சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் சபரிமலைக்குச் சென்ற பெண்களின் மீது நடு வழியிலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாயர் சேவா சமூகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் தாக்குதல் தொடுத்தனர்.
சபரிமலையில் பெண்கள் நுழைவது ஆகம விதிகளுக்கு எதிரானது; இந்துக்களின் பாரம்பரியத்தைக் கெடுக்கும் செயல்; மத விவகாரங்களில் நீதித்துறை தலையிடக் கூடாது என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்கள் கூறுகின்றன. பாலின சமத்துவத்திற்கான தீர்ப்பை இந்து தர்மத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாக பிரச்சாரம் செய்கின்றன.
பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் சட்டமியற்றியபோது இதே எதிர்ப்பை இந்துத்துவவாதிகள் அப்போதும் தெரிவித்தனர். பார்ப்பனப் பெண்களை அழைத்துச் சென்று, பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என டெல்லியில் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.
இதே போல தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டபோதும் சரி, உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்ட போதும் சரி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்று முட்டுக்கட்டை போட்டனர் இந்து மதவெறியர்கள்.
பெண்கள் மட்டுமல்ல, தலித் மக்கள், பழங்குடி மக்கள், சில இடங்களில் சூத்திரர்கள் இவர்களுக்கும் இன்னும் சமத்துவத்தை வழங்க மறுக்கிறது பார்ப்பனியம். கோவில் கருவறை முதல், ஊரில் இருக்கும் கிணறு வரை இம்மக்களுக்கு அனுமதி மறுக்கப் படும் இடங்கள் பல. இதுதான் ‘வல்லரசு இந்தியாவின்’ இலட்சணம்!
பாடப் புத்தகங்களில் பாவம் எனச் சொல்லப்படும் தீண்டாமை, சட்டப் புத்தகங்களில் ஆகம விதிகளாக, மத நம்பிக்கையாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மேற்கண்ட பிற்போக்குத்தனங்களை மக்களிடம் உசுப்பிவிட்டு அதையே இந்து தர்மம் என கற்பனையாக கட்டமைக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களை அபகரிக்க சதி செய்து வருகிறது.
வட இந்தியா முழுவதும் கலவரங்கள் மூலம் இரத்த ஆறு ஓடச் செய்த ஆர்.எஸ்.எஸ்., மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான். தமிழகம் மற்றும் கேரளாவில் அத்தகைய கலவரங்களைத் தூண்டிவிடவே ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். வரவிருக்கும் பேராபத்தை எச்சரிக்கிறது இத்தொகுப்பு.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? – புதிய கலாச்சாரம் நவம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
“சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ?” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
சபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
பெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை
போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
பிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !
பார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்
பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 4
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க
திரும்ப ஒரு கேள்வி கேட்கலாம். வேலை வாய்ப்புகள் எல்லா இடத்துலயும் வரணும்னா ஸ்டெர்லைட் கம்பெனி வைக்கணும், சேலம் 8 வழி சாலை வரணும், ஜிண்டால் ஃபாக்டரி வரனும், அதானி வரணும் என்று சொல்லலாம். ஆனால், ஸ்டெர்லைட்டும், ஜிண்டாலும், அதானியும் முதலீடு செய்து அவர்கள்தான் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்களே தவிர, படித்த இளைஞர்களுக்கு கௌரவமான வேலை கிடைப்பது அரிதாகி வருகிறது. எனவே, வேறு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது.
நன்றி : எக்கனாமிக் டைம்ஸ்
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்களே. அதற்கு மேல் இங்கு முதலாளி என்ற ஒரு வர்க்கம் உண்டு. அந்த வர்க்கம் சிறுபான்மை வர்க்கம். பெரும்பான்மை வர்க்கம் தொழிலாளிதான்.
ஆனால் தொழிலாளி வர்க்கம் ஆங்காங்கே பிரிந்துள்ளனர். Blue Collar, white Collar என்று பொருளாதார அடிப்படையில், வாழ்வின் அடிப்படையில், பின்புலன் அடிப்படையில் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.
அடிப்படையில் நாம் தொழிலாளிகள். தொழிலாளிகள் நீண்ட நெடு போராட்டங்கள் மூலம் வென்றெடுத்த சட்ட, திட்டங்கள் உண்டு. இந்த சட்ட திட்டங்களை எப்படி அணுகுவது, என்ன கேட்க வேண்டும், நமது உரிமை என்ன என்பது பற்றிய அறிவு இல்லாததை ஒரு பெரிய குறைபாடாகக் கருதுகிறேன்.
10வது – 12வது பாட புத்தகங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும். கொண்டு வரும் பட்சத்தில் அதைப் படித்த இளைஞர்கள் தமது உரிமைகளை புரிந்து கொண்டு சுயமாக யோசித்து செயல்படுவார்கள். சுய யோசனையும் சுய அறிவும் விழிப்புணர்வும் இல்லாதது தான் வெளிநாடு போய் ஏமாறுவது போன்ற தவறுகளுக்கு காரணம்.
வெளிநாடு வேலை மோசடியை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மலேசியா சிங்கப்பூர் இது மாதிரியான நாட்டுக்கு போய் நிறைய பேர் பாதிக்கப்படுறாங்கன்ற போது அந்த விசா மையத்திலேயோ, இல்லை ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலையோ இது மாதிரி பாதிக்கப்படுறவங்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி முகாம் மாதம் ஒரு முறை நடத்தலாம்.
பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில் “தேவை (WANTED), பிக் பாக்கெட்டுகள் ஜாக்கிரதை” அப்பிடின்னு ஃபோட்டோ ஒட்டி போடுவாங்க. இது மாதிரி போலி ஏஜெண்டுகள் முகங்களை எல்லாம் ஏன் ஒவ்வொரு பாஸ்போர்ட் ஆபிசுலயும் “இவங்க எல்லாம் போலி ஏஜெண்டுகள், இந்த போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் அப்பிடீன்னு அவங்க ஃபோட்டோவோட போட்டு ஒட்டுனீங்கன்னா போலி ஏஜெண்டுகளை நம்பாம இருப்பாங்க இல்லையா.” ஏன் இதை பண்ண மாட்றாங்க.
இது செய்யாம இருக்கிறதுக்கு காரணம் அந்த போலி ஏஜெண்டுகள் அரசியல் பின்னணி உள்ள நபர்களாக இருக்காங்கன்றது காரணமா இல்ல வேற ஏதும் காரணமா?
ஒரு பிக் பாக்கெட்டு 100, 50 எல்லாம் திருடுறதுக்கு அவங்க ஃபோட்டோ எல்லாம் போட்டு அவங்களை பகிரங்கப்படுத்தி, மானத்தை வாங்கி அவங்க குற்றம் செஞ்சாங்கன்னு சொல்றீங்க. ஆனா, இதே போல குற்றம் இழைக்கும் வெளிநாட்டு ஏஜென்டுகளை ஏன் துரத்துவதில்லை. 1 லட்சம் 5 லட்சம் 10 லட்சம் அப்டின்னு ஒரு பெரிய தொகை வர்றதுனால இந்த தொகையோட கமிசன் போலீசுல இருந்து அரசாங்கத்துல இருக்கிற எல்லாத்துக்கும் போறதால இதை கண்டுக்காம இருக்காங்கன்னு எனக்கு தோணுது.
ஏன் வெளிநாடு போகணும்?
இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கிட்டு தான் இருக்கு. இந்த குற்றங்கள் நடக்கிறதுனால தான் அங்க போறவங்களுக்கு பாதுகாப்பு இல்லை. போறவங்க தப்புதான் செய்றாங்க. ஆசைப்பட்டு தான் போறாங்க. “எனக்கு அங்க போனா வேலை கிடைச்சிடும். ஒரு சின்ன தப்பு தான் டிராவல் விசால தான் போறேன். அங்க போய் வேலை வாங்கிப்பேன்’னு அவங்க போறதுக்கு காரணம் நெருக்கடி. பொருளாதார நெருக்கடி.
அவர்கள் ஏன் வெளிநாட்டு வேலைக்கு சட்டத்தை மீறி போகிறார்கள் என்று சிலர் கேட்கலாம். இது கை கால்களை ஒடித்த பின்பு, ஏன் தவழ்ந்து போறாங்க என்று கேள்வி கேட்பது போன்று உள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக அரசின் திட்டங்கள்தான் இருக்கு. அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.
“எனக்கு வேற வழி இல்லை. நான் diploma படிச்சிருக்கேன் Engineering படிச்சிருக்கேன், வேலை கிடைக்கல. எனக்கு மாத வருமானம் வேண்டும். எங்க அப்பா விவசாயம் பன்னிட்டிருந்தாரு அதையும் நிறுத்தி விட்டீங்க. எனக்கு கவர்மென்ட் குடுத்த இழப்பீட்டு பணத்திலதான் படிச்சு முடிச்சிருக்கேன். நான் குடும்பத்துக்கு திரும்ப சம்பாதிக்கணும். மாசம் 5 ஆயிரம், 6 ஆயிரமாவது குடுக்கணும். இங்க நான் பிளம்பிங் வேலை இது மாதிரி வேலை தான் பார்த்திட்டிருக்கேன். இங்கயும் வருமானம் இல்ல. இந்தியா முழுவதிலும் இருந்து குறைந்த கூலிக்கு உழைக்க நிறைய பேரை கொண்டு வருகிறார்கள். அவங்களுக்கும் விவசாயம் அழிவினால் வேலை இல்லாமல் இப்படி வருகிறார்கள். கிடைக்கிற வேலை வாய்ப்புக்கும் கடும் போட்டி உள்ளது. நான் வேலைக்கு எங்க போவேன்.”
உள்ளூரில் கிடைக்கும் சொற்ப வேலை வாய்ப்புகளிலும் ஒருதரப்பட்ட படிச்சு வர்ர மக்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு கொடுக்கணும்ன்ற unethical rule, unwritten rule follow பண்ணப்படுது. அதில் ஊழல், சிபாரிசு என்று பல முறைகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கிராமங்கள்ல படிச்சவங்க, மக்களுக்கு வேலை கொடுக்கணும்ன்னு ஒரு ஒதுக்கீடு கிடையாது. ‘திறமை’ அடிப்படையில் என்று சோதித்து கொடுக்கப்படுகிறது. ‘திறமை’ ஒரு மேட்டர்ன்னா அதற்கான பயிற்சி எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா?
ஒரு நாள் இரவில் தாய் மேஜையருகே அமர்ந்து காலுறை பின்னிக்கொண்டிருந்தாள்; ஹஹோல் பண்டைக்கால ரோமானிய அடிமைகளின் புரட்சி சரித்திரத்தை அவளுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.
அந்தச் சமயம் யாரோ கதவைப் பலமாகத் தட்டும் ஓசை கேட்டது. ஹஹோல் எழுந்து சென்று கதவைத் திறந்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோல் கையில் ஒரு மூட்டையுடன் உள்ளே வந்தான். அவனது தொப்பி தலையின் பின்புறமாகச் சரிந்து போயிருந்தது. முழங்கால் வரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது.
“போகிறபோது இங்கே விளக்கு வெளிச்சம் தெரிந்தது. சரி, பார்த்துவிட்டுப் போகலாம் என்று உள்ளே வந்தேன். சிறையிலிருந்து வருகிற வழி” என்று ஒரு விபரீதத் தொனியில் பேசினான் அவன். பிறகு பெலகேயாவின் கரத்தைப் பிடித்து மன நிறைவோடு குலுக்கிவிட்டு மேலும் சொன்னான்; “பாவெல் தன் வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னான்.”
அவன் மிகவும் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்தான். சோர்ந்து மங்கிய சந்தேகக் கண்களோடு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான்.
முன்பெல்லாம் தாய்க்கு அவனைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அவனது விகாரமான மொட்டையடித்த தலையும், சின்னஞ்சிறு கண்களும் அவளை ஏனோ பயமுறுத்திக் கொண்டேயிருந்ததுண்டு. ஆனால் அன்றிரவிலோ அவனைப் பார்த்தபோது அவள் மகிழ்ச்சிக் கொண்டாள். அவனோடு பேசும்போது அன்பு ததும்பப் புன்னகை செய்தாள்.
“நீ எவ்வளவு மெலிந்துவிட்டாய்! அந்திரியூஷா, இவனுக்கு ஒரு குவளை நேநீர் கொடுப்போம்.”
“நான் தேநீர்ப் பாத்திரத்தை அப்போதே கொதிக்க வைத்தாயிற்றே” என்று சமையல் கட்டிலிருந்தவாறே பதில் கொடுத்தான் ஹஹோல்.
“சரி. பாவெல் எப்படி இருக்கிறான்? உன்னைத் தவிர வேறு யாராவது விடுதலையானார்களா?”
நிகலாய் தலையைத் தொங்கவிட்டான்.
“பாவெல் இன்னும் பொறுமையோடு காத்துக்கொண்டு தானிருக்கிறான். அவர்கள் என்னை மட்டும்தான் விடுதலை செய்தார்கள்.” அவன் தன் கண்களைத் தாயின் முகத்துக்கு நேராக உயர்த்தினான்; பற்களை இறுக கடித்துக்கொண்டு மெதுவாகப் பேசினான்: “நான் அவர்களிடம் சொன்னேன்! “போதும் போதும் என்னைப் போகவிடுங்கள். இல்லையென்றால் நான் இங்கேயே உங்களில் யாரையாவது கொன்று தீர்த்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சத்தம் போட்டேன். எனவே அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள்.
“ஆ” என்று பின்வாங்கியவாறு அதிசயித்தாள் தாய். அவனது குறுகிய குறுகுறுத்த கண்களை அவளது கண்கள் சந்தித்தபோது அவள் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
“பியோதர் மாசின் எப்படியிருக்கிறான்? இன்னும் கவிதை எழுதிக் கொண்டுதான் இருக்கிறானா?” என்று சமையலறையிலிருந்தவாறே கத்தினான் ஹஹோல்.
“எழுதுகிறான். ஆனால் அதெல்லாம் எனக்குப் புரிவதில்லை” என்று தலையை அசைத்துக்கொண்டு சொன்னான் நிகலாய். “அவன் தன்னைப் பற்றி என்னதான் நினைத்திருக்கிறானோ? வானம்பாடி யென்று நினைப்பு போலிருக்கிறது! அவர்கள் அவனைக் கூண்டில் பிடித்து அடைத்துவிட்டார்கள்; அந்த வானம்பாடியோ உள்ளேயிருந்து கொண்டு பாட்டுப்பாடுகிறது. எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப்படுகிறது. நான் என் வீட்டுக்குப் போக விரும்பவில்லை!”
“வீட்டுக்குப் போய்த்தான் ஆகப்போகிறதென்ன,” என்று முனகினாள் தாய். “காலியான வீடு, எரியாத அடுப்பு, எல்லாம் குளிர்ந்து விறைத்துக் கிடக்கும்….”
அவன் பதில் சொல்லவில்லை. கண்களை மட்டும் சுருக்கிச் சுழித்தான். பிறகு தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். தன் முன்னே திரிதிரியாகப் பறந்து செல்லும் புகை மண்டலத்தை ஒரு சோம்பேறி நாயைப்போல் வெறுமனே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் நிக்கலாய்.
“ஆமாம். எல்லாமே குளிர்ந்து போய்த்தான் கிடக்கும். தரையில் பாச்சைகள் செத்து விறைத்துக் கிடக்கும். எலிகள்கூட செத்துக்கிடக்கும் பெலகேயா நீலவ்னா. “இன்று இரவு நான் இங்கே கழிக்கிறேனே, முடியுமா?” என்று அவளைப் பார்க்காமலேயே கரகரத்துப் பேசினான் அவன்.
“தாராளமாய், இதற்குக் கேட்க வேறு வேண்டுமா?” என்று அவசர அவசரமாகப் பதிலளித்தாள் அவள். அவனது முன்னிலையில் இருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது.
”இந்தக் காலத்திலே, பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்காகக்கூட வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது…..”
”என்ன?” என்று திடுக்கிட்டு அதிசயத்தோடு கேட்டாள் தாய்.
அவன் அவளைப் பார்த்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டான். அப்போது அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகத்தில் கண்களும் குருடாகிப் போய்விட்டது போலத் தோன்றியது.
“இல்லை. பெற்றோர்களைக் கண்டுகூட பிள்ளைகள் வெட்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொன்னேன்” என்று பெருமூச்சுடன் பதிலளித்தான் அவன். “பாவெல் உன்னைக் கண்டு வெட்கப்படவில்லை. நானோ என் தந்தைக்காக வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நான் இனிமேல் அவன் வீட்டில் காலடி கூட எடுத்து வைக்க மாட்டேன். எனக்கு அப்பனே கிடையாது. எனக்கு வீடும் கிடையாது. போலீஸ்காரர்கள் என்னைக் காவலில் வைத்திராவிட்டால், நான் சைபீரியாவுக்கே போயிருப்பேன். அங்கு கடத்தப்பட்டு, அங்கிருப்பவர்களை விடுதலை செய்வேன். ஓடிப்போய்விட உதவி செய்வேன்…”
அவன் துயரப்படுகிறான் என்பதை அவளது உணர்ச்சிபூர்வமான இதயம் உணர்ந்தது. எனினும் அவனது வேதனை அவள் இதயத்தில் அனுதாப உணர்ச்சியை உண்டாக்கவில்லை.
“அப்படி நினைத்தால், நீ போய்விடுவதே நல்லது” என்று பதில் சொன்னாள். ஏதாவது பதில் சொல்லாதிருந்தால் அவனைத் துன்புறுத்தியதாகும் எனக் கருதியே இப்படிச் சொன்னாள்.
அந்திரேய் சமையலறையிலிருந்து வெளியே வந்தான். “நீ என்ன உபதேசிக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே சிரித்தான்.
தாய் எழுந்து நடந்து கொண்டே, “நமக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழி பண்ணப் போகிறேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
ஹஹோலையே சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு நிகலாய் திடீரென்று சொன்னான்.
“எனக்குச் சில பேரைக் கண்டால் கொன்று தீர்க்க வேண்டும் போலிருக்கிறது.”
”ஓஹோ! அப்படியா? எதற்காக?” என்றான் ஹஹோல்.
“அவர்களை ஒழித்துக் கட்டத்தான்.”
நெட்டையாகவும் மெலிவாகவும் இருந்த ஹஹோல் அந்த அறையின் மத்தியில் வந்து நின்று கொண்டு, பாதங்களை உயர்த்தித் தன் உடம்பை ஆட்டிக் கொண்டான், நிகலாயைப் பார்த்தான். நிகலாயோ நாற்காலியில் அசையாமல் சிலைபோல் அமர்ந்து புகை மண்டலத்தைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவனது முகம் திட்டுத் திட்டாகச் சிவந்து கனன்றது.
‘நான் அந்தப் பயல் – இலாய் கர்போவின் மண்டையை உடைக்கிறேனா இல்லையா, பார்!”
“ஏன்?”
”அவன் ஒரு ஒற்றன்; கோள் சொல்லி! அவன்தான் என் அப்பனைக் கெடுத்தான். அவன் என் தந்தையைத் தன் கையாளாக மாற்றிவிட்டான்” என்று அமுங்கிப்போன குரோத பாவத்தோடு அந்திரேய் பார்த்துக்கொண்டே பேசினான்.
“அப்படியா! ஒரு முட்டாள் தான் உன்னை இப்படி எதிர்ப்பான்” என்றான் ஹஹோல்.
“முட்டாளும் புத்திசாலியும் ஒரே இனம்தான்” என்று உறுதியோடு சொன்னான் நிகலாய். ”உன்னையும் பாவெலையும்தான் பாரேன். நீங்கள் இரண்டு பேரும் புத்திசாலிகள்தான். இருந்தாலும் நீங்கள் பியோதர் மாசினையும், சமோய்லவையும் பார்க்கிற மாதிரியா என்னைப் பார்க்கிறீர்கள்? இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் மதித்துக் கொள்வது போல் என்னை மதிக்கிறீர்களா? பொய் சொல்லாமல் சொல்லு. எப்படியானாலும் நான் உன்னை நம்பமாட்டேன். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு என்னை ஒதுக்கி வைக்கிறீர்கள். தனிமைப்படுத்துகிறீர்கள்.”
“நிகலாய்! உன் மனம் புண்பட்டிருக்கிறது” என்று அன்பும் இதமும் ததும்பச் சொல்லிக்கொண்டே அவனருகே சென்று உட்கார்ந்தான் ஹஹோல்.
“என் மனம் புண்பட்டுத்தான் போயிருக்கிறது, உங்கள் மனமும் அப்படித்தான். ஆனால் உங்கள் வேதனை என் வேதனையைவிடக் கொஞ்சம் உயர்ந்த ரகம். அவ்வளவுதான் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் போக்கிரிகளாக நடந்து கொள்கிறோம். அவ்வளவுதான். நான் சொல்வேன். நீ இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? உம். சொல்வதைச் சொல்லு.”
அவன் அந்திரேயின் முகத்தைக் கூரிய கண்களால் பார்த்தான். இறுக்க கடித்த பற்களோடு பதிலுக்காகக் காத்திருந்தான். அவனது சிவந்த முகத்தில் உணர்ச்சியின் உத்வேகம் மாறவில்லை. எனினும் தடித்த உதடுகள் மட்டும் நெருப்பால் சூடுபட்டது போல் நடுங்கின.
‘நான் எதுவுமே சொல்ல முடியாது” என்று கூறிக்கொண்டே குரோதம் நிறைந்த நிகலாயின் பார்வைக்கு எதிராக தனது நீலநிறக் கண்களில் அன்பு நிறைந்த சிரிப்புக் குமிழிடப் பார்த்தான் ஹஹோல். “இதயத்தின் சகல புண்களும் இரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒருவனோடு எதை விவாதித்தாலும் வேதனைதான் அதிகரிக்கும், அது எனக்குத் தெரியும். தெரியும் தம்பி!”
“நீ என்னோடு விவாதிக்க முடியாது. எனக்கு எப்படியென்று தெரியாது” என்று தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டே முனகினான் நிகலாய்.
”நாம் ஒவ்வொருவரும் தனித்தனி முள்ளடர்ந்த பாதையில்தான் நடந்து சென்றிருக்கிறோம். உன்னைப்போல் ஒவ்வொருவருக்கும் துன்பம் எதிர்ப்பட்டிருக்கிறது….” என்றான் ஹஹோல்.
“நீ எனக்கு எந்தச் சமாதானமும் சொல்ல முடியாது” என்று நிகலாய் மெதுவாகச் சொன்னான், “என் இதயம் ஓநாயைப்போல் உறுமி ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது.”
”நான் உனக்கு எதுவுமே சொல்ல விரும்பவில்லை என்றாலும் உன்னுடைய இந்தச் சஞ்சலம் போய்விடும்; பரிபூரணமாகப் போகாவிட்டாலும் ஓரளவாவது போய்விடும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.”
அவன் லேசாகச் சிரித்தான், பிறகு நிகலாயின் தோள்பட்டைமீது. தட்டிக் கொடுத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.
“இது இருக்கிறதே. இது ஒரு குழந்தை நோய் மாதிரி; மணல்வாரி நோய் மாதிரி. நம் எல்லோருக்குமே இந்த நோய் என்றாவது ஒரு நாள் வந்துதான் தீரும். பலமுள்ளவனை அது அவ்வளவாகப் பாதிக்காது; பலமில்லாதவர்களை மோசமாகவும் பாதிக்கக்கூடும். இந்த நோய் எப்போது பற்றும் தெரியுமா? நம்மை நாமே உணர்ந்துகொள்ள முனையும் சமயம் பார்த்து. எனினும் வாழ்க்கையைப் பரிபூரணமாக உணர்ந்துகொள்ளாமல், அதில் நமக்குரிய இடத்தை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற குறைப்பக்குவ சமயம் பார்த்து, நம்மை வந்து பற்றிக் கொண்டுவிடும். நீதான் உலகத்திலேயே உயர்ந்த ரகச் சரக்கு என்றும், எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும்.
ஆனால் கொஞ்ச காலம் போனால், எல்லோருடைய இதயங்களும்… உன் இதயத்தைப் போலவேதான் இருக்கின்றன என்ற உண்மையை நீ உணர்ந்து கொள்வாய். உணர்ந்த பின்னர் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும். கூப்பிடு தூரத்துக்குக் கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியிலே கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உன் அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய், உனது மணியை போன்ற பல்வேறு சிறுமணிகளின் சம்மேளனத்தோடுதான் உனது மணியோசையும் ஒன்றுபட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ உணர்வாய். நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா??
“எனக்குப் புரியலாம். ஆனால் நான் அதை நம்பத்தான் இல்லை’ என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய்.”
”ஏ, பார வண்டி! நானுங்கூடத்தான் அதை நம்பவில்லையடா!” என்றான் ஹஹோல்.
“என்னை ஏன் பார வண்டி என்று சொன்னாய்?” என்று உயிரற்ற சிரிப்போடு ஹஹோலைப் பார்த்துக் கேட்டான் நிகலாய்.
“ஏனா? நீ அப்படித்தானே இருக்கிறாய்?”
திடீரென்று நிகலாவும் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். சிரிக்கும்போது அவன் வாய் விரிந்து திறந்திருந்தது.
“என்னப்பா இது… என்ன சிரிப்பு?” என்று நிகலாயின் முன்னால் சென்று நின்று வியப்புடன் கேட்டான் ஹஹோல். “இல்லை. திடீரென்று ஒன்றை நினைத்துக்கொண்டேன். சிரிப்பு வந்தது. உன் மனத்தைப் புண்படுத்த எண்ணுபவன் உண்மையிலேயே முட்டாளாய் தானிருக்க வேண்டும்” என்றான் நிகலாய்.
“என் உணர்ச்சியை எப்படிப் புண்படுத்த முடியும்?” என்று தோளை உலுப்பிக்கொண்டே கேட்டான் ஹஹோல். “அது எனக்குத் தெரியாது” என்று அன்பு கலந்த இனிய புன்னகையோடு சொன்னான் நிகலாய். “உன்னை ஒருவன் புண்படுத்திவிட்டால். பின்னால் அவன்தான் அதையெண்ணி வெட்கப்பட்டுக் கொள்ளவேண்டும். அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.”
”வழிக்கு வந்துவிட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ஹஹோல்.
“அந்திரியூஷா?’ என்று சமையலறையிலிருந்து அழைத்தாள் தாய்.
அந்திரேய் போய்விட்டான்.
தன்னந்தனியாக விடப்பட்ட நிகலாய் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு முரட்டுப் பூட்சுக்குள் புதைந்திருந்த தன் காலை எடுத்து நீட்டினான். காலைப் பார்த்தான், தடித்து போன காலின் கெண்டைக்காலை தடவி விட்டுக்கொண்டான்; கையை உயர்த்தி தனது கொழுத்த உள்ளங்கையையும் உருண்டு திரண்டு, கணுக்களில் மஞ்சளாய்ப் பூ மயிர் வளர்ந்திருந்த தன் குட்டையான கைவிரல்களையும் பார்த்துக் கொண்டான். ஏதோ ஒரு கசப்புணர்ச்சியோடு கையை உதறிவிட்டு அவன் எழுந்தான்.
அந்திரேய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்த சமயத்தில் நிகலாய் கண்ணாடியின் முன் நின்ற தன்னுருவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என் உருவைக் கண்ணாடியில் பார்த்தே எவ்வளவோ காலமாகிவிட்டது. என் மூஞ்சியில் விழிக்கக்கூட யாரும் துணிய மாட்டார்கள்!” என்ற ஒரு வறட்டுப் புன்னகையோடு சொல்லிக் கொண்டான்.
“உன் முகத்தைப் பற்றி இப்போது ஏன் கவலைப்பட ஆரம்பித்தாய்?” என்ற நிகலாயைக் கூர்ந்து கவனித்தவாறே கேட்டான் அந்திரேய்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று சாஷா சொன்னாள்.
“அபத்தம்!” என்று கத்தினான் ஹஹோல். அவள் மூக்கோ மீன் பிடிக்கிற தூண்டில் முள் மாதிரி இருக்கிறது, கன்னத்தின் எலும்புகளோ கத்திரிக்கோலைப் போல் இருக்கிறது; ஆனால் அவள் உள்ளமோ நட்சத்திரம் போல் ஒளிவிடுகிறது. அகத்தின் அழகாவது, முகத்தில் தெரிவதாவது?”
நிகலாய் அவனைப் பார்த்தான்; சிரித்தான். அவர்கள் தேநீர் அருந்த உட்கார்ந்தனர்.
நிகலாய் ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்தான். ஒரு ரொட்டித் துண்டின் மீது அமிதமாக உப்பைத் தடவிக்கொண்டான். பிறகு மெதுவாக, ஒரு எருதைப்போல், அசைபோட்டுத் தின்னத் தொடங்கினான்.
“சரி, இங்கே நிலைமை எல்லாம் எப்படி இருக்கிறது?” என்று தன் வாய் நிறைய ரொட்டித் துண்டு நிரம்பியிருக்கும் போதே கேட்டான் அவன்.
தொழிற்சாலையில் தங்கள் பிரச்சாரம் எப்படி வலுப்பெற்று வருகிறது என்ற விவரத்தை உற்சாகத்தோடு எடுத்துரைத்தான் அந்திரேய். ஆனால் நிகலாயோ அதைக்கேட்டு மகிழ்வுறவில்லை; சோர்வடைந்தான்.
“’ரொம்ப நாள் இழுத்தடிக்கிறது. இந்த ஆமை வேகம் கூடாது. அசுர வேகம் வேண்டும்.”
தாய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். திடீரென ஒரு வெறுப்புணர்ச்சி அவள் மனதில் கிளர்ந்தெழுந்தது.
“வாழ்க்கை என்பது குதிரையல்ல, நீ அதைச் சவுக்கால் அடித்து விரட்ட முடியாது!” என்றான் அந்திரேய்.
நிகலாய் தன் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டான்.
“எவ்வளவு காலம்? என்னால் பொறுத்திருக்கவே முடியவில்லையே நான் என்ன செய்வேன்?”
ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்து அவன் ஹஹோலின் முகத்தை நிராதரவான பாவத்தோடு பார்த்தான்.
“நாம் அனைவரும் இன்னும் கற்கவேண்டும்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய காரியம்” என்று தலையைக் குனிந்தவாறே சொன்னான் அந்திரேய்.
”நாம் போருக்குக் கிளம்புவது எப்போது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அப்படிக் கிளம்புவதற்கு முன்னால், நாம் நம் எதிரிகளிடம் எத்தனையெத்தனையோ தடவை உதைபடத்தான் செய்வோம். அது மட்டும் எனக்குத் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல். “இருக்கிற நிலையைப் பார்த்தால், நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நமது மூளையைத்தான் முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.”
நிகலாய் மீண்டும் சாப்பிடத் தொடங்கினான். அவனது அகன்ற முகத்தைக் கள்ளத்தனமாக ஓரக் கண்ணிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய். அவனைக் கண்டதும் தனக்குள் ஏற்படும் வெறுப்புணர்ச்சியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கனத்த சதுர உருவத்தில் ஏதோ ஒரு அமைதியைத் தேடுபவள் போலத் தோன்றினாள் அவள்.
திடீரென்று நிமிர்ந்து நோக்கிய அவனது சிறிய கண்களின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவளது புருவங்கள் நெளிந்தன. அந்திரேய்க்கு அங்கு இருக்கவே நிலைகொள்ளவில்லை. எனவே அவன் வாய்விட்டுச் சிரித்தான். பிறகு பேசினான். பேச்சை இடையிலே நிறுத்திவிட்டு சீட்டியடித்துக் கொண்டிருந்தான்.
அவனது அமைதியின்மையின் காரணத்தைத் தாய் உணர்ந்து கொண்டதாகத் தோன்றியது. நிகலாய் வாய்மூடி மெளனியாகி அசையாது உட்கார்ந்திருந்தான். ஹஹோல் ஏதாவது பேசினால் மட்டும் அதை எதிர்த்து வறட்டுத்தனமாக பொறுப்பற்று, ஏதேனும் பதில் கூறிக்கொண்டிருந்தான் அவன்.
அந்தச் சிறிய அறை அந்திரேய்க்கும், தாய்க்கும் நெரிசலாய் வசதிக் குறைவாயிருந்தது. எனவே அவர்கள் இருவரும் ஒருவர் மாற்றியொருவர் தங்கள் விருந்தாளியைப் பார்த்தார்கள்.
கடைசியாக நிகலாய் எழுந்திருந்து சொன்னான்;
”நாம் படுக்கப் போகலாமே, சிறையில் உட்கார்ந்து உட்கார்ந்து பழகிப் போய்விட்டது. திடீரென்று அவர்கள் என்னை விடுதலை பண்ணிவிட்டார்கள். நானும் வெளி வந்துவிட்டேன். எனக்கு ஒரே களைப்பாயிருக்கிறது.”
அவன் சமையலறைக்குள் நுழைந்தான். அங்குச் சிறிது நேரம் அவன் தூக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுப்பது தெரிந்தது. பிறகு சவம் மாதிரி அசையவோ சத்தமோ அற்றுக் கிடந்தான். தாய் அந்த அமைதியைக் கவனித்துவிட்டு, பிறகு அந்திரேயிடம் திரும்பி இரகசியமாகச் சொன்னாள்;
“அவன் மனதில் பயங்கரமான எண்ணங்கள் இருக்கின்றன.”
“ஆமாம், அவன் ஒரு அழுத்தமான பேர்வழி” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல். ”ஆனால் அவன் சரியாகிவிடுவான். நானும் கூட முன்னால் இப்படித்தானிருந்தேன். இதயத்தில் தீக்கொழுந்துகள் பிரகாசிப்பதற்கு முன் முதலில் வெறும் புகைதான் மண்டிக்கொண்டிருக்கும். சரி, நீங்கள் படுக்கப்போங்கள். அம்மா, நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து படிக்கப்போகிறேன்.”
மூளையிலே துணித்திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த படுக்கையை நோக்கிச் சென்றாள் தாய். வெகுநேரம் வரையிலும் அவளது பெருமூச்சையும் பிரார்த்தனையின் முணுமுணுப்பையும் அந்திரேயால் கேட்க முடிந்தது. அவன் புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாய்ப் புரட்டினான்; நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டான்; தனது நீண்டு மெலிந்த விரல்களால் மீசையைத் திருகிவிட்டுக் கொண்டான். கால் மாற்றிக் கால் போட்டுக்கொண்டான். கடிகாரம் தன்பாட்டில் சப்தித்துக்கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே காற்று முனகி ஓலமிட்டது.
”ஆ! கடவுளே!” என்று தாயின் மெதுவான தணிந்த குரல் ஒலித்தது: ”உலகில் எத்தனையோ பேர், அத்தனை பேரும் அவரவர் துக்கத்தால் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அழாமல் இருக்கும் அந்தப் பாக்கியசாலிகள் எங்கேதான் இருக்கிறார்களோ?”
”இருக்கிறார்கள். அம்மா” என்றான் ஹஹோல்; “சீக்கிரமே அவர்களில் பலரை, பல்லாயிரம் பேரை, நீங்கள் காணப்போகிறீர்கள்.”
(தொடரும்)
அடிக் குறிப்புகள்:
(1)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
உலகின் மிக உயர்ந்த சிலையைத் திறந்து வைத்துள்ளார் திருவாளர் நரேந்திர மோடி. சுமார் 182 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை முதலில் கற்பாறைகளால் அமைக்க வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாக திறப்பு விழாவின் போது பேசிய பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்காக அக்கம் பக்கத்து மலைகளைச் சுற்றிப் பார்த்த போது (அவர் சொல்கிறார்; நாம் நம்புவோம்) அந்தப் பாறைகள் இலகுத் தன்மை வாய்ந்ததாக இருந்ததை அறிந்துள்ளார். இதற்கிடையே தீவிரமாக மூளையைக் கசக்கியதில் (மோடியின் மூளை தான்) தீர்வு ஒன்று கிடைத்துள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்கிற அடைமொழிக்குச் சொந்தக்காரர் என்பதால் இரும்புச் சட்டங்களாலேயே சிலையை வடிப்பதென பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். பின் மேற்படி சிலையை 70,000 டன் சிமெண்ட், 24,500 டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் பித்தளை (பிரான்ஸ்) உள்ளிட்ட கந்தாயங்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளனர். பட்டேல் இரும்பு மனிதராக இருந்த அதே நேரம் சிமெண்ட் மனிதராகவும், வெண்கல மனிதராகவும் விளங்கியுள்ளார் என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சிலைத்திறப்பை ஒட்டி நகர்ப்புற நக்சல்கள் நிறைந்த தமிழ்நாட்டு சமூக வலைத்தள வட்டாரங்களில் கேலியும் கிண்டலுமாக அமளிதுமளிப்பட்டது. சிலர் திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரனின் தலையை போட்டோஷாப்பில் பட்டேலின் சிலையோடு இணைத்திருந்தனர். வெறுங்காலிலேயே குத்தாட்டம் போடும் கூட்டத்தின் காலில் சலங்கையைக் கட்டி விட்டது “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” .
விசயம் என்னவென்றால், ஒற்றுமைச் சிலை அல்லது ஒருமைப்பாட்டுச் சிலை (Statue of Unity) என நாமகரணம் சூட்டப்பட்டுள்ள மேற்படி சிலையை ஒட்டி உலக மொழிகள் சிலவற்றில் அதன் பெயரை எழுதிய பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மேற்படி பதாகையில் Statue of Unity என்பதை தமிழில் “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என “முழி பெயர்ந்திருந்தனர்”. தகவல் கிடைத்ததும் தமிழ் வலைஞர்கள் சதிராடித் தீர்த்து விட்டனர்.
உண்மையில் சீனம், அரபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் “முழி பெயர்க்கப்பட்டிருக்கும்” மேற்படி வாசகத்தை மொழிபெயர்ப்பு செய்யாமல் ஒலிபெயர்ப்பு செய்துள்ளனர். எனினும், தமிழ் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் பா.ஜ.கவின் நாராயணன், இலக்கிய பிரிவைச் சேர்ந்த ஸ்லீப்பர் செல் உறுப்பினர் எழுத்தாளர் மாலன் உள்ளிட்டோர் இத்தகவல் பொய்யானது என்றும், அப்படி ஒரு அறிவிப்புப் பலகையே வைக்கப்படவில்லை எனவும் சாதித்தனர். அதே நேரம், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும், மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணனும், தவறு சரி செய்யப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (தினமணி கூரூப்) பத்திரிகை மேற்படி “முழி பெயர்ப்பு” செய்தியே தவறானது என்றும், சம்பந்தப்பட்ட (பெயர் குறிப்பிட விரும்பாத) அதிகாரியிடம் தாம் பேசி உறுதிப் படுத்திக் கொண்டதாகவும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால், புகைப்படத்தை எடுத்த பி.பி.சி செய்தியாளர் தான் அப்புகைப்படத்தை எடுத்ததையும், அவ்வாறு ஒரு அறிவிப்புப் பலகை சர்தார் பட்டேலின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்தினார். குஜராத் முதல்வரின் ட்விட்டரில் வெளியான புகைப்படங்களிலும் அந்த அறிவிப்புப் பலகை இடம் பிடித்திருந்தது.
பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல் உறுப்பினர் எழுத்தாளர் மாலன்.
அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்ததும், அதில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வன்கலவி செய்யப்பட்டதும் உறுதியான நிலையிலும், பா.ஜ.க நாராயணனும், மாலனும், தமது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை – அவர்களைப் பொறுத்தவரை அது பொய்ச் செய்தி தான். ஒரே விசயத்தைக் குறித்து இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட “உண்மைகள்” உலாவும் நிலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது; ஆனால், “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” எனினும் தத்துவத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.
*****
பாரதிய ஜனதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி முழுவதுமே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாகத் தான் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். கருப்புப் பணத்தை ஒழிப்பதே நோக்கம் என முதலில் சொல்லப்பட்டது; பின்னர் கள்ளப் பணத்தையும் ஒழிப்போம் என்றனர். கருப்புப் பணம் வங்கிகளுக்குத் திரும்ப வராது என்றார்கள். ஐம்பது நாட்களில் பலன் கிடைக்கவில்லை என்றால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னைத் தூக்கிலேற்றுங்கள் என்று பிரதமரே சவால் விட்டார்.
செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் திரும்பி வந்த பின் அவற்றை ‘வருடக்கணக்கில் எண்ண்ண்ண்ணி’ இறுதியில் சில மாதங்களுக்கு முன் 99 சதவீத நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இதில் பூட்டான் மற்றும் நேப்பாள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளிடம் இருப்பில் இருக்கும் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய்த் தாள்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 100 சதவீதத்திற்கும் மேலான தாள்கள் திரும்பி வந்து விட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ள வெண்டும்.
15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதில் திரும்ப வராது என்று கணிக்கப்பட்ட 3-4 லட்சம் கோடி கருப்புப் பணம் வெள்ளையானது; 100-க்கும் மேலான மக்கள், வங்கித் தானியங்கி இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்கையில் மரணமடைந்தனர்; 15 லட்சம் வேலைகள் மூன்றே மாதங்களில் காணாமல் போனது; புதிய நோட்டுக்கள் அச்சடிக்க 7,965 கோடி தண்டச் செலவு. நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தலை குப்புற விழுந்தது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கிடைத்த ‘பலன்களின்’ சாராம்சம்.
என்றாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் வெற்றி என்பதே பா.ஜ.கவினரின் துணிபு. எப்படி வெற்றி? அதான் எல்லா பணமும் வங்கி வலைப்பின்னலுக்குள் வந்து விட்டதே என்று தோசையை அப்படியே திருப்பிப் போட்டு விட்டனர். தலை விழுந்தால் தோல்வி என்பது தானே விதி முறை – பூ விழவில்லை என்றால் தோல்வி என்று சொல்லவில்லை அல்லவா? ஆக மொத்தம் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவத்தின் அடிப்படையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் வெற்றியானது.
அதற்கும் கொஞ்சம் முன்னே சென்றால், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பணத்தை மீட்டு 15 லட்சம் போடப்போவதாக சொன்னார்கள். தேர்தலில் வென்ற பிறகு அதெல்லாம் ஜெயிக்க மாட்டோம் என்கிற நம்பிக்கையில் சொன்னது; இப்போது ஜெயித்து விட்டதால் செல்லாது என்கிறார்கள். ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவம் அதன் கருவடிவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திலேயே காணப்பட்டது என்பதை 15 லட்ச விவகாரத்தில் மட்டுமல்ல – அகமதாபாத்தில் உதித்தெழுந்த சீனச் சாலைகள் மற்றும் கம்யூட்டரின் மதர் போர்டில் காட்சியளித்த குஜராத் நகரங்களிலும் காண முடிந்தது. நமக்குத் தான் ‘அப்போ புரியலை; இப்போ புரியுது’
பின்னர் நாட்டு மக்களின் தலையில் விடிந்தது ஜி.எஸ்.டி என்கிற நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் இயந்திரம். தொழில் புரிவோர் வரிகட்டுவதை எளிமையாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் இருக்கும் ‘நெளிவு சுழிவுகளை’ சிறு தொழிலதிபர்கள் புரிந்து கொள்வதற்குள் அவர்களின் தொழில்கள் மொத்தமும் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போனது. என்றாலும் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் ஜி.எஸ்.டி மாபெரும் வெற்றி; எப்படி? எளிமைப்படுத்துவதே நோக்கம் அல்லவா, தொழில்கள் இல்லை என்பதால், வரிகட்டுவதும் தேவையில்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. வரி கட்ட வேண்டிய தேவை இல்லாததால், தொழிலதிபர்களும் இனிமேல் வருமான வரித்துறையின் சிக்கலான வரிவிதிப்பு முறைகளுக்குள் தலையைக் கொடுக்கத் தேவையில்லை. அனைத்தும் எளிமையாகி விட்டது.
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியின் ஆகச் சிறந்த பங்களிப்பு ரபேல் போர் விமானங்கள். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வெறும் 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் மோடி கையெழுத்திட்ட போது (அப்போதைய) பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் கோவாவில் மீன் கடை ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். பழைய ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக விலை என்பதோடு, ஒப்பந்தப்படி கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்க ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருந்த அரசுப் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் கழட்டி விடப்பட்டு சின்ன அம்பானியின் நிறுவனம் நுழைக்கப்பட்டது.
இதைக் குறித்த விவரங்கள் அனைத்தும் பிரான்சு பத்திரிகைகளில் (விலை விவரங்கள் உட்பட) வெளியாகிக் கொண்டிருந்த போது நம்முடைய (இப்போதைய) பாதுகாப்புத்துறை அமைச்சரோ, ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கே உலை வைத்து விடும் என்றொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே பாதுகாப்புத்துறை தொடர்பான விசயங்களுக்கு நிதி அமைச்சரும், நிதி அமைச்சகம் தொடர்பான விளக்கங்களை தகவல் தொடர்புத்துறை அமைச்சரும், தகவல் தொடர்புத் துறை தொடர்பான விளக்கங்களை வேறு ஒரு துறையின் அமைச்சரும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் ஊறுகாய் போடும் படங்களை வெளிட்டு ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனியன் தத்துவத்தின் அடிப்படையில் சேவையாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த வரிசையில் புதுவரவு வங்கித்துறை விவகாரங்கள். ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் ஏறத்தாழ திவாலாகி பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 90 ஆயிரம் கோடி வட்டியை கட்டவில்லை. அரசு மற்றும் தனியார் துறையின் கட்டுமானப் பணிகளுக்கு மேற்படி நிறுவனமே நிதி உதவி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மோடியின் கனவுத் திட்டங்களான குஜராத் கிஃப்ட் சிட்டி, புல்லட் ரெயில் போன்ற திட்டங்களுக்கான நிதி உதவியை இந்த நிறுவனமே செய்து வந்தது.
ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் திவாலாவது ஏறக்குறைய உலகப் பெருமந்தத்தைத் துவக்கி வைத்த லேமென் பிரதர்சின் திவாலின் இந்திய வடிவம் என பொருளாதார நிபுணர்களே தொண்டை அடைக்க உட்கார்ந்திருந்த நிலையில் , வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வாராக் கடன்கள் ஒழுங்கு செய்யப்படவில்லை என்றால் பொதுத்துறை வங்கிகளின் கடன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் காரணமாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கி வந்த வீட்டுக் கடன்களின் தவணைகளும் தடைபட்டது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலைப் பொருத்த வரை வாராக் கடன்கள் ஒழுங்கு செய்யப்படாத நிலையில் பொதுத்துறை வங்கிகளைக் கடன் கொடுக்க அனுமதிப்பது நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தையே சீரழித்து விடும் என்று அஞ்சுகிறார். சாவு உறுதி என்றால் அது என் கையால் நடந்ததாக இருக்கக் கூடாது என்பது அவரது நிலை. ஆனால், அரசியல் சாசணத்தின் ஏழாவது பிரிவில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பிரிவு ஒன்றை பயன்படுத்தியுள்ளது மத்திய அரசு.
ஆக மொத்தம் பாரதிய ஜனதாவின் கையில் மொத்த நாடும் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் வலைஞர்களோ முழி பெயர்ப்புக்காக பொங்குவதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? சிந்திப்பீர் நியாயமாரே!
இறந்த காலத்தில் கதைத் திருட்டிற்காக பேசப்பட்டு விளம்பரமடைந்த சர்கார், நிகழ்காலத்தில் வசூல் சாதனைக்காக வியந்தோதப்படுகிறது. கூடவே கதையில் வரும் ‘அரசியல்’ காட்சிகளுக்காகவும், அ.தி.மு.க.வினர் எதிர்ப்பதை ஒட்டியும் செய்திகளையும் ஆக்கிமித்திருக்கிறது. படம் வெளியான அன்றே தரமான பிரிண்டை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் குறித்தும் விவாதிக்கப்படுவது ஒரு கொசுறு நியூஸ். மொத்தத்தில் ஜாக்பாட் விளம்பரத்தில் சுருட்டப்பட்ட வசூல் மழை!
கார்ப்பரேட் நிறுவன மூளையின் வலிமை குறித்து கத்தி படத்தில் வில்லன் பேசுவார்! சர்காரில் நாயகனே பேசுகிறார். சாதாரண விவசாய கிராமத்தில் இருந்து வந்த விஜய் கார்ப்பரேட் கிரிமினல் மூளையில் புகுந்து துவம்சம் செய்தால் அது கத்தி. அதே கார்ப்பரேட் மூளையோடு எடப்பாடி ஓபிஎஸ்-ஐ துவம்சம் செய்தால் இது சர்கார்.
இப்படியாக கார்ப்பரேட் உலகைச் சார்ந்தோரே இப்படங்களின் படைப்பிலும், படைத்ததிலும் இருக்கும்போது தங்களைப் பற்றிய மேற்கண்ட கதைகள் குறித்து அவர்கள் வெறுப்படையா விட்டாலும் கொஞ்சம் வெட்கமடைந்திருப்பார்கள். காசு வருகிறது என்றால் கரடியாக கத்தவேண்டுமென்றாலும் கத்துவதற்கு மானம் பார்ப்பவர்கள் அல்ல முதலாளிகள். வாங்கிய சில ஆயிரம் கடனுக்காக தற்கொலை செய்பவன் விவசாயி. சுருட்டிய சில ஆயிரம் கோடி கடனுக்காக மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் முதலாளிகள்.
உலகின் நம்பர் 1 நாடு; அங்கே நம்பர் 1 கம்பெனி; அக்கம்பெனியில் நம்பர் 1 நிர்வாகி சுந்தர் ராமசாமியாக நடிக்கிறார் விஜய். அவரது மகிமை குறித்து பிசினஸ் மேலாண்மை படிக்கும் வெண்ணிறக் கொழுந்துகள் பலப்பல படத்தின் ஆரம்பத்தில் பேசுகிறார்கள். அண்ணாத்தே ஒரு இடத்தில் வந்தால் போட்டி கம்பெனி காலி, போட்டி பிராண்ட் காலி, நினைத்ததை சாதிப்பார், பயங்கரமான மூளைக்காரர், பிசினஸ் மாணவர்களின் கார்ப்பரேட் குரு இன்னபிற.
எங்க ஏரியா உள்ள வராதே என்று தாதாக்களின் மதுக்குப்பி சண்டைகளோடும் ஐயிட்டம் பாடல்களோடும் கதை இறைத்துப் பழகிய கோடம்பாக்கம், கார்ப்பரேட் சண்டைகளையும் அத்தகைய குழாயடிச் சண்டைகளாகவே கருதுவதில் வியப்பில்லை. இவற்றையெல்லாம் தாண்டி கார்ப்பரேட் உலகம் என்பது கண்ணுக்கு தெரியாத முறையில் இயங்கி வருகிறது.
விமான நிறுவனங்கள் ஒன்றாகச் சேர்வது, விளையாட்டு சேனல்கள் ஒன்றாக சேர்வது, பெரிய நிறுவனத்திடம் பெரும் விலைக்கு விற்றுக் கொண்டு சிறிய நிறுவனங்கள் சேர்வது என அத்தகைய கூட்டு, சேர்க்கைகளே இன்றைய முதலாளித்துவத்தின் தந்திரம். தற்போது இந்தக் கூட்டுகளுக்கிடையே முரண்பாடு வருவதும், அது நாடு – ஏகாதிபத்திய முரண்பாடாக விரிவதும் அடுத்த நிலை.
கொக்கோ கோலாவை கிண்டலடித்து பெப்சி விளம்பரம் வெளியிட்டாலும் கொக்கோ கோலாவில் பல்லி கிடந்தது என்றோ, அதன் வேதிக் கரைசலில் பிரச்சினை என்றோ செய்தி வந்தால் பெப்சி நிறுவனம் வெளிப்படையாக கொக்கோ கோலாவிற்கு உதவும் – உதவியிருக்கிறது. காரணம் குளிர்பானத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்தாக வேண்டும்.
சுந்தர ராமசாமி
ரஜினி, விஜயின் மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் போன்ற நிறுவனங்கள் கூட ஆரம்பத்தில் இத்தகைய கோல்மால் வேலைகளை செய்தே கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறின. மாறிய பிறகு அவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக தொழில் செய்வார்கள். நாட்டின் அதிபர்களுக்கு நன்கொடை கொடுப்பார்கள். அவர்களோடு பார்ட்டிகளில் சியர்ஸ் அடிப்பார்கள். அப்படிப் பார்த்தால் அம்பானி, அதானி என க்யூ வரிசையில் பலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அந்த கோல்மால் வேலை செய்தும் தொழிலை தொடர முடியாதவர்களே மல்லையா, நீரவ் போன்றோர்களாக மோடி அரசால் மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் போட்டி நிறுவனத்தை காலி செய்வது என்பது சட்ட விரோதமாகத்தான் நடந்தாக வேண்டும். அந்த வகையில் பார்த்தால் சுந்தர் ராமசாமி இன்றோ என்றோ நிச்சயம் கம்பி எண்ணியிருக்க வேண்டும். இதுதான் சர்கார் நாயகனின் பாத்திர வார்ப்பு! இன்னொரு புறம் அவர்களது கிரிமினல்தனத்தை படு லோக்கலாக காட்டி சரியாகச் சொல்வதாக இருந்தால் ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு தமிழ் கதாநாயகர் அண்டர் டிராயரில் அணு குண்டை கடத்துகிறார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். நம்பித் தொலைப்போம்.
எப்படிப் பார்த்தாலும் ஒரு முதலாளித்துவ உலகின் மூளை என்பது எவ்வளவு கிரிமினல்தனமானது என்பதை தமிழ் சினிமாவின் மசாலா கண்ணாடி மூலம் பார்ப்பது என்பது உண்மையான கார்ப்பரேட் கொள்ளையை மறைப்பதற்கே உதவும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் ஜெயமோகன் இதில் மறைந்து போன எழுத்தாளர் சுந்தர ராமசாமியை வெச்சு செஞ்சுட்டார். மற்ற எழுத்தாளர்கள் தனது எழுத்தாற்றலுக்கு இணையில்லை என்பதை உறுதி செய்து கொண்டேதான் சுந்தர ராமசாமி அவர் காலத்திய தமிழ் எழுத்தாளர்களை பாராட்டுவதோ இல்லை விமர்சிப்பதோ செய்வாராம். இதை அவர் மறைந்த நாட்களில் ஜெயமோகன் எழுதிய நினைவின் நதியில் காவியம் உறுதி செய்திருக்கிறது. இதனால்தான் ஆரம்ப காலத்தில் குரு ஸ்தானத்தில் இருந்த சுந்தர ராமசாமி பின்னர் சீடனிடம் தோற்றுப் போன ஆடுகளம் வில்லனாக மாறிப் போனார். அந்த வகையில் போட்டி நிறுவனங்களை காலிசெய்யும் சுந்தர் ராமசாமியின் பில்டப், ஜெயமோகனது இலக்கிய ஆன்மாவில் பொதிந்திருக்கும் கொலை வெறி.
கவிஞர் விக்ரமாதித்யன்
இதை நம்மைப் போன்ற பாமரர்கள் கண்டு பிடித்திருந்தாலும், ஒரு ஆக்சன் ஹீரோவின் பெயராக நம்மவர் பெயர் இருக்கிறதே என தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்காக தனது – பிறரது சொத்துக்களை எழுதிக் கொடுத்துப் பயணம் செய்யும் கவிஞர் அண்ணாச்சி விக்ரமாதித்யன் போன்றோர் மனமுருகும் வாய்ப்பு இருப்பதால் காலச்சுவடு கண்ணன் கூட கவலைப்பட வாய்பில்லை.
இயக்குநர் முருகதாஸுக்கு இலக்கிய அக்கப்போர் ‘அறிவு’ கிடையாது. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பொருளாதார அறிவு கிடையாது. இருவருக்கும் இலக்கியம் – பொருளாதாரத்தை ஆளும் அரசியலின் அரிச்சுவடி தெரியாது. ஆகவே பூலோக சொர்க்கத்தின் நம்பர் ஒன் கார்ப்பரேட் மூளை இப்படியாக கோடம்பாக்கத்தின் கதை இலாகாவில் சதை கிழிந்து சாயம் போன ஒன்றாக இளிக்கிறது. ஒருவேளை கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ், பெப்சியின் முன்னாள் தலைவர் இந்திராநூயி போன்ற நம்பர் ஒன் மூளைகள் இதைக் கேள்விப்பட்டால் ஜாலியாக ஒரு பெக் கூடுதலாக அடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பகாசுர சுரண்டலை, மக்கள் விரோதத்தை இப்படியாக ஒரு திறமை வாய்ந்த – அதுவும் அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு கடலைமிட்டாயில் ஊழலை கண்டுபிடிக்கும் அற்பத்தனமான – மூளையாக, ஆக்சன் ஹீரோவாக காட்டுகிறார்கள்.
திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருக்கும் இந்து மேல்நிலைப்பள்ளியில் பல பிரபலங்கள் படித்திருக்கிறார்கள். அந்தப் பள்ளிக்குத்தான் ஓட்டுப் போட அமெரிக்காவில் இருந்து வருகிறார் விஜய். அந்த வாக்கை ஒரு குவார்ட்டருக்கு கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார் யோகி பாபு. அவரது வேலையால் விஜய் தனது கார்ப்பரேட் மூளையைப் பயன்படுத்தி மறுதேர்தலை நடத்தவும் வைக்கிறார். அதன் மூலம் முதலமைச்சராகவும் ஆகும் நிலையில், இப்போதைக்கு அடுத்து சில படங்களில் நடிக்க இருப்பதால் போனால் போகிறது என சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதலமைச்சராக மாற்றுகிறார்.
ஒருவேளை கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ், பெப்சியின் முன்னாள் தலைவர் இந்திராநூயி போன்ற நம்பர் ஒன் மூளைகள் இதைக் கேள்விப்பட்டால் ஜாலியாக ஒரு பெக் கூடுதலாக அடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.
அரசு வட்டாரத்தில் பேசிப் பார்த்தீர்கள் என்றால் இந்த சகாயம் எப்பேற்பட்ட விளம்பர மோகி என்பதறியலாம். அந்த வகையில் அவரும் இந்த போனால் போகிறது முதலமைச்சர் போஸ்ட்டை தேவன் பங்கு போடாமல் தந்த சூப்பர் அப்பமாக கருதுவார். அதை சட்டைப் பையில் இருந்து தானமாக வீசிய விஜய் ஒரு மாபெரும் வள்ளலாக சகாயம் அவர்கள் எதிர் வரும் கூட்டங்களில் பேசப்படுவது உறுதி.
கள்ள ஓட்டு குறித்து மவுனம் சாதிக்கும் தமிழகம் கள்ள உறவிற்கு மனைவியை கொடுக்கும் மானங்கெட்ட கணவனாக இருக்கிறது என்று விஜய் பேசுகிறார். அப்படிப் பார்த்தால் கள்ள ஓட்டால் தனது ஓட்டை பறிகொடுத்த பெண்களுக்கு என்ன உவமை என்று சர்கார் படைப்பாளிகளைத்தான் கேட்க வேண்டும். ஆண்கள் ஊர் மேய்வது சகஜம்தானே, பெண்தானே பிரச்சினை என்று அப்பட்டமான ஆணாதிக்கத்தை வைத்து யோசித்திருக்கிறார்கள் சர்கார் குழுவினர். ஒரு படத்தின் திருப்பு முனை எனும் அக்கப் போருக்காக தமிழக மக்களை இப்படி இழிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்தக் கதையை பிளாக்கில் விற்றுத்தான் வசூலில் சாதனை என்று விளம்பரம் வேறு! மூணு சீட்டுக் காரன் கூட இப்படி பச்சையாக மோசடி செய்யமாட்டான்.
நம்ம ஆட்டோக்காரர்கள் இன்டிகேட்டரை இடது புறம் போட்டு வலது புறத்தில் கையைக் காண்பித்து நேராக போவார்கள் என விவேக் சொன்னதை கொஞ்சம் மாற்றிப் போட்டு லெப்டில் ஏர்போர்ட்டு, ரைட்டில் வீடு, நேரே போனால் என நீதிமன்றத்திற்கு போகிறார்கள். அங்கே நீதிபதியின் அருகில் அமர்ந்து நேற்று சாப்பிட்ட பிரியாணி ஜீரணமாக என்ன கசாயம் குடிப்பது என்று ஹீலர் பாஸ்கர் பேசுவது போல விஜய் லா பாயிண்ட் பேசுகிறார். அவர் அமர்த்திய பல இலட்ச ரூபாய் ஊதியம் வாங்கும் ஜேட்மலானி சார் பிச்சுட்டீங்க என்று கை தட்டுகிறார். நீதிபதியும் இத்தனை நாள் குப்பை கொட்டியும் கிடைக்காத ஒரு புதிய லா பாயிண்டை பார்த்து வாய் பிளக்கிறார்.
நமது ஓட்டை ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டால் நமது உரிமைக்கு தேர்தல் கமிசன் வைத்திருக்கும் பரிகாரம் என்ன? அதுதான் 49 பி-யாம். அதன்படி தனது வாக்கைப் போட விஜய் முடிவு செய்து அதையே வாட்ஸ்ப்பில் பற்ற வைக்கிறார். திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழகம் எங்கும் இந்த லா பாயிண்டை வைத்து வரும் மக்களுக்காக வாதாடுகிறார்களாம். அவர்கள் பின்னே தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அடக்கமாக வேறு விஜய் கூறுகிறார்.
இன்றைக்கு கைப்பிள்ளையின் மீம்களில் இடம்பெறும் அளவுக்கு பீஸ் பீசாகிப் போன சி.பி.ஐ எனும் போலீசுப் பிரிவு ஒரு காலத்தில் மலையாளப் படங்களில் மாபெரும் சாகசக்காரத் துறையாக சித்தரிக்கப்பட்டது. லோக்கல் போலீசின் மீசைகளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு உருவிவிட்ட பூணூலால் கொலைகாரனை கண்டுபிடிப்பார் மம்முட்டி. அதே மம்முட்டி தற்போது கொலைகாரனை பிடிக்க காஃபி குடித்தவாறு விக்கி பீடியாவின் பாய்சன் தலைப்பில் ஆராய்ச்சி செய்வார். ஏனப்பா ஒரு அதி உயர் போலீசு விசம் குறித்த நவீன விசயங்களை விக்கிப்பீடியாவின் துணை கொண்டுதான் கண்டுபிடிக்கிறார் என்றால் அந்த விசமே தனது நிலை குறித்து வருந்தி தற்கொலை செய்து கொள்ளாதா?
அண்டர் டிராயரில் அணு குண்டை கடத்தும் நம் தமிழ் நாயகர்கள்.
கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இந்த 49-பி வருகிறது. ஏதோ சில ஆமை வடை வக்கீல்களோடு டிஸ்கசன் செய்து இந்த பயங்கரமான பாயிண்டை கண்டு பிடித்திருக்கிறார்கள் போலும். அல்லது இந்த பாவத்தை சர்காரின் ஒரிஜினல் படைப்பாளியான வருண் ராஜேந்திரன் கூட செய்திருக்க கூடும். கதைதான் திருட்டே ஒழிய மசாலா மாசாலாதான், அது தேனாக இருக்குமா என்ன?
ஒருவர் ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டால் அந்த ஒருவர் என்ன செய்ய முடியும்? நெஞ்சு வெடித்து மாரடைப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பிரிவை வைத்திருக்கிறார்கள். அதன்படி சிவாஜி கணேசன், பூத்தில் இருக்கும் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து 49-பி படிவத்தை வாங்கி வாக்களித்து அதை தனியாக கொடுக்கலாம். மற்றபடி மொத்த வாக்கு எண்ணிக்கையில் அது சேர்க்கப்படாது. கள்ள ஓட்டையும் மொத்த எண்ணிக்கையில் பிரிக்க முடியாது. ஆகவே இந்த 49-பியால் எந்த விளைவும், நல்லதும் நடந்து விடாது. சரி இலட்சக்கணக்கானோர் இப்படி புகார் கொடுத்தாலும் இருக்கின்ற சட்ட நடைமுறைப்படியும் ஒன்றும் ஆகிவிடாது.
மேலும் பீகார் பாணி பூத் கேப்சரிங் என்பது தற்போது மின்னணு எந்திரத்தால் வழக்கொழிந்து போய்விட்டது. ஆகவே ஒரு தொகுதியில் ஒரு சிலவற்றுக்கு மேல் கள்ள ஓட்டு விழுந்து விடாது. தற்போது ஆதார் அடையாள அட்டையை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைத்து விட்டால் அந்த ஒரு சில கள்ள ஓட்டுக்களுக்கும் வழியில்லை என்று தேர்தல் கமிசன் கூறுகிறது. அந்தபடிக்கு ஓட்டுப் போட ஆதார் அவசியம் என்ற ஆள் காட்டி வேலையைத்தான் சர்கார் வலியுறுத்துகிறது.
விக்கிபீடியாவில் கிரியேட்டிவிட்டியை கண்டடைய ஆட்டையைப் போடும் ஒரு கும்பலால் நமது உரிமைகள் எப்படி பறிபோகிறது பாருங்கள்! இந்த அக்கப்போருக்காக மற்ற எல்லாவற்றையும் காமெடி பீசாக்கிவிட்டார்கள் படக்குழுவினர். திருவல்லிக்கேணி தேர்தல் பூத்திலேயே நானும் காரில் ஓரமா ஒக்காந்து வரவா என்று கீர்த்தி சுரேஷா, ரமேஷா கேட்கும் போதே சர்கார் கதாநாயகியின் இடம் தெரிந்து விடுகிறது.
இதற்கு மேல் வம்படியாக பார்வையாளர்களின் கண்ணில் இருந்து கண்ணீரை கையை விட்டு எடுப்பதற்காக கந்து வட்டிக் தீக்குளிப்பை சேர்த்திருக்கிறார்கள். எடுத்த கையோடு அடுத்த காட்சிகளில் விஜய் ஐயிட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடுகிறார். இதுதான் 200 கோடி ரூபாய் வசூலின் சாமர்த்தியமாம். மதுரை அன்புவின் கந்து வட்டி கொடுமைக்காக ஒரு தயாரிப்பாளரே தற்கொலை செய்திருக்கிறார். இதை தட்டிக் கேட்கத் துப்பற்ற விஜய் இங்கே இசக்கிமுத்து கொலைக்காக கோபங்களை ஃபார்வர்டு செய்யும் வாட்ஸ் அப் இளைஞர்களை நக்கல் செய்கிறாராம்.
இப்போதைக்கு அடுத்து சில படங்கள் நடிக்க இருப்பதால் போனால் போகிறது என சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதலமைச்சராக மாற்றுகிறார். தளபதி விஜய்.
ஆனால் வறுமை, ஏழ்மை, துயரம், மரணம் போன்றவற்றை ஒரு நாயகனது ரொமாண்டிக்கான ஆக்சன் படத்திற்காக ஆங்காங்கே முந்திரிப் பருப்பு போல தூவும் அயோக்கியத்தனத்தைத்தான் நம்மால் சகிக்க முடியவில்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் பல செய்திகள் வந்து போகின்றன. ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு வெளிப்படையாக கொல்லும்போது மோடி அரசு அதை வெளிப்படையாக கண்டிக்காத போது அந்த மீனவர்கள் நாங்கள் இந்தியாவில் இல்லை என்று அறிவியுங்கள் என்கிறார்கள். இதைக்கூட வெளிப்படையாக கூறி மோடி அரசையோ, சிங்கள அரசையோ கண்டிக்கத் துப்பற்ற சர்கார் கூட்டம் என்னவெல்லாம் பேசுகிறது?
அதாவது விஜய் மீனவர் குடும்பமாம். வாக்களிப்பதற்காக அவரது தந்தை நடுக்கடலில் இருந்து வர இருந்தாராம். மற்றவர்கள் அஸ்தியை கடலில் கரைப்பார்களாம். விஜய் மட்டும் அப்பாவை கடலில் கரைத்து விட்டாராம். இதை மீனவர்கள் வாழும் அயோத்தியா குப்பத்தில் கூறுவாராம். ஒக்கி புயல் முதல், பாக் நீரிணை வரை மீனவர்கள் இந்த அரசால் சாகடிக்கப்படுகிறார்கள். நடிகர் விஜயோ அந்த அவலத்தை காசாக்குவது எப்படி என்று கதை செய்வாராம். அதற்கு முருகதாஸும், ஜெயமோகனும் மூளையை கொடுப்பார்களாம். பிறகு சன் டி.வி மாறன்கள் அதை வசூலாக்குவார்களாம்.
இந்த இலட்சணத்தில் மருத்துவமனைப் படுக்கைகளில் இருக்கும் நோயாளிகளை வைத்து சர்கார் விஜய் நமக்கு விஜயகாந்த் பாணியில் அ.தி.மு.க அரசின் ஊழலை அம்பலப்படுத்துகிறாராம். விஜயகாந்தே இப்போது அஸ்மித்துவிட்ட நிலையில் தளபதி விஜயின் அம்பலம் என்ன செய்து விடும்?
பொதுப்பணித்துறைதான் டெங்கு கொசுவிற்கு காரணம் என்ற மகத்தான் உண்மையை கண்டுபிடித்த சர்காரின் அல்பங்களை விட அ.தி.மு.க அரசு பரவாயில்லையோ என்று ஒரு கணம் தோன்றத்தான் செய்கிறது. ஏனெனில் விக்கு வைக்காத ஜெயக்குமாரோ, காசு பணத்தை விட்டு வைக்காத விஜய் பாஸ்கரோ கொசு, டெங்கு போன்ற வஸ்துக்கள் சுகாதரத்துறையில்தான் வரும், பொதுப்பணித்துறையில் வராது என்ற அளவுக்கு அறிவுள்ளவர்கள்.
இனி விஜய் அமைக்கப் போகும் சர்காரில் முருகதாஸ், ஜெயமோகன் போன்றோரெல்லாம் அமைச்சாரானால் என்ன நடக்கும்? சுள்ளி பொறுக்கும் மலைவாழ் மக்கள் ஜெயமோகனின் காடு படிக்க வேண்டும், இராணுவத்தில் பணி பெறுவதற்கு துப்பாக்கி படத்தில் இருந்து விடையளிக்க வேண்டும் என்று வராதா என்ன?
இதில் ஒளிப்பதிவு சூப்பர், பின்னணி இசை அட்டகாசம், உடை ஆடை அருமை என்று டெம்பிளேட் வார்த்தைகளைப் போட்டு கார்ப்பரேட் ஊடகங்கள் விமர்சனம் என்ற பெயரில் சோப்பு போடுகின்றன. இது கூடப் பரவாயில்லை சில அப்பாவிகள், கேள்வி கேட்டால்தான் பதில் வரும், காலை மடக்கினால்தான் உட்கார முடியும், கண் இருந்தால் தான் கண்ணடிக்க முடியும், நீ பாதி முட்டாள் என்றால் கோபப்படுவாய், நீ பாதி புத்திசாலி என்றால் பெருமைப்படுவாய் போன்ற மண்டபத்தில் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால் எழுதிக் கொடுக்கப்படும் கிளி ஜோசிய வசனங்களுக்காக ஜெயமோகனை பாராட்டுகிறார்கள். என்ன இருந்தாலும் நான்கு வெண்முரசின் உழைப்பல்லவா!
தீபாவளியை குறி வைத்து இறங்கியிருக்கிறது சர்கார். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இரண்டு மணிநேரம்தான் என உத்தரவு போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். வட மாநிலங்களில் மக்களின் பண்டிகையான தீபாவளி அன்று கூடக்குறைய பட்டாசு வெடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்போமென பா.ஜ.க அரசுகளோ பிற அரசுகளோ இருக்கும் போது தமிழக அரசு மட்டும் எல்லா மாவட்டங்களிலும் தடை மீறி வெடித்தவர்கள் மேல் வழக்கு போட்டிருக்கிறது. அந்த அளவுக்கு சட்டத்திற்கும், அந்த சட்டத்தை கையில் எடுத்திருக்கும் காவி கோஷ்டியினருக்கும் பம்மி பணிந்து ஆள்கிறது எடப்பாடி அரசு! இப்பேற்பட்ட அரசை பயங்கரமாக பேசி எதிர்க்கிறாராம் விஜய். அதில் கோமளவல்லி என்ற பெயரோடு முதலைமைச்சரின் மகளாக பாப்பா வருகிறாம்.
கோமளவல்லி உயிரோடு இருந்த போது கொடநாடு சென்று ஒன் பாத்ரூம் போவதை கூட தள்ளி வைத்து விட்டு மணிக்கணக்கில் காத்திருந்தார் சர்கார் விஜய். அந்த சூரர் இன்று கருணாஸ் போன்ற காமடியன்களே வம்பிழுத்து சண்டை போடும் எடப்பாடி கும்பலை பயங்கரமாக எதிர்க்கிறாராம். இதனால் காண்டான எடப்பாடி கும்பல் உடனே தியேட்டர்கள் மூலம் ஆர்ப்பாட்டம் செய்யுமாம். இவர்கள் இருவரையும் நாம் எதிர்க்க வேண்டுமென்றால் எந்த இடத்திற்கு செல்வது?
தமிழகத்தில் ஊழல் என்று ரஜினி, கமல், குருமூர்த்தி, அமித்ஷா பேசுவது போல சர்கார் விஜயும் பேசுகிறார். இதனால் தமிழகத்தில் ஊழல் இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் ஊழலின் தலைநகரம் புதுதில்லியில் இருக்கும் போது விஜய் போன்ற சூரப்புலிகள் பாஜகவை பேசாமல், மல்லையா, நீரவ் மோடி, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி கொள்ளைகளை பேசாமல் கமிஷன் பிரதர்சை மட்டும் கண்டிப்பது ஏன்? தில்லியில் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு கவுரி லங்கேஷ், கல்புர்கி முதல் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் வரை பல செய்திகள் இருக்கின்றன. ஆகவே மறந்தும் காவிக் கறையை பேசக்கூடாது என்பதை ஜெயமோகன் மட்டும் சொல்ல வேண்டியதில்லை. விஜய் வகையறாக்களுக்கும் அது நன்றாகவே தெரியும்.
ஒன்று மட்டும் நிச்சயம். விஜய் தலைமையில் ஒரு சர்கார் அமையுமானால் நாம் ஐம்பது ஜெயலலிதா, நூறு எம்.ஜி.ஆர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் வன்முறையை அனுபவிப்பது உறுதி. ஒரு பாசிஸ்டின் ஆட்சியை விட ஒரு கோமாளி பாசிஸ்டு ஆட்சியில்தான் கொடுமைகள் அதிகம்!
ஒரு காட்சியில் இலவச பொருட்களை ஆவேசமான முகத்துடன் வீசுகிறார் இயக்குநர் முருகதாஸ். இது குறித்து மக்கள் பலர் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அதனால் அதைத் தவிர்ப்போம். ஆனால் அதே மக்கள் பிளாக்கிலும், ஒயிட்டிலும் போடும் பிச்சையால்தான் இந்த சினிமாக் கூட்டம் நத்திப் பிழைத்திருக்கிறது! இந்த ஒட்டுண்ணிகளை அடித்து விரட்டாமல் இங்கே ஊழலையோ, அதிகார முறைகேடுகளையோ ஒழிக்க முடியுமா என்ன?
உலகம் முழுவதும் உழைக்கும் மக்களை, சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !
உலகைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம் என்று காரல் மார்க்ஸ் சொன்ன கம்யூனிச பூதம் இன்றும் முதலாளித்துவத்தை அச்சுறுத்தி வருகிறது.
மூலதனம் நூல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் கடந்த பிறகும், ரசிய சோசலிசப் புரட்சி நடத்தப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவற்றைப் பார்த்து ஜன்னி கண்டவர்களைப் போல் அரற்றுகிறார்கள் முதலாளித்துவவாதிகள்.
மூலதனம் வெறும் புத்தகம் அல்ல முதலாளித்துவத்தின் சாவை முன்னறிந்துகூறிய அசரீரி. எனவே தான் மூலதனதை மீண்டும் படிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என தங்கள் வாயாலே ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.
பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.
“இனியும் இந்த சமூக அமைப்பை சகித்துக் கொள்ள முடியாது” என்ற முழக்கத்தின் எதிரொலிப்புதான் ஸ்டெர்லைட் வரை நீள்கிறது. “இதோ உனது முடிவு நெருங்குகிறது” என முழங்குகிறது மக்களின் குரல். துப்பாக்கிகளின் வேட்டு சத்தங்களைத் தாண்டி புரட்சியின் ஓசை கேட்கத் தொடங்குகிறது கேளுங்கள் அதை…
காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியான “மார்க்ஸ் எனும் அரக்கன்” எனும் காணொளி.
*****
“புரட்சியின் தருணங்கள் !” காணொளி இது உங்களை ரசியப் புரட்சியின் போராட்ட களத்துக்குள்ளாகவே அழைத்து செல்லும்…
இது ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிட்டப்பட்டது.
*****
ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிடபட்ட “தோழர் லெனின் சாதனைகள்” எனும் காணொளி…
*****
மெரினா எழுச்சியின் போது தோழர் கோவன் பாடிய “புதிய உலகம் உன் கண்ணில் படவில்லையா” – பாடலின் காணொளி…
*****
“தன்னை முதன்முதலாக மனிதனாக உணர்கிறேன்” எனக் கூறி சோவியத்தின் சமத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன பால்ராப்சன் பாடிய “சோவியத் கீதம்” உங்களுக்காக.
*****
ரசிய சோசலிசப் புரட்சியின் 100வது ஆண்டையொட்டி வினவு தளத்தில் வெளியிடபட்ட “நவம்பர் புரட்சி நூற்றாண்டு” காணொளி…
தலித் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா ஷெப்பர்ட் எழுதிய மூன்று நூல்களை முதுகலை படிப்புகளுக்கான அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்திலிருந்து அகற்ற தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.
நூல்களில் உள்ள கருத்துக்கள் இந்து மதத்தை அவமதிப்பதாக கூறி இந்நடவடிக்கையை தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கான நிலைக்குழு கடந்த அக்டோபர் 25, 2018 அன்று பரிந்துரைத்தது. இம்முடிவு கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதைப்பற்றி விவாதிக்க எதிர்வரும் நவம்பர் 15-க்கு முன்னதாக ஒரு கூட்டம் நடத்தப்படும். மேலும் ’தலித்’ என்ற சொற்பதத்தையே வழக்கொழிக்கவும் இக்குழுவிற்கு நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
முதுகலை படிப்புகளுக்கான ஒன்பது பாடத்திட்டங்களைப் பற்றிய விவாதம் ஒன்று நடந்ததாக நிலைக்குழு உறுப்பினரும் பேராசிரியருமான ஹன்ஸ்ராஜ் சுமன் கூறியுள்ளார். “நான் ஏன் ஒரு இந்து அல்ல (Why I am not a Hindu), எருமை தேசியவாதம் (Buffalo Nationalism) மற்றும் இந்து இந்தியாவிற்குப் பின் : தலித் – வெகுஜன சமூக ஆன்மிக மற்றும் அறிவியல்பூர்வப் புரட்சி பற்றிய ஒரு பிரசங்கம் (Post-Hindu India: A Discourse in Dalit-Bahujan Socio-Spiritual and Scientific Revolution) ஆகிய நூல்கள் இந்து மதத்தை இழிவு செய்வதால்தான் அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம். மாணவர்கள் அதை படிப்பது பொருத்தமானதாக இருக்காது என்று கருதினோம்” என இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அய்லைய்யாவின் நூல்கள் இந்து மதத்தை பற்றிய அவரது சொந்த புரிதலின் அடிப்படையில் இருந்தன என்றும் அவரது புரிதலை நிறுவுவதற்கு ஆய்வின் அடிப்படையிலான தகவல்கள் எதுவும் அதில் இல்லை” என்று தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி குழுவின் உறுப்பினரான பேராசிரியர் கீதா பட் நியூஸ்18 செய்தியாளரிடம் கூறினார்.
மேற்கூறிய மூன்று நூல்களைத் தவிர நீக்கப்பட வேண்டிய மற்றொரு நூலையும் அவர்களது அறிக்கை முன்வைத்தது. அரசியல் தத்துவஞானியாக கடவுள் : பார்ப்பனியத்திற்கு புத்தரின் சவால் (God as Political Philosopher: Buddha’s Challenge to Brahminism) என்ற நூலும் கூட பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.
“அரசியல் விஞ்ஞான துறை அதன் பாடத்திட்டங்களை சரிபார்க்க வேண்டும். காஞ்சா அய்லைய்யாவின் நூல்கள் இந்து நம்பிக்கையின் மீதான கசப்புணர்வையே காட்டுகின்றன. மேலும் நூலாசிரியரின் எழுத்துக்கள் உண்மைக்கு புறம்பாகவும் உள்ளன” என்று பட் கூறினார். “என்னுடைய முஸ்லிம் மற்றும் கிறுத்துவ உடன்பிறப்புக்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டுமென இந்துத்துவா பள்ளி எப்படி விரும்பியது” என்றும் “காவிப் பொட்டை பார்க்கும் போதெல்லாம் அது எப்படி அவரை துன்புறுத்துகிறது” என்றும் அய்லையா எழுதியுள்ளதாக அவர் கூறினார். அவருக்கு தவம் (tapasya) என்ற சொல்லில் பிரச்சினை இருக்கிறது. அவரது எண்ணத்தையும் இந்து நம்பிக்கையை எப்படி அவர் புரிந்து வைத்துள்ளார் என்பதையும் பொருத்ததுதான் இதெல்லாம். பாடத்திட்டம் என்ற வகையில் அவரது எழுத்தில் எதுவும் இல்லை எனவே அதை கற்பிக்க காரணம் எதுவும் இல்லை. அவரது அனைத்து நூல்களிலும் இந்த கசப்புணர்வுதான் உள்ளது” என்று அவர் கூறினார்.
“சிலரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகள்தான் காஞ்சா அய்லைய்யாவின் நூல்கள் மீதான சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாங்கள் தொடர்ந்து அவற்றை கற்பிக்க விரும்பினால் அதற்கு எதிர் கருத்தையும் மாணவர் முன் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. எனினும் சிலர் அந்த நூல்களை நீக்க விரும்பினார்கள். நாங்கள் ஒரு ஜனநாயகக் குழுவாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் ஒன்றாக அய்லைய்யாவின் நூல்களை எதற்காக கற்பிக்க வேண்டும் என்பதை விவாதித்து ஜனநாயகபூர்வமாக ஒரு முடிவெடுப்போம்” என்று அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவரான வீணா குக்ரேஜா கூறியுள்ளார்.
மேலும் இரண்டு நூல்களுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அவற்றை நீக்கச்சொல்லி அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.. பேராசிரியர் நந்தினி சுந்தர் எழுதிய கீழ்நிலை அதிகாரிகளும் மன்னர்களும் : பாஸ்தரின் மானுடவியல் வரலாறு (Subalterns and Sovereigns: An Anthropological History of Bastar’ and professor Archana Prasad) மற்றும் பேராசிரியர் அர்ச்சனா பிரசாத்தின் சூழலியல் புனைவியத்திற்கு எதிராக : வெர்ரியர் எல்வின் மற்றும் நவீனத்திற்கு எதிரான பழங்குடியின எதிர்ப்பின் உருவாக்கம் (Against Ecological Romanticism: Verrier Elwin and the Making of an Anti-Modern Tribal Identity (2003)) என்ற இரண்டு நூல்கள்தாம் அவை.
பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா எழுதிய கொமட்லு சமூகக் கடத்தல்காரர்கள் (Komatlu Social Smugglers) என்ற நூலைத் தடைச்செய்ய வேண்டி 2017-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ஒரு வக்கீல் தொடுத்த பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீண்டத்தகாத கடவுள் (Untouchable God’) என்ற அவரது நூலின் சாரத்தை இங்கே படிக்கலாம்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, நாடெங்கிலும் பாடத்திட்ட பாடநூல்கள் மாற்றம் கண்டன. பள்ளி பாடநூல்களிலிருந்து மொகலாயர்கள் மெதுவாக மறைந்து போகிறார்கள். வரலாறு திரிக்கப்பட்டு மீண்டும் எழுதப்படுகிறது. மகாத்மா காந்தி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரைப் பற்றிய இன்றியமையாத குறிப்புகளை பள்ளி பாடநூல்களிலிருந்து அகற்றியதற்காகவும் வரலாற்றை மாற்றியதற்காகவும் இராஜஸ்தான் பேர் பெற்றது. இந்தியா, 1962-ல் சினோ – இந்தியப் போரில் இந்தியா வென்றதாக மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பாடநூல்கள் பொய்யுரைக்கின்றன. மகாத்மா காந்தியை நாதுராம் கோட்ஸே படுகொலை செய்ததை பற்றிய குறிப்பும் கூட நீக்கப்பட்டுவிட்டன.
“புதிய பள்ளி பாடநூல்கள் மூலம் தன்னுடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடியின் மீது புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது கல்வியமைப்பை தன்னுடைய சொந்த அரசியல் கொள்கைகளை விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக மோடி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. 85 விழுக்காட்டு பணத்தாள்களை மதிப்பழிக்க செய்த பணமதிப்பழிப்பு திட்டத்தையும், நிதிப்பற்றாக்குறையால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் பெண்குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தையும் நல்ல விதமாக கூறுவதற்காக பாடநூல்களில் புதிதாக சில பத்திகள் இணைக்கப்பட்டுள்ளன. 25 பாட நூல்களை ஆய்வு செய்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இதனை கண்டறிந்துள்ளது” என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
சந்துக்கு சந்து
சாராயம்
வெடிக்க
இரண்டு மணிநேரம்,
குடிக்க
இருபத்தி நான்கு
மணி நேரமும்…
இவர்களை எல்லாம்
விட்டு விட்டு
கெட்டவன்
நரகாசுரன் என்று
இன்னுமா
நம்ம முடிகிறது
உங்களால்?
– துரை. சண்முகம்
*******
நவம்பர் 7 : கொண்டாடுவோம் நமது புரட்சியை !!
புரட்சி
எங்கோ தொலைவில் இருப்பதாய்
புலம்புகிறார்கள்
பலர்.
உண்மையில்
புரட்சி
உன் அருகில் இருக்கிறது.
மெல்ல மெல்ல
காயப் போடப்படும்
உன் நிலத்தின் வெடிப்புகளில்,
எந்நேரம்
குடும்பத்தோடு சாவோமோ
எனும்
சிறுதொழிலின் துடிப்புகளில்
உனக்கு
பக்கத்திலேயே
வெடிக்க காத்திருக்கிறது புரட்சி
வீட்டுக் கதவை
தண்டல் காரன் தட்டினால்
இன்றைக்கு
வேறு பதில் ஏதும் இல்லை
எனும் தன் வெறுப்பில்
பால் மறவா குழந்தைக்கு
ஒத்துக்கொள்ளாது
என
பார்த்து பார்த்து சாப்பிட்டவள்
‘என்னம்மா இது?’
என்ற பிள்ளையின் கேள்விக்கு
நெஞ்சடைத்து
விசம் தருகிறாளே!…
அதற்கு விடை என்ன?
ஒரு புரட்சியைத் தவிர!
புரட்சிக்கு
ஏங்குகிறது அங்கே கருப்பை!
நேற்று வரை
பக்கத்திலிருந்த
சாப்ட்வேர் தொழிலாளி
நியாயமின்றி
இன்று
நிர்கதியாய் விரட்டப்பட்டானே…
உன்னால்
இணைந்து கொள்ளப்படாத
அவன் கோபத்தில்
புரட்சி
உன்னருகே துடித்து நிற்கிறது.
நறுக்கப்படும்
தலித் மக்களின் தலைகள் சிதைக்கபடும்
பெண்களின் உடல்கள்
உரிமைக்காக வீதிக்கு வந்தால்
தேவடியாள் பட்டம்
ஆதிக்க அருவருப்பை
அடித்து நொறுக்குமிடத்தில்,
அதற்கு நானும் வருவேன்
எனும் துணிவில்..
உனது
செயலுக்கு எட்டிய தூரத்தில்
புரட்சி பிறக்கிறது.
தேச எல்லைகளைக் கடந்து
மதப்பிளவுகளைத் தாண்டி
சாதியச் சங்கிலிகளைக் கடந்து
மூலதனம்
சுரண்டும் வர்க்கமாய்
அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது..
எல்லோராலும்
முடியும் ஒன்றை
என்னால் முடியாது
என
நீ ஒதுங்கிச் செல்லும் வழியில்தான்
புரட்சி தவிக்கிறது.
பீறிட்டு வரும்
பெருவெள்ளத்தை
கண்களை மூடிக்கொள்வதன் மூலம்
தவிர்த்து விடலாம்
என்ற உனது நினைப்பை
புரட்சி தகர்க்கிறது.
விடையில்லாமல்
தவிக்கும்
ஒவ்வொரு விடியலும்
புரட்சியின் தருணமாய் இருக்கிறது.
நேர்மையாக
பதில் சொல்ல மனமின்றி
முகத்தை திருப்பிக்கொள்ளும்
நீ,
இங்கெல்லாம் ரசியா போல
புரட்சி எல்லாம் நடக்காது!
என
பொறுப்பை தட்டிக்கழிக்கும்
உனது
பதட்டத்திற்கு பக்கத்தில்
புரட்சி பேசத் தவிக்கிறது!
நீ
உணர இயலா சோகத்தில்
நீ
உணர மறுக்கும்
கோபத்தில்
புரட்சி தகிக்கிறது.
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் பலவடிவங்களில் நடைபெற்றது. கடந்த நவம்பர் இரண்டாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தூத்துக்குடியில் கடந்த 31 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். பட்டய மேற்படிப்பு முடித்துள்ள அவர் இன்றுவரை பதவி உயர்வு பெறாமல் சத்துணவு அமைப்பாளராகவே காலத்தை கழிக்கிறார்.
“என்னுடன் ஒரே பேட்ஜில் ஊராட்சி செயலாளராக வேலைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று இளைநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்று எங்களுக்கு பொறுப்பாளராக இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நாங்கள் அதே நிலையில்தான் இருக்கிறோம்” என்ற கண்ணில் வடிந்த துயரத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
நவம்பர் 2, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் போராடும் சத்துணவு ஊழியர்கள்.
“தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் 63 துறைவாரி சங்கம் உள்ளது. அதில் எங்கள் சங்கமும் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களை கூட்டம் சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இரண்டரை லட்சம் பேர் தனித்துவமாக இருக்கிறோம். எங்களை தவிர்த்து அவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு போராடினால் வெறும் 3 லட்சம் தான் வரும். அதனாலயே எங்களை வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் எங்களை வைத்துதான் அவர்களுக்கு கிடைத்தது. அதனால் நாங்களும் பலனடைந்தோம். இல்லையென்று சொல்லவில்லை. இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக எங்கள் பகுதியில் போராட்டம் செய்து வருகிறோம். முக்கியமாக தாலுக்கா, யூனியன் அலுவகம் அருகில்தான் நடத்தினோம். எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தார்கள். அதற்காக அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. எங்களை வந்து சந்திக்கவில்லை. சந்திக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அவர்கள் அலுவலகத்திலேயே எங்களுக்கு ஆதரவாக மாலை நேர ஆர்ப்பாட்டம் கூட செய்யவில்லை.
இன்னைக்கு நடக்கிற போராட்டத்தில் பெரிய கூட்டம் எதுவும் இல்லை. நாலாயிரம், அய்யாயிரம் சம்பாதிக்கிறார்கள். அவர்களால் இந்த கூட்டதிற்கு வர முடியாது. வந்தால் கடன் வாங்கி வரவேண்டும் என்ற நிலைதான் உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து ஒருவர் வந்திருந்தார்… மனைவியை பிரசவத்திற்கு மருத்துவமனையில் விட்டு விட்டு, மோதிரத்தை அடகு வைத்து இந்த கூட்டதிற்கு வந்ததாக என்னிடம் சொன்னார். வீட்டுல எல்லோரும் திட்டினார்கள்… ஆனால் நான் போராட்டத்துக்கு போனால்தான் வழ்க்கை என்று வந்துவிட்டேன்“ என்றார். இப்படித்தான் எங்க எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு.
பாவம், விதவை பெண்கள், அபலையாக இருக்கும் சமையலர், சத்துணவு அமைப்பாளர் எல்லாம் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். உழைப்பு சுரண்டல், பாலியல் தொந்தரவு எல்லாம் அவர்களுக்கு இருக்கிறது. அதனை எல்லாம் தாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்கிறார்கள்.
அரசின் திட்டங்கள் எல்லாம் “சீனி சக்கர சித்தப்பா.. சீட்டெழுதி நக்கப்பான்னு” ஏட்டளவில்தான் உள்ளது. அதுவும்கூட சத்துணவு பணியாளர்களுக்கு கிடையாது. சென்ற 25-ம் தேதி எங்க போராட்டம் தொடங்கியது. யாரும் எங்கள கண்டுக்கல. 29-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினோம்.
அப்பொழுதுதான் சமூக நலத்துறை இயக்குனர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து “போராட்டத்தை கைவிடுங்கள்” என்றார். அதற்கு நாங்கள் உடன்படவில்லை. மறுநாள் 30-ம் தேதி சமூக நலத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதையே வலியுறுத்தினார். “துணை முதல்வர் பன்னீர்செல்வம் பசும்பொன்தேவர் பிறந்த நாளுக்கு சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் பேசிவிடுகிறேன் நீங்கள் போராட்டத்தை கை விடுங்கள்” என்றார். நாங்கள் ஏற்கவில்லை.
கடந்த ஆகஸ்டில் 6-ம் தேதி நடந்த போராட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு போனபோது, “சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முட்டை ஊழலில் மாட்டிக்கொண்டார். தலைமைச் செயலகத்துக்கு ரெய்டு வருவதாக சொல்லி வராமலே இருக்கிறார். ஆகவே இந்த பிரச்சனை முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றார்கள்.
நாங்கள் மறுக்கவே போலிசு எங்களை கைது செய்தது. பிறகு சத்துணவு சார்பு செயலாளர் பேசினார். “13-ம் தேதிக்குள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள். ஆனால் இன்று வரை எதுவும் செய்யவில்லை. போராட்டத்தை தொடர்கிறோம்.
நாங்க பேச்சுவார்த்தைக்கு போனாலே எதாவது காரணம் சொல்லி ஒளிந்து கொள்கிறார்கள். அமைச்சர்கள் வந்தால் நாங்கள் ஓடி ஒளிந்த காலம் போயி, நாங்க போனால் அவர்கள் ஓடி ஒளியும் காலமாகி விட்டது.
இன்னைக்கு (நவம்பர் 2) பெருந்திரள் போராட்டம் என்றால் கூட்டத்தை பார்த்து பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் இன்னும் அவர்கள் கூப்பிடவே இல்லை. சங்க உறுப்பினர்கள்தான் அவர்களை சந்திக்க சென்றிருக்கிறார்கள். என்ன முடிவு வரும் என்று தெரியவில்லை. முன்பே உணவு மானியத்தை உயர்த்தி தருவதாக சொன்னார்கள். எவ்வளவு என்று சொல்லவில்லை.
பருப்பை சுரண்டுவதற்கு கலவை சாதம் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். 14 வகையான கலவை சாதம் என்பது ஒரு மோசடி. ஒரு மாதத்தில் வேலைநாட்கள் 22 நாளில் 7 நாட்கள் மட்டும் பருப்பு ஒதுக்கி, 15 நாட்கள் பருப்பு இல்லாமல் கலவை சாதம் போடச் சொல்கிறார்கள். அதுவும் 7 நாட்களுக்கு பருப்பு பட்டாணி பருப்பு. அது வேக வைப்பதற்குள் போதும் என்று ஆகிறது.
ஐந்து நட்சத்திர ஓட்டலில் வேலை செய்த “செஃப் தாமு” பேச்சை கேட்டுக் கொண்டு கலவை சாதம் கொண்டு வந்திருக்கிறார்கள். மந்திரி வாயில் தாமு ஊட்ட, தாமு வாயில் செயலாளர் ஊட்ட எல்லாரும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொன்னதால கலவை சாதம் போடுறாங்க. எப்படி உருப்படும்?
இன்னொரு திட்டமும் போட்டார்கள்.. ஒன்றிய அளவில் பெரிய சமையல் கூடம் கட்டி ராட்சத அடுப்பு மூலம் கலவை சாதம் கிண்டி எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி விடலாம் என்று சொன்னார்கள். இதன்மூலம் தொழிலாளர்களை குறைத்து விடலாம். செலவும் மிச்சம் என்று நினைக்கிறார்கள். இப்பவும் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறார்கள். 25 பிள்ளைகள் இல்லையெனில் அதனை மூட சொல்கிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் உபரி பணியாளர்கள். அவர்களை பொறுப்பாளர் இல்லாத சத்துணவு மையத்திற்கு பொறுப்பாக்கி விடுவது. ஒரே இடத்தில் சமைத்து வாகனம் மூலம் சாப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும். இப்படி ஒரு பெரிய திட்டம்போட்டு வேலையை செய்து வருகிறார்கள்.
25 பிள்ளைகளுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கலாமாம். ஆனால் சத்துணவு பணியாளர்கள் இருக்கக் கூடாதாம். இதனைக் கேட்டால், “கல்வித்துறை வேறு;நீங்கள் வேறு” என்று சொல்கிறார்கள். ஓராசிரியர்-ஈராசிரியர் பள்ளியை மூட சொல்வது போல் நடக்கிறது. இத்தனை ஆண்டுகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு சோறு இல்லை என்றால் எப்படி இருக்கும்?
அதுமட்டுமில்லாமல் எங்களுக்கு என்று ஒரு துறையே இல்லை. எங்களுக்கு சமூக நலத்துறையில் இருந்து பண்டு ஒதுக்கி ஊரக வளர்ச்சி துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறோம். ஊரக வளர்ச்சித்துறை சம்பளம் தருகிறது. ஆனால் எங்களை கல்விசார் துறை என்கிறார்கள். அப்படியானால் எங்களுக்கு தாய் அமைப்பு எதுவென்றே தெரியாமல் இருக்கிறோம்.
பஞ்சாயத்து செயலாளருக்கு இளைநிலை உதவியாளர் பதவி உயர்வு பெற்று விட முடியும். ஒரு ஆசிரியர், தலைமையாசிரியராகவும், அவர் தொடக்க கல்வி அலுவலராகவும் ஆக முடியும். ஆனால் நாங்கள் கடைசி வரை சத்துணவு அமைப்பாளர்தான். துறை இருந்தால்தானே துறைவாரியாக உயர முடியும்… அதுவே இல்லாமல் எங்கே உயருவது சொல்லுங்கள்??? இதைக் கேடால் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அதான்….சத்துணவு மற்றும் சமூக நலத்துறை உள்ளதே..! என்பார்கள். அது வெறும் முத்திரைக்காக வைத்திருக்கிறான் அவ்வளவுதான்.
ஏன் எங்களுக்கு துறை இல்லை? ஏனென்றால் ஊராட்சியில் இருந்து நிதியை சுரண்ட முடியாது. இந்த துறையால் ஆள்பவர்களுக்கு லாபம் இல்லை. எங்களை செலவினத் துறையாக கணக்கில் வைத்திருக்கிறார்கள்.
முட்டை ஊழல் புகழ் சரோஜா
அரசு ஊழியர் சங்கத்துல ஊரக வளர்ச்சித்துறையும்தானே இருக்கு. அவர்களாவது எங்களுக்கு ஆதரவா போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் அவர்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதால் அவன் போராட்டமே நடத்த மாட்டேங்கிறான். இன்னைக்கு அவனை வைத்து பிள்ளைகளுக்கு சோறு போடுகிறார்கள். ஊராட்சி செயலாளர்கள், கிளார்க்குகள் கையில் உள்ள பணத்தை போட்டு செய்கிறார்கள். அவர்கள் செய்யலாம். அவர்களுக்கு தேவை இருக்கிறது. பணம் வரும்!
எங்களுக்கு ஆதரவாக அவர்களால் இருக்க முடியவில்லை என்றால் அத்தனை துறையும் ஊழல்மயமாகி விட்டது. ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை….அத்தனையும்…! அதானல்தான் எங்களை கண்டு கொள்வதில்லை. நாங்கள் ஊழல் செய்வதற்கு வழி இல்லை. எங்களை என்ன சொல்வார்கள், அரிசி பருப்பை வித்துட்டான்னு சொல்லுவாங்க…. இன்னைக்கு இருக்க நிலைமையில இது சாத்தியமா’ன்னு நீங்களே நெனச்சி பாருங்க.
அதிகாரிகள் எல்லாம் எங்களை பார்வையிட வந்தார்கள் என்றால் களவானி பயலை பார்ப்பது போலவே வருகிறர்கள்.. தலை கீழாக நின்று ஆய்வு செய்வார்கள். சத்துணவு இணைச் செயலாளர் ஒரு முறை எங்கள் மையத்திற்கு வந்தசமயம், புளியோதரை செய்திருந்தோம். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…. புளி சரியா இல்லை.. நீ புளியே போடலன்னு சொல்லிடாங்க. சமையகாரம்மா பயப்படுறாங்க. போட்டதா சொல்லுறாங்க… அதை காதுல வாங்காம மாவட்ட சத்துணவு அதிகாரி, பி.டி.ஓ இவர்கள் எல்லாம் புளி தோலை தேடியிருக்கிறார்கள். இதுவே இந்த அன்புநாதனிடம் போயிட்டு ஏன் தேடவில்லை.? விஜயபாஸ்கர் குட்கா ஊழல், அவரிடம் சென்று ஏன் தேடவில்லை… அவர்களிடம் அடங்கிப் போவது…… எங்களிடம் மட்டும் சட்டதிட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறது….. சரியாக அமல்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவர்களுக்கு மட்டும் வளைந்து கொடுப்பதன் காரணமென்ன?
எங்களை பணி நிரந்தரம் செய்ய சொன்னால் பணம் இல்லை என்கிறார்கள். “பல்வேறு துறைகளில் வரி ஏய்ப்பு உள்ளது. அதனை வசூலித்தால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்” என்று சுட்டி காட்டினார் முன்னாள் தலைவர் பழனிசாமி. ஆனால் அதை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை.
சரி…! ஊரக வளர்ச்சிதுறையில் 2 லட்சம் பணியிடம் காலியாக உள்ளது. அதன்மூலம் எங்களை நியமனம் செய்தால் அதற்கு ஒதுக்கிய பணத்தை சம்பளமாக கொடுக்க முடியும்! எங்களை மட்டுமல்ல…. எல்லா துறையிலும் இருக்கும் பகுதிநேர ஊழியர்களையும் கூட நிரப்பலாம். அதனையும் செய்ய மறுக்கிறது என்பதுதான் மனவேதனை அளிக்கிறது.
தற்பொழுது ஐந்து அம்ச கோரிக்கையை வைத்திருக்கிறோம். இதில் சாத்தியம்-சாத்தியமில்லாதது என்பதை மட்டும் பரிசீலிக்கிறோம் என்று அரசு இழுத்தடிக்கும். “மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் வேண்டும்” என்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் ஒற்றைக் கோரிக்கையைபோல் “பணி நிரந்தரம்” என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தி போராடினால் மட்டும்தான் அரசு அடி பணியும் என்பதை உணர்ந்துள்ளேன். எங்கள் சங்கமும் இதனை பரிசீலிக்க வேண்டும்!
சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது வானகரம் மீன் சந்தை. இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. ஞாயிறு, புதன் என வாரத்தில் இரண்டு தினங்களில் மீன்கள் அதிகமாவும் மற்ற நாட்களில் மீன் வரத்து குறைவாகவும் இருக்கும்.
வானகரம் மீன் சந்தை இருபக்கமும் தூண்கள் எழுப்பி மேலே கூரை அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட சரிவான திண்ணையில் தான் கடைகள் உள்ளன. இரு தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் தான் ஒரு கடையின் அளவு. அதற்குள் அவரவர் மீன்களை வைத்துக் கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வியாபாரம் செய்கின்றனர்.
“ஒரு கடைக்கி வாடகை இருவதாயிரம். என்னால அம்புட்டு துட்டு தரமுடியல. பாதி கடைய 1,0000-த்துக்கு வாடைக்கி எடுத்துனுருக்கேன். சில பேரு காசிமேடு, சிந்தாதரிப்பேட்டன்னு மீனு வாங்கினு வந்து யாவாரம் பாப்பாங்க. நம்மால வண்டி வாடக குடுத்து அவ்ளோ தொலவு செட்டாகாது. நா.. இங்கியே சந்தைக்கி வர்ர மீனுகளையே ஏலத்துக்கு எடுத்து யாவாரம் பாப்பேன். ஆமா இன்னாத்துக்கு இதெல்லாம் கேட்டுனுகிறிங்க” என்றார் மீன் வியாபாரி மணி.
மீன் வியாபாரி மணி மற்றும் தொழிலாளி வினாயகம் (வலது)
“இன்னாது! படம் புடிச்சு பேப்பர்ல போடபோறிங்கலா!. போடுங்க போடுங்க எங்களுக்கு விளம்பரம்தான். ஆன புரட்டாசி மாசத்துல வந்துகிறிங்கோ கூட்டமே இல்லியே! எங்களுக்கு விளம்பரம் இல்லாமபுடுமே” என சிரித்தார் அருகில் இருந்த தொழிலாளி வினாயகம்.
“என்னப்போல சில பேரு மீனவக் குடும்பத்த சேந்தவங்க. மத்தவங்க வன்னியரு, நாயக்கரு, முதலியாருங்க எல்லா சாதிக்காருமே இருக்காங்க. சீலா, கொடுவா, வஞ்சிரம், கட்லா, பன்னா, சங்கரா, இறா, சுதும்பு, சுறா இப்படி பல வக மீனும் ஒன்னா கடல்ல வாழ்ராப்போல சந்தைக்குள்ள பல சாதியும் கலந்து பாகுபாடு இல்லாமெ ஆளுக்கொரு வேல பாத்துனுருக்கோம். எல்லா வேலையும் செஞ்சாதான் பத்துருவா காசு பாக்க முடியும்.
மீனவப் பெண்மனி கலா
நானு பொறந்ததுலேருந்து இதே தொழில்தான். நானு வெளியூரு (வெளிமாநிலம்) மீனுங்கள விக்க மாட்டேன். காசிமேடு, பழவேற்காடு, மீனுங்கதான் யாவாரத்துக்கு எடுத்துகினு வருவேன். மத்தவங்கள விட எம்மீனு பத்துருவா கூடத்தான் இருக்கும். விக்காத மீன கெட்டுப் போற வரைக்கும் வேடுகட்டி வச்சு விக்க மாட்டேன். கருவாடு போட்டு வித்துருவேன்”. என்றார் மீனவப் பெண் கலா.
“நீங்க ரெண்டு மணிக்கு மேல வந்து பாருங்க இங்கயே சோறு போட்டு சாப்புடலாம் அத்தன சுத்தமா இருக்கும். இங்க கிளினிங் வேல பாக்குற எங்களுக்கு சம்பளம்னா 100 ரூபாதான். ஆனா சரக்கு வரும் லாரியில மீன்கூட எறக்குறது, ஐஸ்பார் தூக்குறது இந்த வேலையில ஒரு நாளைக்கி 500 குறையாமெ சம்பாதிச்சுருவோம். ” என்றார் மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்.
மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்
சரவணன் சொன்னதை ஒப்புக் கொண்டு பேசினார் மீன் சுத்தம் செய்துகொண்டிருந்த ராஜலட்சுமி. “நானும் கிளினிங்கு வேலதான் பாத்துனுருக்கேன். சந்தைக்கி வர்ர மீன இறக்குனதும் வெளிய சுத்தம் செஞ்சு பிளிச்சிங் பவுடரெல்லாம் போட்ட பெறகு மதியத்துக்கா வந்து மீனு ஆஞ்சு குடுக்கலாம். அதுவரைக்கும் கட்டடத்துக்கு வெளியில மீனு ஆயிரதுக்குன்னு இருக்குற உறுப்பினருதான் மீனு ஆயனும். ஒரு நாளைக்கி 500 சம்பாதிப்பேன்”. என்றார் ராஜலட்சுமி.
ராஜலட்சுமி
“விடியகாத்தால மீனு வாங்க கெளம்புவோம். கடலுக்கு போன மீனவங்க வந்து தரம்பிரிச்சு மீன ஏலம் விடசொல்லோ… நீங்க எப்புடி எங்கிட்ட பேரம் பேசுரிங்களோ அத போல நாங்களும் பேரம் பேசி மீனு வாங்கினு வருவோம். நேத்து ரெண்டு பொட்டி எறா எடுத்துனு வந்தேன். கிலோ 120 போட்டாதான் கட்டுபடி ஆகும். புரட்டாசின்னு யாவரமே இல்ல. வச்சுருந்தா அழுகிபுடும். கிலோ 70-துக்கு குடுத்துனுருக்கேன். ஐஸ்கட்டியில மீனு அள்ளி அள்ளி கை ரேக தேஞ்சதுதான் மிச்சம்.” என்றார் வியாபாரி மஞ்சு.
மீன் வியாபாரி மஞ்சு
“இந்த மீன் மார்கெட்ட நம்பி ஆயிரம் குடும்பம் பொழப்பு நடத்தினுக்குது. எங்களுக்கு துரையண்ணே முதலாளி இல்ல எங்கள்ள ஒருத்தரு. நமக்கென்னென்னு குந்திகினு இருக்க மாட்டாரு. எங்க கூட வந்து நின்னு கவிச்சி நாத்தத்துல நனச்சுகினு வேல பாப்பாரு. தொடப்பக் கட்டய எடுத்துகினு தேச்சு கழுவுவாரு. மீன்மார்கெட்டு தொறந்து பதிமூணு வருசமாச்சு யாரையும் அண்ணெ அசிங்கமா பேசுனதே கெடையாது” என்றார் தொழிலாளி மாலா.
தொழிலாளி மாலா
“வெளி மாநிலத்து மீனுங்களுக்கு இங்க ஏஜென்ட்டு இருப்பாங்க. வெளியிருந்து மீன் அனுப்பும் ஆளுங்க கூட இவங்க தொடர்புல இருப்பாங்க. இங்க சந்த நெலவரத்துக்கு தகுந்தபடி மீன் வரத்த கூட்டி கொறச்சு வரவைப்பாங்க. அவங்கதான் ஏலத்தையும் விடுவாங்க. அதேப் போல உள்ளூர் மீனுங்கள வாங்கி வந்து வியாபாரம் செய்றவங்களும் இருக்காங்க. யாரும் யாருக்கும் பிரச்சனையா இருக்க மாட்டாங்க. எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராமெ துரையண்ணெ பாத்துப்பாரு.
மீன் வெட்டும் தொழிலாளி ஸ்டிபன்
இப்ப பாருங்க நானு ஒங்க கூட பேசினுருக்கேன் எனக்கு வந்த மீனெல்லாம் பக்கத்துல உள்ளவன் வெட்டுறான். இப்ப நான் உக்காந்தேன்னா அவம்பக்கம் வர்ர மீன எனக்கு விட்டுக் குடுத்துடுவான். இங்க கெட்டுப் போன மீன விக்க கூடாதுங்கற முறை வச்சுருக்கோம். கெட்டுப் போன மீன உள்ள வித்தாங்கன்னா வெளிய வெட்டுற நாங்க மீன திருப்பி அனுப்பிடுவோம்.” என்றார் மீன் வெட்டும் ஸ்டிபன்.
“நானு தெனக்கூலி வேலதான் பாத்துனுருந்தேன். மீன் மார்கெட் வந்ததுலேருந்து இங்கனக்குள்ளதான் வேல. எம்மகனுக்கு படிப்பு வரல எங்கூட இட்டாந்துட்டேன். மீனுக்கு செதிலெடுப்பான்.. எறா உரிப்பான் அப்புடியே தொழில கத்துனுருக்கான்.” என்றார் ஆனந்த் தன் மகன் பப்லுவை அணைத்தபடி.
ஆனந்த் – பப்லு
புரட்டாசி கார்த்திகை மாசத்துலயும் மீன் பிடி தடைக்காலத்துலயும் எங்களுக்கு விற்பனை பாதிக்கும். வாங்குற மீன் விற்பனை ஆகலன்னா பாதுகாக்குறது பெரிய வேல. தேவைக்கான ஐஸ் கட்டி வாங்கனும். ஐஸ்கட்டி உருகி போகாத தரமான பொட்டி வேணும் அப்படியே உருகினாலும் தண்ணி வெளியேர வழி இருக்கனும். அப்புடி இப்புடி கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் நாத்தம் எடுத்துக்கும், என்றார் தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரி.
கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் எல்லாம் நஷ்டம் தான்.
“சந்தைக்குள்ள மீன் வெட்ட போகனுன்னா உறுப்பினரா இருக்கனும். சந்தக்குள்ள இருக்கவங்க பெரும்பாளும் சிந்தாதரிப்பேட்ட, புளியந்தோப்பு ஆட்களா இருப்பாங்க. அவங்க பேச்சு கொஞ்சம் அடாவடியா தெரியும். அதுக்காக அவங்க கெட்டவங்கன்னு சொல்லல, அவங்க பேச்சே அப்படிதான். அது என்னவோ கொஞ்சம் மரியாத கொறச்சலா தெரியிது, அதனாலதான் இங்குனக்குள்ள வர்ர மீன மட்டும் வெட்டுனா போதுன்னு இருந்துக்கிட்டேன்.” என்றார் ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா.
ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா
“நாங்க வெளியூர சேந்தவங்க. உள்ளூர் ஆளுங்களுக்கதான் சந்தைக்கி பக்கத்துலயும் அடுத்தடுத்தும் கடை போட்டுருக்காங்க. எங்கள தள்ளித்தள்ளி ஊரோட கடைசிக்கி வந்துட்டோம். புரட்டாசி பொறந்துட்டதால மீனு வெட்டுக்கு வரவே இல்ல. மணி ரெண்டாயிடுச்சு அஞ்சுகிலோ மீனுதான் ரெண்டு பேரு வெட்டியிருக்கோம்.” என்றனர் கணவன் மனைவியான சுந்தரம்மாள் நடராஜன்.
சுந்தரம்மாள் – நடராஜன் தம்பதியினர்
நேரம் மதியத்தை தாண்டியதும் நம்மிடம் யாரும் பேசத் தயாராக இல்லை. ஏனென்றால் விற்காத மீன்களை எடுத்து பக்குவப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர் வியாபாரிகள். கழிவுகளை வேளியேற்றுவதும் கட்டிடத்தை கழுவுவதுமாக துரிதமானார்கள் தொழிலாளிகள். அதிகாலை நேரத்தில் தொடங்கிய சுறுசுறுப்பான உழைப்பு பிற்பகல் கடந்தும் எந்த சுணக்கமும் இல்லாமல் தொடர்வதை பார்த்தால் சோம்பேறிகளும் வெட்கமடைவார்கள்.
மீன்களை ஐஸ் பெட்டிகளில் அடுக்கி வைக்கும் தொழிலாளி.
இங்குள்ள மக்களிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது சந்தைக்கு மீன் கொண்டு வருபவர்கள், ஏலமிடுபவர்கள், வாங்கும் வியாபாரிகள், விற்பனையாளர்கள், மீனை சுத்தம் செய்பவர்கள், ஏலமிடும் வெளிப்புறத்தை சுத்தம் செய்பவர்கள், விற்பனை கூடத்தை சுத்தம் செய்பவர்கள், கழிவுகளை எடுத்து செல்பவர்கள், வாகனத்தை பாதுகாப்பவர்கள் என ஆயிரம் பேருக்கும் மேல் இந்த சந்தையை நம்பி வேலை செய்வதாக கூறினர். எது எப்படியோ சமூகத்தின் அடிதட்டு மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழிவகை செய்திருக்கிறது வானகரம் மீன் சந்தை!
இருந்தாலும் இந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்வியும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் மீன் நாற்றம் என புகார்கள் பலவற்றை அருகாமை நிறுவனங்களில் உள்ளவர்கள் (முக்கியமாக பார்ப்பன மற்றும் பிற ‘மேல்’ சாதியினர்) கொடுத்து சந்தையை காலி செய்ய முனைந்திருக்கின்றனர். அந்தப் பிரச்சினை பிறகு பேசி முடிவானாலும், தற்போது சந்தை மாறுவதற்காக காத்திருக்கிறது. அந்த சந்தை எங்கே போகும், எந்த இடம், வேலை எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் இருக்கின்றன. என்றாலும் வியாபாரிகளும், தொழிலாளிகளும் அந்த மாற்றத்தை எதிர் கொண்டே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.
குறிப்பு: இந்தக் கள ஆய்வு புரட்டாசி மாசத்தில் எடுக்கப்பட்டது.
மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் தொழிலாளிகள்
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சந்தையை சுத்தம் செய்யும் தொழிலாளிகள்
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பாவெலைப் பார்க்க அனுமதி கோரி அவள் மூன்று முறை சிறைக்குச் சென்றாள். பெரிய மூக்கும், சிவந்த கன்னங்களும் நரைத்த தலையும் கொண்ட போலீஸ்காரர்களின் ஜெனரல் ஒருவன் அங்கிருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் அவளிடம் இதமாகப் பேசி அனுமதி தரவே மறுத்துவிட்டான்.
“அம்மா, நீ இன்னும் ஒருவார காலமாவது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவாரம் கழியட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் இப்போது மட்டும் அது முடியாத காரியம்” என்பான்.
அவன் உருண்டு திரண்டு கொழுத்துப்போய் இருந்தான், பழுத்து அதிக நாளாகி, பூஞ்சைக் காளான் படர்ந்து போன காட்டிலந்தைப் பழத்தைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான். அவன் எப்போதும் ஒரு சிறு மஞ்சள் நிறமான ஈர்க் குச்சியால் தனது சின்னஞ் சிறிதான வெள்ளைநிற உளிப்பற்களைக் குத்திக் கொண்டிருந்தான். அவனது சின்னங்சிறு பசிய கண்கள் அன்பு ததும்பச் சிரித்தன. அவன் எப்போதுமே நட்போடு பேசினான்.
“அவன் மிகவும் அடக்கமானவன்” என்று அவள் ஹஹோலிடம் சொன்னாள், “எப்போதும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான்.”
”ஆமாம்!” என்றான் ஹஹோல்; ”அவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். அவர்கள் மரியாதை தவறமாட்டார்கள். சிரித்த முகத்தோடேயே பேசுவார்கள்; ஆமாம்! “இதோ ஒரு கண்ணியமான யோக்கியமான புத்தி நிறைந்த மனிதன் இருக்கிறான். இவன் ஒரு பயங்கரமான ஆசாமி” என நாங்கள் நினைக்கிறோம். எனவே, உங்களுக்குச் சிரமமில்லாவிட்டால், இவனை வெறுமனே தூக்கில் போட்டுவிடுங்கள்! போதும் என்று அவர்கள் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் சிரித்துக் கொண்டே அவனைத் தூக்கிலும் போட்டு விடுவார்கள். போட்ட பிறகும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.”
“ஆனால் இங்கே சோதனை போட வந்தானே ஒருத்தன், அவன் வேறு மாதிரிப் பேர்வழி. அவன் ஒரு பன்றிப் பிறவி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்” என்று சொன்னாள் தாய்.
“அவர்களில் யாருமே மனிதப் பிறவிகள் அல்ல. மக்களைச் செவிடாக்கும் சம்மட்டிகள்தான் அந்தப் பிறவிகள். நம்மை மாதிரி, ஆட்களையெல்லாம் மட்டம் தட்டி சீர்படுத்தி கையாள்வதற்கு சுலபமானவர்களாக நம்மை மாற்ற முனையும் கருவிகள்தான் அவர்கள். அவர்கள் நம்மை அதிகாரம் செய்யும் மேலிடத்தின் கைக் கருவிகளாக ஏற்கெனவே தம்மை மாற்றிக்கொண்டு விட்டவர்கள். தங்களுக்கு இட்ட எந்த ஆணையையும் எந்தவித முன்பின் யோசனையுமின்றி உடனே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள்.”
கடைசியாக ஒரு நாள் அவளுக்குத் தன் மகனைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஞாயிற்றுக் கிழமையன்று சிறைச்சாலை ஆபிஸில் ஒரு மூலையில் அவள் மிகவும் பணிவோடு அடங்கி ஒடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அட்டும் அழுக்கும் நிறைந்த அந்தத் தாழ்ந்த கூரை கொண்ட அறைக்குள்ளே வேறு பலரும் இருந்தார்கள். அவர்களும் கைதிகளைப் பார்ப்பதற்காகக் காத்துக் கிடப்பவர்கள்தான். அவர்கள் அங்கு அப்படிக் காத்துக் கிடப்பது அதுவே முதல் தடவை அல்லவாதலால், அங்குள்ள மனிதர்கள் நாளாவட்டத்தில் ஒருவருக்கொருவர் பழகிக்கொண்டு விட்டார்கள். எனவே சிலந்தி வலை பின்னுவதைப்போல் அவர்கள் அமைதியாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மடியிலே ஒரு ஜோல்னாப் பையோடு உட்கார்ந்திருந்த தொளதொளத்த முகம் படைத்த ஒரு தடித்த பெண்பிள்ளை பேசத் தொடங்கினாள்; “உங்களுக்குச் சங்கதி தெரியுமா? இன்றைக்குக் காலையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பாதிரியார் ஞானப் பாடல் பாடுகின்ற பையன் ஒருவனின் காதைத் திருகினாராம்!”
“அந்தப் பையன்களும் சுத்தப் போக்கிரிப் பயல்கள்!” என்று ஒரு வயதான கனவான் பதில் சொன்னார். அவர் உடுத்தியிருந்த உடையைப் பார்த்தால் அவர் யாரோ ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மாதிரி இருந்தது.
குட்டைக் கால்களும், நெட்டைக் கைகளும், துருத்தி நீண்ட மோவாயும் வழுக்கைத் தலையும் கொண்ட சித்திரக் குள்ளப் பிறவியான ஒரு மனிதன், அந்த அறைக்குள் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். இடையிடையே உடைந்து கரகரத்த குரலில் ஏதேதோ உத்வேகத்தோடு பேசிக்கொண்டான்,
“விலைவாசியோ விஷம்போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களோ வரவர மோசமாகிக் கொண்டே வருகிறார்கள். இரண்டாம் தரமான மாட்டுக் கறியின் விலை கூட பவுண்டுக்கு பதினான்கு கோபெக்காம்! ரொட்டி விலையோ இரண்டரைக் கோபெக்குக்கு ஏறிப்போய்விட்டது…”
இடையிடையே கைதிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சாம்பல் நிறமான ஆடையும் கனமான தோல் செருப்புகளும் அணிந்திருந்தார்கள். மங்கிய ஒளி நிறைந்த அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அவர்கள் திருக திருக விழித்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு காலில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.
சிறையின் சகல சூழ்நிலையுமே விபரீதமான அமைதியுடனும், விரும்பத்தகாத எளிமையுடனும் இருந்தது. தங்களது நிர்க்கதியான நிலைமையை அவர்கள் வெகு காலத்துக்கு முன்பே ஏற்றுப் பழகி மரத்துப் போய்விட்டவர் போலவே தோன்றினர். சிலர் தங்கள் சிறைத்தண்டனையைப் பொறுமையோடு அனுபவித்தார்கள். சிலர் உற்சாகமே அற்று சோம்பியுறங்கிக் காத்து நின்றார்கள். இன்னும் சிலர் ஒழுங்காக வந்திருந்து உற்சாகமோ விருப்பமோ அற்று, கைதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றார்கள். தாயின் உள்ளமோ பொறுமையிழந்து துடித்துத் தவித்தது. அவள் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை எதுவுமே புரியாமல் பார்த்துக் கொண்டாள். அங்கு நிலவிய சோகமயமான எளிமையைக் கண்டு வியந்தாள்.
அவளுக்குப் பக்கத்தில் சுருங்கிய முகமும் இளமைத் ததும்பும் கண்களும் கொண்ட முதியவள் ஒருத்தி இருந்தாள். அவள் தனது மெலிந்த கழுத்தைத் திருப்பி, பிறர் பேசிக் கொள்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டாள். கண்கள் படபடக்க அவள் ஒவ்வொருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”நீங்கள் யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று பெலகேயா அவளை நோக்கி மெதுவாய்க் கேட்டாள்.
”என் மகனை! அவன் ஒரு கல்லூரி மாணவன்” என்று உரக்கப் பதில் அளித்தாள் அந்தக் கிழவி, “நீங்கள்?”
‘மகனைத்தான். அவன் ஒரு தொழிலாளி.”
”அவன் பேரென்ன?”
“பாவெல் விலாசவ்.”
‘கேள்விப்பட்டதே இல்லை. உள்ளே வந்து ரொம்ப காலமாகிறதோ?”
“சுமார் ஏழு வாரமிருக்கும்.”
“என் மகன் – அவன் வந்து பத்து மாசமும் முடியப் போகிறது” என்றாள் அந்த முதியவள். அவளது குரலில் ஏதோ ஒரு பெருமிதம் தொனிப்பதாக பெலகேயாவுக்குத் தோன்றியது.
“ஆமாம். ஆமாம்” என்று அந்த வழுக்கைத் தலைக் கிழவன் சளசளக்கத் தொடங்கினான். ‘மனிதர்களுக்குப் பொறுமையே போய்விட்டது. எல்லோரும் எரிந்து பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் சத்தம் போடுகிறார்கள். விலைவாசியோ மேலே மேலே போகிறது. ஜனங்களோ, அதற்குத் தக்கபடி நாளுக்கு நாள் நலிந்து வருகிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண எவனுமே முன்வரக் காணோம்!”
”நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்றான், அந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. “ஒழுங்கீனம்” கடைசி கடைசியாக ‘போதும் நிறுத்து’ என்று கத்தத்தான் வேண்டும். அந்தக் குரல், அந்தச் சக்திவாய்ந்த குரல்தான் இன்று நமக்குத் தேவை….”
ஒவ்வொருவரும் இந்த சம்பாஷணையில் கலந்து கொண்டார்கள். அவர்களது பேச்சு உயிர்பெற்று ஒலித்தது. எல்லோரும் வாழ்க்கையைப் பற்றிய தம் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்பதில் பேரார்வம் காட்டினார்கள். எனினும் அவர்கள் அனைவருமே தணிந்த குரலில்தான் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டது அனைத்தும் தனது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். வீட்டில் இருந்தவர்கள் அந்த மனிதர்களைவிட எவ்வளவு உரத்தும் தெளிவாகவும் எளிதாகவும் பேசிக்கொள்வார்கள்….
சதுரமாய்க் கத்தரித்து விடப்பெற்ற சிவந்த தாடியோடு கூடிய ஒரு கொழுத்த சிறையதிகாரி வந்தான். அவளது பேரைச் சொல்லிக் கூப்பிட்டான். அவளை அவன் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கெந்திக்கெந்தி நடந்து கொண்டே சொன்னான்:
“என் பின்னால் வா.”
அந்தச் சிறையதிகாரி முதுகைப் பிடித்துத் தள்ளி அவனைச் சீக்கிரம் முன்னேறி நடக்கச் செய்ய வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
பாவெல் ஒரு சின்ன அறையில் முகத்தில் புன்னகை தவழ கைகளை நீட்டியவாறே நின்றான். அவள் அவன் கையைச் செல்லமாகப் பற்றிப் பிடித்தாள்; சிறுகச் சிரித்தாள்; படபடவென்று இமைகொட்டிப் பார்த்தாள்.
“நலமா? நன்றாயிருக்கிறாயா?” என்றாள் அவள். அவளுக்கு பேச வார்த்தையே கிடைக்கவில்லை. தடுமாறிக் குழறினாள்.
”அம்மா, நிதானப்படுத்திக்கொள். பொறு” என்று அவளது கையைப் பற்றி பிடித்தவாறு சொன்னான் பாவெல்,
“இல்லை. நான் நன்றாய்த்தான் இருக்கிறேன்.’
“உன் அம்மாவா!” என்று பெருமூச்சுடன் கேட்டான் சிறை அதிகாரி. பிறகு அவன் பலமாகக் கொட்டாவி விட்டுவிட்டு, ”நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் விலகி விலகி நில்லுங்கள். இடையிலே கொஞ்சம் இடம் இருக்கட்டும் என்றான்.
பாவெல் அவனது ஆரோக்கியத்தைப் பற்றியும் வீட்டு விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான். அவள் வேறுபல கேள்விகளை எதிர்பார்த்தாள். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கி அவன் கண்களையே வெறித்து நோக்கினாள். ஆனால் பயனில்லை. அவன் எப்போதும் போலவே அமைதியாக இருந்தான். கொஞ்சம் வெளுத்துப் போயிருந்தான். அவனது கண்கள் முன்னை விடப் பெரிதாகி இருந்தன போலத் தோன்றின.
”சாஷா உன்னை விசாரித்தாள். தன்னை மறந்து விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்” என்றாள் தாய்.
பாவெலின் கண்ணிமைகள் துடித்தன; முகம் தளர்வுற்றது. அவன் புன்னகை செய்தான். தனது இதயத்தில் திடீரென ஒரு குத்தலான வேதனை ஏற்பட்டது போல தாய் உணர்ந்தாள்.
“அவர்கள் உன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று கருதுகிறாயா?” என்று எரிச்சலோடும் துயரத்தோடும் கேட்டாள் அவள். “எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!” என்றாள்.
பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன.
”உண்மையாகவா?” என்று உடனே கேட்டான்.
“ஏய்! இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் இங்கே பேசக்கூடாது. உங்கள் குடும்ப விஷயம் ஒன்றை மட்டும்தான் நீங்கள் பேசலாம்” என்று தூங்கி வழியும் குரலில் சொன்னான் சிறையதிகாரி.
”இது குடும்ப விஷயமில்லையா?” என்று எதிர்த்துக் கேட்டாள் தாய்.
“இதற்குப் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அதை இங்குப் பேசக்கூடாது. அவ்வளவுதான்” என்று அலட்சியமாகச் சொன்னான் அவன்.
“சரி, நீ வீட்டு விஷயங்களையே சொல்” என்றான் பாவெல். “நீ எண்ண பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”
அவள் தனது கண்களில் இளமையின் குறுகுறுப்பு பளிச்சிட்டு மின்ன, அவனுக்குப் பதில் சொன்னாள்.
”நானா? நான்தான் அந்தச் சாமான்களையெல்லாம் தொழிற்சாலைக்கு கொண்டுபோய்க் கொடுக்கிறேன்…”
அவள் பேச்சை நிறுத்தினாள். பிறகு சிறு சிரிப்புடன் மீண்டும் பேசினாள்.
”முட்டைகோஸ், சூப்பு, சேமியா – இந்த மாதிரி சாமான்களையெல்லாம் மரியா செய்து தருகிறாள். மற்ற சரக்குகளும்…”
பாவெல் புரிந்து கொண்டுவிட்டான். அவன் தன் கையால் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பொங்கிவந்த சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டான்.
“பரவாயில்லை. நீ சும்மா இராமல் சுறுசுறுப்போடு வேலை செய்வதற்கு இது ஒரு அருமையான உத்தியோகம்தான். அப்படியென்றால் உனக்குத் தனியாயிருக்கவே நேரமிராதே” என்று அவன் அன்பு ததும்பச் சொன்னான். அந்தப் பரிவு நிறைந்த குரலை அவள் அதற்கு முன் அவனிடம் கேட்டதே இல்லை.
”அந்தப் பிரசுரங்கள் மீண்டும் தலைகாட்டியவுடன், அவர்கள் என்னைக் கூடச் சோதனை போட்டுவிட்டார்கள்” என்று கொஞ்சம் தற்பெருமையுடனேயே அவள் சொல்லிக் கொண்டாள்.
“ஏய்! மீண்டும் அதையா பேசுகிறாய்?” சினந்து போய்ச் சொன்னான் சிறை அதிகாரி. “அதைத்தான் பேசக்கூடாது என்று ஒருமுறை சொல்லிவிட்டேனே. ஒரு மனிதனை எதற்காகச் சிறையில் அடைக்கிறார்கள்? வெளியில் நடப்பது என்ன என்பது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்குத்தானே. நீயோ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்… ம்? எது எதைப் பேசக்கூடாது என்பது இன்னுமா தெரியவில்லை?”
“போதும் அம்மா” என்றான் பாவெல். “மத்வேய் இலானவிச் மிகவும் நல்லவர். அவரைக் கோபமூட்டுவதில் அர்த்தமே இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நீ வந்த சமயத்தில் இவர் இருந்ததே ஒரு நல்ல காலம். வழக்கமாக இவருடைய மேலதிகாரிதான் இருப்பான்.”
”சரி நேரமாய்விட்டது” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான் சிறையதிகாரி.
“ரொம்ப வந்தனம். அம்மா கவலைப்படாதே. என்னைச் சீக்கிரம் விடுதலை செய்துவிடுவார்கள்” என்றான் பாவெல்.
அவன் அவளை ஆர்வத்தோடு அணைத்து முத்தமிட்டான். அவனது அரவணைப்பினால் உள்ளம் நெகிழ்ந்து ஆனந்தப் பரவசமாகி வாய் திறந்து கத்திவிட்டாள் தாய்.
“சரி போதும், புறப்படும்” என்று சொன்னான் சிறையதிகாரி. பிறகு அவளை வெளியே அழைத்து வரும்போது அவளிடம் லேசாக முணுமுணுத்தான். “அழாதே, அவர்கள் அவனை விட்டுவிடுவார்கள். எல்லோரையுமே விட்டுவிடுவார்கள். வரவர, இங்கே கூட்டம்தான் பெருத்துப் போயிற்று.”
வீட்டுக்கு வந்தவுடன் அவள் ஹஹோலிடம் எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லும்போது அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புருவங்கள் துடிதுடித்தன.
”நான் அவனிடம் அதை எவ்வளவு சாமர்த்தியமாகச் சொன்னேன், தெரியுமா? அவன் அதைப் புரிந்து கொண்டுவிட்டான். அவனுக்குப் புரிந்திருக்கத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டுப் பெருமூச்செறிந்தாள். “இல்லையென்றால் அவன் என்னிடம் அத்தனை அன்பு காட்டியிருக்கமாட்டான். அவன் அப்படிக் காட்டிக் கொண்டதே இல்லை.”
“நீங்கள் ஒரு விசித்திரப் பிறவி, அம்மா” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல்; “மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்… பாசம்!”
“இல்லை. அந்திரியூஷா? அந்த மக்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்” என்று திடீரென்று ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியோடு பேசத் தொடங்கினாள் அவள். “அவர்களுக்கு அதெல்லாம் பழகிப்போய்விட்டது. அவர்களது பிள்ளைகளை அவர்களிடமிருந்து பிடுங்கிப் பறித்துச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள். என்றாலும். அவர்கள் எதுவுமே நிகழாதது மாதிரி நடந்து கொள்கிறார்கள். சும்மா வெறுமனே வந்து உட்கார்ந்து, காத்திருந்தது, ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களே இந்த மாதிரி நடந்து கொண்டால், அறிவில்லாத பாமர மக்களிடம் நீ என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?”
“புரிகிறது. அது இயல்புதானே?” என்று தனக்கே உரிய கேலித் தொனியில் பதிலளித்தான் ஹஹோல். “பார்க்கப் போனால், சட்டம் நம் மீது கடுமையாய் இருப்பதுபோல் அவர்களிடம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் நம்மைவிட அவர்களுக்குத்தான் சட்டத்தின் உதவி அதிகம் தேவை. எனவே சட்டம் அவர்கள் தலையில் ஓங்கியறைந்தால், அவர்கள் சத்தம் போடுவார்கள். ஆனால் வெளிக்குத் தெரியாமல் சத்தம் போடுவார்கள். தன் கையிலுள்ள தடியைக் கொண்டு தானே தன் தலையில் அடித்துக் கொண்டால், அந்த அடி அப்படியொன்றும் உறைக்காது. நம்மவர் அடித்தால்தான் உறைக்காது. வலிக்காது.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லையில் அரங்கக் கூட்டம்
நாள் : 10.11.2018 நேரம் மாலை 5 மணி
இடம்: மூர்த்தி அரங்கு, சகுந்தலா இன்டர்நேசனல், வண்ணார்பேட்டை, நெல்லை.
தோழமைமிக்க பேராசிரியர்களே, மாணவ நண்பர்களே!
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக, பொதுநலனுக்கான கல்வி என்பது விற்பனை சரக்காக, மதிப்பீடுகளற்ற பண்டமாக மாற்றப்பட்டுள்ளது.
நல்ல மாணவர்களை – சமூதாயத்தை உருவாக்க வேண்டிய இந்த கல்வி – அமைப்பு கிரிமினல் மயமானதன் விளைவாக சமூகமும் கிரிமினல் மயமாகி வருகிறது. கல்வித்துறையில் தற்போது மத்திய – மாநில அரசுகள் செய்து வரும் மாற்றங்கள் அனைத்தும், இதுவரை எதையெல்லாம் நாம் சட்ட விரோதம், விதிமுறைகளை மீறிய செயல் என்று மனம் குமுறி வந்தோமோ அதையெல்லாம் சட்டபூர்வமாக்கும் நடவடிக்கைகளாக்கிவிட்டன.
சமீப காலமாக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடும் அதற்கு முந்தையதைவிட அளவில் மிகப்பெரியதாகவும், தன்மையில் பேரளவு கிரிமினல் மயமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களை தலைமைப் பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது, தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடப் புத்தகங்களில் மத வெறிக்கருத்துக்களை திணிப்பது, புராணக் கட்டுக்கதைகளை அறிவியல் உண்மையாக திரித்துக்கூறுவது. பிராந்திய மற்றும் தேசிய இனங்களின் பண்பாடு – கலாச்சாரம் – மொழி அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரமாக மாற்றுவதையே இலக்காக வைத்து செயல்படுவது என தனது நச்சு ஆக்டோபஸ் கரங்கள் மூலம் பெரும்பான்மை மக்களை நாசமாக்கி வருகிறது இவ்வாளும் அரசு, தமிழக அரசு அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது.
கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. அத்தோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயர்கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான பல நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இல்லாத அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்தை இவ்வரசு வழங்கியுள்ளது.
கல்வி முதலாளிகளின் கொள்ளைக்காக இந்திய மருத்துவக்குழு (MCI) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) இரண்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. திறமையானவர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்ற பெயரில் நீட் தேர்வை திணித்து காசு உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக்கல்வி என்ற நிலமையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.
இது இந்நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பெண் சமூகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப்பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை நோக்கித் தள்ளும்.
இச்சூழலில் கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்தும் கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் மதவெறி சக்திகளிடமிருந்து கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கப்பெறச் செய்வதுமே இன்றைய காலக்கட்டத்தின் மிகமுக்கியமான கடமையாக உள்ளது.
இப்பணிக்காக பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், கல்வியாளர்களும், கல்வியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்வோம்.
இது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு. வாருங்கள் கலந்துரையாடுவோம் !
*****
நிகழ்ச்சி நிரல்:
தலைமை :
பேரா. ஜெ. அமலநாதன்,
நெல்லை ஒருங்கிணைப்பாளர் CCCE,
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை.
ராமனின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த சபரி என்கிற கன்னிப் பெண்ணின் நினைவாகவே சபரிமலை எனப் பெயர் பெற்றது. பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ள அந்த அழகான மலைகளின் மீதுதான் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.
முந்தைய காலங்களில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய அய்யனார், பின்னர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சிறிய அய்யப்பன் கோவிலாக உருவானது.
அய்யப்பன் அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளவரசன் என்கிறது புராணக் கதைகள். பின்னர் கடுமையான தவங்களின் மூலம் அருள் பெற்று நால் வர்ணங்களுக்கு வெளியில் உள்ள சாதிகளால் வணங்கப்படும் அளவுக்கு ஆற்றல்களைப் பெற்றார் என்கின்றன அந்தக் கதைகள்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ( படம் நன்றி – ஃப்ரண்ட் லைன்)
தினசரி பூசை புனஸ்காரங்கள் ஏதும் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருந்த இந்தக் கோவிலுக்கு வருடம் ஒரு முறை மகர சங்கரமனா எனும் சடங்கிற்காக (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்) மலைப் பண்டாரம், உள்ளத்தார், மன்னன், நரிக்குறவர் போன்ற மலைவாழ் மக்கள் வருவதுண்டு. மேலும் தமிழ்நாட்டில் இருந்து சில பக்தர்களும் வந்து போவதுண்டு. பந்தளம் அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் அந்த நாட்களில் பூசைகள் செய்து வந்துள்ளார்.
பின்னர் பந்தளம் அரச குடும்பம் திருவாங்கூர் அரசிடம் சரணடைந்ததை அடுத்து, இந்தக் கோவில் 1810-ல் வெள்ளை அதிகாரி கலோனல் முன்றோவின் அறிவுரைப்படி ராணி லட்சுமி பாயால் (1810-1815) உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேசஸ்வம் கமிசனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வெள்ளமாய்ப் படையெடுத்த பக்தர்கள் !
சில வன ஆக்கிரமிப்பாளர்கள் ஜூன் மாதம் 1950-ம் ஆண்டு சபரிமலைக் கோவிலுக்கு தீவைத்து சிலையைச் சேதப்படுத்தினர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு கோவிலின் சேதம் சரி செய்யப்படவில்லை.
திருவிதாங்கூர் ராஜ்ஜிய தேவசம் கமிசன் (TRDC) கலைக்கப்பட்டு 1950-ல் உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு (TDB) என்கிற புதிய அமைப்பு பின்னர் ஒரு புதிய கோவிலைக் கட்டியது. அதன் பின் பக்தர்கள் வருகை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே சென்றது.
பதினெட்டாம் படி அருகே குவிந்து இருக்கும் பக்தர்கள்.
ஒரு சில ஆயிரங்களாக இருந்த பக்தர் கூட்டம், 70-களிலும் 80-களிலும் பல்லாயிரமாக அதிகரித்து, பின்னர் லட்சங்களைத் தொட்டு, இன்றைய நிலையில் ஏறக்குறைய நாளொன்றுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருமளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும், நாளொன்றுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருவதாக கொஞ்சம் ஊதிப் பெருக்கிச் சொல்கிறது தேவசம்போர்டு.
பக்தர்களின் வருகை அதிகரித்ததற்கு ஏற்ப, கோவிலின் வழிபாட்டு நாட்களும் அதிகரித்துள்ளன. இன்றைய நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 133 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டு 1431 மணி நேரங்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் 10 பக்தர்களை ஒரு நொடி நேரத்திற்கு தரிசனம் செய்ய அனுமதிப்பதென்றால், பக்தர்களின் மொத்த தொகை 51,51,600 ஆக இருக்கும். பக்தர்களை கருவறைக்கு முன் நீண்ட நேரம் தரிசிக்க விடுவதும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக தற்போது தென்னிந்தியா எங்கிலும் இருந்து ஏராளமான நடுத்தர வர்க்க பக்தர்கள் வந்து குவிகின்றனர். இதன் காரணமாக தங்கமாகவும் பணமாகவும் ஏராளமான காணிக்கைகள் குவிகின்றன. இந்தப் போக்கில் முன்னொரு காலத்தில் பழங்குடிகளாலும் பார்ப்பனிய சாதி அடுக்குகளுக்கு வெளியில் இருந்தவர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட கோவில், தற்போது பார்ப்பனிய சாதிகளாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. பக்தர்களின் சேத்திராடனம் என்பதைக் கடந்து அரசால் கட்டுப்படுத்தப்படும் பல்லாயிரம் கோடி வியாபார சாம்ராஜ்ஜியமாக உயர்ந்து நிற்கிறது.
கண்டுபிடிக்கப்பட்ட சடங்குகள் !
பத்திலிருந்து ஐம்பது வயது வரையிலான பெண்களின் நுழைவுக்கு எதிரான தடை 1991ல் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பெண்களின் மாதவிலக்கின் காரணமாக அவர்களால் 41 நாட்களுக்கு புனிதத் தூய்மையை கடைபிடிக்க முடியாது என்பதும், அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் பெண்களை விரும்ப மாட்டார் என்பதுமே இந்த தீர்ப்பிற்கான முகாந்திரம்.
எனினும், இந்த தடைக்கு அறிவியல் பூர்வமான விளக்கமோ, சடங்குப்பூர்வமான புனிதக் காரணங்களோ ஏதும் இல்லை.
சபரிமலை அய்யப்பன் கோவிலின் பழைய புகைப்படம் இணையத்திலிருந்து…
பார்ப்பனிய சாதிகள் மாதவிலக்கை அசுத்தமானதாகக் கருதுவதும், அந்தக் காலங்களில் பெண்களை கோவில்களுக்கு அனுப்பாமல் இருப்பதும் உண்மை தான். ஆனால், மாதவிலக்கு என்பது பழங்குடிகளைப் பொறுத்தவரை புனிதமானது மட்டுமின்றி செழிப்பின் குறியீடு.
அவர்கள் எல்லா வயதுப் பிரிவையும் சார்ந்த தங்களது பெண்கள் மற்றும் குழந்தைகளோடு 60-கள் வரை இந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். அதே போல் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பார்ப்பனிய சாதிகளைச் சேர்ந்த பெண்களே கூட 80-களின் போது இக்கோவிலுக்கு வந்துள்ளதற்கு ஆவணப்பூர்வமான சான்றுகள் உள்ளன.
ஆகமப்பூர்வமான பாரம்பரியத்தை அதிகம் கொண்டிராத கருநாடகாவைப் பூர்விகமாக கொண்ட தாழமோன் என்கிற குலத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டனர்.
சமீப காலம் வரை சபரிமலைக் கோவிலில் நம்பூதிரி பார்ப்பனர்களால் கட்டுப்படுத்தப்படும் பிற கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல் பார்ப்பனிய வேதங்களை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே காட்டுக்குள் இருக்கும் கீழ்த்தர சாமிகள் எனக் கருதப்பட்ட அய்யப்பன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வைதீக நடைமுறைப்படி அஷ்டபந்தன (எட்டு சடங்குகள்) முறையில் பிரதிஷ்ட்டை செய்யத் தேவையில்லை என்பதே நம்பூதிரி தந்திரிகளின் கருத்தாக இருந்து வந்தது.
அனைத்து சிறுதெய்வங்களையும் உட்செரித்து தனது சடங்குகளை புகுத்துகிறது பார்ப்பனியம்.
பதினெட்டு மலைகளைத் தனது எல்லையாக கொண்ட அய்யப்பன் கோவிலில் வைதீக முறைகளைப் பின்பற்றப்படுவதை எந்த நம்பூதிரிக் குடும்பமாக இருந்தாலும் எதிர்த்திருக்கும். வைதீக பாரம்பரியம் ஏதுமற்ற – தென் கருநாடகத்த்தின் பொட்டி குடும்பத்தைப் பூர்வீகமாக கொண்ட – தாழமோன் குடும்பத்தினரிடம் கோவிலின் உரிமை வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல.
கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் பெரும்பாலான புராணக் கட்டுக்கதைகளும், வழக்கங்களும் சமீபத்திய உருவாக்கங்கள் தாம். சடங்குகளின் பாரம்பரியம் எனப்படுவதில் எதுவும் நிரந்தரமானது கிடையாது. எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் என்னதான் நாம் காலங்களைக் கடந்தது என்று சொன்னாலும், புதிய புரிதலுக்கும், புதிய சூழலுக்கும் தக்கவாறு மாறித்தான் வந்துள்ளன. உலகப் பொது வழக்கமான இந்த சமூக நடைமுறைக்கு சபரிமலையின் பாரம்பரியங்கள் மட்டும் எந்தவிதத்திலும் முரணானது அல்ல.
பார்ப்பனிய மேலாதிக்கம் !
புதிய நடைமுறைகளைப் பொறுத்தவரை குறிப்பான போக்காக காணப்படுவது என்னவென்றால், பார்ப்பனிய கண்ணோட்டத்தில் சிலவற்றை அல்லது சிலரை தள்ளி வைப்பதும், வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கமும் திட்டமிட்ட ரீதியில் புகுத்தப்பட்டது தான்.
இதன் காரணமாக மிகக் கடுமையான கானகப் பயணத்தின் போது பக்தர்களிடையே நிலவிய ஒற்றுமையும் சகோதரத்துவமும் நீர்த்துப் போகின்றன. அதே போல் தற்போது மதச்சார்பின்மையின் குறியீடாக விளங்கி வந்த அய்யப்பனுக்கும் அவரது இசுலாமியத் தோழர் வாவர் சாமிக்கும், அர்த்துங்கல் கிறிஸ்தவ தேவாலயத்துக்குமான தொடர்பை அறுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடும் காட்சி.
சபரிமலை என்பது எல்லா சாதிகள், பிரிவுகள் மற்றும் மதங்களுக்கானது என்கிற வழக்கம் திட்டமிட்ட ரீதியில் புதிய விதிகள் மற்றும் ’மரபுகளின்’ மூலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தங்களது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். பல பக்தர்கள் அர்த்துங்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் சென்று வழிபடுவதுண்டு.
இது போன்ற பொதுத்தன்மைகளும், வேறு சில வழக்கங்களும் அய்யப்ப பக்தி என்பது பௌத்த மத பாரம்பரியத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியது என்பதாக காட்டுகின்றது. எனினும், “தர்ம சாஸ்தா” என்று அழைப்பதைக் கொண்டோ, சரண கோஷங்களைக் கொண்டோ, பிரம்மச்சரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைக் கொண்டோ மட்டும் இந்நம்பிக்கை முழுவதற்கும் பௌத்த பாரம்பரியத்தை சாற்ற முடியாது.
ஏனெனில், தர்ம சாஸ்தா என்பது சமீபத்திய வார்த்தைப் பிரயோகம்; அதே போல் சரண கோஷம் என்பதை பௌத்த சங்கத்தின் இணைவதை உணர்த்தும் சரண கோஷத்தோடு இணை வைத்துச் சொல்ல முடியாது. போலவே இந்த கோணத்தை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் கிடையாது.
மேலும் பௌத்த மடாலயங்கள் பாறைப் பகுதிகளிலும், குறிப்பாக வணிகப் பாதைகளிலும் அமைந்திருக்கும். சாஹ்ய மலையில் வீற்றிருக்கும் நீலகண்டர் எனும் போதி சத்வர் குறித்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு அவரோடு அய்யப்பனைத் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தவில்லை. மேலும், பௌத்த சிற்ப கலையின் தாக்கம் ஏதும் அய்யப்பனின் உருவத்தோடு ஒத்துப் போகவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பு !
புலிகளின் சரணாலயமாய் விளங்கும் அந்தக் காட்டின் சூழல் மற்றும் அதைப் பாதுகாக்கும் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு பக்தர்களின் வசதிக்காக எனும் பெயரில் நவீன நகரக் கட்டுமானங்களை ஏற்படுத்தக் கோரி வருகின்றது தேவஸ்வம் போர்டு.
சபரிமலை பெண்கள் நுழைவு விசயத்தில் மட்டுமல்ல, சுற்றுசூழல் குறித்த தீர்ப்புகளிலும் கூட நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை கோவில் நிர்வாகம்.
இதன் காரணமாக கேரள வனச் சட்டம் 1961, வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ஆகியவற்றை மீறி காடுகளை அழிக்கப்பட்டும், வன நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றது. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவது சபரிமலைக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்பட்ட இடம் அது.
கோவிலின் சந்நிதானம் கட்டப்படுவதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துணை நீதிமன்ற உத்தரவு WP(C) எண் 202/95, WP(C) 212/2001 மற்றும் அக்டோபர் 24, 2005 தேதியிட்ட மத்திய அரசு உத்தரவு கடித எண் F.No.8-70/2005-DC, மாநில அரசு உத்தரவு GO(Rt) 594/05/F7WLD (31-10-2005), மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு I.A No 1373 (No 202 of 1995) உள்ளிட்டவை வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுவதற்கு எதிரானவை.
தேவசம் போர்டின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களால் மத்திய வனத்துறை அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தினால் அது அமல்படுத்தப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் சந்நிதானத்தைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கூடுதலாக கட்டிடங்கள் கட்டவும் தடை உள்ளது.
சந்நிதானத்தைச் சுற்றியுள்ள நிலங்களையும் லீசுக்கு பெறப்பட்ட நிலங்களை பயன்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. லீசுக்குப் பெறப்பட்ட நிலத்தின் மொத்தம் 14.6 சதவீத நிலங்கள் பக்தர்களில் 9.5 சதவீதமானவரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.4 சதவீத நிலம் வெறும் 0.1 சதவீதமானோரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கொடையாக விடுதிகள் கட்ட சந்நிதானத்தைச் சுற்றி அனுமதி வழங்கப்பட்டிருப்பது லீஸ் ஒப்பந்தத்திற்கு முரணானது மட்டுமின்றி பொது நிலத்தை ஒதுக்குவதில் செய்யப்பட்ட அநீதியுமாகும்.
வி.ஐ.பி-க்களும் பணக்கார பக்தர்களும் தங்களது சொந்த தேவைகளுக்காக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது கடுமையான வனப்பகுதியில் பாதயாத்திரை வரும் சபரிமலை பக்தர்களிடையே நிலவ வேண்டிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்த சகோதரத்துவம் என்கிற பண்புக்கே எதிரானது.
தற்போது எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் அப்பட்டமாக மீறப்படுகின்றது. கோவிலின் மீதான தங்களது கட்டுப்பாடு திருவாங்கூருக்கு மாற்றப்பட்டது குறித்த அறியாமையில் இருக்கும் பந்தளம் குடும்பத்தினரும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி குறித்த அறிவற்ற தாழமோன் தந்திரியும் சட்டவிரோதமான முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையே தான் கோவிலின் மற்ற பூசாரிகளும் செய்து வருகின்றனர். ஓட்டுக்களின் மீது ஒரு கண்ணை வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசியல் சாசனம் குறித்த அறியாமையில் மேலும் தாழ்ந்து செல்கின்றனர். சடங்கு சம்பிரதாயங்களின் மீதான நெகிழ்வுத் தன்மையும் சமூக விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட தனது பாரம்பரியத்திற்கு முரணான ஒரு நிகழ்வுப் போக்கை சபரிமலை சந்தித்து வருகின்றது.
இந்த பதிவின் மூலம் நான் கடந்து வந்த சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு அன்றாட வாழ்வியலையும் உயிர்களையும் பாதிக்கிறது என்று பார்ப்போம்.
இந்த பதிவில் நடந்த சம்பவங்கள் யாவும் உண்மையில் பல்வேறு கால நிலைகளில் சூழ்நிலைகளில் நிகழ்ந்தவை. இந்த பதிவில் நிகழ்வு 1 மற்றும் நிகழ்வு 2 என்று விரியும் சம்பவங்களில் சூழ்நிலை(situation) ஒன்று தான் இடம்(place of occurence) மற்றும் மனிதர்கள் வேறு.
நிகழ்வு 1 காட்சி 1
70 வயதான பாட்டி, வீட்டில் பரண் மீது ஏறி பொருட்களை அடுக்கும் போது தவறி கீழே விழுந்து விட, தலையில் வெட்டுக்காயம். மருத்துவரை சந்தித்து தையல் போடப்படுகிறது.
முதியோர் – மாதிரிப்படம்
தலையில் அடிபடும் நோயாளிகளுக்கு பொதுவாக கேட்கப்படும் அபாய அறிகுறிகள் குறித்து கேட்கப்படுகின்றன ;
காது மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வந்ததா?
இல்லை.
தலை சுற்றல் இருக்கிறதா ?
இல்லை.
வாந்தி ?
இல்லை.
“கவலை வேண்டாம் பாட்டி.. மாத்திரைகளை எடுங்கள். நாளை வந்து கட்டு மாற்றிக்கொள்ளுங்கள். தலைசுற்றலோ..வாந்தியோ இருந்தா தான் பெரிய பிரச்சனை. இப்போது பிரச்சனை இல்லை” என்று கூறப்படுகிறது
பாட்டியும் தனது மகளுடன் சென்று விடுகிறார்.
நிகழ்வு 2 காட்சி 1
மேற்சொன்னது போன்றே 70-80 வயதுகளில் உள்ள பாட்டி, யாரும் கூட வரவில்லை. தனியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகிறார்.
இரவு கழிப்பறை சென்று வருகையில் கீழே விழுந்ததில் தலையில் பலமான அடி வாந்தி அவ்வப்போது வருகிறது. தலைசுற்றல் இருக்கிறது. ரத்த அழுத்தம் சோதிக்கப்படுகிறது – மிகவும் அதிகமாக இருப்பதாக ரத்த அழுத்தமானி காட்டுகிறது. 108 அழைக்கப்படுகிறது
நிகழ்வு 1 காட்சி 2
தையல் போடப்பட்ட அந்த பாட்டியை அவரது மகள் இரண்டு நாட்கள் கழித்து அழைத்து வருகிறார். கையில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன் உள்ளது.
“சார். எங்க ரிலேசன் மெடிக்கல் காலேஜ்ல வொர்க் பண்றார். பயமா இருந்துச்சு சார். அதான் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்து பாத்துறலாம்னு.. பாத்துட்டேன்.. ”
” இல்ல சார்.. எங்களுக்கு ஒரே பயம் சார். அது போக மெடிக்கல் காலேஜ்ல
ஆள் இருக்காரு. சிடி ஸ்கேன் 500 ரூபாய்க்குனால உடனே எடுத்து ரிசல்ட்டும் குடுத்துட்டாங்க.. எதுக்கும் எடுத்து பாத்துறது நல்லது தான சார்”
” ஏம்மா.. ஒரு சிடி ஸ்கேன் இருபது எக்ஸ் ரேக்கு சமம்.. தேவையில்லாத கதிர் வீச்சுக்கு உடம்ப உட்படுத்துறது தப்புமா… “
” சரி சார்.. இனிமே உங்ககிட்ட கேட்டு செய்றோம்”
நிகழ்வு 2 காட்சி 3
“108 ஆம்புலன்ஸ்காரங்க கூட ஆள் இல்லனா ஏத்திட்டு போக மாட்டாங்க பாட்டி.. புரிஞ்சுக்கோங்க..”
“சாமி.. எனக்கு நெசமா ஆள் இல்லயா.. இருந்தா கூப்டமாட்டமா?”
108 வருகிறது.
ஆனால் வெளியே அதுவரை அமர்ந்திருந்த பாட்டியை காணவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் தேடப்பட்டும் காணவில்லை..
ஒரு சக பாட்டி; ” சார்.. அந்த பொம்பள செத்த நேரத்துக்கு முன்னாடியே கார் வந்துரும்னு கிளம்பி போய்ருச்சு சார்..”
“எனக்கு என்ன சாமி தெரியும். சொன்னாலும் அது கேக்காது”
“சரி.. எந்த ஊரு பாட்டி அது?”
“@&#%!%÷”
நிகழ்வு 1 மற்றும் 2 இரண்டிலும் சூழ்நிலைகள் ஒன்று தான் மருத்துவரும் ஒன்று தான் முதல் நிகழ்வில் தேவையில்லாத சிடி ஸ்கேன் எடுக்கப்பட, இரண்டாவது நிகழ்வில் அத்தியாவசியமான சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை.
அந்த கிராமத்தை சேர்ந்த சுகாதார செவிலியருக்கு போன் செய்து.. அந்த பாட்டி குறித்து கூறி .. அவர் வீட்டிற்கு வந்தால் உடனே அவரை 108-ல் மருத்துவ கல்லூரிக்கு அனுப்ப சொல்லிவிட்டு அடுத்த நோயாளிகளில் மூழ்கிவிட்டேன்.
மறுநாள் பாட்டி நியாபகம் வர அந்த கிராம சுகாதார செவிலியருக்கு போன் செய்து விசாரிக்கும் போது;
” சார்.. அந்த பாட்டி வீட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்க கிட்டலாம் சொல்லி வச்சு… வந்தா என்ன கூப்டுங்கனு சொல்லிட்டு வந்தேன் சார்..ஆனா”
“என்னமா ஆனா?”
” பாட்டி நைட் வீட்டுக்கு வரல சார்.. காலைல குளத்து ஓரத்துல கெடந்து பாடிய எடுத்துருக்காங்க.. அவங்களுக்கு பிள்ளைங்க யாரும் இல்ல. அதனால் யார்கிட்ட பேசுறதுனு தெரியல.. ஊர் சேர்ந்துதான் காரியம் பண்ணிட்ருக்கோம்”
“ஓ.. சரிம்மா.. நான் அங்க வர்றேன்.. போன வைங்க”
நிகழ்வு 1 மற்றும் 2 இரண்டிலும் சூழ்நிலைகள் ஒன்றுதான் மருத்துவரும் ஒன்று தான் முதல் நிகழ்வில் தேவையில்லாத சிடி ஸ்கேன் எடுக்கப்பட, இரண்டாவது நிகழ்வில் அத்தியாவசியமான சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை.
இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை அதன் ஆணிவேரோடு உணர்ந்தால் அங்கு நம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வு விளங்கும்.
இது போன்ற பல நிகழ்வுகள் நினைவுகளாய் அலையாடுகின்றன
இறைவன் நாடினால் தொடர்ந்து பகிர்வேன்!
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.