ஐரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.
வேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.
முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்துப் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள் ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ?” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா? முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”? கொத்தடிமைத்தனம் ஒழிந்து விட்டதா? இல்லை என்பதே பதில்.
கூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
படிக்க:
♦ பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
♦ சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !
குறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.
சவுதியைச் சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.
வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலமாகி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.
இது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.
சாக்கியன்
செய்தி ஆதாரம் : The US Military and the Slave Trade




ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவாக உள்ள ஒரு நகரத்தில், சவூதி கூட்டணி படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தையும் தாயும், சாடா (Saadah) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வறண்டு வரும் நீர்நிலைகளால், 1.45 கோடி மக்கள் சுத்தமான குடிநீரும் சுகாதாரமும் இன்று தவிக்கின்றனர். இதனால் காலரா போன்ற நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
ஏமனில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் கடுமையான பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. ஹாஜா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள்.
மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பெனி கைஸ் மாவட்ட பள்ளிக்கூடத்தில், தனது இரண்டு வயது குழந்தையுடன் மருத்துவருக்காகக் காத்திருக்கும் அகமது முகமது அல் பஹியாலி.
அப்ஸ் (Abs) மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு. நோய்த் தொற்று ஆபத்து தெரிந்தும் தனது வீட்டில் கவனிக்க யாருமில்லாததால் முதல் குழந்தையையும் உடன் அழைத்துவந்துள்ள தாய்.
அப்ஸ் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை. ஏமனில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள் பாதிக்கு பாதி மூடப்படலாம் எனவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் எனவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேற்கு ஏமனில். அப்ஸ் மருத்துவமனை பகுதியிலிருந்து, 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அஸ்லாம் கிராமம் மருத்துவ முகாமில், மருந்துச்சீட்டிற்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் தந்தையர்கள்.
மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடத்தில் சிகிச்சைப் பெற்று வரும் ஏமன் பெண்.
ஊட்டச்சத்து குறைப்பாடுடைய 9 மாதக் குழந்தையை பரிசோதிக்கும் பெண் மருத்துவத் தாதி. அக்குழந்தையின் எடை 2.8 கிலோ.
ஆப்ஸ் மாகாணத்தில் உள்ள தண்ணீர் கிணறு. கிணற்று தண்ணீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அத்தண்ணீரில் காலரா பரவக்கூடும் என்றும் மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பெரு நிறுவனங்களின் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் இதர நுகர் பொருட்களின் வீழ்ச்சியை பேசும் ஊடகங்கள் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நெருக்கடியைப் பேசுவதில்லை.












ராஜ்நாத்தைப் போல, முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே. ஆண்டனி சிலுவையை வரைந்திருந்தால், இந்ந்தியாவும் ஊடகங்களும் கொலைவெறியோடு கதறியிருக்கும் !


சஃபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரை சேர்ந்த ரஷீத் மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய ஊர்களில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் மூலம் போலியான மாணவர்களை தயாரித்து அவர்களை தமிழக மாணவர்களின் பெயரில் தேர்வு எழுத வைத்ததாக கூறப்படுகிறது.




நான் உடனே பரபரப்பாகி, அப்படியா எங்கே சந்தித்தீர்கள், என்ன பேசினீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன். பொஸ்டனில் ஒரு கருத்தரங்கில் நீல் ஆர்ம்ஸ்ரோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கே அவருடன் பேசுவதற்கு நண்பருக்கு சில நிமிடங்களை ஒதுக்கினார்கள். நண்பர் கேள்விகள் ஒன்றையும் முன்கூட்டியே தயாரித்திருக்கவில்லையாதலால் அந்தக் கணம் மனதில் தோன்றியதை கேட்டிருக்கிறார்.
பிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது. நடிகை பத்மினி ஒருமுறை கனடாவுக்கு வந்திருந்தார். ஐம்பது வயதான ஒரு பெண்மணி விமான நிலையத்துக்கே வந்துவிட்டார், அவரை வரவேற்க. அவருக்கு பத்மினியை முன்பின் தெரியாது. ஆனால் அதற்காக அந்தப் பெண்மணி அதிகாலையிலேயே எழுந்து மிகையான ஒப்பனை செய்ததில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்தும் கைகளும் வேறு நிறத்திலும் இருந்தன. முதல் நாள் இரவே காசுகொடுத்து தலையலங்காரம் செய்து கதிரையில் உட்கார்ந்தபடியே இரவு தூங்கியதாகச் சொன்னார். இந்தப் பெண்மணி தன் மனதில் பத்மினியிடம் கேட்பதற்கான ஒரு கேள்வியை முப்பத்தைந்து வருடங்களாக காவி வருகிறாராம். பத்மினி கனடா மண்ணில் காலடி வைத்து சரியாக அரை மணி நேரம்கூட கழியும் முன்னர் அவரிடம் இந்த நடுத்தர வயது பெண் கேட்ட கேள்வி: ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’
இந்தக் கேள்வியை, அஞ்செலினா ஜூலி சாப்பிட்டு முடித்தபின்னர் விமானப் பணிப்பெண் அவருடைய கரண்டிகளையும், கத்திகளையும் திரும்ப பெற்றுக்கொண்டு போய்விட்டார் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கேட்பேன். அதற்கு பதிலாக அவர் என்ன சொன்னாலும் அடுத்தநாள் அது பத்திரிகை செய்திதான்.


மார்க்ஸ் தம்முடைய அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தில் இந்தப் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், விஞ்ஞானத்துறையில் பிராங்க்ளினுடைய சேவைகளை மார்க்ஸ் இந்தப் புத்தகத்தில் முதல் தடவையாக, மிகவும் முழுமையாக வர்ணிக்கிறார். பிராங்க்ளின் மதிப்புத் தத்துவத்தை , ”நவீன அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விதியை வகுத்துக் கொடுத்தார்”



சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து இவ்வகையில்தான் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர் என்கிறார் ஒரு உள்ளூர்வாசி. பெல்லட் குண்டு சிகிச்சை அளிப்பவர்கள் முந்தைய காலகட்ட போராட்டத்தில் பங்குகொண்டு இது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு, புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்தனர். புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த எழுச்சியில் காயமடைந்தவர்களில் சுமார் 15 சிறுவர்களுக்கு நானே தனியாக மருத்துவம் பார்த்தேன் என்கிறார் அகமது. அந்த ஆண்டுகளில் அவரது நண்பர்கள் சிலரும் பெல்லட் நீக்குவதில் வல்லுனர்கள் ஆகியிருக்கின்றனர்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாமல் இருந்த காரணத்தால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் முடிவு அறிக்கைகளில் இருந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஆற்றல்துறை அமைச்சகம் 2003-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வரை தொடங்கப்பட்ட அனைத்து அனல்மின் நிலையங்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடு காற்று மாசுபாட்டு அளவை 450 mg/Nm3 -ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வந்தது.

புட்டரிசி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே உழைப்பாளி ஜோடியிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம்மிடம் இயல்பாக பேச ஆரம்பித்தவுடன், அவர்களை கலாய்க்க ஆரம்பித்தோம்.
இவளகூட லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிட்டேன். நான் பொறுக்கியா அலையிறேனுன்னு என்னோட மாமன், பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டான். விடுவேனா தூக்கிகிட்டுப் போயி தாலி கட்டிட்டேன். கல்யாணம் கட்டுன புது ஜோர்ல ஒரு படம் விடுறதில்ல. மெட்ராஸ்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் போயிருக்கோம். பாக்காத படமே கிடையாது, அப்படி ஊர் சுத்துவோம். அப்புறம் குழந்தைங்க பொறந்துச்சு, எல்லாம் அடங்கி போயிருச்சு.
“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும். டிரைவரு, கன்டக்டருங்க எனக்கு ரொம்ப ஒத்தாசயா இருப்பாங்க. வண்டி எடுக்கப் போறாங்கன்னு பதட்டத்தோடு எறங்குனாகூட, ‘நைனா பாத்து இறங்கு’ன்னு வாஞ்சையா சொல்வாங்க. கீழே எறங்குன பிறகுதான் வண்டிய ஸ்பீடா எடுப்பாங்க. எல்லாருமே மரியாதையா நடந்துக்குவாங்க. நான் வேர்க்கடலை கொடுத்தாக்கூட சும்மா வாங்க மாட்டாங்க. அவங்களோட ஒத்தாசயாலத்தான் எம் பொழப்பும் போகுது” என்றார்.
பொருள் எல்லாம் பிஞ்சு பொறுக்கி எடுத்துட்டு சுத்தம் பண்ணி, அலசி, கிருஷ்ணாயில் ஸ்டவ்ல வேக வைப்போம். இப்படியே 11 மணியாயிடும். வேல முடிஞ்சாதான் கால சாப்பாடே சாப்பிடுவோம். 12 மணிக்கு மேலே கௌம்பி வந்துடுவோம். நான் பஸ் வியாபாரத்த பாத்துக்குவேன், இவ கடை வியாபாரத்த பாத்துக்குவா.
“சாதாரண ஜனங்க, பொருள் என்ன சின்னதா இருக்கு, கொஞ்சமா இருக்குன்னு கேப்பாங்க, ஆனா கண்டிப்பா வாங்கிடுவாங்க. ஆனா, படிச்சவங்க இருக்காங்களே… ‘ஒரே மண்ணா இருக்குதே, ஈ மொய்க்குதே, மூடி வக்கிறதில்லயா’ன்னு நோண்டி நோண்டி கேப்பாங்க. அதுல சில பேருதான் வாங்குவாங்க. சின்னப் பசங்க எப்போதுமே ‘ஆயா ஆயா’ன்னு கேட்டு வாங்கிப் போவாங்க. வியாபாரம்னா ஆயிரம் இருக்கும். எல்லாத்தயும் அனுசரிச்சுத்தான போகணும்” என்றார்.










செயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும், பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு முடிசூட்டு விழா நடந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது மேலும் அது குறித்து ஆண்களுக்கு முழுமையாக மறந்தே போய்விட்டது. அலாவுதின் கில்ஜியின் தக்காண படையெடுப்பு மற்றும் தக்காணத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டப்பிறகு பரம்பரையாக புனித மத நூல்களை கற்றறிந்த தக்காணத்தின் பார்ப்பனர்கள் அனைவரும் பெனாரசுக்கு குடிப்பெயர்ந்தனர்.