Tuesday, August 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 774

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்

2. பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பார்ப்பன ஜெயா அரசின் வன்கொடுமை வெறியாட்டம்!

3. ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி! பு.ஜ.தொ.மு.வின் கண்டன ஆர்ப்பாட்டம்.

4. உள்ளாட்சித் தேர்தல்கள்: உள்ளூரைக் கொள்ளையடிக்க ஒரு ஏற்பாடு!

5. கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

6. ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

7. வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?

8. மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

9. ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்: வர்க்க ஒற்றுமையால் விளைந்த வெற்றி!

10. லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

11. வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

12. நோவார்ட்டிஸ் வழக்கு: மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகளின் காப்புரிமை!

13. 27ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

14. காக்கை குருவிகளா விவசாயிகள்?

 புதிய ஜனநாயகம் அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

சமச்சீர் கல்வி, டாஸ்மாக், ஜெயா, ஸ்பெக்ட்ரம் ஊழல் – கேள்வி பதில்!

இன்றைய சூழலில் சமச்சீர் கல்வி தேவையா?

_ எஸ். பிரபு

அன்புள்ள பிரபு

கல்வி தனியார்மயமாக்கப்பட்டிருப்பதும், காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதும்தான் இன்றைய சூழலில் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமாக பிரச்சினைகள். 90களில் மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்த நாட்களில் கல்வி என்பது இனியும் அரசின் சேவைகளில் ஒன்றல்ல, அது விற்பனைக்குரிய பண்டம் என்பது அதிவேகமாக அமலாக்கப்பட்டது.

அதன் விளைவுதான் புற்றீசல் போல பெருகியிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள். மழலை பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை தனியார் முதலாளிகளே நாடெங்கும் ஆக்டோபஸ் போல ஆக்கிரமித்திருக்கின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கம் அனைவரும் தமது வருமானத்தில் கணிசமான பங்கை தனியார் கல்வியில் இழந்து வருகின்றனர். ஆங்கிலப் பள்ளிகளும், பொறியியல் கல்வியும் கற்காவிட்டால் தமது பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பாழாகிவிடும் என்று திட்டமிட்டு பரப்பப்படும் மூடநம்பிக்கைகட்க்கு அவர்களும் பலியாகியிருக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை என்பதே தனியார் முதலாளிகள் தமது இலாப நோக்கத்திற்காக செய்து வரும் முதன்மையான பிரச்சாரம். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கற்காவிட்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடும் எனுமளவுக்கு அவர்களது பிரச்சாரம் நடக்கிறது. இந்நிலையில் சமச்சீர் கல்வி வந்துவிட்டால் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே கல்வி என்றால் அவர்கள் இதுகாறும் கொள்ளையடித்து வந்தது ஒப்பீட்டளவில் பிரச்சினையாகும்.

அதனால்தான் சமச்சீர்கல்வியை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றம் வரை போனார்கள். மறுபுரம் கருணாநிதி கொண்டு வந்ததனால் மட்டும் ஜெயா இதை எதிர்க்கவில்லை. வர்க்கரீதியாக அவர் கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஆதரிக்கிறார். மற்றபடி சமச்சீர் கல்வி ஏன் வேண்டும், அது தரமற்றது என்று சொல்லப்படுவது உண்மையா என்பது குறித்தெல்லாம் வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவற்றை படித்துப் பாருங்கள்.

அனைவருக்கும் இலவசக் கல்வி எனும் நமது கோரிக்கையின் முதல் படி சமச்சீர் கல்வி. இன்று முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து பெற்றோர் வீதிக்கு இறங்கியிருப்பது உற்சாகமளிக்கும் சூழல். இரண்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது. அதை தலைமையேற்று நடத்துவதை புரட்சிகர அமைப்புகளின்றி வேறு யாரும் செய்யமாட்டார்கள்.

___________________________________

கேள்வி 1:
டாஸ்மாக்கை ஒழிக்க முடியுமா?

கேள்வி 2:
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் கூட்டணி கட்சிகளை வெளியேற்றுவது வாடிக்கைதான் என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியுமா?

 கேள்வி 3:

தயாநிதி மாறன், சிதம்பரம்… அடுத்தது?

– டி.பெருமாள்

அன்புள்ள பெருமாள்,

1. டாஸ்மாக்

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கும், முதலாளிகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் தரும் டாஸ்மாக் ஒரு அட்சயபாத்திரமாக விளங்குகிறது. எனவே எக்காலத்திலும் இதை ஒழிப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள். அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக்கே கருவூலமாகத் திகழ்கிறது. அதை ரத்து செய்தால் அரசு திவாலாகிவிடும். அதாவது மக்களின் சட்டைப்பையில் காசை எடுத்து அதில் சிலவற்றை அவர்களுக்கே வீசுவது என்பதாக அரசு செயல்படுகிறது.

அரசு, முதலாளிகளது நிலை இதுவென்றால் எல்லா அரசியல் கட்சிகளது நிலையும் அதுதானென்று ஆகிவிடுகிறது. விதிவிலக்காக ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் டாஸ்மாக்கை ஒழிக்க விரும்புவதில்லை. இன்னும் தேர்தல் காலங்களில் தொண்டர்களை திரட்டுவதற்கே அது தேவைப்படுகிறது. குடியை ஒழிக்க விரும்புவதாக சவுடால் அடிக்கும் பா.ம.க ராமதாஸ் தன் கட்சியில் குடிப்பவர் எவரும் இருக்க இயலாது என்று அறிவித்து விட்டாலே கூடாரம் காலியாகிவிடும்.

அடுத்தது குடி என்போது முன்னெப்பதைக் காட்டிலும் அநேக ஆண்கள் அன்றாடம் குடித்தே தீருவது எனும் வழக்கமாக மாறிவிட்டது. வர்க்க ரீதியாக உடலுழைப்பு செய்யும் ஏழை ஆண்கள் தங்களது வருமானத்தில் கணிசமான பங்கை குடிக்கு செலவழிக்கிறார்கள். வேலை கிடைக்காத நாட்களில் கடன் வாங்கி குடிக்கிறார்கள். இதனால் இத்தகைய குடும்பங்களில் வருமானமிருந்தும் வாழமுடியாத அவலம் நிரந்தரமாகிவிட்டது. அந்த வகையில் இது ஏழை குடும்பங்களின் பெண்களது பிரச்சினையாகிவிட்டது.

நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வாரம் ஒரு முறை, விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், விருந்துகள் போன்றவற்றில் அதிகம் குடிக்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதாரம் பிரச்சினை இல்லை என்றாலும் சிலர் நாட்பட அன்றாடம் குடித்தே ஆகவேண்டிய குடிகாரர்களாக மாறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கெட்டுகெதர் நிக்ழவுகளில் குடிக்கவில்லை என்றால் நாகரிகம் இல்லை என்பதாக கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

மறுகாலனியாக்கம் கடுமுழைப்பு நிறைந்த உதிரித் தொழிலையும், அதிக பணிச்சுமையையும், வீடு, குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது. அலவத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டத்தில் மாற்றுவது போய் வலியை மறக்க குடிப்பது என்றாகி விடுகிறது.

மேற்குலக நாடுகளில் குடிப்பது என்பது தட்பவெப்பம், பண்பாடு, உணவுப்பழக்கம் காரணமாக ஒரு சமூகப் பண்பாக உள்ளது. அங்கேயும் குடிக்கு அடிமையான குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சிறு எண்ணிக்கையில்தான் உள்ளனர். இங்கோ குடிப்பது சமூகப்பண்பாக இல்லாத நிலையிலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.

ஆல்ககாலின் அளவு அல்லது காரம் குறைந்த கள் போன்றவையே நமது மரபில் இருந்தது. இன்று அதிக காரம் நிறைந்த வெளிநாட்டு மது வகைகளை நமது மக்கள் குடித்துப் பழகிவிட்டனர்.

எனவே குடிப்பதை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்காமல் சமூகப் பொருளாதார தளத்தில் வைத்துப் பார்ப்பதே சரியாக இருக்கும். குளிர் பிரதேசங்கள், கடுமுழைப்பில் ஈடுபடுவோர் போன்ற காரணங்களுக்காக குடிப்பது தவறில்லை. அதே போல என்றாவது ஒரு நாள் குடிப்பதும் பிரச்சினை இல்லை. ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்.

சென்னையின் சேரிப்பகுதிகளில் குடிக்கு அடிமையாகும் ஆண்கள் அனைவரும் 40, 50 வயதுகளில் இறந்து விடுகின்றனர். இந்தியாவின் ஆயுள் சராரசரி சேரிகளில் இல்லை. எனவே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஏழைப்பெண்கள் விழித்தெழுந்து போராடும் வரை டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. அத்தகைய போராட்டம் ஆந்திராவில் 90களில் நடந்தது. பல நகரங்களில் இருக்கும் மதுக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கி மூடினார்கள்.

இதைத்தவிர டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு வேறு வழி இல்லை.

_________________________

2. ஜெயலலிதா

அகில இந்திய அளவில் ஓட்டுக்கட்சி அரசியலில் தனி முன்னுதாரணம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே. இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றோர் கூட வெகுவாக பின்தங்கித்தான் உள்ளனர். ஆணவம், செருக்கு, அகம்பாவம், மேட்டிமைத்தனம், பழிவாங்குதல் என்று எல்லா டிகிரிகளிலும் கொட்டை போட்டவர் புரட்சித் தலைவி.

அம்மா அரசவையில் அகில இந்திய தலைவர்கள் பலரும் பம்மித்தான் நடந்து கொள்வர். காங்கிரசு, பா.ஜ.க கட்சிகளுக்கு இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை கிடையாது என்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் காலந்தள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜெயாவை சகித்துக் கொள்கிறார்கள். அதே போன்று ஜெயாவும் இந்திய அரசியல் கனவில் ஒரு முக்கிய இடத்தை அடைய வேண்டுமென்று உறவு கொள்கிறார்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்காகவே அரைமனதாக கூட்டணியை அமைத்தவர் ஜெயா. கூட்டணி பேரம் முடியாமலேயே வேட்பாளரை அறிவித்து பின்னர் வேறுவழியின்றி மாற்றிதெல்லாம் திடுக்கிடும் விசயமல்ல. இப்படி நடக்கவில்லை என்றால்தான் ஆச்சரியமாக இருக்கும்.

இதெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், விஜயகாந்த், சரத்குமார், கிருஷ்ணசாமி அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இவர்களைப் பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பதால் சகித்துக் கொள்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை சொந்தக் கொள்கை என்பது எதாவது செய்து அரசியலில் நீடிப்பது, அதையும் சொந்த பலத்தில் செய்ய முடியாது, மாறி மாறி கூட்டணிகளின் தயவில் நீடிப்பது என்று சீரழிந்து போய்விட்டார்கள். விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஒரு ஆம்பளை ஜெயலலிதா என்பதால் பிரச்சினை இல்லை.

சட்டமன்றத் தேர்தலில் உள்ள நிர்ப்பந்தம் உள்ளாட்சித் தேர்தலில் இல்லை என்பதால் கூட்டணிகளை கழட்டிவிட ஜெயலலிதா தயங்கவில்லை. ஆனாலும் இந்த அளவுக்கு மோசம் போக மாட்டோம் என்று வேண்டுமானால் கூட்டணிக் கட்சிகள் நினைக்கலாம். மற்றபடி அவர்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருக்காது.

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், காரியவாதம், போன்றவை கோலேச்சும் ஓட்டுக்கட்சி அரசியலின் யோக்கியதையை இந்த அளவுக்கு வெளிப்படுத்தியமைக்காக நாம் ஜெயலலிதாவை பாரட்டலாம். வேறு என்ன?

________________________________

3. ஸ்பெக்ட்ரம் ஊழல்

தயாநிதி மாறன் ஒரு அமைச்சராக பதவி இழந்திருக்கிறாரே தவிர ஒரு முதலாளி என்பதால் தண்டிக்கப்படவில்லை. அவர் இருக்கும் சன் குழுமத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி விவாகரத்தையும் தற்போது சுமூகமாக முடித்து விட்டார்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை என்பதாகவும், அரசின் கொள்கை முடிவில் வேறுபாடு இல்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

வினவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஏற்கனவே வந்துள்ள கட்டுரைகளில் தெரிவித்த்து போல இந்த வழக்கை நீர்த்துப் போக வைப்பதே தற்போது நடந்து வருகிறது. இதை மேலும் மேலும் தோண்டினால் ப.சிதம்பரம் மட்டுமல்ல, மன்மோகன் சிங், இந்திய அரசு, அதன் கொள்கை முடிவுகள், பிறகு முதலாளிகள் என்று சகலரும் மாட்டுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ராசா இதை கொஞ்சம் அம்பலப்படுத்தினாலும் அவரை மிரட்டுவது போன்ற குற்றப்பிரிவுகளை அரசு தொடுக்கிறது. அதனால் அவரும் தான் அரசையோ, பிரதமரையோ குற்றம் சாட்டவில்லை, தான் நிரபராதி என்றுதான் பேசமுடிகிறது. ஆகவே அடிப்படை விதிமுறையை மீறாமல் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எனும் ஆட்டத்தை எப்படி ஆடுவது என்பதுதான் அரசுக்கும், இந்த வழக்கில் மாட்டியவர்களுக்கும் உள்ள பிரச்சினை.

அதன் வெளிப்பாடுதான் தற்போது நீர்த்துப்போகும் இந்த வழக்கு. இதற்கு இடையில் அண்ணா ஹசாரேவை வைத்து கொஞ்சம் பிரேக் விட்டார்கள். இதற்கு மேலும் இது சூடு பிடிக்காது எனும் போது வேறு யார் மாட்டப் போகிறார்கள்?

தெலுங்கானா போராட்டம்! கேள்வி – பதில்!!

கேள்வி 1:

வணக்கம். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் தனித் தெலுங்கானா போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
கேள்வி 2:

ஒருவேளை தெலுங்கானா பிரிக்கப்பட்டால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

கேள்வி 3:

அகில இந்திய அளவிலான விளைவுகள் என்னவாக இருக்கும்?

– முரளி

அன்புள்ள முரளி,

2010 ஜனவரி புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரை உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கிறது. அதையே இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.

______________________________________

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி,-வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!

47

இந்திய அணுசக்தித் திட்டம் : கூற்றுகளும் உண்மையும் சுவ்ரத் ராஜு

வினவு குறிப்பு: அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் விபத்து நிவாரணம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன.  இதில் அமெரிக்க நிறுவனங்களை காக்கும் சரத்துக்களை சேர்ப்பதற்கு இந்திய அரசு பெரிதும் முயன்று வருகிறது. எனில் போபாலில் இந்திய மக்கள் பட்ட துன்பம் அணு விபத்து மூலம் திரும்பலாம்.

இந்தக் கட்டுரை அணுசக்தி குறித்த முழுமையான அறிவை வாசகருக்கு நிச்சயம் தரும். இந்தியாவில் ஐம்பதாண்டுகளாக செயல்படும் அணுமின் நிலையங்கள் சொல்லிக் கொள்ளும் வண்ணம் உற்பத்தியை செய்ய முடியாமல் இருப்பதும், இந்நிலையில் எதிர்காலத்தில் அணுமின்சாரம் பற்றிய பிரமைகள் உருவாக்கப்படுவதையும் ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார். இதனால் அணு ஆயுதம் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காகவே அணுமின்நிலையங்கள் இயங்கி வந்திருப்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். சுதேசி திட்டமாக போற்றப்படும் தோரியம் குறித்த யதார்த்தத்தையும் அவர் விளக்குகிறார். அதன்படி தோரியம் வணிக ரீதியில் சாத்தியமாகாது என்பதோடு உலக அளவில் அது தேவையற்ற ஒன்றாகவும் உள்ளதை கூறுகிறார்.

அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நம்பகமான கூட்டாளி அல்லது அடியாள் என்ற நிலையை பெறவே இந்த அணுசக்தி ஒப்பந்தம் உதவும் என்பதையும் ஆசிய அளவில் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவை அணு ஆயுத நாடாக வைத்திருப்பதை அமெரிக்கா விரும்புவதையும் சொல்கிறார். கூடவே அணுமின்நிலையங்களின் தேவைக்காக எப்போதும் அமெரிக்காவையே நம்பி இருக்க வேண்டிய நிலை வரும் என்பதையும் சொல்கிறார். முக்கியமாக உலக அளவில் அணு மின்நிலையங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்திருப்பதையும், அவற்றின் கழிவை புதைக்கும் பிரம்மாண்டமான செலவையும் வைத்துப்பார்க்கும் போது அதனால் பெரிய நன்மை இல்லை என்பதையும் கூறுகிறார். எனவே அரசியல் ரீதியில் இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்காக இருக்கிறது. அது உண்மைதான் என்பதை இந்த நீண்ட கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது. இந்த அரிய கட்டுரையை மொழிபெயர்த்து அனுப்பிய தோழர் அனாமதேயனுக்கு நன்றிகள். வாசகர்கள் இந்த அரிய கட்டுரையை படிப்பதோடும் பலருக்கும் சுற்றுக்கு விட்டு பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________________________________________

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

மனித உரிமை செயல்வீரரும், இயற்பியலாளருமான சுவ்ரத் ராஜு எழுதிய இந்தக் கட்டுரை, ஜனவரி, 2010-ல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியா’ஸ் எகானமி ஏட்டில் வெளிவந்திருந்தது.  இந்திய அணுசக்தித் திட்டத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான செயல்பாடுகளைப் பற்றிய முழுமையானதொரு கண்ணோட்டத்தைத் தரத்தக்க கட்டுரை இது.

இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம் அறிவியல் விளக்கம் அளிப்பது அல்ல. மாறாக, அணுசக்தித் துறையின் செயல்பாடு பற்றிய பொதுப் புரிதலை ஏற்படுத்துவதும், தொடர்புடைய அரசியல், பொருளாதார, இராணுவ விவகாரங்களைப் புரியவைப்பதும் ஆகும்.  படிப்பவருக்கு ‘யு’ என்பது அணுப்பிளவுத் தன்மைகொண்ட தனிமம் என்ற அளவுக்கு அறிவியல் தெரிந்தால் போதும் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொன்னதால் துணிந்து, பலரும் படிக்கவேண்டுமே என்ற ஆவலில் இந்த சிறப்பான கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்துவிட்டேன். தவறுகளுக்கு நானே பொறுப்பு. வாசகர்களின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். நன்றி

– அனாமதேயன்.

____________________________________________________________________________

இந்திய அணுசக்தித் திட்டம்

கூற்றுகளும் உண்மையும்

சுவ்ரத் ராஜு

அரசியல் பொருளாதார ஆய்வுக் குழுவின் (RUPE) ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியாஸ் எகானமி – இதழ் எண் 48ல் [ஜனவரி, 2010] வெளியிடப்பட்டது.

1. அறிமுகம்

அணுசக்தி தொடர்பாக இந்தியாவில் நடைபெறும் பிரதான விவாதங்களில், நவீனத்துவத்துக்கும், வல்லரசு என்ற தகுதிக்குமான ஒரு துருப்புச் சீட்டைப் போலவே அணுசக்தி நெடுநாட்களாகவே முன்னிறுத்தப்பட்டு வருகிறது.  1957ல் இந்தியாவின் முதல் அணுவுலையைத் துவக்கிவைத்துப் பேசும்போது, “அணுசக்திப் புரட்சி என்பது தொழிற்புரட்சியைப் போன்றதே; இந்தியா அணுசக்தித் துறையில் முன்னேறவில்லை என்றால் அது மீண்டும் ஒருமுறை தோற்றுப்போகும். நாம் இத்துறையில் முன்னேற வேண்டும் இல்லையேல் பணிந்து பிறருக்கு வழிவிட்டுப் பின் அதே பாதையில் இழுபட நேரிடும்என்று நேரு விவரித்தார்.[1]

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய விவாதத்தில் இவ்விரு கருத்துக்களும் [நவீனத்துவம், வல்லரசு] வலுவாய் புத்தெழுச்சி பெற்று நின்றன.  உதாரணமாக, 2006-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு அவருடன் நடத்திய நேர்காணலை பிரம்மாண்டமாக வெளியிட்டிருந்தது.[2]  அதன் முதல் பக்கத்தின் கால் பகுதியை ஒரே ஒரு கேள்வியே நிறைத்திருந்தது: “டாய் டு புஷ் [புஷ் இடம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கேள்வி]: இந்தியாவை ஒரு பொறுப்பு மிக்க அணுசக்தி வல்லமையுள்ள நாடாகக் கருதுகிறீர்களா? பதில்: ஆம், கருதுகிறேன்” [3] இது மற்ற முதல் பக்கத் தலைப்புச் செய்திகளைப்போல் நான்கு மடங்கு பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது! இப்பதில் சந்தேகமில்லாமல், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆசிரியர்களையும், இந்திய நிறுவனத்தின் பிற அங்கங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

எனினும், வல்லரசுக் கருத்துக்கு ஆதரவான விவாதங்கள் விரிந்த அரசியல் ஆதரவைப் பெற்றுத் தருவதற்குப் போதுமானதல்ல என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. எனவே, இந்த ஒப்பந்தம் நாம் ‘அணுசக்தித் துறையில் அனாதையாக இருக்கும் நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மட்டுமல்லாமல் நமது வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது என்று வலியுறுத்தியது.  ஜஜ்ஜார் என்ற இடத்தில் அனல் மின் நிலையம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டிய சோனியா காந்தி, வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை, மின்சாரத்துக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் தேவை.  ஆக, இந்த ஒபந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரிகள் என்று விளித்தார்.[4]

பாராளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் இக்கருத்தும் பிரதானமாக இழையோடியது.  2007-ம் ஆண்டு நவம்பர், 28 அன்று நடைபெற்ற விவாதத்தில், “அடிமட்ட அளவிலான(grass root level) வளர்ச்சிக்கு “சிவில் அணுசக்தித் தெரிவு[civilian nuclear option] அத்தியாவசியமானது என்றும் 2020-ல் இந்தியா 30,000 40,000 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும் என்றும் காங்கிரஸ் தரப்பின் முதல் பேச்சாளராக எழுந்த ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். சிந்தியாவைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் இந்தியாவை விசுவரூபம் கொள்ளச் செய்ய மிக அவசியமாக இருக்கிறது.[5]  2008 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்த பிரணாப் முகர்ஜி, ஆற்றல் அனைத்துக்கும் தேவைஎன்பதை விளக்கினார். அணுசக்தி இல்லையேல் 2050-ல் நமது மின்சக்திப் பற்றாக்குறை 4,12,000 மெகா வாட்களாக இருக்கும் என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்.  அணுசக்தி இப்பற்றாக்குறையை வெறும் 7000 மெகா வாட்களாகக் குறைக்கும் என்றும், மின்சக்தித் தேவைக்கான நெருக்கடியை நிவர்த்தி செய்யும் என்றும் விளக்கிக் கூறினார். [6]

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்திய அணுசக்தித் துறையால் தரப்பட்டவையே.  ஆனால், இந்த புள்ளிவிவரங்களுக்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? காங்கிரஸ் பெற்ற அரசியல் வெற்றிக்குப் பிறகும் கூட இந்தக் கேள்வி முக்கியமானதாகவே தொடர்கிறது. முதலில், அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது; அணுசக்தி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்னும் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை.  அமெரிக்காவில் இருந்து பெறப்படும் அணு எரிபொருளின் மறுசுழற்சி பற்றிய கருத்து வேறுபாட்டைக் களைவதே நவம்பர் 2009-ல் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றதன் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.[7]   இவ்வரசு ஏற்கனவே ஏழு நாடுகளுடன் தனித்தனியே அணுசக்தி உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளது.  அமெரிக்கா, பிரான்சு மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அணுவுலை அமைப்பதற்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.[8]

இந்த சூழலில், அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி உற்பத்தி இலக்குகளின் சாத்தியப்பாடுகள் பற்றிய ஒரு மறுபரிசீலனை அவசியம் செய்யப்பட வேண்டியிருக்கிறது.  இந்தியாவில் அணுசக்தி உற்பத்தி பற்றிய இதுநாள் வரையிலான வரலாற்று அனுபவம் என்ன கூறுகிறது? இந்தியாவின் மின்சாரத் தேவையில் ஒரு முக்கியப் பங்களிப்பை செலுத்த அண்மை எதிர்காலத்தில் அணுசக்தித் துறைக்கு வாய்ப்பு இருக்கிறதா?  அணுசக்தியில் சமூக மற்றும் இராணுவத் திட்டங்களுக்கு இடையிலான இணைப்பு என்ன? அணுஆயுத உற்பத்தியின் மீது இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன? பிரம்மாண்டமான அணுசக்தி விரிவாக்கத்தை நோக்கி இந்த அரசு முன்னேறவில்லை என்றால் அது ஏகாதிபத்திய சக்திகளை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு இந்தியாவைக் கொண்டுவிடுமா? இப்படிச் சில கேள்விகளைப் பற்றிக் கீழே விவாதிப்போம்.

2. அணு மின்சக்தி பற்றிய கணிப்புகள்:

அணுசக்தித் தேவை பற்றிய இந்த அரசின் வலியுறுத்தல்களில் இருந்து தொடங்குவோம்.  முன்னர் குறிப்பிட்டது போலவே, அடுத்த சில பத்தாண்டுகளில் அடையத்தக்கதாக சில பெருத்த ஆவலாதித்தனமான கணிப்புகளை அணுசக்தித் துறை முன்வைத்துள்ளது.  இந்தியா தனது நிதி ஆதாரங்களை அணுசக்தி வளர்ச்சியை நோக்கித் திருப்பவேண்டும் என்ற வாதத்தைத் தூண்டும்படியாக இந்த கணிப்புகள் அமைந்துள்ளன.

பல்வேறு ஆய்வுகளைப் பரிசீலித்து, 2050-களில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 8 டிரில்லியன் கிலோவாட்-மணிகளாக (kWh) இருக்கும் என அணுசக்தித் துறை 2004-ம் ஆண்டில் மதிப்பீடு செய்தது.[9,10]  2002-2003-ல் மின் உற்பத்தி 0.6 டிரில்லியன் கிலோவாட்- மணிகளாக(kWh) இருந்தது என்றும், இது 13 மடங்கு அதிகரிக்கும் என்றும் அணுசக்தித் துறையின் ஆய்வு குறிப்பிடுகிறது.  மேலும், மக்கள்தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டபின் (மக்கள் தொகை அதிகரிப்பு சுமார் 1.5 பில்லியனில் [150 கோடி]- நிலைகொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது) நபர்வாரி மின்சாரப் பயன்பாடு 614 kWh யில் இருந்து 5305 kWh ஆக, சுமார் 9 மடங்கு உயரும் என்றும் இந்த ஆய்வு முன்னறிவிக்கிறது.

அணு மின்சாரம் இல்லாமல் இவ்வளவு பெரிய தேவையை சமாளிக்க சாத்தியமில்லை என்றும் இந்த ஆய்வு வாதிடுகிறது. 2050-களின் மொத்த மின்சாரத் தேவையில் 25 சதவீதத்தை அணுமின் சக்தி வழங்கும் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.  இக்கூற்றின்படி, 275 ஜிகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு ஆண்டுக்கு 2 டிரில்லியன் கிலோவாட்-மணி(kWh) அளவுக்கான அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றாகிறது.

இருப்பினும், அணுசக்தித் துறையின் இந்த ஆரம்ப ஆய்வு, புஷ்- மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னால் 2004-ல் வெளியிடப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நேரத்தில், இந்த அணுசக்தி உற்பத்தி பற்றிய கணிப்புகள் எல்லாம் மேலும் உயர்த்தப்பட்டன.  விவாதங்களில் இன்று சுட்டிக்காட்டப்படும் அணுசக்தி உற்பத்தி தொடர்பான அளவுகள் எல்லாம் அணுசக்தித் துறையின் புதிய கணிப்புகளில் இருந்து எடுத்தாளப்படுபவை.

நவம்பர், 2009 முடிய அணுசக்தித் துறையின் தலைவராய் இருந்த அனில் ககோத்கர், (இடதுசாரிக் கட்சிகளோடு தனது உறவை முறித்துக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல அரசு முடிவெடுத்துவிட்ட சமயத்தில் ஜூலை 4, 2008 அன்று,) இந்திய விஞ்ஞானக் கழகத்தில் உரையாற்றியபோதும்,[11] டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) உரையாற்றியபோதும் (ஜூன் 2009-ல்) மின் தேவை பற்றிய தங்களது கணிப்புகளை அப்படியே இருத்திக்கொண்ட போதிலும், அணுஉலைகளின் மொத்த உற்பத்தித் திறன் பற்றிய தங்களது கணிப்புகளை 250 சதவீதம் உயர்த்திக் காட்டினார்.  இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறி, இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு மென்னீர் அணுவுலைகளையும் (LWR) எரிபொருளையும் (யுரேனியம்) இறக்குமதி செய்துகொள்ள அனுமதிக்கப்படுமானால், இந்த அணுஉலை எரிபொருட் கழிவுகளின் மறுசுழற்சி அணுவுலைகளின் உற்பத்தித் திறனை 650 ஜிகாவாட்டுகள் அளவுக்கு உயர்த்தும் என்று அறுதியிட்டுக் கூறினார்! இந்தப் புள்ளிவிவரங்கள்தான் இருவாரங்களுக்குப் பின்னர் பாராளுமன்ற விவாதத்தில் பிரனாப் முகர்ஜியால் எடுத்தாளப்பட்டன.

ஆக, 2050-ம் ஆண்டு வாக்கில் இந்திய மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவை அணுமின் சக்தி வழங்கும் என்று ககோத்கர் அனுமானித்தார்.  இந்த அனுமான அளவானது, இன்றைய இந்திய மொத்த மின் உற்பத்தியில் 2.64 சதவீதத்தை மட்டுமே வழங்கும் 4.12 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனைப் போன்று சுமார் 150 மடங்கு அதிகம் என்பதைக் கவனிக்கவும்.[12]  ககோத்கரின் கூற்றுக்கு அடிப்படையான இரண்டு வரைபடங்கள் அப்படியே படம் 1ல் தரப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகார மட்டத்தில் உள்ளோரால் இவ்வாறான புள்ளிவிவரங்கள் திரும்பத் திரும்ப எடுத்தாளப்படுகின்றன.  2050ம் ஆண்டுகளில் 470 ஜிகாவாட் மின்சாரத்தை அணுசக்தி வழங்கும் என்று சமீபத்தில் இந்தியப் பிரதமர் தனது அனுமானத்தை வெளியிட்டார். [13] இக்கூற்றுக்கான பிறப்பிடம் எதுவென்பது தெளிவாய் இல்லை. எனினும், அது ஒருக்கால் க்கோத்கர் தனது பேச்சில் தெரிவித்த பல்வகை மென்நீர் உலைகள் இறக்குமதி தொடர்பான இரண்டாவது சாத்தியப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கூற்றாக இருக்கலாம்.

படம் 1

 

3. அணு மின்சக்தி பற்றிய கணிப்புகளின் சுருக்கமான வரலாறு

இவ்வகை ஆர்வக்கோளாரான கணிப்புகளை அணுசக்தித் துறை கடந்த காலத்திலும் பலமுறை செய்துள்ளது. 1987-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அணுசக்தித் திறன் 18-20 ஜிகாவாட் அளவுக்கு இருக்கும் என அணுசக்தித் துறையின் முதல் செயலர் ஹோமி பாபா 1962-ம் ஆண்டில் அறிவித்தார்.[14]  எதார்த்தத்தில், 1987-ல் அது பாபாவின் கணிப்பில் வெறும் 5% ஆக, அதாவது 1.06 ஜிகாவாட்டுகளாக மட்டுமே இருந்தது.[15]  “செயல்பாடு இலக்கை மோசமாக நழுவ விட்டுவிட்டது” என்று பாபாவுக்கு அடுத்து வந்த விக்ரம் சாராபாய் 1970-ம் ஆண்டிலேயே ஒப்புக்கொள்ளவேண்டி இருந்தது.[16] இருப்பினும், அச்சமயம் தனது பத்தாண்டுக்கான செயல் திட்ட அறிக்கையை (profile) வெளியிட்ட சாராபாய், 1980-ல் அணுசக்தி 2.7 ஜிகாவாட்டுகள் என்ற இலக்கை அடையும் என்று குறிப்பிட்டார்.  ஆனால், எதார்த்தத்தில் அது இந்த கணிப்பில் 5ல் ஒரு பங்குக்கும் குறைவாக 510 மெகாவாட்டுகளாகவே இருந்தது. இந்த பத்தாண்டு செயல்திட்ட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் மூலதனச் செலவை ஈடுகட்டும் வகையில் 500 மெகாவாட் திறன்கொண்ட பெரிய அணுவுலைகளை நிறுவவேண்டிய தேவை இருப்பதாக அவர் முடிவு செய்திருந்தார்.  அதன்படி, ”1972-73 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 மெகாவாட் திறன்கொண்ட ஒரு புதிய அணு மின் நிலையத்தை அமைக்கவேண்டிய அதீதமான பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று அவர் அறிவித்தார்.[17]  இந்த அறிவிப்பு வந்து 35 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் இந்தியாவின் முதல் 500 மெகாவாட் அணுமின் நிலையம் – தாராப்பூர் 4 – 2005-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.

1974-ம் ஆண்டின் பொக்ரான் அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் சிவில் அணுசக்தித் துறையில் அன்னிய ஒத்துழைப்பு சரிந்ததே இலக்குகளில் அடைந்த தோல்விக்குக் காரணம் என்று சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும், 2000 ஆண்டு அளவில், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் கொண்ட உலைகளை அமைத்துவிடுவோம் என 1984-ம் ஆண்டில் தனது அணு சக்தி ”செயல் திட்டஅறிக்கை” (profile)யின் வாயிலாக அணுசக்தித் துறை அறிவித்தது.  1989-ல் அணுசக்தித் துறையால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த இலக்கை மறுபரிசீலனை செய்து அதன் சாத்தியப்பாட்டைக் கண்டறிந்ததுடன் நில்லாமல், தன் பங்குக்கு முன்வைக்கப்பட்ட அந்தத் திறன் இலக்கை சற்றே உயர்த்தவும் செய்தது.   இந்தத் திறன் இலக்கு பலமுறை வெளிப்படையாக மேற்கோள்காட்டிப்  பேசப்பட்டுள்ளது.  உதாரணமாக, ” நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 3 சதவீதமாக இருக்கும் அணு மின்சக்தி 2000-ம் ஆண்டில் 10% அளவுக்கு அதிகரிக்கும்படியான வேலைகள், 10000 மெகாவாட் அணுமின் உற்பத்திச் செயல் திட்ட அமலாக்கம் என்ற வகையில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது” என அணுசக்தி ஆணையத்தின் தலைவர் 1989-ல் எழுதினார்.[18]

இச் செயல் திட்டம் களமிறங்கி ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடந்த பின்னால் இந்திய கணக்குத் தணிக்கை முதன்மை அலுவலர் (Comptroller and Auditor General of India) அதன் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார்.  அவர் தனது பரிசீலனையின் முடிவாக, “மார்ச் 1998 முடிய ரூ.5291.48 கோடிகளை செலவழித்து இந்தச் செயல் திட்டம் அளித்த கூடுதல் மின் உற்பத்தி பெரிய பூச்சியமே” என எழுதினார்.[19] [அழுத்தம் சேர்க்கப்பட்டது]  மேலும்,  2009ம் ஆண்டு வரையிலும் கூட இந்த அணுமின்சக்தி இந்திய மொத்த மின் உற்பத்தியில் அதே 3% அளவுக்கே நீடிக்கிறது.

இந்த அணுசக்தித் துறை தனது குறுகிய கால இலக்கைக் கூட எட்ட முடிந்ததில்லை.  உதாரணமாக, “இன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் அணுசக்தித் துறை 6800 மெகாவாட் உற்பத்தித் திறன் இலக்கை எட்டும்” என்று 2003-ம் ஆண்டு ககோத்கர் அறிவித்தார்.[20]  ஆனால், ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னும் அணுசக்தி உற்பத்தித் திறன் 4120 மெகாவாட் என்ற அளவிலேயே இருக்கிறது.[21]

4. முப்படிநிலை அணுமின் திட்டம்

அணுசக்தித் துறை தனது முந்தைய வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றியதில்லை என்பது தெள்ளத் தெளிவு.  இந்நிலையில், அவர்களது தற்போதைய கணிப்புகள் நடைமுறை சாத்தியமானவையா? முதன்மையான விசயம் என்னவெனில், அணுசக்தித் துறையின் கணிப்புகள் ஆவலாதித் தனமானவையாகவும், சர்வதேச அளவிலான எதிர்பார்ப்புகளையும் விஞ்சி வெகுதொலைவில் நிற்பவையாகவும் உள்ளன. உதாரணமாக, மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (MIT) 2003-ம் ஆண்டு நடத்திய விரிந்த பல்நோக்கு ஆய்வின்படி, 2050-ம் ஆண்டில் உலக அளவிலான அணு மின்சக்தி உற்பத்தித் திறன் 1000 ஜிகா வாட்டுகளாக அதிகரித்து இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.[22]  இதற்கு சற்றும் ஒவ்வாத வகையில், 2050-ல் இந்தியா மட்டும் 650 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் பெற்றிருக்கும் என்கிறது நமது அணுசக்தித் துறை.  அதாவது, உலக உற்பத்தித் திறனில் 65 சதவீதத்தை இந்தியா மட்டுமே பெற்றிருக்குமாம்!

அணுசக்தித் துறையின் இந்த கணிப்புகள் எல்லாம் பாபாவால் முதன்முதலில் 1954-ம் ஆண்டு முன்மொழியப்பட்ட முப்படிநிலை அணுமின் திட்டத்தின் அடிப்படையில் அமைந்தவை.  இத்திட்டத்தை பின்னர் விவரமாக ஆய்வுக்கு உட்படுத்துவோம்.  இடையே, அதன் சாராம்சமான உண்மைகள் இவையே: திட்டத்தில் உள்ள மூன்று படிநிலைகளில் முதல் படிநிலை மட்டுமே யுரேனியத்தை எரிபொருளாகக் கொள்ளும் வழமையான அணுவுலைகளைக் கொண்டிருக்கிறது.  இரண்டாவது, மூன்றாவது படிநிலைகள் முறையே வீரிய ஈனுலைகள் (F.B.Rs) மற்றும் தோரிய அணுவுலைகளைக் கொண்டவை.  இந்த மூன்று படிநிலைகளில் முதல் படிநிலை அணுவுலைகள் மட்டுமே 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்குப் பின், ஓரளவுக்கு நிறைவற்ற நிலையில் என்றபோதிலும், செயல்படுத்தப் பட்டுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது படிநிலைகள் உலக அளவில் எங்குமே வணிக ரீதியாகவும், விரிவாகவும் பயன்பாட்டில் இல்லாத ஒரு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கின்றன.  வீரிய ஈனுலைகள் பல நாடுகளில் முயன்று கைவிடப்பட்டவை. இந்தியாவின் எதிர்காலக் கனவான தோரியம் உலைகள் எங்குமே இதுவரை வணிகரீதியான செயல்பாட்டுக்கு வந்ததில்லை.

இருப்பினும், நமது அணுசக்தித் துறையின் மின் உற்பத்தி பற்றிய மேற்படிக் கணிப்பில், முதல் படிநிலை அணுவுலைகளின் பங்களிப்பு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏதுமில்லை.  கணிப்பின் 90% மின்னாற்றல் திறன் 2வது மற்றும் 3வது படிநிலை அணுசக்தித் திட்டங்களில் இருந்து மட்டுமே வரவேண்டி இருக்கிறது.  ஆக, கிட்டத்தட்ட அணுசக்தித் துறையின் மின் ஆற்றல் பற்றிய முன்மொழிவுகள் அனைத்தும் இல்லாத தொழில்நுட்பத்தையும், சாத்தியமில்லை என்று உலகளவில் கைவிடப்பட்ட தொழில்நுட்பத்தையும் சார்ந்து இருக்கிறது!

இது வெறொரு விசயத்துக்கு இட்டுச் செல்கிறது.  சுயசார்பே அனைத்திலும் முதன்மையானதாய்க் கருதப்பட்ட காலகட்டத்தில் எழுந்த தொலைநோக்குப் பார்வையே இந்த முப்படிநிலை அணுமின் திட்டம்.  இந்தியாவின் யுரேனியத் தாதுவள இருப்போ தரத்திலும், அளவிலும் மிகக் குறைவானது.  உலக அளவிலான அணு உலைகளில் யுரேனியமே மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் பெரிய அளவிலான சுயசார்பு அணு சக்தித் திட்டதை இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே குறைந்த தரத்திலுள்ள எரிபொருளில் இருந்து சாத்தியப்பட்ட அளவுக்கு சக்தியை உறிஞ்சி எடுக்கும்படியாக இத்திட்டத்தின் இரண்டாவது படிநிலை வடிவமைக்கப்பட்டது. மூன்றாவது படிநிலை இந்தியாவில் விரவிக் கிடக்கும் தோரிய வளத்தில் கவனம் செலுத்தியது.

உலகில் அபரிமிதமான யுரேனிய இருப்பு உள்ளதால் பிந்தைய தொழில்நுட்பங்கள் வேறெந்த நாட்டிலும் பின்பற்றப்படவில்லை.  அண்மை எதிர்காலத்தில் இத் தொழில்நுட்பங்கள் முன்னிலைக்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.  ”குறைந்தபட்சம் அடுத்த 50 ஆண்டுகளுக்காவது ஒற்றைச் சுழற்சி எரிபொருள் முறையே சிறந்த தெரிவு” என்று முன்னர் குறிப்பிட்ட எம்.ஐ.டி ஆய்வு வலியுறுத்திக் கூறுகிறது. அதாவது வழமையான யுரேனிய அணுவுலையே சிறந்த தேர்வு என்கிறது.

இந்தியா தனது இரண்டாவது, மூன்றாவது படிநிலைகளை சுயசார்பாய்க் கட்டியமைப்பதில் வெற்றி காணவில்லை என்பதால், முப்படிநிலை திட்டம் தோற்றுவிட்டது என்று சொல்லுவதே நல்லது.  இருப்பினும், இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், கொள்கை வகுப்போருக்கு (சுயசார்பை முதன்மைப்படுத்திய) இந்த முப்படிநிலை அணுமின் திட்டம் என்பது இனியும் ஒரு பொருளற்றது. ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் சுயசார்புக்கான முக்கியத்துவம் என்பது வெகுவாய் நீர்த்துப் போய்விட்டது.

உண்மையில், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்று, சர்வதேச யுரேனிய வர்த்தகத்தில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் இருந்து அணுவுலைகளை இறக்குமதி செய்துகொள்ளவும் இந்தியா அனுமதிக்கப்பட்டிருப்பதாகும்.  வீரிய ஈனுலை அல்லது தோரியம் அணுவுலை மூலம் தயாரிக்கப்படும் மின்சக்திக்கு ஆகும் செலவைக் காட்டிலும் இவ்வகையில் (யுரேனியம் அணுவுலை மூலம்) உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி (இறக்குமதி செய்யப்பட்ட போதிலும்) மலிவாய் இருக்கப்போவதால் முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின்பால் செலுத்தப்படும் கவனமும் அமைதியாகக் கைகழுவப்படக் கூடும்.  [இந்திய அணுஆயுதத் திட்டத்திற்கு வீரிய ஈனுலைகள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஆகவே கட்டுமானத்தில் இருக்கும் சில அணுவுலைகளுக்கு அப்பால் மேலும் சிலவும் கட்டியமைக்கப்பட சாத்தியம் உண்டு.  ஆனால், அதற்கும் மின்சக்தி உற்பத்தி பற்றிய முன்மொழிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.]

இருப்பினும் மூன்று படிநிலைகளைக் கொண்ட இந்திய அணுசக்தித் திட்டத்தைப் பற்றி கீழே விவாதிப்போம்.

4.1 சுருக்கமான தொழில்நுட்ப விவரிப்பு

இந்தியாவின் யுரேனியக் கனிமவள இருப்பு குறைவானது என்ற ஒப்புதலே இந்த முப்படிநிலைத் திட்டத்துக்கு அடிப்படை. ககோத்கர் கூறியதுபோல, ”அணு மின்சக்திக்கு இந்தியாவில் யுரேனியம் இல்லை”.[23]  பதிலாக, உலக அளவில் ஏராளமான தோரிய இருப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்த சாதகத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டுதான் முப்படிநிலை வழிமுறை வடிவமைக்கப்பட்டது.

இந்த முப்படிநிலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் பற்றிய நல்லதொரு ஆய்வை வெங்கடராமன் அவர்கள் எழுதிய நூலில் காணலாம்.[24] மற்றொரு ஆய்வை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் வலைத்தளத்தில் காணலாம்.[25]  இதை மிகச் சுருக்கமாக இங்கு தொகுத்துத் தருகிறோம்.  அணுசக்தித் திட்டத்தின் முதல் படிநிலை அதியழுத்த கனநீர் அணுவுலையைப் (PHWRs) பயன்படுத்துகிறது. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 0.7% அளவே யுரேனியம்-235 (U235) உள்ளது. மற்றது U238. அணுவுலையில் பயன்படும் அணுப்பிளவு எரிபொருள் U235.  எனவே பெரும்பாலும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியம், மைய விலக்கு விசையை அடிப்படையாகக் கொண்ட அதிவேகக் கடைசல்களைக் கொண்டு  [centrifuges ] U238ஐ பிரித்தெடுப்பதன் மூலமாக  U235இன் விழுக்காட்டை அதிகரித்து செறிவூட்டப்படுகிறது.

அதியழுத்த கனநீர் அணுவுலையில் (PHWR) எரிபொருளை செறிவூட்டுத்தல் இன்றி நேரடியாகப் பயன்படுத்த முடியும்.  இது செறிவூட்டுத்துதலுக்கான செலவை மிச்சப்படுத்துகிறது.  ஆனால், இவ்வகை அணுவுலைகளில் அணுக்கருப் பிளவை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தி நடத்துவதற்கான தணிப்பானாக [moderator] செயல்படும் கனநீரின் விலை மிக அதிகம் என்பதே இந்த வகை உலைகளின் பாதக அம்சமாகும். இந்த அணுவுலைகளின் செயல்பாட்டின்போது U238 களில் சில புளூடோனியம்-239 (Pu239) ஆக மாற்றமடைவதால் பாபா இவ்வகை அணுவுலைகளைத் தேர்ந்தெடுத்தார்.

இரண்டாவது படிநிலையில், வீரிய ஈனுலையில் (FBR) மேற்சொன்ன புளூடோனியம், முதல் படிநிலையில் பயன்படுத்தப்பட்டு எஞ்சிய யுரேனியக் கழிவுடன் சேர்த்து எரிபொருளாக அளிக்கப்படுகிறது.  இவ்வுலைச் செயல்பாட்டின்போது புளூடோனியம் எரிபொருளாக எடுத்துக்கொள்ளப்படுகையில் அதனுடன் சேர்த்து அளிக்கப்பட்ட யுரேனியக் கழிவையும் புளூடோனியமாக மாற்றி தனக்கான எரிபொருளைத் தானே ஈன்றெடுத்துக் கொள்கிறது.  கோட்பாட்டளவில், இந்த வழிமுறை யுரேனியக் கழிவையும் பயன்படுத்திக்கொள்வதால் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தின் முழு சக்தியையும் உறுஞ்சி எடுத்துவிடுகிறது.

மூன்றாவது படிநிலை வேறுவிதமான ஒரு தற்பெருக்கத்தைக் கொண்டது. வீரிய ஈனுலையின் அணுப்பிளவுச் செயல்பாட்டுப் பகுதி அல்லது மையம் தோரியம்-232 (Th232) ஆல் போர்த்தப்படுகிறது.  இவ்வுலையின் செயல்பாட்டின்போது போர்த்தப்பட்ட தோரியம் யுரேனியமாக (மற்றொரு யுரேனியத் தனிமமாக- isotope ) U233 மாற்றம் அடைகிறது. இது ஒரு அணுப்பிளவு எரிபொருளாகப் பயன்படக் கூடியது.  [இவை யுரேனியத்தின் பொதுவான இரு தனிமங்கள்.  அதாவது, ஒரே இரசாயனக் கூறுகளையும் –properties- மாறுபட்ட பௌதீகக் கூறுகளையும் கொண்டவை.  அவற்றின் மேல் குறிக்கப்பட்டுள்ள எண் –பொருண்மை எண்- அதன் அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும்.  இக்கட்டுரை தொடர்பாக வாசகர் U என்ற வடிவம் தாங்கிய தனிமம் அணுப்பிளவு எரிபொருளாகப் பயன்படக் கூடியது என்ற அளவுக்குத் தெரிந்துகொண்டால் போதுமானது] தோரியத்தில் இருந்து யுரேனியமாக உருமாற்றப்பெரும் இந்த ஆரம்பத் திரட்சி மூன்றாவது படிநிலை அணுவுலையில் எரிபொருளாக அளிக்கப்படுகிறது.  இந்த அணுவுலையின் மையமும் முந்தைய வீரிய ஈனுலையில் போலவே தோரியத்தால் போர்த்தப்படக் கூடியது.  ஆக இந்த அணுவுலைகளின் செயல்பாடு கூடுதலான யுரேனியத்தை U233உற்பத்தி செய்த வண்ணம் இருக்கும். எனவே, இந்தியாவின் ஏராளமான தோரீய இருப்பைப் பயன்படுத்துவதற்கு இந்த முப்படிநிலை வழிமுறை வகை செய்யும் என்று பாபா பரிந்துரைத்தார்.

நடப்பைக் கணக்கில் கொண்டு பார்க்கையில் இந்த முப்படிநிலை அணுசக்தித் திட்டம் பற்றிய பாபாவின் பரிந்துரைகள் காலத்தை முந்தியவையும் நடைமுறைச் சாத்தியம் அற்றவையும் ஆகும் என்பது தெளிவு.  இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டு 55 ஆண்டுகள் கடந்த பின்னும் திட்டம் முதல் படியிலேயே சிக்கிக் கிடக்கிறது.

5. முதல் படிநிலை

முதல் படிநிலை என்பது முப்படிநிலைத் திட்டம் தொடங்கப்படுவதற்கான முதல் படி என்ற அளவுக்கே முக்கியமானது.  பாபாவின் மாபெரும் திட்டத்தின் மீசிறு துளியே இது.  இந்தியாவின் யுரேனிய இருப்பு 10 ஜிகாவாட் [1000 மெகாவாட் = 1 ஜிகாவாட்] திறன் கொண்ட அணுவுலைகள் அமைக்கப்படுவதற்கு மட்டுமே போதுமானது என அணுசக்தித் துறை மதிப்பீடு செய்துள்ளது.  அது ககோத்கரின் 2050-ம் ஆண்டுக்கான இறுதிக் கணிப்பில் வெறும் 2% மட்டுமே.[11]  இந்த சுதேசித் திறனுடன் இறக்குமதி யுரேனியம் மற்றும் அணுவுலைத் திறனையும் இணைக்க அணுசக்தித் துறை திட்டமிடுகிறது.  இந்த இறக்குமதி அணுவுலைகளும் கூட அதிகரிக்கப்போகும் மின்சக்தி 2050-களின் அணுசக்தித் திறனில் அற்பமான ஒரு பின்னமே என்று வெளிப்படையாகவேனும் அணுசக்தித் துறை கூறிக்கொள்கிறது.

இருப்பினும், வணிகரீதியாக செயல்படுத்தப்படப் போவது என்னவோ அணுசக்தித் திட்டத்தின் இந்த முதல் படிநிலையை மட்டுமே.  நாம் முன்னர் குறிப்பிட்டது போலவும், பின்னர் விரிவாய் விவாதிக்க இருப்பது போலவும், இப்படித்தான் நடக்க சாத்தியமுள்ளது.  ஆக, இந்தியாவில் அணு மின் உற்பத்தி பற்றிய நடைமுறை சாத்தியப்பாடுள்ள விவாதம் சாராம்சத்தில் அணுசக்தித் திட்டத்தின் இந்த முதல் படிநிலையைப் பற்றியதாகவே உள்ளது.  இந்தப் படிநிலை (2வது, 3வது நிலைகளுக்கு மாறாக) வழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இது பற்றிய விவாதம் அணு மின்சக்தி பற்றிய உலகளாவிய விவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

கீழ்க்கண்ட முக்கியமான கேள்விகளை நாம் பரிசீலிப்போம்:

  • அணுசக்தி பற்றிய கருத்து உலகளாவிய புத்தெழுச்சி கண்டிருப்பது ஏன்?
  • அணுசக்தி பற்றிய பொருளியல் கூறுகள் பகர்வது என்ன?
  • அணுசக்தி அமைப்புகளால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எத்தகையவை?
  • இக்காரணிகள் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்துகின்றன?

5.1 அணுசக்தி மறுமலர்ச்சி

பெருத்த மூலதன உள்ளீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் ஆண்டுகள் பலவாய் மீளா உறக்கத்தில் இருந்த அணுசக்தித் துறை, குறிப்பாக மேலைநாடுகளில், புத்தெழுச்சி பெற்றது போல் காணப்படுகிறது.  [சீனாவைப் போன்ற சில வளர்முக நாடுகளும் அணுசக்தி விரிவாக்கத்துக்கான ஆவல்மிகு திட்டங்களை அறிவித்திருக்கின்றன] தட்பவெப்ப மாறாட்டம் மற்றும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் ஆகியவை தோற்றுவித்த பதற்றம் பகுதியளவுக்கு இந்த புத்தெழுச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இரண்டாவதும், பெரிதும் வெளிப்படுத்தப் படாததுமான காரணம் புவி-அரசியல் ஆகும். எகானமிஸ்ட் ஏடு தெரிவிப்பதுபோல், “எண்ணை, எரிவாயு வளங்கள் நம்பத்தகாத …அரசுகள் வசம் இருப்பதாக மேலை நாட்டு அரசுகள் அஞ்சுகின்றன.  அணுசக்தித் துறைக்குத் தேவையான மூலப்பொருள் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நட்புப் பிரதேசங்களில் கிடைக்கின்றன”[27]

கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பட்ட விரிவான விவாதங்களும், அதற்குப் பொருத்தமான கொள்கை மாற்றங்களும் நடந்துவரும் வேளையில், பெரிதாய் முன் தள்ளப்படும் இந்த அணுசக்தி மறுமலர்ச்சி பெருத்த பிரச்சினைகளில் சிக்கித் தத்தளிக்கிறது. மகாராட்டிர மாநிலத்தின் ஜெய்தாபூரில் அணுவுலை நிர்மாணிக்க இருப்பதாக அறியப்படும் அரிவா என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனம் உலக அளவில் முதன் முறையாக தலைமுறை III ரக அணுவுலையை பின்லாந்தில் நிறுவிவருகிறது. இருப்பினும், இது கால இலக்கிற்கு மூன்று ஆண்டுகள் தாமதமாகும் என்றும், திட்டச் செலவைவிட 60% கூடுதலாகும் என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்சொன்ன அரிவா நிருவனமும், இந்தியாவில் அணுவுலை அமைக்க இருக்கும் வெஸ்டிங்ஹவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமும் பிரிட்டனில் புதிய அணுவுலைக் கட்டுமானங்களை செய்ய இருகின்றன.  அவை தற்சமயம் ஒழுங்குமுறைப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் அணுவுலைக் கட்டுமானங்கள் குறித்து பிரிட்டிஷ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் [Health and Safety Executive] ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.  அந்த கட்டுமானங்கள் பற்றிய தனது ஒத்த அறிக்கைகளில் இந்த இரு நிறுவனங்களின் வடிவமைப்புகள் பற்றியும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், “இந்த வடிவமைப்புகளில் பாதுகாப்பு தொடர்பான ஏராளமான ஓட்டைகளை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம்… இவை திருப்திகரமாக சரிசெய்யப்படவில்லை என்றால் நாங்கள் வடிவமைப்பு ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என்றும் கூறியிருக்கிறார்.[28, 29] (இந்த அறிக்கைகளின் சுருக்கம் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.[30])

தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள வல்லது அணுசக்தியே என்ற வாதமும் வன்மையாக மறுக்கப்பட்டிருக்கிறது.  உதாரணமாக, காற்றாலை மற்றும் சிறு நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட மாற்று சக்தி மூலங்களை முன்னிருத்தி லொவின்ஸும் ஷேக்கும் விவாதித்துள்ளனர்.[31]  இவ்வாறான மாற்றுக் கருத்துகளுக்கு இடையிலும், அணுவுலை விபத்தையும், பல துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் புறந்தள்ளிவிட்டு அடுத்த சில பத்தாண்டுகளில் அணுவுலைகள் பல நிர்மாணிக்கப்பட உள்ளதுபோல் தெரிகிறது.

எனவே, முதலில் இந்த அணு மின் உற்பத்திச் செலவு கட்டுப்படியாகக் கூடியதா, அணுசக்தி பாதுகாப்பானதா என்பன பற்றியும்; அடுத்து, அணுசக்தி பற்றிய உலகளவிலான விவாதம் இந்தியாவுக்கு எவ்வகையில் பொருந்தும் என்பது பற்றியும் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.  குறைந்தபட்சம் அடுத்த சில பத்தாண்டுகளுக்காவது இந்தியாவின் மீது விதிக்கப்படும் தட்பவெப்ப உடன்படிக்கைகளின் படியான கடப்பாடுகள் வளர்ந்த நாடுகளின் மீதான கடப்பாடுகளில் இருந்து மாறுபட்டதாய் இருக்கும்.  அடுத்து, மிகக் குறைந்த யுரேனிய வளத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் விரிந்த அளவிலான அணுசக்தித் திட்டங்கள் எரிபொருளுக்காக இந்நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணியச் செய்யும்.  தெளிவாக இவ்விளைவு விரும்பத்தக்கது அல்ல. இது பற்றியும், மேலும் சில பிரச்சினைகள் குறித்தும் கீழே விவாதிப்போம்.

5.2 அணுசக்தியின் பொருளியல்

அணுமின் உலைகளின் நிர்மாணச் செலவு ஏராளம். ஆனால், நிலக்கரி-அனல் மின்நிலையங்கள் போன்றவற்றோடு ஒப்பிடும்போது இவற்றின் இயக்கச் செலவு மிகவும் சிக்கனமானது என்பது அணுசக்தி செலவீனம் பற்றிய மையமான உண்மை.  எனவே, பிற சக்தி மூலங்களோடு அணு மின்சக்திக்கு ஆகும் செலவை ஒப்பிடுவதற்கு “சமன்செய் ஆற்றல் செலவீனம்” [ levelized cost of energy] என்ற பொது நிலைப்பாடு பயன்படுத்தப்படுகிறது.  சுருக்கமாக, இந்த சமன்செய் ஆற்றல் செலவீனம் l என்பது கீழ்க்காணும் சூத்திரத்தால் வரையறுக்கப்படுகிறது.

இங்கு Ct என்பது t என்ற ஆண்டில் நிர்மாணம், பராமரிப்பு, எரிபொருள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய செலவீனத்தின் மொத்தத் தொகையைக் குறிக்கிறது. Et என்பது t ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் குறிக்கிறது. n என்பது உலையின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது; r என்பது தள்ளுபடி விலையைக் ( discount rate) குறிக்கிறது.

இங்கு சொல்லப்பட்ட கருத்து எளிமையானது.  அணுவுலையில் உள்ளீடு செய்யப்பட்ட மூலதனம் வேறுவகையில் பயன்பட்டிருக்கக் கூடும். எனவே இந்த மூலதனம் ஈட்டியிருக்கக்கூடிய வருவாய்க்கு ஈடுசெய்யும் வகையில் அணுவுலையின் இயக்கச் செலவு மலிவாய் இருக்கவேண்டும். [அதற்குப் பொருத்தமான] தள்ளுபடி வீதத்தால் இந்த லாப சதவீதம் உறுதிசெய்யப்படுகிறது.

இந்த கருத்தாக்கத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள உதவும் ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.  ஒரு அனல் மின் நிலையம் அமைக்க ஆகும் செலவு ரூ.100 என்றும் அதை இயக்க ஆகும் செலவு ஆண்டொன்றுக்கு ரூ.10 என்றும் கொள்வோம்.  அதே சமயம் அணுமின் நிலையம் அமைக்க ரூ.150-ம் இயக்குவதற்கு ஆண்டுக்கு ரூ.5-ம் ஆவதாகக் கொள்வோம்.  மேலும், இரண்டும் ஏககாலத்தில் திடீரென அமைக்கப்படுவதாகவும், அவற்றின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகவும், அவை சம அளவு மின்சக்தியை உற்பத்தி செய்வதாகவும் கொள்வோம். ஒரு பொதுக் கணக்கில், அணுமின் நிலையத்தில் ஆனதைவிட (ரூ.225) அனல்மின் நிலையத்தில் அதிகச் செலவீனம் (ரூ.250) ஆகியுள்ளது.  ஆனால் இக் கணக்கு, அணுமின் நிலையத்தின் துவக்ககாலத்திலேயே உள்ளீடு செய்யப்பட்ட கூடுதல் தொகையான ரூ.50  வேறெங்கும் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. தள்ளுபடி விலை வீதம் 10 ஆக இருக்கும்போது அணுமின் சக்தியும், 5% ஆக இருக்கும்போது அனல் மின்சக்தியும் பெருத்த செலவீனமாக இருப்பதை வாசகர் மேற்படி சூத்திரத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.  இரண்டுக்குமான வெட்டுப்புள்ளி 5.56% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. [என்னைப் போன்ற, மேற்படி சூத்திரத்தில் பொருத்திப் பார்க்கத் தெரியாதவர்களுக்கான எளிய வழி: மேற்சொன்ன உதாரணத்தில் அனல் மின்நிலையத்தின் பதினைந்து ஆண்டுகளுக்கான சராசரி நிலை மூலதனம்+ மாறும் மூலதனம் ரூ.180.  அணு மின்நிலையத்தில் அது ரூ.190.  ஆக, கூடுதல் மூலதனமான ரூ.10 க்கு ஈடு செய்ய வேண்டிய லாபக் குறைவு வீதம் (10/180 x 100) 5.555 அதாவது 5.6% ..  மொ-ர்.]

5.2.1 இந்தியாவில் அணுசக்தியின் பொருளியல்

நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல, வழமையானதிலிருந்து சற்றே மாறுபட்ட அணுவுலைகளை இந்தியா பயன்படுத்துகிறது.  இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தை செறிவூட்டுதல் இன்றி அப்படியே பயன்படுத்தும் சாதகத் தன்மை இந்த வகை அணுவுலைகளுக்கு இருக்கிறது.  இவ்வழியில் செறிவூட்டும் செலவு மிச்சமானாலும், இந்த அணுவுலைகள் விலை உயர்ந்த கனநீரைப் பயன்படுத்துகின்றன.  இந்திய அணுசக்தித் துறை எதிர்காலத்தில் இவ்வாறான மேலும் பல அதிஅழுத்த கனநீர் அணுவுலைகளை (PHBRs) நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய அணு மின்சக்தி பற்றிய பொருளியலை அறிந்துகொள்வது இரண்டு காரணக்கூறுகளால் சிக்கலாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, கனநீர் உற்பத்தி உள்ளிட்ட அணு மின்சக்தி தொடர்பான பல்வேறு அம்சங்களுக்கு அளிக்கப்படும் மானியம் பற்றி துல்லியமான மதிப்பீட்டைப் பெறுவது கடினமாக உள்ளது.[32]  இரண்டாவதாக, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி செய்யப்படும் இடத்தில் அணுசக்தித் துறை சொல்லப்படும் ஒரு “மூடிய சுழற்சி” [closed cycle] முறையைப் பயன்படுத்துகிறது. இந்த மறுசுழற்சி முறை பெருத்த செலவு பிடிக்கக் கூடியது. எனினும், தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அடக்கவிலை பற்றிய அதிகாரபூர்வமான மதிப்பீட்டில் இதற்கான செலவு சேர்க்கப்படவில்லை.  அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது படிநிலையில் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட எரிபொருள் இறுதியாகப் பயன்படுத்தப்படக் கூடியது என்பதே இதற்கான காரணமாக இருக்கிறது. இந்த இரண்டாவது படிநிலை இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை என்பதால், உண்மையில் இக்காரணம் அடிப்படை ஏதும் அற்றது.

சில சமயங்களில் அணு மின்சக்தி அனல் மின்சக்தியை விட மலிவானது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.[33,34] ஆனால், அளிக்கப்படும் மானியம் மற்றும் மேற்படி செலவீனங்களை இந்த வாதங்கள் மொத்தமாகப் புறந்தள்ளிவிட்டுப் பேசுகின்றன. கனநீர் உற்பத்திக்கு அளிக்கப்படும் மானியங்கள் பற்றிய குறைந்தபட்ச மதிப்பீட்டின் அடிப்படையில்[32] தள்ளுபடி விலை வீதத்தை ஆகக் குறைவாக 3 சதவீதத்தில் இருத்திப் பார்த்தாலும், அணுமின்சக்தி, அனல் மின்சக்தியின் உற்பத்திச் செலவோடு ஒப்பிடத்தக்க வகையில் இல்லை.  மேற்சொன்ன மறுசுழற்சிக்கு ஆகும் செலவை முழுமையாக விலக்கிப் பார்த்த பின்னும் இந்த முடிவே உறுதிசெய்யப்படுகிறது. [35,36]

சர்வதேச அளவிலான வரையரைகளுக்கும் இந்த நிலைப்பாடு பொருந்தி நிற்பதைக் கீழே விவரிப்போம்.

5. 2. 2 சர்வதேச அளவில் அணு மின்சக்தியின் பொருளியல் சாத்தியப்பாடுகள்

மேற்சொன்ன எம்.ஐ.டி. யின் 2003-ம் ஆண்டு ஆய்வு, பல்வேறுபட்ட தள்ளுபடி விலைகளையும் பரிசீலித்த பின்னர், “கட்டுப்பாடற்ற சந்தையில், நிலக்கரி மற்றும் எரிவாயு மின்சாரத்தின் அடக்க விலையோடு அணு மின்சக்தியின் அடக்கவிலை தற்போதைக்குப் போட்டியிடும் நிலையில் இல்லை” என்று இறுதிசெய்தது.[22]  சிக்காக்கோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட விரிந்த ஆய்வும் இதே முடிவைத்தான் வந்தடைந்தது. பிரான்சைத் தவிர, “பெரும்பாலான பிற நாடுகளில் அணுசக்திக்கு ஆகும் பெருத்த மூலதனச் செலவு, அது நிலக்கரி, எரிவாயுவகை மின்சாரத் தொழில்நுட்பங்களுடன் போட்டியிடும் நிலையைத் தடுக்கிறது” என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.[37] மேலும், “மிகச் சாதகமான எடுத்துக்காட்டுகளிலும்”  அமெரிக்காவின் முதன்மையான புதிய அணுவுலைகளின் நிர்மாணச் செலவு நிலக்கரி மற்றும் எரிவாயு மின் நிலையங்களின் அதிகபட்ச நிர்மாணச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்  என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. [ 1998 முதல் மின்சார உற்பத்தியின் அடக்கவிலை பற்றிய OECD-யின் மதிப்பீடுகளை சிகாகோ பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு பயன்படுத்தியுள்ளது.  2005-ம் ஆண்டில் OECD-யின் மதிப்பீடுகள் மாற்றப்பட்டு இருக்கின்றன.  அதன்படி அணு மின்சக்தியின் உற்பத்திச் செலவு பல நாடுகளில் மலிவாகி உள்ளதாக அதன் அறிக்கையில் காணப்படுகிறது.[39]  பலநாடுகளுக்கும் அனுப்பிய கேள்விப்படிவத்தில் பெற்ற விவரங்களின் அடிப்படையில் OECD-யின் இந்த முடிவு வந்தடையப்பட்டுள்ளது.  2005-ம் ஆண்டு அது பயன்படுத்திய புள்ளிவிவரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை.  உதாரணமாக அந்த அறிக்கையின் 43-ம் பக்கத்தில், பின்லாந்தின் அணுவுலைக் கட்டுமானச் செலவு கிலோவாட்டுக்கு சுமார் 2000 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் பின்லாந்தில் அரிவா நிறுவனத்தால் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 1600 மெகாவாட் திறன்கொண்ட அணுவுலையின் கட்டுமானச் செலவு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கான அடக்க விலை OECD எடுத்தாண்டதைப்போல இரு மடங்கு ஆகும்.]

“கொட்டிக் கிடக்கும் மலிவான சரக்கு” என்று இதன் ஆர்வலர்களால், முன்னர் பேரார்வத்துடன் கூத்தாடப்பட்ட அணு மின்சக்தி அதற்கு மாறாக, 1970-ம் ஆண்டு தொட்டு பெருத்த செலவீனமானது என்பதையே நிரூபித்திருக்கிறது என்று எகானமிஸ்ட் ஏடு தொகுத்துக் கூறுகிறது. [42]  இதன் காரணமாகவே கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுவுலைக் கட்டுமானத்திற்கான விண்ணப்பம் ஏதுமில்லை.

அணுசக்தியின் அடக்க விலை பற்றிய இந்த கணக்குகளை எல்லாம் கரியமில வாயு வெளியேற்றத்தின் மீது சுமத்தப்படும் ஒரு விலை மாற்றிவிடுமா என்பது மற்றொரு கேள்வி.  இது தொடர்பாக, “ஐரோப்பிய கார்பன் வெளியேற்ற வர்த்தகத் திட்டத்தின் படி வெளியேற்றப்படும் ஒரு டன் கார்பனுக்கு  €14 (யூரோக்கள்) என்று விலை வைக்கப்பட்டுள்ளது.  அணுவுலைகளைக் கவர்ச்சிகரமானதாக்கும் என மின் உற்பத்தி முதலாளிகள் எதிர்பார்த்த € 50 விட இந்த விலை மிகவும் குறைவாகிப் போனது” என்று எகானமிஸ்ட் ஏடு குறிப்பிடுகிறது.[43]

எனவே நிலக்கரி சக்தியைக் காட்டிலும் அணுசக்தி மிகவும் செலவீனமானது எனும் ஒருமித்த கருத்து சர்வதேச அளவில் நிலவுகிறது. [இருப்பினும், சூரிய சக்தி போன்ற சில மாற்று சக்தி வளங்களைக் காட்டிலும் அணுசக்தி கணிசமான அளவு மலிவானதாகவே இருந்துவருகிறது.] [இது பொதுவான உலக வழக்கு.  ஆனால், ஆண்டுதோரும் அதிகரிக்கும் அணுக் கழிவுப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஆகும் செலவு; சுமார் 25 ஆண்டுகளில் மூடுவிழா காணும் அணுவுலைகள் அமைந்த இடமும் அதன் நெருங்கிய சுற்றுவட்டாரமும் புவிப்பரப்பில் நிறந்தரமாய்ப் பயனற்றுப் போவதற்கான இழப்பீட்டுக் கணக்கு; செயல் முடக்கப்பட்ட உலையைப் பல்லாயிரம் ஆண்டுகாலம் போர்த்திப் பாதுகாப்பதற்கு ஆகும் செலவு .. இன்னும் பலவும் அணு மின்சக்தியின் அடக்க விலையைக் கணக்கிடுகையில் சேர்க்கப்படுவதாகவே தெரியவில்லை –மொ-ர்] இந்தியாவும் இந்த வரையரையுடன் ஒத்துப்போகிறது.  இந்த ஆய்வு முடிவுகள் அணுசக்தித் தொழிற்துறை வளர்ச்சியை சோர்வடையச் செய்த போதிலும், புதிய அணுவுலைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடவில்லை.  மாறாக, அணுசக்தி பெருத்த செலவீனமானது என்ற இந்த உண்மை, சில சமயங்களில், அணுசக்தித் துறைக்கு கொள்கை ரீதியான உதவிகளும், மானியங்களும் வழங்கப்படுவது அவசியம் என்ற வகையில் சிந்திக்க வைத்திருக்கிறது!

5.3 பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் பற்றி

முன்னர் கூறியது போல தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கவலைகள் அணுசக்தித் தொழிலின் சமீபத்திய புத்தெழுச்சிக்குப் பகுதியளவுக் காரணமாக அமைகிறது.  அணு மின்சக்தி பசுமைக் குடில் வாயுக்களை வெளியிடுவதில்லை என்ற சாதக அம்சத்தைப் பெற்றிருக்கிறது.  இதன் விளைவாக (வேறு சில அற்பக் காரணங்களும் உள்ளிட்டு) க்ரீன்பீஸ் அமைப்பின் செல்வாக்கு மிக்க முன்னாள் உறுப்பினர் பாட்ரிக் மூர் போன்ற சில சூழலியலாளர்கள் அணுசக்தியின் பிரச்சாரகர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இருப்பினும், க்ரீன்பீஸ் அமைப்பும் பிற பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களும் இன்றளவும் அணு மின்சக்தியை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன.  அவர்களது முதன்மையான மறுப்புரைகளில் ஒன்று அதிகரித்துவரும் அணுக் கழிவுகள் பற்றியது.

அணுவுலைகள் கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில நீண்ட நெடுங்காலத்துக்கு அபாயகரமானதாகத் தொடரக்கூடியவை.  உதாரணமாக, அணுவுலைக் கழிவான புளூடோனியத்தின் (Pu239 ) அரை ஆயுள் 24,000 ஆண்டுகள்.  (அதாவது புளூடோனியம் தன் கதிரியக்க சக்தியில் பாதியை இழக்க 24000 ஆண்டுகள் பிடிக்கும்.  எஞ்சியதில் பாதியை இழக்க மேலும் 24000 ஆண்டுகள் … இப்படி)

துரதிஷ்டவசமாக, இக்கழிவுகளை வெளியேற்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஏதுமில்லை.  அணுசக்தித் திட்டவியலாளர்களிடையே இந்த நீண்ட காலப்போக்கில் ஏற்பட்டிருக்கும் சற்றே உடன்பாடான கருத்து, இந்தக் கழிவுகளை அழிக்கவொண்ணா அடியாழ இடுகாடுகளில் (geological repository) இட்டு மூடிவிடுவது என்பதே.  இன்று வரை அத்தகைய ஒரே ஒரு இடுகாடு மட்டும்தான் –அமெரிக்க அணுக்கழிவு தனிமைப்படுத்தல் முன்மாதிரி இடுகாடு – அமைக்கப்பட்டுள்ளது.  அதுவும் இராணுவம் தொடர்பான அணுக் கழிவுகளை இடுவதற்காகவே இயங்குகிறது.  அணுசக்தியின் சமூகப் பயன்பாடு வெளிப்படுத்திய கதிரியக்கக் கழிவுகளில் ஒரு பகுதியை யூக்கா மலை அணுக்கழிவு இடுகாட்டில் போட்டுவிடலாம் என அமெரிக்கா திட்டமிடுகிறது.  ஆனால், அந்த இடுகாடு இன்னும் கட்டப்படவில்லை. இது தொடர்பான திட்டங்கள், அவற்றின் செயலாக்க வழிமுறைகள் பற்றிய விவாதங்களை அணுப் பொறியியல் கையேட்டில் காணலாம்.[44]

இந்தியாவில், எரிக்கப்பட்ட யுரேனியம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  ஆயினும், இந்த மறுசுழற்சி முறையும் அபாயகரமான கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. தற்போதைக்கு இதன் அளவு குறைவானதே.  2001-ம் ஆண்டளவில் இந்தியாவில் திரண்டிருக்கும் இறுதி நிலைக் கதிரியக்கக் கழிவின் ( high-level-waste ) [மா பாதகக் கழிவின்] அளவு 5000 கனமீட்டர் (m3) என மதிப்பிடப்பட்டது (இது சுமார் இரு பெரும் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவுக்கு ஒப்பானது)[45]. இந்தக் கழிவுகளின் அளவு மளமளவென அதிகரிக்க இருக்கிறது. 2011-ம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு 700 கனமீட்டர் அளவுக்கு இறுதி நிலைக் கதிரியக்கக் கழிவு உற்பத்தி செய்யப்படும் என இந்திய அணுசக்தித் துறை 2004-ம் ஆண்டில் மதிப்பிட்டிருக்கிறது. இறுதியாக இந்தக் கழிவுகள் அடியாழ இடுகாடுகளில் புதைக்கப்படுவதன் மூலம் வெளியேற்றப்படும் என்கிறது அணுசக்தித் துறை. ஆயினும், ”இந்த நடவடிக்கையின் சாத்தியப்பாடு பற்றிய செயல் விளக்கம் மற்றும் இந்த வழிமுறையின் பாதுகாப்புத் தன்மை குறித்த விசயங்கள் நம் முன் நிற்கும் பெருத்த சவாலாக இருக்கின்றன” என்று ஒப்புக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு அணுசக்தித் துறை உள்ளாகியிருக்கிறது.[46]

அணு மின்சக்தி தொடர்பான மற்றொரு கவலைக்குறிய அம்சம் அணுவுலைகளின் பாதுகாப்பு பற்றியது.  முன்னாள் சோவியத் யூனியனின் உக்ரைன் குடியரசில் இருந்த செர்னோபில் என்ற இடத்தில் 1986-ம் ஆண்டு நிகழ்ந்த அணுவுலை விபத்தின்போது கதிர்வீச்சுத் தன்மை கொண்ட ஏராளமான பொருட்கள் வளிமண்டலத்தில் கலந்தன.  இவை சோவியத் எல்லையைத் தாண்டி வடக்கே வெகு தொலைவில் இருந்த ஸ்வீடன் வரையிலான அண்டை நாடுகளிலும் பரவின.  2006-ம் ஆண்டு வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இந்த விபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் மக்களின் வாழ்நாளில் நாலாயிரத்துக்கும் மேலானோர் கதிர்வீச்சுப் பாதிப்பினால் புற்றுநோய் பீடித்து இறந்தனர்.  இவ்விபத்தால் “சீர்கேடடைந்த பிற பகுதிகளில்” வாழ்ந்த அறுபது லட்சத்துக்கும் மேலான மக்களிடத்தில் இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு ஐயாயிரத்துக்கும் மேல். (உ.சு.நி அறிக்கையின் பட்டியல் எண் 12)[47]

எனினும் க்ரீன்பீஸ் அமைப்பு சுட்டிக்காடியது போல,[48] இப்படிப்பட்ட ஒரு பாரிய பேரழிவின் தொடர்பாக, “அதன் விளைவுகளை ஒருமைப்படுத்தியும், அதிகரித்த புற்றுநோய் சாவுகள் பற்றிய மதிப்பீடாக ‘எளிமைப்படுத்தியும்’ காட்ட முயலும் எந்த விவரணைகளும், இவ்விபத்தால் மக்கள் அனுபவித்த பன்முகப்பட்ட துயரங்கள் அனைத்தையும் மோசமான முறையில் சிறுமைப்படுத்துவதாகவே இருக்கும்”.

செர்னோபில் விபத்து பெரும்பாலும் மோசமான வடிவமைப்பினாலும் இயக்குனரின் (operator) தவறினாலும் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, இந்த அணுவுலை முறையான தடுப்பரணால் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கவில்லை. மேலும், அந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில், positive void coefficient விளைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.[49] அதாவது அணுக்கருப் பிளவால் தோற்றுவிக்கப்படும் வெப்பத்தைத் தாங்கி வெளியேற்றும் குளிர்விப்பான் தப்பித்து வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக, அணுக்கருப் பிளவின் கட்டற்ற செயல்பாட்டு தூண்டப்பட்டிருக்கிறது.  இவ்வாறு தூண்டப்பட்ட கட்டற்ற அணுக்கருப் பிளவு ஏராளமான குளிர்விப்பான்கள் வெளியேற வழிசெய்திருக்கிறது.  இவ்வாறாக ஒன்றுக்கொன்று துணை செய்யும் படுபயங்கரமான எதிர்வினை நிகழ்வு நடந்திருக்கிறது.   (it seems to have had a positive void coefficient,49 which meant that the escaping coolant increased the intensity of the reaction which in turn caused more of the coolant to escape, thus leading to catastrophic positive feedback. )  புதிய அணுவுலைகள் தடுப்புறுதி மிக்கதாய் நல்ல முறையில் வடிவமைக்கப் படுவதாகத் தோன்றுகிறது. இவ்விபத்தின் மூலம் அணுசக்தித் தொழிற்துறை தனது பொறியியல் பாடத்தை நல்லமுறையில் படித்திருக்கும் என்று மட்டுமே ஒருவர் எதிர்பார்க்க முடியும்.

நாம் மேலே விவரித்ததைப்போல, அணுசக்தி என்பது உள்ளியல்பாகவே விபரீதமானது.  இருப்பினும், அணுவுலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த எந்த ஒரு விவாதத்திலும் அணுசக்தியை முன்னெடுப்போரால் வைக்கப்படும் புறக்கணிக்க முடியாத ஒரு கருத்து இருக்கிறது.  அணுசக்தி பொதுவாகவே, நாமும் செய்தது போலவே, நிலக்கரியுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.  ஆயினும், நிலக்கரியும் தீங்கானதே என்பதே அந்த கருத்து.

இதன் காரணமாகத்தான் நிலக்கரி சுரங்கங்களில் ஆண்டாண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் மடிகிறார்கள்.  இதற்கு சீனா ஒரு அதிர்ச்சிகரமான உதாரணம். அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 2006-ம் ஆண்டு சீன நிலக்கரி சுரங்கங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 4,746; 2007-ல் அது 3,786. [50,51]

நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவிலும் ஆண்டாண்டும் நூற்றுக்கணக்கானோரைப் பாதிக்கிறது.  ஆனால், இங்கு இதுபற்றிய புள்ளிவிவரங்கள் சற்று பிரச்சினைக்கு உரியதாய் இருக்கின்றன. நிலக்கரி அமைச்சகத்தின் விவரப்படி இந்திய நிலக்கரி சுரங்கப்பணி மிகவும் பாதுகாப்பானது.  இங்கு சாவு எண்ணிக்கை நபர்வாரி சாராசரிக் கணக்கில் அமெரிக்காவை விடக் குறைவு; கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் அளவுக்குக் குறைவானது.[52]  இது உள்ளபடியே நம்பத்தக்கதாய் இல்லை.  இருப்பினும், அமைச்சகம் அளித்த விவரப்படியே பார்த்தாலும் 2006-ல் நிலக்கரிச் சுரங்கப் பணியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் பலத்த காயமுற்றோரின் எண்ணிக்கை 966 ஆகவும் இருக்கிறது.  2007-ல் அது  முறையே 69 ஆகவும் 904 ஆகவும் இருக்கிறது.[52] [யுரேனிய சுரங்கப் பணியும் தீங்கானதே.  இருப்பினும் அது நிலக்கரி சுரங்கப்பணியோடு ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவே நடப்பதால் விபத்தும் குறைவாகவே நடக்கிறது] .

நமது சமுதாயத்தில் நிலவும் பாரதூரமான ஏற்றத்தாழ்வும் இந்த நிலைமை தொடர ஒரு காரணமாக இருக்கிறது. அணு விபத்து பேரழிவு விளைக்கத் தக்கதாய், அனைவரையும் பாதிப்பதாய் இருக்கிறது.  எனவே அணுசக்தி அமைப்புகளில் பாதுகாப்பு குறித்து பாரிய கவனம் செலுத்தப்படுகிறது.  நூற்றுக்கணக்கான மக்கள் ஆண்டாண்டும் நிலக்கரிச் சுரங்கங்களில் செத்தாலும், அம்மக்களில் ஆகப் பெரும்பான்மையோர் ஏழைகளாகவும், நாதியற்றவர்களாகவும் இருப்பதால் இந்த விபத்துகள் யாரது கவனத்தையும் ஈர்க்கவும் இல்லை, பெரிதாய் இதற்கு ஒரு எதிர்ப்பும் இல்லை.

5.4 இந்தியாவுக்கான பிரத்தியேக அம்சங்கள்

இந்தியாவில் அணுசக்தியின் விருப்பார்வம் பற்றிய விவாதத்தை மாற்றக்கூடிய இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

முதலாவது அம்சம், இந்தியாவின் மோசமான யுரேனியத் தாதுவள இருப்பு பற்றியது.  நாம் முன்னரே சொன்னதுபோல, இந்தியாவின் யுரேனிய இருப்பு மிகக் குறைவு என்பது மட்டுமல்ல, அதன் தரமும் மோசமானதே.  திட்டக் கமிசனால் நியமிக்கப்பட்ட கிரித் பாரிக் தலைமையிலான நிபுணர் குழு சக்திவளக் கொள்கை தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில், “இந்தியாவின் யுரேனிய வளம் மிகக் குறைவானது.  கிடைக்கப்பெறும் யுரேனியத்தைக் கொண்டு மொத்தத்தில் 10000 மெகா வாட் உயர் அழுத்த கனநீர் அணுவுலைகளை மட்டுமே இயக்க முடியும்.  மேலும், வெளிநாடுகளில் சில இடங்களில் கிடைக்கும் தாதுவளம் 12-14% யுரேனியத்தைக் கொண்டு இருக்கையில், இந்தியாவில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலுள்ள தாதுவிலிருந்து (0.1% அளவுக்குத் தரம் குறைந்த யுரேனியத் தாது) யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகிறது.  இதன் காரணமாக இந்தியாவின் அணுவுலை எரிபொருளின் அடக்கவிலை சர்வதேச விலையோடு ஒப்பிடுகையில் 2-3 மடங்கு அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.[54]  ஆக, விரிவான ஒரு அணுசக்தித் திட்டம் இறக்குமதி எரிபொருளை நம்பியே தாக்குப்பிடிக்க முடியும் என்பது இந்த அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.  மேலும், இந்த இறக்குமதி அணு மின்சக்தியை செலவு மிக்கதாக்கி விடுகிறது.

இருப்பினும், இவ்வாறான யுரேனிய இறக்குமதி, எரிபொருளின் நிலைத்த தேவையைப் பெறுவதற்காக ஏகாதிபத்திய நாடுகளை அண்டி இருக்கும் நிலைக்கு நமது நாட்டைக் கொண்டுவந்து விடும் என்பதே மிகவும் அபாயகரமான விசயம் ஆகும்.  1974-ம் ஆண்டு நிகழ்த்திய அணுவெடிப்புப் பரிசோதனைக்குப் பின் தாராப்பூர் அணுவுலைக்கு அளித்துவந்த எரிபொருளை அமெரிக்கா நிறுத்திவிட்டது.  கடந்த ஆண்டு அணுசக்தி மூலப்பொருள் வர்த்தகர்கள் குழுவால் [Nuclear Suppliers Group] [சர்வதேச அணுசக்தி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகள் அடங்கிய சுயநலக் கும்பல். இதில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது] அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவை அனுமதிக்கும் படியான ஒரு விலக்கு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் உலகளாவிய போர்த்தந்திரக் கூட்டாளியாக இணைந்ததன் காரணமாகவே இந்த விலக்கு இந்தியாவுக்குப் பெற்றுத்தரப்பட்டது. இறக்குமதி எரிபொருளை நம்பி மேற்கொள்ளப்படும் விரிவான அணுசக்தித் திட்டம் எதிர்காலத்தில் பொறுப்புக்கு வரும் எந்த ஒரு அரசும் அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்து வெளியேற முடியாதபடி புதைகுழியில் சிக்கியதைப்போல் ஆக்கிவிடும்.

இரண்டாவது முக்கியமான அம்சம், இங்கு அணுசக்தி அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு இல்லை என்பதே. நிலவுகின்ற மோசமான நிர்வாக வடிவத்தின் அடிப்படைக் கூறுகளை பாபா-நேரு இடத்தில் தேடிக் காணமுடிகிறது. ”அணுசக்தியை வளர்த்தெடுக்கும் பொறுப்பு மிகச் சிறிய உயர் அதிகார அமைப்பின் வசம் ஒப்படைக்கப்படவேண்டும். மேலாண்மை செலுத்தும் இணைப்பு ஏதுமின்றி, நேரடியாகப் பிரதமருக்குப் பதில்சொல்ல வேண்டிய நிலையில், செயல் அதிகாரத்துடன் கூடிய சுமார் மூன்று நபர்களைக் கொண்டதாக இவ்வமைப்பு இருக்கலாம் .. .. அணுசக்தி ஆணையம் என்று இதைக் குறிப்பிடலாம்” என்று பாபா 1948-ல் நேருவுக்கு எழுதினார்.[55] (அழுத்தம் சேர்க்கப்பட்டது).  பாபா ஜனநாயகத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர் அல்ல என்பது தெளிவு. மேலும் பலவற்றைப் போல, இந்த விசயத்திலும், நேருவுடன் தனக்கு இருந்த தனிப்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிற அங்கங்களில் செயல்படும் குறைந்தபட்ச கண்காணிப்பு மற்றும் சீர்செய்தல் வழிமுறைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் பாபா. அணுசக்தி ஆணையம் 1954-ல் நிறுவப்பட்டு 55 ஆண்டுகள் கடந்தபின்னும் அதே கெட்டித்தட்டிப்போன சிறிய அதிகாரவர்க்கக் கும்பல் இந்த நாட்டின் அணுசக்தி தொடர்பான அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. [தற்போது இந்த அணுசக்தி ஆணையம் சற்றே விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  டிசம்பர், 2009ல் அது அணுசக்தித் துறைத் தலைவரின் தலைமையின் கீழ், அவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் அலுவலத்தில், அறிவியல் தொழில்நுட்ப ஸ்டேட் அமைச்சராக இருக்கும் ப்ரிதிவிராஜ் சவ்கான் உள்ளிட்ட 12 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கிறது]

பல பத்தாண்டுகளாகியும் இந்த அணுசக்தி நிறுவனம் ஒரு சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பின் தேவையைக் கூட உணரவில்லை. அணு மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் நெறிப்படுத்துதல் ஆகிய இரண்டு செயல்களையும் அணுசக்தித் துறையே தனது பொறுப்பில் வைத்திருந்தது.  அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள மூன்று மைல் தீவில் 1979-ல் நடந்த பாரதூரமான அணுவுலை விபத்துக்குப் பின்னர்தான் தனியாக ஒரு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை (AERB)அமைக்கும் நடவடிக்கையை அணுசக்தித் துறை தொடங்கியது.[57]  அணுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குறிக்கோளுடன் 1983-ல் இந்த வாரியம் அமைக்கப்பட்டது.  இருப்பினும், இந்த வாரியம் (AERB) அணுசக்தித் துறைத் தலைவர் தலைமைவகிக்கும் அணுசக்தி ஆணையத்திடமே நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டியிருக்கிறது. இச்செயல், அணுசக்தித் துறையிலிருந்து தனித்து சுதந்திரமாகச் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பு என்ற கூற்றை கேலிக்குறியதாக்குகிறது.

எதார்த்தவாதியான ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 1995-ல் இயங்கிய இந்த வாரியம் (AERB) இந்திய அணுசக்தி அமைப்புகளில் காணப்பட்ட, உடனடிக் கவனிப்பு தேவைப்பட்ட 95 பிரச்சினைகள் உள்ளிட்ட 130 பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தொகுத்து ஒரு அறிக்கை தயாரித்துக் கொடுத்தது.  அந்த அறிக்கை தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

இந்த வாரியத்தை (AERB) விட்டு விலகிய பின்னால், திரு.கோபாலகிருஷ்ணன்,  “அணுசக்தித் துறையின் அணுவுலை அமைப்புகளில் பாதுகாப்பு நிலைமை சர்வதேசத் தர நிர்ணயத்துக்கு மிகவும் பின்தங்கி இருக்கிறது” என்றும், “உண்மையிலேயே சுதந்திரமான ஒரு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வழிமுறை இன்மையும், அணுசக்தித் துறை வகிக்கும் ஈடிணையற்ற அதிகாரமும், செல்வாக்கும், இவற்றுடன் இணைந்த உண்மைகளை மூடிமறைக்க விரிவாய்ப் பயன்படுத்தப்படும் அலுவல் கமுக்க சட்டமும் (Official Secrets Act) ஆகிய இவைதான் இந்த படுமோசமான நிலைமைகளுக்கு முதன்மையான காரணங்கள்” என்றும் எழுதினார்.[58].  இதற்குப் பதிலளிக்கும் முகமாக அணு மின்சார நிறுவனம் (Nuclear Power Corporation) இந்த கவன ஈர்ப்புகளை வெறும் “பதற்றக் கூச்சல்” என்று புறந்தள்ளியதுடன் கோபாலகிருஷ்ணன் “காற்றடிக்கும் திசையில் பறக்கிறார்” [“tilting at windmills”] என்று தனது வருத்தத்தையும் வெளியிட்டது. மேலும், “இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை நாங்கள் எதிரிகளாகக் கருதவில்லை.  நாங்கள் அனைவரும், சிக்கனமானதும் பாதுகாப்பானதுமான முறையில் அணுசக்தித் துறையை வளர்த்து அணுசக்தியின் எண்ணற்ற பலன்களை நாட்டுக்கு வழங்கவேண்டி நமது தேசப்பிதாக்களால் பணிக்கப்பட்ட ஒரே அறிவியல் குடும்பத்தின் சகோதரர்கள்”  என்றும் கூறியது.[59]

இந்த சகோதரத்துவ ஒத்துழைப்பு பற்றிய பரிந்துரை சந்தேகத்துக்கு இடமின்றி அடியொற்றிச் செல்லும் வேளையில், அணுசக்தியைப் போன்றதொரு அபாயகரமான தொழில்நுட்பத் துறையில் அதன் நெறியாளர்களும், அமைப்பாளர்களும் இவ்வளவு நெருக்கமாக இருப்பது ஓரளவுக்குப் பிரச்சினைக்கு உரியதாகவும் இருக்கிறது.  உண்மையில் இது, திரு. கோபால கிருஷ்ணன் குறிப்பிடுவது போல, அணுசக்திப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நியதியை மீறுவதாக இருக்கிறது. அந்த நியதிப்படி சம்பந்தப்பட்ட (இந்தியா உள்ளிட்ட) அனைவரும், “ஒழுங்குமுறை அமைப்புக்கும் … அணுசக்திப் பயன்பாட்டுடன் .. தொடர்புடைய .. வேறெந்த அமைப்புக்கும் இடையே திறம்படச் செயல்படத் தக்கதொரு பிரிவினையை உத்தரவாதப்படுத்தத் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்”.[60]

அணு விபத்துகள் அறிதாய் நிகழ்பவையே. எனவே, நமது அணுசக்தித் துறை செய்திருப்பது போன்று, பாதுகாப்பு நெறிமுறையை மீறுகின்ற செயல்கள் பெரிதும் சாத்தியமானவையாகவே இருக்கின்றன.  விபத்துக்கான வாய்ப்புகள் குறைவாயினும், ஒரே ஒரு விபத்தே பேரழிவைக் கொண்டுவரக் கூடிய காரணத்தால் பாதுகாப்பு குறித்து பாரதூரமான கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், இங்கோ ஒழுங்குமுறைக் கட்டமைப்பு சிதிலமடைந்து கிடப்பது தெளிவு.   இந்த நிலைமையில் அணுசக்தித் திட்டம் விரிந்த அளவில் முன்னெடுக்கப்பட இருப்பது, குறிப்பாகப் பெருத்த கவலைக்குறியதாக இருக்கிறது.

6. அணு சக்தித் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிநிலைகள் பற்றி

மேற்சொன்னது போல, முப்படிநிலை அணு சக்தித் திட்டத்தில் முதலாவது படிநிலை மற்ற இரண்டு படிநிலைகளைக் காட்டிலும் மிகச் சிறியது. அணுசக்தித் துறையின் முன்மொழிவுகளின்படியே மின்சக்தியின் பெரும்பகுதி வீரிய ஈனுலை மற்றும் தோரிய அணுவுலைகளாகிய இரண்டாவது மற்றும் மூன்றாவது படிநிலைகளில் இருந்தே கிடைக்க வேண்டி இருக்கிறது என்பதையும் மேலே விவரித்தோம். துரதிஷ்டவசமாக, பாபாவின் தொடக்ககாலக் கணிப்புக்குப் பின் 55 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த இரு படிநிலைகள் தொடர்பான தொழில்நுட்பங்களும் நம்பிக்கை அளவிலேயே தொடர்கின்றன. ரஷ்யாவில் இருக்கும் 30 ஆண்டு பழமையான ஒரு வீரிய ஈனுலையைத் தவிர [61] மேற்சொன்ன இரு படிநிலைகளுக்கான தொழில்நுட்பங்கள் உலகில் வேறெங்குமே வர்த்தக ரீதியான செயல்பாட்டில் இல்லை.

இரண்டாவது படிநிலைக்கான தொழில்நுட்பம் மூன்றாவது படிநிலையினதை விட ஒரளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது.  பல்வேறு நாடுகள் முன்மாதிரி வீரிய ஈனுலைகளை (Prototype Fast Breeder Reactor) நிர்மாணித்து, நிர்மாணித்த கையோடு அதைக் கைவிடவும் செய்திருக்கின்றன. ஆனாலும், இந்தியா தனது சொந்த  முன்மாதிரி வீரிய ஈனுலையைக்  கல்பாக்கத்தில் நிர்மாணித்து வருகிறது.  மூன்றாவது படிநிலை என நமது மனக்கண்ணில் விரிந்த தோரியம் அணுவுலை போன்றதொன்றை கட்டுவதற்கான முயற்சியைக்கூட யாரும் இதுவரை எடுத்ததில்லை. தோரியம் எரிபொருட் சுழற்சி முறையை வணிக ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரம்மாண்டமான ஆய்வு முயற்சிகள் தேவை.  தொழில்நுட்ப ரீதியான ஏராளமான தடைதாண்டல்கள் இல்லையேல் வழமையான யுரேனிய அணுவுலைகளைவிட தோரிய அணுவுலைகள் கணிசமான அளவுக்கு பெருத்த செலவு பிடிக்கக் கூடியவையாய் அமையும். (இந்தியாவில் இல்லாவிடினும்) உலகில் மிகப் பெரும் அளவில் யுரேனியம் கிடைப்பதால் இந்த தோரிய அணுவுலை முயற்சிக்கு உலகளவில் ஒரு பொருளாதார உந்துதல் இல்லை.  தோரிய அணுவுலைத் திட்டத்தின்பால் தனது ஆய்வைத் தொடரும் நாடு உலகளவில் இந்தியா மட்டுமே.

முதல் படிநிலை “உலகத் தரத்திலான செயல்பாட்டிலும்”, இரண்டாவது படிநிலை “உலகின் முன்னேறிய தொழில்நுட்பம்”  என்ற நிலையிலும், மூன்றாவது படிநிலை “உலகளவில் தனித்துவமானது” என்ற நிலையிலும் இருப்பதாக இந்த நிலைமையை அணுசக்தித் துறை வர்ணிக்கிறது! [11]

6.1 இரண்டாவது படிநிலை

ஒரு முன்மாதிரி வீரிய ஈனுலையைக் கட்டியமைக்க இந்தியா நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகிறது. “பெரியதொரு 500 மெகாவாட் முன்மாதிரி வீரிய ஈனுலையை வடிவமைத்துக் கட்டியமைப்பது” என்பதை ”1970-80 ஆகிய பத்தாண்டுகளுக்கான வேலைத் திட்ட அறிக்கை”  தனது இலக்குகளில் ஒன்றாகக்  கொண்டிருந்தது.  கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த PFBR 2010-ல் செயல்படத் தொடங்கும் எனற தற்போதைய கால அட்டவணைப்படி குறைந்தது 30 ஆண்டுகள் காலதாமதம் ஆகியிருக்கிறது!

இன்றைய நிலவரப்படி, எடுத்துக்கொண்ட இந்தப் பணி பெருத்த காலதாமதமாகி இருப்பதுடன் நிதி இலக்கையும்  வெகுவாகத் தாண்டிச் செல்கிறது. எனவே, இந்த காலக்கெடுவும் கூட நடைமுறைச் சாத்தியமில்லை என்பதே உண்மை. இந்த அணுவுலைத் திட்டப் பணி, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியான ரூ.3492 கோடிகளுக்குள் செப்டம்பர், 2010 என்ற கால இலக்கில் முடிவடையும் என திட்ட அமலாக்க அமைச்சகம் மார்ச் 2009-ல்,  தொகுத்தளித்தது.[62]  எனினும், சில மாதங்கள் கழித்து வெளியான பாவினி-யின் (இந்த திட்டப்பணியை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட  பொதுத்துறை நிறுவனம்) ஆண்டறிக்கை 2009-ல் வேறு வழியின்றி குறிப்பிடப்பட்டிருந்தது என்னவென்றால், “திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ.5,677 கோடிகள் ஆகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது”  என்பதே.[63] இது தொடக்க நிலை திட்டச் செலவை விட 60% அதிகம். மேலும், “இந்த கட்டுமானப் பணி மே 31, 2008 அளவில் அடைந்திருந்த 35% முன்னேற்றத்தோடு ஒப்பிடும்போது,   மே 31, 2009 அளவில் 45% முன்னேறியிருக்கிறது” என்றும் அந்த ஆண்டறிக்கை குறிப்பிட்டுகிறது.  இதிலிருந்து, இந்த திட்டப்பணி செப்டம்பர், 2010-ல் முடியப்போவதில்லை என்று தெளிவாக அனுமானிக்க முடியும்.

உலகின் பிற பகுதிகளில் இந்த வீரிய ஈனுலைகள் தொடர்பான வரலாற்றைப் பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். பல நாடுகள் முன்மாதிரி வீரிய ஈனுலைகளைக் கட்டி அமைத்திருக்கின்றன.  சர்வதேச அணுசக்தி முகாமை (IAEA) யின் விவரத்திரட்டு பயனுள்ள வகையில் இந்த வரலாற்றைப் பரிசீலிக்கிறது.[64] 1980-களில் பிரான்சு, ஜெர்மெனி, பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வர்த்தக அளவிலான வீரிய ஈனுலைகளை நிர்மாணிக்கத் தொடங்கின.  அந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தோல்வியே கண்டன.  பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்குப் பின்னர் 1998-ல் இந்த வகை பிரெஞ்சு ஈனுலை மூடப்பட்டது.  பெருத்த பொருட்செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பின்னும் ஜெர்மானிய ஈனுலை இயக்கப்படவே இல்லை!  இவ்வகை ஜப்பானிய ஈனுலை 1995-ல் பாரதூரமான விபத்துக்கு உள்ளான பின்னால் நிரந்தரமாக மூடப்பட்டது.  அமெரிக்கத் திட்டமும் காலப்போக்கில் கறைந்து மறைந்தது. நடப்பில் இருக்கும் வர்த்தக ரீதியான வீரிய ஈனுலை  ரஷ்யாவின் 30 ஆண்டுகள் பழைமையான ஒன்றே ஒன்று மட்டுமே.  இந்த எதார்த்த நிலைமைகள் வலியுறுத்திய வகையில் “வீரிய ஈனுலைகளை அமைப்பதற்கான பொருளாதார நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்”  என்று சர்வதேச அணுசக்தி முகாமை இது பற்றிய தனது தொகுப்பறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த்து. இத்திட்டத்தின் மூல மதிப்பீட்டின் படியே கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் PFBR ஒரு சிக்கனமான சக்தி மூலம் என எதிர்பார்க்கப் படவில்லை.[65]  திட்டச் செலவை அதிகப்படுத்தி இருக்கும் மறு மதிப்பீடு இந்த மோசமான நிலைமையை மேலும் கொடுமையானதாக்கவே உதவுகிறது.

மேலும், இந்த வீரிய ஈனுலையின் பாதுகாப்பு அம்சம் பற்றிய மிகப் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன.  செலவை மிச்சப்படுத்த வேண்டி அணுசக்தித் துறை பலவீனமான தடுப்பு மதில்களைக் கொண்டதாக இந்த வீரிய ஈனுலையை வடிவமைத்திருக்கிறது என்று குமாரும் ரமணாவும் வாதிடுகின்றனர்.[66]  அவர்களுடைய கணிப்பின்படி, வளிமண்டலத்தில் கதிர்வீச்சை வெளிவிடும்படியான ஒரு பாரிய விபத்து நிகழுமானால், அது இந்த அணுவுலையின் தடுப்பு மதில்களை நிச்சயமாக உடைத்து வெளியேறும். இந்த ஆசிரியர்கள் தமது ஆய்வில் விவாதிக்கும் மிக மோசமான பிரச்சினை என்னவென்றால், இவ்வகை அணுவுலை (PFBR) positive void coefficient என்ற குணாம்சத்தைக் கொண்டிருக்கிறது.   நாம் முன்னர் விவரித்தது போல, செர்னொபில் அணுவுலை வெடிப்பு விபத்துக்குக் காரணமான பண்புகளில் இதுவும் ஒன்று. “அணுக்கருப் பிளவு நிகழ்த்தப்படும் அணுவுலை மையத்தை உடைத்து வெளியேறும் நிகழ்வு பெரிதும் அசாத்தியமானது” (voiding of the core is highly improbable) என்றும் “கோட்பாட்டு அளவிலானதொரு மைய ஒழுங்கு குலைவு விபத்து என்ற அளவுக்கு மட்டுமே இது பார்க்கத்தக்கது” (is of concern only in the case of hypothetical core disruptive accident) என்றும் அணுசக்தித் துறை தனது வடிவமைப்பு தொடர்பான அறிக்கையில் வாதிடுகிறது. [67]  அது ”கோட்பாட்டளவிலான”  பிரச்சினையே என்று கொண்டாலும் பெருநாசம் விளைவிக்கக் கூடியதாய் இருப்பதால், இதைப் பகுப்பாய்வு செய்வதில் பாரதுரமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே ஒருவர் எதிர்பார்க்க முடியும். ஆனால் அணுசக்தித் துறையோ (அனாமதேய ”ஆய்வுகளை” சுட்டிக்காட்டி)  “positive void coefficient .. விளைவு அனுமதிக்கத் தக்கதாகவே கருதப்படுகிறது” என்று வெறுமனே கூறுகிறது.

அணுசக்தித் திட்டத்தின் இந்த இரண்டாவது படிநிலைதான் அணுசக்தித் துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கும் அணு மின்சக்தி உற்பத்தித் திறனில் பெரும்பகுதியை வழங்க வேண்டியிருக்கிறது என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.  அணு மின்சக்தி பற்றிய இந்த சவடாலை எல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது வாசகருக்கு இச்சமயம் தெளிவாகி இருக்கும்.  இருந்தும், இன்னமும் ஒருவர் அணுசக்தித் துறையை நம்புவாராயின், அணுசக்தித் துறையின் மின் உற்பத்தி பற்றிய அனுமானங்கள் அடிப்படையிலேயே நிலையற்றவை என்று ரமணனும் சுசித்ராவும் வாதிடுவதைப் பார்க்கவும். [68] சுருக்கமாக, வீரிய ஈனுலைகளின் வளர்ச்சி பற்றிய அணுசக்தித் துறையின் மதிப்பீடுகள் இரட்டிப்பு நேரம் (doubling-time) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  முன்னர் விவரித்ததுபோல இந்த அணுவுலைகள் தனது எரிபொருளைத் தானே தயாரிக்கின்றன; ஆக, ஒரு குறிப்பிட்ட காலச் செயல்பாட்டில் ஒரு ஈனுலை மற்றொரு அணுவுலையில் எரிபொருளாக இடத்தக்க புளூடோனியத்தை உற்பத்தி செய்கிறது.

இருப்பினும், இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால், மேற்சொன்ன செயல்பாடு (இரட்டிப்பு) ஒரு தாமதத்தை உள்ளடக்கி இருக்கிறது. முதல் அணுவுலைக்குத் தேவையான புளூடோனியம் முன்னதாகவே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.  இரண்டாவதாக, அந்த அணுவுலை குறிப்பிட்ட நேரம் இயக்கப்பட்ட பின்னர்தான் அதன் மையத்தில் இருந்து புளூட்டோனியத்தைப் பிரித்தெடுக்க முடியும். பிறகு, மற்றொரு அணுவுலையில் பயன்படுத்துவதற்காக இது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  இதற்கு ஆகும் தாமதத்தை அணுசக்தித் துறை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  அணுசக்தித் துறையின் ஜோசியம் பலிக்குமானால், அவர்களிடம் “ப்ளூட்டோனியம் ஏதும் மிச்சமிருக்காது”! என்கிறது ரமணன் மற்றும் சுசித்ராவின் ஆய்வுக் கட்டுரை.  அணுசக்தித் துறை தனது கணிப்புகளை சாதிக்க முடியாது அல்லது அதிகபட்சம் 40 விழுக்காட்டுக்கு மேல் சாதிக்க முடியாது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள்.  இந்த அளவுக்கான சாத்தியப்பாடும் கூட அசாத்தியமே என்பதை நாம் விவாதித்த பிற கூறுகள் உட்கிடையாக வலியுறுத்துகின்றன.

இந்த வீரிய ஈனுலைத் திட்டம் அணு ஆயுதத் திட்டத்துடனும் முக்கியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தைப் பின்னர் விரிவாய்க் காண்போம்.

6.2 மூன்றாவது படிநிலை

அணுசக்தி எரிபொருளாகத் தோரியத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பம் இன்னமும் குறைவளர்ச்சி கண்டதாகவே இருக்கிறது. யுரேனியத்தை விடவும் தோரியம் மிகப் பெரும் அளவில் இப்புவியின் மேற்பரப்பில் கொட்டிக் கிடக்கிறது.  ஆயினும், தோரிய எரிபொருட் சுழற்சி விரிவாய் வளர்க்கப்படவில்லை என்பதற்கான காரணம் மிகச் சாதாரணமானது.  யுரேனியத்தில் அணுப்பிளவுத் தன்மைகொண்ட ’யு’ இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.  எனவே, இயற்கையாய்க் கிடைக்கும் அந்த தாதுவை சுத்திகரித்தாலே எரிபொருள் கிடைத்துவிடுகிறது.   தோரியத்தில் அவ்வாறு இல்லை.  இயற்கையில் கிடைக்கும் தோரியம் அணுக்கருப் பிளவு எரிபொருளாகப் பயன்படுத்தப்படக் கூடியது அல்ல.  தோரியம், அணுக்கரு வெடிப்பு எதிர்வினைக்கு உட்படும்போது அணுப்பிளவுத் தன்மைகொண்ட யுரேனியம்-233 உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக, தோரியத்திலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை சுத்திகரித்தல் பொன்ற நேரடி செயல்பாடோ, இரசாயன மாற்றமோ அல்ல.  மாறாக, அதற்கு ஒரு யுரேனிய அணுக்கரு வெடிப்பினால் ஏற்படும் தோரிய அணுக்கருவின் எதிர்வினை செயல்பாடே தேவைப்படுகிறது.

மேலும், இந்த வழிமுறையும் கூட சிக்கலான புதிர்கள் நிறைந்தது.  அதற்கான காரணங்கள் இரண்டு.  முதலாவதாக, இந்த யு-வை [ U233 ] உற்பத்தி செய்யும் அணுசக்தி எதிர்வினையின்போது வேறொரு யுரேனிய வகைத் தனிமமும் [ U232 ] உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தத் தனிமத்தின் சிதைவு பெரிய அளவிலான காமா கதிர்வீச்சைத் தோற்றுவிக்கும்.  எனவே, எரிபொருள் உருவாக்கம் மற்றும் மறுசுழற்சி செயல்பாடுகள் வெகுதொலைவில் கையாளப்பட வேண்டியவை.

இரண்டாவதாக, தோரிய எரிபொருள் சுழற்சிமுறை மேற்சொன்ன வகையிலான தற்பெருக்கத்திற்கு உட்படுத்தப் படவேண்டும்.  எரிபொருளின் முதல் தொகுப்பு (பெருத்த பொருட்செலவில் அறிதாய்த் தயாரிக்கப்பட்ட இது) அணுவுலையில் இடப்பட்ட பின்னால், எரிக்கப்பட்ட கழிவும் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உலையில் இடப்பட வேண்டும். இருப்பினும், காமாக் கதிர்வீச்சுப் பிரச்சினைக்கு அப்பாலும் கெட்டித்தட்டிப் போனதும்  கரைக்க முடியாததும் வேதிவினை அற்றதுமான தோரியம்-டை-ஆக்சைடு எஞ்சி நிற்கிறது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, உலகில் வேறு எந்த நாட்டிலும் தோரியத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டம் இல்லாதது ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல.  இந்தியா இந்த அபாயகரமான பாதையில் தொடர்வதுதான் உண்மையில் வியப்பளிக்கிறது.  உலக அணுசக்திச் சங்கம் குறிப்பிடுவது போல, “ பல ஆண்டுகளாக இந்தியா மட்டுமே தனித்து நின்று தோரியப் பயன்பாட்டுக்கான பெருத்த ஆய்வு முயற்சிகளை எடுத்துவருகிறது”[69]

மேற்சொன்ன பிரச்சினைகளின்பால் சிறிது முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் [70] தோரிய சுழற்சி பற்றிய அனுபவத்தைப் பெறுவதற்காக முன்னேறிய கனநீர் அணுவுலையை (AHWR) கட்டுவதற்குத் தற்போது திட்டமிட்டு வருவதாகவும் அணுசக்தித் துறை அறிவிக்கிறது.  இருந்தபோதிலும், இந்தத் தடைகளை எல்லாம் கடந்து முன்னேறுவதற்கு மிகப் பிரம்மாண்டமானதும் ஏராளமான செலவு பிடிக்கக் கூடியதுமான ஆய்வுப் பணிகள் தேவை.  யுரேனிய எரிபொருள் சுழற்சிமுறை மன்ஹாட்டன் திட்டத்திற்குப் பின்னர்தான் வளர்த்தெடுக்கப்பட்டது.

இந்த பகீரத ஆய்வுகளின் முடிவில், தோரிய வழி மின்சாரம் எப்போதாவது பொருளாதார ரீதியில் போட்டியிடத் தக்கதாக உற்பத்தி செய்யப்பட முடியுமா என்பது விளங்காமலேயே உள்ளது.  தனித்து நின்று தோரிய எரிபொருள் சுழற்சித் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதற்கு செய்யப்படும் ஏராளமான செலவுகள் நியாயமானவைதானா?  கொடுப்பினையற்ற வகையில், வெளிப்படையற்ற தன்மையும், ஜனநாயக பூர்வமான விவாதம் இன்மையும் நிலவும் இந்தியாவில் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும் அல்லது வெளிப்படையாக விவாதிக்கப்படும் என்று தோன்றவில்லை.

7.  அணுஆயுதமயமாக்கம்

அணுசக்தியின் இராணுவ அம்சமான அணுகுண்டுகளில் இருந்து அதன் சமூக அம்சமான அணுமின்சாரத்தைத் தனித்துப் பார்ப்பது பெருங் கடினம்.  பாபா, நேரு இருவருமே இதை உணர்ந்திருந்தனர்.  “அணுசக்தித் தொழிற்துறை வளர்ச்சி, பல நாடுகளின் கரங்களில் ஏராளமான அணுப்பிளவுப் பொருட்களைக் குவிக்கும்; அவற்றில் இருந்து அணுகுண்டு தயாரிப்பது என்பது ஒப்பீட்டளவில் மிக எளிதான செயல்” என்று பாபா குறிப்பிட்டார்.[71]  பின்னாளில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் எனப் பெயர் மாற்றப்பட்ட அணு சக்தி நிறுவனத்தை டிராம்பேயில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில்,  ”எனது அரசாங்கத்தின் சார்பாகவும் … ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் எந்த ஒரு இந்திய அரசாங்கத்தின் சார்பாகவும், … நாங்கள் அணுசக்தியை அழிவுப் பணிக்கு எந்நாளும் பயன்படுத்த மாட்டோம் எனக் கூற விரும்புகிறேன்” என்று நேரு கூறினார்.  அணுசக்தியின் சிவில் மற்றும் இராணுவத் தன்மைகள் எனத் தனித்துப் பிரிக்கவொண்ணாத் தன்மையை நேருவும் உணர்ந்திருந்தார்.  பல ஆண்டுகள் முன்னர், அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது, “ நீங்கள் இந்த இரண்டையும் (அணுசக்தியின் அமைதிவழி மற்றும் இராணுவப் பயன்பாடுகள்) எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று (தனது இப் புரிதலுக்கு) ஒப்புதல் அளித்திருந்தார். (p.49 [72])

இருப்பினும், அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு, அடுத்தடுத்து பதவிக்கு வந்த இந்திய அரசுகள் தோற்றத்தின் அளவில் இந்த வேறுபாட்டைத் தொடரவே விரும்பின.  1974-ல் முதல் பொக்ரான் அணுகுண்டுப் பரிசோதனைக்குப் பின், இது அணுவெடிப்பின் சமூகப் பயன்பாட்டுச் சாத்தியப்பாடுகளை அறிவதற்காக செய்யப்பட்ட பரிசோதனையே  என விவரிக்கப்பட்டது.  ஆகவே, இது ”அமைதிக்கான அணுசக்தி வெடிப்பு” என அழைக்கப்பட்டது. [பரவலாய் நம்பப்படுவதற்கு மாறாக, இந்த கோளாறான சொற் பிரயோகம் இந்திய அரசின் கண்டுபிடிப்பு அல்ல.  கால்வாய்களை விரிவுபடுத்துதல் போன்ற சமூக நடவடிக்கைகளுக்கு அணுசக்திக் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க அரசு நெடுங்காலமாக விவாதித்து வருகிறது.  “அணுவெடிப்பின் அமைதிவழிப் பயன்பாடுகள்பற்றிய இப்படிப்பட்ட ஒரு அமெரிக்க ஆய்வில் இருந்து பொருத்தமான அந்த சொற்றொடரைப் பெயர்த்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டார் பாபா]

“நாங்கள் அணு ஆயுதத்தை வைத்திருக்கவில்லை என்று முற்றிலும் தெளிவான முறையில் நான் கூறமுடியும்” என்று ராஜீவ் காந்தி 1985-ல் அறிவித்தார். (p . 267 [73]).  இந்தக் கூற்றுகள் எல்லாம் 1998-ம் ஆண்டு பொக்ரான் வெடிப்புடன் முடிவுக்கு வந்தன.  “எதிர்கால அரசின்”  அந்த நேரத்துப் பிரதிநிதியான பிரமோத் மகாஜன், அணு ஆயுதங்கள் ”பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை அல்ல”.  ”இந்தியா எங்கு இருக்கிறது என்பதை இனி உலகம் அறிந்துகொள்ளும். ஆதலால், எந்த இந்தியனும் தனது பாஸ்போர்ட்டைக் காட்டத் தேவையில்லை”.   இதுவே இந்த பொக்ரான் வெடிப்பின் முக்கியத்துவம் என்று தெளிவுபடுத்தினார்.

1974-ன் ”அமைதிக்கான அணுவெடிப்பு”, 1998-ன் அணுகுண்டுப் பரிசோதனை ஆகிய இரண்டுக்குமான ஆய்வு பெரிதும் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. அய்யங்கார், “அணு வெடிப்பொருளை வெடிக்கச் செய்த இந்த நடவடிக்கை… டிராம்பேயில் விஞ்ஞானிகள், பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் வழமையான செயல்பாடுகளில் இருந்து சற்றே விலகிய நடவடிக்கையே.  மொத்த திட்டப்பணிகளும் இரகசியமாக இருப்பதற்கு … இதுவே காரணம்” என்று இது பற்றி நன்கு புரிந்துகொள்ளத்தக்க வகையில் விவரிக்கிறார். [75]

ஆய்வின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தன்மை என்ற பிரச்சினைக்கு அப்பால் அணுப் பிளவுத் தன்மையுடைய பொருட்களின் குவிப்பு என்ற முக்கியமானதொரு பிரச்சினையும் உள்ளது.  இந்தியாவின் அணுவெடிப்பு ஆராய்ச்சி புளூடோனியத்தைப் பயன்படுத்தியுள்ளது.  பொதுவாய் அணுகுண்டுகளில் பயன்படுத்தப்படும் புளூடோனியம் ஆயுதத் தரத்திலான புளூடோனியம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் வரையறைப்படி இந்த ப்ளூடோனியம் 93 விழுக்காட்டுக்கும் அதிகமான  Pu239 வைக் கொண்டிருக்கிறது.

நாம் ஏற்கனவே விவரித்தபடி, மின்சார உற்பத்திக்கான அணுவுலை செயல்பாட்டிலும் கூட, யுரேனியம் ஒரு நியூட்ரானை உட்கிறகிக்கும் போது, [நியூட்ரானால் யுரேனிய அணுக்கரு சிதைக்கப்படும் பொழுது] இந்த Pu239உற்பத்தியாகிறது.  இருப்பினும், ஒரு அணுவுலை மின்சாரத் தயாரிப்புக்கானதாக இருக்கும்போது யுரேனிய எரிபொருள் தண்டுகள் [rods] சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச யுரேனியத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், உலையில் நீண்ட நேரத்திற்கு வைக்கப்படுகின்றன.  இந்த காலப் போழ்தில் பிற அணுசக்தி எதிர்வினைகளும் நிகழ்கின்றன.  அதன் விளைவாக இந்த அணுவுலைகளில் இடப்பட்ட எரிபொருட் கழிவில் Pu240 உள்ளிட்ட பிற புளூடோனியத் தனிமங்களும் கலந்திருக்கின்றன.  இந்த வகையிலான அணுவுலைத் தர புளூடோனியத்தில் கலந்திருக்கும் இன்னபிற புளூடோனியத் தனிமங்கள் அவற்றிலிருந்து அணுகுண்டு தயாரிப்பதைக் கடினமானதாக்கி விடுகின்றன. (இது தொடர்பான விவாதத்தை அமெரிக்க அணுசக்தித் துறையின் வகைபிரிக்கப்படாத ஆவணத்தில் பக்கம் 37-39-ல்  பார்க்கவும்[76])

எனினும், ஆய்வு அணுவுலைகளில் செலுத்தப்படும் யுரேனிய எரிபொருள் தண்டுகள் குறைந்த அளவு எரிப்புக்குப் பின்னர் வெளியே இழுக்கப்படுகின்றன.  ஆயுதத் தரத்திலான புளூடோனியத்தை உற்பத்தி செய்ய எரிக்கப்பட்ட இந்த தண்டுகளைப் பயன்படுத்த முடியும்.  1974-ம் ஆண்டின் பொக்ரான் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அணுப்பிளவு எரிபொருள் ‘சிரஸ்’  (CIRUS) ஆய்வு அணுவுலையில் இருந்து பெறப்பட்டதே.  இந்த சிரஸ் பற்றிய வரலாறு சுவாரசியமானது.[72,73] கெனடியன் இந்தியன் ரியாக்டர், யூ.எஸ் என்பதே ‘சிரஸ்’ என்பதன் விரிவு ஆகும்.  ஏனெனில், இந்த அணுவுலையின் வடிவமைப்பு கனடாவினது, பயன்படுத்தப்படும் கனநீர் அமெரிக்காவினுடையது மற்றும் எரிபொருள் இந்தியாவினுடையது.  இந்த அணுவுலையில் இருந்து எடுக்கப்படும் எரிபொருள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டுப்பாடுகள் எதையும் கனடா விதிக்கவில்லை.  இந்த எரிபொருளை அமைதி வழிக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்ற இந்தியத் தரப்பின் கடப்பாடு, உண்மையில், இந்த உடன்படிக்கையின் இரகசிய இணைப்பு ஒன்றில் மட்டுமே இடம் பெற்றிருந்தது.  மேலும் பார்க்கையில், எரிபொருள் கனடாவில் இருந்து அளிக்கப்படும் என்பதே தொடக்கநிலைக் கருத்தாக இருந்தது. எனினும், இதற்கு வாய்ப்பில்லாத வகையில் இந்தியத் தரப்பு முந்திக்கொண்டு அந்த அணுவுலையில் பயன்படுத்துவதற்கான எரிபொருள் தண்டுகளைக் குறித்த காலத்துக்குள் சுயசார்பாகத் தயாரித்துவிட்டது. இந்த செயல், என்ன இருந்தாலும் அணுவுலையில் எரிக்கப்பட்ட எரிபொருள் இந்தியாவினுடையது தானே, அதைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்தினால் என்ன என்ற வாதத்தை முன்வைக்க வழிசெய்தது.

அமைதிவழி அணுசக்தித் தொழில்நுட்பம் அளிக்கப்படுவதன் விளைவாக நிகழும் அணு ஆயுதப் பரவல் பற்றிய விவாதங்களில், ‘சிரஸ்’-ல் இருந்து பெற்ற புளூடோனியத்தின் அணு வெடிப்புப் பயன்பாடு அடிக்கடி சுட்டிக்காட்டி விவாதிக்கப்படுகிறது. [“அணுஆயுதப் பரவல்என்ற பதப் பிரயோகம் ஐயப்பாடான ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், இது ஏகாதிபத்திய அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் நிகழும் பேரழிவு ஆயுதங்களின் பரவலை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது] ஆப்ரகாம் போன்ற சிலரது பதிவுகள் இத் தொடர் நிகழ்வுகளை, நல்லெண்ணம் கொண்ட ஆனால், சற்றே ஏமாளித்தனமான கனடாவினரை வஞ்சகமான இந்தியர்கள் சூழ்ச்சித்திறனால் வென்றுவிட்டார்கள் என்பதுபோல் படம்பிடிக்கின்றன.  மேலை நாடுகள் எப்போதுமே நல்லெண்ணம் கொண்டவை என்ற மூதுரையின் வெளிப்பாடாகவே இவ்வகை முடிவுகள் வந்தடையப்படுகின்றன.

இவ்வாறான விவரணைகளைப் பாரதூரமாகக் கருதத் தேவையில்லை.  ஆயுதத் தரத்திலான அணுப்பிளவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இது இந்தியாவுக்கு உதவும் என்று சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் இந்த கனடாவின் தொழில்நுட்பக் கையளிப்பு நடந்துள்ளது.  இது தொடர்பாகக் கேட்கப்படவேண்டிய பொருத்தமான கேள்வி, “தன்னை அணுஆயுதபாணி ஆக்கிக்கொள்ளும்படி  இந்தியாவை ஊக்குவிக்க ஏகாதிபத்திய உலகைத் தூண்டிய கணிப்புகள் எவை?” என்பதுதான்.

உண்மையில், சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்கா கிட்டத்தட்ட நேரடியாக அணுகுண்டையே இந்தியாவிற்கு வழங்க இருந்தது! சீனாவுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்காக “ஆசிய நட்பு” இராணுவச் சக்திகளின் கையில் ”அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் அணுஆயுதங்களை வழங்குவதன் சாத்தியப்பாடுகளைப்”  பரிசீலிக்கும் ஒரு இரகசிய ஆய்வை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1964-ல் நடத்தியது என்று பெர்கோவிச் விவரிக்கிறார்.[73 – பக்கம் 90-93]  அதே காலகட்டத்தில், ‘சமூகத்’ தேவைகளுக்காக இந்தியா அணு வெடிப்புப் பரிசோதனைகளை நடத்த உதவுவதன் சாத்தியப்பாடுகளை ‘தனிப்பட்ட முறையில்’ அமெரிக்க அணுசக்திக் கமிஷன் பரிசீலித்து வந்தது.  இந்த இரண்டு சாத்தியப்பாடுகளும் நடைமுறையற்றுப் போனாலும், இந்தியாவின் கரங்களில் அணு ஆயுதங்கள் இருப்பது பற்றி அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிகள் நிம்மதியற்று இருக்கிறார்கள் என்ற பொத்தாம்பொதுவான கற்பிதம் ஒரு அபத்தம் என்பதையே இவை காட்டுகின்றன.  அமெரிக்காவை ஆளும் நிறுவனத்துள்ளும் இதற்கான எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன.  நாம் கீழே விவாதிக்க இருப்பது போல, அதைப் பெரிதும் ஒத்த பதட்டம் இன்றும் தொடர்ந்து அவர்களை இயக்குகிறது.

1985-ம் ஆண்டு ’துருவா’ என்ற பெயரில் ‘சிரசுக்கு’ [CIRUS] ஒரு கூட்டாளியை இந்தியா கட்டியமைத்தது.  சிரசை ஒத்த, ஆனால் கணிசமான அளவு பெரிதாக, அணுஆயுதத் திரம் கொண்ட புளூடோனியத்தை உற்பத்தி செய்யத் தக்க வகையில் துருவா அமைக்கப்பட்டது.  சிரஸ் மற்றும் துருவாவில் இருந்து 500 கிலோ அணுஆயுதத் தரத்திலான புளூடோனியத்தை இந்தியா உற்பத்தி செய்து குவித்துள்ளது என்று மியான் எட் அல்-ன் ஆய்வு மதிப்பிடுகிறது.[77] இது நூற்றுக்கும் மேலான அணுஆயுத ஏவுகணையின் வெடிப்பு முனையை நிரப்பப் போதுமானது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல, மின்சக்தி உற்பத்திக்கான அணுவுலைகளில் உற்பத்தியாகும் புளூடோனியத்தில் இருந்து அணு ஆயுதங்களைத் தயாரிப்பது கடினமானது. எனினும், இது அறவே முடியாதது அல்ல; மின் அணுவுலைத் தர ப்ளூடோனியத்தில் இருந்தும் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட முடியும்.  உண்மையில், 1998-ம் ஆண்டு அணுவெடிப்பில் மின் அணுவுலைத் தர புளூடோனியமே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு சில சான்றுகள் உள.[73]  இது உண்மையானால், அணுவுலை எரிபொருட் கழிவுகள் மலையெனக் குவிந்து இருப்பதால், இந்திய அரசின் கையிலுள்ள அணுவெடிப்புப் பொருட்களின் இருப்பு, மேற்சொன்ன மதிப்பீடுகளைவிட கணிசமான அளவு அதிகமாக இருக்கும்.

முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது நிலையான வீரிய ஈனுலைத் திட்டம் இங்கே பெருத்த முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.   நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல, இந்த வீரிய ஈனுலைகள் அதன் மையத்தில் இடப்பட்ட எரிபொருளுடனும், யுரேனியப் போர்வையுடனும் இயங்குகின்றன.  இந்த யுரேனியப் போர்வை அணுஆயுதத் தரத்திலான புளூடோனியத்தைப் பெற்றெடுக்கிறது.  கல்பாக்கத்தில் கட்டுமானத்தில் உள்ள PFBR மட்டுமே ஆண்டாண்டும் 140 கிலோ கிராம் புளூடோனியத்தை உற்பத்தி செய்ய முடியும் என க்ளாசர் மற்றும் ரமணா ஆகியோர் மதிப்பிடுகின்றனர். [78]  இது மிகப்பெரிய அளவில் அணுஆயுதக் குவிப்பை செய்துகொள்ள இந்திய அரசுக்கு வழிவகை செய்யும்.

இந்த வீரிய ஈனுலைத் திட்டம் சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுமா என்பது பற்றிய கேள்வி இந்தியா அமெரிக்கா இடையிலான ஆரம்ப காலக் கருத்து வேறுபாடுகளில் முக்கியமான ஒன்றாக இருந்ததை இந்த சூழலில் கவனிப்பது பொருத்தமானதாக இருக்கும்.[79]  இந்த ஈனுலைகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “சாத்தியமில்லை.  ஏனெனில் இது நமது போர்த்தந்திர நலனைப் பாதிக்கிறது” என்றும் இவ்வாறு ஆவதை விட இந்த ஒப்பந்தத்தை மூழ்கடித்து விடுவதே மேல் என்றும் ககோத்கர் பதிலளித்தார். [80]

இறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த வீரிய ஈனுலைகள் ஐ.ஏ.ஈ.ஏ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவில்லை.  இந்த முடிவை இந்தியாவின் பேரம்போசும் திறமை என்றோ, அமெரிக்கர்களின் அறியாமை அல்லது சூதுவாதற்ற தன்மை என்றோ மீண்டும் ஒருமுறை கற்பித்துக் கூறுவது ஒருவரின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டும்.  அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிப் பிரிவினரிடையே இது பற்றிய முரண்பட்ட கருத்து வெளிப்படையாக நிலவியது.  செல்வாக்கு மிக்க ப்ரூகிங்ஸ் கழகத்தின் ஸ்டீஃபன் கோஹன், “நாங்கள் (அமெரிக்கா) வீரிய ஈனுலைத் திட்டத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருந்திருப்போம்”. இருப்பினும், “புஷ் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்” என்று கூறுகிறார் .[81]  எனவே, இது ஒரு அரசியல் முடிவாகவே இருந்தது. ’சிரஸ்’ விசயத்தில் நடந்தது போலவே, இந்தியா அணுஆயுதம் தரித்து நிற்பதற்கு ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு தனது சொந்த நலனை முன்னிட்டு அனுமதி வழங்க முடிவெடுத்துவிட்டதாகவே தோன்றுகிறது.   இந்தியாவை சீனாவுக்கு எதிராக அணுஆயுதம் தரித்த பிராந்திய சக்தியாக வளர்க்க வேண்டிச் செய்யப்பட்டவையே இவை என்று மேற்சொன்ன இரு நிகழ்வுகளில் இருந்தும் ஒரு முடிவுக்கு வர நியாயமிருக்கிறது.

வெகுவாய் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் இராணுவத் தேவைக்கு ஆகக்கூடியதே.  யுரேனிய செறிவூட்டலுக்கான இந்திய அமைப்புகள் ஓரளவுக்கு தறக்குறைவானவையே.  பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் ஒன்றும், மைசூருக்கு அருகே ரத்திஹல்லி-யில் ஒன்றுமாக, இரண்டு வாயுவழி மைய விலக்கு விசையாற்றல் செறிவூட்டு நிலையங்கள் – gas centrifuge enrichment facilities – இந்தியாவில் உள்ளன. இந்தியா சுமார் 400-700 கிலோ அளவுக்கு 45-30% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தயாரித்துக் குவித்திருக்கிறது என்கிறார் மியன் எட் அல் .  இந்தியாவின் வசம் 94 கிலோ அளவுக்கு 90% செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு. [82]  இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இதைக்கொண்டு அணுகுண்டு தயாரிக்கவும் முடியும்.

இத் தலைப்பின் கீழான விவரங்களைத் தொகுத்துக் கூறுவோமாயின், இந்திய அணுசக்தித் திட்டம் தன் முதன்மை அங்கமாக அணுஆயுத அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.  வீரிய ஈனுலை போன்ற சில விசயங்களில், அணுவுலைகளின் குறிக்கோள் மின்சார உற்பத்தி என்பதாகத் தோன்றவில்லை.  மாறாக, ஆயுதத் தொழிற்சாலை என்ற பொருளை மறைப்பதற்கான மூடியாகவே மின் உற்பத்தி என்ற சொல் உண்மையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.  விரிவாகப் பார்த்தால், அணுசக்தித் திட்டம் மின் உற்பத்தி செய்வதில் அடைந்த பெரும் தோல்விக்குப் பின்னரும் அரசின் பேராதரவைப் பெற்றுத் திகழ்வதற்குக் காரணம் இந்தியாவின் அணுகுண்டுத் தயாரிப்புக்கு அதன் பங்களிப்பே எனக் கொள்ளலாம். இது தொடர்பான ஒரு இழையை, உறுதிசெய்யப் படாததெனினும், இங்கு குறிப்பிடுவது பொருந்தும். சாராபாய், ஹோமி சேத்னா காலத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் அசோக் பார்த்தசாரதி.   இவர், அணு மின்சக்தி உற்பத்தியில் அணுசக்தித் துறை கண்ட தோல்வியை தொடர்ச்சியாக முன் நிறுத்தி வாதிட்டதாகவும், அதன் விரிவாக்கத் திட்டங்களை மறுதலித்துப் பேசியதாகவும் கூறுகிறார்.  “நமது அணுசக்தித் திட்டத்திற்கு அணு மின்சக்தியைக் காட்டிலும் பெரிய குறிக்கோள்கள் இருக்கின்றன.  எக்காரணம் கொண்டும் இந்த குறிக்கோள்களை நாம் விட்டுக்கொடுக்க முடியாது”  என்ற விளக்கத்தின் மூலம் இறுதியாக, பி.என். ஹக்சர் தனது கருத்தை வீழ்த்தினார் என்றும் இவர் குறிப்பிடுகிறார். [அழுத்தம் அவருடையது] [83]

8. முடிவுரை

இந்தியாவில் அணுசக்தி பற்றிய விவாதம் நேர்மையின்மையின் உச்ச கட்டத்தில் இருப்பதைத் தெளிவாய் உணர முடிகிறது.  ஒவ்வொரு முறையும் குப்புற விழுவதற்காகவே, நமது அணுசக்தித் துறை தான் உற்பத்தி செய்ய இருக்கும் மின்சாரத்தின் அளவு பற்றித் தொடர்ந்து அசத்தும் முன் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.  இவ்வாறான கணிப்புகள் சென்ற ஆண்டு (2008) அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாதிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

எக்கேடுகெட்டாலும், அணுசக்தித் துறையில் ஏராளமான முதலீடு செய்வது என்ற முடிவில் அரசு உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது.  அணுசக்தி விரிவாக்கம் முப்படிநிலை அணுசக்தித் திட்டத்தின் வழிநின்று நடந்தேறும் என்று அணுசக்தித் துறை உறுதியாகக் கூறுகிறது.  ஆனால், இது பெரிதும் அசாத்தியமானது.  யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட வழமையான சுதேசி மற்றும் இறக்குமதி அணுவுலைகள் மூலம் அணு மின்சக்தி அதிகரிக்கப்படுவதற்கே இன்றைய சூழலில் அதிகபட்ச சாத்தியப்பாடு இருக்கிறது.

தட்பவெப்ப மாறாட்டம் காரணமாக உலகெங்கும் அணுசக்தி மீதான ஆர்வம் ஓரளவுக்குப் புத்தெழுச்சி பெற்றிருக்கிறது.  இருப்பினும், நிலக்கரி போன்ற ஒப்பிடத்தக்க சக்தி மூலங்களை விட அணுசக்தி பெருத்த செலவு பிடிக்கக் கூடியதாகவே தொடர்கிறது.  இந்தியாவின் யுரேனியத் தாதுவள இருப்பு அளவிலும், தறத்திலும் குறைவானதாக இருப்பதால், பெரிய அளவிலான அணுசக்தி விரிவாக்க நடவடிக்கை தவிர்க்க ஒண்ணாமல் ஏகாதிபத்திய நாடுகளை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு இந்தியாவை இட்டுச் செல்லும்.  மேலும், இங்கு ஒரு முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பு இல்லாததால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் படுமோசமாகி உள்ளன.

அணுசக்தித் திட்டத்தில் சிவில் மற்றும் இராணுவ அம்சங்கள் எப்போதும் பின்னிப் பிணைந்துள்ளன.  அணுஆயுதத் தயாரிப்பு அணுசக்தி விரிவாக்கத் திட்டத்தின் பெருமுக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகவும் இருக்கிறது.  புதிய முன்மாதிரி வீரிய ஈனுலையும் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஏராளமான யுரேனியமும் இந்தியாவின் பெருத்த அணுஆயுதக் குவிப்புக்கு வழிவகுக்கும்.  இந்த ஆயுதமயத் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.  இச்செயல், ஆசியாவில் கண்மூடித்தனமான ஆயுதப் போட்டியைக் கட்டவிழ்த்து விடும் அபாயத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பு முறை என்ற கட்டமைப்புக்குப் பெரிதும் உட்பட்ட வகையிலேயே அணுசக்தி பற்றிய நமது விவாதம் அமைந்திருக்கிறது என்பதை நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.  குறிப்பாக, தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சிக்கு முடிவிலா மின்சக்தி அதிகரிப்பு தேவைப்படுகிறது.  பல்வேறுபட்ட மனிதப் பயன்பாடுகளுக்கு மின்சாரம் தேவையாய் இருக்கையில், நிலவுகின்ற வளர்ச்சி மாதிரியோ மின் தேவையை எல்லையற்ற அளவுக்கு நீட்சியுறச் செய்கிறது. அளப்பறிய தேவை பற்றிய இக் கருத்தாக்கம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.  இருப்பினும், அவக்கேடான வகையில், நிலவுகின்ற புதிய தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டமைவின் உள்ளும் கூட மோசமான கொள்கைகளால் அணுசக்தி விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

9. இணைப்பு : அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியல்.

மேற்கண்ட நமது பகுப்பாய்வின் தொடர்ச்சியாக ஒரு சுவாரசியமான கேள்வி எழுகிறது: இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறவேண்டித் தன்னையே பலிக்கடாவாக நிறுத்தத் துணியும் அளவுக்கு காங்கிரசு அரசுக்கு என்ன அவசியம் வந்தது?  இந்த கட்டுரையின் மையப் பொருளில் இருந்து சற்றே விலகியதாய் இருப்பினும், இக்கேள்வி தன்னளவிலேயே சுவாரசியமானதும், முக்கியத்துவம் வாய்ந்த்தும் கூட.  இக்கேள்வி வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. [84]

இது பற்றிய விவாதம் சரியான காலத்தொடர்புடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும் . இந்த அரசு (2008-ம் ஆண்டு மத்தியில்) அணுசக்தி ஒப்பந்தததை நிறைவேற்றத் தீர்மானித்ததை ஒட்டி ஐ.மு. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடது சாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. எனவே இந்த முடிவு ஒரு அரசியல் நெருக்கடியை முன் தள்ளியது.  இறுதியாக, காங்கிரசு அரசு இந்த நெருக்கடியில் இருந்து சிறிதும் பாதிப்பில்லாமல் தப்பியதோடு, கூடுதல் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும், பின்னர் அடையப் பெற்ற இந்த வெற்றிகள் அந்த நேரத்தில் தெளிவானதாக இல்லை.  இந்த அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் தோல்வி அடைந்து வீழ்ந்திருக்கக் கூடியதாய் இருந்தது.  மேலும், அது தேர்தலை சந்திக்க உகந்த நேரமாகவும் இல்லை.  இதற்கான பிற காரணங்களுக்கு மத்தியில், அப்போது பணவீக்க விகிதம் கடந்த 13 ஆண்டுகால உச்சத்தில் இருந்தது.[85]  இந்த சூழலில் காங்கிரசு தனது அரசை ஆட்டங்காணச் செய்வது தற்கொலைக்கு ஒப்பானதாக இல்லையா? இப்படி ஒரு விசித்திரமான நடத்தையை மேற்கொள்ளத் தூண்டிய பலம் வாய்ந்த சக்திகள் எவை?

தலைப்பு 1-ன் கீழ் நாம் பார்த்ததுபோல, ஆற்றல் உத்தரவாதத்திற்கு அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்ற வாதத்தை இந்த அரசு முன்வைத்தது.  எனினும், மேற்கண்ட பரிசீலனையின்படி, இந்தியாவின் சக்தித் தேவைக்கு அணுசக்தி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருக்கிறது, இருக்கவும் போகிறது. சர்வதேச யுரேனியம் கிடைக்கப் பெறும் வாய்ப்பு உள்நாட்டு யுரேனியத் தாதுவளத்தை ஆயுதத் தேவைக்கு என விடுவிக்கும் என்றாலும், அணுப்பிளவுப் பொருட்களின் முதன்மையான குவிப்பு சுதேசி ஈனுலைகளில் இருந்தே வரக்கூடியதாக இருக்கிறது.  ஆக, இந்தியாவின் அணுஆயுதத் திட்டத்துக்கும் இந்த ஒப்பந்தம் அவசியமான ஒன்றல்ல.

தனது சொந்த பிரச்சாரத்திற்கு இந்த அரசு தானே பலியாகிவிட்டது என்றொரு வாதமும் இருக்கிறது.  எனினும், மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரங்கள் எல்லாம் முற்றிலும் வெளிப்படையானவை.  கணிப்புகள் ஏதும் நடப்புக்கு வர சாத்தியமில்லை என்பதும் நன்கு அறிந்ததே. மேலும்,  அணுசக்தித் துறையின் முன்வைப்புகளின்படியே கூட வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவின் சக்திக் கலவையில் அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யப்போவதில்லை. ஆக, இவ்வகையான வாதம், பல பத்தாண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவின் சக்திவள உறுதிப்பாட்டிற்குக் கிடைக்க இருக்கும் சிறியதொரு அனுகூலத்திற்காக இன்றைய தனது அரசைத் தியாகம் செய்யும் அளவுக்கு காங்கிரசு தெளிந்த தொலைநோக்கு உடையது என்ற கருத்தை நோக்கித் தள்ளுகிறது.  இந்த வாதம் சரியல்ல என்பது வெளிப்படை.

தள்ளாடிக்கொண்டிருக்கும் தனது மின் உற்பத்தித் திட்டத்திற்கு உயிர்ப் பிச்சை தேவையாய் இருந்ததால், இந்திய அணுசக்தி நிருவனமே இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முன் தள்ளியது என்கிறது மற்றொரு வாதம்.[86]  இது ஒரு காரணக்கூறாக இருப்பினும், ஒரு சில தொழில்நுட்பவாதிகளின் செல்வாக்கால் இவ்வாறான ஒரு பாரிய அரசியல் முடிவு எடுக்கப்படுவது அசாத்தியமானது.

பெரிதும் ஏற்கத்தக்க ஒரு பதிலை புஷ் நிர்வாகத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரன ஆஷ்லி டெல்லிஸ் அளித்திருக்கிறார். [87]  இந்த ஒப்பந்தம் ” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.  மேலும் கூறுகையில், “நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தைக் கட்டியமைக்கும் அதிபர் மற்றும் பிரதமரின் கடுமுயற்சியில் அஸ்திவாரமாகத் திகழ்கின்ற வெளிப்படையான காரணத்திற்காகவே வரவிருக்கும் அனைத்துக்குமான ஈர்ப்பு மையமாக இந்த ஒப்பந்தம் திகழ்கிறது… … எனது கருத்துப்படி, ஏன் இந்த ஒப்பந்தம் தோற்க முடியாதது, தோற்கக் கூடாதது என்பதற்கு அறுதிக் காரணமாக அமைவது இதுவே.  ஏனென்றால், உண்மையிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒன்றை செய்யும் முயற்சியில் இரு தலைவர்களும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அந்த ஏதோ ஒன்று தனது உறவை நீட்டிப்பதற்கு வலியுறுத்திக் கோருவது, நம்பகத்தன்மை,  கடமையில் உறுதிப்பாடு மற்றும் இறுதியாக பரஸ்பர நம்பிக்கை தொடர்பான செயல்பாடுகளையே” என்று ஆஷ்லி டெல்லிஸ் குறிப்பிடுகிறார்.

இருப்பினும்,  அமெரிக்காவுடனான கூட்டு என்ற நிலையில், இந்த “நம்பகத்தன்மை” , “கடப்பாடு” போன்ற சொற்கள் உணர்த்தும் உண்மைப் பொருள் என்ன?  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் இச்சொற்கள் உணர்த்தும் பொருள் என்பது வெட்டவெளிச்சமானது.

அமெரிக்க நலன்களை உறுதியாய் பற்றி நிற்பதைத் தடுக்கும் ஜனநாயக அரசியல் நிர்ப்பந்தங்களை அனுமதிக்காதவையே இந்த நம்பத்தக்க அரசுகள்.  இந்த அம்சம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏறுமாறாய் இருக்கின்ற மூன்றாம் உலக வாசிகளுடன் சேர்ந்து இயங்குவதை அமெரிக்காவை ஆளும் மேட்டுக்குடிகள் விரும்புவதில்லை.  ஜனநாயக அரசியலை நன்கு சமாளித்து, தனது ‘சர்வதேசக் கடமைகளை’ வழுவாது நிற்கும் நாடு எதுவோ அதுவே ’நம்பத்தக்க கூட்டாளி’.

“[ஈராக்கிற்கு எதிரான] போருக்கான அணிதிரட்டலின்போது ஜனநாயகத்தைப் பற்றிய அணுகுமுறை என்றுமில்லாத் தெளிவுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது” என்று சாம்ஸ்கி குறிப்பிடுகிறார் [88].  ”மக்களின் கருத்துக்கு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஈராக் மீதான போரை ஆதரிக்கவிடாமல் பிரான்சு, ஜெர்மெனி போன்றோ நாடுகளைத் தடுத்துவிட்டன. எனவே, தனது முந்தைய மேற்கத்தியக் கூட்டாளிகளான இவர்களும் “பழைய ஐரோப்பா”வை நோக்கித் தள்ளப்பட்டனர்.  பழைய மற்றும் புதிய ஐரோப்பிய அரசுகள் ஒரே ஒரு எளிய வரையறையால் தெளிவாய் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. பிரச்சினையில் தனது ஆகப்பெரும் குடிமக்களின் நிலையைத் தானும் எடுத்து, வாஷிங்டன் ஆணைகளைப் பின்பற்ற மறுத்தால், மறுத்ததாலேயே ஒரு அரசு அநீதியான பழைய ஐரோப்பாவில் சேர்ந்துவிடுகிறது” என்றும் குறிப்பிடுகிறார் சாம்ஸ்கி .

இது பற்றி அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு மிக்க நபர்களும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் தோல்வி இந்தியாவை “அறவே நம்பத்தகாத நாடு” என்ற நிலைக்குத் தள்ளிவிடும் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனன் சென் விவரிக்கிறார்.  (ஒருவர் மாற்றி ஒருவர் வரும்படியான) “சுழற் கதவு”  அரசாங்கங்கள் அமையும் நிலைமைக்கு இடையே, இந்தியாவைத் தனித்துக் காட்டும் ஓர் அம்சம், இது ஏதோ ஜனநாயக நாடு என்பதல்ல … நாம் நமது கடப்பாடுகளுக்கு என்றும் மதிப்பளித்து வருகிறோம் என்பதே” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  மாநிலங்கள் அளவில் எப்போதும் அது அவ்வாறு இல்லை என்று தெரிவிப்பதுடம், “ அதற்கு ஒரு உதாரணமாக … ஒரு தேர்தலுக்குப் பின் வந்த மாநில அரசு ஒரு ஒப்பந்தத்தை மாற்றிவிட்டது, அதுதான் என்ரான் ஒப்பந்தம்”! என்றும் வருந்துகிறார். சென்-ஐப் பொருத்தவரை, எவ்வளவு கடுமையானதாகவும், நியாயமற்றதாகவும் இருந்தபோதிலும் பன்னாட்டு நிறுவனங்களுடனோ அல்லது அமெரிக்க அரசுடனோ செய்துகொண்ட ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்களோ மக்களின் விருப்பங்களோ குறுக்கீடு செய்யக்கூடாது.

”உலக ஒழுங்கமைவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அணுசக்திப் பாதுகாப்பு போன்ற விசயங்களில் இந்திய அதிகாரவர்க்கத்தினரும் அரசுப் பிரதிநிதிகளும் தமது தனித்துவத்தைப் பேணுவதில் உறுதிமிக்கவர்கள் என்ற பெருமைமிகு பாரம்பரியம் கொண்டவர்கள்” என்று கிளிண்டன் நிர்வாகத்தில் ஒரு உறுப்பினராக இருந்த அஷ்டன் கார்டர் அமெரிக்க செனட் சபைக்கு விளக்கினார். எனினும், “இந்தியா .. ஒரு ஜனநாயக நாடாக”  இருப்பதால் “தில்லியின் எந்த அரசும் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாக விரிவான பல நடவடிக்கைகளை எடுக்க முடியாது” என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்தியாவை ஆளும் மேட்டுக்குடிகளுக்கு இந்த உண்மையும் பெருங் கசப்பாய் இருந்தது. இடதுசாரிக் கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னேறவிடாமல் தடுத்தபோது “முடிவெடுக்கும் திறனை இந்திய ஜனநாயகம் பெரிதும் முடக்குகிறது… இந்த போக்கு மாறயே தீரவேண்டும்” என்று அறுதியிட்டுக் கூறினார் சிதம்பரம். [91]   பலகட்சி ஜனநாயக அமைப்புமுறையின் பயன்பாடு பற்றியே கேள்வி எழுப்பும் அளவுக்கு மனம் நொந்து போனார் மன்மோகன் சிங். கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய மாநாடு ஒன்றில் பேசும்பொது, “ஒரு கட்சி ஆட்சி ஏதேனும் சாதக அம்சங்களைக் கொண்டிருக்கின்றதா” என்றும் “தேசீய-அரசுகள் பெரிதும் செயல்படுத்திக் காட்ட வேண்டிய வகையில் பயனுள்ள ஒரு ஒற்றுமையைக் கூட்டரசு வழங்க சாத்தியமிருக்கிறதா” என்றும் வினவினார்.

முடிவு என்னவென்றால், நீண்ட தேக்கநிலைக்குப் பிறகு, ஜப்பானில் G8 நாடுகளின் கூட்டத்திற்கு மன்மோகன் சிங் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு இடதுசாரிக் கட்சிகளுடன் ஒரு சண்டையை விரைவுபடுத்தியது காங்கிரசு.  டைம்ஸ் ஆஃப் இண்டியா விவரித்தது போல, “சர்வதேச சமூகத்தின் முன்னால் காங்கிரஸ் தலைமைக்கு ஒரு தலைகுனிவு ஏற்படும் என்று மன்மோகன் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்”.[93]   ஆக, மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றது, மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, தாங்கள் நம்பத்தக்க ஏகாதிபத்தியக் கைக்கூலி என்ற தகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எல்லா இடர்பாடுகளையும் கடந்து அரகள் தமது தொடர்ந்த இருப்புக்கான சிறப்புரிமை பெற்றிருக்கின்றன என்ற கருத்தாக்கத்தை இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை தனது அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது.  அமெரிக்காவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காங்கிரசு இந்த அடிப்படைக் கோட்பாட்டை மீற முனைந்ததும், தனது சொந்த அரசின் இருத்தலையே அபாயத்துக்கு உள்ளாக்க விரும்பியதுமான எதார்த்த உண்மை ஏகாதிபத்தியத்திடம் அது கொண்டிருக்கும் நெருக்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கிறது.

_____________________________________________________________________________

– சுவ்ரத் ராஜு

அரசியல் பொருளாதார ஆய்வுக் குழுவின் (RUPE) ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இண்டியாஸ் எகானமி – இதழ் எண் 48ல் [ஜனவரி, 2010] வெளியிடப்பட்டது.

ஆங்கில மூலம் – India’s Atomic Energy Programme: Claims and Reality

– தமிழாக்கம்: அனாமதேயன்
________________________________________________________________________

படிக்க

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி!

ங்குத் திரும்பினாலும் கான்ட்ராக்ட், CL என்ற பெயரில் தினம்தோறும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அமைத்தாலே வேலை இல்லை. போனஸ், பிஎஃப், இ.எஸ்.ஐ போன்ற சட்ட உரிமைகளை இந்த நாட்டில் முதலாளிகள் தங்களின் மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை. இது போன்ற எண்ணற்ற முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டின் நீதிமன்றம், போலிசு,ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவரும் துணை நிற்கிறார்கள்.இதனை எதிர்த்து  தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் போராடும் போதெல்லாம் ஊடகங்களும் தன் பங்குக்கு அதனைக் கண்டு கொள்வதேயில்லை, அல்லது திரித்து செய்திகளை முதலாளிகளுக்கு சார்பாக வெளியிட்டு, போராடும் தொழிலாளர்களின் முதுகில் குத்தி வருகின்றன.

இந்நிலையில்தான் துவண்டு போகும் தொழிலாளர்களுக்கு தலைமையேற்று வழிநடத்தி  வருகின்றன புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி –யின் தலைமையிலான புரட்சிகர தொழிற்சங்கங்கள்.

அந்த வகையில் ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில்  பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக  உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களை  உற்பத்தி செய்துவரும் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் (லிட்) எனும் ஆலை ஓசூர் சிப்காட்-1 பகுதியில் இயங்கி வருகிறது. சுமார் 15- ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வாலையில் அவுஸ்கீப்பிங், கார்டன், பாண்டரி போன்ற இடங்களை  பராமரிக்க 6- பெண்கள் உள்ளிட்ட  மொத்தம் 20- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து பராமரித்து  வருகின்றனர். இவர்கள் கடந்த 13 – ஆண்டுகளாக இங்கே அற்ப கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர்’2010 முதல் போராடி தங்களின் உரிமைகளைப் பெற உறுதிப்பூண்டு தங்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-யில் சங்கமாக இணைத்துக்கொண்டார்கள். ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு  சட்டப்படி நியாயமாக வழங்கவேண்டிய போனஸ், காலணி, உள்ளிட்ட உரிமைகளை கேட்டனர். 12- ஆண்டுகளாக கூலி உயர்வு போனஸ், காலணி கொடுக்காமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை திருடித் தின்று கொழுத்த நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துப் போராடியதால் வேறுவழியின்றி போனஸ் மற்றும் கூலி உயர்வை அளித்தனர்.

கல்லியறிவற்ற,பின்தங்கிய வறிய ஏழைகளான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவ்வாலையில் மலக்குழியை கழுவுகின்றனர். அதிகாரிகள் மென்று துப்பும் சுவிங்கம் –குப்பைகளை மூச்சைப் பிடித்துக்கொண்டு அகற்றும் வேலைகளை செய்கின்றனர். கேண்டீனில் உணவு கிடையாது. புல்வெளியில் அவ்வப்போது படமெடுக்கும் பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துகளிடமிருந்து தப்பித்தாலும் கான்ட்ராக்ட் சூப்பர்வைசர் ரவுடி முனீரிடமிருந்து தப்பிக்கவே முடியாது. மலக்குழியின் துர்நாற்றத்தையே சகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், வாயைத் தொறந்தாலே கெட்டவார்த்தைகளில் பேசும் ரவுடி முனீரை சகித்துக் கொள்ள முடியாது அன்றாடம் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

வேறு தொழில் ஏதும் தெரியாத இந்த அப்பாவித் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட கடந்த ஜுன் மாதம் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு ரூ 50-ஐ மட்டும் கூலி உயர்வாக அறிவித்துவிட்டு ஆகஸ்ட் – 1-ம் தேதி முதல் 5- பேருக்கு வேலை இல்லை என திடீரென்று திமிராக அறிவித்துவிட்டான் நயவஞ்சகன் விக்டர் பிரசாத்.

யார் இந்த விக்டர் பிரசாத் ?

கொடிய விசமுள்ள நச்சுப்பாம்பை நல்லப்பாம்பு என்று சொல்வதைப்போல ‘மனித வள மேம்பாட்டு அதிகாரி’ என்ற போர்வையில் இவ்வாலையில் புகுந்தான் விக்டர்  பிரசாத். தொழிலாளர்களையும்,தொழிற்சங்கத்தையும் ஒழித்துக்கட்ட எண்ணற்ற தாக்குதல்களை தொடுத்து வருகிறான்.

அப்பாவி மக்களை குண்டுவைத்துக் கொல்வதும், துப்பாக்கியால் சுடுவதும் பயங்கரவாதம் என நாம் அறிவோம். அதுபோல் உழைத்து பிழைப்பதைத் தவிர வேறு எதையும் அறியாத இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து வயிற்றிலடிக்கும் இவனை முதலாளித்துவ பயங்கரவாதி என்றழைப்பதுதான் பொருத்தம். அந்தளவிற்கு  மிகவும் கொடியவன்தான்  இந்த விக்டர்பிரசாத்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றிலடித்த இந்தக் கொடூரனுக்கு முதலாளித்துவப் பயங்கரவாதிக்கு மாதச்சம்பளம் ரூ1,50,000. ஆலையில் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவது, தொழிலாளர் ஒற்றுமையைப் பிளக்க கருங்காலிகளை ஆசைக்காட்டி உருவாக்குவது,  இது போன்ற வேலைகளை செய்வதுதான் இந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் (HR) முக்கியமான வேலையாகும். அப்படிப்பட்ட வேலைகளை செய்துவரும்  மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி விக்டர் பிரசாத் தூண்டுதலின் பேரில்தான கான்ட்ராக்ட்காரன் 5- பேரை வேலை  நீக்கம் என்று அறிவித்தான்.

ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்க மறுத்த பு.ஜ.தொ.மு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களையும்  அணிதிரட்டி உடனடியாக ஆலைவாயில் முன்பு 10.08.2011 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை திரளான உள்ளுர் மக்கள் ஆதரவுடன் நடத்தின. இதனைக் கண்டு அரண்டுப்போன நிர்வாகம் உடனே பேச்சுவார்த்தைக்கு  முன்வந்தது.

அதன்பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  வேலை நீக்கத்திற்குப் பதிலாக சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் 4- நாட்கள் மட்டும் வேலையிழப்பு என்று தொழிலாளர்கள் ஒப்புதலுடன் பேசிமுடிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலையைவிட்டு  நீக்கப்படுவதை தொழிலாளர்கள் தங்கள் வர்க்க ஒற்றுமையைப் பேணி, பு.ஜ.தொ.மு-ன் வழிக்காட்டுதலின்படி உறுதியாக நின்றுப் போராடி முறியடித்தனர். இழப்பை எல்லோரும் பகிர்ந்துக் கொண்டனர். இதனால், ஆப்பறைந்த குரங்குப்போல திகைத்து நின்றான் விக்டர் பிரசாத்.

இந்நிலையில் ஒப்புக்கொண்ட விசயங்கள், பேச்சுவார்த்தை மரபுகள் அனைத்தையும் மீறி திடீரென்று தடாலடியாக விக்டர் பிரசாத்தும், கான்ட்ராக்ட்காரனும் இணைந்துக் கொண்டு சங்க முன்னணியாளர்கள் 4-பேரையாவது  கட்டாயமாக வேலையை விட்டு நீக்கியே  ஆக வேண்டும் என்று முடிவெடுத்து செப்டம்பர் 12 –தேதி அதன்படியே அறிவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தொழிலாளர்கள் ஆலையினுள்ளே உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

அதனடிப்படையில் 14.09.2011 அன்று மாலை 5-மணிக்கு வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு மறுநாள் 15.09.2011 அன்று காலை 10-மணிக்கு இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது, ஆட்குறைப்புக்கான  நியாயமான காரணங்கள் எதுவும் நிர்வாகத் தரப்பில் முன்வைக்கப்படவில்லை. மாறாக, சங்கம் சேர்ந்ததற்குதான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாக அம்பலமானது. ஆதாரம் இல்லாததால் கான்ட்ராக்ட்காரன் பேச்சுவார்த்தையின் இடையிலே எழுந்து ஓடிவிட்டான். அதனால் விழிப்பிதுங்கி நின்ற நிர்வாகம் இறுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்கப் போராட்டத்திற்கு பணிந்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பேணிப் பராமரித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஊன்றி நின்று வெற்றியை சாதித்துக் கொடுத்தது புரட்சிகரத் தொழிற்சங்கமான பதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைமை. இது ஓசூர் வரலாற்றிலே அதுவும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநீக்கத்திற்கு எதிரான, உரிமைக்கானப் போராட்டத்தில் பெற்ற வெற்றி என்பது இதுவரை யாரும் சாதித்திராத முன்னுதாரணமிக்கப் போராட்ட அனுபவமாகும். மேலும், இந்த அனுபவம் பிற ஆலையில் கொத்தடிமைகளாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு ஒளிவிளக்காகவும் திகழ்கிறது என்பதே எதார்த்தமாக உள்ளது.

__________________________________________________

    – புதிய ஜனநாயம் செய்தியாளர், ஓசூர்.
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளியில் 4 வயது யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் செய்த பாலியல் வன்கொடுமை!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார்மய கல்வியின்  தரங்கெட்டத் தனத்தைப் பாருங்கள்!

கல்வித்துறை,  காவல் துறை அதிகாரிகள் பள்ளி முதலாளிக்கு ஆதரவாக!

இதை அம்பலப்படுத்த தயங்கிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்!

_____________________________________________

வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு 19 ஆண்டு நெடிய போராட்டத்திற்குப் பிறகே ஓரளவு நீதி கிடைத்திருக்கிறது. எளியோரை அதிகாரம் கொண்டோர் குதறுவதும், அதை எதிர்க்க இயலாமல் மக்கள் சகித்துக் கொண்டு வாழ்வதுமான சூழ்நிலையில் இத்தகைய குற்றம் இழைத்தோரை அதிகாரவர்க்கம், காவல்துறை, அரசு எத்தனை மெனக்கெட்டு பாதுகாக்கிறது என்பதற்கு வாச்சாத்தி ஒரு எடுத்துக்காட்டு.

இங்கே ஒரு நான்கு வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே அதை முறைப்படி விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது. இதே கொடுமை அரசு பள்ளிகளில் நடந்திருந்தால் அவர்கள் நாம் தட்டிக்கேட்க முடியும். ஆனால் தனியார் பள்ளிகள் என்றால் குற்றவாளிகளைப் பாதுகாக்க தனியார் முதலாளியும், அவரது பணபலத்தினால் ஊடகங்களும், காவல்துறையும் உதவி செய்ய ஓடிவருகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்பது தனியார் கல்வி முதலாளிகளிடம் இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற வேண்டுமென்றால் இத்தனை இடர்ப்பாடுகளை நமது அரசமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அநீதிகளை உடனுக்குடன் தட்டிக் கேட்பதற்கு பெற்றோரும், மக்களும் தயாராகும் போதும், இதன் ஊற்று மூலமான தனியார் கல்வி மயத்தை தட்டிக்கேட்கும் போதுமே இத்தகைய கொடுமைகளை நாம் எதிர்காலத்தில் நிறுத்தமுடியும்.

– வினவு

____________________________________________

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்  யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

அது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன….

 

   

பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா
பிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா

ந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் அன்று வரவில்லை. ஏ.கே.டி பள்ளியில் சுமார் 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்சி, ஸ்டேட் போர்டு, மெட்ரிக் ஆகிய பள்ளிகள் ஒரே வளாகத்தில் உள்ளது. கூடவே பொறியியல் கல்லுரி,  பி.எட், டி.டிஎட்  மற்றும் அனைத்து கல்விக்கான உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய பெரிய நிறுவனம். ஏ.கே.டி  பள்ளியின் முதலாளி மகேந்திரனுக்கு மாவட்டம் கடந்து பல பேருந்துகள் ஓடுகிறது. லாட்ஜ், நஞ்சை, புஞ்சை நிலங்கள் என மிக பெரும் அதிபதி.

சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை சொல்ல சொல்ல தந்தை வீடியோவில் பதிவு செய்தாலும் உறவினர்களால் பொறுக்க முடியாமல் பெண்கள் பலர் அன்று இரவே ஆசிரியைகள் வீட்டுக்கும் சென்று செருப்பால் நாலு சாத்து சாத்தினர்.மப்டி போலீசு வந்தது, “இப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க? ” என்று தடுத்தனர். “அவளுங்கள இங்கேயே கொளுத்தனும்”, என்று பெண்கள் சொன்னார்கள். “போலீசுகிட்டேயே இப்படி பேசுரீங்களா” என்று காவலர்கள் கதைத்து சென்று விட்டனர்.

விடிந்ததும் கள்ளகுறிச்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சிறுமி வீட்டு வாசலில் பள்ளி முதலாளி மகேந்திரனுடன் காத்திருந்தனர்.வழக்கறிஞர்கள் சிலர், “இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால் நிற்காது, ஒரு ஆண் பெண்ணை ரேப் பண்ணினால்தான் தண்டனை. பெண் ஆசிரியைகள் அதுவும் குழந்தையிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது எடுபடாது.நீதிமன்றத்தில் கண்டபடி குறுக்கு விசாரணை செய்வார்கள். அதனால் நாலு சாத்து சாத்திவிட்டு இதோடு விட்ட விடுங்க”,என பலர் பல விதமாக ஆலோசனை சொன்னார்கள்.

பள்ளி முதலாளி மகேந்திரனும், “நான்கு டீச்சரையும் நான் ஏற்பாடு செய்றேன். இங்க அடிக்கீறிங்களா? எங்க வீட்ல வச்சிக்கலாமா?” என்றார். பெற்றோர்கள், “வேண்டாம் எங்க வீட்லேயே வச்சிக்கலாம்” என்று சொன்ன பிறகுதான் ஊர் பெரிய மனிதர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதை பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொள்ளலாம் என்ற பெரிய மனிதர்களிடம் மறுத்த பெற்றோர்கள் அவர்களை அனுப்பிவிட்டு தாமதிக்காமல் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். செல் பேசியை அனைத்து விட்டனர்.

ஆனாலும் பெரிய மனிதர்கள் நேரிலே வந்து நான்கு டீச்சரும் ரெடியா இருக்காங்க வாங்க என்ற விடுத்த அழைப்பை உதாசினப்படுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் விவேகானந்தன் ’’நீங்க புகாரை தாமதமாக கொடுக்கீறிங்க குற்றவாளிகள் தலைமறைவாகிட்டாங்க” என்றார்.

இச்சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரையும், ஏ.கே.டி  பள்ளியின் மற்ற பெற்றோர்களையும் நேரில் சந்தித்து காவல் துறை, பள்ளி நிர்வாகம், குற்றவாளிகள் குறித்து விசாரித்தோம். அச்சத்தால் சில எதிர்ப்பு குரல்கள் அடங்கியிருந்தன. இன்று பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் அன்று மௌனம் சாதித்தன. இவர்கள் விசாரித்தால் வழக்கு உருப்படாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகினோம். பெற்றோர்களின் பொது மக்களின் அச்சத்தை போக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம்.

சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மூடிமறைப்பதற்கு பலரிடம் ரூபாய் கட்டுகள் அளிக்கப்பட்டன. பத்திரிக்கையாளர்களும் கவனிக்கப்பட்டனர். ஆனாலும் விஷயம் பெற்றோர்கள் மத்தியில் புகைந்து சாலை மறியலாக கொழுந்து விட்டு எரிந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நான்கு முனை சந்திப்பில் போக்கு வரத்து நிலை குலைந்தது. ஏ.கே.டி  பள்ளி பெற்றோர்கள் ஆவேசத்துடன் போலிஸிடம் வாதிட்டனர். இறுதியில் குற்றவாளி ஆசிரியர்களை கைது செய்கிறோம் என்ற உத்தரவாதத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

வேறு வழியில்லா சூழலில் ஏ.கே.டி பள்ளி முதலாளியிடம் உத்தரவு பெற்று கள்ளக்குறிச்சி காவல் துறை, பிரின்ஸ்பால் லேசி போஸ்கோவை மட்டும் கைது செய்தது. பிறகு பள்ளி முதலாளி நிலைமையை சீர் படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் டி.ஆர்.ஓ  தலைமையில் நடந்தது. இதில் கல்வி துறை, காவல்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பயப்படாமல் பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் தரப்பில் ”இது போன்ற சம்பவம் பள்ளியில் நடந்ததாக உறுதியாகவில்லை. கள்ளகுறிச்சி கல்வி வளர்ச்சியால் முன்னேற ஏ.கே.டி கல்வி நிறுவனம் பாடுபட்டு வருகிறது. இந்த நற்பெயரை கெடுக்க வெளியில் இருந்து வேலை பார்க்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது. ஏனைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளி ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக கள்ளக்குறிச்சியில் 17.8.2011 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கோரியது. ஆனால் ஆய்வாளர் விவேகானந்தன், “அதையெல்லாம் வழக்கை உங்கள் இஷ்டத்துக்கு சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது ஆர்ப்பாட்டதுக்கு அனுமதியெல்லாம் கிடையாது” என்று மறுத்ததுடன் மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர் சங்கராபுரம் ராமலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்ட அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் கையெழுத்து போட சொன்னார்.

“அனுமதி மறுப்பை எழுத்து பூர்வமாக கொடுங்கள்”, என கேட்டு வாங்கினார் இராமலிங்கம். மீண்டும் வேறு தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி DSP, SP யிடம் பதிவு தபாலில் மனு கொடுத்தோம். கிடைத்த 10 நிமிடத்தில் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தது காவல் துறை. “அனுமதி மறுக்கும் கடிதத்தில் ஏற்கனவே 14.8.2011 ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கோரிய மனுவை பரிசிலித்து அன்று மறுக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வாளர் விவேகானந்தன் பள்ளி முதலாளிக்குச் சேவை ஆற்றினார்.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ! ஒரு நெடிய போராட்டம் !!
போலிசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கள்ளக்குறிச்சி நகரத்திலும் ஏ.கே.டி பள்ளியில் படிக்கும் பல்வேறு கிராமங்களிலும்,

தமிழக அரசே!

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்!

வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்று!

 பெற்றோர்களே! மாணவர்களே! அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை அமுல்படுத்த போராடுவோம்!

என சுவரொட்டி ஒட்டினோம்.

பள்ளி முதலாளி மகேந்திரன் ஆள்வைத்து போஸ்டரை கிழித்தார். தலைமையாசிரியர் 20 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து பிறகு பிணையில் வெளியில் வந்தார். போடப்பட்ட வழக்கு பிரிவுகள்

     342 – சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்

                            323 – சிறுகாயம் ஏற்படுதல்,     506 (i) – குற்றமுறு மிரட்டல்

                            377 – இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கை

இதற்கிடையில் மற்றொரு ஆசிரியர் போசியாவும் முன் ஜாமின் பெற்று விட்டார். உயர்நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 இந்த வழக்கு பொருந்தாது என்பதால் முன்ஜாமின் வழங்கியது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீசுக்கு எதிராக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் போடப்பட்ட வழக்கு விசாரணை 19.8.2011 நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு வந்தது. பள்ளி நிர்வாகத்தினை இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனறு நீதிபதி நிபந்தனை விதித்தார். நாம் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19(1) படி கருத்துரிமையை நடைமுறைபடுத்த போடப்பட்ட வழக்கில் பள்ளி நிர்வாகத்தை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினோம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை சி.பி.சி.ஐடிக்கு மாற்ற கோரியும், தனியார் பள்ளி மாணவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பவைகள் பொதுநல வழக்கின் சாரமாக இருப்பதால் வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டு 26.9.2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அன்றே அவசரமாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  30-8-2011-ம் தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு விடுமுறை தினத்தில் மனுதாரர் ராமலிங்கத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்று கூறினர்.

முதல் தகவல் அறிக்கையை பாதி மட்டுமே படித்து விட்டு தலைமை நீதிபதி ’’என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை’’ என்று ஆதங்கப்பட்டார். காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றவாளிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லையென்றும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதுமான போலீஸின் செயல் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே இத்தகைய காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்ட அனைவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு அது சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்துறை செயலாளரும், டி.ஜி.பியும் எங்கள் முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியும் கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

மறுநாள் 27.9.2011 அன்று வழக்கு விசாரணையின் போது எஸ்.பியும், கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியை செப்டம்பர் 8-ம் தேதி முன் ஜாமின் பெற்றுவிட்டார். பள்ளி முதல்வர் ஆகஸ்ட்டு 30-ம் தேதி ஜாமின் பெற்றுவிட்டார். எனவே அவர்களை கைது செய்ய முடியாது என்று போலீசு தரப்பில் கூறப்பட்டது. நாம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தான மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தோம்.

அவ்வறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ டாக்டரை மிரட்டி விவரங்களை கேட்டுள்ளார். அப்போலோ டாக்டர் சியமளாதேவி பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் குழந்தையைப்பற்றி மருத்துவ விவரங்களை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளார். நீங்கள் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று மிரட்டியதையும் மருத்துவ அறிக்கையிலேயே பதிவு செய்திருந்தார் மருத்துவர். அதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை சி.பி.சிஐடிக்கு மாற்றி டி.எஸ்.பி பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரினோம்.

தலைமை நீதியரசர் ஆய்வாளரை பார்த்து இது ஒரு சீரியஸ்சான குற்றசாட்டு என்பதை பதிவு செய்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எந்த விதமான மனுவும் போடாமல்  ஏ.கே.டி பள்ளி மிகவும் புகழ் வாய்ந்தது. 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று பேச முற்பட்டார். நாமும் அந்த மாணவர்களது பாதுகாப்பு குறித்துதான் கவலை அளிக்கிறது என்று சொன்னோம்.

தீர்ப்பை ஒத்தி வைத்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அரசுக்கு எதிராக நீதிபதிகள் அழுத்தமான உத்தரவு ஏதேனும் பிறப்பித்து விடுவார்களோ என்ற நிலையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்  தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நாங்கள் டி.எஸ்.பியை  வைத்து விசாரிக்கிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள் சி.பி.சிஐடிக்கு மாற்றினால் என்ன என்று கேட்டனர். தமிழக அரசு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நாம் கோரியபடி வழக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் வைத்து விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்ததுடன், சி.பி.சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ மருத்துவரிடம் நடந்து கொண்ட சம்பவத்திற்கு எங்கள் வேதனையையும் அதிருப்தியையும் பதிவு செய்கிறோம் என்றும், யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும் அந்த நிர்பந்தத்திற்கு செவிசாய்க்காமல்   இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்குப் பிறகு 28.9.2011 அன்று ஐஜி, சைலேந்திர பாபு மற்றும் டிஐஜி, எஸ்பி, டி.எஸ்.பி சகிதம் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்தித்து விசாரித்தனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு. “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றும், ஆய்வாளர்  விவேகானந்தன் மாணவி இறந்ததாக  பரவிய வதந்தி பற்றி தகவலை அறிந்து கொள்ளவே அப்பல்லோ டாக்டரை பார்த்தார்” எனவும் தலைமை நீதிபதி வேதனைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பெற்றோர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சந்தித்தோம்.’’எங்கள் குழந்தை இந்த ஆண்டு அவர் அம்மாவிடம் வீட்டிலேயே படிக்கிறது. நாங்களும் பள்ளி நிர்வாகத்திடம் விலை போய்விட்டோம் என பலர் சந்தேகப்பட்டனர். உங்களுடைய முயற்சியால் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நம்பவில்லை” என்று உருக்கமாக பேசினார் குழந்தையின் தந்தை.

போஸ்யா மிஸ் எனக்கு எப்படி ஊசி போட்டார்கள் என்பதை சிறுமி செய்து காட்டும் போதும் இரவில் துாங்கும் போது அம்மாவிடம் மிஸ் என்னை காரில் அழைத்து சென்றார்கள்,வீடியோ எடுத்தார்கள், விளையாட்டு பொம்மை கொடுத்தார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை என்பது குற்றவாளிகள் தண்டனை அடையும் போது மட்டுமே தீரும். பல பெற்றோர்கள் இதற்காகதான் வெளியல் சொல்லாமல் மனம் புழுங்கி சகித்து கொண்டு போகிறார்கள்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா, தனியார் பள்ளி முதலாளிகள்? எதிர்த்து பேசும் ரவுடியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசு போல பெற்றோர்கள் சங்கமாக திரண்டு பாலியல் தவறு செய்யும் ஆசிரியரையும் பாதுகாக்கும் பள்ளி முதலாளியையும் உடனுக்குடன் தண்டிக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக்குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, காவல்துறை அதிகாரிகள், ஒத்துப்போகும் பத்திரிகைகள் அனைவரையும் மீறி நாம் நீதி பெறமுடியும்.

இன்று நீதிமன்றம் இப்படி ஒரு உத்திரவு பிறப்பித்தற்கே இத்தனை நெடிய போராட்டத்தை மக்கள் அரங்கிலும், சட்ட அரங்கிலும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வேளை இதை செய்யத்தவறியிருந்தால் அந்த சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதைக் கண்டும் வேதனையோடு நாட்களை கடத்தும் பெற்றோரும் வாழ்நாள் முழுதும் துன்புற்றிருப்பார்கள்.

________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

அமெரிக்கக் கடன் நெருக்கடி -  மைனரின் சாயம் வெளுத்தது ! ‘‘உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு” என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொருமுறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.

1970களில் 283 கோடி அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவின் கடன் சுமை, 2011இல் 14.5 இலட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையை இந்திய ரூபாயில் சொன்னால் (66,70,00,00,00,00,000  அதாவது, 6.67 கோடியே கோடி ரூபாய்) அதிலுள்ள பூஜ்யங்களை எண்ணுவதற்கே தலை கிறுகிறுத்துப் போய்விடும். இம்மொத்தக் கடனில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 4.5 இலட்சம் கோடி டாலர்கள்.

அமெரிக்க அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், செலவுகளைச் சமாளிக்க, அதாவது பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையிலிருந்து எவ்வளவு கடன் பெற வேண்டும் என்ற வரம்பு தீர்மானிக்கப்படும். அரசின் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட இந்த வரம்பையும் தாண்டி கடன் வாங்க வேண்டிய நிலை உருவானால், அதற்கு அமெரிக்க காங்கிரசின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

காங்கிரசின் ஒப்புதலோடு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரம்பையும் தாண்டிக் கடன் வாங்குவது அமெரிக்க அரசிற்குப் புதிய விசயமுமல்ல. ஆனால், கடந்த ஜூலை மாத இறுதியில் நடப்பாண்டு பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி கடன் வாங்க வேண்டிய சூழல் அந்நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டபொழுது, அதற்கு காங்கிரசில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்கள். கடன் வரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக, அமெரிக்க அரசு தனது செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டது, குடியரசுக் கட்சி.

குடியரசுக் கட்சியின் நோக்கம், அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதெல்லாம் அல்ல. அக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபொழுது போர்ச் செலவுகளுக்காகவும், முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையை ஈடுகட்டுவதற்காகவும் ஏழு முறை கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அப்போது கடன் சுமை அதிகரிப்பது பற்றி அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கும்பல் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அமெரிக்க அரசு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் அற்பமான மானியத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையையுடைய குடியரசுக் கட்சியும் தீவிர வலதுசாரிக் கும்பலும் இக்கடன் நெருக்கடியை தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாக இப்பொழுது பயன்படுத்திக் கொண்டன.

4 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என நிதியாதிக்கக் கும்பல்கள் நிர்பந்தித்து வந்த வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 2.1 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்குச் செலவுகளைக் குறைப்பது, செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகையைத் தொடருவது என்ற சமரசத்தின் அடிப்படையில் கடன் வரம்பை உயர்த்திக் கொள்ள அமெரிக்க காங்கிரசில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் 1.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு கல்வி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்ட இப்பொழுதே திட்டம் தயாராகிவிட்டது; மேலும், 1.5 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு மானியத்தைக் கழித்துக் கட்டுவது பற்றி ஆலோசனை கூற, இரண்டு கட்சிகளையும் சேர்ந்த காங்கிரசு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், நிதியாதிக்கக் கும்பல்கள் எதிர்பார்த்த அளவிற்கு செலவைக் குறைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்படாததால், அக்கும்பலின் கையாட்களுள் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (Standard and Poor) என்ற தர நிர்ணய நிறுவனம், அமெரிக்காவின் கடன் வாங்கும் தகுதியினை “ஏஏஏ”  லிருந்து “ஏஏ+” ஆகக் குறைத்து, அமெரிக்க அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

அமெரிக்க அரசின் கடன் உயரக் காரணமென்ன?  

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டது. குறிப்பாக, 2008  இல் ஏற்பட்ட வீட்டு மனைக் கடன் குமிழி வெடிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏற்பட்டதைப் போல பெருமந்தத்தில் சிக்க வைத்தது. இப்பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் சரிந்து வீழ்ந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அரசிற்குத் தனது செலவுகளை ஈடுகட்ட 307 கோடி அமெரிக்க டாலர்கள் தேவையாக இருந்தபொழுது, அம்மாதத்தில் அரசின் வரி வருமானம் வெறும் 172 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. அரசின் கடனை அதிகரிக்காமல், அரசு தனது செலவுகளை  நிர்வாகச் செலவுகள், இராணுவச் செலவுகள், மருத்துவக் காப்பீடு போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றை ஈடுக்கட்ட முடியாது என்ற நிலையை இந்தப் பொருளாதார மந்தம் அமெரிக்கா மீது திணித்தது.

அமெரிக்க அரசின் வரி வருமானம் வீழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பொருளாதாரச் சரிவைத் தூக்கி நிறுத்துவது என்ற பெயரில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மேல்தட்டுப் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கினார். அவர் அளித்த வரிச் சலுகையால் 2003 தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய அமெரிக்க அரசிற்கு 1.7 இலட்சம் கோடி டாலர்கள் வருமான இழப்பு ஏற்பட்டது. புஷ்ஷுக்குப் பின் பதவிக்கு வந்த ஒபாமா இந்த வரிச் சலுகையை ரத்து செய்யாததோடு, அதனை 2013ஆம் ஆண்டு வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இவ்வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, டாட் காம் பங்குச் சந்தை சூதாட்ட வீழ்ச்சி மற்றும் இரட்டை கோபுரத் தாக்குதல்களால் வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, முதலீட்டு வங்கிகளுக்கும், வேலியிடப்பட்ட நிதியங்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. 2008இல் வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்ததையடுத்து, புஷ் 700 கோடி அமெரிக்க டாலர்களையும் அவரையடுத்து வந்த ஒபாமா 814 கோடி அமெரிக்க டாலர்களையும் அமெரிக்க வங்கிகள்  தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கும் மானியமாகவும், நிதியுதவியாகவும் அளித்தனர்.

அரசின் வரி வருமானம் சுருங்கிக்கொண்டே வந்த அதேசமயத்தில், அமெரிக்காவின் இராணுவச் செலவோ அதற்கு எதிர்விகிதத்தில் ஏறிக் கொண்டே போனது. தற்

சமயம் அமெரிக்காவின் வருடாந்திர மொத்த இராணுவச் செலவு 1.2 இலட்சம் கோடி டாலர்களைத் தொட்டுவிட்டது. இது அமெரிக்காவின் பட்ஜெட்டில் 40 சதவீதமாகும். இந்த வருடாந்திர இராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்காக மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 1 இலட்சம் கோடி டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஒபாமா அதிபரான பின் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆக்கிரமிப்புப் போருக்காக மட்டும் மாதமொன்றுக்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறது. மேலும், லிபியா மீதான தாக்குதலின் மூலம் ஒரு புதிய போர் முனையைத் திறந்திருக்கிறது, அமெரிக்கா. உலகைத் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைப்பதற்காகவே இந்த இராணுவ மற்றும் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவுகளை வீங்க வைத்துக் கொண்டே போகிறது, அமெரிக்க ஆளும் கும்பல்.

அமெரிக்க வங்கிகள் நடத்திய பங்குச் சந்தை சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி; இந்நெருக்கடியையொட்டி அமெரிக்க வங்கிகளுக்கும், தொழிற்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட மானியம், நிதியுதவி, வரிச் சலுகை மற்றும் அமெரிக்காவின் போர்ச் செலவுகள்  இவைதான் 2007 இல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாக இருந்த அந்நாட்டின் கடன் சுமையை இன்று 72.4 சதவீதமாக வீங்க வைத்துள்ளன. குறிப்பாக, முதலீட்டு வங்கிகளுக்கும், கார் கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்ட மானியத்தால் மட்டும் அமெரிக்காவின் கடன் சுமை 3.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அதிகரித்தது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையில் 70 சதவீதம் அமெரிக்காவின் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளால்தான் ஏற்படுகிறது. இந்தச் செலவுகளில் ஒரு பைசாவைக்கூடக் குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்க வலதுசாரி கும்பல், சமூக நலத் திட்டங்களுக்கான அரசின் செலவு கட்டுப்பாடின்றிச் செல்வதாகவும் தகுதியற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் வாரி வழங்கப்படுவதாகவும் கூறி, பாசிச புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்ட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருக்கும் ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும், அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் வேறுபட்டு நின்று மோதிக் கொள்கிறார்கள்.

தியாகம் செய்!”  ஒபாமாவின் குரூரம்

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்க வைப்பதுதான் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராக இன்றும் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே வேலைவாய்ப்பும், தொழிலாளர்களின் சம்பளமும் தேங்கிப் போயிருந்த நிலையில், அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்கச் செய்வதற்காகவே கடன் அட்டைகள் (Credit cards), வீட்டு அடமானக் கடன், கார் கடன், அவற்றுக்கான மானியங்கள் வாரி வழங்கப்பட்டன; இவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டது. இந்தக் குமிழி உடைந்தபொழுது, அது அமெரிக்க அரசை மட்டுமல்ல, பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களையும் போண்டியாக்கியதோடு, கடன்காரர்களாகவும் ஆக்கியது.

2005க்கும் 2009க்கும் இடைபட்ட காலத்தில் கருப்பின மக்களின் சொத்தின் மதிப்பு 53 சதவீத மும், அமெரிக்காவில் குடியேறியுள்ள இலத்தீன் அமெரிக்க மக்களின் சொத்து மதிப்பு 66 சதவீதமும், வெள்ளை இனத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் சொத்தின் மதிப்பு 16 சதவீதமும் சரிந்து வீழ்ந்தது. வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்ததால், ஏறத்தாழ 1 கோடி அமெரிக்கர்கள் தங்களின் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். வீட்டு அடமானக் கடன் கொடுத்த வங்கிகள் தங்களின் கடனுக்கு ஈடாக இச்சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டன.

வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்த பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தையடுத்து, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 51 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தற்சமயம் ஏறத்தாழ 2.5 கோடி அமெரிக்கத் தொழிலாளர்கள் நிரந்தர வேலையின்றியுள்ளனர்.

அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படியே, தற்பொழுது 4.4 கோடி அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; 4.9 கோடி அமெரிக்கர்கள் “உணவுப் பாதுகாப்பின்றி” வாழ்கிறார்கள். அன்றாட வாழ்க்கையிலிருந்து பட்டினியை ஒழிக்க முடியாத அமெரிக்க அரசு, பட்டினி என்ற வார்த்தையை அரசின் பதிவேடுகளில் பயன்படுத்துவதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து ஒழித்துவிட்டது.

சமூக ஏற்றத்தாழ்வுகளோ கடந்த பத்தாண்டுகளில் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது. “அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்கள்தான் இப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரத்தின் 40 சதவீத்தைக் கட்டுப்படுத்துவதாக’’க் கூறுகிறார், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். “அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் 24 சதவீதத்தை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றி அனுபவித்து வருவதாகவும்; 1980களில் ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் சராசரி வருமானத்தைவிட 42 மடங்கு அதிக வருமானம் ஈட்டிவந்த அமெரிக்கத் தொழிற்கழகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2001இல் 531 மடங்கு அதிக வருமானம் ஈட்டுவதாகவும்; 1980 தொடங்கி 2005ஆம் ஆண்டு முடிய ஈட்டப்பட்ட அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பகுதியை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றிக் கொண்டுவிட்டதென்றும்” கூறுகிறார், மற்றொரு பொருளாதார அறிஞரான நிக்கோலஸ் கிறிஸ்டாஃப்.

‘‘அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும்பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்” என அமெரிக்காவின் ‘ஜனநாயகத்தை’ப் புட்டு வைக்கிறார், மிகப் பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட். “அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றத்தாழ்வுஅமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்” எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும்பொழுது, கருப்பின அதிபர் ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூற முடியும்.

இது சாதாரண நெருக்கடியல்ல;  மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடி

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! அரசின் செலவுகளை அதிகப்படுத்தியும், உற்பத்தி சார்ந்த தொழில்களில் முதலீட்டை அதிகப்படுத்தியும் இந்தக் கடன் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முடியும் என கெய்னிசிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் தொழிற்துறையில் மூதலீடு செய்வதில்லை. கொள்ளை இலாபம் தருகின்ற நிதிச் சந்தைச் சூதாட்டத்தில்தான் முதலீடு செய்கின்றனர். உள்நாட்டில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபடுவதைவிட, அயல்பணி ஒப்படைப்பையும் (Outsourcing) இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும்தான் அவர்கள் இலாபகரமானதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்த பிறகு தமக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் நிதியுதவிகளையும் இக்கார்ப்பரேட் முதலாளிகள் நலிவடைந்து போன தமது போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கும், உலகெங்கிலும் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் முதலீடு செய்யவோ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ பயன்படுத்தவில்லை.

பற்றாக்குறையைக் குறைக்க தொழில்துறை உற்பத்தியை அதிகப்படுத்துவது, கார்ப்பரேட் வரி வருமானத்தை அதிகப்படுத்துவது என்ற கொள்கையை அமெரிக்க ஆளும் கும்பல் தனது வரலாறு நெடுகிலும் தீண்டத்தகாததாகவே கருதி வருகிறது. இதற்கு மாறாக, மானியத்தை வெட்டுவது, ஆட்குறைப்பு செய்வது, சம்பளத்தை வெட்டுவது என்ற தாராளவாதக் கொள்கையைத்தான் இந்தக் கும்பல் சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறது. ஏற்கெனவே பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை, இந்தத் தீர்வு  அரசு செலவுகளைக் குறைப்பது  மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் எனத் தெரிந்திருந்தும், இந்தச் சுய அழிவுப் பாதையைத்தான் அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல் அமல்படுத்தத் துணிந்துள்ளது. அமெரிக்க முதலாளிவர்க்கம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது என்ற கேள்விக்கு, அப்படிச் சிந்திக்கவில்லையென்றால், அது முதலாளித்துவ வர்க்கமாக இருக்க முடியாது என்ற லெனினினுடைய விளக்கத்தைதான் பதிலாகத் தர முடியும்.

அமெரிக்காவில் 2000க்குப் பின் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள், குறிப்பாக வீட்டுமனைக் கடன் குமிழி வெடிப்பு பிரம்மாண்டமானதாக மட்டுமின்றி, உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தையையும், தொழிற்துறையையும் குப்புறக் கவிழ்க்கும் அளவிற்கு சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. தற்பொழுது தீவிரமான இந்தக் கடன் நெருக்கடியும்கூட, பல நாடுகளின் பங்குச் சந்தைகளைச் சரியச் செய்தது. இதன் காரணம், நிதி மூலதனப் பாய்ச்சல் உலகளாவிய தன்மை பெற்றிருப்பதும்; சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரங்களாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருப்பதும்தான்.

தற்பொழுது உலகெங்கிலும் நடைமுறையில் இருந்து வரும் தனியார்மய  தாராளமயப் பொருளாதாரக் கொள்கையானது, அனைத்து நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது; பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது; உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கிறது. இம்மூன்றும்தான் நெருக்கடிகள் தோன்றுவதற்கும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதற்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

‘‘உலகமயத்தின் பின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியானது, பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வத்தைக் குவியச் செய்கிறது. இச்செல்வம் நிதி மூலதன உலகில் புகுந்து பல ஆபத்தான வழிமுறைகளின் மூலம்  எடுத்துக்காட்டாக, வீட்டு மனைக் கடன் சூதாட்டம்  இலாப வேட்டையாடுவதற்காகச் சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருக்குகிறது; அடுத்தடுத்த குமிழிகளை உருவாக்குகிறது.”

‘‘அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் குவியும் அந்நியச் செலாவணி உபரியானது மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுவதால், இம்முதலீடு வீட்டுமனைக் கடன் போன்ற குமிழிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.”

‘‘கடந்த முப்பதாண்டுகளில் உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளதோடு, அதிலிருந்து பிரிந்து சுயேச்சையாகவும் இயங்கி வருகிறது. இது சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருகச் செய்தும் பின்னர் வெடிப்பை ஏற்படுத்தியும் நிதி உலகில் மட்டுமின்றி, உண்மைப் பொருளாதாரத்திலும் ஏற்ற இறக்கங்களையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.”

இம்மூன்று அடிப்படையான காரணிகள்தான், சமநிலையின்மைகள்தான் நெருக்கடிகளை அடுத்தடுத்து உருவாக்கி வருவதாகக் கூறுகிறார், மைக்கேல் லிம் மாஹ் ஹுய் என்ற பொருளாதார அறிஞர். இம்மூன்று சமநிலையின்மைகள் இல்லாத தனியார்மயம்  தாராளமயத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது எனும்பொழுது, இக்கட்டமைப்பில் நெருக்கடிகள் தோன்றுவதையும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதையும் தவிர்த்துவிட முடியாது.

அமெரிக்காவின் ஒட்டுண்ணித்தனம்

அமெரிக்கக் கடன் நெருக்கடி - மைனரின் சாயம் வெளுத்தது ! ‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும். இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.

அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.

டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.

பொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்காத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.

டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ  பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.

உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.

டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.

அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.

இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 

நூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்!

6

வ்வொரு வருடமும்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனைக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். மைக்ரோஃபினான்ஸ் என்ற கந்துவட்டியின் தொல்லையால் சென்ற வருடம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆந்திராவில் தங்களை மாய்த்துக்கொண்டனர். மிச்சமிருக்கும் விவசாயிகளும், கிராமப்புறத்தினரும் இந்தியாவின்  வடக்கும் தெற்குமாக விசிறியடிக்கபடுகின்றனர். ”இந்தியாவின்  முன்னேற்றத்துக்கு” சாட்சியாக முளைக்கும் வானுயர் கட்டிடங்களிலும், பிரமாண்டமான பாலங்களிலும் தங்கள் வாழ்வை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகர்ப்புற ஏழைகளும், தொழிலாளர்களும் அரைவயிற்றுக்கே அடிமைகளாக உழைக்க வேண்டியிருக்கிறது.

மக்களின் உரிமைகளை, சொத்துகளை  ஏகபோகமாக சுருட்டிக்கொண்டுக் கொண்டு கொழுக்கிறது  முதலாளி வர்க்கம். உரிமைகளை இழந்த மக்களோ ஓட்டாண்டிகளாக மாறியதோடு இந்த முதலாளிகளிடமே வேலைக்காக பிச்சையெடுக்கின்றனர். முதலாளிகளின் செல்வத்துக்காக உழைக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். மும்பையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்றமும் இறக்கமுமே நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன.

இந்த நிலையில், அரசும், அதிகார வர்க்கமும் முதலாளிகளின் கைப்பாவையாக, பன்னாட்டு கம்பெனிகளின்  அடியாளாக வேலை செய்துவருகிறது.  பொதுத்துறைகளை தனியாருக்கு திறந்துவிட அரசு முழுமூச்சுடன் இயங்கிவருகிறது. தண்ணீர்,மருத்துவம்,கல்வி, இயற்கை வளங்களை அடுத்து மின்சாரத்துறையை கொள்ளையடிக்க தனியாருக்கு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார், தமிழகத்தின் அமைச்சர் ஒருவர்.

எந்த சுதந்திரத்துக்காக நமது மூதாதையர் போராடினார்களோ அந்த பெயரளவிலான சுதந்திரத்தையும் அடகு வைத்துக்கொண்டிருக்கிறது  தரகு முதலாளி கும்பலும், அரசும். ஒபாமாவையும், ஹிலாரியையும் வரவேற்று அடிமைசாசனம் எழுதித்தருகிறது

இந்தியா. அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்று  அவர்களுக்கு நாட்டை தாரை வார்த்துக்கொடுப்பதே ‘நாட்டுப்பற்றா’க மாறிப்போயிருக்கும்போது அதற்கு உதவும் படியாகவே அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்திப் போராட்டங்கள்  பயன்படுகின்றன. உண்மையில் போராட்டம் என்பது எதற்கெதிரானதாக இருக்க வேண்டும்? யாருக்கெதிராக இருக்க வேண்டும்?

சமீபத்தில் வாசித்த ”உன் அடிச்சுவட்டில் நானும்” எனும் நாவல்  போராட்டம் என்பதையும், போராளிகளுக்கான அர்த்தத்தையும் சொல்லுவது போலிருந்தது.

இந்த நாவல் வியட்நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் போரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்த வீரதீரமான கம்யூனிஸ்ட் போராளிகளைப் பற்றியது.

அமெரிக்கப்படைகள்  பயந்து பின்வாங்கி ஓடிப்போனது என்றால் அது வியட்நாமில்தான். முதலில் அந்த  பின்னணியை பார்த்துவிடலாம்.   பண்டைய வியட்நாமை அரசர் குல சீனாவும், அதன்பிறகு  1800- களில் பிரான்சும் ஆட்சி செய்து வந்தன.  1900-களில் வியட்நாம் சுதந்திரத்துக்காக எழுச்சி கொள்ள துவங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களிடம்  பிரான்ஸ் வசமிழந்த நேரத்தில் வியட்நாமை ஜப்பான் ஆக்கிரமித்தது.  இந்த ஆக்கிரமிப்புகளால் கொதிப்புடன் இருந்த மக்கள் ஹோ சி மின் கீழ் திரண்டிருந்தனர்.

1945-ல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் கலகலத்துப் போயிருந்தது. தகுந்த சமயம் பார்த்திருந்த ஹோ சி மின், ஹனாய் பிரதேசத்தை தலைமையாகக்கொண்டு  வியட்நாமை சுதந்திர நாடாக அறிவித்தார். தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஹோ சி மின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வியட்நாமின் சுதந்திர பிரகடனத்தை மறுத்த  பிரான்ஸ் வியட்நாமுக்கு படைகளை அனுப்பியது.  நவீன ஆயுதங்களுடன் வந்திறங்கிய பிரெஞ்சு படையுடன் பார்க்கும்போது  ஹொ சி மின் படைகள் மரபான கெரில்லா படைகள்தான். ஆனாலும் உறுதியுடன் போரிட்டு பிரெஞ்சு ராணுவதளத்தை தகர்த்தனர், ஹோ சி மின் படையினர்.  இதில் வடக்கு  வியட்நாம் பகுதி  கம்யூனிஸ்ட் கட்சி வசமிருந்தது. தென் வியட்நாம் பகுதி பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி, வடக்கு தெற்கு என வியட்நாம் பிரிந்திருப்பதை வெறுத்தது. எல்லைக்கோடுகளை அழித்து மக்களை ஒன்று சேர்த்து ஒருமித்த வியட்நாமை உருவாக்க விரும்பியது. இதற்காக ஹோ சி மின் உலகநாடுகளிடம் உதவி கேட்கிறார்.

ஏற்கெனவே கம்யூனிச நாடுகளான சோவியத்  ரஷ்யா மற்றும் சீனாவின் மீதான கடுகடுப்பில் இருந்தது அமெரிக்கா. இதில் ஹோ சி மினுக்கு உதவினால் கம்யூனிசம் வளர ஏதுவாகிவிடுமென்று தனது படைகளை பிரான்சுக்கு அளித்து உதவுகிறது.  ஆமை புகுந்த வீடு உதவாது என்று சொல்வது போல அமெரிக்கா புகுந்த நாடு விளங்குமா?

மெதுவாக தெற்கு வியட்நாம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. தனது சார்பாக ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவுகிறது, அமெரிக்கா. ராணுவம் மற்றும் , போலீசின் அடக்குமுறைக்கும் எண்ணற்ற இன்னல்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  குண்டு மழை பொழிய ஆரம்பிக்கிறது. உயிர்கொல்லும் ரசாயனங்கள் வயல்கள் மீது தூவப்படுகிறது.

அரிசி விளையும் நிலங்களும் காடுகளும் அழிக்கப்படுகின்றன. நாபாம் என்று மிகக்கொடிய குண்டுகள் வீசப்பட்டன.  கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்காக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அரசு பொதுமக்கள் மீதும் தன் கைவரிசையைக் காட்டியது, அமெரிக்கா. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரெஞ்சு படைகளை சமாளிப்பதோடு அமெரிக்க படைகளையும் சமாளித்தாக வேண்டியிருந்தது. பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அமெரிக்காவுக்கு அப்படியென்ன வியட்நாம் மீது அக்கறை? வியட்நாமில் கம்யூனிச சமுதாயம் மலர்ந்துவிட கூடாதென்பதே அதன் குறிக்கோள்.

இதற்காக அமெரிக்கா பலியிட்ட படைவீர்களின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் விசாரணையே இல்லாமல் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புத்தபிட்சுகள் தங்களை தாங்களே நெருப்பு இரையாக்கிக்கொண்டனர்.  1965-ல் போர் மிகவும் உக்கிரமடைந்தது. அமெரிக்க அதிபர்  ஜான்சனுக்குத் துணையாக  போரை முன்னின்று நடத்தியவர் ராணுவத்தளபதி மக்நமாரா.  வியட்நாம் போரின் முக்கியமான ஆலோசகராகவும்,  மூளையாகவும் செயல்பட்ட மக்நமாரா வியட்நாமுக்கு பலமுறைகள் சென்று வந்திருக்கிறான்.

மக்நமாராவை கொலை செய்ய திட்டமிட்டிந்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.  முதல்முறை தப்பிவிட்டான். இரண்டாம் முறை  “காங்லி” எனும் பாலத்தை கடக்கும் போது மயிரிழையில்  தப்பிவிட்டாலும் காயங்களடைந்தான்.  மக்நமாராவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ”நகூயென் வான் டிராயை” கைது செய்கிறது போலீஸ்.

கைது செய்யப்படும்போது ட்ராயுக்கும் அவர் காதலித்த குயெனுக்கும் திருமணம் முடிந்து 19 நாட்களே ஆகியிருந்தன. இருவரையும்  கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம், “வெடிகுண்டுகள் எங்கிருக்கின்றன, மற்ற தோழர்கள் எங்கிருக்கின்றனர்” என்ற  செய்திதான்.  ”அமெரிக்க வெறியர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் வெடிகுண்டுகள்இருக்கின்றன” என்கிறார் ட்ராய்.   குயெனும் பலவித சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார். அதில், ட்ராயை குறித்து பயமுறுத்தி, பலவித சோதனைகள் கொடுத்து உண்மையை வாங்கிவிட முயற்சி செய்கிறது.

தோழர்கள், மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு இந்த சிறைகளில் சொல்லவொண்ணா துயர்களைஉபாதைகளை அனுபவித்துள்ளனர்.  அவர்கள் மன உறுதி எந்நாளும் சிதைக்கப்படுவதில்லை.  இந்த உண்மையை  கைதிகளை சித்ரவதை செய்ய தண்ணீர் நிரப்பிய வாளிகளும், நகக்கண்களில் ஏற்ற விதவிதமான ஊசிகளும், நூதன முறையிலான ஆயுதங்களையும் சிறையில் பார்த்து அறிந்துக்கொள்கிறார், குயென்.

குயெனுக்கு ட்ராயின் கட்சி வேலைகளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால்,ட்ராய்  மாலை வேளைகளில்,இரவுகளில் தாமதமாக வருவதும், ஏதோ யோசனையில் மிகவும் தீவிரமாக  இருப்பது மட்டும் புரிகிறது. திருமணமான சில தினங்களில் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வியட்நாமிலும் சம்பிரதாயமாக இருக்கிறது. ஆனால், ட்ராயுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று அவர் மீது வருத்தம் கொள்கிறார் குயென். பொது மக்களின் மனநிலையில் இருக்கும் குயென்  சிறைவாசத்தின் போதும்,, அதற்கு பிறகு  ட்ராயின் மரணதண்டனையினாலும் புடம் போடபட்டு  ட்ராயின் அடிச்சுவட்டில் ஒரு தோழராக  தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த நாவல்.

சிறையில், சகத்தோழர்களின் போராட்ட வாழ்க்கையையும், அர்ப்பணிப்பையும் கண்டும் கேட்டும் குயென் சாதாரன பெண்ணிலிருந்து போராளியாக மாறுகிறார்.  இந்த நாவல் குயென் சொல்லச் சொல்ல ட்ரான் வான் தின்  எழுதியது. இதில், குயென் சிறையில் சந்தித்த நபர்களின் பெயரை  வெளியிடாமல்”எக்ஸ்”, “எம்” என்றே குறிக்கிறார். இன்று அந்த மனிதர்கள் இல்லை. ஆனால், கட்சியின்  ரகசியத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து அறிந்துக்கொள்ள இது உதவுகிறது.

இன்றும் இணையத்தில், மொக்கைகள் பலர், தோழர்களுடன் விவாதம் செய்யும்போது ”உன் உண்மையான பேர், ஊரோட வா” என்று  கேட்பதை காண்கிறோம்.  இதைக்கேட்டுவிட்டு பதில்சொல்ல இயலாத கேள்வியை கேட்டுவிட்டது போல இறுமாந்து விடுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி என்பது  பெரும்பாலான நேரங்களில் தலைமறைவாகவே   இயங்க வேண்டியிருக்கிறது. அதோடு, அது கட்சிக் கட்டுப்பாடு.   சுரண்டுபவர்களும், ஒடுக்குபவர்களும், போரை ஏவுபவர்களும் தைரியமாக  உலா வருகையில் மக்கள் மீது அக்கறையும், தேசத்தின் பால் பற்றும் கொண்ட மக்கள் தலைமறைவாக இயங்கவேண்டியிருப்பது  மிகப்பெரிய முரண்தான் இல்லையா?!

குயென் சிறையில், தோழர்களுடன் இணைந்து பாடல்களையும், அவர்களது வாழ்க்கையை கேட்டறிகிறார்.  ட்ராயுடன் தான் வீம்பு பிடித்ததும், சாதாரண காரியங்களுக்காக கோபித்துக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது, ட்ராய் தன்னை புதிய உலகுக்காக தயார் செய்ய முனைந்திருக்கிறார், பக்குவப்பட்ட பெண்ணாக மாற்ற முனைந்திருக்கிறார்  என்று அறிந்துக்கொள்ளும்போது  குயெனுக்கு தெளிவு பிறக்கிறது. கட்சி வேலைகளில்  தன்னையும் ஈடுபடுத்திக்கொள்ள மனதளவில் தயாராகிவிடுகிறார், குயென். சிலநாட்களில் விடுதலை அடைகிறார்.

ஆனால், அவர் இப்போது பழைய குயென் அல்ல. தன் நாட்டுமக்களை நேசிக்கும் ஒரு போராளி.  போலீசின் நைச்சியமான ஆசைகாட்டுதல்களுக்கும் அடிமைத்தனத்துக்கும் மயங்காத ஒரு போராளி.  தன் கணவர் மரண தண்டனை அடைந்தாலும் அவரது அடிச்சுவட்டில் பயணம் செய்ய தயங்காத ஒரு போராளி.

இதை நாவல் என்று சொல்வதைவிட வாழ்க்கைக்கதை என்றே சொல்லலாம். குயென் சொல்லச் சொல்ல ட்ரான் தின் வான் எழுதியிருக்கிறார்.  நாவலில், ட்ராய்  அனுபவிக்கும் போலீசின் அடக்குமுறைகளும் சித்திரவதைகளும் வலியும் வேதனையும் மிக்கவை.  பொதுமன நோக்கில் பார்த்தால்,  இதனால் அவர் தனிப்பட்ட அளவில் எதனையும் பெறவில்லை என்று கொண்டாலும் அவர் இழந்ததுதான் அதிகம். எனினும், எதற்காக ட்ராய் அவற்றை அனுபவிக்க வேண்டும்? காதலித்து மணம் புரிந்த தன் மனைவியுடன் இனிமையாக காலத்தை கழித்திருக்கலாமே!

ட்ராயும், குயெனும், வானும், சிறையிலிருந்த தோழர் ”எம்”மும் “எக்ஸும்” இன்னும் எண்ணற்ற தோழர்களும் எளிமையான குடிமக்கள். தங்கள் நாட்டுக்காக, தாங்கள் விரும்பிய புதிய சமூகத்தை அமைத்திட தம்மை அர்ப்பணித்தவர்கள்.  ஆனால்,  இவர்கள்தான் அமெரிக்கப்படைகளை ஓட ஓட விரட்டியவர்கள். இது வரலாறு.  இந்த சாதாரண மக்களின் வீரம்தான் அமெரிக்காவை தன் படைகளை மீளப்பெற வைத்தது. எத்தனை உபாதைகளை, உடலளவிலும், மனதளவிலும் அனுபவித்தாலும் கொண்ட கொள்கை மாறாதவர்கள். வெகு சாதாரண மக்கள். இவர்களின் பெயர்கள்அதிகமாக வெளியில் அறியப்படுவதில்லை.

ஆனால், கம்யூனிசப்பாதையை விட்டு விலகிய  ஒன்றிரண்டு விதிவிலக்கின்  வார்த்தைகளை கொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை அவதூறு செய்யப்படுவது போல இவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தீரமும் பேசப்படுவதில்லை.  கம்யூனிஸ்டுகள் என்றால் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை கானல் நீருக்காக இழந்துவிட்டு பிற்காலத்தில் வாடுபவர்கள் என்பது போலவும்  இரக்கத்திற்குரிவர்கள் போலவும் பார்க்கப்படுகிறார்கள்.  கிண்டல் செய்யப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

உன்னத லட்சியத்தைக் கைக்கொண்ட குயெனையோ அல்லது  தாய்நாட்டுக்காக வீரத்துடன் சாவை எதிர்க்கொண்ட ட்ராயின் தைரியமோ பேசப்படுவதில்லை. போற்றப்படுவதில்லை. ஆனால், தோழர்கள் என்றும் அதற்காக கவலைப்படுவதில்லை. நாம் உயர்வாக எண்ணுபவற்றை துச்சமாக மதிப்பவர்களைப் பார்த்து இவ்வாறு எண்ணிக்கொள்வது நகைமுரணல்லாமல் வேறென்ன?

இன்று இந்தியாவும் அன்றைய வியட்நாம் போல அமெரிக்காவின் பிடியில்தான் இருக்கிறது. அதன் பொம்மை அரசாங்கம்தான் இங்கு ஆட்சி செய்கிறது. விவசாயிகளும், பழங்குடியினரும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  தொழிலாளர்களும், நகர்ப்புற ஏழைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகபோகத்துக்காக நாடு  முழுவீச்சில் மறுகாலனியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  நாட்டின் மீது உண்மையான பற்றும்,பக்தியும் இருந்தால் புரட்சிக்காக நம் கையில் இருக்கவேண்டியது மெழுகுவர்த்திகளோ  வெற்றுக்கோஷங்களோ அல்ல என்று நாம் உணர்வது எப்போது?

நகூயென் வான் ட்ராய் சுடப்படும் வீடியோ

நூல் விவரங்கள் :

வரலாற்று நாவல்:  உன் அடிச்சுவட்டில் நானும்
பக்கங்கள் : 112
எழுதியவர் : ட்ரான் வான் தின்
தமிழாக்கம் : தா. பொன்னிவளவன்
வெளியீடு : அலைகள் 

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

விலை :  ரூ 40

__________________________________________________________

-வேல்விழி
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 9

”பசுவை கோமாதா என்றும், காமதேனு என்றும் வணங்குகிற புண்ணிய பாரத பூமியில் – அரசின் புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 29,500 பசுக்கள், எருதுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் படுகொலை செய்யப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 20 கொலைகள் நடக்கின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகவும், இந்த மண்ணின் மைந்தர்களாகவும் உள்ள இந்துக்களுக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 42 ஆண்டுகள் ஆகியும் இந்தப் படுகொலை நீடித்து வருவது ஏன்? பசுக்கொலை செய்பவர்களில் பெரும்பாலோர் முசுலீம்களாயிற்றே, பசுக்கொலையை நிறுத்தினால் அவர்கள் வாக்களிக்காமல் போய் விடுவார்களோ என்ற  அச்சத்தில் இந்த அட்டூழியத்தை அனுமதித்து வருகிறார்கள்.”

– ‘பசு வதைத் தடைச் சட்டம் ஏன்‘,  இந்து முன்னணி வெளியீடு பக்கம்1.

‘பசுவைக் கொல்வதென்பது நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விசயம். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழ்நாடு பாழாகிவருகிறது. தள்ளுவண்டியில் வைத்து பசுமாமிச பிரியாணி, பசுமாமிச பக்கோடா, பசுமாமிச சூப் என்று விற்கிறார்கள். யார் விற்கிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், யார் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் – நமது இந்து இளைஞர்களே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். காரணம் அவர்களுக்குப் பசுவைச் சாப்பிடுவதும் தாயை வெட்டிச்சாப்பிடுவதும் ஒன்றுதான் என்பது தெரியவில்லை.

– ”இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?” – இந்து முன்னணி வெளியீடு. பக்கம்8

”பசுவைக்காப்போம்! பாரதம்காப்போம். கோயிலுக்குத் தானமாக வரும் பசுக்களைக் கசாப்புகடைகளுக்கு விற்பதைத் தடை செய்யக் கோரியும், பசுக்காப்பகம் அமைத்து பசுக்களைப் பராமரிக்க தமிழக அரசை வற்புறுத்தியும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.”

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது  இந்து முன்னணியின் சுவரெழுத்து விளம்பரம்

 எதற்கும் உதவாத மாடுகள்தான் தற்போது இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. கோவிலுக்குத் தானமாக வரும் மாடுகள் கசாப்புக் கடைக்குப் போகிறது என்பதின் பொருள் என்ன? அவை விவசாய வேலைக்குப் பயன்படாத, மடி வற்றிய, எலும்பும் தோலுமாக உள்ள மாடுகள் என்றுதானே பொருள்? பக்தர்களின் இத்தகைய மோசடிக்கு அரசாங்கம் என்ன செய்யும்?

இருப்பினும் பா.ஜ.க. கூட்டணியின் தமிழகத் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆரம்பித்த உழவர் சந்தைக்குப் பக்கத்திலேயே ஒரு பசு காப்பகம் வைத்திருக்கலாம். மேலும் ‘வயது’ காரணமாக சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவரும் கருணாநிதி இதையும் அனுதாபத்தோடு பரிசீலித்து நிறைவேற்றியிருக்கலாம். அதாவது கருப்புத்துண்டு அரசியலை மஞ்சள் துண்டு அரசியலாக மாற்றிய கலைஞரின் ‘முதிர்ச்சியை’ யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி ‘பசுக் கொலை’யைப் பரிசீலிப்போம்.

கவனியுங்கள், இந்து மதவெறியர்கள் பசுவைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள் என்றால் காளை மாடுகளைக் கொல்லலாமா? தமிழ் சினிமாவின் தாய்க்குல சென்டிமெண்டைப்போல, மாட்டிலும் பசுவை வைத்து அனுதாப அலை உருவாக்கும் தந்திரம் இது என்பது ஒருபுறமிருக்கட்டும். பசுவைக் கொல்பவருக்கு என்ன தண்டனை? எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் இந்துமத வெறியர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன.

பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வேதகாலந்தொட்டு பாரப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோதானம், நடத்தப்பட்ட மாட்டுக்கறி வேள்விகளால் விவசாயமே சீர்குலையும் நிலை தோன்றியது. மக்களின் வாழ்வைப் பிணியாய் அரித்துத் தின்ற பார்ப்பனியத்தின் சடங்கு – வேள்விகளை எதிர்த்து அப்போது புத்த – சமண மதங்கள் எழுந்தன.

இம்மதங்களின் பார்ப்பன எதிர்ப்பும் – புலால் எதிர்ப்பும் மக்கள் ஆதரவு பெற்றதன் அடிப்படையும் அதுதான். பின்னர் இம்மதங்களைச் செரித்துக்கொண்ட பார்ப்பனியம் அவர்களது புலால் மறுப்புக் கொள்கையையும் திருடிக்கொண்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பார்ப்பன – மேல்சாதியினரிடையே ஒரே மாதிரியான சைவ உணவுப் பழக்கம் இன்றும் கிடையாது. காசுமீரப் பண்டிதர்கள், வங்கத்துப் பார்ப்பனர்கள், தக்காணப் பார்ப்பனர்கள் போன்றோர் புலால் உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். புத்தர், மகாவீரரின் முயற்சியால் பார்ப்பனர்களிடமிருந்து மாடுகள் காப்பாற்றப்பட்ட பின்பே பார்ப்பனிய இலக்கியங்கள் புலால் மறுப்பை ஏற்றுக்கொண்டு கறியின் மேல் துவேசத்தையும் பிரச்சாரம் செய்தன. அதற்கும் காரணம் உண்டு.

சாதிப் படிநிலைக்கு வெளியேயும், ஊருக்குப் புறத்தேயும் இருந்த பஞ்சமர்கள், செத்த மாட்டைத் தின்பதற்கும், புதைப்பதற்கும் பார்ப்பனியத்தால் பணிக்கப்பட்டனர். இதை வைத்தே தாழ்த்தப்பட்ட மக்கள் பிறப்பிலும் தொழிலிலும் இழிவானவர்கள் என்பதை பார்ப்பனியம் இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகிறது. ”ஆவுரித்துத் தின்னும் புலையர்” என்று தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்துகிறது தேவாரம்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்குப் பயன்பட்ட மாடு தற்போது முசுலீம் எதிர்ப்புக்கும் பயன்படுகிறது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தல் இந்து மத தேசியத்தை உருவாக்க முனைந்த மதவாதிகள்தான் பசுவுக்கு ஒளிவட்டம் போட்டு பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் எனப் பேச ஆரம்பித்தார்கள். வெள்ளையர்களிடம் அதிகாரமிழந்த மராத்திய சித்பவனப் பார்ப்பனர்களே இதைத் துவக்கினர்.

முசுலீம்கள் மீதான துவேசத்துடன் இந்து மதத்தையும், ஆங்கிலேய எதிர்ப்பையும் உருவாக்க முனைந்த திலகர்தான் மாட்டுப் பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போட்டார். சிவாஜி வழிபாடு, விநாயகர் ஊர்வலம் போன்றவையும் திலகரின் கைங்கரியங்கள்தான் என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அயோத்தி தொடங்கி பசுவதை வரை இந்து முசுலீம் பிரிவினையை வரவேற்ற வெள்ளையர்களும் இத்தகைய போக்குகளை ஊக்குவித்தார்கள். அதன்பின் வட இந்திய நகரங்களில் ‘இந்துக்களின் புனிதச் சின்னமான பசுவை முசுலீம்கள் கொன்று கோவிலில் வீசினார்கள்’ என்ற வதந்தியினால் மட்டும் பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. பிரிவினைக்குப் பின் 60-களில் சங்கபரிவார வானரங்கள் நடத்திய பசுவதை எதிர்ப்பு இயக்கத்தின் போதும் ஏராளமான கலவரங்கள் நடந்தன.

மாட்டுத் தலையை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொன்ற மனிதத் தலைகள்தான் இந்நாட்டின் மாபெரும் அவமானம். கேவலம் மாட்டிற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்து மத வெறியர்கள்தான், ஆயிரக்கணக்காக முசுலீம்களின் உதிரத்தைக் குடித்தவர்கள் என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ்-இன் கலவரப்பட்டியலில் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டிலும் பசுவதையைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார்கள். எனவே அவர்களின் முசுலீம் எதிர்ப்புக் கலவரத்தில் பசுவதைப் பிரச்சினையின் பங்கைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது இதைக் கையிலெடுப்பார்கள். கோமாதா, புனிதம், மதம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தினை ஊடுருவும் பசுவதையை அதன் யதார்த்த நிலையிலிருந்து இனிப் பரிசீலிப்போம்.

குரங்கிலிருந்து மாறிய மனிதனின் கை, கால்கள் நேர்த்தியடைந்து, முதுகுத் தண்டு நிமிர்ந்து, மூளை வளர்ச்சியடைவதற்கும் இறைச்சி பெரும் பங்காற்றியது. ஆரம்பகால மனிதனது கடும் உழைப்பிற்கும், போராட்டத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான புரதத்தை அளித்தது இறைச்சிதான்.

இன்றைக்கு பார்ப்பன – மேல்சாதியினரைத் தவிர உலகமே மாட்டுக்கறியைத் தின்கிறது. மாடு மட்டுமல்ல. ஆடு, குதிரை, ஒட்டகம், நாய், முயல், பலவித பறவைகள் என்று எதெல்லாம் கிடைக்கிறதோ அதெல்லாம் உட்கொள்ளப்படுகின்றன. கால்நடை உற்பத்தி, விவசாய உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு, காலநிலை, உணவுப்பழக்கம் இவற்றுக்கேற்ப சில வேறுபாடுகள் இருக்கலாம். நாட்டுக்கு நாடு இறைச்சியின் பெயர்தான் மாறுபடுகிறதே தவிர ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்றெல்லாம் கிடையாது.

கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக் கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில் தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும் இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால் கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் போகக் கூடாது என இந்து முன்னணி தடை போடுமா?

பார்ப்பனியத்தின் தீண்டாமைக் கருத்துக்கு அப்பாற்பட்டு, விவசாயத்திற்கு உதவும் மாடுகளைக் கொன்று உண்பது நமது விவசாயிகளிடமும் பொதுவில் இல்லை. அதேசமயம் விவசாயத்திற்கு உதவாத மாடுகளை வீணே பராமரிக்கத் தேவையில்லாத விவசாயிகள் அதை விற்கிறார்கள். அவையே கறிக்காக வெட்டப்பட்டு நாடெங்கும் விற்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் மாட்டுக்கறி என்பது ஒரு சாதாரண உணவுதான். ஆடு, கோழி இறைச்சியின் விலை மிகவும் உயர்ந்துவிட்ட நிலையில் மலிவான மாட்டுக்கறிதான் நமது உழைக்கும் மக்களின் புரதத் தேவையை ஈடு செய்கிறது. எனவே கறிக்காக பிராய்லர் கோழி வளர்ப்பது போல, இறைச்சிக்கென்றே மாடுகள் வளர்ப்பது, ஆலைகள் நிறுவுவதற்கு அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின் மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா? எனவே மாட்டுக்கறி பிரச்சினையில் முசுலீம் எதிர்ப்பும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான துவேசமும் இருப்பதால், சாதியை மறுக்கவும், இந்து மத வெறியர்களின் அவதூறை ஒழிக்கவும் மாட்டுக் கறியைத் தின்னாதவர்களும் தின்று பழகுக!

பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்? பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

நாம் பசுவதைத் தடைச் சட்டம் நீக்கப் போராடுவோம்!

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!

சதீஷ் குமார்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்  சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்  படுகொலை வழக்கினை உயர்நீமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டு 3 மாதங்கள் கடந்துவிட்டன. சிபிஐ இவ்விசாரணையில் காட்டும் அலட்சியத்தை உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையின் போதும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டியும், வாய்தா வாங்குவதில்தான் சிபிஐ தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு இக்கொலையை தற்கொலையென திரிக்க முயன்றதற்கான ஆதாரங்கள் இருந்தும், அவரை சிபிஐ கைது செய்து விசாரிக்காமல் இருப்பதும், தமிழக அரசு அவரை பணிநீக்கம் செய்யாமல் இருப்பதும், சதீஷ்குமார் படுகொலையின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் போகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த 2011, ஜுன் 7 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை கண்டுபிடித்து தர மறுநாளே சங்கரசுப்பு புகார் அளித்தார். சதீஷ்குமார் காணாமல் போய் 2 நாட்களுக்குப் பின் அவருடைய பைக் மற்றும் செல்போன் ஐசிஎப் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் காவல்துறை அலட்சியமாக விசாரிப்பதை உணர்ந்த வழக்குரைஞர் சங்கரசுப்பு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் சதீஷ்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐசிஎப் குளத்தில் தேட உத்தரவிட்டது. போலீசோ ஒப்புக்குத்தான் குளத்தில் தேடியது.

மக்கள் தொலைக்காட்சி நிருபர்தான் சதீஷ்குமாரின் உடலை அக்குளத்தில் இருந்து கண்டுபிடித்துக் கூறினார். உடலைப் பார்த்த உடனேயே அவர் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. விரல் நகங்கள் பிடுங்கப்பட்டும், சுண்டுவிரல் துண்டிக்கப்பட்டும், கூரான ஆயுதங்களால் உடலெங்கும் கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடன் உடல் கிடைத்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து அறுக்கப்பட்டு சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டார் என்பது நிரூபணமானது. பிரேத பரிசோதனை அறிக்கையை மறு ஆய்வு செய்து இது கொலை என்பதை சிபிஐயும் உறுதிப்படுத்தியது.

திருமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்-ஒழுங்கு) நஸீர் 28.5.2011 அன்று அஜ்மீர்  தர்காவிற்கு செல்வதாக 2 வாரம் விடுப்பில் சென்றதும், அந்த பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்ள குற்றப் பின்னணி கொண்ட சுரேஷ்பாபுவை நியமித்ததும் சதீஷ்குமாரின் கொலையை திட்டமிட்டு நடத்திவிட்டார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காவல்துறை அணுகுமுறையின் மூலம் குற்றவாளிகளை தொடர்ந்து காப்பதற்கு அவர்கள் செயல்பட்டது அம்பலமாகி இருக்கிறது.

கொலையை தற்கொலையாக்க காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல் துறையின் முயற்சிகள்:

  • சதீஷ்குமார்  செல்போன் அணைக்கப்படாமல் இருந்தும், அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • சதீஷ்குமாரின் பைக் மற்றும் செல்போன் ஐசிஎப் குளம் அருகில் கிடைத்த பின்பும் அங்கு முழுமையாக தேடாமல் தவிர்த்துள்ளனர். போலீசு மோப்ப நாய் மூலம் புலன் விசாரணை செய்வதையும் வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்.
  • உடல் பலர் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்டு பரிசோதித்த போது கிடைக்காத பிளேடு துண்டுகளை சதீஷ்குமாரின் சட்டைப்பையில் இருந்து எடுத்ததாக முன்தேதியிட்ட பிரேத விசாரணை அறிக்கை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • உடல் கிடைத்த இடத்திலேயே பிரேத விசாரணை அறிக்கை எழுத வலியுறுத்தியும் தவிர்த்துவிட்டு, அதிகாலை 4 மணிவரை இரு வழக்குரைஞர்களை காவல்நிலையத்தில் காத்திருக்க வைத்தும் தயாரிக்காமல், காலை 10 மணியளவில் வருமாறு கூறி அவர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் வருவதற்கு முன்பாகவே வேறு இருவரிடம் சாட்சி கையொப்பம் பெற்று அறிக்கையை முன்தேதியிட்டு தயாரித்துள்ளார் சுரேஷ்பாபு.
  • பிளேடுகளை எப்போது சட்டைப் பையில் இருந்து எடுத்தீர்கள் என வினவியபோது பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கொடுத்தார் என முதலில் கூறிய சுரேசு பாபு, அம்மருத்துவர் அதனை மறுத்தபோது யாரோ ஒரு வழக்குரைஞர் கொடுத்தார் என முன்னுக்கு பின் முரணாக கூறியிருக்கிறார்.
  • சதீஷ்குமார் தற்கொலை மனோபாவம் உடையவர் என மருத்துவரிடம் சான்றிதழ் பெற சுரேஷ்பாபு முயற்சித்துள்ளார்.
  • சிபிஐக்கு வழக்கினை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முன்தேதியிட்ட பிரேத விசாரணை அறிக்கையை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுரேஷ்பாபு தாக்கல் செய்துள்ளார்.
  •   உடலில் வெளிக்காயங்கள் இல்லையென காவல்துறை துணை ஆணையாளர் தாமரைக்கண்ணன் கூறியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேற்கூறியவைகளை பிரமாண வாக்குமூலமாகவும், விசாரணையின் போது வாதங்கள் மூலமாகவும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டி சுரேசுபாபுவை கைது செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பிறகும், உயர்நீதிமன்றம் சந்தேகப்படுபவர்களை கைதுசெய்து விசாரிக்க உத்தரவிட்ட பின்பும் சிபிஐ இதுவரை சுரேஷ்பாபுவை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சிபிஐ-யின் பொறுப்பற்ற அலட்சியம்:

உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னால் சிபிஐ ஏதாவது ஒரு செய்தியை ஊடகங்களில் கசிய விடுவதிலும், விசாரணையின் போது கால அவகாசம் பெறுவதிலும் திறம்பட செயல்படுகின்றது. “கொலை என உறுதி செய்துவிட்டோம், துப்பு கொடுப்பவருக்கு பரிசுத் தொகை அறிவித்துள்ளோம், சிபிஐ அதிகாரிகள் பலர் விசாரணை செய்கிறோம், போலீசு அதிகாரிகள் உட்பட பலரை விசாரித்து உள்ளோம், பலரை சந்தேகப்படுகிறோம்” என தனது ‘மாபெரும் நடவடிக்கைகளை’ முன்வைத்தபோது “இதில் இருந்து என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள்” என நீதிபதிகள் வினவினால் “விசாரித்து வருகிறோம், கால அவகாசம் தாருங்கள்” என தலையை சொறிகின்றது சிபிஐ. கொலையை தற்கொலையாக்க முயன்ற சுரேஷ் பாபுவை காவலில் எடுத்து சரிவர நான்கு கேள்விகளைக் கேட்டாலே கொலைக்கான பின்னணியை அறிந்துவிட முடியும் என்ற நிலை இருந்தும், அதனை செய்யாமல் சிபிஐ தவிர்ப்பது யாரை பாதுகாக்க? சுரேஷ்பாபுவையா அல்லது பின்னால் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளையா? சதீஷ்குமார்  படுகொலையின் சூத்திரதாரியாக சுரேஷ்பாபு இருந்தாரா அல்லது படுகொலையை தற்கொலையாக்கி கொலையாளிகளை பாதுகாத்தாரா? என்பதுதான் கண்டறியப்படவேண்டிய விசயம். இப்படிப்பட்ட குற்றவாளியை கைது செய்து விசாரிக்காமல் சிபிஐ இழுத்தடிப்பது ஏன்?

சுரேசுபாபுவை தமிழக அரசு பாதுகாப்பதன் பின்னணி:

மதுரையில் குற்ற கும்பல்களுக்கு இடையிலான மோதலில் தனது அண்ணன் எதிர்க்குழுவால் கொலை செய்யப்பட்டார் என்பதற்காக பழிக்கு பழியாக ஆட்களை ஏவி கொலை செய்ததில் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டு, சந்தேகத்தின் பலனில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான் இந்த சுரேஷ்பாபு. இவ்வழக்கில் போலியாக சிலரை வழக்கில் சேர்த்து தப்பிக்க முயற்சித்து, பின்னர் மாட்டியிருக்கிறார். சிறையில் இருந்தபோது குற்றவாளிகளோடு மேலும் நெருக்கமாகி குற்றவாளிகளின் வலைப்பின்னல் உள்ளவர். சதீஷ்குமார் வழக்கில் சிபிஐ சந்தேகப்பட்டு காவலில் எடுக்க உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த கட்டை ராஜா எனும் கூலிப்படை கொலையாளி சுரேஷ்பாபுவோடு அதே சிறையில் இருந்ததாக கூறப்படுகின்றது. சுந்தேகத்தின் பலன் காரணமாக கொலை வழக்கில் இருந்து தப்பித்த ஒருவர் காவல் ஆய்வாளராக பணிபுரிய முடிகிறது என்றால் அவர் எவ்வளவு தூரம் உயரதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும்!

மேலும் வழக்குரைஞர் சங்கரசுப்பு தனது மகன் கொலையில் காவல் ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் ரியாசுதீனை சந்தேகப்படுவதாகவும் அவர்களால் சட்டவிரோதமான காவலில் வைத்து பணம் பறிக்கப்ட்ட ஒருவருக்காக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி அவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பெற்றதால் அவர்களை சந்தேகிப்பதாகவும் அவர்களை விசாரிக்க வேண்டுமென்றும் புகார் கொடுத்திருந்தார். அதேபோல வழக்குரைஞர் சங்கரசுப்பு தனது கட்சிகாரார் நிலத்தகராறு தொடர்பான பிரச்சினைக்காக, டிஐஜி ஜாங்கிட்டின் சொத்துக்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் பெறுவதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாகவே வழக்குரைஞர் சங்கரசுப்பு காவல்துறையின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பல வழக்குகளில் வழக்காடியிருக்கிறார். அரசு அடக்குமுறை வழக்குளில் புரட்சிகர, தமிழ்தேசிய, ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளுக்காக சமரசமின்றி நீதிமன்றத்திலும், களத்திலும் போராடக்கூடியவர்.

சதீஷ்குமார் படுகொலையில் காவல்துறையின் பங்கு வெளிவந்துவிடக்கூடாது என்பது மட்டுமல்ல தமிழக அரசின் பிரச்சினை. சுரேஷ்பாபு போன்ற கிரிமினல் அதிகாரிகளை உருவாக்குவதும், அவர்களை பாதுகாப்பதும் அரசின் தேவையாக உள்ளது. பிப்ரவரி 19, 2009 உயர்நீதிமன்றத் தாக்குதல், பரமக்குடி துப்பாக்கிக்சூடு… என இன்னும் பல நிகழ்வுகளில் ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பதில் அரசின் நிலையோ மாறுவதில்லை.

சதீஷ்குமார்  படுகொலைக்கு உடனே நீதிபெறப் போராடுவோம்!

சதீஷ்குமார் படுகொலை விசாரணையில் இக்கட்டத்தில் உள்ள ஒரே துருப்பு சீட்டு சுரேசுபாபுதான். சுரேசுபாபு கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால்தான் கொலைக்கான பின்னணி தெரியவரும். இதனை சிபிஐ தானாக செய்யும் என நாம் காத்திருப்பது மடத்தனம். தனது மகனின் கோரமான படுகொலைக்கு நீதிபெற வழக்குரைஞர் சங்கரசுப்புவும் அவரது குடும்பத்தினரும் போராடி வருகின்றனர். சுரேசுபாபுவை கைது செய்து விசாரிப்பதற்கான ஆதாரங்களை சுயமாகத் திரட்டி சிபிஐக்கு தந்துள்ளார் வழக்குரைஞார் சங்ரசுப்பு. ஆனால் காக்கி உடை குற்றவாளி சுரேசுபாபுவோ தமிழக அரசின் பாதுகாப்பில், உயரதிகாரிகளின் அரவணைப்பில் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் காவல் ஆய்வாளராக சுதந்திரமாக உலவி வருகிறார். கோரமான படுகொலையில் தனது மகனை இழந்த வழக்குரைஞர் சங்கரசுப்புவிற்கு தேவை நம் அனுதாபம் அல்ல. அவரது நீதிக்கான போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதும், போராடுவதுமே தேவை. இல்லையேல் மக்கள் நலனுக்காக உறுதியுடனும், இழப்புக்களுடனும் போராடும் இத்தகைய வழக்கறிஞர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஆதரவு தாருங்கள்!

___________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!

விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? – கேள்வி பதில்!

கேள்வி:
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிடும், சிறு பெண் குழந்தைகளை கூட கற்பழித்து சாக்கடையில் வீசுவது அதிகரிக்கும் என்பது என் எண்ணம், நம் இந்திய கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய நாடுகளை போல் நம் அரசு பாலியல் தொழிலை ஏன் ஒரு குடிசை தொழிலாக கொண்டு வரக்கூடாது?இதனால் வேலைக்கு போகுமிடங்களிலும் பொது இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குறையுமே?

– சத்யா
___________________________________________

அன்புள்ள சத்யா,

இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.

தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்த தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார். 1999களில் கூட ஒரிசாவின் பூரி ஜகன்னாதர் கோவில் இருந்த கடைசி தேவதாசி மறைந்து விட்டாலும் தேவதாசி முறையை தொடர வேண்டும் என்று இந்துத்வவாதிகள் பேசி வந்தனர். அப்போதைய புதிய கலாச்சார இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வினவிலும் வெளியிடுகிறோம்.

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது. இங்கும் ஊர்த் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாக பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.

இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ‘வரலாற்று’ பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.

இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.

பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்று அழைக்கப்படும் “ஒருத்திக்கு ஒருவன்” என்ற நன்னெறியின் பொருள் இதுதான். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே இருக்க முடியும். அப்போதுதான் வாரிசுரிமைச் சிக்கல் இருக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது அடிமைகளுக்கும், ஆளப்படும் வர்க்கத்தினருக்கும் சாத்தியமுமில்லை, தேவையுமில்லை. பாலியல் வாழ்வில் மனித சமூகம் உருவாக்கிய சுதந்திரக்காதல் என்பது ஒடுக்கப்படும் வர்க்கத்தினரிடையேதான் ஓரளவுக்கு இருந்தது எனலாம். இன்றும் கூட அப்படித்தான்.

சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.

இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.

மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.

ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது உங்களது கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.

பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.

மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.

சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ‘தீனி’ போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.

8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.

மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.

பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.

மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.

சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.

நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.

அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?

காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!

காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.

ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.

__________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

15

குந்திக்கினு கொறிக்கிறவன்
ஓடிக்கினு பேசுறவன்
அட்ச்சிகினு தூங்குறவன்
அம்சமா லபக்குறவன்
நெட்டுல நோண்டுறவன்
வினவுல பொருமுறவன்
அல்லா மாம்சும்
மறக்காம ஓட்டு போடுங்கப்பு!

வரப்போறது
உங்காட்சி, எங்காட்சி இல்லடே!
உள்ளாட்சி தேர்தல்!

சரிலே,
அது என்னடே
ஆட்சியில உள்ளாட்சி, வெளியாட்சி
ஓபனாட்சி, குளோசுடு ஆட்சி…ன்னு
பிரிச்சு விளையாடுதீக!

கட்டிங் மேட்டருல
வட்டம்னா என்ன,
மாவட்டம்னா என்ன,
கோட்டையின்னா என்ன
இல்ல செங்கோட்டையின்னாதான் என்னடே?

உறைய மாத்தி
கலரை மாத்தி
டேஸ்ட மாத்தி
எப்புடி அட்ச்சாலும்
சாராயம் சாராயம்தாம்லே,
கூமுட்டையில ஏதுடா குல்சா முட்டை!

ஏலே, மக்கா!
வைட்டமின் ‘ப’
ஆயிரத்துல ஆரம்பிச்சா கவுன்சிலரு
‘எல்லுல’ போனா எம்.எல்.ஏ
‘சி’யிலு முடிஞ்சா எம்.பி
ஹவாலாவுல டீலீங்னா லோக்கல் மினிஸ்டர்
சுவிஸ்ஸுக்கு கை மாத்துனா சென்ட்ரல் மினிஸ்டர்
உலகவங்கியோட டைரக்டா பேசுனா பிரைம் மினிஸ்டர்
கூட்டிப் பெருக்கிப் பாத்தா
சில்லறைங்களுக்கு உள்ளாட்சி
நோட்டுக்கு மத்த ஆட்சி!
கவுன்சிலருக்கு மல்லையா பீரு!
மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

___________________

ரிங்கப்பு, மேட்டருக்கு வா!
நிர்மலா பெரியசாமி எபக்டுல சொன்னா,
” தமிழகத்தில் தி.மு.க தனித்துப் போட்டி
கலைஞர் அறிவிப்பு, உடன்பிறப்புகள் உற்சாகம்”

ஏலேய் வீணாப்போன உடன்பிறப்புகளா!
எங்கனயிருந்து நைனா ஜாலி?
இதென்ன மாயாஜால் மங்காத்தா ஷோவா?
இல்ல மாகாபலிபுரம் மிட்நைட் டான்சா?

தில்லிக் குளுருல கனிமொழிக்கு அப்பீட்டு
சப்பாத்தி துன்னு ராசாவுக்கு சீதபேதி ரிப்பீட்டு
சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்
ஏட்டையா கஸ்டடியில,
விழுப்புரத்து பொன்முடி சப் இன்ஸ்பெக்ட்டரு பாக்கட்டுல
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ரிமாண்டுக்குன்னு
டுடேயா, டுமாரோவான்னு வெயிட்டிங்!
பொங்கலூர் பழனிச்சாமி RAC யில புக்கிங்!
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆட்டமெல்லாம் குளோசாகி
பல்லி ஊறும் பாளைச்சிறையில் குடிமுழுக
அஞ்சா நெஞ்சன் அஞ்சி அஞ்சி எஸ்ஸாக
எங்கனயிருந்துடே உற்சாகம்?

கட்சியில ஒரு கோடிப்பேருங்குறான்
ஊருக்கொரு சிங்கம், தளபதி, நாட்டாமைங்குறான்
ஆனா அம்மா அடிச்ச அடியில
ஜட்டியக் காணோம், ஜாக்கியக் காணோம்னு ஓடுறான்
பொண்டாட்டி புள்ளகளை பாத்து அழுவுறான்
களி தின்னு விக்கலுல நெளியுறான்
மாஜிஸ்ரேட்டு முன்னாடி கதறுறான்
மீடியாவக் கண்டா ஒளியுறான்
மீறிக்கேட்டா புலம்புறான்

இத விடுடா,
அம்மா அரஸ்ட்டுல அண்டம் கிடுகிடுங்க
ரப்பர் ஸ்டாம்ப் பிரதிபா பட்டீல் பாட்டியண்ட
காப்பாத்து, காப்பாத்துன்னு முறையிடுறான்.
வீராதி வீரன்னு ரீல்விட்டுகிணு
கைப்புள்ளயாட்டம் ராஷ்டிரபதி பவனுல
புகார் கொடுக்குறவன
இன்னுமா இந்த ஊர் உலகம் நம்புது!

ஆனது ஆச்சு, ஆட்சியும் போச்சு
வாரிசு சான்சும் ஜஸ்ட் மிஸ்ஸிங்ன்னு
தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின்
ஊரு ஊரா புண்ணிய ஷேத்திரம் போறமேரி
வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளைன்னு
உடன்பிறப்பு மேஸ்திரிகளை ஜெயில்ல பாத்தாரு,
ஆறுதலை ஏதோ கொஞ்சம் கொடுத்தாரு
விட்டா சேலம் சிவராஜ வைத்தியர் கணக்கா
ஓரே நாளுல மூணு ஜெயிலுக்கு போனாலும் தீராதுன்னு
போங்கடா போக்கத்தவனுகளான்னு
பாடி செக்கப்புக்கு இலண்டனுக்கு பறந்தாரு

இப்ப வெயிட்டான பாடியோட
உள்ளாட்சி தேர்தலுல பேசுதாறு
“கட்சியப் பாத்து போடாதீங்க,
ஆளப்பாத்து போடுங்கன்னு” புலம்புராறு!
அடுத்து யார் அரஸ்ட், யார் ரிமாண்டு,
எந்த ஸ்டேசன், எந்த ஏட்டுன்னு
இன்னும் எம்புட்டு நாளு அலையறது!

_______________________

னிமொழியை காங்கிரசு கண்டுக்கிலைனு
காங்கிரசை கலைஞர் கண்டுக்கல
ஆ வூன்னா காங்கிரசு தனித்துப் போட்டியினு
மைக் மாமா இளங்கோவன் கானா பாட்டு பாடி
கட்சிய கொன்னுட்டான்னு
கதர்க்காரனுவக துக்கப் படுறானுவ

சத்தியமூர்த்தி பவனுல
வேட்டியக் கிழிச்சது போக
இருக்குற துணிய வச்சு
கோமணம் கட்டுற பயலுவ
இப்போ உள்ளாட்சித் தேர்தலுல
தனித்துப் போட்டின்னு சொல்லிகிட்டு
அதுக்கு 12 வேட்டி கோஷ்டி தலங்கள போட்டு
கமிட்டி அமைச்சுருக்கானுக!
இன்னா தெகிரியம்!
டெபாசிட்டே தேறாத
தொப்பைத் தலையனுகளுக்கு
தெனாவட்ட பாத்தியாடே?

_____________________________

“சரக்கடிச்சுட்டு சட்டமன்றம் வாறான்னு”
அம்மா எகிற
“நீதான் கூட இருந்து ஊத்திக் கொடுத்தியா”ன்னு கேப்டன் திமிற
அது முந்தா நேத்து காமடி
“ஏதோ சீட்ட பாத்துப் போட்டுக்குடும்மா”ன்னு
போயஸ் தோட்டுத்துல காத்திருந்து
ஜாக்பாட்டு அடிச்சாரு நம்ம காப்டன்
இது நேத்து காமடி

அது கேப்டனுக்கு பம்பர் பிரைசுன்னா
அம்மாவுக்கு ராப்பிச்சைக்கு கொட்டுற சோறுதான்
பெறவு பிச்சைக்காரன் பிரியாணிக்கு அடிபோட
அம்மா பீச்சாங்கையால அடிச்சு விரட்ட

ஊர்மேய்ஞ்சு உடம்பு வளர்த்த
ஜல்லிக்கட்டு காளை கணக்கா
நம்ம காப்டன்  ஓடுறாரு, ஓடுறாரு,
நான்ஸ்டாப் ரன்னிங்குதான்.
பார்சிலானோவுல
காளைச்சண்டையை முடிச்சுக்கிட்டாலும்
நம்ம கேப்டன் காளை
மப்போட மிரண்டு புறண்டு ஓடுறதை நிறுத்துமாலே?

_______________________________

ப்பாலிக்கா நம்ம கேப்டனுக்கு
சிவப்பு வாளியில
காமரேடுங்க தண்ணி காட்டுனாங்களாம்!
அவுக கதையைக் கேட்டீகன்னா
அழுவுற புள்ளயும் வியுந்து வியுந்து சியிக்கும்!

காவிக்காரனை எதிர்க்கணும்னா
கதர்க்காரனோட கூட்டு!
கருப்பு சிவப்பு ஊழலை ஓய்க்கணும்னா
போயஸ்தோட்டுத்துல எச்சலை விருந்து
அம்மா அதிகாரத்தை வீய்த்தணும்னா
கோபலாபுரத்துல ஆறிப்போன டீ!

பதிவுலகுல வட போச்சேன்னு
மொக்கைங்க பேசுறமேரி
நம்ம காம்ரேடுங்களும் அம்மாகிட்ட
படாதபாடு பட்டாச்சு!
அப்பாவாச்சும் புத்தி வந்துச்சாடே?

பார் கேப்டன் ஒரு காலத்துல
சிவப்பு மல்லி படத்துல,
சிவப்பு சொக்கா போட்டுகினு,
சிவப்பு கண்ண உருட்டி உருட்டி
சிவப்பு டயலாக் உட்டவராச்சேன்னு
டாஸ் கேப்பிடல் படிச்ச நம்ம
மார்க்சிஸ்ட் மாமாக்கமாரு
வந்தவரைக்கும் ஆதாயம்ணு
கூட்டணியாம்!

இதுல கேப்டன்
கண்டிசனா தா.பாண்டியன் மாமாவும்
வரணும்னு உத்தரவு போட
அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சுன்னு
காம்ரேடுங்க ஒத்துக்கிணாங்களாம்!
பட்சே
அம்மையிண்ட முந்தானையை விட்டு
ஒருபோதும் இறங்காம் பாடில்லான்னு
அச்சன் தா.பா பேக் சைடு பெவிகால் தடவி
அவிடே அரை சீட்டு, கால் சீட்டு கிடைச்சாலும் மதின்னு
வெல் செட்டில்டாம்!
ஏலேய் ஆஃபாயில் அபிஷ்டுங்களா
சீக்கிரம் புரட்சி வர்ரது மாதிரி தெரியிதுடே!

சரிடே
புல்சே புண்ணாக்காட்டம்
ரொம்ப சிரிக்காதலே!

நெக்ஸ்ட் அயிட்டம்
பெரியார் சொன்ன ‘கண்ணீர்த்துளி’ சோகம்லே!

___________________________

“யாருக்காக, இது யாருக்காக,
இந்த மாளிகை வசந்த மாளிகை”ன்னு
சால்வை போட்ட சிவாஜி கெட்டப்புல
நம்ம வைகோ அண்ணே வாராறுலே!
எங்கனயும் சேர முடியாது,
எவிடயும் அடைய முடியாது,
இதுதாம்லே ரியாலிட்டி.
ஆனா அதைக்கூட கொஞ்சம்
ரோசமா நம்ம அண்ணன்
தனிச்சுப் போட்டின்னு
அடைகாக்குற பொந்துக் கோழி மேரி
பினாத்தும் போது
சிரிக்கவும் முடியல,
அழவும் முடியல,
உனக்கு எப்புடிலே?

___________________

ல்லாக் கட்சிக்காரனும் அத்துவிட்ட
இந்த காவிக் கட்சிப் பயலுவ
கோயம்புத்தூர் கவுண்டர் கட்சிக்காரனோட
கூட்டாம்டே!
காவிப்பயலுவ பாய கொல்லணும்பான்
கவுண்டர் பயலுவ சக்கிலியரை ஒழிக்கணும்பான்
இரண்டு பயலுவகளையும்
வளத்து விட்டது அய்யா கட்சியும், அம்மா கட்சியும்தான்!
இல்லேன்னா இவனுகளை எவன் மதிப்பாம்டே?

___________________

“அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி”
“எளிய மனிதனுக்கு அதிகாரம்,
கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்”னு
எதுகை மோனை எபக்டுல
ஒரு காலத்துல முழங்குன
நம்ம தம்பி திருமாவும்
ஃபீல்டுலதாம்டே இருக்காரு!
காங்கிரசு எருமையையே
கண்டுக்காத கலைஞரு
காய்ஞ்சு போன சிறுத்தைக் குட்டிக்கா
பால் குடுப்பாறு!
பாய்சன் குடுக்காம இருந்தா சரி!

என்ன செய்ய?
அரசியல்னு ஆயிப்போச்சு
இப்ப போய் புழப்ப மாத்த முடியுமா?
தம்பி திருமாவும் யாராவது
கூட்டணி வையுங்கய்யான்னு
குய்யா முய்யான்னு கத்துராறு
மாம்பழத்துக்கிட்டயும் தூது விடுராறு

மாம்பயத்தை கடிச்சு துன்ன
அவன் கட்சியிலேயே ஆளு இல்லைன்னு ஆயாச்சு,
பெறவு
வெம்பிப்போன மாம்யத்தை
கைக்காசு போட்டு
தின்னு பேதியாக
எவனும் தயாரில்ல!
ஆனா பாத்துக்கிடுங்க
தைலாபுரம் லாக்கரு
ரொம்பித்தான் வழியிது
வழியிறத கொஞ்சம்
நக்கலாம்ணு
சில பயலுவ அங்கனயும்
கிடக்கான் பாத்துக்கிடுங்க!

பெறவு நம்ம எஸ்.ஆர்.எம்
பச்சமுத்து கட்சியும்
அல்லா ஊர்லயும் போட்டியிடுதாம்!
காலேஜ், சொத்து பத்தை காப்பத்தருதக்கு
இதவிட்ட ஏதுடே வழி?

இதுதாம்டே உள்ளாட்சி தேர்தலு லைவ்!

அல்லா கட்சிக்காரனும்
அம்மாவாசை நல்ல நேரத்தை விட்டா கிடைக்காதுன்னுட்டு
மனு தாக்கல் செய்ஞ்சுருக்கான்!
ஒரே நாளுல 66,000 மனுக்களாம்!
நம்ம நேரம் எம்புட்டு கெட்டுப்போச்சு, பாத்தியாலே?

அது கிடக்கட்டும்
பல கிராமத்துல
ஆலமர, அரச மர பஞ்சாயத்து பெரிசுங்கள கூட்டி
பதவிகளை ஏலம் விடுறாய்ங்களாம்!
இதுனால ஜனநாயகம் கெட்டுப் போச்சுன்னு
நம்ம அண்ணா ஹசாரே அம்பிங்க
வருத்தப் படுதானுங்களாம்!

ஏலே போக்கத்த மூதிகளா
இதத்தாம்லே ராலேகான் சித்தியில
அண்ணா பண்ணிக்கீராறு
அவரு காட்டுத ஆளுதாம்லே
அங்கன பிரசிடண்டு!
மருமக உடைச்சா பொன்குடம்
மாமியார் உடைச்சா மண்குடாமாலே!

சரிலே
கடைசியில ஒன்னு சொல்லுதேன்!
திருப்பதி போய் முடிய வழிச்சு
அடிக்கிற மொட்டையும்
உள்ளாட்சி தேர்தலுல
வேகாத வெயிலுல நின்னு
வோட்டு போட்டு உனக்கு நீனே
அட்ச்சுக்கிற பட்டை நாமமும்
நல்லா மேச்சாகுதுலே!

போய் புள்ளி குட்டிகளை படிக்க வைக்க,
போராடுற வழியப் பாருலே!

________________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!

திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில்  உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்!

மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக  மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் !

– ஒரு நேரடி ரிப்போர்ட்

 சமீப காலமாக  பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.

பெரும்பாலும் இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்களுக்கென்று சில அல்லக்கைகளையும், ஆட்காட்டிகளையும் வைத்துக்கொண்டு ஆவர்த்தனம் செய்வர். ஆனால் இங்கோ அல்லக்கைகளும் ஆட்காட்டிகளும் மட்டுமே சேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை  நடத்தி வருகின்றனர் என்பதுதான் உண்மை. வளாகத்தில் எங்கு எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த /ஆ க்களைப் பார்க்கலாம். இப்பல்கலையில் உள்ள அனைத்து உயர் பதவிகளிலும் தங்கள் உறவினர்களை வைத்தே பல்கலையை நடத்தி வருகின்றார் கொள்ளையனான ஜகத்ரட்சகன்.

பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தாலும் மிகச்சிறிய அளவிலான இட வசதியை மட்டுமே கொண்டுள்ள இங்கு உள்கட்டமைப்பு என்பது பெயரளவிலேயே இருப்பது அங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள்  மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இருக்கும் அங்கு குறைந்தபட்சம் தாகத்தை போக்குவதற்குத் தேவையான தண்ணீர் வசதிகூட இல்லை என்பது கொடுமையின் உச்சகட்டம்.

பல துறைகளைக் கொண்டு இயங்கி வரும் பல்கலைக்கழகம் என்று இவர்களின் வலைத்தளத்தில் சொல்லப்பட்டாலும் இவற்றில் பல பெயரளவில் மட்டுமே உள்ளது. மேலும் அவையாவும் மிகக் குறைவான கட்டிடங்களிலேயே அடங்கிவிடுகிறது. அங்குள்ள அனைத்து உபகரணங்களும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாங்கப்பட்டு இயங்காத, அரதப் பழசான நிலையிலேயே உள்ளது. புதிய துறைகள் தொடங்கப்பட்டாலும் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் மாணவர்களை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும் செய்முறைப்பயிற்சி இல்லாமல் அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கும் நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதன்முலம் ஒட்டுமொத்தமாக இப்பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  சூனியமாகிப் போய்விடுகிறது. இம்மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்குச் சென்றால்  பாரத் பல்கலை என்று பார்த்த மாத்திரத்தில் வெளியேற்றப்படும் அவலநிலையும் உள்ளது.

இந்நிலையில்  தங்களுக்கு பள்ளி வளாகத்திலேயே இந்த ஆண்டு முதல் நேர்முகத்தேர்வு வேண்டும் என்று மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முகநூலின்(ஃபேஸ்புக்) மூலம் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்ட படி நான்காம் ஆண்டு மாணவர்கள் 27.9.2011 அன்று வகுப்பிற்கு செல்லாமல் பல்கலையின் விளையாட்டுத் திடலில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.சமாதானம் பேச வந்த டீன் (Dean) காசி விஸ்வலிங்கம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு டிகிரி தான் தரமுடியுமே தவிர வேலை வாங்கித்தர முடியாது என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த மாணவர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை போராட்டம் ஒயாது என்று முடிவு செய்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கீழ் மட்டத்தில் உள்ள பல்கலையின்  நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாத நிலையில் பல்கலையின் தாளாளரும் ஜகத்தின் மகனுமான சந்தீப் ஆனந்த் வந்தால் மட்டும் தான் பேசுவோம் என்று மாணவர்கள் கறாராகக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பல்கலையின் தேர்வு இயக்குனரும் பொறுக்கியுமான PJK என்கிற PremJeyaKumar நிர்வாகத்திற்குச் சாதகமான சில தமிழ் மாணவர்களை வைத்து போராட்டத்தை அடக்க முற்பட்டிருக்கிறான், மேலும் அதிகமாக வடமாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களை தமிழ் மாணவர்கள் மற்றும் வெளியிலிருந்து வந்த ரவுடிகளையும் வைத்து அடிக்க வைத்திருக்கிறார். இதில் வட மாநிலத்து மாணவர்கள் பலர் ரத்தம் சொட்ட சொட்ட அடிபட பதிலுக்கு அவர்களும் அடித்துள்ளனர். சரியாக இதை எதிர்பார்த்துக் காத்திருந்த  ரவுடி PJK இப்பிரச்சினையை தமிழ் மற்றும் வட இந்திய மாணவர்களுக்கான பிரச்சினையாக மாற்றி போலிசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பொதுவிலும் பிரச்சினை அவ்வாறாகவே சென்றுள்ளது / மடைமாற்றப்பட்டுள்ளது.

இது போன்ற கருங்காலித்தனத்தை நிர்வாகத்தின் சொந்தக்காரனும் ஆட்காட்டியுமான அடையார் செந்திலும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தங்களுடைய அதிகார பலத்தினாலும்  அடாவடித்தனத்தினாலும் இப்பரச்சினையை மொழிகளுக்கிடையேயான பிரச்சினையாக மாற்றியுள்ளது நிர்வாகம். இதற்கிடையில் எட்டு மணியானபோதும் மாணவர்கள் அனைவரும் பல்கலை வளாகத்திலேயே அடைக்கப்படிருந்தனர். அதற்குப் பிறகு வெளியே வந்த மாணவர்கள் அனைவரும் இரவு  பத்து மணியளவில் கல்லூரியில் இருந்து தாம்பரத்தில் உள்ள கேம்ப் ரோடு வரை அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். சாயங்காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலிசும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறது. முடிவு தெரியும் வரை மாணவர்களும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பல்கலையின் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி பல்கலை அலுவலகத்தின் வாயில் முன்பு நின்ற போது அது  தவறு என்றும், கை நீட்டி சம்பளம் வாங்குகிற நன்றி விசுவாசம் கூட இல்லையா என ஒருமையில் சந்தீப் ஆனந்த் திட்டியதும் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். சுய மரியாதை, தன்மானம் உள்ள எவராலும் இதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியாதாயினும் தங்களின் வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு உள்ளுக்குள் புழுங்கியும், வாய் மூடி மவுனிகளாகவும் இருக்கின்றனர். அற்ப சம்பளத்திற்குக் கூட வேலை செய்யத் தயாராக, படித்த வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகமிருக்கிறார்கள் என்பதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள், இதை வைத்தே அனைவரின் வாயையும் மூடிவிடுகிரார்கள்.

மத்திய அரசாலும் பல்கலைக் கழக மானியக் குழுவினாலும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை இழந்துவிட்ட இப்பல்கலைக்கழகத்தின் சமீப கால அடாவடித்தனங்கள், மாநிலத்திலும் மத்தியிலும் அவர்களுக்கிருக்கிற அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் போன்றவை அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.மாணவர்களின் இப்போராட்டம் வெல்ல ஆசிரியர்களும் சேர்ந்து பங்கு கொண்டால் போராட்டம் மேலும் வலுவடையும். போராடும் மாணவர்கள் வெற்றபெற நமது ஆதரவை தெரிவிப்போம்.

__________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

 “நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)

கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது  அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!

ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.

என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்”  அதாவது பட்டினிப் போர்  என்று அறிவித்தார் ஹசாரே.

தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.

“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்”  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.

குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.

ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.

இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும்  இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள்.  இன்று தனியார்மயக் கொள்கைகள்,  ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.

ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை  உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.

கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.

_______________________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்ர் 2011
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

13

லக திரைப்பட ரசிகர்கள், திரை விமரிசகர்கள், திரைத்துறை படைப்பாளிகள் முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதல் பாட்டாளிவர்க்கம், புரட்சிகர கட்சிகள் வரை அனைவரும் கலை எழுச்சியுடன் இன்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த ’ போர்க்கப்பல் பொதம்கின்’(Battelship Potemkin) என்ற ரஷிய மவுன படத்திற்க்கு வயது 85.

திரை மேதை செர்ஜி ஐசன்ஸ்டினால் இயக்கப்பட்ட இந்த படத்தின் கரு, ரஷியாவில் 1905-ம் ஆண்டு ஜார் மன்ன்னுக்கு எதிராக நடந்த போதம்கின் கப்பல் தொழிலாளர்களின் கலகத்தை பற்றியது. பேட்டல்ஷிப் பொதம்கின் கப்பலில் அதன் மாலுமிகளால் ஆரம்பிக்கப்படும் கலகம் பின்பு ஒடேசா துறைமுகத்தில் தீயாக பரவி பல உயிரிழப்புகளுக்கு பின் மக்கள் எழுச்சியாக மாறுகிறது.

வடிவம், உள்ளடகம் என இரண்டிலும் கணகச்சிதப் படைப்பான இந்த படம், 1925-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில், ரஷிய புரட்சியை நினைவு கோரவும், அதன் எழுச்சியை ஆவணப்படுத்தவும் உலக மக்களுக்கு தெரியப்படுத்தவும் நடந்த குறிப்பிடத்தக்க முயற்ச்சி.

ஐசன்ஸ்ட்டீன் ரஷிய புரட்சியை மையமாக வைத்து மூன்று படங்களை இயக்கினார் ஸ்டரைக்(Strike -1925),  பேட்டில்ஷிப் பொதம்கின்(Battleship Potemkin-1925),அக்டோபர் (October-1928).  முதல் படம் ரஷிய புரட்சியின் மிக முக்கிய நிகழ்வுகளான, ரஷியா தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்தது குறித்த ஒன்று. அதை தொடர்ந்து இரண்டாவது படம் 1905-ம் ஆண்டு பேட்டில்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் ஏற்பட்ட கலகம் குறித்தது. இறுதியாக மூன்றாவது படம் 1917-ம் ஆண்டு லெனின் தலமையில் நடந்த பாட்டாளிவர்க மக்கள் பேரெழுச்சியை ஆவணப்படுத்தியிருக்கிறது.

பேட்டல்ஷிப் பொதம்கின் படம் வெளிவந்தவுடன் அதை பல முதலாளித்துவ நாடுகள் தடை செய்தன. இன்னொரு புறம் திரைத்துறைப் படைப்பாளிகளும் பொதுவுடமைவாதிகளும் உச்சிமுகர்ந்து வரவேற்றனர். 1925-ல் பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஏதும் இல்லாத நிலையில் மவுனப்படமாக ஐசன்ஸ்டின் எடுத்த இந்த படம், நூற்றாண்டுகள் கடந்தும், பார்க்கும் பார்வையாளனை ஒன்றிவிடச்செய்யும் அற்புத திரைக்கதையையும்,அதற்க்கு தகுந்த கச்சிதமான காட்சிகளையும் கொண்டது. இது பிரச்சாரப்படம் தான். ஆனால் பல போலி அறிவுஜீவிகளும், முதலாளித்துவ முட்டாள்களும் முன் வைக்கும் கருத்தான “கம்யுனிஸ்டுகளுக்கு படைப்புக்கான நுண்ணுர்வும், நவின யுக்திகளும் , புதுமைகளை படைக்கும் அறிவும் இல்லை” எனும் வாதம் முட்டாள்த்தனமானது என்பதை நிரூபித்த படம்.

தொடர் பிரச்சாரங்களைச் செய்யும் போது தான்  படைப்பில் பல புதுமைகள் செய்ய வேண்டிய நிர்பந்தம் தானாக எழுகிறது. இல்லையென்றால் மக்கள் பிரச்சாரத்தை புறந்தள்ளிவிடுவார்கள். இன்னொரு பக்கம் எழுச்சியை மக்களிடம் பதியவைக்க வேண்டும் என்கிற ஆவல் தான் புதுமைகளுக்கான தேவையை ஏற்படுத்துகின்றது.

ஒடெஸா படிகட்டுகள் எனும் ஒரு முக்கிய காட்சியில் ஐசன்ஸ்டீன் கையாண்ட  படத்தொகுப்பு யுக்தியான மாண்டேஜ் திரைத்துறையின் முக்கிய கோட்பாடாக மாறியது. இன்றளவும் பல நாடுகள் இந்தப் படத்தை அந்த யுக்தியை கற்றுக் கொடுத்த “க்ளாசிக் சினிமாவாக ” அறிமுக படுத்துகிறார்கள. அந்த யுக்தியின் பிறப்பின் சூழலும் அவசியத்தையும் பின்பு பார்க்கலாம்.

இன்னொரு பக்கம் இந்த படத்தை ஏதோ படத்தொகுப்பு கோட்பாட்டிற்க்கான ஒரு மாதிரி படம் என்பது போலவும், இந்த படத்தை பற்றிய விமரிசனம், ஆய்வு தொகுப்புகள், கட்டுரைகள் என பலவும் அதன் வடிவத்தை மாத்திரம் முன்னிறுத்தி அந்த வடிவத்தைக் கோரிய உள்ளடகத்தையும், அரசியலையும் புறக்கணிக்கும் வேலையை சிறப்பாகவே முதலாளித்து அறிவுஜீவிகள் செய்கிறார்கள்.

ஆனாலும் பார்வையாளர்கள் இந்த அறிவுஜீவிகளின் கருத்தை புறந்தள்ளுவது நிச்சயம். படம் பார்த்தப்பின் ரஷிய பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி இயல்பாகவே உங்களுள் புகுந்துவிடும். இந்த படம் பார்த்து தங்கள் நாட்டிலும் புரட்சி வந்துவிடும் என பயந்து ஆரம்ப நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள இந்த படத்தை தடை செய்தது. அதையும் மீறி பலர் மூலம் இந்த படம் ரகசியமாக பார்க்கப்படுவதும்,ஆராதிப்பதும் தொடரவே, திரைத்துறையை பற்றிய கோட்பட்டினை கற்க இது அவசியம் என்றபதாலும் அந்த தடைகள் புறகணிக்கப்பட்டு படம் எல்லா நாடுகளிலும் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் கோலாச்சியது.

சோவியத் அரசாலே அறிவிக்கப்பட்ட பெரும்கொடையான இந்த படத்தின் கதை என்ன?

இந்த படம் ஐந்து பகுதிகளாக பிரிக்கபட்டது,

1. “Men and Maggots”

பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் பணி செய்யும் மாலுமிகள் கடுமையான பணிகளோடும், மோசமான உணவும் கொடுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒரு நாள் புழுக்கள் நிறைந்திருக்கும் இறைச்சியின் சூப்பை சமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்து நெளியும் புழுக்களை கண்டுக்கொள்ளாத அதிகாரி மாமிசம் புழுக்களற்றது அது தான் சமைக்கப்படும் என்கிறான். இதனால் ஆத்திரம் அடையும் மாலுமிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மாலுமிகளின் கலகம் பிறக்கிறது.

2. “Drama on the deck”

உண்ணாவிரதம் போராட்டமாக மாறுகிறது, நடுக் கப்பலில் பிரச்சரங்கள், விவாதங்கள் என போராட்டம் சூடு பிடிக்கிறது ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கெதிரான பெரும் கலகமாக வெடிக்கிறது. கப்பலில் ஊழியர்கள் வேலை செய்ய மறுக்க, கொழுத்த அதிகாரிகளோ துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டுகிறார்கள். பணியாமல் எதிர்த்து நிற்க்கும் கலகக்காரர்களின் தலைவன் சுட்டுக்கொல்லபடுகிறான். ஆனால் கலகம் தொடருகிறது, அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள், கப்பலில் இருந்து வீசியெறியப்படுகிறார்கள். கப்பல் ஒடேஸா துறைமுகம் வருகிறது.

3. “A Dead Man Calls for Justice”

சுடப்பட்ட தலைவனின் பிணம் துறைமுகத்தில் அனாதையாக கிடக்கிறது, மறு புறமோ இந்த செய்தி காட்டு தீயை போல பரவுகிறது. மக்கள் கூடுகிறார்கள். கலகத்தின் விளைவாக இறந்த த்ங்கள் தோழனுக்கு இறுதி மரியாதை செலுத்த சாரைசாரையாக வருகிறார்கள். அதிகார வர்கத்தின் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரளுகிறார்கள். மக்கள் எழுச்சியடைகிறார்கள்.

4. “The Odessa Staircase”

ஒடெஸா படிகட்டுகளில் மிக சாதரணமாக பொழுதை கழிக்கும் எண்ணற்ற மக்கள் கூட்டதின் மீது ஜார் ராணுவம் எந்தவித அறிவிப்புமில்லாமல் தாக்குதலை தொடுக்கிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை கொன்று வெறியாட்டம் ஆடுகிறது ஜாரின் ராணுவம்.

5. “The Rendez-Vous with a Squadron”

பொதம்கின் கப்பலை கலக்காரர்கள் கைப்பற்றி கடலில் செலுத்துகிறார்காள், அதை தடுக்க அனுப்படும் இன்னொரு போர் கப்பல் இவர்களை நெருங்கி சரணடைய சொல்லுகிறது. மீறினால் பொதம்கின் தாக்கப்படலாம் என எச்சரிக்கை செய்யபட்டு தாக்குதல் தொடுக்க தயாராகிறது. எந்த நேரத்திலும் கப்பல் எதிர்கப்பலால் அழிக்கப்படலாம் என்ற சூழலில் பொதம்கின் ஊழியர்கள் குண்டுகளை எதிர்கொண்டு நிற்க, சுட வேண்டியா பீரங்கிகள் தாழ்ந்து பொதம்கினுக்கு வழிவிடுகின்றது. தங்களின் தோழர்களின் ஆதரவால் எழுச்சியடையும் பொதம்கின் தோழர்கள், சுதந்திரமாக கடலில் செல்கிறார்கள். கலகம் வெற்றியடைகிறது.

ஜார் மன்ன்ன் காலத்தில் முதலாளித்தும் வளர்ச்சியடைந்து வந்த நேரத்தில் ரஷியாவில் மக்கள் அனுபவித்த இன்னல்கள் சொல்லில் முடியாது. கசக்கி பிழிந்து சக்கைகளாக, மருத்துவம், சுகாதரம், போதிய உணவு என்று ஏதுமில்லாமல் தூக்கி வீசப்படுவார்கள். ஆனால் பின்னாட்களில் கம்யுனிஸ்ட கட்சியின் வரவால் அந்த தொழிலாளர்களது வர்க்கம் ஒரு முற்போக்கு பாதையில் வளரத் தொடங்கியது. ஒன்றுப்படவும், போராடவும் பழக ஆரம்பித்தார்கள். அரசின் மீதும், சக்கையாக பிழியும் முதலாளிகளையும் எதிர்த்து போராடக் கற்றுக்கொண்டார்கள். இது பின்னால் வரப்போகும் எழுச்சிக்கான ஆரம்ப படி நிலை.

இப்படியாக முன்னேறிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளான பேட்டில்ஷிப் பொதம்கினில் வேலை செய்த மாலுமிகள் 1905-ம் ஆண்டு இனிமேலும் சகித்துக்கொள்ள முடியது என கலகத்தை தொடங்குகிறார்கள். புழுக்கள் நிறைந்த மாமிசத்தை சாப்பிட மறுக்கிறார்கள். இது ஏதோ உணவால் வந்த பிரச்சனை என்பது போல் சுருக்கிவிட முடியாது. காலம் காலமாக ஊட்டப்பட்டு வந்த எழுச்சியின் ஒரு படிநிலை.

படத்தில் இந்த எழுச்சியை இயல்பாக பார்வையாளர்களுக்கு பதிய வைத்ததில் தான் முதல் வெற்றி. உதரணத்திற்க்கு சுடப்பட்டு ஒடேசா துறைமுகத்தில் அனாதை பிணம் போல் கலக்கார தலைவனின் பிணம் கிடத்தப்பட்டிருக்க, இறுதி மரியாதை செலுத்த வரும் ஒடேசா மக்களின் அனுதாபம் பேரேழுச்சியாக மாறும் காட்சியை பாருங்கள்.

முதலில் செய்தி சிலருக்கு தெரியும், பின்பு அது பலருக்கு, என தீயாய் பரவும்., மக்கள் கூட ஆரம்பிப்பார்கள். உடனடியாக பல கம்யுனிஸ்ட்டுகள் பிராச்சாரம் செய்வார்கள்,. மக்கள்திரள் அரசியல்படுத்தப்படும், அதற்க்கான துண்டு பிரச்சுரங்கள் விநியோகிக்கப்படும். முதலில் துக்கத்துடன் த்ங்கள் தொப்பிகளை கசக்கிச் பிடிக்கும் கைகள் காட்டப்படும் . பின்பு தொடர் அரசியல்படுத்தப்படுதலின் விளைவு விரல்கள் மடக்கி முஷ்ட்டிகள் உயரும். ”போராடுவோம்” என மக்கள் எழுச்சியடைவார்கள். இந்த காட்சி, மக்கள திரள் பற்றிய அரசியலை போதிக்கும் அதே நேரம் ஒரு திரைப்பட வடிவம் என்ற முறையிலும் மிக நேர்த்தியான காட்சிகளைக் கொண்டிருக்கும்.

மாண்டேஜ் கோட்பாட்டை விளக்கும் ஒடேசா படிகட்டுகள் பகுதியையும் பாருங்கள். மாண்டேஜ் யுக்தியின் தேவையை அந்த உள்ளடக்கம் கோருகிறது. அமைதியாக கூடும் மக்கள் மீதான எதிர்பாராத தாக்குதல், அந்த தாக்குதல் ஏற்படுத்தும் போர்கள், ஜார் ராணுவத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்ட வெறி, என  அந்த நச்சு சூழல் திரையில் வரவேண்டுமென்பது மாத்திரம் இல்லை. அதை பார்க்கும் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இலக்கல்ல. அதை பார்க்கும் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே புரட்சிகர இயக்குனரின் இலக்கு. அந்த இலக்கும், உள்ளடக்கமும், தொடர்ச்சியாக மாறும் காட்சிகளையும், பெரும் மக்களின் சிதறலையும், அவர்களை கொல்லும் ராணுவத்தின் கோரமுகத்தையும், சிதறி ஓடும் மக்களில் மடியும் குழந்தைகள் என அந்த போர்க்கள காட்சியின் வீரியம், அதை தொடர்ந்து இனி போராடுவது தான் வழி என ஒரு தாய் தன் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தனி ஒருவராக அந்த ராணுவத்தை எதிர்த்து முன்னோக்கி நகருவதும் சிலிர்க்க வைக்கும் காட்சி. அதை வார்த்தைகளால விளக்கிவிட முடியாது. பார்த்து அனுபவிக்க வேண்டும்.

பொதம்கின் கப்பலை நோக்கி இன்னொரு ராணுவ கப்பல் பீரங்கிகளை உயர்த்தி குறிபார்க்க, என்ன நடக்குமோ என்று வெறித்து பார்க்கும் கப்பல் ஊழியர்களின் நிலையையும், அந்த நேரத்திலும் எழுச்சியுடன்  சரணடையாத வீரத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் ”சுடாதே” என தங்களை மீறி திரையை நோக்கி முனங்கவைத்ததுதான் இந்த படத்தின் சிறப்பு தன்மை. தனித் தன்மை.

பல கோடிகள் செலவில் முன்னேறிய டெக்னிக்குகளுடன் லாபம் மட்டும் நோக்கம் என எடுக்கப்பட்ட டைட்டானிக் முதல் எத்தனையோ படங்களை ஒப்பிடும் போது வசதிகள் குறைவான நிலையில் எடுத்த ஒரு படம் வெல்கிறது என்றால், அது காலந்தோரும் வரும் மக்கள் எழுச்ச்சியின் சாட்சி. மக்கள் இருக்கும் வரை மக்கள் எழுச்சி மறையபோவதில்லை. மக்கள் எழுச்சி இருக்கும் வரை அதை பிரதிநித்துவப்படுத்தும் இந்த மாதிரியான கலைப்படைப்புகள் மறையப் போவதில்லை.

இனி போர்க்கப்பல் பொதெம்கினை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள்!

__________________________________________________________________________________

ஆதவன்
__________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]