கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட பொதுப்பணித் துறையை கண்டித்தும், எடப்பாடி அரசை பதவி விலகக் கூறியும், கல்லூரி நுழைவுவாயிலில் 13.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் எடுப்பதே மத்திய – மாநில அரசுகளின் நோக்கம். அதன் காரணமாகவே காவிரி வறண்டு கிடப்பதை அனுமதிக்கிறது. எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.
இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி அரசை பதவி விலகக் கூறியும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 06
இராணுவ பஸ்களின் வரிசை அதிகாலையிலேயே ஆரோக்கிய நிலைய முகப்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
பொத்தான்கள் போடாத சட்டையுடன் படிப்பலகையில் உட்கார்ந்திருந்த மேஜர் ஸ்த்ருச்கோவ் மாஸ்கோ நகர்ப்புறக் காட்சிகளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் களி துள்ளியது. ஓயாது சுற்றித்திரியும் இந்தப் படைவீரர் இப்போது இயங்கிக் கொண்டிருந்தார். தமது வழக்கமான வாழ்க்கைமுறைக்கு வந்துவிட்டதாக அவர் உணர்ந்தார். ஏதோ விமானப்படைப் பிரிவுக்குப் போய்க் கொண்டிருந்தார் அவர். அது எது என அவர் இன்னும் அறியார். எனினும் வீட்டுக்குப் போவது போல் இருந்தது அவருக்கு. மெரேஸ்யெவ் ஒன்றும் பேசாமல் கலவரத்துடன் உட்கார்ந்திருந்தான். யாவற்றிலும் கடினமான சோதனை இனிமேல்தான் வரவிருக்கிறது என்று அவன் உணர்ந்தான். இந்தப் புதிய தடைகளைக் கடக்க அவனுக்கு இயலுமோ இயலாதோ, யார் கண்டார்கள்?
பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே மெரேஸ்யெவ் வேறு எங்கும் போகாமல், இராத்தங்கிடத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மிரொவோல்ஸ்க்கியைத் தேடிச் சென்றான்.
அப்போது முதல் தோல்வி அவனுக்கு எதிர்பட்டது. அவன் இவ்வளவு பாடுபட்டுத் தனக்கு ஆதரவாளராக ஆக்கியிருந்த அவனது நலம் விழைபவர் அவசர வேலை நிமித்தமாக எங்கோ விமானத்தில் போயிருக்கிறார் என்றும் திரும்பக் கொஞ்சம் காலம் ஆகும் என்றும் தெரிந்தது. பொதுவான அறிக்கை எழுதித் தரும்படி அலெக்ஸேயிடம் சொன்னார்கள். அவன் அப்போதே ஆளோடி ஜன்னல் குறட்டில் அமர்ந்து அறிக்கை எழுதி முடித்தான். மெலிந்த சிறுகூடானமேனியும் களைத்த விழிகளும் கொண்ட துணைக் கமாண்டரிடம் அதைக் கொடுத்தான். அவர் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்வதாக வாக்களித்து இன்னும் இரண்டொரு நாள் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அலெக்ஸேய் கெஞ்சினான், மன்றாடினான், அச்சுறுத்தக்கூடச் செய்தான். துணைக் கமாண்டரோ, எலும்பு துருத்திய முட்டிகளை நெஞ்சுடன் அழுத்திக் கொண்டு வழக்கமான ஒழுங்கு அதுவே என்றும் அதை மீறுவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறிவிட்டார். உண்மையிலேயே எவ்விதத்திலும் உதவ அவர் திறனற்றவர் போலும். மெரேஸ்யெவ் கையை உதறிவிட்டு அப்பால் சென்றான்.
மருத்துவமனையில் இருந்த அன்யூத்தாவுக்கு போன் செய்தான். அவள் ஏதோ கவலையில் அல்லது வேலையில் ஆழ்ந்திருந்தாள் என்று குரலிலிருந்து புலப்பட்டது. எனினும் அவன் போன் செய்தது குறித்து மிகவும் மகிழ்வடைந்தாள். இந்த நாட்களில் அவன் தன் வீட்டில் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தான் மருத்துவமனையிலேயே வசிப்பதாகவும் எனவே வீடு வெறுமையாயிருப்பதாகவும், அவனால் ஒருவருக்கும் இடநெருக்கடி ஏற்படாது என்றும் சொன்னாள்.
ஆரோக்ய நிலையத்தினர், வெளிச்சென்ற விமானிகளுக்கு ஐந்து நாள் உணவுப்பண்டங்களைக் கொடுத்திருந்தார்கள். எனவே அலெக்ஸேய் நெடு நேரம் சிந்திக்காமல் அன்யூத்தாவின் வீட்டுக்கு புறப்பட்டான். பிரமாண்டமான புதுக் கட்டிடங்களின் பின்னே முகப்பு வெளியின் மறுகோடியில் ஒண்டியிருந்தது அந்தச் சிறு வீடு. தங்க இடமும் உண்ண உணவும் இருந்தன. இப்போது காத்திருக்கலாம்.
பணியாளர் நியமன அலுவலகத்தில் ஆஜராவதற்கு முந்திய இரவு அலெக்ஸேய் நீள் சோபாவில் திறந்த விழிகளுடன் படுத்திருந்தான். புலர்போதில் எழுந்து முகம் மழித்துக் குளித்து விட்டு, அலுவலகம் திறந்ததுமே நிர்வாகப் பணித்துறை மேஜரிடம் முதலில் சென்றான். அவன் விதியை முடிவு செய்யும் அதிகாரம் இவருக்கே இருந்தது. இந்த மேஜரை அலெக்ஸேய்க்கு முதலிலிருந்தே பிடிக்கவில்லை. அலெக்ஸேயை கவனிக்காதவர் போல மேஜை அருகே நெடுநேரம் ஏதேதோ செய்து கொண்டிருந்தார். காகித அடுக்குகளை எடுத்துத் தம் முன்னே ஒழுங்காக வைத்தார். யாருக்கோ டெலிபோன் செய்தார். சொந்த விவரப் பத்திரங்களுக்கு எவ்வாறு எண்குறி இடவேண்டும் என்று தமது செயலாளிப் பெண்ணுக்கு விரிவாக விளக்கினார். அப்புறம் எங்கோ வெளியே போய்விட்டு வெகுதாமதமாகத் திரும்பி வந்தார். அதற்குள் அலெக்ஸேய்க்கு நீண்ட மூக்குள்ள அவருடைய நீட்டுப் போக்கான முகத்தைக் காணவே கரித்தது. முடிவில் மேஜர் காலண்டர் பக்கத்தைத் திருப்பினார். அப்புறந்தான் வந்தவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா, தோழர் சீனியர் லெப்டினன்ட்?” என்று தன்னம்பிக்கை தொனிக்கும் கட்டைக் குரலில் வினவினார்.
மெரேஸ்யெவ் தன் விவகாரத்தை விளக்கினான்: அவனுடைய பத்திரங்களை எடுத்துத் தரும்படி செயலாளியிடம் கேட்டார் மேஜர். அவள் கொடுத்ததும் “சொந்த விவகாரங்களைப் படிக்கத் தொடங்கினார். கால்கள் வெட்டி எடுக்கப்பட்டது பற்றிய கட்டம் வந்ததும் போலும், அவர் அலெக்ஸேய்க்கு நாற்காலியைக் காட்டினார் “என்ன, நிற்கிறீர்களே, உட்காருங்கள்” என்பது போல. அப்புறம் மறுபடி காகிதங்களில் ஆழ்ந்துவிட்டார். கடைசிப் பக்கத்தைப் படித்து மடித்ததும், “என்னதான் வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்?” என வினவினார்.
“சண்டை விமானப் படை ரெஜிமென்டில் நியமனம் பெற விரும்புகிறேன்.”
மேஜர் நாற்காலியில் சாய்ந்து, எதிரே இன்னமும் நின்று கொண்டிருந்த விமானியை வியப்புடன் உற்று நோக்கி, தாமே அவன் பக்கம் நாற்காலியை நகர்த்தினார். அவருடைய அகன்ற புருவங்கள் எண்ணெய் வழிந்து மழமழப்பாயிருந்த நெற்றியில் இன்னும் மேலே சென்றன.
“ஆனால் உங்களால் விமானம் ஓட்ட முடியாதே?”
“முடியும், ஓட்டுவேன். பரீட்சார்த்தமாக என்னைப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புங்கள்” என்று மெரேஸ்யெவ் அநேகமாமக் கத்தி விட்டான். அடக்க முடியாத விழைவு அவன் குரலில் ஆர்த்தது. பக்கத்து மேஜையின் அருகே உட்கார்ந்திருந்த இராணுவத்தினர், சாமள நிறமான இந்த அழகிய இளைஞன் இவ்வளவு பிடிவாதமாக என்ன வேண்டுகிறான் என்று புரிந்துகொள்வதற்காக நிமிர்ந்து பார்த்தார்கள்.
“ஆனால் கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும்? வேடிக்கைதான்… எங்குமே கண்டதில்லை இதை. உங்களுக்கு யார்தாம் அனுமதி தருவார்கள்?” – தனக்கு முன்னே இருப்பவன் எவனோ வெறியன், ஒருவேளை பைத்தியக்காரன் போலும் என்று நினைத்தார் மேஜர்.
அலெக்ஸேயின் சீற்றம் பொங்கும் முகத்தையும் வெறித்த விழிகளையும் ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, முடிந்தவரை மென்மையாகவே பேச அவர் முயன்றார்.
“இதை எங்குமே கண்டதில்லைதான், ஆனால் இதை எல்லோரும் காண்பார்கள்!” என்று விடாப்பிடியாக அழுத்திக் கூறினான் மெரேஸ்யெவ். தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்திலிருந்து ஸெல்லோபேன் காகிதத்தில் சுற்றியிருந்த பத்திரிக்கைத் துணுக்கை எடுத்து மேஜருக்கு முன்னே மேஜைமேல் வைத்தான்.
பக்கத்து மேஜைகளின் அருகே இருந்த இராணுவத்தினர் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு இந்த உரையாடலை உற்றுக் கேட்கலானார்கள். ஒருவன் ஏதோ காரியமாகப் போல மேஜரை நெருங்கி, நெருப்புப் பெட்டி கேட்டு வாங்கிக் கொண்டு மெரேஸ்யெவின் முகத்தை ஜாடையாகப் பார்த்தான். மேஜர் கட்டுரை மீது கண்ணோட்டினார்.
“இது எங்களுக்குப் பிரமாணம் ஆகாது. எங்களுக்குக் கட்டளை உள்ளது. விமானப் படைக்கு ஏற்ற தகுதி பற்றிய எல்லாத்தரங்களும் அதில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இரண்டுகால்களும் அல்ல, இரண்டே விரல்கள் மட்டும் உங்களிடம் குறைவாயிருந்தால் கூட விமானம் ஓட்ட உங்களை அனுமதிக்க என்னால் முடியாது. உங்கள் பத்திரிக்கைத் துணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இது சான்று அல்ல. உங்கள் விழையை மதிக்கிறேன், ஆனால்….”
தனக்குள் கோபம் மண்டி எழுவதை உணர்ந்தான் மெரேஸ்யெவ். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் அவன் மைக்கூட்டை எடுத்து பளிச்சிடும் அவரது முன் வழுக்கை மண்டையில் எறிந்து விடுவான் போலிருந்தது. சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “இதுவோ?” என்று கம்மிய குரலில் கேட்டான்.
முதல் வரிசை இராணுவ மருத்துவரின் கையொப்பம் உள்ள காகிதத்தை – தன் கடைசி வாதத்தை – மேஜைமேல் வைத்தான்.
மேஜர் அந்தக் குறிப்பைச் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தார். அது உரிய முறையில் எழுதப்பட்டிருந்தது, இராணுவ மருத்துவப் பணித்துறையின் பெயர்க்குறியுடன் முத்திரை இடப் பட்டிருந்தது. விமானப் படையினரால் மதிக்கப்பட்ட மருத்துவரின் கையொப்பம் அதன் அடியில் இருந்தது. மேஜர் அதைப் படித்த பின் அதிகப் பரிவு காட்டலானார். இல்லை, எதிரே இருந்தவன் பைத்தியக்காரன் அல்ல. இந்த அசாதாரண இளைஞன் மெய்யாகவே கால்களின்றி விமானம் ஓட்டத் திட்டமிட்டிருக்கிறான். ஆழ்ந்த போக்கும் செல்வாக்கும் கொண்ட இராணுவ மருத்துவரையும் இவன் எப்படியோ நம்ப வைத்திருக்கிறான்.
“இருந்தாலும், நான் எவ்வளவு தான் விரும்பிய போதிலும், என்னால் முடியாது” என்று பெருமூச்சு விட்டு மெரேஸ்யெவின் விவரப்பத்திரத்தை அப்பால் நகர்த்தினார் மேஜர். “முதல் வரிசை இராணுவ மருத்துவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எங்களிடம் தெளிவான, திட்டவட்டமான உத்தரவு இருக்கிறது. அதிலிருந்து பிறழ்வதற்கு இடமே கிடையாது…. நான் இதை மீறினால் அப்புறம் பதிலளிப்பது யார், இராணுவ மருத்துவரா?” என்றார்.
வயிறார உண்ட, சுயதிருப்தி நிறைந்த இந்த மனிதரை, மட்டுமீறிய தன்னம்பிக்கையும் நிம்மதியும் மரியாதைப் பாங்கும் கொண்டவரை அலெக்ஸேய் வெறுப்புடன் நோக்கினான். அவருடைய கச்சிதமான உடுப்பின் துப்புரவான கழுத்துப் பட்டையையும் மயிரடர்ந்த கைகளையும், கவனமாகக் கத்தரிக்கப்பட்ட அழகற்ற பெரிய நகங்களையும் அருவருப்புடன் பார்த்தான். இந்த ஆளுக்கு விளக்குவது எப்படி? இவரால் புரிந்து கொள்ள முடியுமா? விமானச்சண்டை என்றால் என்ன என்று அறிவாரா இவர்? துப்பாக்கி வெடியைக் கூட அவர் வாழ்நாளில் ஒரு போதுமே கேட்டிருக்க மாட்டார். உணர்ச்சிகளை மிகச் சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு, “அப்போது நான் என்ன செய்வது?” என்று தெளிவற்ற குரலில் கேட்டான்.
“நீங்கள் கட்டாயமாக விரும்பினால், அணியமைப்புத் துறைத் தேர்வுக் குழுவிடம் நான் உங்களை அனுப்பலாம். ஆனால் உங்கள் பாடெல்லாம் வீணே ஆகும் என்று எச்சரிக்கிறேன்.” இவ்வாறு கூறித் தோட்களைக் குலுக்கினார் மேஜர்.
அலுவலகங்களை அவன் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றி வருவது இவ்வாறு தொடங்கியது. கழுத்தளவு வேலை நெருக்கடியில் மூழ்கியிருந்த களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள். உண்மையிலேயே அவர்களால் என்ன செய்திருக்க முடியும்? உத்தரவு, தலைமை அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட, முற்றிலும் சரியான உத்தரவு இருந்தது. பல ஆண்டுகளாக வழங்கிவந்த மரபுகள் இருந்தன. அவற்றை மீறுவது எப்படி? அதிலும் சந்தேகத்துக்கே இடமற்ற இம்மாதிரி விஷயத்தில், போர்ச் செயலுக்காகத் துடித்துக் கொண்டிருந்த, வெறுமே இருக்க முடியாத இந்த அங்கவீனன் மேல் எல்லோருக்கும் உளமார்ந்த இரக்கம் உண்டாயிற்று. “முடியாது” என்று வெட்டொன்று துண்டிரண்டாக அவனிடம் சொல்ல எவருக்கும் நா எழவில்லை. பணியாளர் நியமன அலுவலகத்திலிருந்து அணியமைப்பு அலுவலகத்துக்கு, ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு அனுப்பப்பட்டான். அவன் மீது பரிவு கொண்டு அதிகாரிகள் அவனைத் தேர்வுக் குழுவிடம் அனுப்பி வைத்தார்கள்.
மறுதலிப்புகளோ, அறிவுறுத்தும் தொனியோ, இகழ்வுபடுத்தும் அனுதாபமும் தயையுமோ (இவற்றுக்கு எதிராக அவனது தன்மானம் மிக்க ஆன்மா அனைத்தும் பொங்கி எழுந்தது எனினும்) இப்போது மெரேஸ்யெவுக்குக் கட்டுக் கடங்காத கோபம் உண்டாகவில்லை. தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க அவன் பழகிக்கொண்டான். மனுதாரனின் தோரணையை மேற்கொண்டான். சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று மறுதலிப்புக்களைப் பெற்ற போதிலும் நம்பிக்கையைக் கைவிட அவன் விரும்பவில்லை. பத்திரிக்கைத் துணுக்கும் இராணுவ மருத்துவரின் முடிவும் அடிக்கடி பையிலிருந்து எடுக்கப்பட்டமையால் நைந்து மடிப்புக்களில் விட்டுப்போயின. எண்ணெய்த் தாளில் அவற்றை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
கேள்வி: //பொதுவாக மக்களின் செயல்பாடுகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள், காவல், அரசியல், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், அரசின் சில நடவடிக்கைகள், போன்றவற்றை பார்க்கும்போது அறம், நேசம், நெறிமுறை, மனிதம் அனைத்தும் ஒழிந்துவிட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.
அதேவேளையில் தனிமனிதனோடு பழகும்போது, சாலை விபத்தில் சிக்கியவரை காப்பது; உதவுவது, இன்னும் பிற நிகழ்வுகளில் மனிதமும் நேசமும் இறக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
தனிமனிதர்களின் கூடாரமே சமூகம் என்னும்போது, இந்த முரண்பாடுகள் எதனால் ஏற்படுகிறது? இவற்றை களையும் வழிகள் யாவை?
நன்றி//
– வெ. குணசேகரன்
அன்புள்ள குணசேகரன்,
“தி மாட்ரிக்ஸ் ரிலோடட் (The Matrix Reloaded – 2003)” திரைப்படத்தில் நாயகன் நியோவை தொடர்ந்து துரத்தும் ஏஜெண்ட் ஸ்மித் கூறும் உரையாடல் ஒன்றில் இப்படி வரும்.
“நாம் சுதந்திரமாக இருப்பதால் இங்கு இருக்கவில்லை. நமக்கு சுதந்திரம் இல்லை என்பதால் இங்கு இருக்கிறோம். இதிலிருந்து தப்பிச் செல்வதற்கு காரணம் ஏதுமில்லை; அதை மறுப்பதற்கு நோக்கமும் இல்லை. ஏனெனில் நோக்கமில்லாமல், நாம் இங்கு இருக்கமாட்டோம் என்பது நாமிருவரும் அறிவோம். அந்த நோக்கம்தான் நம்மை உருவாக்கியிருக்கிறது, நம்மை இணைத்திருக்கிறது. அந்நோக்கமே நம்மை இழுத்துச் செல்கிறது. அதுவே நம்மை வழிநடத்தவும் செய்கிறது, தூண்டிவிடவும் செய்கிறது. இந்நோக்கம்தான் நம்மை வரையறுத்திருக்கிறது. நம்மை பிணைக்கவும் செய்கிறது”
எந்திரங்களால் எழுதப்பட்ட மென்பொருளாக உலகம் மாறிவிட்டது. அதில் கனவு காண்பதால் எந்திரங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உயிருள்ள பொம்மைகளாக மக்கள். அதிலிருந்து மனித குலத்தை மீட்க வேண்டும் எனப் போராடும் சயான் போராளிகள். எந்திரங்களின் மென்பொருள் குறைபாடுகளை கண்டறியும் பொருட்டு சயான் விட்டு வைக்கப்படுகிறது. அந்த குறைபாடுகளின் (Bug) உச்சமாய் அதீத சக்தி கொண்ட நாயகன் நியோ. எந்திரங்களின் பக்கமிருந்து தோன்றிய மென்பொருள் குறைபாடாய் ஏஜெண்ட் ஸ்மித். இருவருக்கும் நடக்கும் போட்டி சண்டையில் எந்திரங்கள் தமது அடுத்த வெர்சனை சரி செய்வதாக தீர்மானிக்கிறது. சமயத்தில் அந்தச் சண்டை எந்திரங்கள் தீர்மானித்த வழியில் செல்லாமல் புதுப்புது முடிச்சுக்களோடு பயணிக்கிறது. சமநிலை பிறழ்கிறது. கனவு உலகிலிருந்து மனித குலம் யதார்த்த உலகிற்கு திரும்புமா? இல்லை மனித குலத்தின் இறுதி புகலிடமான சயான் அழிக்கப்படுமா? எந்திரங்களின் மென்பொருள் பரிசோதனையாக சயானும், நியோவும் அவனது கூட்டாளிகளும் பயன்படுகிறார்களா? இது மாட்ரிக்ஸ் வரிசையில் வந்த மூன்று திரைப்படங்களின் கதைச் சுருக்கம்.
இன்றைய நிஜ உலகும் மாட்ரிக்ஸ் போலவே இயங்குகிறது. நாம் நிஜ உலகில் பயணித்தாலும் சொத்துடமையினால் பிரிந்து போய் திட்டமிட்ட வழியில் வடிவமைக்கப்பட்ட நமது வாழ்க்கையை முதலாளித்துவம் எனும் மென்பொருள் தீர்மானித்திருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினையினால் நாம் சிணுங்கினாலோ, வெடித்தாலோ அவர்கள் அடுத்த வெர்சனை வாட்ஸ் அப் வெர்சன் போல வெளியிடுகிறார்கள். நிஜ உலகிலிருந்து துண்டிக்கப்படும் நமது சிந்தை மேலும் அன்னியமாகிறது. இப்படி போகிறது வாழ்க்கை.
மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும் சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் என்பது உங்களது கேள்வி.
அறத்தை பொதுவில் மனித குல நற்குணங்களின் இலட்சியவாதம் என்று வரையறுத்தால் அது தனிநபர் சார்ந்து தோன்றியதா? இல்லை சமூகம் சார்ந்து பரிணமிக்கிறதா?
காட்டு ஓநாயை வீட்டு நாயாக மாற்றிய மனித குலத்திற்கு அதன் பின் வேட்டைக்கு ஒரு துணை கிடைக்கிறது. ஆரம்பத்தில் இனக்குழுவில் இருந்த வயதான கிழவர்கள், கிழவிகளை விட நாய்களுக்கு மதிப்பு அதிகம். சமயத்தில் நாய்களுக்கு இறைச்சி இல்லை என வயது மூத்தோரை இரையாக கொடுத்திருக்கிறது மனித குலம். முதியோரை, நோயுற்றோரை, எளியோரை பராமரிக்க வேண்டும் என்ற பண்பாடு பற்றிக் கொள்ள வெகு காலமாகிறது. அந்தப் பராமரித்தலுக்கு வாழ்க்கைத் தேவைக்கான உற்பத்தி சற்றே அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இப்படி சமூக வாழ்க்கையின் இயக்கமே மனித குலத்தின் இணக்கத்தை கற்றுத் தருகிறது, உருவாக்குகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறை வந்ததும் முழு சமூகமும் உற்பத்தியில் பிணைக்கப்பட்டாலும் நுகர்வு, சொத்துடைமையில் முழு சமூகமும் பிரிக்கப்படுவதால் மனித குலம் இன்று தனித்தீவுகளாய் மாறி வருகிறது. நகர வாழ்க்கையோ, கிராம வாழ்க்கையோ ஒவ்வொருவருக்கும் மாநகர பேருந்து வழித்தடம் போல ஒரு தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அருகாமையில் உள்ள பிற தடங்களையோ, சற்று தூரத்தில் பயணிக்கும் தொலை தடங்களையோ யாரும் ஏறிட்டுப் பார்க்கமுடியாது. நமது தடத்தில் பயணிப்பதிலேயே ஆயிரத்தெட்டு சிக்கல்கள்.
ஒரு கையில் சுமைப்பை. மறு கையை பேருந்துப் படிக்கட்டில் இருக்கும் கூட்டத்தில் துழாவி கம்பியை பிடிக்கிறார் ஒரு சலவைத் தொழிலாளி. பேருந்து வேகமெடுக்கிறது. கூட்டத்தின் நெருக்குதலில் பிடித்த கை கம்பியை விடுகிறது. அது அவரது வாழ்க்கைக்கு உணவிடும் வலது கை. கீழே விழுகிறார். நேரம் நள்ளிரவு 11 மணி. கை மூட்டு விலகி தோள் எலும்பு உடைந்து போய் விட்டது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சொந்த கிராமத்திற்கு பயணிக்க இருந்தவர், பயணத்தை ரத்து செய்து விட்டு கிடைத்த பேருந்தை பிடித்து போரூர் பூந்தமல்லி சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு வருகிறார். முதலுதவிக்கு பிறகு அடுத்த நாள் காலையில் கை எலும்பு சிகிச்சைக்கு இலட்சத்திற்கு மேல் ஆகும் என்று அறிகிறார். உடனே தோளில் துணியையும், வலிக்கு வலி நிவாரணிகளையும் போட்டு விட்டு நூறடி சாலையில் இருக்கும் புத்தூர் கட்டு நிலையம் விரைகிறார்.
அங்கு ஆயிரத்தில் முடிகிறது அவரது சிகிச்சை. உண்மையில் அவரது மூட்டு இணைந்ததா, எலும்பு சேர்ந்ததா என்பதை எக்ஸ்ரே பார்த்து தெரிந்து கொள்ளக்கூட வழியில்லாத மக்கள் மருத்துவம் அது. தற்போது கை வலி விட்டபாடில்லை. புறநகர் அரசு மருத்துவமனை ஒன்றின் பிசியோ தெரப்பியில் ஐ.எஃப்.டி சிகிச்சை பெற்று வலியை குறைக்கிறார். கை இணைய மூன்று மாத காலம் ஆகுமென புத்தூர் வைத்தியர் தெரிவித்திருக்கிறார். பாரிமுனை பூக்கடையில் அவரது சலவை நிலையம் இருக்கிறது. நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாத்தியம் இன்று இல்லை. மனைவி இறந்து விட்டார். மகன்கள் கொடுக்கும் சிறு உதவியுடன் தனது வைத்தியத்தை தானே பார்த்துக் கொண்டு தோளில் போட்ட துண்டுடன் அரசு மருத்துவமனையிலிருந்து நம்முடன் உரையாடிவிட்டு மறைந்து போனார்.
ஒரு சலவைத் தொழிலாளிக்கு முறையான மருத்துவம் கிடைப்பதை இந்த சமூக அமைப்பு ஏன் உத்திரவாதப்படுத்தவில்லை. இன்னொரு புறம் மருத்துவச் செலவிற்கு விதவிதமாய் காப்பீடுகள். அந்தக் காப்பீடு பணம் முழுவதும் கிடைக்கும் வரை ஐசியூவில் வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகள். உனக்கு திடீரென்று விபத்து நடக்கும், திடீரென்று செத்துப் போவாய் என்று பயமுறுத்தியே காப்பீடுகள் கல்லா கட்டுகின்றன. ஏன் ஒரு மனிதன் இறந்து விட்டால் இந்த சமூகம் அவரது குடும்பத்தை காப்பற்ற வழியில்லாமல் இருக்கிறது? அதை பயமுறுத்துவதே ஒரு மாபெரும் தொழிலாக ஏன் இருக்க வேண்டும்? நாய்களுக்கு கிழவர்களை இரையாக்குவதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
இழப்பு இன்னதுதான் என தெரிந்தே நாம் நமது தெரிவுகளை தெரிவு செய்கிறோம். ஏனெனில் இங்கே தெரிவு உண்மையில் தெரிவில்லை, அது ஒரு நிர்ப்பந்தம்.
தேநீர்க் கடையில் தூக்க கலக்கத்துடன் வடை மாஸ்டர் உண்மையில் வட இந்திய மாஸ்டர் வெங்காயங்களை வெட்டிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் விரல்களை வெட்டி விட்டால் என்ன செய்வது? உரிமையாளரிடம் கேட்டால் இரவு விடிய விடிய செல்பேசியில் படம் பார்த்த கொழுப்பு என்று திட்டுகிறார். திட்டை கேட்டுக் கொண்டே சிரித்தவாறு பான் மசாலாவை உள்ளே தள்ளுகிறார் மாஸ்டர். கண்கள் சிவக்க வெங்காயம் தடையின்றி வெட்டப்படுகிறது. சொந்த ஊர் விட்டு, தாய்மொழி, பண்பாடு விலகி அன்னியமான ஊரில் ஏன் இப்படி? அவரைத் துரத்தியது எது? இங்கே வதைப்பது எது?
உழைத்துக் களைக்கலாம். ஆனால் களைப்புக்கு இடமில்லாத வதையாகி விட்டது இன்றைய உதிரி தொழிலாளிகளின் உழைப்பு. இந்த உழைப்புச் சிறையில் இருக்கும் இம்மக்கள் சமூகநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கோ, போராட்டங்களுக்கோ எப்படி வர முடியும்?
பெயருக்கு ஜனநாயகமும், அமலில் அதிகாரமும் இருக்கும் நாட்டில் ஊழல்தான் பணநாயகமாக வீற்றிருக்க முடியும். லஞ்ச லாவண்யங்களை அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களில் இருப்பதை நேரடியாக உணர முடிகிறது. ஆனால் முழு சமூகமும் மறைமுகமாக அதை நோக்கியே பயணிக்கிறது. சிலிண்டர் போடும் தொழிலாளிக்கு ஊதியம் மிகக் குறைவு. அதை ஈடுகட்ட அவர் வாடிக்கையாளர்களிடம் ஐம்பது ரூபாய் வாங்குகிறார். நாளிதழ்களின் ஊரக செய்தியாளர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு. அதை ஈடுகட்ட அவர் கவர் வாங்குகிறார். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. அதை ஈடுகட்ட அவர் டியூஷன் எடுக்கிறார். விடுதிகளின் பரிசாரர்களுக்கு ஊதியம் குறைவு. அதை ஈடுகட்ட அவர் வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்குகிறார். இவர்களெல்லாம் தமது தொழிலை இன்முகத்துடன் வாடிக்கையாளரோடு செய்ய இயலுமா?
இதெல்லாம் இந்த நிறுவனங்களுக்கு தெரிந்தே நடக்கும் நிகழ்வுகள். எடப்பாடி கோட்டு சூட்டுடன் வெளிநாடு சென்று வந்த கதையை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால்தான் கட்சி மற்றும் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். இது அதிகாரப்பூர்வ ஊழல். மோடியின் நூறு நாள் ஆட்சியை பாராட்டினால்தான் தொலைக்காட்சிகளுக்கு பிரச்சினை இல்லை.
ஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு தூங்குவதே இலட்சியம். குறிப்பிட்ட வேலை நேரத்தில் குறிப்பிட்ட சவாரிகளை முடித்தால்தான் ஊக்கத் தொகை கிடைக்கும். அதற்காக ஒரு தெரு தள்ளி இறங்கச் சொன்னாலும் வாடிக்கையாளரிடம் சிடுசிடுக்கிறார். இடுப்பொடிய வண்டி ஓட்டி உணவுகளை விநியோகிக்கும் தொழிலாளிகளுக்கு உணவில் சூடு சற்று குறைந்தால் வாடிக்கையாளரிடம் திட்டு. ரேட்டிங்கில் இழப்பீடு. பிறகு ஏன் அவர் சாலை விதிகளை மதிக்கப் போகிறார்? குடிநீர் லாரிகளும் ஒரு நாளில் இத்தனை சவாரி ஓட்டினால்தான் ஓட்டுநர்களுக்கு வருமானம். பிறகு ஏன் விபத்து நடக்காது?
இரக்கம் பார்க்காத சங்கிலித் திருடர்கள்; அவர்களது கையை ஒடித்து மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியிடும் இரக்கம் பார்க்காத போலீசு. “எந்த விசாரணைக்கும் கிட்டே வராதே, எட்டி நில்” என்பதை அறிவிப்பாய் போட்டுக் கொண்டு காஷ்மீரின் தெருக்களில் காத்துகிடக்கும் இரக்கமில்லாத இராணுவம். ஓய்வூதியத்திற்கும், சமூக நல திட்டங்களுக்கும் மக்களை இரக்கமின்றி அலையவிடும் அதிகார வர்க்கம்! அதே அதிகார வர்க்கத்தை இரக்கமின்றி அப்பார்ட்டுமென்டுகளுக்கும், பொறியியல் – மருத்துவக் கல்லூரிகளுக்கும் இலட்சங்கள், கோடிகளைக் கேட்டு அலைய விடும் முதலாளிகள்! அவர்கள் கையில் நடுநிலைமையென பீதாம்பரத்துடன் நடத்தப்படும் ஊடகங்கள்!
முழு சமூகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வன்முறை ஊழலுடன் பயணிக்கிறதோ? இன்னொருபுறம் பண்பாட்டு அரங்கில் நாளொரு மேனியாக பொழுதொரு விதமாக விதவிதமான கொலைகள்! வன்புணர்ச்சிகள்! இவரா குற்றம் புரிந்தார் என்று அதிர்ச்சியடையும் படியான சராசரி முகங்கள்! மொத்த சமூக அமைப்பும் ரணமாக மாறிவிட்டது. இதை எப்படி களைவது?
இந்தக் குறளுக்கு சாலமன் பாப்பையாவின் விளக்கப்படி “துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.”
ஏழைகள் துன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்பது ஏன் ஒரு விதியாக இருக்க வேண்டும்? அந்த விதியை தோற்றுவித்த சமூக அமைப்பு எது? அந்த அமைப்பைத் திருத்தி ஏழைகளை விடுதலை செய்யும் வரை இந்த சமூகம் ரணப்படுவதை எப்படி மாற்ற முடியும்?
எனில் இந்த சமூக அமைப்பில் நம்பிக்கையூட்டும் அம்சம் ஏதுமில்லையா?
இருக்கிறது. 99% மக்கள் இன்றும் என்ன துன்பம் வந்தாலும் உழைத்துத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதோ, செய்யும் வேலையில் மோசடி செய்வதோ இல்லை. மீதம் இருக்கும் ஒரு சதவீதம்தான் நீங்கள் குறிப்பிடும் ஊழல் செய்யும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளி இன்னபிறர்.
இடையில் இருக்கும் நடுத்தர வர்க்கம் இரு தரப்பிலும் ஊசலாடினாலும் அதன் நிலையும் இன்றைக்கு உழைக்கும் மக்களின் பிரச்சினைகளோடே அணி சேர்கிறது.
இப்படி உழைப்பில் நேர்மையாகவும் ஏழ்மையை பல்லைக் கடித்துக் கொண்டும் ஓடும் மக்களை அரசியல் படுத்த வேண்டும். இரண்டாவது இந்த ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு இடமில்லை. அதுவே அதிகார வர்க்க தடித்தனத்தையும், ஊழலையும் மக்களுக்கு இன்னல்களையும் தோற்றுவிக்கிறது. அதன்படி போலி ஜனநாயகத்தை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை தோற்றுவிக்க வேண்டும். இந்த இரண்டும் என்று ஒன்று சேர்கிறதோ அன்று தனிமனிதனாகவும், சமூகமாகவும் மனித குலம் அறத்துடன் வாழும். (போலி ஜனநாயகம், புதிய ஜனநாயகம் குறித்து இன்னொரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்)
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
காக்ஸ் பசார், வங்காளதேசம் : சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம், 23 வயதே நிரம்பிய சானா பேகம், மியான்மரின் மாங்டாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள முற்றிலும் கருகிப்போன தனது கிராமத்தை விட்டு வெளியேறினார், கடினமான ஈரப்பதம் நிறைந்த புல்வெளிகளையும், நெல் வயல்களையும் கடந்து, மூன்று நாட்கள் கழித்து தனது அண்டை நாடான வங்காளதேசத்தில் அமைந்துள்ள குட்டுப்புல்லாங் அகதிகள் முகாமை அடைந்தார்.
“அவர்கள்(மியான்மர் ராணுவம்) என் தந்தையையும், இரண்டு சகோதரர்களையும் என் கண் முன்னே கொன்றார்கள். நான் ஓடி ஒளிந்து உயிர் பிழைத்தேன்” என்று ஷல்பகான் அகதிகள் முகாமில் வசிக்கும் சஃபீனா அல்ஜசீரா பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
பலுகாளி ரோஹிங்கிய அகதி முகாம்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த அகதிகள் முகாமில் வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் என்னால் இங்கு உயிர் பிழைத்திருக்க முடிகிறதே. நான் என் ஊருக்கு திரும்பி சென்றால் கொல்லப்படுவது உறுதி” என்றார்.
தெற்கு வங்காளத்தில் உள்ள 27 அகதிகள் முகாம்களில் சஃபீனாவை போன்று 10 லட்சத்துக்கு மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் வசித்து வருகின்றார்கள்.
குறிப்பாக 2017 ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மியான்மர் ராணுவத்தால் தொடங்கப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கு பிறகுதான், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் இந்த அகதிகள் முகாம்களுக்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
1970 மற்றும் 1990-களில் ஏற்பட்ட தாக்குதல்களின் விளைவால் ஏற்கெனவே, இங்கு தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களோடு இவர்கள் இணைந்தார்கள்.
52 வயது நிரம்பிய அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறார். “ஆனால், மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட என் மகள் திரும்பி செல்வோம் என்ற செய்தியை கூறினால் மிகவும் அதிர்ச்சியடைகிறாள்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில் “எனது மனது ராகின்கேயில் உள்ள எனது வீட்டை நினைத்து தினமும் வெம்புகிறது. எனது வாழ்வின் பெரும்பகுதியை நான் அங்குதான் கழித்தேன். அங்கு எனக்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. ஆனால், இங்கோ ஏதுமில்லாத ஒரு அகதி வாழ்க்கையை வாழ்கிறேன்.” என்றார்.
இரண்டாம் முறையாக 3400 அகதிகளை நாடு திரும்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. காரணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், குடியுரிமையும் பெறாமல் நாடு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர், என்பதே.
சல்பாகன் அகதி முகாமில் தனது பேரன்களுடன் வசித்து வரும் குல்சும் பேகம், ‘தங்குவதற்கு வசிப்பிடமும், உணவும் கிடைக்கிறது, எங்களுக்கு உயிரை பற்றிய அச்சமில்லை’ என்றார்.
சல்பாகன் அகதி முகாமில் தனது மகன், மருமகன் மற்றும் பேரன்களுடன் வாழ்ந்து வரும் குல்சும் பேகம், தங்குவதற்கு வசிப்பிடமும், உணவும் கிடைப்பதால் தான் திருப்தியடைவதாக அல்ஜசீரா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்கூறினார்.
மேலும், “நான் இதற்கு மேல் கடவுளிடம் ஒன்றும் கேட்டவில்லை” என்கிறார்.
‘எனது மகனுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால், அகதிகளுக்கு இங்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம்’ என்றார்.
பல ரோஹிங்கியாக்கள் இந்த முகாம்களிளேயே சிறிய தொழில்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
சஃபீக் 4 வயதிருக்கும்போது தனது தந்தையுடன் 1991-ல், குட்டுப்பல்லாங் முகாமுக்கு வந்தவர். இப்போது 32 வயதில் ஒரு தையல் கடையை நடத்திவருகிறார். “இங்கே இருக்கும் அகதிகளிடமிருந்து பல ஆர்டர்கள் எனக்கு கிடைக்கிறது, இப்போது என்னால் புதிய ரக துணிகளையும் இங்கு காணமுடிகிறது” என்றார்.
மேலும், தனது சொந்த ஊரை பற்றி கேட்கையில் ஞாபகமில்லை என்கிறார். “நான் குழந்தைப் பருவத்தில் இங்கு வந்து சேர்ந்தேன், என் வாழ்நாள் முழுக்க ஒரு அகதியாகவே வாழ்ந்துள்ளேன்” என்றார்.
பலுகாளி அகதிகள் முகாமில் அமைந்துள்ள உள்ளூர் சந்தை, இங்கு
ரோஹிங்கியர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
பலுகாளி முகாமில் ஒரு ரோஹிங்கியா சிறுவன் பொருட்களை விற்பனை செய்கிறான்.
இரண்டு வருடத்திற்கு முன்னால் மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
“எனது சொந்தங்கள் இன்னும் மியான்மரில் உள்ளனர். ஆனால், அவர்கள் உயிரோடு உள்ளார்களா என்பது தெரியாது” என்கிறார் சல்பாகன் முகாமில் வசித்து வரும் ஹமீடா.
குட்டப்பல்லாங் – பலுகாளியில் உள்ள 27 முகாம்களில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் வசிக்கிறார்கள். உலகில் அகதிகள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளாக இவை உள்ளன.
சல்பாகன் முகாமில் வசிக்கக்கூடிய சஃபீனா பேகம், “அவர்கள் என் தந்தையை என் கண் முன்னமே கொன்றார்கள், நான் அங்கு திரும்பிச்செல்ல மாட்டேன்” என்கிறார்.
அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல விரும்புகிறார். ஆனால், “மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட என் மகள் ‘திரும்பி செல்வோம்’ என்ற செய்தியைக் கூறினால் மிகவும் அதிர்ச்சியடைகிறாள்” என்கிறார்.
இரண்டாம் முறையாக 3400 அகதிகளை நாடு திரும்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. எந்த விதபாதுகாப்பும் இல்லாமல், குடியுரிமையும் பெறாமல் நாடு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர் என்பதே காரணமாகும்.
பலுகாளி முகாமில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள்.
1991-ல் தனது தந்தையுடன் 4 வயது சிறுவனாக வந்த சஃபீக், நயபாரா முகாமில் வசித்து வருகிறார், அவர் திரும்பி செல்வதற்கு இனி எந்த காரணமுமில்லை.
தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு குரல் தூக்குக் கொட்டடியிலிருந்தே கேட்கிறது. மரண தண்டனை கூடாது என்று பொதுவாகக் குரல் கொடுப்பதோடு நில்லாமல் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தன் தலைக்கு மேலேயே தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குத் தண்டனையை எதிர்த்தும் ஆணித்தரமாக வாதிடுகிறார் பேரறிவாளன்.
நாட்டின் உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டதாலேயே ஒரு தீர்ப்பு இறுதியும் அறுதியுமான உண்மையாகி விடாது. குறிப்பாக, ‘தடா’ வழக்குகள் குறித்து இதை இன்னுங்கூட அழுத்தமாகச் சொல்லலாம். தடா சட்டத்தில் நீதியைத் தளைப்படுத்தும் கூறுகளில் ஒன்று, குற்றஞ் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை குறுக்கி விடுவதாகும். மற்றொன்று, உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பை மறுத்து முறையீட்டுப் படிகளில் ஒன்றை உருவி விடுவதாகும். இந்தக் குறையை போக்குமுகத்தான் என்று எண்ணும்படி பேரறிவாளன் நாட்டில் உள்ள நல்லோர்க்கு எல்லாம் செய்துள்ள மேல்முறையீடாகவே இம்மடலைக் கருதலாம்.
தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே அகச் சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டி அவர் வாதிடுவதைப் படிக்கும் போது இன்னுமொரு மேல்முறையீட்டுக்கு வாய்ப்பிருக்குமானால் பேரறிவாளன் குற்றமற்றவராக வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற எண்ணமே மேலிடுகிறது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் தன் பெற்றோர் அடைந்துள்ள துன்பத்தை அவர் எடுத்துக்காட்டுவது நமது நெஞ்சைத் தொடுகிறது. நாம் சொல்கிறோம். அவர்களோடு நாங்களுமிருக்கிறோம்! பேரறிவாளனின் முறையீட்டைக் கேட்டும், பிறரைக் கேட்கச் செய்தும், அவரை ஒப்புரவு நாடும் நல்லிளைஞனாக மீட்டு வந்து விடுதலை வானில் சிறகடிக்கக் காண்பதற்கு இயன்றதனைத்தும் செய்வோம்! (நூலின் முன்னுரையிலிருந்து)
நான், அ.ஞா. பேரறிவாளன், ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14.5 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.
… இம்முறையீட்டு மடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MMDA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு. இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, ‘குறுந்தகடு’ (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.
10.8.2005 தேதியிட்ட ‘குமுதம்’ வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு. இரகோத்தமன் சொல்கிறார் (இணைப்பு – 4)
கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை என்கிறார், இரகோத்தமன். அவை: ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப்பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரியுமா?
இரகோத்தமன்.
31.7.2005 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ வாரமிரு முறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும், (இணைப்பு-5) :
ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா ?
ஒரே ஒரு விஷயம் இருக்கிறது.. தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டைச் செய்து கொடுத்த நபர் யார்… என்கிற விஷயம்தான்!
ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்கு கண்காணிப்புக் குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.
எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்ட போது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர். (நூலிலிருந்து பக். 16-18)
இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தியதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்வித குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச்சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருட்களை நான் அவருக்கு வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?
… நான் கேட்க விரும்புவது இதைத்தான்! சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி செல்லை வாங்கிக் கொடுத்தேன் என்பதற்காக எனக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தாகி விட்டது. நாளை, வெடிகுண்டு செய்தவனுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது?
இது குறித்தான விசாரணை பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) பரிசீலனையில் உள்ளதையும், அந்த விசாரணையின் முடிவு எனது வழக்கை மிகவும் பாதிப்பதாக அமையும் என்பதையும் குறிப்பட விரும்புகிறேன்.
மேற்சொன்ன எனது தரப்பு நியாயங்களையெல்லாம் முழுக்க முழுக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்திருக்கிறேன். (நூலிலிருந்து பக்.43-44)
உலகின் சரிபாதிக்கு மேலான 113 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாகி விட்டது என்பதாலோ, ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது’ என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்பதாலோ, நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை.
மரண தண்டனையின் கொடுங்கரங்கள் எனது வாழ்வைச் சின்னாபின்னாப்படுத்தியிருப்பினும், எனது குடும்பத்தார் வாழ்வைத் துன்பக் கடலில் ஆழ்த்தியிருப்பினும், மனித நேயத்தின் அடிப்படையில் இம்மரண தண்டனையை மாற்றியமைக்கக் கோரவில்லை .
காரணம், எனது கடந்த கால வாழ்க்கை மனித அறத்திற்கும், ஒழுக்கநெறிக்கும் உட்பட்டதாய் இருப்பினும், மனிதனை மனிதன் மதித்து வாழ வேண்டும் என்பதற்காகத் தனது வாழ்நாளெல்லாம் போராடி மடிந்த மனிதநேயர் தந்தை பெரியார் கொள்கை வழி வாழ்பவன் என்றாலும், உலகப் பொதுமறை தந்த வள்ளுவனை வழிகாட்டியாய் ஏற்று நடப்பவனாய் இருப்பினும், இன்றைய எனது சூழலில் மனிதநேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.
பிறகு நான் ஏன் தண்டனைக் குறைப்பைக் கோருகிறேன் எனில், ”எனக்கு நன்றாகத் தெரியும் – தலைச்சேரியில் இளம் வழக்குரைஞராக விசாரணை வழக்குகளில் பணி செய்து கொண்டிருந்த போது பார்த்துள்ளேன். குற்றமற்றவர்கள், நூற்றுக்கு நூறு நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்காக இப்போதும் என் இதயத்தில் குருதி வழிகிறது.” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் 25.6.1998 இல் திருவனந்தபுரத்தில் ‘மரணதண்டனை’க் கெதிரான மாநாட்டில் பேசியவற்றுக்கு உதாரணமாக எனது வாழ்வு அமைந்து விட்டதே என்ற வேதனையோடு என் வழக்கை வைத்துள்ளேன்.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த உலகின் எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்து விடவில்லை.
முடிவாக என் வழக்கின் சாரத்தை தருகிறேன்.
1. வழக்கு ‘தடா’ சட்டப்படி நடந்தது.
2. சாதாரண சட்டங்கள் வழங்கிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.
3. இறுதியில் இவ்வழக்கிற்கு ‘தடா’ பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
4. அதன் பின்னரும், ‘தடா’ வாக்குமூலம் எனும் காவல்துறை அதிகாரி பதிவு செய்த ஆவணத்தின் அடிப்படையிலேயே தண்டனை.
5. அந்த வாக்குமூலத்திலும்கூட சதிச் செயல் எனக்குத் தெரியும் என்பதற்கோ சிவராசன், தனு, சுபா ஆகியோரில் எவரேனும் கூறினர் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை .
இவற்றுக்கெல்லாம் மேலாக ‘தடா’ எனும் கொடூரச் சட்டத்தால் நீதிமன்ற முறையீட்டு வாய்ப்பு ஒன்று (High Court Appeal) பறிக்கப்பட்டது. மேலும் ஒரு சட்ட வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்குமானால் நான் விடுதலை பெற்றிருப்பேன். (நூலிலிருந்து பக்.46-47)
நூல் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் ஆசிரியர் : அ.ஞா. பேரறிவாளன்
வெளியீடு : மோ. ஸ்டாலின் நினைவு நூலகம், 87, கீழை அலங்கம், தஞ்சாவூர் – 613 001. தொலைபேசி எண் : 94438 65698
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 08
பெற்றோர்களுக்கான கலை நிகழ்ச்சி
இன்று அரிச்சுவடி விழா!
குழந்தைகளே ஒரு கெட்டியான காகிதத்தில் எழுதிய இந்த அறிக்கையை முன் மண்டபத்தில் மாட்டுகிறோம். அங்கு இதை எல்லோரும் பார்ப்பார்கள்.
அரிச்சுவடி விழா! கவிதைகள், விடுகதைகள், பழமொழிகள்.
பாடல்கள், நடனம்.
தாள இசைக் குழு. பெற்றோர்களுக்கு ரகசியம்.
இவையெல்லாம் உண்டு! எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கின்றனர்.
இது தான் எங்கள் சுவரொட்டி. இதைத் தாழ்வாரத்தில் உள்ள சுவரில் மாட்டுகிறோம். அருகே எழுத்துகளைப் பெரிதாக ஒட்டுகிறோம். உழைப்புப் பாடத்தில் குழந்தைகளே இவற்றை உருவாக்கினார்கள். வகுப்பறையில் மேசைகளை ஓரமாகப் போடுகிறோம். அவற்றிற்குப் பின் விருந்தினர்கள் அமர்வார்கள். எல்லாம் தயார்.
வலேரி மாமா இப்போது வர வேண்டும். அவர் எஞ்சிய 40 நிமிடங்களில் குழந்தைகளுடன் சேர்ந்து இசை நாடக ஒத்திகையை நடத்துவார்.
“ஏன் வலேரி மாமா வரத் தாமதமாகிறது? மணி என்ன?” என்று லேலா கவலைப்படுகிறாள்.
“அவர் ஒன்றும் தாமதிக்கவில்லை. இதோ கடிகாரம், நீயே பார்!” என்று நான் கைப்பையில் உள்ள கடிகாரத்தை எடுத்துக் காட்டுகிறேன். அவள் யோசித்தபடியே இதைப் பார்க்கிறாள்.
“கடிகாரத்தில் மணி பார்க்கவே எனக்கு முடிய மாட்டேன் என்கிறது. என்ன பண்ணுவதென தெரியவில்லை! எனக்குக் குழந்தை பிறந்து, ‘மணி என்ன?’ என்று கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது, வெட்கமாக அல்லவா இருக்கும்?”
“ஏன் வெட்கமாயிருக்கும்? நான் தான் உங்களுக்கு இதைச் சொல்லித் தரவில்லையே!”.
வலேரி மாமா வருகிறார். குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர்.
குழந்தைகள் விரைவாக இரண்டு வரிசைகளில் அரை வட்டமாக நிற்கின்றனர். முதல் வரிசையில் நிற்பவர்கள் சிறு நாற்காலிகளில் அமருகின்றனர், அவர்கள் முன் உள்ள மேசைகளில் கிசிலாஃபான்களும் பேரிகைகளும் உள்ளன. மற்றவர்களின் கரங்களில் மற்ற இசைக் கருவிகள் உள்ளன.
“எதிலிருந்து துவங்குவோம்?” என்று வலேரி மாமா கேட்கிறார்.
“விருந்தினர்கள் உள்ளே வந்ததும் வால்ட்ஸ் இசையோடு அவர்களை வரவேற்போம்.”
“எல்லாம் தயாரா…”
ஒத்திகை விரைவாக நடந்தது. இதனிடையே எங்கள் வகுப்பறை அருகே தாழ்வாரத்தில் நிறைய பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள், பள்ளி ஆசிரியர்கள், பயனீர்கள் குழுமினர். வால்ட்ஸ் இசை ஒலிக்க, அவர்கள் வகுப்பறையினுள் நுழைந்து மேசைகளுக்குப் பின் உட்கார்ந்த போது எல்லோருக்கும் இடம் போதாதது தெரிய வந்தது. சிலர் வகுப்பறையின் உள்ளும் சிலர் தாழ்வாரத்திலும் கூட நிற்க வேண்டியிருக்கும். வகுப்பறையில் நடப்பது வெளியில் உள்ளவர்களுக்கும் கேட்பதற்காகக் கதவை அகலத் திறந்தோம்.
“அன்புள்ள அப்பாக்களே, அம்மாக்களே, தாத்தா, பாட்டிகளே! அன்புள்ள விருந்தினர்களே! எங்களை நீங்கள் பாராட்டலாம். இன்று எழுத்துகளைப் படிப்பதை முடித்தோம், எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும்!” என்று நாத்தோ முன் வந்து கம்பீரமாக இப்படிச் சொன்னாள். கர ஒலி!.
லேரியும் சாஷாவும் கவிதைகளைப் படிக்கின்றனர்.
குழந்தைகள் வரிசையாக விடுகதைகளைச் சொல்லி தாமே உடனே விடைகளையும் சொல்கின்றனர்.
வாத்திய இசைக்குழு இசைக்கிறது, குழந்தைகள் பாட்டுப் பாடுகின்றனர். ஒருவர் பின் ஒருவராகப் பழமொழிகள், வசனங்களைச் சொல்கின்றனர்.
சோம்பேறி விவசாயியைப் பற்றி இலிக்கோ கதை சொல்கிறான். மீண்டும் இசைக்குழு வாசிக்கிறது.
“அன்புள்ள அப்பாக்களே, அம்மாக்களே, தாத்தா, பாட்டிகளே! அன்புள்ள விருந்தினர்களே! எங்களை நீங்கள் பாராட்டலாம். இன்று எழுத்துகளைப் படிப்பதை முடித்தோம், எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும்!”
சில குழந்தைகள் நடனமாடுகின்றனர், வேறு சிலர் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டுகின்றனர், சிரிப்புக் கதைகளைப் படித்துக் காட்டுகின்றனர்.
“இப்போது நம் ரகசியம்! அன்புள்ள பெற்றோர்களே! உங்களுக்காக நாங்கள் பரிசுகளைத் தயாரித்துள்ளோம். இந்த பாக்கெட்டுகளில் உங்களுக்காக நாங்கள் தயாரித்த பொருட்கள் உள்ளன. நாங்கள் எப்படி எழுதுகிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? நாங்கள் எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் தெரியுமா? நாங்கள் எப்படி வரைகிறோம் தெரியுமா? எல்லாம் இந்த பாக்கெட்டுகளில் உள்ளன” என்கிறாள் தேயா. கடைசி வாக்கியத்தை எல்லா குழந்தைகளும் சேர்ந்து சொல்கின்றனர். விருந்தினர்கள் கை தட்டுகின்றனர்.
குழந்தைகள் “அன்பு அம்மா, அப்பாவிற்கு” என்று எழுதப்பட்ட அழகிய பாக்கெட்டுகளைப் பெற்றோர்களுக்குத் தருகின்றனர்.
“விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழியுங்கள்!” என்று நான் வாழ்த்துச் சொல்கிறேன்.
ஒவ்வொருவராக என்னருகே வந்து முத்தமிட்டு விடை பெறுகின்றனர்.
அம்மா, அப்பாக்களின் முகங்களில் திருப்திகரமான புன்னகை. வளர்ந்து விட்ட, படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்ட தம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர்கள் மெதுவாக வகுப்பறையிலிருந்து வெளியேறுகின்றனர்.
வாகனத்துறை விற்பனை வீழ்ச்சிக்கு இன்றைய தலைமுறையினர் மாதாந்திர தவணை கட்ட பயந்து ஓலா, உபேர் பயன்படுத்துவதே காரணம் என சங்கித்தனமான விளக்கத்தை அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சங்கிகளின் சிந்தனை நூற்றாண்டு பழமையானது என்னும்போது, எவ்வளவு படித்தாலும்; எவ்வளவு உயர்ந்த கல்லூரிகளில் படித்தாலும் வளரவே வளராது என்பதற்கு நிர்மலா சீதாராமன் ஆகச்சிறந்த உதாரணமாகிவிட்டார்.
நிர்மலாவின் விளக்கத்துக்கு புதிய விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் மூத்த சங்கி நிதின் கட்கரி, பார்க்கிங் கட்டணத்தை தவிர்க்கவே வாகனங்களை வாங்குவதை பலர் தவிர்ப்பதாக கூறியுள்ளார். இதில் யார் சொன்ன ‘விளக்கம்’ மிகவும் முட்டாள்தனமாக உள்ளது என தனி போட்டியே நடத்தலாம்.
மத்திய அமைச்சர்களின் பொருளாதார மந்தநிலை விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் #BoycottMillenialls மற்றும் #SayItLikeNirmalaTai போன்ற ஹேஷ்டேக்குகளில் சங்கி அமைச்சர்களுக்கு மேலும் சில ‘யோசனை’களை வழங்கினர்.
வீடு விற்பனை சரிந்துள்ளது காரணம் அனைவரும் ஆன்லைனிலேயே வசிப்பதுதான் என்கிறார் சுகதா.
சாந்தனு சிங்: விமானத்துறை மந்த நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது, ஏனெனில் இன்றைய தலைமுறை இப்போதுதான் அலாவுதீன் படத்தைப் பார்த்து கார்பெட்டில் பறந்துகொண்டிருக்கிறது.
Aviation industry is facing slowdown because millennials just saw the Aladdin remake and switched to flying carpets.#SayItLikeNirmalaTai
ஸ்ரீவத்சவா : நம்முடைய நிதியமைச்சர் வாட்சப் பல்கலையில் ரேங்க் வாங்கியவராக இருப்பார். பொருளாதார வீழ்ச்சி, அரசாங்கத்தின் தவறா, தனிநபர்களின் தவறா? அடுத்த முறை நிர்மலா, இப்படியும் சொல்வார், மக்கள் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை பெருகுகிறது!
Nirmala Sitharaman blames young people prefering Uber & Ola for falling automobile sales 🙄
Our FM seems to be a rank student in WhatsApp University. Crashing economy is everyone else's fault, not Govt's?
தமிழ் முகநூல் பதிவர்களும் ட்விட்டரில் வந்த பலர் பகடிகளை எடுத்து பகிர்ந்திருந்தனர். பார்ப்பனர்கள் அறிவாளிகள் என்கிற பிம்பம் உடைவதாகவும் பலர் எழுதினர்.
“பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பார்ப்பனர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்பதும், வேத காலத்துக் காட்டுமிராண்டிகள் என்பதும் முழுமையாகத் தெரிய வந்துள்ளது.” என்கிறார் பாலச்சந்திரன்.
கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கி வைத்த பொருளாதார சீரழிவை இந்த ஆட்சி காலத்தில் அனுபவிக்க வைத்துவிட்டது மோடியின் அரசாங்கம். மந்தநிலையை சீராக்குவதற்கு பதிலாக, தனது அறிவிலித்தனத்தை காட்டும் விளக்கங்கள் மூலம் மோடியின் அமைச்சர்கள் உளறிக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாத சமூகம், அறிவிலிகளை பகடி செய்துகொண்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் தேவை இன்று தமிழகத்துக்கு கட்டாயம் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவரைப் பற்றிய சில முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனை நிறைவேற்றும் வகையில் இந்த வினாடி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சியுங்கள்.
(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)
பெரியார் பிறந்த ஆண்டு எது?
1921-ம் ஆண்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஈரோட்டில் தலைமை தாங்கிய போராட்டம் எது?
கேரளாவில் ஈழவர், தீயர், புலையர் முதலானோர்க்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க, வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் கோவில் முன்பாக நடந்த போராட்டத்தில் பெரியார் தனது துணைவியார், தங்கையாருடன் கலந்து கொண்டு ஒரு மாத தண்டனை பெற்றார். தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 4 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தப் போராட்டம் நடந்த ஆண்டு எது?
வ.வே.சு அய்யர் நடத்திய “பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமத்தில்” பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும் இருவருக்கும் தனிப்பந்தியும், தனி தண்ணீர் பானைகளும் வைத்திருந்தார். இதை பெரியார் எதிர்த்து காங்கிரசு சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியை நிறுத்துவதற்கு போராடினார். இந்த ஆசிரமம் எந்த ஊரில் இருந்தது?
ஈரோட்டில் 2.5.1925 அன்று பெரியார் துவக்கிய வார இதழின் பெயர் என்ன?
1925-ம் ஆண்டு பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி “இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை” என்று முழங்கியதற்கு காரணம் என்ன?
1927-ம் ஆண்டில் பெரியார் செய்தவற்றில் முக்கியமானவை என்னென்ன?
1928-ம் ஆண்டில் எந்தப் போராட்டத்திற்காக பெரியார் சிறை வைக்கப்பட்டார்?
முக்கியத்துவம் வாய்ந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினை பெரியார் 1929-ம் ஆண்டில் நடத்தினார். டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியன் இம்மாநாட்டுக்குத் தலைமையேற்றார். முக்கியத்துவம் வாய்ந்த 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு எந்த ஊரில் நடந்தது?
1930-ம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் போது பெரியார் ஆதரித்த மசோதா எது?
சோவியத் யூனியனை பெரியார் சுற்றிப் பார்த்த ஆண்டு எது?
1944-ல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து அண்ணா பிரிந்து சென்று தி.மு.க. துவங்கிய ஆண்டு எது?
1956-ம் ஆண்டில் எந்தக் கடவுளின் படத்தை கொளுத்துமாறு பெரியார் அறைகூவல் விடுத்தார்?
1957-ம் ஆண்டில் பெரியார் அறிவித்த போராட்டம் எது?
பெரியார் இறந்த ஆண்டு எது?
நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !
கேள்வி: //நடிகர் சூர்யா திடீர் என்று கல்வி கொள்கை பற்றி பேச காரணம் என்ன? இவ்வளவு நாள் இல்லாம, இப்போதைய அரசு தான் இதுக்கு காரணமா?
இதனால் நடிகர் சூர்யா படத்துக்கு தமிழக அரசு மூலம் பிரச்சனை வருமா?//
– விஜயகுமார்
அன்புள்ள விஜயகுமார்,
‘அம்மா’ ஆட்சி, அடிமைகள் ஆட்சியான பிறகு கமலஹாசனுக்கே துணிச்சல் வந்திருக்கும் காலத்தில் சூர்யாவும் பேசுகிறார். அவரது ‘அகரம்’ அறக்கட்டளை கல்வி உதவிகள் சிலவற்றை செய்கிறது. புதிய கல்விக் கொள்கையின் தீமைகளை அவரது பார்வை, அனுபவத்தில் இருந்து பேசுகிறார்.
உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள் சூர்யாவை குறிவைத்து தாக்குகிறார்கள். பாஜக-வின் தயவில் பாசிச ஆட்சி படரந்து வரும் காலத்தில் இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் எழுவதை நாம் வரவேற்க வேண்டும். இதனால் சூர்யா படத்திற்கு தமிழக அரசு சார்பில் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. ஏற்கெனவே பாஜக-வின் விளம்பரத்தால் மெர்சல் ஓடிய கதை அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
♦ ♦ ♦
கேள்வி: //நீங்கள் இவ்வளவு சொன்னீர்கள் சரி, அப்போ தமிழ்நாட்டிற்கு யாரு தான் சரியான ஆளு?
எனக்கு தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சரியான ஆளு யாருநா அது சீமான் மட்டும் தான், மற்றவர்கள் எல்லாம் பணத்தாசை பிடித்தவர்கள்.
அப்போது தமிழ்நாட்டிற்கு சரியான முதல்வர் யார் என்று நீங்கள் கூறுங்கள்?//
– கு. செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்,
தமிழகத்தை முதலமைச்சர்தான் முற்றிலுமாக ஆள்கிறார் என்று நாம் சிந்தையில் பழகியிருக்கிறோம். இன்றைய தேதியில் முதலமைச்சரால் என்ன செய்ய முடியும்? மின் கட்டண உயர்வை தீர்மானிப்பது யார்? மின்சார ஒழுங்குமுறை ஆணையம். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தீர்மானிப்பது யார்? அதுவும் எண்ணையை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அந்நிறுவனங்களே தீர்மானிக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கட்டணத்தை அந்தந்த மருத்துவமனை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மறைமுக வரியை மத்திய அரசு முதன்மையாக தீர்மானிக்கிறது. மக்கள் அதை எண்ணிறந்த வழிகளில் செலுத்துகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும்? அதை முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆம்னி பேருந்து கட்டணத்தை அந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவல்துறைக்கு அதிகம் ஆட்களை எடுப்பதை மட்டுமே தமிழக அரசு செய்ய முடியும். அந்தக் காவல்துறையும் வேதாந்தா போன்ற முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் மக்களைச் சுட்டுக் கொல்லும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முதலமைச்சர் என்பவர் மேற்கண்ட செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவ்வப்போது சாலையில் ஊர்வல பந்தா மட்டுமே போக முடியும்.
இதற்கு மேல் தமிழக பட்ஜெட்டில் இருக்கும் நிதிப் பற்றாக்குறையோடு கடன் வாங்கி சில நலத்திட்டங்களை அமல்படுத்தலாம். கடன் வாங்கினால் அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை உலக வங்கியும், ஆசிய வங்கியும், இதர வெளிநாட்டு வங்கிகளும் போடும். எனவே பண ஆசை பிடித்தவரா ஒரு முதல்வர் என்ற பிரச்சினையை விட இங்கே பணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமே முதலமைச்சருக்கு கிடையாது. சாலை ஒப்பந்தங்கள், இதர கட்டுமானங்களில் ஆளும் கட்சிகள் அடிக்கும் கொள்ளைகளை வைத்து நீங்கள் யோசிக்கிறீர்கள். அது உண்மைதான். இந்த அமைப்பு முறை ஆளும் கட்சிக்கு நிறைய ஊழல் செய்ய வாய்ப்பளிக்கிறது. அப்படி ஊழல் செய்யாமல் இருப்பவர்களே ஆனாலும் மக்களுக்கு அதிகாரத்தோடு நல்ல நடவடிக்கைகளை செய்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதும் முக்கியமானது. பரிசீலித்து பாருங்கள்!
எனவே யார் நல்ல முதல்வர் என்று ஆய்வதை விட இந்த அமைப்பு முறை மக்களுக்கானதாக இல்லை. அதை எப்படி மாற்றுவது என்பதே நம் முன் உள்ள கேள்வி!
கேள்வி: //புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை வைத்து போராடுவதை தவறு என தெரிந்திருந்தும் ஏன் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை கண்டிக்கவில்லை?//
– நிலா
அன்புள்ள நிலா,
இந்த கோரிக்கையில் நமது சாதி ‘முன்னேறிய’ சாதிப் பட்டியலில் இணைந்து தாழ்த்தப்பட்டோர் என்ற இழிநிலைமை மறைந்து விடும் என்று பள்ளர் இன மக்களில் சிலர் கருத்துரீதியாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வகையில் இது பார்ப்பனியமயமாக்கத்தோடு தொடர்புடையது. தன்னை ‘கீழ்’ சாதி என்று நடத்தும் கொடுமைகளை எதிர்த்து சமர் புரிவதற்கு பதில் தன்னை ‘மேல்’சாதியாக மாற்றிவிடுவதையே பார்ப்பனியமயமாக்கம் என்கிறோம்.
அவ்வகையில் இது சாதி உணர்வை பெருமைப்படுத்தும் கருத்தாகவும் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் குறிப்பிடும் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரடியாக கண்டிப்பதற்கு அஞ்சுகின்றன. அமைப்புகள் மட்டுமல்ல பள்ளர் இன மக்களே கூட அப்படி கண்டிப்பதற்கு பயப்படும் நிலைதான் இருக்கிறது.
♦ ♦ ♦
கேள்வி: //2019 பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் இழுபறிக்கு காரணம்?//
– டி. கண்ணன்
அன்புள்ள கண்ணன்,
சந்தேகமில்லாமல் சாதிய உணர்வுதான். இந்த தேர்தலில் திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வென்றிருக்கிறார். இந்த இழுபறிக்கு காரணம் திருமாவளவன் வெற்றிபெறக்கூடாது என்று பா.ம.க வரிந்து கட்டி வேலை செய்தது.
3 மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன. இவை பெரும்பாலும் வன்னிய மக்களின் செல்வாக்கு கொண்ட தொகுதிகள்தான்.
எனினும் பல கிராமங்களில் சாதிய உணர்வை கடந்து வன்னிய மக்கள் திருமாவளவனுக்கு வாக்களித்திருந்தனர். அதனால்தான் அதிமுக – பாமக கூட்டணியின் சாதிய பலத்தினை தாண்டி மயிரிழையில் திருமாவளவன் வெற்றி பெற்றார். எனவே இதில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது.
கேள்வி: //இந்தியாவில் இராணுவ ஆட்சி வரப் போகிறது என்று நக்கீரன் பத்திரிக்கையில் கூறுகிறார்கள். இராணுவ ஆட்சி வந்தால் மக்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்?//
– திரு அன்பு
அன்புள்ள திரு அன்பு,
இந்தியாவில் அப்படி இராணுவ ஆட்சி வருவதற்கான சாத்தியமில்லை. அதே நேரம் இங்கிருக்கும் ‘ஜனநாயக’ ஆட்சியே ‘இராணுவ’ ஆட்சி போன்று சர்வ அதிகாரத்துடன் செயல்படுகிறது.
குஜராத் கலவரம் மற்றும் இந்துமதவெறியர்கள் குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களை கும்பல் கொலை செய்த குற்றவாளிகள் குற்றப் பத்திரிகையிலேயே சேர்க்கப்படுவதில்லை. நீதித்துறை, கல்வி, வரலாறு அனைத்தும் காவி மயமாகி வருகிறது. மோடியை விமரிசிக்கும் அறிவுஜீவிகள் சிறைகளில் முடக்கப்படுகிறார்கள். இது போக காஷ்மீரும் சில வடகிழக்கு மாநிலங்களும் நீண்ட காலமாக இராணுவ ஆட்சியில்தான் வாழ்ந்து வருகின்றன.
ஒருவேளை கற்பனையாக இராணுவ ஆட்சி இங்கு வந்தால் என்ன நடக்கும்? அரசியல் சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகள் அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, குடியுரிமை, இதர உரிமைகள் எதுவும் இருக்காது. அல்லது இராணுவம் முடிவு செய்யும். இன்றைக்கு காஷ்மீரில் இருக்கும் நிலைமை இந்தியா முழுவதற்கும் வந்து விடும். குறைந்த பட்சம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அப்படி முடக்கி விடுவார்கள்.
யாரையும் எப்போதும் கைது செய்யலாம். பிணை மறுக்கப்படும். எங்கேயும் எப்போதும் எதையும் சோதித்தறியலாம். நீதி என்பது ஒருவழிப்பாதையாக ஆளும் அரசின் நலன்களுக்காக மட்டும் இருக்கும். இராணுவம் செய்யும் கொலைகள், அட்டூழியங்களை கேள்வி கேட்க முடியாது. இவையெல்லாம் உலகில் இராணுவ சர்வாதிகாரம் நடந்த நாடுகளில் பரவலாக பார்க்க முடியும்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் முன்னேறிய நாடுகளில் கூட கடும் சட்டங்களை இயற்றி அதிகாரப்பூர்வமாகவே அதிக அதிகாரத்தை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே நேரடி இராணுவ ஆட்சியும் சரி, மறைமுக இராணுவ ஆட்சியும் சரி தன்மையில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.
♦ ♦ ♦
கேள்வி: //உண்மையான தலைவர் யார் தான் இப்போது தமிழ் நாட்டில் ?//
– அசபு லிங்கம்
அன்புள்ள லிங்கம்,
மீம்களை வைத்துப் பார்த்தால் வடிவேலுதான் பெரும் தலைவர்! அரசியல் விமர்சனங்களை மீம்கள் வழியாக போட்டுத் தாக்கும் தமிழக இளைஞர்களுக்கு வடிவேலு கை கொடுக்கிறார். மற்றபடி இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் இங்கே மக்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமாக இருக்கட்டும், தஞ்சை மீத்தேன் எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும், எட்டு வழிச்சாலையாக இருக்கட்டும், போக்குவரத்து தொழிலாளர் போராட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் மக்களே முன்னணியாக இருக்கின்றனர்.
இந்தப் போராட்டங்களை வாக்கு வங்கி அரசியலில் உள்ள கட்சிகள் நடத்தவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எவரும் இப்படி ஒரு போராட்டத்தை கட்டியெழுப்பி தொடர்ச்சியாக போராடுவதில்லை. போராடும் மக்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, போராட்டத்தின் தீவிரத்தை தணிப்பது என்பதைத் தாண்டி அவர்கள் போவதில்லை. எனவே போராட்டம்தான் உண்மையான தலைவர்களை உருவாக்கும் என்ற விதிப்படி இன்றைக்கு தமிழகத்தில் தலைவர்கள் என யாரைச் சொல்ல முடியும்?
♦ ♦ ♦
கேள்வி: //இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து மதவெறி தீவிர விளைவை ஏற்படுத்தும் என்பது உண்மையா? (அதாவது நாட்டையும் மக்களையும் துண்டாடுவது)//
– ஜெயபால்
உண்மைதான். முஸ்லீம் தீவிரவாதமே இந்துமதவெறியின் எதிர் விளைவுதான். இந்துமதவெறி என்பது பெரும்பான்மை மக்களின் பெயரில் செயல்படுவதால் அது அரசு, அரசாங்கம், நீதித்துறை, ஊடகம், என அனைத்து அதிகார பீடங்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை பெற்றிருக்கிறது. மோடி பிரதமராகவும், குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலைக்கு காரணம் அவர்தான் என்று உத்திரவு போட்ட முன்னாள் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பதும் சமீத்திய சான்று. இன்னும் மாட்டுக்கறியின் பெயரில் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லூகான், அக்லக் வழக்குகளில் குற்றவாளிகள் பகிரங்கமாக விடுதலை செய்யப்படுவதும், அவர்கள் பொது இடத்தில் வரவேற்கப்படுவதும் இப்படி பல சம்பவங்கள் இருக்கின்றன.
இந்த நாட்டில் ஜனநாயகம் முறையாக வேலை செய்யவில்லை, இந்துமதவெறிக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற நிலைமையே சில முசுலீம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுகிறது. அப்படி முறையாக ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரத்தினர் தண்டிக்கப்பட்டிருந்தால் எந்த முசுலீம் இளைஞன் தீவிரவாதம் பக்கம் போகப் போகிறார்?
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் அருள் எழிலன் பகிர்ந்திருந்த செய்தியை பொருத்தம் கருதி இங்கே இணைக்கிறோம்.
நமது இந்தியாவின் நாயகர்கள்!
2002 இருண்ட காவி இருள் இஸ்லாமிய மக்களை குஜராத்தில் வேட்டையாடிய நாட்கள் அவை. துடிக்க துடிக்க பல்லாயிரம் இஸ்லாமியர்கள் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வேட்டையாடப்பட்ட அந்நாளில் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த புகைப்படங்கள். காப்பாற்றக் கோரி ரத்தக்காயங்களுடன் கெஞ்சும் குத்புதீன் அன்சாரி..
காவி ரிப்பனுடன் கொலைவாளோடு வெறிக்கூச்சலிடும் அசோக் மோச்சி. குஜராத் கலவரம் இந்தியாவின் மாடலாக அரசியல் அரங்கில் மாற்றப்பட்டது. அதன் வடிவத்தை மாற்றி பல இடங்களிலும் பரிசோதனை செய்து அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க, அசோக் மோச்சி என்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியை அரசியல் படுத்தினார்கள் கம்யூனிஸ்டுகள்.
2014–ம் ஆண்டு கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் அசோக் மோச்சியும், குத்புதீன் அன்சாரியும் ஒரே மேடையில் ஏறினார்கள். காவி பயங்கரவாதிகளின் அரசியலை புரிந்து கொண்ட அசோக் மோச்சி அந்நாட்களில் தான் நடந்து கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டார். அதுவரை தான் வாழ்ந்த வாழ்வை மற்றி சமூக நல்லிணக்கத்திற்கானதாக மாற்றினார்.
அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார்.
இதோ அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார். இருவருக்குமிடையில் ஆழ்ந்த நட்பை அன்பை பரஸ்பரம் மரியாதையை உருவாக்கியுள்ளது இந்த காலம். “இந்து வர்ணாசிரம அமைப்புதான் என்னை செருப்பு தைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்து வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்காது. அதனால் நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் அசோக் மோச்சி.
காலமும் மனித மனமும் எத்தனை உன்னதமானது அன்பை விடமதங்களும் சாதியும் எதுவும் இல்லை என்பதை அசோக் மோச்சி நிரூபித்திருக்கிறார். நாம் விரும்பும் இந்தியா இதுதானே?
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
முதல் வியாதியான மலேரியா பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு வரை கூட கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த நோயை உண்டாக்கும் ப்லாஸ்மோடியம் வைவாக்ஸ் எனும் நுண்ணியிரியை கொல்லும் மருந்துகளை நாம் கண்டறிந்ததால் அதன் கொட்டம் அடங்கியிருக்கிறது.
ஆனால் இன்னும் இந்த நோய் சென்னை பெருநகரம் மற்றும் ராமநாதபுரத்தில் பரவலாக காணப்படுகிறது. அனாபிலஸ் வகை கொசுவின் பெண்ணினம் கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. எனக்குக்கூட ஒரு முறை இந்த நோய் வந்து சென்றிருக்கிறது. க்ளோரோகுயின் மாத்திரை தான் என்னைக்காப்பாற்றியது.
ஏடிஸ் எனும் புலிக்கொசு (கால்களில் புலி போன்று வரிகள் இருப்பதால் இந்த காரணப்பெயர்) பரப்பும் நோய் இது. இந்த நோய்க்கான காரணி ஒரு வைரஸ். இந்த நோயின் முற்றிய நிலை டெங்கு ரத்தக் கசிவு நோயாக மாறி உயிரைப் பறிக்கும்.
2017-ம் வருடம் மழைக்காலத்தில் டெங்கு தமிழ்நாடு முழுவதும் வந்து படாதபாடு படுத்தியது. இந்த கொசு நல்ல நீரில் மட்டுமே உயிர் வாழும். ஆகவே நம் வீட்டைச்சுற்றி நல்ல நீர் சிறிது அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிரட்டை, ப்ளாஸ்டிக் பாட்டில், டயர்கள் போன்றவை இந்த கொசுக்களின் உற்பத்தி ஆலைகள்.
அடுத்த நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.
உத்தரபிரதேசத்தில் நிறைய குழந்தைகள் இறக்கக்காரணமாய் இருந்த அதே நோய் தான். இந்த நோயை பரப்புவது க்யூலக்ஸ் எனும் கொசு இனம். தமிழகத்தில் இந்த நோய் பரப்பும் கொசு பின்வரும் மாவட்டங்களில் பரவலாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :
1. பெரம்பலூர்
2. விழுப்புரம்
3. கடலூர்
4. திருவண்ணாமலை
5. விருதுநகர்
6. திருச்சி
7. தஞ்சாவூர்
8. மதுரை
9. புதுக்கோட்டை
10. கரூர்
11. திருவள்ளூர்
12. திருவாரூர்
இந்த மாவட்டங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒன்பது மாதம் மற்றும் ஒன்றரை வயதில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது.
கொசுவின் வகைகள் மற்றும் அவற்றால் பரவும் நோய்கள்.
அடுத்த நோய் யானைக்கால் நோய்.
இந்த நோய் பரப்பும் கிருமி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :
1. காஞ்சிபுரம்
2. திருவள்ளூர்
3. வேலூர்
4. கடலூர்
5. திருவாரூர்
6. கன்னியாகுமரி
7. நாகை
8. விழுப்புரம்
9. திருச்சி
10. பெரம்பலூர்
11. புதுக்கோட்டை
12. திருவண்ணாமலை
13. தஞ்சாவூர்
14. அரியலூர்
இந்த நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் மாத்திரை நம்மிடம் இருக்கிறது அதற்குப்பெயர் “Di Ethyl Carbamazine” சுருக்கமாக DEC என்று அழைக்கப்படும்.
ஒரே மாத்திரை தான் கிருமி குளோஸ். இந்த மாத்திரையை நோய் பரவும் மாவட்டங்கள், கிராமங்களில் ஒருமுறை அனைவருக்கும் உண்ணக்கொடுப்பார்கள்.
இந்த மாத்திரையால் தான் இப்போது யானைக்கால் வியாதி அரிதிலும் அரிதாகிவிட்டது
சிக்கன் சாப்பிடுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடுமையான மூட்டு வலியை உருவாக்கும் இந்த நோயை; 2006 -ல் தமிழகம் முழுவதும் வந்த சிக்கன் குனியாவை யாராலும் எளிதில் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
இதுவும் டெங்குவும் ஒரே வகையான ஏடிஸ் கொசுவால் பரப்பப்படுபவை. மேற்சொன்ன நோய்கள் அனைத்தும் கொசுவால் பரப்பப்படும் நோய்கள்.
***
தமிழகத்தில் கொசு கடிக்காமல் யாரேனும் இருக்கிறீர்களா? கொசு கடி வாங்குபவர்கள் அனைவரும் அலர்ட்டாக இருக்க வேண்டும்.
♠ மலேரியா வந்தால் கடும் குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் வரும். சென்னை அல்லது ராம்நாடு சென்று வந்தீர்களா? கவனம் தேவை.
♠ டெங்குவில் முதல் மூன்று நாள் கடும் காய்ச்சல் இருக்கும் அடுத்த மூன்று நாட்கள் உடல் குளிர்ந்து விடும். பகலில் கொசு கடிக்கிறதா? உசாரய்யா உசார்.
♠ வயல்வெளிகள் / மலை காடுகள் போன்றவற்றில் தான் அதிகம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரப்பும் க்யூலக்ஸ் இருக்கும்.
எது எப்படியோ காய்ச்சல் / உடல் வலி / அசதி என்று வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருந்தகங்களில் நேரடியாக மருந்து வாங்கி உண்பது தவறு.
கொசுக்கடி வாங்காமல் இருக்க வீடு முழுவதும் ஜன்னல்களில் வலை அடிக்கலாம். குழந்தைகளை முழு ஆடை போட்டு மூடி வைக்கலாம். வலைக்குள் குழந்தைகளை உறங்க வைக்கலாம். கொசுக்கடியை முடிந்த வரை தவிர்ப்பதன் மூலம் இந்த நோய்களை தவிர்க்க முடியும்.
டெங்கு நோய் பரவாமல் இருக்க நம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேவும் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு தனது நோய் தடுப்புத்துறை மூலம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கொசுக்களை ஒழிப்போம் ! ஆரோக்கியமாக வாழ்வோம் !!
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
பி.ஏ / பி.எஸ்.சி போன்ற இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு என வடிகட்டல் தொடங்குகிறது.
அம்பானி, அதானி, டாட்டா, பில்கேட்ஸ் வகையறாக்கள் கல்விக்கடை தொடங்கி கொள்ளை அடிக்க முன்னுரிமையளிக்கிறது.
மொத்தத்தில் அரசு கல்வியைக் கை கழுவுகிறது. குடிமக்களுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்கிறது. ஆனால் கல்விக் கொள்கைகளுக்கான அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறித்து, பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையத்தின் பிடியில் ஒப்படைத்து விடுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. பெரும்பான்மையான சாமன்ய மக்களை கல்வியிலிருந்து வெளியேற்றுகிறது, இந்த வரைவு அறிக்கை மீது கருத்துச் சொல்லலாம் என்று சுற்றுக்கு விட்டுவிட்டு, அதன் உள் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறவர்களை தேசத் துரோகிகள் என்று ஆளும் கட்சியினர் ஆள்காட்டி வேலைசெய்கிறார்கள்.
இந்த அடக்குமுறையே ஜனநாயகப் போர்வையில் வரும் சர்வாதிகார கருத்துத் திணிப்பு என்பதை தெளிவாகக் காட்டவில்லையா? எனவே இந்த புதிய கல்வி கொள்கையை முற்றாக நிராகரித்து பெரும்பான்மை மக்கள் நலனுக்கான கல்விக் கொள்கையை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும். விளக்கமும் தெளிவும் பெற நீங்கள் அவசியம் கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.
தகவல் : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – திருநெல்வேலி
(Coordination Committee for Common Education – CCCE – Tirunelveli) தொடர்ப்புக்கு : 94892 35387
கடந்த வாரம் உலகெங்கும் நிகழ்ந்த தொழிலாளர் தொடர்பான செய்திகளின் தொகுப்பு இது…
♠ ♠ ♠
மூத்தூட் நிதிநிறுவன ஊழியர்கள் போராட்டம் :
ஆகஸ்டு 20 முதல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் வங்கி சாரா மற்றும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் கூட்டமைப்பு (Non-Banking and Private Finance Employees Association -NPFEA) முன்நின்று நடத்திய இந்தப் போராட்டத்தில் 220 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். போராட்டம் காரணமாக 611 நிதி நிறுவன கிளைகளில் 300 கிளைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
ஊதிய உயர்வு, முறையாக படிகள் வழங்கப்படாதது, ஊக்கத்தொகை முறையாக வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிட்டும் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட NPFEA சங்கத்தை முத்தூட் நிறுவனம் அங்கீகரிக்காததும் போராட்டத்துக்கான காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
“ரூ. 2000 கோடி லாபமீட்டும் ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கவில்லை என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோலிதா. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிளையில் மேலாளராக பணியாற்றுகிறார் இவர்.
மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சிபிஎம்-ன் ஊழியர் சங்கமான சி.ஐ.டி.யூ தூண்டுதலின் பேரில் அரசியல் நோக்கத்துக்காக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக சிலரால் குற்றம்சாட்டப்பட்டாலும், அதை ஊழியர்கள் மறுக்கின்றனர். தாங்களாகவே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அதன்பின்னே சிஐடியூ, தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தை முடக்கும்வகையில் அனைத்து கிளைகளையும் மூடிவிடப்போவதாக முத்தூட் நிதி நிறுவனம் மிரட்டி வருகிறது.
அதானி குழுமத்துக்கு விமான நிலையங்களை தாரைவார்க்கும் முடிவை எதிர்த்து விமானநிலைய ஊழியர்கள் போராட முடிவு:
இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவரிடம் ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு அளிக்கும் முடிவு குறித்து விமான நிலைய ஊழியர்கள், விமான நிலைய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டது.
லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரித்து இயக்கும் பொறுப்பை ஏலத்தின் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் வென்றது. அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இந்நிறுவனம் விமான நிலையங்களை நிர்வகிக்கும்.
விமான நிலைய ஆணையருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இத்தகைய அவசர முடிவு எடுக்கப்படுவதற்கு முன் தங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இந்த முடிவு தன்னிச்சையானது, ஒருதலைப்பட்சமானது என்று விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் எதிர்காலமும் விமான சேவையை பெறும் பயனாளர்களும் விமான நிலையங்கள் தனியார்மயமாவதால் பாதிக்கப்படுவார்கள் என கவலை தெரிவித்துள்ள அவர்கள், தங்களுடைய கவலைகளை கருத்தில் கொள்ளவில்லை என்றால் இந்த மாதம் கருப்புப் பட்டைகள் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் மேலும் 20-25 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவில் இருப்பதாக விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா கூறுகிறார். இது மேலும் ஊழியர்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
♠ ♠ ♠
வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டம்
10 லட்சத்துக்கு அதிகமான வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படும் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம், 10 அரசு வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் முடிவை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இன் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கமும் இவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.
“கடுமையான வேலைநிறுத்தம் இருக்கும். அரசாங்கத்துடன் பெரிய அளவிலான மோதலில் ஈடுபட இருக்கிறோம்” என்கிறார் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம்.
வங்கி இணைப்பை கண்டித்து கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் போராட்டம்.
“செயல்படாத சொத்துக்களை (NPAs) மறைக்கவே 10 அரசு வங்கிகளின் இணைப்பு உதவும். இதனால் பெரிய இருப்பு நிலைகளை உருவாக்க மட்டுமே முடியும். செயல்படாத சொத்துக்களை மீட்டெடுப்பது என்கிற முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் வேலையன்றி வேறில்லை. வங்கிகள் இணைப்பு மூலம் இருப்பு நிலைகளை தீர்க்கவோ அல்லது சுத்தம் செய்யவோ முடியாது என்பது பொது அறிவுள்ளவர்களுக்கும் தெரியும்” என்கிறார் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு.
“மோடி அரசாங்கம் இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, வங்கிகள் இணைப்பின் நன்மைகளை உணர பல ஆண்டுகள் ஆகும்” என ஆண்டி முகர்ஜி எழுதியுள்ளார்.
♠ ♠ ♠
பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட புனே ஐடி துறை ஊழியர்கள்:
புனேயில் உள்ள தொழிலாளர் ஆணைய அதிகாரியிடம் பல மாதங்களாக ஊதியம் தரப்படாதது குறித்து ஐடி ஊழியர்கள் புகார் தெரிவித்து வருவதாக நியூஸ் க்ளிக் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“புனே போன்ற மெட்ரோ நகரங்களில் ஊதியம் இல்லாமல் வாழ்வது மன உளைச்சலைத் தருவதோடு, சவாலானதும்கூட” என ஐடி ஊழியர்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
முன்னணி தகவல் தொழிற்நுட்ப பயிற்சி நிறுவனமான SEED இன்போடெக் தனது ஊழியர்களுக்கு சம்பள நிலுவை வைத்துள்ளதாக பல ஊழியர்கள், தொழிலாளர் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் ஐடி ஊழியர்கள் மன்றம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக ஒரு வருட காலமாக ஊதியத்தை அளிக்க முடியவில்லை என கூறியுள்ளது.
பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஐடி நிறுவனங்களை பாதித்துள்ளதாகவும் சிறிய, நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்துவருவதாகவும் நியூஸ் க்ளிக் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
♠ ♠ ♠
சர்வதேச செய்திகள் : பெண் வேளாண் தொழிலாளர்களை பாதுகாக்க பாகிஸ்தானின் புதிய சட்டம்
சிந்து பெண் வேளாண் தொழிலாளர் சட்டம் 2019 சிந்து மாகாண அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெண் வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு, மீறல்களை நிறுத்த இது முக்கியமான நகர்த்தலாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
பெண் வேளாண் தொழிலாளர்கள் சங்கமாக திரள்வதற்கு பாகிஸ்தான் அளித்திருக்கும் முதல் அங்கீகாராம் இது. இந்த சட்டத்தின்படி, “ஒரு பெண் தொழிலாளி கோரினால் எழுத்துப்பூர்வமாக வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற முடியும். மேலும் இந்த புதிய சட்டம் கூட்டு பேரம் பேசுதல், குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, பொருளாதார லாபம் மற்றும் பொதுவிநியோக பொருட்கள் மற்றும் சேவையை பெறுதல் உள்ளிட்ட சமூக நல உரிமைகளை உள்ளடக்கியது” என பாகிஸ்தான் ஊடகமான டான் எழுதியுள்ளது.
♠ ♠ ♠
வங்கதேசத்தில் ஈத் விடுமுறையிலிருந்து திரும்பிய 700 ஆடை தொழிலாளர்கள் பணிநீக்கம்:
ஆகஸ்டு 18-ம் தேதி ஈத் விடுமுறையை முடித்து பணிக்குத் திரும்பிய 700 தொழிலாளர்களை பணிவாய்ப்பு குறைந்துள்ளதாகக் கூறி பணிநீக்கம் செய்துள்ளது எஸ்.எஃப் டெனிம் அப்பாரல் என்ற நிறுவனம். சமீப ஆண்டுகளில் வங்க தேச ஆடை தொழிற்சாலைகளில் நடந்த பெரிய அளவிலான பணிநீக்கம் இதுவென இண்டஸ்ரியல் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தின் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்தப் பணிநீக்கத்தை நியாயப்படுத்தி, கடந்த ஆறு மாதங்களாக போதிய ஆர்டர்கள் இல்லாத காரணத்தால் இந்தத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை என்றாலே ஞாபகத்திற்கு வருவது, வாகன இறைச்சலும், மக்கள் நெருக்கமும்தான். அந்தச் சுவடே தெரியாமல் இங்கே சில தெருக்கள். ஆம், மேட்டுக்குடி பார்ப்பனர்கள் வசிக்கும் மேற்கு மாம்பலம். ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் சத்தமில்லாமல் நம்மை கடந்து செல்கின்றன. நடைபாதையில் சில கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலையின் எதிர்முனையில் “வளையல், பொட்டு, சீப்பு” என்று ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கினோம். மிகப்பெரிய ஃபேன்சி ஸ்டோரையே தள்ளுவண்டியில் கோபுரமாக அடுக்கி, தெருவோர மரத்தடியில் நிறுத்தி வைத்திருந்தார் அந்த வியாபாரி.
அவரை நெருங்கினோம். அந்த மாலைப் பொழுதின் மங்கிய ஒளியைப் போல, அவரது முகம் இருள் கவ்வியிருந்தது. கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது, இருந்தாலும் பேசிப் பார்ப்போம்.
“என்ன இது? கிராமப்புறங்களில் புறநகர்ப்பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டீர்கள்?”
மாலைப்பொழுதைக் கடந்தும், தண்டல் கட்டும் காசுகூட இன்னும் வியாபாரமாகலையே… காத்துக்கொண்டிருக்கும் வியாபாரி.
“ஆமா, அங்கே வியாபாரம் இல்ல, இங்கே வந்தா இங்கேயும் வியாபாரம் கண்ண கட்டுது. இதுல வேற நேத்து மழ. கட போட முடியல. இன்னைக்கு இதுவரைக்கும் பெருசா வியாபாரம் இல்ல. முழு பொழுதும் போயிருச்சு. இனி வந்தவரைக்கும் தள்ளிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்” என்றார்.
தூரத்திலிருந்து மாமி ஒருவர் வேகவேகமாக நடந்து வந்தார். “ஆயில் பெயிண்ட்ல மெட்டல் வளையல் சொன்னேனே எடுத்து வந்தீயா? கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கொளுன்னு ஊரெல்லாம் ஒரே விசேசம். பரபரன்னு ஓடணும். எங்கே அந்த வளையல காட்டு” என்றார்.
“இது ஸ்பெஷல் வளையல் வெல அதிகம், வழக்கமா கொறைக்கிறமாதிரி இதயும் கொறைக்காதிங்க மாமி” என்று பல வண்ணங்களில் வளையல்களைக் காட்டினார். அதைத் திருப்பித் திருப்பி பல தடவை பார்த்துப் பொறுக்கி கனிசமானவற்றை எடுத்துக்கொண்டு, “சொல்லிக்கொடு” என்றார்.
“அம்மா… ஒன்றரை டஜன் எடுத்திருக்கீங்க. நல்லது எல்லாத்தயும் பொருக்கிட்டீங்க. 250 ரூபாய் கொடுங்க, கொறைக்காதீங்க… குறைவாத்தான் சொல்லியிருக்கேன்” என்றார்.
“ஊகூம்… 100 ரூபாதான், இல்லாட்டி நீயே வச்சிக்கோ” என்றார்.
அவர் 200 என்று கெஞ்ச, கடைசியா 160 ரூபாய்க்குப் பேசி, அதிலும் பத்து ரூபாய் சில்லறை இல்லையென்று கூறி 150ஐ கொடுத்துவிட்டு எடுத்த வளையலோடு நடையைக் கட்டினார் மாமி.
250 ரூபா விக்க வேண்டியது. 200-வது கொடுங்க என்று கெஞ்சினேன். கடைசியா 160க்கு பேசி முடித்து, அதிலும் பத்து ரூபாய் சில்லறை இல்லையென்று 150ஐ திணித்துச் சென்றார் அந்த மாமி.
வண்டிக்காரர் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் நம்மைப் பார்த்தார். நாம் பதிலுக்கு அவரைப் பார்த்தோம். “இதுதான் என் பொழப்பு, பாத்தீங்க இல்ல” என்றார் சோகமாக.
“கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்ப வேண்டியதுதானே, விலை குறைவா கொடுத்தால் திரும்பவும் அதுமாதிரிதானே கேட்பார்கள்” என்றோம்.
“வெறுங்கையோட போனா, தண்டல்காரனுக்கு யார் பதில் சொல்றது. நேத்தே மழையில வியாபாரம் இல்ல, பணம் கொடுக்கல. இன்னைக்கும் இல்லேன்னா கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுவான். ஒடம்பே கூசிடும். நாம என்ன பஜார்லயா கடை போட்டு வியாபாரம் பண்றோம்? இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு வித்துக்கலாமுன்னு நெனக்க முடியுமா?” என்றார்.
“உங்களுக்கு சொந்த ஊர் எது? இங்கே எப்படி வந்தீங்க” என்றதும், கசப்பும் வெறுப்பும் கலந்த கடந்த காலத்தை, விருப்பமின்றி நினைவுகூர்ந்தார்.
“செங்கல்பட்டுக்கு அடுத்த மதுராந்தகம் சொந்த ஊரு. அங்கிருந்து இங்கே வந்து பல வேலைகள் செஞ்சேன். எந்த வேலயும் செட்டாகல. கடைசியில இதுல காலத்த ஓட்டுறேன். இரண்டு ரூபாயிலேருந்து 60 ரூபா வரைக்கும் பல ஐட்டங்களா வாங்கிப் போட்டிருக்கேன். முன்னெல்லாம் சரக்குக்கு பத்தாயிரம் ரூபா வச்சா வெல்லம். தள்ள முடியாதளவு வண்டி நெறஞ்சிரும். இப்போ முப்பதாயிரம் வச்சாலும் பத்தல. வண்டி காலியா தெரியுது. வண்டி காலியா இருந்தா பக்கத்துல யாரும் வரமாட்டாங்க. பாக்க வந்தாத்தானே என்ன வச்சிருக்கேன்னு விசாரிப்பாங்க, பிறகு ஏதாவது வாங்குவாங்க.
நூற்றுக்கணக்கானப் பொருட்கள். இவ்வளவையும் வாங்கிப் போட்டால்தான், பார்க்கவாவது வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.
சரக்கு ஒன்னும் பெருசா இல்லீங்க. கொழந்தைங்க விளையாட்டு ஐட்டம், வீட்டுப் பொம்பளைங்களுக்குத் தேவையான குளியல், கிச்சன், மேக்கப் பொருட்கள், அப்புறம் டப்பி, ஜக்கு, கத்தி, ஸ்பூன், பேண்டு, பொட்டுன்னு பலத பாத்து பாத்து வாங்கிப் போட்டாத்தான் ஏதாவது விக்கும்.
ஒரு நாளைக்கு 3000 ரூபா வித்தாத்தான் 700, 800 கிடைக்கும். எங்கே விக்குது! விக்கிறதே எழுநுறு என்னுறுதான், அதுல எங்கே நிக்கும். எங்கே வியாபாரம் ஆகும், எங்கே ஈ ஓட்டுமுன்னு சொல்ல முடியல. அந்த ரகசியம் தெரிஞ்சா ஏன் ரோடு ரோடா அலையப்போறேன். இந்த அலைச்சல்கூட கடைசி வரைக்கும் முடியாது. எங்க முதுகும் காலும் வலுவா இருக்குற வரைக்கும்தான் ஓட முடியும். எப்ப ஒடம்பு சொல்ற பேச்சு கேக்க முடியாம ஒக்காந்துருவோமுன்னு பயமா இருக்குது. ஒழைக்கும்போதே நம்ம பொழப்பு நாய் பொழப்பு. இதுவும் முடியலன்னா என்ன பண்றது.
ரோட்ல நிழலப் பாத்து வண்டி நிறுத்துனா கூட, இங்கே நிறுத்தாதே, வாசலத் தாண்டி தூரமா போன்னு சொல்லி தொரத்துறாங்க. வசதி இருந்தா கடைய போட்டு உக்கார மாட்டேனா” என்று முணகிக் கொண்டே நகர்ந்தார்.
1 of 8
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
அயோத்தியா மண்டபம் அருகில் தள்ளுவண்டியில் பொம்மை கடை போட்டிருந்த முருகனிடம் பேச்சு கொடுத்தோம்.
“திண்டிவனம் பக்கத்துல மரக்கானம்தான் சொந்த ஊரு. எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. சவுக்கு போட்டு பெரிய நட்டம். இப்பல்லாம் விவசாயம் செஞ்சு கட்டுப்படியாகமாட்டேங்குது. அதனால சிட்டி பக்கம் வந்துட்டேன். இந்தக் கடை மூலம், வீட்டு வாடகை, பசங்க படிப்பு, செலவுன்னு ஏதோ ஓடுது.
முருகன்
காலையில 8 மணிக்கு வண்டியில சரக்கப் போட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்னா இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புவேன். நாள் முழுக்க வண்டிய வெயிட்டு கொடுத்துத் தள்ளித் தள்ளி கால் நரம்பு சுத்திகிட்டு வின்னு வின்னுன்னு வலிக்குது. என்ன செய்யிறது; வீட்டுல பசங்கள பாக்கணும்… இப்படியே காலம் ஓடுது” என்று சொல்லிக்கொண்டே பொம்மையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனையும் அவனது தந்தையையும் நோக்கி நகர்ந்தார், முருகன்.
ஆசைப்பட்ட பொம்மை விலை அதிகம் என்பதால், கிடைத்ததை தனதாக்கிக்கொண்டு மகிழும் சிறுவன்.
***
கிராமங்களிலிருந்து துரத்தப்பட்ட இந்த விவசாயிகள் நகரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவோ, தள்ளுவண்டிகளைக் கொண்டோ பிழைப்பை நகர்த்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொழுதையும் ஒரு போராட்டமாகவே கழிக்கிறார்கள். பொதுவாக கிராமங்களை நினைவுகூரும்போது, பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளுக்கும் அல்லியும் தாமரையும் பூத்துக்குலுங்கும் குளங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள் நமது தமிழ்க் கவிகள்.
ஆனால், இந்த நடைபாதை வியாபாரிகளுக்கோ, கடந்த காலம் மிகக் கசப்பாக இருக்கிறது. அதை நினைவுகூர்ந்து சொல்லவரும் ஒன்றிரண்டு வார்த்தைகள்கூட தொண்டைக்குழிக்குள்ளேயே மரணித்துப் போகிறது. அவர்களது கிராமத்து வாழ்க்கையைப் போலவே, நகர்ப்புறத்து நிகழ்காலமும் எதிர்காலமும் இருண்டே காணப்படுகிறது.
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 05-அ
அலெக்ஸேய்க்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆயினும் குதூகலப் புன்னகையுடன் உற்சாக அடி வைத்து ஹாலுக்குள் நுழைந்தான். குழுவினர் ஒரு பெரிய மேஜையின் அருகே அமர்ந்திருந்தார்கள். நடுவில் மாமிசமலை போல வீற்றிருந்தார் முதல் வரிசை இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய். ஒரு பக்கத்தில் சிறு மேஜையின் பின்னே உட்கார்ந்திருந்தாள் ஸீனா. மேஜை மீது விமானிகளின் சொந்த விவரங்கள் அடங்கிய காகித அடுக்குக்கள் வைத்திருந்தன.
“நல்லது தம்பீ, சட்டையைக் கழற்றும்” என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கூறினார் மருத்துவர்.
மெரேஸ்யெவ் அவ்வளவு உடற்பயிற்சி செய்ததும் வெயிலில் காய்ந்ததும் வீண்போகவில்லை. அவருடைய கட்டுக்குட்டான, முறுக்கேறிய வலிய உடலை வியந்து நோக்கினார் மருத்துவர். பழுப்புத் தோலுக்கு அடியில் ஒவ்வொரு தசையும் துலக்கமாத் தெரிந்தது.
மெரேஸ்யெவ் எல்லாச் சோதனைகளிலும் சுளுவாகத் தேறிவிட்டான். திட்ட அளவுக்கு ஒன்றரை மடங்கு வலுவுடன் கைகளை முட்டி பிடித்து இறுக்கினான். அளவைக் காட்டும் அம்பு கடைசி எல்லைக் கோட்டைத் தொடும்வரையில் மூச்சை வெளியிட்டான். அவனது இரத்த அழுத்தம் திட்ட அளவுப்படி இருந்தது. நரம்புகள் சிறந்த நிலையில் இருந்தன. முடிவில் வலிமை அளவிடு கருவியின் கைப்பிடியை அவன் அழுத்திய விசையில் கருவி பழுதாகிவிட்டது.
மருத்துவர் நாற்காலில் சாய்ந்துகொண்டு “சீனியர் லெப்டினன்ட் அ. பெ. மெரேஸ்யெவின் சொந்த விவகாரங்களின்” மூலையில் முடிவை எழுதப் பேனாவைப் பிடித்தவாறு, “விமானியா?” என்று கேட்டார்.
“ஆம்.”
“சண்டை விமானமோட்டியா?”
“ஆம்.”
“நல்லது, சண்டை போடப் புறப்படுங்கள். அங்கே இப்போது உங்களைப் போன்றவர்கள் எவ்வளவு தேவை, தெரியுமா?…. ஆமாம், நீங்கள் மருத்துவமனையில் எதற்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தீர்கள்?”
எல்லாம் இதோ தகர்ந்து விழுந்துவிடப் போகிறது என்று உணர்ந்த அலெக்ஸேயின் முகம் வாடியது. ஆனால் மருத்துவர் அவனுடைய சொந்த விவரப் புத்தகத்தைப் படித்துவிட்டார். நல்லியல்பு ததும்பிய அவரது முகம் வியப்பால் நீண்டது.
“கால்கள் வெட்டி அகற்றப்பட்டனவா? இதென்ன அபத்தம்? தவறாக எழுதிவிட்டார்களா, என்ன? ஊம், என்ன பேசாதிருக்கிறீர்கள்?”
“இல்லை, தவறாக எழுதவில்லை“ என்று தணிந்த குரலில் மிக மெதுவாக, தூக்குமேடைப் படிகளில் ஏறுபவன் போல, உரைத்தான் அலெக்ஸேய்.
வலிய உடற்கட்டும் சிறந்த வளர்ச்சியும் கொண்ட அந்தத் துடியான வாலிபனை விஷயம் என்ன என்று விளங்காமல் நிலைக்குத்திட்டு நோக்கினார்கள் மருத்துவரும் தேர்வுக்குழுவினர் அனைவரும்.
“காற்சட்டை விளிம்பை மடித்துவிடுங்கள்!” என்று பொறுமையிழந்து உத்தரவிட்டார் மருத்துவர்.
அலெக்ஸேய் வெளிறிப் போய், காற்சட்டையைச் சிறிது மேலே தூக்கிவிட்டுக் கொண்டு, தோல் பொய்க்கால்கள் வெளித் தெரிய, குனிந்த தலை நிமிராமல், கைகளைத் தொங்கவிட்டவாறு மேஜைக்கு எதிரே அப்படியே நின்றான்.
“அப்படியானால், அருமைத் தம்பீ, எங்களை ஏன் போட்டு வதைக்கிறீர்கள்? இவ்வளவு நேரத்தைப் பறித்துக் கொண்டு வீட்டீர்களே. கால்கள் இல்லாமலே விமானப்படைக்குத் திரும்ப நினைக்கின்றீர்களா என்ன?” என முடிவில் கூறினார் மருத்துவர்.
“நான் நினைக்கவில்லை. கட்டாயம் திரும்புவேன்” என்று தணித்த குரலில் சொன்னான் அலெக்ஸேய். அவனுடைய ஜிப்ஸிக் கண்கள் பிடிவாத அறைகூவல் விடுபவை போலச் சுடர் வீசின.
“உங்களுக்கு மூளை புரண்டு விட்டதா? கால்கள் இல்லாமலா?”
“ஆமாம், கால்கள் இல்லாமலேதான் – கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன்” என்று பிடிவாதம் இன்றி மிக நிதானமாக விடையிறுத்தான் அலெக்ஸேய். பழைய மோஸ்தர் விமானிக் கோட்டுப் பையில் கையை விட்டு ஒழுங்காக மடிக்கப்பட்ட பத்திரிக்கைத் துணுக்கை அதிலிருந்து எடுத்தான். “பாருங்கள். இவர் ஒரு கால் இல்லாமல் விமானம் ஓட்டினாரே. நான் ஏன் இரண்டு கால்களும் இல்லாமல் ஓட்ட கூடாது?” என்றான்.
பத்திரிக்கைக் குறிப்பைப் படித்துவிட்டு மருத்துவர் அலெக்ஸேயை வியப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார்.
“ஆனால் இதற்கு அசுரப் பயிற்சி செய்ய வேண்டுமே. இவர் பத்து, ஆண்டுகள் பயிற்சி செய்தாராம், பார்த்தீர்களா? நிஜக்கால்கள் போன்றே பொய்க்கால்களைப் பயன்படுத்தப் பழக வேண்டும்” என்று கனிவுடன் சொன்னார்.
அப்போது அலெக்ஸேய்க்கு எதிர்பாராத விதத்தில் ஆதரவு கிடைத்தது. ஸீனா தன் மேஜை அருகே இருந்து தாவி முன்னே வந்து, பிராத்தனை செய்பவள் போன்று கைகளை மார்பில் வைத்துக் கொண்டு கன்னப் பொருத்துக்களில் வியர்வை துளிக்கும் அளவுக்கும் கன்றிச் சிவந்தாள்.
“முதல் வரிசை இராணுவ மருத்துவத் தோழர் அவர்களே. இவர் எப்படி நடனம் ஆடுகிறார் என்று பாருங்கள். ஊனம் இல்லாதவர்களை விட மேலாக ஆடுகிறார். மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று குழறலுடன் மொழிந்தாள்.
“நடனம் ஆடுகிறாரா? எப்படி? இது எப்படி முடியும்?” என்று மருத்துவர் தோள்களைக் குலுக்கினார். தேர்வுக் குழுவினரின் பக்கம் நல்லியல்புடன் கண்ணோட்டினார்.
ஸீனா குறித்துக் காட்டிய கருத்தை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டான் அலெக்ஸேய்.
“நீங்கள் சாதகமாவோ பாதகமாவோ எதுவும் எழுதாதீர்கள். இன்று மாலை எங்கள் நடனக் கூடத்துக்கு வாருங்கள். என்னால் விமானம் ஓட்ட முடியும் என்பதைக் கண்டுகொள்வீர்கள்” என்றான்.
தேர்வுக் குழு உறுப்பினர்கள் எதைப் பற்றியோ ஆர்வம் பொங்கச் சர்ச்சை செய்வதைக் கதவுப் பக்கம் போகும் பொழுது கண்ணாடியில் கண்டான் அலெக்ஸேய்.
மதிய சாப்பாட்டுக்கு முன் ஸீனா பூங்காவின் வெறுமை மூலையில் அலெக்ஸேயைத் தேடிப்பிடித்தாள். அவன் போன பிறகு வெகு நேரம் வரை தேர்வுக் குழுவினர் அவனைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், “மெரேஸ்யெவ் அசாதரணமான இளைஞன். ஒருவேளை உண்மையாகவே அவன் விமானம் ஓட்டக்கூடும், யார் கண்டது? ருஷ்ய மனிதன் எதுவும் செய்யத் திறன் உள்ளவன்!” என்று மருத்துவர் சொன்னதாகவும் தெரிவித்தாள். மருத்துவர் சொன்னதை மறுத்து, விமானப் பறப்பின் வரலாறு இத்தகைய உதாரணங்களை அறியாது என்று தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினாராம். விமானப் பறப்பின் வரலாறு எத்தனையோ விஷயங்களை அறியாது என்றும் இந்த யுத்தத்தில் சோவியத் மக்கள் அதற்கு எத்தனையோ விஷயங்கள் கற்பித்திருக்கிறார்கள் என்றும் அவருக்குப் பதில் சொன்னாராம் மருத்துவர்.
தெரிந்தெடுக்கப்பட்ட தொண்டர்களை (ஆரோக்கிய நிலையத்தில் இத்தகையவர்கள் இருநூறு பேர் வரை இருந்தார்கள்) போரிடும் சைனியத்திற்கு அனுப்புவதற்கு முந்திய மாலை, விரிவான நிகழ்ச்சித் திட்டத்துடன் நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலெல்லாம் வியர்த்துக் கொட்ட, களைப்பில்லாமல் நடனமாடினார்கள் விமானிகள். தனது செம்பொன் கூந்தல் துணைவியுடன் குதூகலமாகவும் லாவகமாகவும் துடியாகவும் அவர்களுக்கிடையே நடனமாடினான் அலெக்ஸேய். அருமையான ஜோடி!
இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய் குளிர்ந்த பீர்க் குவளையும் கையுமாகத் திறந்த ஜன்னல் அருகே உட்கார்ந்து மெரேஸ்யெவையும் அவனுடைய தழல்முடித் துணைவியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவர், அதிலும் இராணுவ மருத்துவர். நிஜக்கால்களிலிருந்து பொய்க்கால்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதை கணக்கற்ற உதாரணங்கள் வாயிலாக அவர் தெரிந்து கொண்டிருந்தார்.
கட்டுவாய்ந்த மேனியும் பழுப்பேறிய நிறமும் கொண்ட இந்த லெப்டினன்ட் சிறுகூடான, ஒயிலுள்ள ஆட்டத் துணைவியோடு அழகுற இணைந்தாடுவதை இப்போது காண்கையில் இதெல்லாம் சிக்கலான ஏதோ ஏமாற்று என்ற எண்ணத்தை அவரால் விடவே முடியவில்லை. கடைசியில், கைதட்டி ஆர்வாரித்த வட்டத்துக்கு நடுவே மகிழ்ச்சிக் கூக்குரலுடன் உள்ளங்கைகளால் தொடைகளிலும் கன்னங்களிலும் தட்டிக் கொண்டு மிடுக்காக ருஷ்ய நடனம் ஆடிமுடித்து விட்டு அலெக்ஸேய் வியர்த்து விறுவிறுக்க, களிபொங்க ஆட்களை விலக்கிக் கொண்டு மிரொவோல்ஸ்க்கியிடம் சென்றான். அப்போது அவர் மரியாதையாக அவன் கையைப் பற்றிக் குலுக்கினார். மெரேஸ்யெவ் ஒன்றும் பேசவில்லை. ஆனால் மருத்துவரை ஒரே பார்வையாக நோக்கிக் கொண்டிருந்த அவனுடைய விழிகள், விடையை வேண்டின, கோரின.
“உங்களை நேரே படைப்பிரிவுக்கு அனுப்ப எனக்கு உரிமை கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் என் முடிவை உங்களுக்கு நான் தருகிறேன். தக்க பயிற்சி அளிக்கப் பட்டால் நீங்கள் விமானம் ஓட்டுவீர்கள் என்ற எங்கள் கருத்தை நான் எழுதுகிறேன். சுருக்கமாக எந்த நிலையிலும் என் வாக்கு உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள்” என்றார் மருத்துவர்.
அனுபவம் முதிர்ந்த இராணுவ மருத்துவரான ஆரோக்கிய நிலையத்தின் இயக்குநருடன் கைகோத்துக் கொண்டு ஹாலிலிருந்து வெளியேறினார் மிரொவோல்ஸ்க்கிய். இருவரும் பரவசமடைந்திருந்தார்கள், ஒரே குழப்பம் அடைந்திருந்தார்கள். சோவியத் மனிதன் ஒரு விஷயத்தை அடைய உண்மையாகவே விரும்பிவிட்டால் எதையும் செய்ய வல்லவன் என்பது பற்றி உறங்குவதற்கு முன் சிகரெட்களைப் புகைத்தவாறு வெகு நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..
கீழே இன்னும் இசை முழங்கிக் கொண்டிருந்தது, ஆடுவோரின் நிழல்கள் ஜன்னல் வெளிச்சத்தின் நீள் சதுரங்களில் தரைமீது இயங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் மேலே இறுகத் தாளிட்ட குளிப்பறையில் உதட்டை இரத்தம் வரும்படி கடித்துக் கொண்டு, குளிர் நீரில் கால்களைத் தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தான். வலி பொறுக்க மாட்டாமல் அநேகமாக உணர்வு இழக்கும் நிலையில் இருந்தான். பொய்க்கால்களின் ஆவேச இயக்கம் காரணமாக உண்டாகியிருந்த நீலம் பாரித்த இரத்தக் காய்ப்புகளையும் அகன்ற புண்களையும் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான் அவன்.
ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம். காவலர் தரும் தகவலுக்காக காத்திருக்கிறார் அவர்.
“காலையிலிருந்து நான் எங்கேயும் நகரவில்லை. என்னுடைய எண்ணை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்” என்கிற பேகத்தின் காத்திருப்பாளர் எண் 46.
கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை முயற்சித்தும் சிறையில் உள்ள தன்னுடைய மகன் முகமது ரஃபி சோபியை காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த 69 வயது பெண்ணுக்கு இப்போதுதான் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.
ஆகஸ்டு 21-ம் தேதி நள்ளிரவில் ஜம்மு & காஷ்மீர் போலீசால் 39 வயதான சோபி கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபின், மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாக சொல்கிறார் பேகம்.
“அவன் எந்த குற்றமும் செய்யவில்லை. அவன் அப்பாவி என்பதை அல்லா அறிவார்” என பேகம் தொடர்ந்து கூறியபடியே இருந்தார். “பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்ததாக போலீசு தேடிக்கொண்டிருந்த உறவுக்காரர் ஒருவர் கிடைக்கவில்லை என்பதால் இவனை கைது செய்து கொண்டுவந்துவிட்டார்கள்.” என்கிறார் அவர்.
கட்டட வேலை பார்த்து வந்த சோபிக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண்ணும் எட்டு மாதமான ஒரு மகனும் உள்ளனர். அவருடைய உறவுக்கார சிறுவன் 11 வகுப்பு படிக்கிறார். இவர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 10 கி.மீ. தள்ளியிருக்கும் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார் அவன்.
ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் அந்த சிறுவன், இவர்களுடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறான்.
“அவன் எங்கள் வீட்டை விட்டு போன பிறகு, அவனைப் பற்றி எந்த செய்தியும் இல்லை” என்கிற பேகம், “ஒரு நபருக்கு பதிலாக இன்னொரு நபரை எப்படி கைது செய்யலாம்? மற்ற அனைத்து இடங்களிலும் இப்படித்தான் அனைத்து கைதுகளும் நடந்தனவையா?” என கேட்கிறார்.
ஆகஸ்டு 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினர் 3,500-க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளனர். சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடந்த ஒடுக்குமுறையாக ஆகஸ்டுக்கு பிறகான ஒடுக்குமுறை அரங்கேற்றப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர்கள், கிளர்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லெறிவதில் ஈடுபட்ட இளைஞர்களை மட்டும் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக போலீசு கூறுகிறது. இந்தச் சட்டத்தின்படி விசாரணை இல்லாமல் ஒரு நபரை ஆறுமாதங்கள் சிறையில் வைத்திருக்க முடியும்.
அரசாங்கத்தின் கைது குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் வந்தபோதும், அது தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. கைதானவர்களை காஷ்மீருக்கு வெளியே ஆக்ரா, டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிறைக்கும் அது அனுப்பியது.
அதுபோல, தன்னுடைய மகனையும் வேறு சிறைக்கு அனுப்பியிருக்கலாம் என பயம் கொள்கிறார் பேகம்.
“என் மகனைப் போலவே தவறாக கைது செய்யப்பட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களின் மகனை சில நாட்கள் இந்த சிறையில் வைத்திருந்துவிட்டு, வேறு சிறைக்கு மாற்றிவிட்டார்கள்” என்கிறார் அவர். காஷ்மீர் ஊடகங்களும்கூட பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தபோதும், அதுகுறித்து அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.
“என்னுடைய சகோதரன் உடைந்து போயிருக்கிறான்”
ஆகஸ்டு 5-ம் தேதிக்குப் பிறகு கைதான தங்களுடைய உறவினரைப் பார்ப்பதற்காக உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறைச்சாலை முன் பெற்றோரும் உறவினர்களும் வரிசையில் நிற்கிறார்கள். காலை 10 மணிக்கு தொடங்கும் சந்திப்பு நேரம் 2 மணியளவில் முடிந்துவிடுகிறது.
சிறைக் கைதிகளைப் பார்க்க தொடர்புடையவர்களின் உறவினர்கள் ஆதார் அட்டையை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 17-ம் தேதி கைதான தனது சகோதரர் சாகித் மன்சூரைக் காண தனது தங்கையுடன் வந்திருக்கிறார் இக்ரா.
ஸ்ரீநகரின் கன்யார் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மன்சூர், பள்ளியிலிருந்து இடை நின்றவர். கார் சர்வீஸ் செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும் இக்ரா கூறுகிறார். நள்ளிரவு ரோந்தின்போது கல்லெறிந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார் அவர்.
மூன்றாவது முறையாக மன்சூரை சந்திப்பதாக அவர்கள் கூறினர், “கடந்த முறை அப்பாவுடன் பேசும் போது, அவன் உடைந்து போய் அழுதிருக்கிறான். தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லும்படி கெஞ்சியிருக்கிறான். வழக்கறிஞர்கள் இப்போது எதுவும் தங்களால் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். பிணைக்கு மனு செய்வதற்குக்கூட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார் தன் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் இக்ரா.
“வேலைகள் பறிபோய்விட்டன”
கதிதர்வாசா பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே மூன்று கடைகள் திறந்திருக்கின்றன. தங்கள் உறவினர்களைப் பார்க்க வருபவர்கள் அங்கே உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இன்னமும் காஷ்மீரின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இக்பால் அகமது தெலியும் அவருடைய குடும்பமும் ஆனந்த்நாக்கின் தூரு சாகாபாத்திலிருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பி, சிறையில் இருக்கும் 12-ம் வகுப்பு மாணவரான முதாசிர் அகமத்-ஐ காண ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர்.
சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் குடும்பத்தினர்.
அகமதை காண இரண்டு சகோதரர்களும் அவருடை தந்தையும் சிறைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களுக்காக சிறையின் வெளிப்பகுதியில் காத்திருந்தார் தெலி.
“என்னுடைய சகோதரன் ஆகஸ்டு 2-ம் தேதி கைது செய்யப்பட்டான். ஆகஸ்டு 14-ம் தேதிதான் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தில் அவன் கைது செய்யப்பட்டிருப்பது தெரியும்” என்கிறார் தெலி.
அரசாங்கத்துக்கு எதிராக போராட வருமாறு தனது கிராமத்தினரை திரட்டியதே அகமதுவின் கைதுக்குக் காரணமாக போலீசு கூறியுள்ளது. ஆனால், அவருடைய குடும்பம் இதை மறுத்து வருகிறது.
நள்ளிரவு ரோந்தின்போதுதான் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். “அந்த இரவில் நான்கு சிறுவர்கள் அந்தப் பகுதியிலிருந்து கைதான நிலையில், மூவர் விடுவிக்கப்பட்டனர். என்னுடைய சகோதரன் மட்டும்தான் இங்கே மாற்றப்பட்டான்”என்கிறார் தெலி.
நவம்பரில் வரவிருக்கும் 12-ம் வகுப்பு தேர்வுக்கு படிக்க முடியாத நிலையில் அகமத் இருப்பதாக அவருடைய குடும்பம் கவலை கொள்கிறது.
“அவன் பத்தாம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இந்தக் கைது அவனுடைய கனவை களைத்துவிட்டது. இப்போது இங்கிருந்து வெளிமாநில சிறைக்கு மாற்றப்படக்கூடாது என்பதற்காக வேண்டிக் கொள்கிறோம்” என்கிறது அவருடைய குடும்பம்.
கடந்த 36 நாட்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சொல்ல மறுத்து வருகிறது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் போலீசு கூடுதல் இயக்குனர் முனீர் கான், இளைஞர்களுக்கு போதிய ஆலோசனை அளித்த பிறகு விடுவிக்கப்படுவதாக கூறினார்.
ஆனால், கல்லெறிவதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் ஈடுபடும் இளைஞர்கள் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வெளியூர் சிறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்ட மோடி – அமித் ஷாவின் அரசாங்கம், அங்குள்ள இளைஞர்களின் கனவுகளை நசுக்கி தூக்கி எறிந்துகொண்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதைச் செய்யும் எனப் பார்க்கத் தானே போகிறோம் !
கட்டுரையாளர் : Mudasir Ahmad தமிழாக்கம் : கலைமதி நன்றி:தி வயர்.