மக்கள் அதிகாரம் – அறிவிப்பு !
08.06.2022
அறிவிப்பு
மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் முத்துக்குமார் அவர்கள் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஒரு பகுதியில் கலைப்புவாத நடவடிக்கைகள் மற்றும் சீர்குலைவு வேலைகளை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலச் செயலாளர் கோபிநாத் அவர்கள் தனக்கு தொடர்பே இல்லாத பகுதியில் சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், அமைப்பு விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, கோபிநாத் அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தமாக நீக்கப்படுகிறார்.
மேற்கண்ட இருவருடனும் மக்கள் அதிகாரம் தோழர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை
9962366321.
வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !
இந்தியாவின் முன்னணி பதிப்பகமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் (PRH), தெலுங்கு கவிஞர் வரவர ராவின் புத்தகமான “வரவர ராவ்: தி புரட்சிக் கவிஞர் – Varavara Rao: The Revolutionary Poet” என்ற புத்தகத்தில் இருந்து ‘இந்துத்துவா’ ‘சங்க பரிவார்’ மற்றும் ‘அயோத்தி’ உள்ளிட்ட பல வார்த்தைகளை நீக்க பரிந்துரைத்துள்ளது.
வரவர ராவ் 1960-களில் இருந்து பல்வேறு மக்கள் இயக்கங்களுடன் தொடர்புடையவர் மற்றும் எல்கர் பரிஷத் – பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி ஆகஸ்ட் 2018-ல் கைது செய்யப்பட்டார்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 81 வயதான வரவரராவின் கவிதைத் தொகுப்பான “வரவர ராவ்: தி புரட்சிக் கவிஞர்” என்ற புத்தகம் முதல் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர உள்ளது.
புத்தகத்தின் திருத்தப்பட்ட வரைவின் நகலை தணிக்கைக்கு உட்படுத்திய வெளியீட்டாளரின் சட்டக்குழு ‘காவிமயமாக்கல்,’ ‘ஊபா – UAPA’ மற்றும் ‘நக்சல்பாரி’ பற்றிய குறிப்புகளை கோடிட்டதாக, ஜூன் 3 அன்று குயின்ட் அறிக்கை கூறுகிறது.
வரைவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், தேசத்துரோகம் மற்றும் அவதூறு வழக்குள் பதிவு செய்யப்படும் என்ற பென்குயின் அச்சத்தை காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள வரவர ராவ் தற்போது மருத்துவ ஜாமீனில் உள்ளார். இப்பிரச்சினையை பற்றி ராவ் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏனெனில், அவரது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று, அவர் ஊடகங்களுடன் பேசக்கூடாது.
படிக்க :
♦ கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான கவிஞர், நாவலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மீனா கந்தசாமி, தி குயின்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சட்டரீதியான சோதனை பற்றி பேசுகிறார். “எனக்கு, ஒரு ஆசிரியராக இது பேரழிவை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்தாளராக, இது இன்னும் இதயத்தை உடைக்கிறது, ஏனென்றால் இன்று வரவர ராவுக்கு என்ன நடக்கிறது என்பது நாளை நம் அனைவருக்கும் நடக்கும்” என்றார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பென்குயின் ரேண்டம் ஹவுஸின் மூத்த ஆணையாளர் ஆசிரியர் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருப்பதாகத் தோன்றி, ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்கும்படி எங்களிடம் கேட்டார். நான் இந்தப் புத்தக முன்மொழிவை எழுதி, வேணுகோபால் ராவை (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் வரவர ராவின் மருமகன்) வரவழைத்து, அதைச் சமர்ப்பித்தோம்.” என்றார்.
“வரவர ராவ் எப்போதுமே தனது வாழ்க்கைப் படைப்பின் தொகுப்பை பெங்குயின் வெளியிட வேண்டும் என்று விரும்பினார் என்றும், அவர் (சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு) தனது படைப்பை சிறப்பாகப் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட கவிதைகளைத் தேர்ந்தெடுத்தார் என்றும் வேணுகோபாலிடமிருந்து நான் அறிந்தேன்” என்றார் மீனா.
புத்தகத்திற்கான ஒப்பந்தம் 2020-ல் கையெழுத்தானது மற்றும் வெளியீட்டாளர் அது 2021 நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும், ஒப்பந்தம் வெளியிடுவதற்கு 24 மாத கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது. வரவர ராவின் மருமகன் வேணுகோபால், புத்தகத்தை வெளியிட வெளியீட்டாளர்களுக்கு அக்டோபர் 2022 வரை அவகாசம் இருப்பதாகவும், தவறினால் “ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆசிரியர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடரலாம்” என்று கூறினார்.
65 கவிதைகளில் மூன்று கவிதைகள் 2021-ல் கைவிடப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 65-ல் ராவின் மூன்று கவிதைகள் ஏன் தொகுப்பிலிருந்து கைவிடப்பட்டன என்பது குறித்து, வேணுகோபால் ராவ் விசாரணையை எதிர்கொள்ளும் போது எழுதப்பட்டதால் “சட்ட சிக்கல்கள்” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.
“அவர் ஒரு வழக்கின் கீழ் இருப்பதால் சில சட்டச் சிக்கல்கள் இருந்தன, அதனால்தான் மூன்று கவிதைகளை கைவிட்டோம். அவர் ஒரு வழக்கில் இருப்பதால், இது சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்” என்று அவுட்லுக் அறிக்கை வேணுகோபால் கூறியதை குறிப்பிட்டது.
000
2014-ம் ஆண்டில், பென்குயின் அவர்களின் சொந்த புத்தகமான “வெண்டி டோனிகரின் தி ஹிந்துஸ் – Wendy Doniger’s The Hindus” புத்தகத்தை திரும்பப் பெற்றது. இந்த புத்தகம் இந்து மதத்தின் “சிதைக்கப்பட்ட” பார்வையை முன்வைத்ததாகக் கூறி புகார்களை தொடுத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அம்பேத்கர் ஜெயந்தி அன்று (ஏப்ரல் 14), பென்குயின் ரேண்டம் ஹவுஸ் “தலித் ட்ரூத்” என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதில் “தற்போதைய தலித் நிலையை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக, அம்பேத்கரின் பொருத்தம் மற்றும் புதிய பாதையை பகுப்பாய்வு செய்கிறது. பல தலித் உண்மைகள் மற்றும் சாதி அமைப்பால் நிகழ்த்தப்படும் பொய்களுக்கு எதிரான அவர்களின் போர்கள் இந்த புத்தகத்தின் பக்கங்களில் பிரதிபலிக்கின்றன, இது எதிர்கால சந்ததியினருக்கான வாக்குறுதிகள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது” என்றும் வெளியீட்டாளர் கூறினார்.
இருப்பினும், தி தலித் ட்ரூத் வெளியான ஒரு மாதத்திற்குள், ராவின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பென்குயின் ரேண்டம் ஹவுஸின் சட்டக் குழுவின் கைகளால் தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.
படிக்க :
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை. எனவே முற்போக்கு சிந்தனையாளர்களின் புத்தகங்களில் இருக்கும் “இந்துத்துவா”, “சங்க பரிவார்”, “நக்சல்பாரி” “காவிமயமாக்கல்” “ஊபா” போன்ற வார்த்தைகளை நீக்க முயற்சிக்கின்றன. இது தன்னை விமர்சிக்க முடியாத இடத்தில் வைத்து பார்க்கும் பாசிஸ்டுகளின் மனநிலையாகும். அவ்வார்த்தைகளை எழுத்துபவர்களையும், பதிப்பிப்பவர்களையும், மொழிப்பெயர்ப்பவர்களையும் ஒடுக்க முயற்சிக்கின்றன.
ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் புரட்சிகர, பகுத்தறிவு, முற்போக்கு படைப்புகளை வெளி கொணர்வோம். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான, காவி பயங்கரவாதிகளுக்கு படைப்புகளையும், புத்தகங்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் காவி பாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாப்போம்.
காளி
கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு தலித் சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸ், தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் “ஜாதி வெறி மற்றும் துன்புறுத்தல்கள் அதிகமாக செயல்படுத்த அனுமதிப்பதாக” குற்றம் சாட்டியுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட்டில் ஜூன் 2-ம் தேதி வெளியான அறிக்கையின்படி, நிறுவன ஊழியர்கள், தோன்மொழி சௌந்தரராஜனைப் பற்றி “இந்துவெறி” மற்றும் “இந்து எதிர்ப்பு” போன்ற “தவறான தகவல்களை” பரப்பத் தொடங்கியுள்ளனர்.
“இந்த நேரத்தில், சாதி சமத்துவத்தை எதிர்ப்பவர்கள், தேன்மொழி சௌந்தரராஜன் மற்றும் சமத்துவ ஆய்வகங்கள் பற்றிய தவறான தகவல்களை உள்நாட்டில் பரப்பி, சிவில் உரிமைகள் நிகழ்வை இறுதி ரத்து செய்யும் வரை எடுத்து செல்வார்கள்” என்று சமத்துவ ஆய்வகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலித் உரிமைகள் ஆர்வலர் தேன்மொழி சௌந்தரராஜன், அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு, ஏப்ரல் மாதம் கூகுள் செய்தி ஊழியர்களுடன் திட்டமிடப்பட்ட பேச்சு வார்த்தைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேன்மொழி சௌந்தரராஜனை பேச அழைத்த கூகுள் நியூஸ் மூத்த மேலாளர் தனுஜா குப்தா, அவரது பேச்சை கூகுள் நிறுவனம் ரத்து செய்ததைத் தொடர்ந்து தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். “நிறுவனத்தில் எனது வேலையைச் செய்து, சாதி சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில், நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டு அமைதியாக இருப்பதைக் கண்டேன். உண்மை என்னவென்றால், இவை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல” என்று குப்தா தனது கடிதத்தில் கூறினார்.
படிக்க :
♦ இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!
♦ கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !
கூகுள் நிறுவனத்திற்குள் நடக்கும் இந்த சாதிப் பாகுபாட்டிற்கு அல்பபெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (AWU) கண்டனம் தெரிவித்துள்ளது. “பணியிடத்தில் சாதி சமத்துவத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூகுள் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.
கூகுள் வைத்திருக்கும் நிறுவனமான Alphabet-ன் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் தேன்மொழி மற்றும் மூத்த மேலாளர் தனுஜா குப்தா ஆகியோருக்கு ஆதரவு இருக்கிறார்கள். “நாங்கள் தேன்மொழி சௌந்தரராஜன், தனுஜா குப்தா மற்றும் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை அனுபவிக்கும் மற்றும் எதிர்த்துப் பேசும் அனைவருடனும் நிற்கிறோம்” என்று ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம் (Alphabet Workers Union-AWU) கூறியது.

தேன்மொழியின் பேச்சை மீண்டும் நிலைநிறுத்துவது, சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பேச்சாளர்களை தொடர்ந்து கொண்டு வருவது, நிறுவனத்தில் உள்ள சாதியப் பாகுபாடுகளை தடுத்து நிறுத்தற்கு ஏற்ற முதலீடுகள் என மூன்று அம்சங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கூகுளை வலியுறுத்தியது AWU.
எனினும், கூகுள் நிறுவனம் சாதி பாகுபாடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷானன் நியூபெரி “எங்கள் பணியிடத்தில் சாதி பாகுபாடுகளுக்கு இடமில்லை. எங்கள் பணியிடத்தில் பழிவாங்குதல் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் மிகவும் தெளிவான, பொதுவில் பகிரப்பட்ட கொள்கையையும் கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
சௌந்தரராஜனின் பேச்சுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏழு கூகுள் ஊழியர்கள் நிறுவனத் தலைமை மற்றும் குப்தாவிற்கு “சாதி சமத்துவம் பற்றிய விவாதத்தால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்” என்று வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இந்த ஊழியர்களிடமிருந்து வரும் புகார்கள், “தெரிந்த தவறான தகவல் தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து, பேச்சாளரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது”என்று மின்னஞ்சல்கள் கூறப்பட்டுள்ளன. “இந்து தேசியவாதம் அல்லது சாதிய படிநிலையை விமர்சிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள கல்வியாளர்களை குறிவைத்துள்ள” தளங்களும் அமைப்புகளும் இதில் அடங்கும் என்று அறிக்கை கூறியது.
படிக்க :
♦ சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
தேன்மொழி சௌந்தரராஜன், ஏப்ரல் 27 அன்று, பிச்சை மற்றும் கூகுள் தலைமை பன்முகத்தன்மை அதிகாரி மெலோனி பார்க்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், பிச்சையின் “தார்மீகக் கடமை” பற்றி அவர் நினைவுபடுத்தினார். “நீங்களும் நானும் தமிழர்கள். நீங்கள் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், நான் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவன். நீங்கள் இருக்கும் மதுரையில், என்னைப் போன்ற தலித் மக்கள் கொடூரமான வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.. சாதி சலுகை உள்ள ஒருவராக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சரியானதைச் செய்யும் பாத்திரத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்” என்று அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சாதிய ஒடுக்குமுறைகள் தற்போது தேன்மொழியின் உரையை தடுத்து நிறுத்தியதில் இருந்து அம்பலமாகியுள்ளது. கூகுல் நிறுவனம் போன்ற பல கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் சாதிய – இன ஒடுக்கு முறைகளை எதிர்த்து உலகின் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றிணைத்து குரல் கொடுப்பது மிகவும் அவசியம்.
சந்துரு
“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
05.06.2022
“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’
நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் ஜுன் 1 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும் என்றார்.
மேலும், தேசிய கல்வி கொள்கை 2020 வரைவை தாக்கல் செய்த கஸ்தூரிரங்கன் அவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இவர்தான் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவரும் ஆவார்.
இந்த பள்ளிகளை தான் ஆய்வகம் என்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் சோதனை செய்து அதை நாடு முழுவதும் அமல்படுத்துவார்கள். அதனால்தான் இதை நாம் விசக் குஞ்சுகள் என்கிறோம். இது பரவும் இடங்களிலெல்லாம் காவி ஆதிக்கமும் கார்ப்பரேட் ஆதிக்கமும் நிலைநாட்டப்படும்.
தேசிய கல்வி கொள்கை 2020-ன் முன்னுரையில் இவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தை பார்த்தாலே இது எவ்வளவு அபாயகரமானது என்பது நம் கண்முன்னே அரங்கேறும்.
தேசிய கல்விக் கொள்கையின் முன்னுரையில் “அனைவருக்கும் உயர்தரமான கல்வியை அளிப்பதே நமது நாட்டின் அறிவுத்திறனை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்களுக்கு மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் அதுவே நல்லது. அடுத்த பத்தாண்டுகளில் உலகளவில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா விளங்கும். அவர்களுக்கு உயர்தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதே நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்கள்.
படிக்க :
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
உயர்தரமான கல்வியை யார் தரப் போகிறார்கள்? மத்திய அரசே அனைவருக்குமான இலவசக் கல்வியை தந்து தனியார் கல்வியை ஒழிந்துவிடுமா? இல்லை மாறாக இந்த அறிக்கையில் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படி என்றால் இவர்கள் அனைவருக்குமான உயர்தரமான கல்வி என பேசுவதெல்லாம் யாருக்கானது? அம்பானிகளும் அதானிகளும் பல்கலைக் கழகங்களை தொடங்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். அம்பானியின் ஜியோ பல்கலைக் கழகத்தை அரசே ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஆரம்பிக்கச் சொல்கிறது.
அனைவருக்குமான உயர்தரக் கல்வி என்பது ஒரு வெற்றுப் பேச்சு இதனால் ஏழைப் பின்தங்கிய மாணவர்கள் அனைவரும் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

மேலும், இந்த முன்னுரையில் “உலகளாவிய கல்வி இலக்குகளையும் கருத்தில் கொள்கிற அதே சமயம், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக மரபுகளையும் விழுமியங்களையும் ஒருசேரக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இது உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவின் மரபு என இந்த காவி கும்பல் சொல்வதெல்லாம் அப்பட்டமான புராண இதிகாசக் குப்பைகளையும் சாதி – மத வேறுபாடுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் ஆகப் பிற்போக்கான கலாச்சாரங்களையும் கொண்டுள்ளதாகும். அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான கல்வித் திட்டம்தான் இது. இது ஒட்டுமொத்த மாணவர்களையும் அடிமைச் சிந்தனைக்குள் தள்ளி அடிமைகளாகவே மாற்றக் கூடியது.
பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள். இதில்தான் அப்பா அம்மா செய்த தொழில் பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழில் என சாதிய குலக்கல்வி முறையை திணிக்கிறார்கள் மேலும் மாணவர்களை கூலி அடிமைகளாக மாற்றுவதற்கான திட்டத்தையும் இதனுள் இணைத்துள்ளார்கள். மாணவர்களை கார்ப்பரேட் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கே இது வழிவகுக்கும்.
படிக்க :
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
ஆசிரியர்களே கல்விச் சீர்திருத்தங்களின் மையம் என்பதால் ஆசிரியர்களுக்கான தகுதியும் புதிய வரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தப் புதிய கொள்கை வலியுறுத்துகிறது.
இது ஆசிரியர்களை தகுதி என்ற பெயரில் நிரந்தரமற்ற பணியாளர்களாக மாற்றி கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்றமாதிரி வடிவமைக்க நினைக்கிறார்கள். மேலும் காவி சிந்தனையும் முக்கியம் என்பது கூடுதல் தகுதி. இதில் ஆசிரியர்களின் அரசு வேலை பறிக்கப்பட இருக்கிறது.
இன்னும் இதுபோல இந்த கல்விக் கொள்கையில் உள்ள வெற்று சவடால்களையும், நடைமுறையில் இவர்கள் செய்ய இருப்பதையும் நாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. அதுதான் இந்த விசக் குஞ்சுகளை அழித்தொழிப்பதை நோக்கி முன்னேறும்.
மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்!
அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் இறங்கி அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
![]()
இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.
rsyftamilnadu@gmail.com
16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை : கிரிமினல் கும்பலின் அடியாள்படை அதிகார வர்க்கமே!
ஈரோட்டில் 16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தை மூலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் கைது என்ற செய்தியை ஜூன் 3 அன்று தினகரன், தினமலர் இரண்டிலுமே ஒரேபோன்று வெளியானதை பார்த்திருப்போம். உண்மையை திரித்து போலி செய்தியை ஒன்று போல் பரப்பி உள்ளனர்.
அந்த செய்தியில் சொல்லப்பட்டிருப்பது என்ன? 16 வயது சிறுமி அவள் 12 வயதில் பூப்படைகிறாள். அதன் பின் அவளுடைய தாயாரின் இரண்டாவது கணவன் (வளர்ப்பு தந்தை) இந்த குழந்தையை 12 வயதில் பாலியல் வன்கொடுமை செய்கிறான். அதன் பின் அந்த கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் ஒரு புரோக்கர் மூலமாக ரூ.25,000-க்கு விற்று, அதில் ரூ.5,000 புரோக்கருக்கு கொடுத்து விடுகின்றனர்.
இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. தொடர் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். இப்பொழுது அந்த குழந்தைக்கு 16 வயது. 4 வருடத்தில் 8 முறை அந்த குழந்தையிடமிருந்து கருமுட்டை பெற்று ஈரோடு, ஓசூர் சேலம், பெருந்துறையில் என 8 தனியார் மருத்துவமனைகளில் விற்று உள்ளனர். இப்படி வரும் வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
பார்த்த உடனே நமக்கு என்ன தோன்றும், முதலில் அந்த குழந்தையின் அம்மா மீது கோபம் வரும் ”இவ எல்லாம் ஒரு தாயா? இவளும் ஒரு பெண்ணா? என்று தோன்றும். இது இயல்புதான். ஏனென்றால் ஊடகங்கள் என்ன சொல்கின்றனரோ அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே நாம் அந்த குழந்தையின் தாய் மீதும், வளர்ப்பு தந்தை மீதும், புரோக்கர் மீதும்தான் கோபம் வரும்.
படிக்க :
♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
♦ இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!
எவ்வளவு சீரழிந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். திட்டமிட்டு NEWS 7 சேனலில் செய்தி பரப்பப்படுகிறது. குற்றவாளி அந்த மூன்று நபர்கள் மட்டும்தான் (தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர்) என்று செய்தியை பரப்பி அப்படியே உண்மையை ஊற்றி மூடுகின்றனர்.
தனது வறுமைக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் (இரண்டாவது கணவருடன்) சேர்ந்து கொண்டு குழந்தையை சீரழித்து இருப்பது தவறுதான். இந்த குற்றத்திற்கு பின் இருப்பது வறுமை என்ற ஒன்றுதான். அதை போக்கினால் இந்த குற்றம் அப்பொழுதே முடிவுக்கு வரும். ஆனால், அந்த 12 வயதிலிருந்து 16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகங்களும் குற்றமற்றவர்களா? 12 வயது பெண்ணுக்கு 16 வயது என்று போலியாக வயதுச் சான்றிதழ் அளித்த அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை?
ஒரு மருத்துவருக்கு 12 வயது குழந்தையை பார்த்தால் தெரியாதா? ஆனால், அந்த குழந்தையின் தாய் குழந்தையின் வயதை 16 என ஆதார் அட்டையில் மாற்றம் செய்து போலி ஆவணம் தயார் செய்து கொடுத்ததாகவும், இதனால் மருத்துவமனைக்கும், அந்த மருத்துவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல் திட்டமிட்டு செய்தியை பரப்புகின்றனர். இது மிகவும் அப்பட்டமான பொய். தாய் உட்பட அந்த 3 நபர்களை மட்டும் குற்றவாளிகளாக்க மருத்துவமனை நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு போலீசுத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த போலீசின் போலி செய்தியைத்தான் ஊடக நிறுவனங்கள் செய்திகளாக்கி நம் மனதில் பதிய வைக்கின்றன.
எதோ குழந்தைகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளில் விற்பதாக போலீசுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும் இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளும்போது இவர்கள் பிடிபட்டதாவும் செய்தியை முதலில் பரப்புகின்றனர். ஆனால், உண்மை என்னவோ அந்த குழந்தை, தன் தாயிடமிருந்து தப்பித்து சித்தி, சித்தப்பாவிடம் சொல்லி அவர்கள் மூலம்தான் செய்தி வெளிவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில்தான், போலீசுத்துறை வந்துள்ளனர். ஆனால், ஏற்கனவே போலீசுத்துறை இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதான ஒரு பிம்பம் மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பரப்பட்டு வருகிறது.
ஆனால் ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தையிடமிருந்து மட்டுமே 8 முறை கருமுட்டை எடுத்துள்ளன. அப்படியானால் இது ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டதாகவும், அதை போலீசுத்துறை மிகவும் இலாவகமாக கையாண்டு பிடித்து விட்டதாகவும் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இந்த மருத்துவமனைகள் கள்ள மெளனம் சாதிக்கும்போதே தெரிகிறது இது தொடர் நிகழ்வு என்று. அதிலும் குறிப்பாக போலீசுத்துறை பரபரப்பாக காட்டும்போதே தெரிகிறது இது அவர்களின் கண்காணிப்பில் தான் அரங்கேறுகிறது என்பது.
ஏனென்றால், இது சாதரணமாக ஒரு எளிய மக்களால் செய்யப்படக் கூடிய குற்றமா? அப்படி செய்துவிடதான் முடியுமா? ஆனால், இப்பொழுது இந்த பிரச்சினை பரபரப்பாக பேச காரணம் என்பது அந்த குழந்தையின் சித்தி, சித்தப்பா தான். அவர்கள் கொடுத்த புகாரினால் தான் வேறுவழி இல்லாமல் இந்த 3 பேர் மட்டுமே குற்றவாளி என்ற வகையில் பிரச்சினையை திசைதிருப்பி மூடுகின்றனர். அப்படியானால் இந்த குற்றம் நின்று விடுமா? இதுபோன்ற நடவடிக்கை என்பது குற்றத்தை மேலும் அதிகரிக்கதான் செய்யும்.
உண்மையான, குற்றத்திற்கு அடிப்படையான குற்றவாளிகளான ஈரோடு, ஓசூர், சேலம், பெருந்துறை பகுதிகளில் பெயர் வெளியிடப்படாத தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதன் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு துணைபோகும் போலீசுத்துறை, 16 வயது குழந்தையின் வயதை 20 என மாற்றிய அரசு அதிகாரிகள் ஆகிய அனைத்து பணத்திற்காக அதிகாரத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருக்கும் இந்த பணவெறி பிடித்த நாய்கள் தான் முதன்மை கிரிமினல் குற்றவாளிகள்.
படிக்க :
♦ ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !
♦ ’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!
இது ஏதோ இக்குற்றத்தில் மட்டுமல்ல பல குற்றங்களுக்கும் அடிப்படையாக இந்த அரசுக்கட்டமைப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைக்க பிரச்சினையை கிளுகிளுப்பாகவும் ரசிக்கக் கூடியதாகவும் கண்ணீர் வரக்கூடியதாகவும் போட்டு நம் சிந்தனைகளை திசைத்திருப்புகின்றன இந்த ஊடகங்கள்.
இந்த குற்றவாளிகளை இச்சமூக அமைப்போ அல்லது சட்டமோ தண்டிக்குமா? அல்லது இதுபோன்ற குற்றங்களுக்கு இவர்கள் தண்டனைதான் அனுபவித்து உள்ளார்களா? கட்டாயமாக தண்டிக்கப்படவில்லை என்று நம் உள்மனம் சொல்கிறது. அப்படியானால் யார் தண்டிப்பது இந்த கயவர்களை?
இந்த சமூகமும் கட்டமைப்பும் முழுக்க முழுக்க சீரழிந்து, சீரழிவு மட்டுமே புறையோடிப்போய் உள்ளது. இதில் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுபவர்கள் அல்லது ஆக்கப்படுபவர்கள் சாதாரண மக்களே!
உழைக்கும் கரங்கள் தான் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைகளை மக்களே ஒன்று திரண்டு இழுத்து மூட வேண்டும் அல்லது அரசுடைமையாக்க வேண்டும். பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்களை அடித்து நொறுக்க வேண்டும். சமூக மாற்றம் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவையாக மாறிப்போய் உள்ளது.

ஓவியா
திருநெல்வேலி – ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) – ஆவணப்படம்
திருநெல்வேலியில் உழைக்கும் மக்களின் கடைகளை அகற்றி ஓர் பிரம்மாண்ட ஸ்மார்ட் சிட்டி கட்டப்பட்டு வருகிறது.
நகரங்களின் வேர்களாய் இருக்கும் விவசாயிகள், நாடி நரம்புகளாய் இருக்கும் தொழிலாளர்கள், முகங்களாய் இருக்கும் வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளிகள், கொத்தனார்கள், எலக்ட்ரிசியன்கள், பிலம்பர்கள், துப்புரவு தொழிலாளர்கள், உதிரி பாட்டாளிகள் என அனைத்து உழைக்கும் மக்களின் வியர்வையிலும், உழைப்பிலும் இரத்தத்திலும் தான் ஒரு நகரம் உருவாக்கப்பட்டு இன்று வளர்ந்து நிற்கிறது. ரயில்வே மின்சாரம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த மோடி அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களை கூருபோட்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமே இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்
உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திட்டம்தான் இது.
திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம் :
பாருங்கள்! பகிருங்கள் !!
உழைக்கும் மக்களின் துயரங்களை கலை வடிவில் கொண்டு வரும்
மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு ஆதரவு தாரீர் !
கலை இலக்கியம் ஆர்வமுள்ளவர்கள் ம.க.இ.க-விற்கு தோள்கொடுக்க தொடர்பு கொள்ளுங்கள்!
இணைவீர் ம.க.இ.க || தொடர்புக்கு : 97916 53200
இதுபோன்ற ஆவணப் படங்களை தொடர்ந்து படைத்திட நன்கொடை தாரீர் !
வங்கி விவரம் :
Name: R MUTHIAIAH
Bank Name : Canara Bank
A/C.No: 1598101018208
Ifsc code: CNRB0001598
Branch Location : Pudur, Madurai
Account Type : Savings
Mobile – (91) 97916 53200
Email – vinavu@gmail.com
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 97916 53200
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
03.06.2022
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்
அரசியல் பேச தடை உத்தரவு!
நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின்
கொடும் கரங்களை உடைப்பதற்கு ஒன்றுபடுவோம்!
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக பதிவாளர் கோபி அவர்கள் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை பல்கலைக்கழகம் மட்டும் அதன் கீழுள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் சேர்த்தே அனுப்பி உள்ளார்.
அதன்படி சுற்றறிக்கையில் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்கள் கல்வியில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உத்தரவு என்கிறார்.
மாணவர்கள் கல்வியில் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூடாது பேசக்கூடாது என்றால் இது பாசிசத்தின் உச்சம். அதைத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு துணைவேந்தர் செய்து வருகிறார்.
இதை இன்று பல்வேறு மாணவர் அமைப்புகளும் முற்போக்காளர்களும் பேராசிரியர்களும் கண்டித்து வரும் வேளையில் திராவிட மாடல் என்று பேசிக்கொள்ளும் திமுக அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.
மோடி அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் வராத மாநிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை ஆளுநர்களாக நியமித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஆளுநர்கள் இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சக்திகளை துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் தான் இந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்.
படிக்க :
♦ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !
♦ மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!
துணைவேந்தராக அமர்த்தப்பட்ட பிறகு வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் துணைவேந்தர் தனது பாசிச கரங்களை நீட்டி உள்ளார். அதற்குத்தான் இந்த அரசியல் பேச தடை உத்தரவு.
மாணவர்கள் அரசியல் பேசாமல் இருக்க முடியுமா?
காசு இருப்பவனுக்குதான் கல்வி என்று ஒட்டுமொத்த கல்வியையும் தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். அதற்காகத்தான் நீட் தேர்வு க்யூட் தேர்வு புதிய கல்விக்கொள்கை என அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள். இதனால் கல்வி இழக்கும் ஏழை பின்தங்கிய மாணவர்கள் இதை எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
சமீபத்திய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உத்தரவுப்படி, சில இலட்சங்கள் கட்டணமாக செலுத்தாமல் கல்வி கற்க முடியாது. மாணவர்கள் வரவில்லை என்றால் அதற்காக கட்டணத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என பகிரங்கமாக காசில்லாதவன் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற உத்தரவை பிறப்பித்தார்கள். இதையெல்லாம் மாணவர் சமுதாயம் கேள்வி எழுப்பாமல் வேடிக்கை பார்க்க முடியுமா?
சேலம் சுற்றுவட்டார பகுதிகளிலேயே எட்டுவழிச் சாலையை கொண்டுவர துடிக்கிறார்கள். இயற்கை வளங்கள், கனிம வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக தொடர்ச்சியாக வேலை நடக்கிறது இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
இன்று நாட்டினுடைய பொது சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு வேலை என்பது நீக்கப்பட்டு மாணவர்களும் இளைஞர்களும் நிரந்தர கூலி அடிமைகளாக மாற்றப்பட இருக்கிறார்கள். இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
இன்னொரு பக்கம் இதே பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மாணவர்களை மதவெறியூட்டி சாதிவெறியூட்டி கலவரங்களை நடத்துகிறது. சமீபத்தில் கூட கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை திட்டமிட்டு கிளப்பி மாணவர்களை மதவெறிக்கு ஆழ்த்தி இஸ்லாமிய பெண்களின் கல்வி உரிமையை பறித்து இன்று கல்வியை விட்டே வெளியேற்றி உள்ளார்கள். இதைப்பற்றி நாம் பேசாமல் இருக்க முடியுமா?
இதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவு மாணவர் அமைப்புகள் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து நாட்டை விற்பதை ஆதரித்து போராடுகிறார்கள் இவர்களை எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
பேசக் கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம். அப்படிப்பட்ட பாசிச வேலையைத்தான் இந்தத் துணைவேந்தர் ஜெகநாதன் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இன்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி செய்ய முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டை தீவிரமாக விற்று வருகிறார்கள் அது என்றைக்கும் மக்களுக்கு எதிரானது தான்.
இந்த பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய – மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய – மிக முக்கியமான சக்திகள் மாணவர்கள் இளைஞர்கள் தான். வரலாறு முழுவதும் அதைத்தான் சொல்கிறது. இந்தியாவிலேயே கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பகத்சிங் போன்ற இளைஞர்களின் வருகை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அன்று பிரிட்டிஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட காந்தியின் செல்வாக்குக்கு நிகராக பகத்சிங் மற்றும் புரட்சிகர தோழர்களின் செயல்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது.
இன்றும் கூட ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் மாணவர்கள் முன்னணியில் நின்று மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். சமூக மாற்றத்தை சாதிக்கக் கூடிய புரட்சியின் முன்னணி சக்திகளே மாணவர்கள் தான்.
அதனால்தான் மாணவர்களைக் குறி வைக்கிறார்கள் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பல். அதனால்தான் அவர்களே எழுதி வைத்துள்ள பெயரளவிற்கான பேச்சுரிமை என்பதைக்கூட மறுக்கிறார்கள். ஆதலால் இதை அனுமதித்தோம் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல அடுத்ததாக தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரையும் அடிமைப் படுத்துவார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது ஜனநாயக உரிமையை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் மேற்கண்ட பல்கலைக்கழகத்தின் உத்தரவு நமக்கு எடுத்துக் காட்டுவது.
நீட்டப்படும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.
தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !
சென்னை மறைமலை நகரில் இயங்கிவரும் ஃபோர்டு கார் கம்பெனி தனது ஆலையை ஜூலை மாதம் முதல் மூடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து அங்கு பணி புரிந்து வரும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னையில் தனது ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத்தில் 4 ஆயிரம் தொழிலாளர்களும் சென்னையில் 2 ஆயிரம் தொழிலாளர்களும் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். தற்போது 2 ஆலைகளையும் அந்த நிறுவனம் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகி உள்ளது.
முன்னதாக சென்னையில் செயல்படும் ஆலையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு மின்சார கார்களை உற்பத்தி செய்யப்போவதாக தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இதனால் தங்களது வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தொழிலாளர்கள் ஆலையை முழுமையாக நம்பி இருந்தனர்.
படிக்க :
♦ ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
♦புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !
பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்ட் நிறுவன ஆலையை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கபோவதாகவும் அதனால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றும் மீண்டும் தொழிலாளர்களை நம்பவைத்தது ஆலை நிர்வாகம். இதனை நம்பிய தொழிலாளர்கள் 2 மாதத்தில் உற்பத்தி செய்ய நிர்ணயக்கப்பட்ட கார்களை 98 சதவீதம் வரை உற்பத்தி செய்து முடித்துவிட்டனர். மீதம் 1500 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டிய இருக்கும் நிலையில் ஆலையை ஜூன் மாதத்தில் மூடுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது.
தொடர் வருவாய் இழப்பு மற்றும் நட்டம் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலையை மறுசீரமைப்பு செய்வது மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளின் காரணமாக அதிக அளவு மூலதனம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம் கதையளந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்டால் நேரடியாக பணியாற்றும் 3 ஆயிரம் தொழிலாளரகளும் அவர்களை சார்ந்து இருக்கும் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை கூவி கூவி அழைக்கின்றன. அவற்றிற்கு பல்வேறு சலுகைகளை வாரி இறைத்து, இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு விற்று மூலதனத்தை இந்தியாவில் முதலீடு செய்ய உதவுகின்றன.
தேவையான அளவிற்கு இந்தியாவின் இயற்கை வளங்களையும், அரசின் சலுகைகளையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டி கொழுத்துவிட்டு, நட்ட கணக்கு காட்டி ஆலையை மூடிச் செல்வது என்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே நோக்கியா, ஃபாக்ஸ்கான் என தமிழகம் முதல் இந்திய வரை ஆயிரம் உதாரணம் கூற முடியும்.
தொழில் தொடங்குவதற்காக பல்வேறு சலுகைகளையும், ஊடகத்தில் விளம்பரங்களையும் தேடிக்கொள்ளும் இந்த ஆளும் வர்க்க அரசுகள் ஆலையை மூடும்போது மௌன நிலைக்கு சென்று விடுகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களின் பிரச்சினை குறித்தோ எந்த அரசும் கண்டு கொள்வதில்லை. இந்த விவகாரத்தில் திமுக மட்டும் விதிவிலக்கா என்ன? இதுவரை ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் கோரிக்கையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் வருத்தத்துடன் கூறுகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் ஷிப்ட்டில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து அதில் கையெழுத்து போடுமாறு ஆலை நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. அந்த படிவத்தில் ஆலைக்கு எதிராக போராடக் கூடாது என்றும் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
படிக்க :
♦ நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
♦ வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?
ஆலை நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 2,000 தொழிலாளர்கள் ஆலைக்குள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது ஷிப்ட்டுக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்களிடமும் அதே படிவத்தை கொடுத்து அதில் கையெழுத்து போட வேண்டும் என்றும் அவ்வாறு போடவில்லை என்றால் ஆலைக்குள் அனுமதிக்க முடியாது என்று தனது முதலாளித்துவ திமிரை காட்டியுள்ளது ஆலை நிர்வாகம்.
தொழிலாளர்களை சுரண்டி கிடைத்த கொள்ளை இலாபங்களை அள்ளிச் செல்லும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களை, இந்த கார்ப்பரேட் நல அரசு எதுவும் செய்யப்போவதில்லை. இதனால் இந்த விவகாரத்தில் அரசையோ, ஃபோர்டு ஆலையையோ நம்பி எந்தவித பலனும் இருக்கப்போவதில்லை. நோக்கியா ஆலை மூடலால் வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த தொழிலாளர்கள் போல், ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமை.
ஏழைநாடுகளின் உழைப்பையும், வளங்களையும் சுரண்டி கொழுத்துவிட்டு, வேறுஒரு ஏழை நாட்டிருக்கு செல்லும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் – தனியார்மய – தாராளமாய – உலகமயக் கொள்கையை வீழ்த்தாமல் – தொழிலாளர்களுக்கு விடிவில்லை.
வினோதன்
காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பத்திரிகையான தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் போலீசால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 2 அன்று ஒரு வழக்குக்கு (எஃப்ஐஆர்) ஆஜராகுமாறு ஜே & கே போலீசுத்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ) பத்திரிகையின் ஆசிரியரான (23வயது) யாஷ்ராஜ் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. “தேசத்துரோக” கட்டுரையை வெளியிட்டதற்காக பத்திரிகைக்கு எதிராக எண் (01/2022) 2011-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் வாலா பத்திரிகையின் ஆசிரியர் ஃபஹத் ஷா ஏற்கனவே எஸ்.ஐ.ஏ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆசிரியர் அப்துல் ஆலா ஃபாசிலி, காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் 17 அன்று ஸ்ரீநகரில் SIA-வால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 6 அன்று ‘அடிமைத்தனத்தின் கட்டுகள் உடைந்து விடும் – The Shackles of Slavery Will Break’ என்ற தலைப்பில் தி காஷ்மீர் வாலாவின் இளம் பத்திரிகையாளர் யாஷ்ராஜ் ஷர்மாவின் கட்டுரை வெளியானபோது அவருக்கு 12 வயது. ராஜஸ்தானில் வசிக்கும் யாஷ்ராஜ் ஸ்ரீநகரில் பத்திரிகை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
படிக்க :
♦ உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !
♦ காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !
தி காஷ்மீர் வாலா ஆசிரியர் அப்துல் ஆலாவுக்கு எதிராக, SIA சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 120-பி (குற்றச் சதிக்கான தண்டனை), 121-ன் பிரிவுகள் 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை) மற்றும் 18 (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல்) இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 (தேசத்துரோகம்), 153-பி (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளை தொடர கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்பு, கடந்த மே 30 அன்று நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு வெளியான இக்கட்டுரை “ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுத்தது” என்று கூறியது.
இதற்கு முன் அரங்கேற்றப்பட்ட, புலனாய்வு அமைப்பின் தி காஷ்மீர் வாலா ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான பாசிச நடவடிக்கைகளை பார்ப்போம். கடந்த 2022 பிப்ரவரி மாதம், சமூக ஊடகங்களில் “தேச விரோத உள்ளடக்கத்தை” பதிவிட்டதாக ஃபஹத் முதன்முதலில் புல்வாமா போலீசுத் துறையினரால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 22 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும், அவர் காவலில் இருந்து வெளியேறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ஃபஹத் ஷா இதேபோன்ற வழக்கில் ஷோபியான் போலீசுத்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். மார்ச் 5 அன்று அவ்வழக்கிற்கு ஜாமின் கிடைத்தது. இருப்பினும், கலவரம், கொலை முயற்சி, தூண்டுதல், அவதூறான விஷயங்களை அச்சிடுதல் ஆகிய குற்றங்களின் கீழ் மூன்றாவது வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 14 அன்று, ஸ்ரீநகரில் உள்ள நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நான்காவது வழக்கு போடப்பட்டு ஃபஹத் ஷா, வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள சிறைக்கு மாற்றினர். அவர் தொடர்ந்து கைது செய்யப்பட்டதை எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள் மற்றும் பிற சுதந்திரமான பேச்சுக் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
படிக்க :
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
♦ பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
இருப்பினும், கடந்த மே 23 அன்று, கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபஹத் ஷா, குப்வாராவில் உள்ள சிறையிலிருந்து எஸ்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டார். ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளருக்கு எதிரான ஐந்தாவது வழக்கு இதுவாகும்.
இதுபோன்ற பாசிச நடவடிக்கைகள், காஷ்மீர் வாலா பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து மோடி அரசால் ஏவப்பட்டு வருகிறது. கட்டுரை எப்படி கலவரத்தை தூண்டும்? ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்து மதவெறியர்கள் நாடுமுழுவதும் வெளிப்படையாகவே முஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்கள்; இவர்களை கைது செய்து தட்டிக்க துப்பில்லாத அரசு பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை செயல்படவிடாமல் செய்து வருகிறது.
காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களின் அரங்கேற்றப்படும், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் இந்த செயல்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
புகழ்
தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்றும் தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ
தமிழகத்தை இன்னும் ஒரு குஜராத் மாற்றியே தீருவோம் என்ற திமிர் பிடித்த ஆணவம் பிடித்த ஒரு நபரின்(அண்ணாமலையின்) கருத்து அது; போலீசில் புகார் கொடுப்பதெல்லாம் விட செருப்பால்தான் அடிக்க வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ன சார் இப்படி சாதியை இழிவாக பேசியுள்ளீர்களே என்று அண்ணாமலையை கேட்டதற்கு ஆங்கில அகராதியை புரட்டிபாருங்கள் என்று திமிராக பதிலளித்திருக்கிறார்.
ஒருவரை பார்த்து தமிழில் நாயே என்று திட்டினால், அது தமிழில்தான் நாய் ஆப்பிரிகாவில் நாய் என்றால் அர்த்தமே வேற என்று சொல்லி பேச முடியுமா? அந்த யுத்தியைத்தான் அண்ணாமலை கையாள்கிறார். இதுவே ஒரு பார்ப்பன சாதியை சார்ந்த ஒரு நபரை இப்படி பேசியிருந்தால் விசயம் வேறவாக இருந்திருக்கும்.
இஸ்லாமியர்களையும், தாழ்த்தப்பட்டிவர்களையும் கொன்றொழிக்கின்ற அந்த விஷ்வ குரு என்பதுதான் கேவலம். இந்த கேவலம் அநியாயத்தை பார்த்துக்கொண்டு தமிழகம் ஏன் அமைதியாக இருக்கிறது?. அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக மக்கள் செருப்பையும் துடைப்பத்தையும் வைத்துக்கொண்டுதான் வரவேற்க வேண்டும்.
மோடி ஊரெல்லாம் சுற்ற முடியும், ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் மூத்திர சந்து வழியாகத்தால் ஐஐடி-க்கு செல்லமுடியும் என்ற நிலையை உருவாக்கிய தமிழ்நாடு, இன்றைக்கும் இழிவான விஷயத்திற்கு ஒரு சுடுகாட்டு அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!
யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று ட்வீட் செய்ததற்கான Alt News என்ற இணைய தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்-ன் மீது உத்தரப்பிரதேசத்தின் கைராபாத்தில் உள்ள போலீசு நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
ராஷ்டிரிய இந்து ஷேர் சேனாவின் மாவட்டத் தலைவர் பகவான் சரண் என்பவரின் புகாரின் அடிப்படையில், ஜுபைர் மீது பிரிவு 295 ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள், மதத்தை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை தூண்டும் நோக்கம்) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
டைம்ஸ் நவ் சேனலின் ‘தி கியன்வாபி ஃபைல்ஸ்’ குறித்த விவாதத்தின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து, சுபைர் ட்வீட் செய்துள்ளார். ட்வீட்டைக் குறிப்பிட்டு, ஜுபைரின் ட்வீட்டால் அவரது மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக புகார் தாரர் கூறியுள்ளார். மேலும், மஹந்த் பஜரங் முனியை வெறுப்பாளர் என்றும், இந்து தலைவர்களை “கொலை” செய்ய ஜுபைர் முஸ்லீம்களை தூண்டுவதாகவும் சுபைர் மீது குற்றம்சாட்டினார்.
படிக்க :
♦ ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !
♦ ’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
யதி நரசிங்கானந்த், ஜூனா அகாராவில் தீவிர இந்துத்துவா தலைவராவார். இவர் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறைக்கான அழைப்புகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்.
“நமது தற்போதைய காலத்தில் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுபவர்கள் முந்தைய காலங்களில் பேய்கள் என்று அழைக்கப்பட்டனர். நாதுராம் கோட்சே ஜியைப் புகழ்வதற்கு போதுமான வார்த்தைகள் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீர சாவர்க்கர் மற்றும் நாதுராம் கோட்சே ஆகியோரை எனது மிகப்பெரிய ஹீரோக்களாக நான் கருதுகிறேன்” என்று கூறியவர்தான் யதி நரசிங்கானந்த்.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கான நரசிங்கானந்தின் அழைப்புகள் உண்மையில் CAA மற்றும் அதற்கு எதிரான போராட்டங்களுக்கு முந்தையவை. 2019 அக்டோபரில் லக்னோவில் ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட உடனேயே, அவர் அனைத்து முஸ்லீம்களையும் வன்முறையால் அச்சுறுத்தினார் மற்றும் இந்தியாவில் இருந்து இஸ்லாத்தை ஒழிப்பேன் என்று கூறினார்:
“ஒரு இந்து சிங்கம் கொல்லப்பட்டதையடுத்து, எங்கள் வீடுகள் அனைத்தும் துக்கத்தில் இருக்கிறது. இன்று கமலேஷ் திவாரியின் வீடு துக்கப்படுவதைப் போல நான் உங்களை துக்கப்படுத்தாவிட்டால், நான் என் தந்தையின் மகன் அல்ல என்று முஸ்லீம்களிடம் சொல்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை ஆயுதங்களைப் பயன்படுத்துவேன். ஒவ்வொரு முஸ்லீம்களிடமும் நான் சொல்கிறேன், ஒரு நாள் நாட்டில் இருந்து இஸ்லாத்தை ஒழிப்போம்” என்று வெறுப்பு பேச்சு பல பேசித் திரிபவர்தான் யதி நரசிங்கானந்த்.
இதேபோல், பாடி சங்கத் ஆசிரமத்தின் பூசாரி மஹந்த் பஜ்ரங் முனி, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் இந்து புத்தாண்டின்போது போலீசுத்துறை முன்னிலையில் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக பாரிய பாலியல் வன்முறைக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
மஹந்த், கைராபாத் பகுதியில் உள்ள பாடி சங்கத் உதாசின் ஆசிரமத்தின் தலைமை பூசாரி ஆவார். “நீங்கள் ஒரு இந்து பெண்ணை துன்புறுத்தினால், நான் வெளிப்படையாக உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வேன்” என்று மஹந்த் மிரட்டினார்.
இப்படி வெறுப்பு பேச்சுக்களை பேசித் திரியும் யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் போன்ற இந்துமதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் இது ஓர் குற்றம்போல் சித்தரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு கருத்து சுதந்திரத்திற்கு மிகவும் ஆபாயத்திற்குறியது.
முஸ்லீம் மக்களை படுகொலை செய்ய வேண்டும், விரட்டியடிக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் என்று பொதுவெளியில் பேசி இந்துமத வெறியையும், மத கலவரங்களையும் தூண்டி நடந்தி வரும், இந்த இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம். இதைவிட கேலிக்கூத்து இந்த நாட்டில் வேறெதுவும் இருக்க முடியாது. இது போன்ற கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை நாம் உழைக்கும் மக்களாக இணைந்து ஒழித்துக் கட்டாவிட்டால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் சங் பரிவார் கும்பல் ஜனநாயகத்தின் நுகத்தடியை முற்றாக வெட்டிவீசும் நாள் வெகுத்தொலைவில் இல்லை.
காளி
ரூ.265 கோடி நிதியை திருப்பி அனுப்பிய முந்தைய அதிமுக அரசு : வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் !
பழங்குடியின மக்களுக்கான ரூ.265 கோடி நிதியை மத்திய அரசிடம்
திருப்பி ஒப்படைத்த முந்தைய அதிமுக அரசு !
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது.
இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், “மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,310 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் ரூ.1,045 கோடி மட்டுமே பல்வேறு அடிப்படைத் திட்டங்களுக்கு செலவு செய்துள்ளனர். மீதம் ரூ.265 கோடி செலவு செய்யப்படாமல் அரசிற்கே மீண்டும் திரும்பவும் ஒப்படைத்துள்ளனர் என்பதை தெரிவித்துள்ளார்.
மதுரையில் கல்மேடு, சக்கிமங்கலம் போன்ற பகுதிகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுபோக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த பகுதிகள் பார்ப்பதற்கு நவீன சேரிகளை போல் காட்சியளிக்கும். முறையான குடிநீர் வசதி இருக்காது. 500 குடும்பங்களுக்கு இரண்டு தண்ணீர் குழாய்கள்தான் உள்ளன; அதைக் கூட அந்த மக்கள் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட ஆறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் அந்த மக்களிடம் வந்து பல்வேறு கோரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வாரி வழங்கும் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ பேருக்கு பிச்சை போடுவதைப்போல் சில விஷயங்களை செய்வார்கள் அதுவும்கூட அந்த மக்களின் தொடர்ச்சியான அழுத்தமும் போராட்டமுமே அத்தகைய நடவடிக்கை எடுக்கவும் அடிப்படையாக உள்ளது.
படிக்க :
வீடு, மின்சாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இந்த ரூ.265 கோடியை வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடிய நோக்கம்தான் என்ன?
இந்த அதிமுக – பாஜக கும்பலுக்கு மக்கள் நலன் என்றாலே கசப்பான ஒன்றுதான். போன ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கல்விக்காக ஒதுக்கிய நிதியில் ரூ.4,000 கோடி தொகையை திருப்பி அனுப்பியதும் அது அனைவராலும் கண்டிக்கப்பட்டதும் நடந்தது.
காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் துரத்தி அடிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் நகரங்களில் வந்து குவிந்துள்ள இத்தகைய பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் நிற்கும்போது, அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் நம்மை சினம் கொள்ள வைக்கிறது.
ஜெய் பீம் படம் வந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு ஆதரவானவர் என்பதுபோல காட்டிக்கொண்டு வளம் வந்தார். பல்வேறு உதவிகள் செய்வதாகவும் காட்டிக் கொண்டார். அப்படி இருக்கும்போது அந்த மக்கள் இன்றும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்நிலை இன்றும் மாறவில்லை.
மாறாக, சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ள தமிழக அரசு அதை உருவாக்க இன்று பல்வேறு உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஒரு கார்ப்பரேட் நகரை உருவாக்க இப்படி உழைக்கும் மக்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. மக்களை அப்புறப்படுத்தி நவீன சேரிகளை உருவாக்கி வருகிறது. இதற்கு நிகரானதுதான் இப்படிப்பட்ட பழங்குடியின மக்களை புறக்கணிப்பது என்பது. கார்ப்பரேட்டுகளுக்கு விழுந்து விழுந்து சேவை செய்யும் இத்தகைய திராவிட மாடல்தான் நாளை உழைக்கும் மக்களை காப்பாற்ற போவதாக சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று.
கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் கார்ப்பரேட் சேவை மட்டும் நிரந்தரம் என்பதுதான் எதார்த்தம் ஆகிவிட்டது. பல்வேறு உழைக்கும் மக்களின் உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான மக்களின் போராட்டங்களும் வெடிக்க காத்திருக்கிறது அத்தகைய போராட்டங்களுடன் பழங்குடியின மக்களும் இணைந்து போராடுவதே தங்களுடைய உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள உள்ள ஒரே வழி.
![]()
ரவி
மீடியாக்களின் தைரியத்தில் விசக் கொடுக்குகளை நீட்டும் பாசிஸ்டுகள் | கேலிச்சித்திரம்
தந்தைப் பெரியாரை எண்ணி
மனம் வருந்துகிறேன்,
ஒரு தடியையேனும்
விட்டுச் சென்றிருக்கக் கூடாதா!
கிடைத்ததை மேய்ந்துவிட்டு
கண்டதை வாந்தியெடுத்துக்கொண்டிருக்கும்
அண்ணாமலை போன்ற அரைப்பைத்தியங்களின்
நடமாட்டங்கள் அதிகரித்துவிட்டன.
தடியின்
ஒரு சிதிலமேனும் இருந்திருந்தால்
தாமரைக் கம்பங்கள்
தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்!
கமலாலயங்கள்
கற்குவியலாய் மாறியிருக்கும்!
அரசியல் கட்சிகளும்
மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களும்
அரசியல் – ஜனநாயகம் என்று
பாசிச சர்வாதிகாரத்திற்கு
பக்க மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது
மனிதர்களுக்கான பூமி
“பறையா” என இகழும் இழிபிறவிகளுக்கு
இங்கு இடமில்லை என பாடம் புகட்டுவோம்.

கேலிச்சித்திரம் : மு.துரை















