உலகம் முழுவதும் கொரோனாவால் இலட்சக் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இப்போதும் இரண்டாம் அலையால் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவோ மூச்சே விட முடியாமல் பிணக்காடாக பற்றி எரிகிறது, இந்த மரண ஓலத்திற்கு மத்தியிலும் இலாப வேட்டையாடும் ஏகபோக கும்பலும் உலக மேலாதிக்க வெறியும் மனித சமூகத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கிறது.
கொரோனா தொற்றிலிருந்து உலகைப் பாதுகாக்க வேண்டுமானால் ஊரடங்கு, புதிய கட்டுபாடுகள் போன்ற நடவடிக்கைகளைத் தாண்டி தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவதும், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதுமே முதன்மையானது என மருத்துவ வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தவிர மற்ற பெரும்பாலான பின் தங்கிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை தடுப்பூசி பற்றாக்குறைதான்.
படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !
இந்தியாவில் இதுவரை முதல் டோஸ் 10.8 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் 2.8 சதவீதம் பேருக்கும்தான் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் 60 சதவீதம் மக்களுக்குத் தடுப்பூசிப் போட்டாக வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், இந்தியாவில் மூன்றாவது அலை வரக் கூடிய சூழலில் இன்னும் கால் பகுதி மக்களுக்குக் கூட தடுப்பூசிப் போடப்படாத நிலைதான் இருக்கிறது. ஒருபுறம் இந்த நெருக்கடியான அவல நிலைக்கு தடுப்பூசி உற்பத்தியிலும், அதன் விநியோகத்திலும் மோடி அரசு கொண்டிருக்கும் கார்ப்பரேட் நலக்கொள்கையே முக்கியமான காரணம். மறுபுறம் உலகம் சந்தித்து வரும் இந்த நெருக்கடிக்கு தடுப்பூசி உற்பத்தியும், அதற்கான மூலப்பொருட்களும் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோகங்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தின் பிடியில் சிக்கி கொண்டுள்ளதே முதன்மையான காரணம் ஆகும்.
(உதாரணமாக அறிவுசார் சொத்துரிமையினால் இந்தியாவில் உள்ள “சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா” என்ற நிறுவனம் தான் காப்புரிமை பெற்ற ஜெர்மனியின் “அஸ்டஜெனேகா” நிறுவனத்திற்கு, தான் உற்பத்தி செய்த 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசிகளில் 5 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளைக் காப்புரிமை வாங்கும் போதும், மூலப்பொருட்கள் வாங்கும் போதும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளி நாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளது.)
ஏகபோகங்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளை சுரண்டுவதற்கும் இரண்டாம் உலகப்போருக்கு பின் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் வரிசையில் உருவாக்கப்பட்ட உலக வர்த்தக கழகத்தின் (WTO – world trade organization) மேற்பார்வையில் இருக்கும் 60 ஒப்பந்தங்களில், TRIPS (Trade-Related Aspects of intellectual property rights) ஒப்பந்தம் என்பது அறிவுசார் சொத்துரிமையின் வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள வர்த்தகம் தொடர்பான சில அம்சங்களையும் ,அறிவுசார் சொத்துரிமையையும் தற்காலிகமாகத் தளர்த்தக் கோரி இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் 2020 அக்டோபர் மாதம் உலக வர்த்தக அமைப்பிடம் முன்மொழிந்தது.
இந்த முன்மொழிவை ஆதரிக்க வேண்டாமென குடியரசு கட்சியின் 12 செனட் உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தை அப்போதே வலியுறுத்தினர். பைடனும் அன்றைக்கு அந்த முன்மொழிவு குறித்து வாய்திறக்கவில்லை.
ஆனால், தற்போது மே 5 அதனை ஆதரிப்பாதாக பைடன் கூறியதை தொடர்ந்து பத்திரிக்கைகள், போப் பிரான்ஸ் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்கள், இந்திய அரசு எனப் பலரும் பாரட்டுவதின் வாயிலாக பைடனுக்கு “மனித முகம்” தரிக்க முயற்சிக்கிறார்கள். அக்டோபர் 2020-இல் வாய் திறக்காத பைடன் 2021 மே ஆதரிப்பதாக சொல்வதற்கான காரணத்தையும் அதன் பின்னணியையும் அறிய வேண்டுமானால், அமெரிக்கவினுள் பைடனுக்கு எழுந்த அழுத்தம், சர்வதேச அளவில் சீனாவின் நகர்வுகள் ஆகியவற்றோடு சேர்த்துப் புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.
சீனா இந்த குறிப்பிட்ட காலங்களில் இந்தியா உட்பட வளர்ந்து வரும் 100 நாடுகளுக்கு தடுப்பூசி, நன்கொடை, மானியம் மற்றும் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் “சினோபார்ம்” தடுப்பு மருந்துதான் செர்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் 80 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் இந்தியாவிற்கு ஏராளமாக தொற்று நோய்க்கு எதிரானப் பொருட்களை சீனா வழங்கியது. (ஏப்ரல் மாதமே 5,000 வெண்டிலேட்டர், 21,569 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 21.48 மில்லியன் முகக்கவசம், 3,800 டன் மருந்துகள்) அமெரிக்கா இந்தியாவை நோக்கி தும்மினாலே, பக்கம் பக்கமாக ஆண்டவன் அருள் பாலித்ததாகவும், மோடியின் சாதனை என்றும் எழுதுகின்ற ஆளும் வர்க்க ஊடகங்கள், சீனாவின் ‘உதவிகள்’ தொடர்பான செய்திகளை பெரிய அளவில் எழுதுவதில்லை.
ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கையை ஆதரித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சரான வாங் யி (Wang Yi) என்பவரிடம் தொலைபேசியில் “சீனாவின் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி எனவும், நோய்த் தொற்றுக்கு எதிரான சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும், வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது” என்றும் கூறினார். சீனாவின் தரப்பிலிருந்து எந்த ஒரு பூகோள அரசியலின் நலனுக்காகவும் இந்த உதவிகள் செய்யப்படவில்லை முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் என்று பதிலளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த நகர்வுகளின் ’நல்லெண்ணம்’ நாம் அறிந்ததுதான்.
சீனாவின் நகர்வுகள் உலக அளவில் ஒரு ஆதரவை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் சட்டமியற்றும் செனட் உறுப்பினர்கள் 100 பேர் பைடனுக்கு இந்தியாவின் முன்மொழிவை ஆதரிக்குமாறு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இவர்களுக்கும் இந்தியா உட்பட பலரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகிறது. ஆனால், அந்தக் கடிதத்தை வாசித்தால் அந்த “நல்லெண்ணம் படைத்தோரின்” கவலை என்னவென்று உண்மையில் புரிந்துக் கொள்ள முடியும். “உலகின் சில பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி போட்டால் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க முடியாது” என்றும் “ட்ரெம்ப் நிர்வாகம் நமது நாட்டின் உலகலாவிய நற்பெயருக்கு ஏற்படுத்திய சேதத்தை மாற்றவும், அமெரிக்காவின் பொதுச் சுகாதார தலைமையை உலக அரங்கில் மீட்டெடுக்கவும் உங்கள் நிர்வாகத்துக்கு வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளனர்.
அதாவது, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தக்க வைக்கவும், மீட்டெடுப்பதும் தான் இவர்களின் பதற்றமாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளே மே 5 அன்று அமெரிக்கா, இந்தியாவின் முன்மொழிவை ஆதரிப்பதற்கான அவசியமாகவும், அழுத்தமாகவும் அமைந்த்திருக்கிறது.
ஏனென்றால், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு இந்திய நிகழ்வில் பேசும் போது, நாங்கள் இந்த ஆதரவை இந்தியாவின் நண்பராகவும் ஆசிய QUAD உறுப்பினராகவும் செய்கிறோம் என்றார். அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டாய் எங்கள் (பைடன்) நிர்வாகம் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதை உறுதியாக நம்புகிறது. ஆனால், கோவிட்-19 தடுப்பூசிக்கான அந்த பாதுகாப்புகளை தற்காலிகமாகத் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்றார். செனட் உறுப்பினர்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதி டாய் வரை எல்லோரும் அமெரிக்க மேலாதிக்கம் என்ற நிலையிலிருந்தே ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார்கள்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் இந்திய பத்திரிக்கைகள் மற்றும், சமூக வலைதளங்களில் ஏதோ ஐ.பி.ஆர் (IPR – Intellectual Property Rights) ‘தள்ளுபடி’ செய்யப்பட்டது போலப் புகழ்ந்து பேசப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு தற்காலிகத் தளர்வு இல்லை. ஐ.பி.ஆர்ரை எளிதாக்குவதற்கான நகர்வுகளுக்கு அமெரிக்கா அளித்துள்ள ஆதரவு மட்டும்தான். உலக வர்த்தக கழகம், இந்த 7 மாதங்களில் பத்து முறை கூடியும் இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்கப்படவில்லை.
இதுவரையிலும் 120 நாடுகளின் ஆதரவைப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இந்த முன்மொழிவு உலக வர்த்தக கழகத்தின் ஒப்புதலை அவ்வளவு எளிதாக பெற்று விட முடியாது. உலக வர்த்தகக் கழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஏகாதிபத்தியங்களின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.
இத்தகைய நடவடிக்கையெல்லாம் இதில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் யார் என்பதை அம்பலப் படுத்துகிறது என்பது தனிக்கதை. இதையெல்லாம் மீறி உலக வர்த்தக கழகம் இந்த முன்மொழிவின் மீது முடிவெடுத்து அமுல்படுத்த வேண்டுமானால் அதற்கு (உலக வர்த்தகக் கழகத்தில் விவாதிக்கப்ப்ட வேண்டிய நிகழ்ச்சி நிரலில் உள்ள பட்டியலின் படி) இரண்டாண்டுகள் ஆகுமென்று கூறப்படுகிறது.
ஆக, இந்தத் தற்காலிகத் தளர்வு குறித்த அனைத்து நகர்வுகளும் மாயையே. இந்த மாயை ஒருபோதும் உலகம் சந்தித்துள்ள தற்போதைய நெருக்கடியைக் கடக்க உதவப்போவதில்லை.
“அறிவுசார் சொத்துரிமையைத் தளர்த்துவதை” எதிர்க்கும் ஏகபோகங்கள் !
கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் ஏகபோகங்களாக உள்ள அமெரிக்காவின் பைசர், பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான இந்த தற்காலிகத் தளர்வை எதிர்க்கின்றனர். இங்கிலாந்தில் இருக்கக் கூடிய பெரும் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி பங்கு அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைந்து “கோவிட் 19 தடுப்பூசிகள் மீதான அறிவுசார் சொத்துரிமையைத் தளர்த்துவதை இங்கிலாந்து எதிர்ப்பது முற்றிலும் ஏற்கத்தக்கது” என்று கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த ஏகபோகங்கள் இதற்கு சொல்லக் கூடிய ‘நியாயவாதம்’, அறிவுசார் சொத்துரிமை நீக்கப்பட்டால் புதிய ஆராய்ச்சிகளுக்கான ஊக்கம் குறைந்து விடும் என்பதும், ஆராய்ச்சிக்காக ‘டன்’ கணக்கில் நாங்கள் பணத்தை செலவிட்டோம் என்பதும்தான். ஆராய்ச்சிகளுக்கான ஊக்கம் குறைந்து விடும் என்ற கதையே அறிவுசார் சொத்துரிமை ஏகபோகங்களின் இலாப நோக்கத்திற்குதான் அவை ஒரு போதும் சமூக நலணுக்கானதில்லை என்று அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
மேலும், ‘டன்’ கணக்கில் பணத்தை ஆராய்ச்சிக்காக செலவளித்துள்ளோம் என்ற பாதி பொய்யையும் மீதி உன்மையையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஏகபோக நிறுவனங்களின் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாட்டின் அரசும், அந்நாட்டு நிறுவனங்களும் உதவியாக பெரும் தொகையை அளித்துள்ளனர்.
உதராணமாக, ஐ-மேக் நிறுவனத்தின் நிறுவனரான தாஹிர் அமீன், எம்.ஆர்.என்.சி தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்தியதில் மக்களின் பங்கு (பொது டாலர்களின் public dollar’s) அதிகம் உள்ளது என்பது ஆவணப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் பயோஎன்டெக் நிறுவனம் அரை பில்லியன் யூரோக்களை ஜெர்மனிடம் இருந்தும், ஆக்ஸ்போர்ட் இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்தும் ஆராய்ச்சிக்காக நிதி பெற்றுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 2018-ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 4 பில்லியன் டாலர்களில் மருந்து நிறுவனங்கள் செய்த முதலீடு 17 சதவீதம் (650 மில்லியன்) மட்டும்தான், என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி உலகளவில் கடைப்பிடிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தடுப்பூசி கொள்கைகள் “ஆபத்தை சமூகமயமாக்கி லாபத்தை தனியார்மயமாக்கும்” நடவடிக்கையே என்று தாஹீர் அமீன் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்தப் பேட்டியில் கூறுகிறார். ஆகவே, இந்த ஏகபோக நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக முதலீடு செய்வதை காட்டிலும், வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத்தான் அதிகம் செலவிடுகின்றனர்.
அதற்கேற்றவாறு தடுப்பூசி உற்பத்தியில் இவர்களின் இலாபம் மலையளவு பெருக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 3.5 பில்லியன் டாலர்கள் இலாபம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் மாடர்னாவிற்கான தடுப்பூசி வருவாய் 18.4 பில்லியன் டாலர்கள் வருமென எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்கள். இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனாவாலா “இந்தியாவில் இலாபம் கிடைக்கிறது, ஆனால் சூப்பர் இலாபத்தை ஈட்டவில்லை” என்கிறார்.
ஆகவே இந்த அறிவுசார் சொத்துரிமை மனித உயிர்களைக் குடித்து ஏகபோகங்களின் இலாபத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. இப்படி தடுப்பூசி உற்பத்தியை அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் ஏகபோகங்கள் கட்டுப்படுத்துவதால்தான் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையினாலும், தடுப்பூசியின் அதிகப்படியான விலையினாலும் பேரழிவுகளை சந்திக்கின்றன.
தடுப்பூசி மற்றும் மூலப்பொருட்களை முடக்கும் அமெரிக்கா !
அறிவுசார் சொத்துரிமை தற்காலிகத் தளர்வு செய்வதைத் தாண்டி தடுப்பூசி உற்பத்தியில் ஏற்படும் நெருக்கடிக்கு தற்போதைய இன்னொரு முக்கியமன தடையாக இருப்பது தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்துள்ளது தான் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முதற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் ஆகியவை அமெரிக்காவைச் சாடுகின்றனர்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் உட்பட உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மார்ச் மாத இறுதியில் வினியோக சங்கிலி சிக்கலை பற்றி விவாதிக்க கூடினார்கள். அதில் மூலப் பொருட்களின் பற்றாக்குறையை பற்றியும், அமெரிக்கா மூலப் பொருட்களை பதுக்குவதாகவும் விவாதித்தனர். இதில் சீரம் நிறுவனமும் உற்பத்தியை அதிகரிப்பதில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1954-இல் உருவாக்கப்பட்ட “பாதுகாப்பு உற்பத்தி சட்டம்” என்பதைப் பயன்படுத்தி தடுப்பூசிக்கான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை தடைசெய்தது ஒரு பக்கம் என்றால், உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் வினியோகத்தையும் நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா. இதற்கு பைடன் நிர்வாகம் சொல்லும் காரணம் அமெரிக்காவை முதலில் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
ஆனால் உண்மை அமெரிக்காவைப் பாதுகாப்பதை தாண்டி அதன் மேலாதிக்க வெறிதான் முன்னிலையில் இருக்கிறது. அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் “நாங்கள் தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 40 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளின் மேல் உட்கார்ந்திருக்கிறோம் என்றும் இது நாங்கள் பயன்படுத்தாத கையிருப்பு” என்றும் கூறுகிறார்.
டியூப் குளோபல் ஹெல்த் புதுமை மையத்தின் அறிக்கையின்படி ஜூலை மாதத்திற்குள் அமெரிக்கா 300 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி அளவுகளை அடைந்து விடுவது மட்டுமில்லாமல் ஜூலை 5-க்குள் தனது நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமென இலக்கு வைத்துள்ளது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் பல நாடுகள் பெரும்பான்மையான மக்களுக்குத் தடுப்பூசி போட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். என்கிறது இந்த அறிக்கை.
இந்தியாவில் இறப்பு எண்ணிக்கையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்த சூழலில் அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கர்கள், அமெரிக்க வர்த்தக சபை மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் ஆகியோர் இந்தியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களையும், தடுப்பூசியையும், அதற்கான மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யுமாறு அழுத்தம் கொடுத்தனர்.
குறிப்பாக முன்னாள் அமெரிக்க உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் “இந்தியா எப்போதும் தேவைப்படும் மற்றவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது, இப்போது இந்தியாவுக்கு உதவ வேண்டிய நேரம்” என ட்வீட் செய்துள்ளார். இத்தகைய அழுத்தத்திற்கு பின்தான் ஏப்ரல் 25 அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் விரைவாக இந்தியாவிற்கு கூடுதல் ஆதரவை அனுப்புவதாக தெரிவித்தார்,
மேலும் மே 5-ஆம் தேதியன்று வெண்டிலேட்டரும் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொடக்க நிலை ஆதரவை அடைவதற்கே இலட்சக்கணக்கான உயிர்களை இழக்க வேண்டியுள்ளது. ஆனால், அதுவும் உறுதியானதோ, நிரந்தரமோ கிடையாது.
படிக்க :
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
♦ கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்
ஏற்றுமதியை தடை செய்வது, வர்த்தகப் போர்களை நடத்துவது, காப்புவாதத்தில் ஈடுபடுவது, பொருளாதார தடைகளை விதிப்பது என தனது மேலாதிக்க வெறிக்காக இந்த பெருந்தொற்றுச் சூழலிலும் எரிக்கப்படும் மனித பிணங்களுக்கு இடையில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.
ஏகாதிபத்திய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ள எந்தவொரு நாடும் தன்னிறைவு அடைந்த சுயசார்பு நாடாக இருக்க முடியாதென்பது மட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடாக மாற்றப்பட்ட பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் இழக்கும் ஒவ்வொரு உயிரும் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க மற்றும் இலாப வெறியினால் பறிக்கப்படுபவைதான்.
![]()
பூபாலன்
உதவிய கட்டுரைகள் :
1.https://countercurrents.org/2021/05/covid-19-vaccines-politics-and-economics-of-the-ipr-waiver-ploy/
2.https://countercurrents.org/2021/05/political-economy-of-modi-governments-vaccination-policy/
3.https://m.timesofindia.com/home/sunday-times/look-at-the-number-of-pharma-covillionaires-motto-cant-be-socialise-risk-privatise-profit-says-i-mak-founder-tahir-amin/articleshow/82483061.cms
4.https://m.timesofindia.com/business/international-business/white-house-considering-intellectual-property-waiver-for-covid-19-vaccines/articleshow/82284519.cms|
5.https://www.cnbc.com/2021/02/02/covid-vaccine-pfizer-expects-about-15-billion-in-2021-sales-from-shots.html
6.https://science.thewire.in/health/the-least-the-centre-can-do-for-people-now-is-provide-free-covid-vaccines/
7.https://countercurrents.org/2021/04/vaccine-imperialism-now-led-by-biden-the-democrat-and-vaccine-compradors-now-led-by-modi-of-swadeshi/
8.https://www.google.com/amp/s/m.kalaignarseithigal.com/article/chinas-envoy-announces-rollout-of-covid-19-support-for-india-through-red-cross/2f97e422-2c8c-43c8-b6fa-b5eabcf995e4/amp
9.https://www.bbc.com/tamil/global-57036338

























அதுபோலவே, தடுப்பூசிப் போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிரத் தொற்று நிலையை அடைந்து மரணமடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது; நம்பவும் கூடாது.
இவர்களுக்கு இந்த வேலை நிரந்தரம் கிடையாது. ஒப்பந்தம் முறையில்தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இவர்களின் அதிகபட்ச ஒப்பந்த காலம் 8 ஆண்டுகள்தான். இடையில் தன் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டாலோ அல்லது தன் உரிமையை பற்றிப் பேசினாலோ அறிவிப்பு ஏதும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கி எறியப் படுவார்கள்.
“கடைகளுக்குக் குப்பைகள் எடுக்கச் சென்றால் கடை அருகேக் கூட விடுவதில்லை கொஞ்சம் தொலைவில் குப்பைகளைக் கொட்டி எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். வீடுகளில் குப்பை எடுக்கச் சென்றால் குப்பைத் தொட்டியில் கூட குப்பைகளைப் போட மாட்டார்கள். மேலும், குப்பைகளை யாரும் பிரித்து வைக்க மாட்டார்கள் நாங்கள் அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரிக்க வேண்டும். நீண்ட நாட்களான குப்பைகளில் புழு வரத் தொடங்கி விடும். அதையும் வெறும் கைகளில்தான் அள்ளுகிறோம். எங்களுக்கு கை கழுவக் கூட தண்ணீர் தர மாட்டார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாலே ஏதே கீழ் தரமான மனிதரைப் போல அருவருப்பாக பார்ப்பார்கள்” என்றெல்லாம் தங்களின் வாழ்க்கைத் துயரை விவரிக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
சாமானிய மக்களிடம் நிபுணர் கமிட்டி கிடையாது. கொள்ளை நோய் ஆரூட வடிவங்கள் கிடையாது. ஆனாலும் தவறுக்கு அவர்களைப் பொறுப்பேற்க சொல்கிறோம். ஆனால், தேர்தல் கமிஷன் போன்ற அதிகாரம் மிகுந்த ஒரு அமைப்பு எட்டுக் கட்டத் தேர்தலை அறிவிக்கிறது. உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?












கோடி ஜப்கள் தேவைப்படும் என்பதை அந்த நிபுணர்கள் கணக்கிட்டார்களா? இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தளவு டோஸ் மருந்துகளைத் தயாரிக்குமளவு இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் போதுமானதாக இல்லை எனும் நிலையில் அதை மிக விரைவாக உயர்த்த வேண்டும் என்பதை உணர்ந்தார்களா? அப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்திருந்தால் அதை – இது சாதாரண கணக்குதான்! விண்கோள் விஞ்ஞானமல்ல! – முறையாக அரசாங்கத்திற்கு ஆலோசனை சொன்னார்களா?
இ. மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசிகளை மக்களுக்குக் கொடுக்கும் போது மாநில அரசுகள் மட்டும் ஏன் கட்டணம் வாங்க வேண்டும்? எல்லோரும் இந்த நாட்டு மக்கள்தானே? இதில் என்ன வேறுபாடு இருக்கிறது?
செயல்திறன் பற்றி எந்த சான்றுகளும் இல்லாமல். அதோடு, அதன் பக்கவிளைவுகளும் அற்பானவை அல்ல. நீங்களே அறிவியல் அறிஞர்களாகவும் இருப்பதால் விஜயராகவன் பால் பார்கவா DCGI முடிவு பற்றி அதனிடம் விவாதித்தீர்களா? அவற்றின் பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து அங்கீகரிப்பதற்கு எதிராக இந்த மருந்துகள் பற்றிய நிபுணர்களின் நியாயமான சந்தேகத்தின் பலனைப் பொதுக் களத்தில் அவர்கள் எப்படி கட்டம் கட்டுகிறார்கள்?
வென்றுவிட்டதாக” ஒரு தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறார்களே? மார்ச் 7 அன்று மருத்துவர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் “இந்தியாவில் கோவிட்-19 தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம்” என்கிறாரே? இதைப் பற்றியெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவையெல்லாம் நடப்புக்கு எதிரானது மற்றும் நியாயமற்றக் கருத்துகள் என்று அவர்கள் அரசாங்கத்திடம் சொல்லி எச்சரித்திருக்கிறார்களா? அல்லது தற்போதைக்கு மௌனமாக இருப்பதே நமக்கு மிகுந்த நல்லது என்று இருந்துவிட்டார்களா?
இந்தியாவில் வேறு எங்கும் ஏழைகள் இல்லையா, பஞ்சம-சூத்திரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அங்கே, அந்தப் பிரிவுகளையும் தாண்டி, அவர்கள் வளரக் கூடிய அரசியல் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது. அதனால்தான் பஞ்சாபும் தமிழ்நாடும் ஆந்திரமும் குஜராத்தும் கேரளமும் இமாச்சலப் பிரதேசமும் கர்நாடகமும் ஒரிசாவும் சமூக வளர்ச்சியில் போட்டிப் போட்டு வளர்கின்றன.


கொரோனா ஊரடங்கினால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகள் மூடப்பட்டன. பல்கலைக் கழகத்தின் மெரினா விடுதியில் தங்கியிருந்த ஆய்வு மாணவர்களும் முதுநிலை மாணவர்களும் தங்களுடைய ஊருக்குச் சென்று விட்டனர். மாணவர்களிடம் இருந்து ஊரடங்கு காலத்திற்கான(மார்ச்-நவம்பர் 2020) விடுதி கட்டணம், விடுதி ஊழியர்கள் மற்றும் மெஸ் ஊழியர்களுக்கான சம்பளம்(மெஸ் இயங்கவில்லை) சேர்த்து எட்டு மாதத்திற்கானக் கட்டணத்தைப் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டச் சொல்லியது.
இக்கமிட்டியோ பாலியல் புகாரை நடுநிலையோடு விசாரிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட மாணவியை harss செய்வது போல நடந்துக் கொள்கிறது. இவ்விசயங்கள் பத்திரிக்கைகளில் கசிய ஆரம்பிக்கின்றன. உடனே பல்கலைக் கழக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற போர்வையில் போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்கிறது.
பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு பாதிக்கப்பட்ட மாணவியிடம் செய்த விசாரணையின் ஒலிப்பதிவை யாரோருவர் கேட்டாலும் மாணவியின் முடிவுக்குத்தான் வரமுடியும். மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனநிலையிலிருந்தே பாலியல் குற்றச்சாட்டு விசாரனைக்குழு மாணவியிடம் விசாரணை செய்துள்ளது. இக்குழுவைப் பொருத்தவரை மாணவி மீதான தாக்குதல் திட்டமிட்டு நடந்தது கிடையாது.
இதில் இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று மாணவர்களின் போராட்டங்களுக்கு பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது மற்றொன்று பேரா.சௌந்திரராஜன் உள்ளிட்ட மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் திட்டமிட்டே பொய்யானக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள் என்பது.
மேலும், இக்குழுப் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தலித் என்பதை அப்பட்டமாக மறைத்து விட்டது. காரணம் அது ஒன்று மட்டுமே சௌந்திரராஜனை காப்பாற்றும் கடைசி ஆயுதம். இதற்கு குழுவில் உள்ள தலித் இன்டெலெக்சுவல் கலெக்ட்டிவின் Mr.லக்ஷ்மணன் கூறுவது. அம்மாணவரின் சான்றிதழ் படி அவர் தலித் இல்லை.