Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 445

குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !

விலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும் – ஒரு ஐ.டி. ஊழியரின் அனுபவம்!

டந்த வாரம் ஊருக்கு சென்றிருந்தபோது, எனது தந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தால், அன்றைய தினம் நடைபெற்ற அவர் நண்பர் வீட்டு திருமணத்தில் நான் சென்று கலந்து கொள்ள வேண்டி இருந்தது. திருமணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் நடைபெற்றது, திருமணத்திற்கு தலைமை, சுகாதாரத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்.

குட்கா புகழ் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்

தாலி எடுத்துக்கொடுத்து, திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு மணமகளின் தந்தையையும் (அ.தி.மு.க), மணமக்களையும் வாழ்த்திப் பேசிவிட்டு, தங்கள் ஆட்சியின் ‘சாதனைகளை’ விளக்கிப் பேசினார். அதாவது “எங்கள் (‘அம்மா’வின் மற்றும் அவர் இறந்த பின்னர் நடக்கும் ‘எடுபிடி’/’பினாமி’) ஆட்சியில் தமிழகம் முழுவதும் அரசானது பல்வேறு ‘சாதனைகளை’ நிகழ்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதியில் புதிதாக அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, காவிரி கூட்டு குடிநீர் மற்றும் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது” என்றவாறு அமைச்சரின் பேச்சானது கட்சிக்காரர்களிடம் கரவொலி பாராட்டு பெற்றது.

ஏனோ கட்சி சார்பற்ற மக்களிடம் (குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள்) இருந்து எந்த ஒரு உணர்ச்சியையும் காண முடியவில்லை. அவர்கள் அமைச்சரின் பேச்சை ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்பதை அவர்களின் முகத்தில் காண முடியவில்லை.

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் “என்னங்க, அமைச்சர் இந்தப் பகுதிக்கு இவ்வளவு நல்லது பண்ணி இருக்காரு. அப்புறம் என்ன கவலை உங்களுக்கு?” என நான் கேட்டேன். மணல் மாபியா சேகர் ரெட்டி கும்பலுடன் கூட்டணி வைத்து கொள்ளை அடித்தது தொடங்கி குட்கா ஊழல் மேட்டர் வரை வருங்காலத்தில் வரலாற்றுப் பாடங்களாக அமையப்போகும் அமைச்சரின் ‘வரவு செலவு’ விவரங்களை – அந்த சரித்திர சாதனைகளை எனக்கு தெரிந்ததை விட நிறையவே அவர் விவரித்தார்.

அமைச்சர் எந்தெந்த வகையிலெல்லாம் ‘உழைத்து’ தன் பெயரிலும் தனது பினாமி பெயரிலும் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் என்பதை அம்மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். “அமைச்சர் பெரிய மலை முழுங்கி, ஊழல் பேர்வழின்னு தெரிஞ்சும் உங்களுக்கு அவர் மீது கோவம் வரலையா” என்றால், ஒன்று, தங்களின் விதியை நொந்து கொள்கிறார்கள் அல்லது அமைச்சர் ஊழல் செய்வதையும், இதுவரையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் அவரின் தனித் திறமையாக பார்க்கிறார்கள் என்ற பரிதாபமான நிலையை அவரின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

மாதிரிப் படம்

மேலும், அப்பெரியவரின் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தமது ஊர் மக்கள், குறிப்பாக கல்லூரி படிப்பு முடித்த இளைஞர்களின் நிலையை கூறினார். வயல் காடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து B.E, B.Sc, M.Sc, MBA, MCA, மற்றும் Diploma என்று படிக்க வைக்கப்பட்ட இளைஞர்கள், தாங்கள் படித்த படிப்பிற்கு தகுதியான வேலை கிடைக்காத காரணத்தினால் திருப்பூர் சாயப்பட்டறை, சென்னையில் Credit Card Marketing, உள்ளூரில் இருந்தால் திருமணங்களுக்கு கூலிக்கு சமையல் வேலை செய்யச் செல்வது, மளிகைக் கடை வேலை, கடைசிக் கட்டமாக சிங்கப்பூர் அல்லது Gulf நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இதுதான் அப்பகுதி சிறுகுறு விவசாயிகளின் வாரிசுகளான முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலைமை.

என்னிடம் பேசிய அந்த இளைஞர் கூட இன்ஜினியரிங் முடித்திருக்கிறார். தனது கல்லூரியில் Campus Interview-க்கு எந்த நிறுவனமும் வரவில்லை என்பதால் சென்னை சென்று அங்கு தங்கி சில மாதங்கள் வேலை தேடி இருக்கிறார். தனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையென்ற படியால் இப்பொழுது சிவில் சர்விஸ் தேர்வுக்கு Coaching செல்வதாக கூறினார்.

தங்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி நெல், கரும்பு, வேர்க்கடலை, மற்றும் இன்னும் பல உணவு பொருள்களை விளைவித்த விவசாயி உரிய விலை கிடைக்காமல் சுரண்டப்படுகிறார். விவசாயம் என்றால் வாழ்நாள் முழுவதும் கடினமே, உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்பதையும், அவர்களின் தலைமுறையில் பட்டதாரிகள் அரசு வேலை பெற்று சலுகைகள் பெற்றதை பொருத்திப் பார்த்து, ”எனக்குத்தான் அந்த ’கொடுப்பினை’ இல்லை, ஆனால் என் பிள்ளைகள் என்னை போல் கஷ்டப்படக் கூடாது/ சுரண்டப்படக்கூடாது, அவர்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஒரு நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும்” என்று படிக்க வைத்தனர்.

ஆனால் அவர்களது பிள்ளைகளோ அதற்கு எதிர்மாறாக, படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு அதாவது தினக் கூலிகளாக சென்று கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமென்று தெரியாமல் புலம்பித் திரியும் நிலைமையே மிச்சமாக உள்ளது.

அந்த பகுதியில் நடக்கும் விவசாயம் பற்றி விசாரித்தபோது கிடைத்த விவரங்கள், அதாவது 1996 வரை அப்பகுதியில் விவசாயமானது 90% வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்திருக்கிறது. கொல்லை (புன்செய்) பகுதிகளில் கிணற்று பாசனமாகவும், அதுவும் மரணப் படுக்கையில் இருந்த தருணம். வயல்(நன்செய்) பகுதிகள் மழை பெய்து நிரம்பியிருந்தால் ஏரி பாசனமாகவும், அதைவிடுத்து ஒரு சில விவசாயிகளிடம் டீசல் பம்ப் மோட்டார் கொண்ட ஆழ்துளை கிணற்று பாசனமாகவும் இருந்திருக்கிறது.

1996 ஆரம்ப கட்டங்களில், மின்சார வாரியம் புதிய திட்டத்தை அப்பகுதியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ரூபாய் 50,000 கட்டினாலே உடனடி மின் இணைப்பு கிடைக்கும் என்பது தான் அந்தத் திட்டம். பல விவசாயிகள் கடன் வாங்கி தங்கள் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். 3 Phase Supply 12 மணி நேரம் மட்டும் இருந்திருக்கிறது, அடுத்த சில வருடங்களில் அது 20 மணி நேரமாக உயர்த்தப்பட்டு விவசாயம் முப்போகமும் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

2008-க்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு காரணமாக, குறிப்பாக கிராமங்களில் கடுமையான மின்வெட்டு, அதிலும் 3 Phase மிகவும் குறைவான நேர Supply தான் இருந்திருக்கிறது. முப்போகமும் விளைந்த பூமி இப்பொழுது ஒரு போகத்திற்கே ‘முக்குகிறது’ என்றும், பாதி வயல்கள் தரிசாகவும் (அதில் கருவேல மரங்கள் வளர்ந்து அப்பகுதியின் ‘பசுமையை’ இன்னும் நிலை நாட்டி வருகின்றன), மிச்சம் மீதியில் நெல் அல்லது சவுக்கு விவசாயம் அதுவும் ஏனோ தானோ என்று தான் நடப்பதாக கூறினார்.

“இந்த கல்யாணத்திற்கு வந்திருக்கவங்கள்ல முக்கால்வாசி பேரு வீட்ல ரேஷன் அரிசி சாப்பாடுதான், அந்த அரிசியின் லட்சணம் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரேஷன் அரிசி ஒருவேளை நிறுத்தப்பட்டால் ஊரில் முக்கால்வாசி மக்கள் பட்டினியாக கிடக்க வேண்டி வரும் அல்லது ஊரை காலி செய்து விட்டு எதாவது நகரத்திற்கு கூலி வேலைக்குச் செல்லும் நிலைமைதான் ஏற்படும்” என்றார்.

விவசாயிகள் இந்த கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். உண்மையில் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை இன்னும் விவசாயிகள் உணரவில்லை. மாறாக விவசாயம் என்றால் நஷ்டமே என்ற நிலைப்பாடு மட்டுமே உறுதியாக உள்ளது. இப்பொழுது அவர்களின் பிள்ளைகள் வேலை வாய்ப்பற்றும் தனியார் சிறு முதலாளிகளால் சுரண்டப்பட்டும் வருகிறார்கள்.

புழுத்துப் போன ரேஷன் அரிசி சோறுதான், மிஞ்சிப் போனால் கலைஞர் வீடு அல்லது ‘அம்மாவின்’ பசுமை வீடு. ஆனால் தாம் இந்த அரசுக்கு தமது உழைப்பின் மூலம் அளித்த வருமானங்கள் ஏராளம் என்பதை உணர்ந்து இருந்தால் அமைச்சரின் பேச்சுக்கு இவர்களின் எதிர்வினை என்னவாய் இருந்திருக்கும்?

மக்களின் வரிப் பணத்தில் அமைச்சர்களுக்கு வீடு, மாதம் லகரங்களில் சம்பளம், கோடி கணக்கில் கமிஷன்கள், கமிஷன்களை முறைப்படுத்த IAS படித்த அதிகாரி, அவருக்கும் நமது வரி பணத்தில் சம்பளம், அரசு வாகனம், வீடு… இன்னும் பல சலுகைகள். அவர்களின் சொகுசுக்கு குறைவு இல்லாமல் செவ்வனே செய்து வைத்துள்ளது, இந்த ‘ஜனநாயக’ அமைப்பு. இவர்கள் மக்களின் பிரதிநிதியாம்? இவர்கள் தான் மக்களுக்கு ‘சேவை’ செய்பவர்களாம்!

அமைச்சர் அவர்களே, நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை?

அமைச்சர் அவர்களே, நீங்கள் MBBS படித்துள்ளதாக கேள்விப் பட்டேன், அதனால் உங்களிடமே இதை கேட்டு விடலாம், “நீங்கள் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்கிறீர்கள், அன்று மாலையே நீங்கள் செய்த அறுவை சிகிச்சைக்காக உங்களுக்கு விருந்து வைக்கப்படுகிறது.

நீங்களும் அவ்விருந்தில் கலந்துகொண்டு உங்களின் அறுவை சிகிச்சை சாதனையை பெருமைபடக் கூறுகிறீர்கள், மக்களும் அதை ரசிக்கிறார்கள், ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா? உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டவர் உயிரிழந்து விட்டார் என்பதுதான் அது.

இன்னும் பரிதாபத்துக்குரிய நிலை என்ன தெரியுமா, உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டவர் செத்துவிட்டார் என்று தெரிந்தும், மக்கள் உங்களின் சாதனையை ரசித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்.”

  • பாமரன்

நன்றி : new-democrats

அனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.

1

நீட் எதிர்ப்பு போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!

நீட் எதிர்ப்பு போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமுர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்வியிலிருந்து விரட்ட நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்ட உயர்கல்வி ஆணையம்.
உயர்கல்வியை கார்ப்பரேட், காவிமயமாக்கத் துடிக்கும் மோடி எடப்பாடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இறுதியில் அனிதாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி இரங்கல் செலுத்தினர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விருத்தாசலம். 97888 08110

***

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்! என்கிற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டும் கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதனுடைய ஒரு பகுதியாக தருமபுரி பெரியார் மன்றத்தில் 31.08.2018 அன்று மாலை அரங்க கூட்டத்தை நடத்தினர்.

பு.மா.இ.மு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன், தனது தலைமை உரையில், ”UGC – யை குறித்து பெரும்பான்மை மாணவர்கருக்கு தெரியாத நிலை உள்ளது. இதனை வீச்சாக எடுத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் நாடு முழுவதும் போராட்டங்களை அடக்குவது , கைது ,
சிறை என தொடர்ந்து வருகிறது. எனவே கருத்துரிமை பறிப்பதற்கு எதிராக மாணவர்கள் பெற்றோர்கள் சங்கமாக சேர வேண்டிய தருணமிது” என்றார்.

பு.மா.இ.மு கரூர் மாவட்ட அமைப்பாளர தோழர் சுரேந்தர் பேசுகையில் ”20 லட்சம் கோடி வருவாய் இலக்கை அடைய இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.” என்பதைக் குறிப்பிட்டு, கல்வி வியாபாரமயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தினார்.திராவிட கழக மாணவர் அணி தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் செல்லதுரை பேசுகையில், ”கல்வி மட்டும் தான் சுய ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் , பகுத்தறிவை தரக்கூடியது. அதனை பறிப்பதை அனுமதிக்க முடியாது. பெரியாரும், அம்பேத்கரும் இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி பெ ற்றிருக்க முடியாது. ஊழல்வாதிதான் உயர் கல்வி துறை அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ” என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை ஐ. ஐ.டி. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் நிறுவன உறுப்பினர், முனைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். ”இந்தியா முழுவதும் 40,000 கல்லூரிகள் 180 பல்கலை கழகங்கள் இருக்கிறது. இதனை பல்கலைக்கழக மானியக் குழு தான் கட்டுப்படுத்துகிறது. இதனை பறித்து கல்வியை சந்தை மயமாக்குவது, கார்ப்பரேட்டு மயமாக்குவதுதான் இந்த உயர் கல்வி ஆணைய மசோதாவின் நோக்கம். தன்னாட்சியை கல்லூரிகளுக்கு வழங்குவதால் ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்க முடியாத நிலை உருவாகும். ”நீட்”டினால் எப்படி அனிதா படிக்க முடியவில்லையோ?அது போல தான் பெரும்பாண்மை மாணவர்களுக்கும் ஏற்படும். எல்லா விதிமுறைகளையும் கார்ப்பரேட்களுக்காக தளர்த்தி விட்டார்கள். பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டமைப்பை உருவாக்கத் தவறினால் மருத்துவக் கனவுக்கு எப்படி நீட் மூலம் சவக்குழி தோண்டினார்களோ? அதே போல் சாதாரணமாக டிகிரி படிப்பதற்கும் சவக்குழி தோண்டுவார்கள். எனவே இதை எதிர்த்துப் போராடாமல் இலவசக் கல்வி, தரமானக் கல்வியை பெற முடியாது” என்று அறைகூவல் விடுத்தார்.

பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்,படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் உயர்கல்வி படித்தவர்கள் ஓட்டலில் வேலை பார்க்கும் நிலையிருப்பதையும்; மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த மக்களத் வாழ்வாதாரமும் பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,தருமபுரி. தொடர்புக்கு: 81 480 55 539.

அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !

னித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் செப்-08 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.

-o0o-

என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிடும் கண்டன கூட்டறிக்கை.ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரை ஊஃபா (UAPA) சட்டத்தின் கீழ் குற்ற எண். 4/2018 வழக்கில் கைது செய்துள்ளது மகாராட்டிரா காவல்துறை. கோவா ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெ, பாதிரியார் ஸ்தான் சாமி உள்ளிட்டோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டாக ஊடகங்களில் பரப்பப்பட்டது ‘மோடியை கொல்லச் சதி செய்தார்கள்’ என்பதே. உண்மையில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டது பீமா கோரேகான் சம்பவத்திற்காக. தற்போது இரண்டையும் இணைத்து செய்தி பரப்பப்படுகிறது.

பீமா கோரேகன் நிகழ்வு:

1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர்,31,2017-இல் நூறுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்கள் உள்ளடங்கிய எல்கர் பரிசத் (Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.

2018 ஜனவரி 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு
நினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான தலித் மக்களும்- முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கோரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க., சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் டிச-31, 2017 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. – வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.

கைதிற்கு ஆதாரம் இல்லை – அரசியல் சட்டத்திற்கு எதிரானது

  1. டிச, 31, 2017 பீமா கோரேகன் நிகழ்வில் கைதான 5 செயல்பாட்டாளர்களும் பங்கேற்கவில்லை.
  1. கு.எண்.4/2018 முதல் தகவல் அறிக்கையில் கைதானவர்கள் பெயர்கள் இல்லை.
  1. கைது – உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ் குமார் – எதிர் – பீகார் அரசு மற்றும் டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் – எதிர் – மகாராஷ்ட்ரா அரசு வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது.
  1. கைது – அரசியல் சட்டத்தின் சரத்துகள் 14,19 & 21 மற்றும் சர்வதேச அரசியல் & மனித உரிமை பிரகடனம்,1976-க்கு எதிரானது.
  1. கைதை நியாயப்படுத்த மகாராஷ்டிர மாநில ஏ.டி.ஜி.பி. பரம்பீர்சிங் பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய “மோடி கொலை சதிக் கடிதம்” இன்றுவரை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் ரிபப்ளிக் டி.வி. அர்னாப் கோஸ்வாமியிடம் உள்ளது.
  1. “மோடி கொலை சதிக் கடிதம்” கு.எண். 4/2018 & பீமா கோரேகன் வழக்குகளில் இல்லை. குறைந்தபட்சம் கடிதம் தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கை கூட இல்லை.
  1. மோடியை கொல்லச் சதி செய்தார்கள் – ரஷ்யா – சீனாவிலிருந்து, நேபாளம் வழியாக ஆயுதம் கடத்த முயற்சித்தார்கள் – கம்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளில் படம் இருந்தது – என்ற கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
  1. பீமாகோரேகன் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர்களை அதே வழக்கில் சேர்ப்பது இந்திய சாட்சியச் சட்டம், வழக்கறிஞர்கள் சட்டம், 1961–க்கு எதிரானது. வழக்கறிஞர்களின் தொழில் உரிமையைப் பறிப்பது.

கருப்பு சட்டம் ஊபா (UAPA)

மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற ஊபா சட்டத்தின் கீழ். இச்சட்டத்தின்கீழ் பிணை வாங்குவது கடினம். 1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள், மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு.

இச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் திரு.முருகன் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாய் சிறையில் உள்ளார். ஏற்கனவே மருத்துவர் பிநாயக் சென், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் ஊபா சட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். தடா, பொடாவைப் போன்றே ஊபா சட்டமும் முழுக்க முழுக்க அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலரும் சிறையில் வாடி வருகிறார்கள். அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, வாழ்வுரிமை நீடிக்க ஊபா சட்டம் நீக்கப்பட வேண்டும்.

சீர்குலைக்கப்படும் சட்டத்தின் ஆட்சி

இந்தியாவில் நடைபெறுவது மோடி – அமித்சா ஆட்சி அல்ல – அது சட்டத்தின் ஆட்சி. சட்டமே மேலானது. சட்டத்தின் ஆட்சிதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் தற்போதைய மத்திய 7 மாநில பா.ஜ.க. அரசுகள், கட்சி மற்றும் துணை அமைப்புகள் நிகழ்த்திவரும் வன்முறைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இந்த சீர்குலைவு வேலை ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் அரசின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. வெளியிலிருந்து பசு பாதுகாவலர்கள், சனாதன் சன்ஸ்தா என்ற வடிவங்களிலும், உள்ளிருந்து போலி என்கவுன்டர், தேசிய பாதுகாப்பு, ஊபா சட்டக் கைதுகள் என்ற முறையிலும் நடைபெறுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்பவர்கள் “தேச விரோதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், இந்து விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள்” என முத்திரை குத்தி ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால், நேரடியாக கலவரம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சனதான் சன்ஸ்தா, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் மீது எப்போதும் ஊபா சட்டம் பாய்வதில்லை. மாறாக குற்றங்கள் மறைக்கப்படுகின்றன.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள மோடி அரசு அதனை மடைமாற்றம் செய்யவும், தன்னை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவும்தான் கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது.

பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை, பா.ஜ.க.-வை எதிர்ப்போர் என அனைவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம், ஊபாவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் ஆட்சி என்ற நிலை மாறி சர்வாதிகாரம் நிலைகொள்ளும். போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.

எனவே நாங்கள் அனைவரும், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைதையும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதிகளுக்கு எதிராக, அரசியல் சட்டம் – சட்டத்தின் ஆட்சியைக் காக்க அனைத்துத் தரப்பு மக்களும் போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம். இன்று நாம் போராடா விட்டால் நாளை ஊபா நம்மீதுதான் என எச்சரிக்கிறோம்.

-o0o-

வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள்- எழுத்தாளர்கள்

வழக்கறிஞர் லஜபதிராய்
மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான்
வழக்கறிஞர் ஹென்றி டிபேன்
வழக்கறிஞர் மகபூப் பாட்சா
வழக்கறிஞர் திருநாவுக்கரசு
வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்
வழக்கறிஞர் ராமச்சந்திரன்
வழக்கறிஞர் ஆறுமுகம்
வழக்கறிஞர் ஆனந்த முனிராஜன்
வழக்கறிஞர் கனகவேல்
வழக்கறிஞர் இராஜேந்திரன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்

-o0o-

பேராசிரியர் முரளி
பேராசிரியர் சீனிவாசன்
பேராசிரியர் விஜயகுமார்
பேராசிரியர் புவனேசுவரன்

-o0o-

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்
நாடக ஆசிரியர் பேரா.இராமசாமி
எழுத்தாளர் லிபிஆரண்யா

தகவல்: பேராசிரியர் முரளி, மதுரை.

உங்கள் ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் | சுகிர்தராணி

னி நான்
மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன்
நீட்டுக்காகப் போராட மாட்டேன்
பசுவைக் கொல்ல மாட்டேன்
குசுவையும் விட மாட்டேன்

ஸ்டெர்லைட்டுக்காக குண்டடிபட்டு
சாக மாட்டேன்
பெட்ரோல் விலை ஏறினால்
நியுட்ரினோ சோதனை செய்தால்
மூச்சுக் காட்ட மாட்டேன்.
எட்டுவழிச் சாலை போட்டால்
நடைபயணம் செல்ல மாட்டேன்
மீத்தேன் எடுத்தால் சத்தம் போட மாட்டேன்

கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கச் சொல்லிக் கேட்க மாட்டேன்
மணல் கொள்ளையையும்
கண்டு கொள்ள மாட்டேன்
காவிரியில் தண்ணீர் விடாவிட்டால் வழக்குத் தொடுக்க மாட்டேன்
சொந்தக்காரர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால்
வாய் திறந்து கேட்க மாட்டேன்

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால்
யாரையும் பொறுப்பேற்கச் சொல்ல மாட்டேன்
மீனவர்கள் கைது செய்யப் பட்டால்
உரிமைக்காக கொடி பிடிக்க மாட்டேன்
ஓகி புயலில் ‘ஒருத்தரும் வரலே’ என்றால் ஆவணப் படம் எடுக்க மாட்டேன்
ஈழத்திற்கு ஐநாவில் பேச மாட்டேன்
வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்ட மாட்டேன்

பேராசிரியர்கள் பாலியல் தொல்லை செய்தால்
காட்டிக் கொடுக்க மாட்டேன்.
இரத ஊர்வலத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டேன்
பொட்டு வைக்காமல் இருக்க மாட்டேன்
வங்கிகளில் கல்விக்கடன் கேட்க மாட்டேன்
சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்
காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்
மாலை எட்டு மணிக்குமேல் எங்கும் செல்ல மாட்டேன்

பணமதிப்பிழப்பு செய்தாலும்
பண்பற்றவர்கள் எனக் கூற மாட்டேன்
மருத்துவமனைகளில் குழந்தைகள் இறந்தாலும்
சொந்தச் செலவில் சிலிண்டர் வாங்க மாட்டேன்
கெயில் கொண்டு வந்தால் மயிரேயென்று கத்த மாட்டேன்
சமூக விரோதிகள் என்றால்
சூடு சுரணை பார்க்க மாட்டேன்
வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களைக்
திரும்பக் கொண்டுவரச் சொல்லிக் கேட்க மாட்டேன்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கக் கேட்க மாட்டேன்

தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப்
போக மாட்டேன்
இந்தித் திணிப்பு செய்தால்
மொழிப் போராட்டம் நடத்த மாட்டேன்
புருஷன் செத்தால் மறுமணம்
செய்து கொள்ள மாட்டேன்
ஊருக்குள் வரவிடுங்கள் எனக் கேட்க மாட்டேன்
சமத்துவச் சுடுகாடு ஒருபோதும் கோரமாட்டேன்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு நடக்க மாட்டேன்

சுகிர்தராணி

வன்புணர்வு செய்தாலும் எதிர்ப்புக்
காட்ட மாட்டேன்
சேரி நக்சலாக இருக்க மாட்டேன்
தாமரை தவிர வேறு பூவைச் சூட மாட்டேன்
சமூகநீதிப் பற்றிக் கவிதை எழுத மாட்டேன்
அம்பேத்கரியம் பேச மாட்டேன்
இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்க மாட்டேன்
கொடி பிடித்துக் கோஷம் போட மாட்டேன்.
செத்தாலும் பௌத்தராகச் சாக மாட்டேன்

கொஞ்சம் பொறுங்கள்
அவசரமாய் வருகிறது
உங்கள் ஜனநாயகத்தின்மீது
கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்.

நன்றி: சுகிர்தராணி

விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே நண்பர் சி.ஐ.ஏ-வால் கடத்தப் பட்டாரா ?

ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis

விக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis காணாமல் போயிருக்கிறார். நார்வே நாட்டின் போலீசார் அவரது மறைதல் குறித்து விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அரிஜின் டச்சு நாட்டின் குடிமகனாவார். விக்கிலீக்ஸ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுடன் தொடர்புடையவர். இவரது மறைதல் குறித்து டவிட்டரில் பலரும் அமெரிக்க உளவுத் துறை நிறுவனமான சி.ஐ.ஏ.-வை சந்தேகிக்கின்றனர்.

அரிஜின் இணையப் பாதுகாப்பு துறையில் வல்லுனர் என்பதோடு, புலனாய்வு பத்திரிகையாளர்கள் எப்படி அரசு உளவுத்துறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஒரு கையேட்டு புத்தகத்தின் சக ஆசிரியரும் கூட. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியில் வடக்கு நார்வேயின் விடுதி ஒன்றிலிருந்து காலி செய்தவர் அதன் பிறகு தொடர்பில்லாமல் மறைந்து போனார்.

“என்னுடைய சிறந்த நண்பர் நார்வேயின் போடோவில் இருந்து மறைந்து போனார். சக ஊழியர்கள், குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்திருக்கின்றனர். தயவு செய்த பகிருங்கள்” என்று டிவிட்டரில் அவருடைய நண்பர் ஆன்சில்லா பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் அந்த விடுதியிலிருந்து அரிஜின் ரயில் மூலம் ட்ரோன்தெம் நகருக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தார், இந்த ரயில் பயணம் பத்து மணி நேரமே பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். போடா நகரித்திலோ, ரயில் பயணத்திலோ அல்லது ட்ரோன்தெம் நகரிலோ அவர் காணாமல் போயிருக்கலாமென்று அவர் சந்தேகிக்கிறார்.

ஆன்சில்லாதான் இந்த தகவலை முதன்முறையாக டிவிட்டரில் அறிவித்தார். இவர் முன்பு டச்சு நாட்டைச் சேர்ந்த Dutch Pirate Party-யின் முன்னணியாளராக செயல்பட்டு வந்தவர். அந்தரங்க உரிமையை பாதுகாக்கும் செயற்பாட்டளரும் கூட.

விக்கிலீக்ஸ்-இன் டிவிட்டர் கணக்கிலிருந்தும் இச்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். நார்வே போலீசாரும் 47 வயது டச்சுக்காரரான அரிஜின் காணாமல் போனதை அடுத்து விசாரணையை துவக்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

இவரது மறைதல் குறித்து சிலர், அவர் தொடர்பேதுமில்லாத மலைப்பகுதிக்குச் சென்றதால் இருக்குமென்கிறார்கள். சிலரோ அவரது விக்கி லீக்ஸ் தொடர்பால் இது ஒரு அமெரிக்காவின் சதியாக இருக்கும் என்கிறார்கள். இன்னும் ஒருவர், இது விக்கி லீக்சின் மறைபுலனாய்வு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்கும், அவர் முக்கியமான ஒரு பணிக்காக தொடர்பில்லாத நிலையை உருவாக்கியிருக்கலாமோ என்று கேட்கிறார்.

விக்கி லீக்சின் ஆதரவாளர்களோ அவர் கடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். ஏனெனில் “பத்திரிகையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு” எனும் அவரது ( இப்புத்தகத்தின் ஆசிரியர் இருவரில் இவரும் ஒருவர்) கையேட்டு புத்தகம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வண்ணம் அவர் வெளியிட்டுள்ளார். தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு புலனாய்வு செய்தியாளர்கள் செயல்படவேண்டிய முறை பற்றி அவர் அதில் விரிவாகவும் எளிமையாகவும், நுணுக்கமாகவும் விவரித்துள்ளார். அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையை கீழே இணைத்துள்ளோம். விரைவில் அவரது கருத்துக்களை தமிழில் அறியத் தருகிறோம்.

அதில் “உங்களது அந்தரங்கம் மற்றும் உங்கள் ஆதாரங்கள் – ஆதாரங்களைத் தருவோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, பத்திரிகையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு எனும் இந்தக் கையேடு உங்களது குரல் – எழுத்தை மறைக்க முடியாத படியும், அறிய முடியாதபடியும், அடையாளமற்ற அனாமதேயமாகவும் மாற்றுவதற்கு நிச்சயம் உதவும்” என்கிறார்.

மேலும், “இதுவரை எதையும் உருவாக்கிய அனைவரையும் போலவே, நமக்கு முன் வந்த ஆயிரம் தலைமுறையினரது தோளில் நின்று கொண்டுதான் நாமும் எதையும் செய்ய முடியும். அதனால், இந்தப் புத்தகமும் அனைத்து மின்னணு வடிவங்களிலும் எந்த வரம்புமின்றி இலவசமாகவும் கிடைக்கும்” என்கிறார்.

மேலும் இந்த மின்னணு பாதுகாப்பு என்பது ஏதோ கம்யூட்டர் சயின்ஸ் படித்தோரும், முனைவர் படிப்புக்குமான ஆய்வு செய்வோரும்தான் செய்ய முடியும் என்பதல்ல. நீங்களும் செய்யக் கூடிய எளிமையான காரியமே என்று இளம் பத்திரிகையாளர்களை உற்சாகப்படுத்துகிறார்.

இத்தகைய சமூக விழுமியங்கள் தாங்கிய ஒரு அறிஞர் காணாமல் போனதுதான் நமக்கு அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தற்போது இவர் காணாமல் போனதற்கு குறிப்பான காரணங்கள் தெரியவில்லை. அவை அவருடைய தொழில் நிமித்தமான, தனிப்பட்ட காரணங்களுக்காக்கவா என்பதும் தெரியாது. ஆனால் இத்தகைய நல்லவர்களை உலக மக்களின் முன்னேற்றத்திற்காக சுயநலமில்லாமலும், அறிவுப் பூர்வமாகவும் பாடுபடுவர்களை அமெரிக்க அரசு சும்மா விடுமா என்ன? அவரது நண்பர்களது கவலையைப் பார்த்தால் இந்த காணாமல் போனது சதி நடவடிக்கையோடு இருக்குமென்றே எண்ணத் தோன்றுகிறது.

என்.எஸ்.ஏ எனப்படும் அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமையின் உலக ஒட்டுக் கேட்டலை அம்பலப்படுத்தியதற்காக்க அசாஞ்சேயும், ஸ்னோடனும் இன்றும் வேட்டையாடப்படுகிறார்கள். அரிஜின் போன்ற ஆய்வாளர்களும் விதி விலக்கல்ல! ஒரு வேளை சி.ஐ.ஏ-தான் இவரது மறைவிற்கு காரணம் என்றால் உலக மக்கள் பின்னொரு நாளில் அமெரிக்க அரசுக்கு விதிக்கப் போகும் தண்டனையில் இக்குற்றமும் நிச்சயம் வரும்!

Preface – Arjen

Over the last 12 months all the most extreme paranoid fears of privacy activists and information security experts have turned out to be but cuddly little problems compared to the reality of industrialised espionage on the entire planet. Anyone who has kept abreast of the ongoing revelations as a journalist with the desire to protect their sources and their stories from government or corporate snoopers may have felt despair. Is everything with a chip and a battery spying on us? When considering most offthe-shelf computing devices such as laptops, tablets and smartphones, the situation is indeed dire. But there are steps you can take and those steps are not expensive nor do they require a PhD in computer science.

Using a computer system that can withstand all but the most advanced attacks by the most advanced nation state-level attackers is well within the reach of everyone. That is, anyone who is willing to spend a few days learning to use software that is free of cost and hardware that is already available to you or that can be bought for under £200. This handbook can get you started on understanding how to secure your data and communications and those of your sources, and to use tools and methods that have been proven to work in the most extreme situations by experts all over the world. Depending on your pre-existing computer skills this may be a bit of a learning experience, but trust that many have gone before you who also did not consider themselves experts and yet they managed to become comfortable with the concepts and tools described in this book. If you are a journalist in the 21 st century, you need these tools.

After all, William Randolph Hearst said decades ago: journalism is writing down what powerful people and institutions do not want written. If you don’t consider yourself to be a journalist but merely insist on actually having the right to privacy guaranteed to you under the UN Declaration Of Human Rights [1948] Article 12 – this book is for you too. Like almost everyone who ever created anything, we could only do so by standing on the shoulders of a thousand generations that came before us. Thus, this book will be forever freely available in a range of electronic formats without any restrictions. If the format you would like is missing, just let us know.

If you appreciate this work, please spread it around as much as possible and help us make the next version better. Constructive feedback of any kind is most welcome. The problem will keep developing and so will our response. Please contribute to sharing this knowledge and promoting these tools in any way you can.

Arjen Kamphuis

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:

அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

னிதாவின் மரணத்திற்கு
இன்றோடு ஒரு வயதாகிறது
அனிதாவின் மரணத்தின்
முதல் பிறந்த தினத்தில்
ஆயிரம் இரவுகளைப் பிழிந்த
அடர் கறுப்பு வண்ணத்தில்
புத்தாடை வாங்குகிறோம்
ஆயிரம் கசப்புகளின்
சாரத்தாலான
பிறந்த நாள் கேக் ஒன்றை வாங்குகிறோம்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
மெளனமாக நம்மையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
நம் கையாலாகாததனத்தை
கேலி செய்வதுபோல
ஒரு வறண்ட புன்னகையை உதிர்க்கிறது
நீதியின் தந்திகள் அறுபட்ட வீணைகளிலிருந்து
சிலேட்டில் ஆணியால் எழுதுவது போன்ற
சங்கீதங்கள் எழுகின்றன
என் பற்கள் கூசுகின்றன
அதிலிருந்துதான் நாம் அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தின வாழ்த்துப் பாடலை
இசைக்க இருக்கிறோம்

பத்ம வியூகத்தில்
அபிமன்யுவை கொன்றதுபோலவே
அனிதாவைக் கொன்றீர்கள்
நீங்கள் தந்திரமாக
உருவாக்கிய சக்கர வளையங்களை உடைக்க
கடைசிவரை போராடினாள்

கடைசியில் மலைமுகட்டில் மோதி
உயிரைவிடும் ஒரு பறவைபோல
தன்னை அழித்துக்கொண்டாள்
அது துரோகத்திற்கு எதிரான
கடைசி எதிர்ப்பு
அது அநீதிக்கு எதிரான
கடைசிக் கண்டனம்
வரலாற்றின் அரண்களை
தாண்ட முயன்றவர்கள்
வரலாற்றின் பலிபீடங்களில்
ரத்தம் சிந்துகிறார்கள்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
ஒரு குழந்தை வளர்வதுபோல
நம் நெஞ்சில் வளர்கிறது
ஒரு குழந்தையைவிட வேகமாக வளர்கிறது
ஒரு வனத்தில் மூண்ட நெருப்பைவிட வேகமாக வளர்கிறது

அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தினத்தில்
அதற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?
ஒரு ஸ்டெதாஸ்கோப்?
ஒரு ரத்த அழுத்தம் அளக்கும் கருவி?
ஒரு சிரிஞ்ச்?
ஒரு அறுவை சிகிட்சை கத்தி?
ஒரு பிரிஸ்க்ரிப்ஷன் காகிதம்?
இல்லை
தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்
அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்
அன்று கொல்லும் அரசை நின்றுகொல்லும் ஒரு முழக்கம்
நீதியின் இருண்ட வீட்டில் ஏற்ற ஒரு விளக்கு
சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்
அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !

1

துரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, – ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் இரா. முரளி, மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் ஆற்றிய உரை.

பேரா.விஜயகுமார், துணைத்தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு.

கல்வியாளர்களை விரட்டும் உயர் கல்வி ஆணைய மசோதா!

பேரா.விஜயகுமார்

இன்று நாம் பேச வேண்டிய முக்கியமான பிரச்சினையை சரியாக ஆராய்ந்து இந்த மசோதாவை முறியடிக்க அறைகூவி உள்ளார்கள்.  ஏனெனில் கல்வி பறிபோய்விட்டால் அவ்வளவு தான்.  நாம் நம்மை அறியாமலேயே அடிமையாக அதுவே போதும்.  நான் மூன்று விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, பல்கலை மானியக்குழு என்பது கல்வியாளர்களால் நிரம்பிய ஒரு அமைப்பு.  நிதி ஒதுக்கீட்டைத் தவிர அரசுக்கு அதில் வேலை இல்லை.  ஆனால் இந்த மசோதாவின் படி உயர்கல்வி ஆணையத்தில் கல்வியாளர்களுக்கு இடமே இல்லை.  சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் தான் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனில் இதன் யோக்கியதையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.  ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் அம்பானி-குமாரமங்கலம் பிர்லா தலைமையில் கல்வி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.  அதே போல், இனி தொழிலதிபர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களது நிறுவனங்களுக்கு திட்டமிடுவதைப் போல, நம்முடைய கல்வியின் மூலமாக எப்படி இலாபம் பார்க்கலாம் என திட்டமிடுவார்கள்.

இரண்டாவதாக, பொதுவாவே ஒரு சட்டம் உருவாக்கப்படும்போதே, அதிலிருந்து தப்பிக்க ஒரு ஓட்டையை விட்டுவைப்பது போல், இந்த மசோதாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை படித்துப் பார்த்தால் – அந்த ஆணையம் ஒரு ஆய்வு செய்யும் அமைப்பாக மட்டும் இருக்குமே ஒழிய, தற்போதைய மானியக் குழு போல நிர்வகிக்கும் அமைப்பாக இருக்க முடியாது.  உதாரணத்திற்கு தங்களுடைய தேவைக்கு ஒத்துவராத பாடம் ஒன்றை அதைத் தடுப்பதற்கு மட்டுமே இந்த ஆணையத்தை பயன்படுத்த முடியும்.  மற்றபடி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் எப்படி அரசு தலையிட முடியாதோ அதே போல் நம் கல்வி அமைப்பை கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் தம் விருப்பம் போல் இலாப நோக்கோடு நடத்திக் கொள்ளும்.மூன்றாவதாக, வர்க்கம் சார்ந்த ஒரு அரசு, தம்முடைய வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை கொண்டு செல்ல பயன்படுத்துவது, முதலும் கடைசியுமாக கல்வி அமைப்பு தான்.

தற்போது உள்ள மனுதர்ம வாதிகள் தமது இந்துத்துவ காவி கொள்கைகளை கொண்டு செல்ல இந்த ஆணையத்தை பயன்படுத்துவார்கள். ஏற்கனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுவுக்கு சிலை இருக்கிறது, ரோஹித் வெமுலா ஹைதராபாத்தில் கொல்லப்பட்டார், தமிழகத்தில் மூன்று கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1998-இல் வாஜ்பாய் காலத்திலும் தங்களுடைய கோட்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்.  அதாவது, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இனி கல்வி நிலையங்களில் சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என கூறினார்கள்.  அப்போதைய கல்வி அமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலருமான திரு.க.அன்பழகன் இதை எதிர்க்கவும், உடனே பின்வாங்கி விட்டார்கள்.  ஏனெனில், அப்போது அவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது.  இப்போது இருக்கிறது.  எனவே, செய்கிறார்கள்.  இன்னொரு புறம், ஆர்.எஸ்.எஸ்.- இல் கல்வியாளர்கள் என்று ஒருவரும் கிடையாது.  ‘கல்வியாளர்கள்’ என்று சொல்லி அவர்கள் அழைத்து வருபவர்கள் எல்லோரும் அடி முட்டாள்களாகவே இருப்பார்கள்.  தங்களுடைய கோட்பாடுகளை நம் மீது தினித்து நம்மை முட்டாளாக்க முயற்சிப்பதை நாம் முறியடிக்க வேண்டும்.

இறுதியாக,  மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலில் கல்வியை கொண்டு சென்று நம் கல்வி அமைப்பை சீர்குலைப்பது இந்திராகாந்தி அவசர நிலை காலத்தில் இருந்தே ஆரம்பித்து விட்டது.  எனவே இந்த மசோதாவை முறியடித்தே ஆக வேண்டும்.

***

பேராசிரியர் இரா. முரளி, மாநிலப் பொதுச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

தனியார் கல்வியை வளர்த்து இலவச கல்வியை ஒழிக்க போகிறார்கள்!

பேராசிரியர் இரா. முரளி

யு.ஜி.சி. ஆரம்பிக்கப்பட்ட போது அனைவருக்கும் ஒரு கனவு இருந்தது. இந்த நாட்டை ஒரு நாகரீக சமுதாயமாக மாற்றப் போகிறோம் என்று. அது 1956- இல். மாலைநேரக் கல்லூரி எல்லாம் முழுமையாக சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்டது. காலையில் வேலை பார்த்துவிட்டு படிக்க வருபவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தது. அதையேதான் தற்போதும் கொண்டு வருகிறார்கள். ஆன்லைன் கோர்ஸ், பார்ட் டைம் கோர்ஸ்- வீக்லி, மந்த்லி கோர்ஸ் என்று – ஆனால் காசுக்காக.

இதை நீங்கள் பேராசிரியர்கள் ஊதிய – வேலை வித்தியாசத்திலேயே பார்க்கலாம். அரசு பேராசிரியர்கள் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் வகுப்பெடுத்து அறுபதாயிரம் சம்பளம் வாங்குவார். ஆனால் ஒரு சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் 36 மணிநேரம் வகுப்பெடுத்து 12 ஆயிரம் சம்பளம் வாங்குவார். இதுதான் இந்த மசோதா இந்தியாவெங்கும் உண்மையாக்க முயற்சி செய்கிறது – செய்யப் போவது.

இந்த தனியார் கல்வி அமைப்புகளுக்கு தமிழகத்தில் பிள்ளையார் சுழி போட்டதே எம்.ஜி.ஆர். தான்.  தன்னை மகானாக காட்டிக்கொள்ள சாராய வியாபாரிகளுக்கு எல்லாம் கல்லூரி துவங்க அனுமதி கொடுத்தார்.  உதாரணம், சாராய உடையார், ஜே.பி.ஆர். சத்யபாமா கல்லூரி. பொதுவாக உலக பொருளாதார அமைப்பு இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளது. அவர்கள் எல்லாத் துறையையும் தொழில்துறையாக மாற்றி இலாபம் பார்க்க முயற்சித்து GATT ஒப்பந்தத்தை கொண்டு வந்தார்கள். அதில் கல்வியையும் சேர்த்து இலாபம் பார்க்கலாம்– இனி அதுவும் ஒரு தொழில்துறைதான் – அத்தியாவசிய தேவை கிடையாது என்று அந்த GATT இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தனை நாடுகளும் சத்தமே இல்லாமல் அந்த சட்டத்தை கடனுக்காக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்திய அரசு உட்பட. எனவே தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களை பிசினஸ் பீஃல்டாக கல்வி அமைப்பு மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட அந்த GATT ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாட்டின் மொத்த வருமானத்தில் 6% – இருந்த கல்விக்கான பங்கு தற்போது 3% க்கும் கீழ் வந்துவிட்டது. இந்த ஆணையத்தை உருவாக்க காங்கிரஸ்  ஆட்சியிலேயே முயற்சி செய்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தவுடன் GATT -இல் குறிப்பிட்டதைப் போல கம்பெனிச் சட்டத்தில் கல்வியைக் கொண்டு வந்தார்கள். விளைவு, இஷ்டம் போல் வெளிநாட்டு மாணவர்களை அதிக கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டது. இதை முதலில் செய்தது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜ் மற்றும் மதுரைக் கல்லூரி( மெஜீரா) .

யு.ஜி.சி. -யை கலைத்து புதிய ஆணையத்தை அமைக்க என்ன செய்தார்கள் என்றால், முதலில் புதிய வேலை வாய்ப்பு அதிகம் உள்ள எந்த கோர்ஸையும் அரசுக் கல்லூரிகளில் கிடைக்கவிடாமல் செய்து அனைத்தையும் சுயநிதிக் கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கும்படி செய்தார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எல்லாம் பணம்தான் –  என்ன சும்மாவா கொடுக்கிறார்கள் என்ற மனநிலை –  விரக்தி வந்துவிட்டது. இதை தற்போது அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ். –  பி.ஜே.பி.- யை பொருத்தவரை காவிமயம் என்பது வெறும் மேற்பூச்சு. கல்வியை வியாபாரமயமாக்குவதுதான் பிரதான நோக்கம்.

எனவே நம்முள் உள்ள தற்போதைய கேள்வி என்னவென்றால் வணிகமயம் மற்றும்  உலகமயத்தில் நம்முடைய அடையாளத்தை இழந்து நாம் கரையப் போகிறோமா? அல்லது இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா? என்பதுதான்.

***

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு, அரசியல் அறிவியல் துறை, தொலைநிலைக் கல்வி இயக்ககம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா?

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு

1830 -இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வைசிராயாக இருந்த லார்டு என்பவர்தான் இந்தியாவில் நவீனக் கல்வி அமைப்பை உருவாக்குகிறார். அப்போது இரண்டு அதிகாரிகளிடம் இதற்கான வரைவு அறிக்கையை அவர்களுடைய கண்ணோட்டத்தில் உருவாக்கிக் கொடுக்க ஆணையிடுகிறார். இருவரின் வரைவு அறிக்கையும் ஒரு கமிட்டியில் வைத்து விவாதிக்கப்படுகிறது. அப்போது காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது. ஒருவர் வில்லியம் ஆடம், இந்தியாவில் உயர்கல்வி என்ற ஒன்று இருந்தது என்றால் அது மடங்கள்தான். எனவே நாம் அதை எதையும் மாற்றாமல் மடங்களுக்கு நிதி தந்து விடலாம் என்கிறார். கூடுதலாக வேண்டுமானால் நமக்கு எத்தகைய கல்வி கற்ற ஆட்கள் வேண்டும் என்பதை வேண்டுமானால் கேட்டுப் பெறலாம் என்கிறார். ஆனால் நாம் மெக்காலேயை இப்போது திட்டினாலும் அப்போது அவர் சொல்லியதுதான் இன்று நாம் பெயரளவிற்காவது பெற்றுள்ள இந்த நவீன கல்வி.

மெக்காலே அரசுதான் கல்வியைக் கொடுக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட கல்வியைக் கற்றவர்கள் வேண்டும் என்பது நமக்குத் தான் தெரியும். மேலும் அது நம்முடைய நாட்டில் நாம் செய்வது போலவே நம்முடைய கடமை என்கிறார். பின் கவர்னர் தன் அமைச்சரவையில் பேசுகிறார். வருமானம் எப்படி இதற்கு? அதனால் முடியாது என்கிறார். பிறகு கல்வி வரி போடுவோம் என்கிறார். அன்று வரி யாருக்கு  போட முடியும்? ஜமீன்தாருக்கு தானே. எனவே அவர்கள் அதை எதிர்த்தார்கள். பிறகு ஜமீன்தார்கள், அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் கல்வி கொடுக்கிறோம் என்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நடக்கிறது.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா? அதிலிருந்துதான் தற்போதைய அரசு – தனியார் கூட்டு (public-private partnership) பற்றி பேசுகிறார்கள். இதிலிருந்து நீங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரயத்துவாரி வரி வசூல் முறையும் கல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்த ஜமீன்தாரி வரி வசூல் முறையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை அன்றிலிருந்தே அதிகம் என்பது புரியும்.

பின் ‘ மாடர்ன் யுனிவர்சிட்டி சிஸ்டம்’  வந்த போது ‘ ‘மாடர்ன் அக்ரிகல்ச்சர்’ சொல்லிக் கொடுங்கள். அவன் படித்து எங்கள் நிலத்தில் அதை அப்ளை செய்யட்டும் என்றனர். அன்று ஜமீன்தார் இன்று கேப்பிட்டலிஸ்ட்.

பொதுவாக உயர்கல்வியில் மூன்று அடுக்குகள் உள்ளன.

  1. Formulation university courses.
  2. Professional university courses.
  3. Research university courses.

இதில் புரஃபசனல் கோர்சஸ் மட்டும் குறிப்பாக தம்மிடம் கோருகிறார்கள். ஏனெனில் அதுதான் பணம் சம்பாதிக்கும் வழி.

ஆனால் நான் கேட்பது என்னவென்றால், ஒரு முதலாளி என்றாலும் நாராயணசாமி போன்ற கார்ப்பரேட் ஆளுமைகளை உருவாக்கியது கூட நம்முடைய அரசு சார்ந்த கல்வி அமைப்புதானே. அரசு செய்ய முடியாது என்று அதே நாராயணசாமியே கோருகிறாரே ஏன்? இதுதான் பிசினஸ்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! மதுரை – விழுப்புரம் பு.மா.இ.மு. செய்தி !

0

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதா-விற்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டி வருகிறது, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளது.

மதுரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, -ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கிய தோழர் ராஜ்குமார் தனது உரையில், “உயர்கல்வி ஆணைய மசோதாவைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் – தனியார்மயம் என்பது தான்.  இந்த நாட்டில் இருக்கும் – இயங்கக்கூடிய அனைத்துக் கல்வி அமைப்புகளையும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க திறந்து விட வழி செய்யும் ஒரு மசோதா.

இந்த மசோதாவைக் கூட சட்டப்படி எந்த அவகாசமும் கொடுக்கப்படாமல் நம் மீது திணிக்கப் பார்க்கிறது மோடி அரசு.  கடந்த ஜூன் 27-ஆம் தேதி, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கான அறிவிப்பை திடீரென வெளியிட்டு, பத்து நாளில் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சாதாரணமாக முடித்து விட்டார்.  உடனே கல்வியாளர்கள், முற்போக்காளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தொழிலுக்கு உடனே இலாபம் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், இங்கோ ஸ்டெர்லைட் முதல் மீத்தேன் வரை அத்தனை திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.  விளைவு, அடக்குமுறை.  நாம் கண்டனம் தெரிவிக்க முடியாது.  கைது, குண்டாஸ், NSA என மக்களின் குரல்வளையை நெறிக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதி தான் இந்த மசோதா.  வரும் 2020-க்குள் இந்திய கல்விச் சந்தையின் மதிப்பு 9.5 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.  அதை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திறந்துவிட இந்த மசோதா மூலம் வழி அமைத்துக் கொடுக்கிறார்கள்.  தற்போது மதுரை ‘தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில்’ எஸ்.சி. என்றால் விண்ணப்ப படிவம் கூட கொடுப்பதில்லை. இந்த நிலையில் இந்த மசோதாவும் நிறைவேறிவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்.  எந்த சாதி ஆனாலும், காசு இல்லாதவனுக்கு கல்வி கிடைக்காது என்ற நிலை ஆகிவிடும்.” என பேசினார்.இக்கருத்தரங்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்,   பேராசிரியர் இரா. முரளி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக, பு.மா.இ.மு. – வின்  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் தனது உரையில்,  ”ஒரு மாதத்தில் யாரிடமும் கேட்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் இந்த அரசு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக எப்போதும் பதில் சொன்னதில்லை. தரமான கல்வி என்றால் அது தனியார் அமைப்பால்தான் தரமுடியும் என்கிற கருத்துக்கு பெற்றோரே விளம்பரங்களின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு தள்ளிவிட்டதே இந்த அரசுதான்.

இரண்டு வருடத்திற்கு முன் கோவையில் கல்வி கட்டணம் கட்ட முடியாததால் ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இன்னொருபுறம் நம்மீது நீட் திணிக்கப்பட்டது. ஆடை கிழித்து மாணவ மாணவிகள் அவமானப் படுத்தப்பட்டார்கள். 1150 மார்க் எடுத்தவர்கூட நீட்டில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பீகாரில் +1, +2 வகுப்பறைக்கு செல்லாமலே ஒருவர் நீட்டில் தேர்வு எழுத முடிகிறது. இதுதான் உங்களுடைய தேர்வு –  தரம் – இலட்சணம்.

என்ன தரம்? சென்னை சுந்தரவள்ளி என்ற தனியார் பள்ளி திடீரென்று பெற்றோர்களிடம் 2 இலட்சம் டெபாசிட் கேட்கிறான். கேள்வி கேட்டால் இது என்னோட ஸ்கூல் என் இஷ்டம் அரசாங்கம் என்ன கேட்கிறதுன்னு திமிரா பதில் சொல்றான் அதனுடைய ஓனர். இது பெற்றோருடைய தனியார் பள்ளி மோகம் கொடுத்த தைரியம் அவருக்கு.

இன்னொரு பள்ளியில் இரண்டாது படிக்கிற பையனுக்கு நீட் தேர்வு கோச்சிங் ஆரம்பிக்க ஐம்பதாயிரம் கட்டணம் இப்போதே கேட்கிறார்கள். ஏதோ வலது மூளை –  இடது மூளை வித்தியாசத்தை சரி செய்தாதான் இப்பவே படிக்கிறது மனசுல தங்க ஆரம்பிக்குமாம். அதுக்கு இப்ப இருந்தே பயிற்சி கொடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அரசு +1 மாணவர்களுக்கு சென்ற வருடம் ரெண்டு மாதமாகியும் புத்தகம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அனைத்துப் புத்தகங்களையும் தனியார் பள்ளிகளுக்கு பாக்கி வைக்காமல் தந்து விட்டார்கள். அப்ப அரசு பள்ளி மாணவர்கள் நிலை?

இப்போது புதிதாக இந்த கல்வி ஆணையம். ஏற்கனவே இங்கே என்ஜீனியரிங் காலேஜ் நிலைமை என்ன? 50%  க்கும் அதிகமான கல்லூரிகளில் 30% க்கும் குறைவான மாணவர் சேர்க்கை. இலவச கல்வி என கவுன்சிலிங் அன்று ஆள் பிடிக்கிறான். அரசாங்கம் இவனுக்கு நம்மோட கட்டணத்தைக் கொடுக்குமாம். நாம் பிறகு அரசிற்கு கடன திருப்பி கட்டணுமாம். ஏற்கனவே கடனை திருப்பி வசூல் செய்கிறேன் என்று எத்தனை மாணவர்களை இவர்கள் கொன்றுவிட்டார்கள். இனி அது உயர்கல்வியிலும் தொடரப் போகிறது. இனி அண்ணா பல்கலைக்கு அரசு நிதி கிடைக்காது. இனி  நம்மிடம் அதிக கட்டணத்தை வாங்கினால் மட்டுமே பல்கலை நடத்த முடியும் என்ற நிலை வரப் போகிறது. எனவே முன்பு சூத்திர- பஞ்சமருக்கு இருந்த கல்வி உரிமை கிடையாது என்கிற நிலை காசில்லாத அனைவருக்கும் வரப்போகிறது.

இதை எதிர்க்க அதிகாரிகளை நம்பி பயனில்லை. பெற்றோர்கள்- மாணவர்கள்- இளைஞர்கள்- ஆசிரியர்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே தடுக்க முடியும்.  நம் உயிரைக் கொடுத்தேனும் இந்த உயர் கல்வி ஆணைய மசோதாவை முறியடித்தே ஆகவேண்டும்.  முறியடிப்போம்.” என எழுச்சி மிக்க உரையாற்றினார்.

கருத்துரைகளுக்கு இடையிடையே கம்பம் பகுதி மாணவர்கள் புரட்சிகர பாடல்களை பாடினார்கள். உசிலம்பட்டி தோழர் பகத்சிங் உயர்கல்வி ஆணையம் பற்றியும் மோடியின் சதிகள் பற்றியும் அம்பலப்படுத்தி கவிதை வாசித்தார். தோழர். ரவி நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களின் உரை தனிப்பதிவாக வெளியிடுகிறோம்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மதுரை.

_______________________________________

விழுப்புரத்தில், கடந்த ஆகஸ்டு 23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு.  விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர். ஞானவேல் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் ”பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் மசோதாவை கொண்டுவருவதன் மூலம், பெரும்பான்மை ஏழை, எளிய மாணவர்கள் தற்குறியாகவும், உயர்கல்வியில் இருந்து பெரும்பான்மை மாணவர்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள். ஒட்டு மொத்த கல்வியும் கார்ப்பரேட் பிடியில் போகும். இதை முறியடிக்க வேண்டும்.” என்றார்.பு.மா.இ.மு. – வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தனது உரையில், ”60-வது வருடத்திற்கு மேலாக செயல்படும் யூ.ஜி.சி.யைக் கலைப்பது ஒரு சமூகத்தையே  தற்குறியாக்குவதற்கு சமம். 1956 – ஆம் ஆண்டு முதல் உயர்கல்வியை விரிவுபடுத்த கொண்டுவரப்பட்டு இன்றைக்கு தராமான உயர்கல்வி அரசு தருகிறது. மேலும் அடித்தட்டு மக்களும் அவர்களின் பிள்ளைகளும் பட்ட படிப்புகள் படிக்க முடிந்து இருக்கிறது. என்றால் அதற்குக் காரணம் இந்த பல்கலைக்கழக மானிய குழு இருந்ததால்  தான். இப்படி எண்ணற்ற பணிகளை கல்வி மேம்பாட்டிற்கு  யூ.ஜி.சி. ஆற்றியிருக்கிறது. தரத்தின் பெயரால் யூ.ஜி.சி.-யைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறார்கள். இந்த தரத்தின் இலட்சணத்தை நீட் தேர்வில் நாம் பார்க்கிறோம். தேர்வில் முறைகேடு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு  தேர்ச்சி பெறாத உ.பி., பீகாரை சேர்ந்த  மாணவர்கள்  தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பல்கலைக்கழகங்கள்,   கல்லூரிகளில் 2500 இருந்து 5000 ரூபாய் இருந்தால் ஒரு டிகிரி படித்து  விடலாம். ஆனால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் செலவு செய்து படிக்கக்கூடிய நிலை உருவாகும்.

இதனை, நாம் அனுமதிக்கக் கூடாது. நேர்மையான பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைப்போம். உயர்கல்வியை பாதுகாப்போம்.” என்று பேசினார் இந்த கூட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் திலீபன் நன்றி உரை கூறினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம்.

ரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா ?

புதிய தொழில்நுட்பங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்துவது முதலாளித்துவத்தின் சாத்தியமாகாத விஷயம். கார்ப்பரேட்டுகள் தொழில்நுட்பங்களின் மூலம் சாத்தியமாகும் தானியக்கத்தை தமது லாபத்தை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்; மேலும் மேலும் அதிக தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்து, நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் தள்ளுகின்றனர்.

இது தொடர்பாக த வயர் இணைய பத்திரிகையில் வெளியான ஆய்வு கட்டுரை
ஒன்றின் சுருக்கமான தமிழாக்கத்தை தருகிறோம்.

*****

இதற்கு என்னதான் தீர்வு? மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளை பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு என்னதான் வழி?

விஸ்டாரா ஏர்லைன்ஸின் பயணிகள் , ‘ரடா’ என்னும் ரோபாட் மூலம் வரவேற்கப்படுவார்கள். ‘ராடா’ , வாடிக்கையாளர் கருத்துக்களைச் சேகரிப்பது , அவர்களது கேள்விகளுக்கு பதில் தருவது, போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தல் போன்ற சேவைகளைக் கொடுக்க வல்லது.

ராடா ஒரு ‘இந்திய தயாரிப்பாகும் (Made in India). இது டாடா இன்னோவேஷன் மையம் வடிவமைத்தது. அடிப்படை மனித செயல்பாடுகளைச் செய்ய எளிய, விலையுயர்ந்த ரோபோவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. இது போன்ற புதுமைகள், நிச்சயமாக நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும்.

விஸ்டாரா ஏர்லைன்ஸில் பயணிகளை வரவேற்கும் , ‘ரடா’ என்னும் ரோபாட்.

ஆனால், இவை, குறிப்பாக நுழைவு நிலை, குறைந்த-நடுத்தர வேலைகள் செய்துவரும் பணியாளர்களின் வேலையைப் பறிக்கும். புதிய தனித் திறன் தேவைப்படும் வேலைகளை குறைந்த அளவில் மட்டுமே உருவாக்கும்.

உதாரணமாக, இந்தியாவில், பெரும்பாலான தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் வேலை செய்கின்றனர். பல கோடி தொழிலாளர்கள் இன்னும் பழைய, அடிப்படைத் தொழில்நுட்பங்களிலேயே வேலை செய்கிறார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் தாக்கம் உலகெங்கிலும் வளர்ந்து வரும் ஒரு சிக்கலாகும். எனினும், உலகளாவிய விளக்கங்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். அவை தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்களாலும், உள்ளூர் சமூக-பொருளாதார நிலைமைகளாலும் வடிவமைக்கப்படும்.

நான்காவது தொழில்துறைப் புரட்சியில் (4IR) தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் எதிர்கால உழைப்புச் சந்தையை என்ன செய்யும்?

இந்தத் தொழில்நுட்பங்கள் இப்போது தான் வளர்ந்து வருவதால், அவற்றின் தாக்கம் பற்றிய முழுமையான ஆய்வுகள் தற்போது சாத்தியம் இல்லை. தொழில் துறை, அரசு துறை, குடிமை சமூகம், கல்வியாளர்கள் போன்ற பல தரப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

4IR தொழில்நுட்பங்களை கைக்கொள்வது, நிகர வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் குறைந்தபட்ச தாக்கத்தையே ஏற்படுத்தும் என எமது ஆய்வு கூறுகிறது, குறிப்பாக, இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத துறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும்கூட, தொழில்நுட்பத்தின் தலையீடு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் சந்தைகளின் இன்றைய நிலையை மேம்படுத்தப் போவதில்லை, இதே நிலையிலேயே இருத்தி வைக்கும். அது சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய அணுகுமுறைகளை கோருகிறது.

4IR தொழில்நுட்பங்கள், முதன்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையிலும், சேவைத் துறையிலும், அதாவது உழைப்பு செலவினமும், உட்கட்டமைப்பு செலவும் அதிகமாகத் தேவைப்படும் துறைகளில் கைக்கொள்ளப்படும்

பெரு மூலதனம் தேவைப்படும் உற்பத்தித் தொழில்கள், 4IR தீர்வுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கும். உதாரணமாக, வாகன உற்பத்தித் துறை, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தொழிற்துறை ரோபோக்களில் 60%-ஐ வாங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால், இந்த உற்பத்தித் துறைகளில் தொழிலாளர் எண்ணிக்கை ஏற்கனவே கணிசமாகக் குறைந்துவிட்டது.

சேவைத் துறைக்குள்ளேயே, ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து செய்ய, 4IR அதிகம் பயன்படும். நிதி, சட்டம், ஐ.டி, பி.பி.ஓ சேவைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பயன்பாட்டு வீதம் மிக அதிகமாக இருக்கும்.

Comprising small enterprises, daily wage and self-employed workers, the unorganised sector lacks the financial capital, supporting infrastructure and requisite skills to support the adoption of advanced technologies.

ஐ.டி., பி.பி.ஓ பிரிவுகளில் வேலைவாய்ப்பு ஏற்கனவே குறைந்துள்ளது.
2021-ம் ஆண்டில் இந்தியா வேலைவாய்ப்புகள் 14% வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் எப்போதுமே பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்கவில்லை. எடுத்துக்காட்டாக, ஐ.டி. துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய போதிலும், அதில் 37 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 4IR தொழில்நுட்பம் வழங்கும் நிகர வேலைவாய்ப்பு இன்னும் குறைவாகவே இருக்கும்.

ஆனால், இந்தியாவின் தொழிலாளர்களில் 80% க்கும் மேலாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உலகச் சந்தையில் போட்டியிடத் தேவையான 4IR தொழில்நுட்பம் அவர்களுக்கு எட்டாமலே போய்விடும்.

எந்தவொரு குறிப்பிடத்தக்க விதத்திலும் 4IR உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் தாக்கத்தை, ஒழுங்கமைக்கப்படாத துறைகள் உணர முடியாது என்று எங்கள் ஆய்வு கூறுகிறது.

இந்தியாவின் தொழிலாளர்களில் 80% க்கும் மேலாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி மட்டத்துடன் ஒப்பிடும் போது 4IR தொழில்நுட்பங்களின் செலவை பார்க்கும் போது அவை ஒழுங்குபடுத்தப்படாத துறைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். ஏனெனில், அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் மிக அடிப்படையான, பழைய தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன.

அவற்றில் பணி புரியும் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் எந்திரங்களில் அல்லாமல், உடலுழைப்பையே சார்ந்துள்ளனர். சிறிய நிறுவனங்களில், தினசரி ஊதியம் பெறும், அல்லது சுய தொழில் செய்யும் தொழிலாளர்கள், போன்ற ஒழுங்கமைக்கப்படாத துறைகளிலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளத் தேவையான மூலதனமோ, உள்கட்டமைப்போ இல்லை.

இருப்பினும், எதிர்கால உழைப்பு உலகத்தில் ஒழுங்கமைக்கப்படாத வேலை வாய்ப்பு மேலும் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்குள்ளேயே, 68% க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு முறையான ஒப்பந்தமோ, சமூகப் பாதுகாப்போ, பணிப் பாதுகாப்போ இல்லை. எங்களது ஆய்வின் படி, ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளிலேயே, நிலையற்ற வேலை ஒப்பந்தங்கள் அதிகரித்து, அவையும் ஒழுங்கமைக்கப்படாத துறை போலவே செயல்படத் துவங்கும்.

உற்பத்தி துறை, தானியங்கித் தொழில்நுட்பத்துக்கு மாறி உற்பத்தியை அதிகப்படுத்தும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சமீபகால ஆய்வுகள் இது ஏற்கனவே நிலவும் போக்கு என்கின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் 47% ஒப்பந்தத் தொழிலாளர்களே உள்ளனர்.

சேவைகள் துறையிலும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் தளங்கள், புதிய தகவல்தொடர்பு, தரவு பகிர்வுத் துறை ஆகியவை
வேலைகளைப் பிரித்து, குறைந்த செலவில் முடித்துத் தரும் நாடுகளுக்கு அனுப்புகின்றன.

குறிப்பிட்ட துறை சார்ந்த பொருளாதாரமும், ஒழுங்கமைக்கப்படாத தொழில் முறையிலேயே இயங்குகின்றன. ஓலா, ஊபர் போன்ற வாடகைக் கார்
சேவை வழங்கும் நிறுவனங்களும் சேவைத் துறையின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பும், பணிச்சூழல் பாதுகாப்பும் இன்றி தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றனர்.

தொழில்மயமான பொருளாதாரங்கள் போலல்லாது, இவ்வகைப் பொருளாதாரங்கள் முறையான வேலைவாய்ப்புகளை முறைசாரா வேலைகளாக (ஒப்பந்தத் தொழில்களாக) மாற்றுகின்றன. உண்மையில், இவ்வகைப் பொருளாதாரம், புதிய சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குகின்றது என்றாலும், அவை கோரும் தகுதி, திறமை, சமூகப் பாதுகாப்பு கொண்டோர் மட்டுமே ஆதாயமடைகின்றனர்.

ஒழுங்கமைக்கப்படாத வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறி ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் மேலும் சுருங்கும். தானியங்கித் தொழில்நுட்பம், தொழில்நீக்கத்தை துரிதப்படுத்துவதால், இந்தியா உற்பத்தித் துறை வழியிலான முன்னேற்றத்தை பயன்படுத்த இயலாமல் போகும். இந்தியாவின் குறைதிறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மேலும் கடினமாகிவிடும்.

ஒழுங்கமைக்கப்பட்ட சேவைத் துறையில் உள்ள நுழைவு நிலை வேலைகள், ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ள முறைசாரா வேலைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகும். ஆனாலும், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தொழிலாளர்கள் தங்கள் பணிச்சூழலை மாற்ற வேண்டியுள்ளதால், அந்த வழியும் மூடப்படுகிறது. பாரம்பரியமாக, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் கிடைக்கும் நிரந்தர வேலை வாய்ப்பு, வறுமையிலிருந்தும், ஒப்பந்த வேலைகளிலிருந்தும் பாதுகாப்பு அளித்தன. ஆனால் இப்போது, முறையான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து, ஒப்பந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பது ஒரே நேரத்தில் நிகழ்கின்றது.

அதிகரித்து வரும் முறைசாரா வேலை நிலைமைகளால் ஏற்படும் சமூக விளைவுகளைக் கையாள விரைவான தீர்வுகள் காண்பது அவசியம்.
முறைசாராத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு புதிய தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதே சமயம், வேலைச் சந்தைக்குள் நுழையும் இளைஞர்களுக்குப், புதிய தொழில்நுட்பக் கல்வியும், அதைத் தொடர்ந்து திறன் மேம்பாடும் வழங்கக் கணிசமான முதலீடுகள் தேவைப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உழைப்பாளர்கள் குறித்த பழைய சவால்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் புதிய சவால்களைவிட மிக அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டியவை. இல்லையெனில், புதிய தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரிந்து பயனடைவோருக்கும், குறைந்தபட்ச வாழ் நிலையைத் தக்க வைக்கப் போராடுவோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்.

– ஊர்வஷி அனேஜா

This article is based on Tandem Research’s report, Emerging Technologies & the Future of Work in India, supported by the International Labour Organisation. Urvashi Aneja is Founding Director, Tandem Research and Associate Fellow, Chatham House. @tandem_research; @urvashi_aneja

தீயதைப் பார்க்காதே – கேட்காதே – எழுதாதே ! கேலிச்சித்திரங்கள்

விளாடிமிர் கசனேவ்ஸ்கி, உக்ரைன்.
சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள் – பாகம் 2

ல்புர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற உண்மையை துணிச்சலோடு எழுதும் எழுத்தாளர்கள் மர்மமான முறையில் இந்துமதவெறியர்களால் கொல்லப்படுகிறார்கள்.  மேலும் மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. மறுபுறம் பா.ஜ.க. விற்கு ஆதரவான ஊடகங்களின் முறைகேடுகளும் அம்பலமாகின்றன. உலகெங்கும் இதே நிலைதான். சமூகவலைத்தளங்கள் பெருகி வருவதாகக் கூறப்படும் நிலையில் பத்திரிகைச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை உலகெங்கும் உள்ள கார்ட்டூனிஸ்ட்டுகள் அம்பலப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு……..

உலக பத்திரிகை சுதந்திர நாள் 2013

ஜூலியோ காரியன், க்யுவா – பெரு.

_____________________________________________________________________

சொட்டு சொட்டாக வடிக்கப்படுகிறது

ஆர்லந்தோ க்யுலர், கொலம்பியா.

_____________________________________________________________________

தணிக்கையின் கருப்புப் பட்டை

ஹஜோ, நெதர்லாந்து.

_____________________________________________________________________

குறிவைக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்

விளாடிமிர் கசனேவ்ஸ்கி, உக்ரைன்.

_____________________________________________________________________

தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே

செர்கெய் டூனின், ரசியா.

_____________________________________________________________________

பத்திரிகை சுதந்திரம்

ஓமர் டர்சியோஸ், ஸ்பெயின்.

_____________________________________________________________________

ஆட்டுவிக்கும் கம்பிகள்

ஜெஃப் ட்ரீவ்ஸ், துருக்கி.

_____________________________________________________________________

பத்திரிகை சுதந்திரத்தின் உச்சங்கள்

ஸ்டீவ் க்ரீன்பெர்க், அமெரிக்கா.

_____________________________________________________________________

மெக்சிகோவில் பத்திரிகை சுதந்திரத்திற்கான போர்

டாரியோ காஸ்டில்லேஜோஸ், மெக்சிகோ.

_____________________________________________________________________

நன்றி: cartoonmovement.com

பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்

7

ச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்றபோதிலும், அச்சுறுத்துபவனைத் தைரியசாலி என்று என்று நாம் கருதவேண்டியதில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில் கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

மோடியைக் கொல்ல சதி என்ற பெயரில் ‘மாநகர நக்சல்கள்’ கைது செய்யப்படாதிருந்தால், இந்த நாட்களின் அரசியல் விவாதப்பொருளாக எது இருந்திருக்கும்?

வரவிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து  பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுடனான மோடியின் சந்திப்பும், பா.ஜ.க. வின் தோல்வி குறித்த கருத்துக் கணிப்புகளும் கைது நடைபெற்ற அதேநாளில் வெளியான செய்திகள். கைது நடக்காமலிருந்தால், அவை விவாதப்பொருளாக இருந்திருக்கலாம்.

மோடியின் இழிபுகழ்பெற்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கை படுதோல்வியடைந்து விட்டது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்ததே, அது மிகப்பெரிய விவாதப் பொருளாகியிருக்கலாம்.

அல்லது ரஃபேல் விமான பேர ஊழலை ஊறுகாய்ப் பானைக்குள் ஒளிக்க முயன்று நிர்மலா சீதாராமன் தோற்றுப்போக, அதற்கு முட்டுக்கொடுக்க வந்த அருண் ஜெட்லியின் வாதங்களும் அடிபட்டுப் போனதால், போபர்ஸை விஞ்சிய ரஃபேல் ஊழல், விவாதப் பொருளாகிவிடுமோ என்று ‘ஊழல் கறை படியாத உத்தமர்’ அஞ்சியிருக்கலாம்.

ரஃபேல் விமான பேர ஊழல்

கைது செய்யப்பட்ட சனாதன் சன்ஸ்தாவின் பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய அனைவரின் கொலையிலும் தொடர்பிருப்பதை மறைக்க முடியாமல், மகாராட்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு போலீசே வெளியிட்டுவிட்ட காரணத்தினால், சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட காவி பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்  என்ற கோரிக்கை விவாதப் பொருளாகியிருக்கலாம்.

“மோடியைக் கொல்ல சதி” என்று கூச்சல் எழுப்பினால், இவற்றில் எதுவும் விவாதத்துக்கு வந்து விடாமல் தடுத்துவிட முடியுமென்று மோடி-அமித் ஷா கும்பல் கனவு கண்டிருக்கிறது. அந்தக் கனவு பேய்க்கனவாகிவிட்டது.

“பாலம் கட்டியதில் ஊழல்” என்று கூறி நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தார் ஜெயலலிதா. அதன் விளைவாக, ஜெ.வின் குரூர முகம் அம்பலமானது மட்டுமின்றி, கருணாநிதியின் மீதான அனுதாபமும் அதிகரித்தது. அவ்வளவு அடாவடியாகக் கைது செய்யப்பட்ட அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை. இதன் விளைவாக ஜெயா – சசி கும்பலின் அடிமுட்டாள்தனமும் சந்தி சிரித்தது.

மோடி – அமித் ஷா கும்பலானது,  ஜெ-சசி கும்பலுக்கு இணையானது மட்டுமல்ல, அதனினும் கிரிமினல் தன்மை வாய்ந்தது. சோரபுதீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவித்தால், அந்த தீர்ப்பு வெளியாகும் நாளில் வேறொரு செய்தி தலைப்புச் செய்தியாக இருக்கும்படி, இதனைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்று லோயாவிடம் கூறியிருக்கிறார் அமித் ஷாவின் இடைத்தரகராக செயல்பட்ட ஒரு நீதிபதி. லோயாவுக்குப் பின் நியமிக்கப்பட்ட கோசாவி என்ற நீதிபதி அமித் ஷாவை விடுவித்து தீர்ப்பளித்த நாள் டிச, 30, 2014. அன்றைக்கு “தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது” முதன்மைச் செய்தியாக இருக்க, “அமித் ஷாவின் விடுதலை” முக்கியத்துவமற்ற ஸ்குரோலிங் செய்தியாக யார் கண்ணிலும் படாமல்போனது.

தற்போது கைது நடவடிக்கைக்கு குறிக்கப்பட்டிருக்கும் தேதியும் மோடி அரசுக்கு இத்தகைய உள்நோக்கங்கள் இருப்பதைப் புலப்படுத்துகிறது. தீயைத் தீயால் அணைக்கும் நடவடிக்கையைப் போல, ரிசர்வ் வங்கி அறிக்கையிலிருந்து மோடியின் மானத்தையும், தடை செய்யப்படுவதிலிருந்து சனாதன் சன்ஸ்தாவையும் காப்பாற்றும் பொருட்டு அவசரம் அவசரமாக இந்தக் கைது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

முனைவர் ஆனந்த் தெல்தும்டே

புனே போலீஸ் கைதுக்குரிய சட்டபூர்வ முறைகளைப் பின்பற்றவில்லை. கைது செய்யப்படுபவர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டுமென்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை. இந்தக் கைது நடவடிக்கையை ஒட்டி ஆனந்த் தெல்தும்டெ போன்றோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் அனைத்தும் சட்டவிரோதமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றன.

அறிவுத்துறையினரை ‘அச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்ற போதிலும், இதில் வெளிப்பட்டிருக்கும் அவசரமும் மூர்க்கமும் மோடி அரசின் அச்சத்தை அடையாளம் காட்டுகின்றன. அச்சுறுத்துபவனை தைரியசாலி என்று என்று நாம் கருதவேண்டியதில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில்  கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

வரவர ராவ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகியோரை  உபா சட்டத்தின் கீழ் சிறை வைக்கவேண்டுமென்பதற்கு அரசு வழக்கறிஞர்  புனே நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களை மேற்கோள் காட்டி அஜய் சகானி (Institute for Conflict Management) இப்படி எழுதுகிறார்:

“இந்த வழக்கின் பின்புலம் தெரியாமல் அரசு தரப்பின் வாதங்களை நான் படித்திருந்தால், மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளரின் படைப்பாக அதனைக் கருதியிருப்பேன். ’இந்து வெறியர்கள் நடத்திய கும்பல் கொலைகளை புகைப்படக் காட்சி வைத்து மாவோயிஸ்டு கட்சிக்கு ஆள் சேர்த்தார்’ என்பது ஒரு குற்றச்சாட்டு. கும்பல் கொலையை அம்பலப்படுத்துவது மாவோயிஸ்டுகளுக்கு ஆள் சேர்க்கும் குற்றமாகுமா?” என்று கேட்கிறார் சகானி.

அருந்ததிராய்
அருந்ததிராய்

“நாம் சமீப காலமாக விவாதித்து வரும் ஒரு விசயத்திற்கு இன்றைய நாளேடுகளில் விடை கிடைத்திருக்கிறது. ’பாசிச எதிர்ப்பு முன்னணி அமைத்து இந்த அரசையே தூக்கி எறிய சதி செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக’ போலீஸ் கூறுகிறது. எனவே போலீசாலேயே “பாசிஸ்டு” என்று அழைக்கப்படும் ஒரு அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் அருந்ததி ராய்.

மோடி அரசு தனக்குத்தானே பாசிசப் பட்டம் சூட்டிக் கொண்டது ஒரு நகைச்சுவை. இது ஒருபுறமிருக்க, கைது செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய “மாநகர நக்சல்” என்ற சொற்றொடர் “நானும் மாநகர நக்சல்தான்” என்று சமூக ஊடகங்களில் பூமராங் ஆகிவிட்டது.

“சமூகவிரோதி, நக்சல், ஆன்டி இண்டியன்” போன்ற சொற்களுக்கு தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் என்ன நடந்ததோ, அது இப்போது நாடு முழுவதும் நடக்கிறது. “மோடியே வெளியேறு” என்று  தமிழகம் எழுப்பிய முழக்கமும் விரைவிலேயே “தேசிய முழக்கமாக” மாறக்கூடும்.

 – மருதையன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.

பெட்டிச் செய்தி: ‘பத்மஸ்ரீ’ பார்ப்பன பயங்கரவாதி!

பீமா கோரேகானில் கலவரத்தை தூண்டிய முதன்மைக் குற்றவாளியின் பெயர் சம்பாஜி பிடே (85). “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் நிறுவனர். நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர். பீமா கோரேகான் கலவரத்துக்காக பதிவு செய்யப்பட்ட முதல் எப்.ஐ.ஆரிலேயே பிடேவின் பெயர் இருக்கிறது. எனினும், பிடே கைது செய்யப்படவில்லை.
பிடே ஒரு வெறி பிடித்த பார்ப்பன பாசிஸ்டு. ” கிறித்தவனும் முஸ்லிமும் மட்டுமல்ல, இந்துவாக இருந்து கொண்டு நம்மை ஆதரிக்காதவனும் நமது எதிரியே” என்றும் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்” என்றும் பேசும் மராத்திய மாநிலத்தின் எச்.ராஜா.
“குழந்தையில்லாத தம்பதிகள் 130 பேருக்கு என்னுடைய தோட்டத்து மாம்பழத்தைச் சாப்பிட்டுக் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பிரகடனம் செய்த இந்த கோமாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தே தீரவேண்டுமென 2016-இல் பத்து மராத்திய அமைச்சர்கள் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.
தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைகள், குண்டு வெடிப்புகளுக்காக, சமீபத்தில் மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சுதன்வா காண்டலேகர், அவினாஷ் பவார் ஆகியோருக்கு  மட்டுமல்ல மோடிக்கும் பிடேதான் குருநாதர். இதை 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சாங்லி நகரில் அவர் பகிரங்கமாகவே அறிவித்தார்.
அதற்காக மோடியை உபா சட்டத்தில் கைது செய்ய முடியுமா, அவர் பிரதமராயிற்றே!

கோலமாவு கோகிலா : அறத்தின் கழுத்தை அறுக்கும் நயன்தாரா !

21

ம்மாவுக்கு கேன்சர்.. காப்பாற்ற 15 லட்சம் வேண்டும்.. கையில் பணம் இல்லை. விற்க சொத்து இல்லை. நேர்மையாக வேலை செய்து சம்பாதிக்கலாம் என்றால், பார்ப்பவன் எல்லாம் ‘படுக்க வர்றியா?’ என்று கூப்பிடுகிறான். என்ன செய்வாள் நாயகி? போதைப் பொருள் கடத்துகிறாள். நான்கைந்து முறை தனியாக கடத்தி கிடைத்த அனுபவத்தில் மெருகேறி, பிறகு குடும்பத்தோடு கடத்துகிறாள். எந்தக் குடும்பம்? கேன்சர் வந்த அம்மா, வாட்ச்மேன் வேலை செய்யும் அப்பா, கல்லூரி படிக்கும் தங்கை. மொத்த குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு போதைப்பொருள் கடத்தி அம்மாவின் கேன்சர் செலவுக்கு பணம் சேர்க்கிறாள். இதுதான் ’கோலமாவு கோகிலா’படத்தின் கதை.

“அறம்”  படத்தில் சமூகத்தின் ஒட்டுமொத்த அற மதிப்பீடுகளையும் ஒரு கலெக்டராக தன் தோளில் தூக்கிச் சுமந்த நயன்தாரா இதில் மாஃபியா ராணியாக வந்து, அறத்தின் கழுத்தைப் பிடித்து கரகரவென அறுக்கிறார். தியேட்டரே கைகொட்டி சிரிக்கிறது.

“அது வேற ஜானர்; இது வேற ஜானர்”  என்பது சினிமாக்காரர்களின் பொழிப்புரை. ஏதாவது ஒரு தமிழ் இயக்குநரை முற்போக்காக படம் எடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு ஒரு மசாலா தமிழ்ப்படத்தை விமர்சித்தீர்கள் என்றால் அவர்களுக்கு கோபம் வரும். பிறகு மேற்படி இந்த ஜானர் எனப்படும் சினிமாக்களின் வகைகளை விளக்கி எல்லாமும் வேண்டுமென படுத்தி எடுப்பார்கள்.

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா?

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா? பின்நவீனத்துவம் சொல்வதைப் போல, உண்மை என்ற ’பெருங்கதையாடலை’புரிந்து கொள்ளாத ’வன்முறை மனங்களுக்கு’ இந்த வேறுபாடு புரியாதா? எனில் எழவு வீட்டில் பாயாசம் வைக்கவில்லை என்று மக்களை திட்ட முடியுமா?  இல்லை எழவு வீட்டில் பாயாசம் வைக்கக் கூடாது என்பதை மனித நேயம் உருவாக்கிய இயல்பான நேசமாக ஏற்பதில் என்ன சிக்கல்?

போதைப்பொருள் பயன்படுத்தி சீரழியும் மனித உயிர்கள், சித்தரவதைப்படும் குடும்பங்கள், போதையின் பிடியில் நிகழும் வன்முறைகள், போதையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், போதையில் வாகனம் ஓட்டி கொல்லப்படும் மனித உயிர்கள், வீணாகும் மதிப்புமிக்க மனித ஆற்றல்… இவை எதுபற்றியும் இயக்குனருக்கு எந்த கவலையும் இல்லை. தப்பித்தவறி சின்னஞ்சிறு குற்றவுணர்ச்சி கூட திரைக்கதையின் எந்த இடத்திலும் எட்டிப் பார்ப்பதை அவர் அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு நீதியுணர்ச்சி பார்வையாளனின் மனதில் துளிர்விடுமானால், கோலமாவு கோகிலா காலி. அவன் கைதட்ட மாட்டான். அதனால் கோட்டின் அந்தப் பக்கமாக திட்டவட்டமாக ஒதுங்கி நிற்கிறார் இயக்குனர்.

போதைப்பொருள் கடத்தல் என்பது மாபெரும் மாஃபியா நெட்வொர்க். இதனால் பாதிப்படுவதுதான் ஏழைக் குடும்பங்களேத் தவிர, இப்படத்தில் சித்தரிக்கப்படுவதைப் போல இதில் ஈடுபடுவோர் அல்ல.

“நீ போதைப்பொருள் கடத்தி உன் அம்மாவை கேன்ஸரில் இருந்து காப்பாற்றிவிட்டாய்.. நீ விற்ற போதைப்பொருளால் பல்லாயிரம் பேர் நோய் வந்து சாவார்களே… போதையில் பலரை சாகடிப்பார்களே”  என்பது இயல்பாக நமக்குள் எழும் கேள்வி. ஆனால் இந்த கேள்விக்கு, தான் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறார் இயக்குனர் நெல்சன். ஏனெனில் ரசிகனின் மனதில் இதற்கான பதில் தயாராக இருக்கிறது. “தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால்; தன் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த எல்லைக்கும் போகலாம்’ என்ற பொதுப்புத்தியை நம்பும் இயக்குனரின் கணிப்பு வீண்போகவில்லை என்பதை தியேட்டரில் ஒலிக்கும் கை தட்டல்களே சொல்கின்றன.

எளிமையாகச் சொல்வதென்றால் ஊழலை ஒழிக்க ஊழல் வாங்கு, திருடனைப் பிடிக்க திருடு, பொய்யை மறுக்க பொய்யுரை, கருப்புப் பணத்தை பிடிக்க கருப்புப் பணம் வாங்கு என்று பட்டியலிடலாம். இதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் போதை பொருள் விற்பதையே கேன்சரின் மருந்தாக மக்கள் ஏற்பார்களா என்ன?

அப்படி ஏற்கமாட்டார்கள் என்பது தெரிந்தேதான் இயக்குநர் மலிவான நகைச்சுவையை திரைக்கதையில் இயல்பாக சொருகுகிறார். அதனால்தான் மக்கள் கேன்சரை விட கொடிய விசயமான போதை பொருளை, மெய் மறந்து கடத்தும் நாயகியோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். நாயகி போதை பொருளை விற்பதையும் ஏற்கிறார்கள். ஒரு முக்கியமான மக்கள் பிரச்சினையை இப்படி நகைச்சுவையில் கடத்தி மறைப்பது என்பது கலையின் பெயரால் செய்யப்படும் கொலையே அன்றி வேறென்ன? வாழைப்பழம் வழுக்கி விழுபவனைப் பார்த்து எவ்வளவு தூரம் சிரிக்க முடியும்? விழுந்தவன் பெரிய அடிபடாமல் பின்புறத்தை தட்டி விட்டு எழுந்து சிரித்தால் மற்றவர்கள் கொஞ்சம் சிரிப்பார்கள். விழுந்தவன் இடுப்பெலும்பு முறிந்து பின் மருத்துவமனையில் செத்தே போனான் என்றாலும் அதை எப்படி சிரிக்க வைப்பது என்று யோசித்திருக்கிறார் இயக்குநர்.

ஆம். இந்த கலைக் கொலைக்கு இயக்குநருக்கு கை கொடுத்த அந்த நகைச்சுவையும் கூட தர்க்க ரீதியாக நாற்றமெடுக்கும் அநாகரீகமாகவே அமைந்திருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே.

“கோலமாவு கோகிலா”  படத்தின் கேவலமான, அருவருப்பான மற்றொரு விசயம் நகைச்சுவை என்ற பெயரில் வரும் உருவ கேலி. சொல்லப் போனால், படத்தின் ஒட்டுமொத்த கதையோட்டமும் இந்த உருவகேலியின் மீதுதான் நகர்கிறது. யோகிபாபுவை கேலிக்குரியவராக சித்தரிக்க எந்த காட்சி அமைப்பும், தர்க்க நியாயமும் கதையில் இல்லை.  அப்படி ஒரு தர்க்கத்தை சிரிப்புக்காக வைத்தாலே கூட அது பிழைதான்.

சமூக உளவியலில் ஏற்கெனவே கேலிக்குரியதாக நிருவப்பட்டிருக்கும் உருவ தோற்றமே யோகிபாபுவை கிண்டல் செய்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. சொல்லப்போனால், இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே. நிஜத்தில் இந்த உருவங்கள், அதன் அழகியல் அனைத்தும் திட்டமிடப்பட்டு பெரும் வணிகமாக இறக்கப்படும் சூழலில்தான் கருப்பு நிறம், ‘அவலட்சணமான’ முகங்கள், பெரும் தலைகள், கறைபடிந்த பற்கள் என்பவை மக்களிடையே அழகின் மேன்மைக்கான எதிர்மறைப் பிரச்சாரங்களாக விதைக்கப்படுகின்றன.

இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களை ஒரு குழந்தை ஒரு நாளில் பார்த்தாலே போதும், மேற்கண்ட உருவம், வண்ணமுடையவரை பிடிக்காது என்று ஒரே வார்த்தையில் கூறிவிடும். இத்தகைய அநாகரீக அழகைத்தான் யோகிபாபுவை கிண்டல் செய்யப்படுவதற்கான களமாக கட்டியமைத்து புகுந்து விளையாடுகிறார் இயக்குநர். நமக்கு குமட்டுகிறது.

இந்தப் படத்திலும் யோகிபாபு, நயன்தாராவை காதலிக்கிறார் என்ற தகவலே நகைச்சுவையாக மாறுகிறது. அதே இடத்தில் சிவகார்த்திகேயன் இருந்திருந்தால் அது ஹீரோயிசம். யோகி பாபு இருப்பதால் நகைச்சுவை. செய்யும் செயல்களால் அல்ல, செய்யும் நபர்களால் இங்கு நகைச்சுவையா, ஹீரோயிசமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ’கோலமாவு கோகிலா’ படக் கதையின்படி, யோகிபாபு, உழைத்து முன்னேறி மளிகை கடை வைத்திருப்பவர். நயன்தாராவோ, போதைப்பொருள் கடத்தும் ‘குடும்பப் பெண்.  இதை ரசிக மனம் கேள்விகளின்றி ஏற்கிறது. ’அடிடா அவளை, கொல்றா அவளை  என பொறுக்கித்தனம் செய்பவனைக் கூட ஹீரோவாக ஏற்போம்… உழைத்து முன்னேறியிருந்தாலும் தாங்கள் கேலிக்குரியதாக நம்பும் உருவத்தில் இருந்தால் கிண்டல் செய்வோம் என்ற ஊடகங்கள் கட்டியமைத்த பொதுப்புத்தி இது. இத்தகைய காட்சிகளுக்கு தியேட்டரில் இடைவிடாமல் கிடைக்கும் கைத்தட்டல்  என்பது, பொதுப்புத்தியின் பொறுக்கித்தனம் என்பதன்றி வேறில்லை. இதை மலிவாக பயன்படுத்தியிருப்பதால் ரசிகர்களை விட இயக்குநரே முதன்மைக் குற்றவாளியாகிறார்.

யோகி பாபுவின் உருவம் கேலிக்குரியதாக… நயன் தாராவின் அப்பாவி முகத் தோற்றம் சந்தேகம் வராத வகையில் போதைப்பொருள் கடத்த ஏற்றதாக… சரண்யாவின் நோய்வாய்ப்பட்ட தோற்றம்… போதைப்பொருள் கடத்தும்போது போலீஸிடம் பரிதாபத்தைக் கோருவதற்காக… – என பல வகைகளில், தனது திரைக்கதையில் மனித வெளித்தோற்றங்களை கையாள்கிறார் இயக்குனர். ஆனால் அதே கதையில் நேர்மையாக இருக்க முயன்று அடிவாங்கி வரும் நயன்தாராவின் வாட்ச்மேன் அப்பா, கேலிக்குரிய ஏமாளியாக சித்தரிக்கப்படுகிறார். மிக திட்டவட்டமாக அறம், நேர்மை, நீதி ஆகியவற்றை எதிர்வரிசையில் நிறுத்தி வைக்கிறார் இயக்குனர். சிரிப்பு எனும் போர்வையில் வரும் இந்த அற்பத்தனங்கள் ஒரு படைப்பாளியின் எழுத்தில் நுழையும் வித்தையை தனியாக ஆய்வு செய்ய வேண்டும் போல!

படத்தின் இறுதிக் காட்சி இதன் உச்சம். வில்லன், நயன் தாராவை வன்புணர்ச்சி செய்ய ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறான். நாயகியோ, தான் ரேப் செய்யப்படும்போது தன் குடும்பமும் தன்னைச்சுற்றி இங்கே இருக்க வேண்டும் என்கிறாள். குடும்பம் அழைக்கப்படுகிறது. பிறகு, நயன் தாராவை ரேப் செய்வதற்காக வில்லன்களை ஒவ்வொருவராக அறைக்குள் வரவழைத்து குடும்பம் சகிதமாக கொலை செய்கிறார்கள். உள்ளே சென்ற ஒருவர் கொல்லப்பட்டதும், நயன் தாராவின் தங்கை வெளியில் வந்து ‘தண்ணீ… தண்ணீ’ என்கிறார். உடனே அடுத்த ஆள் உள்ளே செல்கிறார். தியேட்டரே சிரித்து மாய்கிறது.

“பெண் என்றாலே உலகம் செக்ஸுக்கான பண்டமாக பார்க்கிறது. அதையே பயன்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவராக தன்னை ரேப் செய்ய வரவழைத்து, குடும்பம் சகிதமாக சேர்ந்து கொலை செய்கிறார்கள். இதில் என்ன தப்பு?’ என இதற்கு வேறொரு கோணம் சிலர் சொல்கின்றனர். அது கற்பு என்ற புனித கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுகுவோருக்கான பதில். மாறாக, ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படும் கொடூரத்தை சிரித்து ரசிப்பதற்கு உரிய காட்சியாக அமைத்திருக்கும் வக்கிரத்தை எப்படி ஏற்க முடியும்? ஒரு பெண் அடுத்தடுத்து பல ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதை ஒரு நகைச்சுவை காட்சியாக்கி சிரிக்கச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணை இதைவிட வக்கிரமான காட்சி அமைப்புகளால் கேவலப்படுத்த முடியாது.

“பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

ஆனால், இந்தப் படத்துக்கு மிகவும் நேர்மறையில் பாராட்டித் தள்ளி விமர்சனம் எழுதியிருக்கும் பி.பி.சி., “படத்தில் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. “நான் போதைப்பொருள் கடத்துகிறேன்” என்ற முடிவை நயன்தாரா எடுக்கிறார்.  “ஓ.கே., வா, என்னை ரேப் பண்ணு” என வில்லனை அறைக்குள் செல்லும் முடிவை நயன் தாரா எடுக்கிறார். “குடும்பத்தோடு கொலை செய்யலாம்” என்ற முடிவை நயன் தாரா எடுக்க, முதல் ஆளாய் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுக்கிறார் கேன்சர் நோயாளியான சரண்யா. இத்தகைய முடிவுகளை  “பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

உண்மையில் கோலமாவு கோகிலா என்ற இந்தப் படத்தின் கதையைவிட, இதை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் மனநிலைதான் அச்சம் தருவதாக இருக்கிறது. இந்த மனநிலைதான் அனைத்தையும் எளிமைப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு கரணம் தப்பினால் மரணம் என பிற்போக்கில் சிக்கிக்கொள்ளும்.

லைக்காவின் தயாரிப்பில் வந்திருக்கும் இத்திரைப்படம் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் ’பெருமை மிகு’ ஐரோப்பிய தொழில் மோசடிகளுக்கு பொருத்தமானதுதான்.

கோலமாவு கோகிலா வாழ்க்கை எனும் பெருங்கோலத்தை அலங்கோலமாக்கும் ஒரு அயோக்கியத்தனமான அற்பத்தனம் என்பதே இதற்கு நாம் அளிக்கும் அதிகபட்ச நாகரீக விமரிசனம்!

– வழுதி

நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !

அருந்ததிராய்
அருந்ததிராய்

ன்றைய செய்தித்தாள்கள் (ஆகஸ்டு 30, 2018) தாங்கி வந்துள்ள செய்திகள் குறித்து நாம் சில காலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்க செய்தியின் தலைப்பு: “நீதிமன்றத்தில் போலீசு : அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான பாசிச எதிர்ப்புத் திட்டத்தின் பகுதியாக இருந்தவர்கள்”.

சொந்த போலீசாலேயே பாசிசவாதி என அழைக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிராக நாம் இருக்கிறோம் என்பதை இப்போது அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய இந்தியாவில், ஒருவர் சிறுபான்மையினராக இருப்பது ஒரு குற்றம்; கொலை செய்யப்படுவது ஒரு குற்றம்; அடித்து கொல்லப்படுவது ஒரு குற்றம்; ஏழையாக இருப்பது ஒரு குற்றம். வறியவர்களை ஆதரிப்பது அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான திட்டமிடல்.

அறியப்பட்ட செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், மத போதகர்களின் வீடுகளை புனே போலீசு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை இட்டது; ஐவரை கைது செய்தது.  முக்கியமான சிவில் உரிமைப் பாதுகாவலர்கள், இரண்டு வழக்கறிஞர்கள்  நகைப்புக்குரிய குற்றச்சாட்டுகளில், சிறு அல்லது ஒன்றுமேயில்லாத ஆதாரங்களின் அடிப்படையில் கைதாகியிருக்கிறார்கள். அரசு இது கடுமையான எதிர்வினைகளைக் கிளறிவிடும் என அறிந்திருந்தும் செய்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, கைதுக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்கள் உள்ளிட்ட நம்முடைய எதிர்வினைகளையெல்லாம் அரசு  இந்த நடவடிக்கையை எடுக்கும் முன் கணக்கில் கொண்டிருக்கும். எனவே, ஏன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

அருந்ததிராய்
அருந்ததிராய்

வாக்காளர்களின் தகவல்களை வைத்து  லோக்நீதி – CSDS-ABP செய்த சமீபத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்களுடைய செல்வாக்கை கணிசமான அளவில் இழந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், நாம் ஆபத்தான காலத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே.  இந்த செல்வாக்கு குறைவு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு பெருகுவதை மறைக்க இனி தொடர்ச்சியான கருணையற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.  கைதுகள், படுகொலைகள், அடித்துக் கொல்லுதல், வெடிகுண்டு தாக்குதல், கொடியை முன்வைத்து கொலை, கலவரங்கள், இனப்படுகொலைகள் என தேர்தல் முடியும்வரை இந்த சர்க்கஸ் தொடரும். அதுதான் பிரித்தாள்வது. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், திசைதிருப்பி ஆள்வது. இப்போதிலிருந்து தேர்தல் வரை, எப்போது, எங்கிருந்து நெருப்பு பந்து நம்மேல் விழும் என நம்மால் கணிக்க முடியாது; அந்த நெருப்பு பந்து எப்படிப்பட்டது என்பதும் தெரியாது.  வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் கைது குறித்து பேசும் முன்னர்,  நெருப்பு மழையும், வினோதமான சம்பவங்களும் நம்மீது விழும் முன், நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

  1. நவம்பர் 8, 2016 அன்று டிவியில் தோன்றி மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க அறிவிப்பு முடிந்து ஒரு வருடம், ஒன்பது மாதங்களாகிறது. இந்த அறிவிப்பால் அவருடைய அமைச்சரவையே வியப்படைந்தது. 99 % சதவீத பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை, இந்த பண மதிப்பழிப்பு நடவடிக்கை நாட்டின் 1 % பொருளாதார வளர்ச்சியை குறைத்ததோடு, 1.5 மில்லியன் வேலையிழப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறது. அதே நேரத்தில், புதிய பணத்தை அச்சடிக்க பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டது. பண மதிப்பழிப்பால் அல்லாடிக்கொண்டிருந்த சிறு மற்றும் குறுந்தொழில்களை அது முற்றிலுமாக அழித்துவிட்டது.
மக்களை வீதியில் நிற்கச் செய்த பணமதிப்பழிப்பு

சிறு தொழில்கள், வர்த்தகர்கள் குறிப்பாக ஏழைகள் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம், பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள் தங்களுடைய சொத்து மதிப்பை பன்மடங்காக உயர்த்திக்கொண்டன. அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றோர் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட அனுமதிக்கப்பட்டார்கள்.

எத்தகைய பொறுப்புத்தன்மையை இவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியும்? ஒன்றுமில்லை? பூஜ்ஜியம்?

இவற்றின் ஊடாக, 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக நாட்டிலேயே பணபலம் மிக்க கட்சியாக உருவெடுத்துவிட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நன்கொடைகளை பத்திரங்களாக வாங்கும் முறையிலும் அரசியல் கட்சிகளின் நன்கொடையாளர்கள் குறித்த விவரங்கள் மூடியே பாதுகாக்கப்படுகின்றன.

  1. 2016-ம் ஆண்டு மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி மோடியால் தொடங்கி வைக்கப்பட்டபோது நடந்த கேலிக்கூத்து நினைவிருக்கலாம். முக்கிய அரங்கின் கலாச்சார நிகழ்வு நடந்த இடத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், நிஜமான தீப்பிழம்பு, மேக் இன் இந்தியாவின் நோக்கமான ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து வெளிப்பட்டது. தன் சொந்த பாதுகாப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாமலேயே, தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு பிரதமரால் பாரிசில் ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இது அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறிய செயல்பாடாகும்.
    modi-ambani-rafale-jet-scam
    தேசப் பாதுகாப்பை அடகு வைத்த ரஃபேல் ஊழல்

    இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2012-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, இந்துஸ்தான் எரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) என்ற இந்திய அரசு நிறுவனம் விமானங்களின் பாகங்களை ஒன்றிணைக்கும் பணியை செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குப்பையில் கிடத்தப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் குறிவைத்து தாக்கப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட பலர் மோடியின் ஒப்பந்தத்தில் கற்பனைக்கெட்டாத ஊழல் நடந்திருப்பதையும் ஒரு விமானத்தைக் கூட இதுநாள் வரை உருவாக்கியிராத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலையீடு மற்றும் திரைமறையில் நடந்த பேரங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோரின. நாம் ஏதாவது ஒன்றை எதிர்ப்பார்க்க முடியுமா? அல்லது அவை அனைத்தையும் ஒரு மடக்கில் விழுங்கிவிட வேண்டுமா?

  1. கர்நாடக போலீசார் பத்திரிகையாளர் மற்றும் செயல்பாட்டாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டு, சனாதன் சன்ஸ்தா போன்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

நிழல் உலகில் இயங்கும், தீவிரவாத வலைப்பின்னலும் யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்ற அவர்களுடைய ஹிட் லிஸ்டும் அவர்களுடைய மறைவிடங்கள்,  மக்களை கொல்லும் ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் விசாரணையில் வெளிவந்தன.  இந்த குழுக்களைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்? எத்தனை பேர் இன்னும் ரகசியமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்?  அதிகாரத்தின் ஆசியுடன், காவல்துறையின் ஒத்துழைப்புடன்  அவர்கள் என்ன திட்டங்களை நமக்காக வைத்திருக்கிறார்கள்? தவறான கொடிக்காக தாக்குதல் நடத்தப்படுவது என்பது என்ன? அப்படியெனில் எது உண்மையானது? இது எங்கே நடக்கும்? காஷ்மீரிலா? அயோத்தியிலா? கும்ப மேளாவிலா?  எப்படி எளிதாக அனைத்து தாக்குதல்களும் குழையும் ஊடகங்களால்  மடைமாற்றம் செய்யப்படுகின்றன?  இந்த உண்மையான அச்சுறுத்தல்களிலிருந்து திசை திருப்பத்தான், சமீபத்திய கைதுகளுக்காக நம்மை கண்ணீர் சிந்த வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  1. கல்வி நிறுவனங்கள் அழிக்கப்படும் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மதிப்பிற்குரிய தடம் பதித்த பல்கலைக்கழகங்களின் அழிவையும் பேப்பரில் மட்டுமே உள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கான உயர்வையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் இதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இது பல வழிகளில் நிகழ்ந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நம் கண்முன்னே சீரழிக்கப்படுவதை பார்க்கிறோம். மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.  பல தொலைக்காட்சி சானல்கள் பொய்களை, ஜோடிக்கப்பட்ட வீடியோக்களை பரப்பி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. பொய்களால் இரக்கமற்று துரத்தப்பட்ட இளம் ஆய்வாளரான உமர் காலித் மீது படுகொலை முயற்சி நடக்கிறது.
இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே, கவுரிலங்கேஷ், கல்புர்கி

பிறகு, அவர்கள் வரலாற்றை திரிக்கும் வேலைகளையும் பாடத்திட்டங்களை கேலிக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.  சமீப சில ஆண்டுகளில் ஒருவகையான குணப்படுத்த முடியாத முடத்தன்மையை கல்வி புலத்தில் உண்டாக்கியிருக்கிறார்கள். இறுதியாக, தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, இடஒதுக்கீடு செய்த சிறு நன்மையைக் கூட செய்யவில்லை. பெருநிறுவனங்களின் முகமூடியோடு கல்வி பார்ப்பனமயமாக்கப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கட்டணங்களை கட்டத் திணறி கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.  இது நிகழத் தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாதது.

  1. மிகப்பெரும் துயரத்தில் இருக்கிறது வேளாண் துறை. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தபடியே உள்ளன. முசுலீம்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், தலித்துகள் இரக்கமற்று தாக்கப்படுகிறார்கள். பொதுவெளியில் ஏவப்படும் கும்பல் வன்முறை, உயர்சாதிகளின் தாக்குதலுக்கு எதிராக எழுந்து நின்ற பீம் ஆர்மியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படுகிறார். பட்டியல் இன மற்றும் பழங்குடிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்கச் செய்யப்பட்ட முயற்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்ல இத்தனை இருக்கின்றன. சமீபத்தில் நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வருகிறேன்.

நேற்று கைது செய்யப்பட்ட வெர்னான் கோன்சால்ஸ், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாத், வரவர ராவ், கௌதம் நவ்லாகா ஆகிய ஐவரில் ஒருவர் கூட டிசம்பர் 31-ம் தேதி நடந்த எல்கர் பரிஷத் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. இந்தப் பேரணியின் முடிவில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள், பெரும்பான்மையினர் தலித்துகள், 200-ம் ஆண்டின் பீமா கொரேகான் வெற்றியைக் கொண்டாடுவதற்காக குழுமினார்கள். (தங்களை சுரண்டிக்கொண்டிருந்த பேஷ்வாக்களுக்கு எதிராக பிரிட்டிஷாருடன் இணைந்து தலித் மக்கள் போராடி வெற்றி கண்டனர். தலித்துகள் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சில வெற்றிகளில் இதுவும் ஒன்று)

ஓய்வுபெற்ற நீதிபதிகளான P.B.சாவந்த் மற்றும் கோல்சே பட்டீல் ஆகியோரின் தலைமையில் எல்கர் பரிசத் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணியில் பங்கெடுத்தவர்கள் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் சில நாட்கள் பதற்றம் உண்டானது. மிலிந்த் எக்போடே மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் இதில் முதன்மை குற்றவாளிகள். இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களுடைய ஆதரவாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, செயல்பாட்டாளர்கள் ரோமா வில்சன், சுதிர் தாவ்லே, ஷோமா சென், மிஹிர் ராட், அவர்களுடைய வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள்.  அவர்கள் மீது பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டது என்கிற குற்றச்சாட்டோடு மோடியை கொல்ல திட்டம் திட்டினார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அவர்கள் உஃபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இப்போதும் காவலில்தான் உள்ளார்கள்.  நல்லவேளையாக, இஷ்ரத் ஜஹான், சொராபுதீன், கவுசர் பீ போன்றோரை போல் அல்லாது அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இதே காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்குக்கூட உயிருடன் இல்லை.

தனது மனைவியுடன் பேராசிரியர் சாய்பாபா

காங்கிரஸ் அரசாங்கமானாலும் பாஜக அரசானாலும் தங்கள் அரசின் பழங்குடியினர்களுக்கு எதிரான தாக்குதலை மறைக்க, (இப்போதைய அரசு தலித்துகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது) அவற்றை ‘நக்சல்கள்’ அல்லது ‘மாவோயிஸ்டுகள்’ மீதான தாக்குதலாகக் கூறின. முசுலீம்கள் ஏறக்குறைய வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் பழங்குடிகள் மற்றும் தலித் மக்கள் வாழும் தொகுதிகளை முக்கியமான வாக்கு வங்கியாக பார்ப்பதன் விளைவு இது. செயல்பாட்டாளர்களை கைது செய்து ‘மாவோயிஸ்டுகள்’ என அழைப்பதன் மூலம் அரசு , தலித் எழுச்சியை கொச்சைப்படுத்துகிறது; குறைத்து மதிப்பிடுகிறது.  அதே சமயம் தலித் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும் தோற்றத்தை உருவாக்குகிறது.  இன்று ஆயிரக்கணக்கான  வறிய, பின்தங்கிய மக்கள் தங்களுடைய உறைவிடத்துக்காகவும் நிலத்துக்காகவும் மரியாதைக்காகவும் போராடி சிறையில் இருக்கிறார்கள். தேச விரோத சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு,  வழக்கு விசாரணைக்குக் கூட ஆட்படுத்தப்படாமல் சிறையில் கும்பலாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட மூன்று வழக்கறிஞர்களும், நன்றாக அறியப்பட்ட ஏழு செயல்பாட்டாளர்களும் நீதி மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பாக, சல்வா ஜுடும் என்றகூலிப்படை, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உருவாக்கப்பட்டது. மக்களை கொல்வது, ஒரு கிராமத்தையே எரிப்பது என வன்முறைகளில் ஈடுபட்டது. பியூசிஎல் அமைப்பின் அப்போதைய பொதுச் செயலாளரான டாக்டர் பினாயக் சென் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசினார். பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டபோது, தொழிலாளர் சங்க தலைவராகவும் வழக்கறிஞராகவும் இருந்த சுதா பரத்வாஜ் அவருடைய பணிகளை செய்தார். பஸ்தாரில் துணை ராணுவப்படையின் தாக்குதல்களுக்கு எதிராக அயராது பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் சாய்பாபா. கைது செய்யப்பட்ட பினாயக் சென்னுக்கு ஆதரவாகவும் அவர் நின்றார். சாய்பாபா கைதுசெய்யப்பட்டபோது ரோனா வில்சன் வந்து நின்றார். சுரேந்திர கட்லிங் சாய்பாபாவின் வழக்கறிஞர். ரோனா வில்சன், சுரேந்திர கட்லிங், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா ஆகியோர் கைது செய்யப்பட்டபோது மற்றவர்கள் அவர்களுக்காக நின்றார்கள். இது இப்படியே போய்க்கொண்டிருக்கும்.

அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதும் அமைதியாக்கப்படுவதும் கொடூரமானது.

கடவுளே எங்கள் நாட்டை திரும்பப் பெற எங்களுக்கு உதவுங்கள்.

  • எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதி த வயரில் வெளியான கட்டுரை
  • தமிழாக்கம் : கலைமதி

நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் ! முனைவர் ஆனந்த் தெல்தும்டே

0
முனைவர் ஆனந்த் தெல்தும்டே

முந்தைய நாள் விமானம்  தாமதமாக வந்திறங்கியதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக நான் சற்று காலந்தாழ்ந்து துயில் எழுந்தேன். நான் பணிபுரிகின்ற கோவா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரும், சக ஊழியருமான பேராசிரியர் அஜித் பாருலேகரின் தவற விட்ட அலைபேசி அழைப்புகளை பார்த்தேன். எங்கள் நிறுவனத்தின் வளாகத்துக்குள் பூனே போலீஸ் நுழைந்து என்னை தேடுவதாக அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தேன். அங்கே செல்ல விரைவதாக கூறி விட்டு மேலதிக விவரங்களை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். அந்த நிறுவனத்தில் பெருந் தரவு பகுப்பாராய்ச்சித் துறையின் தலைவராகவும், முதுநிலை பேராசியராகவும் நான் பணியாற்றுகிறேன்.

காலை பத்து மணிக்கு ஒரு அலுவலக கூட்டம் இருந்ததால் நான் அதற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தேன். கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலே பல அழைப்புகள் எனது அலைபேசிக்கு வந்தன. ஓசையற்ற பாங்கில் எனது அலைபேசி இருந்தது. அதற்குள்ளாக எல்லா தொலைக்காட்சிகளும் அறிவுத்துறையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள் இல்லங்களில் நடந்த சோதனைகளையும், அவர்களில் சிலரின் கைதையும் ஒளிபரப்ப தொடங்கியிருந்தன. நான் எனது மனைவியை அலைபேசியில் அழைத்தேன். எங்கள் வீடும் திறக்கப்பட்டு, சோதனை நடப்பதை தொலைக்காட்சிகள் செய்தியிடுவதாக அவர் தெரிவித்தார்.

எனது மனைவி மிகவும் பயந்து போயிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு திரும்பி செல்ல வேண்டி ஏற்கனவே பயணச்சீட்டுகள் எடுக்கப்பட்டு விட்டன. நான் மனைவியை தொலைபேசியிலேயே சற்று காத்திருக்க சொல்லி விட்டு வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டேன். போலீஸ் சோதனையின் போது யாராவது ஒருவர் இருப்பது நல்லது என்றும் இல்லையேல் சோதனை என்ற சாக்கில் வீட்டில் எதையாவது வைத்து விடுவர் என்றும் வழக்கறிஞர் நண்பர் கூறினார். காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திடவும் சொன்னார். எனக்கு மும்பையில் சில பணிகள் தொடர்பாக திட்டமிருந்ததால் மனைவியிடம் எனது பயணச்சீட்டை ரத்து செய்து விட்டு கோவா செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அதன்படி அவர் கோவா சென்று வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் துணையுடன் போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் எனது இயக்குநரை அலைபேசியில் அழைத்து என்னுடைய வீட்டின் சாவியை போலீசிடம் யார் வழங்கியது என்று கேட்ட போது,  நிறுவனத்தின் வளாகத்துக்கு அவர் செல்லும் முன்பே போலீஸ் அனைத்தையும் முடித்து விட்டதாக கூறினார். அவரிடம் என் மீதான குற்றப்பத்திரிகையை வழங்கியுள்ளனர். அதன் ஒளி நகலை அவருடைய செயலாளர் அனுப்பி வைத்தார். அவர் அதை படித்ததாகவும், அதில் ஒன்றுமில்லை எனவும் கூறினார்.

என்னுடைய சக ஊழியர்களுள் ஒருவரான பேராசிரியர் கிருஷ்ணா லத்தா பார்த்தவற்றை கூறினார். போலீசை சந்தித்தவர்களில் ஒருவர் அவர். போலீஸ் அங்கு நின்றிருந்த பாதுகாப்பாளரை மிரட்டி, சாவியை எடுத்து வரச்செய்து பூட்டை திறந்துள்ளனர். இயக்குநர் வரும் வரை போலீசை காத்திருக்க பேராசிரியர் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார். தங்களுடன் வந்திருப்பவருக்கு சோதனையை மேற்கொள்ள அதிகாரமிருப்பதாக மிகக்கடுமையாக தெரிவித்துள்ளனர். அங்கிருந்த  பாதுகாப்பாளர் தான் வீட்டை திறந்ததாகவும் சொன்னார்.

ஒன்றிரண்டு போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பாளர் மற்றும் ஒரு வீடியோகிராஃபருடனும் வீட்டுக்குள் நுழைந்து, நான்கைந்து நிமிடங்களிலெல்லாம் வெளியே வந்து, பாதுகாப்பு பணியாளரிடம் கதவை பூட்ட சொல்லி உள்ளனர். முக்கியமான அலுவல் கூட்டம் இருந்ததால் பேராசிரியர் லத்தா அங்கிருந்து அகன்றுள்ளார். அதன் பிறகு வீடு திறக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

எனது வீட்டின் எதிர்புறம் வசிக்கும் பேராசிரியர் விஷ்ணுவுடன் பேசினேன். அவரும் இதே கதையை தான் சொன்னார். கூடுதலாக, துப்புரவு தொழிலில் ஈடுபடும் பெண்மணி ஒரு பிளாஸ்டிக் பெட்டியை போலீஸ் தூக்கி சென்றதை பார்த்ததாக கூறியதையும் சொன்னார்.

எனது மனைவி கோவா சென்று எங்கள் வீட்டின் பாதுகாப்பாளருடன் பேசிய போது போலீஸ் சோதனையில்  நடந்தவற்றின் மிகப் பயங்கரமான பரிமாணத்தை அவர் விளக்கி உள்ளார். காலையில், ஒரு போலீஸ் ஊர்தி அதனுடன் கூடவே மேலும் இரண்டு போலீஸ் வாகனங்கள் எங்கள் நிறுவன வளாகத்தின் வாயில் கதவை இடித்து கொண்டு வந்து நின்றுள்ளது. பாதுகாப்பாளர்கள் அனைவரின் அலைபேசிகளையும் பிடுங்கியதோடு தொலைபேசி இணைப்புகளை துண்டித்து விட்டு எங்கள் வீட்டை அடைந்திருக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பாளரை மிரட்டி சாவிகளை எடுத்து வர பணித்துள்ளனர். அவரிடமிருந்த படி சாவிகளை பெற்றுக் கொண்டு மேலே விவரித்த முறையில் வீட்டை திறந்துள்ளனர்.

ஒட்டுமொத்த நிகழ்வும் நடந்த முறை நான் ஏதோ அச்சம் கொள்ளத்தக்க ஒரு பயங்கரவாதி அல்லது கிரிமினல் போன்ற சித்தரிப்பை கொண்டிருந்தது. தங்களுக்கு வேண்டியதை போலீஸ் என்னிடம் நேரடியாகவோ, அல்லது ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பியோ அல்லது காவல் நிலையத்துக்கு என்னை வரவழைத்தோ கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நடவடிக்கையின் முழு நோக்கமும் என்னவென்றால் ஒரு அச்சம் கலந்த சூழலை உருவாக்குவதும், நான் ஏற்கனவே பயங்கரமான குற்றத்தை இழைத்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் தான். என்னிடமுள்ள தகவல் அனைத்தும் மக்கள் மத்தியில் இருப்பவை.

நான் ஒரு சிறந்த மாணவனாக கற்றல் காலம் முழுவதிலும் இருந்து வந்துள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவன். புகழ் பெற்ற ஆமதாபாத் மேலாண்மை நிறுவனமும் அதில் ஒன்று. சைபர்நெட்டிக்சில் (மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையேயான தானியங்கி தொடர்பாடலின் அறிவியல் – மொர்.) முனைவர் பட்ட ஆய்வு செய்து ஒட்டுமொத்த பணிவாழ்வையும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கழிப்பவன். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகவும், அதனை தொடர்ந்து பெட்ரோநெட் இந்தியா லிமிடட் என்ற சார்புவைப்புக் குழுமத்தில் (holding company) மேலாண்மை இயக்குநராகவும், முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) உயர்வு பெற்றவன்.

வழக்கத்துக்கு மாறானதாக என்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை வாழ்ந்த போது 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை மதிப்புமிக்க இதழ்களில் எழுதினேன். என்னுடைய கார்ப்பரேட் கால வாழ்க்கைக்கு பிறகு காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் வேலைக்கு அழைக்கப்பட்டேன். அங்கு தொழில் மேலாண்மை பாடங்களை ஐந்து வருடங்களுக்கு மேலாக கற்பித்தேன். அதன் பிறகு ஜுலை 2016-லிருந்து கோவா மேலாண்மை நிறுவனத்தில் (Goa Institute of Management) முதுநிலை நிர்வாகவியல் பேராசிரியராக உள்ளேன். பெரு தரவு பகுப்பராய்ச்சித் துறையின் தலைவராகவும் இருக்கிறேன். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த பாடப்பிரிவில் முதுநிலை கல்வி இந்த வருடம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய இந்த தொழில்முறை வாழ்க்கை வசீகரிக்கிற வகையில் ஒரு நீதியான சமூகத்தை படைக்கின்ற நோக்கத்துக்கு உதவுகின்ற முறையில் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய அறிவுசார் பங்களிப்பை கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்திலும், பேச்சிலும் வழங்கி வந்துள்ளேன். இந்த வழிமுறையில் 26 நூல்கள் எழுதியுள்ளேன். அவற்றை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முன்னணி வெளியீட்டு நிறுவனங்கனான ஜெத் புக்ஸ், ரூட்லஜ் மற்றும் பென்க்வின் ரேண்டம் ஹவுஸ் ஆகியவை வெளியிட்டுள்ளன.  இது போக நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ‘விளிம்பு உரை’ என்ற தலைப்பில் தொடர் பத்திகள் பெருமதிப்புமிக்க  ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ என்ற இதழில் எழுதி வந்துள்ளேன். என்னுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ச்சியாக இந்திய மொழிகளிலும், வெளிநாடுகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன; மக்கள் மன்றத்தில் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான விரிவுரைகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கி உள்ளேன். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களால் இரு முறை விரிவுரை நிகழ்த்து சுற்றுப்பயணங்களுக்காக அழைக்கப்பட்டுள்ளேன். ஒரு பொது அறிவுஜீவியாக இந்த பணிகளை நான் இவ்வளவு காலமும் செய்து வருவது பல பாராட்டுக்கள், விருதுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கவுரவ முனைவர் பட்டங்கள் ஆகியவற்றை பெற்று தந்துள்ளன.

என்னுடைய புகழ் நிர்வாகவியல் சார்ந்த எனது சொந்த துறையில் தனித்துவமான ஒரு சான்றோனாகவும்; தொழில் ரீதியில் என்னுடைய புகழ் முதன்மை நிர்வாக அதிகாரியையொத்த கார்ப்பரேட் நிர்வாகியாகவும், ஒரு நூலாசிரியராக என்னுடைய புகழ் அனைவராலும் விரும்பித் தேடப்படும் ஒரு எழுத்தாளராகவும், ஒரு பொது அறிவுஜீவியாக என்னுடைய புகழ் அனைவராலும் விரும்பி அழைக்கப்படுகின்ற மனிதராகவும் நாடு முழுக்க இருக்கிறது. மாணவர் பருவத்திலிருந்தே நான் ஒரு சமூக செயல்பாட்டாளன். மாணவர் தலைவராகவும், பின்னர், குடிமை உரிமை செயல்பாட்டாளனாகவும் அது இருக்கிறது. கால ஓட்டத்தில் பல அமைப்புகளுடன் எனக்கு தொடர்பேற்பட்டது. அவை எதுவும் வன்முறையை போதிப்பதுவோ அல்லது சட்டவிரோத காரியங்களை செய்வதோ கிடையாது. உதாரணத்துக்கு ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழுவின் செயலாளராகவும், ஜனநாயக உரிமைகள் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக உறுப்பினராகவும், கல்வி உரிமைக்கான அகில இந்திய அமைப்பின் அவை உறுப்பினராகவும் உள்ளேன்.

நிச்சயமாக, ஒரு பொது அறிவுஜீவியாக என்னுடைய விமர்சனங்கள் இந்த அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக தான் இருக்கின்றன. அவை மேலோட்டமாக அல்லாமல் ஒரு அறிவுத்துறை ஒழுங்குடன் இருப்பவை. நான் சந்தேகம் இல்லாமல் இந்த அரசு மீது கடுமையான விமர்சனத்தை கொண்டுள்ளவன். அதே நேரத்தில் வேறு பலரை போலல்லாது, இந்த அரசின் தோற்றத்துக்கு காரணமான பின்-காலனிய அரசு கட்டமைப்பை பழிப்பவன்.

பீமா-கோரேகான் அல்லது எல்கர் பரிஷத்தில் எனது தொடர்பு குறித்து கூறப்படுவனவற்றின் மீது சொல்ல வேண்டும் என்றால் பீமா – கோரேகான் நிகழ்வு தொடர்பாக நான் எழுதிய கட்டுரை வயரில் ([https://thewire.in/caste/myth-bhima-koregaon-reinforces-identities-seeks-transcend) வெளிவந்து நாடு முழுவதுமுள்ள  தலித்களின் கோபாக் கணைகளுக்கு தான் ஆளானேன். மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக சொல்வதென்றால் வன்முறை மீது அவர்கள் கொண்டிருக்கின்ற சாய்வு மற்றும் அவர்கள் கடைபிடிக்கின்ற வழிமுறை ஆகியவற்றை விமர்சித்து எழுதி உள்ளேன். ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சாதியொழிப்பு, லெஃப்ட் வேர்ட் வெளியிட்ட அம்பேத்கரின் இந்தியாவும், கம்யூனிசமும் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை, நவயானா வெளியிட்ட சாதியின் குடியரசு ஆகிய நூல்களை உதாரணம் காட்ட முடியும்.

இப்போது குறி வைக்கப்பட்டிருக்கும் மற்ற பலரை போல நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவும் கூட இல்லை. இந்த கற்பனையின் விரிவிலிருந்து பார்த்தால் இப்போது பகிரப்படும் செய்திகள் விவரிக்கும் சம்பவங்களில் எனக்கு ஏதாவதொரு தொடர்பிருக்கும் என்று நம்ப முடிகிறதா? இதன் மொத்த அத்தியாயமும் போலீஸ் சமர்ப்பித்த ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் உண்மைத்தன்மை இன்னும் நிலைநாட்டப்படவில்லை. அதன் வாய்மை நிலை குறித்து பலத்த சந்தேகங்களை பலர் எழுப்பி விட்டனர். இதனை அடிப்படையாக கொண்டு நாட்டில் வாழ்கின்ற அனைத்து அறிவுத்துறையினரையும் குறி வைத்துள்ளது போலீஸ். ஊபா போன்ற கொடுஞ்சட்டங்கள் மூலம் மக்களை பீதிக்குள்ளாக்கி மவுனமாக்கி விட்டு, தேர்ந்தெடுத்த சில அறிவுத்துறையினரையும், செயல்பாட்டாளர்களையும் தாக்குதல் இலக்கில் கொண்டு வருவது தான் திட்டம்.

நான் நீதித்துறையை வேண்டுவது ஒரு படுபயங்கரமான மன உளைச்சலுக்கும், சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கிறோம். எந்த சிறு குற்றமும் இழைக்காத என்னை போன்ற அப்பாவி மனிதர்களின் நிலையை நீதித்துறை கணக்கில் கொள்ள வேண்டும். அதே போல இந்த நாட்டு மக்களிடமும் நான் வேண்டுவது இப்போது நான் நடத்தப்படுகின்ற விதத்தில் நடத்தப்பட வேண்டியவனா என்பதை சிந்திக்க கேட்டுக் கொள்கிறேன்.

Dr. ஆனந்த் தெல்தும்டே

BE (Mech), PGDM (IIM, ஆமதாபாத்), Ph D (Cybernetics), FIE (I), FACS (USA), D.  Litt (Hon)
முன்னாள் நிர்வாக இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடட், முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO, பெட்ரோநெட் இந்தியா லிமிடட், மும்பை.
முன்னாள் பேராசிரியர், ஐ.ஐ.டி காரக்பூர்.
முதுநிலை பேராசிரியர் மற்றும் துறை தலைவர்- பெருதரவு பகுப்பாய்வுத் துறை, கோவா நிர்வாகவியல் நிறுவனம்.

தமிழாக்கம்: ராஜ்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு ! ஆவணப்படம்

”இந்த சூப்பின் செய்முறை பைபிளில் விளக்கப்பட்டுள்ளது. யாக்கோபு செய்த அதே சூப்பை நானும் செய்கிறேன். ஆனால், நான் யாக்கோபு செய்ததைப் போன்றே செய்கிறேனா எனத் தெரியவில்லை. சுவையாக இருக்க வேண்டுமென்பது தானே முக்கியம்? ” எனக் குறிப்பிடும் சார்கிஸ் யாக்கோபின், “பொதுவாக இங்கே மக்கள் கத்தியைப் பயன்படுத்துகின்றனர்.. கொல்வதற்காக. நாங்களும் கத்தியைத் தான் பயன்படுத்துகின்றோம்; கொல்வதற்கல்ல, சமைப்பதற்கு” எனச் சொல்கிறார்.

hamas
ஹமாஸ்

அது இசுரேலின் ஜெருசலேம் நகரில் அமைந்திருக்கும் யூகலிப்டஸ் உணவகம். இசுரேலில் உள்ள அனைத்துமே மதத்தோடும், கலாச்சாரத்தோடும், அரசியலோடும், அங்கே தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பகைமையோடும் முடிச்சிட்டுப் பார்க்கப்படுவதைத் தவிர்க்கவே முடியாது. எனில், உணவு? அதைக் குறித்து தனது 22 நிமிட ஆவணப்படத்தில் ஆராய்கிறார் அல்ஜசீராவின் செய்தியாளர். இசுரேலைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மதப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உணவுக் கலாச்சாரங்களையும் ஒரு பருந்துப் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தில், ஆர்மீனியர்கள் துவங்கி எத்தியோப்பியர்கள் வரை பல்வேறு இனக்குழுக்களின் உணவுக் கலாச்சாரத்தையும் நேரில் சென்று நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

இசுலாமியர்களுக்கு இருப்பதைப் போன்றே யூதர்களுக்கும் மத ரீதியான உணவுச் சட்டங்கள் உள்ளன. கஷ்ரூட் என்று அழைக்கப்படும் அந்தச் சட்டங்களை அரசே முன்னின்று கடுமையாக அமல்படுத்துகின்றது. யூத மதச் சட்டங்களின் படி பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டது. அதே போல் செதில் மற்றும் இறக்கை இல்லாத மீன்களும், இரால் மீனும், விபத்தில் அடிபட்ட விலங்குகளின் இறைச்சியும் தடை செய்யப்பட்டவையே. தனது ஆவணப்படத்திற்காக பாரம்பரிய யூத மதக் கடுங்கோட்பாடுகளைப் பின்பற்றும் குடும்பம் ஒன்றைச் சந்திக்கிறார் செய்தியாளர்.

“எங்கள் யூத மதத்தில் ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் எதற்காக இருக்கின்றன, என்ன சொல்ல வருகின்றன என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்தச் சட்டங்களை ஏன் கடவுள் உண்டாக்கினார் என்பதும் தெரியாது. ஆனால், அவற்றையெல்லாம் கடவுளே ஏற்படுத்தியுள்ளார் என்பதால் அப்படியே பின்பற்றி வருகின்றோம்” என்கிறார் அக்குடும்பத் தலைவி. ஜெருசலேம் தங்களுக்காக வாக்களிக்கப்பட்ட நிலம் என யூதர்களும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என இசுலாமிய பாலஸ்தீனர்களும் கருதுகின்றனர். இசுரேல் என்கிற தேசமே குடியேறிகளால் செயற்கையாக கட்டப்பட்ட தேசம் என்பதால் பாலஸ்தீனர்களின் கூற்றில் நியாமில்லாமல் இல்லை.

கீகே ரொட்டி

பாலஸ்தீனர்களின் உணவில் அரேபிய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம். அவித்த சுண்டலை நசுக்கி மாவாக்கி அதோடு கோதுமை மாவு, எள், பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணையைக் கலந்து இறுதியில் எலுமிச்சை சாறைச் சேர்த்து செய்யும் ஒரு விதமான நொறுக்குத் தீனி பாலஸ்தீனர்களிடையே பிரபலம் – அந்த தின்பண்டத்தின் பெயர் ஹமாஸ். ஈராக், லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலும் இதே தின்பண்டம் பிரபலம் என்றாலும், பாலஸ்தீனர்கள் அதில் சேர்க்கும் எலுமிச்சை சாறு இசுரேலில் கிடைக்கும் ஹமாசை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார் அபு அலி எனும் உணவகத்தின் உரிமையாளர். தற்போது ஹமாஸ் யூதர்களிடையேயும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல் பாலஸ்தீனர்களிடையே பிரபலமாக இருக்கும் இன்னொரு உணவு கீகே எனும் ரொட்டி. ஒரு அடி அளவுக்கு நீள் வட்டமாக (நம்மூரில் கிடைக்கும் பன் – ஆனால், நடுவே ஓட்டையுடன் நீள் வட்டமாக) இருக்கும் இதை ஸாடார் எனும் ஒருவகைக் காட்டுக் கீரையில் செய்யப்படும் சட்னியில் தொட்டுச் சாப்பிடுகிறார்கள். ஸாடார் இலைகளைப் பறித்து காய வைத்துப் பொடியாக்குகிறார்கள். பின்னர் அந்தப் பொடியுடன் கொஞ்சம் உப்பும், எள் பொடியும் சேர்த்து அரைத்துக் கொள்கின்றனர். இந்தப் பொடியுடன் ஆலிவ் எண்ணையைக் கலந்து அதைச் சட்னி போல் வைத்துக் கொண்டு கீகே ரொட்டியைச் சாப்பிடுகின்றனர்.

சமீபத்தில் ஸாடார் தாவரம் அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லி அதைப் பறிப்பதையும் உணவுக்காக பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது இசுரேல் அரசு. இந்நிலையில் காலேலி பகுதியைச் சேர்ந்த எலியாஸ் கெனானி என்பவர் தனது 86 வயது தாயாருடன் அருகில் தனது நிலத்தில் விளைந்திருந்த ஸாடார் செடியைப் பறித்த ‘குற்றத்திற்காக’ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதோடு 660 ஷாக்கால் (இசுரேல் செலாவணி) அபராதமும் விதிக்கப்பட்டதைக் கண்டு அவரது தாயார் ஆத்திரமுற்று, “நீங்கள் அபராதம் விதித்துக் கொள்ளுங்கள், நான் அந்த தொகைக்கு ஈடான ஸாடாரை பறித்துக் கொள்கிறேன்” என போலீசாரிடம் வாதாடியுள்ளார்.

இசுரேலின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பாலஸ்தீனப் பெண்கள் காட்டுக் கீரைகளைப் பறிப்பதற்கு விதிகப்பட்டுள்ள தடையைச் சமாளிப்பதற்காக தங்கள் சொந்த நிலத்தில் ஸாடார் சாகுபடி செய்து வருகின்றனர். எப்படி தங்கள் கிராமங்களை யூதர்கள் ஆக்கிரமித்தார்களோ அதே போல் தங்களது உணவுப் பழக்கத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள் என பாலஸ்தீனர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஒன்று, பாலஸ்தீனர்களின் இயல்பான உணவுப் பழக்கத்தை சட்டப்படி தடுப்பது அல்லது அதை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வது என்கிற போக்கில் யூதர்கள் செயல்படுவதாக பாலஸ்தீனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இதற்கு இன்னொரு பக்கமும் இருப்பதைக் காட்டுகின்றது இந்த ஆவணப்படம். இசுரேல் குடியேறி யூதர்களின் தேசமாக இருப்பதால் அவர்களின் உணவு, ஓய்வு நேர விளையாட்டுக்கள், கலாச்சாரம் என சகலத்தையும் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நாடுகளில் இருந்தே சுவீகரித்துக் கொண்டுள்ளனர். விசயம் என்னவென்றால் 20-ம் நூற்றாண்டில் குடியேறிய யூதர்கள் மொராக்கோ, லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அராபியர்களோடு அக்கம் பக்கமாய் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களது கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் அராபியர்களை ஒத்தே இருக்கின்றன.

நவீன இசுரேலின் கலாச்சாரம் மத்திய கிழக்கு, வட ஆப்ரிகா, ஐரோப்பா, இரசியா மற்றும் எத்தியோப்பாவின் கலாச்சாரங்களின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கோல்ட்பெர்க் எனும் யூத சமையல் கலை நிபுணர் “யூதர்களும், அரேபியர்களும் ஒரே விதமான மசாலாப் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்” என்பதை ஒப்புக் கொள்கிறார். அதே போல் ஜெருசலேமில் கிடைக்கும் கருவாடைப் பதப் படுத்தும் முறைகளில் இரசிய, ஐரோப்பிய மற்றும் துருக்கிய பாணிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

எனினும், பாலஸ்தீனர்களிடையே தனித்துவமான உணவுப் பழக்கத்தை ஒன்று தமதாக்கிக் கொள்வது அல்லது தமக்கு ஏற்புடையதல்ல எனும்பட்சத்தில் ஏதாவது ஒரு முறையில் தடுத்து அவர்களுக்கு ஆத்திரமூட்டுவது என்கிற போக்கிலேயே இசுரேலிய அரசு செயல்பட்டு வருகின்றது. தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். என்றேனும் ஒரு நாள் தங்களுக்கான நிலமும் தேசமும் வாய்க்கும் வரை இந்த அடையாளங்கள் மட்டுமே அவர்களுக்கான ஆறுதல்.

  • வினவு செய்திப் பிரிவு