சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கி இஸ்தான்புல் நகரத்திலுள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
சவுதி அரச குடும்பத்தின் அளவற்ற அதிகாரம் குறித்து தொடர்ந்து எழுதி வந்ததன் காரணமாக ஆத்திரமுற்ற இளவரசர் முகமது பின் சல்மானின் ஏற்பாட்டிலேதான் ஜமால் கசோகியின் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர், ஜமால் கஷோகி.
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் தனது பாஸ்போர்டை புதுப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 2-ஆம் தேதி சென்றார் ஜமால் கசோகி. உள்ளே போனவர் திரும்பி வரவில்லை. தூதரகத்திலே வைத்து சவுதி உளவுப் போலீசாரால் கொடூர சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சி.சி.டி.வி. காட்சிகள், தூதரக அதிகாரிகளுக்கும் சவுதி உளவுப் போலீசாருக்குமிடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகளை துருக்கி அரசும் ஊடகவியலாளர்களும் அம்பலப்படுத்திய பிறகே இவ்வுண்மை தெரிய வந்திருக்கிறது. வேறுவழியின்றி தற்போது உளவு போலீசு அதிகாரிகளை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது, சவுதி அரசு.
ஜமால் கசோகியின் கொடூர கொலை சதிக்குப் பின் பொதிந்துள்ள பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன இக்கேலிச்சித்திரங்கள்.
“இங்கு ஜமால் கஷோகி இல்லை.”
ஆண்டோனியோ,ரோட்ரிகூயஸ், மெக்சிகோ.
உண்மைகளை எழுதினால் கிடைக்கும் பலன்
நஜி பெனாஜி, காசாப்ளாங்கா, மொராக்கோ.
அமெரிக்க வாளால் துண்டு துண்டாக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்
மரியன் கமென்ஸ்கி, வியன்னா, ஆஸ்திரியா.
வெறியாட்டம் போடும் கூட்டணி
மரியன் கமென்ஸ்கி, வியன்னா, ஆஸ்திரியா.
இரத்தக் கரையை பணத்தால் மறைக்கும் சவுதி இளவரசன்
ஒசாமா ஹஜ்ஜாஜ், அம்ம, ஜோர்டன்.
கஷோகியை கொன்ற நீதி இதுதான்.
நஜி பெனாஜி, காசாப்ளாங்கா, மொராக்கோ.
கொலைகாரனே கொலையை விசாரிக்கும் அவலம் சவுதியில்…
எமாட் ஹஜ்ஜாஜ், ஜோர்டன்.
கொல்லப்பட்ட பிறகும் அதிகாரத்தின் கழுத்தை நெறிக்கும் ஜமால் கஷோகி.
எமாட் ஹஜ்ஜாஜ், ஜோர்டன்.
என் தகப்பா .. நீதான்யா இந்த உலகத்துலயே நான் அப்பாவிங்கிறது ஒத்துக்கிட்ட ஒரே ஆளு !
கலவரம் நிறைந்த அந்த இரவுக்குப் பிறகு, சுமார் ஒரு மாத காலம் கழித்து போலீஸார் வந்தே விட்டார்கள். அன்று நிகலாய் பாவெலையும் அந்திரேயையும் கண்டு பேசுவதற்காக வந்திருந்தான். அவர்கள் மூவரும் தங்களது பத்திரிகை விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நடு இரவு. மாக்சிம் கார்க்கி ஏற்கெனவே படுக்கச் சென்றுவிட்ட தாய் தூக்கக் கலக்கத்தில் சொக்கியவாறே அவர்களது அமைதியும் ஆர்வமும் நிறைந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அந்திரேய் ஜாக்கிரதையாக தனக்குப் பின்னால் கதவைத் தாளிட்டுவிட்டு சமையலறையைக் கடந்து சென்றான். அந்த சமயம் முற்றத்தில் ஏதோ தகரவாளி உருளும் சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து கதவும் படாரென்ற திறக்கப்பட்டது. அந்திரேய் சமையலறைக்குள் தாவி வந்து சேர்ந்தான்.
“அது பூட்ஸ் லாடச் சத்தம்தான்!” என்று இரகசியமாகச் சொன்னான்.
நடுங்கும் கைகளால் தன் ஆடையைச் சரிசெய்தபடி படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தாள் தாய். ஆனால் பாவெல் வாசல் நடைக்கு வந்து அமைதியாகச் சொன்னான்:
“நீங்கள் போய்ப் படுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லை!” வெளிவாசலருகில் ஏதோ சலசலப்புக் கேட்டது. பாவெல் வாசலுக்கு வந்து கதவைத் திறந்து, சத்தமிட்டான்:
”யார் அங்கே ?”
திடீரென்று ஓர் உயரமான, சாம்பல் நிற உருவம் அவன் முன் தோன்றியது. அதைத் தொடர்ந்து வந்தது இன்னொரு உருவம்; இதற்குள் இரண்டு போலீஸ்காரர்கள் பாவெலைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவனுக்கு இரு புறத்திலும் காவல் நிற்கத் தொடங்கிவிட்டார்கள்.
“எங்களை எதிர்பார்க்கவில்லை, இல்லையா? ஹ!” என்று ஓர் உரத்த குரல் கேலியாகக் கேட்டது.
அப்படிப் பேசியவன் ஓர் உயரமான, ஒல்லியான, நறுக்கு மீசை அதிகாரி. பெத்யாகின் என்ற உள்ளுர்ப் போலீஸ்காரன் தாயின் படுக்கையை நோக்கி விரைந்தான்.
”எஜமான் இவள்தான் அவனது தாய்!” என்று ஒரு கையால் தனது தொப்பியைத் தொட்டுக்கொண்டும் மறு கையால் பெலகேயாவைச் சுட்டிக் காட்டிக்கொண்டும் சொன்னான்: ”அதோ, அவன்தான் அந்த ஆசாமி!” என்று கூறி பாவெலைச் சுட்டிக் காட்டினான்.
”பாவெல் விலாசவா?” என்று கண்களை ஏறச் சொருகிக்கொண்டே கேட்டான் அதிகாரி.
பாவெல் தலையை ஆட்டினான்.
”நான் உன் வீட்டை சோதனை போட வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே, மீசையைத் திருகிவிட்டுக் கொண்டான் அதிகாரி.
“ஏ, கிழவி, எழுந்திரு! உள்ளே யார் இருக்கிறது?” அறைக் கதவினூடே ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் அவன்.
”உங்கள் பேர் எல்லாம் சொல்லுங்கள்!” என்ற குரல் அந்த அறையிலிருந்து கேட்டது.
அந்த அறையோ குறுகலான இடம் கொண்டது. அந்த அறையில் ஏனோ பூட்ஸ் பாலிஷின் நாற்றம் கப்பென்று அடித்தது. உள்ளூர்ப் போலீஸ்காரனும், வேறு இரு போலீஸ்காரர்களும் தடதடவென்று தரையை மிதித்துக்கொண்டு அரங்கிலுள்ள புத்தகங்களையெல்லாம் இழுத்தெடுத்து, அதிகாரியின் முன்னால் கிடந்த மேஜை மீது குவித்தார்கள்.
வெளியே செல்லும் வாசற்புறத்தில் இரண்டு பேர் சாட்சிகளாக வந்து நின்றார்கள். ஒருவன் பழைய பாத்திரத் தொழிலாளியான திவெர்யகோவ்: ஒருவன் கொல்லுப்பட்டறைத் தொழிலாளியான ரீபின். ரீபின் கறுத்த தடித்த ஆசாமி; திவெர்யகோவின் வீட்டில் ஓர் அறையில் அவன் குடியிருந்தான்.
“வணக்கம், நீலவ்னா !” என்று கரகரத்த அடித்த குரலில் தாயைப் பார்த்துச் சொன்னான் அவன்.
அவள் தன் ஆடையணிகளை மாட்டிக்கொண்டு, தன்னைத் தைரியப்படுத்திக் கொள்வதற்காக ஏதேதோ முனக ஆரம்பித்தாள்.
”இந்த மாதிரி நான் கேள்விப்பட்டது கூட இல்லை! இப்படி நடுராத்திரியிலே வந்து பிராணனை எடுக்கிறது. தூங்கிக்கொண்டிருக்கிற வேளையிலா, உள்ளே வருகிறது!”
அந்த அறையோ குறுகலான இடம் கொண்டது. அந்த அறையில் ஏனோ பூட்ஸ் பாலிஷின் நாற்றம் கப்பென்று அடித்தது. உள்ளூர்ப் போலீஸ்காரனும், வேறு இரு போலீஸ்காரர்களும் தடதடவென்று தரையை மிதித்துக்கொண்டு அரங்கிலுள்ள புத்தகங்களையெல்லாம் இழுத்தெடுத்து, அதிகாரியின் முன்னால் கிடந்த மேஜை மீது குவித்தார்கள். வேறு இருவர் சுவர்களை முஷ்டியால் குத்திப் பார்த்தார்கள்; நாற்காலிகளுக்கு அடியில் புரட்டிப் பார்த்தார்கள்; அவர்களில் ஒருவன் அடுப்புக்கு மேலே கூட ஏறிப்பார்த்தான். ஹஹோலும் நிகலாயும் ஒரு மூலையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். அம்மைத் தழும்பு விழுந்த நிகலாயின் முகம் திட்டுத் திட்டாய்ச் சிவந்தது; அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் அதிகாரியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஹஹோல் தன் மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு நின்றான். தாய் அந்த அறைக்குள் வந்தபோது, அவன் சிறிது சிரித்தான். அவளை உற்சாகப்படுத்த தலையை ஆட்டினான்.
பய பீதியிலிருந்து தப்பிப்பதற்காக, அவள் வழக்கம் போல் பக்கவாட்டில் அசைந்து நடக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்தி நேராக நடந்தாள், இந்தப் புதிய நடை அவளுக்கு ஒரு வேடிக்கையான கம்பீர பாவத்தை உண்டாக்கியது. அவள் தைரியமாகத் தடதடவென்று நடந்தாள். எனினும் அவளது புருவங்கள் மட்டும் பயத்தால் நடுங்கத்தான் செய்தன.
அந்த அதிகாரி அந்தப் புத்தகங்களை மெலிந்த விரல்களுள்ள தனது வெள்ளை நிறக் கைகளால் பற்றி எடுத்தான். விடுவிடென்று பக்கங்களைப் புரட்டினான்; மிகவும் அநாயாசமான லாவகத்தோடு அந்தப் புத்தகங்களை ஒரு புறம் எறிந்தான். சில புத்தகங்கள் சப்தமே செய்யாமல் பொத்தென்று விழுந்தன. யாருமே எதுவும் பேசவில்லை. அங்கு நிலவிய சப்தமெல்லாம் முசு முசுவென்று மூச்சு வாங்கும் வேர்த்துப்போன போலீஸ்காரர்களின் சுவாசமும் அவர்களது பூட்ஸ் சப்தமும், இடையிடையே ஒலிக்கும், அந்த ஒரே கேள்வியும்தான்.
”இங்கே பார்த்து முடித்துவிட்டாயா?”
பாவெலுக்கு அடுத்தாற்போல் சுவரையொட்டிச் சாய்ந்து நின்றாள் தாய்; அவன் எப்படிக் கைகளைக் கட்டியிருந்தானோ, அதுபோலவே அவளும் கட்டியிருந்தாள். அவளது பார்வை போலீஸ்காரர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது; கால்களில் பலம் குன்றுவதாகத் தோன்றியது. கண்களில் நீர்த்திரை மல்கியது.
”புத்தகங்களை ஏன் தரையில் எறிய வேண்டும்?’ என்று நிகலாயின் முரட்டுக் குரல் அமைதியைப் பிளந்து கொண்டு ஒலித்தது.
தாய் திடுக்கிட்டாள். திவெர்யகோவ் தன்னை யாரோ பிடித்துத் தள்ளிய பாவனையில் தலையை முன்னுக்கு இழுத்தான்; ரீபின் பற்களைக் கடித்துக்கொண்டு நிகலாயை வெறித்துப் பார்த்தான்.
அந்த அதிகாரி கண்களை நெரித்து, நிகலாயின் அசைவற்ற முகத்தை வெறித்துப் பார்த்தான். அவனது கைகள் புத்தகத்தின் பக்கங்களை இன்னும் வெகு துரிதமாகப் புரட்டத் தொடங்கின. சமயங்களில் அவன் தனது அகன்ற சாம்பல் நிறக் கண்களை மேலும் அகலத் திறந்து பார்த்தான். அந்தப் பார்வை அவன் ஏதோ தாங்க முடியாத வேதனையால் தவிப்பது போலவும், சக்தியற்ற கோபத்தில் வாய்விட்டுக் கத்தப்போவது போலவும் தோன்றியது.
“ஏ, போலீஸ்காரா! புத்தகங்களைப் பொறுக்கி எடு!” என்று மீண்டும் சத்தமிட்டான் நிகலாய்.
உடனே எல்லாப் போலீஸ்காரர்களும் அவன் பக்கமாகக் கண் திருப்பினர். பிறகு தங்கள் அதிகாரியைப் பார்த்தனர். அதிகாரி நிமிர்ந்து நிகலாயின் அகன்ற உருவத்தின் மீது மெதுவான பார்வை செலுத்தினான்.
”ம்! அவற்றைப் பொறுக்குங்கள்!” என்று மூக்கால் உறுமினான் அவன்.
போலீஸ்காரர்களில் ஒருவன் உலைந்து கிழிந்து கிடந்த புத்தகங்களைக் குனிந்து பொறுக்கினான்.
“நிகலாய் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கட்டுமே” என்று பாவெலைப் பார்த்து முனகினாள் தாய்.
அவனோ வெறுமனே தோளை மட்டும் குலுக்கிக் கொண்டான். ஹஹோல் தலையைக் குனிந்து கொண்டான்.
“இந்த பைபிளைப் படிப்பது யார்?”
“நான் தான்” என்றான் பாவெல்.
”இந்தப் புத்தகமெல்லாம் யாருடையவை?”
”என்னுடையவை” என்றான் பாவெல்.
”ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்தான் அதிகாரி. தனது மெல்லிய கைவிரல்களை முறித்துச் சொடுக்கு விட்டுக்கொண்டான்; கால்களை மேஜைக்கு அடியில் நீட்டினான். மீசையைத் தடவிவிட்டுவிட்டு நிகலாயிடம் கேட்டான் ;
அந்தப் புத்தகங்களை ஒரு புறம் எறிந்தான். சில புத்தகங்கள் சப்தமே செய்யாமல் பொத்தென்று விழுந்தன. யாருமே எதுவும் பேசவில்லை. அங்கு நிலவிய சப்தமெல்லாம் முசு முசுவென்று மூச்சு வாங்கும் வேர்த்துப்போன போலீஸ்காரர்களின் சுவாசமும் அவர்களது பூட்ஸ் சப்தமும், இடையிடையே ஒலிக்கும், அந்த ஒரே கேள்வியும்தான்.
”நீ தான் அந்திரேய் நஹோத்காவா?”
“ஆமாம்” என்று ஓர் அடி முன்னால் வந்து சொன்னான் நிகலாய். ஹஹோல் அவனது தோளைப் பிடித்து இழுத்துப் பின்னுக்குத் தள்ளினான்.
‘அவன் சொல்வது தவறு. நான்தான் அந்திரேய்…”
அதிகாரி தன் கையை உயர்த்தி நிகலாயை மிரட்டினான்.
“ஜாக்கிரதையாயிரு!”
பிறகு அவன் தான் கொண்டு வந்திருந்த தஸ்தாவேஜுகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.
ஜன்னலுக்கு வெளியே நிலவொளி எந்தவிதக் கவலையுமற்றுக் காய்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் முன்புறமாக யாரோ நடந்து செல்லும்போது, பனிக்கட்டிகள் நொறுங்கிக் கரகரப்பது கேட்டது.
”நஹோத்கா? நீ ஏற்கெனவே அரசியல் குற்றத்துக்கு ஆளான பேர்வழியில்லை” என்று கேட்டான் அதிகாரி.
“ஆமாம், ராஸ்தோவில் ஒருமுறை; சராத்தவில் ஒரு தடவை. ஆனால் அங்கே போலீஸ்காரர்கள் மரியாதையோடு நடந்து கொண்டார்கள்!”
அதிகாரி தனது வலது கண்ணை மூடி, அதைத் தேய்த்துவிட்டுக்கொண்டான். பிறகு அவன் தனது சிறிய பற்களை வெளிக் காட்டிக்கொண்டே கேட்டான்.
ஹஹோல் லேசாகச் சிரித்தான் , உடம்பை ஆட்டிக்கொண்டான். அவன் ஏதோ பதில் சொல்ல முனையும் போது, மீண்டும் நிகலாய் குறுக்கிட்டுச் சத்தமிட்டான்.
“போக்கிரிகளையே நாங்கள் இப்போதுதான் பார்க்கிறோம்!”
ஒரே சவ அமைதி, ஒரு கணத்துக்கு ஸ்தம்பித்த சர்வ அமைதி நிலைத்தது.
தாயின் நெற்றியிலிருந்த வடுப்பாகம் வெளிறிட்டுப் போயிற்று: அவளது வலது புருவம் மேல் நோக்கி நெரிந்து உயர்ந்தது. ரீபினின் கரிய தாடி விபரீதமாக நடுநடுங்கியது. அவன் அந்தத் தாடியைக் கைவிரல்களால் கோதிக் கொடுத்துக்கொண்டே தலையைக் குனிந்தான்.
“இந்த நாயை வெளியே கொண்டு போ” என்று கர்ஜித்தான் அதிகாரி.
இரு போலீஸ்காரர்கள் நிகலாயின் கைகளைப் பற்றிப் பிடித்து, அவனைப் பலவந்தமாகச் சமையல் கட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள். அங்கு சென்றவுடன் அவன் தன் கால்களைத் தரையில் அழுத்தி ஊன்றி அசைய மறுத்தான்.
“நிறுத்துங்கள்!” என்று கத்தினான், “நான் என் சட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும்!”
போலீஸ் தலைவன் முற்றத்திலிருந்து வந்து சேர்ந்தான். ”அங்கேயும் ஒன்றுமில்லை. எங்கும் பார்த்தாயிற்று.”
“பார்த்துப் புண்ணியம்? கிடைக்காதது அதிசயமில்லை. இங்கே இருப்பவன் ரொம்பக் கைதேர்ந்த புள்ளி. பிறகு இயல்புதானே” என்று சலித்துப் போய்ச் சொன்னான் அதிகாரி.
தாய் அவனது வலுவற்ற சில்லுக் குரலைக் கேட்டாள், மஞ்சள் நிறமான முகத்தைப் பயத்தோடு பார்த்தாள். பொது மக்களைச் சற்றும் மதியாத கர்வியான, ஓர் இரக்கமற்ற எதிரி தன்முன் நிற்பது போல் அவள் மனத்தில் பட்டது. இந்த மாதிரி நபர்களோடு அவளுக்கு என்றும் பரிச்சயம் ஏற்பட்டதில்லை. இப்படிச் சிலர் இருக்கிறார்கள் என்பதே அநேகமாய் மறந்துவிட்டது.
“இந்த மனிதன்தான் அந்தத் துண்டுப் பிரசுரங்களைக் கண்டு கோபப்பட்டவன் போலிருக்கிறது” என்று அவள் நினைத்துக்கொண்டாள்.
“அந்திரேய் அனிசுமோவிச் நஹோத்கா, கள்ளத்தனமாய் பிறந்தவரே, உம்மை நான் கைது செய்கிறேன்”
”நான் உன்னைக் கேட்கவில்லை” என்று கடுமையான குரலில் எதிர்த்துச் சொன்னான் அதிகாரி. “ஏ, கிழவி வாயைத் திற!”
”எதற்காக?” என்று அமைதியுடன் கேட்டான் ஹஹோல்.
“அது பின்னால் உமக்குத் தெரியும்” என்று நையாண்டியாய்ச் சொன்னான் அதிகாரி. ‘நீ படித்தவளா?” என்று பெலகேயாவைப் பார்த்துக் கேட்டான்.
“இல்லை, அவள் படிக்கவில்லை” என்றான் பாவெல்.
”நான் உன்னைக் கேட்கவில்லை” என்று கடுமையான குரலில் எதிர்த்துச் சொன்னான் அதிகாரி. “ஏ, கிழவி வாயைத் திற!”
தாயின் உள்ளத்தில் அந்த மனிதன் மீதுள்ள வெறுப்பு மேலோங்கியது. குளிர்ந்த தண்ணீரில் திடீரென்று விழுந்து விட்டது போல, அவளது உடம்பு முழுவதும் நடுநடுங்கி விறைத்தது. அவள் நிமிர்ந்து நின்றாள். அவளது நெற்றிவடு கன்றிச் சிவந்தது. அவளது புருவங்கள் கண்ணுக்குள் இறங்குவது போல சுழித்தன.
”சத்தம் ஒன்றும் போட வேண்டாம்!” என்று கையை நீட்டிக்கொண்டு சொன்னாள் தாய். “நீங்கள் இன்னும் சிறு வயதினர். உங்களுக்குத் துன்பமும் துயரமும் இன்னதென்று தெரியாது.”
“அம்மா, சாந்தமாயிருங்கள்” என்று கூறி பாவெல் அவளைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றான்.
”நில்லு, பாவெல்!” என்று கத்திக்கொண்டே, அவள் மேஜையை நோக்கி விரைந்தாள். ”நீங்கள் இவர்களை ஏன் இட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“வாயை மூடு! அது உன் வேலையல்ல!” என்று அதிகாரி ஆவேசத்தோடு எழுந்து சத்தமிட்டான். “கைதான வெஸோவ்ஷிகோவைக் கொண்டு வாருங்கள்!”
பிறகு அவன் ஏதோ ஒரு காகிதத்தைத் தனது மூக்கினருகே கொண்டு போய் வாசிக்க ஆரம்பித்தான்.
போலீஸார் நிகலாயைக் கொண்டு வந்தார்கள். அதிகாரி வாசிப்பதை நிறுத்திவிட்டுக் கத்தினான்.
“உன் தொப்பியைத் தூர எடு”
ரீபின் பெலகேயாவிடம் வந்து, முழங்கையால் அவளை லேசாக இடித்துவிட்டுச் சொன்னான்.
“அம்மா, அதைரியப் படாதே.”
” என் கைகளை பிடித்துக்கொண்டால், தொப்பியை எப்படி எடுப்பதாம்?” என்று அந்த அதிகாரி வாசித்த வாக்குமூலத்தை அமுங்கடிக்கும் குரலில் சத்தமிட்டான், நிகலாய்.
“இதிலே கையெழுத்துப் போடு” என்று கையிலிருந்த காகிதத்தை மேசைமீது எறிந்துவிட்டு, கத்தினான் அதிகாரி.
அவர்கள் கையெழுத்திடும் போது, தாய் அவர்களைக் கவனமாகப் பார்த்தாள், அப்போது அவளது கோபம் தணிந்துவிட்டது; உணர்ச்சி உள்ளடங்கிவிட்டது. அவளது கண்களில் பலவீனமான துயர நிலையால் ஏற்பட்ட கண்ணீர்தான் நிரம்பித் ததும்பி நின்றது. அவளுக்குக் கல்யாணமானதிலிருந்து இருபது வருஷ காலமாக, இந்த மாதிரி எத்தனையோ தடவை கண்ணீர் விட்டிருக்கிறாள்; எனினும் கடந்த சில வருஷங்களாக, கண்ணீரின் வேதனையை மறந்திருந்தாள். அந்த அதிகாரி அவளைப் பார்த்தான், பிறகு துவேஷ பாவம் கொண்ட வறட்டுப் புன்னகையோடு சொன்னான்.
“தாயே! உன் கண்ணீரை மிச்சப்படுத்தி வை; இல்லையென்றால், பின்னால் அழுது தீர்க்கக் கண்ணீரே இருக்காது.”
அவளுக்கோ மீண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
”ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்!”
பளபளப்பான பூட்டு மாட்டியிருந்த சிறு பெட்டியில் தனது தஸ்தாவேஜுகளை அதிகாரி அவசரமாக வைத்தான்.
“புறப்படுங்கள்” என்று உத்தரவிட்டான்.
தன்னோடு அவர்கள் கைகுலுக்கிக் கொண்ட போது, அன்பும் அமைதியும் நிறைந்த குரலில் விடை கொடுத்தான் பாவெல்: ”போய்வா அந்திரேவ், போய்வா நிகலாய்”
”ஆமாமாம், போய்விட்டு வந்தாலும் வருவார்” என்று அந்த அதிகாரி எகத்தாளமாய்ச் சொன்னான்.
நிகலாய் நெடுமூச்சு விட்டான். அவனது தடித்த கழுத்தில் ரத்தம் பாய்ந்து புடைத்தது. அவனது கண்களில் கோபம் முட்டி மோதிப் பொங்கிக்கொண்டிருந்தது. ஹஹோல் பளிச்சென்று சிறு புன்னகை செய்து தலையை ஆட்டினான், தாயிடம் மட்டும் இரகசியமாக ஏதோ சொன்னான். அவளோ சிலுவைக் குறியிட்டபடி சொன்னாள்.
“கடவுள் யார் நல்லவர் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்……..”
கடைசியாக, அந்தக் காக்கிச் சட்டை ஆசாமிகள் வாசல் புறத்தை நோக்கிச் சென்றார்கள், காலில் அணிந்த பூட்ஸின் தார் ஆணிகளின் சப்தம் கலகலத்து கறைய அவர்களும் கண் மறைந்து போய்விட்டார்கள். ரீபின் தான் கடைசியாகப் போனான். அவன் போகும்போது பாவெலைக் கவனமாய்ப் பார்த்துவிட்டுப் போனான்.
”சரி. நான் …. வ….ரட்….டுமா?” என்று ஏதோ சிந்தித்தவாறே சொல்லிவிட்டு, தாடியுள் இருமிக் கொண்டே வெளியே போனான்.
பாவெல் தனது கைகளைப் பின்னால் கோர்த்துக் கொண்டு சிதறிக்கிடந்த புத்தகங்களையும், துணிமணிகளையும் தாண்டித் தாண்டி மெதுவாக உலவினான்.
”பார்த்தாயா? அவர்கள் இப்படித்தான் செய்வார்கள்” என்று சோர்ந்துபோன குரலில் சொன்னான் அவன்.
அவனது தாய் குழம்பிக் கிடந்த வீட்டின் சூழ்நிலையைப் பரிதாபகரமாகப் பார்த்தாள்.
“நிகலாய் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்துகொண்டான்?” என்று வருத்தத்தோடு கேட்டாள்.
“ஒருவேளை அவன் உள்ளுக்குள் பயந்து போயிருக்கலாம்” என்றான் பாவெல்.
”அவர்கள் பாட்டுக்கு வந்தார்கள். இவர்களைப் பிடித்தார்கள். கொண்டு போய்விட்டார்கள். இப்படித்தான்………” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சொன்னாள்.
”ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்!”
அவளது மகன் கைது செய்யப்படவில்லை; எனவே அவளது இதயம் அமைதி நிறைந்து அடித்துக்கொண்டது. ஆனால், தன் கண் முன்னால் நடந்து போன மறக்க முடியாத அந்தக் காட்சியை நினைத்து நினைத்து அவளது சிந்தனை செயலற்று ஸ்தம்பித்துத் தவித்துக்கொண்டிருந்தது.
“அந்த மஞ்சள் மூஞ்சிக்காரன் மூமூ அவன் நம்மைக் கேலி செய்தான்! பயமுறுத்தினான்”
”அம்மா” என்றும் ‘நீ’ என்றும் தாயை அழைத்தான். அவளுக்கு வெகு நெருக்கமாய் இருக்கும் பொழுதுதான் தாயை அவன் அவ்வாறு அழைப்பது வழக்கம். அவள் அருகே சென்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
”அவர்கள் உன்னை இழிவுபடுத்திவிட்டார்களா?” என்று அமைதியுடன் கேட்டாள்.
“ஆமாம், அதுதான் சங்கடமாயிருக்கிறது. அவர்கள் என்னையும் கொண்டு சென்றிருந்தால் நல்லது!”
அவனது கண்களில் கண்ணீர் ததும்பியிருப்பதாக அவளுக்குப் புலப்பட்டது. அவனது இதய வேதனையை ஆற்றுவதற்கு முயல்வது போல், அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னாள்.
”பொறு பொறு, அவர்கள் உன்னையும்கூடக் கொண்டு போய்விடுவார்கள்!”
”நிச்சயம் கொண்டு போவார்கள்!”
அவள் ஒரு கணம் மௌனமானாள்.
“பாஷா, நீ எவ்வளவு உறுதி வாய்ந்தவன்!” என்று சொன்னாள் அவள். ”நீ ஒரு வேளையாவது உன் தாயைத் தேற்றியிருக்கிறாயா? நான் ஏதோ பயங்கரத்தைச் சொன்னால், நீ அதைவிடப் பயங்கரத்தைச் சொல்லி, என்னையே பயப்பட வைக்கிறாயே!’ என்று பரிதவித்தாள்.
அவளை ஏறிட்டுப் பார்த்தவாறே தாயை நெருங்கினான் அவன்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது, அம்மா. நீதான் இதற்கெல்லாம் உன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.”
அவள் பெருமூச்சு விட்டாள், உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கத் தயாராயிருக்கும் குரலை உள்ளடக்கிக்கொண்டு, சிறிது நேரம் கழித்து அவள் கூறினாள்.
”அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்? அந்த மனிதர்களின் உடம்பைக் கிழித்து, எலும்புகளை நொறுக்கி… அதைப்பற்றி நினைத்தாலே, ஐயோ, என் கண்ணே!…. என்னால் தாங்க முடியவில்லையடா ……..”
”அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது………”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 13 ஆகவும், தற்போது அவை 17 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை தமிழக அரசு டெங்குவை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதன் வெளிப்பாடுதான் 17 உயிர்கள் பலியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு பலியான இரட்டை குழந்தைகள் தக்ஷன், தீக்ஷா (படம் – நன்றி : தினகரன்)
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகளான தக்ஷன், தீக்ஷா ஆகியோர் டெங்கு காய்ச்சலால் கடந்த அக்டோபர் 21 -ம் தேதி உயிரிழந்தனர்.
சென்னை எண்ணூர் சேர்ந்த சாதிக்கின் மூன்று வயது மகன் சபிக் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும் கடந்த வாரங்களில் புளியந்தோப்பை சேர்ந்த அஸ்லாம், பெரம்பூரை சேர்ந்த ரிஸ்வான், மணலியை சேர்ந்த கவியரசன் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இன்று நேற்று அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கடந்த 2017-ல் மத்திய அரசின் அறிக்கையில் “தேசிய அளவில் டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 23 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் 63 பேர் உயிரிழந்தனர் என்றும் மாநில அளவில் தமிழகம்தான் முதலிடம்” எனவும் குறிப்பிட்டு இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு மூவாயிரத்து 315 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவித்து இருந்தது.
அரசின் இந்த அறிக்கை ஒரு கடைந்தெடுத்த பொய் என்பது சமகாலத்தில் வாழும் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆண்டு டெங்குக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரை ‘டெங்கு காய்ச்சல்’ என்று பதிவு செய்யாமல் ‘மர்மக் காய்ச்சல்’ என்றே பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடியது இந்த அரசு.
அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இழந்து தனியார் மருத்துவமனையை மக்கள் நாடியதும், அவர்களிடம் முடிந்த அளவிற்கு காசையும் பிடுங்கிக் கொண்டு ‘டெங்குக் காய்ச்சல்’ என்று தெரிந்தவுடன் அரசு மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பிய கொடூரமும் அரங்கேறியது.
மற்றொருபுறம் டெங்கு காய்ச்சல் என்று பதியக் கூடாது என மறைமுகமாக தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த அய்யோக்கியத்தனங்களை எல்லாம் எளிதல் மறந்து விட முடியாது. “சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்” பாணியில் செயல்பட்டுவிட்டு, அரசின் சாமர்த்தியத்தால் டெங்கு காய்ச்சலைத் தடுத்து விட்டோமென்று வெட்கமில்லாமல் பொய் பேசியது அதிமுக கிரிமினல் அரசு.
அதேபாணியை இந்த ஆண்டும் செயல்படுத்துகிறது. பருவமழை தொடங்கிய அக்டோபர் முதற்கொண்டு தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதேபோல “அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு இருக்கிறது” என்று அரசு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்தும் சுகாதார நடவடிக்கையை துரித்தப்படுத்தாமல், சின்னசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 17 பேரை பலிகொடுத்துவிட்டு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்களாம்.
பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “உள்ளாட்சி துறை மூலம் மொத்தம் 9,388 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டு கொசு மருந்து அடிக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் மொத்தம் 1,81,859 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத் துறையுடன் இணைந்து வேகமாக பணியாற்ற அறிவுறுத்தியுள்ளதாகவும், 50 வீட்டுக்கு ஒரு ஆள் என ஒவ்வொருவரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மேலும், கடந்த ஆண்டில் 100 சதவீத அறிகுறி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தி எங்கேயும் இறப்பு வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். டெங்கு நோயை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் இலவசமாக கொடுக்க சொல்லியுள்ளோம்” என்று அலட்சியமாகவும், முரணாகவும் சொல்லுகிறார்.
வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆறு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்கள். சுகாதாரத்தில் பின் தங்கிய மாவட்டமான திருவள்ளூரில் இந்த ஆண்டு மட்டும் 4000 பேர் மர்மக் காய்ய்சல் காரணமாக தினந்தோறும் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அப்பொழுதே அதுகுறித்த நடவடிக்கை எடுக்கவில்லை அரசு.
அதன் விளைவு தற்பொழுது 105 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 17 பேருக்கு டெங்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால் 12 பேர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள யதார்த்தம்.
தமிழகத்தில் அடிக்கடி மக்களை பாதிக்கக் கூடிய திடீர்க் காய்ச்சலில் இருந்து காப்பற்ற போதிய மருத்துவர்களோ, மருந்துகளோ இல்லை. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் ஒரெயொரு செவிலியர் மட்டும் சிகிச்சை அளிக்கும் அவல நிலைதான் உள்ளது.
இதனால் மாவட்டத்தில் இருக்கும் தலைமை மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். இதனால் போதிய மருத்துவர்கள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, சிகிச்சை அளிக்கவும் திணறுகிறார்கள்.
“ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட எந்த மருத்துவமனைகளும் கொடிய இந்த காய்ச்சலை தடுப்பதற்கு உரிய முறையில் தயார் நிலையில் இல்லை. அரசின் சார்பில் மருத்துவ முகாம்கள் கூட பெருமளவில் நடத்தப்படவில்லை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதனைப் பற்றியெல்லாம் கடுகளவும் கவலை இல்லாமல் மாநகராட்சி முதற்கொண்டு உள்ளாட்சி வரை அனைத்து பணிகளையும் தனியாருக்கு டெண்டர் விடுவது, அதன் மூலம் கொள்ளையடித்து கொழுத்து வாழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த பார்ப்பன அடியாள் கிரிமினல் அரசு.
கடந்த ஆண்டு மக்கள் டெங்குவால் மடிந்து கொண்டிருந்த பொழுது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடினர். இப்பொழுது அதிமுகவின் 47-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறது.
வக்கிர மனம் படைத்த இந்த அரசு எந்த அளவிற்கு மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சாட்சி ஒன்றே போதுமானது! மக்கள் பிணத்தின் மீதமர்ந்து அதிகாரத்தை சுவைக்கும் இந்த எடப்பாடி அரசு டெங்கு கொசுவை விட ஆபத்தானது!
ஸ்டெர்லைட் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போஸ்டர் ஒட்டினாலும் கைது செய்வோம் !
– தூத்துக்குடி போலீசின் அடக்குமுறை
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக “சிறப்பு சட்டம் இயற்று, ஸ்டெர்லைட்டை அகற்று” என்று தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்து 1000 சுவரொட்டிகள் 22.10.18, 23.08.18 ஆகிய நாட்களில் தூத்துக்குடியின் நகர்ப்பகுதி, கிராமப் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டது.
அரசிடம் கோரிக்கையை முன்வைத்து சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்தது தூத்துக்குடி போலீசு. குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சின்ன சலசலப்பைக் கூட பொறுத்துக் கொள்ள தூத்துக்குடி போலீசால் முடிவதில்லை. நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஒட்டிய சிறிது நேரத்திற்குள் கிழிக்கும் வேலையை தனிப்படை போட்டு செய்தது.
23.08.2018 அன்று காலையில் W.G.C சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளை மிரட்டி சுவரொட்டி ஒட்டுவதை நிறுத்தப் பார்த்தது. நிர்வாகிகளை போலீசு வேனில் ஏற்றுவதற்கும் முயற்சித்தது. உடனே கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் தலையிட்டு பேசினார்.
அப்போது, அங்கிருந்த வடபாகம் காவல்நிலைய ஆய்வாளர், “நீங்கள் தலையிட வேண்டாம், எங்களுக்கு மேலிட ப்ரெசர் இருப்பதால்தான் இவ்வாறு செய்கிறோம், மற்றபடி நானும் உங்களுக்கு ஆதரவுதான்” என்று பேசியுள்ளார்.
அதற்கு “ ஸ்டெர்லைட் நிறுவனம் அரசால் மூடப்பட்ட நிறுவனம். அவர்கள் மக்களிடம் பணம் கொடுத்து கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தோம். ஆனால், அதற்கு எந்த FIR யும் நீங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதை மட்டும் தடுக்கிறீர்கள் என்று அரிராகவன் கேட்டுள்ளார். தொடர்ந்த வாக்குவாதத்தால் வேறு வழியின்றி நிர்வாகிகளை அழைத்துச் செல்வதை கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அதன் பிறகு பழைய பேருந்து நிலையத்தில் நண்பகல் நேரத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்களை மத்திய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வழக்கறிஞர்களும், கூட்டமைப்பு நிர்வாகிகளும் சென்று பேசியும் அவர்களை வெளியில் விடவில்லை. இன்ஸ்பெக்டர் வெளியில் சென்று விட்டார், மாலைதான் வருவார் என்று கூறி நேரத்தை கடத்துவதில் குறியாக இருந்துள்ளது போலீசு. அங்கேயே அரிராகவன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலரும் மாலை வரை காத்திருந்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் இல்லை. பிறகு மாலையில் கூட்டமைப்பு நிர்வாகிகளும், ஊர் மக்களும் 50 பேருக்கு மேல் போலீசு ஸ்டேசனுக்கு முன்பு கூடியுள்ளனர்.
இவ்வாறு மக்கள் கூடிய பிறகுதான் காவல்துறை தனது போக்கை மாற்றிக் கொண்டது. அதுவரை மேலிருந்து சொன்னால்தான் செய்ய முடியும் என்று சொன்னவர்கள், “திறந்த வெளியில் அழகு குலைப்பதை தடுக்கும் சட்ட”த்தின் கீழ் எப்.ஐ.ஆர். மட்டும் போடுகிறோம், அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆட்கள் குலசேகரம் திருவிழாவிற்கு பேனர் வைத்ததற்கும், கிராமங்களில் பணம் கொடுத்ததற்கும் என்ன வழக்கு போட்டுள்ளீர்கள்? தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு என்ன அடிப்படையில் தாசில்தாரும், காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளீர்கள்? ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதை மட்டும் ஏன் குற்றமாக சித்தரிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் இல்லை.
மாணவர்கள் மீது வழக்கு போட்டால், கருப்புக் கொடி காட்டுவோம், சாலை மறியலில் இறங்குவோம், மக்களைத் திரட்டுவோம் என மக்கள் அடுத்த கட்டத்திற்கு பேசத் தொடங்கியவுடன், நிலைமையின் தீவிரத்தை போலீசு உணர்ந்து கொண்டது.
இறுதியாக, நாங்கள் முறைப்படிதான் விசாரித்தோம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் மட்டும் எழுதிக் கொடுத்து செல்லுங்கள் என்று பணிந்து வந்தது.
அதன் பிறகு மக்கள், போஸ்டரை கிழித்ததற்கு, கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடுத்தனர். கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். முதலில வாங்க மறுத்தனர். போஸ்டரைக் கிழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என ஏற்கனவே ஏப்ரல் 24 மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முற்றுகைப் போராட்டத்தின் போது அப்போதிருந்த எஸ்.பி. வாக்குறுதி அளித்திருந்தார் என்பதை நினைவூட்டியபின் நிர்ப்பந்தத்தின் காரணமாக வாங்கிக் கொண்டனர்.
இரவு 9.00 மணியளவில் எஸ்.பி.-யைச் சந்திக்க கூட்டமைப்பில் இருந்து 50 பேர் சென்றனர். SP யை சந்திப்பதற்கு 5 பேரை அனுமதித்தனர். உள்ளே சென்ற கூட்டமைப்பு நிர்வாகிகள், நடந்தவற்றை கூறியுள்ளனர். ஸ்டெர்லைட் கம்பெனி ஊருக்குள் பணம் கொடுப்பதைப் பற்றியோ, குலசேகரத்தில் திருவிழாவிற்கு உதவிகள் செய்தது பற்றியோ, குளங்கள் தூர்வாருவது பற்றியோ எதுவும் தெரியாது. பேப்பரிலும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதைப்பற்றி எதுவும் தெரியாதாம். மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட தெருவுக்குள் போஸ்டர் ஒட்டுவது மட்டும் தெரிந்து விடுகிறதாம். மொத்த மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்பதும், எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இது கண்டனத்துக்குரியதாகும்.
அரசால் மூடப்பட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அதிகாரிகளையும் மதிக்காமல், சட்ட விரோதமாக நடந்து கொண்டாலும் அதனை தட்டிக்கேட்பதற்கு இயலாமல், கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.
ஆனால் அப்படி ஒதுங்கிப் போய்விட மாட்டோம், அடுத்த தலைமுறையைப் பாதுகாப்பதற்கும், 14 உயிர்கள் பறிபோனதற்கும் இறுதிவரை போராடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து கொண்ட தூத்துக்குடி மக்களின், போராட்ட உணர்வே இச்சம்பவத்தில் மாணவர்களை மீட்டுக் கொண்டு வரக் காரணம்.
எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும், மக்களின் துணை கொண்டு தடைகளை முறியடித்து, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உறுதியோடு நிற்கும்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
*****
ஸ்டெர்லைட் : பொதுவாக்கெடுப்பு நடத்து !
மக்கள் அதிகாரம் அமைப்பின் கண்டன சுவரொட்டி!
சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், சங்க பரிவாரக் கும்பல், சபரிமலையில் பக்தர்களைச் சுரண்டித் தின்னும் தந்திரி குடும்பம், கேரளத்தின் பழமையின் அடையாளமான அரச குடும்பம் ஆகியவற்றின் ‘புனித’க் கூட்டு பெண்கள் நுழைவுக்கு எதிராக வெறியாட்டம் ஆடத் தொடங்கியிருக்கிறது.
சபரிமலையில் நடை திறக்கபட்ட பிறகு அங்கு சென்ற பல பெண்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி தாக்கத் தொடங்கியது சங்கப் பரிவாரக் கும்பல். இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் என வட இந்திய சங்க பரிவாரக் கும்பலை களத்தில் இறக்கி விட்டு இந்தத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களை பக்தர்கள் போராட்டம் என செய்தி போட்டு சங்க பரிவாரத்திற்கு தனது சேவையை செவ்வனே செய்தன தமிழ் இந்து போன்ற பத்திரிகைகள். இதே பத்திரிகைதான் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலவரக்காரர்கள் என எழுதியது.
1970-களுக்கு முன்னர் அனைவரும் சென்ற கோவில் என்பதில் தொடங்கி ஆகம விதிகள் எதுவும் இல்லாத மலைக் கோவில் தான் ஐயப்பன் கோவில் என்பது வரையில் பல்வேறு ஆதாரப் பூர்வமான விவரங்கள் சொல்லப்பட்டும், இது நம்பிக்கை சார்ந்த விசயம் எனக் குதிக்கின்றனர் சங்கிகள். சபரி மலைக்கு பெண்கள் தீட்டு என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் குரல் என்பதை அம்பலப்படுத்தி வெளிவந்திருக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல், “சபரி மலைக்கு வந்தா தீட்டா?”
பாடல் வரிகள்:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா?
எங்களைத் தடுக்க தனி பூட்டா பூட்டா?
கடவுளின் நாட்டிலே … பெண்களை தடுக்குறே
gods – own country ladies no entry
எந்தா நியாயம் பறையூ சேட்டா சேட்டா!
நாலுமணிக்கு எழுப்பிவுட்டு
நானும் உன்கூட விரதமிருந்து
விடிய விடிய பஜனை பாட்டு
பட்டாளத்துக்கே ஆக்கிப்போட்டு
மகளிர் குழுவில் சீட்டு போட்டு
திரும்பும் வரைக்கும் விளக்கு போட்டு
திங்கிறதெல்லாம் தின்னுபுட்டு
மலைக்கு மட்டும்… பொம்பளை தீட்டு…
டாஸ்மாக்கிலே தனி கிளாஸ் பாரிலே
மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே
பீடி சிகரெட்டு… சாமி சரணம், தப்பில்லே
பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே!
மாராப்பு போட்டதுக்கு
மார்பை அறுத்த நாடு
மார்பை மறைப்பதற்கு
முலை வரி போட்ட நாடு
நாயர் குல பெண்களை
நம்பூதிரிகள் சிதைத்த நாடு
அது கடவுளின் சொந்த நாடு…
தொடருது சாபக்கேடு!
பாடல் காணொளி:
Lyrics – English
They say we pollute the temple
They say we should be stopped – to save the God
This is God’s own country – Ladies.. No entry !
Is it fair ? Tell me chetta (brother) !
Lord Ayyappa is a brahmachari –
He is not afraid of us
Not doubtful of his celibacy
The male devotees –
We do not doubt their vow of celibacy either
Sanghis, if you are threatened by our presence
You better stay at home – Do not raise a ruckus
My dear husband,
Here is the story of your pilgrimage…
At 4 in the morning – I wake you up
With you – I observe all your vratas
You come in dozens for the nithya pooja
sing bhajans all through the night
I cook the feast – all of you eat heartily
No pollution then.
but for the temple, women are polluted.
Liquor does not pollute –
Bars provide ‘holy glasses’ for the Ayyappanmar.
occasional mutton sukka – also not a pollutant
smoking, no bar – these are modern days.
A mensurating wife ? No entry
She may risk losing her life
to the tigers of sabari hills
You say its all about tradition
The tradition that cut off the breasts of our women
for wearing the upper cloth
Your tradition of breast tax
The tradition that gave licence to the namboodiri brahmins
to ruin nair women at will
This is not tradition, but a curse –
The curse that continues to chase
the Gods own country.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது, இராஜீவ்காந்தி இளைஞர் முன்னேற்றத்திற்கான தேசிய கல்வி நிறுவனம். இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். சமூகவியல் சார்ந்த படிப்புப் பிரிவுகளைக் கொண்டதே இந்த பயிலகத்தின் சிறப்பாகும். இங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமை, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நிர்வாகத்திடம் முன் வைத்தனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் 17-ம் தேதிவரையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்களில் மாணவர்கள் போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என்றெண்ணிய நிர்வாகம், மாணவர்களின் தொடர்ச்சியான உறுதியான போராட்டத்தைக் கண்டு அம்மாணவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது.
மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்தனர்.
மத்திய அரசின் சிறப்புக் கல்வி நிறுவனமாகிய இங்கு NAAC / UGC / NIRF போன்ற அங்கீகாரங்கள் ஏதும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இங்கு மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளது. கல்வி நிறுவனத்திற்கு அங்கீகாரம் பெற வேண்டும்.
மாணவர்களின் ஸ்காலர்சிப் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை.
இக்கல்வி நிறுவனத்திற்கான முத்திரையிலிருந்து இராஜீவ் காந்தி படம் நீக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் சான்றிதழ்களிலும் இராஜீவ் காந்தி பட முத்திரை இன்றி கொடுக்கப்படுகிறது. இராஜீவ் காந்தி பட முத்திரை மீண்டும் அனைத்து சான்றிதழ்களிலும் கொண்டுவர வேண்டும்.
நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பல துறைகள், பேராசிரியர்கள் இல்லாமலேயே இயங்குகின்றன. அங்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி துறைகளின் பெயரை மாற்றுவது, துறைகளை இழுத்துய் மூடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவியர் விடுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செயல்பாட்டில் இல்லை. மேலும் ஏற்கனவே இருக்கும் வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும்.
கல்லூரியில் உள்ள பல்வேறு வசதிகள் பராமரிப்பின்றியே இருக்கின்றன. முறையாக அனைத்தையும் பராமரிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
பிற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு வசதி செய்து தரவேண்டும்.
தற்போது இருக்கும் மாணவர் கவுன்சில் அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதால், மாணவர்களுக்கு சங்கம் தேவை. அதில் உடனடியாக தேர்தலும் நடத்தப்படவேண்டும்.
துணைப்பதிவாளர் மாணவர்களை மோசமாக நடத்துகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக பயிலகத்திற்கு இயக்குனரை நியமிக்க வேண்டும்,
நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்த பதிவாளரிடம் இந்தக் கோரிக்கைகள் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கைகளில் மாணவர்களின் ஸ்காலர்சிப் தொகை உள்ளிட்ட பொருளாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது நிர்வாகம். ஆசிரியர் நியமனம் மற்றும் இயக்குனர் நியமனம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் பதிவாளர். அதே போல பிற அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டனர். தங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனில் மீண்டும் போராட்டம் தொடங்கும் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
தனிச்சிறப்பு பயிலகமாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பயிலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் எங்கிருந்து வந்தன, என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்த பயிலகத்தில் தற்போது உடனடியாக இயக்குனரை போட வேண்டும் என மாணவ்ர்கள் போராடி வருகின்றனர். இதற்கு முன் இருந்த இயக்குனர் என்ன ஆனார் என்ற கேள்வி வருகிறதல்லவா ?
மதன் மோகன் கோயல்.
இங்கு பயிலகத்தின் முன்னாள் இயக்குனரின் பெயர் மதன் மோகன் கோயல். இவர் பதவியில் அமர்ந்தது, இந்தப் பயிலகத்தை படிப்படியாக திட்டமிட்டு சிதைத்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் கலந்தாலோசிப்பும் இன்றி கல்விநிறுவனத்தின் முத்திரையை மாற்றியுள்ளார். இதனால் மாணவர்களின் சான்றிதழ்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
திடீரென ஒரு நாள் கல்வி நிறுவன வளாகத்தில் சாமி சிலை பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, ஒரே வாரத்திற்குள் ஒரு கோவிலையும் கட்டியுள்ளார். பாபர் மசூதியில் ராமர் கோவில் முளைத்த கதை போல உள்ளது அல்லவா ?
இதற்கு எதிராக மாணவர்கள் பயிலகத்திற்குள் மதம் சார்ந்து ஆலயங்கள் கொண்டு வரக் கூடாது எனக் கூறியுள்ளனர். ஆனால், நிர்வாகமோ இது ஆசிரியர்களுக்கானது. இதில் மாணவர்கள் தலையிடவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதிய மாணவரை அனைவருக்கும் முன்னிலையில் சாடி அவமானப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாணவர் சங்கத்தை கலைத்து மாணவர் கவுன்சிலாக மாற்றியிருகிறார். மாணவர் கவுன்சிலின் தலைவராக ஒரு ஆசிரியரை நியமித்திருக்கிறார். இயக்குனர் என்ற இந்த சங்கியின் கொண்டை இப்போது வெளியே தெளிவாகத் தெரிந்து விட்டது அல்லவா..
அதோடு முடியவில்லை. இன்னும் இருக்கிறது. உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று ஏற்கெனவே பயிலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு காவி நிறத்தில் வண்ணம் பூசி அழகு பார்த்திருக்கிறார் இந்த சங்கி.
இப்படி கோவில், காவி நிறம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஹிந்துத்துவ சங்கிகளை பங்கேற்கும் கருத்தரங்கங்கள் மற்றும் வேதங்கள், மகாபாரதம், இராமாயணம் குறித்த சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும் சில மாணவர்களுக்கும் கட்டாய இந்தி வகுப்புகளை ஏற்பாடு செய்து இந்து மதம் தொடர்பான போதனைகள் அங்கு சொல்லித் தரப்பட்டன
ஒரு சங்கியின் குணாம்சங்களில் ஏதோ ஒன்று மட்டும் விடுபட்டது போலத் தோன்றலாம். ஆம், பெண்களின் மீதான பாலியல் ஒடுக்குமுறை. மதன் மோகன் கோயல் என்ற இந்த சங்கி இயக்குனர், உடன் பணிபுரியும் பெண் ஆசிரியை ஒருவரிடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து அந்த பெண் புகாரளித்துள்ளார். அதனைத் தொடந்து விசாரணை ந்டந்து வந்துள்ளது.
விசாரணை நடந்த காலகட்டத்தில் அந்த ஆசிரியையை, இயக்குனருக்கு எதிரான புகாரை வாபஸ் பெறக் கூறி சக ஆசிரியர்களும், மூத்த பேராசிரியர்களும் மிரட்டியுள்ளனர். விசாரணையின் போதும் மாணவர்களை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார் கோயல். இதுவரை பாலியல் குற்றத்திற்கு அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கபப்ட்டதாகத் தெரியவில்லை. அவரை வேறு ஒரு பெரிய பதவிக்கு மாற்றி விட்டதாக கேள்விப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
அந்த சங்கி இயக்குனர் வெளியேற்றப்பட்ட பிறகு, தற்காலிக இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரும் அவ்வப்போது அலுவலகத்துக்கு வந்து சென்று அதிகாரத்தை முழுக்க முழுக்க துணைப் பதிவாளர் ஒருவரின் கையில் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த துணைப்பதிவாளர் முன்னாள் இயக்குனரின் கையாள் என்கின்றனர் மாணவர்கள். புதிய இயக்குனர் வந்தது முதல் மாணவர்களை பால்வாடிக் குழந்தைகளைப் போல நடத்துவது, அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை விதிகளைப் போடுவது என துணைப் பதிவாளர் தனது இஷ்டத்திற்கு செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில், கல்வி நிறுவன வளாகத்துக்கு வெளியே மாணவி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து, பெண் மாணவர்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்திருக்கிறார் துணை பதிவாளர். அதனைத் தொடர்ந்து அதை மாணவிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒருமுறை விடுதி வளாகத்தில் மாணவிகள் வெளியே நின்று கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த துணை பதிவாளர், மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளால் சாடியுள்ளார். இதனைக் கண்டித்து மாணவிகள் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையும் கண் துடைப்புக்காகவே நடந்தது என்கின்றனர் மாணவர்கள்.
அது மட்டுமல்ல, அதிகாரம் கைக்கு வந்ததும், நூலகத்தின் நேரத்தை தடாலடியாக இரவு 8 மணி வரை மட்டுமே என சுருக்கியுள்ளார் இந்த துணை பதிவாளர். இதற்கு எதிராக மாணவர்கள் போராடினர். போராடும் மாணவர்களைப் பயமுறுத்த, முன்னணி போராட்ட மாணவர்களில் 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளார் துணைப் பதிவாளர்.
இயக்குனர் என்ற பெயரில் ஒரு சங்கியால் சீரழிக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில், இன்று வரை மாணவர்களை காவிமயமாக்கவும், அடிமைகளாக்கவும் சங்க பரிவார கும்பல் முயற்சித்து வருகிறது. மாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன்னொரு சங்கியாக இருந்தால் பாவம் அந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?
மத்தியில் பாஜகவின் ஆட்சி இருக்கையில் சங்கியைத் தவிர வேறு யாரையாவது கல்விநிலைய இயக்குனராக நியமிப்பார்கள் என்ற நம்பிக்கை இங்கு யாருக்காவது உண்டா ?
அந்தக் குடியிருப்பிலுள்ள மக்கள், நீல மையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த சோஷலிஸ்டுகளைப் பற்றிப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தப் பிரசுரங்கள் தொழிற்சாலையின் ஒழுங்கு முறை பற்றி காரசாரமாக விமர்சனம் செய்தன; பீட்டர்ஸ்பர்க்கிலும், தென் ருஷியாவிலும் நடைபெறும் வேலை நிறுத்தங்களைப் பற்றிக் கூறினர். தங்களது சொந்த நல உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகத் தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனப் போதித்தன. மாக்சிம் கார்க்கி
தொழிற்சாலையில் நல்ல காசு பார்த்து வந்த நடுத்தர வயதினர் அதைக் கண்டு கோபாவேசம் கொண்டார்கள்.
“கலவரக்காரப் பயல்கள்! இவர்களுக்குச் செம்மையாய்க் கொடுக்கணும்” என்று கூறிக்கொண்டார்கள். அந்தத் துண்டுப் பிரசுரங்களைத் தமது முதலாளிமாரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்கள்.
இளவட்டப் பிள்ளைகள் அந்தப் பிரசுரங்களை உற்சாகத்தோடு வாசித்தார்கள்.
”இதெல்லாம் உண்மைதானே!” என்றார்கள் அவர்கள்.
உழைத்து உழைத்து ஓடாகிப்போன பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கையற்றுப் பேசினார்கள்: “இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப் போகிறது? அதெல்லாம் ஒன்றும் நடக்காத காரியம்.”
எனினும் அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தொழிலாளர் மத்தியில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி விட்டன. ஆனால், அந்த ஒருவார காலத்தில் வேறு புதுப் பிரசுரங்கள் ஏதும் வரக் காணோம். உடனே அந்தத் தொழிலாளர்கள் மட்டும் தம்முள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்; ”ஒருவேளை அவர்கள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது.”
ஆனால் அடுத்த திங்கட்கிழமையன்று எப்படியோ மீண்டும் புதுப் பிரசுரங்கள் வினியோகம் ஆயின. மீண்டும் தொழிலாளர்கள் தம்முள் குசுகுசுவென்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
தொழிற்சாலையிலும் சாராயக் கடையிலும் யாருக்குமே இனந்தெரியாத ஆட்கள் சிலரின் நடமாட்டம் அதிகரித்தது. இந்த ஆட்கள் அங்குமிங்கும் கவனமாகப் பார்ப்பதும், யாரிடமாவது எதையாவது கேட்பதும், ஒவ்வொருவர் பேசும்போதும் குறுக்கே தலையிட்டுப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களது அளவு கடந்த எச்சரிக்கையாலும் அவர்கள் ஜனங்களோடு பலவந்தமாய்ப் பழக முனையும் காரணத்தினாலும் அவர்கள் பிறரது சந்தேகப் பார்வைக்கு ஆளானார்கள்.
இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் தனது மகனது வேலையே காரணம் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். அவனைச் சுற்றி மக்கள் எப்படிக் குழுமுகிறார்கள் என்பதையும் அவள் கண்டாள். அவனுக்கு எதேனும் நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு ஒரு பெருமித உணர்ச்சியும் அவளது இதயத்தில் கலந்தது.
ஒரு நாள் மாலையில் மரியா, விலாசவின் ஜன்னல் கதவைத் தட்டினாள். தாய் கதவைத் திறந்தவுடன், மரியா சிறிது உரத்த குரலில் இரகசியமாகச் சொன்னாள்:
”ஜாக்கிரதையாயிரு, பெலகேயா! இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது. இன்றிரவு உன் வீட்டைச் சோதனை போடப்போகிறார்கள். மாசினுடைய வீட்டையும், நிகலாயின் வீட்டையும் கூடத்தான்.”
உழைத்து உழைத்து ஓடாகிப்போன பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கையற்றுப் பேசினார்கள்: “இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப் போகிறது? அதெல்லாம் ஒன்றும் நடக்காத காரியம்.”
மரியாவின் தடித்த உதடுகள் துடித்தன. அவள் தனது கொழுத்த மூக்கினால் பெருமூச்சுவிட்டாள். திருகத்திருக விழித்தாள், தெருவில் யாரையோ கண்களால் பின் தொடர்ந்தாள். அங்குமிங்கும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.
“எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் உனக்கு ஏதும் சொல்லவில்லை, நான் உன்னை இன்று பார்க்கக்கூடவில்லை. புரிந்ததா?”
அவள் போய்விட்டாள்.
ஜன்னலை மூடிய பிறகும் தாய் மெதுவாக நாற்காலிக்குள் விழுந்து புதைந்து கிடந்தாள். ஆனால், தன் மகனுக்கு நேரவிருக்கும் பேராபத்தைப் பற்றிய பயபீதி அவளை உடனேயே எழுந்திருக்கச் செய்தது. அவள் அவசர அவசரமாக உடை உடுத்திக்கொண்டாள்; தலைமீது ஒரு கச்சையை மடித்துக் கட்டிக்கொண்டாள்; பியோதர் மாசினிடம் ஓடிப்போனாள்; அவன் சீக்காயிருந்தான். எனவே வேலைக்குப் போகவில்லை. அவள் உள்ளே நுழைந்தபோது, அவன் ஜன்னலருகே உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்; வலது கையை இடது கையால் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். நோய்வாய்ப்பட்டிருந்த அவனது வலது கைப் பெருவிரல் இயற்கைக்கு மாறாக நிமிர்ந்து நின்றது. அவள் சொன்ன செய்தியைக் கேட்டதும் அவனது முகம் வெளுத்தது. அவன் துள்ளியெழுந்தான்.
“ஓ, அப்படியா சேதி!” என்று முணுமுணுத்தான்.
”சரி. நாம் என்ன செய்யலாம்?” என்று நடுநடுங்கும் சுரத்தால் நெற்றி வியர்வையை வழித்துக் கொண்டே கேட்டாள் பெலகேயா.
“ஒரு நிமிஷம் பொறுங்கள். பயப்படாதீர்கள்” என்று கூறிவிட்டு, தனது சுருட்டைத் தலையை, இடது கையால் பின்னோக்கிக் கோதி விட்டுக்கொண்டான் பியோதர் மாசின்.
”நீங்களே பயப்படுகிறீர்களே!’ என்று அவள் கத்தினாள்.
வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள். அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள்;
”நானா?” அவன் முகம் கன்றிப் போயிற்று: வலிந்து புன்னகை செய்து கொண்டே , “ஆமாம்…….ம்…. அது போகட்டும்… நாம் இதை உடனே பாவெலுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் யாரையாவது அனுப்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வீணாகக் கவலைப் படாதீர்கள். அவர்கள் நம்மையென்ன அடிக்கவா செய்வார்கள்? அடிப்பார்களா?” என்று கூறினான்.
வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள். அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள்; அடுப்பைப் பார்த்தாள்; அடுப்புக்குக் கீழே பார்த்தாள். தண்ணீர் பீப்பாயைப் பார்த்தாள். பாவெல் அந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே வீட்டுக்கு ஓடி வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் ஏமாந்தாள். அவன் வரவில்லை. கடைசியில் அவள் நடந்து நடந்து அலுத்துப்போய் சமையலறையிலிருந்த பெஞ்சின் மீது புத்தகங்களை வைத்துவிட்டு அதன் மீது உட்கார்ந்தாள், அந்த இடத்தைவிட்டு அசைவதற்கே பயந்து போய் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பாவெலும் ஹஹோலும் வீடு திரும்பும் வரையிலும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
”உங்களுக்கு விஷயம் தெரியுமா?” என்று அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வாய்விட்டுக் கத்தினாள்.
“ஆமாம், தெரியும்” என்று புன்னகையோடு சொன்னான் பாவெல்; “நீ என்ன பயந்துவிட்டாயா?”
“ஆமாம், எனக்கு ஒரே பயம்; ஒரே பயமாயிருக்கிறது…”
”நீ பயப்படக்கூடாது. அதனால் பயனில்லை” என்று சொன்னான் ஹஹோல்.
”சரி, தேநீருக்குத் தண்ணீர்கூட வைக்கவில்லையா?’ என்று கேட்டான் பாவெல்.
“எல்லாம் இதனால் தான்” என்று கூறிக்கொண்டே தன்னிடத்தை விட்டு எழுந்து, புத்தகங்களைச் சுட்டிக்காட்டினாள் அவள்.
அவளது மகனும், ஹஹோலும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அந்தச் சிரிப்பினால் அவள் மனம் சிறிது நிம்மதி பெற்றது. பாவெல் அந்தப் புத்தகங்களில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து, புழக்கடைக்குச் சென்று ஒளித்து வைக்கப் போனான்.
”இதற்கெல்லாம் பயந்தால் ஒன்றுமே நடக்காது அம்மா” என்று கூறிக்கொண்டே தேநீர் அடுப்பை ஏற்றினான் ஹஹோல். ‘இந்த மாதிரி முட்டாள்தனத்தில் ஜனங்கள் தங்கள் நேரத்தைப் பாழடிப்பது இருக்கிறதே அது, படு மோசமான, வெட்ககரமான காரியம். இடைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும், பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக் கொண்டும் பெரிய பெரிய குண்டு மனிதர்கள் இங்கு வருவார்கள், இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள். படுக்கைக்கு கீழே அடுப்புக்குக் கீழே எல்லாம் பார்ப்பார்கள். மேலே ஒரு அட்டாலி இருந்தால் அதில் ஏறிப் பார்ப்பார்கள், நிலவறையிருந்தால் அதிலும் நுழைந்து பார்ப்பார்கள். அவர்களது மூஞ்சியிலும் தலையிலும் நூலாம்படை அப்பி அடைவதுதான் மிச்சமாயிருக்கும், ஏமாற்றத்தால் எரிந்து விழுவார்கள். திகைப்பார்கள்: வெட்கப்படுவார்கள்.
ஆனால், தாங்கள் மிகவும் மூர்க்கமாகவும் கோபமாகவும் இருப்பதாகப் பாசாங்கு செய்வார்கள். தங்களது தொழில் எவ்வளவு படுகேவலமானது என்பதை உணர்வார்கள். ஒரு தடவை இப்படித்தான் என்னுடைய சாமான்களையெல்லாம் அவர்கள் தாறுமாறாய் உலைத்தெறிந்து சீர்குலைத்துவிட்டார்கள். பிறகு அந்தப் பரிதவிப்பால், அவர்கள் இன்னது செய்வது எனத் தெரியாமல் திகைத்து வெளியேறினார்கள், போய்விட்டார்கள்.
இன்னொரு முறை அவர்கள் போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு என்னைச் சிறையில் போட்டு, நாலுமாதகாலம் உள்ளே வைத்திருந்தார்கள். சிறைக்குள் போனால் நீ வெறுமனே உட்கார்ந்து இருப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது. பிறகு சிறையிலிருக்கும்போது சம்மன்கள் வரும்; உன்னைத் தெருக்களின் வழியே சிப்பாய்கள் நடத்திச் செல்வார்கள். யாரோ ஒரு பெரிய தலைவன் உன்னை என்னென்னவோ கேள்வி கேட்பான். அந்தத் தலைவர்களில் எவனும் அப்படி ஒன்றும் புத்திசாலியல்ல. அர்த்தமற்று எது எதையோ கேட்பான். பிறகு மீண்டும் சிறைக்குக் கொண்டு போகுமாறு சிப்பாய்களுக்கு கட்டளையிட்டு உன்னை அங்குமிங்குமாக வெட்டியாக இழுத்தடிப்பார்கள்; அவர்கள் வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது மாரடித்து ஆக வேண்டுமே! கொஞ்ச நாள் போய்விட்டால், அவர்களே சலித்துப்போய் உன்னை விடுதலை செய்துவிடுவார்கள் அவ்வளவுதான்!”
“அந்திரியூஷா 1! நீங்கள் என்ன இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.
அடுப்பை மூட்டி, ஊதுவதற்காகக் குனிந்து முழங்காலிட்டிருந்த ஹஹோல் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் சிவந்து போயிருந்தது. பிறகு மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு கேட்டான்.
“எப்படிப் பேசுகிறேன்?”
“என்னவோ யாரும் உங்களைத் துன்புறுத்தாத மாதிரி!”
இடைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும், பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக் கொண்டும் பெரிய பெரிய குண்டு மனிதர்கள் இங்கு வருவார்கள், இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள். படுக்கைக்கு கீழே அடுப்புக்குக் கீழே எல்லாம் பார்ப்பார்கள்.
“இந்த உலகில் துன்புறாத ஆத்மா எங்கே அம்மா இருக்கிறது?” என்று இளம் புன்னகையோடு கூறிக்கொண்டே எழுந்து நின்று தலையை ஆட்டிக்கொண்டான். “அவர்கள் என்னை எவ்வளவோ துன்புறுத்தத்தான் செய்தார்கள். ஆனால் எனக்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. மரத்துப் போய்விட்டது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும், நாம் என்ன செய்துவிட முடியும்? அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்தினால், என் வேலைதான் கெடும்; அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலை தான். இதுதானம்மா வாழ்க்கை! சமயங்களில் மனிதர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும். எண்ணிப்பார்த்தேன், இதிலென்ன பயன்? ஒவ்வொருத்தனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான். எனவே முதல் அடியை இவனே கெடுக்க முற்படுகிறான். இப்படித்தானம்மா வாழ்க்கை இருக்கிறது!
அவனது வார்த்தைகள் இத சுகத்தோடு பிறந்து வழிந்தன. அந்தப் பேச்சினால் அவளுக்கு அன்று நடக்கவிருக்கும் சோதனையைப் பற்றிய பயம் நீங்க ஆரம்பித்தது. அவனது முழிக் கண்களில் களிப்பு குடி கொண்டது. அவன் எவ்வளவு கோரமாயிருந்தாலும், லாவகமான உடற்கட்டு கொண்டவன் என்று கண்டாள்.
தாய் பெருமூச்செறிந்தாள்.
”அந்திரியூஷா! கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்!” என்று மனதார வாழ்த்தினாள் அவள்.
ஹஹோல் தேநீர் அடுப்பருகே சென்று குந்தி உட்கார்ந்தான். ”எனக்கு நல்லருள் கொஞ்சம் கிடைத்தாலும் போதும். நான் அதை ஒன்றும் மறுதலிக்க மாட்டேன். ஆனால், அவ்வருளுக்காக நான் கை நீட்டி யாசகம் கேட்கமாட்டேன்” என்றான் ஹஹோல்.
பாவெல் புழக்கடையிலிருந்து வந்து சேர்ந்தான்.
”அவர்கள் ஒன்றும் கண்டுபிடிக்கப் போவதில்லை” என்று நம்பிக்கை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு, முகம், கை கழுவினான். பிறகு கைகளைத் துடைத்துக்கொண்டு, தாயின் பக்கமாகத் திரும்பினான்.
“நீங்கள் மாத்திரம் பயந்ததாகக் காட்டிக்கொண்டால், உடனே அவர்களுக்குச் சந்தேகம் தட்டிவிடும். இந்த வீட்டில் ஏதோ இருக்கப் போய்த்தான் நீங்கள் இப்படி நடுங்கிச் சாகிறீர்கள் என்று அவர்கள் நினைத்துவிடுவார்கள். நாம் தப்பாக எதுவும் செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. அந்த நியாயத்துக்காக, நாம் நமது ஆயுள் முழுவதுமே பாடுபடுவோம். அது ஒன்றுதான் நம் மீதுள்ள குற்றம்! பிறகு நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்?”
“நான் தைரியமாக இருப்பேன், பாஷா!” என்று அவள் உறுதி கூறினாள். ஆனால் உடனேயே அவள் மனங்குலைந்து பரிதாபமாகக் கூறினாள். “அவர்கள் சீக்கிரம் வந்து காரியத்தை முடித்துக்கொண்டு போனால் தேவலை!”
ஆனால் அவர்கள் அன்றிரவு வரவில்லை; காலையில் அந்தப் பிள்ளைகள் தன்னைக் கேலி செய்ய முனைவதற்கு முன்னால், தானே தன்னைக் கேலி செய்து சமாளித்துக்கொள்ள முயன்றாள்.
“பார்த்தாயா? பயம் வருவதற்கு முன்னாலேயே நான் பயந்து செத்தேன்” என்று கூறிக்கொண்டாள்.
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
டெங்கு, மரணம், மெளனம்.. பேச மறுக்கிற விசயமும் திசைமாறும் விவாதமும்
1. டெங்கு காய்ச்சல், மரணங்களை நாம் எந்தச்சூழலின் பின்னணியில் ஆய்வு செய்யவேண்டும்? நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கையின் பின்புலத்திலும், தனியார்மயமாக்கல், பொது சுகாதாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் வெகுசன மக்கள் நிலை மிகவும் vulnerable- ஆக இருக்கும் சூழலில் ஆய்வு செய்யப்படாமல் இருப்பதன் காரணம் என்ன?
2. கிருமி – நோய் – சிகிச்சை என்ற குறுகியல் கோட்பாட்டு சட்டகத்தின் வழியே நம்முடைய ஆய்வு முறையும் தொற்று நோய் பற்றிய புரிதலும், அதன் மீதான அணுகுமுறையும் சரியா? அந்த அணுகுமுறையால் சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளதா? தொற்று நோய்க்கான புரிதலும், அணுகுமுறையும், செயல்திட்டமும் எந்த சட்டகத்தின் வழியே இருக்கவேண்டும்?
3. உலகில் ஏதாவதொரு நாட்டில் டெங்கு நோய் தடுப்புமுறைகளுக்கு முன்மாதிரி செயல்திட்டம் உள்ளதா? அப்படி உள்ளதெனில் ஏன் அதை இந்திய அளவில் செயல்படுத்தப்படவில்லை? தமிழகத்தில் ஏன் அது நடைமுறையில் இல்லை?
4.கியூபாவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக டெங்கு தடுப்பு, ஒழிப்பு சிகிச்சை குறித்த ஆராய்ச்சியும் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்த செயல்திட்டத்தின் வெற்றியும் நம் கண்முன்னே உள்ளது. அதை நாம் ஏன் ஆய்வு செய்யாமல் இருக்கிறோம்? அப்படி ஆய்வு செய்தல் அவசியமில்லையா?
5. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் எத்தனை முறை தாக்கியுள்ளது? அந்ததந்த வருடம் என்ன வகை டெங்கு சீரோடைப் ( serotype) வந்துள்ளது என்ற வரலாற்று பூர்வமான ஆய்வுகள் உள்ளனவா? இப்போது காய்ச்சலில் அவதியுற்ற மக்களின் ரத்தமாதிரிகளில் எந்த வகை டெங்கு வைரஸ் கிருமி தாக்கியது என்றும், இறந்தவர்களின் பரிசோதனைகளில் எந்த வகை டெங்கு கிருமி தாக்கியது என்று பதிவுகளில் உள்ளதா? இந்த ரத்த பரிசோதனை முடிவுகள் நோய் தடுப்புக்கு முக்கியமானதல்லவா?
6. டெங்கு காய்ச்சல் அதிகமாகியுள்ளதென்றதும் ஒருங்கிணைந்த ஒரு குழு நோய்பரப்பியல் நிபுணர், வெப்பமண்டல் நோய் வல்லுனரான மருத்துவர், பூச்சியியல் நிபுணர், வைரஸ் ஆராய்ச்சியாளர் ஏன் நாம் அமைக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கும் நோய் தடுப்பிற்கும் அது முக்கியமானதல்லவா?
7. காய்ச்சலில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் ஊர், சமூகப் பொருளாதார நிலை, வாழும்சூழல், ஒடுக்கப்பட்ட வகுப்பினரா, ஊட்டசத்தின் அலகீட்டளவு, அவர் கிராமத்திலிருந்து மருத்துவமனை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதா? இறந்தவர்களின் குறித்த ஆய்வுகள் கிராம அளவில் வீட்டிற்கு சென்று மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான காரணம் கண்டறியப்பட்டதா? மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மேற்கூறப்பட்ட தரவுகள் தொற்று நோய் தடுப்பு செயல்திட்டம் வகுக்க மிக முக்கியமானது அது நம்மிடம் உள்ளதா?
8. டெங்கு நோயால் ரத்த அழுத்தம் குறைவாகி இறப்பவர்களுக்கான நோய் இடர் காரணிகளாக கியூப நாட்டு ஆய்வுகளில் சர்கரை நோய், ஆஸ்த்துமா தொந்தரவு குறிப்பிடப்பட்டுளது. தமிழக டெங்கு மரணங்களில் அந்த இடர்க் காரணிகள் எது என்பது நம்மிடம் உள்ளதா?
9. தடுப்பூசி தான் தீர்வு என்று பேசிவருகிறோம். டெங்கு தடுப்பூசி எல்லோருக்கும் போட முடியுமா? தடுப்பூசி போவாற்கு முன் நிபந்தனை என்ன? அதன் செயல் திறன் எந்த அளவு இருக்கும்? ஒரு முறை போட்டால் மீண்டும் டெங்கு வராதா? தடுப்பூசியினால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் வரும், அதை எப்படி தடுப்பது? சுகாதார பொருளாதாரம் குறித்து பேசுபவர்கள் ஒரு தடுப்பூசியில் எத்தனை டாலர் முதலீடு செய்தால் டெங்கு நோயினால் ஏற்படும் நோய்ச்சுமையின் அளவு எவ்வளவு குறையும் ? டெங்கு பொருளாதாரத்தில் என்ன மாற்றம் வரும் என்ற ஆய்வுகள் செய்தோமா?
10. அதிவேக தீவிர நகரமயமாக்கல், பருவ நிலை மாற்றம் , சூழல் சிதைக்கப்படுவது, கொசுக்களின் பெருக்கம் அதிகமாகியுள்ள நிலை, கொசுக்களை கொசுப்புழுக்களை இயற்கையாகவே இரையாக உட்கொள்ளும் பூச்சிகள் ஏன் அழிந்தது? எப்படி பூச்சிக் கொல்லியினால் கொசுக்களுக்கு எதிர்ப்பு சக்தியும், மற்ற பூச்சிகள் மடிந்து போவதால் ஏற்படும் சமநிலைப்பிறழ்வு டெங்குவிற்கு ஏதுவாகவுள்ளது என்ற கோணத்தில் ஆய்வு செய்ய சூழலியலாளர்கள் உயிரியல் நிபுணர்கள், புவியியல் நிபுணர்களோடு இணைந்து மருத்துவர்கள் குழு செயல்பட தயாராக உள்ளனரா?
11. கொசு பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கைகளும் டெங்கு குறித்த நோய் சுமையும் பொருளாதார சுமையும் என்ன, அதற்கு பின்னால் பயனைடைபவர்கள் யார்? பாதிக்கப்படுபவர் யார்? சுகாதரத்தைப்பற்றி பேசும் போதும், நோய் தௌப்பு குறித்து நாம் பேசும் போது வர்க்கப்புள்ளியிலிருந்து தானே நாம் பேச வேண்டும் ? அதை தவிர்த்த நாம் பேசிடமுடியுமா?
நாம் விவாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது, நம்முடைய சட்டகம் அணுகுமுறை, உலக வங்கியின் தலையீடு, கொள்கை முடிவுகள், ஆய்வு முடிவுகள், கொள்கை முடிவுகள் அடுக்கி கொண்டே போகலாம்.
இதை விவாதிப்பதற்கான அறிவை மக்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். நாம் யாருக்காக, எதை பேசப்போகிறோம், எவரின் குரலாக இருக்கப்போகிறோம் யாருக்கான வழக்குரைஞராக இருக்கப்போகிறோம் என்பது முக்கியம்.
மார்க்ஸ் பிறந்தார் – 21 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 1
உங்களுடைய முக்கியமான குணம்?
கொள்கை உறுதி.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூதுரை?
Nihil humani a me alienum puto. (மனிதனுக்குரிய அனைத்தும் எனக்கும் உரியன.) கார்ல் மார்க்சின் ஒப்புதல்களிலிருந்து(1)
மார்க்சின் உலகக் கண்ணோட்டத்தின் முக்கியமான கூறுகள் உருவாக்கமடைந்த பொழுதே அவருடைய ஆளுமையும் உருவாகிவிட்டது. அந்த ஆளுமையில் விஞ்ஞானியும் புரட்சிக்காரரும் ஒன்றாக இணைந்திருந்தனர்.
மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்காரர்; அவர் புரட்சிக்களத்தில் முதல் விஞ்ஞானி. அவர் தத்துவஞானத்திலும் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களிலும் மெய்யாகவே ஒரு காப்பேர்னிக்கப் புரட்சியை ஏற்படுத்தியவர், புரட்சிகரமான தத்துவமும் செய்முறையும் கறாரான விஞ்ஞானப் பாதைகளில் சுழலும்படி “நிர்ப்பந்தித்தவர்”.
அவர் ஒரு முன்மாதிரியான மனிதர். கடந்த காலத்தின் கலாச்சார பாரம்பரியத்தினுள் தனக்குச் சமகாலத்தவர்கள் எல்லோரையும் காட்டிலும் மிகவும் ஆழமாகக் குதித்து அதை விமர்சன ரீதியில் திருத்தியமைத்து தனக்கு முன்பிருந்த மாபெரும் தத்துவஞானிகள் எவரையும் காட்டிலும் காலத்தை விஞ்சி நின்றவர்.
மார்க்ஸ் பல்துறையிலும் வளர்ச்சி அடைந்த மனிதர் என்றபடியால் அவர் படைப்புத் துறையிலும் பல்துறை வளத்தை வெளிப்படுத்தினார். மனிதனுடைய நடவடிக்கையில் அவருடைய சிந்தனையின் தேடல் தொட்டுச் செல்லாத ஒரு துறையைக் கண்டுபிடிப்பது கடினம். மார்க்சைப் பற்றி தத்துவஞானி மற்றும் பொருளியலாளர், சமூகவியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர், புரட்சிக்காரர் மற்றும் ஸ்தாபன அமைப்பாளர், கட்டுரையாளர் மற்றும் மொழி இயல் நிபுணர், இலக்கிய மேதை மற்றும் பத்திரிகையாளர் என்று நாம் கூறுவது நியாயமானதே.
மூலதனத்தை எழுதி முடித்த பிறகு, தர்க்கவியலும் தத்துவஞானத்தின் வரலாற்றைப் பற்றியும் பல்ஸாக்கைப் பற்றிய புத்தகங்களும் கிராக்கஸ் சகோதரர்களைப் பற்றி ஒரு நாடகமும் எழுதுவதற்கு மார்க்ஸ் உத்தேசித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் கணிதத்திலும் தொழில் நுட்பவியல் வரலாற்றுத் துறையிலும் சில தற்சிந்தனையான ஆராய்ச்சிகளை விட்டுச் சென்றார்; பெளதிகம், இரசாயனம், உயிரியல், பரிணாமத் தத்துவம் ஆகியவற்றின் சாதனைகளில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.
மார்க்ஸ் தன்னுடைய கலைக்களஞ்சிய அறிவையும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருந்த திறமைகளையும் அவருக்கு உரிய முனைப்புடன் பொருளாதாரப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அர்ப்பணித்தார். அதுவே அவருடைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. தன்னுடைய துறையில் மட்டுமே நிபுணத்துவத்தைக் கொண்ட ஒரு அறிஞர் மூலதனத்தைப் போன்ற ஒரு நூலை ஒருபோதும் எழுதியிருக்க முடியாது.
அவருடைய வெளித்தோற்றம் கம்பீரமானது; மார்க்சை மிகக் குறைந்த காலமே அறிந்தவர்கள், மார்க்சியத்துடன் சம்பந்தமில்லாதவர்கள் கூட இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ருஷ்யாவைச் சேர்ந்த மிதவாத எழுத்தாளரான பா. ஆன்னென்கவ் 1846 மார்ச்சில் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் மார்க்சைச் சந்தித்தார். அவர் சுறுசுறுப்பும் உறுதியான சித்தமும் அழிக்க முடியாத நம்பிக்கையும் உடையவர், அவர் தோற்றம் மிகவும் கம்பீரமானது என்று எழுதினார். அடர்த்தியான கறுநிறத் தலைமுடியுள்ள பெருந்தலை, முடி உள்ள கரங்கள், பாதி திறந்து விடப்பட்ட கோட்டு அணிந்து அவர் எப்படித் தோன்றினாலும், என்ன செய்தாலும் அவருடைய தோற்றமே மற்றவர்களை மரியாதை செய்யத் தூண்டும் என்று ஆன்னென்கவ் எழுதினார்.
அவருடைய நடையுடை பாவனைகள் தனித் தன்மையுடன், துணிவு மற்றும் சுய நம்பிக்கையுடன் இருந்தன. மற்றவர்களுடன் பழகும் பொழுது சுதந்திர உணர்ச்சி ஓங்கியிருக்கும்; பொதுவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பழக்கங்களிலிருந்து அவை வேறுபட்டிருக்கும். அவருடைய கரகரப்பான மணிக்குரல் மக்களையும் நிகழ்வுகளையும் பற்றி அவருடைய முடிவுகளின் இறுதியான தன்மைக்கு முற்றிலும் பொருந்தியிருக்கும்.
இருபத்தெட்டு வயது நிரம்பிய மார்க்ஸ் மனிதர்களின் மனங்களை ஆட்சி புரிவதற்கும் அவர்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் தன்னுடைய திறமையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர், “போலித் தீர்க்கதரிசிகள்”, “மனிதகுல இரட்சகர்கள்” அனைவருடைய அறிவீனத்தைப் பற்றி அருவருப்படைந்தவர் என்று ஆன்னென்கவ் எழுதினார்.
ஆன்னென்கவ் கம்யூனிஸ்ட் நிருபர்கள் கமிட்டியின் கூட்டத்தை வர்ணிக்கிறார். இக்கூட்டத்தின் போது மார்க்சுக்கும் கற்பனாவாத கம்யூனிசத்தின் (அதன் கரடுமுரடான, சமத்துவவாத வடிவத்தில்) தத்துவாசிரியர்களில் ஒருவரான வில்ஹெல்ம் வைத்லிங்குக்கும் மோதல் ஏற்பட்டது. வைத்லிங் தன்னுடைய குழப்பமான, ஆனால் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரளவு ஆதரவைப் பெற்று ஜெர்மனியில் பரபரப்பை உண்டாக்கியிருந்தார்.
உங்களுடைய நடவடிக்கைகளில் எத்தகைய தத்துவக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கு உத்தேசிக்கிறீர்கள் என்று மார்க்ஸ் வைத்லிங்கிடம் கூர்மையாகக் கேட்டார். இக்கேள்விக்குப் பதிலளிக்கின்ற முறையில், புதிய பொருளாதாரத் தத்துவங்களை உருவாக்குவது என்னுடைய நோக்கம் அல்ல, தொழிலாளர்கள் தங்களுடைய நிலைமையின் பயங்கரங்களைப் புரிந்து கொள்ளச் செய்வதும் ஜனநாயக கம்யூனிஸ்ட் கம்யூன்களில் அவர்கள் சேர்ந்து வாழும்படி போதிப்பதும் என்னுடைய நோக்கம் என்று முரண்பாடான முறையில் விளக்கமளிக்கத் தொடங்கினார் வைத்லிங்.
மார்க்ஸ் கோபத்துடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு திடீரென்று வைத்லிங்கின் பேச்சில் குறுக்கிட்டார். மக்களின் நடவடிக்கையை அவசியமாக்குகின்ற உறுதியான, தேர்ந்தாராயப்பட்ட காரணங்களைச் சொல்லாமல் அவர்களைத் தூண்டுவது வெறும் ஏமாற்று வித்தையே என்றார். கறாரான விஞ்ஞானக் கருத்துக்கள் அல்லது ஆக்கபூர்வமான போதனைகள் இல்லாமல் தொழிலாளியை அறைகூவுவது நம்பிக்கை மோசடிக்குச் சமம். அது ஒரு பக்கத்தில் தீர்க்கதரிசி இருப்பதாகவும் மறுபக்கத்தில் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்ற கழுதைகள் இருப்பதாகவும் அனுமானிக்கிறது என்றார்.
வைத்லிங்கின் வெளிறிய கன்னங்களில் இரத்தம் பாய்ந்தது. அவர் தன்னுடைய சேவைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாகப் பேசத் தொடங்கினார்; வேதனைப்படுகின்ற நலிந்த மக்களின் உலகத்திலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் இருந்து கொண்டு கொள்கைகளை ஆராய்ச்சி செய்வதையும் விமர்சிப்பதையும் காட்டிலும் என்னுடைய அடக்கமான சேவை பொது இலட்சியத்துக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டது என்றார்.
மார்க்ஸ் இச்சொற்களைக் கேட்டு ஆத்திரத்துடன் மேசையின் மேல் ஓங்கிக் குத்தினார், மேசை மீது வைக்கப்பட்டிருந்த விளக்கு ஆடியது. “அறியாமை எவருக்கும் ஒருபோதும் உதவாது”(2) என்று குதித்தெழுந்து கூறினார். மார்க்சைச் சந்தித்த பலரும் அவர் மக்களையும் கொள்கைகளையும் பற்றி நயமற்ற விதத்தில் “தீர்ப்பு” வழங்குவதைப் பற்றி அதிர்ச்சி அடைந்தனர். மார்க்ஸ் பொறுமை இல்லாதவர், “சர்வாதிகாரமானவர்”, அவருடைய கருத்துக்களை ஆதரிக்காதவர்களிடம் “மெஃபிஸ்டோபிலிய” இகழ்ச்சியுடன் நடந்து கொள்பவர், இதரவை என்று அற்பவாத எழுத்தாளர்களும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களும் அடிக்கடி அவரைக் கண்டனம் செய்திருக்கிறார்கள்.
மார்க்ஸ் தன்னுடைய எதிரிகளிடம் நடத்திய வாதங்களின் போது அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார் என்பது உண்மையே. பிறவி அரசியல்வாதியும் புரட்சிக்காரருமான மார்க்ஸ் சமூக விஞ்ஞானத் துறையில் கருத்து வேறுபாடுகளை வெவ்வேறு சமூக-வர்க்க நிலைகளின் சண்டை என்று கருதினார்; கல்வித்துறையில் போலித்தனமான மரியாதையுடன் நடைபெறுகின்ற வாதங்களில் தோல்வியடைகின்ற தரப்பினர் முக மலர்ச்சியுடன் தோற்றமளிக்கின்ற கலையைப் பரிபூரணமாக்குகின்றனர்; அத்தகைய விவாதமாக அவர் நினைக்கவில்லை.
கொள்கைப் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது பல வருடங்கள் தன்னிடம் நெருங்கிப் பழகிய தோழர்களிடம் கூட மார்க்ஸ் தயவு காட்டமாட்டார். எல்லாவற்றிலும் ஒரே அளவுகோலைப் பின்பற்றிய மார்க்ஸ் மற்றவர்களுடைய நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு “மனித” நிலைக்கு ஒன்று, விஞ்ஞான, “தொழில்” நிலைக்கு ஒன்று என்று இரண்டு அளவுகோல்களைப் பயன்படுத்தவில்லை. ஒரு நபர் விஞ்ஞானத் தத்துவத்தில் அல்லது புரட்சிகர நடைமுறையில் “பிறழ்ந்து விட்டார்” என்றால் அவர் தார்மிகத் துறையிலும் தவறு செய்து விட்டதாகவே மார்க்ஸ் கருதினார், எனவே அவர் சிந்தனையாளர் அல்லது புரட்சிக்காரர் என்ற முறையில் மட்டுமல்லாமல் தனிநபர் என்ற முறையிலும் மார்க்சின் மரியாதையை இழந்தார். இதன் மறுதலையும் உண்டு ஒருவர் தனிப்பட்ட உறவுகளில் சிறிதளவு நேர்மையில்லாமல் நடந்து கொண்டாரென்ரறால் விஞ்ஞான மற்றும் அரசியல் துறைகளில் அவரை நம்பாதிருப்பதற்கு அது போதிய காரணம் என்று மார்க்ஸ் கருதினார்.
“பிளாட்டோவை நான் மதிக்கிறேன்; ஆனால் உண்மையை இன்னும் அதிகமாக மதிக்கிறேன்” என்ற மூதுரை நண்பர்களுடன் மார்க்ஸ் வைத்திருந்த உறவில் முழு விளக்கமடைந்தது. உண்மைக்குத் துரோகம் செய்த எவரையும் அவர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். விஞ்ஞானப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல் முடிவில் நட்பை முறித்துக் கொள்வதற்கும் பிறகு உக்கிரமான விவாதங்களுக்கும் இட்டுச் செல்லும்.
பு. பெளவர், அ. ருட்டென்பெர்க், அ. ரூகே, பி. புரூதோன், மி. பக்கூனின், மோ. ஹேஸ், வி. வைத்லிங், கி. ஹேர்வெக் ஆகியோரை இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.
இளைஞராகிய மார்க்ஸ் ஆன்மிக வளர்ச்சியில் வேகமாக முன்னேறியபடியால் நேற்றைய தினத்தில் அவருடன் ஒத்த கருத்துக் கொண்டிருந்த இளம் நண்பர்கள் பின்னே விடப்பட்டனர். ஆனால் விவாதங்களின் போது மார்க்சின் ஆத்திரத்தைத் தூண்டியது இதுவல்ல; அவர் தன்னுடைய அறிவையும் திறமைகளையும் நிச்சயமாக விளம்பரம் செய்பவரல்ல. விஷயம் தெரியாமல் ஏற்படுகின்ற அறிவீனத்தை அவர் எப்பொழுதுமே புரிந்து கொண்டு மன்னிக்கக் கூடியவர்; ஆனால் மற்றவர்களுக்குப் போதிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் உரிமை கொண்டாடிய “மேதாவிகளின்” அறிவீனத்தை அவர் மன்னிக்க மாட்டார். இச்சந்தர்ப்பத்தில் அவர்களிடம் அறியாமை தனிப்பட்ட பலவீனமாக இருக்கவில்லை, அது ஒரு சமூக ஆபத்தாக மாறிவிட்டது. மார்க்ஸ் அதை வன்மையாகக் கண்டனம் செய்வார்.
நபர்களை மதிப்பிடுவதிலும் மார்க்ஸ் அநேகமாகத் தவறு செய்ததில்லை. இந்த நபர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வகிக்கின்ற சமூக நிலையை அவர் தெளிவாகப் பார்த்தது மட்டுமல்லாமல், அது எதிர்காலத்தில் அவரை எங்கே இட்டுச் செல்லும் என்பதையும் அவர் முன்னறியக் கூடியவர். அவருடைய தாக்குதல்கள் முதலில் நியாயமில்லாதவை என்று தோன்றும், ஆனால் முடிவில் மார்க்ஸ் கூறியபடியே சரியாக நடக்கும்.
புரூனோ பெளவர்
“சிந்தனையில்” பயங்கரவாதியான புரூனோ பெளவர் பிற்காலத்தில் பிற்போக்குவாத Kreuz-Zeitung இல் (“சிலுவைப் பத்திரிகை”) வேலை செய்யத் தொடங்கினார். அரசியல் தியாகியாக வாழ்க்கையைத் தொடங்கிய அடோல்ப் ருட் டென்பெர்க் Preussischer Staats-Anzeiger இன் (“பிரஷ்ய அரசுச் செய்தித்தாள்”) ஆசிரியராகின்ற அளவுக்குத் தரமிழந்தார். 1840க்களின் ஆரம்பத்தில் தன்னுடைய பிரசுரங்களில் அரசியல் போராட்டத்துக்கு அறைகூவிய அர்னோல்டு ரூகே தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பிஸ்மார்க்கின் ஆதரவாளரானார்.
வைத்லிங்கையும் புரூதோனேயும் பொறுத்தமட்டில், அவர்கள் ஒரே விதமான புகழையும் ஒரே விதமான முடிவையும் அடையும்படி விதிக்கப்பட்டிருந்தனர் என்று மேரிங் எழுதியிருப்பது முற்றிலும் சரியானதே. அவர்களுடைய பணிகளின் தொடக்கத்தில் வேறு எவரையும் காட்டிலும் மார்க்ஸ்தான் அவர்களை அதிகமாகப் பாராட்டியவர். தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சுய உணர்வுக்கு அவர்கள் உதாரணம் என்று மார்க்ஸ் கருதினார். ஆனால் ஜெர்மானியக் கைவினைஞரின் குறுகிய வரையறைகளுக்கு அப்பால் வைத்லிங்கனால் முன்னேற முடியவில்லை. அது போல பிரெஞ்சுக் குட்டி முதலாளியின் குறுகிய வரையறைகளுக்கு அப்பால் புரூதோனால் முன்னேற முடியவில்லை. அவர்கள் வரலாற்று வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள், மார்க்சிடமிருந்து பிரிந்தார்கள். அவர்கள் ஆரம்பித்த காரியத்தை மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் பூர்த்தி செய்தார்.
மார்க்ஸ் வைத்லிங்குடன் முறித்துக் கொண்ட பிறகும்-தன்னுடைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதிலும் – தொடர்ந்து அவருக்குப் பண உதவி செய்து கொண்டிருந்தார். “நீங்கள் அவரிடம் பகையுணர்ச்சி கொண்டிருந்தபோதிலும் உங்கள் பணப்பையில் ஏதாவது இருக்கின்ற வரை அதை மூடுகின்ற அளவுக்குப் போக மாட்டீர்கள் என்பது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது தான்”(3) என்று ஹேஸ் இதனைப் பற்றி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்.
தன்னுடைய உள்ளுணர்ச்சி தன்னை ஏமாற்றிவிட்டதாக மார்க்ஸ் ஒரு சமயத்தில் நினைத்தார். பக்கூனின் மீது அவருக்கு நம்பிக்கையில்லா விட்டாலும் பக்கூனினுடைய புரட்சிகர நடவடிக்கை அவருடைய சந்தேகங்களை நிரூபிக்கவில்லை,. Neue Rheinische Zeitung இன் (“புதிய ரைன் பத்திரிகை”) ஆசிரியராக இருந்த பொழுது பக்கூனினுக்கு எதிர்ப்பான நடவடிக்கைகளைச் செய்ததைப் பற்றி மார்க்ஸ் உடனடியாக வருந்தினார். அவர் பக்கூனினுடன் சமாதானம் செய்து கொண்டார். “அவருக்காதரவாகப் பேசினார்.”(4)
சில வருடங்கள் கழிந்தன. முதலாவது அகிலத்தில் பக்கூனின் குறுங்குழுவாத நிலையை மேற்கொண்ட பொழுது தன் உள்ளுணர்ச்சி தன்னை முற்றிலும் ஏமாற்றிவிடவில்லை என்பதை மார்க்ஸ் கண்டார்.
“நான் மிகச் சிலருடன் மட்டுமே நட்புக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்களிடம் உறுதியான நட்பு வைத்திருக்கிறேன்”(5) என்று மார்க்ஸ் ஒரு சமயத்தில் கூறினார். ஆம், அவருக்கு நண்பர்கள், உண்மையான நண்பர்கள் மிகவும் சிலரே. ஆனால் அவர்கள் எவ்வளவு தூய்மையானவர்கள், பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கு எவ்வளவு விசுவாசமானவர்கள்! வில்ஹெல்ம் வோல்ஃப், யோசிஃப் வெய்ட மையர், வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட், கியோர்கு வீர்த்.
வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட்
மார்க்ஸ் மிக அதிகமான அன்பும் நட்புணர்ச்சியும் கொண்டவர், அதனால்தான் அவர் தவறு செய்தவர்களை அதிகமாக வெறுத்தார். அவருடைய வாழ்க்கையில் இரு நபர்கள் மிகவும் அசாதாரணமான பாத்திரத்தை வகித்தனர். ஜென்னியின் காதலும் எங்கெல்சின் நட்பும் வாழ்க்கை மார்க்சுக்கு அளித்த மிகவும் சிறந்த கொடைகளாகும்.
ஜென்னி அவருடைய மனைவியாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அவருடைய புத்தகங்களின் முதல் விமர்சகராகவும் இருந்தாள். மார்க்ஸ் (அவருடைய நண்பர் ஹேய்னெயைப் போல) அவளுடைய நகைச்சுவையை, நயமான கலையுணர்ச்சியை, பரந்த அறிவை (சில துறைகளில் அவருடைய அறிவுக்குச் சிறிதும் குறைவில்லாதது) மிகவும் மதித்தார். அவர் ஜென்னியின் இலக்கியத் திறனை வியந்து போற்றினார்; கடிதம் எழுதுகின்ற கலையில் அவள் ஒப்பற்ற திறமை உடையவள் என்று கருதினார்.
மார்க்ஸ் அற்புதமான உரைநடை எழுதக் கூடியவர். அவருடைய உரைநடையில் “டாசிட்டசின் கடும் ஆவேசமும் ஜூவெனாலின் ஆபத்தான அங்கதமும் தாந்தேயின் புனிதமான சீற்றமும் கலந்திருக்கும்”(6) என்று வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் எழுதினார். எனினும் மார்க்ஸ் ஜென்னியின் உதவியுடன் தன்னுடைய எழுத்து வன்மையைப் பூரணமாக்கிக் கொண்டார்.
1844 ஜூன் மாதத்தில் ஜென்னி மார்க்சுக்கு எழுதிய மிகவும் சுவாரசியமான கடிதம் இன்னும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஜென்னி அக்கடிதத்தில் மார்க்சின் நடையை விமர்சித்துவிட்டு அவருக்கு அறிவுரை கூறுகிறாள்:
“…மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் இலேசாகவும் எழுதுங்கள். அன்பே! உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது ஓட விடுங்கள், சில சமயங்களில் தடுக்கி விழுந்து விடுமானால், அதோடு சேர்த்து வாக்கியமும் சிதைவடைந்தாலும் கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப் போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப் போல அவை ‘சாகும், ஆனால் சரணடைய மாட்டா’ (’elle meure, mais elle ne se rende pas’).
உடை ஏதோ சில சந்தர்ப்பங்களில் இறுக்கமாக இருக்கவே பொத்தான் மாட்டப்படாமல் தளர்வாகத் தொங்கினால் அது முக்கியமானதா? பிரெஞ்சுப் படைவீரர்களின் இயல்பான, தொய்வான தோற்றமே அவர்களுக்கு அதிகமான சிறப்பைத் தருகிறது. போலி உயரமுள்ள நமது பிரஷ்யர்களை நினைத்தால், அது உங்களுக்கு நடுக்கத்தைத் தரவில்லையா? பெல்டுகளைத் தளர்த்துங்கள், கழுத்துப்பட்டையைத் தளர்த்துங்கள், தலைக் கவசத்தையும் அகற்றுங்கள்; முடிவெச்சங்கள் இயல்பாகச் செல்லட்டும், சொற்கள் எப்படித் தோன்றுகின்றனவோ அப்படியே எழுதுங்கள். போர்க்களத்தில் ராணுவம் கறாரான ஒழுங்குமுறைப்படியே அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லையே. உங்களுடைய துருப்புகள்தான் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றனவே, அப்படித்தானே? தளகர்த்தருக்கு நல்வாழ்த்துக்கள்….”(7)
மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை; அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.
1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மனித உணர்ச்சிக்குச் சிறந்த ஆவணம். அதில் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.
“என் அன்பிற்கினியவளே,
“நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது…. எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன். ஆம், அந்த வெனிஸ் மூர் (ஒதேல்லோ. – ப-ர்.) எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே in seculum Seculorum (எக்காலத்திற்கும்- ப-ர்.) நீடிப்பார்கள்.
“…..ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் அதற்குச் (என் காதலுக்குச் – ப-ர்.) செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும் செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது; அதில் என்னுடைய ஆன்மாவின் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவுவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல, மொலிஷோட்டின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
“அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே….
“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை (மார்க்சின் மகன் ஏட்கார் இறந்து விட்டதைப் பற்றிய குறிப்பு – ப-ர்.) நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’ – அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிராமணர்களுக்கும் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”(7)
குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படி இருந்தபோதிலும் மார்க்சின் விஞ்ஞான மற்றும் அரசியல் பணியில் ஜென்னி அலுப்படையாமல் உதவி செய்தாள். பல வருட காலம் ஜென்னியே மார்க்சின் காரியதரிசிப் பொறுப்பில் பணியாற்றினாள், அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தாள், கட்சிப் பணிகளில் அவருடைய “தகவலறிவிப்பாளராக” இருந்தாள். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களுடன் அவள் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள்; அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அவள் அக்கறை காட்டி வந்தாள். அவள் தன்னைக் கட்சியின் ஊழியன் என்று பெருமையாகக் கருதினாள். ஜென்னி லஸ்ஸாலுக்கு எழுதிய கடிதத்தில் நகைச்சுவை மிளிர்கிறது:
“அவசரமாக இந்தச் சிறு குறிப்பை எழுதுவதற்காக மன்னியுங்கள். என் தலையில் எவ்வளவோ கிடக்கிறது. செய்ய வேண்டிய கைவேலையும் ஏராளம். மேலும் இன்று நகரத்திற்கும் போக வேண்டும். எனவே இரண்டு அல்லது மூன்று மணிநேரம் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருப்பேன். நான் கட்சியின் இயங்கும் பகுதியில் இன்னும் இருக்கிறேன், அது முன்னே செல்கின்ற, மைல் கணக்கில் நடக்கின்ற கட்சி. மற்றவை எப்படி இருந்தாலும் நான் நல்ல கட்சிக்காரி அல்லது ஓடிக் கொண்டிருப்பவள். உங்களுக்குப் பிடித்தமானபடி வைத்துக் கொள்ளுங்கள்.”(8)
குறிப்புகள்;
(1)Reminiscences of Marx and Engels, p. 266.
(2)Ibid., p. 272.
(3)Franz Mehring, Karl Marx, The Story of his life, covici, Friede Publishers, New york, 1935, p. 145.
(4)Marx, Engles, Werke, Bd, 30, S. 498.
(5) Ibid., p. 488.
(6) Reminiscences of Marx and Engels, p. 103.
(7) Marx, Engles, Collected Works, Vol. 3, p. 579.
(8) Marx, Engles, Werke, Bd, 29, S. 532-536.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம்இடமாற்றம்செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
தூத்துக்குடி மாவட்டம், பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசம்மாள் (வயது 50) அவர்கள் அக்-22, அன்று மாலை புற்றுநோயால் மரணமடைந்தார். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றுதான் பண்டாரம்பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் புற்றுநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பப்பை பிரச்சினை என பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இக்கிராம மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சூழலில்தான் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கணேசம்மாள் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் பெயர் ராமர். நோயின் கடுமையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 23, 2018 அன்று வினவு செய்தியாளர்களுக்கு அவருடைய குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் :
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது மற்றும் போதிய வகுப்பறைகள் இல்லாததைக் கண்டித்து வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்த கல்லூரி முதல்வர் மாணவர்களை கலைந்து செல்லுமாறு பேசிப் பார்த்தார்.
1 of 4
பொதுவில் இதுபோன்று மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தும் பொழுதெல்லாம் மாணவர்களை பீதியூட்டுவது அல்லது அப்போதைக்கு வெற்று வாக்குறுதிகளை அள்ளிவீசி கூட்டத்தை கலைப்பது என்ற பொதுப்போக்கை கல்லூரி நிர்வாகங்கள் வாடிக்கையாக கடைபிடித்து வருகின்றன.
இம்முறை, கல்லூரி நிர்வாகத்தின் நைச்சியமான பேச்சுக்கு மாணவர்கள் உடன்படவில்லை. தங்கள் கோரிக்கையில் உறுதியாக நின்றனர். பின்னர், போராட்டக்களத்திலிருந்த மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்து தனது தலைமையில் ஆசோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார், கல்லூரி முதல்வர். அக்கூட்டத்தில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான பருண்மையான முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. போதிய ஆசிரியர்களை ஒதுக்கியதோடு, பாடவேளைக்கான கால அட்டவணையும் வகுக்கப்பட்டது. இதனையடுத்தே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தகவல்:
கடலூர்.
தொடர்புக்கு: 97888 08110.
*****
மணல் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்: மிராளூர் – சி. சாத்தமங்கலம் மக்கள் அறைகூவல்:
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மிராளூர் – வெள்ளாற்றில் சுரங்கம் வெட்டி எடப்பாடி அரசு தொடர்ந்து மணல் கொள்ளை!
மணல் கொள்ளையால் முக்கொம்பு மேலணை உடைந்தது போல் சேத்தியாத் தோப்பு அணை உடையும் ஆபத்து; கரைகள் உடைந்து கிராமங்கள் ஆற்றில் அழியும் பேராபத்து!
தொடர்மணல் கொள்ளை மூலம் கடல்நீரை உட்புகச் செய்து மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் சதித் திட்டம்!
உழைக்கும் மக்களே !
கொள்ளையர்களிடம் கெஞ்சிப் பலனில்லை.
அதிகாரத்தைக் கையிலெடுப்போம் !
மணல் கொள்ளைக்கும் முடிவு கட்டுவோம் !
ஒருங்கிணைப்பு: மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம் : 81108 15963
தொழிலாளர் குடியிருப்பின் கோடியிலிருந்த அந்தச் சின்னஞ்சிறிய வீடு, ஊர் ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் சுவர்களை எத்தனையோ சந்தேகக் கண்கள் ஏற்கெனவே கூர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தன. அந்த வீட்டைப் பற்றி எண்ணற்ற வதந்திகள் இறக்கை முளைத்து அதிவேகமாகப் பறந்து பரவின. மாக்சிம் கார்க்கி வீட்டின் சுவர்களுக்குள்ளே ஏதோ ஒரு பரம ரகசியம் பதுங்கிக் கிடப்பதாகவும், அதை விரட்டியடிக்க வேண்டும் எனவும் ஜனங்கள் எண்ணிக் கொண்டார்கள். இராத்திரி வேளைகளில் அவர்கள் ஜன்னலின் வழியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்கள்; சமயங்களில் ஜன்னல் கண்ணாடியைக் கையால் தட்டிவிட்டு உடனே பயத்தால் விழுந்தடித்துக் கொண்டு ஓடிச் சென்றார்கள்.
ஒரு நாள் பெலகேயாவை பென்சோவ் என்ற சாராயக் கடைக்காரன் வழியில் சந்தித்தான். அவன் ஒரு அழகான கிழவன், ஊதா நிறமான தடித்த அரைக்கோட்டும், தொள தொளத்துச் சிவந்த கழுத்துச் சதையைச் சுற்றி, கரிய நிற பட்டுக் கச்சையும் அணிந்திருப்பான்; பளபளக்கும் கூரிய மூக்கின் மீது ஆமை ஓட்டால் ஆன ஒரு மூக்குக் கண்ணாடி தரித்திருப்பான். எனவே அவனுக்கு ஊரார் ‘எலும்புக் கண்ணன்’ என்று பட்டப் பெயர் வைத்திருந்தார்கள்.
மூச்சு விடக்கூட முனையாது, பதிலுக்காகவும் காத்திராது, அவன் பெலகேயாவை நோக்கி சரமாரியாக, உணர்ச்சியற்று உடைந்து போன வார்த்தைகளைப் பொழிய ஆரம்பித்தான்;
இந்தக் காலத்து இளவட்டப்பிள்ளைகள் தேவாலயத்துக்கும் போவதில்லை; நாலு பேர் கூடும் இடத்துக்கும் வருவதில்லை; எங்கேயோ நழுவி ஓடிப்போய் இருட்டிலே கூடித் தமக்குள்ளாக என்னென்ன இரகசியத்தையோ குசுகுசுத்துப் பேசிக்கொள்கிறார்கள். எதற்காக இரகசியமாய்ப் பேச வேண்டும், என்பதுதான் எனக்குத் தெரியவில்லை .
”பெலகேயா நீலவ்னா எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகன் எப்படி இருக்கிறான்? அவன் கல்யாணம் ஏதும் பண்ணப் போகிறானா, இல்லையா? அவனுக்கு இதுதான் சரியான பருவம், அவ்வளவுதான் நான் சொல்வேன். பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் ஆகிறதோ அவ்வளவுக்கு பெற்றோர்களுக்குச் சிரமம் குறையும். புளிக் காடியிலே கிடக்கும் காளானைப் போல், ஒரு மனிதன் குடும்பஸ்தன் ஆனால் தான் அவனது உடலும் உள்ளமும் நல்ல நிலைமை அடையும். நானாயிருந்தால், இதற்குள் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்திருப்பேன். தங்கள் சொந்தப் புத்தியால் வாழவேண்டும் என்று ஜனங்கள் விரும்புகிற இந்த நாளிலே, மனிதப்பிறவி மீது கடுமையான கண்காணிப்பு தேவை. எல்லாரும் அவரவர் நினைத்தபடி வாழத் தொடங்கிவிட்டனர். என்னென்னவோ நடக்கிறது. எதை எதையோ தன்னிச்சையாய் செய்கிறதும் நாம் கண்டித்து வைக்க வேண்டிய சமாச்சாரம்தான்.
இந்தக் காலத்து இளவட்டப்பிள்ளைகள் தேவாலயத்துக்கும் போவதில்லை; நாலு பேர் கூடும் இடத்துக்கும் வருவதில்லை; எங்கேயோ நழுவி ஓடிப்போய் இருட்டிலே கூடித் தமக்குள்ளாக என்னென்ன இரகசியத்தையோ குசுகுசுத்துப் பேசிக்கொள்கிறார்கள். எதற்காக இரகசியமாய்ப் பேச வேண்டும், என்பதுதான் எனக்குத் தெரியவில்லை . அவர்கள் ஏன் மனிதர்களைக் கண்டு வெறுத்து ஒதுங்குகிறார்கள்? ஜனங்களின் முன்னால், உதாரணமாக, சாராயக் கடையில் கூட வெளியிட முடியாத இரகசியம் அப்படி என்ன இருக்கிறது! இரகசியங்களம்மா! புனித தேவாலயம் ஒன்றுதான் இரகசியங்களுக்கே உரிய இடம். மற்றபடி, மற்ற இரகசியங்களெல்லாம் மூலையிருட்டிலே நடப்பவை; சபல புத்தி படைத்தவர்களின் இரகசியங்கள்தான். சரி போகட்டும் நீங்கள் நலமாயிருங்கள், பெலகேயா நீலவ்னா!”
அவன் தனது தொப்பியை அநாயாசமாகத் தூக்கிக் காற்றில் வீசிக்கொண்டே சென்றுவிட்டான்; தாய் திகைப்புற்று நின்றாள்.
இன்னொரு முறை, விலாசாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரியான மரியா கோர்சுனவா தாயைச் சந்தித்தாள். மரியா ஒரு விதவை; அவளது கணவன் ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. தொழிற்சாலை வாசலில் சாப்பாடு விற்று வாழ்பவள். கடைவீதியில் தாயைக் கண்டு அவள் சொன்னாள்.
“பெலகேயா. உன் மகன்மீது ஒரு கண் வைத்திரு!”
“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.
“எங்கு பார்த்தாலும் ஒரே வதந்தி!” என்று இரகசியமாகச் சொன்னாள் மரியா, “மோசமான வதந்தியம்மா. மோசமான வதந்தி! அவன் என்னவோ கிலிஸ்தியைப் (1) போல் ஒரு இரகசியச் சங்கம் சேர்க்கிறானாம். வெட்டுக்குத்துத்தான் நடக்கப் போகிறது……..”
“போதும். நிறுத்து, உளறாதே, மரியா?”
“நான் ஒன்றும் உளறவில்லை . நெருப்பில்லாமல் புகையாது!” என்றாள் மரியா. “தாய் அந்தப் பேச்சையெல்லாம் தன் மகனிடம் போய்ச் சொன்னாள்; பாவெலோ தோளைக் குலுக்கிக் கொண்டதோடு சரி. ஆனால் ஹஹோலோ வழக்கம் போலவே மெதுவாய்ச் சிரித்துக்கொண்டான்.
“இந்த யுவதிகளுக்கெல்லாம் ஒரே சங்கடம். நீங்களோ அழகான வாலிபர்கள், எவளும் உங்களை விரும்புவாள்; நீங்கள் நன்றாகவும் உழைக்கிறீர்கள். குடிப்பதுமில்லை. ஆனால் நீங்கள் அவர்களைக் கொஞ்சங்கூடக் கவனிப்பதே இல்லை. எனவே நகரிலிருந்து உங்களைப் பார்க்க வரும் பெண்கள் சந்தேகத்துக்கு இடம் தரும் நபர்கள்தான் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்……..” என்றாள் தாய்.
“ஓகோ, அப்படியா?” என்று எரிச்சலோடு சொன்னான் பாவெல்.
“சாக்கடையில் நாற்றம் அடிக்கத்தான் செய்யும்” என்று பெரு மூச்சுடன் சொன்னான் ஹஹோல் “ஏனம்மா, அந்த முட்டாள் குட்டிகளுக்கு, மண வாழ்க்கையென்றால் இன்னதென்று நீங்கள் சொல்லித் தரக்கூடாதோ? சொல்லியிருந்தால் அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் முட்டி மோதி போட்டி போட மாட்டார்களே!”
“மோசமான வதந்தியம்மா. மோசமான வதந்தி! அவன் என்னவோ கிலிஸ்தியைப் (1) போல் ஒரு இரகசியச் சங்கம் சேர்க்கிறானாம். வெட்டுக்குத்துத்தான் நடக்கப் போகிறது……..”
“நானா? அவர்களுக்கே எல்லாம் தெரியும். எல்லாவற்றையும் தான் பார்க்கிறார்களே, ஆமாம், அவர்களுக்குத்தான் போக்கிடம் ஏது?” என்றாள் தாய்.
“தெரிந்துகொண்டால்தான், அதற்கு ஒரு வழியையும் கண்டுபிடித்துக் கொள்வார்களே” என்றான் பாவெல்.
தாய் அவனது அசைவற்ற முகத்தைப் பார்த்தாள்.
”அவர்களுக்கும் நீங்கள் ஏன் கற்றுக் கொடுக்கக்கூடாது? அவர்களில் கெட்டிக்காரியாகப் பார்த்து அழைத்து வந்து கற்றுக்கொடுங்களேன்” என்றாள் தாய்.
”அது சங்கடமான வேலை.”
“ஏன் முயன்று பார்த்தால் என்ன?” என்றான் ஹஹோல்.
பாவெல் பதில் சொல்வதற்கு முன் சிறிது மௌனம் சாதித்தான்.
”அவர்களும் வந்துவிட்டால், பிறகு ஜோடி சேர்த்துக்கொண்டு போய்விடுவார்கள்; சிலர் கல்யாணமும் பண்ணிக்கொள்வார்கள்; அப்புறம் அத்துடன் எல்லாம் சமாப்திதான்!”
தாய் சிந்தனையில் ஆழ்ந்தாள். பாவெலின் சந்நியாச வைராக்கியத்தைக் கண்டு அவளது மனம் கலக்கமுற்றது. ஒவ்வொருவரும், ஹஹோலைப் போன்ற மூத்த தோழர்கள் கூட, பாவெலின் வார்த்தையை மதித்து நடந்தார்கள்; அவனைக் கண்டு அவர்களெல்லாம் பயப்படுவதாகவும், அவனது கண்டிப்பு குணத்தால் அவனை யாருமே விரும்பவில்லையெனவும் அவளுக்குத் தோன்றியது.
ஒரு நாள் இரவு அவள் படுக்கைக்குப் போன பிறகும், ஹஹோலும் பாவெலும் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அவர்கள் இருவரும் அடுத்த அறையில் மங்கிய குரலில் ஏதோ பேசிக்கொண்டார்கள்; எனினும் அந்தப் பேச்சு அவளது காதிலும் விழுந்தது.
“அந்த நதாஷாவை என் மனத்துக்குப் பிடித்திருக்கிறது” என்று திடீரெனச் சொன்னான் ஹஹோல்.
“தெரியும்” என்று சிறிது கழித்துச் சொன்னான் பாவெல்.
ஹஹோல் இடத்தைவிட்டு எழுந்து அறைக்குள் நடமாடும் காலடியோசையை அவளால் கேட்க முடிந்தது; அவன் வழக்கம் போலவே சோக இசையை மெதுவாகச் சீட்டியடிக்க ஆரம்பித்தான். மீண்டும் அவன் சொன்னான்.
“இதை அவள் கவனிக்கிறாளா? என்று சந்தேகிக்கிறேன்.”
பாவெல் பதில் பேசவில்லை.
“சரி, நீ என்ன நினைக்கிறாய்?” என்று மெதுவாகக் கேட்டான் ஹஹோல்.
“கவனித்திருக்கிறாள். அதனால் தான் இங்கு வருவதையே அவள் நிறுத்திவிட்டாள்” என்றான் பாவெல்.
ஹஹோல் தனது காலைத் தரையில் அழுத்தித் தேய்த்துக் கொண்டான். பிறகு மீண்டும் அவனது சீட்டிக்குரல் அறைக்குள் எதிரொலித்தது.
நல்ல ஜோடிதான்! அவளோ படிப்பாளி, நீயோ ஒரு தொழிலாளி. குழந்தைகள் பிறக்கும்; நீதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நீ எவ்வளவு உழைக்க வேண்டும் தெரியுமா?
”இதை அவளிடம் நான் சொல்லிவிட்டால் என்ன?” என்று கேட்டான் அவன்.
”எதை ?”
“அவளிடம் நான்…” என்று மெதுவாக ஆரம்பித்தான் ஹஹோல்.
”எதற்காகச் சொல்ல வேண்டும்”
ஹஹோல் நடக்காமல் நின்றுவிட்டதைத் தாய் உணர்ந்து கொண்டாள். அவன் சிரித்துக்கொள்வது போல் அவளுக்குத் தோன்றியது.
”நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அதை அவளிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்! இல்லையேல் பயனென்ன?”
பாவெல் தன் கையிலிருந்த புத்தகத்தைப் பட்டென்று மூடினான்.
“என்ன பயன் உனக்கு வேண்டும்?” என்று கேட்டான் பாவெல்.
இருவரும் வெகு நேரம் வரையிலும் வாயே திறக்கவில்லை.
”சரி…” என்று எதையோ கேட்க முனைந்தான் ஹஹோல்.
”அந்திரேய்! உனக்கு என்ன வேண்டும் என்பதைப்பற்றி முதலில் நீயே தெளிவோடு இரு” என்று மெதுவாக ஆரம்பித்தான் பாவெல்.
“அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்றே வைத்துக்கொள் – அதுவே எனக்கு சந்தேகம்தான். ஒரு பேச்சுக்கு அப்படி வைத்துக்கொள் – பிறகு நீங்கள் மணம் செய்து கொள்வீர்கள். நல்ல ஜோடிதான்! அவளோ படிப்பாளி, நீயோ ஒரு தொழிலாளி. குழந்தைகள் பிறக்கும்; நீதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நீ எவ்வளவு உழைக்க வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக் கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப் போய்விடுவீர்கள்.”
அந்த அறையில் அமைதி நிலவியது. பிறகு பாவெலே மீண்டும் சொன்னான்: இப்போது அவனது குரலில் அத்தனை வேகம் இல்லை.
“அந்திரேய்! இதையெல்லாம் நீ மறந்துவிடுவதே நல்லது. அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிடாதே”
மீண்டும் மௌனம். சுவரிலிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் மட்டும் அசைந்து அசைந்து ஒவ்வொரு கணத்தையும் அளந்து சொல்லிக்கொண்டிருந்தது.
“பாதி மனம் காதலிக்கிறது, பாதி மனம் பகைக்கிறது. இதுவும் ஒரு மனமா?” என்று சொன்னான் ஹஹோல்.
புத்தகத்தின் தாள்கள் சலசலத்தன. பாவெல் மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். அவனது தாய் கண்களை மூடியவாறே கிடந்தாள். மூச்சு விடக்கூடப் பயந்தாள். அவள் ஹஹோலுக்காக இதய பூர்வமாய் அனுதாபப்பட்டாள். ஆனால் தன் மகனுக்காக இன்னும் அதிகமாக அனுதாபப்பட்டாள்.
“அட, என் அருமைக் கண்ணே …” என்று யோசித்தாள்.
“அப்படியென்றால் நான் ஒன்றுமே சொல்லக்கூடாது என்றுதானே நினைக்கிறாய்?’ என்று திடீரெனக் கேட்டான் ஹஹோல்.
”அதுதான் நல்லது” என்று அமைதியாகச் சொன்னான் பாவெல்.
”சரி, அப்படியே செய்வோம்” என்றான் ஹஹோல். சில விநாடிகள் கழித்து அவன் மெதுவாக, துக்கம் தோய்ந்த குரலில் பேசினான். ”பாவெல், உனக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டால், அப்போது தெரியும் அந்தச் சங்கடம் !”
”இப்பொழுதே , சங்கடமாய்த் தானிருக்கிறது!’
காற்று அந்த வீட்டின் சுவர்களில் மோதிச் சென்றது; கடிகாரத்தின் பெண்டுலம் காலக் கணக்கைக் கூறிட்டுச் சொல்லிக்கொண்டேயிருந்தது,
“இது ஒன்றும் விளையாட்டல்ல —— இது…” என்று மெதுவாகச் சொன்னான் ஹஹோல்.
தாய் தனது முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு அரவமில்லாது அழுதாள்.
காலையில் எழுந்தவுடன் தாய் அந்திரேயைப் பார்த்தாள். அவனது உருவம் குறுகிவிட்டது போலத் தோன்றியது, அவன் மீது அவளுக்கு அதிகப் பிரியம் உண்டாயிற்று. அவளது மகனோ மெலிந்து நெட்டுவிட்டுப் போனது போலிருந்தான், எப்போதும் போலவே அவன் மௌனமாயிருந்தான். இதுவரையிலும் அவள் ஹஹோலை அந்திரேய் அனிசிமோவிச் என்றுதான் அழைத்து வந்தாள். அன்றோ அவள் தன்னையுமறியாது கூறினாள்.
”அடுத்த சம்பளத் தேதியில் நான் புதுப்பூட்சுகள் வாங்கிவிடுவேன்” என்று சிரித்துக்கொண்டு பதில் சொன்னான் அந்திரேய். பிறகு தனது வாட்டசாட்டமான கரங்களை அவளது தோளின் மீது போட்டுக்கொண்டு பேசினான்: ” நீங்கள்தான் எனது உண்மையான தாயாக, இருக்கலாம். ஆனால், நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். நான் மிகவும் கோரமாயிருக்கிறேன். இல்லையா?”
அவள் பதில் சொல்லாமல் அவனைச் செல்லமாக அறைந்தாள். அவள் எத்தனையெத்தனை அன்பு மொழிகளையோ கூற நினைத்தாள், எனினும் அவளது இதயம் பரிவுணர்ச்சியினால் பரிதவித்தது: வார்த்தைகள் அவளது உதட்டைவிட்டு வெளிவரவே இல்லை.
(தொடரும்)
அடிக்குறிப்புகள்: (1) கிலிஸ்தி – ருஷ்ய பாஷையில் சவுக்கு என அர்த்தம். இந்தப் பெயரை ஒரு வகையான மதவெறியர்களுக்குச் சூட்டியிருந்தார்கள். – (மொ-ர்.)
(2) அந்தியூஷா – அந்திரேயைச் செல்லமாக அழைப்பது. – (மொ-ர்.)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) பாலித் தீவுகளில் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்திய கலந்துரையாடல் குறிப்பான தீர்வுகள் எதையும் எட்டாமல் புலம்பல்களோடு முடிவுக்கு வந்தது. எனினும், சர்வதேச நிதித்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தின் நிறைவில் நடந்து வரும் உலக வர்த்தகச் சண்டைகளின் விளைவாக கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அதை எதிர் கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் பேசப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே உலகளவிலான பங்குச் சந்தைகள் படு வேகமாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் “வர்த்தகப் போர்” ஒரு புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது. இதன் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் – குறிப்பாக வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (Non Banking Finance) பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. இந்திய பங்குச் சந்தையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சிக்கு ஐ.எல்.எப்.எஸ். (IL&FS – Infrastructure Leasing and Finance Services) நிறுவனத்தின் வீழ்ச்சி கட்டியம் கூறியது.
ஏறத்தாழ அமெரிகக் சப்பிரைம் நெருக்கடியைத் துவக்கி வைத்த லேமென் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியின் இந்திய வடிவம் தான் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தின் வீழ்ச்சி என முதலாளிய பொருளாதாரப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிக்கட்டுமானப் பணிகளுக்கான நிதி உதவியை வழங்கியுள்ளது ஐ.எல்.எப்.எஸ். இந்நிறுவனத்தில் ஸ்தாபன முதலீட்டார்களாக (Institutional Investors) எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிதிநிறுவனங்கள் உள்ளன. அதிகபட்சமாக எல்.ஐ.சிக்கு ஐ.எல்.எப்.எஸ்-ல் 25.34 சதவீத பங்குகள் சொந்தமாக உள்ளன.
ஐ.எல்.எப்.எஸ் நிறுவனத்திற்கு நேரடியாக 24 துணை நிறுவனங்களும், 135 மறைமுக துணை நிறுவனங்களும் உள்ளன. இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக துணை நிறுவனங்கள், கூட்டுப்பங்கு நிறுவனங்கள் என அனைத்தும் சேர்த்து மொத்தமாக சுமார் 91 ஆயிரம் கோடி கடன் உள்ளது – இந்தக் கடன்கள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவை. இக்கடன்களுக்கான வட்டியைக் கட்ட முடியாத நிலையில் ஐ.எல்.எப்.எஸ். சிக்கிக் கொண்டதை அடுத்தே வங்கியல்லாத நிதி நிறுவனங்களான டி.ஹெச்.எப்.எல்., டாடா கேபிடல், இந்தியா புல்ஸ் போன்ற நிறுவனங்களுடைய பங்குகள் வீழ்ச்சியடைந்தன. சென்ற இரண்டு வாரங்களாக பங்குச் சந்தையில் சூறாவளியைக் கிளப்பிய இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாக முதலாளித்துவ பத்திரிகைகள் சொல்வது ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் சீன அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவாக ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் அனைத்துமே சுணக்கமாக இருக்கும் நிலை.
இந்தப் பின்னணியில் இருந்துதான் சீன அமெரிக்க வர்த்தகப் போர் பிற நாடுகளையும் பாதித்து விடக்கூடும் என்கிற சர்வதேச நாணய நிதியத்தின் அச்சத்தையும் எச்சரிக்கையையும் புரிந்து கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் வர்த்தகப் போரின் பாதிப்பு சீனாவையும் அமெரிக்காவையும் மட்டும் பாதிக்கப் போவதில்லை; மாறாக ஏகாதிபத்தியம் எனும் கண்ணியால் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரம் அனைத்தையுமே புதை குழியை நோக்கி இழுத்துச் செல்லும் சாத்தியம் இந்த வர்த்தகப் போருக்கு உண்டு.
***
வெற்றி பெற்றால் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு முடிவு கட்டுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் சொன்னதை வெறும் தேர்தல் கால சவடால் என பலரும் கடந்து சென்றனர். ஆனால், அவரிடம் ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டம் அமெரிக்க முதலாளிகளின் ஒரு பிரிவினரின் நலனைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட ‘பாசிசக் கோமாளி‘ என்கிற வேடத்திற்குப் பொருத்தமானதாகவும் இருந்தது. அதாவது, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் தமது ஆலைகளை இந்தியா சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்திச் சென்றது தான் என்றார் ட்ரம்ப். அதே போல் அமெரிக்க நிறுவனங்கள் கீழை நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து அமெரிக்கர்களுக்கு செல்ல வேண்டிய வேலை வாய்ப்புகளைப் பறித்து விடுகின்றன என்று குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், அது போன்ற நிறுவனங்களை தான் சும்மா விடப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின் விசா நடைமுறைகளை கடுமைப்படுத்துவது, வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகளை வைத்திருக்கும் பெரு முதலாளிகளை மிரட்டுவது என சில காலம் சலம்பி வந்தார் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் கடந்த ஜனவரியில் (2018) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியமின் தகடுகளுக்கான இறக்குமதி வரியை 25 சதவீமாக உயர்த்தினார். அமெரிக்காவில் புழங்கும் சூரியமின் தகடுகள் பெரும்பான்மையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதோடு சீனாவுக்கு சூரியமின் தகடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை அமெரிக்காவில் இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத சீனா உடனடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் மீது இறக்குமதி வரியை அதிகரித்தது.
அப்போதிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் துவங்கி சூடுபிடிக்கத் துவங்கியது. மாறி மாறி பல்வேறு சீன இறக்குமதிப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தி வந்த ட்ரம்ப் நிர்வாகம், கடந்த செப்டம்பர் 24ல் சுமார் 200 பில்லியன் பெறுமானமுள்ள சீனப் பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தியது. அமெரிக்கா குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்த ஒவ்வொரு சந்தர்பத்திலும் சீனாவும் அதே போன்ற பதிலடியை கொடுத்துள்ளது (என்றாலும், சீனாவின் தரப்பில் இறக்குமதி வரியை அதிகரித்துள்ள பொருட்களின் மதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே). சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையில் சீன ஆதரவு நிலைப்பாட்டை ரசியா எடுத்துள்ளது. இச்சூழலில் தற்போது நடந்து வரும் இந்த மோதல்களை ஒரு சில மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் இரண்டாம் பனிப் போர் எனக் குறிப்பிடுகின்றனர்.
***
சர்வதேச நாணய நிதியம் பாலியில் நடத்திய கூட்டத்தில் சீனாவின் சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் யீ காங் (Yi Gang), ஒரு சில நாடுகள் வர்த்தகக் காப்பு (Trade protectionism) நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க பிற நாடுகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றும், உலமயமாக்கல் இன்னும் வெளிப்படையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பாரபட்சமின்றியும், அனைவருக்கும் பயன் தரத்தக்க விதத்திலும் செயல்பட எல்லா நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என கோரியுள்ளார்.
இதே கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க கருவூலத் துறையின் செயலாளர் ஸ்டீவன் நூச்சின், இது ஒன்றும் சோயா பீன்சை அதிகமாக வாங்குவது பற்றிய சில்லறைப் பிரச்சினை இல்லை; மாறாக, இது கட்டுமானப் பிரச்சினை என்று பேசியுள்ளார். மேலும் நடந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போரைத் தணிக்க பாலியில் ஐ.எம்.எப். கூட்டிய பஞ்சாயத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதை பகிரங்கமாக போட்டுடைத்த நூச்சின், எதுவாக இருந்தாலும் தமது குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
நூச்சின் சொல்லும் ”கட்டுமானப் பிரச்சினை” என்பது வேறு – அதாவது, உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் உள்ள சட்டவிதிகளின் ஓட்டைகளுக்குள் சீனா புகுந்து கொள்வதாகவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்குலகச் சந்தைகளுக்குள் சுலபமாக ஊடுருவியுள்ள சீனா தனது சந்தையை பிற நாடுகளுக்குத் திறந்து விடுவதில்லை எனவும் மேற்கு நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தான் நூச்சின் “கட்டுமானப் பிரச்சினை” என்கிறார். ஆனால், இதில் மெய்யாலுமே வேறு ஒரு அம்சத்தினாலான “கட்டுமானப் பிரச்சினை” உள்ளது.
அடிப்படையில் கூலி உழைப்பைச் சுரண்டுவதன் மூலமே மூலதனம் இடையறாது செயல்படவும் விரிவடையவும் லாபம் சம்பாதிக்கவும் முடியும். அதற்கு அடிப்படை குறைந்த கூலி. மேற்கத்திய நாடுகளின் மனித வளம் என்பது கூடுதல் விலை என்பதால் சுரண்டல் வாய்ப்பு குறைவு என்பதால் தான் இந்தியா சீனா போல் மலிவு விலையில் மனித வளத்தைச் சுரண்டும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு தங்களது உற்பத்தி அலகுகளை ”கடத்தி” வந்தனர் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்கள். மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் மலிவான கூலித் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களை முதலாம் உலக நாடுகளின் சந்தைகளில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதே முதலாளிகளின் நோக்கம்.
எனினும், தொடர்ந்து உற்பத்தி ஆலைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் நிலையில் அமெரிக்கா போன்ற முதலாம் உலக நாடுகளில் உற்பத்தி ஆலைத் தொழிலாளர்கள் (blue collar) வேலை இழப்புக்கு ஆளாகினர். நிர்வாக வேலைகள் உள்ளிட்ட ஒரு சில வெள்ளைக் காலர் வேலைகளை மட்டும் அங்கே வைத்துக் கொள்வது, மற்றபடி உற்பத்திப் பொருளாதாரத்தைக் கைவிட்டு நிதிச் சூதாட்டப் பொருளாதாரத்தை மேற்கொள்வது என்கிற பாதையில் பயணித்துள்ள அமெரிக்கா, திரும்பி வர முடியாத நீண்ட தொலைவுக்கு ஏற்கனவே வந்து விட்டது.
எனவே தான் ட்ரம்பின் நடவடிக்கைகளை போர்டு, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும் பன்னாட்டுத் தொழிற் கழகங்கள் எதிர்த்து வருகின்றன. அமெரிக்க முதலாளிகளிலேயே மிகச் சிறுபான்மையினராக இருக்கும் காப்புப் பொருளாதாரவாதிகள் மற்றும் அரசியல் அரங்கில் இனவாத பிற்போக்குவாதிகளின் ஆதரவு ட்ரம்புக்கு உள்ளது. தனது வாக்குவங்கியாக டொனால்ட் ட்ரம்ப் குறிவைத்திருப்பது வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கும் நாட்டுப்புற வெள்ளை இனத் தொழிலாளிகளையே என்பதால் நடந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போர் மேலும் சிலகாலம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
முடிவில் ஒன்று இந்த முரண்பாடுகளின் விளைவாக உலகப் பொருளாதாரம் ஒரு மீளமுடியாத நெருக்கடிக்கும் வீழ வேண்டும் அல்லது தற்காலிகமாக அமெரிக்க பெரு முதலாளிகள் டொனால்ட் ட்ரம்பை கட்டுப்படுத்தி அந்த நெருக்கடியை மேலும் சில காலத்திற்கு தாமதப்படுத்தலாம். எப்படிப் பார்த்தாலும் குறைந்த கூலியில் மனித உழைப்பைச் சுரண்டுவது மற்றும் அமெரிக்க நுகர்வுவெறி என்கிற பொருந்தாத கூட்டணி நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஏனெனில், குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளில் அலைந்து கொண்டிருக்கும் அமெரிக்க முதலாளி நம்பிக் கொண்டிருப்பது அங்கே உற்பத்தியாகும் பொருட்களுக்கு முதலாம் உலக நாடுகளில் இருக்கும் சந்தையை – அந்த சந்தையானது வேலையிழப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் நொறுங்கிச் சரிந்தே தீரும்.
வலையைப் பிரித்து நண்டு, கானாங்கத்த, இறால், திருக்கை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் போட்டுக்கொண்டிருந்த அந்த சென்னை மீனவர், திடீரென படபடத்து கைகளை உதறினார். என்னப்பா ஆச்சு என்று சக மீனவத் தொழிலாளர்கள் பதறிப் போனார்கள்.
மீனவர் மாணிக்கம்
ஒன்னுமில்லப்பா ஷாக் அடிச்சிடுச்சி… என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர ஆரம்பித்தார்.
கரண்டே இல்லாத எடத்துல எப்படி ஷாக் அடிக்கும்? இருந்தாலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக ஒயர் எதுவும் கிடக்கிறதா என்று சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். எனது நிலைமையைப் புரிந்துகொண்ட மாணிக்கம், சார் பயப்படாதீங்க, அதோ அந்த மீன தொட்டதுனால கரண்ட் அடிச்சிருக்கு, பாத்து நேக்கா எடுக்கணும் என்று திருக்கையை காட்டினார்.
மேலும், இது ஒடம்புக்கு ரொம்ப நல்லது, பெண்களுக்கு பால் சுரக்கும். வயித்து புண்ண ஆத்தும். சதப்பிடிப்பு, வாயு பிடிப்பு உள்ளவங்களுக்கு கரண்ட் மீன எடுத்து வச்சா போதும், எல்லாம் சரியாயிடும் என்றார்.
இது பரவாயில்ல, அதோ வலையிலிருந்து எடுக்குறாரே அது ரொம்ப மோசமானது என்று 6 சென்டி மீட்டர் நீளமுள்ள முட்கள் நிரம்பிய ஒரு மீனை காட்டினார்.
கருந்தும்பின்னு இதுக்கு பேரு. பெரட்டை (அழகிய வண்ணங்களில் முட்களைக்கொண்ட கடல் உயிரி) முள்ளு பட்டா கடுக்கத்தான் செய்யும். ஆனா இந்த கருந்தும்பி குத்துனா நெஞ்சே அடைச்சிடும், மூச்சு விட செரமமா இருக்கும் என்றார்.
என்னங்க, விலாங்கு மீனெல்லாம் மாட்டியிருக்கு; நல்ல வேட்டையா என்றதும்,
மீனவர் ஸ்ரீதர் வலையில் இருந்து கடல் பாம்பை லாவகமாக எடுக்கிறார்.
இது மீனில்ல சார், கடல் பாம்பு. சேர-ன்னு சொல்லுவாங்க. கடிச்சா கை துண்டாயிடும் என்று துடித்துக்கொண்டிருந்த பாம்பின் வாயைப் பிளந்து கோரப்பற்களைக் காட்டி, இத சமைக்கல்லாம் முடியாது, தூக்கிப்போட வேண்டியதுதான் என்றார் ஸ்ரீதர்.
மேலும், நீங்க சொல்ற மாதிரி எப்போதாவது மீனுங்க அதிகம் மாட்டும். அப்ப எங்க பாடு கொண்டாட்டம்தான்; நிம்மதியா சரக்கு அடிப்போம், சீட்டுக்கட்டு போடுவோம். ஊரு முழிக்கிறதுக்கும் முன்னே எழுந்து மறுபடியும் கடலுக்கு ஓடுவோம். இந்த மீனவனோட வாழ்க்கையைப் பத்தி சுருக்கமா சொல்லனுமுன்னா “ஒரு நாள் லட்டு, ஒரு நாள் லவடா” என்றார்.
***
நாங்க இல்லேன்னா இந்த கடல் இல்லை; இந்தக் கடல் இல்லேன்னா நாங்களும் இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு போக்கு, வாழ்க்கை, எல்லாமும் என தனக்கும் கடலுக்குமான உறவை அலையலையாய்க் கொட்டினார் சத்தியமூர்த்தி.
மேலும் தொடர்ந்தார்,
எனக்கு விவரம் தெரிஞ்சு என்னோட தாத்தா கடல்ல எறங்கினாரு, அப்புறம் எங்க அப்பா, இப்ப நானு. அடுத்தது என் பையனும் வந்துட்டான்.
மீனவர் சத்தியமூர்த்தி
காலையில மூன்றரை நாலு மணிக்கு பத்து லிட்டர் டீசல போட்டு, போட்ட எடுப்போம். 17, 18 மார்க் தூரம் போயி வலை வீசுவோம். அப்புறம் போட்ட வலையை சுருட்டி திரும்ப எட்டரை ஒன்பது மணியாயிடும்.
மீனு நெறையா கெடச்சதுன்னா இரண்டு வேள கூட கடலுக்கு போவோம். பத்தாயிரத்துக்கும் மேல லாபம் எடுப்போம். சில நாளு எதுவுமே கெடைக்காம சும்மாதான் இருப்போம்.
இன்னைக்கு 3 பேரு கடலுக்கு போனோம். நாலாயிரம் ரூபா மதிப்புள்ள மீன புடிச்சி வந்திருக்கோம். இப்போ புரட்டாசி மாசங்குறதால இரண்டாயிரத்துக்குத்தான் போகும். இதுல ஆயிரம் ரூபாயை வலைக்குக் கொடுத்துட்டு, மீதி உள்ள பணத்த ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்குவோம். தெனமும் கடல்ல கால வச்சாதான் குடும்பத்தையே ஓட்ட முடியும்.
கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள்.
கடலுக்கு போகும்போது, ஒரு நாள பாத்தாப்ல தெனமும் இருக்காது. திடீர்னு காத்து பலமா அடிச்சா, எங்கேயாவது தள்ளிட்டுப் போயிடும். ரொம்ப நேரமா ஆள காணோமேன்னு மத்த போட்டுக்காரங்க தேடிவந்து காப்பாத்திருவாங்க. எங்களோட நிலைமை பரவாயில்லை, கரைக்கும் பக்கத்திலேயே போயி வந்துகிட்டிருக்கோம். ராமேசுவரம் மீனவர்களோட நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு. இலங்கை போலீசு தெனமும் அடிச்சு வெரட்டுறான். அவங்க வாழ ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டேங்குது இந்த அரசு.
கரை திரும்பும் மீனவர்கள்.
சொல்றேன்னு கோச்சுக்காதீங்க, அமைச்சர் ஜெயக்குமாரை எங்காளுன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்கு. மீனவனோட பிரச்சினையை கண்டுக்காம போறாரு, சுத்த வேஸ்ட் சார். நான் கூட ADMK-தான். இங்கே நடக்குறது கெவர்ன்மென்டே இல்ல சார்… இது கான்ட்ராக்ட் கெவர்ன்மென்ட். இனி கெவர்ன்மென்ட நம்பிப் பயனில்லை. ஒரு மீனவனுக்கு மீனவன்தான் துணையா இருக்க முடியும்.
காந்தியம் ஒரு புரியாப் புதிர். அது அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வேண்டும் என்கிறது. அதாவது நாட்டின் இப்போதுள்ள அரசியல் கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்கிறது. அதே போது வழிவழியாக வந்த அடிப்படையில் ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை அடக்கி ஆள்வதற்கு, அதாவது ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை என்றென்றும் நிரந்தரமாய் அடக்கி ஆள்வதற்கு இடமளிக்கிற ஒரு சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்க முயல்கிறது. இந்தப் புதிருக்கு என்ன விளக்கம்? வைதிகமானவர்கள் என்றாலும் வைதிக மற்றவர்கள் என்றாலும் இந்துக்கள் அனைவரின் இடமும் சுயராச்சிய இயக்கத்துக்கு முழுமனதான ஆதரவு திரட்ட காந்தியார் வகுத்த உத்தியின் பகுதிதானா இது? அப்படித்தான் என்றால் காந்தியத்தை நேர்மையானதாகவும் உண்மையுள்ளதாகவும் கருத முடியுமா?
இது ஒரு புறமிருக்க, காந்தியத்தின் இரு கூறுகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடியவை. ஆனால் அந்தக் கூறுகள் குறித்து இது வரை கவனம் செலுத்தப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அவை மார்க்சியத்தைக் காட்டிலும் காந்தியத்தை அதிகம் ஏற்புடையதாக்குமா என்பது வேறு விவகாரம். ஆனால் மார்க்சியத்திலிருந்து காந்தியத்தை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறவை என்பதால் அந்தக் கூறுகளைக் குறிப்பிடுவது நன்று.
காந்தியத்தின் முதலாவது தனிக் கூறு என்னவென்றால்; தத்துவஞானம் உடையவர்கள் தங்களிடமிருப்பதை வைத்துக் கொள்வதற்கும், இல்லாதவர்கள் தாங்கள் அடைய உரிமை படைத்திருப்பதை அடைய விடாமல் தடுப்பதற்கும் அதன் தத்துவஞானம் உதவுகிறது. வேலை நிறுத்தங்கள் தொடர்பான காந்தியப் போக்கையும், சாதியிடம் காந்தியம் காட்டுகிற பயபக்தியையும், ஏழைகளின் நன்மைக்காகப் பணக்காரர்கள் பொறுப்பு ஏற்றிருப்பதான காந்தியக் கோட்பாட்டையும் பரிசீலிக்கிற எவரும் இது காந்தியத்தின் விளைவே என்பதை மறுக்க முடியாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்ட விளைவா, தற்செயலாக ஏற்படுகிற ஒன்றா என்பது விவாதத்திற்குரியதாக இருக்கலாம், ஆனால் உண்மையில் காந்தியம் வசதி படைத்தவர்களின் தத்துவஞானம், உழைக்காமல் ஒய்வெடுக்கும் வர்க்கத்தின் தத்துவ கோட்பாடு என்பதே உண்மை.
காந்தியத்தின் இரண்டாவது தனி கூறு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்பாக்கியங்களை நற்பாக்கியங்களிலேயே மிகச் சிறந்தவை என்று காட்டுவதன் மூலம் அவர்களை மயக்கி அவற்றை ஏற்கச் செய்வதாகம், இந்தக் கூற்று உண்மையானது என்பதைக் காட்டுவதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுக்களே போதும்.
இந்துக்கள் புனிதச் சட்டம் சூத்திரர்கள் (நான்காம் வகுப்பிரான இந்துக்கள்) செல்வம் சம்பாதிக்க விடாமல் தடை செய்து தண்டனை விதிக்கிறது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் அறியப்படாத கட்டாய வறுமைச் சட்டம் இது. காந்தியம் என்ன செய்கிறது? அது இந்தத் தடையை அகற்றுவதில்லை, சொத்தினைக் கைவிடும் மனத் துணிவுக்கான சூத்திரத்தை அது ஆசீர்வதிக்கிறது! காந்தியாரே கூறியதை மேற்கோளாகத் தருவது பொருத்தமானது. அவர் சொல்கிறார்! (1)
உண்மையில் காந்தியம் வசதி படைத்தவர்களின் தத்துவஞானம், உழைக்காமல் ஒய்வெடுக்கும் வர்க்கத்தின் தத்துவ கோட்பாடு என்பதே உண்மை.
– “மதக் கடமை என்ற முறையில் (மேல் சாதியினருக்கு) பணி செய்யும் சூத்திரர்கள், சொந்தமான சொத்து ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். உள்ளபடியே சொத்து எதுவும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படவும் மாட்டார்கள்; இவர்களை ஆயிரம் முறை வணங்கி வழிபடுவது தகும். கடவுளர்களே சூத்திரர்கள் மீது பூமாரி பொழிவார்கள். ஆதாரமாகக் காட்டப்படும் இன்னோர் எடுத்துக்காட்டு, கழிப்பறைத் தொழிலாளியின் பால் காந்தியம் மேற்கொள்கிற போக்காகும். தோட்டியான ஒருவரின் வாரிசு தோட்டியாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டுமென்று இந்துக்களின் புனிதச்சட்டம் விதிக்கிறது. இந்து மதத்தில் தோட்டி வேலை கட்டாயமாய்ச் சுமத்தப்படுவதே தவிர விரும்பித் தேர்ந்தெடுப்பது அல்ல (2) காந்தியம் என்ன செய்கிறது? தோட்டி வேலையை சமுதாயத்துக்கு மிகவுயர்ந்த சேவை என்று புகழ்ந்து இந்த ஏற்பாட்டை நிரந்தரமாக்க முயல்கிறது. காந்தியார் கூறியதை எடுத்துக்காட்டுவோம்; தீண்டாத மக்களின் மாநாடு ஒன்றின் தலைவர் என்ற முறையில் காந்தியார் பேசுகையில் சொன்னார். (3)
“நான் மோட்சமடைய விரும்பவில்லை. எனக்கு மறுபிறப்பு வேண்டாம். ஆனால் நான் மறுபடியும் பிறப்பதாக இருந்தால் தீண்டத்தகாதவனாய்ப் பிறக்க வேண்டும்; அவர்களின் வருத்தங்களையும் இன்னல்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் இழிவுகளையும் நானும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் என்னையும் அவர்களையும் அந்த அவல நிலையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் பாடுபடவேண்டும்; ஆகவே நான் மறுபடியும் பிறப்பதானால் பிராமணனாக, சத்திரியனாக, வைசியனாக அல்லது சூத்திரனாகப் பிறக்கக் கூடாது, அதி சூத்திரனாகவே பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்…
“தோட்டி வேலை செய்வதை நான் விரும்புகிறேன். எனது ஆசிரமத்தில், ஆசிரமத்துத் தோட்டிக்குத் தூய்மையைக் கற்றுக் கொடுப்பதற்காக பதினெட்டு வயது பிராமண இளைஞன் ஒருவன் தோட்டி வேலை செய்து வருகிறான். அந்த இளைஞன் ஒன்றும் சீர்திருத்தவாதி அல்ல. வைதிகத்தில் பிறந்து வைதிகத்தில் வளர்ந்தவன்… ஆனால் குறையற்ற முறையில் தெருக் கூட்டத் தெரிந்தவன் ஆகும் வரை தன் சாதனைகள் முழுமை பெற மாட்டா என்றும், ஆசிரமத்தைக் கூட்டிச் சுத்தம் செய்கிற ஆள் அவரது வேலையை நன்கு செய்ய வேண்டுமானால் தானே அதைச் செய்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென்றும் அவன் எண்ணினான்.
“நீங்கள் இந்து சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.”
ஒரு வகுப்பினர் வேறொரு வகுப்பினர் மீது வேண்டுமென்றே சுமத்திய தீமைகளை நிரந்தரமாய் நீடிக்கச் செய்வதற்கு காந்தியார் செய்யும் இந்த முயற்சியைக் காட்டிலும் மோசமானதொரு பொய்ப் பிரச்சாரம் இருக்க முடியுமா? காந்தியம் சூத்திரருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வறுமை என்னும் விதியை உபதேசித்தால், அது பற்றி எவ்வளவு மோசமாகச் சொன்னாலும் ஒரு தவறான கருத்து என்றுதான் சொல்ல முடியும். ஆனால் வறுமையை ஒரு வகுப்பினருக்கு மட்டும் உபதேசம் செய்வது ஏன்? அவர் தனக்கெதிராக கொடிய பாகுபாடு என்று அறிவார்ந்த அடிப்படையில் வெறுத்து ஒதுக்கக் கூடியதை அவரே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் படிச் செய்வதற்காக மனிதனுக்குள்ள பலவீனங்களில் படுமோசமானவற்றை, அதாவது அகத்தையும் தற்பெருமையையும் தட்டி விடுவது ஏன்? இந்து சாத்திரங்களின் படியும் இந்துக் கருத்துக்களின் படியும் ஒரு பார்ப்பனர் தோட்டி வேலை செய்யதாலும் கூட தோட்டியாகப் பிறந்த ஒருவர் அனுபவிக்கும் ஊனங்களை ஒரு போதும் அனுபவிக்க மாட்டார் என்பது தெளிவாக இருக்கும் போது, ஒரு பார்ப்பனர் கூட தோட்டி வேலை செய்யத் தயாராய் இருக்கிறார் என்று தோட்டியைப் பார்த்துச் சொல்வதால் என்ன பயன்? ஏனென்றால் இந்தியாவில் ஒருவர் அவரது வேலையின் காரணத்தினால் தோட்டியாக இருக்கவில்லை. தோட்டி என்பவர் தோட்டி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் பிறப்பின் காரணத்தினால் தோட்டியாக இருக்கிறார்.
தோட்டி வேலை செய்வது உன்னதமான தொழிலென்று காந்தியம் போதிப்பதன் நோக்கம் அதில் ஈடுபட மறுப்பவர்களையும் ஈடுபடச் செய்வதாக இருக்குமானால் அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தோட்டி வேலை செய்வது உன்னதமான தொழில் என்றும், அது குறித்து அவர் வெட்கப்படத் தேவையில்லை என்றும் தோட்டியைப் பார்த்துச் சொல்வதன் மூலம் தொடர்ந்து தோட்டி வேலை செய்வதற்கு (4) அவரைத் தூண்ட வேண்டும் என்பதற்காக, அவரை மட்டுமே தூண்ட வேண்டும் என்பதற்காக அவரது அகந்தையையும் தற்பெருமையையும் தட்டி விடுவது ஏன்? வறுமை சூத்திரனுக்கு நல்லது, வேறு எவருக்குமல்ல என்று போதிப்பது, தோட்டி வேலை செய்வது தீண்டாத மக்களுக்கு நல்லது, வேறு எவருக்குமல்ல என்று போதிப்பது, அவர்களின் பலவீனங்களைத் தட்டி விடுவதன் மூலம் இந்தக் கொடுஞ்சுமைகளை அவர்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்ட வாழ்க்கைக் குறிக்கோள்களாக ஏற்றுக் கொள்ளும் படி செய்வது – இது நாதியற்ற இவ்வகுப்புகளை இழிவுபடுத்துவதும் கொடிய முறையில் கேலி செய்வதுமாகும். அலட்டிக் கொள்ளாமலும் அச்சமே இல்லாமலும் என்றென்றும் இப்படிச் செய்துக் கொண்டிருக்க காந்தியாரால் மட்டுமே முடியும்.
இது தொடர்பாக காந்தியம் போலவே இருந்த ஓர் “இசத்தை” நிராகரிக்கையில் வால்டேர் பேசிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன: “ஓ! சிலரது இன்னல் வேறு சிலருக்கு மகிழ்ச்சி தருகிறது, முழுமைக்கு நன்மை பயக்கிறது என்று மக்களை பார்த்துச் சொல்வது அவர்களைக் கேலி செய்வதாகும்: இறந்து கொண்டிருக்கிற ஒருவனைப் பார்த்து உனது உடல் கெட்டு அழுகிப் போகும் போது அதிலிருந்து ஓராயிரம் புழுக்கள் உயிர் பெறும் என்று சொல்வது என்ன வகையான ஆறுதல்?”
விமர்சனம் ஒரு புறமிருக்க, இதுதான், அநீதிகளால் பாதிக்கப்படுபவனுக்கே அந்த அநீதிகள் அவரின் சிறப்புரிமைகள் என்பது போல் தோன்றச் செய்வதுதான் காந்தியத்தின் செய் நுட்பம், பொய்யான நம்பிக்கைகளிலும் பொய்யான பாதுகாப்பு உணர்விலும் மக்கள் மயங்கிக் கிடக்கும் படிச் செய்வதற்கு மதத்தை முழு அளவில் பயன்படுத்திய ஓர் ‘இசம்’ உண்டு என்றால் அது காந்தியம்தான். ஷேக்ஸ்பியர் கூறியதுபோல் நாமும் சொல்லலாம்: பொய்த் தோற்றமே; சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா?
(– தொடரும்)
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.
அடிக்குறிப்புகள்:
(1) வர்ண வியவஸ்தா என்ற நூலிலிருந்து தரப்படும் மேற்கோள், பக்கம் 51 (2) யங் இந்தியா, 1921, ஏப்ரல் 27. (3) யங் இந்தியா, 1921 ஏப்ரல் 27.. (4) இந்திய மாகாணங்கள் சிலவற்றில் இதற்குச் சட்டங்களே உள்ளன: தோட்டியான ஒருவர் தோட்டி வேலை செய்ய மறுப்பது இச்சட்டங்களின்படி குற்றமாகும். இந்த குற்றத்துக்காக குற்றவியல் நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை விதிக்கலாம்.