Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 204

குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !

குறிஞ்சாங்குளம் படுகொலை :
சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு!
சாதிவெறியை இனப் பகையாக சித்தரிக்கும் தமிழ்த்தேசிய துரோகிகள்!

முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. தங்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடி ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குறிஞ்சாங்குளம் தியாகிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. “சமூகநீதி படைத்த தமிழ்நாடு” என்று பெருமை பொங்கும் நமது எருமைத்தோல்களை நெருப்பாய் சுடுகிறது இவ்வுண்மை.

கொலைகாரர்கள் ‘நீதி’மன்றத்தால் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். கோயிலினுள் வைக்கப்படுவதற்காக தாழ்த்தப்பட்ட மக்களால் கொண்டுவரப்பட்ட காந்தாரி அம்மன் சிலை, முப்பதாண்டுகளாக அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் காணும்போது போலீசு, நீதித்துறை என மொத்த அரசுக்கட்டமைப்பே எப்படி ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதாரத்தூணாக இருக்கிறது என்பது அம்பலப்படுகிறது. மேலும் சூத்திர சாதிவெறியை பாதுகாப்பதுதான் இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளின் சமூகநீதியா என்ற கேள்வியையும் நம்முன் எழுப்புகிறது.

குறிஞ்சாங்குளம் படுகொலையின் முப்பதாம் ஆண்டினை ஒட்டி, பல அமைப்புகள் கோயிலில் காந்தாரி அம்மனுக்கும் கோயிலுக்கு வெளியில் தியாகிகளுக்கும் சிலை வைக்கப்போவதாக அறிவித்தன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டியும் வருகிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.

படிக்க :

இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !

சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

இன்னொரு முனையில், குறிஞ்சாங்குளம் படுகொலைகளை தற்போது கையில் எடுத்து போராடுவதாகக் கூறிவரும் சிலநபர்களோ கொஞ்சம் ‘விசித்திரமானவர்கள்’. தமிழ்த்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள், குறிஞ்சாங்குளம் படுகொலை என்பது ஆதித்தமிழர்களுக்கும் வந்தேறி வடுகர்களும் இடையிலான மோதல் என்று சித்தரிக்கின்றனர்.

குறிஞ்சாங்குளம் படுகொலையின் சுருக்கமான வரலாறு!

அன்றைய நெல்லை மாவட்டத்தின் கோவில்பட்டி, சங்கரன் கோயில் ஆகிய இரு ஊர்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்துதான் குறிஞ்சாங்குளம். வழக்கமாக ஆதிக்க சாதியினர் ஊருக்குள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்கு வெளியேயும் வாழும் வகையில்தான் கிராமங்கள் அமைந்திருக்கும்.

அதற்கு மாறாக, குறிஞ்சாங்குளத்திலோ ஊர் சாலையின் மேற்கு திசையில் நாயுடு ஆதிக்க சாதி மக்களும் மறுபுறமான கிழக்கு திசையில் பறையர், சக்கிலியர், பள்ளர் ஆகிய தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சாதி ஆதிக்க இலக்கணங்களுக்கு ஒவ்வாத நில அமைப்பே – தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் கண் முன்பு வாழ்வதே – நாயுடு சாதிவெறியர்களின் கண்களுக்கு உறுத்தல்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பயன்பாட்டில் இருந்த பெரும்பான்மையான புறம்போக்கு நிலங்களை நாயுடு சாதியினர் படிப்படியாக அபகரித்துக்கொள்கின்றனர். குறிப்பாக பறையர் சாதி மக்களின் காளி மற்றும் அய்யனார் கோயில்களை நாயுடு சாதியினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென சொந்தமாக இருந்தது காந்தாரி அம்மன் கோயில் நிலம்தான்.

நத்தம் புறம்போக்கில் உள்ள 8 சென்ட்டுக்கும் குறைவாக உள்ள இடத்திலேயே தங்கள் குலதெய்வமான காந்தாரி அம்மனுக்கு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்திவந்தனர் பறையர் சாதி மக்கள். ஒவ்வொரு முறையும் அந்த நிலத்தில் உள்ள மண்ணை எடுத்து அதிலே சிலைசெய்து 4 நாட்கள் நிகழ்ச்சி நடத்திவிட்டு சென்றுவிடுவார்கள். மீண்டும் அடுத்த ஆண்டுதான் வருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்கோயிலுக்கு முதல் மரியாதை நாயுடு சாதியை சேர்ந்த ஊர்த் தலைவருக்கே கொடுக்கப்படும். ஊர்த் தலைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அவர் “சாமி கும்புடுங்கடா” என்று உத்தரவு அளித்தப் பின்னர்தான், பறையர் பூசாரிக்கு அருள் வரும். இதுதான் அப்போது இருந்த நிலைமை.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்ன போது, அவ்வூரைச்சேர்ந்த நாயுடு சாதி நபர் ஒருவரே கல்தூணையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். மேலும் சிலை செய்யவும் உதவி இருக்கின்றார். எனினும் நாயுடு சாதியினர் அந்த இடத்தை அபகரிக்க தொடர்ச்சியாக முயற்சித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வந்தபோது காந்தாரி அம்மன் கோயில் நிலத்தையே நாயுடுகள் காட்டியுள்ளனர். தலித்துகளோ தாங்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தை அளித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் தண்ணீர் தொட்டிக்கும் பறையர்களின் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் இனியும் பறையர்களை விட்டுவைக்கக்கூடாது என்ற முடிவுக்கு நாயுடு சாதிவெறியர்கள் வந்தனர்.

000

90களின் தொடக்கத்தில், தங்கள்மீதான சாதிக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், இனி ஆதிக்க சாதியினருக்கு முதல் மரியாதை இல்லை; பூசாரி அவர்களின் காலில் விழக்கூடாது; தனியாக கோயில் கட்ட வேண்டும் என்ற முடிவுகளை எடுத்து தலித் மக்களை திரட்டுகிறார்கள். அதன்படி 08.08.1990 அன்று காந்தாரி அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர்.

நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யபட்ட குறிஞ்சாங்குளம் தியாகிகள்.

காந்தாரி அம்மன் சிலையை ஊரில் வைக்கக்கூடாது என்று தகராறு செய்தனர் ஆதிக்க சாதிவெறியர்கள். “காந்தாரி அம்மன் ‘துஷ்ட தெய்வம்’; அதை ஊரில் வைத்தால் நமது ஊருக்கு தீங்கு நேரும்” என்று தங்கள் சாதி மக்களை அணிதிரட்டினர். இக்காரணத்தால் “துப்பாக்கிச்சூடு நடத்துவோம்” என்று மிரட்டி தாழ்த்தப்பட்ட மக்களை சிலை வைத்து வழிபடவிடாமல் திருப்பி அனுப்பியது போலீசுப் படை.

தங்கள் சாதி ஆதிக்கத்தையே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டபடியால், தாழ்த்தப்பட்ட மக்களை தண்டிப்பதற்காக அவர்களுக்கு தங்கள் நிலங்களில் வேலை கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் போட்டனர் நாயுடு சாதிவெறியர்கள். நிலம் வைத்துள்ள ஒருசில தாழ்த்தப்பட்ட மக்களை, தங்கள் நிலங்களுக்குப் போகவிடாமல் பாதையை மறித்தனர்.

குறிஞ்சாங்குளம் நாயுடுகள் பக்கத்து ஊர்களிலுள்ள நாயுடு சாதியினரிடமும் இவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டதால், அம்மக்கள் வேலையில்லாமல் பட்டினியால் துயரப்பட்டனர். வெகுதூரம் சென்று விவசாய மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை வேலைகளுக்கு சென்றனர்.

காந்தாரி அம்மன் கோயில் நிலத்தை குப்பைக் கொட்டுவதற்கும் மலம் கழிக்கவும் பயன்படுத்தத் தொடங்கினர் நாயுடுகள். இதற்கெதிராக அளித்த புகார்களால் பயனேதும் இல்லை. நடவடிக்கை எடுக்க முயன்ற ஒரு இன்ஸ்பெக்டரும் அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டார் என்றால், சாதிவெறியர்களின் செல்வாக்கை உணரமுடியும்.

அமைதிப்பேச்சு வார்த்தைகள் பல முறை நடத்தியும் நாயுடு சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் உரிமைக்கு அனுமதி கொடுக்கவே இல்லை. கடைசியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தலைவர் வை.பாலசுந்தரம், 11.01.1991க்குள் சிலையை வைக்காவிடில் தானே முன் நின்று காந்தாரி அம்மன் சிலையை வைக்கப்போவதாக அறிவித்து பிரச்சாரம் செய்தார்.

இச்சூழலை தடுப்பதற்காகவே அமைதிப்பேச்சுவார்த்தை குழு உருவாக்கப்பட்டு, 05.01.1991 அன்று கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வை.பாலசுந்தரம் வரவேண்டாம் என்று தாழ்த்தப்பட்ட மக்களை வற்புறுத்தி தந்தி அடிக்க வைத்தனர் அதிகாரிகள்.

அக்கூட்டத்தில் நாயுடுகளின் சார்பாக, அன்று தி.மு.க. தலைவர்களில் ஒருவராக இருந்த வை.கோபால்சாமியின் தம்பி வை.ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் கலந்து கொண்ட வழக்குரைஞர் ராமராஜ் (முன்னாள் நீதிபதி), ரவிச்சந்திரனின் ஆட்சேபனையால் வெளியேற்றபட்டார். அக்கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான, அந்த இடத்தில் பாதியை நாயுடு சாதியினருக்குக் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் உட்பட அனைவரும் கட்டப்பஞ்சாயத்து செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு உடன்படவில்லை.

இதற்குப் பழிவாங்கும் விதமாக, வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வெடிகுண்டுகளை வீசினர் நாயுடு சாதிவெறியர்கள். அம்மக்களின் வீடுகளை சூறையாடி ஊரைவிட்டே துரத்தினர். போலீசோ இரு தரப்பின் மீதும் பெயருக்கு வழக்கு பதிவுசெய்துவிட்டு அமைதியாக இருந்தது. நாயுடு சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொல்வதற்காக தங்கள் சாதியினரிடம் பணவசூல் செய்தது போலீசுக்கு தெரிந்தபோதும் அமைதியாகவே இருந்தது.

14.03.1992 அன்று  தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலரையும் கொல்வதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதில் சுப்பையா, சக்கரைப்பாண்டி, அன்பு, அம்பிகாபதி ஆகியோர் மட்டும் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்டார்கள்.

சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலை வலுக்கட்டாயமாக வீடுகளில் கொண்டு வந்து ஒப்படைத்த போலீசு, தனித்தனியாகக்கூட புதைக்கவிடவில்லை. இரண்டு, இரண்டு உடல்களாகப் புதைத்தனர். பல்வேறு கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நாயுடு சாதியைச் சேர்ந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டபோதும் 2001-ம் ஆண்டு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.

இச்சம்பவங்களின்போது, நாயுடு சாதி வெறியர்களுக்கு ஆதரவாக வை.இரவிச்சந்திரனும் தற்போது தி.மு.க.வில் உள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் செயல்பட்டனர் என்று வழக்குரைஞர் இராமராஜ் தனது பேட்டிகளில் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தில், குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்று உள்ளது. காந்தாரி அம்மன் கோயில் சிலைநிறுவ முயன்றதற்காக ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே இந்து. மற்ற மூவரும் கிறித்துவர்கள். ‘இந்து’ கோயில் உரிமைக்காக கிறித்தவர்கள் பலியானர்கள்.

ஆனால் அப்போதும் சரி, இப்போதும் சரி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் யாரும் ‘இந்துக்களுக்காக’ வரவில்லை. மாறாக, இதே காலகட்டத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி, “ஹரியின் புதல்வர்களே அயோத்திக்கு வாருங்கள், இராமனுக்கு கோயில் கட்டலாம்!” என்று அறைகூவினர்.

‘தமிழ்த்தேசியத்திற்குள்’ ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதிவெறி!

முதுகுளத்தூர், விழுப்புரம், உஞ்சனை, புளியங்குடி, கொடியன்குளம், பரமக்குடி போன்ற ஊர்களில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான தாக்குதல்கள் போல ஒன்றுதான் குறிஞ்சாங்குளம் படுகொலையும்.

தமிழ் மிண்ட் யூடியூப் சேனலில், தன்னுடைய சுயசாதி வெறியை வெளிக்காட்டிக் கொண்ட ‘தமிழ்த்தேசியவாதி’ வ.கவுதமன்.

இதைத் தற்போது வந்தேறிகளுக்கும் ஆதித்தமிழருக்குமான போராட்டமாக சித்தரிக்கின்றனர் செந்தில் மள்ளர், களஞ்சியம், வ.கவுதமன், சீமான் போன்ற ‘தமிழ்த்தேசியவாதிகள்’. இதன்மூலம் வரலாற்று அறிவும் நடைமுறை அனுபவமும் இல்லாத இணையவாசிகளிடம் தங்களை தமிழ்த்தேசிய தளபதிகளாக வெளிச்சம் போட்டுக் கொள்கிறார்கள்.

தெலுங்கையும் கன்னடத்தையும் தாய்மொழியாகக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதே மொழிபேசும் ஆதிக்க சாதியினராலேயே ஒடுக்குப்படுகின்றனர். சாதிவெறிக்கு இனப் பற்றெல்லாம் கிடையாது.

இளவரசன் – திவ்யா ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியர்களுக்கு இளவரசனும் தன் சகத் தமிழனம் என்ற இன உணர்வா இருந்தது. சமீபத்தில், வீரளூரில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியர் மக்களின் வீடுகளை, தமிழை தாய்மொழியாகக் கொண்ட வன்னியன் ‘இன உரிமை’ காரணமாகவா சூறையாடினான்!

ஒவ்வொரு இடங்களிலும் ஆதிக்க சாதிவெறியர்களைக் காப்பாற்றுவதற்குதான் இப்படிப்பட்ட ‘தமிழ்த்தேசியவாதிகள்’ புற்றீசலாக கிளம்பி இருக்கின்றனர். சாதியத்தை தமிழ்த்தேசியத்தோடு பிரிக்க முடியாதபடி பூணூலால் கட்டி வைத்திருக்கிறார்கள்.

குறிஞ்சாங்குளம் சம்பவத்தை ஒட்டி வ.கவுதமனிடம் தமிழ் மிண்ட் என்ற யூடியூப் சானல் சார்பாக, ஒரு நேர்காணல் நடைபெற்றது. அதில் நெறியாளரான கரிகாலன், “நீங்கள் ஏன் தமிழ்பேசும் மக்களிடம் உள்ள ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதில்லை?” “தமிழர்கள் ஒன்றுபடத் தடையாக இருப்பது எது?” போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்.

இவைகளுக்கு நேர்மையாக பதில் சொல்லமுடியாமல் அம்பலப்பட்டுப்போன வ.கவுதமன், “நான் படையாச்சி சமூகத்தைச் சார்ந்தவன்” என்று வெளிப்படையாக தன் சாதிப் பெருமையை அடையாளப்படுத்திக் கொண்டதோடு, நெறியாளரான கரிகாலனைப் பார்த்து “நீ பறையர் குடியைச் சேர்ந்தவன்; அதனால்தான் இப்படி உள்நோக்கத்தோடு கொடூரமான கேள்விகளை கேட்கிறாய்” என்று இழிவாக பேசியிருக்கிறார்.

இவர்கள் சாதி ஒழிப்பில் தமிழ்த்தேசியத்தை காண்பவர்கள் அல்ல. சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் “வடுகன்”, “மலையாளி” என்று பிற தேசிய இன மக்களை பகைவர்களாக காட்டி இனவெறி தூபம் போடும் நச்சுகள். தாங்கள் சொல்லிக் கொள்ளும் தமிழ்த்தேசியத்திற்கே துரோகிகள் இவர்கள்.

சூத்திர சாதிவெறியைப் பாதுகாப்பதுதான் சமூகநீதியா?

“தலித்துகள் குறிஞ்சாங்குளத்தில் காந்தாரி அம்மன் கோயில் கட்டக்கூடாது; அதற்கு அனுமதிக்கமாட்டோம்” என சாதிவெறியன் காமாட்சி நாயுடு வெளிப்படையாக சமூக ஊடகங்களில் கொக்கரிக்கிறான். நான்கு பேரைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றபின்னரும் அடங்காத சாதிவெறியுடன் சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர் நாயுடு சாதிவெறியர்கள். அவர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

குறிஞ்சாங்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதற்குக்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசு அனுமதி அளிக்கவில்லை. இதுதான் இந்த அரசின் யோக்கியதை.

“இந்த அரசின் யோக்கியதை” என்று சொல்லும்போது தற்போதைய மு.க.ஸ்டாலின் அரசை மட்டுமல்ல. இந்த முப்பதாண்டு காலமாக “சமூகநீதி ஆட்சி” என்ற பதாகையின் கீழ் தமிழகத்தை ஆண்ட தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்களையும் அதிகார வர்க்கத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது.

மிகப்பெரிய அளவு மக்கள் போராடியதால் கைது செய்யப்பட்ட கொலைக் குற்றவாளிகளை நீதிமன்றம் சுலபமாக விடுதலை செய்திருக்கிறது. இனியும் நீதிமன்றங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? சாதிவெறியன் யுவராஜ் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்படமாட்டான் என்று நம்பாமல்தான் இருக்கமுடியுமா?

ஆதிக்க சாதிவெறிக்கு ஆப்பு அறைவது வர்க்கப் போராட்டமே!

இத்தனை ஆண்டுகளில், தலித் மக்கள்மீதான தாக்குதல்கள், ஆணவப்படுகொலைகள், தீண்டாமைக் குற்றங்கள் எதுவும் குறையவில்லை எல்லாம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. குறிஞ்சாங்குளம், வீரளூர் மட்டுமல்ல நாடு முழுமையும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இதுதான்.

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் நீதி வழங்கியதாக வரலாறு இல்லை. இடஒதுக்கீடு உள்ளிட்ட சீர்திருத்தங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அதிகாரம் பெறவுமில்லை. அதில் பலன்பெற்ற ஒரு சிலரும் தம் மக்களின் கோரிக்கைகளுக்காக நேர்மையாக நிற்பது கிடையாது.

ஆதிக்க சாதிவெறிக்கு ஒட்டுமொத்த இந்த அரசமைப்பே தூணாக இருந்து செயல்படும்போது இதற்குள் நின்று மட்டுமே தீர்வைத் தேடுவதும் போராடுவதும் மடமையல்லவா?

படிக்க :

வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !

தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?

“ஆதிக்க சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்.” “வன்கொடுமை செயல்களில் ஈடுபட்ட சாதிவெறியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்.” இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பிடம் மண்டியிட்டு இதுபோன்றதொரு ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது. இந்த கட்டமைப்புக்கு வெளியே, ஒரு புதிய ஜனநாயகத்திற்கான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் போதுதான் இவை சாத்தியம்.

தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் இதே அரசமைப்புதான் பார்ப்பன மேலாதிக்கமாக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும் பறிக்கிறது. எட்டுவழிச்சாலையாக, சிப்காட்டாக ஆதிக்க சாதி விவசாயிகளின் நிலத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் போடுகிறது. மீத்தேன் வாயுவாக எரிக்கிறது. காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்று நீட்-புதிய கல்விக் கொள்கையாக திணிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வாக நம் தலையில் இறங்குகிறது.

ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கையில், ஒட்டுண்ணியாய் அதில் பங்குபெறுபவர்கள்தான் சாதிவெறியர்கள். நம்மையும் சேர்த்து ஒருவன் உறிஞ்சிக் கொண்டிருக்கையில், அடுத்தவனை ஒடுக்க பீற்றுப் பெருமை தேடுகிறது ஆதிக்க சாதிவெறி. இதை ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.

சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதும் வேறுவேறல்ல. சாதி ஆதிக்கத்திற்கு ஆப்பு அறையாமல் வர்க்க ஒற்றுமை சாத்தியப்பட்டதில்லை. வர்க்க ஒற்றுமை சாத்தியமான இடத்தில் சாதிவெறி கொட்டமடிப்பதில்லை. இதற்கு மாறாக, வர்க்கப் பார்வையற்ற ‘சாதி ஒழிப்பு’, அடையாள அரசியலாக சென்று சாதியை மேலும் இறுக்கப்படுத்தியதுதான் வரலாறு.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தபோதும் பின்பு அது கைவிடபட்டபோதும் காணப்படும் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களே இரண்டுக்கும் சாட்சி!


மருது

ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !

ந்த நாட்டின் நீதிபதிகளை என் வழக்கறிஞர்களாக மாற்றிவிட்டேன்” ஹிட்லர் இப்படி சொன்னதாக ஒருசெய்தி இணையத்தில் உலா வருகின்றது. ஹிட்லர் அப்படி சொன்னானா இல்லையா என்பதல்ல விசயம். மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் அவ்வாறே செய்துவிட்டார்கள் என்பதைத்தான் ஹிஜாப் தீர்ப்பு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ.கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய கல்வி நிறுவனத்தால் தடை விதிக்கப்பட்டதால், ஆறு முஸ்லீம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவித் துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர்.
ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லான் என்ற மாணவியை கெரோ செய்த ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக அவர் கூறிய அல்லாஹூ அக்பர் என்ற முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அப்போதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பின்வாங்கவில்லை.
படிக்க :
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
கர்நாடகாவின் கடற்புறங்களில் தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லீம் மாணவிகளை சூற்றிவளைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். ஹிஜாப் அணிந்த இருந்த மாணவிகளின் அறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு காவி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும், தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியையும் கட்டினர். அம்மாநில அமைச்சர் ஒருவர் காவிக்கொடியை தேசியக்கொடிக்கம் பத்தில் ஏற்றியது தவறில்லை என்றார்.
மேலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளின் முகவரிகளை வெளியிடுவோம் என்றும் அவர்களை எல்லாம் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றார். எல்லாப் பிரச்சினைக்கும் காரணமான கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி முஸ்லீம் மாணவிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஹிஜாப் தடைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாதென்றும் ஹிஜாப் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதா என்று ஆராய உள்ளதாக அறிவித்தது கர்நாடக உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணைகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென்று கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அறிவித்தது. மார்ச் 15-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்தபடியே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
தீர்ப்பு வருவதற்கு முந்தைய நாள் மாநில அரசு கர்நாடகாவில் கொண்டாங்களுக்கு தடைவிதித்தது. போலீசைப் பாதுகாப்பு என்ற பெயரில் குவித்தது. பாபர் மசூதி தீர்ப்புக்கு முன்னர் என்ன நடைபெற்றதோ அதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும்போதே அது முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்றே பலராலும் யூகிக்க முடிந்தது.
ஆனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை வாசிக்கும்போது எப்படி இந்துராட்டிரம் படிப்படியாக, சட்டப்பூர்வமாக அமைக்கப்படும் என்ற மனக்காட்சியை காட்டிவிட்டது. ஹிஜாப் அணிவது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டது அதில் அரசு தலையிட முடியாது என்பதே மாணவிகளில் மையமான வாதம்.
அதற்கு நீதிமன்றம் அளித்த பதிலோ, “ஹிஜாப் அணிவது இசுலாம் மதத்தில் அத்தியாவசியமான பழக்கம் அல்ல”. அன்றைய தினம், “சீக்கியர்கள் விமான பயணத்தின்போது சிறிய அளவிலான கத்தியை கொண்டு செல்லலாம்” என்ற அறிவிப்பு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதை பார்க்கும்போது திட்டமிட்ட முசுலீம்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதை உணரமுடியும்.
***
பாசிஸ்டுகளின் தீர்ப்பு
1. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின்கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும். மனுதாரர்களான இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் தங்கள் மத உரிமை என்றும் அதில் கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தனர். இத்தீர்ப்பின்படி, இசுலாமியர்கள் ஹிஜாப் அணிவது தடைவிதிக்கப்படுமே தவிர சீக்கியர்கள் அணியும் டர்பன் உள்ளிட்ட இதரவைகளுக்கு தடைவிதிக்கப்படாது. எது அத்தியாவசியம்? எது அத்தியாவசியம் இல்லை என்பது சம்பந்தப்பட்ட மதம் முடிவு செய்ய முடியாது. பெரும்பான்மை மதவாதமே அதை முடிவு செய்யும் என்பதைத்தான் இத்தீர்ப்பு கூறுகிறது. ஆனால் தில்லைக்கோயிலின் தீட்சிதப் பார்ப்பனர்கள் தங்களை இப்பிரிவின்கீழ்தான் தற்காத்துக் கொண்டு கோயிலை தனதாக்கிக் கொண்டனர்.
2. பள்ளிகள் கல்வி கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட தகுதிவாய்ந்த பொதுஇடங்கள். அத்தகைய பொது இடத்தில் தனிநபர் உரிமையை செயல்படுத்தும் முயற்சிகள் செல்லுபடியாகாது. பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தனிநபர் உரிமை என்பது கூட கல்வி நிலையம், மாணவர்கள் என இருதரப்புக்கும் ஏற்புடைய உரிமையாக உருமாறிவிடுகிறது. தேசியகீத வழக்கு என்றழைக்கப்படும் புகழ்பெற்ற வழக்குத் தீர்ப்பானது, தேசியகீதத்தின்போது அமைதியாக எழுந்து நிற்கும் உரிமையும் தனிநபர் உரிமைதான் என்று கூறியது. இனி அந்தத் தீர்ப்பும் மாற்றப்படலாம். பள்ளிகள் பொது இடங்கள் அங்கே மதவெறியை வளர்க்கும் ஷாகாக்கள் நடத்தப்படலாம்; ஆனால் ஹிஜாப் போடக்கூடாது.
3. பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை வழங்குவது அரசியல் சாசன சட்டப்பிரிவு சட்டப்பிரிவு 19(1) (a) வழங்கும் பேச்சுரிமையோ அல்லது சட்டப்பிரிவு 21 வழங்கும் தனிநபர் உரிமையையோ பறிப்பது ஆகாது. மேலும், கல்வி நிலையங்கள் ஹிஜாப் அணியத் தடை விதிப்பது என்பது அரசியல் சாசனப்படி அனுமதிக்கத்தக்க தடையே. இதை மாணவர்களால் எதிர்க்க முடியாது. ஆகையால், ஹிஜாபுடன் ஒரு சீருடை, ஹிஜாப் இல்லாத சீருடை என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. சீருடை ஒன்றுதான், ஒரேமாதிரியானதுதான். ஆனால் இதை சபரிமலைக்கு மாலை போட்டுபவர்களுக்கு ஒருபோதும் நீட்டிக்க மாட்டார்கள். ஏனெனில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கம் அல்ல என்பதே தீர்ப்பின் சாரம்சம்.
4. இந்த வழக்கை மொத்தம் 11 நாட்கள் நீதிமன்றம் விசாரித்துள்ளது. 23 மணி நேரம் விசாரணை நடைபெற்றிருக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்கப் படுகிறது. கர்நாடக அரசு, கல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவியர் ஹிஜாப், புர்கா, பர்தா, காவித் துண்டு போன்ற மத அடையாளங்களுடன் வரக் கூடாது என்று விதித்த உத்தரவு செல்லுபடியாகும். இதில் ஹிஜாப் தவிர மற்ற மத அடையாளங்கள் அத்தியாவசியமானவையா என்பது கூறப்படவில்லை. பாபர் மசூதி ராமனுக்கு சொந்தம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பானது எவ்வித ஆதாரங்களுமின்றி நம்பிக்கையின் பாற் வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கைபாற் தீர்ப்பை முஸ்லீம்களுக்கு இந்த நாடு ஒருபோதும் வழங்காது.
5. ஹிஜாப் விவகாரம் திடீரென பூதாகரமாக வெடித்ததைப் பார்க்கும்போது அதில் கண்ணுக்குத் தெரியாத சில கரங்களின் வேலை இருக்கிறது என்பது புரிகிறது. சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சூழலில் செயல்பட்டுள்ளனர். கல்வி ஆண்டின் நடுவில் உருவான இந்த சர்ச்சை சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருக்கிறது என்றும் இது தொடர்பாக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை கெரோ செய்தும் அச்சுறுத்தியும் வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மணவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறாத நீதிமன்றம் போராடிய மாணவிகளை விசாரணை செய்ய வேண்டும் என்றுகூறி இருப்பது என்பது திட்டமிட்ட இசுலாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை.
6. இந்த வழக்கில் விவாதத்திற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. ஹிஜாப், பர்தா போன்ற உடைகள் பெண் விடுதலைக்கு குறிப்பாக முஸ்லீம் பெண்களின் விடுதலைக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் வாதிடலாம். பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் அல்ல. மேலும், கல்வி நிலையம் தாண்டி பெண்கள் எந்த மாதிரியான உடையையும் அணியலாம் என்று அத்தீர்ப்பு கூறுகிறது. கர்நாடக பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தடை படிப்படியாக அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். ஏனெனில் பள்ளி பொது இடம் என்றால், சாலை, மருத்துவமனை, காய்கறி – மளிகைக் கடைகள், பேருந்துகள் – புகைவண்டிகள் எனை அனைத்தும் பொது இடங்கள்தான். பால்யவிவாகம் என்ற பெயரில் சிறுவதில் குழந்தைகளுக்கு திருமனம் செய்வது, உடன்கட்டை ஏறுவது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற இழிவான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் பார்ப்பன சனாதனத்தின் நோக்கம் பெண் விடுதலையா என்ன?
7. இளமைப் பருவம் என்பது எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய பருவம். இந்தப் பருவத்தில் மாணவர்களின் அடையாளமும், சிந்தனையும் மாறக்கூடியது. இளம் மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதோ அதன்பால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் இனம், மதம், மொழி, சாதி, இடம் சார்ந்த தங்கள் சுற்றுப்புறக் கருத்துக்களால் ஈர்க்கப்படலாம். அதனால், இத்தகைய தடை உத்தரவு என்பது பிரிவினையைத் தூண்டும் நிலவரங்களில் இருந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர அவசியமாகிறது. இந்தச் சூழலில் மாணவர்களுக்கு சீருடை என்பது கட்டாயமாகிறது என்கிறது இத்தீர்ப்பு.
இந்நாட்டில் பல்வேறு மதங்கள், இனங்கள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் இருக்கின்றன. அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதுதான் அரசியலமைப்பு கொடுக்கும் உரிமை. அந்த உரிமையை பறித்து பார்ப்பன சனாதன இந்து மதத்துக்கு உட்பட்டே அனைவரும் வாழ வேண்டும் என்பதைத்தான் இத்தீர்ப்பு அறிவிக்கிறது. பார்ப்பனர்கள் வேட்டிக்கட்டிக்கொண்டு வருவதும், பூணூல் அணிவதும் சட்டை இல்லாமல் அரை அம்மணமாக தெருக்களில் திரிவது எல்லாம் அவர்களுக்கு அத்தியாவசியம். இத்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இசுலாமிய ஆண்கள் தலையில் குல்லா அணிவதையும் அடுத்து தடுப்பதற்கான அடுத்த வாய்ப்புக்கள் உள்ளன.
***
தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, “மாணவர்களுக்கு எல்லாவற்றையும்விட கல்வியே முக்கியம். ஆகையால் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டுகிறேன். ஆயத்தத் தேர்வுக்கு முன்னதாக செய்ததுபோல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்” என்று மாணவர்களுக்கும்  பெற்றோர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தை மூன்று துண்டாக்கினார்கள், பாபர் மசூதியை இசுலாமியர்களிடமிருந்து பறித்தார்கள், சிஏஏ சட்டத்திருத்தம் கொண்டுவந்து இசுலாமியர்கள் அகதிகளாக்க முடிவெடுத்தனர், இதுபோன்று பல எண்ணிலடங்கா துரோகங்களையும்  அக்கிரமங்களையும் செய்துவிட்டு  அமைதிகாக்கவும் அரசுக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிடுகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிசக் கும்பல். இதைமீறிப் போராடினால் என்ன நடக்கும்? சிஏஏ எதிப்புப் போராட்டங்களை சீர்குலைக்க நடத்தப்பட்ட கலவரங்கள் மீண்டும் நடைபெறும் என்பதை முஸ்லீம்களும் சிறுபான்மை மக்களும் நன்கு அறிவர்.
படிக்க :
ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !
பெரும்பான்மை வாதத்துக்கு கட்டுப்பட்டே சிறுபான்மை மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் இத்தீர்ப்பு உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக வந்திருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மையமான நோக்கம். இப்படிப்பட்ட சட்டங்கள், தீர்ப்புகள் மூலம் இசுலாமிய மற்றும் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் இந்துராட்டிரம் அமைக்கப்படும்.
இப்படி நீதிமன்றம், தேர்தல் ஆணையம் – நிர்வாகத்துறை என  அரசின் அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடையதாக மாற்றிவிட்டனர். உ.பி.யில் சரியான கூட்டணி  இருந்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் என்று அப்பாவித்தனமாக நம்புவதுடன் நம்மையும் நம்பச் சொல்கிறார்கள் சிலர். அதனால்தான் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு பிரஷாந்த் கிஷோர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான் இருக்கிறது.
மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

0
டந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியர்கள் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், “பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வு தன்மையுடையதாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்தி மொழியைப் பரப்ப முடியாது. ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது இந்திய இறையான்மையை குழிதோண்டி புதைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வேலையில் பா.ஜ.க தொடர்ந்து செய்கிறது. இந்தி பேசும் மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
படிக்க :
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்தி மொழி திணிப்பை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையும் சிதைக்கும் முயற்சி என்று கூறியுள்ளார்.  இதேபோல் கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடகா எம்.பி ஜெய்ராம் ரமேஷ், தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் இந்தி மொழி திணிப்பிற்கான அமித்ஷாவின் பேச்சுக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்தி மொழி குறித்து அமித்ஷாவின் பேச்சு பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், “இந்தி கற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை. அதை யார் சொல்கிறார்கள் என்பதும், `ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே மதம்’ என்ற அவர்களின் சித்தாந்தம் தான் இங்கு பிரச்சினை. அதனால்தான் அதை எதிர்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மொழியும் இங்கு தனித்துவமானது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தாய் மொழி வாழும். அதிகமான மக்கள் இந்தி பேசுவதால் இந்தியா முழுவதும் அதை பேசவேண்டியக் கட்டாயமில்லை. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே எந்த மொழி தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொள்வோம். நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
000
hindi-amit-shah-sliderமத்தியில் ஆட்சி செய்யும்போதும் இந்தியை முதலில் நேரடியாக திணித்த காங்கிரஸ் கட்சி, தமிழக மக்களின் கடுமையான எதிர்பின் காரணமாக மறைமுகமாக இந்தியின் ஆதிக்கத்தை திணித்து கொண்டு வந்தது. ஆனால், 2014–ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாசிச பா.ஜ.க சமஸ்கிருதம், இந்தி மொழிகளை காங்கிரஸ் கட்சியைவிட நேரடியாகவும் தீவிரமாகவும் திணித்து வருகிறது. அந்த வகையில் புதிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம், மத்திய அரசின் திட்டத்தின் பெயரை இந்தி மொழியில் மட்டும் வைப்பது, மத்திய அரசு போட்டி தேர்வுகளை இந்தி மொழியில் நடத்துவது போன்ற பல்வேறு வழிகளில் இந்தியின் ஆதிக்கத்தை இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் மீது திணிப்பதை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் போன்ற காவி பாசிஸ்டுகள் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை இந்தியாவின் மொழியாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக பேசுவது மட்டும்மல்ல; அதை நிகழ்ச்சி நிரலுக்கும் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்தி மொழியை இந்தியாவின் மொழியாக மாற்ற வேண்டும் என்று அமித்ஷா கூறினார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்த போதிலும் காவி பரிவாரங்கள் தனது இந்தி மொழி செயலூக்கத்தை வேகப்படுத்தியே வருகின்றனர்.
பெட்ரோல், டீசல், மருந்து பொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வை மறைப்பதற்காகவும், மக்களை அந்த பிரச்சினையில் இருந்து திசைதிருப்புவதற்காகவும்தான் அமித்ஷா தற்போது இந்தி மொழியை பற்றி பேசுகிறார் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அமித்ஷா இவ்வாறு பேசியது விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்புவது என்பது ஒரு அம்சமாக இருந்தாலும் அதுவே முழுகாரணமும் அல்ல.
படிக்க :
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
2024-க்குள் இந்தியாவை, இந்து – இந்தி – இந்தியா என்ற இல்லக்கை கொண்ட இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் நோக்கம். அதற்காக முஸ்லீம்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிகளாக மாற்றுவது, தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழித்து ஒற்றை மொழி, பண்பாடு, கலாச்சாரமாக மாற்றுவதும்தான் இவர்களின் நோக்கம். அதற்காகதான் சிறுபான்மையினர், தலித்துக்களை ஒடுக்குவது, இந்தி மொழியை கட்டாயமாக்கி பிற தேசிய இன மொழிகளை அழிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறது.
000
உலகில் இதுவரை பல ஆயிரம் மொழிகள் தோன்றி இருக்கிறது. அழிந்தும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் பாலி மொழி போன்ற பல மொழிகள் தலைசிறந்து விளங்கி இருக்கிறது. தற்போது அந்த மொழிகள் எல்லாம் அழிந்து வழக்கொழிந்து போய்விட்டன.
ஒரு இனத்தையும் அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தையும் அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழித்தால் அந்த தேசிய இனத்தை அழித்து விடலாம் என்பது வரலாறு மட்டுமல்ல உண்மையும் கூட. அந்த கேடு கெட்ட செயலை செய்வதற்குதான் இந்தி மொழி திணிப்பை கையிலெயெடுத்திருக்கிறது காவிக் கும்பல்.
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்துராஷ்டிரத்தை நிறுவ அனைத்து வழிகளிலும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை முறியடிக்காவிட்டால் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்துபோகும்.
வினோதன்

ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !

0
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஏப்ரல் 11 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வேலையில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தனது கைக்கூலிகளை வைத்துகொண்டு விளையாட்டு போட்டி நடத்துவது; சில கிராமங்களில் ஆங்காங்கே பசுமை இட உருவாக்கம் என்ற பெயரில் கண் துடைப்புக்காக சில மரக்கன்றுகளை நடுவது; மருத்துவமனை போன்றவற்றுக்கு சில உபகரணங்களை வாங்கி கொடுத்தல், போன்ற ஏமாற்று வித்தைகளை செய்து வருகிறது.
துத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கோவில் கொடைவிழாவிற்கு நன்கொடை வழங்குவதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாக போராடிய மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த முயன்று வருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலைக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடுதல் மற்றும் பொதுமக்களிடையை அவர்களின் வறுமையை காரணம்காட்டி தன் பக்கம் இழுத்துக்கொள்ளுதல் போன்ற வேலைகளும் செய்து வருகிறது. ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் மாவட்ட நிர்வாகமோ போலீசோ எதுவும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆலைக்கு எதிராக பேசினால், போஸ்டர் ஒட்டினால், அவர்களிடம் வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்கள் தூத்துக்குடி போலீசு.
படிக்க :
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
கடந்த மார்ச் 28-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அடியாட்களை வைத்து பாத்திமா நகர் பகுதியில் மக்களுக்கு காசு கொடுப்பதற்காக ஆதார் கார்டுகளை வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமககள் ஸ்டெர்லைட் ஆலையின் அடிமைகள்மீது வழக்குபதிவுசெய்து கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த பின்பு ஆலைக்கு உள்ளே உள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது உயர் மட்ட கமிட்டியை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தது. அதன் அடிப்படையில் உயர்மட்ட கமிட்டி ஆய்வு செய்து 11 வகையான கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்களை 90 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றுகூறி 250 பேர் ஆலைக்குள் செல்ல அனுமதி அளித்தது. ஆனால், ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்போது (4ஆண்டுகளாக) வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு வேலை செல்கின்றனர்.

This slideshow requires JavaScript.

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் ஸ்டெர்லைட்டின் கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்கள் 95 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு கூறினார். பணியாளர்கள் தற்போதுவரை ஆலைக்குள் சென்றுவர எவ்வித உரிய அனுமதியும் இல்லை. ஆனால், ஆலைக்குள் ஆட்கள் சென்றுவருவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசுத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு நயவஞ்சகமாக கூட்டுசேர்ந்துகொண்டு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சிப்காட் வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்; கழிவுகளை அகற்றுவதற்காக ஆலைக்கு உள்ளே செல்ல பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள், ஸ்டெர்லையிட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் என்று முழக்கமிட்டு ஏப்ரல் 11 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
***
தூத்துக்குடியில் 14 பேர் தன்னுடைய இன்னுயிரை இழந்தும், பலபேர் படுகாயம் அடைந்தும், பல நுறு வழக்குகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர். ஆலையின் கொடூரத்தால் இன்று வரை அந்த பகுதிமக்கள் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
படிக்க :
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்
துப்பாக்கிச்சூட்டை பயன்படுத்தி வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.பி கனிமொழியோ, எம்.எல்.ஏ கீதா ஜீவனோ ஆலை நிறந்தரமாக மூட எந்த முயற்சியும் எடுக்காமல் ஆலைக்கு ஆதரவான மனநிலையிலே இருந்து வருகின்றனர். தாங்கள் ஆட்சி வந்தால் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவோம் என்று கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட்டுக்கு எதிரான சிறப்பு சட்டம் என்ன ஆனதோ அதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிரான சிறப்பு சட்டமும் ஆன கதை..
அரசையோ, அரசு அதிகாரிகளையோ நம்பாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான போட்டத்திற்கு நாம் துணைநிற்க வேண்டும்.
வினோதன்

புகைப்படங்கள் : மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !

The DMK came to power on an election promise that “once it assumes power, Tamil Nadu is sure to get permanent exemption from NEET”. Once it ascended the throne, understood the ‘reality’ and changed it to “we’ll try as much as possible and continue the legal battle”.
Initially, many believed that NEET would somehow be cancelled by the DMK. But NEET and the legal battle continue together and are not yet over. It is true that the DMK is waging the legal battle aggressively when compared to ADMK. But this alone will not be enough to cancel NEET. We are not saying this; it is the experience of legal struggle that teaches us this lesson!
The Modi government announced that NEET would be held as scheduled in September last year. Health Minister M. Subramanian announced that NEET coaching would be held as usual for government school students. When criticized for DMK’s promise on cancellation of NEET, he asked, “Did we promise that NEET would be cancelled in 24 hours?”.
On the other hand, a committee headed by Justice A. K. Rajan to review the impact of NEET submitted its report to the Government of Tamil Nadu. NEET exam and submission of Justice A. K. Rajan committee report took place at the same time.
Read :
R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
Passing just a Bill against NEET like the previous ADMK regime would not be enough for defeating NEET. Learning from that experience, the DMK had constituted a review committee before passing the Bill.
Later, Dhanush, a student from Salem district, committed suicide due to fear of examination even before appearing for NEET. In the face of the turmoil of the people of Tamil Nadu against NEET, the NEET Exemption Bill (The Tamil Nadu Admission to Undergraduate Medical Degree Courses Bill) was passed in the Assembly next day with the support of all parties excluding BJP.
Subsequently, on October 1 (2021), Stalin wrote to the Chief Ministers of 12 states including West Bengal, Kerala, Andhra Pradesh and Delhi attaching the Justice A.K. Rajan committee saying that NEET would deprive social justice.
Meanwhile, protests began against Governor R. N. Ravi, who had kept the NEET Exemption Bill passed by the Assembly for months without sending it to the President.
It’s been more than 4 months. But till date the Bill has not reached the President’s office. Also the Bill has not been returned to the Tamil Nadu Legislative Assembly. Stalin met the Governor in person and urged him to send the NEET Exemption Bill to the President for approval once on October 13 and another on November 27. But nothing moved.
As happened in the last regime, at the day of the exam and the days that followed, the news is full of suicide by students. The NEET exam usually faces stiff opposition in Tamil Nadu every year. It is noteworthy that the NEET, held in September last year, was held without any major opposition.
Most of the democratic forces that fought against NEET during the ADMK’s Edappadi regime, now ended their duty by just supporting the DMK’s legal battle.
When compared to the AIADMK’s “ritualistic legal battle”, we were possessed by the delusion that the “emotional legal battle” being waged was enough to cancel NEET. Because of this, we could not stop the unjust NEET exam from drinking our students’ blood this time either.
With the NEET exam went over “well”, all party members, led by DMK Parliamentary party leader T. R. Baalu, went to Delhi to meet Amit Shah.
On December 28, they submitted a memorandum to the President’s office and waited at the residence of Home Minister Amit Shah to meet him on December 29, according to a tip-off from Rashtrapati Bhavan. Amit Shah cancelled the meeting at the last moment. He did not allot time for the meeting even after waiting for nearly 10 days; nor was it reported that it was not possible to meet.
Speaking on the issue, T. R. Baalu said, “This approach of Amit Shah is condemnable”. “Refusing to meet people’s representatives is anti-democratic”, said MK Stalin.
It was while these things were going on, the DMK made R. N. Ravi read out their policy statement as “Governor’s speech” on the opening day of the first assembly session of the year on January 5. In his speech R.N. Ravi says, “The government is determined that NEET is not needed for Tamil Nadu”. Pro-DMK media and social media activists exaggerated the “ritualistic” Governor’s address, as if the TN Governor had been subjugated by the DMK and praised, “Did you see, how powerful DMK is!!”
In the same assembly session, VCK walked out ignoring the Governor’s speech, saying that delaying the NEET bill without sending it to the President was an insult to the sentiments of the people of Tamil Nadu and condemned the governor’s anti-Tamil Nadu attitude.
On the same day, representatives of seven parties from Tamil Nadu were waiting in Delhi for seven days to meet Home Minister Amit Shah for the third time. Addressing a press conference on that day, T. R. Baalu said, “The Governor who does not respect the Constitution should step down.”
Next, the DMK again convened an all-party meeting on January 8, to put further pressure on the Governor. A resolution was passed condemning the Governor for not sending the NEET Exemption Bill to the President and also condemning Amit Shah for continuously refusing to meet the Tamil Nadu MPs. And when talking about cancellation of the NEET, they concluded the resolution by saying that, “The legal battle will continue”.
Here we have to consider one thing. Justice A.K. Rajan Committee report on impact of NEET; Anti-NEET Bill; All Party Meeting Resolution; meeting the Governor and the President in person and urging them – These were fierce legal battles being fought in different ways. Does this legal battle story continue to go on like a serial ?
“We will consult experts on the methods of legal battle and take a further decision”, says Minister M. Subramanian. What can we achieve by waging a legal battle against the fascists who do not even respect the law atleast in par with a toilet paper. So far, 13 students have been killed during this legal battle path. How many more people are we going to sacrifice along the path of legal battle? What are we going to do now? Where is the Tamil Nadu which erupted when Anita died?
The legal efforts of the DMK were being continuously blocked and insulted by Amit Shah and the fascist brigade spy R. N. Ravi. It is not just an insult to the DMK alone. It is a disgrace to the people of Tamil Nadu and the sovereignty of Tamil Nadu. The fact that we will continue only the path of legal battle implies that we will carry further these indignities with us.
The DMK has even tried to fight these legal battles because of the pressure of parties in their alliance like CPI, CPM, VCK, TVK; the mindset of the people of Tamilnadu opposing th NEET till today; and the continuous student suicides during examinations.
Read :
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
But even this situation cannot be expected to continue like this. As far as the DMK is concerned, everything is subject to driving its rule without any problem.
Like NEET, the DMK had initially shouted, “We will reject the New Education Policy”. But later, School Education Minister Anbil Mahesh Poyyamozhi said, “Let’s accept the good aspects of the NEP”.
“We will reject the eight lane highway”, the DMK said, and when Union Road Transport Minister Nitin Gadkari was angry that the Tamil Nadu government was not cooperating with the highway projects, the DMK government replied, “Come on, we will cooperate”. In Paliyapattu village of Tiruvannamalai district, people are driven out and the DMK government is desperate to bring about ‘development’ through SIPCOT.
Therefore, the progressive-democratic forces in Tamil Nadu should give up pushing the DMK on the path of legal battle and take up the field struggle. Protests should be along the paths of Jallikattu, Thoothukudi and Delhi Chalo. That’s what makes Tamil Nadu special!

Tulipa

பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

மிழகத்தில் பள்ளி கல்வியில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவருவதற்கு தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறி மார்ச் 9 அன்று ஒரு அறிவிப்பை அறிவித்து நம் பள்ளி, நம்பெருமை என்ற புதிய செயலியை தொடங்கி செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் “அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மை குழு குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் பேசி இதில் அரசியல் தலையீடு இருக்காது, அவ்வாறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளி மேலாண்மை குழு குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதே  பள்ளி மேலாண்மைக் குழு எனவும், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மைக் குழு முக்கிய பங்காற்றுகிறது எனவே அதனை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இதன் தொடர்ச்சியாக மார்ச் 20 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி – அதில் பெற்றோர்களின் பங்களிப்பை வலியுறுத்தி பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாடு குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி குறிப்பாக பெண்கள் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் எனவும், சமூக பங்களிப்புடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏனெனில் அரசு பள்ளி நமது பள்ளி , நமது பெருமை, நமது குழந்தைகள் என பெற்றவர்களை பொறுப்பாக்கும் வேலையை அரசு தொடங்கியுள்ளது.
சமூக பங்களிப்புடன் பள்ளியை மேம்படுத்தப்போவதாக கூறும் அரசு அதற்கான எந்த வரையறையும் சொல்லாமல் இருப்பது உள்ளூர் அளவில் செல்வாக்குள்ள நபர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின்  கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும் என்பதே உண்மை. இதற்கு சான்று ஏற்கனவே செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை பார்த்தாலே போதும். பல இடங்களில் ஓட்டு கட்சி பிரமுகர்கள் செல்வாக்கில் இருந்து கொண்டு மாணவர்கள் – பெற்றோர்களிடம் கட்டண கொள்ளை அடித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் மேன்மையை சமூகத்திற்கு உணர்த்தும் வேலையை இந்து நாளிதழ் ’நம் கல்வி, நம் உரிமை’ என்பதை செய்து அரசுப் பள்ளியை பராமரிக்கும் பொறுப்பை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சதித் திட்டத்தை ஆரவாரமாக வரவேற்று வருகிறது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளையும் பெற்றோர்களின் பங்களிப்புடனும், சமூக பங்களிப்புடனும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், நூலக வசதிகள், கழிவறை வசதிகள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது போன்ற பொறுப்புகளை தட்டிகழிக்கும் வேலை செய்து வருகிறது. இப்போது பள்ளி மேலாண்மை குழுவை பொறுப்பாக்கி அதன் தொடர்ச்சியாக மொத்த சுமையையும் பெற்றோர்கள் தலையில் சுமத்திவிட்டு படிப்படியாக அரசு, தன் பொறுப்பை கைக்கழுவி விடும் வேலை அரங்கேறும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குமேல், பள்ளி மேலாண்மை குழுவால் பராமரிக்க முடியாத சூழலில் இயல்பாகவே தனியார் பங்களிப்புடன், நடத்த வாய்ப்பு ஏற்படுத்தி அதன் பிறகு கார்ப்பரேட்டுகளிடமே ஒப்படைப்பதற்கான நிலைமை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு கல்வி கொடுப்பதில் இருந்து படிப்படியாக வெளியேறும் அபாயம் உள்ளது.
பள்ளி மேலாண்மை குழுவானது கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஏற்படுத்தப்பட்டதாகும். 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வி வழங்குவதில் இந்த பள்ளி மேலாண்மை குழு என்பது ஒரு மைல் கல் என பேசப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் – 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி – ஏப்ரல் 1, 2010-ல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 12 ஆண்டுகளில் பள்ளி கட்டமைப்பு மாறியுள்ளதா, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைத்ததா? பள்ளிகளில் மகிழ்ச்சியான கற்றல் சூழல், அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் இடைவெளி குறைந்ததா? இல்லை கல்வியில் தனியார் பள்ளிகளின் கொள்ளை தடுக்கப்பட்டதா? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
இப்படிபட்ட சூழலில்தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க கூடிய பொறுப்பை பெரும்பான்மையாக பெற்றோர்கள் 15 பேர் (அதாவது 4-ல் 3 பங்கு) ஆசிரியர் 2 பேர் (தலைமை ஆசிரியர் – ஆசிரியர்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர் 2 பேர், கல்வியாளர் ஒருவர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிடம் (அதாவது  பள்ளியை அந்த ஊரே பராமரிப்பது) பள்ளியை ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு.
இதற்கு இவர்கள் கூறும் காரணம் “பள்ளியை நிர்வகிப்பது தலைமை ஆசிரியர் மட்டுமே என்ற பிம்பம் களையப்பட்டு, ஒரு ஊரில் உள்ள பள்ளிக்கு, அந்த ஊரையே பொறுப்பாக்குவது. குறிப்பாக, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை முதன்மை அலகாக கொண்டு மாற்றியமைக்கப்படுகிறது. இதில் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் வழிகாட்டும் அங்கத்தினர் மட்டுமே என்பதை சமூகத்திற்கு உணர்த்த வேண்டும் என்று கூறுவதன்மூலம் அரசு, கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து தன்னை விலகுவதற்கான வழியே ஏற்படும்.
பள்ளியின் அனைத்து தேவைகளையும் அறிந்து கூட்டாகவும், சமுதாய பங்களிப்போடும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்வது மூலம் பள்ளி சேர்க்கை அதிகரித்தல், இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு மீண்டும் வர வைப்பது. அடிப்படை கட்டமைப்பை உறுதிப்படுத்துவது, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படச் செய்வது ஆகியவற்றை பள்ளி மேலாண்மை குழுவின் கடமையாக சொல்லப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு ஏற்ற வகையில் நிலமைகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இந்த குழு சுயமாக இயங்கும், அரசியல் தலையீடு இருக்காது. அவ்வாறு தலையீடு இருந்தால் – உடனடியாக நடவடிக்கை பாயும் என கூறுவது வெறும் வாய்ச்சவடால் மட்டுமே!
ஏற்கனவே பெற்றோர் – ஆசிரியர் கழகம் எவ்வாறு செயல்படுகிறது? உள்ளூர் ரவுடிகளும், ஓட்டு கட்சி பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையடிக்கவே செய்கிறது. இதனை எதிர்த்து பல பள்ளிகளில் மாணவர்கள் போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் – தலைமை ஆசிரியர் இணைந்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த அரும்பாடுப்பட்டு அரசு பள்ளியை தக்கவைத்து வருகின்றனர்.
இந்த லட்சணத்தில், ஒட்டுமொத்தமாக கல்வி சுமையையும் பெற்றோர்கள் மீது சுமத்திவிட்டு அதிலிருந்து வெளியேறவே இது வழிவகுக்கும். இதற்கு “நம் பள்ளி நம் உரிமை, நம் பெருமை என்ற கவர்ச்சி முழக்கத்தை வைத்து பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அரசு வெளியேறும் நிலை ஏற்படும். முதலில் சமுதாய பங்களிப்புடன் செயல்பட தொடங்கினாலும், அதை தொடர்ச்சியாக செய்ய வாய்ப்பு இல்லாமல்போகும்.  குறிப்பாக, அரசின் நிதி ஒதுக்கீடு முற்றிலும் வெட்டப்படும். இதனை பயன்படுத்தி கொண்டு  தனியார் கல்விக் கொள்ளையர்கள் கல்லா கட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அரசுதான் கல்வியை சேவையாகவும், அனைவருக்கும் இலவசமாகவும் வழங்க வேண்டும். இதற்கான நிதியை அரசுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருமானம் இல்லை என்பதால் கல்வியை தனியார்மயமாக்கும் அதேவேளையில் குடியை கெடுக்கும் “டாஸ்மாகை’’ அரசே எடுத்து நடத்தி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வேலையை மட்டும் அரசே செய்யுமாம். இதைவிட கேடுகெட்ட அயோக்கிய தனம் எதாவது இருக்க முடியுமா?
பள்ளி மேலாண்மை குழுவானது 2009 அனைவருக்கும் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்தபோதே ஏற்படுத்தப்பட்டதுதான். பள்ளியை பெற்றோர்கள்தான் மேலாண்மை செய்ய வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த பள்ளி மேலாண்மை குழு. இதற்கான அரசாணை  2011, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது. இது அமலுக்கு வந்த பிறகு இழுத்து மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் ஏராளம். அரசுப் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் பலர். அதன் பிறகு அது என்னவானது என்பது யாருக்கும் தெரியாது. சட்டப் போராட்டம் என்பது எல்லாம் வெறும் கழிப்பறை காகிதம் மட்டுமே.
படிக்க :
பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த அரசின் முன்னெடுப்பை புரிந்து கொள்ள ஒரு உதாரணம், சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.7500 கோடி (28,000 வகுப்பறைகள்) ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து கொடுத்து கட்டமைப்பை மேம்படுத்த முடியுமா? ஒரு பள்ளிக்கு ஒரு கோடி என்றாலும் ரூ. 37,391 கோடி தேவைப்படும் அல்லவா?
ஒருபக்கம் கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம். இந்த கொள்கையை முறியடிப்பதன் மூலமே அனைவருக்கும் இலவச – தரமான – கட்டாய  கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும்.
இனியன்

வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

0
மிழக போலீசு மீது வடமாநிலத் தொழிலாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழக ஊடகங்களில் ஏப்ரல் 7 அன்று செய்திகள் மிகவேகமாக வெளிவந்தன. இதேபோல் சமூக வலைத்தளப் போராளிகள், “வடக்கன்ஸ், பீகாரிகள் இன்று தமிழக போலீசை தாக்குகின்றனர். நாளை தமிழக மக்களையும் தாக்குவார்கள். இது ஒரு எச்சரிக்கை. விழித்துக் கொள்ளுங்கள் தமிழக மக்களே” என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினர். ஈரோட்டில் நடந்த ஒரு வடமாநில தொழிலாளியின் மரணம்தான் இந்த செய்திகளுக்கு எல்லாம் அடிப்படை.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில் எஸ்.கே.எம் பூர்ணா என்ற எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் ராம்குருவா பகுதியை சேர்ந்த காமோத்ராம் என்பவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி இரவு லாரியில் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர்மீது ஏறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர்.
இதையடுத்து அங்கு இருந்த வடமாநில தொழிலாளர்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்போதுதான் உடலை எடுத்து செல்வோம் என்றும் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசு, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் போலீசுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
படிக்க :
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு!
தமிழக தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தினால் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசுத்துறை, வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக எப்படி செயல்படும்? போலீசுத்துறை எப்போதுமே ஆளும் வர்க்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் மட்டும்தான் சேவை செய்யும்.
தமிழக போலீசுத்துறையும் ஊடகமும் எவ்வாறு தொழிலாளர் விரோதப் போக்கை கையாளுகிறார்கள் என்பது சமீபத்தில் நடந்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தனது உரிமைக்காக அங்கு பணிபுரிந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் என்பது துலக்கமான சான்று.
***
பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருந்து வாழவே வழியற்றுதான் தமிழகத்தில் உள்ள ஆலைகளிலும் ஓட்டல்களிலும் அடிமாடுபோல் வேலை செய்கின்றனர் வடமாநிலத் தொழிலாளர்கள். குறைந்த ஊதியத்திற்கு அதிகமான உடல் உழைப்பை வாங்கி உழைப்பு சுரண்டலில் ஈடுபடுகின்றனர் தமிழக முதலாளிகள். மாட்டு தொழுவத்தில் அடைத்து வைப்பதைபோல்தான் வடமாநில தொழிலாளர்களையும் மோசமான இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வடமாநிலத் தொழிலாளிகள் என்பவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள் என்ற பொதுபுத்தி இங்கு நிலவுகிறது. அதை பயன்படுத்திக்கொண்டு ஈவிரக்கமற்ற முறையில் வடமாநிலத் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் இங்குள்ள முதலாளிகள்.
ஈரோட்டில் வடமாநிலத் தொழிலாளர்களின் போராட்டம் என்பது நியாயமான ஒன்று. அந்த தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதுதான் நமது கடமை. ஆனால், தமிழ்த்தேசியவாதிகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக விசமத்தனமாக பிரச்சாரத்தை கட்டமைத்து, இனவெறியை அவர்களுக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்.
வட மாநிலத்தை சேர்ந்த ஒரு முதலாளி தமிழகத்தில் ஒரு ஆலையை வைத்திருந்து, அந்த ஆலையில் தமிழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் தமிழக போலீசுத்துறை தமிழக தொழிலாளர்களின் உரிமைக்காக ஒருபோதும் நிற்காது. வடமாநில முதலாளியின் பக்கம்தான் நிற்கும். அதற்கு சான்றுதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.
அனில் அகர்வால் என்ற வட மாநில முதலாளியின் நாசகாரத் தொழிற்சாலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்தப் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசும், போலீசுத்துறையும் அனில் அகர்வால் எனும் வடமாநில முதலாளிக்கு ஆதரவாக நின்று, தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்றது. ஆகவே ஒன்றிய மற்றும் மாநில அரசும், போலீசுத்துறையும், எந்த மாநிலத்தை சார்ந்த தொழிலாளிகளாக இருந்தாலும், அவர்களை மட்டும்தான் அடித்து ஒடுக்கும்.
படிக்க :
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
சீமான், மணியரசன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாய்கூட திறக்கமாட்டார்கள். அவர்கள் தமிழக முதலாளிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் மட்டுமே பேசுவார்கள். தமிழக போலீசுத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக போஸ்டர் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதியை எதிர்க்காமல் தமிழக முதலாளிகளின் பின் நிற்பவர்கள்.
சாதி, மத, மொழி, இன, தேச வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கு எதிராக போராடவும், எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராடுகிறதோ, அங்கெல்லாம் அதற்கு துணை நிற்பதுதான் உழைக்கும் வர்க்கமாகிய நமது முதல் கடமை.

வினோதன்

பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !

ந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. சென்ற மாதம் இறுதி நாளான 31-ம் தேதியோடு, மொத்தம் பத்து நாட்களில் ஒன்பதுமுறை விலை உயர்ந்துவிட்டது.
31-ம் தேதிவரை சென்னை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.5 காசுகளும், டீசல் விலை ரூ.6.9 காசுகளும் உயர்ந்துள்ளன. இனியும் இவ்வாறே விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது. சுமார் ரூ.20 வரை உயரும் என்று ஊடக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை கடந்த மாதம் 22-ம் தேதி ஒரே நாளில் ரூ.50-யும், வணிக எரிவாயு உருளை விலை இம்மாதம் முதல் நாளான ஏப்ரல் 1-ம் தேதி, ஒரே நாளில் ரூ.250-யும் உயர்த்தப்பட்டுள்ளது. மோடி பதவி ஏற்றதிலிருந்து தற்போது வரை ரூ.540 வரை சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்துள்ளதாக கே.எஸ். அழகிரி கூறுகிறார்.

படிக்க :

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !

சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?

உக்ரைன் – இரசியா இடையிலான போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கான காரணமாக மோடி அரசு கூறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியே போர் தொடங்கிவிட்டது; ஆனால், தேர்தல் காரணமாக 137 நாட்களாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் தன் குரூர புத்தியைக் காட்டிவிட்டது மோடி அரசு.
ஏழை எளிய மக்களைப் பொருத்தவரை, அதிகரித்துவரும் இந்த விலை உயர்வு பெரும் தாக்குதலாகவே அமையும். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட கூலி ஏழை மக்களை இது பெரிய அளவில் பாதிக்கும். டீசல் விலையுயர்வு காரணமாக பல சரக்கு லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் பேருந்துப் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், அதாவது ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு முன்பு, ‘பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய அரசின் வரியைக் குறைத்துவிட்டோம்’ என தம்பட்டம் அடித்தார்கள் பா.ஜ.க.வினர். ஆனால், வரிக் குறைப்புக்கு பின்பு கூட அரசு வசூலிக்கும் மொத்த வரிவிகிதம் சராசரியாக பெட்ரோல் விலையில் 50 சதவிகிதமும், டீசல் விலையில் 40 சதவிகிதமும் இருந்தன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றத்திற்கு ஏற்ப, இந்த வரி விகிதத்தைக் குறைத்துக் கொண்டால் கூட எரிபொருட்களின் விலை இவ்வாறு உயருவதைத் தடுத்து சீராக வைத்திருக்க முடியும். ஆனால், முதலாளிகளுக்கு சலுகை காட்டக் கூடிய மோடி அரசு, சாமானிய மக்களுக்கு கருணை காட்டப் போவதில்லை.
‘வரி’ என்ற பெயரில் மக்களை ஒட்டச் சுரண்டி கொள்ளையடிக்கும் நிதி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி, மூலதனக்கடன் என்ற பெயர்களில் வாரியிறைக்கப்பட இருக்கிறது. இப்படி சமூகத்தில் ஒருபக்கம் தரித்திர நிலையையும் மற்றொரு பக்கம் சொர்க்கப் புரியையும் உருவாக்கி வருகிறது மோடி அரசு.
மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலால் கிளப்பிவிடப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், மதவெறிக் கலவரங்கள் ஆகியவை நமது பிரச்சினைகளிலிருந்து நம்மையே திசைதிருப்புகிறது. விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வேண்டிய உழைக்கும் மக்கள், “இலாவண்யாவை மதமாற்றம் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா, இந்தமுறை சிவராத்திரிக்கு என்ன விசேசம், முசுலீம் மாணவிகள் ஹிஜாப் அணிவது சரியா” என்று பேசிக் கொண்டிருக்கிறோம். பேச வைத்திருக்கிறார்கள் காவிகள்.

படிக்க :

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

இதோ, ‘கோயில் திருவிழாக்களில் முசுலீம்களை அனுமதிக் கூடாது, முசுலீம் கடையில் கறி வாங்கக் கூடாது’ என அடுத்தடுத்த அவல்களை நமது வாயில்போட தயாராக வைத்திருக்கிறது சங்கிக் கூட்டம். மாறாக காவிக் கொடியைத் தூக்கிக் கொண்டு திரியும் எந்த காலிப்பயலும் நமது பட்டினித் திண்டாட்டத்திற்கு வழிசொல்வான் இல்லை.
இவர்களது பிரச்சாரத்திற்கு பலியாகிக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், தனது அன்றாடப் பிரச்சினைகளை எல்லாம் உணர்ந்தால் கூட வீதிக்கு வந்து உரிமைக் குரல் எழுப்பாமல், ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்று கிடக்கும் போக்கு மற்றொருபுறம். குட்டக் குட்ட குனிந்துகொள்வது குட்டுபவனை மேலும் ஊக்கப்படுத்தவே செய்யும். அமைதியைக் களைத்துவிட்டு அமைப்பாய் திரண்டு போராடாமல் தீர்வில்லை மக்களே !

புதிய ஜனநாயகம்

Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array

Last year, in July, “We will build a dam across the Cauvery at Mekedatu; it does not require the approval of the Tamil Nadu government,” said the Eduyurappa-led BJP government and also its Construction began as planned. The Union Modi government showed its antagonism against Tamil Nadu by ordering the Karnataka government to file a detailed project report on the construction of the dam, without stopping the Karnataka government’s illegal activities.
All political parties in Tamil Nadu except BJP, have spoken out in parliament, saying, ” This is an act of lawlessness, and the dam across the river Cauvery cannot be built without the consent of Tamil Nadu.” Many people including farmer’s unions, protested against the Karnataka government and the central government. On behalf of the People’s Power Organization, Dharmapuri zone cadres mobilise mass and marched towards Mekedatu and also besieged. Following this, the Mekedatu Dam project has been suspended temporarily due to strong protests in Tamil Nadu.
In this situation, Karnataka’s Congress party has taken up the issue of the Mekedatu Dam for the vote-bank politics. It also claiming that congress party will be the only alternative to fascist BJP in India. Then the Karnataka Congress party planned to go on a padayatra for ten days under the slogan “Our water, our rights” from Mekedatu towards Bengaluru to demand the completion of the construction of the Mekedatu Reservoir across the Cauvery River.
Read :
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
On the ninth of January, in Kanagapura taluk- Ramanagara district, with the thousands of Congress volunteers, opposition parliamentary leader Mallikarjun Kharge started the padayatra at the confluence of the Kari and Argavathi rivers. The Congress party leader, D.K. Shivakumar, Opposition leader Siddaramaiah, former Deputy Chief Minister Parameswar and a number of film personalities, including former ministers, were present. “This project is actually designed to useful for both states,” Mallikarjun Kharge said after launching the padayatra. “However, due to Tamil Nadu’s opposition, it has sparked unnecessary controversy.”
Former Water Resources Minister K Sivakumar and also Kanagapura’s MLA, said, “This padayatra is for the people neither for Congress party nor for the opposition and also he added that, in the past Congress had fought for national independence, likewise, in present the same Congress fighting for water against BJP which shows that he combined the pseudo-independent struggle with their own despicable racism.
siddharamaiah claimed that the Mekedatu dam project was initiated by his own Congress-led government, and he accused the BJP of betraying its own people in Karnataka and also formed an alliance with Tamil Nadu. Through this, he claimed that the Karnataka Congress was a pioneer than the BJP in betraying Tamil Nadu.
Karnataka-BJP Chief Minister Basavaraj Bommai denied all the allegations and accused that, “Congress only betrayed the people of Karnataka by not implementing the Mekedatu project during this tenure”. In addition to that, he said, Congress allotted Rs. 10,000 crores for the Krishna River water project but only spent Rs. 7,000 crores, and the Congress party was not standing firm on any irrigation project. He added, “The ruling BJP party is actually carrying out the Mekedatu project. After I became the chief minister, the full report on the project was sent to the Central Water Commission and the Cauvery Monitoring Board for approval. A meeting on this project will be held this month and decisions will be taken.
The purpose of constructing a dam across the Cauvery River at a cost of Rs.9,000 crores is to set up a drinking water reservoir which helps to store surplus water and is used for supplying drinking water and generating electricity to Bangalore and its surrounding districts, according to the Karnataka government. However, this is directly showing the racialist plan of the Karnataka parties to usurp the water rights of Tamil Nadu and a new dam is being built at Mekedatu for the benefit of hotel and real estate owners in Bangalore. The Karnataka racialist parties have been touting the plan to divert Karnataka’s water resources to corporates and making a story which is benefit for the people and farmers of Karnataka.
In Karnataka, four major dams and more than five smaller dams have already been built across the tributaries of the Cauvery. With the help of major dams, nearly 104.55 TMC of water is stored. Firstly, the needs of Karnataka are fulfilled, and then the rest of the water is supplied to Tamil Nadu. In this case, if the dam is built in Mekedatu, the surplus water will not come to Tamil Nadu. There are 26 lakh acres of irrigated land in Tamil Nadu, which depends on the Cauvery River for agriculture, and will become a desert. Drinking water will not be available in 25 districts, including Chennai, Ramanathapuram, Vellore, and Tirupur. Already, the Karnataka government is not giving Tamil Nadu’s own share of the Cauvery River if this dam is built on Mekedatu, which would lead to burying Tamil Nadu’s rights permanently.
Read :
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder
In many respects, the Congress party, which pretends to be at odds with the BJP, is competing with the BJP in inciting Kannada racism against Tamil Nadu. We also have to look at one thing: even though the Congress party is the weaker one at the national level, it will be the only alternative to the RSS-BJP and also be a secularist and liberalistic Democratic Party. As a result, as progressive-thinking democrats and intellectuals have stated, we can support Congress in its efforts to dethrone the BJP in the upcoming elections. They also never opened their mouths regarding the activities carried out by the Karnataka Congress on the Mekedatu dam construction.
If inciting racism induces people to vote for the Congress party, they will use it. They do have principles and theories solely based on obtaining votes. The Congress Party is not only racism, but also religious fanaticism, as evidenced by its collaboration with the RSS-BJP on the issue of Kerala’s Sabarimala Temple. Unlike the RSS-BJP, the Congress can be said to be ‘soft’ if you will. But we point out that this ‘softness’ is subject to the ‘violence’ of saffron fascism.
The politicization of the masses and the ground struggles of democratic alliances are the only answers to fascism and the demand for basic democratic rights. Polling votes will not be an alternative, and it is just absurd, as we saw in the Mekedatu dam issue.

Venba

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
தலையங்கம் பெட்ரோல் – டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்ட குட்ட குனியாதே !
♦ இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு, சித்தரவதை செய்யும் போலீசு !
♦ குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு! சாதிவெறியை இனப் பகையாக சித்தரிக்கும் தமிழ்த்தேசிய துரோகிகள்!
♦ வேலையில்லா திண்டாட்டம், தாளாத கடன்சுமைகளால் பெருகிவரும் தற்கொலைகள் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள்!
♦ குற்றவாளிகளை உருவாக்கும் மோடி அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?
♦ ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ : இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!
♦ மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள்!
♦ பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் கார்ப்பரேட் நலனும்!
♦ காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை!
♦ நீட் தேர்வின் தரா’தரம்’ என்ன?
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !

னிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உள்ளது உடை. விவசாயத்துக்கு அடுத்து நெசவுத் தொழில் தமிழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. கொங்கு மண்டலம் நெசவுத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
அதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலின் நிலை என்ன என்பதை பார்ப்போம்.
அம்மாபேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வனவாசி, குகை, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, மடத்தூர், சித்தர்கோவில், காடையாம்பட்டி, கசப்பேரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பிரதானமாக நெசவு நடைபெறுகிறது.
இத்தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு ஜவுளி ரகங்கள் நாளொன்றுக்கு 20 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம், உடையாப்பட்டி பகுதியில் அம்மாப்பேட்டை கூட்டுறவு நூற்பாலை 31 ஏக்கரில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கியது. இதில் 14 ஏக்கரில் நூற்பாலை கட்டிடம் கட்டப்பட்டு, தரமான நூல்கள் உற்பத்தி செய்து லாபத்தில் இயங்கிய ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த 1,100 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
படிக்க :
கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !
நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?
நூற்பாலை இயங்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்தான் இருக்கிறது. தற்போது, இந்த இடத்தில் 17 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இங்கு அடுக்குமாடி தொழிற்கூடம் உருவாக்கி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நெசவு சார்ந்த தொழில் தொடங்கி ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது.
நெசவாளர்-வாழ்க்கை
அச்சில் பிணைப்பது
சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, தானியங்கி தறிகள் மூலம் துணி நெய்யப்படுகிறது. வேட்டி, சேலை, லுங்கி ஆகிய துணிகள் நெய்யப்படுகின்றன. குறிப்பாக செயற்கை இழையால் நெய்யப்பட்ட மலிவு விலை பட்டுச் சேலைகள் இளம்பிள்ளை போன்ற பகுதிகளில் பிரபலமானவை.
கைத்தறிகளின் எண்ணிக்கை குறைவு. விசைத்தறிகள் பிரதானமாக பங்காற்றுகின்றன. மாறி வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கடந்த இருபது வருடங்களில் தானியங்கி தறிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. தானியங்கி தறிகள் மூலம் நெய்யப்பட்ட துணிகள் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கைத்தறி, விசைத்தறியில் நெய்யப்பட்ட துணிகள் நமது தேவை மற்றும் ஏற்றுமதி என்ற அடிப்படையில் கொண்டு செல்லப்படுகின்றன.
தறி உரிமையாளர்கள் :
இப்பகுதியில் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்கள், தானியங்கி தறி உரிமையாளர்கள் என்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் தறிகளை வைத்துக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் தொழிலாளிகள் வேலை செய்யும் தொழிற்கூடங்கள் அல்ல. 5 முதல் அதிகபட்சம் 15 தறிகள் உள்ள சிறுமுதலாளிகள்தான் அதிகம். 60 தறிகள் வரை வைத்துள்ள பெரிய முதலாளிகள் சிலர் உள்ளனர்.
யாரும் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கியவர்கள் அல்லர். சொத்துக்களை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன், நுண்கடன் பெற்றோ தான் தறிகளை வாங்கியுள்ளனர். இதனால் உரிமையாளர்கள் என்பவர்கள் தொழிலாளிகளோடு தொழிலாளிகளாக உழைத்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதே யதார்த்த நிலை. தொடர்ச்சியாக தறி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலில் நிற்க முடியாது.
மேலும் நெய்த துணிக்கு கூலியை இவர்கள் நிர்ணயிக்க முடியாது. ஜவுளி உற்பத்தியாளர்கள்தான் நியமிப்பார்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் கூலி குறைக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த கூலியை விட தற்போது குறைவான கூலி கிடைப்பதாக கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் கோவை பல்லடம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளிகளும் கூலி உயர்வுக்காக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிவோம். சேலம் பகுதிகளில் போராட்டம் நடைபெறவில்லையென்றாலும் இங்கும் கூலி உயர்வு பிரச்சினை பிரதானமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கூலியைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர்கள் உடனே கொடுப்பதில்லை என்கின்றனர். இரண்டு மாதம் வரை தாமதப்படுத்தித்தான் கொடுக்கின்றனர். இதனால் கைகாசைப் போட்டுத்தான் தொழிலாளிகளுக்கான கூலியும், GST உள்ளிட்ட மற்ற அவசியமான செலவுகளை ஈடுகட்டுகின்றனர். GST ஒவ்வொரு மாதமும் 10 ந்தேதி பில் முடித்து, 20 ந் தேதிக்குள் வரி கட்டிவிட வேண்டும்.
கூலியை உடனே கொடுக்கும்படி உற்பத்தியாளர்களை நிர்ப்பந்திக்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் நெய்வதற்கான ஆர்டரை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர், தறி உரிமையாளர்கள்.
கடைசியாக நடந்த GST கூட்டத்தில் காட்டன் துணிகளுக்கு 5% ல் இருந்து 12% மாக GST உயர்த்தப்பட்டதானது மிகக் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகையை வாரி வழங்கும் மோடி அரசு சிறு தொழில் செய்வோரை வரியை உயர்த்தி அழிக்கிறது. GST வரியால் தொழில் நட்டமடைந்து விட்டது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் மேலும் கூலியை குறைக்கின்றனர். ஒரு சேலை நெய்தால் ரூ.280 கிடைத்த இடத்தில் தற்போது ரூ.220 தான் கிடைக்கிறது என்பது நிலைமை.
நூலின் விலையும் ஓராண்டில் 50% வரை உயர்ந்துள்ளது. மாதம், 50 கிலோ கொண்ட 40ம் நெம்பர் நூல், ஒரு சிப்பம் ரூ.9,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ. 14,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 நாட்களில் ஒரு சிப்பத்திற்கு ரூ.5.000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் கடுமையான பாதிப்பை உருவாக்குகிறது. இதைக் கண்டித்து சேலம் வெண்ணந்தூர் பகுதியைச் சார்ந்த விசைத்தறி நெசவாளர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
பணமதிப்பழிப்பு, GST, கொரோனா ஊரடங்கு போன்றவை கடுமையான பாதிப்பை நெசவுத் தொழிலுக்கு ஏற்படுத்தியுள்ளன. தறிக்கு உரிமையாளராக இருந்த பலர் தொழிலாளிகளாக மாறியுள்ளனர். ஊரடங்கு காலங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பை நடத்த வேண்டிய நிலைக்கு விசைத்தறி நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குறைவான தறி வைத்திருப்பவர்கள் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கி கட்டமுடியாமல் அந் நிறுவனங்களால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு பக்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் நீர், மின்சாரம், நிலம் அனைத்தையும் சலுகை விலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் அரசோ சிறு தொழில்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துகிறது. தறித் தொழில்களுக்கான அதிகப்படியான மின்சார கட்டணமும் இவர்களை பதம் பார்க்கிறது. மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
இவர்கள் முக்கியமாக வைக்கும் கோரிக்கைகளாவன; ஜவுளித் தொழிலுக்கான GST ரத்து செய்ய வேண்டும். பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பருத்திக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், இதன் மூலம் கூலியை அதிகப்படுத்த வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பனவாகும்.
தொழிலாளர் நிலைமை :
நெசவுக் கூடங்களில் உழைப்பை மட்டும் செலுத்தும் தொழிலாளர் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. பெரும்பாலும் வேலை நேரம் 12 மணி நேரமாக உள்ளது. 12 மணிநேரம் வேலை செய்யும் தொழிலாளிக்கு கிடைக்கும் ஊதியம் ரூ.500 மட்டுமே. 8மணி நேர வேலைக்கு ரூ.350 மட்டுமே. இத்தொழிலில் நீண்ட காலம் வேலை செய்ததும் மாற்றுத் தொழில்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லாமல் வேறு வழியின்றி இதே தொழிலில் நீடிப்பது என்கிற நிலைமையும் உள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், மருத்துவ செலவுகள், அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்காக குறைவான கூலியாக இருந்தாலும் உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
8 மணி நேர வேலை செய்யும் தொழிலாளிகள் சம்பளம் போதாமையால் நெசவு வேலையை முடித்து விட்டு, கூடுதலாக கிடைக்கும் வேலைகளுக்கும் செல்கின்றனர். விலைவாசி உயர்வு தங்களை கடுமையாக பாதிப்பதாக கூறுகின்றனர்.
தானியங்கி தறிகளில் வேலை செய்யும் தொழிலாளிக்கு 12 மணி நேரம் வேலை. இங்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. விசைத்தறிக் கூடங்களில் தினசரி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.
1970 – 80 களில் கம்யூனிச இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கங்கள் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறித் தொழிலாளர்கள் மத்தியில் வீச்சோடு செயல்பட்டன. குறிப்பாக அன்றைய ஒன்றிணைந்த சேலம் மாவட்டத்தின் பகுதியாக (தற்போது நாமக்கல் மாவட்டம்) இருந்த குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம், ஜலகண்டாபுரம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் தங்கள் வாழ்வுரிமைகளுக்காக பல போர்க்குணமிக்க போராட்டங்களை விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அப்போது இந்த இயக்கங்கள் ஒருங்கிணைத்து நடத்திய பேரணியில் 3000 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.
1990 களுக்குப் பிறகு தொழிற்சங்கங்கள் வலுவிழந்துள்ளன. நெசவுத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களின் தலையீடு என்பது மிக குறைவாகவே உள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக (குறிப்பாக தானியங்கி தறிகள்) தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது நெசவுத் தொழிலாளர்களாக வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் வேலை செய்யும் நிலை உள்ளது. இது மேலும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. சிறு தொழிலகங்களிலான உற்பத்தி நிலைமைகள், கிடைக்கின்ற குறைவான பொருளாதார ஆதாயம், புதிய தாராளவாதக் கொள்கை தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தியுள்ள பொருளாதார, பண்பாட்டு தாக்கங்களும், தொழிலாளர்களுக்கு எதிரான அரசின் அணுகுமுறைகளும், கொள்கைகளும் வலுவான தொழிலாளர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தடையாக உள்ளன.
மேற்கண்ட நிலைதான் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட ஜவுளித் தொழிலை பிரதானமாக மேற்கொள்ளும் மாவட்டங்களிலும் உள்ளது.
பிரச்சினைக்கான தீர்வு என்ன?
இப்பிரச்சினைக்கான தீர்வை நாம் நெசவுத் தொழிலுக்கு உட்பட்டு மட்டும் பார்க்க முடியாது. இதை நெசவுத் தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமான முரண்பாடாக மட்டுமோ, தறிக்கு உரிமையாளராக இருக்கும் நெசவாளருக்கும், அங்கு கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிக்குமான முரண்பாடாக மட்டும் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. தறியை உடைமையாக வைத்து கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்களும், அந்த தறிக்கூடங்களில் வேலை செய்யும் உடமையற்ற தொழிலாளர்களும் தங்களின் தற்காலிகத் தீர்வுக்கு போராடுவது சரிதான் என்றாலும் இதை ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலுக்குமான பிரச்சினையாக பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஜவுளித் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்றுவது முதன்மையானது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு மட்டுமின்றி, பல லட்சம் பருத்தி விவசாயிகளுக்கும், வாழ்வாதாரமாகத் திகழும் ஜவுளித்துறையை தனியார்மயக் கொள்கையின் காரணமாக அரசு கைவிட்டுவிட்டது என்பதுதான் அடிப்படையான பிரச்சினை.
தமிழகத்தை பொறுத்த அளவில் ஜவுளி தொழிலில் மிக முன்னணியில் உள்ள மாநிலம் என்றாலும், ஜவுளிக்குத் தேவையான பருத்தி உற்பத்தியில் மிகவும் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும்! தமிழகத்திற்கு மட்டுமே 108 லட்சம் பேல்கள் தேவைப்படுகின்றன! இதில் கால்வாசி கூட இங்கு உற்பத்தி ஆவதில்லை! நாம் மற்ற மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம்!
நூல் விலை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்களுக்கு கூலியைக் குறைக்கின்றனர். இது கூலிக்கு நெய்து தரும் நெசவாளர்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டுகிறது.
பருத்தி விலையை உற்பத்தியாளர்கள் குறைக்க சொன்னாலும், பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் சாதாரண விவசாயிகளைச் சென்றடையவில்லை. பருத்தி பயிரிடும் விதர்பா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளே இதற்கு உதாரணம். பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளது. இதேதான் மற்ற பிரதான விவசாய விளைபொருட்களுக்கும் பொருந்தும். பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
தனியார்மயத்தின் விளைவாக பருத்தி ஏற்றுமதியின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டது. பன்னாட்டு, உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! இதனால் பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
நம் நாட்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகிறது. அதில் உள் நாட்டின் தேவை எவ்வளவு? அது போக உபரி எவ்வளவு? அல்லது பற்றாக்குறை எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட்டு, ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் அரசுக்கு கிடையாது. பன்னாட்டு ஏகபோகங்களுக்கும், இங்கிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இலாபம் தரும் விசயம் என்னவோ அதைத்தான் அரசு முடிவெடுக்கும். இதுதான் தனியார்மயக் கொள்கை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய பருத்தி கழகமும் (சி.சி.ஐ.,) மேற்சொன்ன விசயத்தைத்தான் நடைமுறைப்படுத்த முடியும். பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போது, விவசாயிகளிடம் வாங்கி அதிக அளவு இருப்பு வைத்து, தட்டுப்பாடு ஏற்படும் போது விலையை உயர்த்தி விற்கிறார்கள்!
படிக்க :
பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைக்காமல் ஒரு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் 130 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதன் மூலம் 355 லட்சம் பேல்கள் பஞ்சு உற்பத்தியாகிறது. நமது உள் நாட்டு சந்தைக்கு 375 லட்சம் பேல்கள் தேவைப்படுகிறது. ஆக, நமக்கே பற்றாகுறை 20 லட்சம் பேல்கள்!
பற்றாக்குறை அதிகமாவதால் எந்த அளவுக்கு ஏற்றுமதி ஆனதோ, அந்த அளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அப்படி தடாலடியாக அதிகமாக இறக்குமதியாகும் போது, உள் நாட்டு பஞ்சின் விலை அடிவாங்கிறது! அதனால், இறக்குமதி பஞ்சின் மீது அதிகம் வரி விதிக்க வேண்டும் என்ற குரல்களும் விவசாயிகள் தரப்பில் எழுகிறது! ஆனால் நெசவாளர்களோ இறக்குமதி பஞ்சின் மீது வரியை குறைக்கச் சொல்லிப் போராடுகிறார்கள்.
இதன் மூலம் உண்மையை மறைத்து விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்குமான முரண்பாடாக மாற்றி வேடிக்கை பார்க்கிறது அரசு .
ஒருபுறம் நெசவாளர்களையும், மறுபுறம் விவசாயிகளையும் ஒரு சேர பாதிப்படைய வைத்து ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் உள்ள கார்ப்பரேட்டுகளை வாழவைக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையைத்தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது என்பதை நெசவாளர்களும், தறித்தொழிலாளர்களும், விவசாயிகளும் உணர வேண்டியுள்ளது. அக் கொள்கையை வீழ்த்துவதற்கும், நம்நாட்டிற்கான தேவையை அடிப்படையாக கொண்ட சுயசார்பான கொள்கை மாற்றத்திற்காகவும் தங்களுக்குள்ளும், அனைத்து தரப்பு மக்களோடும் ஒற்றுமையைக் கட்டியமைத்து போராடும்போதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை நோக்கி செல்ல முடியும்.
வினவு செய்தியாளர்

R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion

When R.N. Ravi was the Governor of Nagaland, he disrupted the administration of the state government and caught fishes for the BJP’s allies. He filled the state administration with RSS cadres. As an Intelligence Officer, he approached Naga militant groups, degenerate it and announce a ceasefire. People celebrated the day when Governor Ravi left Nagaland. The press boycotted Ravi’s parting treat. Such a notorious and fascist stooge, R.N. Ravi has been duly performing his job as a henchman since he assumed office in Tamilnadu.

There were reports in the media that, Governor Ravi, on September 21, summoned Tamilnadu Law and Order DGP Sylendra Babu and Intelligence Bureau ADGP Davidson Devasirvatham and inquired about the protests against the Union Government in Tamilnadu and about the black flag protest by the DMK and its allies against the former Governor Purohit. The Governor used to summon the Chief Secretary if he needed any information about the government. But the new Governor unusually summoned the police officers. The DMK, which swung its horn against Banwarilal Purohit during the last ADMK’S Palanisamy regime, is now remaining mute.

Media reported about the Chief Secretary Irai Anbu’s circular to the heads of departments to keep ready the information regarding welfare schemes to be conveyed to the Governor. Following the media reports, the Chief Secretary claimed that it was a ‘normal practice’.

Read :

War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !

Kashmir: Saffronisation obliterating constitutional freedom

Article 167 of the Constitution permits the Governor to ask the State Government for certain details. But it is up to the Chief Minister of the state to provide the details the Governor asks for. The Governor’s direct call to the Secretaries of the state denotes interference in the functioning of the State Government. The Constitution of India does not allow this. The Governor’s subsequent actions have lamented and angered even the DMK allies.

In a statement, Thirumavalavan, President of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), said, “Meeting officials directly would call into question the credibility of the government elected by the people”. But the DMK is remaining silent.

A student of Chinmaya Vidyalaya School in Coimbatore committed suicide due to sexual exploitation by a school teacher. The people of that area continued to protest to arrest the school teacher and the Principal. The police threatened the parents of the deceased girl to receive the body while on the other hand gave the Principal time to escape by not arresting her. Due to continuous protest by the people, the police arrested the school Principal Meera Jackson, but released her within days. The police filed a case against the people who protested against this. Moreover, the police rolled out the red carpet for Arjun Sampath of the Hindu Makkal Katchi, who had come to disrupt the protest.

Police have registered two cases against Thirumurugan Gandhi of the May 17 movement, who participated in a protest against the shooting of fisherman named Rajkiran of Kottaipattinam, Pudukottai district by the Sri Lankan military in the sea. But the police were not bothered by the BJP’s protest against the same issue. Thirumurugan Gandhi openly said “In the current circumstances, the DMK government is being silent. State autonomy is questioning when the rights of the state government are being taken away. But the DMK doesn’t seem to be paying any attention. The Tamilnadu Police Department doesn’t seem to be in the hands of the TN Government. It is directly in the hands of the Union Government or its affiliates”.

This time, the police had put severe curbs on Muslim organisations that observe the day of Babri Masjid demolition as Black Day.

The police banned the hoisting of the Viduthalai Chiruthaigal Katchi flag at Morur in Salem district and instigated the dominant castes against the VCK cadres. The police later registered a case against the VCK party cadres who protested against it. Thirumavalavan alleged, “Only the regime has changed but not the scenes. Even though the DMK assumed power, the police is still in ADMK mentality”.

Police have registered a case under two sections against Tamizhaga Vazhvurimai Katchi chief Velmurugan for celebrating the birth anniversary of LTTE leader Prabhakaran by cutting cakes. Criticising this, he said, “The regime has changed but the scenes haven’t. Though the DMK assumed power, the situation continues as it did in the ADMK regime. The Tamilnadu police is pressing charges even against the leaders of the DMK allies”.

Various movements in TN, including farmers’ unions, protested against the Modi government over the killing of farmers by the son of the Union Minister of State in Uttar Pradesh. When Modi’s effigy was burnt in Mayiladuthurai, the BJP men said, “If Modi’s effigy is burnt, we will burn Lenin’s effigy in return”. But they were not arrested. Similarly, the BJP had a dispute in Tanjore in a event offering salute to the farmers. The police politely bid them farewell and suppressed the protesting farmers.

The invitation for the Bharathidasan University convocation ceremony carried the words “Azadi Ka Amrit Mahotsav”, to mark the 75th Independence Day. “The Tamilnadu government has dubbed these Hindi words as Suthanthira Thirunaal Amudha Peruvizha (STAP) in Tamil and has also advised that the Tamil phrase should be used. However, Bharathidasan university has violated it,” PMK Anbumani stated. “The use of Hindi slogan by the Bharathidasan University amounts to Hindi imposition. Who is controlling Bharatidasan University which does not respect the order of government of Tamilnadu”, he questioned.

In last October, Governor Ravi convened a meeting of Vice-Chancellors of the Universities and Deemed Universities and said that the New Education Policy should be implemented immediately. In reply to Tamilnadu Minister Ponmudi, who criticised the Three Language policy, the Governor highlighted the ‘special features’ of the New Education Policy at the stage of the convocation. He also challengingly spoke that the New Education Policy would make India an equitable and vibrant knowledge society.

There is a secret order from the ‘High Command’ to prepare a list of students who align with left-wing politics from all Government Colleges & Universities, especially from educational institutions in the metropolitan areas. While student organisations have been wiped out by years of systematic pressure in most educational institutions in Tamilnadu, they have now focused on targeting and suppressing a few unorganised frontline student activists.

The Governor, henchman of the Central Government, “has the power only to aid and advice the elected Government and not to change the decisions of the elected government or to take decisions on his own,” the court observed. R.N. Ravi is laying the foundation for a fascist regime in Tamilnadu by breaking all the rules and laws.

“As long as MK Stalin is there, the BJP won’t be able to enter TN; The RSS’s dream won’t be fulfilled,” some people are saying like that. This ostentatious empty talk is not new. During the 1999 parliamentary elections in which the DMK allied with the BJP, they said on the dais that “even if the DMK forms an alliance with the BJP, there will be no communalism in Tamilnadu as long as Kalaignar Karunanidhi is there”. It was the same Karunanidhi who called the RSS, the culprit behind Gujarat pogrom, as ‘social organization’ inorder to retain power and the post of ministers at the Centre. He called the organization a ‘social organisation’. He laid the foundation for the RSS-BJP. When it comes to position and power politics there exists only opportunism; and not ideology.

Read :

New Democracy – March 2022 | Magazine

Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!

A spy’s job is to penetrate the enemy country and create the foundation for his master, and then bring down the enemy State! That’s what R.N. Ravi is doing in Tamilnadu effectively. But many of us are in the day dream that this fascist invasion could be brought down with the cardboard knife called ‘election’.

The RSS – Hindutva (Brahminical) clique is waging a proxy war against Tamilnadu to establish a saffron-corporate fascist regime. The Intelligence Chief of this clique, R.N. Ravi, is trampling on all the values of the Government of Tamilnadu and creating a fifth army for themselves.

Therefore, the democratic forces and intellectuals of TN must get rid of the tendencies like ‘the DMK will take care of the BJP’, ‘Fascism can be prevented by bringing down the BJP in the upcoming parliamentary elections’. Even R.N. Ravi can be sent home only through the working class’s ground battle to bring down the Brahminical fascists.


Marudhu

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?

சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கியின் உதவி மேலாளர் மணிகண்டன் என்பவர் ஆண்டுக்கு இருபத்தி எட்டு லட்ச ரூபாய்வரை ஊதியமாக பெற்றவர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்துவிட்டு, தொடர்ந்து விளையாட நண்பர்கள், உறவினர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்தில் மோதல் அதிகரிக்கவே, மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றுவிட்டு, தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை திருவான்மியூரில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த டீக்காராம், அதிகாலையில் மூன்று பேர் துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப் போட்டு 1.25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியதைத்தொடர்ந்து விசாரணை செய்தது  போலீசு. அதில் டீக்காராமே தன் மனைவியுடன் சேர்ந்து பணத்தை திருடிவிட்டு, கொள்ளையர்கள் வந்து திருடிச் சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகப்படியான பணத்தை இழந்ததால், கடனை அடைப்பதற்காக இப்படியொரு வழியை தேர்வு செய்ததாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களுமே இந்த ஆண்டு தொடங்கிய முதல் வாரத்திலேயே  நடைபெற்றவை. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் (2020), தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் 30 பேர் வரை தற்கொலை செய்திருக்கக்கூடும் என்றது சென்னை உயர்நீதிமன்றம்.

படிக்க :

டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.
தெருக்களில் பணம் வைத்து சீட்டாடுபவர்களை, போலீசார் தேடிப்பிடித்துக் கைதுசெய்து அபராதம் விதிப்பதாக காட்டும் அதே தொலைக்காட்சி சேனலில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒருநாளில் மட்டுமே பலமுறை வந்து “ஈசியாக சம்பாதிக்கலாம்” என்று ஆசையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏழை மக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் அரசு லாட்டரியும் ஒருவித சூதாட்டமே எனக் கூறி 2003-ஆம் ஆண்டு லாட்டரி விற்பனையை தடை செய்தது தமிழ்நாடு அரசு. ஆனால் இன்று, எதற்கும் கட்டுப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளால் தொடங்கப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களை மிகப்பெரிய போதையில் ஆழ்த்தி கொன்று கொண்டிருக்கின்றன. “2019-ம் ஆண்டு கணக்குப்படி தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த நிறுவனங்களின் லாபம் 200 சதவீதம் அதிரித்துள்ளது” என்று இந்து குழுமத்தின் காமதேனு இதழ் குறிப்பிடுகிறது.
சீட்டாட்ட சூதாட்டம் போலவே, நடப்பு ஐ.பி.எல்-ஐ வைத்து நடக்கும் வீரர்களை தேர்வு செய்யும் சூதாட்ட விளையாட்டும் உள்ளது. கிரிக்கெட் மோகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் எளிதில் பலரையும் வீழ்த்திவிடுகிறது. “வீரர்களை கணிப்பதுதான் பிரச்சினை, சொற்ப பணம்தான், ஒரு டைம் பாஸூக்குக்குதான்” என இளைஞர்கள் பல காரணங்களை ‘சாதகமாக’ சொன்னாலும் ஒரு சூதாட்ட மனநிலைக்கு படிப்படியாக இவ்விளையாட்டுகள் அவர்களை தயார் செய்துவிடுகின்றன.
ஆன்லைன் சூதாட்ட போதையைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் தரகு கும்பல்கள் பல முளைத்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த அரசு என்பவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்; அதில், தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது சில ஆட்டங்களில் வெல்ல வைத்து பின்னர் பல லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டதாகவும் இந்த மோசடி செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, இரண்டு குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட பெருங்கடியைச் சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் மணிகண்டன்.
ஆன்லைன் ரம்மி விளையாடும்போது தொடக்கத்தில் ஒருசில ஆட்டங்களில் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றிப் பெறலாம் என்று நம்பி அடுத்தடுத்து கூடுதலான பணத்தைக் கட்டி விளையாடுவார்கள். ஆனால் யாரேனும் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவதும் மற்றவர்கள் தோல்வியடைந்து பணத்தை இழப்பதும்தான் சூதாட்டத்தின் சிறப்பு. சூதாட்டப் போதை இதை பரிசீலிப்பது இல்லை. இதனால் அதிகப் பணத்தை கட்டி இழந்தவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
000
இந்தியாவில் சூதாடினால், சூதாட்ட பொதுச் சட்டம் 1867-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தமிழக விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பணம் வைத்துச் சீட்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதே சூதாட்டம் ஆன்லைனில் நடைபெற்றால் அது குற்றமாக வரையறுக்கப்படுவதில்லை.
ஏஸ்2த்ரீ, போக்கர்டங்கல், பாக்கெட் 52, ‘கேஸ்டோ க்ளப்’, போக்கர், ஷீட்டிங் பைட்டர்ஸ்… இப்படி பல பெயர்களில் இந்தியாவில் 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு செயலிகள் உள்ளன. இவற்றை ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்லி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம் போன்ற சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
அக்டோபர் 2020-ஆம் ஆண்டு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தில், “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு என்ற மிகக்கொடிய சமூகக் கொடுமையை கூடிய விரைவில் ஒழிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக குறுக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியதோடு, தடை செய்யப்பட வேண்டிய 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணையதளங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலையும் தனது கடிதத்தில் இணைத்திருந்தார். அதற்கு மோடி அரசு இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்காக சட்டமியற்றும் பாசிச மோடியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
000
ஒன்றிய அரசு, “ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்” கொண்டு வராதவரை மாநில அரசுகள் எப்படிப்பட்ட தடைச்சட்டம் போட்டாலும் அவை நீதிமன்றங்கள் மூலம் செல்லாததாக்கப்படும்; ஆக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் ஆன்லைன்  சூதாட்ட கொலைகளை தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படவும் தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் வழிவகை செய்தது. அச்சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக அவற்றின் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. ஆன்லைன் கார்ப்பரேட் கம்பெனிகளின் தரப்பில் ஒருமுறை ஆஜராகுவதற்கே பல லட்சம் கட்டணம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஆஜராகினர். தமிழக அரசின் தரப்பிலோ இரு வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டு அரசுக்கு மக்கள் மீது என்ன அக்கறை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந்த வழக்கினை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போடப்பட்ட தடையானது அரசியலைமைப்புச் சட்டம் 19(1)-G-க்கு எதிரானது என்ற ‘வரலாற்று சிறப்புமிக்க’ தீர்ப்பை வழங்கியது. அச்சட்டப் பிரிவானது தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தை செய்யும் சுதந்திரத்தின் மீதான நியாயமான கட்டுப்பாடுகளைப் பற்றிக் கூறுகிறது.
அப்படி என்றால் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்காக யாரும் கொல்லப்படலாம் என்பதே 19(1)-G குறித்து உயர் நீதிமன்றத்தின் புதிய சட்ட விளக்கமாக (interpretation) இருக்கிறது.
“ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல” என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்துள்ளது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் “ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்” என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
000
1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஒன்றிய அரசு மட்டுமின்றி எல்லா மாநில அரசுகளும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு போட்டிப் போட்டுக்கொண்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகளை வாரிக்கொடுத்து வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு உகந்தவைகளே சட்டங்களாக்கப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு ஒவ்வாத சட்டங்களும் அரசின் வடிவங்களும் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன.
இதிலிருந்து நோக்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது என்பது சாதாரண விசயம் அல்ல. கடும் கட்டுப்பாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் சீனாவில் கூட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்படவில்லை; மாறாக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க முடியும் என்று ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் உலகுதழுவிய பலத்தை மட்டும் காட்டவில்லை; இதுபோன்ற விளையாட்டுகள் முதலாளித்துவ அரசுகளுக்கும் தேவை என்பதையே காட்டுகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. “ஆன்லைன் பாலுறவு” (Online Sex) எனும் புதிய வக்கிரம், ஆபாச இணையதள முதலாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ தங்களை ஒரு ஆபாச இணையதளத்தின் இணைப்பில் இணைத்துக் கொண்டு ஆன்லைனிலேயே “வீடியோ கால்” மூலம் மெய்நிகர் உறவுகொள்ளும் ஒரு குரூரம்; இதுவரை கேள்விப்பட்டிராத வக்கிரம்; இன்று இளைஞர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மியைப் போல இதிலும் மோசடி கும்பல்களின் கைவரிசையால் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் அசிங்கப்பட்டுப் போவோமோ என்று பலர் புகார் கொடுப்பதில்லை.

படிக்க :

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்

ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

இவ்வாறு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நுகர்வுவெறிப் பண்பாடு அனைத்து வகைகளிலும் திட்டமிட்டு பரப்பப்படுவதானது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு தீனிபோடுவதாக மட்டும் அமையவில்லை. முதலாளித்துவ சுரண்டலால் பாதிக்கப்படும் மக்களை, தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி அவர்களது போராட்ட உணர்வை காயடிக்கிறது.
“என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் ! உசுரு இருக்கு வேறென்ன வேணும்.. உல்லாசமா இருப்பேன்” என்ற திரைப் பாடல் வெளிப்படுத்தும் உள்ளடக்கமும் இதிலுள்ள மிருகப் பண்பாட்டை, அடிமைத்தனத்தை உச்சுக்கொட்டி நம்மில் பலர் இரசிக்க முடிவதும் அதற்கு எடுப்பான உதாரணங்கள். இதைத்தான் எல்லா முதலாளித்துவ அரசுகளும் விரும்புகின்றன. அம்பானி-அதானி தாசர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன!
சீனாவின் விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கப்பலில் டன் டன்னாக அபினை இறக்குமதி செய்து சீன இளைஞர்களை போதையில் ஆழ்த்தியது. அதற்கெதிராக சீனர்கள் நடத்திய போரே அவர்களின் புரட்சிக்கு வித்திட்டது. எனவே போதை, ஆபாச சீரழிவிற்கு எதிரான போராட்டமும் மக்கள் விடுதலைக்கான போராட்டமும் வேறுவேறல்ல.
இன்று “ஆன்லைன் மார்க்கமாக” முதலாளித்துவம் நம் மீது தொடுக்கும் சீரழிவுகளை – தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், இத்தகைய சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரம்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. மனிதனை அடிமையாக்கி மனிதனுக்கே விற்பனைப் பொருளாக்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தையும் அதற்கு அடிப்படையாக உள்ள ஏகாதிபத்திய பொருளாதாரத்தையும் ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட கம்யூனிச பண்பாட்டை மக்களிடம் கொண்டுசெல்லும்போதுதான் சமூகத்தை காப்பாற்ற முடியும்.


மருது

முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

முதல் பாகம் : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
இரண்டாம் பாகம் :
பார்வையாளர்களைப் பற்றி இவர் என்ன கருதி, எந்த ஆதாரமுமின்றி படம் எடுத்துள்ளார் என ஆச்சரியமாக உள்ளது. விடுபட்ட புள்ளிகளை இணைத்து புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு முட்டாள்களா படம் பார்க்கும் அனைவரும்? ‘ஜேஎன்யூ பேராசிரியர்’, ‘ராதிகா மேனன்’, போன்றோர் தலைமறைவு பயங்கரவாதிகளுடன் ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்கள் என சித்தரிக்கிறார். படத்தில் தேசபக்தனாக காட்டப்படும் நபர் தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்றபோது அந்தப் பேராசிரியரும் ஒரு பயங்கரவாதியும் ஒன்றாக, நெருக்கமாக உள்ள புகைப்படத்தைப் பார்ப்பதாக காட்டப்படுகிறது, அதாவது, அவர்கள் காதலர்கள் !
இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள், படம் என்ன சொல்ல வருகிறதோ அதையே அதே அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும்! இதே போலத்தான், காஷ்மீரிலான அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் புறந்தள்ளப்படுகிறது! தேர்தலைப் பற்றி பேராசிரியர் பேசும்போது அரசியலை பாதிக்கின்ற சிக்கல்களை தேர்தல் பூதாகரமாக்கிக் காட்டுகிறது என்கிறார். ”நீங்கள் அரசாங்கத்தை வில்லனாக்கினால் தான் அதனுடனான பேச்சு வார்த்தைகளில் நீங்கள் கூடுதல் அதிகாரத்தைப் பெற முடியும்” என பேராசிரியர் சொல்கிறார். இதற்கு நமது தேசபக்தனாக காட்டப்படும் நாயகன், “அது பேச்சு வார்த்தையல்ல, மிரட்டிப் பணிய வைப்பதாகுமே” என பௌயமாகக் கேட்கிறார். அதற்கு, “அதுதான் அரசியல்” என பேராசிரியர் பதில் கூறுகிறார்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அதை ஆழமாக சொல்ல வேண்டும் என்ற பாணியில் இப்பட வசனங்கள் உள்ளன. ஆனால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. அரசு தான் செய்கிற அரச பயங்கரவாதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையே ‘அரசாங்கத்தை வில்லனாக்க வேண்டும்’ என கேவலப்படுத்தும் வகையில் வசனம் அமைக்கப்படுகிறது. இது சொல்லவருவது என்ன வென்றால், அரசாங்கத்தை வில்லனாகப் பார்க்க வைக்கக் கூடாது என்றால், அரசு பயங்கரவாத செயலைச் செய்யும்போது எந்தத் தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே!

படிக்க :

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

எந்த ஒரு ஜனநாயகத்திலும் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுத்தால்தான் அது ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால் கதாநாயகன், “அது பேச்சு வார்த்தையல்ல, மிரட்டிப் பணிய வைப்பதே” எனக் கூறும்போது மாற்றுக் கருத்துக் கூறுவதையே மிரட்டிப் பணிய வைப்பது என மக்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். இதற்கு பதில் கூறும் அக்னிகோத்ரியின் புனைவுப் பேராசிரியர், “அது தான் அரசியல்” என்பதன் மூலம் மாற்றுக் கருத்துக் கூறுவதோ அல்லது அரசாங்கத்தை அதனது செயலுக்கு பொறுப்பேற்கச் சொல்வதோ சொந்த ஆதாயத்துக்குதானே தவிர அது குடிமகனின் உரிமையல்ல என்பதையே இங்கு இயக்குனர் சொல்கிறார்.
அரசாங்கம் தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்வது அருவமான கருத்தல்ல. காஷ்மீர பண்டிட்டுகளின் போராட்டத்தை அங்கீகரித்து அதற்கு அரசாங்கம் நீதி வழங்க வேண்டும் என்பதே மையமானது. இந்த 30 ஆண்டுகளில் பாஜக ஆட்சி 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. ஆனால் பண்டிட்டுகள் அகதிகளாக வெளியேற்றப்பட்டதை நிறுவும் வகையில் நீதித் துறை கமிசன் எதுவும் நிறுவப்படவில்லை. அகதிகள் மறுவாழ்வுத் திட்டம் காகிதத்தில் மட்டும் உள்ளதே தவிர நிஜ வாழ்க்கையில் இல்லை. 2020-ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீர் மாநில தொழில் துறைக்கு 3000 ஏக்கர் நிலம் வழங்கிய அரசு, தங்களது மறு குடியமர்வுக்கு 300 ஏக்கர் நிலம் கூட வழங்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! ஏற்கனவே தங்களிடம் காஷ்மீர் மாநில நிரந்தரக் குடியுரிமைச் சான்று உள்ளதை யாரும் மறுக்க முடியாது என்ற நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு தனிச் சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியது தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என பண்டிட்டுகள் கூறுகின்றனர்.
பத்ரி ரெய்னா என்ற காஷ்மீர பண்டிட், இந்துத்துவ வலதுசாரியினருக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகளை மறுகுடியமர்த்தும் நோக்கம் அறவே இல்லை என்று கூறுகையில், செய்தியின் உயிராதாரத்தைப் பிளந்து காட்டுகிறார். பண்டிட்டுகளின் சிக்கல் தொடர்ந்து நீடிக்க வேண்டுமே தவிர, அவர்களை மறுகுடியமர்த்தி சிக்கலைத் தீர்த்து விட்டால் காஷ்மீர இசுலாமியர்களை வலதுசாரி இந்துத்துவ கும்பல் குற்றம் சாட்ட முடியாதல்லவா என மேலும் கூறுகிறார்.
எந்தக் கூச்சமுமின்றி மிக வெளிப்படையாக போராளிகள் நடத்திய கொடூரமான வன்முறைகளை மகிழ்வோடு காட்டிய இந்தப் படத்தில் அரசு நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டது பற்றிப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில தவிர்க்கவியலாத சூழலில் நடந்துவிட்ட துயர சம்பவம் என போகிற போக்கில் சொல்கிறது.
காட்சியாக்கப்படவில்லை! நடிமார்க் (Nadimarg) படுகொலைச் சம்பவம் படத்தின் இறுதிக் காட்சி! போராளிகளால் 24 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்! இயல்பாகவே இங்கு புரிந்து கொள்ள முடியாத புதிர் என்னவென்றால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் என சொல்லப்படும் இப்படத்தில் சோபோர் படுகொலை ஏன் காட்டப்படவில்லை என்பதே! இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இந்த சோபோர் படுகொலை சம்பவத்தில் 43 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வெறுமனே சுடப்பட்டு மட்டும் சாகவில்லை! மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல கடைகளுக்குள் விரட்டப்பட்டு, சுடப்பட்டு, அந்த உடல்களில் பாரஃபின் எண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டதோடு, அந்தக் கடைகளுமே தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. (இப்படுகொலையாளிகள் அனைவரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது தனியே எழுதப்பட வேண்டியது)
அரைகுறை உண்மையோடு ஒரு பக்க சார்பான கதையாடலை மட்டும் காட்சிப் படுத்திய இந்த திரைப்படக் கதையாடலை இதுவே முழுக் கதையாடல் என்கிறது படம். இதில் முரண் நகை என்னவென்றால், ஒரு கட்டத்தில் அனுபம் கேர் (படத்தில் முக்கிய பாத்திரம்) “பொய்ச் செய்திகளைக் காட்டுவது உண்மையை மறைப்பது போல் மோசமானதல்ல” என உளரிக் கொட்டியதுதான்! (இதுவே படத்தின் யோக்கியதையைத் தோலுரிக்கவில்லையா?).
இதையெல்லாம் சொன்னாலும் நமக்கு விருப்பமில்லாத, இன்னும் அபாயகரமான ஒரு உண்மையை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நடக்கும் உண்மை என்னவென்று தெரிந்தவர்களுக்கு இப்படம் மிக மோசமாக, வெளிப்படையாகவே ஒரு சார்பானது எனப் புரியும்தான். வன்முறையை மற்றும் எளிமையான பிரச்சாரத்தை இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது பற்றி அக்னிகோத்ரி மிகத் துள்ளியமாக கணித்துள்ளார். பிரச்சாரம் என்பது ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒரு கலை. இதில் அக்னிகோத்ரி ஆற்றல் மிக்க கலைஞன்.
அக்னிகோத்ரியின் ஒளிப்பதிவு, காட்சிக் குறியீடுகளை ஒரு தார்மீக சாதனமாகப் பயன்படுத்துகிறது – வீட்டின் தரைகள், சாலைகள், மண் தரையில் இரத்தம் கசியும் நீண்ட, நீடித்த காட்சிகள் உள்ளன. ஒரு போராளியின் முகத்தில் அவரது செயல்களைப் போல கேமரா தங்கவில்லை. முகத்தில் துப்பாக்கியால் சுடப்படுவது மீண்டும் மீண்டும் வந்தாலும், ஒரு கட்டத்தில், அது சொல்ல வரும் செய்தியின் ஆற்றலை இழந்து விடுகின்றன. இது எதிர்பார்த்ததே! இதற்கு முரண்பாடாக பய பீதியூட்டப்பட்ட மக்களின் முகங்களில் கேமரா மிக நீண்ட நேரம் தங்குவது, எதிர்பார்த்த உணர்வைத் தூண்டுகிறது.
அனுபம் கேரின் பாத்திரம் கனமானதாக வடிவமைக்கப்பட்டாலும் பெரும்பாலும் கேலிக்குறியதான உணர்வே தோன்றுகிறது. பேராசிரியராக திறமையாக நடித்துள்ள பல்லவி ஜோஷியை ஒரு கனவுக் காட்சியில் சிவப்பு நிறத்தில் படம் பிடிக்கும் கேமரா அவரை மயக்கும் மோகினியாகவும் பேயாகவும் காட்டுகிறது.
24 பொதுமக்கள் கொல்லப்படும் கடைசிக் காட்சியை, ஒவ்வொரு தனி நபராக சுடப்பட்டு சாக்கடையில் விழுவதை ஒவ்வொன்றாகப் பார்க்க வைக்கும் அக்னிகோத்ரி, இறந்த உடல்களின் உச்சியில் சிவா என்ற குழந்தை இறந்து கிடப்பதைக் காட்டுகிறார். கேமரா குழந்தையின் முகத்தில் அப்படியே நிற்கிறது. ஒரு அசாத்தியமான காட்சிக் கதையை உருவாக்குகிறது – அது கேட்கிறது, ஒரு குழந்தை மிகவும் சர்வ சாதாரணமாக கொல்லப்பட்டது பற்றி யார் எதையும் கேள்வி கேட்கத் துணிவார்கள்?

படிக்க :

பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !

‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்

நாஜி காலகட்டத்தின்போது, அவர்களின் பிரச்சார அடிப்படையான ஒஸ்ஜெமைன்ஸ்சாஃப்ட் – அதாவது தேசிய அளவில் எல்லோரையும் ஒன்றாக்குவது – என்பதன் மீதான விமர்சனமே, அது சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து அனைவரையும் ஒன்றாக்குகிறது என்பதே! இந்த திரைப்படத்தில் காஷ்மீர பண்டிட்டை ஒவ்வொரு இந்தியனுக்குமான குறியீடாக பயன்படுத்துகிறார் அக்னிகோத்ரி. இசுலாமியர்களை மற்றவர்கள் என்பதாக ஒன்றாக்கி, அவர்களால் இந்துவுக்கு ஆபத்து எனக் காட்டி, இந்துத்துவ மேலாதிக்கத்தை நிறுவும் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்.
ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் உள்ள தீவிரவாதிகள் கும்பல், அக்கிரமிப்பும் வன்கொடுமையும் மிக்க இசுலாமியர்களிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க இந்து சமூகம் எப்படி ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது. இந்த நச்சுத் தன்மை கொண்ட கற்பனைக் கருத்துக்களை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.
அடிப்படையே இல்லாத ‘லவ் ஜிகாத்’ என்பது பற்றி பய பீதியூட்டி அதற்கு எதிரான சட்டத்தை இயற்றியது போல, பாதுகாப்பற்ற, பலவீனமான இந்துப் பெண் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என அக்னிகோத்ரி எடுத்துக் காட்டுகிறார். வலது சாரி ஊடகங்களால் தவறான கருத்துக்கள் மலிந்து கிடக்கையில், மிக சிக்கலான உண்மைகளை அக்னிகோத்ரி மிக கவனமாக சிதைத்து அழிக்கிறார்.
இரண்டாம் உலகப் போருக்கு முன் எழுதும்போது, அடௌஸ் ஹக்ஸ்லி சொல்கிறர், “மிக பிரபலமான, வெற்றிகரமான மக்கள் திரள் இயக்கங்களின் உணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் பிரச்சாரமானது ஆற்றலையும் திசைவழியையும் தரலாம். ஆனால் அப்படிப்பட்ட இயக்கங்களை பிரச்சாரத்தால் மட்டும் உருவாக்கிவிட முடியாது. ஏற்கனவே உள்ள நீர்நிலையிலிருந்து கால்வாய் மூலம் நீரைக் கொண்டு செல்பவன் தான் பிரச்சாரகன். நீர் இல்லாத வறண்ட நிலத்தில் அவன் தோண்டுவது வீண் வேலை”.
வட இந்தியப் பகுதியிலுள்ள திரையரங்குகளில் படத்தினை உணர்ச்சிபூர்வமாக எதிர்கொள்ளும் இந்து ஆண்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்வோம் என கூச்சலிடும், “முல்லெ காட்டெ ஜாயங்கே, ராம் ராம் சில்லயெங்கே” (“Mulle kaate jayenge, Ram Ram chillayenge,”) என கத்துகிறார்கள். அக்னிகோத்ரி வெறுப்பு என்னும் மிகப் பெரும் கால்வாய் வெட்டியுள்ளார் எனப் பார்க்கிறோம். இப்போது நமக்குத் தொந்தரவான கேள்வி என்னவென்றால், இந்த வெறுப்பு எவ்வளவு ஆழமாக ஊடுறுவப் போகிறது என்பதே!
(முற்றும்…)

கட்டுரையாளர் : நவோமி பார்டன்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

ந்திய அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைக்கெதிரான செய்திகளை தணிக்கை செய்வது; இணையத்தை மாதக்கணக்கில் முடக்கிவைப்பது; முற்போக்கு பத்திரிகையாளர்கள் மீது கடுமையான பிரிவில் வழக்குப் பதிவுசெய்வது; கைது செய்து சிறை – சித்திரவதைக்குட்படுத்துவது – என காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை இறுக நெறித்துக் கொண்டிருந்த மோடி அரசு, தனது அடியாட்படையை வைத்துக் கொண்டு தற்போது அடுத்தகட்ட தாக்குதலுக்குச் சென்றிருக்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டுவரும், சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய பத்திரிகையாளர்கள் அமைப்பான காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தை (Kashmir Press Club) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அடிவருடி பத்திரிகையாளர் குழுவொன்று நரித்தனத்தோடு “ஆட்சிக் கவிழ்ப்பு” பாணியில் கைப்பற்றிக் கொண்டுள்ளது.
000
ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையடுத்து, அம்மாநிலத்திலுள்ள அனைத்து சங்கங்களின் பதிவையும் இரத்து செய்த காஷ்மீர் நிர்வாகம், சொசைட்டி பதிவு சட்டம் 1860-ன் கீழ் மீண்டும் பதிவை புதுப்பிக்குமாறு கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் மே முதல் வாரமே மறுபதிவிற்காக விண்ணப்பித்தது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம். இதற்கிடையில், ஜூலை 14-ம் தேதியோடு தனது நிர்வாகக் குழுவிற்கான பொறுப்புக் காலம் முடிவடைந்துவிட்டதால், தேர்தலின் மூலம் புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
ஆனால், பதிவுரிமை வழங்கப்பட்டாத நிலையில், தேர்தல் நடத்துவது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதன்பிறகு நீண்ட நாட்கள் கழிந்த பின்னர்தான் டிசம்பர் 29-ம் தேதியன்று (2021) சங்கப் பதிவாளரிடமிருந்து தனது பதிவுரிமையைப் பெற்றது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம். அத்தோடு சென்ற ஜனவரி 14-ம் தேதியன்று (2022) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் தேதியையும் (பிப்ரவரி 15) அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்திலேயே, மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பற்றி குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) அளிக்க வேண்டிய சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கை வரும்வரை மன்றத்தின் பதிவுரிமையை முடக்குவதாக தெரிவித்தது பதிவாளர் அலுவலகம்.
பதிவுரிமை கொடுத்துவிட்டு தற்போது இப்படி திடீரென முடக்குவது குறித்து, அவுட்லுக் பத்திரிகையிடம் பேசிய சங்கப் பதிவாளர் மெஹ்மூத் அஹ்மத் ஷா “காஷ்மீர் பத்திரிகையாளர் சங்கத்தின் மறுபதிவை நிறுத்துமாறு துணை ஆணையரிடமிருந்து தகவல் கிடைத்தது. அதன்படிதான் நான் செயல்பட்டேன்” என கூறினார்.
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் மட்டுமல்லாமல், 2019-ம் ஆண்டு சிறப்புரிமை இரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் பார் கவுன்சில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகள் என பல்வேறு சிவில் அமைப்புகளுக்கு பதிவுரிமை வழங்காமல் இழுத்தடித்து வருவதும் அதற்கெல்லாம் ஒரு காரணம் சொல்லுவதும் தொடர்ந்து வருகிறது. பெயரளவிற்கான ஜனநாயக நிறுவனங்களும் ஒழித்துக் கட்டப்பட்டு முற்றுமுழுதாக இராணுவ சர்வாதிகாரத்தின்கீழ் காஷ்மீர் உள்ளது.
000
இந்நிலையில்தான், ஜனவரி 15-ம் நாள் காலை ஆயுதந்தாங்கிய போலீஸ்காரர்கள், துணை இராணுவப் படையினரின் உதவியுடன் ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்துக்குள் நுழைந்த ஒரு பத்திரிகையாளர் குழு அலுவலக நிர்வாகிகளை மிரட்டியது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள், அவர்களை யார் என கேட்டதற்கு மன்றத்தின் தேர்தலை நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘இடைக்கால கமிட்டி’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.
‘இடைக்கால கமிட்டி’ என இவர்கள் தங்களுக்குத் தாங்களே நாமகரணம் சூட்டிக் கொண்டார்களே ஒழிய, உண்மையில் காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் இப்படியொரு அமைப்பைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டு, போலீசு – துணை இராணுவப் படையின் உதவியோடு மன்றத்தின் அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டது சலீம் பண்டிட் என்பவரின் தலைமையில் வந்த ஒரு சிறுகும்பல்.
பின்னர் மன்ற அலுவலகத்தில் சலீம் பண்டிட் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்குப் பிறகு தன்னை தானே சங்கத்தின் “இடைக்காலத் தலைவர்” என அறிவித்துக் கொண்ட சலீம், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சங்க அலுவலகத்தை பலவந்தமாக நாங்கள் கைப்பற்றியதாக கருத வேண்டாம். நாங்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்கள். இடைக்காலத் தலைவராக நானும், பொதுச் செயலாளராக டெக்கான் ஹெரால்டின் (Deccan Herald) பணியக தலைவர் சுல்பிகர் மஜித்-உம், பொருளாளராக உள்ளூர் தினசரி நாளிதழ் கத்யாலின் (Gadyal) ஆசிரியர் அர்ஷித் ரசூல்-உம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எங்கள் தலைமையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்” என அறிவித்தார்.
மேலும், “காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களாக யார் இருக்க முடியும், அவர்கள் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க தகுதியானவர்களா, சங்கத்தில் உறுப்பினராக இருக்க என்ன தகுதிகள் இருக்க வேண்டும் போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க பல்வேறு குழுக்களை அமைப்போம்” என்றும் சொல்லி பல புதிய விதிகளையும் அறிவித்தது அக்கும்பல்.
யார் இந்த சலீம் பண்டிட்? ஜம்மு காஷ்மீர் சிறப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டபோது, காஷ்மீரின் தன்னுரிமைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மீது மோடி அரசின் அடக்குமுறை மூர்க்கத்தனமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலத்தில், செல்லப் பிள்ளையாக அரவணைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுள் ஒருவர்தான் இந்த சலீம் பண்டிட்.
பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஒருவரை பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பாவுடன் (Lashkar-e-Taiba) தொடர்புப்படுத்தி, அவரது பத்திரிகையில் ஜிஹாதி பத்திரிகையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவதூறு செய்த சங்கிதான் இந்த சலீம் பண்டிட். ஊடக சகோதரத்துவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியதாக இந்த சலீம் பண்டிட்டை 2019-ம் ஆண்டே சங்க உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கிவிட்டது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம்.
000
சிறப்புச் சட்ட ரத்துக்கு பின்பு, பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் மோடி அரசு தொடுத்துவரும் அடக்குமுறையை எதிர்த்துக் குரல் எழுப்பியது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம்.
மேலும், இம்மன்றம் நிறுவனம் சாராத பத்திரிகையாளர்கள் (Freelance Journalists) மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கான புகலிடமாக இருப்பதோடு, இளம் பத்திரிகையாளர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் சந்தித்து அரசியல் விவாதத்தில் ஈடுபடும் இடமாகவும் விளங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் குழுக்களின் கூட்டங்களுக்கு இந்த மன்றத்தின் அரங்கம் பயன்பட்டது. எனவேதான், இம்மன்றத்தை தனது அல்லக்கை சலீம் பண்டிட் போன்றவர்களை வைத்து கைப்பற்றிக் கொண்டுவிட்டது சங்க பரிவாரக் கும்பல்.
ஆட்சிக் கவிழ்ப்பை ஒத்த இந்த சதியானது “ஊடக ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். இதுபோன்ற சம்பவங்களை தடுக்காமல் அனுமதித்தால், அது எதிர்காலத்தில் ஊடக ஜனநாயகத்துக்கே பெரும் ஆபத்து” என எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா (Editors Guild Of India) என்ற பிரபல பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் மும்பை பத்திரிகையாளர் மன்றம்  (Mumbai Press Club), டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் (Delhi Union Of Journalist) உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் இதற்கெதிராக குரல் கொடுத்துள்ளன.
000
ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தின் ஆதரவுடன் காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உட்பட காஷ்மீரைச் சேர்ந்த பல பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
“கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவித்திருந்த நாளில், சில பத்திரிகையாளர்கள் மன்றத்துக்குள் நுழைந்து மன்ற உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக வைத்து மன்றத்தை வலுக் கட்டாயமாகக் கைப்பற்றினர். இந்த செயல் நடைபெறுவதற்கு முன்பே அங்கு ஏராளமான போலீசும், துணை இராணுவத்தினரும் ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்” என பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.
000
பாசிஸ்டுகள் ஒருபோதும் விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ சகித்துக் கொள்வதில்லை. காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என மோடி அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
படிக்க :
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
அரசை விமர்சித்ததாக, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் (2021 விவரத்தின்படி) தேசப் பாதுகாப்புச் சட்டம், ஊஃபா போன்ற ஆள்தூக்கி கொடுஞ்சட்டங்களின் கீழ் 150-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 20 சதவிகிதம் வழக்குகள் 2020-ம் ஆண்டில் மட்டும் போடப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை பா.ஜ.க. ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்பது ஏதோ மக்களின் தனித்த ஒரு பகுதியினர் மேல் செலுத்தப்படுகின்ற அடக்குமுறை அல்ல. அது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.
காவி – கார்ப்பரேட் பாசிச இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பெரும்பாலான மைய ஊடகங்கள் பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக மாறிவிட்டன. அப்படியிருக்கையில், பாசிஸ்டுகளுக்கு விலைபோகாத, அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாத ஜனநாயக உணர்வுள்ள பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர். அவர்களுக்காக குரலெழுப்ப வேண்டியது ஜனநாயக சிந்தனை கொண்ட நம் அனைவரின் கடமையாகும்.

ஆதிரை