“அப்பா.. எனது பிரச்சினையே
எனது பெயர்தான்”
செல்போனில் வைக்கப்பட்டிருந்த
ஒரு பெண்ணின்
தற்கொலைக் குறிப்பின் வாசகம்
கண்ணில் விழுந்த ஒரு துரும்பைபோல
உறுத்துகிறது
உங்களுக்கு அது விசித்திரமாக இருக்கலாம்
ஒருவர் பெயர் அவரை
தற்கொலைப்பாதை வரை
அழைத்துச் செல்லுமா எனில்
ஆம், அழைத்துச் செல்லும்
அவளது பெயர்
குறுவாளின் பளபளக்கும் முனையாக
அவளை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது
பிறகு ஒரு நாள் அது
அவள் தொண்டையில் இறங்கியது
எனக்கும் அப்படி இருக்கிறது
ஒரு பெயர்
நான் அந்தத் துயரத்தை நீண்டகாலமாக
சுமந்துகொண்டிருக்கிறேன்
அந்தப் பெயரினால்
நான் சில இடங்களில்
வாசல்படியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறேன்
சில இடங்களில்
சகிப்புத் தன்மையுடன்
வரவேற்பரை வரைக்கும்
பாதுகாப்பு மிக்க
நுழைவாயில்களில்
காவலர்கள் எல்லோரையும்
ஒரு முறை சோதித்தார்கள் எனில்
என்னை மட்டும் மூன்றுமுறை சோதித்தார்கள்
என்னை ஒரு முறை
என் கடவுளை ஒரு முறை
என் பெயரை ஒரு முறை
என் பெயரினால்
எனது விண்ணப்பங்கள்
எல்லா இடங்களிலும்
கடைசிக்கு தள்ளப்படுகின்றன
சுங்கச் சோதனைகளில்
சந்தேகத்தின் பெயரில்
என் ஆசன வாயில் திறந்துபார்க்கப்படுகிறது
என் சிநேகிதி
உன் வீட்டில்
எப்போதும் இறைச்சி வாடையும்
மீன் கவுச்சியும் அடிக்குமா என்று கேட்கிறாள்
என் ரத்தத்தில்
வெடிமருந்து வாசனை இருக்கலாம் என
என் நண்பர்களே சந்தேகிக்கிறார்கள்
பிறர் தன் திறமையை
ஒருமுறை நிரூபித்தால்
நான் இருமுறை நிரூபிக்க வேண்டும்
பிறர் தன் விசுவாசத்தை
ஒருமுறை நிரூபித்தால்
நான் நான்குமுறை நிரூபிக்க வேண்டும்
பிறர் தன் தேசபக்தியை
ஒரு முறை நிரூபித்தால்
நான் நூறுமுறை
நான் என் பெயருக்காக
வேட்டையாடப்பட்டபோது
ஓடி ஒளிந்துகொள்ள முயன்றேன்
அவர்கள் என் பெயரின் வாசனையால்
நான் இருக்குமிடத்தை
எளிதில் தெரிந்துகொண்டார்கள்
நான் பிறகு
ஒரு தலைமறைவு குற்றவாளிபோல
வேறொரு பெயரை சூடிக்கொண்டேன்
அவர்கள் நள்ளிரவில்
என்னைத் தட்டி எழுப்பினார்கள்
என் சொந்தப் பெயரின் அடையாள அட்டையை
என் முகத்தில் விட்டெறிந்தார்கள்
நான் கடற்கரை மணலில்
வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்
யாரோ ஒருவன்
என்னை உற்றுப்பார்க்கிறான்
” ஏன் இங்கிருக்கிறாய்..
அரேபிய பாலைவனத்திற்குபோ”‘ என்கிறான்
ஒரு இளம் பெண்
தன் பெயரின் சுமைதாங்காமல்
தூக்கில் தொங்குகிறாள்
அவள் உடலின் எடையைவிடவும்
அந்த பெயரின் எடை
ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது
அவள் இறக்கிறாள்
அவளது பெயர் இறக்கவில்லை
அது துடித்துக்கொண்டிருக்கிறது
காயம்பட்ட ஒரு பறவையாக
காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி !
“1947- காலக் கட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஜம்மு காஷ்மீர் களத்தில் நடந்த போரில் ஜவஹர்லால் நேரு சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அன்று மட்டும் இந்திய இராணுவத்தை அவர் சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்” என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருகின்றன. இந்த வாதம் ஒரு வரலாற்று மோசடி என்பதை இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலப்படுத்துகின்றன.
வழக்குரைஞரும் அரசமைப்புச் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.நூரானி, தி வயர் இணையதளத்தில் எழுதிய “காஷ்மீர், சட்டப்பிரிவு 370 முதல் பிரிவினை வரை: நேருவுக்கு எதிரான பா.ஜ.க. பரப்பும் வெறுப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பவை பொய்களே” எனும் கட்டுரையில் இந்திய இராணுவம் வெளியிட்டிருக்கும் “ஜம்மு காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு” என்ற ஆவணத்திலிருந்து அப்பொழுது சமாதான உடன்படிக்கை அவசியமாக இருந்ததை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
அப்பகுதியை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்குச் சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.
ஆசிரியர் குழு.
♦ ♦ ♦
பிரதமர் நேருதான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன் விளைவு, காஷ்மீரின் அந்தப் பகுதி இப்பொழுது பாகிஸ்தான் வசமாகிவிட்டது. இத்தேசத்தின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவரைப் பொருட்படுத்தாமல் நேரு தன்னிச்சையாக எடுத்த முடிவால் ஏற்பட்ட நிலை இது. பிறரது கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டு இருக்குமானால் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் இந்தியாவின் வசம் இருந்திருக்கும் என்று அமித்ஷா உள்ளிட்டு சங்கப் பரிவாரத்தினர் கூறிவருகின்றனர்.
இது அப்பட்டமான பொய். பட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி தெளிவாக்குகிறது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கும் இந்திய இராணுவச் சிப்பாய்கள். (கோப்புப் படம்)
இராணுவ வரலாற்று நிபுணர் S.N. பிரசாத் அவர்களால் பேட்டிகள் மற்றும் அதிகாரபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் இது தொடர்பான இராணுவ விஷயங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. இவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரலாற்றியல் பிரிவு இயக்குனராக பணியாற்றியவர். ஜம்மு காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு (1947-48) என்ற தொகுப்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் வரலாற்றுப் பிரிவால் 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் விவரிக்கப்பட்ட அன்றைய களநிலை பற்றிய வரலாற்றுப் பகுப்பாய்வு இங்கு விரிவாகத் தரப்படுகிறது.
முறையான பாகிஸ்தான் இராணுவத்தின் காலாட்படை டிவிசன்கள் இரண்டும், ஆசாத் காஷ்மீர் இராணுவம் என்றழைக்கப்பட்ட ஒரு காலாட்படை டிவிசனும் டிசம்பர், 1948-ல் எதிரியின் தரப்பில் போர்க்களத்தில் இருந்தன. இவை பாகிஸ்தான் இராணுவத்தின் 14 காலாட்படை பிரிகேடுகள் அல்லது 23 காலாட்படை பட்டாலியன்கள் மற்றும் ஆசாத் காஷ்மீர் இராணுவத்தின் 40 காலாட்படை பட்டாலியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. கூடுதலாக 19,000 சாரணர்கள் மற்றும் முறைசாராப் போர் வீரர்களும் இருந்தனர்.
இதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் 12 பிரிகேடுகள் கொண்ட 2 காலாட்படை டிவிசன்கள், மொத்தத்தில் முறையான இராணுவத்தின் சுமார் 50 காலாட்படை பட்டாலியன்கள் மற்றும் இந்திய மாநிலங்களின் படைகள், கூடுதலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் படை மற்றும் கிழக்கு பஞ்சாப் மக்கள் படையின் 2 பட்டாலியன்கள் நம்மிடம் இருந்தன.
இராணுவ பலம் தொடர்பான மேற்சொன்ன ஒப்பீட்டு விபரங்களை உத்தேச மதிப்பீடுகள் எனக் கொண்டாலும், ஜம்மு காஷ்மீரில் எதிரிப் படை இந்திய இராணுவத்தைவிட எண்ணிக்கையில் விஞ்சி நின்றிருக்கிறது என்பது தெளிவு. இத்தகைய சூழலில், எதிரியைக் காட்டிலும் தீரமும், திறமையும் ஒருகால் கூடுதல் சுடுதிறனும் அதனுடன்கூடச் சின்னஞ்சிறு விமானப்படையின் விலைமதிப்பற்ற உதவியும் சேர்ந்து போர்க்களத்தில் இந்திய இராணுவத்தின் கை ஓங்கியிருப்பதைச் சாத்தியமாக்கின.
1948-ம் ஆண்டின் இறுதியில் இந்திய இராணுவத்திடம் 127 காலாட்படை பட்டாலியன்கள் இருந்தன. இவற்றில் சுமார் 50 பட்டாலியன்கள் ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் இருந்தன. 29 பட்டாலியன்கள் அதிமுக்கியமான இந்திய – பாகிஸ்தான் எல்லையைக் காக்கும் பணியில், கிழக்கு பஞ்சாபில் இருந்தன. சட்டம் – ஒழுங்கு பராமரிப்புக்கு இன்னமும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ரசாக்கர்கள் இருந்த ஹைதராபாத்தில் 19 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு வலுவான இராணுவ பலம் தேவை என்று ஹைதராபாத் இராணுவ கவர்னர் கோரியிருந்தார். இவ்வாறாக உள்நாட்டுப் பாதுகாப்பையும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் விரிந்த எல்லைப் பாதுகாப்பு பணியையும் செய்வதற்கு வெறும் 29 பட்டாலியன்களே பாக்கி இருந்தன. இதுவே பிற பகுதிகளின் அவசரத் தேவைக்கான ரிசர்வ் பட்டாளமாகவும் இருக்க வேண்டியிருந்தது.
ஜம்மு காஷ்மீரின் மொத்த இராணுவத்துக்கும் தேவையான பொருட்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு ஒரேயொரு இருப்புப்பாதை மற்றும் ஒற்றைத்தடத் தார்சாலைதான் இருந்தது. இந்தச் சாலையோ மிக நீண்டது, பலவீனமானதும் கூட. இதன் குறுக்கே ஏராளமான குறுகலான பாலங்கள் வேறு.
பின்தளத்திலிருந்து போர்முனைக்கு பொருட்களையும் தளவாடங்களையும் கொண்டு செல்வதில் இத்தகைய இடர்ப்பாடுகள் இருந்த காரணத்தினால், ஜம்மு காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் துருப்புகளை பராமரிக்க முடியாது என்ற நிலைமையே இந்தியாவுக்கு இருந்தது.
பாகிஸ்தானுக்கு அத்தகைய எந்த ஒரு வரம்பும் இல்லை. பாகிஸ்தானின் பின்தளப் பிரதேசத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு எண்ணற்ற சாலைத் தொடர்புகள் இருந்தன. அதிலிருந்து குறுந்தடங்கள் மற்றும் சாலைகள் மூலமாக போர்க்களத்தின் முன்னணிப் பகுதியை அவர்கள் எளிதில் அடைய முடியும்.
இவற்றால் ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் கடுமையான இடர்ப்பாடுகளுக்கு மத்தியில்தான் செயல்பட வேண்டியிருந்தது. ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் மட்டும் நடத்தப்படும் போர் நடவடிக்கைகளின் மூலமாக எதிரியை முறியடிப்பது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. ஒரு தீர்மானகரமான வெற்றியைச் சாதிக்க வேண்டுமானால் பஞ்சாப்பின் விரிந்த சமவெளியில் போரை நடத்துவதற்கு பாகிஸ்தானை இழுத்து வரவேண்டியது தேவையாய் இருந்தது. எனவே, ஜம்மு காஷ்மீர் முழுவதையும் எதிரியிடம் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பாகிஸ்தானுடன் ஒரு முழுமையான போரில் இறங்கவேண்டியது அவசியமாக இருந்தது. (பக்கம்: 373-375)
காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை இந்தியா கைப்பற்றிக் கொண்டது. 1948 – 49 -ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு முழு வீச்சான போரை நடத்தும் நிலையில் இந்தியா இல்லை.
பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பார்வைக்குக் கொண்டுசெல்லுதல்
அன்றைய போர்க்கள நிலைமைகளில் உடனடிப் போர் நிறுத்தம் அத்தியாவசியமானதாக இருந்தது. இந்தியா அதற்கான செயல்முனைப்பு காட்டாது இருந்திருந்தால், பாகிஸ்தான் முதலில் ஐ.நா. சென்று இந்தியாவை எதிர்மனுதாரர் ஆக்கியிருக்கும். டிசம்பர் 8, 1947-ல் லியாகத் அலி கானைச் சந்திப்பதற்கு மவுண்ட்பேட்டனும் நேருவும் லாகூர் சென்றிருந்தபோதுதான் முதன் முதலின் இந்தப் பிரச்சினை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் ஒரு வரைவு ஒப்பந்தம் தொடர்பாக விவாதித்தனர். இப் பிரச்சினையை ஐ.நா.வின் முன் வைப்பதற்கு லியாகத் அலி கான் சம்மதம் தெரிவித்தார். நேருவை இதற்குச் சம்மதிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கினார் மவுண்ட்பேட்டன்.
1947, டிசம்பர் 21-22 தேதிகளில் மீண்டும் டெல்லியில் அவ்விவாதம் தொடர்ந்தது. கடைசி வரையிலும் இப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லும் கோரிக்கையை நேரு கடுமையாக எதிர்த்துவந்தார் எனினும், டிசம்பர் அன்று அவர் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். இதற்கான வரைவில் இடம்பெற்றிருந்த சுதந்திர காஷ்மீர் என்ற தெரிவை நீக்கிவிட்டு, காந்தியும் இதற்கு ஒப்புதல் அளித்தார். (எஸ். கோபால்; நேரு; தொகுதி-2; பக்கம்-22)
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் மரணத்திற்கு நீதி கேட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்கள் சி.எல்.டி வளாகத்தின் முன்பு ஒன்றிணைந்தனர். நேர்மையான, வெளிப்படையான நிர்வாக விசாரணையும், போலீசு விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்களது கோரிக்கையில், மாணவர்களின் புகார்கள் மற்றும் குறை தீர்க்கும் கமிட்டியை உருவாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் பேரவையால் ஒருமனதாக நிறைவேற்றப்ப்படும் மாணவர் நல விவகாரங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தக் கூடுதலில் மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணத்திற்கான பல்வேறு காரணங்கள் குறித்துப் பேசிய மாணவர்கள் பின்னர் அங்கிருந்து பேரணியாகச் சென்று ஐ.ஐ.டி இயக்குனரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
Today, around 200 students of IIT Madras gathered outside CLT to demand justice for the death of Fathima Lathief. The students demanded for a fair and transparent internal inquiry and cooperation to the police investigation.
The students also demanded for forming a complaints and grievance redressal committee and the necessary mechanisms for student well-being as unanimously decided by the Students Legislative Council.
The students then discussed on the various factors behind the death of Fathima. Then, they rallied to the Director’s office and submitted to him a representation containing their demands.
***
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 06
மார்ச் 7: “சின்ன” விஷயங்களைப் பற்றி
காலை. வகுப்புத் துவங்கும் மணி இன்னமும் அடிக்கவில்லை.
நான் கரும்பலகையில் பயிற்சிகளை எழுதுகிறேன். சில சிறுவர் சிறுமியர் என்னிடம் ஓடி வந்து ”இலிக்கோ அழுகிறான்” என்றனர்.
இலிக்கோ பொறுமையுள்ள சிறுவன். அவன் அழுகிறான் என்றால் உண்மையில் ஏதோ நடந்துள்ளது என்று பொருள். “ஏன் அழுகிறான்?”
இலிக்கோ, மேல்கோட்டுகளை மாட்டும் இடத்தில் மூலையை நோக்கியபடி நிற்கிறான்.
“ஏனெனில் சான்த்ரோ அவனைத் தொந்தரவு செய்தான்!”
”இலிக்கோவிற்கு முடி வெட்டியிருக்கின்றனர், சான்த்ரோ ஏதோ கேலி செய்கிறான்!”
ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? சான்த்ரோவை அருகே அழைத்து, அவன் மோசமாக நடந்து கொண்டதாக எல்லோருக்கும் கேட்கும்படி சொல்லி, இலிக்கோவிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறலாம். இது ஒரு வழி.
என்னிடம் ஓடி வந்த சிறுமிகளிடம், இப்படி நண்பனுக்கு விரோதமான வகையில் நடந்து கொண்டதற்காக சான்த்ரோவை வெட்கப்படும்படி சொல்லலாம். இது இரண்டாவது வழி.
இலிக்கோவை அருகே அழைத்து, அவனுக்கு எப்படி முடிவெட்டியுள்ளனர் என்று பார்த்து, “நீ அழகாக, உண்மையான ஆண் மகனைப் போல் ஆகியிருக்கிறாய். எனக்கும் சிறு வயதில் இப்படி முடி வெட்டிக் கொள்ளப் பிடிக்கும்” எனலாம். யாராவது அவனைக் கேலி செய்ததை குறிப்பிடாமலிருக்கலாம். இது மூன்றாவது வழி.
இந்த சம்பவத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் தராமல், “நான் வேலையாய் இருக்கிறேன்” என்று சிறுமிகளிடம் சொல்லலாம். இது நான்காவது வழி. வேறு வழிகளும் இருக்கக் கூடும். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? நான் சான்த்ரோவைத் தண்டித்தால் இதன் மூலம் வகுப்பு நண்பர்கள் முன் அவனை நான் இழிவுபடுத்தியதாக ஆகக் கூடும். ஒருவேளை அவன் இலிக்கோவை கேலி செய்யவே விரும்பவில்லையோ? கேலி செய்யக் கூடாதுதான், ஆனால் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதும், நாசூக்காக, கவனமாக நடக்கத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதல்ல.
சான்த்ரோவை வெட்கப்படுத்தும்படி, கண்டிக்கும்படி சிறுமிகளிடம் சொன்னால் அவர்கள் அவனை வெட்கப்படுத்தும் ”முறையில்” பின் சான்த்ரோ சிறுமிகள் மீது குற்றம் சாட்டுவான். அப்போது புதிய பிரச்சினை தோன்றும். இதைத் தீர்ப்பது இன்னமும் சிக்கலாயிருக்கும்.
நிலவரத்தைச் சுமுகமாக்க, எனது செல்வாக்கை மட்டும் பயன்படுத்தினால் (“நீ அழகாகி விட்டாய்”) ஒருவேளை மற்றவர்கள் (என்னை ஆதரிக்க வேண்டும் என்பது தெரியாமலேயே) என்னை ஆதரிக்காமலிருக்கலாம்.
இலிக்கோவின் புண்படுத்தப்பட்ட சுயமரியாதையை புனர் நாட்ட குழந்தைகள் என்னை ஆதரிக்க வேண்டியது அவசியம். இப்படி நடந்தால் சான்த்ரோ தானாகவே கண்டிக்கப்பட்டவனாவான். தன் நடத்தையைப் பற்றி சான்த்ரோ யோசித்துப் பார்க்கும்படி செய்ய, இதே போல் எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நான் அவனுடன் நேருக்கு நேராக, விளையாட்டுத்தனமின்றிப் பேச வேண்டும். – நான் தொடர்ந்து கரும்பலகையில் பயிற்சிகளை எழுதிய படியே அருகில் உள்ள சிறுவர்களிடம் சன்னமான குரலில் சொல்கிறேன்:
“நான் இப்போது இலிக்கோவை அருகே அழைத்து அவனுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். சரியா?” சிறுவனைக் கூப்பிடுகிறேன்: ”இலிக்கோ, அந்தப் பெரிய ஸ்கேலைக் கொண்டு வா!”
இலிக்கோ கண்ணீரைத் துடைத்து விட்டு, ஸ்கேலைக் கொண்டு வருகிறான்.
சான்த்ரோ தூரத்தில் நிற்கிறான். குழந்தைகள் என்னிடம் முறையிட்டது அவனுக்குத் தெரியும், எனவே, தொலைவில் நின்று என்ன நடக்கும் என்று பார்க்கிறான்.
“நீ முடி வெட்டிக் கொண்டாயா?” என்று நான் வியப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்கிறேன். ”எங்கே காட்டு பார்க்கலாம்!”
இலிக்கோ மெதுவாகத் தொப்பியைக் கழட்டுகிறான்.
“திரும்பு! உனக்கு முடிவெட்டியவர் திறமையானவர் போல் தெரிகிறது! நன்கு முடி வெட்டியிருக்கிறார்! சிறு வயதில் எனக்கு இம்மாதிரி ஒட்ட வெட்டிக் கொள்ளப் பிடிக்கும். ஆனால் அப்போதெல்லாம் இது மாதிரி அழகாக வெட்ட மாட்டார்கள். என்னைப் பார்த்து சிறுவர்கள் சிரித்தனர், கேலி செய்தனர். ஆனால் நான் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. இரண்டு, மூன்று வாரங்களில் தலை நிறைய முடி வளர்ந்து விட்டது… இப்படி உன்னை எனக்கு அதிகம் பிடிக்கிறது, நீ உண்மையான ஆண்மகன் போலிருக்கிறாய். அப்படித்தானே, சிறுவர்களே?”
உடனே சிறுமிகளும் சிறுவர்களும் என்னை ஒரு மனதாக ஆதரித்தனர். அப்போது தான் வகுப்பறையில் நுழைந்தவர்கள் கூட, நடந்தது என்ன என்று தெரியாமலேயே நான் சொல்வதை ஆமோதித்தனர்.
கீகா: “எனக்கும் இப்படி முடிவெட்டிக் கொள்ள ஆசையாக உள்ளது!”
இயா: “நன்றாகத்தானே இருக்கிறது! நீ ஏன் தொப்பியைக் கழற்ற வெட்கப்படுகிறாய்?”
“பாருங்கள், உங்களுக்காக எப்படிப்பட்ட கணக்குகளை நான் தயார் செய்கிறேன்!” என்று வேண்டுமென்றே எல்லோர் கவனத்தையும் இலிக்கோ முடி வெட்டியதைப் பற்றிய பேச்சிலிருந்து திசை திருப்புகிறேன்.
பாடவேளையின் போது குழந்தைகள் என் காதில் தம் விடைகளைச் சொன்ன போது நான் சான்த்ரோவை அணுகி அவன் காதில் மெதுவாகச் சொன்னேன்: “இந்தக் கணக்கை நீ சரியாகப் போட்டாய். ஆனால் நீ இலிக்கோவிடம் நடந்து கொண்ட விதம் நன்றாக இல்லை! நீ உண்மையான ஆண்மகனாக இருக்க விரும்பினால் இடைவேளையின் போது இலிக்கோவிடம் சென்று “என்னை மன்னித்து விடு, இலிக்கோ, நான் உன்னைக் கேலி செய்ய விரும்பவில்லை” என்று சொல். நீ எப்படி இதைச் செய்கிறாய் என்று நான் பார்த்துக் கொண்டிருப்பேன்!”
சிறிது நேரம் கழித்து இலிக்கோவிடம் சென்று காதில் மெதுவாகச் சொன்னேன்: “சான்த்ரோ உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடு, எல்லாவற்றையும் மறந்து விட்டதாகச் சொல். சரியா?”
இவர்கள் இதே மாதிரி நடந்து கொண்டனர்…… முதல் இடைவேளையின் போது சிறுமிகள் தேன்கோவையும் வாஹ்தாங்கையும் என்னிடம் அழைத்து வந்தனர்.
”இவர்கள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர்” என்று மாயா கோபத்தோடு சொன்னாள்.
நான் என்ன செய்வது? சிறுவர்களைத் தண்டிப்பதா? இவர்கள் தம் செயலைப் பற்றித் தாமே யோசித்துப் பார்க்குமாறு விடுவது தான் நல்லது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
“குழந்தைகளே, இப்போது நான் இவர்களுக்கு ஒரு வேலை தரப் போகிறேன். இதைச் செய்து முடித்ததும், இப்படி ஒருவருடன் ஒருவர் கலந்து பழகக் கூடாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களென எண்ணுகிறேன். இந்தப் பழமொழிகள் எழுதிய 40 தாள்கள் எல்லோருக்கும் தருவதற்காக எனக்கு வேண்டும்” என்று குற்றம் புரிந்தவர்களைப் பார்த்துக் கூறுகிறேன். ”இந்தப் பக்கத்தை எடுத்துச் சென்று தலா 20 தாள்களில் எழுதி வாருங்கள். இடைவேளைகளில் உட்கார்ந்து எழுதுங்கள். நாளை மறுநாள் முடிக்க வேண்டும். நான் ஏன் இந்த வேலையை உங்களுக்குத் தருகிறேன் என்று புரியும் என எண்ணுகிறேன். இதோ தாள், இதில் எழுதுங்கள்!”
ஒரு தாளில் பின்வரும் நான்கு பழமொழிகளை எழுதித் தருகிறேன்:
நல்ல வார்த்தை வாளையும் கீழே போடச் செய்யும்.
நல்ல வார்த்தையால் உலகம் ஒளிமயமாகும்.
கெட்ட வார்த்தை நண்பனையும் விரோதியாக்கும்.
தீய சொல் இதயத்தில் கல்லாக விழும்.
சிறுவர்கள் இதை வாங்கிக் கொண்டு உடனே எழுத உட்கார்ந்தனர்.
ஒரு வாரத்திற்குப் பின் “நல்ல வார்த்தை – மருந்து” எனும் தலைப்பில் வகுப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்துவேன். தேன்கோவும் வாஹ்தாங்கும் அனேகமாக அதில் தீவிரப் பங்கேற்று தம்மைப் பற்றி நிறையப் பேசுவார்களென எண்ணுகிறேன்…
….பெரிய இடைவேளையின் போது குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் விளையாட ஆரம்பித்தனர். நீயாவும் ஏல்லாவும் காணாமற்போய் விட்டார்கள் என்பதை திடீரெனக் கண்டுபிடித்தோம். அவர்களைத் தேட ஆரம்பித்தோம். எனக்குக் கவலை உண்டாயிற்று. குழந்தைகளும் கவலைப்படுகின்றனர். அவர்கள் எங்கே போயிருக்க முடியும்? அனுமதியின்றி அவர்கள் எப்படிப் போகலாம் என்று குழந்தைகள் கண்டிக்கின்றனர். இடைவேளை முடிவடைகிறது. இறுதியாக அவர்கள் வயலில் பூத்த பூக்களை கை நிறையக் கொண்டு வருகின்றனர்.
“இது உங்களுக்கு!” என்று கூறி பூக்களை என்னிடம் நீட்டுகின்றனர்.
நான் பதில் சொல்லும் முன்னரே எல்லாப் பக்கங்களில் இருந்தும் குழந்தைகளின் கோபக் குரல்கள் ஒலிக்கின்றன.
”நீங்கள் எங்கே போனீர்கள்? ஏன் அனுமதியின்றி சென்றீர்கள்? எங்கள் விளையாட்டைக் கெடுத்து விட்டீர்கள்!”
“நாங்கள் ஆசிரியருக்கு பூ பறிக்கப் போனோம்” என்று ஏல்லா சமாதானம் சொல்கிறாள்.
”அவருக்கு பூக்கள் எதற்கு, நீங்கள் அவருக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுத்தினீர்கள் தெரியுமா!”
“உங்களுக்காக அவர் எவ்வளவு கவலைப்பட்டார் தெரியுமா!”
“உங்களுக்கு வெட்கமாயில்லையா!”
“நாங்கள் எல்லா இடங்களிலும் உங்களைத் தேடினோம்!”
குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் எப்படி புத்தி சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்த நான், இந்தப் பொதுக் கோபத்தில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது என்று முடிவு செய்தேன்.
இது ஏதோ புதிதாக தயாரிக்கப்பட்ட கல்விக்கொள்கை அல்ல. ஏற்கனவே 2000-ம் ஆண்டு வாஜ்ய்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் ஒரு கல்வி குழு அமைத்தது. அந்த குழு கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படைகள் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மையமாக இருக்கின்றது. அதன்பின் 2014-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டி.எஸ். சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 2016-ல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட் டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகள் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட வேண்டும் என்ற காட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன.
… பல்தேசிய இனங்களின் மொழி இனம் கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு கல்வியை இந்திய பண்பாடு என்ற பெயரில் சமஸ்கிருதம் பண்பாட்டை புகுத்தி, இந்து, இந்தி, இந்தியா என்ற தனது நீண்ட கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல். இன்னொரு பக்கம் பல இலட்சம் கோடி வணிகம் புரளும் இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்து விடுவது. பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற இந்த தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி முறியடிக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனை ஒன்றிணைத்து ஒட்டு ரக வீரியத்தன்மையுடன் வரும் இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து எமது பு.மா.இ.மு. – வும், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களும் போராட்டங்களையும், விவாதக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.
… பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். பெரும்பான்மை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தாய் மொழி வழியிலான, அறிவியல்பூர்வமான, இலவச – கட்டாயக் கல்விக்கல்வியை முன்னிறுத்தும் ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுக்க வேண்டும். போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களையும், ஆசியர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சிறுவெளியீட்டை கொண்டு வருகிறோம். பயன்படுத்துங்கள்! பரப்புங்கள்! நன்றி! (நூலின் முன்னுரையிலிருந்து)
அரசியலமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டிய இடங்களில், கையாளப்படும் மற்றொரு வார்த்தை ‘சமுதாயம்’ (community) (பக்.29). இதன்படி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ‘சமுதாயத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
இது தே.க. கொள்கை -2019 கூறும் சமுதாயம்’ என்பது என்ன என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றது. சாதி, மதம் மற்றும் வர்க்கம் என்று பிளவுண்டு கிடக்கும் இந்தியச் சமூகத்தை ஒரு ஒற்றை சமூகமாகக் கட்டமைப்பது மிகவும் ஆபத்தானது. இது சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் பிடியில் பொதுக்கல்வி அடிமைப்பட்டுவிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, தே.க. கொள்கை -2019-ன்படி, கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாகக் குழுக்களில் (School Complex Management committees) சமுதாயம்’ முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது (பக். 173). இது மட்டுமல்லாமல், ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early childhood care and education), கல்வி மற்றும் எண் அறிவுத் திறமைகளை மேம்படுத்துதல் (ப.எண். 57), கல்விக் கான உரிமையை நடைமுறைப்படுத்துதல் (பக். 67) போன்றவற்றிலும் ‘சமுதாயத்தின் பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும், 6 – லிருந்து 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த வகையான தொழிற்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதில் இந்த ‘சமுதாயம் ‘தான் பரிந்துரைகளைக் கொடுக்கும் (பக்.95). ஆரம்பக் கல்விபோல, உயர் கல்வித் துறைகளும் ‘சமுதாயத்துடன்’ இணைந்து செயல்படும் (பக்.202). இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தே.க.கொள்கை -2019 கூறும் ‘சமுதாயம்’ ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள், உடல் ஊனமுற்றோர், மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருத்தல் முக்கியம். ஆனால் பிரதிநிதித்துவம் குறித்து எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை ஆகையால், தே.க.கொள்கை -2019 ஒரு ஒற்றைப் பார்வை கொண்ட ஆளும் வர்க்கத்தின் சாதியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கல்வி முறையைத் திணிக்க முற்படும் செயலாகவே அமையும். (நூலிலிருந்து பக்.7-8)
இந்திய உயர் கல்வியைச் சர்வதேசமயமாக்குவது குறித்து அதாவது, சர்வதேசச் சந்தையோடு இணைப்பது குறித்து அறிக்கை விரிவாகப் பேசுகிறது. இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் 15% வெளிநாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, வெளிநாட்டு பேராசி ரியர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியமர்த்துவது, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் படிப்புகள் வழங்குவது – போன்ற பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உள்ள சட்ட ரீதியிலான தடைகளை அரசு நீக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது. (பக்.12.4)
இவையனைத்தும் ஏற்கெனவே, உயர் கல்விச் சீர்திருத்தம் குறித்து காட்ஸ் ஒப்பந்தம் கூறியுள்ள பரிந்துரைகளாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசு செய்து வருகின்ற UGC மற்றும் MCI கலைப்பு, வெளிநாட்டு பேராசிரியர்களைப் பணியமர்துவது, NIRF, MOOCs, மேன்மைதகு நிறுவனங்கள் திட்டம் – ஆகியவை உயர் கல்வியை சர்வதேசப்படுத்துதல் என்ற நோக்கத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உயர் கல்வியில் அதிக லாபமீட்டுவது போல தெற்காசிய நாடுகளிலிருந்து அதிக மாணவர்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதன் வாயிலாக தனியார் கல்வி முதலாளிகள் அதிக லாபம் பெறவே அரசு இப்பரிந்துரைகளைக் கூறியுள்ளது. எனவே, இதை அனைவரும் நிராகரிக்க வேண்டும். (நூலிலிருந்து பக்.48)
நூல் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ? ஆசிரியர் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, நெ-7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 600 095. தொலைபேசி எண் : 94451 12675 மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com
கேள்வி: //பாரத ரத்னா விருதும் பாஜக காவிகளும் பற்றி …?//
– செல்வராஜன்
அன்புள்ள செல்வராஜன்,
மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கின்றது. மதன் மோகன் மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, பூபேன் அசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோர்தான் அந்த ஐவர்.
மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர். காங்கிரசு தலைவராக இருந்தாலும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தியவர். முசுலீம்களுக்கு தனி வாக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதையும் கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கேற்பதையும் எதிர்த்தவர். அந்த வகையில் இவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டாடி வருகிறது.
வாஜ்பாயியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அக்மார்க் ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜக-வின் பிரதமராக பணியாற்றியவர். பிரணாப் முகர்ஜி மோடியின் முதல் ஆட்சியில் பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவராக இருந்து ஒத்தூதிய காங்கிரசுகாரர். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் காங்கிரசுக் கட்சி கண்டனத்தையும் மீறி கலந்து கொண்டு சங்கிகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர். பூபேன் அசாரிகா மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்றாலும் தனது இறுதிக் காலத்தில் பாஜக-வில் இணைந்தார்.
நானாஜி தேஷ்முக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர். சங்கிகளின் ராமராஜ்ஜிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தவர். இந்தக் கொள்கைகள் என்பது சமூக ஏற்றத்தாழ்வை விட்டுவிட்டு தனிமனிதனைச் சீரமைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் உன்னால் முடியும் தம்பி வகையாறாதான். வல்லரசு
இப்படி பாரத ரத்னா விருதுப் பட்டியல் சங்கிகளின் மனம் கவர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இனி அத்வானி, கோட்சே, சாவர்க்கர், ஹெட்கேவார், சியாம் பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை கலைமாமணி விருதுகளை கண்டு கொள்ளாதது போல பாரத ரத்னாவையும் பாராமுகமாக விட்டு விட முடியாது. தொடர்ந்து விமரிசிக்க வேண்டும்.
கேள்வி: //முதலாளித்துவ அமைப்பு முறை தோற்று வருவதாலேயே சோசலிசம் வந்து விடுமா?//
– சி.நெப்போலியன்
அன்புள்ள நெப்போலியன்,
முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி அதன் இயங்கு முறையிலேயே உள்ளார்ந்து உள்ளது. தனி நபர் சொத்து குவிப்பும் – பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வருமானமிழப்பதையும், தனிப்பட்ட தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்தியும் – நாடு தழுவிய அராஜக உற்பத்தியுமான இரு முரண்பாடுகள் முதலாளித்துவம் தானே தோண்டிக் கொண்ட சவக் குழிகள். இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சொத்துடமையை சமூகத்திற்கு சொந்தமாக்குவதும், பெரும்பான்மை மக்களுக்கான திட்டமிட்ட மைய உற்பத்தியும் சோசலிசம் முன் வைக்கும் தீர்வுகள். அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அழிவிலிருந்து வந்தடைந்தே ஆகவேண்டிய மாற்றங்கள். அதைத்தான் புரட்சி என்கிறோம்.
இந்த மாற்றத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சியே சாதித்துக் காட்டும். ரசியாவிலும், சீனாவிலும் அப்படித்தான் புரட்சிகள் நடந்தேறி சோசலிச சமூகம் உருவாக்கப்பட்டது. சரி இது வரலாறு மற்றும் அறிவியல்.
இன்றைய நிலைமையில் உலகெங்கிலும் அப்படி ஒரு சோசலிச முகாம் இல்லை. மார்க்சிய லெனினிய கட்சிகளும் பலவீனமாக உள்ளன. எந்த நாட்டிலும் அவை தீர்மானகரமான சக்தியாக இல்லை. அதே நேரம் முதலாளித்துவத்தின் தோல்வி, அதன் கட்டமைப்பு நெருக்கடி காரணமாக உலகெங்கிலும் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் வெடித்து வருகின்றன. தொடர்ந்து நடக்கின்றன. முதலாளித்துவம் ஒழியட்டும் என்ற அரசியல் முழக்கங்கள் ஐந்து கண்டங்களிலும் முழங்குகின்றன. இந்தப் போராட்டங்களினூடாக சில நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் பலமடைந்து சோசலிச புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருப்பதாக சொல்லலாம். அதன் மூலம் மீண்டும் இவ்வுலகில் ஒரு சோசலிச முகாம் தோன்றி உலகை வழிநடத்தலாம். அப்படி நடக்கவில்லை என்றால்?
முதலாளித்துவம் தனது உள் முரண்பாடுகளால் இந்த உலகை பெரும் போருக்குள் தள்ளி, சுற்றுச்சூழலை நாசம் செய்து அழிவைக் கொண்டு வரும்.
ஆகவே முதலாளித்துவத்தின் தோல்வி ஒரு அறிவியல் எனும் போது அதன் தீர்வில் இந்த உலகம் அழியுமா இல்லை புரட்சியால் காப்பாற்றப்படுமா என்ற இரண்டு தீர்வுகளே உள்ளன. மூன்றாவது ஏதுமில்லை.
நன்றி!
♦ ♦ ♦
கேள்வி: //சீன அதிபரின் சென்னை வருகை எதற்காக?//
– சி. நெப்போலியன்
மோடியைப் போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனது பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளம்பரப்படுத்துகிறார். வருகையில் நடந்த கண்காட்சிகள், விருந்துகளில் இது ஒரு நோக்கம். மற்றொருபுறம் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா பொருளாதார, அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் முதலீடுகளைக் கொட்டி தனது செல்வாக்கு மண்டலங்களை வர்த்தகத்தின் மூலம் உருவாக்க விரும்புகிறது. இந்தியா, அமெரிக்காவின் அடியாளாக இருந்தாலும் வர்த்தகம் என்ற முறையில் சீனாவோடும் உறவாட வேண்டிய தேவை இருக்கிறது. சீன உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் பிரேசிலில் நடக்கும் பிரக்சிட் அமைப்பிலும் இந்தியா பங்கு பெறுகிறது. அமெரிக்காவிற்கு போட்டியான இந்த பொருளாதார அரசியல் அமைப்புகள் இப்போது பெரிய அளவிற்கு பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் செய்யலாம். அது அமெரிக்க சீன முரண்பாட்டின் வளர்ச்சியாகவும் பார்க்கலாம்.
கேள்வி: //சீனா மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன என புரியவில்லை?
சர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள் உலகை ஆட்டிப் படைக்கும் அதே பொழுது, சீனாவும் இந்த மே.நி. வல்லரசுகளை சாராமல் சுயமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காரணம் மாவோவின் கம்யூனிசம் அல்ல என்றும் அதிகாரவர்க்க முதலாளித்துவம் மாவோவின் காலத்திற்கு பின் சீனாவின் அதிகாரத்தை கைப்பற்றியதும்தான் காரணம் என தெரிகிறது.
ஆனால், பிற மேல்நிலை வல்லரசுகளுக்கு போட்டியாக வளர்ந்தது எப்படி? புரியவில்லை.
மற்றும், தற்போதைய உலக பொருளாதார மந்தத்தில் சீனாவும் சிக்கி உள்ளதா? தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.//
– திப்பு
அன்புள்ள திப்பு,
முன்னர் பார்த்த கேள்வி பதிலின் தொடர்ச்சியாக சில விசயங்களைப் பார்க்கலாம். சீனா இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு வல்லரசு நாடு போல வளர்ந்து விட்டதா என்று கேட்டால் ஆம், அப்படி வளர்ந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டை விட சீனாவின் ராணுவ பட்ஜெட் அதிகம். அமெரிக்காவின் பட்ஜெட் இதை விட சில மடங்கு அதிகம் என்றாலும் இன்று அமெரிக்காவிற்கு அடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு சீனாதான்.
அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையில் புழங்கப்படும் சட்டை முதல் செல்பேசி வரை சீனாதான் தயாரிக்கிறது. அமெரிக்காவின் அன்றாட நுகர்வு சீனாவை நம்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. இன்னொரு புறம் சீனாவை புறந்தள்ளி பொருளாதார மேலாண்மையை பெறுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவோடு வர்த்தகப் போரை துவக்கியுள்ளார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு வரிகளை உயர்த்தி உள்ளது.
சீனா இந்த பிரம்மாண்டமான பொருளாதார நிலைமையை எப்படி அடைந்தது?
மாவோ காலம் வரையிலான சீனா அடிப்படைக் கட்டமைப்புகளை வலுவாக கட்டியது. பின்னர் டெங்சியோ பிங் காலத்தில் அந்த அடிப்படைக் கட்டமைப்பின் வலுவில் முதலாளித்துவ பொருளாதாரம் கொண்டு வரப்பட்டு வேகமாக பொருளாதாரம் வளர்ந்தது. திறமையான தொழிலாளர்கள், மலிவான கூலி, பிரம்மாண்டமான அடிக்கட்டமைப்பு வசதிகள், அதற்கு மலிவான கட்டணங்கள் என்று சீனாவில் கட்டமைப்பை வல்லரசு நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. மறுபுறம் சீனாவும் இந்த வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது. இன்று அமெரிக்கா உள்ளிட்டு பல நாடுகள் வெளியிட்டுள்ள கடன்பத்திரங்களின் கணிசமான பகுதி சீனாவிடம்தான் உள்ளது. சோசலிசம் உருவாக்கிய மூலதனத்திரட்சியை சீன அதிகார வர்க்கம் திருடிக் கொண்டு இந்த முதலாளித்துவ வளர்ச்சியை சாதித்திருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடியின் விளைவு சீனாவிலும் இருக்கிறது என்றாலும் வல்லரசு நாடுகள் போல பெரும் பாதிப்பு இல்லை. தனது நிதி மூலதனத்தை பெருக்கும் பொருட்டு சீனா உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகிறது. நிலத்திலும், நீரிலும் அது செயல்படுத்தி வரும் பட்டுவழிப்பாதை திட்டம் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களையும், சாலைகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருக்கும் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளிகளும், சீன அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.
சரி, சீனாவின் இந்த வளர்ச்சி உள்நாட்டில் என்ன சாதித்திருக்கிறது?
வாரத்திற்கு இரண்டு பில்லியனர்கள் புது வரவாக அறிமுகமாகும் அளவிற்கு பெரும் பணக்காரர்கள் சீனாவில் வளர்ந்து வருகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியிலேயே பெரும் பில்லியனர்கள் உறுப்பினர்களாகவும், பொறுப்பிலும் உள்ளனர். மறுபுறம் வறுமையும், வேலையின்மையும், சமூக நலத்திட்டங்களிலிருந்து மக்கள் தூக்கியெறியப்படுவதும் சீனாவில் நடக்கிறது. சீனத் தொழிலாளிகள் சீனாவின் கிழக்கு பொருளாதார மண்டல நகரங்களில் தம்பதி சகிதராக பணி புரிகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் ஒரு தரமான வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாக வாழ முடிவதில்லை. தமது குழந்தைகளை தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வயதான பெற்றோரிடம் விட்டு விட்டு நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணிநேரமும் அதிகம். நல்ல கல்வி, நல்ல சுகாதாரம் ஆகியவை நகரங்களில் பெரும் செலவு பிடிக்கும் வண்ணம் இருப்பதால் சீனத் தொழிலாளிகளின் குடும்ப வேர் இன்னமும் கிராமங்களிலேயே இருக்கிறது.
இன்று உலகிலேயே அணு அணுவாய் குடிமக்களைக் கண்காணிக்கும் நாடாக சீனா உருவெடுத்துவிட்டது. தலைநகர் பீகிங்கில் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் கூட வாழ முடியாது. அப்படி பிழைக்கும் மக்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு நகரத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள். இப்படி வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு சீனாவில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியும், சுகாதாரமும், வேலையும் ஓரளவுக்கு வழங்கப்படுவதால் ஒட்டு மொத்த புள்ளிவிவரம் மற்ற நாடுகளை விட வாழ்க்கைத் தர மேம்பாட்டில் அதிகம் இருக்கும். இதற்கு, அங்கே வறுமை குறைந்து வருவதாக பொருள் இல்லை.
சீன முதலாளிகளுக்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகின்றன. பல முதலாளிகள் தமது சொத்துக்களை வரி இல்லா சொர்க்கங்களில் கொண்டு செல்கின்றனர். சீனாவின் பணக்காரக் குழந்தைகள் அனைத்தும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகளே அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் படிக்கிறார். ஆனால் சீன அதிபரின் வருட ஊதியம் 22,000 டாலர் மட்டுமே. அதாவது மாதம் தோராயமாக ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தில் அவரது மகள் எப்படி அமெரிக்காவில் படிக்க முடியும்? அதற்கு சீனாவில் அனைவரும் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள். சீன அதிபரின் மாமன், மச்சான், அத்திம்பேர் முதலாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதிபர் மகளின் கல்விச் செலவை ஏற்பார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சீனாவின் ஏதாவது ஒரு தனியார் தொழிற்துறையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
இந்த நிலைமைகள் அனைத்திற்கும் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற அரசியல் அமைப்பு சாதகமாக இருக்கிறது. நாட்டின் செல்வ வளங்களை வல்லரசு நாடுகளுக்கு விற்பதற்கும், பணக்காரர்களை உருவாக்குவதற்கும், ஏழைகளை நகரங்களில் வாழமுடியாதபடி செய்வதற்கும், போராட்டங்களை முடக்குவதற்கும் இந்த போலிக் கம்யூனிச ஆட்சி பொருத்தமாக இருக்கிறது.
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்
2003-ம் ஆண்டில் பாபர் மசூதிக்கு அடியில் இராமன் கோயில் இருந்ததற்கு சான்று உள்ளதாக கூறிய இந்திய தொல்லியல் துறையில் (Archaeological Survey of India – ஏ.எஸ்.ஐ) ஆய்வில் ஈடுபட்ட தொல்லியலாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இல்லை.
இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு கீழே ஒரு பிரமாண்டமான கட்டமைப்பு இருந்ததற்கான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய தொல்லியல் துறை அதற்கு 574 பக்க அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2003 ஆகஸ்டில் வழங்கியது. ASI-ன் அறிக்கையை “தெளிவற்ற மற்றும் தன் முரண்பாடானது” என்று வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்ஃபு வாரியம் கூறியது.
தொடர்ந்து, வக்ஃபு வாரியம் தரப்பில் சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் என்ற இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ASI-ன் அகழ்வாராய்ச்சிகளை கவனித்தனர். ஏ.எஸ்.ஐ.யின் ஆய்வு முடிவுகளை, தொடர்ந்து செப்டம்பர் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (Economic and Political Weekly) அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதன் படி, அகழ்வாராய்ச்சியின் போது, ஏ.எஸ்.ஐ பின்பற்றிய பல்வேறு நடைமுறைகளுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வின் போது, “ஏ.எஸ்.ஐ. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் மனதில் ஏற்கனவே ஒரு முன்முடிவு இருந்தது என்பது உண்மை” என்று அவர்கள் கூறினார்கள்.
இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் மீதான ASI-யின் அதிகாரம் காரணமாக அதன் அறிக்கை கேள்விக்குட்படுத்தப்படவில்லை என்று கட்டுரையாசிரியர்கள் கூறினார்கள். “இந்தியரோ அல்ல வெளிநாட்டவரோ எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் தளங்களை ஆராய அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பினால் ASI-யிடமிருந்து உரிமம் பெற வேண்டும். எனவே எந்தவொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் இந்திய தொல்லியல் துறைக்கு எதிராக அல்லது அதன் காலாவதியான முறைகளுக்கு எதிராக பேச தயாராக இல்லை” என்று கூறினார்கள்.
கர சேவகர்கள், 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இப்போது 26 ஆண்டுகள் ஆகின்றன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவ பிற்போக்குச்சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
நடைமுறை குறைபாடுகளுடனான முடிவுகளை ஏ.எஸ்.ஐ வந்தடைந்தது எப்படி என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான வர்மா Huffington Post பத்திரிக்கையிடம் பேசிய போது கூறினார். “பாபர் மசூதியின் கீழ் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு இப்பொழுது கூட தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை” என்று அவர் வாதிடுவதுடன், “பாபர் மசூதிக்கு அடியில், உண்மையில் பழைய மசூதிகளே உள்ளன” என்று மேலும் கூறினார்.
அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு ஏ.எஸ்.ஐ மூன்று சான்றுகளை பயன்படுத்தியது – அனைத்தும் கேள்விக்குரியவை என்று வர்மா Huffington Post-டிடம் கூறியுள்ளார்.
1) ஒரு மேற்கு சுவர் : “மேற்கு சுவர் மசூதிக்குரிய ஒரு அம்சமாகும். அந்த சுவருக்கு முன்பு தான் நமாஸ் என்று நீங்கள் சொல்லுவீர்கள். இது கோவிலுக்குரிய ஒரு அம்சம் அல்ல. கோவில் இதைவிட மிகவும் வேறுபாடான அமைப்பு கொண்டது”.
2) ஐம்பது தூண் தளங்கள் : “இவை முற்றிலும் புனையப்பட்டவை. இது குறித்து பல புகார்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்தோம். தூண் தளங்கள் என்று அவர்கள் கூறுவதுடன் ஒப்பிட்டால், இவை வெறுமனே உடைந்த செங்கற்களின் துண்டுகள் மற்றும் அவற்றுக்கு இடையில் சேறு பூசப்பட்டிருக்கிறது” என்பது தான் எங்கள் வாதம்.
3) கட்டிட துண்டுகள் : “இந்த 12-ல் [மிக முக்கியமான கட்டிடக்கலை துண்டுகள்] ஒன்று கூட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்படவில்லை. மசூதியின் சுண்ணாம்பு தளத்திற்கு மேலே கிடந்த சிதைவுகளிலிருந்து இவை எடுக்கப்பட்டன… ஒரு கோயிலில் அதுவும் ஒரு கல் கோயிலில் (இது ஒரு கல் கோயில் என்று கூறப்படுகிறது) அவர்கள் கண்டுபிடித்ததை விட செதுக்கப்பட்ட பொருள்கள் அதிகம் இருக்கும்.
முந்தைய அகழ்வாராய்ச்சிகள் :
பாபர் மசூதியைச் சுற்றி நடத்தப்பட்ட பழைய அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் வர்மா பேசினார். முதலாவது, ஏ.எஸ்.ஐ.யின் முதல் தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) 1861-ம் ஆண்டில் நடத்தியது. அயோத்தியில் மூன்று குன்றுகளில், இரண்டு புத்த ஸ்தூபிகள் மற்றும் ஒரு விஹாரம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதை வர்மா கோடிட்டு கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சில கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் செவிவழி கதைகளைப் பற்றி அவரது அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வர்மா கூறுகிறார்.
இரண்டாவது அகழ்வாராய்ச்சி 1969-ம் ஆண்டில் பாபர் மசூதி அருகே பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்பொருள் துறையால் (Department of Archaeology of the Banaras Hindu University) நடத்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் சில பதிவுகள் இன்றுவரை தப்பிப் பிழைத்திருந்தாலும், வரலாற்றின் தொடக்ககாலத்தில் மற்றும் இடைக்காலத்தில் இப்பகுதியில் குடியேற்றம் நடந்ததாக அவர்கள் முடிவு செய்தனர்.
1975 மற்றும் 1980-க்கு இடையில், ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய தலைமை இயக்குனராக இருந்த பி.பி.லால் இந்த திட்டத்தை புதுப்பித்தார். இப்பகுதி குறித்த வரலாற்றில் லாலின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.
எனவே லாலின் வேலைத்திட்டம் தனித்து நிற்பதன் பின்னனி என்ன? வர்மாவின் கூற்றுப்படி (தெளிவுக்காக திருத்தப்பட்டது),
அயோத்தி, மதுரா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று தளங்களில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோயில்களின் முழு சிக்கலையும் 1988 வாக்கில் (விஸ்வ இந்து பரிஷத்) கையில் எடுத்தது. 1975 மற்றும் 1978 -க்கு இடையில் அயோத்தியில் எடுக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதாகக் கூறிய தூண் தளங்களின் புகைப்படத்தை மாந்தன் (Manthan – இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) இதழில் (அதே ஆண்டில்) பி.பி.லால் வெளியிட்டார். மேலும் குரோஷியாவில் (Croatia) நடந்த உலக தொல்பொருள் மாநாட்டிலும் அந்த புகைப்படத்தை முன் வைத்ததுடன், அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டால் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.
பாபர் மசூதி நினைவுச் சின்னத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான அரசியல் இயக்கத்தை உருவாக்க பாஜக-வுக்கு லாலின் கூற்றுக்கள் உதவியதுடன் 1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தபின், அகழ்வாராய்ச்சி மீண்டும் பெரிய நிகழ்ச்சி நிரலாக மாறியது. வர்மாவின் கூற்றுப்படி, 2002-ல் அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏ.எஸ்.ஐ க்கு கட்டளையிட்டது.
கேள்விக்குரிய ASIன் அறிக்கை:
தனது இறுதி அறிக்கையில் விரும்பத்தக்க பல விடயங்களை ஏ.எஸ்.ஐ விட்டுவிட்டது என்கிறார் வர்மா. அறிக்கையின் தொடக்கம் சாதாரணமாக இருந்தாலும் முடிவு தனித்து நிற்கிறது என்று அவர் ஹஃபிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.
முழு அறிக்கையையும் நீங்கள் படித்தால், கோவில் பற்றி எதையும் அவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும். இது ஒரு தரமான அறிக்கை. … மனித எலும்பு எச்சங்கள் பற்றிய ஒரு தலைப்பு மட்டும் அதில் காணாமல் போய்விட்டது. அதை தான் அவர்களும் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியிடவில்லை.
நீங்கள் மேலும் காண்பது என்னவென்றால், அந்த [பிற] தலைப்புகளை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கடைசியில், எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையின் கடைசி பத்தியில், மேற்கு சுவர், தூண் தளங்கள் மற்றும் சில கட்டட துண்டுகள் ஆகியவற்றின் சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையில் மூன்று வரிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இல்லையெனில், விவாதத்தில் எங்கும், ஒரு கோயில் இருப்பதாக ஒரு பேச்சும் இல்லை. அதே சான்றுகளுடன், பாபர் மசூதியின் கீழே இரண்டு அல்லது மூன்று சிறிய மசூதிகள் இருந்தன என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம்.
[ இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 6, 2018 அன்று தி வயர் தளத்தில் வெளியிடப்பட்டது. நவம்பர் 8, 2019 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது வாசகர்களுக்காக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ]
இந்தியா நிர்வகித்து வந்த ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருந்த 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நீக்கியது மத்தியில் உள்ள இந்துத்துவ அரசாங்கம். நீக்கத்துக்குப் பின், ஜம்மு காஷ்மீரில் கடுமையான தடைகள் அமலாக்கப்பட்டன.
காஷ்மீர் தெருக்களில் 700,000 படையினர் நிறுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் சிறார்களையும்கூட இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்தது. மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக முடங்கியது.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் பெண்கள் பல தசாப்தங்களாக நீடித்துவரும் மோதல்களால் அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் முடக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சற்றே தளர்த்தியிருந்தாலும், 70 ஆண்டுகாலம் பிரச்சினை நீடித்துவரும் நிலையில், மிக மோசமான ஒடுக்குமுறை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
கடந்த செவ்வாய்கிழமையோடு (12-11-2019) காஷ்மீர் முடக்கத்துக்கு உள்ளாகி 100 நாட்களாகிறது. அங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்தன. பணிக்காக காஷ்மீர் வந்திருந்த வேறு மாநில தொழிலாளர்கள் மூவர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பல கிரானேடு தாக்குதல்கள் நடந்தன. உள்ளூர்வாசி அல்லாத ஒருவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பின்வரும் ஒளிப்படங்கள் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கின்றன…
இந்திய பாராளுமன்றம் பிரிவு 370-ஐ நீக்கிய ஆகஸ்டு 5 அன்று காலை நேரத்தில் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் திரண்டன. இந்த முடிவை எதிர்த்து காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான படை அனுப்பப்பட்டன. பிரச்சினைக்குரிய இந்தப் பகுதியில் ஒவ்வொரு முனையிலும் ஆயுதம் தாங்கிய படைகள் நின்றன.
பிரிவு 370 நீக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், மத்திய அரசாங்கம் சுற்றுலா பயணிகள், இந்து ஆன்மீக பயணிகள், மாணவர்களை காஷ்மீரிலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியது. இது இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை பீதியடைய வைத்தது. குழப்பம் மற்றும் பதட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான வெளியூர் தொழிலாளர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற ஸ்ரீநகர் சுற்றுலா வரவேற்பு மையத்தில் திரண்டனர். “இந்த பூலோக சொர்க்கத்திலிருந்து உண்மையில் எனக்குப் போக விருப்பமில்லை. வாழ்க்கைக்காக பணமீட்ட இங்கே வந்தபோது காஷ்மீர் மீதும் அதனுடைய மக்கள் மீது காதல் கொண்டேன். சூழ்நிலை காரணமாக இங்கிருந்து வெளியேறுவது தவிர எனக்கு வேறு வழியில்லை” என ஆகஸ்டில் தெரிவித்தார் மரவேலை செய்பவரான சுபம் சர்க்கார்.
பெருந்திரள் போராட்டம் நடக்கக்கூடும் என்கிற பயத்தில் ஆகஸ்டு 11-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட ஈத் அல் அத்வா-வின்போது காஷ்மீரில் தடை இறுக்கப்பட்டது. ‘என்னுடைய வாழ்நாளில் ஈத் தொழுகைக்காக அனுமதி மறுக்கப்பட்டது இது இரண்டாவது முறை. பகுதியில் உள்ள தலைவர்களிடம் ஈத் தொழுகையை வெளியிடத்திலும் சிறு குழுக்களாக மசூதிகளில் செய்யும்படி போலீசு வலியுறுத்தியது’ என்கிறார் இங்கே வசிக்கும் முகமது ரம்சான்.
ஸ்ரீநகரின் அன்சார் பகுதியில் ஈத் தொழுகைக்குப் பிறகு, சுதந்திரத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பிய காஷ்மீர் பெண்கள்.
பள்ளத்தாக்கு முழுவதும் கல்வி நிலையங்களில் படைகள் ஆக்கிரமித்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒரே இரவில் பதுங்கு குழிகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அரசாங்கம் கல்விக்கூடங்கள் திறப்பதை அறிவித்தபோது, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அச்சம் கொண்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிர்ப்புகளைத் தடுக்க இந்திய படைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன. நிராயுதபாணியாக நின்ற எதிர்ப்பாளர்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் கடுமையான காயங்களையும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்டு 5 முதல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகரின் ஹப்பா கடல் பகுதியில் இளம் சிறார்களுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நடந்த மோதலில் வீசப்பட்ட கற் குவியல் இது. படையினர் மீது கல் வீசுவதும் சுதந்திரம் கோரி முழக்கங்கள் எழுப்புவதும் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய போராட்ட முறையாகும்.
சோபியனிலிருந்து கைது செய்யப்பட்ட மேலாண்மை படிப்பு மாணவரான அகூப் ரஃபிக் வானியின் தாயார் பர்வீனா, ‘இந்திய படைகள் என் மகனை கொண்டு போன அந்த இரவு குறித்த நினைவு வந்துகொண்டே இருக்கிறது. அவனுடைய வருகைக்காக நான் காத்திருக்கிறேன்’ என்கிறார். ஆகஸ்டு 8-ம் தேதி இரவு வீட்டிலிருந்த வானியை கைது செய்தது இந்திய படை. கொடூரமான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் காஷ்மீருக்கு வெளியே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் 13,000 காஷ்மீர் சிறார்களை ஆகஸ்டு 5 முதல் கைது செய்துள்ளதாக ஐந்து பெண்களைக் கொண்ட உண்மையறியும் குழு தெரிவித்தது.
பட்காம் மாவட்டத்தில் உள்ள கிரெம்ஷோர் கிராமத்தில் ஆப்பிள் தோட்டத்தின் உரிமையாளரான குலாம் மொகினுதீன் மிர், இந்திய வர்த்தகருக்கு ஒரு பெட்டி ஆப்பிளை ரூ. 1000-க்கு விற்பனை செய்ததாகவும், பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் இந்தத் தொகையாக பாதியாகிவிட்டதாகவும் கூறுகிறார். ‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு பிரிவை இந்தியா நீக்கியதிலிருந்து எங்களுடைய தொழில் கடுமையான நட்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது’ என்கிறார் அவர்.
காஷ்மீருக்கு வெளியே அனுப்ப இருந்த ஆப்பிள் பெட்டிகளை அடையாளம் தெரியாத சிலர் அழித்துள்ளனர். இந்திய வணிகர்களுடன் வர்த்தகத்தை துண்டிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்ட பின், இப்படியான சம்பவங்கள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் நடந்து வருகின்றன. வெளியூரைச் சேர்ந்த மூன்று டிரக் ஓட்டுநர்களும், ஐந்து தொழிலாளர்கள் தெற்கு காஷ்மீரில் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3.5 மில்லியன் மக்கள் சார்ந்துள்ள ஆப்பிள் தொழில் காஷ்மீர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.
காஷ்மீர் பிராந்தியத்தில் வசிப்பவர்களிடையே மனம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதட்டம், அழுத்தம், கவலை உள்ளிட்ட பிரச்சினைகளை இந்திய அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முடக்கம் ஏற்படுத்தி வருவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றன.
கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி நிலையங்களை திறந்து மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். ‘பல பெற்றோரிடம் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி கற்க அனுப்பும்படி என்னுடைய மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அழைத்து வருகிறேன். தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பெற்றோர் கேட்கின்றனர். இது சவாலானதாகவே உள்ளது’ என்கிறார் சரார் இ சரீஃப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான பிலால் அகமது.
ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்கப்பட்டதில் காயமடைந்த இவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகிறார். சந்தைகளில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் கிரானேடு தாக்குதல் நடத்தப்படுகிறது. ’நான் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றபோது ஸ்ரீநகர் மத்திய சந்தையில் கிரானேடு வீசப்பட்டது. நான் அப்படியே விழுந்தேன், எழுந்தபோது மருத்துவமனையில் இருப்பது தெரிந்தது’ என்கிறார் முகமது யூனூஸ். பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
கட்டுரை, படங்கள்: முக்தார் சஹூர் அனிதா நன்றி : அல்ஜசீரா.
வாகன ஓட்டிகளை விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்துக் காவலர் : சட்டத்தை நடைமுறைப்படுத்தவா, இலஞ்சத்தைக் கறக்கவா ?
மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் : அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை !
ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது, எவ்வளவு அபராதம் விதிப்பது என்பதை மாநில அரசுகள் தீர்மானித்து வந்த உரிமையை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்து, நாடெங்கும் ஒரேவிதமான அபராதம், தண்டனையைத் தீர்மானிக்கும் உரிமையை மோடி அரசு எடுத்துக்கொண்டு விட்டது.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் 5 இலட்சம் சாலை விபத்துக்களில் 1.5 இலட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்றும், போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான அபராதம், தண்டனை விதிப்பதன் மூலம்தான் இந்த எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனக் கூறி மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
வாகன ஓட்டிகளை விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்துக் காவலர் : சட்டத்தை நடைமுறைப்படுத்தவா, இலஞ்சத்தைக் கறக்கவா ?
இச்சட்டத்திருத்தப்படி குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ.2000 வரை இருந்த அபராதத் தொகை ரூ.10,000-மாகவும், அதிக சுமை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ.2000 வரை இருந்த அபராதத் தொகை, ரூ 20,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும் போது முன்பிருந்த அபராதத் தொகையைவிட இனி பத்து மடங்கு கூடுதலாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
“குற்றத்திற்கு ஏற்றபடிதான் தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்பதுதான் இயற்கை நீதி. ஆனால் “ சிறு குற்றங்களுக்குக் கூடக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்”. அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பது பாசிஸ்டுகளின் வாதம். இப்பாசிச சித்தாந்தப்படிதான் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு, தமது வாழ்வாதாரத்திற்காக மோட்டார் வாகனங்களை நம்பியிருப்போரின் வாழ்வையே அழிக்கக்கூடியதாக உள்ளது, இச்சட்டத் திருத்தம்.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மீது போக்குவரத்து விதிமீறலுக்கு 46,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் தனக்கு அபராதம் விதித்த போலீசுக்காரனை அடித்திருக்கிறார்.
அவரது ஆத்திரத்திற்கு நியாயமுண்டு. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரால் இத்தொகையைக் கட்ட முடியுமா? அப்படியே கடன் வாங்கிக் கட்டினாலும், அதிலிருந்து அவர் மீண்டு விடமுடியுமா? அபராதத் தொகையைக் கட்டுவதை விடச் சிறைக்குப் போவதே மேல் என்றுதான் அவர் முடிவெடுப்பார்.
இது போன்று நாடெங்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் இச்சட்டத்திற்கு எதிராகக் குமுறத் தொடங்கிய பிறகு, மாநில அரசுகள் அபராதத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது, மைய அரசு. எவ்வளவு அபராதம் விதிப்பது என்ற உரிமையை மைய அரசு வைத்துக் கொள்ளுமாம், சலுகையை மட்டும் மாநில அரசு அறிவிக்க வேண்டுமாம். இதன் பெயர் பெருந்தன்மையா அல்லது பித்தலாட்டமா?
இன்று வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர், இரு சக்கர வாகனத்தைக் கொண்டு உபேர், ஸோமாடோ ஆகிய நிறுவனங்களில் டெலிவரி பாய்ஸாக வேலை செய்து வருகின்றனர். இன்னும் பலர் ஆட்டோ அல்லது குட்டி யானை உள்ளிட்ட சிறு இரக வாகனங்களைக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர். இவர்களுள் பலரும் சாலை விதிகளை மதிப்பதில்லை என்பதே உண்மை. சாலை விதிகளை மீறுபவருக்குத் தக்க அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சாலை விபத்துக்களைக் குறைப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் சிறுசிறு வேலைகளையும், தொழில்களையும் தமது சொந்த முதலீட்டைக் கொண்டு நடத்திவரும் அடித்தட்டு வர்க்கப் பிரிவினரை அடியோடு ஒழித்துக்கட்டி விடக் கூடியதாக இருக்கிறது.
சாலைகளைப் பராமரிக்காத அரசு சட்டத்தை மட்டும் கடுமையாக்குகிறது.
உண்மையில், பெரும்பாலான சாலை விபத்துக்கள் குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலும், குண்டும் குழியுமான சாலைகளாலும், சரியான மின்விளக்கு வசதிகள் இல்லாததாலும்தான் நடந்து வருகின்றன. 2017-ஆம் ஆண்டு வெளியான புள்ளி விவரப்படி, நாடு முழுக்க நடந்த விபத்துக்களில் 24% விபத்துக்கள் குடிபோதையால் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
தெருவுக்குத் தெருவும் நெடுஞ்சாலைகளிலும் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையைச் சிறிதுகூடக் குறைக்க மறுக்கும் அரசிற்கு, குடிப்பழக்கத்தைத் தொட்டில் பழக்கம் போல ஊட்டி வளர்த்துவரும் அரசிற்கு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தவறு என உபதேசிப்பதற்கோ அதனைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு அபராதத்தை அதிகமாக்குவதற்கோ ஏதேனும் தார்மீக அடிப்படையிருக்கிறதா?
ஒருபுறம் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியாரின் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, மறுபுறம் சாலைகளைப் பராமரிக்க மறுக்கிறார்கள். சாலைகளைக் குண்டும் குழியுமாக வைத்துக்கொண்டே தலைக்காயங்களால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க தலைக்கவசம் அணியச் சொல்லி உபதேசம் செய்கிறார்கள். 500 ரூபாய், 600 ரூபாய் பெறுமானமுள்ள தலைக்கவசங்களை அணியாமல் போனால், அந்த தவறுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள்.
ஒருபுறத்தில் அதிவேகமாகச் செல்வதற்கென்றே நான்கு, எட்டு வழிச் சாலைகளை அமைத்துக்கொண்டு, அதிவேகமாகச் செல்லக்கூடிய அதிநவீன கார்களையும், பைக்குகளையும் உற்பத்தி செய்து சாலைகளில் ஓட விட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் “அதிவேகம் துரித மரணம்” என உபதேசிக்கிறார்கள். அதிவேகத்தைக் கண்காணித்து அபராதம் விதிக்கக் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.
உண்மையில் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கம் சாலை விபத்துக்களைக் குறைப்பதோ, வாகன ஓட்டுநர்கள் மத்தியில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோ அல்ல. மாறாக, மக்களைக் கொள்ளையடிப்பதற்கு செய்யப்பட்டிருக்கும் புதுவகை ஏற்பாடுதான் இது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1,45,000 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கும் மோடி அரசு சாதாரணப் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையாகப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சட்டபூர்வமாக வழிப்பறி செய்கிறது.
இன்னொருபுறத்தில் இச்சட்டத் திருத்தம் வாகன உதிரி பாகங்கள் விற்பனை, ஓட்டுநர் பயிற்சி மையங்கள், மெக்கானிக் ஷாப்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான தொழில்களைத் தரப்படுத்துவது என்ற பெயரில் தனியார்மயமாக்கும் சதித்தனங்களையும் கொண்டிருக்கிறது.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஒவ்வொன்றும் 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பரிசோதனைக் கூடம் மற்றும் பணிமனையுடன் இயக்கப்பட வேண்டுமென வரையறுக்கிறது இச்சட்டம். இதற்குத் தேவையான பெருமளவு முதலீட்டைத் தற்பொழுது பயிற்சிப் பள்ளிகளை நடத்திவரும் சிறு நிறுவனங்களால் செய்ய முடியாது. இச்சட்டத்தின் விளைவாக அத்தகைய சிறு நிறுவனங்கள் தமது கடைகளைக் காலிசெய்வதைத் தவிர வேறு வழி கிடையாது.
வாகன சோதனை என்ற பெயரில் கொல்லப்பட்ட திருச்சியைச் சேர்ந்த உஷா (இடது); மதுரையைச் சேர்ந்த விவேகானந்த குமார்.
நமது நாட்டில் பெரும்பாலான ஆட்டோ மெக்கானிக் ஷாப்கள் அதிகம் படித்திராத, சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால்தான் நடத்தப்படுகின்றன. தமது சொந்தக் கைக்காசையோ, கடன் வாங்கியோ மூலதனம் போட்டு நடத்தப்படும் இத்தகைய மெக்கானிக் ஷாப்புகளுக்குத் தகுதிச் சான்று அளிக்கும் உரிமையைத் தனியார் நிறுவனங்களிடம் தாரைவார்க்கத் திட்டமிடுகிறது, மைய அரசு.
மேலும், ஓட்டுநர் உரிமம் அளிப்பது, வாகனங்களுக்கு தகுதிச் சான்று, பெர்மிட் அளிப்பது, வாகனப் பதிவு, வாகனக் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, இவையனைத்திலும் மாநில அரசுகள் தலையிட முடியாதவாறு இவற்றை வருங்காலத்தில் தனியாரிடம் ஒப்படைக்கவும் திட்டமிடுகிறது இச்சட்டம். இதன் விளைவாக இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களே தேவையற்றதாகிவிடும். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கும் இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் பொதுமக்கள் கோருகிறார்கள். ஆனால், மோடி அரசோ இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சாலைப்போக்கு வரத்துத் துறையையே அரசிடமிருந்து பறித்துத் தனியார்மயமாக்குகிறது. தனியார்மயமும் கார்ப்பரேட்மயமாக்கமும் வேறுவேறல்ல.
இக்கார்ப்பரேட் மயமாக்கம் பளிச்செனத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது, மோடி அரசு. தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து வருவதைப் போல, விவசாயச் சீர்திருத்தங்கள் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதைப் போல, இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
“அவள் படிப்பில் முதலிடத்தில் இருந்தாளா அல்லது தீவிரவாதிகள் அமைப்பில் முதலிடத்தில் இருந்தாளா? NIA விசாரிக்கட்டும். உண்மை வெளிவரும்” – டிவிட்டர் முட்டுச் சந்தில் முகமறியாத தேசபக்தர் ஒருவர்.
ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி என்று பரவலாக அறியப்படும் சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் அவளது பேராசிரியர்கள் துன்புறுத்தியதை அடுத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள். அதையடுத்து சமூக வலைத்தளங்களில் #justiceforfathimalatheef என்கிற ஹேஷ்டேக் வைரலாக பரவி வருகின்றது. மேற்படி ஹேஷ்டேக் ஒன்றில் பதிவிடப்பட்ட டிவிட்டர் பதிவுக்கு வந்த மறுமொழி தான் மேலே உள்ளது.
பாத்திமா லத்தீப்.
இந்த சுற்றில் வாயைத் திறந்தால் அம்பலமாகி விடுவோம் என்பதால் பார்ப்பன பாரதிய ஜனதா லாபியும் நாம் தமிழர் தம்பிமார்களும் கொஞ்சம் அமுக்கி வாசிப்பதால் இதைப் போன்ற பதிவுகள் வெகு சொற்பமாகவே கண்ணில் படுகின்றன. மற்றபடி ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டி பொதுவானவர்கள் பல்லாயிரக்கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். ஃபாத்திமா தனது தற்கொலைக்கு காரணமாக பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபனை குறிப்பிட்டிருக்கிறாள்.
சமூக வலைத்தளங்களில் ஃபாத்திமாவின் படுகொலைக்கு நீதி வேண்டி பதிவிடுகின்றவர்கள் பார்ப்பன பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கின்றனர். அறப்போர் இயக்கத்தோடும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடும் நெருங்கிய தொடர்பை பராமரித்து வந்துள்ள பத்மநாபன், இந்த இயக்கங்களுக்கு ஆதரவாக பல கூட்டங்களை நடத்திய விவரங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் (குறிப்பாகடிவிட்டரில்) ஃபாத்திமாவின் படுகொலைக்கு நீதி வேண்டி வெளியாகி உள்ள பதிவுகளின் ஒரு சிறிய தொகுப்பை இந்தப் பதிவின் பின்பகுதியில் தொகுத்துள்ளோம்.
♦ ♦ ♦
அதற்கு முன் ஃபாத்திமாவின் தாயார் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கே.
பாத்திமா லத்தீபின் தாயார்.
”எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.
முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதாரணமாக கும்பல் படுகொலை நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடு எனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?”
♦ ♦ ♦
”தமிழ்நாடு எனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.” அந்த அப்பாவித் தாயின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறியிருக்கிறோம் நாம். உண்மையில் தமிழர்கள் என்று பெருமிதப்பட்டுக் கொள்வோரெல்லாம் சோற்றில் உப்பு போட்டு தின்பது உண்மை என்றால், சூடு சொரணை இருப்பது உண்மை என்றால் ஃபாத்திமாவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க தெருவில் இறங்கிப் போராட வேண்டும்.
தமிழ்நாடு என்பது எங்கள் அந்தப்புரம் தான் என்று கொக்கரிக்கின்றனர் சாதி வெறியர்களும் சனாதனப் பார்ப்பனர்களும், இந்துத்துவ பாசிஸ்டுகளும். தங்கை அனிதா முதல் ஃபாத்திமா வரை சனாதனம் பறித்த உயிர்களே இதற்கு சாட்சி. நமது முகத்தில் செருப்பை சாணியில் முக்கி அடிகின்றனர் பார்ப்பனியவாதிகள், உறைக்கவில்லையா சக தமிழர்களே? சாதி மதவாதிகள் எங்கள் மாநிலத்தில் ஆட்டம் போட முடியாது என்று நாமெல்லாம் அடித்துக் கொண்டிருந்த சவடாலை உண்மையென்று நம்பி ஒரு தாய் தன் மகளை அனுப்பி இன்று பறிகொடுத்து விட்டு நிற்கிறாள் – என்ன பதில் சொல்லப் போகிறோம்?
அனிதாவை பறிகொடுத்தோம். நமது அற உணர்ச்சிக்கு ஏற்பட்ட பங்கத்திற்கு டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பதிவிட்டு களிம்பு தடவிக் கொண்டோம். இந்துத்துவ கூடாரத்தினர் களத்தில் நிற்கிறார்கள் – அன்றும் இன்றும். நாம் மெய் நிகர் உலகம் தரும் பாதுகாப்பில் சுகம் கண்டு தேங்கி நிற்கிறோம். நமது கையாலாகாத்தனத்திற்கு இன்று மற்றுமொரு உயிர் பறிபோய் உள்ளது. இனியும் நீதி கேட்கும் நமது குரல்கள் இணைய வெளிகளில் மட்டும் நின்று விடும் என்றால் நம்மை விட கோழைகள் தொடைநடுங்கிகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித்தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமைதான்.
♦ ♦ ♦
சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளில் சில :
வேணி :
”என்னுடைய பெயரே இங்கு பிரச்சினையாக இருக்கிறது அப்பா” என்று தனது தந்தையிடம் கூறியிருக்கிறார் ஃபாத்திமா. அனைத்திந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஐ.ஐ.டி ஆசிரியர்களின் சாதிய மற்று இசுலாமிய வெறுப்புரீதியான துன்புறுத்தல்களாக் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05
பொலபொலவென்று விடிவதற்கு முன்னே விமானிகள் எழுப்பப்பட்டார்கள். சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்த இடத்திற்கு அருகே பெரிய ஜெர்மன் விமான அணி ஒன்று முந்திய நாள் இறங்கியது என்று தகவல் வேவு வீரர்களிடமிருந்து சேனைத் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்திருந்தது. கூர்ஸ்க் பிரதேசத்தில் சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்து விட்டதனால் எதிர்ப்பட்டுள்ள அபாயத்தைப் பெரிதென மதித்து ஜெர்மன் படைத் தலைமையினர் ஜெர்மனியின் சிறந்த விமானிகளால் செலுத்தப்பட்ட “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனை இங்கே தருவித்திருப்பதாக முடிவு செய்யத் தரை அவதானிக்கை விவரங்கள் இடமளித்தன. உளவு வீரர்களின் தகவல்கள் இவற்றை உறுதிப்படுத்தின. இந்த டிவிஷன் கடைசி முறையாக ஸ்தாலின்கிராதுக்கு அருகே தகர்த்து நொறுக்கப்பட்டிருந்தது. பின்பு ஜெர்மன் பின்புலத்தின் உள்ளே எங்கோ வெகு தொலைவில் மறுபடி அமைக்கப்பட்டது. இந்தப் பகை டிவிஷன் தொகையில் பெரியது, புத்தம் புதிய “போக்கே-வுல்ப்-190” ரக விமானங்களைக் கொண்டது, மிகவும் அனுபவம் உள்ளது என்று அலெக்ஸேயின் ரெஜிமென்ட் எச்சரிக்கப்பட்டது. விழிப்புடன் இருக்கும் படியும் பிளந்து உட்புகுந்த டாங்கிகளைத் தொடர்ந்து முன் செல்லத் தொடங்கியிருந்த மோட்டார்ப் படைப் பிரிவுகளுக்குத் திண்ணமான காப்பு அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.
“ரிஹ்த்கோபென்!” ஜெர்மன் கோயெரிங்கின் தனிப்பட்ட அரவணைப்பில் இருந்த இந்த டிவிஷனின் பெயரை அனுபவம் உள்ள விமானிகள் நன்றாக அறிந்திருந்தார்கள். நெருக்கடியான நிலைமை எதிர்பட்ட எல்லா இடங்களிலும் ஜெர்மானியர் இந்த டிவிஷனை அனுப்பி வந்தார்கள். இந்த டிவிஷன் விமானிகளில் சிலர் ஸ்பானியக் குடியரசுக்கு மேல் கொள்ளைத் தாக்கு நடத்தியவர்கள். டிவிஷன் விமானிகள் அனைவருமே திறமையுடன், உக்கிரமாகப் போரிட்டார்கள், மிகமிக அபாயகரமான பகைவர்கள் எனப் புகழ்பெற்றிருந்தார்கள்.
“ஏதோ ‘ரிஹ்த்கோபென்’ விமானங்கள் நம்முடன் சண்டைபோட வந்திருக்கின்றனவாமே. அவற்றை எதிர்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆகா, இந்த ‘ரிஹ்த்கோபென்’களுக்குச் சரியான சூடு கொடுத்தோமானால் அற்புதமாயிருக்குமே!” என்றுச் சாப்பாட்டு அறையில் பொரிந்து கொட்டினான் பெத்ரோவ். மெரேஸ்யெவுக்கோ, செயல் பற்றிய சர்ச்சையில் கேலிகளும் வெட்டிப் பேச்சுக்களும் பிடிக்கவில்லை. அவன் சொன்னான்:
” ’ரிஹ்த்கோபென்’ என்றால் ஏதோ சாமானியமாக எண்ணாதே. ‘ரிஹ்த்கோபென்’ எதிர்ப்படும் போது, களைச் செடிகளுக்கிடையே எரிந்து சாம்பலாக நீ விரும்பாவிட்டால், உன்னிப்பாக விழிப்புடன் இரு. காதுகளை கூராக வைத்துக் கொள், தொடர்பை இழந்துவிடாதே. ‘ரிஹ்த்கோபென்’ இருக்கிறதே, தம்பி, இது பயங்கர விலங்கு. நீ வாயைத் திறப்பதற்குள் அதன் பற்களுக்கிடையே நொறுங்கிக் கொண்டிருப்பாய், தெரிந்ததா…… ”
பொழுது புலர்ந்ததுமே முதல் ஸ்குவாட்ரன் புறப்பட்டு விட்டது. கர்னல் தாமே இதற்குத் தலைமை வகித்தார். அது போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே பன்னிரு விமானங்கள் கொண்ட இரண்டாவது அணி பறக்கத் தயாராக நின்றது. அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவிருந்தார் சோவியத் யூனியனின் வீரர் என்ற பட்டம் பெற்ற மேஜர் பெதோத்தவ். ரெஜிமெண்டிலேயே கமாண்டருக்கு அடுத்தபடி யாவரிலும் தேர்ந்த அனுபவமுள்ள விமானி இவர். விமானங்கள் ஆயத்தமாக இருந்தன, விமானிகள் அறைகளில் அமர்ந்திருந்தார்கள். எஞ்சின்கள் குறைந்த வேகத்துடன் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதனால் காட்டுத் திறப்பு வெளியில் குப்குப்பென்று காற்று வீசத் தொடங்கியது. இடிப் புயலுக்கு முன், தாகமுற்ற தரை மீது, பெரிய, கனத்த முதல் மழைத் துளிகள் சடசடக்கையில், தரையைப் பெருக்கி, மரங்கள் அலைத்தாட்டும் இளங்காற்றை ஒத்திருந்தது அது.
முதல் அணியைச் சேர்ந்த விமானங்கள் வானத்தில் வழுகுவது போன்று நேர்குத்ததாக கீழே இறங்குவதைத் தன் விமானி அறையில் உட்கார்ந்து கவனித்தான் அலெக்ஸேய். தன் வசமின்றியே விமானங்களை எண்ணினான். தரையில் இறங்கிய இரண்டு விமானங்களுக்கு நடுவே இடைவெளி இருப்பதைக் கண்டதும் அவனுக்கு பதைப்பு உண்டாயிற்று. இதோ கடைசி விமானம் தரை சேர்ந்துவிட்டது. அப்பாடா! அலெக்ஸேயின் நெஞ்சச் சுமை இறங்கியது போலிருந்தது.
கடைசி விமானம் ஒரு பக்கம் ஒதுங்கியதும் ஒதுங்காததுமாக மேஜர் பெதோத்தவின் விமானம் மேலே கிளம்பியது. சண்டை விமானங்கள் இணை இணையாக வானில் பறந்தன. இதோ அவை காட்டுக்கு அப்பால் அணி வகுத்துக் கொண்டன. இறக்கைகளை அசைத்துவிட்டு, பெதோத்தவ் தனது விமானத்தை நேரே செலுத்தலானார். நேற்று பிளந்து ஊடுருவப்பட்ட இடத்தை ஒட்டியவாறு ஜாக்கிரதையாகத் தாழப் பறந்தன விமானங்கள். மிக உயரத்திலிருந்து தூரக்காட்சியாகக் காண்கையில் எல்லாம் பொம்மைகள் போன்று தோற்றம் அளிக்கும். இப்போதோ, அவ்வாறின்றி, அலெக்ஸேயின் விமானத்துக்கு அடியே தரை அருகே பாய்ந்து சென்றது. முந்தின நாள் அவனுக்கு மேலிருந்து பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டு போலக் காணப்பட்டது இன்று பிரம்மாண்டமான, எல்லை காண இயலாத போர்க்களமாக அவன் முன்னே விரிந்தது.
பீரங்கிக் குண்டுகளாலும் வெடி குண்டுகளாலும் குழிபறிக்கப்பட்டிருந்த வயல்களும் புல்தரைகளும் சோலைகளும் விமான இறக்கைகளுக்கு அடியே தலை தெளிக்கும் வேகத்துடன் விரைந்தன. போர்க்களத்தில் இறைந்து கிடந்த பிணங்களும் படையினரால் விட்டுவிடப்பட்டுத் தனியாக நின்ற பீரங்கிகளும் முழு முழு பீரங்கிப் படைப்பிரிவுகளும் தோன்றித்தோன்றி மறைந்தன. அடிபட்ட டாங்கிகளும் உடைந்து தகர்ந்த இரும்புச் சட்டங்கள், கட்டைகளின் நீண்ட குவியல்களும் தென்பட்டன. பீரங்கிக் குண்டு மாரியால் அறவே மொட்டையாக்கப்பட்ட பெருங்காடு கீழே பெருகியோடிற்று. மேலிருந்து பார்க்கையில் அது பிரம்மாண்டமான குதிரை மந்தையால் மிதித்துத் துவைக்கப்பட்ட வயல்போலக் காட்சி அளித்தது. இவை எல்லாம் திரைப்பட பிலிம் போன்ற விரைவுடன் பாய்ந்தோடியது. இந்த பிலிமுக்கு முடிவே கிடையாது எனத் தோன்றியது. இங்கு எவ்வளவு பிடிவாதமான, இரத்தப் போக்குள்ள போர் நிகழ்ந்தது, எவ்வளவு பெருத்த இழப்புகள் ஏற்பட்டன, இங்கே அடையப்பட்ட வெற்றி – எவ்வளவு மகத்தானது என்பவற்றை இவை பறை சாற்றின.
விசாலமான திடல் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இரட்டைத் தடங்கள் பதிந்திருந்தன டாங்கிகளின் சங்கிலிப் பட்டைகள். அவை மேலும் மேலும் முன்னே, ஜெர்மன் அணியிடங்களுக்கு உள்ளே இட்டுச் சென்றன. இந்தத் தடங்கள் ஏராளமாக இருந்தன. நாற்புறமும் தொடுவானம் வரை இந்தத் தடங்களைக் காண முடிந்தது. இன்னவை என்று தெரியாத விலங்குகளின் பிரம்மாண்டமான கூட்டம் வழி தெரியாமல் வயல்களின் ஊடாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடியது போலத் தோன்றியது. முன் சென்றுவிட்ட டாங்கிகளைத் தொடர்ந்து சென்றன மோட்டார் பீரங்கிகளும், பெட்ரோல் லாரிகளும் டிராக்டர்களால் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான செப்பனிடும் தொழிற் கூட வண்டிகளும் கித்தானால் மூடப்பட்ட சரக்கு லாரிகளும். மேலிருந்து பார்க்கும் போது அவை மெதுவாகப் போவது போல் தெரிந்தது இளநீலப் புழுதிப்படலம். சண்டை விமானங்கள் உயரே எழும்பிய பிறகோ இவை எல்லாம் வசந்த கால எறும்புப் பாதைகளில் சாரிசாரியாக எறும்புகள் ஊர்வது போன்று தோற்றம் அளித்தன.
காற்று வீசாமல் அசைவற்றிருந்த வானில் வெகு உயரே எழுந்த புழுதி வால்களுக்குள் மேகங்களில் போல மூழ்கியவாறு சண்டை விமானங்கள் படை வரிசைகளுக்கு மேலாகப் பறந்து முன்வரிசை ஜீப்புகள் வரை சென்றன. டாங்கிப் படைத் தலைமை அதிகாரிகள் அந்த ஜீப்புகளில் இருந்தார்கள் போலும் டாங்கிப் படை வரிசைகளுக்கு உயரே வானம் தூய்மையாக இருந்தது. ஆனால் தொலைதூரத் தொடுவானத்தின் மங்கிய விளிம்பின் அருகே சண்டை நடப்பதற்கு அறிகுறியாக ஒழுங்கற்ற புகைப்படலங்கள் தென்பட்டன. விமான அணி திரும்பிப் பாம்பு போல வானில் நெளிந்து போய்விட்டது. அதே சமயத்தில் தொடுவானக் கோட்டின் அருகே தரையை ஒட்டினாற் போலத் தொங்கிய ஒரு வரையுருவை முதலிலும் பின்பு வரையுருக்களின் முழுத் திரளையும் அலெக்ஸேய் கண்ணுற்றான். ஜெர்மன் விமானங்கள்! அவையும் தரையை அடுத்தாற் போல் பறந்தன. களைகள் மண்டிய செம்மைபடர்ந்த வயல்களுக்கு உயரே வெகு தூரம் தென்பட்ட புழுதி வால்களையே நோக்கி அவை முன்னேறின. அலெக்ஸேய் இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பின்னோடி மிகக் குறுகிய இடைவெளிவிட்டு அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ்; நான் கடற் பறவை இரண்டு, பெதோத்தவ். கவனியுங்கள்! என் பின்னே வாருங்கள்!”
வானத்தில் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகக் கடுமையானது. விமானியின் நரம்புகள் தாங்கும் எல்லைவரை இறுக்கம் அடைந்திருக்கும். எனவே, சில வேளைகளில் கமாண்டர் உத்தரவின் கடைசிச் சொல்லை உச்சரிப்பதற்கு முன்பே கூட விமானி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். கண கணப்புக்கும் சீழ்கைக்கும் இடையே எங்கோ தொலைவில் ஒலித்தன புதிய கட்டளையின் சொற்கள். அதற்குள் அணி முழுவதும் இணை இணையாக, அதே சமயம் நெருக்கமான வரிசையை விடாமல், ஜெர்மானிய விமானங்களை குறுக்கிட்டுத் தாக்கத் திரும்பியது. பார்வையும் செவிப்புலனும் சிந்தனையும் எல்லாம் முடிந்தவரை கூராகி விட்டன. கண்களுக்கு எதிரே விரைவாகப் பெரியவையாகிய வேற்று விமானங்கள் தவிர எதையும் அலெக்ஸேய் காணவில்லை. தலைகாப்பின் காதுக் குழாயில் வந்த கணகணப்பையும் கிறீச்சொலிகளையும் தவிர எதையும் அவன் கேட்கவில்லை. இந்தக் குழாய் வழியே உத்தரவு இதோ ஒலிக்க வேண்டும். ஆனால் உத்தரவுக்குப் பதிலாக ஜெர்மன் மொழியில் கிளர்ச்சியுடன் ஒலித்த குரல் அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது.
“பகை விமானங்கள்! பகை விமானங்கள்! ‘லா-5.’ பகை விமானங்கள்!” என்று கத்தினான் ஒருவன். அவன் ஜெர்மானியத் தரைக் குறி வைப்போனாக இருக்க வேண்டும். ஆபத்து பற்றித் தனது விமானங்களை அவன் இவ்வாறு எச்சரித்தான்.
புகழ் பெற்ற ஜெர்மன் விமான டிவிஷன் “ரிஹத்கோபென்” தனது வழக்கப்படி போர்க்களத்தில் குறிவைப்போரையும் தரை அவதானிக்கையாளர்களையும் வலைப்பின்னல் போல விரிவாக நியமித்திருந்தது. விமானச் சண்டைகள் நடக்கக்கூடிய இடங்களில் இவர்கள் வானொலிபரப்பு கருவிகளுடன் இரவில் போதிய நேரம் முன்பே பாராஷூட்டுக்களின் உதவியால் இறக்கப் பட்டிருந்தார்கள்.
கரகரப்பும் எரிச்சலும் கொண்ட இன்னொரு குரல் முன்னதை விடக் குறைந்த தெளிவுடன் ஜெர்மன் மொழியில் சொல்லிற்று:
“இடப்பக்கத்தில் ‘லா-5’! இடப்பக்கத்தில் ‘லா-5’! ” இந்தக் குரலில் கோபத்துடன் கூடவே நன்கு மறைக்கப்படாத கலவரமும் ஒலித்தது.
அலெக்ஸேய் மெரேஸ்யெவ் பகை விமானங்களைக் கூர்ந்து பார்த்தான். இவை “போக்கே-வூல்ப்-190″ ரகத் திடீர்த் தாக்குச் சண்டை விமானங்கள். விறலும் லாவகமும் உள்ளவை. அண்மையில் தான் இவை போர்ப்படைகளில் முழங்கத் தொடங்கியிருந்தன. சோவியத் விமானிகள் இவற்றுக்குப் “போக்கு”கள் என்று பெயரிட்டிருந்தார்கள்.
எண்ணிக்கையில் அவை அலெக்ஸேயின் அணியைப் போல் இரு மடங்காக இருந்தன. “ரிஹ்த்கோபென்” டிவிஷனின் அணிகளுக்குரிய தனிச்சிறப்பான, கண்டிப்பான வரிசையில் அவை பறந்தன. பின் தொடரும் ஒவ்வொரு விமானமும் முன்னுள்ளதன் வாலைக் காக்கும் படியான அமைப்பில் படிவரிசை அணியாக இணை இணையாய்ச் சென்றன அவை. உயரத்தில் தமக்கு இருந்த மேம்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு பெதோத்தவ் தமது அணியைத் தாக்கில் ஈடுபடுத்தினார்.
அலெக்ஸேய் தனக்கென்று ஒரு பகை விமானத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டான். மற்ற விமானங்களைப் பார்வையிலிருந்து தப்ப விடாமல், அந்தப் பகை விமானத்தை இலக்குக் காட்டியின் மையத்துக்குக் கொண்டுவர முயன்றவாறு அதன் மேல் பாய்ந்தான். ஆனால் வேறொரு குழு பெதோத்தவை முந்திக் கொண்டுவிட்டது. “யாக்” விமானங்களைக் கொண்ட அந்தக் குழு வேறு புறமிருந்து வந்து ஜெர்மன் விமானங்களை மேலிருந்து இடைவிடாது தாக்கிற்று. ஜெர்மன் வரிசையைத் தகர்த்து சிதற அடிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது அந்தத் தாக்கு. வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. இரு அணிகளும் தனித்தனியே சண்டையிடும் இணைகளாகவும் நால் விமானக் குழுக்களாகவும் பிரிந்தன. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை இடை மறிக்கவும் வாலில் தாக்கவும் விலாப்புறம் சுட்டுவீழ்த்தவும் முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்.
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேரின் படுகொலையின் குற்றவாளிகளை “நன்னடத்தை” விதிகளின் படி விடுவித்துள்ளது தமிழக அரசு. மேலவளவு முருகேசன் படுகொலை என்பது ஒட்டு மொத்த தமிழகத்தின் முகத்தின் மீதும் சாதி வெறியர்கள் காறி உமிழ்ந்த நிகழ்வு. இந்திய வரலாற்றிலேயே குறிப்பிட்டு சொல்லத்தக்க சாதிய வன்கொடுமைப் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு கொடூரமான குற்றத்தை இழைத்தவர்களைத்தான் விடுதலை செய்துள்ளது தமிழக அரசு.
இணைய தலைமுறையினருக்கு மேலவளவு முருகேசனைத் தெரிந்திருக்காது – பழைய வரலாற்றை சுருக்கமாகவாவது அறிந்து கொண்டால்தான் இந்த விடுதலையின் பின் இருக்கும் தடித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
மேலவளவு : ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டோர்கள். (கோப்புப் படம்)
1996-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தலித் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவரை சூத்திரசாதி கள்ளர்களே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வந்த நிலையில், புதிதாக தலித் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர் சூத்திரசாதி வெறியர்கள். இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக சாதி வெறியர்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிகாரத்தின் முன் மண்டியிட்ட சாதிவெறியர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தலித்துகளை மிரட்டியதை அடுத்து தலித்துகள் தரப்பில் இருந்து யாரும் மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை, மீண்டும் தேர்தலுக்கான மாற்றுத் தேதி அறிவிப்பு என்கிற நாடகங்களின் ஊடே முருகேசன் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட முன்வந்தனர். தேர்தல் அன்று கலவரம் செய்த சாதிவெறியர்கள் வாக்குப் பெட்டிகளை களவாடிச் சென்றனர். இதனால், தேர்தல் தடைபெற்றது.
அதன் பின் மீண்டும் சில மாதங்கள் கழித்து கடுமையான போலீசு காவலோடு நடந்த தேர்தலில் முருகேசன் வென்றார். எனினும், ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் இருந்ததால் அவரால் அங்கே செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்தது. ஒருபக்கம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தனது பணிகளை முருகேசன் மேற்கொண்டு வந்த நிலையில் சாதி வெறியர்கள் தலித் மக்களின் மேல் தொடர்ந்து வன்கொடுமைகளை கட்டவிழ்த்து வந்தனர்.
மேலவளவு முருகேசன்.
ஒரு சந்தர்பத்தில் மூன்று தலித் குடிசைகள் தீயிடப்பட்டன; இதற்கு நிவாரணம் பெற, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இவர்களை பின் தொடர்ந்து சென்ற சாதி வெறியர்கள், அவர்கள் திரும்பும் பேருந்தைக் குறித்து ஊரில் தகவல் சொல்லி சென்னகரம்பட்டி ராமர் என்பவர் தலைமையில் ஆட்களை திரட்டி தயாராக இருந்தனர். பேருந்து அக்ரகாரம் பழைய கள்ளுக்கடை மேடு அருகே வந்த போது துரைப்பாண்டி என்பவர், ஓட்டுநரை மிரட்டி வண்டியை நிறுத்தினார். அதே நேரம், ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் வண்டியை ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.
பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்), பூபதி, சௌந்திரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பிலிருந்து தனியாக வெட்டி எடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
♦ ♦ ♦
25.09.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு 85 நாட்கள் கழித்து 25.09.97 அன்று 41 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராமன், பாம்பு கடித்து இறந்து விட்டார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர். அடுத்த ஆறே மாதத்தில் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜாமீன் பெற்று ஊருக்கே திரும்பினர். அதன் பின் தலித்துகள் அச்சத்துடன் காலம் தள்ளி வந்தனர்.
நீண்ட விசாரணைகளுக்குப் பின் 26.07.2001 அன்று விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பில் குற்றத்தை நிறைவேற்ற சதி செய்தது நிரூபிக்கப்படவில்லை என சொல்லப்பட்டு இருந்தது. அதே போல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (1989) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை.
ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட 17 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே போல் தலித் மக்கள் தரப்பில் 23 பேர் விடுவிக்கப்பட்டதை சீராய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தமிழக அரசு வழக்கை மேல் முறையீடு செய்யாமல் விலகிக் கொண்டது. மேல் முறையீடுகளின் மீதான விசாரணைகள் நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிணையில் வெளி வந்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து 17 பேரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், அதனால் இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுவதாகவும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் குற்றவாளிகளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதமே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 14 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ.-வான பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அப்போதே இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி குற்றவாளிகளில் 13 பேரை ”நன்னடத்தை” விதிகளின்படி விடுவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
மிக கொடூரமான வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் செய்த இந்த மக்கள் விரோதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், மற்ற குற்ற வழக்குகளைப் போல் தீண்டாமை வன்கொடுமையால் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி விடுவிக்க முடியாது என்கின்றனர். ஆனால், அரசு தரப்பில் ஆரம்பத்தில் வழக்கை நடத்திய போதே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர்.
குற்றவாளிகளை இவ்வாறு விடுவிப்பது இனிமேல் தலித் மக்களின் மேல் எந்த குற்றத்தை இழைத்தாலும் தண்டனையில் இருந்து “நன்னடத்தையை” காரணம் காட்டி தப்பி விடலாம் என்கிற திமிரை சமூக விரோதிகளுக்கும், சாதி வெறியர்களும் ஏற்படுத்தும் என்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர். ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வகையான கருத்துக்களைக் கூறுகின்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத் தீர்ப்பு மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இராஜு.
தமிழக அரசியலில் ‘வெற்றிடம்’ – ரஜினி : கருத்துக் கணிப்பு
ஆழ்வார்பேட்டை ‘ஆண்டவரின்’ அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை கமலோடு இணைந்து திறந்து வைத்தார் ரஜினி. இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகம் செய்தவர்கள் இன்று அரசியல் பேசுகிறார்கள், அக்கப்போர் நடத்துகிறார்கள் என்றால் அந்த பாவத்தின் பாவத்தில் பாலச்சந்தருக்கும் பங்கு இருக்கிறது. கலைத்துறையில் காசு பார்த்தவர்கள் சிலை திறந்ததோடு போயிருந்தால் பிரச்சினை இல்லை. சிலை திறந்த கையோடு போயஸ் கார்டன் திரும்பிய ரஜினியை பத்திரிகையாளர்கள் வழிமறித்து கேட்கிறார்கள். அப்போது தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு ‘வெற்றிடம்’ உள்ளது என்று போகிற போக்கில் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனார் ரஜினி.
ஏன் வெற்றிடம், யார் வெற்றிடத்தை நிரப்புவார்கள், நிரப்புகிறவர்களின் தகுதி தராதரம் என்ன என்று கேட்டிருந்தால் ரஜினி குஜினியாக கும்மப்பட்டிருப்பார். “யார் சார் நீங்க” என்று தூத்துக்குடியில் ஒரு மாணவர் கேட்டு பிறகு சென்னை விமான நிலையத்தில் “ஸ்டெர்லைட் போராட்டத்தை தீவிரவாதிகள் நடத்தினார்கள்” என்று வெடித்தாரே அதுதான் ரஜினியின் உண்மையாக பாசிச முகம். ஒரு கருத்தையோ, ஒரு வாக்கியத்தையோ கோர்வையாகவோ, சில்லறையாகவோ பேசத்தெரியாத, தமிழகத்தின் தெற்கு வடக்கு எது என்றே தெரியாத இந்த அறிவாளி, ஏதாவது ரெண்டொரு வார்த்தை பேசினால் ஊடகங்களுக்கு டி.ஆர்.பி. போதை பிடித்து ஆட்டுகிறது.
உடன் தமிழகத்தின் அரசியல் வெற்றிடம் குறித்து ரஜினியை மையப்படுத்தி மாலை நேர விவாதத்தை இட்டு நிரப்புகிறார்கள். ரஜினியின் அரசியல் வெற்றிடம் குறித்து எட்டுவழிச்சாலை எடப்பாடிக்கும், திக்குத்தெரியாத பிரேமலதாவிற்கும் கோபம் வருகிறது என்றால் தி.மு.க.விற்கு சொல்லத் தேவையில்லை. ஆயினும் இவர்கள் எவரும் ரஜினியின் முட்டாள்தனத்தையும் இந்துத்துவ சார்பையும் வெளிப்படையாக கண்டிப்பவர்கள் அல்ல. ரஜினியை திட்டினால் நாலரை ஓட்டு வீணாகுமே என்று கவலைப்படுபவர்கள்.
சரி, பேச்சுக்கு தமிழக அரசியலில் வெற்றிடமிருந்து அதை ரஜினி ஒரு பலூன் போல நிரப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரப்புதல் எப்படி இருக்கும்?
♦ வடிவேலு மீம்ஸோடு போட்டி இருக்கும்
♦ துக்ளக் தர்பாரை விஞ்சி விடும்
♦ பாஜக-விற்கு படுஜோராக இருக்கும்
♦ பிரஸ் மீட் தடை செய்யப்படும்
♦ அனைத்தும் நடக்கும்
கேள்வி : தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும்?
டிவிட்டரில் வாக்களிக்க :
தமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் ? கருத்துக் கணிப்பு
♦ வடிவேலு மீம்ஸோடு போட்டி இருக்கும்
♦ துக்ளக் தர்பாரை விஞ்சி விடும்
♦ பிரஸ் மீட் தடை செய்யப்படும்
♦ அனைத்தும் நடக்கும்
பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”
திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர். விடுதலை ராஜேந்திரன் அறிக்கை :
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது.
இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.
தோழர். விடுதலை ராஜேந்திரன்
இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
1949-ம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த மசூதியில் தொழுகைகள் ஏதும் நடக்கவே இல்லை என்று சங்பரிவாரங்கள் முன்வைத்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 450 ஆண்டு கால உரிமை முஸ்லிம்களுக்கு அந்த மசூதியில் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
450 ஆண்டுகாலம் ஒரு இடத்தில் மசூதி இஸ்லாமியர்களுக்கு இருந்தது அதை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்று சொன்னதற்கு பிறகு அவர்கள் நிலத்திற்கான உரிமை கோருவதற்கு (இஸ்லாமியர்களுக்கு) உரிமை இல்லை என்ற தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சில விஷமிகள் ராமன் சீதை சிலைகளை போட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதும் குற்றத்திற்கு உரிய நடவடிக்கை என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டவைகள். சங்பரிவாரங்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு எதிரான கருத்துக்கள்.
ஆனால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டது. இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவான விளக்கம் இல்லை. மௌனம்தான் சாதிக்கிறது.
ஒப்பீட்டளவில் அது இந்துக்களுக்கு சொந்தம் என்கிற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பில் திரும்பத் திரும்ப கூறுகிறது. எப்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கை; அந்த அறிக்கை மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு கீழே நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கே இஸ்லாமிய கட்டுமானங்கள் ஏதும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்று கூறி இருப்பதை ஒரு காரணமாக காட்டுகிறது.
இரண்டாவதாக அங்கேதான் ராமன் பிறந்தான் என்கிற ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையை காரணமாக காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்துக்கள் ராமன் அங்குதான் பிறந்தான் என்ற நம்பிக்கையை காரணம் காட்டி மசூதி இருந்த இடத்தில் கோயிலை கட்டிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை இந்துக்களுக்கு சாதகமாக பயன்படுத்திய உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறது. அதாவது தொழுகையை நடத்துவதற்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எனவே வேறு இடத்தில் மசூதி கட்டி அவர்கள் தொழுகை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆக இஸ்லாமியர்களுடைய நம்பிக்கையை அந்த இடத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கும் இந்துக்களின் நம்பிக்கை மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றம் இப்போது பயன்படுத்தி இருக்கிறது.
யார் இந்த மசூதியை இடித்தார்களோ, அவர்களே ஒரு அறக்கட்டளையை நிறுவிக் கொண்டு ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பற்றி கோரிக்கை எதுவும் இந்த வழக்கில் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
ஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் மசூதி அங்கு இருந்திருக்கும் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சட்டவிரோதமாக மசூதி இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட ஒரு மசூதி இன்றைக்கு ராமன் கோயில் கட்டுவதற்கு சட்டரீதியான ஒரு தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.
இது சட்டத்தின் முன் சரியான தீர்ப்புதானா என்ற கேள்வியை வரலாறு எதிர்காலத்தில் நிச்சயம் எழுப்பத்தான் செய்யும்.