சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியா விமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.
பொன்.ராதா, தமிழிசை உள்ளிட்ட பல பா.ஜ.க. தலைகள் கோஷமிட்ட பெண்ணுக்கு பின்னணியில் ஏதோ ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் அலறுகிறார்கள். பா.ஜ.க. பாதநக்கி கருத்தாளர்களும் அதனை அப்படியே வழிமொழிகிறார்கள். ஆனால் அனைவரும் கோபத்தையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு தடுப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பது இங்கே பெரிதும் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க. பேச்சாளர்கள் ”நாங்கள் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தோம். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, அந்த உரிமைகூட எங்களுக்கு இல்லையா” என்றுதான் புலம்பினார்கள்.
விமான நிலைய வளாகத்திலேயே மேடை போட்டு உரையாற்றும் அமித்ஷா.
வழக்கமாக தமிழிசைக்காக தமிழக பா.ஜ.க.வின் பார்ப்பன லாபி எந்த வேலையையும் செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் தமிழிசையை வேலை மெனக்கெட்டு ஆதரிக்கிறார்கள். நேரடி மற்றும் மறைமுக பா.ஜ.க. கருத்தாளர்கள் எல்லோரும் அவர் வெறுமனே மாணவியல்ல அவருக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என ஓயாமல் சொல்லி சோஃபியா ஒரு சாமனிய பெண் அல்ல என நிரூபிக்க முற்படுகிறார்கள். பிறரை அவமானப்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட பா.ஜ.க. இவ்விவகாரத்தில் சோஃபியாவை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருகிறது.
மறுபுறம் செய்தி கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் பேரார்வத்தோடும் ஒருவிதமான பரவசத்தோடும் அவரை ஆதரித்து பதிவிடுகிறார்கள். இத்தளங்களில் இயங்காத சாமானிய மக்களும் இதே உணர்வோடுதான் இருந்தார்கள். சோஃபியாவை ஆதரிக்கும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக எனும் ஹேஷ்டேக் ஒரு அலையைப்போல பரவிற்று. ஏன் சாதாரண நிகழ்வுவொன்று ஒருபுறம் பெரும் பதற்றத்தையும் மறுபுறம் பரவசத்தையும் உருவாக்குகிறது?
காரணம் அந்தப்பெண் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பொருளாதாரப் பிண்ணனி. பா.ஜ.க.வின் கோர முகம் தெரிந்தும் அதனை அலட்சியப்படுத்தி, பா.ஜ.க.வை ஆதரித்து பார்ப்பனக் கும்பலோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக அதனை பயன்படுத்திய மிடில் கிளாசில் இருந்து அவர் வந்திருக்கிறார். அதிகம் படித்தவனுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது. நீ படி, அதிகம் பொருளீட்டு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்பதே அனேக மெத்தப்படித்தோரின் வாழ்நாள் அறிவுரை. அந்த அறிவுரையை சோஃபியா துணிவோடு புறந்தள்ளியிருக்கிறார். போராட்டங்களை இடையூறு என்பதாகவும் உரத்த குரலை அநாகரீகம் என்பதாகவும் கருதும் ஒரு வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஒரு சிறு பெண் எட்டி உதைத்துவிட்டார்.
தங்களது கவசமாக இருந்த ஒரு வர்க்கத்தில் இருந்து வந்த பெண் அவர்களுக்கான விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதை பார்க்கையில் தமிழிசைக்கு பயம் மேலிடுகிறது. என்ன நடந்தாலும் சாணி மாதிரி கிடக்கும் மிடில்கிளாசிடம் இருந்து வெளிப்படையான எதிர்குரல் எழுவதென்பது பா.ஜ.க. கூடாரத்தை பெரிதும் கலவரப்படுத்தவல்லது. அதனை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடத் துடித்ததன் விளைவே தமிழிசையின் அந்த விமான நிலைய குறளிவித்தை. எல்லாவற்றையும் பொறுக்கித்தனமாகவே கையாளும் பா.ஜ.க.வின் தலைவர் என்பதால் இதையும் அப்படியே கையாள முற்பட்டார் தமிழிசை. அதனால்தான் அவர் வெறுமனே புகார் சொல்லாமல் தன் ஆட்களை விட்டு சோஃபியாவையும் அவர் குடும்பத்தையும் மிரட்ட வைத்தார் (அவர் மிரட்டு என உத்தரவிடத்தேவையில்லை, என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என சொன்னாலே போதுமானது).
ஆனால், ஆரம்பத்திலேயே பாடம் கற்பித்துவிடவேண்டும் எனும் அவரது ஆத்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டது. தலித், பெண், கிருஸ்துவர், வெளிநாட்டில் படிக்கிறார் என்பதாக பா.ஜ.க.வால் மிக இலகுவாக அவமானப்படுத்த முடிகிற எல்லா தகுதியும் சோஃபியாவுக்கு இருந்தது. ஆனால் மக்கள் யாரெல்லாம் களத்துக்கு வரவேண்டும் என விரும்பினார்களோ அங்கிருந்து ஒரு சிறு பெண் துணிந்து வரவும் கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பா.ஜ.க.வின் வழக்கமான அஸ்திரங்கள் பயனற்றுப்போயின. மிக அரிதான நிகழ்வாக பா.ஜ.க. தடுப்பாட்டம் ஆடும் நிர்ப்பந்தம் வந்தது.
பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாமல் ஷோவை ஓட்டிவிடவேண்டும் எனும் ஊடகங்களின் வேண்டுதலை குழந்தைகளை கொன்ற அன்னை அபிராமியால்கூட காக்க இயலவில்லை. ஆனாலும் பாசிச பா.ஜ.க. ஒழிக எனும் கோஷம் முன்னுக்கு வராமல் தடுத்து சோஃபியா செய்தது சரியா என்பதாக விவாதித்து தமது எஜமானர்களை அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். எந்த டி.வி.யும் தமிழிசை ஏன் புகார் மட்டும் கொடுத்துவிட்டு போகாமல் தன் கட்சி ஆட்களை அழைத்து ரகளை செய்தார் எனும் கோணத்தை விவாதிக்கவே இல்லை.
பா.ஜ.க.வின் டிப்ளமேட்டிக் அணிகள், டிப்ளமேட்டிக் ரவுடி அணிகள் மற்றும் பியூர் ரவுடி-பொறுக்கி அணிகள் எல்லாமே இம்முறை அடக்கி வாசித்தன. பார்ப்பன நற்செய்தியாளர்கள் சேதாரத்தை அனுமானித்து ”ஏர்கிராஃப்ட் ரூல்சை மீறிப் பேஷறது தப்பு” என ஆரம்பித்து ”பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்குல்ல..” என முடித்தார்கள், அதன் பொருள் மற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரும் இப்படி கோஷம் போட்டுவிட வேண்டாம் என்பதே. பொன்ரா வகையறா சோஃபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொல்லி அவர் உங்கள் ஆள் அல்ல என மக்களுக்கு பாடம் எடுத்தார்கள். மக்கள் தமது கோபத்தை அடுத்த வருடம் தேர்தலில் காட்டினால் போதும் என ஆலோசனை சொன்னார் ஒரு நடுநிலை. ”உங்க தலைவருக்கு இது நடந்தா நீங்க சும்மாயிருப்பேளா” என சிலர் முறையிட்டார்கள் (சம்பவத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தி.க. ஓவியாவும் இதை சொன்னார். வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.க. நாராயணன் ஓவியாவின் கருத்துக்களை குறிப்பிட்டு வழிமொழிந்தார்) ஆனால் ஒருவர்கூட பா.ஜ.க. பாசிஸ்ட் கட்சி இல்லை என்றோ பாசிச ஆட்சி இல்லை என்றோ சொல்லவில்லை.
சோஃபியாவின் குரலுக்கான எதிர்வினைகளையும் பரிசீலிக்கையில் அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது விளங்கும். மக்கள் இத்தகைய குரல் ஒன்றுக்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க. கூடாரம் இத்தகைய குரலைக் கண்டு அஞ்சுகிறது என்பதும் உற்சாகமூட்டக்கூடிய செய்திகள். சோஃபியாவை ஆதரிப்பதன் மூலம் அவரது உணர்வுகளை பரவலாக்குவதன் மூலம் நாம் பெருந்தொகையான மத்தியதர மக்களிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும். உண்மையில் பா.ஜ.க.வின் பொருளாதார நடவடிக்கைகள் கொடூரமாகச் சிதைத்திருப்பது மிடில்கிளாஸ் மக்களின் எதிர்காலத்தைத்தான் (ஏழைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததில்லை). நிகழ்காலத்தை செலவு மிக்கதாக்கி சேமிப்பை அர்த்தமற்றதாக்கியதுதான் பா.ஜ.க. மிடில் கிளாஸ் விசுவாசத்துக்கு கொடுத்த பரிசு. இன்று அவர்களை பிடித்து நிறுத்தியிருப்பது அந்த விசுவாசம் அல்ல, பா.ஜ.க.வை செருப்பால் அடிப்பதில் இருக்கும் தயக்கம்.
இதுவரை நடுத்தர வர்க்க மக்களுக்கு போதிக்கப்பட்ட உதாரண மனிதர்களின் இலட்சணமான “நல்லா படி, ஃபாரின் போ, சம்பாதி” என்பதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டவர் சோஃபியா. அப்படியான உதாரண மிடில் கிளாஸ் மகளை சமூக அக்கறைக்கான மாடலாக நாம் காட்டவேண்டும். அவர் கோஷம் மட்டுமல்ல, மன்னிப்பு கேட்க மறுத்த துணிவு மற்றும் அவரது கருத்தியல் பங்களிப்பு (அவர் எழுத்துக்கள்) ஆகிய எல்லாவற்றையும் நாம் பெருமிதத்தோடு வரவேற்போம். எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம். இன்னும் ஆயிரமாயிரம் சோஃபியாக்களின் தயக்கத்தை அது உடைக்கட்டும்.
– வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி அதுவும் ஓரிருவர் அல்ல நூற்றுக்கணக்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வலதுசாரி இணையதளங்கள் முதல் பத்திரிகைகளின் ஓப்பன் எடிட்டோரியல் பத்திகள் இராணுவ வீரர்களுக்காக கதறின.
அப்படி என்ன பிரச்சினை? ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் வரைமுறையின்றி கொலை செய்த இராணுவத்தினர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நத்தை வேகத்தில் நடந்த விசாரணையை துரிதப்படுத்த கோரி சி.பி.ஐ. இயக்குநரை நேரில் அழைத்து கண்டித்தது. அதன் பிறகு சில போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. இதைக் கண்டித்து 400 இராணுவ வீரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
இப்பின்னணியில் போலி மோதல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரனையில் தெரியவந்த தகவல்களை ஸ்க்ரால் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம்:
“வீர தீர செயல்களுக்கான விருது பெறுவதுதான் நோக்கம்” –
மணிப்பூர் போலீசார் பச்சை படுகொலைகளை செய்துள்ளனர் என சி.பி.ஐ குற்றச்சாட்டு!
மணிப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தருண்குமார் என்பவருக்கு கடந்த 2012 நவம்பர்-23 அன்று குடியரசுத் தலைவர் வீர தீர செயல்களுக்கான பதக்கம் வழங்கி கவுரவித்திருந்தார். முகம்மது சமீன் கான் என்பவரை சுட்டுக்கொண்ட படைக்கு தலைமை தாங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தில் போலீசரின் முதல் தகவல் அறிக்கையின் படி “2012 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களைக் கடத்தி குண்டு வைத்து கொலை செய்ய முகமது சமீன் கான் திட்டமிட்டிருந்தார். போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஐரில்பம்ங் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லில்லாங் சண்டிபூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கான் மற்றும் அவனது கூட்டாளிகளை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் கையெறி குண்டுகளை வீசி போலீசாரைத் தாக்கினர். அப்போது நடந்த மோதலில் கான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் சிவப்பு பாலீத்தீன் கைப்பற்றப்பட்டன. அவனது கூட்டாளிகள் இருட்டில் தப்பிவிட்டனர்.“
வீர தீர பதக்கத்தோடு தருண்குமார் பதவி உயர்வும் பெற்றார். தற்போது மோரெஹ் என்ற நகரத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மறுபுறம் கானின் குடும்பமோ கான் ஒரு அப்பாவி என்பதையும் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் நிரூபிக்க கடந்த ஆறுவருடமாக போராடிவருகிறார்கள். கான் இறந்த பிறகு ஒரு மாதத்தில் பிறந்த குழந்தையுடன் அவர் மனைவி வாழ்ந்துவருகிறார்.
கான் என்கவுண்டர் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கானின் குடும்பத்தினர் சொல்வது போல அவர் அப்பாவி என்பதை உறுதி செய்து கான் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க கடந்த 2014-ஆம் ஆண்டு ஆணையிட்டது. கான் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கிடைத்தது. ஆனால், தருண்குமார் மற்றும் அவரது படையினர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தால்பாதுகாக்கப்பட்டிருப்பதால் – இச்சட்டப்படி ஆயுதப்படையினர் சந்தேகிக்கும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொலை செய்யலாம் – இப்பிரச்சினை வழக்கு முடியவில்லை.
இந்நிலையில் தான் மணிப்பூரில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட 98 போலி மோதல் வழக்குகளை விசாரிக்க கடந்த 2017 ஜூலை மாதம் சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். “சட்டப்புறம்பாக கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கான அமைப்பு” சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இவ்வுத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம். 1979 – 2012-க்கு இடையில் 1528 போலி மோதல் கொலைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் எந்த ஒரு வழக்கிலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உச்சநீதி மன்றத்தை நாடியிருந்தார்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதீத நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது.
அவ்வாறு உச்ச நீதிமன்றம் விசாரிக்க கோரியிருந்த 98 வழக்குகளில் ஒன்று தான் கான் கொலை வழக்கு. ஒர் ஆண்டுக்கு பிறகு கடந்த ஜூலை 7-ஆம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கான் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் கூறியவை உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி ஆய்வாளர் தருண்குமார் மற்றும் மேலும் 6 மணிப்பூர் போலீசார் மீது சதி செய்தல், கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.
என்கவுண்டர் நடந்த பகுதியில் தீவிரவாதிகளின் எவ்வித இரகசிய செயல்பாடுகளும் இல்லை எனவும் ஆயுதங்களை போலீசாரே அப்பகுதியில் சோடித்தனர் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ இந்த என்கவுண்டரின் நோக்கமே அரசிடமிருந்து விருது பெறுவது தான். அதற்காக போலி என்கவுண்டரை நடத்தி அதனை உண்மையாக சோடித்துள்ளனர்.” என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தவிர போலி மோதல் தொடர்பாக மேலும் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து மோதல்களும் ஒரே முறையை பின்பற்றி நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
உதாரணமாக ஜனவரி 18, 2012-இல் மணிப்பூர் போலீசாரால் முகம்மது இசாக் மற்றும் முகம்மது முஸ்தகிம் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கை எடுத்துக் கொள்ளலாம். தலைமறைவு உறுப்பினர்கள் குறித்து கிடைத்த “இரகசிய தகவலின் அடிப்படையில்” செயல்பட்டபோது “இசாக் மற்றும் முஸ்தாகிம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தப்பியோட முயன்றதால்” அவ்விருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால், இது என்கவுண்டர் அல்ல பச்சைப்படுகொலை என சி.பி.ஐ.-யின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் இல்லை எனவும் இவர்களுக்கும் மணிப்பூர் தலைமறைவு போராளிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுல்ளது. மேலும் ஆயுதங்கள் வெடிபொருட்கள் போலீசாரால் சோடிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 8 கமாண்டோ போலீசார் மீது கொலை, தடயங்களை அழித்தல், குற்றச்சதி, பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல லாய்ஷ்ராம் ரன்பீர் சிங் வழக்கில் – கங்கலெபக் கம்யூனிஸ்ட் கட்சி (Kangleipak Communist Party) உறுப்பினர் என சொல்லப்பட்டு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று கொல்லப்பட்டார் – நான்கு மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை மற்றும் தடங்களை அழித்தல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னர் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி முந்தைய இரு சம்பவங்களைப்போலவே, இருசக்கர வாகனத்தில் வந்த சிங் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தடுத்தபோது சிங் துப்பாக்கியால் சுட்டார். அப்போது நடந்த மோதலில் சிங் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் சிங் துப்பாக்கியால் சுட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரது துப்பாக்கி என்று சொல்லப்படுவதில் சிங்கில் கைரேகை கூட இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ கொல்லப்பட்ட லாய்ஷ்ராம் ரன்பீர் சிங் போராளி குழுவினரிடமும் தொடர்பில் இருந்ததாக எந்த ஆதரமும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்.
அடுத்ததாக லாய்ஷ்ராம் லிங்கன். இவர் 2011-ஆம் ஆண்டு ஜுன் 28 என்று அவரது வீட்டின் முன்பு மணிப்பூர் போலீஸ் கமாண்டோ படையினரால் கொல்லப்பட்டார். அவரது உடலில் 20 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது பிணக்கூறாய்வில் கண்டறியப்பட்டது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி லிங்கனின் வீட்டை சோதனையிடும் போது லிங்கன் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றதாக அப்போது நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ விசாரணையில் இதுவும் பச்சப்படுகொலை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை, தடயங்களை அழித்தல், சதி திட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவைகள் போல லாக் அப் கொலை தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் சட்டப்புறமாக சிறைவைத்தது தொடர்பாக பத்து போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றப்பத்திரிகையை வரவேற்றுள்ளார்கள். “குற்றப்பத்திரிகையின் தரம் குறித்து மகிழ்ச்சி” என இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்துவரும் மனித உரிமை ஆர்வலர் பப்ளூ லோய்ட்ங்பம் தெரிவித்துள்ளார். “ஆனாலும் கீழ் நிலை அதிகாரிகள் தான் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள். உயர் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை வரம்புக்குள் வரவவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
சட்டபுறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவர் ரேனு தக்ஹெலம்பம் கூறுகையில் “மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. இதற்காகத்தான் தாங்கள் பல காலம் காத்திருந்தேன்.” என்கிறார். இவரின் கணவரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மேலும் அவர் கூறுகையில் ” போலிமோதல் கொலைகளை செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளின் கூட்டாளியான பாஜக-வின் தமிழிசை சவுந்தரராஜனின் முன்னர், விமானத்தில் வைத்தே “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று முழங்கியுள்ளார் சோஃபியா என்ற ஆராய்ச்சி மாணவி.
சோஃபியா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்கிறாயா என நீதிபதி கேட்டதற்கு, மன்னிப்புக் கேட்க முடியாது என மறுத்திருக்கிறார் சோஃபியா.
சோஃபியாவின் உறுதிக்கு இந்தியா முழுவதும் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் பக்க பலமாக இருந்தனர். சோஃபியா விடுதலை செய்யப்பட்ட போது சுமார் ஆயிரம்பேர் அவரை வரவேற்கச் சென்றிருக்கின்றனர்.
இதோ இங்கு சோஃபியாவுக்கு ஆதரவாகவும், “பாசிச பாஜக ஒழிக” என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் ! திருச்சி சுமதி – அசுரன் தம்பதியினரின் மகள்கள் அசரத் பேகம் (6-ம் வகுப்பு) மற்றும் ஜென்னி (3-ம் வகுப்பு) ஆகியோர், சோஃபியாவை வாழ்த்தி முழக்கமிடும் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு..
மார்க்ஸ் பிறந்தார் – 17 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
உண்மையான போர் முழக்கத்தைத் தேடல்
மார்க்சியம் ஒரு முழுமையான, முரணில்லாத போதனையாகும். அது ஒரு அங்ககமான அமைப்பு, அதில் முழுமைக்கு முன்பாகத் தனிப் பகுதி தோன்றுவதில்லை, உயிருள்ள கரு வளர்ச்சியடைவதைப் போல அதன் மொத்தமும் வளர்ச்சியடைந்து தன்னை முழுநிறை வாக்கிக் கொள்கிறது.
முதலில் இயக்கவியல் பொருள்முதல்வாதமும் பிறகு விஞ்ஞான கம்யூனிசமும் அரசியல் பொருளாதாரமும் தோன்றின என்று நினைப்பது வெகுளித்தனமாகும். ஆனால் மார்க்சின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் பிரதானமாக இவற்றில் ஏதாவதொரு துறையில் முழு கவனத்தையும் செலுத்தினார்.
மார்க்ஸ் தன்னுடைய புதிய உலகக் கண்ணோட்டத்தைத் தத்துவஞானத்திலிருந்து தொடங்கினார் என்ற போதிலும், மார்க்சியத்தின் சமூக மற்றும் பொருளாதார அம்சங்களின் உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதுதான் இத்துறையில் தீர்மானமான புரட்சி சாத்தியமாயிற்று.
இந்தக் கூறு ஏற்கனவே Rheinische Zeitung காலகட்டத்தில் தோன்றியிருந்தது. மார்க்சின் தத்துவஞான அறிவு பரந்த அளவிலும் கலைக் களஞ்சிய விரிவுடனும் இருந்தாலும் மெய்யான வாழ்க்கை முன்வைக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஆன்மிகச் செல்வம் போதுமானதாக இருக்கவில்லை; தத்துவஞானத்தில் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கும் அது போதுமானதாக இருக்கவில்லை.
மெய்யான வாழ்க்கை, தத்துவம் ஆகிய இரண்டிலும் சமூக உறவுகளைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வில் ஈடுபடும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின், முதலாவதாகவும் முதன்மையாகவும் சான்சிமோன், ஃபூரியே மற்றும் ஓவனின் தத்துவக் கட்டுரைகளை விமர்சனப் பகுப்பாய்வு செய்தார்.
அவர்கள் கம்யூனிஸ்டு சமூகத்தின் கூறுகள் பலவற்றை (தனிச் சொத்துடைமை, வர்க்க முரணியல்புகள் மற்றும் மனிதனை மனிதன் சுரண்டல் இல்லாதிருத்தல், உழைப்பு சாபக்கேடு என்ற நிலைமையை மாற்றி அதைப் பிரதான மனித அவசியமாகச் செய்வது, சுய நிர்வாகம், இதரவை) அதிகமான மதிநுட்பத்துடன் வர்ணித்தார்கள்; ஆனால் ஒரு முதலாளித்துவச் சமூகத்தைப் புரட்சியின் மூலமாக இல்லாமல், “உதாரணத்தின் வன்மையினால்”, அறவுரைகளினால், வங்கி அதிபர்களையும் தொழிற்சாலை முதலாளிகளையும் தங்களுடைய இலட்சியத்துக்கு மாற்றுவதன் மூலம் – அவர்கள் உடனே தங்களுடைய உடைமைகளைப் பொது நன்மைக்குப் பயன்படுத்தும்படி ஏழைகளிடம் விருப்பபூர்வமாக ஒப்படைத்துவிடுவார்கள் – கம்யூனிஸ்டு சமூகமாக மாற்றிவிட முடியும் என்று வெகுளித்தனமாக நம்பினார்கள்.
மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்திலேயே கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மீது ஒரளவுக்கு அவநம்பிக்கை கொண்டிருந்தார்; ஏனென்றால் அவர்களுடைய உன்னதமான கற்பனைகளுக்கும் அரை நிலப்பிரபுத்துவ பிரஷ்யாவின் வாழ்க்கைக்கும் இடையில் எவ்விதமான உண்மையான இணைப்பையும் அவரால் பார்க்க முடியவில்லை.
ஜெர்மனியில் கற்பனாவாத சோஷலிசக் கருத்துக்கள் பெரும்பாலும் குழப்பமான வடிவத்தில் – மாயாவாத வடிவத்திலும் கூடப் – பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொண்டால் மார்க்சின் அவநம்பிக்கை இயற்கையானதே.
மார்க்ஸ் Rheinische Zeitung பத்திரிகையில் பணி புரிந்த காலத்தில் அவசரமான, செய்முறைக் கடமைகளைத் தீர்ப்பதற்கென்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தபடியால் அவர் கற்பனாவாதத்தைப் பற்றி இன்னும் அதிக ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டார்.
“சரியான தத்துவம் ஸ்தூலமான நிலைமைகளுக்குள் மற்றும் இருக்கின்ற நிலைமைகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்” என்று அவர் கருதினார்.
அவருடைய முன்னாளைய நண்பர்கள், இளம் ஹெகலியவாதிகள் “அரசியலமைப்புச் சட்டத்தின் சுற்றுவட்டத்திற்குள் ஒவ்வொரு படியாக சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு பதிலாக” “சூக்குமக் கருத்தமைப்புகள் என்ற வசதியான சாய்வு நாற்காலியில்” இருந்து கொண்டு பொது முறையான வாதங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.(1) தன்னுடைய முன்னாளைய நண்பர்களுடைய நிலைகளைப் பற்றி அவர் வெறுத்தார்.
ஹெகலுடன் அவரது மாணவர்கள்
இந்த வழியில் சுதந்திரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கைகள் வெறும் கற்பனையே; இந்த உண்மையை மார்க்ஸ் இன்னும் உணரவில்லை. “சுதந்திரமான சிந்தனையைக் கொண்ட, செய்முறையான மனிதர்கள்” அனைவரையும் பத்திரிகையைச் சுற்றி ஒன்றுபடுத்த முடியும் என்று அவர் நம்பினார்; “இன்றைய அரசு அமைப்பின் அடிப்படைகளை எதிர்த்துத் தெளிவான ஆர்ப்பாட்டம் செய்வதனால் தணிக்கை முறை தீவிரப்படுத்தப்படலாம், பத்திரிகை கூட ஒடுக்கப்படலாம்” என்று அவர் அஞ்சினார்.(2)
எனினும் சம்பவங்கள் வேறுவிதமாக வளர்ச்சியடைந்தபடியால் 1842-ம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் கற்பனாவாதக் கம்யூனிசத்தைப் பற்றித் தன் கருத்துக்களை எழுதும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அநேகமாக இதே சமயத்தில் Rheinische Zeitung பத்திரிகை மெவிஸென் மற்றும் ஹேஸ் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அவர்கள் சோஷலிஸ்ட் கருத்துக்களை வெளியிட்டதுடன் “சொத்துடைமையில் புரட்சி” என்ற கோரிக்கையையும் கூட முன்வைத்திருந்தார்கள்.
குறிப்பாக மோஸஸ் ஹேஸ் தனிச் சொத்துடைமைக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக முதலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்துடன் ஒப்பிட்டுக் காட்டி இப்போராட்டம் ஒரு தேசியப் புரட்சிக்கு இட்டுச் செல்லப்படுகிறது என்று வலிமையாக வற்புறுத்தினார்.
மோஸஸ் ஹேஸ்
அவுக்ஸ்பர்கிலிருந்து வெளியிடப்பட்ட Algemeine Zeitung (“பொதுப் பத்திரிகை”) என்ற பத்திரிகை Rheinische Zeitung பத்திரிகைக்குப் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. அது தன்னுடைய எதிரியைத் தாக்குவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. “பணக்கார வர்த்தகர்களின் புதல்வர்கள்” (மோஸஸ் ஹேஸ் ஒரு வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்) தங்களுடைய உடைமைகளைக் கொலோனின் கைவினைஞர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற எண்ணம் சிறிதுமில்லாமல் சோஷலிஸ்ட் கருத்துக்களுடன் சல்லாபிக்கிறார்கள் என்று கிண்டல் செய்தது.
ஜெர்மனியைப் போன்ற பின்தங்கிய நாட்டில் மத்தியதர வர்க்கத்தினர் இப்பொழுதுதான் சுதந்திரமாக மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறார்கள், 1789-இல் பிரெஞ்சுப் பிரபுக்களுக்கு ஏற்பட்ட கதியைச் சுட்டிக்காட்டி இப்பொழுது அவர்களைப் பயமுறுத்துவது என்றால் அது சிறுபிள்ளைத்தனமானது என்று அது எழுதியது.
இது சாமர்த்தியமான தாக்குதல். முதலாளி வர்க்க வாசகர்கள் Rheinische Zeitung பத்திரிகையைப் படிக்காமலிருக்கும்படி பயமுறுத்துவதும் அது கம்யூனிஸ்ட் பத்திரிகை என்று அரசாங்கத்திடம் எடுத்துக்காட்டுவதும் அதன் நோக்கமாகும்.
Rheinische Zeitung -இன் பிரதம ஆசிரியர் என்ற முறையில் இத்தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மார்க்சுக்கு ஏற்பட்டது. பத்திரிகை ஏற்கெனவே எடுத்த நிலையை ஆதரிக்க வேண்டும், அதே சமயத்தில் “கம்யூனிசத்தால்” அதிர்ச்சியடைந்திருக்கும் வாசகர்களைச் சாந்தப்படுத்த வேண்டும். இத்தகைய சிக்கலான, சமயோசிதமான கடமையை அவர் இராஜதந்திரத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
கம்யூனிசம் என்பது அழகான சொற்றொடர்களை உபயோகித்து வரவேற்பறையில் விவாதிக்கக் கூடிய பொருளல்ல என்று அவர் காரமாகக் கூறுகிறார். பன்னீரின் நறுமணம் அதில் இல்லை, அது அழுக்குத் துணியை அணிந்திருக்கிறது. ஆனால் நம் காலத்தின் முக்கியமான பிரச்சினையாக அது இருப்பதை இது தடுக்கவில்லை.
புதிய சமூகப் பிரிவை, அதாவது பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய கருத்தை மார்க்ஸ் உறுதியாக ஆதரிக்கிறார். “இன்று எந்த உடைமையும் இல்லாதிருக்கின்ற சமூகப் பிரிவு மத்தியதர வர்க்கத்தினரது செல்வத்தில் பங்கு கேட்கிறது என்ற உண்மை, ஸ்ட்ராஸ்பர்க் பேச்சு இல்லாமலே, அவுக்ஸ்பர்கின் மெளனத்தை மீறி மாஞ்செஸ்டர், பாரிஸ் மற்றும் லியோனில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்ததே.”(3)
மார்க்சின் எழுத்துக்களில் பாட்டாளி வர்க்கம் முதல் தடவையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து 1842-ம் வருடத்திலேயே அவர் பிரான்சிலும் இங்கிலாந்திலும் பாட்டாளி வர்க்கத்தின் சமூகக் கோரிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது.
ஆனால் மத்தியதர வர்க்கத்துக்கும் (முதலாளி வர்க்கத்துக்கும்) புதிய சமூகப் பிரிவுக்கும் (தொழிலாளர்களுக்கும்) இடையில் “மோதல்” எந்த வழியில் தீர்க்கப்படும்? மார்க்ஸ் இதை முடிவு செய்வதற்கு இன்னும் முன்வரவில்லை. “இரண்டு மக்களினங்கள் தீர்க்க முயன்று கொண்டிருக்கின்ற பிரச்சினைகளை ஒரேயொரு சொற்றொடரில் தீர்த்துவிடுகின்ற கலையை நாம் கற்கவில்லை.”(4)
இந்தப் பிரச்சினையின் இரண்டு அம்சங்களுக்கு இடையில், அதாவது “புதிய சமூகப் பிரிவின்” இயக்கம் என்ற முறையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உண்மையான பிரச்சினைக்கும், தத்துவ ரீதியான விளக்கத்துக்கும் கம்யூனிசப் பிரச்சாரத்துக்கும் இடையில் மார்க்ஸ் தெளிவாக வேறுபடுத்திக் காண்கிறார்.
இரண்டாவது பிரச்சினையைப் பொறுத்தவரை மார்க்ஸ் விமர்சனம் செய்கிறார். ஆனால் இங்கும் அவர் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் எழுதுகிறார். Rheinische Zeitung கம்யூனிஸ்ட் கருத்துக்களை முற்றமுழுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தும், அவை தத்துவ ரீதியான மெய்மையைக் கொண்டிருக்கின்றன என்று ஒத்துக் கொள்ளவில்லை, ஆகவே அவை நடைமுறையில் அமுலாக்கப்படுவதை இன்னும் குறைவாகவே விரும்ப முடியும் என்று மார்க்ஸ் எழுதிய பொழுது “இன்றைய வடிவத்திலுள்ள” கம்யூனிஸ்ட் கருத்துக்களையே மனதில் கொண்டிருக்கிறார்.
கற்பனாவாதக் கம்யூனிசத்தில் மார்க்ஸ் துல்லியமாக எந்த அம்சத்தை வெறுத்தார் என்பதைப் பின்வரும் உதாரணத்தில் காண முடியும். Algemeine Zeitung-க்குத் தெரிந்த ஒரு பிரபலமடையாத நபர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனுக்குக் கொடுத்துவிட்டுத் “தன்னுடைய தோழர்களின் உணவுத் தட்டுகளைக் கழுவி, பூட்சுகளை சுத்தம் செய்தார்” என்பதை மார்க்ஸ் குறிப்பிட்டுக் கிண்டல் செய்கிறார்.
இங்கே அவர் ஃபூரியேயின் சீடர்கள் நடத்திய கம்யூன்களைக் குறிப்பிடுகிறார். இவற்றைப் பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன; இவை கம்யூனிசக் கருத்துக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தின. இத்தகைய “முயற்சிகள்” உண்மையில் ஆபத்தானவை அல்ல என்று மார்க்ஸ் எழுதியது சரியானதாகும்.
தணிக்கை முறையின் காரணமாகத் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக எழுதுவதற்கு மார்க்சினால் முடியவில்லை. எனினும் அவற்றின் சாராம்சம் என்னவென்றால், மக்களின் அறிவை வெல்லக் கூடிய கம்யூனிஸ்ட் கருத்துக்களின் தத்துவ அடிப்படையைத் தேடுவது அவசியம்; அப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் அது பீரங்கியையும் எதிர்த்து நிற்க முடியும்.
புரூதோன்
கம்யூனிசத்தைப் பற்றித் தத்துவ ரீதியாக விமர்சனம் செய்வதற்கு முன்பாக லெரூ, கன்சிடெரான் ஆகியோரது நூல்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக “புரூதோன் எழுதிய நுண்ணறிவு நிறைந்த புத்தகத்தையும்” முற்றமுழுமையாக ஆராய உத்தேசிப்பதாக மார்க்ஸ் எழுதினார்.
பிற்காலத்தில் அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்: “…”முன்னுக்குப் போக ஆசைப்படுகின்ற நல்லெண்ணங்கள் விவரமான அறிவின் இடத்தைப் பிடித்திருந்த அந்தக் காலத்தில் லேசான தத்துவஞான முலாம் பூசப்பட்ட பிரெஞ்சு சோஷலிசம், கம்யூனிசத்தின் எதிரொலி Rheinische Zeitung பத்திரிக்கையில் குறிப்பிடத்தக்க விதத்தில் தென்பட்டது. இந்த மேற்போக்கான அறிவுக்கு (dilettantism) என்னுடைய மறுப்பைத் தெரிவித்தேன் என்றாலும் Allgemeine Zeitung என்ற அவுக்ஸ் பர்க் நகரப் பத்திரிகையோடு நடத்திய விவாதத்தில் பிரெஞ்சுக் கொள்கைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி ஏதாவது அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு எனது கடந்த கால ஆராய்ச்சிகள் அனுமதிக்கவில்லை என்பதை அதே சமயத்தில் வெளிப்படையாக ஒத்துக்கொண்டேன்.”(5)
மார்க்சுக்கு இன்னும் இருபத்தைந்து வயது கூட முடியவில்லை. Rheinische Zeitung பத்திரிகையை நடத்துவதற்கு அகல்விரிவான, ஆழமான அறிவும் நிதானமான, செய்முறைத் தலைமைக்குரிய குணங்களும் தேவைப்பட்டன. ஆனால் மார்க்சின் ஆளுமையில் போர்க்குணம் அதிகம். எனவே மேற்கூறிய குணங்கள் அவரிடம் இல்லையென்று தோன்றின.
எனினும், ஒரு பத்திரிகையை நடத்துகின்ற சிக்கலான கலையில் தான் முழுத் தேர்ச்சி பெற்றிருப்பதை மார்க்ஸ் சிறப்பாக எடுத்துக்காட்டினார். இருப்பதோ ஒரே ஒரு நீர்ப்பாதை; ஆனால் அதன் ஒரு கரையில் தணிக்கை முறை என்ற பூதம் உட்கார்ந்திருக்கிறது; மறு கரையில் அதிதீவிரவாதப் புரட்சிகரக் கோரிக்கைகள் என்ற பயங்கரமான விலங்கு பசியுடன் உட்கார்ந்திருக்கிறது. இவற்றுக்கு நடுவில் கப்பலை சாமர்த்தியமாக ஓட்டிச் சென்று தன்னுடைய திறமையை நிரூபித்தார் மார்க்ஸ்.
அதிதீவிரவாதப் புரட்சிகரக் கோரிக்கைகளை “சுதந்திர மக்கள்” என்ற கழகத்தைச் சேர்ந்த பெர்லின் இளம் ஹெகலியவாதிகள் முன்வைத்தார்கள். அவர்கள் உலகத்தைப் புரட்சிமயமாக்குகின்ற உணர்வில் தோய்ந்து ஆனால் கருத்துக்கள் இல்லாத கட்டுரைகளை ஏராளமாகப் பத்திரிகைக்கு அனுப்பினார்கள். இக்கட்டுரைகளில் அரைகுறையாக ஜீரணிக்கப்பட்ட கற்பனாவாதக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருந்தார்கள்.
மார்க்ஸ் இந்தச் “சொற்களின் நீர் வீழ்ச்சியை” உறுதியாக நிராகரித்த பொழுது துணிவுடன் நடந்து கொண்டார். Rheinische Zeitung இன் புதிய ஆசிரியர் “பழமைவாதி”, அவர் “துரோகி” என்று “சுதந்திர மக்கள்” கூக்குரலிட்ட பொழுது அவர் சிறிதும் கவலைப்படவில்லை.
பத்திரிகையை நாட்டிலுள்ள எல்லா எதிர்ப்புச் சக்திகளின் கேந்திரமாகச் செய்வது புரட்சிகர ஜனநாயகவாதி என்ற முறையில் மார்க்சுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் பத்திரிகை மிகவும் “அதிதீவிரமான” முறையில் நடைபெற வேண்டும் என்று “சுதந்திர மக்கள் என்ற கழகம் கோரியது; அப்படிச் செய்தால் பத்திரிகை உடனடியாக மூடப்பட்டுவிடும். அதன் விளைவாகப் “போராட்டக் களம்” போலீஸ் மற்றும் தணிக்கை முறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிடும்.
“சுதந்திர மக்கள்” கழகத்தின் உறுப்பினர்களில் மார்க்ஸ் சில காலத்துக்கு முன்பு நட்புக் கொண்டிருந்த புரூனோ பெளவர், அடோல்ப் ருட்டென்பர்க், பிரெடெரிக் கோப்பென் ஆகியோரும் இருந்தனர். அத்தகைய கழகத்திடம் மார்க்ஸ் ஏன் கடுமையாக நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதன் நோக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புரூனோ பெளவர்
அக்கழகத்தில் பலவிதமான கருத்துக்களை உடையவர்கள் இருந்தார்கள். அறிவுப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் மிதவாதப் பத்திரிகையாளர்கள், அரசியல் துறையில் புதிய அருணோதயத்தைப் பற்றித் தெளிவில்லாத கனவுகளைக் கொண்டிருந்த இளங்கவிஞர்கள், இளங்கலைஞர்கள், முதிர்ச்சியடையாத இளம் அறிவாளிகள், பாசறை மற்றும் குதிரைப் பண்ணை வேலைகளில் முற்றிலும் மூழ்கிவிடாத இராணுவ அதிகாரிகள், பேராசிரியர்களின் உரைகளைக் கேட்டு முற்றிலும் அலுப்படைந்த மாணவர்கள் ஆகியோர் அதில் சேர்ந்திருந்தனர். மேலும் வேடிக்கைப் பேச்சு அல்லது கெட்ட வார்த்தைகளைக் கேட்டு முகஞ்சுழிக்காத பெண்கள் சிலரும் அதில் இருந்தார்கள்.(6)
இக்கழகத்தினர் ஒரு மதுக்கடையில் கூடி அதிகமாகக் குடிப்பார்கள். அப்படிச் செய்யும் பொழுதே அன்றைய மொத்த அமைப்பையும் இடித்துத் தகர்த்துவிடுவார்கள். அவர்கள் அற்பவாதத்தின் பால் தங்களுடைய இகழ்ச்சியைப் பற்றி உரத்த குரலில் பேசுவார்கள், சமூகத்தின் “தப்பெண்ணங்கள்” அனைத்திலிருந்தும் விடுதலையடைந்துவிட்ட நபர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வார்கள். “அதிபுரட்சிகரமான சொற்றொடர்களை” ஒருவர் மீதொருவர் வீசிக்கொள்வார்கள் – ஆகவே இந்த பொஹீமிய (ஒழுக்கவரம்பற்ற) எழுத்தாளர்கள் மூளை குழம்பிப் போன அற்பவாதிகளுக்கு உதாரணமாக நடந்து கொண்டார்கள்.
அவர்களுடைய கோமாளித்தனம் பல சமயங்களில் களியாட்டமாகவும் மாறிவிடும். அவர்கள் அருவருப்பான வேடிக்கைகளைச் செய்வார்கள், பிச்சைக்காரர்கள் ஊர்வலங்களை நடத்துவார்கள், தொடர்ந்து குடிப்பதற்காக வருவோர் போவோரிடம் பணம் பிடுங்குவார்கள், விபச்சார விடுதிகளுக்குச் சென்று அங்கே கோமாளித்தனமாக நடந்து கொள்வார்கள், அதன் விளைவாக வெளியே விரட்டப்படுவார்கள்.
புரூனோ பெளவர் இப்படி அற்பவாதிகளை நடுங்கச் செய்யும் வேடிக்கைகளைச் செய்து கொண்டே அரசு, சொத்துடைமை, குடும்பம் ஆகியவை ஒழிக்கப்பட்ட கருத்துக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.
“சுதந்திர மக்கள்” சமூகத்தின் “மரபுகளிலிருந்து” தங்களை “விடுவித்துக் கொண்டு”, “மக்கட் கூட்டத்திலிருந்து” உயர்ந்து நிற்கின்ற பெருமை மிக்க தனிமனிதனின் புகழைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த பொழுது அவர்கள் அதே சமயத்தில் மனித நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதையும் சேற்றில் காது வரையிலும் அமிழ்ந்து கொண்டிருப்பதையும் கவனிக்கவில்லை. அவர்கள் சமூகத்தின் “பன்றித்தனத்தைத் தங்களுடைய தனிப்பட்ட பன்றித்தனத்தின் மூலம் எதிர்த்தார்கள்.
அறநெறிப் போதனை செய்யும் அற்பவாதப் போலித்தனத்தை மார்க்ஸ் மிகவும் வெறுத்த போதிலும் அதை எதிர்க்கின்ற இத்தகைய வடிவங்கள் மீது அவர் அனுதாபம் கொள்ளவில்லை.
“பெர்லினைச் சேர்ந்த வாயாடிகள்” நம்ப முடியாத ஆணவத்தோடு தங்களை உண்மையான புரட்சிக்காரர்கள், கம்யூனிஸ்டுகள், மனித குலத்தை விடுவிப்பவர்கள் என்று விளம்பரப்படுத்தி அந்த மாபெரும் இலட்சியத்தைக் கேவலப்படுத்துவதைப் பற்றி அவர் மிகவும் ஆத்திரமடைந்தார்.
Rheinische Zeitung பத்திரிக்கையை வெட்கமில்லாத சுய விளம்பரப் பத்திரிகையாக மாற்றுவதற்கு விரும்பிய “சுதந்திர வீரர்களிடம்” மார்க்ஸ் உறுதியான நியாயமான கோரிக்கையை முன்வைத்தார். உங்களுடைய தெளிவில்லாத வாதத்தை, ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களை, சுய போற்றுதலைக் குறைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் இருக்கின்ற நிலைமையைப் பற்றி அதிகமான கவனம் செலுத்துங்கள், அதிகத் திட்டவட்டமான முறையில், அதிகமான நிபுணத்துவத்துடன் பேசுங்கள் என்று மார்க்ஸ் கேட்டுக் கொண்டார்.
“சுதந்திர மக்கள்” கம்யூனிஸ்ட் மற்றும் சோஷலிஸ்ட் கோட்பாடுகளை-ஆகவே ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை-தற்செயலான நாடகபாணியான விமர்சனத்துக்குள் தந்திரமாக நுழைப்பது, இதரவை பொருத்த மற்றவை, ஒழுக்கக்கேடானவை கூட என்று மார்க்ஸ் கூறினார். “கம்யூனிசம் விவாதிக்கப்பட வேண்டும் என்றால், அதை மிகவும் வித்தியாசமான முறையில், முற்றமுழுமையாக விவாதிக்க வேண்டும்”(7) என்று மார்க்ஸ் வற்புறுத்தினார்.
மார்க்ஸ் “சுதந்திர மக்களுடன்” முறித்துக் கொண்டுவிட்டார்; ஆனால் Rheinische Zeitung பத்திரிகையை அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து இது பாதுகாக்கவில்லை; அதில் வெளியிடப்பட்ட விமர்சனக் கட்டுரைகள், குறிப்பாக மோஸெல் பிராந்திய திராட்சை பயிரிடுபவர்களை ஆதரித்து மார்க்ஸ் எழுதிய கட்டுரை அரசாங்கத்துக்கு ஆத்திரமேற்படுத்தின. பத்திரிகையை நோக்கி அடக்குமுறை மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன.
தணிக்கை முறையின் கடுந்துன்பங்கள், பங்குதாரர்களின் கூக்குரல்கள், மாநில சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், பிராந்தியத் தலைவரின் புகார்கள் ஆகியவை பற்றிக் கவலைப்படாமல் மார்க்ஸ் பதவியில் நீடித்தார். அதிகாரம் வகிப்பவர்களுடைய திட்டங்களைத் தன்னால் இயன்றவரை தடுப்பது தன் கடமையென்று மார்க்ஸ் கருதினார்.
பத்திரிகை தன்னுடைய முந்திய நிலையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை, அதன் குணாம்சத்தையும் கண்ணியத்தையும் தக்கவைத்துக் கொள்வதை அனுமதித்தால் மார்க்ஸ் சில சமரசங்களுக்குத் தயாராக இருந்தார். ஆனால் பத்திரிகை அதிகாரிகளிடம் “நிதானமாக” நடந்து கொள்ள வேண்டும் என்று பத்திரிகை உடைமையாளர்கள் வற்புறுத்திய பொழுது மார்க்ஸ் ஆட்சேபித்தார், ஆசிரியர் குழுவிலிருந்து விலகும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். முக்கியமான நோக்கத்தைப் பாதுகாப்பதற்காகச் சில பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்வதற்கு மார்க்ஸ் தயாராக இருந்தார். ஆனால் கொள்கைப் பிரச்சினைகளில் அவர் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
தணிக்கை அதிகாரியான ஸான்-பால் பத்திரிகையின் பரமவிரோதி. அவர் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் ஆசிரியர் குழுவினருக்குத் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் அவர் கூட பத்திரிகையின் ஆசிரியரான மார்க்சின் மேன்மையை, உறுதியை, ஆழமான நம்பிக்கைகளை மறுக்கவில்லை. பிரஷ்ய அரசின் கோட்பாடுகளுக்கு விரோதமான தீவிர ஜனநாயகக் கருத்துக்களைக் கொண்டிருந்த டாக்டர் மார்க்ஸ் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்று ஸான்-பால் அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பிய பொழுது, இப்பத்திரிகையைப் பழைய முறையில் நடத்துவதற்கும் அதன் இலட்சியங்களுக்காகச் சுறுசுறுப்புடன் போராடுவதற்கும் தகுதியுள்ள ஒரு நபர் கூட இப்பொழுது கொலோனில் இல்லை என்று தெரிவித்தார்.
பத்திரிகையை விட்டு வெளியேறிய பொழுது மார்க்ஸ் நிம்மதியாக மூச்சுவிட்டார். அந்தச் சூழலில் தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று அர்னோல்டு ரூகேக்கு அவர் எழுதினார். “சுதந்திரத்துக்காக என்றால் கூட-அடிமை வேலை செய்வது மோசமானதே; கம்புகளைக் கொண்டு சண்டை போடுவதற்குப் பதிலாக குண்டுகளைக் கொண்டு குத்துவது வெறுக்கத்தக்கதே. போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை எனக்கு அலுத்துவிட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை என்னிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டது.”(8)
மார்க்சின் பெண்கள் 1865ம் வருடத்தில் வினா விடை தயாரித்த பொழுது “துன்பத்தைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று மார்க்சிடம் கேட்டனர். “கீழ்ப்படிதல்” என்று அவர் பதிலளித்தார். அநேகமாக இந்தக் காலத்தை நினைத்தே அவர் அப்படி பதிலளித்திருக்க வேண்டும்.(9)
பத்திரிகையிலிருந்து விலகியது நாட்டின் அரசியல் போராட்டத்தில் பங்கெடுக்கின்ற கடைசி சந்தர்ப்பத்தை இழப்பதாகவே மார்க்ஸ் கருதினார். ஜெர்மனியில் தோன்றிக் கொண்டிருந்த முதலாளி வர்க்க மிதவாதத்தைக் கெய்சர் தன்னுடைய பூட்சுகளின் கீழ் நசுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அற்பவாத ஜெர்மனி அந்த பூட்சுகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையிலிருந்து விலகிய பிறகு அங்கே இருப்பது அர்த்தமில்லாததாக மார்க்ஸ் கருதினார்.
ஜெர்மனியில் ஒருவர் “தனக்கே போலியாக மாறுகிறார்”(10), ஏனென்றால் “இங்கே உள்ள சூழல் ஒரு நபரைப் பண்ணையடிமையாக மாற்றுகிறது”(11) என்று மார்க்ஸ் கூறினார். எனவே அவர் சிறிதும் தயக்கமின்றி-மகிழ்ச்சியோடு கூட-ஜெர்மனியிலிருந்து புறப்படுவதென்று முடிவு செய்தார்.
மார்க்சின் மகிழ்ச்சிக்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுதும் Rheinische Zeitungஇல் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலும் ஜென்னி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஜெர்மனிக்கு வெளியில் தன்னுடைய புதிய வாழ்க்கையை ஜென்னியுடன் தொடங்குவதென்று மார்க்ஸ் உறுதியாக முடிவு செய்திருந்தார்.
மார்க்ஸ் 1843 மார்ச்சில் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய சொந்தத் திட்டங்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: “நான் காதலில் மூழ்கியிருக்கிறேன்-அதிலும் மிகவும் உறுதியான முறையில்-என்பதைச் சிறிதளவு புனைந்துரை கூட இல்லாமல் உங்களிடம் தெரிவிக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஏழு வருடங்களுக்கும் அதிகமாகிவிட்டது. என் மணப்பெண் எனக்காக அவளுடைய உயர்குல உறவினர்கள்-அவர்களைப் பொறுத்தவரை ‘வானத்திலிருக்கும் தேவன்’, ‘பெர்லினிலிருக்கும் பிரபு’ ஆகிய இருவரும் சம அளவுக்கு வழிபாட்டுக்குரியவர்களே-மற்றும் என் சொந்தக் குடும்பத்தினரை-அங்கே சில மதபோதகர்களும் என்னுடைய எதிரிகளும் வசதியாக உட்கார்ந்திருக்கிறார்கள்-எதிர்த்து மிகக் கடுமையாகச் சண்டையிட்டிருக்கிறாள், அதனுல் அவளுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.”(12)
1843 ஜூன் 12ந் தேதியன்று ‘கொலோனில் வசிக்கின்ற, தத்துவஞான டாக்டராகிய திரு. கார்ல் மார்க்சுக்கும் கிரைத்ஸ்னாக்கில் வசிக்கின்ற செல்வி யோஹன்னா பெர்த்தா ஜூலி ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலனுக்கும் (தொழில் கிடையாது)”(13) திருமண ஒப்பந்தச் சான்றிதழ் கையெழுத்திடப்பட்டது.
அன்று முதல் மார்க்ஸ் தன் வாழ்க்கை முழுவதும் விசுவாசத்துடனிருந்த துணைவியைப் பெற்றார். ஜென்னி “தன் கணவருடைய விதி, உழைப்பு, போராட்டம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அவற்றில் சிறந்த அறிவுடனும் தீவிரமான உணர்ச்சியுடனும் தானே பங்கெடுத்தாள்”(14) என்று எங்கெல்ஸ் எழுதினார்.
தம்பதிகள் கிரைத்ஸ்னாக்கில் தங்கியிருந்த பிறகு பாரிசுக்குப் புறப்பட்டனர். மார்க்சும் அர்னோல்டு ரூகேயும் பாரிசிலிருந்து Deutsch-Französische Jahrbücher (“ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்தர சஞ்சிகையை”) வெளியிடுவதற்கு முடிவு செய்திருந்தனர்.
“ஆகவே-தத்துவஞானத்தின் பழைய பல்கலைக்கழகமான பாரிசுக்குப் போவோம்-absitomen! (இது கெட்ட சகுனமாக இல்லாதிருக்கட்டும்! –ப-ர் .)…”(15)
குறிப்புகள்:
(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 392. 239
(2)Ibid. 240.
(3)Ibid., p. 216.
(4)Ibid., p. 219.
(5)கார்ல் மார்க்ஸ், “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை” , முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1982, பக்கம் 8.
(6) எம். செரெப்ரியக்கோவ், கவிஞர் ஹேர்வெக்கும் மார்க்சும், லெனின்கிராத், 1948, பக்கம் 28, (ருஷ்ய மொழியில்).
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 394. 251.
(8) Ibid., p. 397.
(9) Reminiscences of Marx and Engels, p. 266.
(10) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 398.
(11)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.
(12) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 399.
(13) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 571.
(14) Marx, Engels, Werke, Bd. 19, Berlin, 1962, S. 291.
(15) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
காவிரியின் கடைமடை பகுதி விவசாயிகள் மட்டுமல்ல, கல்லணைக்கு அருகிலுள்ள தலைமடைப் பகுதியான செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கும்கூடத் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் முக்கொம்பு மேலணை உடைந்திருப்பது, சம்பா சாகுபடியைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கைக்குக் கிடைத்தவர்களுக்கும் வாய்க்குக் கிடைக்காத ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
உடைந்து போன முக்கொம்பு அணையின் மதகுகளைப் பார்வையிடும் “தமிழகத்தின் எதிரி எடப்பாடி”
மேலணையின் 9 மதகுகள் உடைந்து போனதை இயற்கையானதாகக் காட்டித் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முயல்கிறது, தமிழக அரசு. அவ்வணை 182 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் மனிதர்கள் திடீரென நோய்வாய்ப்படுவது போல அணை திடீரென இடிந்துவிட்டது என்றும் அலட்சியமாகப் பதில் அளித்து, அணையை முறையாகப் பராமரிக்கத் தவறிய தமது குற்றங்களையெல்லாம் மூடிமறைக்கிறது அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டம்.
மேலணை உடைந்து போனதை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் அலட்சியம், இலஞ்சம், ஊழல் ஆகியவற்றோடு மட்டும் முடிச்சுப்போட்டுச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இந்த அணை உடைந்துபோகும்படி கைவிடப்பட்டிருக்கிறது என்பதற்கும், அதன் பின்னேமணல் மாஃபியாக்கள், டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் புகுந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன், அதற்கு மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் ஆதரவு ஆகியவை இருப்பதற்கு வலுவான சாட்சியங்கள் இருக்கின்றன.
காவிரி ஆறு, முக்கொம்பு பகுதியில்தான் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு இயற்கையாகவே காவிரியை விட ஏறத்தாழ ஆறு அடி தாழ்வாக இருக்கிறது.
எனவே, தண்ணீர் கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குச் செல்வதைத் தடுத்து, அதனை காவிரியின் வழியாகப் பாசனத்திற்குத் திருப்பிவிடும் நோக்கத்தில்தான் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் காலனிய அதிகாரியால் 1836-இல் 55 மதகுகளைக் கொண்ட மேலணை முக்கொம்பில் கட்டப்பட்டது. முக்கொம்பில் மேலணையும், அதனைத் தொடர்ந்து அணைக்கரையில் கீழணையும் கட்டப்பட்ட பிறகுதான் டெல்டா பகுதியில் பாசனப் பரப்பு அதிகரித்தது என்பதோடு, நீர்ப்பாசன முறையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
தற்பொழுது மேலணையில் உடைந்து போயிருக்கும் ஒன்பது மதகுகளும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்தவை. இதனால் காவிரி ஆற்றின் வழியாகப் பாசனத்திற்குச் செல்ல வேண்டிய நீரின் பெரும்பகுதி இப்பொழுது கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குச் சென்றுவிடும் அவலமான நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிய அணை கட்டி முடிக்கும் வரையிலும் இந்த அவல நிலை தொடரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் அதிகபட்சமாக இரண்டு இலட்சம் கன அடி நீர் வெளியேறியதென்றும், அதனை இந்தப் பழமையான கட்டுமானத்தால் தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தினால் உடைந்து போய்விட்டதென்றும் ஒரு கதையை உருவாக்கி உலவவிட்டிருக்கிறது, எடப்பாடி அரசு.
2005-ஆம் ஆண்டில் மூன்று இலட்சம் கன அடி நீர் வெளியேறியபோது அதனைத் தாக்குப் பிடித்த அணை, வெறும் 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நாளில் உடைந்தது ஏன்? கொள்ளிடத்து மதகுகள் மட்டுமே உடைந்தது எப்படி?
மேலணையைப் போலவே, கோதாவரியின் குறுக்கே ஆர்தர் காட்டனால் கட்டப்பட்ட பழமையான தவளேஸ்வரம் அணைக்கட்டு, காவிரியைவிட அதிக வெள்ளத்தை வெளியேற்றிக்கொண்டு இன்னமும் பலமாக இருந்துவரும்போது, மேலணை திடீரென உடைந்தது எப்படி? – இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எடப்பாடி கூறும் கதையில் பதில் இல்லை.
மேலணைக்கு அருகிலேயே அனுமதிக்கப்பட்ட மணல் கொள்ளையும் மேலணையைப் பராமரிப்பது என்ற பெயரில் நடந்த ஊழலும்தான் அவ்வணையின் மதகுகள் உடைந்துபோனதற்கு முதன்மையான காரணம்.
காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தமிழக அரசின் நீர்வளத் துறை ஆலோசகராகவும் இருந்த மோகனகிருஷ்ணன் 2002 –ஆம் ஆண்டே மேலணையின் 16 நீர் வழிப் போக்கிகளும், கீழணையில் 14 நீர்வழிப் போக்கிகளும் பலவீனமாக உள்ளன எனக் குறிப்பிட்டு, இந்த அணைகளில் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்திருக்கிறார்.
ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த அணைகளைப் பலப்படுத்தி முறையாகப் பாரமரிப்பதற்குப் பதிலாக, அவ்வணைகளை மேலும் பலவீனப்படுத்தும் சதிகள்தான் ஒன்றன் பின் ஒன்றாக நடந்திருக்கின்றன.
மேலணைக்கு அருகிலேயே அனுமதிக்கப்பட்ட மணல் கொள்ளையும் மேலணையைப் பராமரிப்பது என்ற பெயரில் நடந்த ஊழலும்தான் அவ்வணையின் மதகுகள் உடைந்து போனதற்கு முதன்மையான காரணம். கடந்த ஏழு ஆண்டுகளாக அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தினர்தான்மணல் மாஃபியாகும்பலின் தளபதிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அணை உடைந்து போனதற்கு இந்த அரசைத்தான் முதன்மைக் குற்றவாளியாக அடையாளப்படுத்த வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக மட்டும் 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் காவிரியின் தலைமடை பகுதிக்குக்கூடத் தண்ணீர் வரவில்லை.
காவிரி உள்ளிட்ட ஆறு ஆறுகளைத் தூய்மைப்படுத்துவதற்காக 885 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கு எழுதியிருக்கிறது, தமிழக அரசு. அதன் பிறகும் டெல்டாவில் ஓடும் காவிரியின் கிளை நதிகள் நீர் ஓட வழியின்றிப் புதர் மண்டிக் கிடக்கின்றன.
அதே நேரத்தில் 100 டி.எம்.சி.க்கும் கூடுதலான காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை அனுமதித்துவிட்டு, அது குறித்து கொஞ்சங்கூடக் குற்ற உணர்வோ, அச்சமோ இல்லாமல் எடப்பாடி முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரும் திமிர்த்தனமாகப் பேசி வருகின்றனர்.
2012 –ஆம் ஆண்டில் தமிழகத்திலுள்ள அணைகளைப் பராமரிப்பதற்கு உலக வங்கியிடமிருந்து 745 கோடி ரூபாயை பெற்ற அ.தி.மு.க. அரசு, 2018 -ஆம் ஆண்டுக்குள் இப்பராமரிப்புப் பணிகளை முடித்துவிடுவதாக உத்தரவாதம் அளித்திருந்தது. இது போக மேலணையைப் பராமரிப்பதற்கு என 2015 –ஆம் ஆண்டில் 10 கோடியும், 2016 –ஆம் ஆண்டில் மூன்று கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் மேலணை உடைந்து போயுள்ளது என்றால், இத்துணை கோடி ரூபாயும் எங்கே மாயமானது?
அ.தி.மு.க என்பது வெறும் கள்வர் கூட்டமல்ல. அது நெஞ்சில் சிறிதளவும் ஈரமோ இரக்கமோ இல்லாத கொடியதொரு கிரிமினல் கூட்டம். இப்படி ஒரு கூட்டத்திடம் தமிழகம் சிக்கிக்கொண்டதன் விளைவுகளைத்தான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.
4,000 கோடி ரூபாய் பெறுமான நெடுஞ்சாலைத் துறை ஊழலில் தொடர்புடைய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வர்; வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களை குவித்த வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் ஓ.பி.எஸ்., துணை முதல்வர்; குட்காவழக்கில் தொடர்புடைய விஜய பாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர்; அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு வழக்கில் தொடர்புடைய பழனியப்பன் உயர்கல்வித் துறை அமைச்சர்; அனைத்திற்கும் மேலாக, நிர்மலா தேவி விவகாரத்தின் மையப் புள்ளியென அம்பலப்பட்டுப் போன பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் கவர்னர்.
இவர்களுடைய வழிகாட்டிகளாகவும் கூட்டாளிகளாகவும் திகழும் அதிகார வர்க்கத்தினர் – மோடியின் ஆசியோடு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கிரிமினல் கும்பல் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக எத்தகைய தீமையையும் செய்யத் தயங்காது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காகவும் மணல் கொள்ளையைத் தொடர்வதற்காகவும் டெல்டாவைச் சிறுகச்சிறுகப் பாலைவனமாக்கி வரும் இக்கும்பல், தற்போது மேலணை உடைந்திருப்பதை, தங்களுடைய தீய உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாகவே கருதும்.
நம் ஊர் வங்கியில் சென்று ‘ஐயா.. நான் விவசாயம் செய்ய வேண்டும். 2 லட்சம் கடன் வேண்டும்’ என்று கேட்டுப்பாருங்கள். என்னவோ, அந்த மேலாளரின் சம்பளத்தைக் கேட்பதைப் போல எரிந்து விழுவார். விவசாயக் கடன் வாங்குவது என்பது நம் ஊர் வங்கிகளில் ஒரு கொடுங்கனவு. பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படாது.
ஆனால், நம்புங்கள். கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும், இந்தியா முழுவதும் ஒரு ‘விவசாயி’க்கு 95 கோடி ரூபாய் வீதம் 58,561 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருக்கின்றன இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். இந்த மாபெரும் தொகையை 615 விவசாயிகள் விவசாயக் கடனாக பெற்றிருக்கிறார்கள். ’திவயர்’ இணையதளம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற தகவல்கள் இதை வெளிப்படுத்துகின்றன.
95 கோடி ரூபாய் கடன் வாங்குகிற ஒருவர் விவசாயியா என்பது அடிப்படையான கேள்வி. அவ்வளவு தகுதியுள்ள ஒருவருக்கு எதற்கு ‘விவசாயக் கடன்’ பிரிவில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. பொதுவாக வங்கிகளில் இதர வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை விட விவசாயக் கடனுக்கு வட்டி குறைவு. வெறும் 4 சதவிகிதம்தான். ஏழை, சிறுகுறு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இப்படி வழங்கப்படுகிறது.
ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால், வேளாண் வணிக நிறுவனங்களே பெரும்பகுதி விவசாயக் கடன்களை பெறுகின்றன. மேலே சொன்ன ’ஒரு நபருக்கு 95 கோடி ரூபாய்’ என்ற கடன் கூட இத்தகைய வேளாண் நிறுவனங்கள் பெற்றவையே. விவசாயக் கடனின் பெயரால், விவசாய விளைபொருள் சந்தையில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் மொத்த கடன் தொகையையும் சுருட்டிக்கொள்கின்றன. அம்பானியின் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் கூட வேளாண் வணிக நிறுவனப் பிரிவில்தான் வருகிறது. இவர்கள் விவசாயக் கடன் பிரிவில் கடன் பெற்று, தங்கள் நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதிகள், குளிர்பதன கிடங்குகளை நிறுவிக்கொள்கின்றனர். சாதாரண விவசாயிகளோ, ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் கடன் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.
வங்கிகள் கடன் வழங்குவதற்கான கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. இதன்படி விவசாயம், சிறுகுறு தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி, கட்டுமானம் என பல்வேறு பிரிவுகளுக்கும் என்னென்ன விகிதத்தில் கடன் வழங்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. இந்த முன்னுரிமையின்படி, வங்கிகள், தங்கள் மொத்த கடன் வழங்கும் மதிப்பில் 18 சதவிகிதத்தை விவசாயக் கடனுக்கு ஒதுக்க வேண்டும் என்பது கொள்கை. இதன்படி 18 சதவிகிதத்தை ஒதுக்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதன் பயனாளிகள் யார் என்பதுதான் பிரச்னை.
தி வயர் இணையதளம் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் திரட்டி வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.
♦♦♦
கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு வங்கிகள் (ஆள்பவர்களால் அதிகாரம் செலுத்தக்கூடிய) விவசாய கடன் என்கிற பெயரில் கிட்டத்தட்ட ரூ. 59 ஆயிரம் கோடியை 615 வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கின்றன. ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட தகவலுக்கு ரிசர்வ் வங்கி இந்த விவரங்களை அளித்திருக்கிறது.
மற்ற கடன்களைக்காட்டிலும் விவசாயக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில், குறைந்த விதிகளின் (ஏட்டளவில் குறைந்த விதிகள்) அடிப்படையில் சிறு விவசாயிகளும் பயன்படும்படி அளிக்கப்படுவதாக அரசு சொல்கிறது. தற்போது 4% வட்டியில் விவசாயக் கடன்கள் அளிக்கப்படுகின்றன.
விவசாய சங்க பிரதிநிதியான கிரண் குமார் வீசா , “நிறைய பெரிய நிறுவனங்கள் விவசாயம் தொடர்பான தொழிலைச் செய்கின்றன. அவர்களும் விவசாய கடன்கள் பிரிவில்தான் வங்கிக் கடன்களைப் பெறுகிறார்கள். ‘ரிலையன்ஸ் ஃபிரஷ்’ போன்ற நிறுவனங்களும் விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்யும் நிறுவனங்களின் பிரிவிலேயே வருகின்றன. அவர்கள் விவசாய பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் செய்கிறார்கள். அவர்கள் வங்கி கடன்களை விவசாய கடன்கள் பிரிவின் கீழ் வாங்கிறார்கள். குடோன்கள் கட்டுவதற்கும் இன்னபிற இதுதொடர்பான பணிகளுக்கும் அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.
சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ரிசர்வ் வங்கி அந்தத் துறைசார்ந்தவர்களுக்கு கடன் தருவதில் முன்னுரிமை தரவேண்டுமென வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. வேளாண்மை, சிறு-குறு தொழில்கள், ஏற்றுமதி, கல்வி, வீட்டுவசதி, சமூக கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான துறைகளுக்கு வங்கிக் கடனில் சலுகைகள் தரப்படவேண்டும். இவற்றை முன்னுரிமை துறை கடன்கள் (priority sector lending-PSL)என்பர்.
முன்னுரிமை துறை கடன் கொள்கைபடி, வங்கிகள் அளிக்கும் மொத்த கடனில் 18% சிறிய, வறிய நிலையில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் துறைக்கு வழங்க வேண்டும். கிரண்குமார் வீசா சொல்கிறார், “இந்தக் கடனில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் போகிறது. இதன் விளைவாக விவசாயிகள் கடன்களை பெற முடிவதில்லை”.
மேலும் அவர் தொடர்ந்தார், “உண்மையில், பெரிய நிறுவனங்கள் முன்னுரிமை கடன் கொள்கைப்படி கடன் பெறுவது மிகவும் எளிது. மற்ற கடன்களைக் காட்டிலும் விவசாய கடனுக்கு வட்டியும் குறைவு. பெரிய அளவில் கடன் கொடுப்பதால் தங்களுடைய செல்வமும் அப்படியே இருக்கும் என வங்கிகள் நினைக்கின்றன”.
த வயர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்பட்ட கடன் விவரங்களை கேட்ட நிலையில், அவ் வங்கியின் மும்பை மண்டலம் மட்டுமே விவரங்களை அளித்துள்ளது. மும்பை நகர கிளை, ரூ. 29.95 கோடியை மூன்று வங்கி கணக்குகளுக்கு மட்டும் அளித்திருக்கிறது.
அதாவது, சராசரியாக ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் ரூ. 10 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே வங்கி கிளை, ரூ. 27 கோடிக்கும் அதிகமான கடனை ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு அளித்திருக்கிறது. இந்தக் கடனைப் பெற்ற பயனாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை வங்கி தெரிவிக்கவில்லை.
வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா, விவசாயிகள் என்கிற பெயரை உச்சரித்து வேளாண் கடன்களை பெரிய நிறுவனங்கள் குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார். “விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறோம் என்று சொல்வதன் பொய்முகம் இதுதான். ரூ. 100 கோடி கடன் கொடுக்கக்கூடிய வகையில் இவர்களெல்லாம் என்ன விவசாயம் செய்கிறார்கள்? எல்லாம் பாசாங்குத்தனமானவை. தொழில்சாலைகளுக்கெல்லாம், விவசாயின் பெயரால் ஏன் கடன் தரப்படுகிறது?” என்கிற வினாக்களையும் அவர் எழுப்புகிறார்.
வங்கிகள் தங்களுடைய வேலையை எளிதாக்கிக்கொள்ள, பெரிய கடன்களை வேளாண் கடன்கள் என்ற பெயரில் வழங்குவதாகச் சொல்கிறார் சர்மா. “ரூ. 100 கோடியை எளிதாக ஒரு நிறுவனத்துக்கு தந்துவிட முடியும். அதுவே, விவசாயிகளுக்கு தருவதென்றால் குறைந்தபட்சம் 200 பேருக்கு தர வேண்டும். பெரும் கடன்கள் மூலம் தங்களுடைய பணம் ஒரே இடத்தில் இருக்கும் அதே சமயம் 18% ஒதுக்கீட்டை நிறைவேற்றியது போலவும் இருக்கும் என்ற காரணத்தாலேயே இப்படி செய்கின்றன” என்கிறார் அவர்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 8.5 லட்சம் கோடியை வேளாண் கடனாக வழங்கியது. இது 2018-19-ஆம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. த வயர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் பெற்ற தகவலில், இதில் பெருமளவு பெரிய கடனாக அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வேளாண் அறிஞர்கள் இந்த நிதி வேளாண் துறை நிறுவனங்களுக்கும் தொழிற்துறைகளுக்கும் போவதாக சொல்கிறார்கள்.
விவசாய கடன், அடிப்படை விவசாய உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கு என வேளாண் கடன்கள் மூன்று கிளை பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் அமைத்தல் உள்கட்டமைப்பு பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகத்தான் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் கிளினிக்குகள் மற்றும் வேளாண் வர்த்தக மையங்கள் விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் பிரிவின் கீழ் வருகின்றன. இதற்காகவும் ரூ. 100 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்படுகின்றன.
ரிசர்வ் வங்கி அளித்த டேட்டாவின் படி பெரிய அளவிலான கடன்கள், வேளாண் கடன்கள் என்கிற பெயரில் 2016-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ஆம் ஆண்டில் 604 வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 52,143 கோடியை கடனாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 86.33 கோடி கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு ரூ. 60,156 கோடி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக ரூ. 91.28 கோடி. இதே கடன் வழங்கும் முறை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.
2013-ஆம் ஆண்டு, ரூ. 56 ஆயிரம் கோடி கடனை 665 வங்கிக் கணக்குகள் பெற்றுள்ளன. சராசரியாக ரூ. 84.30 கோடி. 2012-ஆம் ஆண்டில் ரூ. 55, 504 கோடி 698 வங்கிக்கணக்குகள், சராசரியாக ஒவ்வொன்றும் ரூ. 79.51 கோடியை பெற்றுள்ளன.
“ஒரு விவசாயி போதாத நேரம் காரணமாக விவசாயம் பொய்த்துபோய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, வங்கி அதிகாரிகளால் வேட்டையாடப்படுகிறார். விவசாயிகள் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை அரசு அளிக்கிறது என்பதை ஒரு சாதாராண விவசாயியால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கேதார் சிரோகி என்ற விவசாயி.
உத்தரபிரதேசம் இட்டாவாவில் வசிக்கும் சஞ்சீவ் என்ற விவசாயி, நான்கு ஏக்கரில் விவசாயம் செய்கிறார். “வாங்கும் விவசாய கடனில் பெரும்பகுதி தரகருக்கு தரவேண்டியிருக்கிறது. பல அழுத்தங்களின் காரணமாகத்தான் விவசாயி கடன் பெறுகிறார், அதற்கும் வங்கிக்கு நடையாய் நடக்க வேண்டும், வங்கி அதிகாரிகளின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க இந்த 615 வங்கி கணக்குக்கு சொந்தக்காரர்கள் யார், அவர்கள் ஏன் வேளாண் கடன் என்கிற பெயரில் கடன் பெறுகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது” என்கிறார் அவர்.
வேளாண் அறிஞர் தேவேந்திர சர்மா சொல்வது போல் விவசாயிக்கு தனியாகவும் வேளாண் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கு தனியாகவும் கடன்கள் அளிக்கப்பட வேண்டும். ‘வேளாண்மை’ என்ற முத்திரையுடன் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படக்கூடாது. இதை நிதியமைச்சரிடன் நேரடியாக சொன்னபோதும் இதுவரை ஒரு எதிர்வினையும் வரவில்லை என்கிறார் சர்மா.
தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2018 இதழ்
இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
1. தமிழ்நாட்டில் எட்டுவழிச் சாலை மகாராஷ்டிராவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை – பா.ஜ.க. அரசின் பயங்கரவாதம்! இயற்கை வளத்தையும், அதனோடு இணைந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும் அழித்து, ரத்தினகிரி மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட மராட்டிய மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
2. தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !
3. மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடுவதும் எடப்பாடி – மோடியின் வளர்ச்சித் திட்டமே ! காவிரிக் கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா?
4. மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ? மோடி அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்களைத் திரட்டுபவர்கள் யாரோ, அவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு “நகர்ப்புற நக்சல்கள், அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்ற புதிய முத்திரைகளைத் தயார் செய்திருக்கிறது.
ஆதார் தரவுகள் இரகசியமானவை என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தியதால் பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
5. பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும்! ‘அச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்ற போதிலும், அச்சுறுத்துபவனைத் தைரியசாலி என்று நாம் கருதவேண்டிய தில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில் கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.
6. 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு! பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துத் தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக மாருதி தொழிலாளிகளுக்குத் தூக்கு! உயிர் வாழும் உரிமை கேட்டதற்காக தூத்துக்குடி மக்களுக்குத் துப்பாக்கிச்சூடு!
7. தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி! டில்லியிடம் சரணடைந்துவிட்டதாக அவரை எவ்வளவு விமர்சித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியை எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை .
8. அவசரநிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும் கருணாநிதியுடன் இணைந்து அவசரநிலையை எதிர்த்ததாகச் சொல்கிறார் நிதின் கட்கரி. அவசர நிலையை ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆதரித்தது என்பதே வரலாறு. அன்று மட்டுமல்ல, இன்றும் இதுவே உண்மை .
9. ஷாஜகான் காலத்தின் தாஜ்மகாலைக் காட்டிலும் அழகிய காதலர்கள்! ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து – முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அன்று அகிலா ஹாதியாவாக மாறவும் இல்லை . அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கூற ஒரு உயர் நீதிமன்றமும் இல்லை .
10.வாஜ்பாய் (1924-2018):நரி பரியான கதை! 1990 -களில் நிலவிய அரசியல் சூழல்தான், வாஜ்பாயிக்கு மிதவாத முகமூடியை மாட்டி விடவேண்டிய கட்டாயத்தை ஆர்.எஸ்.எஸ்.-க்கு உருவாக்கியது.
11. நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்றொரு காலம் இருந்தது. இப்பொழுது சமஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து நிறுத்தி, தாய்மொழியில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.
12. வங்கிகளின் வாராக்கடன்: இடிதாங்கிகளா பொதுமக்கள்? தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளைச் சட்டவிரோதமாக மொட்டையடிக்கிறார்கள் என்றால், வங்கி நிர்வாகங்களோ பொதுமக்களின் அற்ப சேமிப்பைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்கின்றன.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
We invite you to the press Conference to be held on behalf of Makkal Athikaram on 8.9.2018 at 12 PMon Saturday at Chennai Press Club, Chepauk
Dr. Anand Teltumbde, General secratery, Committee for Protection of Democratic Rights, will address the press conference.
The press conference is to condemn the arrests, illegal raids and the orchestrated smear campaign by the Maharashtra police and the Modi govt, against renowned civil rights activists, lawyers and writers. Dr. Anand Teltumbde, a public intellectual, is one of the targets of this offensive.
Presently Mr.Teltumbde works as a Senior professor and Chair, Big Data Analytics, Goa Institute of Management. He has held senior positions as Executive Director Bharath Petroleum, C E O of Petronet and has also taught at IIT, Kharagpur.
Dr. Anand Teltumbde
Despite his corporate career, he has been a defender of peoples’ democratic rights, and a harsh critique of the anti people policies of all the governments. He is a regular contributor to the Economic and Political Weekly and has authored several books on Dr.Ambedkar, the dalit movement and the left movements. His recent book is ‘Republic of Caste’, in which he launches a searring attack against the attempts of the Sangh parivar to saffronise Dr.Ambedkar.
On 28th august, 2018, the Maharashtra police, illegally opened and raided Mr.Teltumbde’s Goa house, when he was away in Mumbai. His wife (Dr.Ambedkar’s granddaughter) had to rush from Mumbai to her house, mainly to find out whether anything was planted by the police. It is relevant to note here, that the name of Jignesh Mewani is also included in the fabricated letter alleging maoist conspiracy against Modi. So much for his infamous reverence towards Dr.Ambedkar!
Though “#me too urban naxal” has evolved into a widespread protest movement in the social media, the Maharashtra police continues to spread canards, against the activists. The Mumbai H.C and the Supreme Court have pulled up the ADGP, Maharashtra for holding a Press Conference over a matter which is sub-judice. The S.C has also extended the house arrest of the 5 activists till sep 12th.
What next? Would the intervention of the courts, deter the Modi Govt? How to resist this fascist onslaught?
Dr. Anand Teltumbde speaks.
The press conference will be followed by a hall meeting at the same venue, at 4 pm.
Presided by S.Raju, State Co ordinator, Makkal Athikaram.
The Speakers:
Prof.Murali, Gen Secretary, PUCL, Tamilnadu – Pondicherry
“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருநைநதி என மேலிடும் ஆறு பல ஓடி திரு மேனி செழித்த தமிழ்நா(டு)”-டின்இன்றைய நிலை?
குறுவை சம்பா தாளடி என்ற முப்போக விளைச்சலை கண்டது தஞ்சை டெல்டா மாவட்ட பகுதி. காவிரியில் முறையாக தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலும் பருவ மழை காலநிலை தவறாமலும் கிடைத்தால் சொல்லி வைத்து களமாடுவார்கள் விவசாயிகள். ஆனால் கர்நாடகா அரசு மத்திய அரசு, நீதிமன்றங்கள் உதவி்யுடன் நமக்கு வரவேண்டிய நீரை மறுத்ததால் அகண்ட காவிரி வறண்ட காவிரியானது.
தற்போது கர்நாடகாவில் மழை அதிகம் பெய்த நிலையில் காவிரியில் வெள்ளம் வந்தாலும் அந்த நீர் விவசாயிகளுக்கு பயன்படாமல் விரயமாகிறது. காவிரியில் தண்ணீர் வருவதே கனவாக இருந்த இந்த நேரத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி கண்கொள்ளாக் காட்சியானது. பாலைவனத்தில் வாழ்பவர்கள் தண்ணீரை பரவசமாக பார்ப்பது போல், பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவை காண்பதற்கினிய காட்சியாக பார்ப்பது போல் ஆற்றில் ஓடும் தண்ணீரை ஆவலோடு பார்க்கும் மனநிலை மக்களுக்கு.
காவிரியில் தண்ணீர் வருமா? வராதா? என்ற பிரச்சனையில் கடந்த காலங்களின் நிலைதான் தொடரும் என்ற எண்ணத்தில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது இயற்கை தந்த பரிசுதான் காவிரி கரைபுரண்டோடும் காட்சி. கனவான காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் விவசாயிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்திருக்குமா?
பொங்கி வரும் காவிரியை பார்த்து சந்தோசப்பட வேண்டி விவசாயி கவலைப்படுகிறான். ஆனி மாதம் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் ஆடி மாதம் நடவு வேலைத் தொடங்கிவிடும். பருவம் பார்த்து தொடங்கப்படும் வேலை மழைக்கும் வெய்யிலுக்கும் தாக்குப்பிடித்து அதிக பாதிப்பு இல்லாமல் போட்ட முதலுக்கு மோசம் இல்லாமல் அறுவடை முடியும். ஆனால் காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.
1 of 5
தஞ்சையில் கல்லணைக் கால்வாய் ஆற்றின் கிளை பாசனக் கால்வாய்கள் பாயும் ஊர்களில் தூர் வாரப்படாத நிலையை பார்க்க நேர்ந்தது. வடிகால் ஊற்றுகள் ஏரி குளங்கள் உள்ள நீர் நிலைகளுமே பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்தன. கிளை ஆறுகள் ஓடும் பாலத்துக்கு மேல் ஒரு ஆள் மட்டம் அடர்த்தியாக வளர்ந்த நாணல் கோரைப் புற்கள் மண்டிக் கிடக்கின்றன.
ஆறு நிறைய தண்ணீர் ஓடுகிறது அருகில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாமலும் நிலங்கள் ஈரப்பசையற்றத் தரிசாகவும் கிடக்கிறது. சில இடங்களில் தூர் வாரப்படாதக் கால்வாயில் தண்ணீர் வரவும் செய்கிறது. வரும் தண்ணீர் பாசனத்துக்கான மதகு உடைபட்டு கிடப்பதால் வேறு திசைகளில் திரும்பித் தேவைப்படாத இடங்களுக்குப் பாய்கிறது. ஆற்று கரைகளில் ஏற்பட்டிருக்கும் மண் அரிப்பு எப்போது வேண்டுமானாலும் உடைப்பெடுக்கலாம் என்ற நிலையில் உள்ளது. அப்படி உடைப்பெடுத்தால் ஆள் துளைக் கிணற்றைக் கொண்டு செய்யப்பட்ட விவசாயம் அத்தனையும் அடியோடு சேதமாகிவிடும்.
This slideshow requires JavaScript.
குறுவைப்பருவ பயிறு வளர்ந்து நிற்க வேண்டிய காலகட்டத்தில் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டதே என்று இப்பொழுது சம்பா பருவத்து பயிர் செய்தால் ஐப்பசி கார்த்திகையில் அடைமழையில் அத்தனையும் அடியோடு சேதமாகிவிடும் என்று கவலைப் படுகின்றனர் விவசாயிகள்.
கர்நாடகத்தில் தண்ணீர் தர மறுப்பு. விவசாயிகள் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு போராட்டம் என கடந்த கால அனுபவம் எதுவுமே ஆற்றில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு காவிரி கனவாகவே இருந்தது. விவசாயிகள் எப்படி ஆற்றில் தண்ணீர் வரும் என்று நம்பவில்லையோ அதேபோல் அரசும் நம்பவில்லை. அதனால் தான் ஊழலுக்கு பெயர் போன பொதுப்பணித் துறை பாசனக் கால்வாய்களை தூர் வாரும் எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது.ஒரு ஊரில் ஒரு கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடந்துள்ளது. அதன் முன்னும் பின்னும் மண் சரிந்து செடி கொடிகள் மண்டியுள்ளன. ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் இந்த அளவு மட்டும் தான் டெண்டர் எடுத்ததாகவும் தூர் வாரப்படாத மற்ற பகுதிகள் அடுத்த ஊர் எல்லையை சேர்ந்தது என்றனர். இப்படியான அவல நிலையில் நீர் நிலைகளை வைத்துக்கொண்டு ஜோடிப் புறாவாக நின்று வெட்கமே இல்லாமல் அணைக்கட்டை திறந்து வைத்து மலர் தூவி மகிழ்கிறார்கள் ஓ.பி.எஸ்.-சும், இ.பி.எஸ்.-சும்.விவசாயத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது “தூர் வாரும் பணி மாவட்டம், வட்டம் என ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்படும். இதற்கான செலவுத் தொகை பொதுப்பணித் துறையால் ஒதுக்கப்படும். மேலிருந்து கீழ் வரை அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை 40 சதவீதம் வரை போய்விடும். மீதமுள்ள 60 சதவீதத்தில் செய்யப்படும் வேலை முழுமையாகவும் தரமாகவும் இருக்க வாய்ப்பில்லை.” என்றார்.முதன்மை ஆற்றை விட அடுத்தடுத்த பாசனக் கால்வாய்கள் தாழ்வான நிலையில் இருக்கும். முதன்மை பாசன கால்வாய்களில் இருந்து பிரித்து விடப்படும் கிளைக் கால்வாய் தூர் வாரப்படாமல் இருந்தால் நீரோட்டம் எப்படி சீரான முறையில் இருக்கும். இரண்டு மீட்டர் தூரம் தூர் வாரப்பட்டும் இரண்டு மீட்டர் தூரம் தூர் வாரப்படாமலும் இருந்தால் சமமான நிலையில் தண்ணீர் விவசாயத்துக்குப் போய் சேருமா? தூர் வாரப்பட்ட பள்ளமான பகுதியில் இருந்து மேட்டுப் பகுதியான பயிர் செய்த வயல்களுக்கு எப்படி தண்ணீர் பாயும்?பயிர் செய்யும் வயல் வரை பொதுப்பணித்துறையை நாம் இழுக்க வேண்டாம். முதன்மை ஆற்றையும் கிளை கால்வாய்களையும் தூர் வாரியிருந்தால் பாசனக் கால்வாய்களை சரிசெய்து பயிர் செய்யும் வயல்களுக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தை விவசாயிகளே சீர்செய்து கொள்வார்கள்.காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத காலகட்டத்தில் முப்போகம், இருபோகம் என விவசாயம் செய்யப்படும். அப்படி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏரி குளங்களைக் கொண்டு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொள்வார்கள். தண்ணீரின் அளவுக்கேற்ப விவசாய பயிர் வகைகளை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இன்று ஏரி குளமாகவும், குளம் குட்டையாகவும்இருந்த இடம் தெரியாமல் மாறி விட்டது. தஞ்சை சமுத்திரம் ஏரியும் வடுவூர் ஏரியும் நிலப்பரப்புபோல் மாறி வருவதை பார்க்கும் ஒவ்வொரு விவசாயி மனதும் ரத்தம் சிந்தத்தான் செய்கிறது.ஏரி குளம் போன்ற நீர்ப்பாசன நிர்வாகம் நீர் வினியோகம் என்பது ஆங்கிலேயர் காலத்துக்கு முன் கிராமப் பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகள் என்ற பெயரில் கிராம வாசிகளே செய்துள்ளனர். நீர் நிலைகளின் பராமரிப்புக்காக விளைச்சலின் ஒரு குறிப்பிட்ட அளவையும், மீன்பிடிப்பு குத்தகைப் பணத்தையும் ஒதுக்கியுள்ளனர். நிலம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமையும், அதிகம் உள்ளவர்களுக்கு வரம்புக்குட்பட்டும் தண்ணீர் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. நீர் வினியோகம் செய்யும் ஆட்களும் அவர்களுக்கு சம்பளமாக மானிய நிலமும் கொடுத்துள்ளனர்.எப்பொழுது ஏரி குளம் பொதுப்பணித் துறைக்கு போனதோ அப்போது முதல் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பும், பராமரிப்பும் இல்லாமல் கைவிப்பட்டவையாக மாறிவிட்டது. விவசாயிகளே நீர் நிலைகளை பொதுச் சொத்தாக பாதுகாத்து தேவையைப் பூர்த்தி செய்து தன்னளவில் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இந்நிலையில் காவிரியும் கைவிரிக்க இருக்கப்பட்டவர்கள் ஆள்துளை கிணறு அதிக விவசாயம் என்ற தன்னலம் மேலோங்கத் தொடங்கியது. பாசன வசதியற்ற சிறு விசாயிகள் கூலி விவசாயிகள் நகரத்தை நோக்கி வரவேண்டிய கட்டாயம் உருவானது.
காவிரியில் தண்ணீர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியோடு விவசாயிகள் விவசாய வேலையை ஆர்வத்தோடு தொடங்கவில்லை. தண்ணீர் வந்து விட்டது என இப்பொழுதே வேலையை தொடங்கினால் ஏற்படும் இழப்பு பயம் கொள்ளச் செய்கிறது. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை, காவிரியில் வரும் வெள்ளப்பெருக்கு தூர் வாரப்படாத பாசனக் கால்வாய்கள் அடுத்து வரும் அடைமழை காலம் அனைத்துமே பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனையை தீர்க்கும் ஒரே வழி நீர் நிலைகளின் சீரிய பராமரிப்பு மட்டுமே.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி பிரிவு சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். சங்கத்தின் முக்கிய நிகழ்வான நிர்வாகிகளுக்கான தேர்தல் 25-08-2018 அன்று நடைபெற்றது. தேர்தலில் நிற்கும் உறுப்பினர்களிடம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு ஜனநாயக முறையில் உறுப்பினர்களின் முன்னிலையில் தேர்தல் நடந்தது. சங்கத்தின் செயலாளர் சுகேந்திரன் தனது உரையில் சங்கத்தின் வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.
சங்க தேர்தலை பற்றி பேசுவதற்கு முன்னால் கடந்த கால சங்க அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கோப்புப் படம் (அக்டோபர் 2017-ல் நடந்த சங்கக் கூட்டத்தில்)
சங்கம் அமைப்பதற்கு முன்னால் ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது என்ற கருத்துதான் பிரதானமாக இருந்தது அதனால் ஐ.டி. கம்பெனியில் நடக்கும் கட்டாய வேலை நீக்கத்தை எதிர்த்தும், ஐ.டி தொழிலாளர்களின் வேலைச்சுமை மற்றும் பல்வேறு பிரச்சனைக்கு குரல் கொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வந்தனர்.
பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவு 2015-ல் தொடங்கி தோழர் கற்பகவிநாயகம் தலைமையில் செயல்பட்டுவந்தது. ஐ.டி கம்பெனியில் தொழிலாளர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டது. மேலே சொன்ன சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பு.ஜ.தொ.மு தொடர்ச்சியான சட்டப்போராட்டம் நடத்தி “ஐ.டி-யில் வேலைபார்ப்பவர்கள் தாங்கள் செய்த வேலைக்கு ஊதியம் பெறும் தொழிலாளர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் நிர்வாகத்தின் லாபத்திலும் அவற்றின் முக்கிய பொறுப்புகளில் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. ஆதலால் ஐ.டி தொழிலாளர்ளுக்கும் 1947- தொழிலாளர் நலச்சட்டம் அனைத்தும் பொருந்தும்” என்ற உரிமையை நிலைநாட்டியது.
இந்திய ஐ.டி துறையில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. ஐ.டி ஊழியர்கள் சங்கம் வைத்து அதன்மூலம் அவர்களின் பிரச்சனைகளுக்கு தொழிலாளர் துறை மூலமும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஈட்டிக்கொள்ளலாம் என்ற நிலைமை உருவானது.
ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என்று ஐ.டி தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைக்கு எதிராக குரல் எழுப்பியும், ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு லாபத்திற்காக தொழிலாளர்களை வெளியேற்றுகிறார்கள், அதைப்பற்றி கேள்விகேட்காத அரசு எவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறது என்று தொழிலாளர்களிடம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
கடந்த வருடம் ஜூன் மாதம் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருட காலமாக ஐ.டி ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கப்பட்டது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் CTS-ல் 10 மணி நேரம் கட்டாய வேலை நேரத்தை கண்டித்தும், Tech mahendra-வில் கட்டாய பணி நீக்கத்தை எதிர்த்தும், TCS-ல் அப்ரைசல் முறைக்கேடு மற்றும் PF பிரச்சனைக்கு தலையிட்டும் ஊழியர்களின் நலன் நிலைநாட்டப்பட்டது. Verizon கம்பெனியில் நடந்த கட்டாய பணி நீக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டது.
Wipro-வில் நடந்த கட்டாய பணி நீக்க நடவடிக்கையை பாதிக்கப்பட்ட ஊழியர்களை ஒருங்கிணைத்து வழக்கு தொடுக்கப்பட்டது. பு.ஜ.தொ.முவின் மாநில பொருளாளரும் ஐ.டி சங்கத்தின் கௌரவத் தலைவரும் ஆன தோழர் விஜயகுமாரின் வழி காட்டலோடு வழக்கை சங்கம் உறுதியுடன் நடத்திச் சென்றது. அதன் பலனாக இந்தியாவிலே முதல் முறையாக ஒரு ஐ.டி நிறுவனத்துக்கு எதிராக தொழில் தகராறு சட்டம் 1947, பிரிவு 2K ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தாவாவில் சமரச முறிவு அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இது போன்று, கட்டாய ராஜினாமா செய்யவைக்கப்பட்ட ஊழியர்கள் சார்பில் பிரிவு 2A-ன் கீழ் வழக்கு நடத்தி நிவாரணம் பெறுவது, சமரச முறிவு அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதவுவது உட்பட இன்னும் பலவற்றை சாதித்துள்ளோம்.
மேலும் ஐ.டி ஊழியர்கள் சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்ற கருத்தை உடைக்கும் முயற்சியாகவும் சமூகத்தில் நடக்கும் எந்தவொரு பிரச்சனைக்கும் ஐ.டி தொழிலாளர்களுக்கும் தொடர்புள்ளது என்பதை நிலைநாட்டும் விதமாக பல்வேறு சமுகப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் மருத்துவராக முடியாமலும் மருத்துவத்துறை பணம் உள்ளவருக்கானதாக சூல்நிலையை உருவாக்கிய நீட் தேர்வை கண்டித்தும், விவசாயிகள் தற்கொலை, காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் மற்றும் பல தொழிற்சாலைகள் நமது நாட்டு சட்டங்களையும் இயற்கையின் மாண்புகளையும் மதிக்காமல் லாபத்திற்காக சுற்றுப்புற சூழலையும் நாசப்படுத்துவதை எதிர்த்தும் என்று பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு உழைக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இத்தனை நிகழ்வுகளையும் அதற்கான வேலைகளையும் எந்தவொரு தனிப்பட்ட நபராலும் செய்து முடிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியிருக்கும் பட்சத்தில் சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்களின் கடுமையான உழைப்பால் நடந்தது மட்டுமில்லை அவர்களின் கூட்டுச் செயல்பட்டால் நடைமுறையானது என்பதே உண்மை. பல நேரங்களில் நிதிப் பற்றாக்குறை, நடைமுறை வேலை செய்வதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் வராத போதும் திட்டங்களை செயல்படுத்தியது, கூட்டிணைவோடு சங்கம் வளர்வதற்க்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பயனுள்ளதாக நடத்தி முடித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அதே பணியை இன்னும் முன்முயற்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பமாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்சொன்னவை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த பின்னர் கடந்த வருடத்தில் செயல்படுத்தப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாகவும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்கும் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தலில் பங்கெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். இதுவரை நடந்த தவறுகளை பாடமாக எடுத்துக் கொண்டும் சரியானவற்றை உழைப்புக்கு கிடைத்த பலனாக கருதிக்கொண்டும் மேலும் பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பமாக உள்ளதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுகேந்திரன், செயலாளர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு.
‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்டதற்காக, கைது செய்யப்பட்டவரும் ஆய்வு மாணவருமான லூயி சோபியா ‘‘த வயர்” இணையதளத்தில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் 46-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பிரச்சினை என்பதை விளக்கமான கட்டுரையாக ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளில் தமிழக காவல்துறை நடத்திய படுகொலைக்குப் பிறகு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான பிரச்சினைக்குரிய தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையை நிரந்தமாக மூடுவதாக தமிழக அரசு ஜோடிக்கப்பட்ட வார்த்தைகளை நிரப்பி, சட்டரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத ஒரு அறிவிப்பாணையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு முன் எகனாமிக்ஸ் டைம்ஸ், அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வாலின் நேர்காணலை வெளியிட்டது.
கடந்த மே 22, 23-ஆம் தேதிகளில் மாநில காவல்துறை வன்முறையை ஏவி, 13 பேர் கொல்லப்படுவதற்கும், 65-க்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமானது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கைகளை தொடங்கியதோடு, பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட தூண்டியதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்த காரணத்துக்காக பலர் கைதுசெய்யப்பட்டு, வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டனர்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீதான பொதுமக்களின் சினமும் பேரச்சமும், வேதாந்தாவின் காப்பர் உருக்காலைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தின. எவ்வித ஆயுதமும் ஏந்தாத போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசு, அதுவரை 100 நாட்களாக நடந்த போராட்டத்துக்கு எந்த எதிர்வினையும் செய்திருக்கவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக செயல்பட்ட தமிழக அரசு மே 23-ஆம் தேதி வரை, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டிருந்தது.
அதே நாளில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது. அதோடு, பொதுமக்களின் கருத்தை கேட்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தியது.
இத்தகைய அரசியல் சூழலில் அனில் அகர்வால், த எகனாமிக்ஸ் டைம்ஸுக்கு நேர்காணல் அளிக்கிறார். வழக்கமாக ஸ்டெர்லைட் செயல் அதிகாரி ராம்நாத் ஊடகங்களிடம் பேசுவதே வழக்கம்.
இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா? போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
ஸ்டெர்லைட் வெளியிடும் பத்திரிகை செய்தி அறிக்கை போலத்தான் அந்த நேர்காணல் இருந்தது; சில விஷயங்களைத் தவிர. உதாரணத்துக்கு வேதாந்தாவின் தலைவர் சொல்கிறார், “முதல் நாளிலிருந்தே இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது இந்தியாவில் மட்டுமே நடக்கும். எல்லா நேரங்களிலும், மக்கள் ஜனநாயகத்தில் உள்ள அனுகூலங்களை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்”.
கார்ப்போரேட் தலைமையின் இந்த கூற்று வெளிப்படுத்துவது என்னவென்றால், அவருடைய திட்டங்கள் பொதுமக்களின் பரவலான எதிர்ப்பின் காரணமாக மீண்டும் ஒரு முறை முடக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடல் சமீபமாக நடந்த ஒன்று.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் குரலை கேட்க வேண்டும் என்கிற உண்மையான ஜனநாயகத்தை அவமதிக்கும் போக்கை அனில் அகர்வாலின் கூற்று சுட்டிக்காட்டவில்லை; ‘இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்’ என்கிற கேள்வியையும் சேர்த்தே சுட்டுகிறது.
உதாரணத்துக்கு, இந்திய காவல்துறை பயன்படுத்திய L1A1 தானியங்கி துப்பாக்கியின் இங்கிலாந்து வடிவத்தை லண்டன் மாநகர காவல்துறை கண்களை மூடிக்கொண்டு சுட பயன்படுத்துமா? போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆயுதத்தை 2011-ல் லண்டனில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தினால் பிரிட்டிஷ் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராக, பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டத்துக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படுமா?
மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அந்நாட்டின் பிரதமர் தெரசா மே-உம் கூட, 13 பேர் கொல்லப்பட்டதையும் சூழலியல் சீர்கேட்டையும் உருவாக்கிய ஒரு நிறுவனத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தையும் முற்றிலுமாக மறுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது;
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட சாதிய மோதல்கள், அப்போது கட்டுமானப்பணிகளை தொடங்கியிருந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பவே நடத்தப்பட்டன என பல தூத்துக்குடிவாசிகள் கருதுகிறார்கள்.
எப்படியாயினும், சமீபத்திய போராட்டம் சாதி – அரசியல் – மத – வர்க்க அடிப்படைகளை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தது. குமரெட்டியாபுரத்தில் பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கிய போராட்டம் அருகாமை ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் ஓரிடத்தில் கூடி, பேனர்களையும், முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும் வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பணிகளுக்கு ஏற்ப மாறி மாறி போராட்டத்துக்கு நேரம் ஒதுக்கினார்கள், குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வந்த கோடை விடுமுறையிலும் போராட்டக்களத்தில் நின்றார்கள். மார்ச் 24-ஆம் தேதி வியாபாரிகள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் தூத்துக்குடி முழுவதுமாக முடங்கியிருந்தது. அன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்று தெருக்களை நிரப்பினார்கள். பேரணியின் படங்கள் சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை உருவாக்கின.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. த இந்துவில் வந்த தகவலின்படி, 1996-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் நாள் தூத்துக்குடிக்கு கப்பலில் ஏற்றி வரப்பட்ட உருக்கப்படாத தாமிர உலோகத்தை, கீழே இறக்க அனுமதிக்க முடியாது என 500 மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
தூத்துக்குடியின் மில்லர்புரம், மூன்றாவது மைல், ஃபாத்திமா நகர் போன்ற இடங்களில் போராட்டக் கூடாரங்கள் முளைத்திருந்தன. தினமும் நடைபெற்ற போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.
நூறாம் நாள் போராட்டத்தில் உண்ணாவிரதம், மனித சங்கிலி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் காப்பர் உலோகத்தை கொண்டு வருவதைத் தடுப்பதற்கும், அந்தப் பொருட்களை வேறு எங்காவது சேமிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு எந்த தனிமனிதரோ அல்லது மனிதர்களோ தலைமையேற்க அனுமதிக்கக்கூடாது என்கிற தன்னிச்சையான முடிவு போராட்டக்காரர்களால் எடுக்கப்பட்டிருந்தது. அதுபோல, கட்சிகளையும் அமைப்புகளையும் போராட்டக்குழு தள்ளி வைத்திருந்தது.
இது உண்மையில் அடிமட்டத்திலிருந்து நடந்த ஒரு அணிதிரட்டல். சொல்லப்போனால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் போராட்டம் எனவும் கொள்ளலாம். முறைபடுத்தும் அமைப்புகள், அரசு, நீதிமன்றம் என மாநில அரசின் அமைப்புகளால், இரண்டு தசாப்தங்கள் ஏமாற்றப்பட்ட பிறகு, நடந்த போராட்டங்களை நசுக்க, கொடூரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி தூத்துக்குடியில் நடக்கும் அநீதிகளை வெளி உலகத்துக்கு வெளிச்சமிட்டு காட்டியது. இறுதியில் அதை சரிகட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது மாநில அரசு.
தூத்துக்குடியில் நடைபெற்ற பயங்கர நிகழ்வுகளுக்குப் பின் வந்த முதல் அரசு பிரதிநிதியான அமைச்சர் கடம்பூர் ராஜு, அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். அரசியல்வாதிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் மீது மக்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள், அவர்கள் வார்த்தையை மென்று முழுங்காமல் நேரடியாகவே கேட்டார்கள்.
இதுதான், வேதாந்தாவின் அகர்வாலுக்கு பிரச்சினைக்குரியதாகவும் நேர்மையின் அரிதான தருணமாகவும் உள்ள அவருடைய கூற்று, அமெரிக்க சிந்தனையாளர் நோம்சாம்ஸ்கி சொல்லும் ‘எலைட்டுகளுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் அதீதமான வெறுப்புணர்வை’ காட்டிக்கொடுக்கிறது.
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஜான் மெக்டானல், தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்க வேண்டியது, இங்கிலாந்தில் நடந்தது.
“நாம் தொழிலை அரசியலிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்” என, மேலும் ஒரு அதிரடியான பாசாங்கு வாக்கியம் ஒன்றை சொல்கிறார் அகர்வால்.
வேதாந்தா குழுமம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் நன்கொடை அளித்திருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டில் வேதாந்தா குழுமத்திலிருந்து பா.ஜ.க ரூ22.5 கோடி நிதி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட்டிலிருந்து மட்டும் ரூ.15 கோடி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அகர்வால் நன்கொடை அளிக்கிறார். இந்திய மதிப்பில் ரூ. 93 லட்சத்தை டிசம்பர் 2015 மற்றும் மே 2017-க்கு இடைப்பட்ட காலங்களில் அளித்திருக்கிறார். இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக்கவோ அல்லது ஜனநாயக நடைமுறைகளை தாக்கம் செலுத்தவோ தனக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடு உள்ளது என கருதுகிறார் அவர்.
போராட்டக்காரர்களை ஆதரிப்பவர்களை புதைக்க தேசியவாதம் என்கிற முகமூடி ஒன்று அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நேர்காணலில் அகர்வால் சொல்கிறார், “காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்முடைய நாட்டை தங்களுடைய சந்தையாக்கிக் கொள்வார்கள்”. கூடவே வேதாந்தா நிறுவனத்தின் தலைமையகம் இங்கிலாந்தில் இருப்பதை மறந்துவிட்டு, ‘வெளிநாட்டு சதி’ இருப்பதாக மறைமுகமாக குறிப்பிடுகிறார் அகர்வால்.
அதோடு, சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். இதையேதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசும் நடிகர் ரஜினிகாந்தும் சொன்னார்கள். தொழிற்சாலைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் இந்த பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒருபோதும் எவரும் இதற்கு ஆதாரங்களை தருவதில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் போராட்டத்தை சிதைக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
சமூகவிரோதிகள் செயல்பாட்டாளர்கள் போல வேசம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்?
அது நியாமகிரி என்றாலும், தூத்துக்குடி என்றாலும் வேதாந்தா நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதோடு அவர்களின் குரல்களை எதிரொலிக்கும் சூழலியல் செயல்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் குழுக்களை சார்ந்தோரை ஒடுக்குவதையும் விரும்புகிறது. சக குடிமகனின் ஆதரவில்லாமல் பழங்குடியினராலும் ஏழை விவசாய குடிகளாலும் மீனவர்களாலும் பெரும் சுரங்க முதலாளிகளையும் மத்திய-மாநில அரசுகளையும் என்ன செய்துவிட முடியும்?
இந்த நேர்காணலின் எந்த இடத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான முக்கியமாக சூழலியல் மற்றும் சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து சொல்லப்படவில்லை. கேட்கப்படக்கூடிய கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு எடுக்கப்படும் இத்தகைய நேர்காணல்களில் சொல்லப்படும் எதுவுமே தவறான நோக்கத்திற்காக சொல்லப்படுவதாகத்தான கருத முடியும். எதற்காக இத்தகை நேர்காணல்கள் எடுக்கப்படுகின்றன என்பதை படிப்பவரால் நிச்சயம் யூகிக்க முடியும்.
உண்மையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி முடக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட தொழிலதிபர்களின் காரசாரமான நேர்காணல்களுக்கான காலம் இது. அதோடு, பாதிக்கப்பட்ட குரல்களுக்கும் அதிகமாக இடம் கொடுங்கள்.
கடந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் மேலும் 4 மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை, மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்தது புனே போலீசு. சுதா பரத்வாஜ் மாவோயிஸ்ட் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்காகவே அவரைக் கைது செய்வதாகவும் தெரிவித்தது புனே போலீசு.
புனே போலீசு தற்போது கைது நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அப்படி ஒரு கடிதத்தை கடந்த ஜூலை 5-ம் தேதியன்று தனது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் ’லபோதிபோ’ அர்னாப் கோஸ்வாமி.
இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ம் தேதியன்று ‘தி வயர்’ இணையதளத்தின் பத்திரிகையாளர் ஜானவி சென், அர்னாப் கோஷ்வாமியின் இக்குற்றச்சாட்டு குறித்து சுதா பரத்வாஜிடம் நேர்காணல் எடுத்தார். அந்த காணொளி அன்றே ’தி வயர்’ இணையதளத்தில் வெளியானது. அதே நேர்காணலை, சுதா பர்த்வாஜ் கைது செய்யப்பட்டதையடுத்து ’தி வயர்’ இணையதளம் மீள்பதிவிட்டது.
அந்த நேர்காணல் காணொளியின் தமிழாக்கம்:
சுதா பரத்வாஜ் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர். குறிப்பாக சட்டீஸ்கரில் தனது பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஜூலை 5, 2018 அன்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த விவாதம் குறித்த பேட்டி இது.
ஜானவி சென் : அர்னாப் கோஸ்வாமி நீங்கள் எழுதியதாக, ஒரு குறிப்பான கடிதத்தைக் காட்டி உங்கள் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் நீங்கள் அதனை மறுத்துள்ளீர்கள். அவரது குற்றச்சாட்டின் பிரதானமான விசயம், நீங்கள் மாவோயிஸ்ட் தலைவராகக் கூறப்படும் தோழர் பிரகாஷ்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பதுதான்.
சில சந்தர்ப்பங்களில் அவர்களை (மாவோயிஸ்டுகளை) நீங்கள் சந்தித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியிலிருந்து உங்களது கருத்துக்களைக் கேட்டனரா? இது குறித்து உங்களது கருத்தென்ன?
சுதா பரத்வாஜ் : வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில், காலையில் எனக்கு மும்பை எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசுபவர், தாம் ரிபப்ளிக் தொலைக்காட்சியிலிருந்து பேசுவதாகக் கூறினார். அவர்களது நிகழ்ச்சியில் அன்று மாலை பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நான் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை எனக் கூறி தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன்.
பீமா கோரேகான் குறித்து ஏதேனும் விவாத நிகழ்ச்சிக்குதான் அழைக்கப்படுகிறேன் என்று நினைத்தேன். நான் அவ்வப்போது பார்க்கும் ’ரிபப்ளிக் தொலைக்காட்சி’யின் விவாத நிகழ்ச்சி அனைத்திலும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
சிறிது நேரம் கழித்து, வேறு சிலரின் மூலமாக ரிபப்ளிக் தொலைக்காட்சியினர், ’நான் மாவோயிஸ்ட் தோழர் பிரகாஷ் என்பருக்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தை’ ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருப்பதாகக் கூறினார். அது குறித்த தொடர்புச் சுட்டியையும் அனுப்பியிருந்தனர். அதனையும் நான் பார்த்தேன். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹிந்தியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தை அவர்கள் திரையில் காட்டினர். அந்தக் கடிதம் வழக்கறிஞர் தோழர் சுதா பரத்வாஜ்-ஆல் தோழர் பிரகாஷுக்கு எழுதப்பட்டதாக அவர்கள் கூறினர்.
அனைத்து விதமான குற்றச்சாட்டுகளும் அங்கு வைக்கப்பட்டன. காஷ்மீருடனான தொடர்பு குறித்தும், எனக்கு நிதி தேவை என்றும் எழுதியிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் அதில் நிறைய வழக்கறிஞர்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். அதில் கணிசமான வழக்கறிஞர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்தான். அவர்கள் தலைசிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். சிலரைக் குறித்து எனக்குத் தெரியவே தெரியாது. அந்த வழக்கறிஞர்களை, நான் ’தோழர்’ என விளித்ததாகவும், அவர்களுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அக்கடிதத்தில் காட்டப்பட்டிருந்தது.
நான் செய்த முதல் விசயம் என்னவென்றால், உடனடியாக அந்தக் கடிதத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிடக் கூறியதுதான். முதலில் எனக்கு அப்படி ஒரு கடிதம் என ஒன்று இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சியில் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் அது சில பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து கிடைத்ததாகக் கூறப்பட்டது.
அர்னாப் கோஸ்வாமி
இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட தவறான அவதூறு பரப்பும் கடிதம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது எனக்கு தனிப்பட்டரீதியிலும், தொழில்ரீதியாகவும் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பல்வேறு ’டுவீட்டுகள்’ வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமாக வெறுப்பைத் தூண்டி விடும் செயலே ஆகும். நான் இதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்பதை தெளிவாகக் கூறிவிட்டேன். எனது வழக்கறிஞர்களை ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிராக குடிமையியல் மற்றும் குற்றவியல் அவதூறு வழக்கு அறிவிப்பு அனுப்பக் கூறியிருக்கிறேன். நான் அனைத்து சாத்தியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன்.
ஜானவி சென்: அந்தக் கடிதத்தில் அவர்களது தொலைக்காட்சித் திரையிலும், இணையதளத்திலும் பெரிதுபடுத்திக் காட்டிய பகுதியில், 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு குறிப்பான சந்திப்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு வழக்கறிஞரும் அந்த கூட்டத்தில் உங்களுடன் கலந்து கொண்டதாகவும், நீங்கள் ஒரு மிகப்பெரிய சதியின் பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ”நகர்ப்புற நக்சல்கள்” போன்ற புதுவிதமான வார்த்தைப் பதங்களும் உபயோகக்கிப்படுகின்றன. காஷ்மீர் விவகாரமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் கூறியது போல இது இட்டுக்கட்டப்பட்ட கடிதம் எனும் பட்சத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சி உங்களைப் போன்ற குறிப்பான நபர்களைக் குறிவைப்பதற்கான அவசியம் என்ன? மேலும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த சந்திப்பு நிகழ்வு குறித்த விவரங்கள் குறித்து உங்களது கருத்து என்ன?
சுதா பரத்வாஜ்: முதலில் அவர்கள் எந்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. சுரேந்திர காட்லிங்-ஐ எனக்கு வெகுநாட்களாகத் தெரியும். அவர் ஒரு பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர், தலித்திய வழக்கறிஞர். கட்சிரோலியிலோ, ஜக்தல்பூரிலோ வழக்குகள் கொண்டுள்ள வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.
மக்களுக்கான வழக்கறிஞர்களின் இந்திய சங்கம் (ம.வ.இ.ச) என்ற அமைப்பில் நானும் அவரும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம். சுரேந்திர காட்லிங் – அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ஓய்வுபெற்ற மும்பை நீதிபதி சுரேஷ் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் இருக்கிறோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம்.
தற்போது, தனிப்பட்டரீதியில் என் மீதான தாக்குதலுக்குக் காரணமாக நான் நினைப்பது என்னவெனில், ஜூன் 6, 2018 அன்று சுரேந்திர காட்லிங் உட்பட பல்வேறு செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட போது, முதல் எதிர்வினை எங்களிடமிருந்துதான் வந்தது.
நான் ஜூன் 7, 2018 அன்றே எங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக இந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன். ராமகிருஷ்ணன், பி.யூ.சி.எல் தலைவர் ரவி கிரண் ஜெயின், பஞ்சோலி இன்னும் பிற வழக்கறிஞர்கள் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தற்போது மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்பதை நாங்கள் தெளிவாகப் பதிவு செய்தோம். சந்திரசேகர் ராவண், சமீபத்தில் பிணையில் வெளிவந்த வழக்கறிஞர் குபேந்திர நாயக், ஸ்டெர்லைட் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என தற்போது தொடர்ச்சியாக வழக்கறிஞர் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதன் காரணமாக பரவலாக அறியப்படாத மக்களை இடம்பெறச் செய்யும் திட்டங்களுக்கு எதிராகவும், விசாரணைக் கைதிகளாக சிறையிடப்பட்டுள்ள ஆதிவாசி மக்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்டோருக்காக வாதிடுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இது அச்சுறுத்தக் கூடிய நிலைமையாகும். இது தனிநபர்களின் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி, விளிம்புநிலை மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த நீதித்துறையையே நிலைதிரிவுறச் செய்கிறது.
வழக்கறிஞர்கள் ஓரணியில் திரள்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. நாக்பூரில் கூட, நாக்பூர் பார் கவுன்சில், சுரேந்திர காட்லிங்கின் கைதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. ஏனெனில் பீமா கொரேகான் வன்முறை வழக்கில் கடந்த ஜனவரியில் போடப்பட்ட முதல் தகவலறிக்கையில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் நீதிபதி சோதனைக்கு உத்தரவிட மறுத்த பின்னும் நடத்தப்பட்ட சோதனை அது. ஏப்ரலில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் மாதத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். இந்தக் குறுகிய காலத்தில் அபாயகரமான ஏதோ சிலவிசயங்கள் நடந்திருக்கின்றன. வழக்கறிஞர்களை இதுபோன்ற விவகாரங்களில் நிறுத்துவது ஏற்கத் தக்கதல்ல.
மக்களுக்கான வழக்கறிஞர்களின் இந்திய சங்கம் (ம.வ.இ.ச) – சமீபத்தில் காஷ்மீருக்குச் சென்று அங்கு உண்மை அறியும் குழுவாகச் செயல்பட்டனர். அங்கு சென்று காஷ்மீர் வழக்கறிஞர்களிடம் பேசுவதற்காக சென்றனர்.. ஏனெனில் அங்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஏனெனில் வழக்கறிஞர்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பி.எஸ்.ஏ) பாய்ச்சப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள அவர்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை. பிரச்சினைக்குரிய பகுதிகளில் மக்களைப் பாதுகாத்து அவர்களுக்காக வாதாடுவதற்குக் கூட, அனைத்து விதமான சிரமங்களையும் சந்திக்கின்றனர்.
இந்நிலைமையை ஆவணப்படுத்த ம.வ.இ.ச (IAPL) அங்கு சென்றது. பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அவர்களோடு கலந்தாலோசித்தனர். இன்னும் சிறிது நாட்களில் அவர்கள் தங்களது அறிக்கையை சமர்ப்பித்திருப்பார்கள். நான் அங்கு செல்லவில்லை. ஆனால் ம.வ.இ.ச (IAPL), உண்மையறியும் குழுவை அங்கு அனுப்பியது.
காஷ்மீருடன் இவர்களுக்கு சட்டவிரோதமான தொடர்பு இருக்கிறது என அவர்கள் சொல்வதற்கு அநேகமாக இதுவே ஒரு முக்கியக் காரணமாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குரிய பகுதியில் வழக்கறிஞர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது குறித்த விவகாரம் இது. அது மிகவும் சிரமமானது. அநேகமாக இதுவேதான் இத்தகைய தனிப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உடனடி காரணமாகவும் இருக்க முடியும். பெருமெண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள், என்னால் தோழர்கள் என விளிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அவர்களில் சிலரை எனக்குத் தெரியும், அவர்கள் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள். வேறு சிலரை எனக்குத் தெரியாது. இது வழக்கறிஞர்கள் சமூகத்தையும், மக்களுக்கான வழக்கறிஞர்களையும் பற்றி தவறான பிரச்சாரம் செய்வதற்கான வழியாக இருக்கிறது.
ஜானவி சென் : கூடுதலாக, மற்றுமொரு விசயம் அர்னாப் கோஷ்வாமி தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பீமா கோரேகான் வழக்கில் வில்சனின் கணிணியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில், பிரதமரைக் கொல்ல சதி நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதோடு நீங்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் உருவாக்கிவரும் திட்டம் குறித்து நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா ?
சுதா பரத்வாஜ் : இவ்வளவு பெரிய சதித் திட்டம் நடைபெற்றிருக்குமென்றால் ஏன் மாராட்டிய போலீசு மட்டும் இவ்வழக்கை விசாரிக்கிறது என்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஏற்கனவே அந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து அது போலியானதாகத் தெரிகிறதுஎன்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறியிருக்கின்றனர்.
இக்கடிதம் குறித்து முதலில் நான் செய்தது ஒரு அறிக்கையை வெளியிட்டதுதான். ராஜீவ் காந்தி கொலை போன்ற நிலைமைகள் என்றும், காஷ்மீர் போன்ற நிலைமைகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்? வழக்காடும் வழக்கறிஞராக, ஒரு தொழிற்சங்கவாதியாக, இருக்கும் என்னைப் போன்றவர்களை – மிகவும் பொறுமையாக சமரசப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தல், உயர்நீதிமன்றங்களில் வழக்காடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர்களை – காஷ்மீரோடு எப்படிக் கோர்க்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
அவர்களது நோக்கம், இத்தகைய ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைப்பதுதான். ஏனெனில் கைது செய்யப்பட்ட அனைவரும் பல பத்தாண்டுகள் பொது வேலைகளில் ஈடுபட்டவர்கள். யாரையும் இவர்கள் பொதுமக்களிடையே நம்பகத்தன்மை இல்லாதாவர்கள் எனக் கூற முடியாது. ஆனால், இப்படி ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை நீங்கள் அவர்கள் மீது வைக்கும் போது, பய பீதியில் மக்கள் அமைதியாக்கப்படுகிறார்கள். நாம் உண்மையில் அதனைக் கேள்வி கேட்க வேண்டும்.
ஒருவேளை அவ்வளவு பெரிய சதித்திட்டம் இருந்திருந்தால், நான் எப்போதுமே தொலைபேசியிலும், நேரிலும் அணுகக் கூடிய இடத்தில்தானே இருக்கிறேன். என்னை இதுவரை யாரும் இதுகுறித்து விசாரிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இந்த புலனாய்வு எவ்வகையைச் சேர்ந்தது எனப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது செயல்பாட்டளர்களை / மக்களை வாயடைக்கச் செய்வதற்கான ஒரு வழி. குறிப்பாக கடினமான கேள்விகளைக் கேட்பவர்களை வாயடைக்கச் செய்வதற்கான வழி.
ஜானவி சென்:நன்றி ! எங்களோடு இன்று கலந்து கொண்டதற்கு.
நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இன்மதி இதழில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, அதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதாகக் கூறுகிறது. இதை எழுதியிருப்பவர் ஹிமான்ஷு தாக்கூர்.
ஹிமான்ஷு தாக்கூர் இந்திய அளவில் அணைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். அதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமும் பெற்றவர். அவர் நடத்திவரும் Sandrp.in அணைகள், பருவமழை, வெள்ளம் குறித்து ஏகப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். ஆனால், அவரே இந்த முறை சறுக்கியிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.கேரளாவில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது, அதில் அணைகளின் பங்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பங்கு என்ன என்பது குறித்து இன்மதி இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில் அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.
1 ஜூலை 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தனது 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.
2ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட்டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.
3 இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது.
4 கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.
5 வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.
இப்போது ஒவ்வொரு கேள்விக்கான பதிலாகப் பார்க்கலாம்.
பதில் 1 ஜூலை 26ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவில் 90 சதவீததத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீரைத் தேக்கியிருக்கக்கூடாது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல். ஜூலை 26ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.6. இன்னும் ஆறு அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம். ஆதாரம்: 26 ஜூலை தினமணி மதுரைப் பதிப்பு – படம் 1.
அப்படியானால் எங்கே தவறு நேர்ந்தது? ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார்? சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் (சிடபிள்யுசி) புள்ளிவிவரங்களை வைத்தே அவர் முடிவுக்கு வருவதால்தான் இந்தத் தவறு நேர்கிறது. சென்ட்ரல் வாட்டர் கமிஷன்தானே நாடு முழுவதுமுள்ள அணைகளின் நீர் அளவைச் சொல்ல சரியான ஆணையம் என்று கேட்கலாம். ஆனால், இந்த ஆணையம் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஒரு தவறைச் செய்திருக்கிறது.
அதாவது முல்லைப் பெரியாறு அணையின் உயரம் இந்த CWC இணையதளத்தில் மீட்டரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் கொடுக்கப்படுகிறது. நாம் வழக்கமாக அணையின் உயரத்தை Feet அளவில்தான் அறிந்து பழகியிருக்கிறோம். CWC இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 867.41 மீட்டர் எனக் குறிக்கிறது. இது குழப்பத்திற்கு முதல் காரணம்.
இரண்டாவதாக, இந்த 867.41 மீட்டர் என்பது 142 அடியைக் குறிக்கவில்லை. 136 அடியைக் குறிக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய அணையின் உயரத்தையே CWC தன் இணையதளத்தில் இன்னமும் குறிப்பிட்டுவருகிறது. அதுதான் இந்த மொத்தக் குழப்பத்திற்கும் காரணம். அது எப்படி என்பதை அடுத்த பதிலில் பார்க்கலாம்.
பதில் 2 ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையின் உயரம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியையும் தாண்டி 147 அடியைத் தொட்டுவிட்டது என்கிறது கட்டுரை. அதற்கு ஆதாரமாக CWCன் புள்ளிவிவரத்தையே அளிக்கிறார் ஹிமான்ஷு. அதாவது அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 868.91 மீட்டர் என்கிறார் அவர். அதாவது 867.41 மீட்டரை 142 அடி என்று கணக்கில் கொண்டு, 868.71 மீட்டரை 147 அடி என்று புரிந்துகொள்கிறார். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142.2 அடிதான்.
அன்று மாலை நான்கு மணியளவில் அணையின் நீர்மட்டம் 141.8 அடிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆதாரம்: கேரள மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்தின் ட்விட்டர் பதிவு. பார்க்க படம் – 3.
முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரை ஷட்டர் மட்டமே 142 அடிதான். அதற்கு மேல் 20 -30 சென்டிமீட்டர் தண்ணீர் நிற்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டர் மீதே வழிந்துவிடும். 147 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டுமென்றால் கூடுதலாக ஷட்டர்களை இறக்க வேண்டியிருக்கும். அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவிடும். அதனால், எப்போதுமே 142 என்ற மட்டத்திலேயே ஷட்டர்கள் இருக்கும். ஆக 147 அடிக்கு தண்ணீரைத் தேக்குவது சாத்தியமே இல்லை.
இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை எட்டியது. அன்றைய தினத்தில் CWC இணைய தளத்தில் இருக்கும் தகவலைப் பாருங்கள். (படம் எண் 2) அப்போதும் 868.76 மீட்டரைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக அப்போதும் அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதா? இல்லை. அன்றும் 142 அடிக்குத்தான் தண்ணீர் நின்றது. சிடபிள்யுசி இணையதளம்தான் அப்போதும் இப்போதும் update ஆகவில்லை.
பதில் 3 ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் முல்லைப் பெரியாறு அணையத் திறந்து பெருமளவு தண்ணீரை வெளியேற்றியது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 136.1 அடி. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் சரியான மழை. தொடர்ந்து அணையில் நீரைத் தேக்கியது தமிழகம். அதனால் அடுத்த நாள் 140.7 அடியைத் தொட்டது நீர்மட்டம். இதில் எங்கே தண்ணீர் திறக்கப்பட்டது? அப்படி யார் சொன்னது? அப்படியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்தத் தண்ணீர் நேரடியாக மக்கள் வாழும் பகுதியைச் சென்றடையாதே? இடுக்கி அணைக்குத்தானே போகும்? முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது ஆக்ஸட் 15ஆம் தேதி.
அதுவும் வெறும் 11,000 கன அடி மட்டுமே. பிரம்மாண்டமான இடுக்கி அணைக்கு இந்த 11,000 கன அடி என்பது ஒன்றுமே இல்லை.
பதில் 4 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்கிறது கட்டுரை. இதுவும் தவறான தகவல். ஜூலை 25 தேதி பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச நீர் திறப்பு அளவான 2200 கன அடி நீரைத் திறக்க ஆரம்பித்துவிட்டது தமிழகம்.
கட்டுரையாளர் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஜூலை 26ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான வினாடிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.
பதில் 5 வைகை அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை கூடுதலாக வைகையில் தேக்கியிருக்கலாம் என்கிறது கட்டுரை. இதுவும் ஒரு அபத்தமான, தவறான புரிதல். 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு முல்லைப் பெரியாறிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடிதான் அனுப்ப முடியும். அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். முன்கூட்டியே வைகையை திறந்திருந்தால், அணை காலியாகி, தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் போயிருக்கும்.
ஹிமான்ஷு எந்த உள்நோக்கத்துடனும் இந்தக் கட்டுரையை எழுதியிருப்பார் எனக் கருதவில்லை. ஆனால், அணைகளைப் பற்றி அறிந்தவர், அடிப்படையான ஒரு கேள்விக்கு பதிலை யோசித்திருக்க வேண்டும். அதாவது 142 அடி உயரமுள்ள அணையில் அவர் சொல்வதுபோல 147 அடிக்கு எப்படி தண்ணீர்த் தேக்க முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.
1 of 2
ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையை நடுநிலையோடுதான் அணுக வேண்டும். ஆனால், நடுநிலை எடுக்க வேண்டுமென்பதற்காகவே தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சாடுவது என்ன நியாயம்?
இந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கும் படங்களையும் பாருங்கள். முல்லைப் பெரியாறு, வைகை அணையின் தினசரி நீர்மட்டங்களையும் பாருங்கள். ஹிமான்சுவின் கட்டுரை தவறானது எனப் புரியும்.
முல்லைப் பெரியாறு: ஹிமான்ஷுவின் பதிலும் ஒரு Tamil enthusiastன் விளக்கமும்
———————————————————————
முல்லைப் பெரியாறு அணை குறித்த ஹிமான்ஷு தாக்கரின் கட்டுரைக்குப் பதிலாக நான் எழுதிய சில கருத்துகளுக்கு அவர் சில பதில்களை அளித்திருக்கிறார்.
முதலில் ஹிமான்ஷு தாக்கரின் பதில் (கருத்துகளுக்கு பதில் சொல்லும்போது எளிதாக இருக்க அவற்றுக்கு எண்களை இட்டிருக்கிறேன்) :
1. இந்தக் கட்டுரையின் வாதம், ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 20 தேதிவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பது அல்ல. இந்தக் கட்டுரை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதைக் குறித்தே பேசுகிறது. ஆனால், அதிகபட்ச நீர் திறப்பு 2,200 கன அடி நீர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு தரமான சாட்சியங்களை நம்பத்தகுந்த இணைய தளங்களில் காண விரும்புகிறேன்.
2. ஆகஸ்டு 14ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிட்டது தொடர்பாக வண்டிபெரியாறு இணையதளத்தில் உள்ள வரைபடத்தைப் பாருங்கள். (முதன்மை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது) அதில் ஆகஸ்டு 14ஆம் தேதியன்று வண்டிபெரியாறில் உச்சபட்ச வெள்ள அளவு எவ்வாறு உயர்ந்தும் குறைந்தும் உள்ளது என்பதையும் பாருங்கள். இந்த அளவு மதிப்பீடுகள் அனைத்தும் மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து பெறப்பட்டது. அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல, நீர் ஆதாரங்கள் தகவல் சேவை (WRIS) அறிக்கையின்படி, வண்டிபெரியாறின் 90% நீர்ப்பிடிப்பு முல்லைப்பெரியாறில் இருந்துதான் பெறப்படுகிறது. அதாவது வண்டிபெரியாறு வெள்ளம் பெருமளவில் முல்லைப்பெரியாறில் இருந்து வந்ததுதான்.
3. அணையின் நீர்மட்டம் குறித்து வெளிப்படையான தகவல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மை ஆணையத்தின் வெளியீட்டின்படி, முல்லைபெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 867.41மீ(கடல் மட்டத்துக்கு மேல்) என கொடுக்கப்பட்டுள்ளது. இது 142 அடி என நான் யூகித்துக்கொண்டேன், அதுதான் அணையின் மொத்தக் கொள்ளளவு நீர்மட்டம். இந்த கொள்ளளவு நீர்மட்டத்தின் மேலதிக தகவல்களை நான் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பார்க்கவில்லை. மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அணையின் நீர்மட்டம் குறித்து சரியான தகவல்களைக் கொடுத்திருக்கும் என யூகித்தேன். காரணம், மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அவர்கள் வெளியீட்டில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சம்பதப்பட்ட மாநில அரசால் கொடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தது. ஒருவேளை மத்திய நீர் மேலாண்மை ஆணையம் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால், அது அந்தந்த மாநிலங்கள் கொடுத்த தகவல்களைப் பொறுத்து அது வெளியிட்டுள்ளது என்பது என் புரிதல்.
4. இந்த கட்டுரையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்டத்தைவிட 5 அடி கூடுதலாக இருந்தது என மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டது. நீர்மட்டம், அணையின் நிர்ணயிக்கபட்ட நீர்மட்டத்தை விட 5 அடி அதிகமாக தேக்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்தியாவில் பல அணைகளில் நீர்மட்டம், உச்சபட்ச நீர்மட்டத்தை விட பல அடிகள் அதிகமாக உள்ளது. அது அணையின் வெள்ள அளவையும் மதகுகளின் நிலையையும் பொறுத்து அமையும்.
இப்போது Tamil enthusiastன் பதில்கள்:
1. ஜூலை – 20 முதல் ஆகஸ்ட் 20வரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான 2,200 க்யூசெக்ஸ் திறக்கப்பட்டதா என்பதற்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் இல்லை என்கிறார் ஹிமான்ஷு. ஜூலை 25 வாக்கிலேயே 2100 கன அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்த பத்திரிகை செய்தியை என் பதிவில் இணைத்திருந்தேன். அதை ஹிமான்ஷு ஏனோ கணக்கில் கொள்ளவில்லை. அதிகாரபூர்வமாக ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் எந்த அளவுக்குத் திறக்கப்படுகிறது எனத் தெரிய வேண்டுமானால், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிக்கப்படும் Log – book மட்டுமே ஒரே வழி. அது கிடைக்க வாய்ப்பில்லை.
மற்றொரு வழி, அணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவைவைத்து ஓரளவுக்குக் கணிக்கலாம்.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மின் நிலையத்திலும் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை Power system corporation என்ற மத்திய அரசு நிறுவனம் வெளியிடுகிறது. அந்த நிறுவனம் அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி லோயர் பெரியார் புனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் 180 மெகா வாட். ஜூலை 24ஆம் தேதி மின் உற்பத்தி 147 மெகா வாட். தண்ணீர் 2100 கன அடி திறக்கப்பட்ட பிறகு அதன் உற்பத்தித் திறன் 171 மெகாவாட்.
அதாவது உற்பத்தித் திறனில் 95 சதவீதத்திற்கு மேல். ஜூலை 26, 27 என அடுத்தடுத்த நாட்களிலும் இதேபோல மின் உற்பத்தி தொடர்கிறது. ஆக, ஜூலை 25ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட முழு அளவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதற்கு இதுதான் அதிகாரபூர்வமான புள்ளிவிவரம். இதையாவது ஹிமான்ஷு ஏற்பாரா எனத் தெரியவில்லை. Srldc இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை இணைத்திருக்கிறேன்.
2. வண்டிப் பெரியாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பெரியாறு அணை திறக்கப்பட்டதே காரணம் என்று மீண்டும் சொல்கிறார். சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியது என்கிறார் ஹிமான்ஷு. இதற்கு சற்று விளக்கமாகப் பதிலளிக்க வேண்டும்.
A. இந்த அபாய அளவு என்பது எப்போது குறிக்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். ஒருவேளை அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்கும்போது குறிக்கப்பட்டிருக்கலாம். இப்போது வண்டிப் பெரியாறில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியது என்றால், அறிவியல் ரீதியாக அந்த மட்டத்திற்கு, அபாய அளவை மாற்றியமைக்க வேண்டும். கேரள அரசு அதற்குத் தயாராக இருக்குமா? இதனை இப்படிப் புரிந்துகொள்ளலாம். சென்னையில் நிலநடுக்கமே ஏற்படவில்லையென்று வைத்துக்கொள்வோம். அது seismic zone 4ல் இருக்கும். ஒரு முறை நிலநடுக்கம் வந்தாலே seismic zone 2க்கோ மூன்றுக்கோ சென்னை தள்ளப்படும். Seismic zone4ல் ஏன் நிலநடுக்கம் ஏற்பட்டது எனக் கேட்கக்கூடாது. அதைப்போலத்தான்.
B. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி அளவுக்கு தண்ணீரைத் திறக்க அணையைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென கேரள அரசு கோரிவருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்பட்ட 24 ஆயிரம் கன அடி நீரே வண்டிப் பெரியாரை மூழ்கடித்தது என்றால் 1,20,000 கன அடி நீரைத் திறக்க ஏன் தயாராக இருக்கச் சொல்கிறது கேரள அரசு? அப்போது இதைவிட நான்கு மடங்கு தண்ணீர் வருமே, வண்டிப் பெரியாறு அப்போது மூழ்காதா? ஆக, இந்த HFL அளவு என்பது ஒரு மாறாத அளவு அல்ல. ஒவ்வொரு வெள்ளத்தையும் வைத்து அந்த அளவை மாற்ற வேண்டும்.
C. தவிர, வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாற்றின் நீர்தான் காரணம் என்கிறார் ஹிமான்ஷு. ஆகஸ்ட் 15 இரவில் வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இல்லை. ஆனால், கடந்த ஜூலை 18ஆம் வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டு பெரும், உடமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. (https://timesofindia.indiatimes.com/…/articles…/65035962.cms ) அன்றைய தினம் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 127.5 அடி. அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பே இல்லை. அன்றைக்கு எப்படி வண்டிப் பெரியாறில் வெள்ளம் வந்தது? முல்லைப் பெரியாறு அணையின் நீரைத் தாண்டியும் வண்டிப் பெரியாறுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உண்டு என்பதுதான் இதற்குக் காரணம்.
3. சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் இணைய தளத்தில் 867.41 அடிதான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே அதுதான் 142 அடி என மீண்டும் சொல்கிறார் ஹிமான்ஷு. ‘நண்பர்களிடம் கேட்டேன். அவர்களிடமும் தகவல் இல்லை’ என்கிறார்.
தகவலைப் பெற எளிய வழிகள் இருக்கின்றன. ஒன்று, தமிழகத்தில் உள்ள Dam Safety Directorateல் கேட்கலாம். அல்லது முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் உறைவிடப் பொறியாளர்களைக் கேட்கலாம். அவர்கள் அடுத்த நிமிடமே தந்துவிடுவார்கள். Mean Sea levelல் இருந்து 867.41 என்பது 136 அடிதான். அதிலிருந்து ஐந்து அடி கூடினால் 145 அடி வருமே தவிர, 147 அல்ல. ஆக ஆகஸ்ட் 15ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 142.3 அடிதான்.
4. இன்னொரு கருத்தையும் சொல்கிறார் ஹிமான்ஷு. பெரும்பாலான அணைகளில் உயர்ந்தபட்ச அளவைவிட கூடுதலாக 5-6 அடி அளவுக்கு நீரை நிறுத்த முடியும். அப்படியிருக்கையில் முல்லைப் பெரியாறில் அன்றைய தினம் ஏன் 147 அடியாக இருக்க முடியாது என்று கேட்கிறார். சரியான கேள்விதான். முல்லைப் பெரியாறு அணையில் அப்படிச் செய்ய வேண்டுமெனால், அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி வருமளவுக்கு ஷட்டர்களை இறக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் 156 அடிக்கு தண்ணீரை நிறுத்த முடியும்.
தற்போது அங்கு 142 அடி அளவுக்கே ஷட்டர்கள் இறக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டரைத் தாண்டி வழிந்துவிடும். இப்போது ஒரு கேள்வி வரலாம். அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி அணையின் நீர்மட்டம் அதிகபட்ச அளவான 142 என்ற அளவைத் தாண்டி, 142.3 என்ற அளவுக்கு வந்ததே, அது எப்படி எனக் கேட்கலாம்.
தண்ணீர் ஷட்டரைத் தாண்டி வழியும்போது ஒரு உயரம் இருக்குமல்லவா, அதுதான் அந்த 0.3 அடி அளவு.
சரி, நான்தான் Tamil enthusiast; எனக்குத்தான் விவரம் தெரியாது. கேரளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 16 அன்று 141.6 அடிதான் நீர் மட்டம் என்கிறதே, அவர்களுமா அப்படி இருப்பார்கள்?
எந்த இடத்தில் எதை சொல்வது என்று தெரிய வேண்டாமா? பறக்கும் விமானத்தில் அப்படி சத்தம் போடலாமா?
மற்ற கட்சித் தலைவர்களை நோக்கி இப்படி சொல்லிவிட முடியுமா?
– என இதில் கலர் கலராக தொழில்நுட்பக் காரணங்களை கண்டுபிடித்து அலசுவோர் பலரையும் பார்க்கிறோம்.
தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்ஷன் என்று சிந்திப்பவர்கள்
இத்தகைய சிந்தனை கொண்டவர்கள் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த தடையையும் தாண்டப் போவது இல்லை. அவர்கள், தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்ஷன் என்று சிந்திப்பவர்கள். அத்தகைய காரியவாதிகளுக்கு சோபியாவின் சுயமரியாதை மிக்க முழக்கத்தின் உணர்ச்சியை புரிந்துகொள்ள இயலாது.
தான் வாழ்ந்த மண்ணை நஞ்சாக்கி, பல்லாயிரம் மக்களை நோயாளிகளாக மாற்றி, குழந்தைகளுக்குக் கூட புற்றுநோயை கொண்டுவரும் ஸ்டெர்லைட் என்ற கொடிய ஆலையின் நேரடி சாட்சியம், சோபியா. கனடாவில் படித்துக் கொண்டிருந்த போதிலும், அவரது மனம் தூத்துக்குடியின் ஒவ்வோர் அசைவோடும் இணைந்திருந்தது என்பதை அவர் எழுதியுள்ள பதிவுகளும், கட்டுரைகளும் சொல்கின்றன. மே 22-ம் தேதி மஞ்சள் சட்டை அணிந்த தமிழக காவல்துறையின் கூலிப்படை, போராடிய மக்களைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்திய காட்சிகளைக் கண்டு நமக்கு மனம் கொதித்ததுபோல, சோபியாவும் ஆத்திரம் கொண்டார்.
ஒரு நாளோடு முடியவில்லை… அடுத்தடுத்த நாட்களும் வீதி வீதியாக, வீடு வீடாக விரட்டிச்சென்று மக்களை நரவேட்டையாடிய, இளைஞர்களை இழுத்துப்போட்டு அடித்துக்கொலை செய்த இந்த காவல்துறையை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் யாராலும் மறக்க இயலாது. அப்படி இருக்கும்போது தன் சொந்த ஊரின் மீது நீங்கா நேசம் கொண்ட, தன் மண்ணின் மக்கள் மீது காதல் கொண்ட சோபியாவின் மனதில் அந்த துப்பாக்கி சூடும், போலீஸின் அடாவடி வன்முறைகளும் எத்தகைய ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. அதே துயருடன் அவர் கனடாவில் இருந்து சென்னை வந்திறங்கி, தூத்துக்குடி விமானத்தில் ஏறுகிறார். அங்கே தமிழிசை சவுந்தர்ராஜனைப் பார்க்கிறார்.
தமிழிசை யார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை இந்த கணம் வரை நியாயப்படுத்தி வரும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை பின்னின்று இயக்கும் ஒரு கட்சியின் தலைவர். அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது சோபியாவின் மனதில் ஏற்பட்ட கொந்தளிப்பு என்பது மிக இயல்பானது. தனது சொந்தங்களைக் கொலை செய்த ஒரு கொலைகாரனை கண்ணெதிரே காண்கையில் உருவாகும் மனக் கொந்தளிப்பு அது. மனித மனதின் ஆதாரமான நீதியுணர்ச்சி. அந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தினால் விளைவுகள் என்னவாகும் என்று அவர் கணக்கு போடவில்லை. மாறாக கணக்கு போட்டவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.
தமிழிசையை கதறவிட்ட சோபியா
தான் சார்ந்த ஒரு கட்சியை பாசிச கட்சி என்று தன் கண்ணெதிரே ஒரு பெண் முழக்கமிடுகிறாள். அதுவும், கனவான்கள் பயணிக்கிற விமானப் பயணத்தில், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற சத்தம், தமிழிசைக்கு எப்படி துளியும் எதிர்பாராத ஒன்றாகவும், திடுக்கிட வைத்த துர்கனவாகவும் இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகாயத்தில் ஒலித்த அந்த போர்க்குரலை அங்கேயே எதிர்கொள்ளும் திராணி தமிழிசைக்கு இல்லாமல் போனது ஏன்? ’சோபியாவுக்கு இங்கிதம் இல்லை; தமிழிசைக்கு சபை நாகரிகம் தெரிந்துள்ளது’ என இதை புரிந்துகொள்வதா?
பார்ப்பனியத்தின் பெயரால் இந்தியாவை வதைத்து வரும் ஒரு பாசிசக் கட்சி தலைவரிடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பதே அநாகரீகம். எனினும் அந்த அநாகரீகங்களையே நாகரீகம் என நம்பும் சில அப்பாவிகளுக்காக தமிழைசை ‘நாகரீகமாக’ நடந்து கொண்டால் எப்படி இருக்குமென கற்பனை செய்து பார்ப்போம்.
அதன்படி சோபியாவை அழைத்து, “உங்கள் கோபத்துக்கு என்ன காரணம்?” என்று விசாரித்திருக்கலாம். பா.ஜ.க. செய்து கொண்டிருப்பது பாசிச ஆட்சி இல்லை என்று அவர் நம்புவதை விளக்கியிருக்கலாம். எதையும் செய்யவில்லை என்பதுடன், விமானம் தரையிரங்கும் வரையிலும் காத்திருந்து தன் கட்சிக்காரர்கள் நிற்கும் இடத்தை வந்தடைந்தவுடன் கோபத்தை வெளிப்படுத்துவது ஏன்? ஏனெனில் சோபியாவுக்கு வந்த கோபம் மிக இயல்பானது. தமிழிசைக்கு வந்த கோபம் செயற்கையானது; காரியவாதமானது. அடியாட்களின் பலத்தில் கொலேச்சும் ஒரு சர்வாதிகாரியுடையது.
ஒருவேளை விமானத்துக்கு உள்ளேயே தமிழிசை தனது கூச்சலை நிகழ்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ’உங்க அளவுக்கு அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை மேடம்’ என்ற பெண் காவலரின் உள்குத்தையும், ‘அறிவெல்லாம் இருக்கு. அதனாலதான் பா.ஜ.க. ஆட்சி ஒழிகன்னு கத்துது’ என்ற தமிழிசையின் சொந்த உள்குத்தையும் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்போம் என்பதைத் தவிர ஆகாயத்தில் உண்மையிலேயே என்ன நடந்திருக்கும்?
இது ஒரு சுவாரஸ்யமான யூகம்தான். ஆனால் ஒருவேளை அப்படி நடந்திருந்தால் பறக்கும் விமானத்துக்குள் சோபியாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒரு சிலவேனும் எழுந்திருக்கும் என்பது நிச்சயம். அவரது முழக்கத்துக்கு விமானத்தின் இதர பயணிகளில் ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்ற பயணிகளின் அடியாழத்தில் புதைந்துகிடந்த பேசாக்குரலின் சாட்சியாகவே சோபியா ஓங்கி ஒலித்திருக்கிறார்.
உண்மையில் சோபியா செய்ததும், அதற்கு பொதுவெளியில் கிடைக்கும் ஆதரவும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிலைமைகளில் மட்டுமே சாத்தியம். அறிவுஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்பதைத் தாண்டி, தமிழ் சிவில் சமூகம் சோபியாவின் பக்கம் நிற்கிறது. அவரது உணர்ச்சியுடன் தன்னை மிக இயல்பாக ஐக்கியப்படுத்திக்கொள்கிறது. ஆனால் இது வட இந்தியாவில் சாத்தியம் இல்லை. சோபியா ஒரு வட இந்தியராக இருந்திருந்தால் இந்நேரம் அவர் லூயிஸ் சோபியா என்ற பெயருக்காகவே மத அடையாளம் முன்னிருத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டிருப்பார்.
சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற நான்கு சொற்கள், உறைந்து கிடந்த தமிழ் பொது மனநிலைக்கு ஓர் உத்வேகத்தை தந்துள்ளது. தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்… சமூக ஊடகங்களில் கூட அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மை மட்டுப்பட்டிருந்தது. அந்த மடையை சோபியா திறந்துவிட்டிருக்கிறார்.
என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை – சோபியாவின் தந்தை
தன் செயலுக்கு மன்னிப்புத் தெரிவிக்க சோபியா மறுத்திருக்கிறார். “நான் வெளிப்படுத்தியது இயல்பான பேச்சுரிமை” என்கிறார் அவர். “என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஒரேயொரு அவச்சொல்லை கூட பேசவில்லை” என்கிறார் சோபியாவின் தந்தையும் மருத்துவருமான கிருஷ்ணசாமி. ஆனால், இந்த அரசு சோபியாவை எளிதில் விட்டுவிடாது. கனடாவில் மீதமிருக்கும் அவரது ஆய்வுப் படிப்பை தொடர்வதற்கு தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் இடையூறைத் தரும். அதை மோடியின் ஒன்னாம் நம்பர் அடிமையானஎடப்பாடி மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வார். இதன் முதல் கட்டமாக சோபியாவின் பாஸ்போட்டை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே சமூக ஊடகங்களின் ஒருநாள் கொண்டாட்டமாக சோபியா செய்தி முடிந்துவிடாமல் அவருக்காக நாம் தொடர்ந்து பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் தொட்டதெல்லாம் பூம்ராங் ஆக மாறி பா.ஜ.க.வை திருப்பித் தாக்கியபோதிலும், தொடர்ந்து எதிர்மறை செய்திகளில் அடிபடுவது குறித்து அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. ஒரு வார்டு தேர்தலில் கூட வெற்றிபெற இயலாது என்று தெரிந்துவிட்ட பின்பு, தேர்தலுக்கு அப்பாற்பட்ட சமூக உடைப்பை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இறுகிப்போன இந்து மதவாத உணர்ச்சியை இன்னும் ஒருபடி வெறியேற்றவும், தேசியவெறியின் பெயரால் நடுத்தர வர்க்க உணர்வுகளை திசைதிருப்பவும், இவற்றுக்கு முட்டுக்கொடுக்கும் லிபரல்வாதிகளை ஊடகங்களில் உலவவிடவும் இதுபோன்ற தருணங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
நாம் இவர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்தும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற முழக்கத்தை சொல்ல வேண்டியது தமிழிசைக்கு எதிராக மட்டுமல்ல. அது பொன்னாருக்கு எதிராக, எச்.ராஜாவுக்கு எதிராக, கே.டி.ராகவனுக்கு எதிராக, நாராயணன் திருப்பதிக்கு எதிராக, பத்திரிகையாளர் மாலனுக்கு எதிராக, குருமூர்த்திக்கு எதிராக, எஸ்.வி.சேகருக்கு எதிராக… இன்னும் பலருக்கு எதிராக எழுப்பப்பட வேண்டிய முழக்கம்.
“சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது“ என்று கூறி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
செப்டம்பர் 8 திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழமுடியவில்லை இந்த நிலை நீடிக்கலாமா? என மாநாடு நடத்த திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் போலீசார் விசித்திரமான காரணங்களை சொல்லி அனுமதி மறுத்துள்ளனர்.
விவசாயியை வாழவிடு – தஞ்சையில் நடைபெற்ற மாநாடு
மோடி அரசிற்கு எதிராக எழுதினால், பேசினால், சிந்தித்தால், செயல்பட்டால் அவர்கள் தீவிரவாதி என முத்திரை குத்தி தாக்குதல் நடத்தும் இன்றைய பா.ஜ.க. அரசின் பாசிச நடவடிக்கை பரவிவரும் சூழலில், போராடும் மக்களை சுட்டுக்கொல்வதும், தேசதுரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதும் தவறில்லை என ஆட்சியாளர்கள் பேசிவரும் நிலையில் “அடக்குமுறைதான் ஜனநாயகமா?“ என்ற தலைப்பில் நடத்தப்படவிருக்கிறது இந்த மாநாடு. இதில், நடைபெறும் மாநாட்டில் தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ. எம்.எல்., த.தே.வி.இ. மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என பல தரப்பினர் பங்கேற்கவிருக்கின்றனர்.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முறையாக விண்ணப்பித்த பின்னர் மொத்தம் 19 கேள்விகள் அடங்கிய ஒரு கடிதத்தை அனுப்பியது திருச்சி மாநகர காவல்துறை.
“அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்பதன் விளக்கம் என்ன? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை என்பதன் விளக்கம் என்ன? மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களின் நோக்கம், மைய கருத்துக்கள் என்ன? எவ்வளவு நபர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் அதில் ஆண்கள் பெண்கள் எத்தனை பேர்? என 19 கேள்விகள் கேட்டு திருச்சி மாநாகர போலீசார் கடிதம் கொடுத்தனர். இத்தைகய கேள்விகளைக் கேட்கும் அதிகாரம் போலீசுக்கு கிடையாது. இதற்கு எந்த சட்டத்திலும் இல்லை. இவ்வாறு கேட்பதே பேச்சுரிமை கருத்துரிமைக்கு எதிரானது என்ற ஆட்சேபணையுடன் காவல்துறையில் கடிதத்திற்கு பதில் எழுதி கொடுத்தோம்.
இதற்கு முன்னரும், மூடு டாஸ்மாக்கை, விவசாயியை வாழவிடு மாநாடுகள் மற்றும் பல பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்னால், போலீசாரால் “என்ன பேச போகிறீர்கள், பாடல் வரிகள் என்ன? மாநாட்டில் பங்கேற்பவர்களின் முகவரி செல் நம்பர் என்ன “ என்பன போன்ற மோசமான கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிக் கேள்வி கேட்பது, பின்னர் அனுமதி மறுப்பது, பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று நாங்கள் கூட்டம் நடத்துவது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி பெற்றுதான் மக்கள் அதிகாரம் பல கூட்டங்களை நடத்தி வருகிறது. எந்த நீதிபதியும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் இப்படிபட்ட கேள்விகள் கேட்கிறீர்கள் என காவல்துறையிடம் கேள்வி எழுப்பியதில்லை. கண்டித்ததுமில்லை.
செப்டம்பர் 8 திருச்சி மாநாட்டிற்கு போலீசார் கொடுத்த அனுமதி மறுப்பு உத்திரவில் காவல்துறை சொல்லியிருக்கும் காரணங்களில் முக்கியமானவை கீழ்வருமாறு –
1 கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான முழுமையான பதில்கள் தங்களால் அளிக்கப்படவில்லை.
2 உயர்நீதிமன்ற உத்திரவு பெற்று நடத்தப்பட்ட திருச்சி உறையூர் பொதுக்கூட்டத்தில் அத்துமீறி பேசி உள்ளதாக ம.க.இ.க., வி.சி.க., தி.வி.க., த.வி.ச. ஆகிய அமைப்புகளை சேர்ந்த எட்டு பேர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
3 திருச்சி மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை போஸ்டராக ஒட்டி உள்ளீர்கள் என ஒருங்கிணைப்பாளர் செழியன் மீது வழக்கு உள்ளது.
4 தங்கள் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது அரசு உழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக திருச்சியில் 4 வழக்குகள் உள்ளது.
5 மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் , புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, சென்னை என பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.
6 திருச்சி ம.க.இ.க. ஜீவா மீது ஒரு போஸ்டர் ஒட்டியதற்காக ஒன்பது ஸ்டேசன்களில் மாநகரின் அழகை சீர்குலைத்ததாக வழக்கு உள்ளது.
7 தங்கள் அமைப்பின் செயல்பாடு நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசின் திட்டங்களை செயல்படவிடாமல் தடுப்பதும் மக்களிடம் தவறான கருத்துகளை பரப்பும் செயல்பாடாகவும் தெரிகிறது.
8 பல வழக்குகளில் தங்கள் அமைப்பினர், குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில்தாங்கள் கோரி உள்ள இந்த அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்ற சிறப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தால் அது தாங்கள் மேலும் ஒரு நிகழ்வில் சட்ட மீறல் நடவடிக்கையில் ஈடுபட வழிவகுப்பதாக அமைந்து விடுமோ என்று தோன்றுகிறது. எனவே தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே சிறப்பு மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
இவைதான் அனுமதி மறுப்புக்கான காரணங்களாம்.
ஜனநாயக உரிமையும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது என்பதை இதைவிட பச்சையாகவும், வெளிப்படையாகவும் சொல்லமுடியுமா?
போலீசாரின் இந்த உத்திரவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வேறு தேதியில் மாநாட்டை நடத்துவோம்.
மேலும் கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் எந்த ஊரிலும் பொதுக்கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு போலீசார் அனுமதி தருவதில்லை. அரங்குகளில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை. ஆனால் மண்டப உரிமையாளரை மிரட்டி கூட்டம் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்.
கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.