Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 413

இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறது. அந்த பயங்கரமான கதை என்னவெனில், ‘பிரிட்டனுக்கு இந்தியாவில் எந்தவித பொருளாதார நலனும் கிட்டவில்லை. சொல்லப்போனால் இந்தியாவை நிர்வகித்ததில் பிரிட்டனுக்குத்தான் செலவு’. அதாவது பிரிட்டன் தன்னுடைய இரக்க குணத்தின் காரணமாக நீண்ட காலம் இந்தியாவில் தாக்குப்பிடித்தது!

உத்சா பட்னாயக்.

பிரபல பொருளாதார நிபுணரான உத்சா பட்னாயக், சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை, மேற்சொன்ன கதையை தவிடுபொடியாக்குகிறது. 1765 முதல் 1938 வரையான இரண்டு நூற்றாண்டு கால வரி மற்றும் வர்த்தக விவரங்களை கணக்கிட்ட பட்னாயக், 45 டிரில்லியன் டாலர் (45 இலட்சம் கோடி டாலர்) களை இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிக்கொண்டு போனதாக தெரிவிக்கிறார்.

இது மிகப்பெரிய தொகை. உதாரணத்துக்கு 45 டிரில்லியன் டாலர் என்பது, இன்றைய இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 17 மடங்கு அதிகமாகும்.

இந்தியாவை பிரிட்டன் எப்படி சுரண்டியது ?

வர்த்தகத்தின் மூலமாக இந்த சுரண்டல் நடந்தது. காலனியாக்கத்துக்கு முன் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து அரிசி, துணி உள்ளிட்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கியது. காசு என்பது அந்தக் காலத்தில் வெள்ளியாக தரப்பட்டது. 1765-ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறியது. கிழக்கிந்திய கம்பெனி,  துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து இந்திய வர்த்தகத்தில் ஏகபோகத்தை நிறுவியது.

கிழக்கிந்திய கம்பெனி. (கோப்புப் படம்)

அந்த சுரண்டல் அமைப்பு எப்படிப் பட்டது தெரியுமா? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரியை வசூலித்தது. இந்த வரி வருவாயிலிருந்து ஒரு பெரும் பகுதியை இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கப் பயன்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தங்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, பிரிட்டன் வர்த்தகர்கள் ‘இலவசமாக’ பொருட்களை வாங்கிக்கொண்டு போனார்கள். விவசாயிகளும் நெசவாளர்களும் வரியை கட்டினார்கள்; அதில் ஒரு பகுதியை திரும்பப் பெற்று பொருட்களையும் கொடுத்தார்கள்.

இது ஒரு முறைகேடு – மிகப் பெரும் அளவில் நடந்த திருட்டு!

இந்தியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. வரி வசூலிப்பவர் வேறொருவராக இருந்தார், தங்களிடமிருந்து பொருட்களை வாங்குகிறவர் மற்றொருவராக இருந்தார். ஒருவரே இதைச் செய்திருந்தால், அவர்களால் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்கும்.

திருடப்பட்ட சில பொருட்கள் பிரிட்டனில் விற்கப்பட்டன. மீதியிருந்தவை வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டன் தன்னுடைய தொழில்மயமாக்கலுக்கு தேவையான இரும்பு, தார், மரக்கட்டை போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தது. இப்படி மறு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் வாயிலாக பிரிட்டன் தன்னுடைய நிதி புழக்கத்தை மேம்படுத்திக்கொண்டது. இந்தியாவில் அமைப்பாக்கப்பட்ட திருட்டின் மூலமே பிரிட்டனில் தொழில் புரட்சி சாத்தியமானது.

உலகைப் பங்கு போடும் பிரிட்டிஷ் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள்.

இதில் முக்கிய விசயம், பிரிட்டிசார் திருட்டு பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்கும்போது தாங்கள் ‘வாங்கிய’ விலையைவிட அதிகம் வைத்து விற்றனர். பொருளின் உண்மையான மதிப்பை மட்டுமல்லாது, அதன் மீது வந்த இலாபத்தையும் தங்கள் பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.

பிரிட்டிஷ் அரசு இந்திய துணைக்கண்டத்தை 1847-ஆம் ஆண்டு கையகப்படுத்திக்கொண்டபின், காலனியர்கள், வரி வசூலிப்பது – வாங்குவது என்ற அமைப்பில் ஒரு சிறப்பு திருப்பத்தை கொண்டுவந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் உடைபட்டவுடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை நேரடியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.  ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை இலண்டனில் மட்டுமே செலுத்த முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அது இன்னொரு வகையான சுரண்டல். இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க விரும்பும் மற்ற நாடுகளுக்கென்று, பிரிட்டிஷ் அரசு பிரத்யேகமான பணத்தாளை அறிமுகப்படுத்தியது. அந்தப் பணத்தாளை தங்கம் அல்லது வெள்ளி கொடுத்து வாங்கிக்கொண்டு, இந்திய பொருட்களை இலண்டனிலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.  இந்திய வியாபாரிகள் பொருட்களை விற்பதன் மூலம் சேர்த்த பணத்தாளை உள்ளூர் காலனி அலுவலகத்தில் கொடுத்து, இந்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த பரிமாற்றத்தின் போது, வரிப்பணம் பிடித்தம் செய்துகொள்ளும் பிரிட்டிஷ் அரசு. மீண்டும் இந்தியர்கள் சுரண்டப்பட்டார்கள், மோசடி செய்யப்பட்டார்கள்.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
மதுரை : கிரானைட் கொள்ளை கிரிமினல்களுக்கு ஆதரவாக பாஜக தாமரை யாத்திரை !

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிட்டதட்ட மூன்று தசாப்தங்களாக, கணிசமான அளவில் இந்தியாவின் உபரி வர்த்தகம் மற்ற நாடுகளுடன் நடந்துகொண்டிருந்தபோதும், தேசிய கணக்குகளில் பற்றாக்குறை இருப்பதாகக் காட்டியது பிரிட்டிஷ் அரசு. ஏனெனில் இந்திய ஏற்றுமதியின் உண்மையான வருவாய், பிரிட்டன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

இப்படி உருவாக்கப்பட்ட ‘பற்றாக்குறை’ என்பதை பிரிட்டனின் சொத்தாக இந்தியா இருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் கொள்ளலாம்.  இந்திய உற்பத்தியாளர்களின் பெரும்பகுதியான வருமானத்தை பிரிட்டன் இடையிட்டு பறித்துக்கொண்டது. இந்தியா பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. அதே நேரத்தில், ‘பற்றாக்குறை’ என்ற காரணம், இந்தியா வேறு வழியில்லாமல் பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ள உதவியது. எனவே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தேவையில்லாமல்  தங்கள் காலனியாளர்களுக்கு கடனாளிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை மேலும் உறுதியாக்கியது.

இந்த மோசடி முறையிலிருந்து பெற்ற செல்வத்தை பிரிட்டன் தனது ஏகாதிபத்திய வன்முறைகளுக்காகப் பயன்படுத்தியது. 1840களில் சீனாவில் ஊடுருவவும், 1857ல் நடந்த இந்திய சிப்பாய் கலகத்தை ஒடுக்கவும் இந்திய சுரண்டல் பணத்தை பயன்படுத்தியது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்,  இந்திய வரிவசூலை வைத்து தன்னுடைய போர் செலவை செய்தது பிரிட்டன் அரசு. பட்னாயக் இப்படி குறிப்பிடுகிறார், “இந்திய எல்லைக்கு வெளியே பிரிட்டன் நடத்திய போர்களுக்கான நிதி, இந்திய வருமானத்தை முழுமையாகவும் முதன்மையாகவும் சார்ந்தே இருந்தது”.

இவை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து கிடைத்த நிதி புழக்கத்தைப் பயன்படுத்தி,  ஐரோப்பாவுக்கும் ஐரோப்பாவின் குடியேற்றங்கள் நிகழ்ந்த கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கும் முதலாளித்துவத்தை நீட்டிக்க நிதியளித்தது பிரிட்டன். எனவே, பிரிட்டனின் தொழில்மயமாக்கல் மட்டுமல்ல, மேற்குலகின் தொழில்மயமாக்கலும் காலனிநாடுகளிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திலிருந்தே நடந்தது.

1765 முதல் 1938 வரை காலனியாக்க இந்தியாவின் பொருளாதாரத்தை மூன்று தனித்துவமான காலங்களாக இனம்கண்டுள்ள பட்னாயக், அந்தக் காலக்கட்டத்திலிருந்து உறிஞ்சப்பட்ட வருவாயை கணக்கிட்டு, தற்போது வரை அதற்கான குறைந்தபட்ச வட்டியை கூட்டியுள்ளார்.  அதன்படி, 44.6 டிரில்லியன் டாலர்கள் இந்தியாவிடமிருந்து சுரண்டியிருக்கிறது பிரிட்டன். இந்த மதிப்பு தோராயமானது என தெரிவிக்கும் இவர், காலனியாக்க காலத்தில் பிரிட்டன் அரசு, இந்தியாவின் தலையில் கட்டிய கடன்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.

இது மிக மிகப் பெரிய தொகை. ஆனால், இந்த சுரண்டலின் உண்மையான மதிப்பு கணக்கிடப்பட முடியாதது. ஜப்பான் செய்ததுபோல் இந்தியா தன்னுடைய வரி வருவாயையும் அந்நிய செலாவணியையும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தால், வரலாறு வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியா பொருளாதார அதிகார மையமாக உருவாகியிருக்கும். நூற்றாண்டுகால வறுமையும் வேதனையும் தடுக்கப்பட்டிருக்கும்.

கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான்.

இப்படிப்பட்ட கசப்பான பின்னணி இருக்க, பிரிட்டனில் உள்ள ஆற்றல் மிக்க சில நபர்கள் சில புனைகதைகளை கிளப்பி விட்டனர். கன்சர்வேடிவ் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் ‘முன்னேற்ற’த்துக்கு உதவியது என்றார். டேவிட் கேமரூன் பிரதமராக இருந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு உதவியாக இருந்தது என்பதை வலியுறுத்தினார்.

அதிகார மட்டத்திலிருந்து கிளப்பட்ட இந்த புனைவு வெகுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டு பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 50% மக்கள் காலனியாதிக்கம் அந்தந்த நாடுகளுக்கு உதவியது என கருத்துச் சொன்னார்கள்.

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரவே இல்லை. உண்மையில், 19 நூற்றாண்டின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ்  தலையீட்டின் விளைவால் இந்தியாவின் வருமானம் பாதியாகக் குறைந்தது. 1870 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைந்தது. பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கிய பஞ்சத்தின் காரணமாக உயிரிழந்தார்கள்.

பிரிட்டன் இந்தியாவை முன்னேற்றவில்லை. பட்னாயக்கின் ஆய்வில் தெரியப்படுத்துவது என்னவெனில், பிரிட்டன் இந்தியாவால் முன்னேறியது.

படிக்க:
மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

இது பிரித்தானியர்களிடம் என்ன கோருகிறது? மன்னிப்பு? நிச்சயமாக. இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? பட்னாயக் கணக்கிட்டிருக்கும் இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு பிரிட்டனிடம் போதுமான பணம் இல்லை. அதே நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து உண்மையைச் சொல்லத் தொடங்கலாம். பிரிட்டன் தன்னுடைய அதிகாரத்தை இந்தியா மீது செலுத்தி சுரண்டியதே தவிர, இரக்ககுணத்தின் காரணமாக இந்தியாவை ஆளவில்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது பள்ளிப்பாடங்களில் சொல்லித்தரப்படுவதுபோல, நீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.


(கட்டுரையாளர் ஜாசன் ஹிக்கெல், இலண்டன் பல்கலைக்கழக கல்வியாளர்.)
தமிழாக்கம்: கலைமதி
நன்றி
: அல்ஜசீரா

கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்

அறிவியல் – ஆரோக்கியம் ! – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை!

கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றா?

“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன்.

கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல.

நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?

முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா ? அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம்.  சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ  சிறுநீரகக் கோளாறோ வந்து விடுமா? வராது.

அது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.

எல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு?

ஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது ? இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்.

இருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது.

இந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.

நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது?

நம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்.

அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்.

உண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்?

இப்போது உணவுக்கு வருவோம்.  உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.

ஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்

“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா?  இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது.

உலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா ?

தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.

அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.

அதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.

சுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

எந்த ஆயில் நல்ல ஆயில் ?

எண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில்? நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் ? நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள்.  அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.

எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்.

எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.

ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்?

அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.

ஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால்,  ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.

பருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.

இந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா?”  வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன.

ஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

ஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.

எங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ,  மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

வீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.

ஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.

உருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.

உங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால்  இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது.

அதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றி விட்டார்கள் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 37

மாக்சிம் கார்க்கி
ரு நெசவுத் தொழிற்சாலையைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தில் நதாஷா ஆசிரியை வேலை பெற்றாள். தாய் அவளுக்கு அவ்வப்போது சட்டவிரோதமான பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் அறிக்கைகளையும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவாள்.

இதுவே அவளது வேலையாகிவிட்டது. மாதத்தில் எத்தனையோ தடவைகளில், அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரியோ, அல்லது துணிமணி, ரிப்பன், லேஸ் முதலியனவற்றை விற்கும் அங்காடிக்காரி போலவோ, அல்லது செயலுள்ள பட்டணக்கரைக் குடும்பப் பெண் மாதிரியோ, பக்திமயமான புண்ணிய ஸ்தல யாத்திரிகை போலவோ மாறுவேஷம் தரித்துக் கொள்வாள். தோளிலே ஒரு பையையாவது; கையிலே ஒரு டிரங்குப் பெட்டியையாவது தூக்கிக்கொண்டே அவள் அந்த மாகாணம் முழுவதும் சுற்றித்திரிந்தாள். ரயிலாகட்டும், படகாகட்டும், ஹோட்டலாகட்டும், சத்திரம் சாவடிகளாகட்டும். எங்குப் போனாலும் அவள்தான் அங்குள்ள அன்னியர்களிடம் மிகுந்த அமைதியோடு முதன்முதல் பேச்சைத் தொடங்குவாள். கொஞ்சம் கூடப் பயனில்லாமல் தன்னுடைய அனுபவ அறிவினாலும், சுமூகமாகப் பழகும் தன்மையாலும் அவர்களது கவனத்தையெல்லாம் தன்பால் கவர்ந்துவிடுவாள்.

ஜனங்களோடு பேசுவதிலும் அவர்களது கதைகளையும் குறைபாடுகளையும், அவர்களைப் புரியாது மயங்கவைக்கும் விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதிலும் அவள் விருப்பம் கொண்டாள். வாழ்க்கையில் மிகவும் சலித்துப்போய், காலத்தின் கோலத்தால் தமது வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கியதை எதிர்த்து அவற்றைத் தவிர்ப்பதற்கு, தன் மனத்தில் எழும் தெள்ளத் தெளிவான கேள்விகளுக்கு விடையும் மார்க்கமும் தெரியாமல், அதைத் தெரிந்து கொள்வதற்கு இடைவிடாது துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் மக்களில் யாரையேனும் கண்டால், தாய்க்கு ஒரே ஆனந்தம் உண்டாகும். கும்பிக் கொதிப்பைத் தவிர்ப்பதற்காக மனிதர்களால் நடத்தப்படும் அமைதியின்மை நிறைந்த போராட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் அவளது கண் முன்னால் திரை விரித்துப் படர்ந்து தெரியும்.

எங்குப் பார்த்தாலும் மனிதர்களை ஏமாற்றி ஏதாவது ஆதாயம் பார்ப்பதற்காக வென்று செய்யும் கொச்சையான அப்பட்டமான முயற்சிகளையும் சொந்த சுயநலத்துக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களது கடைசிச் சொட்டு ரத்தம் வரையிலும் உறிஞ்சிக் குடிப்பதையும் அவள் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. உலகத்திலே அமோகமான வளமும் செல்வமும் நிறைந்திருப்பதையும் அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தச் செல்வவளத்துக்கு மத்தியிலேயும் கூட அரைப்பட்டினி குறைப்பட்டினியாக உயிர் வாழ்வதையும் எப்போதும் தேவையின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி வாழ்வதையும் அவள் கண்டாள்.

தேவாலயங்களிலோ பொன்னும், வெள்ளியும் நிறைந்து கிடந்தன. அவற்றால் ஆண்டவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. அதே சமயத்தில், அந்த கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள். இதற்கு முன்பு கூட அவள் இது மாதிரிக் காட்சிகளைக் கண்டிருக்கிறாள்; பணம் படைத்த தேவாலயங்களையும் பொன்னாபரணம் கொண்ட உடைகளை அணிந்த பாதிரிகளையும் அவள் கண்டிருக்கிறாள். இந்த நிலைமை பிச்சைக்காரர்களின் குடிசைகளுக்கும், கிழிந்து பழங்கதையாய்ப் போய் மானத்தை மறைக்கக்கூட இயலாத அவர்களது துணிகளுக்கும் எதிர்மறைவான காட்சியாயிருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள். ஆனால் முன்பெல்லாம் அவள் இந்த மாதிரி எதிரும் புதிருமான வித்தியாசத்தை இயற்கை நியதி என்று கருதிச் சாமாதானம் அடைந்தாள். இப்போதோ இந்த நிலைமை அவளால் தாங்க முடியாததாயிருந்தது. பணக்காரர்களைவிட ஏழைகட்கு தேவாலயம் அருகிலேயும் தேவைமிக்கதாயும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே பிச்சைக்காரர்களுக்கு இழைக்கும் எந்தக் கொடுமையையும் அவளால் பொறுக்க முடியவில்லை.

அவள் பார்த்த கிறிஸ்துநாதரின் சித்திரங்களிலிருந்தும், கிறிஸ்துவைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த கதைகளிலிருந்தும், கிறிஸ்துநாதர் எளிய உடைகள் தரித்து ஏழைகளின் நண்பராகவே இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், இந்தத் தேவாலயங்களிலோ கிறிஸ்துநாதரின் உருவத்தை அவர்கள் பளபளக்கும் பொன்னாலும், சரசரக்கும் பட்டைகளாலும் அலங்கரித்திருந்தார்கள்; பிச்சைக்காரர்கள் அவரது அருளை நாடி தேவாலயத்துக்கு வந்தால் அந்தப் பட்டுப் பட்டாடைகள் அவர்களைப் பார்த்துச் சீறிச் செருமுவதாகவே அவளுக்குத் தெரிந்தது. அப்போதெல்லாம் அவள் ரீபின் சொன்ன வாசகத்தைத் தன்னையும் அறியாமல் நினைத்துக் கொள்வாள்.

”கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்!”

அவள் தன்னையும் அறியாமலே வரவரப் பிரார்த்தனை செய்வதைக் குறைத்துவிட்டாள். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக நினைத்தாள். அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துநாதரின் பெயரையே சொல்லாமல், அவரைப் பற்றித் தெரிந்துகூடக் கொள்ளாமல், அதே சமயத்தில் அவள் தனக்குள்ளாகக் கருதியது போல், கிறிஸ்துநாதரின் கொள்கைகளின்படி வாழ்ந்து, அவரைப்போலவே இந்த உலகத்தை ஏழைகளின் சாம்ராஜ்யமாகக் கருதி இவ்வுலகின் சகல செல்வங்களையும் மக்கள் குலத்தோர் அனைவருக்கும் சரிநிகர் சமானமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்று விரும்பி வாழ்கின்ற மக்களைப் பற்றியும் அவள் அதிகமாகச் சிந்தித்தாள். அவளது மனம் இந்த எண்ணத்தின் மீதே பதிந்து படிந்தது. அவளது சிந்தனைகள் அவளது மனத்துக்குள்ளாகவே விரிந்து வளர்ந்து அவள் பார்க்கின்ற பொருளனைத்தையும் கேட்கின்ற விஷயங்கள் அனைத்தையும், அணைத்து ஆரத்தழுவி, வரவரத் தீட்சண்ணியம் பெற்று வளர்ந்தோங்கின. அந்தச் சிந்தனைகள் வளர்ந்தோங்கி, ஒரு பிரார்த்தனையின் பிரகாசத்தோடு விளங்கின.

இந்த இருள் சூழ்ந்த உலகத்தின் சகல திசா கோணங்கள் மீதும் நமது சர்வஜன சமூகத்தின் மீதும், வாழ்க்கையின் மீதும், ஒளிய பிரவாகத்தை எங்கெங்கும் ஒரே சமனமாகப் பாய்ச்சி ஒளி செய்தன. நான் என்றென்றும் ஒரு மங்கிய பரிவுணர்ச்சியோடு நேசித்து வந்த கிறிஸ்துநாதர் – துக்கம் கலந்த இன்பமும் பயங்கலந்த நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த குழப்ப உணர்ச்சியோடு நேசித்து வந்த அதே கிறிஸ்துநாதர் – தன்னருகே நெருங்கி வந்துவிட்டது போன்று தாய்க்குத் தோன்றியது. இப்போதோ இயேசுகிறிஸ்து முன்னைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கண்ணெட்டும் தூரத்தில் ஒளிரும் முகத்தோடு மகிழ்வாய் வீற்றிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. மனிதர்களின் நண்பராக கிறிஸ்துவின் பெயரைக் கூட மரியாதையின் காரணமாகச் சொல்லக்கூசிய மக்கள், அவருடைய திருநாமத்துக்காகத் தங்கள் இரத்தத்தைத் தாராளமாகச் சிந்தினார்கள். அந்தப் புனித இரத்தத்தால் கழுவப்பெற்று, புத்துணர்ச்சி பெற்று, உண்மையாகவே அவர் மீண்டும் உயிர்தெழுந்து வந்துவிட்டது போல் அவளுக்குத் தோன்றியது. தனது சுற்றுப் பிரயாணங்களை முடித்துவிட்டு, அவள் திரும்பி வந்து நிகலாயைச் சந்திக்கும்போது மிகுந்த உணர்ச்சியையும் உவகையும் கொண்டவளாக இருப்பாள். வழியெல்லாம் அவள் கண்ட விஷயங்களும் கேட்ட விஷயங்களுமே அந்த உவகைக்குக் காரணம். தனது கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தியில் அவள் மனம் குதூகலித்து நிறைவுபெறும்.

“இந்த மாதிரிச் சுற்றித் திரிந்து எவ்வளவோ விஷயங்களைக் காண்பது மிகவும் நன்றாயிருக்கிறது” என்று ஒருநாள் மாலை அவள் அவனிடம் சொன்னாள். ”இவற்றால் நாம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜனங்களே வாழ்க்கையின் கடைக்கோடிக்கே தள்ளிச் செல்லப்பட்டிருக்கிறார்கள். வாழ்வின் எல்லைக் கோடியிலே அவர்கள் என்ன நடந்திருக்கிறது என்பதொன்றும் தெரியாது தட்டுத் தடுமாறித் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களைப் பிறர் ஏன் இப்படி நடத்த வேண்டும் என்பதை மட்டும் அவர்களால் நினைத்து நினைத்து அதிசயப்படாமலிருக்க முடியவில்லை. அவர்களை ஏன் இப்படி விரட்டியடிக்க வேண்டும். எல்லாமே நிறையப் பெருகிக் கிடக்கும்போது அவர்கள் மட்டும் ஏன் பசியால் வாட வேண்டும்? எங்குப் பார்த்தாலும் கல்வியறிவு நிறைந்திருக்கும்போது, அவர்கள் மட்டும் ஏன் அஞ்ஞான இருளில் ஒன்றுமறியாத பாமரர்களாயிருக்க வேண்டும்? மக்களைப் பணக்காரன் என்றோ ஏழை என்றோ கருதாமல் தனது அன்பு மிக்க குழந்தைகளாகக் கருதும் அந்தத் தயாபரன், அந்தக் கடவுள் எங்கு போனார்? தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி மக்கள் சிந்திக்கும்போது அவர்களுக்கு ஆத்திரம்தான் பொங்குகிறது. இந்த அநீதியைத் தவிர்க்க ஏதேனும் செய்யாவிட்டால், அந்த அநீதியே தங்களைத் துடைத்துத் தூர்த்து அழித்துவிடும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

மக்களது வாழ்க்கைக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி அந்த மக்களிடமேதான் பேச வேண்டும் என்ற ஆசை அவளுக்கு எத்தனையோ சமயங்களில் எழுவதுண்டு. சமயங்களில் இந்த ஆசையை அடக்கியாள்வதே அவளுக்குப் பெரும்பாடாய்விடும்.

தாய் சித்திரப் புத்தகங்களைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதை நிகலாய் கண்டுவிட்டால் உடனே லேசாகப் புன்னகை புரிவான்; அவளுக்கு உலகத்து அசிசயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுவான். மானுடத்தின் அசகாயத் துணிச்சலைக் கண்டு வியந்துபோய் அவள் திடுக்கெனக் கேட்பாள்.

“இப்படியும் நடக்க முடியுமா?”

தனது தீர்க்கதரிசனத்தின் உண்மையின்மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத, ஆணித்தரமான உறுதியோடு நிகலாய் அவளைத் தனது கண்ணாடியணிந்த கண்களால் அன்பு ததும்பப் பார்ப்பான், பார்த்தவாறு எதிர்காலச் சித்திரத்தை விளக்கிச் சொல்லத் தொடங்குவான்.

”மனிதனுடைய ஆசைகள் அளவு கடந்தவை. அவனது சக்தியோ வற்றி மடியாதது என்றாலும் கூட, இந்த உலகத்தில் ஆத்மபலம் சிறிது சிறிதாகத்தான் பெருகுகிறது. ஏனெனில், இன்று சுதந்திரமாக இருக்கப் பிரியப்படுபவர்கள் எல்லாம் அறிவைச் சேகரிப்பதைவிட பணத்தையே சேகரிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், மாந்தர்கள் இந்தப் பேராசையைத் தொலைத்து, தங்களை அடிமைப்படுத்தும் பலவந்தமான உழைப்பிலிருந்து விடுதலை பெற்றால்……”

இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. என்றாலும் அவற்றைத் தூண்டிவிடும் அமைதி நிறைந்த நம்பிக்கை மட்டும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

”உலகத்தில் சுதந்திரமாக இருப்பவர்கள் மிகச் சிலரே; அதுதான் துர்ப்பாக்கியம்!” என்றாள் அவள்.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு !

அவளுக்கு இதுமட்டும் புரிந்தது. பேராசையிலிருந்தும் குரோதத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டவர்கள் அவளுக்குத் தெரியும். அந்த மாதிரியானவர்கள் மட்டும் அதிகமாக இருந்தால் வாழ்க்கையின் இருளும் பயங்கரமும் தொலைந்து போகும், வாழ்க்கை எளிமையாகவும் ஒளிபெற்றும் மகோந்நதமாகவும் விளங்கும்.

“கொடியவர்களாகும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள்!” என்று துயரத்தோடு சொன்னான் நிகலாய்.

அதை ஆமோதித்து அந்திரேய் முன்னர் சொன்ன வார்த்தைகளை எண்ணி, தலையை அசைத்துக்கொண்டாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடனடியாக ஆவன செய்யவேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த சனிக்கிழமை (15-12-2018) தீர்ப்பளித்தது.

இதனைக் கண்டித்து, ”டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பாக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

பாருங்கள் பகிருங்கள் !

கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !

ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.

02.01.1997 அன்று 7 சிலிண்டர்கள் வெடித்து 40 தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

03.05.1997 அன்று கந்தக அமிலக் குழாய் வெடித்து ஒருவர் உடல் வெந்து சாவு.

05.07.1997 அன்று ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்கம், பலருக்கு கருச்சிதைவு.

30.08.1997 அன்று செம்புக் கலவை உலை வெடித்து பனை உயரத்துக்கு தீ. திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாள், தூத்துக்குடி சங்கர் என்ற இரண்டு தொழிலாளர்கள் எலும்புக்கூடாயினர். 3 பேர் படுகாயம்.

14.02.1997 அன்று ஆலையில் தீ விபத்து. கரும்புகை பரவலால் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல்.

16.04.1998 அன்று நள்ளிரவில் பயங்கர விபத்து. 6 பேர் கருகினர். அதில் 3 பேர் நிகழ்விடத்தில் சாவு.

19.11.1998   அன்று கந்தக அமில குழாய் வெடித்து 5 பொறியாளர்களும் ஒரு கூலித் தொழிலாளியும் உடல் வெந்து தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.

26.12.1998 அன்று எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்து தீ விபத்து.

(மாதிரி படம்)

02.03.1999 அன்று நச்சுப் புகையால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கம். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை.

21.09.2008 – நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நல்லாத்துக்குடியைச் சேர்ந்த சம்பூர்ண ஆனந்த் என்பவரது மகன் பொறியாளர் விஜய் (24) கூலிங் பிளாண்ட்டின் ஒரு பகுதி திடீரெனஇடிந்து விழுந்ததால் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மெக்கானிக் பிரிவு ஒப்பந்த ஊழியர் கேரளாவைச் சேர்ந்த கணேசன் படுகாயம் அடைந்தார்.

18.09.2010 – திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள ஊத்துமலை கிராமத்தினை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (21) ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வாகன ஓட்டுனராகபணியாற்றி வந்தார். அமிலம் ஏற்றி, இறக்கும் போது உடலில் கொட்டியதால் தூத்துக்குடி AVM தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

12.10.2010 சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தார்.

03.03.2011 – ஸ்டெர்லைட் ஆலை தீ விபத்தில் ரதீஷ் என்ற ஒப்பந்த தொழிலாளிக்கு 35 விழுக்காடு தீக்காயத்தோடு உயிருக்குப் போராடி வந்தார்.

படிக்க:
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !

31.05.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவால் அமலநாதன்(28) என்ற தொழிலாளி உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

13.08.2011 – ஸ்டெர்லைட் ஆலை மின் கசிவால் தங்கப்பாண்டி (32) படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தனது கையை இழந்தவர்

17.08.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே கந்தக-டை-ஆக்சைடு வாயுக்கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பாதிப்பின் விபரங்கள் தெரியவில்லை.

14.09.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் அமிலத்திற்குள் விழுந்து ஒப்பந்த தொழிலாளியான தூத்துக்குடி, இந்திரா நகர், 3வது மைல் பகுதியைச் சேர்தவர் சுப்பையா மகன் பாண்டியன் (43) உயிரிழந்தார். பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட் பொறியாளரான தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த செங்கராய பெருமாள் மகன் சுரேஷ்குமார் (25) படுகாயமடைந்தார்.

10.10.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் சல்பர் டை ஆக்சைடு ஆசிட் பிளான்டில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு தொழிற்சாலையில் உள்ள முதல் உதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சைஅளிக்கப்பட்டது.

09.09.2012 – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவன மின் உற்பத்தி நிலையத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் தீ விபத்துஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் தேவைக்காக இதில் தினமும் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

22.02.2013 – தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 4வது கப்பல் தளத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மூலப்பொருளான தாமிரத் தாது, கப்பலிலிருந்து நேரடியாக லாரியில்இறக்கும் போது, உடல் மீது கொட்டியதால் லாரியின் கிளீனரான தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த மயிலேறி மகன் கருப்பசாமி(23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

08.03.2013 – ஸ்டெர்லைட் ஆலை பாஸ்பரிக் அமில உற்பத்தி பிரிவில் மின்கசிவால் அமலன்(30) என்ற தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாதிரி படம்

18.03.2013 – ஸ்டெர்லைட் தொழிற்சாலையில், 60 அடி உயரத்திலிருந்து இரவு 8 மணிக்கு தவறி விழுந்து படுகாயம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வெயிலுகந்தம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து மகன் சுவாமிநாதன் (45) உயிரிழந்தார். இவர் 17 வருடங்களாக ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.

23.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகாலை முதல் நச்சு வாயு வெளியேறியது. தூத்துக்குடியிலுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். செடி, கொடிகள் கருகின.

24.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகதி மேதா மகன் கைலாஷ் மேதா (45) ஆலைக்குள் மயங்கி விழுந்தார். ஏ.வி.எம்.மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

26.03.2013 சிகிச்சை பலனின்றி கைலாஷ் மேதா  உயிரிழந்தார். இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17.06.2018 ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.

(உதவி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, வினவு, மனித உரிமை பாதுகாப்பு மையம், அகில இந்திய மீனவர்சங்கம், மதிமுக இணையத்தள நண்பர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள்)

முகநூலில் :  Kappikulam J Prabakar

இதையும் பார்க்க:

ஒரு அமெரிக்கரின் மாஸ்கோ மருத்துவ அனுபவம் !

து மாஸ்கோவில் வாழும் ஒரு அமெரிக்கரின் அனுபவம். இது இன்சூரன்ஸ் (காப்புறுதி) அடிப்படையிலான அமெரிக்க சுகாதார அமைப்பு முறையையும் சோவியத் கடந்த காலத்திலிருந்து ரஷ்யாவில் எஞ்சியுள்ள அனைவருக்குமான  பொதுசுகாதார முறையையும் ஒப்பிடுகிறது. கடந்த 30ஆண்டுகளில், ரஷ்யா மெதுவாக முதலாளித்துவ அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுஆனால் அங்கே அமல்படுத்தப்பட்ட பல சமூக நல நடவடிக்கைகளை ஒரே இரவில் தூக்கி எறிய முடியாமல் அவை தொடர்கின்றன. நம் நாட்டில் அரசு மருத்துவமனைகள் தொடர்வது போல.

*****

ன்று மற்றொன்றை அவ்வளவு எளிதாக பதிலீடு செய்வதில்லை என்று ஹெகல் தத்துவத்தின் வரலாறு பற்றிய சொற்பொழிவுகளிலும், ஆன்மாவின் தோற்றப்பாட்டியல் (Phenomenology of Spirit) என்ற நூலிலும் சுட்டிக்காட்டினார். மாறாக, அது முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றப்படுகிறது.

பொதுமருத்துவமானது இன்றும் ரசியாவில் சோசலிசத்தின் மிச்ச சொச்சமாக நீடித்து வருகிறது.

சோவியத் யூனியன் இது போன்றதுதான்; அது முற்றிலும் மறைந்து போகவில்லை, அது வாழ்ந்து, இன்றும் நவீன ரஷ்யர்களின் நலன்களைக் காக்கிறது. உணவு மற்றும் குடியிருப்பு தொடர்பாக நான் இதைப் பற்றி விவாதித்தேன், இப்போது இதை சுகாதார நலத்துடன் தொடர்புபடுத்தி விவாதிக்க நான் விரும்புகிறேன்.

இது தொடர்பாக, இரண்டு கதைகள், ஒன்று என்னுடையது மற்றொன்று மாஸ்கோ புறநகர் பகுதியில் ஒரு அச்சு நிறுவனம் நடத்தி வரும் என் நண்பர் அலெக்ஸி என்னிடம் கூறியது.

முதலில் என் கதை :

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தெருவில் மெதுவாக பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் என் மீது மோதியது. திரைப்படங்களில் பார்ப்பதைப் போல், நான் மேலே தூக்கி வீசப்பட்டு, சுமார் பன்னிரண்டு அடிகள் முன்னால் எறியப்பட்டு ஒரு பொம்மை போல் விழுந்தேன். அப்போது 69 வயதாகியிருந்த எனக்கு நடந்தது மிகவும் மோசமாக இருந்திருக்கலாம். நான் இறந்திருக்கலாம், ஆனால், பிழைத்து விட்டேன்.

ஒரு பழைய, நன்றாக பராமரிக்கப்படாத ஆம்புலன்ஸ் வந்தது, ஆனால் உண்மையில், அப்போதிருந்த வலியில் எனக்கு அதன் தோற்றத்தைப் பற்றிய அக்கறை குறைவாகவே இருந்திருக்க வேண்டும். அவர்கள் எனக்கு வலிநீக்கியும், இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளையும் கொடுத்தார்கள். மருத்துவமனையில் அவர்கள் எனக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பல சோதனைகள் செய்தார்கள். என் தோள்பட்டைகள் இரண்டும் விலகியிருந்தன. ஆனால் இடதுபக்கம் முறிந்ததுவிட்டதா என்பதை அவர்கள் உறுதியாகக் கூறவில்லை. இறுதியாக, “பந்து இணைப்பு” முறிந்ததைக் காட்டும் ஒரு எம்.ஆர்.ஐ எனக்கு எடுக்கப்பட்டது. அதற்கு ஒரு பெயர் இருக்கிறது, ஆனால் எனக்கு ஞாபகம் இல்லை.

அவர்கள் என் கைகளை மீட்டனர், ஒரு வயதான பெண் என் உடலின் மேல்பகுதியை கட்டினாள்… பழைய பாணியிலான மெல்லிய சல்லாத்துணிக்கட்டு. நான் திருப்பி அனுப்பப்பட்டேன்.

என் அவசரகால சிகிச்சைக்கு நான் என்ன செலவு செய்தேன்? எதுவுமில்லை, முற்றிலும் ஒன்றுமில்லை. என் பாஸ்போர்ட்டை கூட அவர்கள் கேட்கவில்லை. நான் அமெரிக்கன் என்பதும் ஒரு பொருட்டில்லை. நான் எந்த செலவும் செய்யவில்லை. துடிப்போடு செயல்பட்டு வரும் “புதின்கேர்”, சரியாக சொல்வதென்றால் புதினின் ரஷ்யாவில் அமல்படுத்தப்பட்டு வரும் “சோவியத் பராமரிப்பு”(Soviet Care)க்கு நன்றி.

நான் அமெரிக்காவில் இருந்திருந்தால், என் அவசரகால சிகிச்சைக்கு நான் நிறைய பணம் செலவு செய்திருப்பேன். எவ்வளவு என்று எனக்கு தெரியாது, ஆனால் என்னால் செலவு செய்ய முடிந்ததை விட அதிகமாக இருந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நான் ஒரு வக்கீலை வாடகைக்கு அமர்த்தி, அந்த கார் ஓட்டுனர் மீது நிச்சயமாக வழக்கு தொடர்ந்திருப்பேன். சில ஆண்டுகள் கழித்து நான் உயிருடன் இருந்தால், கணிசமான அளவு பணம் நிச்சயமாக எனக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இது சோவியத் முறை அல்ல. நீங்கள் ஓட்டுனர் மீது வழக்குத் தொடுக்கப் போவதில்லை. உங்கள் மருத்துவ பில்களுக்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே அவர் கடமைப்பட்டவர். என் மருத்துவ பில்கள் சுமார் இருநூறு டாலர்கள் வந்தது. ஒவ்வொரு முறை டாக்டரைப் பார்க்க சுமார் ஐம்பது டாலர்கள், பின்னர் கட்டு அகற்றப்பட்டபோது ஒரு சிறப்புக் கவணின் விலை. ரஷ்யாவில் வழக்காடுவது என்பது அமெரிக்காவில் இருப்பது போல் இல்லை என்பது மட்டுமல்ல, மருத்துவ செலவினமும் அங்கிருப்பது போல் இல்லை.

அலெக்ஸி அவரது மகளுக்கு ஃபிரான்ஸ் ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு செய்யும் போது உடல்நிலை சரியில்லாமல் போய், பின்னர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றாக மாறியதைக் குறித்து என்னிடம் கூறினார். அதற்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்று அவர் தெரிவித்தார். ரஷ்யாவில் நடத்தப்பட்ட அதே சோதனைகளுக்கு மூன்று யூரோக்கள் செலவானது, பிரான்சிலோ ஐம்பது யூரோக்கள். மாஸ்கோவில் காலையில் சோதனை செய்யப்பட்டது, மதியம் பரிசோதனை முடிவுகள் வந்தது. பிரான்சில் அவர்கள் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சோவியத் காலத்தின்போது அமைக்கப்பட்ட புகழ்பெற்ற சுகாதார விடுதியான “மினரல் வாட்டர்ஸ்”-லிருந்து வந்திருக்கும் அவரது தந்தையைப் பற்றி அவர் என்னிடம் கூறுகிறார். வழக்கமாக, தங்களின் விருப்பத்தின் பேரில் அங்கே சென்று தண்ணீரைக் குடித்து, ஓய்வு எடுத்து, உள்ளூர் ஆட்டுக்குட்டி கறியை நிறைய சாப்பிட்டார்கள். இன்று, ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டு தேவை, ஆனால் சிகிச்சை அதே தான் மற்றும் செலவும் அதே தான்… ..முற்றிலும் எதுவுமில்லை.

படிக்க :
♦ இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !
♦ “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

மருந்துகளின் மலிவான விலையைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Ciproset, அமெரிக்காவில் விலையுயர்ந்த, மருந்துச்சீட்டு தேவைப்படும் ஒரு மருந்து, நான் இங்கே 300 ரூபிள் (சுமார் ஐந்து டாலர்கள்) கொடுத்து மருந்துச்சீட்டு தேவையில்லாமல் கடையில் வாங்குகிறேன். அனைத்து ஆண்டிபயாடிக்குகளுக்கும் இது பொருந்தும்.

சமீபத்தில் எனக்கு பல்வரிசை மாற்ற வேண்டியிருந்தது; மூன்று பற்கள். பற்கள் உட்பதிப்பு செய்யுமாறு பல்மருத்துவர் என்னிடம் கூறினார். அதற்கான செலவு, 1,65,000 ரூபிள் என்பது  ஒரு ஏழை வயதான பெண்மணிக்கு நிச்சயமாக அதிகம்தான். நான் சொல்லிக்கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில் பரிமாற்ற விகிதம் டாலருக்கு 58 ரூபிள் ஆகும் (அதாவது செலவு 3 பற்களை மாற்ற சுமார் $3,000).

அமெரிக்காவில்  வீட்டுக்கு வந்ததும் என் மகளும் ஒரு உள்பதிப்பு வைத்திருக்கக் கண்டேன் – ஒரு முன்பல்லுக்கு செலவு 10,000 அமெரிக்க டாலர்கள் .

ரஷ்யா பல் மருத்துவத்திற்கான ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறியுள்ளது…… சோவியத் யூனியனுக்கு நன்றி – புடினின் ரஷ்ய மக்கள் மீது இன்னும் ஒளி வீசும் சிவப்பு நட்சத்திரத்திற்கு நன்றி.

மேரி மேட்ஸ்கர் ரஷ்யாவில் வாழும் நியூயார்க்வாசி

நன்றி:  new-democrats 
Countercurrents.org தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் .

திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்

ப்பிரிக்காவில் ஒரு சின்னக் குற்றம் செய்த சிறுமியின் புகைப்படத்தை என் வீட்டில் கடந்த இருபது வருடங்களாக மாட்டி வைத்திருக்கிறேன். சின்னக் குற்றம் என்று சொன்னால் அங்கே பலருக்கு விளங்காது. ஆப்பிரிக்காவில் குற்றங்களை ஆண்பால் பெண்பால் என்று பிரித்திருப்பார்கள். பாரதூரமான குற்றம் என்றால் அது ஆண்பால்; சிறு குற்றம் என்றால் அது பெண்பாலாக இருக்கும்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
உதாரணமாக கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, தீவைத்தல் போன்ற குற்றங்கள் ஆண்பால். சிறுகளவு, வாய்ச்சண்டை, கடனைத் தீர்க்காமல் இருப்பது போன்றவை பெண்பால். ஆண்குற்றத்துக்கு பெரிய தண்டனையும், பெண்குற்றத்துக்கு சிறிய தண்டனையும் கிடைக்கும்.

சிறுமியின் படத்தை பார்க்கும்போதெல்லாம் அது ஒருவகையில் என் சின்ன வயதை நினைவுபடுத்தியது. என் பழைய காலத்தை மட்டுமல்லாது நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் கூட என்னால் அந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு வருபவர்கள் யார் இந்தச் சிறுமி என்று திரும்ப திரும்ப கேட்பார்கள். ஏதோ பதில் சொல்லி அவர்களை சமாளித்தேன்.  நான் படத்தை சோமாலியாவில் பிடித்தேன். தற்செயலாக அபூர்வமான படமாக அது அமைந்துவிட்டது.

சூரியன் நின்ற திசையும் மரத்தின் நிழலும் நான் எடுத்த கோணமும் எப்படியோ பொருந்தி அந்தக் கணம் பதிவாகியிருந்தது. சிறுமியின் பாதி முகம்தான் படத்தில் தெரியும், மீதியில் மரத்தின் நிழல் விழுந்திருந்தது. அந்தப் பாதிப் படத்திலும் அவள் திகைப்பும் தந்திரமான கண்களும் குதூகலமும் சீராக தெரிந்தது.

மாதிரிப் படம்

நான் பார்த்த சிறுமிக்கு விளையாட்டில் அதிக ஆர்வம். எப்பவும் ஓடியபடியே இருந்தாள். அவர்களுடையது ஒரு சின்னக் குடும்பம். என் சோமாலிய நண்பர்தான் என்னை அங்கே அழைத்துப் போயிருந்தார். இந்தச் சிறுமியும் இவள் தம்பியும் ஒரு கோழியை துரத்திக் கொண்டிருந்தார்கள். கோழி விளையாட்டுப் பொருளா அல்லது அன்றைய இரவு உணவா என்பது தெரியவில்லை. எங்களைக் கண்டதும் அப்படியே நின்றார்கள்; கோழி ஓடிவிட்டது. கோழிக்கு பெரிய மகிழ்ச்சி உண்டாகவில்லை. பக்கத்திலேயே நின்று மேய்ந்தது. தாயார் குடிசைக்குள் ஏதோ வேலையில் இருந்தார். சின்னப் பையன்தான் தகப்பனைக் கூட்டிவர ஓடினான்.

நண்பர் என்னை அங்கே கூட்டிச் சென்றது சோமாலியர்களின் புல்லுப் பானையை காண்பிப்பதற்கு. அவர்கள் ஒருவித புல்லில் பானை செய்து அதில்தான் தண்ணீர் பிடித்து வருவார்கள். வெளிப்புறத்தில் பிசின் பூசி இறுக்கமாக நீக்கல் இல்லாமல் இருக்கும். தகப்பன் வருமுன்னர், தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சிறுமி நண்பரிடம் என்னவோ சொன்னாள். அவர் மொழிபெயர்த்தார்.

‘அப்பா இன்றைக்கு என்னை அடித்தார்.’

‘ஏன் அடித்தார்?’

‘நட்சத்திரம் மறைந்த பிறகு நான் எழுந்ததற்கு.’

இரவு நட்சத்திரங்கள் மறையுமுன்னர் அவள் எழுந்து தண்ணீர் எடுத்துவர வேண்டும் என்பது விதி என்றார் நண்பர். அவள் கைகளைப் பார்த்தேன். தழும்பு தழும்பாக அடி விழுந்த காயங்கள். விரல்கள் சிவப்பாக இருந்தன. உள்ளங்கை காய்த்துப்போய் தடித்து கட்டைபோல கிடந்தது. ஒரு சிறுமியின் கைபோலவே இல்லை.

படிக்க:
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி
♦ என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

தண்ணீர் பிடித்து வருவது என்பது பெண்களின் வேலை. உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பணி. அதிகாலையில் எழும்பியதும் இந்தச் சிறுமி புல்லுக்குடத்தை துக்கிக்கொண்டு தண்ணீர் பிடித்துவர பல மைல்கள் நடப்பாள். அதில் அவள் தவறினால் அவளுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். தகப்பனிடம் ஒட்டகம் இருந்தது. அது சும்மாதான் நிற்கும் ஆனால் அதில் போய் தண்ணீர் பிடித்துவர முடியாது. ஓர் ஆண் தண்ணீர் எடுத்து வந்தால் அது பெரிய அவமானமாகப் போய்விடும்.

தகப்பன் சிறுமியை அழைத்து புல்லுப்பானையை கொண்டுவரச் சொன்னார். அவர் எங்களுக்கு முன்னால் அவளை அழைத்தவிதம் அவளுக்கு பிடிக்கவில்லை. சிரித்த முகம் கறுத்தது. நண்பர் நிலத்தைப் பார்த்து சிரித்தார். தகப்பன் சிறுமியை ‘திருடித் தின்னும் மிருகமே’ என்று அழைத்ததாகச் சொன்னார். ஏன் அப்படி அழைத்தார் என்று கேட்டபோது அவர் நீண்ட முறைப்பாடுகள் வைத்தார்.

தண்ணீர் பிடித்து வருவது என்பது பெண்களின் வேலை. உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பணி.

முக்கியமான குற்றச்சாட்டு பக்கத்து வீட்டுக்காரர்களின் ஆட்டுப் பாலை திருட்டுத்தனமாகக் கறந்து குடித்து விடுகிறாள் என்பது. அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள். இப்பொழுதெல்லாம் பெண்குற்றம் செய்கிறாள். விரைவில் ஆண்குற்றம் செய்யத் தொடங்கி விடுவாள்.

சிறுமி கொண்டுவந்த புல்லுப் பானையை ஒரு படம் பிடித்தேன். பிறகு தகப்பனை  எடுத்தேன். அவர் தொப்பி அணிந்து நீண்ட உடையுடன் காணப்பட்டார். அவருடைய ஒரு கண் நீரில் மிதப்பதுபோல இருந்தது. அவராகவே பையனை தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுக்கச் சொன்னார். சிறுமி அவர் முகத்தை பார்த்தபடியே நின்றாள். எங்கே தன்னை கூப்பிடுவாரோ என்ற ஏக்கம் முகத்தில் தெரிந்தது. ஆனால் அவர் அழைக்கவே இல்லை. நான் ‘சிறுமியும் நிற்கட்டுமே’ என்று சொன்னபோது அவருக்கு அது எப்படியோ கேட்காமல் போய்விட்டது.

தகப்பன் தன் ஆட்டு மந்தையை காட்ட நண்பரை அழைத்துச் சென்றார். மந்தை என்பது இருபதுக்கு  குறைவான ஆடுகள்தான். அதுதான் அவர்களுடைய செல்வம். அந்த வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது. தகப்பன் போனபின்னர் நான் சிறுமியை படம் பிடித்தேன். அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லமுடியாது. அப்பொழுது எறித்த சூரியனின் வெளிச்சம் முழுவதையும் அவள் கண்கள் வாங்கிவிட்டன. அந்தப் புகைப்படத்தை அவள் பார்க்கப் போவதில்லை. அது அவளுக்கு தெரியும். எனக்கும் தெரியும். அவள் தகப்பனை ஏமாற்றிவிட்டதுதான் மகிழ்ச்சிக்கான காரணம். கண்களில் தந்திரம் இருந்தது. ரத்தம் கீழேயிருந்து பாய்ந்து அவள் இருதயத்தையும் தாண்டி முகத்துக்கு போனது. அந்தப் படத்தைத்தான் நான் இன்னமும் பாதுகாத்தேன்.

தகப்பன் தூரத்தில் திரும்பி வருவது தெரிந்ததும் அவளில் மாற்றம் ஏற்பட்டது. கைகளை மறைத்து அணிந்திருந்த முழு நீளச்சட்டையின் விளிம்பை இழுத்து வாயை துடைத்தாள். தகப்பன் நெருங்க நாலைந்து இலையான்கள் அவருடன் கூடவே பறந்தன. அவர் சிறுமியிடம் ஏதோ சொல்ல அவள் குடிசைக்குள் துள்ளிக்கொண்டு ஓடினாள். சிறிது நேரத்தில் இரண்டு நீண்ட குவளைகளில் கால்பாகம் நிறைத்த தேநீரைக் கொண்டுவந்து தந்தாள். ஒரு அலுமினியத் தட்டில் ஆட்டுப்பாலில் செய்த வெண்ணெய் கட்டிகளும் வந்தன. நாங்கள் தேநீரைக் குடித்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.

அதுவரைக்கும் கண்ணில் படாத சிறுமி பாய்ந்து வந்து தட்டை எடுத்துக்கொண்டு திரும்பினாள். திரும்பிய அதே சமயம் தன் பின்பக்கத்தை காட்டிக்கொண்டு பிளேட்டில் இருந்த அத்தனை வெண்ணெய்கட்டிகளையும் ஒரு கையால் அள்ளி வாயிலே திணித்தாள். பிறகு ஒன்றுமே நடக்காதது போல வெறும் பிளேட்டை விசிறிக் கொண்டு போய் குடிசையினுள் எறிந்துவிட்டு ஓடினாள்.

தோடம்பழம்

நாங்கள் வாகனத்தை அணுகுமுன்னர் அக்காவும் தம்பியுமாக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு அதை நெருங்கினார்கள். பக்கக் கண்ணாடியில் சிறுமி தன் முகத்தைப் பார்த்து கைவிரல்களால் தலையை சீவினாள். கதவை திறந்ததும் அதைப் பிடித்துக் கொண்டு நின்றாள். இவள் கதவை பிடிக்காவிட்டால் அது விழுந்துவிடும் என்பதுபோல. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் பத்து நாட்கள் கழித்து அவர்களைப் பிரிந்து போவதுபோல அந்தச் சிறுமியின் கண்களில் துக்கமும் ஏக்கமும் இருந்தது. நாங்கள் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அப்படியும் எங்கள் பிரிவு அவளுக்கு தாங்க முடியாததாக  இருந்தது.

நண்பர் தன் பையில் இருந்த ஒரு தோடம்பழத்தை எடுத்துச் சிறுவன் கையில் கொடுத்தார். அவன் அதை கைகளில் பொத்திக்கொண்டு வேகமாக ஓடினான். அவள் துரத்தினாள். புள்ளியாகத் தெரியும்வரை ஓடினார்கள். அவள் எப்படியாவது அதைப் பறித்து விடுவாள் என்று தோன்றியது. அவன் அப்பொழுது அழுவான். தகப்பன் சிறுமிக்கு தழும்பு வரும்படி தண்டனை கொடுப்பார். அதற்கு முன்னர் அது ஆண்குற்றமா பெண்குற்றமா என்பதை தீர்மானிப்பார்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

து ஒரு பரபரப்பான சாலை. வாகனங்கள் போகும் இறைச்சல் மட்டும் நமக்கு கேட்கிறது. இக்காட்சியை மாடியிலிருந்து ஒரு செல்பேசி கேமரா மூலம் பார்க்கிறோம். விரைந்து செல்லும் வாகனங்களை தவிர்த்து விட்டு சாலையோரத்தில் ஒரு இருசக்கர வாகனம் நிற்கிறது. அதில் ஒருவர் அமர்ந்தவாறு உண்கிறார்.

” சீட்டிங்” என தலைப்பிட்டு பகிரப்பட்ட வீடியோவின் முகப்பு.

அவரது சீருடை சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் என தெரிவிக்கிறது. அவரது பணி உணவுகளை ஓட்டல்களில் இருந்து பெற்று வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது. இருசக்கர வாகனத்தின் பின்னால் உணவுப் பொதிகள் இருக்கும் பெட்டகத்திலிருந்து அவர் ஒருசில பொட்டலங்களை எடுக்கிறார். அவற்றை கவனமாக திறந்து சில கவளங்களை கரண்டியினால் உண்கிறார். பிறகு பொட்டலங்களை கவனமாக மூடி வைக்கிறார். இக்காட்சி ஓரிரு நிமிடங்கள் ஓடுகிறது.

கடந்த ஒருவாரத்தில் இந்த வீடியோ காட்சி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பரவியிருக்கிறது. பலரும் பொங்கியிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக உணவுகளை வினியோகிக்கும் சீருடை அணிந்த இளைஞர்களை நாம் நகர சாலைகளில், தேநீர்க் கடைகளில், சாலையோர உணவகங்களில், சிறு-நடுத்தர-பெரிய உணவகங்களின் வாகன நிறுத்துமிடத்தில் காணலாம். அங்கே நின்று கொண்டு தங்களது செல்பேசியில் வரும் உணவு ஆர்டர் குறித்து விரல்களால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

இத்துறையில் புதிய நிறுவனங்கள் வருடாவருடம் ஆன்லைன் சந்தையில் நுழைகின்றன. அதையொட்டி அவர்கள் வெளியிடும் சலுகைத் திட்டங்கள் அண்டசராசரத்திற்கு போட்டியாக ஆண்ட்ராய்டுகளில் பளிச்சிடுகின்றன. செல்பேசியில் ஆய்வு நடத்தி நுகர்வு கலாச்சார யோகத்தில் தான் மட்டும் மலிவாக செலவழிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம் இத்தகைய சலுகை தள்ளுபடி லேகியங்களை விரல் நுனியில் வைத்திருக்கும்.

பல அலுவலகங்களில் இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. இன்று என்ன ஸ்பெஷல், 300 ரூபாய் பிரியாணி 100 ரூபாய்க்கு எங்கே கிடைக்கிறது, என்று பர்கரா, பீட்சாவா, உயர்தர டிகாஷன் காஃபியா என்று அவர்கள் அன்றைய பொழுதைக் கழிக்கிறார்கள். இப்படியாக கொஞ்சம் அதிகப்படியான மாதச் சம்பளம் வாங்கும் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் ஆன்லைன் உணவு விநியோக ருசி நுழைந்து விட்டது.

ஆகவே முன்னர் கண்ட அந்தக் காட்சி செல்பேசி வழியே மக்களிடையே பரவியது ஆச்சரியமில்லை. கூடவே அந்த வீடியோ அந்த உணவு செயலிகளை பயன்படுத்துவோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் கையேந்தி பவன்களில் சுத்தமில்லை, சுகாதாரம் இல்லை, சேவையில்லை என்றெல்லாம் சலித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்திற்கு நம்பகமான அதி சுவை அறுசுவை உணவு அனுபவத்தை இந்த ஆன்லைன் ஆப்புகள் தருகின்றன. ஆகவே அவர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு இப்படியெல்லாம் எச்சிலாக்கப்படுகிறதா எனக் குமுறுகிறார்கள்.

சமூக வலைதளங்கள் வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் யூடியூபில் நுகர்வுக் கலாச்சார ஆய்வுகளுக்கு என்றே பல சேனல்கள் இருக்கின்றன. அரசியல் செய்திகளை விட இத்தகைய அறுசுவை செய்திகளை ‘அறிவார்ந்து’ சொல்லும் போது சந்தையில் உங்களுக்கென்று ஒரு இடம் கிடைத்து விடுகிறது. இத்தகைய சேனல் சித்தர்கள் இப்படி வைரலாகும் வீடியோக்களை வைத்து ஒரு வாரத்தில் ஒரு பத்து பதினைந்து வீடியோக்களை தேற்றி விடுகிறார்கள். அதுவும் உணவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவர்கள் பயங்கரமாக ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயக் கடமையிலும் இருக்கிறார்கள். சரி பார்சல் உணவை பிரித்து சாப்பிடுவதில் என்ன உண்மையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது?

சம்சா, ஜிலேபி, பானிபூரி, லட்டு என்று நாம் அறிந்த இந்தி வாலாக்கள் பலர் இந்த உணவு உண்ணும் காட்சியைப் பார்த்து கொதித்து எழுந்து விட்டார்கள். வாடிக்கையாளருக்கு உணவை சேர்க்கும் ஒருவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா, வாடிக்கையாளர் என்பவர் பகவான் இல்லையா என்று காந்தி சொன்ன பொன்மொழிகளை எல்லாம் நினைவுகூர்கிறார்கள். பரவாயில்லை இந்த மட்டாவது காந்தி அவர்களிடம் தங்கியிருக்கிறாரே!

உலகெங்கிலும் உணவு விநியோகம் இப்படிப்பட்ட ஆன்லைன் மூலமாக நடக்கிறது என்றாலும் இத்தகைய எச்சில் சமாச்சாரம் எங்கேயும் இல்லை என இணையத்தில் பீறாய்ந்து தெரிவிக்கிறார்கள்.

இந்த உணவு உண்ணும் காட்சி எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்பது முதல் பிரச்சனை. அதில் பலரும் மும்பை தில்லி கொல்கத்தா பெங்களூரு என்று ஒரு சுற்று இந்தியா முழுவதும் புனித யாத்திரை சென்று விட்டு பிறகு மதுரைக்கு வருகிறார்கள். சொமேட்டோ நிறுவனமே அந்த வீடியோவில் உள்ளவர் மதுரையில் பணியாற்றும் தனது ஊழியர், அவர் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டு விளக்கம் அளித்து விட்டது. அதன் பிறகே, இந்தப் புலனாய்வுப் புலிகள் இக்காட்சி மதுரையில் எடுக்கப்பட்டது என்பதை பிரேக்கிங் நியூசாக தருகிறார்கள்.

இந்திவாலாக்கள் மட்டுமல்ல தமிழ் கொழுக்கட்டைகளும் யூ டியூப்பில் சோசியல் டிரெண்டிங், சோசியல் ஃபண்டிங் என்று ஏகப்பட்ட சேனல்கள் நடத்துகிறார்கள். சுமேட்டோ நிறுவனத்தின் விளக்க கடிதத்தைப் போட்டு ஊழியரின் வீடியோவைப் போட்டு, பிறகு அவரது முகத்தை போட்டு நாலு தமிழ் வார்த்தைகளை தப்பும் தவறுமாக பேசி மாபெரும் ஊழலை கண்டு பிடிக்கிறார்கள். இதையே கிராபிக்ஸ் நேர்த்தியில் நிறுவனமயமான பெரும் யூடியூப் சானல்கள் செய்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் தூ தூ வென துப்பித் தள்ளுகிறார்கள்.

அதிலும் சில சேனல்கள் மிகத் திறமை வாய்ந்த அறிஞர் பெருமக்களை அழைத்து வருகிறார்கள். ஆன்லைனில் உண்மைகளை கண்டுபிடிக்கும் அந்த நிபுணர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல. விக்கிபீடியாவை நம்பி 2.0–வே இருக்கும் போது ஜிலேபி வாலாக்கள் மட்டும் நிபுணர்கள் இல்லை என்றால் எப்படி? அந்த அறிஞர்கள் ஃபேக்ட் செக்கிங்கை செய்வார்களாம்.

சேனலின் நெறியாளர் நின்றுகொண்டே ஜாலியாக இது எப்படி நடந்தது? யார் செய்தது? எது உண்மை? என்ன தீர்வு? என்ற கேள்விகளை தலை அசைத்து, தோள் குலுக்கி, கை  ஆட்டி, வார்த்தைகளைக் காட்டி பேசுகிறார்.

தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் சம்பந்தபட்ட பணியாளர்.

இதில் உள்ள ஞானம் என்னவென்றால் சொமேட்டோ நிறுவனமே இதை தீர விசாரித்து உண்மையை வெளியிட்டு விட்டது. அது ஊடகங்கள் முதல் தனிநபர்கள் வரை இரண்டாம் சுற்று வைரலாகியிருக்கிறது. அனேகமாக மூன்றாம் சுற்று அந்த மதுரைக்காரரின் பாவமன்னிப்பு மறுவாழ்வு பிரவேசமாக இருக்கலாம்.

சொமேட்டோ நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி அந்த ஊழியரிடம் விரிவாக பேசிய பிறகு அவரும் தவறை ஒத்துக் கொண்டாராம். பிறகு அவரை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் அந்த ஊழியரின் பரிதாபத்திற்குரிய முகம் அனைத்து ஊடகங்களிலும் யூடியூப் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டது. மதுரைக்காரரப் பய நமது மதுரை நகரத்தை கேவலப்படுத்தி விட்டான் என்று மதுரை வாசகர்கள் சிலர் மதுரைக்கு மானம் போனதாக பின்னூட்டத்தில் கூறுகிறார்கள். ஆனால் இதே மதுரையில் உள்ள பன் புரோட்டா கடை குறித்த வீடியோக்களை பார்த்த இந்தி வாலாக்கள், மாவு பிசையும் போது மாஸ்டரின் முழுக்கையும் வேர்வையோடு கலக்கிறது உவ்வே என்று இழித்திருப்பதால் பாசக்கார மதுரையர்கள் இதற்காக ரொம்பவும் வருந்த தேவையில்லை.

ஃபேஸ்புக்கிலோ தான் சாப்பிட்ட எச்சில் உணவை வாடிக்கையாளருக்கு கொடுக்க நினைத்தது எவ்வளவு பெரிய ஆரோக்கியக் கேடு என்று மருத்துவ விழிப்புணர்வையும் சேர்த்து விடுகிறார்கள். வெண்ணெய் திருடிய கண்ணனை போற்றும் நாட்டில் ஒரு அண்ணன் துன்ன உணவிற்காக இத்தனை பெரிய மகாபாரதப் புராணமா?

என்ன இருந்தாலும் அவர்கள் முகத்தை வெளியிட்டது தவறு என சிலர் மனிதாபிமானம் காண்பிக்கிறார்கள். அதுவும் கண்டிஷன் அப்ளையுடன். யூடியூப் இந்தி வாலாக்கள் மற்றும் ஆங்கில ஊடகங்களில் மறுமொழி போடுபவர்கள் அனைவரும் இந்த டெலிவரி பாய்-க்கு உரிய வகுப்பு, விழிப்புணர்வு, எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பணமதிப்பழிப்பிலும், ஜி.எஸ்.டி.யிலும் சில நூறுபேரே கொல்லப்பட்ட நாட்டில், பல ஆயிரம் வாழ்க்கை அழிந்த நாட்டில் ஒரு ஃபிரைடு ரைசை ஒரு ஸ்பூன் சாப்பிட்டதற்கு என்னமா ஒரு அறச்சீற்றம்?

அந்த ஊழியரை பணி நீக்கம் செய்த சொமேட்டோ நிறுவனம் இனி கவனமாக இருப்போம் என வாக்குறுதியும் அளித்திருக்கிறது. யூடியுப் வீடியோக்களில் வந்த இந்தி வாலா வரலாற்று நிபுணர்கள் அந்த எச்சரிக்கையை பயங்கரமாக ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? இனிமேல் உங்களுக்கு ஹோட்டலிலிருந்து இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்படும் உணவுக்கு சீல் வைக்கப் போகிறார்களாம். அந்த உரை இல்லாத உணவை நீங்கள் ஏற்கக்கூடாதாம். சரி டெல்லி செட்டு என்று போலிகளுக்கு பெயர்போன நாட்டில் ஒரு சீலை பிய்த்து இன்னொரு சீலை போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? தொலைபேசியில் ஏடிஎம் பின் நம்பர் கேட்டாலே சொல்லும் நாட்டில் ஒரிஜினல் சீலா, டூப்ளிகேட் சீலா என்பதெல்லாம் எம்மாத்திரம்?

அந்த மதுரைக்கார சொமெட்டோ ஊழியர் தனது பசி வேகத்தினாலும் அல்லது ருசி மோகத்தினாலும் அந்த உணவை கொஞ்சம் ருசி பார்க்க நினைத்திருக்கலாம். எப்படியோ இருந்து விட்டு போகட்டும். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டாலும் கூட அந்த ஊழியர் செய்த தவறு மாபெரும் தவறு அல்ல. மேலும், இந்தியா முழுவதும் இப்படி உணவு விநியோகத்தை செய்து வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் மிக அரிதினும் அரிதாக ஓரிருவர் செய்யக்கூடிய தவறு தான் இது. இதற்கு மேல் இதை மாபெரும் அறச்சீற்றமாக ஆய்வு செய்வதுதான் அலுப்பூட்டுகிறது.

சமீப ஆண்டுகளாக வேலைவாய்ப்பு குறைந்திருக்கும் சூழலில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பிழைப்பை நடத்த மாட்டோமா என இளைஞர்கள் வெறுப்புடன் வாழ்கிறார்கள். அப்படி கிடைத்தது தான் இந்த வேலை. தினசரி பத்து அல்லது இருபது சவாரிகள் சென்றால் சில நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதிலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் அவர்களுக்கு இருக்கிறது.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

சமீபத்தில் ஸ்விக்கி ஊழியர்கள் தமது நிறுவனத்தை எதிர்த்து சென்னையில் வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த கட்டணத்தை குறைத்தது காரணமாக அவர்கள் போராடினார்கள். அது தொடர்பான ஊடக வீடியோக்களில் அவர்களது பணிச் சிரமத்தை முன்வைக்கிறார்கள். உரிமையாளர் யார் என்றே தெரியாத இந்த நிறுவனங்கள் இவர்களை கூட்டாளிகள் என்று வேறு அழைக்கிறதாம். அல்வாவும், பிரியாணியும் முக்கால் விலையில் தள்ளுபடி வரும்போதே உறைத்திருக்க வேண்டும், இந்த தள்ளுபடியின் பலிகடா யார் என்று!

அம்பானியின் மகள் திருமணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடக்கிறது. அம்பானியின் ஆன்டிலியா மாளிகை இருக்கும் மும்பைக்கு அருகில் இருக்கும் மராத்வாடா பகுதியில் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இப்படி வாழ்க்கை, மகிழ்ச்சி, தொழில், உழைப்பு அனைத்திலும் இரு வேறுபட்ட பிரதேசங்களாக நமது சமூகமும் நாடும் பிரிந்திருக்கிறது

சமீப ஆண்டுகளாக சிவில் சமூகத்தில் நடக்கும் வன்முறைகளைப் பாருங்கள். செல்பேசி வாங்குவதற்காக, திருட்டு சோனி பிளேஸ்டேஷன் வாங்குவதற்காக, ஆடம்பட வாழ்க்கை நடத்த வேண்டிய செலவுகளுக்காக நடக்கும் கொலைகள், பைக் ரேஸில் பங்கெடுத்து துடிப்பை நிலைநாட்டுவதற்காக அப்பாவை நச்சரித்து அதிஉயர் விலையில் பைக்கை வாங்கிய இளைஞர் அதே ரேசில் பலி, குன்றத்தூர் அபிராமி என எங்கே எந்த குடும்பத்தில் வன்முறை வெடிக்கும் என்பது தெரியாமல் இந்த சமூகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டத்தில் நான் என்னுடைய எதிர்கால வாழ்க்கையில் எங்கே இருக்கிறேன் என்று வேலை பார்க்கும் அல்லது வேலை தேடும் அனைவருக்கும் ஒரு பதட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. பிடித்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் பயணிக்கும் இளைஞர்களும் நமது எதிர்பார்ப்பு கற்பனைத் திறத்திற்கு ஏற்ப சோர்வடைகிறார்கள். சில தருணங்களில் குறுக்கு வழியில் பயணித்தால் வசதியை எட்ட முடியும் என்ற சித்த வைத்திய கதைகளையும் நம்புகிறார்கள்.

படிக்க:
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

ஆம். நாம் வாழும் சமூகத்தில் மதிப்பீடுகள் அருகி வருகிறது. அந்த அருகுதலை ஏற்றத்தாழ்வாய் பிரிந்திருக்கும் சமூகம் அதி வேகப்படுத்தி வருகிறது. இருப்போரும் இல்லாதோரும் சேர்ந்து பயணிக்கும் சமூகத்தில் இரக்கமோ, மனிதாபிமானமோ, கடமை உணர்வோ நாம் கருதும் தரத்தில் இருப்பதில்லை. ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டு வந்தார் என்று வீட்டு நாயை விட்டு கடிக்க வைக்கும் ஆத்திரம் அந்த மேன்மகனது பசிவெறியில் இருக்கிறது. அதே பசிவெறி அலைந்து திரிந்து உடலை புண்ணாக்கி பைக்கில் வரும் ஒரு ஊழியருக்கு இருக்கக் கூடாது என்கிறார்கள் இந்தக் கனவான்கள்.

வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் மீதும் தன் வேலை மீதும் மதிப்பில்லாமல் அவர் இருந்திருக்கிறாரே அது ஏன்? அவரது ஊதியம் என்ன, அவரது இடைவெளி நேரம் என்ன, அவர் உண்பதற்கு சொமெட்டே நிறுவனம் என்ன ஏற்பாடு செய்திருக்கிறது இவையெல்லாம் சரியாக இருந்தால் அவர் அந்த தவறினை செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

சென்னையில் போராட்டம் செய்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள், உணவு வாங்கும் இந்தி வாலாக்கள் தம்மை மரியாதையுடன் நடத்துவதாகவும், உள்ளூர் மக்கள்தான் மரியாதை இன்றி நடத்துவதாக கூறுகிறார்கள். நாக்கில் பதிந்து விட்ட ருசி விசுவாமித்திரர் போல வெறியுடன் வெளிப்படுகிறது. உணவைக் கொண்டு வரும் ஊழியர் தாமதாமாக வந்தாலோ, உணவு  சூடு ஆறினாலோ, இல்லை பொட்டலித்திலிருந்து ஒழுகினாலோ அவ்வளவுதான். அந்த ஊழியரின் அந்த நாள் மூட் அவுட்டாகிவிடும்.

இத்தகைய ஆய்வு எதுவும் தேவைப்படாமலேயே அந்த இளைஞர் உணவு உண்ணும் காட்சியை பெரிதுபடுத்தாமல் போய் இருக்கலாம். ஆனால் வாஷிங் மெஷினிலிருந்து அல்ட்ரா மாடர்ன் நவீன தொலைக்காட்சி வரையிலும் வெள்ளிக்கிழமை ஆன்லைன் கியூ வரிசையில் நின்று புத்திசாலித்தனமாக முதலில் வாங்குவதை ஷேர் செய்யும் நாடிது! அதே நாட்டில்தான் கோரக்பூரில் குழந்தைகள் மருத்துவமனையில் சாகின்றன. விவசாயிகள் இலட்சக்கணக்கில் தலைநகரம் சென்று போராடுகிறார்கள். மல்லையாவும், நீரவ் மோடியும் வங்கி பணத்தை முழுங்கி விட்டு வெளிநாடுகளில் உலா வருகிறார்கள்.

ஆளும் வர்க்கம் மக்களை எச்சக்கலை போல நடத்துவதற்கு வராத கோபம் ஒரு பரிதாபத்திற்குரிய தவறைச் செய்த ஒரு ஊழியர் மேல் வருவதுதான் நம்முடைய கோபம்.

– இளநம்பி

சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

ரசு உத்தரவிட்டாலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவில் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்க்க முடியாது என “அட்சய பாத்ரா” எனும் என்.ஜி.ஓ. நிறுவனம் மறுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு மற்றும் அரசு ஆதரவுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். இங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கர்நாடக அரசு பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

அதில் ஒரு என்.ஜி.ஓ-தான் “அட்சய பாத்ரா”. இந்நிறுவனம் இந்துத்துவா அமைப்பான “இஸ்கான்” (ISCKON) அமைப்பின் துணை நிறுவனமாகும். கர்நாடகத்தின் மிகப்பெரிய மதிய உணவு வழங்குனராக இந்த என்.ஜி.ஓ செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நன்கொடைகள் பெறுவதன் மூலமாக கர்நாடகாவில் மட்டும் சுமார் 4.43 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் தங்களது நம்பிக்கையின்படி ’சாத்விக’ உணவுகளையே சமைக்கவும் உண்ணவும் செய்வார்களாம். அந்த அடிப்படையில் கடந்த 16 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சமைத்து வழங்கும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அறவே தவிர்த்து வருகிறது.  ஏனெனில் அவை ’தமஸ்’ வகைப்பட்ட உணவுகளாம்.

இந்நிலையில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கவேண்டும் என மதிய உணவு வழங்கல் திட்டத்தின் அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த நிறுவனம் அரசுடன் 2018-19-ம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட மறுத்து, சாத்விக உணவுகளையே தாம் தொடர்ந்து வழங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து கர்நாடக அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் எம்.ஆர். மாருதி கூறுகையில் “சமீபத்தில்தான் அந்நிறுவனத்திடம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்க்கக் கூறி வழிகாட்டுதல் அனுப்பினோம். மதிய உணவில் வெங்காயமும், பூண்டும் சேர்ப்பது ஊட்டச்சத்தை மட்டுமல்ல, உணவின் சுவையையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டே நாங்கள் அந்நிறுவனத்தை மாநில அரசு தரும் பட்டியலின்படி உணவு வழங்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள் கடிதத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.” என்றார்.

கர்நாடகத்தில் மொத்தம் 71 என்.ஜி.ஓ. நிறுவனங்கள் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துகின்றன. சுமார் 9.31 இலட்சம் மாணவர்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தின் கீழ பயனடைகின்றனர். இதில் 4.43 இலட்சம் மாணவர்களுக்கான உணவை அட்சய பாத்ரா என்.ஜி.ஓ. வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்திருக்கும் பிற தன்னார்வ நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் அரசாங்கம் தரும் பட்டியலை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ‘அட்சய பாத்ரா’ என்.ஜி.ஓ. மட்டும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

‘அட்சய பாத்ரா’ தனது அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில், “மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் மனித வளத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஊட்டச்சத்துக்கள் இருக்கும்படியான உணவையே நாங்கள் வழங்குகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அதாவது “பூண்டையும் வெங்காயத்தையும் சேர்க்க முடியாது. உன்னால் ஆனதைப் பார்” என்பதையே நாசூக்காக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மதிய உணவு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதன் மூலம், “பள்ளி மாணவர்களை பட்டினி போட்டுவிடுவேன், ஜாக்கிரதை” என மறைமுகமாக மிரட்டியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதிக்க சக்திகள் தமது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதற்கான ஏற்பாடுதான் இந்துத்துவா என்.ஜி.ஓ.-க்கள் என்பதை ‘அட்சய பாத்ரா’ தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

கர்நாடக மதிய உணவுத் திட்டம்

சமூக வலைதளங்களில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பல்வேறு இந்துத்துவவாதிகள் “அட்சய பாத்ரா”-வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ”தொண்டு நிறுவனத்தின்” மத நம்பிக்கையை குமாரசாமி அரசு பறிக்க நினைப்பதாக கூச்சலிடுகின்றனர். இது தொண்டு நிறுவனத்தின் மத நம்பிக்கையா? அல்லது சனாதன தர்மமா?

இந்து சனாதன கும்பலான இஸ்கான் அமைப்பின் ஒரு பிரிவான ‘அட்சய பாத்ரா’ நடைமுறைப்படுத்துவது சுத்தமான பார்ப்பனியமே. வட இந்திய பார்ப்பனமயமாக்கப்பட்ட ஜெயின்களின் நம்பிக்கையின் படி வெங்காயம், பூண்டு ஆகியவை தமஸ் குணத்தைக் கொண்ட காய்கறிகள். அதாவது ‘சூத்திர’ காய்கறிகள். இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு. காய்கறிகளிலும் கூட தமது சாதிய வன்மத்தைக் காட்டுகிறார்கள்.

“இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது ”அக்சய பாத்ரா”-வைச் சேர்ந்தவர்களையோ யாரும் பூண்டையும், வெங்காயத்தையும் தின்னச் சொல்லவில்லையே. இவர்களது சனாதன தர்மம் வகுத்துத்தந்த விதிப்படி சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இலட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள்தானே? இந்த ’சூத்திரக் காய்கறிகளை’ சமைத்துப் போடுவதற்கு இவர்களுக்கு என்ன கேடுவந்தது?” என நீங்கள் கேட்கலாம். ஆனால் இவர்கள் சூத்திரக் காய்களை சமைக்கக்கூட மாட்டார்களாம். அவ்வளவு ஆச்சாரமாம் ! ஏனெனில் சூத்திரனை தொட்டாலே தீட்டுதான் அல்லவா?

படிக்க:
ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

ஆனால் இந்த என்.ஜி.ஓ. நிறுவனம் மதிய உணவுத் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோரிடம் நன்கொடை பெறுகிறது. இந்த ஆயிரக்கணக்கானோரில் 99% ‘சூத்திரர்களும்’ ‘பஞ்சமர்களும்’தானே ! அவர்கள் இரத்தத்தில் ‘சூத்திரக்’ காய்கறிகளான வெங்காயமும் பூண்டும் கலந்தில்லாமல் இருக்குமா ? இவர்களுக்கு ‘சூத்திரன்’ கசக்கிறானாம். சூத்திரக் காய்கறி கசக்கிறதாம். ஆனால், சூத்திர பஞ்சமர்களின் பணம் மட்டும் இனிக்கிறதாம் இந்தக் கும்பலுக்கு.

இணையத்தில் அட்சய பாத்ரா-வுக்கு ஆதரவாக லாவணி பாடும் இந்துத்துவக் கும்பல், கர்நாடக அரசுக்கு 4.43 இலட்சம் மாணவர்களின் உணவுக்கு அட்சய பாத்ரா நிறுவனம் வழங்கும் பங்களிப்பின் அருமை தெரியவில்லை எனக் கூறிவருகிறது. அதாவது 4.43 இலட்சம் மாணவர்களுக்கு அட்சய பாத்ரா அமைப்பு போனால் போகட்டும் என பொங்கிப் போடுகிறதாம். கர்நாடக அரசுக்கு அதன் அருமை புரியவில்லையாம்.

ஆனால் உண்மை என்ன ? இலட்சக்கணக்கான ‘சூத்திர’ மாணவர்களைக் காட்டிதான் இந்த ‘அட்சய பத்ரா’ என்.ஜி.ஓ. ஆயிரக்கணக்கான ‘சூத்திரர்களிடம்’ பணம் பெற்று தனது நிறுவன தொந்தியையும், தமது இந்துத்துவ அரசியல் நோக்கையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை.

இந்தப் பார்ப்பனக் கொழுப்பை கொத்தி எடுக்காமல் நமது குழந்தைகளுக்கு சத்துணவும் கிடையாது, சமத்துவமும் கிடையாது.


நந்தன்
செய்தி ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

இதையும் பாருங்களேன்…
அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்

கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

குமரி மீனவர்கள் மீளாத்துயரில் ஆழ்த்திய ஒக்கி புயலின் ஓராண்டு நிறைவில் டெல்டா மாவட்டங்களுக்கு அழிவைக் கொண்டு வந்தது கஜா புயல். இப்புயலில் 64-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். விவசாயிகள், கூலி விவசாயிகள், விவசாயம்சார் சிறுதொழில்கள், முறைசாரா தொழிலாளர்கள், மீனவர்கள் என இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன.

வீடுகள் – குடிசைகள், மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தரைமட்டமாகின. புயல் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் புயல் நிவாரண முகாம்கள் என்ற பெயரில் உணவும் நீரும் கூட இல்லாத கட்டிடங்களில் மக்களை அடைத்து வைத்ததையும் பெரும் சாதனையாக பீற்றியது எடப்பாடி அரசு. இதற்கு ஊடகங்கள் பாராட்டு!

கடன் வாங்கி தென்னை, மா, நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நிற்கதியாக நின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்துக்கே உணவளித்த டெல்டா மக்கள், ஒருவேளை உணவுக்கு ஏதேனும் நிவாரண வண்டி வராதா, என வீதிகளில் காத்து நின்றனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி மாமனார் வீட்டில் விருந்துக்கு சென்றிருந்தார். மோடியோ வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஆத்திரம் கொண்ட மக்களோ மறியல் செய்தும் நேரில் வந்த அமைச்சர்களை விரட்டியடித்தும் போராடினர்.

ஒரு வாரம் கழித்து வந்தது மத்திய ஆய்வுக்குழு புயலைவிட வேகமாக பார்வையிட்டு பறந்து சென்றது. அதன் பிறகு மோடி அரசு வெறும் ரூ.353 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.

கடும் உழைப்பிற்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் இனி என்ன செய்ய முடியும் ? டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக்கி அதானிக்கும் அனில் அகர்வாலுக்கும் தாரைவார்க்கத் துடிக்கும் மோடி அரசிடம் நிலங்களை ஒப்படைத்து விட்டு சொந்த நாட்டில் அகதிகளாக அலைய வேண்டுமா?

கஜா புயலின் அழிவு இயற்கையானது. ஆனால் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட வழங்கத் தகுதியற்ற இந்த அரசுகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவுகள் இயற்கையானதல்ல.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் களச் செய்திகள் புயலின்போது டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவுமென நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • கதவுல தொத்திக்கிட்டிருக்கும் போதே கடலோட போயிருந்திருக்கலாம்…!
  • தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, கூலி சேமிப்பு எல்லாம் அழிந்தது !
  • மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
  • எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க.. நாங்க உயிரோட வந்துட்டோம் !
  • தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
  • வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை !
  • மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை!
  • புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு!
  • மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்!
  • மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை !எது முன்னெச்சரிக்கை ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !
  • சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறிகொடுத்தார் !
  • எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்!
  • எங்க ஓட்டு செல்லும்போது, எங்க உயிர் மட்டும் செல்லாதா ?
  • புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
  • எங்களுக்கு மட்டும் ஆசையா? இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுறதுக்கு !
  • அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்!
  • காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்!
  • கஜா புயல் சேதங்கள் – படத்தொகுப்பு

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

கேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா ?

ணவப் படுகொலைகளை சட்டம் இயற்றித் தடுத்து விடமுடியுமா?
சாதிமறுப்பு திருமணம் செய்வோர்க்கு அரசு, பாதுகாப்பு உணர்வை எந்தளவிற்கு தர முடியும்?

– மா.பேச்சிமுத்து.

ன்புள்ள பேச்சிமுத்து,

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது. ஏற்கனவே சிவில் சமூகத்தில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கும் சட்டம் இருக்கிறது. இருப்பினும் சமூக வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆத்திரம் அடைந்த நபர்கள் கொலை செய்கிறார்கள். இது ஆணவப் படுகொலைகள் விசயத்திற்கும் பொருந்தும்.

சிவில் சமூக வன்முறைகளுக்கும், சாதி மத கொலைகளுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. முன்னது கணநேரத்தில் அடையும் ஆத்திரம் காரணமாகவும், பின்னது காலம் காலமாய் ஊட்டி வைக்கப்பட்ட சாதி மத ஆதிக்க உணர்வு மற்றும் பிற்போக்கு நம்பிக்கை காரணமாகவும் நடக்கிறது. பின்னதில் தத்தமது சாதி – மத நலனை காப்பாற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள். பெற்ற மகளைக் கூட வெட்டிக் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த காலத்தில் சாதிவெறியின் சாதிப் பெருமையும் நாடு தழுவியதாக மாறி இருக்கிறது. உடுமலைப் பேட்டையில் மட்டுமல்ல ஹைதராபாத் நகரிலும் பட்டப்பகலில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் இவை ஆங்காங்கே நடக்கும் யதார்த்தமாக இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் வெளிப்படும் அதிர்ச்சிகள் கூட அங்கே இருப்பதில்லை.

அதேநேரம் இதே காலத்தில்தான் சாதி மறுப்பு திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தும் வருகின்றன. எதிரும் புதிருமாக உள்ள சாதிகள் கூட சமூக வாழ்வில் சந்தித்து பயணிக்கும் சூழலை இக்காலம் ஏற்படுத்தி தருகிறது. காதலிலும் திருமணத்திலும் சாதி பாராட்டுவதை தவிர்ப்பது என்ற நாகரிக வளர்ச்சியும் பரவி வருவதைப் பார்க்கிறோம்.  இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?

படிக்க:
♦ தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
♦மகிழ்ச்சியின் தருணங்கள் !!

காந்தி காமராஜ் காலத்தில் சமூகத்தில் பெரிய அளவுக்கு சாதி கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருந்தது என்பார்கள் (இவர்கள் காலத்தில் சங்கபரிவாரங்கள் பல கலவரங்களை நடத்திருக்கின்றன). இதில் பாதிதான் உண்மை. அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமைகளை அக்காலத்தில் எதிர்க்க முடியவில்லை. அந்த எதிர்ப்பை சாத்தியமாக்கும் பொருளாதார அடித்தளத்தை அப்போது அவர்கள் பெற்றிருக்கவில்லை.

கொடியங்குளம் கலவரத்திற்கு பிந்தைய காலத்தில் அப்படி எதிர்க்கும் நிலையினை அம்மக்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோன்று ஆதிக்கசாதி சமூகத்தை சேர்ந்த மக்களிடத்திலும் சாதி பாராட்டுவது தவறு என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. ஆகவே சாதிவெறிக்கு எதிராக இப்போது தட்டிக்கேட்பது அதிகரித்திருக்கிறது. அதற்கு இணையாக ஆணவப் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன.

இதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் மட்டுமல்ல சமூகத்திலும் பல பண்பாட்டு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு சாதி தீண்டாமை மறுப்பு மணங்கள் அதிகம் நடத்தப்படவேண்டும். இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள் அனைத்தும் இத்தகைய திருமணங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து நடத்த வேண்டும். அப்படி சில அமைப்புகள் நடத்தியும் வருகிறார்கள். தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அனைத்தும் இத்தகைய திருமணங்களை ஊரறிய அழைப்பிதழ் போட்டு பொதுக் கூட்டமாக நடத்துகின்றன.

தர்மபுரியில் இளவரசன் கொல்லப்பட்ட காலத்திலேயே இந்த அமைப்புகள் சாதி தீண்டாமை மறுப்பு மணம் ஒன்றை ஊரறிய ஊர்வலமாக அதே மண்ணில் நடத்தினர். இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் திரைப்படம் ஊடகம் போன்றவற்றிலும் இத்தகைய கருத்துக்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். சாதிவெறியை ஊக்குவிக்கும் கலைப்படைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.

மேலும் ஆணவப் படுகொலை நடக்கின்ற பொழுது தொடர்புடைய சாதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த சாதிவெறியர்களை கண்டிக்கும் நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சாதிவெறி கொண்ட ஒரு தனி மனிதரிடத்திலிருந்தும் சாதி வெறி பிடித்த சில கும்பலிடம் இருந்தும் மற்ற மக்களை பிரித்து தனிமைப்படுத்த முடியும். இவையெல்லாம் தொடர்ந்து நடக்க நடக்க இத்தகைய கொலைகள் நடக்காத வண்ணம்  சூழலை உருவாக்க முடியும்.

படிக்க:
♦ ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் ? ஃபேஸ்புக் தொகுப்பு
♦ தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !

இரண்டாவதாக சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு அரசு முழுமையாக ஒரு பாதுகாப்பு உணர்வை தந்துவிட முடியாது. இது ஒரு எதார்த்தம். சமூக ஆர்வலர்கள் கூறுவதுபோல சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம். அதேபோன்று அத்தகைய திருமணம் செய்வோருக்கு அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை அளிக்கலாம்.

தருமபுரி பென்னாகரத்தில் சாதி மறுப்பு மண விழா ஊர்வலம்

கூடுதலாக அப்படி திருமணம் செய்வோர் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு போலீஸ், நீதிமன்றம், இதர அதிகாரவர்க்க துறைகளை பயிற்றுவிப்பது தான் மிகப்பெரிய பிரச்சனை. ஏனெனில் ஆதிக்க சாதிவெறி என்பது பெரும்பான்மை பலத்தை வைத்து ஒரு சிறு கும்பல் நடத்துவது என்பதால் அத்தகைய சாதிக் கண்ணோட்டம் மேற்கண்ட அரசு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கின்றது. இதை சரி செய்து திருத்துவது அரசின் கையில் இல்லை. அதை மக்களாகிய நாம்தான் போராடி செய்ய வேண்டும். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆதிக்க சாதிகளின் விதிமுறைக்கேற்பவே அரசியல் களத்தில் செயல்படுகின்றன. இதையும் நாம் உடைக்க வேண்டும்.

காதல் மணம் செய்யும் தம்பதியினர் போலீஸ் நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கு முழுமுற்றான பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக ஆதிக்கசாதி தரப்பிலுள்ள குடும்பத்தை சமாதானப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். இது எல்லா துறைகளிலும் நடக்கிறது.

இதையும் நாம் பொது சமூகத்தின் போராட்டத்தினால் மட்டுமே மாற்ற முடியும். அத்தகைய குற்றங்கள் தவறுகள் செய்யும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுவெளியில் கண்டிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்குமாறு நாம் போராட வேண்டும். இதன்போக்கில் அரசு மட்டத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இறுதியில் முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் சமூகத்தில் இந்த பிரச்சனையை எப்படி பிரச்சாரம் செய்து கொண்டு செல்கிறார்கள், அதை மக்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் நாம் முன்னேற முடியும். மேலும் இந்தப் போராட்டம் என்பது தனித்து நடக்கும் ஒன்றல்ல. அரசியல் – பொருளாதாரப் போராட்டங்களின் வீச்சுக்கேற்பவே சமூகரீதியான மாற்றங்களும் போராட்டங்களும் இருக்கும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இந்தியர்கள் குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள்? சமீபத்தில் கர்தார்பூர் புனித யாத்திரை பாதையை திறந்து வைத்த பாகிஸ்தான் அரசு, அந்த நிகழ்ச்சிக்காக இந்திய பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.  அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே. கே. ஸ்ருதிஜித் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் இந்தியத் தன்மை!

முதன்முதலாக பாகிஸ்தான் வரும் இந்தியருக்கு, தான் பஞ்சாபின் கிராமப்புறத்தில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். இந்தியாவின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானில் பஞ்சாபின் அறுவடை முடிந்த நிலங்கள் எரிக்கப்படும் மணத்தை நுகர முடிகிறது. லாகூர் நகரம், இந்தியாவின் லக்னௌ அல்லது சாந்தினி சவுக்-ஐ நினைவுபடுத்துகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் உங்கள் முழங்கையை உரசிக்கொண்டு போவதும் குழந்தைகள் திறந்து கிடக்கும் சாக்கடையில் விழுந்துவிடாதவாறு பார்த்துப் போவதும் இந்தியாவின் பழைய நகரங்களின் சாயலைக் கொண்டுள்ளது. நம்மை போலவே அவர்களும் மற்றொரு நகரத்தின் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கராச்சிக்காரர்களுக்கு லாகூர் நெருக்கடிமிக்க, சிறு சிறு குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரம். லாகூர்காரர்களுக்கு கராச்சியின் உணவு பிடிக்காது.

கர்தார்பூர் புனித யாத்திரைக்காக பாதை திறந்த பாகிஸ்தான் அரசு

இந்திய நகரங்களுக்கும் பாகிஸ்தான் நகரங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம். பாகிஸ்தானில் நிறைந்திருக்கும் பாதுகாப்பு. பாதுகாப்பு என்றால் நம்மூர் கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள் அல்ல, இவர்கள் கைகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர். பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்றாலும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை வெளிக்காட்டிக் கொள்ளவும் அப்படிச் செய்கிறார்கள்.

பயங்கரத்தை நினைவுபடுத்தும் தெருக்கள்!

நகரங்களின் வழியாக நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது, கடந்த காலத்தின் பயங்கரத்தை உங்களால் உணர முடியும். 2009-ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தின் மெரியாட் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சக பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். லாகூரின் தெருக்களை கடந்து சென்ற போது, ‘நண்பர் ஒருவர் இதோ இங்கேதான் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றார்.

தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் போதும், அங்கே பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அவ்வவ்போது ‘இது இங்கே வழக்கமான நிலைமைதான்’ என சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில், உலகின் மிக அபாயமான நாடுகளில் ஒன்றில் இருக்கிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாங்கள் பாகிஸ்தான் சென்றிருந்த வாரத்தில் தாரீக் ஐ லபைக் பாகிஸ்தான் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அங்கே தலைப்பு செய்தியாக இருந்தது. இந்தக் கட்சியின் தலைவர் மதபோதகர் காதிம் உசைன் ரிஸ்வி, பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்ட மத நிந்தனை சட்டத்தை ஆதரித்து பேசி மக்கள் செல்வாக்கு பெற்றவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த சல்மான் தசீர், இந்தச் சட்டத்தை ‘கருப்புச் சட்டம்’ எனக் கூறியதால் கொல்லப்பட்டார்.

தாரீக் ஐ லபைக், மக்கள் செல்வாக்கு (இந்துத்துவ கும்பல் போல, ஆர்ப்பாட்டம் செய்வது, தெருச்சண்டையில் இறங்குவது) பெற்றிருந்த போதும், தேர்தல் அரசியலில் அக்கட்சிக்கு பின்னடைவே கிடைத்தது. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் மதவாதம் பேசும் கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. அதுபோல, ஆயுதம் தாங்கிய அமைப்புகளின் ஆதரவு பெற்ற கட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.

தாரீக் ஐ லபைக் 150 இடங்களில் போட்டியிட்டு இரண்டே இடங்களில் வென்றது. ஆனால், தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐந்தாவது பெரிய கட்சியாக அது உருவெடுத்துள்ளது. தற்போதைய பிரதமர் இம்ரான்கான், இதன் தலைவர் மீது தீவிரவாதம் மற்றும் தேச துரோக வழக்கை போட்டிருக்கிறார்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

நான் சொல்வது வழக்கமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களை பாகிஸ்தானியர்களின் கணிவுடன் வரவேற்கிறார்கள். சக பாகிஸ்தானியரைப் போல அன்பையும், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடியும் தருகிறார்கள். நான் பேசிய அத்தனை பாகிஸ்தானியரும் உள் அன்போடு இதை வெளிப்படுத்தினார்கள், அவர்களிடம் உண்மையைக் காண முடிந்தது. ஆனால், இந்திய சமூக ஊடகங்கள் இதை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரியது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடை வடிமைப்பாளர் மியான் நோமான் மற்றும் அவரது நண்பர்களை சந்தித்தேன். மியானின் அம்மா இந்தியாவின் லூதியானாவில் பிறந்தவர். மற்ற இரண்டு நண்பர்களின் வேர்களும் இந்தியாவில் இருந்தது. மியானின் நண்பர்களில் ஒருவரான சாபி ஸெக்ரா என்னிடம் மெதுவாக, “சமூக ஊடகங்களில் இந்தியர்கள், ஏன் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பாக இருக்கிறார்கள்?” எனக் கேட்டார்.

தொடர்ந்த அவர், “நான் அவர்களிடம் பேச முயற்சித்திருக்கிறேன். ஏனெனில் இந்தியாவின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன், என்னுடைய வேர்கள் அங்கே உள்ளன. ஆனால், அவர்கள் சமூக ஊடகங்களில் வெறுப்பை கக்குகிறார்கள். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என தெரிந்தவுடன் அவதூறு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்” என்றார். அவர் காயப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவரிடம் சொல்ல என்னிடம் நேர்மையான பதில் இல்லை.

இம்ரான் நியாசி

லாகூரில் உள்ள குல்பர்க்-2 குடியிருப்பு அருகே இருந்த சிறிய கடை ஒன்றில் செல்போன் ரீசார்ஜ் செய்யச் சென்றிருந்தேன். அங்கே இருந்த சிறிய குழு, ‘பாகிஸ்தான் – இந்தியா இடையே அமைதி நிலவ வேண்டும்’ என இம்ரான்கான் சொன்னது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். கடை பொறுப்பாளரான் இம்ரான் நியாசி, அதுபற்றி என்னிடம் பேசினார். “இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள்” என பேசியவர், இரண்டு நாடுகளுக்குமிடையே அமைதி நிலவ வேண்டும் என்றார்.

“ஆனால், சமீப நாட்களில் இந்தியாவில் முசுலீம்கள் மோசமாக நடத்தப் படுகிறார்கள். நாங்கள் அந்த வாட்சப் வீடியோக்களை பார்க்கிறோம். அது மிகவும் எதிர்பாராதது. இன்னொரு வீடியோவையும் பார்த்தோம். அதில் சிலர் காசு தருகிறோம் பாகிஸ்தான் கொடியை எரிக்க முடியுமா எனக் கேட்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் அதைச் செய்தார்கள். மற்றவர்கள் எவ்வளவு காசு தந்தாலும் அதைச் செய்யமாட்டோம் என்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என வெளிப்படையாகப் பேசினார்.

  • நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ்

கண்ணுக்குத் தெரிந்த எதிரியை கட்டமைப்பதே தேசியவாதம்-மதவாதம்-இனவாதம் பேசும் வெறியர்கள் செய்யும் அடிப்படையான விசயம். இந்துத்துவா கும்பலுக்கு முசுலீம்களும் பாகிஸ்தானும் எதிரிகள். மோடி தலைமையிலான இந்துத்துவா கும்பல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த ‘எதிரி’ உணர்வு நஞ்சாக பரப்பப் பட்டது.

முசுலீம்களுக்கு எதிரான கும்பல் கொலைகளை விமர்சித்த முசுலீம் பிரபலங்களை ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். காஷ்மீர் பிரச்சினையை விவாதித்த மாணவர்கள் ‘பாகிஸ்தான் வாழ்கவென கோஷமிட்டார்கள்’ என வதந்தி பரப்பினார்கள். காங்கிரஸ் தேர்தல் வெற்றி களிப்பினால், ‘பாகிஸ்தான் கொடி’ பறந்ததாக வாட்ஸப் வதந்தி பரப்பினார்கள். இந்தியா வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என போராடி, சுற்றுலா பயணிகளை நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.

இப்படி இந்துத்துவ கும்பல், செய்துவரும் கீழ்தரமான பிரிவினை அரசியலை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்… ஆனால் பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கே இருக்கும் மதவெறி அங்கேயும் இருந்தாலும் அம்மக்கள் இங்கிருப்பது போல நம்மை வெறுக்கவில்லை. பாகிஸ்தான் மக்கள் மீதான துவேசத்தை இந்துமதவெறியர்கள் எப்படிக் கிளப்பினாலும் இதுவரை அம்மக்கள் அந்த வெறிக்கு எதிர்முகத்தை காட்டவில்லை. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் துடைத்தெறியப்படும் போது இந்த ஒற்றுமை உறுதிப்படும்!

தமிழாக்கம் – கலைமதி

நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

ந்த நேரத்திலும், கேரள மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்திருப்பதாகக் கேரள அரசு, உள்நோக்கத்துடன், மக்கள் நம்பும் வகையில் கற்பனையாகப் பிரச்சனையை உருவாக்கியதோடு, தனக்குச் சாதகமானதும், தேசிய நலனுக்குப் பாதகமானதுமான ஒரு தவறான இடைக்காலத் தீர்வைப் பெற்றுச் செயலாக்கி வருவதால், நாட்டின் முக்கியமான நீர்வளம், வறட்சியான பகுதிகளுக்குக் கிடைக்காமல் தொடர்ந்து வீணாக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரச்சினையை இழுத்து, ஒப்புக்கொண்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கோ, கேரள அரசு கட்டுப்படாமல் இருந்து வரும் நிலையில், பிரச்சனை மீண்டும் உச்சநீதிமன்றம், உயர்மட்டக்குழு என இழுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 27.02.2006 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் செயலாக்க முடியாதபடி, கேரள மாநில அரசு தனது 2003-ம் வருட கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டத்தில், ஒரு முக்கிய திருத்தத்தை அனைத்துக் கட்சிகளின் முழு ஆதரவோடு கேரள சட்ட மன்றத்தில் கொண்டு வந்து இயற்கையான தர்ம நியாயம், மனித நேயம், அண்டை மாநிலத்துடனான இணக்கமான உறவு, தட்டுப்பாடான நீர்வளத்தை வீணாக்காமல் அதிகபட்சப் பலனைப் பெறும் வகையில் பயன்படுத்த வேண்டுமென்கிற தேசிய நலன் ஆகியவற்றை உதறித்தள்ளி விட்டது.

கிடைக்கக்கூடிய நீர்வளத்தை வீணாக விடாமல், திறம்படப் பயன்படுத்தும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டில் ஆங்காங்கே உள்ள உபரி நீர்வளத்தைத் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்குப் பங்கிட்டு வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசும், அரசியல் நிர்வாகக் காரணங்களால், இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உரிய முனைப்புடன் செயல்படாமல் பார்வையாளராக இருந்துவரும் நிலை.
முறை வைத்தாற்போல, கடந்த 40 ஆண்டுகளாக மாறி மாறித் தமிழகத்தை ஆண்டு வரும் பிரதான மாநிலக்கட்சிகளும், மாநில அளவில் குறுகிய நோக்கங்களுடன் சுயநலத்தோடு செயல்பட்டு வந்ததாலும், நமக்குத் தெரியாத பிற காரணங்களாலும் அவர்கள் கேரள அரசின் குறுகிய மாநில நோக்கத்தை முறியடிக்கத் தேவையான உறுதியுடன் செயல்படவில்லை . முல்லைப் பெரியாறு நீர்வளப் பங்கீட்டில் தனது மாநில உரிமையைப் பெறுவதில் ஆரம்பம் முதல் மெத்தனமாக இருந்துவிட்டதாலும், அதனால் ஏற்பட்டு வரும் தொடர் இழப்பையும், தாக்கத்தையும் பொதுமக்கள் சரியாக உணரமுடியாதபடி, அவர்களது இலவசத் திட்டங்கள் அரணாக இருந்து வருகின்றன, இதனால் பிற தன்னார்வ அமைப்புகளின் முனைப்பும், சிறிய அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் எடுபடவில்லை . எனவே, பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சார்பாகக் குரல் கொடுக்க வேண்டிய மாநில அரசின் நடவடிக்கைகளில் உரிய அழுத்தமும் வேகமும் இல்லாத நிலை .

விவசாயம் ஒரு நம்பகத் தன்மையற்ற, கட்டுப்படியாகாத தொழிலாக மாறிவிட்டதோடு, சமுதாயப் பார்வையில் விவசாயிகளின் மதிப்பு குறைந்துவிட்டதாலும், அவர்கள் மாற்றுத் தொழிலைத் தேடிக் கொண்டிருக்கும் போக்கு பரவலாகியுள்ளதாலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள பாசன விவசாயிகள்கூட இழந்துள்ள தங்களது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதில் மந்தமாக இருந்துவரும் நிலை.

இப்பிரச்சனையால், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை முன்னிறுத்திப் போராட்ட முனையும் தென் தமிழகத்தைச் சார்ந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசின் கவனத்தைச் சுண்டி. ஈர்க்கும் அளவிற்கு ஒட்டுமொத்த விவசாயிகளின் ஒத்துழைப்போ, போராட்டங்களைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பொருளாதார வசதியோ இல்லாத நிலை.
பத்திரிக்கைகள், அவ்வப்போது முல்லைப்பெரியாறு சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் வெளிப்படும் பரபரப்புக் கருத்துக்களை மட்டும் வெளியிட்டுத் தங்களது கடமையில் திருப்தி அடைந்துவரும் நிலை.

முல்லைப் பெரியாறு : குமுளி போராட்டக் காட்சிகள் !
முல்லைப் பெரியாறு : கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து வரும் மக்களை தடுத்த நிறுத்த குமுளி அருகே வேன்களை குவித்திருக்கும் போலீசு! (கோப்புப் படம்)

ஆக, சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் அனைவரும், முல்லைப் பெரியாறு பிரச்சனையின் தேசிய முக்கியத்துவத்தையும், அதன் பின்விளைவுகளையும் சரியாக உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. அதனால்தான், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதில் போதிய தீவிரம் காட்டாமல், மிகவும் மெத்தனமான முறையில் செயல்பட்டுப் பல வருடங்களாகத் தீர்வை எட்டமுடியாதபடி, முடக்கப்பட்டுள்ள பிரச்சனையாகி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி என்பதால், இப்பிரச்சனையில் மத்திய அரசு உறுதியான கொள்கை முடிவை எடுத்துக் காலம் கடத்தாமல் ஒரு தீர்வுக்கு வழி செய்தால்தான், நாட்டின் நீர்த்தட்டுப்பாடுள்ள பகுதிகளின் வருங்கால நீர்த் தேவைகளைச் சமாளிக்க முடியும். இதில் மேலும் காலம் கடத்துவது பல பிரச்சினைகளுக்கு வித்தாகிவிடும்.

உண்மைகளின் வெளிச்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகினால், இரண்டு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய தேசிய நோக்கிலான ஒரு நடுநிலையான தீர்விற்கு வழியுள்ளது. இப்படிப்பட்ட தீர்வைக் காண்பதற்கு அடிப்படையாக இந்நூலில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மத்திய நீர்வள ஆணையத்திற்கோ (Central Water Commission), கேரள அரசு மற்றும் மத்திய அரசின் நீரியல் வல்லுநர்களுக்கோ தெரியாதவையும் அல்ல. அவர்களால் மறுக்கக்கூடியவையும் அல்ல. அவற்றைப் பொதுமக்களும் தெரிந்துகொண்டால்தான் பிரச்சினைக்கான சரியான தீர்வை மத்திய அரசு, அரசியலைக் கடந்த உறுதியுடனும், காலம் கடத்தாமலும் செயல் படுத்துவதற்கான அழுத்தத்தைத் தரமுடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு சம்பந்தப்பட்ட இன்றைய பிரச்சனைகள், அதற்காகச் சொல்லப்படும் சொல்லப்படாத காரணங்கள் மற்றும் அறிவுப்பூர்வ அணுகுமுறை கொண்ட நடுநிலையான தீர்வு ஆகியவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக்குவதுதான் இந்நூலின் நோக்கமாகும்.

படிக்க:
முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

இதற்கு ஏதுவாக, முதலில், இந்தியா போன்ற பரந்த நாட்டின் நீர்வள வேறுபாடுகளையும் நீர்வளப் பங்கீட்டின் அவசியம் பற்றிய அடிப்படை விவரங்களையும் நூலின் நுழைவாயிலிலேயே தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியாவின் நீர்வள வேறுபாடுகளும் நீர்வளப் பங்கீட்டின் அவசியமும் உலகின் அனைத்து உயிரினங்களும் வாழ நீர் அத்தியாவசியமென்பதால், “நீரின்றி அமையாது உலகு எனப்பட்டது. நீருக்கான ஒரே ஆதாரம் மழை மட்டுமே ஆகும். மழைக்காலங்களில் ஏற்படும் நீரோட்டம் ஒடைகளாகி, பின்பு ஆறுகளாகி, அவை நிலச்சரிவின் போக்கிலேயே பாய்ந்து செல்கின்றன. எனவே, நீரின் ஓட்டம், நமது நிர்வாக எல்லைகளான வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்பவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறது. நீர் தேவைப்படும் இடங்கள். நீர் தேவைப்படாத இடங்கள் எனப் பாகுபாடின்றி நிலச்சரிவுகளே நீரின் ஓட்டத்திற்கு வழிசெய்கின்றன.

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

பன்னாட்டு நீர்வளப் பயன்பாட்டுக் கொள்கையின்படி, நீர்வளமானது மனித குலத்தின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால், நீரோட்டங்களின் மேல் பகுதியில் வாழும் மக்கள். கீழ்ப்பகுதியில் வாழும் மக்களின் நீர்த்தேவைகளையும் (அளவில் மட்டுமல்லாது தரத்திலும்) பூர்த்தி செய்ய வேண்டிய கடமையுடையவர்களாகிறார்கள்.
(நூலாசிரியரின் உரையிலிருந்து… பக்.6-8)

நூலாசிரியர் திரு.இரா. வெங்கடசாமி அவர்கள், தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி, கண்காணிப்புப் பொறியாளராக பணி நிறைவு பெற்றவர். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர் வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றிய போதும், பெரியாறு – வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும் பெரியாறு அணை பற்றிய பல விவரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்.

நூல்: முல்லை பெரியாறு அணை (வரலாறும் தீர்வும்)

ஆசிரியர்கள்: இரா.வெங்கடசாமி

வெளியீடு: தமிழோசை பதிப்பகம்,
21, கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம்,
கணபதி, கோவை – 641006.

பேச:97884 59063
மின்னஞ்சல்:tamilosai_vijayakumar@yahoo.co.in

பக்கங்கள்: 88
விலை: ரூ.45.00 (இரண்டாம் பதிப்பு)

இணையத்தில் வாங்க: Marinabooks

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

அம்மாடி ! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 36

மாக்சிம் கார்க்கி
தாயின் வாழ்க்கை ஒரு விசித்திர அமைதியோடு நடந்து கொண்டிருந்தது. சமயங்களில் இந்த அமைதி அவளுக்கு வியப்பூட்டியது. அவளது மகனோ சிறையிலிருந்தான், அவனுக்கு ஒரு கொடிய தண்டனை கிடைக்கும் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் அதைப்பற்றி அவள் நினைக்கின்ற வேளையெல்லாம் அவளையும் அறியாது அந்திரேய், பியோதர் மற்றும் எத்தனை பேர்களுடைய முகங்களும் அவளது மனத்திரையில் நிரம்பித் தோன்றும். மகனின் உருவம் அவளது கண்முன்னால் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்து, அவனது விதியில் பங்கெடுக்கும் மற்ற அனைவரையும் தழுவி அணைத்து மறைத்து நிற்பதாகத் தோன்றியது. சிந்தனையினூடே தோன்றும் மற்ற எண்ணங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகனைப் பற்றிய நினைவை மட்டும் வளர்த்துப் பெருக்குவாள். தட்டுத் தடுமாறிச் செல்லும் அந்த மெல்லிய சிந்தனைக் கதிர்கள் எட்டெட்டுத் திசைகளிலும் சென்று, எல்லாவற்றையும் தொட்டு . சகல தத்துவங்களின் மீதும் ஒளிவீசி, சகல விஷயங்களையும் ஒரு தனி உருவமாக ஒன்றுதிரட்டி ஒருமையாக உருவாக்க முயன்று கொண்டிருந்தன. எனவே அவளது மனம் ஒரே விஷயத்தின் மீது மட்டும் நிலைக்கவில்லை. தன்னுடைய மகனைப் பற்றியே ஏக்கத்தையும் பயத்தையும் மட்டுமே அவள் நினைக்கவில்லை.

சோபியா வந்தவுடனேயே எங்கேயோ சென்றுவிட்டு ஐந்து நாட்கள் கழித்துத்தான் திரும்ப வந்தாள். அவள் ஒரே உற்சாகமும் உவகையும் நிறைந்த குதூகலத்தோடு வந்தாள். ஆனால் வந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே அவள் மீண்டும் போய்விட்டாள். இரண்டு வாரம் கழித்துத் திரும்பவும் வந்தாள். வாழ்க்கையின் விரிவான வட்டத்தில் அவள் சுழலுவது போலத் தோன்றியது. இடையிடையே மட்டும் தனது சகோதரனின் வீட்டை எட்டிப் பார்த்து, அவ்வீட்டை அவள் தனது இசையாலும், உற்சாகத்தாலும் நிறைவுபெறச் செய்வதுபோலத் தோன்றியது.

தாய்க்கு வரவர சங்கீதத்தில் விருப்புண்டாயிற்று. அந்தச் சங்கீதத்தை அவள் கேட்கும்போது இத சுகம் தரும் இனிய அலைகள் அவளது மார்பின் மீது மோதி மோதி, இதயத்தைக் கழுவி விடுவது போலவும், இதயத் துடிப்பை மிகுந்த நிதானத்தோடு சமனப்படுத்துவது போலவும் தோன்றியது. மேலும் நன்றாக நீர் பாய்ச்சியதால், ஆழமாய் வேரோடிப் பாய்ந்த வித்துக்களைப்போல் அவளது சிந்தனைகள் முளைத்துக் கிளைத்துப் பரந்து பரவின. அந்தச் சிந்தனைக் கிளைகள் அந்தச் சங்கீதத்தின் மகிமையால் வார்த்தைகளாகப் பூத்து வெடித்துப் புன்னகை சொரிந்து வெளிப்பட்டன.

சோபியாவின் கச்சிதமின்மையை மட்டும் தாயால் சமாளித்துக் கொண்டு போகமுடியவில்லை. சோபியா எப்பொழுதும் தான் குடிக்கும் சிகரெட்டுத் துண்டுகளையும், தனது துணிமணிகளையும் கண்ட கண்ட இடத்தில் தாறுமாறாய் விட்டெறிந்தாள். அவளது ஆரவாரமான பேச்சுக்களைத் தாங்கிக்கொண்டிருப்பதோ தாய்க்கு இதையும்விடச் சிரமமாயிருந்தது. நிகலாயோ தெளிந்த நிதான புத்தியோடும் ஆழ்ந்த பொருளமைதியோடும் தனது வார்த்தைகளை எப்போதும் அளவிட்டு உயிர்கொடுத்துப் பேசுவான். சோபியாவின் பேச்சோ இதற்கு நேர் எதிர்மறையானதாகத் தாய்க்குத் தோன்றியது. தன்னை மிகவும் பெரியவளாகக் காட்டிக்கொள்ள விரும்பும் ஒரு குமரியைப் போலவே சோபியா நடந்து கொள்வதாகவும், அவள் மற்ற மனிதர்களையெல்லாம் விளையாட்டுச் சாமான்களைப் போலவே கருதுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவள் உழைப்பின் புனிதத்துவத்தைப் பற்றிப் பேசுவாள்; ஆனால் தன்னுடைய கச்சிதமின்மையால், தாய்க்கு எப்போதும் அதிகத் தொல்லை கொடுப்பாள். அவள் சுதந்திரத்தைப்பற்றி காரசாரமாய்ப் பேசுவாள்; என்றாலும் அவள் தனது பொறுமையின்மையாலும், வறட்டு முரண்வாதத்தாலும் பிறரை எப்போதுமே அடக்கியாள விரும்புவதாகவே தாய்க்குத் தோன்றியது. அவளது போக்கு ஒரே முரண்பாடுகள் நிறைந்ததாயிருந்தது, இதைத் தாய் உணர்ந்திருந்ததால், தாய் அவளிடம் எப்போதும் ஜாக்கிரதையாகவே நெருங்கிப் பழகினாள். நிகலாயிடம் எந்தவிதமான நிரந்தரமான அன்புணர்ச்சி கொண்டிருந்தாளோ. அதே உணர்ச்சி அவளுக்குச் சோபியாவின் மீது ஏற்படவில்லை.

நிகலாய்க்கு எப்போதுமே பிறரைப் பற்றிய சிந்தனைதான். அந்தச் சிந்தனையோடுதான், அவன் தனது ஒரே மாதிரியான இயந்திர இயக்கம் போன்ற வாழ்க்கையை நடத்தி வந்தான். காலையில் எட்டு மணிக்கு அவன் தேநீர் குடிப்பான், தேநீர் குடிக்கும்போதே பத்திரிகையைப் படித்துத் தாயிடம் செய்திகளை எடுத்துக் கூறுவான். அவன் கூறுவதைக் கேட்கும்போது, திடீரென ஓர் உண்மை அவள் உள்ளத்தில் புலனாகிச் சிலிர்க்கும். வாழ்க்கை என்னும் இந்த மாபெரும் இயந்திரம் எப்படிக் கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றி மக்களையெல்லாம் அரைத்து நொறுக்கிப் பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் உணருவாள். நிகலாய்க்கும் அந்திரேய்க்கும் பலவிதத்திலும் ஒற்றுமை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஹஹோலைப் போலவே இவனும் மக்களைப் பற்றிக் குரோத உணர்ச்சியற்றுப் பேசினான்.

எதையுமே அறிந்து கொள்ளாமல், தங்களது கண்களைக் குளிரவைக்கும் காட்சிகளைக் காணாமல், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் இல்லாமல், ஆசை கூட இல்லாமல் மனிதர்கள் பரபரத்துத் திரிகிறார்கள்.

வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளியாகிறார்கள் என்றே இவனும் கருதினான். ஆனால் புதிய வாழ்க்கை மீது இவன் கொண்டுள்ள விசுவாசம் அந்திரேயினுடையதைப்போல் அவ்வளவு தீவிரமாகவோ தெளிவாகவோ காணப்படவில்லை. இவன் எப்போதும் ஒரு நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த நீதிபதியைப் போலத்தான் அடங்கி அமைந்த குரலில் பேசினான். மிகவும் பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசும்போதுகூட அவனது உதடுகளில் ஒரு சிறு அமைதி நிறைந்த வருத்தப் புன்னகையே நிழலிட்டு மறையும். அந்தச் சமயங்களில் அவனது கண்களும் இளக்கமற்று வக்கிரத்தோடு பிரகாசிக்கும். அந்தக் கண்களில் உள்ள ஒளியைக் காணும்போதெல்லாம் அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றும். இந்த மனிதன் யாரையும் எதையும் மன்னிக்கவே மாட்டான். இவனால் மன்னிக்கவே முடியாது என்று கருதத் தோன்றும். அவனுக்கே தனது இரக்கமற்ற இந்தத் தன்மை பிடிக்கவில்லை. எனவே அவனுக்காக அனுதாபப்பட்டாள் தாய். அவன் மீது அவள் கொண்டிருந்த பாசம் நாளுக்குநாள் வளர்ந்து வந்தது.

ஒன்பது மணிக்கு அவன் வேலைக்குப் புறப்படுவான். போன பிறகு, அவள் வீட்டையெல்லாம் சுத்தப்படுத்துவாள். பிறகு மத்தியான உணவைத் தயாரிப்பாள். குளித்துவிட்டு, தூய உடைகள் அணிந்து கொள்வாள். தன் அறைக்குள் வந்து உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டி அதிலுள்ள படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் இதற்குள்ளாகவே, புத்தகங்களைப் படிக்கத் தெரிந்து கொண்டிருந்தாலும், மிகுந்த சிரமத்தோடும் அதிக கவனத்தோடும் தான் அவளால் அவற்றைப் படிக்க முடியும். அப்படிப் படித்தாள் அவள் சீக்கிரமே களைப்புற்றுப் போவாள். ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள தொடர்பைக் கூட அவளால் உணர முடியாது. குழந்தை படங்களைப் பார்த்துக் குதூகலிப்பது போல அவளும் அப்படங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். அந்தப் படங்களில் அவள் ஒரு புதிய அற்புத உலகைக் கண்டாள். தொட்டுணர முடிவது போன்ற அந்தப் புதிய உலகத்தை அவள் அந்தப் படங்களிலிருந்து புரிந்து கொண்டாள். அவளது கண்முன்னால் மாபெரும் நகரங்களும் அழகிய கட்டிடங்களும், யந்திரங்களும். கப்பல்களும், ஞாபகச் சின்னங்களும், இன்னும் மனிதக் கரங்கள் சிருஷ்டித்த எத்தனை எத்தனையோ பொருட்செல்வங்களும் தோன்றின; அந்தப் படங்களில் அவள் இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டாள். பல்வேறுவிதமான இயற்கைக் காட்சிகள் அவள் மனத்தைத் திகைக்க வைத்தன. வாழ்க்கை என்பது எல்லையற்று விரிந்து பெருகிக் கொண்டிருந்தது. கண்ணின் முன்னால் அவள் இதுவரையில் அறிந்திராத ஓர் அதிசயத்தை ஒரு மகோந்தத்தை எடுத்துக் காட்டியது. அது அவளது விழிப்புற்ற இதய தாகத்திலே தனது குறையாத அழகாலும் அமோகமான வளத்தாலும் நிறைவைப் பொழிந்து கிளர்ச்சியுறச் செய்தது. விலங்கு இனங்களை விளக்கும் சித்திரப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதில் அவளுக்கு ஒரு தனி ஆனந்தம். புத்தகம் அன்னிய மொழியிலிருந்த போதிலும், அந்தச் சித்திரங்களிலிருந்தே அவள் இந்தப் பூலோகத்தின் விசாலத்தையும், அழகையும் செல்வத்தையும் உணர்ந்தறிய முடிந்தது.

”அம்மாடி! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது” என்று அவள் ஒரு நாள் நிகலாவிடம் வியந்துபோய்க் கூறினாள்.

அவளுக்குப் பூச்சி பொட்டுக்களின் சித்திரங்களைப் பார்ப்பதில் பேரானந்தம். அதிலும் வண்ணாத்திப் பூச்சிகளைக் காண்பதில் ஓர் அலாதி ஆசை. அவற்றின் சித்திரங்களை வியப்போடு பார்த்துக்கொண்டே அவள் பேசுவாள்.

“நிகலாய் இவானவிச்! இவை அழகாயில்லை? இந்த மாதிரியான அற்புத அழகு எங்கெங்கெல்லாம்தாம் பரந்து கிடக்கிறது. ஆனால் நமது கண்ணுக்கு அவை படுவதேயில்லை; நாம் அவற்றைக் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறோம். எதையுமே அறிந்து கொள்ளாமல், தங்களது கண்களைக் குளிரவைக்கும் காட்சிகளைக் காணாமல், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் இல்லாமல், ஆசை கூட இல்லாமல் மனிதர்கள் பரபரத்துத் திரிகிறார்கள். இந்த உலகத்திலே எத்தனை செல்வங்கள் இருக்கின்றன. எத்தனை எத்தனை அற்புதமான உயிரினங்கள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் நமக்கு எவ்வளவு ஆனந்தம் ஏற்படும்? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவருக்காக இருக்கிறது. ஒவ்வொன்றும் எல்லோருக்காகவும் இருக்கிறது – நான் சொல்வது சரிதானே?”

“ஆமாம் ரொம்ப சரி” என்று புன்னகை செய்துகொண்டே கூறிய நிகலாய் தாய்க்கு இன்னொரு படப் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தான்.

இரவு நேரங்களில் அவனைப் பார்க்க எத்தனையோ பேர் வந்து போவார்கள். அவனது விருந்தாளிகளில் சிலர் முக்கியமானவர்கள். அலெக்சி வசீலியவிச் – அவன் வெளுத்த முகமும் கறுத்த தாடியும் கொண்டவன். அழகானவன்; ஆனால் மிகுந்த அழுத்தமும் அடக்கமும் கொண்ட ஆசாமி. ரமான் பெத்ரோவிச் – பருக்கள் நிறைந்த உருண்ட முகத்தை உடையவன். எதற்கெடுத்தாலும் கசந்துபோய் நாக்கை அடிக்கடி சப்புக் கொட்டுவான். இவான் தனீலவிச் – மெலிந்து ஒடுங்கிய குள்ளப் பிறவி. கூரிய தாடியும் மெலிந்த குரலும் உடையவன்; அவசரமாக கீச்கீச்சென்றும் குத்தலாகத் துளைத்துத் துளைத்தும் பேசுவான். இகோர்மூமூ – இவன் தன் உடம்பிலே வளர்ந்துவரும் நோயை நினைத்தும், தன் தோழர்களைப் பார்த்தும், தன்னைப் பார்த்ததுமே எப்போதும் சிரித்த வண்ணமாயிருப்பான். எங்கெங்கோ தூரத்தொலை நகரங்களிலிருந்தெல்லாம் பலரும் அங்கு வந்து போவதுண்டு. நிகலாய் அவர்களோடு நெடுநேரம் அமைதியாகப் பேசுவான். ஆனால் அவன் பேசுவதோ ஓரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் – உலகத் தொழிலாளி மக்கள் பற்றித்தான்! அவர்கள் விவாதிப்பார்கள், விவாத வேகத்தால் உத்வேகம் பெற்றுக் கைகளை ஆட்டிக்கொள்வார்கள், அமிதமாகத் தேநீர் பருகுவார்கள். ஒருபுறத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நிகலாய் என்னென்ன அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்பதை யோசித்து எழுதுவான். பிறகு அவற்றைத் தன் தோழர்களிடம் வாசித்துக் காட்டுவான். அவர்கள் உடனே அந்த அறிக்கையினைப் பிரதி எடுத்துக்கொள்வார்கள். அதன்பிறகு அவனால் கிழித்துப் போடப்பட்ட நகல் காகிதப் பிரதிகளின் துண்டு துணக்குகளையெல்லாம் பொறுக்கியெடுத்து அவற்றை எரித்துப் பொசுக்கிவிடுவாள் தாய்.

அவர்களது விவாதங்கள் அவளுக்குப் புரியாவிட்டாலும் அவள் அவற்றைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சியைத்தான் அவள் உணர முயன்றாள்.

அவர்களுக்குத் தேநீர் பரிமாறும்போதே தாய் அவர்களைப் பார்ப்பாள். தொழிலாளி மக்களின் வாழ்க்கைப் பற்றியும், விதியைப் பற்றியும், அவர்களுக்கு எப்படி உண்மையை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் உணர்த்தி, அவர்களது உள்ளங்களை ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கச் செய்வது என்பதைப் பற்றியும் அவர்கள் உற்சாகத்துடன் பேசுவதைக் கண்டு தாய் வியப்படைவாள். அவர்கள் அடிக்கடி கோபாவேசமடைந்து பல்வேறு அபிப்பிராயங்களையும் ஆதரித்துப் பேசுவார்கள். ஒருவரையொருவர் கடுமையாகவும் கண்டிப்பாகவும் குறை கூறிக்கொள்வார்கள். ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி பேசுவார்கள், காரசாரமாக விவாதிப்பார்கள்.

அவர்கள் அறிந்து கொண்டதைவிட, தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றித் தனக்கே அதிகம் தெரியும் என்று உணர்ந்தாள் தாய். அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பணியின் மகத்துவத்தை அவர்களைவிடத் தானே தெள்ளத் தெளிவாகக் காண்பது போல அவளுக்குத் தோன்றியது. இந்த உணர்ச்சியால். கணவன் – மனைவிக்கிடையே நிலவும் உறவு என்னவென்று அறியாத குழந்தைகள், கணவன் – மனைவி விளையாட்டு விளையாடுவதைப் பார்ப்பதுபோலத்தான் அவள் அவர்களைப் பார்த்தாள். தன்னையுமறியாமலே அவள் அவர்களது பேச்சை பாவெல், அந்திரேய் முதலியோரது பேச்சுக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். அந்த ஒப்பு நோக்கினால் இரண்டுக்கும் ஏதோ வித்தியாசம் இருப்பதுபோலத் தோன்றினாலும், அது என்ன என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை. சமயங்களில், தான் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பிலுள்ள வீட்டில் பேசுவதைவிட, இவர்கள் ஒரேயடியாய் உரத்துக் கூச்சலிட்டுப் பேசுவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அதற்குத் தனக்குத் தானே விளக்கமும் கூறிக்கொண்டாள்.

”இவர்களுக்கு அதிக விஷயம் தெரியும்; எனவே அதிகமாகச் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள், அவ்வளவுதான்.”

ஆனால் அடிக்கடி அவள் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த மனிதர்கள் வேண்டுமென்றே ஒருவரையொருவர் கிண்டிக் கிளறிவிட்டுப் பேசுவதாகவும், தங்களது ஆர்வத்தை வேண்டுமென்றே பெரிதாக வெளிக்காட்டிக் கொள்வதாகவும். ஒவ்வொருவனும் மற்றவனைவிட, நான்தான் உண்மையை நன்கு உணர்ந்து அதைச் சமீபத்துவிட்டதாக நிரூபிக்க முயல்வது போலவும், அப்படி ஒருவன் பேசும்போது, மற்றவர்கள் ஒவ்வொருவரும் தாம்தான் உண்மையை நெருங்கி, அதை தெளிவாக உணர்ந்துவிட்டதுபோல் காரசாரமாக, உத்வேகத்தோடு பேசிக்கொள்வது போலவும் தாய்க்குத் தோன்றியது. ஒவ்வொருவனும் அடுத்தவனைவிட ஒருபடி மேலே தாவிச் செல்ல விரும்புவதுபோல் அவள் மனத்தில் பட்டது. இந்த உணர்ச்சி அவளது மனத்தில் ஒரு சோகச் சலனத்தை ஏற்படுத்தியது. துடிதுடிக்கும் புருவங்களோடும் இரங்கிக் கேட்கும் கண்களோடும் அவர்களைப் பார்ப்பாள். பார்த்தவாறே தனக்குத் தானே நினைத்துக் கொள்வாள்.

”இவர்கள் அனைவரும் பாஷாவையும், அவனது தோழர்களையும் மறந்தே போய்விட்டார்கள் ……”

அவர்களது விவாதங்கள் அவளுக்குப் புரியாவிட்டாலும் அவள் அவற்றைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சியைத்தான் அவள் உணர முயன்றாள். எது நல்லது என்பதைப் பற்றித் தொழிலாளர் குடியிருப்பில் பேச்செழுந்த காலங்களில் ஏதோ ஒரு முழு உருவம் போல் கருதி அனைவரும் அதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் இங்கு இவர்கள் அதைப் பற்றிப் பேசும்போதோ அந்த நல்ல தன்மை துண்டுபட்டுச் சிதறி, சிறுமையடைந்து போவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அங்கு அவர்களது உணர்ச்சிகளோ ஆழமும் உறுதியும் வாய்ந்தனவாயிருந்தன; இங்கோ, இவர்களது உணர்ச்சியோ வக்கிர புத்தி படிந்து, எதையுமே வெட்டிப் பேசுவதாக இருந்தது. இங்கு இவர்கள் பழமையைத் தகர்த்தெறிவதைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார்கள். அவர்களோ புதுமையை உருவாக்குவதைப் பற்றியே அதிகமாகக் கனவு கண்டார்கள். இந்தக் காரணத்தினால்தான் அவளது மகனது பேச்சும் அந்திரேயின் பேச்சும் மிகுந்த ஆழம் பொருந்தியதாகவும், அவளுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் இருந்தன.

தொழிலாளர்களிடமிருந்து யாரேனும் நிகலாயைப் பார்க்க வந்தால் அவன் அவர்களிடம் மெத்தனமாகவும் அநாயாசமாகவும் நடந்து கொள்வதையும் அவள் கண்டாள். அவனது முகத்தில் இனிமை ததும்பும் ஒரு நயபாவம் தோன்றும், அவனும் ஏதோ இயற்கைக்கு மாறான மாதிரி அவர்களிடம் இஷ்டப்படியெல்லாம் சில நேரங்களில் கவனக்குறைவாகவும் சில நேரங்களில் கொச்சையாகவும் பேசுவான்.

”இப்படிப் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறான் போலிருக்கிறது” என்று அவள் தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

அவள் பெருமூச்செறிந்தவாறே தன் கையினால் சாஷாவின் கையை அழுத்திப் பிடிப்பாள். தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வாள். ”அடி, என் கண்ணே நீ ஒரு துர்ப்பாக்கியசாலி…..”

ஆனால் இந்த எண்ணம் மட்டும் அவளைத் திருப்திப்படுத்தவில்லை. அவனைப் பார்க்க வந்த தொழிலாளியும் அவனிடம் மனம்விட்டுப் பேசாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டே போவதாக அவளுக்குத் தோன்றியது. சாதாரணத் தொழிலாளி குடும்பப் பெண்ணான அவளோடு எவ்வளவு லகுவாகவும் தாராளமாகவும் அந்தத் தொழிலாளி பேசினானோ, அதே மாதிரி நிகலாவிடம் அவன் மனம்விட்டுப் பேசக் காணோம். ஒரு தடவை நிகலாய் அந்த அறையை விட்டுச் சென்ற சமயத்தில் அவள் வந்திருந்த இளைஞனைப் பார்த்துப் பேசினாள்.

”நீ எதற்காகப் பயப்படுகிறாய்? நீ என்ன உபாத்தியாயரிடம் பாடம் ஒப்புவிக்கின்ற சிறுவனா? இல்லையே!”

அந்த இளைஞன் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“பழக்கப்படாத இடத்தில் நண்டும்கூட முகம் சிவக்கும். என்ன இருந்தாலும், இவர் நம்மைப் போன்றவரில்லையே.”

சமயங்களில் சாஷா வருவாள். அவள் வந்தால் வெகுநேரம் தங்க மாட்டாள். சிரிப்பே இல்லாமல் வந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே அவள் எப்போதும் பேசுவாள். போகும்போது தாயிடம் மாத்திரம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் போவாள்.

”பாவெல் மிகலாய்லவிச் எப்படியிருக்கிறான்?”

“செளக்கியமாய்த்தானிருக்கிறான், சந்தோஷமாகத்தான் இருக்கிறான். எல்லாம் கடவுள் அருள்!”

”நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, உடனே மறைந்து விடுவாள் சாஷா.

ஒருமுறை, பாவெலை விசாரணை செய்யாமலே அவனை அதிக காலமாகக் காவலில் வைத்திருப்பதைப் பற்றி அவளிடம் தாய் புகார் கூறினாள். சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன.

தாய்க்கு அவளிடம் அந்த விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

“அடி கண்ணே, நீ அவனைக் காதலிப்பது எனக்குத் தெரியும்.”

ஆனால் அதைச் சொல்வதற்கு அவளுக்குத் துணிவில்லை. அந்தப் பெண்ணின் அழுத்தம் நிறைந்த முகமும், இறுகிய உதடுகளும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விஷயத்தைப் பற்றி மட்டும் பேசும் அவளது பேச்சும் தாயின் மனத்தில் எழும் அன்புணர்ச்சியை எதிர்த்துத் தள்ளின. எனவே அவள் பெருமூச்செறிந்தவாறே தன் கையினால் சாஷாவின் கையை அழுத்திப் பிடிப்பாள். தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வாள்.

”அடி, என் கண்ணே நீ ஒரு துர்ப்பாக்கியசாலி…..”

ஒரு நாள் நதாஷா வந்தாள். வந்த இடத்தில் தாய் இங்கு வந்திருப்பதைக் கண்டு அவளுக்கு ஒரே பேரானந்தம். அவள் தாயை அணைத்து முத்தமிட்டாள். பிறகு திடீரென்று அமைதி நிறைந்த குரலில் பேசினாள்.

”என் அம்மா செத்துப்போனாள். பாவம் செத்துப் போனாள்…?

அவள் தன் தலையை நிமிர்த்திச் சிலுப்பிவிட்டு, கண்களை விருட்டென்று துடைத்துவிட்டுக்கொண்டு பேசினாள்.

“பாவம் அவளுக்கு இன்னும் ஐம்பது வயதுகூட நிறையவில்லை, அவள் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கையைவிட, அவள் செத்துப்போனதே நல்லது என்றுதான் எனக்குப்படுகிறது. அவள் தன்னந்தனியாளாக. பக்கத்திலே யார் துணையுமின்றி யாருக்கும் தேவையற்றவளாக எப்போது பார்த்தாலும் என் தந்தையின் அதட்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளானவாறே வாழ்ந்தாள். இந்த மாதிரிப் பிழைப்பை வாழ்வென்று சொல்ல முடியுமா? மற்றவர்கள் ஏதோ நல்லகாலம் வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையிலாவது வாழ்கிறார்கள். ஆனால் என் தாயோ நாளுக்கு நாள் அதிகப்படியான வசவுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதையுமே எதிர்பார்க்க முடியவில்லை. அந்த நம்பிக்கை அவளுக்கு இல்லை.”

படிக்க:
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?

“நீங்கள் சொல்வது உண்மை, நதாஷா!” என்று சிந்தித்தவாறே சொன்னாள் தாய். “நல்லகாலத்தை எதிர்பார்த்துத்தான் ஜனங்கள் வாழ்கிறார்கள். எந்தவித நம்பிக்கையுமே இல்லாவிட்டால், அது எந்த வாழ்வோடு சேர்த்தி?” அவள் அந்தப் பெண்ணின் கையைத் தட்டிக் கொடுத்தாள்; ”அப்படியென்றால் நீங்கள் இப்போது தனியாகத்தான் இருக்கிறீர்கள். இல்லையா?”

”ஆமாம். தன்னந் தனியாகத்தான்” என்று லேசாகச் சொன்னாள் நதாஷா.

”அது சரி” என்று ஒரு கணம் கழித்துப் புன்னகை புரிந்தவாறே சொன்னாள் தாய். “நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை. நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக்கொள்வார்கள்.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டத்திற்கு கேட்கப்பட்டிருந்த அனுமதியை திடீரென ரத்து செய்தது அரசு. எனினும் திட்டமிட்டபடி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம் சார்பாக ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் இன்று (13.12.18) காலை 11.15 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கொடி, பேனர், பதாகைகளை உயர்த்திக் கொண்டு முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்பாட்டம் செய்தோம். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் மற்றும் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னதுரை மற்றும் ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறது நேரம் கூட பேசவிடாமல் போலிசு மைக்கை பிடிங்கியது. அதைத் தொடர்ந்து தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தோழர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போலிசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

புயல் பாதித்த மக்களை பாதுகாக்காத அரசு, அவர்களின் கோரிக்கையை கூட பேசக் கூடாது என தடுக்கிறது. நம்மை தடுக்கும் இந்த அரசுதான் கார்ப்பரேட்டுக்கு வளத்தை கொள்ளையடிக்க கொடுக்கிறது. தோற்றுப்போன இந்த அரசு அமைப்பை வீழ்த்தாமல் நாம் இயற்கை பேரிடர்களை எதிர் கொள்வது எப்படி?

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்.
9445475157.