தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்காக 13 உயிர்களை சுட்டுக் கொன்றது தமிழக அரசு. அதன் இரத்தக் கவிச்சி காயும் முன்பே, கொலைகார ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 23-09-2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்திருந்தனர் தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவினர். ஆலையை ஆய்வு செய்ததோடு, அருகாமை கிராமங்களிலுள்ள மக்களை சந்திக்க தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ஏன் மூட வேண்டும் என்பதை விளக்கி எழுதப்பட்ட விரிவான கோரிக்கை மனுவை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து கொடுத்தனர்.
அம்மனுவின் முழுவிவரம் பின்வருமாறு:
கடந்த 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் துவங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சிப்காட்டை சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர் மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. பல லட்சம் மக்கள் ஸ்டெர்லைட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பாதிப்புகளால் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர். எங்கள் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கின்றன. இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகி விட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் சிப்காட்டில் செயல்பட்டால் நாங்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் சூழல் ஏற்படும். மேற்கண்ட சூழலில்தான் கடந்த பிப்ரவரி, 2018 முதல் மே, 22, 2018 வரை அமைதியான முறையில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் ஸ்டெர்லைட்டும், காவல்துறையும் சேர்ந்து 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் முடமாக்கப்பட்டார்கள். இதற்குப் பின்பும் ஸ்டெர்லைட்டைத் திறக்க முயல்வது அநீதியானது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கண்டறியப்பட்டு ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாகி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்றுவருகிறது. 1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லைட்டில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாகும். இந்தியாவின் மொத்த தேவை ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் எனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின் விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட். சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.
- படிக்க:
- ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை !
- ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !
- ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன. கடந்த 21 வருடங்களாக எங்கள் மண். காற்று.நீர் அனைத்தும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் மேற்கண்டவாறாக நாசம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பணக்கார நாட்டு மக்கள் சுகாதாரமாய் வாழ தமிழகத்தின் ஏழை மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் “சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை .
21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு Writ Petitions No. 15501 to 15503 of 1996.
5769 of 19 7& 16861 of 1998 வழக்குகளில் “ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை” பிறப்பித்தது. மேற்படி தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”
“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. “மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை . எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.
கடந்த 2013-ல் CIVIL APPEAL Nos. 2776-2783 OF 2013ன் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் பத்தி 42-ல்
“By this judgment, we have only set aside the directions of the High Court in the impugned common judgment and we make it clear that this judgment will not stand in the way of the TNPCB issuing directions to the appellant-company, including a direction for closure of the plant, for the protection of environment in accordance with law.” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இல்லை.
- படிக்க:
- ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !
- வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!
- சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்கினால், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை , ஆரோக்கியம் பாதிக்கப்படும். மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் அம்மாநில அரசால் தடை செய்யப்பட்டது. தமிழகத்திலும் தூத்துக்குடியிலும் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஆலை மூடப்பட்டடுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் அரசியல் சட்டக் கடமையாகும். ஸ்டெர்லைட் இயங்கினால் எங்களின் வாழ்வுரிமை பறிபோகும்.
ஆகவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, சுற்றுச் சூழலை சீர்குலைத்து மக்களின் வாழ்வுரிமையை அழித்து தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உரிய பரிந்துரைகளை வழங்குமாறு வேண்டுகிறேன்.
– வினவு களச் செய்தியாளர்.








“சார் நீங்கதான் பி.எஸ்.எஸ் கம்பெனி ஓனரா? மன்னார் அன்ட் கம்பெனிக்கு நீங்கதான சாஃப்ட்வேர் செஞ்சு கொடுத்தீங்க? எங்க கம்பெனிக்கும் இதே போல சாஃப்ட்வேர் வேணும். உடனடியாக எங்க ஓனரை வந்து பாருங்க”
“சரிப்பா, இதுல என்னென்ன வசதி இருக்குன்னு சொல்லு பார்க்கலாம்”. அடுத்த இரண்டு மணி நேரம் விவாதம் போனது. ராமமூர்த்தி டீம் கூடுதலாக சொன்ன பல தேவைகளை பிரகாஷ் குறித்துக் கொள்கிறார்.



இப்பகுதிகள் தொடர்ச்சியாக முகலாய சாம்ராச்சியத்தின் கீழ் இல்லை என்பதுடன், அவ்வாறு இருந்த காலங்களிலும், இப்பகுதிளின் மீது முகலாய அரசின் அதிகாரம் மிகவும் பலவீனமாகவே இருந்தது. கேரளத்தை பொருத்தவரை அது முகலாய அரசின் கீழ் என்றுமே இருந்ததில்லை. எனவே இந்தப்பகுதிகளில்தான் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக கூறுவது அபத்தமானது.
1540 இல் ஹுமாயூனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஷெர்ஷா சில இந்து ஜமீன்தார்களை தண்டிக்க விரும்புகிறான். யார் அவர்கள்? அந்த ஜமீன்தார்கள் மசூதிகளை இடித்து அங்கே கோயில்களைக் கட்டியவர்கள் என்று கூறுகிறான் ஷெர்ஷா. இதே காலகட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த காம்பே எனும் துறைமுக நகரில் பார்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் ஒரு மசூதிக்குத் தீ வைத்து, 80 முசுலிம்களைக் கொல்கிறார்கள். இதனை விசாரித்து உண்மைகளை அறிந்த அந்தப் பகுதியின் இந்து மன்னன், மீண்டும் மசூதியைக் கட்ட உத்தரவிடுகிறான்.
தபிஸ்தான் – இ – மசாஹிப் என்ற 17 ஆம் நூற்றாண்டின் பாரசீக நூல் சமூகத்தின் மேல் மட்டத்தில் பலர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியதைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக ஷாஜகானின் அரசவையில் இருந்த மிர்சா சாலி, மிர்சா ஹைதர் என்ற இரண்டு பிரபுக்கள் முதலில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி, பின்னர் இஸ்லாத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இவர்கள் யாரும் எவ்வகையிலும் தண்டிக்கப்படவில்லை.

































நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருந்த வாஜ்பாயி அரசிற்கு, எந்தவொரு கொள்கை முடிவை எடுக்கவும், புதிய திட்டங்கள் ஒப்பந்தங்களுக்கு அனுமதி கொடுக்கவும் தார்மீக அடிப்படையும் கிடையாது. எனினும், தனது முதலீட்டிற்கு இலாப உத்திரவாதம் கோரிய அமெரிக்க என்ரான் நிறுவனத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்து விட்டு பதவி விலகிய நேர்மையாளர்தான் வாஜ்பாயி.
அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் கட்டண நிர்ணய முறைக்குப் பதிலாக வருவாய்ப் பகிர்வு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதி கொடுத்து, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய 8,000 கோடி ரூபாயை, அவர்களுக்கே மொய் விருந்தாகவும் படைத்தார் வாஜ்பாயி.
குஜராத் முசுலீம் படுகொலைக்கு முன்பாக நடந்த இந்த ஒவ்வொரு சம்பவமும், நடப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் என்பதை உணர்த்தின. இந்தப் பக்கபலத்தோடுதான் நரேந்திர மோடி குஜராத்தில் முசுலீம் இனப்படுகொலையை நடத்தி முடித்தார்.
1980 பிற்பகுதியில் இருந்தே இந்திய அரசியல் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஒரு வலுவான சக்தியாக எழத் தொடங்கியது. மண்டல் கமிசன் அமலாக்கத்திற்கு எதிராக ராமன் கோவில் விவகாரத்தைக் கையில் எடுத்து ஆதிக்க சாதி இந்துக்களை அணிதிரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் வளர்ச்சி சாத்தியமானது. 1989 -இல் 85, 1991 -இல் 120, 1996 -இல் 161, 1998 -இல் 180 எனக் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றினாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பா.ஜ.க.வால் செல்வாக்குப் பெற முடியவில்லை.
இதன் பிறகுதான் வாஜ்பாயிக்கு மிதவாத மூகமூடி மாட்டிவிடும் வேலைகள் தொடங்கின. வாஜ்பாயியை மிதவாதியாக முன்னிறுத்தும் தேவை ஆர்.எஸ்.எஸ். -க்கு மட்டுமல்ல, காங்கிரசோடு கூட்டணி சேர முடியாத தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரசு போன்ற மாநில கட்சிகளுக்கும் அவசியமாக இருந்தது. 1999 -இல் பா.ஜ.க.வின் கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க. காங்கிரசு பக்கம் சாய, தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என அறிவித்தது.
கடன் தவணைகள் நிலுவையின்றி வசூலாகி, இந்தத் தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் எழாமல் இருந்திருந்தால், அவ்வங்கி நடப்புக் காலாண்டில் 2,842 கோடி ரூபாய் இலாபம் அடைந்திருக்கக் கூடும். ஆனால், மோடி ஆட்சியில் வாராக் கடன் அதிகரித்துக்கொண்டே செல்வதும், அதனை ஈடுகட்ட பொதுத்துறை வங்கிகள் தமக்குக் கிடைக்கும் இலாபம் அனைத்தையும் ஒதுக்குவதும் பொருளாதார விதி போலவே மாறிவிட்டது.