Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 424

வேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை !

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 5 (இறுதி பகுதி)

மோடி வெளிநாடு போனாரு, அங்க போனாருன்னு அதுக்கான விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவு பண்ற இந்த அரசு ஒவ்வொரு மாவட்டத்திலையும் ஒவ்வொரு ஊர்லயும் திட்டங்கள் வகுத்து “இந்த மாதிரி திட்டம் நடக்குது, போய் சேருங்க”ன்னு கொண்டு வரலாமே, ஏன் செய்வதில்லை?. தகவல் அறியும் மனு போட்டா “இது மாதிரி நாங்க skill development program நடத்திருக்கோம்”னு கணக்கு காட்டுவாங்களே தவிர அது பலனுள்ளதாக இல்லேன்றதுதான் நிலைமை. அது பலனுள்ளதாக இருந்தா அது நிறைய பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.

ஜின்டால் ஆலை வேணும், ஸ்டெர்லைட் ஆலை வேணும் என்று ஒரு எதிர்தரப்பு வாதம் வரலாம். வேலை வாய்ப்புன்றது தனியார் நிறுவனங்கள்ல வரணும்ன்னு இல்லை. அரசு திட்டமிட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்படி சரியான நிறுவனங்களை சரியான இடத்தில் வைச்சு அதுக்கான சரியான கவனமும், விழிப்புணர்வும், ஊக்கமும் கொடுத்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாட்டுல எத்தனை ஐ.டி நிறுவனங்கள் இருக்கு? எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க. ஏன் உள்ளூர் இளைஞர்கள் நிறைய பேரை கேம்பஸ் இன்டர்வியூல எடுக்கிறதில்லை என்று கேட்டால் ஸ்கில் செட் -ன்ற காரணத்தை கொண்டு வர்றாங்க. இந்த ஸ்கில் செட் டெவலப்மென்ட் புரோகிராம் என்னன்னு இருட்டடிப்பாகத்தான் இருக்கு.

படிக்க :
காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்
தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !

இன்னோன்னு இந்த மைண்டு செட். ஒரு தரப்பு மக்கள், ஒரு தரப்பு படிப்பு படிச்சவங்க மட்டும்தான் உள்ள வரணும்ன்ற மாதிரியான மனநிலை இது. உதாரணமாக, சி.பி.எஸ்.இ ஆகட்டும், நீட் ஆகட்டும் இது மாதிரியான மனநிலையோட வெளிப்பாடு. இதை அரசு மாத்திக்கிற மாதிரி தெரியல. அரசு அதே பாதையில தான் போயிட்டிருக்கு. அதே பாதையில போயிட்டிருக்கும் போது நோய் எப்படி குறையும்ன்றது தெரியலை.

ஒரு வேளை சரியான நிறுவனங்கள் சரியான விதிமுறைகளின் படி வந்தாங்கன்னா எல்லாரும் வரவேற்கத் தான் செய்வாங்க. விதிமுறைகளை வரையறுப்பதும் அதை பின்பற்றுவதும் அதுக்கான கல்வியை குடுக்கிறது தான் சரியா இருக்கும்.

எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க.

இங்க அரசு வேலையை பொறுத்தவரை லஞ்சம், தனியார் வேலையை பொறுத்த வரைக்கும் கார்ப்பரேட் அஜெண்டா இருக்கிறது. அதாவது ஊழல் இருக்கிறது, சாதிய அஜெண்டா இருக்கிறது. என்ன சாதி, என்ன மதம், எந்த மாநிலம், எங்கு படித்தீர்கள் என்று ஒதுக்கி வைக்கும் அஜெண்டா உள்ளது.

திருச்சி நகரில் சில நிறுவனங்கள கொண்டு வரலாம். அதை சுத்தி உள்ள கிராமங்களுக்கு அதுக்கான வாய்ப்பு கிடைக்கும், அங்க போவாங்க. இல்ல வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களை செய்யலாம். இந்த மாதிரி விசயங்கள் கேட்டா எல்லாமே இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, நடைமுறையில் எதுவும் இல்லை.

மன் கீ பாத்’ன்னு மோடி வந்து பேசுறாரு, எடப்பாடி பழனிச்சாமி எல்லா இடத்திலையும் போயி பேசுறாங்க. அதுக்கு பதிலா வேலைவாய்ப்புகளை உருவாக்க முறையான திட்டங்கள் தீட்டி, அதை அமல்படுத்தி அதை கொண்டு சேர்க்கணும். அரசின் செயல் திட்டங்கள்ன்னு சொல்லிட்டு ஒவ்வொரு தியேட்டர்லயும் படம் போடுறத விட இது மாதிரி வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும்படி திட்டம் போட்டு அது எங்க எங்க இருக்கு அதுக்கான பயிற்சி திட்டம்  என்ன இருக்கு அப்பிடின்றத ஒரு தியேட்டர்ல ஒரு 2 நிமிட படமா காண்பிக்கலாம். இதை பார்க்கிற எல்லாரும் பார்த்து பயனடைவாங்க. இதெல்லாம் இல்லாமதான் வெளிநாடுகளுக்கு போய் ஏமாறுராங்க.

இன்னோன்னு பொருளாதார நெருக்கடி. ராணுவ வீரர் ஒருத்தர் பென்சன் வாங்குறாரு, இது மாதிரி ஏன் விவசாயத்தை பின்புலமா கொண்டவங்களுக்கு அரசு ஓய்வூதியம்  மாதிரியான முறையை கொடுத்தீங்கன்னா அவங்க வாழ்க்கையை மாசம் மாசம் ஓட்டுறது ஒரு பெரிய பிரச்சனையா இருக்காது. நெருக்கடியில் விழ மாட்டாங்க. வாழ்நாள் முழுதும் உழைச்ச விவசாயிகளும், தொழிலாளிகளும் இந்த மாதிரி பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் போது தான் தப்பு நடக்குது.

படிக்க :
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை

இது சாதாரண பிரச்சனை கிடையாது. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?

8 வழி சாலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிலத்தை  இழக்க போறாங்க. அரசு குடுக்கிற எல்லா பணமுமே திரும்பி அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போக போகுது. அரசியல் கட்சி பின்புலம் இருக்கிற ஆளுங்க தான் இது மாதிரி குற்றங்களை துணிந்து செய்றாங்க. அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போலீஸ் சப்போர்ட்டும் இருக்கு. மத்தபடி அவங்களை அடக்கி ஆளுற அதிகாரமும் அந்த திமிரும் இருக்கு.

தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.

– சரவணன்

(முடிந்தது)

நன்றி : new-democrats

இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
2. வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா !
3. என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !
4. வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?

தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ

ருமபுரி மாவட்டம் சிட்லிங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சவுமியா. அருகில் உள்ள நகரில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 5 அன்று தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். மாலையில் சிறுநீர் கழிக்க அருகில் உள்ள மறைவிடப் பகுதிக்கு சென்ற சவுமியாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ் என்ற இருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சிதைத்து கொல்லப்பட்ட சவுமியா.

சவுமியா வெளியில் சென்று வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டு மூச்சுத்திணறிக் கொண்டிருந்த சவுமியாவை உடனடியாக துணி கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர், நடந்த விவகாரத்தைக் கேட்டு குற்றவாளி சதீஷை பிடித்து சவுமியாவின் அண்ணன் விசாரித்த போது, சதீஷ் தனது நண்பர்கள் உறவினர்களை வரவழைத்து சவுமியாவின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின்னர் சவுமியா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

ஆனால், புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தது போலீசு. பாதிக்கப்பட்ட பெண்ணே வந்து புகாரளிக்க வேண்டும் எனக் கூறியது. சட்டப்படி, பாலியல் வன்முறையைப் பொருத்தவரையில் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண் வரவேண்டும் என அவசியம் இல்லை. அப்பெண்ணின் சார்பாக புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கும், அப்பெண் இருக்கும் இடத்திற்கும் ஒரு பெண் போலீசு அதிகாரி சென்று விசாரணை நடத்த வேண்டும், இதுதான் விதிமுறை. ஆனால், அதனை செய்யாமல் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வா என அலைக்கழித்திருக்கிறது போலீசு.

போலீசு சட்டம் தெரியாததும் அல்ல. குற்றவாளி ரமேஷ் குடும்பத்தின் கள்ளச்சாராய வியாபாரத்தின் மூலம் வரும் வருமானம் குறித்தும் அறியாததும் அல்ல. சவுமியா நேரில் சென்று அங்கு புகார் பதிவு செய்துள்ளார். புகார் பதிவு செய்யும் போது உடன் அவருடன் யாரையும் அனுமதிக்கவில்லை.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்து சவுமியாவிடம் விசாரிக்க வந்த பெண் போலீசு, சவுமியாவின் வீட்டிற்குள் விசாரிக்கையில் சவுமியாவின் குடும்பத்தினர் யாரையும் விசாரணையின் போது உள்ளிருக்க அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க கிரிமினல்தனமாக சட்டத்தை மீறியிருக்கிறது போலீசு.

அதன் பின்னர் நவம்பர் 7-ஆம் தேதி அரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோம் என சவுமியாவை அழைத்துச் சென்று காப்பகத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  அங்கும் அவரது தாயாரை அருகில் கூட இருக்க அனுமதிக்கவில்லை. போலீசே சவுமியாவின் பெற்றோரை பேருந்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் பின்னரும் குற்றவாளிகளைத் தண்டிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாலியல் வன்முறை சம்பவம் நடந்த இடத்திலிருந்த தடயங்களைக் கூட எடுக்கவில்லை.

இந்நிலையில், சவுமியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளதாகவும் போலீசு தரப்பிலிருந்து தகவல் வருகிறது. உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர்களும் அலட்சியமாகவே சிகிச்சை அளித்துள்ளனர். பாலியல் வல்லுறவு காரணமாக ஏற்பட்ட இரத்த இழப்பு அவரது உடல்நிலை மோசமடையக் காரணம் என்று கூறப்பட்டது. அதற்கு உரிய மருத்துவம் அளிக்காமல், சவுமியாவிற்கு தூக்க மாத்திரை மட்டுமே மருத்துவர்கள் கொடுத்தனர் என்கிறார் சவுமியாவின் அக்கா.

கொலைகார கிரிமினல்கள்.

கடந்த சனிக்கிழமை (10-11-2018) அன்று காலையில் சிகிச்சை முறையாக கொடுக்கப்படாததன் காரணமாக சவுமியா மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்களும் சவுமியாவின் உறவினர்களும் போலீசின் அயோக்கியத்தனத்தையும், மருத்துவர்களின் அலட்சியப் போக்கையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு துணை போன போலீசு மற்றும் மோசமான சிகிச்சை அளித்த மருத்துவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போதைக்கு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாகவும், 48 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்வதாகவும் கூறி மாணவியின் உடலை வாங்கச் செய்தது மாவட்ட நிர்வாகம்.

மக்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் இச்செய்தி மைய ஊடகங்களில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினையின் உண்மையான நிலை வெளிவரக் கூடாது என்பதை மனதில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் சவுமியாவின் குடும்பத்தினரிடம், ஒரு கோடி நிவாரணப் பணம் பெற்றுத் தருவதாகவும், இச்சம்பவம் குறித்து மீடியாக்களிடமும், விசாரிக்கும் யாரிடமும் எதுவும் பேசக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

பல்வேறு பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பான, வன்முறைக்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்கள் 12 பேரும்  ஆண் தோழர்கள் 2 பேரும், ஒரு பள்ளிக் குழந்தை என மொத்தம் 15 பேர், இது குறித்து விசாரிக்கவும், மரணமடைந்த மாணவி சவுமியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் அங்கு கடந்த நவம்பர் 13 அன்று சென்றுள்ளனர்.

நவம்பர் 13 அன்று அ.தி.மு.க. அமைச்சர் அன்பழகன், வரவிருந்ததை ஒட்டி, சவுமியாவின் வீட்டில் முன்னமே வந்திறங்கியிருந்த அ.தி.மு.க. அல்லக்கைகள், சவுமியாவின் குடும்பத்தாரை பெண் தோழர்களிடம் எதுவும் கூறக்கூடாது என மிரட்டியிருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் வரும் நேரம் நெருங்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசு படைகளைக் குவித்து சந்திக்கச் சென்ற பெண் தோழர்களை உடனடியாக அங்கிருந்து கிளம்பக் கூறி வலியுறுத்தியது போலீசு.

போலீசோடு வாக்குவாதம் செய்தும் பலனற்ற நிலையில், பாலியல் வன்முறை சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட பெண்கள் கூட்டமைப்பினர் சென்றிருக்கின்றனர். சுமார் 100 பேர் கொண்ட குண்டாந்தடி போலீசு கும்பல் ஒன்று அவர்களை சுற்றி வளைத்து அப்பகுதியிலிருந்து அவர்களை வெளியேறுமாறு நிர்பந்தித்தது. அவர்களை போலீசு வாகனத்தில் ஏறுமாறு மிரட்டியது.

தடயத்தைக் கூட இன்னும் சேகரிக்கவில்லை போலீசு.

அதனை மறுத்து தாங்கள் வந்த வாகனத்திலேயே திரும்பினர் பெண் தோழர்கள். அவர்களது பாதுகாப்பிற்காக வருவதாகக் கூறி அவர்களது வாகனத்திற்கு முன்னும் பின்னும் போலீசு வாகனங்கள் புடைசூழ அழைத்து வந்தது. இடையே திருநங்கையர் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்லவேண்டும் எனக் கூறியபோது, போலீசாரும் உடன் வருவார்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் கூறி கெடுபிடி செய்திருக்கிறது போலீசு.

அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் அரூர் சி-1 போலீசு நிலையத்தில் இருக்கவைத்தது. தனது தாயுடன் இந்தக் குழுவில் உடன் வந்த பள்ளி மாணவி நேயாவிற்கு உடல் பிரச்சினைக்கு மருத்துவம் எடுக்க வேண்டிய சூழலை அவரது தாயார் எடுத்துக் கூறியும் அதற்கு அனுமதிக்க மறுத்துள்ளது போலீசு. இத்தனைக்கும் மாணவி நேயா தலைவலி தொடங்கி அழ ஆரம்பித்திருக்கிறார். அச்சூழலிலும் மருத்துவமனைக்கு அனுமதிக்க மறுத்துள்ளது போலீசு காட்டுமிராண்டிக் கும்பல்.

அதன் பின்னர், மாலையில் 4 பேர் மீது மட்டும் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் சட்டவிரோதமாகக் கூடுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்துள்ளது போலீசு. கைது செய்தால் அனைவரையும் கைது செய், இல்லையேல் அனைவரையும் விடுதலை செய் என பெண் தோழர்கள் அனைவரும் கூறியிருக்கின்றனர். ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல் மற்றவர்கள் அனைவரையும் தனி வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள நகர்ப்பகுதியில் இறக்கி விட்டுள்ளது போலீசு.

கைது செய்யப்பட்டு ரிமாண்டு செய்யப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு.

தோழர் வளர்மதி – பொது நல மாணவர் எழுச்சி இயக்கம்.
தோழர் மகாலெட்சுமி – பெண்கள் எழுச்சி இயக்கம்.
தோழர் ராமகிருஷ்ணன் – வங்கி அலுவலர்.
தோழர் வேடியப்பன் – சமூக ஆர்வலர்.

மாணவி சவுமியா படுகொலையில் முதல் குற்றவாளி போலீசு, இரண்டாவது குற்றவாளியாக இருப்பது மருத்துவமனை நிர்வாகம் என குற்றம்சாட்டுகின்றனர், உண்மையறியும் குழுவினர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர், அதுகுறித்து புகார் கொடுக்கப்பட்ட போது உடனடியாக ஏற்க மறுத்திருக்கிறது போலீசு. அதன் பின்னர் உயரதிகாரிகளைப் பார்த்து மனுகொடுக்கப் போகிறோம் என சவுமியா குடும்பத்தினர் சொன்ன பிறகுதான் வழக்குப் பதிவு செய்துள்ளது. மாணவி என்ற வகையில் இந்த வழக்கை போக்சோ பிரிவின் கீழ் முதலில் பதிவு செய்யவில்லை. நெருக்கடி கொடுக்கப்பட்ட பிறகே பதிவு செய்துள்ளது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட போதே கடுமையான உதிரப் போக்குக்கு ஆளான சவுமியா உடல் நலமில்லாத நிலையில் இருந்த போதும், மருத்துவமனையில் அனுமதிப்பதற்குப் பதிலாக அருகில் உள்ள அரசு காப்பகத்தில் அவரை ஒரு நாள் வைத்துள்ளது.

அங்கும் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீசு. மருத்துவமனை நிர்வாகம் மாணவி சவுமியாவிற்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தூக்க மாத்திரை கொடுத்துள்ளது. முறையாக மருத்துவர் வந்து பார்க்கவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் மாணவி சவுமியா கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்தப் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.

#JusticeForSowmiya

தொடர்புடைய பதிவு:

அரியலூர் நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

சோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் !

சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 3

காஞ்சிபுரம்:

“மக்களை மரணக் குழியில் தள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்’’ என்ற முழக்கத்தின் கீழ் காஞ்சிபுரம் பகுதி பு.மா.இ.மு மற்றும் பு.ஜ.தொ.மு சார்பாக கடந்த நவ-11 அன்று காஞ்சிபுரம் – அப்துல்லாபுரம் பகுதியில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு 90 பேர் கலந்து கொண்டு குடும்ப விழாவாகக் கொண்டாடினர்.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி பறையிசையோடு துவங்கிய இந்நிகழ்ச்சியில் புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன. காவியும் கார்ப்பரேட்மயமும் என்ற நாடகம்; நவீன ஔவையார் உரை ஆகியன நிகழ்த்தப்பட்டன.

இறுதி நிகழ்வாக, ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் துரை.சண்முகம் நவம்பர் புரட்சி தின விழாவின் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றினார். ரஷ்ய புரட்சியின் வரலாற்று ஆவணங்களை பட்டியலிட்ட அவர், இங்கு நாட்டு மக்களை மரணக்குழியில் தள்ளும் ஆர்.எஸ்.எஸ். மதவெறிக்கும்பலையும் அக்கும்பலின் புராண புளுகுகளையும் அம்பலப்படுத்தினார். கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கமாக அணிதிரண்டு மோதி வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பு.மா.இ.மு. காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் துணைவேந்தன் நன்றியுரையாற்ற, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தோடு நவம்பர் புரட்சி தின விழா நிறைவு பெற்றது.

***

வேலூர்:

“மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக “நவம்பர் 7 ருஷ்யப் புரட்சியின் 101 வது ஆண்டு விழா” 11.11.2018 அன்று மாலை வேலூரில் கொண்டாடப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் வாணி விழாவிற்கு தலைமையேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். “சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக் கூடாது?” என்கிற தலைப்பில் இந்த பிரச்சனையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்களின் அரசியலை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் உரையாற்றினார்.

“லெனின் யார்? அவரை ஏன் எனக்குப் பிடிக்கும்!” என்கிற தலைப்பில் அனைவருக்கும் இலவசக் கல்வி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கியவர் லெனின், அதனால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என பள்ளி மாணவர் சந்தோஷ் ஆற்றிய உரை சிறுவர்களை உற்சாகப்படுத்தியது.

நாடெங்கிலும் நடக்கும் கௌரவக் கொலைகள் மற்றும் ஆணவப் படுகொலைகளைப் பட்டியலிட்டு இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் பார்ப்பன பாசிசத்திற்கு சவக்குழி தோண்டுவதோடு சாதி பேதமற்ற சோசலிச இந்தியாவை உருவாக்குவதுதான் ஒரே வழி என்றார், ஆலைத் தொழிலாளி வில்சன்.

ஆண் – பெண் சமத்துவத்தை தனக்கு உணர்த்தியது மார்க்சியம். பழைய பிற்போக்கு சாதி – மதச் சடங்குகளிலிருந்து விடுவித்து அறிவியல் பூர்வமான செயல்களில் தன்னை மாற்றி அமைத்தது மார்க்சியம் என்பதை தனது சொந்த அனுபவத்திலிருந்து மார்க்சியத்தின் அவசியம் குறித்து “பார்ப்பன வாழ்க்கை முறையும் கம்யூனிச வாழ்க்கை முறையும்” என்கிற தலைப்பில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன்.

அடுப்படியில் சிக்கியிருந்த பெண்களை விடுவித்து அவர்களையும் ஆண்களுக்கு நிகராக சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தி பெண்களின் விடுதலைக்கு வித்திட்டது நவம்பர் புரட்சி என்பதை மிக எளிமையாக எடுத்துரைத்தார், அடுக்கம்பாறை பு.ஜ.தொ.மு. கிளைத் தலைவர் தோழர் முருகன்.

மார்க்சிய அரசியலை கற்றுக் கொண்டு சமூக விடுதலைக்குப் போராடும் போதுதான் பெண் விடுதலையும் சாத்தியம் என விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார் வழக்கறிஞர் பாலு.

இன்றைய சமூக அமைப்பில் அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு மருத்துவம் மறுக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்தார் மாணவி செஞ்சுடர்.

தோழர் துரை.சண்முகம் எழுதிய தீபாவளி – நமக்கு தீராவலி ; நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டன.

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில் சோசலிமே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது? என்கிற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சேகர் நிறைவுரையாற்றினார்.

விழாவில் இடையிடையே “கட்டபொம்மன், ஊமைத்துரை, சின்ன மருது, பெரிய மருது”…., “சபரி மலைக்கு வந்தா தீட்டா தீட்டா?”…, “பாரத மாதா நீயும் பாத்து இருந்துக்க பத்திரமா!”.., “மலைகளையே பிளந்திட்டோம்”…, “நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு…. ஆகிய பாடல்கள் பாடப்பட்டன.

நவம்பர் புரட்சி விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றது மட்டுமன்றி இதில் சரி பாதிப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

***

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 10.11.2018, சனிக்கிழமை அன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சிநாளையொட்டி அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் ரஞ்சித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. பு.மா.இ.மு. மாணவர்கள் சார்பாக பறையிசை, சிலம்பாட்டம் நடத்தப்பட்டன.

திருவாரூர் பகுதியில் செயல்படும் மாற்று அமைப்பைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் இவ்விழாவில் பங்கெடுத்து உரையாற்றினர். இறுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் “சோவியத் யூனியன் இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தை வேரோடு அழித்தது. அதைப்போல் நமது நாட்டில் தலைவிரித்தாடும் பார்ப்பன பாசிசத்தையும், ஏகாதிபத்திய – தரகுமுதலாளிகளின் சுரண்டலையும் ஒழித்துக்கட்ட  அணிதிரள வேண்டும்” என்று மாணவர்கள், இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சர்வதேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

***

தஞ்சாவூர்:

.க.இ.க., பு.மா.இ.மு. தஞ்சைக் கிளை சார்பாக கீழவாசல் காமராஜர் சிலை அருகில், நவ-07 அன்று நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழாவில், ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் செங்கொடியேற்றி வைத்தார். மேலும், கீழவாசல் கடைவீதியில் குழுமியிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நவம்பர் புரட்சிநாளை கொண்டாடுவதன் நோக்கத்தை விளக்கிக்கூறும் பிரசுரங்களையும் இனிப்பு – பழங்களையும் விநியோகித்தனர்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் – 10 அன்று மாலை தஞ்சை பெசண்ட் அரங்கில் ” கம்யூனிசம் கனவல்ல அது மனித குலத்தின் மகத்தான இறுதி இலட்சியம்! மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” என்ற முழக்கங்களை முன்வைத்து அரங்கக்கூட்டம் நடைபெற்றது. ம.க.இ.க. தஞ்சைக் கிளை செயலர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். மேலும், பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் பாண்டியன், AITUC மாவட்டத் தலைவர் தோழர் சேவையா, சி.பி.ஐ.(எம்-எல்) மக்கள் விடுதலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருணாச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர்.

தொகுப்பு:

பாவெல் வந்துவிட்டான் ! வீடு வந்து சேர்ந்துவிட்டான் !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 22

மாக்சிம் கார்க்கி

ரு ஞாயிற்றுக்கிழமையன்று தாய் கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்ததும் கதவைத் திறந்தாள்; திறந்தவுடனேயே வாசல் நடையில் அப்படியே நின்றுவிட்டாள். வேனிற்கால மழையிலே நனைந்து விட்டதைப் போன்ற குதூகலத்தில் முங்கித் திளைத்து தன்னிலை மறந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனெனில் வீட்டினுள் பாவெலின் வலுவான குரல் கேட்டது.

“இதோ அவளும் வந்துவிட்டாளே” என்று கத்தினான் ஹஹோல். திடீரெனத் திரும்பிய பாவெலின் முகத்தில் ஏதோ ஆறுதல் தரும் உறுதிமிக்க உணர்ச்சி பிரகாசிப்பதாக அவளுக்குத் தோன்றியது.

“வந்துவிட்டான் – வீடு வந்து சேர்ந்துவிட்டான்” என்று அவள் தடுமாறிக் குழறினாள். அவனது எதிர்பாராத வரவினால் அவள் மெய்மறந்து நிலை குழம்பிப்போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

அவன் தனது வெளிறிய முகத்தை அவள் பக்கமாகக் கொண்டு போனான். அவனது உதடுகள் துடித்து நடுங்கின. கண்ணின் கடையோரத்தில் ஈரம் பளபளத்துக் கசிந்தது. ஒரு கணநேரம் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் அவனை மெளனமாக வெறித்துப் பார்த்தாள்.

ஹஹோல் அவர்களைவிட்டு விலகி வெளி முற்றத்துக்கு வந்து சீட்டியடிக்கத் தொடங்கினான்.

“நன்றி, அம்மா!” என்று தணிந்த குரலில் தளதளத்துக்கொண்டே தனது நடுங்கும் விரல்களால் அவளது கரத்தைப் பற்றி அழுத்தினான் பாவெல், “என் அன்பே மிகுந்த நன்றி.”

“அவனது முகத்திலே தோன்றிய உணர்ச்சியையும், சொல்லிலே தொனித்த இனிமையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்து தன்னை மறந்துபோன அந்தத் தாய், மகனின் தலையைத் தடவிக் கொடுத்தாள். தனது இதயத்தின் படபடப்பைச் சாந்தி செய்ய முயன்றாள்.

“அட கடவுளே, எனக்கு எதற்காக நன்றி கூறுகிறாய்?” என்றாள் தாய்.

”எங்களது மகத்தான கருமத்தில் நீ ஒத்துழைத்ததற்காக! உனக்கு நன்றி, அம்மா” என்று திரும்பச் சொன்னான். “தானும் தன் தாயும் ஒரே மாதிரி உணர்ச்சி கொண்டவர்கள், ஒரே கொள்கை வசப்பட்டவர்கள் என்று ஒருவன் கூறிக்கொள்வது கிடைப்பதற்கரிய பேரானந்தம், அம்மா!”

அவள் மௌனமாக இருந்தாள். அவனது வார்த்தைகளைத் திறந்த மனத்தோடு ஆர்வத்தோடு அள்ளிப் பருகினாள். தன் முன்னே மிகவும் நல்லவனாக, அன்புருவமாக நின்ற தன் மகனைக் கண்டு வியந்து கொண்டிருந்தாள் தாய்.

”அம்மா, உனக்கு எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏதேதோ உன் மனத்தைப் பிடித்து இழுத்தது என்பது எனக்குத் தெரியும். நீ எங்கள் கருத்துக்களோடு ஒத்துவரமாட்டாய், எங்கள் கருத்துக்கள் உன் கருத்துக்களாக என்றுமே ஆகப்போவதில்லை என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால், நீ உன் வாழ்க்கை முழுவதையும் எப்படிப் பொறுத்துச் சகித்து ஏற்றுவந்தாயோ, அது போலவே மெளனமாகப் பொறுத்து விடுவாய் என்றுதான் நான் நினைத்தேன், அதுவே எனக்குச் சங்கடமாயிருந்தது.”

படிக்க:
சர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா ? வாழ வைத்தனவா ?
தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

“அந்திரியூஷா எனக்கு எவ்வளவோ விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவி செய்தான்” என்றாள் அவள்.

”அவன் உன்னைப் பற்றிச் சொன்னான்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

“இகோரும் கூடத்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அந்திரியூஷா எனக்கு எழுதப்படிக்கக்கூடக் கற்றுக்கொடுக்க விரும்பினான்.”

”ஆனால் நீ வெட்கப்பட்டுப்போய், யாருக்கும் தெரியாமல் இரகசியத்தில் எழுதப் படிக்க முனைந்தாய். இல்லையா?”

“அதுகூட அவனுக்குத் தெரியுமா?” என்று வியந்தாள் அவள். தனது இதயத்தில் பொங்கிய ஆனந்தத்தோடு அவள் பாவெலை நோக்கிச் சொன்னாள்:

”அவனை உள்ளே கூப்பிடு. நம்மிருவருக்கும் இடையில் தானும் இருக்க வேண்டாம் என்றுதான் அவன் வெளியே போனான். பாவம், அவனுக்கு என்று ஒரு தாய் இல்லை…..”

”அந்திரேய்!’ என்று வாசற்கதவைத் திறந்து கொண்டே கூப்பிட்டான் பாவெல்; “நீ எங்கே இருக்கிறாய்?”

”இங்கேதான். கொஞ்சம் விறகு தறிக்க வேண்டும்.”

“வா இங்கே!”

அவன் உடனே வந்துவிடவில்லை. சிறிது நேரம் கழித்து சமையல் கட்டுக்குள் வந்து வீட்டு விஷயங்களைப் பேசத் தொடங்கினான்.

“நிகலாயிடம் சொல்லி கொஞ்சம் விறகு கொண்டுவரச் சொல்ல வேண்டும். இங்கு விறகு அதிகமில்லை. அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.”

தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் இன்னும் ஆனந்தத்தில்தான் திளைத்திருந்தாள். அவளது இதயம் இன்பகரமாகத் துடித்தது என்றாலும் தன் மகனை அவனது வழக்கமான அமைதியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வ உணர்ச்சி அவளுக்கு உந்தியெழுந்தது. எல்லாமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவளது வாழ்க்கையில் முதன்முதலாக ஏற்பட்டுள்ள இந்தப் பேரானந்தம் என்றும் எப்போதும், இன்றிருப்பது போலவே, வலிவும் வனப்பும் பெற்று நிலைத்திருக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அந்தப் பேரானந்தம் எங்கே கரைந்தோடிவிடப் போகிறதோ என்று பயந்து, அவள் அந்த ஆனந்தத்தை வெளியிடாமல் தன்னுள்ளேயே அடக்கிச் சிறை செய்ய முயன்றாள். அபூர்வமான பறவையொன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணியில் சிக்கிவிட்டால், ஒரு பறவை பிடிப்பவன் அது பறந்து போய்விடாமல் எப்படி பிடித்து அடைப்பானோ அந்த மாதிரி இருந்தது அவளது பரபரப்பு.

”சரி, நாம் சாப்பிடலாம், நீ இன்னும் ஒன்றும் சாப்பிடவில்லையே, பாஷா?” என்று பரபரப்போடு கேட்டாள் அவள்.

“இல்லை, நேற்று சிறையதிகாரி என்னை விடுதலை பண்ணப்போகும் செய்தியைச் சொன்னார், அதிலிருந்து எனக்குச் சாப்பாடும் செல்லவில்லை; தண்ணீர்கூட இறங்கவில்லை” என்றான் பாவெல்.

“சிறையை விட்டு வெளியே வந்ததும் முதன் முதல் நான் சந்தித்தது சிஸோவைத்தான்” என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தான் பாவெல். “என்னைக் கண்டவுடன் வரவேற்றுப் பேசுவதற்காக அவன் தெருவைக் கடந்து வந்தான். நான் அவனை எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லிவைத்தேன். இப்போதுதான் நான் ஒரு பயங்கர ஆசாமியாச்சே! அதிலும் போலீஸ் கண்காணிப்பிலுள்ள ஆசாமி.’ ‘சரி, அந்தக் கவலை வேண்டாம்’ என்றான் அவன். ‘அவனது மருமகனைப் பற்றி அவன் விசாரித்ததை நீ கேட்டிருக்க வேண்டும்.’ ‘பியோதர் ஒழுங்காக இருக்கிறான் அல்லவா?’ என்று கேட்டான். ‘சிறையில் எப்படியப்பா ஒழுங்காக இருப்பது?’ என்றேன் நான். ‘சரி, அவன் தன் தோழர்களுக்கு எதிராக ஏதாவது உளறிக் கொட்டுகிறானா?” என்று கேட்டான் சிஸோவ். பியோதர் ரொம்பவும் நல்லவன். யோக்கியன், புத்திசாலி என்று நான் சொன்னேன். உடனே அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, ‘எங்கள் குடும்பத்தில் மோசமானவர்கள் பிறப்பதில்லை!” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டான்.

”அந்தக் கிழவனுக்கும் மூளை இருக்கிறது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல். “அவனோடு நான் எத்தனையோ முறை பேசியிருக்கிறேன். ரொம்ப நல்லவன். சரி, அவர்கள் பியோதரையும் சீக்கிரம் விடுதலை செய்யப் போகிறார்களா?”

“எல்லோரையுமே விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கிழட்டு இஸாய் சொல்லும் சாட்சியத்தைத் தவிர, அவர்களுக்கு எதிராக எந்தச் சாட்சியமும் கிடையாது. அவன்தான் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறான்?”

மகனின் மீது தன் பார்வையைச் செலுத்தியவாறே தாய் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள். அந்திரேய் தன்னிரு கைகளையும் பிடரியில் கோத்துக்கொண்டு ஜன்னலுக்கு நேராக நின்று பாவெல் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். பாவெல் அங்குமிங்கும் உலவினான். அவனுக்குத் தாடி அதிகம் வளர்ந்து போயிருந்தது. அழகான கருமயிர்ச் சுருள்கள் கன்னம் இரண்டிலும் சுருண்டு வளர்ந்து அவனது கரிய சருமத்தை இதப்படுத்திக் காண்பித்தன.

“உட்காருங்கள்” என்று சாப்பாட்டைக் கொண்டுவந்தவாறே சொன்னாள் தாய்.

சாப்பிடும்போது அந்திரேய் பாவெலிடம் ரீபினைப் பற்றிச் சொன்னான். அவன் பேசி முடித்ததும், பாவெல் வருத்தத்தோடு பதிலுரைத்தான்.

“நான் மட்டும் இங்கிருந்தால். அவனை நான் போகவிட்டிருக்கமாட்டேன். அவன் செல்லும்போது என்னத்தைக் கொண்டு போனான்? மனக்கசப்பையும் மனக் குழப்பத்தையும்தான் சுமந்து சென்றான்.”

”சரி, ஆனால் ஒரு மனிதன் நாற்பது வயதை எட்டிய பிறகு. அத்தனை காலமும் தன் இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக்கொண்டிருந்த பிறகு, அவனைச் சீர்திருத்தி வழிக்குக் கொண்டுவருவது என்ன, லேசுப்பட்ட காரியமா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.

அவர்கள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். அந்த விவாதத்தில் வார்த்தைகள்தான் மலிந்திருந்தனவாகத் தோன்றியதே ஒழிய, அதிலிருந்து எந்த விஷயத்தையும் தாயால் கிரகித்துக் கொள்ள இயலவில்லை. சாப்பாடு முடிந்தது. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தடபுடலான வார்த்தையலங்காரத்தோடு வாதாடிக்கொண்டிருந்தார்கள். சில சமயங்களில்தான் அவர்கள் தெளிவாகவும் எளிமையாகவும் பேசினார்கள்.

படிக்க:
தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !
கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !

“நாம் நமது கொள்கையில் ஓரடி கூடப் பின்வாங்காது நிலைத்துநின்று முன்னேற வேண்டும்” என்று உறுதியோடு சொன்னான் பாவெல்.

“ஆமாம் நம்மையெல்லாம் தங்களது எதிரிகள் என்று கருதும் பல்லாயிரங்கோடி மக்களிடையே நாம் கண்மூடித்தனமாக முன்னேற வேண்டும். இல்லையா…?”

அவர்கள் விவாதித்துக்கொள்வதைக் கேட்ட தாய்க்கு, ஒன்று, மட்டும் புரிந்தது. விவசாய மக்களால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லையென்பது பாவெலின் கட்சி. எது உண்மை, எது நியாயம் என்பதை முஜீக்குகளுக்கும் கற்றுக்கொடுக்க முயலத்தான் வேண்டும் என்பது ஹஹோலின் கட்சி. அவளுக்கு அந்திரேயின் வாதம்தான் புரிந்தது. அவன்தான் உண்மையோடு ஒட்டி நிற்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே, அவன் பாவெலிடம் பேசத் தொடங்கும்போதெல்லாம் அவள் ஆர்வத்தோடும் பாதுகாப்புணர்ச்சியோடும் அவன் பேச்சைக் கவனித்துக் கேட்டாள். ஹஹோலின் பேச்சு பாவெலைப் புண்படுத்திவிடவில்லை என்பதைத் தன் மகனது பதிலைக் கொண்டுதான் தெரிந்து கொள்ள முடியும் என்று கருதி, மகனது பதிலுக்காக மூச்சுக்கூட விடாமல் காத்திருந்து பார்த்தாள் தாய். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் விபரீதமாகவோ குற்றமாகவோ கருதாமல் காரசாரமாக இருவரும் கத்திக்கொண்டிருந்தார்கள்.

சமயங்களில் தாய் தன் மகனைப் பார்த்துச் சொல்லுவாள்:

“அப்படியா பாவெல்?”

அவனும் ஒரு சிறு புன்னகையோடு பதிலளிப்பான்:

“ஆமாம். அப்படித்தான்.”

“ஆஹா, என் அன்பே” என்று சிநேக பாவமான கிண்டலோடு பேசத் தொடங்கினான் ஹஹோல். “கனவானே, நீங்கள் வயிறு முட்டச் சாப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நன்றாக அசைபோட்டுத்தான் தின்னவில்லை. அதனால் தொண்டைக்குழியில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் அதைக் கழுவித் துடைத்துவிட்டு வருக.”

”என்னை அசடாக்கப் பார்க்காதே” என்றான் பாவெல்.

“விளையாட்டில்லை அப்பனே!”

தாய் சிரித்தவாறே, தலையை ஆட்டிக்கொண்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

62
வில்லவன்

டவுள் கையேந்தி நிற்கும் அவலம் கண்டதுண்டா நீங்கள்? அது தமிழ்நாட்டில் தினசரி காணக்கிடைக்கும் காட்சி. கடவுளுக்கும் மேலான எங்களை கடவுளாகவே மக்கள் கருதி வந்தார்கள். கோயில் ராஜாக்கள் வசம் இருந்தது. ராஜாக்களோ எங்கள் வசம் இருந்தார்கள். எங்கள் வீடுகள் வெள்ளம் அண்டாத மேடான நிலத்தில் இருந்தது. வயலில் கால் வைக்காமலேயே எங்கள் வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தது. ”சாப்பிடுறதுதான் தயிர் சாதம், மோதிப்பார்த்தா உயிர்சேதம்” என ஸ்டேட்டஸ் போடவேண்டிய நிலை எங்களுக்கு அன்று இல்லை. காரணம் ஊரில் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது.

ஹிந்து ராஜாக்கள் காலத்தில் வாழ்ந்தது போலவே முகலாயர்கள் காலத்திலும் சௌபாக்கியத்துக்கு குறைவின்றியே வாழ்ந்துவந்தோம். வெள்ளைக்காரன் காலத்திலும் அசௌகர்யம் என்று ஒன்று இல்லை. சாதி ஒழிப்பு, சூத்திரர்களுக்கு கல்வி போன்ற சில அனாச்சாரங்கள் அப்போது இருந்தன என்றாலும் அதிகாரம் எங்களிடம் இருந்தது. உலகமே பயந்த ஹிட்லருக்கு நாங்கள் பயப்படவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஜெர்மன் மொழி கற்ற வீர சமூகம் எங்களுடையது.

ஆனால் இன்று அவை பழங்கதை ஆகிவிட்டன. முதல்வரைக் காட்டிலும் அதிகாரம் கொண்ட தலைமைச் செயலாளர் எங்களவர். ஆனாலும் மக்களிடம் மரியாதை இல்லை. எல்லா பெரிய நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் எங்கள் வசம்தான். ஆனாலும் எங்கள் குலக் கொழுந்துகளுக்கு மீடியா பெண்களை வேசி என அழைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. மீடியா ஓனர்கள் எங்களை பாதகமலங்களில் வீழ்ந்துகிடக்கும் சூழல் இருந்தாலும் எங்கள் பிள்ளை பாண்டேவால்கூட எங்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை. வியாபாரத்துக்காக பா.ஜ.க.வை நோண்டி நோண்டி கேள்வி கேட்கவேண்டிய தலைவிதியல்லவா அவனுக்கும்?

ஆயிரம்தான் கூமுட்டையாக இருந்தாலும் சுப்ரமணியசாமியை கோமாளிபோல பார்ப்பது நியாயமா? குருமூர்த்தியும் எச்.ராஜாவும் தமது குலவழக்கப்படி ஒரு வதந்தியைக்கூட ட்விட்டர் வாயிலாக பரப்ப முடியாத அளவுக்கு மக்கள் அவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்களின் கூடாரமாக இந்த மாநிலம் இருக்கிறது. மோடியையே அதிகாரம் செய்யவல்ல ஜாதி எங்களுடையது. ஆனாலும் ஷர்மா சாஸ்திரிகளால் ”நம்ம ஜாதி பிள்ளைகள் ஸ்கூல்ல மத்த சாதி கொழந்தைகளோட சாப்பாட்டுல கைவச்சு சாப்பிடக்கூடாது” ன்னு நேரடியாக சொல்ல முடியவில்லை.. அது சுகாதாரம் இல்ல, அதனால் பல விளைவுகள் ஏற்படும்னு மையமாக புலம்ப வேண்டியிருக்கு. எங்கள் தர்மத்தைக்கூட குசுவைப்போல நசுக்கி விடவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி புலம்பி ஸ்டேட்டசோ வீடியோவோ போட்டால் 28 லைக் வருவதற்கும் 750 ஹாஹா ஸ்மைலிகள் அசுர பாணங்களாக வந்து எங்கள் நெஞ்சைத் தைக்கிறதே…

படிக்க:
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !

கோட்சே.

எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்… இந்த பெயர் வரிசையை படிக்கும்போது கெடா குமாரு, டுமீல்குப்பம் வவ்வாலு எனும் சினிமா டயலாக் எனக்கே நினைவு வந்து தொலைக்கிறது. பிறகு ஊர்ஜனம் மட்டும் சிரிக்காமல் இருக்குமா? இந்த எழவெடுத்த இன்டர்நெட் ஒருகாலத்தில் எங்கள் அக்ரஹார திண்ணை போல எத்தனை ரம்மியமாக இருந்தது. இப்போது பீஃப் கடைக்கு போவதுபோல நாங்கள் அங்கு ரகசியமாகத்தான் போக வேண்டியிருக்கிறது.

ஆசிட் அடிப்பது கஞ்சா கேஸ் போடுவது என பல வீர வரலாறு இருந்தாலும் எங்கள் குலமங்கை ஜெயாவை வைத்தே சங்கராச்சாரியை கைது செய்ய வைத்துவிட்டதே இந்த சூத்திர கும்பல். சரி நிம்மியை அடுத்த ஜெ.வாக மாற்றிவிட்டால் எல்லாம் ஷேமமாக நடக்கும் என நாங்கள் ஆறுதல்படும் வேளையில், அந்த தைரிய லட்சுமியை கண்டாலே தமிழக இளைஞர்கள் கூட்டம் ஓணானைக் கண்ட 80-ஸ் கிட்ஸாக மாறி விர்ச்சுவல் கல்லெடுத்து அடிக்கின்றன. போகட்டும் ஜனநாயக மேக்கப் போட்ட பத்ரியை தலைவராக்கலாம் என்றால் அவருக்கும் அதே ஓணான் டிரீட்மெண்ட் கிடைத்துவிடுமோ என அடிவயிறு கலங்குகிறது.

அதுமட்டும் இல்லாமல் இருக்கும் மிச்சம் மீதியெல்லாம் பொறுக்கியாகவும் கூமுட்டையாகவும் இருக்கிறது. இதில் இருக்கும் டெமாக்ரடிக் மூஞ்சியையும் காவு கொடுக்க பயமாயிருக்கிறது. மோடியின் ராஜகுரு குருமூர்த்தி அரும்பாடுபட்டு அறிமுகம் செய்த தீபா விளங்கவில்லை. ஓ.பி.எஸ்.சை வளர்க்கிறேன் என கிளம்பினார் அதனால் சசிகலா மீதிருந்த ஜனங்களின் கோபம் குறைந்து போனதுதான் மிச்சம். ரஜினியை உசுப்பினார், அன்றிலிருந்து அது வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட மெண்டல்போல உளறிவைக்கிறது. இதையெல்லாம் பார்த்த எங்கள் வீட்டு மாமியே, இந்த தரித்திரம் பிடித்தவன் மூஞ்சியில் முழிச்சிட்டு போனா பால் பாக்கெட்கூட கிடைக்கிறது இல்லை என புலம்புகிறாள்.

இத்தனை காலம் நாத்திகம் பேசி மாட்டுக்கறி தின்றவராயிற்றே எனும் நன்றியில்லாமல் பிராமண வீட்டுப் பிள்ளை கமலையும் கழுவி ஊற்றுகிறார்கள், அய்யங்கார் வீட்டு மருமகன் ரஜினியையும் பார்க்குமிடமெல்லாம் துப்புகிறார்கள். இவனுங்களை எப்படி கரெட்க் பண்றதுன்னே தெரியலையே என ஆர்யா போல புலம்பியே எங்கள் மாமாக்கள் பலர் உலக வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டார்கள். ஒரு காலத்தில் எங்கள் வீட்டு நாயாக இருந்த மக்களின் பிள்ளைகள் எதிரியின் வேட்டை நாயாக மாறி எங்களையே கடிக்க வருகின்றன. ஏதோ ஆதிக்க சாதிச்சங்கங்களும் கிருஷ்ணசாமி வகையறாக்களும் (பேரை மாத்தி வச்சுக்கோடாம்பி… அவா அவாளுக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கோல்யோ) எங்களை காலைக் கழுவி சேவகம் செய்வதால் எங்கள் மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஸ்தவ சூத்திரன் விஜய் படத்தை காலி செய்ய எங்கள் பிராமண தளபதி ராஜாவை அனுப்பினால் தமிழக அசுர கும்பல் அந்த மெர்சல் படத்தை வெறித்தனமாக ஓடவைக்கிறது. அதன் பிறகு கோடம்பாக்க டைரக்டர்கள் எல்லோரும் பா.ஜ.க.வை திட்டி காட்சி அமைப்பதற்கென்றே தனி டிஸ்கஷன் வைத்தார்கள் என கேள்விப்பட்டேன். ஏதோ வருமான வரித்துறை எங்கள் வசம் இருப்பதால் தப்பித்தோம். அடுத்த விஜய் படத்தை ஒழிக்க நாங்கள் ஜெயமோகன் எனும் சூத்திரனைத்தான் அனுப்ப வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் எங்கள் காலடியில் கிடந்தது சினிமாத்துறை. மணி சார், பாலச்சந்தர் சார் என பயபக்தியோடு ஒலித்த குரல்களை இன்று கேட்க முடியவில்லை. அரவிந்த் சாமி, மாதவன் என வெண்ணிற சாக்லேட் பாய்களை இன்று சீந்த நாதியில்லை. விஜய் சேதுபதி போன்ற கருப்பர் கூட்டமோ கால்ஷீட் இல்லாமல் பறந்து பறந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமா எங்களை விட்டு தொலைந்தது? கஷ்டப்பட்டு மந்திரம் ஓதி மஹாராஜாக்களுக்கு சோப்பு போட்டு சம்பாதித்த சதுர்வேதி மங்கலங்கள் எம்மிடம் இருந்தன. அவற்றை எல்லாம் நோகாமல் – உழைத்துப் பிழைத்த மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தர்மம் செய்தோம். இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள். ஏற்கனவே காதல் எனும் கருமத்தால் பல பெண்களை எங்கள் சமூகம் இழந்துகொண்டிருக்கிறது.

படிக்க:
யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !

ஸ்கூல் வாத்தியார், தாசில்தார், பேங்க் மேனேஜர் என நாங்கள் கட்டியாண்ட துறைகள் எல்லாம் கையைவிட்டுப் போய்விட்டது. ஆடிட்டர், நீதிபதி, கவர்னர் என சில டிபார்ட்மெண்ட்கள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. ஆனாலும் அங்கேயும் சில கறுப்பு உருவங்கள் வந்து எங்களோடு ஈஷிக்கொண்டு நிற்கின்றன. மயிலாப்பூர் மாம்பலமாவது மிச்சமானதா என்றால் அதுவும் இல்லை. அயோத்தியா மண்டப சொற்பொழிவானாலும் தெற்கு மாடவீதி எஸ்.வி.சேகர் மீட்டிங் ஆனாலும் எங்கள் இனத்தில் இருந்து வெறும் கிழடு கட்டைகள்தான் வருகின்றன. சுகர் பேஷண்ட்டுக்களை வைத்து எங்கிருந்து இன்னொரு குருஷேத்ரப் போரை நடத்துவது? அப்படி போரை நடத்தினாலும் அதை முன்னின்று நடத்த வேண்டிய சின்ன சங்கராச்சாரி மல்லாக்கப் படுத்தால் எழவே மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

போகட்டும், இன்றைய தமிழகம் வேண்டுமானால் எங்களை நக்கல் செய்யலாம். ஆனாலும் எங்களை ஆண்டவன் அப்படி அம்போவென விட்டுவிடமாட்டான். இன்னமும் கோயில்கள் எங்கள் வசம்தான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஷாகா நடத்தி வேண்டிய அளவுக்கு முட்டாள்களையும் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவோம். எங்கள் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டன. மேற்கத்திய சாவர்க்கர் ட்ரம்ப் அவர்கள் அதிபராக இருக்கிறார். ஆகவே அங்கிருந்து எங்கள் ராஜாங்கத்தை நடத்துவோம். மோடி என்றில்லை யார் இந்தியாவின் பிரதமரானாலும் அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் காணாமல் போகும் அல்லது தனியாருக்கு கைமாற்றிப்போகும். இலவசக் கல்வி ஒழிக்கப்பட்டு நாடெங்கும் படிப்பறிவற்ற முட்டாள்கள் இருந்தால் வாட்சப் வீடியோ வழியே வந்து நாங்கள் ராமராஜ்யம் அமைப்போம். பக்தியும் முட்டாள்த்தனமும் எங்களைக் காப்பாற்றும். வாட்சப் ஃபார்வேர்டு தகவல்களை நம்பும் மிடில்கிளாஸ் உள்ளவரை பிராமணீயம் எந்த சவாலையும் தாங்கும்.

ஒரு ஏழை பிராமணனின் குரல், உண்மை ஹிந்து எனில் அதிகம் பகிரவும்.

ஜெய்ஹிந்த்.

கொசுறு:

யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்

சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை பற்றி கேட்கையில், “எந்த ஏழு பேர் ?” என திருப்பிக் கேட்டார் ‘சூப்பர் ஸ்டார்’. பத்திரிக்கையாளர்கள் விளக்கிச் சொல்லியும், தனக்கு தெரியாது என அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆனால் அவர் கேள்வியை உள்வாங்கி பதில் சொல்லவில்லை, என தானாக வந்து அவருக்கு வக்காளத்து வாங்குகிறார் தமிழிசை. எல்லாம் அடுத்த தேர்தல் கணக்கிற்காகத்தான். மக்கள் மீதான பற்றும் சமூகத்தைப் பற்றிய அறிவுமில்லாத ரஜினி இப்படிச் சொன்னதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த ஆச்சரியமில்லைக்குரிய மனிதர்தான் இங்கே அடுத்த முதல்வர் போஸ்ட்டிற்கு கியூ வரிசையில் ஊடகங்களின் உதவியோடு போட்டி போடுகிறார்.

ரஜினியின் மேற்கண்ட உளறல் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்திருக்கிறோம். தான் அம்பலமான பிறகு போயஸ் தோட்டத்திற்கு ஊடகங்களை வரவைத்த ரஜினி தன்னுடைய உளறலின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறார். அதாவது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் என்று கேட்காமல் பொதுவில் எழுவர் விடுதலை என்று கேட்டதால் தான் யார் அந்த எழுவர் என்று கேட்டாராம் ரஜினி.

ஆனால் ஊடகங்கள் தெளிவாக கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை என்பதே உண்மை. இன்றைக்கு அவர் ”பேரறிவாளனோடு தொலைபேசியில் பத்து நிமிடம் பேசியவன் இந்த ரஜினி” என்றெல்லாம் அனுதாப அலை தேட முயற்சிக்கிறார். இதற்கு முன்னர் அவர் இதை ஏன் சொல்லவில்லை? எல்லாம் பயம்தானே? பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, பத்து  பேர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தால் யார் பலசாலி அந்த ஒருவனா, பத்து பேரா என்று பாஜகவை பச்சையாக ஆதரிக்கிறார் ரஜினி. இத்தகைய சந்தர்ப்பவாதியும் கோமாளியும் ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று செய்திகளில் இடம் பெறுவதே தமிழகத்தின் மாபெரும் அவமானம்!

*****

பா. ஜீவ சுந்தரி 

ஏழு பேர் பெயர் சொல்லத் தெரியாதவரா அவர்?

அவ்வளவும் பின்னிருந்து ஆட்டுவிக்கும் அரசியல்…
அடுத்த படம் ஓடணும்னா வந்து சலாம் போட்டுத்தான் ஆகணும் கண்டக்டரே…

————-

Yuva Krishna

சென்ட்ரல் பக்கத்துலே பைக்குலே ஒருத்தன் யுவகிருஷ்ணா மாதிரியே போயிருக்கான். ஆட்டோவில் போன தெரிஞ்ச மேடம் ஒருத்தங்க அவனைப் பார்த்து சிரிக்க, அவன் உம்முன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிருக்கான். அந்த நேரத்துலே ஒரிஜினல் யுவகிருஷ்ணா பெருங்குடியில் இருந்தான். மேடம் போனை போட்டு, ‘என்னய்யா கோவம், முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போறே’ன்னு விசாரிக்க ஏகப்பட்ட குழப்பம். இதுமாதிரி ஏற்கனவே ரெண்டு, மூணு இன்சிடென்ட். ஆகையால் மக்களே! எனக்கு எவனோ டபுள் ஆக்டிங் இருக்கான். ‘ராஜாதிராஜா’ படத்து ரஜினி மாதிரி பிரச்சினை வந்தா நீங்கள்லாம்தான் சாட்சி சொல்லி தூக்குத்தண்டனையில் இருந்துக் காப்பாத்தணும்.

————-

Bala G

எந்த ஏழுபேர் என்று கேட்கும் ரஜினி அவர்களே..

தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.

————-

Abdul Hameed Sheik Mohamed

நடிகர்கள் நாடாள வந்தால்
………………………………………
கடந்த 100 வருடங்களாக தமிழகத்தில் டீகடையிலும் சலூனிலும் பேசிப்பேசி வளர்ந்தது தமிழக அரசியல். ஹிந்து பேப்பரிலிருந்து தந்தி பேப்பர் வரை எல்லா மட்ட தமிழர்களும் நாட்டு நடப்போடு பிணைக்கப்பட்டிருந்த மாநிலம் இது. ஐந்தாம் வகுப்புப் படித்த ஒரு ஆட்டோகாரரிடம் பேச்சுக்கொடுத்தால் நாட்டு நடப்புகளை அலசித் தீர்த்துவிடுவார்.

ஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.

ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.

இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்

இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.

————-

Parimala Rajan

“யார் அந்த 7 பேர்?” என்று கேட்ட கோமாளி கிறுக்கன் ரஜினிகாந்தை தொலைத்துக்கட்ட வேண்டியது உணர்வுள்ள தமிழர்களின் கடமை

அவன் நடித்து வெளியாகும் பிரம்மாண்ட குப்பை எந்திரன் 2.0 எனும் திரைப்படத்தை குப்பைத்தொட்டிக்கு அனுப்புவோம். திரையரங்குகளில் அந்தப் படத்தை பார்க்காமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் பாஜகவின் மறைமுக கைக்கூலி கிறுக்கனை
ஒழித்துக்கட்டுவோம்.

————-

Manikandan Rajendiran

ரஜினியின் சமிப கால பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி பதற்றதினால் அறியாமையால் அப்படி பேட்டி கொடுப்பதாக என்னால் எடுத்து கொள்ள இயலவில்லை… ரஜினி தனக்கு தெரிந்தே திட்டமிட்டு அப்படியான பேட்டிகளை கொடுப்பதாக நினைக்கிறேன்…

ரஜினியின் சமிபத்திய ஜீ தமிழ் டிவி பேட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் ரஜினி எவ்வளவு கூர்மையாக தன்னுடைய நினைவுகளை வெளிபடுத்தகூடியவர் என்று 40 வருடங்களுக்கு பிறகு பைரவி படத்தை நினைவு கூறுகிறார்.. கமலை பார்த்து வியந்த நொடிகளை நினைவுபடுத்துகிறார்.. அபுர்வராகங்கள் படத்தில் வரும் கேட்டை பற்றி துல்லியமாக பேசுகிறார்… ஆனால் இந்தியாவையே உலுக்கிய ராஜீவ் கொலை சம்மந்தமான குற்றவாளிகள் 7 பேரை பற்றி கேட்டால் யார் அவர்கள் என்கிறார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளிப்பாக இருக்கும்போது படுகொலை செய்யபட்டவர்களுக்கு எதிராக கருத்தை முன்வைக்கிறார்…

அதாவது பெரும்பான்மை மக்களின் உணர்வுளுக்கு முற்றிலும் எதிரான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.. ரஜினி ஏன் இப்படியான கருத்தை முன்வைக்க வேண்டும் ? அதனால் அவருக்கு என்ன பயன்?

  • ஜெ என்ற நடிகை அரசியல்வாதியாகி நாட்டை கெடுத்ததுபோதும் நாமும் அந்த வரிசையில் சேர வேண்டாமென நினைக்கலாம்..
  • ரஜினிக்கு உண்மையாகவே அரசியலுக்கு வர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.. இப்படி மக்களுக்கு எதிரான கருத்தை முன்வைப்பதால் மக்களால் வெறுக்கபடும்/வெறுக்கபட்ட ஒருவராக தன்னை கட்டமைத்து தன்னை அரசியலுக்கு தள்ள நினைப்பவர்களுக்கு(பாஜக) நான் இதற்கு சரிபட்டு வரமாட்டேன் என்பதை மறைமுகமாக உணரத்தலாம்…

ஆனால் அழுத்தம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள் அல்லவா… அவர்களை சமாளிப்பதற்காக இதோ கட்சியை கட்டமைக்கிறேன் உறுப்பினர்கள் சேர்க்கிறேன் கொடியை அறிமுகபடுத்தபோகிறேன் என்று சப்ப காரணத்தை தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், சத்தியநாராயண போன்றவர்கள் மூலமாக சொல்லி கொண்டே இருக்கிறார்/இருப்பார்..

இவைகளுக்கு எல்லாம் எப்போது தெளிவான விளக்கம் கிடைக்கும்? வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இப்படியான உள்ளே-வெளியே விளையாட்டுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கமாட்டார்.. எனவே ஆதரவும் யாருக்கும் இல்லை..

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அப்போது வேறுவழி இல்லாமல் ரஜினி அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும்.. ஆனால் அதற்குள்ளாக அவரின் மொத்த இமெஜூம் சிதைந்து மக்களுக்கு எதிரான ஒருவராக இருப்பார்.. so பாஜகவே ரஜினியோடு சேர்வது தன் 3% ஓட்டுக்கு பங்கம்வந்துவிடும் என்று ரஜினியை புறம் தள்ளிவிடும்..

ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை தாம் அமைதியை விரும்புகிறேன் ஆன்மிகத்தை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இமயமலையில் உள்ள தன்னுடைய ஆசரமத்திற்கு சென்று நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவார்..

ஆனால் எம்ஜிஆரை மிரட்டி அதிமுகவை காங்கிரஸ் தொடங்கவைத்தது போல ரஜினியையும் மிரட்டி கட்சி தொடங்க காங்கிரஸ் கட்டாயபடுத்தினால் இன்று ஏழு பேரை யார் என்று கேட்டதுபோல நாளை ஏழு கோடி தமிழர்களையும் நீங்கள் யாரென்று கேட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார்…

————-

Saravanakarthikeyan Chinnadurai

கமல் கிட்ட கேட்ருந்தா மக்களைப் பார்த்து கை காட்டி இருப்பார்:

“அவுங்க தீர்மானிப்பாங்க அந்த ஏழு பேரை என்ன பண்றதுன்னு. ஏன்னா ஏழு பேரா எட்டுப் பேரான்னு தீர்மானம் பண்ணினது அவுங்க தான். இதுக்கும் பதில் சொல்ற கெட்டிக்காரங்க அவுங்க.” இங்க ஒரு pause. மக்கள் கைதட்டல். லவ் லெட்டர் கொடுத்த அந்நியன் அம்பி மாதிரி முகத்தை வெச்சிட்டு அப்புறம் தொடர்வார்: “நான் அவுங்க சொல்றதச் செய்யற பிரதிநிதி தான். சிவாஜி, பாலச்சந்தர்னு எனக்குக் கிடைச்ச குருநாதர்கள் இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.”

————-

Mukunthan Ramasamy

என்னது ராஜிவ் காந்தி செத்துட்டாரா??? 😢

எவன்ட போயி எத கேக்குறதுன்னு தெரியாத வெக்கங்கெட்டவனுங்க..😡😡

————-

Joe Milton

அந்த ஏழு பேர் ?

ரஜினி : எந்த ஏழு பேர் ?

கமல் : ஏழு ஸ்வரங்கள் , ஏழு அதிசயங்கள் , வாரத்தின் ஏழு நாட்கள் என ஏழு என்பதில் எல்லாமே அடக்கம் . அந்த ஏழு பேரில் நானும் உண்டு , நீங்களும் உண்டு . உங்களிலிருந்து தான் அந்த ஏழு பேர் உருவாகிறார்கள் என்பதை உணரும் போது ..

அடங்கப்பா !

————-

Thiru Yo

ரஜினிகாந்த் யார்? கட்சியெல்லாம் துவங்க போவதா இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா. #ரஜினிக்கு_தெரியாது
#நான்தான்ரஜினிகாந்த்

————-

Bala Vellore

ஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல..

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”

அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…

அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..

இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்

அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை..உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது…நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..

————-

ம.கு வைகறை

“எந்த ஏழு பேர்?” என்று கேட்ட மாத்திரத்திலேயே மைக்க வைச்சு மண்டையில நங்குன்னு…
#Rajini_voice

————-

Pavithra Baskaran

இப்போவெல்லாம் தமிழ் சினிமால வடிவேலு இல்லாத குறையை
ரஜனி, ராதாரவி, டுமிழிசை, எச்ச ராஜா தீர்கிறது எவ்வளவு ஆறுதலா இருக்கு

————-

————-

Thiru Yo

பெரிய அறிவாளின்னு நினைக்குமாம்… கீறல் விழுந்த ஒலித்தட்டு…

————-

ஆனந்த்குமார் சித்தன்

7 பேர் யாருங்க..

தெரியாது.. இனிமேல் தான் பாக்கணும்..

சாவர்க்கர் யாருங்க..

அந்த மாதிரி மகான்கள் வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை..

————-

Arul Ezhilan

அந்த எழுவர்!

அவர்கள் யார் என்று உலகிற்கு தெரியும். ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பிடப்பட்ட 26 பேர் தொடர்பாகவும் இறுதியில் தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்ட எழுவர் தொடர்பாக உலகம் அறிந்திருக்கிறது. அதை ஆதரித்தும், எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தலையங்கங்களை ஊடகங்கள் எழுதியுள்ளது. உலகின் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார்கள். கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் பங்குபற்றிய நீதிபதிகளும், விசாரணை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களுமாக கால் நூற்றாண்டுகாலம் இந்த விவாதம் இங்கு நடந்து. இவர்கள் அப்பாவிகள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த பின்னர் அமைதி நிலவுகிறது.

தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.

அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.

அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான் காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.

உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!

#எங்கள்_அற்புதம்மாள்
————-

Saravanakarthikeyan Chinnadurai

தொகுப்பு :

வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

பாசிஸ்டுகள் எப்போதும் பொய்யை அடிப்படையாகக் கொண்டே அரசியல் செய்கின்றனர். “எத்தனை பெரிய பொய்யை வேண்டுமானாலும் சொல்லுங்கள், திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்… ஒரு கட்டத்தில் மக்கள் அதனை உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டால், நீங்களே அதனைப் பொய் என்று சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்” என்பதுதான் கோயபல்ஸின் பிரச்சாரங்களுக்கு அடிப்படை.

அவரின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்பதை நரேந்திர மோடிஜியும் அருண் ஜெட்லிஜியும் நிரூபித்து வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரம் குறித்து இவர்கள் இருவரும் வாய் திறந்தாலே வெறும் பொய்யாக வந்து விழுகிறது.

நாட்டின் தனிநபர் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத அளவிற்கு அதிகரித்து நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கையில், பெட்ரோல் விலை உயர்வு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது  விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரித்து, ஒரு சதவீதம் கோடீஸ்வரர்கள் வசம் நாட்டின் 78 சதவிதம் சொத்துக்கள் குவிந்து கிடக்கும்போது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் மீது ஏவப்பட்ட பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகிய நடவடிக்கைகளின் காரணமாக நாட்டின் பொருளாதாரமே நிலைகுலைந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக அடித்துவிடுகிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. ஒருபுறம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருமானம் உயராமல் தேங்கிக் கிடப்பதாக மைய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார்.

வாங்கிய கடனைக் கட்ட வழியில்லாத விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், உற்பத்திப் பொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைக் கேட்டும், இராஜஸ்தான், மராட்டியம், தில்லி என நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். இனி விவசாயத்தை நம்பியிருந்தால் வாழவேமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என நகரங்களை நோக்கி வருகின்றனர். நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது.

இவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக அமைப்புச்சாரா தொழிற்துறையில் வேலைசெய்கின்றனர். இந்தியத் தொழிலாளர்களில் தினக்கூலிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. அதாவது 15 கோடிப் பேர் தினக் கூலிகளாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. கூலியும் நிலையானதாக இருக்காது.

அமைப்புச் சாரா தொழிற்துறைகளில் மட்டுமல்ல, அமைப்புசார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் உண்டா என்றால் அதுவும் கிடையாது. தொழிற்சாலைகளில் கான்டிராக்ட் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, இன்று மூன்றில் ஒரு பங்கு தொழிளாளர்கள் கான்டிராக்ட் முறையில் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

இதுபோதாதென்று, தொழிலாளர் நலச் சட்டங்களை தொடர்ந்து திருத்தி வரும் மோடி அரசு, நிலையான கால ஒப்பந்தம் (பிக்ஸ்ட் டெர்ம் கான்டிராக்ட்), நீம் போன்ற புதிய முறைகளைக் கொண்டுவருவதன் மூலம் கான்டிராக்ட் முறையை விட மோசமான சுரண்டலைப் புகுத்த வழிசெய்துள்ளது.

விவசாயம் சாராத தொழிற்துறைகளில் 93 சதவிதம் பேருக்கு சிறுதொழில்கள்தான் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. 2016-ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் நாடு முழுவதும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 2017-18 காலகட்டத்தில் சுமார் ஐம்பதாயிரம் சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிவிதிப்பைப் பல மடங்கு அதிகரித்ததால், இன்று பெட்ரோலின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆட்டோ, ஷேர் ஆட்டோ, குட்டி யானை எனக் கூறப்படும் மினி லாரி, வேன்கள் போன்றவற்றை வைத்து வாழ்க்கை நடத்தும் “சிறு உடைமையாளர்களின்” வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. இதனைச் சமாளிக்க அவர்கள் தங்களது வேலை நேரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர் அல்லது தொழிலையே விட்டுவிட்டு வேறு வேலை தேடி ஓடுகின்றனர்.

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்துப் பல ஆய்வு முடிவுகளும், புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன. மத்திய ரிசர்வ் வங்கியினால் நடத்தப்படும் KLEMS இந்தியா டேட்டாபேஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி, 2015-16 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு 1% அளவிற்கு குறைந்துள்ளது. இதே போன்று “இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்” என்ற அமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவித அளவிற்கு உயர்ந்திருந்தாலும், வேலைவாய்ப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2018-19-ஆம் ஆண்டில் 1% என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. 2017 ஆகஸ்டு மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2018 ஆகஸ்டு மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் ஆணையத்தின் ஆய்வுப்படியே 2016-17 காலகட்டத்தில் 5.56 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

படித்தவர்கள், படிக்காதவர்கள், திறன் உள்ளவர்கள், திறனற்ற தொழிலாளர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லாத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் திண்டாடிவருவதாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்தோஷ் மெக்ரோத்ரா கூறுகிறார். பொறியியல் உள்ளிட்ட தொழிற்துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்களிடையேதான் மிக அதிக பட்சமாக 11% அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக அவர் கூறுகிறார்.

பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதில் முக்கிய பங்குவகித்த ஐ.டி.. துறையிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாவது 85 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் அடுத்தடுத்து  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன.

இவ்வாறு வேலைவாய்ப்பு குறித்து வரும் எல்லா ஆய்வுகளும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதையும் குறைந்த கூலிக்குக் கிடைத்த வேலையைப் பார்ப்பதும் (under employment) அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர் ஆணையம், தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு ஆகிய அரசு நிறுவனங்களின் ஆய்வுகள்கூடத் தங்களுக்கெதிராக இருப்பதால், 2017-க்குப் பிறகு இத்தகைய ஆய்வுகள் அனைத்தையும் நிறுத்தும்படி நிதி ஆயோக் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது நரேந்திர மோடியும், அருண் ஜெட்லியும் என்ன கூறுகிறார்களோ அதுதான் ஆய்வுமுடிவுகள் என ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாம் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

படிக்க:
மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !
மோடி அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை – 71 வது சுதந்திர தின உரை

மோடியோ நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதற்குச் சான்றாகத் தொழிலாளர் சேமநல நிதியத்தில் (EPF) 2017-18 காலகட்டத்தில் 45 இலட்சம் பேர் புதிதாகச் சேர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். சிறு, குறு தொழில்நிறுவனங்களிடம் சேம நல நிதியத்தில் சேர்ந்தால், நிறுவனங்களின் பங்கை அரசே கட்டிவிடும் எனச் சலுகை கொடுத்து, அவர்களைக் கணக்கு தொடங்கவைத்து அதையே வேலைவாய்ப்பு அதிகரிப்பு எனக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார். பட்டதாரிகள் பக்கோடா கடைபோட்டு பிழைத்துக் கொள்ளலாம் எனக் கூறும் “பனியா” பிரதமரிடமிருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

“ஸ்டார்ட் அப் இந்தியா”, ஸ்கில் இந்தியா என மோடி காட்டிய ஜூம்லாக்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தில் தொடங்கப்பட்ட 25% நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மொத்தமே 6 இலட்சம் பேருக்குதான் வேலை கிடைத்திருக்கிறது.

மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் தமது சொந்த முயற்சியில் உருவாக்கிக் கொள்ளும் வேலைவாய்ப்புகளையும் – தள்ளுவண்டிக் கடைகள் போடுவது, ஆட்டோ ஓட்டுவது போன்றவை – தட்டிப்பறித்துவிடும் வேலையைத்தான் செய்து வருகிறார். இந்த அரசு கொடுங்கனவு (nightmare) என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்!

அழகு

தீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல ! படக்கட்டுரை

வெப்ப மண்டல நாடான இந்தியாவின் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பது இயல்பு. எனினும் ஒவ்வொரு கோடையிலும் இந்த ஆண்டு வெயில் அதிகம் என்று பேசுவது மக்கள் வழக்கம். இதற்கு சூழலியல் காரணம் இருந்தாலும் கடினமாகி வரும் வாழ்க்கைச் சூழலால் மக்கள் வெயிலை எதிர்கொள்ள முடிவதில்லை. தீபாவளியும் கூட இனி ” முன்ன மாதிரி இல்லை” எனும் வழக்கில் இடம் பெற்று விட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, எரிபொருள் விலை உயர்வு என மும்முனைத் தாக்குதலில் தீபாவளி கொண்டாட்டமும் தப்பவில்லை.

தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கைத் தவிர பட்டாசு விற்பனை, ஜவுளி வியாபாரம் அனைத்தும் புஸ்வாணமாகி இருக்கிறது. பண்டிகை நாட்களும் வழக்கமான நாட்களைப் போன்று  கடந்து செல்லும் நாட்களாகி உள்ளன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வினர்  என்னதான் இந்து, இந்து ராஷ்டிரம், பாரதக் கலாச்சாரம் பேசினாலும், “பொருளாதார நெருக்கடிகள்” பண்டிகை கலாச்சாரத்தை நொறுக்கி வருவது உண்மை. தீபாவளி அன்று, சென்னையில் வசிக்கும் மக்களிடம்  “இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.

பவளவண்ணன், பட்டாசு விற்பனையாளர்.

நீதிமன்ற தீர்ப்பால் தொழில் பாதிப்படைந்துள்ளது உணமைதான். ஆனால் இந்த தீர்ப்பு நாட்டிற்கு நல்லது என்ற அடிப்படையில் வரவேற்கிறோம். சென்ற ஆண்டு 1 மணிக்கெல்லாம் பட்டாசு காலி ஆகிவிட்டது. இந்த ஆண்டு விற்பனையாகவில்லை. பொதுவாக பண்டிகை காலம்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதனை மனதில் வைத்துக்கொண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். சில இயற்கை ஆர்வலர்கள் சொல்வதைக் கொண்டு தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அதுதான் விற்பனை தொய்வு ஏற்பட்டதற்கு காரணம்.

என்னுடைய ரெகுலர் கஸ்டமர் ஒருவர், ரூ.40,000-க்கு பட்டாசு வாங்குவார்.  இந்த ஆண்டு ஐந்தாயிரத்துக்கு மட்டுமே வாங்கினார். கேட்டால் “இரண்டு மணி நேரத்தில் இதுமட்டும்தான் வெடிக்க முடியும்” என்கிறார்.

லோகேஷ், தீபக், தனுஷ், சுப்பிரமணி –  +2  மாணவர்கள்

போன வருஷம் முழுக்க முழுக்க பட்டாசுதான். இந்த வருஷம் ஒன்லி படம்தான். இப்ப சர்கார் பார்த்துட்டு வர்றோம். ஒரு ஆளுக்கு டிக்கெட் 300 ரூபா. இந்த வருஷம் துணி எடுக்கவும், படத்துக்கு பணம் புரட்டவுமே பெரும்பாடு பட்டோம். வீட்டுல காசு கேட்டா கஸ்டமா இருக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டாங்க.. இருந்தாலும் போராடி ஒவ்வொருத்தரும் 1500 ரூபாய் வாங்கினோம். அதுல ஒரு ஆளுக்கு ட்ரெஸ்ஸு 1100 ரூபா. 300 ரூபா படம்… வந்து போறதுக்கு 100 ரூபா.

”எங்க அம்மா ஜூனியர் ஆர்டிஸ்ட்… ஷூட்டிங் போனாதான் காசு. இப்ப வேலையே இல்ல. இந்த நெலைமையில எப்படி செலவு பண்ண முடியும். ஒவ்வொரு வருஷமும் நெலம மாறிக்கிட்டே இருக்கு. போன வருஷம் மாதிரி இப்ப இல்லை” என்கிறார் லோகேஷ்.

அண்ணாமலை, ஆட்டோ ஓட்டுநர் – வடபழனி.

எங்க சார்… கஷ்டமா இருக்கு.  எவ்ளோதான் ஓட்டினாலும் ஒரு நிமிஷம் வீட்டுல உக்காந்து சந்தோஷமா இருக்க முடியல. ஆட்டோ ஓட்டினாதான் வீட்டுக்கு போகும்போது எதையாவது வாங்கிட்டு போக முடியும். பண்டிகையின்னா எதையாவது பண்ணியாகணும்னு இருக்கு. காசு இல்லன்னு பசங்கள சும்மா விட்டுட முடியுமா?

இந்த வருஷம் கடன் வாங்கிதான் செலவு பண்ணியிருக்கேன். போன வருஷம் 4,800 ரூபா செலவு பண்ணேன். இந்த வருஷம் 2,000 ரூபாயில பசங்களுக்கு மட்டும் சிம்பிளா துணி எடுத்தேன். போகும்போது கொஞ்சமா பட்டாசு வாங்கிட்டு போகணும்.

திருப்பதி – பழைய புத்தக விற்பனையாளர்.

“எந்த வருமானமும் இல்லை சார். எப்பவாது புத்தகம் விற்பனையாகும். அதுவும் அய்யர் வீட்டு பெண்கள்தான் வாங்குவாங்க. அதை எந்த செலவும் செய்யாம தேவை வரும்போது எடுத்து செலவு பார்த்துப்பேன். ஒருநாளைக்கு 200, 300 ரூபாய் வருமானம் வரும். அதுல தினமும் 70 ரூபாய் பெட்ரோல் போட்டுடுவேன். தினமணி பேப்பர் வாங்குவேன். இவ்ளோதான் செலவு. பசங்கள அரசுப் பள்ளியில சேர்த்திருக்கேன். சொந்த வீடு இருக்கு. அதனால சமாளிக்க முடியுது சார்.

பசங்களுக்கு துணி, பட்டாசு எதுவும் எடுத்து தரலை. கூடுதலா கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதிச்சதால சவுரியமா போச்சி. அதனால செலவு இல்லை. உங்களைப் போன்ற  இளைஞர்கள் எப்போ புத்தகம் படிக்கும் பழக்கத்தை கைவிட்டார்களோ அப்போதே தொழில் முடிஞ்சு போச்சு. வேறு தொழில் தெரியாதுன்றாதல இதுலயே உழல வேண்டி  இருக்கிறது. என்னோட பையன் துப்பாக்கி சுடும் போட்டியில முதல் இடத்துல இருக்கான். ஆனா அவனுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவைக் கூட வாங்கிதர முடியவில்லை” என்கிறார் கவலையோடு.

சுப்பிரமணி- ஆட்டோ ஓட்டுநர்.

இப்ப இதகேட்டு இன்னா ஆவப்போவுது… சொல்லுங்க? சர்க்கார் படத்துக்கு போவணும். பாக்கெட்ல 200 ரூபா இருக்கு. இன்னும் 50 ரூபா சவாரி கெடச்சா படத்துக்கு போயிடலாம். அதுக்கு தான் அலஞ்சிகிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு 500 கெடச்சாலே பெரிய விசயமா கீது… ஓலா வந்த பிறகு 200 ரூபா கூட கெடக்க மாட்டேன்’து. டீசல் வெலை எல்லாம் ஏறிடுச்சி. நாங்க எக்ஸ்ட்ரா சார்ஜ் கேட்டா மக்கள் மொறைக்கிறாங்க. அதனால நம்ம ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கினாதான் வாழ முடியுது…!

மூர்த்தி, தனியார் நிறுவன ஊழியர்.

மாசம் பதிமூனாயிரம் சம்பளம் வாங்குறேன்… இதுல எப்படி பட்ஜெட் போட்டு வாழ முடியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆட்டோகார் 5 ரூபா ஏத்திக் கேட்டா தர்லன்னு சொன்னாரு. அது அவரோட நெலமை. அதை தர முடியாத நெலமதான் எங்களுக்கு இருக்கு. பார்க்க சின்ன பொருளா இருக்கும்.. ஆசையா வாங்கலாம்னு விலைய கெட்டா அதிர்ச்சியா இருக்கு… அமைதியா திரும்பி வந்துடுறோம். இதான் நெலமை.  கம்பனியில ஐந்தாயிரம் போனஸ் கொடுத்தாங்க… அப்படியே வீட்டுல கொடுத்துட்டேன். அதை வச்சி அவங்க என்ன பண்ணாலும் இனி அவங்க பாடுதான். அதுக்கு மேல என்ன பண்ண முடியும்?

பூமிநாதன், கரும்பு ஜுஸ் கடை.

சொந்த ஊரு ராமநாதபுரம்.. சின்ன வயசுல இங்க வந்துட்டேன். ஊர் திருவிழா தவிர வேற எந்த பண்டிகையும் கொண்டாடுறதே இல்ல. குறைந்தது 15,000 ரூபா இருந்தாதான் குடும்பத்தோட ஊருக்கு போக முடியும். அதுக்கேத்த வருமானமும் இல்ல.

வெய்யில் காலமா இருந்தாலும் பரவாயில்ல… சம்பாதிச்சிடுவேன். இது மழைக்காலம். தினமும் 500 ரூபா தான் வருது. இந்த மிஷினுக்கு தினமும் 250 ரூபாய்க்கு டீசல் போட்டுடுறேன். ரெண்டு பேருக்கு டீ 60 ரூபா செலவாகிடுது. மிச்ச பணத்த வச்சி என்ன பண்றது? எனக்கு ஒரே பையந்தான். அவனுக்கே எதுவும் எடுத்து தரல. பட்டாசும் வாங்கல. கறி சோறுகூட சாப்பிட முடியல. மூணு வேளையும் சோறுதான்.

விஜய்- வங்கி ஊழியர்,  சுகைன் – சுய தொழில் செய்பவர்.
விஜய் – சுகைன்

“இன்னைக்கு இருக்க கூடிய கடும் நெருக்கடியில அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். மளிகை, காய்கறி, பால் இதுக்கே வாங்குற சம்பளத்துல துண்டு விழுது. அப்படி இருக்கும்போது விழாவை எப்படி சமாளிக்க முடியும்? போனஸ் கொடுத்தா சமாளிக்கலாம்.

ஏற்கனவே பல பண்டிகை காணாமல் போயிடுச்சி. இதனையும் விட்டுட்டோம்னா மகிழ்ச்சியே இல்லாம போயிடும்.  டென்சனா இருந்தா அதை மறக்க இந்த பண்டிகை பயன்படுது. அதே சமயம்.. பணம் பற்றாக்குறையா வரும்போது பிரச்சனையாயிடுது”  என்கிறார் விஜய்.

சுகைன்

இது தீபாவளி மாதிரி தெரியவில்லை. மூனு வருசத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு முதல்நாளே அமர்களமாகிடும். இப்ப அந்தமாதிரி இல்ல. கடந்த மூனு வருஷமா எல்லாத்தையும் இழந்துட்டோம்.  இந்த அரசாங்கத்தால எந்த பலனும் இல்ல. எல்லாம் கார்ப்பரேட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் தருது.. இதை கேட்க பப்ளிக் லீடர்சும் இல்லை. என்ன சொல்றது.. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல.

ரமேஷ், அரசு கார் ஓட்டுநர்.
ரமேஷ் (வலது)

இந்த ஆண்டு அர்ரியர்ஸ் போட்டுட்டாங்க. மொத்தம் நாற்பதாயிரம் வந்ததால பிரச்சினை இல்ல. இல்லனா வீட்டுல இருக்க பொருட்களை கொண்டு போயிட்டு அடமானம் வச்சிருக்கணும். அதுவும், இல்லையா… எங்க அய்யாகிட்டதான் (நீதிபதி) வாங்கியிருப்பேன். காசு வந்ததும் வீட்டுல எல்லாரும் கெளம்பி காஞ்சிபுரம் போயிட்டாங்க. ரூ.30,000-க்கு துணி எடுத்துட்டாங்க… 5,500-க்கு பட்டாசு வாங்கிருக்காங்க. அதனால போன வருஷம் மாதிரி எனக்கு இந்த வருஷம் இல்ல.

நடராஜன், பழைய புத்தக விற்பனையாளர்.

“மக்கள் கிட்ட பணப்புழக்கம் சுத்தமா இல்ல. அப்புறம் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்.   ரமணிச்சந்திரன் புத்தகம் பெண்கள் வாங்குவாங்க, ராஜேஸ்குமார் நாவல் ஆண்கள் வாங்குவாங்க. பழைய புத்தகம் என்பதால 10 ரூபாய்க்கு கொடுப்பேன். அவங்க படிச்சிட்டு வந்து திருப்பி தருவதாக இருந்தால் 5 ரூபாய் வாங்கிப்பேன். இதுக்கே யாரும் வரது இல்ல.” என்கிறார் விரக்தியாக!

அண்ணாமலை – மூர்த்தி, கோயம்பேடு வாகன டோக்கன் போடுபவர்கள்.
அண்ணாமலை – மூர்த்தி

வீட்டில் இருந்தால் செலவுன்னுதான் இந்தப் பக்கம் வந்துவிட்டோம். ஓனர் ரூ.1000 போனஸா கொடுத்தார். அதைத்தான் வீட்டில் கொடுத்தோம். அதையும் பசங்க சினிமாவுக்கு போறேன்னு புடுங்கிட்டு போயிட்டானுங்க. இன்னா பண்றது? இந்த வருஷமே இப்படின்னா… இன்னும் வர வருஷம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல.

ஜமால், துணி வியாபாரம்.

”தம்பி, நான் முசுலீம். இருந்தாலும் நீங்க கேட்டதால் சொல்லுறேன். இருபது வருஷமா இந்த வியாபரம் செய்யுறேன்.  சரியா ஒரு வாரத்துக்கு நல்ல சேல்ஸ் இருக்கும். இந்த முறை ஞாயித்துக்கிழமை மட்டும்தான் போச்சி. இன்னைக்கு காலையில இருந்து ஒன்னும் ஓடல. அதான் மூட்டை கட்டிடலாம்னு இருக்கேன்.”

இப்படியாக பார்க்குமிடமெல்லாம் தீபாவளி ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு பெரும் சோகத்தையே அளித்துள்ளது. பண்டிகை என்பதால் குடும்பதினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கித் தரவேண்டும் என்பதே அந்தக் கவலையின் குவி மையம். அரசு, தனியார் நிறுவனங்களில் ஓரளவு நல்ல மாத சம்பளம் வாங்குவோரைத் தவிர இதர பிரிவினர் அனைவருக்கும் தீபாவளி மகிழ்ச்சியாக இல்லை. இம்மக்கள்தான் பெரும்பான்மையினர். அங்காடிகளின் தள்ளுபடி விற்பனைகள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், ஊடகங்களின் கொண்டாட்டங்களைத் தாண்டி உண்மையான தீபாவளியின் யதார்த்தம் இதுதான்.

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி

1

நண்பர்களே….

பொ.வேல்சாமி

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வரலாறு)

ரபோஜி மன்னரின் (1777-1832) நெருங்கிய தோழரும் சரபோஜியை உருவாக்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரின் வளர்ப்புச் சீடரும் தமிழ்நாட்டு ப்ராட்ஸ்டன்டு கிறிஸ்தவர்கள், தேவாலயங்களில் துதிப் பாடல்களைப் பாடுவதற்கு தமிழில் முதல்முதலாக பாடல்களை இயற்றி தந்து புகழ்பெற்று இருந்தவரான தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரால் (1774-1864) தமிழறிஞர் ஜி.யூ.போப் தஞ்சையிலிருந்து விரட்டப்பட்டதாக வரலாறு உண்டு. இதைப் பற்றி வேதநாயக சாஸ்திரியாரே “ஜி.யூ.போப் உபத்ரா உபத்திரவம்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ( அந்தத் தீர்மானத்தின் குறிப்பை பதிவின் படத்தில் தந்துள்ளேன்.) கூடுதலாக கிறிஸ்தவர்களான தாழ்த்தப்பட்டவர்களால் வழங்கப்படும் உணவையும் உண்ண வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது.

படிக்க:
கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

கிறிஸ்தவ மதத்தில் சாதி வேறுபாடு பார்க்கக்கூடாது என்ற இந்தப் போக்கை வேதநாயக சாஸ்திரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஜி.யூ.போப் பாதிரியாராகப் பணிபுரிந்த தேவாலயத்தில் வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று தடைவிதித்து இருக்கின்றார் (தஞ்சையில் உள்ள அந்த தேவாலயம் வேதநாயக சாஸ்திரியாரின் வீட்டிற்கு எதிரில் இன்றும் உள்ளது. அந்தத் தெருவின் பெயர் மிஷன் தெரு). இந்தப் பிரச்சினை உண்டாக்கிய மனத்துயரினால் ஜி.யூ.போப் தஞ்சை செயிண்ட் பீட்டர் கல்லூரியின் (அந்தக் காலத்தில் இந்தப் பள்ளி கல்லூரி என்று அழைக்கப்பட்டது) தலைமைப் பொறுப்பில் இருந்தும் தேவாலயத்தின் பொறுப்பிலிருந்தும் விடுபட்டு தஞ்சையை விட்டே சென்று விடுகிறார்.

“தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்” என்ற இந்த நூலில் உள்ள ஒருசில சுவையான செய்திகளை இந்தப் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். இவை போன்ற பல அரிய சுவையான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. அ.மாதவையாவின் புகழ்பெற்ற நாவலான “கிளாரிந்தா”வின் கதாநாயகியும் பிராமணராகப் பிறந்து கிறிஸ்தவராக மாறி முதல்முதலாக திருநெல்வேலியில் கிறிஸ்தவத் தொண்டு செய்த கிளாரிந்தா அம்மையாரைப் பற்றியும் அவருடைய கணவரைப் பற்றியும் அவருக்கு ஞானஸ்தானம் வழங்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரைப் பற்றியும் பல சுவையான வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை நீங்கள் படிக்க விரும்புவீர்கள் என்ற எண்ணத்துடன் இந்நூலின் இணைப்பைத் தந்துள்ளேன்.

தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

அவனைக் கண்டாலே எனக்குப் பயமாகத்தானிருக்கிறது

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 21

மாக்சிம் கார்க்கி

வாழ்க்கை அதிவேகமாகக் கழிந்து சென்றது. பற்பல சம்பவங்கள் நிறைந்து துரிதமாக, நாட்கள் போவதே தெரியாமல். காலம் கழிந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் கொண்டு வந்தது. ஆனால் தாய் அவற்றைக் கேட்டுத் திடுக்கிடவில்லை. அவளுக்கு அவை பழகிப்போய்விட்டன. அவளது வீட்டுக்கு மேலும் மேலும் இனந்தெரியாத புதிய நபர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மாலை நேரங்களில் வந்து அந்திரேயோடு ஆர்வமும் அடக்கமும் நிறைந்த குரல்களில் பேசிக் கொள்வார்கள். பிறகு தங்கள் கோட்டுக் காலர்களைத் தூக்கிவிட்டுக்கொண்டும், தொப்பிகளைக் கண் வரையிலும் இழுத்து மூடிக்கொண்டும் இருளோடு இருளாய் அரவமேயில்லாது அதி ஜாக்கிரதையோடு மறைந்து போய்விடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ளடங்கித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தை அவளால் உணர முடிந்தது. அவர்கள் அனைவருக்குமே ஆடிப்பாடிச் சிரித்து மகிழ வேண்டும் என்ற ஆசையிருப்பது போலத் தெரிந்தது. எனினும் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமே இல்லை. அவர்கள் எப்போதும் எங்கேனும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடுமையாகவும், ஏளன சுபாவம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் வாலிபத்தின் வலிவும், மினுமினுப்பும் உற்சாகமும் நிறைந்து காணப்பட்டார்கள். சிலர் மிகவும் அமைதியாக, சிந்தனை வயப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருமே ஒரேவிதமான லட்சிய நம்பிக்கையோடு ஒத்து நிற்பதாகத் தாய்க்குத் தோன்றியது. எனினும் அவர்கள் அனைவரும் தனித்தனியே தமக்கென ஒரு உருவும் குணமும் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் அனைவரது முகங்களும் அவளுக்கு ஒன்று போலவே தோன்றின; எம்மாஸை நோக்கிச் செல்லும் கிறிஸ்து நாதரின் அருள் நாட்டத்தைப் போல் – அன்பும் அழுத்தமும் பிரதிபலிக்கும். ஆழமும் தெளிவும் கருமையும் கொண்ட கண்களோடு அமைதியும் தீர்மானம் புத்தியும் நிறைந்து விளங்கும் மெலிந்த முகத்தைப் போல் – ஒரே முகம் போல் தோன்றியது அவளுக்கு.

அவர்களின் தொகையை எண்ணிக் கணக்கிட்டாள் தாய். அவர்கள் அனைவரையும் பாவெலைச் சுற்றி நிற்க வைத்து அவர்களுக்கு மத்தியில் பாவெலை நிறுத்தி வைத்தால், பாவெல் எதிரிகளின் கண்ணில் படாமல் எப்படி அந்த வியூகத்துக்குள்ளேயே மறைந்து நிற்பான் என்பதை அவள் கற்பனாரூபமாகவே சிந்தித்துப் பார்த்துக் கொண்டாள்.

ஒரு நாள் குறுகுறுப்பும் சுருண்ட கேசமும் நிறைந்த ஒரு யுவதி நகரிலிருந்து வந்தாள். அவள் அந்திரேய்க்கு ஒரு பொட்டலம் கொண்டு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போது அவள் தாயை நோக்கித் திரும்பி, உவகை நிறைந்த தன் கண்களில் ஒளிபாய்ந்து பளிச்சிட்டு மின்ன, வாய் திறந்து சொன்னாள்;

“தோழரே, போய் வருகிறேன்.”

“சென்று வருக!” என்ற சிரிப்புக்கு ஆளாகாமல் பதிலளித்தாள் தாய்.

அந்தப் பெண் வெளியே சென்ற பிறகு, தாய் ஜன்னல் அருகே சென்று நின்றாள். வசந்தகால மலர்போல புதுமையும், வண்ணாத்திப் பூச்சியைப்போல மென்மையும் பெற்று, சிறு கால்களால் குறுகுறுவென்று தெரு வழியே நடந்து செல்லும் அந்தத் தோழியைப் பார்த்தாள். பார்த்தவாறே தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“தோழி!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் தாய். ‘அடி’ என் செல்லப் பெண்ணே! உன் வாழ்க்கை முழுதும் உன்னோடு துணை நின்று உதவ, கடவுள் உனக்கு ஒரு நல்ல உண்மையான தோழனையும் அருள் செய்யட்டும்!”

படிக்க:
தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்

நகரிலிருந்து வரும் அத்தனை பேரும் ஏதோ பிள்ளைக்குணம் படைத்த பேதைகளைப் போலத் தோன்றியது. அவளுக்கு அதைக் கண்டு மிகுந்த பெரியதனத்தோடு அவள் தன்னுள் சிரித்துக்கொள்வாள். என்றாலும், அவர்கள் கொண்டுள்ள கொள்கை வைராக்கியம் அவளை ஆனந்த வியப்பில் ஆழ்த்தும்; உள்ளத்தைத் தொடும். அந்த வைராக்கியத்தின் ஆழ்ந்த தன்மையும் அவளுக்கு வரவரப் புரியத் தொடங்கியது, நீதியின் வெற்றியைப் பற்றி அவர்கள் காணும் லட்சியக் கனவுகள் அவளது உள்ளத்தைத் தொட்டுத் தடவிச் சுகம் கொடுத்தன. அந்தக் கனவு மொழிகளை அவள் கேட்கும்போது காரண காரியம் புரியாத ஏதோ ஒரு சோக உணர்ச்சிக்கு அவள் ஆளாகிப் பெருமூச்செறிந்து கொள்வாள். முக்கியமாக, அவர்களது சர்வ சாதாரணமான எளிமையும் தங்களது சொந்த நலன்களில் அவர்கள் காட்டும் அழகான அசட்டை மனப்பான்மையும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன.

வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சொல்லியவற்றை பெரும்பாலும் ஏற்கெனவே அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் தாம் மனிதகுலத்தின் துயரங்களுக்குரிய உண்மையான பிறப்பிடத்தை, மூலாதாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் என அவள் உணர்ந்தாள். எனவே அவர்களது சிந்தனைகளையும் அதன் முடிவுகளையும் அவளும் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப் பழகினாள். என்றாலும், அவளது இதயத்தின் அதலபாதாள ஆழத்திலே அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து விடமுடியும் என்பதையோ, தங்களது லட்சியத்துக்காகச் சகல தொழிலாளி மக்களையும் ஒன்றுதிரட்டி ஒரே சக்தியாகப் பலப்படுத்தி விடுவார்கள் என்பதையோ அவள் நம்பத் துணியவில்லை. இன்றோ ஒவ்வொருவனும் அவனவன் வயிற்றை நிரப்பவே வழி பார்க்கிறான்; அந்தப் பிரச்சினையை நாளைவரை ஒத்தி வைப்பதற்குக்கூட எவனும் விரும்பவில்லை. மூமூ இதுதான் அவளுக்குத் தெரியும். தொலைவும் துயரமும் நிறைந்த இந்தப் பாதையில் அதிகம் பேர் துணிந்து செல்ல ஒப்பமாட்டார்கள். இறுதியாக எய்தப்போகும் அனைத்து மக்களின் சகோதரத்துவ சாம்ராஜ்யம் எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்துவிடப் போவதில்லை. எனவேதான் அந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குழந்தைகளைப் போலத் தோன்றினார்கள். அவர்களது முகத்தில் மீசை தாடிகள் வளர்ந்திருந்தபோதிலும், சோர்வினால் களைத்து வாடிய முகபாவம் தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை அவர்கள் சின்னஞ் சிறார்கள்தாம்.

“அட, என் அருமைக் குஞ்சுகளே!” என்று தலையை அசைத்துக் கொண்டு தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள் அவள்.

இப்போது அவர்கள் அனைவரும் அருமையான, நேர்மையான, தெளிவாற்றல் கொண்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் நன்மை செய்வதைப் பற்றிப் பேசினார்கள்; தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முயற்சியிலும் தங்களைப் பற்றிய கவலையின்றியும் அவர்கள் முன்னேறினார்கள். இம்மாதிரியான வாழ்க்கையை, அதனது ஆபத்தான சூழ்நிலையைக்கூடப் பொருட்படுத்தாது எப்படி ஒருவர் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதையும் அவள் உணர்ந்து கொண்டாள். தன்னுடைய கடந்த காலத்தின் இருள் செறிந்த வாழ்க்கைப் பாதையை அவள் நினைத்து நினைத்துப் பார்த்து பெருமூச்செறிந்து கொண்டாள். அவளது இதயத்துக்குள்ளே, நான் இந்தப் புதிய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றவள் என்ற உணர்ச்சியும் சிறுகச் சிறுக வளர ஆரம்பித்தது. இதற்கு முன்பெல்லாம் தன்னை எவருமே விரும்பவில்லை எனக் கருதினாள் அவள். ஆனால், இப்போதோ எத்தனையோ பேருக்குத் தான் தேவைப்படுவதை அவள் கண்கூடாகப் பார்த்தாள். இந்தப் புதிய இன்பகரமான உணர்ச்சி அவளைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தது.

அந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குழந்தைகளைப் போலத் தோன்றினார்கள். அவர்களது முகத்தில் மீசை தாடிகள் வளர்ந்திருந்தபோதிலும், சோர்வினால் களைத்து வாடிய முகபாவம் தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை அவர்கள் சின்னஞ் சிறார்கள்தாம்.

அவள் தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்களை ஒழுங்காகக் கொண்டு சென்று கொண்டிருந்தாள், அப்படிச் செய்வது தன் கடமை என்று கருதினாள். வேவுகாரர்கள் அவளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போனார்கள்; எனவே அவள் மீது அவர்கள் அத்தனை சிரத்தை காட்டவில்லை. எத்தனையோ தடவைகளில் அவர்கள் அவளைச் சோதனை போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சோதனை போடும் நாளெல்லாம் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்கள் தலைகாட்டிப் பரவித் திரிந்த நாளுக்கு மறுநாளாகவே இருந்து வந்தது. அவளிடம் எந்தவிதமான பிரசுரங்களும் இல்லாத நாட்களில் அவள் வேண்டுமென்றே காவல்காரர்களைத் தன்மீது சந்தேகங் கொள்ளுமாறு தானே தூண்டிவிட்டு விடுவாள். அவர்கள் அவளைப் பிடித்துச் சோதனை போடுவார்கள். அதுதான் சமயம் என்று அவள் அவர்களோடு வாதாடித் தன்னை அவர்கள் இழிவுபடுத்திவிட்டதாகப் பாவனை செய்துகொள்வாள். அவர்களை அவமானப்படுத்தி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு அகன்று செல்வாள் அவள். தன்னுடைய சாமர்த்தியத்தை எண்ணித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வாள். இது அவளுக்கு ஒரு ஆனந்தமயமான விளையாட்டுப்போல இருந்தது.

நிகலாய் வெஸோவ்ஷிகோவை தொழிற்சாலையில் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உத்திரக்கட்டைகள், விறகு, பலகைகள் முதலியனவற்றை ஏற்றுமதி செய்யும் ஒரு மர வியாபாரியிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். அநேகமாக ஒவ்வொரு நாளும் அவன் மரங்களைப் பாரமேற்றிக்கொண்டு செல்வதை, தாய் பார்த்துத்தான் வந்தாள். முதலில் நோஞ்சான் பிறவிகளான ஒரு ஜோடிக் கறுத்த குதிரைகள் வரும். அந்தக் குதிரைகள் தமது பஞ்சடைந்து நொந்துபோன கண்களைத் திருகத்திருக விழித்துக்கொண்டு தலைகளை அசைத்து அசைத்து வரும். உழைப்பினால் ஓய்ந்துபோன அவற்றின் கால்கள் வெடவெடத்து நடுங்கும்.

குதிரைகளை அடுத்து, பச்சை மரக்கட்டைகளாவது, அறுத்தெடுத்த பலகைகளாவது ஒன்றோடொன்று மோதியவாறு தரையில் தேய்ந்தபடி வந்துகொண்டிருக்கும். அந்தப் பக்கத்தில் நிகலாய் வருவான். அவனது கைகள் குதிரைகளின் லகானை வெறுமனே பிடித்துக்கொண்டிருக்கும். நிகலாயின் கால்களில் கனத்த பூட்சுகள் இருக்கும். தொப்பி தலைக்குப் பின்னால் தள்ளிப் போயிருக்கும். மேலும் அவனது ஆடையணிகளும் கிழிந்து பழங்கந்தலாய்ப் போயிருக்கும். உடையெல்லாம் ஒரே புழுதி படிந்து, தரைக்குள்ளிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணடைந்து அலங்கோலமாய்த் தோன்றும். தடித்த முண்டுக் கட்டையைப் போலத் தோன்றுவான் அவன். அவனும் அந்தக் குதிரைகளைப் போலவே தலையைத் தொங்கப்போட்டு அசைந்தாடிக் கொண்டு தரையையே பார்த்தவாறு செல்வான். அவனது குதிரைகள், கண்மூடித்தனமாக எதிரே வரும் ஆட்கள் மீதாவது வண்டிகள் மீதாவது சாடி விழுந்து தடுமாறும். அந்த ஜனங்கள் நிகலாயைப் பார்த்து உரத்துக் கூச்சலிடுவார்கள். மானாங்காணியான வசை மொழிகள் குழவிக் கூட்டத்தைப் போல அவனை மொய்த்துப் பிடுங்கும். அவன் அவற்றுக்கு எந்தப் பதிலும் சொல்வதில்லை, நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. வெறுமனே உரத்துக் கூச்சலிட்டுத் தன் குதிரைகளை முடுக்குவான்.

“போ, முன்னே!”

வெளிநாட்டிலிருந்து புதிதாக வந்த ஒரு பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசித்துக் காட்டுவதற்காக, அந்திரேய் சமயங்களில் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வருவதுண்டு. அந்தக் சமயங்களில் நிகலாயும் வருவான். வந்து ஒரு மூலையிலே சென்று உட்காருவான். ஒரு மணியோ, இரண்டு மணியோ, அவன் அப்படியே வாய் பேசாது உட்கார்ந்து வாசிப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பான். வாசித்து முடிந்தவுடன், அந்த இளைஞர்கள் காரசாரமான விவாதங்களில் இறங்குவார்கள். அவற்றில் நிகலாய் பங்கெடுத்துக் கொள்வதேயில்லை. எல்லோரும் சென்ற பிறகு அவன் மட்டும் பின்தங்கி அந்திரேயோடு தனிமையில் பேசுவான்.

“யாரை அதிகமாகக் குறை கூறுவது?” என்று துயரத்துடன் கேட்பான்.

”குறைகூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா?” ‘இது என்னுடையது’ என்று எவன் முதன் முதல் சொன்னானோ, அவன்தான். அந்தப் பயல் செத்துப்போய் எத்தனை ஆயிரம் வருஷங்களோ ஆகிவிட்டன. இனி அவன்மீது நாம் பாய்ந்து விழ முடியாது” என்று வேடிக்கையாகப் பதில் சொன்னான் ஹஹோல். எனினும் அவனது கண்களில் உற்சாகம் இல்லை. நிலைகொள்ளாமல் அவை தவித்தன.

“பணக்காரர்கள்? அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டத்தார்? அவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா?”

“அதிகாரத்திலே இருக்கும் கனதனவான்கள் இந்தச் சாதாரண மக்களின் மனத்திலே வளர்ந்துவிட்டிருக்கிற உணர்ச்சிகளைப் பார்த்தீர்களா, அம்மா? நிகலாய் மாதிரி நபர்கள் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்தால், அதனால் தமது பொறுமையையும் இழந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவ்வளவுதான். வானத்தில் இரத்த வெள்ளம் பரவும். பூமி ஒரு சோப்புபோல இதில் நுரை தள்ளும்!”

அந்திரேய் தன் தலை மயிரை விரல்களால் உலைத்துவிட்டு கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பற்றியும், மாந்தர்களைப் பற்றியும் விளக்கமான முறையில் விவரித்துச் சொல்வதற்குரிய எளிய வார்த்தைகளைப் பற்றி யோசித்தவாறே மீசை முனையை இழுத்து விட்டுக்கொண்டான். ஆனால் அவன் எதைச் சொன்னாலும் சகல மக்களையும் பொதுப்படையான முறையில் குறைகூறுவது போலத்தான் இருந்தது. அது நிகலாய்க்குத் திருப்தியளிக்கவில்லை. அவன் தனது தடித்த உதடுகளைக் கப்பென்று மூடியவாறே தலையை அசைப்பான். ‘அது அப்படியல்ல’ என்று ஏதாவது முணுமுணுப்பான். கடைசியாக அவன் திருப்தியடையாத கலங்கிய மனத்தோடு விடைபெற்றுக்கொண்டு செல்வான்.

ஒருநாள் அவன் சொன்னான்:

”இல்லை. குற்றம் சாட்டப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். நான் சொல்லுகிறேன். கேள், நாமோ வாழ்நாள் முழுவதும் தழை படர்ந்த வயல் வெளியை கருணையின்றி உழுது தள்ளுவது மாதிரி உழைத்து உழைத்துச் சாக வேண்டியிருக்கிறது!”

‘உன்னைப்பற்றி இஸாயும் இதைத்தான் ஒருநாள் சொன்னான்’ என்று சொன்னாள் தாய்.

“யார். இஸாயா?” என்று ஒரு கணம் கழித்துக் கேட்டான நிகலாய்.

”ஆமாம். அவன் ஒரு மோசமான பயல். அவன் எல்லோர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறான். எல்லோரைப் பற்றியும் அநாவசியமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான். அவன் நமது தெருவுக்குள்ளும் வந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்.”

“என்னது? ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறானா?” என்று திருப்பிக் கேட்டான் நிகலாய்.

ஆனால் அதற்குள் தாய் படுக்கச் சென்றுவிட்டாள். எனவே அவனது முகத்தை அவள் பார்க்கவில்லை. இருந்தாலும் ஹஹோல் பேசியதைப் பார்த்தால் தான் அந்த விஷயத்தை நிகலாயிடம் சொல்லியிருக்கக்கூடாது என்றுதான் அவளுக்குப் பட்டது.

படிக்க:
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்

ஹஹோல் அவசர அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னான்: ”அவனுக்குப் பொழுது போகாவிட்டால் இப்படி எட்டிப் பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே…..”

“நிறுத்து” என்றான் நிகலாய்; “குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களில் அவனும் ஒருவன்!”

“அவனை எதற்காக குற்றம் கூறவேண்டும்? முட்டாளாக இருப்பதற்காகவா?” என்று அவசரமாக கேட்டான் அந்திரேய்.

நிகலாய் பதிலே பேசாமல் எழுந்து சென்றுவிட்டான். ஹஹோல் அறைக்குள்ளே மெதுவாகவும் சோர்வோடும் மேலும் கீழும் நடந்தான். அவனது ஒல்லியான கால்கள் சரசரத்து மெதுவாக நடந்தன. அவன் தனது பூட்சுகளைக் கழற்றிவிட்டு நடந்தான். நடப்பதால் சத்தம் உண்டாக்கி பெலகேயாவை எழுப்பிவிடக் கூடாது என்று கருதினான். ஆனால் அவளோ தூங்கவில்லை. நிகலாய் சென்ற பிறகு அவள் ஆத்திரத்தோடு பேசினாள். “அவனைக் கண்டாலே எனக்குப் பயமாகத்தானிருக்கிறது.”

“ஹூம்!” என்று முனகினான் ஹஹோல். “ஆமாம். அவன் எப்போதுமே வக்கிர புத்தி கொண்டவனாகவே இருக்கிறான். இனிமேல் அவனிடம் இஸாயைப் பற்றிப் பேச்செடுக்காதீர்கள் அம்மா. இஸாய் உண்மையில் ஒரு ஒற்றன்தான்.”

“அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்றாள் தாய். “அவனது பந்துக்களில் ஒருவன் ஒரு போலீஸ்காரன்.”

“இல்லை. நிகலாய் அவனை வெளுத்து வாங்கி விடுவான்” என்று மேலும் தொடர்ந்து பேசினான் ஹஹோல். “அதிகாரத்திலே இருக்கும் கனதனவான்கள் இந்தச் சாதாரண மக்களின் மனத்திலே வளர்ந்துவிட்டிருக்கிற உணர்ச்சிகளைப் பார்த்தீர்களா, அம்மா? நிகலாய் மாதிரி நபர்கள் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்தால், அதனால் தமது பொறுமையையும் இழந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவ்வளவுதான். வானத்தில் இரத்த வெள்ளம் பரவும். பூமி ஒரு சோப்புபோல இதில் நுரை தள்ளும்!”

“பயங்கரமாயிருக்கிறது, அந்திரியூஷா!’ என்று வியந்து போய்ச் சொன்னாள் தாய்.

“ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்” என்று ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னான் அந்திரேய், “முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.”

திடீரென அவன் சிரித்தான். பிறகு சொன்னான்:

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது!”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

சர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா ? வாழ வைத்தனவா ?

விஜய்ண்ணாவும் சற்குணம் ஐஏஎஸும் இல்லாத நாட்கள் !

1966 நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியான ஒரு செய்தி : “கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். சிலரிடம் மறைத்துக்கொள்ள எதுவும் இல்லை. சிலர் குடையைப் பிடித்துக்கொண்டும் சிலர் பையை தலைமேல் போட்டுக்கொண்டும் நிற்கிறார்கள்”. இப்படித்தான் இருந்தது அப்போது நிலைமை. அந்தத் தருணத்தில் விஜய்ண்ணா பிறக்கவில்லையென்பதால் என்ன செய்வதென அரசுக்கும் தெரியவில்லை.

1943 அன்றைய வங்காளத்தில் பட்டினிக் கொடுமையால் மாண்டு போன குழந்தையின் புகைப்படம். (படம் நன்றி : விக்கிபீடியா.)

1965-ல் மிகப் பெரிய உணவுதானிய பஞ்சத்தை இந்தியா எதிர்நோக்கியிருந்தது. 1964 – 65ல் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி 65-66ல் 72.3 டன்களாகக் குறைந்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை. கேட்கவும் வேண்டுமா? இந்தத் தருணத்தில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966 நவம்பர் 16-ல் இந்தத் திட்டம். ஆனால், எல்லா குடும்பங்களுக்கும் கார்டுகள் கிடைக்கவில்லை.

1967-ல் முதலமைச்சரான சி.என். அண்ணாதுரையால் (இவர் விஜய்ண்ணா இல்லை.. வேறு ஒரு அண்ணா) வாக்குறுதி அளித்தபடி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால், அப்போதுதான் தமிழக நிர்வாகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்தது என்கிறார் இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை செயலராக இருந்து ஒய்வுபெற்ற எஸ். நாராயணன்.

அண்ணா துரை வலியுறுத்தியதால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி சில மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் சி.என். அண்ணாதுரை மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கி செயல்படுத்தப்படுவது வழக்கம்.

அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான் கீழிருந்து மேல் நோக்கி திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது என்கிறார் அவர்.
1969-ல் மு. கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மாறியது. பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டறிந்து தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் பிரச்சினைகளைச் சொன்னால், அதிகாரவர்க்கம் அதற்கு காதுகொடுக்க வேண்டியிருந்தது.

1960-களில் துவங்கி 80-களுக்குள் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் அரசு அதிகாரிகளானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமங்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள்.

1975-க்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. அரிசிக்காக துவங்கப்பட்ட இந்த முறையின் மூலம் சர்க்கரை, மண்ணெண்ணையும் வழங்கப்பட்டன. 1972-ல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. இந்த கார்டை வைத்தே கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்படுகிறன. அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

ரேஷன் கார்டுகளுக்காக அடிதடியில் ஈடுபட்ட காலம் மாறி, வருவாய்க்கேற்றபடி வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள், பொருட்களே வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் வரை வந்துவிட்டது. மக்கள் தொகையின் பெரும் பகுதி அரசி வாங்க ரேஷன் கடைகளைச் சார்ந்திருந்த காலம் மாறியிருக்கிறது.

1970-க்கும் 76-க்கும் இடையில் மாநிலத்தின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்தது. தனிநபர் வருவாய் 30 சதவீதம் அதிகரித்தது. 1971-ல் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 1981-ல் 54.4 சதவீதமாக மாறியது. 1971-ல் 125ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 77-ல் 103ஆகக் குறைந்தது. வறண்ட நிலங்களுக்கு நில வரி ஒழிக்கப்பட்டது. 1974-ல் கொண்டுவரப்பட்ட சட்டம், பரம்பரைக் கர்ணம் முறையை ஒழித்தது. இதையெல்லாம் இடஒதுக்கீட்டை வைத்து, தகுதியில்லாமல் வேலைக்குச் சேர்ந்தவர்களே செய்தார்கள்.

திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின, திராவிடச் சித்தாந்தம் என்பது எப்படி மக்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை உண்மையிலேயே அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் Dravidian Years: Politics and Welfare in Tamilnadu. எழுதியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன்.

*****

வளர்ந்த நாடுகள் இலவசங்களை வழங்குவதில்லையா ?

ந்தியா போன்ற ஊழல் அரசியல்வாதிகளும் ஏழ்மையான மக்களும் நிறைந்த நாடுகளில் மட்டும் இலவசங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஊழலுக்காகவே தோன்றி, நிலைபெற்றிருக்கும் திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில் இது அளவுக்கு மீறி போய்விட்டது. எந்த வளர்ந்த நாடும் இலவசங்களை வழங்குவதில்லை என்கிறார்கள் நண்பர்கள். உண்மையில் வளர்ந்த நாடுகளில் இலவசங்கள் இல்லையா?

சில வளர்ந்த நாடுகளில் வழங்கப்படும் இலவசத் திட்டங்கள், மானியங்கள் பின்வருமாறு. இவை இணையத்திலிருந்து தொகுக்கப்பட்டவை. அந்தந்த நாடுகளில் வசிப்பவர்கள் தவறுகளோ, கூடுதல் திட்டங்களோ இருந்தால் சேர்க்கலாம்.

1. ரஷ்யா: நாட்டின் கிழக்குப் பகுதியில் மக்கள் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஹெக்டேர் நிலம் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த சட்டவிரோத நடவடிக்கையும் அங்கு நடக்கவில்லையெனில் ஐந்தாண்டுகளில் நிலம் பயனாளிக்கு முழுமையாக மாற்றித்தரப்படும்.

2. வடக்கு அயர்லாந்து: மருந்துச் சீட்டுகளுக்கு மருந்துகள் இலவசம். ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மருந்துகள் இலவசம்.

3. நியூசிலாந்து: வேலைக்காக வேறு இடங்களுக்கு நிரந்தரமாக குடிபெயர்பவர்களுக்கு வரியில்லாமல் 3,000 நியூசிலாந்து டாலர்கள் – 1500 பவுண்டுகள் – வழங்கப்படுகிறது.

4. அமெரிக்கா :

  1. பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பேச சலுகை விலையில் தொலைபேசி.
  2. வருவாயில் பின்தங்கிய வகுப்பினருக்கு உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்கும் Supplemental Nutrition Assistance Program திட்டம்.
  3. வீட்டு வாடகையோ, சலுகை விலையில் வீடுகளையோ வழங்கும் Federal Public Housing Assistance திட்டம்
  4. National School Lunch Program’s Free Lunch Program – அமெரிக்காவில் இதுபோல பல திட்டங்கள் உண்டு.

5. சிங்கப்பூர் : மக்கள் தொகையை அதிகரிக்க முதல் இரண்டு குழந்தைகளுக்கு தலை சுமார் 3,890 பவுண்டுகளும் மூன்றாவது குழந்தை முதல் ஒவ்வொரு குழந்தைக்கும் 4,870 பவுண்டுகளும் வழங்கப்படுகின்றன.

6. போர்ச்சுகல் : இங்குள்ள Alcoutim-ல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 4,430 பவுண்டுகள் வழங்கப்படுகின்றன.

7. ஹங்கேரி : மணமாகும் இளந்தம்பதிகள் 3 அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெறுவதாக வாக்குறுதியளித்தால் தனியாக வீடு வழங்கப்படுகிறது.

8. இத்தாலி : பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 வயதாகும்வரை மாதம் 61 பவுண்டுகள் வழங்கப்படுகிறது.

9. ஸ்பெயின் : பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 2 ஆயிரம் பவுண்டுகள்.

10. பிரான்ஸ் : கர்ப்பிணி பெண்களின் ஏழாவது மாதத்தில் சுமார் 900 பவுண்டுகள் வழங்கப்படும். ப்ரீ ஸ்கூல் வகுப்பு குழந்தைக்கு இலவசம்.

11. கனடா : பல நகரங்கள் குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் வகையில் மானியங்களை அளிக்கின்றன. அதாவது ஒருவர் குறைந்தபட்ச வருவாயை சம்பாதிக்க முடியாவிட்டால், மீதமிருக்கும் தொகையை அரசு வழங்கும்.

12. நெதர்லாந்து : Utrecht-ல் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது.

13. நார்வே : பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம்.

14. ஃபின்லாந்து : கல்வி முழுக்க முழுக்க இலவசம். (தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முழுக்க முழுக்க இலவசம்).

15. டென்மார்க் : ஐக்கிய ராஜ்ஜியம், போலாந்து : மருத்துவ சேவைகள் இலவசம்.

*****

ரசு இலவசமாகக் கொடுத்த பொருட்களை தூக்கியெறிவது, உடைப்பது என ஒரு விரல் புரட்சி காட்சிகள் வீடியோக்களில் பார்க்கக் கிடைக்கின்றன.

நம் வீடுகளில் உள்ள மின் இணைப்பில், முதல் 100 யூனிட்டுகளை அரசு இலவசமாக வழங்குகிறது. அதுவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெட்கமேயில்லாமல் இலவசமாக அனுபவிப்பவர்கள் எப்படி இதை திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்?

அந்த மின்சாரத்திற்கான மானியத்தை டாஸ்மாக் வருமானத்தில் இருந்து அனுப்பாமல், தமிழக அரசு மூட்டை தூக்கி, கூலி வேலை செய்து மின்வாரியத்திற்கு அனுப்புகிறதா?

நன்றி: Muralidharan Kasi Viswanathan

அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

விருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாட்களை விடுமுறையில் கழிப்பதற்காக போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை.

‘சரி சரி அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்’ என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியை துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர் ‘முடிந்துவிட்டது’ என்று சொன்னது போல எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அந்த ஏமாற்றத்தை மறைப்பது ஆகப் பெரிய சவாலாகவும் ஆனது.

எனக்கு ஒருவிதத்திலும் சம்பந்தம் இல்லாத விருந்து அது. என்னுடைய நண்பருடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மூன்று வருடமாகக் காதலித்தவளுக்கு இப்பொழுதுதான் காதலன் ஒரு மோதிரத்தை கொடுத்து காதலை உறுதிப்படுத்தியிருந்தான். அடுத்து திருமணம்தான். இந்தக் காதலர்களுக்கு வாழ்த்து சொல்கிற மாதிரி அந்தப் பெண்ணின் அலுவலகத்தை சேர்ந்த சில நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த விருந்துக்குத்தான் நான் போகவேண்டுமென்று விரும்பினேன். காரணம் நண்பர் போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவல்தான். அந்தக் காதலன் வேலை செய்வது சி.ஐ.ஏ ( Central Intelligence Agency) நிறுவனத்தில். அதாவது  அமெரிக்காவின் மைய உளவுத்துறையில். என்னுடைய ஆர்வம் அதுதான். நான் என் வாழ்க்கையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தது கிடையாது. இனிமேல் சந்திப்பேன் என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

உளவுத்துறை பற்றி நான் அறிந்தது எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். மீதியை அமெரிக்க சினிமாவில் பார்த்து தெரிந்துகொண்டேன். சினிமாவில் நான் பார்த்த துப்பறிவாளர்கள் எல்லாம் மனதில் திகில் எழுப்பக்கூடியவர்கள். அவர்கள் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். சிறுவயதில் படித்தது சங்கர்லால். அவர் சத்தம் எழுப்பாத மெல்லிய ரப்பர் சூக்களை அணிந்தபடி நாலு மாடிக் கட்டடங்களில் அனாயசமாக பாய்ந்து ஏறிவிடுவார்.

அடுத்து படித்து வியந்தது வந்தியத்தேவன். இவன் தைரியசாலி. வாய் திறந்தான் என்றால் புதுப்புது பொய்களை அந்தக் கணமே உண்டாக்கிவிடுவான். ஆனால் அவன் புத்திசாலியல்ல; மூடத்தனம் கூடியவன். அவன் கண்டுபிடித்தது எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. ஆகவே நவீன துப்பறிவாளன் என்ன செய்வான், எப்படி திட்டமிடுவான், எப்படி செயல்வடிவம் கொடுப்பான் என்பதையெல்லாம் நேருக்கு நேர் நான் அறிய துடித்தது இயற்கையானது.

பின்னேரம் அலுவலகத்திலிருந்து திரும்பிய நண்பர் ‘சரி, பிரச்சினை இல்லை’ என்றார். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை நடந்த விருந்துக்கு என்னை அழைத்துப்போனார். போகும் வழியில் காரில் நண்பரிடம் அந்த சி.ஐ.ஏ அதிகாரிக்கு பக்கத்தில் எனக்கு ஓர் ஆசனம் பிடித்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அந்த உளவாளியிடமிருந்து அத்தனை விசயங்களையும் ஆகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிவிடவேண்டும் என்பது என் திட்டம். நண்பரும் ரோட்டை பார்த்தபடி சரி என்று தலையாட்டினார்.

ஆனால் விருந்து நடந்த இடத்துக்கு போய்ச் சேர்ந்தபோது எனக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கே ஆசனங்களே இல்லை, அது ஒரு கொக்ரெய்ல் (காக்டெயில்) விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தை கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான்.

நண்பன் நான் கேட்டதை மறக்கவில்லை. முதல் வேலையாக என்னை அழைத்துப்போய் தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். முற்றிலும் மென்சிவப்பு வர்ணத்தில் அவள் இருந்தாள். அவளாகவே தான் மணமுடிக்கப் போகும் சி.ஐ.ஏ அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு  மறைந்துபோனாள். முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஆள். சதுரமான முகம், சதுரமான உடம்பு. என்னுடைய கைகளை குலுக்கியபோது முறிந்து விழுந்துவிடும்போல இருந்தது. ஒரு ஜேம்ஸ் பொண்டின் உருவத்தை மனதிலே சித்தரித்து வைத்திருந்த எனக்கு அவருடைய உடலமைப்பும், முக வெட்டும், சொண்டுக்குள் மறைந்திருந்த சிரிப்பும் அப்படியே பொருந்திப் போனது. ஆனால் அதற்கு பிறகு நடந்ததுதான் நான் எதிர்பாராதது.

அந்தக் கூட்டத்தில் ஒருவராவது நின்ற இடத்தில் நின்று பேசவில்லை; சுற்றிக்கொண்டே இருந்தார்கள். உளவுத்துறை அதிகாரியும் என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்துவிட்டார். விருந்துக்கு டிவி சீரியலில் நடிக்கும் ஒரு சின்ன நடிகரும் வந்திருந்தார். இளம் பெண்கள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று பேசினார்கள். அவர் நகர்ந்தபோது சொறி பிடித்த நாயை சுற்றி இலையான்கள் (ஈக்கள்) மொய்ப்பதுபோல அவர்களும் நகர்ந்தார்கள். ஒரு பெண் எழுத்தாளரும் வந்திருந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். எகிப்திய கடவுள்கள் பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று ஏற்கனவே வெளிவந்திருந்தது. அதிலே பிரதானமாக தோத் என்ற கடவுள் மீது தான் ஆராய்ச்சி செய்ததாகவும், தோத் கடவுள் ஆண் உடம்பும் ஐபிஸ் பறவையின் தலையும் கொண்டிருப்பார் என்று விளக்கினார். தன்னுடைய அடுத்த புத்தகம் தயாராகிவிட்டது ஆனால் அதற்கு ஒரு பதிப்பாளரை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார். அது என்ன புத்தகம் என்று நான் கேட்கவில்லை. அது இன்கா இனத்தவரின் கடவுள்களாக இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டேன்.

ஒருவர், யாரோ பாடப் போகிறார் என்று அறிவித்தார். ஒரு சீனப் பெண் கையிலே வட்டமான வைன் கிளாசை தூக்கிப்பிடித்தபடி கூடத்தின் நடுவுக்கு வந்து நின்றார். தரையை தொடும் ஆடையில் அவர் நடந்து வந்தபோது அவர் பாதங்களை ஒருவரும் பார்க்கவில்லை. இனிமேல் பாடப்போகும் மெட்டுக்கு ஏற்ப அசைந்து வந்தார். முதுகு நேராக நிற்க அவருடைய இடை மாத்திரம் பெண்டுலம்போல இரண்டு பக்கமும் ஆடியது. அந்தப் பாடல் ஒரு பழைய சீனப் பாடல் என்று சொல்லிவிட்டு பாடினார்.

ஒலிவாங்கியை பிடிப்பதுபோல வைன்கிளாஸை வாய்க்கு கிட்ட வைத்துக்கொண்டு பாடியபோது எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தைபோல ஒலித்தன. உயிர் எழுத்துக்கள் எல்லாம் மூக்கினாலும், மெய் எழுத்துக்கள் வாயினாலும் ஒலிவடிவம் பெற்றன என்று நினைக்கிறேன். பாடலின் இசை சாதாரணமாகத் தொடங்கி முடிவில் ஒரு மெல்லிய சோகரசத்தை தொட்டுவிட்டு நின்றது. பாட்டு முடிந்ததும் எல்லோரும் கைதட்டி அவரை சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள்.

கூட்டம் ஒருவாறு அகன்றதும் நானும் பாராட்டிவிட்டு ‘இது ஒரு சோகப் பாடலா?’ என்று வினவினேன். அவர் அது சரி என்றார். நீங்கள் பாடியதன் பொருள் என்ன என்றேன். அவர் அதிசயித்தார். ஒருவருமே அவரிடம் அதைக் கேட்கவில்லை. புதிதாக மணமான ஆண், மனைவின் பிரிவை தாங்கமுடியாமல் அரற்றியது. மெல்லிய குரலில் சீன மொழியில் ஒவ்வொரு வரியாக உச்சரித்து அதன் மொழிபெயர்ப்பையும் சொன்னார். வீட்டுக்கு வந்தபோது எல்லாமே மறந்துவிட்டது, சில வரிகளைத் தவிர.

“பளிங்குத்தரையில்  உனது பட்டாடை
உரசும் சத்தம் நின்றுவிட்டது.
புழுதி சேர்ந்துவிட்டது.
பழுத்த இலைகள் வாசல் கதவடியில்
குவிந்துவிட்டன.
உன்னையே ஏங்கி அடிக்கும் என் இருதயம்
ஓய்வதற்குள் திரும்பிவிடு.”

ஒரு குறுந்தொகை பாடலை நினைவூட்டுகிறது என்று அவரிடம் சொன்னேன். அவர் குறுந்தொகை என்றால் என்னவென்று கேட்டார். பின்னர் அது பற்றிப் பேசினோம்.

அவரை எனக்கு நல்லாகப் பிடித்துக் கொண்டது. நான் பேசியபோது ஒரு வார்த்தையையேனும் தவற விட்டுவிடக்கூடாது என்பதுபோல உன்னிப்பாகக் கேட்டார். அவ்வளவு கூர்மையான கவனத்தை நான் முன்னர்  ஒருவரிடமும் கண்டதில்லை. ஒரு நிமிடத்தில் வெடிக்கப் போகும் வெடி குண்டை செயலிழக்க வைப்பது எப்படி என்று ஒருவர் கூறுவதை  உள்வாங்குவதுபோல அவர் முழுக்கவனத்துடன் கேட்டார். தன்னுடைய தொலைபேசி எண்ணை ஒரு பழைய கார் தரிப்பு டிக்கட்டின் பின்பக்கத்தில் பேனையால் எழுதி என்னிடம் தந்தார். மறுபடியும் சுற்றில் அவர் கலந்துகொண்டபோது நான் அவர் பாதங்களை காணவில்லை.

மீதிச் சுழற்சியில் மேலும் இரண்டு முறை அமெரிக்க உளவாளியை சந்தித்தேன். இரண்டு இரண்டு நிமிடங்கள் பேசினார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்  காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று படித்திருந்தேன். ஆனால் இன்றுவரை அதில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. எந்தெந்த நாடுகளில் அமெரிக்க உளவாளிகள் மறைந்திருக்கிறார்கள் என்பதும் ஒருவரும் அறிந்ததில்லை. நிறுவனத்தின் பட்ஜெட் வருடத்துக்கு 40 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்று சொன்னார். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது. எனக்கு முன் நின்று பேசிய உளவாளி பார்த்தால் மெல்லிய ரப்பர் ஒட்டிய சப்பாத்து அணிந்த சங்கர்லால் போலவோ, முரட்டுத் தோற்றம் கொண்ட வந்தியத்தேவன் போலவோ இல்லை. ஒளிவு மறைவு இல்லாமல் நேராக கண்களைப் பார்த்து நேசமுடன் பேசினார். ரோட்டிலே இவரைப் பார்த்தால் நான் ஒரு வீடு விற்பனை முகவர் என்றோ அல்லது விமான ஓட்டி என்றோதான் ஊகிப்பேன்.

நான் மறுபடியும் சுழற்சியில் சேர்ந்து நகர்ந்தபோது விவாதம் செய்யும் இருவரிடம் அது என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. ஒருவர் அந்த கூடத்தையே நிறைத்து விடுவதுபோல நடுவிலே நின்றார். பக்கத்திலே ஓர் இளம் பெண். அங்கு வந்திருந்த பெண்களில் அவரே அதிக அழகானவர். மாலை வெய்யில் நிறம். அவருடைய கண் இமைகள் அவருடைய கண்களை பாதி மறைத்துவிட்டன. தன்னுடைய வம்ச வேர்களைத் தேடிப்போன கதையை அவர் சொன்னார். தன்னுடைய தகப்பன் வழி ரஸ்யாவில் தொடங்கி போலந்துக்கு வந்து இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததென்றும், தன் தாய் வழி நேராக கிரீஸிலிருந்து வந்ததாகவும் கூறினார். ரஸ்ய முடியும் கிரேக்க கண்களும் அவருக்கு அப்படி அமைந்திருந்தன.

கூடத்தின் நடுவில் நின்ற மனிதர் தன்னுடைய பெயர் கிப்ளிங் என்றும், தன்னுடைய மூதாதையர் இங்கிலாந்தின் பிக்கரிங் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும்,  தனக்கு பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் சொந்தமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். எல்லாவிதமான வம்சத் தேடலும் ஓர் அரசகுமாரனிலோ, புகழ்பெற்ற எழுத்தாளனிலோ, பிரபலமான பாடகனிலோதான் முடிவடையும். ஒரு கொலைகாரனிலோ, கொள்ளைக்காரனிலோ, நாட்டை விட்டு துரத்தப்பட்டவனிலோ முடிவடைவதில்லை.

பத்து மணியளவில் விருந்து முடிந்ததும் நான் நண்பனின் காரில் ஏறிக்கொண்டேன். அவன் கார் சாவியை துளையில் நுழைத்துவிட்டு காரை கிளப்பாமல் சும்மா அமர்ந்திருந்தான். பின்னர் என்னை திரும்பி பார்த்து ‘நான் உங்களுக்கு இன்னும் கூட உதவி செய்திருக்கலாம்’ என்றான். ‘இதுவே பெரிய உதவி’ என்றேன் நான். காரை மௌனமாக எடுத்து நெடுஞ்சாலைக்கு விட்டான். எதிர் வெளிச்சத்தை வெளிச்சத்தால் வெட்டிக்கொண்டு வேகமாக காரை ஓட்டிய நண்பன் ‘அமெரிக்க ஒற்றருடன் நிறையப் பேசினீர்களா? என்ன கண்டு பிடித்தீர்கள்?’ என்று கேட்டான். எனக்கு டக்கென்றது.

யோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர், எங்கேயெங்கே வேலை செய்தேன், என்ன வேலை, யார் யாரைத் தெரியும், என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் ஆசைகள், என் திட்டங்கள் என சகலதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவருடைய மூன்றெழுத்து முதல் பெயர்தான் தெரியும். முழுப்பெயரைக்கூட நான் கேட்டு அறியவில்லை. இந்த உண்மை தலையில் இறங்கியதும் நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

அந்த விருந்துக்கு என்னிடமிருந்த ஆகத் திறமான உடுப்பு தரித்து, ஆகத்திறமான சப்பாத்து அணிந்து, ஆகத்திறமான அமெரிக்க ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டு போனது எவ்வளவு வீண் என்று பட்டது. உளவாளியிடம்  நான் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒன்றுமே மிஞ்சவில்லை. மிஞ்சியது ஒரு சீனக் கவிதை மட்டுமே.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

சுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு ! படக்கட்டுரை

சென்னையின் வர்த்தக மையங்களில் பழமையும், முக்கியத்துவமும் வாய்ந்ததென்றால் மூலக்கொத்தளம் கருவாட்டு மண்டியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். சுமார் 130 வருடங்களாக சென்னையின் வரலாற்றில் பயணித்து வருகிறது அந்த மண்டி.1806 -ல் பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு,   பின்னர் ஆந்திராவின் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாயாக மாறிப் போயுள்ள பக்கிங்காம் கால்வாய்.

1876-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தை போக்க மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய சூழலில் அந்தக் கால்வாயை மேலும் நீட்டித்து அடையாறு வரையும் பின்னர் அது விழுப்புரம் வரையிலும் தோண்டப்பட்டது. பின்னாளில் அக்கால்வாய் நீர்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.”

படிக்க :
கருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்

“விஜயவாடவில் இருந்து விழுப்புரம் கூனிமேடு வரை வெட்டப்பட்டுள்ள இந்த கால்வாய் வழியாக அரிசி, உப்பு, பருத்தி, மீன், கருவாடு உள்ளிட்ட உணவு பொருட்கள் மூலக்கொத்தளத்தில் உள்ள படகுத்துறையில் வந்து இறங்கும். அதில் வரும் கருவாட்டை இங்கே விற்பனை செய்வார்கள். அதுவே நிரந்தரமாகி விட்டது” என்கிறார்கள் மண்டி வியாபரிகள்.  இன்று அந்தப் பகுதியில் பல்வேறு தொழில்கள், கடைகள் என ஏகத்துக்கும் பரந்து விரிந்தாலும் கருவாடு என்றால் அப்பகுதி மட்டுமல்ல, கருவாடு ரசிகர்களாக உள்ள அனைத்து மக்களின் நினைவிற்கு வருவது அந்த மண்டிதான்.

பரபரப்பான அந்த நான்குமுனை சந்திப்பில், வால்டாக்ஸ் சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளின் எதிரில் ஒய்யாரமாக நின்று கொண்டு கருவாட்டின் விலையை விசாரித்து கொண்டிருந்தனர் மக்கள். கருவாட்டின் மணம் காற்றில் பரந்த வண்ணம் சாலைகளில் செல்வோரையும் இழுத்து வாங்கும்படி வீசியது.

கருவாடு ஆவணப்படம்

நண்பகல் பத்து மணி என்பதால் அப்பொழுதுதான் கடையைத் திறந்து விற்பனைக்கு எடுத்து வைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தார் குமார். நெற்றியில் விபூதியும், குங்குமமும் நிறைய பவளச் சிரிப்புடன் நம்மை நோக்கி……

“பாருங்க…சார்… எந்த கருவாடு வேணும்..எல்லாம் ஃபிரஷ்..ஷா.. இருக்கு..”என்றார்.

“என்னென்ன கருவாடு’ண்ண இருக்கு”?

குமார்

“வாலை, கெளிச்சக் கருவாடு, காரப்பொடி, நெத்திலி, காஞ்ச எறா, சுறா, பால்சுறா, சென்னாகொன்னி, ஷீலா, வஞ்சிரம், பாம்பேடெக், கோலா, மாசி” என்று கூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கருவாட்டினை ஒவ்வொன்றாக சொல்லி முடித்துவிட்டு, . “எந்த கருவாடு வேணும்” என்று பார்வையிலே கேட்டார்.

“இருக்கிறதுலயே வெல அதிகமான கருவாடு எது’ன்னு சொல்லுங்களேன்”?

வஞ்சிரம்தான் சார். கிலோ 600 ரூபா… அடுத்து கோவா நெத்திலி 600 ரூபாய். ராமேஸ்வரம் நெத்திலி 400 ரூபாய். எல்லாம் நல்ல அயிட்டம்தான்….சார்.

“சரி! எல்லாம் எந்த ஊரு சரக்கு”?

வஞ்சிரம் கருவாடு

சார்! கெளிச்ச, சென்னா, எறா எல்லாம் ஆந்திராவில் இருந்து வருது. கோலா காசிமேடு, பாம்பே டெக் மும்பையிலிருந்து வருது…. வாள கருவாடு குஜராத், ஆந்திரா, காசிமேடு அப்புறம் ராமேஸ்வரத்தில் இருந்து வரும்.!

“குஜராத்ல இருந்து பாடம் செய்து வரும் வாளக்கருவாடு செம்ம டேஸ்ட்டா இருக்கும். ஆனா அங்க இருக்கவங்க அதிகம் சாப்பிட மாட்டாங்க. எல்லாத்தையும் ஒரு பாக்சில போட்டு இங்க அனுப்சிடுவாங்க. அது வந்த இரண்டு மூனு நாளைக்குள் விற்றால் ஓரளவு  லாபம் கிடைக்கும். இல்லன்னா காய்ஞ்சி எடை குறைஞ்சிடும்.

பெட்டிகளில் அடுக்கப்பட்டடுள்ள வாளை கருவாடு.

ராமேஸ்வரம்  வாள கருவாடு ஆறு மாசத்துக்குகூட கெடாம இருக்கும். அந்த அளவுக்கு தரமா பாடம் பண்ணுவாங்க. விற்பனையே ஆகாத பட்சத்தில் கருவாடு கெட்டுப் போனால் அதனை கோழி தீனிக்கு கொடுத்து விடுவோம்” என்றார்.

கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வர அங்கிருந்து நகர்ந்ததும், அருகிலிருந்த கடையில்……ஊழியர் ஒருவர் கருவாட்டை அழகாக வெட்டிக் கொண்டிருக்க… உள்ளே இருந்து ஒருவர் வேகமாக வந்து….

“என்ன வேணும்”? என்றார் காத்திரமான குரலில்! அவர் பெயர் ஜெபகுல்லா.

ஜெபகுல்லா (இடது புறம் உள்ளவர்)

“விற்பனையெல்லாம் எப்படி இருக்கு”? என்றதும்….. சற்று யோசித்து விட்டு…. மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்…..

“சென்னையை பொருத்த வரைக்கும் கருவாடு சாப்பிடுறவங்களோட எண்ணிக்கை கொறஞ்சிகிட்டே வருது. ஆனா கிராமத்துல இருக்கும் மக்கள் கருவாட்டை விரும்பி சாப்பிடுறாங்க. அவங்களால வஞ்சிரம் போன்ற விலையுயர்ந்த கருவாடு வாங்க முடியறதில்ல. விலை கூடுதலா இருக்குன்னு நெனக்கிறாங்க. வாங்கக் கூடியவர்கள் கருவாட்டையே ஒதுக்குறாங்க.

எப்படி இருந்தாலும் வஞ்சிரம் 1000 ரூபாய்க்கு  மேலதான் விற்கனும். ஆனா 600-க்குதான் விக்கிறோம். எப்படின்னா, வஞ்சிரம் மீனே 1000 ரூபாய்க்கு விற்கிறது. அதனை காயவைத்து பாடம் போட்டு கொடுப்பது கடினமான வேலை. அதற்கு ஏத்த விலையைப் போட்டால் மீனைவிட அதிகமாக விற்க வேண்டி வரும். இருப்பினும் குறைவாகத்தான் விற்கிறோம்..

“குஜராத்ல இருந்து வரும் வாளை சிறப்பா இருக்கும்னு சொல்லுறாங்களே எப்படி”?

உண்மைதான். அதைவிட ராமேஷ்வரம் கருவாடு நல்லா இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் பாடம் பண்ணுவதுல ஒரு பக்குவம் இருக்கும். அதுல கைதேர்ந்தவங்க நம்ம ராமேசுவரத்துகாரங்க.

“சரி..! இடையில கருவாடு விக்க கூடாதுன்னு சொன்னாங்களே… அதனால எதாவது பாதிப்பு வந்ததா”?

காய்ந்த இறால்

“சிலர் ‘நான்–வெஜ்’ஜிக்கு எதிரா தொடர்ந்து எதாவது கருத்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. இவங்க,  எல்லோரையும் மனிதர்கள் என்பதை ஏத்துக்கவே மாட்டாங்க..  இவர்கள் (பார்ப்பனர்கள்) இதுபோன்ற உணவில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மாட்டுக் கறி முதல் கருவாடு வரை எல்லா உணவையும் அவர்கள் எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் எப்பவும் கருவாடு உழைக்கும் மக்கள் உணவாகவே இருக்கிறது” என்கிறார், ஜபகுல்லா.

அது என்னவோ உண்மைதான்…. கிராமப்புறங்களில் சுண்டக் கஞ்சிக்கு  கருவாடுதான்  “இன்ஸ்டண்ட் சைடிஸ்ட்”. எறிகிற நெருப்பில் சுட்டுக் கொடுப்பார்கள்..  அதிலிருக்கும் சுவை வேறு எதிலும் இருக்காது. முக்கியமாக விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரின் விருப்பமான தொடுகறி உணவு கருவாடுதான். அதுமட்டுமா?

படிக்க :
சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?
நாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு

கருவாட்டில் இருக்கும் மருத்துவ குணம், அதன் நன்மைகள் பற்றி சரளமாக விளக்குகிறார்….. முகமது சலீம் பாஷா.

முகமது சலீம் (வலது புறம் உள்ளவர்)

“சார், முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த விற்பனை இப்ப இல்ல. காரணம் வரத்து குறைவு. விலையேற்றம் அதிகாமகிடுச்சி. நெத்திலி கருவாடு எல்லாம்  சில்லறை விலைக்கு வித்தோம். இன்னைக்கு அந்த விலைக்கு தான் கொள்முதலே பன்றோம். ராமேஸ்வரத்துல இருந்து வர கருவாடு எல்லாம் அவ்வளவு அற்புதமா இருக்கும். விலையும் குறைவா இருக்கும். சுனாமிக்கு பிறகு எதிர்பார்த்த அளவு சரக்கு வரது இல்ல. எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப ஆந்திரா, கேரளா, குஜராத்துன்னு வெளியில இருந்துதான் இறக்குமதி பண்றோம். தமிழ்நாட்டுல எல்லாம் கொழம்பு கருவாடுதான் வருது.

இன்னொரு பக்கம், எந்த வியாதிக்கு மருத்துவமனைக்கு போனாலும் டாக்டர் முதல்ல சொல்லுறது கருவாடு சாப்பிடாதிங்கன்னு தான் பயமுறுத்துறாங்க. பி.பி, சுகர்  வந்தவங்க கருவாடு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுறாங்க. இன்னிக்கு எல்லாருக்கும் அந்த பிரச்சனைதான் அதிகமா இருக்கு. அதனாலயே கருவாடு சாப்பிடுறது குறைஞ்சிடுச்சி.

உண்மையிலே கருவாட்டுல நெறைய கால்சியம் சத்து இருக்கு.  மருத்துவ குணமும் கருவாட்டுக்கு இருக்கு சார்.!  பறவைக் காய்ச்சல், சிக்கன் குன்யா வந்த பிறகு கச்ச கருவாட்ட ரசம் வச்சி குடிக்க சொன்னாங்க.  அதுல கசப்பு அதிகம். அந்த கசப்பு தான் அந்த நோயை குணப்படுத்தும். திருக்கை  கருவாடு இடுப்பு வலிக்கு நல்ல மருந்து. பால்சுறா குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நல்லது.  மாசி மீன்…. உடம்புக்கு நல்லது. வலிமைய தரும். இந்த மாசி கருவாடு மாலத்தீவுல இருந்து வருது. சுறாவினுடைய கறியை அறுத்து காய வைத்து பாடம் போட்டு கொடுப்பாங்க. அது தான் அந்த கருவாட்டோட சிறப்பு.

மாசி கருவாட்டை ராம்நாட் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க.  பாம்பே டெக்  கருவாட்டை பெங்களுர் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கருவாட்ட வறுத்து சாப்பிட்டா செம்ம டேஸ்ட்டா இருக்கும்.  வாளக் கருவாட்ட வால்டாக்ஸ் மக்க விரும்பி சாப்பிடுவாங்க சார்.

உப்பு இறால்

பால் சுறாவினுடையை இறக்கையை சைனீஸ் மக்கள் சூப் வைத்து குடிப்பார்கள். ஆண்மை அதிகரிக்கும்.  சுறாவும் இடுப்பு வலிக்கு நல்ல மருந்து தான்.  மழையில கருவாடு சாப்பிடுறது அவ்வளவும் உடம்புக்கு நல்லது சார். குளிர்ந்த உடம்ப சூடாக்கும் தன்மை கருவாட்டு இருக்கு.  அதனால் மழையில கருவாடு சாப்பிடனும்னு சொல்லுறது…..  நம்ம கிராமத்து மக்கள் குழம்பு கருவாடு வாங்கிக்குவாங்க. ஆனா இவ்ளோ நல்லது இருந்தும் மக்கள் கிட்ட கருவாடு சாப்பிடுவதற்கான மோகம் குறைந்து விட்டது.

அசைவத்து மேல வெறுப்பு ஏற்படுத்திட்டாங்க. எல்லாத்தையும் அசைவம்னு முத்திரை குத்தி ஒதுக்கிடுறாங்க.. அப்படி பார்த்தா சீஸ் இருக்கே அதுவே மாட்டினுடைய கொழுப்புல இருந்தும், பன்றிக் கொழுப்பிலிருந்தும் தான் தயாரிக்கிறாங்க. அதை மட்டும் எப்படி சாப்பிடுறாங்க? செடி-கொடி எல்லாத்துக்கும் உயிர் இருக்கு! அதை அறுக்கிறது தப்பில்லையா? என்னக் கேட்டா பூமியில வெளஞ்சி சாப்பிடுற எல்லாம் அசைவம்தான் சார்”…!

ரஷ்ய புரட்சி நாள் விழா ! கொடியேற்ற போலீசு தடை

சியப் புரட்சியின் 101 வது ஆண்டையொட்டி “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 2

*****

நவம்பர் 7, ரசியப் புரட்சிநாளை முன்னிட்டு கரூரில் கொடியேற்றியதற்காக பு.மா.இ.மு. தோழர்கள் கைது !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டந்த 07.11.2018 அன்று தமிழகம் முழுவதும் நவம்பர் விழா நிகழ்ச்சி கொடியேற்றி இனிப்பு கொடுத்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்பட்டது.

கரூர் – தாந்தோன்றிமலை பகுதிகளில்  பு.மா.இ.மு. அமைப்பு கடந்த 8 ஆண்டு காலமாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 07.11.2018 அன்று நவம்பர் புரட்சி நாளன்று, தாந்தோன்றிமலை பேருந்து நிலையம் அருகில் பு.மா.இ.மு. அமைப்பின் சார்பில் கொடியேற்ற விழா நடத்தப்பட்டது.

அதையொட்டி பட்டாசு வெடித்தும், பறை இசை நிகழ்ச்சி நடத்தியும் “நவம்பர் புரட்சி வாழ்க!” என்றும், “முதலாளித்துவம் தோற்றுவிட்டது, இனி கம்யூனிசம்தான் மாற்று, காவி கார்ப்பரேட் ’ஹைபிரிட்’ பாஸிசத்தை முறியடிக்க நவம்பர் புரட்சி நாளில் சபதம் ஏற்போம்” என்றும் முழங்கி எமது அமைப்பின் கொடியை ஏற்றினோம்.

இந்நிலையில் ‘டைரக்டர் ஹரி படத்தில் வரும் போலீசு போல’ தயாராக வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் ஒன்று சர்..ரென வந்து தோழர்களுக்கு முன் நின்றது. சுமார் 20, 30 போலீசார் பரபரப்பாக இறங்கினார்கள். என்ன ஏது என அறியா நிலையில் அக்கம் பக்கம் இருந்த மக்களிடம் இனிப்புகள் வழங்கி கொண்டிருந்த தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்களின் வேனில் ஏறும்படி பிடித்து இழுத்தனர்.

“என்ன காரணத்திற்காக வேனில் ஏறச் சொல்கிறீர்கள், ஜனநாயக உரிமை அடிப்படையில் எங்கள் அமைப்பின் கொடியை ஏற்றி மக்களுக்கு இனிப்புதானே வழங்குகிறோம். ரஷ்ய புரட்சி பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரச்சாரம்தான் செய்தோம்” என்று கூறியதற்கு, பசுபதிபாளையம் S.I. அழகுராமன், ”எதையும் பேசாதீர்கள், எதையும் சொல்லமுடியாது, வேனில் ஒழுங்கா ஏறுங்க” என்று கூறி அரைமணி நேரத்தில் தோழர்களை வேனில் ஏற்றிச்சென்று P.K.T.திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் 9 ஆண் தோழர்கள், 3 பெண் தோழர்கள் 4 குழந்தைகள் என 16 பேர் இருந்தனர்.

அதன்பிறகு நமக்கு ஆதரவாக வழக்கறிஞரை வைத்து பேசுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அனுமதியின்றி கொடி ஏற்றியதற்காகத்தான் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

“கோடி கோடியாக கொள்ளை அடித்த கார்ப்பரேட் முதலைகளை பிடிக்கவில்லை, நவம்பர் புரட்சி விழாவை கொண்டாடியதற்கு கைது செய்கிறீர்களா…?” என்று பெண் தோழர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு போலீசாரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

மண்டபத்தில் தோழர்களுக்கு தேவையான தண்ணீர், உணவுகளைக் கூட உரிய நேரத்தில் வழங்கவில்லை. கட்டாய ரிமாண்ட் செய்ய வேண்டும் என பசுபதிபாளையம் போலீசார் முடிவோடு இருந்தனர். அதன்பிறகு சக அமைப்பு தோழர்களும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து போராடியதால் மாலை 6.30 மணியளவில் விடுவித்தனர்.

நாம் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாகவே ஓரிரு போலீசார் அங்கு வந்துவிட்டனர். 10 நிமிடத்திற்குள்ளாகவே 20 – 30 போலீசார் வந்து கைதுசெய்துவிட்டனர். பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் மண்டபத்தில் இருந்த தோழர்கள், ”எதற்காக கைது செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, நாங்கள் எதுவும் பண்ண முடியாது, இது மேலிடத்து உத்தரவு” என்று கூறினார்.

காவல்துறையினர் கைது செய்ததற்கான நோக்கம் என்ன?

காவிரி பிரச்சனையிலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை கைது செய்தபோதும், நீதிபதி குன்காவை இழிவுபடுத்திய போதும், உண்ணாமலை பகுதி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி நீதிமன்றம் உத்திரவிட்ட போதும் அதை அகற்றாமலும் இருந்து நீதிமன்றத்தை அவமதித்தது இந்த அரசும் போலீசும்தான். ஆனால் ஜனநாயக நாட்டில் ஒரு கொடி ஏற்றக்கூட அனுமதி வழங்குவதில்லை.

15 நிமிடத்திற்குள் ஒரு போலீஸ் பட்டாளமே வந்து கைது செய்கிறது. அவ்வாறு கைது செய்ததற்கான உண்மையான நோக்கம், நவம்பர் புரட்சியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதுதான். இதனால் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், நவம்பர் புரட்சி பற்றி வினவு தளத்திலும், புதிய ஜனநாயம் போன்ற இதழ்களிலும் வெளியான கட்டுரைகளை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

புரட்சிகர அமைப்புகள் கொடியேற்றி, இனிப்பு கொடுப்பதற்குக் கூட ஜனநாயக உரிமை இல்லை என்பதுதான் பாசிசம்.

இனி நாம் முழங்க வேண்டியது இதைத்தான் “பாசிச பா.ஜ.க. ஒழிக!”

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு : 98941 66350.

*****

திருச்சியில்…

ஷ்ய புரட்சியின் 101 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளின் சார்பாக, பகுதிகளில் கொடியேற்றியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், மாலையில் அரங்கத்தில் சிறப்புரை மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தியும் விழாவாக கொண்டாடப்பட்டது.

காந்திபுரத்தில் காலை 10 மணி அளவில் பு.ஜ.தொ.மு. மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர ராஜ் தலைமையில் கொடிஏற்றி ”ரஷ்ய புரட்சி.. இன்றைய தேவை!” என்பதை வலியுறுத்திப் பேசினார். பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ம.க.இ.க. அலுவலகத்திற்கு முன்பு, இந்த வருடம் முதன் முதலாக மூவேந்தர் பகுதி மக்களுடன் இணைந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ம.க.இ.க. தோழர் சத்யா கொடியை ஏற்றி வைத்தார்.

அந்தப் பகுதியில் சிறுவர்கள், மாணவர்களைத் திரட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அன்று மாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர். தோழர் ஜீவா தலைமை ஏற்றார்.

பு.ஜ.தொ.மு. – தோழர் தர்மராஜ், பு.மா.இ.மு. – தோழர் பிருத்திவ், மக்கள் அதிகாரம் – தோழர் ராஜா ஆகியோர் உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர்,
தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இதற்கிடையே தோழர்கள் கவிதைகளும் பாடல்களும் இசைச்சித்திரமும் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க.  சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இறுதியாக போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாட்டுகறி விருந்து பரிமாறப்பட்டது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

*****

விருத்தாச்சலத்தில்…

சியப் புரட்சி நாளான நவம்பர் 7 அன்று பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில், லெனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வெடி வெடித்து ரசிய புரட்சியை தோழர்கள் கொண்டாடினர்.

அதன் பின்னர் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள உழவர் சந்தை, பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் நவம்பர் 7 ரசிய புரட்சி தினத்தை பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

*****

மதுரையில்…

துரையில் ம.க.இ.க. மற்றும் பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் சார்பில் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது.

தோழர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி பாடல்கள், கவிதை, நாடகம், பட்டாசுகள், புத்தாடை, விவாதங்கள், உரைவீச்சுகள், மாட்டுக்கறி விருந்து என ஒரு மாற்றுப் பண்பாட்டு நிகழ்வாக சோசலிசப் புரட்சியை கொண்டாடினார்கள்.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி விழா துவங்கியது.

காலை அமர்விற்கு பு.மா.இ.மு. தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார்.  அன்றைய ரசியாவின் நிலைமை, புரட்சியின் தேவை, புரட்சி உருவாக்கிய மாற்றங்கள், உலகெங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உருவாக்கிய தாக்கம் ஆகியவற்றை விளக்கியும், ரசியப் புரட்சியை கொண்டாட வேண்டிய அவசியத்தையும் விளக்கி விழாவை துவக்கிவைத்தார்.

பின்னர் பறை இசையுடன் விழா துவங்கியது.

“நாம் கருப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா” என்ற தா.கலையரசன் எழுதிய நூலை அறிமுகம் செய்து பேசினார் தோழர் அடைக்கலம்.  ‘உழைக்கும் வந்தேறி’களுக்கு எதிராக களமாடும் தமிழினவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக நூல் இருப்பதை விவரித்தார்.  தமிழனே தமிழ்நாட்டிற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து ஏறியவன் தான் என்பதை நூலின் வழி நின்று விளக்கினார்.  தோழரின் உரை நூலை வாசிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருந்தது.

உசிலை பகுதியை சேர்ந்த தோழர் சோவியத், கடந்த காலங்களில் புரட்சிகர அமைப்புகள் தங்களது பகுதியில் நிகழ்த்திய போராட்டங்களையும், அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள், நம்பிக்கைகள் பற்றியும் பேசினார்.  டீசல் பதுக்கலுக்கு எதிராகப் போராடி, டீசலை பறிமுதல் செய்து மக்களிடையே விநியோகித்தது, யூரியா பதுக்கலை கைப்பற்றி விநியோகம் செய்தது, ஈழத்து கொலைகாரன் பாசிச ராஜீவ்காந்திக்கு கருப்புக்கொடி காட்டியது எனப் பல்வேறு போராட்ட அனுபவங்களை பகிர்ந்தார்.  அந்த நாளில் நாம் இல்லையே என்ற ஏக்கமும் பொறாமையும் பார்வையாளர்கள் முகங்களில் தெரிந்தது.

“மக்களுக்காக போராடும் நகர்ப்புற நக்சல்கள்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில செயலாளர் பேரா இரா.முரளி உரை நிகழ்த்தினார்.  பாசிச பா.ஜ.க., மோடி அரசு அறிவுத்துறையினர் மீது நடத்திவரும் அடக்குமுறைகள் பற்றியும், இத்தகைய அறிவுத்துறையினர் மீது பாசிசக் கும்பல் கொண்டுள்ள அச்சம் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறினார்.  மேலும், பாட்டாளி வர்க்க விடுதலைக்காக பாடுபடுவதுதான் அறிவுத்துறையினரின் லட்சியமாக இருக்க வேண்டும் எனபதையும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக தோழர் லயனல் அந்தோனிராஜ், புரட்சிகர போராட்டங்களில் ஈடுபடும்போது நம்மை பாதிக்கும் தயக்கம், அச்சம், ஊசலாட்டம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணங்கள் பற்றிய விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.  விவாதம், தோழர்கள் மத்தியில் சுயபரிசீலனையை தூண்டியது என்றால் மிகையில்லை.

புரட்சிகர அரசியலும் புரட்சிகர அமைப்பும் என்ற தலைப்பில்  பு.மா.இ.மு. தோழர் மருது, “மார்க்சியம் தான் சரியான விடுதலைத் தத்துவம் என்பதையும், அதனை எப்படி உள்வாங்கி அமல்படுத்துவது என்பது பற்றியும்” ஒரு சிறு வகுப்பு எடுத்தார்.

மதியம் மாட்டுக்கறி விருந்து, இளம் தோழர்களின் பட்டாசு கொண்டாட்டம் எல்லாம் முடிந்த பின், மதிய அமர்விற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க. மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் முதலில் பறையிசை முழங்க தோழர்களை அழைத்தார். அது சுரண்டலுக்கெதிரான போர்ப் பறையாக ஓங்கி ஒலித்தது.

“மண உறவுக்கு வெளியே பெண்கள் பாலுறவு கொள்வது கிரிமினல் குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும்” நடந்த விவாதத்தை தோழர் வாஞ்சிநாதன் ஒழுங்கமைத்தார்.  தோழர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு வகை ஆணாதிக்க கண்ணோட்டங்களை வெளிக்கொணர்ந்த விவாதம் சரியான புரிதலை நோக்கி இறுதி உரையில் பயணித்தது.

“லாபமே கடவுள்” என அணு முதல் அண்டம் வரை சூறையாடும் பன்னாட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களைப் பற்றியும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும், நமது கடமை என்ன என்பது பற்றியும் எளிமையாக விளக்கினார் ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்.

நிகழ்வுகளுக்கு இடையிடையே, குழந்தைகளும், தோழர்களும் புரட்சிகர பாடல்களை பாடினர்.  தோழர் ரம்யா கவிதை வாசித்தார். பு.மா.இ.மு தோழர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த நாடகம் ஒன்று நிகழ்த்தினர்.

முழுக்கவும் வணிகம் நுகர்வு சார்ந்த ஆரிய தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக, புரட்சிகர உணர்வை ஊட்டுவதாக, சமூக அக்கறையை உருவாக்குவதாக எழுச்சியுடன் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை.

*****

நெல்லையில்…

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்னால், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும், வருகைக்குறைவு அபராதக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசு புகுந்து தடியடி நடத்தி கலைத்தது.

இதனைத்தொடர்ந்து போலீசைக் கண்டித்து நெல்லை சட்டக் கல்லூரி, புனித சவேரியர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” எனும் தலைப்பில், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் புரட்சி தினம் பாளையங்கோட்டை ஏ.டி.எம்.எஸ் மஹாலில் கொண்டாடப்பட்டது.

விழாவை நெல்லை பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவர் தன் தலைமையுரையில், இங்கு நமது நாட்டில் ஒரு நவம்பர் புரட்சியை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தனது பேச்சில் உணர்த்தினார்.

அடுத்து மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் அன்பு தன்னுடைய உரையில் நெல்லை பகுதியில் இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் மாணவர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அந்த போராட்டத்தை வலிமையாக நடத்தியது என்பதை விளக்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில், கால்வயிற்றுக் கஞ்சிக் கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் வாடும் இந்த நாட்டில் 3000 கோடிக்கு சிலை வைக்கிறார்கள்.

தொழிலாளர்கள் எங்களை கழிப்பறை செல்லக் கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று போராடுகிறார்கள். ஆனால் சோவியத் யூனியனில் ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வது சட்ட விரோதம் என அறிவித்தார்கள் என்று ஒப்பிட்டு மாணவர்கள் பெருமளவில் இந்த சமூக சீர்கேடுகளை கண்டித்து போலீசுக்கு அஞ்சாமல் போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.

அடுத்து பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர் அமுதன், இன்றைய மாணவர்களின் நிலை எப்படி இருக்கிறது? பல்கலைக் கழகங்கள் எப்படி ஊழல் மலிந்ததாக இருக்கின்றன, சாதியக் கூடாரங்களாக இருக்கின்றன, சீரழிந்து போய் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இதற்கு மாறாக சோவியத் யூனியனில் உயர்கல்வி வரையில் இலவசக் கல்வி, அனைவருக்கும் வேலை போன்றவை மக்கள் உரிமை ஆக்கப்பட்டிருந்தன. எனவே, அது போன்ற நிலையை இங்கும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்

அடுத்ததாக இளந்தோழர் வைகுந்தன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடலான தமிழா, தமிழா பாடலை பாடியது அனைவருக்கும் உற்சாகமளிப்பதாக இருந்தது.

இதனையடுத்து, தோழர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். விவசாயத்தின் அழிவு தொடங்கி, ஒக்கி புயலின் போது அரசு நடந்து கொண்ட முறை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற அழிவுத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது உள்ளிட்ட பல அரசின் நாசகாரத் திட்டங்களையும் இவற்றின் பாதிப்புகளிலிருந்து விடுபட புரட்சி ஒன்றே மாற்று என்பதை எளிமையாக விளக்கி உரையாற்றினார்.

தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் கிங்சன் நன்றியரை கூற விழா நிறைவுற்றது.

தீபாவளி விடுமுறைக்காக மாணவர்கள் சொந்த ஊர் சென்றிருந்தது, தேர்வு கால படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கடந்து மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டது தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாக இருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் ரஷ்யப் புரட்சியின் வீச்சையும், சோவியத் யூனியன் எவ்வாறு மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தியது என்பதையும் உணர்த்தி உற்சாகப்படுத்தியது.

சோவியத் யூனியனின் சாதனைகளை விளக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிப் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெல்லை.

*****

கிருஷ்ணகிரி : போலீசின் தடையை உடைத்து வானில் பறந்த செங்கொடி !
வம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 101 – ம் ஆண்டையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் பகுதியில் கொடியேற்றி நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். ஆண்டு தோறும் நவம்பர் 7 புரட்சி நாளை நினைவு கூறும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம்.
கொடியேற்றவிடாமல் தடுக்கவும், மக்களை மிரட்டவும் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட போலீசு வாகனம்.

இந்த ஆண்டும் நாட்றாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி, இனிப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டு வேலைகள் செய்துக் கொண்டு இருந்தோம். அப்போது அஞ்செட்டி போலீசு நிலையத்தில் இருந்து வந்த 10 -க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் உளவுப் பிரிவினர். கொடியேற்றக் கூடாது, இதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

”கொடியேற்றுவதற்கு அனுமதி வாங்க சொல்லி சட்டம் இல்லையே”, என்று பதில் கூறினர் பகுதி தோழர்கள். உடனே “மேல் இடத்து பிரசர் நீங்க கொடியேற்ற கூடாது, மீறினால் கைது செய்வோம்” என்றனர். என்ன நடந்தாலும் நாங்க கொடியேற்றிதான் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று பேச உடனடியாக, போலீசாரின் எண்ணிக்கையை 30 பேராக கூட்டினர்.
கைது செய்வதாக மிரட்ட இரண்டு போலீசார் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தினர்.
கொடி ஏற்றியே தீருவோம் என பதிலளித்து போலீசின் முகத்தில் கரியைப் பூசிய தோழர்கள்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொடியேற்றும் வேலையை தோழர்கள் செய்துக்கொண்டு இருக்க, என்ன முடிவு என்று ஆய்வாளர்  தோழர்களை தொந்தரவு செய்தனர். மீண்டும் மீண்டும் வந்து எப்படியாவது தடுத்தே தீரவேண்டும், என்ற வகையில் போலீசார் செயல்பட்டனர். எவ்வளவு முயன்றும் பயனளிக்கவில்லை என்பதை உணர்ந்த போலீசார், ”சரி முழக்கம் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

”கொடியேற்றுவது  எங்கள் உரிமை அதில் நாங்க பின்வாங்க போவதில்லை” என்று உறுதியாக இருக்க வேறு வழியில்லாமல், ”அரை மணிநேரத்தில் நிகழ்ச்சியை முடித்து கொள்ளுங்கள்” என்று அடுத்தகட்ட வேலையில் இறங்கினர் போலீசார். ”கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த எவ்வளவு நேரம் பிடிக்குமோ, அவ்வளவு நேரம் செய்வோம், அதனை எல்லாம் நேரம் தீர்மானிக்க முடியாது” என்று தோழர்கள் பேச வேறு வழியில்லாமல் இறுதியில் போலீசார் கூட்டத்தை தடுக்க முடியாமல் கொடியேற்றும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தனர்.
வெற்றிகரமாக கொடியேற்றி முழக்கமிடும் தோழர்கள்.
இறுதியில் கொடியேற்றி இங்கும் ஒரு நவம்பர் புரட்சியை உருவாக்குவோம் என்று உறுதியேற்றனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை நிறைவு செய்தனர்.
தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
நாட்றாம்பாளையம். கிருஷ்ணகிரி மாவட்டம்.

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்

பெண்களை தடுப்பது ஐயப்பனா

புதிய கலாச்சாரம்

பரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் சபரிமலைக்குச் சென்ற பெண்களின் மீது நடு வழியிலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாயர் சேவா சமூகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் தாக்குதல் தொடுத்தனர்.

சபரிமலையில் பெண்கள் நுழைவது ஆகம விதிகளுக்கு எதிரானது; இந்துக்களின் பாரம்பரியத்தைக் கெடுக்கும் செயல்; மத விவகாரங்களில் நீதித்துறை தலையிடக் கூடாது என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்கள் கூறுகின்றன. பாலின சமத்துவத்திற்கான தீர்ப்பை இந்து தர்மத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாக பிரச்சாரம் செய்கின்றன.

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் சட்டமியற்றியபோது இதே எதிர்ப்பை இந்துத்துவவாதிகள் அப்போதும் தெரிவித்தனர். பார்ப்பனப் பெண்களை அழைத்துச் சென்று, பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என டெல்லியில் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.

படிக்க:
சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !
சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

இதே போல தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டபோதும் சரி, உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்ட போதும் சரி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்று முட்டுக்கட்டை போட்டனர் இந்து மதவெறியர்கள்.

பெண்கள் மட்டுமல்ல, தலித் மக்கள், பழங்குடி மக்கள், சில இடங்களில் சூத்திரர்கள் இவர்களுக்கும் இன்னும் சமத்துவத்தை வழங்க மறுக்கிறது பார்ப்பனியம். கோவில் கருவறை முதல், ஊரில் இருக்கும் கிணறு வரை இம்மக்களுக்கு அனுமதி மறுக்கப் படும் இடங்கள் பல. இதுதான் ‘வல்லரசு இந்தியாவின்’ இலட்சணம்!

பாடப் புத்தகங்களில் பாவம் எனச் சொல்லப்படும் தீண்டாமை, சட்டப் புத்தகங்களில் ஆகம விதிகளாக, மத நம்பிக்கையாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மேற்கண்ட பிற்போக்குத்தனங்களை மக்களிடம் உசுப்பிவிட்டு அதையே இந்து தர்மம் என கற்பனையாக கட்டமைக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களை அபகரிக்க சதி செய்து வருகிறது.

வட இந்தியா முழுவதும் கலவரங்கள் மூலம் இரத்த ஆறு ஓடச் செய்த ஆர்.எஸ்.எஸ்., மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான். தமிழகம் மற்றும் கேரளாவில் அத்தகைய கலவரங்களைத் தூண்டிவிடவே ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். வரவிருக்கும் பேராபத்தை எச்சரிக்கிறது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? – புதிய கலாச்சாரம் நவம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ?” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • சபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
  • சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
  • பெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை
  • போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
  • சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
  • சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
  • பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
  • சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
  • கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
  • பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
  • பிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
  • இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
  • ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !
  • பார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்
  • பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more