Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 167

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் டிசம்பர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

தலையங்கம்: அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!
♦ காசியில் ‘காவி தமிழ்ச்சங்கம்’?
♦ ‘சோசலிச’,‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!
♦ இந்தித் திணிப்பு: எச்சரிக்கை!
♦ ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
♦ அரசுப் பணியிடங்களில் தனியார்மயம்!
♦ பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
♦ டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
♦ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!
♦ தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
♦ கோவை கார் வெடிப்புச் சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
♦ மின் இணைப்புடன் ஆதார்: மானியத்தை வெட்டும் சதி முயற்சியே!
நேர்காணல்: ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு: மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!
♦ நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ்-ஆழமும் அகலமும்

சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றால் என்ன? | சு.விஜயபாஸ்கர்

வ்வளவு விளக்கமாகக் சொன்னாலும், அல்லது எவ்வளவு சுருக்கமாகக் சொன்னாலும், நம் அனைவருடைய நல்வாழ்வுக்கான வழியே சோசலிசம்.

நமது குடும்பத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். உங்கள் குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்று உங்களுக்கு ஒரு திட்டமிருக்கும் அல்லவா? அதைப்போல இந்த உலகை நிர்வகிக்கும் திட்டமே சோசலிசம்.

ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, இரு மகன்கள், இரு மகள்கள், வயதான தாத்தா, பாட்டி என மொத்தம் 8 நபர்களும், இரண்டு பூனைகளும் ஒரு நாயும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். மேற்சொன்ன குடும்பத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு சோசலிசத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

உழைப்பும் தேவையும்:

ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப உழைப்பை பெற்றுக் கொள்வதும் அவரவர் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் வளங்களை தருவதும் வளர்ந்த சோசலிச சமுகத்தில் சாத்தியப்படும்.

நமது குடும்பத்தில் அப்பா பேராசிரியராக வேலை செய்கிறார். 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். அம்மா வழக்கறிஞர் பணிபுரிகிறார். ஊதியமாக 1.5 லட்சம் பெறுகிறார். பாட்டியும் தாத்தாவும் பணி மூப்பு பெற்று வீட்டில் உள்ளனர். இருவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். மூத்த மகனுக்கு வயது 25, பொறியாளராக வேலை செய்கிறார். 50 ஆயிரம் ஊதியம் பெறுகிறார். இரண்டாவது மகள் கல்லூரி படிக்கிறார். மூன்றாவது மகன் பள்ளிப்படிப்பு படிக்கிறார். கடைசி பெண் குழந்தை சிறுவயதில் ஏற்பட்ட நோய் காரணமாக ஒரு கால் செயல் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடமாடுகிறார். பள்ளிப் படிப்பு படித்து வருகிறார்.

படிக்க : சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

குடும்ப உறுப்பினர்களில் மூவர் மட்டுமே ஊதியம் பெரும் பணி புரிகிறார்கள். அவர்கள் பெறும் ஊதியத்தை வைத்து வளர்ப்பு பிராணிகளுடன் சேர்த்து 11 உயிர்களின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அனைவரின் தேவையும் ஒன்றாக இருக்குமா? அனைவருக்கும் காலை உணவாக இரண்டு இட்லிகள் மட்டும் வழங்கப்படும் என சொல்வோமா? அப்பாவும் அம்மாவும் மூத்தமகனும் மட்டுமே ஊதியம் ஈட்டுவதால் அவர்களுக்கு இட்லிகளுடன் சேர்த்து ஒரு வடையும் ஒரு குவளை பழச்சாறும் காலை உணவாக வழங்கப்படும் எனச் சொல்வோமா?

தாத்தாவும் பாட்டியும் சம்பாதிக்கவில்லையே. எனவே அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கித் தரமாட்டோம் எனச் சொல்வோமா? நாயும் பூனைகளும் மனித இனம் இல்லையே, அவைகளுக்கு உணவிட மாட்டோம் எனச் சொல்வோமா?

சொல்ல மாட்டோம் அல்லவா. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நியாயமான தேவை என்னவோ அதை வழங்குவோம். அது தானே அறம்? இந்த அற உணர்ச்சியோடு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அணுகுவதே சோஷலிச சமூகத்தின் நோக்கம். வெறும் நோக்கம் மட்டுமல்ல. சாத்தியமும் கூட.

எப்படி சாத்தியம்?

தாத்தாவும் பாட்டியும் இப்போதுதான் சம்பாதிக்கவில்லை. அவர்கள் கடந்த காலத்தில் குடும்பதிற்காக உழைத்துள்ளனர். ஊதியம் பெறும் வேலை செய்யதாபோதும், சமையல், வீட்டு வேலைகள், வீட்டுப் பிராணிகளைப் பேணிக் காப்பது என முதிய வயதிலும் தங்களால் இயன்ற வேலைகளை செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் நமக்காக உழைத்தவர்களை நிகழ்காலத்தில் பார்த்துக்கொள்வது நமது கடமை என்பதால் அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து என அனைத்தையும் வாங்கித் தந்து அவர்களை பராமரித்துக் கொள்கிறோம்.

குழந்தைகள் தற்போது வேலை செய்யவில்லையெனினும் எதிர்காலத்தில் வேலை செய்வார்கள் அல்லவா? இளம் வயதில் கல்வி முக்கியம் என்பதால் கல்வி கற்கிற  வேலையை செய்கிறார்கள். இளம் வயதில் அவர்கள் கற்கும் கல்வி பின்னாட்களில் குடும்பத்திற்கு பயன்படும் என்பதால் எதிர்காலத்திற்கான முதலீடாகிறது.

வேலை செய்யும் அளவுக்கு நாய்க்கும் பூனைக்கும் அறிவில்லை அல்லது அவர்களுக்கு இருக்கும் அறிவுக்கு பொருந்துகிற அளவுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே அவர்களால் ஊதியம் பெற இயலவில்லை. இருப்பினும் நம்மைப் போன்ற இன்னொரு குடும்ப உறுப்பினர் போல் செல்லப் பிராணிகளை நாம் பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஒரு அங்கம்.

ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் கடைசி பெண் குழந்தையால் அதிகமான மருத்துவச் செலவுகள் ஏற்படுகின்றன. இருப்பினும் அவளுக்கு மருந்து வாங்காமல் விட்டு விடமாட்டோம். அவளுக்காக ஊன்றுகோல் வாங்கியும் தந்துள்ளோம். குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளை ஒப்பிடும்போது, நோயுற்ற குழந்தையை கூடுதல் பரிவோடு பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில் அவளால் மற்றவர்களைப் போல் நடக்கவோ, ஓடவோ முடியாது. அவளுக்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. வலு அதிகம் உள்ளவர்கள் வலு குறைந்தவர்களை அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்வது மனித நேயம் என்பதால் அவளை பாசத்தோடு கவனித்துக் கொள்கிறோம்.

நம் குடும்பத்தில் இரு குழந்தைகள் சண்டையிட்டு கொண்டால், நமக்கென்ன கவலை என பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். தடுத்துநிறுத்துவோம். அது மட்டுமின்றி, இனி சண்டை போடக் கூடாது என அறிவுரை சொல்லுவோம்.

மகன் போதைப் பொருள், குடிப்பழக்கம் என தீய பழக்கங்களுக்கு அடிமையானால், புத்திமதி சொல்லி, நல்வழிப்படுத்துவோம். இனி தீய பழக்கங்கள் பக்கம் மகன் போய்விடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ, அவை அனைத்தையும் செய்வோம்.

சுருக்கமாகச் சொன்னால், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, விட்டு கொடுத்து, அன்பு செலுத்தி, நம்மிடம் இருப்பவற்றை பகிர்ந்து கொள்வோம்.  அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். வெறும் விருப்பத்தோடு நின்று விடாமல், அனைவரின் நலவாழ்வுக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அவை அத்தனையையும் செய்வோம்.

எங்கிருந்து கற்றோம்?

நோயுற்ற குழந்தையின் மீது நாம் காட்டிய மனிதநேயம், வயதான தாத்தா பாட்டியிடம் நாம் காட்டிய பரிவு, வழி தவறிப் போன மகனிடம்  நாம் காட்டிய அக்கறை உள்ளிட்ட அனைத்து பண்புகளையும் எங்கிருந்து கற்றோம்? அன்பு, மனித நேயம், பரிவு, சக மனிதர்கள் மீதான அக்கறை உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் பிறந்து வளர்ந்த சமூகத்திடம் இருந்து கற்றோம்.

ஆனால், நாம் மேலே சொன்ன (உதாரண) குடும்ப உறுப்பினர்கள் போல் உலகில் உள்ள அனைவரும் நடந்து கொள்கிறார்களா? நற்பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும்தான் இவ்வுலகில் உள்ளனரா? திருட்டு, கொலை, கொள்ளை, பொய், சக மனிதர்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட தீய பண்புகளை கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் உள்ளனர். அத்தகையான மனிதர்கள் எங்கிருந்து தீய பண்புகளை கற்றனர்? கெடுவாய்ப்பாக, அவர்களும் நம்முடைய சமூகத்தில் இருந்தே தீய பண்புகளை கற்கின்றனர்.

அப்படியானால் நல்லதோ கெட்டதோ, அனைத்து பண்புகளையும் கற்கும் பள்ளியாக நம் சமூகமே உள்ளது. கற்றதை செயல்படுத்தும் இடமாகவும் நம் சமூகமே உள்ளது. அப்படியானால் இந்த சமூகத்தை நல்லதை மட்டும் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடமாக மாற்றிவிட்டால், தீய பண்புகளுக்கு இடமிருக்காது அல்லவா?

நல்லதைச் செய், தீயதை செய்யாதே என்ற பிரச்சாரத்தை அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் தீயதை செய்யாமல், நல்லதை மட்டும் செய்பவர்களை இவ்வுலகில் அரிதாக உள்ளது.

ஏன் பிரச்சாரம் வேலை செய்யவில்லை?

நல்லதைச் செய், தீயதை செய்யாதே என்பதை அனைவரும் கேட்டுக் கொண்டே இருந்தாலும், நல்லதையும் கெட்டதையும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் கற்கவில்லை. வேறு சொற்களில் சொன்னால், வெற்றுப் பிரச்ச்சாரத்தில் உலகை மாற்ற முடியவில்லை.  அதாவது நல்லதையும் கெட்டதையும் பிரச்சாரம் உருவாக்கவில்லை. மாறாக நாம் வாழும் உலகில் உள்ள சமூகப் பொருளாதார நிலைகள்தான் நல்லதையும் கெட்டதையும் உருவாக்குகின்றன.

எனவே அந்த வகையில் நமது உலகின் சமூகப் பொருளாதார நிலைகளை மாற்றிவிட்டால், நல்லதையும் கெட்டதையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் அல்லவா. நமது உலகின் சமூகப் பொருளாதார நிலைகளை மாற்றும் வழிமுறையையே சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றைழைக்கிறோம்.

அவரவர் திறனுக்கு ஏற்ப உழைப்பை செலுத்தும் பண்பையும், அவரவர் தேவைக்கேற்ப வளங்களை நுகரும் பண்பையும் ஒவ்வொருவருக்கும் உருவாக்கிவிடும் திறனுடைய சமூகத்தை கட்டி அமைப்பதே சோஷலிசத்தின் லட்சியம். சோசலிசத்தின் லட்சியம் பெரிதாக உள்ளதே. இது சாத்தியமா?

தனி ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் அன்போடும் பரிவோடும் அக்கறையோடும் நடந்து கொள்கிறார்கள் அல்லவா? நமது குடும்பம், நம்ம அம்மா, நம்ம அப்பா, நம்ம தாத்தா, நம்ம பாட்டி, நம்ம பூனை என நினைப்பதால், பரிவோடும் அன்போடும் நடந்து கொள்கிறோம். நம்ம என்பதை குடும்பத்தை தாண்டி நாம் வாழும் இந்த உலகமனைத்திற்கும் விரிவாக்கினால், பாரடா இப்புவி மக்களை என்ற விசாலப் பார்வை கொண்ட சுரண்டலற்ற சமூகம் சாத்தியமே.

விசாலப் பார்வை கொண்ட சுரண்டலற்ற சாத்தியம் சமூகம் என்றால், இதுவரை ஏன் அது சாத்தியமாகவில்லை?

இது நம்ம குடும்பம், நம்ம அம்மா, நம்ம அப்பா, நம்ம தாத்தா, நம்ம பாட்டி, நம்ம பூனை என்ற பொதுமைப் பண்பு நாம் எடுத்துக்கொண்ட உதாரண குடும்பத்திற்குள் உருவாகி இருந்ததால், சுரண்டலற்ற குடும்பம் சாத்தியமானது. ஆனால் இப்படியான பொதுமைப் பண்பு உலகத்தில் உருவாகாததால் சுரண்டலற்ற சமூகம் தற்போதைக்கு இல்லை.

படிக்க : ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!

நமது உதாரண குடும்பத்தில் உழைக்க தேவையான தகுதியைப் பெற்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தகுதிற்கேற்ப உழைத்தார்கள். தங்கள் தேவைக்கேற்ப வளங்களை பகிர்ந்து கொண்டார்கள். யாருக்கும் யாரிடம் இருந்து எதையும் பிடுங்க (சுரண்ட) வேண்டிய தேவையும் இல்லை. உழைப்பும் தேவையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நமது உதாரண  குடும்பத்தில் உறுப்பினர்கள் இடையே போட்டி இல்லை. எனவே சுரண்டல் (அதாவது ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது) இல்லை. வயது, பாலினம், உழைப்பு, கல்வி, அனுபவம் உள்ளிட்ட பல காரணிகளில் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும், அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற பொதுப் பண்பு உருவாகி இருந்தது. எனவே வேறுபாடின்றி அனைவரும் அவரவர் பங்கை குடும்பத்திற்கு செய்தனர். அவரவர் தேவைக்கு ஏற்ப வளங்கள் (உணவு, பணம்) பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஏதேனும் ஒருவர் தவறு செய்தால், அதை குடும்ப உறுப்பினர்கள் விவாதித்து தவறை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாறும் சூழல் காரணமாக சிலருக்கு தேவை (கல்லூரிப் படிப்பு செலவு, மருத்துவச் செலவு) அதிகமானால், அதற்கேற்ப வகையில் உழைப்பும் மாற்றி அமைக்கப்பட்டது. தேவைக்கு அதிகமாக நுகரும் பண்பு குடும்ப உறுப்பினர்களிடையே இல்லை.

இப்படியான சுரண்டலற்ற, தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்த, ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கும் பண்புகள் இல்லாத குடிமக்களை உருவாக்குவதே சோசலிசத்தின் லட்சியம். அந்த லட்சியம் வெறும் கனிவின் மூலமோ, பிரச்சாரத்தின் மூலமோ, கற்பனையின் மூலமோ, தெய்வ சக்தியின் மூலமோ வந்துவிடாது. மனிதர்களுடைய உணர்வுகளும் பண்புகளும் செயல்பாடுகளும் சமூகப் பொருளாதார சூழ்நிலைமைகளில் பின்னணியில்தான் உருவாகின்றன. சுரண்டலற்ற சமூகத்தைப் படைக்கத் தேவையான  சமூகப் பொருளாதார நிலையை உருவாக்குவதே சோசலிசம்.

சு.விஜயபாஸ்கர்

போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண் பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த் திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜுன் சிங் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.

டிசம்பர் 3, 1984: நகரெங்கும் பிணக் குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல் வரும் அதிகாரிகளும் திரும்பிவந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் 20000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டிசம்பர் 7, 1984: தொழிற்சாலையைப் பார்வையிட வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு, விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கப்படுகிறார். இந்திய அரசு வாக்களித்திருந்தபடி, ஆண்டர்சன் பிணையில் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ம.பி. முதலமைச்சர் அர்ஜுன்சிங்கின் சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைக்கப்படுகிறார்.

மார்ச் 29, 1985: பாதிக்கப்பட்டோர் சார்பில் அரசே நிவாரணம் கோர வகை செய்யும் “போபால் விஷவாயுக் கசிவு பேரழிவுச் சட்டம்-1985” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகும் உரிமை பறிபோதல்.

படிக்க : சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?

ஏப்ரல் 8, 1985: நிவாரணத் தொகை கேட்டு அமெரிக்காவில் கார்பைடு நிறுனத்தின் மீது நடந்து வந்த வழக்கு விசாரணையில் இந்திய அரசும் இணைந்து கொண்டது.

மே12, 1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அனைத்து போபால் வழக்குகளையும் இந்தியாவிற்கு மாற்றுகிறது. இதன் மூலம் அற்பமான நிவாரணத் தொகை தருவதை கார்பைடு உறுதி செய்கிறது.

டிசம்பர் 1, 1987: போபால் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் 12 குற்றவாளிகளின் மீது கொலைக் குற்ற மாகாத மரணம் விளைவிக்கும் பிரிவின் கீழ் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.

பிப்ரவரி 14-15, 1989: யூனியன் கார்பைடும், ராஜீவ் அரசும் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலோடு செய்த துரோக ஒப்பந்தம்; 47 கோடி ராலர் நிவாரணத் தொகைக்கு அரசு ஒப்புதல்.

மே 4, 1989: பாதிக்கப்பட்டோர் நடத்திய போராட்டங்களையடுத்து, நிவாரணத் தொகை ஒப்பந்தம் குறித்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது.

பிப்ரவரி 1, 1992: ஆண்டர்சன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுதல்.

ஆகஸ்டு 19, 1992: நிவாரணத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.200 இடைக்கால நிவாரணமாகக் கொடுக்கப்பட்டது.

பிப்ரவரி 14, 1994: போபால் வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்த போதிலும், யூனியன் கார்பைடின் பங்குகளை விற்க அனுமதி.

செப்டமர் 13, 1996: இந்தியக் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கை (Culpable homicide) குற்றமுறு கவனக்குறைவான (Criminal Negligence) வழக்காக மாற்ற் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதற்கு எதிராக சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை.

அக்டோபர் 16, 1997: தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுநிறுவனம் (NEERI) தனது ஆய்வறிக்கையில் நிலத்தடி நீர் மாசுபடவில்லை என்று சான்று அளித்தது.

நவம்பர் 1999: போபாலில் நீரும் நிலமும் 60 லட்சம் மடங்குக்கும் அதிகமாக நஞ்சாக்கப்பட்டுள்ளதை பசுமை அமைதி இயக்கத்தின் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

பிப்ரவரி 5, 2001: டௌ கெமிக்கல்ஸ், யூனியன் கார்பைடைக் கையகப்படுத்தியது. போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பேற்காது என அறிவிப்பு.

ஜனவரி 2002: நீர், நிலம் மற்றும் தாய்ப்பாலில் காரீயம், பாதரசம் போன்ற அபாயகரமான வேதிப் பொருட்கள் கலந்துள்ளதை “சிரிஸ்டி” உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வுகள் உறுதி செய்தன.

மே 24, 2002: ஆண்டர்சன் மீதான பிடிவாரண்டை மாற்றக் கோரி நீதிமன்றத்திடம் சி.பி.ஐ. கோரிக்கை. நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்.

ஆகஸ்டு 28, 2002: சி.பி.ஐ-இன் கோரிக்கை நிராகரிப்பு. படுகொலை நடந்த 18 வருடங்களுக்குப் பிறகு ஆண்டர்சனுக்குக் கைது வாரண்ட். ஆண்டர்சனைத் தேட முடியவில்லை என சி.பி.ஐ. சாதிப்பு.

நவம்பர் 2002: யூனியன் கார்பைடு நிறுவனம் 1989-இல் ஆய்வு செய்தபோதே நீர், நிலம் மோசமாக நஞ்சாவதைக் கண்டறிந்திருப்பது அமெரிக்காவில் ஒரு வழக்கு விசாரணையில் அம்பலமானது.

2003: ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் கோருவதென இந்தியா முடிவு.

மார்ச் 18, 2003: கார்பைடை அமெரிக்காவில் விசாரித்து தண்டனைக் கொடுக்கக் கோரும் வழக்கு மீண்டும் ஒரு முறை அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

ஜூன் 2004: வாரன் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா நிராகரிப்பு.

ஜூன் 30, 2004: பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் பொறுப்பை டௌ கெமிக்கல்ஸ் ஏற்றுக் கொள்ள அமெரிக்க நீதிமன்றம் கோரிக்கை. இந்திய அரசும் ஒப்புக் கொள்ளுதல்.

19 ஜூலை, 2004: 5,72,029 பேருக்கு நிவாரணம் தருவதற்கு உச்சநீதிமன்றம் வற்புறுத்தல். அதாவது, 20 வருடங்களுக்குப் பிறகு தலைக்கு ரூ.25,000.

25 அக்டோபர், 2004: நிவாரணத் தொகை வழங்கப்படாததை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்.

26அக்டோபர், 2004: ஏப்ரல் 1, 2005-க்குள் நிவாரணத் தொகை முழுவதையும் வழங்க உச்ச நீதிமன்றம் கெடு.

2005: மாசுப்பட்டுப் போன போபால் ஆலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை டௌ கெமிக்கல்ஸ் தனது பொறுப்பில் சுத்தப்படுத்த வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடருதல்.

படிக்க : போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

ஏப்ரல் 17, 2006: பாதிக்கப்பட்டவர்களின் குழு தில்லி நோக்கி பாதயாத்திரை. அவர்கள் டௌ கெமிக்கல்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியதை மன்மோகன் சிங் ஏற்க மறுப்பு.

2006 : டௌ கெமிக்கல்ஸை போபால் ஆலையைச் சுத்தப்படுத்தும் பொறுப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் அரசின் சதித் திட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.

ஜனவரி 10, 2007: டௌ கெமிக்கல்சின் கூட்டாளி டாட்ட அலுவலக வாயிலில் ரத்தன் டாடாவை எதிர்த்துப் போராட்டம். டாடா உப்பு முதலான நுகர் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரி இரண்டு நாட்கள் பேரணி.

மார்ச் 28, 2008: பாதிக்கப்பட்டவர்களின் குழு மீண்டும் தில்லிக்குப் பாத யாத்திரை.

2008: பா.ஜ.க, டௌ கெமிக்கல்ஸிடம் நிதி வாங்கியது அம்பலமானது.

ஜூன் 7, 2010: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 7 நிர்வாகிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு. உடனடியாக பிணையில் விடுவிப்பு.

(புதிய ஜனநாயகம் தொகுதி:25 இதழ்:9 ஜூலை 2010)

தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!

தாராவி மறுசீரமைப்பு திட்டம் என்ற பெயரில் துரத்தப்படவிருக்கும் தாராவி உழைக்கும் மக்கள்!
5,069 கோடிக்கு அதானி நிறுவனத்திற்கு டெண்டர் விட்டுள்ளது சிவசேனா-பாஜக அரசு!

சியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 6.5 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இப்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் வீட்டு வேலைகள் செய்து தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய மாநில அரசு தாராவியை மறு சீரமைப்பதற்க்கான திட்டம் ஒன்றை கடந்த 1999 ஆம் ஆண்டிலேயே முன்வைத்தது. ஆனால், பலமுறை முடிவு செய்தும் டெண்டர் விடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசு இத்திட்டத்தை அமல்படுத்த முன்முனைந்து பணியை தொடங்கியுள்ளது.

இந்த டெண்டரில் தென்கொரிய ஐக்கிய அமீரக நாட்டு நிறுவனங்கள் உட்பட 8 கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் இறுதி ஏலத்திற்கு அதானி குழுமத்தை சார்ந்ந அதானி பிராப்பர்ட்டீஸ், டி.எல்.எப் மற்றும் ஸ்ரிநமான் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. 259 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆரம்பக்கட்ட முதலீடாக அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாகத் தெரிவித்திருந்தது. இதையடுத்து இத்திட்டம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

படிக்க : நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 58 ஆயிரம் குடும்பங்கள், 12 ஆயிரம் கடைகள் – வணிக நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 405 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதானி நிறுவனம் இலவச வீடுகள் பெறத் தகுதியானவர்கள் தொடர்பாகப் புதிய கணக்கெடுப்பு நடத்தும். இலவச வீடு பெறத் தகுதியில்லாதவர்கள் நிலம், கட்டுமான செலவைக் கொடுத்து வீடு பெற்றுக்கொள்ள வேண்டும். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தது போக எஞ்சி இருக்கும் நிலத்தில் அதானி நிறுவனம் வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி விற்பனை செய்துகொள்ளும்.

அதானி நிறுவனம் இந்தத் திட்டத்திற்காக மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கும். அதில் மாநில அரசுக்கு 20 சதவிகிதப் பங்கும், அதானி நிறுவனத்துக்கு 80 சதவிகிதப் பங்கும் இருக்கும்.

மொத்தம் 58,000 குடும்பங்கள் என்பது அரசு கூறும் கணக்கு. ஆனால் அரசின் கணக்கில் அடங்காமல் அதற்கு சரி நிகரான அளவில் பல்லாயிரம் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அம்மக்களுக்கு அங்கு வீடுகள் ஒதுக்கப்பட மாட்டாது; தாராவிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் அல்லது மும்பை பெருநகருக்கு உட்பட்ட வேறு ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்காக ஏலம் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. ஏலம் நடைபெறுவதும் திட்டம் கைவிடப்படுவதும் வாடிக்கையான விசயமாக உள்ளது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் துபாய் நிறுவனம் ஒன்று ரூ.7500 கோடிக்கு ஏலத்தில் வெற்றி பெற்றது; அந்த ஏலம் அதானிக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒப்புதல் பெற தாமதமாகிறது என்பதைக் காரணம்காட்டி அத்திட்டம் கைவிடப்பட்டது.

படிக்க : மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

தற்போது நடைபெற்ற ஏலத்தில் அதானி வென்றிருப்பதும் 47.3 ஹெக்டேர் ரயில்வே நிலத்தை கொடுக்கப்பதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டிருப்பதும் தற்செயலான நிகழ்வு அல்ல.

மும்பை நகரத்தை உருவாக்கிய தாராவி உழைக்கும் மக்களை அந்த நகரத்தின் அழுக்காக நவீன தீண்டப்படாதவர்களாக பார்க்கும் மகாராஷ்டிர அரசு அவர்களை துரத்தியடிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறது. குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அரசே செய்து நிறைவேற்றாமல் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான திட்டமாக இதை மாற்றி உள்ளது.

ஆஷிக்

புதுக்கோட்டை: ஆபத்தான (சட்டவிரோத) கல்குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம்; திருமயம் தாலுகா காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில், குளம் – ஓடை மற்றும் குடியிருப்புகளை ஒட்டி, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36(1) விதிமுறைகளை மீறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சுப்பையா கல்குவாரிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் வருவாய் துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள்.

இதனால், இப்பகுதியில் தொன்மை சிறப்புமிக்க, பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் – பள்ளிவாசல் – தேவாலயம்  மற்றும் குடியிருப்பு வீடுகள் – கண்மாய் ஓடை ஆகியவைகளை தகர்க்கும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெடிவைத்து செயல்பட்டு வருகிறது மெய்யபுரம் சுப்பையா கல்குவாரி.

சுப்பையா கல்குவாரி சட்ட விரோதமாக நானல் வெடிகளை (ANEL ED), மட்புல் முறையில் வெடிக்காமல், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தக் கூடாத வெடிகளை வைத்து வெடித்தனர்.

இவ்வாறு வெடி வைத்ததன் காரணமாக ஆறுமாதங்களுக்கு முன்பு இந்த கல்குவாரியில் வெடிவைத்து பாறைகளைத் தகர்த்தபோது அருகிலுள்ள பல வீடுகள், பள்ளிவாசல், கோயில், தேவலாயம், பள்ளிக்கூடம் உட்பட பல கட்டிடங்கள் அதிர்ந்து சுவர்கள் விரிசலாகின.

படிக்க : அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

அதன் பின்னர் பாதிப்பினால் இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பாறைகளுக்குப் பதிலாக அதனை ஒட்டியுள்ள இடத்தில் கிராவல் மண் அளவுக்கு அதிகமாகத் தோண்டி எடுத்து விற்பனை செய்தனர்.

பிறகு தற்போது மீண்டும் பாறைகளைத் தோண்டி எடுக்க எண்ணி, கடந்த வாரம் விடியற்காலையில் மிகப்பெரிய வெடிகளை வெடிக்கச் செய்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடும்படிச் செயதனர்.

அதன்பின்னர் இதனைக் கண்டித்து பெண்கள் முகாமையாக முன்னெடுத்து தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பொதுமக்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனூடாக அந்த கல் குவாரிக்கு லாரிகள் சென்றுவர ஏதுவாக கண்மாய்களுக்கு வரக்கூடிய ஒரே நீர்வரத்தான மழைநீர் வாரியின் (ஓடை) நடுவே சாலைபோல் அமைத்துக் கொடுத்து கண்மாய்களையும் விவசாய நிலங்களையும் வறட்சியுறச் செய்தனர். அதனையும் தட்டிக்கேட்ட மக்கள் மீது அதிகாரிகள் வழக்குப் போட்டதோடு அந்த வாரியை (ஓடை) திறக்க அனுமதி மறுத்தனர் அதிகாரிகள்!

தற்போது கல்குவாரி செயல்பட்டுள்ள வெறும் ஐந்தடி ஆழத்திற்கே இப்படி எண்ணற்ற பாதிப்புகள் எனில், இன்னும் அவர்கள் ஆழமாகத் தோண்டும்பொழுது பல கட்டிடங்கள் இடிந்துவிழும் நிலை உள்ளது.

மேலும் இங்கு 500 ஆண்டுகால தமிழ் கலாச்சாரபடி கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற பழமையான பள்ளிவாசலும் இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குவாரியில் வைக்கப்பட்ட வெடியினால் இங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இங்கே சாலையோரம் உள்ள பேக்கரியில் கட்டிடம் அதிர்ந்து கண்ணாடிகள் உடைந்த காட்சியினை இன்றும் நேரில் காணலாம்.

இப்போது வெகு அருகில் 400 மீட்டர் தொலைவில் கல்குவாரியை அமைத்து கனிமங்களை கொள்ளையடித்தால் இந்தக் கிராமங்களில் மக்கள் வாழமுடியாத அபாய நிலை உள்ளது.

கல்குவாரி முதலாளிகள் நீதிமன்ற ஆணை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் அதிகாரிகள், அதனை எதிர்த்து எவ்வகையிலும் மேல்முறையீடு செய்யாமலும், மக்களின் எதிர்ப்பு கடுமையாக ஏற்பட்ட பின்பும் கூட சட்டவிரோதமாக அனுமதி பெற்று சட்ட விரோதமாக செயல்படும் குவாரியைத் தடுக்காமலும், கல்குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக விவசாயத்தினை அழிக்கக் காரணமாகவும் இருந்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் கல்குவாரி அமைத்து அங்கே உள்ள இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடித்தான் திடீர் அரசியல் பணக்காரர் ஆனார். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கில் கல்குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எப்படி பி.ஆர்.பி.பழனிச்சாமி கிரானைட்களை வெட்டி எடுக்க ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் வளைத்தாரோ அதேபோலதான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் கல்குவாரி அதிபர்களால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் வளைக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடலிலும் சட்ட விரோதமான கல்குவாரிகளின் செயல்பாடு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டுமொத்த அரசு அதிகார வர்க்கமும் லஞ்ச லாவண்யங்களில் மூழ்கி திளைக்கின்றனர். அதனால் எந்த மக்கள் போராட்டமும் இல்லாமல் கல்குவாரிகளை மூட முடியாது என்ற எதார்த்தம் நம் கண் முன்னே நிற்கிறது. இதை புரிந்து கொண்ட காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரம் பகுதி மக்கள்  தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதில் கீழ்காணும் கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

1.உடனடியாக காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில் மெய்யபுரம் ஊரில் இயங்கும் இந்த கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

2.குவாரியை மூடி, இதன் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3.இந்தப் பகுதியில் இயங்கும் கல்குவாரிகள் அனைத்தும், திருநெல்வேலி மாவட்ட கல்குவாரிகள் – திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மொரட்டு பாளையம் கல்குவாரிகள் போல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

4.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கல்குவாரியினால் உருவான பல நூறு அடிகள் ஆழமான ஆயிரக்கணக்கான பெருங்குழிகள் ஆபத்துடன் வாய்பிளந்து காட்சியளிக்கக் காரணமான சட்டவிரோத கல் குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க : விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் சூறையாடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கல்குவாரிகளுக்கு எதிரானதாக மாற வேண்டும்.

பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளும் கல்குவாரிக்கு எதிரான காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் போராட்டங்களில் இணைந்துள்ளனர். அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் இதனுடன் இணையும்போதுதான் நமக்கான இயற்கை வளங்களையும் காடுகளையும் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்திட முடியும்.

வினவு செய்தியாளர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்

01.12.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு;
கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால்
அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா?

பத்திரிகை செய்தி

தூத்துக்குடி மண்ணையும், காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக லட்ச மக்கள் கூடி, ஸ்டெர்லைட்டை மூடினர். கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அன்றைய தலைமைச் செயலாளர் மற்றும் அன்றைய டிஜிபி ஆகியோர் கூட்டு சதி செய்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகளைப்போல சுட்டுக் கொன்றனர்.

அடுத்து சில நாட்கள் தூத்துக்குடியில் இணையத்தை நிறுத்தி ஏறத்தாழ காஷ்மீரைப் போல தூத்துக்குடியை மாற்றி நூற்றுக்கணக்கான பேரை கைது செய்து, அவர்களை அடைத்து வைத்து சித்தரவதை செய்தது தமிழ்நாடு போலீஸ்.

கார்ப்பரேட் வேதாந்தா கம்பெனிக்கு எதிராகப் போராடிய ஸ்னோலினின் வாயில் துப்பாக்கியால் சுட்ட போதும் மே 23 ஆம் தேதி தூத்துக்குடியில் போலீசு அடக்குமுறையை கேள்வி கேட்ட காளியப்பனை மிக அருகில் இருந்து சுட்டுக்கொன்ற போதும் பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டமே ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடியது.

படிக்க : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

ஸ்டெர்லைட் கம்பெனி மூடப்பட்ட பின்னரும் பல்வேறு வகையில் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான சதி வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு என்ற பெயரில் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் அந்த ஆலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் சமூக விரோதிகளோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு அரசும் போலீசும் எவ்வித தடையும் விதிப்பதில்லை. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமூக விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு கூட இன்றைக்கு வரை தூத்துக்குடி போலீசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு – முழக்கமிடும் தூத்துக்குடி மக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் நெருங்கும் வேளையில் அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியானது. மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, தூத்துக்குடி மக்களோ துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.

ஆனால் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதலாக சிறிது தொகை கொடுத்து விட்டு மொத்த பிரச்சினையையும் ஊற்றி மூடி விட்டது தமிழ்நாடு அரசு.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக சதி வேலை செய்த எடப்பாடி பழனிச்சாமி, கிரிஜா வைத்தியநாதன் அன்றைய டிஜிபி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து அவர்கள் உடனே சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு 17.10.2022 அன்று வெளியிட்டுள்ள அரசாணை மூலம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த மண்ணுக்காக போராடிய தூத்துக்குடி தியாகிகளை கொன்றொழித்த சதிகாரர்கள் மீது எவ்விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதைத்தான் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் வெளியிட்டதற்கு கூட நேர்மையாக இதுவரை நடந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை கூட இதுவரை எடுக்கப்படவில்லை.

போலீஸ் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் சில பேர் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய்யே.

திருச்செந்தூர் அருகில் உடன்குடி என்ற பகுதியில் காட்டு மானை பிடிக்கும் பொழுது தவறுதலாக அது இறந்து போய்விட, சம்பந்தப்பட்ட வன அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு மானுக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த நாட்டின் மக்களுக்கு கிடையாது என்பதைத்தான் இந்த தமிழக அரசு நமக்கு  உணர்த்துகிறது. ஏனென்றால் தூத்துக்குடியின் மக்கள் கார்ப்பரேட்டுக்கு எதிராக அல்லவா போராடினார்கள்.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள். தூத்துக்குடி தியாகிகளின் தியாகத்தை வரித்துக் கொள்ள வேண்டும்.

வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

ஆகவே, தூத்துக்குடியையும் தூத்துக்குடி மக்கள் வாழ்வையும் சீரழித்த ஸ்டெர்லைட் கார்ப்பரேட் வேதாந்தா கம்பெனிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகள் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கொலைகாரர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதே உடனடித் தேவை.

ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக மூட சட்டம் இயற்றுவதும் இந்த மண்ணுக்காகப் போராடிய தூத்துக்குடி தியாகிகளுக்கு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைப்பதுமே நியாயமானதாக இருக்க முடியும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி,  பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மசோதா பற்றி வாயை திறக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட தமிழகத்தில் எதற்கும் உதவாத ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

1

குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அங்கு பிரதானமான கட்சிகளாக இருக்கின்றன.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள விவரங்களை ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பகுப்பாய்வு செய்து நவம்பர் 24 மற்றும் நவம்பர் 28 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது 238-ஆக இருந்தது; அது தற்போது 330 ஆக அதிகரித்துள்ளது.


படிக்க: இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்


ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 181 பேரில் 61 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 179 வேட்பாளர்களில் 60 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்; ஆளும் பாஜக கட்சியின் 182 வேட்பாளர்களில் 32 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

ஆத்மி கட்சியை சேர்ந்த 40 வேட்பாளர்களின் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸில் 28 பேர் மீதும், பாஜகவில் 25 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகள் ஆகியவை தீவிர குற்ற வழக்குகளில் அடங்கும்.

பாஞ்ச்மஹல் மாவட்டத்தின் ஷெஹ்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஜெத்தா பர்வாத் பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டில் குஜராத் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சட்டசபைக்குள் அமர்ந்து தனது கைபேசியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தவர் தான் அவர்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்க்ராய் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் கிரண் படேல் மீது கொலை வழக்கும், பதான் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரித் படேல் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-இல் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் என்றும், குற்றப் பின்னணி இல்லாதவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த உச்சநீதிமன்ற உத்தரவால் எந்த பயனும் ஏற்படவில்லை. 20.36 சதவிகித வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.


படிக்க: அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !


1621 வேட்பாளர்களில் 456 பேர், அதாவது 28 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்கள். 2017 தேர்தலின் போது இவர்களின் எண்ணிக்கை 397 ஆக இருந்தது.

2022 தேர்தலில், பாஜக வேட்பாளர்கள் 154 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சியில் 142 பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 62 பேரும் கோடிஸ்வரர்கள்.

தேர்தல் களம் என்பது இயல்பாகவே கிரிமினல்களுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற ஓர் பாசிச நடவடிக்கையை மேற்கொண்டு போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையை காட்டிய குஜராத் மாடலில் தற்போது குற்றப்பின்னணி கொண்டவர்கள் தான் வேட்பாளர்கள். வாக்களித்தாலும் பிரச்சினை வாக்களிக்காவிட்டாலும் பிரச்சினை; இதுதான் குஜராத் மக்களின் தற்போதைய நிலை!

பொம்மி

நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

வணிகப்பயன்பாட்டுக்கு நிலத்தை கையகப்படுத்தினால் நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் லாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

சிப்காட் போன்ற வணிகப் பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது நில உரிமையாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்ட பங்குபெறும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இழப்பீடை முழுவதும் தந்துவிட்டால் பணத்தை கையாள்வது தெரியாமல் வீணாக மக்கள் செலவு செய்து விடுவார்கள் என்றும் அக்கறைப்பட்டிருக்கிறது ஆணையம்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்:

நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டம் 2013 என்ன சொல்கிறது என்றால், அரசானது மக்களின் நிலத்தை கையகப்படுத்தும்போது கருத்து கேட்பு நடத்த வேண்டும், சமூக பாதுகாப்பை கணக்கிட வேண்டும், போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் அச்சட்டத்தின் 105-வது பிரிவானது 13 விசயங்களை பட்டியலிட்டு அவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்தினால் கருத்து கேட்பு கூட்டத்தையோ சமூக பாதிப்பு கணக்கிட்டையோ செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறது.

படிக்க : மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!

இந்த பைத்தியக்கார சட்டத்தை 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்து திருத்தம் செய்தது. இந்தச் சட்டத்தின் படி பெரும் முதலாளிகள் கொழுத்து திரிய, சாதாரண உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த மக்களே சாட்சி:

தற்போது ஒன்றிய அரசின் என்.எல்.சி நிர்வாகம் சுரங்கம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றிற்காக நிலங்களை கையகப்படுத்துவது என்று திட்டமிட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். நிர்வாகம் தரும் இழப்பீடுகளை மற்றும் உத்தரவாதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கின்றனர். மக்களின் எதிர்ப்புக்கு காரணம் கடந்த காலங்களில் மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்ட என்.எல்.சி நிர்வாகம் வாக்களித்தபடி இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்காமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது என்பதுதான்.

இதேபோல் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு திமுக அரசும், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைத்திட நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.

மக்களின் இதுபோன்ற எதிர்ப்புகளை காயடித்து போராட்டத்தை திசை திருப்பவே லாபத்தில் பங்கு என்கிற புதிய சரக்கை ஆளும் வர்க்கம் இப்போது இறக்கியிருக்கிறது.

கருத்து கேட்பு, உரிய இழப்பீடு, மறுவாழ்வு, வேலைக்கு உத்தரவாதம் என்று தான் சொல்லிய எந்த வாக்குறுதியையும் தானே நிறைவேற்றாத இந்த அரசுதான் தற்போது நிறுவனங்களுக்கு நிலத்தை பறிகொடுக்கும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு  நிறுவனத்திடம் இருந்து லாபத்தில் பங்கு வாங்கி தருவதாக கதை அளக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா வளர்கிறது என்ற கோஷம் நம் செவியை கிழித்து கொண்டிருந்த போதுதான் நோக்கியா நிறுவனம் ஆலையை மூடிவிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை தெருவில் நிறுத்தி விட்டு, சத்தமின்றி கடையை காலி செய்து ஓடியது.

படிக்க : வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!

கார்ப்பரேட் முதலாளிகள் கடல் கடந்து முதலீடு செய்வது இயற்கை வளங்களையும், உழைப்பையும் சுரண்டத்தானே அன்றி உழைக்கும் மக்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்க அல்ல! கேட்பவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிற கதை தான் இது! லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.

சிப்காட் போன்ற வணிக நிறுவனங்களுக்காக நிலத்தை பறிக்கும்போது இழப்பீடாக அரசு தருகின்ற பணம் மக்களின் பணம். அதையும் அந்த நிறுவனத்திடமே கொடுத்துவிட்டு அவர்கள் லாபமீட்டி அதில் ஒரு பங்கு மக்களுக்கு கொடுப்பார்கள் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று.

மக்களை தெரிந்தே முட்டாளாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை கூறு போட்டுக் கொடுப்பது என்பது எப்போதும் அரசுக்கு கைவந்த கலைதான். ஆனால் அதை முறியடிக்க  மக்களும் ஒரு கலையை கற்றுணர்ந்து வைத்திருக்கிறார்கள். அதன் பெயர் போராட்டம்!

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ

பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியாவை, குற்றவாளிகள் இருக்கும் போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் பெண் காவல் ஆய்வாளர் அனுபமா குமார் விட்டுச் செல்வது, பின்னர் தேடாமலே இருப்பது, அவர் பேசிய வசனத்திற்கும் காட்சிக்கும் துளியும் பொருந்தவில்லை. பெண் காவலர்கள் நல்லவர்கள் என்பது போலும், பெண் நீதிபதிகள் நல்லவர்கள் என்பது போலும் காட்சிகள் படத்தில் வருகிறது. இந்த அரசு கட்டமைப்பில் ஆண், பெண் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்க கூடிய பெண்கள் அந்த சட்ட வரம்பிற்குள் நின்று தான் வேலை செய்ய முடியும். ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.

தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவம், சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. போலீசு நிலையத்திலும், அரசு அதிகாரிகளாலும் நடந்த குற்றங்களுக்கு சாட்சி. மக்கள் போராட்டங்களே அரிதிலும் அரிதான வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையை வாங்கி தந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

29.11.2022

ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆண்டுக்கு பல கோடி தண்டச்செலவு!
இனியும் வேண்டாத தசைப் பிண்டத்தை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

பத்திரிகை செய்தி

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி,  பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மசோதா பற்றி வாயை திறக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

இதனிடையே, தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் பகுதியில் வசித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் நேற்று (நவம்பர் 28) காலாவதியிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நன்றாக உண்டு, உறங்கி சொகுசாக வாழ்க்கையை கழிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் எதிரான எல்லா விதமான உளவாளி மற்றும் மக்கள் விரோத வேலைகளை திறம்பட செய்து வருகின்ற ஆர்.என்.ரவி, வேண்டுமென்றே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கக்கூடிய, எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் கும்பலாக இருக்கக்கூடிய மோடி, நிர்மலா சீதாராமனின் நோக்கத்துக்கு தமிழ்நாடு அரசு இந்த தடைச் சட்டம் தடையாக இருக்கும் என்பதாலேயே ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களால் பலமுறை வலியுறுத்தப்பட்ட, தமிழ்நாட்டு அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு இந்த ஆளுநர் ஒப்புதலளிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதற்கு என்ற கேள்வியை நாம் உரக்க எழுப்ப வேண்டும்?

இதுவரை ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசின் 36 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எந்த வேலையை செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டாரோ, அந்தப் பணியை செய்ய மறுக்கும் பொழுது அவரை அப்பணியில் இருந்து வெளியேற்றுவதே நலம். அதன்படி மக்கள் நலன் வேலையை செய்யாமல் மக்கள் விரோதி வேலைகளை செய்யும் இந்த ஆளுநர் வெளியேற்றப்படுவதே சரியானதாக இருக்கும்.

சென்னையில் உள்ள ராஜ்பவன் 156.14 ஏக்கர் பரப்பிலும், உதகை ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பிலும் அமைந்துள்ளன. இந்தக் கட்டடங்களைப் பராமரிக்க ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆளுநருக்கான உணவு, சுற்றுப்பயணம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இதரச் செலவுகள் இதில் செய்துகொள்ள வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம்.

தமிழக ஆளுநர் மாளிகைக்கான ஆண்டுச்செலவு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய். இப்படி எல்லாம் சல்லாபமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆளுநர் தன் விருப்பம்போல ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவக் கொள்கைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

படிக்க : ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுவை பெற மாட்டார், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றால், இப்படிப்பட்ட ஆளுநருக்கு இனியும் தமிழ்நாடு அரசு எவ்வித நிதியும் வழங்கக்கூடாது.

ஆளுநர் மாளிகை தொடர்பான செலவுகள் உள்ளிட்ட எதற்கும் தமிழ்நாடு அரசு நிதி அளிக்கக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைப் போல மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் இந்த ஆளுநருடைய அடிப்படை வசதிகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வேலை செய்யக்கூடிய அனைத்து பணியாளர்களையும் தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.

ஆளுநரை வெளியேற்றுவற்காக அனைத்து கட்சிகளுடனும் மக்களோடும் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம் 
தமிழ்நாடு – புதுவை
9962366321.

திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் !

ம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் வேண்டி 20 ஆண்டுகாலமாக மனு கொடுத்துவரும் மக்கள்; கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம், கரையப்பாளையம், ஆலங்காட்டுப்பாளையம் மற்றும் மாரங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசிப்பது, மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுவது, எப்போது வேண்டுமானாலும் வீடு இடிந்து விழும் நிலை, பெண்களுக்கான கழிப்பிட வசதி இல்லாதது என மக்களின் அடிப்படை தேவைகளே கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாரங்காடு கிராமத்தில் 18 வீடுகள், 28 குடும்பங்கள், மொத்தமாக 135 பேரும், சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் 82 வீடுகள், 130 குடும்பங்கள், 400க்கும் மேற்பட்ட மக்களும், கரையப்பாளையம் கிராமத்தில் 12 வீடுகள், 30 குடும்பங்கள், 150 பேரும் வசிக்கின்றனர். குறிப்பாக, சி. முருகன் என்பவரின் குடும்பத்தில் மட்டும் ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் என 16 பேர் வசிக்கும் அவலநிலை உள்ளது.

படிக்க : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்குக்கூட சிரமப்பட்டு தான் வாழ்ந்து வருகின்றனர். சுடுகாட்டை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அனைத்து கிராமங்களுக்கும் முன்னும் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. ஆனால் வீடுகள் இடிந்து விழும் நிலையிலும், ஒரு வீட்டில் 10க்கும் மேற்பட்ட நபர்களும், ஒரு வீட்டில் 3, 4 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரிகள், தாசில்தார், கலெக்டர் ஆகியோர்களிடம் 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும், பல்வேறு மறியல் போராட்டக்கள் செய்தும் வந்துள்ளனர். ஆனால் இன்றுவரை எந்தவொரு அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்கப்படவில்லை.

இங்கு சாதிய பாகுபாடு நிலவுவதால் ஆதிக்க சாதியினர் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து பட்டியலின மக்களுக்கு சேர வேண்டிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, அரசு சலுகைகளை கிடைக்காமல் இழுத்தடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பு செய்து ஆதிக்க சாதியினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்

பட்டியலின மக்களுக்கான உரிமைகளைக் கேட்க குரல் கொடுப்பவர்களை கைது செய்வது, வீடுகளில் புகுந்து மிரட்டுவது என போலிசு அதிகாரிகள் அடாவடிதனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

***

இலவச வீட்டுமனை பட்டா வேண்டி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். கலெக்டரிடம் மனு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் 15.11.2022 அன்று ஊர்மக்கள் ஒன்றுகூடி புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்தும், அம்பேத்கர் நற்பணி மன்றம் கூலி தொழிலாளர் சங்கம் என்ற பதாகைகளை வைத்தும் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதே கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களின் அடிபடை வசதிகளுக்காக தொடர்ந்து மக்களோடு போராடி வந்திருக்கின்றனர்.

அப்பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருந்த கலெக்டரை சந்தித்து புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, கலெக்டர் “மக்கள் அதிகாரம் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்” என்று கூறினார். கலெக்டரின் இந்த அவதூறுக்கு மக்கள் ஒன்றுக்கூடி “அவர் எங்களுக்காக தான் நிற்கின்றார், நீங்கள் தான் எங்களை கண்டுகொள்வதில்லை, எத்தனை முறை தான் நாங்கள் மனு கொடுப்பது” என்று வாதிட்டனர். மக்களின் வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல் “உங்களிடமெல்லாம் பேச முடியாது” என்று அதிகார திமிரோடு நடந்து கொண்டுள்ளார் கலெக்டர்.

கலெக்டர் வந்து நிலத்தை ஆய்வு செய்வார் என்று கூறிச்சென்ற அரசு அதிகாரிகள், அடுத்த நாள் போலிசுடன் வந்தனர். “இது குட்டைக்கான புறம்போக்கு நிலம்” என்றும், “57 பெண்கள் மீது வழக்கு போட்டுள்ளோம், அவர்களை கைது செய்கிறோம்” என்று போலிசு அதிகாரிகள் மிரட்டினர். பின்னர், தோழர் கார்த்திகேயனை கைது செய்து வண்டியில் ஏற்றியபோது மக்கள் கோசமிட்டனர், அங்கிருந்த 60 நபர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும், வாடகைக்கு எடுத்துவந்த 40 சேர்களையும் கிராம நிர்வாக அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். வாடகை சேர்களை பெற வேண்டி செல்லும் போதெல்லாம் கிராம நிர்வாக அதிகாரி 5 நாட்களாக அலைக்கழித்து வந்துள்ளனர். பின்பு சேர்களை கொடுத்துள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுப்பது மட்டுமல்லாமல் மக்களிடம் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் லஞ்சம் பெற்று வரும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

படிக்க : கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

மக்களின்  அடிப்படை கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசு அதிகாரிகளும், தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக காலில் விழும் அரசியல்வாதிகளும், சாதிய கொடுமைகளை அரங்கேற்றும் ஆதிக்க சாதியினரும் என்றும் மாறப்போவதில்லை. உழைக்கும் மக்களின் போர்க்குணமான தொடர் போராட்டங்களே அவர்களை பணியவைக்கின்றன.

இலவச வீட்டுமனை பட்டா வேண்டிய 20 ஆண்டுகால மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடு!

ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டை மீட்டுக்கொடு!

பெண்களுக்கான கழிப்பிட வசதியை செய்துகொடு!

போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மக்கள் அதிகாரம் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம், மக்கள் பாதுகாப்பு அமைப்பு, திராவிடர் தமிழர் கட்சி, தமிழ் சிறுத்தைகள் கட்சி, சமூக விடுதலை கட்சி ஆகிய அமைப்புகள் சார்பாக 28.11.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

RSS Terrorism emerging as an International threat!

Riots that took place for weeks in Leicester of England, where Indians live in huge numbers, have propagated shock waves among the locals and the community leaders. The hindutva mob started the riots after a cricket match between India and Pakistan that took place at the end of August. The people were feared to come out of their houses. Though this part of England is home to people belonging to different religions and races, it has not seen any violence or hostility for the past 50 years.

On last August 28, India played against Pakistan in an Asia Cup cricket match in Dubai. India defeated Pakistan in that match. In the aftermath, a hindutva mob that rallied in the streets of Leicester chanted “Pakistan Murdabad” (death to Pakistan), a slogan chanted during 1947 partition of India and Pakistan. Soon the rally turned into a violent clash.

On September 17, almost 3 weeks after this incident, riots broke out again in Leicester’s Green Lane Road area, where there are a number of Muslim-owned businesses and a Hindu temple. 200 hindutva terrorists with masks rallied from the temple with weapons including cricket bats and shouted the slogan “Jai Shri Ram”. The hindutva mob threw glass bottles to instigate riots, taunted the Muslim community when they came past the mosques and physically beat up the people randomly. As the angered Muslims retaliated, it turned into a bigger riot.

The people of Leicester, who haven’t seen riots like this, were horrified. Leaders of Hindu and Muslim communities of Leicester representing the Iskcon Hindu temple and Jame Masjid read out a joint statement to declare peace. The statement said, “We are from one family. We settled here in this city together, we fought the racists together, we built it up together. We, the family of Leicester, stand in front of you not only as Hindus and Muslims but as brothers and sisters. There is no place for any foreign extremist ideology that causes division.”

Moreover, the statement said “We together call upon the immediate cessation of provocation and violence, both in thought and behaviour. We together, call upon the inciters of hatred to leave our city alone”.

The police in its statement on September 17 riots said that it was an ‘unplanned protest’. Likewise, the majority of the media also depicted that this incident happened only because of a cricket match.

But, videos linked to the riots and the recent attacks on the Muslims in England reveals us that this riot was a pre-planned one.

When we look into the crowd that got out of the temple during the day of the riot, it can be blatantly seen that the crowd was not an accidently gathered crowd. Everything, from their attires to their slogans, looked perfect and organized.

Leicester’s Muslim and Hindu leaders issuing joint statement against communal hatred

The Guardian, in its report, said that eight out of the 18 people arrested on the aftermath of the riots did not belong to Leicester. Of these, five came from Birmingham, while one came from Solihull, one from Luton and one gave an address in Hounslow. This exposes us that the hindutva terrorists were made to infiltrate into Leicester to instigate the riot.

A professor belonging to the London School of Economics said about these riots that, “The incidents that happened in Leicester are not separate or spontaneous incidents or a clash between the locals of the society. These are pre-planned attacks on the Muslims orchestrated by groups of Hindu men with a particular motive”.

He further said, “Rallying on the streets with flags and sticks is an importation from the Hindu supremacist government and is an extract from the hindutva book of drama”

Professor Neil Chakraborti of the Leicester University also opined almost the same. He said that “There is no doubt in my mind that the religious tensions in India, and the actions of a hardline, violent, nationalist government there, have had a direct influence on what we have seen”. From this, we can clearly understand that the riot was not a spontaneous one which got started because of a cricket match.

The attacks against Muslims have been increasing in Leicester in recent times. A new trend that never existed before has been created in Leicester. August 15, the so called ‘Independence Day’, was celebrated by shouting outside the mosque. A video that went viral recently showed that torn pages of Quran was lying on the streets near Melton road, which is populated with Hindus. And Muslims were picking it up.

Moreover, similar to what’s happening in India, Muslims in Leicester are being attacked after enquiring whether they are Muslims or not. A Muslim youth was attacked last May in this fashion, and in September, a Sikh youth doubted to be a Muslim was attacked by the hindutva mob. But Leicester police have not taken any proper action against these incidents, according to a media.

Almost 40% of Leicester’s residents are of South Asian origin. Only a few parts of England including Leicester are populated with Hindus, Muslims and Sikhs. Though people belonging to different religions live, the city remained as a successful model of integration.

The hindutva mob has instigated riots in such a city. They selected Leicester because of its pluralism. In India, RSS instigate riots by targeting the places which are populated with both Muslims and Hindus. They do so, because those places will be the apt choice for them to create division and clashes.

This is how Leicester has been targeted. Raising “Jai Shri Ram” slogan in the streets of Muslim-owned businesses and attacking them and then trying to turn it into a riot; asking “Are you a Muslim?” and then attacking – are all tactics of the Sangh parivar that they follow in India. The RSS is now implementing it in England.

Almost 50 persons were arrested in links with this riot. Moreover, the report released by the Leicester police said, “Serious disorder on Saturday when a large crowd formed after groups of young men began an unplanned protest. Officers attempted to engage with the group and remain with them whilst additional officers were called in. They sought to keep actions lawful but, regrettably, the situation led to disorder.”

But, many media exposed that the police not any action to control the riot. Videos that got released on the day of the riot revealed that the hindutva goons roaming freely on the streets with weapons and that the police just stood on the sidelines and watched.

This pro-hindutva trend of the Leicester police is not only limited to them. The British government itself is not paying any heed to the growth of hindutva and in contrast, it can be seen that the government is encouraging the growth of hindutva.

Hindu Swayamsevak Sangh (HSS), an affiliate of RSS, was started in England in 1966. Though it was active from its establishment, its activity has peaked after Modi’s 2014 election victory in India. Modi, who was denied entry into England after the 2002 Gujarat riots, was welcomed after assuming power in 2014. After that, HSS directly and indirectly partnered with the Conservative Party, which is the ruling party. Because of this, the hindutva mob had gained a free hand there in England. Hence, the communal riots that are taking place in England should be viewed as a part of the terrorist activities carried out by the HSS with the aid of the government.

The British government is not trying to stop these attacks on the Muslims. The reason for this is that both the Conservative Party and the HSS converge at the point called ‘Islamophobia’. Moreover, the HSS needs the Conservative Party for its unhindered growth and the Conservative Party, in turn, needs the HSS for harvesting Hindu votes. They arrived at a compromise because of these mutual benefits.

For example, during the 2019 general elections, Kuldeep Singh Shekhawat, the president of Overseas Friends of BJP UK, campaigned for the Conservative Party through social media individually.

At the same time, members of the Conservative Party openly projected themselves as HSS sympathizers. In 2014, Priti Patel, former Home Secretary, congratulated the HSS for the event “RSS: A Vision in Action – A New Dawn” by writing a letter. Moreover, she said that the HSS should be proud about what they did for the Hindu society in Britain.

RSS’s Hindutva terrorism had spread not only to England, but also to other countries such as the United States and Australia. The RSS is joining hands with the regressive neo-Nazi groups and expanding their base for fascism.

The riots that took place in England and the Independence Day celebrations with bulldozer in the US show us only the presence and growth of the RSS and not its full strength. The truth is that the strength of the RSS is colossal. Now, the RSS is an armed Hindu-fanatic fascist organization with an international base.

The RSS, with its Hindutva terrorism base and Hindu identity, is now engaged in creating split among the working people of the West. Therefore, the obligation of defeating the RSS lies not only in the hands of the Indian proletariat alone. It lies in the hands of the world proletariat.

Thulipa

நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ

தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும். அப்படி உருவாக்கியதால்தான், இன்று வரை, எந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞராலும் தத்துவவாதியாலும் மார்க்சிய தத்துவத்தை தொட்டு கூட பார்க்க முடியவில்லை.

மார்க்சுடன் இணைந்து மார்க்சியத்தை நிறுவியதிலும், இயற்கையை இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்ததிலும், மார்க்சுக்கு பின்னர் தனது இறுதி காலம் வரை மார்க்சியத்தை செழுமைப்படுத்தியதிலும் எங்கெல்சின் பங்கு அளவிடற்கரியது. மார்க்சின் பங்களிப்பு என்று கூறும்போதே அதில் எங்கெல்சின் பங்களிப்பும் உடன் கலந்திருக்கிறது. அந்த இரட்டையர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு அளித்த கொடை தான் மார்க்சியம்!

நவம்பர் 28, 2022 பிரெடெரிக் எங்கெல்ஸின் 203-வது பிறந்த நாளில் அவரது நினைவை நெஞ்சிலேந்துவோம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி

சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை ஒன்றில் மேலாளராக இருக்கும் கதாநாயகி மதி. தன்னுடன்  வேலைப் பார்க்கும் பெண் ஒருவரின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கே மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். ஏற்கெனவே மதியைப் பழிவாங்கக் காத்திருக்கும் சில ஆண்கள்தான் குற்றவாளிகள் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறது போலீசுத்துறை. ஆனால், அந்த போலீசுதுதுறையை சேர்ந்த மூன்று பேரால்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதே படத்தின் கதை.

பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதும், கொடூரமான தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதும் தற்போது அதிகரித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் டெல்லியில் “living together” உறவு முறையில் வாழ்ந்த ஷ்ரதா என்ற 27 வயது பெண்ணை, அவனுடைய காதலன் கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஆணவ கொலைகள், காதலிக்க மறுத்ததால் கொலை, குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் இலக்காகியிருக்கும் இந்த சம கால சூழலில், பெண்ணை தன்னுடைய உடைமையாக பார்க்கும் கேடுக்கெட்ட கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இத்தருணத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

படிக்க : திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் பெண்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள், உளச்சிக்கல்கள் போன்ற விசயங்களை இந்த படம் பேசுகிறது. மேலும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் இந்த சமூக உளவியலை இந்த படம் கேள்வி கேட்கிறது. தவறு செய்தவன் தான் குற்றவாளி, எந்த வகையில் பாதிக்கப்பட்டவள் தவறானவள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் இந்த படம் கேட்கிறது. மிகவும் சரியான பார்வை.

அவளின் உடலே எப்படி அவளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படுகிறது. ‘‘உசுரு பெருசா, மானம் பெருசான்னா, மானம்தான் பெருசு. ஆனா, அந்த மானம் எதுல இருக்கு, என் உடம்புலயா? நான் வாழற வாழ்க்கையிலதானே?’’ என கதாநாயகி ஆண்ட்ரியா பேசும் வசனங்களும், தன் உறவினர்களிடம் கால மாற்றம் குறித்து கதாநாயகன் ஆதவ் கண்ணதாசன் பேசும் வசனங்களும் சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என்கின்ற முற்போக்கான வசனங்களும் வரவேற்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியாவை, குற்றவாளிகள் இருக்கும் போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் பெண் காவல் ஆய்வாளர் அனுபமா குமார் விட்டுச் செல்வது, பின்னர் தேடாமலே இருப்பது, அவர் பேசிய வசனத்திற்கும் காட்சிக்கும் துளியும் பொருந்தவில்லை. பெண் காவலர்கள் நல்லவர்கள் என்பது போலும், பெண் நீதிபதிகள் நல்லவர்கள் என்பது போலும் காட்சிகள் படத்தில் வருகிறது. இந்த அரசு கட்டமைப்பில் ஆண், பெண் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்க கூடிய பெண்கள் அந்த சட்ட வரம்பிற்குள் நின்று தான் வேலை செய்ய முடியும். ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.

தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவம், சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. போலீசு நிலையத்திலும், அரசு அதிகாரிகளாலும் நடந்த குற்றங்களுக்கு சாட்சி. மக்கள் போராட்டங்களே அரிதிலும் அரிதான வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையை வாங்கி தந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

இன்று பெண்களை சக மனிதராக கருதாமல், வெறும் நுகர்வு பண்டமாக கருதும் மறுகாலனியாக்க சூழலில், பெண்ணின் உடல் குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்கள் தான் குற்றவாளிகள் பெண்கள் அல்ல என்று ஆணித்தரமாக பேசுவதும். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள்(போலீசு) மேலும் ஆபத்தானவர்கள் என்று விளக்குவதும் மிகவும் சரியான பார்வை.

ஆனால் அது மட்டுமே போதுமானது இல்லை. சட்ட ரீதியாக போராட வேண்டும் என்பதை இந்த படம் வலியுறுத்துகிறது. பெண்கள் மீதான வன்கொடுமைகளை போலீசு நிலையங்களில் பதிவு செய்ய முடியவில்லை என்பதே இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு யதார்த்த நிலைமை. பெண்கள் அமைப்புகள் சென்று போராடிதான் வழக்குகளை பதிவு செய்ய முடிகிறது. வழக்கு பதிந்தற்காக குடும்பத்தையே வெட்டி சாய்க்கும் சம்பவங்கள் உ.பி போன்ற மாநிலங்களில் நடக்கிறது. இதையும் இயக்குநர் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும். கதாநாயகன் இந்த படத்தில் சரியான நபராக வருகிறார். ”உன்னுடைய போராட்டத்திற்கு துணை நிற்பேன்” என்று சொல்கிறார். வரவேற்கத்தக்கது. இப்படி சமூகமே சொல்ல வேண்டும். ”நீ போராடு நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று அத்தகைய மாற்றங்களை நோக்கி பயணிப்போம்.

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்திற்கான சமூக காரணிகளை ஆழமாக நாம் பேச வேண்டும். இன்று தனியார்மய, தாராளமய, உலகமய சூழலில் பெண் ஒரு விற்பனை சரக்காக விளம்பரங்களில், திரைப்படங்களில், ஆபாச படங்களில், விளையாட்டுகளில், காட்டப்படுகிறாள். இளம் தலைமுறையினரை சீரழிக்கும், நுகர்வு வெறியை ஊட்டி வளர்க்கும் முதலாளித்துவ சீர்கேட்டை, பண்பாட்டை நாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளித்துவ கலாச்சாரம் என்பது லாப வெறிக்காக எதையும் பண்டமாக மாற்றுகிறது. பெண்ணின் உடலும் பண்டமாக மாற்றப்படும் சூழலை எதிர்த்து போராடி முறியடிக்காமல், இந்த குற்றங்களை தடுக்க முடியாது என்பதை நாம் பேச வேண்டும்.

அமிர்தா