Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 402

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

லக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) பாலித் தீவுகளில் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்திய கலந்துரையாடல் குறிப்பான தீர்வுகள் எதையும் எட்டாமல் புலம்பல்களோடு முடிவுக்கு வந்தது. எனினும், சர்வதேச நிதித்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தின் நிறைவில் நடந்து வரும் உலக வர்த்தகச் சண்டைகளின் விளைவாக கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அதை எதிர் கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் பேசப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே உலகளவிலான பங்குச் சந்தைகள் படு வேகமாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் “வர்த்தகப் போர்” ஒரு புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது. இதன் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் – குறிப்பாக வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (Non Banking Finance) பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. இந்திய பங்குச் சந்தையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சிக்கு ஐ.எல்.எப்.எஸ். (IL&FS – Infrastructure Leasing and Finance Services) நிறுவனத்தின் வீழ்ச்சி கட்டியம் கூறியது.

ஏறத்தாழ அமெரிகக் சப்பிரைம் நெருக்கடியைத் துவக்கி வைத்த லேமென் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியின் இந்திய வடிவம் தான் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தின் வீழ்ச்சி என முதலாளிய பொருளாதாரப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிக்கட்டுமானப் பணிகளுக்கான நிதி உதவியை வழங்கியுள்ளது ஐ.எல்.எப்.எஸ். இந்நிறுவனத்தில் ஸ்தாபன முதலீட்டார்களாக (Institutional Investors) எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிதிநிறுவனங்கள் உள்ளன. அதிகபட்சமாக எல்.ஐ.சிக்கு ஐ.எல்.எப்.எஸ்-ல் 25.34 சதவீத பங்குகள் சொந்தமாக உள்ளன.

ஐ.எல்.எப்.எஸ் நிறுவனத்திற்கு நேரடியாக 24 துணை நிறுவனங்களும், 135 மறைமுக துணை நிறுவனங்களும் உள்ளன. இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக துணை நிறுவனங்கள், கூட்டுப்பங்கு நிறுவனங்கள் என அனைத்தும் சேர்த்து மொத்தமாக சுமார் 91 ஆயிரம் கோடி கடன் உள்ளது – இந்தக் கடன்கள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவை. இக்கடன்களுக்கான வட்டியைக் கட்ட முடியாத நிலையில் ஐ.எல்.எப்.எஸ். சிக்கிக் கொண்டதை அடுத்தே வங்கியல்லாத நிதி நிறுவனங்களான டி.ஹெச்.எப்.எல்., டாடா கேபிடல், இந்தியா புல்ஸ் போன்ற நிறுவனங்களுடைய பங்குகள் வீழ்ச்சியடைந்தன. சென்ற இரண்டு வாரங்களாக பங்குச் சந்தையில் சூறாவளியைக் கிளப்பிய இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாக முதலாளித்துவ பத்திரிகைகள் சொல்வது ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் சீன அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவாக ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் அனைத்துமே சுணக்கமாக இருக்கும் நிலை.

இந்தப் பின்னணியில் இருந்துதான் சீன அமெரிக்க வர்த்தகப் போர் பிற நாடுகளையும் பாதித்து விடக்கூடும் என்கிற சர்வதேச நாணய நிதியத்தின் அச்சத்தையும் எச்சரிக்கையையும் புரிந்து கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் வர்த்தகப் போரின் பாதிப்பு சீனாவையும் அமெரிக்காவையும் மட்டும் பாதிக்கப் போவதில்லை; மாறாக ஏகாதிபத்தியம் எனும் கண்ணியால் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரம் அனைத்தையுமே புதை குழியை நோக்கி இழுத்துச் செல்லும் சாத்தியம் இந்த வர்த்தகப் போருக்கு உண்டு.

***

வெற்றி பெற்றால் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு முடிவு கட்டுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் சொன்னதை வெறும் தேர்தல் கால சவடால் என பலரும் கடந்து சென்றனர். ஆனால், அவரிடம் ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டம் அமெரிக்க முதலாளிகளின் ஒரு பிரிவினரின் நலனைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட ‘பாசிசக் கோமாளி‘ என்கிற வேடத்திற்குப் பொருத்தமானதாகவும் இருந்தது. அதாவது, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் தமது ஆலைகளை இந்தியா சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்திச் சென்றது தான் என்றார் ட்ரம்ப். அதே போல் அமெரிக்க நிறுவனங்கள் கீழை நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து அமெரிக்கர்களுக்கு செல்ல வேண்டிய வேலை வாய்ப்புகளைப் பறித்து விடுகின்றன என்று குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், அது போன்ற நிறுவனங்களை தான் சும்மா விடப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

படிக்க:
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !

ஆட்சிப் பொறுப்பேற்ற பின் விசா நடைமுறைகளை கடுமைப்படுத்துவது, வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகளை வைத்திருக்கும் பெரு முதலாளிகளை மிரட்டுவது என சில காலம் சலம்பி வந்தார் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் கடந்த ஜனவரியில் (2018) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியமின் தகடுகளுக்கான இறக்குமதி வரியை 25 சதவீமாக உயர்த்தினார். அமெரிக்காவில் புழங்கும் சூரியமின் தகடுகள் பெரும்பான்மையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதோடு சீனாவுக்கு சூரியமின் தகடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை அமெரிக்காவில் இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத சீனா உடனடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் மீது இறக்குமதி வரியை அதிகரித்தது.

அப்போதிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் துவங்கி சூடுபிடிக்கத் துவங்கியது. மாறி மாறி பல்வேறு சீன இறக்குமதிப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தி வந்த ட்ரம்ப் நிர்வாகம், கடந்த செப்டம்பர் 24ல் சுமார் 200 பில்லியன் பெறுமானமுள்ள சீனப் பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தியது. அமெரிக்கா குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்த ஒவ்வொரு சந்தர்பத்திலும் சீனாவும் அதே போன்ற பதிலடியை கொடுத்துள்ளது (என்றாலும், சீனாவின் தரப்பில் இறக்குமதி வரியை அதிகரித்துள்ள பொருட்களின் மதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே).   சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையில் சீன ஆதரவு நிலைப்பாட்டை ரசியா எடுத்துள்ளது. இச்சூழலில் தற்போது நடந்து வரும் இந்த மோதல்களை ஒரு சில மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் இரண்டாம் பனிப் போர் எனக் குறிப்பிடுகின்றனர்.

***

ர்வதேச நாணய நிதியம் பாலியில் நடத்திய கூட்டத்தில் சீனாவின் சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் யீ காங் (Yi Gang), ஒரு சில நாடுகள் வர்த்தகக் காப்பு (Trade protectionism) நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க பிற நாடுகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றும், உலமயமாக்கல் இன்னும் வெளிப்படையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பாரபட்சமின்றியும், அனைவருக்கும் பயன் தரத்தக்க விதத்திலும் செயல்பட எல்லா நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என கோரியுள்ளார்.

இதே கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க கருவூலத் துறையின் செயலாளர் ஸ்டீவன் நூச்சின், இது ஒன்றும் சோயா பீன்சை அதிகமாக வாங்குவது பற்றிய சில்லறைப் பிரச்சினை இல்லை; மாறாக, இது கட்டுமானப் பிரச்சினை என்று பேசியுள்ளார். மேலும் நடந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போரைத் தணிக்க பாலியில் ஐ.எம்.எப். கூட்டிய பஞ்சாயத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதை பகிரங்கமாக போட்டுடைத்த நூச்சின், எதுவாக இருந்தாலும் தமது குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

நூச்சின் சொல்லும் ”கட்டுமானப் பிரச்சினை” என்பது வேறு – அதாவது, உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் உள்ள சட்டவிதிகளின் ஓட்டைகளுக்குள் சீனா புகுந்து கொள்வதாகவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்குலகச் சந்தைகளுக்குள் சுலபமாக ஊடுருவியுள்ள சீனா தனது சந்தையை பிற நாடுகளுக்குத் திறந்து விடுவதில்லை எனவும் மேற்கு நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தான் நூச்சின் “கட்டுமானப் பிரச்சினை” என்கிறார். ஆனால், இதில் மெய்யாலுமே வேறு ஒரு அம்சத்தினாலான “கட்டுமானப் பிரச்சினை” உள்ளது.

அடிப்படையில் கூலி உழைப்பைச் சுரண்டுவதன் மூலமே மூலதனம் இடையறாது செயல்படவும் விரிவடையவும் லாபம் சம்பாதிக்கவும் முடியும். அதற்கு அடிப்படை குறைந்த கூலி. மேற்கத்திய நாடுகளின் மனித வளம் என்பது கூடுதல் விலை என்பதால் சுரண்டல் வாய்ப்பு குறைவு என்பதால் தான்  இந்தியா சீனா போல் மலிவு விலையில் மனித வளத்தைச் சுரண்டும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு தங்களது உற்பத்தி அலகுகளை ”கடத்தி” வந்தனர் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்கள். மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் மலிவான கூலித் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களை முதலாம் உலக நாடுகளின் சந்தைகளில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதே முதலாளிகளின் நோக்கம்.

எனினும், தொடர்ந்து உற்பத்தி ஆலைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் நிலையில் அமெரிக்கா போன்ற முதலாம் உலக நாடுகளில் உற்பத்தி ஆலைத் தொழிலாளர்கள் (blue collar) வேலை இழப்புக்கு ஆளாகினர். நிர்வாக வேலைகள் உள்ளிட்ட ஒரு சில வெள்ளைக் காலர் வேலைகளை மட்டும் அங்கே வைத்துக் கொள்வது, மற்றபடி உற்பத்திப் பொருளாதாரத்தைக் கைவிட்டு நிதிச் சூதாட்டப் பொருளாதாரத்தை மேற்கொள்வது என்கிற பாதையில் பயணித்துள்ள அமெரிக்கா, திரும்பி வர முடியாத நீண்ட தொலைவுக்கு ஏற்கனவே வந்து விட்டது.

படிக்க:
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
அந்நிய முதலீட்டுக்காக!

எனவே தான் ட்ரம்பின் நடவடிக்கைகளை போர்டு, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும் பன்னாட்டுத் தொழிற் கழகங்கள் எதிர்த்து வருகின்றன. அமெரிக்க முதலாளிகளிலேயே மிகச் சிறுபான்மையினராக இருக்கும் காப்புப் பொருளாதாரவாதிகள் மற்றும் அரசியல் அரங்கில் இனவாத பிற்போக்குவாதிகளின் ஆதரவு ட்ரம்புக்கு உள்ளது. தனது வாக்குவங்கியாக டொனால்ட் ட்ரம்ப் குறிவைத்திருப்பது வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கும் நாட்டுப்புற வெள்ளை இனத் தொழிலாளிகளையே என்பதால் நடந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போர் மேலும் சிலகாலம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

முடிவில் ஒன்று இந்த முரண்பாடுகளின் விளைவாக உலகப் பொருளாதாரம் ஒரு மீளமுடியாத நெருக்கடிக்கும் வீழ வேண்டும் அல்லது தற்காலிகமாக அமெரிக்க பெரு முதலாளிகள் டொனால்ட் ட்ரம்பை கட்டுப்படுத்தி அந்த நெருக்கடியை மேலும் சில காலத்திற்கு தாமதப்படுத்தலாம். எப்படிப் பார்த்தாலும் குறைந்த கூலியில் மனித உழைப்பைச் சுரண்டுவது மற்றும் அமெரிக்க நுகர்வுவெறி என்கிற பொருந்தாத கூட்டணி நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஏனெனில், குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளில் அலைந்து கொண்டிருக்கும் அமெரிக்க முதலாளி நம்பிக் கொண்டிருப்பது அங்கே உற்பத்தியாகும் பொருட்களுக்கு முதலாம் உலக நாடுகளில் இருக்கும் சந்தையை – அந்த சந்தையானது வேலையிழப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் நொறுங்கிச் சரிந்தே தீரும்.

  • சாக்கியன்

ஆதாரம் : IMF-World Bank ends meetings with call to brace for risks

மீனவனுக்கு துணை மீனவன்தான் ! படக் கட்டுரை

லையைப் பிரித்து நண்டு, கானாங்கத்த, இறால், திருக்கை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துப் போட்டுக்கொண்டிருந்த அந்த சென்னை மீனவர், திடீரென படபடத்து கைகளை உதறினார். என்னப்பா ஆச்சு என்று சக மீனவத் தொழிலாளர்கள் பதறிப் போனார்கள்.

மீனவர் மாணிக்கம்

ஒன்னுமில்லப்பா ஷாக் அடிச்சிடுச்சி… என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர ஆரம்பித்தார்.

கரண்டே இல்லாத எடத்துல எப்படி ஷாக் அடிக்கும்? இருந்தாலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக ஒயர் எதுவும் கிடக்கிறதா என்று சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். எனது நிலைமையைப் புரிந்துகொண்ட மாணிக்கம், சார் பயப்படாதீங்க, அதோ அந்த மீன தொட்டதுனால கரண்ட் அடிச்சிருக்கு, பாத்து நேக்கா எடுக்கணும் என்று திருக்கையை காட்டினார்.

படிக்க :
♦ சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை
சென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் !

மேலும், இது ஒடம்புக்கு ரொம்ப நல்லது, பெண்களுக்கு பால் சுரக்கும். வயித்து புண்ண ஆத்தும். சதப்பிடிப்பு, வாயு பிடிப்பு உள்ளவங்களுக்கு கரண்ட் மீன எடுத்து வச்சா போதும், எல்லாம் சரியாயிடும் என்றார்.

இது பரவாயில்ல, அதோ வலையிலிருந்து எடுக்குறாரே அது ரொம்ப மோசமானது என்று 6 சென்டி மீட்டர் நீளமுள்ள முட்கள் நிரம்பிய ஒரு மீனை காட்டினார்.

கருந்தும்பின்னு இதுக்கு பேரு. பெரட்டை (அழகிய வண்ணங்களில் முட்களைக்கொண்ட கடல் உயிரி) முள்ளு பட்டா கடுக்கத்தான் செய்யும். ஆனா இந்த கருந்தும்பி குத்துனா நெஞ்சே அடைச்சிடும், மூச்சு விட செரமமா இருக்கும் என்றார்.

என்னங்க, விலாங்கு மீனெல்லாம் மாட்டியிருக்கு; நல்ல வேட்டையா என்றதும்,

மீனவர் ஸ்ரீதர் வலையில் இருந்து கடல் பாம்பை லாவகமாக எடுக்கிறார்.

இது மீனில்ல சார், கடல் பாம்பு. சேர-ன்னு சொல்லுவாங்க. கடிச்சா கை துண்டாயிடும் என்று துடித்துக்கொண்டிருந்த பாம்பின் வாயைப் பிளந்து கோரப்பற்களைக் காட்டி, இத சமைக்கல்லாம் முடியாது, தூக்கிப்போட வேண்டியதுதான் என்றார் ஸ்ரீதர்.

மேலும், நீங்க சொல்ற மாதிரி எப்போதாவது மீனுங்க அதிகம் மாட்டும். அப்ப எங்க பாடு கொண்டாட்டம்தான்; நிம்மதியா சரக்கு அடிப்போம், சீட்டுக்கட்டு போடுவோம். ஊரு முழிக்கிறதுக்கும் முன்னே எழுந்து மறுபடியும் கடலுக்கு ஓடுவோம். இந்த மீனவனோட வாழ்க்கையைப் பத்தி சுருக்கமா சொல்லனுமுன்னா “ஒரு நாள் லட்டு, ஒரு நாள் லவடா” என்றார்.

***

நாங்க இல்லேன்னா இந்த கடல் இல்லை; இந்தக் கடல் இல்லேன்னா நாங்களும் இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு போக்கு, வாழ்க்கை, எல்லாமும் என தனக்கும் கடலுக்குமான உறவை அலையலையாய்க் கொட்டினார் சத்தியமூர்த்தி.

மேலும் தொடர்ந்தார்,

எனக்கு விவரம் தெரிஞ்சு என்னோட தாத்தா கடல்ல எறங்கினாரு, அப்புறம் எங்க அப்பா, இப்ப நானு. அடுத்தது என் பையனும் வந்துட்டான்.

மீனவர் சத்தியமூர்த்தி

காலையில மூன்றரை நாலு மணிக்கு பத்து லிட்டர் டீசல போட்டு, போட்ட எடுப்போம். 17, 18 மார்க் தூரம் போயி வலை வீசுவோம். அப்புறம் போட்ட வலையை சுருட்டி திரும்ப எட்டரை ஒன்பது மணியாயிடும்.

மீனு நெறையா கெடச்சதுன்னா இரண்டு வேள கூட கடலுக்கு போவோம். பத்தாயிரத்துக்கும் மேல லாபம் எடுப்போம். சில நாளு எதுவுமே கெடைக்காம சும்மாதான் இருப்போம்.

இன்னைக்கு 3 பேரு கடலுக்கு போனோம். நாலாயிரம் ரூபா மதிப்புள்ள மீன புடிச்சி வந்திருக்கோம். இப்போ புரட்டாசி மாசங்குறதால இரண்டாயிரத்துக்குத்தான் போகும். இதுல ஆயிரம் ரூபாயை வலைக்குக் கொடுத்துட்டு, மீதி உள்ள பணத்த ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்குவோம். தெனமும் கடல்ல கால வச்சாதான் குடும்பத்தையே ஓட்ட முடியும்.

கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள்.

கடலுக்கு போகும்போது, ஒரு நாள பாத்தாப்ல தெனமும் இருக்காது. திடீர்னு காத்து பலமா அடிச்சா, எங்கேயாவது தள்ளிட்டுப் போயிடும். ரொம்ப நேரமா ஆள காணோமேன்னு மத்த போட்டுக்காரங்க தேடிவந்து காப்பாத்திருவாங்க. எங்களோட நிலைமை பரவாயில்லை, கரைக்கும் பக்கத்திலேயே போயி வந்துகிட்டிருக்கோம். ராமேசுவரம் மீனவர்களோட நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு. இலங்கை போலீசு தெனமும் அடிச்சு வெரட்டுறான். அவங்க வாழ ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டேங்குது இந்த அரசு.

கரை திரும்பும் மீனவர்கள்.

சொல்றேன்னு கோச்சுக்காதீங்க, அமைச்சர் ஜெயக்குமாரை எங்காளுன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்கு. மீனவனோட பிரச்சினையை கண்டுக்காம போறாரு, சுத்த வேஸ்ட் சார். நான் கூட ADMK-தான். இங்கே நடக்குறது கெவர்ன்மென்டே இல்ல சார்… இது கான்ட்ராக்ட் கெவர்ன்மென்ட். இனி கெவர்ன்மென்ட நம்பிப் பயனில்லை. ஒரு மீனவனுக்கு மீனவன்தான் துணையா இருக்க முடியும்.

சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா | அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 5)

காந்தியம் ஒரு புரியாப் புதிர். அது அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வேண்டும் என்கிறது. அதாவது நாட்டின் இப்போதுள்ள அரசியல் கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்கிறது. அதே போது வழிவழியாக வந்த அடிப்படையில் ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை அடக்கி ஆள்வதற்கு, அதாவது ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை என்றென்றும் நிரந்தரமாய் அடக்கி ஆள்வதற்கு இடமளிக்கிற ஒரு சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்க முயல்கிறது. இந்தப் புதிருக்கு என்ன விளக்கம்? வைதிகமானவர்கள் என்றாலும் வைதிக மற்றவர்கள் என்றாலும் இந்துக்கள் அனைவரின் இடமும் சுயராச்சிய இயக்கத்துக்கு முழுமனதான ஆதரவு திரட்ட காந்தியார் வகுத்த உத்தியின் பகுதிதானா இது? அப்படித்தான் என்றால் காந்தியத்தை நேர்மையானதாகவும் உண்மையுள்ளதாகவும் கருத முடியுமா?

இது ஒரு புறமிருக்க, காந்தியத்தின் இரு கூறுகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடியவை. ஆனால் அந்தக் கூறுகள் குறித்து இது வரை கவனம் செலுத்தப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அவை மார்க்சியத்தைக் காட்டிலும் காந்தியத்தை அதிகம் ஏற்புடையதாக்குமா என்பது வேறு விவகாரம். ஆனால் மார்க்சியத்திலிருந்து காந்தியத்தை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறவை என்பதால் அந்தக் கூறுகளைக் குறிப்பிடுவது நன்று.

காந்தியத்தின் முதலாவது தனிக் கூறு என்னவென்றால்; தத்துவஞானம் உடையவர்கள் தங்களிடமிருப்பதை வைத்துக் கொள்வதற்கும், இல்லாதவர்கள் தாங்கள் அடைய உரிமை படைத்திருப்பதை அடைய விடாமல் தடுப்பதற்கும் அதன் தத்துவஞானம் உதவுகிறது. வேலை நிறுத்தங்கள் தொடர்பான காந்தியப் போக்கையும், சாதியிடம் காந்தியம் காட்டுகிற பயபக்தியையும், ஏழைகளின் நன்மைக்காகப் பணக்காரர்கள் பொறுப்பு ஏற்றிருப்பதான காந்தியக் கோட்பாட்டையும் பரிசீலிக்கிற எவரும் இது காந்தியத்தின் விளைவே என்பதை மறுக்க முடியாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்ட விளைவா, தற்செயலாக ஏற்படுகிற ஒன்றா என்பது விவாதத்திற்குரியதாக இருக்கலாம், ஆனால் உண்மையில் காந்தியம் வசதி படைத்தவர்களின் தத்துவஞானம், உழைக்காமல் ஒய்வெடுக்கும் வர்க்கத்தின் தத்துவ கோட்பாடு என்பதே உண்மை.

படிக்க:
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

காந்தியத்தின் இரண்டாவது தனி கூறு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்பாக்கியங்களை நற்பாக்கியங்களிலேயே மிகச் சிறந்தவை என்று காட்டுவதன் மூலம் அவர்களை மயக்கி அவற்றை ஏற்கச் செய்வதாகம், இந்தக் கூற்று உண்மையானது என்பதைக் காட்டுவதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுக்களே போதும்.

இந்துக்கள் புனிதச் சட்டம் சூத்திரர்கள் (நான்காம் வகுப்பிரான இந்துக்கள்) செல்வம் சம்பாதிக்க விடாமல் தடை செய்து தண்டனை விதிக்கிறது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் அறியப்படாத கட்டாய வறுமைச் சட்டம் இது. காந்தியம் என்ன செய்கிறது? அது இந்தத் தடையை அகற்றுவதில்லை, சொத்தினைக் கைவிடும் மனத் துணிவுக்கான சூத்திரத்தை அது ஆசீர்வதிக்கிறது! காந்தியாரே கூறியதை மேற்கோளாகத் தருவது பொருத்தமானது. அவர் சொல்கிறார்! (1)

உண்மையில் காந்தியம் வசதி படைத்தவர்களின் தத்துவஞானம், உழைக்காமல் ஒய்வெடுக்கும் வர்க்கத்தின் தத்துவ கோட்பாடு என்பதே உண்மை.

– “மதக் கடமை என்ற முறையில் (மேல் சாதியினருக்கு) பணி செய்யும் சூத்திரர்கள், சொந்தமான சொத்து ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். உள்ளபடியே சொத்து எதுவும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படவும் மாட்டார்கள்; இவர்களை ஆயிரம் முறை வணங்கி வழிபடுவது தகும். கடவுளர்களே சூத்திரர்கள் மீது பூமாரி பொழிவார்கள். ஆதாரமாகக் காட்டப்படும் இன்னோர் எடுத்துக்காட்டு, கழிப்பறைத் தொழிலாளியின் பால் காந்தியம் மேற்கொள்கிற போக்காகும். தோட்டியான ஒருவரின் வாரிசு தோட்டியாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டுமென்று இந்துக்களின் புனிதச்சட்டம் விதிக்கிறது. இந்து மதத்தில் தோட்டி வேலை கட்டாயமாய்ச் சுமத்தப்படுவதே தவிர விரும்பித் தேர்ந்தெடுப்பது அல்ல (2) காந்தியம் என்ன செய்கிறது? தோட்டி வேலையை சமுதாயத்துக்கு மிகவுயர்ந்த சேவை என்று புகழ்ந்து இந்த ஏற்பாட்டை நிரந்தரமாக்க முயல்கிறது. காந்தியார் கூறியதை எடுத்துக்காட்டுவோம்; தீண்டாத மக்களின் மாநாடு ஒன்றின் தலைவர் என்ற முறையில் காந்தியார் பேசுகையில் சொன்னார். (3)

“நான் மோட்சமடைய விரும்பவில்லை. எனக்கு மறுபிறப்பு வேண்டாம். ஆனால் நான் மறுபடியும் பிறப்பதாக இருந்தால் தீண்டத்தகாதவனாய்ப் பிறக்க வேண்டும்; அவர்களின் வருத்தங்களையும் இன்னல்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் இழிவுகளையும் நானும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் என்னையும் அவர்களையும் அந்த அவல நிலையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் பாடுபடவேண்டும்; ஆகவே நான் மறுபடியும் பிறப்பதானால் பிராமணனாக, சத்திரியனாக, வைசியனாக அல்லது சூத்திரனாகப் பிறக்கக் கூடாது, அதி சூத்திரனாகவே பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்…

“தோட்டி வேலை செய்வதை நான் விரும்புகிறேன். எனது ஆசிரமத்தில், ஆசிரமத்துத் தோட்டிக்குத் தூய்மையைக் கற்றுக் கொடுப்பதற்காக பதினெட்டு வயது பிராமண இளைஞன் ஒருவன் தோட்டி வேலை செய்து வருகிறான். அந்த இளைஞன் ஒன்றும் சீர்திருத்தவாதி அல்ல. வைதிகத்தில் பிறந்து வைதிகத்தில் வளர்ந்தவன்… ஆனால் குறையற்ற முறையில் தெருக் கூட்டத் தெரிந்தவன் ஆகும் வரை தன் சாதனைகள் முழுமை பெற மாட்டா என்றும், ஆசிரமத்தைக் கூட்டிச் சுத்தம் செய்கிற ஆள் அவரது வேலையை நன்கு செய்ய வேண்டுமானால் தானே அதைச் செய்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென்றும் அவன் எண்ணினான்.

“நீங்கள் இந்து சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.”

ஒரு வகுப்பினர் வேறொரு வகுப்பினர் மீது வேண்டுமென்றே சுமத்திய தீமைகளை நிரந்தரமாய் நீடிக்கச் செய்வதற்கு காந்தியார் செய்யும் இந்த முயற்சியைக் காட்டிலும் மோசமானதொரு பொய்ப் பிரச்சாரம் இருக்க முடியுமா? காந்தியம் சூத்திரருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வறுமை என்னும் விதியை உபதேசித்தால், அது பற்றி எவ்வளவு மோசமாகச் சொன்னாலும் ஒரு தவறான கருத்து என்றுதான் சொல்ல முடியும். ஆனால் வறுமையை ஒரு வகுப்பினருக்கு மட்டும் உபதேசம் செய்வது ஏன்? அவர் தனக்கெதிராக கொடிய பாகுபாடு என்று அறிவார்ந்த அடிப்படையில் வெறுத்து ஒதுக்கக் கூடியதை அவரே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் படிச் செய்வதற்காக மனிதனுக்குள்ள பலவீனங்களில் படுமோசமானவற்றை, அதாவது அகத்தையும் தற்பெருமையையும் தட்டி விடுவது ஏன்? இந்து சாத்திரங்களின் படியும் இந்துக் கருத்துக்களின் படியும் ஒரு பார்ப்பனர் தோட்டி வேலை செய்யதாலும் கூட தோட்டியாகப் பிறந்த ஒருவர் அனுபவிக்கும் ஊனங்களை ஒரு போதும் அனுபவிக்க மாட்டார் என்பது தெளிவாக இருக்கும் போது, ஒரு பார்ப்பனர் கூட தோட்டி வேலை செய்யத் தயாராய் இருக்கிறார் என்று தோட்டியைப் பார்த்துச் சொல்வதால் என்ன பயன்? ஏனென்றால் இந்தியாவில் ஒருவர் அவரது வேலையின் காரணத்தினால் தோட்டியாக இருக்கவில்லை. தோட்டி என்பவர் தோட்டி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் பிறப்பின் காரணத்தினால் தோட்டியாக இருக்கிறார்.

தோட்டி வேலை செய்வது உன்னதமான தொழிலென்று காந்தியம் போதிப்பதன் நோக்கம் அதில் ஈடுபட மறுப்பவர்களையும் ஈடுபடச் செய்வதாக இருக்குமானால் அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தோட்டி வேலை செய்வது உன்னதமான தொழில் என்றும், அது குறித்து அவர் வெட்கப்படத் தேவையில்லை என்றும் தோட்டியைப் பார்த்துச் சொல்வதன் மூலம் தொடர்ந்து தோட்டி வேலை செய்வதற்கு (4) அவரைத் தூண்ட வேண்டும் என்பதற்காக, அவரை மட்டுமே தூண்ட வேண்டும் என்பதற்காக அவரது அகந்தையையும் தற்பெருமையையும் தட்டி விடுவது ஏன்? வறுமை சூத்திரனுக்கு நல்லது, வேறு எவருக்குமல்ல என்று போதிப்பது, தோட்டி வேலை செய்வது தீண்டாத மக்களுக்கு நல்லது, வேறு எவருக்குமல்ல என்று போதிப்பது, அவர்களின் பலவீனங்களைத் தட்டி விடுவதன் மூலம் இந்தக் கொடுஞ்சுமைகளை அவர்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்ட வாழ்க்கைக் குறிக்கோள்களாக ஏற்றுக் கொள்ளும் படி செய்வது – இது நாதியற்ற இவ்வகுப்புகளை இழிவுபடுத்துவதும் கொடிய முறையில் கேலி செய்வதுமாகும். அலட்டிக் கொள்ளாமலும் அச்சமே இல்லாமலும் என்றென்றும் இப்படிச் செய்துக் கொண்டிருக்க காந்தியாரால் மட்டுமே முடியும்.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

இது தொடர்பாக காந்தியம் போலவே இருந்த ஓர் “இசத்தை” நிராகரிக்கையில் வால்டேர் பேசிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன: “ஓ! சிலரது இன்னல் வேறு சிலருக்கு மகிழ்ச்சி தருகிறது, முழுமைக்கு நன்மை பயக்கிறது என்று மக்களை பார்த்துச் சொல்வது அவர்களைக் கேலி செய்வதாகும்: இறந்து கொண்டிருக்கிற ஒருவனைப் பார்த்து உனது உடல் கெட்டு அழுகிப் போகும் போது அதிலிருந்து ஓராயிரம் புழுக்கள் உயிர் பெறும் என்று சொல்வது என்ன வகையான ஆறுதல்?”

விமர்சனம் ஒரு புறமிருக்க, இதுதான், அநீதிகளால் பாதிக்கப்படுபவனுக்கே அந்த அநீதிகள் அவரின் சிறப்புரிமைகள் என்பது போல் தோன்றச் செய்வதுதான் காந்தியத்தின் செய் நுட்பம், பொய்யான நம்பிக்கைகளிலும் பொய்யான பாதுகாப்பு உணர்விலும் மக்கள் மயங்கிக் கிடக்கும் படிச் செய்வதற்கு மதத்தை முழு அளவில் பயன்படுத்திய ஓர் ‘இசம்’ உண்டு என்றால் அது காந்தியம்தான். ஷேக்ஸ்பியர் கூறியதுபோல் நாமும் சொல்லலாம்: பொய்த் தோற்றமே; சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா?

( தொடரும்)

காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(1) வர்ண வியவஸ்தா என்ற நூலிலிருந்து தரப்படும் மேற்கோள், பக்கம் 51
(2) யங் இந்தியா, 1921, ஏப்ரல் 27.
(3) யங் இந்தியா, 1921 ஏப்ரல் 27..
(4) இந்திய மாகாணங்கள் சிலவற்றில் இதற்குச் சட்டங்களே உள்ளன: தோட்டியான ஒருவர் தோட்டி வேலை செய்ய மறுப்பது இச்சட்டங்களின்படி குற்றமாகும். இந்த குற்றத்துக்காக குற்றவியல் நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை விதிக்கலாம்.

முந்தைய பகுதி:
பகுதி – 1 : காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2 : தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி
பகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம்
பகுதி – 4 : சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி

பரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது  என ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அழிச்சாட்டியங்களை தோலுரிக்கிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம்.

கிட்டத்தட்ட 1970 வரை ஆண் – பெண் வேறுபாடின்றி சாதாரணமாக சென்று வழிபட்டிருக்கிறார்கள். எந்த சாஸ்திர விரோதமோ, ஆகம விரோதமோ இல்லாத ஒரு மலைக்கோயில் சபரிமலை ஐயப்பன் கோயில். இப்போது திடீரென ஆகமத்திற்கு ஆகாது என்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

இன்னும் பலரோ, காலங்காலமாக இருந்து வந்த பழக்கம் என்கிறார்கள். காலங்காலமாக இருந்ததனால், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? காலங்காலமா தேவதாசி முறையும்தான் நமது நாட்டில் இருந்தது. அதற்காக நம் வீட்டு பெண்ணை தேவதாசி முறைக்கு விடுறேன்னு ஒருத்தர் விடுவோமா? இது இந்து மதத்துல இருந்தது. மத உரிமைன்னு சொன்னா செருப்ப கழட்டி அடிக்க மாட்டோம்?

படிக்க:
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?

பெண்கள் வந்தா தெய்வக் குத்தமாகிடும்னு சொல்றாங்க .. அது தெய்வக்குத்தமா ? இல்லை பாப்பாரக் குத்தமா ?

ஆண்டவனே பெண்களின் பூஜையை ஏத்துக்கும் போது, பெண்கள் நுழையும் உரிமையைப் பறிக்க இவனுங்க யாரு? ஆண்டவனவிட பெரிய ஆளா? மலைக்கு மாலை போட்டுப் போற ஒவ்வொரு ஆணும், “ எம்பொண்டாட்டிய சாமி கும்பிடக்கூடாதுனு சொல்ல நீ யாருடானு?” இந்த இந்துத்துவக் கும்பலிடம் கேட்கனும்.

மாலைபோட்ட நாள் தொடங்கி, திரும்பி வீட்டுக்கு வரும் வரையில், காலையிலிருந்து பூஜை புனஸ்காரம் செஞ்சி, வீட்டை சுத்தம் செய்து, விரதத்துக்கு உணவு செய்யும் நம் வீட்டுப் பெண்கள் அந்த ஐயப்பனை தரிசிக்கக் கூடாதுன்னா, ஐயப்ப பக்தர்களே.. நீங்களே சொல்லுங்க, இது அந்த சாமிக்கே அடுக்குமா?

சபரி மலையில் பெண்கள் நுழையக் கூடாது எனச் சொல்வது ஐயப்பனின் குரல் அல்ல! ஆர்.எஸ்.எஸ்.-ன் குரல்!

#SabarimalaTemple, #ayyappa, #sabarimala, #ReadyToWait

தோழர் துரை சண்முகத்தின் முழுமையான உரை காணொளியில் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!

தாய் பாகம் 7 : பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 7

பாசி மணிகள் பல சேர்ந்து மாலையாவது போல, நாட்கள் இணைந்திணைந்து வாரங்களாய், மாதங்களாய் மாறிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் பாவெலின் வீட்டில் அவனது நண்பர்கள் கூடினார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்கள் தமக்கு முன்னுள்ள பெரிய படிக்கட்டில் ஒரு படி மேலேறியதாகவும், ஏதோ ஒரு தூர லட்சியத்தை நோக்கிச் சிறிது சிறிதாக உயர்ந்து வருவதாகவுமே தோன்றியது.

மாக்சிம் கார்க்கி

பழைய நண்பர்களோடு புதிய நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். விலாசவின் வீட்டிலுள்ள சின்ன அறையைப் பொறுத்தவரை அதுவே ஒரு பெருங்கூட்டம். நதாஷா குளிரால் விறைத்தும் களைத்தும் வந்துகொண்டிருந்தாள். எனினும் அவள் உற்சாகமாயிருந்தாள். பாவெலின் தாய் அவளுக்குத் தான் சொன்னபடி ஒரு ஜோடிக் காலுறைகள் பின்னிக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் சின்னஞ்சிறு கால்களில் அவளே அதை மாட்டிவிட்டாள். முதலில் நதாஷா சிரித்தாள். ஆனால், மறுகணமே அவள் சிரிப்பை அடக்கி அமைதியானாள்.

“ஒரு காலத்தில் என்னிடம் மிகவும் பிரியம் கொண்ட தாதி ஒருத்தி இருந்தாள்” என்று மென்மையாய்ச் சொன்னாள் அவள், “எவ்வளவு அதிசயமாயிருக்கிறது பார்த்தீர்களா, பெலகேயா நீலவ்னா? பாடுபடும் மக்கள் துன்பமும் துயரமும் சூதும் வாதும் கொண்ட வாழ்க்கைதான் நடத்துகிறார்கள். எனினும் மற்ற எல்லாரையும் விட அன்பு காட்டுகிறார்கள்…” என்று சொன்னாள். அவள் குறிப்பிட்ட மற்றவர்கள் அவளுக்கு வெகு தூரத்தில், ரொம்ப தூரத்தில் தள்ளிப் போனவர்கள்.

இதழ்களிலே புன்னகை பூத்துச் சொரிய அவர்கள் பிரெஞ்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும், ஸ்வீடன்காரர்களையும் தமது நண்பர்களாகக் கருதிப் பேசுவார்கள்.

”நீங்கள் எப்படிப்பட்டவர்!” என்றாள் பெலகேயா; ”பெற்றோர்களையும் உற்றார்களையும் இழந்து நிற்கிறீர்களே…” அவள் பெருமூச்செறிந்தாள். பிறகு மெளனமானாள். அவளுக்குத் தன் சிந்தனைகளை உருக்கொடுத்து வெளியிட முடியவில்லை. ஆனால், நதாஷாவின் முகத்தை பார்க்கும் போது, முன் உணர்ந்தது போலவே, இனந்தெரியாத ஏதோ ஒன்றுக்குத் தான் நன்றி செலுத்தித்தானாக வேண்டும் என்ற உணர்ச்சி அவள் உள்ளத்தில் பிறந்தோங்கியது. அவள் அந்தப் பெண்ணுக்கு எதிராக, தரையில் உட்கார்ந்தாள். அந்தப் பெண்ணோ தனது தலையை முன்னே தாழ்த்தி, இனிய புன்னகை புரிந்துகொண்டிருந்தாள்.

“பெற்றோர்களை இழந்து நிற்கிறேனா?” என்றாள் அவள், ‘அது ஒன்றும் பிரமாதமில்லை. என் தந்தை ஒரு முரட்டு ஆசாமி; என் சகோதரனும் அப்படித்தான். மேலும் அவன் ஒரு குடிகாரன். எனது மூத்த சகோதரி மகிழ்ச்சியற்றுப் போய்விட்டாள். அவளைவிடப் பல வருடங்கள் மூத்தவன் ஒருவன்தான் அவள் கணவன். பெரிய பணக்காரன் தான், ஆனால் படுமோசமானவன், மகாக் கஞ்சன். என் அம்மாவை நினைத்தால் எனக்கு வருத்தம்தான் உண்டாகும். அவளும் உங்களைப்போல், சாதாரணமான பெண்மணிதான். சுண்டெலியைப்போல், சிறு உருவம் ; சுண்டெலிபோலவே குடுகுடுவென்று ஓடுவாள்; எதைக் கண்டாலும் அவளுக்கு ஒரே பயம்தான். சில சமயங்களில் அவளைப் பார்க்க வேண்டுமென்று அப்படி ஆசைப்படுவேன்!….”

”அடி என் அப்பாவிப் பெண்ணே !” என்று தனது தலையை வருத்தத்தோடு அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்.

அந்தப் பெண் மீண்டும் தன் தலையை உயர்த்தி,  எதையோ பிடித்துத் தூரத் தள்ளுவதைப்போல, கையை உதறி நீட்டினாள்.

”இல்லை, இல்லை. சமயங்களில் எனக்கு ஒரே சந்தோஷம், தாங்க முடியாத சந்தோஷம்!”

அவளது முகம் வெளுத்தது; அவளது நீலக்கண்கள் ஒளிபெற்றன. அவள் தன் கரங்களைத் தாயின் தோளின் மீது வைத்துக்கொண்டாள்.

”எத்தகைய மகத்தான வேலையில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்று மட்டும் உங்களுக்குத் தெரிந்தால், புரிந்தால்…” கம்பீரமாகவும், மெதுவாகவும் சொன்னாள் நதாஷா.

ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சி பெலகேயாவின் இதயத்தைத் தொடுவது போலிருந்தது.

”அதற்கெல்லாம் நான் ஆள் இல்லை. நானே ஒரு கிழம். மேலும் எனக்கு எழுத்து வாசனை கிடையாது…” என்று துக்கம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டே தரையை விட்டு எழுந்தாள் தாய்.

அவன் நதாஷாவைப் பார்க்கும் போதும், அவளோடு பேசும்போதும் அவனது கண்களிலுள்ள கடுமையான பார்வை மறைந்து மென்மையாய் ஒளிர்வது போல…

……பாவெல் அடிக்கடி பேசினான். அதிக நேரம் பேசினான். அழுத்தத்தோடு பேசினான். நாளுக்கு நாள் மெலிந்து வந்தான். ஆனால் அவன் நதாஷாவைப் பார்க்கும் போதும், அவளோடு பேசும்போதும் அவனது கண்களிலுள்ள கடுமையான பார்வை மறைந்து மென்மையாய் ஒளிர்வது போலவும் குரலில் இனிமை நிறைந்து ஒலிப்பது போலவும், அவன் எளிமையே உருவாய் இருப்பது போலவும் தாயின் மனதில் பட்டது.

“கடவுள் அருளட்டும்!” என்று அவள் நினைத்துக்கொண்டாள். தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

அவர்களுக்குள் எழும் வாதப் பிரதிவாதங்கள் கொதிப்பேறி வீராவேசம் பெறும் போதெல்லாம், அந்த ஹஹோல் தன் இடத்தைவிட்டு எழுந்து நின்று, உடம்பை ஒரு கண்டா மணியின் நாக்கைப்போல் முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு ஏதோ சில அன்பான, சாதாரணமான வார்த்தைகளைச் சொல்லுவான். உடனே எல்லாரும் அமைதியாய்விடுவார்கள். அந்த நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மட்டும் மற்றவர்களை ஏதாவது செய்யும்படி கடுகடுப்பாய்த் தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பான். அவனும், அந்தச் செம்பட்டைத் தலையனும்தான் (செம்பட்டைத் தலையனை அவர்கள் சமோய்லவ் என அழைத்தார்கள்) சகல வாதப் பிரதிவாதங்களையும் ஆரம்பித்து வைப்பார்கள். சோப்புக் காரத்தில் முக்கியெடுத்ததைப் போன்ற தோற்றமும், உருண்டைத் தலையும் கொண்ட இவான் புகின் என்பவன் அவர்களை ஆதரித்துப் பேசுவான். வழிய வழியத் தலைவாரி விட்டிருக்கும் யாகவ் சோமவ் அதிகம் பேசுவதில்லை. பேசினால் அழுத்தம் திருத்தமாய்ப் பேசுவான். அவனும் அகல் நெற்றிக்காரனான பியோதர் மாசின் என்பவனும் பாவெலையும் ஹஹோலையும் ஆதரித்துப் பேசுவார்கள்.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சில சமயங்களில் நதாஷாவுக்குப் பதிலாக, நிகலாய் இவானவிச் என்பவன் வந்து சேருவான். அவன் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பான். வெளுத்த இளந்தாடியும் அவனுக்கு உண்டு. அவன் எங்கேயோ ஒரு தூரப்பிரதேச மாகாணத்தில் பிறந்தவன். “ஓ” என்ற ஓசை அவன் பேச்சில் அதிகம் ஒலித்தது. பொதுவில், அவன் ஒரு தொலைவானவனாகவே தோன்றினான். அவன் சர்வ சாதாரண விஷயங்களையே பேசினான் – குடும்ப வாழ்க்கை , குழந்தைகள், வியாபாரம், போலீஸ், உணவுப் பொருள்களின் விலைவாசி முதலிய மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியே பேசினான். ஆனால் அவன் பேசிய முறையானது எது எல்லாம் பொய்யாகவும் அறிவுக்குப் பொருந்தாததாகவும் முட்டாள்தனமாகவும், அசட்டுத்தனமாகவும், அதே சமயத்தில் பொது மக்களுக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியதாய் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்துகிற மாதிரி இருக்கும். மனிதர்கள் சுகமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு தூர தொலைப் பூமியிலிருந்து வந்தவன் போல், தாய்க்குத் தோற்றம் அளித்தான் அவன்.

இங்கோ எல்லாமே அவனுக்குப் புதிதாக இருப்பது போலவும், இந்த வாழ்க்கையே அவனுக்குக் கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாதது போலவும் வேறு விதியின்றித்தான் அவன் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றும். அவன் இந்த வாழ்க்கையை வெறுத்தான், இந்த வாழ்க்கையை மாற்றியமைத்துத்தான் ஆக வேண்டும் என்ற இடையறாத ஆசையை அமைதி நிறைந்த விருப்பத்தை அவனுள்ளத்தில் அந்த வெறுப்புணர்ச்சி வளர்த்து வந்தது போன்றும் அவளுக்குத் தோன்றும். அவனது முகம் மஞ்சள் பாரித்திருந்தது, கண்களைச் சுற்றி அழகிய சிறு ரேகைகள் ஓடியிருந்தன. அவனது குரல் மென்மையாயும், கரங்கள் எப்போதும் கத கதப்பாகவும் இருந்தன. அவன் எப்போதாவது பெலகேயாவுடன் கைகுலுக்க நேர்ந்தால், அவளது கரத்தைத் தனது கைவிரல்களால் அணைத்துப் பிடிப்பான், அந்த மாதிரியான உபசாரத்தால் அவள் இதயத்தில் இதமும் அமைதியும் பெருகும்.

“ஒரு காலத்தில் என்னிடம் மிகவும் பிரியம் கொண்ட தாதி ஒருத்தி இருந்தாள்”

நகரிலிருந்து வேறு பலரும் இவர்கள் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒல்லியாய் உயரமாய் வெளிறிய முகத்தில் பதிந்த அகன்ற கண்கள் கொண்ட ஒரு பெண் தான் அடிக்கடி வந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் சாஷா. அவளது நடையிலும், அசைவிலும் ஏதோ ஒரு ஆண்மைக் குணம் படிந்திருப்பதாகத் தோன்றியது. அவள் தனது அடர்த்தியான கறுத்த புருவங்களை ஒரு சேர நெரித்து சுழிப்பாள். அவளது நேர்முகமான மூக்கின் சிறு நாசித் துவாரங்கள் அவள் பேசும்போது நடுநடுங்கிக்கொண்டிருக்கும்.

அவள்தான் முதன் முதலாகக் கூர்மையான குரலில் தெரிவித்தாள்.

”நாம் எல்லாம் சோஷலிஸ்டுகள்!”

தாய் இதைக் கேட்ட போது ஏற்பட்ட பய பீதியால் வாயடைத்துப் போய் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தாள். சோஷலிஸ்டுகள் தான் ஜார் அரசனைக் கொன்றதாக பெலகேயா கேள்விப்பட்டிருந்தாள். அது அவளது இளமைக் காலத்தில் நடந்த விஷயம். தங்களுடைய பண்ணை அடிமைகளை ஜார் அரசன் விடுவித்துவிட்டான் என்ற கோபத்தால் நிலப்பிரபுக்கள் ஜார்மீது வஞ்சம் தீர்க்க உறுதி பூண்டதாகவும், ஜார் அரசனைக் கொன்று தலை முழுகினாலொழியத் தங்கள் தலைமயிரைச் சிரைப்பதில்லை என அவர்கள் சபதம் பூண்டதாகவும், அதனாலேயே அவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைத்து வந்தார்கள். ஆனால் தன்னுடைய மகனான பாவெலும் அவனது நண்பர்களும் தங்களை ஏன் சோஷலிஸ்டுகள் என்று சொல்லிகொள்கிறார்கள் என்பதுதான் பெலகேயாவுக்குப் புரியவே இல்லை.

எல்லாரும் அவரவர் இருப்பிடத்துக்குப் பிரிந்து சென்ற பிறகு, அவள் பாவெலிடம் கேட்டாள்.

“பாஷா! நீ ஒரு சோஷலிஸ்டா?”

“ஆமாம்” என்று அவள் முன்னால் வழக்கம்போல் உறுதியாகவும், விறைப்பாகவும், நின்றவாறே பதில் சொன்னான் அவன்.

“எதற்காகக் கேட்கிறாய்?”

அவனது தாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

”உண்மையில் அப்படித்தானா, பாவெல்? ஆனால், அவர்கள் ஜாருக்கு எதிரிகளாச்சே! ஜார் வம்சத்து அரசர்களில் ஒருவரைக் கூட அவர்கள் கொன்றுவிட்டார்களே?”

பாவெல் அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான்; கன்னத்தைக் கையால் தடவிக் கொடுத்துக்கொண்டான்.

”நாங்கள் அந்தமாதிரிக் காரியங்களைச் செய்யத் தேவையில்லை” என்று இளஞ்சிரிப்புடன் பதில் சொன்னான் பாவெல்.

இதன் பின்னர் அவன் அவளோடு அமைதியும் அழுத்தமும் நிறைந்த குரலில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தைப் பார்த்ததும் அவள் தன்னுள் நினைத்துக்கொண்டாள்.

“இவன் தவறேதும் செய்யமாட்டான்; இவனால் செய்ய முடியாது.”

புரியாத பதிற்றுக்கணக்கான புதிய வார்த்தைகளைப் போல், திரும்பத் திரும்ப அடிக்கடி கேட்ட அந்தப் பயங்கர வார்த்தையும், முனை மழுங்கி அவள் காதுக்குப் பழகிப்போயிற்று. ஆனால் சாஷாவை மட்டும் அவளுக்குப் பிடிக்கவே இல்லை; சாஷா வந்துவிட்டால் அவளுக்கு அமைதியின்மையும் எரிச்சலும்தான் உள்ளத்தில் எழுந்து ஓங்கும்.

உலகில் எத்தனை கோடி தொழிலாளி மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு பலசாலிகளாயிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்கள் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. உங்கள் இதயத்தின் கொண்டாட்டத்துக்கு எல்லையே இருக்காது!

ஒரு நாள் அவள் தனது உதடுகளை வெறுப்போடு பிதுக்கிக்கொண்டு, ஹஹோலிடம் போய் சாஷாவைப் பற்றிச் சொன்னாள்,

“அவள் மிகவும் கண்டிப்பான பேர்வழி! ஒவ்வொருவரையும் அதிகாரம் பண்ணுகிறாள்; ‘நீ இதைச் செய், நீ அதைச் செய்’ என்று உத்தரவு போடுகிறாள்!”

ஹஹோல் வாய்விட்டு உரக்கச் சிரித்தான்.

“சரியான குறி பார்த்து ஒரு போடு போட்டீர்கள் அம்மா, ரொம்ப சரி! அப்படித்தானே பாவெல்?” என்றான். பிறகு அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுக்கொண்டு. “பிரபு வம்சம்” என்றான்.

“அவள் ஒரு நல்ல பெண்!” என்று உணர்ச்சியற்றுச் சொன்னான் பாவெல்.

“அதுவும் உண்மைதான்” என்றான் ஹஹோல், அவள் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன விரும்புகிறோம். நம்மால் என்ன முடியும் – என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.”

புரியாத எதையோ பற்றி அவர்கள் விவாதித்தார்கள்.

சாஷா பாவெலிடமும் கண்டிப்பாக நடந்து கொள்வதையும், சமயங்களில் அவனைப் பார்த்து உரக்கச் சத்தம் போடுவதையும் தாய் கண்டிருக்கிறாள். அம்மாதிரி வேளைகளில் பாவெல் பதிலே பேசுவதில்லை. வெறுமனே சிரிப்பான்; நதாஷாவை எத்தனை அன்பு கனியப் பார்ப்பானோ, அது போலவே சாஷாவின் முகத்தையும் பார்ப்பான். தாய்க்கு இதுவும் கூடப் பிடிக்கவில்லை.

எல்லாரையும் தழுவி நிற்கும் பெருமகிழ்ச்சி தாயைச் சில சமயங்களில் வியப்புக்குள்ளாக்கும். இம்மாதிரியான குதூகலம், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர் இயக்கங்களைப் பற்றிப் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் படிக்கின்றபோதுதான் ஏற்படுவது வழக்கம். அப்போது அவர்கள் அனைவருடைய கண்களும் குதூகலத்தால் ஒளிபெற்றுத் துலங்கும்; அவர்கள் குழந்தைகளைப் போலக் குதூகலம் கொள்வார்கள்; வாய்விட்டுக் கலகலவென்று சிரிப்பார்கள், உற்சாகத்தில் ஒருவர் தோளை ஒருவர் தட்டிக் கொடுத்துக்கொள்வார்கள்.

“ஜெர்மன் தோழர்கள் வாழ்க!” என்று யாரோ ஒருவன் தனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திலேயே மூழ்கி, வெறிகொண்ட மாதிரி கத்தினான்.

“இத்தாலியத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று அவர்கள் வேறொரு முறை கத்தினார்கள்.

அவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்து மறு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்கள். மலர் மலராய்ச் சென்று வண்டு தேனுண்ணுவதைப்போல், அவர்கள் விரைந்து விரைந்து புத்தகம் புத்தகமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த வெற்றி முழக்கங்களைத் தூர தேசங்களிலுள்ள தமது நண்பர்களை நோக்கி, தங்களையோ தங்கள் மொழியையோ அறியாத, புரியாத நண்பர்களை நோக்கிக் காற்றிலே மிதக்கவிட்டுக் கத்தினார்கள். ஆனால், அந்த இனந்தெரியாத நண்பர்கள் அவர்களது முழக்கங்களைக் கேட்பது போலவும், அவர்களது உற்சாகத்தை உணர்ந்து கொள்வது போலவும் இவர்கள் முழுமையாய் நம்புவது போலத் தோன்றியது.

“நாம் அவர்களுக்குக் கடிதம் எழுதுவது ஒரு நல்ல காரியம்” என்று ஆனந்த மயமாக ஒளிரும் கண்களோடு பேசினான் ஹஹோல். “அப்படி எழுதினால், ருஷியாவிலும் தங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். தங்கள் மதத்தையே நம்பி அதையே பிரச்சாரம் செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தாங்கள் எந்தக் கொள்கையோடு வாழ்கிறார்களோ அதே கொள்கையோடு வாழ்ந்து, தங்களது வெற்றிகளைக் கண்டு களிப்பாடும் தோழர்கள் இருக்கிறார்கள் என்ற விஷயம் அவர்களுக்கும் தெரியவரும்.”

இதழ்களிலே புன்னகை பூத்துச் சொரிய அவர்கள் பிரெஞ்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும், ஸ்வீடன்காரர்களையும் தமது நண்பர்களாகக் கருதிப் பேசுவார்கள். தங்கள் இதயத்தோடு மிகுந்த நெருக்கம் கொண்ட மக்களாக, தாங்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் மக்களாக அவர்களைக் கருதிப் பேசிக்கொள்வார்கள். அந்த மக்களின் துன்பத்திலும் இன்பத்திலும் இவர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.

நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது. அவர்கள் அனைவரையும் ஒன்றாக உருக்கிச் சேர்த்து ஒரே பேராத்மாவாக மாற்றிவிட்டது. இந்த உணர்ச்சி அவளுக்குப் பிடிபடவில்லை என்றாலும் அந்த உணர்ச்சியின் இன்பமும் இளமையின் சக்தி வெறியும், நம்பிக்கையும் அவளைத் தளர்ந்துவிடாதபடி தாங்கி நின்றன.

“நீங்கள் இருக்கிறீர்களே!” என்று ஒருமுறை அவள் ஹஹோலிடம் சொன்னாள்; “அனைவரும் உங்களுக்குத் தோழர்கள்! அவர்கள் யூதர்களாகட்டும், ஆர்மீனியர்களாகட்டும், ஆஸ்திரியக்காரராகட்டும் – எல்லாரும் உங்கள் தோழர்கள் ! அவர்களுக்காக நீங்கள் வருத்தம் அடைகிறீர்கள், சந்தோஷமும் கொள்கிறீர்கள்!”

”ஆமாம், அனைவருக்காகவும், அனைவருக்காகவும், அம்மா! அனைவருக்கும்தான்!” என்றான் ஹஹோல். எங்களுக்குக் குலம் கோத்திரமோ, தேசிய இன பேதங்களோ தெரியாது. தோழர்களைத் தெரியும், எதிரிகளையும் தெரியும். சகல தொழிலாளி மக்களும் எங்களுக்குத் தோழர்கள்; சகல பணக்காரர்களும், சகல அரசுகளும் எங்களுக்கு எதிரிகள். உலகத்தை நீங்கள் ஒரு முறை பார்த்து, உலகில் எத்தனை கோடி தொழிலாளி மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு பலசாலிகளாயிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்கள் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. உங்கள் இதயத்தின் கொண்டாட்டத்துக்கு எல்லையே இருக்காது! அம்மா, பிரெஞ்சுக்காரனும், ஜெர்மானியனும், இத்தாலியனும் நாம் எப்படி வாழ்க்கையைப் பார்க்கிறோமோ அது போலவே பார்க்கிறான். நாம் அனைவரும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள்! அகில உலகத் தொழிலாளர்களின் வெல்லற்கரிய சகோதரத்துவம் எனும் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்! இந்த எண்ணம் நமது இதயங்களைப் பூரிக்கச் செய்கிறது. இதுதான் நியாயம் என்னும் சொர்க்க மண்டலத்தின் சூரியனாய்ச் சுடர்விடுகிறது. தொழிலாளியின் இதய பீடம்தான் அந்தச் சொர்க்க மண்டலம்! யாராயிருந்தாலும் சரி, எந்த இனத்தவனாயிருந்தாலும் சரி, ஒரு சோஷலிஸ்ட் எக்காலத்திலும் நமக்கு உண்மை உடன் பிறப்பு – நேற்று இன்று என்றுமேதான்.”

இந்தச் சிறு பிள்ளைத்தனமான, எனினும் உறுதி வாய்ந்த நம்பிக்கையே அவர்களிடம் நாளுக்கு நாள் உரம் பெற்று வந்தது. நாளுக்கு நாள் விம்மி வளர்ந்து, ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து வந்தது. இதைக் கண்ட தாய், வானத்தில் தான் காணும் கதிரவனைப் போல, மகத்தான ஏதோ ஒன்று இவ்வுலகத்தில் பிறந்துவிட்டது என்று, தன்னையறியாமலே உணரத் தலைப்பட்டாள்.

அவர்கள் அடிக்கடி பாட்டுப் பாடினார்கள். உரத்த உற்சாகம் நிறைந்த குரலில் அநேகமாக எல்லாருக்குமே தெரிந்த வெகு சாதாரணமான பாடல்களைப் பாடினார்கள்; சமயங்களில் அவர்கள் புதிய பாடல்களை, கருத்தாழம் கொண்ட பாடல்களைப் பாடினார்கள். இனிமையான இங்கிதத்தோடும், அசாதாரண கீத சுகத்தோடும் பாடினார்கள். இந்தப் பாடல்களை அவர்கள் உரக்கப் பாடுவதில்லை, தேவாலய சங்கீதத்தைப் போலத் தாழ்ந்த குரலில் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் பாடும்போது, அவர்களது முகங்கள் கன்றிச் சிவக்கும்; வெளிறிட்டு வெளுக்கும், கணீரென ஒலிக்கும் அந்த மணி வார்த்தைகளில் ஒரு மகா சக்தி பிரதிபலிக்கும்.

முக்கியமாக, இந்தப் புதிய பாடல்களில் ஒன்று மட்டும் தாயின் உள்ளத்தை மிகவும் கவர்ந்து கிளறிவிட்டது. புலம்பல் சந்தேகமும் நிச்சயமின்மையும் கொடி போல் பின்னிப் பிணைந்து இருண்டு மண்டிக்கிடக்கும் ஒரு பாதையிலே, தன்னந்தனியாகத் தானே துணையாகச் செல்லும் ஒரு துயரப்பட்ட ஆத்மாவின் துன்ப மயமான வேதனை அல்ல, அந்தப் பாடல் தேவையால் நசுக்கப்பட்டு பயத்தால் ஒடுக்கப்பட்டு, உருவமோ, நிறமோ இல்லாத அப்பாவி உள்ளங்களின் முறையீட்டையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. இருளிலே இடமும் வழியும் தெரியாமல் தட்டுத் தடுமாறும் சக்திகளின் சோக மூச்சுக்களையோ, நன்மையாகட்டும், தீமையாகட்டும் – எதன் மீதும் கண்மூடித்தனமான அசுர வெறியோடு மோதிச் சாட முனையும் வீறாப்புக் குரல்களையோ அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. எதையும் உருப்படியாய்க் கட்டி வளர்க்கத் திராணியற்ற. எல்லாவற்றையும் நாசமாக்கும் திறமை பெற்ற, அர்த்தமற்ற துன்பக் குரலையோ, பழிக்குப் பழி வாங்கும் வெறியுணர்ச்சியையோ அவர்கள் பாடவில்லை. சொல்லப்போனால், பழைய அடிமை உலகத்தின் எந்தவிதமான சாயையும் அந்தப் பாட்டில் இல்லவே இல்லை.

தாய்க்கு அந்தப் பாடலிலிருந்த கூரிய சொற்களும், கடுமையான ராக மூச்சும் பிடிக்கவில்லை. ஆனால், அந்த வார்த்தைகளையும் ராகத்தையும் அமுங்கடித்தது. இதயத்தில் சிந்தனைக்கு வயப்படாத ஏதோ ஒரு உணர்ச்சியை மேலோங்கச் செய்யும் ஒரு இனந்தெரியாத மகா சக்தியை அவள் அந்த இளைஞர்களின் கண்களிலும் முகங்களிலும் கண்டாள்; அவர்களது இதயங்களில் அது வாழ்ந்து வருவதாக உணர்ந்தாள், எந்தவிதச் சொல்லுக்கும் ராக சுகத்துக்கும் கட்டுப்படாத இந்த ஏதோ ஒன்றுக்கு எப்பொழுதும் தனிக் கவனத்துடன் தான் கேட்ட அந்தப் பாடல், மற்றப் பாடல்களை விட ஆழமான உணர்ச்சிப் பெருக்கை அவளுக்கு ஊட்டியது.

அவர்கள் அந்தப் பாடலை மற்றவற்றைவிட மெதுவான குரலில்தான் பாடினார்கள். என்றாலும், அவர்கள் பாடிய முறைதான் வலிமை மிக்கதாகத் தோன்றியது. மார்ச் மாதத்தின் நிர்மலமான நாளொன்றைப்போல், வசந்த காலத்தின் வரவை அறிவிக்கும் ஒரு தினத்தைப்போல், அந்தப் பாடல் எல்லாரையும் தன் வசப்படுத்தி இழுத்தது.

”இந்தப் பாடலைத் தெருக்களின் வழியே நாம் பாடிச் செல்வதற்குரிய காலம் வந்துவிட்டது!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உணர்ச்சியற்றுச் சொல்லுவான்.

சமீபத்தில் செய்த ஒரு திருட்டுக் குற்றத்திற்காக, அவனது தந்தை தனீலோ சிறைத் தண்டனை பெற்றுச் சென்றபோது, நிகலாய் தன் தோழர்களைப் பார்த்துச் சொன்னான்,

“இனிமேல் நாம் எங்கள் வீட்டிலேயே கூடலாம்.”

ஒவ்வொரு நாள் மாலையிலும், பாவெல் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவனுடன் யாராவது ஒரு நண்பனும் கூட வந்து சேருவான். அவர்கள் உட்கார்ந்து படிப்பார்கள், குறிப்பு எடுப்பார்கள். அவர்களுக்குள்ள அவசரத்தில் முகம், கை கழுவிக்கொள்ள மறந்து போய் விடுவார்கள். சாப்பிடும்போதும், தேநீர் அருந்தும்போதும் அவர்களது கையிலே புத்தகங்கள் இருக்கும்; அவர்கள் எதைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிவது தாய்க்கு வரவரச் சிரமமாகிக் கொண்டிருந்தது.

”நாம் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கத்தான் வேண்டும்” என்று பாவெல் அடிக்கடி சொல்வான்.

வாழ்க்கை வெகு வேகமாக, ஜுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்து மறு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்கள். மலர் மலராய்ச் சென்று வண்டு தேனுண்ணுவதைப்போல், அவர்கள் விரைந்து விரைந்து புத்தகம் புத்தகமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

“அவர்கள் நம்மைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள், நம் மீது சீக்கிரமே வலை வீசப் போகிறார்கள்” என்று சொன்னான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

“வலையில் விழுவதுதானே குருவிக்குத் தலைவிதி” என்றான் ஹஹோல்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !

தாய்க்கு அந்த ஹஹோலின் மீது நாளுக்கு நாள் வாஞ்சை அதிகரித்தது. அவன் அம்மா’ என்று அருமையாக அழைக்கும்போது, ஒரு பச்சிளங்குழந்தை தன் மென்மையான பிஞ்சுக்கரத்தால், அவளது கன்னத்தை வருடிக்கொடுப்பது போன்ற சுகம் தாய்க்குத் தட்டுப்பட்டது. பாவெலுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வேறு வேலைகளிருந்தால், ஹஹோல் அவளுக்கு விறகு தறித்துக் கொடுப்பான். ஒரு நாள் அவன் ஒரு பலகையைச் சுமந்துகொண்டு வந்து போட்டு, கோடரியால் அதைச் செதுக்கினான்; உளுத்து உபயோகமற்றுப் போன வாசற்படியை அகற்றிவிட்டு, அந்தப் பலகையால் வெகு சீக்கிரத்தில் லாவகமாய் ஒரு வாசற்படி செய்து போட்டுவிட்டான். ஒரு தடவை வீட்டின் வேலியை வெகு திறமையோடு பழுது பார்த்துச் சீராக்கினான். அவன் வேலை செய்யும் போதெல்லாம் ஏதோ ஒரு சோக மயமான, இனிய கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டிருந்தான்.

“ஹஹோல் இங்கேயே வழக்கமாய்ச் சாப்பிடட்டுமே!” என்று ஒரு நாள் தன் மகனிடம் சொன்னாள் தாய்; “அது உங்கள் இரண்டு பேருக்குமே நல்லது. நீங்கள் இருவரும் ஒருவரைத் தேடி ஒருவர் ஓடிக்கொண்டிருக்க வேண்டாம் அல்லவா?”

”உங்களுக்கு அனாவசியத் தொல்லை எதற்காக?” என்று தோளைக் குலுக்கிக் கொண்டே சொன்னான் பாவெல்.

”அபத்தம்” ஏதோ ஒரு வகையில் ஆயுள் பூராவும் தொல்லையாய்த்தானே இருக்கிறது. அவனைப் போன்ற நல்ல மனிதனுக்காக தொல்லைப்படலாம்!” என்றாள் தாய்.

“சரி, உன் இஷ்டம். அவன் இங்கு வந்தால் எனக்குச் சந்தோஷம்தான்” என்றான் மகன்.

ஹஹோல் வந்து சேர்ந்தான்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

(பாகம் – 5) இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?
(பாகம் – 6) நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்

சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிபெற்று, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக பதவி வழங்கப்பட்ட ராகேஷ் அஸ்தானா மீது, சி.பி.ஐ. லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரி மீது சி.பி.ஐ.யே வழக்கு பதிவு செய்திருப்பது இன்றைய ஆங்கில நாளிதழ்களில் தலைப்பு செய்தியாகியுள்ளது. தொழிலதிபர் மொயின் குரேஷியை பணபரிவர்த்தனை வழக்கிலிருந்து  விடுவிக்க ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் அஸ்தானா மற்றும் குரேஷிக்கு சட்டவிரோத ஒப்பந்தத்துக்கு உதவி செய்ததாக ‘ரா’ உளவு அமைப்பின் சிறப்பு இயக்குனரான சமந்த் குமார் கோயல் பெயரும் இடம் பெற்றுள்ளது. கூடவே 1984-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று வெளியேறிய பாஞ்சாப் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கிறது.

ஊழல் தடுப்புப் பிரிவால் அக்டோபர் 16-ம் தேதி கைது செய்யப்பட்ட மனோஜ் பிரசாத் என்பவர் மேஜிஸ்ரேட் கோர்டில் அளித்த வாக்குமூலத்தில், குரேஷிக்காகா அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். கோயலின் பெயரையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.  அஸ்தானாவுக்கு  இந்த குற்றத்தில் உள்ள தொடர்புக்கு ஆதாரங்களாக தொலைபேசி உரையாடல்கள், வாட்சப் குறுந்தகவல்கள், பணப்பரிவர்த்தனை,  பரிமாற்ற அறிக்கைகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஒப்படைத்துள்ளதாக கூறுகிறது.

இறைச்சி ஏற்றுமதியாளரான குரேஷியின் அலுவலகத்தை 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், வருமான வரித் துறை சோதித்தது. இந்த சோதனையில் குரேஷியின் பிளாக்பெர்ரி மெசேஞ்சர் குறுஞ்செய்திகள், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஏ. பி. சிங்குடன் குரேஷிக்கு நேரடி தொடர்பிருந்ததைக் காட்டின. ஓய்வுபெற்ற பின் சி.பி.எஸ்.சி. உறுப்பினராக இருந்த சிங், தனது பதவியை ராஜினாமா செய்யும் கட்டாயத்துக்கு உள்ளானார்.  2017 பிப்ரவரி மாதம், வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்தது.  2017 ஆகஸ்டு மாதம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்க இயக்குனரகம் குரேஷியை கைது செய்கிறது. அரசு அதிகாரிகள் பலரின் பணத்தை மோசடி செய்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது.

ராகேஷ் அஸ்தானா.

அஸ்தானா தலைமையிலான குழு வழக்கை விசாரிக்கும்போது அவருக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டது. ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சனா சதீஷ் என்பவர், குரேஷி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டவர். இவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறார். சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா, குரேஷி மீதான வழக்கை இல்லாமல் ஆக்க முயற்சிக்கிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்.

சதிஷ் தனது உறவினர் மனோஜ் பிரசாத், அஸ்தானா, சோமேஷ் ஸ்ரீவத்சவா ஆகியோர் பெயரை குறிப்பிட்டதோடு, சி.பி.ஐ. வழக்கிலிருந்து தப்பிக்க பத்து மாதங்களில் 3 கோடி ரூபாயை அளித்ததை நீதிமன்றத்தில் சொன்னார். இதுபோதாது, இன்னும் அதிக பணம் வேண்டும் என அஸ்தானா மிரட்டியதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையிலிருந்து தப்பிக்க ரூ. 25 லட்சத்தை மனோஜ் பிராத் கொடுத்ததும் அதன் பின் மீதி ரூ. 1.75 கோடியை திரட்ட துபாயிலிருந்து டெல்லி வந்தபோது சி.பி.ஐ.-ஆல் கைது கைதுசெய்யப்பட்டார். கைதான பிரசாத், குரேஷியின் சார்பாக அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். ‘ரா’ உளவு அதிகாரியாக மேற்கு ஆசியா பிரிவில் உள்ள கோயல், துபாயில் தன்னை வந்து சந்தித்ததையும் அவர்தான் அஸ்தானாவிடன் பழக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதையும் பிரசாத் கூறியுள்ளார். இந்தியாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பாக உள்ள சி.பி.ஐ.யின் இரண்டாவது பெரிய பதவியை வகிக்கும் ஒரு நபர் இத்தகைய லஞ்ச புகாரில் சிக்கியிருப்பது அதிகார வட்டாரத்தில் புருவங்களை உயர்த்தியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளுக்குள்ளே இருக்கும் அதிகாரி போட்டியால்தான் இந்த விவகாரம் வெளியே தெரிந்திருக்கிறது. சி.பி.ஐ. இயக்குனராக உள்ள அலோக் வர்மாவுக்கும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவுக்கு அதிகாரப் போட்டி இருந்துவருகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான ஊழல் புகார் விசாரணையில் சி.பி.ஐ. இயக்குனர் தலையிடுவதாக அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அலோக் வர்மா, அஸ்தானா தன் மீதான ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை மறைக்கவே இதுபோன்று குற்றம்சாட்டி திசைதிருப்ப பார்ப்பதாக குறிப்பிடுகிறார்.

சமன்ந் குமார் கோயல்.

வர்மாவின் அஸ்தானா மீது குரேஷி வழக்கு உள்பட ஆறு வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்று, பத்திரிகையாளர் உபேந்திரா ராயை சிக்கவைத்த வழக்கும் அதில் ஒன்று. மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு ஜூலை மாதம் சி.பி.ஐ. எழுதியிருந்த கடிதத்தில் அஸ்தானா பல்வேறு வழக்குகளில் கண்காணிப்புக்குள் இருப்பதால் சி.பி.ஐ. இயக்குனர் வர்மா இல்லாத நேரங்களில் அஸ்தானாவுக்கு அதிகாரிகளை பணிக்கும் அதிகாரம் இல்லை என சொல்லப்பட்டிருந்தது.  அஸ்தானா தனது சி.பி.ஐ. சிறப்பு அதிகாரி என்கிற பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்தானாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டபோது, ஒரு தொண்டு நிறுவனம் இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தது. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 2011-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட டைரியில் அஸ்தானா ரூ. 3.5 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டைரியை அடிப்படையாகக்கொண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் அஸ்தானாவில் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் சி.பி.ஐ. அஸ்தானாவின் ஈடுபாடு குறித்து விசாரிக்கிறது.

இத்தகைய சர்ச்சைக்குரிய பின்னணியில் 2017, அக்டோபர் 22-ஆம் தேதி அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.  மத்திய கண்காணிப்பு ஆணையர் கே. வி. சவுத்ரி – இவர் மீது சஹாரா பிர்லா டைரி தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது – மேலும் இரண்டு கண்காணிப்பு ஆணையர்கள், உள்துறை அமைச்சக செயலாளர்கள் இணைந்து தன்னிச்சையாக இவரை நியமித்தார்கள். தனக்கு கீழே நியமிக்கப்படும் அதிகாரியை தேர்வு செய்யும் குழுவில் சி.பி.ஐ. இயக்குனர் இடம்பெறமுடியாது. ஆனாலும் யார் நியமிக்கப்பட இருக்கிறார் என்பது குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அஸ்தானா விஷயத்தில் அது மீறப்பட்டதாக சி.பி.ஐ. இயக்குனர் வர்மா குற்றம்சாட்டினார்.

உச்சநீதிமன்றம் அரசின் செயல்பாட்டில் தலையிட முடியாது என அஸ்தானா வழக்கில் சொல்லிவிட்டது. சி.பி.ஐ. இயக்குநராக வர்மா நியமிக்கப்படும் முன், அஸ்தா இடைக்கால இயக்குனராக இருந்தார். அப்போதே அவருடைய நியமனம் குறித்து கேள்வி எழுந்தது. பத்தாண்டுகளில் முதன்முறையாக அப்போதுதான் சி.பி.ஐ. முழுநேர இயக்குனர் இல்லாமல் செயல்பட்டது. சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அனில் சின்ஹா ஓய்வுபெற, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஆர்.கே. தத்தா இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அனில் சின்ஹா ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தத்தா உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். தத்தாவுக்கு வழங்கப்பட்ட பதவி, அவருடைய தகுதியை குறைப்பதாக இருந்தது என விமர்சனங்கள் எழுந்தன.  மோடி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அஸ்தானா உயர் பதவிகளை அடைந்ததாக பல ஊடகங்கள் எழுதின.

படிக்க:
மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
♦ ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

மோடியின் பிரதமர் அலுவலகத்தில் நம்பிக்கைக்குரிய நபராக உள்ள மேற்குவங்க ஐ.ஏ.எஸ். அதிகாரி பாஸ்கர் குல்பே மீது நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கர் குல்பே-ஐ, அஸ்தானா சாட்சியாக்க முனைந்ததாக கூறப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் செயலாளராக உள்ள பாஸ்கர் குல்பே, நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய நபர். அவர்தான் மத்திய அதிகாரிகளின் பணிமாற்றம், பணியமர்த்தல் முழுவதையும் பார்த்துக்கொள்கிறார். பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளரான பி.கே. மிஸ்ராவுக்கு நெருக்கமானவர் என த வயர் கூறுகிறது.  அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டதை ஆதரித்தவர்களில் மிஸ்ராவும் ஒருவர். இவரும் குஜராத்தைச் சேர்ந்த அதிகாரியே.

அறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர். அதுவும் தன் பதவி காலத்திலேயே குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவை எல்லாவற்றையும் துடைத்துவிட்டு, நாங்கள் ஊழலை ஒழிக்கவந்தவர்கள் என வெட்கமே இல்லாமல் முழங்க இவர்களால் எப்படி முடிகிறது?

செய்தி ஆதாரம்:
• FIR Against Rakesh Asthana, Top Modi Appointee in CBI, a Setback to Govt Image

வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !

நாகை மாவட்டம் வேதாரண்யம் காவிரியின் கடைமடைப் பகுதி. இங்கே மீன்பிடி தொழில், உப்பளம், விவசாயம், சவுக்கு மரம் வளர்ப்பு மட்டுமல்ல மல்லிகைப் பூ வளர்ப்பும் முக்கியத் தொழிலாக உள்ளது. குறிப்பாக ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் ஆகிய பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இங்கு எடுக்கும் மல்லிகைப் பூ தஞ்சாவூர், திருவாரூர், கும்பக்கோணம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, நாகை என பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச் செல்கிறது.

எடுக்கும் பூக்களை எடுத்துச் செல்ல வண்டி வாடகை, இடைத்தரகர்களின் குறிப்பிட்ட சதவிதம் பணம் போக மிச்சப்பணம் வரும். அதிலும் குடும்ப கஷ்டம், கல்யாணம், காதுகுத்து, அவசர ஆபத்திற்கு என முன்பணம் வாங்கி இருந்தால், விற்கும் பூ –விற்கு குறைவான பணம் தான் வந்து சேரும்.

கல்யாணம், காதுகுத்து, திருவிழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்வதில் மல்லிகைப் பூவும் ஒன்று.

சூரியன் உதிக்கும் முன்னே விடியற்காலை எழுந்து பூக்கள் மலருவதற்குள் தினம் தினம் மல்லிகை பூக்களைப் பரிக்கத் தொடங்கும் இம்மக்களின் வாழ்க்கையோ இன்னும் விடிந்த பாடாயில்லை. கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எந்த ஓய்வும் இல்லை.

கொளுத்தும் வெயிலால் வியர்வையில் உடல் முழுக்க நனைந்து இருக்கும். உழைக்கும் மக்களின் வியர்வை மணம் எந்த மலரின் வாசனையையும் வீழ்த்தி விடும்.

*****

வ. மலர், வயது – 50ஆயக்காரன்புலம்.

“தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன், பள்ளிகூடத்திற்கு போகும் புள்ளைங்களுக்கு சாப்பாடு செஞ்சிவைச்சிட்டு. எம்புள்ளைங்களை போல பார்த்துக்குற ஆடுகளுக்கும் தழைகளை கொடுத்துவிட்டு பூ எடுக்க போவேன்.

எம்புள்ளைங்க படிப்பு செலவுக்கும், இந்த கவுர்மெண்ட் கொடுக்குற குடியால உடம்பு கெட்டுப்போன எம்புருசனுடைய ஆஸ்பெட்டல் செலவுக்கும் வாங்கிய கடனை பூ எடுத்து தான் அடைக்கனும்.

காலை 6 மணிக்கு எல்லாம் வீட்டு வேலை முடிச்சி டீ குடிச்சிட்டு பூ எடுக்க போனா வீட்டுக்கு 10.30 மணிக்கு தான் வர முடியும். வந்த பிறகும் சாப்பிடகூட உட்கார நேரமிருக்காது, ஆட்டுக்கு தழைய ஒடிக்கணும், விறகு எடுக்கணும், துணி துவைக்கணும் ஓய்வே இல்லாம வேலை பார்க்க வேண்டியிருக்கும்.”

வாங்கிய கடனை அடைத்த பின் நிம்மதி கிடைக்குமா என கேட்டதற்கு..

“எப்படி நிம்மதி கிடைக்கும், மழை வந்தால் வீடு முழுக்க ஒழுகுது அதை சரி செய்யனுமுன்னாலும், ஒரு நல்லது கெட்டது பாத்துக்கிறதுக்கும் கடன் வாங்கி தான் ஆகனும், எங்க வாழ்க்கை முழுவதும் கடன்லதான் ஓடுது” என கஷ்டத்தோடு சொன்னார்.

சின்னான் என்கிற முத்துலட்சுமி, வயது- 39

“எங்களுக்கு கடன் தொல்லை இல்லை என்றாலும், கஷ்டப்பட்டாதான் எதுவானாலும் கிடைக்கும். கஷ்டப்பட எதற்கு பயப்படனும், உழைக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்”.

“எங்க வீட்டுக்காரர் கோடியக்கரையில உப்பளத்தில் வேலை செய்யுரதனால அவருக்கும், 8 –வது படிக்கும் எம்பொண்ணுக்கும் சாப்பாடு செஞ்சி வச்சிட்டு தான் பூ எடுக்கப் போகனும்.

படிக்க :
♦ பூக்காயம்…
♦ மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?

நைட் தூங்கி காலையில எப்பொழுது கண் விழிக்கிறோமோ அது தான் எங்களுக்கு பொழுது விடிவதாக அர்த்தம். அது அதிகாலை 3 மணி ஆகட்டும், 4 மணி ஆகட்டும் சாப்பாடு செஞ்சி வச்சிட்டு, அவருக்கு டீ போட்டு கொடுத்துட்டு பொழுது விடிந்து சூரியன் எட்டி பார்த்து வெளிச்சம் வருவதற்கு முன் நான் டார்ச் லைட் எடுத்துகிட்டு பூ கொல்லைக்கு பொயிடுவேன். எனக்கு காலை சாப்பாடு எல்லாம் கிடையாது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தான்” என வெற்றிலை பையை எடுத்தார்.

இப்பகுதியில் பெரும்பாலும் மக்களின் உணவு, வெற்றிலை பாக்கும் ஒரு டம்ளர் டீயும்தான். கடன் இல்லை என்றாலும், மழை வந்தால் தாங்காத கீத்து வீட்டை மாற்றி நல்ல வீட்டை கட்ட வேண்டும் என்பது தான் இவரின் கனவு.

சரோஜா, வயது – 75.

“என்னால முன்ன மாதிரி சுறு சுறுப்பாக வேலை செய்ய முடியல வெயில்ல நின்னா மயக்கம் வருது. குனிஞ்சி நிமிர்ந்து பூ எடுக்க முடியுல உடம்பு இப்பிடி இருக்ககுனு அப்படியே இருந்துட முடியுமா? எந்த வயசா இருந்தாலும் என்ன? உழைச்சி உழைச்சி தேஞ்சிபோன உடம்பு.

நாம.. நம்ம தேவைக்கு கை நீட்டி பணம் வாங்கிட்டோம். நம்மை நம்பி கொடுத்தாங்க, அந்த நம்பிக்கைய காப்பாத்தனுமுள்ள. நா… இரண்டு பெண் பிள்ளைகள கட்டி கொடுத்துட்டேன். மகன் என்னை சரியாக பார்த்துக்கல, இதுக்காக நான் சோர்ந்து போகல, என் உடம்பில தெம்பு இருக்கும் வரை என்னால உழைச்சி வாழ முடியும்” .

ஸ்நேக லதா, வயது – 28.

“தப்பா எடுத்துக்காதிங்க வெயில் அதிகமாவதற்கு முன்னாடியே பூ எடுத்தால் கொஞ்சம் கஷ்டம் இருக்காது. அதுனால நீங்க சொன்னத கவனிக்க முடியல சொல்லுங்க.”

“எனக்கு 2 குழந்தைங்க மக… இரண்டாவது படிக்கிறாள், பையனுக்கு இப்பதான் 2 வயசு ஆகுது. வீட்டுக்காரர் வண்டி ஓட்டுறார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்கணும், எந்த கஷ்டமாக இருந்தாலும் வேற வழியில்லை. பசங்களுக்கு சாப்பாடு செஞ்சி வச்சிட்டு, 6 மணிக்கு பூ எடுக்க போகணும், 2 வயது மகனை, மகள் பள்ளிக்கூடம் கிளம்பிக்கிட்டே பார்த்துக்குவா..

அப்புறம் நான் 8.30 மணிக்கு அவசர அவசரமாக ஓடி வந்து மகளுக்கு சாப்பாடு போட்டு சாப்பிட வைத்து, தலைவாரி பள்ளி கூடத்துக்கு அனுப்பிடுவேன், மகனுக்கு பசியாற்றி தூங்க வச்சிட்டு வீட்டுல இருக்குற மத்த வேலையை செய்யணும்.
மழையோ, வெயிலோ, பனியோ நம்ம உழைச்சதான் நமக்கு சாப்பாடு.

நான் சின்ன வயசுல இருந்து உழைச்சிட்டு தான் இருக்குறேன். எங்க அப்பா தினமும் குடிச்சிட்டு அம்மாகிட்ட தினமும் சண்டை போட்டதால், எனக்கு 8 வயசா இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க. அம்மா போன பிறகு தங்கச்சி, தம்பியை பார்த்துக்க யாருமில்லை, அதனால பள்ளிக்கூடம் போவாம நிறுத்திட்டேன், சின்ன வயசில இருந்தே எல்லா வேலைக்கும் போவேன். சென்ட்ரிங் வேலையில சிமெண்ட் மூட்டை தூக்குவேன், உப்பளத்தில 80 கிலோ, மூட்டை தூக்குவேன். இந்த மாதிரி மாடா உழைச்சதினால உடம்புல பல பிரச்சனை எனக்கு வந்தது. நான் பலவீனமாக இருந்ததால முதல் குழந்தை ஊட்டச்சத்து இல்லாமல் பிழைக்கல.

படிக்க :
♦ சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !
♦ அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?

கணவர் வெளி நாட்டில் 4 வருஷம் வேலை செய்த பணத்தில் இருந்து வீடு கட்ட முயற்சி செஞ்சதல பாதிலே வீடு கட்டி முடிக்காம நிக்குது. அதற்கு கடன் வாங்கினால் தான் மழைக்காத்துல நனையாம பசங்களை வச்சிக்கிட்டு பார்த்துக முடியும். உடம்பு சரியில்லாம போன ஆஸ்பிட்டலுக்கு போக கடன் வாங்கனும், நைட் தூங்கும் போது நாளைக்கு லோன் கட்ட என்ன பண்ணலாம் என யோசிச்சிக்கிட்டே தூங்கனும், நிம்மதியா தூக்கமும் வராது, இது தான் எங்க வாழ்க்கை.”

ரவி, வயது – 34.

“நான் காலையில 5.30 மணிக்கு எழுந்து பூ கொல்லைக்கு வருவேன், 7.30 மணி வரை பூ எடுப்பேன், அதன் பிறகு காய் வியாபாரத்திற்கு சென்றுவிடுவேன். சொந்தமாக பூ கொல்லை இருந்தாலும், இதனாலே பணக்காரன் ஆயிட முடியாது. பூ எடுக்கும் வேலையை பொருத்த வரையில தூக்கத்தை இழந்தால் தான் எதாவது கிடைக்கும்.”

ஜானகி, வயது – 50 மற்றும் நாகவள்ளி, வயது – 60
ஜானகி(இடது) மற்றும் நாகவள்ளி

“விடியற்காலையிலே எழுந்து வந்து கொஞ்சம் கஷ்டம் பார்க்காம பூ எடுத்தால் பலன் கிடைக்கும். பூ எடுத்தால் மட்டும் போதாது, செடியை பாதுகாக்கனும், அதற்கும் நாம கஷ்டப்பட்டு வேலை செய்யனும், என்ன தான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், பணம் தங்குவது இல்லை. இப்ப இருக்குற விலைவாசில என்ன தான் பண்றது.”

நாம கஷ்டப்பட்டுகிட்டே இருக்குனும் போல எங்க கஷ்டம் தீராதா? என ஏக்கத்துடன் நம்மை பார்த்தார்.

சரண்யா, வயது – 28.

“காலையில 4 மணிக்கு எழுந்திருக்கனும். கணவர் உப்பளத்துல வேலை செய்யுறாரு, காலை 6 மணிக்கு எல்லாம் அவரு போயிடுவாரு , அதனால அவருக்கு சாப்பாடு செஞ்சி அனுப்பியதும், நா பூ கொல்லைக்கு வந்துடுவேன். அதோடு 10.30 மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன். எனக்கு பெரிய அளவில் கடன் இல்லை என்றாலும், எதாவது நல்லது, கெட்டதுக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு செய்யனும் அதற்காக கடன் வாங்கனும், இதே மாதிரி தொடர்ச்சியா கடன் வாங்கிட்டுதான் இருக்கிறோம், வேற வழி இல்லை.”.

தனபால், வயது – 38.

“இந்த வேலையில சொல்றதுக்கு பெரிசா எதுவுமில்லை, காலையில சீக்கிரமாக எழுந்தால்தான் இதுல பலன் கிடைக்கும், உழைச்சாதான் பலன் கிடைக்கும், என்னதான் உழைச்சி பூ -வை எடுத்தாலும், அதுல நடுவில இருக்கும் தரகருக்கு கொஞ்சம் பணம் போயிடும், பூ கொண்டு போற வண்டிக்கு கொஞ்சம் பணம் போயிடும்.

வெயில் நேரத்துல தண்ணீ கீழே இறங்கிடும் தண்ணீ இல்லாம பூச்செடியெல்லாம் வாடிபோயிடும். 3 நாளைக்கு ஒரு தடவை தண்ணீரை விடனும், பூச்சி தாக்காம பார்த்துக்குனும், பூ எடுப்பது மட்டும் வேலை இல்லை…

பண்டிகை நாள்ல நல்ல விலை போகும் மற்ற நேரத்தில பெரியளவில பணம் பார்க்க முடியாது. கார்த்திகை மாசத்துல பனியால பூ சரியா வராது. காலங்காலம பார்த்த விவசாயம் அழிஞ்சதனால இப்ப கைகொடுக்கும் தெய்வமாக இந்த பூ தான் இருக்குது. இதை வச்சிகிட்டு தான் ஏதோ வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்.”

கொசிகா, வயது – 13 மற்றும் கோபிகா, வயது – 10
கோபிகா மற்றும் கொசிகா (வலது)

இவர்கள் இருவரும் அக்கா தங்கை தன் குடும்ப வறுமை எண்ணி பள்ளி விடுமுறை நாட்களில் தன் குடும்பத்தோடு சென்று பூ எடுப்பார்கள், பள்ளி செல்லும் நாட்களில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, தண்ணீர் பிடித்து வைப்பது, ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவது என பொறுப்பான குழந்தைகளாக உள்ளனர்.

வ.சிவா, வயது – 14 (ஒன்பதாவது வகுப்பு)

“காலை 5.30 மணிக்கு எழுந்திருச்சி வீட்டுக்கு தண்ணீ பிடிச்சிக்கொடுப்பேன், வீடு கூட்டுவேன், அம்மாவுக்கு சமையலுக்கு உதவி செய்வது, முடிந்த அளவு வேலை செய்து விட்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பி விடுவேன்.

அடுத்து லீவு விட்டாங்கன்னா அம்மா பூ எடுக்க போகும் இடத்துக்கு நானும் போயி முடிஞ்ச அளவு பூ எடுத்து கொடுப்பேன், அப்பதானே கடன சீக்கரமாக கட்ட முடியும். எங்க அப்பா நிறையா குடிப்பாரு வீட்டை சரியா பார்த்துக்க மாட்டாரு எல்லாமே எங்க அம்மா தான்.

அதேபோல லீவு நாள்ல வேப்ப மரத்திலேருந்து கீழே விழுந்திருக்கும் வேப்ப பழங்களை எடுத்து வந்து தண்ணில ஊறப்போட்டு வேப்பங்கொட்டைய காய வைத்து கொடுத்தா வியாபாரி வந்து கிலோ 35 ரூபாய்க்கு வாங்கிப்பாங்க. இந்த பணத்த வச்சிக்கிட்டு வீட்டுக்கு கஷ்டத்த கொடுக்காம முடிஞ்ச அளவு நாங்களே பள்ளிகூட செலவுகளுக்கு பணத்தை சேர்த்து வைப்போம்.

எங்க ஊருல பசங்க இப்படிதான் இருப்பாங்க, எனக்கும் மத்த பசங்க மாதிரி நல்லா விளையாடுனுமுன்னு ஆசையாக இருக்கும், போன மாசம் வேதாரண்யம் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே நடந்த 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில நான்தான் முதலிடம். எனக்கு தனியா பயிற்சி எடுக்க பணம் இல்லை. பயிற்சி இருந்தா சிறந்த விளையாட்டு வீரரா என்னால வர முடியும்” என தன்னிடம் உள்ள திறமையை மிகவும் தன்னடக்கத்துடன் எடுத்து சொன்னார் இந்த மாணவன்.

தனபாக்கியம், வயது – 60.

“எங்க வாழ்க்கை முழுசும் பூ எடுக்கிறதும், விவசாய வேலையுந்தான்னு வாழ்ந்துட்டேன், இந்த வேலையை விட்டா ஏதும் தெரியாது, நான் 30 வயசா இருக்கும் போது எங்க வீட்டுக்காரர் இறந்துட்டார், 3 பசங்கள வச்சிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டோம்.

இன்னைக்கு கொஞ்சம் முன்னேறி இருக்குகிறோம், பூ எடுக்கிறதுன்னா சும்மா இல்லை, கஷ்டப்பட்டால் பலன் கிடைக்கும், ஆனா உழைக்கனும், உழைச்சா முன்னேறலாம்.” என தள்ளாத வயதிலும், உழைப்பின் பெருமையை பகிர்ந்துக்கொண்டார்.

ரசிகா மற்றும் ரிஷிகா வயது – 9.

இந்த குழந்தைகளும் குடும்பத்தின் சுமையை பகிர்ந்துகொள்வதற்காக பூ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஓடி ஆடி விளையாட வேண்டிய இந்தக் குழந்தைகள் காலையிலேயே பூ எடுத்து பூக்களைப் போல வாடி வதங்கிப் போகிறார்கள்.

இந்தப் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை தொடங்கி பூ எடுப்பதால் வழியும் வியர்வை மணத்தில்தான் இந்த மல்லிகைப் பூ மணம் வீசுகிறது.

உடல் முழுவதும் வியர்வையால் குளித்து மழை, வெயில் பாராது வேலை பார்க்கும் இம்மக்களின் இடைவிடாத உழைப்பால் தான் மல்லிகையிப் வாசம் அப்பகுதி முழுவதும் வீசுகிறது.

தங்கள் வாழ்விலும் வாசம் வீசாதா? என பார்க்கும் இப்பகுதி மக்களின் ஏக்கப் பார்வை நம்மை ஏதோ செய்கிறது.

மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம் வட்டம்,
நாகை மாவட்டம்.
தொடர்புக்கு : 93627 04120

நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

நாட்டுப்புற இசையைப் பயன்படுத்திப் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்வது. என்ற அளவில்தான் எமது துவக்ககால இசை முயற்சிகள் அமைந்திருந்தன. புதிய முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிதாய்க் கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையை நடைமுறையிலிருந்து எமக்கு உணர்த்தின. புரட்சி செய்வதற்கு இசையறிவு ஒரு கட்டாயமான முன்நிபந்தனை அல்லவெனினும், மக்களை மயக்கத்திலாழ்த்தும் ஒரு போதைப் பொருளாக ஆளும் வர்க்கம் இசையைப் பயன்படுத்தும்போது அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது. இன்னொருபுறம் காலாவதியாகிப் போன மன உணர்வுகளை வெளியிடும் தியாகய்யர் போன்றோரின் இசை, காலத்தை வென்ற இசையாகவும், திரையிசைக்கு மாற்றாகவும் முன் நிறுத்தப்படுகிறது.

களவாடிய இசையே கர்நாடக இசை என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது.

நம் மரபில் எதைக் கொள்வது – எதைத் தள்ளுவது, பிற நாட்டு இசை மரபுகளில் எவற்றைச் செரித்துக் கொண்டு நமது விடுதலைக்கான இசையைப்படைப்பது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இசை விமர்சனக் கட்டுரைகள். அக்கட்டுரைகள் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்கள் முறையாக இசை பயின்றவர்கள் இல்லை என்றாலும், அறியாமையிலிருந்து விடுபடும் தம் சொந்த முயற்சியையே வாசகர்கள் அனைவரின் அனுபவமாக மாற்றியுள்ளனர் என்று கூறலாம்.

நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும் அடிமையைச் சுதந்திர மனிதனாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதை சாதிக்க வேண்டுமெனில் வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிந்து கொள்ள முயல்வோம்.

– (பிப்ரவரி 2002 இல் எழுதப்பட்ட, இந்நூலுக்கான முன்னுரையில் புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியர் குழு)

… உட்கார் – வாயை மூடு – வாங்கு!

”துணி துவைக்கும் நேரம் மிச்சம் – இந்த எந்திரத்தை வாங்கு; பேருந்தில் செல்லும் நேரம் மிச்சம் – இந்த வண்டியை வாங்கு; சமையல் செய்யும் நேரம் மிச்சம் – இந்த அடுப்பை வாங்கு” என்கின்றன விளம்பரங்கள். மிச்சமான பொழுதை என்ன செய்வது? “பொழுதைப் போக்கு, டி.வி. பார், விளம்பரம் பார், மீண்டும் வாங்கு.”

‘’உட்கார் – வாயை மூடு, வாங்கு’’ (Sit Back, Shut up and Shop) இதுதான் பொழுதுபோக்குத் தொழில் நுகர்வோருக்கு இட்டிருக்கும் கட்டளை. விளம்பரங்களைக் கண்டு வாய் பிளக்கும் சில சந்தர்ப்பங்களைத் தவிர வேறெப்போதும் நுகர்வோர் இந்த கட்டளையை மீறுவதில்லை .

விளம்பரங்களோ பொருளின் பயன்பாட்டை அல்லது அதன் சிறப்புத் தன்மையை விளக்குவதைக் காட்டிலும் அதனைப் பயன் படுத்தும் விளம்பர மாடலின் ஆளுமை, வாழ்க்கைப் பாணி ஆகியவற்றையே மனதில் பதியச் செய்கின்றன. நுகர் பொருளைச் சொந்தமாக்கிக் கொள்வதே தனிமனித ஆளுமையின் அடையாளமாகி விடுகிறது. புலனறிவும் பகுத்தறிவும் தோற்றுவிக்கும் உணர்வுகளெல்லாம் ஒதுக்கப்பட்டு அவற்றின் இடத்தில் ‘உடைமை உணர்வு’ மட்டுமே எஞ்சியிருக்கிறதென்று முதலாளித்துவச் சமூகம் பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.

இந்த நுகர்வு மதத்தின் அப்போஸ்தலர்களான உலகாத்துமாக்களுக்குத் தெரிந்த ‘படைப்புத் திறனுள்ள’ ஒரே நடவடிக்கை நுகர்வதுதான். உண்பது, குடிப்பது, பொழுதுபோக்குவது என்ற தமது பணியை அவர்கள் இடையறாது தொடர்வதனால்தான் நுகர்பொருள் உற்பத்தித் தொழிலில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடிகிறது என்பதனால் நுகர்தல் ஒரு ‘சமூக நோக்கத்தையும் பெற்று விடுகிறது.

சரக்கை நுகரும் சரக்கு!

சந்தையின் தேவையைக் கணக்கில் கொண்டு செய்யப்படும் வர்த்தக நடவடிக்கையாக அறிவியல் ஆய்வும் கண்டு பிடிப்பும் மாறி விட்டதைப் போல, சந்தையைக் கவரும் விற்பனைத் தந்திரமே கலை முயற்சிக்குரிய தகுதியைப் பெறுகிறது. கலைக்கும் விளம்பரத்திற்கு மிடையிலான வேறுபாடு மறைந்து விளம்பரமே கலையாகி விடுகிறது

தொலைக்காட்சிப் பார்வையாளர்களை அவர்களது ஓய்வு நேரத்திற்கேற்பவும், வாங்கும் திறனுக்கேற்பவும் பல பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் ரசிக்கக்கூடிய அல்லது ரசிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் விளம்பரதாரர்கள். வாங்கும் திறனும் ரசிக்கும் திறனும் ஒன்றேயாகி விடுகின்றன. தங்கள் பண்டத்தை வாங்கச் செய்வதன் மூலம் ரசிகனை நுகர்வோனாக மாற்றுகிறார்கள் விளம்பரதாரர்கள். ஒளிபரப்பு நேரத்தை, அதாவது தங்கள் பார்வையாளர்களின் ஓய்வு நேரத்தை விளம்பரதாரர்களுக்கு விலைபேசி விற்பதன் மூலம் பார்வையாளர்களையே விற்பனைக்குரிய பண்டமாக்குகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள். பண்டமாற்று இவ்வாறு முடிவடைகிறது. நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகன் சரக்கை நுகரும் சரக்காக மாற்றப்படுகிறான்.

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

முதல் எட்டு மணி நேரத்தில் விருப்பமில்லாமல் தன் உழைப்புத் திறனைக் கூலிக்கு விற்கும் தொழிலாளி, இரண்டாவது எட்டு மணி நேரத்தில் – ஓய்வு நேரத்தில் – விருப்பத்துடன் தன் சிந்தனைத் திறனை இழக்கச் சம்மதிக்கிறான். உழைப்புச் சுரண்டல் எவ்வளவுக் கெவ்வளவு தீவிரமடைகிறதோ அதே விகிதத்தில் ஓய்வுச் சுரண்டலும் தீவிரமடைகிறது. வேலை உத்திரவாதமின்மை, வேலைவாய்ப் பின்மை, உழைப்புச் சுமை, எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை – இவையெல்லாம் உழைப்புச் சந்தையில் அதிகரிக்க அதிகரிக்க தன் உழைப்பிலிருந்து தொழிலாளி அந்நியமாவதும் உழைப்பின் மீது வெறுப்பு கொள்வதும் அதிகரிக்கிறது. அவனுக்குப் புத்துணர்ச்சியூட்டக் காத்திருக்கும் பொழுது போக்குச் சந்தையும் உடனே தீவிரமாக இயங்கத் தொடங்குகிறது.

ஆட்கொல்லி இசை!

இந்தப் புத்துணர்ச்சி என்பது ஜப்பானியத் தொழிலாளர்களிடம் பழக்கத்திலிருப்பதைப் போல நிகோடின் பானமாகவோ, மாத்திரை வடிவிலோ, வழங்கப்படும் போது அதன் வேதியல் தன்மையையும் அது மனித உடலில் ஆற்றும் வினையையும் மருத்துவரீதியில் விளக்க முடியும். அதுவே இசையாக, ரசனையாக, சித்தாந்தமாக, வாழ்க்கைப் பாணியாகத் தரப்படும் பொழுது? ‘எக்ஸ்டஸி’ எனும் ‘பேரின்ப மாத்திரை’ நரம்பு மண்டலத்தில் தோற்றுவிக்கும் இரசாயன மாற்றம் எப்படி மகிழ்ச்சி எனும் உணர்ச்சியாக மாற்றம் பெறுகிறதோ, அப்படியே இசையும் நம் மீது வினையாற்றுகிறது” என்று இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

சமீபத்திய (ஆக-2001 இல் வெளிவந்த கட்டுரை இது) ‘டைம்’ வார ஏட்டில் அலபாமா மாநிலத்தைச் (அமெரிக்கா) சேர்ந்த ஜூலியன் என்ற 17 வயதுப் பெண்ணின் மரணம் கிளப்பியுள்ள சர்ச்சையைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அவளது மரணத்திற்குக் காரணம் மிதமிஞ்சிய எக்ஸ்டஸி மாத்திரையா, மிதமிஞ்சிய களிவெறி நடனமா என்ற கேள்வி நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. அந்த நடன விடுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதற்கான தடயம் எதுவும் போலீசிடம் இல்லை. ஆனால் எக்ஸ்டஸி மாத்திரை தின்றவர்கள் பற்களை நறநறக்கும்போது பல் பாதுகாப்புக்காகக் கடித்துக் கொள்ளும் ரப்பர் போன்ற பொருள் அவ்விடுதியில் விற்பனை செய்யப்படுவதை ஆதாரமாகக் கொண்டு போதை மருந்து வழக்குப் போட்டிருக்கிறது போலீசு.

“நரம்புகள் முறுக்கேறிப் பற்களை நறநறப்பது என்பது எங்கள் இசை தோற்றுவிக்கும் விளைவு. எனவேதான் அந்த ரப்பர் துண்டுகளை வழங்குகிறோம்” என்று வாதாடுகிறார் விடுதிக்காரர். அவருக்கு ஆதரவாக 2500 நடன விடுதிகள் களத்திலிறங்கியுள்ளன. ஜூலியனின் சாவுக்குக் காரணம் போதை மாத்திரைதானென்று நிரூபிக்கப்பட்டால் விடுதிக்காரருக்குத் தண்டனை உண்டு. இசைதான் என்று முடிவானால் விடுதிக்காரருக்குத் தண்டனை கிடையாது. என்பது மட்டுமல்ல, அந்த ஆட்கொல்லி இசையைத் தடை செய்யவும் முடியாது. ஏனென்றால் அது கருத்துச் சுதந்திரத்தைத் தடை செய்வதாகி விடும்.

படிக்க:
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

பற்களைக் கடிப்பது, உடம்பை முறுக்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த இசை ரசிகர்கள் என்ன கருத்தை அல்லது உணர்ச்சியை வெளியிட விரும்புகிறார்கள்? அதே போன்ற இசையைக் கேட்டும், தொலைக்காட்சியில் பார்த்தும் ரசித்துக் கொண்டிருக்கும் நமது இளைஞர்கள் அமெரிக்க இளைஞர்களைப் போலப் பற்களைக் கடித்துக் கொண்டு உடம்பை முறுக்காதது ஏன்? வெளிப்படுத்தப்படாத அந்த உணர்ச்சி காற்றில் கரைந்த கற்பூரமாக அவர்களுக்குள்ளேயிருந்து மறைந்து விடுகிறதா? அல்லது வெளிப்படுவதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதா?

(நூலிலிருந்து பக்-107-110)

நூல்: இசை : போதை பொழுதுபோக்கு போராட்டம்
(புதிய கலாச்சாரம் கட்டுரைகள்)

வெளியீடு: புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

பேச: 97100 82506, 99411 75876
மின்னஞ்சல்: vinavu@gmail.com, pukatn@gmail.com

பக்கங்கள்: 112
விலை: ரூ.40.00 (அக்-2002 பதிப்பு)

அச்சு நூல்களை அஞ்சல் மூலமாகப் பெற வினவு மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.  மின்னஞ்சல் : vinavu@gmail.com

இதர மின் நூல்கள் வாங்க (e books)

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

தாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 6

தேநீர் தயாராகி விட்டது. அதை எடுத்துக்கொண்டு தாய் அந்த அறைக்குள் நுழைந்தாள். விருந்தாளிகள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். நதாஷா ஒரு மூலையில் விளக்கடியில் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

மாக்சிம் கார்க்கி

“மனிதர்கள் ஏன் இப்படி மோசமாக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்…” என்று ஆரம்பித்தாள்.

“ஏன் அவர்களே மோசமானவர்களாக இருக்கிறார்கள்” என்று குறுக்கிட்டான் அந்த ஹஹோல்.

”… அதற்கு, வாழ்க்கையை அவர்கள் எப்படித் தொடங்கினார்கள் என்று பார்க்க வேண்டும்…”

“நன்றாய்ப் பாருங்கள். கண்மணிகளே, நன்றாய்ப் பாருங்கள்” என்று தேநீர் தயாரித்தபடி சொன்னாள் தாய்.

எல்லோரும் மௌனமானார்கள்.

“நீ என்ன சொல்கிறாய் அம்மா’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான் பாவெல்.

”எனக்குக் கொஞ்சம் தேநீர் கொடுங்கள். உடலெல்லாம் ஒரேயடியாக நடுங்குகிறது. கால்கள் ஐஸ் போலவே குளிர்ந்துவிட்டன” என்று ஒரு குழந்தையைப் போலப் பரிதாபமாகக் கேட்டாள் அவள்.

“என்னவா?” அவள் ஒரு பார்வை பார்த்தாள். எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். “என்னவோ நான் எனக்குள் பேசிக்கொண்டேன்” என்று குழறினாள் அவள், “நீங்கள் நன்றாய்ப் பாருங்கள் என்று சொன்னேன்”

நதாஷா சிரித்தாள், பாவெல் உள்ளுக்குள் கிளுகிளுத்தான்.

“தேநீருக்கு நன்றி, அம்மா!” என்றான் ஹஹோல்.

“தேநீரைக் குடித்துவிட்டு நன்றி சொல்லுங்கள்” என்றாள் அவள். பிறகு தன் மகனை லேசாகப் பார்த்துவிட்டு, “நான் உங்களுக்கு இடைஞ்சலாக நிற்கிறேனா?’ என்று கேட்டாள்.

”விருந்து கொடுக்கிற நீங்கள் விருந்தாளிகளான எங்களுக்கு எப்படி இடைஞ்சலாக இருக்க முடியும்?’ என்று பதிலளித்தாள் நதாஷா. ”எனக்குக் கொஞ்சம் தேநீர் கொடுங்கள். உடலெல்லாம் ஒரேயடியாக நடுங்குகிறது. கால்கள் ஐஸ் போலவே குளிர்ந்துவிட்டன” என்று ஒரு குழந்தையைப் போலப் பரிதாபமாகக் கேட்டாள் அவள்.

”இதோ, இதோ” என்று அவசர அவசரமாகக் கத்தினாள் தாய்.

நதாஷா தேநீரைப் பருகிய பின்னர், உரக்க பெருமூச்சு விட்டாள். அவளது சடையைத் தோள் மீது இழுத்துப் போட்டுக்கொண்டு, தன் கையிலிருந்த மஞ்சள் அட்டை போட்ட படங்கள் நிறைந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள். தேநீரை ஊற்றும் போதும், பாத்திரங்களை அகற்றும் போதும் சத்தமே உண்டாகாதபடி பதனமாகப் பரிமாறிக் கொண்டிருந்த தாய், நதாஷா வாசிப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது மணிக்குரல், கொதிக்கும் தேநீர்ப் பாத்திரத்தின் ஆவி இரைச்சலின் மங்கிய ரீங்காரத்தோடு இணைந்து முயங்கி ஒலித்தது.

ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்து, கற்களைக் கொண்டு வேட்டையாடிய காட்டுமனிதர்களைப் பற்றிய அழகான கதைகள் சங்கிலித் தொடர் போலப் பிறந்து கட்டுலைந்து விரிந்து, அந்த அறை முழுவதும் நிரம்பி ஒலி செய்ய ஆரம்பித்தன. இந்தக் கதைகளெல்லாம் தாய்க்குப் பாட்டி கதையைப் போல் இருந்தன. அவள் தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொள்வதை அவர்கள் ஏன் தடை செய்ய வேண்டும்?” என்பதைக் கேட்டு விட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் நதாஷா வாசிப்பதை கேட்பதில் தாய்க்கு விரைவில் அலுப்புத் தட்டிவிட்டது. எனவே வந்திருந்த விருந்தாளிகளை, அவர்களோ அல்லது தன் மகனோ அறிந்து கொள்ள முடியாதபடி கூர்ந்து நோக்கி ஒவ்வொருவரையும் அளந்து பார்த்துத் தனக்குத்தானே மதிப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

பாவெல் நதாஷாவுக்கு அருகில் அமர்ந்திருந்தான்; அங்கிருந்தவர்களுக்குள் அவனே அழகானவன். நதாஷா குனிந்து வாசித்துக் கொண்டிருந்ததால், அடிக்கடி முன்புறமாக வந்து விழும் தலைமயிரை ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தாள். படிப்பதை நிறுத்திவிட்டு தலையை ஆட்டி, குரலைத் தாழ்த்தி, படித்த விஷயத்தைப் பற்றிய தனது அபிப்பிராயத்தையோ விமர்சனத்தையோ தனக்கு எதிராக இருப்பவர்களை அன்புடன் நோக்கி அவள் சொன்னாள்.

அந்த ஹஹோல் தனது மார்பை மேஜை விளிம்பின் மீது சாய்த்துக்கொண்டு ஓரக்கண்ணால் தான் திருகிவிட்டுக்கொள்ளும் மீசை முனைகளைப் பார்க்க முயன்று கொண்டிருந்தான். நிகலாய் விஸோவ்ஷிகோவ் நாற்காலியின் கம்பு மாதிரி விறைப்பாக நிமிர்ந்த கைகளால் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். மெலிந்த உதடுகள் கொண்ட அவனது அம்மைத் தழும்பு முகம், புருவமின்றி எந்தவித உணர்ச்சி பாவமும் இல்லாமல் ஒரு பொம்மையின் முகத்தைப் போலவே இருந்தது. பித்தளைத் தேநீர்ப் பாத்திரத்தில் தெரியும் தனது முகத்தின் பிரதி பிம்பத்தையே அவன் தன் குறுகிய கண்கள் இமைக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மூச்சு விடுகிறானா இல்லையா என்பதே சந்தேகமாயிருந்தது.

சின்னவனான பியோதர் படிப்பதைக் கேட்கும்போது தன் உதடுகளைச் சப்தமற்று அசைத்துக்கொண்டிருந்தான்; புத்தகத்தின் வார்த்தைகளைத் தனக்குத்தானே திரும்பச் சொல்லிக் கொள்வது போலிருந்தது அந்த உதடுகளின் அசைவு. அவனது அடுத்த நண்பன் ஒரேயடியாகக் குனிந்து குறுகி, முழங்காலின் மீது முழங்கையை ஊன்றி, முகத்தை உள்ளங்கைகளில் தாங்கி சிந்தனை வயப்பட்ட சிறு புன்னகையோடு அமர்ந்திருந்தான். பாவெலுடன் வந்த இளைஞர்களில் ஒருவனுக்கு சுருள் சுருளான செம்பட்டை மயிரும், களி துள்ளும் பசிய கண்களும் இருந்தன. நிலைகொள்ளாமல் அமைதியற்று நெரிந்துகொடுத்துக் கொண்டிருந்த அவன் எதையோ சொல்ல விரும்புவது போலத் தோன்றியது. இன்னொருவனுக்கு வெளுத்த தலைமயிர், நன்றாக ஒட்ட வெட்டிவிடப்பட்ட கிராப். அவன் தன் தலையைக் கையினால் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். எனவே அவனது முகம் சரியாகத் தெரியவில்லை.

தன் கணவனுக்குத் தான் எப்படி மனைவியானாள் என்ற விஷயத்தையும் அவள் சிந்தித்துப் பார்த்தாள். அந்தக் காலத்தில், இப்படிப்பட்ட கேளிக்கை விருந்தின்போது, ஒருநாள் இரவில் அவளை ஒரு இருளடைந்த வாசற்புறத்தில் அவன் வழிமறித்துப் பிடித்தான்: அவளது உடம்பைச் சுவரோடு சாய்த்து அழுத்தினான். ”என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா!” என்று முரட்டுத்தனமாகக் கேட்டான்.

அந்த அறையில் ஏதோ ஒரு புதிய மங்களகரமான சூழ்நிலை குடிபுகுந்த மாதிரி இருந்தது. தாயின் உள்ளத்தில் இதுவரை தோன்றாத ஏதோ ஒரு அசாதாரண உணர்ச்சி மேலோங்கியது. நதாஷாவின் இனிய குரலின் பின்னணி இசையிலே, அவள் தனது குமரிப் பருவத்துக் கும்மாளங்களை, ஆபாச சல்லாபப் பேச்சுக்களை, வாயில் எப்போதும் ஒட்கா நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும் வாலிபப் பிள்ளைகளின் வம்புத்தனமான கேலிப் பேச்சுக்களையெல்லாம் சிந்தித்துப் பார்த்தாள். அந்த நினைவுகளால் அவளது இதயம் தனக்குத்தானே அனுதாபப்பட்டுக்கொண்டது.

தன் கணவனுக்குத் தான் எப்படி மனைவியானாள் என்ற விஷயத்தையும் அவள் சிந்தித்துப் பார்த்தாள். அந்தக் காலத்தில், இப்படிப்பட்ட கேளிக்கை விருந்தின்போது, ஒருநாள் இரவில் அவளை ஒரு இருளடைந்த வாசற்புறத்தில் அவன் வழிமறித்துப் பிடித்தான்: அவளது உடம்பைச் சுவரோடு சாய்த்து அழுத்தினான்.

”என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா!” என்று முரட்டுத்தனமாகக் கேட்டான். அப்போது அவளது மனம் புண்பட்டு நொந்தது. எனினும் அவன் அவளது மார்பகத்தை வேதனை தரும் விதமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு, ஆவி கலந்து வீசும் அவனது உஷ்ண சுவாசத்தை அவளது முகத்தின் மீது பிரயோகித்தான். அவனது பிடியிலிருந்து தப்புவதற்காக அவள் முரண்டு திமிறி ஒரு பக்கமாக ஒடப் பார்த்தாள்.

“எங்கே போகணும்!” என்று இரைந்தான் அவன். “பதில் — சொல்லு — உன்னைத்தான்!”

அவள் எதுவுமே சொல்லவில்லை. தான் அடைந்த துன்பத்தாலும் அவமானத்தாலும் அவளது மூச்சே திணறிப் போய்விட்டது.

யாரோ கதவைத் திறந்து கொண்டு வாசல் பக்கமாக வந்தார்கள். மெதுவாக அவன் தன் உடும்புப்பிடியை நெகிழவிட்டான்.

“ஞாயிற்றுக்கிழமையன்று கல்யாணப் பேச்சுக்கு அம்மாவை அனுப்பி வைப்பேன், ஆமாம்!” என்றான் அவன்.

அவன் சொன்னபடியே செய்துவிட்டான். தாய் தன் கண்களை மூடி நெடுமூச்செறிந்தாள்.

“மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நான் அறிய விரும்பவில்லை. மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையே அறிய விரும்புகிறேன்” என்று எதிர்வாதம் பேசும் குரலில் சொன்னான் நிகலாய்.

”அதுதான் சரி” என்று கூறிக்கொண்டே எழுந்தான் அந்தச் செம்பட்டைத் தலையன்.

“நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்று கத்தினான் பியோதர்.

வாக்குவாதம் பலத்தது. வார்த்தைகள் தீப்பிழம்புகள் போலச் சுழலத் தொடங்கின. அவர்கள் எதைப்பற்றி இப்படிச் சத்தம் போட்டுக் கொள்கிறார்கள் என்பது தாய்க்குத் தெரியவில்லை. எல்லோருடைய முகங்களும் உத்வேக உணர்ச்சியினால் ரத்தம் பாய்ந்து சிவந்து போயிருந்தன. எனினும் எவரும் நிதானம் இழக்கவில்லை. அவளுக்குக் கேட்டுப் பழக்கப்பட்டுப் போயிருந்த எந்த ஆபாச ஏச்சுப் பேச்சுக்களையும் அவர்கள் பிரயோகிக்கவில்லை.

“இந்தப் பெண்ணின் முன்னிலையில் அப்படிப் பேசுவதற்கு அவர்கள் வெட்கப்படுகிறார்கள்” என்று தீர்மானித்துக் கொண்டாள் தாய்.

நதாஷாவின் முகத்தில் தோன்றிய உக்கிரபாவத்தைக் காண்பது தாய்க்குப் பிடித்திருந்தது. நதாஷாவோ அவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இவர்கள் அனைவருமே இன்னும் குழந்தைகள்தான் என்று கருதிப் பார்ப்பது போலிருந்தது அந்தப் பார்வை.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், தோழர்களே!” என்று அவள் திடீரென்று கத்தினாள். உடனே எல்லோரும் வாய் மூடி மெளனமாக அவளையே பார்த்தனர்.

நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல… வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.

“நாம் சகல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களில் யார் ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்கள் சொல்வதே சரியானது. நம்மிடமுள்ள பகுத்தறிவின் ஒளியை நன்றாகத் தூண்டிவிட்டுக்கொள்ள வேண்டும், கீழ்ப்பட்டவர்கள் நம்மை நன்றாகப் பார்க்கட்டும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நம்மிடத்தில் நேர்மையான, உண்மையான தீர்ப்பும் தீர்மானமும் இருந்தேயாக வேண்டும். நாம் உண்மையை, பொய்யை முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஹஹோல் அவள் கூறியதைக் கேட்டு அவளது பேச்சுக்குத் தக்கபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். நிகலாயும், செம்பட்டைத் தலையனும், பாவெலுடன் வந்த இன்னொரு பையனும் ஒரு தனிக் கோஷ்டியாகப் பிரிந்து நின்றார்கள். என்ன காரணத்தாலோ தாய்க்கு அந்தக் கோஷ்டியினரைப் பிடிக்கவில்லை.

நதாஷா பேசி முடித்த பிறகு, பாவெல் எழுந்து நின்றான்.

“நமக்கு வயிறு மட்டும் நிரம்பினால் போதுமா? இல்லை அதுமட்டும் இல்லை!” என்று அந்த மூவரையும் நோக்கி அமைதியாகச் சொன்னான். “நமது முதுகிலே குதிரையேறிக்கொண்டிருப்பவர்களுக்கு நமது கண்களைத் திரையிட்டு மூடிக் கட்டிவிட்டவர்களுக்கு, நாம் எல்லாவற்றையும் பார்க்கவே செய்கிறோம் என்பதை எடுத்துக் காட்டத்தான் வேண்டும். நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல — வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நம்மை நரக வாழ்வுக்கு உட்படுத்தி நம்மை ஏய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும், நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் நமது எதிரிகளுக்கு நாம் அவர்களுக்குச் சமதையான அறிவாளிகள், ஏன் அவர்களை விடச் சிறந்த அறிவாளிகள் என்பதைக் காட்டித்தானாக வேண்டும்.”

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ

அவன் பேச்சைக் கேட்டுத் தாயின் உள்ளத்தில் ஒரு பெருமை உணர்ச்சி உள்ளோட்டமாக ஓடிச் சிலிர்த்தது. “அவன் எவ்வளவு அழகாகப் பேசினான்!”

“போதுமான அளவுக்குச் சாப்பிடுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் சிலர்தான் நேர்மையானவர்கள்!” என்றான். அந்த ஹஹோல் “முடைநாற்றமெடுத்து நாறும் இன்றையக் கேவல் வாழ்வுக்கும், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மனித குலத்தின் சகோதரத்துவ சாம்ராஜ்யத்துக்கும் இடையே நாம் ஒரு பாலம் கட்டியாக வேண்டும். தோழர்களே! அதுதான் இன்று நம் முன் நிற்கும் வேலை!”.

“போராடுவதற்குரிய காலம் வந்துவிட்டதென்றால், ஏன் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கரகரத்த குரலில் ஆட்சேபித்தான் நிகலாய்.

நடு இரவுக்குப்பிறகுதான் அந்தக் கூட்டம் கலைந்தது. கலையும் போது நிகலாயும் செம்பட்டைத் தலையனும் தான் முதலில் வெளியேறினர். இதைக் கண்டதும் தாய்க்கு அவர்களைப் பிடிக்கவில்லை.

அவர்களை அவள் வணங்கி வழியனுப்பும்போது “உங்களுக்கு ஏன் இத்தனை அவசரமோ?” என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.

”நஹோத்கா! என்னை வீடுவரை கொண்டுவந்து விடுகிறீர்களா?” என்று கேட்டாள் நதாஷா.

“கண்டிப்பாய்’ என்று பதிலளித்தான் ஹஹோல்.

நதாஷா தனது மேலுடையணிகளைச் சமையலறையில் அணிந்து கொள்ளும்போது, தாய் அவளைப் பார்த்துக் கேட்டாள்: ”உங்கள் காலுறைகள் இந்தக் குளிருக்கு மிகவும் மெல்லியவை. நான் வேண்டுமானால் உங்களுக்கு கம்பளி உறை தரட்டுமா?”

“நன்றி. பெலகேயா நிலவ்னா. ஆனால், கம்பளி உறை காலெல்லாம் குத்துமே!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் நதாஷா.

”காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன்” என்றாள் தாய்.

நதாஷா ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தாள். அந்தப் பார்வை அந்த வயதான தாயை என்னவோ செய்தது, துன்புறுத்தியது.

“என் அசட்டுத்தனத்தை மன்னித்துவிடுங்கள். நான் இதயபூர்வமாகச் சொன்னேன்” என்று மெதுவாய்ச் சொன்னாள் தாய்.

”நீங்கள் எவ்வளவு அன்பாயிருக்கிறீர்கள்?” என்று அமைதியுடன் கூறிவிட்டு, தாயின் கரத்தைப் பற்றி கனிவோடு இறுகப்பிடித்து, விடைபெற முனைந்தாள் நதாஷா.

“போய்வருகிறேன், அம்மா!” என்று கூறிவிட்டு, அவளது கண்களையே பார்த்தான் ஹஹோல்; பிறகு அவன் வெளியே சென்ற நதாஷாவுக்குப் பின்னால் வாசல் நடையில் குனிந்து சென்றான்.

தாய் தன் மகனை நோக்கினாள்; அவன் வாசல் நடையருகே புன்னகை புரிந்தவாறே நின்று கொண்டிருந்தான். “நீ எதைப் பார்த்துச் சிரிக்கிறாய்?” என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.

“சும்மாதான். குஷி பிறந்தது. சிரித்தேன்”

”நான் கிழவியாயிருக்கலாம்; முட்டாளாயிருக்கலாம்; இருந்தாலும் எனக்கும் நல்லதைப் புரிந்துக்கொள்ள முடியும்” என்று லேசான மனத்தாங்கலுடன் சொன்னாள் அவள்.

”ரொம்ப நல்லது! நேரமாகிவிட்டது. படுத்துக் கொள்ளுங்களேன்!” என்றான் அவன்.

”படுக்கத்தான் போகிறேன்”

அவளது தந்தை ஒரு பணக்காரர். அவர் இரும்பு வியாபாரி. அவருக்குச் சொந்தத்தில் நிறையக் கட்டிடங்கள் உண்டு. ஆனால் அவள் தன் வாழ்க்கையில் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததால், அவளை வெளியேற்றிவிட்டார் அவர். அவள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவள். விரும்பியதெல்லாம் கிட்டக்கூடிய வாழ்க்கைதான் வாழ்ந்தாள். ஆனால் இன்றோ அவள் இந்த இரவில், ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்கிறாள்.

அவள் மேஜையிலிருந்த பாத்திர பண்டங்களை அகற்றுவதில் பெரும் பரபரப்புக் காட்டிக்கொண்டாள். அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம். அந்தப் பரபரப்பில் அவளுக்கு மேலெல்லாம் வியர்த்துக் கூடக் கொட்டிவிட்டது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையோடு நடந்தேறி, அமைதியோடு முற்றுப் பெற்றதை எண்ணி அவள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

“பாஷா. நல்லா யோசனை பண்ணித்தான் எல்லாம் செய்திருக்கிறாய்!” என்று சொன்னாள் அவள். “அந்த ஹஹோல் ரொம்ப நல்லவன். அந்தப் பெண் -அம்மாடி! அவள் எவ்வளவு கெட்டிக்காரியாயிருக்கிறாள்! அவள் யார்?”

”ஒரு ஆசிரியை!” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு மேலும் கீழும் நடந்தான் பாவெல்.

“அவள் மிகவும் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். மோசமாகத்தான் உடை உடுத்தியிருந்தாள். அவளுக்கு லகுவில் சளிப்பிடித்துவிடும். அவளது பெற்றோர்கள் எங்கே?”

”மாஸ்கோவில்!” என்று பதில் கூறிவிட்டு, அவன் தன் தாயருகே வந்து நின்று மென்மையாக, உறுதி தோய்ந்த குரலில் சொன்னான்: “அவளது தந்தை ஒரு பணக்காரர். அவர் இரும்பு வியாபாரி. அவருக்குச் சொந்தத்தில் நிறையக் கட்டிடங்கள் உண்டு. ஆனால் அவள் தன் வாழ்க்கையில் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததால், அவளை வெளியேற்றிவிட்டார் அவர். அவள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவள். விரும்பியதெல்லாம் கிட்டக்கூடிய வாழ்க்கைதான் வாழ்ந்தாள். ஆனால் இன்றோ அவள் இந்த இரவில், ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்கிறாள்.”

இந்தச் செய்தியைக் கேட்டு தாய் திக்பிரமையடைந்தாள்; அறையின் மத்தியில் நின்று கொண்டு புருவத்தை உயர்த்தித் தன் மகனைப் பார்த்தாள். பிறகு அமைதியாகக் கேட்டாள்.

”அவள் நகருக்கா போகிறாள்?”

”ஆமாம்.”

“ச்சூ! ச்சூ! பயமில்லையா அவளுக்கு?”

”ஊஹூம். அதெல்லாம் பயப்படமாட்டாள்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

”ஆனால்.. ஏன் போகணும்? இன்றிரவு இங்கு தங்கியிருக்கலாமே. என்னோடு படுத்துக்கொண்டிருக்கலாமே!”

”அது சரியல்ல. காலையில் அவளை இங்கு யாரும் பார்த்துவிடக் கூடாது. அதனால் சிக்கல் வரும்.”

அவனது தாய் ஜன்னலுக்கு வெளியே ஒரு சிந்தனையுடன் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

”இதிலெல்லாம் என்ன ஆபத்து இருக்கிறது. என்ன சட்ட விரோதம் இருக்கிறது என்பது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை, பாவெல்! நீங்கள் தப்பாக ஒன்றும் செய்யவில்லை, இல்லை… செய்கிறீர்களா?” என்று அமைதி நிறைந்த குரலில் கேட்டாள்.

அதைப்பற்றி அவ்வளவு தீர்மானமாக அவளால் சொல்ல முடியவில்லை; எனவே தன் மகனின் தீர்ப்பை எதிர்பார்த்தாள்.

பார்க்க:
தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ
மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ

“நாங்கள் தப்பாக எதுவுமே செய்யமாட்டோம்” என்று அவளது கண்களை அசையாமல் பார்த்தவாறு உறுதியாகச் சொன்னான் பாவெல். “ஆனால் நாங்கள் அனைவரும் என்றோ ஒரு நாள் சிறைக்குத்தான் போவோம். நீயும் இதைத் தெரிந்து வைத்துக்கொள்.”

அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன.

”ஆண்டவன் அருள் இருந்தால், நீங்கள் எப்படியாவது தப்பித்து விடுவீர்கள் இல்லையா?” என்று அமுங்கிப்போன குரலில் கேட்டாள்.

”முடியாது” என்று மெதுவாகச் சொன்னான் அவன்.

“நான் உன்னை ஏமாற்ற விரும்பவில்லை. தப்பிக்கவே முடியாது!”

அவன் புன்னகை செய்தான்.

“சரி, நீ மிகவும் களைத்திருக்கிறாய். போ. படுக்கப்போ, நல்லிரவு”

பாவெல் சென்ற பிறகு தன்னந்தனியாக நின்ற தாய் ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே மூட்டமாய்க் குளிராய் இருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த வீட்டுக் கூரைகளின் மீது படர்ந்துள்ள பனித் துகள்களை ஒரு காற்று விசிறியடித்து வீசியது, அந்த ஊதைக் காற்று சுவர்களில் மோதியறைந்து, தரையை நோக்கி வீசும் போது கோபாவேசமாய் ஊளையிட்டது; சிதறிக் கிடக்கும் பனிப்படலங்களை தெருவழியே விரட்டியடித்துக்கொண்டு பின் தொடர்ந்தது.

“கருணையுள்ள கிறிஸ்து பெருமானே, எங்களைக் காப்பாற்று” என்று அவள் லேசாக முனகிக் கொண்டாள்.

அவளது கண்களில் கண்ணீர் பொங்கியது. தனக்கு வரப்போகும் கெடுதியைப் பற்றி அமைதி நிறைந்த தன்னம்பிக்கையோடு சொன்ன பாவெலின் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம், இருளிலே குருட்டுத்தனமாய்ப் பறந்து மோதி விழும் பூச்சியைப் போல், அவளது இதயத்துக்குள் குறுகுறுத்தது. அவளது கண் முன்னால் பெரியதொரு பனிவெளி பரந்து கிடப்பது போலவும், அந்தப் பனிவெளியில் ஒரு பேய்க்காற்று வேகமாக வீசிச் சுழன்று ஊடுருவிப் பாய்ந்து, கீச்சுக் குரலில் கூச்சலிடுவது போலவும் தோன்றியது. அந்தப் பனிவெளியின் மத்தியிலே ஒரு இளம் பெண்ணின் சிறிய நிழலுருவம் ஆட்டங்கண்டு தடுமாறிக்கொண்டிருந்தது. அந்தச் சுழல்காற்று அவளது பாதங்களின் மீது சுழன்று வீசி, அவளது ஆடையணிகளைப் புடைத்துயரச் செய்தது; ஊசி போல் குத்தும் பனித்துகள்களை அவளது முகத்தில் வீசியெறிந்தது. அவள் சிரமத்தோடு முன்னேறினாள். அவளது பாதங்கள் பனிப்பாதையில் சறுக்கி மூழ்கின; ஒரே குளிர்; அதிபயங்கரம். இலையுதிர் காலத்துக் காற்றில் குனிந்து கொடுக்கும் தன்னந்தனியான ஒரு புல்லிதழைப்போல், அவளது உடம்பு முன் நோக்கி வளைந்து குனிந்திருந்தது. அவளுக்கு வலது புறத்தில் சதுப்பு நிலத்திற்கிளைத்தெழுந்த ஒரு ஆரண்யம் நிமிர்ந்து நின்றது. அந்தக் காட்டில் உள்ள நெட்டையான பிர்ச் மரங்களும், மூளியான அஸ்பென் மரங்களும் அபாயக் குரலில் குசுகுசுத்தன. அதற்கும் மேலாக, நகர்ப்புறத்து விளக்குகளில் ஒளி மூட்டம் பளபளத்தது.

“ரட்சகரே! எம்மீது இரக்கம் காட்டும்” என்று பயத்தால் நடுங்கிக்கொண்டு முணுமுணுத்தாள் அந்தத் தாய்..

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

(பாகம் – 5) இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?

சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 4)

காந்தியத்தின் சமூக இலட்சியம் சாதி அல்லது வர்ணம் ஆகும். இரண்டில் எது என்பதைக் கூறுவது கடினம் என்றாலும், காந்தியத்தின் சமூக இலட்சியம் ஜனநாயம் அல்ல என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. ஏனென்றால் ஒப்பு நோக்கிற்கு சாதியை எடுத்துக் கொண்டாலும் சரி, வர்ணத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டுமே அடிப்படையில் ஜனநாயத்திற்கு எதிரானவை. சாதியமைப்புக்கு ஆதரவாக காந்தியம் முன்னிறுத்துகிற வாதம் வலுவானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருந்தால் கொஞ்மாவது அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் சாதியமைப்புக்கு ஆதரவாக அவர் வழக்காடுவது அவர் கிஞ்சிற்றும் அர்த்தமில்லா வாய் வீச்சே தவிர வேறல்ல. சாதிக்கு ஆதரவாகக் காந்தியார் புரியும் வாதங்களைப் பாருங்கள், அவற்றில் ஒவ்வொன்றுமே சிறுபிள்ளைத்தனம் என்று சொல்ல முடியாவிட்டாலும் போலியானது என்பதைக் காணலாம். இந்த அத்தியாத்தில் இதற்கு முன் தொகுத்துரைக்கப்பட்ட அந்த வாதங்களைச் சுருக்கமாக மீண்டும் பார்ப்போம்.

முதல் மூன்று வாதங்கள் பரிதாபத்திற்குரியவை. ஏனைய சமுதாயங்கள் மடிந்தோ மறைந்தோ போய் விட்டன என்றும் அதேபோது இந்து சமுதாயத்தினால் மட்டும் தாக்குப் பிடித்து நிற்க முடிந்துள்ளது என்பதை பாராட்டுக்குரிய செய்தியாகக் கருதுவதில்லை. அது தப்பிப் பிழைத்துள்ளது என்றால் அதற்குச் சாதியல்ல காரணம்; இந்துக்களை வென்ற அயல்நாட்டவர் அவர்களை முழுமொத்தமாய் ஒழித்துக்கட்டுவது அவசியம் என்று கருதாததே காரணம். வெறுமனே பிழைத்திருப்பதில் மாண்பு ஒன்றுமில்லை. பிழைத்து நிற்கிற தளம் என்ன என்பதுதான் முக்கியம். நிபந்தனையற்ற முறையில் சரணடைவதன் மூலம் கூடப் பிழைத்திருக்க முடியும். கோழைத்தனமாகப் பின்வாங்குவதன் மூலமும் பிழைத்திருக்க முடியும். போராடுவதன் மூலமும் பிழைத்திருக்க முடியும். எந்தத் தளத்தில் இந்துக்கள் பிழைத்திருக்கிறார்கள்? அவர்கள் போராடித் தங்கள் பகைவர்களை விரட்டியடித்துப் பிழைத்திருப்பதாகக் கூற முடியுமானால், காந்தியார் சாதி அமைப்புக்கு உரித்தாக்குகிற சிறப்பினை ஏற்றுக் கொள்ளலாம்.

படிக்க:
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

இந்துக்களின் வரலாறு சரணாகதி வரலாறாகவே – கேவலமான சரணாகதியின் வரலாறாகவே – இருந்துள்ளது. மற்றவர்களும் படையெடுத்து வந்தவர்களிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்பது மெய்தான். ஆனால் அவர்களைப் பொறுத்த வரை அயல்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கலகம் புரிந்த பிறகு சரணடைந்தார்கள். இந்துக்கள் அயல் நாட்டுப் படையெடுப்பாளரின் தாக்குதலை ஒருபோதும் எதிர்த்து நின்றதில்லை என்பது மட்டும் அல்ல, அயல்நாட்டு நுகத்தடியைத் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிக் கலகத்தை நடத்துகிற ஆற்றலை ஒரு போதும் வெளிப்படுத்தியதும் இல்லை. மறுபுறம் அவர்கள் அடிமைத்தனத்தை வசதியானதாக மாற்றவே முயன்றிருக்கிறார்கள். இது குறித்து நேர்மாறாகவும் வாதிட முடியும்; அதாவது இந்துக்களின் இந்த நிர்க்கதியான நிலைக்கு முழுக்க முழுக்க சாதியமைப்புதான் காரணம் என்று சொல்ல முடியும்.

காந்தியின் ஹரிஜன் ஏடு.

நான்காவது பத்தியில் சொல்லப்பட்டுள்ள வாதம் நியாயமானதைப் போல் தோற்றமளிக்கக் கூடியது. ஆனால் சாதி என்பது ஆரம்பக் கல்வியைப் பரப்புவது அல்லது பூசல்களைத் தீர்த்து வைத்து நீதி வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒரே இயந்திரம் என்று சொல்ல முடியாது. இத்தகைய பணிகளைச் செய்வதற்கான சாதனங்களிலேயே சாதிதான் படுமோசமானது எனலாம். சாதியின் மீது செல்வாக்கு செலுத்துவதும் ஊழல் செய்வதும் எளிது.

ஏனைய நாடுகளில் சாதியமைப்பு இல்லாவிட்டாலும் இத்தகைய பணிகள் இந்தியாவைக் காட்டிலும் அந்நாடுகளில் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. படைப் பிரிவுகளைத் திரட்டுவதற்கான அடிப்படையாக சாதியைப் பயன்படுத்துவது என்ற கருத்து வெறும் மனக்கோட்டையே தவிர வேறல்ல. சாதி அமைப்புக்கு அடித்தளமாகிய பரம்பரைத் தொழில் தத்துவத்தின் படி இதை எண்ணிப் பார்க்கவே முடியாது. காந்தியார் அவரது சொந்த மாகாணமாகிய குஜராத்தில் ஒரே ஒரு சாதி கூட என்றைக்கும் ஒரு படைப் பிரிவைத் திரட்டியதில்லை என்பதை அறிந்தவர்தான். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகப் போரில் அது அவ்வாறு செய்யவில்லை. ஆனால் சென்ற உலகப் போரில் கூட அது அவ்வாறு செய்யவில்லை; அப்போது காந்தியார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் படைக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவராக குஜராத் எங்கிலும் சுற்றுப் பயணம் செய்தார். சாதி அமைப்பில் மக்களை பொதுவான அளவில் பாதுகாப்புக்காக அணி திரட்டுவது உண்மையில் முடியாத காரியம். ஏனென்றால் சாதி அமைப்புக்கு அடித்தளமாய் இருக்கும் பரம்பரைத் தொழில் தத்துவத்தைப் பரவலான அளவில் ஒழித்துக் கட்டினால்தான் மக்களை அணி திரட்டுவதில் சாத்தியமாகும்.

ஐந்தாவது, ஆறாவது பத்திகளில் அடங்கியுள்ள வாதங்கள் மடத்தனமானவை. அருவருப்பானவை. ஐந்தாவது பத்தியில் கூறப்பட்டுள்ள வாதத்தை ஒரு நல்ல வாதம் என்று கூடச் சொல்ல முடியாது. குடும்பம் ஒரு இலட்சிய அலகு என்பதும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெறுவதில்லை என்றாலும் கூட குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றொருவர் பால் நேசமும் பாசமும் கொண்டிருக்கிறார் என்பதும் மெய்தான். வைணவக் குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து உண்பதில்லை என்றாலும், ஒருவர் பால் ஒருவர் நேசமும் பாசமும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். இதெல்லாம் மெய்ப்பிப்பது என்ன? சேர்ந்து உண்ணுவதும் கலந்து மணம் புரிவதும் சகோதரதுவத்தை நிலை நாட்டுவதற்கு அவசியம் இல்லை என்பதை இது மெய்ப்பிக்கவில்லை.

படிக்க:
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

சகோதரத்துவத்தைப் பேணிக் காப்பதற்கு – குடும்ப உறவு தொடர்பான உணர்வு போன்ற – வேறு வழிகள் இருக்குமிடத்து – சேர்ந்து உண்ணுவதும் கலந்து மணம் புரிவதும் அவசியமில்லை என்பதையே இது மெய்ப்பிக்கிறது. ஆனால் கட்டிப்பிணைக்கிற சக்தி ஏதும் இல்லாத இடத்து – எடுத்துக்காட்டாக சாதி அமைப்பில் – கலந்து மணம் புரிவதும் சேர்ந்து உண்ணுவதும் இன்றிமையாதது என்பதை மறுக்க முடியாது. குடும்பத்துக்கும் சாதிக்கும் ஒப்புமை ஏதுமில்லை. பல்வேறு சாதியினர் சேர்ந்து உண்பதும் கலப்பு மணம் புரிவதும் அவசியமாகும்; ஏனென்றால் வெவ்வேறு சாதியினரை ஒன்றாகக் கட்டிப் பிணைத்திட வேறு வழியே இல்லை; அதேபோது ஒரு குடும்பத்தைப் பொறுத்த வரை அவர்களை ஒன்றாகக் கட்டிப்பிணைத்திட வேறு சக்திகள் இருக்கின்றன. சேர்ந்து உண்பதற்கும் கலந்து மணம் புரிவதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று வற்புறுத்தியவர்கள் அதனை ஒப்பிட்டு விழுமியங்கள் தொடர்பான சிக்கலாகக் கருதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அதனை அறுதி நிலை தொடர்பான சிக்கலின் நிலைக்கு உயர்த்தவில்லை.

முதன்முதலாக அதனை அப்படி உயர்த்தியிருப்பவர் காந்தியார்தான். சேர்ந்து உண்பது மோசமானது, அதனால் நன்மை கிடைக்கும் என்றாலும் கூட அப்படிச் செய்யக் கூடாது என்கிறார், ஏன்? ஏனென்றால் சாப்பிடுவது அருவருப்பான செயலாம்? இயற்கைக் கடன் கழிப்பது போலவே அருவருப்பானதாகும். சாதி அமைப்புக்கு ஆதரவாக மற்றவர்களும் கூட வாதிட்டிருக்கிறார்கள். ஆனால் அதை ஆதரிப்பதாக – அதிர்ச்சியளிக்கும் வாதம் என்று சொல்ல முடியா விட்டாலும் – இப்படி ஓர் அசாதரண வாதம் பயன்படுத்தப்படுவதை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

காந்தியார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் படைக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவராக குஜராத் எங்கிலும் சுற்றுப் பயணம் செய்தார்.

வைதிக மாணவர்களும் கூட “‘காந்தியாரிடமிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று கூறக் கூடும். காந்தியார் எந்த அளவுக்கு ஊறிப்போன இந்து என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. வைதிக இந்துக்களிலேயே மிகவும் வைதிகமானவரையும் அவர் விஞ்சிவிட்டார். இது ஒரு குகை மனிதனின் வாதம் என்று சொன்னால் போதாது. இது உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனின் வாதமாகும்.

சாதியமைப்புக்கு ஆதரவாக ஏழாவது பத்தியில் எடுத்துரைக்கப் பட்டுள்ள வாதம் அறவலிமையைக் கட்டி வளர்ப்பது என்ற நோக்கில் அவ்வளவு மதிப்புக்குரியது அல்ல. சாதி அமைப்பானது ஒருவன் தன் சாதியைச் சேராத பெண்ணிடம் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்குத் தடை விதிக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. சாதி அமைப்பானது ஒருவன் தன் சாதியச் சேராத மற்றொருவனின் வீட்டில் சமைத்த உணவுக்கான ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்குத் தடை விதிக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. அறவொழுக்கம் என்பது கட்டுப்பாடுகளின் அர்த்தம் அல்லது அறிவுடமை பற்றிக் கவலைப் படாமல் இல்லாதக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பதுதான் என்றால் சாதி அமைப்பை ஒரு அறவொழுக்க அமைப்பாக ஏற்றுக் கொண்டு விடலாம்.

ஆனால் இந்து மதம் அனுமதிக்கக் கூடிய பரந்த சுதந்திரங்கள் இந்த சுலபமான கட்டுப்பாடுகளை சரிக்கட்டி அதற்கும் மேலே போய் விடுகின்றன என்பதைக் காந்தியார் பார்க்கவில்லை. எப்படியென்றால், ஒருவன் தன் சாதியின் எல்லைக்குள் நூறு பெண்களை மணந்து கொள்வதற்கும் நூறு வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் இந்து மதம் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அவன் தன் சாதிக்காரர்களிடம் விருப்பம் போல் பசியாற விடாமல் அது தடுத்து நிறுத்துவதும் இல்லை .

‘ஹரிஜன’ மக்கள் விடுதலைக்காக காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 1933-ல் மதராசுக்கு (சென்னைக்கு) வருகைபுரிந்தார்.

எட்டாவது பத்தியில் கூறப்பட்டுள்ள வாதம் இந்தப் பிரச்சனை முழுவதையும் அனுமானம் செய்து கொள்வதாகும். குலத் தொழில் முறைமை நல்லதாய் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அது சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். வேறு சிலருக்கு ஏற்க முடியாததாய் இருக்கலாம். அதை ஓர் அதிகாரப்பூர்வக் கோட்பாட்டின் நிலைக்கு உயர்த்துவது ஏன்? அதை கட்டாயமாக்குவது ஏன்? ஐரோப்பாவில் அது அதிகாரப்பூர்வக் கோட்பாடு அல்ல கட்டாயமும் அல்ல. அது தனிப்பட்டவர்களின் தேர்வுக்கு விடப்படுகிறது; அவர்களில் பெரும்பாலார் தங்கள் மூதாதையரின் தொழிலைத் தொடர்ந்து செய்கிறார்கள், சிலர் அப்படிச் செய்வதில்லை. விரும்பிச் செய்யும் ஏற்பாட்டைக் காட்டிலும் கட்டாய ஏற்பாடு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று யாரால் கூற முடியும்?

இந்தியாவிலுள்ள மக்களின் பொருளாதார நிலைமைக்கும் ஐரோப்பாவிலுள்ள மக்களின் பொருளாதார நிலைமைக்குமான ஒப்பு நோக்கை வழிகாட்டியாகக் கொள்வோமானால், பகுத்தறிவு மனம் படைத்தோர் இந்தக் காரணத்தின் பேரில் சாதியமைப்பை ஆதரிக்க மாட்டார்கள் என்பதைக் காணலாம். அடிக்கடி தொழிலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இணையாகப் பெயரை மாற்றிக் கொள்வதிலான இடர்பாட்டைப் பொறுத்த வரை இது செயற்கையானதே ஆகும். குறிப்பிட்ட தொழிலைச் செய்கிறவர்களைக் குறிப்பிடுவதற்கு அடையாளப் பெயர்கள் இருப்பது அவசியம் என்ற கருத்திலிருந்து இந்த இடர்பாடு எழுகிறது. வகுப்பு முத்திரைகள் தேவையற்றவை. இடர்பாடே இல்லாமல் அவற்றை அடியோடு ஒழித்து விடலாம். மேலும் இன்று இந்தியாவில் என்ன நிகழ்கிறது? மனிதர்களின் தொழில்களும் அவர்களின் வகுப்பு முத்திரைகளும் ஒத்தமைவதில்லை.

காந்தியாரின் சாமர்த்தியம் எப்போதும் எங்கும் குள்ளத்தனமானது. குள்ளனக்குரிய வெளித் தோற்றமே இல்லாமல் கள்ளனுக்குரிய பிஞ்சில் பழுத்த தன்மையனைத்தும் அவரிடமுண்டு.

பார்ப்பனர் செருப்பு விற்கிறார், அவர் சாமார் என்று அழைக்கப் படவில்லையே என்று யாரும் கவலைப்படுவதில்லை. சாமார் ஆகிய ஒருவர் அரசு அதிகாரியாகி விடுகிறார். அவர் பார்ப்பனர் என்று அழைக்கப் படவில்லையே என்று யாரும் கவலைப்படுவதில்லை. இந்த வாதம் முழுதும் ஒரு தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனியொருவரின் வகுப்பு எந்த முத்திரையால் அறியப்படுகிறது என்பது அல்ல, அவர் வழங்கிடும் சேவைதான், சமுதாயத்துக்கு முக்கியமானது.

ஒன்பதாவது பத்தியில் எடுத்துரைக்கப்பட்டுள்ள கடைசி வாதம் சாதி அமைப்புக்கு ஆதரவாக நான் கேள்விப்பட்டிருக்கிற மிகவும் திகைப்பூட்டக் கூடிய வாதங்களில் ஒன்று. இது வரலாற்று வழியில் பொய்யானது. மனு ஸ்மிருதியைப் பற்றி ஏதேனும் அறிந்திருக்கிற எவரும் சாதி அமைப்பை ஓர் இயற்கை அமைப்பு என்று கூற முடியாது. மனு ஸ்மிருதி எதைக் காட்டுகிறது? சாதி அமைப்பானது வாள் முனையில் நிலை நிறுத்தப்பட்ட சட்ட அமைப்பாகும் என்பதையே காட்டுகிறது. அது தப்பிப் பிழைத்துள்ளது என்றால் அதற்கான காரணங்கள்: 1) பெருந்திரளான மக்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள விடாமல் தடுக்கப்பட்டது; 2) பெருந்திரளான மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது: 3) பெரும்பாலான மக்களுக்கு சொத்துரிமை இல்லாமற் செய்யப்பட்டது. சாதி அமைப்பு இயற்கையானது அல்லவே அல்ல, அது உண்மையில் அடிமை வகுப்புகள் மீது ஆளும் வகுப்புகளால் திணிக்கப்பட்டதே ஆகும்.

1930-32-ல் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற அம்பேத்கர் மற்றும் காந்தி.

காந்தியார் சாதி அமைப்பிலிருந்து வருண அமைப்புக்கு மாறிச் சென்றார் என்பது அவர் ஜனநாயகத்துக்கு விரோதமானவர் என்ற குற்றச்சாட்டை இம்மியளவு கூட மாற்றி விடாது. முதலாவதாக, வருணம் என்ற கருத்துதான் சாதி என்ற கருத்துக்குத் தாயாகும். சாதி என்ற கருத்து நச்சுத்தனமானது என்றால், வருணம் என்ற கருத்து நச்சுத்தனமானது என்பதே அதற்கான அறுதிக் காரணமாகும். இரண்டுமே தீய கருத்துகள்தான்; ஒருவர் வருணத்தை நம்புகிறாரா, சாதியை நம்புகிறாரா என்பது அவ்வளவு முக்கியத்துவம் உடையதல்ல.

வருணம் என்ற கருத்து பௌத்தர்களால் ஈவிரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டது; அவர்களுக்கு வருணத்தில் நம்பிக்கை இல்லை. வைதிக அல்லது சனாதன வைதிக இந்துக்கள் வருணத்தை ஆதரித்து அறிவார்ந்த முறையில் வாதிடுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களினால் சொல்ல முடிந்ததெல்லாம், வேதங்களின் கட்டளைப்படி அது நிறுவப்பட்டது, வேதங்கள் பிழையற்றவை என்பதால் வருண அமைப்பும் பிழையற்றது என்பதே பௌத்தர்களின் பகுத்தறிவு வாதத்துக்கெதிராக வருண அமைப்பை பாதுகாக்க இந்த வாதம் போதவில்லை.

வருணம் என்ற கருத்து தப்பிப் பிழைத்துள்ளது என்றால் அதற்கு பகவத் கீதைதான் காரணம்; வருணம் மனிதனின் இயற்கை குணங்களை அடிப்படையாகக் கொண்டதென்று வாதிட்டதன் மூலம் அது வருண அமைப்புக்கு ஒரு தத்துவஞான அடித்தளத்தைப் பயன்படுத்தி வருணம் என்ற கருத்தைத் தூக்கி நிறுத்தி வலுப்படுத்தியது; இல்லையேல் அடி முதல் நுனி வரை அர்த்தமற்றதாகிய ஒன்றில் அர்த்தம் தேடியே அது மங்கி மறைந்து போயிருக்கும். பகவத் கீதையானது வருண அமைப்புக்கு ஒரு புதிய அடிப்படையை, நியாயம் போல் தோன்றக் கூடிய அடிப்படையை அதாவது மனிதனின் இயற்கைக் குணங்கள் என்ற அடிப்படையை வழங்கியதன் மூலம் அவ்வமைப்பின் ஆயுளை நீட்டித்துப் பெருந்தீங்கு செய்து விட்டது.

காந்தியம் எவ்வகையிலும் புரட்சித் தத்துவம் அல்ல. அது அபாரமான பழமை வாதமாகும்… இந்தியாவின் இறந்துபோன, இறந்து போய்க் கொண்டிருக்கிற கடந்த காலத்துக்கு மறுபடியும் உயிர் கொடுப்பதே காந்தியத்தின் நோக்கம்.

பகவத் கீதையின் வருண அமைப்பு எப்படியும் இரு சிறப்புகளைக் கொண்டது. வருண அமைப்பு பிறப்பின் அடிப்படையிலானது என்று அது கூறவில்லை. உள்ளபடியே ஒவ்வொருவரின் வருணமும் அவரவரின் இயற்கைக் குணங்கள் அடிப்படையில் நிர்ணயமாவதாக அது விசேஷமாய்க் குறிப்பிடுகிறது. மகனின் தொழில் தந்தையின் தொழிலாகவே இருக்க வேண்டுமென்று அது கூறவில்லை. ஒருவரின் தொழில் அவரின் இயற்கைக் குணங்களுக்கேற்ப இருக்க வேண்டும், தந்தையின் தொழில் தந்தையின் இயற்கைக் குணங்களுக்கு ஏற்பவும், மகனின் தொழில் மகனின் இயற்கைக் குணங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும் என்றுதான் அது கூறுகிறது. ஆனால் காந்தியார் வருண அமைப்புக்குப் புதிய பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் அதனை அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டார். பழைய வைதிகப் பொருள் விளக்கத்தில் சாதி என்பது பரம்பரைத் தொழிலைக் குறித்தது, ஆனால் வருணம் அவ்வாறு குறிக்கவில்லை. காந்தியார் விருப்பம் போல் வருணத்துக்குப் புதிய பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

படிக்க:
திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !
இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

காந்தியாரைப் பொறுத்தவரை வருணம் பிடிப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அதாவது ஒரு வருணத்தின் தொழில் பரம்பரைக் கோட்பாட்டால் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது வருணம் என்பது சாதிக்கு மறு பெயர்தானே தவிர வேறல்ல. காந்தியார் சாதியிலிருந்து வருணத்துக்கு மாறினார் என்பதே புரட்சிகரமான புதிய கருத்தியல் ஏதும் வளர்ச்சி பெற்றதைக் குறிக்கவில்லை. காந்தியாரின் சாமர்த்தியம் எப்போதும் எங்கும் குள்ளத்தனமானது. குள்ளனக்குரிய வெளித் தோற்றமே இல்லாமல் கள்ளனுக்குரிய பிஞ்சில் பழுத்த தன்மையனைத்தும் அவரிடமுண்டு. ஒரு கள்ளனைப் போலவே அவராலும் ஒரு போதும் வளர முடியாது. சாதிக் கருத்தியலிலிருந்து வெளி வரவே முடியாது. காந்தியார் சில நேரம் செவ்வண்ணம் மிளிர சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் குறித்துப் பேசுகிறார்.

காந்தியத்தைப் பயிலக் கூடியவர்கள் ஜனநாயத்துக்கு ஆதரவாகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் காந்தியார் அவ்வப்போது விலகி வருவதைக் கண்டு ஏமாந்து விட மாட்டார்கள். ஏனென்றால் காந்தியம் எவ்வகையிலும் புரட்சித் தத்துவம் அல்ல. அது அபாரமான பழமை வாதமாகும். இந்தியாவை பொறுத்தவரை, அது ஒரு பிற்போக்குத் தத்துவம் பண்டை காலத்திற்குத் திரும்பிச் செல்வோம் என்ற அறை கூவலைத் தன் பதாகையில் பொறித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் இறந்துபோன, இறந்து போய்க் கொண்டிருக்கிற கடந்த காலத்துக்கு மறுபடியும் உயிர் கொடுப்பதே காந்தியத்தின் நோக்கம்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(3) யங் இந்தியா 1921 ஜனவரி 26.

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி
பகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

 

தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்

தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்;
பீகார், ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது : மரு. அமலோற்பநாதன்

சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியராகவும், இரத்தநாள அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குனராகவும் இருந்தவர் அமலோற்பநாதன் ஜோசப். தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (Transplant Authority of Tamilnadu) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி, அதன் உறுப்பினர்-செயலாளராக இருந்தவர். தி டைம்ஸ் தமிழ்.காம் இவருடன் ஒரு நேர்காணலை நடத்தியது. தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு பற்றிய பருந்துப் பார்வையை இதன் மூலம் பெற முடியும்.  தூய்மை இந்தியா, யோகா, தன்பாலின உறவு போன்ற கேள்விகளுக்கு எளிய வார்த்தைகளில் கூர்மையான பதிலை சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் தருகிறார்.

கேள்வி: சிசு மரண விகிதம், தடுப்பூசி , மருத்துவமனைகளின் எண்ணிக்கை போன்ற பல சுகாதார அளவீடுகளில் ( Health Indicators) தமிழ்நாடு நன்கு முன்னேறி உள்ளது. இதற்கு காரணம் அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?

பதில்: இருவருக்குமே சம பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். புனித ஜார்ஜ் கோட்டை இங்குதான் கட்டப்பட்டது. சாலை வசதி, இருப்புப் பாதை வசதி, விமான நிலையம் போன்றவை இங்கு இருந்தன. இதனால் பெரிய மருத்துவமனைகள் சென்னையில் உருவாயின. 1920 களில் திராவிட கட்சிகள் எழுச்சி பெற்றன; இடைநிலை சாதியினர் அதிகாரம் பெற்றனர்; மகளிர் கல்வி விகிதம் அதிகரித்தது. இதுபோன்ற காரணிகளால் ஏற்கெனவே தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட சிறந்து விளங்கியது. ஆங்கிலேயர்கள் ஒரு நல்ல கட்டமைப்பை விட்டுச் சென்றனர். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசாக இருந்தாலும், திராவிடக் கட்சிகளாக இருந்தாலும் சுகாதார திட்டங்களை செயல்படுத்தினால் ஓட்டு கிடைக்கும் என்று தெரிந்து கொண்டார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு சிறந்து விளங்க முக்கிய காரணங்களாகும்.

கேள்வி: உங்களுடைய அனுபவத்தில் சிறந்த சுகாதார அமைச்சர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

பதில்: அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

கேள்வி: சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியராக இருந்திருக்கிறீர்கள். உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் தொடர்பான பணியில் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறீர்கள். இப்போது அது தொடர்பாக புகார் சமீபத்தில் வந்ததே?

பதில்: இப்போதுள்ள விதிகள் நன்றாக உள்ளன. பெரிதாக தவறு நடக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து திட்டவட்டமான புகார் ஏதும் வரவில்லை. அப்படியே ஏதும் வந்தால் அவை நன்கு விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நேர்மை, Moral Authority யோடு (ஆன்ம பலம்) செயல்பட முடியும்.

கேள்வி: ஆயர்வேதா, சித்தா, யுனானி முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுப்பப்படுகிறதே?

பதில்: மனிதனுக்கு தனது 4000 வருட வாழ்க்கைமுறை குறித்த அறிவு இருக்கிறது. தனது அனுபவத்தில் அசதி,காய்ச்சல், ஆஸ்மா போன்ற நோய்களுக்கு கை மருத்துவம் பயன்படுத்துகிறான். அதில் தவறு இல்லை. நான் கூட தலைவலி என்றால் மிளகுரசம் குடிப்பேன். ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. பல நூறு மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி பல நூறு சோதனைகளைச் செய்கிறோம். பழைய முறை என்பதற்காக யாரும் ஓலைச்சுவடியில் எழுதுவது இல்லை. கணினியை பயன்படுத்துகிறோம்.
இலைகள், வேர்கள் போன்றவைகளில் வேதிப் பொருட்கள் உள்ளன. வேப்பிலை, பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளன. நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்கிறது. அதானால்தான் இதில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், அதற்காக இன்னமும் பழைய முறைகளையே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது சரியல்ல.

படிக்க:
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ?

கேள்வி: மருத்துவக் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக ஓராண்டுக்கு தேவையான அடிப்படையான மருந்துகள் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. அவை மாவட்ட கிட்டங்கிகளுக்கு அனுப்ப படுகின்றன. அங்கிருந்து தாலுகா மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் பெற்றுக்கொள்கின்றன. இதுதான் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கிறது. இது நல்ல முறைதான். பொதுவாக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால் ஊழல் குறையும்.

கேள்வி: தமிழ்நாட்டில் இன்னமும் மேம்பாடு செய்ய வேண்டியவை இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

பதில்: தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களை பலப்படுத்திவிட்டோம். பல முன்னோடி திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் செயலாக்கப்படுகின்றன. ஆனால்
தமிழ்நாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும். பீகார், ராஜஸ்தானை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான். இது ஒருவிதமான சோம்பேறித்தனத்தை உருவாக்குகிறது. ஆனால், நமது தாலுகா மருத்துவமனைகளை, மாவட்ட மருத்துவமனைகளை இன்னமும் நாம் பலப்படுத்த வில்லை. இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். நோயாளிகள் சென்னை, மதுரை போன்ற நகரங்களை நாடி வருவது தவிர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையானது அனைத்தும் தாலுக்கா, மாவட்ட அளவில் கிடைக்க வேண்டும். சுகாதாரத்திற்கு நாம் ஒரு சதவீத ஜி.டி.பியைத்தான( GDP) ஒதுக்குகிறோம். ஒருசில நாடுகள் 10 சதம்வரை கூட சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றன.

உ.பி. அரசு மருத்துவமனையொன்றின் அவலம்.

கேள்வி: தன் பாலின உறவு ஒரு நோயல்ல என்று சுகாதார நிறுவனம் (WHO) ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தன் பாலின உறவு ஒரு குற்றம் அல்ல என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் சமூகத்தில் இதனை இன்னமும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இது ஒரு முற்போக்கான தீர்ப்பு. இதனை வரவேற்கிறேன். ஒருவனுடைய படுக்கை அறையில் நுழைந்து பார்க்க யாருக்கும் உரிமையில்லை. பொது ஒழுங்கு சீர்குலையாத வரையில் தனியுரிமையில் யாரும் நுழைய முடியாது. இந்த தீர்ப்புக்கு பிறகு என்ன கேள்வி வரும் என்றால் தன்பாலின உறவு கொண்டவர்கள் தத்து எடுக்க முடியுமா? இதில் யார் தந்தை? யார் தாய்? இருவரும் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்குழந்தையை தத்து கொடுக்க முடியமா? அவர்கள் பிரிந்தால் யார் குழந்தையை பார்த்துக் கொள்வது என்பது போன்ற கேள்விகள் எழும். இதற்காக விதிகள் காலப்போக்கில் உருவாகும். இது ஒரு பெரிய விஷயமல்ல.

கேள்வி: மாற்றுப்பாலின (transgender)உரிமை குறித்து?

பதில்: தமிழ்நாட்டில் நல்ல திட்டங்கள் அவர்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை மருத்துவ கல்லூரியில் Sex Change Operation (ஆணைப் பெண்ணாக அல்லது பெண்ணை ஆணாக மாற்ற அறுவை சிகிச்சை) நடைபெறுகிறது. அதற்கான உளவியல் சோதனை, மற்ற பரிசோதனைகளுக்குப் பிறகு இது நடைபெறுகிறது. தேவை ஏற்பட்டால் இந்த சிகிச்சையை மதுரை, திருநெல்வேலியிலும் விரிவுபடுத்தலாம்.

கேள்வி: நீங்கள் முகநூலை நன்கு பயன்படுத்தி வருகிறீர்கள். அன்றாட முக்கிய நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் முகநூலில் கருத்து சொல்லுகிறீர்கள். நீங்கள் பல இடங்களில் பணியாற்றி இருந்தாலும் முதலில் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலைய படத்தை நீண்ட காலமாக முகப்புப் படமாக (Profile Picture) வைத்து இருக்கிறீர்கள்? ஏதேனும் விசேட காரணம் உண்டா?

பதில்: சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

கேள்வி: டெங்கு காய்ச்சல் சமயத்தில் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை அரசாங்கம் சரியாக சொல்லுவதில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்: அது எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கம் எதையும் மக்களிடமிருந்து மறைக்கத் தேவையில்லை. பூகம்பம் வந்து இறந்தால் அரசு என்ன செய்ய முடியும்? கொள்ளை நோய் பற்றிய விவரத்தை உடனடியாக சொல்ல முடியவில்லை என்றாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொல்ல வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல்களை மறுக்கக் கூடாது. அரசு தகவல்களை மறைத்தால் தவறான தகவல்களை பரப்புவார்கள். அரசு செய்ய வேண்டியதெல்லாம் நோய் பற்றி முன் கூட்டியே அறிந்து கொண்டதா? அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கை எடுத்ததா? உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்களா? உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதுதான்.

கேள்வி: நில வேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு தரக்கூடாது என்று ஞாநி ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் பேசினீர்கள்?

பதில்: ஆமாம். நில வேம்பு கசாயம் என்பது சிகிச்சை(treatment) அல்ல. அரசு மக்களை ஏமாற்றக்கூடாது. அரசு மருத்துவ மனைகளில், MBBS படித்த மருத்துவர்களை வைத்து இந்த கசாயத்தை கொடுக்கக்கூடாது. தேவையானால் ஆயுர்வேதா, சித்தா மருத்துவர்கள் மூலமாக கொடுக்கட்டும்.

கேள்வி: நீட் தேர்வு குறித்து?

பதில்: நீட் என்பது இப்போது நிஜமாகிவிட்டது. மாநில அரசு முடிந்தவரை எதிர்த்துப் போராடவில்லை. வலிமையான மாநில அரசுகள் உருவானால்தான் இத்தகைய போக்குகளில் மாற்றம் வரும். GST போன்ற வரிவிதிப்பு கூட மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான்.

படிக்க:
நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !
அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி சொன்னார். ஏறக்குறைய இப்போது எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதற்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அது காலப்போக்கில் சரியாகிவிடும்.

கேள்வி: தூய்மை இந்தியா திட்டத்தை ( ஸ்வச் பாரத்) இந்திய அரசு அமலாக்கி வருவது பற்றி?

பதில்: இவையெல்லாம் நகராட்சி மட்டத்தில் சிறிய அளவில்( Micro Level) திட்டமிட்டு நடத்த வேண்டியவை. அதற்கான தொழில் நுட்பம், நிதி, வசதி செய்தால் போதும். இதற்காக ஒரு நாட்டின் பிரதம மந்திரி துடைப்பத்தை எடுத்து பெருக்க வேண்டியதில்லை. பெருக்கிய குப்பையை எங்கே போடப்போகிறார்? நம்முடைய குப்பையை ஏன் வேறு ஒருவர் எடுக்க வேண்டும்.
ஒருசில மாற்றங்கள் தனிநபர் அளவில் உருவாக வேண்டும். நான் துணிக்கடைக்குப் போனால் சட்டையை மட்டும்தான் பெற்றுக்கொள்வேன். அந்த அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் பை போன்றவற்றை பெற்றுக்கொள்ள மாட்டேன்; கடையிலேயே கொடுத்து விடுவேன். சமையலறை குப்பைகளை காய்கறித் தோட்டத்தில் பயன்படுத்த முடியும். கூடுமான வரை குப்பையை உற்பத்தி (Reduce) செய்யக் கூடாது. மறு பயன்பாட்டிற்கு (Reuse) குப்பையை பயன்படுத்த வேண்டும். நாம் ஒரு எளிய வாழ்க்கை வாழத் தவறிவிட்டோம். ஒவ்வொருவரும் 20 சட்டை, 30 புடவை என்று வைத்து இருக்கிறோம். shopping கலாச்சாரம் வந்துவிட்டது. கங்கையை சுத்தப்படுத்துவதும் இந்த திட்டத்தில் ஒரு பகுதி. பெரிய தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை கங்கையில் கலக்கின்றன. இதை தடுக்காமல் கங்கையை எப்படி சுத்தப்படுத்துவது.

கேள்வி: யோகாவை அரசு முன்னெடுப்பது பற்றி?

பதில்: மனித உடலுக்கு உடற்பயிற்சி (Physical activity) அவசியம். உணவு, நல்ல காற்று, சுத்தமான தண்ணீர் போல உடற்பயிற்சியும் அவசியம் ஆண், பெண் இருவருக்கும் அது அவசியம். அது நீ்ச்சலாக இருக்கலாம், ஓட்டமாக இருக்கலாம். யோகாவும் ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான். அது வந்து 300 அல்லது 400 வருடங்கள் இருக்கும். அதனை ஏன் ஒரு தேசிய உடற்பயிற்சியாக (National Exercise) அரசு முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: இறந்த பிறகு உடல் தானம் செய்வது பற்றி?

பதில் : நல்ல விஷயம்தானே. உடல் மண்ணுக்குப் போவதைவிட, எரிப்பதை விட ஆராய்ச்சிக்குப் பயன்படட்டுமே. மருத்துவ கல்லூரிகளில் உடலியல் துறையில் (anatomy) இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் கத்தோலிக்க மாணவர் சங்கத்தில் இருந்து இருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்களேன்.

பதில்: நான் சென்னையில் படித்த மாணவன். நான் AICUF ல் (அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கம்) சேர்ந்தது என் வாழ்வில் ஒரு மகத்தான திருப்பம் என்று சொல்லுவதில் எனக்கு தயக்கமே இல்லை. அதில் சேர்ந்த பின்புதான் கிராமங்களுக்குச் சென்றேன். அவர்கள் வாழ்முறையை புரிந்து கொண்டேன். அந்த அமைப்பின் இதழான ‘தேன்மழை’யின் ஆசிரியராகவும் மூன்று ஆண்டுகள் இருந்தேன்.

கேள்வி: உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி?

பதில்: மனைவியும் மருத்துவர். ஒரு மகள், ஒரு மகன்; இருவரும் படிக்கிறார்கள்.

*****

நேர்காணல்: பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்காக பல்வேறு தரப்பட்ட ஆளுமைகளை நேர்காணல் செய்து எழுதிவருகிறார். சினிமா, புத்தகங்கள் குறித்தும் எழுதுகிறார்.

நன்றி: டைம்ஸ் தமிழ்

நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்

மிழக கடலோர  மீனவர்கள் கடந்த அக் 3–ம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1) கடலோர பகுதிகளில் வரும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்!
2) இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுக் கொடுக்க வேண்டும்!
3) மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில்  தினம் தினம் உயரும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்.
4) கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் !
ஆகியவையே போராடும் மீனவர்களின் கோரிக்கை.

மீனவர்களின் இந்த நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த அக் 12 அன்று நாகை புத்தூர் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். நாகை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் பங்கேற்புடன் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.

தொலைதூர மீனவ கிராமங்களிலிருந்து வந்திருந்தவர்களை நகர எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் நாகை போலீசார். அவர்கள் வந்திருந்த வாகனத்தின் பதிவெண்ணையும் அவ்வாகனத்தில் எத்தனை பேர் வந்திருந்தனர் என்பது வரையிலான விவரங்களை சேகரித்தனர் உளவுப் போலீசார்.

மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தபொழுதே, மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மீனவ கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமல்ல அனைத்து நாசகார திட்டங்களை தமிழகம் மீது திணிப்பதும்  தமிழக மீனவர்களை மத்திய – மாநில அரசுகள் புறம் தள்ளுவதும் திட்டமிட்டே நடத்தப்படுகிறது.

தாயிடமிருந்து குழந்தையை பறிப்பதுபோல், கடலில் இருந்து மீனவர்களையும்,   விவசாயத்திலிருந்து விவசாயிகளையும் பறிப்பதுதான் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள்! நாசகார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை! உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! என்ற அறைகூவல் விடுக்கும் பிரசுரங்கள் விரிவான அளவில் மீனவ கிராமங்களிலும், அக்-12 அன்று நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தின் பொழுதும் விநியோகம் செய்யப்பட்டன.

படிக்க:
ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்
மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

உணர்வுப் பூர்வமாக மீனவ இளைஞர்கள் உள்ளிட்டு பலரும் பங்கேற்ற இந்த மறியல் போராட்டமானது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த போராட்டம் மற்ற பிரிவு மக்கள் மத்தியில் இது மீனவர்களின் பிரச்சினைகளுக்கான  போராட்டம் என தனித்துப் பார்த்து ஒதுங்கிச் சென்ற நிலையையும் காண முடிந்தது.

மீனவர்கள் மட்டுமல்ல மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் ஒட்டுமொத்த மக்களையும் கொல்லும் நச்சுக்குண்டு ஆகும். நாசகார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை! மீனவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இருப்பதையே இன்றைய அரசியல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.

வேதாரண்யம் வட்டம்,
நாகை மாவட்டம்.
தொடர்புக்கு : 93627 04120.

தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் !

மீப காலமாக நாடு முழுவதும் தண்ணீரை ஏ.டி.எம் மூலம் விற்க முயற்சிக்கும்  வேலையும், மேலும் மழை நீரைகூட சேமிக்க தடை வரும் சூழலும் நெருங்கி வருகிற நேரத்தில், தற்போது அதற்கான திட்டத்தை மறைமுகமாக  நிறைவேற்ற வருகின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் இயங்கி வருகிறது அசோக் லேலண்டு கம்பெனி. இது பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் போன்ற மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அசோக் லேலண்டு கம்பெனி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் கொடுத்து சேவை போல் செய்து வந்தது. இதனை அமல்படுத்தியதன் மூலம் மக்களின் நலனுக்காக தான் இருப்பதாக காட்டிக்கொண்டது அசோக் லேலண்டு. ஆனால் தான் ஒரு பசு தோல் போர்த்திய புலிதான் என்பதை தற்போது வெளிப்படுத்தி அம்பலபட்டு போனது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ”பள்ளிக்கான பாதை” என்ற சேவையை அறிமுகப்படுத்தும் அசோக் லேலண்ட் அதிகாரிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்கள் அதிகமாக நிறைந்த பகுதி, தேன்கனி கோட்டை வட்டத்தை சார்ந்த மலை கிராமங்களாகும். இங்கு மழை காலங்களில் சிறப்பாக விவசாயம் நடக்கும், குறைந்த அளவு தண்ணீர் இருந்தால்கூட காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நாடு முழுவதும் சென்றடைகிறது. எப்போதும் செல்வ செழிப்பாக இருக்கும் இந்த மலைப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறுஞ்ச முயற்சித்து வருகிறது அசோக் லேலண்டு. அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மலை கிராமங்களுக்கு புளோரைடு இல்லாமல் நீரை உறுஞ்சி சுத்திகரிப்பு நீரை வழங்குகிறோம் என்று கிராமங்களில் ஆள் பிடித்தனர். இதற்காக ரூ. 250 பெற்று உறுப்பினர் கூட சேர்த்துள்ளனர்.

அதன்பிறகு நாட்றாம்பாளையம் பகுதியில் இது குறித்து கடந்த 13/10/2018 அன்று அனைத்து கிராம மக்களையும் இனைத்து ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உள்ளூர் புரோக்கர்களை கொண்டு சுமார் 100 பேரை திரட்டி கூட்டம் தொடங்கியது. இதில் டெல்லியில் இருந்து  அசோக் லேலண்டு கம்பெனி மூலமாக ஒரு பெண் அவருடன் 4 ஆண்கள் என சொகுசு காரில் வந்திறங்கினர். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் போல் காட்டிக்கொண்டனர். ஆனால் அவர்கள் விளக்கிய பிறகே அசோக் லேலண்டு கம்பெனியின் அயோக்கியத்தனம் வெளிப்பட்டது.

படிக்க:
அசோக் லேலாண்டு என்பது நவீன நரகம்
அசோக் லேலாண்டில் தோழர். பரசுராமன் பணி இடைநீக்கம் !

உங்கள் கிராமம் மூலம் 5 ஏக்கர் நிலம் கொடுங்கள் நாங்கள் கம்பெனி சார்பாக நிலத்தடி நீரை எடுத்து புளோரைடு இல்லாமல் தண்ணீர் கொடுக்கிறோம் என்றனர். இதனால் முதலில் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் மக்கள். அடுத்த கணமே இந்த சுத்தமான தண்ணீரை நீங்கள் பெற ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏ.டி.எம். வைக்கிறோம். அதில் நீங்கள் லிட்டர் 20 பைசா வீதம் காசு கொடுத்து பிடிக்க வேண்டும். முறையாக தண்ணீரை நாங்கள் வழங்குகிறோம் என்றவுடன் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ”சுத்தமான தண்ணீர் வேண்டுமானால் காசு கொடுத்துதானே ஆக வேண்டும்” என்றனர்.

இந்த கூட்டத்தில் பங்குபெற்ற மக்கள் அதிகாரம் தோழர்கள், நாங்கள் நிலம் தரவேண்டும், நீங்கள் எங்களுக்கு குடிநீரை காசுக்கு விற்பனை செய்வீர்களா? என்று கேட்டதற்கு ”சுத்தமான நீர் கொடுப்பது நல்லதுதானே” என்றனர். ”தண்ணீரை விற்பது எப்படி நல்லதாகும்?. தண்ணீரை காசுக்கு விற்று கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூட்டத்தில் அம்பலப்படுத்தி பேசினர்.

அடிக்கும் கொள்ளையை மறைக்க சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு உதவுவது போன்று மக்களைக் கொள்ளையடிக்க படையெடுக்கும் கார்ப்பரேட்டுகள் .

கோவையில் வெளிநாட்டு கம்பெனிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய அனுமதி கொடுத்தது போல் மலை கிராம நீரை உறுஞ்சி கொள்ளையடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்பதை அம்பலப்படுத்தியவுடன், உங்களுக்கு வேண்டாம் என்றால் விடுங்கள் மற்றவர்கள் கருத்து சொல்லுங்கள் என நைச்சியமாக அணுகினர். ”சேவை என்றால் இலவசமாகத்தான் செய்ய வேண்டும் ஏன் காசுக்கு விற்பனை செய்யறீங்க? அப்ப உங்க நோக்கம் என்னவென்று விளக்குங்கள்” என்றவுடன் திருதிருவென அங்குமிங்கும் பார்த்தனர்.

”தண்ணீரை காசுக்கு ஏன் விற்க வேண்டும்? என்பது தொடர்பான எந்த கேள்விக்கும் பதிலே வரவில்லை. உங்களை ஊருக்குள் அனுமதித்ததே தவறு உடனே வெளியேறுங்கள் இல்லையெனில் பிரச்சினை பெரியதாகும் என்று எச்சரித்தவுடன் கூட்டத்தை கலைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். ”மக்களுக்கு சுகாதாரமான குடிநீர்” என்ற ஆசை வார்த்தை கூறி நமது வளங்களை கொள்ளையடித்து நமது நீரை உறிஞ்சி நாடு முழுவதும் விற்று கொள்ளையடிப்பதற்கான முயற்சி இது என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள் தனது ஆலையில் பணியாற்றும் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைக் காக்க சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்களை பழிவாங்கியிருக்கின்றன; வேலையை விட்டுத் துரத்தியிருக்கின்றன. இவ்வாறு, ஆலைத் தொழிலாளர்களிடமிருந்து சுரண்டி சேர்த்த பணத்திலிருந்து சிறு தொகையை ”கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) ” என்ற பெயரில் ‘சமூக சேவை’ யாற்றுவதாகக் கணக்குக் காட்டி மக்களைச் சுரண்டுகின்றன. கொள்ளையடிக்கும் பணத்திலிருந்து அற்பக் காசை போட்டு ‘சேவை’  என்ற பெயரில் அதை மற்றுமோர் முதலீடாகத்தான் பார்க்கின்றன என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தருமபுரி மண்டலம்,
தொடர்புக்கு : 80565 00891.

தாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 5

தூரத்து உறவினர்களாக, நெருங்கியவர்களாக மீண்டும் அவர்கள் இருவரும் தங்கள் மோன வாழ்க்கையையே நடத்தி வந்தார்கள்.

வாரத்தின் இடையில் வந்த ஒரு விழா நாளன்று, பாவெல் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் சமயத்தில் தாயிடம் சொன்னான்.

”சனிக்கிழமையன்று நகரிலிருந்து சிலர் என்னைப் பார்க்க வருவார்கள்” என்றான்.

“நகரிலிருந்தா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுத் திடீரென அவள் தேம்பினாள்.

”எதற்கென்று அழறே?” என்று பதறிப் போய்க் கேட்டான் பாவெல்.

பயம் தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது. நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே. அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆடையால் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“தெரியாது. சும்மா …”

”பயமா இருக்கா?”

“ஆமாம்” என்று அவள் ஒப்புக்கொண்டாள்.

அவளருகே குனிந்து அவளது தந்தை பேசுகிற மாதிரி கரகரத்த குரலில் அவன் சொன்னான்.

“பயம் தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது. நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே. அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.”

”கோபப்பட்டுக் கொள்ளாதே” என்று உவகையற்றுப் புலம்பினாள் அவள். ‘நான் எப்படிப் பயப்படாமல் இருப்பது? என் வாழ்க்கை பூராவுமே நான் பயந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆத்மாவே பயத்திலேயே தான் வளர்ந்து வந்திருக்கிறது’.

‘என்னை மன்னித்துவிடு. இதைத்தவிர வேறு வழி கிடையாது’ என்று மெதுவாகவும், மென்மையாகவும் சொன்னான் அவன்.

பிறகு அவன் போய்விட்டான்.

மூன்று நாட்களாக அவளது இதயம் துடியாய்த் துடித்தது. தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்……

சனிக்கிழமையன்று மாலையில் பாவெல் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு வந்தான். முகம் கை கழுவினான். உடைகளை மாற்றினான். உடனே வெளியே கிளம்பிச் செல்லும் பொழுது சொன்னான்:

“யாராவது வந்தால், நான் இதோ வந்துவிடுவேன் என்று சொல்’ என்று தாயின் முகத்தைப் பார்க்காமலே சொன்னான் அவன். “நீ தயவு செய்து பயப்படாமல் இரு”.

அவள் சோர்ந்துப் போய் ஒரு பெஞ்சில் சரிந்து தொப்பென்று உட்கார்ந்தாள். பாவெல் அவளை உம்மென்று பார்த்தான்.

“வேண்டுமானால், நீ வேறு எங்கேயாவது போய் இரு” என்று யோசனை கூறினான் அவன்.

அவனது பேச்சு அவளைப் புண்படுத்திவிட்டது.

”இல்லை . எதற்காகப் போக வேண்டும்?”

அது நவம்பர் மாதத்தின் இறுதிக்காலம். பனிபடிந்த பூமியில் ஈரமற்ற வெண்பனி லேசாகப் பகல் முழுதும் பெய்து பரவியிருந்தது. நடந்து செல்கின்ற தன் மகனது காலடியில் அப்பனி நெறுநெறுப்பதை அவளால் கேட்க முடிந்தது. இருட்படலம் ஜன்னல் கட்டங்களின் மீது இறங்கித் தொங்கி வேண்டா வெறுப்பாக நிலைத்து நின்றது. அவள் பெஞ்சுப் பலகையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தாள். வாசலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

அதிசயமான ஆடையணிகளோடு தீய மனிதர்கள் நாலா புறத்திலிருந்து இருளினூடே ஊர்ந்து ஊர்ந்து வருவது போல அவளுக்கு ஒரு பிரமை தட்டியது. அரவமில்லாத கள்ளத்தனமாய் நடந்து வரும் காலடியோசை தன் வீட்டைச் சூழ்ந்து நெருங்கிவிட்டதாகவும், சுவரில் விரல்கள் தட்டுத்தடுமாறித் தடவுவதாகவும் அவள் உணர்ந்தாள்.

யாரோ சீட்டியடித்து ராகம் இழுப்பது அவளுக்குக் கேட்டது. அந்த சீட்டிக்குரல் அமைதியினூடே மெல்லியதாகப் பாய்ந்து வந்தது. அது சோகமும், இனிமையும் கொண்டதாகப் பாழ் இருளுக்குள் எதையோ தேடித் தேடித் திரிவதாகப் பட்டது. வரவர அந்தக் குரல் நெருங்கிவந்து. கடைசியில் அவளது வீட்டு ஜன்னலைக் கடந்து சுவரின் மரப்பலகையையும் துளைத்து ஊடுருவி உள்ளே நுழைந்துவிட்டதாகத் தோன்றியது.

பலத்த காலடியோசை வாசற்புறத்தில் கேட்டது. தாய் திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்து நெளிந்தன.

கதவு திறந்தது. பெரிய கம்பளிக் குல்லாய் தரித்த ஒரு தலை முதலில் தெரிந்தது. அதன்பின் அந்தச் சின்ன வாசல் வழியாக ஒரு உயரமான ஒல்லியான உடம்பு குனிந்து நுழைந்தது. உள்ளே வந்தபின் அந்த உருவம் நிமிர்ந்து நின்று தனது வலது கையை உயர்த்தி மரியாதை செலுத்திற்று. பிறகு பெருமூச்சு விட்டு, அடித்தொண்டையில் பேசியது.

”வணக்கம்’.

தாய் பதில் பேசவில்லை ; வணங்கமட்டும் செய்தாள்.

”பாவெல் இல்லையா?’

வந்தவன் மெதுவாகத் தனது கோட்டை அகற்றினான். ஒரு காலை லேசாக உயர்த்தி அதில் படிந்திருந்த பனித்துளிகளைக் குல்லாயினால் துடைத்துவிட்டான். மறு காலையும் உயர்த்தி இது மாதிரியே செய்தான். பிறகு தொப்பியைக் கழற்றி ஒரு மூலையில் விட்டெறிந்தான். அறைக்குள் உலாவ ஆரம்பித்தான். ஒரு நாற்காலியை, அதற்குத் தன்னைத் தாங்கச் சக்தியுண்டா என்று பார்ப்பது போல், அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, பின்னர் அதில் உட்கார்ந்தான். வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு கொட்டாவி விட்டான். அவனது தலை அழகாகவும் உருண்டையாகவும் கட்டையாகவும் வெட்டிவிடப்பட்ட கிராப்புடனும் இருந்தது. அவனது முகம் மழுங்கச் சவரம் செய்யப்பட்டு கீழ் தொங்கிப் பார்க்கும் முனைகளைக் கொண்ட மீசையுடனிருந்தது. துருத்தி நிற்கும் தனது சாம்பல் நிற அகலக் கண்களால் அவன் அந்த அறையைக் கவனத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தான்.

படிக்க:
எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

“இது என்ன சொந்தக் குடிசையா? இல்லை. வாடகை இடமா? என்று கால் மேல் கால் போட்டு, நாற்காலியை முன்னும், பின்னும் ஆட்டிக்கொண்டே கேட்டான் அவன்.

“வாடகை தான் கொடுக்கிறோம்”  என்று அவனுக்கு எதிராக இருந்த தாய் சொன்னாள்.

“இடம் ஒன்றும் விசாலமில்லை” என்றான் அவன்.

“பாஷா சீக்கிரமே வந்துவிடுவான். கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்’

”ஏற்கெனவே காத்துக்கொண்டுதானே இருக்கிறேன்’ என்றான் அந்த நெட்டை ஆசாமி.

‘நான் எப்படிப் பயப்படாமல் இருப்பது? என் வாழ்க்கை பூராவுமே நான் பயந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆத்மாவே பயத்திலேயே தான் வளர்ந்து வந்திருக்கிறது’.

அவனது அமைதி, மிருதுவான குரல், எளிய முகம் முதலியவற்றைக் கண்டு அவளுக்கு ஓரளவு தெம்பு வந்தது. அவனது பார்வை கள்ளம் கபடமற்றதாகவும் நட்புரிமை கொண்டதாகவும் இருந்தது. தெளிந்த கண்களின் ஆழத்திலே ஆனந்தச் சுடர்கள் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. நெடிய கால்களும் சிறிதே சாய்ந்திருக்கும் கோலமும் கொண்ட அவனது முகத்தோற்றத்திலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பது போலத் தோன்றியது. அவன் ஒரு நீல நிறச் சட்டையும், பூட்சுகளுக்கும் நுழைக்கப்பட்டிருந்த அகன்ற நுனிப்பாகம் கொண்ட கால்சராயும் அணிந்திருந்தான். அவன் யார் எங்கிருந்து வருகிறான். தன் மகனை அவனுக்கு ரொம்ப நாட்களாகவே தெரியுமா என்பனவற்றையெல்லாம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் திடீரென அவனே தன்னை முன்னே தள்ளிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“நெற்றியிலே என்ன இத்தனை பெரிய வடு? யார் அடித்தார்கள் அம்மா (1) “.

அவனது குரல் இனிமையாயிருந்தது. கண்கள் கூடச் சிரிப்பது போலக் களிதுள்ளிக்கொண்டிருந்தன. ஆனால் அவளோ அந்தக் கேள்வியால் புண்பட்டுப் போனாள்.

“உங்களுக்கு எதற்கப்பா அந்தக் கவலை எல்லாம்?” என்று உதடுகளை இறுக்கிக்கொண்டு கடுப்பு கலந்த மரியாதையுடன் கேட்டாள் அவள்.

“இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே அவன் அவள் பக்கமாக இன்னும் குனிந்து கொண்டு சொன்னான். நான் எதற்காகக் கேட்டேன் என்றால் எனது வளர்ப்புத் தாயின் நெற்றியிலும் இதைப்போலவே ஒரு வடு இருந்தது. அவள் யார் கூட வாழ்ந்தாளோ அந்த மனுஷன் கொடுத்தது அது. அவன் செருப்புத் தைக்கிறவன். அவளை ஒரு இரும்புத் துண்டால் அவன் அடித்துவிட்டான். அவள் துணி வெளுக்கிறவள். அவனோ செருப்பு தைக்கிறவன். அவள் என்னைத் தன் மகனாக ஸ்வீகாரம் செய்து கொண்டபின் அவனை எங்கேயோ பிடித்திருக்கிறாள். அவளது தொலையாத துயரத்துக்கு கேட்க வேண்டுமா; அவனோ ஒரு விடாக் குடியன்; அவன் எப்படி அவளை அடிப்பான் தெரியுமா? அவன் அடிக்கிற அடியில், பயத்தால் என் தோல் விரிந்து பிய்வதாகத் தோன்றும்.

அவனது வெகுளித்தனமான பேச்சு தாயைச் செயலற்றவளாக்கியது. தான் அவனிடம் கடுப்பாகப் பேசியதற்கு பாவெல் தன்மீது கோபப்படுவானோ என்று அவன் பயந்தான்.

”நான் ஒன்றும் நிஜமாகக் கோபப்படவில்லை ” என்ற ஒரு குற்றப் புன்னகையுடன் சொன்னான் அவன். “ஆனால், நீங்கள் திடீரென்று என்னை இப்படிக் கேட்டுவிட்டீர்கள். எனக்கும் என்னைக் கட்டியவரால்தான் இந்தக் காயம் ஏற்பட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சரி நீங்கள் என்ன தாத்தாரியா (2) ?”

அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக சமையலறைக்குள் ஒரு இளம் பெண் வந்து சேர்ந்தாள். அவள் சின்னஞ் சிறுசாக, கள்ளங்கபடமற்ற முகத்தோடு இருந்தாள், அவள் தனது அடர்த்தியான வெளுத்த கூந்தலை முடித்து பின்னலிட்டிருந்தாள்.

அவன் தன் கால்களை ஆட்டிக்கொண்டே சிரித்தான். அந்தச் சிரிப்பால் அவனது காதுகள் கூட அசைவதுமாதிரி தோன்றியது. ஆனால் மறுகணமே அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

”இல்லை. நான் இன்னும் அப்படியாகவில்லை”

“ஆனால், உங்கள் பேச்சு ருஷிய பாஷை மாதிரியே ஒலிக்கவில்லை” அவன் சொன்ன ஹாஸ்யத்தை அனுபவித்தது. சிறு புன்னகை செய்து கொண்டே சொன்னான் அவன்.

”ஆமாம். ருஷ்ய பாஷையைவிட இது மேலானது” என்று உற்சாகத்தோடு சொன்னான் அந்த விருந்தாளி. “தான் ஒரு ஹஹோல்” (3) கானேவ் நகரப் பிறவி”.

“இங்கே வந்து ரொம்ப நாளாச்சோ?”

”நகரில் சுமார் ஒரு வருஷம் வாழ்ந்தேன். பிறகு ஒரு மாசத்துக்கு முன்னர்தான் உங்கள் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தேன். உங்களுடைய மகனும் வேறு சிலரும் இங்கு அருமையான தோழர்களாயிருக்கிறார்கள். எனவே இங்கேயே கொஞ்ச காலம் இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மீசையை இழுத்து விட்டுக்கொண்டான்.

அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிற்று. தன் மகனைப் பற்றி அவன் கூறிய நல்ல வார்த்தைகளுக்குப் பிரதியாக, தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

ஒரு கோப்பை தேநீர் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டாள்.

“அந்த ஆனந்தம் எனக்கு மட்டும்தானா?” என்று தன் தோளை ஒருதரம் குலுக்கிக்கொண்டே சொன்னான் அவன். “மற்றவர்களும் வரட்டும். அதுவரையில் பொறுத்திருக்கலாம். அப்புறம் நீங்கள் எங்கள் எங்லோருக்குமே தாராளமாகப் பரிமாறலாம்” அவனது பேச்சு மீண்டும் அவளது பயபீதியை நினைப்பூட்டிவிட்டது.

”மற்றவர்களும் இவனைப்போலவே இருந்துவிட்டால்!” என்று அவள் நினைத்தாள்.

மீண்டும் வாசல் புறத்தில் காலடியோசைகள் கேட்டன. கதவு அவசர அவசரமாக திறக்கப்பட்டது. மீண்டும் அவள் எழுந்து நின்றாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக சமையலறைக்குள் ஒரு இளம் பெண் வந்து சேர்ந்தாள். அவள் சின்னஞ் சிறுசாக, கள்ளங்கபடமற்ற முகத்தோடு இருந்தாள், அவள் தனது அடர்த்தியான வெளுத்த கூந்தலை முடித்து பின்னலிட்டிருந்தாள்.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

“நான் பிந்தி வந்து விட்டேனா? என்று அவள் மென்மையாகக் கேட்டாள்

“இல்லை. பிந்தவில்லை” என்று வாசற் புறமாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் அந்த ஹஹோல், ”நடந்தா வந்தீர்கள்?”

”பின்னே? நடந்துதான் வந்தேன். நீங்கள்தான் பாவெல் மிகாய்லவிச்சின் அம்மாவா? வணக்கம். என் பெயர் நதாஷா!”

”உங்கள் தந்தை வழிப் பெயர் என்ன?” என்றாள் தாய்.

”வசீலியவ்னா . உங்கள் பெயர்?”

‘பெலகேயா நீலவ்ன.”

”சரி. நாம் அறிமுகமாகிவிட்டோம்’.

”ஆமாம்” என்று ஆசுவாசமாகச் சுவாசித்துவிட்டு. அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே சொன்னாள் தாய்.

அந்தப் பெண்ணின் மேலுடைகளைக் கழற்றுவதற்கு உதவிக் கொண்டே கேட்டான் அந்த ஹஹோல். “குளிராயிருந்ததா?”

“வயல் வெளியில் வரும்போது மகா பயங்கரம்! அந்த ஊதைக் காற்று – அப்பப்பா!”

அவளது குரல் செழுமையும் தெளிவும் பெற்றிருந்தது. வாய் சிறியதாகவும், உதடுகள் பருத்ததாயும் இருந்தன. மொத்தத்தில் உடற்கட்டு உருண்டு திரண்டு புதுமையோடு இருந்தது. மேலுடையைக் களைந்த பிறகு அவள் தனது சிவந்த கன்னங்களை, குளிரால் நிறைந்த சின்னஞ்சிறு கரங்களால் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அதன் பின்னர் செருப்புக் குதிகள் தரையில் மோதி ஓசை செய்ய, அவள் அந்த அறைக்குள்ளே நடமாடிக் கொண்டிருந்தாள்.

”ரப்பர் ஜோடுகள் அணியக் காணோம்” என்று தாய் மனதுக்குள்ளாக நினைத்துக்கொண்டாள்.

”ஆம்’ என்று நடுங்கிக்கொண்டே இழுத்தாள் அந்த யுவதி. ”நான் எவ்வளவு தூரம் விறைத்துப் போனேன் என்பதை உங்களால் கற்பனைக் கூட பண்ண முடியாது!

நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை, உங்களுக்கு உலக ஞானம் போதாது. உலகத்துக்குள் ஒரு மனிதனைக் கொண்டு வருவதே சிரமம். அவனை நல்லவனாக வாழச் செய்வது அதை விடச் சிரமம்!

”இதோ. உனக்குக் கொஞ்சம் தேநீர் போடுகிறேன்” என்று தாய் சமையலறைக்கு விரைந்தாள். இந்தப் பெண் தனக்கு வெகுகாலமாகத் தெரிந்தவள் போலவும் எனவே தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் அவளை நேசிப்பது போலவும் தாய்க்குத் தோன்றியது. அடுத்த அறையில் நடந்து கொண்டிருந்த சம்பாஷணையைக் கேட்கும்போது அவள் தன்னுள் புன்னகை செய்து கொண்டாள்.

”நஹோத்கா (4)! உங்களுக்கு என்ன கவலை” என்று கேட்டாள் அந்தப் பெண்.

”பெரிய கவலை ஒன்றுமில்லை” என்று அமைதியுடன் பதில் சொன்னான். அந்த ஹஹோல். இந்தப் பெரியம்மாவுக்கு நல்ல கண்கள் இருக்கின்றன. எனது அம்மாவுக்கும் இந்த மாதிரித்தான் கண்கள் இருந்திருக்குமோ என்று யோசித்தேன். நான் அடிக்கடி என் தாயைப் பற்றியே நினைக்கிறேன். அவள் இன்னும் உயிரோடிருப்பதாகவே நான் கருதுகிறேன்!”

“உங்கள் தாய் செத்துப்போய்விட்டதாகச் சொல்லவில்லை?”

“ஆனால், என்னுடைய வளர்ப்புத் தாய்தான் செத்துப் போனாள். நான் என்னைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிச் சொல்லுகிறேன். ————–

ஒருவேளை அவள் கீவ் நகரத் தெருக்களில் பிச்சையெடுத்துத் திரிந்து கொண்டிருக்கிறாளோ என்று எண்ணுகிறேன். பிச்சையெடுப்பதும், ஓட்கா குடிப்பதும்… அவள் குடித்திருக்கும்போது, போலிஸார் அவள் முகத்தில் ஓங்கியறையவும் கூடும்…..

“உம். என் அருமைப் பையனே!” என்று பெருமூச்சு விட்டபடி நினைத்துக் கொண்டாள் தாய்.

நதாஷா விரைவாகவும் மென்மையாகவும் உணர்ச்சிமயமாகவும் ஏதோ பேசினாள். மீண்டும் அந்த ஹஹோல் பேச ஆரம்பித்துவிட்டான்.

“நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை, உங்களுக்கு உலக ஞானம் போதாது. உலகத்துக்குள் ஒரு மனிதனைக் கொண்டு வருவதே சிரமம். அவனை நல்லவனாக வாழச் செய்வது அதை விடச் சிரமம்!’

”என்னமாய்ப் பேசுகிறான்!” என்று தனக்குத்தானே வியந்து கொண்டாள் தாய். அந்த ஹஹோலிடம் ஏதாவது அன்பான வார்த்தையாகப் பேசிவிட வேண்டும் என்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் திடீரெனக் கதவு திறக்கப்பட்டது. உள்ளே பழைய திருட்டுப்புள்ளியான தனிலோவின் மகன் நிகலாய் விஸோவ்ஷி கோல் வந்து சேர்ந்தான். நிகலாய் மனிதரை அண்டி வாழாத தனிக் குணத்தால் அந்தக் குடியிருப்பு முழுவதிலுமே பிரபலமான புள்ளி. அவன் எப்போதுமே யாரிடமும் ஒட்டிப் பழகுவதில்லை; எட்டியே நிற்பான். எனவே மற்றவர்கள் அவனைக் கேலி செய்து வந்தனர்.

”ஊம். என்னது நிகலாய்?” என்று வியப்புடன் கேட்டாள் அவள்.

அவளுக்கு வணக்கம் கூடக் கூறாமல், அம்மைத் தழும்பு விழுந்த தனது அகலமான முகத்தை உள்ளங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டு வறட்டுக் குரலில் கேட்டான் அவன், “பாவெல் இல்லையா!”

”இல்லை .”

அவன் அந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

வணக்கம். தோழர்களே!” என்றான் அவன்.

”இவனும் கூடவா?” என்று வெறுப்புடன் நினைத்தாள் தாய், நதாஷா கொஞ்சமாயும், மகிழ்ச்சியுடனும் கரம் நீட்டி அவளை வரவேற்றது அவளுக்குப் பேராச்சரியம் விளைத்தது.

நிகலாயிக்குப் பின்னர் வேறு இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் பருவம் முற்றாத வாலிபர்கள். தாய்க்கு அவர்களில் ஒருவனைத் தெரியும். கூர்மையான முகமும் சுருண்ட தலை மயிரும், அகன்ற நெற்றியும் கொண்ட அந்தப் பையனின் பெயர் பியோதர்: தொழிற்சாலையின் பழைய தொழிலாளியான சிஸோவ் என்பவனின் மருமகன். அடுத்தவன் கொஞ்சம் அடக்கமானவன். அவன் தன் தலைமயிரை வழித்துவாரிவிட்டிருந்தான். அவளுக்கு அந்தப் பையனைத் தெரியாது. எனினும் அவனைப் பார்த்ததும், அவளுக்கு எந்த பயமும் தோன்றவில்லை. கடைசியாக பாவெல் வந்து சேர்ந்தான். அவனோடு, தாய்க்கு இனம் தெரிந்த வேறு இரு தொழிலாள இளைஞர்களும் வந்து சேர்ந்தனர்.

“நீ தேநீருக்குத் தண்ணீர் வைத்துவிட்டாயா?” என்று அன்போடு கேட்டான் பாவெல், “மிக நன்றி!”

”நான் போய்க் கொஞ்சம் ஓட்கா வாங்கி வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். காரணம் தெரியாத ஏதோ ஒன்றுக்கு தான் எப்படி நன்றி செலுத்துவது என்பது தெரியாமல்தான் இப்படிக் கேட்டாள் அவள்.

“இல்லை, தேவையில்லை’ என்று அன்பு ததும்பும் புன்னகையோடு சொன்னான் பாவெல்.

அவளைக் கேலி செய்வதற்காகவே, தன் மகன் இந்தக் கோஷ்டியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய்க் கூறிப் பயங்காட்டி விட்டதாக அவள் திடீரென நினைத்தாள்.

“அது சரி, இவர்கள்…. இவர்கள் தானா; அந்த சட்டவிரோதமான நபர்கள்?’ என்று மெதுவாகக் கேட்டாள் அவள்.

”இவர்களேதான்” என்று பதில் கூறிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் பாவெல்.

“ஐயோ…” என்று அன்பு கலந்த வியப்புடன் சொன்னாள் அவள். பிறகு தனக்குள்ளே இளக்காரமாக நினைத்துக்கொண்டாள், “இன்னும் இவன் குழந்தைதான்!”

 

அடிக்குறிப்புகள்:

(1) மூலத்தில் ‘அம்மா’ என்பதற்கு ‘நேன்க்கோ ‘ என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. நேன்க்கோ என்பது உக்ரேனியச் சொல். அம்மா என்பதை மேலும் அருமையாக அழைப்பது. (மொ –ர்)

(2) பழந்துணிகளை வாங்கிப் பிழைக்கின்றவர்களை ‘தாத்தாரியன்’ என்று சொல்லுவதுண்டு – (மொ –ர்)

(3) ஹஹோல் -உக்ரேனியப் பிரதேச மக்களுக்கு, ருஷ்யர்கள் இட்டுள்ள கேலிப் பெயர். கதை முழுவதிலும் ஹஹோல் என்ற சொல் அந்திரேயையே குறிக்கிறது. எனவே அந்திரேய் என்பதும் ஹஹோல் என்பதும் ஒருவரே. (மொ –ர்)

(4) அந்திரேய் நஹோத்யா என்பது முழுப் பெயர். அந்திரேய் என்றும் நஹோத்கா என்றும் தனித்தனியே அழைப்பதுமுண்டு. (மொ –ர்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !

மார்க்ஸ் பிறந்தார் – 20
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 3

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பொருளாயத மதிப்புக்களின் உலகத்தை மட்டுமே செல்வமாகக் கருதுகிறது. அதற்குத் தொழிலாளி செல்வத்தைப் பெருக்குகின்ற சாதனமாகத்தான் இருக்கிறான்.

தொழிலாளி தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், பணத்தையும் பொருள்களையும் சேமிப்பதற்காக வாழ்க்கை இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று அது வற்புறுத்துகிறது.

எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, நாடகத்துக்கும் நடனத்துக்கும் சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறீர்களோ, காதலிக்கிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள், உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின்படி பணம் இல்லாத, பொருள் இல்லாத மனிதன் ஒன்றுமே இல்லாதவனாவான். பொருள்களும் பணமும் அவனுக்குச் சமூகத்தில் அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் தருகின்றன, அவன் மனதில் கூட அவனை முக்கியமானவனாகச் செய்கின்றன.

உங்களால் செய்ய முடியாத எல்லாக் காரியங்களையும் உங்கள் பணம் செய்ய முடியும். பணத்தைக் கொண்டு சாப்பிட முடியும், குடிக்க முடியும், நடனங்களுக்கு, நாடகத்துக்குப் போக முடியும், பிரயாணம் செய்ய முடியும், கலைப் பொருள்களை, புலமையை, வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பொருள்களை, அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும்.

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த “மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதன்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார்:

இந்த மஞ்சள் அடிமை மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும், கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும், குட்ட நோயைப் போற்றச் செய்யும், திருடர்களுக்குப் பட்டம் வழங்கி அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும் பெருமையும் அருளும்……

ஷேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச் சிறப்பான முறையில் சித்திரிக்கிறார்”, குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்று மார்க்ஸ் கருதுகிறார்.(1)

பணம் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள்-எல்லா மனித மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர்நிலைகளாக மாற்றியமைத்தல், பொருள்களைச் சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.

பணம் ஒரு பொதுவான விபசாரி, மக்களையும் தேசங்களையும் கவர்ந்திழுப்பது. பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட மனிதகுலத்தின் திறமை.(2)

ஷேக்ஸ்பியர் மற்றும் கேதேயின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்ட இக்கருத்துக்களை மார்க்ஸ் பிற்காலத்தில் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, மூலதனம் ஆகிய நூல்களில் வளர்த்துக் கூறினார்.

படிக்க :
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

இளம் மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் போல தலைகீழான உலகத்தில், அந்நியப்படுத்தலின் உலகத்தில் பொருளிட்டலே வாழ்க்கையின் நோக்கமாகிவிடுகிறது; உண்மையான மனிதத் தேவைகளை வளர்ப்பதற்கு மாறாக பொருள்களைப் பற்றிய காரியவாதமான, நுகர்வு அணுகுமுறை ஏற்பட்டுவிடுகிறது. பொருள் மனிதனுக்கு அளவுகோலாகி விடுகிறது, அதன் மறுதலை அல்ல. பொருளாயதச் செல்வம் மனிதத் திறமைகளுடைய செல்வத்தின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அந்நியப்படுத்தலின் உலகத்தில் செப்பமடையாத, பூர்விகமான தேவைகள் உடைமையாக வகைப்படுத்தப்படுகின்றன. “தனிச் சொத்துடைமை நம்மை அதிகமான அளவுக்கு முட்டாளாகவும் ஒருதலைச் சார்பாகவும் மாற்றியிருக்கின்றபடியால் ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் அல்லது அதை நேரடியாக வைத்திருத்தல், சாப்பிடுதல், குடித்தல், அணிதல், வசித்தல், மற்றும் இதர சந்தர்ப்பங்களின் போது மட்டுமே அது நம்முடையதாக இருக்கிறது.”(3) எல்லாப் புலன் மற்றும் ஆன்மிக உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை என்னும் புலன் வந்து விட்டது.

இதன் விளைவாகப் பொருள்கள் உழைப்பின் நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருள்களின் மீது கவனத்தைக் குவிக்கின்ற மனிதன் அவன் பொருள்களின் ஊழியனாக மாறுவதை, அவை தன்னுடைய உழைப்பின் தன்மையையும் வேகத்தையும் மட்டுமல்லாமல் அவன் ஒய்வு நேரத்தைச் செலவிடுகின்ற தன்மையையும் முறையையும் மற்ற மனிதர்களுடன் அவனுடைய தனிப்பட்ட உறவுகளின் தன்மையையும் பாணியையும் ஆட்டுவிப்பதைக் கவனிப்பதில்லை.

மனிதத் தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்திலிருந்து அந்நியமாதலை அகற்றிவிடுவது மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளின் தன்மையில் மாற்றத்தை மட்டுமல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையின் மொத்த உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும்.

“மனிதன் மனிதனாக இருப்பதாக, உலகத்துடன் அவனுடைய உறவு மனிதத்தன்மை கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் அன்புக்கு அன்பை மட்டுமே, நம்பிக்கைக்கு நம்பிக்கையை மட்டுமே, இதரவை பரிவர்த்தனை செய்ய முடியும். நீங்கள் கலையை ரசிக்க விரும்பினால் நீங்கள் கலைப் பயிற்சியுள்ள நபராக இருக்க வேண்டும்; நீங்கள் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்த விரும்பினால், அவர்களிடம் சிந்தனையைத் தூண்டுகின்ற, உற்சாகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபராக நீங்கள் இருக்க வேண்டும்.

மனிதனுடனும் இயற்கையுடனும் உங்களுடைய உறவுகளில் ஒவ்வொன்றும் உங்களுடைய இலட்சியத்துக்குப் பொருத்தமான, உங்களுடைய உண்மையான தனிப்பட்ட வாழ்க்கையின் பிரத்யேகமான வெளியீடாக இருக்க வேண்டும். நீங்கள் அன்பைத் திரும்பப் பெறாமல் அன்பு செலுத்துவீர்களானால், அதாவது நேசித்தல் என்ற முறையில் உங்களுடைய அன்பு பரஸ்பரமான அன்பை ஏற்படுத்தாவிட்டால், அன்புள்ளம் கொண்ட நபர் என்ற உங்களுடைய ஜீவனுள்ள வெளியீட்டின் மூலமாக உங்களை அன்பிற்குரியவராகச் செய்து கொள்ள முடியாவிட்டால் உங்களுடைய அன்பு மலட்டுத்தனமானது-அது ஒரு துர்ப்பாக்கியமே”(4) என்று மார்க்ஸ் எழுதுகிறார்.

மதிப்புச் செல்வம் என்ற சுயபூர்த்தியுள்ள கோட்பாட்டைக் கொண்ட முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மனித மறுப்பை முரணில்லாமல் போதிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

படிக்க :
♦ அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !

கம்யூனிஸ்ட் சமூகத்தில் பொருள்களின் செல்வம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும், அதாவது மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாமல் முழுமையான மனித நடவடிக்கைக்கு ஒரு சாதனமாக இருக்கும். “அரசியல் பொருளாதாரத்தின் செல்வத்துக்கும் வறுமைக்கும் பதிலாகச் செல்வமுடைய மனித ஜீவனும் வளமான மனித தேவையும் ஏற்படும்.”(5)

மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்திலும் அதன் பூர்வாங்கமான நூல்களிலும் இக்கருத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறார். அவர் சமூகத்தின் மிக உயர்ந்த செல்வமாக, மிக உயர்ந்த மூலதனமாக-மனிதனுடைய உற்பத்திப் பொருளையல்ல – மனிதனை “தனிநபர்களின் தேவைகள், திறமைகள், நுகர்வுச் சாதனங்கள், உற்பத்திச் சக்திகள், இதரவற்றின் முழுதளாவிய தன்மையைப்”(6) பிரகடனம் செய்கிறார்.

கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லாச் சமூக உற்பத்திக்கும் மனிதனே குறிக்கோள்; பொருளாயத மதிப்புகள் இக்குறிக்கோள் நிறைவேறுவதற்குச் சாதனமாக, நிபந்தனையாக, அடிப்படையாக மட்டுமே இருக்கின்றன.

தொடக்க நிலையையும் (சுய அந்நியமாதல்) குறிக்கோளையும் எடுத்துக்காட்டிய பிறகு மார்க்ஸ் இக்குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டிய பாதையை, அந்நியப்படுதலை அப்புறப்படுத்துகின்ற பாதையைச் சுட்டிக்காட்டுகிறார். இப்பிரச்சினை பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சமூகவியலாளர்கள் மற்றும் மார்க்சியவியலாளர்களுக்கு இடையில் மிகவும் காரசாரமான விவாதத்துக்குரிய பொருளாகவே இன்னும் இருந்து வருகிறது.

அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது என்ற உண்மையிலிருந்து மார்க்ஸ் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் முன்னேறுகிறார். தனிச் சொத்துடைமை “அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தி, முடிவு, அவசியமான விளைவு”,(7) பொருளாதார அந்நியமாதல்.

அந்நியமாதலின் வெவ்வேறு வடிவங்களின் (அரசியல், மத, தத்துவஞான, அறவியல், இதரவை) சாயல்களும் அம்சங்களும் பொருளாதார அந்நியமாதலில் குவிகின்றன. மொத்த மனித அடிமைத்தனமும் உற்பத்தி முறையில் தொழிலாளியின் உறவின் அடிமைத்தனத்தில் வெளிப்படுகிறது.” …அடிமைத்தனத்தின் எல்லா உறவுகளும் இந்த உறவின் உருத்திரிபுகளும் விளைவுகளுமே.”(8) இங்கே மார்க்ஸ் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் உற்பத்தி உறவுகளின் தலைமையான பாத்திரத்தைப் பற்றிய கருத்தை வகுத்துரைக்கிறார்.

ஹெகலிடம் எல்லா அந்நியமாதலுமே கருத்தின் அந்நியமாதலாக இருந்தது, அகப்பொருளின் “உணர்வில்” இந்த ரகத்தைச் சேர்ந்த ஊடுருவுதலும் சாத்தியமாக இருந்தது. ஆனால் அவர் உலகத்துடன் தன்னுடைய உறவுகளின் அடிமைத் தன்மையை உணர்ந்து கொண்டிருப்பதால் அவருடைய அந்நியமாதல் மறையவில்லை, அது அதிகரிக்கிறது.

நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நீந்துவதாகக் கற்பனை செய்வது மட்டும் போதாது. சுதந்திரம் வேண்டுமென்றால் சுதந்திரமாக இருப்பதைப் போலக் கருதுவது மட்டும் போதாது. “தனிச் சொத்துடைமைக் கருத்தை ஒழிப்பதற்கு கம்யூனிசம் என்ற கருத்து போதுமானதாகும். உண்மையாகவே தனிச் சொத்துடைமையை ஒழிப்பதற்கு மெய்யாகவே கம்யூனிஸ்ட் நடவடிக்கை அவசியம்.”(9)

“வரலாறு இதற்கு இட்டுச் செல்லும்” என்பதை மார்க்ஸ் சந்தேகிக்கவில்லை. ஆனால் கற்பனாவாதிகளைப் போல தனிச் சொத்துடைமை ஒழிப்பு வேகமாகவும் துன்பமின்றியும் நடைபெறும் என்று மார்க்ஸ் கருதவில்லை. இது “மிகவும் கரடுமுரடான, நெடுங்கால நிகழ்வுப் போக்காக”(10)  இருக்கும் என்பதை அவருடைய வரலாற்று உணர்வு பிழையில்லாமல் எடுத்துக்காட்டியது.

தனிச் சொத்துடைமை முறை மந்திரக் கோலை ஆட்டியதும் திடீரென்று தோன்றிவிடவில்லை. அது பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது, வெவ்வேறு வடிவங்களை அடைந்தது. அதன் வளர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை. அது இப்பொழுது தொழில்துறை மூலதனம் என்ற வடிவத்தை அடைந்திருக்கிறது, அது சமூகத்தின் எல்லா இடுக்குகளுக்குள்ளும் நுழைந்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வரை, “அதன் உலகளாவிய வடிவத்தில் உலக வரலாற்றுச் சக்தியாகும்” வரை இந்த வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.

தனிச் சொத்துடைமை இந்த வளர்ச்சியடைந்த வடிவத்தில், முழு ஜீவனோடிருக்கும் பொழுது தன் எதிரியை, மரணத்தை, தொழில்துறைத் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை எதிரிடுகிறது.

அந்தத் தருணத்திலிருந்து அது தன் சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது, ஆனால் மரணத்தை நோக்கி அதன் பாதை முதிர்ச்சியை நோக்கி வளர்ச்சியடைந்த பாதையைப் போல இருக்கிறது: கம்யூனிச உருவாக்கத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் கட்டங்களிலும் அது தோன்றுகிறது. கம்யூனிசம் முதலில் கரடுமுரடான சமத்துவவாதக் கம்யூனிசமாகத் தோன்றுகிறது என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார் (அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏழைகளின் கம்யூன்களை ஏற்படுத்துவதற்குச் செய்யப்பட்ட ஆரம்பகாலத் தவறுகளை மார்க்ஸ் மனதில் கொண்டிருக்க வேண்டும்).

“இக்கம்யூனிசம்” தனிச் சொத்துடைமையின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்குக் காட்டுமிராண்டித்தனமான சாதனங்களைக் கொண்டு எதிர்ப்பதைக் காட்டுகிறது. தனிச் சொத்துடைமை மற்றும் அது ஏற்படுத்துகின்ற சமத்துவமற்ற நிலைமையின் “தாக்கத்தில்” அது இன்னும் இருக்கின்றபடியால் ஒவ்வொருவரையும் (பெண்கள் சமூகம் உள்பட) பொதுவான தரத்துக்கு வகைப்படுத்துவதற்கு விரும்புகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒவ்வொன்றையும் எல்லோரும் பெற்றிருக்க முடியாத ஒவ்வொன்றையும் அழிப்பதற்கு முயற்சிக்கிறது.

ஆகவே கரடுமுரடான, பாசறைக் “கம்யூனிசம்” மனிதனுடைய திறமையிலிருந்து, அவனுடைய ஆளுமையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அது தொழிலாளியின் அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை ஒழிப்பதற்கு ஏங்கவில்லை, ஒவ்வொருவரையும் தொழிலாளர்களாக மாற்றுவதற்கு விரும்புகிறது.

ஒவ்வொரு துறையிலும் மனிதனுடைய ஆளுமையை “மறுக்கின்ற” இவ்விதமான “கம்யூனிசம்” அதே சமயத்தில் “கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்த உலகத்தையும்” மறுப்பதாக இருக்கிறது. எவ்விதமான தேவையும் இல்லாத ஏழையின் இயற்கைக்குப் புறம்பான எளிமையே அதன் குறிக்கோள். இந்த “எளிமை” தனிச் சொத்துடைமைக்கு அப்பால் போக முடியாமற் போய்விட்டது மட்டுமல்ல அது இன்னும் அதைக் கூட எட்டவில்லை என்பதை இக்குறிக்கோள் நிரூபிக்கிறது.

படிக்க :
♦ நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
♦ மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?

இந்த ரகத்தைச் சேர்ந்த “கம்யூனிசத்தில்” உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலுள்ள எதிர்நிலைத் தன்மை ஒழிக்கப்படவில்லை. உழைப்பு (அதன் மிகவும் ஆரம்ப வடிவத்தில்) ஒவ்வொரு மனிதனும் வைக்கப்பட்டிருக்கும் நிலையாகத் தோன்றுகிறது; மூலதனம் சர்வாம்ச மூலதனமாக மற்றும் சமூகத்தின் சக்தியாகத் தோன்றுகிறது.

இந்தக் “கரடுமுரடான கம்யூனிசம்” “தனிச் சொத்துடைமையின் வெறுக்கத்தக்க” வெளியீடு என்று மார்க்ஸ் கூறினார். இந்த விமர்சனம் இன்றைய தினத்திற்கும் அதன் தத்துவ ரீதியான மற்றும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, அதிதீவிரமான புரட்சிகர வாய்ப்பந்தலையும் மனிதகுலத்தை ஆனந்தமாக வைத்திருப்பதற்குப் பாசறை முறைகளையும் நேசிப்பவர்கள் மாபெரும் கம்யூனிசக் கருத்துக்களைக் கொச்சைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் எதிர்க்கும் போராட்டத்துக்கு உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.

மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்ற இரண்டாவது வடிவம்-அவர் முதலாவதாகவும் முதன்மையாகவும் அக்காலத்திய கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் குறியடையாளமான, எதிர்காலத்தைப் பற்றிச் சிற்சில கருத்துக்களை மனதில் கொண்டிருக்கிறார் – தன்னுடைய அரசியல் தன்மையை இன்னும் இழக்காத கம்யூனிசமாகும். அது ஜனநாயகமாக இருக்கிறது அல்லது எதேச்சாதிகாரமாக இருக்கிறது. அது தனிச் சொத்துடைமையின் கைதியாக இருக்கிறது, அதனால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

முடிவாக, மூன்றாவது வடிவம் மனிதகுலக் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்தச் செல்வத்தையும் பாதுகாத்து வளர்த்துச் செல்கின்ற அடிப்படையில் அந்நியமாதலின் எல்லா வடிவங்களையும் உண்மையில் அகற்றுகின்ற முறையில் தனிச் சொத்துடைமையின் “ஆக்கபூர்வமான” அழித்தலை முன்னாகிக்கிறது. இந்தக் கம்யூனிசம் முழு வளர்ச்சியடைந்த மனிதாபிமானத்துக்குச் சமம்: “மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மோதலுக்கு இது உண்மையான தீர்வு.”(11)

வரலாற்றின் மொத்த இயக்கமுமே இக்கம்யூனிசத் தோற்றத்தின் உண்மைச் செயலே, அதன் வாழ்க்கையின் பிறப்பே. இப்பிரச்சினைக்குத் தீர்வு “புரிந்து கொள்வதைப் பற்றிய பிரச்சினையாக மட்டுமே ஒருபோதும் இருக்கவில்லை, அது வாழ்க்கையின் உண்மையான பிரச்சினை; தத்துவஞானம் இப்பிரச்சினையை வெறும் தத்துவ ரீதியான ஒன்றாக மட்டுமே கருதியதனால் தான் அதைத் தீர்க்க முடியவில்லை.”(12)

இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு மார்க்ஸ் இக்கருத்தைத் தன்னுடைய பிரபலமான ஆய்வுரையில் பின்வருமாறு வகுத்துரைத்தார்: “தத்துவஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி மட்டுமே வந்திருக்கிறார்கள், ஆனால் அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்”.(13)

மார்க்ஸ் தன்னுடைய 1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தெரிவித்த கருத்துக்களை இதற்குப் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்குப் பிறகு அவர் அதிகமான செறிவுடனும் விவரத்துடனும் வளர்த்துக் கூறினார்.

உழைப்பு மற்றும் மூலதனத்தின் எதிர்நிலைத் தன்மை, தொழிலாளி பண்டமாக இருத்தல், பண்ட வழிபாடு, தொழிலாளியை உயிருள்ள இயந்திரமாக, பகுதியளவுக்கு இயந்திரத்தின் உறுப்பாக மாற்றுதல் முதலியன இத்தகைய கருத்துக்களாகும்; முதலாளி மூலதனத்தின் உருவமாகவும் பாட்டாளி உழைப்புச் சக்தியின் உருவமாகவும் இருக்கின்ற பண்ட உறவுகளின் உலகத்தில் மனித ஆளுமை அந்நியமாக்கப்படுதல் என்பதைப் பற்றிய கருத்துக்களும் இவற்றில் அடங்கும்.

“அந்நியமாதல்” என்ற தத்துவஞானக் கருத்தமைப்புக்குப் பதிலாகத் துல்லியமான, சந்தேகத்துக்கு இடமளிக்காத பொருளாதாரக் கருத்தமைப்புகளை மார்க்ஸ் மென்மேலும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்; ஆனால் இது சொற்பிரயோகத்தைப் பற்றிய பிரச்சினையே தவிர, கோட்பாட்டைப் பற்றியதல்ல.

1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் புதிய உலகக் கண்ணோட்டத்தின் மேதாவிலாசம் நிறைந்த உருவரை, ஒரு செயல்திட்டத்தின் உருவரை; அதை விரித்துரைக்கின்ற பணி கார்ல் மார்க்சின் எஞ்சிய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றது.

இப்புத்தகம் எழுதப்பட்டு சுமார் 90 வருடங்களுக்குப் பிறகு, அதன் ஆசிரியர் மரணமடைந்து சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு தான் உலகம் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது.

ஆனால் முக்கியமாக இருக்கின்ற ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி அப்பொழுது எழுதப்பட்ட புத்தகத்தைப் போல அது உடனடியாக அதிகமான கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு இப்புத்தகத்தைப் பற்றிப் பல்வேறு நாடுகளில் ஏராளமான ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்னும் எழுதப்படுகின்றன, வாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்திலிருந்து நாம் எவ்வளவு தள்ளி வருகிறோமோ அவ்வளவுக்கு இப்புத்தகம் அதிகமான உடனடி முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்நூலில் எழுப்பப்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் மார்க்சியத்தைப் பற்றி மிகவும் வேறுபட்ட கருத்துக்களுக்கிடையில் – கொச்சையான வறட்டுச் சூத்திரவாதம் முதல் கொச்சையான திருத்தல் வாதம் வரை – மோதல் நடைபெறுகின்ற களமாக இருக்கின்றன.

இந்த இரண்டு “முனைக்கோடிகளும்” பொதுவான அம்சத்தைக் கொண்டிருப்பது சுவாரசியமானதே. இளமைக் கால மார்க்ஸ், முதிர்ச்சிக் கால மார்க்ஸ் என்று இரண்டு மார்க்ஸ்கள் இருப்பதாகக் கூறி அவரிடத்தில் வேறுபாட்டைக் காண்கின்றன. எனினும் வித்தியாசம் என்னவென்றால் அவை வெவ்வேறு வழிகளில் இதைச் செய்கின்றன: முந்தியது இளமைக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறும் பொழுது பிந்தியது முதிர்ச்சிக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறுகிறது.

இரண்டு அணுகுமுறைகளுமே மார்க்சியத்தைப் பற்றி உருத்திரிபான, பூர்விகமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. இவை அறிவு சார்ந்த சோம்பேறித்தனத்தினால் மார்க்சியத்தை வறட்டுக் கோட்பாட்டுவாத அளவுகளைக் கொண்டு அளக்கின்றன. கையேடுகளும் மூலதனமும் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கொள்கைகள் அல்ல; முதலாவதில் “மனிதாபிமானமும்” பின்னதில் “பொருளாதாரவாதமும்” மையமான இடங்களைப் பெற்றிருக்கின்ற இரண்டு முழுமையான தத்துவஞான அமைப்புகள் அல்ல.

அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்குமானால் அது பிறப்பிடமும் சிகரமும் என்ற முறைகளில் மட்டுமே; உலகறிந்த நிகழ்வுகளைப் பற்றிப் புதிய பகுப்பாய்வு முறை கண்டுபிடிக்கப்பட்ட நூல், அது கையாளப்படுகின்ற நூல் என்ற முறைகளில் மட்டுமே. தத்துவஞான பொருளாதார நூல், பொருளாதார-தத்துவஞான நூல் என்ற முறைகளில் மட்டுமே.

மார்க்சியத்தின் மூலவர்கள் அடிக்கடி வலியுறுத்தியதைப் போல அது ஒரு கோட்பாடு அல்ல, அது ஒரு முறை. எனவே வெவ்வேறு நூல்களில் தரப்பட்டிருக்கின்ற “முன்னரே தயாரிக்கப்பட்ட” வகுத்துரைத்தல்களைக் கூறுவதன் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இயக்கத்தில், கருத்துக்களின் பிறப்பில், முறையைத் தொடர்ச்சியாகப் பதுக்கித் தருவதில் மட்டுமே மார்க்சியத்தின் ஜீவனைப் புரிந்து கொள்ள முடியும்.

கோட்பாட்டுவாதக் குறுகிய அறிவு மூலதனத்தில் “மனிதாபிமானத்தைக்” காண்பதில்லை; ஏனென்றால் மார்க்சின் மொத்த பாரம்பரியத்தில் இப்புத்தகத்தின் இடத்தை அது புரிந்து கொள்வதில்லை. மார்க்ஸ் எத்தகைய மனித இலட்சியங்களுக்காகப் “பொருளாதார மனிதனைப்” பற்றி மிகவும் கருத்தூன்றி ஆராய்ந்தார் என்பதை அது புரிந்து கொள்வதில்லை. அது மார்க்சின் மனிதாபிமானத்தைப் பார்ப்பதில்லை, ஏனென்றால் அது தத்துவத் துறையில் பகற்கனவு காண்பவர்களின் போலிப் பரோபகார உணர்வை “மனிதாபிமானம்” என்று கருதிப் பழகிவிட்டது.

மறு பக்கத்தில் இளமைக் கால மார்க்சை விமர்சனம் செய்பவர்கள் – இவர்களும் அவர்களைப் போன்று குறுகிய அறிவுடையவர்களே – மார்க்சியத்தின் உருவாக்கத்தில் கையேடுகளின் மாபெரும் முக்கியத்துவத்தைப் பாராட்டக்கூடிய தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

“அந்நியமாதல்”, “மனிதாபிமானம்” என்ற சொற்களைக் கேட்டவுடனே இவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள்-இக்கருத்தினங்கள் மார்க்சியமா? அவர்கள் மார்க்சைக் குறுகிய வறட்டுக் கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொண்டவர்கள், அவர்களால் மார்க்சின் வளமான கருத்துக்களை ஜீரணிக்க முடிவதில்லை; எனவே அவர்கள் “பரிசுத்தமான” மார்க்சுக்கும் “அசுத்தமான” மார்க்சுக்கும், “முதிர்ச்சியடைந்த” மார்க்சுக்கும் “முதிர்ச்சியில்லாத” மார்க்சுக்கும் இடையில் வேறுபாடுகளைத் தேடுகிறார்கள்.

மார்க்சின் மனிதாபிமானம் தற்காலிகமான தத்துவ ஈடுபாடு அல்ல. “கரடுமுரடான கம்யூனிசம்” என்று மார்க்ஸ் பெயரிட்டுக் கண்டித்த சித்தாந்திகள் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ அப்படிச் சிந்திக்க விரும்புகிறார்கள். மனிதாபிமானம் மார்க்சியத்தின் ஒட்டுப் பகுதி அல்ல, அது மார்க்சியத்தின் இதயம், அதற்கு சக்தியும் வாழ்க்கையும் தருகின்ற உள்விசை மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்காகப் போராடுகின்ற கோடிக்கணக்கானவர்களின் உலகக் கண்ணோட்டமாக மார்க்சியத்தை ஆக்கியிருப்பது அதுவே.

1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் (மற்றும் Deutsch Französische Jahrbücherஇல் எழுதப்பட்ட இதனை ஒட்டிய கட்டுரைகளும்) மார்க்சின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான சந்திக்குமிடமாக அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டத்துக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகங்கள் மார்க்சியத்தை நோக்கி அவருடைய பாதையைக் குறிக்கின்றன என்றால், அதற்குப் பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் எல்லாப் பகுதிகளிலும், சிறப்பாக அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சியத்தின் வளர்ச்சியை, ஸ்தூலப்படுத்துதலை, விரித்துரைத்தலைக் குறிக்கின்றன.

1844 -ம் வருடத்தை விஞ்ஞான உலகக் கண்ணோட்டம் பிறந்த வருடம் என்று கூறலாம். ஆனால் இந்த உலகக் கண்ணோட்டத்தின் உருவாக்கம் பூர்த்தியடைந்த வருடத்தை நம்மால் கூற முடியாது. மார்க்சும் எங்கெல்சும் மரணமடைகின்ற வரை எழுதிய எல்லா நூல்களிலும் அது தொடர்ந்தது. அது இன்றும் தொடர்கிறது, மனித சமூகம் நீடிக்கின்ற வரை அது தொடரும்.

குறிப்புகள்:

(1) Marx, Engels, Collected Works, Vol. 3, pp. 323, 324.
(2) Ibid., pp. 324, 325.
(3) Ibid., p. 300.
(4) Ibid., p. 326.
(5) Ibid., p. 304.
(6) Karl Marx, Grundrisse der Kritik der politischen Okonomie. (Rohentwurt) 1857— 1858, Berlin, 1953, S. 387.
(7) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 279.
(8) Ibid., p. 280.
(9) Ibid., p. 313.
(10) Ibid.
(11) Ibid., p. 296.
(12) Ibid., p. 302.
(13) கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 1, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, பக்கம் 11.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !