Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 357

ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 05

ரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை, இவற்றைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன், கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை சரித்திர ஆசிரியரான தோழர் P.T. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய சரித்திரம்’’ முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.

கி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை :

”ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் நான்கு வருண பேதங்கள் கிடையா. மண விஷயத்தில் ஆரியர்களின் யக்ஞ முறை அனுஷ்டிக்கப்படவில்லை. வட இந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதானாலும், தென் இந்தியா சமஸ்கிருதத்துக்கு அடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பேசி வந்த பாஷை இப்போது கோதாவரி, வங்கம், விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிக கல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாக இருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிக உருவந்தான் தமிழ் என்பது.”

இரும்புக்கருவிக் காலம் – கி.மு 5000 முதல் 3000 வரை :

”சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்து முன்பு தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டைய வாழ்க்கையைச் சித்தரித்து விடலாம். அக்காலத்தில் நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி) மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம் ஆரம்பமாவதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான் (திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும் பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பல பாஷா பண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்குப் பிறகு ஏற்பட்டது. அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமயம் முதல் குமரி வரையிலும், சிந்து (நதி) முதல் பிரம்மபுத்திரா (நதி) வரையிலும் பரவிக் கிடந்தனர்.

ஆரியக் கோட்பாடு, கி.மு. 3000 முதல் 1500 வரை :

P.T. சீனிவாச அய்யங்கார்.

”இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு புதிய முறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதலே அம்முறை. இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும், ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) என்றும் ஆனார்கள். தேவபாஷையாகிய சாண்டாசா (சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோ – ஐரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.

இந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும் வடமேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்த அன்னியர்தாம் (ஆரியர்) கொண்டு வந்தனர் என ஐரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில் உண்டாயிற்று என்றுதான் தெரிகிறது.

கி.மு. 3000 முதல் 2000 வரை :

பர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப் புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்கு ஆரியக்கலைகளைக் கொண்டு வந்து பரவச் செய்தன.

”மலையாளத்திலே, பிராமண காலனி (குடியேற்றம்)யும் உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு. 2000) தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லது இராஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாக இருந்தது. அவர்கள் ஆரிய முனிவர்களின் யாகக் கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்த இராக்ஷதர்கள் (திராவிட) வட இந்தியரைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களாயில்லை. இக்காலத்தில் தென்னிந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன. இவற்றுள் பெரியது கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்த ஜனாஸ் தானா என்ற இராஜ்யமாகும். டெக்கான் காடுகளென்னும் தண்டகாரண்யத்தில் (விந்தியமலைக்குத் தெற்கேயும், திருவேங்கட மலைக்கு வடக்கேயுமுள்ள பிராந்தியமாகக் கொள்ளலாம்), ஆரியர்களின் கொள்கைகள் பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.

வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவை யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி, அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்று பெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை அந்த ரிஷிகள் தக்ஷண பாதாவுக்குத் (ஆரிய ஆதிக்கமில்லாத தண்டகாருண்யப் பிரதேசங்களுக்கு) துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள் (திராவிடர்), பேர் பெற்ற வியாபாரிகள், அவர்களை ரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தனர். ஆரியர் வகுத்த நான்கு வருணங்களையும் சேராதவர்கள் தஸ்யூக்கள் எனப்படுவர்.

மகாபாரதக் காலத்திற்குப் பின் கி.மு. 1409 – 750 :

”கி.மு. 1500 -ல், பிராமணர்களின் நான்கு ஆசிரமக் (பிரம்மச்சாரிய, கிரகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாச நிலை) கொள்கை தலை நீட்டியது. பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டு என்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்ற சடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டும்தான் என்று ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும், அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்தான் அரசனை அடக்கி ஆதிக்கம் செய்தார்கள்.

“டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு. அதில்தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக் கூட்டத்தில் சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்று வருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

கி.மு. 750 முதல் 320 வரை :

P.T. சீனிவாச அய்யங்கார் எழுதிய ”இந்திய சரித்திரம்’’ நூலின் முகப்பு அட்டை.

”இக்காலத்தில் மதம் மனித வாழ்வில் முக்கிய ஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள் புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்க வருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள், அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான் மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடு உண்டானது. அதன் ஆரம்பந்தான் லிங்கம், சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும். க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ , பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்த இக்காலத்தில்தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின.

”பெளத்தர்கள் எழுதிய பாலி பாஷையும், சமணர்கள் (ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்த மகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரம விரோதிகளாகும். (பாஷையிலுங் கூட ஆரியர் – பௌத்த சமணத்தார்களுக்குப்  பகைவர்கள் என்பது கவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பெளத்த – சமண மதங்களால் பிராமணர்களுக்கு மதிப்புக் குறையத் தலைப்பட்டது.

கி.மு. 320 முதல் 230 வரை :

”இந்தியா பூராவும் மெளரிய அரசர்கள் ஆட்சி செலுத்தினாலும், தமிழர் இனம் மட்டும், அந்தச் சக்கரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கே பாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ், தமிழில் யவன நாடு ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா (சுவர்ண பூமி என்று கூறுவர்) மலேயா, ஜாவா (சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீபம் (சயாம் என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும் நடைபெற்றது.

படிக்க:
மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம் – காந்தியின் பேரன் !

”பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில் ஆசை பிறந்தவுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய வம்சத்தில் தாங்களும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வேட்கையும் பிறந்தது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு. அகஸ்திய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் பாஷையைக் கற்றுக் கொண்டு, தமிழ் பாஷைக்கு ஐந்திர சிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தை உண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில் மயங்கினாலும் தமிழ்ப் பொதுமக்கள் ஆரிய மத சமூக வலையில் அகப்பட்டார்களில்லை.

கி.மு. 230 முதல் கி.பி. 300 வரை :

”கி.பி. 150 -ல் பிராகிருத மொழி போய், சமஸ்கிருதம் அரசாங்க பாஷையாகியது வடநாட்டில். இக்காலம், பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம். காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்ட பல்லவர்களே கி.பி. 200-க்கு முன் தமிழ்நாட்டில் பிராகிருத மொழியை உத்தியோக பாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ் அரசர்களும் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜ சூய யாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர். இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம் வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது! (இதனால் இம்மூன்று நூற்களும், அவற்றிற் பிறந்த கிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவை என்பது பெறப்படுகிறது)

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

அவன் கால்கள் அகற்றப்பட்டது தெரிந்ததும் வோல்கா என்ன சொல்வாள் ?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 6

றுவைக்குப் பிறகு அலெக்ஸேய் மெரேஸ்யெவின் இயல்பில், இத்தகைய சூழ்நிலையில் ஏற்படக்கூடிய மிகப் பயங்கரமான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அவன் தனக்குள் ஒடுங்கிவிட்டான். அவன் குறை சொல்லவோ, அழவோ, சிடுசிடுக்கவோ இல்லை. அவன் மௌனம் சாதித்தான்.

தனது ரெஜிமெண்டுக்கு, விமானி வேலைக்கு, பொதுவாகவே போர் முனைக்கு அவன் இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை. விமானத்தை உயரே கிளப்பிக் கொண்டு போகவும் விமானப் போரில் கலந்து கொள்ளவும் இனி அவனுக்கு இயலாது! இப்போது அவன் அங்கஹீனன்; விருப்பிற்குகந்த பணியிலிருந்து அகன்று விட்டவன்; ஓரிடத்தில் கட்டுண்டவன்; குடும்பத்தினருக்குச் சுமை, வாழ்வுக்குத் தேவை அற்றவன். இதை நேராக்க முடியாது, வாழ்நாள் முழுவதும் இது இப்படியே இருக்கும்.

நாள் முழுவதும் அசையாமல் நிமிர்ந்து படுத்து, மோட்டிலிருந்து நெளிந்த வெடிப்பையே நிலைக்குத்திட்டு நோக்கியவாறு கிடப்பான் அலெக்ஸேய். தோழர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் “ஆமாம்”, “இல்லை” என்று – அதுவும் அடிக்கடி பொருத்தம் இன்றி -விடையளித்துவிட்டு மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்து விடுவான். மருத்துவர்கள் குறித்த சிகிச்சை முறைகளை எல்லாம் அவன் பணிவுடன் கடைபிடிப்பான், அவர்கள் எழுதிக் கொடுத்த மருந்துகளை எல்லாம் சாப்பிடுவான், தாமதமாக, பசியே இன்றி உணவு கொள்வான், பின்பு மறுபடி நிமிர்ந்து படுத்துவிடுவான்.

“டேய், தாடி, என்ன யோசனை பலமாயிருக்கிறது?” என்று அவனிடம் பேச்சு கொடுத்தார் கமிஸார்.

அலெக்ஸேய் அவர் புறம் முகத்தைத் திருப்பினான், அவரைக் காணவே இல்லை போன்ற தோற்றத்துடன்.

“என்ன யோசனை பலமாயிருக்கிறது என்று கேட்டேன்.”

“ஒன்றுமில்லை.”

ஒரு முறை வஸீலிய் வஸீலியயெவிச் வார்டுக்கு வந்தார்.

சிறந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்ட அறுவையை அவன் எஃகு சரீரம் எளிதில் தாங்கிக்கொண்டது. காயங்கள் விரைவாக ஆறிக் கொண்டு வந்தன. எனினும் அவன் வெளிப்படையாக தெரியும் அளவுக்குப் பலவீனம் அடைந்தான்.

“என்ன, ஊர்வான், உயிரோடு இருக்கிறாயா? என்ன சமாச்சாரம்? வீரன்தான் நீ, முணுக்கென்று கூடக் கத்தவில்லை! நீ ஜெர்மானியர்களிடமிருந்து தப்பி, பதினெட்டு நாட்கள் தவழ்ந்து, ஊர்ந்து வெளியேறினாய் என்பதை இப்போது நம்புகிறேன், தம்பி. என் வாழ்நாளில் நான் எத்தனை படைவீரர்களைக் கண்டிருக்கிறேனோ, அத்தனை உருளைக் கிழங்குகளைக்கூட நீ தின்றிருக்க மாட்டாய். ஆனால் உன் போன்றவனுக்கு அறுவை செய்ய இதுவரை வாய்க்கவில்லை” தலைமை மருத்துவர் ரசக்கற்பூரத்தால் அரிக்கப்பட்ட நகங்களைக் கொண்ட, தோலுரியும் சிவந்த கைகளைத் தேய்த்துக் கொண்டார். “என்ன உர்ரென்று முகத்தை வைத்துக் கொள்கிறாய்? இவனைப் புகழ்கிறேன், இவன் முகத்தைச் சுளிக்கிறான். நான் மருத்துவ லெப்டினன்ட் ஜெனரலாக்கும். தெரியுமா? உத்தரவிடுகிறேன் ! ஊர்ந்தும் வந்திருக்கிருக்கவே வேண்டாமே! ரிவால்வரில் மூன்று குண்டுகள் பாக்கியிருந்தனவே.”

தடையரண்களால் சூழப்பட்டுக் கடுகடுப்புடன் போர்க்கோலம் பூண்டிருந்த மாஸ்கோவில் எங்கிருந்தோ எப்படியோ தளிர்த்திருந்த தூவி வில்லோக் கிளைகள் சிலவற்றைக் க்ளோவ்தியா மிஹாய்லவ்னா கொண்டுவந்தாள். ஒவ்வொரு நோயாளியின் சிறு மேஜை மீதும் ஒரு வில்லோக் கொம்பைக் கண்ணாடித் தம்ளர்களில் வைத்தாள். செம்மையோடிய கொம்புகளில் வெள்ளிய தூவியடர்ந்த இலை மொக்குகள் சிறு நூல் பந்துகள் போலக் காட்சி தந்தன. வசந்தகாலமே நாற்பத்து இரண்டாம் வார்டுக்குள் வந்துவிட்டது போன்ற புத்துணர்ச்சி அவற்றிலிருந்து எங்கும் பரவியது. அன்று எல்லோருமே இன்பக் கிளர்ச்சி கொண்டிருந்தார்கள். வாய் மூடி டாங்கிவீரன் கூட கட்டுகள் போட்ட முகமும் தானுமாகச் சில வார்த்தைகளைக் கலகலத்தான்.

அலெக்ஸேய் படுத்தபடியே எண்ணமிட்டான்: கமீஷினில் இப்போது கலங்கல் நீரோடைகள் சேறு படிந்து நடக்கிட்டிருக்கும் நடைபாதைகளின் ஓரமாக சாலைகளில் பரவிய பளிச்சிடும் கூழாங்கற்கள் மேல் பாய்ந்தோடும். வெப்பமடைந்த தரை, குளுமையான ஈரிப்பு, குதிரைச் சாணம் இவற்றின் வாடை கலந்து வீசும். இந்த மாதிரி ஒரு நாளில்தான், வோல்கா ஆற்றின் செங்குத்தான கரைமீது அவனும் ஓல்காவும் நின்றார்கள். வானம்பாடிகளின் குரல்கள் வெள்ளி மணிகள்போல ஒலித்தன.

படிக்க:
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

மற்றபடி எங்கும் ஆழ்ந்த அமைதி வீற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் வோல்கா ஆற்றின் கண்ணுக்கெட்டாத அகல் பரப்பின் மீது ஓசையின்றி மிதந்து சென்றன. ஆற்றோட்டத்துடன் பனிக்கட்டிப் பாளங்கள் மிதந்து செல்லவில்லை நெளிநெளியாக அலைகளை எழுப்பியவாறு விரைந்து பாயும் ஆற்றின் பெருக்குக்கு எதிராக ஓல்காவும் அவனும் மிதந்து செல்வது போலவும் அவர்களுக்குப் பிரமை உண்டாயிற்று. அவர்கள் பேசாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே அளவற்ற இன்பம் காட்சி தந்தது. அந்த இன்பத் திளைப்பில், வோல்கா ஆற்றுப் பரப்பிற்கு மேலே, விட்டு விட்டு வீசிய இளவேனில் காற்றில் அவர்களுக்கு மூச்சு திணறுவது போலிருந்தது. இத்தகைய இன்பக் கணங்கள் இனி என்றுமே வராது. அவள் அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வாள். திருப்பிக் கொள்ளவில்லை என்றாலும் இந்தத் தியாகத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அழகு ஒளி மற்றும் வடிவமைப்புடன் திகழும் ஓல்கா, கட்டைக் கால்களில் விந்தி விந்தி நடக்கும் தன் அருகே செல்ல அனுமதிப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டா?… வசந்தகாலத்தின் அந்த எளியநினைவுச் சின்னத்தை மேஜையிலிருந்து அகற்றி விடும்படி அவன் மருத்துவத்தாதியை வேண்டிக்கொண்டான்.

தூவி வில்லோக் கொம்பு அகற்றப்பட்டுவிட்டது, ஆனால், துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது கடினமாயிருந்தது. அவன் காலற்ற முடவன் ஆகிவிட்டான் என்று அறிந்ததும் ஓல்கா என்ன சொல்லுவாள்? போய்விடுவாளா, மறந்து விடுவாளா, தன் வாழ்க்கையிலிருந்து அவனை அகற்றித் துடைத்துவிடுவாளா? அலெக்ஸேயின் உள்ளமும் ஆன்மாவும் இதை எதிர்த்தன. இல்லை, அவள் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் அவனை ஒதுக்கிவிட மாட்டாள், முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள்! இது இன்னும் மோசம். பெருந்தன்மை காரணமாக அவள் அவனை மணந்துகொள்வாள், நொண்டிக்கு வாழ்க்கைப்படுவாள், இந்தக் காரணத்தால் உயர் தொழில்நுட்பக் கல்வி பெறும் தனது கனவை விட்டுவிடுவாள், தன்னையும் அங்கவீனமான கணவனையும், யார் கண்டது, குழந்தையையுங்கூடப் பராமரிப்பதற்காக வேலை நுகத்தில் கழுத்தை மாட்டிக் கொள்வாள் – இவ்வாறு எண்ணிப் பார்த்தான் அலெக்ஸேய்.

இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்ள அவனுக்கு உரிமை உண்டா? அவர்கள் இன்னும் எவ்விதத்திலும் கட்டுப்பட்டவர்கள் அல்லவே. அவள் அவனுடைய மணப்பெண்தானே தவிர மனைவி அல்லவே. அவன் அவளைக் காதலித்தான், மனமாரக் காதலித்தான். ஆனால் அவளை மனைவி ஆக்கிக்கொள்ளத் தனக்கு உரிமை கிடையாது என்று அவன் தீர்மானித்தான். தங்களை ஒருவருடன் ஒருவர் இணைக்கும் எல்லாத் தொடர்புகளையும் தானே அறுத்து விட வேண்டும், அதுவும் சட்டென்று அறுத்துவிட வேண்டும் – துயர் நிறைந்த வருங்காலத்திலிருந்து மட்டுமல்ல, தயக்கத்தின் சித்தரவதையிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கும் பொருட்டு – என நிச்சயித்தான்.

ஆனால் “கமீஷின்” என்ற முத்திரை பதிந்த கடிதங்கள் வந்து இந்தத் தீர்மானங்களை எல்லாம் அழித்துத் துடைத்து விட்டன. ஒல்காவின் கடிதம் மறைமுகமான ஏதோ கலவரத்தால் நிறைந்திருந்தது. துன்பம் வரப்போவதை முன்னுணர்ந்தவள் போல அவனுக்கு என்னதான் நேர்ந்தாலும் தான் எப்போதும் அவனுடன் இருக்கப்போவதாக அவள் எழுதியிருந்தாள்.

அவன் அவளைக் காதலித்தான், மனமாரக் காதலித்தான். ஆனால் அவளை மனைவி ஆக்கிக்கொள்ளத் தனக்கு உரிமை கிடையாது என்று அவன் தீர்மானித்தான்.

சொந்த ஊரிலிருந்து வந்த கடிதங்கள் முதல் முறையாக அலெக்ஸேய்க்குக் களிப்பூட்டவில்லை. அவன் உள்ளத்தில் அவை புதிய தடுமாற்றத்தை விளைத்தன. இங்குதான் அவன் தவறு செய்தான் – வருங்காலத்தில் அவனுக்கு எவ்வளவோ வேதனை உண்டாகக் காரணமாயிருந்த தவறு செய்தான். தன் கால்கள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன என்ற சேதியை கமீஷிக்னுக்குத் தெரிவிக்க அவனுக்கு துணிவு வரவில்லை.

அலெக்ஸேய் மெரேஸ்யேவின் மருத்துவமனை நாட்கள் களிப்பற்ற சிந்தனையில் அலுப்பூட்டும் வகையில் கழிந்தன. சிறந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்ட அறுவையை அவன் எஃகு சரீரம் எளிதில் தாங்கிக்கொண்டது. காயங்கள் விரைவாக ஆறிக் கொண்டு வந்தன. எனினும் அவன் வெளிப்படையாக தெரியும் அளவுக்குப் பலவீனம் அடைந்தான். மருத்துவர்கள் எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொண்ட பின்னரும் அவன் கண்ணெதிரே நாளுக்கு நாள் இளைத்து வாடிப்போனான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ !

0

ம்பதுகளின் துவக்கத்திலிருக்கும் அமெரிக்கரான அந்தோனி ஆண்ட்ரூஸ் விபத்தின் பின்விளைவாய் ஏற்படும் நாட்பட்ட மூளை பாதிப்புக்கு (chronic traumatic encephalopathy) ஆளானவர். அவர் தனது பள்ளி நாட்களில் பெரும்பாலான அமெரிக்க மாணவர்களைப் போன்றே அமெரிக்க கால்பந்தாட்டம் விளையாடியவர்.

அமெரிக்க கால்பந்தாட்டம் பொதுவான கால்பந்தாட்டத்தை விட முற்றிலும் மாறுபட்டது. எதிரணி வீரரோடு நேருக்கு நேர் மோதுவது, பந்தை கையால் தூக்கி எரிவது, அப்படி எரிய முயலும் வீரரை எதிரணி வீரர்கள் மொத்தமாக சூழ்ந்து கொண்டு மேலே விழுந்து அழுத்துவது என அதன் விதிகள் பொதுவாக நாம் அறிந்துள்ள காலபந்தாட்டத்தின் விதிகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது.

அந்த விளையாட்டில் அடிபட்டுக் கொள்வது – குறிப்பாக தலையில் – மிகச் சாதாரணம் என்பதோடு அடிபட்ட வீரர்கள் அதை கவுரவமாகவும் கருதிக் கொள்வர். வீரர்களின் தலைக்கவசங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது அவர்களின் மண்டை ஓட்டினுள் இருக்கும் மூளை ஒரு திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. இதன் விளைவாக மூளையைத் தாங்கி நிற்கும் நரம்பிழைகள் (axon) ரப்பரைப் போல் முன்னும் பின்னும் இழுக்கப்படுகின்றது.

நரம்பிழைகள் இழுக்கப்படுவதன் காரணமாக மூளைக்கு முக்கியமான இரசாயனங்களை எடுத்துச் செல்லும் மெல்லிய குழாய்கள் அறுபடும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நரம்பிழைகளை அதனிடத்தில் இருத்தும் வேலையைச் செய்யும் டௌ புரதம் ஆங்காங்கே கட்டிக் கொண்டு முக்கியமான இடங்களில் அடைத்துக் கொள்கிறது. சிலருக்கு இவ்வாறு டௌ புரதம் கட்டிக் கொள்வது வளர்ந்து செல்களின் இறப்பு, மூளை சுருக்கம் அல்லது நினைவிழப்பு (டெமென்ஷியா) ஆகிய சிக்கல்களுக்கு காரணமாகி விடுகின்றது.

படிக்க:
எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !
♦ கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

அந்தோனி ஆண்ட்ரூவிடம் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் கவனித்தது அவரது மனைவி. இருவருமாகச் சேர்ந்து நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவது, திட்டமிட்ட பயணங்களை மறந்து விடுவது என அவ்வப்போது ஆண்ட்ரூ விசயங்களை “மறந்துவிடுவதை” கவனித்த அவரது மனைவி மோனா, முதலில் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்கிறாரோ என சந்தேகப்பட்டுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மருத்துவரை அணுக முடிவெடுத்துள்ளனர்.

நான்காண்டுகளுக்கு முன்பு இதே போன்ற காந்த அதிர்வு படிமமாக்கச் சோதனை (Magnetic resonance imaging – MRI) ஒன்றை ஆண்ட்ரூ மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது மூளையில் எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், மீண்டும் அதே சோதனையை ஒரு முறை செய்து பார்த்து விட முடிவு செய்துள்ளார் அவரது மனைவி மோனா. அதன்படி ஆண்ட்ரூவின் மூளையை காந்த அதிர்வு படிமமாக்கச் சோதனைக்கு உட்படுத்தினர் மருத்துவர்கள். தற்போதைய பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த மருத்துவர்கள், மூளையில் கட்டிகளோ அல்லது இரத்தக்கசிவோ, அல்லது சிதைவுற்ற பகுதியோ இல்லை என்பதை உறுதி செய்ததோடு மூளை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆண்ட்ரு அவரது மனைவி மோனா.

இவ்விரு பரிசோதனை அறிக்கைகளையும் எடுத்துக் கொண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர்களான மெரில் மற்றும் அவரது சகா சைரஸ் ராஜியை அணுகியுள்ளார் மோனா. ஆண்ட்ரூவின் பழைய மற்றும் புதிய பரிசோதனை முடிவுகளை நியூரோரீடர் எனும் மென்பொருளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்த வல்லுநர்கள், அவர் அதிர்ச்சியின் விளைவாய் ஏற்படும் நாள்பட்ட மூளை பாதிப்பு நோய்க்கு (chronic traumatic encephalopathy – CTE) ஆளாகியுள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர். இவ்வகையான மூளைபாதிப்பானது தலையில் ஏற்படும் தாக்குதல்களின் விளைவாய் மெல்ல மெல்ல மூளையின் திறன் பாதிப்புக்கு உள்ளாவதால் ஏற்படுகின்றது. பெரும்பாலும் அமெரிக்க கால்பாந்தாட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.

பொதுவாக, அதிர்ச்சியால் விளையும் நாள்பட்ட மூளை பாதிப்பை கண்டறிவது மிகவும் கடினம். பல சந்தர்ப்பங்களில் அதை அல்சைமர் அல்லது டெமென்ஷியா என மருத்துவர்கள் முடிவு கட்டி தவறான சிகிச்சையை மேற்கொண்டு பாதிப்புகள் அதிகரிப்பது உண்டு. ஏற்பட்டிருப்பது சி.டி.ஈ தான் என்பதைக் கண்டறிய மூளையின் திசுக்களை வெட்டியெடுத்து பரிசோதனை செய்வதே உத்திரவாதமான வழிமுறையாக இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில், நியூரோரீடர் ஒரு வரப்பிரசாதம்.

ஆண்ட்ரூ நான்காண்டுகளுக்கு முன் எடுத்திருந்த எம்.ஆர்.ஐ சோதனையின் முடிவுகளையும் தற்போது எடுத்திருந்த அதே சோதனையின் முடிவுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தது நியூரோரீடர். பொதுவாக எம்.ஆர்.ஐ சோதனை அறிக்கையை மருத்துவர்கள் பரிசோதிப்பர்; பின், அதில் ஏதும் மாறுபாடுகள் தட்டுப்பட்டால் அது தொடர்பான சிகிச்சையை பரிந்துரை செய்வர்.

நியூரோரீடர் மென்பொருள் ஒருவரிடம் வெவ்வேறு சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ சோதனையின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கிறது. பழைய மற்றும் புதிய முடிவுகளில் வெளிப்படும் மிக நுணுக்கமான மாறுபாடுகளை கண்டறிந்து மருத்துவரிடம் சொல்லி விடுகிறது. அதன் பின் அறிவாற்றல் சோதனைகள் (Cognitive Tests) உள்ளிட்ட வழமையான சோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களால் ஓரளவுக்குத் துல்லியமாக மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறையைத் தீர்மானிக்க முடிகிறது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு

சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது. நியூரோரீடர் இன்னமும் பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதோடு இதைப் போன்ற மென்பொருட்கள் இன்னமும் சோதனைக் கட்டத்திலேயே உள்ளது.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பரிசோதிக்கும் கணினி மென்பொருட்களின் துல்லியம் இன்னமும் நூறு சதவீதத்தை எட்டவில்லை என்பதும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சம். இன்றைய அளவில் இது போன்ற மென்பொருட்கள் மருத்துவர்களுக்கு உதவி புரியும் ஒரு கருவி என்கிற அளவிலேயே இருக்கின்றது.

எனினும், மூளையைப் பரிசோதிக்கும் மென்பொருட்களுக்கு – குறிப்பாக சி.டி.ஈ போன்ற நோய்களைக் கண்டறிவதற்காக பயன்படுத்துவதை – எதிர்க்கும் மருத்துவர்களும் இருக்கவே செய்கின்றனர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநரும் அப்பல்கலைக்கழகத்தின் சி.டி.இ மையத்தின் இயக்குநருமான மருத்துவர் ஆன் மெக்கேய் ஆண்ட்ரூவின் நோய் கண்டறியப்பட்டதைக் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆண்ட்ரூவிற்கு ஏற்பட்டுள்ள நோய் அறிகுறிகளுக்கு வேறு பல காரணங்களுக்கும் இருக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடும் ஆன், இன்னமும் மூளையின் திசுக்களை பரிசோதிப்பதே சி.டி.ஈ பாதிப்பைக் கண்டறியும் உத்திரவாதமான வழி என்கிறார்.

சைரஸ் ராஜி மற்றும் அவரது சகா மெரில் (வலது)

எம்.ஆர்.ஐ பரிசோதனையின் முடிவுகளை நியூரோரீடர் கொண்டு ஆராய்வது முழுமையாக துல்லியத்தன்மையை எட்டவில்லை என்பதை மருத்துவர் ராஜியும் அங்கீகரிக்கிறார். “எந்த ஒரு சோதனை முடிவுகளும் அறுதியானது அல்ல – அப்படி இருக்கவும் கூடாது. பல்வேறு தரவுகளைக் கூட்டாக பரிசீலிப்பதன் வழியேதான் நோயின் மூலத்தைக் குறித்த சரியான அனுமானத்திற்கு வந்து சேர முடியும்” என்கிறார் ராஜி. மேலும் சோதனை முடிவுகளை தொடர்ச்சியான கால இடைவெளியில் ஒப்பீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் சரியான திசை வழியில் முன்னேறிக் கொண்டுள்ளதா என்பதையும் அவதானிக்க முடியும் என்கிறார் ராஜி.

அல்ஜீமர், டெமென்ஷியா உள்ளிட்ட பல்வேறு மூளை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளின் விளைவுகளை தொடர்ச்சியான கால இடைவெளியில் எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ சோதனை முடிவுகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடிகிறது என்கின்றனர், அதற்கான மென்பொருட்களைப் பயன்படுத்தும் மருத்துவர்கள். குறிப்பாக ஆண்ட்ரூவின் விசயத்தையே எடுத்துக் கொண்டால், அவரது நோயின் காரணத்தைக் கண்டறிந்த பின் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் எதிர்பார்த்த பலன்களை அளிப்பதை அவரது எம்.ஆர்.ஐ சோதனை முடிவுகளை நியூரோரீடர் மென்பொருளின் மூலம் ஆய்வு செய்த போது மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.

ஆண்ட்ரூவின் சிகிச்சை மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்து அவரது ஒப்புதலுடன் ஒரு கட்டுரையை எழுதிய மெரில் மற்றும் ராஜி ஆகியோர் அதை மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர். அந்தக் கட்டுரை வெளியான பின் இந்த மென்பொருள் பயன்பாட்டை ஆதரித்தும் விமரிசித்தும் நரம்பியல் மருத்துவ உலகம் விவாதித்து வருகின்றது. எப்படிப் பார்த்தாலும், எதிர்காலத்தில் மனித உடலைப் பரிசோதிக்க ஒரு உத்திரவாதமான கருவியாக கணினிகள் வளர்ந்து வருவதை முற்றிலுமாக மறுத்து விட முடியாது.

சாக்கியன்

ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

1

ங்கிகளின் ஆட்சியில் நாட்டில் எந்த ஒரு மூலையிலும் ஒரு எழுத்தாளரோ, பத்திரிகையாளரோ, செயல்பாட்டாளரோ தாக்கப்படுவது இயல்பானதாகிவிட்டது. அத்தகைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு ஆதரவுக் குரல்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு ‘முன்னணி’ எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தத் தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களில் அதைக் கொண்டாடுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதை ஒரு சிலர் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும், ஒருவர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில் அவரை கேலி செய்வது சரியல்ல எனவும் எழுதியிருக்கின்றனர்.

ஆனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வந்த பெரும்பாலான பதிவுகளில் ஜெயமோகனின் ‘அறமே’ , ‘பின் தொடரும் நிழலின் குரலாய்’ வந்து ஒலிக்கிறது !

***

டிவிட்டர் பதிவுகள்…

ரேவன் : 

புளிச்ச மாவு பிரச்சினையில குத்து வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்த வாந்தியில் இதுவும் ஒன்று.

”ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள் தமிழர்கள்? அறிவியல்,விண்வெளி ஆய்வில் பிராமணர்கள் சாதனை புரிகின்றனர். அதனால் அவர்களின் மொழியில் தமிழர்களுக்கு பொறாமை,வெறுப்பு.”

மூக்கு பொடைப்பா இருந்தா…

***

ஷிவானி சிவக்குமார் :

நீங்க பெரிய எழுத்தாளர்னு சொல்லியிருக்கலாம்ல..!
சொன்னதுக்கு பிறகு தாண்டா வெளுத்தான் – ஆசான்

♦ புளிச்சமாவு என்ற நாவலில் இருந்து !!

***

மஞ்சள் நிலா :

#மாவு என்பது ஒரு வார்த்தை ! ஆனால் …

3 நாள் #புளிச்சமாவு என்பது உணர்வுப்பூர்வமானது!! #ஜெயமோகன்

***

புத்தன் :

கிரைண்டர் மிக்சி எல்லாம் தூக்கிவீச வேண்டியது அப்பறம் வீட்ல மாவாட்ட முடியாம கடைல புளிச்ச மாவு வாங்கி அடிவாங்க வேண்டியது … பைத்தியகாரனுக …

***

இப்ராஹிம் சிராஜ் :

ஜெமோவை தாக்குனது வெளிநாட்டு சதி யுவர் ஆனர் …
உக்கார்றா சங்கி, அது புளிச்ச மாவு பிரச்சனையாம்….

***

சாம்ராஜ் குமார்:

ஒருவேளை ராஜாஜி ஒரு மளிகை கடை பெண் மீது புளிச்சமாவு பாக்கெட்டை வீசியிருந்தால், பெரியார் அந்த பெண்ணிடம் ராஜாஜியை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து இருப்பார்! கொள்கையில் இணையாத இருதுருவங்கள்!,. தற்போது ரவி பெரியாருமில்லை ஜெமோ ராஜாஜியுமில்லை.

***

நிமேஷிகா:

அடுத்த நாவலோ அல்லது அடுத்து வசனம் எழுதும் திரைப்படமோ அரசு மருத்துவமனை சார்ந்ததாக இருக்கும்.

எனவே அரசு மருத்துவமனையின் அவல நிலையை நேரிடையாகக் கண்டறிய புளிச்ச மாவு வியாபாரியிடம் வாண்ட்டடா அடி வாங்கி மருத்துவமனையில் தஞ்சமடைந்திருக்கும் உண்மை நம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!

***

சுபேஷ்:

புளிச்சமாவு = மாவு+ஈஸ்ட் = மாவோயிஸ்ட்
ஜெயமோகனை அடிச்சது மளிகைக்கடைக்காரன் இல்லையாம்.. மாவோயிஸ்ட்டாம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிருக்கான்.. #Prayforjeyamohan

***

கவாத்து:

ஒரு எழுத்தாளனோட மனைவி அழக்கூடாது.. என்ன நடந்துச்சுனு மட்டும் கேளு..
மாவு வாங்க போனேனா.. அவன் புளிச்ச மாவு கொடுத்துட்டான்.. அதான் இந்த களபரம்.

***

ரவிக்குமார்:‌

அணு உலைக்கு எதிரா போராட்டம் பண்ணி உதை வாங்கி இருந்தா யாராவது கிண்டல் பண்ணீருப்பாங்களா… புளிச்ச மாவு விக்கிறவன் கிட்ட போய் தர்ம அடி வாங்கிட்டு வந்ததால் தான் கிண்டல் பண்றோம்..

***

மது:

டி.எல்-ல சிலர் புளிச்ச மாவு சண்டைக்கு கண்டன கூட்டம் நடத்தணும்-ங்கிற ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்காங்க.. நடந்தது கருத்தியல் சண்டை இல்ல.. கடைக்காரருக்கும் கஸ்டமருக்குமான சண்டை.. கெளரி லங்கேஷ்-க்கு போட்ட ட்விட்ட ஜெமோ-க்காக தூசி தட்டுறது கொஞ்சம் மிகையா இருக்கு..

***

கோபிநாத்:

தோசைக்கு புளிச்ச மாவென்றால்…
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!

***

கல்யாண் குமார்:

ஒருநாள் புளிச்ச மாவை உன்னால் சகிக்க முடியவில்லையே! 2000 வருசமா நீங்கள் அரைக்கும் இந்துமதம் எனும் மாவு எவ்வளவு புளித்திருக்கும்!

***

My name is not that important:

ஜெ : என்னவே 2 நாள் புளிச்ச மாவைப் போய் குடுத்துட்டீரே..

அண்ணாச்சி : நீர் மட்டும் 2000 வருஷ புளிச்சி வெண்முரச குடுக்குதீரு.. நான் 2 நாள் புளிச்ச மாவு குடுத்தா உமக்கு வலிக்குதோ..

***

விஜய்:

பேசாம பொன்னார்க்கு பதிலா ஜெமோவை அங்க நிறுத்தியிருந்தா எழுத்தாளர்ன்னு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்கலாம். இப்படி மாவு வாங்க போயிருக்க தேவையில்ல. #PrayforJemo

***

முகநூல் பதிவுகள்…

மனுஷ்ய புத்திரன் :

துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்
மகா கலைஞன் ஒருவனை
விதி மாவுக்கடை ஒன்றை நோக்கி
அழைத்துச் சென்றது

மகா கவிஞன் ஒருவனுக்கு
மதமேறிய கோயில் யானை ஒன்றால்
துயரம் காத்திருந்ததுபோல
மகா கலைஞனுக்கு
ஒரு குடிவெறியேறிய
மாவுக்கடைக்காரன் வடிவில்
துயரம் காத்திருந்தது

இப்படித்தான் தோழர்களே
வரலாற்றில் மகத்தான சம்பவங்கள்
முதல் முறை அவலத்திலும்
இரண்டாம் முறை கேலிக்கூத்திலும் முடிகின்றன

ஒரு புளித்த மாவு பாக்கெட்டிற்குள்
காப்பியங்களை கறைப்படுத்தும்
சாத்தானின் கைகள் ஒளிந்திருப்பதை அறியாமல்
மகா கலைஞன்
மாவுப்பாக்கெட்டுடன் வீடு திரும்பினான்

புளித்த மாவிலிருந்த
உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள்
கண் விழித்து எழுந்ததை
தன் கூர்மையான படைப்புக் கண்களால் கண்டுகொண்ட மகாகலைஞன்
திடுக்கிட்டு மாவுபாக்கெட்டோடு
கடை நோக்கி விரைந்தான்
நீதி கேட்டு ஒரு நகரை எரித்த நிலம் இது
அறத்திற்காக பெற்ற மகனை
தேர்க்காலிட்ட நாடு இது
ஒரு புளித்த மாவுக்கான நீதி
பொங்கும் நேரம் வந்துவிட்டதை
யாருமே கவனிக்கவில்லை

ஏற்கனவே புளித்த வாழ்க்கையில்
புளித்த சாராய போதையில்
புளித்த மாவுவிற்ற கடைக்காரனால்
ஒரு மகா கலைஞனின் மொழியை
புரிந்துகொள்ள முடியவில்லை

பட்டத்து யானையின் காதில் புகுந்த
எறும்பைபோல
மகா கலைஞனின் தலைக்குள் புகுந்துவிட்ட
புளித்த மாவின் பாக்டீரியா
காவியச்சுவை குன்றிய
மானுட நடத்தை நோக்கி
மகா கலைஞனை நடத்தியது
அவன் அறம் கூறி வீசி எறிந்த
புளித்த மாவு பாக்கெட்
தரையில்பட்டு சிதறியபோது
பிரளயம் தொடங்கியது

மாவிலிருந்த
பல்லாயிரம் பாக்டீரியாக்கள்
பரவத் தொடங்கின
முதலில் கடைத்தெருவில்
பரவிய பாக்டீரியா
பிறகு அடுத்த தெருவுக்கு பரவியது
பிறகு பக்கத்து ஊருக்கு பரவி
சிற்றூர்களெங்கும் பரவியது
சிற்றூர் தாண்டி
பெரு நகரத்தையும் ஆக்ரமித்த
புளித்த மாவின் பாக்டீரியா
கடல்தாண்டி புலம் தாண்டி
நாடு கடந்து பரவத் தொடங்கியது

ஒரு பாக்டீரியா
மகாகலைஞனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா மாவுக்கடைக்காரனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா புளித்த மாவின் அரசியல் பேசியது
வேறொரு பாக்டீரியா சமூக நீதி பேசியது
சில பாக்டீரியாகள் அறம் பேசின
சில பாக்டீரியாக்கள் மறம் பேசின
சில பாக்டீரியாக்கள் புறம் பேசின
மகா கலைஞனின் தத்துவார்த்த விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் தத்துவமும் புளித்துபோனவை என்றன
மகா கலைஞனின் இலக்கிய விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் சொற்களும்
புளித்தவையே என்றன
மகா கலைஞனின் ஆதரவு பாக்டீரியாக்கள்
மகாகலைஞனின் எதிர்ப்பு பாக்டீரியாக்களை
கடித்துத் துப்ப முயன்றன
நடு நிலை பாக்டீரியாக்கள்
எந்தப்பக்கம் போவது என்றும் தெரியாமல்
குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன

புளித்த மாவிலிருந்து கிளம்பிய பாக்டீரியாக்கள்
டினோனஸர்களாக மாறி
ஊரைச்சூறையாடக்கண்ட மகா கலைஞன்
மனமுடைந்துபோனான்
ராப்பபகலாய் பாக்டீரியாக்களின்
உறுமல்களில் அவனால் தூங்க முடியவில்லை

அரசு மருத்துவமனையின்
பச்சை நிறப்படுக்கையொன்றில்
பாதுகாப்பாக ஒளிந்துகொண்டபோதுதான்
புளித்த மாவின் பாக்டீரியாக்களைவிட
மருத்துவமனையின் நிஜ பாக்டீரியாக்கள்
எவ்வளவு பயங்கரமானவை
என்பதை உணரத் தொடங்கினான்

ஒரு புனிதக் கலைஞனின்மீது
ஒரு புனித எழுத்தின்மீது
ஒரு பாக்கெட் புளித்தமாவு கொட்டினால்
எல்லாமே எவ்வளவு புளிப்பாகிவிடும் என்பதை
வரலாறு பதிவு செய்துகொண்டது

மாவீரன் நெப்போலியனை
வைரஸ் காய்ச்சல் ஒன்று வென்றதைப்போல
மகா கலைஞனின் உன்னதங்களை
புளித்த மாவின் பாக்டீரியா ஒன்று
வேட்டையாடிக்கொண்டிக்கிறது

பார்வதிபுரம் காவலர்
புலனாய்கின்றார்
17.6.2019
பிற்பகல் 3.30.
மனுஷ்ய புத்திரன்

***

படிக்க:
♦ நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!
♦ அறம் தின்ற ஜெயமோகன் !

***

இரா. முருகவேள் :

ஜெயமோகன் மீது முகநூலில் வெளிப்பட்ட வெறுப்பின் தீவிரம் அவரது ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது போலிருக்கிறது. எனவே மளிகைக் கடையில் ஜெயமோகன் தவறிழைக்கவில்லை. அப்படியே சிறுதவறு செய்திருந்தாலும் எழுத்தாளர் என்றவிதத்தில் மன்னிக்கக் கூடியதே என்று வாதிடுகிறார்கள்.

JAYAMOHANபுளித்த மாவு ஒரு உடனடிக் காரணம் மட்டுமே. ஜெயமோகன் அவரது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ் அரசியலுக்காகவே விமர்சிக்கப்படுகிறார். அவர் தன்னைக் காந்தியவாதியாகக் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவரது பாசிச அரசு ஆதரவு நிலைபாடுகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

மக்கள் கலைஞர்களின் தவறுகளை மன்னிக்கக் கூடியவர்கள்தான். சௌபா தன் மகனைக் கொன்ற போதும், தனது முடிவைச் சந்தித்த போதும் முகநூலில் ஒரு துயரார்ந்த மனநிலையே நிலவியது.

ஜெயமோகன் எள்ளி நகையாடப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அவர்தான். புளிப்பு விவகாரமாக அதைச் சுருக்க முயன்றால் மேலும் மேலும் அது ஜெயமோகனுக்கே எதிராகத்தான் முடியும்.

இப்போதே மளிகைக்கடைக்காரரின் பிழைப்பில் மண் போட்டார், ஏழை நோயாளியின் படுக்கையை ஆகிரமித்தார், எம்பியைப் பயன்படுத்தினார். உணவுப் பொருள் கெட்டுப் போனதென்றால் அதற்கு உரிய இடத்தில் புகார் அளிக்காமல் (பாலபாரதி பதிவைப் பார்க்கவும்) குறுக்கு வழியில் போலீசை நாடியது தவறு என்றெல்லாம் வரத் தொடங்கிவிட்டது.

ஜெயமோகனுக்கு இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தை தமிழ் அறிவுலகம் ஒருபோதும் அவருக்குக் கொடுத்ததில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.

***

யமுனா ராஜேந்திரன் :

ஜெயமோகன் அடிப்படையில் மனம் நிறைய வன்முறையையும் வன்மத்தையும் கொண்டு திரியும் ஒரு நபர். ஒரு பெண்ணின் மீது ஒரு பொருளை வீசுவது என்பது உச்சபட்ச வன்முறை.

இது ஒரு சாதாரணமான கஸ்டமர் கம்ப்ளெய்ன்ட் பிரச்சினை. அந்த நிலையில் எந்தக் கணவன் இருந்தாலும் மனைவிக்கு ஆதரவாக இதைத்தான் செய்வான்.

குடிப்பவனெல்லாம் கெட்டமனிதனா? ஜெயமோகன் மருத்துவமனை சென்றது நாடகீயமான ஒரு பில்ட்அப். ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட ஒருவருக்காக காவல்துறையை இன்புளுவன்ஸ்ஸ் செய்தது அதிகார துஷ்பிரயோகம்.

இது அரசியல் தலையீடு இல்லையா? ஒரு சிவில் தகராறுக்கு இலக்கியச் சாயமும் கருத்துரிமைச் சாயமும் பூசுவது பச்சை அயோக்கியத்தனம் …

***

கோ. சுகுமாறன் :

ஜெயமோகனையும் கைது செய்ய வேண்டும்!

ஜெயமோகன் கொடுத்த புகாரில் மளிகைக் கடைக்காரர் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவுப் பாக்கெட்டை முகத்தில் வீசி, சாதியை குறிப்பிட்டு பேசியதாக மளிகைக் கடைக்காரர் மனைவி கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயமோகனையும் கைது செய்ய வேண்டும்.

***

தயாளன் :

எழுத்தாளன், கவிஞன், புலவன், அறிஞன் எனப்படுவோர் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போலவும், மாவுக்கடைக்காரர்கள் ஏதோ வேண்டாததற்கு பிறந்து விட்டது போலவும் சலம்பித் தள்ளுகிறார்கள். எழுத்தாளனுக்கு எழுத்து ஒரு தொழில். அவ்வளவுதான்.

மாவுக்கடைக்காரருக்கு மாவு அரைப்பது ஒரு தொழில். அந்த வெட்டி எழுத்தாள”ன்” ஒரு பெட்டி கேஸுல உள்ளே போயிறக்கூடாதுங்கிற அவசரத்துல முந்திக்கிட்டு புகார் எழுதிக் கொடுத்துட்டு ஆஸ்பத்திரில படுத்திருக்கார். இதுவே ஒரு ரொம்ப சீப்பான அல்பத்தனம். அவ்வளவு வன்மமா அவருக்கு.

மாவு பாக்கெட்டை வீசியெறிஞ்சுட்டு பெரிய “சர்க்கார் தனம்” பண்ணியிருக்கார். ஒரு சாதாரண பெட்டிக் கேசுக்கு எம்பி வரைக்கும் சிபாரிசு. ஜெயமோகன் ஒன்றும் எழுத்தாள தேவதூதன் அல்ல. பி.எஸ்.என்.எல்.-லிலும் வேலை பார்த்துக் கொண்டு, பகுதி நேரமாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் அறமற்ற வணிக எழுத்தாளன். புத்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் தனி.

இதுல கருத்துரிமைக்கு ஆதரவா ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு. மாவுக்கடைக்காரரின் வாழ்வுரிமை பத்தி நாம பேச வேண்டாமா? மாவுக்கடைக்காரரின் மனைவியிடம் மன்னிப்பு கேள்! ஜெயமோகன் செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். எழுத்தாள அராஜகவாத குண்டர்களிடமிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

***

ஷோபா சக்தி :

ஜெயமோகன், விஷ்ணுபுரத்தோரை ஊருலகம் தெரியாத அப்புராணிகளாக வளர்த்துவருவது உள்ளபடியே வருந்தத்தக்கது. நேற்றுப் பாருங்க இந்த வெண்பாவும் அனோஜனும்; டாஸ்மாக் கலாசாரம்தான் கூடாதது, பைவ் ஸ்டார் குடி கலாசாரம் பரவாயில்லை என்பதுபோல பேசியிருக்கிறார்கள்.

அடிதடி, கொலை, கொள்ளை, பவுடர், ரேப், இனவாதம் மதவாதம் எல்லாமே இந்த பைவ் ஸ்டார் பப்புகளில் நிறைந்திருக்கும்.

சென்னையின் தலையாய பப்பான பார்க் ஓட்டல் பப்பில் ஒருமுறை நானும் சாருவும் இருந்தபோது கவிஞர் தய். கந்தசாமியை போனில் அழைத்து, பப்புக்கு வருமாறு கேட்டோம். அப்போதெல்லாம் கந்தசாமி பார்ப்பதற்கு சாட்சாத் அய்யனார் போலவேயிருப்பார். உள்ளே விட மறுத்துவிட்டார்கள். சண்டைபோட்டு உள்ளே அழைத்துவந்தோம். பின்பும் தகராறாகி வெளியேறினோம். இதைச் சாரு அப்போது பத்தி பத்தியாக எழுதியிருந்தார்.

அதைவிடுங்க.. இப்போது 3 மாதங்களிற்கு முன்பு அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரின் ஒரு பப்பிற்குள் என்னை நுழையவிடவில்லை. என்னுடன் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை எனச் சப்பைக் காரணம் சொன்னார்கள். ஆனால் உண்மையான காரணம் என் நிறம். கூடயிருந்த சாட்சி Kishoker Stanislas . இதெல்லாம் அவுஸ்ரேலியாவில் ‘வழமையானது’ என நண்பர்கள் சொன்னார்கள்.

டாஸ்மாக் கலாசாரம் அடித்தள மக்கள் கலாசாரம். அங்கே சக மனிதர் மீதான அக்கறையையும் பரிவையும் சமாதானத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விதத்தை அனுபவித்தவருக்கே அதன் அருமை தெரியும். டாஸ்மாக் கலாசாரம் எவ்வாறு மானுடம் தழுவியது என்பதை அண்மையில்தானே நம் கவி பிரான்ஸிஸ் கிருபா நிரூபித்தார்.

சில மாதங்களிற்கு முன்பு ஜெயமோகன் ஒரு கட்டுரையில் இந்திய விமானநிலையங்களின் கழிவறைகளில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இனாம் கேட்டு நச்சரிப்பதாகவும் அது நாட்டிற்கே அவமானம் எனவும் எழுதியிருந்தார்.

இந்திய விமான நிலையங்களில் உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து எல்லா நிலைகளிலுமே இனாம் கேட்பார்கள். சிலபேர் கொண்டுபோகும் விஸ்கிப் போத்தலைக் கூடக் கேட்பார்கள். போர்டிங் போடும்போது கவுண்டரில் இருக்கும் நுனிநாக்கு ஆங்கில யுவன்களும் யுவதிகளும் முதல் வகுப்பு இருக்கை தருகிறோம் 200 ஈரோக்கள் தருகிறீர்களா? என இரகசியமாக வழிவார்கள். இந்திய விமான நிலையங்களில் லஞ்சம் எப்படி விளையாடும் என்பதை ஈழத் தமிழரைவிட நன்கறிந்தோர் வேறு எவர்!

எளிய – அடித்தட்டு மக்கள் மீதான ஜெயமோகனின் பார்வை முன்முடிவுகள் கொண்ட சராசரி இந்திய தத்துவ ஞானப் பார்வை என நினைக்கிறேன். தெருவில் நவ்வாப் பழம் விற்கும் சிறு வியாபாரியைக் கண்டித்தும் கார்ப்பரேட் அங்காடிகளைச் சிலாகித்தும் ஜெயமோகன் எழுதியதும் ஞாபகம் வருகிறது.

ஆசிரியரை எதுவரை தொடரலாம் என்பதற்கும் எல்லைகளுள்ளன. இறைச்சியைச் சாப்பிட்டால் எலும்பைக் கோர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பது ஈழத்து வழக்கு.

படிக்க:
♦ ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு
♦ சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

***

அ. மார்க்ஸ் :

ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன். நாகர்கோவில் நண்பர்கள் உதவினார்கள். ஒரு சாதாரண பிரச்சினையை அவர் இத்தனை சிக்கலாக்கியிருக்க வேண்டியதில்லை.

உள்ளூர் நண்பர்கள், இது போன்று மாவு பாக்கெட்கள் விற்கும் சிறு கடைக்காரர்கள் ஆகியோரிடமும் பேசியபோது ஜெயமோகன் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அன்றாடம் எத்தனையோ அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு போகிறோம். உடைந்து கிடக்கும் சாலைகள், ஏமாற்றும் கான்டிராக்டர்கள் இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் கடந்து போய் விடுகிறோம். இப்படியான பிரச்சினைகளை இந்த ‘லெவலு’க்குக் கொண்டு சென்றிருப்பது ஒரு அப்பட்டமான “மிடில் கிளாஸ் மென்டாலிடி” என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் ஜெயமோகன் 2008 -ல் எழுதிய பதிவொன்றை அனுப்பி இருந்தார். ஒரு முறை ஜெயமோகன் ATM கதவு ஒன்றைச் சரியாகத் திறக்கத் தெரியாமல் அதை உடைத்துத் திறந்து வெளிவந்தன் கதையை அவரே எழுதியது அது.

அதைப் படிக்கும்போது ஒன்று விளங்குகிறது. தான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் ஏகப்பட்ட சிந்தனைகளைச் சுமந்து எப்போதும் தாஸ்தாவெஸ்கி, காம்யூ போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும்போது இபடித்தான் பொறுமை இல்லாமல் நடந்து கொள்ள முடியும் என அவர் தன்னை நியாயப்படுத்துகிறார். மூர்க்கமாக நடந்து கொண்ட அச் சம்பவத்தையும் தனது மேதமையின் அடையாளமாகச் சித்திரிக்கும் அம் முயற்சி உண்மையில் நேற்று வாசிக்கும்போது எனக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது.

ATM கதவை உடைப்பது பெரிய குற்றம். அது வழக்காகி இருந்தால் சிக்கல். எனினும் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் அந்த வங்கி அதிகாரிகள் மிக்க பொறுமையுடன் அந்த நிகழ்வைக் கையாண்டுள்ளனர், அவர்களே அதை ‘ரிப்பேர்’ செய்து உரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கு ஏதும் இல்லாமல் செய்துள்ளனர். அவர்களின் அந்தப் பொறுமைக்கு ஒரு நன்றி தெரிவிக்கும் பண்பு கூட அப்பதிவில் ஜெயமோகனிடம் காணவில்லை.

இப்படியான ஒரு புளித்த மாவுப் பிரச்சினையில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன். மாவு புளித்திருக்கு என மனைவி சொல்லி இருந்தால், “சரி அதைத் தூக்கி எறி. வீட்டில் கோதுமைக் குருணை இருந்தால் கொஞ்சம் கஞ்சி போடு. சாப்பிட்டுவிட்டுப் படுப்போம். உடம்புக்கும் நல்லது” என்று அது இப்படியான சம்பவமாக ஆக்கப்படாமல் கழிந்திருக்கும்.

இரண்டு விடயங்கள் முடிக்கு முன்:

1. அந்த கடைக்காரர் செல்வம் என்பவர் குறித்தும் நாகர்கோவில் நண்பர்கள் ரொம்பவும் நல்ல அபிப்பிராயத்தையே சொல்கின்றனர்.

2. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஜெயமோகனுக்கு ஒன்றும் இல்லை. வழக்கை மெய்ப்பிப்பதற்காகவும், வலுவாவதற்காகவும் வழக்கமாக எல்லோரும் செய்யும் தந்திரம்தான் இது என்பதை பாரதி மணி போன்ற பெரியவர்களும் கூடப் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவர் ஒருவர் இப்படி வழக்குக்காக அரசு மருத்துவமனையில் வந்து வேண்டுமென்றே படுத்துக் கொள்வது எப்படி ஒரு உண்மையான நோயாளிக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியைப் பாதிக்கிறது என அவர் உளமார்ந்த வருத்ததுடன் எழுதியிருந்தது நெஞ்சைத் தொடுகிறது..

இந்தப் பின்னணியில் நான் ஜெயமோகனிடம் முன்வைக்கும் அன்பான வேண்டுகோள் இதுதான். ஜெயமோகன் கடைக்காரர் செல்வத்தின் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும்.

நாகர்கோவில் எழுத்தாள நண்பர்களான லட்சுமி மணிவண்ணன் முதலானோர் இதற்கு உதவ வேண்டும்..

ஜேயமோகனிடமிருந்து வேறு பல நியாயமான காரணங்களுக்காக கருத்து வேறுபடுபவர்கள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அவரை வசைபாடுவதைநிறுத்திக் கொள்வோம்.

***

அதிஷா வினோத் :

வசனம் எழுதும் படங்களுக்கு பலகோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவர் நினைத்தால் தனியாக மாவு ஃபேக்டரியே தொடங்க முடியும். இருந்தும், இன்னமும் தன் மாவை தானே போய் கடையில் வாங்குகிறார் என்றால் அவருடைய எளிமை இதிலிருந்தே விளங்குகிறது… இன்றைய காந்தி அவர்.

பாருங்கள் எவ்வளவு அடிபட்டாலும் கோடிகோடியாக சொத்துபத்து இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பார்க்கிறார். இதே காரியத்தை அஜித்குமார் பண்ணியிருந்தால் அவருடைய ரசிகர்கள் தலடா கொலடா எளிமைடா வலிமைடா… தல போல வருமா என கொண்டாடியிருப்பார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர் என்பதால் அவரை கிண்டல் பண்ணுகிறார்கள்.

இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.

– நடுநிலை அறம் குமார்!

***

அறிவு செல்வம் :

பெரியார் தாக்கப்பட்டிருக்கிறார். கலைஞர் தாக்கப்பட்டிருக்கிறார். அவர்களெல்லாம் கொள்கைக்காக தாக்கப்பட்டார்கள்.

புளிச்ச மாவுக்காக அல்ல..


தொகுப்பு : அனிதா

ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

0

‘இந்து ராஷ்டிரம்’ அல்லது ‘இந்து தேசம்’ என்கிற உட்கருத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? இது நிதர்சனமா அல்லது ஒரு செயல்திட்டமா? பல காலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரம் குறித்து சங்க பரிவாரங்களைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சில சமயம் பேசுவதில்லை. மாறாக, அவர்கள் இந்தியாவை ‘மாற்ற’ வேண்டும் எனப் பேசுகிறார்கள். இது இந்து ராஷ்டிரம் என்பது ஒரு செயல்திட்டம் என்பதையும் அது இன்னும் முடிக்கப்படவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று, இந்துத்துவத்தின் பிடி ஒரு புதிய நிலையை அடைந்திருக்கிறது. அதன் மேலாதிக்கம் அனைத்து நிலப்பரப்புகளுக்கும் விரிவடைந்திருக்கிறது. மேலும், சமூகத்தின் ஆழம் வரை சென்றுள்ளது. அதனுடைய ஏவலாளிகளின் கூற்றுப்படி அது மேலும் விரிவுப்படுத்தப்படும், ஆழப்படுத்தப்படும்.

ஆனால், அதன் இறுதி நோக்கம் என்ன? இந்த செயல்திட்டம் எப்போது நிறைவை எட்டும்? பெயரளவிலோ அல்லது வெளிப்படையாகவோ ஒரு இந்து அரசு நிறுவப்படும்வரை, முறையான இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முடியாது என்பதே உண்மை.

தன்னுடைய நீண்டகால வரலாற்றில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், இந்து ராஷ்டிர கட்டுமானம், அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் அரசின் முறைகேட்டுக்குரிய செல்வாக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் தள்ளி நின்றது.

70-களின் மத்திய பகுதிகளில் இது மாற்றத்துக்குள்ளானது. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது, நிரந்தரமான இந்து ராஷ்டிரத்தை உருவாக்கவும் நிறுவனமயமாக்கவும் ஒரு முக்கியமான கருவியாக பார்க்கப்பட்டது.

அதன் விளைவாக, காலப்போக்கில் இரண்டு மாற்றங்கள் ஒரே நேரத்தில் கொண்டுவரப்பட்டன. முதலாவது, பாரதிய ஜனதா கட்சியுடனான சமநிலையான உறவைப் பேணுதல், ஆர்.எஸ்.எஸ். மற்றும் மற்ற சங் பரிவார அமைப்புகள் பாஜகவை நோக்கி மாறுதல்.

இரண்டாவது, பாஜகவின் உள்ளே அதிக அதிகாரத்தை மையத்தை நோக்கிய நகர்வும், பிரதமராக நரேந்திர மோடிக்கு அதிகாரத்தையும் அவரைச் சுற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உண்டாக்கப்பட்டது. ஆனால், சங்க பரிவார படையும் அதன் செயல்பாட்டாளர்களும் பாஜகவுக்கு தேர்தல் பணி செய்யும் இயந்திரங்களாக தேவைப்பட்டனர். மேலும், பரந்துபட்ட சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும் அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.

படிக்க:
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மற்றுமுள்ள முக்கிய சங்க பரிவாரங்களிடமிருந்து இப்போதும் பிறகும்கூட தப்பமுடியாது. இதன் பொருள் என்னவென்றால், சங்க பரிவாரங்கள் ஒருபோதும் ஒரு நபரை நம்பி இல்லை என்பதே.

பாஜக மற்றும் சங்க பரிவாரங்களின் வலதுசாரி பாசிஸ்டு (சிலர் நேரடியாகவே பாசிஸ்டு) குணங்களை முதலில் முதன்மைப்படுத்தியது இடதுசாரி அறிவுஜீவிகளே என்றாலும், அவர்கள் சொன்னது போல அது ஒரு பாசிஸ்டு அரசாக இருக்காது என்பதை அறிவார்கள்.

தாராளவாதிகள் பாஜக என்பது எதிர்பாராதவிதமாக மதவாத போக்குள்ள ஒரு வலதுசாரி சக்தி என பேசுகிறார்கள். ஆனால், மையத்தில் அதிகாரத்தின் பொறுப்பில் அமரும்போது, இந்த அம்சத்தை மிதப்படுத்த அந்த அதிகாரம் உதவும் எனவும் நம்புகிறார்கள். ஆனால், ஜனநாயத்தின் அனைத்து அடிப்படை முக்கியத்துவங்களையும் நீக்கும் ஒரு தலைவர் தலைமையிலான ஒரு கட்சி சர்வாதிகாரம் இருக்கப்போவதில்லை எனில், மேலும் மிக முக்கியமான சட்டப்பூர்வமாக்குதல் நோக்கங்களுக்காக, அனைத்து வழிகளிலும் தேர்தல் முறையானது துல்லியானது என நம்பப்பட்ட நிலையில், அது அதிகாரத்தை உண்மையில் தக்கவைத்துக்கொண்டுள்ளது, எனில் அதன் இறுதி நோக்கம்தான் என்ன?

பல்வேறு வகையான சிவில் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமும், நடைமுறையில் இருக்கும் அடக்குமுறை சட்டங்களை தீவிரமாக்குவதன் மூலமும், பொது ஊடகங்களை மறைமுகமாகவும் சூழ்ச்சியுடனும் கையாளுவதும், விருப்பமான நியமனங்களைச் செய்து புலனாய்வு அமைப்புகள், ஆட்சிப் பணிகள், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை துணையாக்கிக் கொள்ள முயல்வது போன்றவற்றின் மூலம் இந்திய ஜனநாயகத்தை அதன் உள்ளிருந்து வரும் காலங்களில் மேலும் ஒன்றுமில்லாமல் ஆக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதற்கு இது போதுமானதாக இல்லை. மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்ததோ அதன் தொடர்ச்சியாகவே இதுவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

நிலைத்த ‘இந்து ராஷ்டிர’த்தை உருவாக்க முன்னேறும்போது, முசுலீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கும் சில தனிநபர்கள் மற்றும் இந்துக்களுக்கு மற்ற சமூகத்தினருக்குக் கிடைக்காத கூட்டு உரிமைகளை வழங்கவும் அரசியலமைப்பின் கீழ் சில புதிய சட்டங்களை உருவாக்கும் முயற்சி நடக்கும்.

பாஜகவும் சங் பரிவாரங்களும் நீண்ட நாட்களாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர காத்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான தனிபெரும்பான்மையை அடையும் முயற்சிகளும் இருக்கும். 370 பிரிவை நீக்குவது மட்டுமே நோக்கமாக இருக்காது. ஆனால், நேபாளம் முன்பு மதசார்ப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்து மதத்துக்கு தனி அந்தஸ்து வழங்கும் வகையில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டப்பட்டது போல, இங்கே முயற்சிக்கப்படலாம். அதாவது, ‘சனாதன மத கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில்’ இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.

படிக்க:
♦ மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
♦ புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

கிறிஸ்டோபர் ஜஃப்ரிலாட் சொன்னதைப் போல, இஸ்ரேலின் இந்துத்துவ வடிவம் என்பதே அவர்களின் நீண்ட காலத் திட்டம். ஆனால், அவர்கள் பேராசிரியர் சம்மி ஸ்மூஹா உருவாக்கிய, அபாயகரமாக வழிநடத்தக்கூடிய “இன ஜனநாயகம்” என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு யூத அரசாக இஸ்ரேலின் இருப்புக்கு, அரபு பாலஸ்தீன மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த வார்த்தை மூலம் பொருள் தருகிறார்கள்.

ஆம் உண்மைதான் “இன ஜனநாயம்” என்பதன் பொருள் இஸ்ரேலில் ஜனநாயகமில்லாத தன்மையும் உள்ளது என பொருள். ஆனால், மேலோட்டமாக இது ஜனநாயகத்தைக் கடத்துகிறது. இந்தப் பார்வையை பல இஸ்ரேலிய ஆதரவு தாராளவாதிகள் ஆதரிக்கிறார்கள், மேலும் பல மேற்கத்திய நாடுகளும்கூட இதை ஆதரிப்பதன் மூலம் இஸ்ரேலின் ஜனநாயகம் அல்லாத, இனப்பாகுபாட்டிற்கான உறவுகளை ஒருங்கிணைக்க ஆர்வமாக உள்ளனர். இதே நேரத்தில் தெற்கு ஆப்பிரிக்காவின் இனக் கொள்கை (சாதி அடிப்படையில் மக்களை இங்கே பிரிப்பதைப் போல, நிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரிவினை), மேற்கத்திய ஜனநாயக சக்திகளால் உருவாக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. இதுதான் தெற்கு ஆப்பிரிக்காவில் ஜனநாயகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு இந்து ராஷ்டிரம் என்பது அடிப்படையில் ஜனநாயமற்ற அரசாகவும் சமூகமாகவும் இருக்கும். மேலும் மத பெரும்பான்மையினருக்கு பல ஜனநாயக அம்சங்களும் அதையும் கடந்தும்கூட சில அம்சங்கள் வழங்கப்படக்கூடும். ஆனால், உயர்சாதியினரின் இரக்கமற்ற வன்முறையை தன்னகத்தே கொண்ட சாதிய அமைப்பு இல்லாத இஸ்ரேலைப் போல, அது ஜனநாயகமாக இருக்காது.

தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது இடது வலது அல்லது மைய அரசு ஆனாலும் ஒரு யூத நாடு என்கிற இஸ்ரேலின் அடிப்படை பண்பை மாற்ற முடியாது. இந்துத்துவமும் அதுபோன்றதொரு அரசியல் நிதர்சனத்தை உருவாக்க முனைகிறது. அப்படி உருவாகிவிட்டால் எந்தக் கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்தாலும் அடிப்படை மாறாது.

இந்த தேவையின் அடிப்படையில் இரண்டு முக்கியமான ஒப்புமைகளைக் காணலாம். முதலாவது, இஸ்ரேலின் எந்தக் கட்சியும் எந்தவொரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியையும் முழுமையான சுதந்திரமான இறையாண்மையுள்ள பிரதேசமாக அதை அனுமதிக்காது. அந்தப் பகுதியின் முழு கட்டுப்பாட்டாளர்களாக அவர்கள் இருப்பார்கள். சர்வதேச சட்டங்களின்படி, ஜம்மு காஷ்மீரின் நிலைமை பாலஸ்தீனத்தின் நிலையைவிட முற்றிலும் வேறானது. ஆனால், இஸ்ரேலின் கொள்கையின்படி, இந்தியாவில் இருக்கும் எந்தக் கட்சியும் ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்தைத் தர முன்வராது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் வசிக்கும் மக்களுக்கு உள்ள மனித உரிமைகள் கூட காஷ்மீர்வாசிகளுக்குக் கிடைக்காது.

இஸ்ரேல் மற்றும் இந்திய அரசியல் வர்க்கத்துக்கு, “மக்களைக் காட்டிலும் நிலமே மிக முக்கியமானது”. ஆழ்ந்து அந்நியப்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறையின் மூலம் அவர்கள் ஆட்சி செய்வார்கள். இஸ்ரேல் தன்னாட்சி என்பது சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும், தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டங்கள் முன் கேள்விக்குள்ளாக்கப்படும்போது இஸ்ரேல் தனது நிலையிலிருந்து பின்வாங்கிக் கொள்ளும். அதுபோல, ஜம்மு காஷ்மீர் கையகப்படுத்தலின்போது அளிக்கப்பட்ட அரசியலைப்பின் 35 ஏ மற்றும் 370 பிரிவுகளை பாஜக நீக்கும்.

1948-ம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட தன்னாட்சி வாக்குறுதியை முன்னர் மத்தியில் ஆண்ட கட்சிகள் கிடப்பில் போட்ட நிலையில், பாஜக தன்னாட்சி என்பதை சட்டத்தின் மூலமாகவே அகற்ற விரும்புகிறது.

இரண்டாவது, இஸ்ரேல் தனது குடிமக்கள் சட்டத்தில் உலகில் உள்ள யூதர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என சொல்கிறது. அதுபோல, பாஜக தனது குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவில் எப்போது வேண்டுமானாலும் திரும்ப, முசுலீம் அல்லாத பாகிஸ்தானியரை, வங்காள தேசத்தவரை, ஆப்கனை சேர்ந்தவரையும் இந்து மதப் பிரிவுகளைச் சேர்ந்த தெற்காசிய ஆசியாவைக் கடந்த மக்களையும்கூட அழைக்க நினைக்கிறது.

நிச்சயமாக, இவர்களின் இந்த மோசமான மற்றும் ஜனநாயக விரோத திட்டங்களுக்கிடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது.

தற்போதுள்ள இஸ்லாமாபோபியா மீது அமர்ந்து பயணிக்க சியோனிஸம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால், அதன் அடிப்படையான எதிரி இசுலாம் அல்ல, பாலஸ்தீனியர்கள்தான் – அவர்கள் கடவுள் மறுப்பாளர்களா, முசுலீம்களா அல்லது கிறித்துவர்களா என்பதல்ல. எனவே, இது மிகவும் சகிப்புத் தன்மையுள்ள மத நிலை.

ஆனால், இந்துத்துவத்தின் அடிப்படையே முசுலீம்களுக்கு எதிரான நிலைப்பாடுதான். இந்து ராஷ்டிரம் என்பது சகிப்புத் தன்மையற்ற மத அரசு.

நாம் அதை இன்னும் நெருங்கவில்லை எனிலும், அதற்கான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கிவிட்டது.


கட்டுரையாளர் : Achin Vanaik
கலைமதி
நன்றி : தி வயர்

பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 12

டோக்ளியாட்டி

ர்டிட்டி தொண்டர் படையினரையும், அவர்களது காப்டன்களையும், அதிகாரிகளையும், உதவாக்கரைகளையும், தறுதலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழு என்ற முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற சில காலமாகவே இவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் பிறகு அது தங்களுடையதாகிவிடும் என்று இவர்கள் கருதிக் கொண்டிருந்தனர். குட்டி பூர்ஷுவாக்கள் அதிகாரத்துக்கு வரமுடியும், பாட்டாளி வர்க்கத்தையும் பூர்ஷுவாக்களையும் தங்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும், தங்கள் சொந்தத் திட்டங்களின்படி சமுதாயத்தை மறுசீரமைக்க முடியும் என்று இவர்கள் கற்பனையில் மூழ்கிப் போயிருந்தனர்.

பாசிசம் ஆட்சிபீடம் ஏறியதும் இந்தக் கனவுகள் எல்லாம் பொய்த்துப் போயின. பாசிசம் அதிகாரத்துக்கு வந்ததும் முதல் காரியமாக பூர்ஷுவாக்களுக்குச் சாதகமாக பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு நாம் நிலைமையை மிகைப்படுத்தக் கூடாது. உடனடியாக ஊதியங்கள் மீது எத்தகைய தாக்குதலும் தொடுக்கப்படவில்லை. இது ஏன்? ஏனென்றால் பூர்ஷுவாக்களால் ஏககாலத்தில் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியாது. அவர்களைப் பல பிரச்சினைகள் எதிர்ப்பட்டன. அரசு எந்திரத்தை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. குட்டி பூர்ஷுவாக்களின் அதிருப்தியைத் தணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் மேலும் மேலும் புதிய கோரிக்கைகளை முன்வைத்து வந்ததோடு அரசு எந்திரத்துக்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்திருந்தனர். இதோடு அடிபட்டுக் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. பூர்ஷுவாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அவர்கள் எளிதாக தங்கள் சக்திகளை ஒன்றுதிரட்டிப் போராட்டத்தில் குதிக்க முடியும்.

ஆர்டிட்டி கொலைகார படையினர்.

முதலில், வர்க்கப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், இந்த அம்சம் பிரதானமானதாக மாறி தங்கள் விவகாரங்களில் தலையிடாதிருக்கும்படிச் செய்யவும் பூர்ஷுவாக்கள் முயன்றனர். அச்சமயம் உருவாகி வந்த ஸ்திர நிலைமை சில பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பூர்ஷுவாக்கள் தீர்வுகாண துணை புரிந்தது. தொழில் துறையின் கைகளைக் கட்டிப்போட்டு வந்த யுத்த எந்திரம் அகற்றப்பட்டது. முந்திய காலகட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன; மூலதனத்துக்கு விரிந்து பரந்த சுதந்திரம் அளித்து, அதன் முன்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன.

வர்க்கப் பிரச்சினையை கூர்மையாக்காமல், ஊதியங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்காமல் பல்வேறு பிரச்சினைகளை பாசிசத்தால் எவ்வாறு சமாளிக்க முடிந்தது? பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சமயத்தில் ஸ்திர நிலைமை ஏற்பட ஆரம்பித்திருந்ததும், இத்தாலியப் பொருளாதார நிலைமை மேம்பாடுறத் தொடங்கியிருந்ததும்தான் இதற்குக் காரணம்.

எனினும் இது பாசிசத்துக்கு மிகவும் சோதனை மிக்க காலமாக இருந்தது – நெருக்கடி மிக்க காலம் என்று கூறுவதற்குக் காரணம் இருந்தது. இந்தக் காலத்தில்தான் பாசிசத்தின் திட்டத்துக்கும் பழைய திட்டத்தை ஆதரித்து வந்த குட்டி பூர்ஷுவா வெகுஜனப் பகுதியினரின் ஆர்வ விருப்பங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் பகிரங்கமாக வெளிப்படத் தொடங்கின. இந்த முரண்பாடுகள் முதல் ஆண்டில் எவ்விதம் பிரதிபலித்தன?

ஆர்டிட்டி கொலைகார படைக்கு ஆதரவான பிரச்சார சுவரொட்டி.

பாசிச முகாமுக்கு வெளியே கனன்று கொதித்துக் கொண்டிருந்த எதிர்ப்பு இயக்கங்களில் அவை பிரதிபலித்தன. பாசிச முகாமுக்குள்ளிருந்தவை உள்ளிட்ட குட்டி பூர்ஷுவா சக்திகளை இந்த இயக்கங்கள் கவர்ந்து ஈர்த்தன. இதனால் இந்த சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் பாசிசத்துக்கு ஏற்பட்டது. இச்சக்திகளை பாசிசம் சகித்துக் கொண்டிருந்திருக்குமானால் அதன் வெகுஜன அடித்தளம் பெரிதும் ஆட்டம் கண்டிருக்கும்.

எனவே, பாசிசம் முதலில் பாப்புலர் கட்சியைக் குறிவைத்தது. அதுதான் பாசிசத்தின் முதல் எதிரியாக இருந்தது. அதன்மீது தனது அடக்குமுறைக் கணைகளைத் தொடுத்தது. பாப்புலர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்நிலைகளை மேற்கொண்டனர். இதேபோன்று அமைச்சரவையிலிருந்த ஏனைய குழுக்களும் கட்சிகளும் போர்க்கொடி தூக்கின. குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா பகுதியினரிடையே இவற்றுக்கு வலுவான ஆதரவு இருந்தது. பாசிசம் எடுத்த பல கடுமையான நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் – பொருளாதாரக் குவியலின் ஆரம்பம், சிறு சொத்துடைமையாளர்களின் சீர்குலைவு. சிறு விவசாயிகள் மீது வரிச்சுமை போன்ற நடவடிக்கைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில் எங்கும் அதிருப்தி நிலவியது: பாசிஸ்டுக் கட்சிக்குள்ளேயே கூட அது ஊடுருவிச் சென்றது. அதிருப்தி, அரசு எந்திரத்தின்மீது ஆதிக்கம் செலுத்த இயலாமை ஆகிய இவ்விரண்டு அம்சங்களும் சேர்ந்து ஆரம்பம் முதலே அரசாங்கத்தைச் சரிவர நிர்வகிக்க முடியாத சூழ்நிலைமையை உருவாக்கின; ஆட்சி பீடத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கிழடு தட்டிப் போய், நாட்டுக்குப் பெரும் பாரமாக இருந்தவர்களையும் அகற்ற முடியவில்லை. இவை போன்ற இக்கட்டுகளிலிருந்துதான் மாட்டியோட்டி நெருக்கடி தோன்றியது.

மாட்டியோட்டி நெருக்கடி ஆரம்பமானபோது தொழிலாளி வர்க்கம் பிரதான சக்தியாகத் தோன்றவில்லை. பல நிகழ்ச்சிகள் இதனை மெய்ப்பித்தன; உதாரணமாக, தெற்கிலும், ரோமிலும், நேப்பள்சிலும், பிறகு டூரினிலும் மிகப் பெருமளவுக்கு கொதிப்பும் குமுறலும் கிளர்ச்சியும் நிலவின. சற்றுத் தாமதித்துத்தான் தொழிலாளி வர்க்கம் தன் சக்திகளை அணிதிரட்டி, தலையிட்டது. பிரதான அம்சமாகப் பரிணமித்தது. 1925-26-ம் ஆண்டுகளில்தான் நமது கட்சி சுறுசுறுப்படைந்து முன்னணிப் படையாகத் திகழ்ந்தது.

ஏனென்றால் எதார்த்த நிலைமையும், இத்தாலிய முதலாளித்துவத்தின் ஸ்திரத் தன்மையின் இயல்பும் இந்த ஆண்டுகளில்தான் முழு அளவுக்குத் திரை விலகி வெளிப்பட்டன. தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறையும் ஊதிய வெட்டுகளும் ஆரம்பமாயின. வேலையில்லாத் திண்டாட்டம் பூதாகரமாக தலைதூக்கியது. வாழ்க்கைச் செலவுகள் தாங்கொணா அளவுக்கு அதிகரித்தன. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில்தான் பொருளாதாரமும் உற்பத்தியும் ஒரு சிலரின் கையில் குவியும் இயக்க நிகழ்வு ஆரம்பமாயிற்று. பொருளாதாரத்தை இந்த வளர்ந்து வரும் குவியலால் ஆளும் பூர்ஷுவா வர்க்கங்கள் பெரிதும் ஊக்கமும் உத்வேகமும் பெற்று, தொழிலாளி வர்க்க அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன.

இத்தாலி பாப்புலர் கட்சியினர்.

மத்தியிலிருந்த பெரும் பூர்ஷுவாக்களின் ஊசலாடும் சக்திகளுக்கும் அடித்தளத்திலிருந்த குட்டி பூர்ஷுவா சக்திகளுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுதான் மாட்டியோட் நெருக்கடிக்கு மூலகாரணம் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். பாட்டாளி வர்க்கம் கடைசி நிமிடத்தில்தான் ஒரு தீர்மானகரமான சக்தியாக அரங்கில் தோன்றிற்று. இதே சமயம் பொருளாதார வர்க்க அம்சங்கள் போன்றவையும் தலையிட்டன. உதாரணமாக, ஸ்திர நிலைமை -விரிவடைவதற்கு மூலதனத்துக்குள்ள சுதந்திரம் – நிதி மூலதனத்தை வலுப்படுத்திற்று. உற்பத்தி ஒரு சிலர் கையில் குவிவதை ஊக்குவித்தது. இதன் காரணமாக பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகள் உச்சநிலைக்கு வந்தன.

1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின. நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகள் மேல்நிலையைப் பெற்றதும், அனைத்து எதிர்ப்பையும் அவை அடக்கி ஒடுக்கியதுமானது அரசியல் மட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. பூர்ஷுவாக்கள் மிகவும் பிற்போக்கான அடிப்படையில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கும் இது வகை செய்தது.

சர்வாதிபத்தியம் பிறந்தது. பாசிசம் சர்வாதிபத்தியமாகப் பிறக்கவில்லை; பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமான சக்திகள் அதிகப்பட்ச பொருளாதார ஒற்றுமையையும் அரசியல் ஒற்றுமையையும் எய்திய போதுதான் பாசிசம் சர்வாதிபத்தியமாக மாறிற்று.

பரினாஸ்ஸி (Roberto Farinacci)

சர்வாதிபத்தியம் என்பது பாசிஸ்டு சித்தாந்தத்திலிருந்து தோன்றாத மற்றொரு கருத்தோட்டமாகும். குடிமகனுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய பாசிசத்தின் ஆரம்பக்காலக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், அராஜகவாதப் பெரும்போக்கு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தனிநபர் விவகாரங்களில் அரசு தலையிடுவதற்குக் காட்டப்படும் எதிர்ப்பு இவ்வகையைச் சேர்ந்ததே ஆகும். உண்மையில் சர்வாதிபத்தியம் என்பது இடையிலேற்பட்ட மாற்றத்தையும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

பிரச்சினையின் இந்த அரசியல் அம்சங்களை மேலெழுந்த வாரியாகத்தான் குறிப்பிட முடியும். சர்வாதிபத்தியப் பிரச்சினை எவ்வாறு முன்வைக்கப்படுகிறது என்பதைப் பரிசீலிக்கும்போது முந்திய காலகட்டத்தில் எழுந்த பிரச்சினைகளையும் நாம் காண வேண்டும். பூர்ஷுவா வர்க்கம் தனது செயல்முறையை மாற்றிக் கொண்டது. அவ்வாறே பாசிசமும் தனது செயல் முறையை மாற்றிக் கொள்ள வேண்டியதேற்பட்டது. இந்த மாற்றம் விவாதங்களையும் போராட்டங்களையும் குறித்தது. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் இது பிரதிபலித்தது. கட்சிக்குள்ளும் பாசிசத் தொழிற்சங்கங்களுக்குள்ளும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. கட்சியில் இந்தப் போராட்டம் பாசிஸ்டுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் கட்சிக்கும் அரசுக்குமுள்ள உறவு குறித்த பிரச்சினையை மையமாகக் கொண்டிருந்தது.

அரசு நிறுவனங்களுக்கும் மேலான அதிகாரம் கட்சிக்கு இருக்க வேண்டும் என்று தீவிர நடுத்தர ஊழியர்கள் கொண்டிருந்த கண்ணோட்டமே பாசிஸ்டுக் கண்ணோட்டமாக அமைந்திருந்தது. கட்சிதான் உண்மையில் அதிகாரம் செலுத்த வேண்டும். இந்த நிலையைத்தான் பரினாஸ்ஸி12 மேற்கொண்டிருந்தார். மாகாண கட்சி செயலாளர் மாகாண தலைமை அதிகாரியைவிட மிகவும் அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தேசியவாதிகளான ஃபெதர்ஸோனியும் ரோக்கோவும்13 வேறுவிதமான கருத்துக் கொண்டிருந்தனர். அரசுக்குத்தான் முதல் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும், அதற்குப் பின்னர்தான் கட்சி வரவேண்டும். அரசுக்குக் கட்சி கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். முசோலினி இரு குதிரைகளில் சவாரி செய்யும் செப்பிடு வித்தையில் இறங்கினார். மாட்டியோட்டி காலத்தில் பரினாஸ்ஸியைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், சர்வாதிபத்தியப் பிரச்சினை தலைதூக்கியபோது ரோக்கோவுடன் சேர்ந்து கொண்டார். அரசுதான் எல்லாம், அதற்கு எதிராக எதுவும் கூடாது என்ற திட்டவட்டமான கோட்பாட்டை முன்வைத்தார்.

ஃபெதர்ஸோனி (Luigi Federzoni)

புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த நடைமுறை பூர்த்தியடைந்தது. பாசிஸ்டுக் கட்சியானது அரசின் வெறும் தேசிய பிரசார ஊதுகுழலாயிற்று. குட்டி பூர்ஷுவாக்களையும் மத்தியதர பூர்ஷுவாக்களையும் அரசிடம் விசுவாசம் கொள்ளச் செய்வதும், தொழிலாளர்களைப் பாசிசத்தின் பக்கம் ஈர்ப்பதுமே இந்தப் பிரசாரப் பணியின் குறிக்கோள்.

தொழிற்சங்கங்கள் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை. இந்தப் பிரச்சினை எவ்வாறு சமாளிக்கப்பட்டது? துரதிர்ஷ்டவசமாக இது பற்றி மிகச் சுருக்கமாகவே நம்மால் கூறமுடியும். தொழிற்சங்கப் பிரச்சினையில் நூற்றுக்கு நூறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

பாசிஸ்டுத் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள், ஆரம்பத்தில் அது மிக சொற்பமானதாகவே, அற்பமானதாகவே இருந்தது. இதற்கு முன்னர் பாசிசம் வெகுஜனப் பகுதியினரை ஒருங்கு திரட்டுவதற்குப் பதிலாக அவர்களைச் சிதறடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தது. 1920-ம் ஆண்டுக்கும் 1923-ம் ஆண்டுக்கும் இடையே பாசிசத் தொழிற்சங்கங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒருங்கு திரட்டினர். அதே சமயம் வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களிலிருந்து வெளியேறியவர்கள் லட்சக்கணக்கில் இருந்தனர். தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதே இந்தக் காலகட்டத்தில் பாசிசத்தின் திட்டமாக இருந்தது,

மாட்டியோட்டி காலம் வரை இந்தப் போக்கு நீடித்தது. தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்டப் பாசிசம் முயற்சித்தது. ஆனால் இதில் தோல்வியே கண்டது. ஆனால் சர்வாதிபத்திய பிரச்சினை எழுந்தபோது, அரசை சர்வாதிபத்திய ரீதியில் மறுசீரமைக்கும் பாதையை பாசிசம் மேற்கொண்டபோது, செயல்முறை மாற்றமடைந்தது. அப்போது பாசிசம் தனது சொந்தத் தொழிற்சங்கக் கட்டுக்கோப்புக்குள் தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களிலிருந்து அவர்களைப் பிரிப்பது மட்டும் அச்சமயம் அதன் பணியாக இருக்கவில்லை. மாறாக அவர்களைத் தானே அணி திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது? இது விஷயத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1926-ம் வருடச் சட்டம் இத்தீர்வுக்கு ஓர் அடிப்படையாக அமைந்தது. இச்சட்டம் தொழிற்சங்க ஏகபோகத்துக்கு வழி வகுத்தது. ஆலைப்பிரிவுக் கமிட்டிகள் போன்றவற்றைக் கலைத்துவிட்டது. இந்தத் தொழிற்சங்க ஏகபோகத்தின் அடிப்படையில்தான் வெகுஜனங்களைப் பாசிசத்தின் பக்கம் கவர்ந்து ஈர்க்கும் பணி ஆரம்பமாயிற்று.

மேலும் சில மாற்றங்கள் பின்னால் மேற்கொள்ளப்பட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள். 1926, 1927, 1928-ம் ஆண்டுகளின் சர்வாதிபத்தியமும் 1931-ம் ஆண்டுச் சர்வாதிபத்தியமும் ஒன்றல்ல. நாட்டின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் இத்தாலியின் பொருளாதாரத்தில் தோன்றிய நெருக்கடி காரணமாகவும் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

12. ராபர்ட்டோ பரினாஸ்ஸி (1892-1945) கிரிமோனாவின் பாசிஸ்டுத் தளபதி. வளைந்து கொடுக்காத கிராமப்புற அணியின் ஒரு தலைவர். மாட்டியோட்டி நெருக்கடியின் இறுதியில் பரினாஸ்ஸி முசோலினிக்கு பாதுகாப்பாக இருந்தார். டியூஸ் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள சாகசம் புரிந்தார். நன்றியுள்ள முசோலினி அவரை பி.என்.எப்க்கு செயலாளராக 1925 பிப்ரவரி 12-ல் நியமித்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குப்பின் பெரிய பூர்ஷுவாக்களோடு மோதியபோது பரினாஸ்ஸி ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இரண்டாவது உலக யுத்தத்தில் இத்தாலி நுழையும் காலம்வரை கட்சியில் ஒரு முக்கியத்துவமற்ற நபராக இருந்தார். 1945-ல் இத்தாலிய கொரில்லாக்கள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.

ஆல்பிரெட்டோ ரோக்கோ (alfredo rocco)

லியூகி ஃபெதர்ஸோனி (1875-1967) பாசிசத்திற்கு முந்திய இத்தாலிய தேசிய சங்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவர். பாசிஸ்டு-தேசிய சங்கம் இணைந்ததும் 1923-ல் பி.என்.எப்ல் சேர்ந்தார். முசோலினியின் முதல் அமைச்சரவையில் காலனிகளுக்கான அமைச்சராகப் பணியாற்றியபின், 1924-ல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருடைய இந்த அந்தஸ்தில்தான் அரசைவிட கட்சிக்கு முதல் இடம் என்ற பரினாஸ்ஸியின் கருத்தோடு மோதினார்.

13. ஆல்பிரெட்டோ ரோக்கோ (1875-1935) பி.என்.எப், 1923-ல் ஈர்த்துக் கொண்ட மற்றொரு தேசியவாதி. 1925 முதல் 1932 வரை நிதித்துறை அமைச்சராக இருந்தபோது அரசு, சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் எதேச்சாதிகாரத்தை ஏற்படுத்திய சட்டத்தைத் தயாரிக்கும் பணியை மேற்பார்வையிட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

கேள்வி : //வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க காரணம் என்ன? தீர்க்க என்ன வழி? கூறுங்களேன்.//

– ராஜா

ன்புள்ள ராஜா,

டந்த ஐந்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்திருக்கிறது. மோடி அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2017-18 ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் ஊடகங்கள் மூலம் சமீபத்தில் கசிந்தது. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத ‘சாதனை’களை முறியடிக்கும் வகையில், இந்த புள்ளிவிவரம் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த ஆய்வறிக்கையை தாங்கள் இருவரும் ஆராய்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது ஆறரைக் கோடி மக்கள். இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என்கிறது ஆய்வறிக்கை. ( விரிவாகப் படிக்க: 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை ! )

பி. சி. மோகனன் மற்றும் ஜே. மீனாட்சி

மோடி அரசின் மிக மோசமான சீரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் ஏராளமான ஆய்வுகள் வந்திருக்கின்றன. சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2000 – 2010-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2018 -ம் ஆண்டில் வேலையிழப்பு 6% அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்குப் பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது. ‘இந்தியாவின் பணி நிலைமை 2019’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவின் பணி மற்றும் தொழிலாளர் நிலைமை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், 20-24 வயது வரையான நகர்ப்புற ஆண் மற்றும் பெண்கள், ஊரக ஆண் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகவும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பணி இழப்புகளை ஏற்படுத்தியது பணமதிப்பு நீக்கம். ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ரியல் எஸ்டேட் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சந்தைகளில் தேவை குறைவு காரணமாக வண்டிகளில் நிரப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி குப்பைக்குச் சென்றன. விலை குறைந்ததோடு, விவசாயிகளையும் அது பாதித்தது.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் சிறு மற்றும் குறுந் தொழில்கள் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 2018-ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறுகிறது. 2017-ம் ஆண்டு கடன் நிலுவை ரூ. 8,249 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ரூ. 16,118 கோடியாக உயர்ந்துள்ளது.

“பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட துறைகள் பெரிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும், பணி ஆற்றலில் 80 சதவீதமும் பங்காற்றுகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பின், இந்தத் துறைகள் இப்படிப்பட்ட கொள்கை அமலாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என பணமதிப்பு நீக்கம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் மைத்திரீஷ் கட்டக் தெரிவிக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பணி வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் அவற்றை நம்பியுள்ள வர்த்தகமும் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் சொல்கிறது.  இந்தத் தொழில்களின் நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறு தொழில்களில் 32% வேலை இழப்பும், சிறு தொழில்களில் 35% வேலை இழப்பும், நடுத்தர தொழில்களில் 24% வேலை இழப்பும் ஏற்பட்டிருப்பதாக 34,000 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தையல் கூடங்கள், தீக்குச்சி, பிளாஸ்டிக், பட்டாசு, வண்ணம் ஏற்றுதல், பதனிடும் நிலையங்கள், சில்லறை வேலை மற்றும் அச்சு நிறுவனம் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களைத்தான் அதிகமாக பாதித்துள்ளது.

படிக்க:
♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !
♦ மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

நாட்டின் தனிநபர் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத அளவிற்கு அதிகரித்து நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கையில், பெட்ரோல் விலை உயர்வு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது, விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரித்து, ஒரு சதவீதம் கோடீஸ்வரர்கள் வசம் நாட்டின் 78 சதவீத சொத்துக்கள் குவிந்து கிடக்கும்போது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. ஒருபுறம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருமானம் உயராமல் தேங்கிக் கிடப்பதாக மைய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார்.

“ஸ்டார்ட் அப் இந்தியா”, ஸ்கில் இந்தியா என மோடி காட்டிய ஜூம்லாக்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தில் தொடங்கப்பட்ட 25% நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மொத்தமே 6 இலட்சம் பேருக்குதான் வேலை கிடைத்திருக்கிறது.

மோடி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் தமது சொந்த முயற்சியில் உருவாக்கிக் கொள்ளும் வேலைவாய்ப்புகளையும் – தள்ளுவண்டிக் கடைகள் போடுவது, ஆட்டோ ஓட்டுவது போன்றவை – தட்டிப்பறித்துவிடும் வேலையைத்தான் செய்து வருகிறார். இந்த அரசு ஒரு கொடுங்கனவு (nightmare) என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்!

படிக்க:
♦ பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்
♦ அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன? அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் விவசாயம் அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ஊரகப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நகரங்களை நோக்கிச் செல்கின்றனர். நகரங்களிலோ பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர். மோடி கொண்டு வந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

சமீபத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கார்களின் விற்பனைக் குறைவால் உற்பத்தியைக் குறைத்து, சில நாட்கள் ஆலையையே மூடுகின்றனர். இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளிகள் வேலை இழப்பர்.

சென்ற 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் நெருக்கடி காரணமாக உலகெங்கும் இந்தப்போக்கு வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பண்டங்கள் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. இதனால் மக்கள் தமது தேவைகளை குறைத்துக் கொள்வதால் விவசாயம், சிறு குறு தொழில்கள் நசிவடைந்து போகின்றன. இத்துறைகளில் வேலை வாய்ப்பு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

மறுபுறம் பெரிய நிறுவனங்களும் உற்பத்தி செய்த பொருட்களை அதிகம் விற்க முடியாமல் தேங்கிப் போயுள்ளன. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லாமல் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது.

இந்நிலையில் வேலையின்மையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் ?

அறுபது சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து மையப்படுத்தப்பட்ட திட்டம் போடப்படவேண்டும். அதாவது இந்தியா முழுவதற்கும் தேவையான அரிசி, கோதுமை, கரும்பு, காய்கறிகள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் சீரான விலையில் கிடைக்கும்படி விவசாயத்தையும் சந்தையையும் இணைக்கும் வண்ணம் மையப்படுத்தப் பட்ட திட்டம் போடப்பட வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக சிறு குறு தொழில்களையும் மேற்கண்ட முறையில் மையத்திட்டம் போட்டு முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் வேலை முறையை ஒழித்து விட்டு அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்கும் வண்ணம் தொழிலாளர் உரிமை நலத்திட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அன்னிய முதலீடுகளை நிறுத்தி விட்டு சுதேசிப் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஒரு  சோசலிச நாட்டில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியம் இல்லை. காரணம் இங்கு ஓரிரு சதவீத முதலாளிகள் நாட்டின் 75%-த்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த மலையளவு வேறுபாடு ஒன்றே வேலையின்மையின் சித்திரத்தை தந்து விடுகிறது. சீனா, ரசியாவில் உண்மையான கம்யூனிச ஆட்சி இருந்த போது அந்த நாடுகளின் விலைவாசி ஆண்டுக்கணக்கில் உயராமல் இருந்தது. அதே போன்று தொழிலாளர் வேலை வாய்ப்பும் அனைவருக்கும் கிடைத்து வந்தது.

தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கட்டுப்படுத்தும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு ஒட்டு மொத்த தனியார் பெருநிறுவனங்களையும் நாட்டுடமை ஆக்காமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவே முடியாது.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

3

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய கல்விக் கொள்கை – 2019 –யை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழக தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

அன்பாந்த மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே!

டந்த 5 ஆண்டுகாலம் மோடி தலைமையில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல், கல்வித்துறை முழுவதுமாக கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க 2015 -ல் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதுமட்டுமல்ல, பள்ளிகள் முதல் ஐ.ஐ.டி வரை இந்தி – சமஸ்கிருதத்தை திணிப்பது, பார்ப்பனிய பண்பாட்டை புகுத்துவது, உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள ஆட்களை அமர்த்துவது என காவிமயமாக்கியும் வந்தது.

இப்போது மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதால் 100 நாட்கள் இலக்கு வைத்து கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற வெறிகொண்டு அலைகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள கஸ்தூரிரங்கன் என்பவர் தலைமையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு அவசர அவசரமாக கருத்துக்கேட்டு, சட்டமாக்கத் துடிக்கிறது மோடி அரசு.

உண்மையில் இது அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல. கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ’சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி!

பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எந்த விலைகொடுத்தேனும் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.

படிக்க:
♦ அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

ஏன் புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிக்க வேண்டும்?
  1. இது கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் பார்ப்பனியத்தின் புதிய மனுநீதி!
  2. தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மீண்டும் உயிர்ப்பெறுகிறது!
  3. தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு!
  4. இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது – சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது!
  5. தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவது.
  6. சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவது.
  7. உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழிப்பது. உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது.
  8. இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது.

இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்!

புதிய கல்விக் கொள்கை –2019-ஐ நிராகரிப்போம் ஜூன் – 20, 21 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் ! அனைவரும் வாரீர் !

தகவல் :
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675,
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com
முகநூல் : rsyftn

ருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 23

ருவான் நகரத்தின் நீதிபதி
அ.அனிக்கின்

பொருளாதாரத் திட்டம் தயாரிப்பவர்கள் மக்களில் ஒரு தனி ரகம். அவர்களை அநேகமாக எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் பார்க்கலாம். அவர்கள் விஞ்ஞானத்தில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கின்ற மற்றொரு குழுவினரைப் போன்றவர்களே; அவர்களுக்கு ஏற்படுகின்ற அதே ஆபத்துக்கள் இவர்களுக்கும் அடிக்கடி ஏற்படும்.

இந்த உலகத்தில் வலிமை மிக்கவர்களின் சுயநல விருப்பங்கள், பழமைவாதம் மற்றும் சாதாரணமான முட்டாள்தனம் ஆகியவையே இந்த ஆபத்தாகும்.

பொருளாதாரத் திட்ட நிபுணர்களில் அதிகமான உணர்ச்சியும், நேர்மையும் கொண்டு தன்னலமில்லாத சிலரில் புவாகில்பேரும் ஒருவர். பதினான்காம் லுயீயின் பிரான்சில் அவர் முயற்சிகள் தோல்வியடைவதைத் தவிர வேறு வழியில்லை; அதிலும் தோல்வி என்பது பெட்டியைக் காட்டிலும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் அதிகமான சோகத்தைக் கொண்டதாகும்.

சர் வில்லியம் பெட்டியைப் போல புவாகில்பேர் பன்முகத் திறமையும் வசீகரமும் அதிகமாக உள்ளவராக இல்லாதிருக்கலாம். ஆனால் இவர் அதிகமான மரியாதைக்கு உரியவராக இருக்கிறார். ருவான் நகரத்தைச் சேர்ந்த துணிச்சலான நீதிபதியின் சமகாலத்தவர்கள், அவரை வர்ணிப்பதற்கு அதே போன்று பொதுநலத்துக்காகப் பாடுபட்டவர்களின் உதாரணங்களைத் தேடி மிகவும் பழங்காலத்துக்குச் சென்றார்கள். இந்த இரண்டு பொருளியலாளர்களையும் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்… புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்”.(1) மார்க்ஸ் புவாகில்பேரைப் பற்றி அவருடைய புத்தகங்களின் மூலமாக மட்டுமே தெரிந்து கொண்டவர்; ஆனால் இந்த வர்ணனையில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். 19-ம் நூற்றாண்டின் அறுபதுக்களில் புவாகில்பேரின் கடிதங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வெளியான பிறகுதான் அவருடைய குணச் சிறப்பு மேலும் முழுமையாக வெளிப்பட்டது .

Nobless de robe – மாதிரி படம்.

பியேர் லெ பெசான்(2) ட புவாகில்பேர் 1646 -ம் வருடத்தில் ருவான் நகரத்தில் பிறந்தார். அவர் நார்மண்டியில் Nobless de robe என்ற பரம்பரையைச் சேர்ந்தவர். பழைய பிரான்சில் பரம்பரையாக நீதிமன்ற நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வந்த மேன்மக்களுக்கு இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டது. இதைத் தவிர அரசருக்குத் தங்களுடைய வாட்களால் பாடுபட்டவர்களுக்குத் தரப்பட்ட noblesse d ‘épee என்ற பட்டமும் உண்டு . 17, 18 -ம் நூற்றாண்டுகளில் புதுப் பணக்காரர்களான முதலாளிகளின் வரிசையிலிருந்து noblesse de robe பட்டத்தைப் பலரும் வேகமாகப் பெற்றனர். இது புவாகில்பேரின் குடும்பப் பின்னணியாகும்.

இந்த இளைஞர் அவர் காலத்தோடு ஒப்பிடும் பொழுது சிறப்பான கல்வியைப் பெற்றார். பிறகு அவர் பாரிசுக்குச் சென்று இலக்கியம் படித்தார். அதன் பிறகு அவர் குடும்பத் தொழிலான சட்டத்துறையில் ஈடுபட்டார்; 1677-ம் வருடத்தில் தன்னுடைய சமூக வட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்; நார்மண்டியில் நீதி நிர்வாகப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். ஏதோ சில காரணங்களால் அவர் தகப்பனாரை விரோதித்துக் கொண்டபடியால் குடும்பச் சொத்தை இழக்க நேர்ந்தது; அவருடைய பங்கு அவரது தம்பிக்குக் கொடுக்கப்பட்டது – அவர் பணம் சேர்ப்பதற்காகக் குடும்பத்திலிருந்து வெளியேறிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதை அவர் வெற்றிகரமாகச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் 1689-ம் வருடத்திலேயே ருவான் நீதி இலாகாவில் அதிகச் சம்பளமும் செல்வாக்கும் உள்ள லெப்டினென்ட்- ஜெனரல் பதவியை அதிகமான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்க அவரால் முடிந்தது. அன்று நிலவிய விசித்திரமான நிர்வாக முறையில் இந்தப் பதவிக்கு நகரத்தின் தலைமை நீதிபதி பொறுப்போடு போலீஸ் இலாகாவையும் பொதுவான நகராட்சிப் பணிகளையும் நிர்வாகம் செய்வதும் சேர்ந்திருந்தது. புவாகில்பேர் இந்தப் பதவியைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வகித்த பிறகு, தன்னுடைய மரணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் மூத்த மகனுக்கு மாற்றிக் கொடுத்தார்.

படிக்க:
ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு
♦ மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

புர்போன் முடியாட்சி செய்த சமூக அநீதிகளில் மிக மோசமானது இப்படிப் பதவிகளை விற்பனை செய்த முறையாகும். இந்த முறையின் மூலம் அரசாங்கம் முதலாளிகளிடமிருந்து பணத்தைப் பிடுங்கியது; அதன் மூலம் அவர்கள் உற்பத்தியில் மற்றும் வர்த்தகத்தில் முதலீடு செய்ய முடியாதவாறு செய்தது. புதிய பதவிகள் திடீரென்று உருவாக்கப்பட்டன அல்லது பழைய பதவிகள் பிரிக்கப்பட்டு மறுபடியும் விற்பனை செய்யப்பட்டன. மாட்சிமை பொருந்திய அரசர் புதிய பதவிகளை அறிவித்த உடனே அவற்றை வாங்குவதற்கு முட்டாள்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள் என்று பதினான்காம் லுயீயின் அமைச்சர்களில் ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார்.

புவாகில்பேர் பொருளாதாரப் பிரச்சினைகளை 1670-க்களின் கடைசியில்தான் ஆராயத் தொடங்கினார் என்று தெரிகிறது. நார்மண்டியில் விவசாயிகள் மத்தியில் வாழ்ந்ததனாலும் மற்ற மாநிலங்களில் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்ததாலும் விவசாயிகளின் மிகப் பரிதாபகரமான நிலையை அவர் நேரில் கண்டார்; நாட்டின் பொதுவான பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவே காரணம் என்ற முடிவுக்கு வந்தார். அரசரும் பிரபுக்களும் விவசாயி பட்டினியால் செத்துப் போய்விடாமல் இருக்கின்ற அளவுக்கு மட்டும்தான் அவனிடம் ஏதாவது விட்டு வைத்தார்கள்; சில சமயங்களில் அதையும் விட்டு வைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் உற்பத்தியைப் பெருக்குவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் விவசாயிகளிடம் நிலவிய பயங்கரமான வறுமை தொழில்துறை நலிந்து போவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. ஏனென்றால் அதற்குப் பெரிய சந்தை இல்லாமற் போய்விட்டது.

புவாகில்பேர் (Boisguilbert)

இந்தக் கருத்துக்கள் நீதிபதியின் மனதில் படிப்படியாக முதிர்ச்சியடைந்தன. 1691-ம் வருடத்திலேயே அவர் தன்னுடைய “முறையைப்” பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார், அவற்றை எழுத ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது . அவர் ”முறை” என்று குறிப்பிட்டது அவர் செய்ய உத்தேசித்த சீர்திருத்தங்களையே. நாம் இன்று அவற்றை முதலாளித்துவ ஜனநாயகத்தன்மை கொண்டவை என்று வர்ணிப்போம். மேலும் புவாகில்பேர் நகர முதலாளிகளின் நலன்களுக்காகப் பேசுவதைக் காட்டிலும் விவசாயிகளின் நலன்களுக்காகவே அதிகமாகப் பாடுபடுவதாகத் தோற்றமளிக்கிறார். யுத்தத்தில் தோல்வியடைந்த நாட்டைப் போல பிரான்சை நடத்துகிறார்களே என்ற பல்லவி அவருடைய புத்தகங்கள் எல்லாவற்றிலும் கேட்கிறது.

புவாகில்பேரின் “முறை”-அதன் ஆரம்ப வடிவம், 1707-ம் வருடத்தில் அதனுடைய முடிவான வடிவம் ஆகிய இரண்டிலுமே – மூன்று – முக்கியமான கூறுகளைக் கொண் டிருந்தது – முதலாவதாக, வரிவிதிப்பு முறையில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்று அவர் கருதினார். விவரங்களை ஒதுக்கிப் பார்க்கும் பொழுது பழைய படிப்படியாகக் குறைகின்ற வரிவிதிப்பு முறைக்குப் பதிலாக விகிதாச்சார வரிவிதிப்பை அல்லது சற்றுக் கூடுதலான முன்னோக்கிச் செல்லும் வரிவிதிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இந்த வரிவிதிப்புக் கோட்பாடுகளைப் பற்றி இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றபடியால் இவற்றை விளக்கி எழுதுவது பொருத்தமாகும்.

படிப்படியாகக் குறையும் வரிவிதிப்பு முறையில் ஒரு நபரின் வருமானம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான சதவிகிதத்தில் அவரிடமிருந்து வரி வசூலிக்கப்படும். விகிதாச்சார வரிவிதிப்பு முறையில் வரி விதிக்கப்படுகின்ற சதவிகிதம் ஒரே மாதிரியானது; முன்னோக்கிச் செல்லும் வரிவிதிப்பு முறையில் வருமானம் அதிகரிக்கும் பொழுது வரிவிதிப்பும் அதிகரிக்கிறது. புவாகில்பேரின் ஆலோசனை அவர் காலத்தில் அதிகத் துணிச்சலானதாகும். ஏனென்றால் அப்பொழுது பிரபுக்களுக்கும் திருச்சபையினருக்கும் அநேகமாக எந்த வரியும் கிடையாது; அவர்களிடம் குறைந்த பட்சமாக ஏழைகளுக்கு விதிக்கப்படும் அதே சதவிகிதத்திலாவது வரிவிதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இரண்டாவதாக, உள்நாட்டு வர்த்தகத்தின் மீதிருந்த எல்லாத் தடைகளையும் அகற்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். அவ்வாறு செய்வதன் மூலம் உள்நாட்டுச் சந்தை விரிவடையும், வேலைப் பிரிவினை அதிகரித்து பண்டங்கள், பணச் செலாவணி ஊக்குவிக்கப்படும் என்று அவர் கருதினார்.

மூன்றாவதாக, தானிய வியாபாரத்தில் சுதந்திரமான வர்த்தகம் ஏற்பட வேண்டுமென்றும் அதன் இயற்கையான விலையைக் கீழே குறைத்து விடுவது கூடாது என்றும் கோரினார். தானிய விலைகளைக் குறைவான மட்டத்தில் செயற்கையாக வைத்திருக்கும் கொள்கை மிகவும் தீங்கானது என்று அவர் கருதினார். ஏனென்றால் இந்தக் குறைவான விலைகள் உற்பத்திச் செலவுகளுக்குக் கூடப் போதியதாக இல்லாதிருப்பதோடு விவசாய வளர்ச்சியைத் தடுத்தன.

சுதந்திரமான போட்டி முறையில்தான் பொருளாதாரம் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடையும்; ஏனென்றால் அப்பொழுதுதான் சந்தையில் பண்டங்களுக்கு “உண்மையான விலை” கிடைக்கும் என்று அவர் நம்பினார். பொருளாதாரப் புனரமைப்புக்கும் நாட்டிலும் மக்களிடமும் சுபிட்சம் பெருகுவதற்கும் இந்தச் சீர்திருத்தங்கள் மிகவும் தேவையானவை என்று அவர் கருதினார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு இது ஒன்றே வழி என்று ஆட்சியிலிருப்பவர்களை நம்பவைப்பதற்கு அவர் எல்லா முயற்சிகளையும் செய்தார். தன்னுடைய கருத்துக்களைப் பொது மக்களுக்குத் தெரிவிப்பதற்காக அவர் 1695 – 56-ம் வருடங்களில் தன்னுடைய முதல் புத்தகத்தை ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளியிட்டார்.

பிரான்சின் விரிவான வர்ணனையும் அதன் வளப்பெருக்கத்தில் ஏற்பட்ட நலிவுக்குக் காரணமும், ஒரே மாதத்தில் அரசருக்குத் தேவையான எல்லாப் பணத்தையும் கொடுப்பதற்கும் மக்கள் தொகை முழுவதையும் பணக்காரர்களாக்குவதற்கும் தகுந்த எளிமையான சீர்திருத்தம் என்ற பொருத்தமான தலைப்போடு அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது, தலைப்பில் எளிமையான சீர்திருத்தம் என்றும் எல்லாவற்றையும் ஒரே மாதத்தில் அடைவது சாத்தியம் என்றும் காணப்பட்டது, பொது மக்களின் கவனத்தைக் கவர்வதற்காகவே. ஆனால் சில சட்டங்களை நிறைவேற்றிவிட்டால் பொருளாதாரம் மறு வினாடியே குணமடைந்துவிடும் என்று உண்மையிலேயே புவாகில்பேர் நினைத்ததையும் இது பிரதிபலிக்கிறது.

படிக்க:
ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ?
♦ பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

ஆனால் அவருடைய ஏமாற்றங்களின் தொடர்வரிசை இப்பொழுதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தை யாருமே கவனிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 1699-ம் வருடத்தில் போன் ஷர்ட்ரேன் வகித்த பதவிக்கு ஷமில்லார் நியமிக்கப்பட்டார். இவருக்கு புவாகில்பேரை நன்றாகத் தெரியும்; மேலும் அவருடைய கருத்துக்களை இவர் ஆதரிக்கக் கூடியவர் என்றும் தோன்றியது.

ருவான் நீதிபதிக்கு மறுபடியும் நம்பிக்கை ஏற்பட்டது; புது உற்சாகத்தோடு புதிய புத்தகங்களை எழுதினார். ஆனால் அடுத்த ஐந்து வருடங்களில் அவருடைய முக்கியமான சாதனை அமைச்சருக்கு அவர் எழுதிய நீண்ட கடிதங்கள், அறிக்கைகளின் தொடர் வரிசையே. இந்த ஆவணங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை இதயத்திலிருந்து எழுகின்ற வேதனைக் குரலை வெளிப்படுத்துகின்ற கடிதங்களாகவும் அறிக்கைக் குறிப்புகளாகவும் இருக்கின்றன.

புவாகில்பேர் வாதாடுகிறார்; பிறகு புகழ்ந்து பேசி வசப்படுத்தப் பார்க்கிறார்; பொருளாதார அழிவு ஏற்படப் போகிறது என்று பயமுறுத்துகிறார்; பிறகு கெஞ்சுகிறார். அவர் முயற்சிகளை யாருமே சிறிது கூடப் புரிந்து கொள்ளவில்லை; சில சமயங்களில் அவரை அவமதிக்கவும் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தன்னுடைய சொந்த கெளரவத்தை நினைத்துப் பார்த்து மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறார். வெகு சீக்கிரத்தில் தாய் நாட்டின் நன்மைக்காக சொந்த கௌரவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, பதவியில் இருப்பவர்களிடம் மறுபடியும் மன்றாடுகிறார்: புறப்படுங்கள், செயலாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy.4, Moscow , 1970, p. 55.

(2) இந்தப் பொருளியலாளரின் உண்மையான பெயர் இதுவே. புவாகில்பேர் என்பது அவரது முன்னோர்களுடைய பண்ணையின் பெயர். அரசர் ஒரு முதலாளிக்குப் பட்டமளிக்கும் பொழுது அவர் பெயரோடு அவருடைய பண்ணையின் பெயரையும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது வழக்கம். எனினும் பியேர் லெ பெசான் என்ற பெயரைக் காட்டிலும் புவாகில்பேர் என்ற பெயரில்தான் அவர் நன்கு அறிமுகமாயிருந்தார்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

மிழகத்தில் வாகன சோதனை என்ற பெயரில் போலிசின் வழிப்பறி கொள்ளை- கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மதுரையில் 15.06.2019 சனிக்கிழமை இரவு 11:30 மணிக்கு “சாய் டயர்ஸ்”  என்ற பெயரில் டயர் வணிகம் செய்யும் விவேகானந்தகுமார் தனது கடையை மூடிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பைக்கின் பின்பக்கம் சரவணக்குமார் என்பவர் (அந்த கடையில் வேலை செய்யும் உதவியாளர்) அமர்ந்துகொண்டிருந்தார்.

செல்லூர் பாலம் அருகே அண்ணாமலை திரையரங்கம் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது “டெல்டா போர்ஸ்” என்ற சிறப்புப் பிரிவு போலிசு. இந்த “டெல்டா போர்ஸ்” போலிசு மதுரை நகரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வாகன சோதனையில் ஈடுபடலாம். சட்ட விரோதமாக மதுரை காவல் ஆணையரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரிவு போலீசுக்கு அளவற்ற அதிகாரம் வழங்கியிருக்கிறது.

இந்த “சட்ட விரோதப் போலிசு” கும்பல் விவேகானந்தகுமார் மற்றும் சரவணக்குமார் வந்த வண்டியை மறித்திருக்கிறார்கள். அப்பொழுது கொஞ்சம் தள்ளி நிறுத்த முயற்சி செய்த விவேகானந்தகுமாரை சற்றுதள்ளி இருந்த போலீஸ் ஒருவர் லத்தியால் ஓங்கி அடிக்க, இன்னொரு போலீசு வண்டியின் சக்கரத்தில் லத்தியை விட்டிருக்கிறார்.

உயிரிழந்த விவேகானந்த்குமார்.

ஈவு இரக்கமற கொடுஞ்செயலால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து சரவணகுமாருக்கு நாடியில் பலத்த அடிபட்டு துடித்திருக்கிறார். விவேகானந்தனுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. மண்டையில் பலமான அடிபட்டு இருக்கிறது.

வலியால் துடித்துக்கொண்டிருந்த இருவரையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது போலீசு கும்பல். அங்கிருந்த பொதுமக்கள் உதவி செய்ய முயற்சித்தபோதும் அவர்களை அங்கிருந்து விரட்டியிருக்கிறது போலீசு. இந்தச் சம்பவத்தில் விவேகானந்தனின் போனை ஒரு போலீஸ் எடுத்துக்கொண்டது. தட்டுத்தடுமாறி எழுந்த சரவணன் போனை கொடுங்கள் என்று கேட்க, முடியாது என்று திமிராக சொல்லியுள்ளது போலீசு.

வேறுவழியின்றி அங்கிருந்த ஒருவரின் செல்போனை வாங்கி செந்தில்குமார் என்ற தனது நண்பருக்கு தகவலை சொல்ல, அவர் ஆம்புலன்ஸ் அழைத்து வந்து இருவரையும் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

இந்த சம்பவம் உறவினர்களுக்கு தெரிந்து மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அடுத்த நாள் 16-ம் தேதி விவேகானந்தன் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்த செய்தியை விவேகானந்தனின் நண்பர் ஒருவர் மதுரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்க, உடனடியாக தோழர் வாஞ்சிநாதன் உட்பட ம.உ.பா.மைய தோழர்கள் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

படிக்க:
♦ போலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்
♦ திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு

அங்கிருந்தபடியே சரவணன் நடந்த சம்பவங்களை எழுதி ஆன்லைன் மூலமாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். அங்கு சென்ற மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர்கள் விவேகானந்தனின் உறவினர்களிடம் கலந்தாலோசித்து மூன்று கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

  • காவல் துறையின் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • விதவை மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். மறுநாள் திங்கட்கிழமை கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என்ற அடிப்படையில் மறியலை கைவிட்டனர். இறந்த விவேகானந்தகுமாருக்கு மனைவி கஜபிரியா, ஒன்றரை வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்கள். இவர்கள் பெயரில் ஒரு மனுவை எழுதி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் மனு கொடுக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் மனு கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர்.

கலெக்டர் அலுவலகத்தில் விவேகானந்தகுமாருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், வியாபார சங்கத்தினர் அனைவரும் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். “அதில் எனது கணவரை  கொலை செய்த குற்றவாளிகள் தெரிய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பாடியை வாங்குவோம்” என்று கஜப்பிரியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மதுரை தல்லாக்குளம் போக்குவரத்து போலீசு ஒரு பொய் வழக்கு பதிவு செய்தது. அதில் விவேகானந்தகுமார் குடித்துவிட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரை போலீசு தாக்கவில்லை என்று ஒரு பொய்ச் செய்தியை பரப்பியது. ஆனால் சம்பவ இடத்தில் cctv காமிரா உள்ளது. அதேபோல் அவர்கள் சோதனைக்கு எடுத்து வந்த வாகனத்திலும் காமிரா உள்ளது. இந்த இரண்டு காமெராவிலும் நடந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளது. ஆனால் அந்த பதிவுகளை பார்ப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சியங்களும் இருக்கின்றன. இருப்பினும் இப்படி ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லி வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கலெக்டர் அலுவலகத்தில் மாலைவரை போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் வேறுவழியின்றி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசின் பெயர்களைச் சொன்னது. மேற்கணட சம்பவத்தால் மனமுடைந்த விவேகானந்தனின் மனைவி கஜப்பிரியா திங்கள் இரவு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அவரை உறவினர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். தற்போது அவர் நிலைமை சீரியஸாக இருக்கிறது. உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்

இந்நிலையில் ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கில் கொலைக்குற்றவாளியான சிறப்பு எஸ்.ஐ. ரத்தினவேலு, மதுரை சட்டம்- ஒழுங்கு பிரிவு காவலர்கள் HC-கிருஷ்னமூர்த்தி, HC-ரமேஷ்பாபு, HC-கந்தசாமி மற்றும் மதுரை AR-HC- பிரபு சீலன், மதுரை AR-PC-மணிகண்டன் ஆகியோரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்கள். மேலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எஃப்.ஐ.ஆரை alternate பண்ண முடியும் என்கிறார். உடனடியாக பாடியை வாங்கிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டார். அவருக்குப் பதிலாக அசிஸ்டன்ட் கமிஷனரைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

காவல்துறையின் அராஜகம் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே பாதித்து இருக்கிறது. இந்தக் கொடூர குற்றச் செயல்களுக்கெல்லாம் தாங்கள் எந்த விதத்திலும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற அதிகாரவர்க்கத் திமிர்த்தனத்தோடு இழுத்தடித்து வருகிறது என்பதற்கு இது ஒரு சாட்சி. அதிகார வர்க்கத்தின் இந்த திமிர்த்தனத்தை எதிர்த்து தற்பொழுது வரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 73393 26807.

பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

0

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது. வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக மூளைக்காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

பீகாரில் அடுத்தடுத்து குழந்தைகள் பலியாவது தேசிய அளவிலான செய்தியாகிவிட்ட நிலையில், குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கையை சமர்பிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

மூளைக் காய்ச்சல் பாதிப்பால் முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை.

மருத்துவரீதியாக மூளைக்காய்ச்சல் மரணங்களுக்கு வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. இப்படியொரு உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்க இணக்கமாக உள்ள மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன? போதிய விழிப்புணர்வின்மைக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பீகாரின் அவலத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை…

புரோமிளா தேவி, பீகாரின் மொதிஹாரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த செவ்வாய்கிழமை பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பூஜை முடிந்து தனது நான்கரை வயது மகள் பிரியான்சு-வுக்கு 11 மணியளவில் ரொட்டியும், புஜியா எனப்படும் உருளைக்கிழங்கு கறியும் உண்ணக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, பிரியான்சு உறங்கிவிட்டார்.

அந்த நாளில் பணிகள் அதிகமாக இருந்ததால், புரோமிளா அடுத்த நாள் காலையில் நீண்ட நேரம் கழித்து எழுந்திருக்கிறார். அப்போது, பிரியான்சுவையும் எழுப்ப முயற்சித்திருக்கிறார். ஆனால், தன் மகள் கண் திறக்கவில்லை, அவளுடைய உடல் விறைத்துப் போயிருக்கிறது.

தனது மாமியாரின் துணையுடன் பிரியான்சுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இறுதியாக மருத்துவர் இருந்த மருத்துவமனைக்கு மகளை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கே பிரியான்சுவுக்கு தற்காலிக மருந்துகள் தரப்பட்டுள்ளன. பிரியான்சுவை முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர்.

ரூ. 4000 -க்கு ஆம்புலன்சை வரவழைத்து, தனது மகளை முசாபர்பூருக்கு அழைத்து வந்திருக்கிறார் புரோமிளா. ஆக்ஸிஜன் மாஸ்க் பொறுத்தி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் சிறுமி. தனது கணவரும் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவருமான மோகன் ராம் பஞ்சாபில் தொழிலாளியாக உள்ளார். மகளின் சிகிச்சைக்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள நிலையில், வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறார் புரோமிளா.

படிக்க:
♦ மூளைக் காய்ச்சல்: பட்டினி போட்டது அரசு! கொன்று போட்டது தொற்றுநோய்!!
♦ பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !

“முந்தைய நாள் காலையில் லிட்சி பழத்தை உண்டாள். ஆனால், இரவு ரொட்டியும் புஜியாவும் மட்டும்தான் உண்டாள்” என்கிற புரோமிளா, “நாங்கள் அவளை எழுப்ப முயற்சித்தபோது, அவள் வித்தியாசமாக நடந்துகொண்டாள், நாங்கள் பயந்துபோய்விட்டோம்” மிரட்சியோடு சொல்கிறார்.

நூறு பேரை பலிவாங்கிய காய்ச்சல்தான் தன் மகளை இப்படி கிடத்தியிருக்கிறது என அறியும்போது, புரொமிளாவுக்கு பயம் அதிகமாயிருக்கிறது.

முசாபர்பூரில் மட்டும் நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்க என்ன காரணம்?

ஒவ்வொரு ஆண்டும் முசாபர்பூர் ஒட்டியுள்ள பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் மூளைக்காய்ச்சல் வெப்பத்தின் காரணமாக மக்களை தாக்குகிறது. முதன்முதலாக இந்தப் பகுதியில் 1995-ம் ஆண்டு இந்த நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டது. அதுமுதல் மூளைக்காய்ச்சல் தாக்குதல் காரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வியல், பொருளாதார நிலை, சாதி பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களை வைத்து ஆராயப்பட்ட நிலையில், உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழியும் முசாஃபர்பூர் மருத்துவமனை.

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வொன்றில் முசாபர்பூரில் நோய்த்தாக்குதல் கண்ட குழந்தைகளில் 123 பேர் பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே இருந்தனர். 100 குழந்தைகளின் குடும்பங்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் 114 குழந்தைகளின் குடும்பங்கள் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறியது.

பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, தூய்மையான குடிநீர் இல்லாமை, போதிய சத்து கிடைக்காமல் இருப்பது, தூய்மையில்லாமல் இருப்பது, விழிப்புணர்வின்மையே நோய்க்கு ஊக்கியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் அஜய் குமார், நோய்க்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், நோய்க்குக் காரணமான வைரஸை தனிமைப்படுத்த முடியவில்லை என்கிறார். பலமுறை இந்த நோய்க்கென்று பிரத்யேகமாக பரிசோதனைக்கூடம் அமைக்கக் கேட்டும் இதுவரை அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்.

மூளைக்காய்ச்சலை லிச்சி பழம் தூண்டுகிறதா?

சில நிபுணர்கள் லிச்சி பழத்தை உண்பதால், உடல் வெப்பநிலை அதிகமாவதாகவும் இது வைரஸ் பரவலைத் தூண்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். முசாபர்பூர் லிச்சி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. தற்போது லிட்சிக்கும் மூளைக்காய்ச்சல் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.

மூளைக்காய்ச்சல் கண்டு, முசாபர்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உறவினர்களிடம் பேசியதில், காய்ச்சல் வருவதற்கு முன் அவர்கள் லிச்சி பழத்தை உண்டதை கூறியுள்ளனர்.

படிக்க:
♦ தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !
♦ நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !

நோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

மூளைக்காய்ச்சல் நோய்க்கான வேர்க்காரணியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த உதவும். பீகார் அரசு யுனிசெஃப் -உடன் இணைந்து நிலையான இயக்க நடைமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) மூலம் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உப்பு – சர்க்கரை கரைசல் தரவேண்டும் என்பது முதல், எந்தக் குழந்தையும் வெறும் வயிற்றில் உறங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி படுத்துவது வரை செய்யவேண்டும். இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் குழந்தை.

அதே சமயத்தில், இந்த ஆண்டு நிலையான இயக்க நடைமுறைப்படுத்தலில் காட்டிய அலட்சியமே அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என நம்பப்படுகிறது. அரசு தரப்பில் இதை மறுத்தாலும் ஆஷா பணியாளர்கள் அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு போதிய ஒத்துழைப்பில்லை என கூறுகிறார்கள். போதிய அளவு உப்பு – சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் நோய் வேகமாக பரவிய பின்பே, அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அரசு தரப்பில் ஆணை வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திங்கள்கிழமை தன்னுடை நான்கு வயது மகனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சஞ்சய் ராம், “இந்த நோய் பரவாமல் தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை” என்கிறார். வேளாண் கூலித் தொழிலாளியாக உள்ள இவர், தனது மகனின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கவலை கொள்கிறார். தனது வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில், செலவு பிடிக்கும் தூரத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் மகனை சேர்த்துள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலக்கட்டத்தில் நோய்த்தாக்குதல் இருந்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மத்திய – மாநில அரசுகள் செய்யவில்லை. இதோ இந்த ஆண்டு அதன் விளைவாக நூறைக் கடந்து பலிகளின் எண்ணிக்கை சென்று கொண்டிருக்கிறது.

இத்தனை குழந்தைகளின் உயிரிழப்பில் தனக்குரிய மிகப் பெரும் பங்கை மறைக்கும்விதமாக இழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார் நிதிஷ் குமார். ஏகபோகமாக அரியணை ஏறியிருக்கும் மோடி அரசு அதைக்கூட செய்யவில்லை. வழக்கம்போல ஏழை வீட்டு மரணங்கள் நாட்டின் பிரதமரை உலுக்கவில்லை.


செய்திக் கட்டுரை : உமேஷ் குமார் ராய்
அனிதா
நன்றி : தி வயர்

சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

1

நண்பர்களே….

பொ.வேல்சாமி
டந்த சில நாட்களாக சோழர்கால சமூகம் பற்றியும் இராஜராஜ சோழனைப் பற்றியும் பல்வேறு வகையான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த விவாதங்களில் பங்குபெற்ற பெருவாரியானவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவான சான்றுகளை முன் வைக்கவில்லை. தாங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களைப் பொதுக்கருத்துகள் போல பொத்தாம் பொதுவாகப் பேசுகின்றார்கள்.

இதனால் அவர்களுடைய பேச்சைக் கேட்கின்றவர்களை, அவர்கள் சிந்தனையற்ற ஆட்டுமந்தைகள் என்று கருதுவது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் மந்தைகளாக இருப்பதில்லை. சிலர் சிந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய விவாதங்களில் பேசுகின்றவர்களின் உள்ளத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். அத்தகையவர்கள், தங்களுக்குப் புரிந்ததை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் விளக்கும் பண்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களைப் பற்றி போகிற போக்கில் கருத்துக் கூறுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அண்மையில் நடந்த, இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கின்ற பல்வேறுவிதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளின் உண்மைகள் என்னவென்பதை விளக்க முற்படாத ஊடகங்கள் பழங்காலத்தைப் பற்றிய விவாதங்களை எந்த அடிப்படையில் நடத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இராஜராஜ சோழனை தமிழர்களின் குறியீடு என்று சிலர் குறிப்பிட்டனர். நாம் அவர்களை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். “கி.பி. 1013 -ல் அல்லது 14 -இல் தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அன்றிலிருந்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது என்பதை தமிழர்கள் முற்றிலும் மறந்துவிட்டனர். அடுத்து வந்த 900 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்தவொரு தமிழ் நூலிலும் இராஜராஜ சோழன்தான் பெரிய கோவிலைக் கட்டியவன் என்ற செய்தி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “ஹீல்ஸ்” என்ற ஆங்கில நாட்டு அறிஞர்தான் பெரிய கோவிலைக் கட்டியது இராஜராஜசோழன் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றார். அதுவரை தஞ்சையில் வாழ்ந்த மிகப்பெரும் தமிழறிஞர் ஜி.யு.போப்-க்கும் கும்பகோணத்தில் வாழ்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கும் கூட பெரிய கோவிலை இராஜராஜ சோழன்தான் கட்டினான் என்பது தெரியாது. இப்படி இருக்கும் போது இராஜராஜ சோழனை தமிழனின் குறியீடு என்பது எந்த வகையில் சரியானது..? கேப்பையில் நெய் வடிகின்றது என்று கூறுவதை ஒருவன் கேட்கிறான் என்றால் அவன் கேனையனாகத்தான் இருப்பான் என்ற சொலவடை உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?
♦ இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

சோழர்காலத்திய தமிழ்ச் சமூகம் சார்ந்த மக்கள் பல்வேறு வகையாகப் (சாதிகளாக) பிரிந்துகிடந்தனர். எடுத்துக்காட்டாக பறையர்களின் குடியிருப்புகளை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி “பறைச்சேரி” என்று கூறுகின்ற கல்வெட்டுகளும் அவரவர்களுக்கு தனித்தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்த கல்வெட்டுகளும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டும், சோழர்கால வாழ்க்கை முறைகளின் வேறுபாடுகளைக் கூறுகின்ற செய்திகளை ஆதாரங்களுடன் விளக்கியும் வரலாற்று அறிஞர்கள் கரசிமா, ஒய்.சுப்பராயலு அவர்களால் எழுதப்பட்ட “தென்னக சமூகம் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி” (சோழர் காலம்) என்ற நூலும், வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் தென்னிந்திய வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய நூல்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் ( 850 – 1300) – நொபொரு கராஷிமா
தென்னிந்திய வரலாறு – மு.ரா. பெருமாள்
தென்னிந்திய வரலாறு – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
சோழர்கள் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

இந்த நூல்கள் இல்லாமல் சோழர்காலம் பற்றி மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட “சோழப் பெருவேந்தர் காலம்” என்ற நூல் இரண்டு பாகங்களாக தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இவை நூலகங்களில் கிடைக்கும். இதில் இரண்டாம் பாகம் மிக முக்கியமான செய்திகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரால் சோழர்கள் “இரண்டாம் பாகமும்” இந்த காலம் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை அள்ளித் தருகின்றது. இந்த நூல்கள் மின்னூல் வடிவில் இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு…… “சோழர்கள் முதல் பாகம்” மட்டும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றது. இதன் இணைப்பையும் தந்துள்ளேன்.

வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் ( 850 – 1300) – நொபொரு கராஷிமா
தென்னிந்திய வரலாறு – மு.ரா. பெருமாள்
தென்னிந்திய வரலாறு – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
சோழர்கள் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு

“தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சியினர் டீ கடை, பிரியாணி கடை என்று தாக்குதல் நடத்தினர்கள். இதற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினே மன்னிப்பு கோரினார். தற்போது, நாகர்கோயிலில் திமுக கட்சியைச் சேர்ந்த கடைக்காரரிடம் மாவு குறித்து கேட்டபோது, எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்கியுள்ளார். ஆகவே, திமுக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.” இது ஒரு நேர்காணலில் எச்.ராஜா கூறியது.

நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்குச் சென்ற ஜெயமோகன் மாவு புளித்திருந்ததை கண்டுபிடித்து விட்டார். உலக உத்தம எழுத்தாளரான தன்னிடமே இவ்வளவு அலட்சியமா என்று அந்தக் கடைக்குச் சென்று குழாயடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவமனையில் ‘படுகாயத்துடன்’ ஜெயமோகன்.

கடையில் இருந்த பெண்மணியும், “ஐயா நீங்கள் வாங்கும்போதே இது முந்தைய தினத்து மாவு” என்று கூறியதை நினைவுபடுத்தியுள்ளார். இருப்பினும் எழுத்தாளர் கோபம் குறையாமல் மாவு பாக்கெட்டுகளை அந்த பெண் முன்னே வீசியுள்ளார். எரிச்சலைடைந்த அந்த பெண்ணின் கணவர் தட்டிக் கேட்க சிறு அளவு கைகலப்பு நடந்துள்ளது.

உடனே ஜெயமோகனது செல்வாக்கால் இது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது. சொல்லிக் கொள்ளும்படி அடியே இல்லாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்கியவாறு போலீசில் புகார் கொடுக்கிறார் ஜெயமோகன். போலீசும் அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டவர் தி.மு.க என்பதால் ஸ்டேசனில் தி.மு.க உள்ளூர் தலைவர்கள் வந்து பிறகு இது ஜெயமோகன் என்பதால் விட்டுக் கொடுத்து சென்றுவிட்டனர்.

தற்போது எச்.ராஜா வரைக்கும் ஜெயமோகனுக்கு ஆதரவு அள்ளிக் கொட்டப்படுகிறது.

இன்றைய கேள்வி:

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்?

♣ ஜெயமோகன்
♣ கடைக்காரர்கள்
♣ தி.மு.க.
♣ செய்தியை பரபரபாக்கிய ஊடகங்கள்

*****

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தது யார் ?

மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை

0
கல்லில் உறைந்த செங்குருதியா ? செந்நிறத்தில் மின்னும் கண்ணாடியா?

நிலத்தின் அடி ஆழத்தில் உயிரைப் பணயம் வைத்து நவரத்தினங்களில் ஒன்றான மாணிக்கக் கல்லை ஆயிரக்கணக்கான மனிதர்கள் தேடுகிறார்கள்.

தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் இது எடுக்கப்படுகிறது. குரோமியத்தின் மகிமையால் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் என மாணிக்க கற்கள் பல்வேறு அவதாரங்களை எடுக்கின்றன.

அறிவியலை பொருத்தமட்டில் மாணிக்க கல் வெறும் கனிமம் மட்டுமே. இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.

மோகாக்கிலிலுள்ள ஒரு மாணிக்க கல் சுரங்கத்திற்கு வந்திருக்கும் தொழிலாளிகளின் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மாணிக்க கல் சுரங்கமொன்றில் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள்.
சுரங்கமொன்றில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் சலித்துப் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்
மோகோக் நகர சுரங்க குகையொன்றின் உள்ளே தொழிலாளி ஒருவர் இறங்குகிறார்.
மோகோக் நகர சுரங்க குகையில் பணியின் இடையே தொழிலாளி ஒருவர் ஓய்வெடுக்கிறார்.
தாம் தேடிவந்த கனிமத்தின் படிமம்தானா என பரிசோதிக்கும் தொழிலாளி.
மாணிக்க கல் சுரங்கமொன்றில், மாணிக்க கற்களை சுரங்கத் தொழிலாளி ஒருவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
மாணிக்க கல் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள்.
உணவு இடைவேளையில் உணவருந்தும் தொழிலாளிகள்.
வடக்கு மாண்டலேவின் மோகாக்கிலிலுள்ள ஒரு சுரங்கத்தில் ஓய்வு நேரத்தில் புகைபிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தொழிலாளி
மோகாக் நகர், நவரத்தின கற்கள் சந்தையில் வாங்குபவர்களுடன் விற்பனையில் வணிகர்கள்.
மோகாக் நகர் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செதுக்கப்படாத மாணிக்கக் கற்கள்.
மோகாக் நகர் சந்தையில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் வணிகர் ஒருவர் விற்பனை செய்கிறார்.
மோகாக் நகர் சந்தையில் ஒரு மாணிக்க கல்லை ஆய்வு செய்கிறார் ஒரு வாடிக்கையாளர்.
மோகாக் நகர் சந்தையில் மாணிக்க கற்களையும் இதர கற்களையும் வணிகர் ஒருவர் விற்பனை செய்கிறார்.
மோகாக் நகர் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் செதுக்கப்படாத மாணிக்கக் கற்கள்.


– சுகுமார்
நன்றி : த கார்டியன்

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !

அன்பார்ந்த மக்களே!

ல்துலக்கும் போது, குளிக்கும் போது, துவைக்கும் போது, கக்கூசு போகும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று மக்களுக்கு ஆலோசனை சொல்லும் அரசுதான், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு முதல் காரணம்.

மழைநீரை பஞ்சுப்பொதி போல தேக்கிவைக்கும் ஆற்று மணலை சூறையாடியது, நீர்வழித்தடங்கள், நீர்நிலைகள், சதுப்பு நிலங்களை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு பதில் மண்ணைப் போட்டு மூடி ரியல் எஸ்டேட்டிற்கு பிளாட் போட்டு விற்றது என, மொத்த நீர் ஆதாரங்களையும் தெரிந்தே திட்டமிட்டு அழித்து நாசமாக்கி நம்மை தண்ணீர் பஞ்சத்தில் தள்ளியது இந்த அரசுதான்.

நம்மை அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல; திட்டமிட்டு அரசால் உருவாக்கப்பட்டது. கடல் போல காட்சியளிக்கும் சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்காமல் கழிவு நீர் குட்டையாக மாறிப் போனதற்கு பொறுப்பேற்க வேண்டிய பொதுப்பணித்துறை, இன்று மக்கள் முன்வந்து சுத்தம் செய்வதை தடுப்பதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?

நீர் நிலைகளை பராமரித்து பாதுகாக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுப்பணித்துறை என்ற அரசு நிறுவனம்தான், ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ நீர் நிலைகள் அனைத்தையும் அழித்தது.

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல்தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது. இந்த கிரிமினல் குற்றக் கும்பலை எந்த சட்டமும் தண்டிக்காது. மக்கள் மட்டுமே தண்டிக்க முடியும்.

படிக்க:
நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்
♦ வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலமோ, நதி நீர் இணைப்பு என்ற நிறைவேற்ற முடியாத கனவின் மூலமோ தண்ணீர் பிரச்சினை தீராது. குளம், குட்டை, ஏரி என அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நீர் நிலைகளை மீட்டெடுத்து தூர்வாரி பராமரித்து மழை நீரை தேக்குவதன் மூலம் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும்.

தண்ணீரை கார்ப்பரேட் வணிகமாக மாற்றும் நோக்கில் வேலை செய்துவரும் அரசு இதைச் செய்யாது. ஜப்பான் முதலாளிகளின் விருப்பத்திற்கு 15 ஆயிரம் கோடி செலவு செய்து மெட்ரோ ரயில் விடும் அரசு, மக்கள் தேவையை எப்படி நிறைவேற்றும்?

பொதுப்பணித்துறை உட்பட அரசின் ஒவ்வொரு துறையும் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் செய்யாமல் அதற்கு நேரெதிராக செயல்படுகின்றது. இதன் விளைவாக மொத்த அரசு கட்டமைப்பும் மக்களை ஆளும் தகுதியை இழந்து நெருக்கடியில் சிக்கி தோற்றுப் போய்விட்டது. எனவே, மக்கள் பிரச்சினை எதையும் இந்த அரசுக் கட்டமைப்பு தீர்க்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனியும் அரசை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்துதான் ஏரியை சுத்தம் செய்ய களமிறங்கினார்கள் சிட்லபாக்கம் மக்கள். இதன் வளர்ச்சியாக “எங்கள் ஏரியை சொந்தம் கொண்டாட நீ யார்? பொதுப்பணித்துறையே வெளியேறு!” என்ற கோரிக்கையை முன்வைத்து நீர் நிலைகள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டின் கீழ், கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். இந்த அதிகாரம் நிலை நிறுத்தப்படுவதுதான் மக்கள் அதிகாரம்.

இப்படி கிராமம்தோறும், நகரம்தோறும் தோற்றுப்போய் மக்களின் எதிரியாக மாறிப்போன அரசின் தலையீட்டை நிராகரிப்பதும், மக்களின் தேவைகளை மக்களே முடிவு செய்வதும் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நிறைவேற்றுவதும்தான் மக்கள் அதிகாரம். இதன் வளர்ச்சிப் போக்கில்தான் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை,
தொடர்புக்கு : 91768 01656
மின்னஞ்சல் : ppchennaimu@gmail.com
முகநூல் பக்கம் : fb.com/ppchennaimu


இதையும் பாருங்கள்…

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !