அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு வலுவடைந்து, அவர் மீது விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அவரை அதே பதவியில் நீடிக்கச் செய்து அழகுபார்க்கிறது தமிழக அரசு. எதிர்க்கட்சிகளின் கண்டனம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிவரும் #TNgovtDismiss_Surappa டிரெண்டிங்கும் இணைந்து தாக்கம் செலுத்திய பின்னர்தான், விதிமுறைப்படி சூரப்பா இடைநீக்கம் செய்யப்படுவார் என அறிவித்திருக்கிறார் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2018-ம் ஆண்டு சூரப்பா நியமிக்கப்பட்டது முதல், இன்றுவரையில் மோடி அரசின் கல்வி கார்ப்பரேட்மய காவிமய அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் செவ்வனே செயல்பட்டுவந்தார்.
திறமையான பல்வேறு தமிழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இருக்கையில் கர்நாடகாவில் இருந்து ஏன் சூரப்பாவைக் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகளும் கல்வியாளர்களும் அச்சமயத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரது “திறமையையும்”, “நேர்மையையும்” பாராட்டித் துதிபாடி கவர்னர் மாளிகையே அறிக்கை வெளியிட்டது. அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு நெருக்கமானவர் சூரப்பா .
அந்த ”நேர்மையான”, ”திறமையான” சூரப்பா தான் ரூ. 280 கோடி அளவிலான லஞ்ச, ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 200 கோடி ஊழல் செய்திருப்பதாக, கடந்த பிப்ரவரி மாதமே வந்த புகாரைக் கடந்த 9 மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திடீரென விசாரணைக் கமிசன் அமைத்துள்ளது எடப்பாடி அரசு.
மேலும், அண்ணா பல்கலைக்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கான பேராசிரியர் நியமனத்தில், ஒரு பணி நியமனத்துக்கு ரூ. 13 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை நிர்ணயித்து, மொத்தமாக ரூ. 80 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இலஞ்சப் புகாரில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சூரப்பா மற்றும் துணை இயக்குனர் சக்திநாதன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சூரப்பா தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, தனது மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தது எடப்பாடி அரசு.
லஞ்ச ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகும் நபர் அதிகாரத்தில் நீடித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் சூரப்பாவையோ, சக்தி நாதனையோ அதே பதவியில் அமர்த்தி அழகுபார்த்துக் கொண்டிருந்தது எடப்பாடி அரசு.
படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
இதனைக் கண்டித்து திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சூரப்பாவை பதவி நீக்கம் செய் ( #TNgovtDismiss_Surappa ) என வலைஞர்கள் ட்ரெண்டிங் செய்யத் துவங்கிவிட்டனர்.
புறச்சூழலில் இப்படி ஒரு நெருக்கடி வரத் துவங்கியதும்தான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சூரப்பா மீதான நடவடிக்கை குறித்து வாய் திறந்துள்ளார். “விதிகளுக்கு உட்பட்டு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் அன்பழகன். அதாவது ஆளுநர் இடைநீக்க உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தால்தான் இடைநீக்கம் செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அன்பழகன்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் திமிரோடு பதிலளித்துள்ளார் சூரப்பா. தன் மீதான ஊழல் புகார் குறித்துப் பதிலளிக்கையில், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் எங்கிருந்து வந்தடைந்தனர் என்பது தெரியவில்லை என்றும், தமிழக அரசின் விசாரணை குறித்துக் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்துப் பேசுகையில், தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்குத் தேவை என்பதால்தான் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ பணி நியமனங்களுக்கு பணம் வாங்கியிருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்” என்றும், ”என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார் சூரப்பா.
சூரப்பா ஒருவேளை நேர்மையாளராக இருந்திருக்கலாம், ஆனால் யாருக்கு நேர்மையாக இருந்தார் என்பதுதான் கேள்வி ?
பஞ்சாப் ஐ.ஐ.டியில் இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.ஐ.டி-க்கான புதிய கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ. 750 கோடியை முதல் ஐந்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி ஆண்டில் செய்ததன் காரணமாக அந்தக் கட்டுமானச் செலவு ரூ.1958 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அன்றைய இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூரப்பாவின் நியமனத்தின் போதே தெரிவித்துள்ளார்.
மேலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பை தமது கண்டுபிடிப்பாகக் காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகள் சூரப்பா மீது இருந்ததை ராமதாஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.
ரூ. 750 கோடி செலவில் முடிக்க வேண்டியதை 1958 கோடிக்கு உயர்த்தியதன் பின்னணியில் என்ன நேர்மை இருந்திருக்க முடியும் ? ஒருவேளை சூரப்பா இப்போது கேட்பது போல அப்போதும் “ஆதாரம் இருந்தால் காட்டமுடியுமா?” என்று கேட்டு தனது நேர்மையை “காப்பாற்றியிருக்கலாம்” !
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அண்ணா பல்கலை ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வரின் தனிப் பிரிவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூரப்பா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.
கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்துள்ள சூழலில், தேர்வுக் கட்டணமாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் சூரப்பா. ஆய்வே நடத்தாமல் 8000 ஆய்வு மாணவர்களிடமிருந்து செமஸ்டர்கட்டணம் வசூலித்ததாகவும் சூரப்பாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு.
படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
♦ அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !
அதே போல, உயர் சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனமாக, அண்ணா பல்கலையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ள விவகாரத்தில், தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சூரப்பா. அக்கடித்தில், மாநில அரசினுடைய நிதிப் பங்கீடு இல்லாமலேயே தம்மால் ஐந்தாண்டுகளில் ரூ.1500 கோடி திரட்ட முடியும் என்றும், அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்புத் தகுதி வழங்கும்படியும் எழுதியுள்ளார்.
ஒரு மாநில அரசால் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்பட்டுவரும் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தின், தலையெழுத்தை எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என்றால், அதற்குக் கண்டிப்பாக பின்னணியில் ஒரு சித்தாந்தமும், நோக்கமும் இருக்க வேண்டும்.
மாநில அரசின் நிதியில்லாமல், அண்ணா பல்கலையின் நிதியை தாமாகத் திரட்டுவது என்றால், சூரப்பாவால் நோட்டு அச்சடித்தா விட முடியும் ? மாணவர்களிடமிருந்து கல்விக்கட்டணமாகத்தான் கறக்க முடியும். கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் சிறப்புக் கல்விநிறுவனத்தில் இனி சாதாரண ஏழை, நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை சேரவிடாமல் தடுப்பதுதான் இதன் பின்னணியில் இருக்கின்ற காரணம்.
மத்தியில் ஆளும் மோடி – சங்க பரிவாரக் கும்பல் தமது தனியார்மயமாக்க – பார்ப்பனிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான நபர்களைக் கண்டறிந்து, கல்வி, கலாச்சாரம், வரலாறு, அறிவியல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் பொறுப்புகளில் அவர்களை நியமித்து வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் வளங்களையும், சந்தையையும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவும், பார்ப்பனிய சனாதனத்தை கல்வியில் உள்நுழைக்கவும் சிறப்பாக செயல்படக் கூடிய “செயல்வீரர்களை” தட்டிக் கொடுத்து ஊக்கமளித்து தனது நோக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கி முன் செல்லுகிறது பாஜக அரசு.
சங்கபரிவாரத்தின் அத்தகைய ஒரு செயல்வீரர்தான் ‘சூரப்பா’. பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவந்ததிலேயே நம் அனைவருக்கும் அது தெரியவந்துவிட்டது. இந்நிலையில், அந்த செயல்வீரரை இடைநீக்கம் செய்ய தமிழக அரசு கேட்டதுமே, பாஜகவின் கைத்தடியாகச் செயல்படும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியளித்துவிடுவாரா ?
“சூரப்பாவை பதவி நீக்கு” #TNgovtDismiss_Surappa என சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் டிரெண்டிங், தமிழக அரசை வேண்டுமானால் அசைக்கலாம், சூரப்பாவை நீக்கு என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.
கர்ணன்




மக்களின் உழைப்பில் உருவான செல்வங்களையெல்லாம் தனியாருக்கு அரசு தாரைவார்ப்பது போல், நிதித்துறையையும் ஒப்படைத்ததன் கொடூரமான விளைவுகள்தான் இது. முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற எண்ணற்ற ஒட்டுண்ணி, அட்டைகள் எல்லாம் இதனால் உருவானவையே. இன்று கோடானு கோடி ஏழை நடுத்தர மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அதிகார வர்க்கத்தின் துணையோடு தப்பித்துக்கொள்ள முடியும் என்ற திமிர்தான் இதற்கெல்லாம் காரணம்.
முதலாவதாக, சில தோழர்கள் கட்சி நிலையிலிருந்தோ அல்லது கட்சி முழுமையின் நலனை அடிப்படையாகக் கொண்டோ பிரச்சினைகளைக் கிளப்புவதோ, மற்ற தோழர்களை எதிர்த்தல் அல்லது போராட்டங்களை நடத்துவதோ இல்லை; தனது தனிப்பட்ட நலனையோ அல்லது கோஷ்டியின் நலனையோ கண்ணோட்டத்தில் கொண்டே பிரச்சினைகளை கிளப்பவும், மற்ற தோழர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். அதாவது உட்கட்சி போராட்டம் நடத்துவதில் அவர்கள் நிலை சரியானதில்லை. அதனால், பிரச்சினைப் பற்றி அவர்கள் கண்ணோட்டம், கொள்கை, வழிகளை, அவை தங்களுக்கும் ஒருசில நபர்களுக்கும் உபயோககரமாக இருக்கும் வரையில் ஆதரிப்பார்கள். அதற்காக வாதாடவும் செய்வார்கள். குறிப்பிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கோ அல்லது அந்த ஒருசில நபருக்கோ அனுகூலமாகவில்லை என்றால், அவற்றை எதிர்ப்பார்கள்; நிராகரித்து விடுவார்கள். அத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்கு, அல்லது புரட்சிக்கு பயன் தரத்தக்கவையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அப்படியில்லையென்றால் அத்தகைய நடவடிக்கைகளை இரண்டாந்தர முக்கியத்துவங் கொண்டவையாக ஒருபுறம் தள்ளிவிடுகின்றனர். ஆகவே இவர்கள் எதிர்ப்பதும் சரி, ஆதரிப்பதும் சரி, முற்றிலும் கோட்பாடற்றவையே; கட்சி, புரட்சி முதலியவற்றின் கோட்பாடுகளிலிருந்து விலகியதேயாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் கோட்பாடு கட்சியின், புரட்சியின் கோட்பாடு அல்ல; அவர்கள் சொந்த நலனுக்கான கோட்பாடுகள். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த நலனையே தனது கோட்பாடாகக் கொண்டு விட்டால், பின் அவரது நலனும் கோட்பாடும் மற்றவர்களுடைய நலன் கோட்பாடு முதலியவற்றுடன் நிச்சயம் மோதத்தான் செய்யும்; ஒருவரோடு ஒருவர் சண்டையிடத்தான் செய்வார்கள்.
மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், சில தோழர்கள் ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சி நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எளிய வாழ்க்கைக் கோட்பாட்டையும் ஊதாரித்தனத்திற்கு உள்ள பல திருஷ்டாந்தங்களையும் எடுத்துக்காட்டி, விமர்சித்து, அதை அவர்கள் எதிர்க்கிறார்கள்; சிக்கனத்திற்கு சில யோசனைகள் சமர்ப்பித்து அதை அமல் நடத்தும்படி கட்சியைக் கேட்கின்றனர். இது சரியானது.
இரண்டாவதாக, சில தோழர்கள் கட்சிக்குள் தகராறுகளை கிளப்பிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்; ஆனால் அது கட்சி விவகாரங்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. அதற்கு மாறாக அவற்றை இன்னும் படுமோசமாக்குவதற்குதான் செய்கின்றனர்; அல்லது அந்தரங்க நோக்கத்துடன் செய்கின்றனர். அத்தகைய நோக்கம் தவறானதாகும். இதுவும் கோட்பாடற்ற போராட்டமாகும். உதாரணமாக முக்கியமானவர் என்று எண்ணப்பட வேண்டுமென்பதற்கு, சொந்த அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, கௌரவத்தை விட்டுக் கொடுக்காமலிருப்பதற்கு, ஏன்? மற்றவர்களை பழி தீர்த்துக் கொள்வதற்குகூட, சில தோழர்கள் நிலைமை, அப்பொழுதுள்ள சுற்றுச்சார்பு முதலியவைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்சிக்குள் மற்ற தோழர்களை எதிர்த்து அவர்கள் வேலைகளையும், திட்டங்களையும் கட்சிக்குள் ஒழுங்கு, ஒற்றுமை முதலியவற்றையும் சீர்குலைத்துக் கொண்டு, தகராறுகளை கிளப்பி விட்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவும் இதே கோட்பாடற்ற பகுதியைத்தான் சேரும்.
உதாரணமாக, சில போராட்டங்கள், சில காரியங்கள் சில போராட்ட வடிவங்கள், சில அமைப்பு முறைகள் முதலியன பற்றி சில தோழர்கள் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நிலைநாட்டுகின்றனர். பொதுவான போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளையும், பொதுவான நடைமுறைக் கொள்கையையும் போராட்டம், ஸ்தாபனம் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய பொதுவான கருத்துக்களையும் கொஞ்சம் கூட சம்பந்தப்படுத்திக் கொள்ளாமலே முடிவில்லாமல் வாதாடுவார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் தவறான முறையில் கிளப்பப்பட்டிருக்கிறது. ஆதலின் வழக்கமாகவே சரியான முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. இல்லையெனில் மாறுபட்ட அபிப்பிராயங்களுள் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்க வேண்டும். பிரயோஜனமில்லாத வீண்பேச்சுத்தான் பெரும்பாலும் ஏற்படும் பலன்.




விரோதியையும் அந்நிய நபர்களையும் எதிர்ப்பதற்கு கைக்கொள்ளும் நடவடிக்கைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்களை நடத்துவதில் உபயோகப்படுத்துகின்றனர். எல்லாவித ஆத்திரமூட்டல், பகை, சதி அனைத்தையும் அனுஷ்டிக்கின்றனர். கண்காணித்தல், கைது செய்தல், விசாரணை நடத்துவது, சிறைப்படுத்துவது முதலான சகலவித நிர்வாக நடவடிக்கைகளையும் உட்கட்சிப் போராட்டத்தில் அவர்கள் பிரயோகிக்கின்றனர். உதாரணமாக, துரோகிகளை வேட்டையாடுவதென்னும் “இடதுசாரி”த் தவறை இழைத்த தோழர்கள் அத்தவறு செய்வதற்குக் காரணம், கட்சிக்குள் நடக்கும் போராட்டத்திற்கும் கட்சிக்கு வெளியே நடக்கும் போராட்டத்திற்கும் இடையில் தெளிவான வரையறுப்பு வைத்துக் கொள்ளாததுதான். கட்சிக்குள் நிகழ்த்தும் சித்தாந்தப் போராட்டத்தையும் துரோகிகளை வேட்டையாடும் இயக்கத்தையும் போட்டுக் குழப்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் கட்சிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் ஒற்றர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த ஒற்றர்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு விசயங்களை ஆதாரமாகக் கொண்டு நிற்க வேண்டும்; அவர்களை தோலுரித்துக் காட்டி, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; தவறு செய்த கட்சி அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நடத்தும் போராட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது; இவையிரண்டுக்கும் இடையில் தெளிவான வரையறுப்பு செய்யப்பட வேண்டும். கட்சிக்குள் நடத்தும் போராட்டமும், கட்சிக்கு வெளியே நடத்தும் போராட்டமும், ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவைதான், ஆனாலும் அவற்றின் போராட்ட முறையும் வடிவமும் வேறுபட்டதாகத்தானிருக்க வேண்டும்.
மேல் கமிட்டிகளையும், கட்சியையும் தங்கள் கோரிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் ஒப்புக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்றனர்; கட்சியின்பால் சுயேச்சை மனோபாவம் காட்டுகின்றனர்; கட்சியிலிருந்து விடுபட்டுள்ள தங்கள் சுயேச்சை நிலையை பிரகடனப்படுத்துகின்றனர்; அல்லது கட்சிக்கு வெளியிலுள்ள பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் பல்வேறு மகாநாடுகள், முதலியனவற்றை பூர்ஷ்வாவுக்கும் விரோதிக்கும் சொந்தமானவற்றைக்கூட, மேல் கமிட்டியின் மீதும் சில தோழர்கள், ஊழியர்கள் மீதும் போராட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவறு என்று சொல்லத் தேவையில்லை; இன்னொரு கோஷ்டி நபர்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை பலவந்தப்படுத்தி அடக்கி ஒடுக்கி ஆதிக்கஞ் செலுத்தவும், கட்சிக்கு வெளியிலுள்ள நபர்களை பயமுறுத்தி, தண்டவரி வசூலிப்பதும் எவ்வளவு கடுமையான தவறோ அதேபோல் இதுவும் கடுமையான தவறாகும். இந்தப் பேர்வழிகள் கட்சிக்கு எதிராக கட்சிக்கு சம்பந்தப்படாத கண்ணோட்டத்துடன் போராடுகின்றனர். ஆதலின் அவர்கள் பெயரளவில் கம்யூனிஸ்டுகளாக இருந்து வந்தபோதிலும், கட்சிக் கண்ணோட்டத்தில் அறவே வேறுபட்டு போய்விட்டனர்; கட்சியின் விரோதிகள் ஆகிவிட்டனர்.
இந்த முடிவுப்படி விசயங்கள் தீர்மானிக்கப்பட்டன; ஆனால் பல தவறுகள் நிச்சயம் நேரும் என்று சொல்லத் தேவையில்லை. சில தோழர்கள் ஒரு பிரச்சினையைப் பற்றி முடிவு எடுப்பதற்கு தெரியவில்லையென்றால், தங்களுக்குத் தெரியாது என்றும், பிரச்சினையைப் பற்றி ஆலோசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அல்லது பிரச்சினையை மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்புவதற்கும் அவகாசம் வேண்டும் என்றும் சொல்லத் தயாராயில்லை. ஆயினும் வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்; தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ளவும், ஏற்கனவே தங்களுக்கே எல்லாம் தெரிந்தது போல இவர்கள் பாசாங்கு செய்கின்றனர். போகிற போக்கில் ஒரு முடிவு செய்கிறார்கள்; பெரும்பாலும் அது தவறாக இருக்கிறது; இம்மாதிரி விசயங்களும் திருத்தப்பட வேண்டும்.
இந்த தவறான, பொருத்தமற்ற உட்கட்சி போராட்ட வடிவங்கள் கட்சிக்குள் எத்தகைய விளைவுகளை உண்டாக்கியுள்ளன? அவை கீழ்க்காணும் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளன.
ஆறாவதாக, அவை ட்ராட்ஸ்கீய ஒற்றர்களுக்கும், எதிர்புரட்சிக்காரர்களுக்கும் கட்சியை சீர்குலைப்பதற்கு அரிய வாய்ப்பை அளித்திருக்கிறது; நமது கட்சியைத் தாக்குவதற்கு எதிர்ப்புரட்சிக்கு அதிக சாக்குகளைக் கொடுத்திருக்கிறது. ட்ராட்ஸ்கீய ஒற்றர்கள் கட்சியை சீர் குலைப்பது, தாக்குண்டு கட்சி மீது அதிருப்திப்பட்ட நபர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்வது முதலான நடவடிக்கைகளை நடத்திக்கொண்டு செல்வதற்கு கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளையும், முறை நழுவிய எந்தவிதமான உட்கட்சிப் போராட்டத்தையும் குறிப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை, பிரச்சாரம் செய்வதற்கும் ஆத்திரமூட்டுதலுக்கும், கட்சிக்கு வெளியிலுள்ள அனுதாபிகளையும் கட்சிக்குள் உள்ள உறுதியற்ற நபர்களையும், பகை வளர்க்கும் கொள்கையை நிறைவேற்றுமாறும், கட்சிக்குள் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சீர்குலைக்குமாறும் கவர்வதற்கும் பயன்படுத்திக்கொள்கிறது.



முதலாவதாக, “போராட்டக் கூட்டம்” என்ற பதமே தவறானது. அதற்கு அர்த்தமேயில்லை ; “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படுபவை இருப்பதினால், “போராட்டமில்லாத கூட்டங்களும்” இருக்கின்றனவா? சில கூட்டங்கள் குறிப்பாக போராட்டம் நடத்துவதற்காக இருக்கின்றனவென்றும் போராட்டம் நடத்தப்படாத வேறு கூட்டங்கள் இருக்கின்றன என்றும் நாம் கருதுவோமானால் அது சித்தாந்த ரீதியாக பெருங்குழப்பத்தை விளைவிக்கும். பல தோழர்கள் போராட்டத்தின் பரிபூரண தன்மையையும், அனைத்தையும் அணைத்து நிற்கும் குணத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் இது இங்கு நிரூபிக்கிறது. இயக்க மறுப்பியல் முறையில் கல்வியையும், போராட்டத்தையும் பிரித்துப் பார்க்கின்றனர்.
இரண்டாவதாக, இயக்கமறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சி போராட்டம் கீழ்க்கண்ட வழிகளிலும் பிரதிபலிக்கின்றது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மேலானது என்று சில தோழர்கள் அபிப்பிராயங் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு பிரச்சினை எவ்வளவு கடுமையாகக் கிளப்பப்படுகிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது, எவ்வளவுக்கு அதிகமாக குற்றங்குறை கூறுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவு தடபுடலான பதங்களை உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; விமர்சனம் எவ்வளவு ஏசுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு முகம் தொங்கவிட்டுக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது; எவ்வளவுக்கு பற்களை கடகடவென்று நெரிக்கின்றோமோ அவ்வளவுக்கு சிறந்தது. இந்தமாதிரி நடந்து கொண்டால், “புரட்சிக்காரர்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருக்கவேண்டுமோ அவ்வளவுக்கு புரட்சிகரமாக இருப்பதாக” தங்களைப்பற்றி கருதிக் கொள்கின்றனர். உட்கட்சிப் பற்றியோ, நிதானம் பற்றியோ கவலைப்படுவதில்லை; பொருத்தமான எல்லையுடன் நிற்பதில்லை. எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் போராட்டத்தை நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது என்பது வெள்ளிடைமலை.
இவர்கள் தோழர்களைப் பற்றி தாறுமாறான அமைப்பு முடிவுகளுக்கு வருகின்றனர். அமைப்பு ரீதியான தண்டனைகளையும் தோழர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம் என்னும் பூர்ஷ்வா கண்ணோட்டத்தை வைத்துக் கொண்டு கட்சிக்குள் தோழர்களை நிர்தாட்சண்யமாக தண்டிக்கின்றனர்; அதாவது குற்றம் செய்தவர்கள் எத்தகைய கட்சி அங்கத்தினர்கள், இவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோ அல்லது திருத்திக் கொண்டோ இருக்கிறார்களா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கட்சி அமைப்பு விதிகளில் வரையறுத்துள்ள மிகக் கடுமையான தண்டனையை வழங்குகின்றனர். இந்த வழியில் கட்சிக்குள் தண்டனைமுறை நுழைக்கப்படுகிறது. வேலையை துவக்குவதற்கும், முன்கொண்டு செல்வதற்கும் போராட்டங்கள் நடத்தும் வழியை அவர்கள் அடிக்கடி கையாளுகின்றனர். “போராட்ட இலக்குகளை” (கட்சிக்குள் உள்ள தோழர்களை) வேண்டுமென்றே தேடுகின்றனர். அவர்களை சந்தர்ப்பவாதத்தின் பிரதிநிதிகள் என்று எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த ஒரு தோழரையோ அல்லது அந்த ஒரு சில தோழர்களையோ “நாயை பயமுறுத்துவதற்காக வான்கோழியைக் கொன்ற கதை” என்று வழங்கும் சீனப்பழமொழியைப் போன்று மற்ற கட்சி ஊழியர்கள் கடுமையாகப் பாடுபடவும், பணியை பூர்த்தி செய்யும் பொருட்டும் அவர்கள் தியாகம் செய்கின்றனர்; அல்லது தாக்குகின்றனர், போராட்ட இலக்குகளின் குறைபாடுகள் குற்றங்கள் பற்றி அவர்கள் வேண்டுமென்றே தகவல் சேகரித்து, இயக்க மறுப்பியல் வகையிலும், துண்டு துக்காணியாகவும், அவ்வளவு பொருட்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் செயல்களையும் குறித்துக் கொள்கின்றனர்.


எனவே நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படும் நம் ஒவ்வொருவருடைய பிரச்சினையும்தான்.
‘உற்பத்தியில் ஈடுபடாத உடல்களுக்கு’ இடமும் பொறுமையும் கிட்டத்தட்ட இல்லாத வலுவான தேசம் என்கிற கருத்தாக்கத்தையும் இது எதிரொலிப்பதாகத் தெரிகிறது. யூதர்களை மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளாக இருந்த வெள்ளையின ஜெர்மன் குழந்தைகளையும் குறிவைத்து விசவாயு அறைகளில் அடைத்த நாசி ஆட்சியின் நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது. இது சந்தை மற்றும் தேசத்தின் ஒரு வகையான ‘திறன்வாதத்தைக்’ குறிக்கிறது. ஒருவர் ‘பயன்பாட்டில்’ இல்லாவிட்டால், உற்பத்தி செய்யாவிட்டால், அவர்களை தூக்கியெறிவது அறமற்ற செயலல்ல என்பதை சொல்கிறது.


இது ஏனெனில், நமது கட்சி சமீபத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளையும், புதிய கட்சி அங்கத்தினர்களையும் கட்சிக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது; இவர்கள் பூர்ஷ்வா தாராளவாதத்தில் ஊறிப் போனவர்கள்; சித்தாந்த ரீதியிலும், அரசியல், அமைப்பு ரீதியிலும் தொழிலாளி வர்க்கத்தின் உருக்குப் போன்ற கட்டுப்பாட்டில் புடம் போடப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் அதற்கிடையில் சென்ற காலத்தில் “இடதுசாரி” தவறுகள் செய்தவர்கள். மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்திற்கு நின்றவர்கள்.
மேலும் சமீப காலத்தில் கட்சிக்குள் இன்னுமொரு மிக மோசமான போக்கு தலை தூக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்த நபர்கள், தங்கள் குறைபாடுகளையும், குற்றங்களையும் கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களிடத்திலோ மற்றவர்கள் புகார் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றச்சாட்டுகள் கொண்டுவந்துவிடுவார்களோ என்று குலை நடுங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒருபுறத்தில் அவர்களுக்கே தெரிந்திருக்கும் அதே தவறுகளை அவர்களால் செய்யாமலிருக்க முடியவில்லை ; மறுபுறத்தில் அவர்கள் குற்றங்குறைகளைப் பற்றி கட்சிக்கு, அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கு மற்ற தோழர்கள் தெரிவிப்பதையோ, கூட்டங்களில் விமர்சனம் செய்வதையோ தடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் சில தவறான, முறையற்ற காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பிழைகள் செய்திருக்கிறார்கள்; குற்றங்குறைகளைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதற்கு இஷ்டமில்லை! தங்கள் வியாதியை மறைத்துக் கொள்ளுகிறார்கள்; தங்கள் வியாதியை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்; தங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதின் மூலம்தான் அத்தகைய குற்றங்களைத் திருத்த முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை . அவர்கள் தங்கள் குற்றங்களை பூலோகத்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது போல, மேல் பூச்சுப்பூசி, மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.
கட்சிக்கோ அல்லது மேலுள்ளவர்களுக்கோ மற்றவர்கள் அறிக்கை கொடுப்பதை தடுப்பது என்பது சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது; கட்சியில் என்றுமே அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய அறிக்கைகள் கிடைத்தால், மேல் கமிட்டிகள், என்ன நடந்தது என்பதை நுட்பமாகத் துருவி ஆராய்ந்து, வழக்கை வெகு கவனமாக விசாரிக்க வேண்டும்; சம்பவத்தைப் பற்றிய ஒருதலைப்பட்சமான தகவலை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு தீர்ப்பு செய்யாமலிருக்க வேண்டும்.