Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 442

நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

ழைகள், தாய்மொழியில் கல்வி கற்பவர்கள், தனியார் தனிப்பயிற்சி நிலையங்களில் சேருமளவிற்கு வசதியற்றவர்கள் இவர்களுக்கெல்லாம் மருத்துவராகும் ‘‘தகுதி” கிடையாது என்ற புதிய மனுநீதியை இந்திய சமூகத்தின் மீது உச்ச நீதிமன்றமும் நடுவண் மோடி அரசும் நீட் தேர்வின் வழியாகத் திணித்து வருகின்றன.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்ட விதமும், அத்தேர்வு முடிவுகளும் இந்த அநீதியை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதால், நீட் தேர்வை ஆதரிக்கும் கல்வியாளர்களால்கூட இந்தக் கசப்பான உண்மையை மறுக்க முடியவில்லை.

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 12 இடத்தைப் பிடித்த சென்னை மாணவி கீர்த்தனா, இத்தேர்வை எதிர்கொள்வதற்காகத் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது தனது மேனிலைப் பள்ளிப் பருவம் முழுவதும் தனிப் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்.

இத்தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி என்ற பீகார் மாணவி, பள்ளிக்குச் செல்வதைக்கூடத் தவிர்த்துவிட்டு, டெல்லிக்குச் சென்று தனிப் பயிற்சி எடுத்திருக்கிறார். அம்மாணவி +2 பொதுத் தேர்வை எழுதுவதற்குப் போதிய வருகைப் பதிவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, நீட் தேர்வில் அவர் படைத்த ‘‘சாதனையைக்” காட்டி அக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியது, பீகார் அரசு.

நீட் தேர்வில் முதல் நூறு இடங்களைப் பிடித்த மாணவர்களுள் 17 பேர் தங்களிடம் பயின்றவர்கள் என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது, சிறீ சைதன்யா தனியார் பயிற்சி மையம். முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்களுள் 53 பேர் தங்களிடம் பயின்றவர்கள் என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது, நாராயணா மெடிக்கல் அகாடமி.

இத்தகைய விளம்பரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களைக் கொண்டு பார்த்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்ந்திருக்கும் மாணவர்களுள் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்ளாத மாணவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறிவிட முடியும்.

அதேபொழுதில், பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதும், தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிலுமளவுக்கு வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்.

*****

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் மட்டுமே நடத்தப்படும் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஒருதலைப்பட்சமானது என்பது ஒருபுறமிருக்க, அத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பிலும்கூட ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பதும் 60 இடங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் நீட் தேர்வு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டின.

நீட் தேர்வு முடிந்தவுடனேயே, தமிழ் வழி வினாத்தாளில் 49 தவறுகள் இருப்பதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். அதற்குப் பதில் அளிக்காமல், அலட்சியமாகவும் மவுனமாகவும் இருந்து தமிழக மாணவர்களின் கழுத்தை அறுக்க முயன்றது சி.பி.எஸ்.இ.

தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் நலன் கருதி சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனால் தொடரப்பட்ட வழக்கை, சி.பி.எஸ்.இ., சட்டப்படியும் அணுகவில்லை, அறத்தின்படியும் அணுகவில்லை. மாறாக, இந்த வழக்கை சதிகளின் மூலம் முறியடிக்கவே முனைந்தது.

ஜூன் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது, சி.பி.எஸ்.இ. அன்றுதான் இந்த வழக்கும் விசாரணைக்கு வரவிருந்தது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, மதியம் 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு வெளியிட்டு, வழக்கைச் சீர்குலைக்க முயன்றது, சி.பி.எஸ்.இ.

மேலும், விசாரணையின்போது, ‘‘தேர்வு நடத்துவது மட்டும்தான் தனது பொறுப்பு, வினாத்தாட்களைச் சரி பார்ப்பது எல்லாம் தமது வேலையல்ல எனப் பொறுப்பின்றியும் திமிராகவும் வாதாடியது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்திடம் அளித்திருந்தது. எனினும், அந்த உத்தரவாதத்தைக் காற்றில் பறக்கவிட்டு, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, முதல்கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடித்துத் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் துரோகமிழைத்தது, எடப்பாடி கும்பல்.

இவ்வழக்கு விசாரணையில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டு, ‘‘அக்கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும், கலந்தாய்வை நிறுத்திவைத்து புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது மதுரை உயர் நீதிமன்றம்.

ஆனால், மேல்முறையீட்டில் இத்தீர்ப்பை அங்கீகரிக்க மறுத்துவிட்டதன் மூலம் ஏறத்தாழ 24,000 மேற்பட்ட தமிழக மாணவர்களின் நம்பிக்கையைக் கொடூரமாகச் சிதைத்தது, உச்ச நீதிமன்றம்.

‘‘நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்சினை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், வினாத்தாளில் இருக்கும் ஆங்கில வினாக்களே இறுதியானது என்ற தேர்வு விதி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது சி.பி.எஸ்.இ.

தாய்மொழி வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தரப்படும் வினாத்தாளைப் புரிந்துகொள்ள இயலாது என்பதால்தான், தத்தமது தாய்மொழியில் நீட் தேர்வை எழுத விருப்பம் தெரிவிக்கிறார்கள். தமிழ் வழி வினாத்தாளைப் பிழையின்றித் தயாரிப்பதைத் தட்டிக் கழித்திருக்கும் சி.பி.எஸ்.இ., தனது தவறை, குற்றத்தை மறைத்துக் கொள்ள, தேர்வு விதியைக் காட்டி தமிழக மாணவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது. சி.பி.எஸ்.இ.யின் இந்த வாதமும், அதனை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, குரூரமானதும்கூட.

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கி வைத்துக்கொண்டு, மருத்துவப் படிப்பில் பார்ப்பன சாதியினர் செலுத்தி வந்த ஆதிக்கம் நீதிக் கட்சி ஆட்சியில்தான் ரத்து செய்யப்பட்டது. இப்பொழுது சமஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து நிறுத்தி, தமிழ் உள்ளிட்டுத் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

தமிழகத்தின் உயர் கல்வி புலத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தவுடனேயே, அதன் காரணமாக பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பாதிக்கப்படக் கூடாது எனப் பதட்டமடைந்த உச்ச நீதிமன்றம், 19 சதவீதக் கூடுதல் இடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கி, அந்த இடங்களில் கூடுதல் இட ஒதுக்கீடால் பாதிப்படையும் ஆதிக்க சாதி மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து கடந்த ஆண்டு வரை நடைமுறைப்படுத்தியும் வந்தது. ஆதிக்க சாதியினருக்காக ஆண்டு தோறும் பொழியும் கருணையைத் தவறான வினாத்தாளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு ஒரேயொருமுறைகூடக் காட்டத்தயாராக இல்லை உச்ச நீதிமன்றம்.

*****

ந்த ஆண்டிற்கான தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பன்னிரெண்டே மாணவர்களுக்குத்தான் இடம் கிடைத்திருக்கிறது.

நீட் தேர்வு வருவதற்கு முன்பும்கூட இந்த எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால், நீட் தேர்வு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கீழ் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து ஒதுக்குவதைத் திட்டமிட்ட வகையில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் தனியார் பயிற்சி மையங்களும் குவிந்திருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மட்டும் 5,646 மாணவ அழைக்கப்பட்டிருந்தனர்.

இது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 21 சதவீதமாகும். இந்த எண்ணிக்கையோடு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், அது 12,585 ஆகும்.

அதாவது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மொத்த மாணவர்களுள் 50 சதவீத மாணவர்கள் இந்தப் பத்து நகர்ப்புற மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபொழுதில், சிவகங்கை, இராமநாதபுரம், பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3,019 தான். (12.11 சதவீதம்)

அரசுப் பள்ளி எதிர் சி.பி.எஸ்.இ. பள்ளி, தமிழ் வழி எதிர் ஆங்கில வழி, நகர்ப்புறம் எதிர் கிராமப்புறம் என்ற முரண்களை நீட் தேர்வு ஆழப்படுத்தியிருப்பதை மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.

‘‘தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை உத்தரவாதப்படுத்துவது, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுப்பது” என்ற நோக்கங்களுக்காகத்தான் நீட் தேர்வைக் கட்டாயமாக்குவதாக உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப வாதாடி வருகிறது.

ஆனால் அதில் கடுகளவும் உண்மையில்லை. கட்டணம் மற்றும் மாணவர் சேர்க்கை விடயங்களில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குச் சட்டபூர்வமாகவே அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளும் உரிமைகளும் மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தீவிரமடையச் செய்திருக்கிறதேயொழிய, அதனை இம்மியளவுகூடத் தடுத்துவிடவில்லை.

*****

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி என்ற விதி இருந்தது. அதன் பின்னர் இந்த விதி, தனித்தனியாக அல்லாமல், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என மாற்றியமைக்கப்பட்டது.

இப்புதிய விதியின்படி 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 131, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு 107 என நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 2018 -ஆம் ஆண்டில் முறையே 119, 96 எனக் குறைக்கப்பட்டது.

மேநிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைவதற்குக் குறைந்தபட்சமாக 35 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்றுள்ள நிலையில், மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் (2018) தேர்வில் குறைந்தபட்சமாக 13.3 சதவீதத்திலிருந்து 16.5 சதவீத மதிப்பெண்கள் வரை எடுத்தால் தேர்ச்சி என்பது நகைப்புக்குரியது.

தரத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் நீட் தேர்வு என்று முழங்கியவர்கள், தரத்தை மென்மேலும் குறைத்துக் கொண்டே செல்வது ஏன்? இங்கேதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்தியாவிலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த மருத்துவ இடங்கள் 66,620. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 30,455. தனியார் கல்லூரிகளில் 36,165. இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கையோ 7,14,562.
அதாவது ஒரு இடத்துக்கு 11 மாணவர்கள். அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான சேர்க்கைக்கு ஒரு இடத்திற்கு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு மாணவர்கள் என்ற விகித அடிப்படையில்தான் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

பிறகு ஏன் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து அதிகமான மாணவர்களை வெற்றி பெற வைக்கிறது சி.பி.எஸ்.இ.?

இது, நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.

நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கு நீட் தேர்வில் எத்துணை மதிப்பெண் கிடைத்திருக்கிறது என்பதைவிட, ஒவ்வொரு ஆண்டும் பல இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தும் வசதியிருக்கிறதா என்பதுதான் உண்மையான தகுதியாகும். எனவே, வலை எந்தளவிற்கு விரிவாக விரிக்கப்படுகிறதோ, அந்தளவிற்குப் பணம் படைத்த மாணவர்கள் கிட்ட வாய்ப்புண்டு என்பதால்தான், நீட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தனியாருக்கு ஆள் பிடித்து கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5,000 மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகிய மைய அரசு, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டித்து வாங்கியதோடு, ஒரு இடத்திற்குப் பத்து மாணவர்கள் என்ற விகிதத்தில் கலந்தாய்வுக்கு மாணவர்களை அழைக்கவும் அனுமதி பெற்றுத் தந்தது.

இதன் விளைவாக, நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை மட்டுமே எடுத்துத் தேர்ச்சி பெற்ற பணக்கார வீட்டுக் குலக்கொழுந்துகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.

அந்த ஆண்டில் இந்தியாவெங்கிலுமுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் 150 குறைவு. அவர்களுள் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இயற்பியல், வேதியியல் பாட நீட் தேர்வில் 180 வெறும் 9 மதிப்பெண்களையே பெற்றிருப்பதும் 110 பேர் இந்த இரண்டு பாடங்களிலுமோ அல்லது ஏதாவது ஒன்றிலோ பூஜ்ஜியம் அல்லது அதற்குக் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதையும் முன்னணி ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன் பிறகும்கூடத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் கடந்த ஆண்டில் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் தள்ளுபடி விலையில் இடங்களை நிரப்ப முயன்றதாகச் செய்திகள் வெளிவந்தன. அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலை 2018 -லும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

*****

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆள் பிடித்துவிடும் ஏஜெண்டாக மட்டுமின்றி, அப்பல்கலைக்கழகங்கள் கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு செக்யூரிட்டியாகவும் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 18 இலட்ச ரூபாய் முதல் 22 இலட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கில் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை 13 இலட்ச ரூபாயாக நிர்ணயித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆண்டுக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு 13 இலட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயித்தால், கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது.

கட்டண நிர்ணயக் குழு அமைக்கும் வரையிலும்கூடப் பொறுக்காத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அந்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உல்டாவாக மாற்றி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் 22 இலட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதித்துவிட்டு, கட்டண நிர்ணயக் குழு குறைவாகக் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தால், மீதிப் பணத்தை மாணவர்களிடம் நிர்வாகங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. யானை வாய்க்குள் போன கரும்பு மீண்டு வந்ததாக வரலாறு உண்டா?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2.85 இலட்ச ரூபாய் முதல் நான்கு இலட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அக்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 இலட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை இரண்டுக்குமான சராசரியைக் கணக்கில் கொண்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஏழு இலட்ச ரூபாய்தான்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கும் பெயரைத் தவிர வேறு பெரிய வேறுபாடு இல்லை என்ற நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஆண்டு கல்விக் கட்டணமாக 22 இலட்ச ரூபாய் வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்திருப்பது கட்டணக் கொள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் தவிர வேறில்லை.

நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்ச கட்டணம் முப்பது, நாற்பதாயிரம் முதல் அதிகபட்சமாக ஒரு இலட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதிய 12,69,222 மாணவர்களுள் குறைந்தபட்சமாக சரிபாதிப் பேர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகியிருப்பார்கள் என எடுத்துக்கொண்டால்கூட, பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த வணிகத்தில் புரளுகிறது என்பது உறுதியாகிறது.

மதிப்பெண்களையோ, அறிவுத் திறனையோ அல்ல, பணத்தை முதன்மைத் தகுதியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதுதான் நீட் தேர்வின் ஒரே சாதனை!

-திப்பு
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !

பந்தய மூலதனம் – 2

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

“1993-ல் இன்ஃபோசிஸ் தனது பங்குகளை வெளியிட்ட போது அதில் ரூ 10,000 முதலீடு செய்து பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் அவற்றின் மதிப்பு இன்றைக்கு ரூ 2 கோடி” என்பது போன்ற பங்குச் சந்தை பணத்தை பல மடங்காக்கும் மாயம் பற்றி படித்திருப்போம். அதே போல “1990-ல இந்த ஏரியால கிரவுண்ட் 2,000 ரூபான்னு 2 கிரவுண்ட் வாங்கி போட்டாரு, இன்னைக்கு அதன் மதிப்பு 10 கோடி” என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.

மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன் பஃபெட்

பங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு முதலீடு என்றால் என்ன, என்ன மூலதனம் என்றால் என்ன என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.

எல்&டி நிறுவனத்தில் வேலை செய்யும் அனுபவம் வாய்ந்த, மூத்த, நிரந்தர தொழிலாளர்கள் 5 பேருக்கு அந்நிறுவன முதலாளி ஆண்டு போனஸ் கொடுக்க முடிவு செய்கிறார். அமித், சங்கர், இஷா, பிரகாஷ், அருந்ததி என்ற இந்த இந்த 5 பேருக்கும் தலா ரூ 10 லட்சம் போனசாக கிடைக்கிறது.

சங்கர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி, கஷ்டப்பட்டு படித்து, முன்னேறி, 20 ஆண்டுகளாக சாஃப்ட்வேர் துறையில் உழைத்து உடல் தேய்ந்து வசதியான நிலையை அடைந்திருக்கிறார். இந்த வயதிலாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்று கிடைத்த 10 லட்சத்தை வைத்து அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகளோடு ஒரு 10 நாள் ஐரோப்பிய டூர் போய் வருகிறார்.

இஷா லக்னோவில் இருக்கும் தனது நண்பர் மூலமாக புகழ் பெற்ற லக்னோ புடவைகளை வரவழைத்து சென்னையில் வீட்டுக்கு வீடு விற்பதற்கு அந்த 10 லட்சத்தை பயன்படுத்துகிறார். வாங்கிய விலை, போக்குவரத்து செலவு, விற்கப் போகும் விற்பனையாளர் சம்பளம் எல்லாம் போக ஒரு சுற்று விற்று முடித்ததும் (6 மாதம்) அவர் கையில் ரொக்கமும், புடவைகள் சரக்குமாக ரூ 10 லட்சத்துக்கு மேல் போக கூடுதலாக ரூ 1 லட்சம் நிற்கிறது.

பிரகாஷின் நீண்ட நாள் கனவு ஏதாவது உருவாக்கி விற்க வேண்டும் என்பது. அவர் ஒரு சிறு அலுவகத்தை வாடகைக்கு எடுத்து, 4 கணினிகள் வாங்கி, 2 சாஃப்ட்வேர் டெவலப்பர், 1 மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ், ஒரு பிசினஸ் நிர்வாகி நியமித்து தொழில் தொடங்குகிறார். ஒரு நிறுவனத்துக்கான மென்பொருள் செய்து கொடுக்கும் ஆர்டர் பிடித்து, அதைச் செய்து கொடுக்கிறார்கள். அதற்கு விலையாக ரூ 15 லட்சம் பெறுகிறார்கள். ஒரு வருட முடிவில் முன்பணம் கொடுத்த அலுவலகம், அறைக்கலன்கள், கணினிகள் மீந்திருக்க, சம்பள செலவு, மின்சார செலவு, போக்குவரத்து செலவு எல்லாம் போக போட்ட ரூ 10 லட்சத்துக்கு மேல் ரூ 2 லட்சம் லாபமாக பிரகாஷின் கையில் நிற்கிறது.

“1993-ல் இன்ஃபோசிஸ் தனது பங்குகளை வெளியிட்ட போது அதில் ரூ 10,000 முதலீடு செய்து பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் அவற்றின் மதிப்பு இன்றைக்கு ரூ 2 கோடி – இது உண்மையா?”

அருந்ததி கொஞ்சம் கெட்டியான ஆள். பணத்தை சேமிப்புக் கணக்கிலேயே வைத்திருந்து விட்டு, ஒரு கட்டத்தில் இஷாவின் வியாபாரத்தை விரிவுபடுத்த அந்தப் பணத்தை கொடுத்து விட்டார். ஒரு வருடத்துக்கு 10% வட்டி வீதம் ரூ 1 லட்சம் இஷா கொடுத்து விட வேண்டும்.

அமித் பற்றி பார்ப்பதற்கு முன்பு இந்த 4 பேர் கையில் அந்த 10 லட்சம் எப்படி பயன்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

சங்கர் அதை செலவழித்து முடித்து விட்டார். ஐரோப்பிய டூரோடு கையில் காசு காலி, அடுத்த மாதம் சம்பளம் வாங்கினால்தான் அடுத்த செலவு. இதை தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் கட்டிட தொழிலாளிக்கு கிடைக்கும் சம்பளத்தோடோ, ஆலையில் வேலை செய்து மாதம் ரூ 10,000, 20,000 சம்பளம் வாங்கும் தொழிலாளியின் வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தவறில்லை. பணம் கையில் வருகிறது, தேவைக்கு செலவழிக்கிறோம், அடுத்த செலவுக்கு மறுபடியும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.

இஷா, லக்னோவில் வாங்கிய புடவைகளை வாங்கிய விலை + போக்குவரத்து செலவு + இதர செலவுகள் இவற்றுடன் கூடுதலாக சேர்த்து விலை வைத்து விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார். புடவைகள் விற்காமல் தேங்கி விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ, வாடிக்கையாளரிடம் பணம் வரா விட்டாலோ பிரச்சனை; ரிஸ்க் நிறைய உண்டு. இதனுடன் மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியின் பிசினசை, கிரேஸ் சூப்பர் மார்க்கெட் கடைகளை அளவு, இன்னபிற காரணிகளை சேர்த்து ஒப்பிட்டு பார்க்கலாம். குறைந்த விலைக்கு வாங்கி, செலவுகள் போக அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுவது இதன் அடிப்படை.

பிரகாஷ் அலுவலகம், கணினிகள் என்று முதலீடு செய்து, மாதா மாதம் 4 பேருக்கு சம்பளம் கொடுத்து, ஒரு பொருளை (மென்பொருள்) உற்பத்தி செய்து விற்றிருக்கிறார். அதை விற்கும் போது சம்பள செலவு, மின் கட்டணம், அலுவலக வாடகை இவற்றோடு கணினியின் தேய்மான செலவையும் சேர்த்து கணக்கு போட்டு அதற்கு மேல் ஒரு விலை வைத்து பெற்றிருக்கிறார். அது அவருடைய முதலீட்டுக்குக் கிடைத்த லாபம். இதிலும் நிறைய பிரச்சனைகள் உண்டு, கணினியை பாதுகாத்து பராமரிக்க வேண்டும், மென்பொருள் தயாரிப்பை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும், அதன் தரம் சரியாக இல்லா விட்டால் பிரச்சனை, வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லை என்றால் பிரச்சனை, பணம் வராமல் போய் விடும் அபாயம் என்று பல ரிஸ்குகளுக்கு மத்தியில் போராடி லாபம் சம்பாதிக்கிறார். இதை 4 லட்சம் ஊழியர்கள் வேலை செய்யும் டி.சி.எஸ் நிறுவனத்துடனோ, இல்லை கார்களை உற்பத்தி செய்யும் ரெனால்ட் நிசான் நிறுவனத்துடனோ ஒப்பிட்டுக் கொள்ளலாம். அவற்றின் அளவு, சந்தை வலிமை, ஏகபோகம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

அருந்ததிக்கும் லாபம் கிடைக்கிறது. அது வட்டி வடிவத்தில் கிடைக்கிறது. இஷாவின் வியாபாரத்தில் இஷா லாபத்தை எடுப்பதற்கு முன்பு அருந்ததிக்கு வட்டியை கொடுத்து விட வேண்டும். அருந்ததியின் பணம் முழுகுகிறது என்றால் அதற்கு முன்பே இஷாவும் முழுகியிருக்கிறார் என்று பொருள். தொழில் செய்வதற்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் பாரத ஸ்டேட் வங்கியையோ, முத்தூட் ஃபைனான்சையோ இதனுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

  1. சங்கர் பணத்தை செலவுக்காக பயன்படுத்தினார், அத்தோடு அந்தப் பணத்தின் கதை முடிந்து விட்டது. இதை செலவு பணம் என்று முடித்து விடலாம்.
  2. இஷா பணத்தை பொருளாக மாற்றி விற்று பெருக்கியிருக்கிறார், இதை வணிக மூலதனம் என்று அழைப்போம்.
  3. பிரகாஷ் பணத்தை உற்பத்தி பொருட்களாகவும், சம்பளமாகவும் செலவழித்து புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்வித்து விற்று பெருக்கியிருக்கிறார். இதை உற்பத்தி மூலதனம் என்று சொல்வோம்.
  4. அருந்ததியோ பணத்தை வியாபாரத்தில் பெருக்கும் இஷாவிற்கு பணத்தை கொடுத்து அவரது லாபத்தில் ஒரு பகுதியை வட்டியாக பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை வங்கி மூலதனம் என்று வைத்துக் கொள்வோம்.

அதாவது மூலதனம் என்பது பெருகிச் செல்வது. வளர்ந்து கொண்டே போவது. அப்படி வளராததை மூலதனம் என்று அழைக்க மாட்டோம். இது எல்லாவற்றுக்கும் மேலாக, இது எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டு செயல்படுவது பங்கு மூலதனம் அல்லது பந்தய மூலதனம். அது என்னவென்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகம்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1

அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

அவசரநிலையை அறிவித்த இந்திராகாந்தி தலைமையிலான அமைச்சரவை.

‘‘இந்திய வரலாற்றில் அவசரநிலை என்பது ஒரு கரும்புள்ளி. நாம் இந்த நாளைக் கருப்பு நாளாக கடைப்பிடிக்க காரணம், காங்கிரஸ் செய்த பாவத்தை விமரிசிப்பதற்காக மட்டுமல்ல, அரசமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இதைக் கடைப்பிடிக்கிறோம். அந்த நாட்களில் இந்த நாடே ஒரு சிறையாக மாற்றப்பட்டுவிட்டது என்று அவசரநிலையின் 43 ஆண்டை ஒட்டி பா.ஜ.க.வின் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார் மோடி.

நெருக்கடி நிலை பற்றி ஒரு சிந்தனை என்று சோ எழுதிய கட்டுரையை 4.7.2018 துக்ளக்கில் மீள் பிரசுரம் செய்திருக்கிறார் குருமூர்த்தி. அக்கட்டுரை கீழ்க்கண்டவாறு முடிகிறது:

‘‘நாட்டுக்கு இன்று முதல் தேவை ஒழுங்கு முறையும் கட்டுப்பாடும். அவற்றைச் சாதிக்க நெருக்கடி நிலை அமல் ஆவது பெரிதும் உதவும் என்பது நாடு கண்ட அனுபவம். குடிமக்களுக்கு உரிமைகள்தான் உண்டே தவிர கடமைகள் எதுவும் கிடையாது என்ற ஜனநாயக விரோத சிந்தனையை மாற்ற எமர்ஜென்சியால்தான் முடியும் என்று நாம் கற்ற பாடத்தை இன்று நினைவுகூரத் தோன்றுகிறது.”

அவசர நிலை குறித்து மோடி பேசியிருப்பது உண்மையா, குருமூர்த்தி வழிமொழியும் சோவின் கருத்து உண்மையா? எது மோடி அரசின் கருத்து? அன்று அவசரநிலையை எதிர்த்தவர்கள் போலவும் ஜனநாயகத்துக்காகப் போராடியவர்களைப் போலவும் நடிக்கின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அவர்களது தலைமையும், உண்மையில் அன்றைக்கு இந்திராவிடம் சரணடைந்த கோழைகள். கள்ளத்தனமான இந்திராவுடன் கூட்டு வைத்துக் கொண்ட துரோகிகள் என்பதுதான் வரலாறு.

அவசரநிலையை அறிவித்த இந்திராகாந்தி தலைமையிலான அமைச்சரவை.

எனவே சோ வழிமொழிந்து குருமூர்த்தி கூறியிருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து. ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்துக்கே ஆர்.எஸ்.எஸ். எதிரி என்பது மட்டுமல்ல, இந்தக் கோழைகள் கூட்டம் சுதந்திரத்தையோ ஜனநாயகத்தையோ எந்தக் காலத்திலும் விரும்பியதில்லை என்பதுதான் வரலாறு.

உண்மை இவ்வாறிருக்க, அவசரநிலைக்காலத்தில் ஒரு மாத காலம் வரை சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாயும், ஒரு மாதத்துக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும் ஓய்வூதியம் அளிக்கவிருப்பதாக மகாராட்டிர பா.ஜ.க. அரசு இந்த ஜுன் மாதம் அறிவித்திருக்கிறது.

அரசின் இந்த முடிவை எள்ளி நகையாடிய மகாராட்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ‘‘அவசர நிலையை ஆதரித்தவர்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களுமான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.க.வினர் யாரும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.

‘‘அவசரநிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். செய்தது என்ன? என்பது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் ஏ.ஜி.நூரானி எழுதியிருக்கும் கட்டுரையொன்று சமீபத்திய ஃபிரண்ட்லைன் இதழில் வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜுலை 15 அன்றே சிறையில் இருந்து தனது முதல் மன்னிப்பு கடிதத்தை அனுப்பி விட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலாசாகேப் தேவரஸ்.

‘‘இந்த அரசுக்கோ சமூகத்துக்கோ எதிராக ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்ததில்லை. எங்கள் திட்டத்திலேயே அப்படி எதுவும் கிடையாது. அரசாங்கம் எங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மகாராட்டிர காங்கிரஸ் முதல்வர் எஸ்.பி.சவானிடம் அக்கடிதத்தில் மன்றாடினார் தேவரஸ்.
அடுத்தபடியாக ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்திராவுக்கு நேரடியாக கடிதம் எழுதினார் தேவரஸ்.

‘‘ஆகஸ்டு 15 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது உங்கள் உரை… இந்து சமூகத்தை ஒன்றுபடுத்துவதுதான் எங்கள் நோக்கம். எங்களை ஒரு மதவாத அமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள். அது ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு. இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். எதையும் பிரச்சாரம் செய்ததே கிடையாது. நாங்கள் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்பதும் அடிப்படையிலேயே தவறு. இசுலாமுக்கோ, முகமது நபிக்கோ, கிறித்தவத்துக்கோ, ஏசு கிறிஸ்துவுக்கோ எதிராக நாங்கள் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசியதில்லை”

ஆர்.எஸ்.எஸ். தடையை விலக்கிக்கொள்ளக் கோரி எழுதிய கடிதம்.

என்று போகிறது அந்தக் கடிதம். தேவரஸ் சொல்வது அனைத்தும் பச்சைப்பொய் என்பதற்கு கோல்வால்கரின் நூல்களிலேயே போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

தேவரஸின் கடிதம் ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி, தங்களையெல்லாம் விடுவிக்குமாறு கோருகிறதே ஒழிய, அவசர நிலைக்கு எதிராகவோ, மற்ற கைதிகளை விடுவிக்க கோரியோ அதில் ஒரு வரி கூட கிடையாது.

இந்தக் கடிதங்களையெல்லாம் இந்திரா கண்டுகொள்ளவே இல்லை. ஆகையினால் அன்று ‘கெவர்மென்ட் சாமியார் என்று கேலியாக அழைக்கப்பட்ட வினோபா பாவேக்கு கடிதம் எழுதுகிறார் தேவரஸ்.

‘‘ஆர்.எஸ்.எஸ். பற்றி பிரதமர் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயத்தை மாற்றுவதற்கு முயற்சிக்குமாறு உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இதைச் செய்தால் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். இன் தொண்டர்கள் பிரதமரின் தலைமையில் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவார்கள் என்கிறார் தேவரஸ். இந்தக் கடிதத்திலும் அவசரநிலையை அகற்றுவது பற்றியோ, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றோரை விடுவிப்பது பற்றியோ ஒரு வார்த்தை கூட தேவரஸ் எழுதவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ்.

ஆர்.எஸ்.எஸ். இன் பச்சைத் துரோகம் குறித்து மகாராட்டிர தொழிற்சங்கத் தலைவர் பாபா ஆதவ், செக்யூலர் டெமாக்ரசி (ஆகஸ்டு, 1977) இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

‘‘எப்பாடுபட்டாவது மகாராட்டிர முதல்வர் சவானையும் இந்திராவையும் நேரில் பார்த்து விடவேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். தலைமை அரும்பாடு பட்டது. எரவாடா மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் அரசாங்கமே மன்னிப்புக் கடிதம் ஒன்றை சுற்றுக்கு விட்ட மறுகணமே, ஆர்.எஸ்.எஸ். இன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுப்பதை நான் என் கண்ணால் பார்த்தேன். இன்று இந்தக் கோழைகள்தான் மாபெரும் வீரர்களாக தம்மை சித்தரித்துக் கொள்கிறார்கள்.

‘‘அரசாங்க கடிதம் வரும்வரை கூட காத்திருக்காமல், எப்படியாவது வெளியே போனால் போதும் என்று தனித்தனியே இவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள் என்று ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் டி.ஆர்.கோயல்.
ஆர்.எஸ்.எஸ். இன் அதிகாரபூர்வ பத்திரிகையான பாஞ்சஜன்யா (ஏப். 4, 1976) சஞ்சய் காந்தியின் உரையை வெளியிட்டது. அதன் மராத்தி பத்திரிகையான தருண் பாரத், சஞ்சய் காந்தி சிறப்பிதழே கொண்டு வந்தது.

அவசரநிலையை எதிர்ப்பதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த லோக் சங்கர்ஷ் சமிதியில் அங்கம் வகித்துக் கொண்டே, இன்னொருபுறம் இரகசியமாக இந்திராவிடம் மண்டியிட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இன் வரலாறு.

ஏ.ஜி.நூரானி ஆதாரமின்றி இதைக் கூறவில்லை. அக்டோபர் 18, 1977 அன்று மகாராட்டிர சட்ட மன்றத்தில் தேவரஸின் கடிதங்கள் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

நூரானி மட்டுமல்ல, அவசர நிலைக்காலத்தில் மத்திய உளவுத்துறை இயக்குநராக இருந்த டி.வி.ராஜேஸ்வர், அவசரநிலைக்காலம் குறித்த தன்னுடைய நூலிலும், இந்தியா டுடே டி.வி.க்காக செப், 21, 2015 அன்று கரன் தபாருக்கு அளித்த பேட்டியிலும் இதை உறுதி செய்கிறார்.

‘‘பிரதமர் இல்லத்துடன் தேவரஸ் ரகசியமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவசர நிலையின் மூலம் நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலை நாட்டுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்காக இந்திராவுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்திராவை மட்டுமல்ல, சஞ்சய் காந்தியையும் அவர்கள் சந்திக்க விரும்பினர். சஞ்சயின் நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். அவசர நிலை முடிவுக்கு வந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ஒரு புறம் ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட ஜனசங் கட்சி, இந்திராவுக்கு எதிராக இருந்த அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்திராவுக்காக வேலை செய்தது என்று இந்தப் பேட்டியிலும் தனது நூலிலும் கூறுகிறார் ராஜேஸ்வர்.

இந்த உண்மைகள் எதையும் ஆர்.எஸ்.எஸ். காரர்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியவில்லை. தேவரஸ் இந்திராவிடம் மண்டியிடவில்லை என்றும் ஏ.ஜி.நூரானி போன்றவர்கள் இடதுசாரிகள் என்பதால் தங்கள் தலைவரை வேண்டுமென்றே அவதூறு செய்வதாகவும் ஆர்கனைசர் பத்திரிகை மழுப்பலாக சமாளிக்கிறது.

ஏ.ஜி.நூரனி (இடது) பாபா ஆதவ்.

நூரானி இருக்கட்டும், இன்றைய பா.ஜ.க. தளபதியான சு.சாமி அவசர நிலை அறிவிப்பின் 25 ஆண்டையொட்டி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். பிப். 4, 2000 ஃபிரண்ட்லைன் இதழிலும், ஜூன், 13, 2000 இந்து நாளேட்டிலும் சுப்பிரமணியசாமி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

20 அம்சத்திட்டத்துக்கு வேலை செய்கிறேன் என்று தேவரஸ் இந்திராவுக்கு கடிதம் எழுதினார் என்றும், வாஜ்பாயியும் அவ்வாறே மன்னிப்பு கடிதம் கொடுத்தாரென்றும் அதில் குறிப்பிடுகிறார். அரசுக்கு எதிரான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்று இந்திராவுக்கு கடிதம் எழுதிக் கொடுத்ததன் விளைவாகத்தான் 20 மாத அவசர நிலைக்காலத்தின் பெரும்பகுதி நாட்களில் வாஜ்பாயி பரோலில் வெளியே இருந்ததாகவும் கூறுகிறார் சு.சாமி.

கூமி கபூர் என்ற பத்திரிகையாளர் (சு.சாமியின் மைத்துனி) சமீபத்தில் எழுதியிருக்கும் நூலிலும், அவசர நிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் சரணாகதியை உறுதி செய்கிறார்.

அவசரநிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பலர் சிறை வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் ஒரு விளைவு. அவ்வளவே. அவசர நிலைக்காலத்தில் புரட்சியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்பட்டதுடன் இது ஒப்பிடத்தக்கதல்ல.

சிறை வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? ஏனென்றால் முதலாவதாக அவர்கள் கோழைகள். இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ். ஒரு ஆளும் வர்க்க எடுபிடி அமைப்பு. தனது தன்மையிலேயே அது ஒரு ஜனநாயக விரோத பாசிச அமைப்பு. இந்திராவின் பாசிசம் தங்களை ஒடுக்கியது மட்டும்தான் அவர்களது பிரச்சினையேயன்றி, ஜனநாயகம் அவர்களுடைய கோரிக்கை அல்ல.

துக்ளக் தலையங்கத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து எழுதப்பட்ட சில வரிகளை சென்ற இதழில் மேற்கோள் காட்டியிருந்தோம். ‘‘நாட்டின் 99% மக்களுக்கு தமது உடம்பு குறித்த அச்சத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். அதுதான் தண்ட நீதி. அதுதான் நாட்டுக்குத் தேவை என்கிறது அந்த தலையங்கம்.

‘‘நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டிய காரணத்தினால்தான் அவசரநிலையை ஆதரிப்பதாக அன்று தேவரஸ் இந்திராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். துக்ளக் சோ அதைத்தான் கூறுகிறார். இன்று அவசர நிலையை நினைவுகூரும் குருமூர்த்தி, மீண்டும் அவசரநிலை வேண்டும் என்று சோ கருத்தை வழிமொழிகிறார்.

அன்றைய அவசர நிலைக்காலத்தை இன்றைய மோடி அரசோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அன்று ஊடகங்கள் ஒடுக்கப்பட்டன. இன்று பெரும்பாலானவை சரணடைந்து விட்டன. நீதித்துறையும் அவ்வாறே. மாநிலங்களின் உரிமை பறிப்பு, அதிகார மையப்படுத்துதல், எல்லா அரசு அதிகாரப் பதவிகளிலும் பார்ப்பன பாசிஸ்டுகள் அமர்த்தப்படுதல், அரசியல் எதிரிகள் தேசவிரோதி என்று குற்றம் சாட்டப்படுதல்… என ஒவ்வொரு அம்சத்திலும் அன்றைய காலத்தை இன்றைய நிலை விஞ்சிக்கொண்டிருக்கிறது. இந்த 43 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தமது பெயரளவிலான ஜனநாயகத் தன்மையையும் இழந்து, பாசிசத்துக்கு இணக்கமானவையாக மாறியிருக்கின்றன.

அன்று சிறை வைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். சட்டபூர்வமான அதிகாரத்தில் இருப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆயுதம் தாங்கிய அதிகாரமாகவும் நிலைபெற்றிருக்கிறார்கள். அவசரநிலைக்காலத்தின் கைதிகளுக்கு மகாராட்டிர அரசு வழங்கவிருக்கும் ஓய்வூதியம் என்பது, இந்துத்துவ பாசிசத்தை சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையின் முதல்படி. மோடி அரசின் கீழ் அடுத்தபடியாக பசுக்குண்டர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படலாம்.
– அஜித்

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

சென்னை பாரீஸ் கார்னர்.. சென்னையின் பழமையான அடையாளங்களில் முக்கியமான ஒன்று…. பாரீஸ் என்றாலே விதவிதமான சந்தைகளைக் கொண்ட பஜார் தான். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் ஒவ்வொரு பஜாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில்… பாரிமுனையிலிருந்து வால்டாக்ஸ் சாலை வரை பரந்து விரிந்த சாம்ராஜ்யம்.

1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.

1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.

அந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக  இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.

சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லததால் குறுக்கும் நெடுக்குமாக இரு சக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் நெருக்கடியில் புகையை கக்கியவாறே ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆவின் கேட்  அருகே வழக்கறிஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.  ஆர்ப்பாட்டம் செய்தவர்களை மறைத்துக் கொண்டு பாதி சாலையில் சுற்றி நின்றிருந்தது போலிசு.

அந்த சாலையின் எதிர்திசையில் அமைந்துள்ள கடைவீதியின் கூட்ட நெரிசலில் தங்கள் உடல் பலத்தையும் மீறி மீன்பாடி வண்டிகளில் சரக்கு மூட்டைகளை வானுயர ஏற்றிக் கொண்டு நெரிசில் சிக்கி திணறிக் கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்…

சாலையோர நடைபாதையில் வயதான பாட்டி ஒருவர் பூக்களை கட்டிக்கொண்டிருந்தார். ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் வெறுமனே ஐந்து வாட்ச்களை மட்டும் விற்பனைக்கு வைத்து யாரேனும் வருவார்களா என்று காத்துக்கிடந்தார்.  சற்று தொலைவில் கும்பலாக அமர்ந்து பெண்கள் பூவை கட்டிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகிலும், படிகட்டுகளிலும் அமர்ந்து ஓட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை சமமாக பங்கிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தர். இவற்றை எல்லாம் பார்த்தும் பார்க்கததுமாக அவசர அவசரமாக கடக்க முயன்ற நாகரீக மனிதர்கள்..

அதே நடைபாதை ஓரம் ஒரு ஹாலில் கருத்தரங்கம் நடக்கவிருப்பதற்கான செய்தியை தெரிவிக்கும் வகையில் ஒரு பேனரை இரண்டு இளைஞர்கள் கட்டிக் கொண்டிருந்தர். அங்கிருந்த டீ மற்றும் பழரசக் கடைகளில் வழக்கறிஞர்களின் ஆக்கிரமித்திருந்தனர்.

ஆண்டர்சன் தெரு

ஆண்டர்சன் தெரு வந்தது… ஒருமணி நேர மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக அந்த வீதி இருந்ததை தேங்கி நின்ற மழை நீர் காட்டிக்கொடுத்தது. அழுக்கு கலந்த நீரில் மிகவும் பாதுக்காப்பாக மக்கள் நடந்து சென்றனர்…. அந்தத் தெருவில் பெரும்பலும் ஸ்டேசனரி மற்றும் திருமண, சுப நிகழ்ச்சி கார்ட் கடைகள் தான் இருந்தன.

தெருவின் ஓரமாக நிருத்தப்பட்டிருந்த மீன்பாடி வண்டியின் மீது அமர்ந்திருந்தனர் தொழிளாலர்கள். மெல்ல சென்று அவர்களிடம் பேச்சு கொடுத்ததும், முதலில் நம்மிடம் பேச தயங்கினர். ஒரு சிலர் கூட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பகடை விளையாட போகிறோம் என்று நழுவி கொண்டனர்.

அந்த அமைதிய கலைக்க முன்வந்தார் சரவணன்…………”நான் ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கார்பேசன் ஸ்கூலு… எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான் கீது…  எங்களுக்கு வீடு எதுவும் கெடையாது……நாங்க எல்லோருமே இங்க தான் தங்கினு கீறோம்..

“இங்க தான்னா?”

இதான் பாக்குரியே இந்த ரோடு தான் எங்க வீடு… பொறந்தது வளந்தது எல்லாமே இங்க தான்.. இந்த மீன் பாடி வண்டி தான் சொந்தம்…  லோடு வச்சிக்கினு மாடு மாதிரி மெரிக்கனும். அன்னன்னிக்கு ஒழச்சா தான் சோறு… மூனு வேளயும் ஒட்டல்ல தான் துன்னனும். வூடு இருந்தாதானே வூட்ல ஆக்க முடியும்… அதான் ஓட்டல்லு…

“ஞாயித்து கெழம மட்டும் தான்…. இங்கயே சோறு ஆக்குவோம்.. எப்படின்னு கேக்குறியா?

சரவணன்

தோ… இந்த இடத்துல கடையெல்லாம் மூடிட்ட பிறகு.. மூனு கல்ல மூட்டி தான் சோறு ஆக்குவோம். அப்ப மட்டும் கறி, மீனு….தான். இங்கயே துன்னுட்டு இந்த மீன்பாடி வண்டியில தான் புருசன், பொண்டாட்டி, கொழந்த எல்லோரும் படுத்துக்குவோம். இப்படி தான் நாங்க வாழறோம்…..

கல்யாணம் காச்சி எதுக்குமே துட்டு இருக்காது…. எங்கள நம்பி எவனும் கடனும் கொடுக்க மாட்டான்… மிஞ்சி போனா தண்டல் எடுப்போம். அதுவும் பத்தாயிரம் தான் எங்கள நம்பி கொடுப்பான்.. ஒரு நாளைக்கு எங்களால நூறு ரூபாதான் கட்ட முடியும்னு…அதுக்கு ஏத்த மாதிரி கொடுப்பானுங்க.

பசங்க எல்லாம் கவெர்மெண்ட் ஸ்கூல்ல் படிக்குதுங்க… எல்லாம் எட்டாவது, பத்தாவது அவ்ளோ தான் படிக்கும்.. இங்க எல்லோருக்கும்  அதிக பட்ச படிப்பே அதுதான்.

கொழந்த குட்டிக்கு பிரச்சனன்னா,,, கே.எம்.சி. இல்லனா ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போவோம்… கல்யாணம், காதுகுத்தின்னா சமுதாயக் கூடம்… ஒரு சிலருங்க மண்டபத்துல வைப்பாங்க… அவங்க வேலை செய்யுர ஓனருங்க கிட்ட பணம் வாங்கிப்பாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் வேலை அவரை வலுக்கட்டாயமாக இழுத்ததால் அவசர அவசரமாக வண்டியில் இருந்து இறங்கி ஓடினார்.

அருகில்……ஆர்வமாக பகடை விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து சத்தம் அதிகரித்தது….அதனை பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் பேச ஆரம்பித்தார்.

”இதையெல்லாம் கெட்டு இன்னா பன்ன போறீங்க…?

ஸ்ரீதர்

எங்க கஸ்டத்தை சொன்னா இன்னும் கஷ்டம்தான்… அதனாலதான் யார்கிட்டயும்  சொல்லுறது இல்ல. சொன்னா…. எல்லாரும் அழ வேண்டியது தான்…. நாங்க யாரு… நாங்க எப்படி இங்க வந்தோம்…  எங்க பூர்வீகம் என்னன்னு எதுவுமே தெரியாது.. ஆனா காலம் காலமா இங்கயே தான் கெடக்குறோம்…

இங்க இருக்க யாருக்கும் வீடு கெடையாது… ஆனா ரேசன் கார்டுல இருந்து, ஆதார் கார்டு வரைக்கும் வச்சிருகோம்……ஒரு சிலருக்கு மட்டும் தீவுத்திடல்ல குடிசை இருக்கு… எங்களுக்கும்  அங்க இருக்கு.. அதுகூட எங்க ஆயா அந்த எடத்த புடிச்சி குடிசை போட்டுச்சி….. இல்லனா அதுகூட இருந்திருக்காது.

மழக்காலம் வந்தா பெரும்பாடு பாடு தான். சொல்லி மாளாது… புருசன் பொண்டாட்டி, குழந்தைங்க.. எல்லோரும்.. மூடிய கதவாண்ட (கடைகளின் ஷெட்டர்) போயிட்டு ஒண்டிக்குவோம்.. சாரல் அடிக்கும்.. அதையெல்லாம் அட்ஜெஸ் பன்னி படுத்துப்போம்.. காலையில எழுந்து திரும்ப வேலைக்கு போகனும்,…..!

எங்களுக்கு விளையாடனும்னு ஆசை இருக்கு. ஆனா, விளையாட எடமில்ல…. படம் பார்க்கனும்ன்னா, இங்க பக்கத்துல பாட்சா தியேடர் இருக்கு… இப்ப தான் இதுக்கு பேரு பாட்ஷா தியேட்டரு..  இதுக்கு முன்னாடி மினர்வான்னு இருந்துச்சி. டிக்கெட் ஏழு ரூபாவுல இருந்து இருபத்தி அஞ்சி ரூபா வரைக்கும் இருக்கு.. மாசத்துக்கு ஒரு நாள் குடும்பத்தோட போயிட்டு பார்ப்போம்.. ரொம்ப பழைய படம் தான் போடுவான்.. அதைத்தான் பாக்கனும்.. புதுப்படம் எதுவும் பாக்கற நெலம இல்ல… .

எங்களுக்கு எல்லா நாளும் வேலை கெடைக்காது….. வீட்டுல இருக்க பொம்பளங்க  பூ கட்டி விப்பாங்க. அதுல கெடக்கிற  காச வச்சி அன்னிய பொழுதை கழிப்போம்… அந்த நேரம் ஒரு நாளைக்கு குறைந்தது இருபது டீ குடிப்பொம். அதான் எங்க சாப்பாடே…..!

இதான் எங்க வாழ்க்கை…. அரசாங்கம் எத்தைனையோ முறை வந்து எங்க கிட்ட கணக்கெடுத்து போயிருக்கு வீடு கொடுக்கிறேன்னு.. ஒன்னும் நடந்தது இல்ல.. எங்களுக்கும் சொந்தமா வீடு கட்டி பொண்டாட்டி குழந்தைன்னு வாழனும்னு…   ஆசை தான்..

ஒரு நிமிசம் பொண்டாண்டியோட தனியா இருக்கனும்னு ஆசை தான்.. இந்த உணர்வுகளை எப்படி சொல்லுறதுன்னு தெரியல.. எவன் வருவான்… போவானு தான் தான் சிந்தனை இருக்கும்….. வேற என்ன சொல்லுறது சொல்லுங்க…?

எங்க பொழப்பு இப்படி இருக்குதேன்னு எவனும் எங்கள மதிக்க மாட்டனுங்க.. முக்கியமா போலிசை சொல்லனும்… ரோட்டுல கடை போட்டாலே அடிச்சி புடுங்கி வாரீக்கினு போயிடுவான்…

நாங்க… ரோட்டுல போறதா பார்த்தாலே அவனுக்கு கடுப்பாகியிம்.. கொஞ்சம் டிராபிக் ஆனாலும்..டேய்…ங்…த்தா… சீக்கிரம் எடுடான்னு” சொல்லுவான்..

இதுவே கார் காரன்னா கிட்ட போயிட்டு….. சார்..கொஞ்சம் வண்டிய எடுங்கன்னு சொல்லுவான்….. அதுவே கார் ஓட்டுறது எங்கள மாதிரி ஆளா இருந்தா எங்க கிட்ட சொல்லமாட்டங்க… ஓனர் கிட்ட போயிட்டு சொல்லுவாங்க… நாங்க….. கூலிங்க தானே.. அதான் இவனுங்கள சாருன்னு கூப்பிடனுமான்னு……கவுரவம் பார்ப்பானுங்க….” அவனுங்க கிட்ட நாம எதுவும் பேச முடியாது…..” என்று சொல்லிவிட்டு  அமைதியானார்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்

வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?

அருண் கார்த்திக்

வாராக்கடன் விவகாரத்தில் கடந்த செவ்வாய் (11 செப்டம்பர், 2018) அன்று இரண்டு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 2,000 கோடிக்கு அதிகமாக உள்ள கடன்களில், தவணை தேதி முடிந்து ஒரு நாள் கடன் தொகை கட்டாமல் இருந்தால் கூட அந்தக் கடன்களை அழுத்தத்தில் உள்ள கடன்கள் (stressed loans) என்று வகைப்படுத்தும்படி வங்கிகளுக்கு அந்த சுற்றறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இவ்வாறு வகைப்படுத்தி 180 நாட்களுக்குள், அந்த கடன்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியது. அப்படி தீர்வு காண முடியவில்லை என்றால் அந்த கம்பெனியை வாராக்கடன் என்று அறிவித்து அதை ஏலத்தில் விடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்து தனியார் மின் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அலகாபாத் உயர்நீதி மன்றம் சென்றது,  சுற்றறிக்கைக்கு எதிராக தடை தர மறுத்துவிட்டது உயர்நீதி மன்றம்.

அதே போல், வாராக்கடன்களாக வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை ஏலம்  விடும் விவகாரத்திலும் ஒரு உத்தரவு வந்துள்ளது. எஸ்ஸார் ஸ்டீல் என்ற (வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்ட) நிறுவனத்தை ஏலத்தில் வாங்க ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் ஏலத்தில் பங்கு பெற்றது. ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான  KSS Patron – கே.எஸ்.எஸ். பேட்ரான் மற்றும் Uttam Galva Steel – உத்தம் கால்வா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்கள் கடனைத் திரும்ப செலுத்தாததால் வாராக்கடன்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன. தொடர்புடைய நிறுவனங்கள் வாராக்கடனாக இருப்பதால் ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனம் ஏலத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது ஆர்ஸலர் – மிட்டல்; அந்த இரண்டு நிறுவனங்களின் கடனை கட்டினால் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று தீர்ப்பு வந்தது. ஏலத்தில் பங்கு பெற்று வென்றால் கடனை கட்டுவதாக கூறியது ஆர்ஸலர் – மிட்டல். கடனைக் கட்ட செப்டம்பர் 11 (செவ்வாய்) கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தனியார் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, செவ்வாய் அன்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 14-க்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

வழக்கு தொடுத்தது என்னமோ தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான். ஆனால் தீர்ப்பில், வழக்கம் போல இன்னொரு சரத்தையும் சேர்த்தது உச்ச நீதிமன்றம். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இனி தானே விசாரிக்கப் போவதாக அறிவித்தது. அதாவது, வாராக்கடன் சம்மந்தமான, வாராக்கடன் என்று வகைப்படுத்தப்பட்டு ஏல நிலையில் உள்ள அனைத்து வழக்குகளையும் இனி உயர்நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது. அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்.

பல்வேறு நிலையில் உள்ள வாராக்கடன் ஏலங்கள், இனிமேல் ஏலம் விடப்பட வேண்டிய வாராக்கடன்கள் எல்லாவற்றின் நிலைமையும் என்ன ஆகும் என்று தெரியாத ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது.  இதனால், ஏலம் என்று சொல்லி ஏதோ கொஞ்சமாவது பணத்தை வசூலித்து கொண்டு இருந்த முறையும் முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயர்நீதி மன்றங்களில் உள்ள வழக்குகளைத் தானே விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் சொல்வது நமக்கு புதிய செய்தி அல்ல. முதல் முறை NEET – நீட் அமல்படுத்தப்பட்டு தேர்வு நடந்து பல குழப்பங்கள் நடந்ததால், பலர் உயர்நீதி மன்றங்களில் வழக்குகள் தொடுத்திருந்தனர். சில உயர்நீதிமன்றங்கள் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்புகளையும் வழங்கி இருந்தன. அப்போது, வழக்கம் போல சி.பி.எஸ்.இ – CBSE உயர்நீதி மன்றங்களில் வழக்கை சந்திக்காமல் உச்சநீதிமன்றம் சென்றது. அப்போதும் இதே போல் தான் அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் உள்ள வழக்குகளை இனி தானே விசாரிக்கப்போவதாக அறிவித்தது உச்சநீதிமன்றம். வேறு வார்த்தைகளில், நீட் சம்மந்தமான வழக்குகளை இனி உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

நீட் வேண்டுமா வேண்டாமா என்ற வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. நீட் விவகாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது தெரிந்த செய்தி தான். நீட் மூலம் தான் இனி மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று அனைத்திந்திய மருத்துவக் கழகம் (ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில்) சொன்னது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அல்தமஸ் கபீர் உச்சநீதிமன்ற அமர்வு, மெடிக்கல் கவுன்சில் உத்தரவை ரத்து செய்து, நீட் கட்டாயம் என்பதை நீக்கியது. பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வால் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அமர்வு அல்டமஸ் கபீர் தீர்ப்பை ரத்து செய்து, நீட்-ஐ கட்டாயம் என்று ஒரு ‘இடைக்கால’ தீர்ப்பு வழங்கியது.

அதாவது, நீட் வழக்கு விசாரணை முடியும் வரை மெடிக்கல் கவுன்சில் உத்தரவு அமலில் இருக்கும், அதாவது நீட் தேர்வு கட்டாயம். இந்த இடைக்கால தீர்ப்பின் மூலமாக தான் இந்த இரண்டு வருடங்களாக நீட் நம் மீதி திணிக்கப்படுகிறது. நீட் வேண்டுமா வேண்டாமா என்ற மூல வழக்கு மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

இந்த வரலாறை பார்க்கும் பொழுது, இந்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லுமா செல்லாதா என்ற வழக்கு எப்பொது விசாரிக்கப்படும் என்பதை நாம் கணக்கிடலாம்.

இதில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நீட் பிரச்னையில் வழக்கின் தீர்ப்பு வரும்வரை மெடிக்கல் கவுன்சிலின் நடைமுறை செல்லும், ஆனால் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை பிரச்னையில், வழக்கின் தீர்ப்பு வரும்வரை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லாது.

சட்டத்தின் முன் அனைவரும் ’சமம்’ என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்!

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன ஏலத்தின் முதல் சுற்றில் ஆர்ஸலர் – மிட்டல் துணை நிறுவனங்கள் வாராக்கடன்களாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு (NCLT) சென்றது ஆர்ஸலர் – மிட்டல். துணை நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடனான ரூ. 7 ஆயிரம் கோடியை கட்டிவிட்டு ஏலத்தில் பங்குபெறலாம் என்று சொன்னது NCLT. ஏலத்தில் பங்கு பெற்று வென்றால் கடனை கட்டுவதாகக் கூறி ஏலத்தில் பங்கு பெற அனுமதிக்கும்படி தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLAT) மேல் முறையீடு செய்தது ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனம். கடனை கட்டிவிட்டு ஏலத்தில் பங்குபெறலாம் என்று தீர்ப்பளித்தது NCLAT. கடனைத் திரும்ப செலுத்த கடைசி தேதி தான் 11 செப்டம்பர் (செவ்வாய்).

NCLAT-யின் உத்தரவை எதிர்த்து, மேலே கூறிய கோரிக்கையோடு உச்சநீதிமன்றம் சென்றது ஆர்ஸலர் – மிட்டல். செவ்வாயன்று இது ஒரு சாதாரண வழக்காகக் கூட உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. செவ்வாயன்று, இது ஒரு urgent hearing-ஆக (அவசர விசாரணைக்கு)  தான் உச்சநீதிமன்றம் முன் வந்தது. உச்சநீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பர் 12 அன்று விசாரிப்பதாக கூறி, விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

18 MLA-க்கள் தகுதிநீக்க வழக்கு போல இதுவும் ஒரு தகுதிநீக்க வழக்கு தான். சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. வாராக்கடன் நிறுவனங்களுடன் தொடர்புள்ள நிறுவனமாக இருந்தால் ஏலத்தில் பங்கு பெற தகுதி இல்லை. அப்படி பங்கு பெற வேண்டும் என்றால் கடனை திருப்ப செலுத்திவிட்டு வரலாம். இது எளிய மக்களுக்கு கூட புரியக்கூடிய ஒரு வழிமுறை, நியாயம் என்று தோன்றக் கூடிய ஒன்று. இருந்தாலும் இதை விசாரித்து தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும்.

எஸ்ஸார் ஸ்டீல் பற்றியும் ஆர்ஸலர் – மிட்டல் பற்றியும் நமக்கு இப்போது ஓரளவுக்கு தெரியும். ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் சென்ற நிறுவனங்கள், அதாவது சுற்றறிக்கை தடை செய்யப்படாவிட்டால் வாராக்கடனாகக் கூடிய நிறுவனங்கள்,  எவை என்றும் நமக்கு தெரியவேண்டுமல்லவா. அந்த உத்தமர்கள் – GMR, எஸ்ஸார் பவர், ரத்தன் இந்தியா மற்றும் ஐடியல் எனர்ஜி.

குறிப்பு:

எஸ்ஸார் பவர்: எஸ்ஸார் ஸ்டீல் ஒரு ஸ்டீல் நிறுவனம். எஸ்ஸார் பவர், எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம். எஸ்ஸார் குழுமத்தின் முதலாளி போல் இருப்பவர் ரவி ரூயா, இவர் 2G வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க நமக்கு முக்கியமான செய்தியாக சொல்லப்படுவது எது? ராகுல் என்ன செய்கிறார், ஸ்டாலின் அழகிரி சண்டை என்ன ஆகும், அ.தி.மு.க. அடுத்து என்ன சாதனை செய்யும், எந்த அமைச்சர் என்ன உளறினார், இதுவே தான்.

வங்கிகளின் பணம் பட்டப்பகலில் கடன் என்ற பெயரில் பெரும் முதலாளிகளால் கொள்ளையடிக்கப் படுகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் அரசு வங்கிகள், வங்கியில் உள்ள பணமும் மக்களின் பணம், வங்கி திவால் ஆனால் வங்கிகளுக்கு அரசு கொடுக்கப்போகும் பணமும் மக்கள் பணம். இருந்தாலும் இதை எல்லாம் பற்றி எந்த அரசியல்வாதியும் பேசுவதில்லை.

மற்ற கருத்து வேறுபாடுகளை தாண்டி, இவை அனைத்தும் சரி என்று அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் போல தெரிகிறது! இதை எல்லாம் கேள்வி கேட்டால் அமைப்பையே கேள்விக்கு உட்படுத்துவது போல் ஆகிவிடும்  !

மூலம்:

– அருண் கார்த்திக்

பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

பந்தய மூலதனம் – 1

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

*****

ங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு கதையை ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் தகவலாகவோ படித்திருப்பீர்கள்.

“ஒரு ஊருக்கு அருகில் இருந்த காட்டில் நிறைய குரங்குகள் வசித்தன. அந்த ஊருக்கு தன் உதவியாளன் சுப்பிரமணியுடன் வந்து சேர்ந்த வெளியூர்காரன் ஏகாம்பரம் ஒரு தகவலை கசிய விட்டான். ஏகாம்பரம் தன் ஊரில் செய்யும் தொழிலுக்கு குரங்குகள் நிறைய தேவைப்படுகின்றன எனவும் ஒரு குரங்குக்கு ரூ 100 விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் செய்தி பரவியது.

ஊர் மக்கள் பலர் குரங்கு பிடிக்கும் வேலையில் இறங்கி, ஒரு நாளைக்கு ஏழெட்டு குரங்குகளை கூட பிடித்து வந்து தலா ரூ 100 வீதம் சம்பாதித்தார்கள். தன்னிடம் வந்து சேரும் குரங்குகளை அடைத்து வைத்து பாதுகாத்தார் ஏகாம்பரம். “ஊருக்குப் போகும் போது மொத்தமாக எடுத்துச் செல்வார் என்றும் அவர்கள் ஊரில் இத்தகைய குரங்குகளுக்கு நல்ல டிமாண்ட்” என்றும் சுப்பிரமணி சிலரிடம் கிசுகிசுத்தான்.

ஒரு சில நாட்களில் காட்டில் எஞ்சியிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, ஏகாம்பரத்திடம் விற்பனைக்கு வரும் எண்ணிக்கையும் குறைந்தது. “ஒரு குரங்குக்கு ரூ 200 தருகிறேன்” என்று விலையை உயர்த்தினார் ஏகாம்பரம். இன்னும் அதிக முயற்சி எடுத்து இரவு பகல் பாராமல் குரங்கு வேட்டை நடத்தினார்கள், மக்கள். விலையை படிப்படியாக ஏற்றி ஏகாம்பரம் ஒரு குரங்குக்கு ரூ 500 தரும் நிலை வந்த போது காட்டில் குரங்குகளை பிடிப்பதே அரிதாகி போனது.

இதற்கிடையில் சுப்பிரமணி, ஒரு சிலரிடம் ரகசியமாக டீல் போட ஆரம்பித்தான். ரூ 500-க்கு விற்க குரங்குகளை தேடி தவிக்கும் அவர்களுக்கு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குரங்குகளை (ஏகாம்பரத்திற்கு தெரியாமல்) ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். அவனது விலை ஒரு குரங்குக்கு ரூ 400. ரூ 400-க்கு வாங்கி ஏகாம்பரத்திடம் ரூ 500-க்கு விற்கலாமா என்ற ஆசையில் அவர்கள் அதை வாங்கி விற்க ஆரம்பித்தார்கள்.

அப்படி ஒரு சிறு எண்ணிக்கையிலான குரங்குகளை வாங்கிய பிறகு, ஏகாம்பரம், தன்னிடம் கைவசம் இருந்த பணம் தீர்ந்து விட்டதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் குரங்குகளை வாங்குவதற்கு பணம் திரட்டிக் கொண்டு 10 நாட்களுக்குப் பிறகு வரப் போவதாகவும், அப்போது குரங்குகளை தலா ரூ 1000 விலைக்கு வாங்கப் போவதாகவும் என்று சொல்லி விட்டு பண்ணையை சுப்பிரமணி பொறுப்பில் விட்டு விட்டு போய் விட்டார்.

இதுதான் வாய்ப்பு என்று சுப்பிரமணி கைவசம் இருந்த எல்லா குரங்குகளையும் ரூ 700, ரூ 800 வீதத்துக்கு விற்று விட்டான். ஒரு குரங்குக்கு ரூ 300, ரூ 200 லாபம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊர்க்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல், நகை நட்டுகளைக் கூட விற்று ஆளுக்கு 10-12 குரங்குகளை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்கள்.

பங்குச் சந்தை – குரங்கு கதை

7-8 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் சுப்பிரமணி இரவோடு இரவாக ஊரை விட்டு போய் விட்டான். அடுத்த நாள் குரங்கு வாங்க பேரம் பேச வந்தவர்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. குரங்கு பண்ணை பூட்டிக் கிடந்தது. சரி, வந்த வரை லாபம், கையில் இருக்கும் குரங்குகளை ரூ 1000 விலைக்கு விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஏகாம்பரம் வருவதை எதிர்நோக்கி காத்திருந்தார்கள், ஊர் மக்கள்.

10 நாள் கழிந்த பிறகு ஏகாம்பரம் வரவில்லை, 15 நாட்களுக்குப் பிறகும் வரவில்லை, 20 நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. குரங்கு பண்ணையின் பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தால் குரங்குகளின் கழிவுகள் மட்டும்தான் மிஞ்சியிருந்தன. சும்மா கிடந்த குரங்குகளை எல்லாம் பிடித்து ஏகாம்பத்திடம் ரூ 100 முதல் ரூ 500 வரை விலைக்கு விற்ற ஊர்க்காரர்கள், பின்னர் அவற்றையே சுப்பிரமணியிடம் ரூ 700 முதல் ரூ 900 வரை விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறாக ஏகாம்பரமும், சுப்பிரமணியும் ஊர் மக்களின் சேமிப்புப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்து கொண்டு மாயமாகி விட்டார்கள்.”

இது கதை. பங்குச் சந்தை ஊக வணிகம் இப்படித்தான் செயல்படுகிறது, அப்பாவிகளின் சேமிப்பை சூறையாடி விடுகிறது என்பது கதையின் நீதியாக சொல்லப்பட்டது.

விலை ஏறும் என்று நம்பி பங்குகளை வாங்கி அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்தோ, அல்லது மதிப்பே இல்லாமல் போயோ தமது சேமிப்புகளை எல்லாம் இழந்தவர்களின் நிலையை இந்தக் கதை சொல்கிறது. ஆனால், பங்குச் சந்தை இது மட்டும் இல்லை, இந்த அளவில் மட்டும் இல்லை.

பங்குச் சந்தை முதலீடு என்பதை சேவல் சண்டையின் போது சுற்றி நின்று கொண்டு குறிப்பிட்ட சேவல் மீது பந்தயம் கட்டுவதோடு ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். பந்தயம் கட்டுபவர் சேவலை வளர்க்கவும் இல்லை, அதை சண்டைக்கு பதிவு செய்து இறக்கி விடவும் இல்லை. சுற்றி நின்று கொண்டு கைவசம் இருக்கும் பணத்தை எந்த சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுகிறார். ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவதையும் இதனோடு ஒப்பிடலாம். எந்தக் குதிரை வேகமானது, எந்த ஜாக்கி திறமையாக ஓட்டுவார், குதிரைகளின் கடந்த கால ரிக்கார்ட் என்ன, இந்த மைதானத்தில் குறிப்பிட்ட குதிரை எப்படி ஓடியிருக்கிறது என்று பல விபரங்களை சேகரித்து, பரிசீலித்து, நிபுணர்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு ஒரு அல்லது பல குதிரைகளின் மீது பந்தயம் கட்டி சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள். பணம் கட்டிய குதிரை ஜெயித்தால் பணம் பல மடங்காகும். தோற்றுப் போனால், கட்டிய பணம் போச்சு.

ஆனால், “பங்குச் சந்தையை இப்படி கொச்சையாக பார்க்க வேண்டாம். பங்குச் சந்தையை இவ்வளவு எளிமையாக புரிந்து கொள்ள முடியாது, அது இன்னும் சிக்கலானது, இன்னும் ஆழமானது, நிஜ பொருளாதாரத்தோடு தொடர்புடையது.

உற்பத்தி, வியாபாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியோடு தொடர்புடையது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திறமையும், அறிவும் வேண்டும். உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளில் பலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இன்று பங்குச் சந்தைகள் உலகளாவியவையாக மாறி விட்டன.”

என்று நீங்கள் கருதினாலோ, எங்காவது படித்திருந்தாலோ, யாராவது சொல்லியிருந்தாலோ, அது நூற்றுக்கு நூறு உண்மை. சேவல் சண்டை போலவோ, குதிரை பந்தயம் போலவோ சும்மா பொழுது போக்கு இல்லை பங்குச் சந்தை. அது உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.

எப்படி என்று இன்னும் விபரமாக பார்க்கலாம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையேற்று நடத்தினார். இதில் தோழர் மருதையன் உரையாற்றினார்.

அவரது உரையில், “ உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் ”பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2-வது பயம்தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் முழக்கம் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் வீட்டுக் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் போலீசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

காவல் நிலையத்திற்கு போனாலே எப்படி பொய் வழக்குகளை ஜோடிப்பது என்று தெரியும். அது போலத்தான் முற்போக்காள‌ர்கள் மீது பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை ஆகியவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகளாக இருந்தன. பின்னர் அதுவே நமக்குப் பழகிவிட்டது. அவசர நிலை காலகட்ட நடைமுறைகள் அனைத்தும் நமக்கு பழக்கமாக்கப்படுகின்றன. தமிழிசையை அச்சுறுத்திய சோஃபியாவின் குரல், பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டு முழங்கினானே, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று, அதே குரல்தான் இதுவும்.

இந்த பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட உடனடியாக களத்தில் இறங்குவோம். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத்தனத்திற்கு மீண்டும் செல்ல நேரிடும்” என்று கூறினார்.

**********

க்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும், பத்திரிகையாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பீமா கோரெகான் சம்பவத்தைக் காரணமாக வைத்து, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மோடியைக் கொல்ல சதி செய்தனர் என்றும் பொய்க்கதைகளை கட்டியுள்ளது.

மோடி ஆட்சியிலமர்ந்து இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த மேக் இன் இந்தியா, சுவச்சு பாரத், பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, என அனைத்து திட்டங்களும் தோற்றுப்போய் விட்டன. இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ் இறக்கி உள்ளது. இவர்கள் மூலம்தான் முற்போக்காளர்கள் மீதான் தாக்குதல்களும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. கட்ந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், அதற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தபோல்கரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் ஒன்றுதான் என கர்நாடக புலனாய்வு துறை கண்டுபிடித்துச் சொன்னது.

கொலை செய்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வட இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உணர்வு பூர்வமாக போராடும் மக்களுக்கு மத்தியில் நாம் விசயங்களை அறிவியல்பூர்வமாக எடுத்துச் சொல்லும்போது போராட்டம் தீவிரமடைகிறது. தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100-வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். 100-வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துகுடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். யார் அந்த தமிழிசை? என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, கருத்துரிமைக்கு தடை – இது போன்ற பாசிச ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்க முடியாமல்தான் விமர்சிக்கிறார். இது தவறா?

மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வோரு மாவட்டத்திலும் பல வழக்குகள் உள்ளன. மேலும் உங்களைக் குறித்து அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமது மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைதான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறினார்.

  • வினவு களச் செய்தியாளர்

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ? ஆழி செந்தில்நாதன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.

ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு.

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்றோ இந்தியாவில் ராணுவ ஆட்சி வரவேண்டும் என்றோ இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றோ கூறுவதுகூட அரசியல்சாசன ரீதியில் குற்றம்தான். இந்தியா என்பது இறையாண்மையுள்ள, ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்றக் குடியரசு. இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு எந்த அடிப்படையில் இயங்கமுடியும்? அல்லது வேறு எந்த மதவாத அமைப்பாவது இயங்கமுடியுமா?

உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் சுயநிர்ணய உரிமையைக் கோருவதே குற்றமாகக் கருதப்படுவதில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில் இதுபோன்ற முழக்கங்கள் எழுகின்றன. அதற்கென கட்சிகள் இருக்கின்றன. அத்தகையக் கட்சிகள் தேர்தலில்கூட நின்று வெல்கின்றன, ஏன், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்பது குறித்து வெகுசன கருத்தறியும் தேர்தல்களையேகூட நடத்தியிருக்கிறதே? அந்தக் கட்சியை தடைசெய்ததா பிரிட்டன்?

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இயல்பான உரிமை (natural right). அதைத்தான் இந்திய அரசுமே ஏற்றுக்கொண்ட ஐநா அவையின் விதிமுறைகளும் கூறுகின்றன. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்று தனி அரசு நடத்துவதற்கான உரிமை. ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேரு இத்தகைய உரிமையை இந்தியாவிலுள்ள மாகாணங்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் தரவேண்டும் என்று பேசியவர்தான்.

சுயநிர்ணய உரிமை என்பது விவாகரத்து உரிமையைப் போன்றது என்பார்கள். திருமணமானவர்களுக்கு விவாகரத்து உரிமை இருக்கவேண்டும். அந்த உரிமை இருப்பதானாலேயே அவர்கள் விவாகரத்து செய்துவிடுவதில்லை. மாறாக, சேர்ந்து வாழமுடியாது என்கிற நிலைமையில்தான் விவாகரத்தைப் பற்றி யோசிப்பார்கள். உண்மையில் விவாகரத்து நடந்தால் அதன் பிறகு என்ன ஆகும் என்ற அச்சத்தில், தங்களுடைய போக்குகளை மாற்றிக்கொள்கிற தம்பதிகள் மிகவும் அதிகம்.

சுயநிர்ணய உரிமையின் எளிமையான வெளிப்பாடுதான் தனிநாடு கேட்பது. இணையத்தில் தேடிப்பாருங்கள். உலகில் நூற்றுக்கும் குறைவில்லாத அளவுக்கு தனிநாட்டுக் கோரிக்கைகள் உலவுகின்றன.

திராவிட நாடு கோரிக்கையை கைவிடாவிட்டால் திமுக தடைசெய்யப்படும் என்கிற நிலை ஏற்பட்டது. அப்போது அறிஞர் அண்ணா. 1963 இல் மாநிலங்களவையில் பேசியபோது அண்ணா இரண்டு கருத்துகளை முன்வைத்தார்.

சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டு உரிமை வேண்டும் என்று பேசுவதையே தடைசெய்வது என்பது இந்தியா அரசியல்சாசனம் கூறும் அடிப்படை உரிமைகள் (fundamental rights) என்கிற கோட்பாட்டுக்கே விரோதமானது.

இதைப்பற்றி பேசினாலே அல்லது கோரினாலே இறையாண்மை கெடும் என்கிற வாதம் அடிப்படையிலேயே தவறானது. இந்திய அரசியல்சாசனத்தின் படி இந்தியாவின் அரசியல் இறையாண்மை என்பது இந்தியாவிலுள்ள மக்களிடமே தங்கியிருக்கிறது. அதன் சட்ட இறையாண்மை ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை தில்லியில் மட்டுமே குவிந்திருக்கவில்லை. (Why do you think that our demand endangers

Before answering that we should be very clear about what we mean by sovereignty. The preamble to the Constitution says that the political sovereignty rests with the people. Then legal sovereignty is divided between the Federal Union and the constituent units. Why don’t you take it that our scheme is to make the states still more effective sovereign units? Why don’t you take it in that light? Why do you think that the moment we demand Dravidastan, we are cutting at the root of sovereignty? Sovereignty does not reside entirely in one particular place. – ‘Carry On, But Remember!’ speech by Anna).

திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிற முடிவுக்கு வருகிறார் அண்ணா. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்குக்கூடத் தடை என்பதை ஏற்க மறுக்கிறார். இறையாண்மை என்பதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்கிறார். இந்த அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் கட்சிதான் கண்ணதாசனைக் கைதுசெய்கிறது.

இன்று இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை குறித்து “கவலைக்கொண்டிருக்கிற” எல்லோருமே தனிநாடு கோரும் விஷயத்தை ஒரே விதமாக கைகொள்வதில்லை. சிலரைப் பொறுத்தவரை, தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்தான் தனிநாடு கோருவது தவறு. மற்றபடி, ஜனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு, ஆயுதம் ஏந்தியப் பாதைக்கு போகாத வரை, தனிநாடு பற்றி பேசுவதோ எழுதுவதோ பரப்புபரைசெய்வதோ பெரிய குற்றமல்ல என்றே நினைக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் குறைந்தது அந்தந்த தேசிய இனங்களில் நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகள், தனிநபர்கள் இது குறித்து பேசியும் எழுதியும் வருகின்றன. கல்வி மையங்களில்கூட இத்தகைய கருத்துகளை முன்வைப்பவர்கள் செயல்படுகிறார்கள். புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக, ஆசாதி முழக்கம் எழுப்பபட்டது என்று கூறி வலதுசாரிகள் கொந்தளித்தது நினைவிலிருக்கும். அப்போது அது குறித்து கருத்துத்தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நான் ஆசாதி முழக்கத்தை ஏற்கவில்லை என்றாலும், அதைப் பற்றி பேசுவதே குற்றமல்ல என்றார். (Although I personally disapprove of the slogan for azadi, in my opinion the shouting of such slogans per se, is no crime. So many people in India often shout such slogans. In the past, the advocates of Khalistan did so, as did Nagas and Mizos. In Kashmir today, tens of thousands of people are raising this slogan. In Scotland, many people demand separation from Great Britain, and many people in the French-speaking province of Quebec demand freedom from the rest of Canada. In a democracy, people should be allowed to let out steam, and the government should learn to not over-react.- Markandey Katju, thewire.in, Aug 20, 2016). கட்ஜூ தன் கட்டுரையில் வேறு ஒரு தீர்ப்பையும் குறிப்பிட்டிருந்தார். அது அமெரிக்காவில் நடந்தது.

கம்யூனிஸ்ட்கள் என்றாலே நரவேட்டை ஆடும் அமெரிக்காவில்கூட, கம்யூனிசம் பற்றி பேசுவதே ராஜதுரோகம் என்று கருதப்பட்ட காலத்தில், அதுவும் பனிப்போர் காலத்தில், நீதியரசர் ஹார்லன் பின்வருமாறு ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டார்: “The mere teaching of communist theory, including the teaching of the moral propriety or even moral necessity for a resort to force and violence, is not the same as preparing a group for violent action and steeling it to such action. There must be some substantial direct or circumstantial evidence of a call to violence now or in the future which is both sufficiently strong and sufficiently pervasive to lend colour to the otherwise ambiguous theoretical material regarding communist party teaching.’ (NOTO vs. US (1961).

ஆக, விடுதலை என்றோ புரட்சி என்றோ பேசுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் ஒரு ஜனநாயக நாட்டில் குற்றமாகாது. வன்முறை மூலம் ஆட்சியை அகற்றுவோம் என்று பேசுவது கூட குற்றமில்லை என்கிறார் ஹார்லன். அதற்காக உண்மையிலேயே வன்முறையில் இறங்கினால்தான் குற்றம் என்கிறார். ஆனால் அந்த நாட்டின் விடுதலையின்போது, மக்கள் ஆயுதமேந்தி போராடுவதுகூட உரிமைதான் என்று அமெரிக்க விடுதலையின் தலைமக்கள் பேசியிருக்கிறார்கள். Right to revolt பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இன்றைய நிலையில், இது தன்னாட்சி கோரும் காலமே தவிர தனியாட்சி கோரும் காலம் அல்ல என்றே நினைக்கிறோம். ஆனால் தனியாட்சி கோரும் கருத்துரிமையை, அமைப்பு நடத்தும் உரிமையை நாம் காப்பாற்றவே வேண்டும். கருத்துரிமை, கூட்டும்கூடும் உரிமை, சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் எந்த சமரசமும் செய்யமுடியாது. இல்லையென்றால் பாரதிதாசனையும் பெருஞ்சித்திரனாரையும்கூட குற்றவாளிகளாக ஏற்கவேண்டியிருக்கும். அவர்கள் சாகும்வரை விடுதலையைப் பாடினார்கள். பெரியார் கடைசிவரை விடுதலையைப் பேசினார்.

அதைப் போலவே “இந்தப் பிரிவினைவாதிகளை தூக்கில்போடுங்கள்” என்று ஒரு சங்கப் பரிவார நபர் எழுதுகிறார் என்றால் அவருக்கும் அப்படி எழுத உரிமை உண்டு என்றே நாம் கருதவேண்டும். இங்கே ஆர்.எஸ்.எஸ். சட்டபூர்வமாக செயல்படமுடியுமானால், தமிழ்நாடு விடுதலை கோரும் பல்வேறு அமைப்புகளும் சட்டப்படி செயல்பட முடியவேண்டும்.

பிரிவினைக்கு எதிராக பேசும் பா.ஜ.க., வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரும் பல இயக்கங்களோடு இப்போது கூட்டுவைத்திருக்கிறது. அசாமில் இவர்கள் செய்யும் என்ஆர்சி விவகாரங்கள் அனைத்துமே உல்ஃபா போன்ற ‘பிரிவினைவாத’ அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள்தான்.

தேர்தல் ஆவணத்தில்தான் காஷ்மீரின் மக்கள் மாநாட்டுக் கட்சியும் பஞ்சாபின் அகாலி தளமும் பிரிவினையைப் பேசவில்லை. ஆனால் காஷ்மீரியத்தையும் பஞ்சாபியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், பஞ்சாப் விடுதலை கோரும் அல்லது விடுதலைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இந்தக் கட்சிகளில் இருக்கிறார்கள். தலைமைகள் அப்படி இல்லையென்றாலும், தொண்டர்களில் பலர் அதே விடுதலைக்கனவுகளோடு இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அவர்களோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டுவைக்கவில்லையா? அப்போது இந்திய தேசிய ஒற்றுமை குலைந்து போய்விடவில்லையா? அப்படித்தானே அகாலிதளத்துக்கு எதிராக, தனிநாடு கோருபவர் எனத்தெரிந்தும் பிந்தரன்வாலேவுக்கு இரகசிய ஆதரவளித்து வளர்த்தார் இந்திரா காந்தி?

தனித்தமிழ்நாடு வேண்டும், அதில் சோஷலிச சமூகத்தை அமைக்கவேண்டும் என்றெல்லாம் கருதுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் எந்த விதத்திலும் குற்றமல்ல, சட்டவிரோதமும் அல்ல.

அது சமூகத்தின் ஒரு பிரிவினரின் விழைவு. அதை இந்த அரசு ஏற்கமறுத்தால் எதிர்த்து பிரச்சாரம் செய்யலாம். அந்த விழைவை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவது என்பதே தவறு என்று பாய்வது முட்டாள்தனம். பாசிசம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்கத்தைப் பார்த்தோம்: “மாடு வேண்டும், மாடு வேண்டும் இல்லையென்றால் நாடு வேண்டும்”. காவிரி பிரச்சினையின்போது இப்படி ஒரு முழக்கம் வந்தது: “தண்ணியக் கொடு, இல்லேன்னா தனியா விடு”. இதெல்லாம் யாரும் சொல்லிக்கொடுத்து வந்தது அல்ல. அப்படி வந்திருந்தாலும் இந்த முழக்கங்கள் லட்சக்கணக்கானவர்களிடம் பரவியவதற்கு யார் காரணம்? வேறு எப்போதையும்விட தமிழ்நாட்டில் இப்போது “பிரிவினைவாதம்” பரவியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? – தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசும் அதன் எடுபிடி அரசும்தான் காரணம்.

“நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைத்தான் கைவிட்டோம், ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார் அண்ணா.

“இல்லை, இல்லை, அந்தக் காரணங்களை இப்போது நாங்கள் பல மடங்காக அதிகரித்திருக்கிறோம்” என்கிறது மோடி அரசு.

எது குற்றம்? யார் குற்றவாளி?

– ஆழி செந்தில்நாதன்   

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

10
வில்லவன்

குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.

மனிதகுல வரலாற்றில் திருமணத்துக்கு வெளியேயான காதலும் பாலுறவும் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ”கணவனே கண்கண்ட தெய்வம்” போன்ற அறிவுரைகள் ”விட்டுட்டு போயிடாதடீ” எனும் மன்றாடலாகவும் இருந்திருக்கக்கூடும். சில சமூகங்களில் மாதவிலக்கின்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே தனி குடிசையில் அமர வேண்டும் என்பது கட்டாயம். அது அவர்களது மாதவிலக்கை மற்றவர்கள் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு. விதவைக்கு மொட்டையடிப்பதும், வெள்ளை சீலை உடுத்துவதும் அவர்களை தனித்து அடையாளப்படுத்தத்தான். அழகை குலைத்து வீட்டைவிட்டு ஓடாமல் காப்பாற்ற அல்லது ஓடினால் எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம். அரசர்கள் போருக்கு செல்கையில் ராணிகளுக்கு பூட்டு போட்ட இரும்பு உள்ளாடை அணிவித்த கதைகள் உண்டு. சுரங்கம் தோண்டி இரகசியக் காதலரை சந்தித்த ராணி வடநாட்டில் இருந்திருக்கிறார். கள்ளக்காதல் எனும் பொருள்கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை, அங்கே அதனை எக்ஸ்ட்ரா மெரைட்டல் அஃபேர் எனும் அதிர்ச்சியூட்டாத வார்த்தையால்தான் குறிப்பிடுகிறார்கள்.

குன்றத்தூர் அபிராமி, அவரது  குழந்தைகள்.

அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளைக் கொன்றுவிடும் செய்தியும் நமக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளுக்குப் பிறகு அவை வாரம் இரு முறையேனும் கேள்விப்படும் செய்தியாகிவிட்டது. வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வோர், மனைவியோடு சண்டைபோட்டு அந்த ஆத்திரத்தில் பிள்ளைகளைக் கொன்ற அப்பாக்கள், காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்கள் அல்லது கணவனையோ மனைவியையோ கொன்றவர்கள் என எல்லா வகைமாதிரி குடும்பத்துக்குள்ளேயான கொலைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் கொலைகள்தான் அதிகம் நடக்கும். இப்போது உறவுகளுக்குள் நடக்கும் கொலைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன.

பிறகு ஏன் அபிராமி பற்றிய செய்தி பற்றியெரியும் பிரச்சினையானது?

அதன் பின்னிருக்கும் முக்கியமான காரணி, அபிராமியின் செயலில் உள்ள சுவாரஸ்யம். வெகுமக்கள் மனதில் இருக்கும் கலாச்சார நீதிபதியை அச்செய்தி உசுப்புகிறது. வறுமையில் பிள்ளைகளை கொன்றவள் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை. உங்கள் மன நீதிபதியால் அதற்கு ஒரு எளிய தீர்ப்பு சொல்ல முடியாது (அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாதில்லையா?) சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் தன்னை தேவையின்றி சந்தேகிப்பது பற்றி தோழி ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டார். அவர் கணவர் இவரது சம்பளத்தை பெரிதும் நம்பியிருப்பவர்.

”சந்தேகப்பட்டு என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். ”அடிக்கவோ திட்டவோ மாட்டாரு. ஆனா யாருக்கோ சொல்ற மாதிரி பேஸ்புக்ல எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. மத்த பொம்பளைங்கள திட்டுறமாதிரி என்னை குத்திக்காட்டுவார்” என்றார். (அவரது ஆடைத்தெரிவு ஏனைய ஊழியர்களுடன் சிரித்து பேசுவது மாதிரியான செயல்களை – “தேவடியாளுங்க அடுத்தவங்களை பார்க்க வைக்குற மாதிரி மேக்கப் போடுவாங்க, வேலைக்கு போற பொம்பளைங்க ஏன் அப்படி போகனும்?” இது அவரது வசனங்களின் ஒரு சாம்பிள்).

இந்த வகை வாட்சப்தாசர்கள், சமூகம் சமீபத்தில்தான் கெட்டழிந்துவிட்டது எனத் தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது கருத்து சரி என நிரூபிக்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. அபிராமி செய்தி அவர்களது தீர்மானங்களை உரத்து சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது.

மேலும் நமக்கு தினசரி வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்குகள் குறைவாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டி.வி. சீரியல்கள் அதனை நிறைவேற்றின. அதில் கள்ளக்காதல், கொலை, கடத்தல் என எல்லாமே வந்தன (சித்தி தொடர் உச்சத்தில் இருந்த போது சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கும்). பிறகு நெடுந்தொடர்கள் போரடிக்க ஆரம்பித்த வேளையில் சொல்வதெல்லாம் உண்மை வகையறா நிஜவாழ்வு கள்ளக்காதல், கொலை போன்றவை அவ்விடத்தை ஆக்கிரமித்தன. சும்மா கதை சொல்வது எத்தனை நாள் தாங்கும்? அடுத்து 10 பேரை ஒன்றாக அடைத்து அவர்களது பலவீனங்கள், சண்டைகளை ஒளிபரப்பி வாழ்வை சுவை மிக்கதாக்கினார்கள். ஆனால் அந்த பிக்பாஸும் இப்போது சலிப்புதட்டுவதாக தகவல்.

ஊடகங்களுக்கோ முக்கியமான அரசியல் சமூக பிரச்சினைகள் பொதுவிவாதமாகாமல் தடுக்க வேண்டிய நிர்பந்தம். ரஃபேல் ஊழலையும் பெட்ரோல் விலையேற்றத்தையும் பெரிதாக்கக்கூடாது. ஆனால் தொழில் ஓடியாக வேண்டும். ஆகவே அபிராமியின் செய்தி அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. அதில் பொருந்தாக்காதல் எனும் கிளுகிளுப்பு இருக்கிறது.

நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் நம்மை பாலியல் ரீதியாக கிளர்ச்சியூட்டும்படி வடிவமைக்கப்பட்டவையே. இளைஞர்கள்/ மாணவர்கள் பலர் முதலில் சன்னி லியோனி போன்றோரது ஆபாச வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து அடுத்தகட்டமாக திருட்டுத்தனமான ஸ்கேண்டல் வீடியோக்களையே அதிகம் நாடுகிறார்கள். அது பாலியல் நாட்டத்தில் ஒரு திரில்லை கூடுதலாக சேர்க்கிறது. அதுதான் அபிராமி பற்றிய செய்திகளை பெரிதாக விற்பனையாகவல்ல சரக்காக மாற்றுகிறது. இந்த திரில்தான் திருமணத்துக்கு வெளியேயான காதலின் உடலுறவு நேரத்தை நீட்டிக்கிறது எனவும் அதுவே அந்த உறவின் மீது கூடுதல் போதையேற்படுத்துகிறது என ஒரு உளவியல் பார்வை இருக்கிறது.

காதல் வயப்படுதல் என்பது ஒரு மிதமான கோகைன் அடிமைத்தனத்துக்கு நிகரானது (குறிப்பு : மூளை பாகமான அமிக்டலாவுக்கு நல்ல – மீடியமான – கள்ளக் காதல் என்றெல்லாம் வகைப்படுத்தத் தெரியாது). கிளுகிளுப்பு, திரில், கடைசியில் ஒரு கலாச்சார பாடம் என பெருந்தொகையான மக்களை வசீகரிக்கும் அம்சங்கள் பல இருப்பதால் அபிராமி பாணி செய்திகள் என்பது காட்சி ஊடகங்களுக்கு ஒரு ஜாக்பாட். அதனால்தான் பல கோணங்களில் தக்க பிண்ணனி இசையோடு அச்செய்தியை இறக்குகிறார்கள்.

ஊடகங்களின் ‘எக்ஸ்ரே’ ரிப்போட்டுகள்.

ஆகவே இத்தகைய செய்திகளுக்கு அதிகம் அதிர்ச்சியடைந்து ஆற்றலை வீணாக்காதீர்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என கருதினால், அதற்கான வேறு நியாமான காரணிகள் இருக்கின்றன.

சமூகம் முழுக்க மனிதர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உணவு, காதல் – காமம் மற்றும் பதட்டம் (ஸ்ட்ரெஸ்) ஆகியவை நமது நடத்தை மற்றும் முடிவுகளின்மீது பெரும் செல்வாக்கு செலுத்தவல்லவை. பெரும்பான்மை குடும்பங்கள் போதுமான அளவு நேர்மறையான சமூகத் தொடர்புகள் அற்றதாக இருக்கின்றன (நமது சமூக ஊடக அடிமைத்தனத்துக்கு அதுவும் ஒரு காரணம்). அரசியல் காரணங்களால் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. நவீனத்தை வலியுறுத்தும் விளம்பரங்கள் பழைய கலாச்சாரமே சிறந்தது எனும் வாட்சப் அறிவுரைகள் என முற்றிலும் வேறான இருதுருவ குழப்பங்கள் நம்மை அலைகழிக்கின்றன. இவை எல்லாமே நம் எல்லோரது இயல்பையும் கடுமையாக சிதைக்கின்றன.

தாங்க இயலாத ஆத்திரத்தில் அல்லது மன அழுத்தத்தில் தமது பிள்ளைகளை கடுமையாக அடித்துவிடுவதாக பல அம்மாக்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெல்ட்டால் மகனை / மகளை அடிக்கும் அம்மா, மகனை சுடுதண்ணீரில் தள்ளிவிட முயன்ற அம்மா, நான்கு வயது மகளை சுவற்றில் தள்ளிவிட்டு பிறகு அதற்காக அழுத அம்மா என ஏராளமான உதாரணங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் கொடுமைக்காரி அம்மாக்கள் இல்லை. அது அவர்களை நெருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளின் ஒரு விளைவு. அதனை வெறுமனே அப்பெண்களின் நடத்தைப் பிரச்சினை என கருதினால் நம்மால் ஒரு குழந்தையைக்கூட அடி வாங்குவதில் இருந்து காப்பாற்ற முடியாது.

திடீரென எழுச்சி பெறும் பக்தி, அதீத சோதிட நம்பிக்கை, தற்கொலைகள், மனநல பிரச்சினைகள் என எழுதி மாளாத அளவுக்கு பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன. உறவுச்சிக்கல்கள் அந்தப் பட்டியலில் கடைசியாக வரும். ஆனால் அதன் நியூஸ் வேல்யூ ஏனையவற்றைவிட மிக அதிகம் (மனநலம் சார் தேடல்கள் கூகுளில் அதிகம் இருப்பதாக கேள்வி ஆனால் அதன் செய்தி முக்கியத்துவம் குறைவு). ஆகவே அத்தகைய செய்திகள் விரைவாகவும் முழு வீச்சோடும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வெறும் கலாச்சார மதிப்பீடுகளைக்கொண்டு பார்ப்பதால் எந்த பலனும் வரப்போவதில்லை.

மேற்கத்திய கலாச்சாரம் நம்மை கெடுத்துவிட்டது என்பது பச்சை அயோக்கியத்தனம்.  புதிய தொழில்நுட்பங்கள் பொருந்தாக் காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிற ஒழுக்கமான கலாச்சாரம் இங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பெண்களை ஜாக்கெட்கூட அணியவிடாத கலாச்சாரம் இங்கே இருந்தது. லட்சக்கணக்கான விதவைகளை அனாதையாக காசியில் விட்டுவிட்டு வந்து  கூச்சமில்லாமல் வீட்டில் வம்சவிருத்தி செய்த கலாச்சாரம் இங்கிருந்தது. கணவன் செத்தால் மனைவிக்கு கஞ்சா கொடுத்து நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இங்கிருந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் சோ கால்டு கள்ளக்காதல் எல்லாம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவதற்கான செய்தியே அல்ல.

கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. யார் கண்டது, அந்த செயல்பாடுகள் கலாச்சார காவலர்களின் கடைசி சமரசமான ஸீரோ கேஷுவாலிட்டி எனும் நிலையை கள்ளக்காதல்களிலும் கொண்டுவரக்கூடும்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

ந்தியா டுடேவின் 2018 செப்டம்பர் 10ஆம் தேதியிட்ட ஆங்கிலப் பதிப்பு “An Inconvenient Truth” என்ற பெயரில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கமான தமிழாக்கத்தை ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் முரளிதரன் விஸ்வநாதன் வெளியிட்டிருக்கிறார். அத்தொடரின் முதல் இரண்டு பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.

புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.

ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி.

ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.

கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?
பதில்: இல்லை.

கே. அவர்களது மரபணு, ஆரியர்திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?
பதில்: திராவிடர்கள்.

கே. தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?
பதில்: தென்னிந்தியர்கள்.

எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.

2015லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.

ஆனால், ஹரப்பா நாகரீகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது சிக்கலானது. 1924ல் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் சிதைவுகளை காலனீய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோதே, அது வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் என்பது தெளிவாகிவிட்டது. அந்த நாகரீகம் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்த ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்ற கருதுகோளை அவர்கள் முன்வைத்தனர். பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஆனால், சிந்துச் சமவெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தையது என்ற கருத்தை ஏற்றனர்.

மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

இந்துத்துவ தேசியவாதிகளைப் பொறுத்தவரை இந்த ஆரிய ஆக்கிரமிப்பு கருத்தாக்கம் பெரும் எரிச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை சிந்துச் சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் எனக் கருதினர்.

ஆனால், உண்மையில் சிந்துச் சமவெளியில் வசித்தவர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்தது. ராக்கிகடியில் கிடைத்திருக்கும் 4500 ஆண்டு பழமையான இந்த எலும்புக்கூடு இதில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடும். இந்த எலும்புக்கூட்டுக்கு ‘I4411’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ராகிகடிதான் இந்தியாவின் மிகப் பெரிய ஹரப்பாசிந்துச்சமவெளி நாகரீக பகுதி. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1920-களில் அகழ்வாய்வுசெய்யப்பட்ட மொஹெஞ்ஜோதாரோவைவிட மிகப் பெரிய ஆகழ்வாய்வுத் தளம் இது.

1960-களில் இருந்தே இங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்திருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய நகரமாக இருந்து, பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.

இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதில் மிகத் தீவிரமாக இருக்கும் இந்தக் காலத்தில், அறிவியல் அதற்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, ராகிகடி எலும்புக்கூட்டின் மரபணுவில் மரபணுக் குறியீடு ‘R1a1’ இல்லை. இந்த ‘R1a1’ குறியீடுதான் ஆரிய மரபணுக் குறியீடு என குறிக்கப்படுகிறது. இந்த மரபணுவானது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்டெப்பி புல் வெளி பகுதியிலிருந்து வெண்கல காலத்தில் இந்தியாவுக்கு வந்த மக்களிடம் இருக்கும் மரபணுக் குறியீடு இதுதான். இந்த மரபணுக் குறியீடு வட இந்தியர்களிடமும் வடக்கு ஐரோப்பியர்களிடமும் வலுவாகக் காணப்படுகிறது.

இன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.

சிந்துச்சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரே எலும்புக்கூட்டில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், ‘R1a1’ மரபணு குறியீடு இல்லை என்பதை வைத்து சில முடிவுகளை எட்டலாம். அதாவது சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேத கால நாகரீகத்திற்கு முந்தையது. ஆரம்பகால சமஸ்கிருதத்தைப் பேசியவர்களின் மரபணுவிலிருந்து மாறுபட்டது. இந்த ஆரம்பகால சமஸ்கிருதத்தைப் பேசியவர்களின் மரபணு குறியீடுகள் தற்போதைய வட இந்தியர்களிடம் பொதுவாகக் காணப்படுகின்றன.

அந்த காலகட்டத்தில், மத்திய ஆசியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்தவர்கள், தெற்காசியாவின் மரபணு சித்திரத்தை மாற்றி அமைத்தார்கள் என்றாலும் பழங்கால ராகிகடியில் வசித்தவர்கள், இந்த மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இன்றி இருந்திருக்கக்கூடும். அதாவது சிந்துவெளி மக்களின் மூதாதையர்களுக்கும் இந்த மத்திய ஆசிய மனிதர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களது மரபணுவில் 17.5 சதவீதம் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்களுடையது.

நாம் பொதுவாக இஸ்லாமிய, ஐரோப்பிய நாட்டவர்கள் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்தினார்கள், நம் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று அரசியல் முழக்கங்களை எழுப்பபவர்கள் இங்கே உண்டு. ஆனால், அவர்களது மரபணுப் பதிவுகளைவிட, ஸ்டெப்பி புல்வெளிக்காரர்களின் மரபணுப் பதிவு நம்மிடம் அதிகம் உள்ளது.

சரி, இந்த 4500 ஆண்டு பழமையான ‘I 4411’ என்பவர் யார்? “இந்த மனிதருக்கும் தென்னிந்தியாவின் பழங்குடியின மக்களுக்கும் கூடுதல் தொடர்பிருக்கிறதுஎன்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் ராய். அதாவது, தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப்போகிறது. இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்!!

இந்த ஆய்வு முடிவுகள் வேறு சில அதிரவைக்கும் உண்மைகளையும் சொல்கின்றன. அவை என்ன?

பகுதி – 2

சிந்துச் சமவெளி வரலாற்றை மாற்றி எழுத
இந்துத்துவ சக்திகள் செய்த முயற்சி

இந்த ஆய்வுகளில் இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் ஏற்கனவே வசித்தவர்களின் மரபணுக்களுடன் இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களின் கலப்பும் ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து வந்த இவர்கள் இரானிய விவசாயிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்பாக பழங்கால டி.என்.ஏ.க்கள் பரிசோதனை செய்யப்பட்டபோதும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் விவசாயத்தில் புதிய யுத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மேற்காசியாவுடன் ஏற்பட்ட தொடர்பாலேயே சாத்தியமாயின என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கும் இது வலுச்சேர்க்கிறது.
சிந்துச் சமவெளி நாகரீகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில், யுரேசிய ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளிலிருந்து பெரும் தொகையான மக்கள் திரள் இந்தியாவில் குடியேறியது என்ற முந்தைய ஆய்வு முடிவை அஸ்திவாரமாக வைத்தே ராகிகடி ஆய்வு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மட்டுமல்ல வட ஐரோப்பாவுக்கும் மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவ்வகையான மக்கள் தொகை கலப்பே ஐரோப்பிய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் இடையிலான உறவை விளக்கப் போதுமானது.

ஹரப்பாவில் நிலவிவந்த திராவிட நாகரீகம் முடிவை எட்டிய காலத்தில் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வேதகால மக்கள் குதிரைகளில் வந்தேறினர் என பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஆச்சரியமளிக்காது.
ராகிகடி ஆய்வுகள் முடிந்த பிறகு, அந்த ஆய்வில் என்ன கிடைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி வழக்கம்போல பொய்க் கதைகளும் பரப்பப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வின் மரபணு ஆராய்ச்சியில் பங்கேற்ற ராய் என்பவரைப் பேட்டியெடுத்ததாகவும் அவர், ராகிகடி மரபணுவுக்கும் வடஇந்திய பிராமணர்களின் மரபணுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியதாகவும் ஒரு இந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆக, இந்தோ – யுரேப்பியன் மொழிக் குடும்பம் என்பது இந்தியாவிலிருந்து தோன்றியது என்றது அந்த நாளிதழ். ஆனால், அப்படி ஏதும் இல்லை. அது ஒரு பொய்ச் செய்தி.

ராகிகடியிலிருந்து கிடைத்த ஜீன்களில் R1a1 – அதாவது ஆரிய மரபணு இல்லை என்பதுதான் இந்த ஒட்டுமொத்த ஆய்வும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம். ஆனால், இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது.
இந்துத்துவவாதிகள் சமீப காலமாக, சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேதகால நாகரீகம் என்று நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். 2014ல் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகு, இந்த இந்துத்துவ வரலாற்று முயற்சிகளுக்கு ஆதரவும் பணமும் கிடைப்பதும் எளிதாகியிருக்கிறது.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றுக் கமிட்டிக் கூட்டம் ஒன்றை ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் கூட்டினார். இந்தக் கமிட்டியின் தலைவர் கே.என். தீக்ஷித். அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் நோக்கம், இந்தியாவின் பழங்கால வரலாற்றின் சில பகுதிகளைத் திருத்தி எழுத ஏதுவாக ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்வதுதான்.

அந்தக் கூட்டத்தின் குறிப்புகளில் பின்வரும் வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன: “அகழாய்வு முடிவுகள், மரபணு ஆய்வுகள் போன்றவற்றை பயன்படுத்தி தற்கால இந்துக்கள் என்பவர்கள், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்தவர்களிலிருந்து வந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். பழங்கால இந்து கதைகள் உண்மையானவை, அவை வெறும் தொன்மங்கள் அல்ல என்று கூற வேண்டும்”.

ஆனால், உண்மையான அறிவியல் ஆராய்ச்சி இதற்கு எதிரான திசையிலேயே ஆய்வுகளை எடுத்துச் சென்றது. இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவது என்பது, அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.

ஹார்வர்டில் மக்கள் தொகை மரபணு ஆய்வாளரான டேவிட் ரெய்க் Who We Are and How We Got Here என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலிருந்து யுரேசியர்கள் குடியேறினார்கள் என்பதைச் சொல்வதே எவ்வளவு சிக்கலான காரியமாக இருந்தது என்று வியக்கிறார்.

இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது.

பிறகு ஒரு வழியாக, டெக்னிகலான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டதாம். அதாவது தென்னிந்தியர்களைக் குறிக்க ‘Ancestral South Indian’ (ASI) என்ற வார்த்தையும் வட இந்தியர்களைக் குறிக்க ‘Ancestral North Indian’ (ANI) வார்த்தையும் பயன்படுத்தப்பட்டது. பிறகு ஏஎன்ஐயிடம், இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களின் மரபணுக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டது. ஏ.என்.ஐ. என்பதற்குப் பதிலாக பழங்கால வட இந்தியர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் சிக்கலாகியிருக்கும்.
இதே பிரச்சனை தற்போதைய ஆய்வுக்கும் வந்தது. ரெய்க், அவரது அணியினர், ராகிகடியில் ஆய்வுசெய்தவர்கள் இணைந்து The Genomic Formation of South and Central Asia-இல் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிப்பித்தனர். இந்தக் கட்டுரையில் தெற்காசியாவிற்கு வெளியிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வந்தார்கள் என்ற வாக்கியம் வரக்கூடாது என ராகிகடியின் ஆய்வாளர்களில் ஒருவரான ஷிண்டே ரெய்க்கிடம் கூறினார். பதிலாக, இந்த இரு மக்கள் தொகைக்கும் (வட இந்தியர் – யுரேசியர்) இடையில் கலப்பு இருந்தது என்று வேண்டுமானால் கூறலாம் என்றார்.

ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே தேவையில்லாத கவனம் இந்த ஆய்வுக்குக் கிடைப்பது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. அப்படி மூடுமந்திரமாக இருந்ததால்தான், ஹரப்பா நாகரீகம் அழிந்த பிறகு, மத்திய வெண்கல காலத்திலிருந்து பிற்கால வெண்கல காலம் வரையில் ஸ்டெப்பி புல்வெளிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவினுள் வந்தார்கள் என்ற முடிவை தற்போது சொல்ல முடிந்திருக்கிறது.
ஆனால், இந்த ஆய்வு முடிவு ஏன் இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது. தாங்கள் சேகரித்த ஒரு மாதிரி மாசுபட்டதால் இந்தத் தாமதம் என அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல் ரீதியாக அசௌகர்யமான உண்மைகளை இந்த ஆய்வு முடிவு சொல்லும் என்பதாலேயே தாமதம் ஆனதாக ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஹார்வர்ட் அணியினர் பொறுமையிழந்து தங்கள் pre-printஐ வெளியிட்டுவிட்டனர். இதற்குப் பிறகு, ஷிண்டே தன் ஆய்வின் முடிவுகளை சற்று அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். ராகிகடியில் இருந்தவர்கள் உள்ளூர்காரர்களைப் போலத்தான் இருந்திருப்பார்கள். என்ன, தென்னிந்திய பழங்குடியின மக்களோடு சற்று தொடர்பிருந்திருக்கும் என்று பேச ஆரம்பித்தார்.

ஆனால், ஷிண்டே மட்டுமே இந்த முடிவுக்கு வர முடியுமா?

(தொடரும்)

13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு !

ரியானா மாநிலத்தின் பா.ஜ.க. அரசு, மாருதி தொழிலாளர்கள் 13 பேரைத் தூக்கிலிடவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தீவிரமாக வாதாடியிருக்கிறது. தொழிலாளிகளை ஒரு அரசாங்கம் தூக்கில் போடுவதைக் காலனி ஆட்சிக் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம். இன்று மோடியின் ஆட்சியில் அதைக் காண்கிறோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் மாருதி சுசுகி ஆலையில் நடைபெற்ற வன்முறை அந்த ஆலை நிர்வாகமே திட்டமிட்டு அரங்கேற்றிய ஒரு நாடகம். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கேட்ட தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகக் கூலிப்படையை வைத்து ஒரு கலவரத்தை நடத்தியது மட்டுமின்றி, சங்கம் அமைப்பதற்குத் தொழிலாளிகளுக்கு உதவிய மனிதவளத்துறை அதிகாரி அவினாஷ் தேவையும் கொலை செய்து, கொலைப்பழியைத் தொழிலாளர்கள் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எந்த சாட்சியமுமில்லை என்று 117 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகளான 13 பேருக்கு ஆயுள்தண்டனை. இந்த 13 பேரைத்தான் தூக்கிலிடச் சொல்கிறது, அரியானா அரசு.

மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்குகளில், மிகக் கொடிய கிரிமினல் குற்றமிழைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று பல தீர்ப்புகள் கூறுகின்றன. அவினாஷ் தேவின் மரணம் என்பது நிர்வாகமே செய்த கொலை என்பது ஒருபுறமிருக்க, தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள்தான் இதனைச் செய்தார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில்தான் இந்த ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டது.

அவ்வாறிருக்க, இந்த வழக்கில் மாருதி தொழிலாளிகளைத் தூக்கில்போட்டுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க. அரசு ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது? ‘‘இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வீழ்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் வருவதில்லை. மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி அறைகூவல் விட்டு வரும் இன்றைய சூழலில், மாருதி சம்பவம் நமது தேசத்திற்கே இழுக்காக அமைந்து விட்டது.

அதனால்தான் தூக்குதண்டனை கோருகிறோம் என்று விசாரணை நீதிமன்றத்தில் காரணத்தை விளக்கியிருக்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
இங்கே மரணதண்டனைக்குரிய குற்றமாக அரசால் கூறப்படுவது தீவைப்போ, கொலையோ அல்ல. தொழிற்சங்க உரிமைக்காகத் தொழிலாளிகள் நடத்திய போராட்டம் மோடியின் மேக் இன் இந்தியாவுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் எதிராக இருப்பதால், அது தேசவிரோதமாம்; எனவே, தூக்குதண்டனை!

மாருதி தொழிலாளிகளுக்கு என்ன காரணத்துக்காக தூக்கு தண்டனை கேட்கப்படுகிறதோ, அதே காரணத்துக்காகத்தான் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த அரசு. அங்கே தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக. இங்கே, ‘‘நீரையும் நிலத்தையும் காற்றையும் நஞ்சாக்காதே” என்று உயிர்வாழும் உரிமை கேட்டதற்காக.

மாருதி கலவரம் போலவே தூத்துக்குடி கலவரமும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்றுதான். மாருதியைப் போன்றே இங்கும் கூலிப்படைகள் உண்டு, தீவைப்பு உண்டு, இறுதியில் துப்பாக்கிச் சூடு. வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்; பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் சுட்டுக் கொல்லப்படவேண்டியவர்களே என்பதுதான் பொன்னார் பரிவாரம் இதற்கு அளிக்கும் விளக்கம்.

*****

டுவண் மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்வதென்பது புதிய விசயமல்ல. மாருதி சம்பவம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது. ஸ்டெர்லைட்டுக்கான அனுமதியும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் முதலில் வழங்கப்பட்டது.

எனினும், முதலாளித்துவ அரசுகள் எவையும் பொதுவாகத் தங்களை முதலாளி வர்க்கத்தின் சேவகர்கள் என வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. மக்கள் நல அரசு, அனைத்து மக்களுக்குமான நடுநிலை அரசு என்ற முகமூடிகளைப் பராமரிக்கவே அவை முயற்சிக்கின்றன.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த முகமூடிகள் கழன்று விழத்தொடங்கி விட்டன. மக்களுக்கு அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த ஆளும் வர்க்க அறிவுத்துறையினரின் விளக்கங்களும் மாறத் தொடங்கிவிட்டன. அரசு என்ற அடக்குமுறை எந்திரத்தை பராமரிப்பது, அந்த பராமரிப்புச் செலவை வரியாக மக்களிடமிருந்து வசூலிப்பது என்ற இரு பணிகளைத் தவிர, மற்ற கடமைகள் ஏதுமற்ற நிர்வாண நிலையை நோக்கி முதலாளித்துவ அரசுகள் சென்று கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில், அந்த நிர்வாணத்தை சற்றேனும் மறைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஆள்வதற்கான நியாய உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்தத்தை ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் உணர்ந்தே இருக்கின்றன.

முதலாளி வர்க்கத்திடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கான பணிகளை செய்து கொடுத்துவிட்டு, மக்கள் நலனுக்காக செய்வதைப் போலக் காட்டுவது; தனக்குச் சாதகமான முதலாளிகளுக்குச் சலுகை காட்டிக் கொண்டே மொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கும் நடுநிலையாக நடந்து கொள்வது போன்ற தோற்றத்தைக் காட்டுவது இவை பொதுவில் முதலாளித்துவக் கட்சிகள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள்.

அதேபோல, முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, மோதிக் கொள்ளும் அரசியல் கட்சிகளில் யார் ஒருவருடனும் தனியே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், கூடிய வரை விலகி நின்று கொண்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் போலக் காட்டிக் கொண்டு, எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும் தனது வர்க்கத்தின் நலனைக் காப்பாற்றிக் கொள்வதென்பது பொதுவில் அவர்கள் கடைபிடிக்கும் அணுகுமுறை.

*****

மூலதனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பராமரிக்கப்படும் இந்த நாசூக்கான, இலைமறை காய்மறையான உறவு இப்போது வேறு விதமாக மாறிவருகிறது. தன்னை முதலாளிகளின் நண்பனாக வெளிப்படையாகவே காட்டிக்கொள்வதற்கும், குறிப்பிட்ட குஜராத்தி பனியா, மார்வாரி தரகு முதலாளிகளைச் சலுகை பெற்ற முதலாளி வர்க்கமாக (crony capitalists) நடத்துவதற்கும் மோடி அரசு சிறிதும் தயங்கவில்லை.

விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்ற வங்கிக் கொள்ளையர்கள் தப்பிச்செல்ல அனுமதித்தது இருக்கட்டும். வாராக்கடன்களை வசூலிப்பதில் முதலாளிகளுக்குச் சலுகை காட்டாத ரகுராம் ராஜனை வெளியேற்றவும் மோடி தயங்கவில்லை. அதன் பின், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்ப்பது (Bankruptcy and Insolvency Bill) என்ற பெயரில் அம்பானிகளும் அகர்வால்களும் வங்கிகளைக் கொள்ளையிடுவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறார், மோடி.

அலோக் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் ரூ. 30,000 கோடி. வங்கிகளுக்கு 5,000 கோடியைக் கட்டிவிட்டு, அந்த நிறுவனத்தை கையகப்படுத்திக் கொண்டார் முகேஷ் அம்பானி. வங்கிக்கு நட்டம் 25,000 கோடி. பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் கடன் 52,500 கோடி. அது 31,500 கோடிக்கு டாடாவுக்கு விற்கப்பட்டது. வங்கிக்கு நட்டம் 21,000 கோடி. எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் 14,000 கோடி கடனுக்கு 5,600 கோடியைக் கட்டி விட்டு, அந்நிறுவனத்தை விழுங்கிக் கொண்டார் வேதாந்தாவின் அனில் அகர்வால்.

வாராக்கடனைக் கறாராக வசூல் செய்வதாகக் கூறிக்கொண்டு மோடி கொண்டுவந்திருக்கும் திவால் சட்டம், பொதுத்துறை வங்கிகளைத் திவாலாக்குவது மட்டுமல்ல, இந்தியாவின் இரும்பு மற்றும் கனிமத்துறை முழுவதையும் ஒரு சில முதலாளிகளின் ஏகபோகமாக மாற்றுகிறது. மின்சாரம், உள் கட்டுமானம், சுரங்கம், இரும்பு நிறுவன முதலாளிகளான இவர்கள்தான் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் பெரும்பகுதியைச் செலுத்த வேண்டியவர்கள்.

‘‘வெளிநாட்டுப் பயணங்களில் தன்னுடன் அழைத்துச் செல்லும் தொழிலதிபர்களின் பெயர்களை இரகசியமாக வைத்திருக்கும் ஒரே பிரதமர் மோடிதான்” என்று குற்றம் சாட்டுகிறார் கபில் சிபல். ‘‘இடைத்தரகர்களை ஒழித்துவிட்டதாக மோடி சொல்வது ஒருவகையில் உண்மைதான். தன்னைத் தவிர, மற்றெல்லா இடைத்தரகர்களையும் அவர் ஒழித்து விட்டார்” என்கிறார் யெச்சூரி.

அமைச்சரவையின் அதிகாரத்தை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரமாகவும், கட்சியின் அதிகாரத்தை மோடி – அமித் ஷா கும்பலின் அதிகாரமாகவும் மையப்படுத்திவிட்டதன் காரணமாக, மற்ற மட்டங்களிலான அதிகாரங்கள் அநேகமாக முடக்கப்பட்டுவிட்டன. காங்கிரசு ஆட்சியில் தனித்தனியே நடந்த ஊழல்களைக் காட்டித் தேர்தலில் வென்ற மோடி, அந்த ‘வருமானத்தையெல்லாம்’ மையப்படுத்தியிருப்பதுடன் சட்டபூர்வமாகவும் மாற்றியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பிரதாப் பானு மேத்தா.

பா.ஜ.க., காங்கிரசு ஆகிய இரு கட்சிகளுமே அந்நிய நிதி வரவுச் சட்டத்தை (FCRA) மீறிப் பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிடம் நன்கொடை வாங்கியிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் 2014 – இல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக இரு கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இதற்கிடையில் பன்னாட்டு நிறுவனங்களும் மோடி அரசிடம் முறையீடு செய்தன. தற்போதைய அந்நிய நிதி வரவுச் சட்டம், 50% -க்கு மேல் வெளிநாட்டவரின் முதலீடு உள்ள நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களாக கருதுவதால், ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு’ என்ற தலைப்பில் தாங்கள் செலவிடவேண்டிய 10,000 கோடி ரூபாய் தேங்கிக் கிடப்பதாக மோடியிடம் முறையிட்டன.

‘‘உடனே 100% அந்நிய முதலீடாக இருந்தாலும், அது இந்திய நிறுவனமே” என்று அந்நிய நிதி வரவுச் சட்டத்தை முன் தேதியிட்டு (2010 ஆண்டு முதல்) திருத்தியது மோடி அரசு. இதன் காரணமாக வேதாந்தாவிடம் பணம் வாங்கிய குற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. 100% அந்நிய நிறுவனங்கள் அந்நிய நிதி வரவுச் சட்டத்தைப் பொருத்தவரை இந்திய நிறுவனங்களாக மாறிவிட்டன.

மோடி அரசின் முறைகேடு இத்தோடு முடியவில்லை. நன்கொடைப் பத்திரங்கள் (Electoral bonds) என்ற புதிய முறையின் மூலம் கட்சிகளுக்குப் பணம் கொடுக்கும் முதலாளிகள், யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதை இரகசியமாக வைத்துக் கொள்வதையும் சட்டபூர்வமாக்கிவிட்டது.

2016 – 17 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 90% பாரதிய ஜனதாவுக்குத்தான் சென்றிருக்கிறது (the hindu businessline, Aug 30, 2017). இந்தப் புள்ளிவிவரத்தை மேற்சொன்ன பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் சலுகை பெற்ற முதலாளி வர்க்கத்தினருக்கும் மோடி அரசுக்கும் இடையில் உருவாகியிருக்கும் புதிய வகைப் பிணைப்பைப் புரிந்து கொள்ளவியலும்.

தொழில் போட்டியை விரும்பாத, பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதையே ஒரு தொழிலாக நடத்த விரும்புகின்ற, ‘சலுகை பெற்ற முதலாளித்துவமும்’ ஜனநாயகத்தை விரும்பாத பாசிசக் கும்பலும் ஒருவர் தேவையை மற்றவர் நிறைவு செய்கின்றனர்.

தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் ஊடகங்களையே சந்திக்காத மோடியை கார்ப்பரேட் ஊடகங்கள் விழுந்து தொழுவதைப் பார்க்கிறோம். ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோடி அரசின் அரசியல் தோல்விகளை நியாயப்படுத்துகின்றன. பொய்களையும் மதவெறியையும் கூச்சமின்றிப் பிரச்சாரம் செய்கின்றன.

பா.ஜ.க. எதிர்ப்பாளர்களைக் கொச்சைப்படுத்தி மதிப்பிழக்கச் செய்கின்றன. இவையெல்லாம் இந்த உறவின் அபாயகரமான பரிமாணத்துக்குச் சான்றுகள். பசுக் குண்டர்களும், கலாச்சாரக் காவலர்களும் பார்ப்பன பாசிசத்தின் காலாட்படைகள்தான். ஆயின், அதன் புரவலர் ஆளும் வர்க்கம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

-சூரியன்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “மோடி மட்டும் பிரதமர் ஆகாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பார். கொலை என்பது இவர்கள் பணி. அதனால்தான் யாரைப் பார்த்தாலும் இவர்களுக்கு கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். மோடி ஒரு RSS வேட்பாளர், மோடி பணியை சரியாக செய்யவில்லை என்றால் மோடியையும் கூட இவர்கள் கொலை செய்வார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் வரை இவர்கள்தான் கொலை செய்தார்கள். இதுகுறித்து மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும்.

வாஞ்சிநாதன், அரிராகவன் மீது பொய் வழக்கு. மக்களை அச்சுறுத்த இது போன்ற வேலைகளைச் செய்கிறது மோடி அரசு. அந்த வகையில்தான் முற்போக்காளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5 பேர் மட்டும் இல்லை 5,000 பேர் இருக்கிறோம். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும். மோடி ஆட்சியை எதிர்த்து சிறை செல்வது நமக்குப் பெருமை. மோடி ஆட்சியினால் நமக்கு நிறைய பாதிப்பு. முதலாளிகளுக்கு எதிராக நாம் களமிறங்க வேண்டும். மக்கள் அதிகாரம் முன்னெடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முழுமையாக நிற்கும்.” என்று கூறினார்.

முழுமையான உரையைக் காண

 

ந்நிகழ்ச்சியில் பி.யூ.சி.எல் அமைப்பின் மாநில செயலாளர் முரளி பேசுகையில், ”ஏன் இது போன்ற கைதுகள்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்கு விதவிதமாக கற்றுத் தேர்ந்து உள்ளனர். பீமா கோரெகான் வன்முறையை உருவாக்கியது இந்துத் தீவிரவாதம்தான். 3 மாதங்களில் மட்டும் 22 பேர் UAPA-வில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் என்ன செய்தனர்? ஆனால் அவர்கள் மீதும் தேசதுரோக வழக்கு, அடக்குமுறை. என் வீட்டில் விடியற்காலை 3 மணிக்கு வந்து காவல் துறையினர் உனக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்க்கும் என்ன தொடர்பு, வாஞ்சிநாதனை எப்படித் தெரியும் என்று கேட்கின்றனர். நான் அவர் ஒரு வழக்கறிஞர், பார்த்துள்ளேன் பேசுவேன் என்றதற்கு என் மீது வழக்கு. RSS-ன் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகி வருகிறது. திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகாரர்களைக் கொண்டுதான் அவர்கள் கொலை செய்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எல்லாவற்றின் மீதும் அடக்குமுறை. ஒவ்வொரு மாநிலத்திலும் அடக்குமுறைக்கு புதிய உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர். நீதிமன்றமும் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர்கள் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறார்கள். ஒடுக்குவது, நசுக்குவது, இதற்காக சட்டங்களை அதிகமாக போட்டு உள்ளனர். மக்களின் குரல் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மாற்றி எழுத வைக்கும். போராட்டங்களுக்குத் தயங்கக் கூடாது” என்று பேசினார்

முழுமையான உரையைக் காண

– வினவு களச் செய்தியாளர்

நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்

நவீன மருத்துவம்

யற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம், மரபு வழி மருத்துவம், இலுமினாட்டி கோட்பாடுகள் ஆகியவை விவாதத்திற்கு வந்திருக்கின்றன.

தொற்று நோய் தடுப்பு, ஆயுள் சராசரி கூடியது, குழந்தை – பிரசவகால மரணங்கள் வெகுவாக குறைந்திருப்பது, ஆட்கொல்லி நோய்களுக்கு மருத்துவம், சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாக்கியிருப்பது… என அறிவியலால் வழிநடத்தப்படும் நவீன மருத்துவம் பல சாதனைகளைச் செய்து வருகின்றது.

இன்னொருபுறம் வாழ்க்கை முறை – உணவுப் பழக்கம் மாற்றம், நுகர்வுக் கலாச்சார போதை காரணமாக மக்கள் நோய்வாய்ப்படுவதும், மருத்துவமனைகளை நாடுவதும் அதிகரித்திருக்கிறது. முந்தைய காலத்தில் இத்தகைய நவீன மருத்துவம் இல்லாததால் சாதாரண நோய்களுக்கே மக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்தனர்.

உலகமயத்தின் காலத்தில் சுகாதாரம் என்பது அரசின் சேவைப் பட்டியலில் இருந்து தூக்கி எறியப்பட்டு வணிக சேவையாக மாற்றப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. மறுபுறம் அரசு மருத்துவமனைகளை திட்டமிட்டே நலிவடையச் செய்கிறார்கள். அரசின் கொள்கை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை ஆகிய இப்பிரச்சினைகளை ஆங்கில மருத்துவத்தின் தவறாக சித்தரித்து பல்வேறு போலி வைத்தியர்கள் பெருகிவிட்டனர். இவர்களும் மக்களிடம் முடிந்த மட்டும் கொள்ளையடிக்கின்றனர்.

இத்துடன் கூடவே சிலர் நவீன மருத்துவத்தை இலுமினாட்டிகளின் சதி என்று கதைகள் பல உருவாக்கி உலாவ விட்டிருக்கின்றனர். அதில் பெரியார் கொள்கைகள் மற்றும் திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்போடு சேர்த்து, வல்லரசு நாடுகளின் சுரண்டலை ஏதோ சில தனிக் குடும்பங்கள் – அதுவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே – செய்துவரும் சுரண்டலாக புரளி கிளப்புகின்றனர்.

இவை எல்லாம் சேர்ந்துதான் இன்று திருப்பூர் கிருத்திகாவை கொன்றிருக்கிறது.

நவீன மருத்துவமும், அரசு மருத்துவமனைகளை நலமாக வைத்திருப்பதும்தான் நமது நலத்தைக் காப்பாற்றும் என்பதையும் இலுமினாட்டி சதிக் கோட்பாட்டாளர்களின் பின்னணியையும் அறியத் தருகின்றது இத்தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரிசாலனையும் கைது செய் !
  • பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை !
  • பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
  • அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி
  • பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
  • பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?
  • பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
  • இந்தியாவின் பழங்கால பிரசவ கொடுமைகள்
  • ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?
  • மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
  • ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன் !
  • ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
  • மருத்துவத் துறையை சீரழிக்கும் தனியார்மய வைரஸ் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

  • சென்னை ஆதம்பாக்கம் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.
  • வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தற்காலிகக் கடைகள் அகற்றம் – வியாபாரிகளுடன் தள்ளுமுள்ளு.
  • வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.
  • ஆரணியில் பரபரப்பு ! டி.எஸ்.பி.யை கண்டித்து வியாபாரிகள்
  • சாலை மறியல் – ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
  • ஊட்டி : நடைபாதைக் கடைகள் அகற்றம் – சிறு வியாபாரிகள் புலம்பல்!
  • புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே சாலையோரக் கடைகள் அகற்றம்.
  • மார்த்தாண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

இவை, சென்னை முதல் கன்யாகுமரி வரை சாலையோர சிறு வணிகர்கள் மீது சமீபத்தில் தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் ஒரு சில. சாலையோரக் கடைகள் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லிதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மற்றும் வட்ட – மாவட்ட நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையினர் என ஒரு பெரும்படையே இந்தத் தாக்குதல்களை சாலையோர அப்பாவி சிறுவணிகர்கள் மீது நடத்தி வருகிறது.

வேலூர், அடுக்கம்பாறையில் அகற்றப்படும் சாலையோரக் கடைகள்.

இந்தச் சாலையோரக் கடைகளால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும், அதன் அடிப்படையில்தான் இந்தக் கடைகள் அகற்றப்படுவதாகவும் காரணம் சொல்கின்றனர் அரசு அதிகாரிகள். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு சாலையோரக் கடைகள் இடையூறாக இருப்பதாக மருத்துவமனை வளாகங்களையொட்டி கடை வைத்துள்ள சாலையோர சிறு வணிகர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

சாலையோர சிறு வணிகர்களின் கடைகளை அகற்றுவது ஏதோ பொது நலனுக்கானது போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் உருகி உருகி செய்திகள் வெளியிடுகின்றன. இதைப் பார்க்கின்ற பொது மக்களும், தங்களுக்கு அரசு நல்லது செய்வதாகக் கருதுகின்றனர்.

அச்சத்தில் சாலையோர வணிகர்கள்

அன்றைய வருவாய்க்கு முதலீடாகப் போட்டுள்ள சிறு வணிகர்களின் அற்ப சொற்ப பொருட்களை பொக்கலைன் இயந்திரங்கள் கொண்டு நாசம் செய்து லாரிகளில் ஏற்றும் அட்டூழியம் குறித்தோ, எதிர்ப்புக் குரல் எழுப்பும் சாலையோர சிறு வணிகர்களை காவல் துறையினர் வரைமுறையின்றி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்துவது குறித்தோ, சாலையோர வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை காவல் துறையினர் மிகக் கேவலமாகத் திட்டுவது குறித்தோ இந்த ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

பல இடங்களில் உள்ளூராட்சி அலுவலர்களும், காவல் துறையினரும் சாலையோர சிறு வணிகர்களிடம் அன்றாடம் மாமுல் வாங்கிக் கொண்டு கடைகளை நடத்துவதற்கு அனுமதிக்கின்றனர். அப்பொமுது மட்டும் இந்தக் கையூட்டுக்காரர்களுக்கு பொது மக்களின் நலன் கண்ணுக்குத் தெரியாது போலும்.

எந்த நேரத்தில் பொக்கலைன் வண்டி வரும் அல்லது லத்தியொடு காக்கிச்  சட்டைகள் வரும் என்கிற அச்சத்தோடுதான் சாலையோர சிறு வணிகர்களின் அன்றாடப் பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றல்ல, நேற்றல்ல. இது நீண்ட நெடியப் பிரச்சனை.

சாலையோர வணிகம் குறித்து நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன? 

சாலையோரங்களில் சிறு வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு  முயற்சி செய்யும் சாலையோர சிறு வணிகர்கள் தங்களது தொழிலை இந்தியாவெங்கும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகளில் மும்பை உயர்நீதி மன்றம், டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சாலையோர சிறு வணிகர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களது கூடுதல் வருவாய்க்காக சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்துவதையும் அவர்களது பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்துவதையும் நீதிமன்றங்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன.

தான் விரும்பிய ஒரு தொழிலையோ அல்லது வணிகத்தையோ மேற்கொள்வது இந்தியக் குடிமகனுக்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)(g) வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே ஒழிய, சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை மறுக்கக் கூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்த வழிகாட்டுதலுக்குப் பிறகுதான் சாலையோர சிறு வணிகர்களை பாதுகாப்பதற்கான “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டத்தை நடுவண் அரசு கொண்டு வந்தது. The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act 2014.   இதைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டம் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு 2015-ஆம் ஆண்டு வகுத்துள்ளது.

சட்டமும் திட்டமும், நடைமுறை விதிகளும் கொண்டு வந்து ஆண்டுகள் சில உருண்டோடிவிட்டன. ஆனாலும், காவல் ஆய்வாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை இப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. உண்மையிலேயே இப்படி ஒரு சட்டம் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை என்ற இடத்தில் வேலூர் மாவட்ட மருத்துமனை 2004-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்பொழுது முதலே, அப்பகுதியில் சாலையோர சிறு வணிகர்கள், சாலையோரங்களில் சிறு வணிகம் செய்து வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பழங்களை இச்சிறு வணிகர்களிடமிருந்தே பெற்று வருகின்றனர். இச்சிறு வணிகர்கள் அப்பகுதியில் கடைகள் வைக்கக்கூடாது என பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம், கனியம்பாடி காவல்துறை உதவியுடன் அடிக்கடி கடைகளை அகற்றுவதும், சிறுவணிகர்கள் அதற்கு எதிராகப் போராடுவதும் ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது. 

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ஐ சுட்டிக்காட்டி தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை காலி செய்யச்சொல்லி ஏழு நாள் அவகாசம் கொடுத்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர வணிகர்களுக்கு 14.08.2018 அன்று அறிவிப்பு ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறது.

சாலையோர வணிகம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல, இதற்குத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பொருந்தாது; மாறாக “சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” என்கிற சட்டம்தான் இதற்குப் பொருந்தும். எனவே இச்சட்டப் பிரிவு 22-ன் படி நகர வணிகக் குழு (Town Vending Committee) ஒன்றை அமைக்க வேண்டும். அதன் பிறகு, இந்தக் குழு, சட்டப் பிரிவு 3-ன் படி அங்குள்ள சாலையோர வணிகர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவரை யாரையும் கடை நடத்தும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது; மேலும் எங்கே விற்பனை செய்யலாம் (Vending Zone), எங்கே விற்பனை செய்யக் கூடாது (Non Vending Zone) என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப சாலையோர வணிகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் “தாய்-சேய்” திட்டம். “நெடுஞ்சாலை விரிவாக்கம்”, “மருத்துவமனை வளாகம்” என பொருத்தமற்ற காரணங்களைக் கூறிக்கொண்டு காவல் துறை உதவியுடன் அதிரடியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் அடுக்கம்பாறையில் செயல்பட்டு வந்த சாலையோரக் கடைகள் ஆகஸ்டு மாத இறுதியில் அப்புறப்படுத்தப்பட்டன.

தொடரும் அரச பயங்கரவாதம்

காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் எவரும் சாலையோர சிறு வணிகர்களை துன்புறுத்தவோ அல்லது அவர்களது கடைகளை அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 27) அவர்களுக்கு கடிவாளம் போட்டாலும் அதை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை.

அன்றாட பிழைப்பு நடத்தும் சாலையோர வணிகர்கள் பத்து நாட்களாக எந்தத் தொழிலும் இல்லாமல் வறுமையில் வாடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட பிறகு, சாலையோர வணிகர்கள் குழு ஒன்றை அமைத்து முறைப்படுத்தும்வரை பழைய நிலையையே தொடரலாம் என கோரிக்கை முன்வைத்ததையொட்டி மீண்டும் சாலையோர சிறு வணிகர்கள் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தங்களது கடைகளை நடத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் 08.09.2018 அன்று காலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியுமின்றி, கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி சாலையோர வணிகர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளார். இரு வணிகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களைத் தகாத சொற்களால் வசைபாடியுள்ளார். சட்டத்துக்குப் புறம்பாக, ஒரு ரௌடியைப் போல நடந்து கொண்ட கனியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜனை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் (DIG)  சாலையோர வணிகர்கள் சங்கம் சார்பில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் நாகராஜனின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், சாலையோர சிறு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 11.09.2018 அன்று வேலூர் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதே போன்று, 03.05.2018 அன்று அடுக்கம்பாறை சாலையோர சிறு வணிகர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய அப்போதைய கனியம்பாடி காவல் ஆய்வாளர் பாண்டியனின் அடாவடித்தனத்தை சாலையோர சிறு வணிகர்கள் தங்களது வீரமிக்கப் போராட்டத்தால் முறியடித்துள்ளனர்.

தெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார்? இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள்? நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும், கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள். உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஓர் அங்கமே!

இவர்கள் தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

“சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” அமுல்படுத்தப்பட்டாலொழிய அடுக்கம்பாறை மட்டுமல்ல இந்தியாவெங்கும் உள்ள சாலையோர சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமில்லை.

இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கான களப் போராட்டத்தில், சாலையோர சிறு வணிகர்களுக்கு தோள் கொடுப்பதே பொது மக்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !

“உங்களிடம் 1971-ம் ஆண்டுக்கு முந்தைய பிறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும். அல்லது 1971-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் அப்பா, அல்லது தாத்தாவுக்கு அத்தகைய தகுதி இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள் அல்லது இப்படி ஆதாரம் காட்ட முடியாதவர்கள் எல்லோரும் அன்னியர்கள்.”

ஜூலை மாத இறுதியில் அரசு வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், அஸ்ஸாமில் வசிக்கும் சுமார் 3.3 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். அரசின் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் தங்களது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தவறியுள்ளனர் அல்லது “வந்தேறிகள்”.

அசாம் மாநிலத்தில் 40 லட்சம் உழைக்கும் மக்களை சட்டவிரோத குடியேறிகளாக நிறுத்தியிருப்பது பா.ஜ.க-வின் நாடு தழுவிய அரசின் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி. ஆதார், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உழைக்கும் மக்களை பிரித்து தேசவெறி, இனவெறியை தூண்டி விடுகிறது இந்த பாசிச கும்பல்.

இவ்வாறு இந்திய அரசால் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வரும் அசாமில் தேசிய வெறியை தூண்டி விடும் பணியை பா.ஜ.க கும்பல் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. பன்முகத்தன்மை என்பது பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் அகண்ட பாரதக் கனவுக்கு தடையாக இருக்கிறது.

பெரும்பாலும் மலைவாழ் இனக்குழு சமூகங்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய சமவெளி பகுதி வங்காளம் ஆகும். வங்காளத்திலிருந்து உழைக்கும் மக்களும், வியாபாரிகளும் வேலை வாய்ப்புகள் தேடியும், வணிக ஆதாயங்களுக்காகவும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. வங்காளம் 1947-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் பகுதியானது, 1971-ல் அது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனிநாடாக ஆனது. இதைத் தொடர்ந்து அன்னியர்களின் வருகையால் அசாமிய மொழியும், கலாச்சாரமும் அழிக்கப்படுகின்றன என்ற போராட்டம் தொடங்கியது.

1950-களில் இருந்தே அசாமில் குடியேறியுள்ள வெளியூர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்துள்ளது. அதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முறை கொண்டு வரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகளோ இந்த குடியேற்ற பிரச்சனைக்கு மதச்சாயம் பூச ஆரம்பித்தன. அதன்படி வங்கதேச முஸ்லீம்களின் குடியேற்றத்தால் அசாமின் இந்து கலாச்சாரம் அச்சுறுத்தப்படுவதாக பீதியை கிளப்பினர். 1971-க்குப் பிறகு இது தொடர்பாக நடைபெற்ற கலவரங்களில் 2000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள். 2016-ல் அசாமில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பித்து அன்னியர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டது.

மோடி இந்தியாவின் ராஜபக்சே

உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வெறியை தூண்டி விடுவது ஆர்.எஸ்.எஸ் அரசியலின் அடிநாதம். குஜராத்தில் 2002-ல் படுகொலைகள், மும்பையில் கலவரம், காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை, நாடு முழுவதும் மதக் கலவரங்கள் என்ற வரிசையில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் இசுலாமியர்களை தனிமைப்படுத்தி துன்புறுத்துவது ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி.

அதன்படி இப்போதைய தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் யூதர்களை தனிமைப்படுத்தி, அடையாள முத்திரை குத்தி, தனி முகாம்களில் அடைத்து, கொன்று குவித்தது போன்ற கொடூர திட்டத்துக்கான அச்சாரம். இலங்கையில் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில் போலீசால் துன்புறுத்தப்படுவது இன்றுவரை தொடர்கிறது. 1972-ல் உருவாக்கப்பட்ட அந்த திட்டத்தின் இறுதி விளைவாக முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், முள் வேலி முகாம்களில் வதைக்கப்பட்டதும் சமகாலத்தில் நாம் கண்ட வரலாறு.

‘வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கோடிக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக இடம் பெயர்கிறார்கள். அவர்களால்தான் அசாமின் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகள் பறி போகின்றன.’ என்று நச்சு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வருகிறது பா.ஜ.க. இந்த நாடு தழுவிய வெறுப்பு அரசியலின் உள்ளூர் வடிவமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான ‘வந்தேறி’ குரல்கள் ஒலித்து வருகின்றன.

மேற்கு வங்கத்திலும் இது போன்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தெலுங்கானாவில் அன்னியர்களை அடையாளம் காண வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர் பா.ஜ.க-வினர். தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் வங்கதேசத்தவர்களும் ரொஹிங்கியாக்களும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் குடியேற்ற பிரச்சனையை முஸ்லீம் விரோத ஒடுக்குமுறையாக மாற்றுவதை மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தில் இசுலாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் குடியேறும்போது அவர்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

ரோஹிங்கிய அகதிகள் (கோப்புப் படம்)

அதாவது, பாகிஸ்தானிலிருந்தோ வங்க தேசத்திலிருந்தோ சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர் இந்துவாக இருந்தால் ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவருக்கு குடியுரிமை கொடுத்துவிடும். இந்த சட்டத்தில் முஸ்லீம்கள் மட்டும் கவனமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் சரி, பொருளாதார தேவைகளுக்காக இந்தியாவுக்குள் இடம் பெயரும் கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லீம்களுக்கும் இது பொருந்தாது.

இத்தகைய குறுகிய தேசிய வெறி திட்டங்களை தொழிலாளி வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. உழைக்கும் மக்களை இடம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளுவதே முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குதான். நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். கோடிக்கணக்கான இந்தி பேசும் தொழிலாளர்கள் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து கூலி வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின் இடம் பெயர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் அனைத்து சவடால்களும் தோற்றுப் போய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்ட நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க கும்பல். இதனை முறியடிக்கும் பொறுப்பு பாட்டாளி வர்க்கத்துக்கே இருக்கிறது.

பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைக்க முதலாளிகள் இன, சாதி, மத அடையாளங்களை பயன்படுத்தினாலும், தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தூக்கிப் பிடிக்கிறது. அனைத்து தொழிலாளர்களும் சுதந்திரமாக இடம் பெயரும் உரிமையையும், குடியேறும் இடத்தில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற வேண்டும் என்று கோருகிறது. இதற்காக சமரசமின்றி போராடவும் செய்கிறது.

– செல்வன்
புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018
நன்றி : new-democrats.com