Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 759

டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?

8

இரான்கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இல்லத்துக்கு அருகேயுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் கார் வெடித்து தீப்பிடித்ததில், தூதரகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்டு 4 பேர் காயமடைந்தனர்.  டீசலால் இயக்கப்படும் காரின் வாயு அழுத்த சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து நேர்ந்ததாகவே ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போலீசார் ஊடகங்களிடம் கூறினர்.

போலீசார் புலனாய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே, இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும், இக்குண்டு வெடிப்புக்கு இரானும் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கமும்தான் காரணம் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததோடு, இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அமெரிக்காவும், பிரிட்டனும் இத்தகைய பயங்கரவாதங்களை இரான் தூண்டிவிட்டு ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டின. மறுபுறம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுத்து, இக்குண்டுவெடிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை என்று இரான் அறிவித்துள்ளது.

காந்தத்துடன் கூடிய ஸ்டிக்கர் மூலம் காரில் வெடிகுண்டை ஒட்டவைத்து, பின்னர் தொலைக் கட்டுப்பாட்டு கருவி (ரிமோட்) மூலம் வெடிக்கவைக்கும் நவீன குண்டுவெடிப்புகளின் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் இரானின் 5 அணு விஞ்ஞானிகள்  கொல்லப்பட்டுள்ளனர். மொசாத் எனும் இஸ்ரேலிய பயங்கரவாத உளவு அமைப்புதான் இப்படுகொலைகளைச் செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் இஸ்ரேலியத் தூதரகக் கார் அதே பாணியில் குண்டு வைக்கப்பட்டு வெடித்துள்ளதால், இது இஸ்ரேலின் கைவரிசைதான் என்று கருதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், இது  இரானால் தூண்டிவிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்கிறது இஸ்ரேல். தங்கள் நாட்டிலும் உலகின் பிற நாடுகளில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து இத்தகைய கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

அடுத்த நாளில், இஸ்ரேலிய தூதரக காரைப் பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் ஒரு இளைஞர் வந்ததாகவும், காரில் ஸ்டிக்கர் குண்டை ஒட்டி அதனை வெடிக்க வைத்ததாகவும் இந்திய உளவுத்துறையினர் கூறுகின்றனர். இரு நாட்களுக்குப் பின்னர், ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்டு தெருவில் கிடந்ததாக ஆதாரம் காட்டினர். இந்திய உள்துறைச் செயலாளரோ, இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்த நாட்டையும் தொடர்புபடுத்த எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்கிறார். பிரதமரின் இல்லத்துக்கு 500 மீட்டர் அருகே பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்திருப்பதே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில், விசாரணை முடிவடையாத நிலையில் கார் வெடிப்பில் காயமடைந்த தூதரகப் பெண் அதிகாரி சிகிச்சைக்குப் பின்னர் அவசரமாகத் தனது நாட்டுக்குச் சென்றுவிட்டார். இவ்வாறு தூதரக அதிகாரியை அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ள செயலானது, இஸ்ரேல் தனது குற்றத்தை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத், பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பேர்போன கொலைகார அமைப்பாகும். பாலஸ்தீன மக்களும் போராளிகளும் இலக்கு வைத்து அப்படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு நீண்ட வரலாறே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவுக்கான சௌதி அரேபியாவின் தூதரான அப்தல் அல்ஜூபேர் என்பவரைக்  கொல்ல சதி செய்ததாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது எவ்வித ஆதாரமுமின்றிக் குற்றம் சாட்டின. ஐ.நா.மன்றமும் இக்கொடுஞ்செயலைக் கண்டித்து தீர்மானம் இயற்றியது. ஆனால் இது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத் ஆகியவற்றின் கைவரிசைதான் என்று பின்னர் அம்பலப்பட்டது. அமெரிக்காவின் ஏற்பாட்டில் இஸ்ரேலே டெல்லியில் நடந்துள்ள குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையே இவையனைத்தும் காட்டுகின்றன.

மேற்காசியாவில் இரானின் அரசியல் பொருளாதார ஆற்றலைச் சீர்குலைக்க கடந்த நான்காண்டுகளாகப் பல்வேறு சதிகளை வெளிப்படையாகவே அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் செய்து வருகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டில் அந்நாட்டின் 40க்கும் மேற்பட்ட பொருளாதாரவர்த்தக நிறுவனங்கள் மீதும் முக்கிய வங்கிகள் மீதும் ஐ.நா. மன்றத்தின் மூலம் அமெரிக்கா பொருளாதாரத்  தடைகளை விதித்தது. இரானின் கச்சா எண்ணெய்த் தொழிலில் எந்த நாடும் முதலீடு செய்யக் கூடாது, அணு ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாகச் சந்தேகித்தால் இரானியக் கப்பல்களை நடுக்கடலிலேயே சோதனையிடவும் தனக்கு அதிகாரமுண்டு என்று பல்வேறுவிதமான மேலாதிக்க நடவடிக்கைகளை இரான் மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது.

அணுகுண்டு தயாரிப்பதா, வேண்டாமா என்று தீர்மானிக்கும் இரானின் சுயாதிபத்திய உரிமையை அமெரிக்கா மறுக்கிறது. அமெரிக்காவுக்கு விசுவாசமாக, சர்வதேச அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக இந்தியா  வாக்களித்தது.  இரான்  பாகிஸ்தான்  இந்தியா இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயுவைக் கொண்டுவரும் ஒப்பந்தத்தையும் இந்தியா கிடப்பில் போட்டுவிட்டது.  இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான நிலுவையை ஆசியன் கணக்குத் தீர்வு ஒன்றியம் மூலம் பட்டுவாடா செய்துவந்த இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்காவின் கட்டளைக்கு ஏற்ப அந்த கணக்குத் தீர்வு ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டது.

இரான்இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் இரான் 12 சதவீதப் பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் இறுதியில் இரானின் மத்திய வங்கியுடன் எந்த நிதி நிறுவனம் உறவு கொண்டாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தடைவிதித்தார். இதனால், இந்தியா தனது எண்ணெய் நிலுவையை இரானுக்குப் பட்டுவாடா செய்ய முடியாமல் சிக்கலாகியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் இரானும் இந்தியாவும் எண்ணெய்க்கான நிலுவையை எப்படிப் பட்டுவாடா செய்து கொள்வது என்பது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தின. இந்தியா தனது எண்ணெய்க்கான நிலுவையில் 45 சதவீதத் தொகையை ரூபாயாக யூகோ வங்கியில் செலுத்துவது, அந்த வங்கி இரண்டு இரானிய தனியார் வங்கிக்குத் தொகையைத் திருப்புவது என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய நிலுவையை விரைவில் எப்படி பட்டுவாடா செய்வது என்பது பற்றி பேசுவதென முடிவாகியது. இத்தகைய சூழலில்தான் டெல்லியில் இஸ்ரேலியத் தூதகரக் கார் வெடித்துள்ளது.

துருக்கி, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன. இரானின் நீண்டகால நட்பு நாடான இந்தியாவில் பயங்கரவாதச் சதியை அரங்கேற்றுவதன் மூலம், இரானை உலக அரங்கிலும் இந்தியாவிலும் தனிமைப்படுத்தலாம் என்பதாலேயே இந்தியாவில் இஸ்ரேலிய கார் வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இரானுடனான உறவை இந்தியா முற்றாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்பவே இக்குண்டுவெடிப்பும் பயங்கரவாதப் பீதியும் கிளப்பப்பட்டுள்ளது. இரானிலிருந்து எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டது, அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக வாக்களித்தது ஆகியவற்றில் தொடங்கி, இன்று பொருளாதாரத் தடை, குண்டு வெடிப்பு ஆகிய அனைத்திலும் நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

159

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!சிக்ஸ் பேக்ஸ் மற்போர் வீரனின் கட்டுடலுக்கு ஊத்தை உடம்பு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் தலையைப் பொருத்தி ஓவியம் வரைந்து வைத்துக் கொள்வதாக ஒரு காட்சி அத்திரைப்படத்தில் வருகிறது.

அதைப் போல உல்லாச, ஊதாரி, சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் இம்சை அரசி 24ஆம் புலிகேசியான செல்வி ஜெயலலிதாவை சிறந்த அறிவாளி, துணிச்சல்காரி, நிர்வாகத் திறமைசாலி என்ற பொய்யான சித்திரம் வரையப்படுகிறது.

ஆனால், இவரது ஆட்சியில் மின் பற்றாக்குறையில் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

போலீசு அதிகாரிகள் சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்பதிலும், எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பொய் வழக்குகள் புனைவதிலும், அம்மா பரிவாரங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அணிவகுத்து நிற்பதிலும் குவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கொலை, கொள்ளை, வழிப்பறிப்புகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொழில்முறை குற்றக்கும்பல்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த வகைக் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் பதில் போலீசு நிலையக் கொட்டடிக் கொலைகளும், போலி மோதல்களும் (என்கவுண்டர்) அரங்கேற்றப்பட்டு பீதி உருவாக்கப்படுகின்றது. ஒருவேளை இதுதான் நிர்வாக திறமைசாலி என்பதைக் குறிக்கிறதோ!

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை குறித்து மூத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.ஜி.தேவசாகாயம் (இவர் தி.மு.க.காரர் அல்ல) கூறுகிறார், “தமிழகத்தின் கடந்த 6 மாத ஆட்சி நிர்வாகச் சீரழிவு தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதுகெலும்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலைமை இல்லை. இது இப்படியே போனால் தமிழகம் அதல பாதாளத்திற்குப் போகும்”. இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயா ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நிர்வாகப் பொறுப்பில் எந்தவொரு அமைச்சரும் அதிகாரியும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கூட நீடிக்க முடியாது; கோப்புகளையும், பொறுப்புகளையும், தம்முடன் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும்ம் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் பந்தாடுவதுதான் ஜெயலலிதாவின் இன்னொரு நிர்வாகத்திறமை! முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்யாமலேயே ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததைப் போலவே  தகுதி, திறமைகளை மதிப்பீடு செய்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா நியமிக்கவில்லை.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!வேறு எந்த அடிப்படையில் பொறுப்புகளைத் தருகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செங்கோட்டையனை போயசு தோட்டத்துக்கு அழைத்த ஜெயலலிதா, “அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப் போறேன். இதுநாள் வரைக்கும் நான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியலை. என் சூழ்நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். கேளுங்க… உங்களுக்கு எந்த இலாக்கா வேணும்” என்று கேட்டார். “நீங்க நல்லா இருந்தா போதும்மா… நீங்க எது கொடுத்தாலும் சரிங்கம்மா” என்றார், செங்கோட்டையன். “இப்போதைக்கு வருவாய்த்துறை உங்ககிட்ட இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் வேறு சில துறைகளும் உங்களுக்கு வரும் சரியா” என்று கேட்ட ஜெயாவிடம் குனிந்தபடியே தலையாட்டினார் செங்கோட்டையன்.

அமைச்சர் சிவபதியை முன்பு நீக்கியதற்கும் மீண்டும் சேர்த்ததற்கும் ஜெயலலிதா காரணம் சொல்கிறார்: “ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க. எனக்கு இப்போதுதான் அது தெரிய வந்தது. தப்பு செய்யாத யாரும் தண்டனை அனுபவிக்கக் கூடாது இல்லையா?” என்று சொன்ன ஜெயலலிதா, சிவபதியை மீண்டும் அமைச்சராக்கினார்.

எந்த தகுதி அடிப்படையில் அமைச்சர்கள் சேர்க்கப்படுகிறார்கள், நீக்கப்படுகிறார்கள் பாருங்கள்! ஜெயாவின் விசுவாசிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வருவாய் துறை உட்பட முக்கியத்துறைகளின் அமைச்சராக்கப்படுகிறார்; முன்னாள் பங்காளி (ராவணன்)யை “மதிக்கவில்லை” என்பதற்காக ஒரு அமைச்சர் பதவி நீக்கப்படுகிறார். (யார் நீக்கியது? ஜெயாவுக்கு என்று சொந்த மூளை இல்லையா? யாராவது கோள் மூட்டினால் நம்பிவிடுவாரா? தவறுக்குரிய பொறுப்பு இல்லையா?) பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆக, தகுதி, மதிப்பீடு அடிப்படையில் பொறுப்புகள் ஒதுக்கப்படுவதும் நீக்கப்படுவதும் இல்லை. விசுவாசம், அடிமைத்தனம், திமிர்த்தனமே அடிப்படை.

கொலை, கொள்ளை, வழிப்பறியில் நாட்டிலேயே முதன்மை இடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், இவைகளைச் செய்யும் குற்றவாளிகள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் என்று ஜெயா புளுகினார். கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தி தலித் மக்களைச் கொன்ற சம்பவத்தை சாதித் தகராறு என்று சித்தரித்தார். இப்படியெல்லாம் பச்சையாகப் புளுகும் ஜெயா உண்மையில் துணிச்சல்காரர்தான்!

அப்புறம் மரியம் பிச்சை, பரஞ்ஜோதி விவகாரம்; மூன்று பெண்டாட்டிக்காரர் மரியம் பிச்சை ஜெயாவுக்குத் தன் விசுவாசத்தைக் காட்ட, மின்னல் வேகத்தில் காரை ஓட்டச் செய்து, விபத்து ஏற்படுத்தி, மாண்டு போனார். அவருக்கு மாற்றாக பெண் மருத்துவரிடம் மோசடித் திருமணம், சொத்துப் பறிப்பு செய்த கிரிமினல் பேர்வழி பரஞ்ஜோதியை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, அறநிலையத்துறை அமைச்சரும் ஆக்கி, இரண்டே மாதத்தில் அதே வழக்கில் சிக்கியதால் பதவி நீக்கமும் செய்யப்படுகிறார். விவகாரத்துக்குரியவர் என்று தெரிந்தே நியமனம், நீக்கம் என்று செயல்படும் ஜெயலலிதா தனக்குத் தெரியாமல் நடந்து விட்டதென்று எத்தனை தடவைதான் மழுப்புவார்? ஏதாவது போதையில் மூழ்கிக் கிடப்பவருக்கு எதுவும் தெரியாமல், எதுவும் செய்யலாம் என்றவாறுதானே அரசு நடக்கிறது.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!அடுத்து, ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர் என்ற கருத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து, நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தான் எதைச் செய்தாலும் அதிரடியாகவும் அடாவடியாகவும், திமிர்த்தனமாக செய்வது; எதைச் சொன்னாலும் அண்டபுளுகு ஆகாசப்புளுகாக சொல்வது; மக்கள் எதிர்க்க மாட்டார்கள், ஏமாந்து போவார்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கேள்வி கேட்கும் திராணியில்லை என்ற எண்ணத்தில் விளைவதுதான் ஜெயலலிதாவின் துணிச்சல்.

கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், லாரியை மோதவிட்டும் தன்னைக் கொல்ல முயன்றதாகப் புளுகியது; சட்டப்பேரவையில் தன்னை மானபங்கப்படுத்தினார்கள், ஆளுநர் சென்னாரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று புளுகியது; பணத்துக்காகத்தான் காவல்நிலையக் கற்பழிப்புப் புகார்கள் செய்வதாக பழிபோட்டது; தன் ஆட்சியில் சட்டம்ஒழுங்கு கெட்டு விட்டதாகக் காட்டுவதற்கு தி.மு.க.வினரே திருட்டு, கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என்றும் ராஜீவ் காந்தியையும் கொன்றனர் என்றும் குற்றஞ்சாட்டியது; வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரம் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருகிவிட்டதாகக் கூறி போலீசாருடன் போலி மோதல்கள், கொட்டடிக் கொலைகளை நியாயப்படுத்தியது; லட்சக்கணக்கான அரசு ஊழியரை வீடு புகுந்து தாக்கியதோடு ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்தது  இப்படி ஜெயலலிதாவின் துணிச்சலுக்கான பழங்கதைகளைக் கூட விட்டு விடுவோம்.

1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழலை தி.மு.க. செய்து விட்டதாக (அப்படி ஒரு குற்றச்சாட்டை ஜெயாவும் அவரது பங்காளிகளும் தவிர யாருமே கூறவில்லை) ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்ததும் கடந்த பத்து மாதங்களில் ஜெயலலிதா சொன்னவையும் செய்தவையுமே அவரது துணிச்சல் எத்தகையவை என்பதற்கு சான்றாக உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவுடன் , இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன்; தமிழர்கள் தெருக்களில் பாதுகாப்பாக நடமாடலாம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் என் ஆட்சியின் முதற்பணி; ஒரு சில மாதங்களில் மின்பற்றாக்குறை அடியோடு முடிவுக்கு வரும், மின்வெட்டே இருக்காது என்று அறிவித்தார் ஜெயலலிதா.

ஒரு அரசியல் கட்சியின் தலைவி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் திட்டங்களை அறிவிப்பதும், வாக்குறுதிகள் வழங்குவதும் தவறில்லை. ஆனால், இப்படியெல்லாம் சொல்லிவிட்டு தனது அரசு எந்திரத்தை  அதிகாரிகளையும் போலீசையும்  முதன்மையாக எந்தெந்த வேலைகளில் அவர் ஏவி விடுகிறார்? சமச்சீர் கல்வியும், பாடப்புத்தகங்களும் கேட்டுப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துவது; நீண்டநாள் ஆகியும் திறக்காமல் இருக்கும் தனிச்சிறப்பான வசதி கொண்ட மருத்துவமனையைத் திறக்கக் கோரும் மாணவர்இளைஞர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது; மின்வெட்டுக்கு எதிராகவும், புயல் நிவாரணமும் கோரிப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவது; பழங்குடிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்முறை செய்வது; குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைச் சித்திரவதை செய்து கொட்டடிக் கொலைகள் புரிவது; அமைதியாகப் போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திட்டமிட்டு போலீசைக் குவித்து, சுட்டுக் கொல்வது; வழக்கறிஞர்களைத் தாக்குவது; இரகசியப் படுகொலைகள் செய்வது; தனது பங்காளி சசிகலாவையும் அவரது உறவினர்களையும், எதிர்க்கட்சியினர் மற்றும் தம் கட்சியினரையும் உளவுவேலை செய்து கண்காணித்து வழக்குகள் சோடித்து சிறையிலடைப்பது.

இவை மட்டுமல்ல; ஜெயா ஆட்சியில் போலீசு  உளவுத் துறையின் வேலையைப் பாருங்கள். அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அவரது உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக செங்கோட்டையன் மகன் ‘அம்மா’விடம் கோள் மூட்டுகிறார் அல்லது முறையிடுகிறார். உடனடியாக உளவுத் துறையை அனுப்பி அம்மா விசாரிக்கிறார். ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டுகிறார். ஆறுமுகம் கைது செய்யப்படுகிறார்.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் வேலையைப் பாருங்கள். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுபட வேண்டி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். கூடவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். அம்மாவுக்காக ”வர்ணாபிஷேகம் நடத்துகிறார்கள். கோவில்சார்பிலே அமைச்சர்களுக்கு ரோஜா மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. அதையும் அமைச்சர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சி என்றால் இவைதான் வாடிக்கை என்று பல ஆண்டுகளாகத் தொடரும் அதிரடி, அடாவடி, திமிர்த்தனம் தான் அவரது துணிச்சலா? அதேபோல உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத் தீர்ப்புகளால் திரும்பத் திரும்ப கன்னத்தில் கரிபூசப்பட்டும், சட்டத்துக்கு புறம்பான முடிவுகள் எடுக்கிறார் ஜெயலலிதா. இவைதான் ஜெயலலிதாவின் அறிவுத்திறமைக்கு சான்றுகளா? இல்லை, தன்மீது தொடுக்கப்பட்ட 42 லஞ்ச ஊழல்அதிகார முறைகேடு வழக்குகளைச் சமாளித்து, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நீதித்துறைக்கு தண்ணி காட்டுகிறாரே, இதுதான் அவரது அரசியல் சட்ட ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

சிரிக்க முடியாத வாழ்க்கை!

12

சிரிப்பு

இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது. எதுவும் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று முகத்தைப் பார்க்காமல் அவள் டிபன்பாக்சை மூடிக்கொண்டிருந்தாள்.

“”ஏய்! கூப்டா திரும்ப மாட்டியா? நீதான் பெருசா வேல செஞ்சு கிழிக்கிற மாதிரி, நீ பாட்டுக்கு இருக்க? ” ஏதும் சண்டை வளர்ப்பதென்றால் இப்படி ஒரு முகாந்திரத்தில் அவன் ஆரம்பிக்கும் வழக்கத்தை அவள் அறிந்திருப்பதினால் சுருக்கமாக “”சொல்லுங்க, கவனிக்கல”  என்று அவன் கூப்பிடாவிட்டாலும் தன்மேல் பழியைப் போட்டுக் கொண்டு காது கொடுத்தாள்.

அவன் தொணத்திக் கொண்டே வந்தான்,   ”எப்படிக் கவனிப்ப? பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கறேல்ல! தோ பார், வேலைக்குப் போனமா வந்தமானு இருக்கணும்! தேவையில்லாத பேச்சுகள்லாம் அங்க இடம் இருக்கக் கூடாது, புரியுதா”

”இப்ப என்ன தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கேன்?”

”ஏய்! சொன்னா சரின்னுட்டு போவாம எதுத்து எதுத்துப் பேசுற?”

”என்ன விவரம்னு கேட்டா அது ஒரு தப்பா?”

”ஏய்! ரொம்பத்தான் சம்பாதிக்கிற திமிர்ல பேசிக்கிட்டே போற! வீட்டுக்காரன் சொன்னா அடக்கமா பேசக் கத்துக்க.. பதிலுக்குப் பதில் எகிர்ற!”

”தோ பாரு, நீ என்னவோ மனசுல வெச்சுக்கிட்டு பேசுற…  எனக்கு இந்த மூடிமறைச்செல்லாம் பேசத் தெரியாது, நான்  ஒழுங்கா வேலைக்கு போயிட்டுதான் வாரேன், என்ன தப்பு நடந்து போச்சுண்ணு வெளிப்படையா சொல்லு?”

பொங்கி வந்த கோபத்திலும் நிதானம் தவறாமல் அவள் வெளிப்படையாகப் பேசினாள்.  இந்தப் பேச்சுக்கே பொறுப்பாக பதில் சொல்வதற்குப் பதில் மீண்டும் தாண்டிக் குதித்தான் அவன்.

”ஆமாண்டி நீ வேலைக்குப் போற எடத்துல கண்டவங்கிட்டயும் பேசுற… சிரிச்சு சிரிச்சு வழியுற… சும்மா நீ கத்திப் பேசி சமாளிக்க முடியாது.” ”

அடச்சே! இவ்வளவு நாளா சந்தேகத்தோடதான் என்னோட குடும்பம் நடத்துனியா?… என்னையே சந்தேகப்படுறியே… சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ் கேர்ளா வேல பாத்தா கண்டவங்கிட்டயும் பேசித்தான் ஆகணும். இது கூட உனக்குத் தெரியாதா? உன் மனசுல இவ்வளவு கெட்ட எண்ணத்த வெச்சுகிட்டுதான் எரிஞ்சு எரிஞ்சு விழறியா… வேண்டாம் இனிமே நா வேலைக்கே போகல, நீயே சம்பாதிச்சுக் கொடு! வெறும் வயித்தோட ஓடி ஓடிப்போய் சம்பாதிச்சுக் கொடுத்து, கடைசில நீயே என்னக் கேவலமா நெனைக்கறியே.”

”என்ன பிளாக்மெயில் பண்றியா? நீ எப்படி இருந்தாலும் நான் கேக்கக் கூடாதா? வேலைக்குப் போவாட்டி கெட.. அதுக்காக உன் இஷ்டத்துக்கு இருக்க முடியாது.. என்னமோ நீ சம்பாதிச்சுதான் குடும்பம் நெறயர மாதிரி என்னையே மெரட்டுறியா… என்ன இப்ப சந்தேகப்பட்டு அடிச்சா தொரத்திட்டாங்க… மொதல்ல வாய அடக்கு… புருஷன்னா நாலு வார்த்த கேக்கதான் செய்வான்.  சும்மா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஆமா!”

போகிற போக்கில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தான் பேசிய வார்த்தைகளைப் பற்றி எந்த விவாதமும் இல்லாமல், முக்கியமாக சந்தேகத்துக்குக் காரணமான வேலைக்கு இனிப் போக வே-ண்டாம் என்று திடமாக எந்த முடிவையும் அறிவிக்காமல், தலைக்கேறிய தனது கோபத்தைத் தணித்துக் கொண்டவன் போல இயல்பாக அவன் நகர்ந்து போனான்.

”சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா,, என்று தனக்குத்தானே வெறுத்துக் கொண்டவள் என்ன செய்வது என்று யோசித்து மறுகணம் பிள்ளைகள் படிப்பு, குடும்பத்தின் சூழ்நிலை அனைத்தும் மனதில் நிழலாட தன் விருப்பத்திற்கு எதிராக வழக்கம்போல வேலைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று..  காலையில் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப எதிரொலித்து மனதில் வலி மிகுந்தது.. அவ்வப்போது ஈரம் கசிந்த விழிகளை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு தனக்குரிய சேல்ஸ் செக்சனில் மரம் போல் நின்றாள்.. தொலைவிலிருந்து அவளை கவனித்த சூப்பர்வைசர் நெருங்கி வந்தான்.

”என்ன உமா, காலையிலிருந்து நானும் பாக்கறேன், வர்ற கஸ்டமர சிரிச்ச மூஞ்சியோட அட்டண்ட் பண்ணாம நீ பாட்டுக்கும் ஏனோ தானோன்னு நிக்கற! வர்ற ஆளுங்ககிட்ட ஸ்மைலிங் ஃபேஸோட புரோடக்ட எடுத்துக் காட்டி கான்வாஸ் பண்ணதான உன்ன இங்க போட்டுருக்கோம் . நீ பாட்டும் உம்முன்னு ஓரமா நின்னா எதுக்கும்மா சம்பளம் குடுத்து உன்ன இங்க நிக்க வெச்சுருக்கு… நானும் உன்ன ரொம்ப நாளா கவனிச்சுக்கிட்டுதான் வர்றேன்… வர்றவங்கள பாத்து முதல்ல ஸ்மைல் பண்ணவே மாட்டங்கற.. தானா போயி இண்டரஸ்டா பேசவும் மாட்டங்கற.. இதல்லாம் தெரிஞ்சுதானம்மா வேலைக்கு வந்த! இஷ்டம் இல்லன்னா சொல்லிடும்மா, வேற ஆளா இல்ல… சும்மா கம்பெனிய கவுத்து உட்றாத…”

”இல்ல சார் சில கஸ்டமர் பேசினா டிஸ்டர்பா நினைக்கிறாங்க.. அதான்  ஒதுங்கி நின்னேன்..”
”ஏம்மா ஒதுங்கி நிக்கவா சம்பளம் தர்றோம்.. நீ மேல போயி விழ வேணாம்மா.. பக்கத்துல போயி பக்குவமா பேசு.. அவங்களா சொல்லட்டும், அப்புறம் தள்ளிக்க.. முதல்ல புரோடக்ட எடுத்து டீடெய்ல் சொல்லும்மா..”

”சார்! இன்னிக்கு இருக்கிறது வெஜிடபுள் செக்சன் சார்.. இதுல என்ன சார் கேன்வாஸ் பண்றது?”

”எங்கிட்ட இவ்வளவு பேசுறல்ல? வர்றவங்க கிட்ட வாழப்பூ பத்தி பேசு! தோ அந்த பாவக்காவ காட்டி சுகருக்கு நல்லதுன்னு சொல்லு… கேரட்ட எடுத்துக் காட்டி கண்ணுக்கு நல்லதுன்னு சொல்லேன். சொல்லவா மேட்டர் இல்ல.. வெண்டைக்கா தின்னா மூளைக்கு நல்லதுன்னு சொல்லி சரக்க காலி  பண்ணு.”  சூப்பர்வைசர் பேசப்பேச எரிச்சலையும் மீறி உமாவுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது.

”பாத்தியா! இப்ப சிரிக்கிற பாரு, இதே மாதிரிதான் .. சிரிச்சாதாம்மா சேல்ஸ் கேர்ளு.. இப்படி சிரிச்சுப் பேசி கலகலப்பா கஸ்டமர கவர் பண்ணுவியா! அத வுட்டுட்டு, எதயோ பறிகொடுத்த மாதிரியே நிக்குறியே.. இனிமேலாவது டிசிப்ளினா வேலய பாரும்மா.. இல்லன்னா வேலய வுட்டு தூக்க வேண்டியதுதான்.. வேற வழியே இல்ல..”

சொல்லிவிட்டு வேகமாக சூப்பர்வைசர் அடுத்த செக்சனுக்கு நகர்ந்தான்.  அடுத்த கஸ்டமர் நெருங்கி வர,  சிரிப்பதற்கு சிரமப்பட்டு அவள் முயற்சியெடுத்தாள். ப்ரெஷ்ஷாக காய்கறிகளைக் காட்ட ஒளியூட்டும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்திலும் பட்டது.

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மார்ச் 8 அனைத்து மகளிர் தின அரங்குக் கூட்டம் – செய்தி!

9

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி ரத்தம் சிந்திய நாளான மார்ச் 8 அன்று திருச்சியில் காலை பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கும், அம்பேத்காரின் உருவசிலைக்கும் மாலை அணிவித்து கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர் நிகழ்வாக மாலை உறையூர்  பகுதியில் அமைந்துள்ள “கைத்தறி நெசவாளர்  திருமண மண்டபத்தில்” அரங்குக் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது.

தலைமையுரையாக பெண்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் இந்துமதி பேசும் போது, “பெண்களுக்கு சமூக அக்கறை அதிகரித்து வருகிறது. ஆனால் ஆண்கள் அதை தடைசெய்வதும், வரம்புக்குட்பட்ட உரிமைகளை மட்டும் கொடுப்பதும் உள்ளது. பெண்களுடைய திறமைகள் போர்க்குணங்கள் அதிகரிக்கும் இச்சூழலில் பெண்கள் தம்முடைய குடும்பம் என்ற வட்டத்தை தாண்டி சமூகத்திற்காக உழைக்க முன் வரவேண்டியது அவசியம் இன்று பெண்களுக்கு ஆண்கள் எதிரியல்ல, மாறாக ஆண்-பெண் சேர்ந்து செய்யக் கூடிய ஒரு புரட்சியின் மூலமே பெண் விடுதலை சாத்தியம் மற்றும் மார்ச்-08 வெறும் கோரிக்கை நாளல்ல, அது போராட்ட நாள், சர்வதேச பெண்களின் முழுமையான விடுதலைக்கு போராட பெண்கள் அணி திரள வேண்டும்” என்றார்.

பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா? என்ற தலைப்பில் வழக்கறிஞர் மீனாட்சி பேசும்போது, “பாமர பெண்களாக இருந்தாலும் படித்த பெண்களாக இருந்தாலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருக்கின்றது. சமீபத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அதேபோல் ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்த “அஞ்சலி குப்தா” என்ற பெண்ணும் பாலியம் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகள் மீது எந்தவிதமான கடுமையான தண்டனையும் விதிக்கப்படவில்லை.அதேபோல சொத்துரிமையிலும், ஆண்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் உள்ளன. “குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்” என்பதும், பெண்களுக்கு எதிரானதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேர்ந்து போராடும் போதே பெண் விடுதலை சாத்தியமே தவிர சட்டத்தின் மூலம் தீர்வு கிடையாது என உரையாற்றினார்.

மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும் என்ற தலைப்பில் தோழர் துரை சண்முகம் பேசும்போது:

“மறுகாலனியம் இன்று ஒட்டு மொத்த மக்களையும் வேட்டையாடும் சூழலில் பெண்களின் நிலை என்பது மிக கொடுமையாக உள்ளது. உழைப்பு சுரண்டலின் உதாரணம் சென்னை நோக்கியா கம்பெனியில் வேலை செய்த அம்பிகா என்ற பெண் யந்திரத்தில் வேலை பார்க்கும் போது கழுத்து அறுபட்ட நிலையிலும் உற்பத்தியை நிறுத்தக் கூடாது என நோக்கியா நிர்வாகம் அராஜகம் செய்துள்ளது. இன்று பல நிறுவனங்கள் பெண்களை அழகுப் பதுமைகளாகவே பார்க்கிறது. முதலாளித்துவம் பெண்களின் உழைப்பை சுரண்டுவதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேரவேண்டிய அவசியம் குறித்தும் அந்த உணர்வை ஊட்டுவது பெண்கள் விடுதலை முன்னணியின் கடமையாகவும் உள்ளது” என பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியினரின் அறிமுக ஆட்டத்துடன், பெண் தோழரின் சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. பெ.வி.மு.வின் “நவீன அடிமைகள்” நாடகம் நடத்திக் காட்டப்பட்டது. ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியும் சிறுவர் கலைக்குழுவின் கழியல் ஆட்டம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை, பற்றிய சிறு நாடகமும் நடத்தப்பட்டது.

இறுதியில் நன்றியுரை, சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் சுமார் 700பேர் கலந்து கொண்டனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________

செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி ,திருச்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்

42

தமிழக-மின்வெட்டு-ஜெயலலிதா-கார்டூன்

கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி,  ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.

சென்ற ஆண்டு டிசம்பரில் எப்.ஐ.சி.சி.ஐ. என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “2012 இல் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது” என பிரகடனம் செய்தார். 2012ஆம் ஆண்டோ, எட்டு மணி நேர மின்வெட்டுடன் தொடங்கியிருக்கிறது. “2014இல் தமிழகம் மின் உபரி மாநிலமாக இருக்கும்” என்று இப்போது குறி சொல்லியிருக்கிறார் அமைச்சர்.

திட்டமிட்டபடி அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்காதது, இருக்கின்ற மின்நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்தி குறைந்திருப்பது, மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காதது என்று தற்போதைய மின்பற்றாக்குறைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

2006இல் தமிழகத்தின் மின் தேவை 8500 மெகா வாட். 2012இல் 12,000 மெகாவாட். பெருகியிருக்கும் இந்த மின் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின் உற்பத்தி பெருக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.

இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல்,  அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது. தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதைதான். கடுமையானதொரு மின்பற்றாக்குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.

“மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்.  மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம்  இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.

இப்படி ஒருபுறம் மக்களின் கோபம் குறி தவறிப் போக, இன்னொரு புறம், பிப். 16 அன்று தமிழகத்தின் பிரபல நாளேடுகளில் வெளிவந்த ஒரு விளம்பரம் மின்வெட்டு பிரச்சினையின் முக்கியமானதொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது.

“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள்.  மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”

என்று தமிழகத்தின் ஜவுளி, இஞ்சினியரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரத்தில் கோரியிருந்தனர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை. அரசாங்கமும் இந்த அநீதிக்கு பதிலளிக்கவில்லை.

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்எனினும் இந்த விளம்பரம், தமிழக மின்வெட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், அதில் பளிச்சென்று தெரியும் மறுகாலனியாக்க கொள்கையையும் அம்பலப் படுத்துகிறது. நோக்கியா, ஹூண்டாய், போர்டு, ரெனால்ட், நிஸ்ஸான், டைம்லர், அப்போலோ டையர்ஸ், செயின்ட் கோபெய்ன், நோக்கியா, சீமன்ஸ், மோசர் பேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வாசல் முதல் கழிவறை வரை குளிரூட்டப்பட்ட ஆடம்பர மால்கள், ஐ.டி. நிறுவனங்களுக்காக உள்நாட்டுத் தொழில்கள் காவு கொடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 2010-11ஆம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.

மொத்த மின்சாரத்தில்  18.5% கம்பித்தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி.

மாநில அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு 0.21 காசுகள் (நீர்மின்சக்தி). அதிக பட்சம் யூனிட்டு ரூ.2.14 காசுகள்(அனல்மின்சக்தி). தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ.3.96. அதிகபட்சம் ரூ.17.00.

201112 கணக்கீட்டின்படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சராசரி அடக்க விலை  யூனிட் ஒன்றுக்கு ரூ.5.31. விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1.50. இதனை ஈடு செய்வதற்குத்தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது.

தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93%, வணிக நிறுவனங்கள் 10.43%, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது. வீடுகளுக்கு ரூ.1.85 முதல் ரூ.2.90 வரை; வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.05 முதல் ரூ.6.00 வரை; தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை  என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2.00 இல் தொடங்கி அதிகபட்சம் ரூ.5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேற்கூறிய விவரங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின்சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு, வாரியத்தின் வருவாயில் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கிவிடுகின்றனர் (இந்தியா டுடே, பிப்,29, 2012).

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ‘தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரம் வாங்குவது ஏன்?’ என்று மக்கள் கேட்டதற்கு, “அவ்வாறு வாங்கவில்லையென்றால், 18 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டியிருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார் தமிழக மின்வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் (தினமலர், ஜன30, 2012). தமிழக மின்வாரியத்தின் தற்போதைய கடன் 56,000 கோடி ரூபாய் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த 56,000 கோடி கடன் வந்தது எப்படி? விவசாயத்துக்கான இலவச மின்சாரம்தான் இதற்கு காரணம் என்று பலரும் இதற்கு பதிலளிக்கக் கூடும். அது உண்மைதானா என்பதை விவரங்களிலிருந்து பின்னர் பார்ப்போம். விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரை விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கூறுவதும், இலவச மின்சாரம் கூடாது என்று கூறுவதும் ஒன்றே.  நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதனை செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரசு செய்து தரத் தவறியதால், தனது சொந்தச் செலவில், கிணறு/பம்புசெட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல, சலுகையுமல்ல.

ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்தண்ணீர் உள்ளிட்ட வசதிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர்டர்னர் முதல் பொறியியல், மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள்  என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யூனிட் 17 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தை, ரூ.3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை. அதனால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டுக் கூறுவதில்லை. இதைத்தான் மின்வெட்டுக்காக சிறு தொழிலதிபர்கள் கொடுத்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது.

அதேபோல, கம்பித்தட இழப்பு என்று கூறப்படும் சுமார் 18.5 சதவீதத்தில் பெரும்பகுதி  ஆலை முதலாளிகள் செய்யும் மின்சாரத் திருட்டாகும். துணை மின்நிலையங்களிலிருந்தே நேரடியாகவே மின்சாரம் திருடப்பட்டாலும், அந்த மின்சாரமும் ‘இழப்பு’ என்று காந்திக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இவை ஒருபுறமிருக்க, “தகவல் தொழில் நுட்பத்தின் துணையுடன் இயங்கும் தொழில்களுக்கான (ITES) மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 5 ரூபாயிலிருந்து ரூ.3.50 ஆக குறைக்க வேண்டும்” என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை என்ன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள யாருமறியாத இரகசியம். இவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பற்றிய விவரங்கள்.

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்இனி வாங்கப்படும் மின்சாரத்துக்கு வருவோம். மின் வாரியம் அளிக்கும் விவரங்களின்படியே, அரசாங்க மின்சாரத்தின் விலையை விட தனியார் மின்சாரத்தின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதுதான் மின் வாரியத்தின் நட்டத்துக்கு காரணம். இன்டிபென்டென்ட் பவர் புரொடியூசர்ஸ் (சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள்) என்று அழைக்கப்படும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொண்டும், மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன் (வணிக மின் உற்பத்திக் கழகங்கள்) என்று அழைக்கப்படுவோரிடம் சந்தை விலையிலும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது அரசு. மின்சாரத்தின் வெளிச்சந்தை விலை சென்ற ஆண்டில் மட்டும் குறைந்த பட்சம் யூனிட் ரூ.1.10 இல் தொடங்கி ரூ.12.00 வரை ஏறி இறங்கியுள்ளது. இதில் எப்போதுமே குறைந்த பட்ச விலையைக் கூறுவது அரசு மின் நிலையங்களாகவும், அதிக பட்ச விலையைக் கோருவது தனியார் முதலாளிகளுமாகவே இருக்கின்றனர்.

இன்று மின் வெட்டை சமாளிப்பதற்காக யூனிட் ரூ.4.50 விலையில் குஜராத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கி வருகிறது. இதில் 235 மெகாவாட் மட்டுமே வந்து சேர்வதாகவும் 265 மெகாவாட் மின்தட இழப்பில் போய்விடுவதாகவும் கூறுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். இதனால், வாங்குகின்ற மின்சாரத்தின் உண்மையான விலை யூனிட்டுக்கு 10 ரூபாய் ஆகிவிடுகிறது. இதே மின்சாரத்தை தமிழகத்தின் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு வாங்க முடியும். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மட்டும் 6007 மெகாவாட். தனியார் அனல் மின் நிலைய உற்பத்தித் திறன் 1180 மெகாவாட். “சென்ற ஆண்டு யூனிட் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து 1500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கினோம். 10,000 கோடி ரூபாய் அவர்களுக்கு பாக்கி வைத்திருப்பதால், இந்த ஆண்டு எதுவும் செய்வதற்கில்லை” என்று கூறுகிறார் ஒரு மின்வாரிய அதிகாரி. (டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்.23, 2012)

இதுநாள் வரை  யூனிட் 5 ரூபாய்க்கு தங்களிடம் மின்சாரத்தை வாங்கிவந்த மின்வாரியம், இப்போது ரூ.3.50 கேட்பதாகவும், இதன் காரணமாக 800 மெகாவாட் அனல்மின் உற்பத்தியை முடக்கவேண்டியிருக்கும் என்றும் சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசிடம் தெரிவித்திருக்கிறது தனியார் மின் உற்பத்தியாளர் சங்கம். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 30, 2011) “மின்சாரத்தின் விலையைக் கூட்டி விற்பதன் மூலம் மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளுகின்ற தமிழ்நாட்டிலுள்ள 5 தனியார் அனல் மின் நிலையங்களை உடனே அரசுடைமை ஆக்கு” என்று தீர்மானமே இயற்றி தி.மு.க. அரசுக்கு அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கம் (தி இந்து, 19.5.2008).

தனியார் மின் நிலையங்களை அரசுடைமை ஆக்குவது இருக்கட்டும், முதலில் கூரை ஏறிக் கோழி பிடித்தார்களா என்று பார்ப்போம். 20052010 காலகட்டத்தில் மின் தேவை 3977 மெகாவாட் அதிகரித்தது என்றும், ஆனால் வெறும் 290 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிதாக உற்பத்தி செய்யப்பட்டதென்றும் 200910 க்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. இது ஒன் றைத் தவிர 20012010 காலகட்டத்தில், (அதாவது அ.திமு.க; தி.மு.க. இரு ஆட்சிகளிலும்) புதிதாக ஒரு மெகாவாட் கூட உற்பத்தித்திறன் கூட அதிகரிக்கப்படவில்லை.

இந்தப் பத்தாண்டுகளில் ஜெயாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சென்னையிலும் மற்ற பெரு நகரங்களிலும் பெருகியிருக்கும் ஆடம்பர மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெருகியிருக்கும் விதவிதமான மின் உபகரணங்கள், ஏ.சி.மிசின்கள் ஆகிய இவற்றுக்கான மின்சாரத்தை யார் கொடுப்பது? இதற்காகவேனும் மாநில அரசு தனது சொந்த அனல் மின்நிலையங்களைத் தொடங்கவேண்டும் என்று அ.தி.மு.க; தி.மு.க அரசுகளுக்குப் புரியாததற்குக் காரணம் அறியாமையா, நிர்வாகத் திறமையின்மையா?

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்இரண்டுமல்ல. புதிதாக அரசுப் பள்ளிகளோ கல்லூரிகளோ திறக்காமல், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு கல்வியைத் திறந்து விட்டிருப்பதற்கு எது காரணமோ, அதுதான் அரசு தனது சொந்த முதலீட்டில் மின்நிலையங்களைத் தொடங்காததற்கும் காரணம். “மருத்துவம், கல்வி ஆகியவற்றைப் போலவே, மின்சாரமும் ஒரு விற்பனைச் சரக்கு. பொதுநல நோக்கிலோ அல்லது சமூக நோக்கிலோ அரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்குவது கூடாது. அதன் விலை சர்வதேச சந்தை விலையோடு ஒத்திருக்கவேண்டும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மின் துறையில் முதலீடு செய்ய இயலும்” என்ற உலக வங்கியின் ஆணைப்படி 2003 இல் பாரதிய ஜனதா அரசு  புதிய மின் சட்டத்தை இயற்றியது.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டம், மின்சாரம் என்பதை விவசாயம், தொழில், மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான அத்தியாவசியத் தேவையாகவும், லாப நோக்கமின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் வரையறுத்தது. இதன் காரணமாகத்தான் பல மாநிலங்களின் குக்கிராமங்கள் வரை மின்கம்பிகள் சென்றன. 2003 சட்டமோ மின்சாரத்தை லாபமீட்டும் சரக்காகவும், மின் விநியோகத்தை வணிக நடவடிக்கையாகவும் வரையறுத்தது. மாநில மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்துதல், மின் விநியோகம் என்று மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட்டன. மின் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது.

இன்று அனைத்திந்திய அளவில் தனியார் மின் நிலையங்களின் உற்பத்தி 48,000 மெகாவாட். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது 23% ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் தனியார் உற்பத்தி மேலும் 30,000 மெகாவாட் அதிகரிக்க இருக்கிறது. அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அனுமதிக்க இருக்கிறது மன்மோகன் அரசு. தமிழ்நாட்டில் மட்டும் 18,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 வணிக மின் உற்பத்திக் கழகங்களுக்கு (அனல் மின்சாரம்) தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பங்கு மென்மேலும் அதிகரிப்பதையே இவை காட்டுகின்றன. இது அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசின் கையிலிருந்து அவர்கள் கைக்கு முழுவதுமாக மாறிவிடும். ‘மேட்டூர் நீர்மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 20 காசு’ என்று தமிழக மின்வாரியம் கூறினாலும், ‘கூடங்குளம் அணுமின்சாரம் அஞ்சே காசுகள்’ என்று அப்துல் கலாம் கூவினாலும், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளாகத்தான் இருப்பார்கள். மருத்துவம், கல்வி முதலான துறைகளில் மக்களின் இரத்தத்தைப் பிழிந்து காசாக்கத் தெரிந்த முதலாளிகள், கரெண்டு பில்லுக்கான காசை நம் எலும்பைப் பிழிந்தேனும் எடுத்துவிடுவார்கள்.

மின்சாரம் தனியார்மயம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் மீதும், உள்நாட்டு சிறு தொழில்கள் மற்றும் விவசாயத்தின் மீதும் நிரந்தரமான மின்வெட்டைத் திணித்துவிடும். இன்றைய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம், மின்சாரம் வாங்குவதற்கு தமிழக மின்வாரியத்திடம் பணமில்லை என்பதே; மின்சாரப் பற்றாக்குறை என்பது இரண்டாவது காரணம்தான்.  மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நாளை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகளின் கைகளுக்கு முற்றிலுமாக மாறிவிடும்போது, அவர்கள் சொல்லும் சர்வதேச சந்தை விலைக்கு மின்சாரத்தை வாங்க நம்மிடம் பணமிருக்காது. எனவே மின்வெட்டு நம்மீது திணிக்கப்படும். அந்த மின்வெட்டிலிருந்து நம்மைக் காப்பாற்ற எந்த அணு சக்தியாலும் முடியாது. அதற்கு மக்கள் சக்தி தேவைப்படும். இன்று கூடங்குளத்தைக் கூடாதென்று நிறுத்தி வருகிறதே, அதே மக்கள் சக்திதான்!

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________

டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!

6

நகரப் பேருந்து நிலையம். டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் வெகுநேரம் சோர்வளித்தது. சுற்றியுள்ள காட்சிகளில் கண்கள் நேரம் மறந்தன. சிவந்து உப்பிய பஜ்ஜியை தினத்தந்தி பேப்பரில் ஒரு அப்பு அப்பி பிழிந்து எடுத்தவர், ஏதோ மவுத் ஆர்கன் வாசிப்பது போல அதை விதவிதமாக வாயில் வைத்து ஊதி ஊதிக் கடித்துத் தீர்த்தார். தின்று முடித்தவுடன் அந்தப் பெரியவர் கை நிறைந்து காணப்பட்ட எண்ணைய்ப் பசையை முழங்காலுக்குக் கீழே முழுவதும் தடவிக் கொண்டார். ஆயில் மசாஜ் போல கால் விரல்களின் இடுக்கு வரை எண்ணெய்க் கைகளை தேய்த்தார்.

பக்கத்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த எனது வியப்பைப் புரிந்து கொண்டவர் போல, ”தம்பி! என்ன பாக்குறீங்க, இந்த எண்ணைய இப்படி ஒரு தடவு தடவுனாத்தான் இந்த பஸ்ஸ்டாண்டு கொசுக் கடிக்கு நமக்கு பாதுகாப்பு! இந்த எண்ணெ வாசத்துக்கு கொசு நம்ம பக்கமே தல வெச்சுப் படுக்காது பாருங்க.. ஹி..ஹி..”  .

அவர் சிரிப்பும், அனுபவ அறிவும் எனக்குப் புதுமையாகப் பட்டது. இன்னொரு பக்கம் தட்டு முறுக்கை தஞ்சாவூர் கோபுரம் போல அடுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரின் செய் நேர்த்தி என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தேவைக்கு வெளியூர் போய் வரும் ஒரு பெரிய கிராமத்துக் குடும்பம் சில்வர் வாளி, ஒயர் பேக்குகளை நடுவில் வைத்து சுற்றிலும் பாதுகாப்பு அரணாக அமர்ந்திருந்தார்கள்.

ஓரிரு குட்டிப்பையன்கள் அவர்களைச் சுற்றி வருவதும், திடீரென அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தனர். பெண்டு பிள்ளைகளுக்குத் துணையாக நிற்கும் ஆண்களின் முகத்தில் பஸ் வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் சீட்டப் பிடிக்கணும் என்ற முடிவு குறிப்பாகத் தெரிந்தது.

”நேரத்துக்குள்ள பஸ்ஸு வந்து தொலைச்சா இராச்சோற வீட்டுல போயி திங்கலாம்.” என்று அதிலொருவர் தனது பொருளாதார நிலைமைக்கேற்ப பேசிக் கொண்டிருந்தார். பிளாஸ்டிக் ஊதல் விற்கும் சிறுவன் வேண்டுமென்றே குழந்தைகளைப் பார்த்து ”பீப்பி..” என ஊத ”… டே போடா! நீ வேற புள்ளைங்கள கௌப்பி விட்றாத! ஆளுக்கு ஒண்ணு கேட்டுத் தொலைக்குங்க. போடா அந்தப் பக்கம்” என்று நகர்த்தி விட்டனர். பெரிய பொதிகள் முதுகுத் தண்டை வளைக்க, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் திடீரென பேருந்து நிலையமெங்கும் செடி, கொடிகளாய் முளைத்தனர்.

”டே, ராசப்பா… டேய்..” வளைந்து குலுங்கிய டவுண் பஸ்ஸின் படியில் தொற்றிக் கொண்டு நுழைவாயிலிலேயே ஏறிக் கொண்டவன் செம்மண் புழுதியைக் கிழித்துக் கொண்டு கத்தினான். ”டேய் சீக்கிரம் வா.. சீட்டு போயிடும் ஆமா..” கத்திக் கொண்டே  படிக்கட்டிலிருந்து உள்ளே தலையைக் கொடுத்து முண்டினான். போக்கு காட்டி ஒரு வழியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர் படிக்கட்டின் வழி இறங்க முடியாமல், டிரைவர் சீட்டின் வழியாகக் குதித்தார். ”இறங்க வுடுதுங்களா பாரு, சனியனுங்க.. பொம்பளய போட்டு இந்த இடி இடிக்கிறானுவ.. ” கண்ட கண்ட வார்த்தையில் திட்டியபடி பாட்டி ஒன்று கமறி உமிழ்ந்தபடியே இறங்கினார்.

”ஆசயப் பாரு, உன்ன இடிக்கதான் ஏர்றாங்களாக்கும், சீக்கிரம் எறங்கு.” ”எறங்குறண்டா மவனுங்களா..” என்று காலம் புரியாமல் கத்திக் கொண்டே போனார் பாட்டி. பிதுங்கி நுழைந்து சீட்டைப் பிடித்த வேகத்தில் சிலர் சட்டைப் பட்டன்கள் காணாமல் தேட ஆரம்பித்தனர். பள்ளிப் பிள்ளைகளின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவர்கள் படிக்கட்டில் காலை வைத்தால் போதும். மூட்டையோடு அப்படியே அலாக்காக அவர்களைத் தூக்கி உள்ளே நுழைத்தது கூட்டம். சீட்டுப் பிடித்த பின்பும் சண்டை சச்சரவும், சத்தமும் நீடித்தது.

தாராளமாக நிற்கும் நிலையிலும் பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர். தொலைவிலிருந்து அந்த ஆளைப் பார்த்தால் மிடுக்கான டீசர்ட், பேண்டுடன் தடித்த உருவமாய்த் தெரிந்தார். தோரணையைப் பார்த்தால் குடிகாரனாகவோ, அருவருப்பூட்டும் தோல் வியாதிக்காரராகவோ தெரியவில்லை. சற்று நெருங்க அவர் போட்டிருந்த செண்ட் வாசனை கமகமத்தது. இருப்பினும் வேகமாக சீட் இருப்பதாய் நினைத்து வரும் யாரும் அவர் பக்கத்தில்  அமராமல் இடம் பெயர்ந்தனர்.

பிச்சைக்காரர் போல தோரணை உள்ள ஒருவர் வேகமாக வந்து இருக்கையைப் பார்க்க ”உட்காருய்யா, யாருமில்ல” என்று வாட்டசாட்டம் சொல்லிப் பார்க்க… ”தோ முன்னாடி” என்று நழுவிச் சென்றார். நின்று கொண்டிருந்த பலரும் காலியான இருக்கையில் தன் பக்கத்தில் உட்காராத நிலைமை வாட்டசாட்டமானவரை தனிமைப்படுத்தியதுடன், ஒரு கேவலத்தையும் ஏற்படுத்தியது. சுற்றும் முற்றும் அவசரமாக நோட்டமிட்டவர் சாதாரணமாக அழைத்தாலும் யாரும் வராத  சூழ்நிலையில் ஒரு பள்ளிச் சிறுவனை வெடுக்கென பிடித்து இழுத்து, ”டேய், இங்க உட்கார்றா..”  என்று அதட்டல் குரலில் அமர வைத்தார்.

அவனோ இருப்புக் கொள்ளாதவன் போல இடப்பக்கமாக நெளித்து உட்கார்ந்து கொண்டு, தன்னை பார்க்காத நேரம் அந்த ஆசாமியை முழுவதும் உற்றுப் பார்த்து விட்டு வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான். திடுமென எழுந்தவனைத் திரும்பவும் அந்த ஆள்.. ”உட்கார்றா..” என்று விரட்ட… ”ஏங்க! எறங்கனுங்க!” என்று ஓடினான்.

ஒட்டுமொத்தமாக யாருக்கும் பிடிக்காமல் போன அந்த ஆள் யார்தான்  என்று அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன். மப்டி போலீஸ் என்பது தெளிவாகப் பட்டது.

_____________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?

18
என்கவுண்டர்
ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள்

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது ‘நீதிபரிபாலனத்தை’ நிலைநாட்டியுள்ளனர். தமிழக போலீசின் இந்த ‘அருஞ்சாதனை’ நிகழ்ந்த காலத்தில்தான் நாமும் இங்கு வாழ்ந்தோம் என்பதே ‘பெருமைக்குரிய’ விசயம். ஆனால், சென்னை போலீசின் கடமை இத்துடன் முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் ‘கணக்கை’ முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது. அது வேறு யாருமல்ல, கில்மா காலேண்டர் புகழ் சாராய மல்லையாதான் அந்தக் கொள்ளையன்.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் இந்த கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி. கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர்

வங்கிக்-கொள்ளையன்-மல்லையா
கொள்ளைக்காரன் மல்லையா - என்கவுன்டர் வெயிட்டிங் லிஸ்ட்?

பங்குகளை(5.67% share – இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது (மொத்தம் 1650 கோடிகள்). இதே போல தனியார் வங்கியான ஐசிஐசிஐ 430 கோடிகள் கடனாகவும், 5.3% பங்குகளை துட்டு கொடுத்து வாங்கியும் உள்ளது.

குதிரை குப்புறத் தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்த கதையாக, மொத்தத்தில் 19 வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து பல்லாயிரம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளதுடன் அல்லாமல், நஷ்டத்தில் ஓடும் இந்நிறுவனத்தின் 23% பங்குகளையும் வாங்கியுள்ளன. 23% பங்குகளை வைத்துள்ள இவ்வங்கிகளின் கூட்டமைப்பு கிங்பிஷரின் செயல்பாடுகளை முறைப்படுத்தி அதனை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்தனரா என்றால் இல்லை. காரணம் இந்நிறுவனம் ஒரு மூழ்கும் கப்பல் என்று தெரிந்தேதான் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொட்டியுள்ளனர். செப்டம்பர் 2011னில் கனடா நாட்டு நிறுவனமான வெரிடாஸ் கிங்பிஷரின் யோக்யதையை அம்பலப்படுத்தி அது ஒரு ‘420’ நிறுவனம் என்று அறிவித்துள்ளது. இதோ இப்போது பிப்ரவரி 2012ல் மீண்டும் ஒருமுறை கடன் கொடுங்கள் அய்யா என்று கொள்ளையடிக்க கிளம்பியுள்ளான் மல்லையா. இப்படியாப்பட்ட நிறுவனத்துக்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுத்து கை தூக்கிவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைக்கு 19 வங்கிகள் கிங் பிஷரில் கொட்டிய கோடிக்கணக்கான பணம் கணக்குப் புத்தகத்தில் மட்டும் இருக்கும் பணமாக மாறிவிட்டது(non performing asset). நிலைமை இப்படியிருக்கு இப்போது இன்னொரு முறை கிங்பிஷருக்கு 1500 கோடிகளை கொடுத்துள்ளது SBI. ஊர் பணத்தை எடுத்து உலையில் போடுவது போல, கவனிக்கவும்  நண்பர்களே,  SBIன் பிம்பிலிக்கிபியாப்பியான முதலீடுகளில் பெரும்பகுதி முதலீடு கிங் பிஷரில் இடப்பட்டதுதான்.

மல்லையாவின்-வங்கிக்-கொள்ளை
மல்லையாவின் வங்கிக் கொள்ளை பட்டியல்

ஆஹ, நஸ்டம் என்னவோ கடன் கொடுத்த வங்கிகளுக்கும், குப்பைக்கூடைக்குக் கூட தகுதியில்லாத பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிய பங்குதாரர்களுக்கும், கிங் பிஷர் ஊழியர்களுக்கும்தான், நம்ம சாராய மல்லையாவின் சொத்து மதிப்போ 22850 கோடிகளில் கும்மென்றுதான் உள்ளது. இந்த நாதாரிக்கு கடன் கொடுப்பதே ஒரு கிரிமினல் குற்றம் இதில் இவனது சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் கொடுப்பது என்றால் அப்படி ஒரு கடன் தேவையில்லை என்று சொல்கிறான் மல்லையா.

கிங்பிஷர் மட்டுமல்ல, மல்லையாவின் பிற குடி-கூத்து நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வங்கிகளுக்கு மொட்டையடித்துள்ள கடன் தொகை 14000 கோடிகள். டாடா, அம்பானி, மித்தல் போன்ற இப்படியாப்பட்ட மலைமுழுங்கித் திருடர்கள்தான் நாட்டின் பெருமைமிகு குடிமகன்களாக வலம் வருகிறார்கள்.

பீகார்-கொள்ளையன்
டாடா, அம்பானி, மல்லையாவுக்கு எப்போது?

பீஹாரில் ஒரு திருடரை(மல்லையாவுக்கே மரியாதை கொடுக்கும்  போது….) போலீசுக்காரன் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று தண்டனை கொடுத்தான். நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?

இன்று காலை இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தியறிக்கை சொல்கிறது, ஆந்திர விவசாயிகள் பலர் கடன் வழங்கிய நிறுவனங்கள் தமக்கு செய்த அவமானங்கள் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று. 1.5 லட்சம் கடன் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தாய் வயிற்றுப் போக்கு வந்த தனது குழந்தையை மருத்துவரிடம் காட்ட அனுமதி மறுக்கப்பட்டாள். ஒரு லட்சம் கடனை திருப்பிச் செலுத்து இல்லையென்றால் உன் பிள்ளைகளை விபச்சாரத்திற்கு அனுப்பு என்று மிரட்டப்பட்டதை எதிர்க்க வழியின்றி தற்கொலை செய்து கொண்டாள் இன்னொரு தாய்.

இவர்களின் தற்கொலைகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான், ‘எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு நாண்டு கொண்டோம். டாடா அம்பானி மல்லையா உள்ளிட்டவர்களின் முதலாளித்துவ கொள்ளைகளையும், எங்களது தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மான ரோசம் இருக்கா? இருந்தால் ‘தற்’கொலைகளின் சூத்திரங்களை தலைகீழாக மாற்றுங்கள்’ என்பதுதான். மாற்றுவீர்களா?

______________________________________________________________________<

முதற்பதிப்பு- அசுரன்
(நன்றி தி இந்து மற்றும் நம் கூகிள் உறவினர்கள் எல்லாம்….)

______________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

________________________________________________________________

________________________________________________________________

________________________________________________________________

________________________________________________________________

சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!

8

அப்பல்லோவின் மிடுக்கான மருத்துவ சேவை

சர்வதேச உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. ‘உலகத் தரத்திலான மருத்துவ சேவையை அளிக்க உங்களை அழைக்கிறோம்’ என்று செவிலியர்களை நோக்கிய விளம்பரம் அது. உழைக்கும் மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அப்பல்லோ குழுமம் பணி செய்யும் செவிலியரை போற்றியுள்ளதாக வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு அப்பல்லோ நிர்வாகம் செவிலியர்கள் தமது பணிச் சூழல்களை மேம்படுத்தக் கோரி நடத்த உத்தேசித்திருந்த போராட்டத்தை எதிர்த்து நீதி மன்ற உத்தரவு வாங்கியது அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை. ‘பங்குச் சந்தையில் தமது பங்குகளின் விலை பாதிக்கப்பட்டு விடக் கூடாது’ என்று போராட்டத்தை துணி போட்டு மூடி விட முயற்சி செய்து கொண்டிருக்கும் அப்பல்லோவின் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அந்த விளம்பரத்தில் தேடினால் கூட கிடைக்கவில்லை.

செவிலியர்கள் டிசம்பர் மாதமே தமது கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன் வைத்து, ஜனவரி 20 முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நோட்டிஸ் கொடுத்திருந்ததும் நிர்வாகம் சமரசத்துக்கு அழைத்து பின்னர் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்பது அந்த விளம்பரத்தில் சொல்லப்படவில்லை. முந்தைய நாள் அப்போல்லோவைச் சேர்ந்த 800 நர்ஸூகளும் போர்டிஸ் மலர் மருத்துவமனையை சேர்ந்த 200 நர்ஸூகளும் பார்க் டவுனில் உள்ள மெமோரியல் ஹாலில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அந்த விளம்பரம் பேசவில்லை.

மூன்று ஆண்டுகள் அனுபவம் உடைய செவிலியருக்கு சுமர் 6,000 ரூபாய் மட்டும் மாதச் சம்பளம் வழங்குவது, அவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்திருப்பது, வேலையை விட்டு விலக விரும்பினால் அனுபவச் சான்றிதழையும் தகுதிச் சான்றிதழ்களையும் தராமல் மிரட்டுவது என்ற நடவடிக்கைகள் அந்த விளம்பரத்தைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை.

மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம்

இதே போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளான முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் செவிலியர்களும் அதே மாதிரியான கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 2-ம் தேதி தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

அனுதினமும் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் நோயுற்றவர்களுக்கு உதவி புரியும் செவிலியர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையேதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். நிரந்தர வேலை என்ற உத்தரவாதம் கிடையாது, பற்றாக்குறை சம்பளம், கல்விக்கு வாங்கிய கடன் சுமை, குறைவான செவிலியர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தியிருப்பதால் அழுத்தும் வேலைப் பளு, இதன் நடுவில் இவர்கள் வேலை செய்வது இயந்திரங்களுடன் அல்ல நோயுற்ற மனிதர்களுடன். இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியிலும் இன்முகத்துடன் கவனமாக சேவை செய்ய முனையும் வெள்ளுடை உழைப்பாளிகள் இவர்கள்.

இப்படியாக மிகுந்த பொறுப்புள்ள பணியில் பல அழுத்தங்களின் கீழ்தான் செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் தனியார் மருத்துவமனைகளில் கேட்கவே வேண்டாம். அந்த அழுத்தங்களை எதிர்த்து பீரிட்டு வெளிப்பட்டது செவிலியர்களின் போராட்டம்.

அவர்கள் வைத்த கோரிக்கைகள் ஜனநாயகமானவை மட்டுமல்ல, அத்தியாவசியமானவையும் கூட

  • – சம்பளம் உயர்வு வேண்டும்
  • – கொத்தடிமைகளை போல நடத்தக்கூடாது.
  • – தங்களிடம் வாங்கி வைத்துள்ள சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும்.
  • – தங்களுக்கு போட்டுள்ள பிணை ஒப்பந்தங்களை (bond) ரத்து செய்ய வேண்டும்.
  • – நோயாளிகளின் பராமரிப்புக்குத் தேவையான அளவு போதிய செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லிவிட்டு வேலை நிறுத்தம் செய்ய வில்லை. இந்த கோரிக்கைகளை 6 மாதம் முன்பே மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, மீண்டும் நினைவூட்டி கோரிக்கை மெனு கொடுத்துள்ளனர். ஒரு மாதம் கழித்தும் பதில் இல்லை.  ‘கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம்’ என்று நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு மாதத்திற்குப் பிறகும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவே தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

MMM மருத்துவமனை

சென்னையில் உயர்நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகமாக வாழும் அண்ணா நகர்-முகப்பேர் பகுதியில் உள்ளது மெட்ராஸ் மெடிகல் மிஷன் எனும் தனியார் மருத்துவமனை. ‘முழுக்க தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்’ ஆரம்பிக்கபட்டதாக தன் வலைத்தளத்தில் முழங்குகிறது மருத்துவமனை நிர்வாகம். இந்த MMM  மருத்துவமனை கட்டிடங்கள் பார்க்க ஐந்து நட்சத்திர விடுதி மாதிரி ஜொலிக்கின்றன, நோயாளிகளிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கும் குறைவில்லை. நோயாளிகளிடன் உறிஞ்சி நல்ல லாபம் பார்க்கும் அதே நேரம் செவிலியர்கள் போன்ற சாதாரண ஊழியர்களிடமிருந்தும் உறிஞ்சுகிறது.

மார்ச் 3-ம் தேதி, வியாழக் கிழமை அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் 300 செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் ஒன்றும் தொழிற்சாலையில் வேலை செய்யவில்லையே, வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகளை யார் பார்த்துக்கொள்வது? இந்த அக்கறையுடன் 60 செவிலியர்களை வார்டில் நிறுத்திவிட்டு, 240 பேர் மாத்திரம் கீழே வந்து போராடத் தொடங்கினார்கள்.

வேலை நிறுத்தம் தொடங்கும் முன் இவர்களாகவே போலிசுக்கும் அறிவித்தனர். இத்தனை நாள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் மௌனம் சாதித்த நிர்வாகம், வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்த அரைமணி நேரத்தில் ஒரு நோட்டிஸ் அனுப்பியது. ‘வேலை நிறுத்தம் செய்யும் பெண்கள் உடனடியாக மருத்துவமனை ஆஸ்டலில் இருந்து வெளியேற வேண்டும். யாருக்கும் உணவு கிடையாது’ வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக 3 பேரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

சன் டீவி செய்தியாளர்கள் முதலில் வந்து செய்திகளை சேகரித்து போயிருக்கிறார்கள். நாம் மருத்துவமனை வளாகத்துக்குச் சென்ற போது சுதாரித்துக் கொண்டிருந்த நிர்வாகம் வேறு எந்த ஊடகங்களையும் வேலை நிறுத்தம் செய்யும் செவிலியர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.

போராட்டம் செய்பவர்களுடன் பேசியதில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 வருட படிப்பிற்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. கடனுக்கு மாதம் ரூபாய் 3,500 வங்கிக்குக் கட்ட வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் 7,500ல் பிடிப்புகள் போக ரூபாய் 5,700தான் கையில் வரும். மருத்துவமனை ஆஸ்டலில் தங்க ரூபாய் 700, உணவுக்கு ரூபாய் 700 போக கையில் ரூபாய் 4,300 நிற்கும்.  பெரும்பாலனோருக்கு வங்கிக் கடன் போக கட்டியது போக மீதி 800 ரூபாய்தான் இருக்கும். வீட்டில் இருந்து ஏதாவது பணம் வாங்கித்தான் சென்னையில் பிழைப்பு ஓடுகிறது.

வெளியே வேலை தேடிச் செல்ல முடியாது. சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மருத்துவமை நிர்வாகத்திடமிருந்து கிடைக்காது. அவற்றை பெறுவதற்கு பிணை ஒப்பந்தத்தின்படி ரூபாய் 50,000 கொடுக்க வேண்டும், அப்படியே வெளியில் வேலை தேடினாலும் எங்கும் தனியார் மயமாகி விட்ட சூழலில் மற்ற மருத்துவமனைகளிலும் இதே போன்ற பணிச்சூழல்தான்.

”இதுக்கு மேலே என்ன சார் வேணும், வெளியேவும் பொழைக்க விடமாட்டாங்க, இங்கேயும் சம்பளம் கொடுக்கமாட்டாங்க, நாங்க என்ன செய்ய? எங்களுக்கு பயம் இல்லை, நாங்க போராடத்தான் போறோம். வீட்டில் சொல்லிட்டோம். அவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க. எங்களுக்கு வேற என்ன வழி இருக்கு சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டு போராட்ட களத்தில் இறங்கி நின்றார்கள் செவிலியர்கள்.

மறு நாள் போராட்டம் என்று தெரிந்தவுடன் அரசு பணிநல மேலாளர் இவர்களைச் சந்தித்துள்ளார். அரசு யாருக்கு ஆதரவு தரும்? ‘ஏதாவது நோயாளியின் உடல் நிலையை மோசமாகச் செய்து, செவிலியரின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிப்பு என்று நிர்வாகம் அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது கூட நடக்கலாம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு அக்கறையாக ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் அவர்.

செவிலியர்களின் பணிச் சூழல்

ஒரு காலத்தில் செவிலியர்கள் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் வளைகுடா நாடுகளுக்கும் பறந்தபடி இருக்க செவிலியர்களுக்கான படிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது, தனியார் செவிலியர் கல்லுரிகள் புற்றீசல் போல முளைத்தன. இப்போது அரசு மருத்துவ சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களின் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவதில்லை. இன்னொரு பக்கம் வெளிநாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்பொழுது இருப்பது தனியார் மருத்துவமனைகள் மட்டும்தான். அவை இந்த ரிசர்வ் பட்டாளமாக நிற்கும் இந்த வேலையில்லா பட்டதாரிகளை சுரண்டி தமது வளர்ச்சியை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்’ என்கிறார் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கம், தமிழ்நாடு கிளையின் செயலாளர் ஜினி கெம்ப். பல லட்ச ரூபாய் செலவு செய்து நர்ஸிங் படித்து விட்டு இது போன்ற பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொத்தடிமைகளாக பணி செய்யும் நிலையில் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான செவிலியர்கள். அந்த நிலைமையை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி தம்முடைய மற்றும் நோயாளிகளின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தில் அடி எடுத்து வைத்து முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

செவிலியர்கள் சங்கம் கேரளாவில் இது போன்ற போராட்டத்தின் மூலம், படித்து முடித்தபின் உடன் வேலைக்குச் சேரும் புதிய நர்ஸூக்கு 14,000 ரூபாய் சம்பளம் என்பதை சாதித்திருக்கிறார்கள்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

மலர், MMM நிர்வாகங்கள் அடிபணிந்தன

ஐந்து நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் இத்தனை வருடங்களாக நடத்தி வந்திருந்த அராஜக நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து,

  • — கட்டாயமாக வாங்கி வைத்திருந்த சான்றிதழ்களை திருப்பித் தந்து விடுவது
  • — பணியை விட்டுப் போகாமலிருக்க போட்டிருந்த பிணை ஒப்பந்தத்தை ரத்து செய்வது
  • — சம்பளத்தை உயர்த்துவது

என்ற போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளான அடிப்படை நியாயங்களை நிறைவேற்றுவதாக அடிபணிந்திருக்கிறார்கள். மலர், MMM மருத்துவமனை செவிலியர் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற்றாலும் அப்போல்லோ செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெறும் வரை தமது ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.

‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. இதை தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

அடிப்படை வாழ்வுரிமை சுரண்டப்படும் போது அதை எதிர்த்து கிளர்ந்து எழுவது உழைக்கும் மக்களின் இயல்பு. ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் தகவல் தொடர்புத் துறை ஊழியர்கள் போன்றவர்கள் ‘தாம் அடிமைகள்’ என்பதை உணர்வதற்கு கொஞ்சம் அதிக காலம் பிடிக்கும். ஆனால் எல்லோரும் ‘தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்பது சுரண்டலின் வடிவம், அதன் மூலம் தமக்கு கிடைத்திருப்பது கௌரவமான வாழ்க்கை இல்லை’ என்று உணரும் போது, முதலாளித்துவ அதிகார அமைப்புகளை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.

____________________________________________________

– வினவு செய்தியாளர்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

8

புதிய கலாச்சாரம் மார்ச் 2012

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள  கட்டுரைகள்:

1. பாராமுகம்

2. சென்னை போலி மோதல் கொலை: துப்பாக்கி – குற்றத்தை உருவாக்குவதுமில்லை, ஒழிப்பதுமில்லை!

3. தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்!

4. தின்னத் தங்கம் – குடிக்கக் கடல் – உழைப்பதற்கு அடிமைகள்…. துபாய்

5. விஜய் டி.வி.சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சி சுரண்டல்!

6. வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!

7. ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

8. தி ரெட் மார்க்கெட்: மேற்கத்திய ஆரோக்கியத்திற்கு ஏழை நாடுகளின் மக்கள் பலி!

9. திரை விமரிசனம்: விசில் பிளோயர் – அமெரிக்க ஐ.நா அமைதிப் படையின் அட்டூழியங்கள்!

10. சிரிக்க முடியாத வாழ்க்கை

11. அணுத்திமிர்

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________

வினவுடன் இணையுங்கள்

கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

109

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.

இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார். இவ் விசயத்தில் இஸ்லாமியர்கள்  பாசித்தை விமர்சித்தாலும், இஸஃலாமிய கொள்கையை தூக்கி பிடித்தனர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் பாசித் திருமணம் செய்ததால் அவரை அமைப்பை விட்டு நீக்கிவிட்டோம் என்றும் பிறகு பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும்” கதை அளந்தனர்.

ஆனால் பாசித் மரைக்காயர் சிறையில் அடைக்கப்பட்ட போது தவ்ஹித் ஜமாத்துதான் அவருக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தனர். இன்று ஒருபடி மேலே சென்று முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரிலும், போனிலும் கிரிமினல் வழக்கை வாபஸ் பெறக் கோரியும், சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மிரட்டுகிறார்கள்.

“நீங்கள் காபிர்களின் (தோழர்களின்) பேச்சை கேட்டு போலிசுக்கு சென்றதால் உங்களுக்கு பாசித் எந்த பணமும் தரவில்லை. மேலும் அவர்கள் சொல்வதை கேட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்தால் உங்கள் பணமும் இருக்கின்ற ஒரே வீடும் வழக்கு செலவுக்காக காலியாகிவிடும்.” என்று மிரட்டி பார்த்துள்ளனர்.

தலாக் தலாக் தலாக்
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஆனால் இந்த மிரட்டல் பேச்சுக்கு அடிபணியாத அப்பெண் “எனக்கு இஸ்லாமியர்களைவிட தோழர்கள் மீதுதான் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது; என் வாழ்க்கை பாசித்தால் நாசமாய் போய்விட்டது; இனி எந்த இஸ்லாமிய பெண்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது”. என பதில் கூறியுள்ளார்.

இதனால் இந்த இஸ்லாமிய காவலர்கள் (பாசித்தின் தவ்ஹீத் ஜமாத்வாதி கூட்டாளிகள்) தங்களது இஸ்லாமிய சட்டபுலமையை வெளிபடுத்தும் விதமாக அந்த அப்பாவி பெண்ணுக்கு பதிவு அஞ்சல் (Register Post) மூலம் விவாகாரத்து அனுப்பியுள்ளனர்.

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.

1. இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கி இருப்பதாக கூறுகிறிர்களே….பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு நினைத்தால் விவகாரத்து செய்யும் ஆணின் இந்த வக்கிர மனம் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இல்லையா?

2. கடிதம், தொலைபேசி மற்றும் வேரொறு சாட்சியும் இல்லாமல் விவாகாரத்து செய்யும் இந்த நடைமுறைகள் இஸ்லாத்தை தவிர, வேறெந்த மதத்திலும் இந்த கொடுமை இல்லையே… எங்கே இருக்கிறது இஸ்லாத்தில் பெண்ணுரிமை? பெண்ணுரிமை என்பதை “மைக்ரோஸ்கோப்” வைத்து கண்டுபிடித்து இஸ்லாமிய அறிஞர்கள் அறியத்தர வேண்டுகிறோம்.

3. முத்தலாக்கையும் ஒரே தடவையில் கூறக்கூடாது என்று வாய்கிழிய பேசும் தவ்ஹீத் ஜமாத்தினர், தன்னுடைய உறுப்பினர்க்கு காட்டியுள்ள வழி முத்தலாக்கையும் ஒரே தடவையில் அதுவும் பதிவு அஞ்சலில் அனுப்பும் வழியைத்தான். எங்கள் அமைப்பிலுள்ளவர்கள்தான் அக்மார்க் இஸ்லாமியர்கள் என்று பிதற்றுகிறீர்களே. இதுதான் நீங்கள் கற்றுக்கொடுத்துள்ள தவ்ஹீதுவாதியின் லட்சணமோ?

4. கோபத்தில் கூட ஒரு கணவன் “தலாக், தலாக், தலாக்” என சொல்லிவிட்டால் அந்த தலாக் செல்லும் என்றும், கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அப் பெண்ணை வேறொருவர்க்கு திருமணம் செய்து, பின்பு விவகாரத்து பெற்று மீண்டும் பழைய கணவர்க்கு புதிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே. இதுதான் எளிய மார்க்கம் இஸ்லாமா?

5. தவ்ஹித் ஜாமத்தை விட்டு பாசித்தை நீக்கிவிட்டதாக கூறினீர்கள்.. ஆனால் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டத்திற்கும், பிரசாரத்திற்கும், ஊரில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் பாசித்தான் முக்கிய புள்ளி. தலை இல்லாம வால் ஆடமுடியுமா? ஆணாதிக்கவாதிகள் இல்லாமல் இஸ்லாமோ அல்லது தவ்ஹித் ஜமாத்தோ நிலைத்து இருக்கமுடியுமா?

6. கந்துரி விழாக்களை (தர்கா நிகழ்ச்சிகள்) தடை செய்ய கூறும் தவ்ஹித் ஜாமத், பாசித் தனது இரண்டாவது மனைவியை அருகில் உள்ள கோட்டைபட்டினம் மகான் ராவுத்தர் அப்பா தர்கா கந்துரி விழாவிற்கு அழைத்து டூர் சென்றரே அதற்கு எந்த ஹதிஸ்லேயாவது விதிவிலக்கு உள்ளதா? (முதல் மனைவி பாசித்திற்கு பிடிக்காமல் போனதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் மனைவி தர்காவிற்கு செல்கிறார் என்பதுதான்)

சரி விஷயத்திற்கு வருவோம் கடிதம், தொலைபேசி மூலம் விவகாரத்து செய்தால் செல்லுமா? செல்லும் என்றால் இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு என்னதான் உரிமைகள் வழங்கி இருந்தாலும் அது தலையில்லா முண்டத்திற்கு சமம் தானே? பெண்களை போகப்பொருளாக பயன்படுத்த உரிமை வழங்கி இருக்கும் மதம் தான் இஸ்லாமா? அதன் விளைவுதான் பாசித் போன்றவர்களா?. ஆனாலும் உள்ளூர் ஜமாத் அவர் அனுப்பிய தலாக் கடிதத்தை புறக்கணித்ததுடன் கண்டித்தும் உள்ளனர்.

பெண்கள் தங்களுக்கான விடுதலை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த ஆணாதிக்கவாதிகளிடம் கிஞ்சித்தும் தேட முடியாது. மாறாக ஆணாதிக்கவாதிகளின் தோலை உரித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட சமூக மாற்றத்திற்காக போரடும் புரட்சிகர அமைப்புகளில் இருந்துதான் பெறமுடியும். இதனையே கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகள் நமக்கு திமிருடன் அறிவித்து இருக்கிறார்கள்.

இனி இஸ்லாமிய பெண்கள் அந்த ஆணாதிக்கவாதிகளின் நடைமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கமுடியும்.

 ___________________________________________________

– ஜமால்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

18

ஐரோப்பாஉழைக்கும் மக்களின் போராட்டங்களால் ஐரோப்பா கண்டத்திலுள்ள கிரீஸ் நாடு மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. கிரேக்க நாட்டில் கடந்த பிப்ரவரி 12 அன்று நாடாளுமன்றத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்று அரசின் சமூகச் செலவினக் குறைப்புத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.

தீராத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த  கிரீஸ் நாட்டின் நெருக்கடிக்கு,  நலத்திட்டங்கள்  மானிய வெட்டு முதலான பொருளாதாரத் தாக்குதல்களையே  ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகிய மும்மூர்த்திகள் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனைச் செயல்படுத்தாவிட்டால் நாடு திவாலாகி பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்று நிர்ப்பந்தமாக இதனைத் திணித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணிக்கப்பட்ட இத்தகைய நெருக்கடிக்கான தீர்வுத் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய மோசடி என்பதையும், வறுமையும் வேலையின்மையும்  துயரமும் தீவிரமாகிவிட்டதையும் தற்போதையை நிலைமேகளே நிரூபித்துக்  காட்டுகின்றன. தனியார் துறையில் 20 சதவீத அளவிற்கும், பொதுத்துறையில் 50 சதவீத அளவிற்கும் ஊதியங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீத அளவுக்கும், தொழிற்துறை உற்பத்தி 16 சதவீத அளவுக்கும் வீழ்ச்சியடைந்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி உயர்வால் ஒரு லட்சம் சிறு மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் திவாலாகிவிட்டன.

இத்தனையும் போதாதென்று, கடந்த பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட புதிய சமூகச் செலவின வெட்டுத் திட்டத்தின்படி, 2015இல் இன்னும் கூடுதலாக ஒன்றரை லட்சம் அரசுத்துறை தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவுள்ளனர். “ஒரு முழம் கயிறா, அல்லது ஒரு துளி விஷமா என்கிற வெவ்வேறு வடிவிலான மரணத்துக்கு இடையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்குமாறு ஆட்சியாளர்கள் எங்களைத் தள்ளுகின்றனர்; இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று இத்தாக்குதலை எதிர்த்து கிரீஸ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.

கிரீஸ் நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அது ஐரோப்பாவிலுள்ள பிற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துவிடும் என்று இந்த ஒன்றியத்தின் செல்வாக்கு மிக்க நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் அஞ்சுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, விரைவாக  கிரீசை நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் மானியவெட்டுகளைத் தீவிரமாக்குமாறு நிர்பந்தித்து,  கிரீசை தங்களது மேலாதிக்கத் திட்டங்களுக்கான சோதனைக் கூடமாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஐரோப்பா26 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாடு மட்டும்தான் நெருக்கடியில் சிக்கி திவாலாகும் விளிம்பில் இருப்பதாகவும், அதனைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் முதலாளித்துவ உலகம் சித்தரித்து வந்தது. ஆனால், இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிரீசின் கதியை அடைந்து குடிமுழுகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே வேறுவழியின்றி இப்போது ஒப்புக் கொள்கின்றனர்.  தான் பட்டகடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலில்  “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இருந்த உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, கடந்த 2011 ஆகஸ்டில் அத்தகுதியை இழந்து விட்டது என்று ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீடு நிறுவனம் அறிவித்தது. மற்றொரு பொருளாதார வல்லரசான ஜப்பானும் அத்தகுதியை இழந்து நீண்டகாலமாகிவிட்டது. எஞ்சியிருந்த ஐரோப்பிய ஒன்றியமும் இன்று அந்த நிலைக்குத் தள்ளப்பட்டு முழுகிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த கடந்த ஜனவரி 12 இல் பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகள் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை இழந்துவிட்டன என்றும், தற்போதைய நிலையில்  ஜெர்மனி, லக்சம்பர்க், பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஓரளவுக்கு தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், இந்நாடுகள் உதவினால்தான் ஐரோப்பிய பொருளாதாரத்தையும் யூரோ நாணயத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அந்நிறுவனம்  அறிவித்துள்ளது.

தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலை 9 நாடுகள் இழந்துவிட்டதால், “ஏஏஏ” தரத்தில் நீடித்து வந்த “ஐரோப்பிய நிதிச் சீரமைப்பு ஏற்பாடு’’ (EFSF) என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திவாலான நாடுகளை மீட்பதற்கான நிதியமைப்பும் இப்போது அதன் தரத்தை இழக்கத் தொடங்கியுள்ளது என்று அடுத்த நான்கு நாட்களில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் மக்களின் நுகர்வு குறைந்துள்ளதோடு, அரசின் வரிவருவாயும் குறைந்துவிட்டது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் உண்மைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐரோப்பாஏற்கெனவே அயர்லாந்தில் ஏற்றுமதி உபரி மூலம் நெருக்கடியைச் சமாளித்துவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்தனர். ஆனால் நெருக்கடிக்கு முன்பிருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை விட, இப்போது அந்நாட்டில் வேலையின்மை தீவிரமாகிவிட்டது. இதர நாடுகள் இறக்குமதி செய்தால்தான் அந்நாடு தனது நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் இருப்பதால், அது எந்நேரமும் திவாலாகும் நிலையில் உள்ளது. கிரீசும் அயர்லாந்தும் இரட்டை இலக்க பணவீக்கத்தால் தவிக்கின்றன. ஸ்பெயின் நாடு 23 சதவீத வேலையின்மையால் தத்தளிக்கிறது.

ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கக் கடன் பத்திரங்களும் இன்று மதிப்பிழந்து போய்விட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க இன்னொரு நாடான பிரிட்டன், 1930களில் நிலவிய பெருமந்த நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பிரிட்டனில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டில்தான் மிக அதிகமாக 20.64 லட்சம் பேர் வேலையின்றித் தவிப்பதாகவும், இது 2012இல் 30 லட்சமாக உயரும் என்றும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

கூடுதல் விலைக்கு கடன்களை வாங்கி, தமது நாடுகளின் திவாலாகும் நிலையிலுள்ள வங்கிகளை மீட்குமாறு நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையிலுள்ள நாடுகளிடம் ஜெர்மனியும் பிரான்சும்  நிர்ப்பந்திக்கின்றன. இதன் விளைவாக, நிதித்துறையில் கடுமையான சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்;  இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து அரசின் வரி வருவாயும் குறையும் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இந்நாடுகளின் வங்கிகள் தடுமாறுகின்றன.

மொத்தத்தில் அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியமும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் யூரோ நாணயத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த டிசம்பர் 9 அன்று பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடத்திய உச்சி மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியமே சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் சூழல்தான் நிலவுகிறது. பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டுமொரு உலகப் பொருளாதார நெருக்கடி முற்றுவதற்கான அறிகுறிகளைத்தான் காட்டுகிறதேயொழிய, தீர்வதற்கான வாய்ப்புகளோ வழிகளோ தென்படவேயில்லை.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!

33

மீனவர் கொலைகேரளத்தின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடல்பகுதியில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, “என்ரிகா லாக்ஸி” என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களைக் கைது செய்து தண்டிக்கவும், கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும், மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு, ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால், கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது, எச்சரிக்கை செய்தபோதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால், கடற்கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கையைத் தட்டிக் கழித்துள்ளார்.  ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா, அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்துவிடும்.

மேலும், இது எச்சரிக்கைக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது. சர்வதேசக் கடல் எல்லையில்தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகப் புளுகி, இந்தியச் சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராகக் கூறியுள்ளார். இவற்றை  நிராகரித்து உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.

இத்தாலிய தூதரக அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குப் பின்னர்தான், கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இரண்டு பாதுகாப்புப்படை சிப்பாய்களைச் சரணடையுமாறு கேரள போலீசு கோரியது. ஆனாலும்,கெடு முடிந்து 8 மணிநேரத்துக்குப் பின்னர்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும்போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் ‘விசாரணை’ நடந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும், அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால், இத்தாலிய சட்டப்படிதான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரித்தார். இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள் முதலானவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி, இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேசிய புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறிவிட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே, இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாகக் கைது செய்யும் இந்திய அரசு, ஏகாதிபத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டால்கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச்சம்பவத்துக்குத் தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும், அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.

அரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்தாத நிலையில், சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,  ஒருவிதப் பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்துக்கு ஏற்ப  தினமணி தலையங்கம் எழுதுகிறது.  துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும்போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து, மீன்பிடி படகுகளைக் குறுக்கே கொண்டுபோய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப் போகச் செய்வார்கள் என்பதால், ஒரு மீன்பிடிப் படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில், இத்தாலியக் கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி, மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.

மீனவர் கொலைதற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல; அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத்தனமும் ஏகாதிபத்திய விசுவாசமும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது. 1995 டிசம்பரில் மே.வங்கத்தின் புருலியாவில் இரகசியாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர்,  ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இந்தியத் தூதரகப் பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபலமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோதும்,  அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்டபோதும்,  இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு, தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே, இத்தாலியக் கப்பல் விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அட உங்களைத்தான் சொல்வது கேட்கிறதா?

3

தொலைக்காட்சி ”நாதஸ்வரத்தை”
தொடரும் பெண்ணே,
உலகமயம் உன் நிம்மதிக்கு
சங்கூதும் சத்தம் உனக்குக் கேட்கிறதா?

”செல்லமே”
ரொம்ப நாளைக்கு ஓடாது,
வெறித்துப் பார்த்து, பார்த்து
உனக்கு கண் ஆபரேசன்
ராடன் ராதிகாவுக்கு கலெக்சன்,                                                    ‘
முண்டமே’ என பெண்களை
வெட்டிச் சிதைக்கும் முதலாளித்துவ
உண்மை நிகழ்ச்சிகளை
கொஞ்சம் திரும்பிப்பார்!

சுய உதவிக்குழுக்கள்
நம் போராட்ட உணர்வை அரிக்கும்
முதலாளித்துவப் புழுக்கள்.
வங்கிக் கடனை தூக்கி எறி,
உன் வர்க்க கடனை தீர்ப்பதற்கு பார்….

காணுமிடமெல்லாம் கைத்தோலுரியும்
பெண்களின் உழைப்பு – உங்கள்
கண்கள் உறுத்தலையோ?

ஆணென்று மீசை முறுக்கும்
அன்பான உழைப்போரே,
உன்னையொத்த பெண்களின் கூலியுழைப்பு
உனக்கும் சேர்த்து
விடுதலையை வேண்டும் குரல்
உன் செவிகளுக்கு கேட்கலையோ?

பங்களாக்களின் பத்துப்பாத்திரத்தில்
வெளுக்கும் துணிகளில், தரைகளில்
உரிந்து பளிச்சிடுகிறது
பெண்ணின் தோல்!
பெட்ரோல் பங்குகளில்
பிழியப்பட்டு வழிகிறது
பெண்ணின் வியர்வை!

பன்னாட்டுக் கம்பெனி
கோக் – பெப்சி பாட்டில்களில்
கழுவப்படுகிறது
பெண்ணின் ரத்தம்!

கட்டிட வேலையில், அரிசி ஆலையில்
கான்வென்ட் பள்ளியில், கணினித் துறையில்
ஒவ்வொரு பணியிலும் உருவப்படுகிறது
பெண்ணின் நரம்புகள்!

பணிச் சுரண்டல், பாலியல் சுரண்டல்
காதல் சுரண்டல், குடும்பச் சுரண்டல்… என
பெண்ணைச் சுரண்டி
தின்னும் முதலாளித்துவம்தான், அதன் சிந்தனைதான்

உன்னையும் சுரண்டுகிறது என்பதை உணர்வாயா ஆண்மகனே!

பெண்களை உரசுவதையே
பெரும் சாதனையாய்க் கருதும் நண்பா!
உன்னை மொத்தமும் வாட்டுகிற,
முதலாளித்துவத்தோடு உரச ‘தில்’ இருந்தால்
வா, பெண்கள் அமைப்புப் பக்கம்!

சொந்த வர்க்கத்தை,
மனைவியாய், மகளாய், சகோதரியாய்
வேலைக்காரியாய்
சுரண்டி சுகம் கண்டது போதும்,
‘ஆம்பிளை’ சிங்கங்களே! தயங்காமல்
உழைக்கும் வர்க்கமாய் ஒன்று சேர்ந்து
போராட வாரும்…..!

____________________________________________________

துரை. சண்முகம்

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

32

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

சமூக விடுதலையே! பெண் விடுதலை!

குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்!

அரங்கக் கூட்டம்:
கவிதை, நாடகம், புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள்: 8.3.2012, வியாழன்- மாலை 6 மணி
இடம்: கைத்தறி நெசவாளர் கல்யாண மண்டபம்,

தலைமை: தோழர் இந்துமதி, செயலர், பெ.வி.மு, திருச்சி.

சிறப்புரை: ‘மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும்’

– கவிஞர் தோழர் துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

‘பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா?’

தோழர் மீனாட்சி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

பெ.வி.மு-வின் ‘நவீன அடிமைகள்’ நாடகம், ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

கூட்ட ஏற்பாடு: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

__________________________________

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாள்!

அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடச் சொல்லும் பெண்கள் தினம் மார்ச் -8. இந்த உண்மை மறைக்கப்பட்டு, கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது. இன்று காதலர் தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்துக்கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது.

பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.

இந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன. அம்மாநாட்டில் இயற்றப்பட்ட புரட்சிகர தீர்மானங்களும், சட்டத்திருத்தங்கள் மூலமான உரிமைகளையும் முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. உழைக்கும் பெண்கள் இரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப் பட்டிருக்கின்றன. ஆனலும் இன்றைய நம் பெண்களுக்கு போராடி வென்ற பெண்ணிய உரிமைகள் இல்லாமல் போய்விட்டது ஏன்?

பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் முதல்படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ண்டிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கச்சூழலில் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோரையும், பெண்கள் விடுதலையிலும் சமூகவிடுதலையிலும் அக்கறையுள்ள அனைவரையும் அரங்குக்கூட்டத்திற்கு அழைக்கிறோம்.

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு: தோழர் நிர்மலா, பெ.வி.மு, திருச்சி. செல் 8012421471

_______________________________________________________________

– பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

12

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – புரட்சிகர அமைப்புகள் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி!
  2. கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய – மாநில அரசுகளில் சதி!
  3. மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்!
  4. குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
  5. ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
  6. யேனாம் படுகொலை: முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக….
  7. ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
  8. காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி
  9. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – மக்களின் பேராதரவோடு தொடரும் பிரச்சார இயக்கம்
  10. “ஆபத்தான அணுஉலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்” – எதிரிகளை இனங்காட்டி….துரோகிகளைத் தோலுரித்து போராட அறைகூவிய பொதுக்கூட்டம்!
  11. தீண்டாமையின் புதிய அவதாரம்
  12. மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம், இந்தியாவின் அடிமைத்தனம்!
  13. டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
  14. புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
  15. ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

புதிய ஜனநாயகம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்