Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 232

குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

த்ராஸில் தாக்கூர் சாதிவெறியர்கஆள் நால்வரால் தலித் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் போதுமான அளவு கொடூரமிக்கதல்ல என்பது போல, இறந்த மகளின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற அந்த பெற்றோரின் குறைந்தபட்ச கோரிக்கையைக்கூட நிராகரித்து, இரவோடு இரவாகக் கள்ளத்தனமாக அவரின் உடலை எரிக்கும் அளவிற்கு கொடூரமானது உத்திரப் பிரதேச போலீசு.

இந்த மொத்த நிகழ்வும் ஆதிக்க சாதியினரின் ஆணவத்தையும் போலீசின் இரக்கமற்ற தன்மையையுமே பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. இந்தியாவில் போலீசு படையினரின் செயல்பாடு பொறுப்பற்றதாகவும், தவறுகளின் பின்விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கிறது. உ.பி.யில் குறிப்பாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ், போலீசுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கப்பட்டுள்ளதை நாம் விகாஸ் துபே போலி மோதல் படுகொலையிலேயே பார்த்திருப்போம்.

தற்போது, கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு போலீசை இடைநீக்கம் செய்யவேண்டுமென்ற யோகியின் உத்தரவை போலீசார் புறக்கணித்துள்ளனர்.

படிக்க :
♦ பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
♦ உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

இதற்கிடையில், யோகி ஆதித்யாத் தன்னால் முடிந்தளவு அனைத்து வகைகளிலும் முஸ்லீம்களை ஒடுக்கியும், அனைத்து வகையான மாற்றுக் கருத்துக்களையும் நசுக்கியும் வருகிறார். உதாரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் கோரக்பூரில் பல குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதனைச் சுட்டிக் காட்டியதாலேயே மருத்துவர் கஃபீல் கான் பல மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே உ.பி.-யின் நகரங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் பெயர்களை யோகி மாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது உ.பி.யில் முதலீடு செய்ய தொழிலதிபர்களை அழைத்திருக்கிறார்.

அவர் ஏன் இப்படி செய்யக்கூடாது? இந்தியாவின் சிறந்த முதல்வராக ஆதித்யநாத்திற்கு தொடர்ந்து மூன்றுமுறை இந்தியா டுடே வாக்களிக்கவில்லையா ? தொழிலதிபர்கள் அவரை பிரதமராவதற்கான சிறந்த மனிதர் என்றுகூடப் பாராட்டலாம். அனைத்துக்கும் பிறகு நிறுவனங்கள் எவ்விதத் தொல்லையுமின்றி தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கு அனுமதிக்கப்படும்.

தற்போது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல 400 வருட பழைமையான மசூதி பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் முழு ஆதரவுடன் வன்முறையாளர்களால் தகர்க்கப்பட்டு, இராமர் கோயிலும் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி அடுத்த இலக்கு காசி. அதன் பின்னர் ? சந்தேகமே வேண்டாம் மதுராதான் அவர்களது இலக்கு. இவை அனைத்தும் யோகி ஆதித்யநாத்தின் ஆசியுடன் நிறைவேற்றப்படும்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உயர் சாதிய, சகிப்புதன்மையற்ற மற்றும் முதலாளிகள் சார்பான புதிய – மிளிரும் உத்திரப் பிரதேசம் நம் கண் முன்னால் எழுந்துவருவதைக் கவனியுங்கள். நாம் அதனை அறிவதற்கு முன்பே, இந்தியாவின் முன்மாதிரியாக உ.பி. மாறிவிடும். குஜராத் மாடல் என்பது நேற்றைய செய்தி, வருங்காலம் உ.பி. மாதிரிக்கானது.

இதற்கு முன் குஜராத் மாடல் எப்படி வடிவம் பெற்றது என்பதை இப்போது நினைவுக் கூர்வது மிகவும் முக்கியமானது.

பெரும்பான்மையாக முஸ்லீம்களை உள்ளடக்கி ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த குஜராத் கலவரம் நடந்து பத்தாண்டுக்களுக்குப் பிறகு ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவனாக தன்னைக் காட்டிக்கொண்டார். குஜராத் கலவரத்தின் போது பிரதமராக இருந்த வாஜ்பாயால் பதவிநீக்கம் செய்யப்படாமல் மயிரிழையில் தப்பினார். (இதே வாஜ்பாய்தான் கலவரம் நடந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு, கோத்ரா இரயிலுக்கு தீ மூட்டியதாக முஸ்லீம்களை மறைமுகமாக குற்றம் சாட்டி மாற்றிப் பேசியவர்; அதன் மூலம் இந்துகளின் உணர்வினை தூண்டியவர்).

தனது பதவியை பாதுகாத்துக் கொண்டாலும், இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தினர் பலரால் வெறுத்து ஒதுக்கப்பட்டார் மோடி. இந்திய வர்த்தகர்கள் மோடி மீதான குற்றச்சாட்டில் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். “சர்வதேச அளவில் நாம் ஒரு மதசார்பற்ற நாடு என்ற பெருமையை இழந்துவிட்டோம்” என வங்கியாளர் தீபக் பரேக் வேதனைப்பட்டார் (மார்ச் 2002) (இந்த கூற்றை பின்னர் அவர் மாற்றிக் கொண்டார்). வன்முறைப் படுகொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக இதர தொழிலதிபர்களும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமெரிக்கா போன்று சில நாடுகள் நேரடியாகவும், பல நாடுகள் மறைமுகமாகவும் மோடியை விசா மறுப்புப் பட்டியலில் சேர்ந்தனர். ஆனால் சில ஆண்டு கழித்து அதே நாட்டு தூதர்கள் குஜராத்திற்குச் சென்று மோடியை சந்தித்து தங்களது முதலீடு குறித்து விவாதித்தனர்.

துடிப்பான குஜராத்2013-ம் ஆண்டு, வைப்ரண்ட் குஜராத் உச்சி மாநாட்டில், பெரிய கார்ப்பரேட் அதிபர்கள் மோடியை புகழ்ந்து போற்றினர். “மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர்” என முகேஷ் அம்பானி தெரிவித்தார். அனில் அம்பானியோ, “மோடி மகாத்மா காந்தி மற்றும் சர்தார் பட்டேலைப் போன்றவர்” என்று பிரகடனப்படுத்தினார். இந்தியாவிலேயே அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக குஜராத் இருப்பதற்கு முக்கிய காரணம் மோடி மட்டுமே என்று ரத்தன் டாடா பாராட்டினார்.

அதன்பிறகு, ‘அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்வு, அழகான சாலைகள், தடையற்ற மின்சாரம்’ உள்ளிட்ட தனது தேசிய இலட்சியங்களை மோடி வெளிப்படுத்தி, முதலாளிகளிடம் மட்டுமல்லாமல், சாதாரண மக்களிடமும் பிரபலமடையத் தொடங்கினார். அவர் முசுலீம்களை தனியாகப் பிரித்து ‘அவர்களுக்கான’ இடத்தை அவர்களுக்குக் காட்டியது சொல்லப்படாத வரலாறு. 2002- கலவரத்தைப் பொறுத்தவரையில் அது மறக்கப்பட்டது. விமர்சித்த விமர்சகர்கள் அவ்விவகாரத்தைக் கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். மோடியை ஆதரிக்க அனைத்து ஊடகங்களும் ஒரேகுரலில் எழுந்துநின்றன; காங்கிரசை கடுமையாக விமர்சித்து ஒதுக்கியெறிந்தன. மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒளிபரப்பப்பட்டன. வாரணாசியில் நடத்தப்பட்ட மோடியின் கண்காட்சியைப் பார்த்து தொலைக்காட்சி நிருபர்களும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் எவ்வாறு திகைப்பில் ஆழ்ந்தனர் என்பதை நினைவாற்றல் சற்று அதிகமாக இருப்பவர்களால் நினைவுகூர முடியும். பொதுவான கண்ணோட்டத்தில் கூறப்படுவது போல, ஊடகங்கள் தனது ஆன்மாவை விற்றுவிட்டு மோடியின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தது 2014-ல் அல்ல; அதற்கு முன்னமே அவர்கள் தங்களை விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வரும் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை பாழாக்கிவிட்டார்; மோடிதான் அதனை மீட்பார். அவரால் அந்நிய முதலீடு நம் நாட்டை நோக்கி விரைந்து வரும், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும், இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என்றும், மோடி இனி பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபடமாட்டார்; பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொள்வார் எனவும் நிபுணர்கள் அவருக்கு தலையசைத்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை; நடந்ததாகவும் தெரியவில்லை. மாறாக ‘சூப்பர் திறமைசாலியான’ மோடி இந்திய பொருளாதாரத்தை சரிவிலேயே இட்டுச் சென்றார். அதேநேரத்தில், வெறுப்புக் குற்றங்கள் பல அதிகரித்தன. முஸ்லீம் மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்பட்டனர். சங் பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலான இவை அனைத்தும், இரக்கமற்ற முறையில் செயல்படுத்தப்பட்டன.

ஒரு பரந்துபட்ட வாக்காளர் தளத்திற்கு மோடியை ‘விற்பனை செய்ய’, அவரது பிம்பத்தை மறுவார்ப்பு செய்யவேண்டியிருந்தது; நகர்ப்புற வாக்காளர்கள் பொதுவாக ஒரு வகுப்புவாத கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தாலும், அப்பட்டமாக சகிப்பற்ற ஒரு வேட்பாளருக்கு ஆட்பட மாட்டார்கள். எனவே ஒரு புதிய மோடி உருவாக்கப்பட்டார்; அது நடக்கவும் செய்தது.

படிக்க :
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
♦ 2002 குஜராத் இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !

மத்தியில் மோடி அரசாங்கம் முதலாளிகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள் – தொழிலாளிகள், முஸ்லீம்களுக்கு எதிராகவும் சட்டங்களை கொண்டுவந்து, சங் பரிவாரத்தின் ஆதரவாளர்களை காவல்துறையிடமிருந்து பாதுகாத்து வருவதால் பெரும்பாலான மக்களின் அதிருப்திக்கு ஆளாகி வருகிறது.

மத்திய அரசு சில நேரங்களில் மாநில அரசுகளின் வரம்புகளில் அதிகாரம் செலுத்த முடியாது என்பதன் காரணமாக, சில சமயங்களில் அது கையாலாகாத நிலையில் இருக்கிறது. இங்குதான் யோகி ஆதித்யநாத் நம்பிக்கையளிப்பவராக இருக்கிறார். அவர் முதலமைச்சர்தான் என்றபோதிலும், தனது காவல்துறையின் மூலம் எங்கும் எப்போது வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும். ஏனென்றால், அவர் உ.பி.யின் கடவுள், உ.பி.யின் எஜமானன். டில்லியில் அவர் தடுத்து நிறுத்தப்பட முடியாதவர்.

உ.பி. மாடல் எந்தவொரு எதிர்ப்பையும் சகித்துக் கொள்ளாது. தன்னை குறித்து சர்வதேச அளவில் என்ன கருதுகிறார்கள் என்பதில் அதற்கு எந்தக் கவலையும் இல்லை. யோகி ஆதித்யநாத்தின் பார்வையில் வெளியுறவுக் கொள்கை – இராஜதந்திரம் தேவையேயில்லை. சட்ட நுணுக்கங்கள் நேரத்தை வீணடிப்பவையாகும். ஜனநாயகம் என்பது நலிந்துப்போன ஒன்று.

ஒரு இயக்கம் சாதிக்கப்பட வேண்டும், அதை யோகி செய்து முடிப்பார் என்பது சங் பரிவாரத்திற்கு நன்கு தெரியும். அவரது நற்சான்றுகள் பரிசுத்தமானவை. அவர் முஸ்லீம்களை ஆழமாக வெறுக்கிறார். தலித்துகள் தங்களுக்கு ‘உரிய’ இடத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறார். சங் பரிவாரத்தின் கண்ணோட்டத்தில் நரேந்திர மோடி மிகவும் மென்மையானவர். ஏனென்றால், அவர் தனது பிம்பத்தை பற்றி அதிகம் கவலைப்படுகிறார். ஆனால் ஆதித்யநாத் அவ்வாறு இருப்பதில்லை. அதனால்தான் யோகி ஆதித்யநாத் எதிர்காலத்தின் நாயகனாக இருக்கிறார்.

கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : ஷர்மி
ஆதாரம்: தி வயர்

தவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்! | தோழர் ஸ்டாலின்

4

விவாதங்களுக்குப் பதில் உரை

பாகம் – 2

4 ஊழியர்களை சோதித்துப்பார்ப்பது, கடமைகளை நிறைவேற்றியதை சரி பார்ப்பது என்பதன் பொருள் என்ன?

ஊழியர்களை சோதித்துப் பார்ப்பது என்பது அவர்களது உறுதி மொழிகளையும், அறிவிப்புகளையும் கொண்டு அல்ல, அவர்களது வேலைகளின் முடிவுகளைக் கொண்டுதான்.

கடமைகளை நிறைவேற்றியதைச் சோதித்துப் பார்ப்பது என்பது வழக்கமாக அறிக்கைகளின் மூலம் சரிபார்ப்பதும் சோதிப்பதும் மட்டுமல்ல, முதன்மையாக வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் சரியான முடிவுகளின் அடிப்படையில்தான்.

இத்தகைய சோதித்துப் பார்ப்பதும், சரிபார்ப்பதும் தேவைதானா? சந்தேகத்துக்கு இடமில்லாமல் இது தேவைப்படுகிறது. முதலாவதாக, இத்தகைய சோதித்துப் பார்ப்பதும், சரிபார்ப்பதும்தான் அந்தத் ஊழியரைப் பற்றி  நாம் அறிந்து கொள்ளவும், அவரது உண்மையான தகுதிகளை நாம் நிர்ணயிப்பதற்கும் தேவைப்படுகிறது. இரண்டாவதாக, இத்தகைய சோதனையிடலும், சரிபார்த்தலும் மட்டுமே இந்த நிர்வாக இயந்திரத்தின் நிறைகளையும், குறைபாடுகளையும் நிர்ணயிக்கத் தேவைப்படுகிறது. மூன்றாவதாக, இத்தகைய சோதனை யிடலும், சரிபார்த்தலும் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கடமைப் பொறுப்பின் நிறைகளையும், குறைபாடுகளையும் நிர்ணயிக்க நமக்குத் தேவைப்படுகிறது.

சில தோழர்கள் ஊழியர்களைச் சோதித்துப் பார்ப்பது மேலிருந்து மட்டுமே செய்யப்பட வேண்டும், அப்போது தங்கள் வேலைகளின் முடிவுகளால் வழிகாட்டப்பட்ட தலைவர்கள் அவர்களைச் சோதித்துப் பார்க்க முடியும் என்று கருதுகிறார்கள். ஊழியர்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும், கடமைகளை நிறைவேற்றியதைச் சரிபார்ப்பதற்கும் மேலிருந்து சோதித்துப் பார்ப்பது ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்று என்பது உண்மைதான். ஆனால், மேலிருந்து சோதித்துப் பார்ப்பது சோதித்துப் பார்க்கும் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சாத்தியமற்றதாக்கி விடுகிறது. இங்கு இன்னொரு வகையான சோதித்துப்பார்க்கும் முறையும் உள்ளது. அதுதான் கீழிருந்து சோதித்துப்பார்ப்பது. மக்கள் தங்களுக்கு வழிகாட்டும் தலைவர்களைச் சோதித்துப் பார்க்கும்போது, அவர்களுடைய தவறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். அந்தத் தவறுகள் எவ்வாறு சரிசெய்யப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இந்த வகையான சோதித்துப் பார்க்கும் முறை ஊழியர்களைச் சோதித்துப் பார்க்கும் ஆற்றல் வாய்ந்த வழிமுறைகளில் ஒன்றாகும்.

கட்சி உறுப்பினர் தனது தலைவர்களை, கட்சிச் செயல்பாடுகளில், கூட்டங்களில் மாநாடுகளில், கட்சிப் பேரவைகளில் அவர்களது அறிக்கைகளைக் கேட்டு, குறைபாடுகளை விமர்சனம் செய்து மற்றும் இறுதியாக, கட்சியின் தலைமை அமைப்புகளுக்கு அந்தத் தோழர் களைத் தேர்வுசெய்து அல்லது தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஆகியவற்றின் மூலம் சோதித்துப் பார்க்கிறார்கள். நமது கட்சியின் விதிகள் கோருவது போல ஜனநாயக மத்தியத்துவத்தை மிகக் கறாராகக் கடைப்பிடிப்பதால் நமது கட்சி அமைப்புகளுக்கான கடப்பாடாக உள்ள தேர்தலில் வேட்பாளர்களை முன்மொழியவும், ஆட்சேபிக்கவும் உள்ள உரிமை, இரகசிய வாக்குச்சீட்டு, விமர்சனம் மற்றும் சுய விமர்சன உரிமை – இவை எல்லாம் மற்றும் இவை போன்றவையுமான நடவடிக்கைகள் மற்ற பிறவற்றோடு சோதித்துப்பார்க்கவும் கட்சித்தலைவர்கள் கட்சி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவும் வேண்டும். இது கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும்.

கட்சி சாராத மக்கள் தங்களுடைய வர்த்தக, தொழிற்சங்க மற்றும் பிற தலைவர்களை, கட்சிசாராத நடவடிக்கைக் கூட்டங்களில், எல்லாவகையான மக்களின் மாநாடுகளில் தங்கள் தலைவர்களின் அறிக்கைகளைக் கேட்டு, அவற்றின் குறைபாடுகளை விமர்சனம் செய்து, அந்தக் குறைபாடுகளை எந்தவகையில் நிவர்த்தி செய்யலாம் என்பதைச் சுட்டிக்காட்டி சோதித்துப் பார்க்கிறார்கள்.

இறுதியாக, மக்கள் நாட்டின் தலைவர்களை, சோவியத் ஒன்றியத்தின் அரசு அமைப்புகளின் தேர்தல்களின்போது அனைவருக்குமான, சரிசமமான, நேரடி மற்றும் இரகசிய வாக்குரிமையின் மூலம் சோதித்துப் பார்க்கிறார்கள்.

இங்குள்ள கடமை என்னவென்றால், மேலிருந்து சோதித்துப் பார்ப்பதை, கீழிருந்து சோதித்துப் பார்ப்பதுடன் இணைப்பதுதான்.

5 தங்களது சொந்தத் தவறுகளிலிருந்து ஊழியர்களுக்குக் கற்பிப்பது என்பதன் பொருள் என்ன?

கட்சியின் தவறுகளை உளச்சான்றுகளுக்கு கட்டுப்பட்டு அம்பலப்படுத்துதல், இத்தகைய தவறுகள் எழுவதற்கான காரணங்களை ஆய்வு செய்தல், இந்தத் தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைச் சுட்டிக்காட்டுதல் ஆகியவை கட்சி ஊழியர்களை முறையாகப் பயிற்றுவிப்பதற்கும், கற்றுத் தருவதற்கும், உழைக்கும் வர்க்கத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் முறையாகப் பயிற்றுவிப்பதற்கும், கற்றுத் தருவதற்குமான உறுதியான வழிமுறைகளில் ஒன்று என லெனின் நமக்குக் கற்பித்தார். லெனின் கூறுகிறார்:

  • “ஓர் அரசியல் கட்சியானது தனது சொந்தத் தவறுகளை நோக்கிக்கொண்டுள்ள மனப்பாங்குதான் அந்தக் கட்சியின் பொறுப்புமிக்க தன்மை பற்றிய மிகவும் முக்கியமானதும், உறுதியானதுமான – மேலும் அது தனது வர்க்கத்துக்கும், உழைக்கும் மக்களுக்குமான கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதற்குமான அளவுகோலாகும். தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது, அதற்கான காரணங்களை வெளிப்படுத்துவது, அத்தகைய தவறுகள் ஏற்படக் காரணமான சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, அவற்றை சரிப்படுத்து வதற்கான வழிமுறைகளைக் கவனமாக ஆய்வுசெய்வது – இவை தான் ஒரு பொறுப்புமிக்க கட்சியின் அடையாளங்கள்; இது, அதன் கடமைகளைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது, இது, வர்க்கத்துக்கும், அதன் பின் மக்களுக்கும் கற்பிப்பதையும், பயிற்சி அளிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.” இதன் பொருள், நம்மிடையே அடிக்கடி நிகழ்வதுபோல், தங்களுடைய தவறுகளை குறைத்துக்காட்டி, மாயத்தோற்றத்தை உருவாக்குவது அல்ல, தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்வதிலிருந்து நெளிவுசுளிவாக இருப்பது அல்ல. ஆனால், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதும், இந்தத் தவறுகள் எவ்வாறு திருத்தப்படலாம் என்பதற்கான வழியை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டுவதும், தங்கள் தவறுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் திருத்திக் கொள்வதும்தான் போல்ஷ்விக்குகளின் கடமை.”

நமது தோழர்களில் பலர் இதை மகிழ்வுடன் செய்வதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று என்னால் கூறமுடியாது. ஆனால், போல்ஷ்விக்குகள், அவர்கள் உண்மையிலேயே போல்ஷ்விக்குகளாக இருக்க விரும்பினால், தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கான, அதற்கான காரணங்களைக் கூறுவதற்கான, எந்தவகையில் அவை திருத்தப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கான தைரியத்தைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அந்தவகையில் கட்சி அணிகளுக்கு முறையான பயிற்சியையும், முறையான அரசியல் கல்வியையும் தருவதற்கு கட்சிக்கு உதவ வேண்டும். ஏனென்றால் இந்த ஒருவழியில் மட்டுமே, வெளிப்படையான மற்றும் நேர்மையான சுயவிமர்சன சூழலில் மட்டும்தான் உண்மையான போல்ஷ்விக் ஊழியர்களுக்கு, உண்மையான  போல்ஷ்விக் தலைவர்களுக்கு கற்றுத்தருவது சாத்தியமாகும்.

லெனினின் கோட்பாட்டின் சரியான தன்மையை விளக்க இரண்டு எடுத்துக்காட்டுகள்:

உதாரணத்துக்கு, கூட்டுப்பண்ணைக் கட்டமைப்பில் உள்ள நமது தவறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 1930இல் மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருந்து வந்த விவசாயத்தை, கூட்டுப்பண்ணைக் கட்டமைப்புக்குள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மாற்றுவதைத் தங்களால் நிறைவேற்ற முடியும் என்று நமது கட்சித்தோழர்கள் நினைத்ததையும், அப்போது கட்சியின் மத்தியக்குழு மிகவும் அதீத ஆர்வம் கொண்ட இந்தத் தோழர்களை கட்டுப்படுத்துவது தனது கடமை என்று கண்டறிந்ததையும் நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது நமது கட்சி வாழ்வில் மிகவும் ஆபத்தான காலகட்டங்களில் ஒன்று.

நமது கட்சித் தோழர்கள் கூட்டுப் பண்ணையை விருப்பார்ந்த இயல்பில் கட்டமைக்க வேண்டும் என்பதையும், நிர்வாக அழுத்தத்தின் காரண மாக விவசாயக் கூட்டுப்பண்ணை பாதைக்கு மாற்றப்படக் கூடாது என்பதையும் மறந்துவிட்டதுதான் தவறாகிப்போனது. கூட்டுப் பண்ணைக் கட்டமைப்புக்குத் தேவையானது சில மாதங்கள் அல்ல, மிகவும் கவனமாகவும், ஆழ்ந்து சிந்தித்த வேலைகளையும் கொண்ட ஆண்டுகள் தேவைப்படும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். இதைப்பற்றி அவர்கள் மறந்து விட்டார்கள். மேலும், தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ளவும் மறுத்துவிட்டார்கள்.

தோழர்களுக்கு மத்தியக்குழு, வெற்றியில் தலைசுற்றி மயங்குவது பற்றிய குறிப்பையும், மாவட்டங்களில் உள்ள தோழர்களுக்கு, உண்மையான சூழ் நிலைகளைப் புறக்கணித்து மக்களுக்கு முன்னே தீவிரமாக சென்றுவிட வேண்டாம் என்று அளித்த எச்சரிக்கையும் நமது தோழர்களால் வெறுப்புணர்வுடனேயே பார்க்கப்பட்டன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது மத்தியக்குழுவை இந்த நீரோட்டத்துக்கு எதிராகச் செல்வதிலிருந்தும், நமது கட்சித்தோழர்களை சரியான பாதைக்கு திருப்புவதிலிருந்தும் தடுக்கவில்லை. நல்லதுதானே? நமது கட்சித் தோழர்களை சரியான பாதைக்கு திருப்பியதன் மூலம் கட்சி தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டது என்பது ஒவ்வொருவருக்கும் இப்போது தெளிவாகியிருக்கும். இப்போது நாம் கூட்டுப்பண்ணை கட்டுமானத்துக்காக, கூட்டுப் பண்ணை தலைமைக்காக பல்லாயிரக்கணக்கான அற்புதமான விவசாய ஊழியர்களைப் பெற்றுள்ளோம். இந்த அணியினர் 1930-ன் தவறுகளிலிருந்து கற்பிக்கப்பட்டவர்கள், பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். ஆனால், கட்சி அப்போது தனது தவறுகளை உணர்ந்து கொள்ளாமல் இருந்திருந்தால், அவற்றை அது உரியகாலத்தில் திருத்தியிருக்காமல் இருந்திருந்தால், இன்று நாம் பெற்றிருக்கும் இந்த ஊழியர்களைப் பெற்றிருக்க முடியாது.

இன்னொரு உதாரணம், தொழில்துறைக் கட்டுமானத்தின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நான் ஷக்டி சீர்குலைவு காலத்தின் நமது தவறுகளை எனது மனதில் கொண்டிருக்கிறேன். நமது தவறுகளாக இருந்தவை: தொழில்துறையில் நமது ஊழியர்களின் தொழில்நுட்ப பிற்போக்குத்தன்மையை நாம் முழுதும் அறிந்திருக்கவில்லை. நாம் இந்தப் பிற்போக்குத்தன்மையை நீக்கிக்கொள்ளவில்லை. நம்மிடம் வெறுப்புணர்வு கொண்டுள்ள நிபுணர்களின் உதவியோடு விரிவான சோசலிசத் தொழில்துறைக் கட்டமைப்பை நம்மால் வளர்க்க முடியும் என்று நாம் நினைத்தோம்.

முதலாளித்துவ நிபுணர்களோடு இணைக்கப்பட்டிருந்த மோசமான மக்கள் அரசுப்பணி அமைச்சர்கள் என்ற பாத்திரத்தை நமது வர்த்தக ஊழியர்களுக்கு தண்டனையாக்கி விட்டோம். அந்த நேரத்தில் நமது வர்த்தக ஊழியர்கள் தங்களது தவறுகளை எவ்வளவு மனமின்றி ஒத்துக் கொண்டார்கள் என்பதை, எவ்வளவு விருப்பமின்றி தங்களது தொழில்நுட்ப பிற்பட்ட தன்மையை ஒப்புக்கொண்டார்கள் என்பதை, மேலும் எவ்வளவு மெதுவாக, ‘தொழில் நுட்பத்தில் தேர்ச்சி கொள் என்ற முழக்கத்தை அவர்கள் தங்களுக்குள் உள்வாங்கிக்கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது நல்லதுதானே? ‘தொழில் நுட்பத்தில் தேர்ச்சிகொள்’ என்ற முழக்கம் நல்ல பயனைத் தந்தது, நல்ல விளைவுகளை உருவாக்கியது என்பதை உண்மைகள் காட்டுகின்றன.

இப்போது நாம் அற்புதமான பல நூற்றுக்கணக்கான, பல ஆயிரக்கணக்கான போல்ஷ்விக் வர்த்தக ஊழியர்களைப் பெற்றுள் ளோம், அவர்கள் ஏற்கெனவே தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். நமது தொழில்துறையை முன்னெடுத்துச் செல்பவர்கள். ஆனால், தங்களுடைய தொழில்நுட்ப பிற்பட்ட தன்மையை ஒப்புக்கொள்ளாத வர்த்தக ஊழியர்களின் பிடிவாதத்தன்மைக்கு நமது கட்சி பலியாகியிருக்குமானால், அவர்களுடைய தவறுகளை நமது கட்சி அவ்வப்போது உணர்ந்து கொள்ளாமல் இருந்திருக்குமானால், மேலும் அவர்களது தவறுகளை உரிய காலத்தில் திருத்தாமல் இருந் திருக்குமானால் இப்போது இத்தகைய ஊழியர்களை நாம் பெற்றிருக்க முடியாது.

சிலதோழர்கள், நமது தவறுகளைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது உகந்ததல்ல, வெளிப்படையாக நமது தவறுகளை ஒப்புக் கொள்வது நமது பலவீனம் என்று நமது எதிரிகளால் உய்த்துணரப்பட்டுவிடும். மேலும் அது, அவர்களால் பயன்படுத்திக் கொள்ளப் படும், என்று கூறுகிறார்கள். அது முட்டாள்தனம், தோழர்களே. நெறியற்ற முட்டாள்தனம். அதற்கு மாறாக நமது தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும், அந்தத் தவறுகளை மிகவும் நேர்மையாக திருத்திக்கொள்வதும் மட்டும்தான் நமது கட்சியைப் பலப்படுத்தும், நமது கட்சியின் நன்மதிப்பை தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் அறிவுத்துறையினர் பார்வையில் உயர்த்தும், நமது அரசின் வலிமையையும், ஆற்றலையும் அதிகப்படுத்தும். மேலும் அதுதான் முக்கிய விசயம். தொழிலாளர்களும், விவசாயி களும், உழைக்கும் அறிவுத்துறையினரும் நம்மோடு இருந்தால், எஞ்சியுள்ள அனைத்தும் வந்தே தீரும்.

படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

வேறுசில தோழர்கள், ‘நமது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது நமது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் வழியமைக்காது, ஆனால், அவர்கள் பலவீனம் அடையவும், தொல்லைப்படவும் செய்துவிடும். எனவே நாம் கட்டாயம் அதை ‘விட்டுவைத்து’ நமது அணியினர் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் கட்டாயம் அவர்களது சுய மதிப்பையும், மன அமைதியையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். ஆகையால் அவர்கள் நமது தோழர்களின் தவறுகள் மீது நெளிவு சுளிவாக இருக்கவேண்டும், விமர்சனத்தை தளர்த்தவேண்டும், இன்னும் சிறப்பாக இந்தத் தவறுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று முன்மொழிகிறார்கள். இத்தகைய போக்கு யாரை இவர்கள் விட்டு வைக்கவும்’, ‘கவனம் செலுத்தவும்’ வேண்டும் என்கிறார்களோ அந்த ஊழியர்களுக்கு நாம் செய்யும் தீவிரமான தவறு மட்டுமல்ல, உச்சகட்ட ஆபத்துமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆபத்தான தாகும். அவர்களது தவறுகளை நெளிவுசுளிவாக மூடிமறைப்பதன் மூலம் அந்த ஊழியர்களைப் பாதுகாப்பதும்’, ‘கவனம் செலுத்துவதும்’ என்பதன் பொருள் இந்த அதே ஊழியர்களை மிக உறுதியாகக் கொல்வதாகும். நாம் 1930-களின் தவறுகளை அம்பலப்படுத்தி இருக்காவிட்டால், இந்தத் தவறுகளைப்பற்றி அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்காவிட்டால் தொழிற்துறை போல்ஷ்விக்குகளை நாம் உறுதியாகக் கொன்றிருப்போம். ஷக்டி சீர்குலைவு காலகட்டத்தில் நமது தோழர்களின் தவறுகளை நாம் அம்பலப்படுத்தியிருக்கா விட்டால், இந்தத் தவறுகள் பற்றி நமது தொழில்துறை ஊழியர்களுக்கு கற்றுத் தந்திருக்காவிட்டால், நாம் உறுதியாகத் தொழில்துறை போல்ஷ்விக் ஊழியர்களைக் கொன்றிருப்போம். நமது தோழர்களின் தவறுகளை நெளிவுசுளிவாக மூடிமறைத்து அவர்களைப் பாதுகாக்கவும், சுயமதிப்பைக் காப்பாற்றவும் யார் எப்பொழுது முயற்சித்தாலும், அந்த ஊழியர்களையும், அவர்களது சுயமதிப்பையும் கொல்கிறார்கள். அவர்களது தவறுகளை மூடிமறைப்பதன் மூலம் அவர்கள் புதிய இன்னும் அபாயகரமான தவறுகளைச் செய்ய உதவுகிறார்கள். அவை ஒட்டு மொத்த ஊழியர்களையும் உடைந்து போகவும், அவர்களது சுயமதிப்பும், மன அமைதியும் குறைந்து போகவே வழிவகுக்கும்.

(தொடரும்)

நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

புதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் !

கடந்த ஜூலை மாதம் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ஜனநாயகம் இதழை தற்போது வெளியிடுகிறோம் ! செய்திகள் காலம் கடந்திருந்தாலும் புதிய ஜனநாயகத்தின் அரசியல் பார்வை என்றும் செயலூக்கமிக்கவை என்ற அடிப்படையில் இது வினவு வாசகர்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும் ! அனைவருக்கும் பகிருங்கள் ! நன்றி !

-வினவு

புதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

***

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. தலையங்கம் : இந்தியா – சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
2. சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
3. உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !
4. கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
5. ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
6. நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!
7. நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
8. நீதியில்லையேல், அமைதியில்லை !
9. ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் !

புதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகலாம். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

அறிவிப்பு :

புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகம் விரைவில் இடம் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. புதிய அலுவலக முகவரியை அறிவிக்கும் வரையில், இதுவரை பயன்படுத்தி வந்த அலுவலக முகவரிக்குப் பதிவு அஞ்சல், கூரியர், பணவிடை ஆகியவற்றை அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். – இவற்றுக்கு மாற்றாக, எமது மின்னஞ்சல் (puthiyaJananayagam@gmail.com); வாட்ஸ்-ஆப் மற்றும் G-pay (94446 32561) சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோருகிறோம்.

வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள விரும்பும் வாசகர்கள், முகவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தவிர்க்கவியலாத நிர்வாகக் காரணங்கள் மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக இதழ் தொடர்ச்சியாக வெளிவராத நிலையில், அச்சுப் பிரதிக்கான சந்தா தொகை செலுத்தியுள்ள வாசகர்களுக்கு விடுபட்டுள்ள இதழ்கள் அவர்கள் கணக்கில் நேர்செய்யப்பட்டு, அவர்களின் சந்தா காலம் அதற்கேற்ப நீட்டிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு.

***

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !

20

ன்பார்ந்த வினவு வாசகர்களுக்கு,

உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் களத்தில் வினவு இணையதளம் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

சமூக மாற்றத்தை விரும்பும் வாசகர்களும், ஆதரவாளர்களும் வழங்கும் மாதச் சந்தா மற்றும் நன்கொடையின் மூலமாகவே இத்தனை ஆண்டுகளாக வினவு இயங்கி வருகிறது. மேலும் அரசியல் தோழமையின் அடிப்படையில், புதிய ஜனநாயகம் மாத இதழும், வினவு தளத்தில் பணியாற்றும் பகுதிநேரத் தோழர்களும் வினவு தளத்தின் அவசியமான பொருளாதாரத் தேவைகளுக்கு கணிசமான தொகையை வழங்கி வருகின்றனர். இப்படிப் பலரது ஆதரவின் அடிப்படையில்தான் வினவுதளம் தொடக்கம் முதலே இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 அன்று மருதையன், நாதன் விலகலைத் தொடர்ந்து, வினவு ஆசிரியர் குழுவும் பொறுப்பிலிருந்து விலகியது. அதன் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வினவு தளத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக வினவு தளத்தில் பணியாற்றும் பெரும்பான்மைத் தோழர்கள் கூடி விவாதித்து, வினவு தளத்தின் தொடர்பாளராக இருந்த கண்ணையன் இராமதாஸ் (எ) காளியப்பன் அவர்களையே பொறுப்பாசிரியராக நியமித்தோம்.

வினவு தளத்தின் பொறுப்பாசிரியராக காளியப்பன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், வினவு தளத்தில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவரை பதிவுகள் வெளியிடும் பொறுப்பான இடத்தில் இருத்தினார்.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !

அவரது துணையோடு, கொரோனாவுக்கும் ஏகாதிபத்திய லாபவெறிக்குமிடையிலான உறவு குறித்த சமூக அரசியல் ஆய்வுக் கட்டுரை, மின்வாரிய சட்ட மசோதா – 2020 குறித்த கட்டுரை உள்ளிட்ட பல அரசியல் முக்கியத்துவமிக்க கட்டுரைகளை வெளியிடாமல் முடக்கினார்.

மார்க்சிய லெனினிய அரசியல் பத்திரிகையான புதிய ஜனநாயகம் இதழை மின்னூலாகவும், அதன் கட்டுரைகளை தனித் தனிப் பதிவுகளாகவும் வினவு தளத்தில் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்திருக்கிறோம். ஆனால் காளியப்பன் அவர்கள் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றதும், புதிய ஜனநாயகம் மே மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளில் அரசியல் முக்கியத்துவமிக்கப் பல கட்டுரைகளை எந்தவிதக் காரணமும் இன்றி தளத்தில் வெளிவராதவாறு முடக்கினார்.

கடந்த ஜூலை மாத புதிய ஜனநாயகம் இதழின் மின்னூல் வினவு தளத்தில் பதிவாக வெளியிடப்பட்டது. ஆனால் வெளியிட்ட சில நிமிடங்களில் எவ்விதக் காரணமும் கூறாமல் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். அந்த இதழில் வெளிவந்த இரு முக்கிய அரசியல் கட்டுரைகளான அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம் குறித்த கட்டுரையையும், இந்திய சீன எல்லை மோதல் குறித்த தலையங்கக் கட்டுரையையும் வெளியிடாமல் தடுத்தார். அந்த இரு கட்டுரைகளும் மின்னூலில் இருப்பதால் புதிய ஜனநாயகம் மின்னூலையும் வெளியிட விடாமல் தடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நக்சல்பாரி எழுச்சி நாளின் 53-ம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரை, இ.பொ.க (மா.லெ)-வின் முதல் காங்கிரஸ் நடைபெற்றதன் 50-ம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரை, பு.ஜ.தொ.மு-வின் மே நாள் பிரசுரம் ஆகியவற்றையும் வெளியிடாமல் நிறுத்தி வைத்தார்.

அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான மார்க்சிய – லெனினிய அரசியலை ஜனரஞ்சக ரீதியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே வினவு தளத்தின் நோக்கம். மேற்காணும் மா-லெ அரசியல் கட்டுரைகளை வெளியிடாமல் முடக்கியதன் மூலம் மா-லெ அரசியல் நிலைப்பாட்டிலிருந்து காளியப்பன் அவர்கள் வழுவிச் சென்றுள்ளார்.

மேலும் பல தோழர்கள் எழுதியனுப்பும் கட்டுரைகளையும் வெளியிடாததற்கான காரணத்தையோ, குறைபாட்டையோ கட்டுரையாளர்களுக்குத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் பொறுப்பாசியர் என்ற பொறுப்பிலிருந்தும் வழுவியுள்ளார்.

படிக்க :
♦ புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

காளியப்பன் அவர்களின் மேற்கூறிய செயல்பாடுகளின் தாக்கம், வினவு தளத்திற்காக பணியாற்றும் தோழர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களது பங்களிப்பு சுருங்கும் அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது. முழு நேரமாகப் பணியாற்றிய தோழர்கள், வெறுப்படைந்து பகுதி நேரமாக மாறினர்.

இந்நிலைமைகள் குறித்து வினவு தளத்தில் தற்போது பணியாற்றும் 12 தோழர்களும் விவாதித்தோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தத் தளத்தின் தொடர்பாளராக அறியப்பட்ட காளியப்பன் அவர்கள், டாஸ்மாக் எதிர்ப்புப் பாடலை வெளியிட்டதற்காக ஜெயா அரசால் வினவு தளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது வழக்கை துணிவோடு எதிர்கொண்டு அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியுள்ளார். அச்சமயத்தில் அவரை உந்தித் தள்ளிய மார்க்சிய லெனினிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் சென்றதையே அவரது சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன என்ற முடிவுக்கு ஒருமனதாக வந்தடைந்தோம்.

ஜூலை மாதத்திற்குப் பின்னர், பதிவுகள் வெளியிடும் பொறுப்புகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரது அரசியல்ரீதியான தலையீடுகளை வினவு தளத்தில் பணியாற்றும் தோழர்கள் அனுமதிப்பதில்லை. எனினும், தற்போதைய அரசியல் புறச் சூழலில், வினவு தளத்தின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக, கேடான அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் காளியப்பன் அவர்களை இனியும் பொறுப்பாசிரியராகக் கொண்டு செயல்படுவது என்பது அரசியல்ரீதியில் எமது செயல்பாடுகளை முடக்கிக் கொள்வதற்கு சமமானதாகும். ஆகவே, காளியப்பன் அவர்களை பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து நீக்குவது என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

மேலும், வலைப்பூவிலிருந்து (wordpress blog) வினவு இணையதளமாக (site) மாற்றப்பட்ட சமயத்தில், வினவு தளத்தின் சர்வர் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், நன்கொடை பெறுவதற்கும் காளியப்பன் அவர்களின் வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. வினவு தளத்தின் தொடர்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார். அந்த வகையில் தளத்தின் சட்டரீதியான உரிமையாளர் என்ற பொறுப்பும், தளத்திற்கான வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. காளியப்பன் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றிருந்த இந்த இடைக்காலத்தில், தம்மை உரிமையாளர் என்று அதிகாரத் தொனியில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை வினவு தளத்தில் பணியாற்றும் தோழருக்கு அனுப்பியுள்ளார்.

சமூக நோக்கிற்காக செயல்படும் தளத்தில், அதிகாரத்துவப் போக்கையும், உடைமைக் கண்ணோட்டத்தையும், கொடுக்கப்பட்ட பொறுப்பை தவறாக பயன்படுத்தும் போக்கையும் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. ஆகவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த “தளத்தின் சட்டரீதியான உரிமையாளர்” என்ற பொறுப்பையும், தளத்திற்கான “வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்” என்ற பொறுப்பையும் திரும்பப் பெற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.

மேற்கூறிய சட்டரீதியான மற்றும் தார்மீகரீதியான பொறுப்புகள் அனைத்தையும், வினவு தளம் பின்பற்றும் அரசியல் நிலைப்பாடுகளை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டுவரும் தோழர் மகாலெட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம்.  இனி வினவின் தொடர்பாளராக தோழர் மகாலெட்சுமி செயல்படுவார். அவரது தொடர்பு எண்-7358482113.

தளத்திலிருந்து வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான பொறுப்புகளை தோழர் மகாலெட்சுமியிடம் ஒப்படைக்க ஒத்துழைக்குமாறு காளியப்பன் அவர்களிடம் முறைப்படி கோரியுள்ளோம்.

இந்த பொறுப்பு மாற்றங்களின் நிலைமை குறித்து விரைவில் அறிவிக்கிறோம்.

தோழமையுடன்,

வினவு தோழர்கள்.
தொடர்புக்கு: 7358482113

மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

நாடெங்கும் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தனது கிளைகளை சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய உள்துறை அமைச்சகம். ஏற்கனவே கொச்சி கிளையின் மூலம் தமிழ்நாட்டு வழக்குகளை நிர்வகித்துவந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக சென்னையில் புதுக்கிளையை உருவாக்கி, அதன் தலைமைப் பொறுப்பில் காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியையும் நியமிக்கவுள்ளது.

மும்பையில் நடந்த 26/11 தாக்குதலைத் தொடர்ந்து, தேசியப் புலனாய்வு முகமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசால் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தலைமையகம் புதுடெல்லியிலும், அதன் கிளைகள் ஹைதாரபாத், குவஹாத்தி, மும்பை, கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், கொல்கத்தா, ஜம்மு காஷ்மீரிலும் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு பிரச்சனை வரக்கூடிய வழக்குகளை விசாரணை செய்யும் என்.ஐ.ஏ-விற்கு சிபிஐ அமைப்பை விட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்க உரிய மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. என்.ஐ.ஏ சட்டத்தின் படி இவர்களுக்கு தேவைப்படும் போலீசு படையை அனுப்பி வைக்கக்கூடிய கடமை அந்தந்த மாநில அரசுக்கு உள்ளது.

படிக்க :
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
♦ குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேசிய புலனாய்வு முகமை திருத்தச் சட்ட  மசோதாவை மக்களவையில் நிறைவேற்றினார் அமித்ஷா. அந்த திருத்த மசோதா, திமுக உள்ளிட்டு 278 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

அத்திருத்தத்தின்படி, வெளிநாடுகளுக்கு சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ வழக்குகளை விசாரித்து வரும் செசன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றுவதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ சட்டத்தின் கீழுள்ள குற்றங்களின் பட்டியலில் இருக்கும் எட்டுக் குற்றங்களோடு மேலும் கூடுதலாக நான்கு குற்றங்களை சேர்த்திருப்பது ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளைக் காட்டிலும் கூடுதல் அதிகாரத்தை என்.ஐ.ஏ. கையில் ஒப்படைத்தது மத்திய அரசு.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் என்.ஐ.ஏ-வின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க பாசிசமயமாகி இருக்கின்றன. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யாசிங் தாக்கூருக்குச் சாதகமாக வாதிடும் படி அரசுதரப்பு வழக்கறிஞரான ரோகிணி சாலியன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரி கேட்டுக்கொண்டதை அந்த வழக்கறிஞர் அம்பலப்படுத்தினார்.

பெரும்பாலான இந்துத்துவ தீவிரவாத வழக்குகள் என்.ஐ.ஏ. வசம் மாற்றப்பட்டன. ஒருபக்கம் இந்துத்துவ கிரிமினல்களை விடுவித்துக் கொண்டே, மறுபக்கம் மக்களுக்காக போராடும் சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கவும் என்.ஐ.ஏ.-வை பயன்படுத்தியுள்ளது பாஜக அரசு.

எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யபட்ட முற்போக்காளர்கள் !

பீமா கொரேகானில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் கிளப்பிவிட்ட சாதி வெறி மோதல்களை முகாந்திரமாக வைத்துக் கொண்டு வெர்னான் கன்சால்வேஸ், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாஜ் உள்ளிட்ட அறிவுத்துறையினர் 9 பேரைக் கைது செய்தது புனே போலீசு. மேலும் இவர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகப் போலி ஆதாரங்களைக் காட்டி அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஊபா ஆகிய கருப்புச் சட்டப் பிரிவுகளைப் பாய்ச்சியது. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2020-ல் கல்வியாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் தெல்டும்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோரையும் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்து ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஜீலை மாதத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹனிபாபுவை பீமாகொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பலருடன் தொடர்பு இருப்பதாகவும், பேராசிரியர் சாய்பாபாவை ஆதரித்து அவரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு நிதி திரட்டியதாகவும் கூறி ஊபா சட்டத்தில் கைது செய்தது என்.ஐ.ஏ.

மேலும், கடந்த செப்டம்பர்-8 மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிக்கர கலைக்குழுவை சேர்ந்த சகர் கோர்கே, ரமேஷ் கய்சோர், ஆகிய இருவருக்கும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், எல்கர் பரிஷத் மாநாட்டில் எதிர்ப்புணர்வைத் தூண்டும் வகையில் பாடியதாகவும், பேசியதாகவும் கைது செய்தது.

இம்மாதம் (அக்டோபர்) 8-ம் தேதியன்று, 83 வயது பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியான ஸ்டான் சுவாமி என்பவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. எல்கார் பரிஷத் வழக்கில் ஏற்கெனவே பலமுறை அவரை அழைத்து விசாரித்த என்.ஐ.ஏ. தற்போது அவரது கணிணியில் இருந்து மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தது. பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய ’குற்றத்திற்காக’ மாவோயிஸ்டாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருகிறார்.

படிக்க :
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

மொத்தத்தில், இதுவரை பீமா கொரேகான் வழக்கில் அறிவுத்துறையினர் 16 பேர், ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரின் கைதுக்கும் வலுவான ஆதாரங்கள் இல்லாத போதும் இன்றுவரை ஜாமீனும் தராமல், விடுதலையும் செய்யாமல் சிறையிலே முடக்கிப் போட்டு சித்ரவதை செய்து வருகிறது என்.ஐ.ஏ.. இதற்கு நீதிமன்றமும் துணை நிற்கிறது. இவர்கள் அனைவரும் செய்த ஒரே குற்றம், அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்ததே ஆகும்.

என்.ஐ.ஏ.-வின் காட்டு தர்பாருக்கு பின்வரும் நல்லதொரு உதாரணத்தைப் பார்க்கலாம். அசாமைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான அகில் கொகோய்க்கு நெருங்கியவரான, பிட்டூ சோனோவால் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், லால் சலாம் (செவ்வணக்கம்), காம்ரேட் (தோழர்) போன்ற பதங்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காரணம் காட்டி அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது என்.ஐ.ஏ.  முகநூலில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினாலே ஊபாவில் கைது செய்ய  முடியும் என்றால் அதன் அதிகார வரம்பை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

இதுவரை கைதானவர்கள் அனைவரும் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களிடம் பல உண்மைகளைக் கொண்டு சென்ற இந்தியாவின் தலைச்சிறந்த அறிவுஜீவிகளும் ஆவர். அவர்களை பழிவாங்கும் விதத்தில் இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தனக்கு கட்டுப்படாத மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் உள்ள எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சியினரை ஏற்கனவே கவர்னர் மூலமும், வருமான வரித்துறை மூலமும், நீதித்துறை மூலமும் மிரட்டி வருகிறது பாஜக.

ஏற்கெனவே இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழகத்திற்குள் புகுந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென்றாலும், பாஜகவை எதிர்க்கும் எதிர்க் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் செயல்படும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளுக்கும் எச்சரிக்கை மிரட்டல் விடுக்கும் வகையில் நேரடியாக தனது “அதிகாரப்பூர்வ” ஒடுக்குமுறைக் கருவியின் கிளையை சென்னையில் நிறுவ உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

பாஜகவின் கார்ப்பரேட் மற்றும் காவி பாசிச தாக்குதல்களின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள, புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணம் இது.

மேகலை

செய்தி ஆதாரம் : எக்கனாமிக் டைம்ஸ்

சீர்குலைவுவாதிகளோடு தொடர்புடையவர்களைக் கையாளுவது எப்படி ? || தோழர் ஸ்டாலின்

0

விவாதங்களுக்குப் பதில் உரை

பாகம் – 1

5 மார்ச், 1937

தோழர்களே,

எனது அறிக்கையில் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் பொருளின் முக்கியமான பிரச்சினைகளை நான் பகிர்ந்திருக்கிறேன். இந்த விவாதங்கள் நம்மிடையே இப்போது முழுமையான தெளிவை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டுகின்றன. அதாவது நம் கடமைகளைப் புரிந்துகொண்டிருக்கிறோம், நமது வேலைகளில் உள்ள குறைபாடுகளை அகற்றத் தயாராக உள்ளோம். ஆனால் இந்த விவாதங்கள், நமது அமைப்பு சார்ந்த மற்றும் அரசியல் நடைமுறைகள் சார்ந்த பல்வேறு உறுதியான பிரச்சினைகள் இங்கே உள்ளன. அவற்றின் மீது இன்னும் முழுமையான மற்றும் தெளிவான புரிதல்கள் இல்லை என்றும் காட்டுகின்றன. அத்தகைய ஏழு பிரச்சினைகளை நான் கணக்கிட்டுள் ளேன்.

இந்தப் பிரச்சினைகள் பற்றி சில வார்த்தைகள் பேச என்னை அனுமதியுங்கள்.

1 பொருளாதார செயல்பாடுகளால் அதிகமாக உள்வாங்கப்பட்டு, பொருளாதார வெற்றிகளால் எடுத்துச் செல்லப்பட நம்மை நாமே அனுமதித்துக் கொள்ளும்போது, கட்சியின் அரசியல் பிரச்சினைகள் குறைத்து மதிப்பிடப்படுவதும், மறக்கப்படுவதும் ஒரு முட்டுச் சந்துக்கு இட்டுச்செல்கின்றன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டுள்ளார்கள், உணர்கிறார்கள் என்பதை நாம் கட்டாயம் அனுமானித்தாக வேண்டும். இதன் விளைவாக கட்சி ஊழியர்களின் கவனம் கட்சியின் அரசியல் பிரச்சினைகளின் திசையில் கட்டாயம் திரும்ப வேண்டும். அதனால் பொருளாதார வெற்றிகள் கட்சியின் அரசியல் வேலைகளோடு இணைந்து பக்கம் பக்கமாக முன்செல்லும்.

கட்சியின் அரசியல் வேலையை வலுப்படுத்தும் கடமைப் பொறுப்பும், சிறிய பொருளாதாரச் செயல்பாடுகளிலிருந்து கட்சி அமைப்புகளை விடுவிக்கும் கடமைப் பொறுப்பும் நடைமுறையில் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? விவாதங்களிலிருந்து தெரியவருவது போல் சில தோழர்கள் பொருளாதார வேலைகளை இப்போது முழுவதுமாக கைவிட வேண்டும் என்று தவறான முடிவை வரைவதற்கு கருத்து கொண்டுவிட்டார்கள். எல்லா நிகழ்வுகளிலும் அங்கே குரல்கள் எழுகின்றன. அவை கூறுவது: ‘நல்லது. இப்போது கடவுளுக்கு நன்றி. நாம் பொருளாதார விவகாரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவோம், இப்போது நம்மால் நமது கவனத்தை கட்சி வேலைகளுக்கு அர்ப்பணிக்க முடியும்.’ இந்த முடிவு சரியானதுதானா? இல்லை. அது சரியானதல்ல.

படிக்க :
♦ கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

நமது தோழர்கள் பொருளாதார வெற்றிகளால் இழுத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் அரசியலைக் கைவிட்டார்கள். இது இறுதி எல்லைக்குக் கொண்டு சென்றது. அதற்காக நாம் கடுமையான விலை தர வேண்டியதாயிற்று. இப்போது சில தோழர்கள் கட்சியின் அரசியல் வேலைகளை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளும் போது பொருளாதார வேலைகளைக் கைவிட நினைப்பது இன்னொரு இறுதி எல்லைக்குச் செல்வதாகும். இதற்காக நாம் குறைவாக அல்ல, கடுமையான விலையைத் தரவேண்டியிருக்கும். அரசியல், பொருளாதாரத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. நம்மால் அரசியலைக் கைவிட முடிந்ததைவிட இனி மேலும் பொருளாதாரத்தைக் கைவிட முடியாது. ஆய்வுகளின் வசதிக்காக மக்கள் வழக்கமாக ஆராய்ச்சிமுறைகளின்படி பொருளாதாரத்தின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரிக்கிறார்கள். ஆனால் இது ஆராய்ச்சி வழிமுறைகளுக்காக மட்டுமே செய்யப்படுகிறது.

உண்மை வாழ்வில் எப்படியிருந்தாலும், நடைமுறையில் அரசியல், பொருளாதாரத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அவை ஒன்றாகவே நிகழ்கின்றன, ஒன்றாகவே செயல்படுகின்றன. மேலும் நமது நடைமுறை வேலைகளில் யார் ஒருவர் பொருளாதாரத்தை அரசியலிலிருந்து பிரிக்க நினைக்கிறாரோ, அரசியல் வேலையைக் கைவிட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நினைக்கிறாரோ அல்லது அதற்குமாறாக, பொருளாதார வேலைகளைக் கைவிட்டு அரசியல் வேலையை வலுப்படுத்த நினைக்கிறாரோ, அவர் தவிர்க்க முடியாமல் தன்னை முட்டுச்சந்துக்குள் காண்பார்.

சின்னஞ்சிறு பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து கட்சியை விடுவிப்பது மற்றும் கட்சியின் அரசியல் வேலையை அதிகரிப்பது என்ற நகல் தீர்மானத்தின் பொருள் நாம் பொருளாதார வேலைகளையும், பொருளாதாரத் தலைமையையும் கைவிட்டுவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் இனிமேலும் வெறுமனே நமது கட்சி அமைப்புகளை வர்த்தக அமைப்புகளுக்கு மாற்றாக வைக்க அனுமதிக்கக் கூடாது; குறிப்பாக நிலம் சார்ந்த துறைகளில் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளை அவர்களிடமிருந்து எடுத்துவிட வேண்டும். அதைத் தொடர்ந்து வர்த்தக அமைப்புகளை வழிநடத்தும் போல்ஷ்விக் வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவை இந்த அமைப்புகளுக்கு திட்டமிட்டபடி முழு நிறைவாக உதவும், திட்டமிட்டபடி முழு நிறைவாக அவற்றைப் பலப்படுத்தும். இந்த அமைப்புகளின் தலைவர்கள் மூலமாக அல்ல, அவற்றின் செயல்படு முறை மூலமாக இந்த வர்த்தக அமைப்புகளை பொருளாதாரத்துக்கு வழிகாட்ட முறையாக வலப்படுத்தும் முறையாக உதவிடும் போல்சவிக் வழிமுறையை நாம் கற்க வேண்டும்.

ஜோசப் ஸ்டாலின்

நாம் வர்த்தக அமைப்புகளுக்கும், முதன்மையாக நிலம் சார்ந்த அமைப்புகளுக்கும் சிறந்த நபர்களைத் தரவேண்டும். இந்த அமைப்புகளில் உள்ள அலுவலர் பணியிடங்களை சிறந்தவகையான புதிய தொழிலாளர்களைக் கொண்டு நிரப்பவேண்டும். அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதைச் செய்து முடித்த பிறகு மட்டும்தான் நாம் கட்சி அமைப்புகளை சிறிய பொருளாதார விசயங்களிலிருந்து முற்றிலும் விடுவிப்பது பற்றி கணக்கிடலாம். உண்மையில் இது ஒரு கருத்தூன்றிச் செய்யப்படவேண்டிய விசயம். மேலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரமும் தேவைப்படும். ஆனால் இதைச் செய்து முடிக்கும் வரை கட்சி அமைப்புகள் ஒரு குறுகிய காலத்துக்கு மிக நெருக்கமாக இருந்து உழவு, விதைப்பு, அறுவடை முதலான எல்லாச் செயல்களையும் தொடர வேண்டியிருக்கும்.

2 சீர்குலைவாளர்கள், திசைதிருப்புவோர், உளவாளிகள் முதலானவர்கள் பற்றி இரண்டு வார்த்தைகள் : இன்றைய நாள் சீர்குலைவாளர்கள் மற்றும் திசைதிருப்புவோர், அவர்கள் எத்தனை மாறுவேடமிட்டு வந்தாலும் டிராட்ஸ்கியர்களோ அல்லது புகாரினியர்களோ, தொழிலாளர் இயக்கத்தில் ஓர் அரசியல் போக்காக இருந்ததிலிருந்து மிக முன்பே நீங்கி, அவர்கள் தொழில்முறை சீர்குலைவாளர்களாக, திசைதிருப்புவோராக, உளவாளிகளாக மற்றும் கொலைகாரர்களாக மாறிவிட்டார்கள் என இப்போது ஒவ்வொருவரும் தெளிவாகி விட்டார்கள் என்று நான் கருதுகிறேன். உண்மையில் இந்தக் கனவான்கள் ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகள், நமது நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள் என்ற முறையில் வேருடன் பிடுங்கி எறியப்பட வேண்டும். இது, தெளிவானதும், எந்தவொரு கூடுதல் விளக்கங்களும் தேவைப்படாததாகும்.

ஆனால், கேள்விகள் எழுகின்றன : ‘ஜப்பானிய – ஜெர்மானிய டிராட்ஸ்கிய கையாட்களை அடித்துத் துவைத்து வேருடன் பிடுங்கி எறியும் கடமையை எவ்வாறு நடைமுறையில் நிறைவேற்றுவது?

உண்மையான டிராட்ஸ்கியர்களை மட்டுமல்ல, ஆனால் யார் சில நேரங்களில் அல்லது மற்ற நேரங்களில் டிராட்ஸ்கியத்தின் திசையில் ஊசலாடி, அதன்பின் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்தைக் கைவிட்டார்களோ அவர்களையும், யார் உண்மையில் டிராட்ஸ்கிய சீர்குலைவு கையாட்களோ அவர்களை மட்டுமின்றி, சில நேரங்களில் சில ட்ராட்ஸ்கியர்கள் நடந்து சென்ற வீதிவழியே ஒரேநேரத்தில் நடந்து சென்றவர்களையும் கூட அடித்து நொறுக்கி வேருடன் கலைய வேண்டும் என்று அர்த்தமா? எல்லா நிகழ்வுகளிலும் இந்தக் கூட்டுக் கூட்டத்தில் இத்தகைய குரல்கள் கேட்டன. இந்தத் தீர்மானத்துக்கான இத்தகைய விளக்கம் சரிதானா? இல்லை. அதைச் சரியானதாகக் கருதமுடியாது. மற்ற எல்லாவற்றிலும் போலவே, இந்த விசயத்திலும் ஒரு தனிப்பட்ட வேறுபாடு கண்டறியும் அணுகுமுறை தேவை. உங்களால் ஒவ்வொன்றையும் அதே அளவுகோலால் அளவிட முடியாது. அத்தகைய ஒட்டு மொத்த அணுகுமுறை உண்மையான ட்ராட்ஸ்கிய சீர்குலைவாளர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு ஊறு விளைவித்துவிடும்.

நமது பொறுப்புமிக்க தோழர்களிடையே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்னாள் டிராட்ஸ்கியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்தைக் கை விட்டவர்கள். டிராட்ஸ்கியத்தை எதிர்த்து, டிராட்ஸ்கியத்தின்பால் ஒருபோதும் அலைபாயாத மதிப்புக்குரிய நமது தோழர்களைவிட, குறைவாக அல்ல, உண்மையில் மிகக்கடுமையாகப் போராடுகிறார்கள். அத்தகைய தோழர்கள் மீது ஒரு களங்கத்தை இப்போது சுமத்துவது முட்டாள்தனமாகும்.

நமது தோழர்களிடையே சித்தாந்த ரீதியாக டிராட்ஸ்கியத்தை எதிர்ப்போர், டிராட்ஸ்கியர்களிடம் தனிப்பட்ட தொடர்புகளை மேற்கொண்டு வந்தார்கள். அதை அவர்கள் டிராட்ஸ்கியத்தின்  நடைமுறை அம்சங்கள் அவர்களுக்குத் தெளிவான உடனேயே அந்தத் தொடர்புகளை விட்டுவிடத் தயங்கவில்லை. உண்மையில் அவர்கள் தனிப்பட்ட டிராட்ஸ்கியர்களுடனான தங்களது தனிப்பட்ட நட்புத் தொடர்புகளை உடனடியாக காலம் தாழ்த்தாமல் முறித்துக் கொண்டிருந்தால் மிகவும் நல்லது. ஆனால், இத்தகைய தோழர்களை டிராட்ஸ்கியர்களோடு சேர்ப்பது முட்டாள்தனமாகும்.

படிக்க :
♦ பாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா ?
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

3 சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவர்களை சரியான இடங்களில் வைப்பது என்பதன் பொருள் என்ன?

முதலாவதாக இதன்பொருள், அரசியல் கொள்கைக்கேற்ப ஊழியர்களைத் தேர்வு செய்தல், அதாவது, அவர்கள் அரசியல் நம்பிக்கை வைக்க பொருத்தமானவர்களா? இரண்டாவதாக, வர்த்தகக் கொள்கைக்கேற்ப, அதாவது அவர்கள் அத்தகைய, உறுதியான வேலைகளுக்குப் பொருந்துகிறார்களா? என்று பார்ப்பது.

இதன் பொருள், வர்த்தக அணுகுமுறை ஒரு மிகக்குறுகிய வர்த்தக அணுகுமுறையாக மாற்றப்பட்டு விடக்கூடாது. ஒரு ஊழியரின் வர்த்தகத் தகுதிகளைப் பற்றி தாங்களாகவே சிலர் ஆர்வம் கொள்ளும் போதிலும், அவர்கள் தாங்களாகவே அந்த ஊழியரின் அரசியல் முகத்தோற்றம் பற்றி ஆர்வம் காட்டுவதில்லை.

இதன் பொருள், ஒரு ஊழியரின் அரசியல் முகத்தோற்றத்தில் தாங்களாகவே ஆர்வம் கொள்ளும்போது, அவர்கள் அந்த ஊழியரின் வர்த்தகத் தகுதிகளில் தாங்களாகவே ஆர்வம் கொள்வதில்லை. அதாவது அரசியல் அணுகுமுறை மட்டுமே தனிப்பட்ட ஒற்றை அணுகுமுறையாக மாற்றப்பட்டுவிடக் கூடாது.

நமது தோழர்களால் போல்ஷ்விக் விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று கூற முடியுமா? கெடுவாய்ப்பாக இவ்வாறு கூற முடியாது. இந்தக் கூட்டுக்கூட்டத்தில் இதற்கான மேற்கோள்கள் காட்டப்பட்டன. ஆனால், இதைப் பற்றிய எல்லா விசயங்களும் கூறப்படவில்லை. இதன் புள்ளி என்னவென்றால், முயற்சிசெய்து பரிசோதிக்கப்பட்ட இந்த விதி அடிக்கடி நமது நடைமுறை வேலைகளில் மிகவும் படுமோசமான முறையில் மீறப்படுகிறது. தொழிலாளர்கள் புறநிலையான காரணங்களுக்காகப் பெரும்பாலாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, அதற்கு மாறாக முறையற்ற, அகநிலையாக அற்பவாத, குட்டிமுதலாளித்துவக் காரணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அடிக்கடி அறிமுகமானவர், நண்பர், நகரத்தில் உடன் இருப்பவர், தனிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள நபர்கள், தங்கள் தலைமையைப் போற்றிப் புகழும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் அவர்களுடைய அரசியல் மற்றும் தொழில் வர்த்தகப் பொருத்தம் பாராது நியமிக்கப்படுகிறார்கள்.

இயல்பாகவே, பொறுப்புமிக்க ஊழியர்கள் குழுவின் வழிகாட்டலுக்குப் பதிலாக, நாம் ஒரு சிறு குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களை ஒரு பரஸ்பர உதவி கட்டமைப்பை பெற்றிருக்கிறோம். அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் சமாதானமாக வாழ முயற்சிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்க முயல்வதில்லை. பொது இடங்களில் தங்கள் குறைகளை பேசத் தயங்குகிறார்கள், ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள். நேரத்துக்கு நேரம் வெற்றிகளைப் பற்றிய சலிப்பூட்டுகிற, எரிச்சல்தரும் அறிக்கைகளை மையத்துக்கு அனுப்புகிறார்கள்.

இத்தகைய ஒரு குடும்ப சூழ்நிலையில் வேலையில் உள்ள குறைபாடு பற்றி விமர்சிக்கவோ அல்லது வேலைக்குத் தலைமையேற்பவர்களின் சுயவிமர்சனத்துக்கோ இடமில்லை என்பதைப் புரிந்துகொள்வது சிரமமானதாக இல்லை .

நிச்சயமாக இத்தகைய ஒரு குடும்ப சூழ்நிலை அடிவருடிகளை உருவாக்குவதற்கு ஆதரவான சூழ்நிலை, சுயமரியாதை உணர்வை இழந்த நபர்களை உருவாக்குவதற்குச் சாதகமாக உள்ளது. எனவே இதற்கும் போல்ஷ்வியத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

உதாரணத்துக்கு தோழர்கள் மிர்ஸோயன் மற்றும் வைனோ – வை எடுத்துக் கொள்ளுங்கள். முதலாமவர் கஜகஸ்தான் ஆட்சிப்பகுதி கட்சியின் முதன்மைச் செயலாளர். இரண்டாமவர் யாரோஸ்லாவ்ல் வட்டாரக் கட்சி அமைப்பின் செயலாளர். இந்த நபர்கள் நம்மிடையே மிக மோசமானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் ஊழியர்களை எவ்வாறு தேர்வு செய்தார்கள்? முதலாமவர் தான் முன்பு வேலை செய்த அஜர்பைஜான் முதல் உரால்ஸ் வரை 30 முதல் 40 வரையான எண்ணிக்கையில் தனது சொந்த ஆட்களைத் தன்னுடன் அஜர்பைஜானுக்குக் கொண்டு சென்றார். அவர்களை கஜகஸ்தானில் பொறுப்புமிக்க பதவிகளில் அமர்த்தினார். இரண்டாமவர் தான் முன்பு வேலை செய்த டோனெட்ஸ்லிருந்து 12-க்கும் மேற்பட்ட தனது சொந்த ‘ ஆட்களை யாரோஸ்லாவ்லுக்குக் கொண்டு சென்றார். பொறுப்புமிக்க பதவிகளில் அமர்த்தினார்.

மேலும் தோழர் மிர்ஸோயன் தனது சொந்த பரஸ்பர உதவி கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் தோழர் வைனோவும் கூட தனது சொந்த பரஸ்பர உதவிக் குழுவை வைத்துள்ளார். போல்ஷ்விக் வழிமுறைகளில் நபர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணியில் அமர்த்தவும் வழிகாட்டப்பட்டிருந்தால் அவர்கள் ஊழியர்களை உள்ளூர் மக்களிலிருந்தே தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்களா? நிச்சயமாக அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அப்படியானால் அவர்கள் இவ்வாறு ஏன் செய்யவில்லை?

ஏனென்றால் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போல்ஷ்விக் வழிமுறை, அற்பவாத குட்டிமுதலாளித்துவ அணுகுமுறையை நடைமுறைக்கு ஒவ்வாததாக்கிவிடுகிறது. தொழிலாளர்களை குடும்ப உறவு மற்றும் சொந்த நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் சாத்தியத்தை நடைமுறைக்கு ஒவ்வாததாக்கிவிடுகிறது. மேலும் தனிப்பட்டமுறையில் தங்களுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்தத் தோழர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளூர் மக்களிடம் இருந்து சுதந்திரமாக, கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து சுதந்திரமாகத் தங்களை ஆக்கிக்கொள்ள வெளிப்படையாகவே விரும்புகிறார்கள். தோழர்கள் மிர்ஸோயனும், வைனோவும் சில சூழ்நிலைகள் காரணமாகவோ அல்லது மற்ற காரணங்களாலோ அவர்கள் இப்போதைய வேலை இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அத்தகைய ஒரு நிகழ்வில் தங்கள் ‘சீடர்களை’ என்ன செய்வார்கள்? அவர்கள் வேலைசெய்யச் செல்லும் புதிய இடங்களுக்கே அவர்களை மீண்டும் கொண்டு செல்வார்களா?

இத்தகைய ஒரு நகைப்புக்கிடமான நிலைக்குத்தான் நபர்களை முறையாகத் தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்துவது என்ற போல்ஷ்விக் வழிமுறை மீறப்படுவது கொண்டு செல்கிறது.

(தொடரும்)

நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை !

PP Letter head

 

 

பத்திரிகை செய்தி

12.10.2020

க்கள் அதிகாரம் அமைப்பை சீரமைக்கும் நோக்கில் கடந்த 06.10.2020 அன்று செயற்குழு கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்தது. கருத்து வேறுபாடு காரணமாக தோழர் ராஜுவை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்ததோடு, கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோரும் அவரவர் வகித்து வந்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சீர்குலைவு மற்றும் அமைப்பு விரோத வேலைகளில் ஈடுபட்டு வந்த தலைமைக் குழு உறுப்பினர்களான கணேசன் மற்றும் காளியப்பன் ஆகியோர் மக்கள் அதிகார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இந்த செயற்குழுவின் முடிவு அன்றைய தினமே விடுவிக்கப்பட்ட, நீக்கப்பட்ட தலைமை குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு பத்திரிக்கை செய்தியாகவும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர் ராஜு அவர்கள் “நான் மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து விலகப் போகிறேன்” என்று 06.10.2020 அன்று தலைமைக் குழுவிற்கான வாட்சப் பதிவில் வெளியிட்டு விட்டு, மாநில பொதுக்குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை வைத்துக் கூட்டம் நடத்தி, அதில் தீர்மானம் என்ற பெயரில் தொகுக்கப்பட்ட அவதூறுகளை பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

படிக்க :
♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !
♦ உ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் !

மக்கள் அதிகாரம் அமைப்பு முறையாக தனது செயற்குழுவைக் கூட்டி 06.10.2020 அன்று எடுத்த மேற்கண்ட முடிவை “அமைப்பு விரோத – ஜனநாயக விரோத” நடவடிக்கை என்று கூறுவது உண்மை நிலைமைக்கு மாறானது. ஆகையால் இது அவதூறானது. ஏனெனில் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளாதவர்களும் அமைப்பு விரோத சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டவர்களும் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது என்பது அமைப்பை ஆக்கப்பூர்வமாக வழி நடத்திச் செல்வதற்கு உகந்ததல்ல. ஆகையால் இவர்கள் மீதான நடவடிக்கை என்பது சரியானதே.

இவர்கள் கூறுவது போல மக்கள் அதிகாரம் அமைப்பு துவங்கப்பட்ட காலத்திலிருந்தே வழக்கறிஞர் ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராகவும், கணேசன் மற்றும் காளியப்பன் ஆகிய இருவரும் தலைமைக் குழு உறுப்பினராகளாகவும் செயல்பட்டு வருவதாகவே இருக்கட்டும்; அதற்காக கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ள முயலாமல் தொடர்ந்து நீடிப்பதையும், அமைப்பு விரோத சீர்குலைவு வேலைகளில் தெரிந்தே ஈடுபடுவதையும் அனுமதிக்க முடியுமா? முடியாது.

ஆகையால் அமைப்பின் நோக்கத்திற்கேற்ப, நிலைப்பாட்டிற்கேற்ப ஒருங்கிணைந்து செயல்பட தன்னிடம் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ள முன்வராதவர்கள் மீதான நடவடிக்கை என்பது சரியானதே. ஆக்கப்பூர்வமாக விவாதித்து கருத்து வேறுபாடுகளை களைந்து கொண்டு ஆரோக்கியமாக அமைப்பை வழி நடத்தி செல்லும் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, சாந்தகுமார், முத்துக்குமார் ஆகியோரை, மக்கள் அதிகாரம் தலைமைக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜுவின் தலைமையிலான பொதுக்குழு நீக்குவது என்பதுதான் அமைப்பு விரோத நடவடிக்கை. இது ஒரு எதிர் நடவடிக்கை.

இவர்கள் கூறுவது போல ‘சிலரின் ஆசை வார்த்தைக்கு’ பலியாக அணிகள் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்களும் அல்ல. ஆகையால்தான் நீங்கள் உண்மையை திரித்து சொல்வதையும், அணிகளை அவமதிப்பதையும் அவர்களின் சொந்த சிந்தனையில் உணர்ந்துதான் உங்களைப் புறக்கணித்து எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில் அமைப்பிற்கு விரோதமாகவும், சதி வேலைகளில் ஈடுபட்டு அமைப்பை சீர்குலைக்கும், பிளக்கும் கணேசன், காளியப்பன் போன்ற சதிகாரர்களையும், கருத்து வேறுபாடுகளை களைந்து கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட முன்வராதவர்களையும் வைத்துக்கொண்டு அமைப்பை ஆரோக்கியமாக வழிநடத்தி செல்ல இயலாது. “ஒரு படி பாலுக்கு ஒரு பிடி விஷம்” என்பது போல பெரும்பான்மை மக்களுக்கு இது கேடு விளைவிப்பதாக அமைந்து விடும். இந்த கேட்டை அமைப்பிற்குள் அனுமதிக்காமல் அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தை அசராமல் நடத்துவதன் மூலமே ஆக்கப்பூர்வமான அமைப்பை கட்டி வளர்க்க முடியும். ஆரோக்கியமான புரட்சிகர உணர்வுள்ள அணிகளை வளர்த்தெடுக்கவும் இயலும் என்பதை உணர்ந்து நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆதிக்க சாதியினரால் மனிஷா என்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதற்கு ராஜூ தலைமையிலான பொதுக்குழு முன்வைக்கும் கோரிக்கையானது; “குண்டர்கள் ஆட்சி நடக்கும் உ.பி பாஜக அரசை கலைத்துவிட்டு, நீதித்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிலகாலம் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்பதே. ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே திவாலாகி தோற்றுப்போய் நிலைகுலைந்து எதிர்நிலை சக்திகளாக மாறிப்போன இவற்றில் ஒன்றை மாற்றாக முன்நிறுத்தக் கோருவது மக்கள் அதிகாரம் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானது. ஆகையால் இவர்களுடன் இணைந்து இயங்க முடியாது.

“மக்கள் அதிகாரம் அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். ஆள அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை அப்புறப்படுத்துவோம். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். அதை தடுக்க ஏறிதாக்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை மக்களுடன் இரண்டறக் கலந்து களத்தில் நின்று முறியடிப்போம்.” இதன்மூலம் ஏற்றுக்கொண்ட இலக்கை சாதிப்போம்.

தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

தலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா ?

3

ராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை பஞ்சாயத்து கூட்டத்தின்போது தரையில் அமரச் செய்தது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்ததைத் தொடர்ந்து அப்பிரச்சினை தற்போது பேசப்படுகிறது.

கடலூர் மாவட்டம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஊராட்சி மன்றத்தேர்தலில் தெற்குத் திட்டை ஊராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கான ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கபட்டது. அதில் போட்டியிட்டு ராஜேஷ்வரி பெருவாரியான வாக்குவித்தியாசத்தில்  வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி அன்று நடந்த ஊராட்சி மன்றக் கூட்டத்தில் சுகந்தி மற்றும் ராஜேஷ்வரியை தரையில் அமரச் செய்திருக்கிறார், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன். நாற்காலியில் அமர்ந்திருந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி தரையில் அமரும் வரையில் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்துள்ளார் மோகன்.

படிக்க :
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !
♦ கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்

இந்த நிகழ்வு குறித்து கடந்த அக்டோபர் 10-ம் தேதியன்று புவனகிரி போலீசு நிலையத்தில் ராஜேஷ்வரி புகார் அளித்துள்ளார். அதில் பஞ்சாயத்து துணை தலைவர் மோகனின் சாதி வெறி நடவடிக்கைகளைக் குறுப்பிட்டுப் புகாரளித்துள்ளார். சாதிய ரீதியாக அவமானப்படுத்திய துணைத் தலைவர் மோகன் மீது, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரடியாக தலையிட்டதைத் தொடர்ந்து தேர்தல் நெருங்குவதையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலையிட்டுள்ளார். அதனையடுத்து ஊராட்சி மன்றச் செயலாளர் சிந்துஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஊராட்சித் துணைத்தலைவர் மோகன் தலைமறைவாகிவிட்டார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் ராஜேஷ்வரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் அவரை ஊராட்சி துணைத் தலைவர் மோகன் அவமானப்படுத்தியிருக்கிறார். தனக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்த 5 வார்டு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மோகன்.

ஊராட்சி மன்றத்தில் பெரும்பான்மையினர் சாதி இந்துக்களே என்பதைக் காட்டி, தமக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அனைவரையும் திரட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு பதவியிலிருந்து நீக்கப் போவதாகவும் மோகன் மிரட்டியுள்ளார்.

தான் சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் தனது சொல்பேச்சைக் கேட்கவில்லை எனில் உயிருக்கு உத்தராவதம் இல்லை என்றும் ராஜேஷ்வரியை மோகன் மிரட்டியதாகவும் அதனையொட்டிதான் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் ராஜேஷ்வரியின் கணவர் சரவணக்குமார், தி நியூஸ்மினிட் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

தரையில் அமரச் செய்யப்பட்ட ராஜேஷ்வரி

ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஊராட்சி மன்றக் கூட்டங்களில் ராஜேஸ்வரியை நாற்காலியில் உட்கார அனுமதிப்பதில்லை. குடியரசு தினவிழாவிலும், சுதந்திர தினவிழாவிலும் கொடியேற்றவும் அவரை அனுமதிக்கவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் என்பவரை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அவமானப்படுத்திய நிகழ்வு நினைவிருக்கலாம்.

மிகச்சில சம்பவங்களே வெளிவந்திருந்தாலும், இதுபோன்று வெளிவராத சம்பவங்கள் பல அன்றாடம் நடந்து வருகின்றன. இத்தகைய சாதியரீதியான ஒடுக்குமுறை மற்றும் அயோக்கியத்தனங்கள் அனைத்துமே அதிகபட்சமாக போலீசு நிலையத்தில் இருதரப்பு பஞ்சாயத்துகளோடு  ‘முடித்து’ வைக்கப்பட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இது குறித்து பிபிசி தமிழ் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகனிடம் கேட்டதற்குப் பதிலளித்த மோகன், தாங்கள் யாரும் அவர்கள் இருவரையும் (ராஜேஷ்வரி, சுகந்தி) தரையில் அமரச் சொல்வதில்லை என்றும், அவர்கள் இருவரும் தாங்களாகவே தரையில் அமர்ந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இரண்டு மாதம் கழித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகாரில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பிரச்சினைகளில், பொதுவாகவே ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் வாதம் இதுதான். “நாங்கள் அப்படிச் செய்யச் சொல்வதில்லை. அவர்களாகவே அவ்வாறு இருக்கின்றனர்; நாங்கள் அனைவரையும் சரிசமமாகவே பார்க்கிறோம்; நாங்களெல்லாம் ஊருக்குள் தாயாக பிள்ளையாக நடந்து கொள்கிறோம்” என்பது போன்ற வசனங்களுக்கு குறிப்பாக தமிழகத்தில் பஞ்சமில்லை.

கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப்பெற்ற சலுகைகளையும் தட்டிப் பறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாதிய சமூகக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கான ஒரே வழிமுறையாக இருப்பது உழைக்கும் மக்களை விவசாயியாக, தொழிலாளியாக, மாணவர்களாக என வர்க்கங்களாக அணிதிரட்டுவது மட்டும்தான்.

அதனைச் சாதிக்காதவரை சாதியரீதியான இத்தகைய ஒடுக்குமுறைகளைத் தடுக்க முடியாது.


சரண்
செய்தி ஆதாரம் : தி நியூஸ்மினிட், பிபிசி தமிழ்

‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

“ஏதாவது ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எங்களோடு பேச்சு நடத்த மத்தியக் குழுவுக்கு நிர்ப்பந்தம் வரும்; அதன்மூலம், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்” – என்கிறார் காமனேவ்; தோ…ழர்… காமனேவ்.
“கிரேவை நான் சுடும்போது என்ன நினைத்தேன் என்றால், சோவியத் கட்சிக்கும் சோவியத் அரசுக்கும் எதிரான புரட்சிக்கு – எழுச்சிக்கு எனது தோட்டா ஒரு சமிக்ஞையாக இருக்க வேண்டும் என்பதுதான்” என திமிர்த்தனமாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான், நிக்கோலயேவ்.
காமனேவ் ஒரு புரட்சியாளனைப் போல பேசுகிறார் அல்லவா? நிக்கோலயேவின் பேச்சு சோவியத் கட்சியும் சோவியத் அரசும் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான ஒரு பிற்போக்கானது என்ற தோற்றத்தைக் கொடுக்கிறதல்லவா? உண்மையில் இவர்கள் இருவரும் ஒரு தேர்ந்த சதிகாரர்கள். ‘ஏதாவது ஒரு சூழ்நிலை என்று காமனேவ் கூறுவது கொலையைக் குறிக்கிறது. கொலைகாரனின் பெயர் நிக்கோலயேவ். ஜினோவியவாதிகளின் எதிர்ப்புரட்சி ரகசிய குழுவின் உறுப்பினன்.
ஒரு தோழனைப் போல வேடமிட்டு, தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிய கொலைகாரன் நிக்கோலயேவ்; சுட்டது செர்கி கிரேவ் என்ற தோழரை… தோழர் செர்கி கிரேவ், கட்சியின் லெனின்கிராட் பகுதி செயலரும் கட்சியின் தீவிரப் பற்றாளரும் ஆவார். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்திலேயே இந்தக் கொலை நடக்கிறது. காரணம், கட்சியை சீர்குலைக்கும் சதிகாரர்களையும் கட்சியில் நாசவேலையில் ஈடுபடுபவர்களையும் தோழர் கிரேவ் கண்டறிந்தார் என்பதற்காக …
நிக்கோலயேவ் போன்ற கொலைகாரர்களை நேரில் பலரும் பார்த்திருக்கக் கூடும்.. கண்ணுக்கு முன்னே தென்படும் சக தோழர்களாக இருப்பார்கள்; கையும் களவுமாகப் பிடிபட்டு அம்பலப்பட்டு நிற்பார்கள். இவர்கள்தான் சதியை நடத்தி முடிக்கும் தளபதிகள். ஆனால், சதிக்கு மூளையாக செயல்படுபவர்களை – சதிக் கும்பலின் தலைவர்களை அவ்வளவு எளிதாக காண முடியாது. அவர்கள் தங்களது சதி செயல்பாடுகளை மறைத்து, ‘தகுதி’ மற்றும் ‘திறமை’க்குள் ஒளிந்துகொள்கிறார்கள்; பிரச்சினை வரும்போது அதை எதிர்கொண்டு மோதத் திராணியின்றி ‘பங்கருக்குள்’ பதுங்கியும் கொள்வார்கள் !
இதுவரை நல்ல நண்பர்களாக, உற்ற தோழர்களாக, மக்களை நேசிப்பவர்களாக, சிறந்த போராட்டக்காரர்களாக, சொல்லாடல் மிக்க எழுத்தாளர்களாக, தர்க்கத்தில் வென்று நிற்கும் பேச்சாளர்களாக, இலக்கியத்தில் புலமை வாய்ந்தவர்களாக, கவிஞர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் திடீரென எப்படி சதிகாரர்களாக மாறுகிறார்கள்? ஒரு புரட்சிகர கட்சியில் இயங்கும் சீர்குலைவுவாதிகளும் சதிகாரர்களும் திடீரென அவ்வாறு மாறிவிடுவதில்லை; மார்க்சிய – லெனினிய அரசியல் எனும் நேர்க்கோட்டிலிருந்து அவ்வப்போது சமநிலை வழுவி இடதிலோ வலதிலோ சரிந்து விழுந்திருப்பார்கள். அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை நோக்கிச் செல்லும் இயங்கியல் போக்கில்தான் இந்தத் திடீர் மாற்றம் நடக்கிறது.
சதிகாரர்களும் சதிச் செயலும் எப்படி உருவாகிறது என்பதை ரஷ்ய உதாரணத்திலிருந்து பார்ப்போம்.
சோவியத் ரசியாவில் 1925-ல் நடைபெற்ற 14-வது கட்சிக் காங்கிரசில் மத்தியக் குழுவிற்கெதிராக ஜினோவியேவ், காமனேவ் போன்ற சீர்குலைவுவாதிகளின் நடவடிக்கைகளை முறியடித்து, நாட்டை சோசலிச பாணியிலான தொழில்மயமாக்கலை விரிவுபடுத்துவதற்கான தீவிரப் போராட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் அரசு தொடங்கியது. தொழில்மயமும் சீரான முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருந்தது. காங்கிரசின் தீர்மான முடிவுகளை பல்வேறு பிரிவு மக்கள் மத்தியிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி பிரச்சாரமாக எடுத்துச் செல்லுகின்றனர். இது, தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் அமோக ஆதரவையும் பெறுகிறது.
கட்சியின் இத்தகைய விளக்கக்கூட்ட பிரச்சாரத்திற்கு எதிராக மென்ஷ்விக்குகள் தங்கள் விசக் கொடுக்குகளை நீட்டுகின்றனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், லெனின்கிராடில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் கட்சிக் காங்கிரசின் தீர்மான முடிவுகளைக் கண்டித்து ஜினோவியேவ் பேசுகிறார்; கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. சோவியத் ரஷ்யாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தோழர் ஸ்டாலினின் திட்டத்தை காங்கிரசில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள், அதற்கு நேரெதிராக உரையாற்றும் ஜினோவியேவின் வஞ்சகப் பேச்சைக் கேட்டு கடும் கோபத்திற்கு ஆளாகிறார்கள்; கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். ஜினோவியேவ் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு ஓடவேண்டியதாயிற்று.
இதில் ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் மாநாடு நடத்தி, தங்கள் பிரதிநிதிகளை காங்கிரசுக்கு தேர்ந்தெடுத்து அனுப்புவது வழக்கம். அதேபோல, 14-வது காங்கிரசுக்கு அனுப்புவதற்காக, கட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மாநாடு லெனின்கிராடில் நடக்கிறது. அந்த மாநாட்டில் மத்தியக் குழுவிற்கெதிராக ஜினோவியேவ் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறார். அதில் தங்கள் ஆதரவு பெற்ற பிரதிநிதிகளை லெனின்கிராட் சார்பாக தேர்ந்தெடுத்து காங்கிரசுக்கு அனுப்பி வைக்கிறார்; அந்த லெனின் கிராட்தான் ஜினோவியேவை ஓடஓட விரட்டியடித்தது.
இதே காலத்தில், 14-வது கட்சிக் காங்கிரசின் முடிவுகள் மீது தங்களுக்கு உடன்பாடு இல்லாதிருந்தபோதிலும், டிராட்ஸ்கியவாதிகள், அதை ‘விசுவாசத்தோடு’ ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கட்சியின் நன்மதிப்பைப் பெற்ற அதே சமயம், கட்சிக்கு எதிரான ஏனைய சீர்குலைவுவாதிகளுடன் கூட்டுச் சேரும் கட்சிப் பிளவுவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் கட்சியில் ‘போர்க்கொடி’ தூக்கிய காமனேவும் ஜினோவியேவும் டிராட்ஸ்கியும் கட்சிக்கெதிராக எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்? அதன் சூக்குமம் என்ன? கட்சி பலவீனமான இடங்களில் ஏறி மிதிப்பது; பலமான இடங்களில் அதீத விசுவாசங்காட்டி, ‘சுயவிமர்சனம்’ ஏற்று பணிந்து பதுங்கிக் கொள்வது. அதாவது, தாராளவாத முதலாளித்துவக் கருத்தை கட்சிக்குள் புகுத்த சாம, பேத, தான, தண்டம் எனும் புள்ளியில் ஒருங்கிணைந்து சதியை அரங்கேற்றுகிறார்கள்.
இவர்களுக்கிடையே ஒரு கீழ்த்தரமான ஒப்பந்தமும் ஏற்படுகிறது. ஓட்டுக்கட்சி அரசியலில், எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்களே, அதைவிட கேவலமாக நடக்கிறது. கட்சியின் மீது வெவ்வேறு பிரச்சினைகளை முன்வைத்தவர்கள், தங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு கட்சிக்கு எதிராக ஒன்று திரளுகிறார்கள். அதாவது, ஜினோவியேவ் – காமனேவ் – புகாரின் – டிராட்ஸ்கி இவர்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்பவர்கள்; ஆனால், கட்சியை எதிர்ப்பதில் ஒத்த கருத்துடையவர்கள். இந்தத் தருணத்தில் ஜினோவியேவைப் பற்றிய தனது விமர்சனங்களையெல்லாம் டிராட்ஸ்கி வாபஸ் பெறுகிறார்; அதற்கு கைமாறாக, “கட்சியில் அதிகாரத்துவப் போக்கு” இருக்கிறது என்ற டிராட்ஸ்கியின் வாதத்தில் நியாயம் இருப்பதாக ஜினோவியேவ் ஏற்றுக்கொள்கிறார். இது “வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாத, கொள்கையற்ற பேரம்” என்று கண்டித்து கிண்டலடிக்கிறார் ஸ்டாலின்.
கட்சியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டுவரும் இத்தகையவர்களை பலமுறை நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்கிறது கட்சி. ஆனாலும், ‘பூரண’ சுயவிமர்சனத்தின் மூலம் – பரமபிதாவிடம் மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்பது போல் கட்சியிடம் கேட்பதன் மூலம் – தங்களை கட்சியுடன் இணைத்துக் கொண்டு மீண்டும் அதே சீர்குலைவு வேலைகளை செய்து வந்தனர், முன்னைவிட பலமாக !
டிராட்ஸ்கியின் பொய் பிரச்சாரம் ஒரு கட்டத்தில் எல்லை மீறுகிறது. இனிமேலும் பொறுத்துக்கொண்டு டிராட்ஸ்கியை கட்சியில் வைத்திருப்பதானது கட்சியை உடைப்பதற்கு சமம் – கட்சிக்கு செய்யும் துரோகம் என்று அவரை நாடு கடத்துகிறது சோவியத் அரசு.
படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமும் கூட்டுத் தலைமையும் !
முதலாளிகள் தங்கள் பிரதிநிதியை சும்மா இருக்க விடுவார்களா? ஒரு ‘டைட்டான’ வேலைத்திட்டத்தைக் கொடுக்கிறார்கள். நாடு கடத்தப்பட்ட டிராட்ஸ்கி துருக்கிக்கு வரவழைக்கப்படுகிறார்; துருக்கி அரசு அவருக்கு பாதுகாப்பும் கொடுக்கிறது. அவரது வருகையை ‘சிவப்பு நெப்போலியன்’ என்று கொண்டாடி வரவேற்கின்றன, முதலாளித்துவப் பத்திரிகைகள். டிராட்ஸ்கியின் துதிபாடிகளும் சோவியத்துகளுக்கு எதிரானவர்களும் ஓரணியில் திரண்டு வரவேற்று மகிழ்கின்றனர். அதிதீவிர இடதுசாரி மற்றும் பலாத்கார ‘முற்போக்குக்’ கருத்துக்களை ஒலிக்கும் எண்ணற்ற கட்டுரைகளிலும், புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் தனது எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்தப் பிரச்சாரத்தை முற்போக்கான புரட்சிகர சோவியத் அரசுக்கு எதிராக தாம் வைப்பதாக ட்ராட்ஸ்கி கருதவில்லை. அவரைப் பொறுத்தவரையில், அவரது எதிர்ப்பு எல்லாம், சோவியத் அரசு “எதிர்ப்புரட்சி தன்மையுடையது” “பிற்போக்கானது” என்பதற்காகத் தான். அதாவது ட்ராட்ஸ்கியின் வாதப்படி “புரட்சியின் நலனுக்காகத்” தான் இந்த சதித் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
“எனது வாழ்க்கை” எனும் சுயசரிதையை டிராட்ஸ்கி எழுதுகிறார். ‘நான்’, ‘எனது’ என்று தனது சுயபுராணத்தைப் பாடுகிறார். இதுதான் ட்ராட்ஸ்கியின் சோவியத் விரோத நிலைப்பாட்டை, சர்வதேச எதிர்ப்புரட்சி கும்பலுக்கு அறிமுகப்படுத்திய முதல் நூல். இது ஸ்டாலின் எதிர்ப்புப் பிரச்சாரம் மட்டுமல்ல, சோவியத் யூனியனையும் இழிவுபடுத்துவதுதான் இதன் நோக்கம். சோவியத் எதிர்ப்பு உளவு நிறுவனங்களுக்கு டிராட்ஸ்கியின் நூல்களை பாடப்புத்தகமாகவே வைத்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவரது கட்டுரைகளும் பிரசுரங்களும் மக்களைக் கவரும்வண்ணம் வடிவமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. “ஏமாற்றப்பட்ட புரட்சி, அபாயத்தில் சோவியத் பொருளாதாரம், ஐந்தாண்டு திட்டத்தின் தோல்வி, ஸ்டாலினும் சீனப் புரட்சியும், ஸ்டாலினின் மோசடி சிந்தனை” போன்ற கவர்ச்சிகரமான தலைப்புகளில் வெளிவருகிறது.
இன்றும் பலர் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களில் தங்களது உண்மையான வர்க்கத்தை மறைத்துக் கொள்கிறார்கள். எதைச் சொல்ல வேண்டும்; யாரிடம் சொல்ல வேண்டும்; எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் இந்தச் சதிகாரர்கள் வல்லவர்கள். சதுரங்க விளையாட்டின் சகல காய்களுக்கும் ஒரு இலக்கை முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்கும் ‘திறமை’சாலிகள். இவர்களின் கம்யூனிச முகமூடி அவ்வப்போது கிழிந்து சந்தர்ப்பவாதிகளாக, திரிபுவாதிகளாக, அல்லது அதிதீவிர இடதுசாரிகளாக, அராஜகவாதிகளாக தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம், ஒரு பொதுவுடைமைக் கட்சிக்கு எந்த விதத்திலெல்லாம் நெருக்கடிகளைக் கொடுக்க முடியுமோ அப்படியொரு தொடர் நெருக்கடிகளை இடைவெளியின்றி கொடுத்து தாக்கி அழிப்பதில் அவ்வளவு மும்முரம் காட்டுகிறார்கள் ! இறுதியில் முதலாளித்துவ சகதியில் புதைந்து செவ்வாடையைக் களையவும் துணிந்து, அம்மணமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
00o00
தாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்று கட்சிக்குள்ளேயே முதலாளித்துவ சிந்தனையைப் புகுத்தி, தோழர்களைக் கொலை செய்து, கட்சியை உடைத்து சீரழிக்கும் சதிகாரர்களை மேலே பார்த்தோம்; சோவியத்திலெயே நடந்த இன்னொரு வகையான சதியின் வடிவத்தையும் பாருங்கள். இங்கு, முதலாளிகள் தங்களது கைக்கூலிகளை நேரடியாக கூலிக்கு அமர்த்தி சதித்தனத்தில் ஈடுபட்டு உற்பத்தியை சீர்குலைக்கின்றனர்.
புரட்சிக்குப் பிறகு, கூட்டுறவு விவசாயப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் முழுவதும் அரசுக் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்தச் சூழலில் (1928) நிலக்கரி சுரங்கத் தொழிற்சாலையில் முதலாளித்துவ சார்பு நிபுணர்களைக் கொண்ட நாசகரப் பெருங்கூட்டம் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்கள், நிலக்கரி உற்பத்தியைக் குறைக்கின்றனர். கொதிகலன்களை வெடிக்கச் செய்கின்றனர். சுழலிகளை சேதப்படுத்துகின்றனர். சுரங்கக் குழிகளுக்கும், திட்டப் பகுதிகளுக்கும் மின்சார நிலையங்களுக்கும் தீயிடுகின்றனர். தொழிலாளர்கள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாமல் திட்டமிட்டு தடுத்து நிறுத்துகின்றனர். தொழிலாளர் பாதுகாப்பு சட்டவிதிகளை மீறுகின்றனர். வேண்டுமென்றே செய்யப்படும் தவறான நிர்வாகத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலக்கரி சுரங்கப் படுகையை சீர்குலையச் செய்தது முதலாளிகள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்? ஆம், இதைச் செய்தது மேலை நாடுகளைச் சேர்ந்த சோவியத் எதிர்ப்பு முதலாளிகள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முன்னாள் சுரங்க உரிமையாளர்கள் தான். இவர்கள் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுரங்கத்தை மீண்டும் எடுத்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தை தொழிலாளிகள் நிர்வகித்தால், இப்படித்தான் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற கருத்தைப் பரப்பி சோவியத் மீது கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆதலால், தங்கள் பணத்தை வாரியிறைத்து இந்த நாசவேலைகளை நடத்தி முடிக்கிறார்கள். இந்தச் சீர்குலைவு வேலையைக் கண்டுபிடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
இவை நமக்கு உணர்த்துவது என்ன? ஒருபுறம், கட்சிக்கு வெளியில் உள்ள முதலாளிகள், மறுபுறம், கட்சிக்குள்ளேயே இருக்கும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் – இவர்கள் கட்சியை உடைப்பதற்கு தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று இவர்களுக்கு புரட்சியின் மீது நம்பிக்கை இல்லை; அல்லது புரட்சியை தங்களுக்கு எதிரானதாகப் பார்த்து வன்மத்தோடு அரங்கேற்றுகிறார்கள்.
சுரங்கத் தொழிற்சாலையில் நடைபெற்ற சதிச் செயல்கள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” என்பதை வலியுறுத்துகிறார். “சுயவிமர்சனம் இல்லாமல் கட்சி முன்னேற முடியாது; நமது இழிகுணங்களை வெளிப்படுத்த முடியாது; நமது குறைகளைக் களைய முடியாது – நம்மிடம் குறைகள் நிறையவே உள்ளன” என்கிறார். மேலும், சுயவிமர்சனம் இருந்தால்தான் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீவிரமாகவும் முழுமையாகவும் சமாளிக்க கட்சியால் இயலும்” என்கிறார்.
படிக்க :
♦ கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !
புரட்சி நடந்து முடிந்த ரஷ்யாவிலேயே இதுதான் நிலைமை என்றால், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கம் கொண்ட இந்திய சமூகத்தில் ? கலைப்புவாதிகள், அராஜகவாதிகள், திரிபுவாதிகள், சீர்குலைவுவாதிகள் உருவாகுவதற்கான சாதகமான புறநிலைமையும், அகநிலைமையும் இங்கு பிரகாசமாக இருக்கின்றன.
‘மேலிடத்து’ ஆசிர்வாதம் பெற்றவர்கள், தமக்கு முதுகு சொறிபவர்களை விமர்சன சொல்லடி படாமல் பாதுகாக்கும் ‘மேலிடங்கள்’, பரிசீலனைக்கு முழுமையாக தம்மை உட்படுத்திக் கொள்ளாத ஆதீனங்கள், அணிகளைப் பயிற்றுவிக்காமல் அவர்களை அடிவெட்டிப் பேசும் ‘அறிவுஜீவிகள்’, வார்த்தை ஜாலத்தில் ஆளை அசத்தும் தனித்துவம் பெற்ற சொல் வித்தகர்கள், துளியும் சுயவிமர்சனமற்ற ‘பரிசுத்த’ ஆத்மாக்கள் என இந்தப் பட்டியல் இன்னமும் நீளும்.
இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். இந்தப் பட்டியலில் நம் கண் முன்னே இருக்கும் ‘மதிப்புமிக்க தோழர்’களும் இருக்கலாம். இப்படிப்பட்ட ’தோழர்களிடம்’ இருந்துதான் சதிகாரர்களும், சீர்குலைவுவாதிகளும், கலைப்புவாதிகளும் ‘திடீரென’ வெளிப்பட்டிருக்கின்றனர். இன்னும் பண்பு மாற்றமெடுத்து வெளிப்படாத நிலையிலுள்ள ‘தோழர்களும்’ இருக்கின்றனர்.
விமர்சன, சுயவிமர்சனத்தை விட்டொழிப்பது, வர்க்கப் பார்வையை விடுத்து புற உலகின் எதார்த்தத்தோடு கரைந்து விடுவது, சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்ளத் தவறுவது ஆகியவைதான் தோழர்களாக இருக்கும் நாம் மேற்கண்ட ‘தோழர்களாக’ சரிந்துபோகும் நிகழ்ச்சிப் போக்கின் துவக்கப் புள்ளி!
வேலன்
தரவுகள் :
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு
வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

சட்டபூர்வ உரிமைகளை இனி ஏட்டிலும் காணமுடியாது | பா. விஜயகுமார்

மோடியின் தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்கள் : தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் !

பாகம் 2

முதல் பாகம்

லைமூடல் அல்லது தற்காலிக பணிமுடக்கம் (லே ஆப்) செய்வதென்றால், 100 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்கள் அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்கிற உச்சவரம்பை 300 ஆக உயர்த்தி இருக்கிறது. ஒரே நிறுவனம், ஒரே வளாகத்தில் தனித்தனியாக நிறுவனப் பதிவுகளை செய்து கொண்டு ஏமாற்றி வருவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதேபோல, இத்தகைய நிறுவனங்களுக்கு துவக்க காலத்தில் 5 ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் வரிச்சலுகைகளை பெற்றுக்கொண்டு, 5-வது ஆண்டில் ஆலையை மூடிவிட்டு இன்னொரு மாநிலத்துக்கு குடியேறுகின்ற கார்ப்பரேட் கயமைகளையும் பார்த்திருக்கிறோம். இந்த மோசடிகளை இன்னமும் தீவிரமாக்க வழிவகை செய்துள்ளது, மோடி அரசு. மற்றொருபுறத்தில், ஆலைமூடல் போன்ற தருணங்களிலும், தற்காலிக பணிநீக்கம் போன்ற தருணத்திலும் தரக்கூடிய இழப்பீடு அல்லது பிழைப்பூதியத் தொகையினை மிக அற்ப அளவுக்கு குறைக்கும் விதமாக “ஊதியம்” என்கிற வரையறையை குழப்பத்துடன் கூடியதாக மாற்றியுள்ளது.

எத்தனை அநீதிகள் நடந்தாலும் நம்மைப் பாதுகாக்க தொழிற்சங்கம் இருக்கிறது என்று இனிமேல் பேச்சளவில் கூட சொல்லிக் கொள்ள முடியாது. தொழிலாளர் துறை நமக்கு பாதுகாப்பு தரும் என்றெல்லாம் ‘மூடநம்பிக்கை’ வைத்திருக்கக்கூடாது. இவை எல்லாம் காலாவதியாக்கப்பட்டுவிட்டன. தொழிற்சங்கத்தின் முக்கிய, சட்டபூர்வ உரிமையாகக் கருதப்படுகின்ற கூட்டுப்பேர உரிமையை ஒரே அடியில் அடித்து காலியாக்கிவிட்டது, மோடி அரசு.  தொழிலாளர் உரிமை சார்ந்த எந்த பிரச்சினையையும் (தொழிற்தாவா – Industrial Dispute) தொழிற்சங்கம் கையாண்டு, தொழிலாளர்களை பாதுகாக்கும் வாய்ப்பெல்லாம் இனிமேல் தேவை இல்லை என்கிறது, மோடிஜியின் புதிய சட்டத் தொகுப்பு. 20 பேருக்கு மேல் பணிபுரியும் எந்த ஒரு நிறுவனத்திலும் நிர்வாகமே “குறை தீர்க்கும் குழு” (Grievanve Redressal Committee) ஒன்றை அமைக்கலாம். இந்த குறை தீர்க்கும் குழுவில் அதிகபட்சமாக 10 இருப்பார்கள். இந்த 10 பேரில் 5 பேர் தொழிலாளர்கள், ஏனைய 5 பேர் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருப்பார்கள். இந்த குழுவின் தலைவராக நிர்வாகத்தைச் சேர்ந்த 5 பேரில் ஒருவர் 6 மாதமும், தொழிலாளிகள் 5 பேரில் ஒருவர் இன்னொரு 6 மாதமும் பொறுப்பு வகிப்பார்கள். இந்த குழு எப்படி அமையும், அது எப்படி வேலை செய்யும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இன்றோ, நாளையோ வேலை பறிபோய்விடும் என்று நடுங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளி முதலாளியின் 5 பிரதிநிதிகளோடு எந்த தொனியில் பேச முடியும் என்பதையும், அந்த தொழிலாளி ஒரு 6 மாதத்துக்கு நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு தலைவராக இருக்க முடியும் என்றால் அவர்களை அந்த தொழிலாளி எப்படி ‘கட்டுப்படுத்த’  முடியும்? இதைவிட கேலிக்கூத்தான ஒன்று இருக்க முடியாது.

நூலிழையில் ஊசலாடும் வேலையை காப்பாற்றிக் கொள்ள தவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளியை முதலாளிக்கு ‘உத்தரவு’ போடும் இடத்தில் நிறுத்தி வைப்பது சாத்தியமானதா? உண்மையில் என்ன நடக்கும் என்றால், நிர்வாகம் தனக்கு அடங்கிப்போகின்ற 5 பேரை வைத்து ஒரு குறை தீர்க்கும் குழுவை அமைப்பார். அந்த 5 பேரில் மிகுந்த அச்சத்தில் இருக்கும் தொழிலாளியை குழுவின் தலைவராகவும் போட்டு விடுவார். இப்படித்தான் தொழிலாளர்களது ‘குறைகள்’ தீர்க்கப்படும்.

குறை தீர்க்கும் குழு மட்டும்தான் வைத்துக் கொள்ள முடியுமா? இந்த குழு முதலாளியின் எடுபிடியாக இருப்பதால், நாங்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்கிறோம் என்று தொழிலாளர்கள் சொல்ல முடியாது. 90% தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இருந்தால் கூட அந்த சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டியதில்லை. முதலாளி தனக்குத் தானே அமைத்துக் கொள்கிற குறை தீர்க்கும் குழுவுடன் பேசி எந்த முடிவையும் எடுக்கலாம். இதை எதிர்த்து போராட எந்த சட்டமும் துணை நிற்காது.

தொழிலாளர் துறை என்கிற ஒன்று இருக்கிறதே; அது நம்மை பாதுகாக்காதா என்று சிலர் அப்பாவித்தனமாக நினைக்கலாம். ஏற்கனவே, தொழிலாளர் நலத்துறை என்கிற ஒன்று இருக்கிறதே, அதற்கு எந்த அதிகாரமாவது இருக்கிறதா? கொஞ்ச நஞ்ச அதிகாரமாவது இப்போது இருக்கிறது. அதை எந்த அதிகாரியும் பயன்படுத்திக் கொண்டதாக வரலாறு இல்லை. இந்த நிலையில் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கான பெயரளவிலான அதிகாரம் கூட பறிக்கப்பட்டுவிட்டது. இனிமேல், தொழிலாளர் துறை அதிகாரிகளது பெயர் பிரச்சினையை எளிதாக்கும் அதிகாரி (Facilitator). இந்த சூழலில் தொழிலாளியின் வேலை உத்தரவாதம், வேலைநிலைமை, உழைப்புக்கேற்ற ஊதியமும், விலைவாசிக்கேற்ற ஊதிய உயர்வும் பெறுகின்ற சட்டபூர்வ உரிமைகள் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இவை எல்லாம் கடலுக்கடியில் மூழ்கி இருக்கும் மிகப்பெரிய பனிமலையின், வெளிப்புறத்தில் தெரிகின்ற ஒரு சின்னஞ்சிறு முனைதான். கடலுக்கடியில் மறைத்திருக்கும் பெரிய மலை அடுத்தடுத்து, ஏனைய இரண்டு சட்டத்தொகுப்புகளில் (சமூகப்பாதுகாப்பு குறித்த சட்டத் தொகுப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு; உடல்நலம் மற்றும் வேலைநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு  சமூகப்பாதுகாப்பு) ஆகியவற்றில் மறைந்திருக்கின்றன.

இதுவரை இந்திய தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளில் துளியளவு சட்டத்தின் வழியாகப் பெற்றிருந்தாலும் அதனை முதலாளி வர்க்கமோ, அரசோ பொருட்டாக மதித்ததில்லை. நாடு முழுவதும் பல ஆண்டுகளாக, இலட்சக்கணக்கில் தேங்கி இருக்கும் தொழிலாளர் வழக்குகளது பட்டியலே சான்று. அரசு போடுகின்ற அவசர சட்டங்களைக்கூட முதலாளிகள் மதிப்பதில்லை. உதாரணமாக, 2016 ஆம் ஆண்டில் போனஸ் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது, மோடி அரசு. போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பை உயர்த்தும் வகையில் அந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதை முதலாளிகள் ஏற்கவில்லை. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து முதலாளிகள் போட்ட வழக்கு இன்றுவரை உச்சநீதிமன்றத்தில் தூங்கிக்கிடக்கிறது.

படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

ஆக, அரசு, தப்பித்தவறி தொழிலாளர்களுக்கு சாதகமாக சிறிய சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும் அதன் பலன்களை தொழிலாளர்கள் அடையவிடாமல் தடுக்கப்படுகின்றனர். மிகச்சமீபத்திய உதாரணமாக, கொரோனா முடக்க காலத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவின் கதியைப் பார்க்கலாம். மார்ச் 25 முதல் மே 17 வரை எல்லா ஆலைகளும், எல்லா வகை தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் தர வேண்டும் என்பது உள்துறை அமைச்சக உத்தரவு. இது மிகக் கடுமையான, முதலாளிகளை அழிக்கின்ற உத்தரவு என்று சொல்லி முதலாளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். நாடு முழுவதும் பல கோடி தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய முதலாளிகளை உச்சநீதி மன்றம் கண்டிக்கவில்லை. மாறாக, இந்த பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை தீராவிட்டால் (அதாவது முதலாளிகள் சம்பளம் தராவிட்டால்), முதலாளிகள் மீது வழக்கு போடக்கூடாது என்றெல்லாம் சொன்ன உச்சநீதிமன்றம் ஜூலை மாத இறுதியில் இறுதி தீர்ப்பு வழங்குவதாக ஜூன்12 அன்று அறிவித்தது. செப்டம்பரைக் கடந்தும் இறுதி தீர்ப்பு வரவில்லை. சம்பளம் வழங்குவதற்கு உத்தரவு போட்ட மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவை நிறைவேற்ற  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான் சட்டப்பாதுகாப்பின் இலட்சணம்.

இந்தியத் தொழிலாளி வர்க்கம் காலனியாதிக்க காலத்தில் போராடிப்பெற்ற உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. அதேநேரத்தில், இந்த உரிமைகள் வெறும் புத்தகத்தில் இருக்கவும் அனுமதிக்க முடியாது. கூட்டுப்பேர உரிமை என்கிற சட்டப்பூர்வ உரிமையானது, தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச்சக்திக்கு விலை பேசப்படும் ஏற்பாடுதான். இது ஒரு சீர்த்திருத்தம் மட்டுமே. இந்த சீர்த்திருத்த வாய்ப்பை தொழிலாளி வர்க்கம் எந்த எல்லை வரையில் பயன்படுத்த வேண்டும்; எந்த நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசான் லெனின் சொல்லித் தந்திருக்கிறார்.

கூலி அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டத்தில், தொழிலாளி வர்க்கம் தனது போராட்ட வலிமையை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த வலிமையை பலப்படுத்திக் கொள்ளவும்தான் இந்த சட்டபூர்வ உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூலி அடிமை முறையை ஒழிப்பதே நமது இறுதி இலக்காக இருக்க வேண்டும். கூலியடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள உதவி செய்யும் என எதிர்பார்த்த சட்டபூர்வ உரிமைகள் சட்டப் புத்தகத்தில் இருந்தபோதும் பலன் அளிக்கவில்லை. இப்போது புத்தகத்தில் கூட இந்த உரிமைகள் இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கையாலாகாத்தனமான சட்டபூர்வ உரிமைகளை, அதிகாரபூர்வ உரிமைகளாக நிலைஇனி ஏட்டிலும் காணமுடியாது சட்டபூர்வ உரிமைகள்நாட்ட தொழிலாளி வர்க்கத்துக்கு தெரிந்த ஒரே வழி சோசலிசம்தான். இதைத்தவிர மாற்றுவழியோ, குறுக்குவழியோ ஏதும் இல்லை.

(முற்றும்)

கட்டுரை ஆக்கம்: பா.விஜயகுமார்,
தலைமைக் குழு உறுப்பினர்
, பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு-புதுவை

முதல் பாகத்திற்கு செல்ல…

NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

தேசிய கல்விக் கொள்கை – 2020 குறித்து பேரா. அனில் சத்கோபால் எழுதிய கட்டுரை பிரண்ட்லைன் பத்திரிக்கையில் ஆகஸ்ட் 28, 2020 ல் வெளிவந்தது. இக்கல்விக் கொள்கையின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை தமிழ் வாசகர்களுக்குப் படைக்கும் நோக்கில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தைப் படிக்க இங்கே அழுத்தவும்

0o0o0o0

சாதி மற்றும் ஆணாதிக்கம் :

ல்விக்கான வாய்ப்புகள், கல்வியில் பங்கெடுத்துக் கொள்வது, அறிவைப் பெறுதல்,    அறிவு வளர்ச்சியில் பங்கெடுப்பது மற்றும் உயர்கல்வி மூலமாக சமூக-பொருளாதார இயக்கத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை தடுப்பதில் சாதி மற்றும் ஆணாதிக்கமானது (patriachy) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை NEP அங்கீகரிக்க தவறியுள்ளது. சாதி ஒழிப்பிற்கான மரபில் சாவித்ரிபாய்-ஜோதிராவ் பூலே தொடங்கி  சத்ரபதி ஷாஹு மகாராஜ் மற்றும் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் (மகாராஷ்டிரா); சி. ஐயோதி தாஸ், சிங்காரவேலர் மற்றும் ‘பெரியார்’ ஈ.வே. ராமசாமி (தமிழ்நாடு); நாராயண குரு மற்றும் அய்யங்காலி (கேரளா); கந்துகுரி வீரசலிங்கம் பந்துலு மற்றும் குராஜாதா அப்பராவ் (பிரிக்கப்படாத ஆந்திரா); குட்முல் ரங்க ராவ் மற்றும் கிருஷ்ணராஜா வாடியார் IV (கர்நாடகா); இறுதியாக, 1930 களில் சாதி பற்றிய மகாத்மா காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் வரை NEP புறக்கணிக்கிறது.

சாதி மற்றும் ஆணாதிக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதானது வரலாற்று ரீதியான வேர்களைக் கொண்ட இந்த இரட்டை சிக்கல்கள் பற்றி NEP ன் குறைபாடான புரிதலையே வெளிப்படுத்துகிறது. இது சாதி மற்றும் ஆணாதிக்கத்தைப் “தகுதி(merit)”மற்றும் பாலின உணர்வூட்டுதல் (gender sensitization) என்ற கண்ணாடியின் மூலம் பார்க்க  முயற்சிக்கிறது. NEP இல் இடஒதுக்கீடுக்கு இடமில்லை. இது, அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 16 ஐ மீறுவதாகவும் சுதந்திரத்திற்குப் பின்னர் சமூக நீதிக்கான போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட அனைத்து ஆதாயங்களையும் மறுப்பதாகவும் உள்ளது.

சாதி எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இரட்டை போராட்ட மரபுகளை உள்ளடக்கிய சுதந்திர போராட்டத்தினால் உத்வேகம் பெற்று வடிவமைக்கப்பற்ற அரசியலமைப்பின் நிலைப்பாடுகளுக்குப் பதிலாக உலக வங்கியின் நிதியுதவியை பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்-4 (Sustinable Development Goal-4 – SDG-4) விழுமியங்களே  இடம் பெற்றுள்ளன. இரண்டு ஆவணங்களுக்கு இடையே ஒரு சாதாரண ஒப்பீடு செய்தால் கூட, அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றன கல்வி மற்றும் அது தொடர்புடைய பிற சமூக உரிமைகள்   SDG-4 ன் இலக்குகளை விட மிகவும் மேம்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியும். இதனால்தான் NEP, SDG-4 ன் நிலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அரசியலமைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது.

படிக்க :
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
♦ NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE

தெளிவின்மை, உள்ளார்ந்த முரண்பாட்டுகள், குழப்பமான கருத்தியலைக் கொண்ட பரிந்துரைகள் மற்றும் போலித்தனம் ஆகியவற்றின் குறியீடாக  NEP உள்ளது. அடிப்படைக் கடமைகளை பற்றி பேசும் NEP அடிப்படை உரிமைகள் குறித்து மவுனம் காக்கிறது. ‘இலவச’ கல்வி என்று இருந்தது ‘குறைந்த கட்டண கல்வி’ என்பதாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கிறது; முறையானக் கல்வி மற்றும் எழுத்தறிவு-எண்ணறிவு இடையேயான வேறுபாட்டையும் முறையானக் கல்வி மற்றும் ‘முறைசாரா கல்வி’ க்கும் இடையிலான வேறுப்பாட்டை மங்கலாக்குகிறது. அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகளானபட்டியல் சாதிகள் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி),  மதம் மற்றும் மொழியியல் சிறுபான்மையினர் என்ற பிறிவினரை “சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்கள் (Socio-economically disadvantaged groups SEDGs)”அல்லது “பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குழுக்கள்”, எனச் சொல்வதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மீது பல நூற்றாண்டுகளாகச் செய்துவந்த ஒடுக்குமுறையையும் மற்றும் சுரண்டலையும் முக்கியமற்றதாக்குகிறது.

அரசியலமைப்பின் பிரிவு 1 (1), “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம்” என்றுக் கூறுகிறது. நவம்பர் 25, 1949 அன்று அரசியலமைப்புச் குழு கூட்டத்தில் அரசியலமைப்பு வரைவை தாக்கல் செய்து பேசிய வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர், “கூட்டாட்சியின் அடிப்படை விதியானது சட்டம் இயற்றுதல் மற்றும் நிர்வாக அதிகாரம் மத்திய-மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது…… அரசியலமைப்பின் படி மாநிலங்கள் தங்களுடைய சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாகத்திற்காக எந்த வகையிலும் மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டியதில்லை…….. மத்திய அரசு இந்த பகிர்வு எல்லையை தானாக விரிவு படுத்த முடியாது.” என்றார்.உச்ச நீதிமன்றத்தில் நடந்த கேசவானந்த பாரதி வழக்கில் (1973) 13  நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புக் அமர்வு (constitutional bench), “கூட்டாட்சி தன்மைதான் அரசியலமைப்பின் அடிப்படை” எனக் கூறியது.

காவிமயமாகும் கல்வி

ஆனால் கல்விக் கொள்கையோ,  ஆரம்பகால குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி (Early Childhood care and Education- ECCE) திட்டம் தொடங்கி  உயர்கல்வி வரை முடிவுகள் எடுப்பதற்கு புதிய மத்திய அமைப்புகளை உருவாக்கியுள்ளது. உதாரணத்துக்கு இந்திய உயர்கல்வி ஆணையம் (HIGHER EDUCATION COMMISION OF INDIA), தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (THE NATIONAL RESEARCH FOUNDATION)  தேசிய தேர்வு முகமை (NATIONAL TESING AGENCY) மற்றும் NATIONAL CURRICULAR AND PEDAGOGICAL FRAME WORK FOR ECCE , ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை மதிப்பீடுகள் (NATIONL PROFESSIONAL STANDARDS FOR TEACHERS) மற்றும் பல.

இவ்வமைப்புகளின் மூலமாக கல்வி தொடர்பான மாநில / யூனியன் அரசாங்கங்களின் அனைத்து அதிகாரங்கள்/பொறுப்புகள் பறிக்கப்படும்.ஐந்தாவது-ஆறாவது அட்டவணைகளின் கீழ் அங்கிகரிக்கபட்டுள்ள பழங்குடியினர் கவுன்சில்கள், கிராம பஞ்சாயத்துகள்/ஜில்லா பரிஷத் மற்றும் நகராட்சிகளுடன் பகிந்தளிக்கப்பட்டுள்ள கல்வி சார்ந்த பல்வேறு சட்டங்கள் விட்டுக்கொடுக்கப்படவோ அல்லது முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதாகவோ அமையும். அரசியலமைப்பு சட்டகத்திலிருந்தே விலகியுள்ள இந்த பாரிய மாற்றமானது, நாடு தழுவிய ஜனநாயக விவாதத்திற்கும், கல்விக் கொள்கையை பாராளுமன்றத்தின் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் அழைப்பு விடுகிறது.

NEP-யில் சொல்லப்பட்டுள்ள 3-8 வயதுக்குட்பட்டவர்களுக்கான ECCE திட்டம் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 3-6 வயதினருக்கான ECCE திட்டமானது முந்தைய அனைத்து கொள்கை ஆவணங்களிலும்   இருந்துள்ளது. 1974 முதல், அங்கன்வாடி திட்டம் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (Integrated Child Development Scheme – ICDS) நாடு முழுவதும் செயல்படுத்தபட்டு வருகிறது. இது முதன்மையாக ஆரம்பக் கல்விக்கானதாக இல்லாமல், ஊட்டச்சத்து – சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகவே இருந்தது. 2009-ல் கொண்டு வரபட்ட கல்வி உரிமை சட்டத்தில் (RTE) 3-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்கவில்லை. எனவே, NEP-ல் முன்தொடக்கக் கல்வியை( Pre school 3-6 வயது) முதல் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்வியுடன் (I-II வகுப்பு) இணைத்து அடிப்படையான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெறுவதற்கான (literacy and numeracy) ஒரு திட்டத்தை முன்வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தை ஆராய்வோம்.

ECCE-லிருந்து மேல்நிலைப் பள்ளிகள் வரை, “உள்ளூர் சமூக அமைப்புகளிடம் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கவுன்சிலர்கள் பள்ளி கட்டமைப்பில்  முறைசாரா பங்களிப்பை செலுத்த NEP கோருகிறது.   யார் இந்த நபர்கள்?, அங்கன்வாடி அல்லது பள்ளிகளில் முறைசாரா பணிகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தகுதி என்ன?

படிக்க :
♦ பாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் !
♦ பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

தாங்கள் முன்வைத்த பெரும்பானால “கோரிக்கைகள்” NEP-ல் சேர்த்துக் கொள்ளப்பட்டதென RSS  பகிரங்கமாகவே கூறுகிறது. அரசு நிதியில் RSS ஊழியர்களுக்கே மேற்கூறிய முறைசாரா பணிகள் ஒதுக்கப்படும் என்பதே நிதர்சனம். 3-6 வயதிற்குள் 80 சதவிகித மூளை வளர்ச்சி நடைபெறுவதால் இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆழ் மனதில் இந்துத்துவா கருத்துக்கள் மற்றும் “ethical” values “நெறிமுறை” விழுமியங்களை (அதாவது கட்டுக்கதைகள், தப்பெண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் -) புகுத்துவதே இந்து ராஷ்ட்ராவிற்கான அடியாட்களை தயாரிப்பதற்கு மிகச் சிறந்த வழி என்று RSS ன் கல்வி அமைப்புகள் நீண்ட காலமாக வாதிட்டுவருகின்றன.

இதன் மூலம் எதிர்கால தலைமுறையின் சிந்தனை மற்றும் சமூக நடத்தையை தீர்மானிப்பவைகளின் ஒருங்கிணைந்த கூறுகளாக இக்கருத்துருவாக்கம் அமையும்.  இதனால் தான் இரண்டாண்டு தொடக்கக் கல்வியுடன் ECCE ன் மூன்று ஆண்டுகளை இணைக்க NEP வலியுறுத்துகிறது. மேலும் RSS ன் புதிய நபர்களை தொடக்கப்பள்ளி ஊழியர்களாகக்குவதற்கான நம்பத்தகுந்த(Plausible) அடிப்படையை  NEP முன்வைக்கிறது.

மொழிகள் மற்றும் கல்வி கற்பிக்கும் மொழி :

ஆரம்பக் கல்வியும் அதற்கு மேலும் “தாய்மொழி/வீட்டு மொழி”வழியாக கற்பிக்க வேண்டும் என்ற விவாதமானது மகாத்மா ஜோதிராவ் பூலே காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பூலே ஹண்டர் கமிஷனிடம் (1882) தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரித்தார். தாய்மொழி வழிக் கல்வியானது உலகளவில் கல்வியாளர்கள் மற்றும் மொழியியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக முன்னேறிய அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ள ஒரு முறையாகும். காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் இருவரும் கூட ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியையும் திறமையாகக் கற்பதற்கான அடித்தளத்தளமாகவும் அறிவைப் பெறுவதற்கான  மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகவும் தாய்மொழி வழி கல்வியைக் கருதினர். இருவரும் தாய்மொழி வழி கல்வியின் தீவிர ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.

பகுத்தறிவான மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கொள்கை இந்தியாவில் உயர் சாதியினர் மற்றும் மேல்தட்டு வர்க்கங்களின் குறுகிய நலன்களால் நிராகரிக்கப்படுகிறது. குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் கற்கக்கூடாது என்று யாரும் வாதடவில்லை. விவாதிக்கப்படுவது என்னவென்றால், ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் அந்நிய மொழியை ஊடகமாகப் கொண்டு அம்மொழியை சிறப்பாக கற்க முடியுமா அல்லது குழந்தையின் தாய்மொழியின் வலுவான அடித்தளத்தின் வாயிலாக அம்மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள முடியுமா? என்பது தான்.

2017-ம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் ஆய்வின்படி, ஆங்கிலத்தை சரளமாக கற்பதற்கு EaS (English as Subject) தாய்மொழி வழியைக்  காட்டிலும் ஆங்கிலத்தின் வாழியிலாக கற்பது EMI (English as Medium of Instruction) தான் சிறந்த அல்லது உறுதியான வழி என்ற பரவலான கருத்தை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. . . தெற்காசியா மற்றும் துணை-சஹாரா ஆபிரிக்காவில் பொதுவாகக் காணப்படும் ஆங்கில வழி கற்பிக்கும் (EMI) முறை ஆங்கில மொழியின் ஆழமற்ற அடிப்படையின் மூலம் தான் தொடக்க கல்விக்கு மேல் உள்ள பாடங்களை கற்பதற்கு உதவுகிறது. ஆரம்ப காலத்திலேயே EMI அறிமுகம் செய்வதானது கற்றலைக் குறைப்பதாகவும் கல்வி இலக்குகளை அடைவதைக் கட்டுப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.”

தாய்மொழி/வீட்டு மொழி வழி கல்வி குறித்த NEP ன் பரிந்துரைகள் தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் மட்டுமல்லாமல்  மொழிப் பாடங்களினால் குழந்தைகளுக்கு அதிக சுமையையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் (கல்லூரி கல்வியிலும் கூட) செம்மொழியை (சமஸ்கிருதம்) படிக்க  சொல்லி NEPகட்டாயபடுத்துகிறது. அதே சமயம் மற்ற வளமிக்க செம்மொழிகளான தமிழ், பாலி மற்றும் பாரசீக போன்ற மொழிகளை மாற்றாந்தாய் மனநிலையுடன் அணுகுகிறது. இந்திய மொழிகளை பார்ப்பனிய சமஸ்கிருதமயமாக்கலுக்கு எதிராக NEP எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

தனியார்மயமாக்கப்படும் உயர்கல்வி

உயர்கல்வி :

NEPல் சொல்லப்பட்டுள்ள உயர்கல்வி பற்றிய பரிந்துரைகள் உணர்த்துபவை:

a) நிதிபற்றாக்குறையுள்ள அரசு கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களை, வலுக்கட்டாயமாக சந்தையின் பிடிக்குள் கொண்டு சென்று, இறுதியில் அவைகளை மூடுவது.

b)உயர்கல்வியில் புரவலர்கள் – கொடைவள்ளல் (Philanthropists) ஊக்குவிப்பதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களை (HEIs) சிறிது சிறிதாக தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது.  இது மாற்றியமைக்கப்பட்ட PPP ன் கீழ், அரசு மற்றும் கொடைவள்ளல் கூட்டுடன் (Public Philanthropic Partnership), அரசு நிதியை தனியார்  நிறுவனங்களிடம் மடைமாற்றுவதற்காக தாராளமயக் கொள்கையின் புதிய கண்டுபிடிப்பு.

c) உயர்கல்வியிலிருந்து பகுஜங்கள் மற்றும் ஊனமுற்றோரை (இந்த ஒவ்வொரு பிரிவிலும் பெண்களின் விகிதம் அதிகம்) வெளியேற்றுகின்ற தற்போதைய விகிதத்தை மேலும் மோசமைடையச் செய்வதற்கு, HEI க்கு அவர்களின் கட்டணங்களை சுதந்திரமாக உயர்த்துவதன் மூலம் மட்டுமல்லாமல், இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி திட்டங்களை நீக்குவதும், ‘தகுதி (merit)’ என்பதின் வாயிலாக உதவித்தொகை என்ற கருத்தை சிதைப்பதன் மூலமும் நடத்தப்படுகிறது.

(d) ECCE லிருந்து உயர்கல்வி வரை தொழிற்கல்வி என்ற போர்வையில் அறிவை(Knowledge) வெறும் திறன்களை(skills)கற்பதாக சுருக்கப்படுகிறது. பல இடங்களில் “கல்விக்கும்  தொழிற்கல்விக்கும்  இடையில் கடினமான வரையறைகள் இல்லை” என்று கூறப்பட்டாலும். . .”, தொழிற்கல்வி மூலம் பகுஜன் மாணவர்களை கல்வியிலிருந்து விலக்கி சாதி அடிப்படையிலான தந்தை வழித் தொழில்கள் மற்றும் குறைந்த ஊதிய வேலைகளை நோக்கி திருப்புதல்; விமர்சன கண்ணோட்டம், படைப்பாற்றல் மற்றும் அறிவியல் விஞ்ஞான மனநிலையை வெறும் திறன்களாகப் பார்ப்பது; அறிவு தொடர்பானக் கருதுகோள்களை  திறன் இந்தியாவுக்கான (skill India) கருத்தாக சுருக்குவது(பிரிவு 18.6);

(e) தேசிய ஆராய்ச்சி ஆணையத்தின் வாயிலாக ஆராய்ச்சிக்கான திட்டங்களை மையப்படுத்துதலின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவு உற்பத்தியை தகர்ப்பது, அதாவது ஆராய்ச்சிக்கான  உற்சாகத்தை அகற்றுவது;

(f) இணையவழிக் கல்வியின் மேலாதிக்கத்தை நிறுவுவதின் மூலம் சந்தையின் தேவைகக்கு ஏற்ப அறிவை ஒற்றை தன்மை கொண்டதாக மாற்றுதல்; அறிவை வெறும் திறன்களாகக் சுருக்குதல் – குறைந்த ஊதியம் (அமைப்புசாரா துறையைப் போல) மற்றும் அதிக ஊதியம் (சிலிக்கான் பள்ளத்தாக்கு / தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகத்தைப் போல) பிரிப்பது; மேலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையேயான  தொடர்புகளை நீக்குவதன் மூலம் கல்வியை மனிதநேயமற்றதாக்குதல், இது கல்வி முறையிலிருந்தே அரசியல் கூறுகளை நீக்கிவிடும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி :

“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்”மீது ஆதிகாரத்திலுள்ள மேல்தட்டு வர்க்கத்திற்கு  இருக்கும் மோகம் அவர்களை உண்மையை பார்க்க அனுமதிப்பதில்லை. உலக வங்கி மற்றும் யுனெஸ்கோ (The Task Force, 2000) வின்  கூட்டு ஆவணம் “வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தரம் குறைவான படிப்புகளை வழங்குகின்றன, அவற்றின் புகழ்பெற்ற பெயர்களைப் பயன்படுத்தி சமமான தரத்தை உறுதிப்படுத்தாமல் உள்ளன.”என்று கூறுகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுடைய 150 ஆண்டுகால அறிவுசார் மரபுகளை வளர்ப்பதன் மூலம் உலகளவில் நற்பெயரைப் பெற்றுள்ளன. அவர்களின் அறிவு  மரபை அப்படியே இந்திய கல்வி வளாகங்களுக்கு இயந்திரத்தனமாக பொருத்துவது என்பது குழந்தைத்தனமானது. நமக்கு தற்போது இருக்கும் ஒரே வழி, நமது சொந்த அறிவுசார் மரபுகளைக் கொண்டு சிறந்த பல்கலக்கழகங்களை உருவாக்குவது  மட்டுமே.

படிக்க :
♦ பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!
♦ மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு

பிரச்சனைக்குறிய பகுதிகள் மற்றும் சிக்கல்கள் :

i) சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து குழந்தைகளுக்கும் அருகாமை பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான பள்ளி முறைக்கு NEP உறுதியளிக்கவில்லை.;

ii) பாகுபாடுகள் அடிப்படையிலான பல அடுக்கு பள்ளி முறையை(multi layered school system)அகற்ற எந்த திட்டமும் இல்லை;

iii) ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை கண்ணியமான வேலை நிலைமைகளுடன் மாற்றுவதற்கு இது உறுதியளிக்கவில்லை; மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் (கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம்) மற்றும் பேரழிவு-நிவாரண வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை;

iv) 3-6 வயது மற்றும் 14-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் RTE 2009 சட்டத்திற்குள் கொண்டுவர எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இதன் மூலம் ECCE, உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு சட்டரீதியான பாதுகாப்பை மறுக்கிறது;

v) அறிவு கடைச்சரக்காக்குவதையும் கல்வி வர்த்தகத்தையும் தடை செய்ய மறுக்கிறது;

vi) பள்ளி கல்வியில் உலக வங்கியின் தலையீட்டிற்கும், உயர்கல்வியில் உலக வர்த்தக நிறுவனத்தின் ஆதிக்கத்துக்கும் எதிராக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

இந்த பின்னணியில், “இந்தியாவின் இயற்கை மற்றும் மனித வளங்களை கொள்ளையடிப்பதற்காக புதிய தாராளமய மூலதனம் இந்து ராஷ்டிர படைகளின் முதுகில் சவாரி செய்கிறது”என்று கருதுவது நியாயமானது! முன்பை விட இந்தியாவுக்கு இன்று அம்பேத்கர், காந்தி மற்றும் தியாகி பகத்சிங் தேவை.

(முற்றும்)

00o00

கட்டுரையாளர் : அனில் சத்கோபால்
தமிழாக்கம் : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
நன்றி : பிரண்ட்லைன்

குறிப்பு :
அனில் சத்கோபால் –  கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மற்றும் டெல்லி பல்கலைக்கழக கல்வித் துறையின் முன்னாள் டீன்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – பொதுக்கல்வியை வலியுறுத்தும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கல்வியாளர்களின் அமைப்பு.

பாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் !

0

பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் சார்பு கல்லூரிகளில் 2021 -22 கல்வி ஆண்டிற்கான ஆராய்ச்சி படிப்பின் ஆய்வறிக்கை மற்றும் ஆய்வு சுருக்கத்தை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 160 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை எதிர்த்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுவரை 7000 ரூபாயாக இருந்த ஆய்வறிக்கைக்கான சமர்ப்பிப்பு கட்டணம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆய்வுச்சுருக்கத்திற்கான கட்டணமும் 3500 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை கண்டித்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன்  பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் சார்பு கல்லூரிகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலும்  ஊக்கத் தொகை இல்லாமலேயே ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்கின்றனர். மேலும் ஏழை எளிய, மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்வி வாழ்க்கையை இது போன்ற பெரும்  கட்டண உயர்வு கேள்விக்குறியாகும்  என்பதை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதைப்பற்றிய பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர். முனைவர். காளிராஜ் அவர்கள் “foreign evaluation fees” அதிகரித்ததே இந்த கட்டண உயர்விற்கு காரணம் என்று கூறினார். இருப்பினும் இதுபோன்ற பன்மடங்கு  கட்டண உயர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிண்டிகேட் கமிட்டிக்கு கோரிக்கை மனு கொடுக்கப் போவதாகவும் ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர்.

 

அதீத கட்டண உயர்வு என்பது சாதாரண பின்புலத்தில் இருந்து வரும் ஏழை ஆராய்ச்சி மாணவர்களை உயர்கல்வியில் இருந்து தூக்கி எறிந்து விடும் ! இந்தக் கட்டண உயர்வை உடனடியாக பல்கலை நிர்வாகம் பின் வாங்க வேண்டும் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை

பு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!

0

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு – உ.பி. பாலியல் வன்கொலை :

நெருங்கி வருகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் பார்ப்பன இந்து மத வெறியர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை உச்சநீதிமன்றம் தண்டிக்கும் என்ற நம்பிக்கை வைத்திருந்தனர் இசுலாமியர்கள் சிலர். ஆனால், அந்த நம்பிக்கையை நீதிமன்றமே பொய்யாக்கிவிட்டது.

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போதே, “பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான் என கூறிக்கொண்டே அங்கே இராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது” “பாலியல் வல்லுறவு செய்தவனுக்கே பெண்ணை கட்டிக்கொடுக்க வேண்டும் எனும் ஆண்டைகளின் கட்டப்பஞ்சாயத்து போல, இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்கிறது இந்த தீர்ப்பு” என அப்போதே அதை நாங்கள் விமர்சித்திருந்தோம். மேலும் நாடு பாசிசமயமாகிவரும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் இந்த நீதிமன்றத்தையும், இந்த அரசுக் கட்டமைப்பையும் நம்புவதில் பயனில்லை எனத் தெரிவித்திருந்தோம்.

பிடிஎஃப் கோப்பாக (PDF File) தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

இப்போது அது மீண்டும் உண்மையென்று நிரூபணமாகியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில், பாபர் மசூதி இருந்ததும் உண்மை, இடிக்கப்பட்டதும் உண்மை” எனக் கூறிவிட்டு, இடித்தவர்களுக்கு தண்டணை வழங்காமல் “பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை, அசோக் சிங்கால் போன்ற தலைவர்கள் குழந்தை ராமர் சிலையை பாதுகாக்க விரும்பினார்கள், குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 32 பேரும் இடிப்பதை தடுக்கவே விரும்பினார்கள்” என குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். உலகமே அதிர்ந்து போன பாபர் மசூதி இடிப்பில் “குற்றம் நிரூபணமாக போதிய வலுவான ஆதாரங்கள் இல்லை” என்று இடித்தவர்கள் எழுதிக் கொடுத்ததையே தீர்ப்பாக்கியுள்ளது நீதிமன்றம்.

படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனப் பயங்கரவாதிகள் எழுதிக் கொடுப்பதுதான் இனி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலைமையை இந்தத் தீர்ப்பு நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.

இதே நேரத்தில் மற்றொரு சம்பவம்: உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் சிறுமி மணிஷாவை தாக்கூர் ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் வன்புணர்வு செய்து, துப்பட்டாவால் கழுத்தை நெறித்து, நாக்கை அறுத்து, முதுகெலும்பை முறித்து வீசியுள்ளனர். மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மணிஷா, தான் வன்புணர்வு செய்யப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்து இறந்துள்ளார். நாடே அதிர்ச்சியடைந்த இந்த விசயத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி பெற்றோர்-உறவினர்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் எனத் தெரிந்து பெற்றோருக்குக் கூட உடலை கொடுக்காமல் இரவோடு இரவாக மணிஷாவின் உடலை எரித்துச் சாம்பலாக்கிய உ.பி. போலிசு, மணிஷா வண்புணர்வே செய்யப்படவில்லை என பிறகு அறிவிக்கிறது. தாக்கூர் சாதி வெறியர்கள் காப் பஞ்சாயத்தைக் கூட்டுகின்றனர்; குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு மணிஷா வீட்டின் முன்னால் போராட்டத்தில் இறங்குகின்றனர். இதற்கெல்லாம் பாதுகாப்பு வழங்குகிறது உ.பி. போலீசு. மொத்தத்தில் ஆதிக்கசாதி வெறியர்களின் அடியாள் படையாகிவிட்டது.

இதேவேளையில், கொஞ்சம்கூட குற்றவுணர்வின்றி சாதிவெறியர்களுக்கு ஆதரவாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ தலைமையில் களமிறங்கியுள்ளது சங்பரிவார் கும்பல். காஷ்மீர் ஆஷிபா குதறிய காமவெறியர்களைக் காப்பாற்ற பேரணி நடத்திய இதே பா.ஜ.க கும்பல்தான் இன்று உ.பி.யிலும் ஆதிக்க சாதி காமவெறியர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகின்றது.

இது தலித்துகள் – பெண்கள் மீதான முதல் தாக்குதல் அல்ல. நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்கள் இப்படி தொடர்ந்து தாக்குதல் – பாலியல் வெறியாட்டம் நடத்தி வருகிறார்கள். அரியலூர் நந்தினிக்கும், கையர்லாஞ்சி போட்மாங்கே குடும்பத்தினருக்கும் நடந்த கொடுமைகள் என ஏராளமான இரத்த சாட்சியங்கள் நம்முன் உள்ளன. குறிப்பாக, பார்ப்பனப் பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தலித்துகள் படிப்பிலும், பொருளாதாரத்திலும் முன்னேறி வருவதை ஆதிக்க சாதிவெறியர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. சூத்திரர்களுக்குக் கல்வி எதற்கு? நல்ல வாழ்வு எதற்கு? என்பதுதான் அவர்களது சாதி ஆதிக்கச் சிந்தனை. அதன் விளைவே தலித்துகள் மீதான தாக்குதல்களும் பாலியல் வல்லுறவுகளும்.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ கல்வித் துறையில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேராசிரியர் கருணானந்தன்

இப்படிப்பட்ட சாதியக் கட்டமைப்பை உயர்த்தி பிடிக்கும் வருணாசிரமத்தைப் பாதுகாக்க வேண்டும் என சொல்லும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப்பரிவார கும்பல்கள்தான், இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம், அடித்துக் கொல்லுதல் போன்ற வன்முறைகளுக்கு இந்து ஒற்றுமை என்று கூறிக்கொண்டு தலித்துகளை அணிதிரட்டுகின்றன; கலவரங்களுக்குக் காலாட்படையாகவும் பயன்படுத்துகின்றன.

ஏற்கெனவே அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார நெருக்கடிகளில் சிக்கி, தோற்று, திவாலாகி, மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகிப் போன இந்த அரசு-சமூகக் கட்டமைப்பு கார்ப்பரேட்-காவி பாசிசமயமாகிவரும் இன்றைய சூழலில் போலீசு, நீதிமன்றம், அரசுக் கட்டமைப்பு என அரசின் அங்கங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக மேலும் தீவிரமாகவே செயல்படும். இதனை அனுமதித்தால், பாசிஸ்ட் ஹிட்லர் ஆட்சியைப் போல கொத்துக்கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்படுவது இனி சர்வ சாதாரணமாக நடந்தேறும் அபாயம் நெருங்கி வருகிறது என்பதை உணர்வோம்!

தோற்றுப்போன இந்தக் கட்டமைப்பைத் தூக்கியெறியவும் எதிர்வரும் இந்த பாசிச அபாயத்தை எதிர்கொள்ளவும் சாதி, மதம் கடந்து சமூக நலனில் அக்கறைகொண்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்! பாசிசக் கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம்!!

  • தோற்றுப்போய் திவாலான இந்த சமூக-அரசுக் கட்டமைப்பைச் சூழ்ந்து வருகிறது கார்ப்பரேட்-காவி பாசிசம்!
  • கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த மக்கள் போராட்டத்தைக் கட்டியமைப்போம்! ஒன்றிணைந்து செயல்படுவோம்!!


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94448 36642
மின்னஞ்சல் : rsyftamilnadu@gmail.com

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

பாபர் மசூதியை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் தலைமையிலான இந்துத்துவக் கும்பல் இடிக்கவில்லை என்றும், மசூதிக்கு கீழ் உள்ள ராமர் சிலையைப் பாதுகாக்கத்தான் அங்கு சென்றனர் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.

மேற்சொன்ன கிரிமினல்கள் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தைச் சேர்ந்த பலரும் பொதுவெளியில், மசூதி இடிப்புக்குப் பொறுப்பேற்றும், அதனை பகிரங்கமாகவே நியாயப்படுத்தியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் மசூதியை அவர்கள் இடிக்கவில்லை என ஒரு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியும் எனில், நாம் ஒரு அபாயகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

தமது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை படிப்படியாக அமல்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரக் கும்பல் இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை இந்தத் தீர்ப்பு முன்னறிவிக்கிறது.

இந்தத் தீர்ப்பின் சாராம்சத்தையும் பின்னணியையும் விரிவாக விளக்குகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !

பாருங்கள் ! பகிருங்கள் !

இந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் !

0

ந்தோனேசியாவில் புதியதாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இப்போராட்டங்களைக் கடுமையான முறையில் போலீசு  ஒடுக்கி வருகிறது.

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் “பல அம்சங்களைக் கொண்ட” வேலை உருவாக்கச் சட்டத்தை இந்தோனேசிய அரசு கடந்த திங்கள் கிழமை (05-10-2020) அன்று நிறைவேற்றியது.

தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு விரோதமான பல்வேறு அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்துக்கு இந்தோனேசியத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய அளவிலான போராட்டத்துக்கு அந்நாட்டு தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !

இதனையொட்டி, கடந்த செவ்வாய்க் கிழமை (06-10-2020) முதல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு நீண்ட பேரணிகளை நடத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மூலம் தாக்குதலைத் தொடுத்தது இந்தோனேசிய போலீசு. பல இடங்களில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.

வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என அந்த நாட்டின் அதிகார வர்க்கத்தினர் கூறிவருகின்றனர். இந்தியாவிலும் கூட தொழிலாளர் நலச் சட்டங்களில் கார்ப்பரேட் ஆதரவு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசால் சொல்லப்படும் காரணமும் இதுதான். ஆனால் உண்மையில் இந்தச் சட்டம் என்ன  செய்யவிருக்கிறது ?

இந்தோனேசியாவின் தொழிலாளர்களுக்கான சம்பளம், வேலை நிலைமைகளில் உள்ள பாதுகாப்பை ரத்து செய்துள்ளது.  துறைவாரியான குறைந்தபட்ச ஊதியத்தை அகற்றுகிறது.

இதற்கு முன்னர், ஒரு நிறுவனத்திலிருந்து தொழிலாளர் வெளியேறும் போது அவருக்குக் கொடுக்க வேண்டிய பிரிவுத் தொகை, அதிகபட்சமாக 32 மாதச் சம்பளமாக இருந்தது. இது அவர் எவ்வளவு காலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார் என்பதைப் பொருத்து மாறுபடும். ஆனால் தற்போது இந்தப் புதிய சட்டம் அதிகபட்ச தொகையை 19 மாதச் சம்பளமாக சுருக்கிவிட்டது.

அனுமதிக்கப்பட்ட கூடுதல் உழைப்பு நேரத்தை (Overtime) நாளொன்றுக்கு 4 மணிநேரமாக உயர்த்தியிருக்கிறது இந்தச் சட்டம். வாரத்திற்கு 18 மணிநேரம் அதிகபட்ச கூடுதல் உழைப்பு நேரமாக வரம்பு வைத்திருக்கிறது.

வேலையை வெளியே கொடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்தச் சட்டம் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகளை அனுமதிக்கிறது.

இந்தப் புதிய சட்டம் பெரு முதலாளிகளுக்குப் பெரும் ஆதாயமாக இருக்கும் நிலையில் இந்தோனேசிய பங்குச் சந்தை புள்ளிகள் 1.31% அளவிற்கு உயர்ந்துள்ளன.

தங்களது உரிமைகளுக்காகப் போராடும் இந்தோனேசிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் !

 போராட்டப் புகைப்படங்கள் !

இந்தோனேசியாவின் தெற்கு சுலவெசி மாகாணத்தில் உள்ள மகஸ்ஸரில் இந்தோனேசிய அரசிற்கு எதிராகப் போராடும் ஒரு பல்கலைக் கழக மாணவர் ! நாள் : அக் 06, 2020 படம் :ரெய்டர்ஸ்
மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டங் பகுதியின் மண்டல பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்னர் தடுப்பரணாக நிற்கும் போலீசாருடன் மோதும் போராட்டக்காரர் ! நாள் : அக் 06, 2020 படம் :ரெய்டர்ஸ்
சுமத்ராவில் உள்ள லாம்பங்க் பகுதியில் நடைபெற்ற போராட்டம் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பெகாசியின் ஜபபேகா தொழிற்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
மஃப்டியில் இருந்த ஒரு போலீசு (கையில் துப்பாக்கியைப் பிடித்திருப்பவர்), இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இளைஞரை கைது செய்து அழைத்துச் செல்கிறார். இடம் : பாண்டங்க்., நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
ஜகார்த்தாவில் போராட்டக்காரர்களுடனான மோதலில் கவிழ்க்கப்பட்ட போலீசு வாகனத்தை மஃப்டியில் உள்ள போலீசுக்காரர்கள் தூக்குகின்றனர். நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
மத்திய ஜாவாவில் உள்ள செமராங் பகுதியில் போலீசாருடன் மோதும் போராட்டக்காரர்கள் நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
இந்தோனேசியாவின் பெகாசி பகுதியில் கலவர போலீசுடனான மோதலுக்குப் பின்னர் மாணவர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
ஜகார்த்தாவில் போராட்டத்தினிடையே போலீசு வாகனத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் மாணவர்கள். நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
பாண்டங்கில் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தண்ணீர் பீரங்கியின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது கலவர போலீசு. நாள் : அக் 07, 2020 படம் : ஏ.எஃப்.பி
மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டிங் பகுதியில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
மேற்கு ஜாவாவின் பாண்டங்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அவை கட்டிடத்தின் முன்னர் நடந்த போராட்டம் நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
இந்தோனேசியா, ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டான்ஞ்-ஜெராங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டம் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
மேற்கு ஜாவா – பாண்டங்கில் நடந்த போராட்டத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பற்றி எரிகிறது. நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
இந்தோனேசியாவின் லாம்பங்கில் நடைபெற்ற போராட்டத்தில், இளைஞர்கள் போலீசை நோக்கி கற்களை எரிகின்ற காட்சி. நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி


சரண்

நன்றி : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், த வயர்