மேற்குவங்கம், இந்தியா : இந்தியாவின் கிழக்குப்புறம் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, இவை பிரிட்டிஷ் ஆட்சிக்காலந்தொட்டே இங்கு இருந்துவருகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பகுதி மலைவாழ் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இந்த தோட்டங்கள் ஒரு வாழ்வாதாரமாக இருந்தது. இவை மெதுவாக மூடப்பட ஆரம்பித்தப்பின், அந்த பகுதியைச் சேர்ந்த பெருவாரியான தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனது, இது அவர்களை கட்டாய இடப்பெயர்வுக்கு இட்டுச்சென்றது.
தன்னை டீ வித்தவன் என பெருமையாக கூறிக்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, ‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்’ என இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தார்.
ஆனால், தொழிலாளர்களின் நிலை மாறவில்லை. பெரும்பாலானோர், குடிபெயர்ந்துவிட்டனர், எஞ்சியிருப்போர், தினக்கூலிகளாகயினர் -இவர்கள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.
கடந்த மாதம் (ஆகஸ்டு-2019) நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால், இந்தச் சட்டம் தேயிலைத் தோட்டங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
“தேயிலையின் சந்தை வீதமும் அதை உற்பத்தி செய்வதற்கான மொத்தச் செலவும் கட்டுப்படியாகாமல் பல தோட்டங்கள் மூடப்பட்டது… [அது] தொழிலாளர்கள் சம்பாதிக்க பிற ஆதாரங்களை தேடவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது” என்று நெயில் செத்திரி, என்ற அரசு அலுவலர் தெரிவித்தார்.
ஒரு நாள் வேலைக்குப் பிறகு தேயிலை விவசாயிகள் வீடு திரும்புகின்றனர். சிலர் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பை பெறுகின்றனர் என்றாலும், கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களாக வேலை செய்பவர்களுக்கு இங்கு எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை.
மீனு லோகார், தேயிலை தோட்டம் மூடப்பட்டதால் அவரது குடும்பத்தினரால், புது டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.
பல பழங்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் வருமானத்தை நிரப்புவதற்கு, பள்ளியை விட்டுவிட்டு, கிடைத்த வேலைகளை செய்கின்றனர். புகைப்படத்தில் உள்ள குழந்தைகள் சந்தையில் விற்கப்படும் மரக்கட்டைகளை கண்டுபிடிக்க அவர்களின் உயிரை பணயம் வைக்கிறார்கள். நிரம்பப் பாயும் நதி பல உயிர்களை காவு கொண்டுள்ளது.
அகிலா லோகார் : 35 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய பின்னர், நிர்வாகத்தின் தவறான நடத்தை மற்றும் முறைகேடுகள் உட்பட, தானும் அதேபோல் தவறாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இவரது மகன் சாரதா மொஹாலி, 22, இவர், டூர்ஸ் டிவி என்ற ஒரு யூடியூப் சேனல் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்.
ஒரு விவசாயி, வேலை நேரத்தின் இடைவேளையில், நிரம்பி வழியும் நதியைக் கவனிக்கிறார். தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்ட பின்னர் டஜன் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அல்லது பட்டினியால் இறந்துள்ளனர்.
குவாரிகளில் இருந்து கற்கள் ஏற்றிச் சென்ற லாரி, டோஅர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஆற்றை கடக்கிறது. கல் உடைப்பது பல விவசாயிகளுக்கு ஒரு மாற்று வருவாய் ஆதாரமாக உள்ளது.
தூரிவில் பீர்பாரா பகுதியில் கல் ஏற்றும் இடத்தில் ஒரு தொழிலாளி. 20 கி. மீ. தொலைவில் உள்ள பூடான் மலைப் பகுதியிலிருந்து கனரக கற்கள் வருகிறது, சிறிய சிறிய துண்டுகளாக இங்கு உடைக்கப்பட்டு பிறகு ரயில் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
டோஅர்ஸ் பகுதி பீர்பானில் உள்ள கல் உடைக்கும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பிறகு ஒரு சமுதாயமாக குளிக்கும் காட்சி.
கல் உடைக்கும் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் காட்சி.
கற்களை ஏற்றிச்செல்லும் கூட்ஸ் ரயில் ஒரு பாலத்தின் இடையில் நிற்கிறது. இந்த ரயில் கற்களை நாடுமுழுவதும் கட்டுமானம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச்செல்லும்.
புஷ்மா டி, தற்போது மூடப்பட்ட பண்டப்பாண்டி தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு சமூகப் பணியாளர், தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டுறவை ஆரம்பித்திருக்கிறார்.
தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டபின், பல இளைஞர்கள் தங்கள் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேலை தேடி பிற இடங்களுக்கு சென்றுவிட்டனர். இந்த குழந்தைகளும் தங்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தங்கள் சகோதரர்களையும் வீட்டையும் பராமரித்து வருகின்றனர்.
ஒரு பழங்குடி பெண் அரசாங்க சுகாதார நிலையத்தில் மருத்துவம் பெறுகிறார். ஊட்டச்சத்து குறைபாடும் தொற்று நோய்களும் இப்பகுதியில் பொதுவாக தென்படுபவை.
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அந்தக் கட்டிடத்தை அணுகியதும் நான் பார்த்த காட்சி எதிர்பாராதது. அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. பனி தூவி முடிந்து, மழை தூற ஆரம்பித்த ஒரு ஜனவரி வியாழன் காலை நேரம். பொஸ்டன் நகரத்து 20 பார்க் பிளாஸா உயர் கட்டிடத்தின் வரவேற்பறை. நான் உள்ளே கால் வைக்கமுடியாதபடி வரவேற்பறையை மறித்து குறுக்காகப் படுத்தபடி கிடந்தன மனித உடல்கள். நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப்போய் நின்றேன்.
எனக்கு முன் நின்ற குளிராடை அணிந்த உயரமான பெண் தயங்காமல் தன் குதி உயர் காலணியை எட்டி எட்டி வைத்து ஒரு கையையோ, காலையோ, பிருட்டத்தையோ மிதித்துவிடாமல் எச்சரிக்கையாக நடந்தார். நானும் அவர் பின்னால் தொடர்ந்துபோய் வரவேற்பறை மின்தூக்கியினுள் நுழைந்துகொண்டேன். அவர் தனக்கு வேண்டிய தள பட்டனை அமுக்கினார். நான் என்னுடையதை அமுக்க மின்தூக்கி மேலெழும்பியது.
பாஸ்டன் நகரத்தின் பார்க் பிளாசா வளாகத்தின் வாயிலில் இசுரேலின் தாக்குதலைக் கண்டித்து போராட்டக்காரர்கள்.
அந்தக் கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்துதான் இஸ்ரேல் நாட்டு துணை தூதரகம் இயங்கியது எனக்கு தெரியாது. இஸ்ரேல் காஸாவை தாக்கியதை தொடர்ந்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை வரவேற்பறையை ஆக்கிரமித்து வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அமைதி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று அந்த உயரமான பெண்மணி சொன்னார்.
எட்டாவது தளத்தில் நான் என் நண்பரைச் சொன்ன நேரத்துக்கு சந்தித்தேன். அவர் எப்படியோ எனக்கு முன்னால் வந்து காத்திருந்தார். அவருக்கு இந்த போராட்டம் பிடிக்கவில்லை என்பதால் கோபத்திலிருந்தார். காஸாவில் நடக்கும் போருக்காக இங்கே இவர்கள் ஏன் வீணாக வரவேற்பறையை தடுத்து படுத்திருக்கிறார்கள், இவர்களால் என்ன ஆகப் போகிறது என்பதுதான் அவர் வாதம். அவர்கள் அமைதி முறையில் தங்கள் சகோதரர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். இந்த நாட்டில் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளவர்கள் அதைச் செய்யாவிட்டால் மனிதப் பிறப்பு என்பது எதற்கு என்றேன். மூன்று அடிதூரம் பொஸ்டன் காற்று எங்களைப் பிரித்தது, ஆனால் எங்கள் மனங்களோ பல மைல்கள் தூரத்தில் நின்றன.
பாஸ்டன் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் காட்சி. (கோப்புப் படம்)
நான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கியபோது இன்னொரு காட்சி கிடைத்தது. பொலீஸ் வண்டிகள் வெளியே நிற்க, நிறைய பொலீஸ்காரர்கள் கட்டிடத்தை சூழ்ந்துவிட்டார்கள். ஓர் உடலை நாலு பேர் சேர்ந்து காவினார்கள். இடது காலை ஒருவர் வலது காலை ஒருவர் இடது கையை ஒருவர் வலது கையை ஒருவர் என்று பிடித்து தூக்கிப்போய் வாகனத்தை நிறைத்தார்கள். சிலர் பதாகைகளை ஏந்தினார்கள். சிலர் இஸ்ரேல் ஒழிக என்று குரல் எழுப்பினார்கள். பெட்ரோல் கலந்த தண்ணீர் குட்டை பல வண்ணங்கள் எழுப்ப அதிலே நின்றபடி ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் சேர்த்து தன்னையும் பொலீஸ் வானில் ஏற்றும்படி கத்தியதை அன்று முழுவதும் என்னால் மறக்க முடியவில்லை.
எனக்கு பாலஸ்தீனிய கவிஞர் முகமட் டார்விஷ் ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு காவல் அரண்கள் பிடிக்காது, அடையாள அட்டையையும் வெறுத்தார். அவை அடக்குமுறைகளின் சின்னம். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில்தான் காவல் அரண்கள் இருக்கும், அடையாள அட்டைகளும் புழங்கும். ஒரு காவல் அரண் காவலாளியிடம் சொல்வது போன்ற அவருடைய கவிதை பிரபலம்.
எழுதிக்கொள்
நான் ஒரு அரேபியன்
அட்டை எண் 50000
எனக்கு எட்டு பிள்ளைகள்
ஒன்பதாவது கோடை முடிவில் பிறக்கும்
எனவே, உனக்கு கோபமா?
எழுதிக்கொள்
நான் ஒரு அரேபியன்
நான் தோழர்களுடன் கல்லுடைக்கிறேன்
எனக்கு எட்டு பிள்ளைகள்
அவர்களுடைய ரொட்டியையும்
உடைகளையும் நோட்டுப் புத்தகங்களையும்
கல்லிலேயிருந்து
உடைத்து எடுத்துக்கொள்கிறேன்.
பொஸ்டன் நண்பரிடம் மேலே கூறிய கவிதையை சொல்லிக்காட்டியபோது அவர் கோவலனுக்கு ஓர் அடையாள அட்டை இருந்திருந்தால் அன்று ஒரு கொலையை தடுத்திருக்கலாம் என்றார். அடையாள அட்டையை தகவலுக்காக பயன்படுத்துவது வேறு, ஆனால் குறிப்பிட்ட மக்களை அடையாளப்படுத்தவும், அடிமைப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் பயன்படுத்தினால் அது அரச பயங்கரவாதம்.
முகமட் டார்விஷ் அதைத்தான் எதிர்த்து குரல் எழுப்பினார். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிரான குரல் அது. அதை மனிதன் செய்யாவிட்டால் அவன் பிறந்து பூமியில் ஓர் இடத்தை நிரப்பியதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். மாவீரன் நெப்போலியன் சொன்னான் 10,000 பேருடைய மௌனத்திலும் பார்க்க ஒருவருடைய குரல் சத்தமாக ஒலிக்கும் என்று. நண்பர் அப்பொழுதும் சமாதானமாகவில்லை. ஐயாயிரம் மைல்களுக்கப்பால் நடக்கும் ஒரு போருக்கு இங்கே பொஸ்டனில் பனிச்சேற்றில் புரள்வதால் ஒன்றுமே நடக்காது என்பதுதான் அவர் நிலைப்பாடு. உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கும் ஆயிரமாயிரம் குரல்கள் அடக்குபவர்களின் ஆன்மாவைத் தொடும் என்றேன். அது போலவே நடந்தது. பத்து நாட்களில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
முகமட் டார்விஷ்
நான் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலங்களில் அடிக்கடி காவல் அரண்களைக் கடக்க நேரிடும். துப்பாக்கியை நெஞ்சோடு அணைத்த காவலர்கள் அடையாள அட்டையை மேலும் கீழும் ஆராய்வார்கள். தலைகீழாக வெளிச்சத்தில் படித்துப் பார்த்து அப்படியும் திருப்தி வராமல் சுரண்டிப் பார்த்து உறுதிசெய்வார்கள். ஒரு எதிர் வார்த்தை பேசினால் அதுவே கடைசி வார்த்தையாக அமைந்துவிடக்கூடும். அந்தச் சமயங்களில் நான் என்னை மிகவும் கேவலமாக உணர்வேன். அப்படியெனில் அந்த நாட்டு மக்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள். ஓர் உண்மையான அரசு செயல்படும்போது அது இருப்பது தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஓர் அடக்குமுறை நாட்டில் ஒவ்வொரு கணமும் அரசுதான் அரசோச்சுவதை ஞாபகமூட்டியபடியே இருக்கும்.
மார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை. ஹிட்லரின் இன அழிப்புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மார்ட்டினுடைய குரல், அவர் 84-ல் இறந்துபோனாலும், ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவருடைய கவிதை இன்றைக்கும் கேட்கிறது.
முதலில் அவர்கள் யூதரைத் தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் யூதனில்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் கம்யூனிஸ்டு இல்லை
பின்னர் அவர்கள் தொழில் சங்கத்தினரை தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் தொழில் சங்கத்தவன் இல்லை
அடுத்து அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அப்போது குரல் கொடுப்பதற்கு எனக்கு
ஒருவருமே இல்லாமல் போய்விட்டார்கள்.
எனக்கு ஓர் இளம் நண்பர் இருக்கிறார், பெயர் எம்.ரிஷான் ஷெரீப். நல்ல கவிஞர் அத்தோடு எழுத்தாளர். அவர் ஒருமுறை கொழும்பில் ஒரு பழைய புத்தகக் கடைக்கு போனார். மூன்று மணிநேரம் செலவழித்து பல அருமையான தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அவற்றை பையிலே நிரப்பிக்கொண்டு, அந்தப் பாரத்தில் பை தரையில் இழுபட, பஸ்சில் ஏறினார். புறக்கோட்டையை சமீபித்தபோது காவல் அரணில் பஸ்சை நிறுத்தி ஒவ்வொருவராக சோதனைபோட ஆரம்பித்தார்கள்.
சிங்களம் தெரியாதவர்கள், அட்டை இல்லாதவர்கள், தமிழர்கள் எல்லோரும் ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அவரை சோதித்த காவலனின் கையில் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ஏதோ கடத்தல்காரனை பிடித்ததுபோல அவன் பரபரப்பானான். நீண்ட விசாரணை நடந்தது. படையதிகாரியை கூப்பிட்டு அவரைக் கலந்தாலோசித்தான். பஸ்சிலே எல்லோரும் திரும்பவும் ஏறி உட்கார்ந்துகொண்டு இவருக்காக காத்து நின்றார்கள். இறுதியில் மூன்றுமணிநேரம் பரிசோதித்து வாங்கிய அத்தனை புத்தகங்களையும் பறித்துக்கொண்டு ‘ஓடடா’ என்று துரத்திவிட்டான். இந்த விவரங்களை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் புத்தகம் வைத்திருந்த குற்றத்தை தவிர அவர் வேறு ஒன்றையும் செய்திருக்கவில்லை. அவருக்கு இனிமேல் காவல் அரணையும், அடையாள அட்டையையும் நினைக்கும்போது நடுக்கம் வராமல் வேறு என்ன செய்யும்.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பொஸ்டன் குளோப் நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. வின்செஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பிரியா சுந்தரலிங்கம் என்ற 17 வயது மாணவி கடந்த பதினொரு நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை. இலங்கை போரில் சிக்கி தினம் செத்துக்கொண்டிருக்கும் 300,000 தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய தாயார் தன் மகள் பொஸ்டனில் இருந்தாலும் அவருடைய இதயம் முழுக்க ஈழத்து போரில் அல்லலுறும் மக்களிடம் இருப்பதாகக் கூறுகிறார். பிரியா கடைசி வேளை உணவை பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு உண்டார். ஒரு மாதகாலம் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தப்போவதாக கூறுகிறார். ‘இனம் அழிகிறது. நிலம் அழிகிறது. ஒரு கலாச்சாரம் அழிகிறது. போரை நிறுத்த உலகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் எல்லாத்தையும் இழந்துவிடுவோம்’ என்று சொல்கிறார். அவருடன் சேர்ந்து 1100 அமெரிக்கர்கள் ஒருவேளை உணவைத் துறந்திருக்கிறார்கள். பத்தாயிரம் வேளை உணவைத் துறப்பது தங்கள் இலக்கு என்று கூறுபவரிடம் உண்ணாவிரதத்தால் என்ன பயன் என்று கேட்டால் உணவு துறப்பதும் உலகை நோக்கிய ஒருவித குரல்தான் என்று பதில் கூறுகிறார்.
கடந்த மாதங்களில் கனடாவில், இலங்கை தமிழின ஒழிப்பை எதிர்த்து பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மனிதச் சங்கிலித் தொடர்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கனடிய அரசு தலையிட்டு போரை நிறுத்தவேண்டுமென்று கோரி நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் கனடாவில் மரண அஞ்சலிக் கூட்டங்களும் அதிகமாகி வருகின்றன. ஒவ்வொரு நாளும் கனடாவில் இருக்கும் உறவினர்களுக்கு இலங்கையிலிருந்து மரணச் செய்திகள் வருகின்றன. போர் நிலத்தை விட்டு புலம்பெயர்ந்தபோது வீதிகளில் குண்டுகள் விழுந்து இறந்தவர்கள் அதிகம். குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்தன. கணவனே கதியென்று அவர் பின்னால் வந்த ஒரு பெண் கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். ‘இரு என்றால் இருந்து, நில் என்றால் நின்று, வா என்று சொன்னபோது அவருடன் புறப்பட்டேன். இப்ப என்னைவிட்டுவிட்டு போய்விட்டார். நானும் செத்துப் போறேன்’ என்று தலையிலடித்து அழுகிறார் அந்தப் பெண். எனக்கு புறநானூறுப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
கலம் செய் கோவே, கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே.
‘குயவனே, வண்டிச் சில்லில் ஒட்டியிருக்கும் பல்லி, வண்டி போகும் இடம் எல்லாம் போவதுபோல நானும் கணவர் பின்னால் அவர் சென்ற இடமெல்லாம் சென்றேன். இன்று என்னை விட்டுவிட்டு போய்விட்டார். அவரை புதைப்பதற்கு செய்யும் தாழியை பெரிதாகச் செய். எனக்கும் இடம் வேண்டும்.’
இரண்டாயிரம் வருடங்கள் முந்தைய புறநானூற்றுப் பெண்ணுக்கும் இன்றைய ஈழத்துப் பெண்ணுக்குமிடையில் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.
இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. போரில் சிக்கி சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க தீர்மானித்திருக்கிறது. அது ‘நல்வாழ்வு கிராமங்கள்’ அமைக்கும் திட்டம். யாருக்கு நல்வாழ்வு என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. யுத்த நிலத்திலிருந்து தப்பி வந்த மக்கள் வன்னிக்கு வெளியே தங்கள் புதுவாழ்வை தொடங்கலாம். வவுனியாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நாலு கிராமங்களும், 100 ஏக்கர் நிலப்பரப்பில் மன்னாரில் ஒரு கிராமமும் அமைக்கப்படும். இந்தக் கிராமங்கள் முழுக்க முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் உச்சமான பாதுகாப்புக்கு உத்திரவாதம் உள்ளது என்று அரசாங்கம் சொல்கிறது.
உண்மையில் இவை கிராமங்கள் அல்ல, ஹிட்லரின் இன அழிப்பு வதை முகாம்கள் போல concentration camps தான் என்பதை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். உயரமான முள்ளுக் கம்பி வேலிகள் இராதென்றும், அகதிகளின் புஜங்களில் அடையாள எண்கள் பச்சை குத்தப்படமாட்டாது என்றும் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். இதிலே கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தக் கிராமங்களில் 39000 தற்காலிக வீடுகள், 7800 கழிப்பிடங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள், கடைகள் என்று கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டிருக்கிறது. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அகதிகள் வாழப்போவதால் தவறுதலாக விமானங்கள் அவர்கள் தலை மீது குண்டுகள் போடும் அபாயம் இல்லை.
அகதிகளின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்படும் என்றும், அகதிப் பெண்களின் கர்ப்பம் அழிக்கப்படும் என்றும், பள்ளிக்கூடங்களில் சிங்களம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்றும் வதந்திகள் கிளம்பியிருக்கின்றன. அவை எல்லாம் பொய். அத்துடன் இன்னொரு முக்கியமான விடயம். இந்த திட்டத்தை நுட்பமாக ஆராய்பவர்கள் நச்சு வாயுக் கிடங்குகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அவதானிக்கலாம். அரசாங்கம் எவ்வளவு விவேகத்துடனும், தீர்க்க தரிசனத்துடனும், கரிசனத்துடனும் இப்படியான தீர்வு வேலையை முன்வைத்தாலும் கத்துபவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள்; குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.
இன்று காலை நான் கம்புயூட்டரில் இருந்தபோது என்னை ஒருவர் சாட்டில் (chat) அழைத்தார். சில நிமிடங்கள் பேசிய பிறகு எங்கள் உரையாடல் இப்படி முடிவுக்கு வந்தது.
உங்கள் நாட்டில் காவல் அரண்கள் உள்ளனவா?
இல்லை
அடையாள அட்டையை காட்டச் சொல்லி கேட்பார்களா?
இல்லை
அங்கே நீங்கள் சுதந்திரமாக எதற்காகவும் குரல்கொடுக்கலாமா?
கொடுக்கலாமே.
அப்ப அது நல்ல நாடாகத்தான் இருக்கவேண்டும்.
யோசித்துப் பார்த்தபோது இந்த முகம் தெரியாத நண்பர் சொன்னதில் அர்த்தம் இருந்தது. அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள்தான் அடுத்தவர் எப்படி வாழவேண்டும் என்பதை முடிவுசெய்வார்கள். அடக்குமுறை இல்லாத, அநீதிக்காக குரல் கொடுப்பதை தடை செய்யாத நாடு ஒருவருக்கு வாய்ப்பது அரிது. அதுதான் பொஸ்டன் மாணவியின் குரலும், வண்டிச்சக்கரத்து பல்லிபோல புருசனுடன் சென்று அவனைப் பலிகொடுத்த பெண்ணின் குரலும் ஒலிக்கின்றன.
மனிதன் எல்லாம் இழந்த நிலையில் அவனிடம் எஞ்சியிருப்பது அவனுடைய குரல் மட்டுமே. மார்ட்டின் நியூமொல்லரின் குரல் இன்னும் ஒலிக்கிறது. முகமட் டார்விஷின் குரல் அவர் இறந்தபின்னும் தொடர்கிறது. சு. வில்வரத்தினத்தின் தோப்பிழந்த குயிலின் குரல் இன்றைக்கும் கேட்கிறது. குரல் ஒலிக்குமட்டும் மனிதன் நம்பிக்கை இழப்பதில்லை.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு : இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
அத்தியாயம் ஏழு | பெஞ்ஜமின் பிராங்க்ளினும் அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியும்
அ.அனிக்கின்
18-ம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களில், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிந்தனையாளர்களில் கடைசியாக வந்தவர்களில் ஒருவர் பிராங்க்ளின். வட அமெரிக்காவில் அவர் வகித்த பாத்திரத்தை அறிவு வளர்ச்சிக்குக் காரணமான மாபெரும் முன்னோடிகளோடு ருஷ்யாவில் லொமனோசொவ், இங்கிலாந்தில் நியூட்டன், பிரான்சில் டெகார்ட் போன்றவர்களோடு ஒப்பிடுவது அவசியம்.
அவர் ஒரு பெளதிக விஞ்ஞானி; நவீன மின்னியல் விஞ்ஞானத்தைப் படைத்தவர்களில் ஒருவர். தம் காலத்திய சமூகத்தின் புதிய, முதலாளித்துவ ஜனநாயகக் கருத்துக்களைத் தற்சிந்தனையோடு எடுத்துக் கூறிய தத்துவஞானி, எழுத்தாளர். அவர் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர். அமெரிக்கப் புரட்சி மற்றும் புதிய அரசின் விடுதலைப் போராட்டத்தின் அதிகத் தீவிரமான தலைவர்களில் ஒருவர். புத்தகம் அச்சிடுவதே தன்னுடைய முக்கியமான தொழில் என்று கருதிய அந்தப் புகழ்மிக்க அமெரிக்கரின் ஈடுபாடுகள், பணிகள் ஆகியவற்றைப் பற்றிய இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.
அவர் தன்னுடைய தத்துவஞான, அரசியல் பணிகளின் சுற்றுவட்டத்துக்குள்ளாக அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுதினார். அமெரிக்கா என்ற புதிய உலகத்தில் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளில் அவரும் ஒருவர்.
அவர் வாழ்க்கையும் எழுதிய நூல்களும்
பிராங்க்ளின் எழுதிய சுயசரிதை குறிப்பிடத்தக்க வகையிலிருக்கின்ற வரலாற்று, இலக்கிய ஆவணமாகும். அவர் தன்னுடைய எழுபத்தொன்பதாம் வயதில் இந்தப் புத்தகத்தை எழுதினார். அதில் ஒரு அத்தியாயத்தில் தன்னுடைய நீண்ட வாழ்க்கையில் தனக்குத் தொடர்ச்சியாக மகிழ்ச்சி இருந்ததைப் பற்றி எழுதுகிறார். குடிமகன், அறிஞர், தனிப்பட்ட மனிதர் – இப்படி ஒவ்வொரு வகையிலும் அவர் மகிழ்ச்சியோடிருந்தார். அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் வட அமெரிக்காவின் சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அந்த இலட்சியம் அவருடைய வாழ்க்கைக் காலத்திலேயே வெற்றியடைந்தது. அவர் விஞ்ஞானத்துக்குச் செய்த சேவைகளை உலகம் முழுவதும் அங்கீகரித்தது. அவர் சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியோடிருந்தார் (அவருடைய ஒரே மகனான வில்லியம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் தன் தகப்பனாருக்கும் தாய்நாட்டுக்கும் விரோதமான எதிரிகளை – ஆதரித்ததை நாம் ஒதுக்கி விடலாம்).
பெஞ்ஜமின் பிராங்க்ளின்
ஒரு ஏழைப் பயிற்சியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய பிராங்க்ளின் தன்னுடைய வாழ்க்கையின் இறுதியில் பெரும் பணக்காரராக இல்லாவிட்டாலும் சுமாரான பணக்காரராக இருந்தார். அவருக்குப் பல வீடுகளும் அதிகமான நிலங்களும் சொந்தமாக இருந்தன. அந்தக் காலத்தில் குறிப்பாக அமெரிக்காவில் செல்வத்தின் முக்கியமான சின்னங்கள் இவைதான்.
பிராங்க்ளின் புதிய உலகத்தைச் சேர்ந்தவர். அங்கே, மார்க்ஸ் எழுதியிருப்பது போல், ”முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அவற்றின் பிரதிநிதிகளோடு சேர்த்து இறக்குமதி செய்யப்பட்டு வரலாற்று மரபு இல்லாததை ஈடு செய்யும் விதத்தில் மிக அதிகமான இயற்கை வளத்தைக் கொண்டிருந்த மண்ணில் அவை வேகமாக விளைந்தன”. (1)
இங்கிலாந்திலிருந்த மத, அரசியல் ஒடுக்குமுறையைத் தாங்க முடியாமல் ஓடி வந்த பரிசுத்தவாதிகள் அங்கே முதன் முதலாகக் குடியேறியவர்களில் பெரும்பான்மையினர். அவர்களின் வழிவந்தவர்கள் கன்னி நிலங்களைப் பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்கினார்கள்; வெகு சீக்கிரத்தில் நகரங்களில் கைத்தொழில்களைத் தொடங்கினார்கள். அவர்களும் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலவே பணக் கடவுளை வழிபட்டார்கள் – ஆனால் அந்த முறை வேறுவிதமாக இருந்தது.
அவர்கள் வரலாற்றிலேயே மிகவும் முந்திய, அதிக முழுமையான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்தினார்கள்; தனிநபர் சுதந்திரம், நிர்வாக அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்தல், சுதந்திரமான நீதித்துறை ஆகிய கருத்துக்களை அவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் இந்த ஜனநாயகத்தில் சட்டத்துக்கு முன்பு சம்பிரதாய ரீதியான சமத்துவம் அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கும் திரையாகப் பயன்பட்டது; அங்கே சம்பிரதாயத்துக்கு விரோதமான கருத்துக்கள் ஒடுக்கப்பட்டன.
இந்தப் புதிய அமெரிக்க இனத்தில் செல்லரித்துப் போன நிலப்பிரபுத்துவ உயர் வகுப்பு இல்லை; அவர்கள் பட்டங்களையும் குடும்பங்களின் தனிச் சலுகைகளையும் ஏளனம் செய்தார்கள். ஹெர்மன் மெல்வில் எழுதிய இஸ்ரேல் பாட்டர் என்ற நாவலின் கதாநாயகனான அமெரிக்கன் விவசாயியாகவும் மாலுமியாகவும் இருப்பவன். அமெரிக்க சுதந்திரப் போர் நடைபெறும் காலத்தில் இங்கிலாந்துக்கு வந்தான். அவனால் ஆங்கில அரசவையினரைப் பார்த்து “சர்” என்று சொல்ல முடியவில்லை; மூன்றாம் ஜார்ஜ் மன்னரிடம் பேசும் பொழுது “மாட்சிமை பொருந்திய” என்று சேர்த்துச் சொல்ல முடியவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பென்சில்வேனியாவின் நில உடைமையாளர்களும் மஸாசூ ஸெட்ஸ் வணிகர்களும் ஆணவத்தில் ஆங்கிலப் பிரபுக்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல.
மேற்கு ஐரோப்பாவோடு ஒப்பிடுகின்ற பொழுது அமெரிக்காவில் மத சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் நிலவும் என்று நம்பப்பட்டது. ஆனால் பிராங்க்ளின் பிறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சொந்த ஊரான போஸ்டன் நகரத்துக்கு மிக அருகேயுள்ள சேலம் என்ற இடத்தில் “சூனியக்காரிகள்” விசாரிக்கப்பட்டு சிரச் சேதம் செய்யப்பட்டனர். அங்கே வெவ்வேறு மதப்பிரிவுகளைப் பின்பற்றியவர்களும் ஒருவரோடொருவர் கூடி வாழவில்லை; தனித்தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் மதகுருக்கள், திருச்சபை வட்டாரத்தைச் சேர்ந்த பணக்காரர்களின் ஈவிரக்கமற்ற ஆதிக்கம் எப்பொழுதும் மேலோங்கியிருந்தது. மதப் பாசாங்கில் அமெரிக்கர்கள் ஆங்கிலேயர்களையும் மிஞ்சிவிட்டனர். அவர்கள்தான் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்து முதலில் போராடியவர்கள்; ஆனால் அவர்கள் ஈவிரக்கமற்ற வகையில் சிவப்பு இந்தியர்களை அழித்தார்கள்; தெற்கு மாநிலங்களில் அடிமைமுறையை ஏற்படுத்தினார்கள்.
இந்த விவசாயிகளும் கைவினைஞர்களும் அடிப்படையில் சுதந்திரத்தை நேசிப்பவர்களாக, வீரமானவர்களாக, சுறுசுறுப்பானவர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து தான் பிராங்க்ளின் வந்தார். அந்தத் தேசியம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது; அதன் சிறப்புமிக்க அம்சங்கள் எல்லாவற்றையும் பிராங்க்ளின் ஈர்த்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளையும் அவருடைய ஆளுமை பிரதிபலித்தது. அவர் ஆழமான ஜனநாயக உணர்வோடு செல்வம் மற்றும் அதிகாரத்தை மதிப்பதையும் இணைத்துக் கொண்டார். அவர் வறட்டுத்தனமான மதக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் எதிர்த்தார். ஆனால் “தெய்வம் இருப்பதையும், அவர் உலகத்தைப் படைத்து அதைத் தன்னுடைய பேரருளால் காப்பதையும் ஒருபோதும் சந்தேகித்ததில்லை” என்று அவரே எழுதியிருக்கிறார். அவர் அடிமை முறையை எதிர்த்தார், தேசிய சுதந்திரத்துக்காகப் போர் புரிந்தார். எனினும் அவர் ஆங்கில- சாக்ஸானிய இனத்தின் விசேஷமான குறிக்கோளில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் எளிமையானவர், எல்லோரும் விரும்பும் தன்மைகளைக் கொண்டவர்; ஆனால் பல சந்தர்ப்பங்களில் குறுகிய மனம் படைத்த ஆசானாகவும் சிறு திறமான அறநெறியாளராகவும் அவருடைய வாசகர்களுக்கும் கேட்போருக்கும் தோன்றினார்.
பெஞ்ஜமின் பிராங்க்ளின் 1706-ம் வருடத்தில் போஸ்டன் நகரத்தில் ஒரு பரிசுத்தவாதியின் மகனாகப் பிறந்தார். அது பெரிய குடும்பம். தகப்பனார் சோப்பு, மெழுகுவத்திகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு எவ்வகையிலும் முறையாகக் கல்வி கற்பிக்கப்படவில்லை; அவர் பெட்டியைக் காட்டிலும் கூட அதிகமான அளவுக்கு சுயமாகக் கல்வி கற்றவர். ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இரண்டு வருடங்கள் படித்த பிறகு அவருடைய மூத்த சகோதரன் (அவருடைய தகப்பனாரின் முதல் மனைவியின் மகன்) நடத்தி வந்த அச்சகத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டார். “… என்னுடைய சகோதரர் உணர்ச்சிவசப்பட்டவர்; என்னைப் பல முறை அடித்திருக்கிறார்; நான் அதைப் பற்றி மிகவும் ஆத்திரப்பட்டதுண்டு. அவர் என்னைக் குரூரமாகக் கொடுமைப்படுத்தியதுதான் சர்வாதிகாரத்தைக் கண்டு அருவருப்படையுமாறு எனக்கு போதித்தது என்று நினைக்கிறேன்; என் வாழ்நாள் முழுவதும் இந்த உணர்ச்சி என்னிடம் நிலைத்துவிட்டது.”(2)
இந்தக் காலத்தில்தான் ஆற்றல், முன்முயற்சி, அசாதாரணமான உழைப்பு, அறிவு வேட்கை போன்ற அவருடைய தனித்தன்மை மிக்க பிற அம்சங்கள் வளர்ச்சியடைந்தன. அவர் ஏராளமான புத்தகங்களைப் படித்தார்; புலமைமிக்கவர்களோடு நெருங்கிப் பழகினார்; அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். மதத்தைப் பற்றி ஓரளவுக்கு விமரிசனத்தன்மை கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அவர் தனது பதினேழாவது வயதில் குடும்பத்தையும் சொந்த ஊரையும்விட்டு வெளியேறினார். பென்சில்வேனியாவில் கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரான குவேக்கர்களின் தலைநகரமாக இருந்த ஃபிலடெல்ஃபியாவுக்குச் சென்றார். அங்கே ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அச்சுக் கலையை சிறப்பாகப் பயில்வதற்கும் அச்சு இயந்திரங்கள் வாங்குவதற்காகவும் இங்கிலாந்துக்குப் போனார். அவருக்குப் பணமும் சிபாரிசுக் கடிதங்களும் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்; ஆனால் இந்த வாக்குறுதிகள் பேச்சோடு நின்றுவிட்டன.
பிராங்க்ளின் இங்கிலாந்தில் ஒன்றரை வருட காலத்துக்கு மேல் இருந்தார்; லண்டனிலுள்ள அச்சகங்களில் வேலை செய்து அச்சுக் கலையில் அறிவும் அனுபவமும் பெற்றார். 1726-ம் வருடத்தில் இளைஞர் பிராங்க்ளின், தன்னுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு ஃபிலடெல் ஃபியாவுக்குத் திரும்பினார். அவரிடம் பணம் இல்லை; இங்கிலாந்திலிருந்து புத்தகங்களையும் அச்சு மாதிரிகளையும் கொண்டு வந்திருந்தார்; எல்லாவற்றிலும் மிக முக்கியமானது என்னவென்றால் அவரிடம் கருத்துக்களும் தன்னம்பிக்கையும் எதிர்காலத்தைப் பற்றி அதிகமான நம்பிக்கையும் நிறைந்திருந்தன.
அவர் முன்முயற்சி உடைய அச்சிடுபவர் என்ற முறையில் ஃபிலடெல்ஃபியாவில் வெகு சீக்கிரத்தில் கௌரவமான அந்தஸ்தைப் பெற்றார்; அந்த நகரத்தின் குடிகளில் மிகவும் சிறந்தவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவரைச் சுற்றி விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் புதிய முயற்சிகளில் அக்கறை கொண்ட இளைஞர் குழு ஏற்பட்டது. அவர் தன்னுடைய வாழ்க்கை, நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் கடைசி நிமிடம் வரையிலும் கறாராக ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொண்டார். அவர் சோர்விலா ஊக்கத்தோடு ஈடுபட்ட ஒவ்வொரு துறையையும் குறித்துச் சொல்வது கூட இயலாது.
அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார்; முதல் விஞ்ஞானக் கழகத்தையும் பொது நூலகத்தையும் அமெரிக்காவிலேயே முதன்முறையாகத் தீயணைப்புப் படையையும் ஏற்படுத்தினார். அமெரிக்காவில் முதன் முதலாக தேசிய செய்தித்தாள் நடத்தியதும் அவரே. தபால் இலாகாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1754-ம் வருடத்தில் நடைபெற்ற அல்பனி காங்கிரசில் அவர் தன்னுடைய மாகாணத்தின் சார்பில் கலந்து கொண்டார். அமெரிக்காவிலுள்ள எல்லாக் குடியேற்றங்களையும் இங்கிலாந்தின் அரசரின் கீழ் – ஆனால் ஓரளவு சுயாட்சி அதிகாரத்தோடு ஒன்றுபடுத்தக் கூடிய திட்டத்தை முன்வைத்தார். ஆனால் லண்டனில் இருந்தவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ என்று மிகவும் அதிகமாக பயந்து கொண்டிருந்த காரணத்தால் அவருடைய திட்டம் நிராகரிக்கப்பட்டது.
பிராங்க்ளின் இயற்கை விஞ்ஞானங்களைப் பற்றி அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டார்; அவர் தன்னுடைய கைகளைக் கொண்டு பல காரியங்களைத் திறமையாகச் செய்து கொள்ளக் கூடியவர். அவர் பூகம்பங்களின் தன்மையைப் பற்றி ஆராய்ந்தார்; நுட்பமான அமைப்புக் கொண்ட எரியுலையைக் கண்டுபிடித்தார். 1743-ம் வருடத்தில் மின்சாரத்தை உபயோகப்படுத்தும் சில பரிசோதனைகளைக் கண்டார். அந்தக் காலத்தில் ஊர் ஊராகச் சென்று வேடிக்கை காட்டுபவர்கள் இத்தகைய வித்தைகளைச் செய்வதுண்டு. அவர் இந்தப் பரிசோதனைகளில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார்; உடனே தனக்கு வழக்கமான உற்சாகத்தோடும் வேகத்தோடும் அவற்றைச் செய்தார்; ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குள் நிலைமின் இயல் சம்பந்தமான ஆயிரக்கணக்கான பரிசோதனைகளைச் செய்தார்; இவை அந்தக் காலத்துக்கு அதிகமான நுணுக்கமும் திறமையும் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய பரிசோதனைகள் மூலம் நிலைமின் இயலுக்கு அடிப்படை அமைத்தார். அவர் மின்சாரத்தின் ஒருமைத் தத்துவத்தை உருவாக்கினார்; நேர், எதிர் மின்பொறி ஆகிய கருத்துக்களை நுழைத்தார் (அவருக்கு முன்பு இரண்டு விதமான மின்சாரம் இருக்கிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்), பிராங்க்ளின் மின் உராய்வினால் தான் மின்னல் ஏற்படுகிறது என்பதை நிரூபித்தார்; வானவெளி மின்சார நிகழ்வை விளக்கினார்; இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.
1757-ம் வருடத்தில் பிராங்க்ளின் பென்சில்வேனியாவின் (பிறகு மற்ற மாநிலங்களின்) பிரதிநிதியாக இங்கிலாந்தின் அரசாங்கத்தோடு பேசுவதற்காக இங்கிலாந்துக்குப் போனார். அடுத்த முப்பது வருடங்களின் பெரும் பகுதியை அவர் ஐரோப்பாவில் கழித்தார். முதலில் இங்கிலாந்திலும் பிறகு பிரான்சிலும் இருந்தார்; இரண்டு தடவைகள் மட்டுமே தாய் நாட்டுக்குத் திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் அவர் ராஜியவாதியாக, மூத்த அரசியல் தலைவராக, அரசியல் எழுத்தாளராகப் பெரும் புகழ் பெற்றார். ”தாய் நாட்டுக்கும்” அமெரிக்கக் குடியேற்றங்களுக்கும் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமென்று அவர் பல வருடங்களாகப் பாடுபட்டார், பிரிட்டிஷ் பேரரசுக்குள் சுயாட்சி அந்தஸ்துக் கிடைப்பதற்கு வழிகளைத் தேடினார். ஆனால் இங்கிலாந்து எத்தகைய சலுகைகளையும் கொடுக்க மறுத்தது. இனி கலகத்தைத் தவிர வேறு வழியில்லை. 1775-ம் வருடத்தில் யுத்தம் வெடித்தது.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் பிரதானமாக டி. ஜெபர்சனால் எழுதப்பட்டது என்பது நமக்குத் தெரியும்; ஆனால் அதில் பிராங்க்ளினுடைய கைவண்ணமும் உண்டு. அந்த வருடத்தின் இலையுதிர் காலத்தில் புரட்சி செய்திருக்கும் குடியேற்றங்களின் பிரதிநிதியாகக் காங்கிரஸ் அவரை பிரான்சுக்கு அனுப்பியது; அப்பொழுது தான் பிறந்திருந்த குடியரசுக்கு பிரான்சின் இராணுவ, பொருளாதார உதவி மிகவும் அவசியமாக இருந்தது. அவர் பல நெருக்கடிகளையும் சமாளித்து பிரான்சுடன் இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தினார். யுத்தம் இங்கிலாந்துக்கு பாதகமான வகையில் திரும்பியது. 1783-ம் வருடத்தில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தது.
பிராங்க்ளின் 1790-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் கடைசியாக எழுதி வெளிவந்தது அடிமை வர்த்தகத்தைக் கண்டித்து ஒரு செய்தித்தாளின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதம் அவர் மரணமடைவதற்கு இருபத்து நான்கு நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. அவர் தன்னுடைய பிற்கால வாழ்க்கை முழுவதும்-பென்சில்வேனியா மாநிலத்தின் தலைவர் என்ற முறையிலும் 1787-ம் வருடத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மாநாட்டின் பிரதிநிதி என்ற முறையிலும் அடிமை முறையை எதிர்த்துப் போராடினார். கடைசிக் காலத்தில் அவர் எழுதிய இலக்கிய வடிவம் அதிகமான தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது. அவர் எழுதிய காரசாரமான, சிறு அங்கதக் கட்டுரைகள் ஊசி போலக் குத்தின.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1)K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, p. 55.
(2) B. Franklin, The Autobiography and Other Writings, N.-Y., 1961, | p. 33.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
இந்துத்துவ சக்திகளின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கியுள்ள இன்றைய நிலையில் இந்திய வரலாற்றையே உலுக்கி திருத்த வல்லமை கொண்ட இரண்டு ஆய்வுகள் மிக சமீபத்தில் நடந்தேறியுள்ளன. ஒன்று ராக்கிகர்கி மரபணு ஆய்வு மற்றொன்று கீழடி தொல்லியல் ஆய்வு. ஒன்று சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்னரே சமஸ்கிருதத்தை சுமந்துகொண்டு ஆரியர்கள் துணைக் கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. மற்றொன்று சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கங்கை சமவெளியில் இரண்டாம் கட்ட நகர குடியேற்றம் நடந்த அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் அதே போன்றதான குடியேற்றம் நடந்தேறியுள்ளது என்றும் சிந்து சமவெளி குறியீட்டிற்கும் தமிழிக்கும் (தமிழ் பிராமி என்று தற்போது அழைக்கப்படுகிறது) உள்ள உறவை உறுதி செய்யும் பானை கீறல்களையும் கண்டறிந்துள்ளது.
கீழடி அகழாய்வு மையத்தில் கி.மு 580-ம் ஆண்டைச் சேர்ந்த பானை உள்ளிட்ட தொல்பொருள்கள் தமிழக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குழுவினால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பானைகளில் உள்ள “கிராஃபிட்டி” குறியீடுகள் அல்லது கீறல்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவங்களின் தொடர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அகழாய்வு குழுவின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
சிந்து சமவெளி எழுத்துக்கள் கி.மு 5,000 முதல் கி.மு 1,500 வரை அம்மக்களால் பயன்படுத்தப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய காலத்தில்தான் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்ததை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது.
கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் உள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் என்றும் சிந்து சமவெளி மக்கள் பேசியது ஒரு திராவிட மொழி என்றும் நீண்ட நாட்களாகவே திராவிட அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். மொழியியல் நோக்கில் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 1964-ல் இரசியாவையும் ஃபின்லாந்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து சிந்து சமவெளி எழுத்து வடிவம் திராவிட எழுத்துதான் என்பதை நிறுவினர். பின்னர் சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் முன்னனி ஆய்வாளரான அஸ்கோ பர்போலா சிந்து சமவெளி எழுத்து வடிவத்தை திராவிட எழுத்து வடிவத்துடன் ஒப்பிட்டு பிரபலமான கருதுகோளை முன்வைத்தார்.
ஆனால் இதை உறுதிப்படுத்த இது மட்டுமே போதாது. ஏனெனில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். தமிழ் நாகரிகத்திற்கும் அதற்குமான தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் போதுமான தொல்லியல் மற்றும் மரபணு சான்றுகள் அதுவரை கிடைக்காமலிருந்தன. முன்னதாக அரிக்கமேட்டில் 1947-லும், காவேரிப்பூம்பட்டினத்தில் 1965-லும், ஆதிச்சநல்லூரில் 2005-லும் நடந்த மூன்று அகழாய்வுகளில் ஒன்றுக்கூட நகர்புற குடியேற்றத்திற்கான உறுதியான சான்றுகள் எதையும் வழங்கவில்லை.
ஆனால் 2015-ம் ஆண்டில் கீழடியில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி மற்றும் கங்கை பகுதி நகர்ப்புற குடியேற்றம் போலவே தமிழகத்திலும் நடந்ததற்கான ஏராளமான சான்றுகளை தன்னுள்ளே புதைத்திருக்கிறது.
“மறைந்து போன சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் பிராமி எழுத்து வடிவங்களுக்கும் இடைப்பட்ட எழுத்து வடிவத்தை கீறல்கள் (கிராஃபிட்டி) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கீறல்கள் சிந்து சமவெளி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றிய பிராமி எழுத்து வடிவங்களுக்கு இணைப்பு சங்கிலியாக இருந்துள்ளது. எனவே இதை வெறும் குறியீடாக கருத முடியாது. சிந்து சமவெளி குறியீடுகளைப் போலவே இவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.
முன்னதாக அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், கொற்கை, ஆலங்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மங்குளம், பேரூர் மற்றும் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் வேறு சிலப் பகுதிகளிலும், இலங்கையிலும் பனையோட்டு கீறல்கள் கிடைத்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை கிடைத்த பனையோட்டு கீறல்களில் 75 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிராமி (அசோக பிராமிக்கு 3 நூற்றாண்டுகள் முந்தையதால் இதை தமிழி என்றே அழைக்கலாம் என்று தமிழறிஞர்கள் முன் வைக்கின்றனர்) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 56 பானைகள் தமிழ்நாட்டு அகழாய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு தமிழ் எழுத்து வரலாற்றை கிமு ஆறாம் நூற்றாண்டு வரை முன் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கீழடியில் வாழ்ந்த மக்களுக்கு உயர்ந்த எழுத்தறிவு இருந்ததை அது சுட்டுகிறது. “பானைகளின் மேல் பகுதிகளில் கீறல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பானை ஈரமாக இருக்கும் போதோ அல்லது உலர்ந்த பிறகோ அதில் எழுத்துக்கள் பொறிக்கப்படும். கீழடியில் கண்டறியப்பட்ட பானைகளில் காய்ந்த பிறகே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே பானையை விலைக்கு வாங்கிய பிறகு உரிமையாளர்களால் அவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகளில் உள்ள வித விதவிதமான எழுத்து பாணிகள் கிமு ஆறாம் நூற்றாண்டு தமிழ் சமூகத்தின் பரவலான எழுத்தறிவை பறைசாற்றுகிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
2018-ல் ஆறு மாதங்கள் அகழாய்வு பணிகள் நடைபெற்றதாக தமிழ்நாட்டு தொல்பொருள் ஆய்வுகளின் மைய ஆணையர் டி. உதய்சந்திரன் கூறினார். 2015-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை அகழாய்வு செய்த பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வுப்பணியை நிறுத்திவிட்டது.
இந்திய வரலாறு என்பதே வேத கால நாகரிகம் என்று நிறுவ மோடி அரசாங்கம் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான எந்தச் சான்றும் கிடைக்காத தருணத்தில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல 2016-ல் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டறிந்திருந்தது. விளைவு தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தது. பின்னர் இப்பணியை தமிழக தொல்பொருள் ஆய்வு மையம் எடுத்துக்கொண்டு நான்காம் கட்ட ஆய்வினை முடித்து “கீழடி – தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க கி.மு 2000-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிந்து சமவெளி மக்கள் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்திருக்கக் கூடும் என்ற கருதுகோளை சமீபத்தில் செல் மற்றும் சயின்ஸ் அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
தொல்பொருள் ஆய்வில் புதிய வெளிச்சத்தை கொடுத்த அதே நேரத்தில் ஆதித்தமிழர்களின் மரபணு ஆய்வுகளுக்கான கருவினை எலும்புக்கூடாக இன்னமும் கீழடி தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் என்பதை வரலாறு பதிலாகச் சொல்லும்.
நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சலால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் இரட்டை இலக்க எண்ணிக்கையில் மக்கள் மடிந்து வருகிறார்கள். இந்த ஆண்டு தமிழகத்தில் தீவிரமாகப் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்களே இதை மறுக்க முடியாமல் ஒத்துக்கொள்கின்றது. மேலும் வைரஸ் காய்ச்சலைத் தவிர மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத மர்மக்காய்ச்சல் என்று சொல்லி மரணமடைந்தவர்களின் பட்டியலில் பலரை அடைத்திருப்பதால் டெங்குவின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சீசன் நோய் போல வந்து மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை உயிர்கள் மடிந்தாலும் சமாளிப்பதற்கு ஒரு காரணத்தை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காய்ச்சலால் மருத்துவமனையை நோக்கி ஓடி வரும் ஏழைகளின் உயிரைக் காக்க போதிய மருத்துகள்தான் இந்த அரசிடம் இல்லை.
நடப்பு ஆண்டில் கடந்த இரண்டு மாதமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வருகிறர்கள் என்ற செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தவில்லை. கொசுக்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்க கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படவில்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. தினந்தோறும் அரசு மருத்துவமனையை நோக்கி பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை படையெடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.
சென்னை முகப்பேரை சேர்ந்த 6 வயது சிறுமி மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். அதற்கு முந்தைய தினம் 3 வயது குழந்தை ஒன்று இறந்திருக்கிறது. மதுரவாயிலைச் சேர்ந்த லோகித் என்ற 8 வயது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறான். சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பிரித்திகா என்ற 12 வயது சிறுமியும் இறந்திருக்கிறார். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 26 வயதான ஜோதிலட்சுமி என்ற பெண்ணும் இறந்துள்ளார். தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் இறப்பதாக தகவல்கள் வருகின்றன.
மருத்துவ வசதி முழுமை பெறாத காலத்தில் அம்மை நோய் தாக்கி கொத்துக் கொத்தாக இறந்ததைபோல் மருத்துவம் வளர்ந்திருக்கும் இந்த நூற்றாண்டிலும் குழந்தைகள் இறப்பது தற்செயலா? அல்லது சதியா?
டெங்குவிற்கான தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் உள்ளது என்பது உண்மை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கும், நோய்க்கான மருத்துவத்தை துரிதப்படுத்தி பரவலாக்குவதற்கும் அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி?
கொள்ளை நோய்கள் தாக்கும் காலங்களில் அவற்றை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான திட்டமே இந்த அரசிடம் இல்லை. சென்னையை சுற்றியுள்ள எல்லா புறநகர் பகுதிகளிலும் ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு குட்டையாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. மெட்ரோ ரயில் முதல் கேபிள் வயர்களை புதைப்பது வரை எங்கு காணினும் மரணக்குழிகள்… இதுவே அதிகப்படியான கொசுக்களை உற்பத்தி செய்வதற்கான முதல் வாய்ப்பாகிறது. மாநகராட்சியின் கொசு ஒழிப்புப் பணியும் வி.ஐ.பி-க்களின் ஏரியாவோடு சுருங்கி விடுகிறது. இவர்களின் இந்த அலட்சியத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஏழ்மையில் உழலும் மக்கள்தான். அதிலும் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
கிராமப்புற பகுதிகளில், அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திலோ போதிய மருந்துகள் இல்லையெனக் கூறி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கும் நோய் தீர்ந்தபாடில்லை. கேட்டால் “மர்மக் காய்ச்சல்” என்று கூறப்படுகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், ராயப்பேட்டை மருத்துவமனையில் 7 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 107 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவிக்கிறது. இதன் லட்சணம் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் வந்து குவிவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
தற்போதைய நிலவரப்படி மருத்துவமனைகளில் உள்ள மருந்து கையிருப்பு போதுமானதாக இல்லாததால், நோய் கட்டுப்படுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டெல்லிக்கு சென்று சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் ஹர்ஸ் வர்த்தனை சந்தித்து மருந்துகளை உடனே வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இனி எப்போது மருந்து வந்து… எப்போது மக்களைக் காப்பாற்றுவது ?
பருவ மழைக்காலம் தொடங்கி மாதங்கள் பல கடந்தும் உயிர்க் கொல்லிகளாகிவிட்ட டெங்கு உள்ளிட்ட திடீர் வைரஸ் காய்ச்சலில் இருந்து மக்களை காப்பற்ற போதிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இதன் விளைவுதான் தமிழகத்தில் பல பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.
PCOD எனும் குணப்படுத்தக்கூடிய பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதியுறும் மருமகள்கள் சார்பாக பேசுகிறேன்..
சிறிது செவிமடுங்கள் அன்னைகளே…
நன்றி!
***
இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில தகர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகளும் !
PCOD என்றால் என்ன?
இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD. இதை “நோய்” (disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. “குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது. அதனால் தான் “குளறுபடி” ( Messing up of hormones) என்ற கணக்கில் சேர்த்துள்ளேன்.
முறையாக ஹார்மோன்கள் சுரக்காமல் தாறுமாறி சுரப்பதால் இதை “Disorder” என்கிறோம். ஒரு பூப்படைந்த பெண்ணுக்கு முறையாக நிகழ வேண்டிய நிகழ்வு பிரதிமாதம் வர வேண்டிய மாதவிடாய் (Menstruation).
மாதவிடாய் என்பதை சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதை அடைந்த பெண்ணிற்கு அவளது கருவில் (ovary) இருந்து ஒரு முட்டை (ovum) முதிர்ச்சி அடைந்து உடைந்து வெளியேறும்.
அந்த முட்டையை அவளது துணையின் ஒரு விந்தணு பல கோடி சக போட்டியாளர்களை முந்தி ஓடோடி வந்து நலம் விசாரித்து காதலாகி கூடல் (fertilisation) கொண்டால் அது கருவாக (zygote) உருவாகும்.
பின் அது தவழந்து சென்று கர்ப்பபையில் அட்டைப்பூச்சி போல ஒட்டிக்கொள்ளும்.
அங்கிருந்து தாயின் உதிரத்தை உறிஞ்சி வளரும். அதுவே அடுத்த பத்து மாதங்களில் சிசுவாகி வெளியே வரும். இது இணையுடன் கூடல் கொள்ளும் பெண்களுக்கு நிகழும் இயற்கை நிகழ்வு.
இப்போது மற்றொரு சினாரியோவுக்கு வருவோம்.
இன்னும் திருமண பந்தத்தில் இணையாத சிற்றிளம்பெண்களுக்கு இந்த கரு முட்டையானது மாத மாதம் வெளியேற்றப்படும். கருமுட்டையுடன் கூடவே கர்ப்பபையில் உள்புற சுவரும் (endometrium) சேர்ந்து வெளியேற்றப்படும் இயற்கையான நிகழ்வு தான் மாதவிடாய்.
மாதவிடாய் சிக்கல் ஏன் ஏற்படுகிறது?
அதற்கு மாதவிடாயின் மருத்துவ அறிவியல் குறித்த சிறிய ரீகேப் அவசியம். PCOD என்பது ஹார்மோன்களின் சதிராட்டம் என்று கூறியதற்கு காரணம் அறிவோம் வாருங்கள்.
ஈஸ்ட்ரோஜென் எனும் பெண்மைக்கான ஹார்மோனின் தூண்டுதலால் நமது சினைப்பையில் (ovary) பல முட்டைகள் (ova) ஒரே நேரத்தில் வளர்ச்சி காண ஆரம்பிக்கும். அந்த முட்டை அடங்கிய தொகுப்பை Graafian follicle என்போம்.
இந்த முட்டை வளர்ச்சிக்கு தொடர்ந்து அவளது மூளையின் பிட்சூடரி எனும் சுரப்பியில் இருந்து சுரக்கும் follicular stimulating hormone எனும் ஹார்மோனின் தூண்டுதல் தேவை.
நன்கு முட்டை வளர்ந்ததும் மூளையில் இருந்து லூடினைசிங் ஹார்மோன்(lutenising hormone) சுரக்கும். அந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து உச்ச நிலையில் இருக்கும் 24 இல் இருந்து 36 மணி நேரத்தில், ஒரு முட்டை சினைப்பையில் இருந்து வெளியேறும்.
முட்டையை வெளியேற்றியவுடன் சினைப்பையில் இருக்கும் க்ராஃபியன் ஃபாலிகிள் – கார்பஸ் லூடியம் (corpus luteum) எனும் பகுதியாக மாறும். வெளியேறிய முட்டை சினைக்குழாயில் (Fallopian tube) வந்து 24 முதல் 36 மணி நேரம் காத்திருக்கும்.
யாருக்காக இந்த காத்திருப்பு ?
தன்னை சந்தித்து முழுமை படுத்த விந்தணுவில் ஏதேனும் ஒன்றாவது வந்து விடாதா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நமது கதாநாயகியான கருமுட்டை.
க்ளைமேக்ஸ் ஒன்று :
தன்னை சந்திக்க கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று வந்தவுடன் அதனுடன் இரண்டறக்கலந்து கருமுட்டையாக மாறிவிடும். இது சுபமான முடிவு.
முட்டையை வெளியேற்றியவுடன் மீதம் இருந்த கார்பஸ் லூடியம் “ப்ரொஜஸ்டிரான்” progesterone எனும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் தான் அவளது கருப்பையை கர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் தயார் செய்யும். கருப்பைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கர்ப்ப பையை மெத்தை போல ஆக்கும். அந்த மெத்தையில் நமது கருமுட்டை சென்று ஒட்டிக்கொண்டு கருவாக வளர்ந்து குழந்தையாக உருமாறுகிறது.
க்ளைமேக்ஸ் இரண்டு :
தன்னை வந்து சேர கதாநாயகனான விந்தணு கண்ணுக்கெட்டிய தூரம் வராததை அறிந்த முட்டை… பசலை நோய் கொண்டு உண்ணாமல் உறங்காமல்
24 முதல் 36 மணிநேரத்தில் மரணித்து விடும்.
அந்த முட்டை இறந்த செய்தி கேட்டதும் சினைப்பையில் இருந்த கார்பஸ் லூடியம் – ப்ரோஜெஸ்டிரான் சுரப்பதை நிறுத்தி விட்டு, தானும் அழிந்து விடும். ப்ரோஜெஸ்டிரான் இல்லாத கர்ப்ப பை மழையில்லாத கழனி போல பசுமை இழந்து வறண்டு விடும்.
சிறிது நாட்களில் இந்த கர்ப்ப பை கழிவுகள் அனைத்தும் வெளியேறி கர்ப்பப் பை மற்றொரு மாதவிடாய் சுழற்சிக்கு தயாராகி விடும். இந்த கழிவு வெளியேற்றத்தை
பீரியட்ஸ் / மென்சஸ் என்று அழைக்கிறோம். மாதவிடாய் சுழற்சியை உன்னிப்பாக கவனித்தால் இந்த தொடர் நிகழ முக்கியமான தேவை ஹார்மோன்கள் தான்.
ஈஸ்ட்ரோஜென் , FSH , LH போன்ற ஹார்மோன்கள் சரிவிகிதத்தில் டைம் செட் செய்து வைத்தார் போல் ஏறி இறங்க வேண்டும். இதில் நடக்கும் பிரச்சனைகள் தான் மாதவிடாய் சுழற்சி கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
வைரமுத்து அவர்கள் ஆய்த எழுத்து படத்தில் ஒரு பாடலில் “எந்தன் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு” என்று கற்பனை செய்திருப்பார்.
பெண்ணிற்கு மாதவிடாய் நிகழ சில நேரங்களில் வெள்ளப்பெருக்கும் சில நேரங்களில் வறட்சியும் அவசியம்.
இன்சுலின் எனும் ஹார்மோன் கணையத்தில் சுரப்பதை அறிவோம் அதன் வேலை உடலை கட்டமைப்பது; தசைகளை ஏற்றுவது; மனிதனை திடமாக்குவது. கூடவே உண்ணப்படும் மாவுச்சத்தில் இருந்து கிடைக்கும் க்ளூகோசை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கு ஏற்ற எரிபொருளாக அல்லது உணவாக உண்ணத்தருவது.
இந்த இன்சுலினின் இன்னொரு வேலை… மாதமாதம் கருமுட்டை சினைப்பையில் இருந்து வெளியேற உதவுவது.(ovulation)
ஒருவர் தான் இருக்க வேண்டிய எடையில் இருந்து அதிகமாவது (obesity)
அதிகமாக மாவுச்சத்து உணவுகளை உண்பது (Very high carb diet)
உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ( sedentary life style)
இவற்றால் இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் தர்ணாவில் ஈடுபடுகிறது. இதை “இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்” என்கிறோம். இன்சுலின் தனது வேலையை சரியாக செய்யாமல் இருப்பது தான் இது.
இதனால் PCOD-ஐ பொருத்தவரை கருமுட்டை சரியாக வெளியேறாது. இதற்காகத்தான் PCOD -க்கு மெட்ஃபார்மின் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது. பல புதிதாக திருமணம் ஆன வீட்டில் புதுப்பெண் Metformin மாத்திரை விழுங்கினால் அவருக்கு சுகர் இருப்பதாக மாமியார்கள் நினைக்கிறார்கள்.
அது தவறு மாமியார்களே..
உங்களை நம்பி மருமகளாக வந்த அந்த இளம்பெண்ணுக்கு PCOD எனும் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு சிறிய பிரச்சினை தான் இருக்கிறது. சுகர் குறைபாட்டிலும் இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போவது தான் காரணமாக இருப்பதால், இன்சுலினை நன்றாக வேலை செய்யக் கட்டளையிடும் Metformin மாத்திரை தரப்படுகிறது.
எனவே உங்கள் மருமகளை அரவணைத்து செல்லுங்கள். அவளுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் களைய உதவுங்கள். அவள் உடல் எடை அதிகமாக இருந்தால் பேலியோ உணவு முறையை பரிந்துரை செய்யுங்கள். தினமும் உடற்பயிற்சி இருவரும் சேர்ந்து செல்லுங்கள். அதிகம் பேசுங்கள்.
PCOD என்பது எளிதில் குணமாகக்கூடிய ஒரு பிரச்சனை. மாவுச்சத்து குறைத்து நல்ல கொழுப்புணவை அதிகம் உண்ணும் பேலியோ உணவு முறையில் பயன் பெற்ற பல பெண்கள் உள்ளனர்.
பேலியோ + மகப்பேறு மருத்துவரின் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரிக்க இயலும்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்து தாயாவது முக்கியம்தான். ஆனால் அதை விட முக்கியம் அவளது மாண்பு, ரகசியங்கள், சுயமரியாதை பேணிப் பாதுகாக்கப்படுவது..
அன்புள்ள மாமியார்களே…
உங்களை நம்பித்தான் ஒரு பெண் தன் வீட்டை விட்டு உங்களுடன் சேர்ந்து வாழ வருகிறாள். அவளையும் சக மனுசியாய் மதியுங்கள். அவளுக்கு நேரும் உடல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய உதவுங்கள்.
“மலடி” “என் மகன இப்டி ஒரு தரிசு நிலத்துக்கு கொடுத்துட்டேனே”
என்று கரித்துக்கொட்டாதீர்கள். உங்கள் மகனுக்கு விந்தணுக்கள் சோதனை செய்து பார்த்தால் 100 -க்கு ஐம்பது சதவிகித வாய்ப்பு , விந்தணு குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்படுகிறது.
ஒரு ஆண் ஒரு பெண்ணை; ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்வது தனக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏமாற்றிப் பிழைக்க அல்ல.
உடலியல் சார்ந்த சரிசெய்யக்கூடிய பிரச்சனைகளைக்கூட சமூகம் ஏற்கும் நிலை இன்னும் வரவில்லை. ஆனால் அந்த நிலையை நோக்கி முன்னேறவே இது போன்ற பதிவுகள்.
***
இந்த சமூகத்தில் திருமணம் முடிந்து சென்று மாமியார்களுக்கும் கணவர்களுக்கும் தெரியாமல் மறைத்து, மறைத்து வைத்து தைராய்டு மாத்திரைகளை; PCOD மாத்திரைகளை உண்ணும் மருமகள்கள் இருக்கிறார்கள் அந்த மருமகள்களுக்காக இந்தப் பதிவு.
முடிவுரை :
1. PCOD குணப்படுத்தக்கூடியது.
2. குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை PCOD ஐ குணப்படுத்தும்.
3. PCOD உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க இயலும்.
4. மாமியார்கள் தங்களின் மருமகள்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்று அவற்றை களைய வேண்டும்.
5. மருமகள்கள் தங்கள் பிரச்சனைகளை மூடி மறைக்க வேண்டியதில்லை .
பகிரங்கமாக அதே சமயம் சாமர்த்தியமாக தங்களது உடல் சார்ந்த பிரச்சனைகளை தெரிவிக்கலாம். எத்தனை காலம் மறைக்க முடியும்.? மறைத்து செய்வதற்கு இது ஒன்றும் குற்றம் அல்ல.
6. மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகள்களே. அவர்களும் பெண்களே என்பதால் நிச்சயம் மற்றொரு பெண்ணின் பிரச்சனைகளை கரிசனத்துடன் அணுகுவார்கள்.
7. உங்கள் கணவரிடம் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிவியுங்கள். அவர் உங்களது அத்தனை நன்மை தீமைக்கும் பொறுப்பாகிறார். அவரது ஆதரவு நிச்சயம் உங்களுக்கு தேவை.
8. PCOD குறித்த கருத்து வேறுபாடுகள் தோன்றுமாயின் உடனே மகப்பேறு மருத்துவர் / குடும்ப மருத்துவரை சந்தியுங்கள். அவர்கள் தரும் கவுன்சிலிங்கில் பிரச்சனை சரியாகிவிடும்.
பிரச்சனையை மறைப்பது தீர்வாகாது. அதை சாமர்த்தியமாக பகிரங்கப்படுத்தி அதை தீர்ப்பதே தீர்வு
PCOD குறித்த சந்தேகங்களையும் தீர்க்க நானும் என் மருத்துவ நண்பர்களும் தயாராக இருக்கிறோம்.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
இரட்டை வாய்க்கால் : ஊர் தாலியறுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை புதிதாகத் திறக்காதே !
பூரண மதுவிலக்கு, படிப்படியாக கடை நேரம் குறைப்பு…
என்பதெல்லாம் ஏமாற்று !
சாராயம், கஞ்சா போதையில் ஆழ்த்தி மக்களை நாசமாக்காதே !
அதிகாரத்தை கையிலெடுப்போம் ! டாஸ்மாக்கை விரட்டியடிப்போம் !
திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதை கண்டித்து, மேலத்தெரு ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து திறக்கப்பட உள்ள கடை வாசலில் நேற்று (30.09.2019) மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர் – சிறுமியர், இளைஞர்கள், தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “பெண்களின் தாலியறுக்கும், இளைஞர்களை சீரழிக்கும் சாராயக் கடையை மூட வேண்டும்!” என முழக்கமிட்டனர். போலீசார் வந்து “கடை இங்கு திறக்கப்படாது…” என உறுதியளித்த பிறகு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
கடை திறந்தால் வந்து மூடுவோம். என ஆவேசத்துடன் சென்றனர். இதில் மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்நிலையில் இன்றும் (01.10.2019) போலீசாரின் வாய்வழி உத்திரவாதங்களை நம்ப முடியாது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ள பொதுமக்கள், மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யா சின்னத்துரை, மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் என போராடும் அமைப்புகள், மக்களுடன் இணைந்துள்ளனர்.
இங்கு புதிதாக டாஸ்மாக் திறக்கப்படாது என்பதை எழுத்து பூர்வ உத்திரவாக வட்டாட்சியர் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடக்கும் பகுதிக்கு வட்டாட்சியர் நேரில் வந்துள்ளதால், அவரிடம் மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரத்தை கையிலெடுப்போம் என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் முழக்கமானது, மக்களைப் பற்றிக் கொண்டுள்ளது. வாருங்கள் இனி உங்கள் ஊரில், உங்கள் தெருவில் உள்ள சாராயக்கடைகளையும் அகற்றுவோம்… !
1 of 5
வட்டாட்சியரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் மக்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மேலத்தெரு ஊர் பொதுமக்கள் (மற்றும்) மக்கள் அதிகாரம் திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.
சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா? அதற்குமுன் என்னைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா என்பது விளங்கும்.
எனக்குச் சிறுவயது முதற்கொண்டே ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுசரிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக்கொண்டிருந்திருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ, தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதியையோ, மதத்தையோ கடவுகளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னமும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பலதடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன்; கண்டுபிடிக்க முடியவே இல்லை. (நூலிலிருந்து பக்.3-4)
நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புத்தகங்களையோ படிப்பதில்லை என்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்பந்தமாக உள்ள கதைகளோ சரித்திரங்களோ சதா சர்வகாலம் எங்கள் வீட்டில் இருசமய ”பக்தர்”களாலும் காலாட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும்போது தர்மம் செய்து தர்மப்பிரபு பட்டம் வாங்க வேண்டாமா? ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்துகிடப்பார்கள். என் தாயார் இவர்கள் அளப்புகளை அதக ”பக்தி சிரத்தை” யுடன் கேட்டுக் கொண்டே இருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்பந்தமான விஷயங்கள் – புராண சம்பந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும், அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்குப் பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒருவிதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு, என்னை ஒரு ‘கெட்டிக்காரப் பேச்சுக்காரன்’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சொல்லுமளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் தகப்பனார் நான் இப்படி ”விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படிப் புத்தியாய்ப் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சியுண்டு.
இந்தச் சம்பவங்கள்தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். (நூலிலிருந்து பக்.8-9)
நிற்க, ஜாதி – மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும், கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான கவலையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான்தான் செய்யவேண்டுமென்றோ, அதற்காகத்தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை. என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாய் உயிர்வாழுகின்றோம். எப்படியோ உயிர்வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது, சோம்பேறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்கு சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை, முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத்தகுந்நிலை எதுவோ அதுவே மேற்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால், (இருக்கிறதாக) நான் நினைத்துக் கொண்டிருப்பதால் அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ, அதை செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.
நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்துதானே ஆக வேண்டும். ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் – இதை அதாவது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானது, முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன். இந்த எண்ணத்தின் மீதே ‘சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பித்தேன்.
இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் பெரிதும் மறைந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும். தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது, பண்டிகைக்காக ஓய்வெடுத்துக் கொண்ட மக்கள் பலர்கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ, விளையாடும் போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவது போல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் இருந்துதான் தீரும். ஆகையால் மனிதனுக்கு எந்த நிலையிலும் வேலை, கவலையுணர்ச்சி, சுக துக்கம் இருந்தே தீரும். அதை உத்தேசித்தே இந்த வேலையை மேற்கொண்டேன். (நூலிலிருந்து பக்.11-13)
நூல் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ? ஆசிரியர் : தந்தை பெரியார்
வெளியீடு:பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. தொலைபேசி:8428 455 455 மின்னஞ்சல்:periyarbooks.in@gmail.com
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 04
பாடவேளையின் போது குழந்தைகளுடன் காரிய ரீதியான உறவுகளை ஏற்படுத்தும் கோட்பாடு..
இதற்கு என்ன பொருள்? சோவியத் ஆசிரியரியல் நிபுணராகிய எஸ்.ஷாத்ஸ்கி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இவரிடமிருந்து தான் இக்கருத்தை நான் பெற்றேன். “…விஷயம் என்னவெனில், ஆசிரியரியல் பிரச்சினைகள், சாதாரண மானுடப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன. ஆசிரியருக்கு தன் கேள்விக்கான பதில் தெரியும், ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதில் ஆசிரியருக்குத் தெரியும் என்பதை மாணவனும் அறிவான். நாம் ஒருவரையொருவர் கேள்விகள் கேட்டுக் கொள்ளும்போது நமக்குத் தெரியாததைத்தான் கேட்கிறோம். எனவே, ஆசிரியர் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கும் போது, இக்கேள்வி ஒரு விதமான பொறி என்னும் கருத்து மாணவனின் மனதில் உறுதிபெறுகிறது, அவன் சாராம்சத்தில் பதில் சொல்லாமல், ஆசிரியரின் மனதில் உள்ள பதிலைக் கண்டுபிடிக்க முயலுகிறான்.
நாம் நம் மாணவர்களிடம் கேட்கும் இக்கேள்விகள் இறுதியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் காரிய ரீதியல்லாத உறவுகளைத் தோற்றுவிக்கின்றன. ஆசிரியர் பல அணுகுமுறைகள், பொறிகளைப் பயன்படுத்துகிறார், மாணவர்களோ இவரது நோக்கங்களைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலையை மேற்கொள்ள முயலுகின்றனர். சரி, பிரச்சினையை வேறு எப்படி முன்வைப்பது? கேள்வி பதில்களில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே காரிய ரீதியான உறவுகளை, மனநிலைகளை ஏற்படுத்தலாமா? ஆசிரியர் எதைப் பற்றிக் கேட்க வேண்டும்? அவர் காரிய ரீதியான உறவுகளை ஏற்படுத்த விரும்பினால் தனக்குத் தெரியாததை, மாணவர்களுடன் கலந்து பழகுவதில் தான் அறியாததைக் கேட்க வேண்டும்.
மாணவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளும், அவர்களது சந்தேகங்களும், மாணவர்களிடம் கல்வியின் பால் தோன்றும் ஆர்வங்களும் அல்லது வெறுப்புகளும் ஆசிரியருக்குத் தெரியாது. ஆகவே, ஆசிரியர் தன் மாணவர்களை எதைப் பற்றியாவது கேட்க விரும்பினால், அவர்களின் கஷ்டங்கள், சந்தேகங்கள், அக்கறைகள் போன்றவற்றைப் பற்றிக் கேட்பது தான் நல்லது. இப்படிச் செய்தால், தம் பதில்களின் மீது மாணவர்கள் பெரும் அக்கறை காட்டும்படி செய்ய முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன், அப்போது அவன் ஆசிரியர் இயன்றவரை அதிகமாகத் தன்னைக் கேள்விகள் கேட்க வேண்டுமென விரும்புவான், ஏனெனில் இக்கேள்விகள் அவன் வேலை செய்ய உதவுகின்றன; இதில் தான் மாணவர்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளனர்; இப்படிப்பட்ட கேள்வி பதில்களுக்குப் பின் மாணவர்களுக்கு வேலை செய்வது எளிமையாக இருக்கும்!”
மாபெரும் சோவியத் ஆசிரியரின் நூலிலிருந்து, பாட வேளையில் குழந்தைகளுடனான காரிய ரீதியான உறவுகளைப் பற்றிய கருத்துக்களைக் கண்ட நான் என்னையறியாமலேயே, நீண்ட நாட்களுக்கு முன் எப்போதோ இதே மாதிரி காரிய ரீதியற்ற கேள்விகளைக் கேட்டதையும் அக்குழந்தைகளின் முகங்களையும் எண்ணிப் பார்த்தேன். “எனக்கு எல்லாம் தெரியும், உங்களுக்குத் தெரியுமா?” என்பது தான் இக்கேள்விகளின் சாரமாயிருந்தது. இச்சமயங்களில் குழந்தைகளின் முகங்களில் சலிப்புத் தென்பட்டது, கண்களில் ஒளியில்லை, குறும்புக்காரர்கள் குறைவு, கட்டுப்பாடோ சாலச் சிறந்த தாயிருந்தது, அறையில் முன்னும் பின்னும் நடந்த படி கேள்விகளை யோசித்து கேள்! இப்படிப்பட்ட போதனை முறைக்காக யார் குற்றஞ் சொல்ல முடியும்?
இப்போது? குழந்தைகளுடனான காரிய ரீதியான உறவுகள் பற்றிய ஏதோ கோட்பாட்டை முன்வைக்கிறேன்! இக்கருத்தை வெளியிட்டவர் இது போதனைமுறைக் கோட்பாடு என்று சொல்லவில்லையே, ஆசிரியர் தனக்குத் தெரியாததைக் கேள்வியாக கேட்க வேண்டும் என்று தானே சொன்னார். நானோ எனக்கும் என்னைப் பின்பற்ற விரும்பும் மற்றவர்களுக்கும் எல்லாவற்றையும் சிக்கலாக்குகிறேன். எப்படிச் சிக்கலாக்குகிறேன்? இதோ நீங்களே பாருங்கள்.
“6+2 எவ்வளவு?” என்று குழந்தைகளிடம் கேட்கிறேன்.
“எட்டு!” என்று ஒரே குரலில் பதில் வருகிறது.
“5+3?”
“எட்டு!” என்று பதில் சொல்கின்றனர்.
இந்த இடத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்துகிறேன், சிந்தனை வசப்படுகிறேன், என் உதடுகள் எதையோ முணு முணுக்கின்றன; குழந்தைகள் தம் கண்களை அகல விரித்தபடி “என்ன நடக்கிறது?” என்று என்னைப் பார்க்கின்றனர்.
“என்ன சொல்கின்றீர்கள்? 5 + 2 எட்டா?”
அவ்வளவு தான்: “நீங்கள் ‘5 +3′ என்று சொன்னீர்கள்!”
“இல்லை, நான் அப்படிக் கேட்கவில்லை!” என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். ‘5+2’ எவ்வளவு என்று தான் கேட்டேன், நீங்கள் தான் ‘எட்டு’ என்றீர்கள்!”
“இல்லை, நீங்கள் ‘5+3’ என்றீர்கள். அது 8.”
“சரி, நல்லது!” என்றாலும் எனது குழப்பத்தை பேச்சிலும் முகத்திலும் வெளிப்படுத்தியபடி கேட்கிறேன்:
”7+1 எவ்வளவு?”
“7+1 எட்டு.”
“மன்னியுங்கள், நான் 7+1 கேட்க விரும்பவில்லை. 4+4 எவ்வளவு என்று கேட்க விரும்பினேன்.”
“4+4 எட்டுதான்.”
“என்ன நீங்கள், எல்லாவற்றிற்கும் ‘எட்டு, எட்டு’ என்கின்றீர்கள்! ‘ஒன்பது’ அல்லது ‘பத்து’ என்று வேறு பதில் சொல்ல முடியாதா?” என்று உண்மையான குரலில் கேட்கிறேன்.
ஆனால் தம் ஆசிரியர் “ஞாபகமறதியானவர்”, “கவனக் குறைவானவர்” என்பதற்கு குழந்தைகள் பழகிவிட்டதால், நிரூபிக்கத் துவங்குகின்றனர்:
“நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை 8 தான்! அப்படியிருக்கும் போது ‘ஒன்பது’, ‘பத்து’ என்று எங்களால் எப்படிச் சொல்ல முடியும்?”
“நான் எந்த கணக்குகளைத் தந்தேன்?”
“6+2, 5+3, 7+1, 4+4!”
நான் இவற்றை கரும்பலகையில் ஒரே வரிசையில் எழுதி விட்டு சிறிதே சிந்தித்து, அவற்றின் எதிரே சமன் குறியிட்டு, எட்டு என்று பெரிதாக எழுதி விட்டு பின் எனக்குள்ளேயே கூறிக் கொள்வதைப் போல் நடிக்கிறேன்: “ஆமாம், ஆமாம், எட்டுதான்!” இக்கணக்குகளைப் போட்ட அந்த குறுகிய நேரத்தில் குழந்தைகளின் முகங்களில் வியப்பும் கவலையும் மகிழ்ச்சியும் பொறுமையின்மையும் மாறி மாறி வருகின்றன. கண்கள் ஒளிர்கின்றன. சில சமயங்களிலோ வகுப்பில் யார் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்க முடியாத படி ஒரே சத்தம். ஆனால் அவர்கள் உண்மையை அறிவதைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.
இங்கே நான் குழந்தைகளுடன் எப்படிப்பட்ட காரிய ரீதியான உறவுகளை நிலை நாட்டினேன்? நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் எனக்குத் தெரியும், எனக்கு ஏதோ புதியதை சொல்லித் தருவதாக அவர்களும் நினைக்கவில்லை. அதாவது இங்கே புதியது எதுவும் இல்லை. ஆனாலும் உறவுகள் முற்றிலும் காரிய ரீதியாக இருந்தன என்று எனக்குத் தோன்றுகிறது. நான் முற்றிலும் காரிய ரீதியாக, கவலையோடு கணக்குகளைக் கொடுத்ததால், வேறொன்றை நிரூபிக்க முயன்றதால் தான் அவை இப்படி ஆயின. எனது “கவனக் குறைவு”, “ஞாபகமறதி”, “தவறுகள்” இவர்கள் மத்தியில் என்னைத் திருத்தும் நாட்டத்தை, என்னோடு விவாதம் புரியும் நாட்டத்தைத் தூண்டி விடுகின்றன.
ஏனெனில், உண்மையில் எனக்குத் தெரியாத கேள்விகளை மட்டுமே குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதே. எனவே தான் அவர்களுடன் கலந்து பழகுவதன் மூலம் அவர்கள் தம்மை எனக்குச் சரிசமமானவர்களாக உணர, அவர்கள் எனக்கு அவசியம், அவர்களின்றி எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று புரிந்து கொள்ள நான் வாய்ப்பளிக்கிறேன். குழந்தைகளுடன் நான் கலந்து பழகி அனுபவம் கிடைக்கக் கிடைக்க, ஆசிரியரியல் என்பது குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போதனையைப் பற்றிய விஞ்ஞானம் மட்டுமல்ல, இது குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போதனைக் கலையைப் பற்றிய விஞ்ஞானம் என்ற விவாதத்திற்குரிய கருத்து நிலை சரியானது என்பதை மேன்மேலும் உறுதியாக நம்பி வருகிறேன். வகுப்பறையில் அமர்ந்து, என்னைப் பார்த்தபடியே, என்னிடமிருந்து முக்கியமான எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகள் உண்மையிலேயே ஒவ்வொரு பள்ளி நாளையும் மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டுமென நான் விரும்பினால், தாம் வளர்க்கப்படுகிறோம், தமக்கு படிப்புச் சொல்லித் தருகின்றனர் என்பதை உணராமலேயே வளர்க்கப்பட வேண்டும், கல்வி பெற வேண்டும் என்று நான் விரும்பினால், எங்களுடைய காரிய ரீதியான உறவுகள் உறுதியானவையாக, தொடர்ச்சியானவையாக இருக்க வேண்டும் என்பதன் மீது நான் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த உறுதியையும் தொடர்ச்சியையும் பேணிக் காக்கும் அவசியம் ஏற்படும் போது நான் துணிவாக, ஈடு இணையற்ற ஆசிரியர் – நடிகராக நடிக்க வேண்டும். அதாவது, எனக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான காரிய ரீதியான உறவுகள் உண்மையானவையாக இருக்க வேண்டும், சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமையை இவை குழந்தைகளிடமிருந்து பறிக்கக் கூடாது, பாடத்தில் தமது உண்மையான பங்கேற்பின் உணர்வை அவர்களிடமிருந்து பிடுங்கக் கூடாது என்பவை தான் மேற்கூறியதன் சாரமாகும். இது ஒரு எளிய காரியமல்ல, ஆனால் நான் என் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முன் கலந்து பேசிய யாருமே குழந்தைகளுடன் வேலை செய்வது சிக்கலான காரியமல்ல என்று எனக்கு உறுதி தரவில்லை.
எனது ஆறு வயதுக் குழந்தைகளுடன் நான் வேறு வழிகளிலும் காரிய ரீதியான உறவுகளை நிலை நாட்டுகிறேன். எந்தப் பாடத்தை எப்படி படிக்கப் போகின்றோம் என்று அவர்களுக்குச் சொல்லி, தம் கருத்தை வெளியிட வாய்ப்பளிக்கிறேன்.
“குழந்தைகளே, இன்று என்ன கணக்குகள், பயிற்சிகள் உங்களை எதிர்நோக்கியுள்ளன பாருங்கள்! இவற்றை எல்லாம் இன்று படிக்கப் போகின்றோம்!” என்று பாட ஆரம்பத்தில் சொல்லி கரும்பலகையில் உள்ளவற்றைக் காட்டுவேன் அல்லது வாய் மொழியாக விளக்குவேன். குழந்தைகளைக் “கவரும்படி” இதைச் செய்வேன். ஒவ்வொரு வேலையும் முடிந்ததும், வரைபடத்திற்குத் திரும்பி, “இதோ இதைச் செய்தாகி விட்டது, அடித்து விடலாம்” என்பேன்.
அல்லது, “இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள்!” என்று கேட்பேன்.
“சிக்கலானதாக… கவர்ச்சிகரமானதாக… விந்தையானதாக… அதிகம் சிந்திக்க வைப்பதாக… சுயமாக வேலை செய்யத்தக்கதாக… விவாதிக்கத்தக்கதாக… சிரிக்கவும் இடமிருக்கும்படியாக…”
“இப்படிப்பட்ட பாடம் நடத்த உதவுவீர்களா?”
“கண்டிப்பாக!”
பாட இறுதியில் நான் கேட்பேன்: “பாடம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?”
பாடம் பிடிக்காவிடில், பின்வருமாறு பதில் வரும்:
“ரொம்ப இல்லை….. சுமார்… பரவாயில்லை…. சிக்கலான கேள்விகளே இல்லை… சுயமான வேலையில்லை…”
அப்போது அவர்களிடம் உதவி கோருவேன்: “என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? நாளைய பாடத்திற்கு எந்த மாதிரி கேள்விகள், கணக்குகளைத் தயாரிக்கட்டும்?”
பாடம் பிடித்திருந்தாலோ இப்படிப் பதில் வரும்: “ரொம்ப….. சுவாரசியமாயிருந்தது. நன்கு விவாதித்தோம்…. சிக்கலான கணக்குகளைப் போட்டோம்… புதியதைக் கற்றுக் கொண்டோம். பல்வேறு தவறுகளைத் திருத்தினோம்.”
“குழந்தைகளே! இப்படிப் பாடம் நடத்த உதவியதற்கு நன்றி!”
“உங்களுக்கும் நன்றி!”
என் அன்பு ஆசிரியர்களே! அப்போது தான் எழுதக் கற்றுக் கொண்ட ஒரு சிறுவன் இடைவேளையில் தாழ்வாரத்தில் “சுவாரசியமான கணிதப் பாடத்திற்காக நன்றி!” என்று எழுதியதைப் படிக்கும் போது உங்களுக்கு எம்மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படும்? இந்தத் தருணத்தில் என்னிடம் எந்த உணர்வுகள் தோன்றுகின்றன என்று சொல்ல எனக்கு சக்தியிருக்காது, ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன நினைக்கிறேன் என்று சொல்ல முடியும்: “குழந்தைகள் என் பாடங்களில் நன்கு பழகுகின்றனர், அவர்களுக்கு சுவாரசியமாக உள்ளது. அப்படியெனில் நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று பொருள்”.
தேசியக் குடிமக்கள் பதிவேடு: யாருக்கும் மனநிறைவு அளிக்காத ஒரு கேடான வழிமுறை – ஹர்ஷ் மந்தேர்
அசாம் மாநிலத்தில் நடைபெற்று வந்த குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் ஏறத்தாழ 19 இலட்சம் பேர் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இறுதிப் பட்டியலை பா.ஜ.க.வும் எதிர்க்கிறது. காரணம், அந்நியர்களாக அறிவிக்கப்பட்டவர்களுள் கணிசமானோர் இந்துக்கள் என்பதுதான். மேலும், இறுதிப் பட்டியலில் வந்தேறிகளான வங்கதேச முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துவிட்டதாகவும் கூறி, இந்த இறுதிப் பட்டியலுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.
முஸ்லீம்களை அந்நியர்களாக முத்திரை குத்தி ஒதுக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறையை நாடெங்கும் கொண்டுவரவும் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதற்கேற்ப குடிமக்கள் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது.
ஹர்ஷ் மந்தேர்.
இதுவொருபுறமிருக்க, அசாம் குடிமக்கள் பதிவேட்டில் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் நிலை என்ன? அவர்களுள் முஸ்லீம்கள் நீண்டகாலத்திற்குத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படக் கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார், மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தேர்.
இட்லர் யூதர்களைத் தடுப்பு முகாம்களில் (Concentration Camps) அடைத்து வைத்ததற்கு ஒப்பான நிலை இது. இட்லரின் யூத இன அழிப்பு நாஜிசக் கொள்கை இங்கு இந்து மதவெறி பாசிசமாக, சட்டப்பூர்வமாக அரங்கேறிவருகிறது.
ஹர்ஷ் மந்தேர் இத்தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் குறித்து செப்.2, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய A flawed process that pleased none என்ற கட்டுரை சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது.
– ஆசிரியர் குழு
புதுப்பிக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெறாத காரணத்தால், தங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சமும் பதட்டமும் அசாமில் வசிக்கும் சுமார் 20 இலட்சம் மக்களையும் அவர்களது உற்றார் உறவினர்களையும் இறுகக் கவ்வி இருக்கிறது. ஆனால், பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்த பின்னாலும்கூட, வங்காள வம்சாவழி அசாமிய மக்களுக்குத் துளியும் நிம்மதியில்லை. ஏனெனில், பின்னாளில் அவர்கள் சட்டவிரோத வந்தேறிகள் என்று அறிவிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அசாமுக்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலுள்ள எல்லை வழியாக தொடர்ந்து இலட்சக்கணக்கான வங்கதேசிகள் தடையின்றிச் சட்டவிரோதமாக ஊடுருவிய வண்ணம் இருக்கிறார்கள்; அவ்வாறு வெள்ளமென ஊடுருவும் வங்கதேசிகள், அசாமின் பண்பாடு, மொழி அனைத்தையும் மூழ்கடித்து விடுவார்கள்; மேலும் தங்களை மெல்ல மெல்ல விளிம்புக்குத் தள்ளி தங்களது நிலம் மற்றும் காடுகளை விட்டே வெளியேற்றி விடுவார்கள்” என்பன போன்ற அச்சங்கள் அசாம் போராட்ட ஆதரவாளர்களின் மனதில் படிந்துபோன நம்பிக்கைகள். இவ்வாறு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை என்ன? 50 இலட்சம் முதல் ஒரு கோடி வரை எனப் போராட்டத் தலைவர்கள் ஆளுக்கொரு கணக்கைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், இறுதியாகக் கணக்கிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையோ 20 இலட்சத்திற்கும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கை அவர்களைப் பெரும் சோர்வுக்கும் கடும் கோபத்துக்கும் ஆளாக்கியிருக்கிறது.
பா.ஜ.க.-வின் மைய வேலைத்திட்டம்
காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், ராமர் கோயில் கட்டுதல் போன்றே வங்காளதேசத்தில் இருந்து “ஊடுருவியவர்களை” வெளியேற்றுதல் என்ற செயல் திட்டமும் அசாமிலும் சரி, மத்தியிலும் சரி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.-வின் மையமான வேலைத்திட்டத்தின் ஓர் அம்சமாகும். ஆனால், அவர்களது வரையறையின்படி வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அசாமிய முஸ்லீம்கள் மட்டுமே தேசத்துக்கு ஆபத்தானவர்கள். அதேசமயம், வங்காளத்திலிருந்து குடியேறிய இந்துக்கள் ஊடுருவல்காரர்கள் அல்ல; அவர்களை அகதிகள் என்றும், அவர்களுக்கு இந்தியா இயற்கையான தாயகம் என்றும் கூறுகிறது பா.ஜ.க. தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கப்பட்ட 19 இலட்சம் பேர்களின் அதிகாரப்பூர்வமான பகுப்பு விவரம் நம்மிடம் இல்லை. எனினும், கிடைக்கப் பெற்ற அறிகுறிகளின்படி இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் இந்துக்கள் ஆவர்.
தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் தமது குடும்பத்தினர் அனைவரும் விடுபடாமல் சேர்க்கப்பட்டிருக்கின்றனரா என உறுதி செய்துகொள்ள தேஜ்பூர் நகரிலுள்ள தெங்காபஸ்தி பகுதியில் அமைந்திருக்கும் மையத்தில் குவிந்திருக்கும் பொதுமக்கள்.
அசாமிய துணை தேசியம் என்றுமே மதவாதமாக இருந்ததில்லை; வங்காளத்தில் இருந்து குடியேறிய மக்கள் இந்துக்களா, முஸ்லீம்களா என்பதைப் பற்றி அதன் ஆதரவாளர்கள் அக்கறைப்பட்டதில்லை. ஆனால், பா.ஜ.க.வைப் பொருத்தவரையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய இந்துக்களின் வாக்குரிமையைப் பறிப்பது அல்லது அவர்களை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புவது என்ற எதுவாயினும் அச்செயல் அவர்களது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. ஏனெனில், இதன் மூலம் அவர்கள் தமது பிரதானமான வாக்கு வங்கியைத் தியாகம் செய்ய வேண்டிவருகிறது.
எனவேதான், பா.ஜ.க.-வின் மாநிலத் தலைவர்களும், மையத் தலைவர்களும் அசாமில் தமது சொந்த அரசு செயல்படுத்திய ஒரு திட்டத்தை நேர்மையற்ற முறையில் பக்கச்சார்பானது என்று கூறிப் புறக்கணிக்கிறார்கள். சான்றாவணங்கள் இல்லாத குடியேறிகள் இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கவும், இஸ்லாமியர்களாக இருந்தால் குடியுரிமை மறுக்கவும் வகை செய்யும் வண்ணம் குடிமக்கள் (திருத்த) மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கினால்தான் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
மறுபுறம் சட்டவிரோதக் குடியேற்றம் பற்றிய மதிப்பீடுகள் மிகப்பெரும் அளவில் ஊதிப் பெருக்கப்பட்டவை என்று வங்காள வம்சாவளி அசாமியர்கள் நெடுநாட்களாகவே கூறிவருகிறார்கள். மேலும், பெரும்பாலான வங்காள வம்சாவழியினர் நெடுங்காலம் முன்னர் கிழக்கு வங்காளத்தையும் சேர்த்து இந்தியா ஒரு நாடாக இருந்தபோதே சட்டபூர்வமாகக் குடியேறியவர்களின் வாரிசுகள்தான் என்றும், 1971-க்கு பிந்திய சட்டவிரோதக் குடியேற்றம் என்பது மிகமிகச் சொற்பமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கு மிக மோசமான வழிமுறைகள் அவர்கள் மீது திணிக்கப்பட்ட பின்னரும், குடிமைப் பதிவு மறுக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருப்பதிலிருந்து, அவர்கள் இதுகாறும் கூறிவந்தது உண்மை எனத் தோன்றுகிறது.
பிறப்பு, பள்ளிப் படிப்பு மற்றும் நிலவுடமை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் தன்னை இந்நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்கும் பொறுப்பு அசாம் வாழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டது. பரம ஏழைகளாகவும் படிப்பறிவு அற்றவர்களாகவும் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு, அவர்கள் அசாமியர்களாக இருந்தாலும் வேறு எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேற்படி ஆவணங்களை ஆய்வுக்குச் சமர்ப்பிப்பதென்பது மிகமிகக் கடினமான ஒன்று.
முஸ்லீம்களை ஒதுக்கும் பாரபட்ச நோக்கத்தோடு நாடெங்கும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவை எதிர்த்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
மக்கள் எப்படியோ அலைந்து திரிந்து உரிய ஆவணங்களைத் திரட்டி வெற்றிகரமாகச் சமர்ப்பித்த போதிலும், அற்பமான வேறுபாடுகளைக் கண்டுபிடித்து, நொட்டஞ்சொல்லி அவை நிராகரிக்கப்பட்டன. ஒரு வங்காளியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்படும் போது ஏற்பட்டுவிடும் எழுத்துப்பிழை காரணமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அது போல பெரும்பான்மையான கிராம மக்கள் தங்களது பிறந்த தேதியை அறியமாட்டார்கள் என்பது உலகறிந்த விடயம். இருப்பினும், ஆவணத்தில் பதிந்துள்ள வயதில் காணப்படும் சிறு தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அந்த ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பலரிடம் சட்டபூர்வமான நில உரிமை ஆவணங்கள் இல்லை. மேலும், இந்தத் தேசியக் குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடைச்செருகலாக, அசாமிய பூர்வகுடிகள் என்ற பொத்தாம் பொதுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு வகையினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க முடியாத நிலையில்கூட இவர்களுக்கு மிதமிஞ்சிய சலுகை காட்டப்பட்டது.
இவர்களது எதிர்காலம் என்ன?
வங்காள வம்சாவளி அசாமிய மக்களின் எதிர்காலம்தான் என்ன? தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் மறுக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் (Foreigners Tribunals – FTs) மேல் முறையீடு செய்யலாம். இது அவர்களுக்குக் காட்டப்படும் இருண்ட எதிர்காலமே அன்றி, வேறல்ல. ஏனெனில், இத்தீர்ப்பாயங்கள் வெளிப்படையான வெறுப்புணர்ச்சியுடனும் ஒருதலைப் பட்சமாகவுமே செயல்பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை உயர்த்த வேண்டும் என்று அரசாங்கம் வாய்வழியாகத் தீர்மானிக்கும் இலக்குகளும் உத்தரவுகளும்தான் இத்தீர்ப்பாயங்களை வழி நடத்துகின்றன.
மேலும் கூடுதலான கவலை அளிக்கக்கூடிய விடயம் என்னவென்றால், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாதோர் என்ற ஒரு பெரும் திரளான மக்களின் வழக்குகளை அந்நியர்களுக்கான தீர்ப்பாயம் விசாரிக்கும் என்பதோடு இந்த விவகாரம் முடியவில்லை. இறுதிப்பட்டியலின்படி வெளியேற்றப்பட வேண்டிய வங்காள முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஏமாற்றமடைந்திருக்கும் மாநில அரசு, பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களையும்கூட அரசு தொடர்ந்து பரிசீலிக்கும் என்றும் பின்னாளில் அவர்கள் அந்நியர்கள் என்று இவ்வரசு கருதுமானால், அவர்களையும்கூட அன்னியர்களுக்கான தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
உரிமைகள் அற்ற குடிமை
மிகப்பெரிய கேள்வி இதுதான். இந்த வழிமுறைகளின் இறுதியில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்” என்று அறிவிக்கப்படும் மக்களின் தலைவிதி என்ன? வங்கதேசம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது. இந்திய அரசு டாக்காவுடன் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. அசாம் கிளர்ச்சியின் கோரிக்கைகள் தெளிவானவை. அவை, சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிதல், (வாக்காளர் பட்டியலில் இருந்து) நீக்குதல் மற்றும் திருப்பி அனுப்புதல் ஆகியனவாகும்.
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தில்கூடத் தங்கவிடாமல் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது எவ்வாறு நிறைவேற்றப்படும்? இவர்கள் அடையாளம் கண்டிருக்கும் 10 இலட்சக்கணக்கான மக்கள் வங்கதேசத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளப்படுவார்களா? அல்லது மாபெரும் தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்படுவார்களா? ஆம் என்றால், எத்தனை காலத்திற்கு? நடைமுறை சாத்தியப்பாடு எதுவாக இருக்கக்கூடும்? இறுதியில் அவர்கள் குடிமக்களுக்கான எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படக் கூடும். அவர்கள் சூடு வைக்கப்பட்ட அடிமைகளைப் போல அடையாளமிடப்பட்ட மக்களாக, உரிமையற்றவர்களாக, கும்பல் வன்முறைக்கும் அரசின் மூர்க்கமான கண்காணிப்புக்கும் எளிதில் இலக்கானவர்களாக இருப்பார்கள்.
தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதற்கும் விரிவாக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அதற்கு அமித் ஷா அளித்த வாக்குறுதியையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் திருத்தத்துடன் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்படும்போது என்ன நடக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். இந்தத் திருத்தத்தின்படி இஸ்லாமியர்கள் தவிர, அந்நிய நாடுகளிலிருந்து குடியேறிய அனைவரும் சான்றாதாரங்கள் இல்லையென்றாலும், இந்தியராக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் அந்நியர்களுக்கான தீர்ப்பாய நடைமுறைகள் தோற்றுவிக்கும் கொடிய துயரம் எனும் சூறாவளிக்குள் இந்திய முஸ்லீம்களில் ஒருபகுதியினர் வீசியெறியப்படுவதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பது என்பதே இதன் பொருள். மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தமிழகத்தின் சமூக வளர்ச்சிக் குறியீட்டெண்கள் அரோக்கியமாகவும், பிற இந்திய மாநிலங்களைக் காட்டிலும் மேம்பட்டதாகவும் இருப்பது இணைய விவாதங்களில் சுட்டிக்காட்டப்படுவது வழக்கம். குறிப்பாக வடக்கு vs தெற்கு விவாதம் எழும் போதோ, இந்தி Vs தமிழ் விவாதங்களின் போதோ தமிழ் இணையவாசிகள் பயன்படுத்தும் முதலும் கடைசியுமான ஆயுதம் இந்தப் புள்ளி விவரங்கள் தான். சுட்டிக்காட்டப்படும் மேற்படி புள்ளி விவரங்களில் உண்மை இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், புள்ளிவிவரங்கள் காட்டும் சித்திரத்தை நாம் இதுவரை நெருங்கிச் சென்று பார்த்ததில்லை.
ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை ஒன்று தமிழகத்தில் குழந்தைப் பிறப்பில் ஆண் பெண் பால் விகிதாச்சாரம் குறித்த புள்ளிவிவரங்களை நெருக்கமாகச் சென்று ஆய்வு செய்கிறது. 2014 – 16 ஆண்டு வாக்கில் இந்திய அளவில் பால் விகிதாச்சாரம் 898 – அதாவது அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கும் 898 பெண் குழந்தைகள் பிறந்தன. இதே காலப்பகுதியில் தமிழகத்தின் விகிதாச்சாரம் 915. இந்தியாவின் பெரிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒப்பிடும் போது அப்போது நமக்கு ஒன்பதாம் இடம் கிடைத்தது.
மாதிரிப்படம்
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் நிலைமை ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது. 2018-19 ஆண்டில் தமிழகத்தின் பால் விகிதாச்சாரம் 931 என்கிறது தேசிய சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள மின்தரவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இந்த புள்ளி விவரத்தைக் கொண்டு நாம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியும். ஆனால் இதே புள்ளி விவரத்தை சற்றே நெருங்கிப் பார்த்தால் வேறு விதமான சித்திரம் கிடைகின்றது.
தொன்னூறாம் ஆண்டுகளின் துவக்கத்தில் நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதாச்சாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்யும் போக்கு இம்மாவட்டங்களில் உச்சத்தில் இருந்த சமயம் அது. இதனைத் தடுக்க மாநில அரசு தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் விழுப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தது. பட்டாதாரி பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் போன்றவை கணிசமாக பலனளித்தன. இதன் விளைவாக குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் பால் விகிதாச்சாரம் மெல்ல மெல்ல அதிகரித்தது.
ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களை நுணுகிச் சென்று ஆராய்ந்தால் மாவட்டங்களுக்கு இடையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வான நிலைமை நிலவுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கிழக்கு மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கோயில்பட்டி, பரமக்குடி போன்ற மாவட்டங்களில் பால் விகிதாச்சாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு 914-ஆக இருந்த தஞ்சாவூரின் பால் விகிதாச்சாரம், 2017-ல் 950-ஆக உயர்ந்து பின் 2018-ல் 908-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே போல், கடலூர் மாவட்டத்தில் 2013-14 ஆண்டுகளில் 848-ஆக இருந்த பால் விகிதாச்சாரம், 2017-18 ஆண்டில் 926-ஆக உயர்ந்து பின் 2019ல் 917-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பால்விகிதாச்சாரம் சராசரிக்கு மேலும், வேறு சில மாவட்டங்கள் சராசரிக்கு கீழும் உள்ளது. “2016 – 2019 தரவுகளை பரிசீலிக்கும் போது பல மாட்டங்களில் பால் விகிதாச்சாரம் 900க்கும் கீழே இருப்பது தெரியவருகின்றது. மாவட்டங்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வான நிலைமைக்கு காரணம் கருவிலேயே பெண் சிசுக்களை கலைத்து விடுவதுதான்” என்கிறார் இத்துறை சார்ந்த வல்லுனரான சாபு ஜார்ஜ்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கருவிலேயே ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடிக்கும் போக்கு சேலம், நாமக்கல், மதுரை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து தற்போது கடலூர் அரியலூர் போன்ற பிற பின் தங்கிய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. கல்வியறிவும் நகரமயமாக்கமும் அதிகரித்துள்ள பகுதிகளில் பால் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளதும், பின்தங்கிய பகுதிகளில் குறைந்துள்ளதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பெண் சிசுக்களை கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கருவுறும் பெண்கள் குறித்த விவரங்களை அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவித்து பதிவு செய்து விடுகின்றன. அதே போல் கர்ப்பிணிகளின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத பரிசோதனை அறிக்கையும், கருவின் வளர்ச்சி நிலையும் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது. இதன் மூலம் யாரெல்லாம் இடையிலேயே கருவைக் கலைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய சாத்தியமாகின்றது.
இன்னொரு பக்கம், சோதனை மையங்கள் கருவுற்ற குழந்தைகளின் பாலினத்தை அறிவதைத் தடுக்கும் சட்டங்களின் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act, 1994) தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இது போன்ற கண்காணிப்பு முறைகள் அனைத்தையும் தாண்டி பல சோதனை மையங்கள் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பெற்றோருக்குத் தெரிவிக்கின்றன – அதே போல் சட்ட விரோத கருக்கலைப்புகளும் நடந்து வருகின்றன என்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
சட்டங்களும், கண்காணிப்புகளும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனவே அன்றி தவறு நடப்பதற்கான மூலகாரணத்தை களைவதில்லை. இந்த புள்ளி விவரங்களின் மேல் கருத்து தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் “மக்களிடையே விழிப்புணர்வு இன்மை, கல்வியறிவில் பின் தங்கியிருப்பது” போன்ற காரணங்கள் களையப்பட வேண்டும் எனவும், இதற்கு அரசு முழுவீச்சில் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் தீர்வாக முன்வைக்கின்றனர்.
ஆனால், இது வெறுமனே “விழிப்புணர்வு” பிரச்சாரங்களின் மூலம் மட்டுமே களையப்படக் கூடிய பிரச்சினை இல்லை. மாறாக, பெண் குழந்தைகளை சுமையாக கருதும் பார்ப்பனிய கண்ணோட்டத்திற்கு எதிரான பிரச்சாரமாகவும், கலாச்சார போராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு சம வாய்ப்பும், பாதுகாப்பும், பொருளாதார சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களில் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதில்லை. பார்ப்பனிய விசம் கழுத்து வரை பரவியிருக்கும் இந்திய சமூகத்தில் நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது.
அரசின் கண்காணிப்பும், சட்டரீதியான கட்டுப்பாடுகளும் ஒருபுறம் இருக்க அதற்கு இணையாக கலாச்சார தளத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும் என்பதையே புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி.
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் வெடிக்கச் செய்து, பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் மீண்டும் பேசுபொருளாக்கிவிட்டார் மோடி. இந்தச் சாதனையில் தனக்கே தெரியாமல், அவர் நேருவை விஞ்சிவிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த சந்திப்பு.
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் மீண்டும் ஐ.நா. மன்றத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. ஊரடங்கைத் தளர்த்த வேண்டும், இணையம், தொலைபேசி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், செயல்வீரர்கள், மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வலியுறுத்தியிருப்பதுடன், காஷ்மீர் மக்களுடைய எதிர்காலம் குறித்த எந்தவிதமான முடிவையும் காஷ்மீர் மக்களையும் ஈடுபடுத்தித்தான் எடுக்கவேண்டும்” என்றும் கூறுகிறது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஹை கமிசனர் மிஷல் பேசலட்டின் அறிக்கை.
ஐ.நா. தீர்மானங்களையும் சிம்லா ஒப்பந்தத்தையும் மனித உரிமைகளையும் இந்தியா மதிக்க வேண்டும். மனித உரிமை மீறல் என்பது இருதரப்புப் பிரச்சினை அல்ல. மனித உரிமை மீறல் குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்படவேண்டும்” என்று கூறியிருக்கிறது பிரிட்டிஷ் அரசு.
காஷ்மீர் பிரச்சினையை அம்மக்களின் விருப்பத்தின்படி ஐ.நா. மன்றம் தீர்க்கவேண்டும்; அமெரிக்க அரசு அதற்கான நடவடிக்கையைத் துணிவுடன் எடுக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கூறியிருக்கிறார்.
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறைப் பிரிவும் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன.
காஷ்மீரைப் பேசவிடு” என்ற முழக்கத்தின் கீழ் இந்திய அரசைக் கண்டித்து பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.
காஷ்மீரைப் பேசவிடு” என்ற உலகு தழுவிய பிரச்சார இயக்கத்தை அம்னஸ்டி இன்டர்நேசனல் தொடங்கியிருக்கிறது. இவை மேற்குலகின் எதிர்வினைகள்.
காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலையை அட்டியின்றி ஆதரித்து வந்த ரசியாவின் குரலும் மாறிவிட்டது. இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் சரி, மத்திய ஆசியாவிலுள்ள கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளிலும் சரி மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிரான பொதுக்கருத்து அரசியல் அரங்கில் வலுப்பெற்றிருக்கிறது.
சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் மோடி அரசை மட்டுமின்றி, மோடி அரசுக்குக் காவடி தூக்கும் இந்திய ஊடகங்களையும் காறி உமிழ்ந்திருக்கின்றன.
விரைவிலேயே இயல்பான அரசியல் தகுதிநிலைக்கு காஷ்மீர் திரும்பும் என்று நம்புவதாக” ஆகஸ்டு இறுதியில் கூறிய அமெரிக்க அரசின் அறிக்கை, அரசியல்வாதிகளை உடனே விடுவி, தேர்தலை உடனே நடத்து” என்று செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிப்படையாகவே மோடிக்கு உத்தரவிட்டிருக்கிறது. இத்தகைய கண்டனங்களைச் சமாளிக்க நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இருப்பினும், பாகிஸ்தானின் கண்டனமும், ஐ.நா.-வில் சீனா கொண்டு வந்த தீர்மானமும் தவிர, மற்ற உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஹை கமிசனர் மிஷல் பேசலட்.
குறிப்பாக, வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய இசுலாமிய நாடுகளைப் பணத்தால் அடிப்பதன் மூலம் (இந்திய மக்களை சுரண்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம்) அவர்களின் வாயைக் கட்டி, இசுலாமிய நாடுகளே இந்தியாவைத்தான் ஆதரிக்கின்றன என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது.
ரிலையன்ஸில் முதலீடு, இந்திய அரசுடன் இணைந்து பெட்ரோகெமிக்கல் ஆலைகள், உள்கட்டுமானத்துறை முதலீடுகள் எனப் பல இலட்சம் கோடி முதலீடு செய்யும் சவுதியும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் தங்களது ஆதாயம் காரணமாக மவுனம் சாதிக்கின்றன. இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனம் முதல் இராக், இரான் வரை அனைவரையும் காட்டிக்கொடுத்த ஷேக்குகள், காஷ்மீருக்கும் அதேவிதமான துரோகத்தைச் செய்கிறார்கள்.
உம்மா என்பதெல்லாம் சும்மா என்றும், சர்வதேச இசுலாமிய சகோதரத்துவம் என்பதெல்லாம் பணக்கார ஷேக்குகளின் வர்க்க நலனைக் காப்பாற்றுவதற்கான தந்திரம் என்றும் பாக். ஊடகங்களே எழுதுகின்றன. இந்த உண்மை முஸ்லீம் மக்கள் மத்தியிலேயே அம்பலமாகியிருப்பது, இத்தீமையில் விளைந்திருக்கும் ஒரு நன்மையாகும்.
♦♦♦
சட்டப்பிரிவு 370- நீக்குவது என்ற தங்களது அடிப்படைக் கொள்கையை நிறைவேற்றிவிட்டதாக மோடி அரசு ஜம்பமாக கூறிக்கொண்டாலும், ஆகஸ்டு 5- தேதியன்று அவசரமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு வேறு பின்புலங்களும் உள்ளன. ஜுலை தேதியன்று பாக். பிரதமர் இம்ரான்கானுடன் ஊடகங்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இருநாடுகளுக்குமிடையே பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்குமாறு மோடி தன்னிடம் கோரியதாகவும் அதற்குத் தான் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பதாகவும்” கூற, அதை இம்ரான் உடனே வரவேற்றார். மோடி அவ்வாறு கேட்கவில்லை என்று ஈனசுரத்தில் அவசரமாக மறுப்பு வெளியிட்டது இந்திய வெளியுறவுத்துறை.
ஆகஸ்டு 2- தேதி ஒரு நிருபரின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், நான் இரண்டு பேரிடமும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன். அவர்கள் உடன்பட்டால், நிச்சயம் நான் தலையிடுவேன்” என்று மீண்டும் அறிவித்தார். இதற்குப் பிறகு ஆகஸ்டு 5- தேதி வருகிறது மோடி அரசின் அறிவிப்பு.
அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள்.
காஷ்மீர் விசயத்தில் டிரம்ப் இந்தளவு அக்கறை செலுத்தக் காரணம் இருக்கிறது. தாலிபானை ஒழிப்பதற்காக 2001- ஆப்கானுக்குப் போன அமெரிக்கா, 2000 சிப்பாய்களைப் பறிகொடுத்திருக்கிறது. ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டிரம்ப், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக். உதவியை நாடியிருக்கிறார். இதற்கு ஈடாக, இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானில் தனிநாடு கேட்டுவரும் பலூசிஸ்தான் விடுதலைப் படையைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாக். பேரம் பேசியிருக்கிறது. பலூச் விடுதலைப் படையைச் சர்வதேச பயங்கரவாத இயக்கமென்று அமெரிக்கா ஜூலை மாதமே அறிவித்துவிட்டது. இரண்டாவது கோரிக்கையின் விளைவுதான் டிரம்பின் காஷ்மீர் பஞ்சாயத்து குறித்த பேச்சு.
மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்பது இந்தியாவின் வெற்று வீராப்பு. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தலையிட்டுத்தான் கார்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று மோடி இப்படி வீராப்பு பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆகஸ்டு 20 தேதியன்று டிரம்ப் காஷ்மீர் குறித்து அளித்த பேட்டியில், காஷ்மீர் அபாயகரமான நிலையில் உள்ளது, அங்குள்ள முஸ்லீம் மக்கள் ஆட்சியாளர்களை விரும்பவில்லை, அங்கே இந்து, முஸ்லீம் முரண்பாடு உள்ளது” என்றெல்லாம் விவரித்து விட்டு, தான் தலையிட்டுத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக” மீண்டும் பேசியிருக்கிறார். ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுப் பேசியது முன்னெப்போதும் நடந்திராத வெட்கக்கேடு” என்று கூறுகிறார்கள் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
அதுமட்டுமல்ல, தன்னை பாசிஸ்டு என்று இம்ரான் தாக்குகிறார், பதட்டத்தைக் கூட்டுகிறார் என்று மோடி தன்னிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்தார் என்றும், உடனே இம்ரான்கானை அழைத்து தான் பேசியதாகவும் தனது பஞ்சாயத்து குறித்து டிவிட்டரில் எழுதி, மோடியின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார் டிரம்ப்.
காஷ்மீர் பிரச்சனையில் டிரம்ப் அவ்வாறு பேசக் காரணம் பாகிஸ்தானின் நிர்ப்பந்தம் மட்டுமல்ல, இரான், வெனிசூலா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அமெரிக்காவின் பால் மோடி அரசு காட்டி வரும் அடிமைத்தனமான அணுகுமுறையும் டிரம்பின் இந்த அணுகுமுறைக்குக் காரணமாக அமைகின்றன.
இரான், வட கொரியா, நிகராகுவா, வெனிசுலா, ஆப்கான் என்று தலையிட்ட எல்லா நாடுகளிலும் தோல்வியைத் தழுவிய டிரம்ப், தனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் போல்டனைப் பதவி நீக்கம் செய்து விட்டு, மீண்டும் வட கொரியாவுடனும் இரானுடனும் சமரசம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தங்களுடனான பேச்சுவார்த்தை முறிந்து போனது குறித்து அமெரிக்கா வருத்தப்படவேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கும் தாலிபான், தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுதான் வல்லரசு அமெரிக்காவின் தற்போதைய நிலை. அத்தகைய அமெரிக்காவிடம்தான் பல்லிளிக்கிறது மோடி அரசு.
காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தெரிவித்திருக்கும் கண்டனங்கள் சர்வதேச அரசியல் கருத்துருவாக்கத்துக்குப் பயன்படக்கூடுமேயன்றி, அந்த ஏகாதிபத்தியங்கள் காஷ்மீர் மக்களின் உரிமையை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை. இப்பிரச்சனையைப் பயன்படுத்தி அரசியல், பொருளாதார, இராணுவரீதியாக இந்தியாவின் கையை முறுக்கி அடையக்கூடிய ஆதாயங்களே அவர்களது இலக்காக இருக்கும். அந்த வகையில் காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபிய ஷேக்குகள், அமெரிக்க முதலாளிகள் போன்ற அனைவரின் மவுனத்தை விலைக்கு வாங்குவதற்கு பல்லாயிரம் கோடி டாலர்களை மோடி அரசு அவர்களுக்கு வாரி வழங்கி வருகிறது. பார்லே பிஸ்கெட் வாங்க முடியாத இந்தியர்கள்தான் காஷ்மீர் பெருமைக்காக இந்த விலையைக் கொடுக்கவேண்டும்.
மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்பது இந்தியாவின் வெற்று வீராப்பு. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தலையிட்டுத்தான் கார்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. … ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுப் பேசியது முன்னெப்போதும் நடந்திராத வெட்கக்கேடு.
அதுமட்டுமல்ல, மதவாத அரசியலுக்கு ஆட்படாத காஷ்மீர் இளைஞர்களும் அதற்குப் பலியாவதற்கான வாய்ப்பையும், இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் பெருகுவதற்கான வாய்ப்பையும், பாகிஸ்தான் உளவுத்துறை காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டுப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பையும் மோடி அரசின் இந்த நடவடிக்கை தோற்றுவிக்கும்.
ஆப்கானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் தாலிபான், கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான இன்னொரு தோற்றுவாய்.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எப்போதும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று ராஜ்நாத் சிங் கூறியதற்குப் பதிலடியாக முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை எங்களுக்கு என்றைக்குமே இருந்ததில்லை” என பாக். இராணுவ ஜெனரல் அறிக்கை விடுத்திருக்கிறார்.
தனது தலையாய இலட்சியம் என்று கூறிக்கொள்ளும் ராமன் கோயில் விவகாரத்தை, அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க. பலமுறை பற்ற வைத்திருக்கிறது, ஆறப்போட்டுமிருக்கிறது. அதே போல அபாயகரமான பொருளாதார வீழ்ச்சியையும் பலமுனைத் தோல்வியையும் மறைப்பதற்கு காஷ்மீர் நடவடிக்கையைத் தற்போது மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.
கருப்புப் பண ஒழிப்பு என்று சித்தரிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை எப்படிச் சிறுதொழில், சுய தொழில்களை ஒழித்துக் கட்டியதோ அதே போல, காஷ்மீரின் உரிமை பறிப்பு என்று இந்தியர்கள் கருதிக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை, இந்தியர்களின் உரிமை பறிப்பில் வந்து முடியும். தேசவெறி, போர், பயங்கரவாதம் என்ற பேரழிவுப் பாதைக்குள் இந்தியாவை இழுத்துச் செல்லும். தங்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கே இந்தியர்கள் அனைவரும் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தாக வேண்டும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் தத்துவ பாடம் என்ற பெயரில் கீதையை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதிக்கு எதிராக, காவல்துறையின் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துறை, நேற்று (29.09.2019) இரவு திடீரென அனுமதியை இரத்து செய்து அறிவித்தது. இதனால் தடையை மீறி இன்று (30.09.2019) காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தோழர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை, தன்னை ஆர்.எஸ்.எஸ் இன் இளைய பங்காளி என அடையாளம் காட்டிக் கொண்டது. அதே நேரம் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் அங்கு சுற்றுப் பகுதியில் இருந்த மக்களை கவனிக்கச் செய்தது. அம்முழக்கங்கள் காவி கும்பலை மக்களிடம் அம்பலப்படுத்திக் காட்டியது.
1 of 8
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கஙகள் :
திணிக்காதே! திணிக்காதே!
பொறியியல் படிப்பிலே
சமஸ்கிருதத்தை திணிக்காதே!
கீதை என்ற பெயரிலே
பார்ப்பன புராண புரட்டுகளை
மாணவர் மண்டையில் திணிக்காதே!
உழைக்கும் மக்களை சாதிகளாக
பிளவு படுத்தும் கீதையை,
அம்பேத்காரும் பெரியாரும்
காரித் துப்பிய கீதையை,
பொறியியல் கல்வியில் சேர்க்காதே!
சூத்திரன் படிக்கக் கூடாது
என்று சொல்லும் கீதையை
பாடத்திலே சேர்க்காதே!
பொறியியல் மாணவரை
பார்ப்பன அடிமை ஆக்காதே!
நட்டும், போல்ட்டும், மின்னணுவும்
கீதை தந்த தத்துவமா?
‘எல்லாம் மாயை’ என்னும் கீதையை
படித்தால் பல்பு எரியுமா?
ஹவ்டி மோடி! ஹவ்டி மோடி!
பதில் சொல்! பதில் சொல்!
கிருஷ்ணன் என்ன இஞ்சீனீயரா?
கீதை என்ன அறிவியலா?
பதில் சொல்! பதில் சொல்!
படித்தவர்கள் வேலை கேட்டால்
பக்கோடாவை விற்கச் சொன்ன
காவிக் கேடி மோடியே
பக்கோடாவை விற்பதற்கு
கீதை என்ன சமையல் குறிப்பா?
ஆலை எல்லாம் மூடுறான்,
வேலையை விட்டு தொறத்துறான்!
கீதையை படித்து விட்டால்
வேலை வெட்டி கிடைக்குமா?
‘கொண்டு வந்தது எதுவும் இல்லை
கொண்டு போவது எதுவும் இல்லை’
என்று சொல்லும் கீதையை
அம்பானிக்கு கொடுத்து விட்டு
அம்பானியின் திருட்டுச் சொத்தை
பறிமுதல் செய்! பறிமுதல் செய்!
கார்ப்பரேட்டுக்கு அள்ளிக் கொடுக்கும்
காவி மாமா மோடியே!
கார்ப்பரேட்டுக்கு கீதை கொடுத்து
திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்!
சூரப்பா! சூரப்பா!
பொறியியல் படித்தாயா?
பஜனை மடத்தில் படித்தாயா?
அண்ணா பொறியியல் பல்கலையா?
ஆர்.எஸ்.எஸ் பஜனை மடமா?
‘அதுவும், இதுவும், எதுவும் நானே’
என்று சொல்லும் கீதையை படித்து
கர்ப்பக்கிருகத்தில் கக்கூஸ் கட்டினால்
ஆர்.எஸ்.எஸ் கும்பலே!
டீலா? நோ டீலா?
தத்துவ ஞான கீதை படித்து
இஸ்ரோ செல்லும் விஞ்ஞானிக்கு
நிலவில் லேண்டரை கண்டுபிடிக்க
பகவான் உதவி செய்வாரா?
பொறியியல் கல்வி என்பது
மக்கள் வாழ்க்கைக்காகத் தான்!
கீதை காட்டும் வழி எல்லாம்
சொந்த மக்களை கொல்வது தான்!
அறிவியல் படித்து வாழவா?
கீதை படித்து சாகவா?
பார்ப்பன புராண புரட்டுகளை
கல்வித் துறையில் திணிக்கின்ற
ஆர்.எஸ்.எஸ் இன் சதித் திட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
இந்து பாசிச சித்தாந்தத்தை
மாணவர் மீது திணிக்கின்ற
காவிக் கேடி மோடியின்
முகத்திரையை கிழித்தெறிவோம்!
தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மதுரை.
சென்னை ஐஐடி வளாகத்திற்கு வான் வழியில் வரும் மோடியை எதிர்த்து #gobackmodi இணைய வெளியில் முன்னணிக்கு வந்துவிட்டது. டிவிட்டரில் முன்னணியில் இருக்கும் #gobackmodi குறித்த செய்திகளை தொகுத்திருக்கிறோம்.
Fake promises to Andhra Pradesh before election- Got rejected in Andhra pradesh(0 seats) Now coming to Tamilnadu with fake promises, Definitely he will be rejected. Dravidian people are more sensible.#gobackmodipic.twitter.com/lrlpv4Gg9G
தேர்தலுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்திற்கு போலியான வாக்குறுதி. இதனால் ஆந்திராவில் பாஜகவிற்கு கிடைத்த இடங்கள் 0. தற்போது தமிழ்நாட்டிற்கு போலியான வாக்குறுதிகளுடன் மோடி வருகிறார். அங்கேயும் அவர் நிராகரிக்கப்படுவார். திராவிட மக்கள் மிகவும் உணர்வுள்ளவர்கள்
#gobackmodi destroying our education system, stealing our jobs, grabbing our tax money, plundering our wealth, destroying our environment, imposing Hindi, capturing our institutions. Modi is the father of Hindi colonial imperialism. You are not welcome in Tamilnadu.
எங்களது கல்வித் துறையை அழித்து, வேலைகளை திருடி, வரிப்பணத்தை பறித்து, செல்வத்தை மூழ்கடித்து, சுற்றுச்சூழலை அழித்து, இந்தியைத் திணித்து, எமது நிறுவனங்களை பறித்து வரும் மோடி இந்தி ஏகாதிபத்தியத்தின் தந்தை. நீங்கள் தமிழ்நாட்டில் வரவேற்கப்படமாட்டீர்கள்.
மோடி அரசாங்கத்தில் அனைத்துமே அபாயகரமாக இருக்கிறது.
Please donot increase the fees. You have done nothing for development so atleast also do nothing in education sector. Cause you all are illiterate.#gobackmodipic.twitter.com/XM0nqOZ0sg
Fascism will always be defeated. We stand on the shoulders of giants who fought this beast before. This time it is our honour as Tamils to put an end to this hateful, dehumanising and violent ideology. And so every Tamil in unison says #gobackmodipic.twitter.com/zGKBCe69yF
பாசிசம் எப்போதும் தோற்கடிக்கப்படவேண்டும். இதை முறியடிக்க போராடிய முன்னோர்களின் வழி நடப்போம். இந்நேரம் வேறுக்கத்தக்க, மனிதாபிமானமற்ற, வன்முறை சார்ந்த இந்துத்துவ சித்தாந்தத்தை முறியடிக்க சரியாண தருணமிது. அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு சொல்வோம், மோடியே திரும்பிப் போ!
Our most recent comrades in the war against Fascism are our Kurdish brothers and sisters who beat back ISIS a religious ideology as hateful as the RSS.#gobackmodipic.twitter.com/1w2bPVk9in
பாசிசத்திற்கு எதிரான போரில் நமது குர்தீஸ் சகோதரர்களும், சகோதரிகளும் ஐஎஸ்ஐஎஸ்-ஐ முறியடித்தது போல நாமும் ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுக்கத்தக்க சித்தாந்தத்தை முறியடிப்போம்!
#GobackModi Modi again had to fly from Chennai airport to chennai IIT, a distance of not more than 7 to 08 kms! That's the level of fear Tamizhs had managed to strike at the hearts of hindtuva fascists! But GobackModi is boring! But yet, we say GobackModi
சென்னை விமானநிலையத்திலிருந்து 8 கீ.மீட்டர் தூரம் இருக்கும் சென்னை ஐஐடி வளாகத்திற்கு செல்ல மோடி இந்த முறையும் பறக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கு எதிராக தமிழகம் நடத்தும் கெத்து! மோடியே திரும்பிப் போ என்று அடிக்கடி சொல்வது போரடித்தாலும், மீண்டும் சொல்வோம் மோடியே திரும்பிப் போ!
கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்து ரூபாய் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை! இந்தியா விரைவில் உன்னை உதைத்து துரத்தும்!
A govt that is destroying higher education in our country by demolishing UGC & AICTE and bringing some useless regulatory commission is unwelcome. Let our IIT’s be neutral and really scientific
யூஜிசி-யையும், ஏஐசிடிஇ-யையும் ஒழித்து விட்டு உயர் கல்வித்துறையில் திணிக்கப்படும் பயனற்ற ஒழுங்குமுறை ஆணையங்களை வரவேற்கமுடியாது! நமது ஐஐடி நடுநிலையாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்கட்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் வாழ்க என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.
கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி (ITI) ஆகிய இரண்டு இடங்களில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கை நினைவு கூறும் வகையில் அவரது 113-வது பிறந்தநாள் அன்று, பகத்சிங் பற்றிய கூட்டங்கள் பு.மா.இ.மு சார்பில் நடைபெற்றது.
இன்றைய காலகட்டங்களில் பாடத் திட்டங்களிலும் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மற(றை)க்கப்பட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் பகத்சிங் பற்றி, வரலாற்றுரீதியான விஷயங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரைப் பற்றி வரலாற்று விவரங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
பகத்சிங் ஒரு தீவிரவாதி என்று சித்தரிக்கப்படும் போலி வரலாற்றிலிருந்து உண்மை தன்மையை எடுத்துரைக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை, தொடர்புக்கு : 94451 12675.