Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 339

ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

crisis-in-automobile-industry-ashok-leyland-started-layoffs

♦ அசோக் லேலாண்ட்-ல் மிகை உற்பத்தி : வாரத்தில் 6-வது வேலைநாள் பறிப்பு – சம்பள வெட்டு – ஆட்குறைப்பு !

♦ நண்டு கொழுத்தால் வளையில் தங்காது ! மூலதனம் கொழுத்தால் தொழிலாளர்களை வாழவிடாது !

டந்த 60 ஆண்டுகளில் அதிகபட்ச உற்பத்தி செய்து அதிகபட்ச இலாபமாக ரூ 1,983 கோடி ஈட்டிய அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 6 வது வேலை நாளில் கதவடைப்பு செய்து வருகின்றது. இரவு, பகல், வெயில், மழை, குளிர் பராமல் ஆண்டு முழுவதும் உழைத்து கொடுத்த பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதியஉயர்வு, போனஸ் வழங்க வேண்டிய நிர்வாகம் வாரத்தில் ஒரு வேலைநாளை பறித்துக்கொண்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து வருகின்றது.

போனஸ் கேட்ட நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சம்பளவெட்டை பரிசாக தந்துள்ளது. நிர்வாகத்தின் சூழ்ச்சிகள் நிரம்பிய பேச்சுவார்த்தைகளால் தொழிலாளர்களை குடுமி சண்டையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது, நிர்வாகம். முதலாளித்துவம் வாழவிடாது என்பதற்கு லேலாண்ட் அறிவித்திருக்கும் சட்டவிரோத லே-ஆஃப் ஓர் சாட்சியாகும்.

Ashok Leylandபணி நிரந்தரமில்லாத சூழலில் அசோக் லேலண்ட்-ன் முதலாளித்துவ லாபவெறி கொள்கையால் வாரத்தில் 6 வது நாள் சம்பளவெட்டுக்கு ஓசூரில் மட்டும் 10,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உற்பத்தியில் பெரும்பான்மையாக ஈடுபடும் கேஷுவல்(CL), காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் தொழிலாளர்களில் பணிக்கு சேர்ந்த சில நாட்களேயான 1,100 பேர் ஆட்குறைப்பும் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, தினந்தோறும் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்வதும்; தான் வாங்கும் அற்பக்கூலியில் ஒருவேளைக்கு பட்டினி கிடந்து சிக்கனம் செய்துதான் பெற்றோருக்கு பணம் அனுப்புகின்றனர். குறைந்த கூலியை சமாளிக்க விடுமுறை நாட்களில் சில்லரை வேலையும் செய்கின்றனர். இதனால் சத்துமிகுந்த காய்கறி, மாமிசம், மளிகைப் பொருட்கள் வாங்குவதை குறைத்து விடுகிறார்கள். இத்தொழிலாளர்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் ஏறக்குறைய 40 ஆயிரம் பேர் பட்டினியின் பிடியில் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக, இந்த ஆலை மூடலுக்கு உற்பத்தி தேக்கத்தை காரணமாக காட்டுகின்றது, லேலாண்ட் நிர்வாகம். சந்தையின் தேவையை கணக்கில் கொள்ளாமல் அதிகபட்ச இலாபத்தை மட்டும் உற்பத்தி கொள்கையாக கொண்ட முதலாளித்துவ மிகை உற்பத்திதான் தேக்கத்திற்கு காரணமாகும்.

படிக்க:
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

லேலாண்டு நிர்வாகம் கடந்த 11 ஆண்டுகளில் உற்பத்தி கொள்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது. 2008 – 09-ல் 54,431 வாகனங்கள் என செய்யப்பட்ட உற்பத்தி 2018 – 19-ல் 1,94,366 வாகனங்கள் என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கம் உற்பத்தியில் பேரம் பேச முடியாத வகையில் ALTS என்கின்ற மைக்ரோசெகண்ட் உற்பத்தி முறையைத் திணித்து; பல மடங்கு உற்பத்தி உயர்த்தியும் 6 நாள் உற்பத்தியை 5 நாளில் செய்தும்; உற்பத்தியின் பெரும் பகுதியை அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட் என்ற பெயரில் ஆலைக்கு வெளியே தள்ளி விட்டும்; அதுமட்டுமில்லாமல் கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பணி நிரந்தரம் செய்யப்படாத பல ஆயிரம் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் அற்பக் கூலிக்கு நியமித்து அவர்களை சுரண்டித்தான் இந்த அதிகபட்ச உற்பத்தியும் லாபத்தையும் ஈட்டியிருக்கிறது, நிர்வாகம்.

பல லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை விரிவு படுத்தியதில் பெரும்பாலும் சட்டவிரோதமான நடைமுறைகளே உள்ளது. தற்போது உபரி உற்பத்தியைக் காட்டி வாரத்தில் ஆறாவது வேலை நாளை பறித்து விட்டது. அடுத்து, ஆட்குறைப்பு என்ற கத்தியை தலைக்கு மேல் தொங்க விட்டுள்ளது, லேலாண்ட் நிர்வாகம்.

மற்றொரு பக்கம், இந்த முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு முன்னால் சட்டப்பூர்வ உரிமைகளை அடகு வைத்த பிழைப்புவாத தொழிற்சங்கத் தலைமைகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. தொழிலாளர் உரிமைகளை மறுக்கும், இந்த சமூக அமைப்பையே பட்டினியில் தள்ளும் முதலாளித்துவ கொடுங்கோன்மைகளை அம்பலப்படுத்தி முறியடிக்கும் புரட்சிகர தலைமைகள் இன்றைய தேவைகளாக உள்ளது. மேற்கண்ட முதலாளித்துவ தாக்குதல்களை லேலாண்ட் நிர்வாகத்தின் பிரச்சனையாக மட்டும் பார்த்தால் அது தொழிற்சங்கவாதமாக முடியும்.

இதே போல டாடா, மகேந்திரா, மாருதி என பல ஆலைகளில் 5 லட்சம் கார்களும் 30 லட்சம் டூவீலர்களும் தேங்கி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிகை உற்பத்தியை தேக்கம் என காட்டியதில் குஜராத்தில் 10, ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஆட்டோ மொபைல் சந்தை மந்தமாக உள்ளது என கார்ப்பரேட் கம்பெனிகள், செய்தி ஊடகங்கள் பூதாகரமாக செய்திகள் வெளியிடுகின்றன.

அடுத்து, பொருளாதார மந்தம் என பொதுவாக ஊடங்களில் பேசுவார்கள். ஆனால் முதலாளிகளின் அதித லாபவெறியால் மிகை உற்பத்தி செய்து சந்தையில் தேக்கத்தை ஏற்படுத்தியதை மறைத்து பொருளாதாரம் வீழ்ந்தது என்று சலுகை பெறுவதும் தொழிலாளர் சட்ட உரிமைகளை பறிப்பதும்; அடக்கு முறைகளை ஏவி விடுவதும் முதலாளித்துவ சர்வதேச கொள்கையாகும். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தொழில் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாக (போராடி பெற்ற) 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு விதிகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை குப்பை தொட்டிக்கு அனுப்ப தயாராக இருக்கின்றது.

முதலாளித்துவத்தின் கட்டற்ற இலாப வெறி கொள்கையால் மிகை உற்பத்தி செய்யப்பட்டு; உலகின் பல நாடுகள் திவாலாகி, மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த நெருக்கடிகள் பாசிச ஆட்சிக்கும் வழி ஏற்படுத்துகிறது.

படிக்க:
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
♦ தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !

உதாரணமாக முதலாளித்துவ மிகை உற்பத்தியால் தான் அமெரிக்க பொருளாதாரமே 12 ஆண்டுகளாக வீழ்ந்து கிடக்கிறது. ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து “வந்தேறிகள்தான் நெருக்கடிக்கு காரணம்” எனப் பேசியே டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “வங்கதேச கரையான்களை ஒழிப்பேன்” என்று வெறுப்பு அரசியல் பேசிய அமித்ஷா மேற்கு வங்கத்தில் மட்டும் 18 எம்.பி தொகுதிகளை கைப்பற்ற முடிந்துள்ளது.

முதலாளித்துவ இலாபவெறியால் உண்டாகும் வேலையின்மை, விவசாயம் – சிறுதொழில் – அழிப்பு , பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை மறைக்க இனவெறி, மதவெறி, சாதிவெறி என திட்டமிட்டு தூண்டி விட்டு பாதிக்கபட்ட மக்களை பிரித்து பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறார்கள். உலகளவில் மக்களை சுரண்டும் முதலாளித்துவத்தை புரிந்து கொள்ளத் தவறினால் சக மனிதனையே எதிரியாக பார்க்கும் பாசிசம் நம் வாசலுக்கு வந்து நிற்கும்.

donald-trump-amit-shah

ஹெல்மெட் போடவில்லை என்றாலே இரு சக்கரவாகனம் ஓட்டக் கூடாது எனக் கெடுபிடி செய்யும் அரசு, தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இந்த கார்ப்பரேட் அடக்குமுறையை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த லாபவெறிக்கு அரசின் அங்கங்களான தொழிலாளர் நலத்துறை, போலீசு, நாடாளுமன்றம் – சட்டமன்றம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பு அரணாக உள்ளது. பண மதிப்பு நீக்கம் முதல் GST வரை சிறு முதலீட்டாளர்களை விவசாயம், தொழில்துறை இவற்றிலிருந்து வெளியேற்றி எல்லாவற்றையும் கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது இந்த அரசின் நோக்கமாகும். ஆட்டோமொபைல் வீழ்ச்சியோ, பொருளாதார மந்தமோ இரண்டுமே முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தான்.

தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் லாபவெறிக்கு எதிராக நமக்கு முன்னே இருக்கும் ஓர் வழி – வரலாறு நமக்கு காட்டும் பாதை – ஒன்று திரளுவதும்! உரிமைக்காக குரல் எழுப்புவதும் தான்!. PF சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூர் ஆயத்த ஆடை பெண்தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடிய ஒரே நாளில் PF சட்டத் திருத்தத்தை வாபஸ் வாங்கியது, மோடி அரசாங்கம்.

அதுபோல ஓசூரில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த அரசின் சதித் திட்டங்கள் மற்றும் முதலாளித்துவ அடக்குமுறை, உரிமை பறிப்புக்கு எதிராக அணிதிரள்வோம். தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டுவோம்!

♦♦♦

தொழிலாளர்களே!

  • மக்கள் எதிர்கொண்டுள்ள வேலையில்லாத திண்டாட்டம் முதல் திருட்டு, ஏமாற்று, கொலை, கொள்ளை, வன்முறை என இந்த எல்லா சமூக சீரழிவு பிரச்சனைகளுக்கும் முதலாளித்துவ கார்ப்பரேட் சுரண்டல் தான் காரணமாகும்!
  • கார்ப்பரேட் இலாப வெறிக்காக படித்த இளைஞர்கள், தொழிலாளர்கள் நாடோடிகளாக அலைய வேண்டுமா?
  • NEEM, கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரன்டீஸ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப் போராடுவோம்! மக்களை சூறையாடும் பொருளாதாரக் கொள்கையை வீழ்த்தினால் தான் மக்கள் கையில் பணம் புழங்கும்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784.

முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

0
Kashmir-Photo-Slider

ந்தியா நிர்வகித்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை அளித்த சட்டப்பிரிவை நீக்கும் முன், அம்மாநிலத்தை முடக்கி சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் படைகளால் நிரப்பியது.

அதன் பின், 15 நாட்கள் கழிந்த பின்னும் காஷ்மீரின் நிலைமை சீராகவில்லை. இந்திய அரசும் ஊடகங்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறதென சொல்லிவந்தாலும், ஆயிரக்கணக்கான படையினர் வீதிகள் தோறும் நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டபோது, ஒரு மாணவர்கள்கூட பெரும்பாலான பள்ளிகளுக்கு வரவில்லை என செய்திகள் சொல்கின்றன.

Barbed wire is seen laid on a deserted road during restrictions in Srinagar, August 5, 2019. REUTERS/Danish Ismail TPX IMAGES OF THE DAY பத்து நாட்களாக கேபிள் டிவி இணைப்புகள், தொலைபேசி, இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இன்னமும் பல பகுதிகளில் தடை தொடரவே செய்கிறது.

நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க தெருக்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளும்கூட மூடியே உள்ளன.

1989-ம் ஆண்டு முதல் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அந்த பிராந்தியம் சுதந்திரம் பெற வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என போராடி வருகின்றனர். காஷ்மீர் பிரச்சினையை உற்றுநோக்கி வரும் குழுக்கள், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான, பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷாரிடமிருந்து 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் ‘சுதந்திரம்’ பெற்றது முதல், இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீரை முன்வைத்து மூன்று யுத்தங்கள் நடந்திருக்கின்றன.

Residents cross a street during restrictions in Srinagar, August 5, 2019. REUTERS/Danish Ismail இந்தியாவின் நடவடிக்கை முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை மேலும் தூண்டும் என்றும் பாகிஸ்தானுடன் உராய்வை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Indian security personnel stop people during restrictions in Srinagarஸ்ரீநகரில் தடை செய்யப்பட்ட பகுதியில் மக்களை நிறுத்தும் இந்தியப் படையினர்.

View of a deserted road during restrictions in Srinagarஅனைத்து தொலைபேசிகளும் இணைய இணைப்புகள் மற்றும் கேபிள் தொடர்புகளும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னரே நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் இது பிரச்சினையை உண்டாக்கும் எனக் கருதி, இந்தியாவுக்கு ஆதரவான தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Indian security personnel stand guard on a deserted road during restrictions in Srinagarஇந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஸ்ரீநகரின் ஆள் அரவம் இல்லா சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

INDIA-PAKISTAN-KASHMIR-UNRESTமுள்வேலியால் தடுக்கப்பட்டிருக்கும் ஜம்முவின் ஒரு பகுதியில், இந்தியப் படையைச் சேர்ந்தவர் நிற்கிறார்.

Indian security personnel patrol on deserted road during restrictions in Srinagarபாகிஸ்தான் எல்லையோரமும், பள்ளத்தாக்கு முழுவதும் சுமார் 7,00,000 படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உலகின் இராணுமயமாக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீரும் ஒன்று.

India Kashmirமத்திய ஸ்ரீநகரில் ஊரடங்கின்போது, சாலையை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய போலீசின் கவச வாகனம்

India Kashmirஇடதுசாரி போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசின் முடிவை எதிர்த்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.

Pakistan India Kashmirபாகிஸ்தானின் லாகூரில் இந்தியாவுக்கு எதிராக நடத்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானியர்… தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக அமைதியான வழியில் போராடும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றனர்.


அனிதா
நன்றி
: அல்ஜசீரா

தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !

0

ல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த, வெவ்வேறு தொழிற்சங்கங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தில்லி பாராளுமன்றத் தெருவில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

நரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சம்பளம், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட வேலைச் சூழல், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்டவைகளை நேரடியாக பாதிக்கக் கூடியதாக இந்த சட்ட திருத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

labour-cose
டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )

சுமார் பத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் சங்கப்பரிவார “தொழிற்சங்கமான” பாரதிய மஸ்தூர் சங்கம் கலந்து கொள்ளவில்லை. “சம்பளச் சட்டம் – 2019” ஏற்கனவே பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடந்த மாதமே நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்நிலையில், பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், பணியிட வேலைச் சூழல் குறித்த சட்ட திருத்தம் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்திற்காக காத்துள்ளன.

ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குழப்பமானதாக இருப்பதாகவும், தொழில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு அவற்றை எளிமைப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தொழிற்சங்கங்களோ இந்த திருத்தங்கள் முதலாளிகளுக்குச் சாதகமானவை என்கின்றன. ஏற்கெனவே இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களையே கணக்கில் கொள்வதாக இருந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தமானது எல்லா பிரிவு தொழிலாளர்களையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. மேலும், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளும் குறுக்கப்பட்டுள்ளது.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

அதேபோல “சம்பளச் சட்டம்” பயிற்சிக் காலத்தில் உள்ள ஊழியர்களை (அப்ரண்டீஸ்) தொழிலாளர்கள் எனும் வரையறைக்குள் கொண்டு வரவில்லை என்பதையும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலின் பேரில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்ததை மாற்றி அதை ஒரு கமிட்டியின் பொறுப்பில் ஒப்படைக்கும் அதே வேளையில், வருடாந்திர சம்பள உயர்வையும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவது அல்லது மாற்றப்படுவதைப் பொறுத்தவரை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் ஒரு முடிவெடுத்தால் போதுமானது என்கிறது புதிய சட்ட திருத்தம். இதில் உலகளவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே குறைந்தபட்ச சம்பளமானது மிகக் குறைவான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் ஆய்வு அதிகாரி (Labour Inspector) எனும் பதவியை “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” (Inspector-cum-Facilitator) என மாற்றியுள்ளனர். இது நிர்வாக அதிகாரத்தை மொன்னையாக்கும் நோக்கம் கொண்டது என தொழிற்சங்கவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது வழக்காடு மன்றத்திற்கு வரும்போது அரசு தரப்பு வாதம் முதலாவதாக இருக்காது. மாறாக, ஆலை நிர்வாகம் தனது செயல்பாடுகளை “சட்டத்திற்கு உட்பட்டதாக” மாற்றிக் கொள்ள “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” வாய்ப்புக் கொடுக்கலாம்.

trade-union-protest-change-labour-laws
டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை என இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது AICCTU தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை. மேலும், வேலை நேரத்தைப் பொறுத்தவரை புதிய சட்டத்தின் பிரிவு 13, உட்பிரிவு 1A வேலை நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு கொடுக்கிறது. அதே நேரம் பிரிவு 13 உட்பிரிவு 2 அந்த வேலை நேரத்தை நீட்டிக்கும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு வழங்குகின்றது. ஆக, சட்டப்பூர்வமாகவே 8 மணி நேர வேலை என்பதை நினைத்தமாத்திரத்தில் முதலாளிகளால் மீற முடியும் – தொழிலாளிகளின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மோடி அரசு.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற பம்மாத்துகளின் பின்னணியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மற்றும் அந்த உரிமைகளைக் காக்க ஏற்படுத்தப்பட்ட 44 சட்டங்களை ஒரே மூச்சில் நொறுக்கிப் போட்டுள்ளது மோடி அரசு. பல்வேறு தொழில்கள், தொழிற்பிரிவுகள் மற்றும் அவற்றில் ஈடுபட்டுள்ள வேறுபட்ட தொழிலாளர்கள், வேறுபட்ட பணிச்சூழல், பிரத்யேகமான நிலைமைகள், தன்மைகள், முக்கியமாக பரந்துபட்ட நாடு மற்றும் பிரதேச வேறுபாடுகள் என பலபத்தாண்டுகளாக ஒவ்வொரு தனித்தன்மையான சூழலுக்கும் ஏற்ப தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் வேண்டும் என ஒவ்வொரு சந்தர்பத்திலும் போராடியதால் தான் இதுவரை இருந்த பாதுகாப்புச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவையனைத்தையும் ஒரே வீச்சில் ஒழித்துக் கட்டிவிட்டு அனைத்துக்கும் ஒரே சட்டம் என மாற்றுவது சந்தேகமின்றி முதலாளிகளுக்கே சாதகமானது என குற்றம்சாட்டுகின்றன தொழிற்சங்கங்கள்.

படிக்க:
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
♦ காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

”தொழிலாளர் நலச் சட்டங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும், சிறுபான்மையினரை பாராளுமன்றத்திற்கு வெளியிலும் கும்பல் கொலை செய்துள்ளது பாரதிய ஜனதா. இதனை அனுமதிக்க முடியாது” என்கிறார் AICCTU தொழிற்சங்கத்தின் தில்லி இணைச் செயலாளர் ராஜேஷ் சோப்ரா. ஆனால், சங்க பரிவாரத்தின் பி.எம்.எஸ் இந்த சட்டங்களை வரவேற்கிறது. அதற்கு பி.எம்.எஸ் சொல்லும் காரணம் இந்தச் சட்டங்கள் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்கிறது என்பதே.

ஆனால், ஒருமைப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினர் பத்துக்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட சிறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்கிறார் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியா. அனைத்துத் தொழிலாளர்களையும் காக்கப் போகிறோம் என்கிற முகமூடியில் போடப்பட்டுள்ள புதிய சட்டம் உண்மையில் முக்கால் பங்கு தொழிலாளர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது.

தொழிலாளர்கள் தில்லியில் நடத்திய போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (International Trade Union Confederation (ITUC)) “மிக அடிப்படையான சமூக நீதியையும், கவுரவமான வேலைக்கான கோரிக்கையையும் மோடியின் அரசு துச்சமாக மதிப்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இது எமது இந்தியச் சகோதர சகோதரிகளின் போராட்டம் மட்டுமல்ல; எமது போராட்டமும்தான்” என அதன் பொதுச் செயலாளர் ஷரோன் பர்ரோ தெரிவித்துள்ளார்.


கட்டுரையாளர் : Akhil Kumar
தமிழாக்கம் :
சாக்கியன்
நன்றி : தி வயர்

தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

0

“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்!” என்ற தலைப்பில் குடந்தையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக  அரங்கக்கூட்டம் 13.8.2019 அன்று, பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு குடந்தை பகுதி அமைப்பாளர் தோழர் திலீபன்,  தலைமை தாங்கினார். “இப்ப அரசு கல்லூரில படிக்கும் போதே, வீட்டு கஷ்டத்தால குழு கடன் நிறைய வாங்கி, அத கட்டுறதுக்கு காலேஜ் லீவ் போட்டு, சப்ளையர் வேலைக்கு போறதால ஒழுங்கா காலேஜு போக முடில, படிக்கவும் முடில, இதுல புதிய கல்வி கொள்கைனு.. எல்லாம் பெரு முதலாளிகளிடம் போச்சுனா, எங்கள போல கஷ்டபடுற பசங்க படிப்புலாம் அப்புறம் கேள்விக்குறிதான்” என்று தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அடுத்து கருத்துரையாக, தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் திருநாவுக்கரசு பேசுகையில், “கல்வி என்பது அறிவாற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் கல்வி முறை, நம்மை சிந்திக்கவிடாமல்,  ஆங்கிலேயனுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்  அது ஏதோ ஒரு வகையில் பலருக்கு கல்வியை கொடுத்தது, ஆனால் தற்போது அருகமைப் பள்ளிகளை மூடுவது, கல்வியை பெரு முதலாளிகளிடம் ஒப்படைப்பது, என்பது பொதிமாடுகள் போன்ற இளம் தலைமுறைகளையே உருவாக்கும். இதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்” என்றார்.

படிக்க:
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !
♦ காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில், நமது நாட்டில் கல்விக் கொள்கை உருவான வரலாறு பற்றியும், சூத்திரர்களுக்கு கல்வி சென்றதும், அதை பார்ப்பனர்கள் எவ்வாறு பொறுக்காமல் துடித்தார்கள் என்பதையும், இன்று மிக கோரமான முறையில் அறிவியலுக்கு புறம்பான, புராண இதிகாச குப்பைகளை அறிவியல் என மாணவர்களிடம் புகுத்துவது பற்றியும் விளக்கிப் பேசினார். “இந்த புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையாக இருக்கும் போதே, பல வழிகளில் அமல்படுத்திவருகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும், அதற்காக எமது அமைப்பு துணை நிற்கும்” என்று பேசினார்.

சிறப்புரையாக பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் புதிய கல்விக் கொள்கை எப்படி கார்ப்ரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் சேவை செய்கிற வகையில் உள்ளது என்பதையும், இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில்தான் பலமாக உள்ளது மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களின் அறிவு மிகவும் பின்தங்கி உள்ளதால் அங்கு இதைப் பற்றியான விழிப்புணர்வு மிக குறைந்த அளவே உள்ளது. எனவே  இதை எதிர்த்து முறியடிக்க பள்ளி – கல்லூரி  மாணவர்கள் – ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் ஒற்றுமையுடன் களத்தில் போராட வேண்டும், என்று அறைகூவல் விடுத்தார்.

கடலூர் பு.மா.இ.மு தோழர்கள் மாணவர்களை ஈர்க்கும் விதமாக பாடல்களை பாடினார்கள். தோழர் சந்தோஷ் நன்றியுரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஜனநாயக சக்திகள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

லோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31

0
Political-economy-Cash-inflation

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 31

லோவும் இருபதாம் நூற்றாண்டும்

அ.அனிக்கின்

லோவின் திட்டத்திலிருந்த மோசமான அத்துமீறல்கள் இனி எந்தக் காலத்திலும் மறுபடியும் ஏற்பட முடியாது என்று அவருடைய சமகாலத்தவர்கள் எண்ணினார்கள். அவர்கள் நினைத்தது தவறாகும். லோவின் திட்டம் முடிவைக் குறிக்கவில்லை, தொடக்கத்தையே குறித்தது அல்லது வரப்போகின்ற யுகத்துக்குக் கட்டியங் கூறியது. அவர் ஆரம்பித்த துணிவான முயற்சிகளைக் கண்டு அவர் காலத்து மக்கள் திகைத்து நின்றார்கள். ஆனால் 19, 20-ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் ஏற்படுத்தியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அவை குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளைப் போலத் தோன்றுகின்றன.

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நுண்ணறிவுடைய பெரெய்ரா சகோதரர்களின் “கிரெடிட் மொபிலியே” என்ற பாரிஸ் நகரக் கூட்டுப் பங்கு வங்கியின் மூலம் லோவின் திட்டங்களான ஜெனரல் வங்கிக்கும் மிஸிஸிப்பி கம்பெனிக்கும் புத்துயிர் கொடுக்கப்பட்டதென்று சொல்லலாம்.

லோ தொடங்கிய நிறுவனங்களுக்கு, பொறுப்பு அரசரான ஃபிலீப் எப்படி புரவலராகவும் சுரண்டுபவராகவும் இருந்தாரோ அதைப் போலவே இந்த ஊக வாணிக அரக்கனின் திட்டங்களுக்கு மூன்றாம் நெப்போலியன் இருந்தார். இந்த வங்கி தன்னுடைய நடவடிக்கைகளைப் பன்மடங்காக்கி பிரான்சின் தொழில் துறை வளர்ச்சி முழுவதையுமே பங்குச் சந்தையின் சூதாட்டத்துக்கு உட்படுத்துவதற்கு என்ன சாதனங்களைப் பயன்படுத்தியது என்ற கேள்வியைக் கேட்டுப், பின்வரும் பதிலைத் தருகிறார் மார்க்ஸ்: “லோ உபயோகித்த அதே சாதனங்கள் தான்”(1)  என்று சொல்லிய பிறகு இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமையை விரிவான முறையில் விளக்குகிறார்.

கிரெடிட் மொபிலியே பிரெஞ்சு – பிரஷ்ய யுத்தத்துக்குச் சற்று முன்பு முறிந்தது; ஆனால் அது ஓரளவுக்கு முக்கியமான வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தது. தொழில் துறையோடு நெருக்கமாக இணைந்துள்ள ஊகவணிக வங்கிகளை ஏற்படுத்தியதன் மூலம் வங்கித் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்துக்கு அடிக்கல் நாட்டியது. தொழில் துறையின் முழுக் கிளைகளிலும் கேந்திரமான உச்சிகளைக் கைப்பற்றிய பெரிய அளவிலுள்ள கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் வளர்ச்சியிலிருந்து, 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரம்மாண்டமான வங்கிகள் தொழில் துறை ஏகபோகங்களோடு இணைந்து நிதி மூலதனம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இதை “ஆக்கபூர்வமான” வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதன் அத்து மீறல்கள் அப்படிப்பட்டனவா? மிஸிஸிப்பி பள்ளத்தாக்கில் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போவதாக லோ சொன்னதை, ஒரு வணிகர்கள் குழு பனாமா கால்வாய் கட்டப் போகிறோம் என்று சொல்லி 8,00,000 பங்குதாரர்களிடம் பணத்தை வசூலித்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போன மோசடியோடு ஒப்பிடலாமா? “பனாமா” (மாபெரும் மோசடி) என்ற சொல்லோ காலத்தில் ”மிஸிஸிப்பி” என்ற சொல்லைப் போல சாதாரணமாகக் கையாளப்பட்டது .

Crowd_outside_nyse-1929-crash
1929 நியூயார்க் வீழ்ச்சியினைத் தொடர்ந்து வால்வீதியில் குவிந்திருக்கும் மக்கள்.

லோ உருவாக்கிய திட்டத்தின் வீழ்ச்சியை 1929-ம் வருடத்தில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததோடு ஒப்பிடலாமா? அல்லது லோவினால் ஏற்பட்ட பணவீக்கத்தை, இருபதாம் நூற்றாண்டில் (இருபதுக்களில் ஜெர்மனியிலும் நாற்பதுக்களில் கிரீசிலும்) பணம் பல மில்லியன் தடவைகள் தன் மதிப்பை இழந்த மிக அதிகமான பண வீக்கத்தோடு ஒப்பிடலாமா? பண வீக்கப் பிரச்சினை நவீன முதலாளித்துவத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சிறிதும் மிகைப்படுத்தத் தேவையில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பண வீக்கம் என்பது கட்டளை விதியாக, நிரந்தரமான கூறு என்பதாகிவிட்டது. அது பொருளாதாரக் கஷ்டங்களை அதிகப்படுத்துகிறது, சமூகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துகிறது, பண நெருக்கடியை ஊக்குவிக்கிறது. நவீன காலத்தில் பணவீக்கம் ஜான் லோவின் காகிதப் பணம் மதிப்புக் குறைந்ததைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகச் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு ஆகும்.

நவீன காலத்தில் பணவீக்கம் என்பது காகிதப் பணத்தை மிகவும் அதிகமாக அச்சிடுவதோடு சம்பந்தப்பட்ட பொதுவான பொருளாதார நிகழ்வுப் போக்காகும்; ஆனால் சில சமயங்களில் அது இல்லாத பொழுதும் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பண வீக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான காரணம் “பணவியல்” அம்சத்தோடு நேரடியாக இணைக்கப்படாமல் ஆனால் வேறு ஏதாவது காரணங்களின் மூலமாக ஏகபோகக் கொள்கை, பொருள்கள் பற்றாக்குறை அல்லது அந்நிய வர்த்தக நிலைமை முதலியவற்றினால் ஏற்படுகின்ற விலைகளின் அதிகரிப்பாகும்.

ஆனால் இப்படி “முட்டுக் கொடுக்கின்ற” பணத்தின் அளவின் அதிகரிப்பு அதிகரித்திருக்கும் விலைகளின் மட்டத்தை உறுதிப்படுத்தியதோடு பணவீக்கத்தை ஊக்குவிக்கலாம்; அவ்வாறு செய்கிறது. இன்றைய நவீன நிலைமைகளில் பணத்தின் அளவும் விலைகளின் மட்டமும் ஒரே வழியாக மட்டுமே இருக்கும் நெகிழ்ச்சியைப் பெற்றிருக்கின்றன, அதாவது அவை மேலே உயர்கின்றனவே தவிர, கீழே இறங்குவதில்லை. இந்த விதியின் கரு ஏற்கெனவே லோவின் முறையில் இடம் பெற்றிருந்தது.

படிக்க:
நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

லோ வளமான கற்பனையும், வாய்ப்பும் தீவிரமான வேகமும் கொண்ட பண மோசடிக்காரராக இருந்தார்; அவருக்குப் பின்னர் அவரைப் போன்றவர்கள் வரலாற்றில் தோன்றினர்; அவருடைய ஆளுமையை வரலாறு பல தடவைகளில் மறுபடியும் உருவாக்கியது. அப்படிப்பட்ட மனிதர்கள் முதலாளித்துவத்துக்குத் தேவை; அவர்களை அது பெற்றெடுக்கிறது. அவர்கள் சில சமயங்களில் இஸாக் பெரெய்ரா அல்லது ஜான் பிர்பான்ட் மார்கன் ஆகியவர்களைப் போன்று உண்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். அல்லது எமிலி ஜோலாவின் L’argent என்ற நாவலின் முக்கிய பாத்திரமான பங்கு மார்க்கெட் முதலாளி சாக்கார் அல்லது டிராய்ஸரின் படைப்பாகிய அசுர பலமும் அடக்கமும் கொண்ட பண மோசடிக்காரரான கௌபெர்வுட் போல கற்பனைப் பாத்திரங்களாக இருக்கிறார்கள்……

லோவின் நிதித் துறைச் செய்முறைகளும் கருத்துக்களும் அரசியல் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் முக்கியமான பங்கு வகித்தன. இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு நேரடியான சீடர்கள் ஏற்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கு அவர் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது உண்மையே. மறுபக்கத்தில், 18-ம் நூற்றாண்டிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அரசியல் பொருளாதாரத்தின் மிகச் சிறப்பான வளர்ச்சி பெருமளவுக்கு லோவின் கருத்துக்களின் மூலமாகவே ஏற்பட்டன என்றபோதிலும், அந்தக் கருத்துக்கள் அபாயகரமான, பெருங்கேடு ஏற்படுத்தக் கூடிய முரண் கோட்பாடுகள் என்ற வகையில் அவற்றை நிராகரித்ததன் மூலமாக வளர்ச்சி அடைந்தன.

Political-Economy-Adam_Smith-David_Ricardo
ஆடம் ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ

லோவின் முரண்கோட்பாடுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் கெனே, டியுர்கோ, ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோருடைய கருத்துக்களை உருவாக்குவதில் கணிசமான பங்கு வகித்தது. பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆராய்ந்த பொழுது மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிஸியோ கிராட்டுகளின் தோற்றம் கொல்பேர்வாதத்தை எதிர்த்ததோடும் குறிப்பாக ஜான் லோவின் அமைப்பைப் பற்றி ஏற்பட்ட கலவரத்தோடும் இணைப்புக் கொண்டிருந்தது.”(2) மூலச்சிறப்புடைய பொருளியலாளர்கள் லோவைக் குறை கூறியது முற்போக்கான தன்மை கொண்டிருந்தது, சரியான திசையில் செலுத்தப்பட்டிருந்தது. வாணிப ஊக்கக் கொள்கையோடு லோ பல பொது அம்சங்களை அதிகமாகக் கொண்டிருந்த படியால் அந்தக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் அது ஒரு பகுதியாக இருந்தது. எல்லாவிதமான பொருளாதாரப் பிரச்சினைகளையுமே பணம், வர்த்தகச் சமநிலை முதலியவை பற்றிய விவகாரங்களாகவே வகைப்படுத்திய பூர்வீக வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து அவர் அதிகமாக வேறுபட்டிருந்தார் என்பது உண்மையே.

பணம் என்பது பிரதானமாக பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்துகின்ற கருவி என்றே அவர் கருதினார். ஆனால் அவர் மேலெழுந்த வாரியாகவுள்ள செலாவணி உலகத்தைத் தாண்டி முன்னேறவில்லை; முதலாளித்துவ உற்பத்தியின் சிக்கல் நிறைந்த அமைப்பியலையும் உட்கூறுகளையும் புரிந்து கொள்வதற்குக் கூட எந்த முயற்சியும் செய்யவில்லை. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச்சிறப்புடைய ஆசிரியர்கள் இதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் செய்தார்கள்.

லோ பணவியல் காரணிகளைச் சார்ந்திருந்தபடியால் இயல்பாகவே தன்னுடைய எல்லா நம்பிக்கைகளையும் அரசுடன் இணைத்துக் கொண்டார். அவர் ஆரம்பத்திலிருந்தே அரசு வங்கி ஏற்படுவதை விரும்பினார்; அப்பொழுது ஏற்பட்ட தற்காலிகமான சிரமங்களே முதலில் தனியார் வங்கியை ஏற்படுத்துவதற்கு அவரை இணங்கவைத்தன. அவருடைய வர்த்தக ஏகபோகம் என்பது பிரத்தியேகமான வகையில் அரசின் ஒட்டுப்பகுதியாக இருந்தது.

லோ தன்னுடைய பொருளாதாரக் கொள்கையில் முரண்பாடுகளோடு நடந்து கொண்டார். அரசின் ஒழுங்கு முறை உத்தரவுகளில் சில பொருளாதாரத்துக்குக் குந்தகமாக இருந்தபடியால் அவர் அவற்றை ரத்துச் செய்தார், உடனே வேறு நடவடிக்கைகளைக் கொண்டுவந்தார். நிலப்பிரபுத்துவ அதிகாரவர்க்க அரசின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது; ஆனால் பொருளாதாரத்தில் அரசின் இத்தகைய முரட்டுத்தனமான, சுமை மிகுந்த தலையீட்டை எதிர்த்து பிஸியோ கிராட்டுகளும் ஆடம் ஸ்மித்தும் போராடினார்கள். இந்த அம்சத்திலும் கூட, லோவைக் காட்டிலும் புவாகில் பேர் அவர்களுக்கு அதிகம் நெருக்கமானவர்.

படிக்க:
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

கடன் வசதி மூலதனத்தைப் படைக்கும் என்ற கருதுகோளை லோ முன்வைத்ததோடு அதை அமுல் செய்வதற்கும் முயற்சி செய்தார். மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தினர் இந்தக் கருதுகோளை நிராகரிக்கும் பொழுது உற்பத்தியை வளர்ப்பதில் கடன் வசதி வகிக்கின்ற முக்கியமான பாத்திரத்தைக் குறைவாக மதிப்பிட்டார்கள், இங்கே ஒரு ஆங்கிலப் பழமொழியை உபயோகிக்கலாமென்றால், அவர்கள் குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரை மட்டும் வெளியே கொட்டவில்லை, குழந்தையையும் சேர்த்தே கொட்டினார்கள்.

கடன்வசதியைப் பற்றி லோ கொண்டிருந்த கருத்துக்கள் குறைந்தபட்சம் ரிக்கார்டோவின் கருத்துக்களைக் காட்டிலும் அதிக சுவாரசியமானவை; எனினும் மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை விளக்கியவர்களில் மிகவும் முக்கியமானவரோடு மொத்தத்தில் அவரை ஒப்பிட முடியாது.

“இயற்கையான அமைப்பின்” முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒத்திசைவில், சுதந்திரமான உற்பத்திக் கொள்கையின் பேராற்றலில் லோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதிலும் கூட அவர் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்கிறார் என்பது வெளிப்படுகிறது. இந்த முரண்பாடுகள் தீவிரமடைந்தது முதலாளித்துவ விஞ்ஞானம் லோவைப் பற்றிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்ப்பந்தித்தது. லுயீ பிளாங், இஸாக் பெரெய்ரா ஆகியோர் காலத்தின் போது அவருடைய பழைய பெருமை மீட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவே கடைசி அல்ல. இன்னொரு புது வகையான மீட்டுக் கொடுத்தலை (வேறு வகையான கருத்து நிலையிலிருந்து என்பது தெளிவு) அரசு ஏகபோக முதலாளித்துவச் சித்தாந்திகள், கெய்ன்சின் ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.

Political-economy-Cash-inflationகடன் வசதி, நிதித்துறை ஆகியவற்றின் மூலமாகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது, அரசு பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாத்திரத்தை வகிப்பது ஆகியவை லோவின் முக்கியமான இரண்டு கருத்துக்களாகும். இவை இங்கே நன்கு பொருந்துகின்றன. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் லோ, கெய்ன்ஸ் ஆகிய இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ஒரு நவீன எழுத்தாளருடைய கருத்துக்களை மேற்கோளாகக் காட்டினோம். இது மட்டும் தான் புதிரான கருத்து என்று நினைக்கக் கூடாது. உதாரணமாக பிரான்சில் ஜான் லோவும் டிரிஜிஸ்மின் தோற்றமும் என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. டிரிஜிஸ்ம் என்பது அரசு பொருளாதாரத் திட்டமிடுதலின் பிரெஞ்சுப் பதிப்பாகும்.

அமெரிக்காவில் முதலாளித்துவக் கம்பெனிகள், தனிநபர்கள் மீது விதிக்கப்படுகின்ற வரி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்குக் காங்கிரசின் அனுமதி இல்லாமல் முடியாது. இது நிர்வாகத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற பழைய முதலாளித்துவ ஜனநாயக நடவடிக்கையாகும். இன்று அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த நிலைமையைப் பற்றி அதிகமாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்; வரிகளைக் கையாளுவது தான் நவீன பொருளாதாரக் கொள்கையின் ஒரு முக்கியமான ஆயுதம்; எனவே அதைத் தங்களுடைய முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு அவர்கள் விரும்புவார்கள். அந்தக் காலத்தில் பிரான்சில் முடிவுகள் எவ்வளவு சீக்கிரமாக எடுக்கப்பட்டன என்பதைப் பற்றி லோ மகிழ்ச்சியடைந்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. “இது அதிர்ஷ்டமான நாடு; இங்கே ஒரு நடவடிக்கையைப் பற்றி ஆராய்வதற்கும் முடிவு செய்வதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இருபத்து நான்கு மணி நேரம் போதும்; இங்கிலாந்தில் அதற்கு இருபத்து நான்கு வருடங்கள் தேவைப்படும்.” பிரான்சில் மிக வேகமாக முடிவுகள் எடுக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அங்கே சர்வாதிகார முடியாட்சி நடைபெற்றது தான்; இதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

படிக்க:
ஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு
♦ ஸ்வீடன் தேர்தல் முடிவு : மக்கள் நல அரசில் இருந்து பாசிசத்தை நோக்கி !

அதிகமான பணச் செலாவணி, பண வீக்கம் ஆகியவற்றின் சாதகமான விளைவுகளைப் பற்றி லோ கூறியிருக்கும் கருத்துக்கள் முதலாளித்துவப் பொருளியலாளர்களின் புத்தகங்களில் திரும்பத் திரும்பப் புத்துயிர் அடைகின்றன. பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தம் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு “அளவான பண வீக்கம்” என்று அவர்கள் கருதுகின்றனர்.

எனினும் இந்தக் கொள்கையைப் பின்பற்றும் பொழுது, அதற்குரிய தீவிரமான பிரச்சினைகளையும் மோதல்களையும் அது ஏற்படுத்துகிறது. மேற்கு நாடுகளில் பொருளாதார நிபுணர் என்ற தொழில் முதலாளித்துவம் என்ற நோயாளியின் படுக்கையின் அருகே உட்கார்ந்திருக்கும் மருத்துவர் தொழிலைப் போன்றதாகும். நோயினால் ஏற்படும் துன்பங்களை இடையிடையே குறைப்பது தான் இந்த மருத்துவர்கள் செய்யக் கூடிய மாபெரும் சேவையாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, F. Engels, Werke, Bd. XII, Berlin, 1969, S. 32.

(2)  K. Marx, Theories of Surplus-Value, Part 1, p. 59.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !

கேள்வி : //மோடியும் ” காமராஜர் ஆட்சி ” என்று இப்போது பிதற்றுவது எப்படியிருக்கு //

-எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

Modi

தேர்தல் பிரச்சார நேரத்தில் மோடி அப்படி கூறியிருப்பார். காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கருக்கு பாராளுமன்றத்தில் படம் திறந்து விட்டு இன்னொருபுறம் காந்தியை ஆண்டுதோறும் நினைவுகூர்கிறார் மோடி.

அது போல பசுவதைத் தடைச் சட்ட கலவரத்தின் போது ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தில்லியில் காமராசாரின் வீட்டையே எரிக்க முயன்றது. திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை எதிர்ப்பதற்காக துக்ளக் சோ துவங்கி வைத்த இந்த “காமராஜர் ஆட்சி பொற்காலம்” புரளியை சோவின் மனங்கவர்ந்த மோடி உச்சரிப்பதில் என்ன அதிசயம்?

♦ ♦ ♦

கேள்வி : // கேள்விக்கு பதில் வரல அப்படி அந்த கேள்வி தப்புனாலும் அதை எடுத்துச் சொல்லலாம்..? அப்படி வினவில் போட முடியாத கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலமாக பதில் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்? //

– பா.அருண்

ன்புள்ள அருண்,

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவே முயல்கிறோம். வேலைச் சுமை தவிர தாமதத்திதற்கு வேறு காரணங்கள் இல்லை

♦ ♦ ♦

கேள்வி : // தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றால் என்ன? //

– சசாங்கன்

விரிவாக பதிலளிக்க வேண்டிய இந்தக் கேள்விக்கு ஒரு எளிய அறிமுக விளக்கம் மட்டும் கொடுக்கிறோம். 1991-ம் ஆண்டில் இந்தியாவில் இம்மூன்றும் அறிமுகம் செய்யப்பட்டன. தனியார்மயம் என்பது தனியார் இன்னின்ன தொழில்தான் செய்ய வேண்டும், அவை தவிர மற்ற தொழில்களை செய்யக் கூடாது, சில துறைகள் அரசிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்கிறது. அவ்வகையில் அனைத்து தொழிற்துறைகளும் ஏன் கல்வி, சுகாதாரம் போன்ற சேவை அடிப்படையிலான துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டன. தற்போது ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பார்த்தால் நாட்டின் பாதுகாப்பு தொழிற்துறைகளிலும் தனியார் துறை வந்துவிட்டது. இந்த 28 ஆண்டுகளில் ஏராளமான பொதுத்துறைகள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன. பல பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன.

தாராளமயம் என்பது சந்தைதான் அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்ற முறையில் அன்னிய முதலீடு உள்ளே வருவது மற்றும் தனியார் தொழில் துவங்க இருக்கும் தடைகள் அத்தனைகளையும் ரத்து செய்யக் கோருகிறது. கோக், பெப்சி மட்டுமல்ல சில்லறை வணிகத்தை அழிக்கும் வால்மார்ட் கூட எந்த தடையுமின்றி வரலாம் என்பதை தாராளமயம் நடைமுறைப்படுத்துகிறது. தற்போது அமேசான் ஆன்லைன் விற்பனையாக அது பரிணமித்துவிட்டது. சில துறைகளில் அன்னிய முதலீடு 49% இருக்கலாம் என்பதை 51 மற்றும் அதற்கு மேல் என்பதை தாராளமயம் கொண்டு வருகிறது. ‘லைசன்ஸ் ராஜ்ஜியம்’ என்று கூறப்பட்ட தடைகள் அனைத்தையும் தகர்ப்பதே தாராளமயம். தாராளமயத்தின் மூலம் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது, சங்கம் கட்ட ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் போன்றவையும் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு உத்தரவுகளோடு, சட்டங்களையும் திருத்துகிறார்கள், அல்லது புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.

globalஉலகமயம் வல்லரசு நாடுகளின் நிதி மூலதனம் தங்கு தடையின்றி நம்மைப் போன்ற ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சுரண்டுவது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை உற்பத்தியின் பின்னிலமாக்குவது. தற்போது உலக அளவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவையை உலக அளவில் பல நாடுகளில் மலிவான உழைப்பு, தாராளமய சலுகைகளைப் பெற்றுக் கொண்டு மலிவாக உற்பத்தி செய்கின்றன. அதன் மூலம் பெரும் இலாபத்தை அடைகின்றன. உற்பத்தி மட்டுமல்ல நுகர்வையும் சுரண்டலுக்கேற்ப உலக மயமாக்குகிறார்கள். இதற்கு தோதாக உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்கிறார்கள். அவ்வகையில் தேசிய இனப் பண்பாடுகள் ஒழிக்கப்பட்டு நுகர்வு கலாச்சாரமே ஆதிக்கம் செலுத்துகிறது. கலை, இசை, சினிமா அத்தனையும் உலகமயத்தில் தேசிய அடையாளங்களை இழந்து வருகின்றன.

தனியார்மயம், தாராளமயம், உலக மயத்தை அமல்படுத்துவதற்காக 90-களில் உலக வர்த்தகக் கழகம் (World Trade Organisation) துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஏகாதிபத்திய நாடுகளின் சார்பில் ஏழை நாடுகளின் வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதிகளை வடிவமைக்கிறது. உலக வங்கியும் (World Bank), சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund) அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் உலகெங்கும் அமல்படுத்துவதை செய்கின்றன. அதற்காகவே ஏழை நாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளோடு கடன்களை அளிக்கின்றன. அந்த நிபந்தனைகள் உலகமயத்தை அமல்படுத்துவதை உத்திரவாதப்படுத்துகின்றன.

மொத்தத்தில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை அமெரிக்காவை மையமாகக் கொண்ட வல்லரசு நாடுகள் முழு உலகையும் பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்பு செய்வதற்காக அமல்படுத்தப்படுகிறது. உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலக வர்த்தகக் கழகம் போன்ற வல்லரசு நாடுகளின் அமைப்புகள் மேற்கண்ட மூன்று கொள்கைகளையும் அமல்படுத்தும் கருவிகளாக செயல்படுகின்றன.

♦ ♦ ♦

கேள்வி : // சிலை வழிபாடு தேவையா? பெரியார்க்கு  மாலை போடுறது அப்படினு கேள்வி வருது? சிலை பிற்போக்குத்தனமான ஒன்றா? //

– பா.அருண்

அன்புள்ள அருண்

கடவுள் சிலைகளை வழிபடுபவர்கள் பக்தர்கள். தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்பவர்கள் கட்சி மற்றும் இயக்க ஆர்வலர்கள். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட ஒன்று.

கடவுளர்களே இந்த உலகை படைத்து காப்பதாக நம்பும் பக்தர்கள் கடவுளர்களின் சிலைகளை தொழுகிறார்கள். அப்படி தொழும் போது தங்களது வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தவறாது வைக்கிறார்கள். நமக்கு அப்பாற்பட்ட சக்தி, இந்த உலகை ஆளும் சக்தி என்ற பயத்தோடும் இந்த வழிபடுதல் அல்லது தொழுதல் நடக்கிறது. இதுவும் தலைவர்களை மரியாதை செய்வதும் ஒன்று அல்ல.

தலைவர்கள் சிலைகளை பொறுத்தவரை அவர்களது கொள்கைகள் போராட்டங்கள் பங்களிப்பு சார்ந்து அவர்களை நினைவுகூர்ந்து அந்தக் கொள்கைகள் போராட்டங்களை தொடருவோம் என அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்கிறார்கள். அந்த வகையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு சிலைகள் வைப்பதும் மாலை போட்டு மரியாதை செய்வதும் அவர்கள் பிறந்த மற்றும் இறந்த தினத்தன்று பெருந்திரளாக மாலை போட்டு நினைவு கூர்வதும் சரியான ஒன்றுதான். இரண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

0
veer-shivaji

சிவாஜியின் வளர்ச்சி மற்றும் ஆட்சியின் பன்முக பரிமாணங்களை ஆய்வு செய்தல் :

சிவாஜி குறித்த வரலாற்று உண்மைகளை சங்கபரிவாரங்கள் மறைந்த வரலாற்று உண்மைகளை தனது சப்ரங் இணையதளத்தில் ”Sivaji in Secular Maharastra” என்ற பெயரில் கட்டுரைத் தொடர்களாக எழுதியிருந்தார், சமூகச் செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத். அதன் தமிழாக்கத்தை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்..

ராட்டிய நாட்டுப்புறப்பாடல்களில் குறுநில நாடுகளின் மன்னனாக உருவகப்படுத்தப்பட்ட சிவாஜி சமகால வரலாற்றாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதன் விளைவு : இந்து தீவிரவாதிகளால் அவர் கைப்பற்றப்பட்டதுடன் அரசியல் அதிகாரத்திற்கு குறிப்பாக அவர் முடிசூடப்பட்டதன் பின்னனியில் இருக்கும் சாதிய பரிணாமத்தை மறைப்பார்கள்.

SA Dange
தோழர் எஸ்.ஏ. டாங்கே

தோழர் எஸ்.ஏ. டாங்கே (SA Dange) மற்றும் கோவிந்த் பன்சாரே (Govind Pansare) ஆகியோர் தங்களது வீச்சான சொற்பொழிவில் மராட்டியத்தில் சிவாஜியின் வரலாற்றை திறம்பட அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஜடுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) முதல் ஜி.எஸ்.சர்தேசாய் (GS Sardesai) வரையிலான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் இவற்றை ஆய்வு செய்துள்ளனர். 1994 முதல் பன்முக இந்தியாவுக்கான கல்வி இயக்கமான KHOJ அமைப்பு சமூக ஆய்வுகள் மற்றும் வரலாற்றை கற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தி வருகிறது. வரலாற்றாசிரியர்களின் பணிகள் உள்ளடக்கிய சிலவற்றை இங்கு தொகுத்து தருகிறோம்.

கேள்வி 1: சிவாஜியின் படையில் முதன்மை படைத்தலைவர்கள் யார்?

பதில்: தௌலத் கான் மற்றும் சிட்டி மிஸ்ரி. இருவரும் முஸ்லிம்கள்.

கேள்வி 2: சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் யார்?

பதில்: முல்லா ஹைதர். இவரும் ஒரு முஸ்லிம் தான்.

கேள்வி 3: சிவாஜிக்கு மிக நம்பகமான மற்றும் நெருக்கமான வேலைக்காரரும் ஆக்ரா சிறையிலிருந்து அவர் தப்ப உதவியரும் யார்?

பதில்: மதானி மஹ்தர். இவரும் முஸ்லிம் தான்.

கேள்வி 4: ராய்காட்டிலுள்ள தன்னுடைய அரண்மனையின் முன்னால் நாள்தோறும் வழிபாட்டிற்காக செல்லும் ஜெகதீஸ்வர் கோவிலுக்கு அடுத்து சிவாஜி கட்டியது என்ன?

பதில்: முஸ்லிம்களின் தொழுகைக்காக சிறப்பான ஒரு பள்ளிவாசலை கட்டினார்.

(ஆனால் வரலாற்றில் கீர்த்தி பெற்ற பல்வேறு நபர்களை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் கபளிகரம் செய்துள்ளனர்.)

சிவாஜியைப் பற்றிய ஒரு சமச்சீரான புரிதலுக்கு பள்ளி மாணவர்களைப் பழக்கப்படுத்துவதற்கான ஒரு ஆய்வினை சீர்குலைப்பதாக சிவசேனா அச்சுறுத்துகிறது. ஒரு முன்னோடி கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக எந்த தவறும் செய்யாத போதும் பள்ளி நிர்வாகத்தை எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மும்பை காவல்துறை மிரட்டுகிறது.

sivajiஒருபுறம் நாட்டை பாகுபடுத்தும் போக்கு மற்றும் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்துடன் திரிப்பது குறித்த விவாதம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாராமுகமாக இருந்து வருகிறது. இச்சூழலில், சிவாஜியைப் பற்றிய ஒரு சமச்சீரான பகுத்தறிவு பார்வையை தரக்கூடிய ஒரு கையேட்டை வெளியிட்டதற்கு எதிராக மிரட்டல்களையும் நியாயமற்ற எதிர்ப்புகளையும் மராட்டியத்தை ஆளும் ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ்-எம்.சி.பி அரசு பார்க்க நேர்ந்தது.

டான் பாஸ்கோ குழுமத்தால் நடத்தப்படும் மூன்று பள்ளிகளில் வரலாற்றைப் பற்றிய புரிதலையும் கற்றலையும் மேம்படுத்துவதற்காக தீஸ்தா செதல்வாத் (KHOJ மதச்சார்பற்ற கல்வித் திட்டம் வழியாக) எழுதிய ஒரு கையேட்டை அறிமுகப்படுத்தியது தான் சிக்கலின் தொடக்கம். மும்பையில் டான் பாஸ்கோ குழுமத்தால் இயக்கப்படும் பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இக்கையேடு அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்றுப் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இக்கையேடுகள் வரலாற்று ஆசிரியர்களுக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான பத்து மாத கால ஒத்துழைப்பின் விளைவாகும்.

படிக்க:
♦ சூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் !
♦ இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே!

சிவாஜியைப் பற்றிய பல தகவல்களுடன் சாதியத் தடைக்கற்களை தாண்டி அவர் அதிகாரத்திற்கு வந்து புகழடைந்ததை பற்றியும் இக்கையேடு கூறுகிறது. அப்சல் கானையும் சீரான முறையில் இது அணுகுகிறது. கலாச்சார பாதுகாவலர்களாக தங்களை தாமே அறிவித்து கொண்டவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன.

பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களின் முழு ஒப்புதலுடன் மூன்றில் இரண்டு பள்ளிகளில் ஜூன் முதல் இச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால் போரிவாலியில் உள்ள மூன்றாவது பள்ளியில் கையேட்டின் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான கருத்துக்களால் எரிச்சலடைந்த சில பெற்றோர்கள் அதை திரும்ப பெறக்கோரி பள்ளி தலைவரிடம் புகாரளித்து ஏற்றுக்கொள்ளப்படாததால் சிவசேனாவின் உள்ளூர் ஷாகா ஒன்றை அணுகினர். சிவசேனாவின் மகிழ்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்?

மராட்டியத்தில் குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக குறுகிய வகுப்புவாத அமைப்பு ஒன்றினால் சிவாஜி ஊதி பெருக்கப்பட்டுள்ளார். பாடநூல்களின் தரத்தை உயர்த்த அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வன்முறைகளால் இவ்வமைப்புகள் தடுத்து நிறுத்துகின்றன. 1986-ம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடநூல்களை திருத்த மராட்டிய பாடநூல் கழகம் எடுத்த முயற்சிகள் கூட இப்பிற்போக்கு சக்திகளால் கவிழ்க்கப்பட்டது.

சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட இந்த பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன. தன்னுடைய வாழ்நாளில் மகத்தான வெற்றிகளையும் புகழுமடைந்த ஒரு மனிதர் தன்னை மன்னனாக முடிசூடுவதற்கு பெனாரஸிலிருந்து ஒரு பார்ப்பனரை வரவழைத்து பூணூல் அணிந்து புனிதமாக்கும் சடங்கை செய்ய வேண்டியிருந்த துயரக்கதையை புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள் பலர் எடுத்துரைத்துள்ளனர். சிவாஜிக்கான சடங்கை செய்ய ஒப்புக்கொண்ட பார்ப்பன பூசாரிக்கு கணிசமான பணத்தை கொடுத்து ஈடு செய்ய வேண்டியிருந்தது.

SHIV SENA BJPசிறிது காலத்திற்கு முன்பாக இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்ற சமூகத்தை பிளவுபடுத்தும் மதவாத அமைப்புகள் இந்த வரலாற்று உண்மைகளை கையிலெடுத்து அதற்கு பல வண்ணம் பூசி கலவரத்திற்கு முயன்றன. ஆனால் ஜெயந்த் கட்காரி, என்.ஆர் பதக், கோவிந்த் பன்சாரே மற்றும் சரத் படேல் போன்றவர்களின் தொடர் முயற்சியால் மராட்டியத்தில் சிவாஜியை பற்றிய உண்மையான கருத்துக்கள் புத்துயிர் பெற்றன. மூத்த தொழிற்சங்கவாதி எஸ்.ஏ. டாங்கே 1950-களின் பிற்பகுதியில் மராட்டிய தொழிலாளர்களிடம் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகளான தியான்ச்சி சிவாஜி (Tyanche Shivaji), ஆம்ச்சே சிவாஜி (Aamche Shivaji) சிவாஜியை ஒரு ‘இந்து’ மன்னனாக காட்டும் சூழ்ச்சியையும், சிவாஜியின் ஆட்சிப் பகுதிகளில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களிடையே சமரச போக்கை உருவாக்க அவரெடுத்த கடுமையான முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும் செயல்களையும் கடுமையாக எதிர்த்தன.

சிவசேனாவை பொருத்தவரை சிவாஜிக்கும் அப்சல் கானுக்கும் இடையிலான சண்டை என்பது முஸ்லிம்களுக்கெதிரான தங்களது அரசியலை அதாவது அவர்களுக்கெதிரான தங்களது வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு கருவி அவ்வளவே. சிவசேனாவினால் மராட்டிய நாட்டுப்புற பண்ணான போவாடாவில் அவை பாடல் ஒலிப்பேழைகளாக வெளியிடப்பட்டு புகழ் பெற்றன. கடந்த காலத்தை நிகழ்கால அரசியலுக்கு அவர்கள் பயன்படுத்துவதை தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் எதிர்த்தாலும் கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் அத்தகைய முயற்சிகள் முளையிலேயெ கிள்ளியெறியப்படுகின்றன.

சமீபத்தில் டான் பாஸ்கோ கல்வி நிறுவனத்திற்கு எதிராக சிவசேனாவின் மிரட்டல்களையும் பிறகு மாநில அரசு உறுப்புகளான காவல்துறையும் கல்வித்துறையும் எப்படி செயற்பட்டன என்பது குறித்தும் இதன் வரலாற்று ஒளியில் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

படிக்க:
♦ சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
♦ காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

2001, செப்டம்பர் 17-ம் தேதி காலையில் கையேட்டைத் திரும்ப பெற நிர்வாகத்தை பணிய வைக்க சில பெற்றோர்களால் முடியாமல் போன பிறகு, சிவாஜியை ‘சூத்திரன்’ என்று இழிவுப்படுத்தியதாகவும் இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும் கூறி போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனாவின் அறிவிப்பு பலகை ஒன்று பள்ளிக்கு வெளியே வைக்கப்பட்டது.

Don-Bosco
டாப் போஸ்கோ பள்ளி (மாதிரிப் படம்)

அந்த நேரத்தில் பள்ளி நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டது. ‘சர்ச்சைக்குரிய’ பகுதியை நிபுணர்களின் குழு ஒன்றின் முடிவிற்கு நாம் விட வேண்டும். ஆனால் பள்ளிக்கு விடப்பட்ட மிரட்டல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நான் சொன்னேன். அதே சமயத்தில் சிவசேனாவின் வன்முறை வரலாற்றுப் பின்னணியின் கரணமாக பள்ளிக்கு பாதுகாப்பு கோரி செப்டம்பர் 18 காவல்துறையை அணுகினேன்.

ஆனாலும் பள்ளி நிர்வாகம் எடுத்த சரியான நிலைபாட்டை ஆதரிக்காமல் சிவசேனாவின் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால் கையேட்டை திரும்ப பெறுவதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என்று அப்பகுதியின் காவல்துறை துணை ஆணையர் இரக்கமற்ற முறையில் பள்ளி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.

விளைவு: செப்டம்பர் 19 காலையன்று பள்ளிக்கு முன்பு வெற்றி மிதப்பில் திரண்ட சிவசேனா கும்பல் நிர்வாகத்தின் மன்னிப்பு கடிதத்தை நகல் எடுத்து பொது மக்களுக்கு கொடுத்தது. பள்ளி நிர்வாகம் அளித்த மன்னிப்பு கடிதம் சிவசேனாவின் கைகளுக்கு எப்படி சென்றது என்பதை போலீசுதான் விளக்க வேண்டும். போலீசு இதற்கு உடந்தை இல்லையெனில் ஆங்கில அகராதிகளில் திருத்தம் வேண்டும்.

அதே போல பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் பள்ளிக்கு வந்ததுடன் கையேடு திரும்ப பெறப்படும் என்றும் உறுதியளித்த ஆச்சரியமும் நிகழ்ந்தது.

இப்பின்னணியில் அரசு ஊழியர்களின் நடத்தை தொடர்பாக எழுந்த இந்த சிக்கல்கள் மராட்டிய மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மராட்டிய மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டு விவாதப்பொருள்களாகின. ஒன்று, வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் போலீசு செயற்பட்டது மற்றொன்று, வரலாற்றைப் பற்றிய புதிய கண்ணோட்டம் வழங்குவதை கல்வித்துறை கட்டுப்படுத்தியது தொடர்பானது.

செப்டம்பர் 17 திங்களன்று சிவசேனாவிடமிருந்து பாதுகாப்புக் கோரி உள்ளூர் போலீசை தொடர்பு கொள்ள பள்ளி நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்தாலும் துணை ஆணையர் எஸ்.எஸ் கேம்கரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மும்பையில் சிவசேனா உருவாக்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் மிரட்டல்களுடன் சேர்த்தே இதை பார்க்க வேண்டுமெயொழிய தனித்துப் பார்க்க முடியாது.

இதற்கு சில வாரங்களுக்கு முன்பு மும்பை அருகிலுள்ள தானேவிலிருந்த ஒரேயொரு மருத்துவமனையை சிவசேனா முழுவதுமாக நொறுக்கியது அதன் உண்மையான நிறத்தை காட்டியது. நோயாளிகளைக் காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த மருத்துவமனை மருத்துவர்களால் கூட இரண்டு நோயாளிகளுக்கு கூடுதலாக எத்தனை பேர் இறந்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. இந்த கும்பலின் ஆத்திரத்திற்கு காரணம்? சாலை விபத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேனாவின் தானே தலைவர் ஆனந்த் திகே இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். ரூ 9 கோடி மதிப்புள்ள மருத்துவமனை சொத்துக்கள் மற்றும் கருவிகளை நொடிப்பொழுதில் நொறுக்கித்தள்ளிய சேனாவிற்கு எதிராக செயல்படத் தவறியதற்காக காவற்துறை ஆணையரும் மற்ற போலிஸ்காரர்களும் இப்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன் விசாரணையை எதிர்கொள்கின்றனர். அந்த மருத்துவமனை பின்னர் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு
♦ பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

இவையெல்லாம் டான் பாக்ஸோ நிறுவனத்தை மிரட்டிக்கொண்டிருந்த சிவ சேனாவின் உடனடி செயல்பாடுகள் ஆகும். அந்நிறுவனத்திற்கு எதிரான சிவசேனாவின் மிரட்டல்கள் ஒருபுறமிருக்க, சிவ சேனாவின் மகளிர் அமைப்பினரோ மும்பை நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஆணையரை அடித்துள்ளனர். இந்த சூழ்நிலைகளில் நூற்றுக்கணக்கான இளம் குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு பள்ளி நிர்வாகத்தின் அச்சத்தை நீக்க காவல்துறை என்ன செய்கிறது?

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகமும் எழுத்தாளரும் பலமுறை தெளிவுப்படுத்திய போதிலும் துணை ஆணையர் எஸ்.எஸ் கேம்கர் மூலம் போரிவலி காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து கையேட்டை திரும்ப பெற வைத்திருக்கிறது. முதல் நாள் நேரில் சந்திக்க முயன்று வீணானதைத் தொடர்ந்து செப்டம்பர் 18, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தொலைபேசியில் நான் தொடர்பு கொண்ட பிறகு நகர காவல்துறை ஆணையர் எம்.என். சிங்கின் நடத்தை இன்னும் மோசமானது.

தொலைப்பேசி அழைப்பிற்கு பிறகு துணை ஆணையர் கெம்கரிடமிருந்து பள்ளிக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்தன. மேலும் திரை மறைவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோவுடனான கிறிஸ்தவ தொடர்புகளைப் பயன்படுத்தி “சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்குமாறு” பள்ளிக்கு சிங் எச்சரித்தார்.

அந்த நேரத்தில், அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக பிரிவு 142 (ஆயுதங்களுடன் கூட தடை) நடைமுறையில் இருந்தது. இந்த புறச்சூழல் மற்றும் சிவசேனாவின் வன்முறை வரலாற்றை பார்க்கும்போது சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் அதன் அணுகுமுறையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் துணை ஆணையர் எஸ்.எஸ். கெம்கர் மூலம் முன்னோடி கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தை மன்னிப்பு கோர செய்து கையேட்டையும் திரும்ப பெற செய்திருக்கிறார் ஆணையர்.

மாநில பள்ளிக்கல்வித்துறையும் இதையேதான் செய்திருக்கிறது. மேல்நிலை பள்ளிக்கல்வி துறைக்கான சட்ட விதிமுறைகளின் படி, பள்ளிகள் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. இருந்தும் மாநில அரசு இயல்புக்கு மாறாக நடந்து கொண்டுள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ் / வி.எச்.பி நடத்தும் பல்லாயிரம் நிறுவனங்கள் காளான்களை போல பரவியிருக்கின்றன, வெறுப்பை பரப்பும் நூல்களை தடையேதுமில்லாமல் அவை பயன்படுத்துகின்றன. இதற்கெதிராக விசாரணை நடத்த ஆளும் ‘மதச்சார்பற்ற’ அரசுக்கு எப்போதாவது ‘தைரியம்’ இருக்கிறதா? வரலாற்றை பகுத்தறிவுடன் கற்றலுக்கும், மதவெறி மற்றும் வெறுப்பின்பால் பின்னப்படும் வலைகளை தூய்மைப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் நமது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக ஏன் இருக்கின்றன? மதவெறி மற்றும் ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் கும்பலுக்கு இது சவாலாக இல்லையே ஏன்?

இந்த வழக்கு தற்போது மகாராஸ்டிர மாநில மனித உரிமை ஆணையத்திடம் உள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர், 29-ம் நாள் நடக்க உள்ளது. அதே நேரத்தில் கையேட்டின் ஆசிரியருக்கு எதிராக 153 சி பிரிவின் கீழ் ஒரு வழக்கையும் போரிவலி காவல் நிலையம் தொடுத்துள்ளது.

(தொடரும்)


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா

கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் கடந்த 18.08.2019 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், சென்னை திருவெற்றியூரில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

NDLF Meetingஇக்கூட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் “பொருளாதார நெருக்கடியும், தொழிலாளர் வர்க்கம் எதிர் கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பொருளாதார சிக்கல்களை விளக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. அதன் பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். அவர்களுக்கு முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் பதிலளித்தார்.

அவரைத் தொடர்ந்து பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுவின், சென்னை துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.ரமேஷ் அவர்கள் “புதிய கல்வி கொள்கை – 2019” குறித்து உரையாற்றினார். அவர்தம் உரையில் “இதனை புதிய கல்வி கொள்கை என குறிப்பிடக் கூடாது. தேசிய கல்விக் கொள்கை என்பதே சரி. அதுவும் பாஜக ஆட்சியில் உள்ள தருணத்தில் ‘தேசிய’ என்பதன் பொருள் இந்துத்துவத்துக்கும் – கார்ப்பரேட்களுக்குமானது” என்பது குறித்து விளக்கி பேசினார்.

இறுதியாக புஜதொமு SRF மணலி கிளை பொருளாளர் தோழர் P.R.சங்கர் நன்றியுரையாற்றினார்.

படிக்க:
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

இந்த கூட்டத்தில் CITU திருவெற்றியூர் பகுதி தோழர்கள், மணலி தொழிற்சங்க கூட்டமைப்பு (FMTU), CPCL தொழிலாளர் சங்கம், TPL தொழிலாளர் சங்கம், பால்மர் லாறி தொழிலாளர் சங்கம், KPL தொழிலாளர் நலச்சங்கம், CETEX தொழிலாளர் சங்கம், SRF & SRF(P) தொழிலாளர் சங்கம், இந்துஜா பவுண்டரி தொழிலாளர் சங்கம், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம், MRF தொழிலாளர் சங்கம், ராயல் என்பீல்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு) மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 94444 61480 / 94453 68009

நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு

அயோத்தி : இருண்ட இரவு | பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு

டுத்த கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை / சீரழிவுகள் நடைமுறைப்படுத்த, முதலாளிகளுக்கு இன்று மோடி ஒரு அவசரத்தேவை, ஒருவேளை அயோத்தி இராமன் மோடியால் நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தப்படலாம் அல்லது மீண்டும் எழுப்பப்படலாம். தட்டி எழுப்பப்படுவதற்கு முன், இருண்டு கிடக்கும் இரகசியங்களை கட்டுடைக்க இந்நூல் பயன்படும்.

‘புதிய கலாச்சாரம்’ இதழில் வெளிவந்த இந்நூலின் ஆங்கில பதிப்பிற்கான விமர்சனமே இந்நூலை விடியலில் தமிழில் கொண்டுவரத் தூண்டியது. (நூலின் பதிப்புரையிலிருந்து)

1949-ம் ஆண்டு டிசம்பர் திங்கள், 23-ம்நாள், காலை 9 மணி பாபர் மசூதியுள் இராமர் சிலை வைக்கப்பட்டுப் பல மணிநேரம் கடந்த பின்னர், உ.பி. மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகர் காவல் நிலைய அதிகாரியான பண்டித் ராம்தேவ் துபே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்தார். அதில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (வன்முறையாகக் கலகம் செய்தல்), 448 (அத்துமீறி நுழைதல்), 295 (இறைவழிபாட்டு இடத்தின் புனிதத்தைக் குலைத்தல்) ஆகியவற்றின் கீழ், அபிராம்தாஸ், ராம்சகல்தாஸ், சுதர்சன்தாஸ், மற்றும் பெயர் தெரியாத 50 – 60 பேர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அந்த முதல் தகவல் அறிக்கைப் பதிவு இவ்வாறிருந்தது.

”காலை 7 மணி அளவில் நான் (ராம்தேவ்துபே) ‘ஜன்மபூமி’ இடத்திற்குச் சென்றேன். அங்கு காவற்பணியிலிருந்த காவலர் மாதா பிரசாத் (எண் 7, அயோத்தி காவல் நிலையம்) வழியாக நான் தெரிந்து கொண்டதாவது: பாபர் மசூதியின் சுற்றுச்சுவர் வாயில் பூட்டை உடைத்தும், சுவரிலும் படிக்கட்டிலும் தொத்தித் தவழ்ந்து ஏறியும் உள்ளே நுழைந்த 50 – 60 நபர்கள் ஸ்ரீபகவானின் சிலையை அங்கு நட்டி வைத்ததோடு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் சீதா, இராமர் படங்களைக் கோடுகளாக எழுதினர். அந்த 50-60 நபர்களும் அதைச் செய்தபோது அங்கு காவற்பணியிலிருந்த ஹன்ஸ்ராஜ் (காவலர் எண் – 70) அவர்களைத் தடுத்தார். ஆயினும் அவர்கள் காவலரைப் பொருட்படுத்தவில்லை. அங்கு பாதுகாப்புப் பணி செய்த மாநில ஆயுதப் படையினர் அழைக்கப்பட்டனர்.

அதற்குள்ளாகக் கும்பல் மசூதிக்குள் நுழைந்து விட்டிருந்தது. அவ்விடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட  மூத்த அதிகாரிகள் செயலில் இறங்கினர். சில மணி நேரம் கடந்த பின்னர் 5000 – 6000 பேர் அங்கு கூடினர். மசூதிக்குள் நுழைய முயற்சி செய்த அவர்கள் மத முழக்கங்களை எழுப்பியவாறும், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் இருந்தனர். வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதனால் இசை கேடாக எதுவும் நிகழவில்லை. குற்றம் இழைத்தவர்களான (அபி) ராம்தாஸ், (ராம்) சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் பெயர் தெரியா 50 – 60 நபர்கள் அத்துமீறி வன்முறையாக மசூதிக்குள் நுழைந்து சிலையை நட்டி வைத்ததோடு, மசூதியில் புனிதத்தையும் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். பணியில் இருந்த அலுவலர்களும், பொதுமக்கள் பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். எனவே நிகழ்வு நன்றாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வு மெய்யெனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.” (நூலிலிருந்து பக்.29-30)

அயோத்தியிலிருந்து வெளியிடப்பட்ட இந்தி வார இதழான ”விரக்தா” மட்டுமே நடந்த நிகழ்வுகளை  பதிப்பித்து வெளியிட்டது. அதனுடைய ஆசிரியர் நன்கு அறியப்பட்டவரான இராம் கோபால் பாண்டே சரத் இந்து மகாசபை உறுப்பினர். ‘விரக்தா’ வெளியிட்ட செய்திகள் அனைத்தும் இந்து மதச் சார்புடையனவாகவே இருந்தன. மகாசபை உறுப்பினரை ஆசிரியராகக் கொண்ட விரக்தா உண்மை நிகழ்வுகளை வெளியிடும் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் இராமர் பாபர் மசூதிக்குள் தானே தோன்றினார் என்னும் ‘கடவுளின் செயலை’ முதன்முதலாக வெளியிட்டது இந்த இதழ்தான்.

பின்னாட்களில் இந்த இராம் கோபால் பாண்டே சரத் இந்தியில் ஒரு சிறு நூல் – ஸ்ரீ இராம ஜன்ம பூமி கா ரக்தா ரஞ்சித் இதிஹாஸ்  – இராமர் பிறந்த இடத்தின் குருதி தோய்ந்த வரலாறு எழுதி வெளியிட்டார் … அந்நூலில் கூறப்பட்டதாவது:

23-12-1949-ம் நாள் இந்தியாவுக்குப் பெருமைமிக்க நாள். அன்றுதான் நானூறு ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின் இராமருடைய பிறப்பிடம் மீட்கப்பட்டது. முந்தைய நாள் இரவின் போது நடந்தவை பற்றிக் கூற வேண்டுமானால் அந்த இரவில் இராமர் தனது பிறப்பிடத்தைத் தானே மீட்டுக் கொண்டார் என்பதை மட்டுமே கூற முடியும்”

இவ்வாறு விளக்கம் தந்த மதவாதிகள் இரவின் இருளில் நடத்தப்பட்ட வஞ்சகச் செயலாக்கத்தைத் திரையிட்டு மூடினார்கள். ஆனால் அந்த இரவின் போது நடந்த உண்மை நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து வெளிக் கொண்டு வர அரசோ, நிறுவனங்களோ, தனி ஆய்வர்களோ முயற்சி செய்யவே இல்லை. ‘கடவுளின் செயல்’ என்பது பொய்க் கதை என வெளிப்படுத்துவதும் ஒருவகைப்பட்ட ஆய்வே.  (நூலிலிருந்து பக்.12-13)

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

அயோத்தியில் நிகழ்த்தப்படவேண்டியவை, மற்றும் அதன் எதிர்விளைவுகள் ஆகியன குறித்து, அரசியல் கட்சி என்ற அளவில் மகாசபை நன்றாகவே அறிந்திருந்தது. நிகழ்த்தப்பட வேண்டிய செயல் ஆபத்துக்கள் நிறைந்தது. பாபர் மசூதிக்குள் அதிரடியாகப் புகுந்து ஆக்கிரமித்துக் கொள்வது என்பது காந்தி கொலைக்குப் பின் உருவாகிய எதிர்விளைவுகளைப் போலவும் ஆகிவிடக்கூடும். அதை விடுத்து வஞ்சக வழிமுறையைக் கையாண்டு, மசூதியைக் கைப்பற்றிக் கொள்வது எளிதாகவும் நல்ல பலன் தருவதாகவும் இருப்பதோடு, உணர்வுகளின் அடித்தளத்தில் இந்துக்களை ஒன்றுதிரட்டி, எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவற்றைத் திசை திருப்பவும் இயலும். திட்டமிட்டவாறு அயோத்தியில் நிகழ்த்தப்பட்டால் அதன் தாக்கம் பல தொடர் நிகழ்வுகளைச் செயல்படுத்தவும், நாடு முழுவதும் இந்து தீவிரவாதிகளுக்கு ஊக்கம் பெருகவும் வழிவகை செய்ய, அதன் வழிபட்டுத் தேசிய அரசியலிலிருந்து காங்கிரசை வெளியேற்றவும் இயலும்.

வெளிப்படையாகப் பேசப்படாத வேறொரு காரணமும் இருந்தது. முந்தைய நாட்களில் மகாசபை நல்ல வலுவுடன் இருந்த மராட்டியத்தில் கூட, மக்கள் எதிர்ப்பு மற்றும் அரசின் அடக்குமுறை ஆகிய காரணங்களால் கட்சி புத்துயிர் பெறுவது இயலாததாக இருந்தது. எனவே, புத்துயிர் பெறுவதற்கான ஒன்றைச் செயல்படுத்துவதற்கான இடமாக உ.பி. மாநிலத்தை மகாசபை சிந்திக்கத் தொடங்கியது. மேலும் அங்கு கட்சித் தலைவர்கள் செயல் ஊக்கம் நிறைந்தவர்களாக இருந்தனர். அங்கு பற்ற  வைத்தவுடன் வெடித்துச் சிதறக்கூடிய அளவிலான மதப்பூசல்கள் இருந்தன. அங்கிருந்த சமூக அமைப்பு மதங்களிடையே வெறுப்பை உருவாக்குதவற்கு ஏதுவானதாக இருந்தது. அனைத்திலும் மேலாக அங்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துத்துவ உணர்வுமிக்கவர்களாக இருந்தனர். எனவே அயோத்தியில் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிமிக்க திட்டம், இந்துமகா சபை வரலாற்றில் உ.பி. ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிடக்கூடும். கட்சி அதைத் தெளிவாகக் கண்டுகொண்டது. மகந்த் திக்விஜய் நாத் மற்றும் அவரது தளபதிகளான கோபால் சிங் விஷாரத், இராமச்சந்திரதாஸ் பரமஹன்ஸ், அபிராம்தாஸ் ஆகியோரும் அதைக் கண்டுகொண்டனர். (நூலிலிருந்து பக்.68-69)

இசுலாமிய வழிபாட்டு இடத்தை வன்முறையாகக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் குற்றவியல் வழிமுறைகளை கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. முதல் தகவல் அறிக்கையில் குற்றம் இழைத்தவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147 (கலகம் செய்தது), பிரிவு 275 (வழிபாட்டு இடத்தைத் தீட்டுப் படுத்தியது), பிரிவு 448 (அத்துமீறி நுழைந்தது) ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

1.2.1950 அன்று பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் குற்றவியல் வழக்கின் முக்கிய குற்றவாளி அபிராம்தாஸ் எனப் பெயர் கூறிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை. சில ஆண்டுகள் வரையில் இழுத்தடிக்கப்பட்ட இந்த குற்றவியல் வழக்கு, இறுதியில் உள்ளூர் இந்து மகா சபைத் தலைவர்கள் தொடுத்த உரிமையியல் வழக்கில் மூழ்கடிக்கப்பட்டது. (நூலிலிருந்து பக்.162)

இந்நூலைப்பற்றிய விரிவான மதிப்புரை : பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு !

நூல் : அயோத்தி : இருண்ட இரவு
(பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு)
ஆசிரியர்கள் : கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே.ஜா
ஆங்கிலம் வழி தமிழில் : கே. சுப்பிரமணியன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576 772 ; 94434 68758
மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 248
விலை: ரூ 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagampanuval

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !

0

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் !

அரங்கக்கூட்டம்

நாள் : ஆகஸ்ட் 21, 2019
நேரம்: காலை 11 மணி
இடம் : பெரியார் மன்றம், தருமபுரி

அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே!

  • 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு… 3-வது முதல் தச்சு வேலை, தோட்ட வேலை, கட்டிட வேலை, பானை செய்தல் போன்ற தொழில்கள்…
  • ஆரம்பக்கல்வி முதலே மும்மொழி திட்டம்…
  • பள்ளிகளில் பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீத உபதேசம் என புராணக் கட்டுக்கதைகள்…
  • தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு…
  • யு.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் கலைப்பு. உயர்கல்வி ஆணையம், உயர்கல்விக்கான அறக்கட்டளை, உயர்கல்வி நிதிக்கான குழு ஆகியவை உருவாக்கப்படுமாம்!
  • கலை – அறிவியல் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு..

இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை – 2019.

தலைமை :

தோழர். சத்தியநாதன்
மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தருமபுரி.

கருத்துரை :

ஜெயந்தி,
மாணவி, அரசு சட்டக்கல்லூரி, தருமபுரி.

திரு. ஜெ. கிருஷ்ணமூர்த்தி,
செயலாளர், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு- புதுவை.

முனைவர். க.ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு (CCCE) சென்னை.

சிறப்புரை:

தோழர். த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

நன்றியுரை :

தோழர். பாலன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தருமபுரி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம். தொடர்புக்கு: 63845 69228.

பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 01

அத்தியாயம் நான்கு :

அரிச்சுவடி விழா (84-வது நாள்) படிப்பது – புதியவற்றை அறியும் வழி

னது ஆசிரியர் தொழிலின் ஆரம்பத்தில் நான் குழந்தைகளுக்கு எப்படி எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தேன், எப்படி விளக்கினேன், படிக்கவும் எழுதவும் எப்படிச் சொல்லித் தந்தேன் என்று யோசித்துப் பார்க்கையில் எப்படியாவது மந்திரக்கோல் மூலம் பழைய நாட்களுக்குத் திரும்பி எனது அன்றைய குறைகளை நிவர்த்தி செய்யவும், சலிப்பான பாடங்கள், களைப்பேற்படுத்தும், புத்தி சொல்லும் படிப்பு முறைகள், கடுமையான கையெழுத்துப் பயிற்சிகள், பொதுவாக அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது. நான் இன்று பயன்படுத்தும் முறையின்படி அன்று அவர்களுக்கு சொல்லித் தந்திருந்தால், அவர்களுடைய இன்றைய வாழ்வில் என்ன மாறியிருக்குமென எனக்குத் தெரியாது. அனேகமாக அவர்களுடைய வளர்ச்சியை நான் துரிதப்படுத்தியிருப்பேன், எழுத்துக் கட்டம் என்றழைக்கப்படும் கடினமான கால கட்டத்தை இரண்டு மடங்கு குறைத்திருப்பேன்.

யாராவது ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது ஆறு வயதுக் குழந்தைக்கு பாடநூலில் அவ்வரிகளைப் பின்பற்றுவது கடினம் என்று எனக்குத் தெரிந்தால் இம்மாதிரி செய்யுமாறு ஏன் அவனைக் கட்டாயப்படுத்த வேண்டும்? அதுவும், “திடீரென நிறுத்தி, உன்னைப் படிக்கும்படி சொல்வேன்” என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? கோடு போட்ட நோட்டுப் புத்தகத்தில் பெரிய எழுத்துகளை எழுதிப் பழகிய பின் சிறிதாக எழுதுவது கடினம் என்று எனக்குத் தெரியும் போது நான் ஏன் இவனை முட்டுக்கட்டைக்குத் தள்ள வேண்டும்?

எனது பாட முறைகள் கல்வியைக் கடினமாக்கி, குழந்தையை ஞானத்திலிருந்து தள்ளி, அவனுடைய வாழ்க்கையையும் நெருங்கியவர்களுடனான உறவையும் சிக்கலாக்கினால் இவற்றின் மனிதாபிமானம் எங்கே?

எப்படியாவது மந்திரக்கோல் மூலம் பழைய நாட்களுக்குத் திரும்பி எனது அன்றைய குறைகளை நிவர்த்தி செய்யவும் பொதுவாக அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறது.

கல்வி முறைகளை எப்படி நிர்ணயிப்பது, இவற்றை எப்படி வகைப்படுத்துவது, எப்படிப்பட்ட பாட வரையளவுகளை நிலை நாட்டுவது, பாடத்தில் மூன்று, ஐந்து, ஏழு, பத்து அம்சங்களைப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கல்வி நிபுணர்கள் அடிக்கடி விவாதிக்கின்றனர். ஒருவேளை இந்தப் பன்முக சிந்தனை தன் சாரத்தில் மதிப்புமிக்கதாக இருக்கலாம். மேற்கூறிய வகைபாடுகளும் வரையளவுகளும் கட்டமைப்புகளும் பாடவேளையின் போதும் பாடங்கள் முடிந்த பின்னரும் குழந்தையின் வாழ்க்கையை எப்படி இலகுவாக்கும், இவற்றைப் பயன்படுத்தி புதியவற்றை அறியும் மகிழ்ச்சியை, பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது எனும் மிக முக்கிய அம்சத்திற்கு ஆசிரியரியல் விவாதங்களும் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் பதில்தராவிடில் இவற்றால் எப்போதுமே தத்துவத்தை முன்தள்ள முடியாது.

இன்று வகுப்பில் எழுத்து விழா: இன்று என் வகுப்புக் குழந்தைகள் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதை முடிக்கின்றனர். இன்று டிசம்பர் 28-ம் தேதி, 84-வது பள்ளி நாள், அரிச்சுவடியின் கடைசி எழுத்தைச் சொல்லித் தந்து விட்டு, எல்லா எழுத்துகளையும் படித்ததற்காகப் பாராட்டுவேன். நாங்கள் எப்படி எழுத்துகளைப் படித்தோம்?

ஒரு வார்த்தையில் புதிய ஒலியைத் தனியே சுட்டிக் காட்டி பின் இதன் வரி வடிவத்தைப் படிக்கும் அவசியமே ஏற்படவில்லை. பல வார்த்தைகளின் ஒலி உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்த என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிட்டத்தட்ட “புதிய ஒலி” என்பதே இருக்கவில்லை . “முதல் அசை என்ன… இரண்டாவது அசை… முதல் ஒலி…” என்ற வகையில் நாங்கள் வார்த்தையை வழக்கமான முறையில் பகுப்பாய்வு செய்யவில்லை. ஏனெனில் இது அவர்களின் வளர்ச்சிக்குப் புதிதாக எதையுமே தரவில்லை (இது அவர்களிடம் ஏற்கெனவே வளர்ச்சியடைந்திருந்தது), அவர்கள் புதிதாக அறிந்து கொள்ளவும் உதவவில்லை (இந்த “தேட்டத்தில் எல்லாமே குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது). எழுத்துகளைச் சொல்லித் தரும் போது நான் படங்களையும் பயன்படுத்தவில்லை; இவை ஏதோ வார்த்தையில் ஒலிப் பகுப்பாய்விற்கு உதவுவதாகக் கூறுகின்றனர்.

படிக்க:
மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !
பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !

உதாரணமாக, சேவல் படத்தைக் காட்டினால் குழந்தைகள் இந்த வீட்டு மிருகத்தைப் பற்றித் தமக்கு தெரிந்தவற்றையெல்லாம் சொல்வார்கள், சேவல் என்று உச்சரிப்பார்கள் பின் இதை அசைகளாகவும் ஒலிகளாகவும் பிரிக்கத் தொடங்குவார்கள். இந்தப் பட முறையைக் கைவிட்ட நான் பொருளைப் பற்றிய பேச்சையும் கைவிட்டேன், ஏனெனில் இது உண்மையில் படிக்க வேண்டியதிலிருந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பியது. வார்த்தையின் மிகச் சிறந்த வெளிப்பாடு இந்த வார்த்தையும் இதன் மாடலும்தான்.

இவ்வாறாக, நாங்கள் ‘புதிய’ எழுத்தை நோக்கி (ஒலியைத் தாண்டி) நேரடியாக “தாவிச்” சென்றோம். நான் இதை எப்படிச் செய்தேன்?

முதல் முறை :

“குழந்தைகளே, இதைப் பாருங்கள், இன்று எந்த எழுத்தைப் படிக்கப் போகின்றோம் என்று சொல்லுங்கள்.”

கரும்பலகையில் உலகம் எனும் சொல் எழுதப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது எழுத்தாகிய ‘’ என்பது புதிய எழுத்து. அருகே வட்டத்தினுள் அறிமுகமான, அறிமுகமற்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன, ல எனும் எழுத்து மூன்று முறை எழுதப்பட்டுள்ளது.

“இவ்வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பாருங்கள். இங்கே ‘ல’ என்ற எழுத்து உள்ளதா? எவ்வளவு ‘ல’ உள்ளன?

குழந்தைகளுக்கு அறிமுகமான எழுத்துகள் வார்த்தையைப் படிக்கவும், புதிய எழுத்து எது என்று கண்டு பிடிக்கவும், இதைச் சொல்லவும், வார்த்தையில் இதைச் சுட்டிக்காட்டவும் உதவும்.

இரண்டாவது முறை :

“இந்த வார்த்தைகளைப் பாருங்கள். நான் சொல்லித் தரப்போகும் எழுத்து இவற்றில் சிலவற்றினுள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இது என்ன எழுத்து? எந்தெந்த வார்த்தைகளில் இது உள்ளது?”

கரும்பலகையில் பதினொன்று வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு வார்த்தைகளில் புதிய எழுத்தாகிய ‘’ உள்ளது. படிக்கப் போகும் எழுத்து தனியாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எழுத்துகள் மற்றும் வட்டங்கள் சேர்ந்து வார்த்தையைப் படிக்கவும் அதில் ‘ப’ என்ற எழுத்தைக் கண்டுபிடிக்கவும் உதவும். எந்த வார்த்தையில், எந்த இடத்தில் “புதிய எழுத்து” உள்ளதென அவர்கள் சொல்கின்றனர், எனது செய்கைகளைக் கவனித்து திருத்துகின்றனர். ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள ‘ப’ என்ற எழுத்தைக் கோடுபோட்டு இணைக்கும் நான் “கவனக் குறைவாக” “தவறு” செய்யக் கூடாது அல்லவா! கரும்பலகையில் பின்வரும் படம் இருக்கும், இதன் நடுவே ‘ப’ என்று நான் எழுதுகிறேன்.

மூன்றாவது முறை :

“இந்தப் படத்தைப் பாருங்கள், நாம் எந்த எழுத்தை இன்று படிக்கப் போகின்றோம் என்று கண்டுபிடியுங்கள்.”

இப்படத்தின் நடுவே ஒரு சிறு சதுரம் உள்ளது, அதில் கேள்விக்குறி இடப்பட்டுள்ளது; சதுரத்தைச் சுற்றிலும் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் இன்று படிக்க வேண்டிய எழுத்தைச் சுற்றி வட்டமிடப்பட்டு, இவை கோடுகளால் நடுவிலுள்ள சதுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்து ‘’ என்று குழந்தைகள் கண்டுபிடித்ததும், சதுரத்தில் உள்ள கேள்விக்குறியை அழித்து விட்டு இந்த எழுத்தை எழுதுகிறேன். ஆனால் நான் “தப்பு செய்யக் கூடும்”, ‘ர’ என்பதற்குப் பதில் ‘கு’ என்றோ வேறு எழுத்தையோ எழுதினால், குழந்தைகள் என்னைத் திருத்துவார்கள்.”

நான்காவது முறை :

“இங்குள்ளவற்றில் ‘’ என்ற எழுத்து எது என்று உங்களில் யாரால் சொல்ல முடியும்?”

கரும்பலகையில் ஐந்து எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன: ஓ, க, ந, ம, ழ. இவற்றில் இரண்டு ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமானவை, மூன்று தெரியாதவை.

“ஒருவேளை இதுவோ?” என்று முதல் எழுத்தைக் காட்டி நான் கேட்கிறேன்.

“இல்லை, அது ஓ!” நான் அதைக் கரும்பலகையிலிருந்து அழிக்கிறேன்.

“ஒருவேளை இதுவோ!” என்று இரண்டாவது எழுத்தைக் காட்டிக் கேட்கிறேன்.

“இல்லை இது க.” அதையும் அழிக்கிறேன்.

“சரி, ந என்ற எழுத்து எங்கே இருக்கிறது?”

“நடுவில்!” என்று குழந்தைகள் பதிலளிக்கின்றனர்.

“இதுவா?”

“ஆமாம்!”

“இவை என்ன எழுத்துகள்?” என்று இன்னமும் நாங்கள் படிக்காத எழுத்துகளைக் காட்டி கேட்கிறேன். பலர் அவற்றைச் சொல்கின்றனர்.

“சரி, இவற்றைப் பின்னால் பார்ப்போம்.” என்று அந்த இரண்டு எழுத்துகளையும் அழிக்கிறேன்.

“இது என்ன எழுத்து?”

“ந!” ஒருமித்த குரலில் பதில் வருகிறது.

ஐந்தாவது முறை :

குழந்தைகள் வருமுன் வகுப்பிலுள்ள கரும்பலகைகளில் நாங்கள் படிக்கப் போகும் எழுத்தை இரண்டு, மூன்று முறை எழுதுகிறேன். வகுப்பறையினுள் நுழைந்ததுமே குழந்தைகள் இதைக் கவனித்து விடுவார்கள். இது என்ன எழுத்து என்று விவாதிக்கத் தொடங்குவார்கள். பாடம் துவங்கும் போது பெரும்பான்மையினருக்கு இது நன்கு தெரிந்திருக்கும்.

“இன்று எந்த எழுத்தைப் படிக்கப் போகின்றோம்?”

அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பதில் சொல்வார்கள்.

எழுத்தைப் படித்த பின் நான் குழந்தைகளுக்குப் பல்வேறு விதமான வேலைகளைத் தருவேன். இவற்றிற்கு நான் பெரும் முக்கியத்துவம் தருகிறேன்.

எனது பாட முறைகள் கல்வியைக் கடினமாக்கி, குழந்தையை ஞானத்திலிருந்து தள்ளி, அவனுடைய வாழ்க்கையையும் நெருங்கியவர்களுடனான உறவையும் சிக்கலாக்கினால் இவற்றின் மனிதாபிமானம் எங்கே?

எழுத்துக் கட்டம் என்றழைக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் என் ஆறு வயதுச் சிறுவர் சிறுமியருக்குப் படிப்பதன் கஷ்டங்களைப் பற்றிச் சொல்லி அச்சுறுத்த நான் விரும்பவில்லை; எழுத்துகளில் சுவாரசியமானது எதுவுமே இல்லை என்றொரு கருத்து அவர்களிடம் ஏற்பட்டால் ருஸ்தவேலி, பாரதஷ்வீலி, சாவ்சவாத்ஸே, பூஷ்கின், டால்ஸ்டாய் போன்றவர்களைப் படிக்கும் மகிழ்ச்சியை நான் அவர்களிடமிருந்து பிடுங்கியவனாவேன். எனது முயற்சிகள் இப்படி முடியக்கூடாதென விரும்புகிறேன், எனவே, எழுத்துக் கட்டத்தை விரிவுபடுத்துவது, புதியவற்றைப் பரவலாகக் கற்றுக்கொள்ளும் அக்கறைகளை வளர்ப்பது (படிக்கும் பழக்கத்தின் மூலம் இவற்றைப் பூர்த்தி செய்யலாம்) ஆகியவற்றை லட்சியமாக முன்வைக்கிறேன்.

குழந்தைகளிடம் உள்ள படிக்கும் பழக்கத்தை அதிகப் பரவலான, உட்பொருள் மிக்க, உணர்ச்சிகரமான, சுவாரசியமான அறிதல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும், இப்படிக்கும் பழக்கமே இறுதி இலட்சியமாக இருக்கக் கூடாது, இது புதியவற்றை அறியும் சாதனமாகத் திகழுமாறு செய்ய வேண்டும்.

இந்த “முது மொழியின்” அடிப்படையில் எனது வகுப்புக் குழந்தைகளுக்கான பாட முறைகளை உருவாக்கினேன்.

முதல் பாடம் :

கரும்பலகையில் அசைகளும் சொற்களும் செங்குத்தாக ஒரே வரிசையில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர் கரும்பலகையிலிருந்து தள்ளி நின்று வேகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

“மேலிருந்து மூன்றாவதாக நர்ச என்று எழுதப்பட்டுள்ளது. இல்லையா?”

குழந்தைகள் படித்துப் பார்த்து விட்டு நான் சொன்னது தவறு என்கின்றனர்.

“அது என்ன அசை?”

குழந்தைகள் (ஒரே குரலில்): “நசர்!”

குழந்தைகளிடம் உள்ள படிக்கும் பழக்கத்தை அதிகப் பரவலான, உட்பொருள் மிக்க, உணர்ச்சிகரமான, சுவாரசியமான அறிதல் நடவடிக்கையாக மாற்ற வேண்டும், இப்படிக்கும் பழக்கமே இறுதி இலட்சியமாக இருக்கக் கூடாது, இது புதியவற்றை அறியும் சாதனமாகத் திகழுமாறு செய்ய வேண்டும்.

“கீழிருந்து நான்காவதாக அகர் என்று எழுதப்பட்டுள்ளது. சரிதானே?”

“ஆமாம்!”

“எல்லோரும் சேர்ந்து இந்த அசையைப் படியுங்கள் பார்க்கலாம்.”

குழந்தைகள் (ஒரே குரலில்): “அகர்!”

“மேலிருந்து கீழாக எந்த இடத்தில் பாய்மரம் என்ற வார்த்தை உள்ளது?”

இந்த வார்த்தையே கரும்பலகையில் இல்லையே என்று குழந்தைகள் பார்க்கின்றனர்.

“மன்னியுங்கள்! பம்பரம் என்று சொல்ல விரும்பினேன்!”

“மூன்றாவது இடத்தில்!” என்று குழந்தைகள் கத்துகின்றனர்.

இரண்டாவது பாடம் :

“இந்த வாக்கியத்தில் நான் என்ன தப்பு செய்துள்ளேன் என்று கண்டுபிடியுங்கள்.”

குழந்தைகள் வாக்கியத்தைப் படித்து விட்டு தப்பைத் தேடுகின்றனர்; இதில் தப்பே இல்லாமலிருக்கலாம். உண்மையில் தப்பு உள்ளதா, இருந்தால் எந்த வார்த்தையில் உள்ளது, இதை எப்படித் திருத்துவது என்று இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்றாவது பாடம் :

கரும்பலகையில் ஐந்து, ஆறு எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

“இவற்றைக் கொண்டு ஆறு வெவ்வேறு சொற்களை எழுதலாம், எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்!”

படிக்க:
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

குழந்தைகள் வார்த்தைகளை உருவாக்கிச் சொல்ல, நான் அவற்றைக் கரும்பலகையில் எழுதுகிறேன். ஆனால் ஆறாவது வார்த்தையை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த எழுத்துகளை எப்படியெல்லாம் சேர்த்து எழுதலாம் என்று ஒன்றாகச் சேர்ந்து யோசித்து விட்டு, ஐந்து வார்த்தைகளுக்கு மேல் எழுத முடியாது என்ற முடிவிற்கு வருகிறோம்.

நான்காவது பாடம் :

கரும்பலகையில் வார்த்தைகளும் படங்களும் உள்ளன, இவை ஒவ்வொன்றும் கோடுகளால் இணைக்கப்பட்டுள்ளன.

“வார்த்தைகள் சரியான படங்களுடன் இணைக்கப் பட்டுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!”

வார்த்தைகள் படங்களுடன் தவறாக இணைக்கப்பட்டிருந்தால் அவற்றைச் சரி செய்ய குழந்தைகள் எனக்கு உதவுகின்றனர். சில சமயங்களில் வேண்டுமென்றே நான் தவறாக இணைத்து தப்பு செய்தேன். குழந்தைகள் என்னைத் திருத்த ஆரம்பிக்க, நான் அங்குமிங்குமாகக் கோடு போட்டேன், சரியான வார்த்தையைக் “கண்டு பிடித்து”, வகுப்பு அமைதியாகும் வரை இப்படி செய்தேன். சுயமாக செய்து பார்ப்பதற்காக இப்படி படங்களும் எழுத்துகளும் உள்ள தாள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் பெரிதும் விரும்பினர். அவர்கள் தமது விடைகளைக் கரும்பலகையில் எனது விடைகளுடன் ஒப்பிட்டு மீண்டும் என் “தவறுகளைக்” கண்டுபிடித்தனர்.

ஐந்தாவது பாடம் :

நான் கரும்பலகையில் எழுத்துகள், படங்களைக் கொண்டு எளிய ஓவிய ஒலியெழுத்துப் புதிர்களை வரைந்தேன்; வார்த்தைகளிலிருந்து குறிப்பிட்ட எழுத்துகளை எடுத்து விட்டு வார்த்தையின் எஞ்சிய பகுதியைப் படங்களின் பெயர்களுடன் இணைக்க வேண்டும். விடைகளைக் கரும்பலகையில் எழுதி இவற்றைக் குழந்தைகளுடன் சேர்ந்து சரிபார்த்தேன். தனியாகப் போட்டுப் பார்ப்பதற்காக இத்தகைய புதிர்கள் அடங்கிய தாள்களை நான் தயாரித்த போது குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர், இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டனர்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !

0

ம்மு – காஷ்மீருக்கு சிறப்பு தகுதியை வழங்கிய 370 வது பிரிவை நீக்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பட்டேல் 2.0’ என புகழப்படுகிறார்.

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தடுத்ததன் காரணமாக, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் முடிக்காமல் விட்ட காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் பணியை அமித் ஷா முடித்துவிட்டார் என்பதே இந்த கூற்றின் பின்னால் சொல்லப்படும் காரணம்.

இந்திய ஒன்றியத்தில் 552 சுதேச மாநிலங்களை இணைத்த பெருமைக்குரியவரான பட்டேல், காஷ்மீர் குறித்த நிலைப்பாட்டில் நேருவுடன் ஒத்துப்போகவில்லை என பாஜக நீண்ட காலமாகக் கூறிவருகிறது.

பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர குமார், “பட்டேல் ஜம்மு காஷ்மீரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். பட்டேலைவிட தனக்குத்தான் ஜம்மு காஷ்மீர் குறித்து நன்றாகத் தெரியும் என நேரு நினைத்தார்” என பேசினார்.

Vallabhai Patel
வல்லபாய் பட்டேல்

ஜம்முவைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஜுகல் கிஷோர் சர்மா, “ஷேக் அப்துல்லாவின் தூண்டுதலின் பேரில் ஜவஹர்லால் நேரு பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ -ஐ திணித்தார். பிரிவு 370 அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டபோது, சர்தார் வல்லபாய் பட்டேல், பி. ஆர். அம்பேத்கர், ஷியாமா பிரசாத் மூகர்ஜி அதை எதிர்த்தார்கள்” என்றார்.

ஆனால், வரலாற்று ஆதாரங்கள் பட்டேல் பிரிவு 370-ஐ முழுமையாக ஆதரித்தார் என சொல்கின்றன என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். அரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொடர்புகள் மற்றும் வரலாற்று துறை பேராசிரியராக உள்ளார் இவர்.

“பிரிவு 370 என்பது முழுக்க முழுக்க பட்டேலின் உருவாக்கம். மற்றவர்களைவிட பட்டேலின் கருத்துக்கே இந்த விசயத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது” என்கிறார் ராகவன்.

“நேரு அதை திணித்தார் எனக் கூறுவது அபத்தமாகும். ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவு அல்ல; அரசியலமைப்பு சபையால் நிறைவேற்றப்பட்ட ஒன்று” என்கிறார் அவர்.

படிக்க:
காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
♦ காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

இந்தப் பிரிவின் முதல் வரைவு குறித்த சந்திப்பு 1949-ம் ஆண்டு மே 15 மற்றும் 16 தேதிகளில் பட்டேலின் இல்லத்தில் நடந்தது. அப்போது நேருவும் இருந்தார் என்கிற தகவலையும் அவர் கூறுகிறார்.

ஜம்மு – காஷ்மீரின் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என். ஜி. அய்யங்கார். நேரு, அப்துல்லாவிடமிருந்து ஒப்பந்தத்தின் சுருக்கமான வரையறைகளை வரைவுக் கடிதமாகத் தயாரித்து பட்டேலுக்கு ஒரு குறிப்புடன் அனுப்பினார் அவர்.

“நீங்கள் ஒப்புதல் அளித்ததை ஜவஹர்லால்ஜிக்கு நேரடியாக தெரியப்படுத்த முடியுமா? உங்கள் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அவர் ஷேக் அப்துல்லாவுக்கு கடிதம் அனுப்புவார்” எனக் கூறுகிறது அய்யங்கார் எழுதிய ஒரு குறிப்பு.

மேலும், நேரு வெளிநாட்டில் இருந்தபோது, இந்திய அரசியலமைப்பின் உரிமைகள் மற்றும் உத்தரவு கோட்பாடுகளை தகவமைத்து கொள்வதற்கான கேள்விகளை ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை அப்துல்லா வலியுறுத்தினார். இதன் பிறகு அப்துல்லாவுடன் பேச்சு வார்த்தையை தொடருமாறு அய்யங்காரிடம் படேல் கேட்டுக்கொண்டார்.

அப்துல்லாவின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடு இல்லாதபோதும் பட்டேல் இதைச் செய்தார். நேரு திரும்பியபோது, இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வைப்பதில் தான் வெற்றியடைந்துவிட்டதாகவும் அவரிடம் பட்டேல் தெரிவித்தார்.

பிரச்சினையை தீர்ப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் விவகாரம் ஐநா வரை செல்ல நேருவே காரணம் என பாஜக கூறுகிறது.

ஷியாமா பிரசாத் முகர்ஜி

பாஜகவின் பிறப்பிடமான ஜன சங்கத்தின் நிறுவனர் முகர்ஜி, காஷ்மீர் பிரச்சினையை ஐநா தீர்க்க வேண்டும் என ஒப்புக்கொண்டதாகத்தான் ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், பாஜகவோ காஷ்மீரின் சிறப்பு தகுதியை நீக்குவதற்குத்தான் அவர் கனவு கண்டார் எனக் கூறிவருகிறது.

முகர்ஜி, 1952 ஆகஸ்ட் 7-ம் தேதி மக்களவையில் இப்படி பேசினார், “காஷ்மீர் பிரச்சினையை ஐநாவிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றவர்களில் நானும் ஒருவன் எனக் கூறப்படுகிறது. அது உண்மைதான். அந்த முடிவு எடுக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அந்த சூழ்நிலையில் இந்திய அரசு கொண்டிருந்த பெரும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், ஐநாவிடமிருந்து நாங்கள் எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை”.

காஷ்மீரில் குடியேற விரும்பும் காஷ்மீர் அல்லாதவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற முகர்ஜி, 1953-ம் ஆண்டு ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் இறந்தார். மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவ அறிக்கை கூறினாலும், முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய், நேருவின் சதித்திட்டம்தான் காரணம் என பழிபோட்டார்.

வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை, வெளியாரை அனுமதிப்பது உள்ளிட்ட உண்மையான காரணங்களின் அடிப்படையில் பட்டேல் ஆதரித்தார். ஆனால், முகர்ஜி அதை எதிர்த்தார்.

“சங்க உறுப்பினர்கள் உள்ளூர் முசுலீம்களை துன்புறுத்துவதையும் அவர்களுடைய நிலங்களை பறிப்பதையும் செய்து வந்தனர். இதன் காரணமாகத்தான் சர்தார் பட்டேல், உள்ளூர் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க, காஷ்மீரில் நுழைவதை தடை செய்தார்” என்கிறார் அவர்.

படிக்க:
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

பட்டேல் ஒரு கட்டத்தில் ஹைதராபாத்துக்காக காஷ்மீரை பாகிஸ்தானுடன் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருந்தார் என்பதையும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜுனாகாத்தின் முசுலீம் தலைவர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். அப்போது ஒரு உரையின்போது பட்டேல் இந்த கருத்தை முன்வைத்தார்.

1947 நவம்பர் 14 இந்துஸ்தான் டைம்ஸில் பட்டேல் சொன்னதாக, “ஜுனாகாத்துக்கு பதிலாக காஷ்மீரை அடைய பாகிஸ்தான் நினைத்தது. ஜனநாயக வழியில் தீர்வு பற்றிய கேள்வி எழுப்பியபோது, அவர்கள் ஒருமுறை இந்தக் கொள்கையை காஷ்மீரில் பயன்படுத்தினால் அவர்கள் அதைக் கருத்தில் கொள்வதாக சொன்னார்கள். எங்களுடைய பதில், அவர்கள் ஹைதராபாத்துக்கு ஒப்புக்கொண்டால் நாங்கள் காஷ்மீருக்கு ஒப்புக்கொள்வோம் என்பதாக இருந்தது” செய்தியாகியுள்ளது.

இருப்பினும், 370-வது பிரிவு குறித்து பட்டேல், நேருவுடன் உடன்பட்டிருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தின் மற்ற அம்சங்கள் மற்றும் புது டெல்லி அதைக் கையாண்ட விதம் குறித்தும் இருவருக்கும் வேறுபாடுகள் இருந்தன.

nehru sheikh abdullah
ஷேக் அப்துல்லா – ஜவஹர்லால் நேரு.

பட்டேல் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் ராஜ்மோகன் காந்தி இப்படிச் சொல்கிறார்: “காஷ்மீரின் மீதான இந்தியாவின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பட்டேல் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்தார். பொது வாக்கெடுப்பு, ஐநாவிடம் சென்றது, போர் நிறுத்தம் காரணமாக மாநிலத்தில் ஒரு பெரும்பகுதி பாகிஸ்தானின் கைகளுக்குச் சென்றது, மகாராஜாவை அகற்றுவது உள்ளிட்டவையும் அதில் அடங்கும். ஆனாலும் எப்போதாவது கருத்து சொல்வது அல்லது ஒரு குறிப்பை சொல்வது என்றிருந்தாலும் அவர் ஒருபோதும் தனது சுய தீர்வை சொல்லவில்லை”.

நேஷனல் புக் டிரஸ்ட் 2010-ம் ஆண்டு வெளியிட்ட Nehru-Patel: Agreement Within Differences, Select Documents and Correspondences, 1933-1950, என்ற நூலில் இதுபோன்ற ஏராளமான கூற்றுக்கள் உள்ளன.

1948-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி கல்கத்தாவில் பேசிய பட்டேல், “காஷ்மீரைப் பொறுத்தவரை, மறைமுகமான யுத்தத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும் நேரிடையாகப் போரிடுவதை விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் ஐநாவிடம் சென்றோம். காஷ்மீர் வாளின் மூலம் காப்பாற்றப்படுமெனில், அங்கே பொது வாக்கெடுப்பு எடுப்பதன் தேவைதான் என்ன? காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தைக்கூட நாங்கள் ஒப்படைக்க மாட்டோம்”.

“காந்திக்குப் பிறகு இந்தியா: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரலாறு” என்ற ராமச்சந்திர குஹாவின் நூலில், தொழிலதிபர் ஜி. டி. பிர்லாவிடம் 1949 மே மாதம் பட்டேல் சொன்னதாக ஒரு கூற்று சொல்லப்பட்டுள்ளது. “இப்போது நாம் ஒரு பழிவாங்கும் நேரத்தில் இருக்கிறோம். வானிலையும் காஷ்மீர் பிரச்சினையும் நமக்கு மோசமான தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன”.

“Agreement Within Differences” நூலில் இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்திடம் 1949, ஜூன் 29-ம் தேதி டேராடூனில் பட்டேல் இப்படிச் சொல்கிறார்…“காஷ்மீர் பிரச்சினையும்கூட தீர்ந்திருக்கும். ஆனால் ஜவஹர்லால் பாராமுல்லாவிலிருந்து டொமெல்லுக்கு (1947-48 போரின்போது) படைகளை அனுப்பவில்லை. அவர் பூன்ச்-க்கு படைகளை அனுப்பினார்”

ஆனாலும், ராகவனின் “நவீன இந்தியாவில் போரும் அமைதியும்” என்ற நூலில் பட்டேல் இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீரை இரண்டாக பகிர்ந்துகொள்ள சமரசம் செய்துகொண்டார் என்றும் கூறுகிறது.

1948-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி இந்தியாவுக்கான இங்கிலாந்தின் தூதரிடம் பட்டேல், “ஜம்மு காஷ்மீர் பிரிவினை நிரந்தர, உடனடி மற்றும் யதார்த்தமான தீர்வை வழங்கும்” என சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் இறுதி பிரிட்டீஷ் கவர்னர் ஜனரலாக இருந்த லூயிஸ் மவுண்பேட்டனுக்கு 1950 மார்ச் 16-ம் தேதி எழுதிய கடிதத்தில் பட்டேல், “1947 டிசம்பரில் நீங்கள் பரிந்துரைத்தது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை காஷ்மீரில் நடக்கும் விசயங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால், நீங்கள் அறிந்த காரணத்துக்காக நாங்கள் அதை ஏற்கவில்லை” என குறிப்பிட்டிருக்கிறார்.

மவுண்ட்பேட்டன் அப்போது, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியிருந்தார்.

சங்கிகளின் வாயில் பொய்யையும் புரட்டையும் தவிர வேறெதுவும் வராது என்பது நம்மனைவருக்கும் தெரியும் எனினும், இது போன்ற வரலாற்றாதாரங்களை அவ்வப் போது எடுத்துக்காட்டவும் வேண்டியிருக்கிறது. பொய்களைப் பலமுறை கூறி உண்மையாக்கும் சங்கிகளின் சதியை தகவல்கள்தான் முறியடிக்கவல்லவை.


கட்டுரை : பெரோஸ் எல். வின்செண்ட்
தமிழாக்கம் :
அனிதா
நன்றி
: டெலிகிராப் இந்தியா

காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !

காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை
  • 370 & Art.35-A-ன் கீழான ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்புரிமை பறிப்புஅரசியல் சட்டத்திற்கு விரோதமானதுகூட்டாட்சி முறைக்கு எதிரானது ! உடனே ரத்து செய் !
  • கருத்துரிமை, அமைதியாகக் கூடுதல், இணைய – தகவல் தொடர்பு உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு உடனே வழங்கு !
  • அனைத்துக் கட்சிகள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகளை ஜம்மு – காஷ்மீர் செல்ல அனுமதி !

ந்திய அரசியல் சட்டம் பிரிவு 370 & பிரிவு 35-A-ன் கீழான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமை, குடியரசுத் தலைவரின் G.S.R.551 (E) (C.O.272) & G.S.R.562 (E) (C.O.273) உத்தரவுகள் & JAMMU AND KASHMIR (REORGANISATION) ACT-2019-ன் படி நீக்கப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட உச்சபட்ச அநீதி. ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்டம் & இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

Madurai J&K Press Statement (2)

ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்ட வரலாறு :

ஜம்மு-காஷ்மீர் மாநிலம்  80% இசுலாமியர்கள், 20% இந்து-பண்டிட்கள், புத்த, சீக்கிய மதத்தினர் உள்ளிட்டோரைக் கொண்டது.16.03.1846-ல் பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஜம்மு காஷ்மீரின் டோக்ரா – இந்து வம்சாவளி மன்னர் குலாப் சிங் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி காஷ்மீர் மீதான உரிமை மன்னர் மற்றும் மன்னரின் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே. 1947 வரை டோக்ரா வம்ச ஆட்சியே நடக்கிறது.

1947-ம் ஆண்டு சமஸ்தானங்கள் யாருடனும் சேரலாம் என் மவுண்ட் பேட்டன் அறிவிக்கிறார்.காஷ்மீர் மன்னர் ஹரிசிங் “காஷ்மீர் தனி நாடாக இருக்க விரும்புகிறது” என்கிறார். 1947, அக்டோபர் 22-ல் பாகிஸ்தான் ஆதரவு பழங்குடி படைகள் காஷ்மீரை ஆக்கிரமிக்கவே, 1947, அக்டோபர். 26-ல்  இந்தியா-காஷ்மீர்  இணைப்பு ஒப்பந்தம்(INSTRUMENT OF ACCESSION)  கையெழுத்தாகிறது.

ஒப்பந்தப்படி, இந்திய அரசு – காஷ்மீரின் “பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு குறித்து” சட்டம் இயற்றலாம் – மற்றவை தொடர்பாக காஷ்மீர் மன்னர் முடிவெடுப்பார். இதற்கிடையே மன்னராட்சிக்கு எதிராக சுதந்திர காஷ்மீருக்கான போராட்டமும் சேக் அப்துல்லா தலைமையில் நடந்து வருகிறது.

மே.15, 16 -1949 அன்று வல்லபாய் பட்டேல் வீட்டில் நேரு – சேக் அப்துல்லா இடையே காஷ்மீரின் “பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பாக  ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபையே முடிவெடுக்கும்” என ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு உறுப்பினர், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் திவான், பிரிவு 370-ஐ எழுதிய தஞ்சாவூரைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார் அக்டோபர் 17,1949 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது “காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கலாம் – நேர்மையான, நடுநிலையான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் – வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் தனித்துச் செல்வதென முடிவெடுத்தால் இந்திய அரசு காஷ்மீர் மக்கள் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது” என அறிவிக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

இணைப்பு ஒப்பந்தத்தில் சொல்லப்படாத விசயங்கள், ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் இன்றி-கொண்டு வரப்படாது எனவும் உறுதியளிக்கிறார். அதன்பின்னரே, 1949 அக்டோபர், 17 அன்று, பிரிவு 370 இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படுகிறது. 1951, நவம்பர் 5-ல்  ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, ஜம்மு-காஷ்மீருக்கென 158 பிரிவுகள் கொண்ட  புதிய அரசியல் சட்டம் உருவாக்கி நிறைவேற்றப்பட்டு நவம்பர் 17, 1956-ல் கலைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சிறப்புரிமையா? :

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 371 நாகலாந்து, அசாம், மிசோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், கோவா – ஹைதராபாத் – கர்நாடகா – மகாராஷ்டிரா – குஜராத்தின் சில பகுதிகளுக்கு சிறப்புரிமை வழங்குகிறது. நாகலாந்து மாநில சட்டமன்ற அனுமதியின்றி, இந்தியப் பாராளுமன்றம் நாகலாந்தின் மதம், பழக்க வழக்கங்கள், சட்ட நிர்வாகம் தொடர்பாகச் சட்டம் இயற்ற முடியாது. இந்திய அரசியல் சட்டம் SCHEDULES – V & VI -ன் படி பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலப் பயன்பாடு தொடர்பாக பழங்குடி மக்களின் தன்னாட்சி குழுக்களே தீர்மானிக்கும் சிறப்புரிமை உள்ளது.

எனவே சிறப்புரிமை என்பது வரலாறு, நிலவியல், மக்கள் வாழ்நிலை, பண்பாடு, இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணையும்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையிலேயே பார்க்கப்பட வேண்டும். இந்த சிறப்புரிமைகள் இல்லாவிட்டால் பல மாநிலங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்திருக்காது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான குடியரசுத் தலைவரின் G.S.R.551(E)(C.O.272) & G.S.R.562(E)(C.O.273) உத்தரவுகள் AND JAMMU AND KASHMIR (REORGANISATION) ACT-2019 – அரசியல் சட்ட விரோதமானது

1. பிரிவு 370 தொடர்பான குடியரசுத்தலைவர் மற்றும் இந்தியப் பாராளுமன்றத்தின் அதிகாரம் வரம்புடையது. இணைப்பு ஒப்பந்தத்தில் உள்ள  பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றம் சட்டம் இயற்ற காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் அவசியம். பிரிவு 370-ஜ நீக்க ஜம்மு – காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை அவசியம்.

இதனை மீறி “ஜம்மு – காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை” என்பதற்கு “ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப்பேரவை” எனவும், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை என்பதற்கு – “மாநில கவர்னர்” எனவும் பொருள் கொள்ள வேண்டும் என பிரிவு-367-ல் திருத்தம் செய்திருப்பது முழு அரசியல் சட்ட மோசடி- அதிகார வரம்பு மீறல். அரசியல் சட்ட நெறிமுறைகளின்(CONSTITUTIONAL MORALITY)படி “நேரடியாக நிறைவேற்ற முடியாத சட்டங்களை, மறைமுகமாக நிறைவேற்ற முடியாது”. ( You cannot do indirectly – what you cannot do directly)

2.ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை & சட்டப் பேரவை இல்லாத சூழலில் “கவர்னரும் – இந்தியப் பாராளுமன்றமும்” ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரதிநிதியாகக் கொள்ளப்படுவர் என்று சொல்லி பிரிவு 370-யை நீக்கி-மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர். மத்திய அரசு-தனது பிரதிநிதியான கவர்னரின் ஒப்புதலை பெற்றிருப்பதாகக் கூறுவது – இந்திய அரசியல் சட்டத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறான மக்களாட்சி-கூட்டாட்சி முறைக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் வழங்கிய “கேசவானந்த பாரதி” மற்றும் “எஸ்.ஆர்.பொம்மை” வழக்குகளின் தீர்ப்புகளுக்கு நேர் எதிரானது.

3. மத்திய பாஜக அரசின் செயல் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சட்டத்தை ரத்து செய்து விட்டது. பிரிவு.370-ன் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சட்டத்தை ரத்து செய்ய முடியாது.

4. ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தே இறுதியானது. ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறு என்பது “தங்கள் அரசியல் சட்ட நிலையை மக்களே நேரடியாகத் தீர்மானிப்பது – தங்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்மானிப்பதுமாகும்”. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை நீக்க, ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதிகாரம் குறைக்கப்பட்ட “யூனியன் பிரதேசமாக” மாற்ற – பா.ஜ.க அரசு காஷ்மீர் மக்களிடமோ? – காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகளிடமோ – கருத்துக் கூடக் கேட்கவில்லை. பாஜக அரசின் இந்த நடவடிக்கை சரியென்றால் – நாளை பாஜக வெல்ல முடியாத தமிழகம், கேரளா, ஆந்திராவை – சட்டப் பேரவை அற்ற யூனியன் பிரதேசமாக மாற்றலாம். நேரடி மத்திய அரசு ஆட்சியின் கீழ் கொண்டு வரலாம். எனவே நடந்திருப்பது அரசியல் சட்ட கேலிக்கூத்து மட்டுமல்லாது மக்களின் இறையாண்மையை மதிக்காத பாசிசம்.

5. இந்திய அரசியல் சட்டம் – பிரிவு 1 & 3 – சட்டப் பேரவை உள்ள மாநிலத்தை – யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதி அளிக்கவில்லை. எனவே குடியரசுத் தலைவரின் உத்தரவுகள் அரசியல் சட்டப்படி செல்லாது.

6. பாஜக அரசின் நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் – CONSTITUTIONAL MORALITY மற்றும் காஷ்மீர் மக்களின்  அரசியல் சமத்துவம் மற்றும் கண்ணியமாய் வாழும் உரிமைக்கு எதிரானது.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

ஜம்மு-காஷ்மீரை ஒடுக்குவதற்கான அரசியல் பின்னணி :

♦ ஜம்மு-காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்வோம் எனத் தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சய்னி, “பாஜகவைச் சேர்ந்த மணமாகாத ஆண்கள் இனி காஷ்மீருக்குச் சென்று நிலத்தை வாங்கவும், அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் வரவேற்கப்படுகிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் “இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர்- அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால்-பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்காது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாஜக-வின் இந்த நடவடிக்கை அதனது- மதவாத, வெறுப்பரசியலே.

♦ பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மட்டுமே தேசிய இன அடிப்படையிலான மொழிவாரி மாநிலங்களை எதிர்த்த ஒரே அமைப்பு. மாநிலங்கள் என்ற நிர்வாக அலகு தேவையில்லை – மாவட்டங்கள் என்ற வகையிலான நிர்வாக அலகு – அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரே மத்திய அரசு என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை. இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரான திசையில் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது பாஜக.

♦ ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பண்டிட்,டோக்ரா,சீக்கிய,புத்த மதத்தினர் பாஜக-வின் காஷ்மீர் சிறப்புரிமை பறிப்பை எதிர்த்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே காஷ்மீரில் உள்ள இசுலாமியர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் என்ற பாஜக-வின் பிரச்சாரம் தவறு.

♦ பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.

♦ சற்று அடங்கி இருந்த காஷ்மீர் பிரச்சனையை பாஜக அரசு தனது தவறான நடவடிக்கை மூலம் சர்வதேசப் பிரச்சனை ஆக்கியுள்ள முட்டாள்தனத்தைச் செய்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் உலக நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார். ஐ.நா. சபையிலும் விவாதம் வருகிறது. பாஜக அரசின் இம் மாபெரும் அரசியல் தவறை உலகின் பணக்கார நாடுகள் தங்கள் பொருளாதார நெருக்கடியை தீர்க்கப் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியாவின் இராணுவச் செலவுகள் அதிகரித்து, பொருளாதாரம் வீழ்ச்சியடையும். மொத்த பாதிப்புகளும் இந்திய மக்கள் தலையில் விடியும்.

மேற்கண்ட காரணங்களால் காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து மீறி, அம்மக்களுக்கு அரசியல் சட்ட அநீதி இழைத்து வரலாற்றுத் தவறு செய்துள்ளது பாஜக அரசு.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொண்டு “கொடுத்த வாக்குறுதியை மீறியிருப்பது – அதைக் கொண்டாடுவது – காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும் – ஒரு சென்ட் இடம் வாங்க வேண்டும் என வக்கிரமாய் பேசுவது – அறம் கொன்ற – அரசியல் சட்ட விரோத செயல் எனக் கண்டிக்கிறோம்.

அறம் கொன்ற அரசின் கீழ் வாழ்வதை அவமானமாகக் கருதுகிறோம். ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள – மனசாட்சி உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இன்று நாம் பேசாவிட்டால், நாளை நாம் பாதிக்கப்படும்போது நமக்காகப் பேச யாரும் இருக்க மாட்டார்கள்!

வழக்கறிஞர்கள் – மதுரை

போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு நல்ல பெண்கள் அஞ்சுவதில்லை !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 14

போர்முனையில் புயலுக்கு முந்திய அமைதி மேலும் நீடித்தது. செய்தி அறிக்கைகளில் வட்டார முக்கியத்துவம் உள்ள சண்டைகளையும் வேவுக்காரர்களின் தேட்டங்களையும் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மருத்துவமனை நிர்வாகிகள் நாற்பத்து இரண்டாம் வார்டில் நோயாளிகளின் நெருக்கத்தைக் குறைத்து விட்டார்கள். இரண்டு கட்டில்கள் மட்டுமே அதில் எஞ்சியிருந்தன. வலப்புறம் மெரேஸ்யெவின் கட்டில். இடப்புறம், ஆற்றங்கரையை நோக்கிய ஜன்னல் அருகே, மேஜர் ஸ்த்ருச்கோவின் கட்டில்.

வேவுக்காரர்களின் தேட்டங்கள்! மெரேஸ்யெவும் ஸ்த்ருச்கோவும் அனுபவம் வாய்ந்த படைவீரர்கள். எனவே, இந்த இடைநிறுத்தம் எவ்வளவு பெரிதாயிருக்குமோ, இறுக்கம் நிறைந்த இந்த அமைதி எவ்வளவு நீடிக்குமோ, புயல் அவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் சீறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

குறிதவறாது சுடும் ஸ்னைப்பர், “சோவியத் யூனியனின் வீரர்” ஸ்தெபான் இவானவிச், இவுஷ்கின் போர்முனையின் தென் பகுதியில் ஓரிடத்தில் இருபத்தைந்து பாசிஸ்டுகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், இத்துடன் அவரால் கொல்லப்பட்ட பகைவர்களின் மொத்த எண்ணிக்கை இருநூற்றை எட்டிவிட்டது என்றும் ஒரு தகவல் செய்தி அறிக்கையில் ஒரு முறை கூறப்பட்டது. க்யோஸ்தியேவிடமிருந்து கடிதம் வந்தது. அவன் எங்கிருக்கிறான், அவனது நிலைமை என்ன என்பது பற்றி எதையும் அவன் தெரிவிக்கவில்லை. தனது முந்தைய கமாண்டர் ரோத்மிஸ்த்ரோவின் படையணியை மீண்டும் சேர்ந்து விட்டதாகவும் வாழ்க்கை மனநிறைவு அளிப்பதாகவும் எழுதியிருந்தான். இந்தக் கடிதம் கிடைத்தால் அன்யூத்தாவுக்கு இரண்டு வரி எழுதிப் போடும்படி அலெக்ஸேயைக் கேட்டுக் கொண்டிருந்தான். தானும் அவளுக்கு எழுதுவதாகவும் ஆனால் தான் ஒயாமல் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாகவும் எனவே தன் கடிதம் அவளுக்குப் போய்ச் சேருமோ சேராதோ தெரியவில்லை என்றும் குறித்திருந்தான்.

நண்பர்களைப் பற்றிய இந்த இரண்டு தகவல்களைக் கொண்டே புயல் தெற்கே எங்கோ வீசப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வது படைவீரனான அலெக்ஸேய்க்கு முடிந்தது. அவன் அன்யூத்தாவுக்கும் எழுதினான், தாடி வளர்ப்பது பற்றித் தலைமை மருத்துவர் சொன்ன யோசனையை க்யோஸ்தியோவுக்கும் எழுதினான். எனினும் க்யோஸ்தியேவ் இப்போது போருக்கு முந்தைய இராணுவக் கெடுபிடி மனநிலையில், மிகக் கடினமும் அதே சமயம் ஒவ்வொரு படைவீரனுக்கும் மிக உவப்புள்ளதுமான கெடுபிடி மன நிலையில் இருப்பதனால் தாடியைப் பற்றியோ அன்யூத்தாவைப் பற்றியோ கூட நினைப்பதற்கு ஓடாது என்பதை அலெக்ஸேய் அறிந்திருந்தான்.

நாற்பத்து இரண்டாம் வார்டில் இன்னும் ஒரு களிப்பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மேஜர் பாவெல் இவானவிச் ஸ்த்ருச்கொவுக்கு “சோவியத் யூனியனின் வீரர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப் பெருமகிழ்ச்சி கூட ஸ்த்ருச்கொவுக்கு நெடுநேரம் உற்சாகமூட்டவில்லை. அவர் தொடர்ந்து முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தார். இந்தப் “பாழாய்ப் போகிற முழங்காற் சில்லுகள்” காரணமாகத் தாம் இவ்வளவு கெடுபிடி நிறைந்த வேளையில் படுத்துக்கிடக்க வேண்டியிருப்பது அவருக்குச் சள்ளையாக இருந்தது.

ஒரு நாள் மாலை அலுவலகப் பணிபுரிந்த மெலிந்த முதிய நர்ஸ் வார்டுக்கு வந்தாள்.

“’அலெக்ஸேய் மெரேஸ்யெவ் – நடமாடுபவரா?” என்று வினவினாள்.

“ஓடுபவர்” என்று வெடுக்கெனச் சொன்னார் ஸ்த்ருச்கொவ்.

“நான் இங்கே வேடிக்கை பேச வரவில்லை!” என்று கோபத்துடன் கூறினாள் நர்ஸ். “சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவை போனில் கூப்பிடுகிறார்கள்” என்றாள்.

“யார் கன்னிப் பெண்ணா?” என்று நர்ஸின் பக்கம் கண்சிமிட்டியவாறு உற்சாகமாகக் கோட்டார் ஸ்த்ருச்கொவ்.

“நான் அவளுடைய பாஸ்போர்ட்டைப் பார்க்கவில்லை” என்று மிடுக்காக வார்டிலிருந்து வெளியே சென்றவாறு குத்தலாக மொழிந்தாள் நர்ஸ்.

படிக்க:
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?
மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

மெரேஸ்யெவ் கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான். கைத்தடியை உற்சாகமாக டொக் டொக் கென்று ஊன்றி ஒலித்துக் கொண்டே நர்ஸை முந்தி ஆளோடியில் உண்மையாகவே ஓடினான். சுமார் ஒரு மாதமாகவே அவன் ஓல்காவின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “ஒரு வேளை இது அவள் தானோ?” என்ற அசட்டு எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. உண்மையிலே, இவ்வாறு நடப்பது சாத்தியமே இல்லை. இம்மாதிரி வேளையில் ஸ்தாலின்கிராத் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு வருவது நடக்கக் கூடியதா! தவிர, தான் பின்புல நிறுவனம் ஒன்றில், மாஸ்கோவில் அல்ல, நகர்புறத்தில் வேலை செய்வதாக அவள் எழுதியிருக்கையில் இங்கே, மருத்துவமனையில் அவள் அவனை எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்?

ஆனால் அந்தக் கணத்தில் மெரேஸ்யெவ் அற்புதம் நிகழும் என நம்பினான். அவன் ஓடினான், எப்போதாவது கைத்தடியை ஆதாரமாக ஊன்றியவாறு, இடமும் வலமுமாகச் சாய்ந்தாடியபடி, பொய்க்கால்களால் முதல் முறை மெய்யாகவே ஓடினான். பொய்க்கால்கள் சரக்சரக்கென்று கறுமுறுத்தன…

ஆழ்ந்த, காதுக்கு இனிய குரல் டெலிபோன் குழாயில் ஒலித்தது. அது அலெக்ஸேய்க்கு முற்றிலும் புதியது. நாற்பத்து இரண்டாம் வார்டைச் சேர்ந்த சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அவன் தானா என்று கேட்டது அந்தக் குரல்.

இந்தக் கேள்விகளில் தனது மனத்தைப் புண்படுத்தும் ஏதோ விஷயம் இருப்பது போலக் கோபத்துடன் குழாயில் “ஆமாம்!” என்று வெடுக்கெனக் கத்தினான் மெரேஸ்யெவ்.

குழாயில் வந்த குரல் கணப்பொழுது அடங்கிவிட்டது. பிறகு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் என்று உணர்ச்சியற்ற இறுக்கத்துடன் கூறியது.

“நான்தான் அன்யூத்தா க்ரிபொவா பேசுகிறேன். உங்கள் நண்பர் லெப்டினன்ட் க்யோஸ்தியேவுக்கு என்னைத் தெரியும். உங்களுக்கு என்னைத் தெரியாது” என்று சற்று சிரமத்துடன் சொன்னாள் ஒரு பெண். அன்பற்ற பதிலால் அவள் மனத்தாங்கல் கொண்டிருப்பது வெளிப்படையாகப் புலப்பட்டது.

ஆனால் மெரேஸ்யெவ் குழாயை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்டு குரல் கொண்ட மட்டும் உரக்கக் கத்தினான்: “நீங்கள் தாம் அன்யூத்தாவா? அதே பெண்தானா? இல்லை, நான் உங்களை மிக நன்றாக அறிவேன், மிக நன்றாக! க்யோஸ்தியேவ் என்னிடம்…”

“எங்கே அவர்? என்ன நேர்ந்தது அவருக்கு? அப்படித் திடீரென அவர் போய்விட்டாரே! அபாய அறிவிப்பைக் கேட்டதும் நான் அறைக்கு வெளியே போனேன், ஏனெனில் நான் மருத்துவப் பணியினள். திரும்பி வந்தபோது அவரைக் காணோம். கடிதமோ, முகவரியோ, எதுவுமே இல்லை. எங்கே அவர்? ஏன் அப்படி மறைந்துவிட்டார்? அவருக்கு என்ன நேர்ந்தது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை….. அருமை அலெக்ஸேய், நான் உங்களை இப்படி அழைப்பதற்கு மன்னியுங்கள். எனக்கும் உங்களைத் தெரியும். அவர் எங்கே, ஏன் இப்படித் திடீரென மறைந்து விட்டார் என்று விளங்காமல் மிகவும் சஞ்சலப்படுகிறேன்…”

அலெக்ஸேயின் உள்ளத்துக்கு இது இதமாயிருந்தது. நண்பனுக்காக அவன் மகிழ்ந்தான். நல்ல பெண்கள் போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்றும் இதனால் அர்த்தமாகிறது. ஆகவே தானும், ஆம், அலெக்ஸேயும் நம்பலாம் தன்னையும் ஓல்கா இவ்வாறே கலவரத்துடன் தேடுவாள் என்று! இந்த எண்ணங்கள் எல்லாம் மின்வெட்டுப் போல அவன் மனத்தில் பளிச்சிட்டன.

“அன்யூத்தா! எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது, அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான். அடே, சொல்ல மறந்து விட்டேனே! அவன் முகவரி போர்க்களத் தபால் நிலையம் 42531-B. அவன் தாடி வளர்க்கிறான், அன்யூத்தா, மெய்யாகவே செழித்து அடர்ந்த தாடி. ஊம்… ம்ம்.. ம்ம்… கொரில்லா வீரனது போன்ற தாடி. அவனுக்கு அது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது” என்று மூச்சு திணறக் கத்தினான்.

தாடி வளர்ப்பதை அன்யூத்தா அங்கீகரிக்கவில்லை. அது அனாவசியம் என அவள் கருதினாள். இதனால் இன்னும் களிப்படைந்த அலெக்ஸேய், அவள் கருத்து அதுவானால் க்யோஸ்தியேவ் ஒரே வீச்சில் அதைச் சிரைத்துத் தள்ளிவிடுவான் என்றும், ஆயினும் தாடி அவனுக்குத் தனிச் சோபை அளிப்பதாக எல்லோரும் எண்ணுவதாகவும் கூறினான்.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்

மொத்தத்தில், பேச்சு முடிவதற்குள் அவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். சமயம் கிடைத்தபோது அலெக்ஸேய் அவளுக்குக் கட்டாயம் போன் செய்வது என்று தீர்மானமாயிற்று.

வார்டுக்குத் திரும்பும்போது டெலிபோனுக்குத் தான் ஓடியதை அலெக்ஸேய் நினைவுப்படுத்திக் கொண்டான். மறுபடி ஓட முயன்றான், பலிக்கவில்லை. பொய்க்கால்கள் தரை மீது திடும் திடுமென மோதியதால் அவன் உடல் முழுவதிலும் கொடிய வலி உண்டாயிற்று. கிடக்கிறது, பரவாயில்லை. இன்றில்லாவிட்டால் நாளை, நாளையில்லாவிட்டால் நாளை மறுநாள், அவன் வெற்றி பெற்றே தீருவான், பார்க்கலாம் ஒரு கை! எல்லாம் நலமே முடியும்! மறுபடி ஓடவும் விமானம் ஓட்டவும் போரிடவும் தொடங்குவோம் என்பதில் அவனுக்குச் சந்தேகமே ஏற்படவில்லை. சபதம் ஏற்பதை விரும்புவன் ஆதலால், முதலாவது விமானச் சண்டைக்குப் பின், முதலாவது ஜெர்மன் விமானத்தை அடித்து வீழ்த்திய பிறகு ஒல்காவுக்கு எல்லாவற்றையும் எழுதி விடுவது என்று சபதம் செய்து கொண்டான். அப்புறம் என்ன ஆகிறதோ, ஆகட்டும்!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்துமூட தூத்துக்குடி மக்கள் நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தை ஸ்டெர்லைட் நிறுவனமும் தமிழக அரசும் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. எங்கும் எழுந்த மக்கள் கண்டனத்தை அடுத்து மேம்போக்கான அரசாணை மூலமாக மூடியது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக வழக்கு விசாரணை தேசியபசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. தே.ப.தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், இந்த தே.ப.தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதனைத் தொடந்து இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த 18 நாட்களாக நடந்து வரும் விசாரணை குறித்தும், ஸ்டெர்லைட் ஆலையின் மோசடிகள் குறித்தும் இரண்டு பாகமாக வெளியிடப்படும் இந்தக் காணொளிகளில் விவரிக்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

பாகம் 1:

பாகம் 2 :