Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 446

கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 10

கேரளா ஆலப்புழா மாவட்டம் சங்கனாசேரியில் உள்ள NSS இந்து கல்லூரிக்கு எதிரில் மாலை 7 மணியளவில் நடந்து சென்றோம். காலம் ஆகஸ்டு மாதத்தின் நான்காம் வாரம். அந்த ஏரியாவில் கண்ணில் பட்ட சில இடங்களில் காக்கி டவுசர் அணிந்த ஒரு சில இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். என்னவென்று கண்களை சற்று உயர்த்தி மேல பார்த்ததும் ஆ.எஸ்.எஸ் அலுவலகம்.

சேவாபாரதியின் அலுவலகம்

வெள்ள நிவாரணப் பணிக்காக அங்கயே முகாம் அமைத்து அமர்ந்திருந்தார்கள். வெளியில் நின்றிருந்த லாரியில் இருந்து சில மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அருகில் காக்கி டவுசர் அணிந்த ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.

அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரோ, சற்று தொலைவில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவரை கை காமித்து விட்டார். அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

மேலும் கீழும் உற்றுப் பார்த்து விட்டு, கொஞ்சம் வெயிட் பன்னுங்க… வரேன்னு சொல்லிட்டு விட்டு போனவர், கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து…… நீங்க உள்ள வாங்க என்று அழைத்து சென்று வேறு ஒருவரை காட்டி விட்டு சென்றார். அவர் பெயர் ஹரிதாஸ். அவர் நம்மை கண்களால் ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.

யூனியன் மினிஸ்டர் அல்போன்ஸ் கண்ணாந்தனம்.

எங்களைப் பற்றி ஹரிதாஸ் விசாரிக்க ஆரம்பித்தார். எங்கள் மலையாளம் அவருக்கு புரியவில்லை, அவரின் தமிழ் எங்களுக்கு புரியவில்லை. எனவே தமிழ் தெரிந்த ஒருவரின் பெயரை சொல்லி அழைத்தார்கள்… அவர் வருவதற்கு கொஞ்சம் தாமதமானதால் இப்போதைக்கு நாங்க பதில் சொல்லுற நிலைமையில இல்ல.. நீங்க கெளம்புங்க என்று அரைகுறை தமிழில் நம்மை விரட்டினார் அவருடன் இருந்த மற்றொருவர்.

அந்த நேரம் மத்திய இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணாந்தனம்- இவர் கேரளாவின் சி.பி.எம். ஆதரவால் 2006 முதல் 2011 வரை கஞ்சிராபள்ளி-யில் எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் தற்போது பாஜக-வின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்ஜியசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மின்னணு, தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம், மற்றும் சுற்றுலாத்துறைக்கான மத்திய துணை அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.-  இவர் வருகையால் நம்மை மறந்து பிசியாகினர்.

நமக்கு தமிழில் தகவல்களை சொல்லி உதவிய சுயம் சேவக் (வலது)

நாங்கள் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த போது ஒருவர் வந்து, “நீங்க தான் தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கிங்களா?” எனக் கேட்டு விட்டு “அதிகம் சொல்ல முடியாது.. குறைந்த பட்சம் சொல்லுறோம்”… என்று அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்த்தினார். அவர் எங்களை பற்றிய அறிமுகத்தை அதிகம் கேட்டுக் கொண்டே விஷயத்திற்கு வந்தார்….

“ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டத்துல கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. தொடர்ந்து இந்த பகுதியில தான் வேலைகள், நிவாரண உதவிகள் செஞ்சிட்டு இருக்கோம். ஒரு நாளைக்கு 17,000 பேருக்கு எங்கள் சார்பாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு மற்றும் தண்ணீர், உடைகள் ஆகியவைகளை வழங்குகிறோம். இதற்காக வெளி மாநிலத்துல இருந்து பல உதவிகளை பெறுகிறோம். அவர்களும் எங்களுக்கு வழங்குகிறார்கள். நேற்று முதல் தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு சென்று வீட்டை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறோம்.” என்று சொல்லி முடிப்பதற்குள்… ஒருவர் எங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரால் சரிவர போட்டோ எடுக்க முடியாததால் இளைஞர் ஒருவரை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதுமட்டுமில்லாமல், ”உன்னோட செல்போன்லயும் எடுத்துக்கொள்” என்று சொல்லி விட்டு போனார்.

அதற்குள் உள்ளே சென்ற அல்போன்ஸ் வெளியே வந்ததால் முழுக் கூட்டமும் அவரை காணச்சென்றது. வந்தவரோ அனைவருக்கும் நமஸ்காரம் சொல்லி கைகுலுக்கினார். எங்களுக்கும் கைகொடுத்தார். அவரிடம், நிவாரணப்பணிகள் பற்றி கேட்டபோது “அதைப் பற்றி பேச நேரமில்லை” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

நாங்களும் அருகில் இருந்தவர்களிடம் கிளம்புகிறோம் என்று சொல்லி விட்டு ஒரு அடி எடுத்து வைத்ததும், ஹரிதாஸ் ஓடிவந்து, இந்த தம்பிகளை போட்டோ பிடிச்சிட்டிங்களான்னு கேட்டுவிட்டு…. எங்களிடம் பார்வையை எங்களிடம் திருப்பி “ஒன்னுமில்ல தம்பி…. பைல் பன்னி வச்சிக்கிறதுக்கு தான் போட்டோ” என்றார். நாங்களும் வேறு வழியில்லாமல் சரி என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

நடக்க ஆரம்பித்த சில விநாடியில்…

“தம்பி..நில்லுங்க … நீங்க தமிழா? என்று ஒரு குரல் ஒலித்தது. திரும்பி பார்த்தால் அறுபது வயதைக் கடந்த ஒருவர் நம்மை நெருங்கி…….. இங்க இப்ப பார்த்திங்க இல்ல.. அவரு தான் யூனியன் மினிஸ்டர்…. உங்க ஊர்ல இந்த மாதிரி எந்த மினிஸ்டரயாவது சாதாரணமா வருவாரா? பார்க்க முடியுமா? அதெல்லாம் இங்க தான் முடியும். திராவிட கட்சிகள் தமிழநாட்ட குட்டி சுவராக்கிடுச்சி. நீங்க எல்லாம் நம்ம அர்னாப் கோஸ்வாமிய பாக்கனும். அவரை மட்டும் தான் பார்க்கனும். நம்ம பாரத பிரதமர் மோடிக்காக நீங்க எல்லாம் நெரயா பன்னனும்பா…

நீங்க மலையாளம் கத்துக்கிறது ரொம்ப நல்லது. இந்த பக்கம் அடிக்கடி வந்தா சமாளிக்க முடியும். மலையாளத்துல பாஜகவோட சேனல் ஒன்னு இருக்கு.. அதையும் அடிக்கடி பார்க்கனும்.” என்று தனது பிரச்சாரத்தை பரப்புவதிலேயே கவனம் செலுத்தினார். ஆக வெள்ளம் குறித்துப் பேசச் சென்றால் அவர்கள் அர்னாப் கோஸ்வாமியின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். பிறகு கிளம்பினோம்.

உண்மையில் கேரளாவில் எங்களுக்கு மொழியோ, இடங்களோ பிரச்சினையாக இருக்கவில்லை. புது இடம் என்பதால் வரும் பதட்டம் கூட சில மணித்துளிகளில் மறைந்துவிட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கேம்பானது எங்களது முன் முடிவுகளைத் தாண்டி, சூழலே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. புகைப்படம் எடுப்பது, முறைத்து பார்ப்பது, நோட்டம் விடுவது போல் பார்ப்பது என திகிலூட்டுவதாக அமைந்திருந்தது. அப்போது தான் புரிந்துகொள்ள முடிந்தது உண்மையில் “பாசிஸ்ட்கள் தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை.”

*****

டவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவில் பாஜகவின் இந்துத்துவ அரசியல் எடுபடுவதில்லை என்பதால், சபரிமலை ஐய்யப்பனின் கோபமும், மாடு தின்னும் பாவத்தாலும் தான் இந்த பேரழிவு என ஒருபக்கம் தங்களின் வெறுப்பை கக்குகின்றனர் வட இந்திய சங்கிகள்.

இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ் உள்ளூர் தலைகள் எப்படியாவது நமது இருப்பை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக இந்த நிவாரணப் பணியை பார்கிறார்கள். அதனால் தான் தாங்கள் மட்டும் ஈடுபாட்டோடு வேலைகள செய்து வருகிறோம் என்பது போல ஒரு பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்க முயற்சி செய்கின்றனர்.

சேவாபாரதியின் நிவாரண வாகனம் ( இடம் – செங்கனூர் )

குறிப்பாக, சில இடங்களில் முகாம்களை அமைத்து அதன் மூலம் உதவி செய்வது ஒருபுறம், மற்றொருபுறம் நேரடியாக இந்துக்கள் யாரும் கம்யூனிஸ்ட் அரசுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சமூக வலைதளங்கலில் அறைகூவல் விடுவது என்று தீவிரமாக இருக்கிறார்கள். இந்தத் தீவிரம் பாதிக்கப்பட்ட மக்களை பாதுக்காக்க வேண்டும் என்பதல்ல….. தமிழகத்தில் 2015 வெள்ள நிவாரணப் பணிக்கு வந்த பொருட்களின் மீது ஜெயலலிதா தன் படத்தை ஒட்டி பெயர் வாங்கிய பார்முலாதான் இதுவும்.

சி.பி.எம் தோழர்கள் ஐம்பது பேர் ஒரு வாகனத்தில் நிவாரணப் பணிக்கு செல்கிறார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ் சேவக்குகள் ஐம்பது பேரை ஐந்து வாகனங்களில் பிரித்து அனுப்புகிறார்கள். அதன் மூலம் நாங்கள் நிவாரணப் பணிகளை பிரம்மாண்டமாக செய்துவருகிறோம் என ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் சேவா பாரதிக்கு வட இந்தியாவில் இருந்து நிறைய பொருட்கள் வந்திருக்கின்றன. அவர்களிடன் வாகனங்களும் நிறைய இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்குவது அவர்களின் பிரதானமான பணியாக இருந்தது. அவற்றை பதிவு செய்வது, ஊடகங்களுக்கு அளிப்பது அனைத்தும் திட்டமிட்ட வகையில் செய்தனர். அவர்களது நிவாரண பொருள் வழங்கும் பணி அனைத்து இடங்களுக்கும் பெரும் ஊர்வலமாக சென்றது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சிலர் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியையும் செய்தனர். மக்களைப் பொறுத்த வரை அரசியல் ரீதியான கருத்துக்களையும் இந்த சேவைகளையும் பிரித்தே பார்க்கின்றனர். சி.பி.எம் மற்றும் மற்ற கட்சிகள், தன்னார்வலர்கள் யாரும் இத்தகைய விளம்பர நாட்டமில்லாமல் அமைதியாக பணி செய்து வந்தனர். சி.பி.எம் கட்சியினரின் தொண்டர் படை அதிகம் என்றால் பொருட்கள் வைத்திருப்பதில் சேவா பாரதி முந்தியது (நாம் இருந்த இடத்தில்) எனலாம்.

எனினும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு இந்த வெள்ள நிவாரண பணிகளை பயன்படுத்திக் கொண்டது. மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம். மீனவர்கள் காப்பாற்றியது குறித்த நிறைய வீடியோக்கள் கேரள தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின. வரலாற்றை மறைத்து விட முடியுமா என்ன?

– வினவு களச் செய்தியாளர்கள்.

தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !

தூத்துக்குடி சதி வழக்கு: தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு !  விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி ! என்ற தலைப்பின் கீழ் 26.08.2018 அன்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அரங்கக் கூட்ட நிகழ்வு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் மற்றும் குண்டாசில் கைதான தோழர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தூத்துக்குடி படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

தூத்துக்குடி படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

அதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தோழர். மருது அவர்கள் கூட்டத்தின் வரவேற்புரையாற்றினார். அவரது உரையில்;

“தூத்துக்குடி சதி வழக்கில் கைது செய்யப்பட்ட மக்கள், தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது.

தோழர் மருது

இங்கு நாம் எதை வரவேற்க வேண்டி உள்ளது..? தூத்துக்குடி போராட்டத்தில் போர்குணமாக நின்று போராடிய மக்களை வரவேற்க வேண்டி உள்ளது. உயிரே போனாலும் மக்களின் உயிரை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் ஓய்வதில்லை என்ற மக்களின் போர் குணத்தை வரவேற்க வேண்டும்.

இறுதிவரை போராடியும் துளியும் சலைக்காமல் நின்ற பெண்களின் வீரத்தை வரவேற்க வேண்டி உள்ளது. வழக்கில் கைதான தோழர்களின் குடும்பத்தை எதற்கும் சலைகாத இவர்களின் உறுதியை வரவேற்க்க வேண்டி உள்ளது. இவைதான் இங்கு வரவேற்க்க வேண்டியவை” என்று கூறி தனது வரவேற்பு உரையை கூறி முடித்தார்.

அதன் பின்னர் தலைமை உரையாற்றிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது உரையில்;

“மக்கள் அதிகாரத்தை எப்படியாவது ஒழித்து கட்டிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு கங்கனம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒழித்துகட்டியே தீர வேண்டும் என்பதில் தான் வேலை செய்து வருகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எல்லோருமே பெரிய பணக்காரர்களோ. பெரிய வேலையில் இருபவர்களோ அல்ல சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். குறிப்பாக பெண்கள் மிகவும் வீரமானவர்களாக இருந்தனர். துப்பாக்கி சூட்டின் போதும் துளியும் மணம் தளராமல் போராடினார்கள்.

ஒரு பெண்மணியிடம் போலீசு ஒருவர் சென்று “ஏம்மா உன் மகன் எங்க அவன் கொலை பண்ணிருக்கான் அவன் மேல கேசு” இருக்கு என்ற உடனே அந்த பெண்மணி துளியும் அஞ்சாமல் காவல் துறை என்ற அச்சம் இல்லாமல். என் பையனா கொலை பன்னினான். போங்க சார் எங்களுக்கு எல்லாம் தெரியும் யாரு கொலை பன்னினாங்கனு டி.வி ல தான் எல்லாத்தையும் பார்த்தோமே என்று துனிவாக கூறி உள்ளார். இங்கு அந்த தாயின் வீரத்தை பார்க்க முடிந்தது. இதை தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தோழர் வெற்றிவேல் செழியன்

மக்களை பொருத்த வரையிலும் அரசின் மீதான கோபம் என்பது மிகவும் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தான் ஒரு பேராசிரியர் ஒருவர் நமக்கு தொடர்பு கொண்டு, “தொடர்ச்சியா செய்திகள்ள பாத்துட்டு இருக்குறேங்க… மக்களுக்காக நிக்குறிங்க போராடுறிங்க நிறைய வழக்குகள் போடுராங்க என்னால பெரிய அளவுல உதவி செய்ய முடியல அணில் மாதிரி என்னால முடிஞ்ச சிறிய உதவி” என்று கூறி ரூ.5000 நிதி அளித்தார்.

அதே போல் ஓய்வு பெற்ற  இராணுவ வீரர் ஒருவர் எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால உங்க கூட வந்து நிக்க முடியல என்னால் முடிந்த சிறிய உதவி என்று கூறி ரூ.10,000 நிதி அளித்தார். இது போல் உள்ள நபர்களின் ஆதரவினால் தான் வழக்கில் இருந்த தோழர்களின் குடும்பத்தை நம்மால் பராமரிக்க முடிந்தது.

வழக்கறிஞர்களும் இலவசமாக வழக்கு நடதியதும் தான் தோழர்களை விரைவில் வெளியில் கொண்டு வர காரணமாக இருந்தது.

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நமக்காக குரல் கொடுக்கிறார்கள், இவைதான் நாம் மீண்டு வருவதற்கான காரணம் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன். போராளிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தார்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.” என தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

தலைமை உரையை தொடர்ந்து ம.க.இ.க கவிஞர் தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதையை மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமை குழு தோழர் காளியப்பன்  வாசித்தார்.

அதை தொடர்ந்து நினைவு பரிசு வழங்கும் விதமாக சிறை சென்று வந்த தோழர்களுக்கும், பொய் வழக்குகளை தவிடுபொடியாக்கி விடுவித்த வழக்கறிஞர்களுக்கும் “தூக்குமேடை குறிப்பு” , “பகத்சிங்” புத்தகம் பேராசிரியர் கருணானந்தம் அவர்களால் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பேராசிரியர். ஐயா கருணானந்தன் உரையாற்றினார். அவரது உரையில் “போராடுவதற்க்காக வாழ்கிறோம். வாழ்வதற்க்காக போராடுகிறோம். இந்த கூட்டத்தில் பேச வாய்ப்பு அளித்தமைக்குக்கு நன்றி.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள், அப்படி இருந்தால் நல்லது என்று தான் நாமும் நினைக்கிறோம். மன்னர் ஆட்சியில் மக்களுக்கு கடமை மட்டுமே இருக்கும் உரிமைகள் என்பது கிடையாது. உரிமை என்று கேட்டால் அது ராஜ துரோகம். ஆனால் இப்பொழுது நடப்பது மக்கள் ஆட்சி இங்கும் நமக்கு உரிமைகள் கிடையாது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்த அடக்குமுறை சட்டங்கள் தான் இன்னும் நடைமுறையில் உள்ளது. உரிமைகள் இருந்தால் தான் நாம் மக்களாக இருப்போம். இல்லையென்றால் நாம் மாக்களாக தான் இருப்போம்.

இந்த அரசு பொறுப்பில் இருந்து விலகி முதலாளிகளின் அடியாள் படையாக மாறும் போது தான் நமக்கு எதிராக உள்ளனர்.  குண்டர்கள் ஆட்சி செய்யும் போது மற்ற அனைவருமே அவர்களுக்கு குண்டர்களாக தான் தெரிவார்கள். உரிமை என்பது கெஞ்சி பெறுவதல்ல ஜனநாயக உணர்வு தான் நம்மை காப்பாற்றும்,சிறு துளிகள் மீதும் நாம் அக்கறை காட்ட வேண்டும். காவலர்களையும் நமக்கானவர்களாக மாற்ற வேண்டும். இந்த நிலை மாறும். போராளிகளுக்கு வாழ்த்துக்கள். என தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து சிறை சென்ற தோழர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தோழர் முகம்மது அனஸ்

தோழர் அனஸ்

“தோழர்களுக்கு வணக்கம். என் மீது NSA போட்ட காவலர்களுக்கு நன்றி. நான் பயந்து ஓடிவிடுவேன், படிப்பு கெட்டு போய்விடும் என்று நினைத்து நான் போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் என்று எண்ணி தான் காவல் துறையினர் என் மீது NSA போட்டனர். ஆனால் நேர் மாறாக மாறியது. எனக்கு இது புதிய உணர்வை ஏற்படுத்தி உள்ளது. என் பெயர் பின் கூட NSA என்று போட்டு தான் எழுதுகிறேன். இது எனக்கான அடையாளம் பட்டமாக கருதுகிறேன். அடுத்த போராட்டத்திற்கு தயாராக உள்ளேன்.”

தோழர் வேல்முருகன்

தோழர் வேல்முருகன்

“அனைத்து தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம். எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் 1 மெய் 17 பொய் தெரிந்தும் கையொப்பம் இட்டோம். ஏன் என்றால் அவை எல்லாமே படிக்கும் போதே பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து விடும் என்ற அடிப்படையில் தான். சொல்லுங்கள் இந்த ஜனநாயகத்தை தூக்கி நிறுத்த முடியுமா? நன்றி”.

தோழர் மகேஷ்

தோழர் மகேஷ்

“தொடர்ச்சியாக மக்கள் உரிமைக்காக போராடி வரும் தோழர்களுக்கு எங்கள் ஊர் சார்பாக புரட்சிகர வணக்கம். இந்த தூத்துக்குடி போராட்டம் என்பது முதலில் இளைஞர்களாக தொடங்கினோம். பிறகு இது ஒரு நாசகர ஆலை என்பதை உணர்ந்த வகையில் பெண்கள் குழந்தைகள், தாய்மார்கள் என குடும்பங்களாக சேர்ந்து போராடினோம்.

எங்கள் பெயரை ஒவ்வோரு முறை வாசிக்கும் போதும் தெரியும் பல வழக்குகள் போடுகின்றனர் என்று. தெரிந்து கொண்டோம். 3 நாட்களிலே குண்டர் சட்டத்தை உடைத்த பெருமை வழக்கறிஞர்களையே சாரும். நாங்கள் அதிகமாக போராடி உள்ளோம், பல உயிர்களை பலி கொடுத்து உள்ளோம். இந்த நாசகர ஸ்டெர்லைட் ஆலையால் பல பெண்களுக்கு கரு சிதைவு ஏற்பட்டு உள்ளது. இறுதிவரை போராட தயாராக உள்ளோம். இந்த ஆலையை முழுமையாக மூடும் வரை போராடுவோம்.” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

தோழர் கெபஸ்டின்

“தோழர்களுக்கு புரட்சிகர வணக்கம். இந்த போராட்டம் என்பது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டது, அப்போதெல்லாம் எங்கள் போராட்டங்கள் பணம், சாதி ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் இளைஞர்கள் நாங்கள் இப்போராட்டத்தை கையில் எடுத்தோம். ஜல்லிகட்டு போராட்டத்தைப் போல் செய்யவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த அடிப்படையில் தான் குடும்பமாக எல்லோரும் போராட்டத்தில் கலந்து கொண்டோம். நாங்கள் பேரணியாக செல்லும் போதே காவல் துறையினரால் தடுத்த நிறுத்தியிறுக்க முடியும். ஆனால் திட்டமிட்டு எங்களை உள்ளே விட்டு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் சுட ஆரம்பித்தனர்.

தோழர் கெபஸ்டின்

சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என்று சொல்கிறார்கள். ஆம் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தனர். நான் என் கண்ணால் பார்த்தேன் அந்த சமூக விரோதிகளை இன்றும் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

அவர்கள் காக்கி சட்டை அணிந்து இருந்தார்கள், காலில் ஷூ அணிந்து இருந்தார்கள். இவர்கள் தான் அமைதியான பேரணியில் உள்ளே நுழைந்தார்கள். கலகம் செய்தார்கள்.

காலில் தான் சுடுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் எடுத்த உடனேயே தலையில் சுட்டனர். மார்பினில் சுட்டனர். என் அருகில் ஒருவர் ஐயோ நான் பொழைப்பேனா என்று கூறி தலையை பிடித்து கொண்டே கீழே சரிந்து விழுகிறார். எதற்காக இந்த கொலைவெறி ஆலையை எப்படியாவது திறக்க வேண்டும் என்பதுதான்.

ஏன் என்றால் இது போல பல தொழிற்சலைகள் அந்த பகுதியில் உள்ளது. அவற்றையும் நாங்கள் இது போல் போராட்டத்தை கையில் எடுத்து மூடிவிடுவோம் என்பதால் தான். கட்டாயமாக மூடும் வரை போராட்டம் ஓயாது. பல நபர்களுக்கு புற்று நோய் வாந்து உள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராய் இருக்கிறேன். ஒன்று சேர்ந்து போராடுவோம்.” என்று கூறி மற்ற அனைத்து நபர்களின் உணர்வுகளையும் தட்டி எழுப்பினார்.

தோழர் கலீல் ரஹ்மான்

தோழர் கலீல் ரஹ்மான்

“வரலாற்றில் மீரட் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு பற்றி படித்து உள்ளோம். ஆனால் இப்போழுது தூத்துக்குடி சதி வழக்கு புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.

என்னிடம் பல நபர்கள் நண்பர்கள் சிறைக்கு சென்ற போது கேட்டனர், ஏன் நீங்கள் தான் இப்படி செய்றிங்க..? போராடுறிங்க என்றால் படிக்கிற பசங்கள எதுக்கு இதுல கொண்டுவரிங்க என்றனர்.

அவர்களிடம் கேட்டது ஒரே வார்த்தைதான் என் மகன் படித்து முடித்து வந்தால் வேலைக்கு உத்திரவாதம் இருக்கா? வேலைக்கு உங்களால் உத்திரவாதம் தர முடியுமா? யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

இருப்பது சமூகத்திற்கு சரியாக இருக்காது என்ற வகையில் பதில் சொன்னேன். சிறையில் உள்ளவர்கள் எங்களுக்கு கை கொடுத்து வரவேற்றனர். இது போன்ற போராட்டங்கள் இருந்தால் எங்களுக்கும் சொல்லவும் என்றனர்.

அந்த வகையில் இந்த NSA எங்களுக்கு கிடைத்த டிகிரி ஆகும். இது போல இன்னும் பல டிகிரிகளை வாங்க தயாராக உள்ளேன்.” என்று போராட்டமே ஒரு மகிழ்ச்சி என்று அனைவரும் உணரும் வகையில் பேசினார்.

நவனீதா- தோழர் கோட்டையன் மகள்

நவனீதா- தோழர் கோட்டையன் மகள்

“நான் 12ம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா போல் போராட வேண்டும் என்பது தான் எனக்கு விருப்பமாக உள்ளது. என்னை கைது செய்யவில்லை என்பது கஷ்டமாகவும் உள்ளது. நான் ஏன் 12ம் வகுப்பு படிக்கிறேன் என்று கோபமாக வருகிறது. நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை திட்டுகிறார்கள் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் தேவையா என்று. திட்டிற்க்கு பயந்தும் காவல் துறைக்கு பயந்து என் அம்மா என்னை பெரியம்மா வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.

நாம ஏன்..? பயப்பட வேண்டும் நாம தப்பு எதும் பன்னலயே, போராடினால் தப்பா என்று கேட்டாலே அதிகம் பேசுகிறென் என்கின்றனர். ஏன் பெண்கள் என்றால் போராடக் கூடாதா? நாங்களும் போராடுவோம்.” என்று இளைமைக்கான துடிப்புடன் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அரிராகவன்

வழக்கறிஞர் அரிராகவன்

“எங்கள் மீது போடப்பட்டு உள்ள இந்த NSA எங்களுக்கு கிடைத்த லாட்டரி மாதிரி தான் நினைக்கிறேன். ஏன் என்றால் அந்த இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நிலை. பல வழக்கறிஞர்கள் நம்முடன் இணைந்து செயல் பட்டனர். நிதி வாங்கும் வழக்கறிஞர்கள் நமக்காக இலவசமாக வாதாடினார்கள்.

நம்முடைய நோக்கம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும் தான். நான் சிறைக்கு சென்ற உடன் தோழர்கள் குடும்பத்தை நன்கு பராமரித்து உள்ளனர். சிறையில் மக்களிடம் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டோம். நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.” என்று உணர்வூட்டி பேசினார்.

சிறை சென்ற தோழர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து வழக்கறிஞர் தோழர் மில்டன் பேசினார். அவரது உரையில்;

வழக்கறிஞர் தோழர் மில்டன்

“ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் லட்சக்கணக்கில் ஈடுபட்ட மக்களுக்கு வணக்கம். போராளிகளுக்கு வரவேற்பு கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. ஏன் என்றால் இது எங்கள் கடமை.

போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல மக்கள் உயிரை பணயம் வைத்தார்கள், உடல்களை வாங்க மறுத்து உறுதியாக நின்றனர். நாம் கைது சிறை NSA போன்றவற்றை வரவேற்க வேண்டும். சாதாரண மக்கள் பெரிய பெரிய போராட்டங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சமூக விரோதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் அதை பற்றி பேசுகிறார்கள் திருமுருகன் காந்தி மீது 27 வழக்குகள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டினால் தேச துரோகம். அப்படியானல் நமக்கான அரசை நாம் தான் உருவாக்க வேண்டும்.” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

தோழர் தியாகு

“சிறை சென்ற தோழர்கள் சிறைக்கு அஞ்சவில்லை இதுவே நமது போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி. வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்வதல்ல செய் நன்றி, அதாவது இது போல் இன்னும் அதிகமான பணி இருக்கிறது என்பதை கூறுவதற்காகதான். அடக்கு முறை சட்டம் ஒரு புறம், சட்ட அடக்கு முறை ஒரு புறம்.

ஸ்டெர்லைட் மாடல் அடக்குமுறையை இப்பொழுது அரசு தொடர்ந்து செய்கிறது. சிறைகளை வெல்லவும் முடியும் மீறவும் முடியும், இதை நாம் ஜூலியஸ் பூசிக்கிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறை பற்றிய அச்சம் முதலில் நீக்கப் பட வேண்டும்.. நமக்கு உலகெங்கும் தோழர்கள் உள்ளனர். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும்.” என பேசியமர்ந்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ உரையாற்றினார்;

“மக்கள் அதிகாரம் என்பதே மக்கள் தலைவர்களாக வர வேண்டும் என்பதுதான். வீரம் என்றால் என்ன என்பதை நாம் தூத்துக்குடி பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காவல் துறையை நேரடியாக எதிர் கொள்கின்றனர்.

தோழர் ராஜூ

எந்த நெருக்கடியாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். போராட்டம் யார் நடத்தினார்கள் என்று மக்களே சொல்கிறார்கள், மக்களுக்கு அரசு என்பது நம் எதிரி என்பதை மட்டும் புரிய வைத்தால் போதும் மற்ற அனைத்தையும் மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஏனெனில் இன்று அனைத்து விவாதங்களிலும் நம்மை தவிர்க்க முடியாதவர்களாக மாற்றியது போலீசும், அரசும் தான். அதே வேலையில் நமக்கான தொண்டர்கள் அதிக அளவில் தேவை. நாம் நமது அரசியலை இன்னும் வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.”என தனது உரையை நிறைவு செய்தார்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்

மாநகர பயங்கரவாதி ! – மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

ன்று எனக்கு ஒரு புதிய பெயர் கிடைத்தது
மாநகர நக்சலைட்
மாநகர பயங்கரவாதி

இந்த நகரம் எனக்கு
இதற்குமுன் ஏராளமான
பெயர்களைக் கொடுத்திருக்கிறது
நான் ஒரு மாநகர கவிஞன்
நான் ஒரு மாநகர அன்னியன்
நான் ஒரு மாநகர குடிகாரன்
நான் ஒரு மாநகர வந்தேறி
நான் ஒரு மாநகர சிறுபான்மையோன்
நான் ஒரு மாநகர உல்லாசி
நான் ஒரு மாநகர தொழிலாளி
நான் ஒரு மாநகர பெண்பித்தன்
நான் ஒரு மாநகர அனார்கிஸ்ட்
நான் ஒரு மாநகர பைத்தியம்
நான் ஒரு மாநகர தெய்வ நிந்தனையாளன்

அவர்கள் இப்போது சொல்கிறார்கள்
நான் ஒரு மாநகர பயங்கரவாதி என்று
நான் ஒரு மாநகர நக்சலைட் என்று
இந்தப் பெயர் புதுமையாக இருக்கிறது
கவர்ச்சியாக இருக்கிறது
எனது பிற மாநகர பெயர்கள் போல் இல்லாமல்
இந்தப் பெயர் கம்பீரமாக இருக்கிறது
அவர்கள் கோழைகள்
எல்லா அதிகாரமும்
அவர்கள் கையில் இருந்தும்
என்னைக்கண்டு அவர்கள்
பயந்து சாகிறார்கள்
எனக்கு ஒரு அபாயகரமான
பெயரைச் சூட்டிவிட்டால்
என்னை அழிப்பது
சுலபம் என்று நினைக்கிறார்கள்
நான் கரையானைப்போல
பூமிக்கடியில் பரவியிருக்கிறேன்
அவர்கள் அதிகாரத்தை
கண்ணுக்குத் தெரியாமால் அரித்துக்கொண்டிருக்கிறேன்

இன்று ஐந்து
மாநகர பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

அதில் ஒருவன்
எரிமலைகளை
உற்பத்தி செய்யும் கவிஞன்

அதில் ஒருவன்
புனித முகமூடி அணிந்த திருடனின்
மூடு துணியை அகற்றும்
பத்திரிகையாளன்

அதில் ஒருத்தி
விவசாயிகளின் நிலத்தைக் காக்க
தெருவுக்கு வந்தவள்

அதில் ஒருவன்
நீதியைக் கற்பித்த
ஆசிரியன்

அதில் ஒருவன்
ஒடுக்கப்பட்டவர்களின் குரலை
நீதி மன்றங்களில் உரத்து முழங்கியவன்

எல்லோருக்கும் இப்போது
ஒரே பெயர்
மாநகர பயங்கரவாதி
மாநகர நக்சலைட்

இதற்கு முன்பும்
பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்
நரேந்திர தபோல்கர் என்றொரு பயங்கரவாதி
கோவிந் பன்ஸாரே என்றொரு பயங்கரவாதி
கல்புர்கி என்றொரு பயங்கரவாதி
கெளரி லங்கேஷ் என்றொரு பயங்கரவாதி
அவர்கள் ரத்தவெள்ளத்தில் மெளனமாக்கப்பட்டார்கள்

உங்களுக்கு எல்லா வாய்ப்புகளும்
தரப்படுகின்றன
முதலில் மென்மையாக எச்சரிக்கப்படுகிறீர்கள்
நீங்கள் மெளனம் காப்பதில்லை
நீங்கள் அவதூறு செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் வாயை மூடுவதில்லை
நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் அபாயமற்ற விஷயங்களை நோக்கி நகர்வதில்லை
நீங்கள் பொய்வழக்கில் கைது செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் உங்கள் நாவை துண்டித்துக்கொள்வதில்லை
எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு தரப்படுகின்றன
நீங்கள் எதையும் பயன்படுத்திக்கொள்வதில்லை
அவர்கள் என்னதான் செய்வார்கள்
கடைசியில் உங்கள் நெஞ்சில்
இரண்டு துப்பாக்கி ரவைகளை
செலுத்துகிறார்கள்
உங்களை மெளனமாக்க
அதுதான் ஒரே வழி

ஒருவரை
பயங்கரவாதியாக்க
எந்த குற்றமும் தேவையில்லை
ஒருவரை நக்சலைட்டாக்க
எந்த ஆதாரமும் தேவையில்லை
ஒரு போலி சதிக்கடிதத்தை
நூறு பிழைகளுடன் தயாரிக்கவேண்டும்
அதில் அழிக்கவிரும்புகிறவர்களின் பெயரை
வரிசையாக எழுத வேண்டும்
அதை எங்காவது தானே தெருவில்போட்டு
தானே கண்டெடுக்க வேண்டும்
இப்படித்தான் மாபெரும் தேசவிரோத குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன
மாநகர நக்சலைட்டுகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்

மாநகரத்தின் பேரிருள்
எல்லோர் முகங்களிலும் படிகிறது
அந்த இருளில் ஒளிந்திருக்கிறார்கள்
வழிபாட்டு தலங்களை இடிக்கும் பயங்கரவாதிகள்
மாட்டு மாமிசம் உண்பவர்களைக் கொல்லும்
பயங்கரவாதிகள்
உங்கள் பணத்தை செல்லாமலாக்கி
ஒரே இரவில் உங்களை தெருவில்
பித்துப் பிடித்து அலையச் செய்த பயங்கரவாதிகள்

இந்த நகரமெங்கும்
வாழ்வின் சங்கீதங்கள் இறந்துவிட்டன
பேய்களின் ஊளைச் சத்தம் மட்டுமே
எங்கெங்கும் கேட்கிறது
நள்ளிரவு சோதனைகள்
நள்ளிரவு கைதுகள்
ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்
எதிர்த்துப் பேசும்
ஒவ்வொரு குரல்வளையாக நெறிக்கப்படுகின்றன

இந்த நாட்டில் காந்தி என்றொரு
பயங்கரவாதி இருந்தார்
இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு
நக்சலைட் இருந்தான்
அவர்கள் கொல்லப்பட்டார்கள்
நாங்கள் கொல்லப்படுகிறோம்
நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான்
ஒடுக்குமுறையின் பாதை
எப்போதும் ஒன்றுதான்

நிராயுதபாணிகளின் கைகளில்
விலங்குகள் பூட்டப்படுகின்றன
நிராயுதபாணிகளின் நெஞ்சில்
துப்பாக்கிக்குண்டுகள் இறங்குகின்றன
இந்தக் காலம் கொடுமையானது
இதுவரை இருந்ததிலேயே
இதுதான் இதயமற்றது

எங்கும் பொழிகிறது
இரத்தத்தை உறையச் செய்யும்
கொடும் பனி

நன்றி : மனுஷ்ய புத்திரன் 

ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?

பேராசிரியர் சத்யநாராயணா

“உங்கள் கணவர் ஒரு தலித். அதனால் அவர் எந்த ஒரு கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை. ஆனால் நீங்கள் ஒரு பிராமணர்தானே, பின்னர் ஏன் நீங்கள் எந்த ஒரு நகையோ பொட்டோ அணிவதில்லை? நீங்கள் ஏன் ஒரு பாரம்பரிய மனைவியைப் போன்று உடையணிவதில்லை? மகளும் தந்தையைப் போலவே இருக்க வேண்டுமோ?”

இவை அனைத்தும் ஐதராபாத்தில் உள்ள ’ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தின்’ (EFLU, Hyderabad) கலாச்சாரக் ஆய்வுத்துறையின் துறைத்தலைவர் சத்திய நாராயணாவின் மனைவி பவனாவிடம் போலீசு அதிகாரி கேட்ட கேள்விகளில் சில. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்திருந்த அவர்களது வீட்டில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (28.08.2018) தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நடந்த சம்பவம் இது.

எல்கர் பரிஷத் கருத்தரங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலிருப்பதாகக் கூறப்படும் தொடர்பு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை 5 சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுல் ஒருவரான பிரபல எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளருமான வரவரராவின் மகள்தான் பவனா.

புனே போலீசாலும், தெலுங்கானா சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாலும் தமது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து சத்யநாராயணா (பவனாவின் கணவர்) கூறுகையில் அதனை ஒரு அதிர்ச்சியூட்டக்க்கூடிய அவமானப்படுத்தக்கூடிய அனுபவமாகக் குறிப்பிட்டார். போலீசு தம்மிடமும் தமது மனைவியிடமும் ஆத்திரமூட்டக்கூடிய மற்றும் முட்டாள்தனமான பல கேள்விகளைக் கேட்டதாகக் கூறுகிறார்.

இது குறித்து சத்தியநாராயணா கூறுகையில்,

”முதலில் அவர்கள் எனது மாமனாரான வரவரராவைத் தேடி வந்திருப்பதாகக் கூறினர். அவர் இங்கு இல்லாததை அறிந்த பிறகு, அவர்கள் புத்தக அலமாரிகள், அலமாரிகள் மற்றும் பரண்களிலும் தேட ஆரம்பித்தனர். என்னை மாவோயிஸ்டுகளோடு தொடர்புபடுத்தக்கூடிய ஏதேனும் கிடைக்குமா எனத் தேடுவதாக அவர்கள் கூறினர். வரவரராவ் எனது வீட்டில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாரா எனக் கேட்டனர். புனே மற்றும் தெலுங்கானா போலீசைச் சேர்ந்த 20 போலீசார், காலையில் 8.30 மணியிலிருந்து, மாலை 5:30 மணி வரையில் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அனைத்தையும் வாரி இறைத்தனர்.”

”ஏன் உங்கள் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன? அனைத்தையும் நீங்கள் படித்துவிட்டீர்களா? ஏன் இத்தனை புத்தகங்களை வாங்கியிருக்கிறீர்கள்? ஏன் இத்தனை புத்தகங்களை வாசிக்கிறீர்கள்? மாவோ மற்றும் மார்க்ஸ் குறித்த புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள் ? சீனாவில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள்? கத்தாரின் பாடலை ஏன் வைத்திருக்கிறீர்கள்? பூலே, அம்பேத்கரின் புகைப்படங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கின்றன ? கடவுள் படங்கள் எதுவும் உங்கள் வீட்டில் இல்லையே ஏன்? என்று கேட்டனர்”

ஒரு போலீசு அதிகாரி புத்தகங்களைச் சுட்டிக்காட்டி, “நிறைய புத்தகங்களைப் படித்து மாணவர்களை கெடுக்கிறீர்கள்” எனக் கூறியதாகக் கூறுகிறார் சத்யநாராயணா.

மேலும் கூறுகையில் ”ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியாளராக, ஒரு பேராசிரியராக நான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். கல்வியாளர்களாக நாங்கள் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிக்கிறோம். அது இடதுசாரி, வலதுசாரி, தலித் பற்றிய புத்தகங்களாக இருக்கலாம். அவர்கள் தலித் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், சிவப்பு அட்டை கொண்ட ஒவ்வொரு புத்தகங்கள் குறித்தும் கேள்வி கேட்டனர்.” என்று கூறினார்.

தலித் இலக்கியங்கள் குறித்த தமது ஆராய்ச்சித் தரவுகள், இணையத்தில் தாம் வாங்கிய மின்னூல்கள், இலக்கிய ஆய்வறிக்கைகள், தமது புதிய இரண்டு நூல்களுக்கான முன்வரைவுகள் உள்ளிட்டு தமது புற சேமிப்பு வன்தட்டு (External Hard Disk) மற்றும் கணிணி, மடிக்கணிணி ஆகியவற்றை எல்லாம் சேர்த்து தமது இருபதாண்டு இலக்கியப் பணிகளை மொத்தமாக போலீசு வாரிச் சென்றுவிட்டது என்று கூறினார்.

”அவர்கள் எனது கல்விப் பணியை இருபது – இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிவிட்டனர். இதிலிருந்து நான் மீண்டுவரமுடியுமா என்பது எனக்குத் தெரியாது. கணினியில் சேமிக்கப்பட்ட அனைத்தையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதன் பிரதி எதுவும் என்னிடம் கிடையாது. அவர்கள் எடுத்துச் சென்ற எனது ’மேக் புக் ப்ரோ’ மடிக்கணிணியில், தென்னிந்தியாவைச் சேர்ந்த 40 தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்து நான் கொண்டு வரவிருக்கும் புத்தகங்களான “No Alphabet In Sight” மற்றும் “Steel Nibs Are Sprouting” ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட முன்வரைவுகள் இருந்தன. அதனை எப்போது திரும்பத் தருவார்கள் எனக் கேட்டபோது, அதற்காக மனுச் செய்து பின்னர்தான் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிவிட்டார்கள்” என்று சத்திய நாராயணா கூறினார்.

மேலும், ”கலாச்சாரப் படிப்பில் ஆய்வு முறைகளைப் பற்றிய ஒரு புதிய பாடப் பிரிவை நான் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்த கற்பித்தலுக்காக சுமார் 50 புத்தகங்களை எனது மாணவர்களுடன் மின்னஞ்சல் மூலமாகவும், இணையதள சேவைகள் மூலமாகவும் பகிர்ந்து வந்து கொண்டிருந்தேன். அத்தனை தரவுகளும் அடங்கிய வன்தட்டை (Hard Disk) அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். நான் அவை அனைத்தையும் மீண்டும் திரட்டி மாணவர்களுக்குக் கற்பிக்கவே சில மாதங்கள் எடுக்கும்.” என்றார்.

போலீசாரிடம் தனது வீட்டை ஏன் அவர்கள் சோதனையிடுகிறார்கள் எனக் கேட்டபோது, தாம் வரவரராவின் மருமகன் என்பதால்தான் என போலீசு கூறியதாகக் கூறினார்.

“ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் ஒரு மதிப்புமிக்க பேராசிரியராக என்னுடைய சொந்த அடையாளத்தை அவர்கள் உதறித் தள்ளிவிட்டார்கள். என்னை வீட்டில் எதையோ மறைத்து வைத்துள்ள ஒரு குற்றவாளியைப் போல் உணரச் செய்தனர். அவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிகளின் கடவுச் சொற்களைக் கூறும்படி என்னை வற்புறுத்தினார்கள். அவர்கள் கேட்பதையெல்லாம் நான் செய்யவில்லையெனில், தேடுதலுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என அறிக்கை கொடுக்கப் போவதாகவும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். மாவோயிச சித்தாந்தத்தை ஆதரிக்கவோ அல்லது பின் தொடர்வோ வேண்டாம் என எனது மாமனாருக்கு நான் ஏன் உபதேசம் செய்யக் கூடாது எனக் கேட்டு எனக்கு வகுப்பெடுத்தனர். அவர்கள் வரவரராவுக்கு வயதாகிவிட்டதால் அவர் தற்போது ஓய்வெடுத்து சந்தோசமாக வாழ வேண்டும் எனக் கூறினர்.” என்றார் சத்யநாராயணா.

போலீசாரால் கேட்கப்பட்ட இத்தகைய கேள்விகள் குறித்து புனே இணைக் கமிஷனர் சிவாஜி போட்கேவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டபோது, இவையனைத்தும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் இத்தகைய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், முறைப்படியே இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது என்றும் கூறினார்.

போலீஸ் கமிஷனர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இதில் மட்டுமல்ல இந்த கைது விசாரணை நடவடிக்கை அனைத்திலும் இருப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் அம்பேத்கர், மார்க்ஸ் படம் வைத்திருப்பதைக் கூட குற்றமாக கருதுகிறது போலீசு. பொட்டு வைக்காததையும், நகை அணியாததையும் குற்றமென கேள்வி கேட்கிறது. இது எமர்ஜென்சியை விடவும் அதிகப்படியான அடக்குமுறை! கணவர் தலித், மனைவி பார்ப்பனர் என்பதெல்லாம் இவர்களது கண்ணை உறுத்துகிறது. ஏனெனில் பார்ப்பன இந்துமதவெறியிரின் பார்வையில் சூத்திர-பஞ்சம மக்கள் மட்டுமல்ல, சாதி மறுப்பு மணம் புரிந்தோரும் கூட குற்றவாளிகள்தான். மோடி அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டிய தருணமிது!

– வினவு

மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !

டந்த செவ்வாய் (28-08-2018) அன்று புனே போலீசு குழு பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்று தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
இடமிருந்து, சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், வரவர ராவ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரெய்ரா

சமூகச் செயற்பாட்டாளர்கள் வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி மற்றும் வரவர ராவ், க்ராந்தி தெகுலா, நசீம், பேராசிரியர் ஆனந்த் தெல்டும்பே ஆகியோரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போலீசு, செவ்வாய் அன்று மாலையில், சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கவுதம் நவ்லகா, வரவரராவ் ஆகியோரைக் கைது செய்துள்ளது போலீசு.

இந்த தேடுதல் நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ள தேடுதல் ஆணையின் நகலைப் பெற்ற ஸ்க்ரோல் இணையதளம், தேடுதல் அனுமதிக்கான முகாந்திரமாக, அந்த ஆணையில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், ஊபா மற்றும் மக்களுக்கிடையே பகைமையைத் தூண்டிவிடுதல் ஆகிய பிரிவுகளை போலீசு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
இடமிருந்து, பிரசாந்த் பூசன், மனோஜ் ஜோஷி, ராமச்சந்திர குஹா, அருந்ததி ராய், ஜூலியோ ரிபெய்ரோ, ஆகார் படேல், அஜாய் சாஹ்னி (படம்: நன்றி: Scroll.in)

இந்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அருந்ததி ராய், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர்:

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்தனது இருப்பின் அவசியத்தை இழந்துவிட்டோமோ என்று அச்சத்திலும் பீதியிலும் இருக்கிற ஒரு அரசாங்கத்தின் அபாயக் குறியீடுதான், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தக் கைது நடவடிக்கைகள். பசுவின் பெயரில் அடித்துக் கொல்லும் கூட்டத்தை உருவாக்குபவர்களும், மக்களை பட்டப்பகலில் கொலை செய்பவர்களும், மிரட்டுபவர்களும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கையில், அந்த வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள் மற்றும் அறிவுஜீவிகள் பரிகாசிக்கத்தக்க குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதானது, இந்தியா எதை நோக்கிச் செல்கிறது என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. கொலைகாரர்கள் மரியாதை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். நீதிக்காகவோ அல்லது இந்து பெரும்பான்மைவாதிகளுக்கு எதிராகவோ யாராவது குரல் எழுப்பினால் அவர் குற்றவாளியாக்கப்படுகிறார். நடைபெற்றுக் கொண்டிருப்பவை முழுவதும் ஆபத்தானவை. தேர்தல் வரும் நேரத்தில், இது இந்திய அரசியல் சாசனத்துக்கும், நாம் அனுபவித்து வரும் அனைத்து சுதந்திரங்களுக்கும் எதிரான கவிழ்ப்பு முயற்சியே”

பிரசாந்த் பூசன், வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர்:

“இது முழுக்க பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கை. மாற்றுக் கருத்துக்களை இல்லாமல் செய்வது மற்றும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சி இது. இந்த செயற்பாட்டாளர்கள் அனைவருமே பொதுப் பிரச்சினைகளுக்காக அவர்கள் செலுத்திய பங்களிப்பிற்காக நன்கறியப்பட்டவர்கள். இந்த வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. இது இந்த மோடி அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க நடத்தப்படுகிறது. இது உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

ராமச்சந்திர குஹா, எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர்:

இது முற்றிலும் பயங்கொள்ளச் செய்வதாக இருக்கிறது. இது கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் மட்டும் இவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
ராமச்சந்திர குஹா
படம் : தாஷி தொப்க்யால்

அவர்களுக்காக சட்டரீதியான உதவி செய்ய வருபவர்களையும் அச்சுறுத்தி ஒடுக்குவதற்காகவும் செய்யப்படும் நடவடிக்கையாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு சுதந்திரக் குரல்களின் மீதான இந்த துன்புறுத்தல்களையும் தலையீடுகளையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். வன்முறை மற்றும் சட்டவிரோதத்திற்கு அமித்ஷா எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அதிலிருந்து வெகுதொலைவில் இருப்பவர் சுதா பரத்வாஜ். ஒரு வேளை மகாத்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் தனது வழக்கறிஞர் உடுப்பை மாட்டிக் கொண்டு சுதா பரத்வாஜுக்காக நீதிமன்றத்தில் வழக்காடியிருப்பார் என்பதில் காந்தியின் சரிதையை எழுதியவனாக எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவும் கூட மோடி அரசு காந்தியின் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்யாமல் இருந்திருக்கும் என்ற உத்தேசத்தில்தான்.

அஜாய் சாஹினி, மோதல் மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குனர்:

பீமா கொரெகான் வன்முறை குறித்த விசாரணையில் போலீசின் தரப்பில் போடப்பட்ட வழக்குகளும், குறிப்பாக கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களுடனான தகவல் தொடர்பு ’கடிதமும்’ இட்டுக்கட்டப்பட்டவையாகவே தோன்றுகின்றன.  மத்திய ஆட்சியாளர்களிடம், இடது சாரி செயற்பாட்டாளர்களை மாவோயிஸ்டு ஆதரவாளர்களாகக் காட்டி அவர்களை அச்சுறுத்துவது அவசியம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது முன்னணிக்கு வரும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் என்னும் கருத்தாக்கத்தின் தயாரிப்பும் இத்தகைய பரப்புரையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்த வழக்குகள் எவையுமே நீதித்துறை விசாரணையில் நிற்காது. ஆனால் இந்த வழக்குகளின் நோக்கமே நீதித்துறை நடைமுறைகள்தான். இது ’விசாரணைக் காலகட்டத்தின்’ மூலம் தண்டிக்கும் ஒரு வழிமுறை. இறுதி முடிவைக் கணக்கில் கொள்ளாமல், நெடிய நீதிமன்ற நடைமுறையின் வேதனை இந்த செயற்பாட்டாளர்களைச் சிறிதுகாலம் அமைதி கொள்ளச் செய்யும். பிற செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லப்படவேண்டிய ‘செய்தி’ (மிரட்டல்) போய்ச் சேரும். போலீசு தொடுத்துள்ள இந்த வழக்குகள் தோல்வியடையும்போது, வழக்கம் போல, யாரும் இதற்கு பொறுப்பானவர்களாக்கப்பட மாட்டார்கள்.

இது சட்டீஸ்கரில்  மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளின் ஒரு நீட்சியே. இதன் தொடர்ச்சி கண்டிப்பாக எதிர்பலனளிக்கக் கூடியவையே. கருத்துரீதியான நடுநிலைக் களத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சார்பூட்டப்பட்ட சமூகம் என்றும் அமைதிக்கான வழியைக் கண்டதில்லை. எங்கு கிரிமினல் கூட்டுகளுக்கான அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கான தெளிவான ஆதாரம் கிடைக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல, இந்த வழக்கு அத்தகைய நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு அல்ல.

மனோஜ் ஜோஷி, கண்காணிப்பாளர் ஆராய்ச்சி நிறுவனம்:

கொள்கை மற்றும் நடைமுறைப்படி யாரையேனும் கைது செய்வதற்கு  முன்னால், போலீசு முதலில் விசாரித்து, வழக்கை கட்டமைக்க வேண்டும். இங்கு வழக்கம் போல கைதுகள் விசாரணைக்கு முன்பாகவே நடக்கின்றன. சட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதென்றால், அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணைக்கு உதவச் சொல்லியிருக்கவேண்டும், ஆனால் இந்திய போலீசின் ’மரபை’ப் பின்பற்றி முதலில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துவிட்டு, வழக்கைக் கட்டமைக்க ஏதேனும் தரவு கிடைக்குமா என தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

இங்கு கண்டிப்பாக அரசியல் விவகாரம் இருக்கிறது. பீமா கொரேகானில் தலித்துகள் மீது வலதுசாரிகள் நடத்திய தாக்குதல்கள் வன்முறைகள் தான் இதற்குக் காரணம். மராட்டிய அரசு குற்றவாளிகளைக் காப்பது போல தெரிகிறது. மாவோயிஸ்டுகள் மனித உரிமைப் பிரச்சினைகளை தங்களது நடவடிக்கைகளுக்கான கவசமாக அடிக்கடி உபயோகிப்பார்கள் என்பது குறித்து அறிந்திருக்கிறேன். எனக்கு அவர்கள் மீது பெரிய அளவிலான கரிசனம் ஏதும் கிடையாது. ஆனால் இந்த மண்ணின் சட்டத்தின் முதன்மை அனைவருக்கும் ஒன்றுதான். விசாரணை செய், குற்றம் சாட்டு, அதன் பின்னர் கைது செய்.”

ஆகார் படேல், அம்னெஸ்டி இண்டர்நேசனலின் இந்திய செயல் இயக்குனர்:

இன்றைய கைதுகளும், தேடுதல்களும், இந்த செயற்பாட்டாளர்கள், அவர்களது போராட்டங்களுக்காக குறிவைக்கப்படுகின்றனரா என்பது குறித்த குறுகுறுக்கும் கேள்வியை எழுப்புகிறது. இது தொடர்ச்சியாக நீடிக்க முடியாது. அரசாங்கம் பயமுறுத்தும் சூழலை உண்டாக்காமல், கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூடுவது, சங்கமாகத் திரள்வது ஆகியவற்றிற்கான மக்களின் உரிமையைக் காக்க வேண்டும்.

நன்றி: Scroll.in
தமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு

இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்

அ. முத்துலிங்கம்

ரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல். தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம் மோசமானது.

பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும் பார்க்க உயர்ந்த வேலை எனக்கு கிடைத்ததில்லை. நாலாவது வேலையும் போய்விட்டது.

மாதிரிப் படம்

என்னுடைய நண்பருக்கு வேண்டிய ஒருவருக்கு தெரிந்த இன்னொருவர் என்னை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தார். நல்ல வேலை, இரண்டு மடங்கு சம்பளம் என்றார்கள். சொன்ன நேரத்துக்குள் நான் போய்ச் சேரவேண்டும். அதுதான் முக்கியம். எனக்காக அவர் காத்திருக்க மாட்டார்.

பஸ்சில் இதே பாதையில் பலமுறை போயிருக்கிறேன். குறித்த நேரத்தில் பஸ் இலக்கை அடைந்தால் அது அந்தந்த பயணிகளின் கூட்டுமொத்த அதிர்ஷ்டம். ஆகவே நேரம் பிந்துவதற்கு அதிகம் வாய்ப்பு இருந்தது. போவதற்கு இரண்டு டாலர் கட்டணம், திரும்புவதற்கு இரண்டு டாலர் என்பது கணக்கு. என்னுடைய மதிய உணவுக்காக நான் சேமித்து வைத்த காசு இது.

வேலை முக்கியமா மதிய உணவு முக்கியமா என மனதுக்குள் விவாதம் நடந்தது. தூரத்தில், திருப்பத்தில் சாம்பல் பச்சை வர்ண பஸ் வருவது தெரிந்தது. பிரார்த்தனையில் பாதி பலித்து விட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பஸ்சில் அடிக்கடி சின்னச் சண்டைகள் உண்டாகி அதனால் தாமதம் ஏற்படுவது வழக்கம். எல்லாம் பஸ் சாரதியின் சாமர்த்தியத்தில் தங்கியிருக்கிறது.

பஸ் முக்கால்வாசி நிரம்பியிருந்தது. இரண்டு டாலரை பஸ் சாரதியிடம் தந்துவிட்டு வசதியான இடம் பிடித்து அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் கடுதாசிக் குவளை காப்பியை குடிக்காமல் கையிலே பிடித்து நல்ல சந்தர்ப்பத்துக்காக அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கைவிரல்களில் வரிசையாக வெள்ளி மோதிரங்கள். மற்றப் பக்க இளைஞன் இரண்டு பெருவிரல்களாலும் செல்பேசியில் படுவேகமாக குறுஞ்செய்திகள் அனுப்பியவண்ணம் இருந்தான். அதே சமயம் புதுச் செய்திகள் டிங் டிங் என வந்து விழுந்தன.

என்னுடைய புகழ்பற்றி நேர்முகத்தில் என்னவென்ன சொல்லலாம், என்னவென்ன சொல்லக்கூடாது என்பது பற்றி திட்டவட்டமாக யோசித்து வைத்திருந்தேன். மறுபடியும் மனதுக்குள் ஒத்திக்கை பார்த்தேன். இதிலே ஒரு தந்திரம் இருக்கிறது. பெரிய கேள்விகளுக்கு சின்னப் பதில் சொல்லவேண்டும்; சின்னக் கேள்விகளுக்கு பெரிய பதில் தேவை. ஒவ்வொரு தடவையும் தவறாமல் கேட்கப்படும் கேள்வி ‘எதற்காக கடைசி வேலையை விட்டீர்கள்?’ என்பதுதான். ‘16 கோப்பைகளை உடைத்தேன்’ என்று சொல்லமுடியுமா? அமோகமான கற்பனை வளம்தான் என்னைக் காப்பாற்றும்.

அ.முத்துலிங்கம் இரண்டு டாலர்பஸ்சிலே ‘கஞ்சா உருட்ட அனுமதியில்லை’ (No weed rolling) என்று எழுதி வைத்திருந்தது. யாராவது கடைசி ஆசனத்தில் இருந்து கஞ்சா உருட்டி புகைக்க ஆரம்பித்தால் ஓட்டுநருக்கும் உருட்டுநருக்கும் இடையில் சண்டை தொடங்கிவிடும். பயணி இறங்கிய பின்னர்தான் பஸ் மேலே போகும். ஐந்து நிமிடம் தாமதமாகிவிடும்.

அல்லது சில பேர் பஸ்சில் ஏறுவார்கள். பயணிகளிடம் காசு சேகரித்து ஒட்டுநரிடம் கொடுத்து பயணம் செய்வார்கள். இன்னும் சிலர் அப்படி சேகரித்த காசை சாரதியிடம் கொடுக்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் பின் கதவு வழியாக இறங்கிப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அன்று நான் பலதடவை பிரார்த்தித்தபடியே இருந்தேன். இப்படியான சம்பவம் ஏதாவது நடந்து பஸ் பிந்தாமல் போகவேண்டும். அன்றைய சாரதி கறுப்பு இனத்து பெண். கறள் நிறம். பெண் என்றால் நல்லதுதான், மிகக் கண்டிப்பாக இருப்பார். பஸ்சிலே ஏறிய பயணிகள் அனைவரும் என்றுமில்லாதமாதிரி அமைதியாக இருந்தனர். கடைசி சீட்டில் கஞ்சா உருட்டுபவர் ஒருவரும் இல்லை. ஒரு பெண்ணை மட்டும் ஒருவன் உருட்டிக்கொண்டிருந்தான்.

அடுத்த நிறுத்தத்தில் கறுப்புக் கண்ணாடி அணிந்த உயரமான ஆள், ஒலிம்பிக் பதக்கத்தை அணிவதுபோல தன் பெயர் எழுதிய அட்டையை கழுத்திலே தொங்கவிட்டபடி ஏறி அமைதியாக அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு பெண் கையில் குழந்தையையும், மறுகையில் பையையும் காவியபடி செல்பேசியை வாயினால் கவ்விக்கொண்டு ஏறி ஓர் இருக்கையை தேடிப் பிடித்து அமர்ந்தார். சரி, நேரத்துக்கு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நிம்மதி ஏற்பட்டது. ஒரு புதுவிதமான பிரச்சினை அன்று உருவாகப் போகிறது என்பது எனக்குத் தெரியாது.

அடுத்துவந்த பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சக்கர நாற்காலியில் பேருந்துக்காக காத்தபடி நிற்பது தெரிந்தது. சக்கர நாற்காலியை பஸ்சில் ஏற்றுவதற்கு ஒரு முறை உண்டு. சாரதி பஸ்சை நிறுத்திவிட்டு கதவை திறந்தார். பின்னர் இறங்கு பலகையை இறக்கினார். அது ஆடி அசைந்து கீழே இறங்கி நிலத்துடன் ஒட்டிக்கொண்டு வளைந்து நின்றது.

பயணி தன்னுடைய தானியங்கி நாற்காலியை பலகைக்கு நேராகக் கொண்டுவந்து பின்னர் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கினார். உள்ளே வந்ததும் சாரதி தன் ஆசனத்தை விட்டு எழுந்து ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாற்காலியை நிறுத்தி, ஒரு சங்கிலியால் பிணைத்துக் கட்டினார். இதற்கு ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டது. நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

பஸ் புறப்படுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். ஓட்டுநர் கவர்ச்சியான உயரமான பெண். சிகை சுருண்டு சுருண்டு அவர் தோள்மூட்டை தொட்டு நின்றது. திட்டமிட்டு நேராக்கிய பல்வரிசை. ஒரு பெட்டிக்குள் நிற்பதுபோல தலையை குனிந்து பயணி கொடுக்கப்போகும் இரண்டு டாலருக்காக காத்து நின்றார்.

அப்போதுதான் பிரச்சினை ஆரம்பமானது. பயணியை பார்த்தேன். வட்டமான முகம். இடுங்கிய கண்கள். நாற்காலியை நிறைத்து உட்கார்ந்திருந்த அவர் தொப்பை கீழே இறங்கி தொடையில் கிடந்தது. தவளையின் கழுத்துப்போல வீங்கிய தொண்டை.. ’ஆஸ், ஆஸ்’ என்று மூச்சு விட்டார்.

பயணி உட்கார்ந்திருந்தது நாற்காலியல்ல, அவருடைய வீடு. கைப்பிடியில் இரண்டு மூன்று உடுப்புகள் தொங்கின. ஆசனத்துக்கு கீழே அத்தியாவசியமான சாமான்கள் அடுக்கியிருந்தன. அவர் அணிந்திருந்த உடுப்பில் எட்டு பாக்கெட்டுகள். அவர் காசைத் தேடத் தொடங்கினார். ஒவ்வொரு பக்கெட்டாகத் தேடியும் காசு கிடைக்கவில்லை.

பின்னர் நாற்காலி கைப்பிடியில் கொழுவிய உடுப்புகளின் பக்கெட்டுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். அங்கேயும் காசு இல்லை. சுருண்ட முடி சாரதி பெட்டியை மூடுவதுபோல இமைகளால் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக நின்றார். ஏனைய பயணிகள் தங்கள் தங்கள் ஆசனங்களில் நெளிந்தனர். மேலும் ஐந்து நிமிடங்கள் ஓடின.

என்னிடம் இருந்த மீதி இரண்டு டாலரை பயணியின் கட்டணமாக சாரதியிடம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். திரும்பும்போது நடந்து போய்விடலாம். ஆனால் சில சமயங்களில் உதவி செய்ய இயலாது. ஊனமுற்றவர் எரிந்து விழுவார்; சத்தம் போடுவார். சாரதியும் என்ன செய்வார் என்று ஊகிக்க முடியாது. அங்கே நடக்கும் சம்பவங்களை எல்லாம் பஸ்சில் பொருத்திய வீடியோ காமிரா படம் பிடித்துக் கொண்டிருந்தது.

ஆகவே அதையும் யோசிக்க வேண்டும். எவ்வளவு நேரம்தான் இவர் பக்கெட்டுகளை ஆராய்வார். இறுதியில் ஏதோ கொசு கடித்ததுபோல உடம்பின் கீழ்ப்பாகத்தை மெல்ல ஆட்டினார். உதடுகளைச் சுருக்கி பிரயத்தனமாக வாயை திறந்தார். ஆனால் வார்த்தை வெளியே வரவில்லை. அவர் தலையை குனிந்து நெஞ்சிலே ஒட்டுவதுபோல வைத்துக்கொண்டார்.

பஸ்சிலே கோடு கோடாக வெளிச்சம் இறங்கத் தொடங்கியிருந்தது. நான் என் முகத்தை பஸ் ய(ஜ)ன்னலில் பார்த்தேன். பதற்றமாகத்தான் தென்பட்டது. சாரதி சங்கிலி பூட்டை திறந்து பயணியின் நாற்காலியை விடுவித்தார். பஸ் கதவை திறந்தார். இறங்கு பலகை மெதுவாக ஆடி அசைந்து இறங்கி நிலத்தை தொட்டு நின்றது. பயணி சாவகாசமாக தன்னுடைய சக்கர நாற்காலியை இயக்கி லாவகமாகத் திருப்பி நிலத்தை அடைந்து பஸ்சிலிருந்து நகர்ந்து இடம் விட்டார். சாரதி மறுபடியும் விசையை அமர்த்தி பலகையை உள்ளே இழுத்தார். கதவை பூட்டினார். மேலும் ஐந்து நிமிடங்கள் கடந்தன.

அ.முத்துலிங்கம் இரண்டு டாலர்மறுபடியும் பஸ் கிளம்பி சிறிது தூரம் நகர்ந்திருக்கும். நாற்காலி பயணி கைகளை மேலே தூக்கி ஆட்டி ‘இரண்டு டாலர், இரண்டு டாலர்’ என்று கூவினார். இத்தனை நேரமும் அவர் கையில் இரண்டு டாலர் இருந்ததை மறந்துவிட்டார். பஸ் சாரதி முடிவு எடுக்க வேண்டிய நேரம். பஸ்சை நிறுத்தி கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினார். கதவை திறந்தார். இறங்கு பலகையை இறக்கினார். அது மெல்ல அசைந்து அசைந்து இறங்கி நிலத்தை தொட்டது. நான் கைக்கடிகாரத்தை பார்த்தேன்.

இதற்குத்தான் காத்திருந்ததுபோல பக்கத்து இருக்கைப் பயணி குவளை விளிம்பிலே சிந்திய காப்பியை நக்கிவிட்டு குடிக்க ஆரம்பித்தார். குதிரை கால்களைத் தூக்கி பாய்வதுபோல நான் செல்போன்காரரையும், குறுஞ்செய்திகளையும் கடந்து பின் கதவு வழியாக இறங்கி எதிர் திசையில் நடக்கத் தொடங்கினேன்.

வேலை கிடைக்காவிட்டால் என்ன? நாற்காலிப் பயணி, இரண்டு டாலரை கண்டுபிடித்தது கொண்டாடப்பட வேண்டிய தருணம் அல்லவா? என்பையில் எஞ்சியிருந்த இரண்டு டாலர் காசுக்கு மதியம் என்ன சாப்பிடலாம் என்ற நினைப்பில் மனம் லயித்தது.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் 
முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

***
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்ததை வைத்து பா.ஜ.க அரசு மலிவான விளம்பரத்தை செய்து வருகிறது. சாலைகள், நகரங்கள், கட்டிடங்கள், பல்கலைகள் அனைத்தும் வாஜ்பாய் பெயர் மயமாகிறது. தமிழகத்தில் தேர்தல் அரசியலில் இருக்கும் இடது சாரிகள், வி.சி.க உள்ளிட்டோர் கூட வாஜ்பாய் புகழஞ்சலியில் கலந்து கொண்டனர். இவர்களே இப்படி எனும் போது மற்றவர்களை சொல்லத் தேவையில்லை.

உண்மையில் இந்த புகழுரைகளுக்கு அருகதை உள்ளவரா வாஜ்பாயி? பார்ப்பனிய இந்துமதவெறி அமைப்புக்களின் அத்தனை குற்றங்களிலும், மக்கள் விரோத சித்தாங்களிலும் பங்கு பெற்ற ஒருவரை ஏதோ மிதவாதி, நல்லவர் என்று மதி மயங்கி போற்றுவது சரியா?

வாஜ்பாயிஆர்.எஸ்.எஸ். ஊழியராக வெள்ளைக்காரனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்தது முதல் 1999-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராகி வல்லரசு நாடுகளுக்கு நாட்டையே தாரைவார்க்கும் தொழிலை செவ்வனே செய்து வந்தவர்தான் வாஜ்பாய் எனும் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்.

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் என ஆர்.எஸ்.எஸ்.கிரிமினல்களால் நடத்தப்பட்ட அத்தனை வெறியாட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் உடனிருந்து முட்டுக்கொடுத்த யோக்கிய சிகாமணிதான் நமது வாஜ்பாய்.

வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது! அத்வானியும், அசோக் சிங்காலும் கொம்பேறி மூக்கன் வகையறா என்றால், நமது ’நல்லவர்’ வாஜ்பாய் ஒரு அக்மார்க் ‘நல்ல பாம்பு’ என்பதை அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல்

பாருங்கள் பகிருங்கள் !

பாடல் வரிகள்:

வாஜ்பாயி… வாஜ்பாயி…
வாராது வந்த நம்ம வா…ஜ்பாயி

வாரார் வாரார் நம்ம வாஜ்…பாயி – அப்டி
வாரார் வாரார் நம்ம வாஜ்…பாயி

நாடே போற்றும் பிரதமர் இவரு
இவரப்போல தலைவரு எவரு…?

ஆயிரம் யானை மோதினாலும்…
அசைக்க முடியா ஆட்சி…
அடிச்சி சொன்னார் அடல் பிகாரி
அதுதான் சூப்பர் பேச்சு…
பிரதமர் பதவி சீட்டுக்குள்ளே போயசு மூட்டப்பூச்சி – வெளிய
தெரிஞ்சிடாம சொறிஞ்ச சொறியில
தேசிய வேட்டி கிழிஞ்சி போச்சு…

அலையலையாக எம்.பி. வந்தான்
ஆளுங்கட்சிக்கு மாறி…
சொள சொளயாக அள்ளித் தந்தார்
யாரு…? அந்த பாரி…
அவர், புள்ளக்குட்டி  ஏதுமில்லா கட்ட பிரம்மச்சாரி – ரொம்ப
உள்ள போயி நோண்டாதீங்க…
அயா…ம் வெரி சாரி…

எதிரிகள் கூட்டம் நடுநடுங்கும்
இடி முழக்கப் பேச்சு…
எதுகை மோனை சந்தம் துள்ளும்
பிரதமர் கவிதை வீச்சு…
எப்பேர்ப்பட்ட கிளிண்டனையே…
காச்சிட்டாராம் காச்சி… – கூப்ட்டு
எக்…குனார்  பார் ஜெயலலிதா…
எதுகையும் மோனையும் கொழம்பிப் போச்சு…

அய்யோ என்றார் அநீதி என்றார்…
அழுதார் அடல் பிகாரி…
அயோத்திக்காக  வடித்த கண்ணீர்
தேரும் ஒரு லாரி

பாம்புகளெல்லாம் அடையுமெடந்தான்
ஆர்.எஸ்.எஸ்சு கேம்ப்பு…
கூட்டணி கட்சிகாரங்க எல்லாம்
சும்மா… வெத்தல காம்பு…
அத்வானிக்கும் சிங்.. காலுக்கும்
கொம்பேரி மூக்கன் வீம்பு… ஆனா
அப்படி இல்ல அடல் பிகாரி…
பாவம் நல்ல பாம்பு….

******

நெருங்குகிறது எமர்ஜென்சி ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

பத்திரிகை செய்தி

29.08.2018

நெருங்குகிறது எமர்ஜென்சி !

5 மாநிலங்களில் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மக்கள் உரிமை போராளிகள் கைதுசோதனையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறோம்!

இந்து மதவெறி பார்ப்பன பாசிச மோடி அரசு போராளிகள் மீதான  நரவேட்டையை தீவிரமாக்கி இருக்கிறது. மோடியைக் கொல்ல சதி என ஒரு அப்பட்டமான பொய்யை சொல்லி தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள்  5 பேரை கைது செய்திருக்கிறது மராட்டிய பாஜக அரசு.

கவிஞர் வரவர ராவ் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ் வழக்கறிஞர் அருண் பெரிரா பத்திரிக்கையாளர் கௌதம் ஆகியோர் ஆள்தூக்கி உஃபா சட்டத்தின் கீழ் செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி இதே காரணத்திற்காக பேராசிரியர்கள் சத்யநாராயணா ஆனந்த் தெல்தும்டே  பாதிரியார் ஸ்டாண்சாமி பத்திரிக்கையாளர் குர்மலாக் (வரவரராவ்  மருமகன்) கிரந்தி தெகுலா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்து இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் ரோனா வில்சன் உள்ளிட்ட 5 பிரபல மனித உரிமைப் போராளிகள் கொடிய உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மோடியை கொல்ல சதி செய்யும் கடிதம் ஒன்றை கைப்பற்றியதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதே காரணத்தை கூறி இப்போது கைது சோதனை என அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி கும்பல்.

கடந்த ஜனவரியில் மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் பார்ப்பனர்களை தாழ்த்தப்பட்ட படை வீரர்கள் வெற்றி கொண்ட 200வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சார்ந்த ரவுடிகள் கலவரம் செய்தனர்.

இதனை தொடர்ந்து மனித  உரிமைகளுக்காகவும் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும் எழுதி, பேசி வருகின்ற நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்கள் பேராசிரியர்கள்  இடதுசாரி சிந்தனையாளர்கள் அறிவுத்துறையினர்  கழுத்தை நெரித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கிறது மோடி அரசு.

அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதின் தொடக்கம் தான் இந்த கைது சோதனை. ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மையினர் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோர் நலனைக் காப்பாற்ற முடியாது.

எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம் ஓரணியில் திரண்டு முறியடிப்போம்.

– தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?

டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா ?

நூற்றுக் கணக்கான சீனியர் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு குறிவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு செயற்கையாக, நியாயமின்றி குறைந்த ரேட்டிங் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புராஜக்ட் மறுக்கப்பட்டு, எச்.ஆர்-ஆல் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அதை எதற்கு எங்களிடம் கூறுகிறீர்கள்? நாங்கள் டெக் மகிந்த்ராவில் வேலை செய்யவில்லையே? நாங்கள் என்ன செய்ய முடியும்?

2015-ல் டி.சி.எஸ், 2017-ல் விப்ரோ, காக்னிசன்ட், ஐ.பி.எம், டெக் மகிந்த்ரா, 2018-ல் வெரிசான், மீண்டும் டெக் மகிந்த்ரா. இப்படி எல்லா ஐ.டி கம்பனிகளிலும் வேலை பறிப்பு என்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

இது வேலை இழப்பு அல்ல, வேலை பறிப்பு. விழித்துக் கொண்டு நாம் எல்லோரும் கைகோர்க்கா விட்டால் இது ஒரு வாடிக்கையாகி விடும்.

எனக்கு எல்லாம் வேலை போகாது, நான் கம்பெனிக்கு விசுவாசமாகத்தான் வேலை செய்கிறேன்.

அப்படித்தான் மேலே சொன்ன டெக் மகிந்த்ரா, விப்ரோ, காக்னிசன்ட், டி.சி.எஸ் ஊழியர்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

நம்முன் உள்ள மிகப் பெரிய சவால், இருக்கிற வேலையைத் தக்கவைத்துக் கொள்வது. இதற்காக நாம் முழு மூச்சுடன் ‘விசுவாசத்துடன்’ வேலை செய்து கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் 8 மணி நேரத்திற்கு மேல், நமது சுக துக்கங்களை இழந்து, குடும்பத்தை தவிர்த்து, நமது அனுபவம் மற்றும் துறை சார்ந்த வேலை என்றில்லாமல் கொடுக்கப்படும் அனைத்து வேலைகளையும் நம் திறமைக்கு சிறப்பாக, வேகமாக செய்ய முற்படுகிறோம். சிலர் ஜால்ரா அடிப்பது, போட்டு கொடுப்பது, எட்டப்பன் பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள் என்று பார்க்கிறோம். அதைப் பற்றி பேசுகிறோம்.

ஒருவகையில் நாம் அனைவருமே வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அனைத்து வேலைகளையும், தெரிந்தும், தெரியாமலும், செய்து கொண்டுதான் இருக்கிறோம். நம்முடைய சொந்த நேரம் அல்லது பணம் அல்லது இரண்டுமே செலவழித்து, நிறுவனத்தின் நலனுக்காக அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டும் வருகிறோம்.

இத்தனையும் சிறப்பாக செய்தாலும் நிறுவனம் தனது செலவு குறைப்புக்காக ஆட்களை துரத்த முடிவு செய்யும் போது இது எல்லாம் கணக்கில் வருவதில்லை என்பது நிதர்சனம்.

ம்ம். நீங்கள் சொல்வது சரிதான்? ஆனால் என்ன செய்வது. போகச் சொன்னால் கேள்வியே கேட்க முடியாது. வேறு வேலை தேடி போக வேண்டியதுதானே ஒரே வழி? எல்லோரும் அதைத் தானே இவ்வளவு காலம் செய்து கொண்டிருக்கிறோம்.

இதை எத்தனை காலத்துக்கு நாம் சகித்துக் கொள்ளப் போகிறோம்.

இது ஏதோ ஒரு நிறுவனம், அதன் ஊழியர்களை வேலையிலிருந்து துரத்துவது அல்ல, எல்லா கார்ப்பரேட்டுகளும் இணைந்து ஒட்டு மொத்த ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறிப்பது என்பதாக உள்ளது. எந்த நிறுவனத்திற்கு போனாலும் இதுதானே நிலைமை.

அப்படியானால், இப்படி நாம் துரத்த துரத்த ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? இப்படியே நாம் பணிந்து போனால், எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் நிலைமை எப்படி இருக்கும்?

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும். இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

ராஜினாமா செய்ய மறுக்க வேண்டும். என்ன மிரட்டினாலும் ராஜினாமா செய்யக் கூடாது.

அப்படியென்றால், இவ்வளவு பெரிய கார்ப்பரேட்டுகளை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? வாய்ப்பே இல்லை?

ஆம்.

இதில் பாதி உண்மை உள்ளது. கார்ப்பரேட்டுகள் மிகப் பலம் பொருந்தியவைதான். பணம் பார்லிமென்ட் வரை பாயத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய பலம் அதைவிட பலமடங்கு அதிகமானது. நம் பலம் குறித்து நாம் குறைவான மதிப்பீட்டையே வைத்துள்ளோம். நம்முடைய பலமே நமது எண்ணிக்கைதான். அதை பயன்படுத்த நாம் சங்கமாக ஒன்று சேர வேண்டும்.

சங்கமா? சங்கம் என்பது தொழிலாளர்களுக்குத்தான். ஐ.டி ஊழியர்களுக்கு கிடையாது.

இந்தக் கேள்வியே ஒரு பரிதாபமான நிலையைத்தான் காட்டுகிறது. நாம் தொழிலாளர்கள் இல்லை என யார் கூறியது? எதற்கெடுத்தாலும் இணையத்தை தோண்டி நமக்கு தேவையான விசயத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நாம், என்றாவது நமக்கான உரிமை, தொழிலாளர் என்பதற்கான வரையறை, தொழில் தகராறு சட்டம் என்றால் என்ன? அது நமக்கான என்ன உரிமைகளைக் கொடுத்துள்ளது? நாம் அதன் கீழ் வருவோமா என்று பார்த்துள்ளோமா?

தேர்தலில் ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை, அடிப்படை உரிமை என எகிறும் நாம், என்றாவது நமது வாழ்க்கையை நடத்த தேவைப்படும் பணியிட ஜனநாயக உரிமை என்ன என்று யோசித்ததுண்டா?

உண்மை என்னவெனில், தொழிற்சங்கம் என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. நாம் அனைவரும் கணினியை பயன்படுத்தி உழைக்கும் தொழிலாளர்கள்தான். தொழில்தகராறு சட்டம் உட்பட தொழிலாளர் சட்டம் அனைத்தும் நமக்கும் பொருந்தும் என்பதே உண்மை. இனிமேல் இதை நோக்கியும் நமது தேடுதலைச் செலுத்துவோம்.

எங்கள் நிறுவனத்தில் சங்கம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சங்கம் என்று கூறினால் ப்ளாக் மார்க் வரும். சங்கம் மூலம் கேள்வி கேட்டால் ரிலீவிங் லெட்டர் கொடுக்க மாட்டார்கள், டெர்மினேட் செய்து விடுவார்கள். வேறு எங்கும் வேலை கிடைக்காது.

இந்தக் கருத்து உங்களுடையதா… .இல்லை இல்லை. கார்ப்பரேட்டின் குரல் இது. கார்ப்பரேட்டிடம் வேலை செய்து செய்து, அவன் சொன்னா சரியாகத்தான் இருக்கும், தவறாக இருந்தாலும் பிழைப்பை ஓட்டணுமே என்று அடங்கி அடங்கி வேலை செய்ததன் விளைவு இது. கார்ப்பரேட்டின் கருத்தை நமது கருத்தாகவே ஆக்கிவிட்டோம்.

சங்கம் வைக்கும் உரிமை அரசியல் சட்டமும், இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ம் வழங்குவது. இதை மறுக்க எந்த ஒரு தனிநபருக்கும், நிறுவனத்துக்கும் அதிகாரம் கிடையாது என்பதுதான் உண்மை.

NDLF, FITE போன்ற ஐ.டி தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் வெளிப்படையாக சங்கத்தில் செயல்படுகிறார்கள், தமது நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.

நீங்க சொல்வது சரிதான். ஆனா, நிறுவனத்தை எதிர்த்து வேலையை காப்பற்றுவது, அதை தக்க வைத்துக்கொள்ளுவது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இப்பெல்லாம், நிறுவனத்திடமிருந்து ஃபைனல் செட்டில்மென்ட் ஐ முழுமையாக, முறையாக வாங்குவதே குதிரைக் கொம்பாக உள்ளது?

ஆம். சரிதான். ஆனால் நமக்குத் தெரிந்த விசயங்கள் கடுகளவு, தெரியாத விசயங்கள் கடலளவு. தொழிற்சங்கங்கள் சாதித்த விசயங்கள் கடலளவு உள்ளன. தொழிற்சங்கங்களைக் கண்டு கம்பெனி பயப்படுவது ஏன்? அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

நமது இந்த விவாதம் வெறுமனே நமது வேலை தொடர்பான விவாதம் மட்டும் அல்ல. இதுவரை லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் பெற்ற தொழிற்சங்க உரிமைகள் மீதான கேள்விகள், சந்தேகங்கள். கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதியான, தானே ஒரு பெரிய கார்ப்பரேட்டான அரசிடமிருந்து (காலனிய காலத்திலேயே) தொழிலாளர்கள் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற உரிமைகள் மீதான விவாதம்.

இன்றுவரை பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து, தனியார் நிறுவனங்கள் வரை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க சங்கம் ஒரு கலங்கரை விளக்காக திகழ்கிறது. அதனால்தான் போக்குவரத்து, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆலைகள் என்று அனைத்து துறைகளிலும் சங்கம் இன்னும் உயிர்த்துடிப்போடு செயல்படுகிறது.

ஆனால் நாமோ நம் கண்முன்னே, நமது முன்னோர் போராடிப்பெற்ற உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறோம். அதுவே கார்ப்பரேட்டுகளின் மூச்சுக்காற்றாக பரிணமிக்கிறது.

நமக்காக மட்டுமல்ல, நம்முடைய அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவும் அவசியம் தேவைப்படுவது ஒற்றுமை; தொழிலாளர்களாக நாம் ஒன்றுபடுவது. அதுதான் நமது குழந்தைகளின் வாழ்க்கையை, எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திரா. இவர்களின் தொடர்ச்சியான இந்த வேலைப்பறிப்புக்கு மூலகாரணமே நமது ஒற்றுமையின்மைதான்.

சரி. சரி எல்லாம் புரிகிறது. என்னதான் செய்வது?

இந்தியா முழுவதும் கம்ப்யூட்டரின் முன் நமது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும், கார்ப்பரேட்டுகளின் அசுர வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஐ.டி துறை தொழிலாளர்களும் நமது ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சங்கமாக‌ ஒன்றிணைவோம்.

ஆரம்பத்தில் அந்நியமாக இருந்த “தொழிலாளர்”, “சங்கம்” என்ற‌ வார்த்தைகள் இப்போது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது!

இதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக, நமது ஒற்றுமையை உலகுக்கு முன்னறிவிக்கும் வகையில் எல்லோரும் கைகோர்ப்போம்,

ஆட்குறைப்புகளுக்கு நமது எதிர்ப்பை தெரிவிப்போம், சங்கமாக இணைவதை பேரலையாக மாற்றுவோம்.

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.

  • ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
  • சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
  • நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!
  • பிரசுரம் பி.டி.எஃப். கோப்பு: டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது?
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு.
தொடர்புக்கு – தொலைபேசி 9003009641, மின்னஞ்சல் combatlayoff@gmail.com

நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !

மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணம் தொடர்பான தகவல்களை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படி வெளியிடுவது பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்கிறது. இது ஒரு வடிகட்டிய பொய் என்கின்றனர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன்.

கடந்த ஆகஸ்ட் 8, 2018 அன்று அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட முழு அறிக்கையின் சற்று சுருக்கப்பட்ட மொழியாக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமான பேர ஊழல்
பத்திரிகையாளர் சந்திப்பில், பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா

மோடி அரசின் கீழ் ரபேல் போர் விமானங்கள் வாங்கும் நடைமுறை திடீரென மாற்றப்பட்டது; இந்திய அரசு கடைபிடிக்கும் வழக்கமான அடிப்படை நடைமுறைகள் அனைத்தும் தூக்கியெறியப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் குழப்பமான மற்றும் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்கள் தொடர்ந்தன. ஊடகங்கள் மொத்தமாக மழுங்கடிக்கப்பட்டன. விமானத் தளவாடங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் வாய்ந்த உள்நாட்டு அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)-ஐ இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைத்து, ஒரு பெயர்ப் பலகை நிறுவனத்தை ஒத்த, விமானத் தளவாடங்கள் உற்பத்தி குறித்து குறைந்தபட்ச அனுபவம்கூட இல்லாத,  தொடர்ந்து பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வருகின்ற, கடனில் மூழ்கிய ஒரு தனியார் நிறுவனம் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிலான முறைகேடுகளனைத்தும் ஒட்டுமொத்தமாக அரங்கேற்றப்பட்ட இந்த ரபேல் ஒப்பந்த ஊழல்தான் பாதுகாப்புத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாகும். இந்த ஊழலானது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமன்றி இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

நாங்கள் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இங்கு முன்வைக்கிறோம்.

  • ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய அரசு உடனே வெளியிட வேண்டும். குறிப்பாக எவ்வளவு பணம் இந்திய அரசால் செலுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
  • எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று மத்திய அரசை இவ்விவகாரத்தில் எதிர்க்க வேண்டும்; ஏனென்றால் மோடி தலைமையிலான இந்த அரசு, ஊழல் புரிந்ததோடு மட்டுமன்றி, அரசு நிறுவனத்தை ஒதுக்கிவைத்து தனியார் நிறுவனத்தை உள்நுழைத்து ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
  • இந்த அரசு மூடி மறைக்கும் அத்தனை உண்மைகளையும் வெளிக்கொண்டு வர அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும்.

ரபேல் விமான பேர ஊழல்சில உண்மைகளும் கேள்விகளும்

1. கடந்த 2007-ம் ஆண்டு இந்திய விமானப் படை வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 126 மத்திய ரக பல்நோக்கு போர் விமானங்களை (Medium Multi-Role Combat Aircrafts (MMRCA)) வாங்குவதற்கென வரைவுத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி முதன்முதலில் போர் விமானங்களை வாங்குதல், தொழில்நுட்பங்கள் பகிரப்படுதல், பிறகு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் உரிமம் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். கூடுதல் சேர்க்கைகள் இருப்பதால்தான் ’தஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்கு கூடுதலாகப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது என மத்திய அரசு கூறுவதைப் பொய் என நிருவுகிறது மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம்.

2. தஸ்ஸால்ட் ஏவியேஷன், லாக்கீட் மார்ட்டீன், போயிங், சாப், யூரோ ஃபைட்டர், ரஷ்யன் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்கள் போர் விமானங்களுக்கான ஏலத்தில் பங்குபெற்றன. பரிசோதனை ஓட்டம், தொழில்நுட்ப மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய விமானப்படை 2011-ம் ஆண்டு தஸ்ஸால்ட் நிறுவனம் மற்றும் யூரோ ஃபைட்டர் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக உள்ளன என அறிவித்தது. 2012-ம் ஆண்டு ஏல மதிப்பீட்டின் அடிப்படையில் தஸ்ஸால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

3. தொடர்ந்து நடைபெற்ற பேரங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட இறுதிநிலையை அடைந்தனர். கடந்த 25.03.2015 அன்று பிரான்சில், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியர் ”எச்.ஏ.எல் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது விரைவில் நடந்தேறும்” என்று அறிவித்தார்.

4. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது.

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி எரிக் ட்ரேப்பியர்

முதலாவதாக தஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு சில போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், ஏனென்றால் மிக்-21 மற்றும் மிக்-27 வகை போர் விமானங்களின் வாழ்நாள் சேவை நிறைவுற்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்று விட்டன. இந்திய வான்வெளி உற்பத்தித்துறை சீர்செய்யப்படுவது மிகவும் அவசியம்; இதற்காக நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளை இந்தியா விரைவில் பெற்றாக வேண்டும்.

பல பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்திய அரசின் விமான உற்பத்தித் துறை நிறுவனமான எச்.ஏ.எல்-ஐ அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்தியாவால் வாங்கப்படும் ரபேல் விமானங்களை உள்நாட்டிலேயே மராமத்துப் பணிகளைச் செய்துகொள்ளலாம். ஏனென்றால் இவை 30 முதல் 40 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருக்கும். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் நாமே போர் விமானங்களை உற்பத்தி செய்துகொண்டு தன்னிறைவு பெறலாம்.

5. இதனடிப்படையில் மொத்தம் 18 விமானங்களை முழுவதுமாக இறக்குமதி செய்துகொண்டு, மீதமுள்ள 106 விமானங்களையும் எச்.ஏ.எல் நிறுவனம் மூலமாகவே உற்பத்தி செய்துகொள்ளலாம். 2007-ம் ஆண்டு போடப்பட்ட வரைவுத் திட்டத்தில், மொத்தமுள்ள 126 ரபேல் போர் விமானங்களுக்கு ரூ.42,000/- கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இறுதி மதிப்பீடு பொதுவில் வெளியிடப்படவில்லை. 13.04.2015 அன்று மோடியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு, தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேட்டியளித்த அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ’126 போர் விமானங்களுக்கான மொத்த விலை ரூ.90,000/- கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; ஏனென்றால் ரபேல் விமானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் தொழில்நுட்பத்தில் மற்றவற்றை விட மிகவும் முன்னேறியவை; எனவே 126 போர் விமானங்களுக்கு ரூ.90,000/- கோடி என்பது தவிர்க்கவியலாதது’ என்றார். இந்தக் கூற்றின்படி ஒரு போர் விமானத்திற்கு ரூ.714 கோடி செலவாகும் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பாரிக்கர் கூறிய முக்கியமான விடயம் 90,000 கோடி என்பது ஒப்பந்தத்தில் போடப்பட்ட அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியது என்பதாகும்

6. ஏற்கனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தின்படி 18 போர் விமானங்களை (முழுமையான பயன்பாட்டில் உள்ள) வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், புதிதாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மோடி அரசின் மாயாஜால வித்தை வெளியில் தெரிந்துவிடும்.

7. பழைய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போன்று 108 விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு ஆகப்போகின்ற செலவும், 18 விமானங்களை தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கும் பாரிய அளவிலான வித்தியாசமிருக்கும். ஏனென்றால் நேரடியாக வாங்குவது என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி செய்வதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால் ஒரு போர் விமானத்திற்கான உற்பத்தி செலவு, ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல்-ல் உற்பத்தியைத் தொடங்கும் போதுதான் கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம், இன்னபிற செலவுகள் உட்பட ஒட்டுமொத்த செலவும் (ஒரு போர் விமானத்திற்கு) ரூ.714 கோடியை எட்டும் என்பது மோடி அரசு போட்ட கணக்கீட்டின்படியே செல்லும். எனவே 36 ரபேல் போர் விமானங்களை நேரடியாக தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் வாங்கும் போது ஒரு விமானத்திற்கான விலை என்பது ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டுமென்பது மிகத்தெளிவான செய்தி

8. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து கூறுகையில் ”ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தஸ்ஸால்ட் நிறுவனம், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையுடன் பிரதமர் மோடியின் பிரான்சு பயணத்தைத் தொடர்புபடுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் மேல்மட்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது பாதுகாப்பு குறித்த மற்ற அம்சங்கள் குறித்தோ பேசுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது”.

பிரதமர் மோடியின் ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக திரு.ஜெய்சங்கரின் மேற்சொன்ன கூற்றிலிருந்து 4 விடயங்கள் நமக்குத் தெளிவாகப் புரிகின்றன.

  • பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  • முதன்முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
  • எச்.ஏ.எல் நிறுவனம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் பங்குபெறுகிறது.
  • இந்தியப் பிரதமரும், பிரான்சு அதிபரும் வேறு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவிருக்கின்றனர்.
ரபேல் விமான பேர ஊழல்
எஸ். ஜெய்சங்கர்

இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து (10.04.2015) மோடி தன்னிச்சையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிரான்சு நாட்டு நிறுவனத்துடன் செய்துகொண்ட புத்தம் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரான்சு அரசுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் ’இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்படி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்க்கும் பணி திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்திய விமானப்படை போர் விமானங்களின் தரம் குறித்து உறுதி அளிக்கும் பட்சத்தில் மற்ற போர்க்கருவிகளையும் அனுப்பி வைக்கவிருப்பதாகவும் மேலும் போர் விமானங்களைப் பராமரிக்கும் பணி பிரான்சு நிறுவனத்தின் பொறுப்பிலேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்தது.

இந்த அறிக்கை இரண்டு முக்கியமான விடயங்களை தெளிவாக்குகிறது.

  • 36 ரபேல் போர் விமானங்களுக்கான மொத்த விலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட 18 விமானங்களின் விலையை விட மிகவும் குறைவானதாகவே இருக்க வேண்டும்
  • முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட மத்திய ரக பல்நோக்கு போர் விமானம் தொடர்பான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் 36 போர் விமானங்களுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட பணமதிப்பு மிக மிக அதிகம் என ஒரு தகவல் உலா வந்தது.

மோடியின் ஊழல்
மனோகர் பாரிக்கர்

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கேட்கப்பட்டபோது அவர் தன்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஒரே போடாக போட்டுடைத்துவிட்டார். மேலும் இது தொடர்பாக என்.டி.டிவி செய்தி நிறுவனத்திற்கு 13.04.2015 அன்று அளித்த பேட்டியில் ”இது பிரதமர் மோடியின் முடிவு; எனவே எனக்கு இதில் வேறெந்த வேலையுமில்லை; மேலும் இது இரு நாட்டு தலைவர்கள் கலந்தாலோசித்து எடுத்த முடிவு. எனவே கருத்து எதுவும் சொல்ல முடியாது” என்று நழுவிக்கொண்டார்.

இந்தப் புதிய ஒப்பந்தத்தில் ஆச்சர்யமூட்டும் வேறு சில செய்திகளும் உள்ளன.

  • 36 போர் விமானங்கள் வாங்க வேண்டுமென்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது விளக்கப்படவில்லை
  • இந்தியாவில் உற்பத்தித் திட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் எந்தத் தகவலுமில்லை
  • தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றங்கள் குறித்து எந்த விளக்கமுமில்லை.
  • இந்திய விமானப்படை 126 போர் விமானங்கள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்த பட்சத்தில், எந்த அடிப்படையில் அவை 36 ஆகக் குறைக்கப்பட்டன என்ற விவரமும் இல்லை.

மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கும் இந்திய அரசு தெரிவித்த ஒரே பதில் இந்திய விமானப்படையின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் 36 விமானங்களும் இன்னும் இரண்டு வருடத்திற்குள் நம் கைக்கு வந்துவிடும் என்று மட்டும் கூறி நிறுத்திக்கொண்டது.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், ரபேல் போர் விமானம் இந்திய விமானப்படை வசம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. செப்டம்பர் 2019-க்குள் போர் விமானங்கள் வந்துவிடும் என்று நம்பப்படுகிறதாம். மேலும் குறிப்பிடப்பட்ட 36 போர் விமானங்களும் 2022-ம் ஆண்டு மத்தியில்தான் நம் கைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

ரபேல் விமான பேர ஊழல்
ரஃபேல் விமானம் வாங்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் நிர்மலா சீதாராமன்

2007-ல் போடப்பட்ட ஒப்பந்த வரைவின்படி இந்நேரம் 18 போர் விமானங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் நம் கைகளில் வந்திருப்பதோடன்றி, தஸ்ஸால்ட் நிறுவனமும் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி 2022-க்குள் 108 விமானங்களையும் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்து முடிக்கும் திறனையும் எட்டியிருக்கும். இந்திய விமானப்படையின் அவசரத் தேவை என்பதைப் பயன்படுத்தி 36 விமானங்களை 2022 மத்தியில் வாங்கி முடிப்பதற்கும், 108 விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும் வித்தியாசம் என்பது இந்த நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்பதைத் தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும்?

மேலும் சில கேள்விகள் இப்போது எழுகின்றன

  • கடந்த 2007-ல் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை அவசர நிலை கருதி ரத்து செய்து 36 விமானங்களை உடனே வழங்குமாறு இந்திய விமானப்படை மத்திய அரசிடம் எப்போது கோரிக்கை வைத்தது?
  • அப்படி வைத்ததென்றால் 126 விமானங்கள் பாதுகாப்புக்கு வேண்டுமென்ற கோரிக்கை எந்த அடிப்படையில் இந்திய விமானப் படையால் கோரப்பட்டது?
  • இந்திய – பிரான்சு நாடுகளின் கூட்டறிவிப்புக்கு முன் (ஏப்ரல் 2015-க்கு முன்), மத்திய அரசு நாடாளுமன்ற அமைச்சரவையில் 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதலைப் பெற்றதா?
  • ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில், ஏன் புதிய டெண்டர்கள் (ஏலமுறை) கோரப்படவில்லை? குறிப்பாக யூரோஃபைட்டர் நிறுவனம் 04.07.2014 அன்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய ஏலத்தொகையிலிருந்து 20% சதவீதம் வரை கழிவுகள் தர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய ஒப்பந்தமும், எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்படுதலும்

9. கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தஸ்ஸால்ட் மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 108 போர் விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனமே உற்பத்தி செய்யும் பட்சத்தில், அதற்குத் தேவையான மற்றும் இன்னபிற வசதிகளை தஸ்ஸால்ட் நிறுவனம் செய்து தருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மோடியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், இரண்டு புதிய தனியார் நிறுவனங்களின் பெயர் அடிபட்டது. அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் லிட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிட் ஆகிய இரு நிறுவனங்கள்தான் அவை.

மோடியின் ஊழல்
மோடியின் அன்பர்கள் அனில் அம்பானி, அதானி

10. அதானி, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்ட சில நாட்கள் கழித்து 10.04.2015 அன்று மோடி வெளியிட்ட அறிவிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கவிருப்பதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு நான்கு அதிர்ச்சி தரும் விவரங்களை உள்ளடக்கியுள்ளது.

  • கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட ஒப்பந்தத்தின் கதி என்னவாயிற்று என்பதும், அந்த ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், தரவுகளும் என்னவாயின என்பதும் தெரியவில்லை
  • இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டது; அதோடு கூடவே ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் குப்பையில் போடப்பட்டது.
  • ’மேக் இன் இந்தியா’ குப்பையில் போடப்பட்டது மட்டுமன்றி, போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த பேச்சும் புறந்தள்ளப்பட்டது.
  • குறுகிய காலத்திற்குள்ளாகவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் உள்நுழைக்கப்பட்டு பில்லியன் டாலர் வருமானம் தரக்கூடிய ரபேல் நிறுவன ஒப்பந்தத்தின் முழு பலன்கள் அனைத்தும் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டது.

11. புதிய ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்திடப்பட்ட பிறகு தஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனங்களுக்கிடையிலான புரிதலின் அடிப்படையில் கூட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அனில் அம்பானி தலைமை செயல் அதிகாரியாகச் செயல்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 51% பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் 49% பங்குகள் தஸ்ஸால்ட் நிறுவனத்திடமும் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்திற்கு 70% இலாபம் கிடைக்கும், அதாவது மொத்த பொறுப்பீட்டுத் தொகையான ரூ.30,000 கோடியில், ரூ.21,000 கோடி இந்தப் புதிய நிறுவனத்திற்கு இலாபத் தொகையாகக் கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது.

12. இதே மத்திய அரசால் 01.04.2016 அன்று அமல்படுத்தப்பட்ட புதிய இராணுவ ஒப்பந்த வழிகாட்டுதல் பிரிவு 8.6-ன் படி ”எந்த ஒரு புதிய அந்நிய முதலீட்டுத் திட்டமும் அது எத்தனை சிறிய பணமதிப்பைக் கொண்டதாக இருந்தாலும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ தங்கள் கையில் எதுவுமில்லை என்று கைகழுவுகிறது. அதோடன்றி தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் யாருடன் கூட்டு சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அந்த நிறுவனத்திற்கே தரப்பட்டுள்ளது. மேலும் எந்த அடிப்படையில் எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்பட்டது என்ற விளக்கமும் இதுவரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பிலோ அல்லது மத்திய அரசு தரப்பிலோ தரப்படவில்லை.

இராணுவப் போர் விமானங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் பெற்ற தஸ்ஸால்ட் நிறுவனம் எப்படி ஒரே ஒரு வருட அனுபவம் மட்டுமே பெற்ற ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் கூட்டுசேர முடிந்தது? அதுவும் மத்திய அரசின் ஒப்புதலே இல்லாமல்? இன்னொருபுறம் பார்க்கும்போது ரிலையன்ஸ் ட்ஃபென்ஸ் நிறுவனம் ரூ.8000 கோடி கடனில் மூழ்கியுள்ளது மேலும் ரூ.1300/- கோடி வியாபார நட்டம் ஏற்பட்டதோடன்றி, ஒட்டுமொத்த அனில் அம்பானி குழுமங்களுமே கடனைக் கட்டாமல் நட்டத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெருநிறுவனமாகும்.

13. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கோ அல்லது அது கூட்டு சேர்ந்திருக்கும் எந்த ஒரு நிறுவனத்திற்குமோ இராணுவ போர் விமானங்கள் தயாரிக்கும் அனுபவம் கொஞ்சம்கூட இல்லை. குஜராத்தில் உள்ள பிப்பாவாவ் கடற்படை கட்டுமான தளத்தில் ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்களைச் சந்தித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் அந்த ஒப்பந்தத்தையே நிறைவேற்ற வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முரணாக இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம், விமானங்கள் தயாரிப்பில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ற முன்னோடியாக இருக்கிறது. தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியரே இதை உறுதிபடுத்தியிருக்கிறார்.

ரபேல் விமான பேர ஊழல்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா

புதிய விமானங்களுக்கான விலையை வெளியிடாமல் இரகசியம் காக்கும் இந்த அரசு

14. பிரான்சு நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசிய நடவடிக்கைகளைக் கருதி போர் விமானங்கள் வாங்கப்படும் விலையை வெளியிட முடியாது என்று சாதிக்கிறது மத்திய அரசு. இது ஒரு அப்பட்டமான பொய்.

15. கடந்த 18.11.2016-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ” 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கென 23.09.2016-ம் தேதியன்று பிரான்சுடன் இணைந்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விமானம், உதிரிபாகங்கள், மராமத்து பணிகள், ஆயுதங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு விமானத்திற்கு ரூ.670 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 2022-க்குள் அனைத்து போர் விமானங்களும் இந்தியாவிற்குள் வந்துவிடும்” என்று பதிலளித்தார்.

மேற்சொன்ன கூற்றிலிருந்து தெரியவரும் உண்மைகள்

  • அரசாங்கம் ஒரு போர் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்லியிருக்கிறது.
  • ஒரு விமானத்திற்கு ஆகும் செலவு ரூ.670 கோடி என்றும் தெரியவருகிறது.
  • விமானம் மட்டுமன்றி ஆயுதங்கள், பராமரிப்புச் செலவுகள் உட்பட அனைத்தும் இந்த விலைக்குள் உள்ளடங்கியிருக்கிறது என்றும் தெரியவருகிறது.

16. போர் விமானத்திற்கான விலையைச் சொல்லும் வெளிப்படைத்தன்மை ஏதோ 2016-ம் ஆண்டில் மட்டும் தற்செயலாகச் சொல்லப்பட்டதல்ல. 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதியிலும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ரபேல் போர் விமானங்களின் விலைகுறித்து தகவல்கள் தரப்பட்டன.

17. இரகசியம் என்பது போர் விமானத்தின் பாகங்கள், செயல்திறன், வேகம் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் போன்றவற்றை வெளியிடக்கூடாது என்பதே தவிர விலை குறித்து இரகசியம் காக்கத் தேவையில்லை என்பதே. இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த பிரத்தியேக பேட்டியில் ‘ரபேல் போர் விமானங்களுக்கான விலையை வெளியிடும் முடிவு முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தினுடையது; இதில் எங்கள் தலையீடு எதுவுமில்லை’ என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

18. இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு இராணுவத் தளவாடங்களின் விலையையும் யார் வேண்டுமானாலும் இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நடைமுறை.

19. ரபேல் போர் விமானங்கள் 36-க்கான விலையை தஸ்ஸால்ட் அண்ட் ரிலையன்ஸ் நிறுவனமும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் 2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டுள்ளன. அதன்படி 36 விமானங்களின் விலை தோராயமாக ரூ.60,000 கோடி என்கிறது அவற்றின் அறிக்கை. அப்படியென்றால் ஒரு விமானத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1660/- கோடியாகும். பழைய ஒப்பந்தத்தில் கணக்கிடப்பட்ட 126 விமானங்களுக்கான விலையிலிருந்து பார்க்கும்போது இரண்டு மடங்குக்கும் மேல் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் நாடாளுமன்றத்தில் 18.11.2016 அன்று தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு விமானத்திற்கு ரூ.1000/- கோடி அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.

20. கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு போர் விமானம், ஆயுதங்கள், பராமரிப்பு என அத்தனை செலவுகளும் உட்பட ரூ.670/- கோடி என்று சொல்லிவிட்டு இப்போதோ கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால்தான் ரூ.1660/- கோடியாக அதிகரித்து விட்டது என்று பசப்புகிறது இந்திய அரசு

21. இந்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதை நிரூபிக்க மேலும் ஒரு உதாரணமாக தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிரேப்பியர் 19.02.2015 அன்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ‘போர் விமானுங்களுக்கான விலை நிர்ணயம் குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். முதல் ஒப்பந்தத்தில் என்ன விலை குறிப்பிடப்பட்டதோ அதுவேதான் இப்போதும் தொடர்கிறது’ என்று கூறியுள்ளார்.

22. இறுதியாக போபர்ஸ் ஊழல் வழக்கில் என்ன நடைமுறைகளை காங்கிரஸ் கையாண்டதோ அதே நிலையைத்தான் மோடியின் பாஜக அரசும் எடுத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை அநியாயமான முறையில் செலவிட்டு விட்டு, அதற்கான காரணங்கள் கேட்கப்படும்போது பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளியிடவிடாமல் தடுப்பது என்ற போக்கில்தான் இந்த அரசாங்கம் சென்று கொண்டுள்ளது.

மோடியின் ஊழல்
இவ்விவகாரத்தில் ஊழலின் நாயகன் – வெட்டி வாய்ச்சவடால் மோடி கல்லுளிமங்கனாய் மவுனித்திருக்கிறார்

மூன்று கேள்விகள் நம்முன்னே இப்போது எழுகின்றன

  • எந்த ஒரு வெளிநாட்டுடனும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்தின் வரம்புகளுக்கு உட்படாமல் செயல்படும் அதிகாரம் இருக்கின்றதா?
  • ஆர்.டி.ஐ மற்றும் சி.ஏ.ஜி போன்ற சட்டங்களுக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு அன்னிய நாட்டு ஒப்பந்தமும் போடப்பட முடியுமா?
  • அப்படியே இது போன்ற ஒப்பந்தங்கள் இரகசியமானது என்றாலும் ஊடகங்களுக்கு இந்த இரகசியத் தகவல்கள் எப்படி கிடைக்கின்றன, அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்த இரகசியத் தகவல்கள் கிடைப்பது சாத்தியமா என்ன?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அரசு எந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை அநியாய விலையில் வாங்குவதன் மூலம்

  • தேசப்பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுவிட்டது
  • அரசின் கருவூலம் அநியாயமாகச் சூறையாடப்பட்டுவிட்டது
  • அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் அநியாயமாகத் தூக்கியெறியப்பட்டுவிட்டது
  • விமான மற்றும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் குறைந்தபட்ச அனுபவமே இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் பெருமளவிலான நிதி அதாயம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும். அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேச நலன் மற்றும் தேசப் பாதுகாப்பினை காவு கொடுத்து பலதரப்பினரை வளப்படுத்தும் செயலாகும்.

பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பாதுகாப்பையும், அரசின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலைத் தடுப்பதையும், உறுதி செய்து மேற்பார்வையிடக் கூடிய பிற அமைப்புகளும், ஊடகங்களும் முதலில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தம் எவ்வாறு கீழிறக்கப்பட்டது என்பதையும் அதனிடத்தில் தகுதியற்ற மற்றொரு ஒப்பந்தம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதன் பின்னணியை தோண்டி வெளியிட வேண்டும்.

தமிழாக்கம்: வரதன்

மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?

0

நேற்று (28.08.2018) அதிகாலை 6 மணிக்கு டெல்லி, ஐதராபாத், ஃபரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை நடத்தியிருக்கிறது மகாராட்டிரா போலீசு.

சிவில் உரிமை செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவர ராவ் மற்றும் வழக்கறிஞர் வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகிய 5 பேர் ஊஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கோவா ஐ.ஐ.எம் -இல் பணியாற்றும் தோழர் ஆனந்த் தெல்தும்டெ,  ராஞ்சியில் பாதிரியார் ஸ்தான் சாமி, வெர்னான் கன்சால்வேசின் மனைவி சூசன் ஆப்ரகாம், ஐதராபாத்தில் பத்திரிகையாளர் கிராந்தி தெகுலா, வரவரராவின் மகள்கள் ஆகியோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கைது செய்யப்படுபவர்கள் பிரபலமான சிவில் உரிமை அமைப்புகளின் தேசியத்தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் என்ற போதிலும், கைது மற்றும் சோதனையின் போது பின்பற்ற வேண்டிய சட்டபூர்வ வழிமுறைகள் எதையும் மகாராட்டிரா போலீசு பின்பற்றவில்லை. கைது குறித்தும் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் மராத்தி மொழியில் எழுதி அதன் கீழ் கையெழுத்திடுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கை எதிர்பாராததல்ல. மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான “கடிதம்” தங்களிடம் சிக்கிவிட்டதாகவும் கூறி,  ஜுன் 7 ஆம் தேதியன்று வழக்கறிஞர்க்கள் உள்ளிட்ட 5 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.

கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த “மொட்டைக் கடிதம்” பீமா கோரேகான் நிகழ்ச்சியுடன் மாவோயிஸ்டுகளை மட்டுமின்றி ஜிக்னேஷ் மேவானி முதல் காங்கிரசு கட்சி வரையிலான அனைவரையும் தொடர்புபடுத்தி போலீசால் தயாரிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதில் கூடுதலாக “மோடியைக் கொல்ல சதி” என்ற மசாலாவும் சேர்க்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன கைதுகள் நடந்த ஒரு மாதத்துக்குள்ளாக,  அடுத்த புரளியை கடந்த ஜூலை 4 ஆம் தேதியே ரிபப்ளிக் டிவி கிளப்பத் தொடங்கி விட்டது.  பியுசிஎல் அமைப்பின் தேசிய செயலரான சுதா பரத்வாஜுக்கும், நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்கும் கடிதம் தங்களிடம் சிக்கியிருப்பதாக ஒரு பொய்ப் பிரச்சாரத்தை இடையறாமல் தொடர்ந்தது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி.

உடனே, “தங்களிடமும் ஒரு கடிதம் சிக்கியிருப்பதாக” இந்த பொய்ப் பிரச்சாரத்தை போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்தது டைம்ஸ் நவ் டிவி. இந்த கோயபல்ஸ் பிரச்சாரத்தின் தொடர்ச்சியே தற்போதைய கைது நடவடிக்கை. உமர் காலித் உள்ளிட்ட ஜே.என்.யு மாணவர்களுக்கு எதிராக “தேசவிரோதிகள், நாட்டை துண்டாடுபவர்கள், பாக் கைக்கூலிகள்” என்ற பிரச்சாரத்தை மேற்சொன்ன தொலைக்காட்சிகள் இடையறாமல் நடத்தின. “என்னைக் சுட்டுக் கொல்ல முயன்றவன் இந்தப் பிரச்சாரத்தை உண்மையென நம்பிய ஒரு முட்டாளாகவும் இருக்கலாம்” என்று உமர் காலித் கூறியதை இங்கே நினைவிற்கொள்ள வேண்டும்.

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் “மோடியைக் கொலை செய்வதற்கான சதியில் சம்மந்தப்பட்டவர்கள்” என்ற தோற்றத்தை, மோடியின் ஏவல்நாய்களான ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன. ஆனால் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் மகாராட்டிர போலிஸ் அளித்துள்ள ஆவணங்களில் இல்லை. குற்ற எண் 04- 2018 இன் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது பீமா கோரேகான் சம்பவம் தொடர்பானது மட்டுமே.

*****

“மோடியைக் சொல்லச் சதி என்பது குஜராத்தில் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட  நாடகம்தான்.  இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலையில் என்ன நடந்ததோ அதுதான் இதிலும் நடக்கிறது. இது தலித் மக்களின் போராட்டத்தை மாவோயிஸ்டு சதி என்று  திசைதிருப்புவதற்கான  திட்டமிட்ட முயற்சி” என்று ஜூன் மாதத்தில் நடந்த கைதுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் ஆனந்த் தெல்தும்டே.

அந்த நாடகம் இப்போது புதிய பரிமாணங்களை எடுத்திருக்கிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரிலான ஆக்கிரமிப்புகள், சூழல் அழிவு, பண மதிப்பழிப்பு முதல் ஜி.எஸ்.டி வரையிலான நடவடிக்கைகள்  மக்களிடம் தோற்றுவித்திருக்கும் கோபம், அதிகரித்து வரும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றால் மக்களின் கடும் கோபத்தை எதிர்கொண்டிருக்கிறது மோடி அரசு.

இந்தக் கோபத்திலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு “முஸ்லிம் தீவிரவாதம்” என்ற பழைய பூச்சாண்டி பயன்படாது என்பது மோடி – அமித் ஷா கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. எனவேதான், மேற்கூறிய பிரச்சினைகளில் மோடி அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்களைத் திரட்டுபவர்கள் யாரோ, அவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு “நகர்ப்புற நக்சல்கள், அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்ற புதிய முத்திரைகளை தயார் செய்திருக்கிறது.

மோடி அரசை விமரிசிக்கும் அறிவுத்துறையினர், ஊடகத்தினர் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரை ஒவ்வொருவரும் “தாங்கள் நகர்ப்புற நக்சல்கள் அல்ல” என்றும், “வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல” என்றும், “இந்திய அரசியல் சட்டத்தின் மீது பக்தி கொண்டவர்கள்” என்றும்  தன்னிலை விளக்கம் அளிக்குமாறு அச்சுறுத்தப்படுகின்றனர்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மீது பாஜக வினர், “சமூகவிரோதி, நக்சலைட்டு” என முத்திரை குத்தியதை நாம் அறிவோம்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மீது பாஜக வினர், “சமூகவிரோதி, நக்சலைட்டு” என முத்திரை குத்தியதை நாம் அறிவோம். இத்தகைய முத்திரை குத்தல்களுக்கு அஞ்சி  தன்னிலை விளக்கம் அளிப்பது இழிவானது. “நான் நடத்தை கெட்டவள் அல்ல” என்று ஒரு பெண் தன்னிலை விளக்கம் அளிக்க நேர்வதற்கு ஒப்பானது.

“சட்டத்தின் ஆட்சி குறித்தோ ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தோ, வன்முறையைத் தவிர்ப்பது குறித்தோ பேசுவதற்கான அருகதை உனக்கு கிடையாது” என்று திருப்பியடிப்பது ஒன்றுதான் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்கொள்ளப் பொருத்தமான வழி.

“சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு” என்று சொல்லிக் கொண்ட போதிலும், மோடி அரசு நடத்துவது “சட்டத்தின் ஆட்சி” அல்ல. சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டத்தின் ஆட்சியை நாடாளுமன்றத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கவிழ்க்கும் நடவடிக்கைகள்தான் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன.

பாஜக -வினர் அரசியல் செல்வாக்கு பெற்றிருக்கும் வட இந்திய மாநிலங்களில் முஸ்லிம் மக்களும், தலித் மக்களும் பார்ப்பன பாசிசக் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.  இந்தக் கொலைகளுக்கு போலீசும் அரசு எந்திரமும் துணை நிற்பதை நாம் பார்க்கிறோம்.

பாஜக அரசியல் செல்வாக்கு பெற முடியாத தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் அறிவுத்துறையினர் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். இது இன்னொரு உத்தி. கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் மூலம் அத்தகைய கொலைப்பட்டியல்கள் குறித்தும் நாம் அறிகிறோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் “ஊஃபா” கைது இன்னொரு வகைத் தாக்குதல். இதற்கும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான்  இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. ஒருவேளை இந்தக் கைது நடந்திராவிட்டால், உமர் காலித் மீது நடத்தப்பட்ட  கொலைமுயற்சியைப்  போன்ற  ஒன்று இவர்களுக்கு எதிராகவும் நடந்திருக்கும்.

கவுரி லங்கேஷ் வழக்கு விசாரணை பார்ப்பன பாசிச அமைப்புகள் தயாரித்திருக்கும் கொலைப்பட்டியலை அம்பலமாக்கியிருக்கிறது. பன்சாரே மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட  குடும்பத்தினரும் கொலைப்பட்டியலில் இருப்பதை கர்நாடகா போலீசே உறுதிப் படுத்தியிருக்கிறது.

கவுரி லங்கேஷ் விசாரணையில் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் சனாதன் சன்ஸ்தாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசு மகாராட்டிர அரசை வலியுறுத்தி வருகிறது. மும்பையில் இந்துக்கள் வாழும் பல பகுதிகளில் சனாதன் சன்ஸ்தாவினர் குண்டு தயாரிப்பதும், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஈத் பண்டிகைகளின் போது குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“இதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ள கோரிக்கையை திசை திருப்புவதற்காகவே தற்போதைய கைது நாடகம் நடத்தப்படுகிறது” என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியிருப்பதையும் நாம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும்.

கார்கில் போர், நாடாளுமன்றத் தாக்குதல், கோத்ரா – குஜராத் படுகொலை உள்ளிட்ட ஒவ்வொன்றின் பின்னாலும் பாசிஸ்டுகள் மறைக்கத் துடிக்கும் ஒரு மர்மம் இருந்துள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

வீழ்த்தப்பட முடியாததல்ல பார்ப்பன பாசிசம்.  அப்படி ஒரு தோற்றத்தைக் காட்டி அது அச்சுறுத்துகிறது. அஞ்சுவதும், சமரசம் செய்து கொள்வதும், மவுனம் சாதிப்பதும்தான் பாசிசத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். கைது செய்யப்பட்டிருப்பவர்கள் யாரும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சக் கூடியவர்கள் அல்ல என்பது மோடி அரசுக்குத் தெரியும்.

அத்தகைய அச்சமின்மையை சமூகம் முழுமைக்கும் நாம் பரப்ப வேண்டும். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான அரசியலை மேலும் போர்க்குணமாக, மேலும் பரவலாக கொண்டு செல்வதும், மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதும்தான் அச்சமின்மையைப் பரப்புவதற்கான வழி. தமிழகம் அதனைச் செய்து காட்ட வேண்டும்.

மருதையன்
பொதுச்செயலர்,  மக்கள் கலை இலக்கியக் கழகம்.

இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !

லித் மக்கள் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடும் இடது சாரி செயல்பாட்டாளர்களின் மீது அடக்குமுறையை ஏவும் விதமாக அவர்களது வீடுகளை சோதனை செய்வது மற்றும் அவர்களை ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் கைது செய்வது என அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது மோடி அரசு.

இதனை கண்டித்து சமூக வளைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக டிவிட்டரில் #MeTooUrbanNaxal என்ற வார்த்தை டிரெண்டாகியுள்ளது. நாம் ட்ரெண்ட் செய்ய வேண்டியது வார்த்தைகளை மட்டுமல்ல செயலையும் தான்.

MeTooUrbanNaxal trending

_______________

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான மகாராஷ்ட்ரா & தமிழ்நாடு போலிசாரின் அத்துமீறல்களுக்கு தமுஎகச கண்டனம்!

பீமா கோரேகான் போர் வெற்றியின் 200 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடச் சென்ற தலித்துகள் மீது இந்துத்வ அமைப்பினர் நடத்திய கொடிய தாக்குதல் உலகளாவிய கண்டனத்தைப் பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை கோரி நடந்த போராட்டங்களை பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரித்து ஒடுக்குவதில் மும்முரம் காட்டி வருகிறது மகாராஷ்ட்ர காவல்துறை.

இது தொடர்பில் சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிங், மகேஷ் ரௌட், ஷோமா சென், ரொனா வில்சன் உள்ளிட்ட தலித் அமைப்பினரையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த ஜூன் மாதத்தில் கைதுசெய்த மகாராஷ்ட்ர காவல்துறை இன்று அடுத்தக்கட்ட கைதுகளை நடத்தியுள்ளது.

புரட்சிகரக் கவிஞர் வரவரராவ் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனை காப்பதிலும், மத்திய அரசின் மக்கள்விரோதத் திட்டங்களை எதிர்ப்பதிலும், சங்பரிவாரத்தின் இந்துத்வ வெறுப்பரசியலை விமர்சிப்பதிலும் முன்னணியில் இயங்கும் கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, எழுத்தாளர் வரவரராவ் ஆகியோர் இன்று மகாராஷ்ட்ர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது மடிக்கணினி, செல்பேசி, பென் டிரைவ் ஆகியவையும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களது சமூக ஊடகங்ளின் கணக்குகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கல்வியாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் அண்ணல் அம்பேத்கரது குடும்ப உறுப்பினருமான ஆனந்த் டெல்டும்டேவின் வீடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நாடறிந்த ஆளுமைகளான இவர்களுக்கே இந்த கதியா..? என்கிற பீதிக்குள் கருத்தியல் தளத்தில் இயங்குகிறவர்களை மூழ்கடித்து, சுயதணிக்கையின் மூலம் அவர்கள் தம்மைத்தாமே முடக்கிக் கொள்ளும் நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

நாட்டை வழிநடத்திச் செல்லும் பொறுப்பிலிருந்து வழுவி பல்வேறு முனைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள பா.ஜ.க, தனக்கெதிரான விமர்சனங்களின் கழுத்தை நெறித்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தயாராகி வருவதன் முன்னோட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை கருத இடமுண்டு. அதற்காக அது அரசதிகார அமைப்புகளை சட்டநியதிகளுக்குப் புறம்பாக, பழிவாங்கும் இயந்திரமாக பயன்படுத்தி வருகிறது.

திவ்யபாரதி, திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றோர் மீது தமிழக அரசும், பீமா கோரேகான் போராட்ட வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது மகாராஷ்ட்ர அரசும் இழைத்துவரும் கொடுங்கோன்மைகளுக்கு இந்துத்துவ வாதிகளின் எதேச்சதிகார கருத்தியலே காரணமாக இயங்குகிறது.

மக்களின் உயிர்வாழும் உரிமை உட்பட அனைத்தையும் அரசுக்கும் அரசின் வழியாக ஆளுங்கட்சிக்கும் கீழ்ப்படுத்தும் இத்தகைய முயற்சிகளை த.மு.எ.க.ச வன்மையாக கண்டிக்கிறது.

சு. வெங்கடேசன், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

_______________

கி. நடராசன்

மாட்டிற்க்காக மனிதர்களை அடித்து கொல்லும் காவிபயங்கரவாதிகளை கைது செய்யாமல் மக்களுக்கான கருத்துரிமையாளர்களை கைது செய்யும் மோடி ஆட்சி

பீமா கோரேகான் தலித் எழுச்சியை திசைதிருப்பவே பாசிச பேஷ்வா பார்ப்பனகாவி கும்பல் சதியே மனித உரிமையாளர்கள் கைது.

_______________

மருத்துவர் அரவிந்தன்

பெண் மனநோயர் உரிமைகள் , மனித உரிமை செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் !

2010 எனறு நினைக்கிறேன், அமகாவின் பெண்கள் பிரிவில் இருக்கும் வெளி மாநிலத்தின் மனநலம் தேறிய நோயர்களை அவர்கள் வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அப்போது வார்டு எண் 14,15 -ல் இரு பெண்கள் சட்டிஸ்கர் மாநிலத்தின் குக்கிராமத்தை சேர்ந்தவர்கள்.அவர்கள் குக்கிராமத்திற்கு கொண்டு சேர்பது எப்படி என்று திட்டங்கள் முயற்சிகள் மேற்கொண்ட போது தான் நண்பர் ஒருவர் மூலம் மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்குரைஞருமான தோழர் சுதா பரத்வாஜ் அவர்கள் எண் கிடைத்தது. அவரிடம் விஷயத்தை சொன்னோம். அனுப்பி வைக்க சொன்னார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு பெண் நோயர்களோடு மூன்று பெண் உடனாளர்கள், மூவருக்கும் இந்தி தெரியாது. அதிலொருவர் மாற்றுத்திறனாளி இருந்தாலும் நோயர்களை கொண்டு சேர்க்கும் கடமை உணர்ச்சியோடு அவர்கள் சென்றனர்.

ராய்பூர் ரயில் நிலையத்தில் அவரை மனித உரிமைகள் அமைப்பு சார்பாக இருந்த ஒருவர் அழைத்து சென்று இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கொடுத்து பாதுகாப்பாய் பார்த்துக்கொண்டார்.

மறுநாள் அவர்களை அழைத்துக்கொண்டு நோயர்களின் ஊர் தேடி பயணித்து கடினமான பாதைகள், உறவினர்களின் மனத் தடைகளை மீறி பெண் நோயர்களை அவர்கள் வீட்டில் சேர்க்க பேருதவி செய்தது தோழர் சுதா பரத்வாஜ் சார்ந்த மனித உரிமை அமைப்பு. அவர்களை வீட்டில் சேர்க்கும் வரை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.

அமகா பெண் உடனாளர்களை மீண்டும் பத்திரமாய் ரயில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை வந்த பெண் உடனாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். பாராட்டும் அவர்களின் சேவை ஊக்குவிக்க அது முக்கியமானதாக கருதினோம்.

எட்டுவருடங்கள் கடந்துவிட்டன அந்த பெண் நோயர்கள் இன்றும் சுதா பரத்வாஜ் அவர்களின் உதவியை மறக்கமாட்டார்கள். அவர் இல்லையென்றால் நாட்பட அமாகாவிலோ, அல்லது ஏதோ ஒரு என் ஜி ஓ ஹோமிலோ சிறையிலிருந்திருப்பார்கள்.

தங்கள் நிறுவனம் நலன், வளர்ச்சி , பொருளாதாரம் சார்ந்து மன நோயாளிகள் உரிமைகள் அதிகாரப் பகிர்வை அரிதாரம் பூசி சந்தையில் விற்பனை செய்யும் எத்தனையோ என்.ஜி.ஓ-க்கள் இருக்கின்றன. அவர்களுக்கு சர்வதேச, தேசிய விருதுகள்.

மனித உரிமைகளுக்காக 30 ஆண்டுகளுக்காக போராடும் சுதா பரத்வாஜ் போன்றோர்க்கு திடீர் கைது அரசு அடக்குமுறை ஒடுக்குமுறை.

– மருத்துவர் அரவிந்தன்

_______________

Aazhi Senthil Nathan

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஐந்து பேர் கைதுக்குத் தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம்.

மீண்டும் ஓர் அவசரநிலைக் காலம் பிறப்பிக்கப்பட்டுவிட்டதோ என்கிற அச்சம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நேற்று பரவியது. மனித உரிமைகளுக்காக போராடிய வரும் ஐந்து பேர் நேற்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் ஏழு நகரங்களில், ஒரே சமயத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், புனே காவல்துறை, மும்பையில் வெர்ணோன் கான்சால்வஸையும் தானேயில் அருண் ஃபெரெய்ராவையும் தில்லியில் கெளதம் நவ்லேகாவையும் அரியாணாவில் சுதா பரத்வாஜையும் ஹைதராபாதில் புரட்சிக் கவிஞர் வரவர ராவையும் கைது செய்திருக்கிறது. கோவாலில் அம்பேத்கரிய அறிஞர் ஆனந்த் டெம்டுல்டேவும் மும்பையில் மனித உரிமையாளர் சூசன் ஆப்ரஹாமும் விசாரிக்கப்பட்டார்கள். இவர்களின் வீடுகளில் நேற்று காலை புகுந்த காவல்துறை, பின்பு இவர்களுக்கு மாவோயிஸ்ட் கட்சியோடு தொடர்பிருக்கிறது என்று கூறி முதலில் குறிப்பிடப்பட்ட ஐவரைக் கைதுசெய்திருக்கிறது.

இந்தக் கைதுகளையும் விசாரணைகளையும் தன்னாட்சித் தமிழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இக் கைதுகளுக்கு எதிராக குழலெழுப்பியுள்ள அனைத்து எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், அறிவுஜீவிகள் உள்பட அனைவரோடும் அது தன் கைகளை இணைத்துக்கொள்கிறது.

நரேந்திர மோடி தலைமையிலான மதவெறி-பாசிஸ்ட் அரசின் கோர முகம் உலகின் பார்வையில் கிழிந்து தொங்குகிறது. மகாராஷ்ட்டிரத்தில் பீமா கோரேகாவில் கடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சி தொடர்பாக இந்த கைதுகள் அரங்கேறியுள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1818 ஜனவரி 1 இல் பீமா கோரேகாவில் நடந்த போர் ஒன்றில், பார்ப்பனீய பேஷ்வா ஆட்சியாளர்களுக்கு எதிராக மகாராஷ்ட்டிரத்தைச் சேர்ந்த தலித் மக்கள், ஆங்கிலேயர்களோடு இணைந்து போராடி, ஆதிக்கசாதி பேஷ்வா சாம்ராஜ்யத்தை உடைத்தெறிந்தார்கள். அந்த போரின் 200 ஆவது ஆண்டை நினைவுகூர்வதற்காக தலித் அமைப்புகளும் முற்போக்காளர்களும் 2017 ஆம் ஆண்டின் கடைசி நாளில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். குஜராத் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவாணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வைத் தொடர்ந்து, புனே பகுதியில் ஆதிக்கசாதியினர் வன்முறையில் இறங்கினர். எல்கார் பரிஷத் நிகழ்வில் மாவோயிஸ்ட் தொடர்பு இருக்கிறது என்று காரணம் காட்டி மகாராஷ்ட்டிரா காவல்துறை இப்போது இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்தியாவின் வரலாற்றை ஆதிக்க சாதியினரின் வரலாறாக மட்டுமே கற்பிக்க முயலும் ஆர் எஸ் எஸ்ஸின் நேரடி தலையீட்டில்தான் மகாராஷ்ட்டிர பாஜக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையானது.
தலித் மக்களுக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையிலான உறவு என்பது எப்போதுமே அடிப்படையான அரசியல் உறவுதான். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நிற்பது என்பது குற்றம் என்கிறது இந்திய அரசு. அதனால்தான் அவர்கள் மீது யுஏபிஏ உள்பட பல்வேறு சட்டங்களை ஏவியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெட்கங்கெட்டத் தனமாக, பிரதமர் மோடியைக் கொல்ல இவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தேசத்துக்கு அச்சுறுத்தல், பிரதமருக்கு அச்சுறுத்தல் என்கிற அதே பழைய தந்திரத்தைப் பயன்படுத்தி மனித உரிமையாளர்களையும் கவிஞர்களையும் தலித் தலைவர்களையும் மிரட்டிப்பார்க்கிறது மோடி அரசு.

கோரேகாவ் வன்முறை தொடர்பாக ஆதிக்கச் சாதியினரையும் அவர்கள் தரப்பில் ஈடுபட்டவர்களையும் சுதந்திரமாக விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருப்பவர்களை அச்சுறுத்துவதன் மூலம் மோடி அரசு தான் யார் பக்கம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்கிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது மகாராஷ்ட்டிரத்தில் மராத்தா சமூக மக்கள், மற்றும் பிற ஆதிக்கசாதியினரிடம் அவர்களின் பாதுகாவலன் தாங்கள்தான் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக எதிர்வரும் தேர்தலை மனத்தில் வைத்து நகர்த்தப்படும் திட்டமும் ஆகும். மராத்திய இன மக்களை சாதி வேறுபாடுகளைக் கொண்டு பிளவுபடுத்தி அதில் பலனடையும் பிரித்தாளும் சூழ்ச்சிதான் இது. மராத்திய இன விவசாயிகளின் போராட்டங்களால் அதிர்ந்துபோயிருக்கும் மகாராஷ்ட்டிர பாஜக இப்போது மக்களை பிரித்தாள முயல்கிறது.

தோழர்கள் வர வர ராவ் உள்ளிட்ட அனைவருக்காகவும் நாம் குரல்கொடுக்கிறோம்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தோழர்கள் திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசின் பாசிச நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள ஜனநாயக, முற்போக்கு சக்திகள் இணைந்து எதிர்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சித் தமிழகம்

____________

பா. ஏகலைவன்

ஒரு பயலும் சீண்ட மாட்டான்.

———————————————————
பொய்யும் புரட்டிலுமே
இந்த ஆட்சியை கடந்து விடலாம் என்றிருக்கிறது மோடி அரசு.

அதிகாரத்திற்கு வந்து இதுவரை ஒரு நன்மையும் மக்களுக்கு கிட்டவில்லை.
எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை ஏறினபடியே உள்ளது. என்னமோ இவர் நாட்டை வல்லரசாக்க துடிக்கின்ற மாதிரியும், அதை பார்த்து பொறாமையில் அமெரிக்க சதி திட்டம் தீட்டுகின்ற மாதிரியும் பினாத்திக்கொண்டு திரிகிறார்கள்.

சதி திட்டம் தீட்டும் நக்ஸல்பாரிகள் யாராவது பிட் நோட்டீஸ் அடித்து சொல்வார்களா என்ன? பொய்யும் புரட்டுக்கும் ஒரு அளவு வேண்டாம்.

இவரைப் போன்றவர்களை அம்பானி, அதானி, ராம்தேவ் மாதிரியான ஆட்கள் போட்டுத் தள்ளினால்தான் உண்டு, அதுவும் கொடுக்கல் வாங்கல் தகறாரில். மற்றபடி ஒரு பயலும் சீண்ட மாட்டான். தானாகவே அழியப்போறதுக்கு எதற்கு சதித் திட்டம் தீட்டுவார்கள்.?

அந்த 15 லட்சம் என்னாச்சின்னு கேட்டா போதும், ‘ஐயையோ..என்னைய கொல்ல சதி நடக்குதுன்னு’ ஒப்பாரி வக்கிறதே பொழப்பா போயிடுச்சு..

_______________

 

 

_______________

PRESS ANNOUNCEMENT / INVITE

28th August 2018

Dear friends,

On 28th August 2018, simultaneous raids were conducted by Police on the premises of prominent human rights and civil liberties activists and intellectuals – Advocate Sudha Bharadwaj (National Secretary, PUCL) in Faridabad, Father Stan Swamy in Jharkhand, Senior Writer and Poet Varavara Rao, his two daughters – Anala and Pavana, ‘The Hindu’ journalist KV Kumaranath, English and Foreign Languages University (EFLU) Professor Satyanarayana, ‘Namaste Telangana’ journalist Kranthi Tekula – all in Hyderabad, Anand Teltumbe (General Secretary, CPDR) in Goa, Gautam Navlakha (founder member, PUDR) in Delhi, Arun Ferreira, Writer Vernon Gonsalves and Advocate Susan Abraham in Mumbai, and several of them have been arrested on false and fabricated charges under the draconian UAPA law.

WE the aforesaid civil society organisations/ groups/ collectives, are jointly convening an urgent Press Conference to condemn the appalling state actions of reprisals against noted human rights activists and intellectuals, which are clearly politically motivated and an attempt to stifle voices of dissent. The unjustified raids on and arrests of the above public spirited individuals who have tirelessly worked for the cause of the poor and marginalized sections of society, are nothing but an attack on Indian democracy and an attempt to undermine the democratic fabric of our society.

JOINT PRESS CONFERENCE BY –

(1) PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES (PUCL) – MAHARASHTRA,
(2) COMMITTEE FOR PROTECTION OF DEMOCRATIC RIGHTS (CPDR),
(3) WOMEN AGAINST SEXUAL VIOLENCE AND STATE REPRESSION (WSS),
(4) FORUM AGAINST OPPRESSION OF WOMEN,
(5) LABIA – A QUEER FEMINIST LBT COLLECTIVE,
(6) AWAAZ-E-NISWAAN,
(7) BEBAAK COLLECTIVE,
(8) AKSHARA WOMEN’S RESOURCE CENTRE
(9) POLICE REFORMS WATCH,
(10) AMBEDKAR PERIYAR PHULE STUDY CIRCLE (APPSC) – IIT BOMBAY
(11) NEW TRADE UNION INITIATIVE (NTUI)
(12) BHARAT BACHAO ANDOLAN
(13) CITIZENS FOR JUSTICE AND PEACE (CJP)
(14) PEOPLE’S COMMISSION ON SHRINKING DEMOCRATIC SPACES (PCSDS)
(15) HUMAN RIGHTS DEFENDERS ALERT (HRDA) – INDIA
(16) INDIAN CHRISTIAN WOMEN’S MOVEMENT, MUMBAI CHAPTER
(17) SATYASHODHAK, MUMBAI & OTHERS

CONDEMNING THE ARRESTS OF PROMINENT HUMAN RIGHTS ACTIVISTS FOLLOWING SIMULTANEOUS MULTI-CITY RAIDS BY POLICE ON 28TH AUGUST 2018.

Date : Wednesday, 29 August 2018 Time : 4 p.m. onwards

Venue : Mumbai Press Club, Mahapalika Marg, Azad Maidan, Fort, Mumbai – 400 001

We request you to attend and / or depute a reporter to cover this event.

With Regards,

All of the Joint Organisers.

_______________

பா. ஜீவ சுந்தரி

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இந்தியாவில்..
தமிழகத்திலும் கைது நடவடிக்கை, ரெய்டுகள் அறிவுஜீவிகள், செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்…

_______________

Arul Doss Borntowin

மக்கள் போராளிகள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா ?தமிழக ஊடகங்கள் பாசிச விஷத்தில் மிதக்கிறது !!

_______________

Bharathi Raja

பாசிச மோடி கும்பலின் தொடரும் அடக்குமுறை இப்போது
அறிவுஜீவிகளின் மீது நேரடி தாக்குதல்..

_______________

Rajathi Salma

கவிஞர் வரவர ராவ் மோடியை கொலை செய்ய திட்டம் போட்டதாக கைது . எப்படி சிரிப்பது எனத்தெரியவில்லை. எதற்கும் கவிஞர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் நல்லது..

________________

PUCL STRONGLY CONDEMNS AND DENOUNCES THE ARRESTS UNDER THE DRACONIAN UAPA OF 

  1. Sudha Bharadwaj, PUCL National Secretary
  2. Gautam Navalakha of PUDR,
  3. Prof. Anand Teltumde of CPDR,
  4. Vernon Gonsalves and Arun Ferreira, advocates, and
  5. Vara Vara Rao, noted poet and rights activist.
  6. Kranti Tekula of Virasam, Hyderabad.

PUCL also denounces the simultaneous multi-city raids conducted today, 28th August 2018 in a concerted and pre-meditated manner across the country at the premises of other eminent human rights activists including:

  • Father Stan Swamy in Jharkhand;
  • Senior Writer and Poet Varavara Rao, as also the houses of his two daughters and sons-in-law, Anala and the Hindu journalist KV Kumaranath; and Pavana and her husband, Prof. Satyanarayana, of English and Foreign Languages University;
  • Anand Teltumbde in Goa;
  • Gautam Navlakha in Delhi,
  • Arun Ferreira, Vernon Gonsalves and Susan Abraham, Advocates in Mumbai.

PUCL asserts that the arrests and raids are nothing but a targeted crackdown and attack by the police and state on civil liberties and democratic rights activists across the country in a concerted attempt to crush human rights interventions and silence voices of dissent;

Such systematic and pre-meditated crackdown on human rights activists is unprecedented and unheard of in a democracy and PUCL strongly condemns this unconstitutional crackdown by the state and police ;

PUCL stands firmly in solidarity with advocate Sudha Bharadwaj, National Secretary, PUCL and the other human rights activists who face raids and have been arrested under false and fabricated charges.

We would like to point out that in a Habeas Corpus petition filed before the Delhi High Court, his transfer on transit warrant to Pune has been stayed pending further hearing of the habeas corpus petition tomorrow 29th August, and he is currently under house arrest. As per sources, Anand Teltumbde’s house in Goa was raided by the police in a completely illegal manner, in his absence, after procuring keys from the security guard. While some news channels state that the raids and arrest have been made in the Pune case of Bhima Koregaon caste violence, where the prime accused are Hindutva right wing groups and leaders who are enjoying state impunity and at large, some other news agencies are alleging that the arrests are linked to claims of alleged plot to assassinate Prime Minister Narendra Modi and Chief Minister Devendra Fadnavis.

It is pertinent to note that just last month on 4th July 2018, a scurrilous, motivated, fabricated and malicious media propaganda and hate campaign was run by Republic TV and its anchor Ms. Shivani Gupta, Deputy Editor Mr. Shrawan Sen and its Managing Director, Mr. Arnab Goswami, by way of a series of programmes presented as “Super Exclusive Breaking News” and also showcased by way of a national debate on Prime Time TV. Relying on a fabricated letter allegedly addressed by her to a Maoist named ‘Comrade Prakash’, the channel repeatedly aired, completely false, unsubstantiated and scurrilous accusations against Advocate Sudha Bharadwaj, falsely profiling her as “Urban Naxal”. The allegations were categorically denied by Advocate Sudha Bharadwaj in her rebuttal statement. The programmes were aired with headers of“#UrbanNaxalsExposed” and similar allegations were made against other human rights activists like Mr. Gautam Navlakha in part 2 of the programme, via a second letter supposedly procured by the Channel. PUCL has previously issued a statement dated 7th July 2018 strongly condemning the incident and demanding strict action against the Channel. Advocate Sudha Bharadwaj also issued a legal notice in respect of the Channel’s illegal acts.

The current arrests and raids are taking place in the backdrop of the arrests of five human rights activists – Advocate Surendra Gadling, Professor Shoma Sen, Rona Wilson, Mahesh Raut and Sudhir Dhawale – who were also arrested under UAPA on 6th June 2018, relying on a similar fabricated letter produced by Republic TV allegedly addressed to the same “Comrade Prakash”, in the same Pune case. Following this, on 7th June 2018, Advocate Sudha Bharadwaj had addressed a press conference organized by the Indian Association of People’s Lawyers (IAPL) in New Delhi to condemn the arrest of Advocate Surendra Gadling of the Nagpur High Court. Susan Abraham, Arun Fererreia and Vernon Gonsalves are in fact representing the Bhima Koregaon accused in Court.

Advocate Sudha Bharadwaj has been a dedicated trade unionist for more than three decades and has served as a general secretary of its Chhattisgarh branch, during which time the branch did remarkable work in the State. She is also associated with the Chhattisgarh Mukti Morcha, which was founded by the late Shankar Guha Niyogi. She started her legal practice in the year 2000 and has since, fought innumerable cases of workers, farmers, adivasis and poor people in the fields of labour, land acquisition, forest rights and environmental rights. Since the year 2007, she has been practicing in the High Court of Chhattisgarh at Bilaspur and was nominated by the High Court to be a member of the Chhattisgarh State Legal Services Authority. She also supported young lawyers to set up the Jagdalpur Legal Aid group as a civil society initiative to provide legal aid to incarcerated Tribals. She is a visiting faculty at the National Law University Delhi, where she teaches the course on tribal rights and land acquisition.

PUCL believes that the intention of the state and police in targeting the aforesaid human rights activists by foisting false and fabricated cases against them, is clear and apparent from their profiles of work. All the aforesaid human rights activists targeted in this multi-city “operation” by the police have been tirelessly involved in advocating the cause and fighting for the rights of the most poor, marginalized sections of society against serious state violations and unscrupulous corporates. They have stood for the principles of human rights enshrined in the Indian Constitution and the international standards on human rights.

PUCL strongly condemns the actions of the state and police. This simultaneous crackdown against human rights activists across the country signals the imposition of an unofficial Emergency in our nation and is a direct attack on Indian democracy. This is a deliberate strategy of the state to target noted human rights activists in a clear act of reprisals against them for calling out the human rights violations by the state and police, and to intimidate those who are fighting for justice.

PUCL cautions the public at large on the concerted efforts underway to stifle voices of dissent and threaten the democratic fabric of the country.

In light of the above, PUCL makes the following urgent demands:

  1. PUCL calls upon the state and the police to immediately and unconditionally release human rights activists, Sudha Bharadwaj, Gautam Navalakha, Anand Teltumbde, Varavara Rao, Arun Ferreira, Kranti Tekula and Vernon Gonsalves and withdraw the false and fabricated case against them;
  1. PUCL calls upon the National Human Rights Commission (NHRC) to urgently intervene to ensure the release of the human rights activists and to order an immediate, transparent, effective and impartial investigation into the simultaneous multi-city raids and arrests of the human rights activists by the state and the police on false and fabricated accusations and charges ;
  1. PUCL also calls upon the democratic minded citizens of India to condemn the unprincipled manner in which human rights activists are being targeted and oppose such insidious and collusive attempts by State agencies and media outfits to silence human rights activists against the vindictive State policies and action ;
  1. PUCL further condemns the constant profiling as “Urban Naxals/ Maoists” and criminalisation of human rights activists working tirelessly against the state’s anti-people actions and policies, in an attempt to malign them and influence public sentiment.

Mr. Ravi Kiran Jain, National President, PUCL
Dr. V. Suresh National General Secretary, PUCL

அமித்ஷாவுக்கு அழைப்பு – என்ன சொல்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள் ?

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் தி.மு.க. சார்பாக வருகிற 30-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அ.தி.மு.க. தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க. முக்கியமாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா வரலாம் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.தி.மு.க.வின் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்தது. தற்போது அமித்ஷாவிற்கு பதில் நிதின் கட்காரி வருவார் எனத் தெரிகிறது.இந்த சூழலில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 28.08.2018 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க.வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலின், “மாநில உரிமைகளை பறிக்கும், மதவாதத்தை பரப்பும் காவி அரசையும், சுயமரியாதை என்னும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும் தூக்கி எறிய வேண்டும்”  என்று பேசினார்.ஒரு பக்கம் எதிர்ப்பு… மற்றொரு பக்கம் அழைப்பு…. இதனை எப்படி எடுத்துகொள்வது? புகழஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்குமோ என்ற விமர்சனத்திற்கான எதிர்வினைதான் அவ்வாறு பேச வைத்ததா? இல்லை… திராவிட இயக்கக் கொள்கை கோட்பாடுதான் பேச வைக்கிறதா?

அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களிடமே கேட்டோம்!

கரும்பாயிரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முன்னாள் செயலர், தஞ்சாவூர்.

பதினைந்து வயசுல இருந்து தி.மு.க.வுல இருக்கேன். தமிழ் மேல இருந்த பற்று தான் தி.மு.க. மீதான பற்றானது. நான் கட்சிக்கு வரும்போது மதுரை முத்து தான் மேயரா இருந்தாரு. கர்நாடகா – தமிழ்நாடு பிரச்சனை அப்போ பெரிசா இருந்தது. இப்ப அறுபத்தி ஐந்து வயசாவுது. இன்னும் தி.மு.க. மேல இருக்க பற்று போகல. அதுக்கு காரணம் கொள்கை. பி.ஜே.பி.காரனுங்க மதவெறி, ஜாதிவெறி புடிச்சவனுங்க. அவங்கள நாம நம்ப முடியாது. அவங்க மொழிப்பற்றுக்கு எதிரானவங்க. இந்தி வெறிய திணிக்கிறாங்க. இருந்தாலும் அவங்கள நினைவேந்தலுக்கு கூப்பிட்டதுக்கு காரணம் கலைஞர் சாவுக்கு பிரதமர் வந்தார் என்ற அடிப்படையில தான். அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் எங்களை கூப்பிடவில்லைன்னு சொல்லுறது சரியில்லை. அவர்களை கூப்ப்பிடக் கூடாது. அவர்கள் தமிழக விரோதிகள். கலைஞர் இறப்பு நிகழ்வுக்கு முதலைமைச்சர் எங்கே போயிருந்தார்? இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடலன்னு சொல்லுறாங்க? நாங்க எதுக்கு கூப்பிடனும்?

மணிசேகர், பூத் கமிட்டி உறுப்பினர், திருவாரூர் ஒன்றியம்.

கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரா இருக்கும் போது எங்க அப்பா எனக்கு கலைஞர் கருணாநிதிய அடையாளம் காமிச்சார். அப்ப நான் சின்ன பையன். அதுல இருந்து நான் தி.மு.க. தான். நான் கலப்பு திருமணம் பண்ணினேன். கட்சி கொள்கைப் படிதான் அப்படி செஞ்சேன்.  என் பையனுக்கும், பொண்ணுக்கும் கலைஞர் தான் கரிகாலன், கண்ணகின்னு பேரு வச்சார்.

இப்ப தளபதி ஸ்டாலின் வாரிசு அரசியல்ல தலைவரா வந்தது சரிதான். அதுக்கான தகுதி அவருக்கு உண்டு. அதேபோல இப்ப நினைவேந்தலுக்கு அமித்சாவ கூப்பிட்டது சரிதான். ஆனா இதை வைத்தே கூட்டணி வச்சா நான் ஏத்துக்க மாட்டேன். அது தேவை இல்லாத வேலை. தளபதி ஸ்டாலின் கலைஞர் வழியில வந்த புடம் போட்ட தங்கம். அவர் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க மாட்டார். அப்படி கூட்டணி வச்சா நான் கட்சிய விட்டே வெளியேறுவேன். தி.மு.க.வினுடைய உண்மையான தொண்டர்களோட உணர்வுகள் இதுதான்.

அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர், மானாமதுரை.

ஒரு விஷயம் பார்க்கணும். திதிக்கு கூப்பிடுறது எல்லாம் கூட்டணியில இருக்கணும்னு கணக்கு கிடையாது. தேர்தல் வேற… நினைவேந்தல் வேற… அமித்சாவை கூப்பிடுறாங்கன்னா அவர் பொறுப்புல இருக்காரு. அதனால கூப்பிடுறோம். அதுக்காக கூட்டணிக்கு கூப்பிடறதா நினைக்க கூடாது. பா.ஜ.க. மத நல்லிணக்கத்துக்கு ஒத்து வராது. இங்க அவங்க எடுபட மாட்டாங்க. அதே போல அ.தி.மு.க.வ புகழஞ்சலி நிகழ்வுக்கு கூப்பிடாததுக்கு காரணம், அவர்கள் நேரடியா எங்களுக்கு எதிரி. தலைவர் கலைஞருக்கு மெரினாவுல இடம் கொடுக்க மாட்டேன்னு சொன்னது அவங்க தான். பி.ஜே.பி. எல்லாம் பின்னணியில இருக்கிறது என்பதெல்லாம் வேற. ஆனா அ.தி.மு.க. அதிகார பூர்வமா நீதிமன்றத்துலயும் எதிர்த்தாங்க. அவனுங்கள மன்னிக்க முடியாது. அதே மாதிரி, அழகிரிக்கு பயந்துகிட்டு நாங்க பி.ஜே.பி.க்கு இன்விடேசன் கொடுப்பதாக ஒரு செய்தி வந்தது. அது தவறானது. அழகிரி எல்லாம் எங்களுக்கு தலைவர் இல்ல. அவரும் கலைஞர் புள்ள. அந்த அளவுக்கு தான் அவர் மேல மதிப்பு. கட்சின்னு வந்துட்டா அவர் எங்களுக்கு தேவை இல்லை.  தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க. கட்சிக்கு தான் கட்டுப்படுவாங்க. அழகிரிக்கு இல்ல. பி.ஜே.பி. தமிழநாட்டுக்கு எவ்வளவு மோசம் செஞ்சாங்கன்னு தெரியும். நீட் தேர்வுல இருந்து ரேசன் வரைக்கும் அவன் தமிழ்நாட்டுக்கு எதிரா தான் இருந்தான். பி.ஜே.பி.யிடம், தமிழகம் இழந்த உரிமைய தளபதி மீட்டெடுப்பாரு. கூட்டணி எல்லாம் இருக்காது.

முனியாண்டி, ஆதிதிராவிடர் மாவட்ட அமைப்பாளர், தேனி.

தி.மு.க., தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்படுவார்கள். தளபதி இப்ப தலைவர். கலைஞர் இடத்துல அவர நாங்க வச்சிருக்கோம். அவர் ஈரோட்டு பெரியார் வழியில, காஞ்சிபுரம் அண்ணா வழியில, கலைஞர் வழியில வந்தவரு. அவங்களுக்கு எதிரா தளபதி போக மாட்டாரு. இருந்தாலும் தலைமை எடுக்கிற முடிவுக்கு கட்சி கட்டுப்படும். நாங்களும் அமைப்பு என்ன சொல்லுதோ அதைத்தான் கேட்போம். பி.ஜே.பி. கூட்டணி இருக்காது.

ஆலன், விவசாய தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர், நீலகிரி.

நான் 1986-ல இருந்து தி.மு.க.வுல இருக்கேன்.  பி.ஜே.பி.யோட உறவு இப்ப முடிச்சி  போட்டு பேச முடியாது.  அமித்சாவை கூப்பிட்டும், அவர் அழைப்பை ஏத்துக்கல. அவர்கள் எப்பவுமே அப்படி தான். அவங்க ஜாதித் திமிர் பிடிச்சவங்க.  அ.தி.மு.க.வ ஏன் கூப்பிடலன்னு ஜெயக்குமார் சொல்லுறதுக்கு காரணம், நாங்க எங்க பி.ஜே.பி.யோட கூட்டணி வச்சிக்க போறோம்னு பயம். மெரினாவுல இட ஒதுக்கீடு செய்ய எதிர்த்தவனுக்கு இன்விடேசன் ஒரு கேடா? பி.ஜே.பி.கூட கூட்டு என்பது தலைமை எடுக்கிற முடிவுதான். ஆனா எங்க கொள்கைய விட்டு கொடுக்க மாட்டோம். கொள்கை தான் முக்கியம். பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்னு இல்ல. அதனால தளபதி சரியான முடிவு எடுப்பார். அதுக்கு நாங்க கட்டுப்படுவோம்.

நீலகண்டன், தி.மு.க. இளைஞரணி, திருவள்ளூர்.

வலதுபுறம் இருப்பவர்.

அமித்சா வரல. அதுக்கு முட்டுக்கட்ட போட்டுட்டாங்க. என்பதை எல்லாம் இப்ப சொல்ல முடியாது. இது இணைப்பு, கூட்டு பத்தி பேசுற நேரம் இல்ல. தேர்தலின் போது கூட்டணி பத்தி தலைமை தான் முடிவெடுக்கும். நாம் தொண்டர் தான். பி.ஜே.பி. எதிரி. அதுங்கூட எப்படி கூட்டணி வக்கலாம்? அமித்சாவை எப்படி கூப்பிடலாம்னு நாம கேக்க முடியாது. அதுபற்றி தலைமை தான் முடிவெடுக்கும். தொண்டர்கள் அதை கேட்டுக்கணும்.

சேகர், ஆதிதிராவிடர் நகர அமைப்பாளர்,  திருவாரூர்.

பி.ஜே.பி. கூட ஒருபோதும் தி.மு.க. உறவு வச்சிக்கிறது இல்ல. மதவாத கட்சி அது. நூற்றுக்கு தொண்ணூறு சதவிதம் கூட்டணி இருக்காது. இங்க ஏற்கனவே பலமான கூட்டணி எங்க கிட்ட இருக்கு. கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க.ன்னு. பி.ஜே.பி. கிட்ட திடீர்னு கூட்டணி வச்சிகினா இவர்கள் எல்லாம். வெளியே போயிடுவாங்க. அதால கட்சி என்கிற ரீதியில கூட பி.ஜே.பி. சரியில்ல. அதனால் கூட்டணி இருக்காது.

கருப்பசாமி,  திருப்பூர்.

கம்யூனிஸ்ட் கட்சியில தொழிற்சங்க பணியில இடுந்தேன். 2009-ல தி.மு.க. கட்சிக்கு வந்துட்டேன். அப்ப தி.மு.க. ஆட்சியில இருந்தது. நான் நாற்பது ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சியில ஒழச்சேன். தி.மு.க. கொள்கை, மொழிப்பற்று இதை வைத்து தான் தி.மு.க.வுக்கு வந்தேன். அமித்சாவை கூப்பிடுறது கருணாநிதி இரங்கல் கூட்டம், கூட்டணி இதெல்லாம் வேற வேற… கண்டிப்பா பி.ஜே.பி. கூட இதை வைத்து கூட்டணி வைக்க மாட்டாங்க. தி.மு.க. கட்சிகாரங்க இதை விரும்ப மாட்டாங்க.

கோவிந்தராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம்.

இப்பொழுது வெளிப்படையா மொழி அச்சுறுத்தல் எதுவும் நேரடியா இல்ல. பி.ஜே.பி. என்பது எதிர் கட்சி தான். தேசிய தலைவரா இருந்த கலைஞர் கருணாநிதி இரங்கலுக்கு அவர்களை கூப்பிடுவது தப்பு இல்ல. மறைமுகமா கூட்டணி வச்சிக்கணும்னு தி.மு.க.வுக்கு எண்ணம் இல்ல. அதை முடிச்சி போடுறது தவறு. நாம் மதவாத கருத்தை தான் எதிர்க்கிறோம். மதத்தை பின்பற்றுபவர்களை இல்ல. அப்படி தான் எல்லா விஷயத்தையும் பார்க்கணும். எப்படி இருந்தாலும் பி.ஜே.பி.யோட கூட்டு 99 சதவீதம் இருக்காது. அ.தி.மு.க.வ கூப்பிடாதற்குகாரணம் எந்த ஒரு கொள்கையும் இல்லாத கொள்ளையடிக்கிற கட்சி. இன்று தளபதி ஸ்டாலின் கட்சிக்கு தலைமை பதவிக்கு வந்துட்டார். அவர் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரா போக மாட்டார், அந்த வகையில் தான் கூட்டணி பற்றியும் சிந்திப்பார்.

மாடசாமி,  வாழும் கலைஞர், நெல்லை மாவட்டம், கருங்குளம்.

நான் எந்த கட்சியும் இல்ல. எனக்கு நாடகம் தான் மூச்சி. பிரம்மன் நாடகக்குழு நடத்துறேன். எங்க அப்பா பேர். நான் எம்.ஜி.யாரு மாதிரியும் வேஷம் போட்டிருக்கேன். கருணாநிதி மாதிரி அச்சு அசலா இருக்குன்னு எல்லோரும் சொல்லுறாங்க. பார்க்கறவங்க என்னோடபோட்டோ எடுக்காம போக மாட்டாங்க.

ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்.

உண்மைய சொல்லனும்னா, நான் 1972- ல பொறந்ததுல இருந்தே தி.மு.க.வில இருக்கேன். 89-ல தான் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட ஆரம்பிச்சேன். எங்க வீட்டுல குழந்த குட்டி எப்பவுமே தி.மு.க. தான். இப்ப கலைஞர் இறப்பின் போது என் ஆறு வயசு பேரன், இரங்கல் பாடி வாட்சப்புல அனுப்பினான். அது பெரிசா போச்சி. அந்த அளவுக்கு தி.மு.க. மீது பற்று.

பி.ஜே.பி.யோட, வாஜ்பாயோட தலைவர் கலைஞர் அப்பவே கூட்டு வச்சிக்கினாரு. அப்போ பல மந்திரிங்க பதவி வாங்கி தமிழ்நாட்டுக்கு பல நல்லது செஞ்சாரு. கொள்கைய விட்டுக்கொடுக்காத கூட்டணி வக்கிறது கட்சி முடிவு. அதை நாங்க ஏத்து தான் ஆகனும். கலைஞர் இந்தியாவுக்கு ஒரு பொது சொத்து. அதனால அமித்சாவ இப்ப கூப்பிட்டது தப்பு இல்ல. அவர் எதுக்கு வரலன்னு தெரியல. எதிர்காலத்துல கூட்டணி பத்தி எங்க தலைவர் முடிவு எடுப்பார். எங்க கொள்கைக்கு எதிரா… எங்க தலைவர் போக மாட்டார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு!

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் வராக் கடனும், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையும், அதில் மோடியின் சாதனையும்!

ந்தியா முழுவதும் செயல்பாட்டாளர்கள் கைதுகள், மாட்டின் பெயரில் கொலைகள், சபரிமலைக்கும் வெள்ளத்துக்கு உள்ள தொடர்புகள், இன்னும் பல செய்திகளுக்கு மத்தியில் வேறு சில நிகழ்வுகளும் நடந்துகொண்டு இருக்கின்றது.

மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 2000 கோடிக்கு அதிகமாக உள்ள கடன்களில், தவணை தேதி முடிந்து ஒரு நாள் கடன் தொகை கட்டாமல் இருந்தால் கூட அந்த கடன்களை அழுத்தத்தில் உள்ள கடன்கள் (stressed loans) என்று வகைப்படுத்தும்படி வங்கிகளுக்கு அந்த சுற்றறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இவ்வாறு வகைப்படுத்தி 180 நாட்களுக்குள், அந்த கடன்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியது. அப்படி தீர்வு காண முடியவில்லை என்றால் அந்த கம்பெனியை திவாலான கம்பெனி என்று அறிவித்து அதை ஏலத்தில் விடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்து மின்சார உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு என்ற தனியார் கம்பெனிகளின் கூட்டமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. திங்கள் (27 Aug) அன்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

விளக்கமாக கூற வேண்டிய செய்தியின் முக்கிய விவரங்களை மட்டும் கூறி இருக்கிறேன்.

இந்த செய்தி தொடர்பான, முக்கியமான தகவல்கள் உள்ளது. கடனை திருப்பி செலுத்த தவறிய, அதாவது அந்த 180 நாட்களையும் கடந்துவிட்ட, மின் உற்பத்தி கம்பெனிகள் மொத்தம் 34. அந்த 34 கம்பெனிகளின் கடனை கூட்டினால், மொத்த தொகை 1.75 லட்சம் கோடி ரூபாய்.

கேரளா வெள்ளத்துக்கு யூனியன் அரசு கொடுத்த தொகை எவ்வளவு? கேரளா அரசு கேட்ட தொகை எவ்வளவு? எதுவாக இருந்தாலும் 1.75 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் சில்லறை காசு போல் தெரிகிறது.

இன்னொரு தகவலையும் தருகிறேன். ஆகஸ்ட் 27 படி, மொத்தம் அழுத்தத்தில் உள்ள கடன்கள் 70, அதாவது 70 கம்பெனிகள் வாங்கிய கடன் திருப்பி செலுத்தாததால் அழுத்தத்தில் உள்ளன. இந்த கடன்களின் கூட்டு தொகை 3.8 லட்சம் கோடி ரூபாய். (இதற்கு எத்தனை பூஜ்யங்கள் என்று கல்லூரி மாணவர்களின் தேர்வில் கேள்வியாக கேட்கலாம்!)

இதில் இன்னும் சுவையான செய்தி ஒன்று இருக்கிறது. குஜராத்தில் GSPC (Gujarat State Petroleum Corporation) என்ற ஒரு மாநில அரசு நிறுவனம் உண்டு. இது திருவாளர் மோடி அவர்கள் முதல்வராக இருந்த பொழுது, குஜராத்தின் வளர்ச்சிக்காக, வெளிநாட்டு கம்பெனிகளுடன் கூட்டு சேர்த்து பல திட்டங்களை செய்வதாக சொன்னது.

வழக்கம் போல இந்த கூட்டு ஒப்பந்தங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பல கட்டுரைகள் வந்துள்ளன (One Big Jumla: ‘GSPC Is a Case of How Not to Do Business’).

இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த GSPC ஏராளமாக கடன்களை வாங்கியது. அதிகமான முறைகேடுகள் நடந்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ இப்பொழுது பொது துறை வங்கிகளுக்கு GSPC ரூ. 12,519 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் உள்ளது, அதாவது தவணை தேதி முடிந்தும் செலுத்தாமல் உள்ளது.

சுவையான செய்தி என்னவென்றால், மேலே கூறிய அலகாபாத் உயர்நீதி மன்ற வழக்கில், மோடி அரசு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு எதிராக தன்னையும் இணைத்துக் கொண்டது. அதாவது, ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை எதிர்த்து மோடி அரசு நீதி மன்றத்துக்கு சென்றுள்ளது.

ரிசர்வ் வங்கியை எதிர்த்து இந்திய அரசு நீதி மன்றம் சென்றது இதுவே முதல் முறை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆக, இதுவும் திருவாளர் மோடிஜீ அவர்களின் சாதனைகளில் ஒன்று.

நன்றி : Arun Karthik முகநூல் பக்கம்

மேலும் :

சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !

நான் பெட்ரோல் போடும்போது நீங்க மீட்டரைப் பார்க்க முடியாது சார்.
அதோ.. அந்த மோடிஜி போஸ்டரைத் தான் பார்க்கனும்.
இது மேலிடத்து உத்தரவு சார் !நன்றி: rsyftn

______________________

நாசிச மோடி!நன்றி: rsyftn

______________________

போராடுறவன்லாம் சமூக விரோதிங்கனு எழுதுங்கஜி!

நன்றி: rsyftn

______________________

கேரள வெள்ள நிவாரணமாக அரேபிய ஐக்கிய குடியரசு வழங்க முன்வந்த 700 கோடி நிதியை நிராகரித்த மோடி!______________________