சென்னை மெரினா கடற்கரையின் காலை நேரம், மழைச்சாரலின் குளிர்ந்த காற்று. எதிரே நூற்றுக்கணக்கான புறாக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறு பையை தரையில் விரித்து, பத்மாசனத்தில் இரு கைகளையும் விரைப்பாக நீட்டி வயிறு குலுங்க மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார், 70 வயது மதிக்கத்தக்க உக்கம்ராஜ் ஜெயின்.
உக்கம்ராஜ் ஜெயின்
அருகில் வரலாமா என்ற சைகை மொழி காட்டி மெல்ல அடிவைத்துச் செல்கிறோம். ஆனாலும், பறவைகள் படபடத்தன. “மெதுவா வா சார்” என்று கண்டிக்கிறார்.
“இவன் வெறும் க்ரெய்ன்ஸ் (தானியங்கள்) மட்டுமே சாப்டும், ரொம்ப நல்லவன். அதுவும் ஒரு ஜீவன்தானே. அதான் ராகி, கோதுமை, கம்புன்னு டெய்லி 4 கிலோ கொண்டு வருவேன். இப்ப நீ பாக்குறது கம்மி சார். பத்தாயிரத்துக்கும் மேல வருவான். காலையில அஞ்சரை மணிக்கல்லாம் வந்து பாரு.
விரும்புறவங்க யார்னாலும் வாங்கி போடலாம். பக்கத்துல இருக்குற பெட்டிக்கடையில நெறைய மூட்டை கொடுத்து வச்சிருக்கேன். அவங்காளல முடிஞ்ச டொனேசன் கொடுத்து தானியம் வாங்கிக்குவாங்க. அதுக்கு ரெசிப்ட்கூட கொடுத்துடுவோம். இது எனக்கு ஆத்ம திருப்தியை கொடுக்குது.
சௌகார்பேட்டையில தாமஸ் குக் (சர்வதேச சுற்றுலா நிறுவனம்), பிரான்சசைஸ் ( கிளை உரிமம்) எடுத்து டூர்ஸ் & டிராவல்ஸ் வச்சிருக்கோம். இப்ப என்னால கம்பெனிய பாக்க முடியாது, சன்னுதான் பாக்குறார். ஆண்டவன் அருளால என்னால் முடிஞ்சத இந்த வாயில்லா ஜீவராசிகளுக்கு செஞ்சிகிட்டிருக்கேன்.
பாவம் அவனுக்கு யாரு சாப்பாடு போடும்?” என்றார் அந்த பறவை அபிமானி.
*****
புறாக்களுக்காக கருணை உள்ளத்தோடு கடமையாற்றும் உக்கம்ராஜ் ஜெயின் இருந்த இடத்திற்கு சற்று அருகே ஒரு மனிதர். அந்த முதியவரின் முகத்தில் ஓராயிரம் கதைகள் முகச் சுருக்கமாக வரி வரியாக காட்சியளிக்கின்றன.
கோவிந்தசாமி
“பத்து வருஷத்துக்கு முன்னாடியே போயிருக்க வேண்டிய உசுரு இது. நிம்மதியா போயி சேர மாட்டோமான்னு காத்துகிட்டிருக்கேன்” என்கிறார் மெரினா கடற்கரையில் பெட்டிக்கடை நடத்தும் 80 வயது முதியவர் கோவிந்தசாமி.
இருபது தண்ணீர் பாட்டில்கள், இருபது கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள், ஒன்றிரண்டு சாக்லெட் டப்பாக்கள், கொஞ்சம் பீடி, சிகரெட்டுகள்… – இதுதான் கோவிந்தசாமியின் கடையை நிரப்பியிருக்கும் மொத்தப் பொருட்கள். காலை 7 மணிக்கு திறக்கும் கடையை மாலை 5 மணிக்கு மூடுகிறார்.
“பத்து வருஷமா இந்த கடையை நடத்திகிட்டிருக்கேன். இந்த பெட்டி அடிச்சது மட்டும்தான் என்னோட காசு, இருக்குற சரக்கெல்லாம் கம்பெனியிலிருந்து போடுவாங்க, வித்தபெறகு காசு வாங்கிப் போவாங்க. ஒரு நாளைக்கு 200, 300 ரூபா கெடைக்கும். அதுலதான் என்னோட வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு.
புள்ள கார்ப்பரேஷன்ல வேலை செஞ்சிகிட்டிருக்கான். தனிக்குடித்தனம் போயிட்டான். கடைப்பக்கம் எட்டியே பாக்க மாட்டான். பேரன்தான் எப்போதாவது சாயந்திரத்துல கடையைப் பாத்துக்க வருவான். எனக்கு ஓய்வும் வாழ்வும் இந்தக் கடைதான்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்போதும் போல கடலுக்குப் போனோம். நெறைய சங்கு கெடச்சது. திரும்பும்போது திடீர்னு பலமான காத்து. வெயிட்டு தாங்காம போட்டு கவுந்து போச்சு. கடல்ல தத்தளிச்ச எங்கள இன்னொரு போட்டுலேருந்து வந்து காப்பத்தி கரை சேர்த்தாங்க.
ஒரே கூட்டம். போலீசுகூட வந்துருச்சு. ஒரு போலீஸ்காரம்மா என்ன கோஸா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகச் சொல்லி ஏற்பாடு பன்னுனாங்க. அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. எனக்கு குளிரு தாங்க முடியல, கோச்சுக்காம ஒரே ஒரு பீடி வாங்கிக் கொடுத்தீங்கன்னா போதும்னு நடுங்கிக்கொண்டே சொன்னேன். அந்தம்மாவும் என்ன அப்பா மாதிரி நெனச்சு ஓடிப்போயி பீடி வாங்கிக் கொடுத்தாங்க. அப்பகூட ஆஸ்பத்திரி பக்கம் போனதில்ல.
அப்போ நெலம வேற (70 வயதுக்கு முன்). இப்ப வயசாகுது, ஒரு வேல செய்ய முடியல. எப்பதான் இந்த உசுரு நிம்மதியா போயி சேருமோன்னு காத்துகிட்டிருக்கேன்.
மீனவர் கோவிந்தசாமிக்கு வாழ்க்கையே போராட்டம்தான். கடலில் துவங்கிய வாழ்க்கை கரை ஒதுங்கினாலும் அங்கே அவரைக் காப்பவரோ, காப்பதோ எதுவுமில்லை. முதுமையின் துயரத்திற்காக இங்கே வருந்துவதற்கு யாருமில்லை! முதுமையோடு வறுமையும் சேர்ந்தால் அது ஒரு பெட்டிக்கடையைப் போல யாருடைய கவனத்தையும் பெறப் போவதில்லை!
பரவாயில்லை இந்நாட்டில் சில புறாக்களுக்காவது தீனி கிடைக்கிறதே!
பொ.வேல்சாமி 31.08.18 தமிழ் இந்துவில் ”களப்பிரன்” எழுதிய கட்டுரையில் 1892 இல் உ.வே.சாவின் முன் முயற்சியால் சிலப்பதிகாரம் அச்சு வடிவம் ஏறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தகவல் குறைபாடு உடையது.
சிலப்பதிகாரத்தின் புகார்காண்டம் 1872, 1876, 1880 களில் அச்சில் வெளிவந்து விட்டது. உ.வே.சா 1892 இல்தான் சிலப்பதிகாரத்தை முழுமையாக வெளியிட்டார். அந்த நூலில் அரும்பத உரை பின்னிணைப்பாகத்தான் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் (1872, 1876, 1880) சிலப்பதிகாரத்தின் புகார்காண்டம் முழுமையும் ஆங்கில அரசாங்கத்தால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் B.A. மாணவர்களுக்கு பாடமாக வைக்கபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1880 நூலில் புகார்காண்டம் மட்டும் அடியார்க்கு நல்லார் உரையுடனும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமான பக்கங்களை இணைத்துள்ளேன்.
1 of 4
உ.வோ.சாதான் தமிழ்நூல்களை “எல்லாம்” அச்சுக்கு கொண்டு வந்தார் என்ற பிம்பத்தை பலரும் பறைசாற்றி வந்ததின் விளைவுதான் ”களப்பிரன்” போன்ற படித்தவர்களும் இத்தகைய பிழையில் விழ நேர்ந்தது . உ.வே.சா., மற்றவர்களை விட பலபடி மேலே போய் மிகச் சிறப்பாகத் தன் நூல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் பயன்படும்படி பதிப்பித்தார் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதே நேரத்தில் மற்ற பதிப்பாசிரியர்களின் பங்களிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது. இத்தகைய நிலை நீடித்தற்கான காரணங்களும் சில உண்டு. ஆனால் இன்றைய கணினி யுகத்தில் எந்த அரிய நூலையும் சிறிது முயன்றால் யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டும்.
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
குடந்தை, கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியை சேர்ந்த நத்தம் என்னும் கிராமத்தில், முதன்மைச் சாலையிலிருந்து, ஊரின் உள்ளே வரை 1,500 மீட்டர் நீளத்திற்கு சாலை உள்ளது. (இவ்வூரில் தான் குடந்தை பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள் அதிகம்).
இப்பகுதியில் உள்ள சுவாமிநாதன் என்ற தனிநபர் அந்த ரோட்டில் மூன்று இடங்களில், தன் விவசாய நிலத்திலிருந்த நீர் வடிய, பள்ளத்தை வெட்டியுள்ளார். அதை ஒழுங்காக மூடாமல், சேற்றை கொண்டு மூடியுள்ளார். சில தினங்களுக்கு முன் அக்கிராமத்திலிருந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது.
மேலும், அந்த சாலையால் நிறைய வாகன விபத்து நடக்கின்றது. மக்கள் ஊராட்சி மன்றத்திடம் பல முறை முறையிட்டும், ஊராட்சி மன்ற அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், மக்கள் ஆத்திரத்திலிருந்தனர். இந்த நேரத்தில் தான் அக்-06 அன்று, சமையல் எரிவாயுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அந்த சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்துவிட்டது.
இதைப் பார்த்த கிராம மக்கள் அன்று இரவு 8 மணிக்கு குடந்தை – சென்னை சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும், மக்கள் அதிகார குடந்தை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயபாண்டியன், போராட்ட இடத்திற்கு சென்று, மக்களுக்கு ஆதரவாக முன்னின்று, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இப்பிரச்சனையை உடனடியாக உரிய நேரத்திற்குள் தீர்த்து வைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக போராட்டம் தொடரும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.
செப்டம்பர் 23 – ஆம் தேதியில் இருந்து உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற யமஹா, ராயல் என்பீல்டு மற்றும் எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் மீதான ஒடுக்குறைக்கு எதிராகவும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராகவும் 08.10.2018 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருவொற்றியூர் மற்றும் பூந்தமல்லி – குமணன்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூந்தமல்லி
குமணன் சாவடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தூசான் கம்பனி தொழிலாளர்கள், TI மெட்டல் கம்பனி தொழிலாளர்கள் மற்றும் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.ஜதொ.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தனது உரையில், “யமஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கான கோரிக்கை மனுவை கொடுத்தற்காக இரண்டு தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யபட்டுள்ளார்கள். திருவொற்றியூர் பகுதியில் இருந்த ராயல் என்பீல்டு கம்பனியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேலைக்கு வைத்தார்கள். மூன்று ஆண்டுகளில் நிரந்தரம் செய்வதாக சொன்னார்கள். கிட்டதட்ட அந்த காலம் முடிந்து விட்டது. இன்னும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருகிறது.
1 of 3
தென்கொரிய நிறுவனமான எம்.எஸ்.ஐ.-யில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை கேட்டு போராடி வருகிறார்கள். ஆனால் நிர்வாகம் திமிர்த்தனமாக மறுத்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் பேச்சு வார்த்தைக்கே வர மறுக்கிறார்கள். தென்கொரியாவின் தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய தொழிலாளர்களை கைது செய்து இருக்கிறார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள். மாறாக தொழிலாளர்கள் வேலை பறிப்பு நடந்து வருகிறது. சொந்த வேலைக்காக தொழிலாளர்கள் லீவு போட்டால்கூட அப்பாவை கூட்டி வர வேண்டும். அப்படி வந்தால்தான் வேலை மீண்டும் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது. தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். தொழிலாளர் துறை ”தொழிலாளர்கள் வேலை நீக்கம் தவறு அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள” சொன்னால். ”முடியாது. நாங்கள் ஜப்பான் நாட்டு சட்டதிற்கு தான் கட்டுப்படுவோம்” என்று திமிராக சொல்கிறார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எல்லா ஆலைகளிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது” என்பதை தனது தலைமையுரையில் பேசினார்.
தோழர் முகுந்தன் உரை
1 of 2
தொடர்ந்து கண்டன உரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநில தலைவர் தோழர் முகுந்தன், “ சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட பிறகு ஒரகடம் சிப்காட் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நடத்தும் போராட்டம் இது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடினார்கள். அதுபோல இப்பொழுது யமஹா, என்பீல்டில் நடந்து வருகிறது. இந்த கம்பனியை எங்களுக்கு எழுதி தர வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் போராடவில்லை. நியாயமான சம்பளம் வேண்டும், உரிமை வேண்டும் என்று கேட்டு போராடுகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் “உன்னால் முடிந்ததை பார்” என்று சொல்கிறது.
முழக்கமிடும் தொழிலாளர்கள்...
1 of 5
தொழிலாளர்கள் லீவு போட்டால் “நான் லீவு போட்டது தவறு” என்று கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் பார்க்குமாறு நிற்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் உரிமையை மறுப்பது, தொழிலாளியை மிரட்டுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது, பணிய வைப்பது. இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். நியாயமான உரிமையை கேட்டால் மிரட்டுகிறான். யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்களின் இந்த போராட்டதிற்கு சங்கங்களை கடந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த போராட்டத்தில் தோல்வியடைந்தால் எதிலும் வெற்றி பெற முடியாது.
1 of 10
1926 தொழிற்சட்டத்தில் 7 பேர் சேர்ந்தால் சங்கம் வைக்கலாம். ஆனால் சங்கம் வைக்கும் உரிமையை மறுக்கிறான். கேட்டால் எங்க நாட்டு பாலிசி என்கிறான். ஆங்கிலேயன் காலத்தில் தான் இது போல் இருந்தது. இன்றும் இருக்கிறது. இதைத்தான் மறுகாலனியாக்கம் என்று 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்.
இந்த நாட்டின் சட்டம் ஜனநாயகம், பேச்சுரிமை எதுவும் இல்லை. இதுதான் மறுகாலனியாகிக் கொண்டிருக்கிறது. ACl, DCL யாருடைய பேச்சையும் மதிக்காமல் நடந்து கொள்கிறான். மாவட்ட கலெக்டரோ “தொழிலாளி உள்ளே செல்லவில்லையா” என்று கேட்கிறார். ஆனால் முதலாளியைப் பார்த்து கேட்பதில்லை. ஆக இது முதலாளிக்கான சட்டமாக இருக்கிறது. அதனை முறியடிக்க அனைத்து தரப்பு மக்களும் அணிதிரள வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராகவும், அவற்றுக்கு துணைபோகும் அரசை அமபலப்படுத்தும் விதமாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருவொற்றியூர்
திருவொற்றியூர், பெரியார்நகர், பெரியார்சிலை அருகில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு தலைமை வகித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் அவர்கள் தனது தலைமை உரையில் கூட்டத்தின் நோக்கத்தை அதாவது தற்போது திருபெரும்புதூரில் யமஹா, என்பீல்டு, MSI ஆகிய ஆலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்தும், உரிமையை கேட்டால் வேலையைப் பறிக்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கெதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
அதன்பின் உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் SRF மணலி கிளை, இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள், தற்போது நிலவிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கி பேசினார். தொழிலாளி வர்க்கத்தின் முன்னோர்கள் இரத்தம் சிந்தி, உயிரை கொடுத்து போராடிப் பெற்ற உரிமைகளை கூட தற்போது அனுபவிக்க முடியவில்லை. தொழிலாளிகளுக்கு என்ன என்ன உரிமைகள் இருக்கின்றன என்று கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு முதலாளிகளால் அடக்கப்படுகின்றனர்.
இயல்பாக கிடைக்கக் கூடிய 8 மணி நேர வேலை, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றிற்குக் கூட பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்பதையும், இன்று ஓரளவு வசதி வாய்ப்புகளோடு இருப்பவர்கள் அதிக பணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து விட்டால் போதும் வாழ்க்கையில் முன்னேறி விடுவான் என்கிற பகல் கனவில் இருப்பதை சுட்டிக்காட்டி, எமது முன்னோர்கள் அனுபவித்த உரிமைகள் தற்போதைய தலைமுறைக்கே மறுக்கப்படுகிறது, அடுத்த தலைமுறை எப்படி வாழப்போகிறது? எனக் கேள்வி எழுப்பி நமது நாடு ஒட்டு மொத்தமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்தி பேசினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய CPM கட்சியை சார்ந்த திருவொற்றியூர் முன்னாள் நகராட்சி தலைவர் தோழர் ஜெயராமன் அவர்கள் தனது உரையில், ”கடந்த தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் எப்படி சங்கமாக சேர்ந்து உரிமைகளுக்காக போராடினார்கள் என்பதையும், தொழிற்சங்க தலைமை எப்படி வலிமை வாய்ந்ததாக இருந்தது என்பதையும் தன்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்து விளக்கி பேசினார்.
தொழிற்சங்க தலைமையின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு செயலையும் முதலாளியால் நடைமுறைபடுத்த முடியாத நிலை இருந்தது. அப்போது தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு சிறுக சிறுக தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையாக இருந்த தொழிலாளி வர்க்கத்தை பல்வேறு கோஷ்டிகளாக பிரித்து அதில் தனக்கு ஆதரவான பிரிவினரை ஆதரித்து சலுகைகளை அள்ளி வீசியது. மற்றவர்களை அடக்கி ஒடுக்கி பழிவாங்கியது. இன்று முதலாளிகளின் அடக்குமுறை மேலும், மேலும் அதிகரித்து தொழிற்சங்கமே கூடாது என்கிற நிலை எட்டியுள்ளது என்பதை விளக்கி, அதற்கு எதிராக வலுவான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும், அதற்கு இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் அவர்கள் தனது உரையில் ”சினிமா நடிகர்கள் சங்கம் அமைக்கின்றனர்; முதலாளிகளே கூட சங்கம் அமைக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கக்கூடாது. இதுதான் கார்ப்பரேட்டுகளின் அதிகாரம்” என்பதையும், பல்வேறு ஆலைகளில் நடைபெற்ற முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தினார்.
குறிப்பாக சிறப்புப் பொருளாதார மன்றங்கள் வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும், நாடு வல்லரசாகும் என்றும் நம்பச் சொன்னார்கள். தற்போது நிலைமை அப்படியே மாறியுள்ளது. விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகளில் கொத்தடிமைகளாக பணிசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு சட்டப்படியான உரிமையும் வழங்கப்படுவதில்லை. உரிமை என்று வாயை திறந்தாலே வேலைபறிப்பு! இது அரசும், ஆளும் வர்க்கமும் இணைந்து நடத்துகின்ற அடக்குமுறை. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் வர்க்கமாக ஒன்றிணைவது மட்டும் போதாது. புரட்சிகர தலைமையின் கீழ் இன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தகவல்:
திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம்.
***
ஓசூர் :
யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ ஆலைத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில்… அவ்வாலை நிர்வாகத்தையும், அதற்குத் துணைபோகும் தொழிலாளர் நலத்துறையை அம்பலப்படுத்தியும், தொழிலாளர்கள் பிற ஆலைத்தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி அறைகூவல் விடுக்கும் நோக்கத்தோடு ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அக்-10 அன்று ஓசூர் ராம்நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி தோழர் ரவிச்சந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்மைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, இவ்வமைப்பின் கமாஸ் வெக்ட்ரா ஆலையின் கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார். வர்க்க உணர்வோடு திரண்டிருந்த தொழிலாளர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.
இதற்கு முன்னதாக, ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டறிக்கை அச்சிட்டும் ஆலைவாயில்களிலும், மக்கள் திரளாக கூடும் இடங்களான தர்கா, சிப்காட் போன்ற பகுதிகளிலும் பிரச்சாரத்தை நடத்தினர், பு.ஜ.தொ.மு. தோழர்கள்.
1 of 3
இவர்கள் வெளியிட்டிருந்த துண்டறிக்கையில், ” சென்னை : யமஹா என்ஃபீல்டு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தை கலைக்க அரசு – முதலாளிகள் கூட்டுச்சதி!
தொழிலாளர்களே!
யமஹா , என்ஃபீல்டு ஆலையில் நேரடி உற்பத்தியில் பல ஆயிரம் பயிற்சி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திணிக்கப்பட்டு, சட்டவிரோதமாக சுரண்டப்படுவது அரசுக்கு தெரியாதா?
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட சட்டபூர்வ கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேச மறுத்து சட்டம் தன் மயிருக்குச் சமம் என்பதை காட்டுகிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?
இலாபவெறியில் சட்டவிதி முறைகளை மீறி ஆலை நிர்வாகங்கள் பகிரங்கமாக செயல்பட துவங்கிவிட்டது. சட்டமும், சுதந்திரமும் கேள்விக்குறியாகிவிட்டது!
யமஹாவில் போலீசை ஏவி, தொழிலாளர்களை சட்ட விரோதமாக கைது செய்ததன் மூலம், முதலாளித்துவமும் அரசும் தான் வகுத்துப் பேசி வந்த சட்ட உரிமைகள் என்ற முகமூடியை கிழித்தெறிந்து விட்டார்கள். தாங்கள் கூட்டுக் களவாணிகள்தான் என்பதை காட்டிவிட்டார்கள். இன்னும் என்ன மயக்கம்?
பணி நிரந்தரம் செய்யாமல் காண்ட்ராக்ட் தற்காலிக எஃப்.டி.இ, பயிற்சித் தொழிலாளி, நீம் என்ற பெயர்களில் இளைஞர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்போம்!
தொழிற்சாலைகள் ஆண்டு முழுவதும் இயங்குமாம்! பல கோடி லாபம் ஈட்டுவார்களாம்! தொழிலாளர்களுக்கு மட்டும் எட்டுமாதம் வேலையாம்! இது என்னநீதி? முதலாளிகளின் லாபவெறிக்காக தொழிலாளர் வர்க்கம் நாடோடியாக அலையவேண்டுமா?
அரசும் போலீசும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் என்றால் ஓட்டுரிமை மக்களாட்சி என்பது கண்துடைப்பு வேலைதான் அல்லவா?
பணிநிரந்தரமில்லை, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு , ஜி.எஸ்.டி. வரி, விலைவாசி உயர்வு இப்படிப்பட்ட நாட்டில் பாதுகாப்பாக எப்படி வாழமுடியும்?
தட்டினால் திறக்காது! கெஞ்சினால் கேட்காது! மூடிய கதவுகளை உடைக்க ஒரே வழி வர்க்க ஒற்றுமையே! ஆட்டோமொபைல் துறையின் அசைக்க முடியாத சக்தியாக, ஓரமைப்பாக திரள இதுவேதருணம்!
நிரந்தரம் – பயிற்சி காண்ட்ராக்ட் என்ற பிரிவினைகளைக் கடந்து அணிதிரள்வோம்! பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலை, அரசு அடக்கு முறையை முறியடிப்போம் வாரீர்! ” என்ற அறைகூவல் விடுத்திருந்தனர்.
தகவல்:
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்.
செல் – 9788011784.
அமெரிக்கவில் நடந்த செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நிகழும் சமூக ஒட்டுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இசுலாம் மையப்புள்ளியாக விளங்குகின்றது.
இசுலாமிய குடியேறிகளுக்கு கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றது. சமீபத்தில் தனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங் இது குறித்துப் பேசியுள்ளார். பலர் இசுலாத்தின் பெயரில் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடும் என்று நம்புகின்றனர்.
செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங்
இந்த எதார்த்த சூழலில் இசுலாம் குறித்து நமக்கு செய்தியளிக்கவும் அந்த செய்திகளுக்கு நமது எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் ஊடகங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் இசுலாத்தைக் குறித்த போதிய அறிவின்மையிலோ அல்லது இசுலாமியர்களை விரோதித்துக் கொள்வோம் என்கிற அச்சத்தின் விளைவாகவே மிக அடிப்படையான ஒன்றை ஊடகங்கள் தவற விடுகின்றன. அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.
இவ்விரண்டு பதங்களும் கேட்பதற்கு ஒன்று போலத் தெரிவியலாம். ஆனால், இசுலாமும் இசுலாமியமயமாதலும் ஒன்றல்ல. இசுலாம் என்பது சுமார் 1.6 பில்லியன் மக்களால் பின்பற்றப்படும் நம்பிக்கை. மாறாக, இசுலாமியமயம் என்பது சில குறுங்குழுக்களின் அரசியல் சித்தாந்தம். இவர்கள் இசுலாத்திடம் இருந்து ஷரியா, ஜிகாத் போன்ற கருத்துக்களை கடன் வாங்கி அவற்றைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மறுவிளக்கம் அளிக்கின்றனர்.
பயங்கரவாதிகளின் லட்சியங்களை ஊடகங்கள் எவ்வாறு உத்திரவாதப்படுத்துகின்றன?
அல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.
கவனமாக தெரிவு செய்யப்பட்ட இசுலாமிய பாடங்களை மறுதொகுப்பு செய்து அவற்றையே மதச் சட்டங்களாக நிறுவும் தந்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை.
குறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும் இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.
உதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. மேலும் உலகளவில் இசுலாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து ஃபத்வா (மதக் கட்டளை) பிறப்பித்துள்ளனர்.
ஜிஹாது குறித்த தவறான விளக்கங்களை விரிவாக பதிவு செய்து செய்தியாக்குவதும், அதைக் குறித்த இசுலாமிய தலைவர்களின் கண்டனங்களைப் போதிய முக்கியத்துவமின்றி வெளியிடுவதன் மூலம் இசுலாத்துக்கும் பயங்கரவாதத்திற்குமான தொடர்பு குறித்த பொதுபுத்திக்கு வலு சேர்க்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.
சில சந்தர்பங்களில் ஊடக அறிவுஜீவிகள் பயங்கரவாதிகள் தங்களது செயல்களுக்கான அடிப்படையாக இசுலாத்தை முன்வைப்பதைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே மதத்தையும் பயங்கரவாதத்தையும் தொடர்பு படுத்துகின்றனர்.
பயங்கரவாதிகளின் கூற்றையும் அவர்கள் இசுலாத்திற்கு அளிக்கும் விளக்கத்தையும் விமர்சனமற்ற முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலம் இசுலாமியவாதிகளின் நோக்கங்களுக்கு இவர்கள் சேவை செய்கின்றனர்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்களையே இசுலாத்திற்கும் இசுலாமியர்களுக்குமான பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் பயங்கரவாதிகளின் திட்டங்களுக்கு ஊடகங்கள் துணை போகின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆள்சேர்ப்பு முறை
இசுலாத்திற்கும் மேற்கத்திய உலகத்திற்கும் இடையே ஒரு மனித நாகரீகப் போர் நடப்பதாக மேற்கொள்ளப்படும் நச்சுப் பரப்புரைகளில் இசுலாமியவாத பயங்கரவாதிகளின் போர்தந்திர ரீதியிலான நலன்கள் இருக்கின்றன.
“மேற்குலகில் வாழும் இசுலாமியர்கள் வெகு விரைவில் தங்களுக்கு இரண்டு தேர்வுகளே இருப்பதை உணர்வார்கள்” என்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிப்ரவரி 2015ல் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று.
அதாவது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மேற்கத்திய முசுலீம்கள் தாம் சந்தேகத்தோடும் அவநம்பிக்கையோடும் நடத்தப்படுவதை உணர்வார்கள். இதன் மூலம் “சிலுவைப் போர் நாடுகளின் கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒன்று அவர்கள் தங்களை மதம் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு குடியேறியாக வேண்டும்” என்கிறது அந்த செய்திக் குறிப்பு.
நடந்து கொண்டிருக்கும் போரில் ஏற்படும் மனித இழப்புகளை மேற்கத்திய இசுலாமியர்களைக் கொண்டு ஈடுகட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிரித்துக் கைப்பற்றும் (Divide and conquer) உத்தியைக் கையாள்கின்றது. விளிம்பு நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மேற்கத்திய இசுலாமியர்களைக் குறிவைத்து தங்கள் பிரதேசத்தில் சகோதரத்துவமும், பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும் எனப் பரப்புரை செய்கின்றது.
மறுபுறம், இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதத்தோடு வெளிப்படையாகவே தொடர்புபடுத்தி எழுதுவதன் மூலமும், இசுலாமிய நம்பிக்கையையும் இசுலாமியவாத அரசியலையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாததன் மூலமும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களை மறைமுகமாக முன் தள்ளுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.
உதாரணமாக இங்கிலாந்தில் சிரிய அகதிகளின் முதல் குடியேற்ற அலை நிகழ்ந்த 2015 -ல். உடனடியாக இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் பத்திரிக்கை “பிரிட்டனின் உள்விரோதிகளின் மோசமான அச்சுறுத்தல்” என்கிற கட்டுரையை வெளியிட்டு அகதிகளை ‘இசுலாமிய தீவிரவாதிகளாக’ சித்தரித்தது.
அதே போல் 2014 -ல் சிட்னியில் நடந்த தாக்குதலின் போது துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த இசுலாமியரை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது டெய்லி டெலிகிராப் பத்திரிகை. பின்னர் இது உண்மையல்ல என பயங்கரவாதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.
பொறுப்பற்ற ஊடகச்செய்திகளால் உண்டாகும் விளைவு
இம்மாதிரியான எளிமைப்படுத்தப்பட்டு, பரபரப்புக்கான ஊடகச் செயல்பாடுகள் இசுலாமியர்களுக்கு எதிராக முசுலீமல்லாதவர்களை தூண்டி விடுவதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களுக்கே சேவை செய்கின்றன.
இசுலாமியர்களுக்கும் இசுலாமியவாத பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவது இசுலாமிய மக்களுக்கு எதிராக பிற மக்களைத் தூண்டி விடும் என்கிறது வியன்னா பல்கலைக்கழகம் 2017 -ல் நடத்திய ஆய்வு ஒன்று.
இம்மாதிரியான செய்திகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்து வருவதால் சி.என்.என் போன்ற சில ஊடகங்கள் “மிதவாத இசுலாம்” “தீவிரவாத இசுலாம்” மற்றும் “இசுலாம்”, “இசுலாமிய தீவிரவாதம்” போன்றவைகளை வேறுபடுத்தி எழுதுகின்றன. எனினும், இவர்களும் கூட இசுலாமியவாத அரசியல் கண்ணோட்டம் குறித்த புரிதலின்றி மத நோக்கங்களை முன்தீர்மானமாக கொண்டே எழுதுகின்றனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி, அவர்களில் 85 சதவீதம் பேர் முறையான மதக் கல்வி பெற்றவர்கள் இல்லை என்பதோடு அவர்கள் இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களும் இல்லை என்பது தெரியவந்தது. “இவர்கள் தமது இயக்கம் முன்வைக்கும் ஜிஹாது குறித்த விளக்கங்களை கேள்விக்கு உட்படுத்த மாட்டார்கள்” என்பதாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விரும்பிச் சேர்த்துக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின் காலனிய சூழலின் அரசியல் அதிருப்திகளின் வெளிப்பாடுகளே. ஷரியா சட்டங்களின் அடிப்படையிலான ஒரு கலீபாவை (இசுலாமிய தேசம்) உருவாக்குவதே லட்சியங்களாக இசுலாமிய பயங்கரவாதிகள் சொல்கின்றனர். எனினும், ஒரு முசுலீமாக இருப்பதற்கு இவை அவசியமே இல்லை. இப்படி ஒரு முசுலீம் அல்லாதவர் சொல்வது இசுலாத்தின் மீதான தாக்குதலும் இல்லை.
அரசியல்-சரியா அல்லது நுட்பமான விவாதமா?
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான நியாயம் கற்பித்தலை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வியக்கத்தைக் குறிப்பிடும் போது “இஸ்லாமிக் ஸ்டேட்” என்பதற்கு பதில் “டேயிஷ்” என குறிப்பிட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. எனினும், இது எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.
இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் போன்ற பல அரசியல்வாதிகள் “கடுங்கோட்பாட்டுவாத இசுலாமிய பயங்கரவாதம்” என குறிப்பிட்டு அந்த எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்குகின்றனர்.
சிலர் நமது அரசியல் சரி நிலைப்பாடுகளே பிரச்சினைக்கு முகம் கொடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கின்றது என்கிறார்கள்.
ஆனால், இசுலாமிய மதமே பிரச்சினைகளுக்கான வேர் எனச் சொல்பவர்கள் பெரும் தவறிழைக்கின்றனர். இசுலாத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னவென்பதைக் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஒரு கலீபேட்டை உருவாக்குவதும், முசுலீம் அல்லாதவர்களின் மேல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் இசுலாமிய மதக் கட்டளைகளா, அவ்வாறு செய்வதற்கு இசுலாமிய மதம் கோருகின்றதா என்பதை விவாதிக்க வேண்டும்.
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் – உறுப்புக் கல்லூரிகளில் போராடும் மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!
தமிழில் தேர்வெழுத அனுமதி கொடு!
பு.மா.இ.மு. கண்டன அறிக்கை!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆங்கிலப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வருகைப்பதிவு குறைவு என காரணம் காட்டி ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அபராதம் விதித்து கொள்ளையடிக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது என மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டங்களை சீர்குலைப்பதற்காக நேற்றைய தினம் (9.10.2018) நெல்லையில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கெதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கெதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பெருகி கொள்ளையடிக்கும் வகையில் கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில் அரசுப்பள்ளியில் படித்துவிட்டு வரும் கிராமப்புற பின்னணி கொண்ட ஏழை மாணவர்கள் பட்டப்படிப்புகளுக்காக இன்று வரக்கூடிய ஒரே இடம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள்தான். ஒவ்வொரு ஆண்டும் +2 முடித்துவிட்டு இலட்சக்கணக்கில் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கொடுக்கும் வகையில் போதிய அரசுக்கல்லூரிகள் இல்லை. வெறும் 90 அரசுக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இந்த மாணவர்கள் யாரும் ஆங்கில பிரிவில் விரும்பி சேர்வதில்லை, வேறு வழியில்லாமல் சேர்கிறார்கள். இது நன்கு தெரிந்துதான் இதுகாலம் வரை அனைத்து பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்திலும் ஆங்கில பிரிவு மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு திடீர் ஞான உதயம் வந்ததைப்போல் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறார். தகுதியான மாணவர்களை உருவாக்கத்தான் இப்படி செய்வதாக நியாயப்படுத்துகிறார். ஆங்கில பிரிவில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்திலா பாடம் நடத்துகிறார்கள். இல்லையே. தமிழில்தான் நடத்துகிறார்கள். அதற்கு தகுதியான ஆசிரியர்களே இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை, போதிய ஆசிரியர்கள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளும் இன்று அரசு பல்கலைக்கழகங்களில் இல்லை. துணைவேந்தர்கள் கோடிகளை கொடுத்து பதவியை வாங்குகிறார்கள் (மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 30 கோடியை கொடுத்து பதவி வாங்கியவர் என்ற புகார் உள்ளது) இதையெல்லாம் செய்து மாணவர்கள் படிக்கும் சூழலை உருவாக்க வக்கில்லாதவர்கள் தான் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என திணிக்கிறார்கள்.
இது ஏழை மாணவர்களை உயர்க்கல்வியில் இருந்து விரட்டும் சதி. இதனை மாணவ சமூகம் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களை தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். அபராதம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும். கல்லூரிகள் திறந்து 5 மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் இலவச பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசு மாணவர் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். உரிமைக்காக போராடும் மாணவர்கள் ரவுடிகள், கிரிமினல்கள் அல்ல. அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு பதில் போலீசை ஏவி மண்டையை பிளப்பதை மாணவ சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது, தமிழ்ச்சமூகமும் அனுமதிக்கக் கூடாது. கல்லூரிகள் சிறைச்சாலையும் அல்ல, மாணவர்கள் அடிமைகளும் அல்ல. போராடும் மாணவர்களுக்கு RSYF என்றும் துணை நிற்கும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமென கோருகிறோம்.
இவண், த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு. தொடர்புக்கு; 9445112675
நீர் நிலைகளின் புனிதம் பாதுகாக்கப் படனுமுன்னு சொல்லி தாமிரபரணி புஷ்பகர விழா (புனித நீராடலாம்) தமிழ்நாட்டுல கோலாகலமா கொண்டாடப்படுது. நாலாயிரம் போலீசுக்கு மேல பலத்த பாதுகாப்போட சிறப்பு பயண வசதிகளோட தடபுடலா நடந்துட்டு இருக்கு. நம்ம கவர்னர் கூட காவி வேட்டி கட்டிக்கிட்டு போகப்போறாராம்.
தண்ணிய மையமா வச்சு புஷ்பகரம் புனிதமுன்னு தீவிரமா நடக்குற இந்த கூத்துக்கு மத்தியில அதே தண்ணியால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கையறு நிலையில் நிக்கிறாங்க தஞ்சை டெல்டா விவசாயிகள்.
ஒரத்தநாடு பக்கத்துல உள்ள மேல உளூர் என்ற கிராமத்துல கல்லணை கால்வாயின் பிரிவான கல்யாண ஓடை ஆற்றின் இடது புற கரையில் நேற்று (8.10.2018) உடைப்பு ஏற்பட்டது. சுமார் பத்து மீட்டர் அளவுல ஏற்பட்ட உடைப்பினால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
1 of 2
1 of 2
உடைப்பு ஏற்பட்ட மேல உளூர் கிராமத்தைச் சுற்றி உள்ள மற்ற கிராமங்களான பருத்திக்கோட்டை, தும்பத்திக்கோட்டை, கீழஉளூர், பொண்ணாப்பூர், ஒரத்தநாடு மேலும் சில கிராமங்களின் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
1 of 2
காலதாமதமாக காவிரியில் தண்ணீர் வந்ததாலும் நீர் நிலைகளின் பராமரிப்பு சரியில்லாததாலும் சம்மா பயிர் சாகுபடி பின்தங்கிப் போனது. ஏறக்குறைய நடவுப்பணிகள் இந்த ஒரு மாத இடைவெளியில் தான் நடந்துள்ளது. பயிர் வேர் பிடிக்க தொடங்கும் இந்த நேரத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
ஒரு மாதம் கடந்துவிட்ட பயிர்களுக்கு போடப்பட்ட உரம் மருந்தும் தண்ணீரோடு கலந்துவிட்டது. உடைப்பு சரிசெய்யப்பட்டு வயல்களில் தண்ணீர் வடிந்த பின் மிஞ்சியுள்ள பயிர்களுக்கு மீண்டும் உரம் போட்டு சற்றேனும் பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையில் உள்ளனர் சில விவசாயிகள்.
ஆற்றின் கரையில் நின்ற மரம் சாய்ந்து இருந்ததாகவும் தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்த காரணத்தால் மரம் விழுந்து விட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு கறை உடைந்து விட்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
ஆனால் நீர்நிலைகளின் பராமரிப்பு செலவுகளுக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து தஞ்சாவூர் கல்லணை கால்வாயின் குடிமராமத்து பணிக்காக ரூ 2.78 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் எந்த நிர்வாகச் சீர்கேட்டையும் அறியாத அப்பாவி விவசாயிகள் உயிரைக் கொடுத்து விவசாயம் செய்துள்ளனர். நடவு நட்டு சில தினங்களே ஆன பயிர்கள் மட்டும் பாதிக்கவில்லை. ஆள்துளை கிணற்று தண்ணீரை கொண்டு நடவு பணி செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தரையோடு சாய்ந்துள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியையும் தாண்டி மதுக்கூர் வரை பல ஊர்களுக்கு இந்த கல்யாண ஓடை ஆற்றில் இருந்துதான் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்கிறது. ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் உயிர் விட்டு துளிர்க்கும் நிலையில் இருக்கும் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும். பயிர் வேர் விடாத நிலையில் மழை பெய்தால் பயிர் சாய்ந்துவிடும். இந்த நேரத்தில் ஆற்றுத் தண்ணீர் கட்டாயம் தேவைப்படும்.
இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதி நிலங்களுக்கு மட்டும் பாதிப்படைவதோடு அல்லாமல் கல்யாண ஓடை ஆற்றின் கடைசி எல்லை வரை பாதிப்பு இருக்கும். இந்த ஆற்றின் தண்ணீரை நம்பி நடவுப்பணி செய்த விவசாயிகளின் நிலை என்ன? ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது, ஏற்பட்ட இழப்பை எப்படி சரிகட்டுவது என புலம்புகின்றனர்.
காவிரி பிரச்சனை அதையும் தாண்டி தண்ணீர் வந்தால் பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. உரம் விலை உயர்வு. விவசாய கடன்கள் கிடைப்பதில் முறைகேடு. விளைந்த நெல்லை விற்க முடியவில்லை. வறட்சி நிவாரணம் வெள்ள நிவாரணம் எதை எடுத்தாலும் துன்பத்தில் உழல்கிறான் விவசாயி.
அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கி உலகுக்கே சோறுபோட்ட உழவனுக்கே பசியையும் பஞ்சத்தையும் ஏற்படுத்தி விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் மண்டலமாக்குவதே அரசின் நோக்கம்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை முதலில் வரவேற்பதாக அறிவித்த காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தற்போது தீர்ப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள். பந்தள அரச குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கலந்துகொண்ட பேரணி கேரளாவில் நடத்தப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற பேரணி.
தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். போராட்டத்தைத் தூண்டி வருகிறது. நாங்கள் சபரிமலைக்கு போகமாட்டோம் என பெண்கள் சத்திய பிரமாணம் எடுப்பதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. தீர்ப்பு குறித்து பேட்டி கொடுத்துள்ள அரச குடும்பத்தின் வாரிசு ஒருவர் பெண்களை அனுமதித்தால் தீங்கு நிகழும் என்ற தனது அச்சத்தை தெரிவித்துள்ளார். இது போன்று பய பீதி ஊட்டப்பட்டு தான் பெண்கள் போராட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். கேரள வெள்ளத்திற்கு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தான் காரணம் என துக்ளக் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். பல ஆண்டுகளாக பிற்போக்கு தனத்தில் ஊறிய பெண்களும் இது போன்ற கருத்துக்களை நம்பி போராட்டத்திற்கு அப்பாவியாக வருகிறார்கள். அச்சத்தின் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் பந்தள அரச குடும்பமும், சங்க பரிவாரமும்.
ஒரு வேளை மக்களிடம் அப்படியாக கருத்துக்கள் இருந்தால் அதை மாற்றுவது தான் அனைத்து இந்துக்களுக்குமான அமைப்பின் கடமையாக இருக்க முடியும். ஆனால் ஒரு புறம் சக்தி என்று பேசிக்கொண்டே பெண்களை அடிமைகளாக கருதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இதை எதிர்பார்க்க முடியாது.
மக்களிடம் பீதியூட்டும் இவர்கள் அறிவுத்தளத்தில் மத விவகாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்று வாதிடுகிறார்கள். ஒரு பக்கம், மக்களுக்கு பயபீதீயூட்டி கலவரத்தை தூண்டுகிறார்கள்; போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
வரலாற்றில் இது புதிது அல்ல. மதத்தில் அரசு தலையிடலாமா? என்ற கேள்வி வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த காலத்திலிருந்து பேசப்படுகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பொட்டுகட்டுதல் என்ற பெயரில் நடந்த தேவதாசி ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கு சட்டம், சமீபத்தில் அனைத்து சாதியினர் அர்ச்சகர்சட்டம் என எல்லா சீர்திருத்தங்களிலும் எழுப்பபட்டவைதான் இக்கேள்விகள். இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகள் அனைத்தும் இக்கும்பல்களை எதிர்த்து நடந்த போராட்டத்தின் விளைவுகள் தான். எதுவும் தாமாக கிடைத்துவிடவில்லை.
தற்போது சபரிமலைக்கு எதிராக பேசுபவர்களின் முன்னோர்கள் குழந்தை திருமணம் மற்றும் கோவில் நுழைவு விசயங்களில் என்ன பேசினார்கள். வரலாற்றில் யார் வென்றார்கள் என்பதை பற்றி சிறு அறிமுகம்.
1 உதாரணமாக Age of Consent Act, 1891 என்று ஒரு சட்டத்தை ஆங்கில அரசு கொண்டு வந்தது. இது எதற்கு தெரியுமா? 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் கணவர்கள் உடலுறவு கொள்வதை தடை செய்யும் சட்டம். சட்டம் திருமணத்தை தடை செய்யவில்லை குறைந்தபட்சமாக உடலுறவைத் தடை செய்கிறது.
12 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்வதை தடுக்க சட்டம் போட வேண்டிய நிலைமை இருந்ததா? நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா. அதைவிட முக்கியமானது இச்சட்டத்தை லோகமானிய பாலகங்காதர திலகர் கடுமையாக எதிர்த்தார். இன்று நீதிபதி இந்து மல்ஹோத்திராவும், பிற இந்துத்துவ அறிவுஜீவிகளும் சொல்லும் அதே வாதத்தை வைத்தார் திலகர். இந்து மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றார். இவ்விவகாரம் குறித்து மேலும் படிக்க: குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்
பின்னர் 1929-ல் திருமணத்திற்கு வயது வரம்பு நிர்ணயித்த போது 10 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் செய்யாவிட்டால் பாவம் நேரும் என சத்தியமூர்த்தி உள்ளிட்ட இந்துமதவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள்.
இப்போது பெண்கள் நுழைவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவது போலவே பாவம் வரும், வெள்ளம் வரும், அழிவு நேரும் என மக்களிடத்தில் பீதியூட்டுவதும்; அறிவுஜீவி தளத்தில் இந்துமத விவகாரத்தில் தலையிடக் கூடாது என பேசுவதும் அந்த காலத்திலிருந்தே செய்திருக்கிறார்கள்.
அதைக் கண்டித்து பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அறிவுஜீவிவாதத்திற்கு பதிலடி கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பீதி உண்டாக்குவதையும் தடுத்துள்ளார். “எவ்வளவு குற்றம் செய்தாலும் தலைமுடியை வெட்டுவது, நான்கு பார்ப்பனர்களுக்கு உணவளிப்பது மூலம் அதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகளுக்கு பதினாறு வயதிற்கு பிறகு திருமணம் செய்வதற்கு மட்டும் பரிகாரம் இல்லாமலா போகும். கண்டிப்பாக பாலும், பழமும் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதாகத்தான் அந்தப் பரிகாரம் இருக்கும். அதனால் சீர்திருத்தத்திற்கு கவலைப்படாதீர்கள்” என்பதாக பெரியார் எழுதியிருப்பதை குடியரசு வாயிலாக அறிய முடிகிறது.
2 இப்பொழுது எப்படி பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டு என்கிறார்களோ அது போல நாடார்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதாக நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தினரும், பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்த முற்போக்கு சக்திகளும் போராடினர். சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என தடை சொல்லும் இந்து மத ஆண்களுக்கு தாங்கள் எப்படி கோவிலுக்குள் நுழைந்தோம் என்பதை நினைவுபடுத்த தமிழகத்தில் கோவில் நுழைவு போராட்டத்தின் சுருக்கம்.
சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01.1926 இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.
• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07.02.1927 இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)
• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப் படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (கேசரி)
• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில்1927 இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிர்வாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.
• 25.06.1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும், 12. 08. 1928 இல் திருவானைக்கோவிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.
• தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு – பொது உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.
கோயில் நுழைவுப் போராட்டத்தில் அம்பேத்கர்.
பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர். இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்று பாராட்டி எழுதியது.
ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர்.
சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். “
– ( நன்றி தலித் முரசு மற்றும் பெரியார் முழக்கம்)
பின்னர் 1939-ல் வைத்தியநாதய்யர் நாடார்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்து சென்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலய பிரவேசம்.
இந்த போராட்டங்கள் எதுவும் தமிழகமே கொந்தளித்து எழுந்த போராட்டங்கள் அல்ல. சுயமரியாதை இயக்கத்தினர் முன்னின்று நடத்தியவை. கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதை இன்று சபரிமலைக்கு போகமாட்டோம் என்று சொல்லும் பெண்களைப் போல அன்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று கோயில் கருவறைக்குள் எப்படி செல்வதில்லையோ அது போல தங்கள் இழிவை தாங்களே அன்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வேளை மீறிப்போனால் என்ன நடக்கும். கோவில் நுழைவுப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்க தோழர்களுக்கு நேர்ந்தது தான் நடக்கும். மேலும் கேரள சி.பி.எம். அரசு இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு இல்லை என்று முடிவு எடுத்து உறுதியாக இருப்பது வரவேற்கதக்கது.
பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன. சபரிமலை சமரிலும் பெண்கள் வெற்றி பெறுவார்கள்.
மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்து தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் முற்றிலும் தரக்குறைவான மற்றும் பயன்படுத்தத் தகுதியில்லாத ஆபத்தான கருவிகளைத் தயாரித்து, சந்தையில் விற்று காசு பார்த்து விட்டது. தங்களின் தயாரிப்புக்கள் தரமற்றவை என்பது நன்கு தெரிந்தும் அதை கமுக்கமாக மூடி மறைத்து சந்தையில் விற்பனை செய்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இப்போது கையும் களவுமாகச் சிக்கி, சில இந்திய ஊடகங்களில் அம்பலப்பட்டு பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தால் தயாரிக்கபட்ட உபகரணம் ஏற்படுத்தும் பாதிப்பு
இது குறித்து விசாரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு தயாரித்த அறிக்கையில் தரக்குறைவான இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள் குறித்த தகவல்கள் தவிர கூடுதலான வேறு பல தகவல்களும் இணைக்கப்பட்டு, அந்த அறிக்கை 23.08.2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும், லைவ் மிண்ட் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் ’செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள்’ பொருத்தப்பட்ட 4,700 நோயாளிகளில் 3,600 பேரைப் பற்றிய தகவல்களைப் பெற முடியவில்லை என்றும், மேலும் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட 4 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதும் பதிவாகியுள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தரக்குறைவான இடுப்பெலும்புக் கருவிகளைப் பொருத்தியதன் காரணமாக, பெரும்பான்மையினருக்கு மீள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அதிலும் சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 ஆண்டிற்குள்ளாகவே மீள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 254 பேருக்கு இடுப்பெலும்பு மீள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவில் இதே இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகளால் பாதிப்படைந்த 8,000 நோயாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக (2.47 பில்லியன் அமெரிக்க டாலர்) கொடுப்பதற்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. தரக்குறைவான மருத்துவக் கருவிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகப்படியானது என லைவ்மின்ட் ஊடகம் கூறுகிறது.
ஆனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விரும்பவில்லை என்று நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது. மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை என்றும் செலவு செய்த பணத்தைத் திரும்ப கொடுப்பதையே இழப்பீடு என்பதாகக் காட்ட முனைகிறது அந்நிறுவனம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ரூ. 20 இலட்சம் இழப்பீடு கொடுப்பதோடன்றி 2025-ம் ஆண்டு வரைக்குமான மருத்துவச் செலவுக்கான சலுகைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எதுவும் நடந்தபாடில்லை.
‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு மாற்று உபகரணம்
ஜான்சன் & ஜான்சனின் தரக்குறைவான ‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு அமைப்பு (ASR XL Acetabular Hip System) மற்றும் ‘ASR’ இடுப்பு மீள்பொருத்துதல் அமைப்பு (ASR Hip Resurfacing System) ஆகிய இந்த இரண்டையும் தயாரித்தது அதன் துணை நிறுவனமான ‘டெப்யூ ஆர்த்தோபீடிக்ஸ்’ (DePuy Orthopaedics Inc). அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து துறையால் 2005-ம் ஆண்டில் இந்தக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்டன. உலக அளவில் 93,000 நோயாளிகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கூறுகிறது.
இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட பல்வேறு நோயாளிகளுக்கு சுகவீனம் ஏற்பட்டு மற்றுமொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தக் கருவிகளின் பக்கவிளைவுகள் குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு இக்கருவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உண்மைகளை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது எனவும் இந்தக் கருவிகளை உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அந்நிறுவனம் கொடுத்துள்ள விவரங்களை, நடைமுறையில் ஏற்பட்ட பாதிப்புக்களுடன் ஒப்பிடுகையில் அவை பெரிதும் முரண்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது.
உயிருக்கே எமனாய் மாறிய இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள்
தரமற்ற இந்த செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் ஏற்படுத்திய பாதிப்புக்களால் நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டுமொருமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி இந்தக் கருவிகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோபால்ட் மற்றும் குரோமியம் அமிலங்கள் எலும்புகளிலும், இரத்தத்திலும் கசிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அதில் சிலருக்கு உறுப்புச் சிதைவுகள் ஏற்பட்டுள்ளது. மற்றும் சிலர் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் உயிரிழந்தனர்.
இப்படியாக இடுப்பெலும்பு மாற்றுக்கருவிகள் உயிரைப் பறித்தது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது மாற்றுக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து, வலியிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அந்தக் கருவிகளே தங்களுக்கு எமனாய் மாறும்போது அந்த மனிதனின் சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கேள்விக்குரியதாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவரின் மன உறுதியை சுக்கு நூறாக்கி விடுகிறது. நடையற்று செயல்படாமல் முடங்கிய நிலையில், அத்தனையையும் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
முகப்பூச்சு பவுடரால் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏவா எசெவர்ரியா
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக புகார் எழுப்பிய 22 பெண்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு கடந்த 2018, ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது. மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தன்னுடைய முகப்பூச்சு பவுடரில் கல்நாரை (asbestos) 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தியதை மூடி மறைத்ததாக அப்பெண்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினையில் 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் இழப்பீட்டை வழங்கத் தயாராக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் அதனைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட முயற்சிக்கிறது. ஆண்டை அமெரிக்கா தனது குடிமக்களின் நலனையும் உரிமையையும் சிறிதேனும் பாதுகாக்கிறது. ஆனால் அடிமை இந்தியாவோ தனது எஜமானனின் இலாபத்தை உறுதி செய்ய குடிமக்களின் நலனையும் உரிமைகளையும் காவுகொடுக்கிறது. அது அணு விபத்து கடப்பாடு மசோதாவாக இருக்கட்டும் அல்லது மரபணு மாற்றப் பயிர்களாகட்டும் அல்லது இந்திய மக்களை மருந்துக் கம்பெனிகளின் சோதனைச் சாலை எலிகளாக்குவதாகட்டும் இந்தியர்களின் உயிர் கார்ப்பரேட்டுகளின் முடிக்குச் சமானமாக மதிக்கப்பட்டு வந்ததே வரலாறு.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவில் துவங்கியது #MeToo இயக்கம். தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், அதைச் செய்யும் பொறுப்பிலுள்ள ஆண்களை, சமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்தி வருகிறார்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள்! ஈவ்டீசிங் எனும் பதமே பாலியல் துன்புறுத்தலின் தீவிரத்தை தளர்த்துவதாக இருக்கிறது. ஏனெனில் முன்னர் சொன்னது ஒரு தவறு, பின்னதோ ஒரு தண்டனைக்குரிய குற்றம்!
இந்த #MeToo இயக்கத்தின் மூலம் இந்தியப் பெண்களுக்கு அவர்களது பணியிட உரிமை, பாதுகாப்பாக பணியாற்றும் உரிமைகள் கற்றுத் தரப்படுகின்றது. போலவே படித்த ஆண்களுக்கும் இப்பிரச்சினையின் பரிமாணத்தை அறிமுகம் செய்கிறது.
தற்போது ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, தனியார் நிறுவனம் என பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்துல்களை தைரியமாக பேசுவதோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் அம்பலப்படுத்துகின்றனர். இவற்றில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகிறது எனவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையாகவே இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் உண்மையாகவே தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதுவரை பேசாமல் பேச முடியாமல் இருந்த துன்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டின் படி பாலியல் சமத்துவமும் இல்லை, மக்களிடையே சமூக சமத்துவமும் இல்லை. அதனால் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் தம் கீழ் பணியாற்றும் பெண்களை துன்புறுத்துகின்றனர்.
இன்றைய கேள்வி: #MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
(மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்)
சினிமா
ஊடகம்
தனியார் நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள்
அரசியல் கட்சிகள்
இலக்கியம்
பல்கலைக் கழகங்கள்
ட்விட்டரில் வாக்களிக்க:
எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
அமெரிக்காவில் தொடங்கிய #MeToo இயக்கத்தில் இந்தியாவிலும் ஊடகம், சினிமா என பல துறைகளில் பணியாற்றும் பெண்களும் அம்பலப்படுத்த துவங்கியுள்ளனர்.
எந்தத் துறையில் பெண்கள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்? வாக்களியுங்கள்
குடந்தை அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 8/10/12 அன்று இரவு உணவில் பல்லி விழுந்துள்ளது, இரவு உணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாயில் நுறை தப்பி, மயக்கம் ஏற்பட்டதும், உடனடியாக அவர்களை மற்ற விடுதி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின் மற்ற மாணவர்கள் விடுதி வாசலில் (குடந்தை – நீலத்தநல்லூர்- செயங்கொண்டம்) சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
1 of 3
மாணவர்களை அதிகாரத் திமிரில் அணுகிய போலீசாரையும் அதிகாரிகளையும் துணிச்சலோடு தட்டிக்கேட்டனர், அவ்வழியே சென்ற பு.மா.இ.மு. தோழர்கள். ”சார் நீங்க எந்த ஜெயில வேணா போட்டுக்குங்க, ஆனா எங்களுக்கு தீர்வு கிடைக்கமா போமாட்டோம்” என்று உறுதியாக நின்றனர் விடுதி மாணவர்கள். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்களை போலீசு வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர்.
சட்டவிரோதமான முறையில் மேல காவிரி ஆற்றுப் பாலம் அருகே வேனை நிறுத்தி மாணவர்களிடம் ‘பேச்சுவார்த்தை’ நடத்தினர் போலீசார். இத்தகவலறிந்து குடந்தை பு.மா.இ.மு. அமைப்பாளரும், குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவியுமான தோழர் தமிழ், ” கொட்டும் மழையில் மாணவர்களை இங்கு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? ஏன் இன்னும் உணவு கொடுக்கவில்லை” என்று கேள்வியெழுப்பினார். மண்டபம் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை என மழுப்பினர் போலீசார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரை வைத்து மாணவர்களிடம் நைச்சியமாகப் பேசி கலைக்க முயற்சித்தனர் போலீசார். ” ஒரு மாதத்திற்குள் விடுதி பிரச்சினைகளைசரி செய்துவிடுகிறேன் கலைந்து செல்லுங்கள்” என்றார், ஆ.தி.ந. துறை அதிகாரி. ”நீங்க சொல்ற வாக்குறுதியை அப்படியே கைப்பட கடிதமா எழுதிக் கொடுங்க கலைந்து செல்கிறோம்” என்று பு.மா.இ.மு. தோழர் கேட்டதற்கு, ” அதெல்லாம் எழுதித் தரமுடியாது” என்று திமிராக மறுத்தார் அந்த அதிகாரி.
நள்ளிரவு நேரம் என்பதும், மழை பெய்துக் கொண்டிருந்ததாலும் அடுத்தகட்டமாக போராட்டத்தை எவ்வாறு தொடர்வது என்று கலந்தாலோசித்தனர். மறுநாள் காலை (9/10/18) குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்களிடம் விடுதி மாணவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி தமது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.
விடுதி மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்ட குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “சோறு கேட்டா குத்தமா… உரிமைய கேளு சத்தமா“ என்ற முழக்கத்த்தோடு சாலைமறியல் போராட்டமாக மாற்றினர். கல்லூரி முதல்வரும் போலீசாரும் மாணவர்களின் உறுதியான போராட்டத்தை கண்டு பின்வாங்கினர்.
மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன்
1 of 3
சம்பவத்தை அறிந்து அங்கு வந்த தி.மு.க. குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் தரப்பிலுள்ள நியாயத்தை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர், தாசில்தார் மற்றும் துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவழைத்தார்.
மாணவர்களின் உறுதியான போராட்டத்தின் விளைவாக, முதல்நாள் இரவு அதெல்லாம் முடியாது என்று திமிராகச் சென்ற அதிகாரிகளே மறுநாள் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமானது. மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினரின் சாட்சி கையெழுத்தோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர், அரசு அதிகாரிகள்.
தமிழில் பொருளாதாரச் சிந்தனைகள் குறித்த நூல்கள் குறைவாகவே வருகிறது என்கிற ஆதங்கத்தைத் தவிர்க்கிற இன்னுமொரு அரிய முயற்சி இது.
” Understanding the Financial Crisis” என அனைத்திந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு. அமானுல்லாகான் ஆங்கிலத்தில் எழுதிய நூல் தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு.இயேசுதாஸ் அவர்களின் சிறப்பான தமிழாக்கத்தில் வெளிவந்துள்ளது.
2008 இல் உலகத்தையே உலுக்கிய நிதி நெருக்கடியை மையப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் முதலாளித்துவப் பொருளியல் தத்துவங்களின் பொய்மையைத் தகர்த்தெறிகிற அளவிற்கு இந்நூலின் நோக்கமும், ஆக்கமும் விரிந்துள்ளது… (க.சுவாமிநாதன் எழுதிய பதிப்புரையிலிருந்து பக்.5)
நிதி நெருக்கடி என்பது ஒரு மனிதனுக்கு நோய் வருவது போன்றது… இரண்டிலும் தீர்வு என்பது நோய்க்கானக் காரணங்களைக் கண்டுபிடித்து அதை குணப்படுத்துவதே ஆகும் என்கிறது உலக வங்கியின் 2009ம் ஆண்டு அறிக்கை. அரசுகளால் கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை நோய்க்கான காரணங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. தொடர்ந்து கொண்டிருக்கும் நிதித்துறையின் பலகீனமும், அண்மையில் அரசு கடன் சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான போக்குகளும், உலகப் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்துவதாக 10.09.2010 அன்று வெளியான சர்வதேச நிதி நிறுவன அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. தற்போதைய கரன்சி யுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.
உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது… கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிட்டன; உலகத் தொழிலாளர் நிறுவன மதிப்பீட்டின்படி நிலைமை நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப 3-4 ஆண்டுகளாகும். வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் நிலைதான் மிக மோசமானதாகிவிட்டது. வேலையில்லா நிலைமை பற்றி உலகத் தொழிலாளர் அமைப்பு அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. உழைப்பு சக்திக்கான சந்தையின் பின்னடைவு நீள… நீள.. வேலை தேடுவோருக்கும் துன்பம் நீண்டு கொண்டே இருக்கிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி 35 நாடுகளில் உள்ள உழைப்பாளர்களில் 40% பேர் ஓராண்டாக வேலையின்றி உள்ளனர். அதனால் அவர்கள் நம்பிக்கை இழந்து மனநலம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இளம் தலைமுறை வேலைவாய்ப்பின்மையால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியே வேலைவாய்ப்பிலும் அவர்களின் தகுதிக்குத் தகாத வேவையே கிடைக்கிறது. வேலை இழப்பால் நொந்துபோன தொழிலாளர்கள் உழைப்புச் சந்தையை விட்டே ஒதுங்கிவிட்டனர். (நூலிலிருந்து பக்..87,88)
இன்று உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வணிகம் ஒழுங்குமுறைபடுத்தப்படாதது மட்டும் காரணம் அல்ல என்பது படிப்பினை ஆகும். முதலாளித்துவம் அதன் அமைப்பிலேயே பிரச்சனைகளும், குறைகளும் நிறைந்ததாகும். இன்று உற்பத்தி சக்திகள் பெருமளவு அதிகரித்து சமூக உற்பத்தி அதகிரித்ததும் அத்துடன் உற்பத்தி உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டும் உள்ளது; ஆனால் சமூகத்தால் உற்பத்தி ஆன பொருட்கள் தனியாரின் உடமையாக உள்ளது. இதுவே முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடு ஆகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின் 1991ல் தொடங்கிய முதலாளித்துவத்தின் வெற்றிப் பயணம் நிதி வீழ்ச்சி (Financial Meltdown)யைத் தொடர்ந்து 2007ன் இறுதி காலாண்டிலிருந்து, எந்த ஒரு தீர்வும் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் பல்வேறு நிகழ்வுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. 1980 களில் சர்வதேச நிதி நிறுவனம் / உலக வங்கி அமைப்புகள் திணித்த திட்டங்களாலும், 1990 களில் சோசலிச அரசுகளின் வீழ்ச்சியாலும் நிலைகுலைந்து போன வளர்ந்து வரும் நாடுகள், இன்று உலகவர்த்தக நிறுவனம், சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலகவங்கிகளின் மூலம் தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன…
லத்தீன் அமெரிக்க நாடுகளில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் தொழிலாளி வர்க்கத்தின், விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவை எல்லாம் முற்போக்கு சக்திகளின் வெற்றி அலைகளை வெகுகாலம் தடுத்து நிறுத்த முடியாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அராஜகமாக செயல்படும், பிரச்சனைகள் நிறைந்த, லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகத்தை எதிர்த்து புதிய உலகம் படைக்கும் நீண்ட போராட்டத்திற்கு தோழர் அமானுல்லாகானின் இந்த நூல் ஆயுதமாகப் பயன்படும். இந்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமய கொள்கைகளை மாற்றி அமைத்திடும் உடனடிப் போராட்டத்திற்கும் இந்நூல் உதவும். (நூலுக்கான முன்னுரையில் வெங்கடேஷ் ஆத்ரேயா, பக் 10,11)
நூல்: நிதி நெருக்கடி ஒரு புரிதல் ஆசிரியர்: அமானுல்லாகான் (தமிழில்: இரா.இயேசுதாஸ்)
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி: 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
சீனக் கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் ’கம்யூனிச’ கல்வி கட்டாயம். ஆனால், அவர்கள் எம்மாதிரியான ‘கம்யூனிசத்தை’ கற்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்.
சீன கம்யூனிஸ்டு கட்சி சந்தைப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்ட ஆண்டு 1992 என்றாலும் அதற்குத் தேவையான அடித்தளத்தை 1978 -ல் இருந்தே போடத் துவங்கி விட்டது. ‘சோசலிச சந்தைப் பொருளாதாரம்’ என ஒன்றுக்கொன்று பொருந்தாத சொற்களால் தனது நவீன திரிபுவாதத்திற்கு விளக்கமளித்தது சீன கம்யூனிஸ்டு கட்சி.
எனினும், அந்நாட்டின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கம்யூனிச கல்வி அளிக்கும் நடைமுறை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது இருபதுகளில் இருக்கும் மாணவர்கள் பலர் சொந்த முறையில் கம்யூனிச தத்துவங்களைக் கற்றுக் கொள்ள படிப்பு வட்டங்களை அமைத்து மார்க்ஸ், லெனின், மாவோவின் படைப்புகளைப் படித்து விவாதித்து வருகின்றனர். விளைவு? இந்த மாணவர் குழுக்கள் தங்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் போராட்டங்களுக்கும், வெளியில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்களுக்கும் ஆதரவாக களமிறங்கத் துவங்கியுள்ளன.
இளம் கம்யூனிஸ்டுகள் என அறியப்படும் இம்மாணவர்கள் கடுமையான அரசு அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அதே சமயம் களப் போராட்டங்களிலும், சித்தாந்தப் போராட்டங்களிலும் துணிச்சலுடன் முன்னேறிச் செல்கின்றனர். அவ்வாறான மாணவர்களில் ஒருவர் தான் யூயீ ஜின்.
*****
யூயீ ஜின் (Yue Xin) 21 வயதேயான கல்லூரி மாணவி. பீகிங் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் யூயீ, அதே பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கை அரசு தரப்பில் இழுத்தடித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து தனது சக மாணவர்களைத் திரட்டிக் களமிறங்குகிறார்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் உலகளலவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் முன்னெடுத்த #MeToo இயக்கம் சீனாவிலும் மெல்லப் பரவியது. அந்த சமயத்தில் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பின் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு மாணவர்களைத் திரட்டத் துவங்கினார் யூயீ.
சென்ஷென் பகுதி மாணவர்கள் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், சீரழிந்து போயுள்ள போலீசு துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், (படம் : நன்றி – நியூயார்க் டைம்ஸ்)
சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் யூயீ, “சீனாவில் மார்க்சிய தத்துவம் ஒரு கட்டாயப் பாடம் தான்… ஆனால், நீங்கள் உண்மையான மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதை உங்கள் சொந்த முயற்சியில் தான் மேற்கொள்ள வேண்டும்” எனப் பதிவு செய்துள்ளார். மேலும், தொழிலாளர் உரிமை, ஆலைகளின் பணிச்சூழல், ஏற்றத்தாழ்வான ஊதியம் மற்றும் ஜனநாயக மறுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களைக் குறித்தும் பதிவு செய்துள்ள யூயீ, பல்கலைக்கழக வளாகத்தில் தான் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் மூலமே தான் அரசியல் கற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.
எனினும், கம்யூனிச படிப்பு வட்டங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரகசியமாகத் தான் நடத்தியாக வேண்டும். ஜாங் யுன்ஃபான் (Zhang Yunfan) 25 வயது மாணவர். கடந்த ஆண்டு (2017) நவம்பர் 15ம் தேதி தனது தோழர்களோடு கம்யூனிச நூல்களைப் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாங்குடன் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் செய்த குற்றம்? தொழிலாளர் உரிமை மற்றும் ஜனநாயக மறுப்பு குறித்து படித்து விவாதித்ததே.
“அது ஒரு ஹாலிவுட் ஆக்சன் திரைப்படம் போல் இருந்தது” எனத் தான் கைது செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறார் ஜாங்கின் நண்பர். அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கும்பலாக உள்ளே நுழைந்துள்ளனர் போலீசார். அப்போது படுத்துக் கொண்டிருந்த ஜாங்கின் நண்பரின் கழுத்தைப் பிடித்து படுக்கையோடு அழுத்தி கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.
ஜாங்கும் அவரது நண்பர்கள் ஏழு பேரும் கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து விவாதக் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி மற்றும் சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.
தற்போது அதிகாரத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாவோவின் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், அதை அரசியல் பேரழிவு என்று வகைப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு இனிமேல் மார்க்சிய வகுப்புகளை நடத்தினால் அதில் விவாதிக்கப்பட உள்ள நூல்கள் மற்றும் தலைப்புகளை போலீசாருக்கு முன்னறிவிக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை சித்தரிக்கும் “வெண் கூந்தல் பெண்” (White-haired Girl) எனும் மாவோ காலத்திய நாடகத்தை நடத்துவதற்கும் போலீசார் தடைவிதித்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும், அதற்கு ஆதரவளிப்பதையும் சீன ஆளும் வர்க்கம் மிகக் கடுமையாக ஒடுக்கி வருகின்றது. சீனாவின் குவாங்ஜொவ் மாகான நீதிமன்றம் 2016 -ம் ஆண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
மார்க்சிய சித்தாந்தத்தால் ஒளியூட்டப்பட்ட சமூக செயல்பாடுகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக கூறுகிறார் மார்க்சிய தத்துவவியலாளரான யுவான் யுவா (Yuan Yuhua). ’குவாங்ஜொவ் குழு’ எனும் மார்க்சியக் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது 20-களின் மத்தியில் இருப்பவர்கள். இவர்கள் தங்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் – அந்த ஈர்ப்புக்கு அரசின் பாடதிட்டம் காரணம் இல்லை எனவும் கூறுகின்றனர்.
தீவிர இடதுசாரி மாணவர் குழுக்களில் இணைகிறவர்கள் தங்களது சொந்த முயற்சியில் மூல மார்க்சிய நூல்களைப் படித்து விவாதிப்பது, நேரடியான கள ஆய்வுகளில் ஈடுபடுவது மற்றும் தாங்களே ஆலைகளில் வேலை செய்து தொழிலாளர் நிலைமைகப் புரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவே தொழிலாளர் போராட்டங்களை இம்மாணவர் குழுக்கள் ஆதரிக்கின்றன.
சீனத் தொழிலாளர்களின் நிலை 2008 -ம் ஆண்டு துவங்கிய பொருளாதார நெருக்கடியை ஒட்டி மேலும் சீரழிந்தது என்கிறார் ஹான் பெங் (Han Peng). முன்பு போலீசாரின் தேடப்படுவோர் பட்டியிலில் இடம் பிடித்திருந்த ஹான் பெங், தீவிர இடதுசாரிக் குழுக்களில் இயங்கி வருபவர். பத்தாண்டுகளுக்கு முன் துவங்கிய பொருளாதார நெருக்கடியால் உலகளவில் பொருட்களின் நுகர்வு சரிந்துள்ளது. இதைத் தாக்குப் பிடிக்க சீன ஆலை முதலாளிகள் தாங்க முடியாத பணிச் சுமையை தொழிலாளர்களின் மேல் சுமத்தியுள்ளனர்.
பணி உத்திரவாதம் ரத்து, பாதுகாப்பான பணிச் சூழல் ரத்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து, பணிக் கொடை ரத்து என வரிசையாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்த சீன ஆளும் வர்க்கம், தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு இருந்த பெயரளவுக்கான தடைகளையும் விலக்கியுள்ளது.
இதன் விளைவாக தொழிலாளர் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றது. இன்னொருபுறம், நவீன திரிபுவாத சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் சரியான கம்யூனிச கோட்பாடுகளைக் கற்பதும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுமான போக்கு எழுந்துள்ளது.
மார்க்சிய கோட்பாடுகளை வரித்துக் கொண்ட மூளையில் இருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சிந்தனைகள் உதிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நல்ல மரம் நல்ல கனிகளைத் தானே கொடுத்தாக வேண்டும். எனினும், இந்த போக்கு சர்வ வல்லமை கொண்டு இரும்புக் கரத்தோடு நாட்டை ஆண்டு வரும் சீனத் திரிபுவாத கம்யூனிஸ்டு தலைமையை எதிர்க்கும் அளவுக்கான வலிமையை இன்னும் பெறவில்லை.
சீன கம்யூனிஸ்டுகளிடையே அதிகரித்து வரும் மேற்கத்திய சிந்தனைகள் குறித்து கட்சி காங்கிரசின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதற்கு பதிலாக யூயீ அனுப்பிய கடிதம் ஒன்றில், ஊழலை ஒழிக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலில் பாராட்டுகிறார். அதன் பின், தன்னைப் போன்ற இளம் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளில் இருந்து கிளைத்தவை அல்ல என்றும் 1919 மே 4 இயக்கத்தில் (சீனப் புரட்சிக்கு வித்திட்ட மாணவர் இயக்கம்) இருந்தே தாங்கள் உணர்வு பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.
எப்படிப் பார்த்தாலும் சீனாவின் நவீனத் திரிபுவாதிகளின் எதேச்சாதிகாரத்திற்கான முடிவு சீனாவில் முளைவிடத் துவங்கியுள்ளதை மட்டும் மறுக்கவே முடியாது. விசயம் என்னவென்றால் முளைவிட்டெழும் குருத்துகள் அனைத்தும் மார்க்சியம் எனும் விதையில் இருந்தே முளைத்தெழுகின்றன.
உண்மையான மார்க்சியம் என்கிற விதையை மறைப்பதாக எண்ணிய சீன எதேச்சாதிகாரவாதிகள் அதை பண்பட்ட மண்ணுக்கடியில் புதைத்து வைத்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
நக்கீரன் ஆசிரியரை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய கோரியும் விருத்தாசலத்தில் பத்திரிகையாளர்கள மறியல், கைது! #NakkeeranGopal
நக்கீரன் ஆசிரியரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில், விருத்தாசலம் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்த 25-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் மக்கள் அதிகாரம் சார்பாக விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் கலந்து கொண்டு முழக்கமிட்டார்.
மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ‘நக்கீரன்’ கோபால் இன்று (9-10-2018) காலையில் போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித உரிய ஆவணங்களுமின்றி அவரை போலீசு கைது செய்திருக்கிறது.
நிர்மலா தேவி விவகாரத்தை பல பத்திரிகைகளும் மறந்துவிட்ட நிலையில், தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை குறித்து அம்பலப்படுத்தி வருகிறது நக்கீரன். இது தொடர்பாக சமீபத்திய இதழில் தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் ஆளுநரை நிர்மலாதேவி 4 முறை சந்தித்தார் என்ற செய்தியை நக்கீரன் இதழ் பிரசுரித்தது.
ஆளுநர் – நிர்மலாதேவி விவகாரத்தை மக்கள் மறந்துவிடுவார்கள், எளிமையாகக் கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஆளுநர் தரப்புக்கு தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டும் நக்கீரன் பெரும் குடைச்சலாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் கொடுக்கப்பட்டு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்து அடையாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறிய போலீசு, பின்னர் அலைக்கழித்து அவரை சிந்தாதிரிப் பேட்டை போலீசு நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறது. அவர்மீது தேச துரோகம் (124-A), வன்முறையைத் தூண்டுதல், தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசு நிலையத்தில் கோபாலைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. நக்கீரன் கோபாலின் வழக்கறிஞராக அவரைச் சந்திக்கவிருப்பதாகச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அனுமதிக்க மறுத்தது போலீசு. அதைத் தொடர்ந்து வைகோவும், பிற பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகோவைக் கைது செய்து அங்கிருந்து அகற்றியது போலீசு. ஒரு வழக்கறிஞரை சந்திக்கும் உரிமை கூட இங்கு நக்கீரன் கோபால் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
’நக்கீரன்’ கோபால்
நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியதும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஆளுநரே, ஒரு விசாரணைக் கமிசனுக்கு உத்தரவிடும் இழி சூழலையும் தமிழகம் கண்டது. குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க விசாரணைக் கமிசன் போட்ட கதைதான் இது.
தமிழகத்தில் இரண்டு பொம்மைகளை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு பாஜக-வின் நிழல் அரசாங்கம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் உட்பட யாரை முதல்வர் சந்தித்தாலும், உடன் நிழலாகவே தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும் அதில் கலந்து கொள்கிறார். பாஜக-வின் நிழல் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். பழங்கிழமான பன்வாரிலால் புரோகித்தைக் காப்பாற்றவே நக்கீரன் கோபாலின் மீதான இந்த கைது நடவடிக்கை ஏவப்பட்டிருக்கிறது. எச்.ராஜாவிற்கு ஆளுநர் மாளிகையில் விருந்து வைத்தவர் புரோகித் என வைகோ அம்பலப்படுத்துகிறார்.
நக்கீரன் கோபால் கைதை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக-வை அம்பலப்படுத்தும் விதமான எந்த ஒரு விவகாரமும் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது என பிற ஊடகங்களை பகிரங்கமாக மிரட்டுவதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை. சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி.
ஜனநாயகத்தைக் காப்பதற்கு, மத்தியில் ஆளும் பாசிச கும்பலையும், தமிழகத்தை ஆளும் அதன் அடிமைக் கும்பலையும் விரட்டியடிப்பதே நம்முன் உள்ள ஒரே தீர்வு.
நக்கீரன் கோபால் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ நக்கீரன் ஆசிரியர் கோபாலை உடனே விடுதலை செய்!
♦ கவர்னர் பன்வாரிலாலை திரும்பப் பெறு!
♦ தமிழகத்தில் பாசிசம் தலை விரித்தாடுகிறது.
♦ எதற்கு எடுத்தாலும் தேசதுரோக வழக்கா?
“ஹைகோர்ட்டாவது மயிராவது, தமிழக போலீஸ் அனைவரும் லஞ்சப் பேர்வழிகள்“ எனப் பேசிய எச்.ராஜாவிற்கு கவர்னர் மாளிகையில் விருந்து. பெண்கள் சமூகத்தையே கேவலமாக பேசிய எஸ்.வி. சேகர் அரசு மரியாதையுடன் உலா வருகிறார். தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பேராசிரியரே மாணவிகளை பல்கலைகழக அதிகாரிகளுக்கும், கவர்னர் மாளிகை வட்டாரத்திற்கும் பாலியல் இச்சைக்கு கூட்டிகொடுக்க முயன்றதை அம்பலபடுத்தினால் தேசத்துரோக வழக்கில் கைதா?. இது என்ன நாடா?
பேசத் தடை, பாடத் தடை, கூட்டம் நடத்தத் தடை, நடந்து போகத் தடை, படம் வரையத் தடை, ஆறுதல் சொல்லத் தடை, பிரசுரம் கொடுக்கத் தடை, போஸ்டர் ஒட்டத் தடை, எழுதத் தடை, போராடத் தடை, பத்திரிகை ஊடகங்கள் அச்சுறுத்தி முடக்கம், இதுதான் ஜனநாயக ஆட்சியின் அருகதை.
இனியும் எதிர்த்து போராட அஞ்சினால், தயங்கினால், பின்வாங்கினால் நாயினும் கீழாக நடத்தப்படுவோம். அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை.
வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
9-10-2018
*****
நக்கீரன் கோபால் கைது ! முகநூலில் செயற்பாட்டாளர்கள் கண்டனம் !
Villavan Ramadoss
நக்கீரன் கோபால் கைது.
சக ஊடகங்கள் நாங்களும் ஊடகங்கள்தான் என நிரூபிக்க ஒரு வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.
இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் இன்னொரு நிர்மலா தேவி என நிரூபணம் ஆகும், அவ்வளவுதான்.
அன்சாரி முஹம்மது
தமிழக பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களின் உண்மையான முகத்தை பார்க்க தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் அபூர்வமான சந்தர்ப்பம்.!! பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார்களென்று….
Ashok.R (Don Ashok)
அடக்குமுறையும், அத்துமீறலும் ஆட்சி செய்யும்போது எங்காவது சிறுநம்பிக்கையாக ஒரு ஒளிக்கீற்று தோன்றும். நக்கீரன் அப்படித்தான் இதுவரையில் எப்போதும் இருந்திருக்கிறது. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் எல்லாம் ரஃபேல் ஊழலில் இருந்து கவர்னரின் லீலைகள் வரை பேசாமல் கோமாளித்தன விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு மின்மினிப்பூச்சியாக வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த நக்கீரனையும் அணைக்க வேண்டும் என அடிமையரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால் முன்காலங்களில் ஃபாசிஸ்டு ஜெயலலிதா ஒவ்வொரு முறை அந்த மின்மினிப்பூச்சியை அழிக்க முயற்சி செய்தபோதெல்லாம் அது ட்ராகனாக மாறி இன்னும் அதிக வெளிச்சத்துடன் நெருப்பைக் கக்கியிருக்கிறதேயொழிய அணைந்த வரலாறு ஒருபோதுமில்லை. இனியும் அப்படித்தான். நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு கடுமையான கண்டனங்கள். அவரை உடனே விடுதலை செய்வதோடு இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்டோரை கைது செய்ய முயற்சிப்பதையும் உடனே கைவிட வேண்டும்.
#ReleaseNakeeranGopal
Abdul Hameed Sheik Mohamed
ஆளுநரை விமர்சித்து செய்திவெளியிட்டால் அதற்கு தேச துரோக வழக்கு.. ஆளுனர்தான் இந்திய தேசம் என்பதையும் ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறைப்பதுதான் இந்த தேசத்தை பாதுகாப்பது என்பதையும் எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுங்கள். நானே அரசன், நானே நாடு என்று சொல்லவர்களையெல்லாம் வரலாறு எங்கே அனுப்பி வைத்ததோ அங்கேதான் இவர்களும் அனுப்பபடுவார்கள்.
Yuva Krishna
முந்தைய காலங்களில் அண்ணன் கோபால் மீது கை வைத்தபோதெல்லாம் ஆளுங்கட்சியின் அஸ்திவாரமே நொறுங்கியது என்பது வரலாறு. அது தொடரும்.
Sugumaran Govindarasu
நக்கீரன் கோபால் கைது : வன்மையாக கண்டிக்கிறேன் !
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவதூறு செய்தி வெளியிட்டார் என்றால் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கலாம். அது அவதூறான செய்தியா இல்லையா என்பது குறித்து சட்டப்படி விளக்க அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அதைவிடுத்து வழக்கு, கைது என்பது கருத்துரிமைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகும்.
Jdr Trichy
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் சமீப காலமாக கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளதை கண்டிக்கிறோம்.
மேலும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் வார இதழின் உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து புனே செல்ல இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது தமிழக ஆளுநரின் பணிகளில் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து. மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயலை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.
சமூக அவலங்களையும், ஊழல்களையும், அரசும், ஆட்சியாளர்களும் மூடிமறைக்கும் பொழுது அதனை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் மிக உன்னதமான பணியை செய்யும் பத்திரிக்கையாளர்களையும், ஊடகங்களையும் நசுக்கும் நோக்கில், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, பொய்வழக்குகளில் கைது செய்வது உள்ளிட்ட செயல்கள் தொடருமேயானால், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று பொருள்.
தமிழகம் மிக நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்தபோதெல்லாம், அவற்றை தான் சார்ந்த ஊடகத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்து வந்தவர் நக்கீரன் கோபால், குறிப்பாக சந்தன மரக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு பேருதவியாக செயல்பட்டவர் இவர்.
இது மட்டுமல்லாமல் தமிழக ஊடகங்களின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழக்குகள் நடத்தி வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நடந்தவை நடந்தவையாக நக்கீரன் இதழ்களில் பதிவு செய்துவரும் நிலையில், அதற்கு மாற்று கருத்து இருக்குமேயானால் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, நடந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் (All are equal before the eyes of law) என்ற போதிலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட சிலர் சுதந்திரமாக போதுமேடைகளில் தோன்றும் நிலையில் சிலர் மட்டும் ரகசியமாக கைது செய்யப்படுவது சட்டத்தின் ஆட்சி (RULE OF LAW) தான் நடக்கிறதா என்ற ஐயத்தினையும் அச்சத்தினையும் ஏற்படுத்துகிறது.
எனவே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும், நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு ஷானு, தலைவர்
ஜீ.ஜான்டேவிட்ராஜ், செயலாளர் திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்
9677081363
அன்சாரி முஹம்மது
இதுதான் இவனது (தினகரன்) உண்மையான முகம். இனியாவது இவன் யாரென்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Kokkarakko Sowmian
இணையதள செயல்பாட்டாளர்களே,
நீங்கள் எந்த கட்சி அல்லது சார்புநிலை கொண்டவராக இருப்பினும், நக்கீரன் கோபால் கைதினை இன்னுமொரு பிரேக்கிங் நியூஸாக மட்டுமே கடந்து சென்றால்..
நாளை நீங்கள் இங்கே எழுதுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லது எழுத்திற்கும் கூட இந்த அரசால் கைது செய்யப்படலாம் என்பதை உணருங்கள்..!
இது நக்கீரன் கோபாலுக்கான பிரச்சினை அல்ல…, அவர் இது போல பல வழக்குகளை சந்தித்து வெளியே வந்துள்ளார்..!
ஆனால் இந்த அரசு அவரைக் கைது செய்து, இணையத்தில் அரசுக்கு எதிராக எழுதுகின்ற ஒவ்வொரு தனி நபருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்..!
ஒரு ஜனநாயக நாட்டில் எதையும் விட அதி பயங்கரம்…. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அரச நடவடிக்கையே..! இதை அனுமதித்தால், இங்கே ஒவ்வொரு குடிமகனும் அடி மாடாகவேதான் வாழ வேண்டியிருக்கும்..!