கூடங்குளம் அணு உலைகளில், அவற்றின் எரி பொரு ளாகிய யுரேனியத்தை நிரப்பி இயங்கச் செய்வதற்கும், அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. “நாறவாய்” நாராயணசாமிகள் கூறுவதைப் போல உடனடியாக இல்லாவிட்டாலும், சில மாதங்களில் அணு மின் உற்பத்தி தொடங்கிவிடும்.
இது, அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் அதன் தலைமையிலான இடிந்தகரை கூடங்குளம் வட்டாரக் கிராமங்களின் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு நிச்சயமாகப் பின்னடைவுதான். ஆனால், இப்பின்னடைவு மீளமுடியாததோ, நிரந்தரமானதோ அல்ல. இப்பின்னடைவி லிருந்து மீண்டு, போராட்டங்களைச் சரியான திசையில் முன்னெடுப்பதற்கு முதன்மையான கடமை ஒன்றிருக்கிறது. இப்போராட்டங்களை வழிநடத்திய முன்னணியாளர்கள், அவற்றிலிருந்து சரியான அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றாக வேண்டும்.
முதலாவதாக, போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள். இது மத்திய தர அறிவுஜீவி வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான். “என்னதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும், எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லக் கூடாது; சொல்லவேண்டிய அவசியம் இல்லை; சொன்னால் பயந்து விடுவார்கள்; போராடத் துணியமாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்; பின்வாங்கி விடுவார்கள்” என்று அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.
உண்மையில் இது அறிவுஜீவிகளிடமே உள்ள குறைபாடு; இருப்பதையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். உண்மையில் உழைக்கும் மக்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; வரலாற்றுப் படைப்பாளிகள்.
கூடங்குளம் அணுஉலைகளையும், அணு மின்நிலையத்தையும் இழுத்து மூடவேண்டும், அவை வரவிடாமல் செய்ய வேண்டுமானால், எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை. கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்கரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.
கூடங்குளம் திட்டத்தைத் தொடர்ந்து அதுபோன்ற 60க்கும் மேற்பட்ட அணு மின் திட்டங்கள், அவற்றுக்கான அணுஉலைகள், 70 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட அணிவகுத்து நிற்கின்றன. உற்பத்தி செய்து குவிக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை விற்றுத் தீரவேண்டும்; அப்போதுதான் மேலை நாடுகளின் ஆயுதத் தொழிற்சாலைகளும் இயந்திரங்களும், மூலதனமும் இடைவெளியின்றிச் சுழன்று, கொழுத்த இலாபமீட்ட முடியும்; அதற்காக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தாலும் கவலையில்லை என ஏகபோக ஆயுத உற்பத்தியாளர்கள் வெறிபிடித்து அலைவதைப் போல, மேலைநாடுகளில் காலாவதியாகிப் போன தொழில்நுட்பம், துருப்பிடித்து ஓட்டை உடைசலாகிப் போன நாசகார அணுசக்தி உலைகளை “நம்” தலையிலே கட்டிக் “காசா”க்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கு போட்டு ஆதாயம் அடைவதற்காக, தனியார்துறையில் பல அணு மின் நிலையங்களை நிறுவக் காத்திருக்கிறார்கள், டாடா, அம்பானி, அதானி முதலிய தேசங்கடந்த இந்தியத் தரகு முதலாளிகள். பேரழிவு ஆயுத வியாபாரிகளைப் போல, இவர்களின் கொள்ளை இலாபவெறிக்கு எவ்வளவு கோடி மக்களையும் அணு உலைகளுக்குக் காவு கொடுக்கவும் தயாராய் உள்ளனர், இந்திய ஆட்சியாளர்கள்.
அடுத்து, எட்டுமாதங்கள், ஒரு சிறு அளவுகூடச் சட்டவிரோதமான வன்முறையில் கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் ஈடுபடவில்லை. பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர். ஆனால், “மூட்டைப் பூச்சிகளை நசுக்குவதற்குப் பீரங்கி வண்டிகளின் அணிவகுப்பா?” என்ற தோரணையில், “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு!” என்று பெயர் பெற்ற “தி இந்து” நாளேடே வியந்து தலையங்கம் தீட்டியது; அந்த அளவு கூடங்குளம் அணுஉலைகளையும், அணுமின் நிலையத்தையும் திறந்து மின்உற்பத்தியில் ஈடுபடுவதற்கு எந்த எல்லைவரையும் போவது என்று ஆட்சியாளர்கள் வலிந்து நிற்பதைக் கண்டு போராடிய மக்கள் அதிர்ச்சியுற்றனர்.
அதிரடிப்படை உட்பட ஆயுதந்தாங்கிய மத்திய, மாநிலப் போலீசுப் படைகள், உளவுப் பிரிவுகள் ஆகியவற்றின் 7,000 படையினர் குவித்துச் சுற்றி வளைக்கப்பட்டனர். 144 உத்திரவு பிறப்பிக்கப்பட்டு, குடிநீர், மின்சாரம், பால் முதலிய உணவுப் பொருட்கள் வழங்கீடு, போக்குவரத்தைத் தடை செய்து முற்றுகையிடப்பட்டது. அந்நிய நாட்டு மக்கள் மீது பாய்ந்து குதறுவதற்குத் தயார் நிலையில் இருப்பதைப் போல முப்படைகளும் குவிக்கப்பட்டன. அந்நிய நாடுகளிடம் நிதி பெற்று, அந்நிய நாடுகளின் சதிக்கு உடன்பட்டு கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக மக்கள் போராடுவதாக அவதூறும் விசாரணையும் நடந்தது. போதாதென்று “நக்சலைட்டு பீதி” பரப்பப்பட்டு, கைது நடவடிக்கைகள் ஏவிவிடப்பட்டன.
ஏற்கெனவே தலைக்குமேல் தொங்கும் வாளாக போராட்ட முன்னணியாளர்கள் மீது தேசத்துரோகம் மற்றும் அரசு மீது போர் தொடுத்தல், அரசுக்கு எதிராகச் சதி உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது அவற்றின் கீழ் பலரைக் கைது செய்து பணயக் கைதிகளாக்கி, காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி ஆட்சியாளர்கள் நிர்பந்தித்தனர். மும்பையிலுள்ள கிறித்துவத் திருச்சபை கார்டினல் மூலம் பேரங்கள் நடத்தி, நிர்பந்தங்கள் செய்து, மதுரை மண்டல ஆயர் ஃபெர்ணான்டோவைத் தூது அனுப்பி காரியத்தைக் கச்சிதமாக முடித்தனர், ஆட்சியாளர்கள்.
இவற்றையெல்லாம் போராடும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், போராட்ட முன்னணியாளர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்; மக்களை எச்சரித்திருக்கவும் வேண்டும். “நாமென்ன மாவோயிசத் தீவிரவாதிகளைப் போலத் துப்பாக்கி ஏந்தியா போராடுகிறோம். காந்திய வழியில் அமைதியான போராட்டங்களைத் தானே நடத்துகிறோம். ஆட்சியாளர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்” என்று எண்ணி ஏமாந்து போனார்கள், போராடிய மக்கள்.
ஆனால், நாட்டை மீண்டும் காலனியாக்கித் தருவதற்குத் தவணை முறையில் கையூட்டுப் பெறுவதென்று பேரங்கள் பேசி முடித்து விட்டார்கள், ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும். “எங்கள் வனங்களை அழிக்காதீர்கள், எங்கள் இயற்கை வளங்களை வேட்டையாடாதீர்கள், எங்கள் மண்ணைப் பிடுங்கிக் கொண்டு, எங்களை வெளியே துரத்தாதீர்கள்” என்று நிராயுதபாணிகளாக நின்று முழக்கமிடும் ஒடிசா பழங்குடி மக்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளை பரிசாக வழங்குகிறார்கள் ஆட்சியாளர்கள். எல்லாம் எதற்காக?
வேதாந்தா மற்றும் போஸ்கோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இரும்பு, செம்பு, பித்தளை, அலுமினியம் முதலிய தாதுப்பொருட்களை வரைமுறையின்றிக் கொள்ளையடித்து, பல இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டுவதற்குத்தான். அதேபோன்றுதான் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களை நிறுவிட ஆட்சியாளர்கள் மக்களின் வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, மக்கள் உயிர்களையும் பலியிடத் துடிக்கிறார்கள்.
இறுதியாக, இவ்வாறான கொடூரமான எதிரிகளை எதிர்த்து முறியடிக்க வேண்டுமானால் நாடு முழுவதும் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் போராடும் மக்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப்போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்கவேண்டும். ஆனால், கூடங்குளம் இடிந்தகரை வட்டாரத்திலிருந்து விலகிப் போகப் போக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு எதிர்ப்பு கடுமையாகிக் கொண்டே போகிறது. ஓரிரு சிறு கட்சிகள், சிறு ஏடுகள் தவிர அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்தி ஊடகங்களும் எதிர்த்தரப்பில் நிற்கின்றனர். அது மட்டுமல்ல, பரந்துபட்ட உழைக்கும் மக்களும் கூட அணு மின் சக்திக்கு ஆதரவான பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகி எதிர் அணியாக நிற்கிறார்கள். கடலூர், தூத்துக்குடி, கொச்சி, சென்னைஎண்ணூர் துறைமுகங்களில் இராட்சத பெட்டகங்களை இறக்குமதி செய்து, உள்நாட்டுப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் தொழிலாளர்களுக்குத் தெரியாது, அவற்றின் உள்ளே அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் நமது நாட்டின் அத்தியாவசியத் தேவைகள் அல்ல. நமது மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் மருத்துவக் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், அணுக் கழிவுகள் என்று.
இவ்வாறான உண்மைகளை உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டு ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நிச்சயம் எழுச்சியுறுவார்கள். கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.
இதற்கு மாறாக கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.
_________________________________________
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!
- கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
- கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் மருதையன், சபா.நாவலன் நேர்காணல்!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
- கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!
- கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!
- இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
- கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு! படங்கள்!!
- கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
- கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!

அயராது உழைத்த தோழர், மீளாத உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்!

எண்பதுகளில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை முதல் தற்போது படையெடுக்கும் காதல் சார் திரைப்படங்கள் வரை இடம், காலம் மட்டும்தான் மாறியிருக்கின்றன; பொருள் மாறவில்லை. அன்று கிராமம், கடற்கரை, ஏழ்மை, சைக்கிள், பேருந்து, ஊரக விளையாட்டு என்றிருந்தவை இன்று காஃபி ஷாப், ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ், ஸ்கூட்டி, ஃபேஸ்புக், நடுத்தர வர்க்கம் என்று ’வளர்ந்தி’ருந்தாலும் காதலின் சித்தரிப்பு என்னவோ அதேதான்.
‘பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி பொண்ணுங்க அளவுக்கு பசங்களால காட்ட முடியாது‘ என்று பார்வதியுடனான பிரிவுக்குக் காரணமான அந்த டம்ளர் சண்டையைப் பற்றி அருண் கூறுகிறான். பெண் குறித்த இத்தகைய சித்தரிப்புகள், வசனங்கள் படம் முழுவதிலும் வருகின்றது. ஏற்கெனவே ’பெண் மனது ஆழமானது‘ போன்ற தத்துவ முத்துக்கள் தமிழ் சினிமாவில் நிரம்பி வழியும் சூழ்நிலையில் இங்கு பெண்ணுக்கு கொஞ்சம் ’சமத்துவத்தை’ அளித்து விட்டு, அடுத்த கணமே அந்த முத்துக்கள் வீசப்படுகின்றன.
காதலைத் தெரிவு செய்வதற்கு சுதந்திரமான சமூகச் சூழல் இல்லாத போது பார்வதிகள் இப்படிப் பயப்பட்டுக் கொண்டுதான் காதலிக்க முடியும். ஆக இப்போதைக்கு நாம் உண்மையான காதலையோ, காதல் கதைகளையோ சந்திக்க இயலாது என்பதை எத்தனை காதலர்கள் ஏற்றுக் கொள்வார்களோ, தெரியவில்லை.
ஜோதிக்குப் பிறகு, “வாய்தா ராணி” பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஜெயாவுக்கு விசுவாசமாக உழைத்த நவநீத கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளிலும் தண்டனிட்டு, கூனிக் குறுகி நிற்கிறார். அரசை நடத்துவதற்கு அரசு நிர்வாகத் திறமை, தகுதி தேவையில்லை; மக்களை ஒடுக்கி ஒட்டச் சுரண்டுவதோடு, போலீசு அதிகாரிகளும், அரசு உயர் அதிகாரிகளும் செய்வதற்கு எல்லாம் தலையாட்டினால் போதும், அதைவிட முக்கியமாக அரசியல் பழிவாங்குதலில் அவர்களை ஏவிவிட்டால் போதும் என்று கருதி செயல்படுகிறது, ஜெயா அரசு.
அதேசமயம், ஜெயலலிதா அரசு சாதாரண சட்ட அறிவு கூட இல்லாமல் பல வழக்குகளிலும், குறிப்பாக அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் படுதோல்விகளைக் கண்டுள்ளது. சமச்சீர் கல்வியை ரத்து செய்தது, புதிய தலைமைச் செயலகத்தை அதிநவீன மருத்துவமனையாக மாற்றும் செய்கை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவு; ஆளுங்கட்சிக்காரன் வசமுள்ள தோட்டக்கலை சங்கத்திற்கு அரசு நில ஒதுக்கீடு செய்தது; தி.மு.க.வின் ஸ்டாலின், டி.ஆர். பாலு அலுவலகங்களைப் பறிக்க முயன்றது; தி.மு.க. பிரமுகர்கள் மீது ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் போட்டுச் சிறையிலடைத்தது, அந்த வழக்குகள் நிற்காத போது பலரைக் குண்டர்கள் சட்டத்தில் சிறையிலடைத்தது; பின்னர் எல்லா வழக்குகளிலிருந்தும் அவர்கள் விடுதலை பெற்றது; 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் வேலை நீக்கம் செய்தது; தமிழ்நாடு அரசுப் பணி நியமன ஆணைய உறுப்பினர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள மூன்று பேரின் கருணை மனுக்கள் விவகாரத்தில் மாறி மாறிப் ‘பல்டி’ என்று சட்டநீதித்துறை அறிவின்றி முட்டாள்தனமாக ஜெயா அரசு சிக்கிக் கொண்ட பட்டியல் நீளமானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா தனது கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சசிகலாவையும் அவரது நெருங்கிய 13 உறவினர்களையும் திடீரென கட்சியில் இருந்து நீக்கம் செய்தார். இந்நடவடிக்கைக்குக் காரணம், அவர்களின் கட்சி விரோதச் செயல்கள் என்ற ஒருவரிச் செய்திக்கு மேல் எதுவும் கூறவில்லை; சில வாரங்களுக்குப் பின் நடந்த கட்சிப் பொதுக்குழுவில், தனக்குத் துரோகமிழைப்பவர்களுக்கு இதுதான் கதி; அவர்கள் மன்னிக்கப்படவே மாட்டார்கள் என்று எச்சரித்தார். ஜெயலலிதாவின் பாதந்தாங்கிகளான பார்ப்பனச் செய்தி ஊடகங்கள் இது பற்றி பலவாறான கிசுகிசு, வதந்திகளைப் பரப்பின. சசி கும்பல் அளவுக்கு மீறி, ஜெயலலிதாவுக்குத் தெரியாமல், ஜெயாவுக்கு எதிராகவே அரசியல் தலையீடுகளிலும் துரோகங்களிலும், நஞ்சு வைத்து ஜெயாவைக் கொல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பல சதிவேலைகளில் ஈடுபட்டதாக கிசுகிசுக்களைப் பரப்பின.
கருணாநிதி ஆட்சியிலும் அதன்பிறகு எட்டு மாதங்களாகவும் நீடித்திருந்த மின் உற்பத்தி அளவைப் பராமரிக்கத் தவறி, மின்வெட்டு 2,3 மடங்கு அதிகரிக்குமளவு சீர்கேடடையச் செய்தது, ஜெயாவின் நிர்வாகமே. 201112ஆம் ஆண்டுகளில் 3000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தியைத் தரும் அளவிலான மின் திட்டங்களை முந்தைய ஆட்சியில் வகுத்து செயல்பட வைத்தும் அவற்றையும் நிறைவு செய்யத் தவறியதும் தேவையான நிதி திரட்டி மத்திய, தனியார்துறையிடமிருந்து மின் வழங்கலைப் பெறத் தவறியதும் ஜெயாவின் நிர்வாகமே. கடும் மின்கட்டண உயர்வைத் திணிக்கவும், கூடங்குளம் அணுஉலையைத் திறக்கச் சாதகமான சூழலை உருவாக்கவும் இவ்வாறு மின்உற்பத்தி சீரழிவதற்கு வேண்டுமென்றே விடப்பட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய மின் பற்றாக்குறை 3000 மெகாவாட்; ஆனால், 500 மெகாவாட் கூட உற்பத்தி செய்யாது, அதிலும் மொத்த உற்பத்தியில் கால் பங்கு கூட தமிழகத்திற்கு வழங்கப்படமாட்டாது என்றாலும் கூடங்குளம் அணுஉலை திறப்பால் தமிழக மின்வெட்டு பற்றாக்குறை பிரச்சினை தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் அனைத்துக் கட்சி, அனைத்து ஊடகத் துணையுடன் நடத்தப்பட்டது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பை விட 20 சதவீதம் கூடுதலாக, அதாவது அடுத்த 11 ஆண்டுகளில் 11 சதவீதம் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பு இருக்கும் என்று ஜெயலலிதாவின் 2023ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்; குடிசைப் பகுதிகளும் ஓலைக் குடிசைகளும் இருக்காது என்று நம்பச் சொல்கிறது.

























