நூல் அறிமுகம் – பாகம் 2 : அமெரிக்க மக்கள் வரலாறு
படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1
அடிமைகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. ஹேர் பர்ட் அப்தேகர் அமெரிக்காவில் அடிமைகள் எதிர்ப்புகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த தனது அமெரிக்க நீக்ரோ அடிமை கிளர்ச்சிகள் (American Negro Revolts) என்ற நூலில் குறைந்தபட்சம் 10 பேர் சம்பந்தப்பட்ட 250 கிளர்ச்சிகள் அல்லது சதிகளை பட்டியலிடுகிறார். சுரண்டல் கொடுமைக்கு இலக்கான அதிருப்தி அடைந்த வெள்ளையர்கள், கறுப்பின அடிமைகள் உடன் சேர்ந்து நிலவுகின்ற, இந்த சுரண்டல் சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட முனைவார்கள் என்ற பீதியின் காரணமாக நிறவெறியை ஒரு கோட்பாடாகவே உருவாக்கினார்கள்.
வர்ஜினியா ஆளும் வர்க்கம் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கருப்பர்களை விட மேலானவர்கள் என்பதை அறிவித்தது. சமூகத்தின் அடித்தட்டில் இருந்த வெள்ளையர்களுக்கு சலுகைகளை வழங்கியது. வெள்ளையின உழைக்கும் மக்களையும் கருப்பின அடிமைகளையும் ஒரு பொது நோக்கத்திற்கு ஒன்றுபடவிடாமல் செய்வதற்கான ஒரு சிக்கலான வரலாற்று வலைப்பின்னலை அமெரிக்காவில் காணலாம்.
இதனை தனது நூலில் சிறப்பாக விவரித்திருக்கிறார் ஹாவாட் ஜின்
கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர், உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டி செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவுதான் மூர்க்கர்களாகவும், நெறி புகட்டப் படாதவர்களாகவும், கருணை வெட்கம் பற்றி எல்லாம் கவலைப் படாதவர்களாகவும் இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்த காலத்திலும் இவற்றுக்கு ஒப்பான அட்டூழியங்களை புரிந்ததில்லை. (வில்லியம் ஹோவிட் எழுதிய குடியேற்றமும் கிறிஸ்தவ சமயமும்) – காரல் மார்க்ஸ் – மூலதனம்.
படிக்க :
♦ அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !
பேகன் கிளர்ச்சி
பேகன் கிளர்ச்சி 1676-ஆம் ஆண்டு வர்ஜீனியா உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பின் நடந்த, அமெரிக்கப் புரட்சியின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மாபெரும் கிளர்ச்சி. வெள்ளையர்கள் மற்றும் கருப்பின அடிமைகளுடன் பணியாளர்கள் இணைந்த கிளர்ச்சி. இந்தக் கிளர்ச்சியின் வெம்மை தாங்காமல் தலைநகர் ஜேம்ஸ் டவுனை விட்டு கவர்னர் ஓட வேண்டி வந்தது. கிளர்ச்சியை அடக்க ஆயிரம் பேர் கொண்ட ராணுவத்தை இங்கிலாந்து அனுப்பியது. அந்த கிளர்ச்சியின் தலைவர் பேகன் இறந்துவிட்டார். அவருடைய தளகர்த்தர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1676-ஆம் ஆண்டு பேகன் வெளியிட்ட மக்கள் பிரகடனத்தைப் பற்றியும் பேகனின் கிளர்ச்சி பற்றியும் நேரடியாக அந்தச் சூழலுக்கு நம்மை அழைத்துச் சென்று விவரிக்கிறார் ஹாவாட் ஜின்.
வர்க்கப் பிரிவினை காலனிய காலத்தில் கெட்டிபட்டது. ஏழைப் பணக்காரன் வேறுபாடு கூர்மை அடைந்தது, 1700-ஆம் ஆண்டுவரை வர்ஜீனியாவில் 50 பணக்கார குடும்பங்கள் இருந்தன. அவர்களுடைய செல்வ வளம் ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு சமமானதாக (அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை) இருந்தது. கருப்பின அடிமைகளின் உழைப்பையும் வெள்ளை பணியாளர்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுத்து சுகபோகங்களில் திளைத்தனர். இந்த செல்வ சீமான்களே கவர்னர் கவுன்சில் உறுப்பினர்களாக, நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். ஆங்கிலேய மன்னரால் உரிமை வழங்கப்பட்ட உரிமையாளரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தனர். 1650-ஆம் ஆண்டு முதல் 1689-ஆம் ஆண்டு வரை இந்த காலனிய ஆட்சியின் உரிமையாளரை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.
அடிமை உழைப்பாளிகளும் – வெள்ளை பணியாளர்களும்
அமெரிக்க அமைப்பு முறையின் முன்னோர்களின் தத்துவத் தந்தை என்று கருதப்பட்ட ஜான் லாக் அவர்களால் 1600-ம் ஆண்டுகளில் அரசியலமைப்பு சட்டத்திற்கான அடிப்படைகள் எழுதப்பட்டன. நிலவுடமை உயர்குடி சீமான்கள், ஊக பேர நிலப்பிரபுக்கள் ஆகியோரின் நலன் காக்கும் வகையில் இந்த சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. பாஸ்டன் தலைவர்கள், மதகுருமார்கள் உடன் இணைந்து அமெரிக்க சமூகத்தை தாய் நாடான இங்கிலாந்தின் சமூக ஏற்பாடுகளை போலவே அமைத்து பாதுகாக்க ஆர்வமாக செயல்பட்டனர். தேவாலயம் மற்றும் நகர கூட்டங்களின் மூலம் குடியானவர்கள் மீது தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டனர்.
1630-ஆம் ஆண்டில் காலனி ஆட்சியின் துவக்கத்திலேயே கவர்னர் ஜான் விந்த் ரோப், தங்களது ஆட்சிமுறை கோட்பாட்டை அறிவித்தார். சிலர் பணக்காரர்களாகவும் சிலர் ஏழைகளாகவும், சிலர் அதிகாரத்தில், அந்தஸ்த்தில் முக்கியமானவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் சிலர் கீழானவராகவும் கீழ்படிந்தவராகவும் இருக்கும் நிலை எல்லா காலங்களிலும் இருக்கும் என்றார்.
அடிமை உழைப்பாளர்களின் உதிரத்தை அட்டைபோல் உறிஞ்சிய பணக்கார வியாபாரிகள், உயர்குடியினர் ஒய்யாரமாய் கையில் மதுக் கோப்பைகளை வைத்துக் கொண்டு, உயர் வகை உணவுகளையும், கேக்குகளையும் உட்கொண்டனர். எல்லா இடங்களிலும் ஏழைகள் உயிர் வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருந்தனர். கடும் குளிரில் உறைந்துசாகாமல் உயிர் வாழ்வதற்காக ஜீவ மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
கருப்பின அடிமைகளை கண்காணிக்க ஏழை வெள்ளையர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அடிமைத்தனமும் நிறவெறியும் மேன்மேலும் அதிகமாக நடைமுறைக்கு வந்தது. எட்மன்ட் மோர்கன் என்பவர், வர்ஜினியாவின் அடிமை முறையை ஆராய்ந்து “நிறவெறி என்பது கருப்பு-வெள்ளை வித்தியாசங்களை ஒட்டி இயல்பானது அல்ல, வர்க்க இழிவிலிருந்து வந்த ஒரு விஷயமாக இருந்தது என்கிறார்”. அமெரிக்க வரலாறு முழுமையிலும் உயர்குடி ஆட்சி தொடர மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதனை தனது நூலில் துலக்கமாக விளக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
அடிமைகளை படுகொலை செய்வது தெய்வ குற்றம் அல்ல
அமெரிக்க மேல்தட்டு வர்க்கம் தமது செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் சுக போகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆட்சி செய்வதற்காக நடுத்தர வர்க்கத்திற்கு சில சலுகைகளை வழங்கியது. அடிமைகள் மற்றும் ஏழை வெள்ளையர்கள் உழைத்து உருவாக்கிய உபரியை செல்வ வளங்களில் சில பங்கை நடுத்தர வர்க்கத்திற்கு வழங்கியது.
1610-ஆம் ஆண்டு அருட்தந்தை ஜான் டேவல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு இத்தகைய அடிமை வணிகம், அடிமைமுறை கிறிஸ்துவத்திற்கு ஏற்புடையதா? என்று கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு கிறிஸ்துவ பாதிரியார் லூயிஸ் பிராண்டன் பதில் எழுதினார். அடிமைகளை வாங்குவதும் விற்பதும் தெய்வ குற்றமாகாது என்று எழுதினார். இந்த கொடுமை மத அங்கீகாரத்துடன் 200 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹிட்லரின் நாஜிகளின் சித்திரவதைக் கூடத்தை விடக் கொடூரமானது அமெரிக்க சித்திரவதைக் கூடங்கள். அடிமை முறையை எதிர்த்து பல கலகங்கள் கிளர்ச்சிகள் எழுந்தன.
அமெரிக்க வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்தப் பகுதியின் மீது ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது இந்நூல்.
கருப்பின அடிமைகளின் தலைவர் பிரடரிக் டக்லஸ் “நமக்கான விடுதலையைப் பெறும்வழி என்ன? எந்த மனிதனின் உரிமையும் தரப்படுவதில்லை, போராடிப் பெறுவது. போராட்டம் அமைதியான அறவழியில் நடத்துவதா? அல்லது வலிமையும் ஆயுதமும் கொண்ட வழியிலா? எப்படி இருந்தபோதும் கேட்காமல் எதுவும் கிடைக்காது, எப்போதும் இதுவே உண்மை” என்றார்.
நீதிமன்றத்தில் உரிமை முழக்கம்
கருப்பின அடிமைகளுக்காகப் போராடிய தியாகி ஜான் பிரவுன் ஒரு வெள்ளையர். தென்பகுதி முழுவதும் அடிமைகளை எழுச்சி பெறச் செய்தார். கோரியட்டூப்மன் என்ற வீரம் மிகுந்த கருப்பினப் பெண், அந்தப் போராளிக்கு துணை நின்றார். கைது செய்யப்பட்டு வர்ஜீனியா நீதிபதி முன் நிறுத்தப்பட்ட ஜான் பிரவுன் “நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தூக்குமேடை முன்பு நின்று துணிந்து முழக்கமிட்டார்.
தூக்கிலிடுவதற்கு முன் அந்த மகத்தானப் போராளி “நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நாட்டின் பாவக் கரையை, ரத்தம் கொண்டு மட்டுமே கழுவ முடியும்” என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். “ஜான் ப்ரவுன் அவர்களை கொன்ற கழுமரம் சிலையைப் போல் புனிதமானது” என்கிறார் ரால்ப் எமர்சன் என்ற பிரபல எழுத்தாளர்.
சரித்திரத்தில் மறக்க முடியாத அமெரிக்க மக்களின் உரிமை போராட்ட வரலாற்றுப் பயணத்தை சுவைபட தமது நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். அமெரிக்காவில் அடிமை முறை சட்டப்படி மட்டும் ஒழிக்கப்பட்டது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
(தொடரும்…)
நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.
நூல் அறிமுகம் : காமராஜ்






இந்தியாவில் Reliance, சிறு நகரங்களில் கூட தங்களின் சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களை நிறுவியிருக்கிறார்கள். இதன் மூலம் உயர்நடுத்தர வர்க்கத்தை மட்டுமின்றி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் கீழ்நடுத்தர வர்க்கத்தையும் தங்களது சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
“விவசாயம் என்பது மிகக்குறைந்த வருமானம் தரக்கூடிய தொழில் என்ற நிலை சமீபத்திய ஆண்டுகளில் மாறியுள்ளது. விவசாயம், உணவுத்துறை ஆகியவை நீண்டகால வளர்ச்சியளிக்கக் கூடிய துறையாக பார்க்கப்படுகிறது”, என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் நிலங்களை வாங்குகிறார்கள். ஒரு தனிநபர் என்ற வரையறையில் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களுக்கு சொந்தக்காராக இருப்பவர் பில் கேட்ஸ் (Bill Gates) தான் என்றால் நம்ப முடிகிறதா ?
அடிமை மக்களின் துயரம் மிகுந்த வரலாறு, கருப்பின உழைக்கும் மக்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு, வெள்ளைப் பணியாளர்களின் உரிமைப் போராட்ட வரலாறு என்று உழைக்கும் மக்களின் தரப்பிலிருந்து, அவர்களின் சார்பில் நின்று, அமெரிக்காவின் வரலாற்றை இந்த வரலாற்று நூல் விவரித்து சொல்கிறது.
அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. “பணம் பிறவியிலேயே கண்ணத்தில் ரத்தக்கரை படிந்ததாய் உலகில் பிரவேசித்தது” என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். எல்லையற்ற லாப வெறி, நிற வேற்றுமை அடிப்படைகள், வெள்ளையன் எஜமானனாக கருப்பினத்தவர் அடிமையாக நடத்தும் கொடூரமான அமெரிக்க அடிமைமுறை உலகில் வேறு எங்கும் இல்லாதது.
குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் நிர்வாணமாக சோதனையிட்ட பின் நல்ல உடல் கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பவர்களை ஒருபக்கமாக ஒதுக்குவார்கள் அவர்கள் மார்பில் பிரஞ்சு இங்கிலீஷ் டச்சு என கம்பெனிகள் முத்திரைகளை பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவார்கள் முத்திரையிட்ட அடிமைகள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றும் வரை அடைத்து வைக்கப்படுவார்கள்.
கர்நாடகாவில் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாகவும், ஏமாற்றியும் நிலத்தை தனியார் முதலாளிகள் பறிக்காமல் தடுக்கும் பொருட்டு நிலத்தை தனியார் நிறுவனங்கள் நேரடியாக கையகப்படுத்துக் கூடாது என்று சட்டமிருக்கிறது. அதை கடந்த டிசம்பர் 2020-ல் திருத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் சாதகமான இந்த சட்டத்தை பெருமுதலாளிகள் வரவேற்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கையால், இந்தியாவின் விவசாயம் சீரழிந்து போயிருக்கிறது. 1990-களில் இருந்து தற்போதுவரை ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருகிறார்கள்.
“உழுபவர்களுக்கே நிலத்தின் மீதான உரிமை” என்ற சமூக உரிமையை ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மிகக்கடுமையான போராட்டத்தின் மூலமாகவே வென்றெடுத்தார்கள். இப்படி வரலாற்று ரீதியாக நிலத்தின் மீது நிலவும் சமூக உரிமையைதான் McKinsey நிறுவனம் “தெளிவற்ற சொத்துரிமை” என்று சொல்கிறது.
சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாகக் கண்டறிந்தார். அதாவது, எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால், சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.
சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர்.
குமுறி எழுந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை ‘ரௌலட்’ போன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு ஒடுக்க முடியவில்லை. மக்களின் போராட்டம் ஆளும்வர்க்கத்தின் அரசாளும் உரிமையைக் கேள்விக்குட்படுத்திய சமயத்தில், ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு நோகாத வகையிலான போராட்ட வழிமுறைகளை காந்தி துவங்கி வைத்தார். அதுவே அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம்.
சௌரி-சௌராவின் தீ இந்தியா முழுமைக்கும் பரவும் ஆபத்து இருந்ததை உணர்ந்த காந்தி, இதையே சாக்கிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். 22 போலீசாரை கொன்ற வழக்கில் ஒத்துழையாமை இயக்க போராளிகள் 228 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 19 பேருக்கு தூக்கு தண்டனையும் 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.




சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது பெற்ற நாவல்







