Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 432

தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் !

மீப காலமாக நாடு முழுவதும் தண்ணீரை ஏ.டி.எம் மூலம் விற்க முயற்சிக்கும்  வேலையும், மேலும் மழை நீரைகூட சேமிக்க தடை வரும் சூழலும் நெருங்கி வருகிற நேரத்தில், தற்போது அதற்கான திட்டத்தை மறைமுகமாக  நிறைவேற்ற வருகின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் இயங்கி வருகிறது அசோக் லேலண்டு கம்பெனி. இது பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் போன்ற மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அசோக் லேலண்டு கம்பெனி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் கொடுத்து சேவை போல் செய்து வந்தது. இதனை அமல்படுத்தியதன் மூலம் மக்களின் நலனுக்காக தான் இருப்பதாக காட்டிக்கொண்டது அசோக் லேலண்டு. ஆனால் தான் ஒரு பசு தோல் போர்த்திய புலிதான் என்பதை தற்போது வெளிப்படுத்தி அம்பலபட்டு போனது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ”பள்ளிக்கான பாதை” என்ற சேவையை அறிமுகப்படுத்தும் அசோக் லேலண்ட் அதிகாரிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்கள் அதிகமாக நிறைந்த பகுதி, தேன்கனி கோட்டை வட்டத்தை சார்ந்த மலை கிராமங்களாகும். இங்கு மழை காலங்களில் சிறப்பாக விவசாயம் நடக்கும், குறைந்த அளவு தண்ணீர் இருந்தால்கூட காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நாடு முழுவதும் சென்றடைகிறது. எப்போதும் செல்வ செழிப்பாக இருக்கும் இந்த மலைப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறுஞ்ச முயற்சித்து வருகிறது அசோக் லேலண்டு. அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மலை கிராமங்களுக்கு புளோரைடு இல்லாமல் நீரை உறுஞ்சி சுத்திகரிப்பு நீரை வழங்குகிறோம் என்று கிராமங்களில் ஆள் பிடித்தனர். இதற்காக ரூ. 250 பெற்று உறுப்பினர் கூட சேர்த்துள்ளனர்.

அதன்பிறகு நாட்றாம்பாளையம் பகுதியில் இது குறித்து கடந்த 13/10/2018 அன்று அனைத்து கிராம மக்களையும் இனைத்து ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உள்ளூர் புரோக்கர்களை கொண்டு சுமார் 100 பேரை திரட்டி கூட்டம் தொடங்கியது. இதில் டெல்லியில் இருந்து  அசோக் லேலண்டு கம்பெனி மூலமாக ஒரு பெண் அவருடன் 4 ஆண்கள் என சொகுசு காரில் வந்திறங்கினர். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் போல் காட்டிக்கொண்டனர். ஆனால் அவர்கள் விளக்கிய பிறகே அசோக் லேலண்டு கம்பெனியின் அயோக்கியத்தனம் வெளிப்பட்டது.

படிக்க:
அசோக் லேலாண்டு என்பது நவீன நரகம்
அசோக் லேலாண்டில் தோழர். பரசுராமன் பணி இடைநீக்கம் !

உங்கள் கிராமம் மூலம் 5 ஏக்கர் நிலம் கொடுங்கள் நாங்கள் கம்பெனி சார்பாக நிலத்தடி நீரை எடுத்து புளோரைடு இல்லாமல் தண்ணீர் கொடுக்கிறோம் என்றனர். இதனால் முதலில் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் மக்கள். அடுத்த கணமே இந்த சுத்தமான தண்ணீரை நீங்கள் பெற ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏ.டி.எம். வைக்கிறோம். அதில் நீங்கள் லிட்டர் 20 பைசா வீதம் காசு கொடுத்து பிடிக்க வேண்டும். முறையாக தண்ணீரை நாங்கள் வழங்குகிறோம் என்றவுடன் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ”சுத்தமான தண்ணீர் வேண்டுமானால் காசு கொடுத்துதானே ஆக வேண்டும்” என்றனர்.

இந்த கூட்டத்தில் பங்குபெற்ற மக்கள் அதிகாரம் தோழர்கள், நாங்கள் நிலம் தரவேண்டும், நீங்கள் எங்களுக்கு குடிநீரை காசுக்கு விற்பனை செய்வீர்களா? என்று கேட்டதற்கு ”சுத்தமான நீர் கொடுப்பது நல்லதுதானே” என்றனர். ”தண்ணீரை விற்பது எப்படி நல்லதாகும்?. தண்ணீரை காசுக்கு விற்று கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூட்டத்தில் அம்பலப்படுத்தி பேசினர்.

அடிக்கும் கொள்ளையை மறைக்க சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு உதவுவது போன்று மக்களைக் கொள்ளையடிக்க படையெடுக்கும் கார்ப்பரேட்டுகள் .

கோவையில் வெளிநாட்டு கம்பெனிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய அனுமதி கொடுத்தது போல் மலை கிராம நீரை உறுஞ்சி கொள்ளையடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்பதை அம்பலப்படுத்தியவுடன், உங்களுக்கு வேண்டாம் என்றால் விடுங்கள் மற்றவர்கள் கருத்து சொல்லுங்கள் என நைச்சியமாக அணுகினர். ”சேவை என்றால் இலவசமாகத்தான் செய்ய வேண்டும் ஏன் காசுக்கு விற்பனை செய்யறீங்க? அப்ப உங்க நோக்கம் என்னவென்று விளக்குங்கள்” என்றவுடன் திருதிருவென அங்குமிங்கும் பார்த்தனர்.

”தண்ணீரை காசுக்கு ஏன் விற்க வேண்டும்? என்பது தொடர்பான எந்த கேள்விக்கும் பதிலே வரவில்லை. உங்களை ஊருக்குள் அனுமதித்ததே தவறு உடனே வெளியேறுங்கள் இல்லையெனில் பிரச்சினை பெரியதாகும் என்று எச்சரித்தவுடன் கூட்டத்தை கலைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். ”மக்களுக்கு சுகாதாரமான குடிநீர்” என்ற ஆசை வார்த்தை கூறி நமது வளங்களை கொள்ளையடித்து நமது நீரை உறிஞ்சி நாடு முழுவதும் விற்று கொள்ளையடிப்பதற்கான முயற்சி இது என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள் தனது ஆலையில் பணியாற்றும் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைக் காக்க சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்களை பழிவாங்கியிருக்கின்றன; வேலையை விட்டுத் துரத்தியிருக்கின்றன. இவ்வாறு, ஆலைத் தொழிலாளர்களிடமிருந்து சுரண்டி சேர்த்த பணத்திலிருந்து சிறு தொகையை ”கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) ” என்ற பெயரில் ‘சமூக சேவை’ யாற்றுவதாகக் கணக்குக் காட்டி மக்களைச் சுரண்டுகின்றன. கொள்ளையடிக்கும் பணத்திலிருந்து அற்பக் காசை போட்டு ‘சேவை’  என்ற பெயரில் அதை மற்றுமோர் முதலீடாகத்தான் பார்க்கின்றன என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தருமபுரி மண்டலம்,
தொடர்புக்கு : 80565 00891.

தாய் பாகம் 5 : இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 5

தூரத்து உறவினர்களாக, நெருங்கியவர்களாக மீண்டும் அவர்கள் இருவரும் தங்கள் மோன வாழ்க்கையையே நடத்தி வந்தார்கள்.

வாரத்தின் இடையில் வந்த ஒரு விழா நாளன்று, பாவெல் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் சமயத்தில் தாயிடம் சொன்னான்.

”சனிக்கிழமையன்று நகரிலிருந்து சிலர் என்னைப் பார்க்க வருவார்கள்” என்றான்.

“நகரிலிருந்தா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுத் திடீரென அவள் தேம்பினாள்.

”எதற்கென்று அழறே?” என்று பதறிப் போய்க் கேட்டான் பாவெல்.

பயம் தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது. நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே. அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆடையால் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“தெரியாது. சும்மா …”

”பயமா இருக்கா?”

“ஆமாம்” என்று அவள் ஒப்புக்கொண்டாள்.

அவளருகே குனிந்து அவளது தந்தை பேசுகிற மாதிரி கரகரத்த குரலில் அவன் சொன்னான்.

“பயம் தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது. நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே. அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.”

”கோபப்பட்டுக் கொள்ளாதே” என்று உவகையற்றுப் புலம்பினாள் அவள். ‘நான் எப்படிப் பயப்படாமல் இருப்பது? என் வாழ்க்கை பூராவுமே நான் பயந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆத்மாவே பயத்திலேயே தான் வளர்ந்து வந்திருக்கிறது’.

‘என்னை மன்னித்துவிடு. இதைத்தவிர வேறு வழி கிடையாது’ என்று மெதுவாகவும், மென்மையாகவும் சொன்னான் அவன்.

பிறகு அவன் போய்விட்டான்.

மூன்று நாட்களாக அவளது இதயம் துடியாய்த் துடித்தது. தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்……

சனிக்கிழமையன்று மாலையில் பாவெல் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு வந்தான். முகம் கை கழுவினான். உடைகளை மாற்றினான். உடனே வெளியே கிளம்பிச் செல்லும் பொழுது சொன்னான்:

“யாராவது வந்தால், நான் இதோ வந்துவிடுவேன் என்று சொல்’ என்று தாயின் முகத்தைப் பார்க்காமலே சொன்னான் அவன். “நீ தயவு செய்து பயப்படாமல் இரு”.

அவள் சோர்ந்துப் போய் ஒரு பெஞ்சில் சரிந்து தொப்பென்று உட்கார்ந்தாள். பாவெல் அவளை உம்மென்று பார்த்தான்.

“வேண்டுமானால், நீ வேறு எங்கேயாவது போய் இரு” என்று யோசனை கூறினான் அவன்.

அவனது பேச்சு அவளைப் புண்படுத்திவிட்டது.

”இல்லை . எதற்காகப் போக வேண்டும்?”

அது நவம்பர் மாதத்தின் இறுதிக்காலம். பனிபடிந்த பூமியில் ஈரமற்ற வெண்பனி லேசாகப் பகல் முழுதும் பெய்து பரவியிருந்தது. நடந்து செல்கின்ற தன் மகனது காலடியில் அப்பனி நெறுநெறுப்பதை அவளால் கேட்க முடிந்தது. இருட்படலம் ஜன்னல் கட்டங்களின் மீது இறங்கித் தொங்கி வேண்டா வெறுப்பாக நிலைத்து நின்றது. அவள் பெஞ்சுப் பலகையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தாள். வாசலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

அதிசயமான ஆடையணிகளோடு தீய மனிதர்கள் நாலா புறத்திலிருந்து இருளினூடே ஊர்ந்து ஊர்ந்து வருவது போல அவளுக்கு ஒரு பிரமை தட்டியது. அரவமில்லாத கள்ளத்தனமாய் நடந்து வரும் காலடியோசை தன் வீட்டைச் சூழ்ந்து நெருங்கிவிட்டதாகவும், சுவரில் விரல்கள் தட்டுத்தடுமாறித் தடவுவதாகவும் அவள் உணர்ந்தாள்.

யாரோ சீட்டியடித்து ராகம் இழுப்பது அவளுக்குக் கேட்டது. அந்த சீட்டிக்குரல் அமைதியினூடே மெல்லியதாகப் பாய்ந்து வந்தது. அது சோகமும், இனிமையும் கொண்டதாகப் பாழ் இருளுக்குள் எதையோ தேடித் தேடித் திரிவதாகப் பட்டது. வரவர அந்தக் குரல் நெருங்கிவந்து. கடைசியில் அவளது வீட்டு ஜன்னலைக் கடந்து சுவரின் மரப்பலகையையும் துளைத்து ஊடுருவி உள்ளே நுழைந்துவிட்டதாகத் தோன்றியது.

பலத்த காலடியோசை வாசற்புறத்தில் கேட்டது. தாய் திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்து நெளிந்தன.

கதவு திறந்தது. பெரிய கம்பளிக் குல்லாய் தரித்த ஒரு தலை முதலில் தெரிந்தது. அதன்பின் அந்தச் சின்ன வாசல் வழியாக ஒரு உயரமான ஒல்லியான உடம்பு குனிந்து நுழைந்தது. உள்ளே வந்தபின் அந்த உருவம் நிமிர்ந்து நின்று தனது வலது கையை உயர்த்தி மரியாதை செலுத்திற்று. பிறகு பெருமூச்சு விட்டு, அடித்தொண்டையில் பேசியது.

”வணக்கம்’.

தாய் பதில் பேசவில்லை ; வணங்கமட்டும் செய்தாள்.

”பாவெல் இல்லையா?’

வந்தவன் மெதுவாகத் தனது கோட்டை அகற்றினான். ஒரு காலை லேசாக உயர்த்தி அதில் படிந்திருந்த பனித்துளிகளைக் குல்லாயினால் துடைத்துவிட்டான். மறு காலையும் உயர்த்தி இது மாதிரியே செய்தான். பிறகு தொப்பியைக் கழற்றி ஒரு மூலையில் விட்டெறிந்தான். அறைக்குள் உலாவ ஆரம்பித்தான். ஒரு நாற்காலியை, அதற்குத் தன்னைத் தாங்கச் சக்தியுண்டா என்று பார்ப்பது போல், அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, பின்னர் அதில் உட்கார்ந்தான். வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு கொட்டாவி விட்டான். அவனது தலை அழகாகவும் உருண்டையாகவும் கட்டையாகவும் வெட்டிவிடப்பட்ட கிராப்புடனும் இருந்தது. அவனது முகம் மழுங்கச் சவரம் செய்யப்பட்டு கீழ் தொங்கிப் பார்க்கும் முனைகளைக் கொண்ட மீசையுடனிருந்தது. துருத்தி நிற்கும் தனது சாம்பல் நிற அகலக் கண்களால் அவன் அந்த அறையைக் கவனத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தான்.

படிக்க:
எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

“இது என்ன சொந்தக் குடிசையா? இல்லை. வாடகை இடமா? என்று கால் மேல் கால் போட்டு, நாற்காலியை முன்னும், பின்னும் ஆட்டிக்கொண்டே கேட்டான் அவன்.

“வாடகை தான் கொடுக்கிறோம்”  என்று அவனுக்கு எதிராக இருந்த தாய் சொன்னாள்.

“இடம் ஒன்றும் விசாலமில்லை” என்றான் அவன்.

“பாஷா சீக்கிரமே வந்துவிடுவான். கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்’

”ஏற்கெனவே காத்துக்கொண்டுதானே இருக்கிறேன்’ என்றான் அந்த நெட்டை ஆசாமி.

‘நான் எப்படிப் பயப்படாமல் இருப்பது? என் வாழ்க்கை பூராவுமே நான் பயந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆத்மாவே பயத்திலேயே தான் வளர்ந்து வந்திருக்கிறது’.

அவனது அமைதி, மிருதுவான குரல், எளிய முகம் முதலியவற்றைக் கண்டு அவளுக்கு ஓரளவு தெம்பு வந்தது. அவனது பார்வை கள்ளம் கபடமற்றதாகவும் நட்புரிமை கொண்டதாகவும் இருந்தது. தெளிந்த கண்களின் ஆழத்திலே ஆனந்தச் சுடர்கள் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. நெடிய கால்களும் சிறிதே சாய்ந்திருக்கும் கோலமும் கொண்ட அவனது முகத்தோற்றத்திலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பது போலத் தோன்றியது. அவன் ஒரு நீல நிறச் சட்டையும், பூட்சுகளுக்கும் நுழைக்கப்பட்டிருந்த அகன்ற நுனிப்பாகம் கொண்ட கால்சராயும் அணிந்திருந்தான். அவன் யார் எங்கிருந்து வருகிறான். தன் மகனை அவனுக்கு ரொம்ப நாட்களாகவே தெரியுமா என்பனவற்றையெல்லாம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் திடீரென அவனே தன்னை முன்னே தள்ளிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“நெற்றியிலே என்ன இத்தனை பெரிய வடு? யார் அடித்தார்கள் அம்மா (1) “.

அவனது குரல் இனிமையாயிருந்தது. கண்கள் கூடச் சிரிப்பது போலக் களிதுள்ளிக்கொண்டிருந்தன. ஆனால் அவளோ அந்தக் கேள்வியால் புண்பட்டுப் போனாள்.

“உங்களுக்கு எதற்கப்பா அந்தக் கவலை எல்லாம்?” என்று உதடுகளை இறுக்கிக்கொண்டு கடுப்பு கலந்த மரியாதையுடன் கேட்டாள் அவள்.

“இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே அவன் அவள் பக்கமாக இன்னும் குனிந்து கொண்டு சொன்னான். நான் எதற்காகக் கேட்டேன் என்றால் எனது வளர்ப்புத் தாயின் நெற்றியிலும் இதைப்போலவே ஒரு வடு இருந்தது. அவள் யார் கூட வாழ்ந்தாளோ அந்த மனுஷன் கொடுத்தது அது. அவன் செருப்புத் தைக்கிறவன். அவளை ஒரு இரும்புத் துண்டால் அவன் அடித்துவிட்டான். அவள் துணி வெளுக்கிறவள். அவனோ செருப்பு தைக்கிறவன். அவள் என்னைத் தன் மகனாக ஸ்வீகாரம் செய்து கொண்டபின் அவனை எங்கேயோ பிடித்திருக்கிறாள். அவளது தொலையாத துயரத்துக்கு கேட்க வேண்டுமா; அவனோ ஒரு விடாக் குடியன்; அவன் எப்படி அவளை அடிப்பான் தெரியுமா? அவன் அடிக்கிற அடியில், பயத்தால் என் தோல் விரிந்து பிய்வதாகத் தோன்றும்.

அவனது வெகுளித்தனமான பேச்சு தாயைச் செயலற்றவளாக்கியது. தான் அவனிடம் கடுப்பாகப் பேசியதற்கு பாவெல் தன்மீது கோபப்படுவானோ என்று அவன் பயந்தான்.

”நான் ஒன்றும் நிஜமாகக் கோபப்படவில்லை ” என்ற ஒரு குற்றப் புன்னகையுடன் சொன்னான் அவன். “ஆனால், நீங்கள் திடீரென்று என்னை இப்படிக் கேட்டுவிட்டீர்கள். எனக்கும் என்னைக் கட்டியவரால்தான் இந்தக் காயம் ஏற்பட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சரி நீங்கள் என்ன தாத்தாரியா (2) ?”

அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக சமையலறைக்குள் ஒரு இளம் பெண் வந்து சேர்ந்தாள். அவள் சின்னஞ் சிறுசாக, கள்ளங்கபடமற்ற முகத்தோடு இருந்தாள், அவள் தனது அடர்த்தியான வெளுத்த கூந்தலை முடித்து பின்னலிட்டிருந்தாள்.

அவன் தன் கால்களை ஆட்டிக்கொண்டே சிரித்தான். அந்தச் சிரிப்பால் அவனது காதுகள் கூட அசைவதுமாதிரி தோன்றியது. ஆனால் மறுகணமே அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

”இல்லை. நான் இன்னும் அப்படியாகவில்லை”

“ஆனால், உங்கள் பேச்சு ருஷிய பாஷை மாதிரியே ஒலிக்கவில்லை” அவன் சொன்ன ஹாஸ்யத்தை அனுபவித்தது. சிறு புன்னகை செய்து கொண்டே சொன்னான் அவன்.

”ஆமாம். ருஷ்ய பாஷையைவிட இது மேலானது” என்று உற்சாகத்தோடு சொன்னான் அந்த விருந்தாளி. “தான் ஒரு ஹஹோல்” (3) கானேவ் நகரப் பிறவி”.

“இங்கே வந்து ரொம்ப நாளாச்சோ?”

”நகரில் சுமார் ஒரு வருஷம் வாழ்ந்தேன். பிறகு ஒரு மாசத்துக்கு முன்னர்தான் உங்கள் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தேன். உங்களுடைய மகனும் வேறு சிலரும் இங்கு அருமையான தோழர்களாயிருக்கிறார்கள். எனவே இங்கேயே கொஞ்ச காலம் இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மீசையை இழுத்து விட்டுக்கொண்டான்.

அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிற்று. தன் மகனைப் பற்றி அவன் கூறிய நல்ல வார்த்தைகளுக்குப் பிரதியாக, தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

ஒரு கோப்பை தேநீர் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டாள்.

“அந்த ஆனந்தம் எனக்கு மட்டும்தானா?” என்று தன் தோளை ஒருதரம் குலுக்கிக்கொண்டே சொன்னான் அவன். “மற்றவர்களும் வரட்டும். அதுவரையில் பொறுத்திருக்கலாம். அப்புறம் நீங்கள் எங்கள் எங்லோருக்குமே தாராளமாகப் பரிமாறலாம்” அவனது பேச்சு மீண்டும் அவளது பயபீதியை நினைப்பூட்டிவிட்டது.

”மற்றவர்களும் இவனைப்போலவே இருந்துவிட்டால்!” என்று அவள் நினைத்தாள்.

மீண்டும் வாசல் புறத்தில் காலடியோசைகள் கேட்டன. கதவு அவசர அவசரமாக திறக்கப்பட்டது. மீண்டும் அவள் எழுந்து நின்றாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக சமையலறைக்குள் ஒரு இளம் பெண் வந்து சேர்ந்தாள். அவள் சின்னஞ் சிறுசாக, கள்ளங்கபடமற்ற முகத்தோடு இருந்தாள், அவள் தனது அடர்த்தியான வெளுத்த கூந்தலை முடித்து பின்னலிட்டிருந்தாள்.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

“நான் பிந்தி வந்து விட்டேனா? என்று அவள் மென்மையாகக் கேட்டாள்

“இல்லை. பிந்தவில்லை” என்று வாசற் புறமாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் அந்த ஹஹோல், ”நடந்தா வந்தீர்கள்?”

”பின்னே? நடந்துதான் வந்தேன். நீங்கள்தான் பாவெல் மிகாய்லவிச்சின் அம்மாவா? வணக்கம். என் பெயர் நதாஷா!”

”உங்கள் தந்தை வழிப் பெயர் என்ன?” என்றாள் தாய்.

”வசீலியவ்னா . உங்கள் பெயர்?”

‘பெலகேயா நீலவ்ன.”

”சரி. நாம் அறிமுகமாகிவிட்டோம்’.

”ஆமாம்” என்று ஆசுவாசமாகச் சுவாசித்துவிட்டு. அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே சொன்னாள் தாய்.

அந்தப் பெண்ணின் மேலுடைகளைக் கழற்றுவதற்கு உதவிக் கொண்டே கேட்டான் அந்த ஹஹோல். “குளிராயிருந்ததா?”

“வயல் வெளியில் வரும்போது மகா பயங்கரம்! அந்த ஊதைக் காற்று – அப்பப்பா!”

அவளது குரல் செழுமையும் தெளிவும் பெற்றிருந்தது. வாய் சிறியதாகவும், உதடுகள் பருத்ததாயும் இருந்தன. மொத்தத்தில் உடற்கட்டு உருண்டு திரண்டு புதுமையோடு இருந்தது. மேலுடையைக் களைந்த பிறகு அவள் தனது சிவந்த கன்னங்களை, குளிரால் நிறைந்த சின்னஞ்சிறு கரங்களால் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அதன் பின்னர் செருப்புக் குதிகள் தரையில் மோதி ஓசை செய்ய, அவள் அந்த அறைக்குள்ளே நடமாடிக் கொண்டிருந்தாள்.

”ரப்பர் ஜோடுகள் அணியக் காணோம்” என்று தாய் மனதுக்குள்ளாக நினைத்துக்கொண்டாள்.

”ஆம்’ என்று நடுங்கிக்கொண்டே இழுத்தாள் அந்த யுவதி. ”நான் எவ்வளவு தூரம் விறைத்துப் போனேன் என்பதை உங்களால் கற்பனைக் கூட பண்ண முடியாது!

நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை, உங்களுக்கு உலக ஞானம் போதாது. உலகத்துக்குள் ஒரு மனிதனைக் கொண்டு வருவதே சிரமம். அவனை நல்லவனாக வாழச் செய்வது அதை விடச் சிரமம்!

”இதோ. உனக்குக் கொஞ்சம் தேநீர் போடுகிறேன்” என்று தாய் சமையலறைக்கு விரைந்தாள். இந்தப் பெண் தனக்கு வெகுகாலமாகத் தெரிந்தவள் போலவும் எனவே தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் அவளை நேசிப்பது போலவும் தாய்க்குத் தோன்றியது. அடுத்த அறையில் நடந்து கொண்டிருந்த சம்பாஷணையைக் கேட்கும்போது அவள் தன்னுள் புன்னகை செய்து கொண்டாள்.

”நஹோத்கா (4)! உங்களுக்கு என்ன கவலை” என்று கேட்டாள் அந்தப் பெண்.

”பெரிய கவலை ஒன்றுமில்லை” என்று அமைதியுடன் பதில் சொன்னான். அந்த ஹஹோல். இந்தப் பெரியம்மாவுக்கு நல்ல கண்கள் இருக்கின்றன. எனது அம்மாவுக்கும் இந்த மாதிரித்தான் கண்கள் இருந்திருக்குமோ என்று யோசித்தேன். நான் அடிக்கடி என் தாயைப் பற்றியே நினைக்கிறேன். அவள் இன்னும் உயிரோடிருப்பதாகவே நான் கருதுகிறேன்!”

“உங்கள் தாய் செத்துப்போய்விட்டதாகச் சொல்லவில்லை?”

“ஆனால், என்னுடைய வளர்ப்புத் தாய்தான் செத்துப் போனாள். நான் என்னைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிச் சொல்லுகிறேன். ————–

ஒருவேளை அவள் கீவ் நகரத் தெருக்களில் பிச்சையெடுத்துத் திரிந்து கொண்டிருக்கிறாளோ என்று எண்ணுகிறேன். பிச்சையெடுப்பதும், ஓட்கா குடிப்பதும்… அவள் குடித்திருக்கும்போது, போலிஸார் அவள் முகத்தில் ஓங்கியறையவும் கூடும்…..

“உம். என் அருமைப் பையனே!” என்று பெருமூச்சு விட்டபடி நினைத்துக் கொண்டாள் தாய்.

நதாஷா விரைவாகவும் மென்மையாகவும் உணர்ச்சிமயமாகவும் ஏதோ பேசினாள். மீண்டும் அந்த ஹஹோல் பேச ஆரம்பித்துவிட்டான்.

“நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை, உங்களுக்கு உலக ஞானம் போதாது. உலகத்துக்குள் ஒரு மனிதனைக் கொண்டு வருவதே சிரமம். அவனை நல்லவனாக வாழச் செய்வது அதை விடச் சிரமம்!’

”என்னமாய்ப் பேசுகிறான்!” என்று தனக்குத்தானே வியந்து கொண்டாள் தாய். அந்த ஹஹோலிடம் ஏதாவது அன்பான வார்த்தையாகப் பேசிவிட வேண்டும் என்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் திடீரெனக் கதவு திறக்கப்பட்டது. உள்ளே பழைய திருட்டுப்புள்ளியான தனிலோவின் மகன் நிகலாய் விஸோவ்ஷி கோல் வந்து சேர்ந்தான். நிகலாய் மனிதரை அண்டி வாழாத தனிக் குணத்தால் அந்தக் குடியிருப்பு முழுவதிலுமே பிரபலமான புள்ளி. அவன் எப்போதுமே யாரிடமும் ஒட்டிப் பழகுவதில்லை; எட்டியே நிற்பான். எனவே மற்றவர்கள் அவனைக் கேலி செய்து வந்தனர்.

”ஊம். என்னது நிகலாய்?” என்று வியப்புடன் கேட்டாள் அவள்.

அவளுக்கு வணக்கம் கூடக் கூறாமல், அம்மைத் தழும்பு விழுந்த தனது அகலமான முகத்தை உள்ளங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டு வறட்டுக் குரலில் கேட்டான் அவன், “பாவெல் இல்லையா!”

”இல்லை .”

அவன் அந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

வணக்கம். தோழர்களே!” என்றான் அவன்.

”இவனும் கூடவா?” என்று வெறுப்புடன் நினைத்தாள் தாய், நதாஷா கொஞ்சமாயும், மகிழ்ச்சியுடனும் கரம் நீட்டி அவளை வரவேற்றது அவளுக்குப் பேராச்சரியம் விளைத்தது.

நிகலாயிக்குப் பின்னர் வேறு இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் பருவம் முற்றாத வாலிபர்கள். தாய்க்கு அவர்களில் ஒருவனைத் தெரியும். கூர்மையான முகமும் சுருண்ட தலை மயிரும், அகன்ற நெற்றியும் கொண்ட அந்தப் பையனின் பெயர் பியோதர்: தொழிற்சாலையின் பழைய தொழிலாளியான சிஸோவ் என்பவனின் மருமகன். அடுத்தவன் கொஞ்சம் அடக்கமானவன். அவன் தன் தலைமயிரை வழித்துவாரிவிட்டிருந்தான். அவளுக்கு அந்தப் பையனைத் தெரியாது. எனினும் அவனைப் பார்த்ததும், அவளுக்கு எந்த பயமும் தோன்றவில்லை. கடைசியாக பாவெல் வந்து சேர்ந்தான். அவனோடு, தாய்க்கு இனம் தெரிந்த வேறு இரு தொழிலாள இளைஞர்களும் வந்து சேர்ந்தனர்.

“நீ தேநீருக்குத் தண்ணீர் வைத்துவிட்டாயா?” என்று அன்போடு கேட்டான் பாவெல், “மிக நன்றி!”

”நான் போய்க் கொஞ்சம் ஓட்கா வாங்கி வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். காரணம் தெரியாத ஏதோ ஒன்றுக்கு தான் எப்படி நன்றி செலுத்துவது என்பது தெரியாமல்தான் இப்படிக் கேட்டாள் அவள்.

“இல்லை, தேவையில்லை’ என்று அன்பு ததும்பும் புன்னகையோடு சொன்னான் பாவெல்.

அவளைக் கேலி செய்வதற்காகவே, தன் மகன் இந்தக் கோஷ்டியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய்க் கூறிப் பயங்காட்டி விட்டதாக அவள் திடீரென நினைத்தாள்.

“அது சரி, இவர்கள்…. இவர்கள் தானா; அந்த சட்டவிரோதமான நபர்கள்?’ என்று மெதுவாகக் கேட்டாள் அவள்.

”இவர்களேதான்” என்று பதில் கூறிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் பாவெல்.

“ஐயோ…” என்று அன்பு கலந்த வியப்புடன் சொன்னாள் அவள். பிறகு தனக்குள்ளே இளக்காரமாக நினைத்துக்கொண்டாள், “இன்னும் இவன் குழந்தைதான்!”

 

அடிக்குறிப்புகள்:

(1) மூலத்தில் ‘அம்மா’ என்பதற்கு ‘நேன்க்கோ ‘ என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. நேன்க்கோ என்பது உக்ரேனியச் சொல். அம்மா என்பதை மேலும் அருமையாக அழைப்பது. (மொ –ர்)

(2) பழந்துணிகளை வாங்கிப் பிழைக்கின்றவர்களை ‘தாத்தாரியன்’ என்று சொல்லுவதுண்டு – (மொ –ர்)

(3) ஹஹோல் -உக்ரேனியப் பிரதேச மக்களுக்கு, ருஷ்யர்கள் இட்டுள்ள கேலிப் பெயர். கதை முழுவதிலும் ஹஹோல் என்ற சொல் அந்திரேயையே குறிக்கிறது. எனவே அந்திரேய் என்பதும் ஹஹோல் என்பதும் ஒருவரே. (மொ –ர்)

(4) அந்திரேய் நஹோத்யா என்பது முழுப் பெயர். அந்திரேய் என்றும் நஹோத்கா என்றும் தனித்தனியே அழைப்பதுமுண்டு. (மொ –ர்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !

மார்க்ஸ் பிறந்தார் – 20
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 3

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பொருளாயத மதிப்புக்களின் உலகத்தை மட்டுமே செல்வமாகக் கருதுகிறது. அதற்குத் தொழிலாளி செல்வத்தைப் பெருக்குகின்ற சாதனமாகத்தான் இருக்கிறான்.

தொழிலாளி தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், பணத்தையும் பொருள்களையும் சேமிப்பதற்காக வாழ்க்கை இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று அது வற்புறுத்துகிறது.

எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, நாடகத்துக்கும் நடனத்துக்கும் சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறீர்களோ, காதலிக்கிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள், உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின்படி பணம் இல்லாத, பொருள் இல்லாத மனிதன் ஒன்றுமே இல்லாதவனாவான். பொருள்களும் பணமும் அவனுக்குச் சமூகத்தில் அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் தருகின்றன, அவன் மனதில் கூட அவனை முக்கியமானவனாகச் செய்கின்றன.

உங்களால் செய்ய முடியாத எல்லாக் காரியங்களையும் உங்கள் பணம் செய்ய முடியும். பணத்தைக் கொண்டு சாப்பிட முடியும், குடிக்க முடியும், நடனங்களுக்கு, நாடகத்துக்குப் போக முடியும், பிரயாணம் செய்ய முடியும், கலைப் பொருள்களை, புலமையை, வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பொருள்களை, அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும்.

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த “மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதன்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார்:

இந்த மஞ்சள் அடிமை மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும், கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும், குட்ட நோயைப் போற்றச் செய்யும், திருடர்களுக்குப் பட்டம் வழங்கி அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும் பெருமையும் அருளும்……

ஷேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச் சிறப்பான முறையில் சித்திரிக்கிறார்”, குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்று மார்க்ஸ் கருதுகிறார்.(1)

பணம் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள்-எல்லா மனித மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர்நிலைகளாக மாற்றியமைத்தல், பொருள்களைச் சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.

பணம் ஒரு பொதுவான விபசாரி, மக்களையும் தேசங்களையும் கவர்ந்திழுப்பது. பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட மனிதகுலத்தின் திறமை.(2)

ஷேக்ஸ்பியர் மற்றும் கேதேயின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்ட இக்கருத்துக்களை மார்க்ஸ் பிற்காலத்தில் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, மூலதனம் ஆகிய நூல்களில் வளர்த்துக் கூறினார்.

படிக்க :
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

இளம் மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் போல தலைகீழான உலகத்தில், அந்நியப்படுத்தலின் உலகத்தில் பொருளிட்டலே வாழ்க்கையின் நோக்கமாகிவிடுகிறது; உண்மையான மனிதத் தேவைகளை வளர்ப்பதற்கு மாறாக பொருள்களைப் பற்றிய காரியவாதமான, நுகர்வு அணுகுமுறை ஏற்பட்டுவிடுகிறது. பொருள் மனிதனுக்கு அளவுகோலாகி விடுகிறது, அதன் மறுதலை அல்ல. பொருளாயதச் செல்வம் மனிதத் திறமைகளுடைய செல்வத்தின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அந்நியப்படுத்தலின் உலகத்தில் செப்பமடையாத, பூர்விகமான தேவைகள் உடைமையாக வகைப்படுத்தப்படுகின்றன. “தனிச் சொத்துடைமை நம்மை அதிகமான அளவுக்கு முட்டாளாகவும் ஒருதலைச் சார்பாகவும் மாற்றியிருக்கின்றபடியால் ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் அல்லது அதை நேரடியாக வைத்திருத்தல், சாப்பிடுதல், குடித்தல், அணிதல், வசித்தல், மற்றும் இதர சந்தர்ப்பங்களின் போது மட்டுமே அது நம்முடையதாக இருக்கிறது.”(3) எல்லாப் புலன் மற்றும் ஆன்மிக உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை என்னும் புலன் வந்து விட்டது.

இதன் விளைவாகப் பொருள்கள் உழைப்பின் நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருள்களின் மீது கவனத்தைக் குவிக்கின்ற மனிதன் அவன் பொருள்களின் ஊழியனாக மாறுவதை, அவை தன்னுடைய உழைப்பின் தன்மையையும் வேகத்தையும் மட்டுமல்லாமல் அவன் ஒய்வு நேரத்தைச் செலவிடுகின்ற தன்மையையும் முறையையும் மற்ற மனிதர்களுடன் அவனுடைய தனிப்பட்ட உறவுகளின் தன்மையையும் பாணியையும் ஆட்டுவிப்பதைக் கவனிப்பதில்லை.

மனிதத் தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்திலிருந்து அந்நியமாதலை அகற்றிவிடுவது மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளின் தன்மையில் மாற்றத்தை மட்டுமல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையின் மொத்த உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும்.

“மனிதன் மனிதனாக இருப்பதாக, உலகத்துடன் அவனுடைய உறவு மனிதத்தன்மை கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் அன்புக்கு அன்பை மட்டுமே, நம்பிக்கைக்கு நம்பிக்கையை மட்டுமே, இதரவை பரிவர்த்தனை செய்ய முடியும். நீங்கள் கலையை ரசிக்க விரும்பினால் நீங்கள் கலைப் பயிற்சியுள்ள நபராக இருக்க வேண்டும்; நீங்கள் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்த விரும்பினால், அவர்களிடம் சிந்தனையைத் தூண்டுகின்ற, உற்சாகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபராக நீங்கள் இருக்க வேண்டும்.

மனிதனுடனும் இயற்கையுடனும் உங்களுடைய உறவுகளில் ஒவ்வொன்றும் உங்களுடைய இலட்சியத்துக்குப் பொருத்தமான, உங்களுடைய உண்மையான தனிப்பட்ட வாழ்க்கையின் பிரத்யேகமான வெளியீடாக இருக்க வேண்டும். நீங்கள் அன்பைத் திரும்பப் பெறாமல் அன்பு செலுத்துவீர்களானால், அதாவது நேசித்தல் என்ற முறையில் உங்களுடைய அன்பு பரஸ்பரமான அன்பை ஏற்படுத்தாவிட்டால், அன்புள்ளம் கொண்ட நபர் என்ற உங்களுடைய ஜீவனுள்ள வெளியீட்டின் மூலமாக உங்களை அன்பிற்குரியவராகச் செய்து கொள்ள முடியாவிட்டால் உங்களுடைய அன்பு மலட்டுத்தனமானது-அது ஒரு துர்ப்பாக்கியமே”(4) என்று மார்க்ஸ் எழுதுகிறார்.

மதிப்புச் செல்வம் என்ற சுயபூர்த்தியுள்ள கோட்பாட்டைக் கொண்ட முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மனித மறுப்பை முரணில்லாமல் போதிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

படிக்க :
♦ அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !

கம்யூனிஸ்ட் சமூகத்தில் பொருள்களின் செல்வம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும், அதாவது மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாமல் முழுமையான மனித நடவடிக்கைக்கு ஒரு சாதனமாக இருக்கும். “அரசியல் பொருளாதாரத்தின் செல்வத்துக்கும் வறுமைக்கும் பதிலாகச் செல்வமுடைய மனித ஜீவனும் வளமான மனித தேவையும் ஏற்படும்.”(5)

மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்திலும் அதன் பூர்வாங்கமான நூல்களிலும் இக்கருத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறார். அவர் சமூகத்தின் மிக உயர்ந்த செல்வமாக, மிக உயர்ந்த மூலதனமாக-மனிதனுடைய உற்பத்திப் பொருளையல்ல – மனிதனை “தனிநபர்களின் தேவைகள், திறமைகள், நுகர்வுச் சாதனங்கள், உற்பத்திச் சக்திகள், இதரவற்றின் முழுதளாவிய தன்மையைப்”(6) பிரகடனம் செய்கிறார்.

கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லாச் சமூக உற்பத்திக்கும் மனிதனே குறிக்கோள்; பொருளாயத மதிப்புகள் இக்குறிக்கோள் நிறைவேறுவதற்குச் சாதனமாக, நிபந்தனையாக, அடிப்படையாக மட்டுமே இருக்கின்றன.

தொடக்க நிலையையும் (சுய அந்நியமாதல்) குறிக்கோளையும் எடுத்துக்காட்டிய பிறகு மார்க்ஸ் இக்குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டிய பாதையை, அந்நியப்படுதலை அப்புறப்படுத்துகின்ற பாதையைச் சுட்டிக்காட்டுகிறார். இப்பிரச்சினை பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சமூகவியலாளர்கள் மற்றும் மார்க்சியவியலாளர்களுக்கு இடையில் மிகவும் காரசாரமான விவாதத்துக்குரிய பொருளாகவே இன்னும் இருந்து வருகிறது.

அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது என்ற உண்மையிலிருந்து மார்க்ஸ் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் முன்னேறுகிறார். தனிச் சொத்துடைமை “அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தி, முடிவு, அவசியமான விளைவு”,(7) பொருளாதார அந்நியமாதல்.

அந்நியமாதலின் வெவ்வேறு வடிவங்களின் (அரசியல், மத, தத்துவஞான, அறவியல், இதரவை) சாயல்களும் அம்சங்களும் பொருளாதார அந்நியமாதலில் குவிகின்றன. மொத்த மனித அடிமைத்தனமும் உற்பத்தி முறையில் தொழிலாளியின் உறவின் அடிமைத்தனத்தில் வெளிப்படுகிறது.” …அடிமைத்தனத்தின் எல்லா உறவுகளும் இந்த உறவின் உருத்திரிபுகளும் விளைவுகளுமே.”(8) இங்கே மார்க்ஸ் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் உற்பத்தி உறவுகளின் தலைமையான பாத்திரத்தைப் பற்றிய கருத்தை வகுத்துரைக்கிறார்.

ஹெகலிடம் எல்லா அந்நியமாதலுமே கருத்தின் அந்நியமாதலாக இருந்தது, அகப்பொருளின் “உணர்வில்” இந்த ரகத்தைச் சேர்ந்த ஊடுருவுதலும் சாத்தியமாக இருந்தது. ஆனால் அவர் உலகத்துடன் தன்னுடைய உறவுகளின் அடிமைத் தன்மையை உணர்ந்து கொண்டிருப்பதால் அவருடைய அந்நியமாதல் மறையவில்லை, அது அதிகரிக்கிறது.

நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நீந்துவதாகக் கற்பனை செய்வது மட்டும் போதாது. சுதந்திரம் வேண்டுமென்றால் சுதந்திரமாக இருப்பதைப் போலக் கருதுவது மட்டும் போதாது. “தனிச் சொத்துடைமைக் கருத்தை ஒழிப்பதற்கு கம்யூனிசம் என்ற கருத்து போதுமானதாகும். உண்மையாகவே தனிச் சொத்துடைமையை ஒழிப்பதற்கு மெய்யாகவே கம்யூனிஸ்ட் நடவடிக்கை அவசியம்.”(9)

“வரலாறு இதற்கு இட்டுச் செல்லும்” என்பதை மார்க்ஸ் சந்தேகிக்கவில்லை. ஆனால் கற்பனாவாதிகளைப் போல தனிச் சொத்துடைமை ஒழிப்பு வேகமாகவும் துன்பமின்றியும் நடைபெறும் என்று மார்க்ஸ் கருதவில்லை. இது “மிகவும் கரடுமுரடான, நெடுங்கால நிகழ்வுப் போக்காக”(10)  இருக்கும் என்பதை அவருடைய வரலாற்று உணர்வு பிழையில்லாமல் எடுத்துக்காட்டியது.

தனிச் சொத்துடைமை முறை மந்திரக் கோலை ஆட்டியதும் திடீரென்று தோன்றிவிடவில்லை. அது பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது, வெவ்வேறு வடிவங்களை அடைந்தது. அதன் வளர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை. அது இப்பொழுது தொழில்துறை மூலதனம் என்ற வடிவத்தை அடைந்திருக்கிறது, அது சமூகத்தின் எல்லா இடுக்குகளுக்குள்ளும் நுழைந்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வரை, “அதன் உலகளாவிய வடிவத்தில் உலக வரலாற்றுச் சக்தியாகும்” வரை இந்த வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.

தனிச் சொத்துடைமை இந்த வளர்ச்சியடைந்த வடிவத்தில், முழு ஜீவனோடிருக்கும் பொழுது தன் எதிரியை, மரணத்தை, தொழில்துறைத் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை எதிரிடுகிறது.

அந்தத் தருணத்திலிருந்து அது தன் சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது, ஆனால் மரணத்தை நோக்கி அதன் பாதை முதிர்ச்சியை நோக்கி வளர்ச்சியடைந்த பாதையைப் போல இருக்கிறது: கம்யூனிச உருவாக்கத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் கட்டங்களிலும் அது தோன்றுகிறது. கம்யூனிசம் முதலில் கரடுமுரடான சமத்துவவாதக் கம்யூனிசமாகத் தோன்றுகிறது என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார் (அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏழைகளின் கம்யூன்களை ஏற்படுத்துவதற்குச் செய்யப்பட்ட ஆரம்பகாலத் தவறுகளை மார்க்ஸ் மனதில் கொண்டிருக்க வேண்டும்).

“இக்கம்யூனிசம்” தனிச் சொத்துடைமையின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்குக் காட்டுமிராண்டித்தனமான சாதனங்களைக் கொண்டு எதிர்ப்பதைக் காட்டுகிறது. தனிச் சொத்துடைமை மற்றும் அது ஏற்படுத்துகின்ற சமத்துவமற்ற நிலைமையின் “தாக்கத்தில்” அது இன்னும் இருக்கின்றபடியால் ஒவ்வொருவரையும் (பெண்கள் சமூகம் உள்பட) பொதுவான தரத்துக்கு வகைப்படுத்துவதற்கு விரும்புகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒவ்வொன்றையும் எல்லோரும் பெற்றிருக்க முடியாத ஒவ்வொன்றையும் அழிப்பதற்கு முயற்சிக்கிறது.

ஆகவே கரடுமுரடான, பாசறைக் “கம்யூனிசம்” மனிதனுடைய திறமையிலிருந்து, அவனுடைய ஆளுமையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அது தொழிலாளியின் அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை ஒழிப்பதற்கு ஏங்கவில்லை, ஒவ்வொருவரையும் தொழிலாளர்களாக மாற்றுவதற்கு விரும்புகிறது.

ஒவ்வொரு துறையிலும் மனிதனுடைய ஆளுமையை “மறுக்கின்ற” இவ்விதமான “கம்யூனிசம்” அதே சமயத்தில் “கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்த உலகத்தையும்” மறுப்பதாக இருக்கிறது. எவ்விதமான தேவையும் இல்லாத ஏழையின் இயற்கைக்குப் புறம்பான எளிமையே அதன் குறிக்கோள். இந்த “எளிமை” தனிச் சொத்துடைமைக்கு அப்பால் போக முடியாமற் போய்விட்டது மட்டுமல்ல அது இன்னும் அதைக் கூட எட்டவில்லை என்பதை இக்குறிக்கோள் நிரூபிக்கிறது.

படிக்க :
♦ நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
♦ மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?

இந்த ரகத்தைச் சேர்ந்த “கம்யூனிசத்தில்” உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலுள்ள எதிர்நிலைத் தன்மை ஒழிக்கப்படவில்லை. உழைப்பு (அதன் மிகவும் ஆரம்ப வடிவத்தில்) ஒவ்வொரு மனிதனும் வைக்கப்பட்டிருக்கும் நிலையாகத் தோன்றுகிறது; மூலதனம் சர்வாம்ச மூலதனமாக மற்றும் சமூகத்தின் சக்தியாகத் தோன்றுகிறது.

இந்தக் “கரடுமுரடான கம்யூனிசம்” “தனிச் சொத்துடைமையின் வெறுக்கத்தக்க” வெளியீடு என்று மார்க்ஸ் கூறினார். இந்த விமர்சனம் இன்றைய தினத்திற்கும் அதன் தத்துவ ரீதியான மற்றும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, அதிதீவிரமான புரட்சிகர வாய்ப்பந்தலையும் மனிதகுலத்தை ஆனந்தமாக வைத்திருப்பதற்குப் பாசறை முறைகளையும் நேசிப்பவர்கள் மாபெரும் கம்யூனிசக் கருத்துக்களைக் கொச்சைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் எதிர்க்கும் போராட்டத்துக்கு உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.

மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்ற இரண்டாவது வடிவம்-அவர் முதலாவதாகவும் முதன்மையாகவும் அக்காலத்திய கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் குறியடையாளமான, எதிர்காலத்தைப் பற்றிச் சிற்சில கருத்துக்களை மனதில் கொண்டிருக்கிறார் – தன்னுடைய அரசியல் தன்மையை இன்னும் இழக்காத கம்யூனிசமாகும். அது ஜனநாயகமாக இருக்கிறது அல்லது எதேச்சாதிகாரமாக இருக்கிறது. அது தனிச் சொத்துடைமையின் கைதியாக இருக்கிறது, அதனால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

முடிவாக, மூன்றாவது வடிவம் மனிதகுலக் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்தச் செல்வத்தையும் பாதுகாத்து வளர்த்துச் செல்கின்ற அடிப்படையில் அந்நியமாதலின் எல்லா வடிவங்களையும் உண்மையில் அகற்றுகின்ற முறையில் தனிச் சொத்துடைமையின் “ஆக்கபூர்வமான” அழித்தலை முன்னாகிக்கிறது. இந்தக் கம்யூனிசம் முழு வளர்ச்சியடைந்த மனிதாபிமானத்துக்குச் சமம்: “மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மோதலுக்கு இது உண்மையான தீர்வு.”(11)

வரலாற்றின் மொத்த இயக்கமுமே இக்கம்யூனிசத் தோற்றத்தின் உண்மைச் செயலே, அதன் வாழ்க்கையின் பிறப்பே. இப்பிரச்சினைக்குத் தீர்வு “புரிந்து கொள்வதைப் பற்றிய பிரச்சினையாக மட்டுமே ஒருபோதும் இருக்கவில்லை, அது வாழ்க்கையின் உண்மையான பிரச்சினை; தத்துவஞானம் இப்பிரச்சினையை வெறும் தத்துவ ரீதியான ஒன்றாக மட்டுமே கருதியதனால் தான் அதைத் தீர்க்க முடியவில்லை.”(12)

இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு மார்க்ஸ் இக்கருத்தைத் தன்னுடைய பிரபலமான ஆய்வுரையில் பின்வருமாறு வகுத்துரைத்தார்: “தத்துவஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி மட்டுமே வந்திருக்கிறார்கள், ஆனால் அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்”.(13)

மார்க்ஸ் தன்னுடைய 1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தெரிவித்த கருத்துக்களை இதற்குப் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்குப் பிறகு அவர் அதிகமான செறிவுடனும் விவரத்துடனும் வளர்த்துக் கூறினார்.

உழைப்பு மற்றும் மூலதனத்தின் எதிர்நிலைத் தன்மை, தொழிலாளி பண்டமாக இருத்தல், பண்ட வழிபாடு, தொழிலாளியை உயிருள்ள இயந்திரமாக, பகுதியளவுக்கு இயந்திரத்தின் உறுப்பாக மாற்றுதல் முதலியன இத்தகைய கருத்துக்களாகும்; முதலாளி மூலதனத்தின் உருவமாகவும் பாட்டாளி உழைப்புச் சக்தியின் உருவமாகவும் இருக்கின்ற பண்ட உறவுகளின் உலகத்தில் மனித ஆளுமை அந்நியமாக்கப்படுதல் என்பதைப் பற்றிய கருத்துக்களும் இவற்றில் அடங்கும்.

“அந்நியமாதல்” என்ற தத்துவஞானக் கருத்தமைப்புக்குப் பதிலாகத் துல்லியமான, சந்தேகத்துக்கு இடமளிக்காத பொருளாதாரக் கருத்தமைப்புகளை மார்க்ஸ் மென்மேலும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்; ஆனால் இது சொற்பிரயோகத்தைப் பற்றிய பிரச்சினையே தவிர, கோட்பாட்டைப் பற்றியதல்ல.

1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் புதிய உலகக் கண்ணோட்டத்தின் மேதாவிலாசம் நிறைந்த உருவரை, ஒரு செயல்திட்டத்தின் உருவரை; அதை விரித்துரைக்கின்ற பணி கார்ல் மார்க்சின் எஞ்சிய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றது.

இப்புத்தகம் எழுதப்பட்டு சுமார் 90 வருடங்களுக்குப் பிறகு, அதன் ஆசிரியர் மரணமடைந்து சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு தான் உலகம் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது.

ஆனால் முக்கியமாக இருக்கின்ற ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி அப்பொழுது எழுதப்பட்ட புத்தகத்தைப் போல அது உடனடியாக அதிகமான கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு இப்புத்தகத்தைப் பற்றிப் பல்வேறு நாடுகளில் ஏராளமான ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்னும் எழுதப்படுகின்றன, வாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்திலிருந்து நாம் எவ்வளவு தள்ளி வருகிறோமோ அவ்வளவுக்கு இப்புத்தகம் அதிகமான உடனடி முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்நூலில் எழுப்பப்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் மார்க்சியத்தைப் பற்றி மிகவும் வேறுபட்ட கருத்துக்களுக்கிடையில் – கொச்சையான வறட்டுச் சூத்திரவாதம் முதல் கொச்சையான திருத்தல் வாதம் வரை – மோதல் நடைபெறுகின்ற களமாக இருக்கின்றன.

இந்த இரண்டு “முனைக்கோடிகளும்” பொதுவான அம்சத்தைக் கொண்டிருப்பது சுவாரசியமானதே. இளமைக் கால மார்க்ஸ், முதிர்ச்சிக் கால மார்க்ஸ் என்று இரண்டு மார்க்ஸ்கள் இருப்பதாகக் கூறி அவரிடத்தில் வேறுபாட்டைக் காண்கின்றன. எனினும் வித்தியாசம் என்னவென்றால் அவை வெவ்வேறு வழிகளில் இதைச் செய்கின்றன: முந்தியது இளமைக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறும் பொழுது பிந்தியது முதிர்ச்சிக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறுகிறது.

இரண்டு அணுகுமுறைகளுமே மார்க்சியத்தைப் பற்றி உருத்திரிபான, பூர்விகமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. இவை அறிவு சார்ந்த சோம்பேறித்தனத்தினால் மார்க்சியத்தை வறட்டுக் கோட்பாட்டுவாத அளவுகளைக் கொண்டு அளக்கின்றன. கையேடுகளும் மூலதனமும் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கொள்கைகள் அல்ல; முதலாவதில் “மனிதாபிமானமும்” பின்னதில் “பொருளாதாரவாதமும்” மையமான இடங்களைப் பெற்றிருக்கின்ற இரண்டு முழுமையான தத்துவஞான அமைப்புகள் அல்ல.

அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்குமானால் அது பிறப்பிடமும் சிகரமும் என்ற முறைகளில் மட்டுமே; உலகறிந்த நிகழ்வுகளைப் பற்றிப் புதிய பகுப்பாய்வு முறை கண்டுபிடிக்கப்பட்ட நூல், அது கையாளப்படுகின்ற நூல் என்ற முறைகளில் மட்டுமே. தத்துவஞான பொருளாதார நூல், பொருளாதார-தத்துவஞான நூல் என்ற முறைகளில் மட்டுமே.

மார்க்சியத்தின் மூலவர்கள் அடிக்கடி வலியுறுத்தியதைப் போல அது ஒரு கோட்பாடு அல்ல, அது ஒரு முறை. எனவே வெவ்வேறு நூல்களில் தரப்பட்டிருக்கின்ற “முன்னரே தயாரிக்கப்பட்ட” வகுத்துரைத்தல்களைக் கூறுவதன் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இயக்கத்தில், கருத்துக்களின் பிறப்பில், முறையைத் தொடர்ச்சியாகப் பதுக்கித் தருவதில் மட்டுமே மார்க்சியத்தின் ஜீவனைப் புரிந்து கொள்ள முடியும்.

கோட்பாட்டுவாதக் குறுகிய அறிவு மூலதனத்தில் “மனிதாபிமானத்தைக்” காண்பதில்லை; ஏனென்றால் மார்க்சின் மொத்த பாரம்பரியத்தில் இப்புத்தகத்தின் இடத்தை அது புரிந்து கொள்வதில்லை. மார்க்ஸ் எத்தகைய மனித இலட்சியங்களுக்காகப் “பொருளாதார மனிதனைப்” பற்றி மிகவும் கருத்தூன்றி ஆராய்ந்தார் என்பதை அது புரிந்து கொள்வதில்லை. அது மார்க்சின் மனிதாபிமானத்தைப் பார்ப்பதில்லை, ஏனென்றால் அது தத்துவத் துறையில் பகற்கனவு காண்பவர்களின் போலிப் பரோபகார உணர்வை “மனிதாபிமானம்” என்று கருதிப் பழகிவிட்டது.

மறு பக்கத்தில் இளமைக் கால மார்க்சை விமர்சனம் செய்பவர்கள் – இவர்களும் அவர்களைப் போன்று குறுகிய அறிவுடையவர்களே – மார்க்சியத்தின் உருவாக்கத்தில் கையேடுகளின் மாபெரும் முக்கியத்துவத்தைப் பாராட்டக்கூடிய தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

“அந்நியமாதல்”, “மனிதாபிமானம்” என்ற சொற்களைக் கேட்டவுடனே இவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள்-இக்கருத்தினங்கள் மார்க்சியமா? அவர்கள் மார்க்சைக் குறுகிய வறட்டுக் கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொண்டவர்கள், அவர்களால் மார்க்சின் வளமான கருத்துக்களை ஜீரணிக்க முடிவதில்லை; எனவே அவர்கள் “பரிசுத்தமான” மார்க்சுக்கும் “அசுத்தமான” மார்க்சுக்கும், “முதிர்ச்சியடைந்த” மார்க்சுக்கும் “முதிர்ச்சியில்லாத” மார்க்சுக்கும் இடையில் வேறுபாடுகளைத் தேடுகிறார்கள்.

மார்க்சின் மனிதாபிமானம் தற்காலிகமான தத்துவ ஈடுபாடு அல்ல. “கரடுமுரடான கம்யூனிசம்” என்று மார்க்ஸ் பெயரிட்டுக் கண்டித்த சித்தாந்திகள் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ அப்படிச் சிந்திக்க விரும்புகிறார்கள். மனிதாபிமானம் மார்க்சியத்தின் ஒட்டுப் பகுதி அல்ல, அது மார்க்சியத்தின் இதயம், அதற்கு சக்தியும் வாழ்க்கையும் தருகின்ற உள்விசை மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்காகப் போராடுகின்ற கோடிக்கணக்கானவர்களின் உலகக் கண்ணோட்டமாக மார்க்சியத்தை ஆக்கியிருப்பது அதுவே.

1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் (மற்றும் Deutsch Französische Jahrbücherஇல் எழுதப்பட்ட இதனை ஒட்டிய கட்டுரைகளும்) மார்க்சின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான சந்திக்குமிடமாக அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டத்துக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகங்கள் மார்க்சியத்தை நோக்கி அவருடைய பாதையைக் குறிக்கின்றன என்றால், அதற்குப் பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் எல்லாப் பகுதிகளிலும், சிறப்பாக அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சியத்தின் வளர்ச்சியை, ஸ்தூலப்படுத்துதலை, விரித்துரைத்தலைக் குறிக்கின்றன.

1844 -ம் வருடத்தை விஞ்ஞான உலகக் கண்ணோட்டம் பிறந்த வருடம் என்று கூறலாம். ஆனால் இந்த உலகக் கண்ணோட்டத்தின் உருவாக்கம் பூர்த்தியடைந்த வருடத்தை நம்மால் கூற முடியாது. மார்க்சும் எங்கெல்சும் மரணமடைகின்ற வரை எழுதிய எல்லா நூல்களிலும் அது தொடர்ந்தது. அது இன்றும் தொடர்கிறது, மனித சமூகம் நீடிக்கின்ற வரை அது தொடரும்.

குறிப்புகள்:

(1) Marx, Engels, Collected Works, Vol. 3, pp. 323, 324.
(2) Ibid., pp. 324, 325.
(3) Ibid., p. 300.
(4) Ibid., p. 326.
(5) Ibid., p. 304.
(6) Karl Marx, Grundrisse der Kritik der politischen Okonomie. (Rohentwurt) 1857— 1858, Berlin, 1953, S. 387.
(7) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 279.
(8) Ibid., p. 280.
(9) Ibid., p. 313.
(10) Ibid.
(11) Ibid., p. 296.
(12) Ibid., p. 302.
(13) கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 1, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, பக்கம் 11.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !

மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?

சிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதிகளில் மட்டுமே. இவற்றின் எண்ணிக்கை 600க்குள் இருக்கலாம். சிங்கங்கள் வாழ்வதற்கேற்ப உயிர்ச்சூழல் உள்ள மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் வளர்க்க, சில ஆண்டுகள் முன் முயற்சி நடந்தது. ‘கிர் சிங்கங்கள் குஜராத்தின் பெருமை’ எனக்கூறி அப்போது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மறுத்துவிட்டார்.  2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் தலையிட்டு சிங்கங்களை மத்திய பிரதேசம் கொண்டு செல்ல அனுமதித்தது. ம.பி.யில் ஆட்சி மாற்றம் நடந்ததும் குஜராத் சிங்கங்களை கொண்டு செல்ல இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குஜராத்தின் பெருமை மிகு சிங்கங்களை காத்த நவாப்!

வரலாற்றின்படி ஆசிய நிலப்பரப்பில் சிங்கங்களே இல்லை என்கிறார் ரோமிலா தாப்பர். ஆசிய நிலப்பரப்புக்குள் படையெடுத்து வந்தவர்களால் கொண்டுவரப்பட்டவை என்பது அவருடைய வாதம். அதன்பின், மொகலாய மன்னர்கள் சிங்கங்களையும் சிறுத்தைகளையும் (சிவிங்கிப் புலி அல்ல) செல்லப்பிராணிகளாக தங்கள் ஆட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளில் வளர்த்திருக்கிறார்கள்.  அக்பர் 9000 சிறுத்தைகளை வளர்த்ததாக மொகலாய வரலாற்று அறிஞர் யூசுப் அன்சாரி கூறுகிறார்.  வளர்த்த செல்லப்பிராணிகளை பொழுதுபோக்குக்காக வேட்டையாடி தீர்த்தார்கள்.  18-ஆம் நூற்றாண்டில் ஜுனாகட்டின் நவாப்-ஆக இருந்த முகமது ரசூல் கஞ்சி-2, தனது பெருமைமிகு சிங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கருதி, கிர் வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியான அறிவித்தார்.  ஒரு நவாப்பின் முயற்சியால் காப்பாற்றப்பட்ட சிங்கங்களை தனது மாநிலத்துக்கு மட்டுமே உரிய பெருமை என குறுகிய மனப்பான்மையுடன்  வெறுப்பரசியல் செய்யும் இந்துத்துவ கும்பல் பார்க்கிறது. விளைவுகள் இன்று மோசமாகியுள்ளன. கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.

குஜராத் அரசின் அலட்சித்தால் பலியான சிங்கங்கள்!

கடந்த செப்டம்பர் மாதம் நடுவில் 10 சிங்கங்கள் இறந்தபோது, குஜராத் அரசு சிங்கங்களின் இறப்புக்கு எல்லை சார்ந்த பிரச்சினையே காரணம் என்றார்கள். அக்டோபர் 1-ஆம் தேதி இந்த இறப்புகள் இரண்டு மடங்கானபோது, இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. ஆசிய சிங்கங்களை அழிவிலிருந்து காப்பாற்றியதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட குஜராத் அரசு, அதே சிங்கங்களில் கொத்தான மரணங்களுக்கு என்ன காரணம் என தெரியாமல் விழித்தது. அறிவியலாளர் குஜராத் அரசு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

“எல்லை பிரச்சினை காரணமாகத்தான் சிங்கங்கள் இறந்ததாக முதலில் எங்களுக்குச் சொன்னார்கள். பொதுவாக எல்லை பிரச்சினை தொடர்பாக எழும் சண்டையில் குட்டிகளும், பருவத்தில் உள்ள ஆண் சிங்கங்களும் கொல்லப்படும். ஆனால், இங்கே பெண் சிங்கங்கள் இறந்துள்ளன. சிங்கங்கள் ஏன் கொல்லப்பட்டன என்கிற உண்மையை மறைக்கத்தான் பலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, அறிவியல்பூர்வமாக இந்த பிரச்சினையை தாங்கள் அணுகவில்லை என ஒப்புக்கொள்கிறார்கள்” என்கிறார் உயிரியலாளர் ரவி செல்லம்.

படிக்க:
விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ?
நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?

‘கேனைன் டிஸ்டம்பர் வைரஸ்’ என்ற தொற்று தாக்கி உயிரிழந்த 7 சிங்கங்களின் அழுகிய உடலைக் கண்ட பிறகே, இந்த விவகாரம் குஜராத் வனத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கண்கள் மற்றும் மூக்கில் நீர் ஒழுகும். இருமலும் இருக்கும். கண்காணிப்பின் மூலம் வன விலங்குகளின் நோய்க்கூறுகளை கண்டறிய முடியும். கடந்த பல வருடங்களாக கிர் வனப்பாதுகாப்பு பணியாளர்கள் ஒருவர்கூட, வனமேலாண்மை பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிங்கங்களை காப்பாற்ற கிர் வனப்பகுதிக்குள் போதுமான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்கிறார் வனப்பணியாளர் ஒருவர். அடிப்படையான மருத்துவ வசதிகள் இல்லை; வனப்பாதுகாவலர்களுக்கு பயிற்சி தரப்படவில்லை. ஆனால், கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம் பிரதமர் மோடி, தனது பெருமைமிகு சிங்கங்கள் குறித்து பேசுகிறார்.

“600 சிங்கங்கள் மட்டுமே உள்ள வனப்பகுதியை கண்காணிப்பது அவ்வளவு கடினமான பணி அல்ல. ஆனால் கிர் வனப்பகுதியில் கண்காணிப்புகள் முறையாக இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. உண்மையில் அறிவியல்பூர்மான கண்காணிப்பு தேவை. அது இப்போதைக்கு சாத்தியமற்றதாகவே தெரிகிறது” என்கிறார் விலங்கின சூழலியலாளர் அபி.டி. வனக்.

படிக்க:
குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?

சர்வதேச கவனம் பெற்று சர்ச்சைகள் எழுந்தநிலையில், மீதியுள்ள சிங்கங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது குஜராத் அரசு. நோய் தாக்குதலுக்குள்ளான சிங்கங்களிடமிருந்து நோய்க்கூறின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.  உண்மையில் கிர் சிங்கங்களுக்கு வைரஸ் மட்டும் அச்சுறுத்தலாக இல்லை என்கிறது தி இந்து ஆங்கில இதழில் வந்த சிறப்புக் கட்டுரை.

சிங்கங்களை அச்சுறுத்தும் மிதமிஞ்சிய சுற்றுலா மற்றும் சுரங்க நடவடிக்கைகள்!

குஜராத் அரசு கிர் வனப்பகுதியை குறைக்க முயற்சித்தபோது, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் கிர் வனப்பகுதிக்கு அருகே சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி வழங்கியிருக்கிறது குஜராத் அரசு. இப்போது நடந்துகொண்டிருப்பதை அதிகாரத்தில் இருக்கிறவர்கள் தருவித்தவையே என்கிறார் வன அதிகாரி ஒருவர். சிங்கங்கள் குறித்தோ வனப்பாதுகாப்பு குறித்தோ குஜராத் அரசுக்கு ஒரு அக்கறையும் இல்லை. துணை வனப் பாதுக்காப்பாளர் சாசன் கிர் ராம் ரட்டன் நல்லா என்ற அதிகாரி, கிர் வனத்துக்குள் இருக்கும் சிங்கோட அணையை ஆழப்படுத்தும் பணியை அனுமதிக்கவில்லை. குஜராத் முதல்வர் வனப்பகுதியில் இருந்த கோயில் வழிபாடு நடத்தவிருந்ததையும் இவர் அனுமதிக்கவில்லை. இதனால் கடந்த மே மாதம் பணிமாற்றம் செய்யப்பட்டார். முரண்பாடாக, சிங்கங்களின் கொத்தான மரணத்துக்குப் பின், மீண்டும் இந்த இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

கிர் வனப்பகுதியை ஒட்டி டஜனுக்கு மேலான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக சிங்கங்களை வைத்து காட்சிகளை நடத்துவதும் அதிகமாக நடக்கிறது. சுற்றுலா வருகிறவர்கள் சிங்கங்களுக்கு கறித்துண்டுகளை அளித்து வேடிக்கை பார்ப்பதும், அதை வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்வது நடக்கிறது. போதிய கண்காணிப்பு இல்லாததாலேயே இத்தகைய அத்துமீறல்கள் நடப்பதாக உயிரிலாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

படிக்க:
சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !
பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !

23 சிங்கங்கள் இறந்துவிட்டன; 21 சிங்கங்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மங்குனி இந்துத்துவ முதலமைச்சர் விஜய் ரூபானி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கிர் வனப்பகுதியில் முழுமையான பாதுகாப்பில்  சிங்கங்கள் இருக்கின்றன.  அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை என்கிறார்.

ஆனால், நோய்தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான நிலையில் உள்ள சிங்கங்களை வேறு பொருத்தமான இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிய சிங்கங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரவி செல்லம், “கிர் சிங்கங்களை வேறு இடத்தில் வளர்க்க அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதோடு, அறிவியல் துறை சார்ந்தவர்களை சுதந்திரமாக பணியாற்றவும் குஜராத் அரசு அனுமதிக்க வேண்டும்” என்கிறார்.

தனது மாநிலத்தின் பெருமையென வாய்ச்சவடால் அடிக்கும் மோடி – பா.ஜ.க. கும்பலின் நிலை அழுகி நாறிக்கொண்டிருக்கிறது. மதவாதிகளால் எந்த பெருமையையும் காப்பாற்ற முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தி ஆதாரங்கள்:

என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

நான் ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேர்ந்த அந்த வருடம்தான் உலகத்தின் மூன்றாவது பெரிய வைரக்கல்லைக் கண்டுபிடித்தார்கள். உலகத்தின் வைரம் விளையும் நாடுகளில் சியாரோ லியோன் பிரசித்தமானது. அந்த ஆண்டு சியாரோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 969 காரட்டில், அரை றாத்தல் எடை இருந்தது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. பெரிய வைரம் கிடைத்த நாளை அரசாங்கம் கொண்டாடியது. அதுவும் பொருத்தமாக காதலர்கள் தின நாளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால் ‘உங்கள் காதலிக்கு வைரம் பரிசளியுங்கள்’ என்று விளம்பரம் வேறு செய்தார்கள். சாப்பிடுவதற்கு வழியில்லாத ஏழை மக்கள் வைரத்துக்கு எங்கே போவார்கள்.

அரசாங்கம் வைரம் கிடைத்ததை நினைவுகூரும் விதமாக ஒரு தபால்தலை வெளியிட்டது. முக்கோண வடிவத்தில் புது வைரத்தின் படத்துடன் வெளிவந்த அபூர்வமான தபால்தலையை வாங்கி தபால்தலை சேகரிக்கும் இலங்கை நண்பர்களுக்கு நான் அனுப்பிவைத்தேன். புதிதாகக் கண்டுபிடித்த வைரத்தை வெட்டுவதற்கு உலகத்திலேயே தலைசிறந்த வைரம் வெட்டும் நிபுணரான Lazane Kaplan என்பவரை நியமித்தார்கள். அவர் ஒரு வருடகாலமாக அந்த வைரத்தின் முன் உட்கார்ந்து அதைப் பல கோணங்களிலும் படித்து ஆராய்ந்து திட்டமிட்டார். இறுதியில் அமெரிக்க தொலைக்காட்சியின் முன் கோடிக்கணக்கான மக்கள் பார்க்க அதை வெட்டினாராம். The Star of Sierra Leone என்ற அந்த வைரமும், சியாரா லியோனும் உலகப் பிரபலமானது அப்படித்தான்.

சியாரோ லியோனின் கிழக்குப் பகுதிகளில் வைரம் விளைந்தது. ஆற்றோரங்களில் சனங்கள் கும்பல் கும்பலாக ஆற்று மணலை அரித்து வைரம் தேடுவது சாதாரண காட்சி. உரிமம் இல்லாமல் வைரம் அரிப்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனை விதிக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஒருவரும் அந்த புதுச் சட்டத்தை பொருட்படுத்தவில்லை. வைரம் கிடைத்தால் அதனால் வரும் லாபம் எக்கச்சக்கமாக இருக்கும். சாதாரண விவசாயம் செய்துவந்த ஏழை மக்கள் அந்த தொழிலை துறந்துவிட்டு வைர வேட்டையில் இறங்கினார்கள். ஒரு நல்ல விவசாய நாடு வைரம் தேடும் பேராசைக்காரர்களால் நிறைந்துகொண்டு வந்தது.

வைரம் தேடுபவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் உலாவின. யெங்கிமா, ரொங்கோ போன்ற இடங்களில் மழை பெய்து தண்ணீர் அடித்துப் போனபிறகு கற்கள் கிளம்பி மேலே வந்துவிடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே குனிந்து நிலத்தைப் பார்த்தபடி நடப்பது வேடிக்கையாக இருக்கும். ஒருநாள் ஒரு பெண் ஆற்றிலே குளித்துவிட்டு திரும்பும்போது காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள். ஒரு கையிலே அடக்க முடியாத அளவுக்கு பெரிதான  வைரக்கல். அதை இரண்டாம் ஆளுக்கு தெரியாமல் கொண்டுபோய் ஒரு லெபனிஸ் வைர வியாபாரியிடம் விற்றிருக்கிறாள். அவர் அவளுக்கு 5000 லியோன் காசு கொடுத்தார். பெரும் தொகை. அடுத்தநாள் அந்த வியாபாரி அதே வைரக்கல்லை ஐந்து லட்சம் லியோனுக்கு விற்றது அவளுக்கு தெரியாது.

படிக்க:
ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…
♦ மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு
♦ சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!

இன்னொரு நாள் ஒருவர் வேலைக்கு போய்விட்டு வரும் வழியில் ஏதோ மினுங்குவதைக் கண்டு தூக்கிப் பார்த்தார். அவரால் நம்பமுடியவில்லை. பெரிய வைரக்கல். அதை அவருடைய இரண்டு நண்பர்களுக்குக் காட்டி ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் அதை அங்கேயுள்ள வியாபாரிகளுக்கு விற்கவேண்டாம், அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள். நேரே தலைநகரத்துக்கு எடுத்துப்போய் விற்றால் நல்ல விலைகிடைக்கும் என்று கூறினார்கள். அவரும் அடுத்தநாள் காலை போவதென்று முடிவு செய்தார். அன்றிரவு அந்த நண்பர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு வைரத்தை திருடிக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.

இந்தக் கதைகள் எல்லாம் ஒரு லெபனிஸ் வைர வியாபாரி எனக்கு சொன்னவைதான். இவர் அங்கேயிருந்த வியாபாரிகளில் நேர்மையானவர் என்று பெயரெடுத்திருந்தார். வைரக்கற்களை மதிப்பீடு செய்வதில் வல்லவர். இவர் வீட்டு வாசலில் ஒரு காவல்காரன் எப்போதும் நிற்பான். அவனைத் தாண்டிப் போனால் பெரிய இரும்புத் தூண்கள் போன்ற கதவு.  உள்ளே இருந்து கடவு எண்களைப் பதிந்தால்தான் அது திறக்கும். திருடர்கள் அதிகமாக இருந்ததால் தன் வியாபாரத்துக்கு பாதுகாப்பு அவசியம் என்பார்.

ஒரு நாள் நான் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது ஓர் இளைஞன் வந்தான். சுற்றுமுற்றும் கண்களை சுழலவிட்டபடியே நின்றான். நாங்கள் பார்க்கும்போதே கொடுப்புக்குள் இருந்து புளியங்கொட்டை அளவு வைரக்கல் ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அவர் அந்தக் கல்லைப் பரிசோதித்தார். அவரிடம் பலவித கருவிகள் இருந்தன. வைரத்துக்கு எடையும், உருவமும் முக்கியம். எடை கூடி இருந்தாலும் உருவம் சரியாக அமையாவிட்டால் வெட்டுவதில் சேதாரம் உண்டாகி வைரத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். இளைஞன் கொண்டுவந்த வைரம் அளவில் பெரிதாக இருந்தாலும் மதிப்பு குறைந்தது என்றார். அதிலே மோசமான கறுப்பு புள்ளி விழுந்திருந்தது. பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது அவனிடம் ஒரேயரு கேள்விதான் கேட்டார். ‘எங்கே கிடைத்தது?’ அதற்கு அவன் ‘ரொங்கோ’ என்று பதில் சொன்னான்.

ரொங்கோவுக்கு என் நண்பர்களைப் பார்க்க நான் அடிக்கடி போவதுண்டு. ஓர் இடத்தில் ஆறு மெல்லிய ஓடைபோல பிரிந்து நிலம் தெரிய ஓடும். அந்த இடம் மனதைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். ஒரு நாள் அந்தப் பாதையில் போனபோது தூரத்து மலை பூக்களால் மூடப்பட்டுக் கிடந்தது. நெடிதுயர்ந்த மரங்கள், நீலமான ஆகாயம், தெளிந்த நீர். வாழ்க்கையில் ஒருமுறைதான் அந்தக் காட்சி பார்க்கக்கிடைக்கும் என்று எனக்குப் பட்டது. ஒரு புகைப்படம் பிடிக்கலாம் என்று காரை விட்டு இறங்கினேன். ஆற்று மட்டத்துக்கு இறங்கிய பிறகுதான் நான் எடுக்க வந்த படத்திலும் பார்க்க இன்னும் அரிய காட்சி ஒன்று கிட்டியது.

இரண்டு பெண்கள் வெகு சிரத்தையாக வைரத்துக்காக மண்ணை அரித்துக் கொண்டிருந்தார்கள், எங்களுக்கு முதுகைக் காட்டியவாறு. நானும் சாரதியும் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களைப் பார்த்தால் சிநேகிதிகள் போலவும் இருந்தது; சகோதரிகள் போலவும் தெரிந்தது. இருவரும் ஒரே மாதிரியான உடை தரித்திருந்தார்கள். கீழே பூப்போட்ட லப்பா உடுத்தி மேலே மஞ்சள் ரீசேர்ட் அணிந்திருந்தார்கள். பெரியவளுக்கு 25 – 26 வயதிருக்கலாம்; சின்னவளுக்கு 12 -13 மதிக்கலாம். அவர்கள் மென்டே மொழியில் கலகலவென்று பேசுவதும், பின்பு சிரிப்பதுமாக முழங்கால் தண்ணீரில் குனிந்தபடி நின்று  வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

படிக்க:
♦ கோலார் சுரங்க வரலாறு !
கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
♦ உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

எங்களுடன் வந்த சாரதி மென்டே மொழியில் வணக்கம் சொன்னான். திடுக்கிட்டு திரும்பிய அவர்கள் கண்களில் வியப்பும், பயமும், வெட்கமும் ஒரே அளவில் கலந்திருந்தது. நான் ஒரு படம் பிடிக்கலாமா என்று கேட்டேன். அதைச் சாரதி மொழிபெயர்த்தான். அதற்கு அவர்கள் பதில் சொல்ல அவன் என்னவோ சொன்னான். அவர்கள் அதற்கும் ஏதோ சொல்லிவிட்டு சிரிசிரியென்று சிரித்தார்கள். இப்படி என்னை விட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்கு நீண்ட உரையாடலில் இறங்கினார்கள். நான் ஒருவன் அங்கே நட்ட மரம் மாதிரி நிற்கிறேன் என்பதே அவர்களுக்கு மறந்துவிட்டது.

‘சரி, சரி என்ன சொல்கிறார்கள்’ என்றேன். அவன் சிரித்தபடி சொன்னான் அவர்கள் இருவரும் தாயும் மகளுமாம். பக்கத்து கிராமத்தில் வாழ்கிறார்கள். இந்த ஒதுக்குப்புறமான இடத்தை அவர்கள் பிடித்திருக்கிறார்கள். தினமும் காலையிலிருந்து இரவு வரைக்கும் அரிப்பார்கள். இன்னும் ஒரு வைரமும் அகப்படவில்லை. ‘கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?’ இது என் கேள்வி.’ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடாதா?’ இது அவர்கள். ‘வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?’ இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். ‘அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.’ அவள் வெடிப்பதுபோல வாயைத் திறந்து சிரித்தாள். தாயை கலந்து ஆலோசிக்காமல் அவளாகவே சிந்தித்து அந்தப் பதிலை கொடுத்ததில் தாய்க்கு பெருமை தாங்க முடியவில்லை.

நான் காமிராவை தயார் செய்தேன். அவர்கள் இருவரும் ஏதோ தங்களுக்குள் பேசினார்கள். பிறகு சாரதியிடம் பேசியபோது முகம் வாடி அவர்கள் உற்சாகம் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. என்னவென்று கேட்டால் அவர்களுக்கு கூச்சமாக இருக்கிறதாம். எனக்கு ஆச்சரியம். கூச்சம் என்ற வார்த்தையே மென்டே மொழியில் இல்லை. சாரதி தொடர்ந்தான். அழுக்கான  ரீசேர்ட்டை அணிந்து படம் பிடிக்க அவர்களுக்கு விருப்பமில்லை; ரீசேர்ட்டை கழற்ற அனுமதித்தால்தான் சம்மதிப்பார்களாம். இப்பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது. யாராவது இந்த உலகத்தில் மறுப்பு சொல்வார்களா. மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் ஒப்புக்கொண்டேன்.
அது பொத்தான் வைத்து முன்னுக்கு பூட்டும் ரீசேர்ட். அது முடிந்த இடத்தில் கழுத்து தொடங்கி மேலே போனது. ஒரே இழுவையில் இருவரும் தலைக்கு மேலால் ரீசேர்ட்டைக் இழுத்துக் கழற்றி வீசிவிட்டு ஒருவர் தோளை ஒருவர் அணைத்தபடி நின்றனர்.  இருவரும் ஒரே அச்சாக  இருந்தனர். பூக்கள் நிறைந்த மலையும், மரங்களும், ஆறும் பின்னணியாக அமைந்தது. படம் எடுத்து முடிந்தபிறகும் அது தெரியாமல் அவர்கள் சிரித்தபடி காமிரா முன்னால் நின்றார்கள்.

தங்களுக்கு ஒரு படம் வேண்டுமென்று கேட்டாள் சின்னவள். அவள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அழுக்கான ரீசேர்ட்டை மறுபடியும் மாட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய தலையும், ஒரு கையும் ஒரு மார்பும் ரீசேர்ட்டுக்கு உள்ளேயும், மற்ற மார்பு வெளியேயும் இருந்தது. அடுத்தமுறை இந்த வழியால் போகும்போது கொடுப்பேன் என்றேன். ஆனால் அவர்களை எங்கே தேடுவது? மறுபடியும் சிறியவளே பதில் கூறினாள். ‘இந்த ஆற்று தண்ணீரிலேயே நிற்போம். இல்லாவிட்டால் அதோ அந்தப் பளிங்கு வீட்டில் இருப்போம்’ என்றாள். மறுபடியும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் சிரிப்பு அலை அலையாக எழும்பியது.
அந்த அலையுடன் நான் காருக்கு திரும்பியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை, எனக்கு ஒரு கேள்வி இருந்தது. ‘இது சட்டவிரோதமான காரியம் அல்லவா?’ அவ்வளவு குறைந்த நேரத்தில் முழுச் சிரிப்பில் இருந்து முழுக் கோபத்துக்கு ஒருவர் மாறியதை அன்றுதான் கண்டேன். அம்மாக்காரி சொன்னாள், ‘சட்டவிரோதமா? அவர்கள் என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும். நானும் என் மகளும் இன்று காலை உணவு சாப்பிட்டோமா என்று ஒருவருமே கேட்பதில்லை. என்னுடைய ஆற்றுத் தண்ணீரில் நான் நிற்கக்கூடாதா?’

நான் அந்தப் பெண்களை எடுத்த படம் அருமையாக விழுந்திருந்தது. பார்த்தால் தாயும் மகளும் என்று சொல்லவே முடியாது. அக்காவும் தங்கையும் போலவே தோளுக்கு மேல் கைபோட்டபடி நின்றார்கள். நான் பெரிய புகைப்படக்காரன் அல்ல; என்னுடைய காமிராவும் பெரிய விலையுயர்ந்த காமிரா என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்தப் படத்தில் எல்லா அம்சங்களும்  பொருந்தியிருந்தன. பூச்சொரிந்த மலையும், உயர் மரங்களும், படிகம் போன்ற ஆற்று நீரும், அடக்கமுடியாமல் எழும்பிய சிரிப்பை கொஞ்சமாக வெளியே விடும் பெண்களும். அவர்களின் அழகு அப்படி அபூர்வமாக அமைந்ததற்கு காரணம் அந்தக் கண்களில் துள்ளிய சூரிய ஒளிதான்.

அடுத்து வந்த சில வாரங்களில் மழை பிடித்துக்கொண்டது. மழை என்றால் ரொங்கோ போகும் ரோட்டுப்பாதை சேறும் சகதியுமாக மாறிவிடும். கார் உருளுவதற்குப் பதிலாக மிதக்கவும், சறுக்கவும் செய்யும். மழைப் பருவம் முடிந்து போனபோது வழக்கமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களைத் தேடினால் அவர்களைக் காணவில்லை. அவர்கள் வேலைசெய்த அதே இடத்தில் வேறு  இரண்டு நடுத்தர வயது ஆண்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஆற்று மணலை அரித்தார்கள். அந்தப் பெண்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. புகைப்படத்தை எடுத்துக் காட்டினதும் புரிந்துகொண்டார்கள். அவர்களை சில வாரங்களுக்கு முன்னால் பொலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது. எதற்காக என்று கேட்டபோது உரிமம் இல்லாமல் வைரம் அரித்த குற்றத்திற்காக என்றனர்.

‘உங்களிடம் உரிமம் இருக்கிறதா?’

‘இல்லை, ஆனால் மறுபடியும் பொலீஸ் இந்தப் பகுதியில் திடீர்சோதனை நடத்த ஆறுமாதம் பிடிக்கும்.’

நான் அவர்களிடம் படத்தைக் கொடுக்கப் போனபோது மனைவி தடுத்துவிட்டார். திரும்பவும் காருக்குள் ஏறியதும் இன்னொரு தடவை அந்தப் படத்தை வெளியே எடுத்துப் பார்க்கத் தோன்றியது. மனைவி ‘கண்கள் என்ன பளபளப்பாக இருக்கின்றன’ என்றார். உண்மைதான், எப்படியும் ஒரு பளிங்குவீடு வாங்கவேண்டும் என்ற கனவு அந்தப் பெண்களின் கண்களில் மினுமினுத்தது. உற்றுப் பார்த்தபோதுதான் அது சூரிய ஒளி இல்லை, வைரக் கற்கள் என்பது தெரிந்தது.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

0

காதிபத்திய எதிர்ப்புப் போராளியான பகத்சிங் பிறந்த நாளை, கோவை அரசு கலைக்  கல்லூரியில்  கொண்டாடியதற்காக முதுகலை முதலாமாண்டு மாணவி மாலதி, கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, பகத்சிங்கின் பிறந்தநாளை மீண்டுமொருமுறை கொண்டாடியுள்ளனர் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். முன்னரே இக்கல்லூரி மாணவர்கள் பகத்சிங் பிறந்தநாளை கடந்த செப்-28 அன்று பு.மா.இ.மு. சார்பாக கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் பேசுவதும், மாணவர்கள் ஒன்றுகூடுவதும் மாணவர்களின் ஜனநாயக உரிமை. என் வழியாக மாணவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்த பார்க்கிறது அரசு. நான் வரலாற்றுத்துறை மாணவி. பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடுவதில் நான் ஆர்வமாக இருந்தேன். நான் கல்லூரியில் பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கும் போலீஸ் ஸ்டேசனுக்கும் என்ன சம்பந்தம்? என்னை  இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவு நகல் ஒன்றை கோவை சி-2 போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கல்லூரி வளாகங்களில் அரசியல் பேசுவதும், கூட்டம் நடத்துவதும் என்ன தவறு? மறைமுகமான ரௌலட் சட்டம் ஏதும் இருக்கிறதா? இல்லை 144 ஏதும் பிறப்பிச்சிருக்கீங்களா?’’ என தனியார் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி மாலதி.

“பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம் எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்” என்று பகிரங்கமாகவே சவால் விடுக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

பிறந்தநாள் விழாவிற்கு தலைமையேற்று பேசிய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சுரேஷ் ”மாணவி மாலதியை சஸ்பெண்ட் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். கண்டிக்கத்தக்கது என்பதைத் தாண்டி உச்சகட்ட பாசிசத்தின் வெளிப்பாடே’’ என்ற அவர் மேலும், ”கல்லூரியில் ரதயாத்திரை நடத்தலாம், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடலாம் ஆனால்  மக்களின் விடுதலைக்காக போராடிய பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதா? இன்று மாலதியை சஸ்பெண்ட் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பகத்சிங்கை கொண்டு சென்றுள்ளது அரசு. நாளை நம்மை சஸ்பெண்ட் செய்தால் அச்செய்தி இலட்சக்கணக்கான மாணவர்களிடம் பகத்சிங்கை கொண்டு செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்றார்.

படிக்க:
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

”பகத்சிங் சாகவில்லை. எங்களது ஒவ்வொருவரின் மனதிலும் வீரனாக வாழ்கிறான். நாங்கள் பகத்சிங்கின் வாரிசுகள்.’’ என்பதை தங்களது செயலின் வழியே அறிவித்திருக்கிறார்கள், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி.
திருச்சி. 9943176246.

திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திச் செல்வதும், மணமக்கள் வீட்டார், வந்தவர்களுக்கு சுவையான விருந்தளித்து வாசல்வரை தாம்பூலப் பை கொடுத்து வழியனுப்பி வைப்பதும் இன்றைய திருமணங்களின் வழக்கமான நடைமுறை.

வழக்கமாக தாம்பூலப்பை வழங்கப்படும் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்வோருக்கு புத்தகங்களையும்கூட பரிசாகக் கொடுக்கலாமே. முற்போக்கு முகாமில் மணம் செய்வோருக்கு இந்த முறை அறிமுகமாகியிருக்கலாம். அதிலும் மண நிகழ்வில் கலந்து கொள்வோர் மணமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக புத்தக விற்பனை செய்யப்படும். கூடவே வருவோர் அனைவருக்கும் முற்போக்கு நூல்களை வழங்குவது இன்னும் சிறப்பு.

ஏனெனில் பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்னும் நேரடியான அரசியல் அமைப்புக்கள், கருத்துக்கள், நூல்களுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சிகர அரசியல் மற்றும் பண்பாட்டை அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கலாம்.

குறிப்பிட்ட தலைப்பில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு கட்டுரைகளை தொகுத்து அழகிய நூலாக்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.

முப்பது ரூபாய் விலையில் எண்பது பக்கங்களில் மேப்லித்தோ தாளில், ஃபெர்பெக்ட் பைண்டிங், மேட் லேமினேசன் ஆர்ட் பேப்பர் அட்டையுடன் அழகிய புத்தகமாக வெளிவருகிறது புதிய கலாச்சாரம். இத்தகைய கட்டமைப்பில் ஒரு நூலை இந்த விலையில் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது. அச்சிடும் செலவை மட்டும் விலையாக வைத்து இந்த நூல் வெளியாகிறது என்றால் மிகையல்ல. தற்போது தாள்கள் விலை, அச்சக கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் அதே முப்பது ரூபாயில் தொடர்ந்து வெளிவருகிறது புதிய கலாச்சாரம்.

இது வரை வெளிவந்த நூல்கள் பல்வேறு தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை கொண்டிருக்கின்றன. சினிமா விமரிசனம், பெப்சி கோக், குப்பை உணவு, எது காதல், மீடியாவை நம்பலாமா, விவசாயத்தின் அழிவு, மாட்டுக்கறி துவேசம் என சமகால அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த நூல்கள் பேசுகின்றன.

ஆகவே தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம். கைவசம் இருக்கும் நூல்களின் இருப்பை வெளியிட்டுள்ளோம். அதிலிருந்து உங்கள் தலைப்புக்களை தெரிவு செய்யலாம். அவை ஒரே தலைப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எவ்வளவு வேண்டுமானலும் (இருப்பைப் பொறுத்து) வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே வெளிவந்த நூல்களில் குறைந்தபட்சம் 500 படிகள் வாங்குவதாக இருந்தால் அதை மீண்டும் அச்சடித்து தருவோம். சில நூல்களை திருமணங்களைத் தாண்டி பள்ளிகள், கல்லூரிகள், ஊர்க்கூட்டங்களிலும் விநியோகிக்கலாம். தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்க.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

 

 

குற்றங்களின் அம்மா

புதிய கலாச்சாரம்
ஜூன் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 95 புத்தகங்கள்

 

   

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ?
புதிய கலாச்சாரம்
ஜுலை 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 100 புத்தகங்கள்

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா…
ஹீரோவா ஜீரோவா…?

புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2016விலை: ரூ.20 கையிருப்பு : 330 புத்தகங்கள்
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 116 புத்தகங்கள்

 

விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம்
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 33 புத்தகங்கள்

 
   

மோடியின் டிஜிட்டல் பாசிசம்
புதிய கலாச்சாரம்
சனவரி 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 30 புத்தகங்கள்

   

எதிர்த்து நில் !
புதிய கலாச்சாரம்
மார்ச் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 56 புத்தகங்கள்

 

கோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் !

புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 118 புத்தகங்கள்

 

 

 

மருத்துவ எமன் !

புதிய கலாச்சாரம்
மே 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 34 புத்தகங்கள்

 

கல்வி வியாபாரம் : வாங்க சார்வாங்க ! 

புதிய கலாச்சாரம்
ஜூன் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 51 புத்தகங்கள்

 

 

 

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்

புதிய கலாச்சாரம்
ஜூலை 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 39 புத்தகங்கள்

 

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்

புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 110 புத்தகங்கள்

 

 

 

நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி !

புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 210 புத்தகங்கள்

 

ஊழல் பரிவார் உத்தமர்மோடி  ! 

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 218 புத்தகங்கள்

 

 

 

போர்னோ : இருளில் சிக்கும் இளமை

புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 245 புத்தகங்கள்

 

பேரிடர் : புயலா அரசா ?

புதிய கலாச்சாரம்
ஜனவரி 2018

விலை: ரூ.20

கையிருப்பு : 96 புத்தகங்கள்

 

 

 

ரஜினி : வரமா சாபமா ?

புதிய கலாச்சாரம்
பிப்ரவரி 2018

விலை: ரூ.20

கையிருப்பு : 212 புத்தகங்கள்

 

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் !

புதிய கலாச்சாரம்
மார்ச் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 212 புத்தகங்கள்

 

 

 

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் !

புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 421 புத்தகங்கள்

 

இதயத்தை மீட்பது எப்படி ?

புதிய கலாச்சாரம்
மே 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 416 புத்தகங்கள்

 

 

 

தூத்துக்குடி முதல் நியமகிரி வரை :
வளர்ச்சியின் பெயரில்
கொல்லப்படும் மக்கள் !

புதிய கலாச்சாரம்
ஜுன் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 436 புத்தகங்கள்

 

ஆன்மீகக் கிரிமினல்கள் !

புதிய கலாச்சாரம்
ஜுலை 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 460 புத்தகங்கள்

 

 

தாய்மார்களைக் காப்பாற்றுவது
நவீன மருத்துவமா
?
இலுமினாட்டி பைத்தியமா ?புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2018விலை: ரூ.30கையிருப்பு : 500 புத்தகங்கள்
 

மீடியாவை மிரட்டும் மோடி !

புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 235 புத்தகங்கள்

 

புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க:

இதழ்களுக்கான தொகையை அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC. NO. – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

இதழ்களுக்கான தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் !

நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் பிரிட்டன் அதிலிருந்து வெளியேறுவதாக வாக்கெடுப்பில் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நாடு எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் குறித்து “ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்” –  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தோம்.

என்னதான் பிரச்சனை?

பிரெக்சிட் என்று அழைக்கப்படும் பிரிட்டனின் விலகல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் (ஐக்கிய அரசு – UK) எதற்காக பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்? வரப்போகும் சிக்கல்களின் அடிப்படை என்ன என்று கூடுதல் விபரங்களை அந்தக் கட்டுரை வெளியான அதே தளத்தில் வெளியான Why is the EU in no hurry for a trade deal? என்ற கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ உலகமயம் பெரிய நாடுகளின் கார்ப்பரேட்டுகளை ஒரு நாட்டு எல்லைகளை தாண்டி பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் உற்பத்தி சங்கிலிகளை சார்ந்திருக்க செய்திருக்கின்றன. இதை சாத்தியமாக்குவதற்கும், எளிமையாக்குவதற்குமான வர்த்தக உடன்படிக்கைகள், சுதந்திர வர்த்தக மண்டலங்களை அரசுகள் உருவாக்கியிருக்கின்றன.

நாடுகளின் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக மேலும் மேலும் நெருக்கமாக பிணைக்கப்படுகின்றன. எனவே, ஒரு பொருளாதார ரீதியில் ஒரு நாட்டின் ஒரு பகுதி பிரிந்து செல்வது என்பது முதலாளிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுத்தக் கூடியதாக மாறியிருக்கிறது.

ஆனால், இந்த கார்ப்பரேட் உலகமயம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளால் உழைக்கும் வர்க்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதை எதிர்த்த போராட்டங்களை இனவாதமாக திசை திருப்பி பிரிவினை அரசியல் செய்வதும் முதலாளித்துவ அரசியலுக்கு தேவையாக இருக்கிறது. டிரம்பின் காப்புவாதம், பிரெக்சிட், “மண்ணின் மைந்தர்கள்” அரசியல் எல்லாம் இந்த வகையில் சேர்கின்றன.

ஒரு பக்கம் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் மேலும் மேலும் நெருங்கி வர வேண்டும். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பிரிவினைவாதமும், காப்புவாதமும் தேவைப்படுகிறது. இந்த இரட்டைக் கிடுக்கியில் சிக்கிக் கொண்டு திணறுகிறது, உலக முதலாளித்துவம்.

பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் எப்படி இருக்கின்றன? பிரிட்டன் தனியாக பிரிந்து செல்வதாக கூறுவது அவற்றை எப்படி பாதிக்கும்? என்பதற்கான அடிப்படைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. 

கட்டுரையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஐக்கிய அரசு என்று பேசப்படும் இடங்கள் அந்தந்த பகுதி கார்ப்பரேட்டுகளை குறிப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். உள் தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

*****

பிரெக்சிட்டுக்கு பிந்தைய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை பிரிட்டனுடன் ஏற்படுத்திக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏன் அவசரம் காட்ட மறுக்கிறது? [அதே நேரம் பிரிட்டன் அப்படி ஒரு ஒப்பந்தத்துக்காக தவியாக தவிக்கிறது]

  1. பிரிவதற்கு முன்னால் ஒப்பந்தம் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆர்வம் இல்லை

பிரிட்டன் உடனான வர்த்தக பேச்சு வார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் இன்னும் தயாராக இல்லை” என்று தெரிவிக்கிறார் பி.பி.சி.யின் ஆடம் பிளெமிங்.

பிரஸ்ஸல்சின் பிரெக்ஸிட் வட்டங்களில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கு இது மற்றொரு காரணம். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியம் (EU)-ஐக்கிய அரசு (UK) இடையிலான எதிர்கால உறவுகள் பற்றியும், அதை நிர்வகிப்பது பற்றியும் குறித்த விவரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகே முடிவு செய்யப்படும் என்று கருதுகின்றனர்” என்று கட்யா ஆட்லேர் தெரிவிக்கிறார்.

“அரசாங்கத்துக்கான கழகம்” என்ற சிந்தனை குழாம் சென்ற மாதம் வெளியிட்ட EU27-ன் கண்ணோட்டம் பற்றிய அறிக்கையில் இது தொடர்பான குறிப்புகள் இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் அரசுகளுக்கு ஐக்கிய அரசின் (UK) சந்தையை விட ஐரோப்பிய ஒற்றைச் சந்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் அதன் ஒற்றைச் சந்தைக்கும் முன்னுரிமை என்று கூறும்போது இதையே குறிப்பிடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றும் UK-உடன் ஒரு நெருக்கமான எதிர்கால உறவு வேண்டும், அதில் தங்கள் நலன்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்க பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் அதற்காக, இதுவரை நிலவி வரும் ஒற்றைச் சந்தை பற்றிய ஒருமித்த கருத்தை அவை கைவிட்டு விடப் போவதில்லை. ஒற்றைச் சந்தையையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் திடமாக பாதுகாப்பது என்ற நோக்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்த கருத்தை கொண்டுள்ளன.

ஒற்றைச் சந்தையின் முழுமை என்னும் பதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடிக்கடி நாம் கேட்டாலும் நம் நாட்டு அரசியல்வாதிகள் அதற்கு போதுமான கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அதன் உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை பாதுகாத்து பராமரிப்பதற்கு பல தேவைகள் உள்ளன. ஒற்றைச் சந்தை சுங்க ஒன்றியத்துடன் இணைந்து இயங்கும்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே உலகத்தில் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு தடையின்றி வர்த்தகம் நடப்பதை அது உறுதி செய்கிறது.

நாடுகளுக்கிடையே வர்த்தக காப்புவாதமும், முதலாளித்துவ சுதந்திர வர்த்தகமும்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மிகவும் சிக்கலானது. “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வது நமக்கு அதிக சுதந்திரத்தை தரும்” என்றும் “வெளியே பல்வேறு நாடுகள் தங்களிடையே சுதந்திர வர்த்தகம் செய்துகொள்வதாகவும்” பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், உண்மை என்னவென்றால், சர்வதேச வர்த்தகத்தில் பொதுவான நிலைமை மோசமானது, மிருகத்தனமானது. வரலாற்று ரீதியாக, நாடுகள் எப்போதுமே வர்த்தகத்தை தமக்கு சாதகமாக கட்டுப்படுத்தி வந்துள்ளன. உள்நாட்டுச் சந்தைகளை பாதுகாத்து, பிற நாட்டு பொருட்களின் மீது இறக்குமதி வரிகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் சுமத்தி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாகவும் உலக வர்த்தக் கழகத்தின் மூலமாகவும் இந்தத் தடைகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன.

இந்த நிகழ்முறை ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறு எந்த ஒரு ஒப்பந்த பகுதியையும் விட அதிக முன்னேற்றம் கண்டது. ஐரோப்பிய சுங்க ஒன்றியம், சரக்குகள் மற்றும் சில சேவைகளின் மீது சுங்கவரிகளை நீக்கியது. ஐரோப்பிய ஒற்றைச் சந்தை இணக்க விதிகளை செயல்படுத்துகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் சேர்க்கை எல்லை கட்டுப்பாடுகளுக்கான தேவையை நீக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளே ஒரே மாதிரியான வரிகள், ஒரே மாதிரியான தரநிர்ணயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், ஒரு முழுமையாக தயார் செய்யப்பட்ட பொருளோ அல்லது மற்றொரு உற்பத்திக்கான உதிரி பாகமோ ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வந்தவுடன் அது எந்தத் தடையுமின்றி உறுப்பு நாடுகளுக்கிடையே நகர முடியும்.

உதாரணமாக, மான்செஸ்டரில் ஒரு டிரக்கில் பொருட்களை ஏற்றி நாடுகளின் எல்லைகளை கடந்து மூனிச்சிற்குள் ஓட்டி வந்து இறக்கி விட்டு, மேலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு எந்தத் தடையும் இல்லாமல் திரும்ப வந்துவிட முடியும். சர்வதேச வர்த்தகத்தில் வழக்கமான தடைகள் இல்லாத ஒரு நடைமுறையை உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது. இது வழக்கமான சர்வதேச வர்த்தக நிலைமைக்கு ஒரு விதிவிலக்கான அமைப்பாகும்.

ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்டால் ஒன்றியத்தில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளை இழந்துவிடும் என்றுதான் பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டனின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் மீது தடைகளைத் விதிக்கும் என்ற பரவலாக பேசப்படுவது தவறான சிந்தனை.

பிரிட்டன் வெளியேறிய பிறகு என்ன நடக்கும்?

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால், சர்வதேச வர்த்தகத்தில் இயல்பாக நடைமுறையில் இருக்கும் தடைகளை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்திலும் அது எதிர்கொள்ள ஆரம்பிக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு வெளியே தன்னை நகர்த்துவதன் மூலம், வரிகளும் ஒழுங்குமுறைகளும் தடைகளாக இல்லாத ஒரு அமைப்பின் பயனை பிரிட்டன் இழக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்கு வெளியில் பிரிட்டன் போய் விட்டால், பிற நாடுகளின் ஏற்றுமதிகளைப் போலவே பிரிட்டன் பொருட்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ஆனால் நமது எல்லையை கடந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செல்லும் பொருட்களை சோதனை செய்ய வேண்டாம் என்று நாம் முடிவு செய்தோமே? ஐரோப்பிய ஒன்றியம் வகுத்த அதே விதிமுறைகளைத் தானே நாமும் பின்பற்றுகிறோம். எனவே, மார்ச் 29-ல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு என்ன மாறி விடும்? இது அயர்லாந்து தொடர்பான பிரச்சனையையும் தீர்த்து விடும் அல்லவா?

துரதிருஷ்டவசமாக அது அவ்வளவு எளிதல்ல. உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளின்படி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வர்த்தக விதிமுறைகளைத்தான் ஒரு நாடு கடைப்பிடிக்க முடியும். உறுப்பு நாடுகளுக்கிடையே பாரபட்சம் காட்ட முடியாது. பிராந்திய ஒப்பந்தங்களின் கீழோ, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழோ மட்டும்தான் ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சலுகை அளிக்கும் விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.

உலக வர்த்தகக் கழக விதிமுறைகள் எப்படி செயல்படுகின்றன?

இதை “அரசாங்கத்துக்கான கழகம்” இவ்வாறு விளக்குகிறது:

விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டாம் என்று ஒரு தலைபட்சமாக பிரிட்டன் முடிவு செய்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அது தனது எல்லைகளை முழுமையாக திறந்துவிட முடியாது.
முதலாவதாக, உலக வர்த்தகக் கழகத்தின் (WTO) விதிமுறைகளின் படி, ஐரோப்பிய ஒன்றிய பொருள் ஒன்றின் மீது இறக்குமதி தீர்வையை ரத்து செய்தால் அதே பொருள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் போதும் அதன் மீது வரி விதிக்க முடியாது. அப்படி வரி விதித்தால், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் மீதும் இறக்குமதித் தீர்வை விதிக்க வேண்டும்.

இரண்டாவதாக, உலக வர்த்தக கழகத்தின் பல்வேறு உடன்படிக்கை அமைப்புகளின் உறுப்பினராக இருக்கும் வகையிலும், TBT (வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப தடைகள்) மற்றும் SPS (சுகாதார மற்றும் தாவர சுகாதார நெறிமுறைகள்) உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட வகையிலும், பிரிட்டன் உறுப்பு நாடுகளுக்கிடையே பாகுபாடு காட்டாத ஒழுங்குமுறை விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஒரு நாட்டிற்கு (ஐரோப்பிய ஒன்றியத்துக்கு) சுங்க வரியை கைவிடுகிறீர்கள் என்றால், எல்லா நாடுகளுக்கும் அதை கைவிட வேண்டும். இது பிற ஒழுங்குமுறை விதிகளுக்கும் பொருந்தும்.

பிரெக்சிட்டும் உலக வர்த்தகக் கழகமும்

அயர்லாந்து எல்லையில் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதிப்பதை கைவிட்டு விட்டால் விரைவில் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதிப்பதையும் நிறுத்த வேண்டியிருக்கும் இல்லாவிடில் ஏதாவது ஒரு நாடு இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சட்டரீதியான வழக்கு ஒன்றை எழுப்பும்.

FT (Financial Times)-ன் ஆலன் பீட்டி இதை இவ்வாறு விளக்குகிறார்:

இங்கிலாந்து இந்த வகையிலான பாகுபாடு காண்பித்தால், உலக வர்த்தக கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகளுக்கு அது வழிவகுக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தில் இது வரை ஐரோப்பிய ஒன்றியத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு வந்த பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகி தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளப் போகிறது. இந்த அமைப்பில் தனது அந்தஸ்தை அது நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

உணவுப் பொருட்கள் இறக்குமதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே இப்போது இருக்கும் ஒதுக்கீடுகளைப் பிரித்துக் கொள்வதில் மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவு பிரிட்டனுக்கு தேவைப்படும். தன் நாட்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு டெண்டர்களில் பங்கு பெற உரிமையை வழங்கும் உலக வர்த்தகக் கழகத்தின் அரசு கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் பிரிட்டன் தனது நலன்களை புதிதாக உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நேரத்தில் உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை சட்டத்தில் மிகப்பெரிய மீறலை உருவாக்குவது, மற்ற நாடுகளை தனக்கு ஆதரவாக முடிவெடுக்க வைப்பதற்கு நிச்சயம் உதவி செய்யாது.

இதற்கு என்ன தீர்வு?

பிரிட்டன் பிற நாட்டு இறக்குமதிகளுக்கு விதிக்கும் அதே கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு விதிக்க வேண்டும் என்று சொன்னால் எதிர் திசையியிலும் இது பொருந்தும். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனின் ஏற்றுமதிகளை மற்ற நாடுகளின் ஏற்றுமதிகளைப் போலவே சுங்க சோதனைகளுக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தியாக வேண்டும்.

இதன் பொருள் ஐரோப்பிய ஒன்றியமானது பிரிட்டிஷ் பொருட்களின் மீது புதிதாக கட்டணங்களையும் சோதனைகளையும் விதிக்கும் என்று இல்லை. சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் நாம் வெளியேறியதன் தர்க்கரீதியான விளைவாக அவை இருக்கும்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இந்தத் தடைகளை மாயமாக மறைந்து போகச் செய்யப் போவதில்லை. ஒழுங்குமுறைகளும் பொருட்களின் ஆரம்ப இடம் பற்றிய விதிகளும் அமல்படுத்தப்பட்டே தீர வேண்டும். சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் வெளியேறிய பின்னர், எல்லை சோதனைகள் எல்லா நாடுகளுக்கும் ஒரே போல அமல்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டும் தனியாக விலக்கு அளிக்க முடியாது.

அதனால்தான் ஒற்றைச்சந்தையில் எந்த அளவுக்கு பங்கேற்பது என்று தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிரிட்டனின்’ அணுகுமுறையை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் தயக்கம் காட்டுகிறது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனித்து மற்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய ஆரம்பித்தவுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகளை எட்டாத பொருட்கள் பிரிட்டனுக்குள் வர ஆரம்பிக்கும். அந்தப் பொருட்கள் பிரிட்டனின் எல்லையை கடந்து ஐரோப்பாவுக்குள் செல்வதை தடுப்பதற்கு எல்லை சோதனைகளை அமல்படுத்த வேண்டும்.

ஒரு நாடு சுங்க ஒன்றியத்திற்குள்ளும், ஒற்றைச் சந்தையிலும் பாதி உள்ளே பாதி வெளியே இருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய ஒரு ஏற்பாடு ஒட்டு மொத்த அமைப்பு முறையையும் குலைத்து விடும். அதாவது ஒரு சுங்க ஒன்றியம் அல்லது ஒற்றைச் சந்தைக்குள் அனுமதிக்கப்படும் எல்லா பொருட்களும் அதற்குள் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி நகர முடிய வேண்டும். இதன் மறுதலை என்னவென்றால் அதற்கு வெளியிலிருந்து வரும் எல்லா பொருட்களும் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

சுதந்திர சந்தை முதலாளிகளுக்கு தேவை

பொருட்களை இவ்வாறு தடைகளின்றி இடம் விட்டு இடம் அனுப்புவது கார்ப்பரேட்டுகள் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான உற்பத்தி/மதிப்பு சங்கிலிகளை உருவாக்கி பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது. கீழே உள்ள எரிபொருள் உட்செலுத்துவான் (fuel injector) ஒன்றின் நகர்வுகளை காண்பிக்கும் ஃபைனான்சியல் டைம்ஸ் வரைபடம், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேறெங்கோ தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தி பொருளின் பகுதியாக சேர்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

பிரிட்டன்தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான துணை பாகங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான துணை பொருட்களை தான் அவற்றுக்கு அனுப்புகிறது. மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளபடி, கடந்த வருடம் பிரிட்டனின் ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் 30 சதவீதத்துக்கும் மேல், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான துணை பொருட்கள் ஆகும்:

ஐக்கிய அரசு (UK) ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றிய மதிப்புச் சங்கிலி இடைநிலைப் பாகங்களின் மதிப்பு 1995-இல் மொத்த ஏற்றுமதியில் 5-இல் ஒரு பங்காக இருந்தது 2014-இல் 3-ல் ஒரு பங்கு என்று அதிகரித்துள்ளது. ஐரோப்பா வழியாக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பிரிட்டன் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வது இல்லை; கண்டத்திற்கு அப்பால் ஏற்றுமதி செய்யப்படும் இறுதி பொருட்களுக்கான விநியோகஸ்தராக பிரிட்டன் இருக்கிறது.

முதலாளிகளின் கத்தி எந்தப் பக்கம் சாயும்?

பிரிட்டன் ஒற்றைச் சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் விட்டு விலகினால் இந்த வர்த்தகம் முழுமையும் எல்லை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும், கால தாமதத்தை பொறுதுதக் கொள்ள முடியாத கார்ப்பரேட் உற்பத்தி செயல்முறைகளுக்கு இடையூறாக மாறும். சில சந்தர்ப்பங்களில், இந்த விநியோக சங்கிலிகளை இடமாற்றம் செய்யும் அளவுக்கு இந்த இடையூறுகள் இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை விட ஐக்கிய அரசு நிறுவனங்களை இது அதிகம் பாதிக்கும், ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பிரிட்டனைத் தவிர்த்து வேறு நாடுகளை எளிதில் தேர்ந்தெடுத்து விட முடியும். ஆனால் பிரிட்டிஷ் நிறுவனங்கள் தங்களுடைய தேவைகளை பிரிட்டனுக்கு உள்ளேயே பெறும்படி மாறுவது சிரமமான ஒன்றாக இருக்கும்.

நிதிக் கட்டமைவு ஆய்வுகளுக்கான கழகம் இதை இவ்வாறு சொல்கிறது.

பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் சார்பு நிலை குறைவானது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டன் தவிர்த்த உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உள்ளீடுகளில் 1.5%-ஐ மட்டுமே பிரிட்டனிலிருந்து பெறுகின்றன.

விநியோக சங்கிலிகளில் ஏற்படும் சீர்குலைவு பிரிட்டனை விட மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.

மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பார்வையில் பிரெக்ஸிட் (Brexit) உடன் தொடர்புடைய பெரும்பாலான பிரச்சினைகள் பிரிட்டன் சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் வெளியேறுவது தொடர்பானவை. ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒரு அளவிற்கு அதை குறைக்கலாம் ஆனால் அது விநியோக சங்கிலிகளின் சுமுகமான ஓட்டத்தை மீட்டெடுக்காது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை இயக்குநரான இயன் ராபர்ட்சன், “உலக வர்த்தக அமைப்பு விதிகளை விட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) பெரிய அளவு மேம்பட்டது இல்லை. ஒருமுறை விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு விட்ட பிறகு, ஏற்படும் சேதத்தை சரிக்கட்டுவது எளிதல்ல” என்கிறார்.

இதை பிரிட்டிஷ் துறைமுக சங்கமும் ஒப்புக்கொள்கிறது. உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ் இருப்பதை விட, ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை(FTA)யின் கீழும் துறைமுக நடைமுறைகள் பெரிய அளவு வேறுபடாது என்கிறது அது. அதன் தலைமை நிர்வாகி கூறும்போது:

பிரெக்ஸிட் (Brexit)-க்குப் பிந்தைய ஏதாவது ஒரு விதமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இத்துறையில் பலரும் வரவேற்பார்கள், ஆனால் அது எல்லை கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்து விடப் போவதில்லை. எல்லை கட்டுப்பாடுகளை பொறுத்தவரை சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் விலகுவதின் தாக்கம் துறைமுகங்களை பொறுத்தவரை ஒப்பந்தம் போட்டாலும், போடாமல் போனாலும் ஒரே விளைவுதான் என்று மாறியிருக்கிறது.

உண்மையில் இது ஐக்கிய அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் புதிய எல்லை கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியாததாக மாற்றி விடும். துறைமுகங்களிலும் முக்கிய வர்த்தக நுழைவு புள்ளிகளிலும் ஏற்படவிருக்கும் தாமதங்கள் தவிர்க்க முடியாத சாத்தியம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகள் இதை எப்படி பார்க்கிறார்கள்?

இதனால் தான் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி பேசுவதற்கு அவசரப்படவில்லை எனத் தோன்றுகிறது. ஐரோப்பிய ஒன்றிய விநியோக சங்கிலிகளுக்கான சேதத்தை மட்டுப்படுத்தி, சுங்க ஒன்றியத்தையும் ஒற்றைச் சந்தையையும் பிரிட்டன் இன்றி செயல்படும் வகையில் மாற்றி அமைப்பது அதன் முதன்மையான குறிக்கோள். பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் போடுவது வெறும் “இருந்தால் நல்லது” என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஒரு எறும்புப் புற்றை தொந்தரவு செய்தால் என்ன நடக்கும்? எறும்புகள் எவ்வளவு சீக்கிரம் உடைப்பை அடைக்க முடியும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகின்றன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனமாக கட்டப்பட்ட அமைப்பை சிதைக்கும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதைத்தான் செய்கின்றன. எந்தவொரு துளையையும் விட்டு வைக்காத வகையில் உடைப்பை அடைக்க அது மீண்டும் முயற்சிக்கிறது. ஒரு இரண்டு ஆண்ட காலம் மாறிச் செல்லும் கட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தங்களுடைய விநியோக சங்கிலிகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், அதனால் பிரிட்டனின் இறுதி விலகல் அவற்றுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.

கடைசியாக இது எப்படி போய் முடியும்?

ஐரோப்பிய ஒன்றியம், பொருட்களுக்கான ஒற்றைச் சந்தையில் மட்டும் பிரிட்டனை அனுமதிக்கும் புதிய சுங்க ஒன்றியம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கான சாத்தியம் உள்ளது. சாம் லோ மற்றும் ஜான் ஸ்ப்ரிங்போர்ட் வாதிடுவதைப் போல, இது ஜெர்சி தற்போது ஏற்பாடு செய்வதை ஒத்திருக்கும். பிரிட்டன் அதன் குடியேற்றக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் இது உதவுகிறது.

“ஜெர்சி முறை தேர்வு” பொருட்களின் மீதான பரிசோதனையின் தேவைகளை அகற்றும், இதன் மூலம் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும், இது அயர்லாந்துடன் எல்லைக் கோடு பற்றிய பிரச்சனையையும் தவிர்த்து விடும். இதுவரை, நான் பார்த்தவற்றில் இந்த ஒரு திட்டம்தான், பிரிட்டன் தான் மீற முடியாத நிலைப்பாடுகளை பராமரித்துக் கொள்ளும் அதே நேரம் அயர்லாந்து தொடர்பாக அதன் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதை சாத்தியமாக்கும். அதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏற்றுக் கொள்ள வைக்கும்.

இது நடக்கவில்லை என்றால் 2021-ல் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் போடாமலேயே ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனை கழற்றி விடுவது நடக்கலாம். அதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது விநியோகச் சங்கிலிகளை மாற்றியமைத்து, நாடுகளின் துறைமுக உள்கட்டமைப்புகளை சீரமைத்துக் கொண்டிருக்கும். அந்த நிதி ஆண்டின் இறுதி வரைக்கான வரவு செலவு திட்டத்தில் பிரிட்டனின் பங்களிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும். அவ்வாறு, அதன் தங்கு தடையில்லாத வர்த்தக அமைப்பை பாதுகாத்துக் கொண்ட பிறகு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்குள் அலங்கோலப் பட்டுப் போய் விட்ட அண்டை நாடான ஐக்கிய அரசுடன் வர்த்தக உடன்படிக்கை பற்றி பேச்சு வார்த்தை நடத்த முன்வரலாம்.

மூலக் கட்டுரை : Why is the EU in no hurry for a trade deal?

நன்றி : new-democrats இணைய தளத்தில் வெளியான கட்டுரை.

சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி

“ஜே.என்.யு. முதல் சென்னைப் பல்கலைக் கழகம் வரை – அறிவுத் துறையினரைத் தாக்கும் இந்து மதவெறிக் கும்பல் ! தமிழ்ச் சமூகமே ஆர்த்தெழு !” என்னும் முழக்கத்தின் கீழ் சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ. அரசு கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையில், “பேராசிரியர் பத்மாவதி எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு என்பது இந்துத்துவக் கும்பலைப் பொறுத்தவரையில் ஒரு எடுகோள்தான். அவர்களது உண்மையான நோக்கம் பேராசிரியர் சரவணனுக்கு சிக்கல் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்குக் காரணம், அவர், “சைவ சமயத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆய்வுகளில் தெளிவுபடுத்தியிருப்பதைத் தான்.

ஸ்மார்த்த பார்ப்பனர்களான சங்கராச்சாரிகள், சதித்தனமாக சைவத்தையும், வைணவத்தையும் பார்ப்பனமயமாக்கி அதனை இந்துமதத்திற்குள் திணித்தார்கள். ஆனால் சைவமும் வைணவமும் இந்து மதத்திற்குள் சேர்த்தியானவை அல்ல. இவ்விரு சமயங்களுக்கும் இந்து மதத்துக்கு துளி சம்பந்தமும் இலை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட போது, அங்கு கிடைத்த ஏராளமான முத்திரைகளில் முக்கியமானது லிங்கம். லிங்க வழிபாடு என்பது இயற்கையான வழிபாட்டு முறைகளில் ஒன்று.

படிக்க:
கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

மக்கள் பொதுவாக இயற்கையை புரிந்து கொள்ள இயலாதவர்களாகவே இருந்தார்கள். இன்றும் பெரும்பான்மையினர் அந்நிலையிலேயே இருக்கிறார்கள். தங்களது அறியாமையை “நம்பிக்கை”யைக் கொண்டுதான் நிரப்புகிறார்கள். அந்த நம்பிக்கை எனும் நிழலில்தான் இன்று கடவுள், பக்தி ஆன்மீகமும் நீடிக்கின்றன.

உலகில் உயிர் உற்பத்தியை அடையாளப்படுத்தும் குறியீடுதான் லிங்கம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இவ்வகை வழிபாடுதான் இருந்தது. தமிழர் நாகரிகம் என்பது இயற்கை வழிபாடுதான் என்பதை நமது சங்க இலக்கியங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

நமது சங்க இலக்கியங்களைப் பாடிய காலம் ஒன்று, தொகுத்த காலம் இன்னொன்று. அதற்கு விளக்க உரை அதன் பின்னர் எழுதப்பட்டது. கிபி 8-ம் நூற்றாண்டில்தான் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. பரிபாடலையும், திருமுருகாற்றுப் படையையும், கலித்தொகையையும் பழைய சங்க இலக்கியங்களோடு சேர்த்துத் தொகுத்துவிட்டனர். சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளே காட்டப்படுகின்றன. பின்னர் இணைக்கப்பட்ட பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்றவை அனைத்தும் வைதீக வழிபாட்டு முறைகளைப் பற்றி பேசுகின்றன.

இயற்கை சார்ந்த வழிபாட்டு முறையான லிங்க வழிபாட்டு முறைதான், சைவ வழிபாட்டு முறை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், அனைத்து சமயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு மதச்சார்பற்றவராகவே அந்நூலை எழுதியுள்ளார். சைவம், வைணவம் எல்லாம் தனித்து செயல்படவல்ல சமயங்களாக இருந்தும், பிற்காலங்களில் பிராமணர்களின் வைதீக மதத்திற்குள் சதித்தனமாக இணைக்கப்பட்டன.

தீயை சார்ந்துதான் பிராமண மதத்தின் வேதங்கள், உபநிடதங்களும் எழுதப்பட்டன. அவர்கள் இயற்கையை வழிபடவில்லை. கிபி 4 – 5 ஆகிய நூற்றாண்டுகளில் மவுரிய சாம்ராஜியத்தின் வழியில் வந்த புத்தமதம், சமண மதம் உள்ளிட்டு அனைத்து சமயங்களும் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டு வைதீக, பார்ப்பனிய, ஆரிய மரபுகள் சமஸ்கிருத மொழியின் மூலமாக உள்நுழைகின்றனர். அவர்கள் மன்னர்களை தங்களது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், பல்லவர்கள் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குகிறார்கள். திராவிட மொழிக் குடும்பங்கள் வாழ்ந்த இப்பகுதியில் பல்லவர் காலம் தொடங்கி, பிற்காலச் சோழர்கள் வரையில் வைதீக மரபுகள் உட்புகுத்தப்பட்டன. அக்கிரகாரங்கள், வைதீக பாடசாலைகள் கோவில்கள் பல கட்டப்பட்டன. இவர்கள் சமஸ்கிருந்தத்தை ஆட்சி மொழியாக்கினார்கள்.

வைதீக சமயத்தினர், சைவ மரபையும், வைணவ மரபையும் வைதீகமயப் படுத்தினர். இடைக்காலத்தில் மாணிக்கவாசகர், திருமூலர், இராமலிங்க அடிகள் உள்ளிட்டோர் இதனை அம்பலப்படுத்தினர். ஆனால் சைவ மரபைச் சேர்ந்த மடாதிபதிகளை வைதீகர்கள் வென்றெடுத்தனர்.

பின்னர் சைவ மடங்களில் சமஸ்கிருத வைதீக மரபுகளே அன்றாட மரபாக கட்டியமைக்கப்படுகிறது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்து மதம் என்ற சொல் இங்கு இல்லை. பிராமண மதம் என்பது மட்டும்தான் இருந்தது.

படிக்க:
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்
பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

தமிழக மரபை இவர்கள் படிப்படியாக மாற்றியது குறித்தும் நாம் பார்க்கவேண்டும். கிபி 7-ம் நூற்றாண்டில் தமிழுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விநாயகனை இங்கு கொண்டு வந்து கடவுளாக சொருகுகிறார்கள்.

சாதாரண மக்கள் தங்களை ஒத்த தலைவனாக கொண்டாடும் முருகனை கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஸ்கந்தனாக மாற்றுகிறார்கள். 13-ம் நூற்றாண்டில் சைவர்களைக் கொண்டே ஸ்கந்த புராணத்தை எழுத வைத்தார்கள். ஸ்கந்த புராணத்தின் ஆபாசம் ஊரறிந்த ஒன்றே.

பிற்காலத்தில் தமிழ் இசை மரபை மாற்றி கர்நாடக இசையை உருவாக்குகிறார்கள். பின்னர் 18-ம் நூற்றாண்டில் வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு ஆட்சி செய்ய வசதியாக, கிறுஸ்தவர்கள், முசுலீம்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்களை இந்து என்ற சொல்லைக் கொண்டு பெயரிடுகிறார்கள். இங்குதான் வைதீக மதத்தை இந்து மதமாக உருவாக்குகிறார்கள். இதில் திலகரின் பங்கு முக்கியம்.

சொல்லளவில் இருந்த ’இந்து’-க்கு ஒரு தேசியம் வேண்டும் என்பதற்காக வேலை பார்க்கிறார் திலகர். பிள்ளையார் வழிபாட்டு முறையை பொதுமைப் படுத்துகிறார். 19-ம் நூற்றாண்டில் மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் இதனை அம்பலப்படுத்துகின்றனர். இந்து மதத்திலிருந்து சைவ மரபை வேறுபடுத்திக் கட்டமைக்கிறார். நல்லசாமி, சுப்பிரமணியம், மறைமலை அடிகள், திருவிக, ஆகியோர் சைவத்திற்கும் இந்து மதத்திற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற கருத்தாக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும்.

தமிழகத்தில் தமிழை ஒழித்துக்கட்ட எடுக்கப்படும் முயற்சிகளை முடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

முழு உரையைக் காணொளியில் காண …

பாருங்கள் ! பகிருங்கள் !

தாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 4

ரு நாள் இரவு பாவெல் சாப்பாட்டுக்குப் பின், ஜன்னலின் திரையை இழுத்து தன் தலைக்கு மேலாகவுள்ள ஆணியில் தகர விளக்கை மாட்டினான். பிறகு ஒரு மூலையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். அவனது தாய் பண்ட பாத்திரங்களைக் கழுவிவிட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்; மெதுவாக அவன் பக்கம் சென்றாள். அவன் தலையை உயர்த்தி தன் தாயிடம் வந்த காரியத்தை வினவும் முகபாவத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

மாக்சிம் கார்க்கி

“ஒன்றுமில்லை, பாஷா! ஒன்றுமில்லை!” என்று முனகிவிட்டு, அவள் மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்; அவளது புருவங்கள் மட்டும் தைரியமற்று நெளிந்து கொடுத்தன. பிறகு அவள் தனது சிறிது நேரச் சிந்தனைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு மீண்டும் தன் மகனை நெருங்கினாள்.

”நீ எப்போது பார்த்தாலும் எதையோ படித்த வண்ணமாயிருக்கிறாயே. அதைத்தான் கேட்க எண்ணினேன்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.

அவன் புத்தகத்தை மூடினான்.

”உட்கார், அம்மா !”

அவனது தாய் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்து, முதுகை நிமிர்த்தினாள்; ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.

பாவெல் அவளைப் பார்க்காமலேயே பேச ஆரம்பித்தான். அவனது குரல் தணிந்திருந்தபோதிலும், அது ஏனோ உறுதி வாய்ந்ததாக இருந்தது.

‘நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன. இவையெல்லாம் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அச்சிடப் பெறுகின்றன. இந்தப் புத்தகங்களோடு அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில் தான் போடுவார்கள். சிறையில்தான்! ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேனே, அதனால்தான், புரிந்ததா?”

திடீரென அவளுக்கு மூச்சு முட்டியது. அவள் தன் கண்களை அகலத் திறந்து மகனைப் பார்த்தாள். அவன் ஒரு அன்னியன் போலத் தோன்றியது அவளுக்கு, அவளது குரல் கூட மாறிப்போயிருந்தது, அந்தக் குரலின் ஆழமும் அழகும் செழுமையும் நிறைந்து இருப்பதாகத் தோன்றியது. அவன் தனது அரும்பு மீசையைத் திருகினான். குனிந்து நின்ற புருவங்களுக்கு மேலாக, ஒரு மூலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன் மகனைக் கண்டு பயந்தே போனாள். மகனுக்காகப் பரிதாபப்பட்டாள்.

“நீ ஏன் இப்படிச் செய்கிறாய், பாஷா?” என்று கேட்டாள்.

” ஏன் என்றால் — நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவன் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னான்.

அவனது குரல் மிருதுவாக இருந்தது. எனினும் உறுதி வாய்ந்திருந்தது. அவனது கண்களில் அசைவற்ற ஒரு ஒளியும் நிறைந்திருந்தது. தன் மகன் ஏதோ ஒரு பயப்படக்கூடிய ரகசியமான காரியத்துக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்டான் என்ற உணர்ச்சி அவளது இதயத்தில் கிளர்ந்தது. வாழ்க்கையில் எதுவுமே தடுக்க முடியாதவைதாம் என்றே அவள் கருதினாள். எனவே அதைப்பற்றி அவள் மேலும் கேட்காமல் அடங்கிப் போனாள். துன்பமும் துக்கமும் இதயத்தை அழுத்த வார்த்தையின்றி அமைதியாக அழுதாள் அவள்.

இந்தப் புத்தகங்களோடு அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில் தான் போடுவார்கள். சிறையில்தான்! ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேனே, அதனால்தான், புரிந்ததா?

“அழாதேயம்மா” என்று அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் சொன்னான் பாவெல்; ஆனால் அவளுக்கோ அவன் பிரிவதற்கு விடைபெறுவது போலத் தோன்றியது.

”நாம் எந்த மாதிரி வாழ்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது எண்ணிப்பார், அம்மா. உனக்கு நாற்பது வயதாகிறது. இதுவரை நீ என்னத்தைக் கண்டுவிட்டாய்? அப்பா உன்னை அடித்தார். அவரது தொல்லைகளையெல்லாம் வாழ்வின் கசப்பையெல்லாம் உன்னையடிப்பதன் மூலம் அவர் தீர்த்துக்கொண்டார் என்று இப்போது உணர்கிறேன் நான். கசப்புணர்ச்சிதான் அவரை ஆட்கொண்டிருந்தது. ஆனால் இந்த மாதிரிக் கசப்பும் தொல்லையும் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர் அறிந்து கொள்ளவே இல்லை. அவர் முப்பது வருஷகாலமாய் உழைத்தார். இந்தத் தொழிற்சாலை இரண்டு கட்டிடங்களாக இருந்த காலத்திலிருந்து அவர் வேலை பார்த்தார். இப்பொழுதோ அவை ஏழு கட்டிடங்களாகப் பெருகிவிட்டன.”

படிக்க:
ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

அவன் சொல்வதை ஆர்வத்தோடும் பயத்தோடும் அவள் கேட்டாள். மகனின் கண்கள் அழகாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. தன் மார்பை மேஜையின் மீது சாய்த்தவாறு கண்ணீர் படிந்து ஈரம் பாய்ந்த அவளது முகத்துக்கு நேராகக் குனிந்து, தான் புரிந்து கொண்டுள்ள உண்மையைப் பற்றி பிரசங்கத்தைத் தொடங்கினான் பாவெல். இளமையின் முழுப்பலத்தோடும், மாணவன் ஒருவனது அறிவின் அகந்தையோடும் உண்மையின் மீதுள்ள பரிபூரண விசுவாசத்தோடும் தனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி அவன் பேசினான்.

தாய்க்காகப் பேசியதை விடத் தன்னைப் பரீட்சித்துக் கொள்ளவே அவன் பேசினான். சில வேலைகளில் அவன் வார்த்தைகள் கிடைக்காமல் பேச்சை நிறுத்தினான். அப்போது கண்ணீர்த் திரைக்கு அப்பால் ஒளி செய்யும் அன்பான கண்களைக் கொண்ட தன் தாயின் வேதனை நிறைந்த முகம் தன்னெதிரே இருப்பதை உணர்ந்து கொண்டான். அந்தக் கண்கள் அவனைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்தன. அவனோ தன் தாய்க்காக அனுதாபப்பட்டான். மீண்டும் பேச ஆரம்பித்தான். இப்போதோ, அவன் அவளைப் பற்றியும் அவளது வாழ்வைப் பற்றியுமே பேசினான்.

”இதுவரை நீ என்ன சுகத்தைத்தான் அனுபவித்திருக்கிறாய்? நீ சிந்தித்து மகிழ்வதற்கு சென்றுபோன உன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.

மீண்டும் அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். தலையை மட்டும் சோர்வாய் ஆட்டினாள். இதுவரை அறியாத புதுமையான உணர்ச்சி. இன்பமும் துன்பமும் கலந்த ஏதோ ஒரு உணர்ச்சி தனது நொந்து போன இதயத்துக்குள் குடிபுகுந்து அதை இதப்படுத்திச் சுகமூட்டுவது போல அவளுக்குத் தோன்றியது. அவளைப் பற்றியும் அவளது வாழ்க்கையைப் பற்றியும் யாரேனும் பேசுவதைக் கேட்பது, இதுதான் அவளுக்கு முதல் தடவை. மகனது வார்த்தைகள் அவளது மங்கி மக்கிப்போன பழைய நினைவுகளை, எந்தக் காலத்திலேயோ செத்தொழிந்து தேய்ந்து போன பழைய இளமைக் கால சிந்தனைகளை நினைவுக்குக் கொண்டுவந்தான். வாழ்க்கையின் மறைந்து போன மங்கலான அதிருப்தி உணர்வுகள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தன. அப்போது அவள் தன் தோழிமாரோடு வாழ்க்கையைப் பற்றி, அனைத்தையும் பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறாள். ஆனால் அவளது தோழிகளும், ஏன் அவளும் கூட, தங்களது வாழ்க்கையின் துன்ப துயரங்களைப் பற்றிக் குறைப்பட்டுத்தான் பேசிக் கொண்டார்களேயன்றி, அதற்குரிய காரணத்தை ஆராய முனையவில்லை. ஆனால் இப்போதோ அவளது மகன் அவளெதிரே உட்கார்ந்திருந்தான். அவனது கண்களும் முகமும் பேச்சும் வெளியிடுவதெல்லாம் அவனது இதயத்தின் அடித்தளத்தையே தொட்டன. தன் தாயின் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து, அவளது துன்ப துயரங்களைப் பற்றி அவளிடமே அனுதாபத்தோடு பரிந்து பேசும் தன் மகனைக் கண்டு அவளது மனத்தில் பெருமை உணர்ச்சி நிரம்பித் ததும்பியது.

ஆனால் தாய்மார்கள் என்றும் அனுதாபத்துக்குரியவராகவே ஆவதில்லை…

அதுவும் அவளுக்குத் தெரியும். அவன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னவை அனைத்தும் கசப்பான எனினும் ஊரறிந்த உண்மைகள் தான். எனினும், அவளது இதயத்தில் பலவிதமான உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்து, இயல்புக்கு மீறிய அன்போடு இதம் செய்து சுகமூட்டுவதாகத் தோன்றியது.

“நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்?’ என்று அவனது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டாள் அவள்.

”முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்; பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்!’

உறுதியும் அழுத்தமும் நிறைந்த அவனது நீலக் கண்களில் அப்போது மென்மையும் அன்பும் கலந்த ஒரு ஒளி நிறைந்திருப்பதைக் காண, அவளுக்குக் குதூகலமாயிருந்தது. அமைதி நிறைந்த இளம் புன்னகை அவளது இதழ்களில் நெளிந்தது. எனினும் அவளது கன்னச் சுருக்கங்களில் கண்ணீர்த் திவலைகள் இன்னும் துடிதுடித்துக் கொண்டுதானிருந்தன. வாழ்க்கையின் கசப்பைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்ட தன் மகனைப் பற்றிய அவளது பெருமை உணர்ச்சி ஒரு புறம்; மற்றவர்கள் பேசுவதற்கு மாறாக அவன் பேசுவது, அவன் உட்பட்ட இச்சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பழகிக் காய்த்துப்போன வாழ்க்கையை எதிர்த்து அவன் தன்னந்தனியனாகப் போராட முனைந்து நிற்பது. அவன் இன்னும் இளைஞனாக இருப்பது —  முதலிய விஷயங்களால் ஏற்பட்ட அவளது நிதான புத்தி ஒரு புறம் இவ்வித இரு உணர்ச்சிகளுக்கிடையிலகப்பட்டு அவள் தடுமாறினாள், எனவே, அவள் அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட நினைத்தாள்.

‘கண்ணே, நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும்?”

ஆனால், திடீரென்று, சற்றே அன்னியனாக, ஆனால் பெரும் அறிவாளியாகத் தன் முன்னே தோன்றும் மகனைப் பற்றிய பரவசத்திலிருந்து விடுபட அவள் விரும்பவில்லை.

‘சரி. நான் இதில் தலையிடவில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். “நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”.

பாவெல் தன் தாயின் இதழ்களில் தோன்றிய புன்னகையை, அவளது முகத்தில் தெரிந்த கவன உணர்வை, அவளது கண்களில் மிதந்த அன்பை – எல்லாம் கண்டான். உண்மையை அவள் உணர வைத்துவிட்டோம் என்று தோன்றியது. தனது வார்த்தைகளின் சக்தியால் ஏற்பட்ட இளமைப் பெருமிதம் அவனுக்குத் தன் மீதுள்ள நம்பிக்கையை வெகுவாக உயர்த்தியது. அவன் சிரித்துக்கொண்டும், முகத்தைச் சுழித்துக் கொண்டும் உணர்ச்சிமயமாகப் பேசினான்: சமயங்களில் அவனது பேச்சில் பகைமை உணர்ச்சி ஒலி செய்தது. ஆனால் இந்த மாதிரிக் கடுமை கலகலக்கும் வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு அவனது தாய்க்கு நெஞ்சில் பயம்தான் அதிகரித்தது. எனவே அவள் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தன் மகனை நோக்கி மெதுவாகக் கேட்டாள்.

“இதெல்லாம் உண்மையா, பாஷா?”

“ஆமாம்!” என்று உறுதியோடு பதிலளித்தான் அவன். மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தினால் மனிதர்களிடையே உண்மையைப் பரப்பியவர்களைப் பற்றியும் அப்படிச் செய்தவர்களை மக்களின் எதிரிகள் மிருகங்களைப் போல் வேட்டையாடி, சிறையில் தள்ளியதையும் சித்திரவதை செய்ததையும் அவன் தாயிடம் சொன்னான்.

”நான் அந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் இந்த உலகம் செழித்து வளர்வதற்கான உரம்!” என்று ஆர்வத்தோடு கத்தினான் பாவெல்.

இந்த மாதிரி மனிதர்களைப் பற்றிய எண்ணம் அவனது தாய்க்குப் பயத்தைக் காட்டியது எனினும் “நிலைமை இப்படித்தானா இருக்கிறது’ என்பதை அவள் மீண்டும் கேட்க விரும்பினாள்; ஆனால் கேட்கத் துணியவில்லை. தனக்குப் புரியாத மனிதர்களைப் பற்றிய – எனினும் தன் மகனை இந்த மாதிரியான பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த அந்த மனிதர்களைப் பற்றிய – கதைகளை மகன் சொல்லும்போது திணறிப்போன மூச்சோடு அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாக அவனைப் பார்த்துச் சொன்னாள்,

”சரி, பொழுது சீக்கிரம் விடியப்போகிறது. நீ போய்ப் படு. கொஞ்ச நேரமாவது தூங்கு போ.”

“நான் இப்போதே படுக்கப் போகிறேன் என்றான் அவன். பிறகு அவளை நோக்கிக் குனிந்து கொண்டே நான் சொன்னதையெல்லாம் புரிந்து கொண்டாயா?” என்று கேட்டான்.

அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

”ஆமாம் என்ற ஒரு பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள். மீண்டும் அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

அவன் எழுந்து அறைக்குள் நடமாடினான்.

”சரி, இப்போது நான் எங்குப் போகிறேன். என்ன செய்கிறேன் என்பது உனக்குத் தெரியும். உனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீ என்னை நேசிப்பது உண்மையானால், இனிமேல் இதில் தலையிடாதே அம்மா’ என்றான் அவன்.

“கண்ணே என் கண்ணே! இதை நீ என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் போலிருக்கிறதே’’ என்று கத்தினாள் அவள்.

அவன் தாயின் கரத்தை எடுத்து இறுகப் பிடித்து அழுத்தினான்.

அவன் அன்போடு ‘அம்மா’ என்று அழைத்த சொல்லாலும், அவளது கரத்தை இதுவரை இல்லாத இனிய வாஞ்சையோடு அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட சுக உணர்ச்சியாலும் அவள் மெய்மறந்து போய்விட்டாள்.

‘சரி. நான் இதில் தலையிடவில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். “நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”. தனது மகனுக்கு எந்தவிதமான ஆபத்து காத்து நிற்கிறது என்பதை அறிய முடியாமல், மீண்டும் அவள் வருத்தத்தோடு சொன்னாள். “நீ நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறாய்!’

அவனது நெடிய பலம் பொருந்திய உருவத்தை அவள் அன்போடு ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள்.

உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய, கடுமையான முகம், வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது.

“உன் இஷ்டப்படியே நீ வாழப்பா, அதெல்லாம் நான் தலையிடக் கூடிய விவகாரம் இல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது இவ்வளவு தீவிரமாகப் பேசாதே. மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்: பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள். அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள். நீ அதை எடுத்துக்காட்டி, அவர்களைக் குறை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள். உன்னை அழித்தே விடுவார்கள்’’.

அவளது சோகமயமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அவளது மகன் வாசல்படியருகே நின்றான். அவள் பேசி முடித்ததும் அவன் லேசாக நகைத்தான்.

“நீ சொல்வது சரிதான். மனிதர்கள் கெட்டவர்களாகத் தானிருக்கிறார்கள்” என்றான் அவன். “ஆனால் உலகத்தில் நியாயம் என்று ஒன்று இருப்பதாக நான் அறிந்து கொண்டேனே, அதைப் பார்க்கும்போது இந்த மனிதர்கள் எவ்வளவோ தேவலை!” மீண்டும் அவன் நகைத்தான்: பிறகு சொன்னான்: ”இதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியாது. சிறு பிள்ளையாயிருக்கும் போது நான் யாரைக் கண்டாலும் பயப்படுவேன். பெரியவனான பிறகு எவரைக் கண்டாலும் வெறுக்கவே செய்தேன். சிலரை அவர்களது படுமோசத்தனத்தைக் கண்டு வெறுத்தேன். ஆனால் மற்றவர்களை அது ஏன் என்று எனக்கே தெரியாது; என்னவோ வெறுக்க வேண்டும் என்பதற்காக வெறுத்தேன். ஆனால் இப்போதோ எல்லாமே எனக்கு வேறுபட்டுத் தோன்றுகிறது. இது நான் மனிதர்களுக்காக அனுதாபப்படுவதால் ஏற்பட்டிருக்கக்கூடும். எப்படியானாலும், மனிதர்கள் மோசமாய் நடந்து கொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணம் அல்ல என்பதை நான் உணர்ந்துகொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்றுவிட்டது….”

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தன் இதயத்துக்குள் கேட்கும் ஏதோ ஒரு குரலைக் கேட்டது போல நின்றான். பிறகு அமைதியும் சிந்தனையும் நிறைந்தவாறு அவன் சொன்னான்,

”எனவே – உனக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை இதுதான்”

”கிறிஸ்து ரட்சகரே… நீ மிகவும் பயங்கரமாகத்தான் மாறிவிட்டாய்” என்று சொல்லி அவள் மகனை லேசாகப் பார்த்தாள்.

அவன் நன்றாக தூங்கிய பிறகு, அவள் தன் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவனருகே சென்றாள். பாவெல் மல்லாக்கப் படுத்திருந்தான். உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய, கடுமையான முகம், வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது. அவனது தாய் காலில் ஜோடு எதுவும் அணியாமல் இரவு ஆடையில் அங்கு நின்றாள். அவளது கைகள் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன; உதடுகள் சப்தமின்றி அசைந்தன. கன்னங்களில் பெருகும் கண்ணீர்த்துளிகள் மெதுவாக உருண்டு வழிந்து கொண்டிருந்தன.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்

போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ?

போலியோ சொட்டு மருந்து கலப்பட விவகாரம் நடந்தது என்ன ?

ந்த விவகாரத்தில் தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஏன்? விரிவாகப் பார்ப்போம் :

இந்த பிரச்சனையை பற்றி முழு விபரமும் அறிய முதலில் போலியோ தடுப்பு மருந்து குறித்து அறிய வேண்டும். இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்துகள் இரண்டு விதங்களாக குழந்தைகளுக்கு கிடைக்கின்றது.

  • ஒன்று – வாய் வழி அளிக்கப்படும் சொட்டு மருந்து (Oral polio vaccine) .
  • மற்றொன்று – ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பூசி (injectable polio vaccine )

முதல் டைப் போலியோ தடுப்பு மருந்து – வாய் வழியாக கொடுக்கப்படுவதால் அது குழந்தையின் குடலில் சென்று அந்த குழந்தைக்கு போலியோ நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தியை அளித்து மலத்தின் வழியே அந்த வைரஸ் வெளியேறும்.

அதுவே இரண்டாவது வழியான ஊசி ஊசி மூலம் போடப்படும் போலியோ தடுப்பூசியானது அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆனால் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் மலத்தின் வழி வெளியேறாது.

சொட்டு மருந்தாக போடப்படும் போலியோ மருந்தின் மூலம் அந்த குழந்தைக்கு மற்றுமின்றி அந்த சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
ஆம். அந்த இறந்த கிருமிகள்(killed vaccine derived virus) மலத்தின் மூலம் வெளியேறுவதால், அந்த சமூகத்தில் wild virus -ன் இருப்பு குறைந்து ஒட்டுமொத்தமாக அந்த வைரஸ் ஒழிக்கப்பட்டும்.

இப்படித்தான் நாம் 1995 -இல் இருந்து போலியோ சொட்டு மருந்து நாள் என்ற பெயரில் வருடம் இருமுறை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த தடுப்பு சொட்டு மருந்து வாய் வழியாக ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போடப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

இதற்கு Pulse Polio Immunisation என்று பெயர். தேசம் தழுவிய அளவில் ஒரே நேரத்தில் வைரஸ் கிருமிக்கான தடுப்பு மருந்து தரப்படுவது என்பது அந்த வைரஸ் முற்றிலும் நமது சமுதாயத்தை விட்டு துரத்தப்பட ஏதுவாக அமையும்.

அவ்வாறு நாம் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்துகளை கொடுத்து வந்ததால்
2011 -ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் புதிதாக போலியோ பாதிக்கப்பட்டவர்கள் இல்லை எனும் நிலையை அடைந்தோம்.

படிக்க :
♦ இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
♦ பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

அதற்கடுத்த மூன்று வருடங்களும் போலியோ இல்லாத நாடாக திகழ்ந்த நம்மை உலக சுகாதார நிறுவனம்”போலியோ இல்லாத நாடாக ” அறிவித்தது.

ஆனாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போலியோ நோய் இன்னும் உயிர்ப்புடன் இருந்ததால், நாடு விட்டு நாடு விமானங்கள் மூலம் பயணம் செய்பவர்களால் அந்த கிருமிகள் நமக்கு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும்..

நாம் இன்னும் வருடம் ஒருமுறை தரும் Pulse Polio Immunisation சொட்டு மருந்து தரும் நாட்களை கடைபிடித்து வருகிறோம். போலியோ நோயை மூன்று வைரஸ்கள் உருவாக்கும். அவை டைப் 1 , டைப் 2, டைப் 3. இவற்றில் உலகம் முழுவதும் இந்த டைப் 2 வைரஸை ஒழித்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு செய்ததை அடுத்து..

இந்திய தேசமும் 25 ஏப்ரல் 2016-ம் ஆண்டு முதல் “national switch over day” என்று அறிவித்து அதுவரை போலியோ தடுப்பு சொட்டு மருந்தாக போட்டு வந்த முத்தடுப்பு ( மூன்று வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு மருந்து) சொட்டு மருந்தை இருதடுப்பு சொட்டு மருந்தாக மாற்றியது. (switch over from trivalent to bivalent vaccine) ஆகவே.. இப்போது தடுப்பு சொட்டு மருந்து உருவாக்கும் அனைத்து உற்பத்தியாளர்களையும் தங்களிடம் வைத்திருக்கும் டைப் இரண்டு வகை போலியோ வைரஸ் கிருமிகளை உடனே அழித்துவிடுமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, 25 ஏப்ரல் 2016 -க்கு பிறகு கொடுக்கப்பட்டு வரும் அனைத்து சொட்டு மருந்துகளிலும் டைப் ஒன்று மற்றும் டைப் மூன்று போலியோவுக்கு எதிரான தடுப்பு மருந்து மட்டுமே இருக்கும்.

இருப்பினும் , சமூகத்தில் டைப் இரண்டு வைரஸ் எங்கேனும் காணப்பட்டு அதனால் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் பாதுகாக்க என்ன செய்வது?

அதற்காகவே பிரத்யேகமாக ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பூசிகளை அரசாங்கம் உற்பத்தி செய்து 26 ஏப்ரல் 2016 -க்கு பிறகு குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது .

இந்த தடுப்பூசியில் டைப் 1, டைப் 2 , டைப் 3 ஆகிய மூன்று வைரஸ்களுக்கும் தடுப்பு மருந்து இருக்கும். இதில் உள்ள தடுப்பு மருந்துகள் அதை எடுப்பவருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மலத்தின் மூலம் கிருமிகள் வெளியே வராது. ஆகவே.. இந்த முறையை இந்திய அரசு கையாண்டது.

இப்போது என்ன தவறு நேர்ந்தது?

உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் எனும் இடத்தில் இயங்கும் பையோ மெட் எனும் தனியார் தடுப்பு மருந்து உற்பத்தி சாலையில் இருதடுப்பு( டைப் ஒன்று மற்றும் மூன்றை தடுக்கும்) போலியோ சொட்டு மருந்துகள் உற்பத்தி செய்கையில் தலா ஐம்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட மூன்று பேட்ச் தடுப்பு மருந்து வயல்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட டைப் இரண்டு வைரஸ்களும் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மூன்று பேட்ச் மருந்துகளும் மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளன. இதனால் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆகவே தமிழர்கள் கவலை கொள்ள தேவையில்லை.

இப்போது இந்த டைப் இரண்டு வைரஸ் கலப்படமான தடுப்பு சொட்டு மருந்தில் என்ன பிரச்சனை?

இந்த மருந்தை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு மூன்று வைரஸ்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும். ஆனால் வாய் வழி உட்கொள்வதால் அந்த வைரஸ்கள் குடல் வழி சென்று மலம் வழி வெளியேறி சமூகத்தில் கலந்திருக்கும்.

படிக்க :
♦ உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு
♦ நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்

இப்போது 26 ஏப்ரல் 2016-க்கு பிறகு பிறந்த குழந்தைகளில் யாருக்கேனும் சரியாக போலியோ தடுப்பூசி மற்றும் தடுப்பு சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டிருந்தால் அவர்களுக்கு அந்த டைப் இரண்டு கிருமியால் போலியோ வரும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆகவே யாரும் பெரிய அளவில் கவலை கொள்ளவோ அச்சப்படவோ தேவையில்லை. இந்த கலப்படம் நடந்ததற்கு காரணமான அந்த பையோமெட் உற்பத்தி சாலைக்கு சீல் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முடிவுரை :

போலியோவை இந்தியாவை விட்டு நாம் துரத்தி ஏழு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. இனியும் போலியோ வராமல் தடுக்க நமது அரசாங்கம் பரிந்துரைக்கும் வரை தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்தை கொடுப்பது நமது கடமை.

இந்த சிறிய பிரச்சனை என்பது ஒன்றரை லட்சம் வயல்கள் சென்ற தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டுமே. தமிழகத்திற்கு யாதொரு சிக்கலும் இல்லை.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாநிலங்களிலும் 25 ஏப்ரல் 2016 -க்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் போலியோ மீண்டும் வராமல் தடுக்கப்படும்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

குறிப்பு: தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்ற வகையில் நாம் நிம்மதி அடைந்துவிட முடியாது. எந்த மாநிலமாயினும் அவர்களும் நமது மக்கள்தான். தனியார்மயத்தின் பிடியில் இன்று மருத்துவம் என்பது இலாபம் தரும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் இது போன்ற பிரச்சினைகள் தொடரும் என்பதில் ஐயமில்லை.

ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி இவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் இவர்களது கருவிகள் இவர்களது உடலின் உறுப்புகள்.

ம்ப்யூட்டருக்குப் பொட்டு, கல்லாப் பெட்டிக்கும் பொட்டு; டீக்கடை பாய்லருக்குப் பொட்டு, ஹெவி பாய்லருக்கும் பொட்டு; வில்வண்டிக்குப் பொட்டு, விமான‌த்துக்கும் பொட்டு.. புரிந்திருக்குமே ஆயுத பூசைதான். அவல், பொறி, கடலை, வாழைப்பழ‌ம், வெல்லச் சர்க்கரையுடன் ஆயுதபூசை பட்டியலில் தொழிலாளியும் சேர்ந்து விட்டதனால்தான் இதை எழுத வேண்டியிருக்கிறது.

 

விவசாயிக்குப் பொங்கலைப் போல, தொழிலாளிக்கு ஆயுதபூசையா? அப்படியானால் மே தினம்?

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை.

விண்ணில் உயர்ந்து பறக்கும் செங்கொடி, முதலாளிகளைக் கிலி கொள்ள வைக்கும் போர்க்குணம், அடிவயிற்றிலிருந்து வெடித்துக் கிளம்பும் முழக்கங்கள், நெருப்புத் துண்டுகளாய் சொலிக்கும் கண்கள், கண்ணுக்கு எட்டியவரை கடல் போல விரிந்து அலைபோல ஆர்த்தெழும் அணிவகுப்பு – மே தினம். யதார்த்தம் இல்லையென்றாலும் எதிர்பார்ப்பு. ஏன் ஈடேறவில்லை இந்த எதிர்பார்ப்பு?

ஒவ்வொருவராகத் தேடிச்சென்று காகிதத்தில் கையெழுத்து வாங்கும் அக்கறை, பின்னர் கையெழுத்துப் போட்டவர்களைக் காசு போட வைப்பதில் உள்ள திறமை – மே தினத்தில் இல்லையே. பூசை போட்டு பூசணிக்காய் உடைப்பதில் இருக்கும் நம்பிக்கை ஊர்வலத்தில் இல்லையே. பொரி, கடலை விநியோகத்தில் இருக்கும் பொறுப்புணர்வு பிரசுர விநியோகத்தில் இல்லையே, தோரணம் கட்டுவதில் உள்ள ஆர்வம் கொடி கட்டுவதில் இல்லையே. ஏன்?

இதுதான் நமது முதுகில் ஏற்றப்பட்டிருக்கும் ஆயிரமாண்டு கலாச்சாரச் சுமையோ!

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி இவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் இவர்களது கருவிகள் இவர்களது உடலின் உறுப்புகள்.

சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும்.

ஆனால் தொழிலாளிக்கு? சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும். ஆலையின் தூசு எதுவும் சட்டையில் ஒட்டி யிருந்தால் கூட அதைத் தட்டிப்பார்த்து, தடவிப் பார்த்து வெறும் ஆளாக வெளியே அனுப்புவதற்கென்றே வாயிற்காவலர்கள்.

துருத்தியும் சம்மட்டியும் கொல்லனுக்கு சொந்தம்; வெல்டருக்கு? ”உனக்குச் சொந்தமில்லாததை உடைத்தெறி” என்று சொல்லவில்லை. ”போய்த் தொலையட்டும் – மூடநம்பிக்கை” என்று வைத்துக் கொண்டாலும் தனக்குச் சொந்தமானதை ஒருவர் பூசிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் கல்யாண சடங்குகளில் ‘அதிகாரம்’ செலுத்தும் பெண்களைப் போல ஆயுத பூசை ஏற்பாடுகளை கவனித்து நடத்த ‘அதிகாரமளிக்கப்பட்ட’ தொழிலாளிகள் தலை கால் புரியாமல் போகிறார்களே, அதுதான் விநோதம்.

ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ‘இது என்னுடைய ஆலை’ ‘இது என்னுடைய எந்திரம்’ என்று மண்டையில் அடிக்காத குறையாக முதலாளி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் போது கூட, தலைவாரி, பூச்சூடி, பொட்டிட்டு பிள்ளையை அழகு பார்க்கும் தாயைப்போல – எந்திரத்திற்கு எண்ணெய் முழுக்காட்டி, பொட்டு வைத்து, சாம்பிராணிப் புகை போட்டு அழகு பார்க்கும் ‘பாசம்’ தொழிலாளிக்கு எப்படி வந்தது ? பாசமா, பெருந்தன்மையா, மூடநம்பிக்கையா? வெறும் மூடநம்பிக்கை மட்டும்தானா?

போனசுக்கும், கூலி உயர்வுக்கும் போராடும் போது முதலாளியின் பிரதிநிதியாகத் தொழிலாளியின் கண்ணுக்குத் தென்படும் எந்திரம் ஆயுத பூசையன்று மட்டும் தன்னுடைய அவதாரமாகத் தெரிவது ஏன்? சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவைதான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள்தான்.

அதனால் தான் ஆத்திரம் கரை புரண்டாலும் கூட தான் வேலை செய்யும் எந்திரத்தை நொறுக்கவோ நாசம் செய்யவோ தயங்குகிறான் தொழிலாளி [மாறாக அதை மதித்து கொண்டாடி பூசை செய்கிறான்].

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவை தான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள் தான்

இன்சூரன்சு பண‌த்தை ஏமாற்றி வாங்க நினைக்கும் முதலாளியோ ஆயுத பூசையன்றே கூட ஆலைக்குத் தீ வைக்கத் தயங்குவதில்லை. விலை சரிந்து விட்டால் உற்பத்தியாகிக் கிடங்கில் குவிந்துள்ள பொருட்களைக் கடலில் கொட்டவும் தயங்குவதில்லை. முதலாளி நேசிக்கும் ஒரே எந்திரம் அவனுடைய பணப்பெட்டிதான். அதற்கு மட்டும் ஆயுதபூசையன்று மட்டுமல்ல; அன்றாடம் பொட்டு வைத்துப் பூசை போட அவன் தவறுவதில்லை.

ஆனால் தொழிலாளியால் அது முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்க வேலைக்காரர்கள், அழிக்க மறுக்கிறார்கள். அவசியம் நேரும்போது கூட அழிக்க தயங்குகிறார்கள்; அவர்களது கரங்களும், அவற்றின் உள்ளேயிருந்து ஊற்றெடுக்கும் உழைப்பும் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. உழைப்புதான் அவர்களது ஒரே ஆயுதம்.

இந்த ஆயுதத்துக்கு சந்தனப் பொட்டும் வைக்க முடியாது; சாம்பிராணி புகையும் போட முடியாது. பூசை போடவேண்டியவற்றின் பட்டியலில் முதலாளி இதைச் சேர்க்கவும் மாட்டான். ஏனென்றால் அது அவனுடைய ஆயுதமல்ல; அவனுடைய எதிரிகளின் ஆயுதம் – தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை – உழைப்பைப் போற்றும் நாள்தான் மே நாள். ஆலையையும் தொழிலையும் உழைப்பாளியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக்கக் குரல் கொடுக்கும் நாள், அதுதான் தொழிலாளிகளின் திருநாள்.

எனவே, சாம்பிராணிப் புகை மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

உண்டியல் சாவி தருமகர்த்தாவின் கையில் இருக்கும் போது, பூசாரியாய் இருப்பதில் என்ன பெருமை?

புதிய கலாச்சாரம் இதழ் ஒன்றிலிருந்து

மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !

மீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே “ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபரணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?” என்று தான் தொடர்கிறார்கள்.

அது என்ன புஷ்கரணி – புஷ்கரம் ?

இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.

ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது.

ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.

அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள்.

படிக்க :
♦ அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்
♦ தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018 -ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874 -ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870 -ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5 -ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 18 அக்டோபர் 1875 -ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.

1869 – 74-ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 77 -ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன.

1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.

அதில் 1874 -ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24 -ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869 -ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன.

நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

படிக்க :
♦ மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
♦ தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.

சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851-லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம்.

ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது.

அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஏன்? உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? ஏன்? இங்கேதான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன.

இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள்.

எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?

தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.

தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.

-கார்த்திக் புகழேந்தி,
பத்திரிகையாளர், பதிப்பாளர்.

நன்றி : தி டைம்ஸ் தமிழ் இணைய தளத்தில் வெளியான கட்டுரை.

பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் (12.10.18) அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்காத எடப்பாடி அரசை கண்டித்து கல்லூரிக்குள் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினர். போக்குவரத்து அதிகாரி கல்லூரிக்கு வந்து பதில் சொன்னால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வோம் என்று விடாப்பிடியாக நின்று போராடினர்.

கல்லூரி தொடங்கி ஏறத்தாழ நான்கு மாதங்களாகியும் இன்றுவரையில் பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. அன்றாடம் நடத்துனரோடு மாணவர்கள் மல்லுக்கட்டும் நிலைதான் நீடித்து வருகிறது. ஓ.சி. பயணம் என்பதாகக்கூறி மாணவர்களை அவமானப்படுத்தி பாதிவழியில் இறக்கிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

குறிப்பாக, கல்லூரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் கல்லூரி அருகே நிறுத்தப்படுவதுமில்லை. அதற்கடுத்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்துகின்றனர். கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் கல்லூரி வழியே செல்லும் வகையில் பேருந்துகளை திருப்பி விட வேண்டுமென்று நீண்டகாலமாகவே கோரி வருகின்றனர். குறிப்பிட்ட அந்த ஒன்றிரண்டு பேருந்துகளையும் தவற விட்டால், கல்லூரியில் முதல் இரண்டு வகுப்புகளை இழக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, மன்னார்புரம் மற்றும் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதிகளிலிருந்து சுமார் இரண்டு முதல் மூன்று கி.மீ. தூரம் வரை நடந்தே கல்லூரிக்கு செல்கின்றனர் மாணவர்கள்.

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் தொலைதூரங்களிலிருந்து குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் முதல் பட்டதாரி மாணவர்கள். அன்றாடம் 40 கி.மீ. தூரம் வரை பயணித்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். கல்லூரியிலிருந்து 30 கி.மீ. தூரம் வரையில் அரசின் இலவச பஸ்பாஸை பயன்படுத்தியும் அதற்கு மேல் உள்ள தூரத்தை தமது சொந்தக் காசை போட்டும்தான் அன்றாடம் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

படிக்க:
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!

வாரநாட்களில் இவ்வாறு கல்லூரிக்கு வந்து போகும் செலவுகளுக்காக, வார விடுமுறை நாட்களில் விவசாயக்கூலிகளாகவும், பெட்ரோல் பங்க், ஓட்டல் வேலை, கேட்டரிங் என கிடைத்த வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப காசைக் கொண்டுதான் ஈடு செய்கின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகளை இவ்வளவு தூரம் கல்லூரிக்கு படிக்க அனுப்புவதே பெரிய விசயம். அதிலும் அன்றாடம் பஸ்க்கு காசுனு கேட்டா கல்லூரிக்கே போக வேணாம். வேலைக்கு போ என்று முடக்கிவிடுவார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்தே, பஸ்பாஸ் வழங்கக்கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, போக்குவரத்து அதிகாரி கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பஸ்பாஸ் கொடுக்கும் வரை கல்லூரியில் வழங்கியுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதாகவும் தமது தரப்பில் எல்லாம் சரியாகவே நடக்கிறது என்பதைப் போல பேசினார்.

ஆனால், நாள்தோறும் பேருந்து பயணத்தின்போது மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதையும், நடத்துனர்களால் வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்படும் சம்பவங்களையும் எடுத்துரைத்தனர். கரூர் மாவட்டத்திலிருந்து அன்றாடம் நூறு ரூபாய் பேருந்துக் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு வர இயலாத நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு திருப்பூர் பணியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் அவலத்தை சொன்னார் மாணவி ஒருவர்.

”எங்கள் வீட்டில் நாலு பொம்பள பிள்ளைங்க. எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?… ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனும்னு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?” என்று மற்றொரு மாணவி எழுப்பிய கேள்விதான் அரசுக்கல்லூரி மாணவர்களின் ஒட்டுமொத்த நிலைமை.

கல்லூரி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யுமாறும்; தாம் மீண்டும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அறிவறுத்துவதாகவும்; அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர் நடத்துனர் குறித்து குறிப்பான புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் வாக்குறுதியளித்தார்.

இனிமேல் மாணவர்களின் மீது நடத்துநர்கள் யாராவது கைய வச்சா, பஸ்ஸை விட்டு கீழே இறக்கினால் அடுத்தமுறை ஒட்டு மொத்த மாணவர்களும் ரோட்டுக்கு வருவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மாணவர்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

தகவல்: பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்,
திருச்சி – 9943176246.

இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !

மது நாட்டில் காலில் செருப்பு போடுவதற்கு போராட்டம், தெருவில் நடப்பதற்கு போராட்டம், சட்டை போடுவதற்கு போராட்டம், ஏன் மாராப்பு போடுவதற்குக் கூட போராட்டம் என்று கடும் போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது ஒவ்வொரு அடிப்படை மனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கும் உணவகங்கள் முன்பும், பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியிலும் வாடிக்கையாளர்களை வரவேற்று கடைக்குள் அனுப்பும் வேலை செய்யும் செக்யூரிட்டியில் இருந்து கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை வேலை நேரத்தில் உட்காருவதற்கு அனுமதி இல்லை. அப்படி உட்காருவது எஜமானர்களாகிய முதலாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மரியாதை குறைவு என்று அதட்டப்படுவார்கள்.

அதாவது, இன்று முதலாளித்துவ முறையிலான கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் “முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமின்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகின்றனர். நவீன காலத் தீமைகளோடு கூடவே, பாரம்பரியமாய் வந்த அவலங்களின் முழு வரிசையும் நம் நாட்டு தொழிலாளர்களை வருத்துகிறது.. வாழ்பவற்றால் மட்டுமின்றி செத்துப் போனவற்றாலும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.” (காரல் மார்க்ஸ், மூலதனம் முதல் பதிப்புக்கு முன்னுரையிலிருந்து)

துணிக்கடைகள், நகைக்கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்க வந்திருக்கும் பொருட்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்களேயன்றி அவற்றைத் தங்களுக்கு எடுத்துக் காட்டும் கடை ஊழியர்களைப் பற்றி எதுவும் கவனிக்க மாட்டார்கள். வாடிக்கையாளர் எத்தனை முறை துணிகளை மாற்றி மாற்றிக் கேட்டாலும் முகம் சுளிக்காமல் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துத் தரும் பணியாளர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டு வேலை செய்வது பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடி, கேரளாவின் துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை செய்யும் பெண் பணியாளர்கள், அமர்ந்து வேலை செய்யும் உரிமையை வென்றிருக்கிறார்கள். கேட்கும் போது ஏதோ சாதாரண விசயம் போன்று தோன்றினாலும், இந்த வெற்றியானது அந்தத் தொழிலாளர்களுக்கு அவர்களது பணியிடத்தில் அனுபவித்து வந்த நரக வேதனையிலிருந்து, விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது.

படிக்க:
♦ அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை
♦ கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை

நாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.

திருவிழாக் காலங்களிலோ வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல இவர்களது துயரமும் பலமடங்காகிவிடும். பணியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவோ, சுவற்றில் சாய்ந்து ஓய்வெடுக்கவோ கூடாது. எல்லா நேரமும் கடைக்குள் இருக்கும் கேமரா இவர்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும்.
தப்பித் தவறி உட்கார்ந்து விட்டாலோ, தாங்க முடியாமல் கழிப்பறைக்குச் சென்று விட்டாலோ காது கூசும் அளவுக்கான வசவுகளை சூப்பர்வைசர் என்ற கங்காணியிடமிருந்து கேட்க வேண்டி வரும்.

இப்படிப்பட்ட பணிச்சூழலில் தினமும் 10 முதல் 12 மணிநேரம் வரை உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய எந்தவொரு தொழிலாளர் சட்டமும் கிடையாது. நடைமுறையில், அவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது.

இதனால் பெண் பணியாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகிறார்கள். அதிக நேரம் நிற்பதாலும், தண்ணீர் குடிக்காததாலும், கடுமையான கால் வலி, நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌ய் (Varicose Veins), சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த்தொற்று (Urinary Tract Infection) ஆகிய உடல் உபாதைகளுக்கும், மாதாவிடாய் காலங்களில் கடுமையான வலியை அனுபவிப்பதுடன், கருப்பை சம்பந்தமான நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

கேரளாவில் துணிக்கடை பெண் ஊழியர்கள் போராட்டம்

இதனை எதிர்த்து முதலில் கலகம் செய்தவர் கேரளாவைச் சேர்ந்த மாயாதேவி என்ற தொழிலாளிதான். இவர் பணியிடத்தில் அமரவும், கழிப்பறை இடைவேளைகள் வேண்டுமெனவும் புகார் அளித்த போது, கேரள வணிகர் சங்கமும், கடை உரிமையாளர்களும், அவரின் கோரிக்கைகளைக் கண்டு கேலி செய்ததோடு மட்டுமன்றி, ‘உட்காரவும், கழிப்பறைகளைப் பயன்படுத்தவும் வேண்டுமெனில், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்’, என்று ஏளனம் செய்தனர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய மற்ற தொழிற்சங்கங்கள் பெண்களின் பிரச்சனையைக் கையிலெடுக்க மறுத்துவிட்ட நிலையில், ‘பெண்கூட்டு’ என்ற பெண்கள் அமைப்பின் உதவியை நாடினார் மாயாதேவி. இந்த ‘பெண்கூட்டு’ அமைப்பு ஏற்கெனவே 2010-ம் ஆண்டு பெண்களுக்கு போதிய கழிப்பறைகள் வேண்டும் என்று போராடியிருக்கிறது. பெண்கூட்டு அமைப்பின் தலைவர் விஜியும் மாயாதேவியும் இணைந்து பெண் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார்கள்.

அவர்களது தொடர் போராட்டத்திற்குப் பிறகு அவர்களது கோரிக்கைகளுக்கு கேரள மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் செவிசாய்த்தது. ஏற்கனவே, பாலியல் வன்முறையைத் தவிர்க்கவும், பணியிடத்தில், வேலை செய்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்கவும் இயற்றப்பட்ட ‘கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான’ சட்டத்தைத் திருத்தி பெண்கள், வேலை நேரங்களில் உட்காருவதற்கும், போதிய இடைவெளிகளை எடுப்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று புதிதாக ஒரு விதியை, கேரள அரசு சேர்த்துள்ளது.

தொழிலாளர் சட்டம் வந்துவிட்டாலும் அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பெண் தொழிலாளர்களுக்கு தங்களது உரிமை குறித்த புரிதலை ஏற்படுத்த, அவர்களைச் சங்கமாக அணிதிரட்டப் போவதாக விஜி கூறுகிறார். கேரள மாநில தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து துணிக்கடை, நகைக்கடைத் தொழிலாளர்களும் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால் இந்த கொடுமையிலிருந்து வெளிவர முடியும் என்ற உத்வேகத்தை தருகிறது கேரள தொழிலாளர்களது இந்தப் போராட்டம்.

படிக்க:
♦ செம்படையில் பெண்கள் – திரைப்படம்
♦ அழகு – சில குறிப்புக்கள் !

இந்தப் போராட்டம் கேரளத்து பெண் தொழிலாளர்களது போராட்டமாக சுருங்கவிடக் கூடாது. நாடு முழுவதும் இன்னும் சொல்லப் போனால், உலகம் முழுவதும் பணியிடத்தில் வழங்கப்பட வேண்டிய அற்ப, சொற்ப பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக போராடித்தான் ஆக வேண்டும் என்கிற நிலையைத்தான் முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. பணியிட பாதுகாப்பற்ற சூழல்,  ஆண் – பெண் என்கிற பேதமின்றி ஒவ்வொரு ஆலையிலும், ஒவ்வொரு தொழிலிலும் அவற்றுக்கே தனித்தன்மையுடன் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தொழிலாளி வர்க்கம் தன்னை “சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அதே போது சமுதாயம் முழுவதையுமே எல்லாவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப் பாகுபாடுகளிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும் முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும்” என்று பாட்டாளி வர்க்க பேராசான் எங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரையில் சொல்வதை நினைவு கூர்வோம்.

பெண்கள் மீதான ஆணாதிக்க சுரண்டல், நிலப்பிரபுத்துவ சாதிய முறையிலான சுரண்டல் உட்பட அனைத்து விதமான சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தை ஆதரித்து அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையின் ஒரு பகுதியாகும்.

வின்சென்ட்
புதிய தொழிலாளி செப்டம்பர் 2018
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள்