இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை கடந்த மே மாதம் 13-ம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், அத்தடையை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு – 2024-ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது, மைய உள்துறை அமைச்சகம்.
இந்த உத்தரவு, மே 14, 2019 அன்று பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்வரைகூடக் காத்திராமல், காபந்து அரசான மோடி அரசே இந்த உத்தரவை வெளியிட்டிருப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தனது தீராத வன்மத்தையும் வெளிக்காட்டிக் கொண்டுவிட்டது.
2009-ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிக் கட்டப் போரின்போதே விடுதலைப் புலிகள் இருந்த தடம்கூடத் தெரியாத அளவிற்கு அவர்களை இந்திய அரசின் உதவியோடு கொன்றொழித்தது, இலங்கை அரசு. கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத்திலோ, தமிழகத்திலோ மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.
ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது போலக் கூறி, “அதனின் குந்தகச் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவையாக உள்ளன” என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடி, அவ்வியக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருக்கிறது, இந்திய அரசு. “கற்பனையான எதிரிகளை உருவாக்கிப் பீதியூட்டுவதன் மூலம்தான் பாசிஸ்டுகள் தமது அடக்குமுறைகளை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்” என்பதை இத்தடையின் மூலம் மீண்டும் நினைவூட்டியிருக்கிறார்கள், இந்து மதவெறி பாசிஸ்டுகள்.
இத்தடை நீட்டிப்பின் மூலம் தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்காகச் சட்டபூர்வமாகப் போராடும் இயக்கங்களைக்கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி ஒடுக்குவதற்கான முகாந்திரத்தையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது, இந்திய அரசு.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
ஐன்ஸ்டீன் பற்றிய இந்த நூல் சிறிய நூல்தான். எனினும் விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை பெரிய அளவில் இந்த சிறிய நூல் தூண்டும்.
ஐன்ஸ்டீன், படிப்படியாக முழு மனிதனாக உருப்பெறுவது காட்சிகளாய் இந்த நூலில் விரிகிறது. நூலைப்படித்து முடித்தவுடன் பல நூல்களைப் படித்துவிட்ட திருப்தி ஏற்படுகிறது. இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.
”அறிவு முக்கியமானதுதான், ஆனால் அதைவிட முக்கியமானது கற்பனைத்திறன்” என்று ஐன்ஸ்டீன் கூறினார். இந்தக் கற்பனைத்திறன் எப்படிக் கைவரப்பெறும்? இளம்வயதில் சொந்த மொழியில் பயிலுவதும், இதைத்தான், இப்படித்தான் பயில வேண்டும் என்ற கட்டாயத்திற்காளாகாமல் சொந்த வழியில் கற்பதும் கற்பனைத்திறன் வலுப்பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகள்.
சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனைச் சிறகுகள் வெளியிலிருந்து வருகிற எந்த ஆணைக்கும் அடிபணியவில்லை. இளங்கன்று பருவத்திலேயே பட்டாளத்துக்காரனின் மிடுக்கான நடையும், விரைப்பான கை வீச்சும் அவருக்கு கிலுகிலுப்பையும் கிளர்ச்சியையும் தரவில்லை. சமாதான வேட்கையும், மனிதாபிமானமும், சமூகக் கவலையும் கொண்ட மனிதனாக இந்தப் பயிர் விளையும் என்பது இப்படி முளையிலேயே தெரிந்தது.
ஒரு மனிதனின் மனதிற்குள் புதைந்திருக்கும் விஷயங்களை உளவியல் பூர்வமாக நுட்பமாக சொல்வதற்கும் இந்த நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது இந்த நூலின் தனிச்சிறப்பு.
… ஹிட்லரின் இன வெறி மற்றும் பாசிச ஆட்சியின் வேட்டையில் இருந்து அவர் தப்பியது உலகம் செய்த பேறு எனலாம். அவர் மயிரிழையில் தான் தப்பியிருக்கிறார். நாசி ஆட்சியின் எதிரிகளும் குற்றவாளிகளும் என்று ஹிட்லரின் ஆட்சி ஒரு ஆல்பத்தை வெளியிட்டிருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஐன்ஸ்டீன் படம் போடப்பட்டு, இவர் செய்த குற்றம் என்ற பட்டியலில் ”சார்புநிலைக்கொள்கை” என்று எழுதப்பட்டிருந்தது. இதன் பின் குறிப்பில் ”இன்னும் தூக்கிலிடப்படவில்லை” என பதிவாகியுள்ளது.
இது போன்ற மனதை அறுக்கும் பல தகவல்கள் இந்த நூல் தருகிறது.
ஹிட்லரின் ஜெர்மனி அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதையும், அவர்கள் பேரழிவு ஆயுதத்திற்கு நெருக்கத்தில் உள்ளனர் என்பதையும் அறிந்து பதறிப்போன ஐன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டிற்கு இதைத் தடுக்கும் உபாயங்கள் பற்றி கடிதம் எழுதினார். ஆனால், அமெரிக்காவே அணுகுண்டை தயாரித்துக் கொண்டது.
நூல் நெடுக உளவியல் பூர்வமாகவும், தத்துவ சாயலோடும், விஞ்ஞான நுணுக்கத்தோடும் தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது படித்துப் பயன்பெற வேண்டிய கையடக்க நூல். (நூலின் முன்னுரையிலிருந்து)
பாடப்புத்தகங்களில் தனது கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லையென்றால், வேறு புத்தகங்களில் தேடும் பழக்கம் ஆல்பர்ட்டிடம் இருந்தது.
அன்று ஜெர்மனியில் மிகவும் பிரபலமாக இருந்த இயற்கை விஞ்ஞான பொது விளக்க வரிசைகளை ஆல்பர்ட் விரும்பிப் படித்தான். கேள்வி கேட்டால் எள்ளி நகையாடும் ஆசிரியர்களிடமிருந்து பெற முடியாததைப் பெற இப்புத்தக வரிசை உதவியது. விலங்கியல், தாவரவியல், வானவியல், புவியியல் ஆகியவை பற்றிய விளக்கங்கள் இப்புத்தக வரிசையில் இருந்தன. மதவாத விளக்கங்களாகவும், புராணக் கதைகள் மூலம் விளக்கங்களாகவும் இல்லாமல், இவை பொது விளக்கங்கள் தந்தன. சிறு பிராயத்திலேயே இந்த விளக்கங்களை அறிய நேர்ந்ததால் மத அடிப்படையிலான நம்பிக்கைகள் ஐன்ஸ்டீனின் மனதில் ஒட்டவே இல்லை. (நூலிலிருந்து 17-18)
1909 முதல் 1911 வரை சூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஐன்ஸ்டீனிடம் கற்ற ஹான்ஸ்டானர் என்ற மாணவர் அவரது பாட உரையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :
வகுப்பறையின் மேடை மீது முதலில் ஐன்ஸ்டீன் ஏறிய பொழுது, நாங்கள் நொந்துப்போனோம். கலைந்த, சற்றும் பொருத்தமில்லாத நிறங்கள் கொண்ட சூட்டுடன் அவர் ஏறியதால் புதிய பேராசிரியர் பற்றி சலிப்புடன் பார்த்தோம். வெகுசீக்கிரத்திலேயே அவர் பாடக்குறிப்பை விளக்கிய விதம், கடினமான எங்கள் இதயங்களைக் கவ்விப் பிடித்தது. கையடக்க அளவில் உள்ள தாளில் ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு அவர் உரையாற்றினார். அவரது தலையிலிருந்து அந்த உரைகள் நேரடியாக வருவது போல் தோன்றியது. அவரது மூளை வேலை செய்கிற விதத்தை நாங்கள் பார்த்தோம்.
இதைவிட குறையற்ற நடையில் மேன்மையான பாட உரைகள் கேட்டிருக்கிறோம். ஆனால், அவைகள் எங்கள் மனதிலே ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கசப்புடன் உணரவைக்கும். ஆனால், இவரது உரை அந்த இடைவெளியை உணர்த்தாத சுவையான அனுபவமாக இருந்தது.
சில நேரங்களில், நூதனமான முறையில் சில மதிப்புமிக்க விஞ்ஞான முடிவுகள் பெற முடியும் என்பதை நாங்களாகவே உணர முடிந்தது. ஒவ்வொரு பாட உரைக்குப் பிறகும், இப்படி நாமேகூட உரை ஆற்றலாம் என்று எங்களை உணர வைக்கும். (நூலிலிருந்து பக்.47)
ஐன்ஸ்டீன் எழுதுகிறார் : ” எனது அகவாழ்வும், புறவாழ்வும் மறைந்த மற்றும் உயிருடன் இருக்கிற பிற மனிதர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை தினசரி நூறு தடவையாவது நினைத்துப் பார்ப்பேன். இதுவரை பெற்றதற்கும், இன்று பெறுவதற்கும் கடன்பட்டுள்ளேன் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த நினைப்பு என்னை சிக்கன வாழ்விற்கு ஈர்த்ததோடு, சகமனிதர்களின் உழைப்பை கூடுதலாக அனுபவிப்பது போல் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது”
சமூக உழைப்பைச் சுற்றித்தான் மானுட சமூகம் உயிர்வாழ முடியும் என்ற உண்மையை, எத்தனை விஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் அரசியல் தலைவர்கள், தத்துவ மேதைகள் இன்றும் ஏற்பார்கள் என்பது சந்தேகமே. தாங்கள் அவதரிக்கப் போய்தான் மானுடம் முன்னேறுகிறது என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு சமூக உழைப்பின் மகிமையை உணர முடியுமா என்பதும் கேள்விக்குறியே. பிறர் உழைப்பை மதிக்கும் குணம் ஐன்ஸ்டீனிடம் இருந்ததாலேயே சாமான்ய மக்களின் பார்வையிலே உயர்ந்த மனிதனாகக் காட்சி அளித்தார். (நூலிலிருந்து பக்.89)
ஐன்ஸ்டீன் இன்பெல்டோடு பேசியதிலிருந்து ; ” வாழ்வு என்பது ஒரு கிளர்ச்சியுறச் செய்யும் காட்சி. நான் அதை அனுபவிக்கிறேன். அது ஆச்சரியகரமானது. ஆனால் அடுத்த மூன்று மணிநேரத்தில் நீ சாக வேண்டுமென்ற நிலை இருந்தாலும், என்னை அது பாதிக்காது. அந்த கடைச மூன்று மணி நேரத்தையும் எவ்வாறு நல்ல முறையில் செலவிடுவது என்றுதான் யோசிப்பேன்; ஆவணங்களை தயாரிப்பேன். அமைதியாகப் படுத்துவிடுவேன்” – (நூலிலிருந்து பக்.95)
நூல் : ஐன்ஸ்டீன் வாழ்வும், சிந்தனையும் ஆசிரியர் : வே. மீனாட்சி சுந்தரம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி எண் : 044 – 2433 2424. மின்னஞ்சல் : info@tamizhbooks.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பாசிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஆபேரா பாலில்லா1 போன்ற அதன் இணை அமைப்பு ஒன்றின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பாலில்லா, பாசிஸ்டைவிட அதிகம் செயலூக்கத்துடன் இருப்பதைக் காணலாம். எல்லா இணை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். பரந்த வெகுஜனப் பகுதியினருடன் ஆனால் அதிகம் செயல்படாத மையத்துடன் கூடிய ஒரு பெரிய கட்சி நிறுவனம் இருந்து வருவதைப் பார்க்கிறோம். குறிப்பிட்ட நலன்களின் அடிப்படையில் வெகுஜனப் பகுதிகளை ஒழுங்கமைக்க இந்த மையம் பாடுபடுகிறது; பாசிசம் அடைய விரும்பும் ஸ்தூலமான குறிக்கோள்களுக்கு ஏற்ப தனது ஸ்தாபன வடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டு இப்பணியை அது செய்கிறது.
பாசிஸ்டு நிறுவனங்கள் முழுவதையும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். படைப் பிரிவு, படை அணி – பிரசாரம், தொழிற் சங்கம் ஆகியவையே அவை. இந்த மூன்று வகைகளுக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவு அதிகமில்லை. படைப்பிரிவை முதல் வகையைச் சேர்ந்த அமைப்புக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இளம் பாசிஸ்டுகளை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். பாசிஸ்டுத் தொழிற்சங்கங்கள் மூன்றாவது வகைப்பாற்பட்டவை. இந்த அமைப்புகளிடையே சில பொது அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, படைப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவோர்க்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இளம் பாசிஸ்டுகளுக்கும் இடையே சில பொது அம்சங்கள் காணப்படுகின்றன. சிவில் ஊழியர் சங்கங்கள் (குமாஸ்தாக்கள், ரயில்வே ஊழியர்கள் முதலானோர்) தொழிற்சங்கங்களை ஒத்திருக்கின்றன. ஆனால் அவை தொழிற்சங்கங்கள் அல்ல.
ஆபேரா பாலில்லா படையணி.
இந்த அமைப்புகள் சிலவற்றைப் பற்றி இப்போது ஆராய்வோம். முதலில் படைப்பிரிவுடன் ஆரம்பிப்போம். இது பற்றிய தகவல்கள் நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. எனினும் நமக்குத் தேவைப்படும் விவரங்கள் எல்லாம் இருப்பதாகக் கூற முடியாது. இது குறித்து எவரேனும் அதிக விவரங்கள் தந்தால் நலமாக இருக்கும். படைப்பிரிவின் சட்ட திட்டங்கள் கிடைக்குமாயின் உகந்ததாக இருக்கும்.
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் இரண்டு அடிப்படை அம்சங்களைக் காட்டவில்லை. ஒன்று, பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இன்று வரையிலும் படைப்பிரிவு அடைந்துவந்துள்ள மாற்றம்; இரண்டு, படைவீரர்கள் எந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அல்லாமல் அவர்களது கடமைகள், அவர்களது ராணுவப் பொறுப்புகள் அடிப்படையில் அதன் உள் கட்டமைப்பின் அடுக்கமைவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். பத்து வருடம் சேவை செய்யக் கூடிய அடிப்படையான ஒரு மையக் கருவை இன்று படைப்பிரிவு பெற்றிருக்கிறது. இது ஒரு முக்கியமான அம்சமாகும்.
இதற்கு முன்னர் இவ்வாறிருந்ததில்லை. முன்னர், படைப்பிரிவு ஸ்குவாட்ரிஸ்டுகளின் ஓர் அமைப்பாக இருந்தது. இன்றைய கட்டத்தை அடைவதற்கு அதற்குக் கால அவகாசம் பிடித்தது, அரசு எவ்வகையிலும் பொறுப்பேற்க விரும்பாத செயற்பாடுகளில் ஸ்குவாட்ரிஸ்மோ வடிவில் படைப் பிரிவைப் பயன்படுத்தவே ஆரம்பத்தில் பாசிசம் விரும்பிற்று. எல்லாத் துறைகளிலும் சர்வாதிபத்தியத்தைக் கட்டி வளர்க்க ஆரம்பித்தபோதுதான் படைப்பிரிவு தனது இப்போதைய வடிவத்தை எழுதத் தொடங்கிற்று.
ஸ்குவாட்ரிஸ்மோ கொலைகாரப் படையணி.
இன்று, இந்தப் படைப்பிரிவு தொழில்முறை படை வீரர்களைக் கொண்ட ஒரு மையத்தைக் கொண்டிருக்கிறது. அது இரண்டு பணிகளை ஆற்றுகிறது: ஓர் அரசியல் காவல் படையாக அச்சொல்லின் பரந்த அர்த்தத்தில் அது செயலாற்றுகிறது – காவல் படையாக மட்டுமன்றி, சமூக ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் அது செயல்படுகிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்; அண்மை ஆண்டுகளில் இந்த மக்கள் படையை மிகத் தீவிரமான சந்தர்ப்பங்களில்தான் பாசிசம் பயன்படுத்தி வருகிறது; சிறு சிறு இயக்கங்களைச் சமாளிப்பதற்கு ஒரு காவல் படையாகவும் கரபியனரியாகவும் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கு அவநம்பிக்கையை ஓரளவு பிரதிபலிக்கிறது.
இன்றைய பொருளாதார முரண்பாடுகளின் வர்க்கத்தன்மையைப் புரிந்து கொள்வது எளிது; சாதாரண விவசாயிகள் கூட அதனைப் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் கலகக் கொடி தூக்கும் விவசாயிகளுக்கு எதிராக மக்கள் படையைச் சேர்ந்தவர்கள் மிகப்பல சந்தர்ப்பங்களில் செயல்படுவதில்லை; மாறாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுதாபமே காட்டுகின்றனர். எனினும் இந்தப் போக்கில் மற்றொரு அம்சமும் பொதிந்துள்ளது: மிகப்பரந்த சமூக இயக்கங்களிலும், உள்நாட்டுப் போரிலும் தலையிடுவதற்கு இந்தப் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு அதற்கு உண்மையான இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறு அளவிலான ஸ்தல சச்சரவுகளைச் சமாளிப்பதற்கு அல்லாமல் மிகப்பரந்த வெகுஜன இயக்கங்களைக் கடுமையாக ஒடுக்குவதற்கு அது தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பணியை இராணுவப் பணியுடன் ஒப்பிடலாம். ஆனால் அதேசமயம் அரசியல் கட்டுப்பாடும் அதன்மீது திணிக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், டாங்கிகள் முதலிய எல்லாவிதமான ஆயுதங்களையும் கையாள்வதற்கு இன்று இப்படைப் பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. இதுவல்லாமல், போர் விமானங்கள், வானொலி, விஷ வாயு முதலியவற்றைப் பயன்படுத்தவும் அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசியல் போதனையும் அதற்கு அளிக்கப்படுகிறது.
அதன் இரண்டாவது பணி இத்தாலிய இராணுவ அமைப்பு சம்பந்தப்பட்டதாகும். இந்தப் படைப்பிரிவு எதிர்கால அதிகாரிகளின் அணியாக அமைந்திருக்கிறது. இதன் பணி ரெய்ச்ஸ்வரின் கீழ் படைக்கலைப்பு செய்யப்பட்ட ஜெர்மனியில் பூர்த்தி செய்யப்பட்ட பணியை ஒத்ததாகும்; இன்று இது 1 இலட்சம் வரை தொழில்முறை படைவீரர்களைப் பயிற்றுவித்து வருகிறது. மக்கள் படையை ஒரு இராணுவப் பிரிவாக்கும் முயற்சி இந்தப் போக்கில் வெளிப்படுவதைக் காணலாம். அவசியமாகும்போது வெகுஜனங்களையும் இராணுவ சேவைக்கு அழைக்க முடியும். எனவேதான் இத்தாலிய ஆயுதப்படைகளைப் பற்றி எண்ணும்போது சில கண்டிப்பான சேவை விதிகளைக் கொண்ட இராணுவத்தை மட்டுமே கருத்தில் கொள்ளக் கூடாது. மக்கள் படை இருப்பதால் கட்டாய இராணுவ சேவைக் காலத்தைப் பாசிசத்தால் குறைக்க முடியும். பிரான்ஸ் உட்பட ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த இதர நாடுகளிலுள்ளவற்றிலிருந்து மாறுபட்ட வகையைச் சேர்ந்த ஒரு இராணுவ அமைப்பை பாசிசத்தால் அமைக்க முடிந்திருக்கிறது. பாசிசத்தின் இராணுவ அமைப்பு ஏற்கெனவே நன்கு பயிற்சி பெற்ற அணிகளையும், வெகுஜனங்களை ஆயுதபாணிகளாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது, இவ்வகையான இராணுவ அமைப்பை உருவாக்குவதில் மக்கள் படை ஒரு கேந்திரப் பங்காற்றுகிறது.
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
1. ஆபேரா பாலில்லா : 1926 ஏப்ரலில் அமைக்கப்பட்ட ஆபேரா நாசியோனலே பாலில்லா: இத்தாலிய குழந்தைகள், இளைஞர்களின் பள்ளிக்கு வெளியிலான நடவடிக்கைகளை இதன் மூலம் ஆட்சி கட்டுப்படுத்தியது. ஆரம்பத்தில் சிறுவர்களுக்காக பல இணை ஸ்தாபனங்களாக இவை அமைக்கப்பட்டிருந்தன (பாலில்லா, பதினான்காம் வயதில் முன்னணிப் படை வீரர்களாகி இராணுவத்திற்கு முந்திய பயிற்சி பெற்றனர்). இளம் பெண்களுக்கும் (சிறிய இத்தாலியர்கள் இளம் இத்தாலியர்களாக ஆயினர்). 1930-ல் பதினெட்டு முதல் இருபத்தி ஒன்று வயதான இளைஞர்களுக்கு இளம் பாசிஸ்டுகள் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் தமிழில் : ரா. ரங்கசாமி பக்கங்கள் : 233 விலை : ரூ. 50.00 வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 08
சாஷா வகுப்பை நோக்கித் திரும்பினான்; அவன் கண்கள் சுருங்கியிருக்கின்றன, ஜன்னல் வழியே எங்கோ பார்க்கின்றன.
ஒன்றுக்குள் ஒன்றாக வட்டங்களிருந்த பலகையைக் காட்டி “இதில் 6 வட்டங்கள் உள்ளன” என்றும் அடுத்த பலகையைக் காட்டி “இதில் 5 வட்டங்கள் உள்ளன” என்றும் “எனவே, முதல் பலகையில் அதிக வட்டங்கள் உள்ளன” என்றும் கூறுகிறான்.
சிலர் சாஷாவுடன் விவாதித்தனர்: “இல்லை, ஓரிடத் தில் 6 வட்டங்களும் இன்னொரு இடத்தில் 5 வட்டங்களும் இருந்தால் என்ன; வலது புற பலகை பூராவும் வட்டங்கள் உள்ளதால் அங்கு தான் இவை அதிகம். இங்கு பார்த்தாயா எவ்வளவு வெற்றிடம்!”. ஆனால் சாஷா தான் சொல்வதே சரியெனப் பிடிவாதம் பிடித்தான். வகுப்பில் தனக்கு ஆதரவாளர்களைக் கண்டுபிடித்தான். “என்ன வித்தியாசம்? வட்டங்கள் சிதறிக் கிடந்தால் என்ன, ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தால் என்ன? ஆறு எப்பவுமே ஐந்தை விட அதிகம்!” என்றனர் அவர்கள்.
… ஒரு சில நாட்களுக்கு முன் இப்படியிருந்தது. இன்று இதே விஷயத்திற்கு நான் திரும்பி வருகிறேன்.
”நிமிர்ந்து பாருங்கள், யோசியுங்கள்!”
ஆனால் குழந்தைகள் தலையைத் தூக்கி படத்தின் மீது கண்பார்வைபட்டதுமே பலர் கைகளைத் தூக்கினர்.
“பாருங்கள், இலிக்கோ எப்படி யோசிக்கிறான். அவன் பதில் சொல்ல அவசரப்படவில்லை. நீங்களும் முதலில் யோசியுங்களேன்?”
எல்லோரும் கைகளைக் கீழே போடுகின்றனர், கரும்பலகையை கவனமாக உற்று நோக்கும் இலிக்கோ மீது கண்பார்வைகள் செல்கின்றன. அவன் தனக்குள்ளாகவே ஏதோ கூறியபடி விரலால் சுட்டிக்காட்டி சதுரங்களை எண்ணுகிறான்:
ஒரு நிமிட சிந்தனை… குழந்தைகள் மீண்டும் கைகளை உயர்த்துகின்றனர். ஒவ்வொருவரின் அருகேயும் குனிந்து பதிலைக் கேட்கிறேன். B என்ற தொகுதியை விட A தொகுதியில் சதுரங்கள் அதிகமிருப்பதாக ஏற்கெனவே 6 அல்லது 8 குழந்தைகள் என் காதில் சொல்லி விட்டனர். “இல்லை, தப்பு” என்று ஒவ்வொருவர் காதிலும் நான் திரும்பச் சொன்னேன். ஆனால் ஏக்கா, B என்ற தொகுதியில் பத்து சதுரங்களும் A தொகுதியில் ஒன்பதும் இருப்பதாக என் காதில் கூறினாள்.
“ஏக்கா சரியாகச் சொன்னாள்” என்று கூறுகிறேன்.
“நன்றி, ஏக்கா!” என்று அவள் கையைப் பற்றிக் குலுக்குகிறேன்.
நீக்கா, இராக்ளி, நாத்தோ, இயா, கீயா, மாக்தா முதலானோர் தவறாக பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு சதுரங்கள் என்று எண்ணிப் பாருங்கள்!” அவர்களுக்கு நான் யோசனை சொல்கிறேன். கீகா, சான்த்ரோ, தேயா, மாயா, நீயா, தேன்கோ ஆகிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உரக்க ”நன்றி” சொல்லி, கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.
யோசித்து, நல்ல விடையை கண்டுபிடித்து, அதைச் சொல்லி நிரூபிக்கும் போது நான் குழந்தைகளுக்கு “’நன்றி” சொல்லி அவர்களின் கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.
கல்வியின் பால் ஆர்வத்தையும், சுய முயற்சியையும், சிந்தனையையும், துணிவையும் விடா முயற்சியையும் குழந்தை வெளிப்படுத்தும் போது நான் குழந்தைக்கு “நன்றி” சொல்கிறேன். தன் வளர்ப்பிலும் கல்வியிலும் இதன் மூலம் அவனே என் உதவியாளனாகிறான். குழந்தையின் ஒவ்வொரு முயற்சியையும், தன் வளர்ச்சியில் இன்னுமொரு கட்டத்திற்கு உயர அது மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊக்குவிக்க வேண்டும். எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் நட்பையும் வெளிப்படுத்துவதை விட இதற்கு வேறு வழி எனக்குத் தெரியாது.
…சரி, இன்றுள்ள நிலை என்ன? என் வகுப்புக் குழந்தைகளால் இந்த இடையூறுகளைக் கடக்க முடியும். அனேகமாக பயிற்சியும் கல்வியும் இப்போக்கை விரைவுபடுத்தக் கூடும்.
“வாருங்கள், A தொகுதியில் எவ்வளவு சதுரங்கள் உள்ளன என்று எண்ணுவோம்” என்று நான் முன்மொழிகிறேன்.
ஒன்றுசேர்ந்து எண்ணினோம். ஒன்பது சதுரங்கள் இருக்கின்றன. இதைப் படத்தின் கீழ் எழுதுகிறேன்.
B தொகுதியில் உள்ள சதுரங்களை எண்ணினோம். அதில் பத்து சதுரங்கள் இருக்கின்றன. இதை அந்தப் படத்தின் கீழ் எழுதுகிறேன்.
“எதில் அதிக சதுரங்கள் உள்ளன?”
“B தொகுதியில்” என்று வகுப்பு முழுவதும் சேர்ந்து சொல்லுகிறது. சிறிது நேரத்திற்கு முன்னர் தான் வேறுவிதமாகக் கூறிய குழந்தைகள் கூடத் தம்மை மாற்றிக் கொண்டனர்.
“அப்படியெனில் A தொகுதியில் அதிக சதுரங்கள் உள்ளதாக ஏன் ஒரு சிலருக்குத் தோன்றியது?”
தான் ஏன் தவறு செய்தேன் என்று மாக்தா எப்படி விளக்கப் போகிறாள்!
“இதில் பலகை முழுவதும் சதுரங்கள் சிதறிக் கிடப்பதால் B தொகுதியை விட இதில் அதிக சதுரங்கள் இருப்பதாக எனக்குப்பட்டது.”
இராக்ளி (இவனும் முதலில் தவறான பதிலைச் சொன்னான்) பின்வருமாறு கூறுகிறான்: “அவை எப்படி சிதறியுள்ளன என்று பார்க்க வேண்டாம், அவற்றை எண்ணி ஒப்பிட வேண்டும். சிந்திக்க வேண்டும்!”
“ஆம், எப்போதும் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குப் பிடித்துள்ளன என்று “எனக்குத் தெரிகிறது.”
“ஆம், மிகவும் பிடித்துள்ளன.”
“அப்படியெனில், யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் பாடங்கள் முடிந்த பின் என்னிடம் வாருங்கள். இப்படிப்பட்ட கேள்விகள் பல அடங்கிய பாக்கெட்டைத் தருவேன்.”
எல்லோரும் இப்பாக்கெட்டை வாங்க விரும்பினார்கள். அவர்கள் இரண்டு முறை இப்படிப்பட்ட கேள்விகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர், இதோ இப்போது மீண்டும் கேட்கின்றனர். ஆண்டு பூராவும் பல்வேறு விதமான கேள்விகளை பாக்கெட்டுகளில் பன்முறை தருவேன்; ஒவ்வொரு முறையும் “யாருக்கு வேண்டும். விருப்பமிருந்தால்!…” என்று கூறியபின் தான் தருவேன். கடினமான அல்லது எளிதான கேள்விகள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யும்படி விட்டு விடுவேன். ஓரிரு நாட்களுக்குப் பின் பதில்கள் வந்ததும் அவற்றை அந்தந்த குழந்தையோடு சேர்ந்து ஓய்வு நேரத்தில் சரிபார்ப்பேன், பின் அவரவரைப் பற்றிய தனிக் கோப்பில் அவற்றைச் சேர்ப்பேன்.
இம்முறை பின்வரும் கேள்விகள் அடங்கிய அட்டைகளை பாக்கெட்டுகளில் போட்டேன்:
“கவலைப்படாதீர்கள். விருப்பப்படும் அனைவருக்கும் பாக்கெட் கிடைக்கும். இப்போது வடிவ கணிதப் படங்கள் உள்ள பெட்டிகளைத் திறந்து வையுங்கள்.”
“ஓ!” என்று உற்சாகம்.
ஒவ்வொரு பெஞ்சின் மீதும் ஒவ்வொரு குழந்தைக்கும் முன்னும் சிறிய, தட்டையான பிளைவுட் பெட்டி உள்ளது (பெற்றோர்களுக்கு நன்றி!). அதில் “மந்திர” விளையாட்டுகள் உள்ளன. பேராசிரியர் பி. இ. ஹச்சாபுரீத்ஸே இவற்றைக் கண்டுபிடித்தார். இவற்றில் வட்டம், முக்கோணம், சதுரம், செவ்வகம், முட்டையுரு ஆகிய வடிவங்களாலான அட்டைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் மூன்று அளவுகளும் (பெரிய, நடுத்தர, சிறிய) நான்கு நிறங்களும் (சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள்) உள்ளன. ஆக 12 வட்டங்கள், 12 முக்கோணங்கள்….. என்று மொத்தமாக 60 அட்டைகள் பெட்டியில் உள்ளன.
முதலில் எளிய கட்டளைகளைத் தந்தேன். ஒரே விதமான வடிவங்கள், பெரிய அல்லது சிறிய வடிவங்கள், சிவப்பு, பச்சை… நிறங்கள் போன்றவற்றை மட்டும் தனியே எடுக்கும்படி சொன்னேன்… ஒவ்வொரு முறையும் குழந்தைகள் அந்தந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட வடிவங்களை மட்டும் பகுப்பாய்வு செய்தனர். பின், இரண்டு குணங்கள் (அளவு, நிறம்), மூன்று குணங்களுக்கேற்ப (வடிவம், அளவு, நிறம்) அட்டைகளைச் சேர்க்க சொல்லித் தந்தேன். அட்டைகளுக்கிடையே ஒற்றுமையையும் வேற்றுமையையும் கண்டுபிடிக்கச் சொல்லித் தந்தேன். அதே சமயம் எல்லா வடிவங்களின் பெயர்களையும் குழந்தைகள் கற்று வந்தனர்.
இப்படிப்பட்ட கணக்குகளைப் போட்ட பின் கற்பனையில் இறங்குமாறு அவர்களுக்கு முன்மொழிந்தேன்: இவற்றைக் கொண்டு உதாரணமாக விமானங்கள், விண்வெளி இராக்கெட்டுகள், கப்பல்கள், கார்கள், வீடுகள் போன்றவற்றைக் கட்டுமாறு கூறினேன். நானும் அவர்களோடு சேர்ந்து கற்பனையில் மூழ்கினேன்: மேசையிலிருந்த பெரிய வடிவங்களை எடுத்து கப்பல்களையும் கார்களையும் கட்டினேன். சிலருக்கு என் “கற்பனைகள்” பிடிக்கவில்லை, இவற்றில் ஏதோ சரியில்லை, பொருத்தமில்லை என்று கண்டுபிடித்தனர், இவற்றைச் சரி செய்து, மேம்படுத்த உதவினர்.
இரண்டு நாட்களுக்கு முன் சிக்கலான கணக்கைக் கொடுத்தேன்.
கேள்வி:பட்டத்துக்கு வந்துவிட்ட “மூன்றாம் கலைஞர்” என்று பிளெக்ஸ் – டிஜிட்டல் – கடவுட்-களில் ஜொலிக்கிற உதயநிதி பற்றி உங்களின் பார்வை ..? கார்பொரேட் அரசியல் கட்சிகளில் இது சாதாரணம் என்று “மௌனமாக” இருக்கப் போகிறீர்களா ..?
– எஸ். செல்வராஜன்
அன்புள்ள செல்வராஜன்,
கார்ப்பரேட் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேமுதிக, பாமக போன்ற லோக்கல் கட்சிகளிலும் இதுதான் நிலைமை. முன்பெல்லாம் வாரிசு அரசியல் என்ற வாதம் நடைபெறுமளவுக்கு இருந்த நிலைமை, தற்போது அப்படி வாதிட்டு பயனில்லை என்ற நிலைமையை அடைந்து விட்டது.
உதயநிதி ஸ்டாலின் சில வருடங்களுக்கு முன்பு திடீரென திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார். ஏதோ அப்பா கொடுத்த பாக்கெட் மணியை வைத்து சகஜமாக படம் தயாரிப்பது போல அவரது படக்கம்பெனி துவக்கப்பட்டது. பின்னர் திடீரென நடிகரும் ஆனார். தற்போது சில பல படங்களில் ‘நடித்து, பாடி, ஆடி’ முகத்தை மக்கள் திரளிடம் பதிய வைத்தார். அப்புறம் என்ன? அடுத்து “இளைஞரணி செயலாளர்”தான்.
தி.மு.க போன்ற தரகு முதலாளிகளின் கட்சியில் வாரிசுரிமை என்பது குடும்ப அரசியலாக மாவட்டம், வட்டம் வரை பிரதிபலிக்கிறது. ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.
கனிமொழியின் மகன் ஆதித்தியன் எப்போது பட்டத்துக்கு வருவார் என்று தெரியவில்லை. இந்நிலைமை அ.தி.மு.க, பாஜக, காங்கிரசு என்று எல்லாக் கட்சிகளிலும் வழிந்தோடுகிறது. ஒய்.எஸ்.ஆர் மகன் ஜெகன் மோகன் தந்தையின் மரணத்திற்கு பிறகு கட்சி ஆரம்பித்து முதல்வரே ஆகிவிட்டார். தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளை எம்.பி தேர்தலிலே நிறுத்தினார்.
சென்ற பாராளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒட்டி நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் பல தலைவர்கள் தமது வாரிசுகளுக்கு சீட் கேட்டு மிரட்டினார்கள் என்று ராகுல் காந்தியே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரும் நேரு குடும்பம் இன்றி காங்கிரசு கடைத்தேற முடியாது என்று அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்தான். பாஜக-வில் மாநில அளவில் பல்வேறு வாரிசுகள் களமிறக்கப்படுகிறார்கள். இன்னும் லல்லு, முலாயம் போன்ற சமூகநீதிக் கட்சிகளிலும் மகன்களே அடுத்த தலைவர்களாக அரியணை ஏறியிருக்கிறார்கள்.
இப்படி கட்சிகளில் வாரிசுகள் நேரடியாக களமிறக்கப்படுவதனால் என்ன நட்டம்? அக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் என்ற வஸ்து இருக்காது; இல்லையென்றால் பெயரளவுக்கு இருக்கும். தி.மு.க போன்ற கட்சிகளில் கூட பெயரளவுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை வைத்திருக்கிறார்கள். கட்சியின் தலைவர், செயலர், பொருளாளர் போன்றோர் கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவை போக உள்ள பதவிகள், எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் எல்லாம் நியமனமாக உட்கட்சி தேர்தல் இன்றி நியமிக்கப்படுகின்றனர்.
நாம் தமிழர், தேமுதிக, பாமக போன்ற கட்சிகளில் அனைத்துமே நியமனம்தான். அங்கே பெயரளவுக்கு கூட தேர்தல் கிடையாது. சீமான் போன்றோர் கட்சியை தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ் போல பாவிக்கிறார்கள். அன்புமணி, சுதீஷ், பிரேமலதா போன்றோர் எந்த தகுதியுமின்றி அரசியலுக்கு வந்து குடும்பம் போல கட்சிகளை நிர்வகித்து வருகிறார்கள்.
இப்படி கட்சிகள் அனைத்தும் குடும்பமயமாகி வருகின்றன. ஜெயா உயிரோடு இருந்த போது கூட அவர் நினைத்தால் யாரையும் எந்த பதவிக்கும் நியமிப்பார் என்ற நிலைமை இருந்தது. அதனால் பலருக்கு அதிர்ஷடவசமாக பதவிகள் கிடைத்தன. இங்கேயும் ஜனநாயகம் இல்லை. அம்மா மனது வைத்தால் வார்டு கவுன்சிலர் கூட நாடாளுமன்ற மேலவை எம்.பி-யாக மாறலாம். தி.மு.க.வில் இந்த அதிருஷ்டங்கள் இல்லவே இல்லை எனலாம். மாவட்ட அளவிலேயே வாரிசுகளுக்குத்தான் பதவிகள் என்பது பெரும்பான்மையாக இருக்கிறது.
கட்சித் தொண்டர்களும் இத்தகைய குடும்ப அரசியல் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. மாறாக கட்சி தனக்கு என்ன செய்தது என்று அதாவது தான் சம்பாதிப்பதற்கு என்ன வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே பார்க்கிறார்கள். உள்ளூர் தலைவர்களிடம் கல்லூரி சீட்டுக்கள், அரசு மானியங்கள், இலவச வீடுகள் – பொருட்கள், நிவாரண நிதிகள் போன்றவை சுமூகமாக கிடைக்கிறதா, அதில் கொஞ்சம் கமிஷன் அடிக்கலாமா என்பதே அவர்களுடைய கவலையாக இருக்கிறது. அதிமுக போன்ற கட்சிகள் இப்படித்தான் தனது கீழ்மட்ட தொண்டர் படையை தீனி போட்டு நடத்துகிறது.
கீழ்க்கண்ட பகுதி தேர்தல் முடிவுகளை ஒட்டி எழுதப்பட்டது. வெளியிடப்படாத அந்தக் கட்டுரையை இங்கே பொருத்தம் கருதி இணைக்கிறோம்.
♦ ♦ ♦
“இன்டர்ஸ்டெல்லர்” படத்தில் ஒரு வசனம் வரும் “மரிப்பதற்கு முன்னால் கணிசமான அளவு ஆண்கள் தமது குழந்தைகளை நினைத்துக் கொள்கிறார்கள்”. இப்படி குடும்பம் குழந்தை வாரிசு என்பது ஏதோ அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. கோலிவுட் முதல் பாலிவுட் வரை குடும்பத்தின் சென்டிமென்ட் இல்லாத ஒரு கதையோ காட்சியோ பார்க்க இயலாது.
ஹாலிவுட் படங்களில் கதை சொல்லும் பாணியில் ஒரு விசயத்தை கவனித்திருக்கலாம். நாயகர்களுக்கு குடும்பம் உண்டு மனைவி உண்டு பிள்ளை உண்டு. அவர்கள் விண்வெளிக்கு செல்பவர்களாக இருக்கலாம்; சிஐஏவின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு ஈராக்கில் ஏஜெண்டுகளை இயக்குபவர்களாக இருக்கலாம்; அமெரிக்க அதிபராக இருக்கலாம்; எகிப்து அல்லது தென்னமெரிக்காவின் தொல்லியல் தடயங்களைப் பின்பற்றி ஆய்வு செய்யும் பேராசிரியராக இருக்கலாம்; அனைவரும் குடும்பஸ்தராக இருப்பதோடு தமது அபாயகரமான அல்லது குடும்பத்தை பிரிந்திருந்து செய்யும் முக்கியமான பணிகளுக்கிடையே குடும்பத்தை நினைப்பதும் இறுதிக்காட்சியில் மனைவி குழந்தைகளோடு ஒன்று கூடுவதும் ஒரு முக்கியமான விடயம். ஆனால் வில்லன்களுக்கு இந்த பாக்கியத்தை ஹாலிவுட் படைப்பாளிகள் கொடுப்பதில்லை.
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொறியியல் கல்லூரி பேருந்துகள் வந்து நிற்கும்போது ஒரு காட்சியை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம். நடுத்தர வயதில் கவலையுடன் இருக்கும் ஒரு தந்தை அருகே பொறியியல் படிக்கும் ஒரு மகள்.
ஏன் அந்த மகள் வீட்டில் இருந்து தனியாகவோ இல்ல வாகனத்திலோ இல்ல வேறு நண்பர்களோடு கூடவோ பேருந்து செல்லும் இடத்திற்கு வருவதில்லை. அல்லது கல்லூரி தொடர்பான வேறு பயணங்கள்; தேர்வு தொடர்பான பயணங்கள்; மேற்படிப்பு அல்லது வேலை தேடும் பயணங்கள் அத்தனையிலும் இந்த சால்ட் அன்ட் பெப்பர் தந்தைகள் உடன் பயணிக்கிறார்கள். அப்போது அவர்கள் முகத்தை கண்டால் இது என் மகள் இது என் ரத்தம், அவ்வளவு நல்லது கெட்டது அனைத்தும் எண்ணில் குடிகொண்டிருக்கிறது என்பதான ஒரு பாச – நேச அல்லது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு உணர்ச்சியை அந்த முகங்களில் பார்க்கலாம்.
மனிதகுலம் சொத்துடைமையை மையமாக வைத்து, வர்க்கங்களாக பிரியும் பொழுது தமது சொத்துக்களை காப்பாற்றுவதற்கும், கை மாற்றுவதற்கும் அவர்கள் கண்டுபிடித்த முதன்மையான நிறுவனமே குடும்பம்தான். நல்லது இப்போது நாம் தலைப்புக்கு திரும்புவோம்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 20 திமுக வேட்பாளர்களில் ஆறு வாரிசுகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 4 பேர் வாரிசுகளாகவும் இருந்தனர்.
இவர்களில் கனிமொழி, தயாநிதி மாறன் போக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி, பொன்முடி மகன் கவுதம் சிகாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்க வாரிசுகளாக களமிறக்கப்பட்டார்கள். துரைமுருகன் போன்றோர் பேட்டியளிக்கும் போது இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஒரு அலட்சியம் நிச்சயம் இருக்கும்.
அதிமுகவைப் பொறுத்தவரை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன், மற்றும் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், பீச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் ஆகிய வாரிசுகளும் களமிறங்கினர்.
கட்சிகளில் வாரிசுகள் களமிறக்கப்பட்டாலும் அவர்கள் கண்டிப்பாக மக்களின் ஓட்டுக்கள் வாங்கித்தான் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ பதவி ஏற்க முடியும். அந்த அளவுக்காவது அவர்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அந்த நிபந்தனை கூட இல்லை. எல்லாம் பகிரங்கமான வாரிசு அரசியல்தான்.
தாதுமணற் கொள்ளையர் வைகுண்டராசனின் வாரிசு நியூஸ் 7 சானலையும், கல்விக் கொள்ளையர் பச்சமுத்துவின் வாரிசு புதிய தலைமுறை சானலையும் நிர்வகிக்கின்றன. பிறகு அம்பானி, அதானி, அகர்வால், டாடா, டி.வி.எஸ், தி இந்து குழுமம் என எந்த நிறுவனத்தை எடுத்தாலும் இந்தியாவின் தரகு முதலாளிகளின் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் வாரிசு அரசியல்தான். அரசியல்வாதிகளின் வாரிசுகள் களமிறக்கப்படுவதை விட கார்ப்பரேட்டுகளின் வாரிசுகள் களமிறக்கப்படுவதுதான் முக்கியமான பிரச்சினை என்றார் அருந்ததி ராய்.
அரசியல்வாதிகளை ஏஜெண்டுகளாக வைத்துக் கொண்டு நாட்டு வளத்தை இந்த வாரிசுகள்தான் கொள்ளையடிக்கிறார்கள். யாரும் தொழிற்முறையில் சாதனைகள் செய்து பதவி ஏற்பது கிடையாது. அப்பன் சொத்து மகனுக்கு என்ற முறைப்படி நிறுவனங்களுக்கு வருகிறார்கள். தனது அப்பாக்கள் என்னென்ன முறையில் ஊழல் செய்து தொழில் சாம்ராஜ்ஜியத்தை படைத்திருக்கிறார்கள் என்ற குறுக்கு வழியிலேயே பயணிக்கிறார்கள். அதற்காக கட்சிகளுக்கு குறிப்பாக பாஜக-விற்கு நன்கொடையை கொட்டிக் கொடுக்கிறார்கள். இயல்பிலேயே மக்கள் மீது வெறுப்பும், கட்சிகள் மீது எரிச்சலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இப்படி நேரடியாக வரும் கார்ப்பரேட் வாரிசுகள் மூலம் நாட்டு மக்களை ஒடுக்கும் பல்வேறு திட்டங்கள் அரசாங்கங்களின் மூலம் வருகின்றன. மக்களுக்கு பதில் சொல்வதற்கு கடமைப்பட்டவர்கள் அல்ல என்பது இந்த கார்ப்பரேட் கட்டமைப்பிலேயே இருப்பதால் அவர்கள் இயல்பிலேயே அப்பன்களை விட அதிகமாய் மக்களை வெறுக்கும் நிலையை அடைகிறார்கள்.
இவர்களுக்குத்தான் நாம் முன்னர் கண்ட அரசியல் வாரிசுகள் சேவை செய்கிறார்கள். ஊடகங்கள் ஆளும் கட்சி சார்பாக இருப்பதற்கு காரணம், அந்த ஊடக நிறுவனங்களின் வாரிசு தலைமைகள்தான். இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்தக் கூட்டணி வேலை செய்கிறது. எனவே கார்ப்பரேட் வாரிசுகளை நாம் முதன்மையாக அம்பலப்படுத்த வேண்டும். கட்சி வாரிசுகளை அதற்கடுத்த அளவில் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
தனிநபர்களை மரபணு அடிப்படையில் அடையாளப்படுத்துவதற்கு வகை செய்யும் “மரபணு தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா” பாராளுமன்றக் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று (ஜூலை 8-ம் தேதி) இந்த மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் ஆட்சேபங்களுக்கு இடையே அறிமுகம் செய்துள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதே போன்ற ஒரு மசோதா கடந்த ஜனவரி மாதம் கீழவையில் நிறைவேற்றப்பட்டது; எனினும், மேலவையில் பாரதிய ஜனதாவுக்குப் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.
முந்தைய பாராளுமன்றக் கீழவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அப்போது நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாததாகி விட்டதால், மீண்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவது முறையாக பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்மசோதாவுக்கான அடித்தளம் 2003-ம் ஆண்டே (வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே) போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திருத்தங்களுக்குப் பின் 2015-ம் ஆண்டு இறுதி வடிவத்தை எட்டிய இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
விசாரணைக் கைதிகளின் மரபணுக்களை சேகரிப்பதற்கு வகை செய்யும் இந்த மசோதா அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என பாராளுமன்றக் கீழவையின் காங்கிரசு உறுப்பினர்களின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும் மரபணுத் தரவுகளை சேமித்து வைப்பது குறித்து தனிநபர்களின் விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இம்மசோதா “கண்காணிப்பு அரசு” (“surveillance state”) என்பதை நிறுவனமயமாக்கி விடும் என்கிறார் காங்கிராசு கட்சியின் மற்றொரு உறுப்பினர் சசி தரூர். முதலில் மரபணுத் தரவுகளுக்கான பாதுகாப்புச் சட்டமே இல்லாத நிலையில் மரபணுக்களை சேகரிக்க வகை செய்யும் சட்டம் என்பது “குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதற்கு” ஒப்பானது என அவர் விமரிசித்துள்ளார்.
எனினும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளில் எந்தப் பொருளும் இல்லை என்கிறார். பலசுற்று விவாதிக்கப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த சட்ட மசோதா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதாவின் படி, மரபணு தரவுகளை சேமிக்க தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் “தரவு வங்கிகள்” நிறுவப்படும். இதில் சந்தேகத்திற்குரியவர்கள், விசாரணைக் கைதிகள், குற்றவாளிகள், இறந்து அடையாளம் தெரியாதவர்கள் ஆகியோரின் மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு இந்த வங்கிகளில் சேமிக்கப்படும். அதே போல் மரபணு ஒழுங்கமைப்பு வாரியம் ஒன்றும் அமைக்கப்படும். மேலும், மரபணுச் சோதனைச் சாலைகள் இந்த ஒழுங்கமைப்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மசோதாவின்படி, தனிநபர்களிடம் மரபணுக்களை சேகரிக்க எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை. அதே நேரம், ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களிடம் எந்த அனுமதியும் இன்றி மரபணுக்களை சேகரிக்க முடியும். நீதிமன்ற உத்தரவைப் பெற்றே மரபணு விவரங்களை நீக்க முடியும். மரபணு தடய அறிவியலின் மூலம் சட்டபரிபாலனத்தை பராமரிக்க முடியும் என்கிறது மத்திய அரசு.
இந்த மசோதாவை உருவாக்கும்போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “புட்டசாமி எதிர் இந்திய அரசு” வழக்கின் தீர்ப்பில் தனியுரிமை என்பது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை என்கிறது உச்சநீதிமன்றம். எனினும், இந்த தீர்ப்பை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதற்கு மத்திய சட்ட கமிசன் ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளது. “இந்திய நிலைமைகளின் கீழ் தனியுரிமை என்பது அரசியல் சட்டப் பிரிவு 21-ன் கீழ் வருமா இல்லையா என்பது துறைசார் வல்லுநர்களால் விவாதிக்கப்பட வேண்டியது. மேலும் இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்கிறது மத்திய சட்டக் கமிசன்.
இரண்டாவதாக, நீதியரசர் சிறீகிருஷ்ணா அறிக்கையில் இந்தியர்களுக்கு தங்களைக் குறித்த “மின் தரவுகளின்” மேல் உள்ள உரிமைகளைக் குறித்து சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என முன்மொழிந்துள்ளது. அதன்படி தனிநபர்களின் மின் தரவுகளை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அபராதத்திற்குரிய குற்றமாக கருத வேண்டும் என்கிறது அந்த அறிக்கை. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதா மரபணு தரவுகளை சேகரிப்பது குறித்து பேசுகிறதே தவிர, அப்படி சேகரிக்கப்பட்டு மின் தரவுகளாக இருக்கும் விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கவில்லை.
மூன்றாவதாக, மத்திய அரசு மரபணு தரவுகளை சேமிக்கும் தரவு வங்கிகளுக்காக 20 கோடி செலவிட்டாலே போதும் என்கிறது. ஆனால், தி வயர் இணையதளம் நடத்திய ஆய்வின் படி தற்போது கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மட்டுமே மரபணுக்களை சேகரிக்க ரூ. 1,800 கோடி செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் இவ்வாறு மரபணு ரீதியில் வகைபிரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ, அதைக் குறித்த தொழில்நுட்ப அறிவோ, குற்ற விசாரணைகளில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டுதலோ இந்தியாவில் இல்லை. அடுத்து, மரபணு சேகரிக்கும் மத்திய அரசு அமைப்பான CDFD, தன்னிடம் மாதிரிகளை சமர்ப்பிப்பவர்களின் சாதி விவரங்களையும் கட்டாயமாக கோரிப் பெறுகிறது. இவ்வாறு மரபணு ரீதியிலான வகைபிரித்தல் குடிமக்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதற்கே வகை செய்வதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, மரபணு வங்கிகளை நடத்தும் பொறுப்பை அம்பானி – அதானி போன்ற முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. மொத்த நாட்டின் மக்கள் அனைவரின் மரபணு விவரங்கள் சில தனியார் முதலாளிகளின் கையில் சிக்குவது நமது எதிர்காலச் சந்ததியினரின் குடுமியை நாமே அவர்கள் கையில் பிடித்துக் கொடுப்பதற்கு ஒப்பானதாயிருக்கும்.
மேலும் இந்த மசோதா அமலுக்கு வரும்பட்சத்தில் அரசியல்ரீதியான போராட்டங்களில் கைதாகி சிறை செல்லும் புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரையும் மரபணு வங்கிகளில் சேகரித்து வைத்து போராடும் சக்திகளை ஒடுக்க முடியும். ஆதார் அடையாளத்தோடு இனி மரபணு அடையாளமும் நாட்டு மக்களை ஒடுக்க கண்காணிக்க, மிரட்ட வந்து கொண்டிருக்கிறது.
வருடாந்திர பருவமழை காரணமாக, மும்பையின் பெரும்பாலான பகுதி இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. கட்டுப்பாடற்ற கட்டுமானப் பணிகள், குப்பைகளால் அடைப்புக்குள்ளான நீர் வழிகள் – வடிகால்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
கடும் பருவமழை காரணமாக மும்பையில் சுவர் இடிந்து மட்டும் 27 பேர் கொல்லப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடும் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது.
கடுமையான பருவமழை காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்லும் மக்கள்.
மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான மலாட்-இல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் வசித்த குடிசைப் பகுதி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.
கல்யாண் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.
மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் கனமழை காரணமாக குடிசைகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 18 பேரைக் கொன்றது.
மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 1, 2-ம் தேதிகளில் மட்டும் மும்பையின் சில பகுதிகளில் 300மி.மீ.-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாக பயணிக்கும் சில புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இடைவிடாத கனமழை காரணமாகவும், மேலும் கனமழை பொழிவு இருக்கும் என்ற வானிலை முன் அறிவிப்பின் காரணமாகவும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சுவர் இடிந்துவிழுந்ததில் தனது குடும்பத்தை இழந்த பெண் கதறுகிறார்.
மீட்புப் பணி இன்னும் முடியவில்லை. இதுவரை 2 டசனுக்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார் ஒரு தீயணைப்பு வீரர்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையான ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், இந்தியாவில் பலமில்லாத அடித்தள கட்டுமானத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுவது வாடிக்கையாக நிகழும் ஒன்றாகிவிட்டது.
ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் மும்பையின் சில இடங்களில் 300மி.மீ.க்கும் அதிகமான மழையளவு பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் நகரத்தின் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவித்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘எழுந்தருளும்’ அத்தி வரதர் வைபவத்தால் தமிழ்நாட்டின் எட்டுத் திக்கிலும் ஊடகங்கள் பரபரக்கின்றன. வணிக ஊடகங்களின் விளம்பரத் தீயில் உள்ளூர் மக்களும், ஏழை பக்தர்களும் நாளும் வதைப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
அரசு – அதிகார வர்க்கமும், உயர்மட்டப் பார்ப்பனக் கூட்டமும் ஒன்று சேர்ந்து இங்கு, விழா நிர்வாக வேலை என்ற பெயரில் தினவெடுத்துத் திரிகின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள், தொழிலுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் அல்லலுறுகின்றனர். காஞ்சிபுரம் நகரையே திறந்தவெளி கொட்டடியாக மாற்றியுள்ளது, போலீசு.
இரண்டு, நான்கு சக்கரம் ஓட்டுவதற்குக் கூட உள்ளூரில் கட்டுப்பாடு. ஒரு மாதத்துக்கு முன்னரே வண்டி எண் குறித்துக் கொடுத்து, அதிகார வர்க்கத்திடம் அனுமதிச் சீட்டு வாங்கியிருக்க வேண்டும். அப்படி வாங்கியிருந்தாலும் ஓட்டும்போது மரியாதையின்றிப் பேசி அலைக்கழிக்கின்றனர். அபராதம் விதிக்கின்றனர். காஞ்சிபுரத்திற்குள் திடீரேன பொதுப் போக்குவரத்தை குறைத்தும்; நிறுத்தியும் திட்டமிட்டு அத்தி வரதர் கூட்ட நெரிசலை வடியாமல், குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டம். பத்து லட்சம் பக்தர்கள் குவிந்தனர் என்று பரவசக் கதைகளை பரப்புகின்றனர். குவிந்த கூட்டத்திற்கு அவசர ஏற்பாடுகள் செய்வதாகக் கூறி நிர்வாக முறைகேடுகளிலும், பகல் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர்.
ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம். தற்போதைய திடீர் கூட்ட நெரிசலால் குடிநீர், சுகாதாரப் பாதுகாப்பு அனைத்தும் தறிகெட்டுக் கிடக்கிறது. குடிக்கவே முடியாதபடி குளோரின் நீரை கொடுக்கின்றனர். போதுமான கழிப்பிட வசதி செய்ய வக்கற்ற அதிகார வர்க்கம், போலீசு, பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்களை வதைப்பதோடு உயிரையும் எடுத்து படுகொலையும் செய்கிறது.
அத்திவரதர் விழா தொடங்கியதும் நேரடியாக அதிகாரவர்க்கத்தால் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் :
ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியிலிருந்து வந்த வயதான பார்ப்பன குடும்பத்தினர் அத்தி வரதரை தரிசித்துவிட்டு திரும்பும்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை சன்னதிற்குள்ளேயே லத்தியால் தாக்கி பிணமாக அனுப்பியது. காரணம், ‘அத்தி வரதரை செல்ஃபி’ எடுத்ததாகவும், அதை வாங்கி அழிக்க சொன்னதை அவர் மறுத்ததாகவும், அதற்காக அவரை எச்சரித்ததாகவும் வழக்கமாகப் பொய் செய்தியைப் பரப்பியது போலீசு.
போலீசு தாக்கியதால் உயிரிழந்த ஆந்திர இளைஞர் (படம் : நன்றி விகடன்)
உண்மையில் அந்த இளைஞர் கோவிலின் சுற்றுச்சுவரில் கருங்கல் புடைப்பில் செதுக்கி இருக்கும் பல்லியை தன் ஃபோனில் படம் பிடித்துள்ளார். இதற்குதான் வெறிபிடித்த மாதிரி அவர்மீது பாய்ந்த பெண் போலீசு லத்தியால் அவர் முன் மண்டையில் அடிக்க அங்கேயே அவர் சுருண்டு விழுத்தார். அப்போதும் அவரை கவனிக்கவில்லை. குடும்பத்தினர் பதறி அழுதபோதுதான், அவர் இறந்தது தெரிந்தது. உடனே போலீசு, ”அவர் மாரடைப்பில் இறந்தார். வலிப்பு நோயில் இறந்தார்” என்று சுருட்டி ஆந்திராவுக்கு பிணமாக அனுப்பியது.
காஞ்சிபுரம் – அய்யம்பேட்டை புறநகரைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் குமார். இவரை எம்.ஜி.ஆர். குமார் என்றே அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அழைப்பார்கள். அந்த அளவிற்குத் தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகர். கடந்த 20 ஆண்டுகளாக காஞ்சிபுரம் நகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுபவர். நாற்பது வயதுடைய அவருக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஷேர் ஆட்டோ வருமானத்தில்தான் அவர்களை படிக்க வைத்து குடும்பத்தை நடத்தியுள்ளார். அவரையும் அத்தி வரதருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டப் பகலில் படுகொலை செய்தது போலீசு. அவர் குடும்பப் பிரச்சினையாலும், கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்டதாக, வழக்கம்போல பொய்ச் செய்தியை பத்திரிகையில் பரப்பியது.
தற்போது நிற்கதியாக நிற்கும் குமாரின் குடும்பத்தை காண வினவு சார்பில் சென்றிருந்தோம் :
“அன்னைக்கு மதியம் ஒண்ணேகாலுக்கு சாப்பாட்டுக்கு வந்தாரு, நான் சொல்லி அனுப்புன, டூத்பேஸ்ட், பிரசு, மதியம் பிரிஞ்சி சாதத்துக்கு பச்சடி செய்ய தயிரு எல்லாம் வாங்கினு வந்தாரு. குளிச்சிட்டு வந்து எங்கிட்ட ஆசையா பேசிட்டு, கிளம்புனாரு… அடுத்த ஒரு மணி நேரத்துல என் வீட்டு பக்கத்துல இருக்கற புள்ளளைங்கல்லாம் ஓடி வந்து அக்கா… நம்ம அண்ணன் எரிஞ்சிப் போயிட்டாருன்னாங்க இன்னமும் என்னால நம்ப முடியலயே….”.
“அவருக்கு ஒரு வாரமாவே அலைச்சல். அத்தி வரதர் திருவிழாவுல ஷேர் ஆட்டோ ஓட்டணும்னா உள்ளூர் வாகனமுனு ‘ஸ்டிக்கர் ஒட்ட’ கலெக்டர் கெடு வைச்சாங்க…. அதுக்கு அலைஞ்சி ஆயிரம் ரூபா கொடுத்து ஸ்டிக்கர் வாங்கினாரு.”
“அதுக்குப் பிறகு, ‘சவாரி ஏத்திக்கிட்டு காஞ்சிபுரத்தில் மற்ற வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ள டோல்கேட் வரை போக அவரை போலீசு அனுமதிக்கல. அத்தி வரதர் கோயிலிலிருந்து ஐஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலயே ஆட்டோவை முத்தியால் பேட்டையிலேயே நிறுத்தி உள்ள விடாம திருப்ப சொல்லிட்டாங்க..’ன்னு காலைல எங்கிட்ட குறைப்பட்டாரு…. அப்போது போனில் அவர், ஆட்டோ நண்பர்களிடம் பேசியது… இதுதான்….
‘எல்லா ஆட்டோகாரங்களுமா சேர்ந்து இதுதான் எங்களுக்கு பொழப்பு, இந்த நேரத்துல போலீசு கெடுத்தா எப்படினு? கலெக்டர்கிட்ட பேசுவோம்…. அவரும் விடலன்னா…. ஆட்டோ சாவிய எல்லாரும் சேர்ந்து அவர்கிட்டயே கொடுத்துட்டு வந்துடுவோம்… எல்லாரும் தயாரா வந்துடுங்க…’னு சொன்னாரு. நான், அவரு பேசி கேட்ட கடைசி வார்த்தை இதுதான்.”
“கஷ்ட நிலைமையில… நிறைய செலவு செஞ்சி ஆட்டோவுக்கு எஃப்.சி இப்பத்தான் வாங்குனாரு.. அத்தி வரதர் விழாவுக்கு மக்கள் வெளியூர்ல இருந்தெல்லாம் வருவாங்க, ஆட்டோ நல்லா ஓடும். கஷ்டம் தீரும்னு நினைஞ்சாரு…. நாங்க பெரிசா ஒண்ணும் நினைக்கலயே.
அன்னைக்கு அவருக்கு நேர்ந்த கொடுமைய நாங்க எதுவும் நேர்ல பாக்கல, பார்த்தவங்க சொல்லறததான் கேட்டோம். மதியம் இங்கிருந்து போனவரு, முக்கால் மணி நேரமா போலீசுக்கிட்ட வாக்குவாதம் பண்ணியிருக்காரு. அவங்க மரியாத இல்லாம அவர பேசியிருக்காங்க, இங்கேயே தீக்குளிச்சி செத்துடுவேன்னு சொல்லியிருக்காரு.”
போலிசார் அவமானப்படுத்தியதால் தீக்குளித்து இறந்த ஆட்டோ ஓட்டுநர் குமார்.
“போலீசு மேலும் அவமானம் படுத்தியிருக்காங்க அதனால, அவங்க எதிரிலேயே வண்டிக்கு வைச்சிருந்த பெட்ரோல ஊத்தி கொளுத்திக்கினாரு, பல பேரு பக்கத்துல இருந்தும் யாருமே தடுக்கலையே….. எரிஞ்சி கரிக்கட்டயாவர வரைக்கும் வேடிக்கை பார்த்திருக்காங்க, முழுசா எரிஞ்சதால அவர யாருக்கும் அடையாளம் தெரியல, அவர் ஆட்டோவை வைச்சி எங்களுக்கு தகவல் கொடுத்தாங்க.
அந்த கோரத்த என்னால பாக்கவே முடியல, மயக்கமாயிட்டேன்… அங்க என்ன நடந்ததுனு கேட்கக்கூட என்னால முடியலயே.”
அருகிலிருந்த அவரது மகன் திருநாவுக்கரசு:
“அன்னிக்கு காலைல என்ன காலேஜ்க்கு வண்டியில விட்டுட்டு போனாரு, மதியம் பக்கத்து வீட்டு சூர்யா வந்து கூப்பிட்டான். “வாடா உங்கம்மா கூப்பிட்டாங்க… உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்” என்றான்.. வந்து பார்த்தா ஆஸ்பத்திரி மார்சுவரியில உங்கப்பா பாடி இருக்குன்றாங்க, எனக்கு என்ன சொல்லறதுனே தெரியல அப்போ.. போலீசெல்லாம் சேர்ந்து, அம்மாகிட்ட கையெழுத்து போடுனு கேட்டாங்க… அங்க சப் கலெக்டரும் கூட நிக்கிறாரு… நான் அவங்கக்கிட்ட “எங்கப்பா எப்படி செத்தாரு” னு கேட்டேன். திரும்ப… திரும்ப அதையே கேட்டேன்.
அவங்க எனக்கு பதில் சொல்லாம, காதுல வாங்காத மாதிரி.. எங்கம்மாவ விடாம ‘வீட்ல பிரச்சினை, டென்ஷனா இருந்தாருனு கையெழுத்துப்போடு’-ன்னு தொல்லை பண்ணாங்க, அவங்க எங்கிட்ட, ‘இன்னா கேள்வி கேட்குற? உங்களுக்கு இப்ப உங்கப்பா பொணம் வேணுமா வேண்டாமா? எங்களுக்கு பல கேஸ்கள், பந்தோபஸ்த்துனு பல வேலைகள் இருக்கு. உங்ககிட்ட பதில் சொல்லிக்கினு இருக்க முடியாது…. நாங்க சொல்ற மாதிரி எழுதி கையெத்துப்போட்டா பாடிய சீக்கிரம் நீங்க எடுத்துட்டு போயிடலாம். இல்லேன்னா… ஆஸ்பிட்டல்லயே காத்துக்கினு இருக்க வேண்டியதுதான் நாங்க கிளம்பிடுவோம்’னு மிரட்டனாங்க. எனக்கு அப்பா போய்ட்டாரேனு அழுவுறதா, இவங்க மிரட்டறதுக்கு கோவப்படுறதானே தெரியல….” என்றார் சோகத்தோடு.
ஆட்டோகாரங்க நிறைய பேர் இருப்பாங்களே… யாரும் துணை நிக்கலயா?
“ஆஸ்பிட்டலுக்கு அவர கொண்டு வந்தது எனக்கு ஆறுதல் சொன்னதோட; டிரைவர்ங்க எல்லாம் நியாயம் கேட்டு ஆஸ்பிட்டல் ரோட்டுல உக்காந்தாங்க. ஐஞ்சி நிமிசத்துலயே போலீசு மிரட்ட ஆரம்பிச்சிடுச்சி. இந்த ரோட்டுலத்தானே நீங்க ஆட்டோ ஓட்டணும், பாத்துக்கறோம்…. என்று மிரட்டியதும் வேறு வழியில்லாம எங்கிட்ட வந்து ஆக வேண்டியத பாப்போம்னு சொன்னாங்க.
அந்த நேரத்துல சப்கலெக்டர்: உங்க பசங்க என்ன படிச்சிருக்காங்க..? அவங்களுக்கு கவர்மெண்ட் வேல போடலாம்; சி.எம் கிட்ட பேசி நிவாரணம் வாங்க ஏற்பாடு பண்றேன்; வேற எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாடிய நல்லபடியா அடக்கம் பண்ணுங்க…. இதுல கையெழுத்துப்போடுங்க…..னு வாய் ஒழுக பேசி எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டானுங்க….
எனக்கும் இருந்த மனநிலையில என்ன பண்றதுனே தெரியல, யாரும் எனக்கு துணை இல்ல… வக்கீலா வந்தவனும் அவங்க பக்கமே நின்னு பேசிட்டான்…. என் குடும்ப சொத்தே போச்சு….. இவனுங்க கொடுக்கற நிவாரணம் எனக்கு எதுக்கு?”
என்று அழுத அவர்… “நாப்பது வருசத்துக்கு ஒரு தடவை அத்தி வரதர தண்ணியிலருந்து எடுக்கறானுங்களாம், அந்த சாமி என் புருஷன எரிச்சி குளிர் காய்ஞ்சிடுச்சிப்போல”என்றார் விரக்த்தியோடு.
அவனுங்க “குடும்ப கஷ்டமுனுக்கூட சொன்னானுங்களா……? அவருக்கு நான் பொண்டாட்டியா? இவனுங்க… பொண்டாட்டியா? எங்க குடும்பத்துல எந்த கஷ்டமும்… இல்ல….நாங்க கட்ட முடியாத அளவுக்கெல்லாம் கடனுமில்ல…. எங்க ரெண்டு பிள்ளங்கள நல்லா படிக்க வைச்சாரு…. ஆட்டோத்தான் அவருக்கு உசுரு.. ஒருநாள்கூட ஆட்டோவ ஓட்டாம இருக்க மாட்டாரு…. உடம்பு சரியில்லனாக்கூட ஒரு ரவுண்டு போனாத்தான் தூங்குவாரு…. அப்படி அந்த தொழில நேசிச்சாரு…. எந்த நேரமும் காக்கி சட்டத்தான் போடுவாரு…. காக்கித்தான் டிரைவருக்கு கெத்து…னு சொல்வாரு, அதே காக்கியோட போயிட்டாரு. போன வராத்துலக்கூட முன்னூரு ரூபாத்தான் இன்னிக்கு வருமானம்.. சொன்னவரு, நான் பரவாயில்ல வாடகை ஆட்டோ ஓட்டுற மத்தவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். வாடக கட்டணும்; போலீசுக்கு மாமூல் தரணும்; வண்டி ரிப்பேர் பாக்கணும்; அவங்க எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்களோனு வேதனைப்பட்டாரு.
ஆனா, அந்த மனுசன் எரிஞ்சி கட்டையாவர வரைக்கும் வேடிக்கை பாத்திருக்காங்க ஏன் போலீசு ஒரு தட்டு தட்டி, பெட்ரோல புடுங்கிப் போட்டிருக்க முடியாதா? எவன் செத்த நமக்கென்ன-ன்ற திமிர் தானே… நாளைக்கு போலீசு உனக்கு இதே நில வந்தா யாரு தடுப்பா?
இதுமட்டுமில்ல, அவரு கொளுத்திக்கனப்போ பக்கத்துல இருக்குற பேக்கரியில வீடியோ கேமரா இருக்கு. அதுல எல்லாம் பதிவாயிருக்கும்… அதையும் போலீசு மிரட்டி புடுங்கிட்டாங்க..
அந்த மனுசன் எவ்வளவு கஷ்டத்தயும் தாங்குவாரு… ஆனா, மாரியாத இல்லனா கோவப்படுவாரு, போலீசு மேல கோவப்பட்டு எங்கள விட்டுப்போனத நெனஞ்சாத்தான் தாங்க முடியல….. எந்த கெட்ட பழக்கமும் இல்ல குடி, பீடி எதுவுமே இல்லேயே. எங்கம்மா வீட்டவிட என்ன அவரு நல்லா பாத்துக்குவாரு, இனி நான் என்ன பண்ணப்போறானே தெரியலயே.
ஆட்டோ சவுண்டு நைட்டலெல்லாம் கேட்கற மாதிரியே இருக்கு, ஒருநாள் கூட அம்மா வீட்ல என்ன விட மாட்டாரு, வாம்மா நம்ம வீட்டுக்கு போலாம்னு அங்க வந்து நிப்பாரு… இனி யாரு என்ன கூப்பிடப்போறாங்க….”னு அழ ஆரம்பித்துவிட்டார்.
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இருக்குமே அதுல எதுவும் உதவலயா?
“காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்துலத்தான் இருக்காரு. அதுக்கு மாசமாசம் பணம் கட்டுவாரு, எப்பவுமே சொல்லுவாரு; அங்க யாரும் தைரியமா பேசமாட்டாங்க, ஏன்னா எல்லாருமே வாடகை ஆட்டோ ஓட்டுறவங்க. எதிர்த்து பேசுனா தொழில் பண்ண முடியாதுனு சொல்லுவாரு, அங்கிருந்துவந்து ஒரு மாலை போட்டுட்டு தியாகி ஆகிட்டாருனு போயிட்டாங்க, வேற ஒண்ணும் சொல்லல.
ஆனா, அவரு இறந்து பிரச்சினை ஆனாதால போலீசு இப்ப எல்லா ஆட்டோவும் உள்ள விடுறான்… அதனால, இன்னிக்கு பல குடும்பங்கள் சந்தோஷமா இருக்கு…. இவரு எங்கள நடுத்தெருவுல நிறுத்திட்டு போயிட்டாரு…” என்றார்.
அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் குடும்பமே பித்து பிடித்தவர்கள் போல ஆதரவின்றி தவிக்கின்றனர்.
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரி என அலையலையாய் மோடி அரசு ஏவிய தாக்குதலில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடந்த ஐந்தாண்டுகளில் அங்குலம் அங்குலமாக கழுத்தறுபட்டுச் செத்துப் போயின. இந்தக் கொலைச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே விரல்விட்டு எண்ணக்கூடிய சில தரகு முதலாளிகள் மட்டும் வீங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தியப் பொருளாதாரம் பாதாளத்திற்குள் பாய்ந்த அதே நேரம், பங்குச் சந்தை குறியீட்டெண்கள் வானத்தில் பறந்தன. விசித்திரமான இந்த வளர்ச்சி மாடலின் விளைவாகப் பலனடைந்த கார்ப்பரேட் குழுமங்களில் பிரதானமானது அதானி குழுமம்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விற்பனை செய்வதற்கான 126 ஒப்பந்தங்களை வழங்கியது மத்திய மோடி அரசு. இவ்வாறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் சில கவனத்திற்குரிய விசயங்கள் உள்ளன. முதலில் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன் காங்கிரசு அரசின் ஒன்பதாண்டு காலத்தில் வழங்கப்பட்ட இதேபோன்ற ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கையே 35தான். மோடி பதவி ஏற்றபின் நான்காண்டுகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையோ 63.
தனது சகோதரர்கள் விநோத் அதானி, வசந்த் அதானி, ராஜேஷ் அதானி, மஹாசுக் அதானி ஆகியோருடன் கௌதம் அதானி (இடமிருந்து நான்காவது). (கோப்புப் படம்)
இரண்டாவதாக, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டாலும் எரிவாயுவைக் கடத்துவதற்கான குழாய் வலைப்பின்னல்கள் இன்னமும் முழுமையாகப் போட்டு முடிக்கப்படவில்லை. மார்ச் 2017 வரை சுமார் 17,753 கி.மீ. தொலைவிற்கு குழாய்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி செயல்பாட்டுக்கு வர மேலும் சுமார் 13,000 கி.மீ. தொலைவிற்கு குழாய் அமைக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விசயம் என்னவென்றால், சுமார் 23 நிறுவனங்கள் கலந்து கொண்ட டெண்டரில் அதானி குழுமம் மட்டும் 25 ஒப்பந்தங்களை வென்றுள்ளது. நேரடியாக 15 ஒப்பந்தங்களையும், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் மூலம் 10 ஒப்பந்தங்களையும் அதானி குழுமம் பெற்றுள்ளது.
அதானி குழுமத்தின் திடீர் வளர்ச்சி மலைக்கச் செய்யக் கூடியது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மும்பைக்கான மின் பகிர்மான நிறுவனம், ஜி.எம்.ஆர். நிறுவனத்திடமிருந்து அதன் சத்தீஸ்கர் நிலக்கரி, மின் உற்பத்தி நிறுவனம், எல்&டி நிறுவனத்திடமிருந்து சென்னையை அடுத்துள்ள துறைமுகம், இராஜஸ்தானில் உள்ள கே.இ.சி. நிறுவனத்தின் மின் பகிர்மானக் கட்டமைப்பு, தமிழகத்தில் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்றின் 51 சதவீத பங்குகள் என அதானி குழுமம் கடந்த சில வருடங்களில் ஏராளமாக வாங்கிக் குவித்துக் கொண்டே வந்துள்ளது.
உள்கட்டுமானத் துறைகளில் முதலீடு செய்ததைப் போலவே, அலகாபாத்தில் கழிவு நீர் சுத்திகரிப்புக்கான ஒப்பந்தத்தையும் வென்றுள்ளது. இந்தாண்டு (2019) பிப்ரவரி மாதம் ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான டெண்டரை மத்திய அரசு அறிவித்தது. விமான நிலைய நிர்மாணம் மற்றும் நிர்வாகத்தில் அனுபவமுள்ள ஜி.எம்.ஆர். போன்ற நிறுவனங்களோடு அத்துறையில் கிஞ்சிற்றும் அனுபவமில்லாத அதானி குழுமமும் மேற்படி டெண்டரில் போட்டியிட்டது. இறுதியில் அந்த ஆறு விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமமே வென்றுள்ளது.
மின் உற்பத்தி, மின் பகிர்மானம், துறைமுகங்கள் எனத் தான் ஏற்கெனவே கால்பதித்துள்ள துறைகளிலும் தனது முதலீட்டைப் பன்மடங்கு அதிகரித்துள்ள அதானி குழுமம், இன்னொருபுறம் ஸ்வீடனைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்டான ஸாப் நிறுவனத்தோடு சேர்ந்து கூட்டுப் பங்கு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் ஆளில்லா விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.
2013-ம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டே செயல்பட்டு வந்த அதானி, இன்று இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. இன்றைய தேதியில் இந்தியாவின் சுமார் 260 நகரங்களில் அதானி குழுமம், தனது ஏதோவொரு தொழில் நிறுவனத்தை இயக்கி வருகின்றது. நிலக்கரி துரப்பணம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள், ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஆயுத உற்பத்தி என அதானி குழுமம் கடந்த வெகுசில ஆண்டுகளிலேயே தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருப்பதை அந்நிறுவனத்தின் அறிக்கையே குறிப்பிடுகின்றது.
கடந்த நான்காண்டுகளைப் பொருத்தவரை இந்திய உள்கட்டுமான நிறுவனங்கள் பெரும் சவால்களைச் சந்தித்துத் தோல்வியைத் தழுவியுள்ளன. குறிப்பாக உச்சநீதிமன்றம், கடந்த 2014 செப்டெம்பரில் 200 நிலக்கரித் தொகுதிகளுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்திருந்தது. அதைத் தொடர்ந்து எரிசக்தி மற்றும் கனிம வளங்களைத் துரப்பணம் செய்ய அனுமதி வழங்கும் அரசின் கொள்கை முடிவுகள் மாறின. இதன் விளைவாக உள்கட்டுமானத் துறையில் செயல்பட்டு வந்த நிறுவனங்கள் கடனில் விழுந்து தமது தொழிற் பிரிவுகளை விற்கும் நிலைக்கு ஆளாகின.
அதே சமயம், இந்திய அரசு நெடுஞ்சாலைகள், எரிவாயு பகிர்மானம் உள்ளிட்ட உள்கட்டுமானத் துறைகளைத் தனியாருக்கு வாரிக் கொடுக்க டெண்டர்களை அறிவித்து வந்தது. ஒருபக்கம் தமது தொழில்கள் நலிவடைந்து வந்த நிலையில் புதிய துறைகளுக்குள் நுழையவோ, இருக்கும் தொழில்களை விரிவுபடுத்தவோ மூலதனமின்றி பிற நிறுவனங்கள் தமது தொழில்களின் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்தன. இந்நிலையில் அதானி குழுமம் பிற நிறுவனங்களிடமிருந்து பங்குகளை வாங்கியதோடு புதிய தொழில்களிலும் தயக்கமின்றி நுழைந்தது.
அதானி குழுமம் தனது பல்வேறு துணை நிறுவனங்களில் செய்த முதலீடுகளும், கையகப்படுத்தல்களுக்காக செய்த முதலீடுகளும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். ரிலையன்சின் மின்பகிர்மானப் பிரிவை ரூ.12,300 கோடிக்கும், ஜி.எம்.ஆரின் துணை நிறுவனத்தை ரூ. 5,200 கோடிக்கும், காட்டுப்பள்ளி துறைமுகத்தை ரூ. 1,950 கோடிக்கும் வாங்கியுள்ளது அக்குழுமம். அதே போல தனது புதிய தொழில் திட்டங்களிலும் ஏராளமாக முதலீடு செய்துள்ளது. உதாரணமாக, கடந்தாண்டு அதானி குழுமம் வென்றுள்ள எரிவாயு பகிர்மானத்திற்கான உட்கட்டமைப்புக்கு மட்டும் சுமார் ரூ.24,000 கோடி முதலீடு செய்தாக வேண்டும்.
அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் வாங்குவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கௌதம் அதானி மற்றும் ஸ்டேட் பாங்க் தலைவர். (கோப்புப் படம்)
அதே போல ஆந்திராவில் அமைக்கவுள்ள தனது டேட்டா சென்டரில் அடுத்த இருபது ஆண்டுகளில் ரூ. 70,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ள அதானி நிறுவனம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 53,000 கோடியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே உள்ள தொழில்பிரிவுகளான அதானி கேப்பிடலில் ரூ. 500 கோடியும், ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு ரூ. 940 கோடியும் ஒதுக்கியுள்ளது. அதாவது சென்ற 2018-ம் ஆண்டு மட்டும் அதானி குழுமம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்த தொகை ஏறத்தாழ ரூ. 49,000 கோடி. மேலும், சுமார் ரூ. 1,67,000 கோடி மதிப்பில் தனது எதிர்கால விரிவாக்கத் திட்டத்திற்காக முதலீடு செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் வியப்புக்கும் நமது கவனத்திற்கும் உரிய விசயம் என்னவென்றால், அதானி குழுமத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் படியே அதன் மொத்த ஆண்டு வருவாய் ரூ. 77,000 கோடி. இதில் வரி செலுத்தியது, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை கழித்தால் இலாபமாக எஞ்சுவது வெறும் ரூ. 20,141 கோடிதான். அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் அதானி குழுமத்தின் நிகர இலாபம் ரூ. 23,000 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமத்தின் நிகர இலாபத்தில் பணமாக வெளியே எடுக்கக் கூடிய தொகை வெறும் ரூ. 7,062 கோடிதான்.
ரிலையன்ஸ், டாடா போன்ற பிற இந்தியத் தரகு முதலாளிகளிடம் இருந்து அதானி பெரிதும் வேறுபடும் புள்ளி ஒன்று உள்ளது. அதாவது முந்தையவர்களிடம் உள்ள குழும நிறுவனங்களில் ஏதாவது ஒன்றாவது அபரிமிதமான இலாபம் கொழிக்கக் கூடியதாக இருக்கும். ரிலையன்சுக்கு எண்ணெய் என்றால், டாடாவுக்கு டி.சி.எஸ். இப்படி ஒரு தொழில் பிரிவில் கிடைக்கும் அபரிமிதமான இலாபத்தை மற்ற தொழில்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு பிற கார்ப்பரேட் குழுமங்களுக்கு உள்ளது. ஆனால், அதானியின் குழுமத்தைச் சேர்ந்த எந்த நிறுவனமும் இவ்வாறு அபரிமிதமான இலாபம் கொழிக்கக் கூடியதாக இல்லை.
எனில், அதானி குழுமம் எந்த அடிப்படையில் இப்படி வீங்கிக் கொண்டே செல்கிறது?
எந்த அடிப்படையும் இன்றி அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்களைக் கொண்டே அதானி வீங்குகின்றது. அதானி குழுமத்திற்கு பொதுத்துறை வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்களைக் குறித்து முறையான தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், நிதித்துறையைச் சேர்ந்த சிலரும், நிதித்துறையை நெருக்கமாக கவனித்து வரும் ஊடகங்களில் சிலவும் (குறிப்பாக புளூம்பர்க் பத்திரிகை) மேற்கொண்ட மதிப்பீட்டின்படி அந்நிறுவனத்தின் கடன் குறைந்தபட்சம் ரூபாய் ஒரு இலட்சம் கோடியாக இருக்க வேண்டும் என மதிப்பிடுகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்குவது, வாங்கிய கடனைக் கொண்டு தனது துணை நிறுவனம் ஒன்றின் பங்குகளை வாங்குவது, அப்படி வாங்கிய பங்குகளை அடமானம் வைத்து மேலும் கடன் வாங்குவது, வாங்கிய கடனை ஏதேனும் ஒரு துணை நிறுவனத்தில் முதலீடு செய்வது, முதலீடு செய்வதால் அதிகரிக்கும் அந்நிறுவனத்தின் பங்குகளை மேலும் அடமானம் வைத்துக் கடன் வாங்குவது எனத் தலைசுற்ற வைக்கும் நடைமுறைகளை அதானி குழுமம் பின்பற்றுகிறது. மேலும், தனது துறைமுகங்களின் பங்குகளை வெளிநாட்டு பங்குச் சந்தையில் விற்பது, மின் பகிர்மான வழித்தடங்களை அடமானம் வைப்பது அல்லது பகுதி அளவுக்கு விற்பது என நிதியைத் திரட்டுகிறது அதானி குழுமம்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பயணங்களுக்கு அதானி குழுமத்திற்குச் சொந்தமான தனி விமானத்தைத்தான் பயன்படுத்தினார் நரேந்திர மோடி.
எந்த வளர்ச்சியும் இன்றி வெறுமனே கடன்களின் மூலம் மட்டுமே வீங்கிப்பெருத்து வரும் அதானி குழுமம், மோடி அரசுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது. வரவுக்கு மிஞ்சிய அளவில் கடன், எந்தத் தொழில் வளர்ச்சியும் இன்றிக் கடன் மூலம் வளர்ச்சி என அஸ்திவாரமில்லாத மாளிகையைக் கட்டியெழுப்பி இருக்கும் அதானி, மோடியுடனான தனது நெருக்கத்தின் மூலம் பங்குச் சந்தையின் ஊகபேரங்களைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
இதன் விளைவு தவிர்க்கவே முடியாத நிலையில் ஒருநாள் நிகழவிருக்கும் அதானி குழுமத்தின் வீழ்ச்சி இந்திய நிதிச் சந்தையையும் இந்தியப் பொருளாதாரத்தையும் தன்னோடு சேர்த்து புதைகுழிக்குள் இழுத்து விடும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சென்ற 2018-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மீ டு (#MeToo) இயக்கம் அனைத்து இடங்களிலும் பேசப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் – குறிப்பாக ஊடகம் மற்றும் திரைத்துறையில் இருந்து தங்கள் கதைகளை வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்தனர். உடனேயே அந்தப் பெண்களின் ஆளுமையை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ள ஆண்கள் செய்ய ஆரம்பித்தனர். ஆயினும் இவர்களது அவதூறுகளை தூக்கி வீசிவிட்டு மீ டு இயக்கம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது.
ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள். சமூக வாழ்க்கையில் இருக்கும் சாதாரண பெண்களே இத்தகைய துன்புறுத்தல்களை மவுனமாக கடந்து போகையில் அதிகாரத்தில் உள்ள ஆண்களை அத்தனை சுலபமாக எதிர்க்க முடியுமா என்ன? அப்படி புகார் தெரிவித்தால் அந்தப் பெண்ணை விபச்சாரி என்று தூற்றுவது, இல்லையேல் வேலையை விட்டு தூக்குவது, எதிர்காலத்தையே ஒன்றுமில்லையென ஆக்குவது என அத்தனை ஆயுதங்களும் இப்பெண்களைக் குதறுவதற்கு எப்போதும் காத்திருக்கின்றன.
அமைச்சர்கள், தனியார் நிறுவன உயர் பொறுப்பில் இருப்பவர்கள் என பல பிரபலங்கள் மீ டு இயக்கத்தால் அம்பலப்படுத்த்தப்பட்டார்கள். அவர்களில் பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது பதவி விலகினார்கள். சில பெண்கள் துணிந்து தம் கதையை பொதுவெளியில் பகிர்வதற்கான மனத்தின்மையை மீ டு இயக்கம் அளித்தது. அதனாலேயே பிரபலமல்லாத சாதாரண பெண்கள் கூட தங்களது வதைக் கதைகளை பொது வெளியில் எடுத்து வைத்தார்கள். ஊடகங்களில் முன்னுக்கு வர வேண்டுமா, டிசம்பர் சங்கீத சீசனில் மேடை ஏற வேண்டுமா அத்தனையும் பெண்களை பலிகடாக்களாக ஆக்கிவிட்டுத்தான் நடந்தேற வேண்டும் என்பது எத்தனை கொடுமையானது?
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்காக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வேலை பறிபோனது, கணவருக்கும் அதே நிலை என எத்தனை எத்தனை கொடுமைகள்? |
பார்ப்பனியமும் ஆணாதிக்கமும் சேர்ந்து நடத்திய இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நமது சமூகத்தின் ‘தரத்தை’ தெளிவாகக் காட்டுகிறது. அவ்வகையில் மீ டு இயக்கம் குறித்த ஒரு பறவைப் பார்வையை இத்தொகுப்பு எடுத்து வைக்கிறது.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
***
இந்தியாவில் #MeToo இயக்கம் – புதிய கலாச்சாரம் ஜூலை 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
” இந்தியாவில் #MeToo இயக்கம் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ?
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம்!
#Metoo : நாம் யார் பக்கம் நிற்பது ?
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை!
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ?
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன்?
#MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ”கண்ணியத்துக்கான பேரணி”!
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்! இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன? ஒரு முழுமையான அறிக்கை!
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
டாக்டர் வரதர்போலத் திரு. T. R. வெங்கடராம சாஸ்திரியார் 1940 பிப்ரவரியில் குடந்தையில், திராவிடராவது ஆரியராவது என்று பேசிய காலை, பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டார். அறிவு மிளிரும் அவர் உரையினை அன்பர்கட்கு அளிக்கிறோம்.
தங்களுக்குத்தான் யோக்கியதையும் புத்தியும் இருப்பதாக இறுமாப்புடன் பேசுவது ‘மகாத்மா’ வின் புதிய யோசனைகளில் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. தோழர் சாஸ்திரியாரைப் போல விசால புத்தியுள்ளவர் வேண்டுமென்று குறை கூறுவதை, நம்மால் இன்னதென்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எந்த விஷயத்தையும் அலங்காரமாய் ஜோடித்துச் சொன்னால் அதை நம்புவார்கள் என்றும், பண்டைய காலத்துத் திராவிட மக்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொன்னது முட்டாள்தனமே.
அவர் சொன்ன விஷயங்களில், சில கேள்விகள் கேட்பதற்கு நமக்கு நியாயமிருக்கிறது. அதற்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும். ஏனெனில் அவர் புதியதாய்க் கண்டுபிடித்துச் சொன்ன விஷயங்களைப் பற்றிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டவர்கள். தமிழர்கள் கலைப்பயிற்சியிலும் பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், ஆரியக் கலப்பற்றதொன்றுமில்லை என்று கண்டுபிடித்ததாய்த் தெரிகிறது.
பரந்த நோக்கமே உறைவிடமாயுள்ளவரிடத்தில், நமக்கு இன்னும் அநேக விஷயம் தெரிய வேண்டி இருக்கிறது.
திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.
தோழர் சாஸ்திரியார் நமது தென்னிந்தியாவில் குடியிருக்கும் ஜனங்கள் பூராவும் ஒரே மதமென்றும், ஒரே கலைஞானமுள்ளவர்கள் என்றும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.
தென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் என்ன மதம் என்று கேட்கிறோம். அவர்கள் எல்லாரும் வேதத்தை ஆதாரமுறையாகப் பின்பற்றுவார்களென்று சொல்ல முடியாது. பிராமணர்கள் கூட பழக்கங்களில் வேதங்கள் படி நடப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க, எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படித் துணிந்தார்?
இப்போது பிராமணர்கள், பிராமணரல்லாதார் கோயிலுள் போவதே கிடையாது. அப்படியே பிராமணரல்லாதார் கூட எல்லோரும் தினந்தோறும் கோயிலுக்குப் போவதுமில்லை. வேதமும் வேதத்தின்படி நடப்பதும் பிராமணரல்லாதாருக்குச் சாபத்தீட்டே ஒழிய வேறில்லை.
தமிழ்க் கலைஞானமாகிய சைவசித்தாந்த சாஸ்திரங்களும் ஆகமங்களும், பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்.
ஆரியர்கள் ஆதிக்கமான திராவிடத் தமிழ் மக்கள் கோயில்களிலும், அல்லது வேதமில்லாத சிவாலயங்களிலும் வேத பாராயணம் செய்து பிராமணர்கள் பிரசாதம் முதலியன வாங்கிக்கொண்டு போன பிறகுதான் தேவாரப் பதிகங்கள் பாடலாம் என்று வைத்திருக்கிறார்கள். இறந்துவிட்டாலும் அல்லது கருமாதி காரியங்களிலும் கூட ஒரு பிராமணனாவது பிராமணரல்லாதவன் இறந்து போன வீட்டிற்குத் துக்கம் கொண்டாட வரும் வழக்கம் கிடையாது. பிறகு இறந்து போனவனுடைய 16 நாள் கழித்துத்தான், ஏதாவது வரும்படி வருமென்று தெரிந்தால்தான் வருவார்கள். அதுவுமில்லை என்று தெரிந்தால் அதுகூட வரமாட்டார்கள்.
எந்த நல்ல காரியங்களுக்குப் பிராமணக் குருக்கள் வந்தாலும், பிராமணனுக்கு உள்ள மந்திரங்களைச் சொல்லாமல் வேறு ஏதோ மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
கம்பல நாயக்கமார்களிடத்தும், இன்னும் அநேக ஜாதியார்களிடத்தும், கலியாண காலங்களிலும் அல்லது நல்ல விசேஷ காலங்களிலும் கூடப் பிராமணர்கள் வந்தால் அபசகுனமென்றும், தங்கள் வீட்டுக்குள் எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகுதான் வரலாம் என்றும் வழக்கம் இருந்து வருகிறது.
தமிழர்கள், பொதுவில் ஏராளமாகப் பிராமணர்களின் மத விஷயங்கள் தெரியாமலே இருந்து வருகிறார்கள்.
பிராமணர்களின் புரோகிதத்தைத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கிற ஜனங்களின் நம்பிக்கைகளைப் பற்றி, தோழர் சாஸ்திரியார் என்ன சொல்லுகிறார்? இந்து மதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்று தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா? புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இன்னும் மலையில் வாசம் செய்யும் கலைஞர்கள் எல்லோரும் வித்தியாசமில்லாமல் இந்துக்கள் என்று சொல்லுகிறார். எல்லோரும் ஒருவரை ஒருவர் ஒத்துக் கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. புத்தர்களும், ஜைனர்களும், பிராமணர்களுக்குரிய வேதத்தையும் அதன் கிரியைகளையும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வதில்லை.
பிராமண மதத்திற்கு உறைவிடமாயுள்ள ஜாதி வித்தியாசம் புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கிடையாது. இப்படி இருந்தும்கூட, இவர்களை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லுகிறார். இதைவிட உண்மையில்லாததும், யோக்கியதை இல்லாததும், அர்த்தமில்லாததுமான வார்த்தை ஏதாவது உண்டா? இதுதானா தென்னிந்தியாவிலுள்ள சகல ஜனங்களின் பொது மதம் என்று சொல்லும் யோக்யதை?
இப்போது தோழர் சாஸ்திரியாரின் மற்ற சங்கதியைப் பற்றிக் கவனிப்போம்.
தினந்தோறும் நடை உடை பழக்க வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் மற்ற விஷயங்களிலும், பிராமணரல்லாதார்களுக்கும் பிராமணர்களுக்கும் அநேக வித்தியாசமுண்டு. பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
மற்ற மூன்று வகுப்பு ஜாதியர்களும் பிராமணர்களை எல்லாவிதத்திலும் சிறந்தவர்களென்று ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.
பிறப்பால் உயர்ந்த ஜாதியார் என்பவர்கள், மற்ற ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளலாமென்றும், அல்லது வைப்பாட்டியாய் வைத்துக் கொள்ளலாமென்றும், கீழ் ஜாதியார், மேல்ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளக் கூடாதென்றும், அப்படி எண்ணங்கொண்டால் கூட அவனுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும், அது நியாயமென்றும் சொல்கிறார்கள். இது என்ன நியாயம்? அநேக ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் வியாபார முறையாலும், பலவிதமான காரணங்களாலும், பலப்பல ஜாதிகளாகப் பிரிந்தும், ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் என்றும் கூறுவதை ஒத்துக்கொள்வதில்லை.
ஆரியர் என்று சொல்லிக்கொள்ளுவோர், ஏர் உழுவது பாவமென்றும், இழிவான தொழில் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் தமிழர்கள், அதுதான் உயரிய மகத்துவமான தொழில் என்று நினைக்கிறார்கள்.
சவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தாற்போல சட்டத்தையும், தமிழர்கள் நடவடிக்கைகளையும் பிராமணர்கள் கண்டிருக்கிறார்கள்.
ஆரியர்கள் ஸ்மிருதிகளில் உயிர் வாழ்வதற்கு மரியாதையை விட்டு விடலாமென்று சொல்லியிருப்பதாயும் சொல்லுகிறார். ஆனால் உயிரைவிட மரியாதையே பெரியது என்று தமிழர்கள் கருதுகிறார்கள்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-இ
அலெக்ஸேய் வெகு நேரம் தாமதித்து உறக்கத்திலிருந்து எழுந்தான். ஏதோ மகிழ்வு நிறைந்த உணர்வுடன் அவன் கண் விழித்தான். தூக்கமா? எப்பேர்பட்ட தூக்கம் … உறக்கத்தில் கூட அவன் கை இறுகப் பற்றியிருந்த சஞ்சிகை மீது அவன் பார்வை விழுந்தது. லெப்டினன்ட் கார்ப்போவிச் கசங்கிய பக்கத்திலிருந்து முன் போலவே விரைப்பாக, வீரம் திகழப் புன்னகை செய்து கொண்டிருந்தான். மெரேஸ்யெவ் சஞ்சிகையைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
அதற்குள் முகங்கழுவித் தலைவாரிக் கொண்டு தயாராக இருந்த கமிஸார் புன்சிரிப்புடன் அலெக்ஸேயைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
“அவனைப் பார்த்து என்ன கண்ணடிக்கிறாய்?” என்று மனநிறைவுடன் வினவினார்.
“பறப்போம்” என்று விடையிறுத்தான் அலெக்ஸேய்.
“எப்படி? அவனுக்கு ஒரு பாதந்தான் இல்லை, உனக்கோ, இரண்டு கால்களுமே கிடையாதே?”
“ஆனால் நான் சோவியத் குடிமகன், ருஷ்யன் ஆயிற்றே!” என்றான் மெரேஸ்யெவ்.
அவன் லெப்டினன்ட் கார்ப்போவிச்சைக் கட்டாயம் முந்தி விடுவான், விமானம் ஓட்டுவான் என்பதை இந்த விஷயம் உத்தரவாதப்படுத்தியது போலிருந்தது இந்தச் சொற்களை அவன் உச்சரித்த தோரணை.
அறைத்தாதி கொண்டு வந்த காலையுணவு அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, வெறும் தட்டுக்களை வியப்புடன் நோக்கி, இன்னும் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டான். நரம்புக் கிளர்ச்சி நிலையில் இருந்தான் அவன். பாடினான், சீழ்கை அடித்துப் பார்த்தான், தனக்குத் தானே உரக்கத் தர்க்கம் செய்து – கொண்டான். தலைமை மருத்துவர் பார்வையிட வந்தபோது அவரது மனநிலை வாய்ப்பாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, விரைவில் உடல் நலம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகளாகக் கேட்டு அவரைத் துளைத்து விட்டான். நிறைய சாப்பிடுவதும் உறங்குவதுமே இதற்குத் தேவை என்று அறிந்து, பகல் சாப்பாட்டின் போது இறைச்சி வடைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டுத் தின்னமாட்டாமல் திண்டாடிச் சிரமப்பட்டு அவற்றையே உள்ளே தள்ளினான். பகல் வேளையில் ஒன்றரை மணி நேரம் போல மூடிய கண்களுடன் படுத்திருந்தான் ஆயினும் அவனால் உறங்க முடியவில்லை.
இன்பம் மனிதனை சுயநலமி ஆக்கிவிடுகிறது. தலைமை மருத்துவரைக் கேள்வியால் நச்சரித்த அலெக்ஸேய், வார்டு முழுவதும் கருத்து செலுத்திய ஒரு விஷயத்தைப் பார்க்காமலே இருந்துவிட்டான். வஸீலிய் வஸீலியெவிச் வார்டைப் பார்வையிட வழக்கம் போலவே நேரம் தவறாமல் வந்துவிட்டார். பகல் போதில் வெயிலொளி மெதுவாக தரை மீது ஊர்ந்து வார்டு முழுவதையும் கடக்கும். அது சிலும்பு எழும்பிய பிளாச்சு விளிம்பை எட்டுவதும் அவர் அறைக்குள் வருவதும் ஒருங்கே நிகழும். அன்று வெளிப்பார்வைக்குத் தலைமை மருத்துவர் முன்போலவே கவனம் உள்ளவராக காணப்பட்டார்.
எனினும் இயல்புக்கு முற்றிலும் மாறான உள்ளார்ந்த ஞாபக மறதிக்கு அவர் ஆளாகியிருப்பதை எல்லாரும் கண்டார்கள். அவர் திட்டவில்லை. வழக்கம் போலக் காரசாரமான சொற்களைப் பிரயோகிக்கவில்லை. அவரது சிவந்து வீங்கிய கண்களின் ஓரங்களில் நரம்புகள் இடைவிடாது துடித்தன. மாலையில் அவர் வாடி, தென்படும் அளவுக்குக் கிழடு தட்டிப் போயிருந்தார். கதவுப் பிடியில் துணியை மறந்து விட்ட அறைத் தாதியை தணிந்த குரலில் கடிந்து கொண்டார். கமிஸாரின் உடற்சூடு பற்றிய குறிப்பைப் பார்வையிட்டார், அவரது சிகிச்சை முறையில் மாறுதல்கள் செய்தார், பின்பு அவர் போன்றே எங்கோ நினைவாக மௌனமாயிருந்த உதவியாளர்கள் பின் தொடர் வெளியே போனவர் நிலையில் இடறி விழத் தெரிந்தார். நல்லவேளையாக மற்றவர்கள் பிடித்துக் கொண்டதால் தப்பினார்.
மறுநாள் காலை எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைமை மருத்துவரின் ஒரே மகன் மேற்குப்போர் முனையில் கொல்லப்பட்டுவிட்டான். அவன் பெயரும் வஸீலிய் வஸீலியெவிச், அவனும் மருத்துவன். அவன் பெருத்த விஞ்ஞானி ஆவான் என்ற நம்பிக்கை இருந்தது. தகப்பனாருக்கு அவனைப் பற்றி ஒரே பெருமை, அவனே அவரது மகிழ்ச்சியாக இருந்தான். அத்தகைய மகனை அவர் பறிகொடுத்து விட்டார். தலைமை மருத்துவர் வழக்கம் போல வார்டுகளைச் சுற்றிப் பார்க்க வருவாரா மாட்டாரா என்று மருத்துவமனை முழுவதும் குறித்த நேரத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் தரை மீது வெயில் புலப்படா வகையில் மெதுவாக ஊர்வதை இறுக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். முடிவில் வெயில் சிலம்பு எழும்பிய பிளாச்சு விளிம்பை எட்டியது. எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் – வர மாட்டார் என்று.
ஆனால் அந்தச் சமயத்தில் பழக்கமான கனத்த அடிவைப்பும் பல துணையாளர்களின் பூட்சொலியும் ஆளோடியில் கேட்டன. தலைமை மருத்துவர் முந்தைய நாளை விட நன்றாகக் கூடக் காணப்பட்டார். அவருடைய விழிகள் சிவந்திருந்தன, இமைகளும் மூக்கும் கடுமையான ஜலதோஷத்தின் போது இருப்பது போல வீங்கியிருந்தன என்பது உண்மையே. கமிஸாரின் மேஜை மேலிருந்து உடல் வெப்பக் குறிப்பை எடுத்தபோது, பருத்த தோலுரிந்த அவருடைய கைகள் வெளித்தெரியும்படி நடுங்கின என்பதும் உண்மையே. ஆனால், அவர் முன்போலவே சுறுசுறுப்பாகவும் காரிய நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருடைய கத்தலும் அதட்டலும் தாம் மறைந்துவிட்டன.
காயமடைந்தவர்களும் நோயாளிகளும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டவர்கள் போல எப்படியாவது அவருக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றார்கள். அன்று அவர்கள் எல்லோருக்கும் உடல்நிலை முன்பை விட சீர்பட்டு இருந்தது. மிகக்கடும் நோயாளிகள் கூட எதுவும் குறை சொல்லவில்லை, தாங்கள் குணமடைந்து வருவதாகக் கூறினார்கள். எல்லோருமே கொஞ்சம் அதியுற்சாகத்துடன் கூட, மருத்துவமனை ஒழுங்குமுறையைப் புகழ்ந்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகள் ஏதோ மந்திர சக்தி போலப் பயன் விளைப்பதாகச் சொன்னார்கள். பொதுவான பெருந்துயரத்தால் ஒன்று இணைக்கப்பட்ட நட்பார்ந்த குடும்பமாக விளங்கியது மருத்துவமனை.
இன்று காலையிலிருந்தே தமக்கு இத்தகைய சிகிச்சை வெற்றி கிடைப்பது என்ன காரணத்தால் என்று வார்டுகளைச் சுற்றிப் பார்க்கையில் வியந்தார் வஸிலிய் வஸீலியெவிச்.
உண்மையில் வியப்படைந்தாரா? இந்த மௌனச் சூழ்ச்சியை ஒருவேளை அவர் கண்டுகொண்டார் போலும். அப்படிக் கண்டுகொண்டார் என்றால், தமது ஆற்ற முடியாத பெரும் புண்ணைத்தாங்கிக் கொள்வது அவருக்கு முன்பை விட எளிதாயிற்று போலும்.
மோடியின் வெற்றி தனித்துப் பார்க்கக்கூடிய நிகழ்வு அல்ல. உலகின் பல்வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி, மதவெறியைத் தூண்டுகின்ற பாசிஸ்டுகளும் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளும் அதிகாரத்துக்கு வருகின்றனர்.
துருக்கியில் எர்டோகன், பிரேசிலில் பொல்சானரோ, இசுரேலில் நெதன்யாகு, அமெரிக்காவில் டிரம்ப், ஆஸ்திரேலியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரான்சில் லிபென், இத்தாலியில் மாட்டோ சால்வி, ஹங்கேரியில் விக்டர் ஆர்பன் ஆகிய வலதுசாரிகள் ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்று வருகின்றனர்.
தனது நாட்டை உலக அரங்கில் செல்வாக்குள்ள நாடாக மாற்றவிருப்பதாகச் சொல்லித் தேசவெறியைத் தூண்டுவது, தீவிரவாத ஒழிப்பு, அகதிகள் மற்றும் வெளிநாட்டினர் மீது வெறுப்பை கக்குவது, விரட்டியடிப்பது, பிற்போக்குக் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிப்பது, வேர்மட்ட அளவிலான வன்முறை அமைப்புகளைக் கட்டியமைப்பது போன்ற கூறுகளைக் கொண்ட வலதுசாரி, பாசிச கட்சிகள் உலகெங்கும் தோன்றி வளர்ந்து வருகின்றன. அண்மையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் இத்தகைய சக்திகள் கணிசமான ஓட்டுகளைப் பெற்றுள்ளன.
(இடமிருந்து) பாசிஸ்டுகள், வலதுசாரிகலின் வெற்றி : துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சானரோ, இசுரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்தியாவில் இது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பார்ப்பன பாசிசமும், புதிய தாராளவாதக் கொள்கையை உள்ளார்ந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் பாசிசமும் இணைந்த ஒரு ஹைபிரிட் பாசிசமாக உருப்பெற்றிருக்கிறது.
கார்ப்பரேட் பாசிசத்தைப் புதிய தாராளவாதக் கொள்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால், மோடியின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் அவ்வாறுதான் இதனை அணுகுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாகத்தான் பணமதிப்பிழப்பு முதல் ஜி.எஸ்.டி. வரையிலான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன என்பதையும் மோடியின் வெறிபிடித்த கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு அடிப்படை அதுதான் என்பதையும் அவர்கள் பேசுவதில்லை.
அதே புதிய தாராளவாதக் கொள்கையை மனிதமுகத்துடன் அமல்படுத்த முடியும் என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் கூறுகின்றனர். புதிய தாராளவாதத்துக்கு மனித முகம் சாத்தியமே இல்லை, பாசிச முகம்தான் சாத்தியம் என்பதையே இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காட்டுகின்றன.
பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் – மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதன் கோட்பாடுகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியாத கடைசிக் கட்டத்திற்கு ஏகாதிபத்தியக் கட்டமைப்பு வந்துவிட்டது.
இதன் கோர விளைவுகளால் மிகப்பெரிய சுரண்டலிலும் ஒடுக்குமுறையிலும் சிக்கியுள்ள மக்கள் உலகெங்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மரபுரீதியான கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு மக்கள் தாங்களே இணைந்து போராடுகின்றனர்.
உலக முதலாளித்துவத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் பொருட்டு, இசுலாமியர், அகதிகள், கருப்பினத்தவர் என ஒவ்வொரு நாட்டிலும் அதன் சூழலுக்கு ஏற்ப பலிகடாக்களைக் கண்டுபிடித்து தேசவெறி, இனவெறி, மதவெறி, நிறவெறியை அந்தந்த நாடுகளின் பாசிச சக்திகள் தூண்டுகின்றன. மக்களைச் சரியான திசையில் வழிநடத்தக் கூடிய கம்யூனிச இயக்கங்கள் பலநாடுகளில் இல்லை அல்லது செல்வாக்குடன் இல்லை. இதன் காரணமாக மக்கள் பாசிச சக்திகளின் சவடாலுக்கும் திசைதிருப்பலுக்கும் எளிதில் பலியாகிறார்கள்.
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழக வளாகத்தில், “வலதிசாரிகளே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து வெள்ளை இனவெறியர்கள் கடந்த ஆண்டு நடத்திய தீவட்டி ஊர்வலம். ( கோப்புப் படம் )
மக்களுக்கு வழமையான அரசியல் கட்சிகள் எதன் மீதும் நம்பிக்கையில்லை. நமது நாட்டில் மார்க்சிஸ்டு கட்சியைப் போல, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சோசலிஸ்டுகள் அல்லது இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சியினரை மக்கள் வெற்றிபெற வைத்திருக்கின்றனர். மனித முகம் கொண்டு புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தப் போவதாகச் சொன்ன அவர்கள் அனைவரும் அந்த முயற்சியில் தோற்றது மட்டுமின்றி, மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டனர்.
இருப்பினும், எந்த மாற்றமாயினும் அது தேர்தல் மூலம்தான் சாத்தியம் என்று மக்கள் எண்ணுவதால், அல்லது இதைத்தவிர வேறு வழியில்லை என்று கருதுவதால், தேர்தல் ஜனநாயகம் மீதும் அதன் அமைப்புகளைச் சார்ந்தே சிந்திக்கிறார்கள். இந்த முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் யார் பதவிக்கு வந்தாலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.
நேர்மையான, ஊழல் அற்ற, தேசபக்தியுள்ள, வலிமையான, துணிச்சலான தலைவரைக் கொண்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால், நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கையை முதலாளித்துவ வர்க்கம் திட்டமிட்டே மக்களிடம் உருவாக்குகிறது.
எதிர்க்கட்சிகள் எல்லாம் மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளாகவோ, மக்கள் மத்தியில் மத்தியில் அம்பலமான ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளாகவோ, மிதவாத இந்துத்துவா கட்சிகளாகவோ, பா.ஜ.க.வின் மிரட்டலுக்குப் பணிந்து நடக்கும் கட்சிகளாகவோ, பதவிக்கு ஆசைப்பட்டு பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்துவிடும் கட்சிகளாகவோ அல்லது அப்படிப்பட்ட கீழ்மட்டத் தலைவர்களைக் கொண்ட கட்சிகளாகவோ தான் இருக்கின்றன.
இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க. என்ற கட்சிக்கும் அப்பாற்பட்ட, அதனை விடவும் உயர்ந்த, வலிமை கொண்ட, நேர்மையான தலைவனாக மோடியை ஆளும் வர்க்கம் திட்டமிட்டே மக்களிடம் முன்நிறுத்தியது. மோடியின் தோல்வியையும், தவறுகளையும், மதவெறியையும், உளறல்களையும் மறைத்து கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்திய பிரச்சாரப் போருக்கு மக்கள் பலியாகிவிட்டார்கள்.
நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குள் சிந்திப்பவர்கள் இந்தத் தேர்தல் முடிவை, “மோடியின் வெற்றி, – எதிர்க்கட்சிகளின் தோல்வி” என்று சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால், புதிய தாராளவாதம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களையே பறித்து வருகிறது.
அதிகார வர்க்கமும், கார்ப்பரேட் நிர்வாகிகளும் கொண்ட தேர்ந்தெடுக்கப்படாத ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதும், அந்த ஆணையங்களின் முடிவை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும் புதிய தாராளவாதம் வகுத்திருக்கும் இலக்கணங்களாகும். இந்தப் பொருளில் தேர்தல் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமியற்றுவது என்பதுமே கேள்விக்குள்ளாகிவிட்டன. இது இந்தக் கட்டமைப்பே பாசிச மயமாகிவருவதற்கான எடுத்துக்காட்டாகும்.
முதலாளித்துவக் கட்டமைப்பின் தோல்வி மற்றும் இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வி ஆகியவற்றின் அங்கமாகத்தான் தேர்தல் கட்சிகளின் தோல்வி இருக்கிறது. இங்கே நாம் அவர்களுடைய தேர்தல் தோல்வியைக் குறிப்பிடவில்லை. கொள்கை, உட்கட்சி ஜனநாயகம் ஆகியவை மருந்துக்கும் இல்லாமல், அரசு அதிகாரத்தையும் புதிய தாராளவாதக் கொள்கைகள் வழங்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு ஊழல் செய்வது, பொதுச்சொத்தை கொள்ளையடிப்பது, தரகு முதலாளிகளாக மாறுவது என்ற நோக்கத்துக்காகவே தேர்தலில் நிற்பவர்களாக எல்லா கட்சியினரும் மாறியிருக்கிறார்கள். இவர்கள் பாசிசத்துக்கு எதிராகப் போராடும்படி நிர்பந்திக்கப்பட்டாலும், அதில் உறுதியாக நிற்பார்கள் என்று சொல்ல இயலாது.
நடுநிலையாகத் தேர்தலை நடத்தப் பொறுப்பேற்றிருக்கும் தேர்தல் ஆணையமோ கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் கைப்பாவையாகவே இயங்கியது. இந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்த புகார்கள், மதவெறிப் பேச்சுகள், பண விநியோகம் உள்ளிட்ட எல்லா வகையான தில்லுமுல்லுகளுக்கும் தேர்தல் ஆணையம் துணை நின்றது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று ஓட்டுக்கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்கும் நிலையும் ஆணையத்துக்குள்ளேயே பிளவு ஏற்படும் நிலையும் வந்து விட்டது. பாசிசத்தை முறியடிக்கத் தேர்தல்தான் வழி என்று கூறும் கட்சிகளுக்கு, “தேர்தல் மூலம் பாசிசத்தை முறியடிக்க முடியாது” என்ற உண்மையை தேர்தல் ஆணையமே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உணர்த்தியிருக்கிறது.
எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு மோடி அரசு மேற்கொள்ளும் எல்லா முறைகேடுகளுக்கும் தேர்தல் ஆணையம் மட்டுமின்றி நீதித்துறையும் துணை நிற்கின்றன. ரபேல் ஊழல், சகாரா ஊழல், லோயா மர்ம மரணம் ஆகியவை தொடர்பான வழக்குகள் அனைத்திலும் அப்பட்டமாக மோடி அரசுக்கு ஆதரவாகவும் முறைகேடாகவும் உச்ச நீதிமன்றம் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான பாலியல் குற்றச்சாட்டும், குற்றம் சாட்டிய பெண்ணை நீதிபதியும் போலீசும் இணைந்து வேட்டையாடியதும் நீதித்துறையின் “மாண்பை” சந்தி சிரிக்கச் செய்திருக்கின்றன.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகங்கள், பாசிசத்தின் தூண்களாகவே செயல்பட்டிருக்கின்றன. இந்த தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் அப்பட்டமாக மோடியின் பிரச்சார பீரங்கிகளாகவே இயங்கின. பா.ஜ.க. செய்திகளுக்கு முன்னுரிமை தருவது என்பது மட்டுமல்ல, பிரைம் டைம் எனப்படும் நேரத்தில் மோடியை விளம்பரப்படுத்துவதற்கு தரப்பட்ட நேரத்தில் நான்கில் ஒரு பங்கு கூட ராகுல் காந்திக்கு தரப்படவில்லை.
அதுமட்டுமின்றி மோடி சரஞ்சரமாக அவிழ்த்துவிடும் பொய்களை ஊடகங்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஊடக அறத்திற்கு எதிராக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்வி, பதில்களை வைத்துக்கொண்டு இயல்பாக பேட்டி எடுப்பது போல ஊடகங்கள் நடித்தன. இவை போதாதென்று நமோ டி.வி. என்றொரு சானல் தொடங்கப்பட்டு அது எந்த விதிக்கும் கட்டுப்படாமல் சட்டவிரோதமாக இயங்கியது. 24 மணிநேரமும் தேர்தல் பிரச்சாரம் செய்தது.
இந்த நாடாளுமன்ற அரசியலின் எல்லைக்கு வெளியே ஆர்.எஸ்.எஸ். இன் பயங்கரவாத கொலைப்படைகள் இயங்குகின்றன. சங்கப் பரிவார அமைப்புகள் துப்பாக்கிப் பயிற்சி நடத்துகின்றன. இவையனைத்தும் போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகியோருடைய பார்வையின் கீழ் வெளிப்படையாகவே நடந்த போதிலும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் எதையும் அரசின் உறுப்புகள் தடுப்பதில்லை.
மொத்தத்தில் அரசியல் சட்டத்தின்படி ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றிருக்கும் அமைப்புகள் எனக் கூறப்படும் அரசின் உறுப்புகள், பாசிசத்தின் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றவே தவிர, அதனை ஒடுக்குவதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ எள்ளளவும் பயன்படவில்லை. இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியை பாசிசம் தனது நோக்கத்துக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான சமீபத்திய சான்றுகள் இவை.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் தோல்வியைக் காட்டிலும் நமது கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை அரசுக் கட்டமைப்பின் இந்தத் தோல்விகளே.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
புவாகில்பேரின் கருத்துக்களில் இருந்த கவர்ச்சியான, மேன்மையான அம்சம், அவற்றிலடங்கியிருந்த மனிதாபிமானமே. எனினும் பொருளாதாரத் தத்துவக் கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது, அவருடைய ”விவசாய மோகம்” அதன் மறுபக்கத்தையும் கொண்டிருந்தது.
தொழில்துறை மற்றும் வர்த்தகத்தின் பாத்திரத்தைக் குறைவாக மதிப்பிட்டு விவசாயப் பொருளாதாரத்தை இலட்சியமாகக் காட்டிய பொழுது அவர் பெருமளவுக்குப் பின் திசையில் பார்த்தாரே தவிர முன் திசையில் பார்க்கவில்லை. இது அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களில் ஆதிக்கம் செலுத்தியது .
புவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும். தொழில்துறை, வர்த்தக முதலாளி வர்க்கம் இங்கிலாந்தைக் காட்டிலும் பிரான்சில் ஓப்பிடவும் இயலாத அளவுக்கு பலவீனமானதாக இருந்தது; மேலும் அங்கே முதலாளித்துவ உறவுகள் மெதுவாகவே வளர்ச்சியடைந்தன.
இங்கிலாந்தில் விவசாயத்தில் கூட முதலாளித்துவ உறவுகள் வேரூன்றியிருந்தன. இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் உழைப்புப் பிரிவினையும் போட்டியும் மூலதனம் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வும் பெருமளவுக்கு இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம் என்பது கலப்பற்ற முதலாளித்துவக் கருத்துக்களைக் கொண்ட முறையியலாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. ஆனால் பிரான்சில் அது பிரதானமாகக் குட்டி முதலாளித்துவத் தன்மையைக் கொண்டிருந்தது.
ஆங்கில மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் – அதன் பிறப்பிடத்தில் நிற்பவர் பெட்டி – இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளை, ஒன்றோடொன்று இணைந்துள்ள பிரச்சினைகளை விஞ்ஞான ஆராய்ச்சியின் மையத்தில் வைத்தது, பண்ட விலைகளின் இறுதியான அடிப்படை என்ன, முதலாளியின் லாபம் எங்கேயிருந்து வருகிறது என்பவையே அவை. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு மதிப்பின் இயல்பை ஆராய்வது அவசியமாயிற்று. உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஆங்கிலப் பொருளியலாளர்களுடைய சிந்தனையின் தர்க்கரீதியான அடிப்படையாயிற்று.
இந்தத் தத்துவத்தை வளர்க்கும் பொழுது, பல்வேறு பயன் மதிப்புக்களை உருவாக்குகின்ற ஸ்தூலமான உழைப்புக்கும் குணரீதியான தன்மையைக் கொண்டிராமல் நீளம், அளவு என்ற ஒரு அளவுருவை மட்டுமே பெற்றிருக்கும் சூக்குமமான உழைப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதை நோக்கி அவர்கள் படிப்படியாக முன்னே வந்தார்கள். இந்த வேறுபாடு மார்க்சுக்கு முன்பு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை, முறையாக எடுத்துக் கூறப்படவுமில்லை. ஆனால் அதை அணுகுவதற்குச் செய்யப்பட்ட முயற்சியே பெட்டி முதல் ரிக்கார்டோ வரை ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வரலாறாக ஓரளவுக்காவது இருக்கிறது.
அதன் ஆராய்ச்சிகள் உண்மையில் மதிப்பு விதியைப் பற்றியே இருந்தன. ஆனால் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, ”மதிப்பு விதி முழு வளர்ச்சி அடைவதற்கு, பெரும் அளவில் தொழிலுற்பத்தியும், சுதந்திரமான போட்டியும் நிலவுகின்ற சமூகத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நவீன முதலாளித்துவ சமூகத்தை முன்னூகிக்கிறது”. (1) இந்தச் சமூகம் இங்கிலாந்துக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் பிரான்சில் ஏற்பட்டது. எனவே தத்துவாசிரியர்கள் மதிப்பு விதியின் இயக்கத்தைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் கஷ்டமானதாக இருந்தது – புவாகில்பேர் தனது “அளவு விகித விலைகள்” என்ற கருதுகோளின் மூலமாகப் “பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பை உழைப்பு நேரத்துக்கு நடைமுறையில் வகைப்படுத்தினார்…. ஆனால் அவருக்கே அது தெரியாது” (2) என்பது உண்மையே. ஆனால் உழைப்பின் இரட்டை அம்சத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. எனவே செல்வத்தின் மதிப்பு அம்சத்தை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். இந்த மதிப்பு அம்சம் எக்காலத்துக்கும் உரிய சூக்குமமான உழைப்பைக் கொண்டிருக்கிறது. அவர் செல்வத்தின் பொருளாயத அம்சத்தை மட்டுமே பார்த்தார்; அதைப் பயனுள்ள பொருள்களின், பயன் மதிப்புக்களின் குவியல் என்பதாக மட்டுமே கருதினார்.
புவாகில்பேரின் சிந்தனையிலடங்கியுள்ள இந்தக் குறையை பணத்தைப் பற்றிய அவருடைய கருத்துக்களில் குறிப்பிடத்தக்க வகையில் தெளிவாகக் காணலாம். மதிப்பின் விதி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பண்டங்களும் பணமும் பிரிக்க முடியாத மொத்தமாக இருக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
ஏனென்றால் பரிவர்த்தனை மதிப்பின் தனி முதலான கொள்கலமாகிய பணத்தில் சூக்குமமான உழைப்பு தனது முழுமையான வெளியீட்டை அடைகிறது. புவாகில்பேர் பணத்தை வெறும் பயனுள்ள பொருள்கள் என்று மட்டுமே கருதிய பண்டங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்த்தார்; பணத்தை எதிர்த்து வெறிகொண்ட வகையில் போராடினார்.
பணம் அதனளவில் நுகர்வுப் பொருள் அல்ல என்பதால் அது அந்நியப் பொருளாக, செயற்கையானதாக அவருக்குத் தோன்றியது. பணம் இயற்கைக்கு மாறான, கொடுமையான ஆட்சியைப் பெற்று விடுகிறது; இதுவே பொருளாதார அழிவுக்குக் காரணம். அவர் பணத்தைப் பற்றிக் கசப்பான கண்டனத்தோடு தம் ஆராய்ச்சியுரையைத் தொடங்குகிறார். ”.. நம்முடைய மனங்கள் கெட்டுப் போயிருப்பதால் தங்கமும் வெள்ளியும் தெய்வ உருவங்களாகி விட்டன.. அவற்றை தெய்வங்களாகவே மாற்றி விட்டோம். பெரும்பாலான மக்களின் மதமாகவும் வழிபடுகின்ற பொருளாகவும் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்ற போலித் தெய்வங்களுக்குக் குருட்டுத்தனமான பண்டைக் காலம் ஒருபோதும் படைத்திராத அளவுக்கு அதிகமான பொருள்களையும் விலைமதிப்பற்ற காணிக்கைகளையும் மக்களையும் கூட இன்னும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.”(3)
முதலாளித்துவ உற்பத்தியைப் பணத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும், அதே சமயத்தில் அதன் அடிப்படைகளை மாற்றிவிடக் கூடாது என்ற கற்பனாவாத ஆசை, மார்க்ஸ் குறிப்பிட்டது போல, புவாகில்பேர் முதல் புரூதோன் வரை பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் ”தேசிய மரபுரிமைக் குறைபாடாகும்”.
புவாகில்பேர் காலத்தில் முதலாளித்துவ சமூகம் அப்பொழுதுதான் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் உருவாகத் தொடங்கியிருந்தது. எனவே அந்த முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க இயல்பை, சுரண்டும் தன்மையை அவரால் வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால் அவர் பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வையும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்.
“பழைய அமைப்பு” வீழ்ச்சி அடைவதற்கும் புரட்சி தோன்றுவதற்கும் வழிவகுத்த புத்தகங்களை முதன்முதலாக எழுதிய சிலரில் புவாகில்பேரும் ஒருவர். சர்வாதிகார முடியாட்சியை ஆதரித்தவர்கள் 18-ம் நூற்றாண்டிலேயே இதை உணர்ந்திருந்தார்கள். புவாகில்பேரின் “அருவருப்பான நூல்கள்” அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டின, கொள்ளையடித்தலையும் கலகத்தையும் ஊக்குவித்தன; இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கைகளில் அவை குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தானவையாக இருந்தன என்று அத்தகைய ஆதரவாளர் ஒருவர் அவர் மரணமடைந்து அநேகமாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் எழுதினார். ஆனால் அவருடைய புத்தகங்களும் ஆளுமையும் முக்கியமானவை, சுவாரசியமானவை என்று நாம் கருதுவதற்குரிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) K. Marx, A Contribution to the Critique of Political Econorm, Moscow, 1970, p. 60..
(2)1bid., p. 54.
(3)Economistes financiers (dit XVIIIe siecte, Paris, 1843, pp. 394-395,
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983