“அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் மாநாடு, கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடலூரில் 26.08.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் கருத்தரங்கம், ம.க.இ.க கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் து. பாலு அவர்கள் தலைமைதாங்கினார். அவர் பேசுகையில்:
“கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழகத்தில் மக்கள் அதிகாரம் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது ஏனென்றால், இது அதானி – அம்பானி போன்ற முதலாளிகள் தொடர்பான பிரச்சினை எனவே கூட்டத்திற்கு அனுமதி இல்லை.
இந்தியாவில் உள்ள 58 மண்டலங்களில் மிகவும் முக்கியமான இடம் தமிழகம். மரக்காணம் முதல் கடலூர் வரை ஒரு மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேதாரண்யம் வரை ஒரு மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் வேளாங்கண்ணி வரை ஒரு மண்டலம் இதில் மிகவும் முக்கியமானது கடலூர் பகுதி.
இப்படி ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, அணுக்கழிவு, கோயம்புத்தூர் பகுதியில் கெயில் குழாய் பதிப்பு, தேனியில் நியூட்ரினோ என பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவருகிறார்கள். 10 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை நாசமாக்குவது போல் தமிழகத்தை நாசமாக்க பார்க்கிறார்கள்.
இந்த நாசகார செயல்களை மறைக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம் டாஸ்மாக், சாதிக்கலவரம், மதக்கலவரம் போன்றவை. எனவே இதையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். மக்கள் அதிகாரம் மட்டும் போராடி இதை முறியடிக்க முடியாது நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என்று உரையாற்றினார்.
படிக்க :
♦ டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !
இதைத்தொடர்ந்து சிதம்பரம், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு இளங்கிரன் பேசுகையில்: “கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தெரியாமல் உள்ளது எனவே ஒவ்வொரு இளைஞரும் கிராமத்திலுள்ள பத்து விவசாயிகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறார். இவர்களை நம்பினால் நீட் தேர்வில் என்ன நடந்ததோ, அதேதான் ஹைட்ரோ கார்பன் திட்டதிலும் நடக்கும். மத்திய அரசு தமிழகத்தை சுடுகாடாக நினைக்கிறது, ஆகையால் இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து திரு இளங்கோவன் அவர்கள் ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, ஆகியவற்றை அம்பலப்படுத்தும் வகையில் கவிதை வாசித்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அவருக்கு அடுத்தபடியாக ஹைட்ரோகார்பன் – சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு, தோழர் கு. பாலசுப்பிரமணியன் அவரது உரையில்: “நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, மக்களை பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் இன்று விவசாயம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குடிநீர் கூட இந்த அரசால் வழங்க முடியவில்லை தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படவில்லை; ஆனால் அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது.
இன்று விவசாயிகள் பெருமளவு தங்களுடைய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராடி வருகிறார்கள் ஆனால் அதை செய்ய மறுக்கும் இந்த அரசு அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கடனை பெருமளவு தள்ளுபடி செய்கிறது.
ஆக அரசு என்பது மக்கள் நலன் இல்லாமல் முதலாளிகள் நலன் என மாறிவிட்டது. எனவே இந்த பிரச்சாரத்தை கிராமந்தோறும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் இதை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்” என்று கூறி நிறைவு செய்தார்.
இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் திரு அய்யநாதன் உரையாற்றும் பொழுது; “தமிழகத்தில் குறிப்பாக காவிரிப்படுகையில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு போராட்டம், கூட்டம் நடத்த இதற்கு முன் அனுமதி இருந்தது. ஆனால் எப்பொழுது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக காவிரி படுகையை கபளீகரம் செய்யத் துணிந்தார்களோ; எட்டு வழி சாலைக்காக ஐந்து மலைகளை சிதைக்க துணிந்தார்களோ; மக்களை வாழ வழி இல்லாத நிலையை உருவாக்க அணுக் கழிவுகளை கொட்ட துணிந்தார்களோ; அப்போதிருந்து அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அடக்குமுறை.
வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மண் வளங்களையும், கனிம வளங்களையும், மக்களையும் சுரண்டுகிறார்கள். இதனை எதிர்த்து கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே, இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
உலகம் முழுவதும் தொழில்நுட்ப மாற்றத்தினால் மின்கலங்களுக்கும் மாறிக் கொண்டிருக்கும் வேளையில்; உலகம் முழுவதும் கச்சாப்பொருள் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்; ஹைட்ரோ கார்பன் யாருக்காக எடுத்து எங்கே கொடுக்கப் போகிறீர்கள்?”
மேலும் மக்கள் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, மக்களின் வாங்கும் சக்தி குறைதல் என்று அடுக்கடுக்கான பிரச்சினை குறித்த கேள்விகளை முன் வைத்து எழுச்சிகரமாக உரையாற்றினார்.
படிக்க :
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் அவரது சிறப்புரையில்: “தமிழகத்தில் அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழி சாலை, போன்ற திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் இந்த வளர்ச்சி எங்களுக்கு தேவையில்லை என்று எதிர்க்கிறார்கள், போராடுகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் கிரிமினல் வழக்கு தொடருவோம் என்கிறார்கள். ஆனால் மக்கள் ஹைட்ரோகார்பன் வேண்டாமென தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினால் போலீசு மக்கள் மீது வழக்கு போடுகிறது. எனில் தமிழகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் ஆட்சியாளர்களும், போலீசும் செய்கிறது. தமிழகம் முழுவதும் மக்கள் இந்த நாசகார திட்டங்களுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி போராடி வருகிறார்கள். ஆனால் இது போதுமானது கிடையாது.
நாம் இப்போது தனித்தனி ஆயுதமாக இருக்கிறோம், அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். நாம் மிகப்பெரிய சக்தியை மாற வேண்டும், மாபெரும் சக்தியாக எழுந்து நாசகார திட்டங்களை விரட்டி அடிப்போம்.” என்று கூறி நிறைவு செய்தார்.
பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசியாக மக்கள் அதிகாரம் கடலூர் வட்டார குழு தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார். அத்துடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் – இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 81108 15963
இதையும் பாருங்க :
எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? – பாடல் வீடியோ







அடுத்தவர் இரண்டு நிறுவனங்களை நடத்தியவர், உயர் மத்தியதர வாழ்க்கை வாழ்ந்தவர். கடந்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து இரு நிறுவனங்களையும் மூடிவிட்டார். கம்பெனி விற்பனைக்கு தயாராக இருக்கிறது. வேறெதுவும் விற்பதற்கு பாக்கியில்லை. வீட்டைக் காலி செய்துவிட்டு போயிருக்கிறார்கள். பள்ளிக் கட்டணத்துக்கு வழியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக தகவல். இங்கேயும் மேலதிக தகவல்கள் நம்மை அச்சுறுத்தவல்லவையே.
உங்கள் வருமானத்துக்கான கதவுகள் மூடப்படுகின்றன. பொருளாதாரத்தேக்கம் எல்லா தரப்பு மக்களின் வருமானத்தையும் பறிக்கும் அல்லது குறைக்கும். அது இன்னும் மோசமான தேக்கத்தை நோக்கி இட்டுச்செல்லும். அது வாங்கும் திறனை சிதைத்து இன்னும் அதிகமாக பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும். 2009 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தின்போது பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனை 15% சம்பள வெட்டை கொண்டுவந்தது. சீக்குகளுக்கு பஞ்சமில்லாத ஊரின் ஆஸ்பத்திரியே சம்பளத்தில் கைவைக்கும் எனில் ஏனைய துறைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
இன்னொரு முக்கியமான பிரச்சினை, தாராளமயம் உருவாக்கியிருக்கும் பொருள்சார் மதிப்பீடுகள். சற்றேறக்குறைய ஒரு தலைமுறை மனிதர்கள் எல்லாவற்றையும் பொருள் சார்ந்து மதிப்பிடக் கற்றுகொண்டிருக்கிறார்கள். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கவலை, அந்தஸ்து, லட்சியம், வாழ்வின் அர்த்தம் என எல்லாமே பொருள் சார்ந்ததாகவே அவர்களுக்கு இருக்கிறது. மனநல ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ளும் குடும்ப பிரச்சினை சம்பவங்கள் எல்லாமே பெருமளவு இந்த மதிப்பீட்டின் விளைவாக உருவானவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் வருவாய் ஆதாரங்கள் நாசமாகி சேமிப்புக்கள் பாதுகாப்பற்றதாகும்போது இந்த மதிப்பீட்டின் வழியே உலகைக் காண பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தம் வாழ்வே அர்த்தம்ற்றுப்போனதாக உணரக்கூடும். மனரீதியான பிரச்சினைகளையும் உறவுச் சிக்கல்களையும் இழுத்துவர அது ஒன்றே போதுமானது. இது மிகையான கற்பனை எனில் நாம் இழக்க ஏதுமில்லை, ஒருவேளை இது பகுதியளவு உண்மை என்றாலும் அதன் விளைவுகளை சமாளிக்கும் வழிகள் நம்மிடையே இல்லை.

அதிமுக-வை ஒரு திராவிட இயக்கம் என்றே எடுத்துக் கொள்ள முடியாது. அம்மா காலத்தில் மண் சோறு சாப்பிட்டு அலகு குத்தி காவடியாட்டம் எடுத்தம் கட்சி அது. அம்மா காலத்திலும் சரி அடிமைகள் எடப்பாடி, ஓபிஎஸ் காலத்திலும் சரி அவர்கள் இந்துத்துவ பாஜக-வின் இயல்பான இளைய பங்காளியாக இருக்கின்றனர்.
பெரியார் பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்த புராண, இதிகாச புரட்டுக்களை அம்பலப்படுத்துவது அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார். இன்று பாஜக – ஆர்.எஸ்.எஸ் அணி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. அவர்கள் தாம்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதியாக மக்களிடையே பேசுகிறார்கள். உண்மையில் அவர்கள் பார்ப்பன மற்றும் சில ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கு’ அவர்கள் பிரதிநிதி இல்லை என்பதை சமூகநீதி பேசும் கட்சிகள் உரத்துப் பேசுவதில்லை. அவ்வகையில் அவர்கள் இந்து மதத்தை விமர்சித்தால் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள்.


அவர் பேசுகையில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் இருந்தும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்த இடங்களில் நிரப்பாமல் இருக்கக் காரணம் தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான் என தனது பேச்சில் அம்பலப்படுத்தினார். அத்துடன் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இது நான்காம் பாடநூலில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வு. 1986-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி திட்டத்தினால் ஒட்டுமொத்த பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. வரலாறு பாடத்திலும் வட்டார வரலாறு, இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகவியல் குறித்த புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பாடத்திட்டத்தை தயாரித்து வெளியிடுவதற்கு கடுமையான பொருளாதார பிரச்சினைகளையும் சந்தித்தோம். ஒட்டுமொத்த மாநிலத்திலுமுள்ள இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மலிவு விலையில் நூல்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் 96 பக்கங்களாக அது குறைக்கப்பட்டது. ஆனால் நான்காம் வகுப்பு பாடத்திட்டத்தினை பார்த்தால் 96 பக்கங்களில் 80 பக்கங்கள் சிவாஜி பற்றியே பேசுவதை நாங்கள் கண்டோம். நாங்கள் விரும்பிய வேறு எதையும் சேர்ப்பதற்கான வாய்ப்பு சிறிதளவே இருந்தது.



இது பட்டறைத் தொழில், அதாவது உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு கைகளால் செய்யப்படும் உற்பத்தி யுகத்தின் இறுதிக்கட்டம். முன்னர் பயன்படுத்திய பூர்வீகமான கருவிகளையே உபயோகித்த போதிலும் உழைப்புப் பிரிவினையும் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு உதவி செய்தன. இயந்திரத் தொழில் அப்பொழுதுதான் 
பள்ளர்கள் தமிழகத்தை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள், பின்னாளில் ஆளப்படும் பரம்பரையாக வீழ்ந்து போனார்கள் என்று சிலர் முன்வைக்கிறார்கள். இதை பள்ளர் பிரிவைச் சேர்ந்த சில அறிஞர்கள் மட்டுமல்ல ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோரும் தத்தமது சாதிகள் ஆண்ட பரம்பரை என்றே கூறுகின்றனர். ஆண்ட பரம்பரை வரலாற்றின் படி ஒரு அரசன் அவனது வாரிசுகள் மட்டுமே ஆண்டிருக்க முடியும். மற்றவர்கள் குடிமக்களாகவோ அடிமைகளாகவோ மட்டுமே வாழ்ந்திருக்க முடியும். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அனைவரும் ஆண்டார்கள் என்று பேசினால் ஆள்வதற்கு இந்த ஒரு பூமி போதாது.







இதிலே எனக்கு பிடித்த அம்சம் ஒன்று இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கிக் கடைகளில் குறிபார்த்து சுட்டு வாங்குவதற்கு வசதிகள் இருக்கும். இங்கே அப்படி ஒன்றும் target வசதிகள் இல்லை. இவர்கள் துப்பாக்கி தேர்வு செய்வது வித்தியாசமாக இருந்தது.
நண்பருக்கு ஒர் ஆசை பிறந்தது. துப்பாக்கியால் சுடும்போது எப்படி இருக்கும். ஒரு டொலர் காசு கொடுத்தால் ஏகே47ல் ஒருமுறை சுட்டுப் பார்க்கலாம். நண்பர் ஏகே47ஐ எடுத்து ஆகாயத்தை நோக்கி ஒருமுறை குருட்டாம் போக்கில் சுட்டார். அந்த குண்டு ஒரு டொலர் காசு போகும் தூரத்துக்குப் போனது. நண்பரின் முகத்தில் ஒரு காது வரைக்கும் நீண்ட சிரிப்பு தோன்றியது. இவரைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இவர் எதை வாங்கினாலும் இரண்டு வாங்குவார், எதைச் செய்தாலும் இரண்டு தடவை செய்வார். இன்னொரு டொலர் கொடுத்து மறுமுறையும் சுட்டு தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.
திரும்பும்போது ஓர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. எங்கள் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் ஒரு டயர் வெடித்தது. அதை மாற்றிக்கொண்டு புறப்பட்டோம். சொல்லி வைத்தாற் போல் இரண்டு நிமிடமாகவில்லை, இன்னொரு டயரும் வெடித்தது. நாங்கள் இன்னும் போக வேண்டிய தூரம் 60 மைல் இருந்தது. பழங்குடியினர் பிரதேசத்தை தாண்டவில்லை. இருட்டிக்கொண்டு வேறு வந்தது. ஒருவித சட்டங்களும் செல்லாத இடத்தில் மாட்டிவிட்டோம்.








சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார். வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.
மாறாக இவையன்றி சில நண்பர்களது குழாம் அத்தகைய மன்றங்களை நடத்தும் பட்சத்தில் சிறிது காலத்திற்கு பிறகு நண்பர்களது கருத்து வேறுபாட்டாலோ புதியவர்கள் சேராமல் விரிவடையாமலோ மன்றம் நின்று போகும். மேலும் இம்மன்றங்களில் முடிவுகளை அல்லது செயல்பாட்டை மன்றங்களின் புரவலர்களாக இருக்கும் வசதிவாய்ந்த தனிநபர்களை மையமாக வைத்து எடுக்கும் போது சிக்கல் வரலாம். அப்படி எடுக்காமல் மன்றத்தின் உறுப்பினர்களே கூடிப் பேசி எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் வருவது குறையும். அத்தகைய கூட்டுத்துவ முறை ஏற்படும்போது பல்வேறு வழிகளில் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் குறிப்பிடும் குறிப்பான பிரச்சினை எதுவென்று தெரியவில்லை.
வலது கம்யூனிசக் கட்சி நேருவை மட்டுமல்ல இந்திராவையும் அவசரநிலை நெருக்கடியையும் ஆதரிக்கும் அளவு சீரழிந்து போனது. வலதுகளிடம் இருந்து சித்தாந்த ரீதியாக பிளவுற்றதாக கூறினாலும் நெருக்கடி நிலைக்கு பிறகு இடது கம்யூனிசக் கட்சியும் சிலமுறை காங்கிரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. கூடவே குருசேவின் திருத்தல் வாதத்தையும், சீனாவில் மாவோவின் தலைமைக்கு பின்னர் தலைமை ஏற்ற டெங்சியோபிங்கின் நவீன திருத்தல்வாதத்தையும் ஏற்றுக் கொண்டது. இவர்களும் பாராளுமன்ற பாதையிலேயே சோசலிசம் கொண்டு வரலாம் என்று ஆரம்பித்து இன்று கேரளாவைத் தவிர எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.


இந்நிலையில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாக அறியப்பட்டுள்ள புனல், காற்று மற்றும் சூரியசக்தி ஆகியவை சூழலுக்கு பாதிப்பேற்படுத்தாத மாற்று ஏற்பாடுகளாக இருக்கும். இதில் அரசு கவனம் செலுத்துவதும் ஏற்புடையது தான். ஆனால், இதற்காக நிறுவப்படும் பெரும் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களைத் தங்களது வாழிடங்களில் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை விரட்டியடித்துவிட்டு நிறுவப்படும் இதுபோன்ற திட்டங்கள் அடிப்படையில் யாருக்கானது என்கிற கேள்வியை எழுப்பும்.