Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 407

ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !

கைது ! வேலை பறிப்பு ! அச்சுறுத்தும் நிர்வாகம் – அரசு !
அடிபணியாத ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் போராட்டம் !!

  • தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் நீம் (NEEM), எஃப்.டி.இ (FTE) திட்டத்தின் கீழ் 150 தொழிலாளர்களை இணைக்கும் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்துசெய் !
  • சட்டப்படியான ஊதிய உயர்வை அமல்படுத்து !
  • சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கு !
  • 480 நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய் !
  • கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சட்டப்படியான போனஸை வழங்கு !

என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13/09/2018 அன்று ராயல் என்பீல்டு நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். இதன்படி எந்தப் பேச்சுவார்த்தைக்கும் வராத நிர்வாகத்தைக் கண்டித்து 24/09/2018 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 24, 26, 27 ஆகிய மூன்று தேதிகளிலும் எச்.ஆர் அதிகாரியான ராஜரத்தினம் நிர்வாகத்திடம் பேசுவதாக தொழிலாளர்களிடம் கூறினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித பழிவாங்கலும் கூடாது என்ற நிபந்தனையுடன் அதனை ஏற்று 30-ம் தேதி வேலைக்குச் சென்றுள்ளனர்.

படிக்க:
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

அவ்வாறு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம் செல்போனை உள்ளே அனுமதிக்க முடியாது என மிரட்டியுள்ளது நிர்வாகம். மேலும் முறையாக வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்துத் தொடங்கிய போராட்டத்தை “சட்டவிரோத வேலை நிறுத்தம்” (Illegal Strike) எனக் கூறி தொழிலாளிகளின் 8 நாள் சம்பளத்தைப் பிடித்துள்ளது. 8 பேருக்கு சார்ஜ் சீட் கொடுத்துள்ளது. பெரியசாமி என்ற தொழிலாளியை டிஸ்மிஸ் செய்துள்ளது.

குழுமி நிற்கும் தொழிலாளர்கள்

இதனை எதிர்த்து மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க ஏற்கனவே பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு பல்வேறு சதிகளையும் செய்யத் தொடங்கியது நிர்வாகம். உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது பெண்களுக்கான கழிவறைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஒரு பெண் எச்.ஆர் அதிகாரி.

போராடும் இளம் தொழிலாளிகளின் வீடுகளுக்கு “உங்கள் மகன்/ மகள் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுகிறார். அவர் எதிர்காலம் பறிபோய்விடும்” என கடிதங்கள் அனுப்பியுள்ளது. போராடும் தொழிலாளிகளுக்கு போன் செய்து வேலை பறிபோகும், எதிர்காலம் பாழாகும் என்று அச்சுறுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உயர்வு தருவதாகவும் பணி நிரந்தரம் செய்வதாகவும் ஆசை வார்த்தைகளைக் காட்டி நயவஞ்சகமாகவும் தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்க முயன்றுள்ளது.

போலீசும் இதற்கேற்ப 26/09/2018 தேதிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டம் கூடாது எனக் கூறியதோடு வெளியே வந்து போராடும்போது சாமியானா போட அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்துக்கு சற்றும் இடையூறின்றிப் போராடியவர்களிடம் போலீசு கூறிய காரணம் “தேசிய நெடுஞ்சாலையில் ’சாமியானா’ போட அனுமதி கிடையாது” என்பதுதான்

குடும்பத்தினர் அச்சப்பட்டபோது பின் வாங்காமல் – நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கும் நயவஞ்சகத்துக்கும் பலியாகாமல் – கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது தொழிலாளர்கள் போராட்டம். சற்றும் அச்சமின்றிப் போராடும் பெண் தொழிலாளர்களது முழக்கங்கள் நிர்வாகத்தை அச்சுறுத்துகிறது. தான் மேற்கொண்ட எந்தவழியிலும் போராட்டத்தினைச் சிதைக்க முடியாமல் நிர்வாகம் தோற்றுள்ளது.

கடந்த 04/10/2018 அன்று ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிலாளர்கள் மீதான எந்தவிதப் பழிவாங்கலும் கூடாது, போராட்டத்துக்கு முன்பிருந்த பணிச்சூழல் இருக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் 05/10/2018 அன்று பணிக்குச் சென்றுள்ளனர். மீண்டும் செல்போன்களை அனுமதிக்க மறுத்ததோடு அவர்களிடம் “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இனி போராட்டங்களில் ஈடுபடமாட்டேன். நிர்வாகத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்.” என அடிமைச் சாசனம் எழுதிவைத்து அதில் கையெழுத்தும் கேட்டுள்ளது.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
♦ சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200- க்கும் மேற்பட்ட போலீசு ஆலைக்குள் வந்து “எஃப்.ஐ.ஆர் போட்ருவோம் – வாழ்க்கை வீணாகிடும் – ஒழுங்கா வேலைக்குப் போங்க” என மிரட்டியுள்ளது. இதற்கு அடிபணியாமல் தொழிலாளர்கள் போராடவே சுமார் 300 தொழிலாளிகளைக் கைது செய்து வல்லக்கோட்டை திருமண மண்டபத்தில் அடைத்துள்ளது. இதை அறிந்த ஏனைய 2வது ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையின் வாசலில் திரண்டனர்.

மேலும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட 17 தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக வந்து அணிதிரண்டுள்ளனர். போராடினால் வேலைபோகும், எதிர்காலம் பாழாகும் என்ற கருத்தைக் காட்டி இனியும் உழைக்கும் மக்களை ஏமாற்ற முடியாமல், பிளக்க முடியாமல் ஆளும் வர்க்கமும் அரசும் தோற்று நிற்கிறது. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எனப் போராடுபவர்களின் பட்டியலில் தனது நீண்ட உறக்கத்தை உதறி எறிந்து தலைமை தாங்க வருகிறது தொழிலாளி வர்க்கம்.

இச்சூழலில் தோழர் பகத்சிங்கின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

“சற்றும் சோர்வடையாத நமது மனவுறுதி

ஒவ்வொரு நொடியும் எதிரிகளை பலவீனப்படுத்துகிறது.”

இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

2

மெய்நிகர் உலகம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களில் சமூக ஊடகங்களுக்கு

வில்லவன்
அடுத்து முக்கியமானது இணைய வணிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பேரங்காடிகள் பல இப்போது கலையிழந்து நிற்கின்றன. அப்படியான புதிய பேரங்காடிகள் இப்போது அதே வேகத்தில் திறக்கப்படுவதில்லை. ஆன்லைன் மருந்துக்கடைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக மருந்துக்கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். பிரதான வீதிகளில் மட்டுமல்ல உள்ளடங்கிய தெருக்களிலும் இடுப்புயர பைகளை சுமந்தபடி கொரியர் ஊழியர்கள் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது.

நான் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள இளைஞர்கள் திடீரென ஒரு மாலையில் பரபரப்பானார்கள். “”ஏய் ஃபலூடா 9 ரூபாய், சீக்கிரம் ஆர்டர் பண்ணு” என தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தேசமாக 10 பேரேனும் அலைபேசியை எடுக்க ஓடியிருப்பார்கள். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அமேசான் டெலிவரி ஊழியர் அரைமணி நேரம் நின்று வரிசையாக பொருட்களை டெலிவரி கொடுத்தவண்ணமிருக்கிறார் (மருத்துவமனை ஊழியர்கள் அந்த முகவரியில் வாங்கிக்கொள்கிறார்கள்). அவர் பையில் இருப்பதில் பாதி அங்கேயே காலியாகிறது. அமேசான்-இந்தியாவின் பாதி வருவாய் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. கண்களால் நேரடியாக பார்த்தோ அல்லது அணிந்து பார்த்தோ வாங்க வேண்டிய ஆடைகளும் மூக்குக்கண்ணாடியும்கூட இணையத்தின் வழியே பெருமளவு விற்பனையாகின்றன. அழுகும் பொருட்களான காய்கறி, இறைச்சி வகைகளை விற்க பிக் பேஸ்கெட் நிறுவனம் இயங்குகிறது. சீன இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே கியர்பெஸ்ட் எனும் தளம் இருக்கிறது.

ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.

சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு செருப்பு, ஸ்பூன் போன்ற பொருட்களை விற்பனை செய்தது (ஷிப்பிங் செலவு உட்பட). அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கோல்டு மெம்பர்ஷிப்பை இலவசமாக கொடுத்தது (இதில் பொருள் அனுப்பும் செலவு இலவசம் மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். இதையொத்த சலுகையை நீங்கள் அமேசானில் பெற ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). சில வட இந்திய நகரங்களில் இப்போது மளிகைப் பொருட்களை பாதி விலைக்கு விற்கிறது அமேசான் (பேண்ட்ரி எனும் பெயரில் மளிகைப் பொருட்களை விற்கிறது அமேசான், இது பெருநகரங்களில் மட்டும்). எல்லா நிறுவனங்களும் இப்படியான திடீர் சலுகைகளை கொடுக்கின்றன. ஏன்?

படிக்க:
அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !
வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்

சில வகையான மொபைல் போன்கள் எப்போதும் கிடைக்காது. அவை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் (ஃபிளாஷ் சேல்). அப்போதும் சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்துவிடும். ஜியாமி போன்கள் பெரும்பாலும் இப்படித்தான் விற்பனையாகின்றன. அந்த நிறுவனங்களால் இந்த ஃபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்து குவித்துவிட முடியும். எவ்வளவு விற்பனை ஆகும் என்பதையும் கணிப்பதும் சுலபம். இருப்பினும் ஏன் ஓரிரு நிமிடங்களில் விற்பனை முடிந்துபோகுமாறு திட்டமிடுகிறார்கள்?

இது வியாபாரம் மட்டும் இல்லை. அந்த நிறுவனங்கள் மக்களை தயார்ப்படுத்துகின்றன. பொருள் வாங்குவது என்பதாக இல்லாமல் அந்த செயலியில் மக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் திடீர் சலுகைகள் தரப்படுகின்றன. திடீரென ஒரு சலுகை வரக்கூடும் எனும் எச்சரிக்கை உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தொடர்ந்து அந்தத் தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஃபிளாஷ் சேல் என்பது அந்த பொருள் மீதான எதிர்பார்ப்பை உங்களிடம் உருவாக்குகிறது. அதில் பொருளை வாங்கிவிட்டால் லட்சம் பேரோடு போட்டியிட்டு வென்ற பரவசம் கிடைக்கிறது. அதில் பொருள் கிடைக்காவிட்டாலோ நீங்கள் தோற்றவராகிறீர்கள். ஆகவே அடுத்த முறை வென்றாக வேண்டும் எனும் முனைப்பை அந்தப் பொருள் உருவாக்குகிறது. மிகைப்படுத்தவில்லை, பல சமயங்களில் ஃபிளாஷ் சேல்களில் கிடைக்கும் பொருள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அந்தப் போட்டியில் கிடைக்கும் பரவசம் உங்களை தற்காலிகமாக மகிழ்வூட்டுகிறது. அதனால்தான் அந்த பரவசத்தை நுகர அடுத்த மாடல் ஃபோனின் ஃபிளாஷ் சேல் நடக்கையில் போனை மாற்றும் முடிவுக்கு பலர் செல்கிறார்கள். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு ஒப்பான நிலை இது.

ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர் ரெட்மி 5 ப்ரோ ஃபோன் ஒன்றை விளையாடுத்தனமாக ஆர்டர் செய்ய முற்பட்டார் (இது முதல் முறை). பிறகு வரிசையாக நான்கு ஃபிளாஷ் விற்பனைகளில் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில் அந்த போனை வாங்குவது என்பது ஒரு கவுரவப் பிரச்சினையானது. கடைசி முறை நண்பரிடம் ஏர்டெல் சிம்மை கடன் வாங்கி (அதுதான் அங்கே ஒழுங்காக சிக்னல் கிடைக்குமாம்), கிரெடிட் கார்டு தகவல்களை முன்கூட்டியே செயலியில் உள்ளிட்டு காத்திருந்து அந்த போனை வாங்கியிருக்கிறார்.

படிக்க:
நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016
நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

அவர் போனை அதிகம் பாவிப்பவர் அல்ல. அவரது வாட்சப் பயன்பாடுகூட மிகவும் குறைவானதே. ஆனால் அந்த போனை வாங்கியதன் மூலம் அவர் மனம் ”ஆன்லைனில் பொருள் வாங்குவது பரவசமூட்டக்கூடியது. அதில் நீ ஒரு வீரனைப்போல உணரலாம்” என விளங்கிக்கொண்டிருக்கும். ஆகவே அடுத்த முறை அவருக்கு மனச்சோர்வு உண்டாகும்போதெல்லாம் அவர் ஆன்லைன் வணிக செயலிகளை மேய்வார். காரணம் அது தரும் பரவசம் மனச்சோர்வை விலக்கும் எனும் நம்பிக்கை அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டக்காரர்களை செலுத்துவது இத்தகைய அடிமைத்தனம்தான்.

இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஆன்லைன் வணிகத்தில் கொட்டுகின்றன. அமேசான்தான் இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிக நிறுவனம்; அதன் முதலாளிதான் இன்று உலகின் பெரும் பணக்காரர். இந்த ஒரு நிறுவனம்தான் அமெரிக்காவின் 40% நுகர்பொருட்களை விற்கிறது. அமெரிக்காவில் இதுவரை சந்தையை கட்டுப்படுத்தி வந்த வால்மார்ட் தமது விற்பனை உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறது (வால்மார்ட் நடத்தியது ஒரு ரவுடி ராஜாங்கம், அவர்கள் கேட்ட விலைக்கு கொடுக்காவிட்டால் அந்த பொருளை சந்தையில் இருந்து ஒழிக்க வால்மார்ட்டால் முடியும். காரணம் சில்லறைவணிகம் பெருமளவு அவர்கள் வசம் இருந்தது).

அமேசான் இந்தியாவின் பெரிய போட்டியாளர் ஃபிலிப்கார்ட்டை இப்போது கையகப்படுத்தியிருப்பது வால்மார்ட் (ஃபிலிப்கார்ட் நிறுவனமானது ஈபே, மிந்த்ரா உள்ளிட்ட மேலும் சில இணையதள கடைகளை ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறது). இது அனேகமாக அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வால்மார்ட் செய்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆன்லைன் வணிகத்தின் பெரும் சந்தையான இந்தியாவில் நுழையும் முயற்சியாக இருக்கலாம். அல்லது சந்தையில் நீடித்திருக்க ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது எனும் அனுமானமாக இருக்கலாம்.

இ காமர்ஸ் உலகின் இன்னொரு ராட்சசன் அலிபாபா இந்தியாவின் பேடிஎம் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. இப்போது வாரன் பஃபட் நிறுவனம் அதில் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகள்தான். டாடா நிறுவனம் டாடா கிளிக் எனும் ஆன்லைன் நிறுவனத்தை நடத்துகிறது. ஸ்னாப்டீல் போன்ற பல கடைகளும் சந்தையில் போராடிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த மூன்று பகாசுரக் கம்பெனிகளிடம் தோற்கலாம் அல்லது கடையை அவர்களிடமே விற்றுவிட்டு கிளம்பலாம்.

எல்லோரும் இருக்கும்போது இந்தியாவின் ஓனர் அம்பானி மட்டும் சும்மாயிருப்பாரா? அவர் பங்கிற்கு ஏ ஜியோ எனும் செயலி வழி இணைய ஃபேஷன் கடையை நடத்துகிறார். ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் பெயரில் 400க்கும் மேலான ஆயத்த ஆடைக் கடைகளை முகேஷ் அம்பானி நிறுவனம் நடத்துகிறது. அதே பெயரில் இணைய வழி வியாபாரமும் நடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு பிரிவு ஜவுளித்துறைதான். அதனை சந்தியில் நிறுத்தும் வேலையை அம்பானி செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது. காரணம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஆடைகள் பெரும்பாலும் மேட் இன் பங்களாதேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை வங்காள தேசம் பெருமளவு கைப்பற்றிவிட்டது. இப்போது திருப்பூரை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது உள்ளூர் சந்தைதான். அதையும் வாரி வாயில் போட களமாடுகிறார் அம்பானி.

சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தப் போட்டி ஒரு போரைப்போல நடந்துகொண்டிருக்கிறது. அமேசான் தமது கிரேட் இண்டியன் சேல் எனும் பெருவிற்பனை விழாவை இந்த மாதம் நடத்துகிறது. அதே நாட்களில் ஃபிலிப்கார்ட் பிக் பில்லியன் டே எனும் விற்பனை விழாவை நடத்துகிறது. பேடிஎம் தன் பங்குக்கு கோல்டுபேக் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறது. மற்ற அல்லு சில்லுகளும் தன் பங்கிற்கு ஏதேனும் நடத்தலாம். இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் அடிமைகளின் தீபாவளி இந்த மாதம் பதினைந்தாம் தேதியே முடிந்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.

2015, 16 ஆம் ஆண்டுகளில் பிக் பில்லியன் டே விற்பனையின்போது ஃபிலிப்கார்ட்டின் சர்வர்கள் முடங்கின. அந்த அளவுக்கு இணையக்கூட்டம் அந்த தளத்தை மொய்த்தது. அதே ஆண்டுகளில் நடந்த விற்பனைத் திருவிழாக்களில் அமேசானின் டெலிவரி பன்மடங்கானது. இருசக்கர வண்டிகளில் டெலிவரி ஆன தெருக்களில் எல்லாம் டாடா ஏஸ், டெம்போக்களில் டெலிவரி ஆனதை பார்த்திருக்கிறேன் (இரண்டாம் நிலை நகரங்களில்). ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி திறம்பட செய்வது என ஆலோசனை வழங்கும் செயலிகள்கூட வந்தாயிற்று. பேடிஎம் நிறுவனம் இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே வேர்ல்டு ஸ்டோர் எனும் பிரத்தியோக பகுதியை தமது செயலியில் வைத்திருக்கிறது. அதில் தோடு, வளையல், பொம்மை என சகலமும் கிடைக்கின்றது. ஃபேன்சி ஸ்டோர் முதல் பிளாட்பாரக்கடை வரை எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சீன சந்தையில் நீங்கள் பொருள் வாங்க இயலும். பிலிப்கார்ட் தமது கிட்டங்கிகளை முழுமையாக ரோபோக்கள் மூலம் கையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன் மூலம் 2 மணி நேர டெலிவரிகூட சாத்தியப்படலாம். அமேசான் ஏற்கனவே இதனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தப் போட்டியினால் நமக்கு எல்லாமே சல்லிசாக கிடைக்கிறது என நம்பிவிட வேண்டாம். விலையில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தி.நகர் தெருக்கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் மொபைல் கேஸ் இந்த தளங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண மருந்துக் கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகும் செரிலாக் (குழந்தைகள் உணவு) அமேசானில் 286 ரூபாய், அதில் அதன் உண்மையான விலை 499 என பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அமேசானின் தள்ளுபடி விலையைக் காட்டிலும் உள்ளூர் விலை 100 ரூபாய் குறைவு.

பேடிஎம் ஒரு சீன தயாரிப்பு கைக்கடிகாரத்துக்கு 100% கேஷ்பேக் என அறிவிக்கிறது (கேஷ்பேக் என்பது பொருளுக்கு நீங்கள் கொடுத்த பணம் சில நாளில் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான பொருட்களை பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால் அதன் விலையில் இருக்கிறது பித்தலாட்டம். அந்த பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய். ஆக 100 ரூபாய் கடிகாரத்தை 3300 ரூபாய் கொடுத்து வாங்கினால் பேடிஎம் உங்களுக்கு 3300 ரூபாயை திருப்பித்தரும் . அதுவும் பணமாக அல்ல, அவர்களிடமே பொருள் வாங்கி அந்த பணத்தை கழிக்க வேண்டும். (இது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்பதை சராசரி அறிவுடைய எவரும் கண்டுபிடிக்கலாம். ஆனால் அந்த கடிகாரம் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்கிறது.).

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இதன் சேதாரங்கள் மூன்று இடங்களில் வெளிப்படலாம்.

முதலில் இந்த ஷாப்பிங் மனோபாவம் நமது நடத்தையில் பாரிய மாற்றங்களை உருவாக்குகிறது. ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. முதலில் ஒரு பரவச உணர்வுக்கு ஆட்பட்டு பிறகு அது பதட்டக்குறைப்பு செயலாக சுருங்குகிறது (கிட்டத்தட்ட சாராயத்தைப்போல). அதாவது ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் கைநடுக்கும் எனும் நிலைக்கு செல்லலாம். வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை மேயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள்.  குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய்.

இரண்டாவதாக இது நம் நாட்டில் இருக்கும் சிறுவணிக கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும். இணையத்தில் இல்லாத பொருளே இல்லை எனும்போது, எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போது, பணம் செலுத்தும் வழிகள் எளிமையாக இருக்கும்போது மக்கள் அதன் பக்கம் திரும்புவது நடந்தே தீரும். அவை இறுதியில் சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். மேலும் இந்த சப்ளை செயின் அளிக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தரமில்லாதது. மூட்டை துக்கி முதுகுவலி வந்த பின்னால் அந்த டெலிவரி ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமேசானிலேயே விஷம் வாங்கிக்குடித்து சாகவேண்டியதுதான். மேலும் தேவையற்ற பொருட்களுக்கு செலவிடும் மக்கள் தேவையானவற்றுக்கு செலவைக் குறைப்பார்கள். அதுவும் மறைமுகமாக இந்தியாவின் வணிக கட்டமைப்பைத்தான் சிதைக்கும்.

இறுதியாக இந்த ஷாப்பிங் கலாச்சாரம் சேர்க்கும் குப்பைகள் ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. வரும் ஜனவரி முதல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது (பைகள், டீ கோப்பைகள் போன்றவை). கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இப்போதே தடை வந்தாயிற்று. ரோட்டுக்கடை போடுபவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர் அமேசானுக்கு அது பொருந்தாது. பொருட்களை சேதமாகாமல் அனுப்ப உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் உறைகளும் பபுள் பேக்கிங் தாள்களும் தெர்மாகூல் அட்டைகளும் பெரும் சூழல் அபாயங்கள். மேலும் அளவுக்கு மீறி நுகரப்படும் தரமற்ற (மலிவான) சீன பொருட்கள் இன்னொரு சூழல் அபாயம். அவை வெகுசீக்கிரமே குப்பைக்குப் போகும். இப்போது சிறு நகரங்களில்கூட குப்பை கொட்ட இடமில்லை. இவற்றை கையாளவும் கட்டுப்படுத்தவும் எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.

நாம் இவை குறித்து கவலைப்பட ஆரம்பிக்கும்போது சிக்கல் கைமீறிப்போயிருக்கும். என்ன செய்யலாம்?

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி

வனைக் கொன்றுவிடலாமென்று முடிவு செய்திருக்கிறோம். உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்கிறீர்கள்?

யாரும் எதுவும் பேசவில்லை .

லட்சுமணாவின் கண்டிப்பு மிகுந்த குரல் திரும்பவும் உயர்ந்தது.

தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்கள். மற்ற மூன்று பேரும் தயங்கிக் கொண்டே கைகளைத் தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமலிருந்து விட்டேன்.

“உனக்கென்ன, முடியாதா?

டி.ஒய்.எஸ். பி.யின் கேள்வி.

“இவனை நாங்கள் உயிருடனல்லவா பிடித்தோம், இவன் எந்த எதிர்ப்புமே காட்டவில்லையே? இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும்?”

“ப்ளடி, அதைத் தீர்மானிக்கிறது நீயா?”

லட்சுமணா சொன்னார்:

“இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது, நக்சலைட்களுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”

‘நான் வர்க்கீசின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீசை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன்.  “செய்கிறேன்.  குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன், குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்.”

குண்டு பாய்ந்த சத்தத்தையும் மீறி வர்க்கீசிடமிருந்து இறுதி சத்தம் முழங்கியது. “மாவோ ஐக்கியம் சிந்தாபாத். புரட்சி. வெல்லட்டும்”

1970 பெப்ரவரி 18 ஆம் தேதி சாயுங்கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு சுய வாக்குமூலம்தான் பி.ராமச்சந்தின் நாயர்  எனும் காவலரை வரலாற்றுத் திசை வெளிக்குக் கொண்டு வருகிறது.  சம்பவம் நிகழ்ந்த ஏழாண்டுகளுக்குப் பின் அதைக் குறிப்புகளாக எழுதி வர்க்கீசின் வலதுகரமாக அறியப்பட்ட தோழர் ஏ.வாசுவிடம் ஒப்படைத்த பிறகும் இரு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தச் சுய ஒப்புதலை உலகம் அறிந்து கொண்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போலீஸ்காரர் தனக்குச் செய்ய வேண்டியதிருந்த ஒரு பாதகச் செயலைச் சுயமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்: “நான் தான் அதைச் செய்தேன். என் கைகளாலேயே அதைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் இதோ உங்களெதிரில் நிற்கிறேன். என்னைத் தண்டியுங்கள்” என்று.

இதுவரை ஏ.வர்க்கீஸ் எனும் நக்சலைட் புரட்சிக்காரனின் சாவைப் பற்றி ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் மட்டுமே நமது நினைவுகளிலிருந்தன. ஒடுக்கப்பட்டோரின் பெருமான் என்றறியப்பட்டிருந்த வர்க்கீஸ் வயநாட்டின் காட்டில் வைத்து காவல்துறையால்… இடுப்பு வரை கொதிக்கும் நீரில் வேக கண்களைத் தோண்டியெடுத்து, உடலைச் சல்லடையாகச் சுட்டுத் துளைத்து, கையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்து இன்று வர்கீஸ் பாறை என்றறியப்படும் பாறையின் மீது மல்லாந்தபடி படுக்க வைத்து…

ஒருமுறை ‘நாடுகத்திக’ என்ற நாடகத்திற்கு ஒரு வர்கீஸ் தினத்தன்று நானும் அங்கே போயிருந்தேன். ஆதிவாசிகள் நிறைந்த ஒரு சபை நாடகத்தின் இறுதிகட்டத்தில் தொல்குடித் தெய்வங்களை அழைத்து தங்களை விட்டுப் பிரிந்து சென்ற மூத்தார்களை அழைத்து நாடகத்தின் கதாபாத்திரங்கள் திமிர்த்தாடிய போது பார்வையாளர்களாக இருந்த ஆதிவாசிகள் அத்தனைபேரும் அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆட்டம், ஒரு போதுமே மறக்க முடியாத நாடக அனுபவமாகவும் அரசியல் அனுபவமாகவும் இருக்கிறது. அப்போதும்கூட வர்க்கீசின் மரணம், ஒரு மோதலின்போது நடந்த கொலை என்ற மூடு பனிக்குள்தான் ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் இருந்தன.

1970-ல் கேரளத்தில் நக்சல்பாரிகளைப் போலீசார் வேட்டையாடியபோது பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் வர்க்கீசை, சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் மேலதிகரியின் நிர்ப்பந்தத்தால் தனக்கு ஆதர்சமான மனிதரையே தன் கைகளால் கொன்றதைப் பற்றி 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.

அன்றுவரை வெறுமொரு காவலராக மட்டுமே இருந்த ராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்தபிறகு, முப்பதாண்டுகளுக்கு முன் வயநாடன் காடுகளில் நடந்தவைகளைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அவர் சொல்கிறார். “இப்படித்தான் நடந்தது. என்னைக் கொல்ல வைத்தார்கள். எனக்குச் செய்ய வேண்டியதாயிற்று. முப்பது ஆண்டுகளாக நான் இந்தப் பாரத்தைச் சுமந்து திரிந்தேன். எனக்கு இதை வெளி உலகிற்குச் சொல்லியேயாக வேண்டும். உங்களில் சிலரிடம், தோழர் வர்க்கீசின் மிக நெருங்கிய சிலரிடம் சொல்லியும்கூட நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே? இதோ, நான் தஸ்தாவேஸ்கியின் ஒரு கதாபாத்திரம் போல்…”

அவசர நிலைக்காலம் முதல் தோழர் ஏ.வாசுவுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவரை அறிந்து கொண்டவன் என்ற நிலையில் நான் உறுதியாக நம்புகிறேன். வாசு அண்ணன், ராமச்சந்திரன் நாயரின் சுய ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய விஷயத்தை மறந்துதான் போயிருப்பாரென்று. அந்தக் குறிப்பு எங்கேயோ வைத்துத் தவறிவிட்டது. ஆனால் வர்க்கீசின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை அவசர நிலை வாபஸ் பெறப்பட்டதன் பின் நடந்த வர்க்கீஸ் தினம் முதல் (கேரளத்தில் முதன் முதலாக நக்சலைட்களின் இந்தப் பொதுக்கூட்டம் கோழிக்கோடு டவுண் ஹாலில் வைத்து நடந்தது) ஒவ்வொரு வர்க்கீஸ் தினத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தோழர், வர்க்கீசின் நினைவுகளை உரத்த குரலில் பேசிக் கொண்டுதானிருக்கிறார்.

ஆனால் இந்த உண்மைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த சுய ஒப்புதலின் குறிப்புகளை அவர் மறந்தே போய்விட்டார். ஏழெட்டு வருடங்களாகத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து விசாரணைகளுக்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் சராசரி மனோநிலையுடன் இருக்க முடியாது என்பதுதான் இயல்பு. அதன் காரணமாக அந்த மறதி, அவர் ஏற்ற சித்திரவதைகளின் கொடூரத்தையே காட்டுகிறது. தோழர் வாசு, தோழர் வர்க்கீசின் வீர மரணம் தொடர்பான உண்மைகளை, அதைத் தெரிவித்த காவலரின் சுய ஒப்புதலை எதற்காக மறைக்க வேண்டும்?

படிக்க:
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

கொஞ்சம் காலதாமதமாக நடந்திருந்தாலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாக்குமூலம், இறுதியாக நடந்த நமது புரட்சி இயக்கத்தை அதிகார வர்க்கம் எதிர்கொண்ட முறை, நாம் அவற்றை வாய்மூடி பார்த்து நின்ற விதம் திரும்பவும் ஒருமுறை விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாயிற்று. நமது அணுகுமுறைகள் ஜனநாயக விதிப்படி நடந்தேறுவதாக நாம் நம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. இந்தக் காவலரின் மனசாட்சி முன் வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா? நீதித் துறையின் பொறுப்புகளைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது யார்? ஜனநாயகக் கட்டமைவின் கீழிருக்கும் ஒவ்வொரு பிரஜைகளாலும் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளை நம் போன்ற குடிமக்கள் கேட்காமலிருக்கும்போது ஒரு காவலர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்து இதைக் கேட்கும்போது நாம் அப்படியே கூனிப் போகிறோம். நம்முடைய ஜனநாயக உணர்வும் மொத்தமே இவ்வளவுதானா? நம்மிடையிலுள்ள ஒருவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் செழுமைப்படுத்தவும் முயற்சி செய்த ஒருவரை இப்படியெல்லாம் செய்த பிறகும் நாம் பிரஜைகள், ஆகா!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா?

எதுவாயினும் வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. பொதுவாகவே, இப்படியொரு சுய ஒப்புதலை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை காவல்துறையின் தரப்புசாட்சியாக்கி வழக்கைப் பதிவு செய்வதுதான் வழக்கம். இப்படித்தான் செய்யவும் வேண்டும். ஆனால், இங்கே சி.பி.ஐ. குற்றத்தை வெளிப்படுத்தியவரையே முதல் பிரதிவாதியாக்கி குற்றப்பத்திரிகையை அளித்திருக்கிறது. ராமச்சந்திரன் நாயர் பதறிவிடவில்லை.

அவர் சொல்கிறார். “நீதிமன்றம் தன்னைத் தண்டிக்க வேண்டும். வாழ்க்கையில் செய்த பாதகச் செயலுக்கானத் தண்டனையாகச் சிறையிலடைக்கப்பட வேண்டு மென்பதுதான் தனது கடைசி ஆசை” என்று. ஆனால், தன்னுடனிருக்கும் சக பிரதிவாதிகளான தனது மேலதிகாரிகளும் தன் இடது புறத்திலும் வலது புறத்திலுமாக நின்று தண்டனை அனுபவிக்க வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்.

இதில், எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்களா, முக்கியக் குற்றவாளிகள் மட்டும் தப்பித்துக் கொள்வார்களா, அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு, இந்தக் காவலர் மட்டுமே தண்டிக்கப்படுவாரா, என்னதான் நடக்கப் போகிறது என்ற மன உணர்வுகளை நாம் தற்போது வெளிக்காட்ட வேண்டாம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால். இதனிடையில்தான் ராமச்சந்திரன் நாயர் தனது நினைவுகளைப் பதிவு செய்து கொள்ளத் துவங்கினார்.

ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒருவரது வாழ்க்கைக் கதை. அந்த முகம், அந்தப் பாவம், தைரியம், சஞ்சலமின்மை… தோழரின் அந்திம நிமிடங்களைப் பற்றி எழுதுவதற்கு இந்த ஆறாம் வகுப்பு படித்தவனிடம் வார்த்தைகளில்லை என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் இது, அவரது பணிவை மட்டும்தான் காட்டுகிறது. இந்த வாழ்க்கைக் கதையினூடே நான் பல தடவை கடந்து சென்று, வாசிப்பின் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காக மட்டும் சில தலையீடுகள் செய்த ஒருவன் – இந்தப் புத்தகத்தின் எடிட்டர் என்ற நிலையில் பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை முன் வைக்கிறேன். பொக்குடனின், ஸி.கே.ஜானுவின், நளினி ஜமீலாவின், வினயாவின் நினைவுப் பகிர்வுகள் போல் மலையாளத்தில் எழுதப்பட்ட விளிம்பு நிலை வாழ்வியல் பதிவுகளில் இதுவுமொன்று.

படிக்க:
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

நான் இவ்வளவு பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வர முன் வருவதற்கானக் காரணம், இது ஒப்புதல் வாக்கு மூலம் என்பது மட்டுமல்ல, இந்தப் புத்தகம் முப்பத்தி மூன்றரை வருடங்கள் காக்கியுடுத்தி ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அப்பட்டமாகத் திறந்து காட்டும் ஒரு வேதனை மிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான். தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

‘மனோரமா’ வார இதழில் வெளியான பழைய ‘டோம்ஸ்’ கேலிச் சித்திரத்தையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார். ‘நான்கு மனிதர்களும் ஒரு காவலரும்’. காவலரால் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்கிறார். “நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”. காக்கிக்குள்ளிருக்கும் காவல்துறை எதுவென்பதை  வழக்கமான ஒரு சுய வரலாறுபோல் இந்த சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையை பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.

நம் மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே, நமக்கு இந்த சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.

தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

காவல்துறையைப் பற்றி நமது திரைப்படங்கள் உருவாக்கும் ஒரு புனைவிருக்கிறதல்லவா? மம்முட்டியும், சுரேஷ் கோபியும், இப்போது பிரித்விராஜும் பிரதிநிதித்துவப்படுத்தும், நீதிமான்களும் யோக்கியர்களுமான காவல் அதிகாரிகள், இன்னசென்டும், ஜகதியும், மாமுக்கோயாவும், இந்தரன்சும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதாரண காவலர்கள் எனும் கோமாளியும் ஏமாளியுமான வேடங்கள். அவசர நிலைக் காலத்தில் கக்கயம் முகாம் துவங்கி பல தடவைகள், பல இடங்களில் வைத்துக் காவலர்களுடன் பழகி, அவ்வப்போது அவர்களிடமிருந்து சிறு அளவிலான அடி உதையும் வாங்கி, சமூகப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவன் என்ற நிலையில், என் அனுபவம் முற்றிலும் வேறானது.

நம்முடைய காவலர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். நமது சாதாரணக் காவலர்கள் ஊமைகள். அவர்களுக்கு ஏமாளிகளும் கோமாளிகளுமாக ஆக வேண்டியச் சூழல்கள் உருவாவதற்கானக் காரணங்கள், காவல்துறையின் அதிகார மனோபாவங்களும் வர்ணாஸ்ரம் படிநிலைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்க நேரும் கசப்பான உண்மைகளும்தான். தோளிலிருக்கும் நட்சத்திர அடையாளங்களின் எண்ணிக்கை அதிகரிக்குந்தோறும் அவர்களது மனவளம் குறைந்துகொண்டே வருகிறது. நேரடியாகப் பொருள் கொள்வதனால் அவர்கள் குற்றவாசனையுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களென்பதுதான் அனுபவ உண்மை. இந்த உண்மையை எதிர்கொள்வதற்கு ஒரு ஊடகம் என்ற நிலையில் திரைப்படங்களால் இயலாமலாகி விடுகிறது.

ஆகவே, அவர்கள் அதிகார மையங்களைத் திருப்திபடுத்தும், மேலே எல்லாமே சரியாகத்தானிருக்கிறதென்பது போன்ற பிம்பங்களைத் தான் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் சந்திரன் ஐ.பி.எஸ். எனும் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படம் இதை இப்போது எழுதிக் கொண்டிருக்கும்போது தியேட்டருக்கு வந்திருக்கிறது. இந்த வரிசையில் வந்த கடைசித் திரைப்படம் இது.

படிக்க:
மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

ஒரு விஷயத்தை உரத்தக் குரலில் கேட்டு நான் இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். பி.ராமச்சந்திரன் நாயர் எனும் இந்த சாதாரணமான ஒரு காவலர் எழுதியதைப்போல் சுய வாழ்க்கையை வெளிப்படையாகத் திறந்துகாட்ட ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் தர ஏதாவதொரு ஐ.பி.எஸ்.காரர் முன்வருவாரா? அப்படியொன்று நடக்கும் வரை ராமச்சந்திரன் நாயரின் இந்த சுய வரலாறு அதன் நேர்மையின் பொருட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், எளிய காவலர் ஒருவரது வாழ்க்கைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னசென்ட், ஜகதி, மாமுக்கோயா, இந்தரன்ஸ் வேடங்களில் கேலி செய்யப்படும் அத்தனை காவலர்களது வாழ்க்கையின் மதிப்பீடுகளையும் இந்தப் புத்தகம் மீட்டெடுத்திருக்கிறது. ஒரு காவலரால் மட்டுமே இது போன்ற  புத்தகத்தை எழுத முடியும், உயரதிகாரிகளால் முடியாது. மிகுந்த நம்பிக்கையுடன் நான் இந்தப் புத்தகத்தை வாசகர்களின் முன்வைக்கிறேன்.

(”பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., இது போன்ற ஒரு புத்தகம் எழுதுவாரா ?” என்ற தலைப்பில் சிவிக் சந்திரன் எழுதிய இந்நூலுக்கான முன்னுரை)

நூல்: நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
மலையாள மூலம்: ராமச்சந்திரன் நாயர்
(தமிழில்: குளச்சல் மு.யூசுப்)

வெளியீடு:மக்கள் கண்காணிப்பகம்,
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625 002.
பேச: 0452-2531874
மின்னஞ்சல்: info@pwtn.org

பக்கங்கள்: 214
விலை: ரூ.120.00

இணையத்தில் வாங்க: tamil books online | Common Folks | new book lands

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

ஆப்பிள் நிறுவன அதிகாரியை கொலை செய்த உ.பி. போலீசு : இது 67- வது என்கவுண்டர் கொலை !

ப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது உத்திரப் பிரதேச போலீசின் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து தொடங்கிய என்கவுண்டர் பலிகளின் பட்டியலில் ஆப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி 67-வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (28.09.2018) தனது சக பணியாளருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தார் ஆப்பிள் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த விவேக் திவாரி. லக்னௌ அருகே இவர்களுடைய வாகனத்தை இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் இருவர் வழிமறித்துள்ளனர். ஒரு போலீசுக்காரர் கையில் இருந்த லத்தியால் காரின் கண்ணாடி வழியே விட்டு தாக்கி நிறுத்த முயன்றிருக்கிறார். இதில் பதட்டமடைந்த விவேக் திவாரி, தொடர்ந்து காரை இயக்கியிருக்கிறார். இன்னொரு போலீசுக்காரர், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியை எடுத்து விவேக் திவாரியை சுட்டிருக்கிறார். இரத்த வெள்ளத்தில் சிறிது தூரம் சென்ற அந்தக் கார் பாதையோரம் இருந்த சுவரில் மோதி நின்றிருக்கிறது.

கொல்லப்பட்ட விவேக் திவாரி.

காரில் உடன் பயணித்த அலுவலக பெண் சனா கான், உயிருடன் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்க்க அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், எவரும் உதவவில்லை.

“சாலையின் இருபுறமும் ட்ரக்குகள் நின்றன. நான் அன்று என்னுடைய போனை வீட்டிலேயே விட்டுவிட்டேன். சாரின் போன் லாக்-ஆகி விட்டது. அருகில் இருந்தவர்களிடம் நிலைமையைச் சொல்லி போனைக் கேட்டேன். எவரும் தரவில்லை. 15 நிமிடம் கழித்து போலீசு ரோந்து வாகனம் வந்தது, அவர்கள் ஆம்புலன்சை அழைத்தார். அது வரவும் தாமதமானதால் போலீசு வாகனத்தில் கொண்டு செல்லக் கேட்டேன். மருத்துவமனைக்கு சாரை கொண்டு சென்றோம். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை” என்கிறார்.  நடந்த விவரங்கள் குறித்து போலீசு வாக்குமூலம் வாங்கிக் கொண்ட பிறகும் தன்னை கண்காணிப்பதாக சனா கான் பயம் கொள்கிறார்.

‘தேவையில்லாமல் ஆயுதத்தை பயன்படுத்திய’ குற்றத்துக்காக பிரசாத் சவுத்ரி, சந்தீப் என்ற இரு போலீசுக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறுகிறது உ.பி. போலீசு. சுட்டுக்கொல்லப்பட்டவரின் பெயர் விவேக் திவாரி என்பதாலும் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறவர் என்பதாலும் இந்த ‘நடவடிக்கை’ எடுக்கப்பட்டிருக்கிறது என யூகிக்கலாம்.

இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதாவது ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு. இதில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700 பேர் காயங்களுடன் தப்பினர். 4 போலீசுக்காரர்கள் இந்த மோதலில் இறந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த என்கவுண்டர் ‘ஆபரேசனி’ன் போது காயமடைந்துள்ளனர்.

சுட்டுக்கொன்ற போலீசு கான்ஸ்டபிள் பிரசாத் சவுத்ரி.

இந்த ஆண்டு மே மாதம், முசாஃபர் நகரில் 50-வது என்கவுண்டர் கொலை செய்த போலீசுக்காரருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அளித்து ‘சிறப்பி’த்தது கொலைவெறி சாமியார் அரசு.

தான் பதவியேற்றவுடன் கிரிமினல்கள் அனைவரையும் சரண்டராகுங்கள் அல்லது மாநிலத்தை விட்டு ஓடுங்கள் (முதல் நபராக கொலை குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல் முதல்வர் என பெயர் பெற்ற ஆதித்யநாத் ஓடியிருக்கவேண்டும். ஆனால், இந்த இடத்தில் அவர் நீதியை நிலைநாட்ட வந்த தேவன் ஆகிவிட்டார்) என்றார். அதன்படி ‘ஆபரேசன் க்ளீன்’ என்ற திட்டத்தை போலீசு தொடங்கியது. உ.பி.போலீசு தெரிவித்துள்ள தகவலில் 2017 மார்ச் 20 முதல் 2018 ஜனவரி 31 வரை 1142 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

உ.பி.யின் முன்னாள் டி.ஜி.பி. ஏ.எல். பானர்ஜி  சொல்கிறார், “உ.பி. போலீசுக்காரர் இப்போது தலைமை காவல் அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களுக்குக்கூட அறிக்கை அளிக்க வேண்டும்” என்கிறார்.

“நேரமின்மை காரணமாக போதிய பயிற்சியை காவலர்களுக்கு தர முடிவதில்லை. காவலர்களின் பயிற்சி காலத்தை ஒன்பது மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக குறைத்துவிட்டோம். இந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் இன்னமும் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதே தெரியவில்லை” என்கிறார் முன்னாள் போலீசு அதிகாரி. போலீசு அதிகாரி முட்டுக்கொடுத்தாலும் சுடச்சொல்கிற உத்தரவு இருப்பதால்தானே ஒரு காவலர் துப்பாக்கியைத் தூக்குகிறார்? போலீசு அதிகாரி சொல்வதுபோல, சட்டத்தின்படி, எதிர்த் தாக்குதல் நடத்த மட்டுமே துப்பாக்கியை தூக்க வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்த விவேக் திவாரி எவரைத் தாக்கினார்?

படிக்க:
உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

தன்னுடைய 32 ஆண்டுகால பணி அனுபவத்தில் ‘உண்மையான என்கவுண்டர்’ மிக அரிதாக நடந்ததென மற்றொரு ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி எஸ்.எஸ். தாரபூரி ஒப்புக்கொள்கிறார் . என்கவுண்டர்களால் ஒருபோதும் குற்றங்களை குறைக்க முடியாது என்பது அவர் கருத்து. “உ.பி.யில் நடக்கும் என்கவுண்டர்கள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவையே” என்கிறார் அவர்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வெளியான தகவல்களின்படி அதிக அளவில் மீரட் பகுதியில் 449 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்து ஆக்ரா பகுதியில் 210 என்கவுண்டர்கள். மூன்றாவது இடம் பரேலிக்கு 196 என்கவுண்டர்கள். முதலமைச்சர் தொகுதியான கோரக்பூர் குறைவான என்கவுண்டர் நடந்த இடம். (முதலமைச்சர் தன் பரிவாரங்களுக்கு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறார்)

திவாரியின் படுகொலைக்குப் பிறகு ‘தி ஏசியன் ஏஜ்’ இப்படி எழுதியிருந்தது, “ஆயுதம் தாங்கிய காவலருக்கு அரைகுறை பயிற்சி இருப்பது தெரிகிறது. ஆனாலும் அவரிடம் குண்டுகள் சேர்க்கப்பட்ட துப்பாக்கியை தந்திருக்கிறார்கள். போதிய பயிற்சி இல்லாதவர்களுக்கு லத்தி கொடுப்பது போதுமானது. இவர்களிடம் துப்பாக்கியை தருவது கொல்வதற்கு தரும் அனுமதியைப் போன்றதாகும். சுடுவதைக் காட்டிலும் தொடர்புடையவரை நிலைகுலையச் செய்யலாம் – ஆனால் இது கொல்வதற்கான பகிரங்க அழைப்பு!”.

உ.பி. நீர்பாசன துறை அமைச்சர் தரம்பால் சிங் சனிக்கிழமை அளித்த பேட்டியில் ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் ‘உண்மையான கிரிமினல்’கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்” என்கிறார். கிருஷ்ண பரமாத்மா போல் கையைத் தூக்கி அருள்பாலிக்காத குறையாக எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்கிறார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார். இந்தியாவுக்கு நரேந்திர மோடி பிரதமராக கிடைத்திருப்பதும், உ.பி.க்கு ஆதித்யநாத் கிடைத்திருப்பதும் மக்கள் செய்த ‘பாக்கியம்’ என்கிறார்.

ஆமாம், கொலைகார ஆட்சியாளர்கள் கைகளில் துப்பாக்கியோடு அலைவது பாக்கியமா? பயங்கரமா?

– கலைமதி

செய்தி ஆதாரம்:

கல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை

 உயர்கல்விச் சேர்க்கைக்கு +1 பொதுத்தேர்வு மதிப்பெண்களை எடுத்துக்கொள்ள வேண்டும்!! என்பதை வலியுறுத்தி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகம், பள்ளிக் கல்விதுறைச் செயலகம், பள்ளிக் கல்வித் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில்  செப் 28, வெள்ளிக்கிழமை நேரில் அளிக்கப்பட்ட, கல்வி அமைப்புகள், கல்விச் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் சார்பான கூட்டறிக்கை.

•••

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செப். 14, 2018 அன்று செய்தியாளர் சந்திப்பில் மேல்நிலைப் பள்ளிக் கல்வி இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே கல்லூரிக் கல்விக்கான தகுதியாக கருதப்படும் எனவும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்காகக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்புலம் மற்றும் உளவியல் பாங்கு ஆகியவற்றை நன்கு அறிந்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், உயர்கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறித்த புரிதலும் அக்கறையும் கொண்டு கல்வித் தளத்தில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் தமிழகக் கல்வி நலனில் அக்கறைகொண்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை.

♦ மேல்நிலைக் கல்வி முதலாண்டு (+1) பொதுத் தேர்வை நடத்திக்கொண்டே அதன் மதிப்பெண் உயர்கல்வியில் சேர்வதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மேல்நிலை முதலாண்டுக்குப் (+1) பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்ததன் நோக்கங்கள் இனி நிறைவேற வழியேயில்லை.

♦ அரசின் கொள்கை மாற்றம் தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது. மேனிலைக் கல்வியில் தனியார் பள்ளிகளின் தாக்கம் மிக அதிகம். தனியார் பள்ளிகள் இடும் கட்டளையைக் கல்வித் துறை நிறைவேற்றும் என்பது அண்மைக்கால வரலாறு. தற்போதும் அது நிறைவேறியுள்ளது.

♦ தொடர்ந்து மூன்றாண்டுகளுக்குப் பொதுத் தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் நேர்கிறது என்கிற பொத்தாம் பொதுவான காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. மேல்நிலை முதலாண்டு (+1) பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளாமல் விடுவதால் மன அழுத்தம் குறையும் என்பதும் சரியான காரணமல்ல.

♦ மாணவர்களுக்கு நன்மை செய்யும் உண்மையான நோக்கம் தமிழக அரசின் புதிய முடிவில் இல்லை. மேல்நிலை முதலாண்டு (+1) பொதுத்தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கடந்த கல்வி ஆண்டில் அறிவித்துவிட்டு, இக்கல்வியாண்டில் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தற்போது மேல்நிலை வகுப்பில் படித்துவரும் மாணவர்களுக்கு ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

♦ புதிய அரசாணை எண் 195, அரசாணை எண் 100-க்கு முரணாக உள்ளது. அரசாணை எண் 100-இல் 6, 7, 8 ஆகிய பத்திகளில் கூறப்பட்டுள்ள மோசமான நிலைக்கு மேல்நிலைப் பள்ளிக் கல்வியை மீண்டும் பின்னுக்கு இழுக்கும் வேலையை அரசாணை எண் 195 செய்கிறது.

♦ மேல்நிலை முதலாண்டு (+1) மதிப்பெண்களைக் கல்லூரிக் கல்விக்கான தகுதியாக ஏற்பதில்லை எனும் முடிவு, அரசுப் பள்ளிகள் மட்டுமே மேல்நிலை முதலாண்டுப் (+1) பாடங்களை நடத்துவதும், தனியார் பள்ளிகள் அதைப் புறக்கணிப்பதுமான நிலையை மீண்டும் உருவாக்கும். இதனால், கல்லூரிக் கல்விக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறும் சமூக அநீதி தொடரும். அரசின் தற்போதைய பரிந்துரை சமூக நீதிக்கு எதிரானதாகும்.

தனியார் பள்ளி மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறும் சமூக அநீதி தொடரும்.

♦ மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் குறைவதற்கே வழிவகுக்கும். “தனியார் பள்ளிகள் தான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரவல்லவை” என்று ஏற்கனவே பெற்றோர்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள மனநிலையினால் அரசுப் பள்ளி மேனிலைப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைய நேரிடும். இதன் தொடர் விளைவாகக் கல்வி வணிகத்திற்கு மக்கள் மேலும் ஆட்படுவர். மாணவர் எண்ணிக்கை போதுமான அளவு இல்லை என்று அரசுப் பள்ளிகளையும் மேல்நிலை வகுப்புப் பாடப்பிரிவுகளையும் மூடும் நிலைக்கு அரசே வழிவகுப்பது ஒரு சமூகக் குற்றமாகும்.

♦ மேல்நிலைப் பள்ளிக் கல்வி என்பது இரண்டாண்டுப் படிப்பைக் கொண்ட ஒரு பாடத்திட்டம். இரண்டாம் ஆண்டு படிப்பு முதலாண்டுப் படிப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டாண்டுகளும் முழுமையாகப் பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் அவற்றைப் புரிந்து படித்தால் மட்டுமே உயர்கல்விக்கு முழுத் தகுதியுடையவர் ஆவர். முதலாண்டு முழுமையாக நடத்தப்படாமல் இரண்டாம் ஆண்டில் முழு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அம்மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தபின் பட்டப் படிப்பில் முதலாண்டில் தடுமாறுவதும் தோல்வி அடைவதும் அனைவரும் அறிந்ததே. அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.

♦ நாடுதழுவிய அளவிலான போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறாமல் போவதற்கு மேல்நிலை முதலாண்டுப் (+1) பாடங்கள் முறையாகப் கற்பிக்கப்படாததும் ஒரு முதன்மைக் காரணம் என்பது கடந்த காலங்களில் தெளிவாகியுள்ளது. அரசின் புதிய முடிவினால் இந்த அவலம் மீண்டும் தொடரும்.

தமிழக அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்

♦ ஏற்கனவே உள்ள அரசாணை 100 இன் படி, மேல்நிலைக் கல்வி முதலாண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகளை நடத்துவதும் இரண்டாண்டுப் பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்வதும் மட்டுமே சரியான தீர்வாகும். இத்தகைய அணுகுமுறை குழப்பமற்றதாகவும், மன அழுத்தமற்றதாகவும் எளிமையானதாகவும் அமையும். உயர்கல்விக்குத் தேவையான நல்ல அடித்தளத்தையும் இது அமைத்துத் தரும்.

♦ மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முறைகளை மன அழுத்தமற்றவையாக மாற்றவேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள் நடத்துவதைத் தீவிரக் கண்காணிப்பின் மூலம் முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். அரசின் ஆணையை மீறும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். எளிமையான தேர்வுகள், பாடச்சுமைக் குறைப்பு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகியவையே மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

♦ தற்போது முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி ஆண்டில் மூன்று பருவத் தேர்வுகள் (முப்பருவ முறை) நடத்தப்படுகின்றன. 10-ஆம் வகுப்பில் முப்பருவ முறை இல்லை. ஆண்டிறுதிப் பொதுத் தேர்வுக்குக் கல்வி ஆண்டின் பாடநூல்களை முழுமையாகப் படிக்கவேண்டும். தனியார் பள்ளியினருக்கிடையிலான வணிகப் போட்டியினால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களைக் கவனத்தில் கொண்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்தே பத்தாம் வகுப்புப் பாடங்களைக் குருட்டு மனனம் செய்ய வைக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ முறையில் படித்துவிட்டுப் பத்தாம் வகுப்பில் ஆண்டு இறுதிப் பொதுத் தேர்வு முறைக்கு மாணவர்களைத் தள்ளுவது குறித்தும் கவலைப்படவேண்டும். பத்தாம் வகுப்புக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், மொழிப்பாடத்தாள்கள் ஒன்றாகக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவேண்டும்.

படிக்க:
பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

♦ தனியார் பள்ளி மாணவர்கள் தனிப்படிப்பிற்கும் சிறப்பு வகுப்பிற்கும் சென்று கற்கின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள் அற்றவர்களே அரசுப் பள்ளி மாணவர்கள். பள்ளி வகுப்பறை ஒன்றே அவர்கள் கல்வி பெறும் இடம். அங்கு பழுதற்ற, தரமான கல்வியை உறுதி செய்யும் கடமையினின்று கல்வித்துறை விலகிக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றம். உட்கட்டமைப்பு வசதிகளோடு ஆசிரியர் தான் கற்றலுக்கு உதவும் பெரிய கருவி. அரசுப் பள்ளி மாணவர்களுடைய முழுமையான கற்றல் வாய்ப்புகளுக்கான பல்வேறு தடைகளைக் குறித்து உடனடியாக அக்கறையுள்ள ஆழமான ஆய்வு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

♦ அரசுப்பள்ளிகளில் செப். 30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. புதிய பள்ளிகளைத் தரம் உயர்த்துவது ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் நியமனம் உடனடியாக நடைபெறுவதுமில்லை. பல அரசுப் பள்ளிகளில் மேனிலை வகுப்புப் பாடங்களுக்கு நீண்ட நாட்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் நடப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி ஆண்டில் 120 நாட்களுக்கு முழுமையான கற்பித்தல் நடப்பதே சாத்தியமற்றதாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர் எதிர்கொள்ளும் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு விடிவு காண வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களை நிர்வாகக் குறைபாடுகளுக்குப் பலிகடாவாக்குவதிலிருந்து விடுவிப்பதே அரசின் கல்வி நெறியாக இருக்க வேண்டும். கற்பித்தலும், கற்றலும் முழுமையாக நடைபெற்ற பின்னரே பொதுத்தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் !

♦ மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் அரசு-தனியார், ஆண்-பெண், சாதி, நகர்ப்புறம்-கிராமப்புறம் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படும். அதுபோல, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வு முடிவுகளையும் ஆராயவேண்டும். குறைகளைச் சரி செய்யவேண்டும். ஏற்கனவே +2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ஒரு விழுக்காட்டினர் (1%) கூடச் சேர முடியவில்லை. போட்டி நிறைந்த வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற உயர்கல்விப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், கற்றல் – கற்பித்தல் குறைபாடுகள் போன்றவற்றால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளில் சமமான போட்டிக்கு வழியில்லாமல் போவதைத் தடுப்பதற்கும் உடனே வழி காணவேண்டும்.

♦ தனியார் பள்ளியினரின் அழுத்தத்தாலும் அவர்களின் வணிக நோக்கத்தாலும் கல்வியில் அரசின் கொள்கை மாற்றங்கள் நடைபெறக் கூடாது. அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நடவடிக்கைகள் இனியும் கல்வியில் தொடரக்கூடாது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அரசாணை 195–ஐத் திரும்பப் பெற வேண்டுகிறோம்.

இக்கூட்டறிக்கையில் பங்குபெறுவோர்:

1. பேரா. பிரபா கல்விமணி (தலைவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணி)
2. பேரா. ச. மாடசாமி (எழுத்தாளர், கல்விச் செயல்பாட்டாளர்)
3. கண. குறிஞ்சி (மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் – பியூசிஎல்)
4. பேரா. சே. கோச்சடை (தலைவர், மக்கள் கல்வி இயக்கம்)
5. பெ. மணியரசன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்)
6. பொழிலன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்)
7. செ. நடேசன் (மொழி பெயர்ப்பாளர், முன்னாள் ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளர்)
8. சீ.தினேஷ் (மாநிலச் செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் – AISF)
9. சே. இளையராஜா (தமிழ்நாடு மாணவர் முன்னணி)
10. சா.கிள்ளிவளவன் (தலைவர், பெற்றோர் மாணவர் சங்கம்)
11. முனைவர் விஜய் அசோகன் (ஆராய்ச்சியாளர், சால்மர்ஸ் பல்கலைக்கழகம், சுவீடன்)
12. பேரா. சி. ஜோசப்பிரபாகர் (கல்விச் செயல்பாட்டாளர்)
13. சு.மூர்த்தி (கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு)
14. உமாமகேஸ்வரி (அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் அமைப்பு – A3)
15. சுடரொளி (குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பு)
16. வீ.சிவகாமி (அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்)
17. க.மகாலட்சுமி கண்ணன் (தெருவிளக்கு கல்வி அறக்கட்டளை)
18. தமிழாசான் (குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி அமைப்பு)
19. செ. சி. நடராஜ் (சுடர் – பழங்குடிக் குழந்தைத் தொழிலாளர் கல்வி அமைப்பு)
20. சு.தங்கவேல், அ.இருளப்பன் (தமிழகக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்)
21. விழியன் (சிறார் இலக்கிய எழுத்தாளர்)
22. மு. சிவகுருநாதன் (ஆசிரியர், எழுத்தாளர்)
23. ரெ. சிவா (ஆசிரியர், கலகல வகுப்பறை)
24. க.சரவணன் (ஆசிரியர், எழுத்தாளர்)
25. செ.மணிமாறன் (ஆசிரியர், கல்விச் செயல்பாட்டாளர்)
26. தா. வே. நடராஜன் (கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி – பணிநிறைவு)
27. முனைவர் தி. ராமகிருட்டிணன் (‘பரிதி’) (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
28. க. இரா. சுப்பிரமணியன் (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்)
29. சுப்ரபாரதிமணியன் (எழுத்தாளர்)
30. எல். பெர்னாட் (மனித உரிமைக் கல்விச் செயல்பாட்டாளர்)
31. ஜெ. சியாம்சுந்தர் (ஆசிரியர் – சமத்துவக் கல்வி)
32. அ.சத்தியமாணிக்கம் (கலிலியோ அறிவியல் மையம்)
33. அமரந்தா (எழுத்தாளர், தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்)
34. இரா. முருகப்பன் (திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு)
35. எழில் அ. சுப்பிரமணியன் (செயலாளர், தாய்த்தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை, திருப்பூர்)
36. ப. க. அருள்குமார் (செயலாளர், பசுவபட்டி அரசுப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு)

தொடர்புக்கு:
பேரா. பிரபா கல்விமணி
(தலைவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணி)
மின்னஞ்சல்: kalvimani@gmail.com

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ! கும்மிடிப்பூண்டியில் திரண்ட பு.ஜ.தொ.மு. தொழிலாளிகள் !

”பெட்ரோல் டீசல் விலை உயர்வு! எரிந்து சாம்பலாகிறது மக்களின் வாழ்வாதாரம்! ” என்கிற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடந்த 01.10.2018 தேதியன்று மாலை 05:30 மணியளவில் கும்மிடிப்பூண்டி பஜாரில் தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேற்கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தலைமை வகித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மட்டுமல்ல இந்த ஆர்ப்பாட்டம் என்று உரையை ஆரம்பித்தார். உழைக்கும் மக்களின் சேமிப்பான வங்கிப் பணம் தொடர்ந்து வங்கிக்கடன் என்கிற பெயரிலே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகளுக்கும், மக்களின் வரிப்பணம் வியாபம், ரஃபேல் போன்ற இமாலய ஊழல்களுக்கும், தற்போது தினம் தினம் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை உணர்த்தவும்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்றார். ஒட்டுமொத்த மக்களை சூழ்ந்துள்ள இத்தகைய அபாயகரமான நிலைமைகளை எதிர்த்து முறியடிக்க புரட்சிகர தலைமையின் கீழ் பெருந்திரள் மக்கள் போராட்டம் கட்டியமைக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என பதிவு செய்தார்.

கண்டன உரையாற்றிய மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் மக்கள் விரோத செயல்களை வரிசைகிரமமாக அம்பலப்படுத்தி அதன் தொடர்ச்சியாகத்தான் பெட்ரோல் – டீசல் விலை உயர்வையும் பார்க்க வேண்டும். பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் முதலாளிகளின் இலாப நோக்கத்தையும் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

படிக்க:
பெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் !
காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு

மேலும், ”மத்திய மாநில அரசுகள் ஒருபக்கம் இந்தியாவை வல்லரசாக்குவோம் எனச் சவடால் பேசிக்கொண்டு, அநியாய வரிக்கொள்ளை மூலமாக மக்களை பொருளாதார ரீதியில் ஓட்டாண்டிகளாக்கிக்கொண்டு, மறுபக்கம் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் மூலமாக மக்களை  பண்பாட்டு கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல் நடத்தி மக்களை பிளவுபடுத்துகிறது. இவற்றை அம்பலப்படுத்துகின்ற அல்லது எதிர்த்து போராடுகின்ற அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறை செலுத்தப்பட்டு வருகிறது” என கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு சாட்சியமாக தற்போது திருபெரும்புதூரில் நடைபெற்றுவரும் தொழிலாளர் போராட்டங்களை எடுத்துரைத்தார். யமஹா, ராயல் என்ஃபீல்டு, MSI ஆகிய ஆலைத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டு போராடிவரும் சூழலில் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு மாறாக ஆலை முதலாளிகளுக்கு நேரடியாகவே அரசு துணை நிற்பதை அம்பலப்படுத்தி இவற்றிற்கு எதிராக வலுவான மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படக்கூடிய ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் இடையே பெட்ரோல் – டீசல் விலை உயர்வு குறித்து தொழிலாளி ஒருவர் எழுதிய பாடல் ஒன்றை சினிமா பாடல் வரிகளை மாற்றியமைத்து பாடப்பட்டது. இது மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு – 94444 61480.

டெல்லி விவசாயிகள் பேரணி – மோடி போலீஸ் நடத்திய தடியடி ! படக்கட்டுரை

மோடி அரசின் விவசாயி விரோதப் போக்கை கண்டித்து உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 70,000 விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களுடன் டெல்லியை நோக்கிச் சென்றனர். கடந்த அக்டோபர் 2, 2018 அன்று டெல்லியின் பல்வேறு நுழைவுச் சாலைகளில் அவர்கள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மீறி பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு போலீசு நடத்திய தாக்குதலில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர்களுள் ஒருவரான மகேந்திர சிங்கால் தொடங்கப்பட்ட பாரதிய கிசான் சங்கம் செப்டம்பர் 23-ம் தேதி ஹரித்துவாரில் இருந்து ”விவசாயிகளின் புரட்சிப் பயணத்தை” (Kisan Kranti Yatra) தொடங்கியது. குறைந்தபட்ச ஆதரவு விலை, குறைவான டீசல் விலை மற்றும் மின்சார கட்டணம், நிபந்தனையற்ற கடன் தள்ளுபடி, ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடங்கப்பட்ட இந்த பயணம் டெல்லியின் ’கிசான் காட்’ பகுதியில் கடந்த அக்டோபர் 2 அன்று முடிவடைவதாகத் திட்டமிடப்பட்டது.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?

டெல்லி போலீசு, இந்தப் போராட்டத்திற்கு எவ்வித வாய்ப்பும் வழங்காமல் அதனை முடக்க, டெல்லியின் பல்வேறு இடங்களில் தடையுத்தரவு போட்டிருந்தது. அக்டோபர் 2 அன்று டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு உத்திரப்பிரதேச எல்லையிலேயே விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். “நாங்கள் நொய்டா வழியாக டெல்லிக்கு செல்ல முயற்சி செய்தோம். ஏனெனில் அந்த வழி ஒன்று தான் திறந்திருப்பதாக ஒருவர் கூறினார். ஆனால் அந்த வழியும் மூடப்பட்டு விட்டது. அதனால் இப்பொழுது இங்கேயே உட்கார்ந்திருக்கிறோம்.” என்று முசாபர்நகர் பயணத்தில் கலந்து கொண்ட பிரதீப் பன்வார் எனும் விவசாயி கூறினார்.

டெல்லியின் பல்வேறு நுழைவுப்பாதைகளில் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். அங்கு முழக்கமிட்ட விவசாயிகளின் மீது தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைந்து போகச் சொன்னது மத்திய அரசின் அடியாட்படையான டெல்லி போலீசு. கலைந்து செல்ல மறுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தது போலீசு.

டெல்லி – உ.பி. எல்லையில் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் இரவு உணவு தயாரிக்கும் பணியில்..
டெல்லிக்குள் நுழையும்  எல்லையில் காவல்துறையினரின் தடுப்பரணை உடைத்துச் செல்ல முயலும் விவசாயிகள்
விவசாயிகளுடன் மோதலில் ஈடுபடும் போலீசு.
போராடும் விவசாயிகளை கலைக்க தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தும் போலீசு.
போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் போலீசு.
பாரதிய கிசான் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் புரட்சி பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளின் பேரணி.
டெல்லி – உ.பி. எல்லையில் பாதுகாப்பு அரண்களோடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் போலீசு
விவசாயிகள் பேரணி காசியாபாத்திற்குள் நுழையும் காட்சி.
காசியாபாத்தில் உள்ள ஒரு சாலையை பேரணி கடந்து செல்லும் காட்சி
விவசாயிகள் பேரணி காரணமாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை எண் 24-ல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

படங்கள் நன்றி: அவுட்லுக், Kisan Kranti Yatra
செய்தி நன்றி: தி வயர்,  ♦ Police Use Lathi Charge, Water Cannons to Stop Over 70,000 Farmers From Entering Delhi

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி !

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தராமல் இருக்கும் சம்பள பாக்கி 7,000 கோடி, குஜராத்தை சேர்ந்த சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி!

அருண் கார்த்திக்
உத்தர பிரதேஷ், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பின் கீழ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி அக்-2 அன்று பேரணியாக சென்றனர். மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கையை அளிப்பதும், ஆட்சியில் இருப்பவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதும் அவர்கள் திட்டம். இப்படி சென்ற விவசாயிகளை டெல்லி – உ.பி. எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது மத்திய அரசுக்கு கீழ் இருக்கும் டெல்லி போலீஸ்!

இந்த விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று விவசாய கடன் தள்ளுபடி.

IL&FS (Infrastructure Leasing & Financial Services) என்ற நிறுவனம் திவாலாகி அதில் நடந்துவரும் குழப்பங்கள், ஊழல் புகார்கள் பற்றி வெகு மக்கள் பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்து விட்டன அதனால் அதை பற்றி நமக்கு கொஞ்சம் தெரியும். முக்கியமான தகவல், IL&FS வாங்கி செலுத்த முடியாமல் இருக்கும் கடன் தொகை சுமார் ரூ. 91 ஆயிரம் கோடி. IL&FS பற்றிய விபரங்களை வேறு கட்டுரையில் பார்ப்போம், முதலில் செய்தியில் அதிகமாக பேசப்படாத கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனம் ஒன்று பற்றி பார்ப்போம்.

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் டெல்லி போலீசு.

ஸ்டெர்லிங் பையோடெக் (Sterling Biotech) என்கிற நிறுவனம் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. இது சண்டேசரா என்ற குழுமத்தை சேர்ந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் வாராக்கடனாக வகை படுத்தப்பட்ட நிறுவனம்.

இந்த நிறுவனம் சம்மந்தமாக அக்டோபர் 1 அன்று பிசினஸ் ஸ்டேண்டர்டு என்ற பத்திரிக்கையில் செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியின் தலைப்பு – ‘Sterling group firms offer steep haircuts to lenders’. இதன் தமிழாக்கம் – ‘ஸ்டெர்லிங் குழும நிறுவனங்கள் கடன் தந்தவர்களுக்கு ஒண்ட முடி வெட்டும் வாய்ப்பை வழங்குகின்றனர்’.

இந்த ‘haircut’ (முடி வெட்டுதல்) என்பது பெரு நிறுவனங்களிடம் இருந்து வங்கிகள் கடன் வசூலிக்கும்போது உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் ஒரு வங்கியிடம் 100 கோடி கடன் வாங்கிக்கொண்டு திவாலாகி 60 கோடி மட்டுமே திருப்பி செலுத்தினால், அந்த தருணத்தில் ‘வங்கிகள் 40 கோடி haircut எடுத்துக்கொண்டன’ என்று கூறுவார்கள்.

ஸ்டெர்லிங் குழும நிறுவனம் இவ்வாறு முடி வெட்டிக்கொள்ளும்படி (haircut) கடன் கொடுத்த வங்கிகளுக்கு கூறுகிறார்கள்.

ஸ்டெர்லிங் பையோடெக் (Sterling Biotech) பெற்றிருந்த கடன் ரூ. 4200 கோடி, இது கடனை காட்டாமல் திவாலான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்த நிறுவனம் ரூ. 2400 கோடி மட்டுமே செலுத்த முடியும் என்று கூறுகிறது. வங்கிகளின் நேரம் நல்ல நேரமாக இருந்தால் ரூ. 1800 கோடி மட்டும், ஸ்வாஹா! இல்லையேல் ரூ. 4200 கொடியும் ஸ்வாஹா!

IL&FS நிறுவன அலுவலகம்.

சண்டேசரா குழும நிறுவனங்கள் மொத்தமாக செலுத்தாமல் இருக்கும் தொகை சுமார் ரூ. 5000 கோடி என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.

இந்த நிறுவனத்தின் முதலாளி யார் தெரியுமா? செப்டம்பர் மாதம் குஜராத்தை சேர்ந்த இன்னொரு தொழிலதிபர் கடனை செலுத்தாமல் தப்பி ஓடினார் என்றும் அவர் சுருட்டிய தொகை ரூ. 5000 கோடி என்றும் ஒரு செய்தி வந்ததே, அவர் தான் இந்த கம்பனியின் முதலாளி. அவர் பெயர் நிதின் சண்டேசரா.

இது இப்போது ஆரம்பித்த பிரச்சனை அல்ல. 2012லேயே ஸ்டெர்லிங் குழுமத்துக்கு வங்கிகள் கொடுத்த ரூ. 6000 கோடி கடன் வாராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது என செய்தி வந்துள்ளது. வழக்கம் போல, அதிக கடன் கொடுத்த வங்கிகள் – SBI, PNB, IOB போன்ற அரசு வங்கிகள்.

படிக்க:
வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !

இதோடு முடியவில்லை. 2011 இல் வருமான வரித்துறை ஸ்டெர்லிங் நிறுவன அலுவலகங்களில் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். அதில் சில ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதில் இருந்து தப்பிக்க வருமான வரி துறை அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் லஞ்சம் வழங்கி உள்ளது, இதை CBI விசாரித்து 2017 இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுபோக ஹவாலா முறைகேடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை துறை வழக்கு பதிவு செய்தி விசாரித்து வருகிறது.

நிதின் சண்டேசரா.

இந்த மாதிரி உத்தமர்களுக்கு நாடு மக்கள் என்ற பேதம் எல்லாம் இல்லை. நைஜீரியாவில் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொண்டு 30 மில்லியன் டாலர் ராயல்ட்டி செலுத்தாமல் ஏமாற்றியதற்காக அந்த நாட்டு அரசு குழு ஒன்றால் ஸ்டெர்லிங் பையோடெக் நிறுவனம் விசாரிக்கப் படுகிறது என்ற செய்தி ஜூலை 2018-இல் வந்துள்ளது.

நிதின் சண்டேசரா இப்போது இருப்பதாக கருதப்படும் நாடும் நைஜீரியா தான்.

இந்த சண்டேசரா குழுமத்தின் வழக்கறிகராக இருந்தவர் யார் தெரியுமா? முகுல் ரோஹத்கி. முகுல் யார் தெரியுமா? நாட்டின் உயர்ந்த வழக்கறிஞர் பதவியான ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை 2014 முதல் 2017 வரை வகித்தவர். முகுல், அனில் அம்பானியின் வழக்கறிஞராக இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.

இவை அனைத்திலும் சிறப்பு என்னவென்றால், மெகுல் சோக்சி தொடங்கி, நீரவ் மோடி, ஜெயின் மேத்தா என இந்த நிதின் சண்டேசரா வரை அனைவரும் குஜராத்தை சேர்ந்த முதலாளிகள். எதற்கெடுத்தாலும் குஜராத் மாடல் என்று கொக்கரிப்பவர்கள் ஏனோ இதற்கு மட்டும் வாய் திறப்பது இல்லை!

ஆக மொத்தத்தில், மக்களின் பணம் இன்னொரு 4300 கோடி ரூபாய் ஸ்வாஹா ஆகிறது, ஆகி உள்ளது!

போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது…

இந்த கோடிகளை வெறுமனே சொன்னால் புரிவது கொஞ்சம் கடினமாக உள்ளது. அதனால் புரிந்து கொள்ள வேறொன்றுடன் ஒப்பிடுவோம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்த நிலுவைத் தொகையான ரூ.7,000 கோடியை உடன் அளித்தல், ஊதிய முரண்பாடு களைதல், முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முறையான உடன்பாடு ஏற்படாததால் இன்று (அக்டோபர் 4, 2018) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி கோட்டையை முற்றுகையிட்டனர். இப்படி தொழிலாளிகளின் ஊதியத்தில் கை வைக்கும் அரசு முதலாளிகளுக்கு கடனையே தள்ளுபடி செய்கிறது!

சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான். என்ன, நிதின் சண்டேசராவால் 2012-இல் இருந்து வழக்கு இருந்தும் கைதாகாமல் இருக்க முடியும்; நைஜீரியாவுக்கு தப்ப முடியும்; ஆனால் இந்த விவசாயிகளால் அவர்கள் நாட்டின் தலைநகருக்கு கூட செல்ல முடியாது! இந்த நிலையில் கடனை எங்கே தள்ளுபடி பண்ணுவது!

செய்தி ஆதாரம்:

– அருண் கார்த்திக்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டச் செய்தி – படங்கள்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு! இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!, என்ற தலைப்பில் கடந்த 29-09-2018 (சனி) அன்று மாலை 5 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம்  உளுந்தூர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர், கிருஷ்ணமூர்த்தி  தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர்  தோழர் A.V.சரவணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் தோழர் சு.ஆற்றலரசு, மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர், ரவி கார்த்திகேயன், பு.மா.இ.மு. விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஞானவேல், மக்கள் அதிகாரம் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினார், இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னணியாளர்கள் தங்களது உரையில், பெட்ரோல் – டீசல் விலை என்பது அன்றாடம் உயர்ந்துகொண்டே போகின்றது; இந்த விலை உயர்வு என்பது அன்றாட உழைக்கும் மக்களை பெரிதும் பாதிக்கும்; உணவு பொருட்களின் விலை உயரும் என்பதை சுட்டிக்காட்டினர்.

சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.38. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பினால் நமக்கு ரூ.84 க்கு விற்கபடுகின்றது. மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய மத்திய அரசோ, ”பெட்ரோல் விலை உயர்வை எங்களால் தடுக்க முடியாது; அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும்; விலை நிர்ணயத்தை GST க்குள் கொண்டுவர முடியாது; வேண்டும் என்றால் மாநில அரசின் வரியை குறைக்க சொல்லுங்கள்” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டிருக்கும் பி.ஜே.பி. அரசை கண்டித்தனர். மேலும், பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர்.

படிக்க:
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !
பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

இதற்கிடையில் மாற்று கட்சி தோழர்கள் உரையாற்றியபோது மக்கள் அதிகாரம் தோழர்களின் மீதான அரசின் அடக்குமுறைகளை சுட்டிக்காட்டியும், இவ்வளவு அடக்குமுறைகளுக்கு இடையேயும் அவர்களின் சமரசமற்ற போராட்ட குணத்தை வாழ்த்தினர். மேலும், மக்கள் அதிகாரத்திற்கு என்றென்றும் நாங்கள் துணைநிற்போம் என்றனர்.

இறுதியாக பேசிய தோழர் ராஜு அவர்கள் மோடி அரசின் அனைத்துத் திட்டங்களும் படுதோல்வி, அதற்கு வெட்டி விளம்பர செலவு 4300, கோடி. இதனை மூடி மறைக்கவே தன்னை கொலை செய்ய சதி என்ற நாடகம் என்பதை அம்பலப்படுத்தினார். கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு சேவை செய்துவரும் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்துஸ்தானிய ஏரோநாடிகல் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து எந்த அனுபவமும் இல்லாத, 30,000 கோடி கடனில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானிக்கு கை மாற்றி கொடுத்து தான் ஒரு கார்ப்பரேட்டின் கைகூலி என்பதை நிரூபித்து இருக்கின்றார் எனக் கூறினார்.

நாட்டையே காவிமயமாக்க துடிக்கும் BJP, RSS கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்திற்கு எதிராகக் கொண்டுவரும் அழிவுத் திட்டங்கள்; பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட்; பல்கலைக்கழக மானியக் குழு கலைப்பு போன்றவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றார். தமிழகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல், குட்கா, டாஸ்மாக், பாலியல் வக்கிரங்கள் என சீரழிந்து கிரிமினல் கும்பல்களாக தமிழக அரசும், காவல்துறையும் மாறிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மக்களை தீவிரவாதிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி தன்னுடைய அதிகார பலத்தால் அடக்கி ஒடுக்க நினைக்கும் அரசின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தினார். இந்த ஜனநாயக விரோத போக்கை இனியும் சகித்துக்கொள்ள வேண்டுமா? அனைத்து அதிகாரமும் மக்களுக்கே, நாம் இழந்ததை மீட்டெடுக்க மக்கள் அதிகாரமாய் மாறுவோம் என அறைகூவல் விடுத்தார்.

தகவல்:

விழுப்புரம் மண்டலம்.

மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஊடகங்களை மிரட்டும் மோடி

மீடியாவை மிரட்டும் மோடி

னநாயகத்தின் நான்காவது தூண் என மதிக்கப்படும் பத்திரிகைத் துறை மோடி பாசிசத்தின் பிரச்சார பீரங்கியாக மாறிக் கொண்டிருக்கிறது. நாடறிந்த ரஃபேல் ஊழலை பல ஊடகங்கள் வெளிநாட்டு சதி என விவாதிக்கின்றன.

சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் வேர் கொண்டிருந்த மோடியை கார்ப்பரேட் ஊடகங்கள் இந்திய அளவில் சந்தைப்படுத்தின. அன்று முதல் மீடியாவின் மோடி சேவை தொடங்கியது. இந்த சேவைக்கு பணிய மறுத்த பத்திரிகையாளர்களின் கதி என்ன?

அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அடக்கி வாசிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டார்கள். கவுரி லங்கேஷ் போன்றவர்கள் வாழ்வதற்கே அனுமதியில்லை எனக் கொல்லப்பட்டார்கள். சில ஊடகங்களுக்கு வரும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. மோடியை எதிர்த்து எழுதுபவர் எவருக்கும் தேசிய – பிராந்திய ஊடகங்களில் இடமில்லை !

இந்தப் பத்திரிகையாளர்கள் இ.பி.டபிள்.யூ, தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், அவுட் லுக் என நாடறிந்த ஊடகங்களில் பணியாற்றியவர்கள். சிலர் தலைமை ஆசிரியராகவே பணியாற்றியவர்கள்.

தமிழகத்தில் கூட அற்ப விசயங்களுக்காக பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் ரவுடி போல பேசுகின்றனர். முகவரியே இல்லாத தமிழக பா.ஜ.க. தலைவர்கள், காவி ஆதரவு சமூக ஆர்வலர்கள் அனைவரும் தமிழக ஊடகங்களால் கடந்த நான்காண்டுகளில் பிரபலமாக்கப்பட்டிருக்கிறார்கள். அர்னாப் கோஸ்வாமி போன்றோரோ சங்க பரிவாரத்தை எதிர்க்கும் எவரையும் தேசவிரோதி என பரபரப்பாக சித்தரிக்கின்றனர்.

மராட்டிய போலீசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட ஐந்து மனித உரிமை செயற்பாட்டாளர்களை நகர்ப்புற நக்சல்கள் என மோடி ஆதரவு ஊடகங்கள் முத்திரை குத்தின. இறுதியாக போலீசின் செயலுக்கு தடை போட மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் துணிபு! அதை முறியடிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தத் தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

மீடியாவை மிரட்டும் மோடி ! – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

மீடியாவை மிரட்டும் மோடி ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு!
  • இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?
  • மோடி அரசின் கூலிப்படையா பத்திரிகையாளர்கள் ?
  • 2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி
  • அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம்!
  • டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம்!
  • சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் இவர்கள் படுத்தேவிட்டார்கள்!
  • நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலைநீக்கமா? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள்!
  • உண்மையைப் பேசாதே! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசின் ஒடுக்குமுறை!
  • மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !
  • தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ?
  • அமித்ஷா சொத்து விவர நீக்கம் அறிவிக்கப்படாத அவசரநிலை!
  • செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா!
  • EPW : ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி – அதானி கூட்டணி!
  • குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க-வா?
  • பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
  • கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஐரோப்பியர்களால் வாழ்வும் வளமும் பெற்ற வடமொழி | பொ.வேல்சாமி

0

நண்பர்களே….

எழுத்தாளர்
பொ. வேல்சாமி
வடமொழியாகிய சமஸ்கிருதமொழியின் சிறப்பை 13, 14 ம் நூற்றாண்டுகளில் அரேபியர்களின் வழியாக ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டனர் என்று வரலாறு கூறுகின்றது. 1651 இல் ஆப்ரகாம் ரோஜர் பர்த்திருஹரியின் “ஸீபாஷித த்ரிசதி” என்ற வடமொழி நூலை போர்த்துக்கீசிய மொழியிலும் டச்சு மொழியிலும் மொழிபெயர்த்தார். ஐரோப்பியர்களுக்கு அறிமுகமான முதல் வடமொழி நூல் இதுதான் என்று கூறுகின்றனர். தரங்கம்பாடியில் வசித்த ராபர்ட் டி நொபிலி (1577) தமிழ்நாட்டில் வேதங்களைத் தேடியதில் யஜீர் வேதத்தை மட்டும் கண்டுபிடித்து ஐரோப்பியாவிற்கு கொண்டு சென்றதாக அறிவித்தார். அந்நூலை வால்டேர் படித்து பிரான்ஸ் நாட்டு நூல்நிலையத்தில் சேர்த்ததாகத் தகவல் உண்டு. ஆனால் அது உண்மையான யஜீர் வேதம் அல்ல என்று பிற்காலத்தில் தெரிந்தது. கர்னல் போலியர் (COLONEL POLIER) 1798 இல் நான்கு வேதங்களையும் தேடிப் பிடித்து அவற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்ப்பித்தார்.

சமஸ்கிருதமொழியை ஐரோப்பியர்கள் பலரும் ஆராய்ந்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளனர். அவற்றுள் பல இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கின்றன. அப்படி எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

1. சார்லெஸ் வில்கின்ஸ் (Charles Wilkins) 1750 -1836
2. ஸர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) 1746 -94 முதன்முதலாக தேவநாகரி எழுத்துகளில் அச்சிட்டவர் இவரே. அதனை அச்சு எழுத்துக்களாக உருவாக்கியவரும் இவரே.
3. ஹென்றி தாமஸ் கோல்புரூக் (Henry Thomas Cole brooke) 1765 – 1837 பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களில் பலரை சமஸ்கிருத பண்டிதர்களாக மாற்றியவர் இவரே.
4. ஷ்லெகல் (Friedrich Schlegel) 1772 -1829
5. பிரான்ஸ் பாப் (Franz Bopp) 1791 -1867. இவர் சமஸ்கிருத அகராதியை வெளியிட்டவர் என்ற தகவல் உண்டு.
6. பர்நாப் (Prof.Eugene Burnouf) 1801 -52. இவர் மாக்ஸ்முல்லரின் வடமொழி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. ரோஸன் (Friedrich Rosen) 1805-37. இவர் ஏட்டுச்சுவடிகளில் இருந்த ரிக் வேதத்தின் முதல் அஷ்டகத்தை சொற்களுக்கான அர்த்தங்களுடன் முதலில் பதிப்பித்தவர்.
8. பென்வே (Theodor Benfey) 1809 -1881 இவர் 1848 இல் சாம வேதத்தையும் 1866 இல் சமஸ்கிருத ஆங்கில அகராதியையும் வெளியிட்டார்.
9. மாக்ஸ்முல்லர் (Prof. Friedrich Max Muller) 1823-1900 இவர் ரிக் வேதத்தை சாயனருடைய விளக்கத்துடன் முதன்முதலில் பதிப்பித்தார். இவர் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட சமஸ்கிருத நூல்களும் பிற நூல்களும் 50 தொகுதிகளாக இணையத்தில் உள்ளன. சுமார் 16000 பக்கங்கள் உள்ள இந்த தொகுதிகளை அரை மணிநேரத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10. ராத் (Rudolph Roth) 1821-95 இவர் பேரா. போட்லிங் என்பவருடன் இணைந்து ரஷிய நாட்டின் “செயின்ட் பீட்டர்ஸ்பர்க்“ நகரத்தில் 1853 -75 க்கு இடையில் சமஸ்கிருத – ஜெர்மானிய பெரிய அகராதியை வெளியிட்டார். இன்றுவரை அந்த அகராதி வேதம் படிப்பவர்களுக்கு உறுதுணையான நூலாக நிலவி வருகிறது. 1848 -52 க்கு இடையில் யாஷ்க நிருத்தத்தை அதற்கான உரையுடனும் தாம் எழுதிய உரைவிளக்கத்துடனும் வெளியிட்டார்.

இப்படியாக ஐரோப்பியர்கள் பலரும் வடமொழிக்கு செய்துள்ள பணிகள் ஏராளமானது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியர்களில் எவரும் இத்தகைய பணிகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்வந்த காலங்களில் தமிழ்நாட்டவரும் வேதங்களை அறிந்துகொள்வதற்காக அவற்றை மொழிபெயர்க்கும் பணி மிக சிலரால் தொடங்கப்பட்டது. ஜம்புநாதன் என்ற அறிஞர் நான்கு வேதங்களையும் மொழிபெயர்த்துள்ளார். இந்த தொகுதிகளை “அலைகள் வெளியீட்டகம்” மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளது. (சாம வேதம் மட்டும் இணையத்தில் இருக்கிறது.)

1939-42 காலகட்டத்தில் திருவொற்றியூரான் அடிமை எனும் த.ப.இராமசாமிப் பிள்ளை என்பவர் யஸீர் வேதம் முழுமையும் அதற்கு எழுதப்பட்ட வடமொழி உரைகள் அனைத்தையும் வடமொழி அறிஞரான காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளைக் கொண்டு மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளையும் யஸீர் வேதம் அதன் உரைகள் தொடர்பான செய்திகளையும் விரிவான முன்னுரைகளாக எழுதி பத்துபாகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த பத்துபாகங்களும் (சுமார் 5000 பக்கங்கள் உள்ளன ) படிப்பர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நூலை எவரும் விற்பனை செய்யக்கூடாது என்ற குறிப்பு நூலில் உள்ளது.

இத்தகைய மனிதர்கள் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டார்கள், தமிழ்த் தொண்டில் ஈடுபட்டார்கள் என்று பேசுவது நியாயம் ஆகும். அதைவிட்டு தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?

இந்த நூல்களை அனைத்தையும் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு உங்களுக்கு கொடுத்துள்ளேன். தயவுசெய்து நூல்களை படிக்க நேரம் இல்லாவிட்டாலும் நூலின் முன்னுரைகளை படிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

♦ கிருஷ்ண எசுர்வேதம் தைத்திரீய சங்கிதை : மகாக்கினி சயனத்தின் சேடப் பிரகரணம் சாயணபாடியக் கருத்துப் பதவுரைகளுடன் கூடியது

♦ ஸாம-வேதம் : (தமிழ் மொழி பெயர்ப்பு)

***

”அண்ணா”வின் நூல்களைப் படிக்க வேண்டுமா…

நண்பர்களே….

“அண்ணா”வின் நூல்களைப் படிக்க விருப்பமுள்ள நண்பர்கள் தரவிறக்கம் செய்துகொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்….

♦ அண்ணாவின் நூல்கள்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

தொழிலாளர்களும், விவசாயிகளும் கடுமையாக உழைத்து அரசுக்கு வரி செலுத்துகிறோம். அந்த வரிப்பணத்தில் பெரும்பகுதியை தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்துக்கு செலவிடுகிறது ஆளும் வர்க்கம்.

இப்போது சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி விதிப்பு உயர்வே இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 2014-க்குப் பிறகு மட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பின் மூலம் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு பெற்றிருக்கிறது. இதன்றி ஜி.எஸ்.டி மூலம் மாதம் 1 லட்சம் கோடி வீதம் வருடத்திற்கு 12 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கிறது.

இந்தப் பணத்திலிருந்துதான் பாதுகாப்புத் துறைக்கு பட்டுக் குஞ்சலம் வாங்கி அலங்கரித்துக் கொள்கிறது ஆளும் வர்க்கம். 2018-2019-க்கான மத்திய பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில இருக்கிறது இந்தியா. தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்தச் செலவு உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்பிற்குதான் பயன்படுத்தப்படுகிறதா? கார்ப்பரேட் கொள்ளைக்கே இந்த நிதி ஒதுக்கீடு சென்று கொண்டிருக்கிறது.

இராணுவத்திற்கு என்று ஒதுக்கப்படும் பணத்தில் பாதிக்கும் மேல் புதிய தளவாடங்கள் வாங்கவும், தளவாட பராமரிப்புக்காக வும் செலவிடப்படுகிறது. இராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா

போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், சமீபத்திய ரஃபேல் விமான ஊழல் வரை மேற்கத்திய கார்ப்பரேட்டுகளுடனான இந்த ஒப்பந்தங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் பற்றிய விபரங்கள் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதலின் காரணமாக அவ்வப்போது வெளிவருகின்றன. தற்போது வெளியாகியிருக்கும் ரஃபேல் விமான ஊழல் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது, ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ள உதவும்.

2012-ம் ஆண்டு பிரான்சின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 நவீன ரக போர்விமானங்களை (18 விமானங்கள் பறக்கும் நிலையில்) அன்றைய மதிப்பில் சுமார் ரூ 54,000 கோடி செலவில் கொள்முதல் செய்வது, 108விமானங்களை இந்திய அரசின் HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்) நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை அடக்கம்.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு போட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை ஏறத்தாழ ரூ 60,000 கோடி கொடுத்து வாங்க வேண்டும், தொழில்நுட்ப பரிமாற்றம் கிடையாது. முக்கியமாக HAL நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, அனில் அம்பானி புதிதாகத் திறந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் மூலமாக விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூ 700 கோடியிலிருந்து ரூ 1600 கோடியாக இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது, HAL நிறுவனத்திடம் இருந்து ரிலையன்சுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது என்பவை இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள்.

படிக்க:
ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

இதில்தான் ரூ 30,000கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முன்னாள் பா.ஜ.க தலைவர்களும் கூறுகின்றனர். ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கும் மோடி அரசு, குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் இதைப்பற்றி கேள்வி கேட்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து வாய்ப்பை பறித்து அம்பானிக்கு கொடுத்து விட்டீர்களே என்ற குற்றச்சாட்டுக்கு பதிலாக, அம்பானிக்கு மட்டுமில்லை 70 தனியார் நிறுவனங்களுக்கு காண்டிராக்ட் கொடுக்கப்பட உள்ளது என்று பதில் சொல்கிறார் மோடியின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் எம்.ஜே.அக்பர். அதாவது, பொதுத்துறையில் வேலை வாய்ப்பை பலி கொடுத்து விட்டு தனியார் கார்ப்பரேட்டுகள் பையில் நமது வரிப்பணத்தை கொண்டு சேர்ப்பதுதான் தங்களது தேச பக்தியின் யோக்கியதை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள்.

மோடி – ஹாலந்தே

“காந்தி அவர்களே, எங்களுக்கு தேசம் என்ற ஒன்றே இல்லாத நிலையில், தேசபக்தியைப் பற்றி எப்படி பேச முடியும்?” என்பதுதான் அம்பேத்கர், தேசபக்தி குறித்த காந்தியின் கேள்விக்கு அளித்த பதில். தேச பாதுகாப்பு என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப்படும் ராணுவம் என்பது உண்மையில் சொத்துடைமை வர்க்கங்களின் நலனை பாதுகாப்பதற்கான நிறுவனம்தான். இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், பாகிஸ்தான் அல்லது சீன ஆளும் வர்க்கங்களுக்கும் இடையேதான் பகையும் போட்டியும் நிலவுகிறது. ஆனால், போரில் பலியிடப்படுவது உழைக்கும் வர்க்கம், ராணுவத்துக்கு செலவிடப்படுவது உழைக்கும் மக்களின் வரிப்பணம்.

ஒவ்வொரு நாட்டு முதலாளி வர்க்கமும் அண்டை நாடுகளை எதிரிகளாகக் காட்டி, தீவிரவாதிகள் என்று அச்சுறுத்தி தேசபக்தி என்ற திரையிட்டு தங்களை மறைத்துக் கொள்கின்றன. உண்மையில் உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக இருப்பது கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளும்தான்.

இந்தியாவை ஆளும் கட்சிகளைப் பொறுத்தவரை டாடா, அம்பானி, அதானி உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் தேசம், அவர்களின் நலனே தேசத்தின் நலன், அவர்களின் கொள்ளையை உறுதிப்படுத்துவதே தேசப்பாதுகாப்பு. தேசம், தேசியம், தேசபக்தி அனைத்தும் முதலாளிகளும் ஆளும்வர்க்கமும் மக்களுக்கெதிரான தங்களுடைய சுரண்டலை மறைப்பதற்கு போட்டுக்கொள்ளும் திரைகள்.

முதலாளிகளின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் ராணுவம் இருக்கிறது என்றால், இப்போது அந்த ராணுவத்திற்காக செலவிடப்படும் வரிப்பணத்திலும் கைநனைத்து லாபமீட்டுகிறது, முதலாளி வர்க்கம்.

இதற்கும் இந்தியாவுக்கு முன்னோடி அமெரிக்காதான். அமெரிக்காவில் அரசாங்கப் பதவிகளில் ஆயுதத் தளவாடக் கம்பெனிகளின் முதலாளிகள் நேரடியாக பங்குபெறுகின்றனர். ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த டிக் சென்னி பதவி ஏற்பதற்கு முன்பு ஹல்லிபர்டன் என்ற எண்ணெய் கம்பெனியின் CEO-ஆக இருந்தார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ஒப்பந்தங்கள், LOGCAP என்னும் மறுசீரமைப்புப் பணிகள் உட்பட ஹல்லிபர்டன் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் (KBR) வழங்கப்பட்டு அமெரிக்கப் பொதுமக்களின் இலட்சக்கணக்கான டாலர் அள்ளி கொடுக்கப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தில் சண்டையிட தனியார் நிறுவனங்கள் ஆட்களை சப்ளை செய்வது அதிகரித்து 2003-ல் 2.4 இராணுவ வீரர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஈராக் போரில் அமெரிக்க இராணுவ வீரர்களை விட தனியார் நிறுவனங்களின் ஆட்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சொத்துடைமை வர்க்கங்களின் நலனுக்காக பராமரிக்கப்படும் ராணுவ செலவில், முதலாளிகள் லாபம் ஈட்டும் போது, அதிகார வர்க்க தரகர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கிறார்கள்.

உண்மையில் நாட்டைக் காக்க வேண்டும் என்ற தேசபக்தி புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்திற்கே உரியது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படையை சோவியத் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு வீழ்த்தியதன் மூலம் தங்கள் தேசத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் முதலாளித்துவ வேட்டையிலிருந்து காத்தனர். அதுபோல அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் புரட்சிகர இயக்கங்களில் ஒன்று திரள்வதன் மூலம் தான் முதலாளி வர்க்கத்தை அம்பலப்படுத்தி வீழ்த்த முடியும்; நமது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

செல்வம்
புதிய தொழிலாளி செப்டம்பர் 2018
நன்றி: new-democrats.

லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு

“சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களிடம் மட்டும் தானா? முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காட்டுமா?” – இதை யார் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எச்.ராஜா, ராமகோபாலன், அர்ஜூன் சம்பத், ஜெயமோகன் என பல பெயர்களை நீங்கள் யூகிக்ககூடும். ஆனால் இவர்கள் யாரும் இல்லை.இதை சொல்லியவர் ’லிபரல் ஜனநாயகவாதி’ என பெயரெடுத்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு.

கட்ஜு, மேலும் ஒருபடி மேலே போய் “நீதிபதிகளுக்கு சமநிலையும், கட்டுப்பாடும் இல்லை”  என்று கூறியிருக்கிறார். மேலே கூறப்பட்ட வாசகங்கள், “உயர் நீதிமன்றமாவது மயிராவது” என எச்.ராஜா பேசிய வசனத்தின் பாலிஷான வடிவம் என்றும் சொல்லலாம்.

லிபரல் கருத்துக்களைப் பேசும் ’தி வயர்’ இணையதளத்திலும், காவி பயங்கரவாதிகளின் ஆதரவு இணையதளமான ’ஸ்வராஜ்யா’ தளத்திலும் பத்தி எழுதிவருகிறார் கட்ஜூ. ஒருவர் ஒரே சமயத்தில் லிபரல் கருத்துக்களை பேசும் தளத்திலும், மதவெறியைப் பரப்பும் தளத்திலும் எழுத இயலுமா என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? எனில் நீங்கள் லிபரல் பார்ப்பனர்கள் என்கிற பதத்தை இதுவரை கேள்விபட்டதில்லை என்று நினைக்கிறேன்.

அது என்ன லிபரல் பார்ப்பனர்கள்?

இதற்கு ஒவ்வொருவரும் பலவித அர்த்தம் சொல்கிறார்கள். அசைவம் சாப்பிடும் பார்ப்பனர்களை லிபரல் பார்பனர்கள் என்பதாகவும் இன்னும் பலவாறாகவும் பலர் பல வறையறைகளை வைத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் படம் குறித்து பதிவர் யுவகிருஷ்ணா அவருக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். அது லிபரல் பார்ப்பனர்களைப் பற்றிய ஒரு அறிமுகமாக வாசகர்களுக்கு இருக்கும் எனக் கருதுகிறேன். “முற்போக்கு பார்ப்பனர்கள் ஒரு எல்லை வரைதான் அனுமதிப்பார்கள். மணிரத்னம் பற்றி குறைகூறினால் வாய் மீதே போடுவார்கள்” என்று எழுதியிருந்தார் யுவகிருஷ்ணா.

லிபரல் பார்ப்பனர்களுக்கான ஒரு சிறப்பான உதாரணமாக நான் மார்க்கண்டேய கட்ஜுவை முன்வைக்கிறேன். அதற்கான ஆதாரத்தை நான் உங்களுக்கு புதிதாகத் தரப் போவதில்லை. கட்ஜுவே அனைத்து ஆதாரங்களையும் ஏற்கனவே தந்திருக்கிறார். அதை எடுத்தியம்பும் வேலையை மட்டுமே நான் இங்கு செய்யப் போகிறேன்.

கட்ஜு ஒரு லிபரல் பார்ப்பனர்தான் என்பதை நிருபிக்க மூன்று உதாரணங்களைத் தொகுத்தளிக்கிறேன்.

உதாரணம் #1: சபரிமலை வழக்கு vs முத்தலாக் வழக்கு

சபரிமலை வழக்கு குறித்து கட்ஜூ பின்வருமாறு சுவராஜ்யா தளத்தில் எழுதியுள்ளார்.

“ நீதிபதி இந்து மல்ஹோத்திரா தனது சிறுபான்மை தீர்ப்பில் சமநிலையுடன், சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மற்ற நீதிபதிகளிடம் அவை இருப்பதாக சொல்ல முடியவில்லை. பல நூற்றாண்டு பழக்கவழக்கத்தில் தலையிடுவதன் மூலம் பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை திறந்திருக்கிறார்கள். நீதித்துறையை பெரும் பழி சுமக்க வைத்திருக்கிறார்கள்.

நீதித்துறை மத பழக்கவழக்கங்களில் தலையிடக் கூடாது. மதம் நம்பிக்கை சார்ந்தது. ஒவ்வொரு மதமும், வகையறாவுமே தங்களது மத நடவடிக்கைகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது)

பெரும்பான்மையான பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்படும் சில பள்ளிவாசல்களில் கூட தனியாக தொழுவதற்குத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றம் முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காண்பித்து ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழ உத்தரவு அளிப்பார்களா? இல்லை சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களுக்கு மட்டும்தானா?”

உச்சநீதிமன்றம் இந்துக்களுக்கு அநீதி இழைத்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றத்தை இதன் மூலம் உருவாக்குகிறார் கட்ஜு.

மேற்கண்ட கட்டுரை எழுதுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே, மீண்டும் சொல்கிறேன், முன்னதாகவே தி வயரில் முத்தலாக் குறித்து பின்வருமாறு எழுதியிருக்கிறார் கட்ஜு.

பின்வருமாறு ஒரு வாதம் வைக்கப்படுகிறது. முத்தலாக் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் முத்தலாக் சொல்வது என்பது மனைவியை கைவிடுவது என்பதாகிறது. அப்படியானால் மனைவியை கைவிடுவது ஏன் குறிப்பிட்ட மதத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது. எந்த மதமாக இருந்தாலும் மனைவிகளை நிராதரவாக கைவிடும் கணவர்கள் அனைவரையும் ஏன் தண்டிக்கக் கூடாது?.

அப்படி செய்யலாம் என்றாலும் ஒரு தரப்பினரை சட்டவரம்புக்குள் கொண்டுவராமல் இருப்பதாலேயே அச்சட்டம் தவறு என்று ஆகிவிடாது. உதாரணமாக மருத்துவமனைக்கு அருகில் ஸ்பீக்கர் வைக்க அனுமதி இல்லை என்கிற சட்டத்தை அதே மருத்துவமனைக்கு அருகில் வண்டி ஹார்ன் சத்தம் தடை செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக நீக்க முடியாது.

ஒரு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது, அனைவரும் இயற்கையாகவோ இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலோ ஒரே நிலையில் இருப்பதில்லை.

முத்தலாக் என்பது முஸ்லீம்களுக்கு தனிசிறப்பானது. ….. பிறமதத்தின் கணவர்களுக்கு தண்டனையில்லை என்பதற்காகவே முஸ்லீம்களிடம் நிலவி வரும் நிலப்பிரபுத்துவ பழக்கவழக்கத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு விலக்கு அளிக்க முடியாது.”

இப்போது நமது கேள்விகளுக்கு வருவோம்.

முத்தலாக் பிற்போக்கிலிருந்து வெளிவருவதாம். சபரிமலையில் மட்டும் மதத்திற்குள் நீதித்துறை தலையிடக்கூட்டாதாம் நம் மனுநீதியரசர் கட்ஜுவுக்கு

1. உச்ச நீதிமன்றம் முஸ்லீம்களின் மத விவகாரத்தில் தலையிட்டு தீர்ப்பளித்துள்ளது என்பது நமது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு-க்கு நன்றாகவே தெரியும். எனினும் அத்தீர்ப்பையும் அதைத் தொடர்ந்து அரசு இயற்றிய சட்டத்தையும் ஆதரித்து கட்டுரையும் எழுதியுள்ளார் கட்ஜு.

உச்சநீதிமன்றமும் அரசும் முசுலீம்களின் மத விவகாரத்தில் தலையிட்டுள்ளன என்பது தெரிந்தும், சபரிமலை விசயத்தில் ”முஸ்லீம்கள் மீது கை வைக்க திராணி இருக்கிறதா?” என்று உச்சநீதிமன்றத்தை கேட்கிறார் கட்ஜூ. இதன் மூலம் இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த கட்ஜு முயல்வது ஏன் ?

  1. “ஒரு தரப்பினருக்கு பொருந்தாவிட்டாலும் சட்டம் சரியானதுதான். அவருக்கு பொருந்துமா? இவருக்கு பொருந்துமா? என்றெல்லாம் பார்க்கக் கூடாது” என்று 7 நாட்களுக்கு முன்னர் முத்தலாக் விவகாரத்தில் வகுப்பெடுத்துவிட்டு இப்போது சபரிமலை விசயத்தில் முஸ்லீம்களுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பது ஏன் ?

முத்தலாக் விசயத்தில் பெரிய பண்டிதரை போல பல தீர்ப்புகளையும் அமெரிக்க நீதிபதியையும் மேற்கோள் காட்டிவிட்டு சபரிமலை என்றதும் ஒரு சங்கியைப் போல பொங்குகிறார் கட்ஜு.

படிக்க:
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

நன்றாக கவனித்தும் பார்த்தால், கட்ஜு ’ஸ்வராஜ்யா’ என்கிற காவி பயங்கரவாத இணையதளத்தில் சபரிமலை குறித்து எழுதுகிறார்.   ‘தி வயரில்’ தம்மை முற்போக்காக காட்டிக்கொண்டு முத்தலாக்கை எதிர்த்தும் கட்டுரை எழுதுகிறார். முன்னதில் அவர் காஷ்மீரத்து பார்ப்பன கட்ஜு, பின்னதில் அவர் லிபரல் கட்ஜு.

உதாரணம் #2: அருந்ததிராய் மற்றும் பார்ப்பனியம் குறித்து கட்ஜு

” கட்ஜு லிபரல்தான். இந்த விவகாரத்தில் மட்டும் கொஞ்சம் நடுநிலை இழந்துவிட்டார் என்று சிலர் நினைக்கலாம். இல்லை கட்ஜூ இந்துக்களுக்கு ஆதாரவாக நிற்கிறார் என்றுகூட சில இந்துமத அப்பாவிகள் நம்பலாம். அவர்களுக்காவே அவரது எழுத்தில் இருந்தே இரண்டாவது உதாரணம்.

பார்ப்பனியம் என்ற சொல்லின் மூலம் தலித்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறாராம் அருந்ததி ராய்

இதில் அருந்ததிராயை ஒரு அறிவிலியாக நிருபிக்க நினைத்து எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கும் அரசுத்துறையிலும் அதிகாரத்திலும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்குமான விகிதாச்சாரம் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பாக அருந்ததிராய் எழுதியிருக்கும் கருத்தை கோடிட்டு கட்ஜூ எழுதுகிறார்

” அவர் (அருந்ததிராய்) பார்ப்பனியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். சாதி அமைப்பு என்கிற வார்த்தைக்கு பதிலாக பார்ப்பனியம் என்கிற வார்த்தை பார்ப்பனர்களைக் காயப்படுத்துகிறது.” என்கிறார்.

அப்படி காயம்பட்ட பார்ப்பனர் யார் தெரியுமா ? அது வேறு யாருமல்ல.. நம் காஷ்மீரத்து பார்ப்பனர் கட்ஜுதான். தான் வாங்கிய அடிகளை, தன் கட்சிக்காரன் தாக்கப்பட்டதாகக் காட்டி மேடையில் பேசும் வடிவேலுவின் நகைச்சுவையை இது ஒத்திருந்தாலும் இப்படி காயம்படும்படி அடிக்கவேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பக்கூடும்.

பார்ப்பனியம் என்கிற வார்த்தை கட்ஜுவுக்கு ஏன் கோபத்தை வரவழைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தோழர் மருதையன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகளை கோடிட்டுக் காட்டுவது இங்கு பொருத்தமானதாக இருக்கும்.

” சாதி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் யாருக்கும் தான் பிறந்த சாதியை விமரிசிக்கிறார்களே என்று சிந்தனையே எழவில்லை. தான் பிறந்த சாதியை யாரேனும் விமரிசிக்கும்போது அதன் காரணமாகக் கோபப்படுகிறவர் சாதி உணர்வைத் துறந்தவராக இருக்க முடியாது.”

மேலும் அருந்ததிராயின் மீது பின்வருமாறு தானே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தானே தீர்ப்பும் எழுதுகிறார் கட்ஜு.

“பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்து எழுதும் அருந்ததிராய் தலித்துகளை ஆதரிக்கிறார். இது தலித் மக்களுக்கு நன்மை பயப்பதல்ல மாறாக ஊறு விளைவிப்பது.

பார்ப்பனர்கள் தங்களது விகித்தாசாரத்து அதிகமாக பதிவிகளில் இருந்தாலும் அவர்களிலும் ஏழைகளும், வேலை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

‘பார்ப்பனியத்தை விமர்சிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது’ என்று அருந்ததிராய் கூறுவது அறிவிலித்தனமானது, சிறுபிள்ளைதனமானது.

அருந்ததிராயின் அறிவுஜீவி முகமூடியை கிழிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது”

 

– என எழுத்திலேயே சத்ரு சம்ஹார யாகம் நடத்தியிருக்கிறார் கட்ஜு.

முத்தலாக் vs சபரிமலை விசயத்திலேயே, தான் ஒரு அடிப்படை நேர்மைகூட இல்லாத நபர் என்பதைக் காட்டிய கட்ஜு, இப்போது பூணூலை பிடித்துக்கொண்டு சண்டமாருதம் செய்கிறார்.

படிக்க:
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

சரி, இங்கு நாம் கட்ஜுவிடம் கேட்க வேண்டிய சில கேள்விகளுக்கு வருவோம் !

  1. பார்ப்பனியம் என்று அழைப்பது எப்படி தலித்துகளுக்கு எதிரானதாகும்?
  2. பார்ப்பனியம் என்று கூறுவது எப்படி மக்களை பிளவுபடுத்துவதாகும்? இப்படிக் கருதும் கட்ஜு எப்பேர்பட்ட சாதி வெறியராக இருக்க வேண்டும்?

கட்ஜூவுக்கு இருப்பது வெறும் சாதி உணர்வுதான், காழ்ப்பு கிடையாது என்று கூட சிலர் நினைக்ககூடும்.

அவரை வர்ணாசிரம மனுதர்ம கருத்துடையவர், சாதி வெறியர் என்றெல்லாம் கருத எனக்கும் கூட விருப்பமில்லைதான். ஆனால் அடுத்த உதாரணம் தவிர்க்கவியலாமல் அக்கருத்துக்குத்தான் நம்மை இட்டு செல்கிறது.

உதாரணம் #3: கருணாநிதி vs ஜெயலலிதா

கட்ஜூ என்கிற நீதிதேவர் ஒரு ஊழல் எதிர்ப்புப் போராளி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரியாதவர்களுக்காக கருணாநிதியின் இறுதி நாட்களில் தமிழக மக்கள், ஊடகங்களில் கருணாநிதியைப் புகழ்ந்து கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது டிவிட்டினார் கட்ஜூ.

“ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி குறித்து தமிழர்கள் பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கேட்கவேண்டியது கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் சொத்து எவ்வளவு ? இப்போது அவர், அவர் மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் உள்ளிட்டவர்களின் குடும்ப சொத்து எவ்வளவு? காமராசர் இறக்கும் போது அவரிடம் சொத்து இல்லை. எவ்வளவு பெரிய வேறுபாடு? “

கருணாநிதி குறித்து தமிழர்கள் கவலைப்படுவது கட்ஜூவுக்கு உள்ளக்குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது.

“அடேங்கப்பா ! லஞ்ச ஊழலை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளாத பெரிய கோபக்காரர் போலத் தெரிகிறதே? எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத கருணாநிதிக்கு எதிராகவே இப்படிப் பொங்குபவர், பல ஆண்டுகள் நீதிமன்றத்தை அலைக்கழித்து வாய்தா வாங்கி, இறுதியில் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை கிழித்துத் தொங்க விட்டிருப்பார் போலத் தெரிகிறதே” என நினைக்கிறீர்களா ?

நமது முன்னாள் நீதிபதி ஜெயலலிதாவுக்கு என்ன நீதி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் கட்ஜூ எழுதியது,

“ஜெயலலிதா ஒரு சிங்க குட்டி. அவரின் எதிரிகள் குரங்குகள். அவர் மீண்டு வருவார். பணிக்கு திரும்புவார். என் இளமை காலத்தில், அது அவரின் இளைமை காலமும்கூட, நான் அவர் மீது காதல் வயப்பட்டிருந்தேன்.”

ஒரு வேளை ஜெயலலிதாவின் ஊழல் குறித்து கட்ஜூவுக்கு தெரியாமல் இருந்திருக்குமோ? ஜெயலலிதாவுக்கு பயந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்ட வழக்கில் கணக்குப் பிழையுடன், “கூடுதலாக கொஞ்சம்தான் சொத்து சேர்த்திருக்கிறார் பரவாயில்லை” என்று குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு பிறகுதான் வாய்தா ராணி ஜெயலலிதா குறித்து “அவர் முதல்வராக இருந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்தவர். அவர் நீதித்துறையின் மீது செல்வாக்கு செலுத்த நினைத்ததில்லை” என்று குறிப்பிட்டார் கட்ஜு.

ஜெயலலிதா இறந்து பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஜெயா, சசிகலா குற்றவாளிகள் என தீர்ப்பான பிறகும் ஜெயலலிதா மீது தனக்கு இருந்த காதலை சிலாகித்து எழுதி மகிழ்ந்தார் கட்ஜூ.

ஊழல்களின் பேரரசி – கட்ஜுவின் ‘சிங்கக் குட்டி’ – ’அம்மா’

இன்று ஆறுமுகசாமி விசாரணைக்கு காரணமாக இருக்கும் ஜெயாவின் அப்பல்லோ மர்ம காலத்தில், ஜெயாவின் படங்களை வெளியிட கோரிக்கை வைத்திருந்தார் கருணாநிதி. அப்போது கட்ஜு, “கருணாநிதி என்ன மாதிரியான மனிதர். அவருக்கு மரியாதை தெரியாதா? ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிடக் கோருவது அவமானம், வெட்ககேடு, மூர்க்கமானது. கருணாநிதிக்கு நாகரிகமே கிடையாது”  என்று எழுதியிருந்தார்.

சட்டப்படியே, எந்தவித நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் இல்லாத,  எந்த ஊழல் வழக்கிலும் தண்டனை பெறாதவர் கருணாநிதி. ஆனால் ”கருணாநிதிக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள்?, அவரிடம் சொத்துக் கணக்கு கேளுங்கள்” என தமிழக மக்களிடம் கோரும் நமது முன்னாள் நீதியரசர், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏ1 குற்றவாளி  ஜெயலலிதா குறித்து மாய்ந்து மாய்ந்து காதல் கொள்கிறார்.

அதாவது ”கருணாநிதி எனும் சூத்திரனுக்கு ஒரு நீதி, ஜெயலலிதா எனும் பார்ப்பனத்திக்கு ஒரு நீதி” என்பதுதான் கட்ஜுவின் நீதி – அதாவது மனுநீதிதான் கட்ஜுவின் நீதி என்பதே இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

படிக்க:
ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

மேற்கண்ட மூன்று உதாரணங்களில் எடுத்தாளப்பட்ட கட்ஜுவின் சொந்த எழுத்துக்களின் முரண்களிலிருந்தே, ஒரு கிளாசிக்கல் லிபரல் பார்ப்பனருக்கான ‘டெக்ஸ்ட் புக்’ உதாரணம்தான் கட்ஜு என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

கொஞ்சம் பொறுங்கள்.. முடியவில்லை.. இன்னும் இருக்கிறது..

’ஸ்வராஜ்யா’வில் அவரது ”சமஸ்கிருதம் – ஒரு அறிவியல் மொழி” என்ற கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதேபோல தமிழின் குறைகளையும், தேவநாகரியின் மேன்மையையும் விளக்கி தமது முகநூலில் எழுதியிருக்கிறார்.

தமிழ், திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பு அதனையொட்டி, கருணாநிதியின் மீதான தீராத வெறுப்பு, முத்தலாக் என்று வரும்போது லிபரல் பூச்சு, சபரிமலை விவகாரத்தில் பிற்போக்கு, பார்ப்பனியம் என்று பேசினால் நோவுவது, அதே சமயம் பத்திரிகை சுதந்திரம், சகிப்பின்மை, அது இது என கைவலிக்க டிவிட்டுவது – இதுதான் மார்க்கண்டேய கட்ஜு.

ஒரு லிபரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் கட்ஜுவை புரிந்து கொள்வது எப்படி? முன்னர் குறிப்பிட்ட தோழர் மருதையனின் கட்டுரையில் ஹேராம் படம் வெளியான போது நடந்த நிகழ்வு ஒன்றை குறித்துக் கூறியிருப்பார்.

“புதிய கலாச்சாரம் இதழில், ‘ஹே ராம்’ திரைப்படத்துக்கு எழுதப்பட்ட விமரிசனத்தில் ஞாநிக்கு உடன்பாடு இல்லை.

பார்ப்பன நடுத்தர வர்க்கத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். ஆபத்தற்றவர்கள்” என்றவாறு அவரது(ஞாநி) கருத்து அமைந்திருந்தது.

“மேற்பரப்பில் தெரியும் அவர்களது மென்மையைக் கண்டு ஏமாறக்கூடாது. அதன் தன்மைதான் நமது கவனத்துக்குரியது. பொருத்தமான தருணத்தில் அது விகாரமாக வெளிப்படும்” என்பது அன்று என் பதிலாக இருந்தது. என் கருத்தை அவர் ஏற்கவில்லை“

– என்று எழுதியிருப்பார். கட்ஜுவின் லிபரல் மேற்பரப்பு மென்மைக்குப் பின்னால், குடி கொண்டிருக்கும் பார்ப்பன ’மனு’நீதி அரசர் கட்ஜு விகாரமாக வெளிப்பட்ட சந்தர்ப்பங்களைத்தான் நாம் மேலே பார்த்தோம்.

’தி வயர்’, ’ஸ்க்ரோல்’, ’தி இந்து’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவதாலேயே சிலரை முற்போக்கானவர்கள் என நம்மில் பலரும் நம்புகிறோம். அதனால்தான் கட்ஜுவோ, பி.ஏ.கிருஷ்ணனோ முற்போக்காளர்களாக நம்முன் நிறுத்தப்படுகிறார்கள்.

தன் தளத்தில் பத்தி எழுதும் கட்ஜூ, ’ஸ்வராஜ்யா’வில் மதவெறியைத் தூண்டும் வகையில் எழுதுவது குறித்து ‘தி வயர்’-க்கு பிரச்சினையில்லை. இதை ’நேர்மையற்ற அறிவுஜீவித்தனம்’ (Intellectual Dishonesty) என்று கருதுவதில்லை. மாறாக, கருத்து சுதந்திரம் என்பதாக இதை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதை கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியுமா ? பாசிசத்தின் இருள் நம் மீது கவிந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய லிபரல் பார்ப்பனர்களை அம்பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயமாகும்.

  • ரவி

நூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்

வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா?
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்?
மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
மன்னர்களுக்கெதிராகச் சிறு முணுமுணுப்புக்கூட எழவில்லையா?

தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்தில், அந்தப்புரங்களையும் போர்க்களங்களையும் தாண்டி எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் திருடிய செயலுக்காக உயர் பறிக்கப்பட்டாளே சங்ககாலப் பெண் ஒருத்தி.

தான் மேய்த்த மாடு பயத்தம் செடியை மேய்ந்துவிட்டதற்காகக் கண்ணைப் பறிகொடுத்தாரே மிஞிலியின் தந்தை.

வைதீத சமயத்தை எதிர்த்தமைக்காகக் கழுவில் ஏற்றப்பட்டார்களே எண்ணாயிரம் சமணர்கள்.

குடி நீக்கிய பிரம்மதேயங்களும், தேவதானங்களும் உருவாகத் தம் நிலத்தை இழந்தார்களே, பல உழவர்கள்.

பிரம்மதேயமாக மாற்றப்பட்ட கிராமங்களில் கள் இறக்கும் உரிமையை இழந்தார்களே ஈழவர்கள்.

‘வெண்கல் உடைத்து மண்கலம் உடைத்து’ என்ற விதிமுறைப்படி தம் வெண்கலப் பாத்திரங்களைச் சோழப் பேரரசின் சேவகர்களிடம் பறிகொடுத்ததுடன், தம் வீட்டு மட்பாண்டங்களையும் அவர்கள் உடைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனரே சோழர்கால வேளாண்குடிகள்.

வீட்டின் முன்புறம் திண்ணை வைத்துக்கொள்ள, மாடிகட்ட, வெள்ளையடிக்கப் போராடித்தானே சோழர்கால இடையர்கள் இவ்வுரிமைகளைப் பெற்றார்கள்.

ஊதியமில்லாத கட்டாய வேலையை ‘வெட்டி’, ஊழியம் என்ற பெயர்களில் செய்து மாய்ந்துபோனார்களே நம் முன்னோர்.

தளிச் சேரிப் பெண்டிர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டனர்?

அழகான பெண்களைக் கவர்ந்துவந்தும், விலைக்கு வாங்கியும், அவர்களுக்கென ‘அம்முவீடு’, ‘மங்களவிலாசம்’, ‘கல்யாண மகால்’ என்ற இருப்பிடங்களை உருவாக்கிய மன்னர்கள் யார்?

இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாட்டை பெண்கள் மீது திணித்த மன்னர்கள் மற்றும் மேட்டிமை சாதியினர் யார்?

இக்கொடுமைகளுக்கெதிரான போராட்டங்கள் நடந்தனவா இல்லையா?

இவ்வாறு ஏராளமான கேள்விகளும் ஆய்வுக்குரிய செய்திகளும் தமிழக வரலாற்றிலும் உண்டு; இந்திய வரலாற்றிலும் உண்டு. அதிகாரப் பூர்வமான வரலாற்றுப் பாடநூல்களில் இவை இடம்பெறுவதில்லை….

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

வரலாறு என்பது மன்னர்கள் இல்லாமல் இல்லை என்ற கருத்து ஆதிக்கம் செலுத்துவதல்தான் வரலாற்று நாடகத்திற்குச் செங்கோலையும் கிரீடத்தையும் தேடி நம் பள்ளி மாணவர்கள் அலைகிறார்கள்.

உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் மன்னர்களைத் தாண்டி நிகழ்ந்த நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும்தான் என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.

உணர்த்தப்பட்டிருந்தால் கலிலியோ என்ற விஞ்ஞானி கண்ணை இழந்ததும், புருனோ என்ற விஞ்ஞானி உயிருடன் கொளுத்தப்பட்டதும், மகத் என்ற ஊரின் குளத்து நீரை ஆயிரக்கணக்கான மகர் சாதியினருடன் சென்று அம்பேத்கர் பருகியதும், தஞ்சை மண்ணின் விவசாயிகள் சாணிப்பால் குடித்ததும், சவுக்கால் அடிபட்டதும், அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்ததும் வரலாற்று நிகழ்வுதான் என்பதை அறிந்திருப்பர்.

நூலின் முன்னுரையில் : ஆ.சிவசுப்பிரமணியன் (பக்: 13-15)

நூலாசிரியரைப் பற்றி: ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளுள் ஒருவர். தூத்துக்குடி நகரில் வாழ்ந்து வரும் இவர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டவர்.

நூல்: வரலாறும் வழக்காறும்
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001.
பேச: 91-4652-278525
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

பக்கங்கள்: 120
விலை: ரூ.90.00

இணையத்தில் வாங்க: பனுவல் | CommonFolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு பகுதி – 1

து வரையிலும் இந்தியர்கள், இந்திய சமூக, பொருளாதார வாழ்க்கையின் புனரமைப்பு பற்றிப் பேசும் போது, தனிநபர்வாதமா கூட்டுவாதமா, முதலாளித்துவமா, சோசலிசமா, பழமைவாதமா முற்போக்குவாதமா என்ற தன்மையில் பேசி வருகிறார்கள். ஆனால் சமீப காலத்தில்தான் இந்திய வானில் ஒரு புதிய ‘வாதம்’ தோன்றியுள்ளது, அது காந்தியவாதம் (காந்தியம்) எனப்படுகிறது. சமீப காலத்தில் காந்தியாரே காந்தியம் என்ற ஒன்று இல்லை என மறுத்திருப்பது உண்மைதான். இந்த மறுப்பு காந்தியார் அழகுறச் சூடிக் கொள்ளும் அந்த வழக்கமான தன்னடக்கத்தைக் குறிப்பதாகுமே தவிர வேறல்ல. காந்தியம் என்ற ஒன்றே இல்லை என மெய்ப்பித்து விடாது. காந்தியாரிடமிருந்து எவ்வித எதிர்ப்புக் குரலும் இல்லாமல் காந்தியம் என்ற பெயருடன் அநேக நூல்கள் வந்து விட்டன. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அது ஏற்கெனவே சிலரது உள்ளத்தை ஈர்த்திருக்கிறது. மார்ச்சியத்திற்கு ஒரு மாற்றாக அதனை முன்னிறுத்தத் தயங்குவதில்லை, என்னும் அளவுக்கு சிலர் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

காந்தியத்தைப் பின்பற்றுகிறவர்கள் இதுவரை இந்த நூலில் எழுதப்பட்டிருப்பதையெல்லாம் படிக்க நேரிட்டால் பின்வரும் கேள்விகளைக் கேட்கக் கூடும்; தீண்டாத மக்கள் காந்தியாரிடமிருந்து என்ன எதிர்ப்பாத்தார்களோ அதை அவர் செய்யாமல் போயிருக்கலாம்; ஆனால் காந்தியம் தீண்டாத மக்களுக்கு வருங்காலம் குறித்து எவ்வித நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லையா? தீண்டாத மக்களின் நலனுக்காக காந்தியார் குறுகிய கால அடிப்படையிலும் மெல்ல மெல்லவும் விட்டு விட்டும் எடுத்த முயற்சிகளை மட்டுமே நான் நினைவில் வைத்திருப்பதாகவும், அவரால் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளின் உள்ளியல் நீளத்தை நான் மறந்து விட்டதாகவும் காந்தியத்தைப் பின்பற்றுவோர் குற்றஞ்சாட்டலாம். சில நேரம் இப்படி நேரிடுவதுண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்; நீண்ட கோட்பாட்டை வகுத்துரைப்பவர் குறுகிய அடி மட்டுமே எடுத்து வைக்கிறார்; என்றாவது ஒரு நாள் அந்தக் கோட்பாடு அதற்கே உரிய இயக்க ஆற்றலைக் கொண்டு நீண்ட அடி எடுத்து வைக்கும் படிச் செய்து, ஒரு நேரத்தில் விடப்பட்ட அனைவரையும் அரவணைத்துச் செல்ல வழிகோலும் என்ற நம்பிக்கையில் அந்தக் குறுகிய அடிக்காக அவரை மன்னித்து விடலாம்.

காந்தியம் அதனளவில் மிகவும் சுவாரசியமான ஆய்வுப் பொருளாகும். ஆனால் காந்தியாரைப் பரிசீலித்தப் பிறகு காந்தியத்தைப் பரிசீலிப்பது சலிப்பூட்டும் பணியாக இருந்தே தீரும்; காந்தியாரும் தீண்டாத மக்களும் என்பதைப் பரிசீலினையிலிருந்து விட்டு விட வேண்டும் என்பதுதான் என் முதற் கருத்தாக இருந்தது. அதே போது, நான் இந்த ஆய்வுப் பொருளைப் பரிசீலிக்காமல் விடுவதன் விளைவு பெரிதும் வருத்தத்திற்குரியதாக இருக்கக் கூடும் என்ற உண்மையை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை, ஏனென்றால், காந்தியாரை நான் அம்பலபடுத்தியுள்ள போதிலும் காந்தியத்தைப் பரிசீலிக்காமல் விட்டு விட்டால் காந்தியவாதிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். காந்தியார் இது வரை தீண்டாத மக்களின் பிரச்சினையை தீர்க்கத் தவறி விட்டார் என்றால், தீண்டத்தகாதவர் இப்போதும் கூட காந்தியத்தில் விமோசனம் காண்பர் என்று அவர்கள் தொடர்ந்து போதனை செய்து வரக் கூடும். நான் இத்தகைய பிரசாரத்துக்கு இடமளிக்க விரும்பவில்லை என்பதால்தான் தொடக்கத்தில் எனக்கிருந்த தயக்கத்தை உதறிவிட்டு, காந்தியம் பற்றிய பரிசீலனையில் இறங்குகிறேன்.

II

காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன?

எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்; காந்தியவாதிகள் சிலர் காந்தியம் பற்றி முற்றிலும் கற்பனையான ஒரு கருத்துருவத்தை இட்டுக் கட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்துருவத்தின் படி, காந்தியம் என்பது கிராமத்துக்குத் திரும்பிச் செல்வதையும் கிராமத்தைத் தன்னிறைவாக்குவதையும் குறிக்கிறது. இது காந்தியத்தை வெறும் வட்டாரவாதம் தொடர்பான ஒன்றாக்கி விடுகிறது. காந்தியமானது வட்டாரவாதத்தைப் போல் சாமானியனமானதோ, அறியாத்தனமானதோ அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன், வட்டாரவாதத்தை விடவும் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டது காந்தியம், வட்டாரவாதம் அதில் ஓர் அற்பச் சிறு பகுதிதான். அதற்கென்று ஒரு சமூகத் தத்துவம் உள்ளது; அதற்கென்று ஒரு பொருளாதாரத் தத்துவம் உள்ளது. காந்தியத்தின் பொருளாதார, சமூகத் தத்துவத்தைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுவது வேண்டுமென்றே காந்தியம் பற்றி ஒரு தவறான படத்தைக் காட்டுவதாகும். காந்தியம் பற்றிய உண்மையான படத்தை காட்டுவதுதான் முதல் முக்கியத் தேவை,

தனது ஆசிரமத்தில், தாழ்த்தப்பட்டோர்களுடன் உரையாடும் காந்தி.

முதலில் சமூகச் சிக்கல் தொடர்பான காந்தியாரின் போதனைகளை எடுத்துக் கொள்வோம். சாதி அமைப்பு தொடர்பான காந்தியாரின் கருத்துக்கள் இந்தியாவில் சாதி அமைப்புதான் முக்கிய சமூகச் சிக்கலாக இருந்து வருகிறது 1921-22இல் நவஜீவன் என்னும் குஜராத்தி ஏட்டில் அவரால் முழு அளவில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்தக் கட்டுரை1 குஜராத்தி மொழியில் எழுதப் பட்டியிருக்கிறது. அவருடைய கருத்துகளை அவருடைய சொற்களிலேயே முடிந்தவரை மிக நெருக்கமாய் சொல்கிறார்; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கீழே தருகிறேன். காந்தியார் சொல்லுகிறார்:

“1. இந்து சமுதாயம் சாதி அமைப்பை அடித்தளமாகக் கொண்டிருப்பதால்தான் அதனால் தாக்குப் பிடித்து நிற்க முடிந்துள்ளது என்றுநான் நம்புகிறேன்”

“2. சுயராச்சியத்தின் வித்துக்களை சாதி அமைப்பில்தான் காண வேண்டும். வெவ்வேறு சாதிகள் இராணுவப் படையின் வெவ்வேறு பிரிவுகளைப் போன்றவை. ஒவ்வொரு பிரிவும் முழுமையின் நன்மைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.”

“3. சாதி அமைப்பைத் தோற்றுவிக்க முடிந்த ஒரு சமுதாயம் ஈடற்ற அமைப்புத் திறனைப் பெற்றிருப்பதாகச் சொல்ல வேண்டும்.”

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

“4. சாதி என்பது ஆரம்பக்கல்வியைப் பரப்புவதற்கு ஆயத்த நிலைச் சாதனங்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சாதியும் அந்தச் சாதிக் குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும். சாதிக்கு ஓர் அரசில் அடிப்படை உள்ளது. அது ஒரு பிரதிநிதித்துவ அமைப்பிற்கான தேர்தல் தொகுதியாக இயங்க முடியும். சாதியானது ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடையே ஏற்படும் பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு நீதிபதிகளாகச் செயல்படுவதற்குரிய ஆட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீதித் துறைக்குரிய பணிகளையும் ஆற்ற முடியும். சாதிகளைக் கொண்டு ஒவ்வொரு சாதியும் ஒரு பட்டாளத்தைக் கட்ட வேண்டும் என்று கோருவதன் மூலம் சாதிகளை வைத்து ஒரு பாதுகாப்புப் படையைக் கட்டுவது எளிது.”

“5. தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு, வெவ்வேறு சாதியினர் சேர்ந்து உண்ணுவதோ, கலந்து மணம் புரிவதோ அவசியமில்லை என நம்புகிறேன். சேர்ந்து உண்ணுவது நட்புறவைத் தோற்றுவிக்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானது. இது உண்மை என்றால் ஐரோப்பாவில் போரே மூண்டிருக்காது.. உணவு உண்பது இயற்கைக் கடன் கழிப்பது போல் அருவருப்பானதொரு செயல். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், இயற்கைக் கடன் கழித்த பிறகு நமக்கு அமைதி கிடைக்கிறது, உணவு சாப்பிட்ட பிறகோ சங்கடம் ஏற்படுகிறது. இயற்கைக் கடன் கழிக்கும் செயலைத் தனிமையில் செய்வது போலவே உணவு சாப்பிடுவதும் தனிமையில்தான் செய்யப்பட்டாக வேண்டும்.

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

“6. இந்தியாவில் சகோதரர்களின் குழந்தைகளுக்கிடையே திருமணம் செய்து வைப்பதில்லை. அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதால் ஒருவரை ஒருவர் நேசிக்காமல் போய் விடுகிறார்களா? வைணவர்களிடையே பல பெண்கள் குடும்பத்தவர்களோடு சேர்ந்து சாப்பிட மாட்டார்கள், ஒரு பொதுவான தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் மாட்டார்கள் என்னும் அளவுக்கு வைதீகமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பு எதுவுமில்லையா? சாதி அமைப்பானது வெவ்வேறு சாதிகளிடையே சேர்ந்து உண்ணுவதையோ கலந்து மணம் புரிவதையோ அனுமதிப்பதில்லை என்பதால் அந்த அமைப்பை மோசமானது என்று கூறி விட முடியாது.

“7. சாதி என்பது கட்டுப்பாட்டுக்கு மறு பெயராகும். அது இன்ப நுகர்ச்சிக்கு வரம்பு விதிக்கிறது. ஒருவர் இன்ப நுகர்ச்சிக்கானச் சாதி வரம்புகளைக் கடப்பதை சாதி அனுமதிப்பதில்லை. சேர்ந்து உண்ணுவதற்கும் கலந்து மணம் புரிவதற்குமான தடை போன்ற சாதிக் கட்டுப்பாடுகளின் பொருள் இதுதான்.

“8. சாதி அமைப்பை அழித்து விட்டு மேற்கு ஐரோப்பிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள், இந்துக்கள் சாதி அமைப்பின் ஆன்மாவாகிய பரம்பரைத் தொழில் கோட்பாட்டைக் கைவிட்டாக வேண்டும் என்பதாகும். பரம்பரைக் கோட்பாடு ஒரு சாசுவதக் கோட்பாடாகும். அதை மாற்றுவதென்பது ஒழுங்கின்மையை உண்டு பண்ணுவதாகும். ஒருவரை எனது வாழ்நாள் முழுவதும் பிராமணர் என்று அழைக்க முடியா விட்டால் பிராமணரால் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும் சூத்திரர் பிராமணராகவும் மாற்றப்படுவதாயிருந்தால் குழப்பம் ஏற்படும்.

“9. சாதி அமைப்பு சமுதாயத்தின் இயற்கை ஒழுங்காகும். இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் சாதி அமைப்பின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளாததால் அங்கு அது இறுக்கமற்ற நிலையில் தான் இருந்து வந்தது; ஆகவே இந்தியா சாதி அமைப்பிலிருந்து அடைந்துள்ள அதே நன்மையை அந்த நாடுகள் அடையவில்லை.

“இவை என் கருத்துகளாய் இருப்பதால் சாதி அமைப்பை அழிக்கப் புறப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் நான் எதிரானவன்.”

1922இல் காந்தியார் சாதி அமைப்பிற்கு வக்காலத்து வாங்கினார். அந்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டு செல்லுகையில், 1925ஆம் ஆண்டு காந்தியார் சாதி அமைப்பை சற்றே விமர்சனக் கண் கொண்டு பார்ப்பதைக் காண முடிகிறது. 1925 பிப்ரவரி 3ஆம் நாள் காந்தியார் கூறியது இதுதான்:

“சாதியானது கட்டுப்பாட்டைக் குறிக்கிறது என்பதால் நான் சாதிக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் இப்போது சாதியானது கட்டுப்பாட்டைக் குறிக்கவில்லை, தடை சுவர்களைத்தான் குறிக்கிறது. கட்டுப்பாடு என்பது பெருமைக்குரியது, சுதந்திரம் பெறுவதற்கு உதவக் கூடியது. ஆனால் தடைச்சுவர் என்பது சங்கிலியைப் போன்றது. அது கட்டிப் போடுகிறது. இன்றுள்ள நிலையில் சாதிகளில் போற்றத்தக்கது எதுவுமில்லை. அவை சாத்திரங்களின் கோட்பாடுகளுக்கு மாறானவை. சாதிகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை; கலப்புத் திருமணத்துக்கு தடை உள்ளது. இது முன்னேற்றத்திற்குரிய நிலைமை அல்ல, வீழ்ச்சிக்குரிய நிலவரமே ஆகும்.”

இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் காந்தியார் சொன்னார்:

“மிகச் சிறந்த பரிகாரம் சிறு சாதிகள் ஒன்றாய்ச் சேர்ந்து பெரிய சாதியாகி விட வேண்டும் என்பதே. இப்படி நான்கு பெரிய சாதிகள் இருக்க வேண்டும்; இவ்விதம் நாம் பழைய நால்வர்ண அமைப்பை மீண்டும் உருவாக்கி விடலாம்.”

சுருங்கச் சொல்லின், 1925 இல் காந்தியார் வர்ண சிரம அமைப்பை ஆதரிப்பவராகி விட்டார்.

புராதன இந்தியாவில் நிலவி வந்த பழைய வர்ண அமைப்பு சமுதாயத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தது:
1) பார்ப்பனர்கள்; அவர்களின் வேலை கல்வி கற்பது;
2) சத்திரியர்கள்; இவர்களின் வேலை போர்த் தொழில்;
3) வைசியர்கள்; இவர்களின் வேலை வர்த்தகம்;
4) சூத்திரர்கள், இவர்களின் வேலை ஏனைய வகுப்புகளுக்குத் தொண்டூழியம் செய்தல்.

காந்தியாரின் வர்ண அமைப்பும், வைதிக இந்துக்களின் பழைய வர்ண அமைப்பும் ஒன்றுதானா? காந்தியார் தனது வர்ண அமைப்பைப் பின்வரும் சொற்களில் விளக்கினார் 2:

“1. வர்ணமாகப் பிரித்திருப்பது பிறப்பின் அடிப்படையிலானது என நான் நம்புகிறேன்.

“2. சூத்திரர் கல்வி கற்பதற்கோ தாக்குதல் – தற்காப்பு தொடர்பான இராணுவக் கலையைக் கற்பதற்கோ தடை போடும் படியான எதுவும் வர்ண அமைப்பில் இல்லை. மாறாக, பிறருக்குத் தொண்டூழியம் செய்ய ஒரு சத்திரியருக்கும் கூட உரிமை உண்டு. வர்ண அமைப்பில் அவருக்கு எவ்விதத் தடையுமில்லை . சூத்திரர் கல்வி கற்பதைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கி விடக் கூடாது என்றுதான் வர்ண அமைப்பு கட்டளையிடுகிறது. சத்திரியரும் தொண்டூழியம் செய்வதைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கி விடக்கூடாது.

சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது

(இதே போல் ஒரு பிராமணன் போர்க்கலை அல்லது வாணிகம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவற்றைப் பிழைப்புத் தேடும் வழி ஆக்கிவிடக் கூடாது. வைசியன் கல்வி கற்கலாம் அல்லது போர்த்தொழில் பயிலலாம். ஆனால் அவற்றைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கிவிடக் கூடாது.)

“3. வர்ண அமைப்பு பிழைப்பு தேடும் வழியோடு தொடர்புடையது. ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர் ஏனைய வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் தமது தனித் தேர்ச்சிக்குரியதாய்க் கொண்டிருக்கும் அறிவையோ, விஞ்ஞானம் -கலையையோ ஈட்டிக் கொள்வதால் எவ்விதத் தீமையுமில்லை. ஆனால் பிழைப்பு தேடும் வழியைப் பொறுத்த வரை, அவர் தம் வர்ணத்தின் தொழிலைத்தான் செய்தாக வேண்டும்; அதாவது அவருடைய மூதாதையர்களின் பரம்பரைத் தொழிலைத்தான் அவரும் செய்தாக வேண்டும்.

“4. வர்ண அமைப்பின் குறிக்கோள் போட்டா போட்டியையும் வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கப் போரையும் தடுப்பதாகும். நான்வர்ண அமைப்பில் நம்பிக்கை வைத்திருப்பது ஏனென்றால் அது ஆட்களின் கடமைகளையும் தொழில்களையும் நிர்ணயம் செய்து விடுகிறது.

“5. வர்ணம் என்பது ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவரது தொழில் நிர்ணயிக்கப்படுவதைக் குறிக்கின்றது.

“6. வர்ண அமைப்பில் தமது தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் யாருக்கும் இல்லை. பரம்பரைதான் அவரது தொழிலை அவருக்காக நிர்ணயித்துக் கொடுக்கிறது”

படிக்க:
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
காந்தியம் = அம்பானியம்!

பொருளாதார வாழ்க்கைத் துறைக்குத் திரும்புகையில் காந்தியார் இரு இலட்சியங்களை ஆதரிக்கிறார்:

இவற்றில் ஒன்று இயந்திர சாதனங்களை எதிர்ப்பதாகும். 1921இலேயே காந்தியார் இயந்திர சாதனங்களின் பால் தமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தினார். 1921 ஜனவரி 19ஆம் தேதிய யங் இண்டியா ஏட்டில் எழுதுகையில் காந்தியார் சொன்னார்:

”முன்னேற்றத்தின் கடிகார முள்ளை நான் பின்னுக்கு இழுக்க விரும்புகிறேனா? ஆலைகளுக்கு பதில் கைநூற்பையும் கைநெசவையும் கொண்டு வர விரும்புகிறேனா? இருப்புப் பாதைகளுக்குப் பதில் நாட்டு வண்டிகளைப் பயன்படுத்தலாம் என்று நான் விரும்புகிறேனா? இயந்திர சாதனங்களை எல்லாம் அடியோடு அழித்து விட விரும்புகிறேனா? இந்தக் கேள்விகளைப் பத்திரிகையாளர் சிலரும் பொது வாழ்வில் இருக்கும் சிலரும் கேட்டிருக்கிறார்கள். எனது பதில் இதுதான்: இயந்திர சாதனங்கள் மறைந்து போகுமானால் அதற்காக நான் கண்ணீர் விட மாட்டேன். அதனை ஒரு கொடிய நிகழ்ச்சியாகக் கருதவும் மாட்டேன்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
1காந்தி சிட்சன் தொடரின் இரண்டாம் பாகத்தில் எண் 18 ஆக மீண்டும் அது அச்சிடப்பட்டுள்ளது.
2 இப்பொருள் குறித்து காந்தியார் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து எடுகோள்கள் தரப்படுகின்றன. இந்தக் கட்டுரை வர்ண வியவஸ்தா என்ற நூலில் தரப்பட்டுள்ளது இந்நூலில் மூலமொழியாகிய குஜராத்தியிலேயே காந்தியாரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.