Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 169

அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை | வீடியோ

தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு! | வீடியோ

தென்காசிக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார்.

இதுகுறித்து உண்மையை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் பேரா. இரா.முரளி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார்,மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் வழக்கறிஞர் ஆ.ஜான்வின்சென்ட், வழக்கறிஞர் ச.மனோகரன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்(CPCL), வழக்கறிஞர் முனைவர் கரு.சித்தார்த்தன், மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் அடங்கியக் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

கணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

கல்வித் துறையை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்!

ந்திய பள்ளிகளை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் பணியில் தற்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதைப் பல்வேறு முனைகளில், பள்ளி பாடத்திட்டத்திலும் மாணவர்கள் மத்தியிலும் திணிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ள அமினாபாத் இன்டர் காலேஜ் பள்ளியில் இந்துத்துவத்தைத் திணிக்கும் விதமாக A என்றால் இனிமேல் Apple இல்லை அர்ஜுனா (Arjuna), B என்றால் பலராமன்  (Balarama), C என்றால் சாணக்யா (Chnakya) என்று பள்ளி மாணவர்களிடையே இந்துத்துவ – பார்ப்பன மதவெறி ஊட்டப்பட்டு வந்தது அம்பலமானது.

இது குறித்து அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, படிக்கும்போதே குழந்தைகளுக்கு இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றை கதை, பாடல்கள், நாடகங்கள் இதர வழிமுறைகளின் மூலம் கற்றுத்தர வேண்டுமென்றும், அதற்காகத்தான் இந்த மாதிரியான முயற்சிகளை எடுத்திருக்கிறோம் என்றும் கூறினர். அர்ஜுனன் பலராமன் சாணக்கியன் ஆகியோர்தான் இந்தியாவின் விழுமியங்களா? சணக்கியரின் விழுமியங்கள் நமக்குத் தெரியாதா என்ன? இந்த விழுமியங்களைத் தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தப் போகிறார்களாம்!

ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்சி செய்யவில்லை. பார்ப்பன – இந்து பயங்கரவாத கலாச்சாரத்தை மேம்படுத்தவே இவ்வாறான முயற்சிகளை வெளிப்படையாகவோ அல்லது  மறைமுகமாகவோ வலுக்கட்டாயமாகச் செய்து வருகிறது. இது மாதிரியான பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அதற்குப் பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான்; இராமனைப் போல் மறைந்திருந்து அம்பு எய்கிறது.

படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இல்லை; கர்நாடகாவிலும் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அந்தமானில் சிறையில் இருந்த சாவர்க்கர் புல்புல் பறவையில் அமர்ந்து இந்தியாவுக்கு பறந்து வந்ததாக எழுதப்பட்டிருந்தது. புல்புல் பறவை வேண்டுமானால் சிறைக்குள் செல்லும் அளவிற்குச் சிறியதாக இருந்திருக்கலாம். ஆனால், சாவர்க்கர் இறக்கையில் அமர்ந்து செல்லும் அளவிற்கு மந்திரவாதியா என்ன? இந்த மந்திரவாதியின் உண்மையான வரலாற்றை மறைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவனை சுதந்திரப் போராட்ட வீரராக காட்டுவது போன்று பல சாணக்கியத்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ‘அழகு’ என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சாவர்க்கர் சொன்னதால்தான் வேலூர் கலகம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னோடியாக அமைந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாவர்க்கரை ஒரு வரலாற்றாசிரியர் என்றும் கூட எழுதப்பட்டிருந்தது. இது உத்தரப்பிரதேசத்திலோ கர்நாடகாவிலோ நடந்தது அல்ல தமிழ்நாடு அரசின் பாடநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழக மண் பெரியாரின் மண்; இம்மண்ணில் காவிகளுக்கு இடமில்லை என்று கழக கண்மணிகள் சிலாகித்துக் கொண்டிருக்கின்றன. (கழக கண்மணிகள் காவிகளுடன் சமரசம் செய்து கொண்டிருப்பது தனி கதை) ஆனால் தமிழக வரலாற்றையே மாற்றி எழுதிக் கொண்டு இருக்கின்றன ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க பாசிச கும்பல். இவ்வாறு காஷ்மீர் முதல் குமரி வரை கல்வித்துறையை பாசிச கும்பல் கவ்விக்கொண்டு வருகின்றது.

மேலும், பள்ளிகளின் முதல்வராகவோ அல்லது நிர்வாகியாகவோ சங்கர மடத்தின் ஆசியுள்ளவரை பாசிச கும்பல் நியமித்து வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் இந்துராஷ்டிரத்தை அமைப்பதில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுகிறது.

படிக்க: ‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்க வைப்பதற்காக சில மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக மேளம்(Drums) வாசிக்கப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதேபோல், கராத்தே பயிலும் மாணவர்களையும் பேரணிக்கு அழைத்துச் செல்வதற்குத் தயார் செய்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பகலில் எந்தப் பயிற்சியும் கொடுப்பதில்லை. இரவு நேரங்களில் 8 அல்லது 9 மணி போலத்தான் பயிற்சிக் அளிக்கப்படுகிறது.

இரவில் இவ்வளவு தாமதமாகப் பயிற்சி என்ற பெயரில் பள்ளிக்கு வரச்சொல்வதைப் பற்றி விசாரிப்பதற்காக ஒரு மாணவரின் பெற்றோர் பள்ளியின் முதல்வரிடம் கேட்டப்போது, பள்ளியின் முதல்வர் கூறியது, “இந்த மாதிரி இரவில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று எனக்கு எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார். இந்த விசயத்தைப் பற்றி உடற்கல்வி ஆசிரியரிடம் கேட்ட போதும் அவர் தனக்கும் எதுவும் தெரியாது என்றும், தான் சில நாட்களாக விடுமுறையில் இருப்பதாகவும் கூறினார். பிறகு தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்பதும் வெளியில் இருந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. வெளியிலிருந்து பள்ளிக்குள் ஒருவர் வந்து மாணவர்களுக்கு இதுபோன்று பயிற்சியளிப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் இரகசிய சாகா பயிற்சிக்கான சான்றாக அமைந்துள்ளது.

இதில் மோசமான விசயம் என்னவென்றால், அந்த மாணவர்களுக்கு நாம் எதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் ஆர்.எஸ்.எஸ்–இன் ஊர்வலத்திற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான பயிற்சிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இது ஏதோ சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் மட்டும் நடப்பது அல்ல; தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இது போன்ற சாகாப் பயிற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.

அசரத்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து அகற்ற கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை நவம்பர் 22 செவ்வாய் அன்று நடத்த உள்ளனர்.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் நான்கு வழி சாலையில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இந்த டோல்கேட் ஆரம்பிக்கப்படும் சமயத்தில் திருமங்கலம் நகர் எல்லைப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்ததால் அதனை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி திருமங்கலம் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை அடுத்து திருமங்கலம் நகர் எல்லைக்கு மிகவும் அருகில் விதிகளுக்கு முரணாக கப்பலூர் டோல்கேட் அமைக்கப்பட்டு இருப்பதை ஒப்புக்கொண்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அப்போது மக்களின் கடுமையான எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 28 பயணிக்கும் டீ கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வரை உள்ளூர் வாகனங்கள் இலவசமாக பயணம் செய்ய அன்றைய ஒப்பந்ததாரர் ஒத்துழைப்புடன் அனுமதி அளித்தது.

படிக்க : நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது. தடுப்பு அரண்கள் அமைத்து ரவுடிகளை வைத்துக்கொண்டு சாதாரணமாக பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் மிரட்டும் துணியில் வழிப்பறி செய்து வருகின்றது.

வாகன ஓட்டிகள், அரசு ஊழியர்கள், கார் வைத்திருப்பர் என உள்ளூர் வாசிகள் தினந்தோறும் அவமானப்படுத்தப்பட்டு மிரட்டப்பட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் வருகிற 22.11.2022 செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு மற்றும் 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். இதில் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தனியார் மையக் கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அடிமையிகளாக மாற்றப்பட்டு வருவதற்கு எதிரான போராட்டம் பல இடங்களில் பல வடிவங்களில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இந்த தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையிலும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

0

சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி பிரியா பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற கால்பந்து வீராங்கனை. குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கால்பந்து விளையாட்டில் அவர் சாதனைகள் பல படைப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில்தான் விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தால் முழங்கால் ஜவ்வு கிழிந்துள்ளது. அதை சரி செய்ய கொளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாமல் காலை துண்டிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றது. காலை அகற்றிய போதும் உடலின் உறுப்புகள் செயல் இழப்பது தொடர்ந்தது இறுதியாக பிரியா உயிரிழந்தார்.

வீராங்கனை பிரியாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், இவர்களை மட்டும் குற்றவாளி கூண்டில் ஏற்றும் இந்த அரசின் யோகிதை என்ன?

வீராங்கனை பிரியாவின் பயிற்சியாளராக இருந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பேசும்போது, “இதேபோல எனது நண்பன் ஒருவனுக்கும் காலில் ஜவ்வு கிழிந்தது. ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த பிரச்சினையை சரி செய்து விட்டான். ஆனால் பிரியாவின் குடும்பம் அந்தப் பணத்தைக் கூட செலவு செய்ய முடியாத பின்னணி கொண்டது. அதனால்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவர் உயிருடன் திரும்பவில்லை” என கூறியுள்ளார்.


படிக்க : சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!


ஒரு தேசிய அளவில் விளையாடக்கூடிய வீராங்கனையை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்துள்ளார்கள் என்பது அந்தப் பயிற்சியாளரின் பேச்சு அழுத்தமாக பதிவு செய்கிறது.

கிரிக்கெட் என்ற விளையாட்டை எடுத்துக் கொண்டால் அதில் விளையாடும் வீரர்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குகிறார்கள். அவர்களுக்கு அடிபட்டால் உடனடியாக மிகப்பெரும் மருத்துவமனைகளில் தனிச்சிறப்பான கவனம் கொடுத்து சரி செய்கிறார்கள். அவர்களின் ஆடம்பரங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் செலவு செய்யும் பணத்தில் சொற்பமான அளவு ஒதுக்கி இருந்தால்கூட இன்று பிரியாவின் உயிர் பிரிந்து இருக்காது.

கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் சதுரங்கப்போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்த தமிழக அரசு செய்த செலவு ரூ.92 கோடி என்கிறார்கள். சென்னை முழுவதும் விளம்பர பேனர்கள், வரவேற்பு பாடல், கலை நிகழ்ச்சிகள் என குதூகளித்தார்கள். இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒதுக்கி இருந்தால் கூட இன்று பிரியா  காப்பாற்றப்பட்டிருப்பார்.

சென்னை சதுரங்கத்திற்கு உலகின் 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வருகிறார்கள். அந்த நாட்டின் பார்வை அனைத்தும் தமிழகத்தின் மீது படும். அங்கிருந்து முதலீடுகளைக் தமிழகத்தில் குவிப்பார்கள். அதனால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம்.

கார்ப்பரேட் நிறுவனங்களை இங்கு கொண்டுவந்து குவிப்பதற்காக ரூ.100 கோடிகள் செலவு செய்யலாம். அதேபோல, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் விளம்பரங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதிக்கலாம். இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கத்துடன் இணைக்கப்படும் விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கு ஆடம்பரங்களும் சுபபோகமான வாழ்க்கையும் உத்தரவாதம். அந்த நிலைக்கு உயராத நடுத்தர வர்க்கத்திற்கு சொந்தக் காசில் ஓரளவு அவர்களே சிகிச்சை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், உழைக்கும் வர்க்கத்து வீட்டு பிரியா போன்றவர்கள் அரசு மருத்துவமனையை நம்பி மிகவும் வறிய பின்னணியிலேயே வாழ்கின்றனர்.

இதுபோக கார்ப்பரேட்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடிகளை வரிசலுகைகளாக வாரி வழங்கும் அரசுகள். கல்வி சுகாதாரம் மருத்துவம் போன்ற அனைத்திலும் வறிய ஏழை நாடுகளை காட்டிலும் குறைந்த அளவே நிதி ஒதுக்குகின்றனர். இதன் விளைவு டாக்டர்கள் பற்றாக்குறை மருத்துவமனைகள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை என அனைத்தும் தலை விரித்தாடுகிறது. மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறுவது கூட சிரமமாக மாறி வருகிறது.

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.


படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


தனியார்மய-தாராளமய-உலகமய ஆதிக்கத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட்டுகளிடம் மருத்துவத்தை ஒப்படைக்கும் வேலையைத்தான் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதற்கு திராவிட மாடல் அரசும் விதிவிலக்கல்ல. உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறார்கள். நமது உரிமைகளையும் தேவைகளையும் நாம்தான் போராடி பறித்தெடுக்க வேண்டும்.

வீராங்கனை பிரியா மருத்துவமனையில் இருக்கும் போது, தனது நண்பர்கள் உறவினர்கள் என பல இடமும் பேசும்போது மீண்டும் “மாஸாக என்ட்ரி” கொடுத்து திரும்ப வருவேன்  என உறுதியாக கூறியுள்ளார். ஆனால் பிரியா திரும்பவில்லை. இன்னும் இதுபோல பல பிரியாக்களை நாம் இழக்க வேண்டுமா? உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் “மாஸாக என்ட்ரி”கொடுத்து களத்திற்கு வருவதுதான் கார்ப்பரேட் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான வழி, வர்க்க பகைமையை தீர்க்க வழி. அதுவே பிரியாவிற்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

ரவி

நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

கில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டிருப்பதும், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பதும், MASA சார்பில் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற திட்டமிடப்பட்டதும், நவ.2 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்திருந்தோம்.

பு.ஜ.தொ.மு (மா.ஒ.கு) சார்பில் இந்த பேரணியில் பங்கேற்க சுமார் 40 பேர் கொண்ட குழு (முன்னணியாளர்களது குடும்பத்தினர் உள்பட) 11.11.2022 இரவு டெல்லிக்கு புறப்பட்டது. 13.11.2022 அதிகாலை 5.30 மணியளவில் நடுங்கும் குளிரில் டெல்லி மாநகராட்சி சமூக கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் நமது தோழர்கள்  இணைந்து கொண்டனர்.

படிக்க : நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

காலை 11 மணியளவில் துவங்கப்போகும் பேரணிக்கு உடனடியாக தயார் செய்து கொண்டனர்.  பேரணி துவங்குமிடமான ராம்லீலா மைதானத்தில் 16 உறுப்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாமும் கலந்து கொண்டோம்.

டெல்லியில் 144 தடை உத்தரவு இருப்பதால் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கிய பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், ராம்லீலா மைதானத்திலேயே பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், மதியம் 2 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, தடையை மீறி குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கிய பேரணியை முன்னெடுப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

நண்பகல் 12 மணியளவில் துவங்கிய பொதுக்கூட்டத்தில் நமது அமைப்பு சார்பில் தோழர் அமிர்தா உரையாற்றினார்.

“நாங்கள் தமிழகத்திலிருந்து வந்திருக்கிறோம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கமான MLU (மெட்ராஸ் லேபர் யூனியன்) துவங்கப்பட்ட மண்ணிலிருந்து வந்திருக்கிறோம். காலனிய இந்தியாவிலும், அதற்குப் பிந்தைய இந்தியாவிலும் பல்வேறு போர்க்குணமிக்க தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்த, செறிந்த அனுபவம் வாய்ந்த மண்ணில் ஆட்டோமொபைல் துறை துவங்கி ஐ.டி துறை வரை; அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் துவங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை; பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் பயின்ற அனுபவத்திலிருந்து எமது முன்மொழிதல்களையும், இந்திய தொழிற்சங்க இயக்கம் கருத்தில் கொள்ள வேண்டிய முதன்மை அம்சங்களையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

மாசா முன்வைத்துள்ள 7 அம்ச முதன்மை கோரிக்கைகள், எஞ்சிய துணைக் கோரிக்கைகள் ஆகியவற்றுடன் முழுமையாக எமது அமைப்பு உடன்படுகிறது. எனினும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகிய இரண்டு அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும்போது, ஆலையின் உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் பணி நிலைமைகள், நாம் உருவாக்கும் இலாபத்தில் நமக்குரிய பங்கு ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். இந்த இரண்டு அடிப்படை உரிமைகளே ஏனைய கோரிக்கைகளுக்கு திறவுகோலாகவும் அமையும்.

இந்திய தொழிலாளி வர்க்கம் மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது சாதாரண விசயமல்ல. நாம் இங்கே பல்லாயிரக்கணக்கில் கூடி இருக்கிறோம். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். உங்களில் பலர் பீகாரிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ, மேற்கு வங்கத்திலிருந்தோ, தேசிய தலைநகர பிராந்தியம் எனப்படும் NCR மண்டலத்திலிருந்தோ, வேறு ஏதேனும் மாநிலத்திலிருந்தோ வந்திருக்கிறோம்.

நாம் மொழியாலும், பண்பாட்டாலும், நிலப்பரப்பாலும், இன்னபிறவற்றாலும் பிரிந்து கிடக்கிறோம். நம் அனைவரையும் ஒற்றைச் சொல், ஒற்றை உணர்வு  ஒன்றிணைக்கிறது. அதுதான் “வர்க்க உணர்வு” என்கிற ஒற்றை சொல்லும்,உணர்வுமாக இருக்கிறது.

பல்வேறு கூறுகளால் பிளவுபட்டிருக்கும் நாம்  ஒற்றை உணர்வால் ஒன்றுபடுகிறோம். இந்த ஒன்றுபடுதல் கீழிருந்து துவங்க வேண்டும். ஆலைக்குள்ளிருந்து மட்டுமல்ல, ஆலைக்கு வெளியில் இருந்தும் துவங்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தை குடியிருப்புகள், தொழிற்பேட்டைகள் என ஆலைக்கு வெளியில் அணி திரட்டுவோம். குடும்பங்களோடு அணி திரட்டுவோம். என் முதலாளி – உன் முதலாளி என தனித்தனியாக எதிர்த்து நிற்காமல் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பொது எதிரி முதலாளி வர்க்கம் என்கிற அடிப்படையிலிருந்து நமது வர்க்கப் போராட்டத்தை கட்டியமைப்போம்… வாருங்கள் தோழர்களே…!” என்கிற அறைகூவவலுடன் தோழர் அமிர்தாவின் உரை நிறைவுற்றது. அடுத்தடுத்து நடந்த உரைகளுடன் பொதுக்கூட்டம் முடிவுற்றது.

கருத்துரைகளுக்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தின. நம் தரப்பில் காஞ்சிபுரம் பகுதி தோழர்கள் “நான் உலகம்! நானே உலகம்!” பாடலை எழுச்சியுடன் பாடினர்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மதியம் 3 மணிக்கு பேரணி துவங்கியது. ராம்லீலா மைதானத்துக்கு வெளிப்புறம் வந்தடைந்த பேரணியின் வரிசையில் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு ஏழாமிடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விண்ணதிர முழக்கமிட்டது. இந்தி மொழியில் பிரதான முழக்கம் அமைந்த நிலையில் நமது முழக்கம் தமிழிலும், ஆங்கிலத்திலும் அதிர்ந்தது.

படிக்க : நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

பேரணி மைதானத்தின் வெளிச் சுற்றுப்புறத்தில் முன்னேறியபோது டெல்லி போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது. தடைக்கான காரணங்களைச் சொன்னதோடு, 16 அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட 5 பிரதிநிதிகள் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வருகின்ற பிரதிநிதிகள் குடியரசுத்தலைவர் இல்லத்தில் MASA அமைப்பின் கோரிக்கைகளை கடிதமாக தர முன்வர வேண்டும் எனவும் டெல்லி போலீசு சொன்னது.

இதையடுத்து 16 அமைப்புகளின் கூட்டுக்குழுவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவர் இல்லத்துக்கு சென்றனர். அங்கு கோரிக்கை பட்டியலை கொடுத்துவிட்டு வரும் வரையில் பேரணியில் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் அமர்ந்து தலைவர்களது அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

இறுதியாக MASA தலைமைக்குழு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பேரணி நிறைவடைந்தது.

இந்த போராட்டம் பல்வேறு புதிய அனுபவங்களை கொடுத்திருக்குறது. நமது கடந்தகால அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வைத்திருக்கிறது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஏப்ரல் 2021-ல் பிளவுபடுவதற்கு முந்தைய காலத்தில் முன்னெடுத்த நிகழ்வுகள், பிளவுக்குப் பிறகு பு.ஜ.தொ.மு-வின் வாரிசாக மாநில ஒருங்கிணைப்புக்குழு இயங்கி வருவதை நிலைநாட்டியுள்ளோம்.


இவண்,
பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக்குழு.

கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!

0

ங்கள் பள்ளிக் காலங்களில்  வகுப்பறைக்கு வரும் ஆசிரியர் எங்களிடம் உங்கள் வருங்கால கனவு என்ன என கேட்கும்போது எங்களில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகப் போகிறோம் என்று பதில் கூறுவர்.

அர்ப்பணிப்போடும் சமூக அக்கறையோடும் சக நண்பன் போல்ச் செயல்படும் சில ஆசிரியர்களைப் பார்த்து சில மாணவர்கள் இப்படிச் சொல்வதுண்டு.  ஆனால் இன்று ஆசிரியர் பணி என்றாலே முகம் சுழிக்கும் அளவிற்கு ஆசிரியர் பணியை மிகவும் நலிந்த நிலைக்கு மாற்றி வைத்துள்ளது அரசு. எப்போது பணி நிரந்தரம் செய்யப்படும்  என்ற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்  தற்காலிக ஆசிரியர்கள்.

நிரந்தர பேராசிரியருக்கு நிகராக அனைத்துத் தகுதிகளும் பெற்றிருந்த போதிலும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்பது சொற்பம் தான். பணிப் பாதுகாப்பு என்பதோ அரசு சலுகைகள் என்பதோ துளியும் இவர்களுக்குக் கிடையாது. நாள் தோறும் தினக் கூலிகளைப் போல வேலை செய்யும் இவர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு  நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். இவர்கள் அரசைக் கேள்வி கேட்டால் உடனடியாக  வேலையை விட்டு துரத்தியடிக்கப்படும் நிலையில்தான் அரசு இவர்களை வைத்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சம வேலை, சம ஊதியம், பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை  என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு  செவி சாய்க்காத அரசு, அவர்கள் தற்காலிகமாக  பணி செய்யும் வயதை அல்லது கூலி அடிமையாய் மட்டும்  வேலை செய்யும் வயதை  60 -ஆக நீட்டித்துள்ளது. தன்னுடைய உரிமைகளைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களையும் போராட்டத்தை விடுத்து பணிக்குத் திறும்பவில்லை என்றால் இருக்கும் தற்காலிக வேலையையும் பறிக்கப்படும் என்று அரசு ஆசிரியர்களை மிரட்டுகிறது. நிரந்தர பணி கிடைக்குமென TET, SET ,NET என விதவிதமான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகளை இவர்கள் எழுதினாலும்  இவர்களுக்கு நிரந்தர பணி கொடுக்க அரசு மறுக்கிறது.  பெயரளவில் மட்டும் தேர்வுகளை நடத்தி விட்டு ஆசிரியர்களை அரசு ஏமாற்றி வருகிறது.  2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி இந்நாள் வரை வழங்கப்படவில்லை. நிரந்தரமாக கூலி வேலையாட்களாய் மட்டுமே அரசு இவர்களை மாற்றி வைத்துள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாமல் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு, கடன் தொல்லையில் வாழும் இவர்களின் கண்ணீர் ஓலங்கள் இந்த அரசின் காதுகளுக்கு  இன்னும் எட்டவில்லை.

படிக்க: கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!

அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது அரசு.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு. வி. க  அரசு கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்களுக்கு நிகரான எண்ணிக்கையில்  கௌரவ விரிவுரையாளர்கள்  உள்ளனர். திரு.வி. க கல்லூரியைச் சேர்ந்த காட்சி தொடர்பியல் துறையில் துறைத் தலைவரைத் தவிர்த்து அனைத்து ஆசிரியர்களும் கௌரவ விரிவுரையாளர்கள் தான். இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் இருந்தாலும் இவர்களை நிரந்தரம் செய்ய அரசு முன்வரவில்லை. இதனால் பிஎச்டி சேர‌‌ வரும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அடுத்து இதழியல் துறையைப் பொறுத்தவரை இங்கு 100க்கும்  மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதும், ஆண்டிற்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகாரித்து வரும் போதும், இந்தத் துறையில் நிரந்தர பேராசிரியர்கள் என்று யாருமே கிடையாது; எல்லா ஆசிரியர்களும் தற்காலிக பணியாளர்கள் தான். விலங்கியல் துறையில் போதைய ஆசிரியர்கள் கிடையாது; இருக்கும் குறைந்தபட்ச ஆசிரியர்கள் தான் எல்லாப் பாடங்களையும் நடத்தி வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் 30-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி புரிகின்றனர். இதே நிலைதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் நிரந்தரம்  செய்து விடுகிறேன் என்று சொன்ன திமுக  அரசு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் அதிமுக செய்த அதே வேலையைத் திரும்பச் செய்கிறது.

ஆண்டுதோறும் வறுமையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு புகலிடமாக இருந்து வருவது அரசு கல்லூரிதான். இந்த அரசு கல்லூரிகள்தான் தன் வாழ்க்கை என நம்பி அனைத்து ஏழை மாணவர்களும்  அரசு கல்லூரியை நோக்கி வருகின்றனர். ஆனால் கல்வியை கடைச் சரக்காக்கி விற்றுக் கொண்டிருக்கும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் கண்களுக்கு அரசு கல்லூரிகள் என்பது தூசிபோல் கண்களில் உருத்திக் கொண்டிருக்கிறது.

கடைக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுவன் எப்படி கடைகளில் உள்ள அனைத்துப் பொருட்களையும் வாங்கச் சொல்லி அடம் பிடிப்பனோ, அதே போல் இந்தியாவிற்குள் நுழைந்த அந்நிய கார்ப்பரேட்  முதலாளிகள் எப்படியாவது எல்லாத் துறைகளையும்  வாங்கிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க: 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’

அதன் ஒருபகுதியாகத்தான், எப்படியாவது அரசு கல்வி கட்டமைப்பை நொறுக்கி விட்டு மாணவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் வேலையில் தனியார் முதலாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களின் நம்பிக்கையாக இருக்கும் அரசு கல்வி கட்டமைப்பையும் செல்களை போல தினம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். அதற்கு, மேலும் படையல் இடும் வகையில்தான் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை மட்டும் நியமித்தது இந்தக் கல்விக் கட்டமைப்பை நொறுக்கி வருகிறது அரசு.

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். குறைந்த  மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட இக்கல்லூரிகளை எளிதில் அரசு மூடிவிடும். இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டமும்.

இவை எல்லாவற்றையும் கண்டித்து கடந்த ஆண்டு சென்னை DPL அலுவலகத்தின் முன் போராட்டம் , தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் போராட்டம், அக்டோபர் மாதம்  மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரி போராட்டம் மற்றும் திருவாரூர் திரு.வி.க கலைக் கல்லூரியில் போராட்டம் என கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டம் தொடர் கதையாகி உள்ளது. இதற்குத் தீர்வு ஆசிரியர்கள் கைகளில் மட்டும் இல்லை; ஆசிரியர்கள் போராட்டத்தோடு மாணவர்களும் கைகோர்க்காவிட்டால் நாளைய ஏழை மக்களின் பிள்ளைகளுக்குக்  கல்வி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

பாரி

மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

துரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நவம்பர் 17 அன்று காலை முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி விடுதிகளுக்கான கட்டிடங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதுதொடர்பாக மாணவர்கள் பலமுறை புகார் அளித்தும், போராடியும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரி அமைந்துள்ள பகுதி நீர்நிலைப் பகுதியாக இருக்கிறது. கல்லூரியின் கட்டிடங்கள் தரம் மற்றும் நீண்ட நாட்களுக்கு தாங்கும் உறுதித்தன்மை இல்லாததால் விரைவில் சிதலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை அடைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாணவியர் தங்கும் விடுதியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எவ்விதப்பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகு கட்டிடத்தை ஆய்வுசெய்த பொதுப்பணித்துறை, இந்த கட்டிடம் பயன்படுத்த தகுதியற்றது எனக் கூறியது. அதனை தொடர்ந்து மாணவியர்கள் வெளியேற்றப்பட்டு விடுதிக் கட்டிடம் இழுத்துமூடப்பட்டது. அதேபோல், சென்ற ஆண்டு மழை வெள்ளம் காரணமாக மாணவர்கள் தங்கும் விடுதியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்ததால், அந்த கட்டிடமும் இழுத்துமூடப்பட்டது.

படிக்க : மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

நீர்நிலை(கண்மாய்) நிரம்பியதால் கல்லூரி வளாகம் முழுவதும் மழைநீரில் சூழ்ந்தது. இத்தருணம் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை, கல்லூரியின் நூலகம், ஆய்வகம், கலையரங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் பயன்பத்த முடியாத அளவிற்கு சிதலமடைந்துவிட்டதாக கூறியது. எனவே மாணவர்களுக்கு மாற்று ஏற்பட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு கல்லூரிக்கு சில காலம் விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் கல்லூரியின் தரக் குறைபாட்டை சரிசெய்யாமல் மீண்டும் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் புதிய கட்டிடத்துக்கான வேலையை தொடங்க தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர். மாணவர்கள் கோரிக்கை வைக்கும் போதும் போராடும் போதும், அவ்வப்போது ஏதேனும் காரணம் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளது அரசு. இச்சூழ்நிலையில் தற்போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசிடம் சிதலமடைந்த கல்லூரியை சீர்செய்ய கோரிக்கை வைக்கவேண்டிய கல்லூரி நிர்வாகமோ மாணவர் போராட்டத்தை பிளவுப்படுத்தி சீர்குலைக்க முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் ஒரேஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியான திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி பல ஆண்களாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இருக்கிறது. அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை. தற்போது மாணவரக்ள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் ஆதரிக்கவேண்டும்.

தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.

அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!

அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை.

தென்காசிக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இது தற்கொலைதானா அல்லது வேறுவகையில் நிகழ்ந்த மரணமா என்பது பற்றி சந்தேகம் எழுந்த நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை வேண்டும் என்று கோரி அப்பகுதியினர் போராட்டம் நிகழ்த்தினர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து உண்மையை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் பேரா. இரா.முரளி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார்,மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் வழக்கறிஞர் ஆ.ஜான்வின்சென்ட், வழக்கறிஞர் ச.மனோகரன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்(CPCL), வழக்கறிஞர் முனைவர் கரு.சித்தார்த்தன், மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் அடங்கியக் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

இறந்த சீனுவின் தந்தை ஆறுமுகம், கட்டுமானக் கூலிவேலை செய்துவருகின்றார். தாய் மாரியம்மாள் திருவேட்ட நல்லூரில் தூய்மைக் காவலராகப் பணிபுரிகின்றார். முன்பு அரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் அவர் ஐந்து ஆண்டுகள் வார்டு உறுப்பினராகவும் சேவை செய்திருக்கின்றார். மேலும் சீனு படித்து வந்த இந்து நாடார் உறவின் முறை மேல்நிலைப்பள்ளியில் சிறிது காலம் உதவியாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். இறந்த சீனுவின் அண்ணன் கணேஷ்குமார் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கின்றார்.

சம்பவத்தன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு காலை 9:30 மணிக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர்.  தாய் மாரியம்மாள் வழக்கம்போல காலை 11.30 மணிக்கு பணி இடைவேளையில் வீடு திரும்பியிருக்கின்றார். அச்சமயம் வீடு திறந்திருந்தது. உள்ளே பார்த்தால் சிறுவன் சீனு அறையில் உள்ள மின் விசிறியில் தன் தாயின் வெள்ளை நிறச் சேலையில் கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டிருக்கின்றார்.


படிக்க : சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்


  • கழுத்தைச் சுற்றி புடவை சுற்றப்பட்டும், சுருக்கிடப்பட்ட இடத்தில் ஐந்து முடிச்சுக்களும் காணப்பட்டதாக மாரியம்மாள் தெரிவிக்கின்றார். மேலும் ஒரு இரும்புக் கட்டிலின் மேல் நின்று சீனு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கின்றார். கால்கள் கட்டிலில் ஊன்றியிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் மலம் கழிந்த நிலையிலும், நாக்கு பக்கவாட்டில் கடித்தபடி வாயில் நுரையும் வடிந்த நிலையிலும் சீனுவின் உடல் காணப்பட்டத்தையும் அவர் தெரிவித்தார்.
  • மகனுக்கு ஒருவேளை உயிர் இருக்குமோ என்ற ஆசையில் உடலை இறக்கி, அதை அருகில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கு இறந்துவிட்டான் என சொல்ல, மேலும் உறுதிபடுத்த வீர சிகமணி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். அவர்கள் இறப்பை உறுதி செய்தபின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
  • இதற்கிடையில் தகவலறிந்த காவலர்கள் வீட்டிற்கு வந்து சிறுவனின் சடலத்தை சடல உடல்கூறாய்விற்காகப் பாளையம்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
  • படித்த பள்ளியில் சிறுவன் மரணத்திற்கு காரணமான சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று பெற்றோரும் அவர்கள் உறவினர்களும், நண்பர்களும் கருதுகின்றனர். சீனுவின் தந்தை இதன் விளைவாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து டி.எஸ்.பி. தலைமையிலான விசாரணைக்குழு அமைக்க ஆணை பெற்றார். அது வரை சீனுவின் உடல் கூறாய்வு செய்யப்பட்ட சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது.
  • இம்மரணத்தில் பள்ளியில்தான் காரணம் இருக்கின்றது என வலுவாக சீனுவின் பெற்றோர்கள் நம்புகின்றனர். அதற்குரிய காரணங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.
  • அரிய நாயகிபுரம் இந்து நாடர் உறவின் முறை மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் ஆகும்.
  • சம்பவம் நிகழ்ந்த அன்று பள்ளிக்கு சீனுவின் மரணத்தை ஒட்டி விடுமுறை விடப்படவில்லை.
  • சீனுவின் இல்லம் பள்ளியில் மதில் சுவரை ஒட்டியே உள்ளது.
  • சீனுவின் வக்குப்பறையில் ஜன்னல்கள் கூட சீனு வீட்டை ஒட்டியே உள்ளது.
  • விடுமுறை விடாதது மட்டுமல்ல, இன்று வரை பள்ளி தரப்பிலிருந்து எந்தப் பொறுப்பாளரும் இறந்த மாணவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்ககூட வரவில்லை.
  • சம்பவம் நடந்த அன்று வழக்கத்திற்கு மாறாக பள்ளி மாணவர்கள் மாலை ஆறு மணி வரை பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
  • சீனுவுடன் பயிலும் சக மாணவர்கள் சிவமுகுந்தன் மற்றும் கதிர்வேல் எனும் இருவரை (இருவரும் அருந்ததியர் இனத்தைச் சார்ந்தவர்கள்) மட்டும் பள்ளி நிரிவாகத்தைச் சார்ந்தவர்கள் தனியாக மாடிக்கு அழைத்துச்சென்று, சீனுவுக்கு வயிற்று வலி அதிகம் இருந்தது என்றும், அதனால் அவன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் எழுதித் தர கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு சரிவர எழுதத் தெரியாதாகையினால் அலுவலக உதவியாளர் பால முருகனும், பள்ளிக் காவலர் ஒருவரும் வெவ்வேறு தாள்களில் எழுதிக்கொடுத்து அதைப்போல எழுதித் தரச்சொல்லி எழுதி வாங்கியுள்ளனர். பொழுதாகியும் மாணவர்கள் வராததால் பள்ளிக்கு சென்ற இவர்களின் பெற்றோர் உள்ளே சென்று மாடியில் சத்தம் கேட்டு அங்கே சென்று உதவியாளர் எழுதிக் கொடுத்த கடிதங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு பள்ளியின் மீது பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
  • இப்பள்ளியைப் பெறுத்தவரை தலைமை ஆசிரியர் திரு.செல்லையா மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சக்திமுருகன் ஆகியோர் பட்டியலின மாணவர்களைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ” சக்கிலியப் பயல்களா, செத்த மாட்டைத் திங்கிறவங்க, பீ அள்ளுகின்ற பயலுங்க” போன்ற வசவுகளை வீசி அவமானப்படுத்துவது நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது.
  • பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டங்களில் பிற பெற்றோர்கள் அமரவைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் தாங்கள் பின் வரிசையில் நிற்கவே வைக்கப்பட்டதாகவும், தான் பணி செய்த நாட்களிலும் சாதியப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் மாரியம்மாள் கூறுகின்றார்.
  • மூன்று மாதங்களுக்கு முன் தன் மூத்த மகனை ஆசிரியர் ஒருவர் சாதி பற்றி இழிவாக குறிப்பிட்டு திட்டியதிற்கு புகார் கொடுத்தபோது தலைமை ஆசிரியர் இங்கு இப்படித்தான் இருக்கும் உங்களுக்கு வேண்டுமானல் சக்கிலியர் நடத்தும் பள்ளியில் போய் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று என்று கூறினாராம்.
  • தலித் மாணவர்கள் எப்போதுமே வகுப்பறையில் கடைசி வரிசையில்தான் அமரவைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
  • பொதுவாக சிறுவன் சீனு வீட்டிற்கு வெளியில் உள்ள இடத்தில் தான் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருப்பது வழக்கமாம். வெளியில் எங்கும் போகமாட்டான் என்றும் தெரிந்தது.
  • சம்பவம் நடந்த அன்று பள்ளியின் கண்காணிப்பு கேமிரா அகற்றப்பட்டுள்ளது. பின்னர் புது கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
  • சீனு குடும்பத்தினர் மற்றும் மூன்று அருந்ததியின குடும்பத்தினர் ஒன்றாக வீடு கட்டி வசிக்கும் பகுதி நாடார்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். இருபதிற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இவர்கள் தங்களுக்கான மின்சார வசதி கேட்டும் கொடுக்காத மின்துறை, சீனு இறந்த ஒரு சில நாட்களுக்குள் மின்சார இணைப்பைக் கொடுத்துள்ளது. அதுவரை அவர்கள் “வாடகை மின்சாரம்” பெற்றே பயன்படுத்தி வந்தனர்.
  • அதைப்போலவே அவர்கள் சென்று வருவதற்கான பாதை திறக்கப்பட்டு சிமெண்ட் சாலை உடனடியாகப் போடப்பட்டுள்ளது.
  • கல்வித் துறை அதிகாரிகளும் இவர்களை விசாரிக்கவில்லை. உள்ளூர் காவல் துறையும் தீர விசாரிக்கவில்லை.
  • தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில்தான் சேர்ந்தமரம் காவல் நிலையம் குற்ற எண் 310/2022 என்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.
  • இப்பள்ளியில் 105 தலித் மாணவர்கள் பயில்வதாகவும் அதில் 45 பேர் அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். அருகில் வேறு பள்ளிகள் இல்லாத நிலையில் இவர்கள் எல்லோரும் இப்பள்ளியிலேய படிக்கவேண்டிய நிலை உள்ளது. முன்பு இல்லாத வகையில் சமீப கலங்களாகத்தான், அதுவும் புதிய இளம் நிர்வாகத்தினர் பொறுப்பேற்ற பிந்தான் இந்த சாதியப் பாகுபாடு அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டது.
  • இப்பள்ளியில் சத்துணவுப் பணியாளராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் செல்வி என்பவர். இவர் இந்த சம்பவத்தை ஒட்டி நடந்த போராட்டத்திற்கு பிறகு சாதிப் பாகுப்பாட்டினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் பணியை விட்டுவிட்டு பெரியசாமிபுரம் எனும் ஊரில் உள்ள பள்ளியில் பணிக்குச் சென்றுவிட்டாராம்.
  • சி.பி.சி.ஐ.டி விசாரணைக் கோரி சீனுவின் தந்தை ஆறுமுகம் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். (W.P No.24274/2022) இதன் விளைவாக காவல் துறைத் துணைத்தலைவர் மேற்பார்வையில், துணைக் கண்காணிப்பாளர் திரு. சுப்பையா வழக்கை விசாரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பாக அக்டோபர் 20 ஆம் தேதி காலை சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போராடிய உறவினர்கள், பெண்கள், தமிழ்புலிகள் அமைப்பினர் சிலர் என பலர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை சிறையிலடைத்து உள்ளது. இதில் கொலை முயற்சி வழக்கும் அடங்கும். நவம்பர் 11 அன்று அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளித் தலைமை ஆசிரியரையும், சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்கப் பள்ளிக்குச் சென்றபோது அங்கே குழுமியிருந்த காவல்துறையினர். உள்ளே செல்லவே அனுமதி மறுத்தனர். பாதுகாப்புப் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் உயர்நீதி மன்ற உத்திரவுப் படி விசாரணை நடந்து வருவதால் யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.
  • இதற்கு முன்பாகவே உண்மையறியும் குழுவின் உறுப்பினர் தலைமை ஆசிரியரை வழியில் சந்தித்து இது குறித்து விசாரித்தபோது, சீனு இறப்பதற்கு முதல் நாள் வரையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறினார். சம்பவம் நடந்த அன்று சீனு வந்தது பற்றி அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் டிஜிட்டல் வருகைப் பட்டியல் காலை பத்துமணி அளவில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.டிஜிட்டல் வருகை என்பது மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகத்திற்கு உடனடியாக, தானியங்கியாக பகிரப்பட்டுவிடும். இருப்பினும் மேலும் விபரங்களுக்கு காவல்துறை அனுமதி தேவை என்று சொல்லிவிட்டார்.
  • இப்பள்ளியில் பயின்ற மறவர் இனம் மற்றும் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த வேறு இரு மாணவர்கள் சில மாதங்களுக்கு முன் இம்மாதிரியே தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளதை அறிந்து உண்மையறிய முற்பட்ட குழுவினர் அதில் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்த பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் எனும் பதினோராம் வகுப்பு மாணவர் இல்லத்திற்கு சென்று விசாரித்தனர். இம்மாணவனின் தாயாரும் அவன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்பதைம் மிகவும் வருத்தத்துடன் கூறினார். இம்மாணவரும் காலை பள்ளிக்குச் சென்றவர், முற்பகலிலே வீடு திறந்த நிலையிலேயே தூக்கில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
  • இப்பள்ளியில் பயின்ற மற்றொரு பட்டியலின மாணவர் குமரேசன் என்பவர் புன்னைவனம் கிராமத்தைச் சார்ந்தவர் இம்மாதிரியே மரணமடைந்துள்ளார்.

உண்மையறியும் குழுவின் புரிதல்கள்

அரிய நாயகிபுரத்தில் உள்ள இந்து உறவின்முறை மேல் நிலைப் பள்ளியில் சாதியப் பாகுபாடு சமீப காலமாக சில ஆசிரியர்களால் பார்க்கப்படுவதுடன் தலித் மாணவர்கள் இழிவுபடுத்தப்பட்டு வருவதும் தெரிகின்றது. வேறு பள்ளி வசதிகள் இல்லாத நிலையில் இங்கு தலித் மாணவர்கள் பயிலும் நிலை நிலவுகின்றது.

இந்த சூழலில், சிறுவன் சீனு தானாகவே அதுவும் மின்விசிறியில் சேலையைக்கட்டி தூக்கிடுக்கொள்ள முடியுமா என்பது பலத்த சந்தேகத்தைத் தருகின்றது. ஆனால் மலம் கழித்துள்ளான் மற்றும் வாயில் எச்சில் நுரை காணப்பட்டது என்றாலும் யாரேனும் சிறுவனை தாக்கி உயிர் போகும் நிலையில் வீட்டில் கொண்டு வந்து தொங்க விட்டிருக்கலாம் என்ற ஐயம் வலுவாக எழுகின்றது. அவனே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதற்கு அச்சிறுவனுக்கு வலுவான காரணம் குடும்ப அளவில் இல்லை என்றும் தெரிகின்றது. அவனுக்கான வேறு வெளி என்பது பள்ளியாகவே உள்ளதால் சீனுவின் மரணத்திற்கு பள்ளியில் காரணம் உள்ளது என கணிக்கின்றோம்.

ஆனால் பள்ளி தரப்பிலிருந்து தகவல் பெற முடியாமல் தடை செய்யப்பட்டது மட்டும் அல்ல, அவர்கள் சீனுவின் நண்பர்கள் இருவரை வலுக்கட்டாயமாக வயிற்று வலி காரணமாக சீனு தற்கொலை செய்துகொண்டான் என்று எழுதித்தரச் சொன்னது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

மேலும் கண்காணிப்பு கேமிரா அதுவும் சீனு வீட்டிற்கு நெருக்கமாக இருந்த கேமிரா ஏன் அன்று நீக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏற்கனவே இயங்கிய கேமரா அகற்றபட்டு மீண்டும் புதிய கேமராக்கள் தற்போது வைக்கபட்டுள்ளது ஏன்?

ஏன் மாலை ஆறுமணிவரை மாணவர்கள் பள்ளியிலே இருக்கவைக்கப்பட்டார்கள்?

ஏன் உள்ளூர் காவல்துறை பெற்றோரைத் தீவிரமாக விசாரிக்கவில்லை?

வழக்கில் பள்ளி சம்பந்தப்பட்டவர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இணைக்கப்படவில்லை?

ஏன் துக்கம் தெரிவிக்ககூட பள்ளி நிர்வாகமோ,ஆசிரியர்களோ வரவில்லை?

ஏன் இருபது ஆண்டுகளாக கொடுக்கப்படாத மின்இணைப்பு உடனடியாகக் கொடுக்கப்பட்டது?

ஏன் உடனடியாக சீனு வீட்டிற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டது?

சமீபத்தில் சீனுவைப் போன்றே மரணமடைந்த தலித் சிறுவர்கள் மரணத்தின் காரணங்கள் என்ன?

தொடர்ந்து சாதியப் பாகுபாடை உருவாக்கும் வசவுகளைப் பொழியும் உடற்பயிற்சி ஆசிரியர் ஏன் கண்டிக்கவோ தண்டிக்கப்படவோ இல்லை?

போன்ற பல பதிலில்லா கேள்விகள் பள்ளியின் மீது வலுவாக சந்தேகப்படவே வைக்கின்றன.

அப்படி பள்ளி இதற்கான காரணமாக இல்லை என்றால் வெளியிலே உள்ள ஆபத்தான நபர்கள் யார் என்பதையும் காவல் துறை கண்டுபிடிக்கவேண்டும்.

டிஜிட்டல் வருகைப் பதிவை சோதனை செய்வதுடன், சீனுவுடன் பயிலும் மாணவர்களையும் விசாரிக்கக் கோருகின்றோம்.

எது எப்படியாயினும் சாதி பாகுபாட்டை ஒழிக்க கல்வியை பயிற்றுவிக்க வேண்டிய கல்வி நிலையத்தில் தொடர்ந்து சாதி பாகுப்பட்டை வலுபடுத்தும் நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் முன்னணீயாக செயல்பட்ட குற்றாலம் குமார்,சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆய்வாளரை கொலை செய்ய முயற்சி செய்தனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்தது என்பதும் காவல்துறை உள்நோக்கத்தோடே செயல்பட்டுள்ளது போல உள்ளது.


படிக்க : திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!


பரிந்துரைகள்:

1.தமிழகத்தில் குறிப்பகத் தென் தமிழகப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடு காணப்படுவதை தடுக்க, அது இல்லாமல் ஆக்க தமிழக அரசு அதற்கான கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதுடன். புகார்கள் மேலிடத்திற்கு உடனடியாக அனுப்பும் வகை செய்யவேண்டும். மேலும் கல்வி அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டங்களையும், சாதிப் பாகுபாடு அற்ற நல்லுறவு உண்டாக்கும் கல்வி சூழலையும் உருவாக்க தீவிரமாக செயல் படவேண்டும்.

2.தலித் மாணவர்களை இழிவாக நடத்தும் ஆசிரியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுக்க ஆவன செய்யவேண்டும்.

3.சீனுவின் மரணம் என்பது மிகவும் சந்தேகத்துக்குரியது. அப்படியே தற்கொலை செய்துகொண்டாரெனில் அதற்குத் தூண்டியது யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4.தமிழகத்தில் பள்ளியில் பயிலும் தலித் மாணவர்களிடம், பள்ளியில் சாதியப் பாகுபாடு எந்த அளவில் நிலவுகின்றது  என்பது பற்றி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாயரிக்க தக்க மனித உரிமை ஆர்வலர்களையும், ஒய்வு பெற்ற நீதிபதியையும் கொண்ட குழுவை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகின்றோம்..

5.மேலும் பள்ளி நிர்வாகத்தில் ஏற்படும் பிரிவினைகளும், மோதல்களும் மாணவர்களையும், கல்விச் சூழலையும் பாதிக்காத நிலை உருவக்கப்படவேண்டும்.

6.கிராமப்பகுதிகளில் சாதிய கட்டுமானங்களோடு மக்கள் வாழ்வதால் கிரமப்புறப் பள்ளிகளுக்கு நகரப்பகுதி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டுகிறோம்.

7.பள்ளி ஆசிரியர்களுக்கு சாதிக் கண்ணோட்டம், பாகுபாடு அற்ற கல்வி சூழலை பள்ளியில் வழங்க சிறப்பு பயிற்சி தேவை.

8.இறந்த சிறுவன் சீனுவின் மரணத்தில் புற சக்திகளுக்குத் தொடர்ப்பிருக்க வாய்ப்புள்ளது என கருதுவதால் இளம் மாணவர்களை உயிர் பலியாக்கும் சக்திகள் இருக்கின்றனவா என்பதையும் விசாரணை அதிகாரி அறியவேண்டும் என வேண்டுகின்றோம்.

9.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்துள்ள சிறுவன் சீனுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 25,00,000 இழப்பீடாக வழங்கக் கோருகின்றோம்.

10.குற்றாலம் குமார்,சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது வன்மமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டுகிறோம்.

9.இந்த வழக்கு குறித்து SC/ST ஆணையம் கள ஆய்வு மேற்கொள்ளவும் கோருகின்றோம்.

உண்மையறியும் குழுவினர்:

1.பேரா.இரா.முரளி, (தேசிய செயலர்,மக்கள் சிவில் உரிமைக் கழகம்- PUCL)

2.வழக்கறிஞர் ஆ. ஜான்வின்சென்ட் (மாநிலப் பொதுசெயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் – தமிழ்நாடு & புதுவை- PUCL)

3.வழக்கறிஞர் ச. மனோகரன், (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்( CPCL) ராஜபாளையம்

4.வழக்கறிஞர் முனைவர்.கரு.சித்தார்த்தன்,

5.இரா.சங்கர் (மக்கள் கலை இலக்கியக் கழக மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)

6.திரு.முத்துக்குமார் (தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர்)

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

காஞ்சிபுரத்தில் அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் இணைந்து நடத்திய நவம்பர் விழாவிற்கு மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர், தோழர் சரவணன் தலைமை ஏற்று நடத்தினார்.

முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமை உரையில் இன்றைய பாசிச நெருக்கடியில் ஏகபோகமாக வளர்ந்துள்ள கார்ப்பரேட் பாசிசத்தின் நெருக்கடியை சமாளிக்க ரஷ்ய புரட்சி அவசியம் என்பதை எளிமையாக விளக்கினார். அதில் சீனாவில் நடந்த சுகாதாரத் துறையில் ஏற்பட்ட மிகப் பெரும் புரட்சியை எடுத்துரைத்துப் பேசினார். அடுத்த நிகழ்ச்சியாக “வந்திடும் வந்திடும் நவம்பர் 7 வந்திடும்” என்ற பாடல் கலைக்குழுச் சார்பாக பாடப்பட்டது.

பாலாறு கூட்டியக்கத்தை சார்ந்த காஞ்சி அமுதன் அவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினை என்று நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி உள்ள தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வளர்ந்து இன்று கால்வாய்கள் ஏரி குளங்கள் அழிக்கப்பட்டு  இயற்கை வளங்களை சின்னாபின்னம் ஆக்கியுள்ளது. மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் இடம்  சென்னைக்கு செல்லும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் இடமாகவும் மீனம்பாக்கம் விமான நிலைய அமைந்துள்ள இடமும் நீர் நிலைகள்  இருந்ததையும் சுட்டிக்காட்டி, இதனால் இந்த பகுதி முழுக்க இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இது எதிர்கால சங்கதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்” என உரையை நிறைவுசெய்தார்.

“போராட்டம் வேண்டாமா போலீஸ் வேண்டாமா” என்ற பாடலை பாடினார்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்பு குழு) தோழர் ஆகா சிவா அவர்கள் விலைவாசி ஏற்றம், வேலை இழப்பு, வரி விதிப்பு, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் கீழ் தனது உரையை தொடங்கினார். எப்படி சோசலிசம் என்பது மக்களுக்கானது என்பதையும் மக்களுக்கான அரசு எப்படி பாசிசத்தை வீழ்த்தும் என்பதையும் ஆணித்தனமாக அழுத்தத்துடன் பேசினார்.

வரி எதற்காக விதிக்கப்படுகிறது? ஒரு பக்கம் இந்தியாவினுடைய வளர்ச்சி பற்றி கூறிவிட்டு இன்னொரு பக்கம் வாராக்கடனை தள்ளுபடி செய்து கார்ப்பரேட்டின் நலனுக்காக மோடி மாடல் வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களையும் உழைக்கும் மக்களையும் விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த அரசமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்றால் ஒரு பாசிசை எதிர்ப்பு கூட்டமைப்பு தேவை. அது ரஷ்ய புரட்சி போல ஒரு சோசலிசப் புரட்சி. இங்கு, நாம் இந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் என்பதையும் அழுத்தமாக விளக்கிப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் “கம்யூனிசம் வெல்லும்” என்ற பாடல் பாடப்பட்டது. மழலைகள் யுகேஷ், கபிலன், கஷ்மிதா, கலை ஆகியோர் உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் அம்பேத்கரின் பொன்மொழிகள் குறித்துப் பேசினார்கள்.

கலைக்குழு சார்பாக தோழர் திலகவதி அவர்கள் தலைமையில் நாடகத்தில், செல்வகுமார்(கட்டபொம்மன்), சரண்(ஊமைத்துரை), ஜிவிதா(வேலுநாச்சியார்), மகா(குயிலி), பவித்ரா (நெறியாளர்) ஆகியோர்  இணைந்து இன்று நவீன பாசிசத்தில் இவர்களுடைய பங்கு இன்றைய காலகட்டத்தில் எப்படியிருக்கும் என்பதை விவாதமாக நடத்தி உணர்வுபூர்வமாக நடத்தினார்கள்.

வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர் சுந்தர் அவர்கள் நன்றி உரையாற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது. நமது மக்கள் அதிகார அமைப்பின் ஆதரவாளர், இந்த நவம்பர் விழாவிற்கு வருகை தந்து அனைத்து தோழர்களுக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

தகவல்:
பு.ஜ.தொ.மு(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.

0-0-0

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

கடலூரில் அரங்கக் கூட்டம்

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி;அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நவம்பர் 7 நிகழ்ச்சி தீன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தோழர் ஜெயக்குமார் (மக்கள் அதிகாரம் பகுதி பொருளாளர்) தலைமை உரையில், “நாம் நம் வாழ்வில் பல பண்டிகைகளை கொண்டாடிக் கொண்டு வருகிறோம். முக்கியமான ஒரு மகத்தான விழா எதுவென்றால் நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள்தான். ஏனென்றால், அன்றுதான் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள். தனிவுடைமை சுரண்டலை ஒழிக்காத வரையில் பொதுவுடமை சமூகம் மலராது என்றும் பேசினார். உழைக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பாட்டாளி வர்க்க நலனை எடுத்துக் கூறி, வர்க்க அரசியலை பயிற்றுவிப்பதன் மூலமாகதான், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி;அம்பானி-அதானி பாசத்தை முறியடிக்க முடியும்” என்று கூறி நிறைவு செய்தார்.

உத்தரவேல் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு விசிக) அவர்கள் தமது உரையில், “பாசிச பாஜக அரசு மனுதர்மத்தின் அடிப்படையில் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த மனுதர்மத்தின் கட்டமைப்பை அடித்து நொறுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை அழித்தொழிக்க வேண்டும்” என்று பேசினார்.

ஜே.அப்துல் காதர் (SDPI­) அவர்கள் தனது உரையில், “பார்ப்பனப்பாசிசம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி உள்ளது. காலில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது தோளில் துண்டு போடக்கூடாது. குறிப்பிட்ட சமூகப் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது போன்ற கொடுமைகள் நடந்துள்ளன. அது எதிர்த்து அன்று போராடினார்கள் இன்று மீண்டும் இந்துராஷ்டத்தை அமைக்கும் நோக்கில் பாசிச மோடி அரசு செய்து வருகிறது. தன்னை எதிர்த்து போராடும் அனைவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைகிறது. இஸ்லாமியர்களை முதன்மை எதிரியாக காட்டி வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அதானி-அம்பானி பாசிசத்தை புரிந்து கொண்டவர்கள் ஓரணியில் திரண்டு எதிர்த்து போராட வேண்டும்” என்று பேசினார்.

தோழர் முருகானந்தம் (மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலச் செயலாளர்) அவர்கள், “நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளின் ரஷ்யாவில் நடைபெற்ற சாதனங்களைப் பற்றி விளக்கு பேசினார். பால்காரப் பெண்மணி பாராளுமன்ற உறுப்பினர் ஆனது ஐந்தே ஆண்டில் ரஷ்யாவை மின்சாரமயம் ஆக்கியது. மருத்துவம் கல்வி பயின்று முடித்த பின் உத்தரவாதமான வேலை உள்ளிட்டவை அடிப்படை சட்டமாக்கப்பட்டதை முதியோர் உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை இன்னும் பல்வேறு ரஷ்ய புரட்சியின் சாதனைகளை” விளக்கி பேசினார்.

திருவரசு (அனைத்து பொதுநல சங்கம், கடலூர்) அவர்கள், “மோடி  டீ  வித்தவர்  என்று சொல்லி அன்றைக்கு அனைவரும் பெருமையாக பேசினார்கள் ஆனால் மோடி டி வித்தவர் என்பதை தாண்டி இன்றைக்கு இந்தியாவே விற்கும் நிலைமைக்கு வந்துட்டாரு, இன்னைக்கு ரயில்வே, மின்சாரம், வங்கி, மருத்துவம், கல்வி என பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. பாசிச மோடி அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுக்களுக்கான அரசு” என்று கூறினார்.

தோழர் மருது (செய்தி தொடர்பாளர் மக்கள் அதிகாரம்) அவர்கள், “கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் முஸ்லீம் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் உயிர் வாழலாமே தவிர அவர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கக் கூடாது; இரண்டாம் தர குடிமக்களாக இங்கே அவர்களை நடத்த வேண்டும் என்பதை நோக்கி ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்ட வேலையாக செய்து வருகிறது.

இன்றைக்கு ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் பிடியில் சிக்கி உள்ளது. ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் ஜனநாயகம் மற்றும் முற்போக்காளர்கள் வேலை செய்வார்கள் என்ற நிலைமை இப்போது இல்லை. எந்த ஊடகம் எந்த பத்திரிகை மோடி எதிர்த்துப் பேசினாலும் அதை தடை செய்வது; அந்த ஊழியர்களை தாக்குவது பணியை விட்டு நீக்குவது போன்ற பல்வேறு வேலைகளை செய்து வருகிறது; எனவே அன்றைக்கு எப்படி ஹிட்லர் முசோலினி பாசிசத்தை மக்கள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் உயிரைக் கொடுத்து தியாகம் செய்து வீழ்த்தினார்களோ அதுபோல இன்று நமக்குத் தேவைப்படுவது அற்பணிப்பும் தியாக உணர்வும்தான். எனவே இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசத்தை முறியடிக்க அனைவரும் ஓணியில் திரண்ட போராட வேண்டும்” என்று தனது உரையை நிறைவுசெய்தார்.

தோழர் பஞ்சாட்சரம்( மக்கள் அதிகாரம் கடலூர்) நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டது. இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.

தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 02.11.2022 மற்றும் 03.11.2022 அன்று ராஜராஜ சோழனின் 1037-வது பிறந்த நாளை சதய விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை அரசு சார்பில் நடத்தப்பட்டது. விழாவை துவக்கி வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் கலந்து கொண்டார் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் “ராஜராஜ சோழன்” குறித்த கருத்தரங்கை தொடக்கி வைத்தார். மேலும் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாடு ஆன்மீக மற்றும் பண்பாட்டு எழுச்சி பெற்றதாக இருந்தது’ என்று 23-ஆம் புலிக்கேசி படத்தில் மன்னனை ஏற்றி போற்றி பாடி தங்க நாணயம் பெற்றுச்செல்லும் அடிவருடி கூட்டத்தின் மரபை உயர்த்திப் பிடித்துள்ளனர்.

இந்த விழாவின்போது அங்கிருந்த சிலைகளுக்கு, மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட  பொருட்களால் அபிஷேகம் செய்பட்டது. நவம்பர் 2 அன்று ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழாக்கள் போன்ற பல கூத்துகள் நடத்தப்பட்டது. நவம்பர் 3 அன்று ‘சோழர்’ கட்டிய பெரிய கோவிலுக்கு அருகே உள்ள அவனது சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு சாதிய அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கபட்டது.

மேலும் இரவு நேரத்தில் சோழனின் சிலைக்கும் மற்றும் உலோகமாதேவி என்ற சிலைக்கும்  அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடத்தினார்கள். இதுபோன்று சிறப்பாய் கொண்டாடுகின்ற சோழரை பற்றி. நாம் படிக்கும் பாட புத்தகங்களில் சோழரின் ஆட்சி ‘பொற்கால ஆட்சி’ என்று சொல்கிறார்கள். சோழனின் ஆட்சி எப்படிபட்டது என்று நாம் வரலாற்றை பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.


படிக்க : இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?


தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கைப்பற்றி வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தயே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்தது. அதனடிபடையில் கட்டியதுதான் பெரிய கோவில்.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டுவந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்த காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரத்து பன்னிரெண்டு ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன், போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோவிலை கட்டினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைவென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற்கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த போன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ  வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக [நிவந்தம்] விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்து பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான்.

பெரிய கோவிலின் பொருளாதாரம்:

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியல் [பண்டாரம்] இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைக்கும் பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கொவில் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக [பணமாகவோ பொருளாகவோ] வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம் ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன் 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பு மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்களுக்கு ‘சாவா மூவாப்பேராடுகள் எனும் பெயரில் ஆடு, மாடு எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகல்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழைக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்ததுபோக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ [ஊதியம் இல்லா வேலையாட்கள்]களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


படிக்க : இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?


வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால் பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

வரிகளின் மூலம் மக்களை சூரையாடிய பார்ப்பனர்களும் ராஜராஜ சோழனும்!

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் “பாடி காவல் வரியை செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி [இறை]செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ‘தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ‘செக்கு இறை’யும் தட்டாரப்பாட்டத்தையும், தச்சர்,’தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து  புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டது.

விவசாயிகள், விளைச்சலின் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வெண்டியிருந்தது. அந்த வரிக்குக் ‘கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக [இறை]க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கோண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ல ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடம்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளனர். இதேபோல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில ஊரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ [’குடி நீக்கியா’], குத்தகையாளராக மாற்றியோ [’குடி நீக்காமலோ’] அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன. மேலும் சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி விதிப்பு இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தங்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பரிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

சாதி தீண்டாமையையும் தேவதாசி முறையையும் உருவக்கிய ராஜராஜன்:

ராஜராஜன், 400-க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு, தேவரடியார்களாக’ மற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகலென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப்பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929-இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களின் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.


படிக்க : பொன்னியின் செல்வன்: தமிழர்களின் அடையாளமா? அடிமைத்தனமா?


தழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழுவதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

ராஜராஜனின் பொற்காலம்:

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சியை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்துவந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீர்ப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றைதான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுபாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்திய சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே, குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய மங்கலங்களின் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு அப்பட்டமான பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்பட்டு. பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்கு தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளாரக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோல முறையின் யோக்கிதை. அதுமட்டுமல்ல, நிலவுடமையாளர்களான பிரமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக [பண்டாரி] இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை [துலாபாரம்] தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தங்கை குந்தவையும் தமது பிறவி இழிவு நீங்கி சொர்க்கம் செல்வதற்காக தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வைற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்களுக்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது”  என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்டான்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும் அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் [காராட்சி] கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் [மீயாட்சி] வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’ மீயாட்சிப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காத்தால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக்கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

இதுபோன்று மக்கள் விரோத ஒரு கேவலமான ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் பிறந்த நாளைதான் வருடம் வருடம் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தை தமிழகமே கொண்டாடியது இதுதான் தமிழர்களின் வரலாறு என்று. இப்படத்தை இந்த பாசிச சூழலின் போது வெளியிடுவதற்க்கு வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது.


படிக்க : சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !


1950-காலகட்டத்தில் இருந்து 1954 காலகட்டத்தில் தெலுங்கான விவசாயிகள் போராட்டம் பெரியார் பார்ப்பனர் எதிர்ப்பு போரட்டம், நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி என வர்க்கப் போராட்டம் தீவிரமாக நடந்த காலகட்டமாகும். இந்த எழுச்சிகரமான நிலைமை மழுங்கடிப்பதற்காக தான் அக்காலகட்டத்தில் மன்னர்களின் பெருமையை பேசும்படி பொன்னியின் செல்வன் நாவலை அன்றைக்கு கல்கி எழுதினார்.

இன்றைய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிச சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான இந்திய உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் என அனைத்து தரப்பட்டு வர்க்கங்களும் இந்த பாசிச பேய்யாட்சியை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த நேரத்தில் மன்னர்களின் பெருமையை பேசும்படி 1950-முதல் 1954 கால கட்டத்தில் கல்கி மக்களுக்கு துரோகம் செய்ததுபோல் இன்றைக்கு அம்பானியின் ஆசிப்பெற்ற மணிரத்தினமும் மன்னர்களின் பெருமையை பேசும்படி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து மக்களுக்கு துரோகம் செய்து இருகிறார். மேலும் மக்களின் சிந்தையை திசைத்திருப்பி இருக்கிறார். அதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே நம் சொல்லலாம்.

ஏனென்றால் இன்றைக்கு விலைவாசி உயர்வினால் மக்கள் ஒரு வேலை சாப்பாட்டை நிறுத்தி கொண்டு வருகிறார்கள், இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் போராடுகிறார்கள், ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், செவிலியர்கள் போராடி வருகிறர்கள், தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள், இப்படி அனைத்து தரப்பட்ட மக்களும் வாழவழியின்றி போரடிவரும் நிலமையில் இதையெல்லாம் மறக்க செய்து மன்னர்களின் பெருமைகள்தான் நம்முடைய பெருமை என்று பேச வைத்து அதை கொண்டாடவும் வைத்துள்ளார்.

ஆனால், நம்மை அடிமைகளாக நடத்திய மன்னர்களையும் பார்ப்பனர்களையும் கொண்டாடுவதுதான் நம் பெருமையா? இல்லை, பார்ப்பன மரபை எதிர்ப்பதுதான் நம்முடைய பெருமை.

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும். தமிழகத்தில் பெரியார் மட்டுமல்ல சித்தர்கள், வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை கொண்டவர்கள். அம்மரபை உயர்த்தி பிடித்து பார்ப்பனியத்தின் கொடுமை கனவான இந்திராஷ்டத்தை முறியடிக்க ஆயுதங்களாக எழுதுவோம்.

செழியன்
தரவுகள்: 2010 புதிய கலாச்சாரம்

ராஜீவ் காந்தி ஒரு பாசிசவாதி! | மருது வீடியோ

காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு நபரை தண்டனையை குறைத்து விடுதலை செய்கிறது மாகாராஷ்ரா அரசு.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு அநியாயமான விசயம்.

ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

0

விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தரவிருக்கும் நாளில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை (விஎஸ்பி) தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆலையின் ஊழியர்கள், VUPPC-வின்கீழ், நவம்பர் 11 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தத்தில், 13,000 தொழிலாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள், கூர்மன்னபாலம் சந்திப்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

செய்தியாளர்களிடம் பேசிய VUPPC தலைவர் டி ஆதிநாராயணா, “நாங்கள் கிட்டத்தட்ட 650 நாட்கள் போராட்டத்தை நிறைவு செய்துள்ளோம். ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். உற்பத்தி 50% குறைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.” என்றார்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி வட்டாரங்களின்படி, நடந்து வரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்க அரசு முடிவு செய்துள்ளது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் போராட்டங்களில் இருந்து விலகி இருக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சிபிஐ(எம்) உறுப்பினர்களும், விஎஸ்பி தனியார்மயமாக்கல் மற்றும் மாநிலம், குறிப்பாக வட ஆந்திரா தொடர்பான நிலுவையில் உள்ள பிற பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசவில்லை என்று விமர்சித்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணா கல்லூரி சாலை அருகே சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மட்டிலப்பாலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

VUPPC உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் VSP மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இரும்பு ஆலை அருகே தர்ணாவில் ஈடுபட்டனர் மற்றும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆலைக்குள் வாகனங்கள் செல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தினர்.

சந்துரு

அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!

சிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்ததில் ஆறு தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்து போயினர். 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை நடத்தி வந்த வெள்ளையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என்ற அறிவிப்பு, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் களத்தில் சென்று பார்வையிட்டனர். விதிமுறைகளின் படிதான் பட்டாசு ஆலை இயங்கியதா என சோதனை செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் பேட்டியளிக்கிறார். உயிர்களை பறிகொடுத்த பிறகு சோதனை என்கிறார்கள். அதற்கு முன்பு சோதிக்கக் கூடிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

பட்டாசு ஆலையில் வெடி வெடிப்பதும் உயிர் போவதும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. வருடத்திற்கு இரண்டு, மூன்று இடங்களிலாவது வெடி வெடிக்கின்றது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இறந்து போகின்றனர். இதுதொடர் கதை யாகிவிட்டது. நிவாரணம் கொடுப்பது, வழக்கு போடுவது என்பதைத் தாண்டி இந்த அரசு என்ன செய்துவிட்டது?

படிக்க : மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

இதே ஆலையில் 2009-இல் நடந்த வெடிவிபத்தில் 18 பேர் இறந்து போயுள்ளனர். இதுபோக கடந்த தீபாவளி நாளுக்கு முன்பாகவும் ஐந்து வருடங்களுக்கு முன் என இரு முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை இந்த விஷயம் கூட வெளியில் தெரியாமல் மூடி மறைத்து விட்டார்கள் என அந்த பகுதிவாழ் உழைக்கும் மக்கள் ஆலையில் நடந்த வெடி விபத்துகளை பட்டியலிடுகின்றனர்.

மேற்கண்ட மக்கள் கூறும் விஷயங்கள் படி பார்த்தால், தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய ஆலையை ஏன் கண்காணிக்காமல் வைத்திருந்தார்கள் என்பது அந்த பட்டாசு ஆலை முதலாளிக்கும் அதிகார வர்க்கத்துக்குமே வெளிச்சம். இந்த கூட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

பெரும்பாலான பட்டாசு ஆலைகள் கிராமப்புறங்களில்தான் வைத்துக் கொள்கிறார்கள். அங்குதான் விவசாயம் அழிக்கப்பட்டு வருமானத்திற்கு வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தத்தளிக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் பட்டாசு ஆலை அதிபர்கள் மிகவும் அபாயகரமான இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி கோடிகளில் புரள்கின்றனர். வேலை செய்யும் தொழிலாளர்கள் தினக்கூலியின் அடிப்படையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் எந்த உரிமைகளும் அற்ற அடிமைகளாக வைத்து சுரண்டப்படுகின்றன.

இந்த பட்டாசு ஆலை வெடித்ததை ஒட்டி அந்தப் பகுதிக்கு சென்றிருந்த தோழர்கள் அங்கு வேலை செய்த சற்று வயதான ஒரு அம்மாவை பார்த்து பேசி உள்ளனர். அந்த அம்மா உடன் வேலை செய்தவர்கள் மிகவும் கொடூரமாக உடல் அங்கங்கள் தனித்தனியாக சிதறிய அந்த விஷயங்களை மிகவும் பதட்டத்துடன் பகிர்ந்து கொண்டு, மேலும் அவர் கூறுகிறார் வேறுவழியில்லை நாங்கள் இங்குதான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று.

அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயம், வேறுவழியில்லாமல் வாழ்க்கை பிழைப்பை தேடிக் கொள்வது இவைதான் இந்த அபாயகரமான தொழிலில் மக்களை தள்ளுகின்றது.

விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முனைந்து செயல்படும் அரசு எப்படி விவசாயத்தை மேம்படுத்தும்?

படிக்க : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?

முதலாளிகளுக்கோ பாதுகாப்பை மேம்படுத்துவது, தனது லாபத்தில் பாதிக்கு மேல் இழக்க நேரிடும் என்பதால் அதைப்பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. இவர்களிடம் நக்கிப்பிழைக்கும் அதிகார வர்க்கமோ மக்களைப் பற்றி துளியும் அக்கறை கொள்வதில்லை.

தெரியாமல் நடந்த விபத்து, விதி வேற என்ன செய்வது என நொந்து கொள்வது நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் நிலைதான் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும்.

ஆகவே இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம். நமது உரிமையையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க சங்கமாக இணைந்து களத்தில் இறங்குவோம். சமரசம் இல்லாத போராட்டங்களில் ஊன்றி நிற்போம்.

தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிராக 100 நாட்களை கடந்து மீனவர்கள் துறைமுக பணிகளை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் முதலிய ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக பாஜகவும் சி.பி.எம் கைகோர்த்துக் கொண்டு ஒரு பேரணியை கலந்துக்கொண்டுள்ளனர்.

‘save vizhinjam port action council’ சார்பாக நடத்தப்பட்ட இந்த பேரணியில் சி.பி.ஐ(எம்) கட்சியின் மாவட்டச் செயலர் அனவூர் நாகப்பன் மற்றும் பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர் வி.வி.ராஜேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்த திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் சி.பி.ஐ(எம்)-யைச் சேர்ந்த நாகப்பன் என்பவர் ‘பெயரிடப்படாத குழுக்களின் உள்நோக்கங்களால் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது’ என கூறியுள்ளார்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

ஆனால் உழைக்கும் மக்கள் உண்மையில் எதற்காக போராடுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம். கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டியின் தலைமையிலான அரசு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியில் சுமார் ரூ.7525 கோடி மதிப்பீட்டில் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை தொடங்கியது.

கேரள அரசின் இத்திட்டமானது அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) என்ற அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.7525 கோடியில் அதானி நிறுவனமானது வெறும் ரூ.2454 கோடி மட்டுமே முதலீடு செய்யும் என்றும், மீதமுள்ள தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டமானது அரசுக்கு பெரும் இழப்பை தரும் என்று 2017 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் தக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கை கூறியுள்ளது.

மேலும் இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்தே மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக துறைமுக கட்டுமானப் பணிகளால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பினால் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது தங்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வாடகை வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் மீனவர்கள் தாங்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் எல்லைப் பகுதிகளில் மீன்கள் கிடைக்காததால் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் அவர்களுக்கு படகுகளுக்கான எரிபொருளின் தேவையும் பெருமளவு அதிகரித்துள்ளது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, தாங்கள் வாழுமிடத்தை விட்டும் விரட்டியடிக்கப்படுவதை உணர்ந்த மக்கள் துறைமுக திட்டத்தை நிறுத்தக் கோரியும் படகுகளுக்கான எரிபொருளுக்கு மானியம் வழங்க கோரியும், கேரள அரசுக்கு எதிராகவும் துறைமுக பணிகளுக்கெதிராகவும் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். இந்த போராட்டங்களினால் துறைமுக பணி பாதிக்கப்பட கூடாது என உயர்நீதிமன்றமும் மீனவர்களின் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட்டுள்ளது.

ஒருபுறம் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் அரசானது, அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதே வேளையில் மக்களை வாழ கூட வழியின்றி நிர்மூலமாக்கியும் வருகிறது.

இத்தகைய மக்கள் விரோத திட்டத்தை, தற்போது உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசும் துறைமுக திட்டத்தால் பொருளாதாரம் பெருகும் என கூறி மக்களை ஏய்த்துக் கொண்டு எவ்வித தயக்கமோ, கூச்சமோ இன்றி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. உண்மையில் இவர்கள் கூறும் பொருளாதார முன்னேற்றம் என்பது மக்களுக்கானது அல்ல கார்ப்பரேட்டுகளுக்கானது. அதனால் தான் அரசுக்கு பெரும் இழப்பைத் தரும் திட்டம் என்றாலும் இதை நடைமுறைப்படுத்த இவ்வளவு மும்முரமாக செயல்படுகிறார்கள்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

தற்போது எல்லவாற்றிக்கும் மேலாக ஒரு படி போய் இத்துறைமுக திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டங்களிலும், துறைமுக திட்டத்திற்கான ஆதரவு பிரச்சாரங்களிலும் சி.பி.ஐ(எம்) கட்சியினர், பா.ஜா.க-வினருடன் கூட்டாக பங்கேற்பது மட்டுமல்லாமல் போராடும் மக்களை கலவரக்காரர்கள் என்றும், இவர்கள் விழிஞ்சம் பகுதில் பெரும் வன்முறையை உண்டாக்க சதி செய்கின்றனர் எனவும் உளறிக் கொட்டுகின்றனர்.

சி.பி.ஐ(எம்) தங்களின் அரசியல் பிழைப்பும், அவர்களது எஜமானர்களான கார்ப்பரேட்களின் நலனுமே முக்கியமே தவிர மக்கள் நலன் அல்ல அதற்காக நாங்கள் பாசிசிட்டுகளான பா.ஜ.க-வுடன் கூட கூட்டு வைப்போம் என தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை முறை இவர்களின் மக்கள் விரோத கொள்கைகளை-செயல்களை அம்பலப்படுத்தினாலும், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள் இவர்கள்.

அரசு, நீதிமன்றம், போலிசு போன்ற அளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் எந்த நிறுவனங்களும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதாரவாக செயல்படாது என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போரடும் மீனவ மக்கள் போராட்டத்தில் அனைத்து உழக்கும் மக்களையும் இணைத்து, உண்மையான மக்கள் போராட்டம் இந்த ஆளும் வர்க்கங்களை என்ன செய்யும் என்பதை அவர்களுக்கு காட்டுவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு தரக்கூடியதாக இருக்கும். அவ்வாறில்லாமல் கார்ப்ரேட் நல அரசின் ஒடுக்குமுறையிலும், கார்ப்ரேட்டுகளின் சுரண்டல்களில் இருந்தும் நம் மீள்வது என்பது சாத்தியமற்றதே.

கதிர்